View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
[
12]
13
14
15
16
17
vasudevan31355
12th April 2012, 12:15 PM
அற்புத தோற்றத்தில் அருந்தவப்புதல்வர்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/20-5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
KCSHEKAR
12th April 2012, 12:35 PM
கடந்த 4 நாட்களாக வெளியூரிலிருந்ததால் பதிவிட முடியவில்லையென்றறாலும் பதிவுகளைப் பார்த்தேன்.
திரு.பம்மலாரின் பொக்கிஷங்கள், திரு.வாசுதேவன் அவர்களின் புகைப்பட வரிசைகள் அருமையாக இருந்தது.
பழகிய முகம், ஆனால் திரிக்குப் புதிய வரவாக வந்திருக்கும் திரு.கோபால் அவர்களே வ்ருக.
KCSHEKAR
12th April 2012, 12:51 PM
நாகர்கோவில் வசந்தம் திரையரங்கில் 8-4-2012 அன்று நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கர்ணன் திரைப்பட 25-வது நாள் விழா நடைபெற்றது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/25thDay1.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/25thDay2.jpg
KCSHEKAR
12th April 2012, 12:52 PM
Nagarkovil News1
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/Maalaimalar1005.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/Maalaimalar2006.jpg
vasudevan31355
12th April 2012, 01:08 PM
அன்பு நண்பர்களே!
பொதுவாகவே எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு. நடிகர் திலகத்தின் சில நல்ல படங்கள் அசந்தர்ப்பமாக, துரதிருஷ்டவசமாக தோல்வி அடைந்து விடும் போது மனம் மிக வருத்தப்படும். படம் நன்றாக இருந்தும் காலம் தாழ்ந்து வரும் போது ஜனங்களின் ரசிப்புத்தன்மை மாறிவிட்டது என்ற போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இதுபோன்ற படங்கள் படுகுழியில் தள்ளப்படும். நம் ரசிகர்கள் மத்தியில் கூட இது போன்ற அற்புத படங்கள் எடுபடுவதில்லை.
நேற்று இந்தப் படத்தை மறுபடி முழுவதுமாகப் பார்த்தேன். நடிகர் திலகத்தைப் பார்த்து மீண்டும் பிரமித்துப் போனேன். அப்படிப்பட்ட சாந்தமான நடிப்பை வாரி வழங்கியுள்ளார் அவர். என்ன ஒரு தேஜஸ் அவர் முகத்தில்!. அப்படியே ஒளி வெள்ளம் வீசுகிறது அவர் ஹரிச்சந்திர மன்னனாக வரும் போது. சோகமும் துன்பமும்,கண்ணீரும்,கம்பலையுமாய் வெட்டியானாக வரும் போது அப்படியே உருமாறிப் போய் கண்களில் சோகத்தைத் தேக்கி அவர் அந்தப் பாத்திரத்தின் தன்மையை நூறு சதவிகிதம் நம் கண்கள் முன் பிரதிபலிக்கிறாரே, அவ்வளவும் விழலுக்கிறைத்த நீராய்ப் போய் விட்டது என்று எண்ணும் போது வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை.
நம்மிலும் பெரும் பாலோனோர் இந்த மாதிரிப் படங்களைப் பற்றியும் பேசுவதில்லை. தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். நான் யாரையும் குற்றம் கூறவில்லை.
நாம் பெரும்பாலும் தெய்வமகன், வீ.பா.க.பொம்மன், வசந்த மளிகை, திருவிளையாடல், உத்தம புத்திரன், கர்ணன், பட்டிக்காடா பட்டணமா போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைப் பற்றி அதிகம் நமக்குள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் இந்த ஹரிச்சந்திரா போன்ற திரைப் படங்களில் அவர் நடிப்பைப் பற்றி அவ்வளவாக யாரும் பேசுவதோ, எழுதுவதோ, விமர்சிப்பதோ கிடையாது. இது ஏன் என்றே எனக்குப் புரிய வில்லை. இன்னும் சொல்லப் போனால் சூப்பர் ஹிட் படங்களை விட இது போன்ற படங்களில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் நடிகர் திலகம். ஹரிச்சந்திரா வரிசையில் நானே ராஜா, முதல் தேதி, தெனாலி ராமன், ராணி லலிதாங்கி, மணமகன் தேவை, அம்பிகாபதி, பாக்கியவதி, அவள் யார், எல்லாம் உனக்காக, வளர்பிறை, அறிவாளி, நெஞ்சிருக்கும் வரை, பாதுகாப்பு, தங்கைக்காக, இருதுருவம், துணை, தியாகி, ஹிட்லர் உமாநாத் என்று ஒரு நீள் பட்டியலே இருக்கிறது. இவற்றையெல்லாம் நாம் மறந்து விட வில்லை. ஆனால் போதிய அளவிற்கு முக்கியத்துவம் நாமே கொடுப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. படம் தோல்வியடைந்து இருக்கலாம். தோல்வியடைந்து விட்டதனாலேயே ஒரு படம் குறைந்து விட்டதாக ஆகி விடாது. அதில் நம்மவரின் உன்னதமான காலத்தை வென்ற நடிப்பு இருக்கிறதல்லவா! நமக்கு அது ஒன்று போதுமே! ஆனால் நடிகர் திலகம் இப்படங்களில் செலுத்தியிருக்கும் அபார உழைப்பு மற்ற மாபெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மேற்கூறிய படங்களின் பட்டியலில் பெரும்பான்மையான படங்களின் dvd-க்கள் கிடைக்கின்றன. இது போன்ற கடந்த காலங்களில் சுமாரான வெற்றியையோ, அல்லது தோல்வியையோ தழுவிய படங்களில் நம் நடிகர் திலகம் காட்டியுள்ள அசாத்திய திறமைகளை எல்லோரும் அறியும் வண்ணம் நாமனைவரும் வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அன்புடன்,
வாசுதேவன்
KCSHEKAR
12th April 2012, 01:19 PM
Nagarkovil News2
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/Tamilmurasu007.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/Dinathanthi008.jpg
KCSHEKAR
12th April 2012, 01:20 PM
Karnan - Nagarkovil News-3
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nagarkovil/Dinakaran009.jpg
Mahesh_K
12th April 2012, 01:21 PM
சென்னை 3 தியேட்டர் தவிர, திருச்சி , கோவை மற்றும் சேலத்தில் எல்லாம் 100 நாட்கள் ஓடிய வியட்நாம் வீடு , மதுரையில் 100 நாட்கள் ஓடவில்லையா? ஏன் இப்படி முரளி சார்?
KCSHEKAR
12th April 2012, 01:28 PM
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில், கர்ணன் திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக 11-04-2012 அன்று நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நீர்மோர்ப் பந்தல் திறக்கப்பட்டது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai-Veeravanallur/Veeravanallur6.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai-Veeravanallur/Veeravanallur5.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai-Veeravanallur/Veeravanallur1.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai-Veeravanallur/Veeravanallur2.jpg
joe
12th April 2012, 01:28 PM
Kcs சார் ! நாஞ்சில் நகர் செய்திகளுக்கு நன்றி.
KCSHEKAR
12th April 2012, 01:34 PM
One friend from Salem - Mr.Bala (he is working as drawing teacher & he is a regular visitor of this Hub) sent me a design (his own creation) for Karnan's 25th day. He wants to post this in Hub.
Please find below his design:
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/Karnan1.jpg
RAGHAVENDRA
12th April 2012, 02:44 PM
Doctor Akkineni Nageswara Rao shares his moments with Nadigar Thilagam, in the "Thirumbi Parkkiren" of Jaya Tv. The speciality of this clipping is a piece from the great film Chanakya Chandraguptha starring ANR, NTR and NT.
video courtesy: Daily Motion.
http://www.dailymotion.com/video/xq28uh_thirumbi_shortfilms?start=1#from=embedifram e
KCSHEKAR
12th April 2012, 04:41 PM
Karnan - Nellai Theatre Photos-1
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai5.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai3.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai9.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai10.jpg
KCSHEKAR
12th April 2012, 04:42 PM
Karnan - Nellai Theatre Photos-2
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai8.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai7.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Nellai4.jpg
KCSHEKAR
12th April 2012, 05:07 PM
Kcs சார் ! நாஞ்சில் நகர் செய்திகளுக்கு நன்றி.
Thanks Joe Sir
NOV
12th April 2012, 05:39 PM
Another grandson of NT enters the film industry!
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/562908_10150720218892999_602912998_9247749_6896340 46_n.jpg
Shivaji Dev, Shankar Krishnamurthy, Jenny Angel in the film NANDHANAM
RAGHAVENDRA
12th April 2012, 06:10 PM
வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்க...
யாரு...
நீங்களே யூகிச்சுக்கங்க...
rajeshkrv
12th April 2012, 10:40 PM
The thirumbi paarkiren by ANR praising NT did not have the content.
so here is the video again
http://tamilo.com/2012TamilTVShow/MarakaMudiuma/04/ThirumbiApr11.html
Murali Srinivas
12th April 2012, 11:35 PM
மகேஷ்,
உண்மைதான். மதுரையில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் 100-வது நாளை தவற விட்டார், இல்லை தவற விட வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். வில்லன் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ். தமிழகமெங்கும் பல பெயர்களில் [கிரசன்ட் மூவீஸ் போன்ற பெயர்களில்] விநியோக நிறுவனத்தை நடத்தி வந்த இந்த கீழக்கரை நபர்தான் தேவர் பிலிம்ஸ், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்களுக்கு நிரந்தர விநியோகஸ்தர். தவிர பல படங்களின் தயாரிப்பிலும் பைனான்ஸ் செய்வது வரை இந்த மனிதர்தான் என்பதால் மிகுந்த செல்வாக்கு உடையவராக திகழ்ந்தார். வியட்நாம் வீடு படத்தை திரையிட்ட வினியோகஸ்தரோ [எம்.ஏ. பிலிம் டிஸ்டிரிபியுட்டர் என்று நினைவு], எம்.ஆர். எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் மட்டுமே வர்த்தகம் செய்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண விநியோகஸ்தர்.
இதற்கும் பார்த்தோமென்றால் வியட்நாம் வீடு மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் ஒரு புதிய சாதனை நிகழ்த்திய படம். மதுரை ஸ்ரீ தேவியில் தொடர்ந்து 106 காட்சிகள் அரங்கு நிறைந்த படம். 106 Continuous House Full Shows. வெளியான 1970 ஏப்ரல் 11 முதல் மே 12 வரை அதாவது 32 நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடிய படம். இந்த சாதனையை பின்னாளில் பட்டிக்காடா பட்டணமா வந்து முறியடித்தது [கோவையிலும் இரும்பு திரைக்கு பின் வசூல் சாதனை படைத்த கருப்பு வெள்ளை படம் வியட்நாம் வீடு]. இவ்வளவு ஏன், 13-வது வாரம் ஓடும் போது கூட ஞாயிறு மாலை காட்சி கூட [அதாவது 86-வது நாள் -1970 ஜூலை 5-ந் தேதி] ஸ்ரீதேவியில் ஹவுஸ் புல்.
இந்த நேரத்தில் தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் தேவர் தயாரித்த ஜெய்சங்கர் நடித்த மாணவன் படம் ஜூலை 10 அன்று வெளியாகிறது. அந்தப் படத்தை ஸ்ரீதேவியில் வெளியிடுவது என்று சேது பிலிம்ஸ் ஒப்பந்தம் செய்கிறார்கள். சேது பிலிம்ஸ் நினைத்தால் மாணவன் படத்தை சென்ட்ரலிலோ நியூ சினிமாவிலோ சிந்தாமணியிலோ வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்களோ பிடிவாதமாக ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று இருந்தார்கள். நமது பட விநியோகஸ்தரும் ரசிகர்களும் தியேட்டருக்கு சென்று பேசியும் கூட அவை சேது பிலிம்ஸின் பலத்திற்கு முன் எடுபடாமல் போனது. ஆகவே மதுரை தேவியிலிருந்து 90 நாட்கள் நிறைவு செய்த பிறகு வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்தது.
எத்தனையோ நடிகர் திலகத்தின் படங்கள் எங்கே அதிக பட்சமாக ஓடியிருக்கின்றன என்று பார்த்தால் கண்டிப்பாக மதுரைதான் என்று பெருமையோடு சொல்வோமோ அது போல் சில தீர்க்க முடியாத வருத்தங்களும் எங்களுக்கு உண்டு. அவற்றில் வியட்நாம் வீடு, ஞான ஒளி போன்றவை 100 நாட்களை தவற விட்டதும் [இரண்டுமே 90 நாட்கள்], மனோகரா, சம்பூர்ண ராமாயணம், பாசமலர், திருவிளையாடல் போன்ற படங்கள் குறைந்த நாட்களில் வெள்ளி விழாவை தவற விட்டதும் அடங்கும்.
அன்புடன்
மகேஷ், இதற்கும் முன்பு இதை பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் மீண்டும் உங்களுக்காக இதை எழுதுவதன் மூலம் ஒரு சின்ன மன ஆறுதல்.
vasudevan31355
12th April 2012, 11:51 PM
அன்பு பம்மலார் சார்,
பிரஸ்டீஜ் பத்மனாப ஐயரின் அரிய புகைப்படங்கள் நமது திரிக்கு என்றென்றும் பெருமை சேர்ப்பவை. அனைத்து புகைப்படங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
தினத்தந்தி ஆகஸ்ட் வெளியீடு விளம்பரம் தலைவரை அசல் பத்மனாபனாகவே பிரதிபலிக்கிறது.
அதுபோல முதல் வெளியீட்டு விளம்பரங்கள் அற்புதம். கோவை சென்ட்ரலில் நூறாவது நாள் நடைபெறப் போவதாக வந்த விளம்பரம் அரிதிலும் அரிது. தலைவர் மேடையில் தோன்றுவார் என்ற விளம்பரம் பார்த்ததில் அந்த நிகழ்ச்சி எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனைக் குதிரை பறக்கிறது. இப்போதுள்ள வசதிகள் அன்று இருந்திருந்தால் அப்படிப்பட்ட சரித்திர நிகழ்வுகளை கண்டு களித்திருக்கலாமே என்ற ஏக்கம் மேலிடுகிறது. அட்டகாசமான விளம்பரத்தை அமர்க்களமாக அளித்துள்ளீர்கள்.
ஆனந்த விகடன் விமர்சனம் தலைவரை உச்சத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை படிக்கும் போது அப்படி ஒரு சந்தோஷம். குமுதம் விமர்சனமும் கன ஜோர்.
அவன்தான் மனிதன் ஸ்டைல் கிங் ரவிகுமாரின் ரம்யமான தோற்றம் என் கணினியில் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கிறது. நூறாவது நாள் விளம்பரம் படம் சுமாரான வெற்றி என்பவர்களுக்கு நெத்தியடி. கல்கி விமர்சனம் ஜாலியாக இருந்தது.
விடுதலை முதல் வெளியீட்டு விளம்பரம் நன்றாக உள்ளது.
மொத்தத்தில் அற்புதமான பல பதிவுகளை அள்ளிக் கொட்டியுள்ளீர்கள். இப்பதிவுகளுக்கெல்லாம் நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்பதை நினைத்தால் தலை சுற்றுகிறது. உங்கள் அபார உழைப்புக்கு என் மனப் பூர்வமான பாராட்டுக்களும் முக்கியமாக இதயம் நிறைந்த நன்றிகளும்.
vasudevan
Murali Srinivas
12th April 2012, 11:58 PM
வாசு சார்,
உங்கள் ஆதங்கம் நியாயமானது. இந்த கருத்தை முன்னரே பல முறை சாரதா அவர்களும் இங்கே எழுதியிருக்கிறார். எனக்கும் அந்த கருத்து உடன்பாடானது. ஆகவேதான் அதிகம் பேசப்படாத நல்ல படங்களான குலமகள் ராதை, பேசும் தெய்வம், நீலவானம், செல்வம், நெஞ்சிருக்கும் வரை, லட்சுமி கல்யாணம் போன்ற படங்களை பற்றி எழுதினேன். சாரதா அவர்களும் என்னை போல் ஒருவன் அன்பை தேடி படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த வரிசை இனியும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரசேகர் சார்,
தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து கர்ணனின் வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழாக்கள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் அமைப்பின் மூலமாக செயல்படுத்தி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் நற்பணி.
அன்புடன்
Gopal,
Thanks for that analysis on Vikram and Vijay. Expecting more from you.
Murali Srinivas
13th April 2012, 12:19 AM
அன்பு நண்பர்கட்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புடன்
vasudevan31355
13th April 2012, 07:51 AM
அனைத்து நல் இதயங்களுக்கும் இனிய நந்தன தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/nt-1.jpg
குறிப்பு: மேற்கண்ட தலைவரின் புகைப்படம் நடிகர் திலகத்தைக் காண நாங்கள் கடலூரில் இருந்து அன்னை இல்லம் சென்ற போது எடுக்கப் பட்டது.
http://lh3.ggpht.com/-tDzuOZ4ZSsU/T4cMi5zcEpI/AAAAAAAAKnM/JtfY0gFjfEg/New%252520Year%252520wishes%25255B8%25255D.jpg?img max=800
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
13th April 2012, 08:02 AM
"சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்"
http://reviews.in.88db.com/images/puthandu-vazthukal-2012.jpg
http://www.youtube.com/watch?v=nNRAh2FXwto&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
13th April 2012, 08:16 AM
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் உள்ளம் மகிழ்ந்த பாராட்டுதல்களுக்கு உயர்வான என் நன்றிகள்.
நாகர்கோவில் வசந்தம் திரையரங்கில் 8-4-2012 அன்று நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கர்ணன் திரைப்பட 25-வது நாள் விழாவில் நடைபெற்ற சமூக நலப் பணிகளை அமர்க்களமாக நிழற்படமாகத் தந்துள்ளீர்கள். சிவாஜி சமூகநலப்பேரவையின் நற்பணிகளை சற்றும் தொய்வில்லாமல் தாங்களும், தங்கள் பேரவை அமைப்பினரும் செவ்வனே செய்து வருகிறீர்கள். பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில், கர்ணன் திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நீர்மோர்ப் பந்தல் திறக்கப்பட்டது கோடை வெப்பத்தை தணிக்க மக்களுக்கு ஆற்றும் மகத்தான பணி.
கர்ணன் Nellai Theatre Photos கலக்குகிறது. அதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
vasudevan31355
13th April 2012, 08:26 AM
அன்பு முரளி சார்.
தங்கள் அன்புப் பதிவிற்கு நன்றி.
நடிகர் திலகத்தின் காவியங்களைப் பற்றி தொடர்ந்து தாங்கள் ஆய்வு செய்து எழுத இருப்பதாகக் கூறியிருக்கும் செய்தி எங்களுக்கெல்லாம் களிப்பூட்டும் தமிழ்ப் புத்தாண்டு பரிசு.(தங்களின் லட்சுமி கல்யாணம் ஆய்வுக் கட்டுரையை சமீபத்தில் படித்து மகிழ்ந்தேன். மனதைக் கொள்ளை கொண்ட அற்புதப் பதிவு, அதற்காக என் அன்பு நன்றிகள்.)
Subramaniam Ramajayam
13th April 2012, 08:37 AM

karnan gave a good start and hope this trend continues in the coming days as we havebeen expecting. Tamil new year greetings to all our hubbers.
Gopal.s
13th April 2012, 09:07 AM
Friends,
Wishing you all a great year ahead as the past year had a golden patch for all of us with Karnan's Mega mega success.May our Acting God shower more of his blessings on us.
Dear Vasu & Murali,
I agree partly on what you say.There were some good movies failed or moderately succeeded deserve mention,yes.But if you allow this kind of freedom,people will write pages on movies that are unimaginative and substandard in form and content.This thread is also meant for the people(Fans dont need thread,as they know enough) who wants to know more on his films and his acting .Great movies can be analysed in many facets and dimensions in great depth which will serve our cause.The movies like"Garuda Sowkyama" was a very poor imitation of God Father which doesn't deserve any place here.If it is analysed in depth ,what is the use?Iru Duruvam-Poor imitation of Ganga Jamuna and an out-dated with no nativity and nothing to rave abt performance.If someone who comes to our thread as a new entrant ,as a cursory glance,happened to see these films(one has to apportion time as they cant do it on full time)
,God only knows,what will be his opinion on our Acting God?
Another humble suggestion is to seperate the threads as one for Stills,Functions and historical documentary exhibits and other for reviews,articles,titbits,information and opinion sharing.People can do justice for both that way.
RAGHAVENDRA
13th April 2012, 09:54 AM
தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று தனது ஐந்தாவது ஆண்டினை நிறைவு செய்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது நடிகர் திலகம் இணைய தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வேண்டி பயணம் தொடரும்.
அன்புடன்
vasudevan31355
13th April 2012, 09:54 AM
'அவன்தான் மனிதன்' காவிய விமர்சனம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/av.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
13th April 2012, 10:14 AM
'அவன்தான் மனிதன்' நடிகர் திலகம் மஞ்சுளாவுடன். (பொம்மை இதழ் நிழற்படம்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/av2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
13th April 2012, 10:39 AM
'அவன்தான் மனிதன்' நடிகர் திலகம் மஞ்சுளாவுடன்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/yyy.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
sankara1970
13th April 2012, 10:51 AM
Sivaji Bakthargalukku Iniya Thamiz puthandu nalvazthukal
Gopal.s
13th April 2012, 10:53 AM
Since hubbers have raised a relevant issue,let us have wide choice of his Films (Ofcourse restricted for obvious reasons indicated)to choose and write appreciation &Critical reviews/Opinions.
1952- Parasakthi
1953-Thirumbi Paar
1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
1976-Uthaman,Rojavin Raja
1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
1980-Rishi Moolam
1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
1984-Vazhkai,Dhavaki Kanavugal
1985-Mudhal Mariadhai,Rajarishi
1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
1987-Anbulla Appa
1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
1996-Oru Yatra Mozhi
1997-Once more
1998-En Aasai Rasave
1999-Padayappa,Pooparikka Varugirom
Such a wide choice and try to confine to this wide boundary.Otherwise,it is futile and counter-productive.
1
vasudevan31355
13th April 2012, 10:54 AM
' கர்ணன்' 50-ஆவது நாளை நோக்கி வீறுநடை போடும் 5-ஆவது வாரம். (13 -4-2012 கடலூர் 'தினத்தந்தி' விளம்பரம்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/karnan-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Gopal.s
13th April 2012, 11:01 AM
Totally 145 Movies to choose from.All are not successful or popular.But somehow ,they will not creat anti-feeling and palattable to all viewers and serve the purpose of our thread.
vasudevan31355
13th April 2012, 11:07 AM
'அவன்தான் மனிதன்' காவியத்தில் அழகுத் திலகம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/avan.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Gopal.s
13th April 2012, 11:13 AM
The movies that I wished ,to have seen the light of the day of our Acting God.
1)Periyar(Dream of our God)
2)Jeeva Bhoomy(Sandilyan story ,produced by actor sriram)
3)Yarukkaga Azhuthan?(Jayakandhan story by Bhimsingh)finally came out with Nagesh in lead.
4)Maha Chanakya(Announced by Panthulu during release of Karnan but dropped later)
5)Gnayirum Thingalum(Devika ,had a famous song Pattilum melliya penn idhu)
6)Mounam Enathu Thai Mozhi(with Vanishri by A.L.S)ramke of Koshish finally came out with Kamal with male role truncated to give better scope to Sujatha
7)Bambay Babu(Vanishri with VKR production and ACT Direction)
8)Udal Porul Anadhi(Javar story to be directed by CVR under Ramkumar Films Banner)
9)Devan Koil Maniosai(By Somu with music by Vijay ramani alias Ragavendar)
10)Vayasu Appadi(Remake of Shaukeen with Poornam and VKR as co-artists)
11)An untitled film by balu Mahendra to be produced by sivaji productions.
12)A movie titled Thamizhan by G.V.Films directed by Suhasini Maniratnam.
13)Nandha(By Bala with our acting God and ajith in lead) finally came out with surya and Rajkiran.
Gopal.s
13th April 2012, 11:17 AM
My Special gratitudes to Chandra Sekar sir,Girija madam and Raghavendar sir who are able to motivate &mobilise the people positively and keep our flag flying high.My humble salute.
vasudevan31355
13th April 2012, 11:19 AM
'அவன்தான் மனிதன்' காவியத்தில் ஜெயலலிதா அவர்களுடன் நடிக வேந்தர் (பொம்மை இதழ் நிழற்படம்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sj.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
13th April 2012, 12:00 PM
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது நடிகர் திலகம் இணைய தளத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
http://www.couponaholic.net/wp-content/uploads/2012/01/congratulations1.gif
தனியொரு மனிதராக நின்று பல்வேறு சோதனைகளுக்கிடையில் நடிகர் திலகம் இணைய தளத்தைத் தொடங்கி வெற்றிகரமாக ஆறாவது ஆண்டிற்குக் கொண்டு சென்று இதய தெய்வத்தின் புகழை தரணியெங்கும் பரப்பி வரும் எங்கள் 'ரசிகவேந்தர்' ராகவேந்திரன் சார் அவர்களே! தலை வணங்குகிறேன் தங்கள் தன்னிகரில்லா தொண்டுக்கு.
http://static.railbirds.com/gallery/2007/12/41476congratulations_myspace_graphics_02.gif
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-61.jpg
http://www.youtube.com/watch?v=wDajqW561KM&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Mahen
13th April 2012, 12:17 PM
not sure if this has been shared :oops:
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/426521_354528331247519_316248231742196_1200510_200 0395222_n.jpg
joe
13th April 2012, 12:26 PM
Mahen,
It is well known one and shared many times ,Never Mind ..Thanks for sharing again ..It shows that you start searching for NT ..That is good :)
Gopal.s
13th April 2012, 12:55 PM
The main souls responsible for this success of this thread are Ezhuthu Vendhargal Murali,Parthasarathy&Karthick,Aavana Vendhar Pammalar,Video Vendhar Vasudevan.
Our sincere Gratitude to all them for lighting the lamp of this thread and carrying it this far.
Our sincere thanks on behalf of all devotees of Acting god.
Mahesh_K
13th April 2012, 01:20 PM
மகேஷ்,
உண்மைதான். மதுரையில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் 100-வது நாளை தவற விட்டார், இல்லை தவற விட வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். வில்லன் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ். தமிழகமெங்கும் பல பெயர்களில் [கிரசன்ட் மூவீஸ் போன்ற பெயர்களில்] விநியோக நிறுவனத்தை நடத்தி வந்த இந்த கீழக்கரை நபர்தான் தேவர் பிலிம்ஸ், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்களுக்கு நிரந்தர விநியோகஸ்தர். தவிர பல படங்களின் தயாரிப்பிலும் பைனான்ஸ் செய்வது வரை இந்த மனிதர்தான் என்பதால் மிகுந்த செல்வாக்கு உடையவராக திகழ்ந்தார். வியட்நாம் வீடு படத்தை திரையிட்ட வினியோகஸ்தரோ [எம்.ஏ. பிலிம் டிஸ்டிரிபியுட்டர் என்று நினைவு], எம்.ஆர். எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் மட்டுமே வர்த்தகம் செய்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண விநியோகஸ்தர்.
இதற்கும் பார்த்தோமென்றால் வியட்நாம் வீடு மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் ஒரு புதிய சாதனை நிகழ்த்திய படம். மதுரை ஸ்ரீ தேவியில் தொடர்ந்து 106 காட்சிகள் அரங்கு நிறைந்த படம். 106 Continuous House Full Shows. வெளியான 1970 ஏப்ரல் 11 முதல் மே 12 வரை அதாவது 32 நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடிய படம். இந்த சாதனையை பின்னாளில் பட்டிக்காடா பட்டணமா வந்து முறியடித்தது [கோவையிலும் இரும்பு திரைக்கு பின் வசூல் சாதனை படைத்த கருப்பு வெள்ளை படம் வியட்நாம் வீடு]. இவ்வளவு ஏன், 13-வது வாரம் ஓடும் போது கூட ஞாயிறு மாலை காட்சி கூட [அதாவது 86-வது நாள் -1970 ஜூலை 5-ந் தேதி] ஸ்ரீதேவியில் ஹவுஸ் புல்.
இந்த நேரத்தில் தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் தேவர் தயாரித்த ஜெய்சங்கர் நடித்த மாணவன் படம் ஜூலை 10 அன்று வெளியாகிறது. அந்தப் படத்தை ஸ்ரீதேவியில் வெளியிடுவது என்று சேது பிலிம்ஸ் ஒப்பந்தம் செய்கிறார்கள். சேது பிலிம்ஸ் நினைத்தால் மாணவன் படத்தை சென்ட்ரலிலோ நியூ சினிமாவிலோ சிந்தாமணியிலோ வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்களோ பிடிவாதமாக ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று இருந்தார்கள். நமது பட விநியோகஸ்தரும் ரசிகர்களும் தியேட்டருக்கு சென்று பேசியும் கூட அவை சேது பிலிம்ஸின் பலத்திற்கு முன் எடுபடாமல் போனது. ஆகவே மதுரை தேவியிலிருந்து 90 நாட்கள் நிறைவு செய்த பிறகு வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்தது.
எத்தனையோ நடிகர் திலகத்தின் படங்கள் எங்கே அதிக பட்சமாக ஓடியிருக்கின்றன என்று பார்த்தால் கண்டிப்பாக மதுரைதான் என்று பெருமையோடு சொல்வோமோ அது போல் சில தீர்க்க முடியாத வருத்தங்களும் எங்களுக்கு உண்டு. அவற்றில் வியட்நாம் வீடு, ஞான ஒளி போன்றவை 100 நாட்களை தவற விட்டதும் [இரண்டுமே 90 நாட்கள்], மனோகரா, சம்பூர்ண ராமாயணம், பாசமலர், திருவிளையாடல் போன்ற படங்கள் குறைந்த நாட்களில் வெள்ளி விழாவை தவற விட்டதும் அடங்கும்.
அன்புடன்
மகேஷ், இதற்கும் முன்பு இதை பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் மீண்டும் உங்களுக்காக இதை எழுதுவதன் மூலம் ஒரு சின்ன மன ஆறுதல்.
முரளி சார் -
தங்கள் அன்புக்கும், விளக்கத்துக்கும் ஒரு பெரிய நன்றி.
இருந்தாலும் shift செய்யப்பட்டு ஓடிய வெள்ளைக்கண்ணு தியேட்டரையும் 100 வது நாள் விளம்பரத்தில் சேர்த்து இருக்கலாம் சிவாஜி புரடக்ஷன்சார். குறைந்த பட்சம் "இணைந்த 100 வது நாள்" என்றாவது போட்டிருக்கலாம்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களின் 100 வது நாள் , 175 வது நாள் விளம்பரங்களில் படம் ஓடியிருக்காத பல அரங்கங்களையும் அசராமல் சேர்த்திருப்பார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்கத் தவறிய ஒரு பாடம் இது.
vasudevan31355
13th April 2012, 01:36 PM
"HE CAN ACT LIKE US BUT WE CANNOT ACT LIKE HIM"-SAID ABOUT SIVAJI SIR BY MARLON BRANDO widely believed best actor of hollywood
vasudevan31355
13th April 2012, 02:04 PM
டியர் கோபால் சார்,
தங்கள் ஊக்கமளிக்கும் பாராட்டுதல்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயபூர்வமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வயசு அப்படியில் கதாநாயகியாக நடிகை ராதா தேர்வு செய்யப் பட்டிருந்தார் என்று ஞாபகம். அதே போல் கலாகேந்திராவின் தயாரிப்பு என்றும் நினைவு.
