View Full Version : Jayalalitha - legend in Tamil Cinema
RAGHAVENDRA
20th May 2010, 11:16 AM
டி.பி. ராஜலட்சுமி காலந் தொட்டு இன்றைய தமன்னா வரை, தமிழ்த்திரையுலகம் எண்ணற்ற நடிகையரைக் கண்டிருக்கிறது. இவர்களில் பல்லாண்டுகள் கோலோச்சியவர்கள் உண்டு. இதில் டி.ஆர். ராஜகுமாரி, பி.பானுமதி, ராஜ சுலோச்சனா, அஞ்சலி தேவி, ஜமுனா சாவித்திரி, சரோஜா தேவி, பின்னர் கே.ஆர். விஜயா, மஞ்சுளா, லதா, வாணிஸ்ரீ, என ஏராளமானோர் உள்ளனர்.
ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி தமிழ்த்திரையுலகில் ஒரு நடிகை நிலைத்து நின்று அரசியலிலும் வெற்றி கண்டிருக்கிறார் என்றால் அவர் ஜெயலலிதா அவர்கள் தான். அவருடைய அரசியல் ஒரு புறமிருக்க அவருடைய திரையுலக சாதனைகள் பிரமிக்கத் தக்கவை. அவருடைய திரைப்படங்களைப் பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் உள்பட தமிழ்ததிரையுலகிற்கு அவருடைய பங்களிப்பு பற்றி அலசுவதே இத்திரியின் நோக்கம். ஏற்கெனவே அவருக்கு நம்முடைய ஹப்பில் திரி இருந்தால் தொகுப்பாளர்கள் அதைச் சுட்டினால் அங்கேயே தொடரலாம். அப்படி இல்லையென்றால் இதில் தொடரலாம்.
கன்னடப் படம் மூலம் திரையலகில் நுழைந்த ஜெயலலிதா அவர்களின் நடிப்பில் வெளிவந்த படங்களில் என் மனம் கவர்ந்த பல படங்களை நான் குறிப்பிட வேண்டும். அவருடைய உன்னத நடிப்பில் வெளிவந்த திருமாங்கல்யம், தங்க கோபுரம் உள்பட பல படங்களைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.
ராகவேந்திரன்
gkrishna
20th May 2010, 12:34 PM
அற்புதம் ராகவேந்திர சார் அவர்களே
நேற்று இரவு எங்கிருந்தோ வந்தாள் பார்த்தவுடன் கலை செல்வி ஜெயலலிதா பற்றி திரி எதுவம் வந்ததாக நினவு இல்லை ஏன் இதை suggest செய்யகூடாது என்று நினைத்தேன் இன்று நீங்கள் ஆரம்பித்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்தாள் படத்தில் அவரின் நடிப்பு மிக்க சூப்பர்
gk
gkrishna
20th May 2010, 05:11 PM
கலை செல்வி இன் 'முத்துசிப்பி ' படம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா கலை செல்வி இன் மிக சிறந்த நடிப்புக்கு எடுத்துகாட்டு இந்த படம்
RAGHAVENDRA
20th May 2010, 05:36 PM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களைப் போலத் தான் நானும் எண்ணினேன். நேற்றிரவு எங்கிருந்தோ வந்தாள் உச்சக் கட்டக் காட்சியைப் பார்த்த வுடன் அவருடைய நடிப்பு நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது. அப்போது தான் தோன்றியது, நமது ஹப்பில் அவருடைய நடிப்புத் திறமையைப் பற்றி விவாதித்தோமா என எண்ணினேன். அப்படித் தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் இத்திரி.
முத்துச் சிப்பியும் அவருடைய சிறந்த படங்களில் ஒன்றாகும். எண்ணிலா படங்கள். சூரிய காந்தி, சவாலே சமாளி, கண்ணன் என் காதலன், எத்தனையோ படங்கள் உள்ளன.
