PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

goldstar
27th November 2011, 05:18 PM
Thanks a lot Vasu for wonderful write up about your experience with our god and shooting of "Padhukaappu". You have all taken 41 years back and made us watching shooting live at Cadallore. Hats off you sir.

What a competition between Vasu sir, Pammalar , Murali sir, Karthik sir, Saradha madam and loved Ragavendran sir for writing about our NT. Thanks guys for making us happy. I always felt like doing "allapparai" in our Madurai on Sunday galas when ever I visit this thread.

Pammalar sir congrats for reaching 2000, hope to congrats on 20000. Hats off to your effort sir.

Cheers,
Satish

mr_karthik
27th November 2011, 06:21 PM
//அப்படி அந்த இரண்டாம் கட்டத்தில் வெளிவந்த படங்கள் தான் இன்றளவும் அவருடைய மாபெரும் சேனை உருவாகக் காரணமாயிருந்தன.//

அன்புள்ள ராகவேந்தர் சார்,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நடிகர்திலகத்துக்காக எதையும் செய்யும் ரசிகர் படை உருவானது இந்தக்கால கட்டத்தில்தான். அதற்கு முன் பீம்சிங், பந்துலு காலப்படங்களைப் பார்த்து ரசித்தவர்கள், படத்தையும், நடிகர்திலகத்தின் அபார நடிப்புத்திறமையையும் பாராட்டிப்புகழ்வதோடும், அதற்காக பலமுறை அப்படங்களைப் பார்ப்பதோடும் நிறுத்திக்கொண்டனர்.

அவரையே உயிராக நினைத்து அவரோடு இணைந்திருக்கும், அவர் என்ன சொன்னாலும் கேட்கும் ரசிகர்கூட்டம் உருவானது நீங்கள் குறிப்பிட்ட இரண்டாம் காலகட்டத்தில்தான். குறிப்பாகச்சொல்வதென்றால் 'செல்வம்' பட காலத்திலிருந்து என்று சொல்லலாம். அதனால் அவர்களின் ரசனைக்காகவே படங்களில் கற்பனைக்காட்சிகள் இடம்பெற்று சிறப்புப்பெற்றன.

பாதுகாப்பு படத்துக்கு முன் வந்த 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் ஒரு கற்பனைக்காட்சி (துஷ்யந்தன் - சகுந்தலை) இடம்பெற்றதென்றால், இன்னொரு படமான 'சொர்க்கத்தில்' மூன்று கற்பனைக்காட்சிகள் இடம்பெற்றன ('ஜூலியஸ் சீசர்' நாடகம், 'பொன்மகள் வந்தாள்' பாடல் காட்சி, 'அழகுமுகம் பழகும் சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம்' பாடல் காட்சி). இவையனைத்தும் ரசிகர்களுக்காகவே சேர்க்கப்பட்டவை. அப்படி ரசிகர்களுக்காகவே படம் வந்துகொண்டிருந்த வேளையில் நடிகர்திலகத்துக்கு படம் முழுக்க ரோல் இல்லை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் இவர் அவ்வப்போது வந்து போகிறாற்போல ரோல் என்றதும்தான் ரசிகர்கள் சோர்ந்து போயினர்.

உயர்ந்த மனிதனில் 'என் கேள்விக்கென்ன பதில்' பாடல் நடிகர்திலகத்துக்கு இல்லையென்றதும் ரசிகர்கள் அடைந்த ஏமாற்றம் நமக்குத் தெரிந்ததே.

pammalar
27th November 2011, 08:00 PM
'கடலூர் டைம்ஸ்' பத்திரிகையின் சினிமா நிருபர் மதிப்பிற்குரிய திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

ஒரு கற்பனையாகத்தான் இத்தகைய அடைமொழியை வைத்து தங்களை அழைத்தேன் என்றாலும், இதற்கு முழுமுதற்தகுதியானவர் தாங்கள் என்பதனை "பாதுகாப்பு" படப்பிடிப்புக்கட்டுரை மூலம் ஆணித்தரமாக நிரூபித்துவிட்டீர்கள். அடேங்கப்பா.....! என்ன ஒரு எழுத்துநடை..., என்ன ஒரு வர்ணணை..., என்ன ஒரு அபார நினைவாற்றல்...! முதலில் வண்டிவண்டியாக என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுக்களைப் பிடியுங்கள் !

'நடிகர் திலகத்தின் படப்பிடிப்பு கட்டுரைகள்' என்கின்ற தலைப்பில் நான் ஒரு கோப்பு(File) வைத்துள்ளேன். அதில் பத்திரிகைகளில் வந்த அவரது பல திரைப்படங்களின் படப்பிடிப்பு கட்டுரைகள் இருக்கிறது. "பாதுகாப்பு" படப்பிடிப்பு கட்டுரை அதில் இல்லை. தங்கள் புண்ணியத்தில் இன்று [27.11.2011] - அதுவும் "பாதுகாப்பு" வெளியான 42-வது தொடக்கவிழா தினத்தன்று - அக்கட்டுரை ஒரு மிகமிக அரிய ஆவணப்பொக்கிஷமாக எனக்கு கிடைத்துவிட்டது. எனக்கு மட்டுமா, இங்கே உள்ள எல்லோருக்கும்தான். இதற்காக தங்களுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள் !

தாங்கள் எழுதியதைப் பார்க்கும்போது, இதுபோன்று கடலூரில் இன்னும் பல நடிகர்திலகத்தின் படங்களின் விரிவான படப்பிடிப்புகள் நடைபெற்றிருக்கக்கூடாதா என்கின்ற ஏக்கம் மேலிடுகிறது. அப்படி நடந்திருந்தால், எத்தனை இதுபோன்ற உன்னதமான கட்டுரைகள் தங்கள் கைவண்ணத்திலிருந்து பளிச்சிட்டிருக்கும்...! Anyway, Hats Off to You Vasu Sir !

ஒரு அருமையான படப்பிடிப்புக் கட்டுரையில் எத்தனை சிறப்பம்சங்களை வழங்கியிருக்கிறீர்கள்...

- தங்கள் ஊரான கடலூர் குறித்த ஒரு மினி Factfile

- வெளிப்புறப் படப்பிடிப்பை தங்களது வருணனையில் எங்களையும் நேரிலேயே பார்க்கவைத்தவிதம்

- அசத்தல் ஸ்டில்ஸ்

- நடிகர் திலகத்தின் எளிமை, பொதுஜனத்தொடர்பு, விளம்பரம்தேடா கொடைக்கரம், நகைச்சுவை உணர்வு போன்ற அவரது அளப்பரிய நற்பண்புகளுக்கு சிறந்த உதாரணங்கள்

- ரசிகப்பிள்ளைகளிடம் அவர் காட்டிய பாசம்-பரிவு

- நண்பர்களிடம் நல்லுறவாக அவர் பேணிய நட்புறவு

என ஒரு மாபெரும் கதாநாயகனுடைய வெளிப்புறப் படப்பிடிப்புக் கட்டுரை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இக்கட்டுரை மூலம் இலக்கணத்தை வகுத்துவிட்டீர்கள். உண்மையைச் சொல்கிறன், நானும் நடிகர் திலகத்தின் படப்பிடிப்புக் கட்டுரைகள் பலவற்றை, பல பிரபல சினிமா பத்திரிகைகளில் பல நிருபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் எழுதியவற்றையெல்லாம் படித்திருக்கிறேன். அந்த அனைத்து கட்டுரைகளையும் தாங்கள் எழுதிய இந்தப் படப்பிடிப்புக் கட்டுரை தூக்கி சாப்பிட்டுவிட்டது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பார்த்த "பாதுகாப்பு" படப்பிடிப்பை, அந்த அனுவங்களை, 51வது வயதில் பாதுகாத்துத்தரும் தாங்கள், தங்கள் குடும்பமும், நட்பும் சூழந்து செழித்தோங்க, பல்லாண்டு பல்லாண்டு காலம், இறைவனின்-இதயதெய்வத்தின் அருள் என்ற "பாதுகாப்பு"டன் வளமாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் !

["பாதுகாப்பு" மெகா ஆல்பம் வழக்கம்போல் மிக அருமை !]

ஒரு மினி நகைச்சுவை:
["நம் நாடு" விளம்பரத்தை நமது திரியில் பதிவிடும்போது, யாரேனும் ஏதேனும் சொல்வார்களோ என்ற ஒருவித தயக்கத்துடன்தான் பதிவிட்டேன். ஆனால் வாசுதேவன் ஆகிய தாங்கள் இருக்க எனக்கென்ன கவலை?! உடனேதான் நீங்கள் எனக்கு "பாதுகாப்பு" அளித்துவிட்டீர்களே !!!]

பாசத்துடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
27th November 2011, 10:33 PM
வாசுதேவன் சார்,

பாதுகாப்பு ஷூட்டிங் பற்றிய நினைவலைகள் அருமை! தாங்கள் 9 வயதில் பார்த்ததை ஏதோ நேற்று நடந்தது போல் அழகாக விவரித்துள்ளீர்கள்!!!

மிக்க நன்றி!

pammalar
28th November 2011, 03:26 AM
டியர் mr_karthik,

நமது வாசு சாருக்கு தாங்கள் பதிவிட்ட பாராட்டுப்பதிவில், தங்களது "பாதுகாப்பு" நினைவுகளையும், அக்காவியம் குறித்த தங்களது கண்ணோட்டத்தையும் மிக அழகுற அளித்துள்ளீர்கள் ! தங்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th November 2011, 03:53 AM
Dear goldstar,

Thanks for your whole-hearted wishes & compliments !

Regards,
Pammalar.

pammalar
28th November 2011, 04:09 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

பாதுகாப்பு

[27.11.1970 - 27.11.2011] : 42வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5111-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th November 2011, 04:22 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

அண்ணன் ஒரு கோயில்

[10.11.1977 - 10.11.2011] : 35வது உதயதினம்

சாதனைச் செப்பேடுகள்

'தீபாவளி முதல்' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5100-1.jpg


'தீபாவளி முதல்' விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5110-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 10.11.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5095-1.jpg


'NOW RUNNING SUCCESSFULLY' Ad
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5101-1.jpg


'வெற்றி நடைபோடுகிறது' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5104-1.jpg


'குடும்ப சித்திரம்...சிறந்த சித்திரம்' பாராட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5103-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி (திருச்சி) : 27.11.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5097-1.jpg


95வது நாளன்று கொடுக்கப்பட்ட விளம்பரம் : தினத்தந்தி : 12.2.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5098-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 17.2.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5105-1.jpg

தொடரும்....

பக்தியுடன்,
பம்மலார்.

NOV
28th November 2011, 09:56 AM
Parasakthi intro scene IN COLOR!


http://www.youtube.com/watch?v=vVX40wjio3I

vasudevan31355
28th November 2011, 10:12 AM
முத்தான முரளி சார் அவர்களுக்கு,

தங்களுடைய அன்பு பாராட்டுக்களுக்கு என் தலைவணங்கிய கோடானு கோடி நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன். நடிகர் திலகம் என்ற சாகரத்தில் மூழ்கி முத்துக்கள் எடுத்த தங்களை போன்ற பழுத்த அனுபவசாலிகளின் அன்புக்குப் பாத்திரமானது நான் செய்த பெரும் பாக்கியம். தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனமகிழ்வான நன்றிகளை மறுபடி மறுபடி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th November 2011, 10:21 AM
அன்பு கார்த்திக் சார்,

தங்கள் உயரிய பாராட்டுதல்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

பாதுகாப்பு படத்தைப் பற்றி ஒரு அற்புதமான ஆய்வையே நடத்தி அசத்தலான பதிவு அளித்து விட்டீர்கள். அதற்காக என் உளப்பூர்வமான பாராட்டுதல்கள்.

நடிகர் திலகத்தின் சாதனைகளை மறைக்கத் துடிக்கும் சில அரைவேக்காட்டு இணையதளங்களின் வலைப்பூக்களின் மண்டூகங்களுக்கு பம்மலாரின் விலைமதிப்பில்லா ஆவணங்கள் மூலமும், உங்கள் கைதேர்ந்த எழுத்து நடையின் மூலமும் சாட்டையடிகளாக பதிலடிகள் கொடுத்து நம் ஹப்பிற்கும், நடிகர் திலகத்தின் பெயருக்கும் அழியாப் புகழைத் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை போல நடிகர் திலகத்தின் திரைப் படங்களின் விஷயங்கள் அனைத்தையும் finger tip-இல் வைத்துக் கொண்டு அவ்வளவையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதற்கும் நாங்கள் உங்களுக்கு காலமெல்லாம் நன்றி கூறினாலும் போதாது. அளவிடற்கரிய தங்கள் சேவைகளை நினைத்து மனம் பெருமிதம் கொள்கிறது.

தங்கள் அற்புத சேவைகளுக்காவும், தாங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதனாலும் தங்களுக்காக கீழே நான் பதிவிட்டுள்ள புகைப்படம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் அன்பு நன்றிகளை தெரிவிக்கும் வண்ணமாகவும் தாங்கள் இந்த அற்புதப் புகைப் படத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன். நன்றிகள் சார்!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan099.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th November 2011, 10:32 AM
அன்பு ராகவேந்திரன் சார்!

தாங்கள் கடலூரில் பிறக்கவில்லையே என்ற மனக்குறை எனக்கு உங்களிடம் பழகிய நாட்களில் இருந்தே உண்டு. ஏனென்றால் நான் எப்போதும் எங்கள் அன்பு ரசிகவேந்தரின் அருகிலேயே இருந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடிக் கொண்டிருக்கலாமல்லவா ?... அதனால்தான்.

தங்களின் 'பாதுகாப்பு' பற்றிய பாராட்டுக்கு என் இதய பூர்வமான ஆத்மார்த்தமான நன்றிகள் சார்!

தங்களுடைய பாதுகாப்பு பற்றிய கருத்தும்,என்னுடைய கருத்தும் 100% ஒத்துப் போகிறது. பாதுகாப்பு பற்றிய நினைவலைகள் இரண்டு நாட்களாக என்னை வாட்டி எடுத்து விட்டது. தூக்கத்திலும் கூட படகுகள், நடிகர்திலகம், ஷூட்டிங் நடந்த ஆற்றோர கிராமங்கள்... என்று ஒரே பாதுகாப்பு பற்றிய கனவுகள் தான்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th November 2011, 10:37 AM
டியர் சதீஷ் சார்,

தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கும், உயரிய உள்ளத்திற்கும் என் பணிவான நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th November 2011, 10:50 AM
அன்பு பம்மலார் சார்,

நான் என்ன செய்துவிட்டேன் என்று இவ்வளவு நீள்பதிவுப் ...................... பாராட்டு?... இந்தக் குருவி தலையில் பலாப்பழத்தை அல்லவா வைத்துவிட்டீர்கள். தாங்குமா?...தங்கள் அன்பு வலைக்குள் சிக்குண்டு திக்குமுக்காடித் தவிக்கிறது இந்த சின்னஞ்சிறு குருவி. தங்கள் அன்புக்கும், சகோதர பாசத்திற்கும் பார் உள்ளவரை பாசக்கடன் பட்டவனாகிறேன். 'அன்பு' என்ற மூன்றெழுத்தின் மூலம் 'நன்றி' என்ற மூன்றெழுத்தை தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இப்படிப்பட்ட சகோதரர்களையும், நல்லிதயங்களையும் எனக்களித்த இறைவனுக்கும், இறைவனுக்கும் மேலான நம் இறைவனாருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th November 2011, 10:53 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

உங்கள் அழகான பாராட்டுக்கு என் அன்பான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th November 2011, 11:29 AM
அன்பு பம்மலார் சார்,

'சிவந்த மண்' பொக்கிஷப் புதையல் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கிறது. எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

பேசும் படம் நவம்பர் 1969 இதழின் அட்டைப்படம் நடிகர் திலகம் அவர்களின் அழகான ஆர்ட் வடிவிலான போஸில் பொன்னென தகிக்கிறது. உண்மையாகவே பொன்னுக்கும் மேலான பொக்கிஷம் தான் அது. அதை அளித்த பொன் மனம் கொண்ட தங்களுக்கு பொன்னான நன்றிகள்.

சிவந்த மண் பற்றிய தென்னகம் பத்திரிக்கையின் விமர்சனம் படு ஜோர். நான்கு சிறு பகுதிகளாகப் பிரித்து நடிகர் திலகத்தின் அபார நடிப்புத் திறமையை புகழ்ந்திருப்பது உவகை அளிக்கிறது. 'உலக நடிகர்களுக்கு ஒரு அறைகூவல். தமிழன் பெருமைப்படலாம்' என்பதில் மட்டும் ஒரு சிறு திருத்தம். தமிழன் மட்டுமல்ல... இந்தியன் மட்டுமல்ல...உலகமே பெருமைப்படலாம் என்று போட்டிருக்க வேண்டும். அற்புதமான அரிய காவிய விமர்சனம் அளித்த காவிய நாயகரே! அதற்கும் மனமார்ந்த நன்றி!

என்னுடைய Favourite movie-யான 'பாதுகாப்பு' காவியத்தின் முதல் வெளியீட்டு விளம்பரத்தை விளம்பரமில்லாமல்(சத்தமில்லாமல்) வெளியிட்டு இன்ப அதிர்ச்சியூட்டி விட்டீர்கள். உங்கள் பாராட்டுப் பதிவிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த அற்புத ஆவணம். அதற்காக என் சிறப்பு நன்றிகள்.

நடிகர் திலகத்தின் 'அண்ணன் ஒரு கோயில்' வெளியீட்டு மற்றும் சாதனை விளம்பரக் கட்டிங்குகள் விலைமதிப்பற்றவை. அதுவும் 95-ஆவது நாள் கட்டிங்கையும் கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை போல் இருக்கிறது. ம்........எங்கள் ஆவணப் பொக்கிஷம் ஆயிற்றே! பம்மலாரா! கொக்கா! தங்கள் அபார உழைப்புக்கு எனது ஒரு சிவந்தமண் ராயல் சல்யூட்...

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
28th November 2011, 02:31 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

பாதுகாப்பு வெளியீட்டு தினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள 'பாதுகாப்பு' திரைப்படத்தின் ஷூட்டிங் பற்றிய நினைவலைகள் மிக மிக அருமை. நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில், நாங்களே அங்கு நேரில் இருந்து கண்முன்னே கண்டு களித்தது போல இருந்தது.

உங்கள் சுவாரஸ்யக்கட்டுரையின் இடையிடையே இணைத்திருந்த நிழற்ப்படங்கள் அருமை. அதுபோலவே படத்தின் ஸ்டில்களும் நன்றாக உள்ளன. சுவையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

Thank you Vasudevan sir.

mr_karthik
28th November 2011, 04:05 PM
அன்புள்ள பம்மலார் சார்,

ஆர்ப்பாட்டமான 'ஆலயமணி', சிறப்புமிகு 'சிவந்த மண்' இவற்றின் ஆவணங்கள் எனும் அசைக்கமுடியாத ஆதாரப் பொக்கிஷக்குவியலைத்தொடர்ந்து, அருமையும் பெருமையும் மிக்க 'அண்ணன் ஒரு கோயில்' விளம்பர ஆதாரங்கள் என்னும் பீரங்கியைக்கொண்டு இறக்கியிருக்கிறீர்கள்.

ஒன்பது விளம்பரங்களும் ஒவ்வொன்றும் அற்புதம். அதிலும் 100வது நாள் விளம்பரம் கொள்ளை அழகு. தங்கப்பதக்கம் பட 100வது நாள் விளம்பர டிசைன் செய்தவர் இப்படத்தின்போது சிவாஜி புரொடக்ஷன்ஸில் இல்லையென்று நினைக்கிறேன். இருந்திருந்தால் நம்முடைய, குறிப்பாக என்னுடைய சாபங்களை வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பார். (100-வதுநாள் விளம்பரத்தில் அத்தனை திரையரங்குகளின் பெயர்களும் பளிச்சென்று இருக்கின்றன).

இவற்றை அள்ளித்தந்த தங்களுக்கு..... (என்ன சொல்வது? நன்றி சொல்லும் நிலையையெல்லாம் கடந்து எங்கோ உயரத்துக்குப் போய்விட்டீர்களே).

'நம்நாடு' விளம்பரத்தைப் பதித்ததில் மகிழ்ச்சியே. சென்ற பக்கத்தில் நான் சொல்லியிருந்தேன். பேசும் படம் அட்டையில் 'சிவந்த மண்' வண்ண விளம்பரமும், உள்பக்கத்தில் 'போட்டிப்படம்' கருப்பு வெள்ளையிலும் வந்திருந்தது என்று. அதை உறுதிப்படுத்தும் வண்ணம் இரண்டையும் வெளியிட்டு, 'கார்த்திக் (சிவப்பாயிருப்பவன்) பொய் சொல்ல மாட்டான்' என்பதை உறுதி செய்து விட்டீர்கள். அதற்கும் ஸ்பெஷல் நன்றிகள். (மக்கள் திலகத்திடம் நான் விரும்பும் படங்களில் நம்நாடும் ஒன்று. டி.வி.டி.யே வைத்திருக்கிறேன்).

தங்கள் தன்னிகரில்லாத் தொண்டுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப்போகிறோம்?. நீங்கள் 2000 பதிவுகளைக் கடந்ததற்கு வாசுதேவன் ஒரு பெட்டி நிறைய தங்கக்காசுகளை தந்தார். ஆனால் நீங்கள் அள்ளித் தந்துகொண்டிருக்கும் பொக்கிஷங்களுக்கு முன் அந்தத் தங்கக் காசுகள் ஒண்ணுமேயில்லை. இதுதான் உண்மை.

mr_karthik
28th November 2011, 04:27 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'பாதுகாப்பு' பற்றிய பதிவைப் பாராட்டியதற்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்டது போல, நடிகர்திலகத்தின் சாதனைகளை ஆதாரங்களோடு தந்து, அவரைக்குறை சொல்வோரை தெளிவடையச்செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் அதற்கு போதுமான வசதிகள் இல்லாமலிருந்தது. இப்போது அமுத சுரபியாக, ஆர்ப்பரித்துக்கொட்டும் நயகராவாக நமது பம்மலார் வந்ததும் அதற்கு வசதியாகப்போய் விட்டது. நமது திரியின் இணைப்பைக்கொடுக்க, இப்போது ஏராளமானோர் நமது திரியை விசிட் செய்து உண்மையுணர்ந்து (சிலர் மூக்குடைபட்டு) செல்கிறார்கள்.

நீங்கள் அன்புப்பரிசாக அளித்த 'என் தம்பி' சாட்டையடி ஸ்டில் மிக மிக அருமை. இதற்கு இன்னும் ஒரு படி மேலே போய், முன்பு நீங்கள் அளித்த சிவந்த மண் ஸ்டில்லில் அரபு உடையில் ஒரு கையில் சாட்டை, இன்னொரு கையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் ஸ்டில்லும் (ஸ்டைலும்) அழகு.

மிக்க நன்றி.

KCSHEKAR
28th November 2011, 04:28 PM
டியர் கார்த்திக் சார், பாதுகாப்பு படத்தைப் பற்றி தங்களது அலசல் கட்டுரை அருமை.

KCSHEKAR
28th November 2011, 04:30 PM
டியர் பம்மலார் சார், தங்களுடைய நவம்பர் திரைமலர்களில் சிவந்த மண், பாதுகாப்பு - விளம்பரங்கள் மற்றும் அதுகுறித்த பொக்கிஷ ஆவண்ங்கள் அருமை.

pammalar
28th November 2011, 08:35 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் சரமாரியான பாராட்டுதல்களுக்கு எனது சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th November 2011, 08:43 PM
டியர் mr_karthik,

தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து தாங்கள் பொழியும் பாராட்டு மழைக்கு எனது பாசமான-பணிவான நன்றிகள் !

எளியவனான என்னைப் பாராட்டி தாங்கள் பதிவிடும் ஒவ்வொரு பாராட்டுப்பதிவைக் கண்டதும் நான் உணர்ச்சிப்பிழம்பாகி விடுகிறேன். தங்களின் பெரியமனதுக்கும், பெருந்தன்மைக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

இதயத்தின் அடித்தளத்திலிருந்து தங்களைப் போன்றவர்கள் எனக்கு அளிக்கும் இதயபூர்வமான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், ஆசிகளும் நான் பெறும் பெரும் கைம்மாறு. அதற்கு ஈடு-இணை ஏது !

எல்லாப் புகழும் நமது இதயதெய்வத்துக்கே !!!

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
28th November 2011, 09:08 PM
டியர் mr_karthik,

அடியேன், '"நம் நாடு" விளம்பரத்தை பதித்ததில் மகிழ்ச்சியே' என தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கு, தங்களுக்கு எனது கனிவான நன்றி !

பண்பாளரும், நடிகர் திலகத்தின் பக்தருமாகிய தாங்கள், மக்கள் திலகத்தின் திரைப்படத்தையும் சிலாகித்து கூறியிருப்பது தங்களின் பரந்த, திறந்த மனதைக் காட்டுகிறது. நமது அன்புள்ளங்களில் பெரும்பான்மையோர் எல்லோரிடத்திலும் உள்ள சிறந்த அம்சங்களை பாராட்டும் Open Mind உள்ளவர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

"நம் நாடு" திரைப்படத்தை குறுந்தகடு(VCD) வடிவில் நானும் வைத்திருக்கிறேன். எனக்கும் மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் திரைப்படம் அது. உட்கார்ந்தால் மூன்று மணி நேரம் போவதே தெரியாது, அவ்வளவு விறுவிறுப்பு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th November 2011, 09:50 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

அண்ணன் ஒரு கோயில்

[10.11.1977 - 10.11.2011] : 35வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AOKFilmReviewAV1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AOKFilmReviewAV2.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
29th November 2011, 01:51 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

பெம்புடு கொடுகு (தெலுங்கு)

[11.11.1953 - 11.11.2011] : 59வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5114-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th November 2011, 02:09 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

செல்வம்

[11.11.1966 - 11.11.2011] : 46வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : குமுதம் : 1966
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5115-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th November 2011, 03:26 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

செல்வம்

[11.11.1966 - 11.11.2011] : 46வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

நடிகர் திலகம் பற்றி அவரது ஆருயிர் நண்பர் - "செல்வம்" தயாரிப்பாளர் திரு.வி.கே.ஆர்.

வரலாற்று ஆவணம் : கல்கி : 20.4.1997
['கல்கி' வார இதழில் விகேஆர் எழுதிய 'தேரோட்டம்' தொடரிலிருந்து...]

முதல் இரண்டு பக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5116-1.jpg


முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5117-1.jpg


இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5118-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5119-1.jpg
[நடிகர் திலகம் குறித்து விகேஆர் கூறியவை மூன்று பக்கங்களில் வெளிவந்தது.]

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
29th November 2011, 07:23 AM
அன்பு பம்மலார் சார்,

அண்ணன் ஒரு கோயில் ஆனந்த விகடனின் விமர்சனம் ஆனந்தம். ஒருசில குறைகளை விகடன் சுட்டிக் காட்டியிருப்பது சரியே. (பொதுவாகவே விஜயன் இயக்கம் என்றால் அனாவசிய சீன்கள் எதுவும் இல்லாமல் விகடன் விமர்சனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது போல வெகு நேர்த்தியாக இருக்கும். எனக்கு மிக மிகப் பிடித்த இயக்குனர்களில் விஜயனும் ஒருவர்).

'பெம்புடு கொடுகு' நிழற்படம் பேரானந்தம்.

'செல்வம்' குமுதம் இதழின் முதல் வெளியீட்டு விளம்பரம் ஆவணச் செல்வத்தின் அரிய செல்வம்.

கல்கி இதழில் திரு.வி.கே.ஆர்.அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்துள்ள பேட்டி கற்கண்டு. மனதில் கள்ளம் கபடம் இல்லாமல் அவர் அளித்திருக்கும் பேட்டி அற்புதம்.

அருமையான பதிவுகளை அற்புதமாய் அளித்ததற்கு ஆனந்தமயமான நன்றிகள்.

(தலைவரின் busy Schedule -ஐ நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. அதையும் மீறி ஒரு நாளைக்கு இருபது மணி நேரங்களுக்கு மேல் அவர் உழைத்ததாக தமிழ்வாணன் அவர்கள் நடிகர்திலகத்தைப் பற்றி மிகத் தெளிவாக எழுதி உள்ளார். 1972- களில் தமிழ்த் திரைப்பட உலகின் மூன்று பங்கு வியாபாரத்தில் இரண்டு பங்கு வியாபாரம் நடிகர்திலகத்தை வைத்தே நடந்ததாகவும் எழுதியுள்ளார். இது புரியாத சில அப்பாவிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக நானும் ஆவணச் செம்மல் ஆகி விடுகிறேன் பேர்வழி என்று ரொம்ப நாளாக தூங்கி வழியும் வேறொரு திரியில் சம்பந்தமே இல்லாமல் எங்கோ கிடைத்த ஸ்டாம்ப் சைஸ் கட்டிங் சிலவற்றை copy, paste செய்து,சாதனை விளம்பரம் என்று டயத்தை வேஸ்ட் செய்து கொண்டிருக்கின்றனர். ஐயோ பாவம்! இவர்கள் சாதனைகளை தகுந்த ஆதாரங்களுடன், தெளிவாக, உண்மையான விளக்கத்துடன் போடத் தெரிந்து கொள்ள நம் பம்மலார் அவர்களுக்கு ட்யூஷன் கொஞ்சம் எடுத்தால் நல்லது.)

திரு.வி.கே.ஆர். அவர்கள் கூறியுள்ளது போல சோதனைகளினால் துவண்டவர்களை துயர்களில் இருந்து மீள வைத்ததும் எங்கள் அன்பு அண்ணன் நடிகர் திலகம் தான்.

தன் தன்னிகரற்ற சாதனைகளினால் அனைத்து எதிரிகளையும் மிரள வைத்ததும் எங்கள் அன்பு அண்ணன் நடிகர் திலகம் தான்.

அன்புடன்,
வாசுதேவன்.

goldstar
29th November 2011, 08:00 AM
அன்பு பம்மலார் சார்,



1972- களில் தமிழ்த் திரைப்பட உலகின் மூன்று பங்கு வியாபாரத்தில் இரண்டு பங்கு வியாபாரம் நடிகர்திலகத்தை வைத்தே நடந்ததாகவும் எழுதியுள்ளார். இது புரியாத சில அப்பாவிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக நானும் ஆவணச் செம்மல் ஆகி விடுகிறேன் பேர்வழி என்று ரொம்ப நாளாக தூங்கி வழியும் வேறொரு திரியில் சம்பந்தமே இல்லாமல் எங்கோ கிடைத்த ஸ்டாம்ப் சைஸ் கட்டிங் சிலவற்றை copy, paste செய்து,சாதனை விளம்பரம் என்று டயத்தை வேஸ்ட் செய்து கொண்டிருக்கின்றனர். ஐயோ பாவம்! இவர்கள் சாதனைகளை தகுந்த ஆதாரங்களுடன், தெளிவாக, உண்மையான விளக்கத்துடன் போடத் தெரிந்து கொள்ள நம் பம்மலார் அவர்களுக்கு ட்யூஷன் கொஞ்சம் எடுத்தால் நல்லது.)


100% true Vasu sir.

vasudevan31355
29th November 2011, 08:19 AM
'உயர்ந்த மனிதன்' (29-11-1968) உயரிய 44-ஆவது ஆண்டுத் துவக்க மெகா மேளா.

உலகம் வியந்த 'உயர்ந்த மனிதன்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/uyarntha-manithan-dvd.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um1.png?t=1322535219

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um4.png?t=1322535295

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um5.png?t=1322535397

http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/5.jpg

http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/2.jpg

http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/3.jpg

http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/6.jpg

http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um8.png?t=1322535545


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
29th November 2011, 08:57 AM
எங்கள் உயர்ந்த மனிதரின் 125-ஆவது திரைக்காவியம்.

http://im.in.com/connect/images/profile/b_profile5/Uyarntha_Manithan_300.jpg

http://tamilvip.com/media_thumbs/3400.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-184107.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-184175.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-184467.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-185638.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-187075.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
29th November 2011, 09:25 AM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/125.jpg

'உயர்ந்த மனிதன்' பாடல்கள் வீடியோவாக.

"நாளை இந்த வேளை பார்த்து"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iW19JBjKWjA

"என் கேள்விக்கென்ன பதில்"....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xPofOU6YGvI

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
29th November 2011, 10:00 AM
'உயர்ந்த மனிதனி'ல் பட்டையைக் கிளப்பும் 'பத்மஸ்ரீ' யின் உயர்ந்த, உன்னதமான நடிப்பில் முத்திரை பதித்த காட்சி .


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NWnTa0rDF94

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
29th November 2011, 10:45 AM
'உயர்ந்த மனிதன்' சிறப்புப் புகைப்படம்.

http://www.freewebs.com/pammalar/08.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
29th November 2011, 11:55 AM
'உயர்ந்த மனிதன்' இதயக் கடவுளின் அபூர்வ அசத்தல் நிழற்படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_001392892.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_001595562.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_001600600.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_002294561.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_003329362.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_003363930.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_004007974.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_006651884.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
29th November 2011, 12:40 PM
டியர் பம்மலார் சார்,

அண்ணன் ஒரு கோவில் ஆனந்தவிகடன் விமர்சனம், போம்புடு பொடுகு நிழற்படம் மற்றும் செல்வம் திரைப்பட விளம்பரம் என்று பிரமாதபடுத்தி விட்டர்கள்.

நடிகர்திலகம் பற்றிய வி கே ராமசாமி அவர்களின் கல்கியில் வந்த பேட்டி அறிய ஒன்று! இதில் நடிகர்திலகத்தின் தொழில் பக்தி, வள்ளல் குணம் போன்றவற்றை அழகாக சொல்லிருந்தார், அதே வேளை அவர் தம்பி உட்பட பலபேர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நடிகர்திலகம் தான் தான் மீண்டு வர காரணம் சொல்லி இருக்கிறார்.நடிகர்திலகம் தன் கால்ஷீட், மற்றும் பணவிஷயங்களை தன் தம்பி சண்முகத்திடம் ஒப்படைத்தது போல இவரும் தன் தம்பியிடம் ஒப்படைத்தார். ஆனால் சண்முகம் அவர்களின் நேர்மை அனைவரும் அறிந்ததே, வீட்டில் உள்ள அனைவர் பெயரிலும் வங்கி கணக்கு இருந்தபோதும் இவர் பெயரில் கடைசிவரை கிடையாது. நடிகர்திலகம் அவர்களே சண்முகம் இல்லாவிட்டால் பல பேர் என்னை ஏமாற்றி இருப்பார்கள் என்று சொன்னதாக கேள்விபட்டிருக்கிறேன். வி கே ஆரின் தம்பி அவரை ஏமாற்றியதோடு இறுதி காலத்தில் வி கே ஆர் பெரும் கடன் சுமையோடு வாழ்த்தார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

Subramaniam Ramajayam
29th November 2011, 01:01 PM
undred percent true. NADIGARTHLAGAM was the busiest super star during 68 to 74-75 peakest being 72. we have had many personal visits during that period and by seven n the mornng NT ill be out for shootings instead of usual timngs. On the day of arrival from Europe tour of sivandamann shhotings I had the darsan of NT n a very close meeting in annallam lawn,with select group of fans, steam of producers and personaliies were on waiting to fix up dates with chinnavar and NT was closely watching the scene. what a a magnificant moment for me that time. really a great personality i have seen in my life.
VKR artcle about NT was one if the thing. i have missed earler. GOOD he has honestly admtted the facts.
vasudevan doing clourful job regularly. padukappu essay ver well designed.