Gopal.s
13th April 2012, 02:45 PM
You are cent percent correct.It is Kalakendra productions and Radha was the heroine.Kalakendra ran into troubled water and Unkannil Neer Vazindhal flopped miscerably(Rajini,Balu mahendra Combo)I forgot to add B.R.Panthulu's Maha Chanakya announced during release of Karnan.Indeed a Great Miss!!
vasudevan31355
13th April 2012, 03:02 PM
இந்த இனிய புத்தாண்டு தினத்தில் நடிகர் திலகத்தின் அற்புதக் குரலை சிலோன் ரேடியோவில் திரு.அப்துல் ஹமீத் அவர்களின் பேட்டியின் வாயிலாக கேட்டு மகிழ்ந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறலாம்.(ஏற்கனவே கேட்டு மகிழ்ந்திருந்தாலும் திரியின் புது வரவு நண்பர்களுக்காக)
http://www.youtube.com/watch?v=Xi-dILr69Ww&feature=player_detailpage
vasudevan.
Gopal.s
13th April 2012, 03:07 PM
The Pair that I would have loved to see more often but not happened(1966-1976 Period)
1)Sivaji-Kanchana(Only one movie as Pair)-My favourite Scene Oru Nalile(Atleast one song possible in Avan oru Charithram in Manjula's imagination)
2)Sivaji-Bharathi(Again only one)-Santhana kudathukkulle-I would have repeated the pair in Raja,Needhi,En magan and Vaira Nenjam
3)Sivaji-Vijaya Nirmala(Only One)-Amma Kannu- What a chemistry and why not a repeat!!??
4)Sivaji-Shardha-Not exploited enough after Kungkumam.-Ennai Pol oruvan-Wasted.
5)Sivaji-Vennira Adai Nirla-Only One-unnai thedi Varum,Thangaikaga -run into rough weather in Sivakamiyin selvan due to being late for shooting(Reprimanded)but could have been a nice Pair
6)Sivaji-Latha-(Only One)-Aadikku pinne- Got missed in Yemanukku Yemen(Could have used in Engal Thanga Raja as Bairavan pair)
7)Sivaji-Hema malini-3 misses-Sivantha Mann,Ilaya Thalaimurai,Lorry driver rajakannu(She gave an interview that she would act in only one Tamil Movie with her favourite Sivaji)
8)Sivaji-rekha- missed in Avanthan Manithan-She openly said that she was pining to have an affair with sivaji)
9)Sivaji-Smitha Patil, Sivaji-Vidya Sinha-Tried but couldn't materialise due to dates
10)Sivaji-Vaijayanthi mala-Only 3 Films-I would have casted her in Thillana Mohanambal instead of Padmini(It was agreed by my friend's Father Kothamangalam Subbu-The story writer)
11)Sivaji-Srividya-Instead of 16 Films with Sujatha ,I could have given chance to Srividya in atleast 6 of them)
12)Sivaji-Padmapriya(Only two)- Atleast 50% of Sripriya's Film could have been shared(11 Total)
13)Sivaji-Rajshri-(Only One)- What a chemistry in Oh Little flower-Could have been repeated during 1971-1973.
14)Sivaji-Lakshmi-Paired only after Unakkaga Naan from 1976-Could have been Earlier in 1970-1973-G.N.Velumani started a movie with this pair "Punidha Payanam" in 1969 but got shelved.We could have tried her in Thirudan,Iru Dhuruvam,Thava Pudhalvan.
15)Sivaji-Jayapradha-Tried in Yemanukku Yeman but dropped due to call-sheet issue.
16)Sivaji-Chandra Kala-Praptham -Wasted without a duet.Moondru deivangal-Watching her singing duet with sivakumar.Could have been a cute pair could have been tried in Anbai Thedi,Chitra Pournami.
Gopal.s
13th April 2012, 03:10 PM
There was a Hindi Movie called Desh Preemie was to be made by Manmohan Desai(An ardent sivaji Fan) with NT,Amitabh and Uttam in 1977.It was announced and dropped later.
Gopal.s
13th April 2012, 03:23 PM
The Pairs I hate to see in Screen-
Sivaji-K.R.Vijaya- Somehow no one can have any sort of Chemistry with her(Selvam -the only exception)
Sivaji-Jayalalitha-Somehow,I felt that after 70,we could have gone for a better pair( Galatta Kalyanam,Deiva Magan,Engiruntho vanthal-OK).
Sivaji-Banumathi-It looks like Akka-Thambi on Screen and terrible misfit.Ambigapathi lost out due to miscasting(Arivali,Manamagal Thevai,Kalvanin Kathali-OK)
Sivaji-Sowkar- Again lack lustre(Padikkadha medhai,Pudhia Paravai,Uyarntha Maithan being exception)
Sivaji-Sujatha- Somehow,too many repeats with mechanical intimacy(Deepam,Annan Oru Koil being exception)
Sivaji-sakunthala-I would have avoided repeating this pair in Thava Pudhalvan,Vasantha Maligai &Engal Thanga Raja.
Sivaji-Vijayalalitha-Sorgam OK.But Thirudan ,I could have used Jothi Lakshmi.
My Favourite onscreen pairs for our NT
Sivaji-Vanishree- 9 Movies-Ultimate Pair
Sivaji-Padmini- All time pair 1952-1961,1966-1971,1985-1987.
Sivaji-Sarojadevi-Almost 17 Films and exceptional in Pudia Paravai,Anjal Petti 520.
Sivaji-Devika- Intimate chemistry after Vanshri
Sivaji-Ushanandhini-(I know all my friends are going to throng on me)-Somehow I enjoyed this pair in Ponnunjal
Sivaji-Vijayshree-Surprise package of Babu but worked well.
Sivaji-Alam-Great chemistry in Ennai pol oruvan(Valale,Mounam),Vasantha laligai
groucho070
13th April 2012, 03:29 PM
Gopal,S. Wow, you were dropping information like nothing, especially the abandoned projects. Wow. Thanks mate :smile: I like your wishlist, by the way. One exception, your dislike of Sivaji-Jayalalitha pairing. I could watch them together forever.
Gopal.s
13th April 2012, 04:01 PM
The ultimate year for variety for NT is 1969.
Three Village stories-Anbalippu,Guru Dakshinai,Kaval Deivam
One James Bond Film-Thanga Churangam
Two Action Films- Sivantha Mann,Thirudan
Two Comedy Films-Anjal Petti 520,Niraikudam
One Oscar Classic- Deiva Magan
Music Directors-7
M.S.V-Anbalippu,Thirudan,Sivantha mann
T.K.R-Thanga Churangam
V.Kumar-Nirai Kudam
Devarajan-Kaval deivam
Govardhan-Anjal petti 520
Pugazendhi,KVM- Guru Dakshinai
Heroines-8
Vanishree-Niraikudam
Bharathi- Thanga churangam
Kanchana-Sivantha Mann
Jayalalitha-Deiva magan,Guru Dakshinai
Saroja Devi-Anbalippu,Anjal Petti 520
K.R.Vijaya-Thirudan
Padmini-Guru Dakshinai
Pandari Bhai-Deiva Magan
Directors-7- A.C.T,A.P.Nagarajan,Ramanna,Sridhar,V.Srinivasan,K .vijayan,T.N.Balu
vasudevan31355
13th April 2012, 06:55 PM
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
sivajidhasan
13th April 2012, 08:08 PM
அனைவருக்கும் வணக்கம்!
ஒரு பக்கம் வயிறெரிந்து, மறு பக்கம் மனம் குளிர்ந்து எழுதுகிறேன்! இன்று மாலை காட்சிக்கு சென்னை வில்லிவாக்கம் ags திரையரங்கில் கர்ணன் திரைப்படம் காண என் நண்பர்களுடன் சென்றேன். 7.00 மணி திரைப்படத்திற்கு 6.30 மணிக்கே சென்றுவிட்டோம்! அந்தோ பரிதாபம்! கர்ணன் திரைப்படத்திற்கு டிக்கெட் ஹவுஸ் புல். என்றும் மற்ற திரைப்படங்கள் அதாவது, ஒரு கல் ஒரு கண்ணாடி, மற்றும் கழுகு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் இருக்கின்றன என்றும் கவுண்டரில் சொன்னவுடன், ஒரு பக்கம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்று வயிறெரிந்தாலும் மற்றொரு பக்கம் தலைவரின் அலைப்பரைக்கு ஒரு அளவு இல்லை போலும் என எண்ணும் போது மனம் குளிர்ந்து வெளியில் வந்தேன். என் நண்பரிடம் காலையிலேயே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்ய சொல்லியிருந்தேன். அவர்தான் நிரம்ப அசால்ட்டாக சாயிங்காலம் போகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். நான் கூட AGSல் இரண்டாவது வாரம் தானே டிக்கெட் சுலபமாக கிடைக்கும் என்று நம்பியே சென்றேன்.ஆனால் நடிகர் திலகத்தின் ஆதிக்கம் சாதாரணமானது அல்ல என்பதை அவர் ஒவ்வொரு முறையும் நிருபித்து கொண்டுதான் இருக்கிறார். நாம் தான் அதை உணருவதில்லை. கடைசியாக என் நண்பர் blackல்லாவாது டிக்கெட் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு டிக்கெட் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதுடன் நாளை மாலை டிக்கெட்டிற்கு முன் பதிவு செய்வதாக கூறிச்சென்ற்து மனதிற்கு இதமாக இருந்தது. நடிகர் திலகம் இன்னும் சாகவில்லை! அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். நன்றி!
நட்புடன்!
sivajidhasan
13th April 2012, 08:17 PM
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது நடிகர் திலகம்.காமி ற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்!
Murali Srinivas
13th April 2012, 11:57 PM
வெற்றிகரமாக ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம் .காம் இணைய தளத்திற்கும் அதன் வெற்றிக்கும் புதுமைக்கும் அயராது பாடுபடும் நிர்வாக சிற்பி ராகவேந்தர் சார் அவர்களுக்கும் மனங்கனிந்த வாழ்த்துகள்.
அன்புடன்
Murali Srinivas
14th April 2012, 12:02 AM
சிவாஜி தாசன் அவர்களே,
இன்று மாலை ஏ.ஜி.எஸ். அரங்கு மட்டுமல்ல, சத்யம் [மதிய காட்சி] எஸ்கேப் மாலைக் காட்சி, பி.வி.ஆர். ஆகியவையும் ஹவுஸ் புல். மாயாஜாலிலும் அது போன்றே status.
அன்புடன்
pammalar
14th April 2012, 02:17 AM
நந்தன வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SivajiNatural1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
pammalar
14th April 2012, 02:48 AM
நந்தன வருடத்தில் ஆனந்தமாக ஆறாவது ஆண்டில் ஏறுநடை போடும் நமது நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
Raghavendran Sir, Hats off to You !
தங்களுக்கு ஒரு அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SES100-1.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
pammalar
14th April 2012, 03:19 AM
முத்தான முப்பது ஆண்டுகள்
[14.4.1982 - 14.4.2012]
CONGRATS ILAIYA THILAGAM !
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Prabhu-1.jpg
HATS OFF !! KEEP IT UP !!!
With Love & Affection,
Pammalar.
pammalar
14th April 2012, 03:35 AM
Pammalar,Vasu Sir,
The hard work done by both of you despite your gruelling woking sessions is amazing.I cant stop admiring you two guys as I feel diminished in my stature in front of you and your devotion to our almighty acting God.I know how much of personal sacrifice to be made to accomodate this as routine. Infact the thread was so boring without all big names of you two along with Karthick,Sharda and their mysterious absence. Sharda Madam,we all miss you for your vivid account on young,vibrant and handsome nadigar Thilagam.
Dear Gopal Sir,
Thank you so much for your whole-hearted appreciation !
As you rightly pointed out, we are missing the services of mr_karthik & Sister Saradha, two towering pillars of our thread for more than a quarter. Hope Nandhana varudam brings them to our fold.
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
14th April 2012, 04:04 AM
சகோதரி சாரதா & mr_karthik,
தங்களுக்கு உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
நமது திரியின் தூண்களான தாங்கள் இருவரும் இதில் காலாண்டுக்கும் மேலாகப் பங்குபெறாமல் இருப்பதை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அது ஒரு இனம் புரியாத சோகம். தங்கள் இருவருடைய பங்களிப்புகளுக்கு இணை தாங்கள் இருவர் மட்டுமே.
நானும், வாசு சாரும் இடுகை செய்யும் ஒவ்வொரு பதிவுக்கும் அலுக்காமல்,சளைக்காமல் உடனுக்குடன் உளமாரப் பாராட்டும் உயர்ந்த உள்ளம் படைத்த தாங்கள் இருவரும் நந்தன வருடம் பிறந்துள்ள இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தங்கள் மேலான பங்களிப்புகளை வாரி வழங்க விரைந்துவர வேண்டும். எங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். இது எனது-எங்களது அன்பான-பாசமான வேண்டுகோள். இதற்கு தாங்கள் செவி மடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உளமாரப் பாராட்டுவதும் மனிதனுக்குரிய ஓர் உயர்ந்த பண்பு என்பதனை மிக நேர்த்தியாக உலகுக்கு உணர்த்திய தங்கள் இருவருக்கும் மீண்டும் நமது திரியின் சார்பில் ஒளிமிகு நந்தன வருட நல்வாழ்த்துக்கள் !
பாசத்துடன்,
பம்மலார்.
pammalar
14th April 2012, 04:41 AM
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய மேன்மையான பாராட்டுக்கு எனது மென்மையான நன்றிகள் !
"வியட்நாம் வீடு" விஷுவல்கள் வியப்பின் விளிம்பைத் தொட்டது !
"அவன் தான் மனிதன்" பதிவுகள் பதிவுவித்தகர் தாங்கள் ஒருவரே என்று பறைசாற்றுகிறது !
['ஆனந்த விகடன்' விமர்சனம் இதம், 'பொம்மை' படங்கள் பதம்]
"ஹரிச்சந்திரா" : ஆஹா, வருணிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன் !
டியர் சந்திரசேகரன் சார்,
நாகர்கோவில் மற்றும் நெல்லையில் சிவாஜி பேரவை சார்பில் நடைபெற்ற "கர்ணன்" 25வது நாள் விழாப் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அருமை. வழங்கியமைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Subramaniam Ramajayam
14th April 2012, 06:39 AM
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது நடிகர் திலகம்.காமி ற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்!
congrats and goodwishes to raghavendran for successful completion of five years of nadigarthilagam.com we will always be wth you for all your endaveour.
Karnan 5weeks successful run function was arranged by fellow rasigargal very nicely and meaningfully.
vasudevan31355
14th April 2012, 08:03 AM
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பதிவுகளைப் பற்றிய பாராட்டுதல்களுக்கும் தலை வணங்குகிறேன்.
தங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ நம் நடிகர் திலகத்தை உளமார வேண்டுகிறேன்.
தங்களால்தான் காணக் கிடைக்காத பல அரிய ஆவணப் பதிவுகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அதுவும் வியட்நாம் வீடு, அவன்தான் மனிதன் போன்ற படங்களின் விமர்சனங்கள் அன்றைய பத்திரிக்கைகளின் வாயிலாக நீங்கள் வழங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நான் அது போன்ற பத்திரிக்கைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கிடைப்பது மிக அரிதாக குதிரைக்கொம்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது. சேர்த்து வைத்திருந்த சில ஆவணங்களும் சரியான பராமரிப்பின்றி சேதமுற்று விட்டன. ஆனால் எங்களை விட தாங்கள் வயதில் குறைந்திருந்தாலும் சிறுவயது முதற்கொண்டே சிறுத்தொண்டர் போல நம் இறைவனாரின் மேல் உள்ள அளவு கடந்த பக்தியினால் இந்தியாவெங்கும் தேடி அலைந்து குருவி சேர்ப்பது போல உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காக மெனக்கெட்டு செலவிட்டுள்ளீர்கள்.
அதுமட்டுமல்ல. எனக்கு தலைவர் பற்றிய அரிய ஆவணம் ஒன்று கடலூரில் ஒரு கடையில் கிடைத்தது. அதை வாங்கலாம் என்று விலை விசாரித்தால் அதற்கு கடைக்காரர் சொன்ன விலையில் என் தலை சுற்றியது. இரண்டாவது அக்கால பொம்மை, பேசும்படம், சினிமா எக்ஸ்பிரஸ்,ஜெமினி சினிமா போன்ற பத்திரிக்கைகளைக் கேட்டால் இன்றைய தலைமுறையினர் பல பேர் சிரிக்கிறார்கள். அக்காலத்து ஆசாமிகளோ அதெல்லாம் "இப்போது எப்படி சார் கிடைக்கும்? என்று ஏளனப் பார்வை வீசுகிறார்கள். அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் அதற்கு அவர்கள் சொல்லும் விலையே தனி. பெரிய நூலகங்களில் கேட்டாலோ அங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். விதிமுறைகள்.
ஆனால் நாங்கள் செய்த பாக்கியம் எல்லோருக்குமாய் சேர்த்து நீங்கள் கிடைத்து விட்டீர்கள். தாங்கள் இதற்காக எவ்வளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. எவ்வளவு ஆவணங்கள்!. எவ்வளவு புகைப்படங்கள்!
நம் தலைவரின் ரசிகர்கள் விழா எது எடுத்தாலும் பேனர்களுக்கு புகைப்படம் வேண்டுமா... படங்களைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் ஆதாரத்துடன் வேண்டுமா...தலைவரைப் பற்றிய புத்தகங்களுக்கு அனைத்து விஷயங்களும் வேண்டுமா... கல்யாணப் பத்திரிகை அடிக்க தலைவரின் ஸ்டில் வேண்டுமா....
"கூப்பிடு பம்மலாரை"
என்று அனைவரும் ஒரு சேர அழைப்பது தங்களைத் தான். அந்த நம்பிக்கைக்கும் தாங்கள் பங்கம் வைக்காமல் கேட்டவருக்கு கேட்டபடி 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா' என்ற கூற்றுக்கேற்ப ஆவணங்களையும், ஸ்டில்களையும் கர்ணனாய் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீகள். அவ்வளவு ஆவணகளையும் எலி, கரப்பான், கரையான், மழை, புயல், வெயில் அனைத்தையும் மீறி பாதுகாப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. பல்வேறு இடங்களில் சுற்றி தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து வைத்துள்ள அபூர்வ ஆவணங்களையும், புகைப்படங்களையும் எங்களுடன் மனமகிழ்ச்சியோடு தாங்கள் பகிர்ந்து கொள்வது தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் மரியாதையை மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறது. ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் பணமாக மாற்றி கொள்ளத் துடிக்கும் இந்தக் காலத்தில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் இரவு பகல் பாராமல் திரிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு மிக உயர்ந்த உள்ளமும், எண்ணமும் வேண்டும். அது தங்களிடம் தாராளமாய் உள்ளது. பகலில் தாங்கள் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவுடன் பல இரவுகளில் தூங்காமல் கண் விழித்து திரியே கதியென்று இருப்பதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். கை பேசியைக் கூட சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இடைவிடாமல் பதிவுகள் இட்டதை நான் நன்கு அறிவேன்.
ஏதோ உங்களைப் புகழ்வதற்காக இதை எழுதுகிறேன் என்று தாங்கள் நினைக்க வேண்டாம். நானும் ஆவணைங்களுக்காக அலைந்து திரிந்து ஏமாந்ததுதான் மிச்சம். 'சே' என்று அலுத்து, சலித்து, வெறுத்து விட்டு வந்து விட்டேன். விடா முயற்சி சென்று வெற்றி பெறுவதற்கு நான் ஒன்றும் பம்மலார் அல்லவே!
அன்பன்
வாசுதேவன்.
sivajidhasan
14th April 2012, 08:37 AM
அன்பு நண்பர்களே!
பொதுவாகவே எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு. நடிகர் திலகத்தின் சில நல்ல படங்கள் அசந்தர்ப்பமாக, துரதிருஷ்டவசமாக தோல்வி அடைந்து விடும் போது மனம் மிக வருத்தப்படும். படம் நன்றாக இருந்தும் காலம் தாழ்ந்து வரும் போது ஜனங்களின் ரசிப்புத்தன்மை மாறிவிட்டது என்ற போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இதுபோன்ற படங்கள் படுகுழியில் தள்ளப்படும். நம் ரசிகர்கள் மத்தியில் கூட இது போன்ற அற்புத படங்கள் எடுபடுவதில்லை.
நேற்று இந்தப் படத்தை மறுபடி முழுவதுமாகப் பார்த்தேன். நடிகர் திலகத்தைப் பார்த்து மீண்டும் பிரமித்துப் போனேன். அப்படிப்பட்ட சாந்தமான நடிப்பை வாரி வழங்கியுள்ளார் அவர். என்ன ஒரு தேஜஸ் அவர் முகத்தில்!. அப்படியே ஒளி வெள்ளம் வீசுகிறது அவர் ஹரிச்சந்திர மன்னனாக வரும் போது. சோகமும் துன்பமும்,கண்ணீரும்,கம்பலையுமாய் வெட்டியானாக வரும் போது அப்படியே உருமாறிப் போய் கண்களில் சோகத்தைத் தேக்கி அவர் அந்தப் பாத்திரத்தின் தன்மையை நூறு சதவிகிதம் நம் கண்கள் முன் பிரதிபலிக்கிறாரே, அவ்வளவும் விழலுக்கிறைத்த நீராய்ப் போய் விட்டது என்று எண்ணும் போது வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை.
நம்மிலும் பெரும் பாலோனோர் இந்த மாதிரிப் படங்களைப் பற்றியும் பேசுவதில்லை. தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். நான் யாரையும் குற்றம் கூறவில்லை.
நாம் பெரும்பாலும் தெய்வமகன், வீ.பா.க.பொம்மன், வசந்த மளிகை, திருவிளையாடல், உத்தம புத்திரன், கர்ணன், பட்டிக்காடா பட்டணமா போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைப் பற்றி அதிகம் நமக்குள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் இந்த ஹரிச்சந்திரா போன்ற திரைப் படங்களில் அவர் நடிப்பைப் பற்றி அவ்வளவாக யாரும் பேசுவதோ, எழுதுவதோ, விமர்சிப்பதோ கிடையாது. இது ஏன் என்றே எனக்குப் புரிய வில்லை. இன்னும் சொல்லப் போனால் சூப்பர் ஹிட் படங்களை விட இது போன்ற படங்களில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் நடிகர் திலகம். ஹரிச்சந்திரா வரிசையில் நானே ராஜா, முதல் தேதி, தெனாலி ராமன், ராணி லலிதாங்கி, மணமகன் தேவை, அம்பிகாபதி, பாக்கியவதி, அவள் யார், எல்லாம் உனக்காக, வளர்பிறை, அறிவாளி, நெஞ்சிருக்கும் வரை, பாதுகாப்பு, தங்கைக்காக, இருதுருவம், துணை, தியாகி, ஹிட்லர் உமாநாத் என்று ஒரு நீள் பட்டியலே இருக்கிறது. இவற்றையெல்லாம் நாம் மறந்து விட வில்லை. ஆனால் போதிய அளவிற்கு முக்கியத்துவம் நாமே கொடுப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. படம் தோல்வியடைந்து இருக்கலாம். தோல்வியடைந்து விட்டதனாலேயே ஒரு படம் குறைந்து விட்டதாக ஆகி விடாது. அதில் நம்மவரின் உன்னதமான காலத்தை வென்ற நடிப்பு இருக்கிறதல்லவா! நமக்கு அது ஒன்று போதுமே! ஆனால் நடிகர் திலகம் இப்படங்களில் செலுத்தியிருக்கும் அபார உழைப்பு மற்ற மாபெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மேற்கூறிய படங்களின் பட்டியலில் பெரும்பான்மையான படங்களின் dvd-க்கள் கிடைக்கின்றன. இது போன்ற கடந்த காலங்களில் சுமாரான வெற்றியையோ, அல்லது தோல்வியையோ தழுவிய படங்களில் நம் நடிகர் திலகம் காட்டியுள்ள அசாத்திய திறமைகளை எல்லோரும் அறியும் வண்ணம் நாமனைவரும் வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அன்புடன்,
வாசுதேவன்
திரு. வாசுதேவன் அவர்களுக்கு!
உங்கள் ஆதங்கம் நியாயமானது தான். எனக்கும் இது சம்பந்தம்மாக ஒரு ஆதங்கம் உண்டு. அதாவது, நடிகர் திலகம் அவர்களைப் பற்றி பேசுகிற போது ஏனோ முதல் 25 ஆண்டுகளோடு நிறுத்திக் கொள்கிறோம் என்று. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளைப் பற்றி நாம் பேசுவதில்லை. மக்களும் பேசுவதில்லை, மீடியாக்களும் பேசுவதில்லை, அவர்களோடு சேர்ந்து நாமும் பேசுவதில்லை. இனிவரும் காலங்களிலாவது இந்த குறை களைய வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி!
நட்புடன்!
vasudevan31355
14th April 2012, 08:39 AM
அன்பு பம்மலார் சார்,
நந்தன வருடத்தில் மட்டுமல்ல நவயுகத்திற்கும் ஈடுஇணையற்ற நாயகனாய் விளங்கும் நம்மவர் நடிகர் திலகம் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த புகைப்பட ஸ்டில் அட்டகாச அருமை. இணையில்லா அழகுடன் ஜொலிக்கும் நம் இளம் வயது நாயகரின் அந்த புகைப்படம் இதயத்தில் இனம் புரியா இன்பத்தை அள்ளி வழங்குகிறது. புத்தாண்டிற்கு புதுமைப் பரிசு வழங்கிய தங்களுக்கு புளகாங்கித நன்றி!
நமது நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை திரு. ராகவேந்திரன் சாருக்கு அவருக்குப் மிகவும் பிடித்த 'சுமதி என் சுந்தரி' ஸ்டில் மூலம் தெரிவித்திருப்பது சுந்தரம்.
இளைய திலகத்தின் முப்பதாண்டு கலைச் சேவையை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு தாங்கள் வாழ்த்துக் கூறியிருப்பது அற்புதம். அந்த ஸ்டில்லும் கொள்ளை அழகு.
அன்பன்
வாசுதேவன்.
sivajidhasan
14th April 2012, 08:43 AM
திரு. Kc shekar அவர்களுக்கு,
தமிழகம் முழுவதும் தாங்கள் நடத்தி வரும் கர்ணன் வைபவத்திற்கும், நலத்திட்டங்களுக்கும் என் நன்றியோடு கலந்த வாழ்த்துக்கள்!
நட்புடன்!
KCSHEKAR
14th April 2012, 10:33 AM
திரு. Kc shekar அவர்களுக்கு,
தமிழகம் முழுவதும் தாங்கள் நடத்தி வரும் கர்ணன் வைபவத்திற்கும், நலத்திட்டங்களுக்கும் என் நன்றியோடு கலந்த வாழ்த்துக்கள்!
நட்புடன்!
திரு.சிவாஜி தாசன் சார், தங்கள் பாராட்டுக்கு நன்றி.
KCSHEKAR
14th April 2012, 10:36 AM
My Special gratitudes to Chandra Sekar sir,Girija madam and Raghavendar sir who are able to motivate &mobilise the people positively and keep our flag flying high.My humble salute.
Dear Mr.Gopal, Thanks for your appreciation
KCSHEKAR
14th April 2012, 10:38 AM
சந்திரசேகர் சார்,
தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து கர்ணனின் வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழாக்கள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் அமைப்பின் மூலமாக செயல்படுத்தி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் நற்பணி.
அன்புடன்
.
திரு.முரளி சார், தங்கள் பாராட்டுக்கு நன்றி.
KCSHEKAR
14th April 2012, 10:46 AM
திரு.வாசுதேவன் சார், திரு.பம்மலார் சார் தங்கள் பாராட்டுக்கு நன்றி.
தங்களைப் போன்ற ரசிக சிகரங்களின் வாழ்த்துக்களோடு, இந்த நந்தன வருடத்தில் சிவாஜி சமூகநலப்பேரவையின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் மற்றும் விண்ணிலிருக்கும் நடிகர்திலகம் ஆசிகளை இறைஞ்சுகிறேன்.
vasudevan31355
14th April 2012, 11:17 AM
அன்பு திரு.சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நம் இருவருக்கும் (இதில் பம்மலாரும் அடங்குவார்) ஒரே சிந்தனைதான் என்பதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.சமீபத்தில்தான் நானும், பம்மலாரும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் கருத்தைத் தாங்கள் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். இதைத்தான் vibration என்கிறார்களோ!
பொதுவாகவே எல்லோரும் ஏன் நமது ரசிகர்களும் கூட ஏதோ இருநூறு படங்களுக்கு மேல் வந்த தலைவரின் படங்கள் சுமார் ரகம் தான். இருநூறோடு அவர் நிப்பாட்டி இருக்கலாம் என்று கூறுவார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய படங்களின் தரத்தை புதிய படங்களில் காண முடியாது என்பது வேறு விஷயம். அதற்காக பழைய படங்களின் தரத்தை அப்படியே புதிய படங்களில் எதிர்பார்க்காமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே! நான் குறிப்பிடுவது இப்போது வரும் புதுப் படங்களை அல்ல. இருநூறுக்கு மேல் வந்த தலைவரின் திரைப்படங்களைப் பற்றி.
திரிசூலத்திற்குப் பிறகும் பல நல்ல படங்கள், வெற்றிப்படங்கள் வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது என்னுடைய சொந்தக் கருத்து.
திரிசூலத்திற்கு அடுத்து 201- ஆவது படமாக வந்த 'கவரிமான்' ஒரு அற்புதமான படம் என்று எல்லோராலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைவர் கூட இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களிடம் "செதுக்கி செதுக்கி அழகான சிற்பமாய் இப்படத்தை வடித்திருக்கிறாய். ஜனங்கள் ரசிப்பார்களா?" என்று கேட்டாராம். அந்தப் படத்தை தரக் குறைவாக யாருமே விமர்சித்ததே இல்லை. அதற்கு முன்னால் வந்த திரிசூலத்தின் விஸ்வரூப வெற்றியினால் கவரிமான் பாதிக்கப்பட்டதே தவிர நல்ல படம் என்ற பெயரை அது இழக்கவே இழக்காது. மிகப் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அது தோல்விப்படமல்ல. (பம்மலாரின் 'கவரிமான்' பதிவின் குறிப்பில் இதனை கவனித்திருப்பீர்கள்).
'நல்லதொரு குடும்பம்' அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. எங்கள் கடலூரில் 40- நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை அள்ளித் தந்தது அப்படம்.
'இமயம்' தோல்விப் படமென்றால் கூட இப்போது பாருங்கள். very intersting -ஆன தலைவரின் நடிப்பு முத்திரைகளைத் தன்னகத்தே கொண்ட படம்.
'நான் வாழ வைப்பேன்' நல்ல வெற்றிப்படம். ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படம். நம் தலைவரும் அருமையாகப் பண்ணியிருப்பார்.(முக்கியமாகத் தலைவலி வரும் காட்சிகளில்)
'ரிஷிமூலம்' அனைவராலும் பாராட்டுப் பெற்று வெற்றியடைந்த படம்.
'எமனுக்கு எமன்' ஜாலியாகப் போகும் படம். சிரிப்புக்கு 100% உத்திரவாதம்.
'சத்திய சுந்தரம்' எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை அளித்த கலகலப்பான குடும்பப்படம். குவியல் குவியலாக தாய்மார்கள் இப்படத்தைக் கண்டு களித்தார்கள். நல்ல குடும்பப் படமாக குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இதே வரிசைகளில் கல்தூண், கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, வசூலில் அட்டகாசம் செய்த சங்கிலி (பொதுவாக இரவுக்காட்சிகள் 9.30 அல்லது 10.00 மணிக்குத் துவங்கும். ஆனால் சங்கிலி கதையே வேறு. கடலூரில் இரவு பதினோரு மணிக்குள் இரவுக்காட்சி முடிந்துவிடும். இந்தப் படம் மட்டுமே அந்தப் பெயரைத் தட்டிச் சென்றது. அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. ஷோ கணக்கெல்லாம் கிடையாது. படம் விட்ட ஐந்தே நிமிடங்களில் அரங்கு நிறைந்து விடும். இப்படி பேயக்கூட்டத்துடன் எங்கள் ஊரிலும் ஓடி வசூலை வாரி அள்ளினார் 'சங்கிலி').
