PDA

View Full Version : Thevadhai



sivank
29th June 2010, 01:21 PM
தேவதை

பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு இடம். எங்கும் ஒளிமயமாக, நறுமணம் வீசும் ஒரு இடம். சிலர் இதை சொர்க்கம் என்பார்கள், சிலர் கடவுளின் சந்நிதானம் என்பார்கள். எல்லாமே சரிதான். கடவுள் இல்லாத இடமே இல்லையே. ஆனால் இந்த இடத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. கருக்கள் சிசுக்களாக மாறுமுன் கடவுளிடம் பேசும் இடம் இது. மறுநாள் பூமியில் ஜனிக்க போகும் ஒரு சிசுவிற்கு மனத்தில் ஒரு இனம் புரியாத பயம். கடவுள் அதன் வேதனையை பார்த்து அதன் அருகே அமர்ந்தார்.

"என்னை, நீங்கள் நாளை பூமிக்கு அனுப்ப போவதாக சொன்னார்களே, எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனக்கு ஒன்றுமே தெரியாது, உடலிலும் பலம் இல்லை, எப்படி நான் தனியாக சமாளிப்பேன். நான் இங்கேயே இருந்து விடுகிறேனே."

கடவுள் சிரித்து கொண்டே, " உன்னை நான் அப்படி தனியாக அனுப்பி விடுவேனா. உனக்காக நான் ஒரு தேவதையை வைத்து இருக்கிறேன். அந்த தேவதை உனக்காகவே வாழும் ஒரு ஜீவன். உனக்கு தேவையான அனைத்தையும் சொல்லி கொடுக்க கூடிய ஜீவன் அது", என்றார்.

சிசு இன்னும் சமாதானம் அடையாமல், " இங்கு எனக்கு எந்த வித பயமுமில்லை, ஆனால் அங்கோ எனக்கு அவர்கள் பேசும் பாஷை கூட தெரியாது, பழக்க வழக்கங்களும் தெரியாது. அது மட்டுமில்லாமல் எனக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் உங்களிடம் சொல்கிறேன், அங்கு என் நிலை," என்றது.

"நீ, அந்த தேவதையை பார்த்த உடனே உன் மனத்தில் ஒரு தைரியம் வரும். உனது நிழல் போல உன் அருகே இருந்து உன்னை காக்க கூடியது அந்த தேவதை. தேவைபட்டால் உன்னை காக்க தன உயிரையும் கொடுக்க கூடியது அது. அது உன் அருகே இருக்கும் வரை உனக்கு எந்த பயமும் தேவையில்லை. உனது ஒவ்வொரு அடியையும் கூட இருந்து கவனித்து வழி நடத்தி அழைத்து செல்லும். ஆகையினால், நீ எந்த தயக்கமும் இல்லாமல் பூமிக்கு செல்லலாம்," என்றார் கடவுள்.

சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்த சிசு, " எனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை என்றால் என் கதி,"

" எந்த நேரமும் நீ என்னிடம் திரும்பி வரலாம். ஒவ்வொரு இரவும் உனக்கு என்னுடன் பேசும் வாய்ப்பு உண்டு. உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்யலாம். நீ தயக்கம் இல்லாமல் சென்று வா".

நேரம் செல்ல செல்ல மெதுவாக சிசுவின் காதில் வேறு சில சப்தங்கள் கேட்க, ஜனிக்கும் நேரம் வந்து விட்டது என்று உணர்ந்த சிசு கடவுளை பார்த்து அவசரமாக, " என் தேவதையின் பெயர் என்ன, அதை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்வேன்", என்றது.

கடவுள் சிரித்து கொண்டே, " அதன் பெயர் அம்மா" என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனித்த சில மணி நேரங்களில் சிசுவின் மனத்தில் என்னன்னவோ எண்ணங்கள். அம்மாவை கண்ட சந்தோஷம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. இவளை இவ்வளவு நாட்கள் ஏன் சந்திக்கவில்லை, ஏன் இவ்வளவு காலம் காத்து இருந்தோம் என்று தோன்றியது. அம்மாவின் அருகில் மிக சந்தோஷமாக இன்னொரு ஜீவனும் இருந்தது. அம்மாவிற்கு துணையாக, காவலாக இருந்த அந்த காவல் தேவனையும் சிசுவிற்கு பிடித்து இருந்தது. அவன் சிசுவை தூக்கி, அம்மாவை பார்த்து, உன்னை போலவே இருக்கு என் குட்டி என்றது சிசுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மா, அவனை காட்டி, இது தான் உன் அப்பா என்ற போது, அவன் முகத்தில் தோன்றிய பெருமிதமும், இனி உன்னையும் காப்பேன் என்று சொல்லாமல் சொன்னதும் சிசுவிற்கு புரிந்தது. ஆனால் கொஞ்ச நேரமாக அம்மாவை காணவில்லை. சுற்றிலும் அழு குரல்கள். அப்பா சிசுவை கையில் தூக்கி அழுது கொண்டே இருந்தார். அப்படி இப்படி பார்த்து அம்மாவை தேடியது சிசு. அம்மாவை காணாமல் கடவுள் மேல் ஆத்திரம் கொண்டது அது.