ஒரு நினைவூட்டலாக, எனக்கு நினைவிலுள்ள வரை அவர் நடித்த படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். இப்பட்டியல் ஆங்கில அகர வரிசையில் அமைக்கப் பட்டுள்ளது. ஏதேனும் விட்டுப் போயிருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆதி பராசக்தி
ஆயிரத்தில் ஒருவன்
அடிமைப் பெண்
அனாதை ஆனந்தன்
அன்பைத் தேடி
அன்புத் தங்கை
அன்று கண்ட முகம்
அன்னை வேளாங்கண்ணி
அன்னமிட்ட கை
அரச கட்டளை
அவன் தான் மனிதன்
பாக்தாத் பேரழகி
பொம்மலாட்டம்
புத்திசாலிகள்
சந்திரோதயம்
சித்ரா பௌர்ணமி
தெய்வ மகன்
தர்மம் எங்கே
என் அண்ணன்
எங்க மாமா
எங்க ஊர் ராஜா
எங்கள் தங்கம்
எங்கிருந்தோ வந்தாள்
கலாட்டா கல்யாணம்
கங்கா கௌரி
குருதட்சணை
ஜீஸஸ்
கணவன்
கந்தன் கருணை
கண்ணன் என் காதலன்
கன்னித் தாய்
காதல் வாகனம்
காவல் காரன்
குடியிருந்த கோயில்
குமரிக் கோட்டம்
குமரிப் பெண்
லாரி டிரைவர்
மாடி வீட்டு மாப்பிள்ளை
மகராசி
மேஜர் சந்திரகாந்த்
மணி மகுடம்
மாட்டுக்கார வேலன்
மூன்றெழுத்து
மோட்டார் சுந்தரம் பிள்ளை
முகராசி
முத்துச் சிப்பி
நான்
நம் நாடு
நதியைத் தேடி வந்த கடல்
நீ
நீரும் நெருப்பும்
நீதி
ஒளி விளக்கு
ஒரு தாய் மக்கள்
பாதுகாப்பு
பட்டிக்காடா பட்டணமா
பட்டிக்காட்டு பொன்னையா
பாட்டும் பரதமும்
புதிய பூமி
ராஜா வீட்டுப் பிள்ளை
ரகசிய போலீஸ் 115
ராஜா
ராமன் தேடிய சீதை
சவாலே சமாளி
சக்தி லீலை
ஸ்ரீ கிருஷ்ண லீலா
சுமதி என் சுநதரி
சூரிய காந்தி
தாய்
தாய்க்குத் தலை மகன்
தங்க கோபுரம்
தனிப் பிறவி
தேர்த் திருவிழா
தேடி வந்த மாப்பிள்ளை
திக்குத் தெரியாத காட்டில்
திருமாங்கல்யம்
உண்மையே உன் விலை என்ன
உன்னைச் சுற்றும் உலகம்
வைரம்
வந்தாளே மகராசி
வெண்ணிற ஆடை
யார் நீ
யாருக்கும் வெட்கமில்லை
அன்புடன்
ராகவேந்திரன்
saradhaa_sn
21st May 2010, 11:23 AM
டியர் ராகவேந்தர்...
பொருத்தமான ஒருவருக்கு பொருத்தமான ஒருவரால் துவங்கப்பட்ட பொருத்தமான ஒரு திரி. ஜெயலலிதாவின் பெயரை நீக்கி விட்டு தமிழ்த்திரையுலக வரலாற்றை மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் எழுதிவிட முடியாது என்ற அளவுக்கு முத்திரை பதித்த ஒரு தங்கத்தாரகை, தைரியலட்சுமி.
அவருக்காக நீங்கள் துவங்கியுள்ள இந்த திரி பெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கலைச்செல்வியின் திரையுலகப்பயணத்தில் பிரதான மைல்கல்லான, நடிகர்திலகத்தின் "எங்கிருந்தோ வந்தாள்" படத்துக்கான எனது விமர்சனம் (இதுவரை படித்திராதவர்களுக்காக) இந்த இணைப்பில்...
பாகம் 1, 2
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1250952&sid=4a6196ee2c1e2d2b49e960eee39cb3bd#1250952
பாகம் 3, 4
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=1140
tvsankar
21st May 2010, 11:28 AM
Jayalalitha - Always i like her Hair style and the costumes.
I like her Saree's colors.
Engirndho vandhal - 4th or 5th std ... apo partha padam..
ana - Manadhil ninradhu - Avangaloda saree colors dhan.
Sumathi en Sundari - idhuvum dhan........
Hair style - romba nalla irukum.
Saree's colors - ellam romba nalla irukum.......
saradhaa_sn
21st May 2010, 12:25 PM
கலைச்செல்வியின் திரைப்படங்களுக்கு எனது விமர்சனங்கள் (இதுவரை படித்திராதவர்களின் பார்வைக்காக)...