தீவிர வசூல் வேட்டியாடிய தீர்ப்பு, அற்புத நடிப்பைக் கொண்ட தியாகி, கேஷுவல் நடிப்பில் மனதை உருக்கிய துணை, மறுபடியும் பிராமணராக நடிப்புக் கொடி நாட்டிய பரிட்சைக்கு நேரமாச்சு, படித்ததின் பயனை மறந்து, காதலில் உழன்று, கடமையை மறந்து, பிறந்த கிராமத்தையே உதாசீனப்படுத்தும் தன் தம்பியை வித்தியாசமான அணுகுமுறையில் திருத்தி, கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வைக்கும் கிராமத்தானாக நடித்து, நல்ல மெசேஜை சொல்லிய ஊரும் உறவும், வெள்ளி விழாக் கண்ட நீதிபதி, கேலி செய்தோரின் வாயை அடைத்து வசூலில் பின்னியெடுத்த மசாலாக் கலவை சந்திப்பு, மிருதங்க வித்வான்களே மெய் சிலிர்த்துப் பாராட்டிய மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை மனம் கொண்ட பாதராகவும், கர்ஜனை புரியும் போலீஸ் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் கலக்கிய வெள்ளை ரோஜா, திரும்பவும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய திருப்பம், வசூலிலும், நடிப்பிலும் வரலாறு படைத்த வாழ்க்கை, மழலையின் மேல் பாசம் வைத்து மலைக்க வைத்த நடிப்பைப் பகிர்ந்து கொண்ட பந்தம், முக்காலமும் தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் முதல் மரியாதை, விசுவாமித்திரரை வியக்கும் வகையில் நடிப்பால் நமக்குக் காட்டிய ராஜரிஷி, அண்ணனின் அன்புப் பாசத்தை தம்பிகளிடம் கண்களிலேயே பிரதிபலித்த படிக்காதவன்,
இயக்குனர் வேடத்தில் இதயத்தை வருடிய சாதனை,
படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்த மருமகள்,
ஸ்டைலிலும், நடிப்பிலும் ஜமாய்த்த ஜல்லிக் கட்டு,
தேவர்களும் மயங்கும் நடிப்பைக் கொண்ட தேவர் மகன்,
மகள் விதவையான சோகத்தை நேரிடையாகக் கண்டு அனுபவித்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகும் பசும்பொன்,
ஜாலியான அறுபது வயது இளைஞனாக யூத்களுடன் கும்மாளமிட்ட ஒன்ஸ்மோர்,
மோகன்லாலுடன் இணைந்து மோகன நடிப்பை வழங்கிய, மலையாளத் தமிழ் பேசிய ஒரு யாத்ராமொழி,
கடைசி வரையிலும் கரகாட்டம் ஆடி களேபரம் செய்த என் ஆச ராசாவே,
காதலர்களை இணையவைக்கும் முதியவராக இளையவர்களுக்கு ஈடு கொடுத்த பூப்பறிக்க வருகிறோம்
என்று தன் திறமை இறுதி வரை குறைந்ததல்ல என்று அவர் வாழ்நாள் முழுதும் தன் திறமையைக் காட்டினார் என்றுதான் கூற வேண்டும்.
அவருடைய முன்னாள் படங்களோடு இருநூறுக்கும் மேல் வந்த படங்களை ஒப்பிடுவதே தவறு. பின்னாட்களில் அவர் படங்கள் வேஸ்ட் என்பது தவறு என்பதும் என் தாழ்மையான கருத்து. பின்னாட்களிலும் மிகச் சிறந்த படங்களை அவர் தந்திருக்கிறார். நல்ல வித்தியாசமான நடிப்பையும் நமக்கு வழங்கி விட்டுத்தான் போய் இருக்கிறார். சில படங்கள் அவர் பெயரைக் கெடுத்திருக்கலாம். அவரும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சிறப்பாகவும், வெற்றியுடனும் செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏற்றத் தாழ்வுகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு. இருநூறுக்கு முன்னாலும் அவருடைய மோசமான படங்கள் இருக்கின்றன. தோல்விப்படங்களும் இருந்திருக்கின்றன. எதையும் எதனுடனும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் ஒரு சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.
வெற்றி தோல்விகளை அவரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு படங்களின் தரங்கள் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு இடத்திலாவது அவர் எல்லோரையும் வாயைப் பிளக்க வைத்து விடுவார். மறுபடியும் சொல்கிறேன். பின்னாட்களிலும் அவர் நல்ல படங்கள் பல கொடுத்திருக்கிறார். பிற படங்களில் இல்லாத நடிப்பையும் அளித்திருக்கிறார். அதனால் தான் இத்திரியில் நான் உறுப்பினரானவுடன் தாங்கள் மனதிலுள்ள எண்ணம் எனக்கும் இருந்ததினால் என்னுடைய முதல் ஆய்வுப் படமாக பின்னாளில் வெளியான 'கருடா சௌக்கியமா' படத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டேன்.
சற்று நீண்ட பதிவாகி விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. அவர் விண்ணில் தெய்வமாக வாழ்ந்தாலும் மண்ணில் இருந்த போது அவரும் மனிதர் தான். ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்தான், விருப்பு வெறுப்புகள் அவருக்கும் உண்டு. அவர் அப்போது கடவுள் இல்லை. எல்லாவற்றிலுமே நூறு சதவிகிதம் வெற்றியை எவரும் கொடுத்து விட முடியாது.
இப்படி ஒரு பதிவை நெடுநாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தங்களால் இன்று நிறைவேறிற்று. அதற்காகவும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
நன்றியுடன்
வாசுதேவன்.
KCSHEKAR
14th April 2012, 12:15 PM
திரு. ராகவேந்திரன் அவர்களே!.
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம்.காமி ற்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
RAGHAVENDRA
14th April 2012, 12:27 PM
தொலைபேசியிலும் நம் திரியிலும் நமது இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு நுழைவிற்கு வாழ்த்துத் தெரிவித்த வியட்நாம் கோபால், வாசுதேவன், சந்திரசேகர், பம்மலார், முரளி சார், சிவாஜி தாசன், ராமஜெயம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி. தங்களுடைய அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும்.
பம்மலார் சார், விட்டில் பூச்சி என்ற பெயரில் முதலில் படம் வளர்ந்த பொழுது வெளி வந்த ஸ்டில்லை சூப்பராக பாதுகாத்து இங்கே எனக்களித்தமைக்கு மிக்க நன்றி. அப்போது ஆரம்பித்த கதை, சற்றே மெருகேற்றப் பட்டு சுமதி என் சுந்தரி என வெளி வந்தது. தங்களுக்கு ஸ்பெஷலாக என் பாராட்டுக்கள்.
வாசுதேவன் சார்,
305 படத்திலும் 305 விதமான சிறப்பு முத்திரையுடன் தான் நடிகர் திலகம் நடித்திருப்பார். பெரிதும் கிண்டல் செய்யப் பட்ட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் தங்கைக்காக அவர் பாடும் பாடலான என்னென்பதோ பாடலாகட்டும், வெற்றிக்கு ஒருவன் படத்தில் தன் பயம் கலந்த பாசத்தை வெளிக் காட்டும் காட்சியிலாகட்டும், பட்டாக் கத்தி பைரவன் படத்தில் யாரோ நீயும் நானும் யாரோ பாடல் காட்சியாகட்டும், எல்லா படத்திலும் அவருடைய தனி முத்திரை இருக்கும். ஒரு சில பத்திரிகையாளர்கள் ஆரம்பித்து வைத்த பல்லவியை ஏனோ பெரும்பாலானவர் எதிர்க்க பயந்து பேச ஆரம்பித்ததன் விளைவுதான் அந்த 200 என்ற எல்லையில் நிற்க காரணமாயிருந்தது. உண்மையிலேயே மிகவும் பரிதாபத்திற்குரிய படம் என்றால் சொல்லக் கூடிய ஒரு படம் தர்மராஜா மட்டுமே. முழுக்க முழுக்க நடிகர் திலகத்தை வேஸ்ட் பண்ணிய படம் என்றால் அது தான். அதில் கூட அவர் விட்டு வைக்காமல் தன் தேசப் பற்றை வெளிக்காட்டும் விதமாக மூவர்ணக் கொடியுடன் ஒரு பாடலை அளித்திருப்பார்.
தங்களுடைய பதிவுகளை மேலும் மேலும் எதிர் பார்க்கிறோம்.
அன்புடன்
vasudevan31355
14th April 2012, 12:35 PM
திரையுலகில் முப்பது ஆண்டுகள் சங்கிலித் தொடராய் வெற்றிகள் கண்ட சர்தார் 'ராஜாளி' யே! மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
http://www.top10cinema.com/dataimages/12872/03-10-2011-12872-1-3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
14th April 2012, 01:10 PM
இளைய திலகம் பிரபு அவர்களின் அரிய சாதனையை முன்னிட்டு
18-8-1993 'தேவி' இதழில் வெளியான இளைய திலகத்தின் 'எங்கள் குடும்பம்' கட்டுரை.
'தேவி' இதழ் பக்கம் 9
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/p-1.jpg
'தேவி' இதழ் பக்கம் 10
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/p2-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Gopal.s
14th April 2012, 01:19 PM
Vasu Sir,Raghavendran Sir,
Please do not mistake me for my intervention.It calls for some explanation.As an ardent ,a born devotee of Acting God,I supported his later movies and felt happy about their successes and wished for his longevity as an actor.But here,we are talking about an acting God not a mortal.We are happy with his successes and proud to talk about it loudly to the world.(thats why I started my myth series)I feel that this thread is not to talk among ourselves but should serve as a future Documentary evidence and a kind of reference point for the youngsters to know about him.NT remained a good actor till his Pooparikka varugirom ,no doubt,but he remained the best in the world from 1952 to 1974.(Thanga Padakkam as last).Barring Avanthan Manithan,Rojavin Roja,Deepam,Annan oru Koil,Naan Vazha Vaipen,Thunai,Mudhal Mariadhai and Thevar Magan where we could rejoice the glimpse of his adaption to the neo- cinema so called realistic.If someone wants to glorify mediocrity as a showpiece of his talence,sorry guys,I am not your associate.The person who saw God Father and Nayagan happened to see Garuda on the basis of our writing skills,you are losing a potential young mind to perpetuate our glory.I request all of you not to be over-enthusiastic to market the sub-mediocre Films of his(He did plenty in later part of his career)and unimaginative but good performances,you are not doing justice to present him as the best in the world.Let us talk about his Natural , controlled,versatile performances from 1952-1958,Stylised method acting from 1958-1965, and his free flowing &improvised , unique style of acting from 1966-1974&His extrodinary acting merging with young talence in Thunai,Mudhal Mariadhai and Thevar Magan at later years.Despite my reservations,I chose some of his later movies for appreciation in my guidelines for movie selections.Dont think that a junior is trying to dictate terms but we should not lose track of our prime objective of introducing NT in proper perspective to the young minds.Every creative genius has a shelf life for his creativity and beyond the creative life span they bask in the good will and past glory to cash on the past hard work during their productive Span. It happened to many great Novelists,Artists,Cricketers(Tendulkar) and let us accept this as a fact of life and go on.But our Acting God had the verve and Fire till his last breath and proved time and again to the young generation in later year movies also.
I only request you to abstain from certain Movies with better bench marks set by others(Same genre or theme) and obvious lack of congruence in Energy,Physique,agility,cheer in some of his later movies.We dont criticise but avoid glorifying it.
But Success or failure is not a criteria for our selection here but a class and watcheable presentation is the main objective.
vasudevan31355
14th April 2012, 02:07 PM
'சர்தார்' ராஜாளியின் அறிமுகத் தோற்றம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-91.jpg
உடலும் உயிரும்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-63.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-45.jpg
'அக்னி நட்சத்திரம்' படத்தில் இளைய திலகம்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-34.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
NOV
14th April 2012, 02:30 PM
The Pairs I hate to see in Screen-
Sivaji-K.R.Vijaya- Somehow no one can have any sort of Chemistry with her(Selvam -the only exception)
Sivaji-Sowkar- Again lack lustre(Padikkadha medhai,Pudhia Paravai,Uyarntha Maithan being exception)
1. Thanga Pathakkam - one of the best movies ever! :thumbsup:
2. Paar Magale Paar - enna oru performance!
selvakumar
14th April 2012, 02:37 PM
NOV, I still feel K.R.V shouldn't have acted with Sivaji. He deserved better heroines ::yessir: I agree with most of Gopal sir's list
RAGHAVENDRA
14th April 2012, 03:06 PM
I request all of you not to be over-enthusiastic to market the sub-mediocre Films of his(He did plenty in later part of his career)and unimaginative good performances,you are acting like his Friendly Enemies(Anukoola Chatru)
டியர் கோபால்,
தங்களுடைய கருத்துக்களுக்கு என்னுடைய கண்டனங்களை கடுமையான முறையில் தெரிவிக்க விரும்புகிறேன். இத்திரியில் இதைப் போன்று எழுதி நானும் சிவாஜி ரசிகர் தான் என்று கூறி சிலர் முன்னர் எழுதி அவரை விமர்சிப்பதற்கு இந்தப் படங்களை கேடயமாக பயன் படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு சரியான பதிலடியை முன்னர் அளித்துள்ளனர் நம்முடைய நண்பர்கள். அவர்களுடைய பட்டியலில் தாங்களும் இணைந்து விட்டீர்களோ என்கிற ஐயத்தை தங்களுடைய கருத்து தோற்றுவிக்கிறது.
கிட்டத் தட்ட பாதிக்கு மேல் அவர் படங்களை நாம் ஒதுக்கி விட வேண்டும் என்பது போல் எழுதியுள்ளீர்கள்.
எங்களையெல்லாம் அனுகூல சத்ருக்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். தோல்விப்படங்களிலும் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி அந்த நடிப்பில் என்னென்ன இலக்கணங்கள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்து சொல்வது எப்படி அனுகூல சத்ரு என்ற கணக்கில் சேரும். அப்படியென்றால் அவருடைய நடிப்பில் உள்ளதெல்லாம் உதவாதவை என்று பொருளா. அவருடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த இயக்குநர்கள் பலர் உழைத்திருக்கிறார்கள், அவர்களெல்லாம் புதிய பரிணாமத்தில் அவருடைய நடிப்பைக் கண்டு அதனை பயன் படுத்தியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் புறக்கணிக்க வேண்டுமா. தங்கள் ஒருவருக்கு பிடித்த படங்களை மட்டும் தான் இத்திரியில் விவாதிக்க வேண்டுமா. தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். அவரைப் பற்றி விமர்சிப்பவர்களுக்குத் தாங்களே பாதை அமைத்துக் கொடுப்பது போல் தோன்றுகிறதே. புரியவில்லை. நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரத்தில் அவரவருக்கு வேண்டிய வகையில் கிடைக்கும் போது ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்து தாம் ரசித்த விஷயங்களைத் தான் இங்கே பதிந்து கொள்கிறோம். எல்லாமே எல்லாருக்கும் பிடித்திருக்கும் எனக் கூற முடியாது. அதே சமயம் பிடித்தவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாமே. உதாரணத்திற்கு துணை படத்தில் காக்கா வலிப்புக் காட்சியில் அவருடைய சமயோசித புத்தியைக் கடைப்பிடித்ததைப் பற்றி இயக்குநர் துரை அவர்களும் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களும் கூறியுள்ளனர். அது போன்று பல சம்பவங்கள் நடிக்க விரும்பி வரும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இதைப் போன்று ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்பில் ஏதாவது ஒரு சிறப்பினைப் புகுத்தியிருப்பார்.
1974 வரைக்கும் தான் நான் சிவாஜியை ரசிப்பேன் என்று கூறுபவரை நாம் எப்படி சிவாஜி ரசிகன் என்று ஏற்றுக் கொள்வது.
எனக்குத் தெரியவில்லை. நம் நண்பர்கள் தான் விளக்க வேண்டும்.
Gopal.s
14th April 2012, 03:17 PM
Dear Mr.Raghavendar,
If this is the pre-condition to be addressed as his fan,I am not a fan and leave me out of this thread.This is the first time in my life,I am being doubted for my devotion to our Acting god.First Read my full message carefully and if it makes sense ,then we will go further.We are not like other fans who supports blindly,and I think only our Acting God is bestowed with intelleuctual&thinking Fans.The question is to present the best to the future generation as they cant devote their full time to the past . They are busy with so many things with gruelling routines ,you cant expect them to view everything to choose &It is our duty to give them the best out of what we have.If we can concur,I write further.I leave it to the other hubbers to decide it.
sankara1970
14th April 2012, 05:50 PM
Best wishes to Mr Ragavendra on the occassion of Nadigarthilagam.com entering 6th year
It's a unique achievement.
goldstar
14th April 2012, 06:09 PM
I leave it to the other hubbers to decide it.
Gopal sir,
Every one has their own view and for me I become NT veriyan after watching Lorry Driver Rajakannu, Sangili, Santhippu, Sumangali. So in my view NT is "Atchaya Pathiram" and you can get any kind of food to satisfy your taste whether his first or middle or after 1980's movies.
For me I am attracted more towards his movies done after 1980's just because of NT has given more than enough and justified his role and also made fans like me happy. Even yesterday watching LDR and Anjal Petti 520, I felt each and every scene in AP520 and LDR totally different and his body language and facial expression is quite brilliant. The beauty of NT movies reagardless of any years are each time you watch and you could see different different facial expression and body language and some thing new. I don't think you can find any other actor have this kind of caliber and talent. So my humble request all NT movies are like diamond and day by day and year by year will glow and get value and respected by others, so let us full stop this topic and let us praise our NT.
After talking with you over the phone I can tell every one that you are die hard fan of NT and every day watch his movies , so there is no question about your affection to our NT.
Cheers,
Sathish
Gopal.s
14th April 2012, 06:34 PM
Dear Mr.Satish,
Yes.I decided to keep quite on these matters further.Everyone failed to notice whichever movies mentioned by Vasu Sir after 1981 figured in my shortlist.No actor in the world can claim that all his movies are good and watcheable.If you go thru NT comment on his own Films ,he was honest and ruthless.(He went to the extent of saying Why did they make this Film?For his 50th movie Sarangadhara , Even I didn't remember it for Nan Vanangum deivam Etc).Let me suggest this humbly.Let us take the shortlisted movies for detailed analysis.In other Films ,if there are some exceptional performance by NT,Let us analyse only the scenes in specific analysis case by case.I am doing this for projecting the best of our God to the world.No one is understanding my concern.
Gopal.s
14th April 2012, 07:07 PM
I continue with my wishlist(Hope I wont get comdemned for it)
I wish Our NT acted in these Films .
1)Malaikallan-PakshiRaja was begging our NT to do this role.As our NT was too busy to accept this offer,he offered this role to his friend who was not busy at that time.Later Pakshiraja switched camps and made Maragatham and Kalyaniyin Kanavan .Malaikallan was a neat film and could have been another jewel in our crown.
2)Nenjil oor Aalayam-A cult film with tailor made doctor role for our NT (ofcourse Patient role for Gemini or Muthuraman is OK) and the role would have attained more gloss with subtle NT performance .
3)Major Chandrakanth-Ofcourse major has lived that role to get his title but NT would have made it more memorable .
4)Nootrukku Nooru-I wish K.B and NT got together in this movie rather than lacklusture Ethiroli.Ofcourse ,Jai was adequate and his non-Expression and non-acting was managed by K.B well.But it was a monumental Film in crisp and intelligent screen play and our NT as Handsome college lecturer(Lakshmi in lead)with the scope to exploit(Ofcourse NT would have made it different from Andavan Kattalai),Hummm... what a miss!
5)Nan Avanillai-What a movie and what a subtle and good performance by Gemini.But NT with his body language and facial dexturity would have made it better ,though little exaggerated but with distinction in roles would have come more striking with his extraordinary performance.KB would have made more money!!
6)Sila Nerangalil Sila Manithargal-Though,heroine oriented,as guilt-ridden, middle aged remorseful gentleman -could have been a great supporting cameo role.
7)Oru Nadigai Nadagam Parkiral-Reporter Role could have been lapped up earlier than Mudhal Kural and we missed a great show (Sivaji-Lakshmi duel -great)
8)Sankarabaranam-A land mark movie appreciated from all quarters with great music.Somayajulu had an advantage of apt debudant's charm in this role.But NT would have given another Thillana like subtle and exemplary performance.
9)Kizhakku seemaiyile-A folk-story on sibling intimacy on Thevar community and whoelse we could think of?Though Vijaykumar was good and adequate,NT's presence would have made it as memorable as Pasa Malar.
10)Sandhya Ragam-Balu Mahendra's masterpiece and a terrible mis-casting.Chockalinga Bagavathar at best can be a hut-dweller and can't be accepted as a middle-class elder(Balu repeated that mistake in casting him as Ramesh Arvind's father in Sathileelavathi)If NT handled this role,it could have taken him to national accolade.Balu as an ardent NT fan could have enjoyed it.
vasudevan31355
14th April 2012, 08:24 PM
டியர் கோபால் சார்,
நான் திரிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகின்றன. எவ்வளவோ நல்ல பல விஷயங்கள் நடை பெற்றிருக்கின்றன. சில வருத்தமான விஷயங்களும் நடந்திருக்கின்றன. ஆனால் எதுவுமே எல்லை மீறாமல் நாகரீகமாகத்தான் நடந்து வந்திருக்கின்றன. ஆனால் மனம் வருந்தி நான் தெரிவிக்கும் என்னுடைய முதல் கண்டனப் பதிவிற்கு நீங்கள் காரணமாகி விட்டீர்கள்.
இரவு பகல் பாராமல், குடும்பத்தைக் கூட கவனிக்காமல் எங்கள் தலைவரின் மேல் உள்ள ஈடுபாட்டால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் திரியில் உள்ள அனைவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப தலைவரின் புகழை எங்களால் முடிந்த மட்டும் யார் மனமும் புண்படாமல் பதிவுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் நீங்கள் இப்போது கை வைத்திருப்பது மிக மிக sensitive ஆன விஷயத்தில். நடிகர் திலகத்தின் முதல் ரசிகர் என்று மார் தட்டிக் கொள்ளும் நீங்கள் எந்த வகையில் முதல் ரசிகர்? உங்களுக்கு நாயகனும், காட் பாதரும் அருமையாகத் தெரிந்தால் நீங்கள் மார்லன் பிராண்டோவின் ரசிகர் ஆகி இருக்க வேண்டும். உங்கள் கூற்றுப்படி வேஸ்ட் நடிப்பை தந்த சிவாஜி அவர்களின் ரசிகர் ஆகி இருக்கக் கூடாது. சிவாஜி வெறியன் என்றும் கூறிக் கொள்ளக் கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறீர்கள். அது என்ன அனுகூல சத்ரு? திரியில் உள்ள அனைத்து அங்கத்தினர்களையும் அவமானப் படுத்தும் வார்த்தை அல்லவா அது. முதலில் நீங்கள் அனைத்துப் பதிவுகளையும் பொறுமையாக உட்கார்ந்து படித்துப் பாருங்கள். மேல்தட்டு மக்களுக்காக மட்டும் படைக்கப் பட்டவரல்ல நடிகர் திலகம். கோபால் ஒருவரை திருப்தி படுத்த மட்டும் அவர் அவதாரம் எடுக்க வில்லை. நீங்களே பல முறை சொல்லியிருக்கிறீகள் "தர்மராஜா போன்ற மோசமான படங்களில் கூட நடிகர் திலகத்தின் நடிப்பை யாராவது மோசமாக விமர்சித்தால் என்னிடம் அவன் ஒழிந்தான் என்று". அப்படியிருக்க இங்கே அனைவராலும் கோவிலாக மதிக்கப்படும் இந்தத் திரியை சிவாஜி வெறியன் என்று கூறிக் கொள்ளும் தாங்களே எங்களை எப்படி அவமானப் படுத்த முன் வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம். அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா? யாரோ வேறொரு ரசிகர் தலைவரை அவமானப் படுத்துவதை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியாத தாங்கள், அவருக்காக வாதாடி முதல் சிவாஜி ரசிகர் நான்தான் என்று அவர் பெருமையைக் காப்பற்றுவதாக பறைசாற்றிக் கொள்ளும் தாங்கள் எங்களை அனுகூல சத்ரு என்று அவமானப் படுத்துவதை எங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
தயவு செய்து தேன் கூட்டில் கை வைக்காதீர்கள். எங்களுக்கு பராசக்தியும் ஒன்று தான். பூப்பறிக்க வருகிறோமும் ஒன்றுதான். பெற்ற குழந்தைகளிடம் நாங்கள் பேரம் பார்ப்பதில்லை.அதற்காக குறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததில்லை. நிறை குறைகளை நாங்கள் மனதார வரவேற்கிறோம். அவமானப் படுத்துவதை எங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? நீங்கள் இந்த வார்த்தை தவறு என உணர்ந்து அந்த வார்த்தையைத் திரும்பப் பெறும் வரையில் நான் இந்தத் திரியில் எனது பதிவுகளை இடப் போவதில்லை. அனுகூல சத்ருவான எனக்கு இனி இந்தத் திரியில் எந்த வேலையும் இல்லை.
மிகுந்த மன வருத்தத்துடன்
அனுகூல சத்ரு.
Gopal.s
14th April 2012, 08:40 PM
The best Love Songs of NT(Ofcourse my choice)
1)Mayakkamenna (VM-with ultimate pair)
2)OruDharam ore Dharam(SES-with JL)
3)Madi meedhu(A L with devika)
4)Nenjathile(Shanthi-Devika)
5)Amma Kannu(G.O with V.N)
6)Mannikka vendugiren(I.M-All time Pair)
7)Vinnodum Mugilodum(Pudhayal -all time Pair)
8)Kana Inbam Kanindhadheno(S.M-with one movie wonder)
9)Aha Mella Nada(PP-with pinnazhagi)
10)Kandene unnai Kannale(N.S.R with anjali-PBS only duet for NT)
Other good love songs are Oru Nalile uravanadhe,Undhan Kannukkulle,Nenjil Kudiyirukkum,Kannoru Pakkam,Vellikinnandhan,Pottu vaitha mugamo,Ange Malai Mayakkam,Muthukkalo Kangal,Santhana kudathukkulle,Mela thalam Ketkum,Iniyavale endru Padi Vandhen,Agaya Pathalile,Varuvan Mohana Roopan,Poo Malaiyil,Anbale Thedia,Pudhu Pennin Manasai Thottu,Idhaya oonjal adava,Inge Ha ha Inge,Ondra Iranda,Paththu Pathinaru muththam muththam,Devan Vandhandi,Iravukkum Pagalukkum,Yamuna Nadhi Inge,Ennanga Sollunga,Kanavin maya Logathile,Kathalikka Katru Kollungal,Oh Little Flower,Oh ho ho Odum ennangale,Palakkattu Pakkathile,Palliyaraikkul,Mella Varum,nalla Idam Nee vandha Idam,Irandil Ondru,Nee Vara Vendum,Kalyana Ponnu,Sindhu nadhi Karai oram,Gangai Yamunai,Nalu Pakkam vedarundu,Kadhal rani Katti Kidakka,Pavai Yuvarani,Ethanai Azhagu,Aadikku pinne,Pudhu Nadagathil,Senthamizh Padum,Thirumalin Thirumarbil.
Gopal.s
14th April 2012, 08:45 PM
The best group/club songs of NT
1)Yaradi nee Mohini
2)Yen Yen Yen Oru Kinnathai
3)Paravaigal Palavidham
4)Theru Parka vandhirukkum
5)En Rajathi Varungadi
6)Kadhal Malar Kootam Ondru
7)Kudi Magane
8)sorgam Pakkithil
9)Anbulla nanbare
10)Ponmagal vandhal
Others are love is fine Darling(Nanoru Kathal),Idhu Ver Ulagam, Thani Ulagam,Adal Padalil,Kutral Aruvi,Thyagam dance with Phata Phat,Vasantha laigai tribal Dance,Nallavan Enakku Naane,Thanga Churangam shake dance with Nirmala,Adi Ennadi Rakku,Guru Dakshinai Temple Dance,Ambigaiye,Nal vakku,Mappillaye Pathukkadi,Mummum Muththangal Nooru,Karthigai Masamadi.
Gopal.s
14th April 2012, 08:50 PM
The best solos /Male duets of NT
1)Enge Nimmadhi
2)Ponnondru Kanden
3)Mayakkam Enadhu Thayagam
4)Un kannil Neer vazhindhal
5)Kavalaigal kidakkattum marandhu Vidu
6)Naan Kavignanum illai
7)Andha Naal Gnabagam
8)Ennirandu Padhinaru Vayadhu
9)Aru Maname aru Andha
10)Ayirathil oruthiyamma nee
11)Deivame Deivame
12)Pani Padarntha malaiyin mele
13)Kelvi Piranthathu andru
14)Vetri Vel veeravel
15)Pattum Naane
16)Malargalai pol
17)Enthan pon Vanname
18)Nallavarkellam
19)Deivam iruppathu Enge
20)Siththamellam Enakku Siva Mayame
Gopal.s
14th April 2012, 08:54 PM
Vasu Sir,
My unconditional apologies.I dont want to offend anyone .I feel very happy to be with like minded people.The mistake wont recur.You are more required for this thread than my presence.
ScottAlise
14th April 2012, 09:09 PM
I agree with Ragavenderan Sir.By the way Vasudevan sir Thank u 4 sharing information that Sangili had a non stop shows in cuddalore. I loved that movie very much but somehow could not make out how it could not be profitable. Also I love Yemanuku Yemen(Yamaleela NTR ). But NT was at his best in comical in this movie Could any one share information on this movie & also Maratha Nattu Veeran , I recently got this movie CD waiting 2 know the story,is this a hit
ScottAlise
14th April 2012, 09:14 PM
I recently saw Enn thambi (a remake, good thriller ) its from Jayam audio . Its a really gud movie. Billa has its shade khootadi character
Gopal.s
14th April 2012, 09:34 PM
I am sorry Vasu Sir/Raghavendran Sir, if I offended you by the word.I am out of this thread from today and I will never offend anyone.My affection for you will remain same as I treat all of you as my family.(The testimony is the time I spent with you all is more than the time I spoke to my family)I was losing sleep out of anxiety on Karnan release for more than 2 months and the result made me go floating in air with happiness).I am not leaving this with any ill-feeling and I genuinely realise that your contribution is more valuable than mine.
Bye&Goodluck
Regards
Gopal
Murali Srinivas
15th April 2012, 12:46 AM
இந்த திரிக்கு செழுமையை ஊட்டிக் கொண்டிருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும், ஏன் ஒரு எட்டு மணி நேரத்தில் இப்படி ஒரு ரண களம்? ஏன் நண்பர்கள் ஒருவருக்கொருவர் இப்படி ஒரு சில பதிவுகளை இங்கே பதிவிட்டு ஒரு கசப்புணர்வை உருவாக்க வேண்டும்?
இங்கே தொடர்ந்து பதிவிடும் அனைத்து நண்பர்களும் நடிகர் திலகத்தின் மேல் மாறா அன்பு கொண்டவர்கள்தான். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்களில் வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கும். எல்லோரும் ஒருமித்த கருத்து உடையவர்களாக இருக்க முடியாது. அதில் நாம் தெளிவடைந்து விட்டோம் என்றால் இந்த கருத்து மோதல்களுக்கு இடமிருக்காது.
இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இங்கே இருக்க கூடிய நமது நண்பர்களை எடுத்துக் கொள்வோம். ஜோ நடிகர் திலகத்தின் வெறியர். ஆனால் அவரின் அரசியலோடு ஒத்துப் போகிறவரில்லை. நமது சுவாமி மற்றும் வாசு அவர்களை எடுத்துக் கொண்டோமோனால் அவர்கள் நடிகர் திலகத்தை அந்த கலை தெய்வம் சரஸ்வதியின் அம்சமாக பார்க்கிறவர்கள். ராகவேந்தர் மற்றும் சந்திரசேகர் அவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் நடிகர் திலகம் எடுத்த அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் ஆதரிக்க கூடியவர்கள். சாரதா மற்றும் கார்த்திக் நடிகர் திலகத்தின் நடிப்பையும் அரசியலில் தி.மு.க.வையும் ஆதரிப்பவர்கள். சாரதி மற்றும் கிருஷ்ணாஜி, சிவாஜி என்ற நடிகரை மிகவும் நேசிப்பவர்கள் [மனதில் தேசியவாதிகள்].