கோபமாக இருந்த சிசுவை பார்த்து, " ஒவ்வொருவர்க்கும் ஒரு நியதி இருக்கிறது. உனது தேவதை உன்னை காக்க தன உயிரை கொடுத்தாள். இனி இங்கு இருப்பதும், என்னோடு வருவதும் உனது விருப்பம். என்ன சொல்கிறாய்", என்றார் கடவுள்.

தன்னை கையில் ஏந்தியபடியே துவண்டு இருக்கும் காவல் தேவனை பார்த்த சிசு கடவுளிடம், " நான் , என் அப்பாவிற்கு தேவதையாக இருக்க போகிறேன்," என்றது.

அழுது கண்கள் இடுங்கி இருந்த அவன் கையில் இருந்த சிசுவை பார்க்க, அது அவனை பார்த்து கண்கள் மலர்ந்து சிரித்தது.
அவனும் முகம் மலர்ந்து சிரித்தான்.
கடவுளும் அகம் மலர்ந்து சிரித்தார்.

sivank
29th June 2010, 01:25 PM
Thanks to PP maam for giving me the inspiration for this story

Sarna
29th June 2010, 01:27 PM
sivan, touching story :clap: :clap:

sivank
29th June 2010, 01:43 PM
sivan, touching story :clap: :clap:

Thanks sarna :D

pavalamani pragasam
29th June 2010, 01:48 PM
சிவன், அழகான கதை ஒன்று உங்கள் மொழிபெயர்ப்பில் மேலும் அழகாகிவிட்டது! அத்தோடு தொடர்ந்த உங்கள் கற்பனை சேர்க்கையும் மிகவும் அழகாக இருக்கிறது!

Thirumaran
29th June 2010, 01:51 PM
Sivan :2thumbsup: :clap:

sivank
29th June 2010, 02:15 PM
Thanks PP maam, Thanks Thiru

19thmay
29th June 2010, 02:19 PM
Good one Sivan sir! :D

sivank
29th June 2010, 03:18 PM
Thanks Sridhar

Shakthiprabha
29th June 2010, 04:32 PM
I got the first part as a forward sometime back... (in english)

epilogue is good. Nice perspective of who a 'devathai' would be!
For each, their own :)

keep going

ksen
29th June 2010, 05:03 PM
:thumbsup:

Dinesh84
29th June 2010, 09:41 PM
Nice story Sivan sir :clap:

suvai
30th June 2010, 04:18 AM
sivank nga......Thaai = Devathai....nu azhaga solliteenga :thumbsup:

sivank
30th June 2010, 10:00 AM
Thanks sp, kamala, Dinesh, Suvai

NOV
30th June 2010, 10:06 AM
Great inspiration work on an existing story. :clap:
Fathers have always been neglected and your story underlines this. But now he has an angel instead! :D

I have always delved on the curious subject on who thrives on whose love? Parent or child! Excellent Sivan.

sivank
30th June 2010, 10:24 AM
Thanks velan :D

Madhu Sree
5th July 2010, 05:10 PM
Wooowwwwwww annaa... :clap: a gr8 inspiration... :thumbsup:

sivank
6th July 2010, 07:02 PM
Thanks Madhu :D

Murali Srinivas
7th July 2010, 11:45 PM
சிவன்,

வேறொரு உணர்வில் இருந்த என்னை உங்கள் எழுத்தும் கருத்தும் முற்றிலுமாக மாற்றி நெகிழ செய்திருக்கிறது. வாழ்த்துகள்.

அன்புடன்

crazy
8th July 2010, 01:56 AM
:thumbsup: :bow: :clap:

sivank
8th July 2010, 06:35 PM
Thanks Murali, Vaasi.

GSV
10th August 2010, 02:24 PM
sivank,

Nice story...Nalla Ending.. oru feel irundhudhu...

keep going...

sivank
13th August 2010, 09:13 PM
sivank,

Nice story...Nalla Ending.. oru feel irundhudhu...

keep going...

Thanks GSV :D