சுமதி என் சுந்தரி (Part 1, 2, 3, 4)
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743
நீதி (Part 1, 2, 3)
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1302568#1302568
நான் (Part 1, 2)
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=13618&start=0
மூன்றெழுத்து (Part 1, 2, 3)
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=13618&postdays=0&postorder=asc&start=15
வெண்ணிற ஆடை
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=13689
joe
21st May 2010, 12:30 PM
மிகத் திறமையான நடிகை ஜெயலலிதா.
தனித்துவமான நடிப்பும் ,நடனமும் அவரின் சிறப்பு.
saradhaa_sn
21st May 2010, 12:56 PM
கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது பட சர்ச்சையும், அதையொட்டிய நிகழ்வுகளும் பற்றிய எனது மற்றும் ராகவேந்தர் அவர்களின் பதிவு.... (மற்றும் பாக்தாத் பேரழகி விமர்சனம்)...
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=13618&postdays=0&postorder=asc&start=30
saradhaa_sn
21st May 2010, 01:03 PM
[tscii:6c023f3efc]"ஆயிரத்தில் ஒருவன்" (1)
தமிழ்ப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு ஒரு தனிச்சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப்படங்களில் புராணப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப்படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக்கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இதுவரையாகட்டும், கடற்கொள்ளையர்களை கதைக்கருவாகக்கொண்டு வெளிவந்த ஒரே படம் 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டுமே. கதை, வசன்ம், காட்சியமைப்பு கள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக்களங்கள் என, ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
இப்படத்தின் கதாநாயனான 'மக்கள் திலகம்' எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கைதேர்ந்த தையற்கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவதுபோல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச்சணடைக்காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச்சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப் பாகிக்கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் BANDHULU மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதுவரை (பானுமதிக்குப்பின்) சரோஜாதேவிதான் எல்லாப்படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக)போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப் படுத்தியிருந்தார்.
'பருவம் எனது பாடல்' என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மணடபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம்போல "வெற்றி... வெற்றி..." என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித்தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும்போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இள்வரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக்கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக்காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக 'கடற்கொள்ளையனாக' சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப்போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்... இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டுமப்டியாக இருக்கும்.
கத்திச்சண்டைக்காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (MGR & ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச்சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப்பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள்சண்டை (நம்பியார்: "இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் த்லைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்"), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர்.(வழக்கம்போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப்போகும் மூன்று கத்திச்சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித்தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அதுவரை தமிழ்த்திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகி விட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா... இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1) பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
"பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்"
பல்லவியைபாடிமுடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ‘HUMMING’ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ்ஸ்தாயி வரையில் கொண்டுவர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
"இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்"
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2) 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை'
வழக்கம்போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
"ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே"
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3) 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ'
இந்தப் பாடலைப்பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப்பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப்பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4) 'உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்'
பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
"பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்"
அடுத்து வ*ரும் இசை 'பிட்'டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கருப்பு நிற உடையில் அழகுப்பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
[/tscii:6c023f3efc]
saradhaa_sn
21st May 2010, 01:05 PM
[tscii:ea3a90b62a]"ஆயிரத்தில் ஒருவன்" (2)
4) 'ஆடாமல் ஆடுகிறேன்'
கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டயடி சத்தம், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
"ஆடாமல் ஆடுகிறேன்... பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா...வா...வா....
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா...வா...வா.... வா....வா...வா......"
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, 'ஆண்டவனைத் தேடுகிறேன்' என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக த்பேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
"விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்"
'கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்' என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5) 'நாணமோ... இன்னும் நாணமோ..'
நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன..?. காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா?. அதுதான் இந்தப்பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்துகொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
"தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது.. அது இது"
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்னைக்கவரும் வண்ணம் இருக்கும்.
6) 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'
அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
"கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை"
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் "என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?"
நாகேஷ்: "அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து 'ஈ'ன்னு சிரிச்சா. 'கொன்னுடுவேன்' அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்".
'ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
'ஆயிரத்தில் ஒருவன்' பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
[/tscii:ea3a90b62a]
saradhaa_sn
21st May 2010, 01:07 PM
-reserved-
app_engine
21st May 2010, 05:36 PM
'கொன்னுடுவேன்' அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன்.
:lol:
Excellent writeup, Saradhaji!
On the 'motivational songs', there cannot be anything better than 'adhO andhappaRavai' in TFM!
Wonderful, wonderful song!