இப்போது என்னை எடுத்துக் கொண்டால் அவரின் படங்களை ரசிக்கும் நான், பெருந்தலைவரின் மறைவிற்கு பிறகு அவர் எடுத்த அரசியல் நடவடிகைகளில் உடன்பாடு இல்லாதவன். இன்னும் சொல்லப் போனால் இந்த ஒரு விஷயத்தை பொறுத்தவரை நான் ராகவேந்தர் சார் அவர்களோடு கருத்து வேறுபாடு உடையவன். பலமுறை அவரோடு இதைப் பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் எங்கள் வாதம் நாகரீகமான எல்லையை தாண்டியதில்லை. எப்படி எனக்கு என் கருத்தோ அது போல அவருக்கு அவர் கருத்து.
இன்று நடந்ததும் அதேதான். 80-களில் வெளிவந்த அவரின் சில படங்களைப் பற்றி ரசிகர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு சில தவறான படங்களில் அவர் நடித்தார் என்பது உண்மைதான். ஆனால் blanket rejection என்று சொல்வார்களே அதைப் போன்று ஒரு காலக் கட்டத்திற்கு பிறகு வந்த அனைத்துப் படங்களையும் ஒரே தராசில் வைத்து பேசுவது சரியில்லை. ஆனால் அப்படி ஒரு கருத்து உருவானதற்கு காரணம் அதற்கு முந்தைய ஒரு முப்பது வருட காலக்கட்டத்தில் அவரே ஏற்படுத்திய பெஞ்ச்மார்க். இப்போது ராகவேந்தர் சார் குறிப்பிட்ட என்னென்பதோ ஏதேன்பதோ பாடலை திரையில் 1981-ல் பார்க்கும் போது கூட அதற்கு சரியாக 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த மலர்களை போல் தங்கை நினைவிற்கு வந்தால் அதற்கு காரணம் நடிகர் திலகம்தானே.
கோபாலைப் பொறுத்தவரை இளைய தலைமுறையினருக்கு நடிகர் திலகத்தை சேதாரம் இல்லாமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். என்னை அநேகமாக எல்லா நாட்களிலும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் அவர் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அலசுவதே கேட்பதற்கு மிகுந்த சுவையாக இருக்கும். அவரின் ஆதங்கம் என்னவென்றால் நமது திரியை படிப்பவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல பல தரப்பட்ட மக்களும் அடங்கும். அவற்றில் கணிசமான இளைய தலைமுறையினரும் இருக்கிறார்கள். அவர்களிடையே நாம் ஒரு தவறான படத்தை promote செய்கிறோம் என்று எண்ணம் தோன்றி விடக் கூடாதே அதன் காரணம் அவர்கள் சிவாஜியை தெரிந்து கொள்ளாமல் விலகி சென்று விடக் கூடாதே என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. ஆனால் அதை அவர் வெளிப்படுத்திய விதம்தான் தவறாக போய்விட்டது. குறிப்பாக அவர் பயன்படுத்திய வார்த்தையை அவர் தவிர்த்திருக்கலாம். அது ராகவேந்தர் சார் மற்றும் வாசு அவர்களின் மனதை பாதித்திருக்கிறது. அவர் அதை உணர்ந்து தன் வார்த்தையை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அது போல் ராகவேந்தர் சாரும் ஒரு உணர்ச்சி வேகத்தில் கோபால் அவர்களை மாற்று முகாமை சேர்ந்தவர் என்பது போன்ற குற்றச்சாட்டை சொல்வதை தவிர்த்திருக்கலாம். நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை சிவாஜியை தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்ளாத கோபால் அவர்களை இந்த வார்த்தை காயப்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அவரின் அனைத்துப் படங்களையும் ஒத்துக் கொண்டால்தான் அவரின் ரசிகர்கள் இல்லையென்றால் அவர்கள் ரசிகர்கள் இல்லை என்பது என்னைப் பொறுத்தவரை நியாயமான வாதம் இல்லை.
இதை மேலும் வளர்க்காமல் அனைவரும் நடந்தவற்றை மறந்து திரிக்கு திரும்ப வேண்டும். ராகவேந்தர் சார், வாசு சார் மற்றும் கோபால் சார் அனைவருக்கும் என் வேண்டுகோள் என்னவென்றால் நடந்தவற்றை மறந்து முன் போல் அனைவரும் ஒரே தோழமை உணர்வுடன் மீண்டும் பதிவிட வேண்டும்.
இங்கே யாரால் யார் மனம் புண்பட்டிருந்தாலும் சரி அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்
pammalar
15th April 2012, 03:10 AM
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பதிவுகளைப் பற்றிய பாராட்டுதல்களுக்கும் தலை வணங்குகிறேன்.
தங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ நம் நடிகர் திலகத்தை உளமார வேண்டுகிறேன்.
தங்களால்தான் காணக் கிடைக்காத பல அரிய ஆவணப் பதிவுகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அதுவும் வியட்நாம் வீடு, அவன்தான் மனிதன் போன்ற படங்களின் விமர்சனங்கள் அன்றைய பத்திரிக்கைகளின் வாயிலாக நீங்கள் வழங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நான் அது போன்ற பத்திரிக்கைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கிடைப்பது மிக அரிதாக குதிரைக்கொம்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது. சேர்த்து வைத்திருந்த சில ஆவணங்களும் சரியான பராமரிப்பின்றி சேதமுற்று விட்டன. ஆனால் எங்களை விட தாங்கள் வயதில் குறைந்திருந்தாலும் சிறுவயது முதற்கொண்டே சிறுத்தொண்டர் போல நம் இறைவனாரின் மேல் உள்ள அளவு கடந்த பக்தியினால் இந்தியாவெங்கும் தேடி அலைந்து குருவி சேர்ப்பது போல உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காக மெனக்கெட்டு செலவிட்டுள்ளீர்கள்.
அதுமட்டுமல்ல. எனக்கு தலைவர் பற்றிய அரிய ஆவணம் ஒன்று கடலூரில் ஒரு கடையில் கிடைத்தது. அதை வாங்கலாம் என்று விலை விசாரித்தால் அதற்கு கடைக்காரர் சொன்ன விலையில் என் தலை சுற்றியது. இரண்டாவது அக்கால பொம்மை, பேசும்படம், சினிமா எக்ஸ்பிரஸ்,ஜெமினி சினிமா போன்ற பத்திரிக்கைகளைக் கேட்டால் இன்றைய தலைமுறையினர் பல பேர் சிரிக்கிறார்கள். அக்காலத்து ஆசாமிகளோ அதெல்லாம் "இப்போது எப்படி சார் கிடைக்கும்? என்று ஏளனப் பார்வை வீசுகிறார்கள். அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் அதற்கு அவர்கள் சொல்லும் விலையே தனி. பெரிய நூலகங்களில் கேட்டாலோ அங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். விதிமுறைகள்.
ஆனால் நாங்கள் செய்த பாக்கியம் எல்லோருக்குமாய் சேர்த்து நீங்கள் கிடைத்து விட்டீர்கள். தாங்கள் இதற்காக எவ்வளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. எவ்வளவு ஆவணங்கள்!. எவ்வளவு புகைப்படங்கள்!
நம் தலைவரின் ரசிகர்கள் விழா எது எடுத்தாலும் பேனர்களுக்கு புகைப்படம் வேண்டுமா... படங்களைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் ஆதாரத்துடன் வேண்டுமா...தலைவரைப் பற்றிய புத்தகங்களுக்கு அனைத்து விஷயங்களும் வேண்டுமா... கல்யாணப் பத்திரிகை அடிக்க தலைவரின் ஸ்டில் வேண்டுமா....
"கூப்பிடு பம்மலாரை"
என்று அனைவரும் ஒரு சேர அழைப்பது தங்களைத் தான். அந்த நம்பிக்கைக்கும் தாங்கள் பங்கம் வைக்காமல் கேட்டவருக்கு கேட்டபடி 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா' என்ற கூற்றுக்கேற்ப ஆவணங்களையும், ஸ்டில்களையும் கர்ணனாய் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீகள். அவ்வளவு ஆவணகளையும் எலி, கரப்பான், கரையான், மழை, புயல், வெயில் அனைத்தையும் மீறி பாதுகாப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. பல்வேறு இடங்களில் சுற்றி தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து வைத்துள்ள அபூர்வ ஆவணங்களையும், புகைப்படங்களையும் எங்களுடன் மனமகிழ்ச்சியோடு தாங்கள் பகிர்ந்து கொள்வது தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் மரியாதையை மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறது. ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் பணமாக மாற்றி கொள்ளத் துடிக்கும் இந்தக் காலத்தில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் இரவு பகல் பாராமல் திரிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு மிக உயர்ந்த உள்ளமும், எண்ணமும் வேண்டும். அது தங்களிடம் தாராளமாய் உள்ளது. பகலில் தாங்கள் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவுடன் பல இரவுகளில் தூங்காமல் கண் விழித்து திரியே கதியென்று இருப்பதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். கை பேசியைக் கூட சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இடைவிடாமல் பதிவுகள் இட்டதை நான் நன்கு அறிவேன்.
ஏதோ உங்களைப் புகழ்வதற்காக இதை எழுதுகிறேன் என்று தாங்கள் நினைக்க வேண்டாம். நானும் ஆவணைங்களுக்காக அலைந்து திரிந்து ஏமாந்ததுதான் மிச்சம். 'சே' என்று அலுத்து, சலித்து, வெறுத்து விட்டு வந்து விட்டேன். விடா முயற்சி சென்று வெற்றி பெறுவதற்கு நான் ஒன்றும் பம்மலார் அல்லவே!
அன்பன்
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தமிழ் அகராதியில் 'பெருந்தன்மை' என்ற சொல்லுக்கு இணைச்சொற்களை சேர்க்க வேண்டுமென்றால் அதில் சிவாஜி கணேசன், வாசுதேவன் என்ற இரண்டு பெயர்களை மட்டுமே சேர்க்க முடியும். பெருந்தன்மையில் நடிகர் திலகத்தின் மறு உருவமாகத் திகழும் தாங்கள் அளித்த பாராட்டுப் பதிவுக்கு, புகழுரைக்கு நான் நன்றி தெரிவித்து சாத்தியம் ஆகுமா? இதயத்தின் ஆழத்திலிருந்து இதயபூர்வமாக வெளிவந்திருக்கும் தங்களது மிச்சம் வைக்காத உச்சமான பாராட்டுப் பதிவுக்கு எளியவனான இந்த சிறியேன் தலைவணங்குகிறேன். தங்கள் புகழுரையின் மூலம் என் ஜென்மபலனை அடைந்தேன். என்னுடைய இந்த நாற்பதாண்டு கால பூலோக வாழ்வில் என்னை இதுபோன்று வானளாவ மிக உச்சமான முறையில் எவருமே பாராட்டியதில்லை என்பதையும் மனப்பூர்வமாகத் தெரிவிக்கிறேன். தங்களின் பதிவுக்கு எனது ஆத்மார்த்தமான கோடானுகோடி நன்றிகள் !
எல்லாப் புகழும் கலைதெய்வமான இதயதெய்வத்தின் திருவடிகளுக்கே அர்ப்பணம் !
ஆனந்தக்கண்ணீர்ப் பெருக்கில்,
உங்கள் பம்மலார்.
sivajidhasan
15th April 2012, 07:11 AM
திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன். நமக்குள் வாதம் ஏற்படலாம். ஆனால் பேதம் ஏற்பட்டுவிடக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட இது போன்ற கருத்து முரண்பாடுகளால் தான் நடிகர் திலகம் ஏற்கனவே பல வெற்றிகளை தவற விட்டிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. எனவே, அனைவரும் ஒன்று கூடி அந்த தேரை இழுத்து அந்த மகா கலைஞனுக்கு பெருமை சேர்ப்போம். வாருங்கள்! ஒன்று கூடுங்கள்!! வெற்றி காணுங்கள்!!!.
நட்புடன்!
joe
15th April 2012, 08:10 AM
முரளி சார்,
மிக அருமையா சொன்னீங்க ..அப்படியே வழிமொழிகிறேன்.
NOV
15th April 2012, 08:15 AM
Dear Mr. Gopal
ungal sEvai ingu thEvai..... http://www.mayyam.com/talk/showthread.php?9727-Introducing-Sivaji-Ganesan-to-the-younger-generation/page3
Gopal.s
15th April 2012, 10:18 AM
I accept all your suggestions and I am not against any individual or group.My apologies to Vasu Sir,Raghavendar Sir again.
My objective is simple-
1)To take NT to all the sections and demography by establishing that he is the best in the world and select the best ones to kindle the interest in the young minds and neutral readers.
2)To reserve the appreciation sessions on the hubbers on the occasions and not doing it like Rani,Dhinathanthi Vasagar Kaditham.It creats boredom and the good and purposeful articles on NT getting buried in such trivial compliments.
3)Seperate informations and Stills from critical analysis in seperate threads to justify both.
4)It is not a place for Sycophancy and yes group who rates all his movies as the same.Even NT had preference for some of his movies.All movies are equal but some movies are more equal.
5)Others can not put condition that if you are a fan,you have to weigh Deiva Magan and Sandhippu in equal scale which is not at all acceptable.
6)When I wrote about Deiva Magan and Uthama Puthran,I was compelled and advised to write about Harischandra and Sumangali which I cant do it whole heartedly.
7)No thread can operate without some sanity and purpose ,the objective is not to fill pages after pages without quality content.It becomes a Fan Club Pamphlet.
Gopal.s
15th April 2012, 10:58 AM
I also make it very clear that dividing line between good and bad is not success.Success or Failure is not a baro meter of Quality.It is only the relevance to contemporary taste and timeless classics that I am suggesting.Again Vasu Sir,All the after 1981 indicated in your excellent write up figured in my short-list.
Pl.have an objective re-look at my articles and my short-list.
Even now,I dont consider myself equal or in the league of Pammalar Sir,Vasu Sir,Raghavendar Sir ,Murali Sir who all will be looked up for directions and I follow.No problem.But say yes or no to my suggestions after a review.
ScottAlise
15th April 2012, 12:32 PM
Movie with many firsts
• When first released, Karnan was the first of the mythology series that made a comeback in the 1960s. It was an answer to the “rationalistic” dialogue that was catching up in the early 50s and almost drowned the mythology genre — a trendsetter, even then.
• With its re-release, Karnan became the first Tamil classic to be fully digitally restored.
• The first to be re-released in 72 centres across Tamil Nadu.
• The first to be re-released in 10 screens in Chennai City.
• The first re-release to celebrate 25 days in 30 centres, 5 in Chennai and 4 in Madurai.
• Despite the Examination season and the IPL, it is enjoying a healthy collection with many shows sporting the ‘Houseful' sign.
ScottAlise
15th April 2012, 12:33 PM
Nagesh on Thiruvilayadal
In his autobiography, Nagesh wrote, “Everyone kept telling me that I had done a superb job and at times stole the scene from the hero, so I was extremely scared it might not see the light of day as the director was struggling to trim the film's length. One day when I was in the recording theatre, Sivaji walked in and wanted to see the “Dharumi” piece. He did not notice me in the dark sound engineers' room. He watched it once and then wanted to see it again — by this time I was sure that my scene, especially the solo lamenting, would be axed. To my astonishment, Sivaji turned and said, ‘Do not remove a single foot from this episode as well as the episode featuring T. S. Balaiah. These will be the highlights of the film. This is my opinion, but as the director, you have the final say. Whatever dubbing additions have to be done, get that fellow (Nagesh), lock him up in the studio and don't let him run away till he completes it to your satisfaction. He has done outstanding work.' Such was his generosity to his fellow actors.”
How prophetic, for these two turned out to be all-time favourites and the backbone for the film's success.
ScottAlise
15th April 2012, 12:34 PM

15th April 2012, 12:36 PM
The recent release and success of the classic Karnan has prompted a lot of interest in the revival of other mythological classics in Tamil cinema. Myths and legends were the predominant subject in the early years of both Silent and Talkie Cinema. By the late Fifties, social themes took over and the contribution of Dravidian leaders to this cannot be denied. The one person who brought mythological stories back to the screen was A. P. Nagarajan.
His son, C. N. Paramasivan, an NRI businessman, says the warm response to the re-released Karnan has encouraged him to seriously consider restoring his father's films such as Thiruvilayadal, Saraswathi Sabatham, Thiruvarutchelvar and Thillana Mohanambal. “As they have all been watched over and over again by people on television, the restoration has to make a marked difference to moviegoers. We need to offer them something more than just a good quality print — like converting them to 3D. Some of the other films of my father such as Kandhan Karunai, Karaikal Ammaiyar, Thirumalai Deivam and Sri Krishna Leela too will be taken up if the restoration costs come down,” says Paramasivan.
Akkammapettai Paramasivan Nagarajan was born in a family of wealthy landowners on February 24, 1928, and christened Kuppuswamy. His father, Paramasiva Gounder, died when Nagarajan was a young boy; within a few months, he lost his mother, Lakshmi Ammal, too. His maternal grandmother, Manicka Ammal, took charge of the boy. Afraid that he might not be cared for by the family, she admitted him to a drama company without informing them of the boy's antecedents. Later he shifted to Avvai T. K. Shanmugam's drama company. As there were many Kuppuswamis, his name was changed to Nagarajan. Nagarajan learnt the basics of theatre and rose to play the lead in the play “Gumasthavin Penn.” A remarkable actor, he brought to life all the roles he donned, his early “sthreepart” roles being very popular with the audience. He worked in the Madurai Jayarama Sangeetha Boys Company as well as Sakthi Nadaga Sabha, along with Sivaji Ganesan and Kaka Radhakrishnan.
Nagarajan started his own drama company, the Pazhani Kadiravan Nadaga Sabha, and, in 1949, married Rani Ammal. He wrote and acted in several plays and one of his plays “Nalvar” was made into a movie. Nagarajan wrote the screenplay for his own story and play the hero in this film. His film career thus began in 1953. In an interview to a magazine, he mentioned his father's name as well as his ancestral village Akkammapettai. Some of his family members read this article and came down to meet him and he was re-united with his family after almost 20 years.
He also acted in many movies for producer M. A. Venu, formerly of Modern Theatres, such as Mangalyam, Nalla Thangal and Pennarasi. He wrote the screenplay for Town Bus and by 1956 decided to focus on writing. He wrote Naan Petra Selvam and Makkalai Petra Maharasi — in the latter, he introduced the ‘Kongu' Tamil accent for the hero. The first of his many mythological films — Sampoorna Ramayanam (1958) — was a big success, and Rajaji, who had little regard for cinema, watched this film and praised Sivaji Ganesan's performance as Bharatha in it. He then started to produce in partnership with actor V. K. Ramaswamy. Some of the works of this period include Nalla Idaththu Sammandham (1958), Thayai Pol Pillai, Noolai Pol Selai (1959) and Paavai Vilakku. He made his directorial debut with Vadivukku Valaigaappu (1962). He launched his own production company with Navarathri and then went on to make a mark in the field of mythological cinema as well.
In 1965, a year after the release of Karnan, Thiruvilayadal hit the screens and set box office records. This was followed by Saraswathi Sabatham, Kandhan Karunai, Thiruvarutchelvar, Thirumal Perumai, Agasthiyar, Thirumalai Deivam, Karaikaal Ammaiyar and Sri Krishna Leela. He made Thillana Mohanambal and Raja Raja Chozhan, both of which too deserve to be restored.
A. P. Nagarajan passed away in 1977 — a self-taught man whose life was as much an epic as were his movies.
RAGHAVENDRA
15th April 2012, 12:38 PM
The postings no. 2855 and 2858 by ragulram have been quoted from The Hindu. The link for that page is given below:
http://www.thehindu.com/arts/cinema/article3314719.ece
Thank you ragul.
RAGHAVENDRA
15th April 2012, 12:48 PM
டியர் கோபால்,
தங்களுடைய கருத்துக்களில் இங்கு பெரியதாக யாரும் மாறுபடவில்லை. அதே போல் உருப்படாத படங்களையெல்லாம் யாரும் இங்கு தலையில் தூக்கி வைத்து ஆடவும் இல்லை. ஒவ்வொரு படத்திலும் நடிகர் திலகத்தின் பங்கு அவருடைய ஆற்றல் இவற்றைத் தான் இந்தத் திரியில் 7 பாகங்களைக் கடந்து 8ம் பாகம் வரையிலும் அனைவரும் எழுதி வந்திருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய தொனி தாங்கள் தான் புதிதாக நடிகர் திலகத்தை நேர்மையாக விமர்சிப்பது போலவும் இதுவரை செய்தவர்கள் அனைவரும் வெறுமனே ஜால்ரா தட்டி எழுதி வருபவர்கள் போலவும் தோன்றுகிறது. தாங்கள் இது வரை வந்த அனைத்து பாகங்களையும் முழுமையாக ஒரு தரம் நேரம் செலவிட்டு படிக்கவும். இங்கு எல்லோருமே விமர்சனங்களை பாரபட்சமின்றி செய்து வருகிறார்கள். யாரோ ஒரு காலத்தில் நடிகர் திலகத்தை நடிப்பைத் தவிர மற்ற அனைத்து கோணங்களிலும் செய்த விமர்சனங்களை, அதுவும் தற்போதைய தலைமுறை சற்றும் கவலைப்படாத விமர்சனங்களை மீண்டும் நாம் ஏன் கிளற வேண்டும். தற்போதைய தலைமுறையில் ரசிகர்கள் தனிப்பட்ட மனிதனை விட அவருடைய திறமையை வைத்து எடைபோடத் தெரிந்த புத்திசாலிகள். நிறைகுறைகளை சரியாக எடை போடத்தெரிந்த அறிவாளிகள். அவர்கள் 80க்குப் பிறகு தான் பிறந்திருப்பார்கள். அவர்கள் காலத்தில் நடிகர் திலகத்தை அவர்கள் பார்த்ததை வைத்தே ரசிகர்களானோர் பலர். அப்படிப் பட்ட உள்ளங்களில் நாமே வலியச் சென்று இந்தப் படங்களைப் பற்றி - தவறான கருத்தை திணிக்க வேண்டும் அதை அவர்கள் தீர்மானிக்கட்டுமே... அப்படிப் பட்ட படங்களில் அவருடைய நடிப்பை நாம் அலசுவதில் என்ன தவறு உள்ளது. தோல்விப் படங்கள் எல்லா காலகட்டங்களிலும் எல்லா கலைஞர்களும் சந்தித்தவை.
இந்தக் கண்ணோட்டத்தில் தான் நான் நடிகர் திலகத்தை ரசிக்கிறேன். நேர்மையான விமர்சனம் என்கிற மூகமூடியை அணிந்து அவரைத் தாறுமாறாக விமர்சிக்கும் தைரியமும் எண்ணமும் எனக்கு இல்லை என்பதில் நான் பெருமைப் படுகிறேன்.
Gopal.s
15th April 2012, 01:09 PM
Thanks Raghavender Sir.Pl.Go thru all my articles.Not even one wrong word about his later movies or about Acting God that I mentioned to invite your reprimand charging me as Maatru Mugaam. I consider this as the ultimate insult for any decent human being.I can never think of anyone other than our God of Acting till my last breath and Be assured of this fact.I follow you,Vasu Sir as I mentioned in my earlier post.
RAGHAVENDRA
15th April 2012, 01:19 PM
அன்பு நண்பர்களே,
எனக்கும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதவேண்டும் என்கிற எண்ணம் சற்றும் இல்லை. மனதில் பட்டதைத் தான் எழுதுகிறேன். நடிகர் திலகம் என்கிற உன்னத கலைஞனின் திறமையையும் ஆற்றலையும் முழுவதுமாக ஆய்ந்து அறிந்தவர்கள் இதுவரை யாரும் இல்லை என்பதே உண்மை. ஒவ்வொரு முறையும் புதிய கோணங்களில் காட்சியளிக்கும் அவரது அபார நடிப்பாற்றலை வெளிக் கொணர வேண்டும் அதே சமயம் அதில் விருப்பு வெறுப்போ அல்லது கால பாகுபாடோ தேவையில்லை என்பதே என் கருத்து. தான் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் 100 சதவீதம் வஞ்சனையின்றி உழைத்த நேர்மையாளர் நடிகர் திலகம். அதே போல் அவருடைய அரசியலும். இதைப் பற்றிப் பல முறை நாம் எழுதி யிருக்கிறோம்.
எனவே எந்த வித தனிப்பட்ட தாக்குதலும் என்னுடைய உள்ளத்திலிருந்தோ எழுத்திலோ இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய இந்த விவாதத்தில் பம்மலார் மற்றும் வாசுதேவன் சார் அளித்து வரும் ஆவணப் பதிவுகளைப் பாராட்ட மறந்து விட்டோமோ என என்னுள் தோன்றுகிறது. ஏப்ரல் ஏஞ்சலின் அணிவகுப்பு மேலும் தொடர வேண்டும். நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகளை ஆவணங்களின் மூலம் நிரூபித்து அனைத்து தவறான கண்ணோட்டங்களையும் தவிடு பொடியாக்கி மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் உழைத்து வரும் வாசு மற்றும் பம்மலாருக்கு நம் உளப் பூர்வமான பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம்.
RAGHAVENDRA
15th April 2012, 01:22 PM
அன்பு கோபால்,
தங்களை மாற்று முகாம் என்று நான் எங்கேயாவது குறிப்பிட்டுள்ளேனா அல்லது தங்களுடைய ரசிகத்தன்மையைப் பற்றியாவது குறிப்பிட்டு எழுதியுள்ளேனா. மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களையே நீங்களும் வைக்கிறீர்கள் என்று தான் எழுதியுள்ளேன். இதற்காக தாங்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுதுவது தேவையில்லை. அப்படி என் எழுத்து தங்களுக்கு கடுமையான மனக் குறையைத் தந்திருந்தால் அதற்காக நான் நிச்சயம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் எந்த சாதனையும் உருவானதில்லை. உளமார்ந்த கருத்துப் பரிமாற்றங்களைக் கொண்ட திரி என்ற சாதனையை நாம் உருவாக்குவோமே.
அன்புடன்
Gopal.s
15th April 2012, 01:36 PM
We will forget all the differences and Let us take it forward to sing our God's fame further.Pamalar Sir,Vasu Sir should continue as usual.As I mentioned,I'll stay aside and enjoy your writings as I mentioned earlier.Thanks for all your understanding and magnanimity.
sivajidhasan
15th April 2012, 01:57 PM
அன்பு திரு.சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நம் இருவருக்கும் (இதில் பம்மலாரும் அடங்குவார்) ஒரே சிந்தனைதான் என்பதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.சமீபத்தில்தான் நானும், பம்மலாரும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் கருத்தைத் தாங்கள் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். இதைத்தான் vibration என்கிறார்களோ!
பொதுவாகவே எல்லோரும் ஏன் நமது ரசிகர்களும் கூட ஏதோ இருநூறு படங்களுக்கு மேல் வந்த தலைவரின் படங்கள் சுமார் ரகம் தான். இருநூறோடு அவர் நிப்பாட்டி இருக்கலாம் என்று கூறுவார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய படங்களின் தரத்தை புதிய படங்களில் காண முடியாது என்பது வேறு விஷயம். அதற்காக பழைய படங்களின் தரத்தை அப்படியே புதிய படங்களில் எதிர்பார்க்காமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே! நான் குறிப்பிடுவது இப்போது வரும் புதுப் படங்களை அல்ல. இருநூறுக்கு மேல் வந்த தலைவரின் திரைப்படங்களைப் பற்றி.
திரிசூலத்திற்குப் பிறகும் பல நல்ல படங்கள், வெற்றிப்படங்கள் வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது என்னுடைய சொந்தக் கருத்து.
திரிசூலத்திற்கு அடுத்து 201- ஆவது படமாக வந்த 'கவரிமான்' ஒரு அற்புதமான படம் என்று எல்லோராலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைவர் கூட இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களிடம் "செதுக்கி செதுக்கி அழகான சிற்பமாய் இப்படத்தை வடித்திருக்கிறாய். ஜனங்கள் ரசிப்பார்களா?" என்று கேட்டாராம். அந்தப் படத்தை தரக் குறைவாக யாருமே விமர்சித்ததே இல்லை. அதற்கு முன்னால் வந்த திரிசூலத்தின் விஸ்வரூப வெற்றியினால் கவரிமான் பாதிக்கப்பட்டதே தவிர நல்ல படம் என்ற பெயரை அது இழக்கவே இழக்காது. மிகப் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அது தோல்விப்படமல்ல. (பம்மலாரின் 'கவரிமான்' பதிவின் குறிப்பில் இதனை கவனித்திருப்பீர்கள்).
'நல்லதொரு குடும்பம்' அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. எங்கள் கடலூரில் 40- நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை அள்ளித் தந்தது அப்படம்.
'இமயம்' தோல்விப் படமென்றால் கூட இப்போது பாருங்கள். very intersting -ஆன தலைவரின் நடிப்பு முத்திரைகளைத் தன்னகத்தே கொண்ட படம்.
'நான் வாழ வைப்பேன்' நல்ல வெற்றிப்படம். ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படம். நம் தலைவரும் அருமையாகப் பண்ணியிருப்பார்.(முக்கியமாகத் தலைவலி வரும் காட்சிகளில்)
'ரிஷிமூலம்' அனைவராலும் பாராட்டுப் பெற்று வெற்றியடைந்த படம்.
'எமனுக்கு எமன்' ஜாலியாகப் போகும் படம். சிரிப்புக்கு 100% உத்திரவாதம்.
'சத்திய சுந்தரம்' எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை அளித்த கலகலப்பான குடும்பப்படம். குவியல் குவியலாக தாய்மார்கள் இப்படத்தைக் கண்டு களித்தார்கள். நல்ல குடும்பப் படமாக குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இதே வரிசைகளில் கல்தூண், கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, வசூலில் அட்டகாசம் செய்த சங்கிலி (பொதுவாக இரவுக்காட்சிகள் 9.30 அல்லது 10.00 மணிக்குத் துவங்கும். ஆனால் சங்கிலி கதையே வேறு. கடலூரில் இரவு பதினோரு மணிக்குள் இரவுக்காட்சி முடிந்துவிடும். இந்தப் படம் மட்டுமே அந்தப் பெயரைத் தட்டிச் சென்றது. அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. ஷோ கணக்கெல்லாம் கிடையாது. படம் விட்ட ஐந்தே நிமிடங்களில் அரங்கு நிறைந்து விடும். இப்படி பேயக்கூட்டத்துடன் எங்கள் ஊரிலும் ஓடி வசூலை வாரி அள்ளினார் 'சங்கிலி').