KCSHEKAR
29th November 2011, 03:19 PM
V.k.r. அவர்களின் பேட்டி உண்மையிலேயே நெஞ்சைத் தொடுவதாக, நடிகர்திலகத்தின் மற்றொரு பரிமாணத்தை வெளியுலகிற்கு பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது. பதிவிட்ட பம்மலாருக்கு நன்றிகள்.

KCSHEKAR
29th November 2011, 03:21 PM
வாசுதேவன் சார் உயர்ந்த மனிதன் நிழற்படங்கள் மற்றும் பாடல் காட்சி இணைப்புகள் சூப்பர்.

vasudevan31355
29th November 2011, 06:10 PM
'படிக்காதவன்' திரைப்படத்தின் "இப்பொழுது நடைபெறுகிறது" 'தேவி' வார இதழ் விளம்பரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_2-1.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
29th November 2011, 08:14 PM
தினகரன் 16-9-2011 வெள்ளி மலரில் திரு பிலிம்நியூஸ்ஆனந்தன் அவர்கள் எழுதும் 'ஓல்ட் ஈஸ் கோல்ட்' தொடரில் 'சிவந்த மண்' திரைப்படத்தின் செயற்கைக் குளம் பற்றிய ஒரு செய்திக் குறிப்பு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0001-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG-2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
29th November 2011, 08:32 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

செல்வம்

[11.11.1966 - 11.11.2011] : 46வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

சிறப்பு வண்ணப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Selvam1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th November 2011, 09:40 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

படிக்காதவன்

[11.11.1985 - 11.11.2011] : 27வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 11.11.1985
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5124-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5120-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th November 2011, 12:27 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

படிக்காதவன்

[11.11.1985 - 11.11.2011] : 27வது ஆரம்பதினம்

சாதனைச் செப்பேடு

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 18.2.1986
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5136-1.jpg

குறிப்பு:
மெகாஹிட் வெள்ளிவிழாக்காவியமான "படிக்காதவன்", சென்னையில் 'பால அபிராமி' திரையரங்கிலும், மதுரையில் 'சென்டரல் சினிமா' திரையரங்கிலும் வெள்ளிவிழாக் கண்டது. வெள்ளிவிழா விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே இடுகை செய்கிறேன். சென்னை தவிர, மதுரை 'சென்ட்ரல் சினிமா'விலும், கோவை 'தானம்' திரையரங்கிலும் இக்காவியம் 100 நாட்களைக் கடந்தது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th November 2011, 02:20 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

படிக்காதவன்

[11.11.1985 - 11.11.2011] : 27வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

வெள்ளிவிழா ரிப்போர்ட் : ஜெமினி சினிமா : 1986
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5139-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th November 2011, 03:10 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

படிக்காதவன்

[11.11.1985 - 11.11.2011] : 27வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

நடிகர் திலகத்துக்கு ஒரு மடல் வரைகிறார் இயக்குனர் ராஜசேகர்

வரலாற்று ஆவணம் : பொம்மை : 1-15 செப்டம்பர் 1985
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PadikkaadhavanArticle1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PadikkaadhavanArticle2-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th November 2011, 03:43 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து பொங்கிவரும் பாராட்டுப்புனலுக்கு எனது நன்றி முத்தாரங்கள் !

"உயர்ந்த மனிதன்" பதிவுகள் அதகளம்; அட்டகாசம்; அற்புதம் !

'தேவி' வார இதழில் வெளிவந்த "படிக்காதவன்" முதல் வெளியீட்டு விளம்பரம் அரிய ஆவணப்பொக்கிஷம் !

'தினகரன் வெள்ளி மலர்' இதழில், பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் அளித்த "சிவந்த மண்" தகவல் அருமை !

அசுரப்பதிவுகளை அள்ளி அளித்த தங்களுக்கு எனது அசத்தல் நன்றிகள் !

Dear goldstar,

Thanks for your compliments !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th November 2011, 03:52 AM
டியர் ஜேயார் சார்,

தங்களின் பாராட்டுக்கும், தாங்கள் அளித்த அருமையான மேலதிக விவரங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

Dear Ramajayam Sir,

Thanks for your compliments and for the extra info.

டியர் சந்திரசேகரன் சார்,

தாங்கள் அளித்த பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th November 2011, 03:58 AM
விரைவில் அல்லது வரும் வாரத்தில், மதுரை 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில், புதுமைத் திலகத்தின் "புதிய பறவை" சிறகடிக்க வருகிறது !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
30th November 2011, 07:48 AM
டியர் ராமஜயம் சார்,

தங்கள் உயரிய உன்னத பாராட்டுக்கு என் பணிவான நன்றிகள். நடிகர் திலகத்தை தாங்கள் தரிசனம் செய்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளது அழகு.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
30th November 2011, 07:49 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது உயர்ந்த மனிதன் பதிவு பற்றிய பாராட்டிற்கு என்னுடைய உச்சமான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
30th November 2011, 08:05 AM
அன்பு பம்மலார் சார்,

கலைச்செல்வத்தின் வண்ணப் புகைப்படம் ஆவணச் செல்வத்தின் அற்புதப் பரிசு.

'படிக்காதவன்' நாளிதழ் விளம்பரங்கள் கலக்குகின்றன.

'ஜெமினி சினிமா' வில் வெளியான படிக்காதவனின் வெள்ளிவிழா ரிப்போர்ட் அருமை!

நடிகர் திலகத்துக்கு ராஜசேகர் வரைந்த மடல் ஒரு சிகர மடல். "நீங்கள் எட்டிப்பிடித்த உயரத்தை இனி எவரும் எட்டிக் கூடப் பார்க்க முடியாது"
என்று அவர் கூறியிருப்பது சத்தியமான வார்த்தை. நடிகர்திலகத்தின்பால் அவர் கொண்டிருந்த அன்பும், பாசமும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. பிரமாதமாக முன் வரிசையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அந்த இளஞ்சிங்கம் இளவயதிலேயே காலனுக்கு பலியானது கொடுமை!

மொத்தத்தில் தங்களின் பதிவுகள் அறுசுவை விருந்து. பதிவுகளுக்கு பரிபூரணமான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
30th November 2011, 02:54 PM
Anbulla Pammalar sir,

I am much impressed with your posts carrying...

'Annan Oru Koyil' vikatan review....
'Selvam' advertisement....
V.K.R's wonderful rememberances about NT's help to recover from his debts, which includes about NT's wonderful charector on maintaining friendship.....
'PadikkAthavan' ads and Bommai report about its Silver Jubilee function.... and
The wonderful essay of Director Rajasekhar.

Hats off to you sir.

mr_karthik
30th November 2011, 03:04 PM
Anbulla Vasudevan sir,

Your posts with the outstanding face expressions of NT in 'Uyarndha Manidhan' are just awsome.

Your post with Film News Anandan sir's nerration about the pond created in Vahini Studio for our beloved 'Sivandha Mann' is wonderful. (actually it was said in dialogues as river (Kaattaaru) . My humble openion is, Director Shreedhar spent (wasted..?) lot of amount for this kind of matters, which in noway helped for the success of the movie. Even without that artificial river, the movie would have succeeded because of NT).

Thank you Vasu sir for your posts.

parthasarathy
30th November 2011, 03:54 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தாங்கள் பதிவிட்டுள்ள 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' வரிசையில் இடம் பெற்றுள்ள "அந்த நாள் ஞாபகம்" பாடல் பற்றிய பதிவு பட்டையைக் கிளப்புகிறது. அருமையான சரளமான நடை. என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

பொதுவாகவே ஒரு புகழ் பெற்ற பாடலைப் பற்றி ஆய்வு செய்து எழுதும் போது அப்பாடலில் நடித்தவர் பெயரை ஒரு மரியதைக்காகக் குறிப்பிட்டு வைத்து அப்பாடலைப் பற்றி முழுமையாக அலசுவார்கள். ஆனால் நம் நடிகர் திலகம் விஷயத்தில் அவர் நடிப்பை முழுமையாக ஆய்வு செய்தால் தான் பாடலையே ஆய்வு செய்து ரசித்து எழுத முடியும்.அதை மிகப் பிரமாதமாக நீங்கள் கையாண்டுள்ள விதம் அருமை. மிகச் சிறப்பாக அவருடைய அசைவுகளை வர்ணித்துள்ளீர்கள். (பாடல் வரிகளையும் தான்) படிக்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி!

அன்பு பம்மலார் அவர்களை இத்திரியின் 'சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்துரைத்திருப்பது நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை. அதற்காக தங்களுக்கு என் அன்பு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அந்தப் பாடலின் வீடியோ பதிவையும் கண நேரத்தில், பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. டைமிங் கன கச்சிதம்.

நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சிகளை எழுதினால் மட்டுமே, நடிப்பைப் பற்றி பெரிதாக எழுத முடியும். அது தானே அவருடைய தனிச் சிறப்பு.

திரு. முரளி அவர்கள் கூறியது போல் பாதுகாப்பு பற்றிய தங்களுடைய கட்டுரை ஒரு லைவ் ரிலே மாதிரி தான் இருந்தது. தங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய ஞாபக சக்தி? மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப் படத்தின் "ஒரு நாள் நினைத்த காரியம்" பாடல் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல் எனலாம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
30th November 2011, 04:08 PM
பார்த்தசாரதி சார்,

உங்களின் ஆய்வுக்கட்டுரையான "அந்த நாள் ஞாபகம்" மிகவும் அருமையானதொரு ஆழமான சிந்தனைக் கட்டுரை.அதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முகபாவத்தைக் கையாண்டிருப்பார் நடிகர் திலகம் அவர்கள்!!!!

மிக நன்று.

Anm

அன்புள்ள திரு. Anm (தங்கள் பெயர்?) அவர்களே,

தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. இந்தப் பாடலில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முக பாவம் காட்டியதைக் கூட என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
30th November 2011, 04:30 PM
டியர் பார்த்தசாரதி சார்,

திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது எனது பேறு. தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கலக்கல் நெடுந்தொடரில், லேட்டஸ்ட் பதிவாக வெளிவந்துள்ள "உயர்ந்த மனிதன்" காவியப்பாடலான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடலின் அலசல் அசத்தலோ அசத்தல் ! நடிகர் திலகத்தின் மறைவுக்குப்பின் நடந்த ஒரு அஞ்சலிக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திரு.குமரி அனந்தன் பேசும் போது இந்தப்பாடல்காட்சியைக் குறிப்பிட்டு ஒரு வாசகம் சொன்னார். அது ஒரு வாசகமானாலும் திருவாசகம் போல் என் மனதில் நிலை பெற்றுவிட்டது. அப்படி அவர் என்னதான் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள்?, 'அந்த நாள் ஞாபகம்' பாடலைக் குறிப்பிட்டு. "இப்பாடலில் நடிகர்திலகத்தின் உடம்பில் ஓடுகின்ற நரம்பும் நடிக்கும், அவர் கையில் ஆடுகின்ற பிரம்பும் நடிக்கும்" என்றாரே பார்க்கலாம், அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.

மணியான பாடலைப் பற்றி மணிமணியாக தகவல்களை வழங்கி ஆய்வு செய்தமைக்காக தங்களுக்கு எனது பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களுடைய அன்பான பாராட்டுகளுக்கு என் நன்றிகள். இந்தக் கட்டுரையின் அடுத்த பாடலை விரைந்து பதிவிட உங்களைப் போன்றோரின் பாராட்டுகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
30th November 2011, 04:36 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,

சிறிது இடைவெளிக்குப்பின் உங்கள் 'காவியப்பாடல்கள்' சீரியலில் நீங்கள் ஆய்வு செய்திருக்கும் 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் விவரிப்பு மிக மிக அருமை. என்ன ஒரு முழுமையான ஆய்வு. (அதை உடனே ரெஃபர் செய்துகொள்ளும் வண்ணம் பாடல் காட்சியைப்பதிப்பித்த வாசுதேவருக்கு நன்றி).

நிச்சயம் இரு ஒரு சாகாவரம் பெற்ற பாடல்தான். ஏனென்றால் இப்பாடலில் பங்கேற்ற பலரே இப்பாடலைப்பற்றி விரிவாகப்பேசியிருக்கிறார்கள்.


அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வண்ணம் நீங்களும் மிக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.

நிச்சயம் இது காலங்களைக் கடந்த சாதனைப் பாடல்தான். அருமையாக திறனாய்வு செய்த தங்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களுடைய அன்பான பாராட்டுகளுக்கு என் நன்றிகள். இந்தக் கட்டுரையின் அடுத்த பாடலை விரைந்து பதிவிட உங்களைப் போன்றோரின் பாராட்டுகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
30th November 2011, 06:34 PM
அன்பு நண்பர்களே!

"ஆரூரான்" என்று நடிகர் திலகத்தால் செல்லமாக அழைக்கப்பட்ட 'கலைவித்தகர்' வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ் அவர்கள் எழுதிய 'கோட்டையும் கோடம்பாக்கமும்' என்ற நூலில் நடிகர் திலகம், திரு.எம்ஜியாரோடு தனக்கிருந்த போட்டியையும், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு இருந்தது போன்ற நம்பிக்கையான விசுவாசிகள் தனக்கில்லாதது குறித்து தன்னுடய மன வருத்தத்தையும், தன்னை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் எதிரி முகாமுக்குள் நுழைந்ததைக் குறித்தும், அரசியலில் தனக்கிருந்த நம்பிக்கையையும், இறுதியாக தன் ஆதங்கத்தையும்,மன விரக்தியையும் திரு.ஆரூர்தாஸ் அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருப்பதைப் படிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. அந்த மனம் திறந்த இருவருக்கிடையேயான உரையாடல் இதோ...

பக்கம் 1

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-3.jpg

பக்கம் 2

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-3.jpg

பக்கம் 3

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-2.jpg

பக்கம் 4

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-3.jpg

பக்கம் 5

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-5.jpg

பக்கம் 6

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-4.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
1st December 2011, 12:18 AM
NADIGAR THILAGAM'S CARRIER AND THE WAY HE HAS ATTRACTED BIG MASS WITHOUT ANY OTHER INFLUENCE IS TOTALL DFFERENT FROM OTHERS. NT FULLY GAINED FOLLOWERS INFLENCED B THE GREAT ACTING TALENT WHICH HAS LATER CONVERTED AS FOLLOWERS WHO ARE PREPRED TO SACRIFICE ANY THNG ABD EVERTHING.
TRUE THAT MGR AND DMK GROWN LIKE MADE FOR EACH OTHER, WHICH WAS PROVED LATER. IAM NOT COMING TO POLITCS.
ONE MORE THING BROTHER SHUNMUGAM WAS MORE THAN RMV IN DONG BUSINESS AND SAFEGARDING THE INTERST OF SIVAJI AND HIS FAML WCHICH ALL OF US KNOW VERWELL. HE HAS SUCCEEDDED TILL HIS LFETIME.
AFTER his demise no proper person to gude NT IN RIGHTWA, MY OBSERVATIONS.
NOT ALL THE MOVIES COMMERCIALL SUCCESS FOR BOTH OF THEM, ONLY PERCENTAGE DIFFERS.

RAGHAVENDRA
1st December 2011, 07:25 AM
Today, 1st December being World Aids Day, a short film on Aids Awareness with message from Nadigar Thilagam Sivaji Ganesan, Kamal Hassan and Prabhu.


http://www.youtube.com/watch?v=-bBQoiDEL_Y

sankara1970
1st December 2011, 11:06 AM
B&W padangalil athuvum lates 60s and early 70s il vanda padangalil-UM,KK and TM esp. kathal katchikal arumaiya irukkum

vasudevan31355
1st December 2011, 11:36 AM
நடிகர் திலகத்தின் டிசம்பர் மாத தேன்சுவை தீந்தமிழ்க் காவியங்கள்.

04-12-1953 - மனிதனும் மிருகமும்

06-12-1975 - பாட்டும் பரதமும்
http://vodimages.bigflicks.com/LImages/L_7709.jpg

07-12-1972 - நீதி
http://images.raaga.com/Catalog/CD/T/T0001733.jpg

07-12-1973 - மனிதரில் மாணிக்கம்
http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/166.jpg

08-12-1979 - வெற்றிக்கு ஒருவன்
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTLy5CuTBIbRvld4Lk-rG7_rCZJPLjiyXgEs0JTo49Yjb1Ti58-tTjxjec3Hw

09-12-1954 - எதிர்பாராதது

10-12-1965 - நீலவானம்
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRKPnc9nPhIPNLYXGYwAyZ_Tm-ks874_nZqDZOHk_Kiik7od8TfxcKTVVc98A

10-12-1982 - நெஞ்சங்கள்
http://en.600024.com/images/profile/movie/1982/nenjangal.jpg

10-12-1988 - புதிய வானம்
http://2.bp.blogspot.com/_ahyaQ6mE4g8/TQJZThgM3iI/AAAAAAAAABg/cX4FqaYSViM/s1600/Puthiya+Vaanam.jpg

12-12-1986 - மண்ணுக்குள் வைரம்
http://vodimages.bigflicks.com/LImages/L_13413.jpg

(தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
1st December 2011, 11:46 AM
நடிகர் திலகத்தின் டிசம்பர் மாத தேன்சுவை தீந்தமிழ்க் காவியங்கள் லிஸ்ட் தொடர்கிறது...

16-12-1978 - ஜஸ்டிஸ் கோபிநாத்
http://www.rajinikanth.com/rajini136.jpg

22-12-1973 - ராஜபார்ட் ரங்கதுரை
http://www.veenaimovies.com/images/movies/PI_RajapartRangadurai.jpg

23-12-1964 - பக்த ராமதாசு (தெலுங்கு) (கௌரவத் தோற்றம்)
http://cineradham.com/songs/1960-1969/images/Bhakta-Ramadasu-(1964).jpg

25-12-1976 - ரோஜாவின் ராஜா
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcThTTkmp4LP594c4k82VaRs3qKxcuu_W YbnzewoQYQ6ziwX3OHMKcP1_6ht

27-12-1952 - பணம்
http://images.raaga.com/Catalog/CD/T/T0001753.jpg

27-12-1957 - பாக்கியவதி

31-12-1960 - விடிவெள்ளி
http://tamillyrics.hosuronline.com/pictures/vidivelli_p_small.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
1st December 2011, 11:46 AM
Anbu Vasudevan sir,

(My Tamil converter is not working for few days, so recent posts are in English)

Thanks for publishing the article by Story & Dialogue writer Thiru. Aroordass, which in some places are not acceptable.

Once Director Muktha Srinivasan told in an interview that, when some producers jumped to the other side, many producers stood with NT such as Muktha, K.S.G., Balaji and gave many successful movies.

What Aroordass told (not even a single producer jumped from MGR side to NT’s side) cannot be accepted…..

1) He mentioned about P.S.Veerappa as after Alayamani and Andavan Kattalai he gone to MGR and produced Anandha Jyothi. True, but after that he came back and produced ‘Iru Dhuruvam’ with NT in 1970 when MGR was in DMK party and active in cine field.(Iru Dhuruvam was released on Pongal 1971, ran more than 50 days and met an average success).

2) Jeyaar Movies, PKV Sankaran & Arumugam, after producing ‘Puthiya Boomi’ in 1968, came to NT’s side and produced Enga Mama (1970), Gnana Oli (1972) and Mannavan Vandhaanadi (1975) and met success in all the three.

3) Every one know about TR Ramanna, who produced many films with MGR like Kulebghavali, Paasam, Periya Idathu Penn, Panakkara Kudumbam, Panam Padaiththavan, Parakkum Paavai etc., during early 60s, the jumped to Jaishankar (Nee), Ravichandran (Kumarippen, Naan, Mondrezuthu) and finally came to Nadigar Thilagam and produced Thanga Surangam, Sorkam and EnnaippOl Oruvan. (No need to forget that he is holder of the recorded land mark ‘Koondu Kili’)

4) Jayanthi Films thiru Kanagasabai, who was the producer of succeeded Maattukkra Velan and flopped Raman Thediya Seethai, came back to NT and produced Sivakamiyin Selvan, the remake of super hit Aradhana (hindi). Sivakamiyin Selavan ran more than 60 days in many centre and give normal profit to distributors.

5) AVM, after their Anbe Vaa, produced Uyarndha Manidhan with NT, infact both of them were hits.

6) Vijaya Vahini, after their Nam Nadu (1969), produced Vana Rani (1974) with NT.

7) The interesting thing is, even Sathya Movies produced a film ‘Puthiya Vaanam’ with NT, in later years.

Being a senior personality in cine field, thiru Aroordass should know and study all these things before he write something in his book.

HARISH2619
1st December 2011, 01:36 PM
திரு வாசுதேவன் சார்,
கடலூரில் நடிகர்திலத்தின் படப்பிடிப்பை பற்றிய தங்களின் கடல் போன்ற நீண்ட கட்டுரையை படித்து மனம் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கிறது,தங்களுக்கு கடலளவு நன்றிகள்.
திரு பம்மல் சார்,
தாங்கள் 2000 பதிவை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.தங்களின் 20000 ம் பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

திரு பார்த்தசாரதி சார்,
அந்த நாள் ஞாபகம் பாடல் ஆய்வு கட்டுரை அருமை,வாழ்த்துக்கள்.

parthasarathy
1st December 2011, 02:37 PM
திரு பார்த்தசாரதி சார்,
அந்த நாள் ஞாபகம் பாடல் ஆய்வு கட்டுரை அருமை,வாழ்த்துக்கள்.

அன்புள்ள திரு. ஹரீஷ் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
1st December 2011, 02:50 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

9. "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை"; படம்:- சிவந்த மண் (1969); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி; இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- ஸ்ரீதர்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் காஞ்சனா.

மறுபடியும் நடிகர் திலகம் இடம் பெறும் பாடல்களில், அவர் பாடுவதாக வராது போனாலும், அவரது தன்னிகரற்ற உடல் மொழியால், அனைவரின் கவனத்தையும், தன் மீதும் நிலை நிறுத்திய பாடல்.

படத்தின் நாயகன் பாரத் (நடிகர் திலகம்), தாய் நாட்டை மாற்றானிடம் விற்று விடத் துடிக்கும் சர்வாதிகார திவானிடமிருந்து (எம்.என்.நம்பியார்), தாய் நாட்டைக் காப்பாற்ற, அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து, அதற்காக வகுக்கும் பல திட்டங்களில் ஒன்றாக, அவனை ஒரு மேல் நாட்டு நடனக் காட்சிக்காக வரவழைத்து, அவனைக் கொல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பாடல்.

இந்தப் பாடலுக்குப் பல சிறப்புகள் உண்டு. இருப்பினும், முதன்மையானது - பாடல் முழுவதும் நிறைந்திருக்கும் அந்தப் பரபரப்பு மற்றும் சஸ்பென்ஸ். இத்தனைக்கும், பாடல் துவங்குவதற்கு முன்னர், நாயகன் நடிகர் திலகத்தை எம்.என். நம்பியாரிடம் அறிமுகப்படுத்தும்போது, நம்பியார் அவரது வலது கரத்திலுள்ள தழும்பைப் பார்த்து விடுவார். ஏற்கனவே ஒரு முறை இருவருக்கும் நடந்த சண்டையின் போது, நடிகர் திலகத்தின் கரத்திலுள்ள தழும்பைப் பார்த்திருப்பார். அதை வைத்து, அங்கு வந்திருப்பது விடுதலைக்காக தலை மறைவாக இருந்து, தன்னுடன் போர் புரியத் திட்டமிட்டிருக்கும் கும்பலின் தலைவன் பாரத் - அதாவது நடிகர் திலகம் தான் என்று தெரிந்து கொள்வார். மேலும், பாடல் துவங்கும்போது, நடிகர் திலகத்தின் கையிலுள்ள துப்பாக்கியையும் பார்த்து விடுவார். உடனே, தன்னுடைய கைத்துப்பாக்கியையும் எடுத்து மறைவாக வைத்துக் கொள்வார். ஆக, எதற்காக அந்த நடனத்தை ஆரம்பிக்கின்றார்களோ, அந்தத் திட்டம் துவக்கத்திலேயே தெரிந்து விடும். அந்த சஸ்பென்ஸ் முதலிலேயே உடைந்தும், அந்தப் பாடல் முழுவதும், கொஞ்சம் கூட தொய்வு ஏற்படா வண்ணம் எடுத்திருப்பார் இயக்குனர் ஸ்ரீதர். அதனால், இந்தப் பாடலின் ஆணிவேரான ஸ்ரீதரே இந்தப் பாடலின் முதல் நாயகன்.

இரண்டாவது, அரங்க வடிவமைப்பு. பங்களிப்பு - ஸ்ரீதரின் ஆஸ்தான கலை இயக்குனர் கங்கா. என்ன ஒரு கற்பனை வளம். எகிப்து நாட்டையே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அந்த பிரமிடுகளும், பிரமிக்க வைக்கக் கூடிய மற்ற அரங்குகளும், சுழலும் தட்டும்! பாடல் துவங்கும் போதே, களை கட்டத் துவங்கி விடும்.

மூன்றாவது, பாடல் வரிகள். மறுபடியும், ஒரு சூழ்நிலை அதற்கேற்றாற்போல் பார்க்கும் ஒவ்வொருவரையும், அந்தச் சூழலுடன் இணைத்துக் கொண்டுவிடும் வரிகள். சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல், தட்டித் தட்டி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள் - துடித்து எழுந்ததே, கொதித்து சிவந்ததே, கதை முடிக்க நினைத்ததே என்னும் போது, உடனே, அந்த வரிகளை சரியாக நம்பியார் புரிந்து கொள்வார். இப்படி பாடல் முழுவதும், சூழலுக்கேற்ற வரிகள். இனி ஒருவன்தான் பிறக்க வேண்டும் கவியரசுக்கு இணையாக - அது குதிரைக் கொம்புதான்!

இப்போது பாடியவர். எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் வாழ்க்கையில், அவருக்கு மிகப் பெரிய புகழ் சம்பாதித்துக் கொடுத்த பாடல். அதிலும், குறிப்பாக, அஹ்... அஹ்... அஹ்... என்று விம்முவது அற்புதம். இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தில், ஆஷா போன்ஸ்லேயால் இந்த விம்மலை சரியாக செய்ய முடியாமல் போக, ஈஸ்வரி அவர்கள் அவருக்கு உதவி செய்ததாகக் கூறுவர். இருப்பினும், அவரால் ஈஸ்வரி அளவுக்குப் பாட முடியாமல் போனது. கதாநாயகியின் அந்தக் கொலை வெறித் திட்டம் அவரது நடனத்திலும், முக பாவங்களிலும் எந்த அளவுக்குப் பிரதிபலித்ததோ, அதற்கு ஈடாக அவருக்குப் பாடிய ஈஸ்வரியின் குரலும் சவால் விட்டது.

அடுத்தது இசை. இந்தப் பாடல் வந்த புதிதில், நிறைய இசைக்கருவிகளை உபயோகித்து இசையமைக்கப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்று மெல்லிசை மன்னர் கூறியிருந்தார். இந்தப் பாடலில், நாயகனின் கொலை வெறித் திட்டம், நடனங்களில் தெறிக்கும் நளினம் மற்றும் பாவங்கள், பாடல் நெடுகிலும் தேவைப் படுகின்ற பரபரப்பு மற்றும் சஸ்பென்ஸ் மற்றும் அந்த பிரம்மாண்ட அரங்கத்துக்கேற்ற மிக பிரம்மாண்டமான இசை - அத்தனையும், தெறிக்க வேண்டும்; பார்ப்பவரைப் பற்றி தொற்றிக்கொள்ள வேண்டும். அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இப்போது, நடிப்பு. காஞ்சனா மேலே கூறியபடி, அத்தனை உணர்வுகளையும், காட்டியிருப்பார். இந்தப் பாடலில், அவர், கொலை வெறித்தனத்தையும் காட்டியாக வேண்டும்; சாட்டையால் அடி வாங்கும் போது வேறு விதமான பாவனையையும் காட்ட வேண்டும். அதாவது, பார்ப்பவர்களை, இது வெறும் பாட்டு தான் அதற்கு என்னுடைய நடனம் ஒரு நடிப்பு தான் என்றும் சொல்லியாக வேண்டும். அதே சமயம் அவருடைய மனதிலிருக்கும் கொலை வெறித்தனத்தையும் தன்னை அறியாமல் வெளிப்படுத்த வேண்டும். மிக அருமையாக இதை பேலன்ஸ் செய்திருப்பார். நம்பியார் இந்தப் பாடலுக்கு மேலும் சுவை சேர்த்திருப்பார். துவக்கத்திலேயே, அவர் இந்த நடனம், தன்னைக் கொல்ல வந்ததன் திட்டம் என்று அறிந்து கொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும், குறிப்பாக "கதை முடிக்க நினைத்ததே" என்ற வரிகள் பாடப் படும் போதெல்லாம், ஒரு மாதிரி முகம் முழுக்க வேர்த்து விறுவிறுத்து, அட்டகாசமாக, "உனக்கு நான் ஒன்றும் இளைத்தவன் இல்லை, என்னிடமும் துப்பாக்கி இருக்கிறது" என்றும் பாவனையால் கூறிக்கொண்டிருக்கும் விதம் அட்டகாசமாக இருக்கும்.

கடைசியில், நடிகர் திலகம். இதில், அவருடைய ஒப்பனையும், ஆடை அலங்காரமும் மட்டுமே, அவரை நூறு சதவிகிதம் வெற்றியடைய வைத்து விடும். அந்த அளவுக்கு ஒரு கன கச்சிதமான பொருத்தம். இதற்கு மேல், அவருடைய உடல் மொழி வேறு. முகத்தில் ஒரு வித இறுக்கம், வாயில் எதையோ வைத்து மென்று கொண்டே தன்னுடைய திட்டத்தில் குறியாக இருக்கும் கவனம். Focussed attention with single minded devotion and concentration. இது ஏற்கனவே குறிப்பிட்டது தான். மேடையில் உள்ள இரண்டு தட்டுக்களில் வெளிப் பக்கம் இருக்கும் தட்டில் நடப்பார். இதில் விசேஷம் என்னவென்றால், அந்தத் தட்டு எந்தப் பக்கம் சுழலுகிறதோ, அதற்கு எதிர்ப்புறம் வேகமாகவும், லாகவமாகவும் நடப்பார். இத்தனைக்கும், அந்தத் தட்டின் அகலம் வேறு குறைவு. இந்த ஒரு நடைக்கே இந்தப் பாடல் இன்றளவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்தப் பாடலில், நடிகர் திலகத்தின் பாத்திரத்துக்கு தேவைப்படுகின்ற மேற்கூறிய உடல் மொழிகள் அல்லாமல் அசாத்திய வேகமும் (quick reflex and swiftness) தேவைப்படுகிறது. அதுவும் நடிகர் திலகத்திடம் நூறு சதவிகிதம் வெளிப்படும். இந்தப் பாடலும், நடிகர் திலகம் பாடாமல் வெறுமனே உடல் மொழியை வைத்துக் கொண்டே பார்க்கும் எல்லோருடைய கவனத்தையும் தன் மீதும் தக்க வைத்துக் கொண்ட பாடல்.

சென்ற வருடம் விஜய் டிவியில் இடம்பெற்ற ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடைசி ஆறு பாடகர்களில் ஒருவரான நித்யஸ்ரீ இந்தப் பாடலை - அதுவும் அந்த விம்மலை நுணுக்கமாகப் பாடி எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்றார். அன்றிலிருந்து இன்று வரை எங்கெல்லாம் இந்த இளம் பாடகி பாடுகிறாரோ, அவரை இந்தப் பாடலைத் தவறாமல் பாடும்படி மக்கள் கேட்கின்றனர். அதற்கு ஆவன செய்தது இந்தப் பாடலின் சிறப்பு தான்.

இந்தப் பாடலும், இன்றளவும் அனைத்து மக்களாலும், இன்றைய தலை முறையினராலும் விரும்பி ரசிக்கப் படுகின்றது. அதனால் தான், இந்தப் பாடலும், இந்தக் கட்டுரையில் இடம் பெறுகிறது.

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
1st December 2011, 05:54 PM
அன்புமிக்க கார்த்திக் சார்,

தங்கள் உண்மையான கருத்துக்களுக்கு நன்றி. திரு ஆரூர்தாஸ் அவர்களின் சில கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக்கூடியவை அல்ல என்று ஆணித்தரமாக அற்புதமாக ஆதரங்களோடு நிரூபித்துள்ளமைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். பல உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றிகள் சார். ஏ.பி.நாகராஜன்,ஸ்ரீதர்,பந்துலு போன்ற, நடிகர் திலகத்தை வைத்தே பெரும்பான்மையான ஹிட் படங்களைக் கொடுத்த, மிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்கள் எதிர் அணி சென்றதால் அது பரபரப்பாயிற்று. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பாலாஜி, முக்தா ஸ்ரீனிவாசன் போன்றோர் தலைவரை விட்டு இறுதிவரை செல்லவில்லை. கே.எஸ். ஜி கூட 1985-இல் 'படிக்காத பண்ணையார்' தந்தார். உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களையும்,நன்றிகளையும் மீண்டும் ஒருமுறை கூறக் கடமைப்பட்டவன் ஆகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
1st December 2011, 05:59 PM
டியர் ஹரிஷ் சார்,

தங்களின் கடலளவு வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த வானளவு நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
1st December 2011, 06:13 PM
அன்புமிக்க TFMLover அவர்களுக்கு முதலில் நம் அனைவரின் சார்பில் மிகப் பெரிய

நன்றி....நன்றி..... நன்றி....


http://youtu.be/IaxGu--YQpQ

நீண்ட நெடும் நாட்களாக என்னுள்ளே ஏக்கத்தை ஏற்படுத்தி ஆவலைத் தூண்டி விட்டு காத்துக் கொண்டிருந்த பாடலைக் காணொளியாகத் தந்தமைக்கு நம் அனைவர் சார்பிலும் நன்றியை உணர்வுபூர்வமாக கூறிக் கொள்கிறேன். அநேகமாக நம் நண்பர்களில் 90 சதம் பேர் இப்பாடலைப் பார்த்திருக்க மாட்டார்கள்.

எல்லாம் உனக்காக திரைக்காவியத்திலிருந்து மலரும் கொடியும் பெண்ணென்பார் பாடலைத் தந்து உள்ளத்தில் உவகை பொங்கச் செய்து விட்டார் அவருக்கு மீண்டும் உளமார்ந்த நன்றி.

vasudevan31355
1st December 2011, 06:15 PM
டியர் பார்த்த சாரதி சார்,

தங்களின் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாடலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை பசுமையாக நெஞ்சில் நிரந்தரமாகக் குடியேறி விட்டது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த எல்.ஆர். ஈஸ்வரி அவர்களைப் பற்றி நீங்கள் புகழ்ந்துள்ள விதம் மனத்தைக் குதூகலிக்கச் செய்கிறது. அந்த அற்புதப் பாடலுக்கு அவர்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. நடிகர் திலகத்தின் அந்த சுழலும் மேடையின் எதிர் நடையையும் காலம் உள்ளவரை மறக்க முடியாது. சுற்றக்கூடிய தட்டிற்கு எதிர்ப்புறம் வேகத்துடனும், அதே சமயம் கம்பீர ஸ்டைலுடனும் நடக்க அவரை விட்டால் வேறு யார்?

மொத்தத்தில் பார்த்தசாரதி சாரால் 'பட்டத்துராணி' மேலும் மெருகேறி பளிங்குச் சிலை போல் மின்னுகிறாள்.

பாராட்டுக்களுடன்,
வாசுதேவன்.

vasudevan31355
1st December 2011, 06:21 PM
அன்பு ராகவேந்தர் சார்,

மிக அரிய 'மலரும் கொடியும்' தந்து TFMLover அவர்கள் அசத்தினார்கள் என்றால் தாங்கள் அதனை 'எல்லாம் உங்களுக்காக' என்று பதிவிட்டு நீண்ட நெடுநாள் பசியைப் போக்கியதற்கு நன்றி.!

அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
1st December 2011, 07:15 PM
அன்புமிக்க கார்த்திக் சார்,

தங்கள் உண்மையான கருத்துக்களுக்கு நன்றி. திரு ஆரூர்தாஸ் அவர்களின் சில கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக்கூடியவை அல்ல என்று ஆணித்தரமாக அற்புதமாக ஆதரங்களோடு நிரூபித்துள்ளமைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். பல உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றிகள் சார். ஏ.பி.நாகராஜன்,ஸ்ரீதர்,பந்துலு போன்ற, நடிகர் திலகத்தை வைத்தே பெரும்பான்மையான ஹிட் படங்களைக் கொடுத்த, மிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்கள் எதிர் அணி சென்றதால் அது பரபரப்பாயிற்று. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பாலாஜி, முக்தா ஸ்ரீனிவாசன் போன்றோர் தலைவரை விட்டு இறுதிவரை செல்லவில்லை. கே.எஸ். ஜி கூட 1985-இல் 'படிக்காத பண்ணையார்' தந்தார். உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களையும்,நன்றிகளையும் மீண்டும் ஒருமுறை கூறக் கடமைப்பட்டவன் ஆகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.
KUDOS TO KARTKSENIOR AND VASUDEVAN SIRS FOR ENLGHTNNG BRIEF FACTS. DRCTOR CVRAJAENDRAN ALSO STOOD WITH NT TLL END AND INFACT REFUSED SOME OFFERS WHEN GIVEN TO WORK WITH OTHERSDE.
BR PANTHULU WAS GIVEN ALL POSSIBLE HELP TO PRODUCE MURADAN MUTHU, NT TOOK ONL NOMNAL VALE FOR HIS JOB STILL BRP WANTED TO MAKE THIS AS 100TH MOVIE OF NT insetead of navarathri to mone gans . navarathr was produced to help APN, the movie has come so nicely when compeled chinnavar wanted to make this as 100th movie, later mm and navarathr clashed on the sameda, mm was given special mornng shows n madras thus counted as 99 th movie and navarathr later released at 3pm shows as 1oo th movie. lke this NT has astuggled caarrier and many untold stores are there for many people to leave NT, I also felt very bad for aarur dass remarks.

J.Radhakrishnan
1st December 2011, 10:10 PM
டியர் பார்த்தசாரதி சார்,

பட்டத்துராணி பாடல் ஆய்வு பிரமாதம், குறிப்பாக நடிகர்திலகம் சாட்டையால் அடிக்கும் போது உண்மையிலேயே அடிப்பது போல் தோன்றும், அதற்கேற்ப காஞ்சனா அஹ்... அஹ்... அஹ்... என்று விம்முவது (எல்.ஆர் ஈஸ்வரி குரலில்) பாடலின் சுவையை மேலும் கூட்டும்.

pammalar
2nd December 2011, 12:02 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் சுவையான பாராட்டுக்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

டிசம்பர் மாதம் வெளியான கலைக்குரிசிலின் காவியங்கள் பட்டியல் அருமை. ஒவ்வொரு காவியத்திற்கும் ஒரு மினி இமேஜையும் இணைத்திருப்பது excellent !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 12:05 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

கோடீஸ்வரன் & கள்வனின் காதலி

[13.11.1955 - 13.11.2011] : 57வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5122-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 12.11.1955
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5123-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 12:21 AM
டியர் mr_karthik,

தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

டியர் செந்தில் சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 12:40 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

அன்பைத் தேடி

[13.11.1974 - 13.11.2011] : 38வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1974
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5121-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 01:04 AM
டியர் ராகவேந்திரன் சார்,

உலக எய்ட்ஸ் தினமான இன்று [டிசம்பர் 1], எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்பட வீடியோவை பதிவிட்டது ஒரு சிறந்த timely gesture !

இதுவரை நான் பார்த்திராத "எல்லாம் உனக்காக" காவியப் பாடலான 'மலரும் கொடியும் பெண்னென்பார்' பாடலை youtube இணையதளத்தில் தரவேற்றிய TFMLover அவர்களுக்கும், அதனை இங்கே இடுகை செய்த தங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 01:16 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

பாரம்பரியம்

[13.11.1993 - 13.11.2011] : 19வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5126-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 01:33 AM
டியர் பார்த்தசாரதி சார்,

'பட்டத்து ராணி' பாடல் பற்றிய தங்களின் ஆய்வு குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதியற்புதம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2011, 03:13 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

பரிட்சைக்கு நேரமாச்சு & ஊரும் உறவும்

[14.11.1982 - 14.11.2011] : 30வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5125-1.jpg


காவிய விமர்சனம் : தேவி : 1982
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/OUDeviReview-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
2nd December 2011, 08:51 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்.

கோடீஸ்வரன், கள்வனின் காதலி, அன்பைத் தேடி விளம்பரங்களின் அணிவகுப்பு அருமை. (கோடீஸ்வரன் விளம்பரம் கோலாகலம்).

பரிட்சைக்கு நேரமாச்சு & ஊரும் உறவும் மற்றும் பாரம்பரியம் பதிவுகள் பரவசப் படுத்துகின்றன.

'ஊரும் உறவும்' தேவி விமர்சனம் தேனமுது. நிஜமாகவே நல்ல படம். நல்ல மெசேஜ் சொன்ன படம். வழக்கம் போல நடிகர்திலகத்தின் படங்களாலேயே இந்தப் படமும் பாதிக்கப் பட்டது. வித்தியாசமான வேடத்தில் அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம். எல்லாம் விழலுக்கிழைத்த நீராகி விட்டது. பின் புற்றீசல் போல தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருந்தால்?...

அருமையான பதிவுகளை பதிப்பித்ததற்கு பாராட்டுக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
2nd December 2011, 09:32 AM
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத்திய அமைச்சர் கிராமங்களில் மருத்துவ சேவை ஆற்ற வேண்டியதைப் பற்றி மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். அவர் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருந்தால் தன்னுடைய துறைக்கு இப்படத்தைப் பிரச்சாரப் படமாக ஆக்கியிருப்பார்.

RAGHAVENDRA
2nd December 2011, 09:34 AM
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்
டின்செல் டவுனின் டீட்டி (Tinsel Town Deity) யின் டிசம்பர் அணிவகுப்பினை அட்டகாசமாக தந்துள்ளீர்கள். ஆவணங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
நன்றி.

RAGHAVENDRA
2nd December 2011, 09:36 AM
TFMLover அவர்களின் கருணையினால் எல்லாம் உனக்காக திரைக்காவியத்தில் மற்றொரு பாடல் சுசீலாவின் கொஞ்சும் குரலில் கோபத்தைப் போக்கி சாந்தம் வரவழைக்கும் பாடல்

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் ஏனடா ... கேளுங்கள்... பாருங்கள்...


http://www.youtube.com/watch?v=Xz50gYQtTfs

parthasarathy
2nd December 2011, 05:27 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)



10. "வாராய் என் தோழி வாராயோ"; படம்:- பாச மலர் (1961); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர்; ; இசை:- மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ. பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, சுகுமாரி மற்றும் குழுவினர்.

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அந்த வைர வரிகளுக்காக சிலிர்க்கும்; எப்போது பார்த்தாலும், அதை எடுத்த விதத்துக்காகவும், அதில் நடித்த நடிக/நடிகையர்களின் நடிப்புக்காகவும், புல்லரிக்கும். இப்போதெல்லாம், கான்செப்ட் சாங், தீம் சாங் என்று என்னவெல்லாமோ சொல்லுகிறார்கள். இந்தப் பாடலைப் போல ஒரு கான்செப்ட் சாங்கை ஐம்பது வருடங்களுக்கு முன்பே யோசித்து அதைக் கச்சிதமாக எடுத்ததற்கு இந்தத் தமிழ் சமுதாயம் என்றென்றைக்கும் இந்தக் குழுவிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தப் பாடல் வந்த புதில் இருந்து, இன்று வரை, ஏன் என்றென்றும் திருமணப் பந்தல்களில், நிரந்தரமாகக் குடியேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மற்றொரு பாடல், (அதுவும் நடிகர் திலகம் தான்; வேறென்ன சொல்வது, எந்த நிகழ்ச்சிக்கும், நினைவு கூறுதலுக்கும், அது கோவில் திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும், இந்திய சரித்திரத்தை நினைவு கூறுவதாகட்டும் - சுதந்திர எழுச்சி உட்பட - யாருக்கும், இவரது படங்கள்/காட்சிகள்/பாடல்களை விட்டால் வேறு கதியே இல்லை - அப்படி தமிழர்களின் வாழ்வில் ஊனும் உயிருமாய்க் கலந்து விட்ட யுக, மகாக் கலைஞன்.) பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி - ஆனால், இந்தப் பாடல் சோக ரசத்துடன் இருப்பதால், வாராய் என் தோழி வாராயோ அந்தப் பாடலை முந்துகிறது. இந்தப் பாடலை மிகச் சரியாக யோசித்து, அதை கவனத்துடன் செதுக்கி அந்தப் பாடலின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக நுழைத்து மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்கள் தான் இந்தப் பாடலின் முதல் நாயகன்.

அடுத்து, வரிகள். எப்பேர்ப்பட்ட அர்த்தம் தொனிக்கும் வரிகளையும், சூசகமாகக் கையாள்வதில் சூரன் கவியரசு என்பதை நிரூபித்த பாடல். இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மயங்குகிறாள் ஒரு மாது பாடலிலும், இதே வித்தையை அற்புதமாக செய்தார். ஒரு மங்கல நிகழ்ச்சியில் இடம் பெறுகின்ற பாடல் - ஆனால், தோழி பாடுகின்றாற்போல் வருகின்ற பாடல் என்பதால், வெறுமனே, மங்களமான வார்த்தைகள் மட்டுமே வருவதாக எழுத முடியாது. இது சினிமா என்கின்ற பொழுதுபோக்கு ஊடகம் அதில் சொல்லப் படுபவை வெகு ஜனங்களுக்காக என்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு எந்த இடத்திலும், டாகுமெண்டரி உணர்வு யாருக்கும் வராவண்ணம் வார்த்தைகளை எழுதி, அதாவது, தன்னுடைய உயிர்த்தோழியை இலேசான குறும்புடன் சூசகமாக சில வார்த்தைகளை வைத்துப் பாடுவதாகவும் எழுதி, பாடலின் கண்ணியத்தைக் கடைசி வரை காப்பாற்றிய - அதன் மூலம், மொழியின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலை நாட்டிய எழுத்து வேந்தர், கவியரசு கண்ணதாசனை எப்படி பாராட்டுவது - இந்த யுகக் கவியை நாளும், பொழுதும் நினைத்து நினைத்து கர்வப்படுவதை விட வேறென்ன வேலை ஒவ்வொரு தமிழனுக்கும்?

அடுத்து பாடியவர். மறுபடியும் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த அற்புதப் பாடகியை உலகத்திற்குப் பெரிய அளவில் வெளிக்காட்டிய பாடல். இவரது முதல் மூன்று முத்தான பாடல்களில், ஒரு பாடலை இப்போது தான் எழுதினேன்; அடுத்த பாடல், இப்போது இடம் பெறுகிறது. ஆக, ஒவ்வொரு கலைஞனின் சிறந்த முதல் ஐந்து படைப்புகளை குறிப்பிடச் சொன்னால், அதில் குறைந்தது அறுபது சதவிகிதம், நடிகர் திலகம் நடித்த படங்களில் இருந்து தானே வருகிறது? இந்தப் பாடல் நெடுக வரும் அந்தக் குறும்பை, கொப்பளிக்கும் எனர்ஜியை, வேகத்தை, ஆரவாரத்தை, ஈஸ்வரி அவர்களை விட எந்தப் பாடகியும் இந்த அளவிற்குச் சிறப்பாகக் காட்டியிருக்க முடியாது.

இப்பொழுது இசை. ஒரு விழாப் பாடலுக்குத் (மங்களகரமான பாடலும் கூட) தேவைப்படுகின்ற வேகம், எனர்ஜி மற்றும் ஆர்பரிக்கும் சந்தோஷ உணர்வு அத்தனையும் இதில் காட்டியாக வேண்டும். இந்த உணர்வுகளை மெல்லிசை மன்னர் தந்த விதம் அருமை. குறிப்பாக இரண்டு விஷயங்கள் இந்தப் பாடலின் இசையமைப்பில் கூறியாக வேண்டும். ஒன்று, குழுவினரின் சிரிப்பொலி அந்தப் பாடலின் பின்னணி இசையோடு இயைந்து வரும் (மூன்றாவது சரணம் - இரவோடு இன்பம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ! என்னும்போது). அடுத்து, சமஸ்கிருத வேதங்கள் அடங்கிய - திருமணம் நடைபெறும்போது புரோகிதர்களால் ஓதப்படுகின்ற வரிகள் - பாடலோடு மீண்டும் இயைந்து வருகின்ற விதம். இந்த இரண்டு சங்கதிகளும் மிக முக்கியமாக - பாடலின் அடிப்படை விஷயமான அந்த வேகம் / டெம்போவைக் கொஞ்சமும் குறைக்காமல், மேலும் மெருகூட்டிச் செல்லும் அந்த விதம். நிறைய பேர் இந்த விஷயத்தைக் கவனித்திருக்கக் கூடும். இல்லையென்றால், ரசித்து இன்புறலாம்.

கடைசியில் நடிப்பு. சுகுமாரி எனக்குத் தெரிந்து இந்தப் படத்தில்தான் முதன் முறையாக நிறைய நேரம் வருவார் - இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் (பின்னாளில் இவர் இயக்குனர் பீம்சிங்கின் மனைவியானது வேறு விஷயம்.). மிக அருமையாகவும் அதே சமயம் அளவோடும் பாடி நடித்து - யார் இந்தப் புதுமுகம் என்னும் அளவுக்குப் பெயர் வாங்கினார். என்றுமே, இது போல் ஒரு பாடலுக்கு நடனம் மற்றும் பாடி நடிப்பவர்கள் பெரிய அளவுக்கு உடனே பெயர் வாங்குவதில்லை. (உதாரணம் ஏ.சகுந்தலா - அவருமே கூட இந்தப் பாடலில் குழுவினரோடு நடனம் ஆடியிருப்பார். இது போல் இன்னும் சில நடிகைகளும் உண்டு.). நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்கும் இந்தப் பாடலில் பெரிதாக வேலை இல்லை. இருப்பினும், இந்தப் பாடலில் அவ்வப்போது வரும் சில வரிகளுக்கேற்ப, அவருடைய நாணத்துடன் கலந்த முக பாவங்கள் இன்னமும் யாருடைய கண்களை விட்டும் அகல மறுக்கின்றன.

கடைசியில், நடிகர் திலகம். இந்தப் பாடலிலும், - அதாவது இது ஒரு குழுவினர் ஆக்கிரமிக்கும் பாடல். இந்தப் பாடலிலும், நடிகர் திலகம் அற்புதமாக சில பல ரீயாக்ஷன்களைக் காண்பித்து, பார்ப்பவர்களின் கவனத்தை தன் மீதும் தக்க வைத்துக் கொண்டார். இது எல்லோரும் அறிந்த ஒன்று. மேற்கூறிய வரிகள் வரும் போது, சாவித்திரி ஒரு வித நாணத்துடன் போகும்போது, அந்த இடத்தில் நிற்கும் நடிகர் திலகம் தானும் ஒரு வித பாவத்துடன் - கண்ணியம் தென்படும் ஒருவித பாவம். அதற்கு ஒரு இலக்கணத்தை அன்றே வகுத்துச் சென்றிருப்பார்! அதிலும், அப்போது வரும் இலேசான காற்றில் அவருடைய தலை முடி ஒரு விதமாக ஆடும். அவரது முடி கூட நடிக்கும்!! இந்தக் குறிப்பிட்ட போர்ஷனை பின்னாளில் வந்த ஒரு சினிமாவில் மொத்தமாகப் பயன்படுத்தி, இந்த ரீயாக்ஷனை நகைச்சுவை நடிகர் செந்திலை விட்டு செய்யச்சொல்லியிருப்பார்கள். நல்ல வேளை, அவர் பெரிதாக நையாண்டி செய்யாமல், நகைச்சுவையோடு மட்டுமே அணுகியிருப்பார் - இந்நாட்களில் நடிக்கும் நடிகர்களைப் போல் இல்லாமல்! அடுத்து, கடைசியில் மாங்கல்ய தாரணம் நடக்கும் போது, கையில் இருக்கும் அட்சதையை கண்களில் நீரைத் தேக்கி வைத்து மணமக்கள் மேல் போடும் இடம். தங்கையின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணத்தில் ஒரு அண்ணன் எப்படி உணர்வானோ, அதை நூறு சதவிகிதம் நடித்துக் காண்பித்து பார்ப்பவர் அத்தனை பேரின் கண்களிலும் - முக்கியமாக, ஒவ்வொரு தகப்பன், தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்த அற்புதத் தருணமல்லவா அது! இது வெறும் ஒரு நொடியில் காட்ட வேண்டிய காட்சி தானே. இது போல், எத்தனையோ படங்களில் எத்தனையோ நடிகர்களுக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது - அது எப்படி, இவர் ஒருவர் மட்டும், அந்த ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்காமல், தன்னுடைய நூறு சதவிகித அற்பணிப்பைத் தந்தார்? ஆம், இந்த ஒரு காரணத்தினால் தான், அவர் மட்டுமே நடிகர் திலகமானார். உலகம் உள்ளளவும், இந்தப் பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார்!

நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும், என்னுடைய பார்வையில் இந்தப் பாடல்கள் மற்றவைகளை முந்துகின்றன என்பதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்று தான். இவை, இன்றளவும், எல்லோராலும், இன்றைய இளம் தலை முறையினராலும் ரசிக பேதமின்றி ரசிக்கப் பட்டு சிலாகிக்கப்பட்டு கேட்பதற்கு மட்டுமல்லாமல், பார்பதற்கும் விரும்பப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுகின்றது. அதற்குக் காரணம் ஒரு சிறந்த பாடலுக்குத் தேவைப் படுகின்ற அத்தனை அம்சங்களும் நூறு சதவிகிதம் வெற்றிகரமாக அமைந்து, அந்த குழுப்பணி (டீம்வொர்க்) முழுமையாக நிறைவேறியது. அதனால் தான் இந்தப் பாடல்களை சிரஞ்சீவித் துவம் பெற்ற பாடல்கள் என்று தலைப்பு கொடுத்தேன்.

இந்தத் தொடரில் நான் அவ்வப்பொழுது எழுதி வந்த பாடல்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளுக்கு உடனுக்குடன் என்னைப் பாராட்டி அங்கீகரித்த, அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய கோடானு கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

தொடரும்,

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
2nd December 2011, 05:38 PM
டியர் பார்த்த சாரதி சார்,

தங்களின் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாடலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை பசுமையாக நெஞ்சில் நிரந்தரமாகக் குடியேறி விட்டது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த எல்.ஆர். ஈஸ்வரி அவர்களைப் பற்றி நீங்கள் புகழ்ந்துள்ள விதம் மனத்தைக் குதூகலிக்கச் செய்கிறது. அந்த அற்புதப் பாடலுக்கு அவர்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. நடிகர் திலகத்தின் அந்த சுழலும் மேடையின் எதிர் நடையையும் காலம் உள்ளவரை மறக்க முடியாது. சுற்றக்கூடிய தட்டிற்கு எதிர்ப்புறம் வேகத்துடனும், அதே சமயம் கம்பீர ஸ்டைலுடனும் நடக்க அவரை விட்டால் வேறு யார்?

மொத்தத்தில் பார்த்தசாரதி சாரால் 'பட்டத்துராணி' மேலும் மெருகேறி பளிங்குச் சிலை போல் மின்னுகிறாள்.

பாராட்டுக்களுடன்,
வாசுதேவன்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
2nd December 2011, 05:40 PM
டியர் பார்த்தசாரதி சார்,

பட்டத்துராணி பாடல் ஆய்வு பிரமாதம், குறிப்பாக நடிகர்திலகம் சாட்டையால் அடிக்கும் போது உண்மையிலேயே அடிப்பது போல் தோன்றும், அதற்கேற்ப காஞ்சனா அஹ்... அஹ்... அஹ்... என்று விம்முவது (எல்.ஆர் ஈஸ்வரி குரலில்) பாடலின் சுவையை மேலும் கூட்டும்.

அன்புள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
2nd December 2011, 07:03 PM
Anbu Pammalar sir,

Your recent Treasures (ponnukku mElAna pokkishanggaL) are simply superb.

the eye catching ads of.....
Kodeeswaran
KaLwanin Kadhali
Parambariyam
Paritchaikku NEramaachu
AnbaiththEdi

and the review of 'Oorum Uravum' are making us very happy.

Thanks for your unvaluable service, and continue for all of us.

mr_karthik
2nd December 2011, 07:10 PM
Anbu Parthasarathy sir,

Your analysis about the evergreen hit 'Pattaththu Rani paarkum paarvai' is excellent.

You have analised all departments of the song such as lyrics, unparalelled music, wonderful picturisation, art direction, the performance of the involved and also co-stars (esp. Nambiar) are very very super.

Your special pointing about NT's performance (walking on the disc on anti rotating direction) is pleasant one.

Thanks a lot to you sir.

joe
2nd December 2011, 09:44 PM
http://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y&feature=player_embedded

J.Radhakrishnan
2nd December 2011, 11:35 PM
டியர் பம்மலார் சார்,

பாரம்பரியம், பரீட்சைக்கு நேரமாச்சு விளம்பரம் மற்றும் ஊரும் உறவும் திரைப்பட தேவி விமர்சனம் என பதிவிட்டு கலக்கி விட்டீர்கள், விமர்சனத்திலேயே குறிப்பிட்டது போல் சற்று இடைவெளி விட்டு வந்திருந்தால் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும், என்ன செய்வது, நம் படத்துக்கு நம் படமே எதிரி, அந்த வருடம் மட்டும் 13 படங்கள், அதாவது மாதம் ஒரு படம் என இடைவெளி இல்லாமல் வெளியானதே முக்கிய காரணம்.

J.Radhakrishnan
2nd December 2011, 11:46 PM
//நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம்//



டியர் பார்த்தசாரதி சார்,

மீண்டும் ஒரு அருமையான பாடல் பதிவோடு வந்துள்ளீர்கள், இசை, பாடியவர், பாடல் வரிகள், நடிப்பு என ஒன்று விடாமல் அலசி விட்டீர்கள், நீங்கள் எந்த பாட்டை ஆய்வு செய்தாலும் அது சிறப்பாக இருப்பதால் பாடல் தேர்வு குறித்து யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகிறேன்.

pammalar
3rd December 2011, 01:24 AM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் வழங்கிய கோலாகலமான பாராட்டுக்களுக்கு எனது குதூகலமான நன்றிகள் !

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

'கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் ஏனடா' பாடல் வீடியோவுக்காக TFMLover அவர்களுக்கும், தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

டியர் ஜேயார் சார்,

தங்களின் கலக்கல் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd December 2011, 01:31 AM
Dear mr_karthik,

My sincere thanks for your priceless post of praise !

Regards,
Pammalar.

pammalar
3rd December 2011, 01:35 AM
//நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம்//



டியர் பார்த்தசாரதி சார்,

மீண்டும் ஒரு அருமையான பாடல் பதிவோடு வந்துள்ளீர்கள், இசை, பாடியவர், பாடல் வரிகள், நடிப்பு என ஒன்று விடாமல் அலசி விட்டீர்கள், நீங்கள் எந்த பாட்டை ஆய்வு செய்தாலும் அது சிறப்பாக இருப்பதால் பாடல் தேர்வு குறித்து யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகிறேன்.

வழிமொழிகிறேன் !

'வாராயோ தோழா வாராயோ
சாரதிபதிவை வாசிக்க வாராயோ'

சாரதி சார்,

தங்கள் ஏற்றமிகு எழுத்தில் மேலும் எழுச்சி பெற்ற 'வாராயென் தோழி வாராயோ' பாடலின் ஒலி-ஒளிக்காட்சி:


http://www.youtube.com/watch?v=JM5HxZM6R3E

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
3rd December 2011, 11:45 AM
நடிகர்திலகம் திரியின் ஏழாம் பாகம்.....

பார்வையாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டி சாதனை.

அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் விலை மதிக்க முடியாத ஆவணப்பொகிஷப் பதிவுகளாலும் மற்ற நண்பர்களின் சீரிய பங்களிப்பினாலும் இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக தாங்கள் இந்த ஏழாம் பாகத்தில் அள்ளித்தந்திருக்கும் சாதனைப்பொன்னேடுகளால், முந்தைய பாகங்களை விட இது பல மடங்கு பொலிவு பெற்றதாக விளங்குகிறது. அவற்றால் இங்கு வருகைதந்து மகிழ்வோர் எண்ணிக்கை மிகக்கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இதற்கு முழுமுதற்காரணமாக விளங்கிய தங்களுக்கும், தங்கள் சீரிய முயற்சி மற்றும் அயராத உழைப்பு இவைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

நீங்கள் தேடித்தேடி அளித்திருக்கும் வரலாற்று ஆவணப்பொக்கிஷங்கள், நடிகர்திலகத்தின் ஐம்பதாண்டுகால திரையுலக வரலாற்றில் அங்கங்கே ஒளி வீசும் வைரங்கள், வைடூரியங்கள், விலை மதிப்பில்லா முத்துக்கள். அவற்றின் 98 சதவீத ஆவணங்களை தீவிர ரசிகர்களாகிய நாங்கள் கூட பார்த்ததில்லை. அவற்றை தேடிச்சேகரித்து அனைவரின் பார்வைக்கும் அள்ளி வழங்கி, ஒவ்வொரு ரசிகர்களையும் 'ஆவணக்காப்பாளர்களாக' மாற்றிய தங்களுக்கு எங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

தன்னிகரில்லா தங்கள் சிறப்பான சேவை தொடர வாழ்த்துகிறோம்.

vasudevan31355
3rd December 2011, 02:54 PM
அன்பு பார்த்தசாரதி சார்,

சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
3rd December 2011, 03:52 PM
சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.


Dear Parthasarathy Sir,

Very good analysis about evergreen songs. Thanks

KCSHEKAR
3rd December 2011, 03:54 PM
Your recent Treasures (ponnukku mElAna pokkishanggaL) are simply superb.

the eye catching ads of.....
Kodeeswaran
KaLwanin Kadhali
Parambariyam
Paritchaikku NEramaachu
AnbaiththEdi

and the review of 'Oorum Uravum' are making us very happy.

Thanks for your unvaluable service, and continue for all of us.

Dear Pammalar,

Thank you for your valuable service to this thread and for NT fans all over the world

KCSHEKAR
3rd December 2011, 04:01 PM
டிசம்பர் மாதம் வெளியான கலைக்குரிசிலின் காவியங்கள் பட்டியல் அருமை. ஒவ்வொரு காவியத்திற்கும் ஒரு மினி இமேஜையும் இணைத்திருப்பது excellent !



Dear Vasudevan Sir,

Thank you for your valuable postings.

KCSHEKAR
3rd December 2011, 04:05 PM
உலக எய்ட்ஸ் தினமான இன்று [டிசம்பர் 1], எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்பட வீடியோவை பதிவிட்டது ஒரு சிறந்த timely gesture !

"எல்லாம் உனக்காக" காவியப் பாடலான 'மலரும் கொடியும் பெண்னென்பார்' பாடலை youtube இணையதளத்தில் தரவேற்றிய TFMLover அவர்களுக்கும், அதனை இங்கே இடுகை செய்த தங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் !


Dear Ragavendran Sir,

Thanks for your timely post

vasudevan31355
4th December 2011, 04:39 PM
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000326893.jpg

நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.

தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.

அந்த அற்புத போஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000076676.jpg

மேரியம்மாவை மடியில் கிடத்தி கதறும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000056990.jpg

"மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"

என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.


தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000158158.jpg

தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,

"என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...

என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்

"இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"

என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக

"முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.

அதிர வைக்கும் ஆங்கார சொடுக்கு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000323156.jpg

ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா?...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000287087.jpg

சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)

பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.

சங்கிலி முருகனிடம் "ஜகா"வாங்குவது போன்று கலாய்க்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000658091.jpg

தொடர்கிறது....


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th December 2011, 05:35 PM
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்). (தொடர்கிறது)....

N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே

"டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"

என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,

"ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T

"என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?
நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?
நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.

பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,

"உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...
உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...

என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,

"சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)

"எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000838338.jpg

உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,

"இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"

என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,

"பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"

என்று நிறுத்தி

தன் கரத்தை பாக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில்
"விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)

"விஷ்"....என்ற வெட்டுவது போன்ற பாவனை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000918985.jpg


"குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)

பின் தொடர்ந்து,

"நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"

என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...

"அணு அணுவா" அற்புத ஆக்ஷன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000927327.jpg

மீசையை கம்பீரமாகத் தடவும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000939739.jpg

கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..

"எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,
அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,
துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,
"be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..

"எட்றா துண்டை" மிரட்டி மிரள வைக்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000946646-1.jpg

துண்டை லாவகமாக அணியும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000951251-1.jpg

"be careful" சங்கிலி முருகனை எச்சரிக்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000957023.jpg

போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.

தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.

தியாகராஜனைப் பின்னி எடுத்துவிட்டு "தம்" போடும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_001071638.jpg

"சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.

பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.

தியாகராஜனை அடித்துவிட்டு மனம் வெதும்பும் அற்புத உணர்வுப் பிரதிபலிப்புகள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_001117050.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_001114447.jpg

(ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)

(தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
5th December 2011, 02:23 AM
அன்பிற்குரிய ஆய்வுச்செம்மல் வாசுதேவன் சார்,

தங்களின் கைவண்ணத்தில் ஜொலிஜொலிக்கின்ற "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரையின் மூன்றாம் பாகத்தை எதனுடன் ஒப்பிட்டுப் புகழ்வது ? முப்பாலுடனா, முக்கனியுடனா, முத்தமிழுடனா - இவை மூன்றையும் சேர்த்து அதனோடு தங்களின் மூன்றாம் பாகத்தை ஒப்பிட்டாலும் அந்த மூன்றையும் விஞ்சி நிற்கிறதே தங்களின் இந்த மூன்று.

படப்பிடிப்புக் கட்டுரை எழுதி பிரமாதப்படுத்தினீர்கள் ! படக்கட்டுரையிலும் புகுந்து விளையாடுகிறீர்கள், தாங்கள் "கட்டுரைத் திலக"மும் தான் !

ஒவ்வொரு காட்சிக்குண்டான முத்திரை வசனங்களோடு நமது நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகளை தாங்கள் அலசியுள்ளவிதம் அதியற்புதம் ! அந்தந்த காட்சிக்கான நிழற்படங்களையும் அங்கங்கே இணைத்து நிழற்படத்திலகம் என்பதனை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள் !

மொத்தத்தில், "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரையினுடைய மூன்றாம் பாகத்தின் இரு பதிவுகளும், இரு கண்களுக்கு ஒப்பான கண்ணான பொன்னான பதிவுகள் !

அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவல் பீறிட்டு எழுகிறது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th December 2011, 02:43 AM
நடிகர்திலகம் திரியின் ஏழாம் பாகம்.....

பார்வையாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டி சாதனை.

அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் விலை மதிக்க முடியாத ஆவணப்பொகிஷப் பதிவுகளாலும் மற்ற நண்பர்களின் சீரிய பங்களிப்பினாலும் இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக தாங்கள் இந்த ஏழாம் பாகத்தில் அள்ளித்தந்திருக்கும் சாதனைப்பொன்னேடுகளால், முந்தைய பாகங்களை விட இது பல மடங்கு பொலிவு பெற்றதாக விளங்குகிறது. அவற்றால் இங்கு வருகைதந்து மகிழ்வோர் எண்ணிக்கை மிகக்கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இதற்கு முழுமுதற்காரணமாக விளங்கிய தங்களுக்கும், தங்கள் சீரிய முயற்சி மற்றும் அயராத உழைப்பு இவைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

நீங்கள் தேடித்தேடி அளித்திருக்கும் வரலாற்று ஆவணப்பொக்கிஷங்கள், நடிகர்திலகத்தின் ஐம்பதாண்டுகால திரையுலக வரலாற்றில் அங்கங்கே ஒளி வீசும் வைரங்கள், வைடூரியங்கள், விலை மதிப்பில்லா முத்துக்கள். அவற்றின் 98 சதவீத ஆவணங்களை தீவிர ரசிகர்களாகிய நாங்கள் கூட பார்த்ததில்லை. அவற்றை தேடிச்சேகரித்து அனைவரின் பார்வைக்கும் அள்ளி வழங்கி, ஒவ்வொரு ரசிகர்களையும் 'ஆவணக்காப்பாளர்களாக' மாற்றிய தங்களுக்கு எங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

தன்னிகரில்லா தங்கள் சிறப்பான சேவை தொடர வாழ்த்துகிறோம்.

டியர் mr_karthik,

தங்களின் தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுக்களுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது சிரம் தாழ்த்திய சிகர நன்றிகள் !

நம் ஒவ்வொருவரது பங்களிப்பினாலும், நமது திரி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. வருங்காலத்தில் நமது திரி இன்னும் பற்பல சாதனைகளுக்கு சொந்தமாகப்போவது திண்ணம் !

எல்லாப் புகழும், பெருமையும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th December 2011, 02:57 AM
Dear Pammalar,

Thank you for your valuable service to this thread and for NT fans all over the world

Dear Chandrasekaran Sir,

Thanks for your whole-hearted appreciation !

Regards,
Pammalar.

pammalar
5th December 2011, 03:24 AM
2.12.2011 வெள்ளி முதல், மதுரை 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை", சிறகுகளை விரித்து வெற்றி பவனி வருகிறது.

3.12.2011 சனிக்கிழமை முதல், கோவை 'டிலைட்' திரையரங்கில், தினசரி 3 காட்சிகளில், கலையுலக மன்னர் மன்னனின் "மன்னவன் வந்தானடி" ராஜகம்பீர நடைபோட்டு வருகிறது.

தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.பி.கணேசன் அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இனிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
5th December 2011, 10:14 AM
வாசுதேவன் சார்,

இடையில் நிறுத்தியிருந்த 'கருடா சௌக்கியமா' படத்தின் திறனாய்வை மீண்டும் தொடர்ந்திருப்பது மிகவும் சந்தோஷம். நீங்கள் ஒவ்வொரு காட்சியையும்... இல்லையில்லை... நடிகர்திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் விவரிக்கும் இடங்கள் அப்படியே அவரது நடிப்பை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

என்ன பயன்..?. எல்லாம் விழலுக்கிரைத்த நீராகிப்போனதே.

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் உயிரைக்கொடுத்து நடித்துத் தருவதோடு தன் வேலை முடிந்து விட்டதென்று அவர் போய்க்கொண்டிருந்ததுதான் அவரிடம் இருந்த மிகப்பெரிய குறை. இவ்வளவு கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறோமே, அதன் பலன் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கிடைக்க வேண்டும், தனக்கும் பட்ட பாட்டுக்கு பேரும் முகழும் வந்து சேர வேண்டும் என்று நினைத்து, பட வெளியீடுகளில் போதுமான இடைவெளிகள் தந்து (குறைந்தது 60 நாட்கள் வீதம் வருடத்துக்கு ஆறுபடங்கள்) செய்திருந்தாரானால், அவரும் பட்ட பாட்டுக்கு பேரும் புகழும் அடைந்திருப்பார். மற்றவர்களும் பெரிய அளவில் லாபம் அடைந்திருப்பார்கள்.