JJ was very good in AO and a well-matched pair for MGR :-)
RAGHAVENDRA
21st May 2010, 06:23 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். பல வெற்றிப் படங்களுக்கு ஜெயலலிதா அவர்களின் நடிப்பு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல சுமாரான படங்களைத் தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார் ஜெயலலிதா அவர்கள். நடிகர் திலகத்துடனும் சரி, எம்.ஜி.ஆர். அவர்களுடனும் சரி, ஜெயலலிதாவின் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். அவருடைய 100வது படமான திருமாங்கல்யம் படத்தில் அவருடைய நடிப்பு நம் உள்ளத்தை உருக்கி விடும். அதே போல் சூரியகாந்தியிலும் அத்தனை உணர்வு பூர்வமாக நடித்திருப்பார். நடிகர் திலகத்துடன் பல நடிகையர் ஜோடியாக நடித்திருந்தாலும் ஜெயலலிதா நடித்த படங்கள் தனித்து நிற்கும். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி போன்ற நகைச்சுவை, காதல் உணர்வு மிக்க படங்களானாலும் சரி, கண்ணன் என் காதலன், குரு தட்சணை, எங்க ஊர் ராஜா, போன்ற குடும்பக் கதைகளானாலும் சரி, ராஜா, ரகசிய போலீஸ் 115 போன்ற பொழுது போக்குப் படங்களானாலும் சரி, அவருடைய நடிப்ப சிறந்து விளங்கும். இவையெல்லாம் ஒரு உதாரணத்துக்காக மட்டும் கூறப்பட்டிருக்கின்றன. இனி வரும் நாட்களில் அவருடைய படங்களை அலசலாம்.
ஆயிரத்தில் ஒருவன் - நிச்சயம் தமிழ்ப் பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும். பழைய Pirates of the Carribean Sea படத்தின் காட்சியமைப்புகள் நினைவு படுத்தினாலும் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்புற்று விளங்கியது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பும் முக்கியமான காரணம். எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றமும், நீங்கள் குறிப்பிட்ட காட்சியமைப்புகளும் நடன அமைப்பும் ஒளிப்பதிவும் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
அன்புடன்
ராகவேந்திரன்
gkrishna
22nd May 2010, 03:39 PM
சோவின் யாருக்கும் வெட்கமில்லை திரைபடத்தில் ஜெயலலிதாவின் விலைமாது கேரக்டர் excellant ஸ்ரீகாந்த் ஜெயலலிதா காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி விட்டு பொய் விடுவர். சோ rowther வேடத்தில் வருவர் ஜெயலலிதாவிற்கு நியாயம் கேட்கும் காட்சி சூப்பர் ஜேசுதாசின் ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகிற்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கம் என்ன ஏய் மனித சமுதாயமே மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் என்ற பாடல் மூலம் படத்தின் கதை கருவை வெளி படுத்தி இருப்பார் சோ அவர்கள் அவர் direction இல் வந்த படம் என்று நினேகிரன்
நட்புடன் gk
gkrishna
22nd May 2010, 04:07 PM
S SR உடன் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மணிமகுடம் என்று நினைக்கின்றேன் அந்த படம் ஷூட்டிங் போது தான் ச.ச.ராஜேந்திரன் அவர்களுக்கும் அவர் மனைவி விஜயகுமாரிக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக கேள்வி பட்டேன் இது பற்றி சற்று விரிவான தகவல்கள் தெரிந்தால் தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன்
நட்புடன் gk
RAGHAVENDRA
22nd May 2010, 11:01 PM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் நினைவுத் திறன் அபாரம். யாருக்கும் வெட்கமில்லை சிறந்த கதையம்சம் நிறைந்த, சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலையைப் பிரதிபலிக்கக் கூடியதாக அமைந்தது. ஜி.கே. வெங்கடேஷ் அவர்களின் இசையில் யாருக்கும் வெட்கமில்லை பாடல் மிகப் பிரபலமானது. அது போல் பல படங்களைச் சொல்லலாம்.
மணி மகுடம் அருமையான பாடல்கள் நிறைந்தது. குறிப்பாக நான் வந் பாதை மான் வந்தது, சிரமறுத்தல், போன்ற பாடல்கள். கறுப்பு வெள்ளையில் வந்த அரச வம்சத்தைப் பற்றிய கதை.