தீவிர வசூல் வேட்டியாடிய தீர்ப்பு, அற்புத நடிப்பைக் கொண்ட தியாகி, கேஷுவல் நடிப்பில் மனதை உருக்கிய துணை, மறுபடியும் பிராமணராக நடிப்புக் கொடி நாட்டிய பரிட்சைக்கு நேரமாச்சு, படித்ததின் பயனை மறந்து, காதலில் உழன்று, கடமையை மறந்து, பிறந்த கிராமத்தையே உதாசீனப்படுத்தும் தன் தம்பியை வித்தியாசமான அணுகுமுறையில் திருத்தி, கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வைக்கும் கிராமத்தானாக நடித்து, நல்ல மெசேஜை சொல்லிய ஊரும் உறவும், வெள்ளி விழாக் கண்ட நீதிபதி, கேலி செய்தோரின் வாயை அடைத்து வசூலில் பின்னியெடுத்த மசாலாக் கலவை சந்திப்பு, மிருதங்க வித்வான்களே மெய் சிலிர்த்துப் பாராட்டிய மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை மனம் கொண்ட பாதராகவும், கர்ஜனை புரியும் போலீஸ் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் கலக்கிய வெள்ளை ரோஜா, திரும்பவும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய திருப்பம், வசூலிலும், நடிப்பிலும் வரலாறு படைத்த வாழ்க்கை, மழலையின் மேல் பாசம் வைத்து மலைக்க வைத்த நடிப்பைப் பகிர்ந்து கொண்ட பந்தம், முக்காலமும் தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் முதல் மரியாதை, விசுவாமித்திரரை வியக்கும் வகையில் நடிப்பால் நமக்குக் காட்டிய ராஜரிஷி, அண்ணனின் அன்புப் பாசத்தை தம்பிகளிடம் கண்களிலேயே பிரதிபலித்த படிக்காதவன்,
இயக்குனர் வேடத்தில் இதயத்தை வருடிய சாதனை,
படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்த மருமகள்,
ஸ்டைலிலும், நடிப்பிலும் ஜமாய்த்த ஜல்லிக் கட்டு,
தேவர்களும் மயங்கும் நடிப்பைக் கொண்ட தேவர் மகன்,
மகள் விதவையான சோகத்தை நேரிடையாகக் கண்டு அனுபவித்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகும் பசும்பொன்,
ஜாலியான அறுபது வயது இளைஞனாக யூத்களுடன் கும்மாளமிட்ட ஒன்ஸ்மோர்,
மோகன்லாலுடன் இணைந்து மோகன நடிப்பை வழங்கிய, மலையாளத் தமிழ் பேசிய ஒரு யாத்ராமொழி,
கடைசி வரையிலும் கரகாட்டம் ஆடி களேபரம் செய்த என் ஆச ராசாவே,
காதலர்களை இணையவைக்கும் முதியவராக இளையவர்களுக்கு ஈடு கொடுத்த பூப்பறிக்க வருகிறோம்
என்று தன் திறமை இறுதி வரை குறைந்ததல்ல என்று அவர் வாழ்நாள் முழுதும் தன் திறமையைக் காட்டினார் என்றுதான் கூற வேண்டும்.
அவருடைய முன்னாள் படங்களோடு இருநூறுக்கும் மேல் வந்த படங்களை ஒப்பிடுவதே தவறு. பின்னாட்களில் அவர் படங்கள் வேஸ்ட் என்பது தவறு என்பதும் என் தாழ்மையான கருத்து. பின்னாட்களிலும் மிகச் சிறந்த படங்களை அவர் தந்திருக்கிறார். நல்ல வித்தியாசமான நடிப்பையும் நமக்கு வழங்கி விட்டுத்தான் போய் இருக்கிறார். சில படங்கள் அவர் பெயரைக் கெடுத்திருக்கலாம். அவரும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சிறப்பாகவும், வெற்றியுடனும் செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏற்றத் தாழ்வுகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு. இருநூறுக்கு முன்னாலும் அவருடைய மோசமான படங்கள் இருக்கின்றன. தோல்விப்படங்களும் இருந்திருக்கின்றன. எதையும் எதனுடனும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் ஒரு சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.
வெற்றி தோல்விகளை அவரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு படங்களின் தரங்கள் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு இடத்திலாவது அவர் எல்லோரையும் வாயைப் பிளக்க வைத்து விடுவார். மறுபடியும் சொல்கிறேன். பின்னாட்களிலும் அவர் நல்ல படங்கள் பல கொடுத்திருக்கிறார். பிற படங்களில் இல்லாத நடிப்பையும் அளித்திருக்கிறார். அதனால் தான் இத்திரியில் நான் உறுப்பினரானவுடன் தாங்கள் மனதிலுள்ள எண்ணம் எனக்கும் இருந்ததினால் என்னுடைய முதல் ஆய்வுப் படமாக பின்னாளில் வெளியான 'கருடா சௌக்கியமா' படத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டேன்.
சற்று நீண்ட பதிவாகி விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. அவர் விண்ணில் தெய்வமாக வாழ்ந்தாலும் மண்ணில் இருந்த போது அவரும் மனிதர் தான். ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்தான், விருப்பு வெறுப்புகள் அவருக்கும் உண்டு. அவர் அப்போது கடவுள் இல்லை. எல்லாவற்றிலுமே நூறு சதவிகிதம் வெற்றியை எவரும் கொடுத்து விட முடியாது.
இப்படி ஒரு பதிவை நெடுநாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தங்களால் இன்று நிறைவேறிற்று. அதற்காகவும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
நன்றியுடன்
வாசுதேவன்.
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
என்னுடைய கருத்திற்கு உடனடியாக செவி சாய்த்து, பதில் பதிவிட்டமைக்கு என் உளமார்ந்த நன்றி! நீங்கள் பதிவிட்ட இந்த விளக்கங்களே போதும் நடிகர் திலகம் 200வது படத்திற்கு பிறகும் மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பதை உணர. இதுவே ஒரு நல்ல ஆரம்பமாக நினைத்து இனி வரும் காலங்களில் இதை தொடருவோம்.
நன்றியுடன்!
rangan_08
15th April 2012, 06:36 PM
We will forget all the differences and Let us take it forward to sing our God's fame further.Pamalar Sir,Vasu Sir should continue as usual.As I mentioned,I'll stay aside and enjoy your writings as I mentioned earlier.Thanks for all your understanding and magnanimity.
Going thru the last few pages just now.
Welcome Gopal.....Pudhiya Paravayaga thiriyil parakka vazhthukkal.
rangan_08
15th April 2012, 06:39 PM
Heartiest Congratulations for Nadigar Thilagam thread on entering into 6th successful year.
Kudos to Raghavendra Sir, Pammalar, Murali sir, Vasudevan sir, NOV, Joe, Groucho, Partha and other ardent NT fans.
rangan_08
15th April 2012, 06:48 PM
Today i was passing by Perambur barracks road and happen to see a pathetic sight. Yes, the famous Bhuvaneswari theatre has been completely demolished. Now all one can see there is a vacant ground with few concrete remains. I can never forget those wonderful days where I've seen lots of NT's & other films in that theatre.
But then, as the world moves on a feverish pace today, we have to keep going and incidents like Karnan's enormous success is the only respite for us. NT will continue to rule the screen as ever.
Gopal.s
16th April 2012, 01:44 PM
Dear Vau Sir,
I removed this objectionable word from the thread.You can withdraw this posting and request you to be back .I'll put my new postings only after your return.
You know very well that I enjoy special relationship with you and take some liberty.Now I realised you are a Anicham flower(Moppa Kuzhaiyum Anicham) and I avoid any kind of controversy in future.I learnt my lessons and sorry.
Thomasurink
16th April 2012, 04:34 PM

Dear Gopal,
I was little busy.So I could read all the previous pages to day only.
Forget all the differences and be here with pleasure.I can simply say
that in any NT Movie,his role is definitely will be good.
Some of his movies might have flopped in Box Office.But the reason for the
flop will definitely not be his performance.
Any scene in any of his movies-no boby can challenge his performance.
My son who is only 11 years old and a fan of Vijay.He has never seen a full
NT movie.He wanted to see the new Ponmagal vandal song of Vijay for some
dance show.(He has participated in some TV Dance Shows).
When he typed in Youtube Our NT song came.He watched the full song and got
excited.Now he started seeing NT movies.
Then I understood, we have to make this generation to watch NT movies.
We all have enjoyed a lot.But it is our responsibility to give that
oppotunity to the new generation.
Shivaji Mohan
sankara1970
16th April 2012, 06:17 PM
We can't compare the quality of films of 60s with 70's
similarly the quality of films of 80s can't be same as 70s
90s films are generally better than 80s
There may be exceptions, one may have different view.
Even NT had replied to questions, why his films of late 70s are not the same as earlier films.
a recent posting of NTs interview in this thread, explains these questions
NT had to compete with young actors in late 70s and 80s.
by then he was only acting as more of supporting role than lead role
or
The general film goer was comparing NT with other actors(rajini/Kamal)
that was wrong.
NT had beaten all those who competed with him-He is the real hero who won time.
we can't even compare one of his films with his other film.
For e.g Kalatta Kalyanam and Bale Pandiya-we may say both are comedy films
but if u start looking at closely, we may find various differences btw both the films.
Note: my daughter 6 yrs old, likes both these films and could not find the different NT's and MR Radha's
rsubras
16th April 2012, 06:21 PM
Also in NT's own words, he leaves it to the director whom he calls as the Captain of the ship.......
ezuxsuc
16th April 2012, 07:21 PM
1253
Karnan is running succesfully,in salem Arrs multiplex
ezuxsuc
16th April 2012, 08:32 PM
Sivaji is a ever green hero
ScottAlise
16th April 2012, 08:35 PM
This 7 threads consists of so many information & photos which is not available in books. So i make a honest appeal, request to Ragavendra, Pammalar, Vasu & other members to compile this into a book which will be a treasure to all NT fans just like earlier books like pasamalar special, sivaji in sigarangal , VelliVizha movies, B/w movies. I did not get reply 4 my earlier posts regarding NT magazine but pl reply 2 this @least
sankara1970
16th April 2012, 09:41 PM
karnan discussion on now in jaya tv
Madan talkies-the main discussion was about Karnan's success
Chitra Lakshmanan, Ramakrihnan, Kumara raja participated
Chitra Lakshmanan informed VPK will be liked if remade similar to Karnan
Kumararaja felt Thillana,Thiruvilayadal,Rathkanneer,Vanchikotai Valiban will do well,if remade
Karnan mania!
Murali Srinivas
17th April 2012, 12:11 AM
Dear Balaa [you are one more Bala],
Welcome to the virtual world of Nadigar Thilagam. Hope your stay here is pleasant and enjoyable. Heard that you are a good artist [saw one sample also] and hope to see more of your creations here.
Ragul,
We have been given to understand that whatever we had written would be brought out in the print format too by the Hub admin. So let us wait for that to happen. Regarding a magazine, it is long pending desire of thousands of fans but the problem of economics and sustainability are the stumbling blocks. Let us hope all these are overcome and let the dawn of such a magazine happen at the earliest.
Mohan (Rangan),
Hope to see you frequent the hub more often. Missed you when there was a healthy argument on Barrister some time back and of course that was in another thread.
Regards
Murali Srinivas
17th April 2012, 12:37 AM
சுவாமி,
இங்கே நிகழ்ந்த ஒரு சில கருத்து வேறுபாடு வாக்குவாதங்களால் தங்களின் பங்களிப்பை ஒத்தி வைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். உங்களையும் உங்கள் சேவையையும் பொறுத்தவரை அவை இங்கே தடைபடக் கூடாத சேவை என்பதே அனைவரின் விருப்பம். ஒரு சில நேரங்களில் நீங்கள் எடுக்கும் பிரயத்தனத்திற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்பது போன்ற ஒரு தோற்றம் உருவானாலும் கூட எனக்கு தெரிந்த வரை நமது திரியின் வழக்கமான பங்களிப்பாளர்கள் அனைவரும் [அவர்கள் தினசரி பதிவிடவில்லை என்றாலும் கூட] உங்கள் பங்களிப்பை பெரிதும் விரும்புபவர்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பலருடனும் நான் பல நேரம் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலம் எனக்கு அது நிச்சயமாக தெரியும். நண்பர் வாசு எழுதியது போல் ஒவ்வொரு ஆவண சேகரிப்புக்கு பின்னால் எத்தனை பெரிய உடல் உழைப்பும் கதையும் இருக்கிறது என்பதை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட நாள் முதலே உணர்ந்தவன் நான். அனைத்து தியாகங்களுக்கும் காரணம் நடிகர் திலகம் என்ற மனிதன் மேல் நீங்கள் வைத்துள்ள பற்று.
இங்கே உள்ள அனைவருக்கும் அதுதான் கோல் போஸ்ட் எனும்போது உங்கள் பங்களிப்பு அவசியமாகிறது. இன்றைய தினம் உலகெங்கும் உள்ள எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றிய மிக சரியான வரலாற்று உண்மைகள் கிடைக்குமிடம் என்று சொன்னால் அது நமது திரிதான் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. அந்த தகுதியை இந்த திரி அடைவதற்கு உங்களின் ஆவணபூர்வமான ஆதாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆகவே ஏப்ரல் ஏஞ்சலின் பட வரிசை தொடரட்டும். நடிகர் திலகத்தை தவிர வேறு யாருக்கும் தலை "வணங்காமுடி"யே, தொடருங்கள்.
அன்புடன்
விரைவில் வீடியோ வேந்தர் வாசுவும் நம்முடன் வந்து இணைந்து கொள்வார்.
Gopal.s
17th April 2012, 10:24 AM
அன்புள்ள பம்மலர்,வாசுதேவன்,
நான் தமிழில் எழுதும் முதல் பதிவு இது.நான் செய்ய கூடாத வேலையை செய்து ஒற்றுமையை குலைத்த குற்ற உணர்ச்சிக்கு என்னை ஆளாக்க வேண்டாம்.நான் நடிகர் திலகதுக்கோ,எனது உயிரரான உங்களுக்கோ கனவிலும் நினைக்காத ஒரு பாவ காரியத்தை செய்த பிழைக்கு என்னை ஆளாக்க வேண்டாம்.என்னை மன்னித்தீர்கள் என்று காட்ட ஒரு பதிவை இன்று போடுங்கள்.வாழ்கையில் இது வரை யாரிடமும் நான் உதவி கேட்டதில்லை.எனக்கு உதவியாக இதை செய்யுங்கள்.ஆவணங்கள் சேர்ப்பது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் அதை சேமிப்பது.இதை செய்பவர்கள் தொழில் முறையில் பயன் பெறுபவர்கள்.ஆனால் பயன் கருதாது நடிகர் திலகத்தின் சேவை ஒன்றையே நினைந்து அதை பணியாக செய்பவரே ,உனக்கு அடிமையாக இருக்கவும் தகுதியற்றவன் நான்.என்னால் நான் சேமித்த சிறு துளி ஆவணங்களை காக்கும் திறன் கூட இருந்ததில்லை.அனால் இவ்வளவு ஆவணங்களை பெற்று,பாதுகாத்து,நாங்கள் அனுபவிக்க கொடுக்கும் வள்ளலே,உனக்கு என் தலை வணங்குகிறது.வாசு,தங்கள் போக முடியாத போது தங்கள் சகோதரியிடம் வேண்டி புகை படங்களை பெற்று ,எங்களுக்கு பார்க்க கொடுத்தீர்கள்.உண்மையாக கடவுள்களில் அதிஷ்டம் அற்ற பிரம்மா போல்,நடிப்பு கடவுள் அதிர்டம் இல்லாதவர் என்று உள்ளுக்குள் அழுதிருக்கிறேன்.ஆனால் பம்மலர் போல் ,வாசு போல்,முரளி போல்,ஒரு ரசிகனை,தொண்டனை பெரும் பாக்கியம் எந்த கடவுளுக்கும் இல்லை.அதனால் இந்த நடிப்பு கடவுளின் கொடுப்பினை வேறு எந்த கடவுளுக்கும் இல்லை என்று பெருமிதம் கொண்டு எனது முதல் பதிவினை ,முதல் மரியாதைக்கு உரிய தங்களுக்கு சமர்பிக்கிறேன்.மன்னிக்க வேண்டுகிறேன்.
KCSHEKAR
17th April 2012, 10:38 AM
Karnan - Trichy News
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/Dinathanthi010.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/Maalaimurasu011.jpg
ezuxsuc
17th April 2012, 03:05 PM
Thank you murali sir,
As far as i can, i will publish my creations, for our GOD SIVAJI.
I would like to tell u one thing,friday i had been to kovai,to see karnan in brooke fields,but i could not get the ticket.
because already tickets had been reserved,even college students want to see karnan,for want of the tickets,
collage students are booking for next day show,i felt very happy in that moment.
ezuxsuc
17th April 2012, 03:13 PM
Thank you chandrasekar sir,
for publishing my first creation in this thread.
goldstar
17th April 2012, 04:57 PM
Guys,
Karnan DTS print at http://www.rajtamil.com/2012/04/watch-karnan-movie-online/.
Cheers,
Sathish
pammalar
17th April 2012, 08:40 PM
டியர் வாசுதேவன் சார்,
ஆகஸ்ட் 2011-ல் நமது நடிகர் திலகம் திரியில் புயலெனப் புகுந்த தாங்கள், கடந்த எட்டரை மாதங்களில், எட்டரை ஆண்டுகளின் சேவையினை எந்தவித பிரதிபலனும் கருதாது செய்துள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தங்களின் இத்தொண்டுக்குப் பின்னால் உள்ள அசாத்திய-அசுர உழைப்பு மிகுந்த போற்றுதலுக்குரியது, சிறந்த பாராட்டுதல்களுக்குரியது. எப்படி நடிகர் திலகத்தை நினைக்காத நாளில்லையோ அதுபோல தாங்கள் இந்தத்திரியில் பதிவுகளை அளிக்க ஆரம்பித்தநாள்முதல் அகிலமெங்கும் உள்ள அண்ணலின் அன்புள்ளங்கள் திருவாளர் வாசுதேவனை நினைக்காத நாளில்லை என்றும் அடித்துக் கூறலாம்.
அப்பேர்ப்பட்ட புகழுக்குரிய தாங்கள், நமது இதயதெய்வத்தின் இந்தத் திரியை திருக்கோயிலாக மதித்து வணங்கும் தாங்கள், சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட உச்சக்கட்ட கருத்து வேற்றுமைகளால், திரியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பது, நமது திருக்கோயிலான இந்தத்திரிக்கு நல்லதல்ல. இந்த உண்மையை இங்குள்ள எல்லோரையும் போல் தாங்களும் உணர்ந்திருப்பவர்தான். எனவே தாங்கள் நடந்தவற்றையெல்லாம் அன்புகூர்ந்து மறந்து, நமது திரிக்குத் திரும்பி, மீண்டும் முன்போல் தங்களின் இணையற்ற-மேலான பங்களிப்புகளை-பதிவுகளை ஆரவாரத்துடன் அளிக்குமாறு தயவுகூர்ந்து மாறா அன்புடனும், மிகுந்த உரிமையுடனும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த பதிவிற்கு தாங்கள் நிச்சயம் செவி சாய்ப்பீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
ஊற்றாகப் பெருகும் பாசத்துடன்,
உங்கள் பம்மலார்.
guruswamy
17th April 2012, 09:09 PM
My Dear N.T. Devoted Fans,
Would like to share a happy news which i feel all our N.T. devoted fans wishes is our beloved N.T. Blessings.
Today, we are blessed with 2nd boy child, nevertheless i really felt it was prabhu for us after ramkumar.
JAIHIND
M. Gnanaguruswamy
joe
17th April 2012, 09:22 PM
guruswamy,
இதயம் கனிந்த வாழ்த்துகள்
RAGHAVENDRA
17th April 2012, 09:58 PM
My Dear N.T. Devoted Fans,
Would like to share a happy news which i feel all our N.T. devoted fans wishes is our beloved N.T. Blessings.
Today, we are blessed with 2nd boy child, nevertheless i really felt it was prabhu for us after ramkumar.
JAIHIND
M. Gnanaguruswamy
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள், குருசாமி அவர்களே...
RAGHAVENDRA
17th April 2012, 10:00 PM
டியர் வாசுதேவன்,
தில்லானா மோகனாம்பாள் நலந்தானா பாடல் வரிகளைப் போல் நாமும் நடந்ததெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம்...
எல்லா பிரச்சினைகளுக்கும் எப்படி நடிகர் திலகம் உதவுகிறார் பாருங்கள்...
அன்புடன்
pammalar
18th April 2012, 01:29 AM
டியர் கோபால் சார்,
நமது வாசுதேவன் அவர்கள் தொடர்ந்து தனது பங்களிப்பை நல்க நமது திரிக்கு கூடிய விரைவில் விஜயம் புரிவார்.
தங்களது மேலான சேவையும் இத்திரிக்கு அவசியம் தேவை. எனவே, தங்களின் பதிவுகளை தொடர்ந்து அளித்து அசத்துங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
18th April 2012, 01:46 AM
My Dear N.T. Devoted Fans,
Would like to share a happy news which i feel all our N.T. devoted fans wishes is our beloved N.T. Blessings.
Today, we are blessed with 2nd boy child, nevertheless i really felt it was prabhu for us after ramkumar.
JAIHIND
M. Gnanaguruswamy
டியர் ஞானகுருசுவாமி சார்,
மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி !
தங்களின் பெரிய குழந்தையும், புதுவரவாக தற்பொழுது அவதரித்துள்ள இந்த இளைய குழந்தையும், நமது நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களான ராம்குமார், பிரபு போலவே, வாழ்வில் எல்லா நலன்களும் பெற்றுத் திகழ்ந்து, தீர்க்காயுளுடன் வாழ்வாங்கு வாழ, எனது வளமான வாழ்த்துக்கள் !
நடிகர் திலகத்தை நேசிக்கும் தங்களைப் போன்ற தேசிய நெஞ்சங்களுக்கு எந்நேரமும், எப்பொழுதும் நல்லதே நடக்கும் !
வந்தே மாதரம் !! ஜெய்ஹிந்த் !!!
பாசத்துடன்,
பம்மலார்.
pammalar
18th April 2012, 02:03 AM
படைப்பாளி பாலா அவர்களே,
வருக ! வருக ! தங்களுக்கு நல்வரவு !
தங்களது வண்ணமயமான பதிவுகளால் இத்திரியை மென்மேலும் செம்மைப்படுத்துக !
அன்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
பம்மலார்.
pammalar
18th April 2012, 02:37 AM
This 7 threads consists of so many information & photos which is not available in books. So i make a honest appeal, request to Ragavendra, Pammalar, Vasu & other members to compile this into a book which will be a treasure to all NT fans just like earlier books like pasamalar special, sivaji in sigarangal , VelliVizha movies, B/w movies. I did not get reply 4 my earlier posts regarding NT magazine but pl reply 2 this @least
டியர் Mr. ragulram11,
முதற்கண் தங்களது அன்பான பதிவுக்கும், பாராட்டுக்கும் எனது இனிய நன்றிகள் !
நமது நடிகர் திலகம் திரியின் அனைத்து பாகங்களுமே சிவாஜி அவர்களைப் பற்றிய ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்று கூறினால் அது மறுக்கமுடியாத உண்மை. இதனைப் புத்தக வடிவில் வெளிக்கொண்டுவர தாங்கள் விடுத்த வேண்டுகோள் இங்கே இதற்கு முன்னரும் வைக்கப்பட்டுள்ளது. நமது ஹப் நிர்வாகம் இதனைத் தக்க தருணத்தில் செய்வார்கள்.
நமது நடிகர் திலகத்துக்கு அவரது மறைவுக்குப் பின், அவரது புகழ்பாடும் வகையில், 20 சிறப்பு மலர்களை வெளியிட்டவன் என்கின்ற முறையில், அவருக்கு ஒரு மாத இதழ் வேண்டும் என்ற தங்களின் இதமான ஆசைக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இதயதெய்வம் நடிகர் திலகம் இப்பூவுலகை விட்டு மறைந்த பிறகு, 2002லிருந்து 2005-ம் ஆண்டு வரை, அவரது புகழ் பாடும்விதமாக பல சிறப்பு மலர்களையும், "வசந்த மாளிகை" என்கின்ற மாத இதழையும் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் (Editor & Publisher) இருந்து வெளியிட்டுள்ளேன். அதில் அட்டை-டு-அட்டை நடிகர் திலகம், நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட தகவல்கள்-புகைப்படங்கள் மட்டும்தான். நமது முரளி சார் குறிப்பிட்டது போல், ஒரு இதழை தொடர்ந்து நடத்துவதற்கு பொருளாதாரம் இன்றியமையாதது. அத்தகைய சிக்கல்களினால் 2006லிருந்து "வசந்த மாளிகை" இதழை தொடர்ந்து வெளியிட முடியாமல் போனது. எனினும் எதிர்காலத்தில், "வசந்த மாளிகை" இதழை மீண்டும் வெற்றியுடன் வெளிக்கொண்டு வருவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைமட்டும் எப்பொழுதும் உள்ளது. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெறும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்றும் உணர்கிறேன்.
தங்களின் அன்புக்கு மீண்டும் நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
18th April 2012, 04:43 AM
Heartiest Congratulations for Nadigar Thilagam thread on entering into 6th successful year.
Kudos to Raghavendra Sir, Pammalar, Murali sir, Vasudevan sir, NOV, Joe, Groucho, Partha and other ardent NT fans.
Dear Rangan Sir,
Welcome back ! Thanks for your compliments !
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
18th April 2012, 04:47 AM
Dear Mr. Gopal
ungal sEvai ingu thEvai..... http://www.mayyam.com/talk/showthread.php?9727-Introducing-Sivaji-Ganesan-to-the-younger-generation/page3
டியர் மாடரேட்டர் Mr. NOV,
இரு பதிவாளர்கள் தங்களுக்குள் உண்டான கருத்து மாறுபாடு காரணமாக, 'திரியை விட்டு விலகுகிறேன்' என உணர்ச்சிப் பெருக்கில் பதிவுகளை அளிக்கும்போது, அவர்கள் இருவரையும் ஒருசேர 'மீண்டும் பதிவுகளை அளிக்க வாருங்கள்' என்று பதமாக அழைக்காமல், ஒருவரை மட்டும் 'உங்கள் சேவை இங்கே தேவை' என்று வருந்தி அழைப்பது, என் மனதுக்கு என்னமோ சரியாகத் தோன்றவில்லை.
அழைக்கப்படாத அன்புள்ளம் இதனால் நிச்சயம் புண்படும்.
என் மனதில்பட்டதை வெளிப்படையாக இங்கே எழுதினேன். தாங்கள் எனது இந்த கருத்தை சரியான வகையில் எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
வருத்தத்துடன்,
பம்மலார்.
pammalar
18th April 2012, 04:49 AM
சுவாமி,
இங்கே நிகழ்ந்த ஒரு சில கருத்து வேறுபாடு வாக்குவாதங்களால் தங்களின் பங்களிப்பை ஒத்தி வைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். உங்களையும் உங்கள் சேவையையும் பொறுத்தவரை அவை இங்கே தடைபடக் கூடாத சேவை என்பதே அனைவரின் விருப்பம். ஒரு சில நேரங்களில் நீங்கள் எடுக்கும் பிரயத்தனத்திற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்பது போன்ற ஒரு தோற்றம் உருவானாலும் கூட எனக்கு தெரிந்த வரை நமது திரியின் வழக்கமான பங்களிப்பாளர்கள் அனைவரும் [அவர்கள் தினசரி பதிவிடவில்லை என்றாலும் கூட] உங்கள் பங்களிப்பை பெரிதும் விரும்புபவர்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பலருடனும் நான் பல நேரம் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலம் எனக்கு அது நிச்சயமாக தெரியும். நண்பர் வாசு எழுதியது போல் ஒவ்வொரு ஆவண சேகரிப்புக்கு பின்னால் எத்தனை பெரிய உடல் உழைப்பும் கதையும் இருக்கிறது என்பதை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட நாள் முதலே உணர்ந்தவன் நான். அனைத்து தியாகங்களுக்கும் காரணம் நடிகர் திலகம் என்ற மனிதன் மேல் நீங்கள் வைத்துள்ள பற்று.
இங்கே உள்ள அனைவருக்கும் அதுதான் கோல் போஸ்ட் எனும்போது உங்கள் பங்களிப்பு அவசியமாகிறது. இன்றைய தினம் உலகெங்கும் உள்ள எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றிய மிக சரியான வரலாற்று உண்மைகள் கிடைக்குமிடம் என்று சொன்னால் அது நமது திரிதான் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. அந்த தகுதியை இந்த திரி அடைவதற்கு உங்களின் ஆவணபூர்வமான ஆதாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆகவே ஏப்ரல் ஏஞ்சலின் பட வரிசை தொடரட்டும். நடிகர் திலகத்தை தவிர வேறு யாருக்கும் தலை "வணங்காமுடி"யே, தொடருங்கள்.
அன்புடன்
விரைவில் வீடியோ வேந்தர் வாசுவும் நம்முடன் வந்து இணைந்து கொள்வார்.
டியர் முரளி சார்,
தங்களின் பதமான பதிவுக்கு எனது இதமான நன்றிகள் !
தொடர்கிறேன்...
அன்புடன்,
பம்மலார்.
pammalar
18th April 2012, 04:54 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
வணங்காமுடி
[12.4.1957 - 12.4.2012] : 56வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 1.3.1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5679-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 5.4.1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5680-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5681-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1957
[இந்த விளம்பரம் அன்று ஹிந்து நாளிதழில் முழுப்பக்க விளம்பரமாக வெளியாயிற்று]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5678-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.5.1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5682-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி : 20.7.1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5683-1.jpg
குறிப்பு:
1. "வணங்காமுடி" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்: சென்னை-கிரௌன் மற்றும் திருச்சி-பிரபாத்.
2. சிங்காரச் சென்னையில், 'சித்ரா'வில் 63 நாட்களும், 'கிரௌன்' அரங்கில் 100 நாட்களும். 'காமதேனு'வில் 63 நாட்களும், 'சயானி'யில் 70 நாட்களும் ஓடி மகாஹிட்.
3. மதுரை 'தங்கம்' திரையரங்கில் 78 நாட்களும், சேலம் மற்றும் கோவையில் 70 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 63 நாட்களும் ஓடி பம்பர்ஹிட்.
4. தமிழ்த் திரையுலக வரலாற்றில், 1957-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய காவியம், "வணங்காமுடி". முதலாவது திரைப்படம் "மாயாபஜார்". இது "வணங்காமுடி" வெளியான 12.4.1957க்கு முன்தினம் அதாவது 11.4.1957 அன்று வெளியானது.
5. ஒரு திரைப்பட நடிகருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக 80 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது இக்காவியத்திற்குத்தான். வைக்கப்பட்ட இடம் : சென்னை 'சித்ரா' திரையரங்க நுழைவாயில். கட்-அவுட் கலாசாரத்துக்கு வித்திட்டவரும் கலையுலக 'வணங்காமுடி'தான்.
பக்தியுடன்,
பம்மலார்.
joe
18th April 2012, 07:02 AM
டியர் மாடரேட்டர் mr. Nov,
இரு பதிவாளர்கள் தங்களுக்குள் உண்டான கருத்து மாறுபாடு காரணமாக, 'திரியை விட்டு விலகுகிறேன்' என உணர்ச்சிப் பெருக்கில் பதிவுகளை அளிக்கும்போது, அவர்கள் இருவரையும் ஒருசேர 'மீண்டும் பதிவுகளை அளிக்க வாருங்கள்' என்று பதமாக அழைக்காமல், ஒருவரை மட்டும் 'உங்கள் சேவை இங்கே தேவை' என்று வருந்தி அழைப்பது, என் மனதுக்கு என்னமோ சரியாகத் தோன்றவில்லை.
அழைக்கப்படாத அன்புள்ளம் இதனால் நிச்சயம் புண்படும்.
என் மனதில்பட்டதை வெளிப்படையாக இங்கே எழுதினேன். தாங்கள் எனது இந்த கருத்தை சரியான வகையில் எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
வருத்தத்துடன்,
பம்மலார்.
தவறான புரிதல் பம்மலார் அவர்களே!
திரு .கோபால் அவர்கள் இளைய தலைமுறைக்கு நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்தி ஆர்வம் கொள்ள செய்வது அவசியம் என குறிப்பிட்டதால் அதற்காக பிரத்யேகமாக இயங்கி வரும் மற்றொரு திரியில் பங்களிக்க வருமாறு nov அழைத்ததில் எந்த தவறும் அல்லது வேறு எந்த கோணமும் இல்லை என்பதை என்னால் உறுதியாக்க கூற முடியும்.