சமைக்கும்போது (நடிக்கும்போது) அருமையாக சமைத்து, பறிமாறும்போது (பட வெளிடீட்டில்) சொதப்பி விட்டார் பல சமயங்களில். உண்மையிலேயே ஜீரணிக்க முடியாத விஷயம் இது. எவ்வளவு வெற்றிகள் இப்படி கைநழுவிப்போயின..!.

mr_karthik
5th December 2011, 10:27 AM
219 Hitler Umanath 26.01.1982
220 Oorukku Oru Pillai 05.02.1982
221 Vaa Kanna Vaa 06.02.1982
222 Garuda Sowkiyamaa 25.02.1982
223 Sangili 14.04.1982
224 Vasandhathil or naal 07.05.1982
225 Theerppu 21.05.1982

SEVEN movies within FOUR months...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Fans will see all movies, but Public will watch only selected few.

Subramaniam Ramajayam
5th December 2011, 09:06 PM
219 Hitler Umanath 26.01.1982
220 Oorukku Oru Pillai 05.02.1982
221 Vaa Kanna Vaa 06.02.1982
222 Garuda Sowkiyamaa 25.02.1982
223 Sangili 14.04.1982
224 Vasandhathil or naal 07.05.1982
225 Theerppu 21.05.1982

SEVEN movies within FOUR months...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Fans will see all movies, but Public will watch only selected few.
Well said mr kartk sir. Lke this many occassons we have missed several movies which should have been celebrated more successful runs earlier occassions also. no proper persons to monitor thngs in rghtway. sORRY TO MENTION AT THIS POINT that every one was selfish in lookng for quick money and even HQ of mandrams prvaled that times has not raised or brught these issues to N T CRCLES PROPERLY. MY PERSONALOBSERVATONS
now THAT MY UTMOST CONCERN IS NOTHING BUT ERECTNG SIVAJI MANI MANDAPAM AT THE EARLIESTm withoutany further LOSS OF TIME.




INT,

pammalar
6th December 2011, 03:54 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

அன்னை இல்லம்

[15.11.1963 - 15.11.2011] : 49வது உதயதினம்

சாதனை வசந்தங்கள்

ஜூலை 1963-ல் வெளிவரப்போவதாக வெளியான விளம்பரம் : The Hindu : 14.4.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5127-1.jpg


பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamPesumPadamBackCover-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5128-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் [மதுரை]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamMaduraiThangamAd-1.jpg


50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 3.1.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5130-1.jpg


50th Day Ad : The Hindu : 3.1.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllam50DaysAd-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 22.2.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllam100DaysAd1-1.jpg


100th Day Ad : The Hindu : 22.2.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllam100DaysAd2-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th December 2011, 07:32 AM
அன்னை இல்லத்தின் அற்புத பொக்கிஷங்களை அள்ளி வழங்கிய ஆவணத்திலகம் பம்மலாருக்கு உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நன்றிகள்...

http://koodu.thamizhstudio.com/images/thodar_4_49.jpg


வரும் 11.12.2011 ஞாயிறு அன்று மாலை 4.15 மணிக்கு சென்னை ருஷ்ய கலாச்சார மய்யத்தின் அரங்கில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழாவும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 129வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப் படுகிறது. விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவின் நீதிபதி மேன்மை தாங்கிய பாஷா அவர்களும், ஜெம் வீரமணி அவர்களும், நடிகர் சிவகுமார் அவர்களும்,பாரதி பாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். கப்பலோட்டிய தமிழன் திரைக்காவியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட காட்சிகள் ஒளிபரப்பட வுள்ளன. மேலும் சந்துரு அவர்களின் இசைக்குழுவினர் நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து தேச பக்திப் பாடல்களை இசைக்க உள்ளனர்.

நிகழ்ச்சி தள்ளிப் போடப் பட்டுள்ளது. விவரம் பின்னர்

அன்புடன்

vasudevan31355
6th December 2011, 09:02 AM
அன்பு பம்மலார் சார்,

நடிகர் திலகம் திரியின் கண்களாகத் திகழும் தங்களுடைய கருடா சௌக்கியமா' பதிவு பற்றிய பாராட்டு பரமானந்தத்தைத் தருகிறது. தங்களைப் போன்ற இத்திரியின் தங்க உள்ளங்கள் அளிக்கும் மனமுவந்த பாராட்டுதல்கள் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் தருகின்றன. தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டிற்கு மகிழ்ச்சியான நன்றிகள்.

பார்த்தசாரதி சார் கலக்கிய 'வாராயென் தோழி வாராயோ' பாடல் ஆய்வுக்கு மகுடம் சூட்டியதைப் போல பொருத்தமாக அப்பாடலின் வீடியோவைப் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி.

அன்பு கார்த்திக் சார் சொன்னது போல இத்திரிக்கு நீங்கள் ஆற்றியுள்ள தொண்டும், பணியும் நிகரற்றது. தங்கள் கைவண்ணத்தால் அரிய ஆவணங்களாலும், அற்புத நிழற்படங்களாலும், வண்ணப் புகைப்படங்களாலும்,மிகச் சரியான சாதனைப் புள்ளிவிவரங்களினாலும் மாணிக்கத்தேரின் மரகதக் கலசமாக நமது திரி ஜொலிஜொலிக்கிறது. பார்வையாளர்கள் நான்கு லட்சமாக (கார்த்திக் சாருக்கு நன்றி!) உயர்ந்து நமது திரி சாதனைகளின் சிகரத்தைத் தொடுகிறது என்றால் தங்களின் பங்களிப்பு அதற்கு மிக முக்கியமான காரணம் என்றால் அது மிகையல்ல. அந்த அற்புத சாதனையை நிகழ்த்தி நமது திரிக்கும், நடிகர் திலகத்திற்கும்,அவர்தம் ரசிகர்களுக்கும் நீங்காப் புகழையும், பெருமையும் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காகத் தங்களுக்கு கோடி முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது. இரவு, பகல் என்று பாராமல் இத்திரிக்காக நீங்கள் உழைக்கும் உழைப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. மற்றும் ராகவேந்திரன் சார், முரளி சார், கார்த்திக் சார், சாரதா மேடம், பார்த்தசாரதி சார், இன்னும் அனைத்து உயிரான நண்பர்களின் தத்தம் பங்களிப்பால் மேலும் பட்டை தீட்டப் பட்ட வைரமாக ஜொலிக்கும் நமது திரி நான்கு கோடி பார்வையாளர்களைப் பெறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

சிறப்பான தங்கள் பணிக்காக என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th December 2011, 09:15 AM
அன்பு பம்மலார் சார்,

அன்னை இல்ல நாயகரின் 'அன்னை இல்லம்' விளம்பரங்கள் அனாயாசமான அட்டகாசங்கள். அதுவும் பேசும்பட அட்டைப்பட நிழற்படம் கலர்புல் கலக்கல்.

தினத்தந்தி 'அன்னை இல்லம்' நூறாவது நாள் விளம்பரத்தில் கர்ணனும் இடம் பெற்றிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. ஹிந்து ஆங்கில விளம்பரமும் அப்படியே.

'அன்னை இல்ல'த்தின் ஆவணங்களை அள்ளி வழங்கிய ஆவணத் திலகமே! என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th December 2011, 09:24 AM
அன்பு கார்த்திக் சார்,

தங்களுடய அன்பான பாராட்டுப் பதிவிற்கு பற்பல நன்றிகள். பம்மலாரை நீங்கள் பாராட்டியுள்ளவிதம் பாராட்டுக்குரியது. நமது திரியின் மீதும், நடிகர் திலகத்தின் மீதும் தாங்கள் வைத்துள்ள அன்பு வெறியும், தங்கள் அற்புத புள்ளி விவரங்களும், ஆய்வுக் குறிப்புகளும் இத் திரியின் வளர்ச்சிக்கு உரமாய் உதவியுள்ளன. அதற்காக தங்களுக்கு என்னுடய ஸ்பெஷல் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
6th December 2011, 02:50 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் அட்சய பாத்திரத்திலிருந்து இன்றைக்கு அள்ளி வழங்கியிருக்கும் 'அன்னை இல்லம்' ஆவணப்பொக்கிஷங்கள் அனைத்தும் அருமையோ அருமை. விளம்பரங்கள் எட்டும், எட்டுத்திசையெங்கும் நடிகர்திலகத்தின் சாதனைகளைப்பரப்பும் வண்ணம் பொலிவுடன் விளங்குகின்றன.

100-வது நாள் விளம்பரத்துடன் (தமிழ் ஆங்கிலம் இரண்டிலும்) கர்ணனையும் சேர்த்து வெளியிட்ட சிவாஜி பிலிம்ஸுக்கு நன்றி. 'அன்னை இல்லத்திலி'ருந்து கோலோச்சிய 'கர்ணனை' நினைவூட்டியது. பேசும் படம் அட்டைப்படமும், படம் வெளியீட்டு விளம்பரங்களும், 50-வது நாள், மற்றும் 100-வது நாள் விளம்பரங்கள் யாவும் கணிணியில் தோன்றி, கண்ணில் நிறைந்து நிற்கின்றன.

அரிய பொக்கிஷங்களை அறியத்தந்த, அள்ளித்தந்த தங்களுக்கு அகில உலக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் நன்றி.... நன்றி.... நன்றி....

'இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்'.

mr_karthik
6th December 2011, 03:05 PM
'அன்னை இல்லம்' 50-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில், இயக்குனர், தயாரிப்பாளர் பெயர்களைவிட, 'திரையிசைத்திலகம்' கே.வி.மகாதேவன் அவர்களின் பெயரை பெரிதாக இடம்பெறச்செய்து சிவாஜி பிலிம்ஸ் அவருக்கு சிறப்புச் சேர்த்திருப்பது மனதுக்கு இதமளிக்கிறது.

'எண்னிரண்டு பதினாறு வயது' மங்கையை, 'நடையா இது நடையா' எனக்கொஞ்சி, 'மடிமீது தலைவைத்து விடியும் வரை' தூங்கும் வண்ணம், 'சிவப்பு விளக்கை எரிய'விட்ட அந்த இசைமேதைக்கு இந்த கௌரவம் அவசியமே.

vasudevan31355
6th December 2011, 11:35 PM
திரு தேவ் ஆனந்த் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி.

http://i1226.photobucket.com/albums/ee410/punjabiportal/dev-anad-death-dead.jpg

ஹிந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகவும், 'ஸ்டைல் கிங்' ஆக ஹிந்தி திரையுலக ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவருமான திரு தேவ் ஆனந்த் அவர்கள் 6-12-2011 அன்று மாரடைப்பால் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 88. 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா', கைடு, ஜுவல் தீப், போன்ற காலங்களை வென்ற படங்களை நமக்களித்தவர். ஸ்டைல் சக்கரவர்த்தி. இவர் நடித்த 'ஜானி மேரா நாம்' சூப்பர் ஹிட் மூவி நம் அன்பு நடிகர் திலகத்தின் 'ராஜா'வாக ரீமேக் ஆகி மாபெரும் வெற்றி கண்டது. அவருக்கு நமது திரியின் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.


மறைந்து விட்ட திரு தேவ் ஆனந்த் அவர்களின் நினைவாக பிரசித்தி பெற்ற "கான்ச்சீ ரே...கான்ச்சீ ரே" என்ற பாடல் காட்சி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' (1971) என்ற உலகப் புகழ் பெற்ற திரைப் படத்திலிருந்து வீடியோ வடிவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ptrl5WFwmTQ

துயரத்துடன்
வாசுதேவன்.

RAGHAVENDRA
7th December 2011, 12:03 AM
டியர் வாசுதேவன் சார்
தேவ் ஆனந்த் அவர்களின் மறைவு நமது இந்திய நாட்டுத் திரையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது தனி ஸ்டைலைத் தான் பல நடிகர்கள் பிற்காலத்தில் பின்பற்றினர்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.

அவர் நினைவாக மிக மிகப் பிரபலமான ஹிந்தித் திரையுலகம் இருக்கும் வரையிலும் அதற்கு மேலும் இருக்கக் கூடிய பாடல்கள்...


http://youtu.be/jtn4am42kW4


http://youtu.be/ItCHlI_qC44


http://youtu.be/lquTatrN_9Y

RAGHAVENDRA
7th December 2011, 12:17 AM
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல், டேக்ஸி டிரைவர் திரைப்படத்தில் தேவ் ஆனந்த் - கல்பனா கார்த்திக் இணை நடித்த பாடல் - இந்தப் பாடல் வரிகள் இன்று அவர் மறைந்த பிறகு உயிர் பெற்றுள்ளன. பொருள் தெரிந்தால் நிச்சயம் கண்ணில் நீர் பெருகும்...


http://youtu.be/e74H54urf6M

vasudevan31355
7th December 2011, 07:14 AM
'நீதி' (07-12-1972) 40-வது ஆண்டு அமர்க்கள ஆரம்பம்.

'நீதி'யோடு வாழ்ந்து நேர்மை காத்த தூயவர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-5.jpg?t=1323221564

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/needhi-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-3.jpg


நாளை முதல் குடிக்க மாட்டேன்...

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=94DBfwjoFS4


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th December 2011, 08:12 AM
மனிதரில் மாணிக்கத்திற்கு (07-12-1973) 39-ஆவது பிறந்த நாள் தொடக்கம்.

'மனிதரில் மாணிக்கம்' திரைப்படத்தில் 'மனிதருள் தெய்வம்' (மிக அரிய நிழற் படங்கள்).

குறிப்பு: 'மனிதரில் மாணிக்கம்' படத்தின் vcd, மற்றும் dvd க்கள் இதுவரை வெளியாக வில்லை. இணையத்திலும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்கள் காணப்படவில்லை. மிக அரியதொரு திரைப்படமாக ஆகி விட்ட இந்த மாணிக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி!

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/166.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/m5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/77.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/m9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/m7avi_000620453.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/21-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/22-3.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
7th December 2011, 01:28 PM
நீண்ட நாட்களாகக் காத்திருந்த பாடல் காணொளியாக ... அஞ்சல் பெட்டி 520 திரைப்படத்திலிருந்து பத்துப் பதினாறு பாடல். இதைத் தரேவற்றிய அன்பருக்கும் Youtube இணைய தளத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.


http://youtu.be/Bh12YRzxnO8

mr_karthik
7th December 2011, 03:10 PM
'நீதி' நினைவுகள்

ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.

1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).

இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.

வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.

நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).

கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.

பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.

முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).

அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.

காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.

படம் வெளியானது 1972 ஆச்சே.

groucho070
7th December 2011, 03:19 PM
Always a special place in my heart for Neethi.

Haven't seen the original, so I don't know how much performance credit goes to Rajesh Khanna. But NT just nailed it as frustrated lorry driver who rather spent time in jail than to be charitable to the family whose member he accidentally killed.

Unlike other K.Balaji remakes, where things happen suddenly and inexplicably, here the change of heart of the main characters are shown nicely. NT's patented Rage is well used here especially in the beginning when totally didn't get the reason behind the experimental judgement. Mappilaya pAthukkadi was total riot! His dance, his naughty leer, waking up middle of the night sleeping next to a prostitute. Gee which other hero of that era would do that? And nAlai muthal kudikkamAtten, nice extension of Kannadhasan's pledge :smile:.

Really, this is one of those not-so-great NT movies that I visit more often than I should.

mr_karthik
7th December 2011, 05:21 PM
அன்பு வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் இரு மாணிக்கங்களான 'நீதி', மற்றும் 'மனிதரில் மாணிக்கம்' படங்களின் ஸ்டில்களையும், நீதி பாடல் காட்சியையும் பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

அன்பு ராகவேந்தர் சார்,

அஞ்சல் பெட்டி 520 படப்பாடல் காட்சியை இணைத்தமைக்கு மிக்க நன்றி. பலர் இப்பாடலை இப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பார்கள் என்பது திண்ணம்.

நீங்கள் இருவரும் மறைந்த மாபெரும் நடிகர் தேவ் ஆனந்த் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலியில் நானும் பங்கேற்கிறேன். 'காஞ்சாரே... காஞ்சாரே' பாடல் காட்சி, முந்தைய நாட்களுக்கு இட்டுச்சென்று, அப்படம் சென்னையில் ஓடிய நாட்களையும், அப்போது சென்னை நகர் முழுக்க இப்பாடலும், 'தம் மேரே தம்' பாடலும் ஒலித்த அந்த நாட்களை நினைவுக்கொண்டு வந்தன.

vasudevan31355
7th December 2011, 08:20 PM
'நீதி' (நடிகர் திலகம்) ஒரு மினி ஆய்வு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-6.jpg

'நீதி' நினைவலைகளில் எங்களையும் மூழ்கச் செய்த கார்த்திக் சாருக்கு நன்றி. 'ராஜா' வை எந்த அளவுக்கு மறக்க முடியாதோ அந்த அளவுக்கு நீதியையும் மறக்க முடியாது.

புதுமையான கதைக்களம் கொண்ட அற்புதமான இந்தப் படத்தை ரீமேக் படம் என்று நம்ப முடியாத வகையில் நடிகர் திலகமும்,சி.வி.ராஜேந்திரன் அவர்களும் தங்கள் அபாரத் திறமையால் இமயத்தின் உச்சியில் தூக்கி நிறுத்தி இருப்பார்கள்.

ஒரு சராசரி லாரி டிரைவருக்குரிய குடிகாரன்,(அதுவும் சாராயம்) பெண் பித்தன்,முரடன், அடிதடி கேஸ் என்ற அத்தனை குணங்களையும் கண் முன்னே கொண்டு நிறுத்துவதாகட்டும்..

"சாராயம் என்னைக்கு பொறந்ததோ அன்னைக்கு பொறந்தவண்டா நான்" என்று ஜம்பம் அடித்துக் கொள்வதாகட்டும்,

"வாத்தியாரே! மெதுவாப் போங்க... லாரி நெறைய புல்லா லோடு இருக்கு" என்று கிளீனர் கூற, "அத்தேறிக் கழுத! லாரி மட்டுமாடா லோடு, உங்க வாத்தியாரும்(!) லோடு தாண்டா" என்று பீற்றிக் கொள்வதாகட்டும்....

லாரியில் ராமுவை அடித்துவிட்டு நீதி மன்றத்தில் "அத்தேறிக் கழுத! நான் போற ஸ்பீடுக்கு எந்தப் பய என்ன புடிக்க முடியும்?" என்று சவுண்ட் விட, நீதிபதி அதற்கு சத்தம் போடக்கூடாது என எச்சரிக்க, அதே டயலாக்கை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வதாகட்டும்...

தண்டனையை அனுபவிக்க கிராமத்திற்கு செல்லும் போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க, சிலம்பை எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகட்டும்,

கொஞ்சம் கொஞ்சமாக சௌகாரின் குடும்பத்துடன் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்தின் பொறுப்பான அண்ணனாக, மகனாக, குழந்தைகளுக்கு மாமாவாக, தம்பியாக தன்னை செதுக்கி புது மனிதனாக்கிக் கொள்வதாகட்டும்....

ஊரை 'மோகினிப் பேய்' என்ற போர்வையில் பயமுறுத்தி உலா வரும் 'பயாஸ்கோப்' காட்டும் பெண்ணை அடக்கி, ஆண்டு, தனக்கு அடிமைப் படுத்திக் கொள்வதாகட்டும்...

தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து திருமணம் செய்து வைத்த தங்கை தனக்கு ஆசையாய் உடுத்திக் கொள்ள வாங்கி வந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுவதாகட்டும்...('நீதி'யில் இவருக்கு இரண்டே இரண்டு உடைகள்தான் என்பது எப்போதும் பேசப்படுகிற வரலாற்று உண்மை ஆயிற்று.)

தங்கைக்கு சீர் செய்ய பாலாஜியிடம் தான் உழைத்ததற்கான ஊதியத்தில் சிறிது வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு அற்புதமான சல்யூட் (இந்த சல்யூட்டுக்கும், சிவந்த மண்ணின் சல்யூட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!) அடித்து அமர்க்களம் செய்வதாகட்டும்...

தான் அண்ணியாக மதிக்கும் சௌகாரின் மானத்தைக் காக்க வில்லன் மனோகரிடம் தொங்க விட்டிருக்கும் இறைச்சிகளுக்கு மத்தியில் போடும் ஆக்ரோஷ சண்டையாகட்டும்...(இந்த அருமையான சண்டைக் காட்சியில் ஐஸ் கட்டிகளின் மீது உண்மையாகவே வழுக்கியபடி வருவார். 'தியாகம்' படத்தில் தொங்க விட்டிருக்கும் மீன்களுக்கு மத்தியில் மீன் மார்க்கெட்டில் ஜஸ்டினுடன் படு ஸ்டைலாக நடிகர் திலகம் போடும் சண்டைக்காட்சிக்கு முன்னோடி இந்த சண்டைக்காட்சி எனலாம்).

இறுதில் நன்னடைத்தைக்காக தனக்கு விடுதலை என்று தெரிந்தவுடன் ஊரையும், உறவுகளையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கிராமத்திலேயே பாச உணர்வுகளில் ஊறி அங்கேயே தங்கி விடுவதாகட்டும்...

நடிகர் திலகம் ஸ்டைலான நடிப்பில் கொடிகட்டிப் பறந்து அந்த மூன்று மணி நேரமும் நம்மை ஆடாமல் அசையாமல் கட்டிப்போட்ட அந்த அற்புதக் காலங்கள் (கார்த்திக் சார் சொன்னது போல அந்த 1971,72-கள்) நமக்கெல்லாம் சொர்க்கபுரி காலங்கள். நம்மை தவிக்க விட்டு, துடிக்க வைத்துவிட்டுப் போய் விட்ட அந்தத் தங்கத் தலைவனின் தன்னிகரில்லா காலங்கள்.

கனத்த இதயத்துடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
7th December 2011, 11:27 PM
டியர் வாசுதேவன்,

நீதி படம் குறித்து தங்களின் பதிவு அற்புதம், நடிகர்திலகம் மிக இயல்பாக நடித்திருப்பார், படம் முழுவதும் ஒரே உடை, ஒரு பாடல் காட்சியில் மட்டும் தன் தங்கை (ஜெயகௌசல்யா) எடுத்து கொடுத்த உடையை போட்டு நடித்திருப்பார், தன் தங்கைக்கு சீர் செய்ய வேண்டி இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பணம் கேட்கையில் பாலாஜி பணம் கொடுத்து உன் உழைப்பிற்கு இது ஊதியம் என்று ஒரு தொகையை கொடுப்பார், அதை வாங்கும் போது கொடுக்கறது பெரிசில்ல, அத சமயம் பார்த்து தந்தற்காக நன்றி சொல்லும் இடம், காந்திமதி இவர் வாங்கி வந்த பொருளை வேண்டாம் என்று சொல்லி இவனே கைதி என்று சொல்லும் போது, அம்மா உங்களுக்கு கண் இல்லை என்று ரொம்ப வேதனைப்பட்டேன், இப்பதான் தெரியுது உங்களுக்கு இதயமும் இல்லேன்னு என்று வேதனைப்படும் இடமும் நடிகர்திலகத்தின் முத்திரை பதித்த காட்சிகள்!!!

Subramaniam Ramajayam
8th December 2011, 12:09 AM
'நீதி' நினைவுகள்

ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.

1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).

இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.

வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.

நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).

கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.

பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.

முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).

அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.

காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.

படம் வெளியானது 1972 ஆச்சே.

படம் வெளியானது 1972 ஆச்சே.[/QUOTE]
ABSOLUTELY WELL SAID KARTIK 1972 GOLDEN YEAR FOR NADIGARTHLAGAM ANDASWELLAS FOR US TOO.
Neethi deserves 10days run all three theatres, for the reasons well explained in this thread earlier producers stopped the 10days run and stll 99thday shield kept indevparadise,when represented to balajee he regretted very much and asked us to bear with the happening.

pammalar
8th December 2011, 02:51 AM
அன்னை இல்லத்தின் அற்புத பொக்கிஷங்களை அள்ளி வழங்கிய ஆவணத்திலகம் பம்மலாருக்கு உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நன்றிகள்...
அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th December 2011, 03:39 AM
டியர் வாசுதேவன் சார்,

இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் பொழிந்துள்ள இதயபூர்வமான பாராட்டு மாரிக்கு எனது இதயங்கனிந்த பெருவாரியான நன்றிகள் !

திரிப்பணியை, திருப்பணியாகச் செய்துவரும் தங்களின் பங்களிப்பு அளப்பரியது. தங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் ! தங்களின் திரித்தொண்டு மென்மேலும் சிறந்தோங்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

ஹிந்தி ஸ்டைல் கிங் அமரர் தேவ் ஆனந்த் அவர்களுக்கு தீர்க்கமான அஞ்சலியை செலுத்திவிட்டீர்கள் !

"நீதி", "மனிதரில் மாணிக்கம்" பதிவுகள் வைர-வைடூரியங்கள் ! "நீதி" மினி ஆய்வு மிக அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th December 2011, 04:02 AM
டியர் mr_karthik,

தங்களின் ஆனந்தமயமான பாராட்டுப்பதிவுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !

தாங்கள் பதிவிட்ட "நீதி" நினைவுகள் வரலாற்றுச் சுவடுகள் ! அனைவரையும் 1972 டிசம்பர் மாதத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் ! ஏதோ நேற்று நடந்த நிகழ்வு போல அன்றைய அற்புத நினைவுகளை தாங்கள் விவரிக்கும்விதமும், தங்களின் அபார நினைவாற்றலும் போற்றுதலுக்குரியது. தங்களுக்கு எனது பசுமையான பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th December 2011, 04:05 AM
டியர் ராகவேந்திரன் சார்,

அமரர் தேவ் ஆனந்த் அவர்களுக்கு சரியான அஞ்சலியை செலுத்தியுள்ளீர்கள் !

"பத்து பதினாறு முத்தம் முத்தம்" பாடல் வீடியோவை பதிவிட்டமைக்காக தங்களுக்கு பல்லாயிரம் நன்றி முத்தாரங்கள் !

Dear Rakesh,

"Needhi" in a nutshell, Superb !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th December 2011, 04:41 AM
அமரத்துவம் அடைந்துவிட்ட பாலிவுட்டின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் கிங் தேவ் ஆனந்த் அவர்களுக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி

2007-ம் ஆண்டு தேவ் ஆனந்த் அவர்கள் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். அதன் வெளியீட்டு விழா சென்னையிலும் நடைபெற்றபோது அது குறித்து 'குமுதம்' வார இதழில் வெளிவந்த செய்தித் தொகுப்பு:

வரலாற்று ஆவணம் : குமுதம் : 31.10.2007
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5156.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5157.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5158.jpg

தேவ் ஆனந்த் நினைவாக 'Khoya Khoya Chand',
"Kala Bazaar(1960)" திரைப்படத்திலிருந்து...

http://www.youtube.com/watch?v=oT9kqNvaUoQ

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

pammalar
8th December 2011, 05:07 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

லக்ஷ்மி கல்யாணம்

[15.11.1968 - 15.11.2011] : 44வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5131-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5026-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
8th December 2011, 07:21 AM
டியர் ராகவேந்திரன் சார்,

அஞ்சல்பெட்டி 520-ன் அரிய பாடலான 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' பாடலைப் பதிப்பித்தமைக்கு சந்தோஷமான நன்றிகள்.

தேவ் ஆனந்த் அவர்களின் தேனினும் இனிய கானங்களை காணொளி வடிவில் பதிப்பித்து காதுகளுக்கும், கண்களுக்கும் தெவிட்டாத விருந்து அளித்து விட்டீர்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை. அதுவும் அந்த 'jaye to jaye kahan' மனதை விட்டு அகல மறுக்கிறது. அன்று இரவு தூக்கமில்லாமல் செய்து விட்டீர்கள். இதுபோன்ற அன்பு தண்டனைகள் ஆயிரம் ஆயிரமாய் எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அற்புதப் பதிவுகளுக்கு அன்பான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th December 2011, 07:36 AM
அன்பு கார்த்திக் சார்,

'நீதி' நினைவலைகளை நீங்கா நினைவலைகளாய் ஆக்கி விட்டீர்கள். உங்கள் அபார நினைவாற்றலுக்கு என்னுடய ஒரு 'நீதி' (தேங்க்ஸ் )சல்யூட். அற்புதமான பதிவு. நாங்கள் கடலூரில் கொட்டும் மழையில் (ஒரே வெள்ளக்காடு) அதைவிட பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி டிக்கட் முத்தை எடுத்து, நீந்தி, நீதியை நியூசினிமா திரை அரங்கில் கண்டு களித்தது உங்கள் பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது. அடாது மழையிலும் விடாமல் அரங்கு ஐந்தே நிமிடங்களில் நிரம்பி விடும். கிட்டத் தட்ட ஒரு மாதம் ஓடி வசூல் மழை பொழிந்து அபார வெற்றி கண்டது நீதி. அந்தக் காலங்களெல்லாம் நமக்கு குப்தர்களின்....... போல.

'நீதி' மற்றும் 'மனிதரில் மாணிக்கம்' பதிவுகளுக்காக தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th December 2011, 08:00 AM
ஆவணப் பதிவரசர் பம்மலார் சார்,

தங்கள் பாராட்டுகளுக்கு என் தலை வணங்கிய நன்றிகள். தங்கள் பாராட்டும், அன்பும் திக்குமுக்காட வைக்கிறது.

தேவ் ஆனந்த் அவர்களுக்கு நம் அன்புத்தலைவரை சம்பந்தப்படுத்திய அவருடைய பேட்டியை வைத்தே அஞ்சலி செய்திருப்பது மிகப் பொருத்தம்.(இதற்குத் தான் பம்மலார் வேண்டுமென்பது) தன் காதலைப் பற்றிய அவருடைய ஒளிவு மறைவு இல்லாத மனம் திறந்த பேட்டி நிஜமாகவே வியக்க வைத்து விட்டது. ஒரு புகழ் பெற்ற ஸ்டைல் ஹீரோவிற்கு சம அந்தஸ்துடைய இன்னொரு ஹீரோ (ராஜ்கபூர்) வில்லனாகிப் போனது தேவ் ஆனந்த் அவர்களின் துரதிருஷ்டம் தான். இப்படி போல்டாக இங்கெல்லாம் யார் இப்படி பேட்டி தருகிறார்கள்? இந்தியாவே வாயைப் பிளந்து பார்த்த அந்த அசத்தல் கதாநாயகனுக்கே காதல் தோல்வி. ம்... விதி யாரை விட்டது?

(தேவ் ஆனந்த் அவர்கள் 110 திரைப்படங்களில் நடித்தும், 19 படங்களை இயக்கியும், 35 படங்களைத் தயாரித்தும் மாபெரும் சாதனைகள் புரிந்த நடிகர். 1946- இல் 'Hum Ek Hai' என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமானார். 2011- இல் வெளியான 'Charge Sheet'தான் அவருடய கடைசிப் படம். 2001-இல் 'பத்மபூஷன்' அவார்டும், 2002-இல் 'தாதா சாகேப் பால்கே' விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.).

நடிகர் திலகத்தைப் பற்றி அவர் சிலாகித்து சொன்ன விதம் அவர் உண்மையாகவே ஒரு ஜென்டில்மேன் தான் என்று நிரூபித்து விட்டது. அவருடய நல்ல உள்ளத்திற்கு அவருடய ஆத்மா நல்லபடியாக சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

வித்தியாசமான அருமைப் பதிவை அளித்ததற்கு தங்களுக்கு என்னுடைய அகம் குளிர்ந்த அன்பான நன்றிகள்.

அது போலவே 'Khoya Khoya Chand' வீடியோப் பாடல் பதிவு செய்து கலக்கியிருக்கிறீர்கள். என்ன பாடல் அது!....இப்படிப்பட்ட பாடல்களை இனி கேட்க முடியுமா?... சூப்பர் பதிவு.

'லக்ஷ்மி கல்யாணம்' முதல் வெளியீட்டு விளம்பரம், பேசும் படம் முதல் வெளியீட்டு விளம்பரம் இரண்டும் அதி அற்புதம். எங்கிருந்துதான் தேடித் பிடிக்கிறீர்களோ.... அசுர சாதனை.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th December 2011, 08:49 AM
டியர் ராதா கிருஷ்ணன் சார்,

தங்களுடைய மனமுவந்த 'நீதி' பதிவு பற்றிய பாராட்டிற்கு பணிவான நன்றிகள். நான்கே வரிகளில் 'நச்'சென்று நடிகர் திலகத்தின் அந்த பாலாஜியுடனான கட்டத்தை சொல்லியிருப்பதற்கு என் அன்பு பாராட்டுதல்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
8th December 2011, 01:52 PM
'மனிதரில் மாணிக்கம்'

இப்படத்தில் நடிகர்திலகம் கௌரவத்தோற்றம் என்றுதான் பெயர். ஆனால் படம் முழுவதும் வருவார். கதாநாயகன் ஏ.வி.எம்.ராஜனுக்கு ரொம்பவே சீரியஸ் ரோல் என்பதால், தனது ஜோவியலான, வித்தியாசமான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துபவர் நடிகர்திலகம்தான். ஞாபக மறதிக்காரரான டாக்டர் ரோலில் வெளுத்து வாங்கியிருப்பார்.

(இப்படத்தைப்பார்த்து இதே போல ஒரு ரோலில் நடிக்க வேண்டுமென்று தான் விரும்பியது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட 'சுயம்வரம்' படத்தில் நிறைவேறியதாக நடிகர் கார்த்திக் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருந்தாலும், இரண்டு பேருடைய பெர்பாமன்ஸுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் கார்த்திக் ஒப்புக்கொண்டிருந்தார்).

சட்டை போடாமல் வெறும் பனியன் மட்டும் அணிந்து, அதன் மேல் கோட்டுப்போட்டுக்கொண்டு, தாடையில் குறுந்தாடியுடன் தோன்றும் அந்த ரோல், அதுவரை நடிகர்திலகம் செய்திராதது. பயங்கரமாக சண்டை நடந்துகொண்டிருக்கும்போது, மாஸ்ட்டர் ராமுவின் கையைப்பிடித்துக்கொண்டு, சண்டையில் அடிபட்டு விழும் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே நடந்துபோகும் இடம் ஒன்று போதும் அவருடைய அப்பாவித்தனத்தைக்காட்ட.

கையில் கத்தியுடன் மிரட்டும் பிரமீளாவின் மிரட்டலுக்குப்பயந்து 'ஐ.வி.ஸிங் ஃபார் யூ' பாடலுக்கு ஆடும்போதும் செம கிளாப்ஸ் வாங்குவார். இறுதிக்காட்சியில் 'லவ் இஸ் காட்' என்று சல்யூட் அடித்து படத்தை முடித்து வைப்பதும் நடிகர்திலகம்தான்.

1973 டிசம்பர் 7 அன்று இப்படம் வெளியானது. சரியாக 15 நாட்கள் கழித்து 22-ம் தேதியன்று 'ராஜபார்ட் ரங்கதுரை' வெளியானது. சென்னை பைலட் தியேட்டரில் ரா.ரங்கதுரை வெளியானதால், மனிதரில் மாணிக்கம் அத்தியேட்டரில் ரிலீஸாகும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்று போடப்பட்டது. வடசென்னையில் ஏழுகிணறு பகுதியில் இருந்த, (புதுப்படங்கள் அபூர்வமாகவே வெளியாகக்கூடிய) ஸ்ரீ முருகன் தியேட்டரில் வெளியானது. அந்த தியேட்டர் அதிபர் திரு பரமசிவ முதலியார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகர், என்றாலும் நடிகர்திலகத்தின் பழைய படங்கள் நிறைய அந்த தியேட்டரில்தான் பார்க்க முடியும். மனிதரில் மாணிக்கம் புதிய ரிலீஸாக அந்த தியேட்டரில்தான் பார்த்தோம். கிரௌனில் 'கௌரவம்' ஓடிக்கொண்டிருக்க, ஸ்ரீ கிருஷ்ணாவில் 'ராஜபார்ட் ரங்கதுரை' வெளியானது. கௌரவமும், ராஜபார்ட்டும் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அகஸ்தியாவில் 'சிவகாமியின் செல்வன்' ரிலீஸாகி விட்டது. ரசிகர்களுக்கு ஒருபக்கம் கொண்டாட்டம். இன்னொருபக்கம், இப்படி கியூவில் படங்கள் ரிலீஸாகிறதே என்ற வருத்தம்.