ஒரு பணிவான வேண்டுகோள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தேவையில்லை, அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
groucho070
24th May 2010, 08:24 AM
A nice thread to a wonderful actress. I don't know JJ as politician, but as an actress I think she was superb. An all rounder, multi-talented, versatile actress. Thanks Raghavendra-sar.
For me, she is special as I like all the films she made with NT, they just have this fantastic chemistry.
Pattikada Pattanama = The way she stood up to NT's ferocity.
Savale Samale - Pre-cursor to the above, but her innocent naivety mistaken for arrogance.
Sumathi En Sundhari - A celeb seeking normalcy, genuinely in love with NT but her "other life" stands inbetween their love and how she deals with it.
Gallatta Kalyanam - part of the madness. Beginning of NT/JJ partnership.
Gurudatchanai - How many have seen this film, in the first place? Though highlight is NT and the village-folks suspician of his affair with the teacher, Padmini, I actually preferred the scenes of him with JJ. "Cute" is the right word for it. Check out the scene where NT rides a bicycle with her sitting at the back. Her tease and NT's reaction = priceless!
That's all I can think of for now.
saradhaa_sn
24th May 2010, 10:59 AM
அடிமைப்பெண் படத்தில் 'ஏமாற்றாதே... ஏமாற்றாதே' மிகவும் அருமையான பாடல். தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பாகாத பாடலும் கூட. ஒருத்தர் குழியில் விழுந்தால், எல்லோரும் குழியில் விழுவது என்ற நம் மூதாதையரின் வழிகாட்டல்படி, திருப்பி திருப்பி 'ஆயிரம் நிலவே வா' அதைவிட்டால் 'தாயில்லாமல் நானில்லை' இவற்றையே ஒளிபரப்புவர். அந்தக்கால 'வினைல் ரிக்கார்ட்' எனப்படும் மண் இசைத்தட்டில், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இடம் இருந்ததால், பாடலின் அற்புதமான முன்னிசைகள் மற்றும் இடயிசைகள் நிறைய அடிபட்டுப்போகும். இதனால் எம்.எஸ்.வி.யும் கே.வி.எம்.மும் நிறைய நஷ்டமடைந்தனர். பாடல் வரிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இசைக்கோலங்கள் வெட்டப்பட்டு விடும். (சில பாடல்களில் இடமின்மையால் சரணங்கள் கூட கட் செய்யப்படும்) முழுசாக படங்களில் மட்டுமே பார்க்க (கேட்க) முடியும். இந்தக்காலத்திலோ, சி.டி.க்களில் அத்தனை 'பிட்'டுகளும் இடம் பெற்றுவிடுகின்றன. ஆனால் தரம்.. அந்தோ. அப்படி அற்புத இசைக்கோலங்கள் அடிபட்ட பாடல்களில் 'ஏமாற்றாதே' பாடலும் ஒன்று. படத்தில் பார்க்கும்போது மகாதேவனின் இசையமைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். ஒரு மாதிரியான அரேபிய இசையைக் கலந்து கொடுத்திருப்பார்.
பாடலின் முக்கிய விசேஷம், ஜெயலலிதாவின் அருமையான நடனம். இப்பாடலுக்கு பல காஸ்ட்யூம்களில் வந்து ஆடுவார். அதிலும் இடுப்பு, முழங்கால், பாதம் போன்ற் இடங்களில் சின்ன்ச்சின்ன முரசுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை அடித்துக்கொண்டே அவர் ஆடுவது இன்றைய நடிகையர் யாராலும் செய்ய முடியாத ஒன்று. நைட் எஃபெக்ட்டில் பாடல் அழகாகப்படமாக்கப்பட்டிருக்கும்.
groucho070
24th May 2010, 11:51 AM
:clap: Saradha mdm. I was expecting overall review of Adimai Penn, a film I had the pleasure of seeing on big screen. I must say JJ was fantastic in this film. Plus, the costumes, I remember my mother remarking that JJ in those costumes is the reason why she wouldn't mind revisiting the film. She looked so gorgeous that it helped the hunchback to straighten himself :lol:
By the way, I felt Asohan was unintentionally hillarious in this film...but that's for another thread.