RAGHAVENDRA
18th April 2012, 07:07 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi18412ad.jpg
RAGHAVENDRA
18th April 2012, 07:11 AM
டியர் திரு ஜோ அவர்களே,
திரு பம்மலார் அவர்களுடைய மன வருத்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கு உடனடியாக பதிலளித்ததன் மூலம் தாங்கள் ஒவ்வொரு அங்கத்தினரையும் எந்த அளவிற்கு முக்கியமாக கருதுகிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். நன்றிகளும் பாராட்டுக்களும். திரு பம்மலார் அவர்களும் தங்கள் உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் சொல்லி நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதை நிரூபித்து விட்டார். மேம்போக்கான கருத்துப் பரிமாற்றமாக மட்டுமின்றி உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இது ஒரு குடும்பமாகவே மாறி வருகிறது என்பதற்கு தற்போது நடந்தவையெல்லாம் சான்றாகும்.
அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
RAGHAVENDRA
18th April 2012, 07:13 AM
டியர் பம்மலார்,
திரு கோபால் அவர்களுக்கு விடுத்த அழைப்பினைப் பற்றித் தங்களுடைய உள்ளத்தில் பட்டதை மறைக்காமல் எடுத்துச் சொல்லி எந்த ஒரு மாறுபட்ட கருத்தாயிருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசி தீர்த்துக் கொள்வதே சரியானது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.
வணங்காமுடியின் வணங்காமுடி கவரேஜ் சூப்பர். அதற்காக மீண்டும் பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
18th April 2012, 07:15 AM
டியர் வாசுதேவன் சார்,
தங்கள் உள்ளம் காயம் பட்டிருந்தாலும் அதனை குடும்பத்திற்குள் உள்ள சிறு சலசலப்பாக கருதி, அதனை மன்னித்து அத்துடன் மறந்து விட்டுத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தர வாருங்கள்.
அன்புடன்
NOV
18th April 2012, 07:26 AM
mikka nandri Joe. :ty:
pammalar avargalE, naan enna ungalai azhaippadhu? indha hub enbadhu namma veedallavaa? namakkul enna formalities? :)
groucho070
18th April 2012, 08:06 AM
Heartiest Congratulations for Nadigar Thilagam thread on entering into 6th successful year.
Kudos to Raghavendra Sir, Pammalar, Murali sir, Vasudevan sir, NOV, Joe, Groucho, Partha and other ardent NT fans.ayyo, nAn ellam onnum pannala, lately. It's going on autopilot mode in full speed with more contributing passengers onboard. The contributions and the growth of this thread is staggering!!!! My my! :shock:
ScottAlise
18th April 2012, 08:59 AM
Dear Pammalar & Murali Srinivas Sir,
Thank you for your replies. I know that a book on NT was in circulation& stopped but I never knew that it was due to your contribution. U r efforts won't go waste . Monthly magazine on NT will come soon along with special books published earlier. We hubbers will definitely support all the concerned people in this himalayan task.
Subramaniam Ramajayam
18th April 2012, 09:20 AM
டியர் வாசுதேவன் சார்,
தங்கள் உள்ளம் காயம் பட்டிருந்தாலும் அதனை குடும்பத்திற்குள் உள்ள சிறு சலசலப்பாக கருதி, அதனை மன்னித்து அத்துடன் மறந்து விட்டுத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தர வாருங்கள்.
அன்புடன்
dear vasu and pammalar and raghavendran sirs
As mentioned rightly by raghavendran we are all the family of NADIGAR THILAGAM AND NADIGARTHILAGAM ALONE. let us march forward further and make everything success for nadigarthilagam.
Gopal.s
18th April 2012, 11:20 AM
அன்புள்ள வாசுதேவன்,
தங்கள் மனம் என்னால் புண் பட்டதினால்,தங்கள் பதிவை இடும் வரை காத்திருந்துதான்,என் பதிவை நான் இட போகிறேன்.இந்த முடிவின் எந்த மாற்றமும் இல்லை.சிவாஜி பக்தர்களின் முன்னால் எந்த ஈகோ வும் என்னை அண்டாது.தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்பது போல் நடிகர் திலகத்தின் அடியவர்களின் அடியவர்களுக்கும் நான் அடியவன்.அதனால் எனது மனப்ப்பூர்வமான மன்னிப்பை ஏற்று கொண்டு ,வீறு கொண்டு புத்துணர்ச்சியோடு வாருங்கள்.தங்கள் தலைமையேற்க நானும் அர்த்தரதனாக பங்கேற்பேன்.
KCSHEKAR
18th April 2012, 12:06 PM
My Dear N.T. Devoted Fans,
Would like to share a happy news which i feel all our N.T. devoted fans wishes is our beloved N.T. Blessings.
Today, we are blessed with 2nd boy child, nevertheless i really felt it was prabhu for us after ramkumar.
JAIHIND
M. Gnanaguruswamy
Congratulations
groucho070
18th April 2012, 12:14 PM
Congratulations guruswamy, enjoy your time with your own ilayathilagam :smile:
KCSHEKAR
18th April 2012, 12:15 PM
திரு.பம்மலார், திரு.வாசுதேவன். திரு.ராகவேந்திரன் & திரு.கோபால் - நடந்தவை திருஷ்டியாகக் கழிந்து, நடப்பவை சிறப்பாக அமைந்து. நடிகர்திலகத்தின் புகழ் நானிலமெங்கும் பரவ நாமனைவரும் இணைந்து உழைப்போம். நன்றிகள் பல.
parthasarathy
18th April 2012, 12:45 PM
My Dear N.T. Devoted Fans,
Would like to share a happy news which i feel all our N.T. devoted fans wishes is our beloved N.T. Blessings.
Today, we are blessed with 2nd boy child, nevertheless i really felt it was prabhu for us after ramkumar.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Mr. Gnanaguruswamy,
Heartiest congratulations! Trust Mother and Kid are doing well.
Regards,
R. Parthasarathy
parthasarathy
18th April 2012, 12:56 PM
அன்புள்ள நண்பர்களே,
அலுவலக வேலை நிமித்தம் வெளியூர் சென்று விட்டதால், நிறைய நாட்களுக்குப் பிறகு தான் இந்தத் திரிக்குள் நுழைய முடிந்தது. நுழைந்தவுடன் அதிர்ச்சி.
ஹப் சீனியர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தது போல், திரு. வாசுதேவன் அவர்கள் விரைவில் மீண்டும் பதிவிடுவார் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
HARISH2619
18th April 2012, 01:34 PM
DEAR VASU SIR,
PLEASE CONTINUE YOUR CONTRIBUTION IN THIS THREAD,I TRIED TO PERSONALLY CALL YOU AND REQUEST BUT YOUR CELLPHONE IS IN SWITCHOFF MODE.
DEAR GURU,
MY HEARTIEST CONGRATS FOR YOUR ILAYATHILAGAM.
DEAR BALA,
A VERY WARM WELCOME TO OUR NT'S THREAD.
DEAR RAGHAVENDRA SIR,
MY HEARTIEST WISHES FOR NADIGARTHILAGAM.COM ON IT's 6TH YEAR CELEBRATION.
DEAR SUPERSTAR PAMMAL SIR,
VANANGAMUDI AD'S VERY SUPERB.
ezuxsuc
18th April 2012, 02:48 PM
Dear pammalar sir,
Vanangamudi stills super,you are really great,because you have lot of collections about NADIGAR THILAGAM.
parthasarathy
18th April 2012, 02:56 PM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
நடிகர் திலகத்தின் "வணங்காமுடி" நூறு நாட்களைக் கடந்த படம் தான் என்று, சான்றுடன் பதிவிட்ட உங்களுக்குக் கோடி நன்றிகள்.
பல வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் நடிகர் திலகத்தின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருந்தது. அது, ராஜா ராணி படங்களைப் பொறுத்தவரை, அவருடைய படங்கள் ஓடாது என்று. எதை வைத்து, இப்படி அவர்கள் எழுதினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு சில படங்கள், சாரங்கதாரா, ராணி லலிதாங்கி போன்ற படங்கள் ஓடாததை வைத்தும், மாற்று முகாமில், அந்த வகைப் படங்களை (மிகச் சில என்றாலும்) மட்டுமே நடித்து வெளி வந்ததாலும் இருக்கலாம். அங்கு 1961 -லிருந்து தான் வேறு வகைப் படங்கள் வரத் துவங்கியது.
தூக்குத் தூக்கி, மனோகரா, தெனாலி ராமன், வணங்காமுடி, உத்தம புத்திரன், சம்பூர்ண இராமாயணம், வீரபாண்டிய கட்டபொம்மன் (சிகரம் தொட்ட வெற்றி!), கர்ணன், என்று எத்தனை வெற்றிப் படங்கள்! எதை வைத்து விகடன் இதழ் இப்படி எழுதினார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர் தான்!!
பல நாட்கள் வணங்காமுடியும் கர்ணனும் நூறு நாட்களைத் தொடாத தோல்விப் படங்கள் என்று எத்தனை பேர் வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆவணங்களுடன் அவர்கள் வாயை அடைத்த உங்களுக்கு மறுபடியும் கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
parthasarathy
18th April 2012, 03:01 PM
Dear Mr. Raghavendar,
Heartiest congratulations to you on your Website Nadigar Thilagam.com entering 6th year.
Please continue to enthral million of NT Fans like me!
Regards,
R. Parthasarathy
vasudevan31355
18th April 2012, 03:04 PM
நன்றி! நன்றி! நன்றி!
http://1.bp.blogspot.com/-EE9FDcxvdrg/TwMPUGWH0DI/AAAAAAAABIc/A53C-hz75GA/s1600/Nandri.jpg
அன்புள்ளமும், பெருந்தன்மையும் கொண்ட என் உயிரினும் மேலான இத்திரியின் அன்பர்களே!
உங்கள் அனைவரின் பொற்பாதங்களில் என் நன்றியைக் கண்ணீரால் காணிக்கை ஆக்குகிறேன். தாங்கள் என் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் கண்டு வாயடைத்துய் போய் நிற்கிறேன். இது போன்ற அன்பு நெஞ்சங்கள் கிடைத்ததற்கு அந்த இறைவனாருக்கும், இறைவனை விட என் ஊனிலும், உயிரிலும் கலந்த என் முதல் தெய்வமான நடிகர் திலகத்திற்கும் கோடானு கோடி நன்றிகளை அவர்தம் பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
உலகமே திரும்பிப் பார்க்கும், நான் கோவிலாக மதிக்கும் இத்திரியில் சேவை செய்யும் பாக்கியத்தை நடிகர் திலகம் எனக்கருளியது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பெரும் பேறு. ராமருக்கு அணில் சேவை செய்ததில் கோடியில் ஒரு பங்கு கூட நான் இத்திரியில் சேவை செய்யவில்லை என்பதை தன்னடக்கத்துடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி ஒரு சின்னஞ்சிறு சேவை செய்தாலும் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும், பேராதரவுடனும் அந்த சேவையை செய்து வந்துள்ளேன் என்பதை நினைக்கையில் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன்.
ஒரு சலசலப்பு. ஆரம்பத்தில் சிறிது மனம் காயப் பட்டாலும் தங்கள் அனைவரது அன்பினால் அந்தக் காயம் மாயமாய் மறைந்து போனது. உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகி விடுபவன் தானே மனிதன்! ஆனாலும் நெஞ்சை இனம் புரியாத ஒரு துன்பமும் சோகமும் வாட்டிக் கொண்டே இருக்கிறது. என்னவென்று சொல்லத் தெரிய வில்லை. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை என்பதை நேரிடையாகவே கூறிக் கொள்கிறேன். இத்திரியில் உறுப்பினர் ஆனதில் இருந்து இன்று வரை என்னால் முடிந்தவற்றை விருப்பு வெறுப்பின்றி நடிகர் திலகம் பற்றிய அவர் புகழ் பாடும் பதிவுகளை அளித்துள்ளேன். குறிப்பாக ஸ்டில்கள். எதிர்காலங்களில் வரும் இளைய தலைமுறையினர் இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகள் கழித்து இத்திரியை பார்க்கும் போது நடிகர் திலகம் என்பவர் 'தெனாலி ராமன்' படத்தில் இப்படி இருந்தாரா... 'ஹரிச்சந்திரா' வேடத்தில் இப்படி இருந்தாரா என்று எந்தத் தடையும் இன்றி விஷூவலாக பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இப்போதே பல dvd-க்கள் கிடைக்கவில்லை. நம்மவரின் படங்களே இன்னும் சில கிடைக்கவில்லை. காலப் போக்கில் எல்லாமே அழிந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. நம் கண் முன்னமேயே நடிகர் திலகம் படங்களின் print-களின் நெகடிவ்கள் பல சேதமடைந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. அப்படி வரும் காலத்தில் அனைவருக்கும் இந்த நிழற்படங்களும், புகைப்படங்களும் உதவ வேண்டும் என்பது என் அவா. dvd, cd க்களில் இருந்து ஸ்டில்களை எடுத்துப் போடுவது ஒரு பதிவா அல்லது கஷ்டமா என்று கூட சிலர் நினைக்கலாம். நிச்சயமாக அது ஒரு சிரமமான வேலைதான். பொதுவாகவே எனக்கு ஒன்றிரண்டு ஸ்டில்கள் போடுவதில் மனம் உடன் படாது. அதனால் தான் என்னால் முடிந்த வரை ஸ்டில்களைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். என்னால் முடிந்த சில ஆவணங்களையும் தந்துள்ளேன். சில திரைப்பட வீடியோக்களையும் தரவேற்றியுள்ளேன். பல மிகுந்த சிரமங்களுக்கிடையே (சில படங்களின் நெடுந்தகடுகள் கிடைக்க இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆயின) தலைவரின் சில அபூர்வ திரைப் படங்களை உலகெங்கும் இணையத்தின் மூலம் தேடியும், வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரின் உதவியுடனும் பெற்றுள்ளேன். (குறிப்பாக தர்த்தி (இந்தி), ஸ்கூல் மாஸ்டர் (இந்தி), மனிதனும் தெய்வமாகலாம், எல்லாம் உனக்காக போன்ற இன்னும் சில படங்கள்) அவைகளில் இருந்து எடுத்த சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளேன். இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். வெளியிடங்களுக்கும் சென்று தலைவர் படங்களுக்கு நம் ரசிகர்கள் நடத்தும் ஆர்ப்பாட்ட அலப்பரைகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் என்னால் இயன்ற வரை அளித்துள்ளேன். பெருமைக்காகவோ அல்லது தற்புகழ்ச்சிக்காகவோ சத்தியமாக இதைக் கூறவில்லை. அப்படி என்னால் முடிந்த பதிவுகளை இத்திரியில் பதிவு செய்து அனைவரையும் சந்தோஷப் படுத்த முடிந்ததே என்ற பேரானந்துக்காகவும், மனத்திருப்திக்காகவும் இதை தெரியப்படுத்தி உள்ளேன்.
நீங்கள் எனக்களித்த பாராட்டுதல்களையும், ஆதரவையும், உற்சாகத்தையும் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்கிறேன். என் வாழ்நாள் முழுதும் இந்த நன்றியை மறக்க மாட்டேன். இத்திரியின் இமாலய வெற்றிக்கு நீங்கள் அனைவரும் அளித்திருக்கிற, அளித்து வருகிற பங்கு மகத்தானது. உங்கள் அனைவரது உழைப்பாலும் இத்திரி பற்பல சாதனைகளைப் புரியப் போவது உறுதி. ஆனால் உங்கள் அனைவருடனும் இருந்து இத்திரியில் பங்கு கொண்டு பணியாற்ற தற்சமயம் இயலாதவனாய் உள்ளேன் என்பதை கண்ணீரோடும், ஆழ்ந்த வருத்ததோடும், கனத்த இதயத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிகளை டைப் செய்யும் போது என் இதயமே சுக்குநூறாய் வெடித்து சிதறுவதாக உணர்கிறேன். தயவு கூர்ந்து எல்லோரும் என்னை மன்னித்து விடவும். எங்கு எப்படி இருந்தாலும் என் இதயம் முழுதும் இந்தக் கோவிலை சுற்றியபடியேதான் இருக்கும். என் தாயார் ஊரிலிருந்து என்னைப் பார்க்க வந்தால் கூட 'வாம்மா' என்று ஒரே ஒரு வார்த்தை சம்பிரதாயத்துக்கு சொல்லி வீட்டு இத்திரியே கதியென்று கிடந்திருக்கிறேன். அவர்களிடம் இரண்டு வார்த்தை கூட தொடர்ந்து பேசியதில்லை நான். அப்படி உடலும் உயிருமாய் கலந்த, இணைந்த இத்திரியையும், உங்களையும் உயிரற்ற உடலாய் விட்டுப் பிரிகிறேன். உடன் பிறந்த சகோதரர்களாய் அன்பையும், பாசத்தையும் என் மீது பொழிந்த தங்கள் அத்துணை பேருடய பொற்பாத கமலங்களையும் என் நன்றிப் பூக்களால் அர்ச்சனை செய்து இறைவனின் அருளும், இறைவனுக்கே இறைவரான நம் அன்பு நடிகர் திலகத்தின் அருளும் ஆசியும் இருந்தால் நிச்சயம் மீண்டும் இந்தத் திரியில் உங்களோடு மகிழ்ச்சி வலம் வருவேன் என்று கூறி தாங்கொணாத் துயரத்துடன் கண்ணீர் மல்க அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறேன். நன்றி.
http://i917.photobucket.com/albums/ad12/scraps2/goodbye/ubye4.gif
vasudevan31355
18th April 2012, 03:18 PM
மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய அன்பு ஜோ சார் மற்றும் அன்பு மாடரேட்டர் NOV சார் அவர்களுக்கும் என் அடிபணிந்த மரியாதையான வணக்கங்கள். தாங்கள் நடிகர் திலகத்தின் மேல் கொண்ட பற்றுதல்களை நினைத்து பல தடவை பூரித்துப் போய் இருக்கிறேன். தங்களது நிர்வாகத் திறமையையும் கண்டு வியந்திருக்கிறேன். திரு NOV சார்... நீங்கள் சிவாஜி மன்றங்களுக்கு நற்பணிகளுக்காக ஓசையில்லாமல் கொடுத்து வரும் உதவித்தொகைகளை நான் அறிவேன். வளர்க உங்கள் தொண்டு. இந்த அடியேனுக்கும் திரியில் சிறு தொண்டு புரிய அனுமதி அளித்தமைக்கு தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
அன்பு ராகவேந்திரன் சார்,
திரியில் என்னை எல்லா வகையிலும் ஊக்கமளித்து, என்னுடைய பல தொழில் நுட்ப சந்தேகங்களை எந்த நேரமானாலும் பொறுமையாக விளக்கி என்னை வழி நடத்திய நான் மிக மிக நேசிக்கக் கூடிய என்னுடைய ஆசான் ஸ்தானத்தில் இருக்கும் தங்களை என்னால் மறக்கவே முடியாது. எப்போது சென்னை வந்தாலும் சொந்த சகோதரரைப் போலத் தாங்கள் என்னை கவனித்துக் கொண்டது காலம் உள்ள வரை மறக்க முடியாது. எந்த பிரதிபலனும் கருதாது மூச்சும் உயிரும் நடிகர் திலகத்துக்காகவே என்று வாழும் தங்களின் தன்னலமற்ற சேவை எனக்கும், நம் திரியில் உள்ளவர்களுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தன்னந்தனி ஆளாக நடிகர் திலகம் இணையதளத்தை தொடங்கி அதை சிறப்பாக ஆறாவது ஆண்டில் அடியெடுக்க வைக்க நீங்கள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் நாங்கள் பட்ட சிரமங்கள் மிகக் குறைவு. வெற்றிகரமாக N.T. fans association தொடங்கி திரு Y.G.M மற்றும் முரளி சார் அவர்களின் உறுதுணையுடன் சிறப்பாக நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம். தங்களுடன் இணைந்து பணி புரிந்ததில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணி புரிந்ததாகவே அப்படி ஒரு சந்தோஷத்தை உணர்கிறேன். தங்களுடைய பேராதரவிற்கும், அன்பிற்கும் தலைவணங்கி மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.
அன்பு முரளி சார்,
நான் இத்திரியில் உறுப்பினராக சேர நீங்கள் ஊக்கமளித்ததற்கும், என்னுடைய பதிவுகளைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டுக்களை தெரிவித்ததற்கும், என்னை தங்கள் சகோதரனைப் போல பாவித்ததற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய அன்பு உள்ளத்திற்கும், தங்கள் முத்தான சத்தான பதிவுகளுக்கும் என்றும் நான் அடிமை. அதனால் தான் தங்களை எப்போதும் 'முத்தான முரளி சார் ' என்று உரிமையுடன் அழைப்பேன். தங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு மிகவும் மனம் வருந்துகிறேன். எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்ட உயரிய மனிதர் தாங்கள். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வணங்கி தற்சமயம் தங்களிடமிருந்து கண்ணீர்ப் பெருக்குடன் விடைபெறுகிறேன். (தங்கள் மதுரை மதி திரையரங்கில் நடை பெற்ற கர்ணன் விழாப் புகைப்படங்களை தங்களுக்காகவும், நம் திரியின் அன்பு இதயங்களுக்காகவும் இங்கே பதிவிட்டுள்ளேன். நிச்சயம் நீங்கள், மற்றும் சதீஷ் சார் மனம் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/11-6.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-19.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-30.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-29.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-16.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-13.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10-7.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/12-4.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/13-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-90.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
18th April 2012, 03:24 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/14-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/15-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/16-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/17-3.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/18-4.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/19-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/20-6.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-33.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-44.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-62.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
18th April 2012, 03:41 PM
என் இளைய சகோதரர் பம்மலார் அவர்களே!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தங்களைப் போன்ற சகோதரர் எனக்குக் கிடைப்பாரா?.. அப்படிப்பட்ட கள்ளம் கபடமில்லாத அன்பையும், பாசத்தையும் என் மீது வான் மழையாய் பொழிந்து கொண்டிருக்கும் என் உயிரே! நடிகர் திலகத்தை நான் நினைக்காத நேரமில்லை. அதே நடிகர் திலகத்தின் ஸ்தானத்தில் என் உள்ளத்தின் அடித்தளத்தில் தங்களை வைத்து அகம் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாய் நின்ற கருணைக் கடவுளே! உங்கள் அளவிற்கு என் மேல் என் தாயார் தான் பாசம் காட்டியுள்ளார். உணவு உண்ணக் கூட மறந்து போகும். உங்களிடம் மணிக்கணக்கில் கைபேசியில் தினமும் பேச மட்டும் மறந்து போகாதே! நமது திரியை மென்மேலும் செழுமை அடைய வைக்க தாங்கள் எனக்கு பலவகையில் பேருதவி புரிந்ததை மறக்க முடியுமா? சதா சர்வ காலமும் திரியின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருக்கும் நாங்கள் தவம் செய்து அடைந்த எங்கள் அனைவரின் செல்லக் குழந்தை அல்லவோ தாங்கள்!
(தங்களின் 'வணங்காமுடி' பதிவுகள் எப்படிப்பட்ட வணங்காமுடிகளையும் உங்கள் முன் தலை வணங்க வைத்து விடும். அற்புதமான அருமையான பதிவுகள். அதற்கு என் மனம் மகிழ்ந்த நன்றிகள்)
எப்பொழுதும் எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு, ஒரே வேண்டுதலோடு வாழ்த்துக்களே வார்த்தைகளாய், வாழ்க்கையாய்க் கொண்ட அன்பு வடிவமே! உலகில் யாருமே சாதிக்க முடியாத சாதனைகளை செய்தவர் நம் இறைவனார். அதே போல அவருடைய தொண்டராகிய தாங்களும் உலகில் யாருமே செய்ய முடியாத சாதனைகளைப் படைத்து வருகிறீர்கள் கிடைத்தற்கரிய ஆவணப் பொக்கிஷங்களை பாதுகாத்து சுயநலம் பாராமல் எங்கள் எல்லோருக்கும் அளித்து வருவதன் மூலமாக. இதற்காக என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை. இந்த சிறு வயதில் செயற்கரிய செயல்களைச் செய்து சிறப்புடன் பணியாற்றி சிகரப் பதிவுகளை அள்ளி வழங்கும் அமுத சுரபியே! எனக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் தோளோடு தோள் நின்று என் சுமைகளை உங்கள் சுமைகளாய் நினைத்து, என் சந்தோஷத்தை உங்கள் சந்தோஷமாய் நினைத்து, உரிமைகளுக்காக குரல் கொடுத்த உத்தமரே! நீங்கள் அப்பனுக்கு பாடம் சொன்ன முருகப் பெம்மான் அல்லவோ எனக்கு. இதற்கு மேல் எனக்கு எழுத முடியவில்லை. கண்ணீர் நிறைகிறது. நடிகர் திலகத்தின் அருமைகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்ற முதலிடம் பெற முழுத் தகுதியும் கொண்ட ஆவண முதல்வரே! அந்தப் மனிதப் புனிதரின் ஆசியினால் வாழ்வாங்கு வாழ்ந்து, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று எல்லாவற்றிலும் வெற்றி நடை போட இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள். நாம் பிரிய வில்லை. உயிருடன் கலந்திருக்கிறோம்.
வாழ்க வளமுடன்.
தங்கள் அன்புச் சகோதரன்
வாசுதேவன் .
vasudevan31355
18th April 2012, 03:56 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தாங்கள் இல்லாமல் அருமைப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வந்து மீண்டும் புதுப் பொலிவு தர உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பதிவானாலும் உடனே அந்தப் பதிவிற்கு முழுமனதுடன் பாராட்டும் உயர்ந்த குணம் தங்களுக்கு. அதே போல தவறான பதிவுகளையும் மனம் நோகாத படி நாசூக்காக கோடிட்டுக் காட்டும் குரு போன்றவர் தாங்கள் எனக்கு. ஒரு விசுவாசமிக்க மாணவனாக குருவான தங்களை எப்போதும் வணங்குகிறேன். ஆவலுடன் தங்கள் பதிவுகளைக் காண வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
அன்பு கார்த்திக் சார்,
என்னைப் பொறுத்தவரை நீங்கள் நக்கீரர். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் தாங்கள் அஞ்சாமல் குற்றம் குற்றமே என்று சூளுரைக்கும் பாணியே தனி. நீங்களும் திரியில் பங்கு பெற்று சில மாதங்கள் ஆயிற்று. எங்களுக்கு பல யுகங்கள் ஆனாற்போன்று இருக்கிறது. தங்கள் முதல் நாள் திரையரங்கு அனுபவ பதிவுகளைக் காணாமல் கவலையுறுகிறது நெஞ்சு. தங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், வழிகாட்டுதல்களும் மறக்க முடியாதவை. தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.
அன்பு பார்த்தசாரதி சார்,
தங்கள் பாடல் ஆய்வுகள் என்னவாயிற்று? தாங்கள் இல்லாமல் பாடல் ஆய்வுப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வாருங்கள். இன்பப் பாடல்களின் ஆய்வுப் பதிவை அள்ளித் தாருங்கள். தங்கள் அன்பிற்கும் பாராட்டும் குணத்திற்கும் மிக்க நன்றி!
திரு.சந்திரசேகரன் சார்,
தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!
டியர் ஞானகுருசுவாமி சார்,
தங்கள் குடும்பத்தின் புதிய வரவான அந்த தெய்வக் குழந்தைக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
மற்றும் திரியின் அனைத்து நண்பர்களே!
திரு plum சார், திரு.P.R சார், திரு கோல்ட் ஸ்டார் சதீஷ் சார், அன்பு ஹரீஷ் சார், திரு. சங்கரா சார், dear grouchcho sir, அன்பு குமரேசன் பிரபு சார், அன்பிற்கினிய பாலா சார், திரு.ராதாகிருஷ்ணன் சார் , திரு சுப்பிரமணியம் ராமஜயம் சார், திரு.ரங்கன் சார், புதிய வரவுகளான சிவாஜி தாசன் சார், திரு subras சார், இளம் சிங்கமான ராகுல் சார், படைப்பாளி பாலா சார், திரு மோகனராம் சார், திரு சகலா சார், திரு கரிகாலன் சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன உயிரினும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாசம் கலந்த நன்றிகளைத் தெரிவித்து, தாங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
shankarbharath
18th April 2012, 03:58 PM
Dear All,
I wish to share my personal experience and opinions. This is very nostalgic for me. I am now 31, but my experiences start from the early 1980s, right from the time I was 3 years old.
Back then, we had the VHS players and I loved watching commercial entertainers like Sakalakala Vallavan and Murattu Kaalai. I came to know about Sivaji Ganesan around the same time as Kamal or Rajini but was clearly told that his films are mostly "Black and White", which as a child, I did not prefer watching. As a child, I was more attracted to color films and did not watch Sivaji films till I was 6.
My first Sivaji film that I watched on VHS was the eternal classic Thiruvilayadal. My mother was clear on bringing me up with happy comedies or entertainers and she shielded me for a long while from sorrowful melodramas in family setups. But Thiruvilayadal had a mythological theme, was colorful, had great songs and she was happy to play it for me. I watched it again and again and again. I could not get enough of it. I was told by my mother that "None of us have seen god. But if Sivan was born in this earth, he is definitely more likely to behave in the fashion that Sivaji has shown in his acting".I specifically remember a majestic, yet stylish walk that Sivaji would depict, when he plays the role of the fisherman. Nothing much - just a BGM and he walks on the sand. But what body language!
In 1985-86, I still remember one evening. My dad, mom and I had gone to mount road for evening tiffin. My dad got out of the car and sent us all home. He said he will watch a film and come back after 3 hours. I asked him which film he was going to watch - he told me it was a Sivaji film called "Sadhanai". I cried but I was not taken to the film. Yes, I watched it much later and enjoyed it, but I look back at that evening and laugh today.
And then it happened. By the time I was 10, I started asking for older films and watched entertaining/comedy films like Galatta Kalyanam, Uthamaputhiran, Ooty varai uravu, etc. I still remember getting scared and turning off the radio if "Engey nimmadhi" played on it. TMS' voice was so scary in that song for me as a child.
Today, I can say with utter respect and dignity that I grew up watching his later films, but watched all his classics as an adult. That helped me understand the cinematic techniques, technology, trends and socio-economic situations at the time of his older films. That helped me establish a clear context in which his classics were released. That logical thinking is what has helped me enjoy the acting dictionary (or course guide) called Sivaji Ganesan. I am happy to say I am not a fan or fanatic of any actor. I njoy good films when I see them.
I also grew up listening to Ilayaraja songs and would do anything for an evening of his songs on my home theatre. And it is in this context that I listened to "O Vaanampadi" from Sadhanai and fell in love with the situation of the song, Sivaji's dialogue with Ilyaraja just preceding the song and also the way he acts and shows Prabhu in the video. Utter class.
And I never saw rich or upper class people in the 1960s. By the time I was 3 or 4 years old, people who were rich in the 1960s were nearing 70-80 years old and were a shadow of their younger selves. But I saw one brilliant film called Uyarndha Manidhan when I was 15 (I was seeing it for the 20th time, but this time, I watched it with keen intent). Now I know that is how upper class people in the 1960s would have dressed, walked, behaved, smoked a pipe, talked with servants, etc etc.
I have zillions of learnings to take from his films, in terms of behavior, dressing sense, etc. Kings, lawyers, Doctors, freedom fighters, old people - you name it and Sivaji will have at least one brilliant portrayal of that character across his career.
I know I am digressing a bit in terms of what I wanted to say here - but without being a fan of any actor, I still say his films are enough to show who a true actor is. And my memories of Sivaji will always be how amazed I was at my father, uncles, family doctor, etc who were all such great fans of him.
May his soul rest in peace and may his fame never rest, but spread far and wide for as long as possible.
joe
18th April 2012, 04:09 PM
Shankarbharath :clap: enjoyed every bit of your writing . So happy to read the experience of youngster like you and your take on NT . Pls keep coming .
vasudevan31355
18th April 2012, 04:11 PM
15-4-2012 அன்று peppers tv சேனலில் ஒளிபரப்பாகிய AVM ராஜேஸ்வரி திரையரங்கில் நடைபெற்ற 'கர்ணன்' வெற்றிவிழாவினை பதிவு செய்திருந்தேன். இப்போது நம் அன்பு உள்ளங்கள் மகிழ இணையத்தில் தரவேற்றி இதோ...