பின்னர் வீடியோ யுகம் வந்த பிறகு, வீடியோ கேஸட்டில்தான் மீண்டும் 'மனிதரில் மாணிக்கம்' பார்க்க முடிந்தது.

groucho070
8th December 2011, 02:43 PM
(இப்படத்தைப்பார்த்து இதே போல ஒரு ரோலில் நடிக்க வேண்டுமென்று தான் விரும்பியது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட 'சுயம்வரம்' படத்தில் நிறைவேறியதாக நடிகர் கார்த்திக் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருந்தாலும், இரண்டு பேருடைய பெர்பாமன்ஸுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் கார்த்திக் ஒப்புக்கொண்டிருந்தார்).
Totally different type of character. Karthik's was funny, forgetful doctor - totally dangerous character in real world (imagine he forgets sympthoms of fever and gives patient laxative).

NT's, though comedic, is introspective. He might look dumb, but he knows what's happening and he's AVM Rajan's conscience in the film. One should not dismiss this as another cameo, I believe it's one of his best cameo. More of an extended cameo. I revisit this film sometimes with the remote control in end, just watch NT's antics (I will sing for you, hillarious) and watch him turn sagely in another scene. Wonderful role.

To all the fans making this thread pick up awesome, thank you, thank you, thank you. I know I am hardly here, but I try to catch up. Truly appreciate your contributions here.

mr_karthik
8th December 2011, 02:55 PM
அன்புள்ள பம்மலார்,

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

தாங்கள் வழங்கிய, 'லட்சுமி கல்யாணம்' ஆவணங்களுக்கும், தேவ்ஜியின் நூல் வெளியீட்டு விழா பற்றிய குமுதம் இதழ் பக்கங்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

ஜீனத்துடனான தேவ்ஜியின் காதல் ஒருதலை ராகமாகத்தெரிகிறது. அத்துடன் கால வித்தியாசமும் அதிகம் தெரிகிறது. Hare Rama Hare Krishna வெளியானது 1971-ல். ஆனால் Sathyam Shivam Sundharam வெளியானது 1978-ல். இதற்கிடையே ஜீனத் நிறைய வெளிப்படங்களில் நடித்து விட்டாரே. சரி, நமக்குத் தெளிவாகத்தெரியவில்லை.

இருந்தாலும் ஒளிவு மறைவில்லாமல் தேவ்ஜி சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

பிற்காலத்தில் ஜீனத்தின் திருமண வாழ்க்கை தியாகம் நிறைந்தது என்றும். தீராத நோய்வாய்ப்பட்ட கணவருக்கு பணிவிடை செய்வதில் அவர் மன நிறைவு கண்டார் என்று படித்திருக்கிறேன்.

RAGHAVENDRA
8th December 2011, 03:09 PM
நம் அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் பாகுபாடின்றி இடம் பெற்ற திரைப்படங்களில் ஒன்று மனிதரில் மாணிக்கம், குறிப்பாக ஐ வில் சிங் பார் யூ பாடல் அந்தக் கால கட்டத்தில் இடம் பெறாத மெல்லிசைக் கச்சேரி மேடைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மிகப் பிரபலமாகி, இன்று வரை சௌந்தர்ராஜனின் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலைப் பற்றி நாம் விவாதிக்கும் போது அதைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்றாமலிருக்குமா
பார்க்காவிட்டால் தூக்கம் தான் வருமா

பார்ப்போம்... இதோ...


http://www.dailymotion.com/video/xh5rr5_i-will-sing-for-you-manitharil-maanikkam_travel

groucho070
8th December 2011, 03:15 PM
Thank you, Raghavendra sir. Iconic! Iconic!

parthasarathy
8th December 2011, 04:07 PM
வழிமொழிகிறேன் !

'வாராயோ தோழா வாராயோ
சாரதிபதிவை வாசிக்க வாராயோ'

சாரதி சார்,

தங்கள் ஏற்றமிகு எழுத்தில் மேலும் எழுச்சி பெற்ற 'வாராயென் தோழி வாராயோ' பாடலின் ஒலி-ஒளிக்காட்சி:


http://www.youtube.com/watch?v=JM5HxZM6R3E

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு (போன் வழியாகவும்) மிக்க நன்றி.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

பாராட்டியதோடு நில்லாமல், உடனே "வாராய் என் தோழி வாராயோ" படப் பாடலைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றிகள். அதோடு நில்லாமல், போனிலும் அழைத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்.

உங்கள் எல்லோருடைய பாராட்டுதல்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
8th December 2011, 04:22 PM
அன்பு பார்த்தசாரதி சார்,

சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு (போன் வழியாகவும்) மிக்க நன்றி.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

பாராட்டியதோடு நில்லாமல், உடனே "வாராய் என் தோழி வாராயோ" படப் பாடலைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றிகள். அதோடு நில்லாமல், போனிலும் அழைத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்.

உங்கள் எல்லோருடைய பாராட்டுதல்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

மேலும், போனில் அழைத்துப் பாராட்டிய திரு. சதீஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.

உங்கள் எல்லோருடைய அங்கீகாரமும் பாராட்டு மழையும், என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கிறது.

parthasarathy
8th December 2011, 04:30 PM
[QUOTE=parthasarathy;779974]
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

தங்களின் "கருடா சௌக்கியமா" படத்தின் பதிவு அபாரம். குறிப்பாக, நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக கவனித்து, விவரித்து, அதகளப் படுத்தி விட்டீர்கள்.

அத்துடன் நில்லாமல், "நீதி" படத்தின் மினி ஆய்வும் மிகச் சுவையாக இருந்தது. தங்களிடத்திலிருந்து மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

மேலும், போனில் அழைத்துப் பாராட்டிய திரு. சதீஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.

உங்கள் எல்லோருடைய அங்கீகாரமும் பாராட்டு மழையும், என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கிறது.

Subramaniam Ramajayam
8th December 2011, 09:51 PM
Anjalpett520 PATTUPADNARU song a long mi ssng in tv relays, one of the rare songs like OH littleflower neelavanam. thanks mr raghavendran.
expecting more collections of neelavanam, due for dec.
kartik sir gving details of seventies nicely. sorgam was cresent moves release and engrundovandal a svaji release, my vague rememberance.
manitharulmanickam a movie suddenly appeared in the scene without much adv and disappeared verysoon before not spoken in publc

vasudevan31355
9th December 2011, 09:29 AM
அன்பு நண்பர்களே!

1982-ஆம் ஆண்டு ஜூன் மாத 'ஜென்டில்மென்' ஆங்கில இதழ் நடிகர் திலகம் ராஜ்ய சபா எம்.பி ஆக பதவி ஏற்றுக்கொண்டதைப் பெருமைபடுத்தும் விதமாக அவர் புகழ் பாடும் அற்புதமான ஒரு கட்டுரையை வெளியிட்டது. 'Men and Matters' என்ற பகுதியில் இந்த சிறப்பான கட்டுரை இடம் பெற்றுள்ளது. நடிகர் திலகத்தின் அரசியல் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட துறைகளைப் பற்றி அவரே தெரிவிக்கும் அற்புதமான விஷயங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. சென்சார் சம்பந்தப் பட்ட விஷயங்கள், சினிமாத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள், இப்படி பல்வேறு கருத்துக்களை அழகாகவும், சுருக்கமாகவும் பேட்டியில் கொடுத்திருக்கிறார் நடிகர் திலகம். புகழ் பெற்ற நடிகர்கள் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை சிலாகித்துப் பாராட்டியுள்ள விதம் நம்மையெல்லாம் மிகவும் பெருமைப் பட வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் திலகத்தின் அன்புப் புதல்வர் திரு.ராம்குமார் தன் தந்தையைப் பற்றி பலவிஷயங்கள் தெரிவித்திருப்பது இக்கட்டுரைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அரிய அற்புதமான போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய இந்தக் கட்டுரையை இப்போது படித்து மகிழலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_2-2.jpg

பக்கம் 1

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0001-2.jpg

பக்கம் 2

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0002-1.jpg

பக்கம் 3

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0003-1.jpg

பக்கம் 4

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0004.jpg

பக்கம் 5

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0005.jpg

பக்கம் 6

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0006.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
9th December 2011, 11:21 AM
அன்புள்ள வாசுதேவன் சார்,

காணக்கிடைக்காத 'ஜென்டில்மேன்' ஆங்கில இதழில் நடிகர்திலகத்தின் சிறப்பு ஆர்ட்டிக்கிள் மற்றும் அவரது பிரத்தியேக பேட்டியை அதன் ஒரிஜினல் வடிவில் பதிப்பித்த விதம் அருமை. இந்த இதழ்கள் எல்லாம் நாங்கள் பார்த்திராதது. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து அந்தப்பொக்கிஷப் பதிவுகளைக் கண்ணுறச்செய்தமைக்கு மிக்க நன்றி. நம்மவர்கள் எங்கிருந்தெல்லாம் ஆவணங்களைத்தேடியெடுத்து வந்து தருகிறார்கள் என்பது நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறது.

அன்புள்ள ராமஜெயம் சார்,

சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் இரண்டுமே சென்னையில் 'எலைட் மூவீஸ்' ரிலீஸ்தான். எனவேதான் அவ்விரண்டு படங்களின் 100-வது நாள் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாக நடந்தது அத்ற்கு முன்னும் அதற்குப்பின்னும் நடந்ததில்லை. (கமல் தனது ஒரே நிறுவனத்தின் சார்பில் தயாரித்த சதி லீலாவதி, மகளிர் மட்டும், குருதிப்புனல் ஆகிய மூன்றின் வெற்றிவிழாக்களை ஒரே விழாவாகக் கொண்டாடினார்).

அத்துடன் என் நினைவுக்கெட்டிய வரையில் பாலாஜியின் எந்தப்படத்தையும் சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்ததாக தெரியவில்லை.

parthasarathy
9th December 2011, 05:59 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள்

மீண்டும் ஒரு புதிய கட்டுரைத் தொடர் மூலம் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பை வேறு வேறு பரிமாணங்களில் இப்பூவுலகம் உள்ளவரை ரசித்துக் கொண்டே இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், அவரது ஒவ்வொரு படத்தையும், திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும், ஒவ்வொரு முறையும், ரசிப்புத் தன்மையுள்ள ஒவ்வொருவருக்கும், வேறு வேறு கோணங்களில், அவரது அற்புதத் திறமையை புதிது புதிதாக ரசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

நான் இங்கு எழுதப் போவது, நிச்சயம் அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஏற்கனவே ரசித்தது தான் (திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அடிக்கடி குறிப்பிடுவது போல், அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஒரே கோணத்தில்தான் அவரை ரசிக்கிறார்கள்.) இருப்பினும், அந்த அற்புதத் தருணங்களை மறுபடியும் எழுத்து வடிவில் இங்கு கொணர என்னால் இயன்றவரை முயல்கிறேன்.

நடிகர் திலகம் பெரிய/அகன்ற திரைக்கு அறிமுகம் ஆன கால கட்டத்தில், பெரும்பாலும், அனைத்து நடிகர்களும் நாடகத்திலிருந்துதான் அறிமுகம் ஆனார்கள். நாடகம் என்கின்ற ஊடகம் எதையும் உரத்துச் சொல்லுவதிலும், சொல்ல வந்த விஷயத்தைப் பாடல்களின் மூலமும் சொல்லிக் கொண்டிருந்தது. காரணம் எல்லோரும் அறிந்ததுதான் - கடைசி இருக்கையில் இருப்பவருக்கும் கேட்க வேண்டும் என்பதால். இந்தக் காரணத்தால், நாடகத்திலிருந்து வந்த நடிகர்களின் நடிப்பில் ஒரு வித செயற்கைத் தன்மை இருப்பதாக சொல்வதுண்டு. இது சரியான கூற்று அல்ல. நாடகத்திலிருந்து வந்தவர்களிடம் இருந்த சரளமான நடிப்பு நேரே வெள்ளித்திரைக்கு வந்தவர்களுக்கு ஒரு போதும் இருக்காது. இதற்குக் காரணம், நாடகம் அளிக்கும் அனுபவம் மற்றும் தைரியம் - நேரே லைவாக ஆடியன்சை எதிர்கொள்ளவிருப்பதால். அங்கு தான் ரீடேக் எல்லாம் கிடையாதே.

அதே சமயம், நாடகத்திலிருந்து நடிக்க வந்த நடிகர்கள் பாடல் காட்சியில் நடிக்கும் போது, அவர்களுடைய உடல் மொழி இயல்பாக இல்லாமல், கைகளை மனம் போன போக்கில் ஆட்டி, அசைத்து நடித்துக் கொண்டிருந்தார்கள் - இல்லை ஒரேயடியாக எந்த வித அசைவும் இன்றி நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று நடித்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது ஒரு உயிரோட்டமான நடிப்பு அந்தக் காலத்தில் பாடல்களில் இல்லாமல் இருந்தது. அப்படிப் பார்த்தால், இந்த நிமிடம் வரை, பெரும்பாலான நடிகர்களுக்குப் பாடல் காட்சியில் அந்த அளவிற்கு நடிப்பதற்குத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நாடக உலகில் இருந்து வந்த நடிகர் திலகமோ, தன் முதல் படத்தில் இருந்தே, பாடல் காட்சியில் நடிக்கும் போது, அளவோடு கை கால்களை அசைத்து, அந்தப் பாடல் வரிகளுக்கேற்றார் போல் முகம் மட்டுமல்லாமல், மற்ற உடல் மொழிகளின் மூலமாகவும், சரியான பாவங்களைக் காட்டி நடிக்கலானார். அதாவது, அந்த முதிர்ச்சி, அவரது முதல் படத்திலேயே இருந்தது. நடிப்பில் எல்லையை முதல் படத்திலேயே தொட்டவரல்லவா அவர்! பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பின்னர் நடித்து விட்டவராயிற்றே! (பொன்னை விரும்பும் பூமியிலே - ஆலய மணி).

திரைப்படங்களில், பாடல்கள் மூலம் கதையையும், காட்சியின் வீரியத்தையும் காட்டி அதன் மூலம், மக்களை ஒரு சேர சென்று சேர ஆரம்பித்தது, நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி - டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா கூட்டணி தான் என்றால், இதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமேது? இதே போல், பாடல்களின் மூலம், காட்சியின் வீரியத்தை மட்டுமல்லாது, அந்தப் பாடல்கள் இடம் பெற்ற காட்சிகளின் சூழலை சுவையும் சுவாரஸ்யமும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டதும், நடிகர் திலகம் தான்.

அப்படிப்பட்ட பாடல்களின் மூலம், ஒரு இயக்குனர் (அவர் தானே அந்தக் கப்பலின் கேப்டன்) சொல்ல வந்த விஷயத்தை, மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, வெறுமனே நடித்து விட்டுப் போகாமல், அந்தப் பாடலில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலைத் தன்மையை, கிரியேடிவிடியைக் காண்பிக்க நினைத்து, அதில் நூறு சதம் வெற்றி பெற்ற பாடல்களை இந்தக் கட்டுரையில் பதிவிட முயல்கிறேன்.

1. "சக்கப் போடு போடு ராஜா"; படம்:- பாரத விலாஸ் (1973); இயக்கம்:- ஏ.சி.திருலோகசந்தர்

புதிதாகத் திருமணம் ஆன ஒருவன், முதன் முதலாகத் தன் காதல் மனைவியைப் பார்க்கும் முன், அவன் மனதில் எழுகின்ற உணர்வுகளைக் காட்டுவதாக அமைந்த பாடல். இந்தப் பாடலைப் புதிய கோணத்தில் சிந்தித்து எடுத்திருப்பார் இயக்குனர் ஏ.சி.டி. - அதாவது, அவனும் அவனது மனசாட்சியும் பாடி, பேசுவதாக அமைந்த பாடல்.

இந்தப் பாடலின் தனிச் சிறப்பு - பொதுவாக, அனைத்து படங்களிலும், சம்பந்தப்பட்ட மனிதனும் மனசாட்சியும் நேருக்கு நேர் வருவதாகக் காண்பிப்பார்கள். அதனால், அந்த இரண்டு பாத்திரங்களும் அதாவது நடிகர்களும், கொஞ்சம் சுலபமாக யோசித்து, நடித்து விட முடியும். ஆனால், இந்தப் பாடலிலோ, மனசாட்சி அசரீரியாகக் குரல் மட்டுமே கொடுக்கும். அதை அவர் கவனித்து, ரியேக்ட் மட்டும் செய்ய வேண்டும். இங்கு தான், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம் அவருக்குக் கை கொடுக்கிறது.

பல்லவியில், சக்கப் போடு போடு ராஜா என்று நிஜ மனிதனாக நடிகர் திலகம் பாடத் துவங்கியவுடன், "டேய் டேய் என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட" என்று மனசாட்சியின் குரல் வரும். அப்பொழுது அவருடைய ரியேக்ஷனை கவனியுங்கள். அபாரம்!

சரணத்தில், "நல்ல சமயம் இதை விட்டு விடாதே நாளும் தெரிந்த நீ நழுவ விடாதே" என்றவுடன் "என்னடா என்னடா நல்ல சமயம்" என்று மனசாட்சி கேட்டவுடன், அவர் இரண்டு கைகளையும் பின்னி "வெள்ளி நிலாக் காயுது வாடைக் காற்று வீசுது" என்று நடிக்கும் நடிப்பு, அது வரை அவர் காட்டாத - நடிக்க வந்து 21 வருடங்களுக்குப் பின்னர், 150 படங்களுக்கு மேல் நடித்த பின்னும், காட்டிய ஒரு புதிய பாணி நடிப்பு!

அடுத்த சரணத்திற்கு முன் வரும் தருணத்தில், அந்த மனசாட்சி இவரது கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுப்பதாக நினைத்துக் கொண்டே அந்தத் துண்டைப் பிடித்து இழுத்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கற்பனை கலந்து நடித்திருக்கும் விதம் - நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.

கடைசியில், கட்டிலைச் சுற்றி ஒரு மாதிரி கைகளை இழுத்து இழுத்து காட்டிக் கொண்டே பாடலை முடிக்கும் விதம் மிகவும் நகைச்சுவையோடு இருக்கும்.

மொத்தத்தில், ஒரே நேரத்தில், அபாரமான கற்பனை வளத்தோடும், அற்புதமான நகைச்சுவையோடும், ஒரு முதல் இரவுப் பாடலாக இருந்தாலும், தரம் கொஞ்சமும் குறையா வண்ணம், நடித்த பாடல். அதுவும், எந்த வித அதீத முயற்சியும் இல்லாமல் (effortless) நடித்த பாடல்.

எதையும் வித்தியாசமாக சிந்தித்து, மக்களுக்கு அறுசுவை விருந்து படைப்பவர் நடிகர் திலகம் என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல்.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
9th December 2011, 06:16 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தாங்கள் பதிந்த தி ஜென்டில்மேன் இதழில் வெளி வந்த நடிகர் திலகம் நான் இது வரை படிக்காத ஒன்று. எனக்குத் தெரிந்து நிறையே பேர் இதைப் படித்திருக்க மாட்டார்கள். அது எப்படித் தான் உங்களுக்கு இந்தக் கட்டுரைகள் கிடைக்கிறதோ, தெரியவில்லை. உள்ளம் குளிர்ந்தது. மிக்க நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களுடைய "நீதி" மற்றும் "மனிதரில் மாணிக்கம்" படங்களின் நினைவலைகள் மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருந்தது. அதிலும், மனிதரில் மாணிக்கம் படத்தைப் பற்றிய நினைவலைகள் ரொம்பவே சுவை. அந்தக் காலத்தில், "I will sing for you" மிகவும் பிரபலமான பாடல். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

திரு. கார்த்திக் அவர்கள் எழுதியவுடன், அந்த அரிதான பாடலைப் பதிந்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டீர்கள். நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
9th December 2011, 06:46 PM
சக்கை போடு போடும் பார்த்தசாரதி சார்,

நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்புத் திறமையைக் கொண்ட பாடல்களை ஆய்வு செய்ய ஆரம்பித்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுவும் நம்மவர் மிகக் கடினமான இருவேறு நடிப்புப் பரிமாணத்தை ஒரே சமயத்தில் வேறுபடுத்திக் காட்டும் 'சக்கை போடு போடு ராஜா' பாடலை நீங்கள் ஆய்வு செய்துள்ளவிதம் புதுமையாகவும், அதேசமயம் மிகச் சரியாகவும் உள்ளது. நடிகர் திலகத்தின் நடிப்பை நயமாக ஆய்வு செய்துள்ளீர்கள். நாடகக் கலைஞர்களைப் பற்றிய தங்களின் அப்பிப்பிராயமும் அருமை. நாடகத்துறையில் இருந்து வந்த பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் வெள்ளித்திரையில் நாடக பாணியைக் கடைப்பிடித்தாலும் சில காலங்களுக்குள்ளேயே தங்கள் அசாத்திய அனுபவத்தால் அற்புதமாக வெள்ளித்திரைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு இன்றுவரை மறக்க முடியாத கலைஞர்களாய் நம் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறார்கள். அதவும் நம் நடிகர் திலகம் பற்றி கேட்கவே வேண்டாம். பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே நடித்து வியக்க வைத்தாரென்றால், படம் முழுவதும் கட்டில் மெத்தையில் படுத்துக் கொண்டே 'மருமகள்' படத்தில் பட்டையைக் கிளப்புவார்.அற்புதமான ஆய்வுக்கு ஆனந்தமான நன்றிகள்.

தங்களுடைய இந்த புது முயற்சியை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறோம். பாடல்களில் நடிகர் திலகம் அசத்தியிருக்கும் நடிப்புத் திறமைகள் உங்கள் மூலம் புதிய பரிணாமத்தில் திரியில் பிரகாசிக்கப் போகிறது என்பதால் 'எங்க காட்டுல மழை பெய்யப் போகுது....

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
9th December 2011, 06:51 PM
பார்த்தசாரதி சார் 'சக்கை போடு' போட்டு விட்டார். இந்த அற்புதப் பாடலில் சக்கை போடு போடும் நம் தங்க ராஜாவை பார்த்தசாரதி சாரின் அருமையான ஆய்வை மனதில் நிறுத்திக் கொண்டே பார்த்து இன்புறுவோம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y-uROpATLkI

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
9th December 2011, 07:10 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

"I will sing for you" பாடலைப் பதிபித்ததற்கு "I always thanks for you"

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
9th December 2011, 08:18 PM
நீலவானம் (10-12-1965) 47-ஆவது ஆண்டுத் துவக்கத்தை முன்னிட்டு...

http://thumbnails.truveo.com/0022/37/13/3713420B52FBCD4DE0425E_Large.jpg

http://img96.imageshack.us/img96/2659/snapshot20100104194803.jpg

http://img23.imageshack.us/img23/4426/snapshot20100104195011.jpg

http://img199.imageshack.us/img199/7233/snapshot20100104195048.jpg

'நீலவானம்' வீடியோ டிரைலர்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8nAdIbrwrLs

நடிகர் திலகத்தின் நளினமான மேற்கத்திய பாணி நடன அசைவுகளில் ஜொலிக்கும் "oh little flower" வீடியோப் பாடல் காட்சி.


http://www.youtube.com/watch?list=PLAA20294B6F3C7E48&feature=player_detailpage&v=hSYQXCEc2TQ

ஓஹோஹோ...ஓடும் எண்ணங்களே..(பி.சுசீலாவின் மயக்கும் குரலில்) வீடியோப் பாடல் காட்சி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Coddhl4fmJg

"ஒ..லக்ஷ்மி... ஒ.. ஷீலா"... வீடியோப் பாடல் காட்சி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8awtjGcO_SQ

நடிகர் திலகமும், திருமதி.தேவிகா அவர்களும் நடிக்கும் ஒரு அற்புதக் காட்சி. (இந்த வீடியோக் காட்சியை you tube- இல் அப்- லோட் செய்த அன்பு 'ரசிக வேந்தர்' ராகவேந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்).


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=STCBN60rIzc

அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
9th December 2011, 09:35 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

காணக்கிடைக்காத 'ஜென்டில்மேன்' ஆங்கில இதழில் நடிகர்திலகத்தின் சிறப்பு ஆர்ட்டிக்கிள் மற்றும் அவரது பிரத்தியேக பேட்டியை அதன் ஒரிஜினல் வடிவில் பதிப்பித்த விதம் அருமை. இந்த இதழ்கள் எல்லாம் நாங்கள் பார்த்திராதது. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து அந்தப்பொக்கிஷப் பதிவுகளைக் கண்ணுறச்செய்தமைக்கு மிக்க நன்றி. நம்மவர்கள் எங்கிருந்தெல்லாம் ஆவணங்களைத்தேடியெடுத்து வந்து தருகிறார்கள் என்பது நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறது.

அன்புள்ள ராமஜெயம் சார்,

சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் இரண்டுமே சென்னையில் 'எலைட் மூவீஸ்' ரிலீஸ்தான். எனவேதான் அவ்விரண்டு படங்களின் 100-வது நாள் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாக நடந்தது அத்ற்கு முன்னும் அதற்குப்பின்னும் நடந்ததில்லை. (கமல் தனது ஒரே நிறுவனத்தின் சார்பில் தயாரித்த சதி லீலாவதி, மகளிர் மட்டும், குருதிப்புனல் ஆகிய மூன்றின் வெற்றிவிழாக்களை ஒரே விழாவாகக் கொண்டாடினார்).

அத்துடன் என் நினைவுக்கெட்டிய வரையில் பாலாஜியின் எந்தப்படத்தையும் சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்ததாக தெரியவில்லை.
dear kartck sir,
BALAJI;s thirudan, enthambi were earlier sivaji releases.
when I happened to meet balajee at the time ofdiwali, he was telling that he has spent huge amounts for engirundovandal, and little worred about the sorgam getting released same day requested us to plead NT HQ
to postpone the release of sorgam. we conveyed that both movies will go for succeessful runs and he acknowledged the enthu by rasigargal
cresent movies and elite moves are sister concerns, correct. cresent came to field by releasing kannithai at safire frst time followed byregular releases.

pammalar
10th December 2011, 12:16 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களுக்கு எனது சிறப்பான நன்றிகள் !

என்னிடம் இதுவரை இல்லாத, நான் படித்திராத, நடிகர் திலகத்தின் கட்டுரையை பதிவிட்டு அசரவைத்து அசுர சாதனைக்கு சொந்தக்காரராகிவிட்டீர்கள் ! ஜூன் 1982 "ஜென்டில்மென்" ஆங்கில மாத இதழின் கட்டுரைப்பதிவைப் பற்றித்தான் கூறுகிறேன். நடிகர் திலகத்தின் பிரத்தியேக பேட்டியும், கருத்துரைகளும் கொண்ட இக்கட்டுரை உண்மையிலேயே மிகமிக அரிய அற்புத வரலாற்று ஆவணம். நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் தளபதி ராம்குமார் அவர்கள் தனது தந்தையார் பற்றி கூறிய கருத்துக்களும் இக்கட்டுரைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. நவரத்தினங்களுக்கும் மேலான பொக்கிஷத்தை அள்ளி வழங்கிய தங்களுக்கு எனது கனிவான பாராட்டுக்களுடன் கூடிய கோடானுகோடி நன்றிகள் ! மேலும் இதுபோன்ற மிகமிக அரிய ஆவணப்பொக்கிஷங்களை தங்களிடமிருந்து தொடர்ந்து இங்குள்ள அனைவரையும்போல் நானும் எதிர்பார்க்கிறேன் !

"நீலவானம்" பதிவு வழக்கம்போல் அமர்க்களம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th December 2011, 04:12 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

தாம்பத்யம்

[20.11.1987 - 20.11.2011] : 25வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 18.10.1986
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Thaambathyam1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th December 2011, 04:20 AM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்கும், தேவ் ஆனந்த் மற்றும் ஜீனத் அமன் குறித்த மேலதிக விவரங்களுக்கும் இனிய நன்றிகள் !

பிரமுகர்களில் பெரும்பாலானோர் தங்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வடிக்கும்போது - முதுமையின் காரணமாக - காலச்சக்கரத்தை முன்னுக்குப்பின் முரணாக சுழற்றி விடுகின்றனர். [இதில் நமது முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மட்டும் விதிவிலக்கு]. இந்த சகஜமான முரண்பாடுதான் தேவ் ஆனந்த்ஜியின் சுயசரிதையிலும் வெளிப்படுகிறது. இதுகுறித்து அவகாசம் எடுத்துகொண்டு சற்று அலசி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டித்தர முயற்சிக்கிறேன் !

"மனிதரில் மாணிக்கம்" பதிவு அருமை ! இப்பதிவில் உள்ள இக்காவியத்திற்கு முன்னும் பின்னும் வெளியான கலைக்குரிசிலின் காவியங்கள் குறித்த புள்ளிவிவரக்கண்ணோட்டம் தாங்கள் கொடுத்த பூங்கொத்து !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th December 2011, 04:49 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"எல்லாம் உனக்காக" திரைக்காவியத்திலிருந்து இரு அபூர்வ பாடல்களின் வீடியோக்கள், 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' அரிய பாடல் வீடியோ வரிசையில், தற்பொழுது 'I will sing for you' பாடலின் கிடைத்தற்கரிய வீடியோவையும் இடுகை செய்து 'I will give for you' எனப் பறைசாற்றிவரும் தங்களுக்கு களிப்பான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th December 2011, 05:31 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

உயர்ந்த மனிதன்

[29.11.1968 - 29.11.2011] : 44வது ஜெயந்தி

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd2-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 20.12.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd3-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.3.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UM-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
10th December 2011, 08:05 AM
"நீதி" மிக அரிய நடிகர் திலகத்தின் புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-5.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th December 2011, 10:36 AM
அன்பு பம்மலார் சார்,

என்னுடைய ஆழ்ந்த நன்றிகள். ' ஜென்டில்மென் ' ஆங்கில மாத இதழின் கட்டுரைப்பதிவைப் பாராட்டிய விதத்தில் தாங்கள் ஒரு அற்புத 'ஜென்டில்மேன்' என்று நிரூபித்து விட்டீர்கள். உங்கள் பாராட்டில் அளவில்லா சந்தோஷமும், ஆனந்தமும் கொப்பளிக்கிறது. உங்களை சந்தோஷப் பட வைத்ததில் அடியேனுக்கு மிகப் பெரிய சந்தோஷம். தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு பணிவான நன்றிகள். நீலவானப் பதிவுப் பாராட்டிற்கும் வானம் போல் மனம் படைத்த உங்களுக்கு என் நன்றிகள்.

உடல் நிலை தேறி நம்மவர் மீண்டும் 'தாம்பத்யம்'படப்பிடிப்பில் கலந்துகொண்ட 'தினத்தந்தி' செய்தியை தாங்கள் பதித்திருப்பது மனதை மயிலிறகால் வருடுவது போல் உள்ளது. உடல்நிலை சுமாரான நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் நடிகர் திலகம் நிற்கும் அந்த கம்பீரம் இருக்கிறதே! அற்புதம். (பதிவும்தான்)

'உயர்ந்த மனிதன்' விளம்பரப் பதிவுகள் தங்களின் உயர்ந்த அரிய பதிவுகள். அனைத்தும் அசத்துகின்றன. உயர்ந்த உள்ளத்தோடு தாங்கள் வாரி வழங்கும் உயர்ந்த மனிதரைப் பற்றிய அற்புத ஆவணங்கள் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுக்காக்கப் படவேண்டியவை. நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
10th December 2011, 01:55 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'உயர்ந்த மனிதன்' திரைக்காவியத்தின் உன்னதமான ஆவணங்கள் அனைத்தும் சூப்பர். அத்துடன் 'தாம்பத்யம்' படப்பிடிப்பில் நடிகர்திலகம் கலந்துகொண்ட செய்தியின் கட்டிங்கும் சிறப்பு.

தாங்கள் தவறாது, நவம்பர் மாத ஆவணப்பொக்கிஷங்களை தவறாமல் அளித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அனைவரின் மனதுக்கும் மகிழ்ச்சியை தொடர்ந்து அளித்து வரும் தங்களுக்கு நன்றிகள்.

அன்பு வாசுதேவன் சார்,

'நீலவானம்' ஸ்டில்களும் பாடல்களின் இணைப்பும் மிக அருமை. ஒருமுறை நடிகை ராஜஸ்ரீ வழங்கிய சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சியில், அவர் நடிகர்திலகத்தைப்பற்றிய நினைவுகளை நினைவு கூர்ந்து, பின் அவரும் நடிகர்திலகமும் இணைந்து கலக்கிய 'ஓ... லிட்டில் ஃப்ளவர்' பாடலை ஒளிபரப்பியதாக முன்பு சாரதா எழுதியிருந்தது இப்பாடலைக்கண்ணுறும்போது நினைவுக்கு வருகிறது. வழங்கிய தங்களுக்கு நன்றி.

அன்பு பார்த்தசாரதி சார்,

மிகவும் வித்தியாசமாக அமைந்த 'சக்கைபோடு போடு ராஜா' பாடலை நீங்கள் மிகவும் வித்தியாசமாக ஆய்வு செய்திருந்த விதம் அட்டகாசம். படத்தை முதலில் பார்த்தபோது இப்பாடலை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் நமக்கு இருந்தது உண்மை. ஆனால் அதையும் தாண்டி மக்களை ரசிக்க வைத்து வெற்றியடைந்து காட்டினார் நடிகர்திலகம்.

டி.எம்.எஸ். பேசிய வசனங்கள் நடிகர்திலகத்துக்கு அட்சர சுத்தமாகப்பொருந்தியது என்று சொல்லத்தேவையில்லை. ஏற்கெனவே உயர்ந்த மனிதனில் 'அந்த நாள் ஞாபகம்', தெய்வ மகனில் 'தெய்வமே' பாடல்களின் இடையே வரும் வசனங்களும், சிவந்த மண்ணில் 'ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்', மற்றும் வசந்த மாளிகையில் 'எழுதுங்கள் என் கல்லறையில்' வசனங்களும் பொருந்தியது போல, இப்பாடலின் வசனங்களும் கச்சிதமாகப்பொருந்தின. (ஒன்ஸ்மோரில் மலேசியா பேசிய 'உன்னையும் என்னையும் இணைப்பது காதல்' வசனத்தை மறந்து விடுவோம்).

KCSHEKAR
10th December 2011, 04:08 PM
டியர் வாசுதேவன் சார்,நடிகர்திலகத்தின் ஜென்டில்மேன் ஆங்கில இதழ் கட்டுரைப் பதிவு அருமை. நன்றி.

KCSHEKAR
10th December 2011, 04:10 PM
அன்பு பம்மலார் சார், உயர்ந்த மனிதன் விளம்பரங்கள் மற்றும் தாம்பத்யம் படப்பிடிப்பு செய்தி பதிவு அருமை. நன்றி.

KCSHEKAR
10th December 2011, 04:12 PM
டியர் பார்த்தசாரதி சார், சக்கைபோடு போடு ராஜா பாடல் பற்றிய உங்கள் ஆய்வு அருமை.