gkrishna
24th May 2010, 03:55 PM
பாராட்டுகளுக்கு நன்றி திரு ராகவேந்தர் அவர்களே
ராஜேந்திரன் விஜயகுமாரி இருவருக்கும் மணிமகுடம் நாடகத்தை திரை படம் ஆக தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது அதில் கதாநாயகி ஆக தானே நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் ஆனால் திரு ராஜேந்திரன் அவர்கள் ஜெயலலிதா அவர்களே தான் இதில் நடிக்கவேண்டும் அப்போதுதான் படம் வெற்றி பெறும் என்று சொன்னதாகவும் இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலம் பிரிந்ததாகவும் கேள்விபட்டேன் இது கிட்டத்தட்ட சாவித்திரி அவர்கள் ப்ராப்தம் படம் தயாரிக்கும் போது சாவித்திரி அவர்களுக்கும் அவரது கணவர் ஜெமினி கணேஷ் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு போல் என்று பழைய பேசும் படம் பத்திரிகையில் படித்த நினவு தயுவு செய்து என்னை தவறாக எண்ண வேண்டாம் .
உன்னை சுற்றும் உலகம் நீண்ட நாள் தயாரிப்பில் வந்த படம் என்று கேள்விபட்டேன் jj அவர்கள் சில காட்சிகளில் மெலிந்தும் சில காட்சிகளில் குண்டாகவும் காட்சி அளிப்பார்கள். கமல்ஹாசன் ஆரம்ப கால படங்கிளில் ஒன்று. அவள் ஒரு தொடர்கதை கவிதா மற்றும் arrangettram லலிதா போல் jj குடும்பத்திற்கு ஆக தன்னை வருதிகொள்ளும் பாத்திரத்தில் நடித்திருப்பார். புகுந்த வீடு G .சுப்ரமணிய ரெட்டியார் production என்று நினவு
நட்புடன் gk
gkrishna
24th May 2010, 04:48 PM
நதியை தேடி வந்த கடல் மகரிஷி அவர்கள் எழுதிய கதை ப.லெனின் அவர்கள் இயக்குனர் என்று நினவு மகரிஷி அவர்களின் கதைகள் "வட்டர்த்திற்குள் சதுரம்" "புவனா ஒரு கேள்வி குறி " , "சாய்ந்தடும்மா சாய்ந்தாடு" தொடர்ந்து வந்த திரைப்படம் சரத்பாபு/JJ /படாபட் நடித்து வெளி வந்தது ஸ்ரீகாந்த் உண்டு என்று நினைக்கிறன்
"தவிக்குது தயுங்குது உன் மனது" மற்றும் "எங்கயோ ஏதோ பாட்டு ஒன்று கேட்டேன்" என்ற இரு பாடல்கள் பிரபலம் JJ அவர்கள் reentry க்கு ட்ரை செய்த படம் ஆனால் படம் வெற்றி அடையாதலால் திரை துறை யில் இருந்து ஒதுங்கி விட்டார்கள் என்று கேள்வி பட்டேன் ஆடபிறந்தவள் என்று ஒரு திரை படம் விளம்பரம் பார்த்த நினவு 80 கால கட்டங்களில் பின்பு அந்த முயற்ச்சி கைவிடப்பட்டது என்று படித்த நினவு இதற்கு பிறகு வேறு எதாவது திரைப்படம் நடிதர்களா என்று தெரியவில்லை நடிகர் திலகத்துடன் இரண்டு திரைப்படங்கள் வெளி வரவில்லை என்று கேள்வி பட்டேன் மாதவன் இயக்கத்தில் "தேவன் கோயில் மணியோசை" மற்றும் ராமண்ணா direction இல்
"ராஜ" என்று ஆரம்பிக்கும் பாதி எடுத்த படம்
மேலும் ரஜினி அவர்களுடுன் ஜோடியாக நடிக்க முக்தா அவர்கள் ஒரு படம் எடுக்க முயற்சி எடுத்ததாகவும் அது நின்று போனது என்றும் படித்த நினவு
நட்புடன் GK
RAGHAVENDRA
24th May 2010, 07:38 PM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் நினைவுத்திறன் அபாரமாய் உள்ளது. தேவன் கோயில் மணி ஓசை படம் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்ததாக நினைவு. பொம்மை அல்லது பிலிமாலயாவில் ஷூட்டிங் ஸ்டில் போட்டிருந்தார்கள். மற்றொரு படம் அறிவிப்போடு சரி. மற்றபடி அவர்கள் ரீ என்ட்ரி ஆக வேண்டும் என்று முனைந்ததாக நான் நினைக்க வில்லை. அந்தக் கதைக்கு இயக்குநரும் தயாரிப்பாளரும் ஜெயலலிதா அவர்கள் தான் பொருத்தமானவர் என்று உறுதியாக தீர்மானித்து வேண்டிக் கொண்டதால் தான் அவர்கள் நடிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் நாட்டிய நாடகங்களில் அதிக ஈடுபாடு கொண்டு நடத்தி வந்தார்கள். எனவே அதற்குரிய நேரங்களில் எந்த வித பாதிப்பும் வராமல் இருக்கும் வண்ணம் படப்பிடிப்பு வந்தால் நடிப்பதாக கூறியிருந்ததாக நான் படித்த நினைவு.