பள்ளி ஆசிரியையும்,பள்ளிக்கூட குழந்தைகளும் அளித்த ஆர்ப்பரிக்கும் பேட்டி.
http://www.youtube.com/watch?v=IXB0pOuqLq0&feature=player_detailpage
திரு.சொக்கலிங்கம் அவர்களின் பேட்டி.
http://www.youtube.com/watch?v=tUmWD4Q964o&feature=player_detailpage
திரு.Y.G.மகேந்திரா, திரு.M.L.கான் அவர்களின் அசத்தல் பேட்டி.
http://www.youtube.com/watch?v=CYg8dC0m094&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
vasudevan31355
18th April 2012, 04:22 PM
எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்களும், நன்றிகளும்.
என்றென்றும்
உங்கள் வாசுதேவன்.
Gopal.s
18th April 2012, 04:45 PM
வாசு சார்,
நான் தங்களிடம் ஒரு சகோதர உரிமை எடுத்து பழகினேன். சிறிது காலமே ஆனாலும் ஒரு இறுகிய நட்பு மலர்ந்துள்ளது.ஆனால் உங்கள் தொட்டார் சுருங்கி குணம் என்னை மிரட்டுகிறது. எனக்கு என்ன பதிவு போடுவது என்று பயம் உள்ளது.இந்த விஷயத்திற்கு இவ்வளவு பின்விளைவா என்று என்னையும் உறுத்துகிறது.நீங்கள் ஓய்வு எடுக்க விரும்புவது வேறு.விடை பெறுவது என்பது வேறு.விடை பெறுவதனால் தங்கள் மன வருத்தத்திற்கு காரணமான நான்தான் விடை பெற வேண்டும்.நீங்கள் சிறிது ஓய்வெடுத்து உங்கள் பணிகளை தொடருங்கள்.நான் இடையில் வந்து இடையில் போனவனாக இருக்கட்டும்.உங்கள் விடை பெரும் முறை என் வாழ்நாள் உறுத்தலாக இருக்கும்.நான் மனதால் கூட யாருக்கும் செய்ய விரும்பாத தீமையை உங்களுக்கு செய்ததாக இருக்க வேண்டாம்.நல்ல சக்திகள் உலகில் குறைவு.அதனால் நல்ல சக்திகளுக்குள் பிளவு என்பது இதயத்தை பிளப்பது.இதற்கு மேல் என் இதயத்தை பிளந்து காட்டுவது கடினம்.உங்கள் உழைப்பையும்,நேரத்தையும் செலவழித்து நீங்கள் சிந்திய ரத்தத்தை என் ஒரு பழி சொல்லால் நான் அதன் மேன்மையை குறைத்ததை உணர்கிறேன்.மனமார வேண்டுகிறேன்.நட்புக்கு சிறிது இடம் கொடு.
joe
18th April 2012, 04:46 PM
Vasudevan sir,
Thanks a lot for the videos .
பெருந்தலைகளின் கோரிக்கைக்குப் பின்னரும் நீங்கள் விடைபெறுகிறேன் என்று சொல்வது வருந்தத்தக்கது ..உங்கள் சொந்த காரணமெனில் வற்புறுத்த முடியாது ..ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்பது என் விருப்பம் .நன்றி.
sankara1970
18th April 2012, 04:49 PM
instant coffee or fast food pola, sameepa kalamaka, intha thiriyil,
Thiru. Ragavendra, Thiru Pammalar, Thiru. Neyveli Vasudevan intha moovarum niraya
visuals vazangi vanduleerkal
Kurippaka, ellorum poramai padumpadi, Vasu avargal order seyyamale, rasigarkalukku,
instant aha, virundhu padaithu varukirar-nanum konjam computer vishayangalil edupadu
ullavan than. analum Vasu(enna full time intha velai thana) avargalin vegam edu enai illathathu
Ippothu etho kan pattu vittathu.
Please come back-we want ur services
parthasarathy
18th April 2012, 05:04 PM
Dear Mr. Shankar Bharath,
What a write-up! Wow!! Great going indeed!!!
Please continue to enthral us.
Regards,
R. Parthasarathy
shankarbharath
18th April 2012, 05:14 PM
Thanks to Mr. Joe and Mr. Parthasarathy for the kind welcome.
I do contribute to posts on younger actors also, on other threads, but there is something when I post about Sivaji, MGR, Muthuraman, Vyjayanthimala, etc. - you can't help but think about the sheer power in their character portrayals. That they acted in many black-and-white films is the reason why their expressions are that much more impactful even today. Yes, I am equally appreciative of Kamal or Mohanlal also - I am not comparing or starting any discussion here - but when it comes to that era, the power of the characterization stands out with aplomb.
I will continue posting about specific films and what each of those meant to me. Thanks again.
ajithfederer
18th April 2012, 05:19 PM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/546127_10150829554185761_297262185760_12011521_457 047328_n.jpg
joe
18th April 2012, 05:20 PM
AF :ty:
Gopal.s
18th April 2012, 06:59 PM
Welcome Barath.Pl.Enrich the thread further.I advise you to stick to only Sivaji Films to gain the maximum pleasure of watching the only genius india ever produced.
Gopal.s
18th April 2012, 07:03 PM
Gnana Guru Samy Sir,
Pudhu Varavukku Engal Vazhthukkul Asiyudan.Namadhu Kudumbam virivadaivadhu Maghizhchidhane.
ScottAlise
18th April 2012, 07:08 PM
Dear Vasu Sir,
U r one among the veteran hubber. Pl don't go sir. If this happens we cannot gain this momentum(Karnan success).I feel this thread is going great right from Karnan release date is announced. I hope all others echo my words
ScottAlise
18th April 2012, 09:31 PM
I would like to share my liking towards NT & how I became his fan
I remember vaguely that my thata when we come for summer holidays would watch Thillana Mohanmbal. Rent was only Rs 10/- for one day. 20years back
During Diwali or Pongal in Raj Tv Karnan would be in night 10 pm. My father & whole family would watch the movie whole night .(Now I went to Karnan 2 times with my father& Mother)
As I grew I was(,Iam) addicted to Rajini sir still Iam. I watched old movies in KTV, sun tv.
I liked Trisoolam, Thangapadakam,Vietnam veedu etc.
When I was doing my +2 my Computer Sir disclosed that NT is dead. Many of my friends including me were shocked though we were not his fans.
Next day all theatres were closed in Udumalpet &kalpana theatre(oldest theatre in Udumalpet) kept a big photo in his honour & rememberance
When I was doing ACS moser bear introduced cds with lesser rates I purchased Moser bear Cd Gouravam, Thangapadakam cds.I was astonished. I started buying Rajini,Kamal, MGR movies . I bought Colour movies of NT like Mundru Deivangal,Thillana,Navaratiri,Thiruvilayadal etc.
It was during that time I was fascinated towards MGR. I watched all his movies, read books subscribed to his monthly magazines argued with my parents . Though I was watching all MGR movies, I did not ignore NT.
But after sometime I was irritated about false propaganda made by rival camp monthly magazines regarding the credibility, BO of NT. My father being ardent movie patron would say rival camp would hit cow dung on posters, create false propaganda during 60s & 70s to overcome NT.
After certain point I just could not tolerate this. They say many of his movies were flop. (which were actually hits). Though through publications of hubbers in books ppl might get a clear picture
It was at this time I decided to watch NT.
My Mom suggested Avan Thaan manithan. I loved it but when NT loses his wealth & died with his fingers closed I made sure not to watch it again(I could not see NT like that) so
I bought Tirisoolam Dvd . I love(d) the movie.
ScottAlise
18th April 2012, 09:32 PM
My first crush on NT
, First scene when NT arrives in gold shirt & welcomes us (lion walk), old Sivaji’s intro scene when reena asks why u punish yourself , NT acting!? Was --------
Trunk call famous sumathi scene is chanceless
Also when he sees KR vijaya’s photo he touches her grey hair & also his hair unakumm enna mathirye vayasidhcu also he will run in the steps when he knows that he is going to meet his wife after a long gap
Guru’s acting is bubbly that too with a fat dollar, white shirt, white stick (Inseperable Compaion of old age)
He also utters a dialogue “ in stage I live my character, on life I keep my character” a real punch dialogue
Also songs were exceptionally good . Kudos to MS sir. Cinematography was also good capturing good locales
Technically the movie was sound . One sivaji will sit on another sivaji’s shoulder that’s brilliant. Ajith did the same in Vaali intro scene.
Though it’s a kannada remake & remade in hindi & Telugu . I saw Hindi, telugu version too.
It collected more than one crore as tax for Government & the related news are given in our thread itself.
The movie did super business & record run though Rajini, Kamal were in there.
A big function was held @ Madurai
A must watch movie for whole family. Watch it tomm @11 PM in Sun TV
ScottAlise
18th April 2012, 09:47 PM
http://www.youtube.com/watch?v=EcqXs94XVe8
The full credit goes to this video creator
goldstar
19th April 2012, 09:49 AM
சதீஷ் சார் மனம் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்)
அன்புடன்,
வாசுதேவன்.
Thanks a lot Vasu sir. I am seeing Madhi theater entrance nearly after 17 years, last I was there around 1995 to watch "Amaithipadai".
I would love to watch our NT's Karnan on Sunday evening show and watching with so much "alapparai" would be complete satisfaction.
Thank you sir for your valuable efforts to bring these photos into this thread and make us happy.
I DO believe you will make us (me) happy again with 50th days photos and videos.
Cheers,
Sathish
kumareshanprabhu
19th April 2012, 10:18 AM
Dear Guru
congrats
regards
kumar
groucho070
19th April 2012, 12:06 PM
Shankarbarath, wonderful sharing.
ragulram, keep it coming.
KCSHEKAR
19th April 2012, 12:44 PM
திரு.சந்திரசேகரன் சார்,
தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
தங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி! தங்களின் பளிச் பதிவுகளை மீண்டும் எதிர்நோக்குகிறேன்.
Gopal.s
19th April 2012, 01:11 PM
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
வாசு சார்,
உங்கள் அன்பு கட்டளையை ஏற்கிறேன்.ஆனால் நான் வியாபாரி.பதிலுக்கு எதையாவது பெறாமல் நான் எதையும் கொடுப்பதில்லை.நீங்கள் என் அன்பு கட்டளையை ஏற்று உங்கள் சொந்த வேலைகள் முடிந்ததும் பதிவுக்கு வர வேண்டும்.செய்வீர்களா?
Gopal.s
19th April 2012, 01:28 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தாங்கள் இல்லாமல் அருமைப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வந்து மீண்டும் புதுப் பொலிவு தர உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பதிவானாலும் உடனே அந்தப் பதிவிற்கு முழுமனதுடன் பாராட்டும் உயர்ந்த குணம் தங்களுக்கு. அதே போல தவறான பதிவுகளையும் மனம் நோகாத படி நாசூக்காக கோடிட்டுக் காட்டும் குரு போன்றவர் தாங்கள் எனக்கு. ஒரு விசுவாசமிக்க மாணவனாக குருவான தங்களை எப்போதும் வணங்குகிறேன். ஆவலுடன் தங்கள் பதிவுகளைக் காண வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
அன்பு கார்த்திக் சார்,
என்னைப் பொறுத்தவரை நீங்கள் நக்கீரர். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் தாங்கள் அஞ்சாமல் குற்றம் குற்றமே என்று சூளுரைக்கும் பாணியே தனி. நீங்களும் திரியில் பங்கு பெற்று சில மாதங்கள் ஆயிற்று. எங்களுக்கு பல யுகங்கள் ஆனாற்போன்று இருக்கிறது. தங்கள் முதல் நாள் திரையரங்கு அனுபவ பதிவுகளைக் காணாமல் கவலையுறுகிறது நெஞ்சு. தங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், வழிகாட்டுதல்களும் மறக்க முடியாதவை. தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.
அன்பு பார்த்தசாரதி சார்,
தங்கள் பாடல் ஆய்வுகள் என்னவாயிற்று? தாங்கள் இல்லாமல் பாடல் ஆய்வுப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வாருங்கள். இன்பப் பாடல்களின் ஆய்வுப் பதிவை அள்ளித் தாருங்கள். தங்கள் அன்பிற்கும் பாராட்டும் குணத்திற்கும் மிக்க நன்றி!
திரு.சந்திரசேகரன் சார்,
தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!
டியர் ஞானகுருசுவாமி சார்,
தங்கள் குடும்பத்தின் புதிய வரவான அந்த தெய்வக் குழந்தைக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
மற்றும் திரியின் அனைத்து நண்பர்களே!
திரு plum சார், திரு.P.R சார், திரு கோல்ட் ஸ்டார் சதீஷ் சார், அன்பு ஹரீஷ் சார், திரு. சங்கரா சார், dear grouchcho sir, அன்பு குமரேசன் பிரபு சார், அன்பிற்கினிய பாலா சார், திரு.ராதாகிருஷ்ணன் சார் , திரு சுப்பிரமணியம் ராமஜயம் சார், திரு.ரங்கன் சார், புதிய வரவுகளான சிவாஜி தாசன் சார், திரு subras சார், இளம் சிங்கமான ராகுல் சார், படைப்பாளி பாலா சார், திரு மோகனராம் சார், திரு சகலா சார், திரு கரிகாலன் சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன உயிரினும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாசம் கலந்த நன்றிகளைத் தெரிவித்து, தாங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாசு சார்,
உங்கள் அன்பு கட்டளையை ஏற்கிறேன்.ஆனால் நான் வியாபாரி.பதிலுக்கு எதையாவது பெறாமல் நான் எதையும் கொடுப்பதில்லை.நீங்கள் என் அன்பு கட்டளையை ஏற்று உங்கள் சொந்த வேலைகள் முடிந்ததும் பதிவுக்கு வர வேண்டும்.செய்வீர்களா?
rsubras
19th April 2012, 01:49 PM
thanks very much for mentioning my name too along with the list of hub stalwarts........ :) Take care and Looking for your earliest return to this hub
ezuxsuc
19th April 2012, 03:05 PM
1266
thirisulam,mutththukkal moondru,
Gopal.s
19th April 2012, 03:24 PM
இரு மேதைகள்
அந்த பிரபல மேடை நாடக நடிகரின் நாடகத்தை பார்க்க மாக் சென்னேட்ட் என்பவரும் பாபேல் நோர்மாந்து என்பவரும் வந்தனர்.நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய்,தங்கள் படமான மேகிங் எ லிவிங் என்ற படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.அதுவரை கீஸ்டோன் கம்பெனி யில் நடித்த போர்ட் ஸ்டேர்லிங் என்பவரை தூக்கி விட்டு ,அந்த புது நடிகரை போட்டனர்.அந்த படத்தில் அவரது வேடம் நகரத்தில் காசில்லாத ஒருவன்,மற்றவர்களை ஏமாற்றி வேடமிட்டு வாழ்கையை நடத்துவான்.ஆனால் பட தயாரிப்பாளர் சென்னேட்ட் ,புது நடிகரின் நடிப்பில் திருப்தியில்லாமல் ,பழைய நடிகரை போட்டு படபிடிப்பை மீண்டும் தொடர விரும்பினர்.ஆனால் நோர்மாந்து பிடிவாதமாய் அதே நடிகரை வைத்து மீண்டும் பழைய ரீல்களை திரும்பி எடுத்தார்.இப்போது சென்னேட்ட் கு திருப்தி.படம் ரிலீஸ் ஆனது.பிய்த்து கொண்டு ஓடி ,ஒரே இரவில் அந்த நடிகர் ஐ பிரபல்யம் ஆக்கியது.
என்ன,எங்கோ கேட்ட கதையை திரும்பவும் ஆங்கில பெயர்களை போட்டு கதை விடுகிறான் என்கிறீர்களா?உண்மை.உண்மை.சத்தியம்.அந்த நடிகரின் பெயர் சாலி சாப்ளின்.
நான் பிறவி மேதைகளை வணங்கும் நமது நடிகர் திலகத்துக்கும் ,சார்லி சாப்ளினுக்கும் உள்ள ஒற்றுமை வியக்க வைக்கிறதல்லவா?படக்கதை,பாத்திரம் எல்லாமே பராசக்தி மாதிரியே.
RAGHAVENDRA
19th April 2012, 04:15 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/ChaplinMakinALiving.jpg/756px-ChaplinMakinALiving.jpg
Making a Living is the first film starring Charlie Chaplin. It premiered on February 2, 1914. Chaplin plays Edgar English, a lady-charming swindler who runs afoul of the Keystone Kops.
Chaplin wore a large moustache and a top hat in this film, he also carries a walking cane. Whilst not "the tramp" the character is somewhat reminiscent of the tramp, having hat, cane, moustache and baggy trousers; his famed screen persona of "The Little Tramp" did not appear until his next film, Kid Auto Races at Venice.
It was written and directed by Henry Lehrman.
Cast
Charlie Chaplin - Swindler
Virginia Kirtley - Daughter
Alice Davenport - Mother
Henry Lehrman - Reporter
Minta Durfee - Woman
Chester Conklin - Policeman / Bum
Plot
Edgar English cons a journalist out of some money. He applies for a job at his newspaper. Whilst the journalist is helping a trapped motorist Edgar steals the camera with the picture of the accident and rushes back to the paper with it. He steals the headlines. A short pursuit with the police ensues.
from the pages of wikipedia (http://en.wikipedia.org/wiki/Making_a_Living)
Making a Living video
http://youtu.be/JiaAmx5RT-I
RAGHAVENDRA
19th April 2012, 04:23 PM
அன்பு ராகவேந்திரன் சார்,
திரியில் என்னை எல்லா வகையிலும் ஊக்கமளித்து, என்னுடைய பல தொழில் நுட்ப சந்தேகங்களை எந்த நேரமானாலும் பொறுமையாக விளக்கி என்னை வழி நடத்திய நான் மிக மிக நேசிக்கக் கூடிய என்னுடைய ஆசான் ஸ்தானத்தில் இருக்கும் தங்களை என்னால் மறக்கவே முடியாது. எப்போது சென்னை வந்தாலும் சொந்த சகோதரரைப் போலத் தாங்கள் என்னை கவனித்துக் கொண்டது காலம் உள்ள வரை மறக்க முடியாது. எந்த பிரதிபலனும் கருதாது மூச்சும் உயிரும் நடிகர் திலகத்துக்காகவே என்று வாழும் தங்களின் தன்னலமற்ற சேவை எனக்கும், நம் திரியில் உள்ளவர்களுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தன்னந்தனி ஆளாக நடிகர் திலகம் இணையதளத்தை தொடங்கி அதை சிறப்பாக ஆறாவது ஆண்டில் அடியெடுக்க வைக்க நீங்கள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் நாங்கள் பட்ட சிரமங்கள் மிகக் குறைவு. வெற்றிகரமாக N.T. fans association தொடங்கி திரு Y.G.M மற்றும் முரளி சார் அவர்களின் உறுதுணையுடன் சிறப்பாக நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம். தங்களுடன் இணைந்து பணி புரிந்ததில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணி புரிந்ததாகவே அப்படி ஒரு சந்தோஷத்தை உணர்கிறேன். தங்களுடைய பேராதரவிற்கும், அன்பிற்கும் தலைவணங்கி மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய அளவற்ற அன்பிற்கும் பாசத்திற்கும் என்றென்றும் நன்றியுடையவனாயிருக்கிறேன். தயவு செய்து தங்கள் பதிவுகளைத் தொடருங்கள். ஒவ்வொரு நிழற்படத்திற்கும் தாங்கள் எடுக்கும் சிரத்தையும் அதே போல் ஒவ்வொரு ஆவணத்திற்கும் பம்மலார் எடுக்கும் சிரத்தையும் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அதே போல் இங்குள்ள அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். தங்களைப் போன்றே நானும் ஒரு சமயம் முடிவெடுத்து சற்று விலகியிருந்து மீண்டும் வந்திருக்கிறேன். தற்சமயம் தங்களுடைய மனப் பளுவும் மற்ற சுமைகளும் குறைய வேண்டி சற்று ஒய்வெடுங்கள். ஆனால் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் தலைதூக்கி வந்து வாசுன்னா வாசுதான் என்று நிரூபியுங்கள். நாம் அனைவரும் ஆற்றும் தொண்டு நடிகர் திலகம் என்ற உயர்ந்த மனிதருக்கு எனவே அது என்றும் தங்களை கை விடாது. வாருங்கள், தாருங்கள், நம்மோடு சேருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Gopal.s
19th April 2012, 06:14 PM
பம்மல் சுவாமிக்கு அர்பணிப்பு.
தெய்வ பிறவி-1960
அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகர் கொடுத்திருக்க வேண்டிய முதல் படம்.(ஜூரிகள் பார்வையில்)(இரண்டாவது மோட்டார் சுந்தரம் பிள்ளை,மூன்றாவது தில்லானா மோகனம்பாள்,நாலாவது முதல் மரியாதை)-உலக தரத்தில் பார்த்து முடிவு செய்தாலும் இந்த படங்களுக்கு அவசியம் அவருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)
சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.
நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.
நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.
எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
Murali Srinivas
20th April 2012, 12:04 AM
Bharath,
It is heartening to see people born in late 70s and early 80s coming out with their brand of admiration for NT. The enjoyable part of your write up is you were able to bring out your inner feelings quite well. Keep them coming!
Congrats Guruswamy Sir!
வாசு அவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். தனிப்பட்ட பல அலுவல்கள் காரணமாகவும் அவர் இந்த ஓய்வை விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் வருவேன் என்று உறுதி பட கூறினார். அதற்காக காத்திருப்போம்.
சுவாமி,
சாரதி சொன்னது போல் வணங்காமுடி சாதனையில் யாருக்கும் வணங்காமுடி என்று ஆவணபூர்வமான ஆதாரத்தை அள்ளி தந்ததற்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படமே நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக வருவது இங்கும் நடைபெற்றது. மதுரை தங்கத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வணங்காமுடி 78 நாட்களை நிறைவு செய்த போது திரையரங்க நிர்வாகம் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம் வெளியானது. இல்லையென்றால் மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது நடிகர் திலகத்தின் படமாக வணங்காமுடி மாறியிருக்கும்.
அன்புடன்
NOV
20th April 2012, 07:03 AM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/580342_345324015526988_100001481766300_925313_2004 74231_n.jpg
Gopal.s
20th April 2012, 07:14 AM
Nice Snap Buddy.
Gopal.s
20th April 2012, 07:15 AM
Pammalar Sir,Vasu Sir,
If both of you are absent,thread is suffering as you two are the back bones.Atleast one of you should be active as I don't want the repeat of Jan-March'2012.
Gopal.s
20th April 2012, 07:16 AM
Pammalar,Vasu Sir,
You didn't take care of our NT's Galatta Kalyanam in all our Galatta?
Gopal.s
20th April 2012, 08:04 AM
என் உயிர் நண்பா,
உனக்கான பதிவு இது.நட்புக்கு நான் கொடுக்கும் உச்ச பட்ச மரியாதை.
ஹரிச்சந்திரா-1968
கலாட்டா கல்யாணத்துடன் சேர்ந்து வந்த பருவம் தவறி வந்த பயிர்.ஜி.வரலக்ஷ்மி தயாரிப்பில் அவரது கணவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் (ஆமாம் -வசந்த மாளிகை,அவன் ஒரு சரித்திரம் ,கருடா சௌக்யமா படங்களின் இயக்குனர்.)இயக்கத்தில்,கே.வீ.மகாதேவன் இசையில்,ஏ.கே.வேலன் வசனம்(வணங்கா முடி?),ஆர்.ஆர்.சந்திரன்(மகாகவி காளிதாஸ் பட இயக்குனர்)மஸ்தான்(ராஜா பட காமெரா)சேர்ந்து காமெரா,கோபிக்ரிஷ்ணா குழுவினரின் அற்புத நடனம் என்று வந்தும் வெற்றி எல்லையை தொடாத படம்.
நான் இந்த படத்தை அனாதையை (மற்ற நண்பர்கள் வர மறுத்து விட்டனர்)போல் எழுபதுகளின் ஆரம்பத்தில் கீத்து கொட்டாய் ஒன்றில் பார்த்த ஞாபகம்.அந்த ஞாபகத்தில் எழுதுகிறேன்.
எனக்கு அந்த வயதில் சடேரென்று பொட்டில் அடித்தது,நடிகர் திலகத்தின் ஆரம்ப சூரிய வணக்க பாடல்.கர்ணன் வந்து ,மூன்றே வருடங்கள்.ஆனால் எவ்வளவு வித்யாசமான வணக்கம்.மிதமான கம்பீரம்,சாந்தி தவழும் முகம்,சாத்வீக,சத்திய மன்னனாக வித்யாசமான வணக்கம்.(ஒரே மாதிரி போலீஸ் அதிகாரி,மன்னன் என்று பாத்திரங்கள் அமைந்தாலும் ,நடிப்பு கடவுள் காட்டும் வித்தியாசம் அபாரம்.)வாசு சார் சொன்ன படி தேஜஸ் பொலிந்த முகத்தோடு,அளவான கம்பீரம கொண்டு,மிதமாக குரல் கொண்டு,சத்திய திரு உருவாக வளம் வருவார்.பிறகு,ஒரு காட்சியில் (காட்டில்)
ஒரு அந்தணர் தூங்க இவர் காவலுக்காக முழித்து இருந்து ,அடுத்த காட்சியில் அந்த களைப்பை கண்களில் கொண்டு வருவார்.சுடுகாட்டு தத்துவ காட்சி ஒன்றில் வசனம் என்னை கவர்ந்தது.(அந்த வயதில்).இளைத்து ,இளமை கூடிய முதல் மன்னர் படம் .ஆனால் ஒரு குழந்தையின் தந்தையாக நடிப்பில் முதிர்ச்சி காட்டி வயதை காட்டுவார்.(பின்னாட்களில் துஷ்யந்த மன்னனாக எங்கிருந்தோ வந்தாளில் எவ்வளவு இளமையாக ,அழகாக ஜொலிப்பார் நம் கடவுள்?)உருக்கம்,பிரிவு இதெல்லாம் தலைவருக்கு மீன் குஞ்சு நீந்துவது போல்.
படம் தோற்றதற்கு காரணங்கள் -ஹரி சந்திரன் கதையிலே லாஜிக் இருக்காது.இவ்வளவு பொன் கொடுத்து ஒரு வேலை காரியையும்,வெட்டியானையும் யாராவது வாங்குவார்களா? ஹரி சந்திர மன்னருக்கான ஆரம்ப காட்சிகளில் மனைவி ,மகன் உடன் நெருக்கம் காண்பித்து உறவு மனதில் தங்காததால் ,பின்னாட்களின் பிரிவின் சோகம் நம்மை உறுத்தாது.ஜி.வரலக்ஷ்மி(அஞ்சலி உருவம்,சந்த்யா குரல்)பொருந்தாத மனைவி(அம்பிகாபதி போல்).சுமார் இசை(உலகம் அறியாத,காசியில் வாழும்).அந்த வயதில் நான் ஆச்சர்ய பட்டது காவல் காரன் படத்தில் வரும் ஓறாம் மாதம் உடலது பாடல் சோகமாக ஒலிக்கும்.பின் பகுதி கொஞ்சம் இழுக்கும்.
ஆனால் நமது கடவுளுக்காக இதை பார்க்கலாம்.
shankarbharath
20th April 2012, 12:22 PM
Bharath,
It is heartening to see people born in late 70s and early 80s coming out with their brand of admiration for NT. The enjoyable part of your write up is you were able to bring out your inner feelings quite well. Keep them coming!
Congrats Guruswamy Sir!
வாசு அவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். தனிப்பட்ட பல அலுவல்கள் காரணமாகவும் அவர் இந்த ஓய்வை விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் வருவேன் என்று உறுதி பட கூறினார். அதற்காக காத்திருப்போம்.
சுவாமி,
சாரதி சொன்னது போல் வணங்காமுடி சாதனையில் யாருக்கும் வணங்காமுடி என்று ஆவணபூர்வமான ஆதாரத்தை அள்ளி தந்ததற்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படமே நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக வருவது இங்கும் நடைபெற்றது. மதுரை தங்கத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வணங்காமுடி 78 நாட்களை நிறைவு செய்த போது திரையரங்க நிர்வாகம் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம் வெளியானது. இல்லையென்றால் மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது நடிகர் திலகத்தின் படமாக வணங்காமுடி மாறியிருக்கும்.
அன்புடன்
Many thanks for the kind words..!!
Gopal.s
20th April 2012, 01:41 PM
Shankar bharath,
Great going.we enjoy every bit of your writing.As soon as I open the thread ,I search for your postings as the first option.Pl.Keep it up.
Regards
Gopal
Gopal.s
20th April 2012, 03:09 PM
Sri Raghavender/sailasri Chandra sekar,
One of you Please.Download the video of Jaya TV Madhan parvai discussing success of Karnan.
Gopal.s
20th April 2012, 03:25 PM
நடிகர் திலகத்தின் அனைத்து விஷயங்களையும் தொகுத்து வீடியோ ஆக்க முடியுமா?பிரபலங்களின் பார்வையில் நடிகர்திலகம்- சன் டி.வீ.
செவாலியர் பாராட்டு நிகழ்ச்சி(உரிமை ஜெ.ஜெ.டி.வீ)நடிப்பு சூரியன் -தூர் தர்ஷன் -இந்த மாதிரி பல விஷயங்களின் தொகுப்பு.
ராகவேந்தர் (அ) சந்திரசேகர் சார் பதில் சொல்லவும்.
gkrishna
20th April 2012, 03:40 PM
நடிகர் திலகம் நாட்டின் செல்வம்
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்துக்கும் உரிய அருமை nt யின் உயிரோடு கலந்து விட்ட சகோதரர்களே
நீண்ட நாட்கள் கழித்து திரியில் நுழைகிறேன் எத்தனை புதிய வரவுகள் நெஞ்சம் இனிக்கிறது
தொடர வேண்டும் நம் அனைவரின் உறவும் பங்களிப்பும்
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
gkrishna
20th April 2012, 03:49 PM
திரு கோபால் அவர்களின் ஹரிச்சந்திரா ஒரு பார்வை மதனின் திரைபார்வை விஞ்சி விட்டது .
Nt அவர்களின் ரசிகர்கள் கூட மிக சிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்து விட்டது
வாழ்க தமிழ் வளர்க சிம்ம குரலோன் புகழ்
gkrishna
20th April 2012, 03:56 PM
கவிஞர் வைரமுத்து அவர்கள் உடன் nt போட்டோ மிக அருமை (அன்புள்ள அப்பா என்று நினைக்கிறன் சரியா)
ஒரு சாயலில் ஷோபன் பாபு போல் தோற்றம். அன்புள்ள அப்பா திரைப்படத்திற்கு கல்கியின் விமர்சனம் நினைவிற்கு வருகிறது
"பிறவி கலைஞன் ஐயா "
parthasarathy
20th April 2012, 04:33 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தெய்வப்பிறவி மற்றும் ஹரிச்சந்திரா படங்களைப் பற்றிய உங்களுடைய சுருக்கமான, ஆனால், அழகான ஆய்வு பிரமாதம்.
குறிப்பாக, தெய்வப்பிறவி. ஒரு கட்டிட மேஸ்திரியின் பாத்திரத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எந்த வித பிரத்தியேக ஒப்பனையுமின்றி, அவருடைய அசல் சுருள் முடியை சரியாகச் சீவாமல் வெறுமனே விட்டு, மீசையை மட்டும் ட்ரிம் செய்யாமல் விட்டு, அசல் மேஸ்திரி போன்றே தோற்றமளித்திருப்பார்.
அன்பாலே தேடிய என் - பாடலில் மிக மிக இயல்பாக நடித்திருப்பார். இன்று சொல்லப்படும் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் நடிகர் திலகம் - பத்மினி ஜோடியிடம் அற்புதமாக மிளிரும்.