KCSHEKAR
10th December 2011, 04:20 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai%20Meeting%20-%2027%20Dec%202011/MaalaimurasuNellai.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai%20Meeting%20-%2027%20Dec%202011/DinamalarDinakaranNellai.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai%20Meeting%20-%2027%20Dec%202011/DinamaniNellai.jpg

pammalar
11th December 2011, 12:27 AM
9.12.2011 வெள்ளி முதல், சென்னை 'நியூ பிராட்வே' திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, புதுமைத் திலகத்தின் "புதிய பறவை".

10.12.2011 சனிக்கிழமை முதல், சேலம் 'அலங்கார்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக மன்னவரின் "மன்னவன் வந்தானடி".

இனிப்பான இந்த இரு தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு Sweet Thanks !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
11th December 2011, 01:07 AM
தீவிரமான நடிகர் திலகம் ரசிகர்களிடமோ இல்லை மிதமான ரசிகர்களிடமோ சென்று கேட்டால் கருடா சௌக்கியமா படத்தைப் பற்றி அவ்வளவு சிலாக்கியமான பதில் வராது. ஆனால் தனியொரு மனிதனாக நின்று அந்தப் படத்தின் சிறப்புகளை தெள்ள தெளிவாக எழுதுவதோடு மட்டுமல்லாமல் படிப்பவர்கள் மனதில் அவர்கள் படத்தை பார்க்காதவர்களாக இருந்தால் இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தையும் படம் பார்த்தவர்கள் மத்தியில் இவ்வளவு நுணுக்கங்கள் படத்தில் இருந்ததா நாம்தான் கவனிக்காமல் ரசிக்க தவறி விட்டோமோ என்ற குறுகுறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் அது வாசுதேவன் அவர்களின் பேனாவிற்கு, ரசனைக்கு கிடைத்த வெற்றி. என்னைப் பொறுத்தவரை படம் வெளியான அந்த நேரத்தில் கேரளத்தில் வேலை செய்து கொண்டிருந்ததால் அந்நேரம் தொடர்ச்சியாக வெளியான அந்த நாலு படங்களையும் உடனடியாக பார்க்க முடியாமல் சிறிது காலம் சென்ற பிறகே பார்க்க முடிந்தது. அதிலும் கருடா சௌக்கியமா கிட்டத்தட்ட ஒரு டூரிங் தியேட்டர் போல் இருந்த ஒரு அரங்கிலே பார்க்க நேர்ந்தது. அதுகூட அந்தப் படத்தை சரியாக ரசிக்க முடியாமல் செய்திருக்கலாம். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் பொதிகையில் சிறிது நேரம் பார்த்தேன். மீண்டும் பார்க்க முயற்சிக்கிறேன்.

அது போல Gentlemen இதழில் வெளி வெளிவந்த நடிகர் திலகத்தின் பேட்டி. மிக அரிதான ஒன்று. பெமினா என்ற பெண்களுக்கான இதழை நடத்திக் கொண்டிருந்த பத்திரிகை குழுமத்தின் மற்றொரு வெளியீடுதான் Gentlemen இதழ் என்பதுதான் என் நினைவு. அதிலும் அந்த பேட்டி 1982 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று சங்கிலி வெளியான அன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பேட்டியில் ஒரு வித்தியாசமான சிவாஜியை பார்க்க முடிகிறது.

படத்தை அலசுவது வேறு. ஆனால் படத்தில் வரும் பாடல் காட்சியை அதன் அனைத்துக் கோணங்களிலும் அலசுவது என்பது வேறு. இரண்டாவதாக சொன்னது சற்றே கடினமான காரியம். ஆனால் நம்முடைய சாரதி அவர்களுக்கோ அதுதான் தண்ணீர் பட்ட பாடு. நடிகர் திலகத்தின் நடிப்பால் மட்டுமே பேசப்பட்ட பாடல்கள் என்ற தலைப்பில் அவர் தொடங்கியிருக்கும் இந்த வரிசை சக்கை போடு போடப் போகிறது என்பது உறுதி. இது போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நடிகர் திலகத்தின் பாடல்களை அவர் அலசப் போகிறார் என்ற ரகசியத்தை உங்களுக்கெல்லாம் சொல்ல விழைகிறேன். அசத்துங்கள் சாரதி!

சிவாஜி பிலிம்ஸ்-ன் முதல் ஹீரோவான தேவ் ஆனந்த் அவர்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியும் பாடல் காட்சிகளும் நல்ல முறையில் அமைந்திருந்தன.

அன்புடன்

Murali Srinivas
11th December 2011, 01:12 AM
நீதி பற்றியும் மனிதருள் மாணிக்கம் பற்றியும் கார்த்திக்கின் பதிவு பல்வேறு நினைவுகளை கிளறி விட்டு விட்டது. இங்கே எல்லோரும் குறிப்பிட்டது போல் நீதி 1972-ம் ஆண்டின் கடைசி படம் என்பதால் ஏராளமான எதிர்ப்பார்ப்புகள். ராஜா மிக பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் எந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இருக்கும் என்பது வரை ஒரு பெரிய விவாதமே ரசிகர்களுக்கிடையேயும் திரைப்பட துறை சம்மந்தப்பட்டவர்களிடையேயும் நடந்து வந்தது. ராஜா 100-வது நாளன்று அதற்கு விடை கிடைத்தது. 100-வது நாளன்று தினத்தந்தியில் முதல் பக்கத்தில் கிழே ஒரு ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரமும் மற்றொரு ஓரத்தில் நீதி விளம்பரமும் வெளிவந்தது. அது துஷ்மன் என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக் என்பதும் வெளிவந்தது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ராஜா அளவிற்கு நீதிக்கு எதிர்பார்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் நீதி வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பு நவம்பர் 4 தீபாவளியன்று மதுரையில் சென்ட்ரலில் துஷ்மன் வெளியானது. [பட்டிக்காடா பட்டணமா 182 நாட்களை நிறைவு செய்து சென்ட்ரலில் இருந்து வேறு தியேட்டருக்கு ஷிப்ட் செய்யப்பட்டது]. நான் தீபாவளியன்று மாலைக் காட்சி துஷ்மன் பார்த்தேன். ஜானி மேரா நாம் பார்த்தபோது எந்தளவிற்கு பிடித்திருந்ததோ அதற்கு மாறான உணர்வே துஷ்மன் பார்த்தபோது ஏற்பட்டது.

மதுரை தங்கத்தில் படம் வெளியானது. நீதி படம் வெளியான டிசம்பர் 7 அன்று பார்க்க முடியவில்லை. அன்று தமிழகத்தில் நிலவிய அசாதரணமான அரசியல் சூழல் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பள்ளிக்கூடங்கள் வெகு நாட்கள் மூடப்பட்டு கிடந்து அந்த டிசம்பர் 4 அன்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆகவே சனிக்கிழமைதான் படம் பார்த்தேன். அதற்கு முன்னரே படத்தைப் பற்றிய நல்ல opinion வந்து விட்டது. அதுவும் தவிர துஷ்மன் படத்தை போன்று இடையிடையே போர் அடிக்காமல் படத்தை சீரான வேகத்தில் கொண்டு சென்றிருந்தார் சி.வி.ஆர். அந்தக் காட்சியில் எனக்கு இப்போதும் நினவு இருப்பது பயாஸ்கோப் பாட்டின் போது "கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க" என்ற வரியின் போது காண்பிக்கப்படும் பெருந்தலைவரும் நடிகர் திலகமும் இணைந்து இருக்கும் அந்த ஸ்டில். ஹவுஸ்புல் ஆன தங்கம் தியேட்டரே அலறினால் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.ஆனாலும் ராஜா போல பலமுறை பார்க்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்கத்தில் 57 நாட்கள் ஓடியது இந்தப் படம். தங்கத்தில் அத்தனை நாட்கள் என்றால் சாதாரண தியேட்டர்களில் எவ்வளவு நாட்கள் என்று யூகிக்கலாம். சென்னையிலும் சேலத்திலும் 100 நாட்கள் ஓடுகிறது என்ற செய்தி மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. ராஜா அளவிற்கு நீதி மறு வெளியீடுகள் காணவில்லை என்பதும் உண்மை.

தங்கத்தைப் பொறுத்தவரை நீதி படத்திற்கு பின் ஒரு 18 மாத காலத்திற்கு அவர்கள் தமிழ் படங்களே திரையிடவில்லை. 1973 பிப்ரவரி 2-ந் தேதி முதல் 1974 ஆகஸ்ட் 14 வரை ஹிந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. 1974 ஆகஸ்ட் 15 அன்று வெளியான அத்தையா மாமியாதான் மீண்டும் தமிழ்ப் படங்களின் வெளியீட்டை துவக்கி வைத்தது.

தங்கத்தில் வாரத்திற்கு ஒரு ஹிந்திப் படம் வெளியிடப்படும். படம் பிரமாதமாக ஓடினாலும் சரி மோசமாக ஓடினாலும் சரி கரெக்டாக 7 நாட்கள்தான். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை படம் மாறி விடும். இதன் காரணமாக சில நல்ல படங்களும் பாதிக்கப்பட்டன. உதாரணமாக 1974 ஜனவரி 4 அன்று யாதோன் கி பாராத் வெளியானது. நான் ஞாயிறு மாலை படம் படம் பார்க்கிறேன். கட்டுக்கடங்காத கூட்டம். ஆனாலும் ஒரே வாரத்தில் மாற்றப்பட்டது. அதே 1974 ஜனவரி 1 அன்றுதான் மீனாட்சி தியேட்டரில் பாபி வெளியாகியிருந்தது. இரண்டும் ஒரே நேரத்தில் ஓடியிருக்க வேண்டியது. அதன் பிறகு அதே 1974 வருடம் அக்டோபர் மாதம் பரமேஸ்வரியில் மீண்டும் யாதோன் கி பாராத் வெளியாகி சக்கை போடு போட்டது. தங்கத்தில் வெளியான இந்திப்படங்களைப் பற்றி பேசும் போது வேறொன்று நினைவுக்கு வருகிறது.

1973 வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் பகுதியில் தங்கம் திரையரங்கின் சார்பாக தினத்தந்தியில் ஒரு விளம்பரம் வருகிறது. அதில் என்ன இருந்தது என்றால் "1973 மே மாதம் 11-ந் தேதியிலிருந்து 1973 டிசம்பர் 13-ந் தேதி வரை 217 நாட்களில் எங்களது தங்கம் திரையரங்கில் வெளியான படங்களின் மொத்த வசூல் இவ்வளவு. அதே 217 நாட்களில் மதுரையின் மற்றொரு திரையரங்கில் மொத்த வசூல் இவ்வளவு" என்ற வரிகள். அந்த கணக்கின்படி தங்கம் வசூல் அதிகம். என்ன காரணத்தினால் இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் அதை பார்த்ததும் மாற்று முகாமில் அது மிகுந்த கோவத்தை உருவாக்கியது என்பது உண்மை. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து அதில் குறிப்பிட்டிருந்த அந்த திரையரங்கின் சார்பாக ஒரு பதில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பதில் சரியானபடி எழுதப்படவில்லை என்ற வருத்தம் அந்த முகாமில் வெகு நாட்கள் இருந்தது.

மனிதருள் மாணிக்கம் பற்றி ---- மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

pammalar
11th December 2011, 01:21 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் அடுத்த அசத்தல் - 'நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள்' - நெடுந்தொடரை தாங்கள் தொடங்கியிருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. ஆரம்பப்பதிவிலேயே 'சக்கை போடு' போட்டுவிட்டீர்கள் ! எழுதும் பதிவு ஒவ்வொன்றிலுமே தாங்கள் சக்கை போடு போடுபவர் என்பது வேறு விஷயம். இந்த கட்டுரைத்தொடருக்காக தாங்கள் அளித்திருக்கும் முன்னுரை simply superb.

இப்பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறித்த தங்களின் திறனாய்வு வெகு ஜோர். நடிகர் திலகத்தின் முகபாவங்களுக்காகவும், உடல்மொழிக்காகவும் அந்த உடல்மொழியில் அவர் செய்யும் குறும்பு மற்றும் சேஷ்டைகளுக்காகவும் இந்தப்பாடல் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் வனப்பான வரிகளும், இசைவானம் எம்.எஸ்.வி. அவர்களின் ஈர்க்கும் இசையும் பாடலுக்கு கூடுதல் மெருகு.

'சக்கை போடு' போட்டு ஆரம்பித்துள்ளீர்கள் ! இனி இங்கே என்ன போடு போடப்போகிறீர்களோ !

[பாடலின் வீடியோவை இடுகை செய்த இடுகை மன்னன் வாசுதேவன் அவர்களுக்கு இனிய நன்றிகள் !]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 02:07 AM
வீரபாண்டிய கட்டபொம்மனை பாராட்டி வாழ்த்தி ஆசி வழங்கும் மூதறிஞர்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RajajiSivaji-1.jpg

10.12.2011 : முன்னாள் இந்திய கவர்னர்-ஜெனரல், முன்னாள் சென்னை மாகாண முதல் மந்திரி சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவர்களின் 134வது பிறந்த தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
11th December 2011, 02:47 AM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் வழங்கிய பாசம் நிறைந்த பாராட்டுக்களுக்கு எனது பவ்யமான நன்றிகள் !

"நீதி" ஸ்டில் சூப்பர் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 02:54 AM
டியர் mr_karthik,

தங்களின் ஆனந்தமயமான பாராட்டுக்களுக்கு எனது அற்புத நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 03:10 AM
பாரதி கணேசன்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Bharathiyar1-1.jpg

11.12.2011 : அமரகவி பாரதியாரின் 130வது ஜெயந்தி.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
11th December 2011, 03:31 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

ஒரு அமைப்பு என்றால் அது எப்படி ஆக்கப்பூர்வமாக சமுதாய அக்கறையோடு இயங்க வேண்டும் என்பதற்கு நமது 'நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை' சிறந்த சான்று. நெல்லை மாவட்ட சிவாஜி பேரவையின் செயல்வீரர்கள் கூட்டம் குறித்த நாளிதழ் செய்தி ஆவணங்கள் உண்மையிலேயே பிரமிப்பு. 'இன்றைய செய்தி நாளைய வரலாறு' என்பதற்கேற்ப வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும், சிவாஜி பேரவைக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 04:17 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

உயர்ந்த மனிதன்

[29.11.1968 - 29.11.2011] : 44வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

உயர்ந்த உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் பற்றி திரு.ஏவிஎம் சரவணன்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி [ஞாயிறு மலர்] : 16.9.2001
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5164.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMInfo1.jpg

[இரண்டு ஆவணங்களும் ஒன்றே. இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து படிக்கவும். எதில் படிப்பதற்கு எழுத்துக்கள் தெளிவாக இருக்கிறதோ அதனை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 05:39 AM
டியர் முரளி சார்,

"நீதி" முதல் வெளியீட்டு முதன்மை நினைவுகள், மதுரை 'தங்கம்' குறித்த சுவாரஸ்யங்கள் என தங்கள் பதிவு சொக்கத்தங்கமாக மின்னுகிறது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 05:51 AM
Demi-God's December Delicacies

மனிதனும் மிருகமும்

[4.12.1953 - 4.12.2011] : 59வது ஆரம்பதினம்

நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள் : அரிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

சுதேசமித்ரன் : 28.11.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM1-1.jpg


சுதேசமித்ரன் : 4.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM2-1.jpg


சுதேசமித்ரன் : 11.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM3-1.jpg


சுதேசமித்ரன் : 18.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM4-1.jpg


சுதேசமித்ரன் : 25.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM5-1.jpg

குறிப்பு:
"மனிதனும் மிருகமும்" அதிகபட்சமாக சென்னை 'கெயிட்டி' திரையரங்கில் ஏழு வாரங்கள் [49 நாட்கள்] ஓடியது.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
11th December 2011, 07:00 AM
டியர் சாரதி,
சக்கைப் போடு போட்டு அசத்தத் தொடங்க விட்டீர்கள். குறிப்பாக உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் மனசாட்சியின் வலிமை, வெளியே காட்சியளிக்கும் உருவத்தை விட பன் மடங்கு உயர்ந்தது என்பதைப் பாடல் மூலமாக நடிகர் திலகம் விளக்கியதை, நீங்கள் எடுத்துரைத்த விதம் மிகவும் அருமை.

தங்களுக்காக இதோ ஒரு ஸ்டீரியோகிராம் நிழற்படம்.

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் படத்தை உன்னிப்பாக உற்றுப் பார்த்தால் தான் தெரியும், மனசாட்சியைப் போல.

http://www-ai.ijs.si/sirds/bird.jpg

RAGHAVENDRA
11th December 2011, 07:03 AM
டியர் வாசுதேவன் சார்,
ஜென்டில்மேன் புத்தகத்தின் பக்கங்களில் வெளியான நடிகர் திலகத்தின் பேட்டியை வெளியிட்டு அசத்தி விட்டீர்கள்.
இதே போல் அஸைடு சஞ்சிகையின் ஜனவரி அல்லது பிப்ரவரி 1988 இதழ்களில் வெளியான நடிகர் திலகத்தின் பேட்டி மற்றும் அவரைப் பற்றிய செய்திக் கட்டுரை கிடைக்குமா பாருங்கள். அதில் பல முக்கியமான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

அன்புடன்

RAGHAVENDRA
11th December 2011, 07:05 AM
டியர் பம்மலார்,
ஆவணத்திலகம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். உயர்ந்த மனிதன் மற்றும் அபூர்வமான மனிதனும் மிருகமும் விளம்பரங்களின் நிழற்படங்கள்.. காணக் கிடைக்காத பொக்கிஷங்கள். தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

RAGHAVENDRA
11th December 2011, 07:07 AM
டியர் முரளி சார்,
நீதி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் நினைவுப் பதிவுகள் துல்லியமான தேதிகளுடன் ஆணித்தரமாக அமைந்துள்ளன. தங்கள் அசாதாரணமான நினைவாற்றல், நடிகர் திலகத்திற்கு தாங்கள் சரியான தொண்டர் என்பதை நிரூபித்து வருகின்றன.

பாராட்டுக்கள்

அன்புடன்

mr_karthik
11th December 2011, 03:34 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

தாங்கள் இங்கே அளித்துள்ள, 'நடிகர்திலகம் சமூக நலப்பேரவை'யின் ஆக்க பூர்வமான, சமுதாயத்துக்கு இப்போது அவசியத்தேவைகளுக்கான செயல்பாடுகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

சத்தமில்லாமல் சாதனைகளைப்படத்தவர் மட்டுமல்லாமல், சத்தமில்லாமல் பல்வேறு சமூக நலனுக்கான பணிகளையும் ஆற்றிவந்த நடிகர்திலகத்தின் பெயரால் அமைந்த பேரவை, அவரைப்போலவே சத்தமில்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களையும் நிறைவேற்றி வருவது மிகுந்த பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியது. அதனை மீடியாக்கள் (செய்தித்தாள்கள்) இருட்டடிப்புச் செய்யாமல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதைக்கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.

செய்தித்தாள்களைப்போலவே, தொலைக்காட்சி செய்திபிரிவினரும், பேரவையின் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு சென்று சேர்க்க வேண்டும். தேவையில்லாத எத்தனையோ வெட்டிச்செய்திகளுக்கு கொடுக்கும் இடத்தைக்குறைத்து, இதுபோன்ற பயனுள்ள நடப்புகளை ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தன் சொந்த வேலைகளை இரண்டாம் பட்சமாகப்புறந்தள்ளி, நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும், அதே சமயம் சமுதாயத்துக்குப் பயனளிக்கும் தங்களின் சேவைக்கு அனைத்துலக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் மட்டுமல்ல, அனைத்து தமிழ் நெஞ்சங்களின் சார்பில் பல்லாயிரம் நன்றிகள். இந்த சேவையில் மாநிலம் முழுவதும் தங்களுடன் உடன் உழைத்து புகழ் சேர்த்திடும் 'நடிகர்திலகம் சமூக நலப்பேரவை'யின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மற்றும் தங்கள் சேவைகளுக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் நிறுவனங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றிக்கொண்டிருக்கும் சமூகநலப்பேரவையின் பணிகள் தொடர, உங்கள் அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைத்தர பிரார்த்திக்கிறோம்.

vasudevan31355
11th December 2011, 03:43 PM
அன்பு கார்த்திக் சார்,

'நீலவானம்' பதிவு பற்றிய தங்களின் அன்பு பாராட்டிற்கு நன்றி.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் உயரிய பாராட்டுகளுக்கு அன்பு நன்றிகள்.

நெல்லையில் நடைபெற்ற சமூக நலப் பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக நாளேடுகளின் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள வைத்ததோடு தங்கள் அமைப்பு பெயருக்கேற்றார்போன்று நாளொருமேனியும், பொழுதொருவண்ணமுமாக செயல்பட்டு வருவது போற்றுதலுக்குரியது. பாராட்டுக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
11th December 2011, 03:44 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'மனிதனும் மிருகமும்' பட வெளியீட்டு நாளை முன்னிட்டு, தாங்கள் அள்ளி வழங்கியிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அருமை. இவ்விளம்பரத்தின் மூலம், சென்னையில் 'திருமகள்' என்றொரு திரையரங்கு இருந்ததென்பது நம் கவனத்துக்கு வருகிறது.

படம் வந்து 58 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஆண்டில் பிறந்த ஒருவர், இந்நாளில் பணியிலிருந்து ரிட்டையர் ஆகியிருப்பார். ஆனால் அத்தனை ஆண்டுகளுக்கு முன் வந்த அனைத்து விளம்பரங்களும் புதுமை மங்காமல் அப்படியே நம் கண்களுக்கு விருந்தாகப் படைக்கப்படுகிறது என்ற நிதர்சன உண்மை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இத்தனைக்கும் அது ஓகோவென்று ஓடிய படமல்ல. அதற்கே இத்தனை ஆவணங்கள் உங்களால் தர முடிகிறதென்றால் அது என்ன ஒரு விந்தை.

அற்புதங்கள் நிகழ்த்துதற்கென்றே பிறவி எடுத்துள்ள எங்கள் பம்மலார் பல்லாண்டு வாழ்க.

ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் கட்டுரைத்தொகுப்பும் மிக அருமை. பதித்தமைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

vasudevan31355
11th December 2011, 04:11 PM
அன்பு முரளி சார்,

தங்கள் மடை திறந்த வெள்ளம் போன்ற பாராட்டுக்கள் என் கண்களில் ஆனந்த வெள்ளத்தைப் பெருகச் செய்து விட்டது. நடிகர் திலகத்தின் அதிதீவிர பக்தரான தங்கள் பாராட்டு நடிகர் திலகமே நேரில் வந்து வாழ்த்தியதைப் போல அவ்வளவு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்துவிட்டது. இதற்கு 'நன்றி' என்ற ஒரு வார்த்தை போதாது.என் ஆனந்தக் கண்ணீரை தங்களுக்கு நன்றியாய் சமர்ப்பிக்கிறேன்.

தங்களின் 'நீதி' பற்றிய பதிவு நீங்காமல் நெஞ்சில் இடம் பெற்று விட்டது. ஒவ்வொரு படத்தின் வெளியீட்டு தினங்களையும்,அப்படங்கள் ஓடிய நாட்களையும் தாங்கள் மெமரியில் இன்றளவும் வைத்திருப்பது பிரமிப்பாய் இருக்கிறது. 'யாதோன் கி பாராத்' ஒரு வாரம் தான் தங்கத்தில் ஓடியது என்ற தங்களின் செய்தியைப் படித்து அதிர்ந்து போய் விட்டேன். மீண்டும் 'யாதோன் கி பாராத்' பரமேஸ்வரியில் வெளியாகி சக்கை போடு போட்ட செய்தியை படித்த பின்தான் மனம் சற்று நிம்மதி அடைந்தது. தங்களின் கைவண்ணத்தில் வரப்போகும் 'மனிதரில் மாணிக்கம்' பற்றிய பதிவு மாணிக்கமாய் ஜொலிக்கப்போவது உறுதி. இப்போதே அந்தப் பதிவுக்காக 'ரிசர்வ்' செய்து வைத்துக் கொள்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின்,
அன்பு வாசுதேவன்.

vasudevan31355
11th December 2011, 04:48 PM
அன்பு பம்மலார் சார்,

புகழ் பெற்ற தலைவர்களின் பிறந்த நாட்கள் ஆனாலும் சரி, நினைவு தினங்களானாலும் சரி...அவர்களை மறக்காமல் நம் இதய தெய்வத்தின் வாயிலாக நினைவு கூர்வது தாங்கள் 'தேசிய செம்மல்' நம் அன்பு நடிகர் திலகத்தின் தேசிய வழியில் நடந்து வருபவர் என்பதை பறைசாற்றுகிறது. அதற்காக என் மனமுவந்த பெருமைமிகு பாராட்டுக்கள்.

மூதறிஞர் அவர்களுடன் கட்டுக்கடங்காத கம்பீரத்துடன், பொன்னாடை சகிதமாக காட்சியளிக்கும் நம் 'கட்டபொம்மர்' ஸ்டில்லை பதிவிட்டமைக்கு எண்ணிலடங்கா நன்றிகள்.

அமரகவி பாரதியாரின் 130வது ஜெயந்தியை முன்னிட்டு தங்களால் பதிவு செய்யப்பட்டுள்ள பாரதி கணேசர் கண்கள் வழியே நுழைந்து, நெஞ்சை நிறைத்து, நிலைத்து நின்றுவிட்டார்.

உயர்ந்த மனிதர் நடிகர் திலகத்தைப் பற்றி திரு.ஏவிஎம் சரவணன் கூறியுள்ள கருத்துக்கள் அவரை 'மறக்க முடியாத சரவணன்' என்று கூற வைத்து விட்டன. அதுமட்டுமல்லாமல் இந்த அற்புத பதிவை அளித்த தாங்கள் எல்லோராலும் 'மறக்க முடியாத ஆவணச் செம்மல்' என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

'மனிதனும் மிருகமும்' என்ற தலைவரின் அபூர்வ ,பெரும்பாலும் யாரும் பார்த்திராத திரைப்படத்தின் அதுவும் 53-இல் வெளியான படத்தின் அற்புத, அரிய விளம்பரக் கட்டிங்குகளை மெருகு குலையாத புத்தம் புது காப்பி போல இடுகை செய்து எங்கள் வயிற்றில் தேனை வார்த்து விட்டீர்கள். இதன் ஒரு விளம்பரத்தைக் கூட நான் பார்த்தது கிடையாது நேற்றுவரை. அள்ளித்தரும் கலைப்பொக்கிஷ வள்ளலாய் தாங்கள் இருக்கையில் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி இறுமாப்புடனே கூட தங்கள் ஆவணங்களுடன் வலம் வரலாம். அப்படி தலை நிமிரச்செய்து எங்களை உலா வந்துகொண்டிருக்க செய்ததற்கு ஒப்புயர்வில்லா நன்றிகளை தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இதுவரை நான் பார்க்காத இப்படத்தை பார்த்த திருப்திக்கு உள்ளாக்கி விட்டது தங்கள் இந்த மிக உயர்ந்த அற்புதப் பதிவு. மறுபடியும் தங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்

vasudevan31355
11th December 2011, 04:54 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கு என் தலை வணங்கிய நன்றிகள். நீங்கள் கேட்டிருந்த அஸைடு பத்திரிகை கிடைக்கிறதா என்று முயற்சி செய்கிறேன். நிச்சயம் நம் அன்பு பம்மலார் வசம் கண்டிப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
11th December 2011, 05:28 PM
அன்புள்ள முரளி சார்,

சிறிது இடைவெளிக்குப்பின் தாங்கள் மீண்டும் மதுரை மாநகர் வரலாற்றுத்தொகுப்புடன் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு என் பதிவு தூண்டுதலாய் இருந்ததாக பகர்ந்தமைக்கு நன்றி.

'நீதி' பட வெளியீட்டின்போது மதுரையில் நடைபெற்ற சம்பவங்கள் படிக்கும்போதே சுவையூட்டுகின்றன. பழைய நிலைவலைகளை அசைபோட இத்திரி பெரும் தூண்டுதலாய் இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. எழுபதுகளின் சுவையான காலம் இனிமேல் வரவே வராது என்ற போதிலும், நடந்தவற்றை திரி நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் ஒரு தனியின்பம்தான் என்பதில் ஐயமில்லை.

தாங்கள் சொன்னது மிகச்சரி. இப்படம் மதுரை தங்கத்தில் 57 நாட்கள் ஓடினால், அது சென்ட்ரல், ஸ்ரீதேவி போன்ற அரங்குகளில் 114 நாட்கள் ஒடியதற்குச்சமம். எனவே 'நீதி' மதுரையிலும் 100 நாள் படம்தான்.

'பைலட் பிரேம்நாத்' வெளியாகவிருந்த சமயத்தில் மதுரையில் 'பார் மகளே பார்' படத்தை வெளியிட்டதாக முன்னர் சொல்லியிருந்தீர்கள். இப்போது 'நீதி' படம் வெளியாகவிருந்த சமயத்தில் சென்ட்ரலில் 'துஷ்மன்' இந்திப்படத்தை வெளியிட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். இது தற்செயலாக நடந்தவையா? அல்லது முன்பு சாரதா அவர்கள் சொன்ன 'நாட்டியமும் நாதஸ்வரமும்' சம்பவம் போல சதி வேலையா?.

நண்பர் வாசுதேவன் அவர்கள் சொன்னதுபோல, தங்களின் மனிதரில் மாணிக்கம் படத்தின் மதுரை நிகழ்வுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

vasudevan31355
11th December 2011, 07:04 PM
'புதிய வானம்'(10-12-1988) நடிகர் திலகத்தின் 275-ஆவது படம்.

http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/flimAlbum/PuthiyaVaanam.jpg

http://i1103.photobucket.com/albums/g466/bak3ong/vlcsnap-2010-06-04-00h12m40s105.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-2010-06-04-00h20m31s207.jpg

'புதிய வானம்' 'லஹரி' ஆடியோ C.D

http://www.grantimage.com/out.php/i6630_pudhiya-vaanam-00-cd.jpg

ஒரு பாடல் சொல்கிறேன்...(வீடியோப் பாடல்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3VyGB42TVx0


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
11th December 2011, 08:15 PM
டியர் பம்மலார்,
ஆவணத்திலகம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். உயர்ந்த மனிதன் மற்றும் அபூர்வமான மனிதனும் மிருகமும் விளம்பரங்களின் நிழற்படங்கள்.. காணக் கிடைக்காத பொக்கிஷங்கள். தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th December 2011, 08:25 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'மனிதனும் மிருகமும்' பட வெளியீட்டு நாளை முன்னிட்டு, தாங்கள் அள்ளி வழங்கியிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அருமை. இவ்விளம்பரத்தின் மூலம், சென்னையில் 'திருமகள்' என்றொரு திரையரங்கு இருந்ததென்பது நம் கவனத்துக்கு வருகிறது.

படம் வந்து 58 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஆண்டில் பிறந்த ஒருவர், இந்நாளில் பணியிலிருந்து ரிட்டையர் ஆகியிருப்பார். ஆனால் அத்தனை ஆண்டுகளுக்கு முன் வந்த அனைத்து விளம்பரங்களும் புதுமை மங்காமல் அப்படியே நம் கண்களுக்கு விருந்தாகப் படைக்கப்படுகிறது என்ற நிதர்சன உண்மை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இத்தனைக்கும் அது ஓகோவென்று ஓடிய படமல்ல. அதற்கே இத்தனை ஆவணங்கள் உங்களால் தர முடிகிறதென்றால் அது என்ன ஒரு விந்தை.

அற்புதங்கள் நிகழ்த்துதற்கென்றே பிறவி எடுத்துள்ள எங்கள் பம்மலார் பல்லாண்டு வாழ்க.

ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் கட்டுரைத்தொகுப்பும் மிக அருமை. பதித்தமைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

டியர் mr_karthik,

அதியற்புத மனம் படைத்த தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது ஆனந்தமான நன்றிகள் !

மேற்கு சைதாப்பேட்டையில் இருந்த 'ஜெயராஜ்' திரையரங்கம்தான் அதற்கு முன்னர் 'திருமகள்' என்ற பெயர் கொண்டிருந்தது.

அன்புடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
11th December 2011, 09:08 PM
டியர் பம்மலார்,
ஆவணத்திலகம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். உயர்ந்த மனிதன் மற்றும் அபூர்வமான மனிதனும் மிருகமும் விளம்பரங்களின் நிழற்படங்கள்.. காணக் கிடைக்காத பொக்கிஷங்கள். தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

PAMMALAR SR, doing great job to the website. all your materials to be kept as treasures for ever. by all of us.

avm saravanan article about NT a memorable one, especially Asokan's acting those days other side people always keep him at the top just to demerit NT acting. we agree ASOKAN Agood chracter actor, comparng wth NT is quiet nonsense. for some tme they hailed kalyankumar also and kept quiet later.
SIVAJI PERAVAI CHANRASEKAR taking all [positve steps for erccting manimandapam, kudos.
NEELAVANAM bews collections super. watching a NT MOVIE FIRST DAY AT NORTHMADRAS AREA, HAS NO MEANS OF BOUNDRES. from morning standng in biq cowds and got tickets and amidist huge allaparais enjoyed the lovely movie, especally scene WTH RAJASREE UNAKKUM ENAKKUM URUVAM PORUTHAME, LIVELYA MOVIE STYLES OF OODUM MEGANGALE.
both anna illam and neelavanam comedy track not handled properly ny the dirctor, which has affected the story very mich.

pammalar
11th December 2011, 11:23 PM
அன்பு பம்மலார் சார்,

புகழ் பெற்ற தலைவர்களின் பிறந்த நாட்கள் ஆனாலும் சரி, நினைவு தினங்களானாலும் சரி...அவர்களை மறக்காமல் நம் இதய தெய்வத்தின் வாயிலாக நினைவு கூர்வது தாங்கள் 'தேசிய செம்மல்' நம் அன்பு நடிகர் திலகத்தின் தேசிய வழியில் நடந்து வருபவர் என்பதை பறைசாற்றுகிறது. அதற்காக என் மனமுவந்த பெருமைமிகு பாராட்டுக்கள்.

மூதறிஞர் அவர்களுடன் கட்டுக்கடங்காத கம்பீரத்துடன், பொன்னாடை சகிதமாக காட்சியளிக்கும் நம் 'கட்டபொம்மர்' ஸ்டில்லை பதிவிட்டமைக்கு எண்ணிலடங்கா நன்றிகள்.

அமரகவி பாரதியாரின் 130வது ஜெயந்தியை முன்னிட்டு தங்களால் பதிவு செய்யப்பட்டுள்ள பாரதி கணேசர் கண்கள் வழியே நுழைந்து, நெஞ்சை நிறைத்து, நிலைத்து நின்றுவிட்டார்.