இந்தப் படத்தைப் பற்றி மேலும் விரிவாக அலசலாம்.
ஹரிச்சந்திரா - திரு. வாசுதேவன் அவர்கள் பதிந்திருந்த பல புகைப் படங்களைப் பார்த்தால், இந்தப் படம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எடுத்திருப்பது நன்றாகப் புலனாகும். அப்படியென்றால், ஒரு காட்சிக்கும் அடுத்து வருகிற காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவது எவ்வளவுக் கஷ்டம்? அதையும், மிக அழகாக செய்திருப்பாரே நடிகர் திலகம். மற்ற கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பை நல்கியிருப்பார்கள்.
அருமையான ஆய்வு. தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
parthasarathy
20th April 2012, 04:35 PM
அன்புள்ள கிருஷ்ணா ஜி,
நீண்ட நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். அசத்துங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
kumareshanprabhu
20th April 2012, 04:37 PM
dear Raghavendra, Murali sir
Why vasudevan and pammalar are not writing nowdays
regarrds
kumar
rsubras
20th April 2012, 05:02 PM
. இன்று சொல்லப்படும் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் நடிகர் திலகம் - பத்மினி ஜோடியிடம் அற்புதமாக மிளிரும்.
Best of Sivaji - Padmini duet IMO is "madhavi ponmayilaal" song, oruthar nadippu expressions, mannerism la kalakkirupar na, innoruthar dance la asathiruppar (also her expressions particularly when Sivaji's character tries to come too closer for her comfort)....... music, dance and acting would have complemented each other perfectly......... it is a chanceless song........
Gopal.s
20th April 2012, 05:09 PM
Pammalaar sir ,
உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை என் சிறு வயது ஞாபகத்துக்கு கை பிடித்து அழைத்து செல்கிறது.நான் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் பெரும் ரசிகன்.Vietnaam வீடு சம்பந்த பட்ட பதிவுகள் ஒரு விலை மதிப்பில்லா ரத்னம்.பொக்கிஷம்.என்னை இந்த ஹப் இல் போதை கொள்ள செய்ததில் பெரும்பங்கு உங்களுடையதே.நீங்கள் சேகரித்ததை பலன் கருதாமல் தரும் மனம் பொன் போன்றது.உங்களுடன் நான் பேசிய நேரங்கள் விலை மதிப்பிலா வாழ்வின் நிமிடங்கள்.உங்களின் நலம் வேண்டி பிரார்த்திக்கும் உங்கள் ரசிகன்.
உங்கள் நலம் நாடும்,
கோபால்
Gopal.s
20th April 2012, 05:11 PM
krishnaji,
welcome back after a long gap.It is refreshing to have you with us.
Parthasarathy Sir,
Nanri.We are on the same boat in pick of films.
RAGHAVENDRA
20th April 2012, 05:16 PM
நண்பர்களே,
மிக நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த திரைக் காவியம், பரீட்சைக்கு நேரமாச்சு, தற்பொழுது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/paritchaidvdcover.jpg
RAGHAVENDRA
20th April 2012, 05:22 PM
இத்திரைப் படத்தில் நெஞ்சைத் தொடும் சிறந்த காட்சி. ஆச்சார அனுஷ்டானமான அந்தணர் குடும்பத்தில் தன் மகனைப் போலவே காட்சியளிக்கும் ஆனந்தைத் தன் மனைவியின் மன நிம்மதிக்காக வசிக்க வைத்து, புலால் உண்பவனான அவனுக்காக மிகுந்த தர்ம சங்கடத்துடன் புலால் அங்காடியின் வாசலில் நின்று அவன் விரும்பிய உணவைப் பொட்டலமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து அவனுக்குத் தரும் இக்காட்சி நடிகர் திலகம் எந்த வயதிலும் தன் நடிப்பில் தன்னுடைய திறமையை நிலைநாட்ட முடியும் என்று நிரூபித்த காட்சியாகும். குறிப்பாக அந்தப் பொட்டலத்தை குடைக்குள் மறைத்து வருவதும். சூதக மந்திரத்தை சொல்லிக் கொண்டே ஸ்நானம் செய்வதும், பின் அவன் மனம் வருந்தும் போது அவனைத் தேற்றுவதும்...
ஒரு நிஜமான அய்யங்கார் எப்படி உணர்வார் என்பதை நிரூபித்த காட்சி..
சூப்பரோ சூப்பர்...
அந்தக் காட்சியைக் காணுங்கள்.
http://youtu.be/BPsRQnqMc64
இக்காட்சி நம்முடைய நடிகர் திலகம் திரியின் முந்தைய பாகத்தில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் மீண்டும் தரப் படுகிறது.
இக்காட்சி நம் கோபால் சாருக்கு சமர்ப்பணம்.
RAGHAVENDRA
20th April 2012, 05:27 PM
மீண்டும் தங்கள் பதிவை அளித்த கிருஷ்ணாஜி அவர்களே, வருக ... வருக...
NOV
20th April 2012, 07:57 PM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/577384_207273716042882_341473984_n.jpg
J.Radhakrishnan
20th April 2012, 08:13 PM
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் பரீட்சைக்கு நேரமாச்சு நெடுந்தகடு பற்றிய தகவல் மற்றும் காணொளி அற்புதம், தாங்கள் குறிப்பிட்டது போல் ஒரு நிஜமான அய்யங்கார் கூட இந்த அளவுக்கு செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே?
J.Radhakrishnan
20th April 2012, 08:27 PM
டியர் கோபால் சார்,
தங்களின் தெய்வபிறவி மற்றும் ஹரிச்சந்திரா திரைப்பட ஆய்வு அற்புதம்! அதிலும் தாங்கள் கீற்று கொட்டகையில் படம் பார்த்த அனுபவத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள், நானும் நம் தெய்வத்தின் பல படங்களை கீற்று கொட்டகையில் தான் பார்த்திருக்கிறேன்.
jaiganes
21st April 2012, 12:37 AM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/577384_207273716042882_341473984_n.jpg
Was casually browsing the channels and stopped for a while to see a bit of "Thirudaadhe" in KTV. The scene I saw was a comedy scene involving KAThangavelu as he was being chased around by a Pathani outside a tea stall.. The wall behind made for a very interesting viewing.. There were two movie posters stuck side by side. One was Chakravarthi thirumagan showing a swashbuckling MGR wielding a sword- full size.. The next one on its side was that of "Ambikaapathy". Now what do we expect - a full image of Sivaji on it - right? Bang - Wrong. It had Bhanumathi full size..
I was like - that was strange and watched the scene on for a while...
Another wall and another set of posters - This time it was chakravarthi thirumagan with Anjali Devi's face prominently - along side there was Ambikapathi poster and what did i expect? Sivaji - full size? right?
Got you.. WRONG...
It was NS Krishnan, TA madhuram and some other side actors...
I was like.. wow - ivvlo deeppaa politicsaa appavevaa????
VELANGIDUM..
shankarbharath
21st April 2012, 12:42 AM
Shankar bharath,
Great going.we enjoy every bit of your writing.As soon as I open the thread ,I search for your postings as the first option.Pl.Keep it up.
Regards
Gopal
Thanks Mr. Gopal - very sweet of you to compliment my posts - I was merely expressing myself. I shall continue to do so :)
pammalar
21st April 2012, 01:51 AM
தவறான புரிதல் பம்மலார் அவர்களே!
திரு .கோபால் அவர்கள் இளைய தலைமுறைக்கு நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்தி ஆர்வம் கொள்ள செய்வது அவசியம் என குறிப்பிட்டதால் அதற்காக பிரத்யேகமாக இயங்கி வரும் மற்றொரு திரியில் பங்களிக்க வருமாறு nov அழைத்ததில் எந்த தவறும் அல்லது வேறு எந்த கோணமும் இல்லை என்பதை என்னால் உறுதியாக்க கூற முடியும்.
டியர் ஜோ சார்,
தெளிவுபடுத்தியமைக்கு மகிழ்ச்சி ! தங்களின் உறுதியான பதிவுக்கு உளங்கனிந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 01:54 AM
mikka nandri Joe. :ty:
pammalar avargalE, naan enna ungalai azhaippadhu? indha hub enbadhu namma veedallavaa? namakkul enna formalities? :)
டியர் மாடரேட்டர் Mr. NOV,
தங்களின் அன்புக்கும், பெருந்தன்மைக்கும் தூய்மையான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 01:55 AM
டியர் பம்மலார்,
திரு கோபால் அவர்களுக்கு விடுத்த அழைப்பினைப் பற்றித் தங்களுடைய உள்ளத்தில் பட்டதை மறைக்காமல் எடுத்துச் சொல்லி எந்த ஒரு மாறுபட்ட கருத்தாயிருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசி தீர்த்துக் கொள்வதே சரியானது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.
வணங்காமுடியின் வணங்காமுடி கவரேஜ் சூப்பர். அதற்காக மீண்டும் பாராட்டுக்கள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது பாராட்டுதல்களுக்கு குளிர்ச்சியான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 01:58 AM
Dear Pammalar & Murali Srinivas Sir,
Thank you for your replies. I know that a book on NT was in circulation& stopped but I never knew that it was due to your contribution. U r efforts won't go waste . Monthly magazine on NT will come soon along with special books published earlier. We hubbers will definitely support all the concerned people in this himalayan task.
Dear Mr. ragulram11,
Thank you very much for your appreciation & magnanimity !
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
21st April 2012, 02:00 AM
DEAR VASU SIR,
PLEASE CONTINUE YOUR CONTRIBUTION IN THIS THREAD,I TRIED TO PERSONALLY CALL YOU AND REQUEST BUT YOUR CELLPHONE IS IN SWITCHOFF MODE.
DEAR GURU,
MY HEARTIEST CONGRATS FOR YOUR ILAYATHILAGAM.
DEAR BALA,
A VERY WARM WELCOME TO OUR NT'S THREAD.
DEAR RAGHAVENDRA SIR,
MY HEARTIEST WISHES FOR NADIGARTHILAGAM.COM ON IT's 6TH YEAR CELEBRATION.
DEAR SUPERSTAR PAMMAL SIR,
VANANGAMUDI AD'S VERY SUPERB.
Dear Senthil Sir,
Thanks for your accolades !
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
21st April 2012, 02:02 AM
Dear pammalar sir,
Vanangamudi stills super,you are really great,because you have lot of collections about NADIGAR THILAGAM.
Dear BALAA Sir,
Thank you so much for your whole-hearted compliments !
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
21st April 2012, 02:04 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
நடிகர் திலகத்தின் "வணங்காமுடி" நூறு நாட்களைக் கடந்த படம் தான் என்று, சான்றுடன் பதிவிட்ட உங்களுக்குக் கோடி நன்றிகள்.
பல வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் நடிகர் திலகத்தின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருந்தது. அது, ராஜா ராணி படங்களைப் பொறுத்தவரை, அவருடைய படங்கள் ஓடாது என்று. எதை வைத்து, இப்படி அவர்கள் எழுதினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு சில படங்கள், சாரங்கதாரா, ராணி லலிதாங்கி போன்ற படங்கள் ஓடாததை வைத்தும், மாற்று முகாமில், அந்த வகைப் படங்களை (மிகச் சில என்றாலும்) மட்டுமே நடித்து வெளி வந்ததாலும் இருக்கலாம். அங்கு 1961 -லிருந்து தான் வேறு வகைப் படங்கள் வரத் துவங்கியது.
தூக்குத் தூக்கி, மனோகரா, தெனாலி ராமன், வணங்காமுடி, உத்தம புத்திரன், சம்பூர்ண இராமாயணம், வீரபாண்டிய கட்டபொம்மன் (சிகரம் தொட்ட வெற்றி!), கர்ணன், என்று எத்தனை வெற்றிப் படங்கள்! எதை வைத்து விகடன் இதழ் இப்படி எழுதினார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர் தான்!!
பல நாட்கள் வணங்காமுடியும் கர்ணனும் நூறு நாட்களைத் தொடாத தோல்விப் படங்கள் என்று எத்தனை பேர் வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆவணங்களுடன் அவர்கள் வாயை அடைத்த உங்களுக்கு மறுபடியும் கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மைகள் என்றேனும் ஒருநாள் எவ்விதத்திலோ வெளியாகத்தானே செய்யும் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 02:20 AM
என் இளைய சகோதரர் பம்மலார் அவர்களே!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தங்களைப் போன்ற சகோதரர் எனக்குக் கிடைப்பாரா?.. அப்படிப்பட்ட கள்ளம் கபடமில்லாத அன்பையும், பாசத்தையும் என் மீது வான் மழையாய் பொழிந்து கொண்டிருக்கும் என் உயிரே! நடிகர் திலகத்தை நான் நினைக்காத நேரமில்லை. அதே நடிகர் திலகத்தின் ஸ்தானத்தில் என் உள்ளத்தின் அடித்தளத்தில் தங்களை வைத்து அகம் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாய் நின்ற கருணைக் கடவுளே! உங்கள் அளவிற்கு என் மேல் என் தாயார் தான் பாசம் காட்டியுள்ளார். உணவு உண்ணக் கூட மறந்து போகும். உங்களிடம் மணிக்கணக்கில் கைபேசியில் தினமும் பேச மட்டும் மறந்து போகாதே! நமது திரியை மென்மேலும் செழுமை அடைய வைக்க தாங்கள் எனக்கு பலவகையில் பேருதவி புரிந்ததை மறக்க முடியுமா? சதா சர்வ காலமும் திரியின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருக்கும் நாங்கள் தவம் செய்து அடைந்த எங்கள் அனைவரின் செல்லக் குழந்தை அல்லவோ தாங்கள்!
(தங்களின் 'வணங்காமுடி' பதிவுகள் எப்படிப்பட்ட வணங்காமுடிகளையும் உங்கள் முன் தலை வணங்க வைத்து விடும். அற்புதமான அருமையான பதிவுகள். அதற்கு என் மனம் மகிழ்ந்த நன்றிகள்)
எப்பொழுதும் எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு, ஒரே வேண்டுதலோடு வாழ்த்துக்களே வார்த்தைகளாய், வாழ்க்கையாய்க் கொண்ட அன்பு வடிவமே! உலகில் யாருமே சாதிக்க முடியாத சாதனைகளை செய்தவர் நம் இறைவனார். அதே போல அவருடைய தொண்டராகிய தாங்களும் உலகில் யாருமே செய்ய முடியாத சாதனைகளைப் படைத்து வருகிறீர்கள் கிடைத்தற்கரிய ஆவணப் பொக்கிஷங்களை பாதுகாத்து சுயநலம் பாராமல் எங்கள் எல்லோருக்கும் அளித்து வருவதன் மூலமாக. இதற்காக என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை. இந்த சிறு வயதில் செயற்கரிய செயல்களைச் செய்து சிறப்புடன் பணியாற்றி சிகரப் பதிவுகளை அள்ளி வழங்கும் அமுத சுரபியே! எனக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் தோளோடு தோள் நின்று என் சுமைகளை உங்கள் சுமைகளாய் நினைத்து, என் சந்தோஷத்தை உங்கள் சந்தோஷமாய் நினைத்து, உரிமைகளுக்காக குரல் கொடுத்த உத்தமரே! நீங்கள் அப்பனுக்கு பாடம் சொன்ன முருகப் பெம்மான் அல்லவோ எனக்கு. இதற்கு மேல் எனக்கு எழுத முடியவில்லை. கண்ணீர் நிறைகிறது. நடிகர் திலகத்தின் அருமைகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்ற முதலிடம் பெற முழுத் தகுதியும் கொண்ட ஆவண முதல்வரே! அந்தப் மனிதப் புனிதரின் ஆசியினால் வாழ்வாங்கு வாழ்ந்து, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று எல்லாவற்றிலும் வெற்றி நடை போட இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள். நாம் பிரிய வில்லை. உயிருடன் கலந்திருக்கிறோம்.
வாழ்க வளமுடன்.
தங்கள் அன்புச் சகோதரன்
வாசுதேவன் .
சகோதரர் வாசுதேவன்,
தங்களின் பாராட்டுதல்களுக்கும், புகழுரைகளுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க எனக்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.
தாங்கள் வழங்கிய விஷூவல் பதிவுகளான மதுரை 'மதி'யில் நடைபெற்ற "கர்ணன்" 25வது நாள் விழாக் கொண்டாட்ட புகைப்படங்கள் [இதற்கு தங்களது சகோதரியின் கணவருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !] மற்றும் சென்னை 'ஏவிஎம் ராஜேஸ்வரி'யில் கொண்டாடப்பட்ட 25வது நாள் விழா வீடியோ முதலியவை பாராட்டுக்களுக்கும், நன்றிகளுக்கும் அப்பாற்பட்டவை.
பெருந்தன்மையில் நடிகர் திலகத்தின் மறுவடிவம் தாங்கள் என்பது அறிந்த ஒன்று. கடுங்கோபத்தில் துர்வாசரும்-பரசுராமரும் தங்களிடம் தோற்றோடிவிடுவார்கள் போலிருக்கிறதே ! தங்களின் இதயம் 'அன்பு' என்னும் ஊற்றுப்பெருக்கால் நிறைந்ததல்லவா !
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி உன் மனச பாத்துக்க நல்லபடி"
இந்த வைரவரிகளை நினைவில் நிறுத்துங்கள், வருத்தங்களை விலக்குங்கள், திரிக்கு திரும்புங்கள்.
ஒரு அருணோதயத்தை நாங்கள் காண்போம் !
"காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு"
என்கின்ற "ராஜா" பாடல் வரிகளைப் பாடிக்காட்டி பம்மலார் ஆகிய எனக்கே 'அல்வா' கொடுக்கக் கூடாது.
அல்வா என்றவுடன் நினைவுக்கு வருகிறது,
திரிக்கு சில தினங்களாக இதுபோன்று 'அல்வா' கொடுத்தது போதும், எப்பொழுதும்போல் நிஜமான இனிப்பு 'அல்வா' கொடுக்க வீறுகொண்டு வாருங்கள் !
இது ஆண்டவன் கட்டளையோ, அரசகட்டளையோ அல்ல, உங்கள் பம்மலாரின் பாசக்கட்டளை !
உரிமையுடன்,
உங்கள் இளைய சகோதரன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 02:33 AM
Dear All,
I wish to share my personal experience and opinions. This is very nostalgic for me. I am now 31, but my experiences start from the early 1980s, right from the time I was 3 years old.
Back then, we had the VHS players and I loved watching commercial entertainers like Sakalakala Vallavan and Murattu Kaalai. I came to know about Sivaji Ganesan around the same time as Kamal or Rajini but was clearly told that his films are mostly "Black and White", which as a child, I did not prefer watching. As a child, I was more attracted to color films and did not watch Sivaji films till I was 6.
My first Sivaji film that I watched on VHS was the eternal classic Thiruvilayadal. My mother was clear on bringing me up with happy comedies or entertainers and she shielded me for a long while from sorrowful melodramas in family setups. But Thiruvilayadal had a mythological theme, was colorful, had great songs and she was happy to play it for me. I watched it again and again and again. I could not get enough of it. I was told by my mother that "None of us have seen god. But if Sivan was born in this earth, he is definitely more likely to behave in the fashion that Sivaji has shown in his acting".I specifically remember a majestic, yet stylish walk that Sivaji would depict, when he plays the role of the fisherman. Nothing much - just a BGM and he walks on the sand. But what body language!
In 1985-86, I still remember one evening. My dad, mom and I had gone to mount road for evening tiffin. My dad got out of the car and sent us all home. He said he will watch a film and come back after 3 hours. I asked him which film he was going to watch - he told me it was a Sivaji film called "Sadhanai". I cried but I was not taken to the film. Yes, I watched it much later and enjoyed it, but I look back at that evening and laugh today.
And then it happened. By the time I was 10, I started asking for older films and watched entertaining/comedy films like Galatta Kalyanam, Uthamaputhiran, Ooty varai uravu, etc. I still remember getting scared and turning off the radio if "Engey nimmadhi" played on it. TMS' voice was so scary in that song for me as a child.
Today, I can say with utter respect and dignity that I grew up watching his later films, but watched all his classics as an adult. That helped me understand the cinematic techniques, technology, trends and socio-economic situations at the time of his older films. That helped me establish a clear context in which his classics were released. That logical thinking is what has helped me enjoy the acting dictionary (or course guide) called Sivaji Ganesan. I am happy to say I am not a fan or fanatic of any actor. I njoy good films when I see them.
I also grew up listening to Ilayaraja songs and would do anything for an evening of his songs on my home theatre. And it is in this context that I listened to "O Vaanampadi" from Sadhanai and fell in love with the situation of the song, Sivaji's dialogue with Ilyaraja just preceding the song and also the way he acts and shows Prabhu in the video. Utter class.
And I never saw rich or upper class people in the 1960s. By the time I was 3 or 4 years old, people who were rich in the 1960s were nearing 70-80 years old and were a shadow of their younger selves. But I saw one brilliant film called Uyarndha Manidhan when I was 15 (I was seeing it for the 20th time, but this time, I watched it with keen intent). Now I know that is how upper class people in the 1960s would have dressed, walked, behaved, smoked a pipe, talked with servants, etc etc.
I have zillions of learnings to take from his films, in terms of behavior, dressing sense, etc. Kings, lawyers, Doctors, freedom fighters, old people - you name it and Sivaji will have at least one brilliant portrayal of that character across his career.
I know I am digressing a bit in terms of what I wanted to say here - but without being a fan of any actor, I still say his films are enough to show who a true actor is. And my memories of Sivaji will always be how amazed I was at my father, uncles, family doctor, etc who were all such great fans of him.
May his soul rest in peace and may his fame never rest, but spread far and wide for as long as possible.
Excellent write-up, Mr. Shankarbharath.
Enjoyed every bit of your piece.
Keep it up !
Warm Wishes & Regards,
Pammalar.
pammalar
21st April 2012, 03:45 AM
Pammalaar sir ,
உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை என் சிறு உ வயது ஞாபகத்துக்கு கை பிடித்து அழைத்து செல்கிறது.நான் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் பெரும் ரசிகன்.Vietnaam வீடு சம்பந்த பட்ட பதிவுகள் ஒரு விலை மதிப்பில்லா ரத்னம்.பொக்கிஷம்.என்னை இந்த ஹப் இல் போதை கொள்ள செய்ததில் பெரும்பங்கு உங்களுடையதே.நீங்கள் சேகரித்ததை பலன் கருதாமல் தரும் மனம் பொன் போன்றது.உங்களுடன் நான் பேசிய நேரங்கள் விலை மதிப்பிலா வாழ்வின் நிமிடங்கள்.உங்களின் நலம் வேண்டி பிரார்த்திக்கும் உங்கள் ரசிகன்.
உங்கள் நலம் நாடும்,
கோபால்
டியர் கோபால் சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், இதயபூர்வமான பாராட்டுக்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள் !
"தெய்வப்பிறவி", "ஹரிச்சந்திரா" திரைக்காவியங்களின் ஆய்வுகள் சுருக்கமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் உள்ளன. பாராட்டுக்கள் !
முதல் ஆய்வை எனக்கும், அடுத்த ஆய்வை நமது சகோதரர் நெய்வேலியாருக்கும் அர்ப்பணம் செய்த தங்களின் பெரிய மனதுக்கு பவித்ரமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 03:51 AM
Bharath,
It is heartening to see people born in late 70s and early 80s coming out with their brand of admiration for NT. The enjoyable part of your write up is you were able to bring out your inner feelings quite well. Keep them coming!
Congrats Guruswamy Sir!
வாசு அவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். தனிப்பட்ட பல அலுவல்கள் காரணமாகவும் அவர் இந்த ஓய்வை விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் வருவேன் என்று உறுதி பட கூறினார். அதற்காக காத்திருப்போம்.
சுவாமி,
சாரதி சொன்னது போல் வணங்காமுடி சாதனையில் யாருக்கும் வணங்காமுடி என்று ஆவணபூர்வமான ஆதாரத்தை அள்ளி தந்ததற்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படமே நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக வருவது இங்கும் நடைபெற்றது. மதுரை தங்கத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வணங்காமுடி 78 நாட்களை நிறைவு செய்த போது திரையரங்க நிர்வாகம் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம் வெளியானது. இல்லையென்றால் மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது நடிகர் திலகத்தின் படமாக வணங்காமுடி மாறியிருக்கும்.
அன்புடன்
டியர் முரளி சார்,
தங்களின் பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 03:52 AM
டியர் கிருஷ்ணாஜி,
Welcome Back !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 04:33 AM
டியர் ராகவேந்திரன் சார்,
"பரிட்சைக்கு நேரமாச்சு" நெடுந்தகடு வருகை நெஞ்சுக்கு களிப்பூட்டுகிறது. வெகு நாட்களாக எதிர்பார்த்தது அல்லவா ?! தகவலுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 04:40 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
நான் வணங்கும் தெய்வம்
[12.4.1963 - 12.4.2012] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5684-1.jpg
குறிப்பு:
தென்னகமெங்கும் 12.4.1963 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் 27.4.1963 சனிக்கிழமையன்று வெளியானது. [அரங்குகள் : காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, உமா].
பக்தியுடன்,
பம்மலார்.
pammalar
21st April 2012, 05:10 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கலாட்டா கல்யாணம்
[12.4.1968 - 12.4.2012] : 45வது ஆண்டு கொண்டாட்ட தினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5685-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 20.7.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5686-1.jpg
குறிப்பு:
1. 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : சென்னை - சாந்தி[106 நாட்கள்] மற்றும் கிரௌன்[106 நாட்கள்].
2. சென்னை [சயானி]யில் 77 நாட்களும், மதுரை [ஸ்ரீ மீனாக்ஷி]யில் 70 நாட்களும் மற்றும் திருச்சி, சேலம், கோவை போன்ற மாநகரங்களில் ஒவ்வொன்றிலும் முறையே 70 நாட்களும், ஏனைய பல ஊர்களின் அரங்குகளில் 56 நாட்களும் ஓடிய இக்காவியம் ஒரு சூப்பர்டூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
Gopal.s
21st April 2012, 07:50 AM
Pammalaar Sir,
Now only thread is again back to full throttle.What ever we write,your stills are like kumkumam for the women.It attains full grace only after this Galatta Padhivu.
Subramaniam Ramajayam
21st April 2012, 09:56 AM
Pammalaar Sir,
Now only thread is again back to full throttle.What ever we write,your stills are like kumkumam for the women.It attains full grace only after this Galatta Padhivu.
Grand welcome to pammalar sir. hope vasu sir will be back very soon and we wish for the same. all nadigar thilagam fans should be united and do our small contributions regularly. many more KARNANS are expeccted in big screens
long live NADIGARTHILAGAM FAME AND GLORY.
GREETINGS TO ALL HUBBERS.
Gopal.s
21st April 2012, 10:04 AM
சாந்தி- 1965
ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.
பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து
கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.
கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.
உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது? எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான்
ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
Gopal.s
21st April 2012, 12:01 PM
Ragavendar Sir,
I know you are making a dig at me by attributing the video parikshaikku neramachu.Pl.look at my shortlist on page 279-article No 2784.This movie is figuring in the list.
Gopal.s
21st April 2012, 12:03 PM
Friends,
One of you can take it to index all the articles,documents,stills by name or subject for easy access of old articles.This is only my humble suggestion.The index should serve as reference by page/article no.
Gopal.s
21st April 2012, 12:47 PM
இரும்பு திரை-1960
முதல் முதலில் தொழில் சார்ந்த தொழிலாளர் பிரச்னையை வலுவாக அக்கறையுடன் சொன்ன வர்த்தக படம்.ஹிந்தி,தமிழ் இரண்டிலும் தயாரிக்க பட்ட ஜெமினி நிறுவனத்தாரின் முதல் சிவாஜி படம்.(உறவு சரியாக இல்லாததால் வாசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் முயற்சிக்கு சிவாஜி ஒத்துழைக்காமல் பிறகு வாசன் கை விட்ட பிறகு பந்துலுவிற்கு கை கொடுத்தார் என்று கேள்வி).ஹிந்தியில் திலிப் ,இரண்டிலும் வைஜயந்தி.ஹிந்தி மிக நன்றாகவும்,தமிழில் சுமார் நன்றாகவும் ஓடியது.வாசன் இயக்கம்.ஜெமினி கதை இலாக்காவின் (முக்கியம் தில்லானா மூல கதாசிரியர் சுப்பு)
நல்ல திரைகதை,வெங்கட்ராமன் இசை(ஷன்முகப்ரியாவில் கண்ணில் குடியுருக்கும் )என்று ஜெமினி யின் நல்ல முயற்சி.திலிப் இதன் மூலம் சிவாஜியின் சுமார் நண்பர் ஆனார்.(இன்றும் சிவாஜியை மிக நல்ல நடிகர் என்று புகழ்வார்)
தொழிலாளர் சங்க தலைவர் சிவாஜி,முதலாளி விசுவாசி சுப்பையா அண்ணா,முதலாளி மகள்-தொழிலாளி காதலி(முதலாளி மாஜி காதலி மகள்) -சிவாஜி என ஒரு முக்கோண காதல்,தங்கவேலுவின் சகிக்க முடியாத காமெடி என போகும் மிக நீஈண்ட படம்.பின்னாளில்(1971) மல்லியம் ராஜகோபால் சார் இதே மாவை மேலும் சுவையான பணியாரம் ஆக்கினார் சவாலே சமாளி என்று.முக்கோணம் தவிர்த்து திருநீலகண்டர் கதை ,நல்ல தங்கை,தங்கையின் முரட்டு கணவன்,நல்ல வில்லன் கம் காமெடியன் என்று நல்ல வெற்றி பெற்றார்.
இரும்பு திரையின் நான் மிக மிக ரசித்த சிவாஜியின் காதல் காட்சி(யதார்த்த நடிப்பின் உச்சம்) ஒன்று.வைஜயதியிடன் செல்லமாக தன் கன்று காதலை சொல்லும் இடம்/.அருமையான கெமிஸ்ட்ரி வைஜயந்தி உடன்.(இந்த ஜோடி நிறைய சேர்ந்து நடித்திருக்கலாம்)அதே போல் நிர்வாகத்தின் ஆட்டு மந்தை புத்தியை சுட்டி காட்டி இந்திய பொறியியல் ஆளர்களிடம் நம்பிக்கை வைக்க சொல்லும் இடம் அருமை.எதிர்பார்த்த திசையில் பயணித்தாலும்
நன்றாக எடுக்கப்பட்ட படம்.கிளைமாக்ஸ் ,வைஜயந்தி தீ பந்தத்துடன் என்று ஞாபகம்.(ச.ச. வில் விஜயகுமாரி அதே தீ பந்தம்)இரண்டிலும் சிவாஜி பழி ஏற்பார்.சரோஜா தேவி கொஞ்சம் டம்மி.ரங்கராவ் நல்ல நடிப்பு வழக்கம் போல்.
படத்தை சிவாஜி கொஞ்சம் இழுத்தடித்தார் என்று கேள்வி.ஆனால் ஜெமினி நிறுவனம்-சிவாஜி உறவு மோட்டார் சுந்தரம் பிள்ளை,விளையாட்டு பிள்ளை என தொடர்ந்தது.வாசன் பிறகு ஏ.வீ.எம் முடன் ஒரு மேடையில் சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பேசினார்.
சிவாஜி அருமையாக தன் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்.தூய தமிழ் ரொம்ப உறுத்தாது.
நல்ல படம்-தமிழில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுள் ஒன்று.தொழில் நகரம் கோவையில் வெள்ளி விழா கண்டது.
ezuxsuc
21st April 2012, 01:52 PM
MUTHTHUKKAL MOONDRU
http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/Untitled-10.jpg
ezuxsuc
21st April 2012, 01:55 PM
GOD OF CINEMA
http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/Untitled-8.jpg
kumareshanprabhu
21st April 2012, 02:52 PM
Welcome back pammalar sir
regards
kumareshanprabhu
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.