உயர்ந்த மனிதர் நடிகர் திலகத்தைப் பற்றி திரு.ஏவிஎம் சரவணன் கூறியுள்ள கருத்துக்கள் அவரை 'மறக்க முடியாத சரவணன்' என்று கூற வைத்து விட்டன. அதுமட்டுமல்லாமல் இந்த அற்புத பதிவை அளித்த தாங்கள் எல்லோராலும் 'மறக்க முடியாத ஆவணச் செம்மல்' என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

'மனிதனும் மிருகமும்' என்ற தலைவரின் அபூர்வ ,பெரும்பாலும் யாரும் பார்த்திராத திரைப்படத்தின் அதுவும் 53-இல் வெளியான படத்தின் அற்புத, அரிய விளம்பரக் கட்டிங்குகளை மெருகு குலையாத புத்தம் புது காப்பி போல இடுகை செய்து எங்கள் வயிற்றில் தேனை வார்த்து விட்டீர்கள். இதன் ஒரு விளம்பரத்தைக் கூட நான் பார்த்தது கிடையாது நேற்றுவரை. அள்ளித்தரும் கலைப்பொக்கிஷ வள்ளலாய் தாங்கள் இருக்கையில் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி இறுமாப்புடனே கூட தங்கள் ஆவணங்களுடன் வலம் வரலாம். அப்படி தலை நிமிரச்செய்து எங்களை உலா வந்துகொண்டிருக்க செய்ததற்கு ஒப்புயர்வில்லா நன்றிகளை தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இதுவரை நான் பார்க்காத இப்படத்தை பார்த்த திருப்திக்கு உள்ளாக்கி விட்டது தங்கள் இந்த மிக உயர்ந்த அற்புதப் பதிவு. மறுபடியும் தங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்

To the Esteemed Reputed Neyveli Vasudevar University,

தங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து தாங்கள் எனக்கு அளித்துவரும் பட்டங்களையும், பாராட்டுக்களையும் பணிவோடும், பெருமையோடும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொண்டு சிரமேற்கொள்கிறேன் ! இவையனைத்தும் என் வாழ்வின் பாக்கியம் !

பணிவு கலந்த அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th December 2011, 04:30 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு
இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!

பொக்கிஷப் புதையல் : அன்னை இல்லத்தில் ரஜினி

வரலாற்று ஆவணம் : மாலை மலர் : 1.10.2004
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR1-2.jpg


வரலாற்று ஆவணம் : மக்கள் குரல் : 1.10.2004
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR2-2.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR2a.jpg

வரலாற்று ஆவணம் : The New Indian Express : 2.10.2004
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR3-2.jpg


வரலாற்று ஆவணம் : தினகரன் : 2.10.2004
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR4-2.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR4a-1.jpg
[பெங்களூரூவைச் சேர்ந்த நமது ஹப்பர் திரு.குமரேசன் பிரபு அவர்கள் 1.10.2004 அன்று அன்னை இல்லத்திற்கு விஜயம் செய்த அன்புள்ளங்களுக்கு கர்நாடக மாநில பிரபு மன்றம் சார்பில் பிரியாணி வழங்கினார். இந்தத் தகவல் மேற்கண்ட ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. திரு.குமரேசன் பிரபு அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களுடன் கூடிய பொன்னான நன்றிகள் !]


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR4b-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR4c-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th December 2011, 09:24 AM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கு என் தலை வணங்கிய நன்றிகள். நீங்கள் கேட்டிருந்த அஸைடு பத்திரிகை கிடைக்கிறதா என்று முயற்சி செய்கிறேன். நிச்சயம் நம் அன்பு பம்மலார் வசம் கண்டிப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,

நடிகர் திலகத்தின் நேர்காணல் இடம்பெற்ற 1988-ம் ஆண்டு 'அஸைடு' சஞ்சிகை என்னிடம் இருக்கிறதா என்று சரிபார்த்து, அது கிடைக்கப்பெறின் உடனடியாக இங்கே இடுகை செய்கிறேன்.

[வாசு சார், "புதிய வானம்" பதிவு வான்மழை !]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th December 2011, 09:36 AM
PAMMALAR SR, doing great job to the website. all your materials to be kept as treasures for ever. by all of us.


Dear Ramajayam Sir,

Thanks for your treasurely special compliments !

Regards,
Pammalar.

parthasarathy
12th December 2011, 02:48 PM
சக்கை போடு போடும் பார்த்தசாரதி சார்,

நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்புத் திறமையைக் கொண்ட பாடல்களை ஆய்வு செய்ய ஆரம்பித்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுவும் நம்மவர் மிகக் கடினமான இருவேறு நடிப்புப் பரிமாணத்தை ஒரே சமயத்தில் வேறுபடுத்திக் காட்டும் 'சக்கை போடு போடு ராஜா' பாடலை நீங்கள் ஆய்வு செய்துள்ளவிதம் புதுமையாகவும், அதேசமயம் மிகச் சரியாகவும் உள்ளது. நடிகர் திலகத்தின் நடிப்பை நயமாக ஆய்வு செய்துள்ளீர்கள். நாடகக் கலைஞர்களைப் பற்றிய தங்களின் அப்பிப்பிராயமும் அருமை. நாடகத்துறையில் இருந்து வந்த பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் வெள்ளித்திரையில் நாடக பாணியைக் கடைப்பிடித்தாலும் சில காலங்களுக்குள்ளேயே தங்கள் அசாத்திய அனுபவத்தால் அற்புதமாக வெள்ளித்திரைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு இன்றுவரை மறக்க முடியாத கலைஞர்களாய் நம் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறார்கள். அதவும் நம் நடிகர் திலகம் பற்றி கேட்கவே வேண்டாம். பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே நடித்து வியக்க வைத்தாரென்றால், படம் முழுவதும் கட்டில் மெத்தையில் படுத்துக் கொண்டே 'மருமகள்' படத்தில் பட்டையைக் கிளப்புவார்.அற்புதமான ஆய்வுக்கு ஆனந்தமான நன்றிகள்.

தங்களுடைய இந்த புது முயற்சியை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறோம். பாடல்களில் நடிகர் திலகம் அசத்தியிருக்கும் நடிப்புத் திறமைகள் உங்கள் மூலம் புதிய பரிணாமத்தில் திரியில் பிரகாசிக்கப் போகிறது என்பதால் 'எங்க காட்டுல மழை பெய்யப் போகுது....

அன்புடன்,
வாசுதேவன்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

உடனடியாக, பாராட்டியதோடு நில்லாமல், அந்தப் பாடலையும் உடனடியாகப் பதிந்து, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

மிக்க நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
12th December 2011, 02:54 PM
டியர் பார்த்தசாரதி சார், சக்கைபோடு போடு ராஜா பாடல் பற்றிய உங்கள் ஆய்வு அருமை.

அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.

தாங்கள், நடிகர் திலகத்தின் பேரவை மூலம் செய்து வரும் பல்வேறு சமூக அக்கறை கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் வியக்க வைக்கிறது. தங்களது சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
12th December 2011, 03:15 PM
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்

http://3.bp.blogspot.com/_ThUWbdDLu58/SM0Ps7VImHI/AAAAAAAABHg/bkObBSGCc4s/s1600/sivaji-rajini-14-09-08.jpg

http://www.upperstall.com/files/film/padayappa-5.jpg

http://img718.imageshack.us/img718/4905/padikathavan04.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/24lkava.jpg?t=1323685009


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th December 2011, 04:35 PM
'வெற்றிக்கு ஒருவன்' (08-12-1979) நடிகர் திலகம்.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTLy5CuTBIbRvld4Lk-rG7_rCZJPLjiyXgEs0JTo49Yjb1Ti58-tTjxjec3Hw

'வெற்றிக்கு ஒருவன்' படப் பிடிப்பின் போது நடிகர் திலகம் சக கலைஞர்களுடன் (மிக அரிய நிழற்படம்)

http://www.thehindu.com/multimedia/dynamic/00030/10MPMEMORIES_3_30683f.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1vob_000238795.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2vob_002592977.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2vob_001243400.jpg

'இசைஞானி' யின் இசையில் தூள் பரத்தும் பாடல்கள்

"முத்தமிழ்ச் சரமே...இளங்கொடி மலரே"...(வீடியோப் பாடல்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pqf81uPc0Kk

"தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன்... நாயகி"...(வீடியோப் பாடல்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-Ddm_esNPZY

"ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ"...(நடிகர் திலகத்தின் அசர வைக்கும் நீக்ரோ நடனத்தில்)(வீடியோப் பாடல்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kaSCz8zCGfk


அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
12th December 2011, 04:36 PM
டியர் பம்மலார், நெல்லை நிகழ்ச்சி குறித்த தங்களுடைய மனமுவந்த பாராட்டுக்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்.

மூதறிஞரை கட்டபொம்மன் நடிகர்திலகத்தின் வாயிலாகவும், பாரதியாரை நடிகர்திலகத்தின் மூலமாகவும் தாங்கள் நினைவுகூர்ந்திருப்பது மிகவும் அருமை.

உயர்ந்த மனிதன் பற்றிய தினத்தந்தி கட்டுரை சிறப்பு.

மனிதனும் மிருகமும் - முதல், 2, 3-வது வார விளம்பரங்கள் யாரும் பார்த்திராத பொக்கிஷங்கள்.

ரஜினிகாந்த் அன்னை இல்ல விஜயம் குறித்த செய்திகள் பதிவு மிகவும் பொருத்தம்.

Demi God's December delicacies - தலைப்புக்கேற்றபடி தங்களின் டிசம்பர் மாத பதிவுகளை, ரசிகர்களுக்கு அமுதான பதிவுகளை, அதிரடியாகத் துவக்கியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், ந்ன்றிகள்.

KCSHEKAR
12th December 2011, 04:47 PM
டியர் கார்த்திக் சார், தங்களின் தொடர்ந்த, மனமுவந்த, பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

KCSHEKAR
12th December 2011, 04:51 PM
டியர் வாசுதேவன் சார், தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள். தங்களின் புதிய வானம் பதிவு அருமை.

நிழற்படப் பதிவுகளைத் தொடர்ந்து, ஆவண்ங்கள் மற்றும் காட்சி அலசல்களையும் கலக்கலாக அளித்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.

parthasarathy
12th December 2011, 04:51 PM
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தாங்கள் மிகவும் சிலாகித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள். தாங்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடர்ந்து தரவேற்றிக் கொன்றிக்கும் ஆவணப் பொக்கிஷங்களுக்கு என்றென்றும் ஒவ்வொரு நடிகர் திலக ரசிகனும் ஏழேழு ஜென்மங்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளான். அதிலும், குறிப்பாக, மனிதனும் மிருகமும் பட ஆவணங்கள் காணக்கிடைக்காதவை.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. கூடவே, ஒரு ஸ்டீரியோக்ராமையும் இணைத்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

தங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றிகள் பல. கூடவே சில செய்திகளையும் சொல்லி, எனக்கு நிறைய வேலை வைத்து விட்டீர்கள். அதற்கும் சேர்த்து நன்றிகள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

தங்கள் எல்லோருடைய பாராட்டுகளும், என்னை மேன் மேலும் ஊக்குவித்து நிறைய எழுதத் தூண்டும்.

KCSHEKAR
12th December 2011, 04:56 PM
டியர் பார்த்தசாரதி சார், தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

Dear Ramajayam sir, Thanks for your appreciation.

vasudevan31355
12th December 2011, 05:25 PM
அன்பு பம்மலார் சார்,

திரு.ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள பதிவு அருமை. அன்னை இல்லத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைவரின் திருஉருவப் படத்திற்கு முன்னால் ரஜனி, விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்துவது மனதை நெகிழச் செய்தது.

தலைவரின் 77-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் உணவுப் பொட்டலம் வழங்கிய பெங்களூரூவைச் சேர்ந்த நமது அன்பு ஹப்பர் திரு.குமரேசன் பிரபு அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்.

நம் நல் இதயங்களின் நலத் திட்டங்களை தங்கள் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி!.

அன்னை இல்லத்திற்கு 1-10-2004- க்கே தங்கள் ஆவணங்கள் மூலம் அழைத்துச் சென்று விட்டீர்கள். ரஜினி பிறந்தநாளுக்கு சரியான பரிசுப் பதிவு. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

Murali Srinivas
12th December 2011, 10:51 PM
நீதி பற்றிய பதிவுகளை பாராட்டிய சுவாமி, வாசுதேவன், ராகவேந்தர் சார், சாரதி மற்றும் கார்த்திக் ஆகிய அனைவர்க்கும் மனங்கனிந்த நன்றிகள் பல.

இங்கே பலருக்கும் பயன்படும் ஒரு செய்தி. டி.டி,கே சாலையில் அமைந்துள்ள ஏவிஎம் Sound Zone ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் அந்த கடையின் அருகிலே உள்ள சங்கரா ஹாலில் discount sale நடத்துவது வழக்கம். கடந்த வெள்ளி டிசம்பர் 9 அன்று ஆரம்பித்த sale ஜனவரி 1 வரை நடைபெறுகிறது. அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. பழைய மற்றும் புதிய படங்களில் ஏராளமான படங்களின் டிவிடிகள் கிடைக்கின்றன. தவிர, கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், பக்தி, குழந்தைக்களுக்கான டிவிடிகள் என பல்வேறு பிரிவுகளும் இருக்கின்றன. ஆடியோ டிவிடிகளும், MP3 ஆகியவையும் இடம் பெற்றிருக்கின்றன.

நமது நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை இதுவரை தனி டிவிடி வடிவில் கிடைக்காத தெய்வப்பிறவி மற்றும் பதி பக்தி படங்கள் தனி டிவிடியாக வெளியாகியிருக்கின்றன. ராஜ் வீடியோ vision நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு புது விதமான கவர் வடிவமைப்பை நேர்த்தியாகவும் கவர்ந்திழுக்கும் வகையில் செய்திருக்கின்றனர். அவர்களின் விலைதான் சற்று அதிகம்.

சுருக்கமாக சொன்னால் பழைய புதிய படங்களின் டிவிடி சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதை தவிர விகடன் பிரசுரம் மற்றும் கிழக்கு பதிப்பகம் ஆகிய புத்தக வெளியிட்டாளர்களும் தங்கள் படைப்புகளை இந்த விற்பனையில் வைத்திருக்கின்றனர்.

அன்புடன்

Murali Srinivas
12th December 2011, 11:15 PM
மனிதரில் மாணிக்கம் பற்றி

திரைப்பட துறையில் உள்ளவர்கள் அதே துறையில் உள்ளவர்களுக்கு உதவுவது என்பது பெரும்பாலும் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். அதிலும் ஒருவர் உச்சத்தில் இருக்கும் போது அப்படிப்பட்ட உதவிகளுக்கு வாய்ப்பேயில்லை. ஆனால் இதிலும் விதி விலக்கானவர் நடிகர் திலகம். அவர் முன்னணி நாயகனாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பல தயாரிப்பாள நண்பர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார். பரதேசி படத்தில் தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த அஞ்சலிதேவிக்கு அவர் பொருளாதார தேக்கத்தில் இருந்த போது செய்துக் கொடுத்த பக்த துக்காராம், பந்துலுவிற்காக செய்துக் கொடுத்த பலே பாண்டியா , முரடன் முத்து, எஸ்.வி.சுப்பையாவிற்காக காவல் தெய்வம் போன்ற பலவற்றை குறிப்பிடலாம். அது போன்ற ஒரு உதவிதான் மனிதரில் மாணிக்கம். அதுவும் 1971-72-73 காலகட்டத்தில் அவர் இருந்த அந்த peak period-ல் அதை செய்தார் என்றால் அவரின் மனிதாபிமானத்தை புரிந்துக் கொள்ளலாம். இயக்குனர் சி.வி.ஆர். என்பதாலும் ஹீரோ ராஜன் என்பதாலும் இது சாத்தியமாயிற்று.

தன்னுடைய திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த நடிகர் திலகம், அவர்கள் தனக்கு எதிரே கடைபிடித்த விரோத போக்கினால் அதிலிருந்து விலகினார் என்பது அனைவருக்கும் தெரியும். பிறகு பெருந்தலைவரினால் ஈர்க்கப்பட்டு தன்னை ஒரு தேசியவாதியாக வார்தெடுத்துக் கொண்டார். நண்பர் ஒருவர் ஒருமுறை கூறியது போல் அந்த தேசியத்தையும் அதன் தலைவர்களையும் தன் படங்களின் வாயிலாக தமிழ் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம் மட்டுமே. இந்திய மொழிப் படங்களில் வேறு எந்த நடிகரும் செய்யாத அளவிற்கு காந்தியையும், நேருவையும் சாஸ்திரியையும் இந்திராவையும் படேலையும், மற்றும் பல பல தலைவர்களையும் கடைக்கோடி தமிழனிடம் கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம். எங்க மாமா திரைப்படத்தில் தன்னால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கெல்லாம் தேசிய தலைவர்களின் பெயர்களை வைத்திருப்பதையும் அவர்களின் பெருமைகளையும் பெருமிதத்தோடு சொல்லும் ஒரு காட்சி போதுமே! எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ஆசிய ஜோதி நேரு அவர்களின் மற்றொரு பட்டமான மனிதரில் மாணிக்கம் என்பதனை இந்தப்படத்தின் பெயராக வைத்ததும் அதனால்தானே! ஆராதனா போன்ற படத்தை தமிழிலே எடுக்கும்போது அதற்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் சூட்ட எந்த ஹீரோ முன்வருவார்? அதை எந்த நெருடலும் இல்லாமல் வைத்ததையும் அதை ரசிகர்களும் பொது மக்களும் ஏற்றுக்கொண்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

மனிதரில் மாணிக்கம் படத்தில் அவருக்கு வெறும் கெஸ்ட் ரோல் என்று சொல்லி விடமுடியாது.அதே நேரத்தில் முழுமையான வேடமும் இல்லை. ஆனால் அவர் முழுமையாக வருவது போல் திரைக்கதை தோற்றமளிக்கும். அவர் வரும் பெரும்பாலான காட்சிகள் அவரின் கிளினிக்-ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் ஒரு விதமான அலுப்பு மக்களுக்கு ஏற்பட்டதோ என்று ஒரு எண்ணம்.

ஒரு விஷயம் பார்த்தோம் என்றால் 1969 காங்கிரஸ் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவிற்கு பிறகு இந்திரா அவர்களின் புகைப்படம் முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்தில் இடம் பெற்றது என்றால் அது இந்தப் படத்தில்தான். ஆனால் அதே நேரத்தில் நடிகர் திலகம் தன் முத்திரையை ஆழமாக பதித்த [அவர் மட்டுமா, மெல்லிசை மன்னர்,டி.எம்.எஸ். போன்றவர்களும்தான்] I will sing for you பாடலில் இரு வரிகள் வரும்

பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடணுமா
ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து பின்பாட்டு பாடணுமா

என்ற வரிகள் அன்றைய பிரதமருக்கு நேராகவே வைக்கப்பட்ட விமர்சனம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேறொரு வகையில் பார்த்தால் படத்தில் அந்தப் புகைப்படம் இடம்பெற்றது அதற்கு பிறகு நடந்த ஒரு இணைப்புக்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தது. ஆம், 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புதுவை சட்டமன்ற பொது தேர்தல், கோவை பாராளுமன்ற மற்றும் கோவை கிழக்கு தொகுதி இடைதேர்தல்களில் பெருந்தலைவரின் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ்-ம் இந்திராவின் இந்திரா காங்கிரஸ்-ம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நமது தோழர்கள் பலரும் பார்த்து ரசித்திருக்கக் கூடிய பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் நடிகர் திலகமும் இணைந்து இருக்கக் கூடிய புகைப்படம் பாண்டிச்சேரியில் நடந்த பிராச்சரக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதுதான். அந்த கூட்டணி புதுவையில் 12 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது கோவை பாராளுமன்ற தொகுதியில் 2000 வாக்குகள் வித்தியாசத்திலும் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெறும் ஐநூற்று சொச்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. தமிழகத்தின் துரதிர்ஷ்டம் அந்த கூட்டணியும் நீடிக்கவில்லை, பெருந்தலைவரும் மறைந்து போனார்.

மீண்டும் படத்திற்கு வருவோம். நமது ரசிகர்களை பொறுத்தவரை ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே அந்தப் படம் பற்றிய செய்திகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பதே இல்லை. தவிரவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கெளரவம் படத்திற்கும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த ராஜபார்ட் படத்திற்கும் நடுவில் வேறு வந்து சிக்கிக் கொண்டது இந்த படத்திற்கு வினையானது. டிசம்பர் 7 அன்று மதுரை - நியூசினிமாவில் ரிலீஸ். நான் இரண்டாவது நாள் சனிக்கிழமை காலைக் காட்சி பார்த்தேன். ஆரவாரங்கள் எல்லாம் இருந்த போதினும் ஏதோ ஒன்று குறைவது போல் ஒரு எண்ணம். படம் pick up ஆவதற்குள் ராஜபார்ட் வெளியாகி விட்டது. இந்தப் படம் பொங்கலுக்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.

அன்றைய நாளில் எங்களுக்கு இது ஒரு வருத்தமளிக்கும் நிகழ்வாகவே இருந்தது. அன்றைய தினத்தை விட அதற்கு ஒரு வருடம் கழித்து அதைப் பற்றி சிந்திக்கும் போதும் வருத்தம். காரணம் முன்பு ஒரு முறை நான் ஒரு பதிவில் ஒரு விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டேன். அது என்னவென்றால் 1971 தீபாவளி முதல் 1974 தீபாவளி வரை நடிகர் திலகம் நடித்து 21 படங்கள் வெளியாகின. அவற்றில்

வெள்ளி விழா கண்ட படங்கள் - 3

பட்டிக்காடா பட்டணமா

வசந்த மாளிகை

தங்கப்பதக்கம்

100 நாட்களும் அதற்கும் மேலே ஓடிய படங்கள் - 12

பாபு

ராஜா

ஞான ஒளி

தவப்புதல்வன்

நீதி

பாரத விலாஸ்

ராஜ ராஜ சோழன்

எங்கள் தங்க ராஜா

கெளரவம்

ராஜபார்ட் ரங்கதுரை

வாணி ராணி

என் மகன்

8 வாரங்கள் முதல் 11 வாரங்கள் வரை ஓடிய படங்கள் - 5

தர்மம் எங்கே

பொன்னுஞ்சல்

சிவகாமியின் செல்வன்

தாய்

அன்பை தேடி

இது போன்ற ஒரு தொடர் சாதனையை தமிழ் சினிமாவின் 80 வருட சரித்திரத்தில் செய்துக் காட்டிய ஒரே நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.

ஆக வெளியான 21 படங்களில் 50 நாட்கள் என்ற கோட்டை தவறவிட்ட ஒரே படம் மனிதரில் மாணிக்கம் மட்டுமே. அது கூட அவர் நாயகனாக நடித்த படம் இல்லை. இருந்தாலும் எங்களுக்கு [மதுரை ரசிகர்களுக்கு] ஒரு ஆதங்கம். இந்தப் படம் நியூசினிமாவில் வெளியாகாமல் வேறு அரங்கில் வெளியாகி இருக்கலாமே என்ற ஏக்கம். காரணம் நியூசினிமாவில் பொங்கலுக்கு புதிய படம் திருமாங்கல்யம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பதிலாக ஸ்ரீதேவியில் வெளியிட்டிருக்கலாம் என்று பேசிக் கொண்டோம் ஏனென்றால் தேவியில் சிவகாமியின் செல்வன் ஜனவரி 26-ந் தேதி ரீலீஸ் செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள விஷயம் எங்களுக்கு தெரியும். எனவே டிசம்பர் 7 அன்று தேவியில் வெளியாகி இருந்தால் ஜனவரி 25-ந் தேதி மனிதரில் மாணிக்கம் 50 நாட்களை நிறைவு செய்திருக்கும். முதலில் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தேவியில்தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் தீபாவளிக்கு ஸ்ரீதேவியில் வெளியான புன்னகை அரசியின் நூறாவது படமான நத்தையில் முத்து படத்தின் விநியோகஸ்தர் 50 நாட்கள் நிறைவு செய்யாமல் படத்தை மாற்ற மாட்டோம் என்று கூறிவிட்டதாக கேள்வி. எனவே நியூசினிமாவில் சுமாராக ஓடிக் கொண்டிருந்த பாக்தாத் பேரழகி படத்தை தூக்கிவிட்டு மனிதரில் மாணிக்கம் வெளியானது. இன்றைக்கும் இந்தப்படத்தை பார்த்தால் நடிகர் திலகம் வரும் காட்சிகளை இப்போதும் ரசிக்க முடியும் என்றே தோன்றுகிறது.

மீண்டும் அந்த இனிய நினைவுகளில் மூழ்கிட வாய்ப்பளித்ததற்கு நன்றி.

அன்புடன்

pammalar
13th December 2011, 05:04 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுப் பதிவுக்கு எனது சிறப்பான நன்றிகள் !

டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கும், இணையில்லாப் பெருந்தன்மைக்கும், உச்சமான பாராட்டுதல்களுக்கும் எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள் ! நாமனைவரும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் !

டியர் வாசுதேவன் சார்,

தங்களின் அன்பார்ந்த பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

"வெற்றிக்கு ஒருவன்" பதிவு டாப். அதில் அந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் மிகமிக அரிய பொக்கிஷம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th December 2011, 05:09 AM
டியர் முரளி சார்,

"மனிதரில் மாணிக்கம்" பற்றி... என ஆரம்பித்த தங்கள் பதிவு அக்காவியத்தைப் பற்றி மட்டுமா...எத்தனை அரிய வரலாற்று தகவல்களை, ஆணித்தரமான புள்ளிவிவரங்களை தாங்கி வந்திருக்கிறது. தங்களின் இந்தப்பதிவும் ஒரு மாணிக்கமே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th December 2011, 05:20 AM
கலையுலக சக்கரவர்த்திக்கு சூப்பர் ஸ்டார் அளித்த கௌரவம்

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : இதயம் பேசுகிறது : 4.10.1998
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR5a-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR5b-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR5c-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR5d-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR5e-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

Kadhir Vel
13th December 2011, 12:21 PM
No words can define this legend ..........no one is up to his mark as an actor in India till now....even Marlon Brando remarked him as one of the greatest actor he had ever seen.....he was honored by the french governments "Chevalier" award

vasudevan31355
13th December 2011, 12:47 PM
அன்பு முரளி சார்,

மனிதரில் மாணிக்கம் பற்றிய தங்களுடைய நினைவுப் பதிவுகள் அமர்க்களம். மனிதரில் மாணிக்கம் ஐம்பது நாட்கள் தாண்டாதது உங்கள் மனதை மிகவும் பாதித்திருப்பது உங்கள் பதிவிலிருந்து உணர முடிகிறது. தாங்கள் கூறியுள்ளது போல ஏதோ ஒன்று அப்படத்தில் குறைவாக இருப்பது உண்மை. நடிகர் திலகம் இல்லையென்றால் இப்படம் ஒரு வாரம் தாங்கியிருப்பதே கஷ்டம். 1971முதல் 1974 வரை நடிகர் திலகத்தின் காவியங்கள் ஓடிய நாட்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி. அருமையான பதிவு.

தாங்கள் கூறியுள்ளது போல் நன்றிக்கடன் தீர்ப்பதில் நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் தான். அந்த நல்ல உள்ளத்தை அவருக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அவரைக் காயப்படுத்திதான் இருக்கிறார்கள்.

அவரை இயக்கிய இயக்குனர்களும் அவரது இளகிய மனதை புரிந்துகொண்டு அவரை வேதனைப் பட வைத்துள்ளனர். அசோகன் என்ற நடிகர் இவருக்கு எதிரி முகாம் நடிகர் என்று தெரிந்தும் இவரைக் கேட்காமலேயே இவருடைய படங்களில் நடிக்க வைக்கப்பட்டார். திரு பி.ஆர்.பந்துலு தன் பெரும்பான்மையான படங்களில் அசோகனை நடிகர் திலகத்துடன் இணைந்து நடிக்க வைத்துள்ளார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, கர்ணன், முரடன் முத்து போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள். நடிகர் திலகத்தைப் பற்றி தாறுமாறான விமர்சனங்களை அசோகன் பலதடவை கூறியுள்ளார். இருந்தாலும் பந்துலு அவர்கள் மீது கொண்ட நட்பாலும், தன் திறமையின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்ததாலும் நடிகர் திலகம் இதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லையென்றுதான் கூற வேண்டும்.

நம் பம்மலார் அவர்கள் பதிந்த உயர்ந்த மனிதன் பதிவில் 'அசோகனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நடிகர் திலகம்' செய்தியில் கூட எதிர் முகாம் நடிகராக இருந்தாலும், தன் அனுபவத்தை வைத்து அந்த டாக்டர் ரோல் தனக்குக் கிடைக்காவிட்டாலும் கிடைத்தவர் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எப்படி அந்த ரோலை நடித்தால் நன்றாய் இருக்கும் என்று அசோகனுக்கு சொல்லிக் கொடுக்க, ஆனால் அவரோ "அந்த ஆள் (நடிகர் திலகம்)என்னை கவிழ்த்து விடுவதற்காக வேண்டுமென்றே தப்பாக சொல்லிக் கொடுத்துவிட வில்லையே"என்று சரவணனிடம் சொன்னால் ஏ.வி.ஏம் முக்கு தான் பட்ட செஞ்சோற்றுக் கடனுக்காக அதையும் பொறுத்துக் கொண்ட மகா புருஷர் நம் நடிகர் திலகம். (ஏ.வி.ஏம் படங்களில் பெரும்பாலும் அசோகன் இடம் பெறாமல் இருக்க மாட்டார். P.s வீரப்பாவின் ஆண்டவன் கட்டளையிலும் கூட அசோகன் வில்லன்)

முக்தா ஸ்ரீனிவாசன் படங்களில் மாற்று முகாம் நடிகரின் அபிமானி வில்லன் நடிகர் கண்ணன் பெரும்பாலும் இடம் பெறாமல் இருக்க மாட்டார். அன்பைத்தேடி, இமயம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அதையும் முக்தாவிற்காக பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம். (பாலாஜி அவர்களின் 'ராஜா' வில் கூட வில்லனாக ஒரு சிறு பாத்திரத்தில் கண்ணன் வருவார்.)

அதே போல தேங்காய் சீனிவாசன். மாற்று முகாமில் இருந்தாலும் இவருடன் எத்தனை படங்கள்! பிற்காலங்களில் திரு. எம்ஜியார் அவர்கள் முதல்வர் ஆனபிறகு 'தேங்காய்' இல்லாத நடிகர் திலகம் படங்களே இல்லை எனும் அளவுக்கு. அதுவும் வலுவான ரோல்களில். அதற்கு முன்னம் கூட தேங்காய் சீனிவாசன் ஸ்ரீதருக்கு வேண்டியவர் என்பதனால் சிவந்தமண்ணில் தலை காட்டுவார். (விமானத்தில் காஞ்சனாவின் உதவியாளராக வந்து நடிகர் திலகத்துடன் ஒரு சிறு சண்டைக்காட்சி) முக்தாவின் 'அருணோதயம்', நிறைகுடம் படங்களிலும் தேங்காய் சீனிவாசனுக்கு சான்ஸ். இயக்குனர் டி .என் பாலு அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து முதன் முதல் இயக்கிய 'அஞ்சல் பெட்டி 520'-இல் தேங்காய் சீனிவாசன் நடிகர் திலகத்தின் நண்பனாக நாகேஷுடன் சேர்ந்து வருவார். இயக்குனர் டி .என் பாலுவும், தேங்காய் சீனிவாசன் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்பதனால் தேங்காய்க்கு அந்த ரோல். ஜேயார் மூவீஸ் 'எங்க மாமா' விலும் தேங்காய் சீனிவாசனுக்கு ஒரு காமெடி ரோல். இதையெல்லாம் விடவும் ராம்குமார் பிலிம்ஸ் 'சுமதி என் சுந்தரி' யிலேயே இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் (ஸ்ரீதரின் உதவி இயக்குனராக இருந்ததால்) தேங்காய் சீனிவாசனை ஒரு ரோலில் நடிக்க வைத்திருப்பார். ('கலியுகக் கண்ணன்' படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்தபோது நடிகர் திலகத்தையே நடிப்பில் மிஞ்சி விட்டதாக அப்படி ஒரு அண்டப்புளுகுப் பிரச்சாரம் அப்போது எதிர்முகாமினரால் செய்யப்பட்டது மறந்து போகுமா?..இதற்கு சில பத்திரிக்கைகள் கூட உடந்தை)

சிவாஜி புரடக்ஷன்ஸ் படங்களிலும் கூட (அண்ணன் ஒரு கோவில், திரிசூலம்) தேங்காய் சீனிவாசன் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை காரணமாக 'புக்' செய்யப்பட்டார். பின் தேங்காயின் சொந்தப் படமான 'கிருஷ்ணன் வந்தான்' திரைப்படத்தில் கூட பழைய விஷயங்கள் எதனையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நட்புணர்வோடு நடித்துக் கொடுத்து உதவினார் நடிகர் திலகம்.

சொந்தத் தயாரிப்பாய் இருந்தாலும் கூட,எதிரி முகாம் நடிகர்களாய் இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் இயக்குனர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்த கள்ளம் கபடமில்லாத பிள்ளை உள்ளம் கொண்டவர் நம் நடிகர் திலகம். பழி வாங்கும் உணர்வு, பகை தீர்த்தல் போன்ற தீய சுபாவங்கள் என்றுமே அவருக்கு இருந்ததில்லை. மாறாக தன்னை தூற்றிப் பேசிய அனைவரையும் தூக்கி வைத்துதான் கொண்டாடியிருக்கிறார் அவர். ஆனால் அவருடைய நல்ல உள்ளத்தை எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்த்தார்கள்?... அல்லது நினைத்துப் பார்க்கிறார்கள்? வேறு யாராக இருந்தாலும் இப்படி விட்டுக் கொடுத்துப் போவார்களா? அதுதான் நடிகர் திலகம்...அவர்தான் மனித தெய்வம்.

அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
13th December 2011, 08:12 PM
டியர் முரளி சார்,

நீதி மற்றும் மனிதரில் மாணிக்கம் நினைவலைகள் அற்புதம், படத்தில் அவருக்கு டாக்டர் ரோல் அதுவும் ஏழைகளுக்கு உதவும் ஒரு அருமையான மனிதர்.

என்ன இருந்தாலும் avm ராஜன் தானே ஹீரோ, இவருக்கு கௌரவ வேடம் தானே, அதனால் கூட படம் ஓடாதிருந்திருக்கலாம்

J.Radhakrishnan
13th December 2011, 08:29 PM
டியர் வாசுதேவன் சார்,

வெற்றிக்கு ஒருவன் பதிவு பிரமாதம், அதிலும் படப் பிடிப்பின் போது நடிகர் திலகம் சக கலைஞர்களுடன் இருக்கும் ஸ்டில் அதி அற்புதம்.

Subramaniam Ramajayam
14th December 2011, 12:23 AM
CENTPERCENT TRUE HAPPENNGS WHICH HAPPEND BETWEEN 67 TO 72 TILL MGR WAS WITH DMK. it s not far to dicuss ill of the peoplewho are no more. but the way asokan, kannan humilated NT and fans somethng very bad and nonsense,
thengai also joned thestream under compulson, JUST TO PLEASE OTHERS AND POLITCAL GANINS THEY ARE COMPELLED TO ACT LIKE THIS. as NADIGAR THILAGAM happened to be a UYARTHANTHA MANITHAN, HE SIMPLY
IGNORED EVERYTHNG. WELL SAID MR VASUDEVAN SIR.

pammalar
14th December 2011, 04:37 AM
Demi-God's December Delicacies

மனிதனும் மிருகமும்

[4.12.1953 - 4.12.2011] : 59வது ஆரம்பதினம்

நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள் : ஒரிஜினல் பாட்டுப் புத்தகப் பக்கங்கள்

முகப்பு
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5207-1.jpg


பின் அட்டை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5211-1.jpg


நடிக-நடிகையர்-தொழில்நுட்பக்கலைஞர்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5209.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5210.jpg

கதைச் சுருக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5212.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5213.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5214.jpg

நடிகர் திலகம் பாடுவதாக வருகின்ற 'காலமென்னும் சிற்பி செய்யும்' பாடலின் வரிகள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5215-1.jpg

[இசைச் சித்தரின் இனிமை நிறைந்த குரலில் ஒலிக்கும் இந்த 'காலமென்னும் சிற்பி செய்யும்' என்ற அருமையான மிக அரிய பாடலின் ஆடியோவை கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கிலிருந்து பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் !]

http://www.mediafire.com/?d4ehy65ks16lghq

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th December 2011, 05:11 AM
Demi-God's December Delicacies

மனிதனும் மிருகமும்

[4.12.1953 - 4.12.2011] : 59வது ஆரம்பதினம்

நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷம் : மிகமிக அரிய நிழற்படம்

சுதேசமித்ரன் : 1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MMNewspaperStill-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
14th December 2011, 07:48 AM
அன்பு பம்மலார் சார்,

தலைவர் வீட்டிற்கு வந்து தலைவருக்கு அஞ்சலி செய்த ரஜினி அவர்களின் ஆஷ்ரம் பள்ளி ஆண்டு விழாவில் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியைப் பதிவிட்டு கலக்கி விட்டீர்கள். தலைவர் அந்த விழாவில் ஜாலியாக இருந்தது படிக்க சந்தோஷமாய் இருந்தது.

மனிதனும் மிருகமும் பார்ட் 2 சூப்பர். ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு அட்டை பின்னி எடுக்கிறது. பாரிஸ்டர் மாதவன் அசத்தலாக உள்ளார். ஆனால் கதைச் சுருக்கம் நான் படிக்கவில்லை. (பின்னாளில் இப்படம் கிடைத்து பார்க்க நேர்ந்தால் சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால்) அரிய, மிக அரிய, மிக மிக அரிய பதிவை அளித்த தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். சுதேசமித்திரன் ஸ்டில்லும் அசத்தல்.

'காலமெனும் சிற்பி செய்த' காவியப் பாடலின் லிங்கிற்கு நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
14th December 2011, 07:52 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி.

டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் அன்புப் பாராட்டிற்கு நன்றி.

டியர் ராமஜெயம் சார்,
தங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
14th December 2011, 01:37 PM
நடிப்பு வைரம் நடிக்கும் 'மண்ணுக்குள் வைரம்'(12-12-1986)

http://www.buycinemovies.com/images/detailed/0001-001.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2_2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4_2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
14th December 2011, 05:51 PM
அன்பு வாசுதேவன் சார்,

'பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற மனம் நடிகர்திலகத்துக்கு வாய்க்கப்பட்டிருந்ததால் பலனடைந்தவர்கள் பலர். தேங்காய் சீனிவாசனின் கிருஷ்ணன் வந்தான் முழுப்படத்தையும் பணமே வாங்காமல் நடித்துக்கொடுத்தார் என்று ஏற்கெனவே நமது திரியில் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது, அண்னன் ஒரு கோயிலில் துவங்கி, பின்னர் நடிகர்திலகம் நடித்த 90 சதவீதம் படங்களில் தேங்காய் நடித்திருந்தார். அதுவும் பல படங்களில் நடிகர்திலகத்துக்கு இணையான ரோல்களில் நடிக்க வைக்கப்பட்டார்.

கே.கண்னன், பாலாஜியின் ராஜாவில் மட்டுமல்ல, நீதி படத்திலும் நடித்திருந்தார். மனோகர் ஏராளமான படங்களில் நடிகர்திலகத்துடன் நடித்துள்ளார். நம்பியாரைப்பெறுத்தவரையில் மாற்றுமுகாமை விட, நடிகர்திலகத்துடன் நடித்த படங்கள்தான் அதிகம். 50களில் துவங்கி, நடிகர்திலகத்தின் கடைசிப்படமான 'பூப்பறிக்க வருகிறோம்' வரையில் தொடர்ந்து நடித்துள்ளார். எஸ்.வி.ராமதாஸும் எழுபது எண்பதுகளில் பல்வேறு படங்களில் நடிகர்திலகத்துடன் நடித்துள்ளார். இவர்கள் யாரும் நடிகர்திலகத்தைப்பற்றி தப்பாய் பேசியவர்கள் அல்ல. இவ்வளவு ஏன், ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டின் கூட 'தியாகம்' சண்டைக்காட்சியில் நடித்து முடித்தபின், 'சிவாஜி சாருடன் இதுவரை நடிக்கவில்லையே என்ற என்னுடைய பெரிய ஆசை இன்று நிறைவேறியது' என்று பத்திரிகையாளர்களிடம் பெருமைபடக்கூறியுள்ளார். (பின்னர் ‘வெற்றிக்கு ஒருவன்’ படத்திலும் ஜஸ்டின் நடித்தார்).

இவர்களில் அசோகன் மட்டுமே நடிகர்திலகத்தை எப்போதும் எதிரியாக நினைத்து ஏதாவது கமெண்ட் அடித்துக்கொண்டிருப்பார். இருமலர்கள் படப்பிடிப்பின்போதும் இப்படித்தான். நடிகர்திலகம் ஒரு காட்சியில் சீரியஸாக நடித்துக்கொண்டிருக்கும்போது, சற்று தள்ளி 'அவுட் ஆஃப் போகஸ்' ஏரியாவில் நின்று கொண்டு அசோகன் ஏதாவது காமெடி பண்ணி அனைவரின் கவனத்தையும் சிதறடிப்பாராம். இப்போது அவர்கள் யாரும் இல்லாததால் இதை பெரிது படுத்திப்பேச வேண்டியதில்லையெனினும், தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில் நடிகர்திலகம் சிறந்து விளங்கினார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர் நினைத்திருந்தால் இவரை படத்திலிருந்து தூக்கு என்று சொல்ல அதிக நேரம் ஆகியிருக்காது.

mr_karthik
14th December 2011, 06:37 PM
அன்புள்ள முரளி சார்,

'மனிதரில் மாணிக்கம்' பட்த்தைப்பற்றி எழுதத்துவங்கி 71 தீபாவளி முதல் 74 தீபாவளி வரையிலான கால கட்டத்தை தீர்க்கமாக அலசிவிட்டீர்கள். மிக அருமையான சுவையான விவரங்கள். மதுரை மாநகர் நிலவரங்களை அப்படியே கண்முன் கொண்டு வருகிறீர்கள்.

(மதுரையின் கடந்த கால நிலவரங்கள் பற்றி நீங்களும், சென்னை நிகழ்வுகள் பற்றி சாரதா, ராகவேந்தர் சார், மற்றும் நான், கடலூர் நிகழ்வுகள் பற்றி வாசுதேவன் சார், செல்லை பற்றி சதீஷ் போன்றோர் எழுதுவது போல மற்ற பெருநகரங்களான திருச்சி, சேலம் நகரங்களில் நடிகர்திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் பற்றி அப்பகுதி ரசிகர்கள் எழுதினால் சுவையாக இருக்குமே).

மனிதரில் மாணிக்கம், சிவகாமியின் செல்வன் தலைப்புகளைப்போல, தலைவர்களை நினைவு கூர்ந்த இன்னொரு படத்தலைப்பு 'ரோஜாவின் ராஜா'.

திரைப்பட வரலாற்றை எழுதும்போது, அன்றைய அரசியல் சூழலையும் மறவாமல் சேர்த்து எழுதி சுவையூட்டுவது தங்களுக்கே உரிய ஸ்பெஷாலிட்டி. அதைப்படிக்கும்போது மனம் பின்னோக்கிச்சென்று அந்த காலகட்டத்தில் சஞ்சரிக்கிறது.

எல்லோரும் விடுக்கும் வேண்டுகோள்தான் நானும் உங்களுக்கு வைப்பது. அது 'முன்போல அடிக்கடி வாருங்கள், அள்ளித்தாருங்கள்' என்பதுதான்.

mr_karthik
14th December 2011, 06:59 PM
அன்புள்ள பம்மலார் சார்,

அன்னை இல்லத்தில் ரஜினிகாந்த் கலந்துகொண்ட நிக்ழச்சியையும், ரஜினியின் ஆஸ்ரமத்தில் லதா ரஜினி நடத்திய விழாவில் நடிகர்திலகம் கலந்துகொண்ட நிகழச்சியையும் அப்படியே பத்திரிகைகளில் வந்த ஒரிஜினல் வடிவில் பதிப்பித்து அசத்தி விட்டீர்கள். ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்வதிலும் கூட நடிகர்திலகத்தை சம்மந்தப்படுத்தியே பதிவிட்டிருப்பது, எங்கும் எதிலும் நடிகர்திலகத்தையே பார்க்கிறீர்கள் என்பதை இன்னொருமுறை மெய்ப்பிப்பதாக உள்ளது.

'மனிதனும் மிருகமும்' படத்தின் பாட்டுப்புத்தக கவரேஜும் அருமை. அதுபோல அப்படத்தில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படமும்.

தொடர்ந்து அசத்துங்கள். 'நீதி' திரைக்காவியத்தின் ஆவணப்பொக்கிஷங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்.

Murali Srinivas
14th December 2011, 11:51 PM
மனிதரில் மாணிக்கம் பதிவைப் பாராட்டிய சுவாமி, வாசுதேவன், ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்திக்கிற்கு மனங்கனிந்த நன்றிகள். கார்த்திக், நீங்கள் குறிப்பிட்டது போல் ரோஜாவின் ராஜாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தப் படம் நினைவில் இருந்த போதும் எழுதும் போது சேர்க்க மறந்து விட்டேன்.

NOV,

Thanks for effecting the breakup in thread without disturbing anything. Like we used to do earlier, can you please give the links for the earlier threads, reviews and other important posts here in the first page so that new entrants can benefit.

Regards

pammalar
15th December 2011, 05:23 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் பாசமான பாராட்டுக்கு எனது பசுமையான நன்றிகள் !

"மண்ணுக்குள் வைரம்" பதிவு வைரமாய் மின்னுகிறது !

டியர் mr_karthik,

தங்களின் அசத்தல் பாராட்டுக்கு எனது அற்புத நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th December 2011, 05:29 AM
Demi-God's December Delicacies

பாட்டும் பரதமும்

[6.12.1975 - 6.12.2011] : 37வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PB1-1.jpg


அட்டைப்படம் : பேசும் படம் [தீபாவளி மலர்] : நவம்பர் 1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PB2-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 6.12.1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5237-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5221-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : ஆனந்த விகடன் : 1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5220-1.jpg


காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PB3-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
15th December 2011, 07:00 AM
"பாட்டும் பரதமும்" 37வது ஆண்டுத் துவக்கம்

எங்கள் பாரத திலகத்தின் பரத நாட்டிய அசைவுகளில்

http://www.dhool.com/gifs/8511.jpg

http://img830.imageshack.us/img830/6025/77025529.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-6.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th December 2011, 07:52 AM
"பாட்டும் பரதமும்" நிழற்படங்கள் தொடர்கிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-7.jpg

நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பில் "மாந்தோரண வீதியில்" (வீடியோ வடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D0RQVMo8YiM

"மழைக்காலம் வருகின்றது" (வீடியோ வடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cKaX4MrLXuA

"சிவகாமி ஆட வந்தால்" (நடிகர் திலகத்தின் அற்புத பரத முத்திரைகளில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fCEX8_4VBpQ


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
15th December 2011, 11:37 AM
அன்புள்ள் பம்மலார் சார்,

எல்லோருக்கும் பிடித்த 'பாட்டும் பரதமும்' திரை ஓவியத்தின் ஆவணப்பொக்கிஷப்பதிவுகள் மிக மிக அருமை. ஆவணங்கள் ஒவ்வொன்றும் கடந்தகால நினைவுகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. எத்தகைய அற்புதமான நடிப்பு. இப்படத்தின் 50-வது நாள் விளம்பர ஏடு கிடைத்தால் தவறாது பதிவிடுங்கள். அதில் தமிழகத்தில் 50 நாட்கள் ஓடிய அனைத்து அரங்குகளும் இடம்பெற்றிருந்ததாக நினைவு. இந்த அருமையான படத்துக்கு, அன்றைய அரசியல் சூழலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஏற்கெனவே முரளி சார், ராகவேந்தர் சார், சாரதா ஆகியோர் விரிவாக அலசியது நினைவில் தங்கியுள்ளது.

அன்புள்ள வாசுதேவன் சார்,

'பாட்டும் பரதமும்' படத்தின் ஸ்டில்களும், பாடல்களின் வீடியோ இணைப்புகளும் வழக்கம்போல மிகவும் அற்புதம். நீங்களும் நமது பம்மலாரும் சேர்ந்து 'பாட்டும் பரதமும்' வெளியீட்டு தினத்தை மிக சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளீர்கள்.

தங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.

mr_karthik
15th December 2011, 11:39 AM
'ஜஸ்டிஸ் கோபிநாத்' 34வது உதய தினம்
(16.12.1978 - 16.12.2011)

1878-ம் ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் எட்டு படங்களில் (தமிழ் 7, மலையாளம் 1) சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வெளிவந்தது 'தியாகம்' ஒரு படம் மட்டுமே. ஜெனரல் சக்ரவர்த்தி சாந்தி, மகாராணி, அபிராமியிலும், தச்சோளி அம்பு சாந்தியில் மட்டும் ரிலீஸ் ஆயின. மற்ற படங்கள் மற்ற தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. பட்டியல் போட்டால் தெளிவாகும். (1977 தீபாவளியன்று வெளியான 'அண்ணன் ஒரு கோயில்' மார்ச் 3 அன்று சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் 114 நாட்களைக்கடந்த நிலையில், அதே அரங்குகளில் 'தியாகம்' திரையிடப்பட்டது).

அந்தமான் காதலி - லியோ/மிட்லண்ட், மகாராணி, ராக்ஸி
தியாகம் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
என்னைப்போல் ஒருவன் - தேவிபாரடைஸ், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா
புண்ணிய பூமி - சித்ரா, பிராட்வே, உமா
ஜெனரல் சக்ரவர்த்தி - சாந்தி, மகாராணி, அபிராமி
தச்சோளி அம்பு (மலையாளம்) - சாந்தி
பைலட் பிரேம்நாத் - அலங்கார், மகாராணி, ஈகா
ஜஸ்டிஸ் கோபிநாத் - பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, பால அபிராமி, லிபர்ட்டி

இவற்றில் அந்தமான் காதலி, தியாகம், ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத் ஆகிய நான்கும் 100 நாட்களைக்கடந்து ஓடின. என்னைப்போல் ஒருவன் 10 வாரங்களும், மற்றவை 50 நாட்களும் ஓடின. தியாகம் சாந்தியிலும், புவனேஸ்வரியிலும் 104 நாட்களில் மாற்றப்பட, கிரௌனில் தொடர்ந்து ஓடியதும், அங்கே வெள்ளி விழாவைக்கடக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு ஒரு வாரம் ஓடிய நிலையில் 111 நாட்களில் வேறு படம் வெளியிடப்பட்டு, ரசிகர்களை ஏமாற்றினர்.

ஆனால், மதுரை சிந்தாமணியில் தியாகம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளிவிழாப்படமாக அமைந்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது. (முரளி சாருக்கும் மதுரை ரசிகர்களுக்கும் நன்றி). ஜஸ்டிஸுக்கு வருவோம்...

அக்டோபர் 26 அன்று வெளியான பைலட் பிரேம்நாத் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 16 அன்று 'ஜஸ்டிஸ் கோபிநாத்' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை பேப்பரைப் பார்க்கும் வரை பாரகன் தவிர மற்ற தியேட்டர்கள் முடிவாகாமலே இருந்தது. காலை தினத்தந்தியைப் பார்த்ததும்தான் சென்னையில் நான்கு தியேட்டர்களில் வெளியாவதாக விளம்பரம் இடப்பட்டிருந்தது. அதில் ஒரு ஆச்சரியம், கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த 'லிபர்ட்டி' தியேட்டரும் இடம் பெற்றிருந்ததுதான்.

ஆச்சரியத்துக்குக் காரணம் இருந்தது. லிபர்ட்டி தியேட்டரில் ஆரம்ப காலத்தில் புதுப்படங்கள் வெளியாகியிருக்கும் போலும். ஆனால் பல ஆண்டுகளாக புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல், பழைய படங்களே திரையிடப்பட்டு வந்தன. அந்த தியேட்டரில் ஜஸ்டிஸ் கோபிநாத் ரிலீஸாகிறதென்பது ரசிகர்களுக்கு அதிசயமாக இருந்தது. (இதற்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதில் 'ஒருதலை ராகம்' திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி, லிபர்ட்டி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற விஷயமும் பின்னர் நடந்தது).

1971-க்கு முன்னர் நடிகர்திலகத்தின் எங்க ஊர் ராஜா, எங்க மாமா, குலமா குணமா போன்ற படங்கள் லிபர்ட்டியில் ரிலீஸாகின. ஆனால் அதன்பின்னர் நான்காவது ஏரியா தியேட்டர் என்றால் கிருஷ்ணவேணி, ராம், கமலா, நூர்ஜகான் என்றுதான் படங்கள் வெளியாயின.

ஜஸ்டிஸுக்குப்பின்னர், நடிகர்திலகத்தின் கவரிமான், நான் வாழ வைப்பேன் படங்களும் லிபர்ட்டியில் ரிலீஸானது

பேப்பர் பார்த்ததும் மண்ணடியிலிருந்த மளிகைக்கடையிலிருந்து தி.நகர் நண்பர் வீரராகவனுக்கு போன் செய்து விவரம் சொல்ல (அப்போது லோக்கல் கால் 15 பைசா) அவனும் விளம்பரத்தைப் பார்த்ததாகவும், முதல்நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு லிபர்ட்டிதான் சரியான தியேட்டர், மற்றவைகளில் முதல்நாள் டிக்கட் கிடைக்காது என்று சொல்லி, என்னை கோடம்பாக்கம் வரச்சொல்ல, பீச் ஸ்டேஷனிலிருந்து புறநகர் ரயிலில் கோடம்பாக்கம் விரைந்தேன். சைக்கிளில் வந்த வீரராகவன் ஸ்டேஷனில் காத்திருக்க, இருவரும் லிபர்ட்டிக்கு விரைந்தோம். அப்போதுதான் ருசிகர சம்பவம் நடந்தது.

அந்த நேரத்திலும் (காலை 8 மணிக்கு) தியேட்டர் கேட் முன்னால் சுமாராக கூட்டம் கூடியிருந்தது. கேட்டைப்பிடித்துக்கொண்டு நிற்கும் கூட்டத்தைப்பார்த்த தியேட்டர் சிப்பந்திகள் இருவருக்கு ஆச்சரியம். "எதுக்குய்யா எல்லாரும் வந்திருக்கீங்க?" என்று கேட்க, பலர் கோரஸாக "புதுப்படத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ண வந்திருக்கோம்" என்று சொன்னதும்...
"என்னது? புதுப்படமா? இங்கே புதுப்படமெல்லாம் போடறதில்லைங்க. நீங்க தியேட்டர் தப்பா வந்துட்டீங்க. போங்க... போங்க" என்று விரட்டினர். "இல்லேப்பா, பேப்பர்ல பார்த்துட்டுதாம்பா வந்திருக்கோம்" என்று (சொல்லாதே யாரும் கேட்டால் இடையில் வரும் வசனம் போல) சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அடுத்து அவர்கள் சொன்னதுதான் இன்னும் வேடிக்கை "அப்படியா? அப்போ பேப்பர்காரங்க தப்பா போட்டிருப்பாங்க" என்று சொன்னார்களே தவிர கேட்டைத் திறக்கவில்லை.

"இது ஏதுடா வம்பா போச்சு, பேசாம வேறு தியேட்டருக்குப்போயிடலாம் போலிருக்கே. போயும் போயும் இந்த தியேட்டரை புக் பண்ணியிருக்காங்க" என்று ரசிகர்கள் முனகியபடி நிற்க (இத்தனைக்கும் நடிகர்திலகமும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கும் முதல்படம்), அப்போதுதான் தியேட்டர் மேனேஜர் பைக்கில் வந்தார். அவருக்கு மட்டும் சிறிதாக கேட்டை திறந்து விட்ட சிப்பந்தி, "சார், நம்ம தியேட்டர்ல புதுப்படம் ரிலீஸாகப்போறதாக எல்லோரும் தப்பாக வந்து நிற்கிறாங்க" என்று சொல்ல,

"இல்லேப்பா ஜஸ்டிஸ் கோபிநாத் படம் நம்ம தியேட்டர்லதான் ரிலீஸாகுது. நேத்துராத்திரிதான் நம்ம தியேட்டர் கன்பர்ம் ஆச்சு. அதுனாலதான் இன்னும் போஸ்ட்டர்கள் வரலை. நீ மெயின் கேட்டையும் கவுண்ட்டர் கேட்டையும் திறந்து எல்லாரையும் உள்ள விடு" என்று சொல்லிவிட்டு உள்ளே போக, எல்லோரும் சரியான நகைச்சுவை கிடைத்து போல 'ஓ'வென்று கூச்சலிட்டு சிரித்தனர். தியேட்டர் சிப்பந்திகள் முகத்தில் அசடு வழிந்தது. அவ்வளவு சீக்கிரம் போயும் முதல்நாள் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது. மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து ஆறு டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். இந்த சம்பவத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.

என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஒருமுறை மாலைக்காட்சி பார்த்தபின் ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தை இன்றுவரை மறுமுறை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலமுறைகள் பார்க்க முயன்றும், வேறு சில தடங்கல்கள் வந்து இடையூறு செய்து பார்க்கமுடியாமல் போனது. வீடியோ கேஸட்டிலும் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் படத்தின் கதை சரியாக நினைவில்லை. ஆனால் படம் நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்தின் ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், ரஜினிகாந்த்தின் ஜோடியாக சுமித்ராவும் நடித்திருந்தனர். சி.ஐ.டி.சகுந்தலா ஏதோ கிராமத்துப்பெண் ரோலில் நடித்திருந்ததாக நினைவு. ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார். Heron ராமசாமிதான் பிரதான வில்லன் என்று நினைவு. படத்தில் நடிகர்திலகம் மற்றும் ரஜினியை விட தேங்காய் சீனிவாசனுக்கு அதிக சீன்களில் வரும் வாய்ப்பு. அவருக்கு ஒரு பாட்டு கூட இருந்தது. ரஜினிக்கும் சுமித்ராவுக்குமான ஒரு டூயட் பாட்டு வாகினி ஸ்டுடியோ புல்வெளியில் எடுக்கப்பட்டிருந்தது. சுமித்ரா ரோஸ்கலர் பெல்பாட்டமெல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணுவார். அந்தப்பாடலை மட்டும் சில மாதங்களுக்கு முன் பார்த்திருந்ததால் நினைவிருக்கிறது.

இப்போது மீண்டும் 'ஜஸ்டிஸ் கோபிநாத்' முழுப்படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறது.

NOV
15th December 2011, 11:58 AM
Thanks for effecting the breakup in thread without disturbing anything. Like we used to do earlier, can you please give the links for the earlier threads, reviews and other important posts here in the first page so that new entrants can benefit.Will do Murali, after I have completed moving Parts 7 & 8, with 50 pages of 40 posts each. (System is very slow now). Thanks.

vasudevan31355
15th December 2011, 03:30 PM
அன்பு பம்மலார் சார்,

'பாட்டும் பரதமும்' படத்துக்கான தங்கள் பதிவு பரமானந்தம். சைட் போஸில் கலக்கும் தலைவரின் கருப்பு வெள்ளை புகைப்படம் அட்டகாசம். கிட்டத் தட்ட அதே போஸில் இருக்கும் 'பேசும்படம்' (கலர்) அட்டைப் படமும் அருமை! அதுவும் தீபாவளி மலரின் அட்டையை அலங்கரிப்பது இன்னும் சிறப்பு.

இன்று முதல் முரசொலி விளம்பரம் லைனிங் ஆர்ட்டில் பின்னி எடுக்கிறது. முதல் வெளியீட்டு விளம்பரம் கம்பீரக் கலக்கல் என்றால் ஆனந்தவிகடன் விளம்பரம் சாந்தம் தவழும் அழகு.

ஆனந்த விகடன் விமர்சனம் வியப்பு. பின்னே! ஒருகுறை கூட இல்லாமல் வெளிவந்த விமர்சனமாய் இருக்கிறதே! உண்மையாகவே ஆனந்த விகடன் விமர்சனம் ஆனந்தம் தான்.

தங்களின் இந்த அற்புதப் பதிவுகளால் மனம் ஆனந்த பரதமாடுகிறது. பாட்டும் பரதமும் போல ஆவணங்களும் பம்மலாரும் இணைந்திருப்பது இவ்வையகம் பெற்ற பாக்கியம். நன்றி!

vasudevan31355
15th December 2011, 05:11 PM
அன்பு கார்த்திக் சார்,

'பாட்டும் பரதமும்' பற்றிய பம்மலார் மற்றும் அடியேனுடைய பதிவுகளை உடனே பார்த்த மாத்திரத்தில் பாராட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள்.

1978-ம் ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் எட்டு படங்களையும், அவை வெளியான அரங்குகளையும் பதிவாக அளித்து நீங்கள் ஒரு 'மனித கம்ப்யூட்டர்' என மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். என்ன ஒரு அபார நினைவாற்றல்! நானெல்லாம் அடிக்கடி மறந்துவிடுவேன். இந்த விஷயத்தில் உங்கள் மேல் எனக்கு கொஞ்சம் ஏன் அதற்கு ஒரு படி மேலேயும் பொறாமைதான். (சும்மா ஜாலியாகத்தான் சொன்னேன்) அநேகமாக படிப்பிலும் நீங்கள் சூரப்புலியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இரண்டு 'நாத்' களும் அடுத்தடுத்து வரிசையாக வந்ததில் 'first is the best' என்பது போல முதல் 'நாத்' நாட் அவுட். ஓரளவிற்கு நன்றாக இருந்தும் கூட இரண்டாவது 'நாத்' திற்கு not response. விதியாகப் பட்டது வலியது...அதை யாரும் வெல்ல முடியாது...( அதே சொர்க்கத்தின் சொல்லாதே யாரும் கேட்டால் இடையில் வரும் வசனம் போல)

நீங்களும் உங்கள் நண்பர்களும் லிபர்ட்டியில் ஜஸ்டிஸ் வருவாரா அல்லது வரமாட்டாரா என்று குழம்பிப் போய் நின்ற கதை 'குபீர்' சிரிப்பை வரவழைத்து விட்டது.

தேங்காய் ஸ்ரீனிவாசன், அவர் ஜோடியாக வரும் அபர்ணா காட்சிகளில் கொஞ்சம் கத்தரி வைத்து கதையிலும், காட்சி அமைப்புகளிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் நல்ல வெற்றி கண்டிருக்கும். ஏனோ நெஞ்சில் ஒட்டவில்லை. ரஜினி தலைவர் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட சற்று அச்சப் படுவார். (தலைவருடன் முதல் படமாயிற்றே!)

"நானா சொன்னேன் தீர்ப்பு" பாடல் T.M.S. இன் கணீர்க் குரலில் அட்டகாசமாகவே இருந்தது.( இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைல் செம கலக்கல் )

"அட என்னாங்க இது பொல்லாத்தனம்" பாடல் அப்படியே ஜெனரல் சக்கரவர்த்தியின் "ஒ...மை டியர் டாக்டர்" பாடலின் கார்பன். குறைந்த இடைவெளியில் மறுபடியும் அதே போன்ற பாடலைக் கேட்க சற்று சலிப்பு ஏற்பட்டது உண்மை. அதே ஜோடி. அதே இயக்குனர் வேறு. (D.யோகானந்த் என்றாலே இப்படித்தான் பாடல் எடுப்பார் போல. 'கிரஹப்பிரவேச'த்திலும் கூட "எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது" பாடல்) அதனால் பாடலும் அதே ரகமாய் போயிற்று.

"நமது காதல் என்றும் என்றும் மாறாதது" ரஜினி சுமித்ரா டூயட் சாங் தியேட்டர் கேண்டீன்காரர்களுக்கு மிகவும் பிடித்தமான பாட்டு. டீ, சிகரெட்,சோடா இந்தப் பாடலின் போது அமோக விற்பனை.

வயதான ரோலில் வரும் போது நடிகர் திலகத்தின் அந்த குறுந்தாடி அவருக்கு கன கச்சிதம். அந்த குறுந்தாடி அவர் மேல் ஒரு கம்பீரமான மரியாதையை ஏற்படுத்தும்.

கார்த்திக் சாருக்கு நன்றிப் பதிவு போடப் போக விஷயம் 'ஜஸ்டிஸ்' பக்கம் திரும்பி விட்டது. எல்லோரையும் அவர் பக்கம் திருப்பித்தானே அவருக்குப் பழக்கம். (நன்றி: 'தங்கப்பதக்கம்' மகேந்திரனுக்கு).

கார்த்திக் சார்! கவலை வேண்டாம். ஜஸ்டிஸ் கோபிநாத் கிடைத்தால் அவசியம் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் உங்கள் சுவையான பதிவைப் பதியுங்கள். கிடைக்காவிட்டால் நான் உங்களுக்கு DVD அனுப்பி வைக்கிறேன்.

விறுவிறுப்பான நகைச்சுவையுடன் கலந்த பதிவை எங்களுடன் கலந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி நன்றிகள் சார்!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th December 2011, 06:04 PM
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/7532_17_JUSTICE%20GOPINATH10.jpg http://icdn1.indiaglitz.com/tamil/gallery/Movies/justicegopinath/main.jpg

'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தில் வரும் "அட என்னாங்க இது பொல்லாத்தனம்" அரிய,அபூர்வ வீடியோப் பாடலுக்கு கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் .

http://www.tamilflix.tv/videos/3012/Ada-Ennanga-Ithu-%28Sivaji-Ganesan%29-Hits

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th December 2011, 06:46 PM
அன்புள்ள கார்த்திக் சார்,

'ஜஸ்டிஸ் கோபிநாத்'தில் குறுந்தாடியுடன் நடிகர் திலகம் வருவது அசத்தல் காவியமான 'பார் மகளே பார்' படத்தின் அவரது தோற்றத்தை நினைவு படுத்தும்.(பார் மகளே பார் என்றதும் அன்பு முரளி சார் தான் நினைவுக்கு வருகிறார்) ஜஸ்டிஸ் கோபிநாத்தில் முகவாய்க்கட்டையில் ஒரு சிறு குறுந்தாடி. மீசை இதில் மெல்லியதாக வரையப்பட்டது.

'பார் மகளே பார்' படத்தில் முகவாய்க்கட்டைக்கு சற்று மேலிருந்து கீழாக படர்ந்த குறுந்தாடி. மீசை இதில் அடர்த்தி.

இரண்டிற்கும் வித்தியாசம் பாருங்கள்.

பார் மகளே பார்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DvDRipParmahagalapar1963-sivajimovieChiyaaNwwwuyirvanicomavi_005818777.jpg? t=1323955215

ஜஸ்டிஸ் கோபிநாத்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_7VOB_001740119.jpg

பார் மகளே பார்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DvDRipParmahagalapar1963-sivajimovieChiyaaNwwwuyirvanicomavi_005799174.jpg? t=1323955882

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
16th December 2011, 08:41 AM
ஒரு சில நாட்கள் வெளியூர் பயணம் காரணமாக நமது ஹப்பில் பங்கேற்கவில்லை. அதற்குள் மாற்றங்கள்... நீண்ட திரியினை அமைப்பில் மாறுபடுத்தி வெளியிட்ட மாடரேட்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள். முரளி, பார்த்தசாரதி, வாசுதேவன், கார்த்திக், ராமஜெயம், சந்திரசேகர், பம்மலார் உள்ளிட்ட அனைவரும் அட்டகாசமாக கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு உலகம் போற்றும் உத்தமனின் புகழ் பாடி பரவசப் படுத்தி வருகின்றனர்.

கார்த்திக் சொன்னது போல் ஜஸ்டிஸ் கோபிநாத் லிபர்டியில் வெளியிடப் படுவது கடைசி நேரத்தில் தான் வெளியானது. அந்தக் காலத்தில் எதேச்சையாக அதே சமயம் பிடிவாதமாக இப்படத்தின் விளம்பரங்களை கத்தரித்து ஒரு நோட்டில் ஒட்டி வைத்து பாதுகாத்து வந்தேன். குறிப்பாக லிபர்டி திரையரங்கம் சேர்க்கப் பட்ட விளம்பரம் மட்டும் கிடைத்த பத்திரிகைகளிலிருந்து எடுத்து வைத்தேன். அதனுடைய மகத்துவம் இப்போது....

அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கார்த்திக் சொன்னவற்றை நீங்கள் புரிந்து கொள்ளலாம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd03fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd04fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/JGAd05fw.jpg

இதில் லிபர்டி திரையரங்கின் பெயர் மட்டும் தனித்து தெரிவதையும், முதலில் இடம் பெற்றிருந்த கிரௌன் திரையரங்கின் பெயர் எடுக்கப் பட்டு கிருஷ்ணா திரையரங்கின் பெயர் சேர்க்கப் பட்டதையும் அதனையும் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததையும் பார்க்கலாம்.

அது மட்டுல்ல, ரவிராஜ் பிக்சர்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் என்கிற பெயர்களில் படம் வெளியிடப் பட்டிருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அன்புடன்

RAGHAVENDRA
16th December 2011, 09:45 AM
S-superb
i-imagination unlimited
v-valuable
a-attractive
j-jovial
i-impressive

tat is "sivaji"-the legend..

from the facebook...

http://www.facebook.com/permalink.php?story_fbid=115211341928789&id=100001481766300

vasudevan31355
16th December 2011, 11:33 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-11.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-10.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
16th December 2011, 12:28 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'ஜஸ்டிஸ் கோபிநாத்' பற்றிய எனது பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக அப்படம் பற்றிய மேலதிக விவரங்களை அள்ளி அளித்தமைக்கு மிக்க நன்றி. கூடவே பாடல் காட்சிகளில் வீடியோக்களையும் தந்து அசத்தி விட்டீர்கள். உண்மையைச்சொன்னால், அப்படத்தின் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்காமல் போய்விட்டன. படம் சரிவர ஓடாததால் பாடல் நிலைக்கவில்லை என்று சொல்ல முடியாது. சரியாக ஓடாத அன்பே ஆருயிரே, வைரநெஞ்சம் போன்ற படங்களின் பாடல்கள் என்றைக்கும் தேன் குடங்களாக நம் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றனவே. அவையும் மெல்லிசை மன்னர் அளித்தவைதான்.

(முந்தாநால் இரவு காவியப்பாடல்கள் வரிசையில், அவன் ஒரு சரித்திரம் படத்தில் இடம்பெற்ற 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடலை ஒளிபரப்பினர். என்ன ஒரு அருமையான மெட்டமைப்பு, காட்சியமைப்பு).

தங்களின் மகத்தான பதிவுக்கு, மேலான நன்றிகள்.

mr_karthik
16th December 2011, 12:37 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

சிறிய இடைவெளிக்குப்பின் தங்களின் பதிவைப்பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படத்தின் ஆவணப்பொக்கிஷங்களுடன் வந்து கலக்கிவிட்டீர்கள். அப்படத்தின் விளம்பர வரிசை அமர்க்களம்.

என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ஆவணங்கள் அமைந்திருப்பது மிகவும் தெம்பூட்டுகிறது. தாங்கள் அன்றைக்கு சிரமப்பட்டு சேகரித்த ஆவணங்கள் இன்று அப்படத்தின் வெளியீட்டை நினைவு கூற பேருதவியாக இருக்கிறது.

நாமெல்லோரும் கூடி 'ஜஸ்டிஸ் கோபிநாத்' வெளியீட்டை மறவாமல் கொண்டாடி விட்டோம் என்ற மகிழ்ச்சி மனதில் நிறைகிறது. பொக்கிஷப்பதிவுகளுக்கு நன்றிகள்.

vasudevan31355
16th December 2011, 12:58 PM
'பிலிம் நியூஸ்' ஆனந்தன் அவர்கள் விகடன் இதழுக்கு(10-11-11)அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/av16-11-2011www-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.