அவர் நடித்த படங்களில் மற்றொரு முக்கியமான படம் வந்தாளே மகராசி. இரு வேடங்களில் பின்னி யிருப்பார். கிராமத்தில் நியாயம் வேண்டி விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முயல்வார். அப்போது விவசாயிகளை பண்ணையார் தன் பக்கம் இழுக்க முயல்வார். இறுதியாக மற்றொரு ஜெயலலிதாவிற்காக நியாயம் கேட்கும் போது உள்ளம் உருக வேண்டி மக்களைத் தன் பக்கம் உள்ள நியாயத்திற்காக ஆதரவு கேட்பார். இந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு மிகவும் நெஞ்சைத் தொடும் வகையில் சிறப்பாக இருக்கும்.
ராகவேந்திரன்
gkrishna
25th May 2010, 02:19 PM
நன்றி ராகவேந்தர் அவர்களே
கலைச்செல்வி அவர்கள் நடித்த கண்ணன் என் காதலன் திரைபடத்தின் ஒரு பாடல் "பாடுவோர் பாடினால் ஆட தோன்றும் பாட்டுடன் தேன் கனி சேரவேண்டும் தலைவனை தெய்வமாய் காண வேண்டும் கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் " என்ற பாடலில் அவர்களின் நடனம் மெய் சிலிர்க்க வைக்கும் வாணிஸ்ரீ ,முத்துராமன்,தேங்காய் மற்றும் T .கே.பகவதி எல்லோரும் அமைதியாக பார்த்து கொண்டு இருப்பார்கள் பாட்டு ஆரம்பத்தில் mgr அவர்கள் சொடுக்கு போட்டு பியானோ வாசிக்க கலைச்செல்வி அவர்கள் கால் அசைவுகளை யும் கை அசைவுகளையும் காண கோடி வேண்டும். அதே போல் ரகசிய போலீஸ் 115 திரை படத்தில் "சந்தனம குங்கும கொண்ட தாமரை பூ ஏன் இன்று பூமியில் கொண்டாடுது" என்ற பாடலிலும் அவருடைய நடன அசைவுகள் மிக சிறப்பாக இருக்கும் நடிகர் திலகம் அவர்கள் கலைச்செல்வி அவர்களை பற்றி அவர் உடைய நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சியில் "பொற்சிலை" என்று பாராட்டினார்கள் என்று கேள்விபட்டுள்ளேன் அது பற்றி தெரிந்தால் சற்று விவரமாக சொல்லவும்.
நட்புடன் gk
saradhaa_sn
18th September 2010, 05:06 PM
நடிகர்திலகத்துக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்றார். இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் விருதை வழங்கினார். விருது வழங்கும் முன்னதாக திரையுலகப்பிரமுகர்கள் பலரும் மைக்கில் பேசும்போது ஜெயலலிதாவை 'மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்றே விளித்துப்பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடிகர்திலகத்துக்கு காஃபி வந்தது. காஃபியை கையில் வாங்கிய நடிகர்திலகம், தன் அருகில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப்பார்த்து படு கேஷுவலாக "அம்மு... காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்க, அவர் புன்முறுவலோடு மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சரானபின்னரும் அவரை ஒருமையில் அழைத்தவர் நடிகர்திலகம் மட்டுமே.
saradhaa_sn
17th November 2010, 08:01 PM
ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது...?
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது நமக்குத்தெரியும். ஆனால் அந்த ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது தெரியுமா?.
கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் சொன்ன விவரம்....
முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில், வித்யா மூவீஸின் 'சூரியகாந்தி' படத்துக்கு நான் கதை வசனம் எழுதியிருந்தேன். அது கதாநாயகிக்கு நல்ல ஸ்கோப் உள்ள சப்ஜெக்ட் ஆதலால் அந்த ரோலுக்கு ஒரு பெரிய நட்சத்திரத்தை போடலாம் என்று முடிவடுத்து, யாரைப்போடலாம் என்ற ஆலோசனையின்போது கலைச்செல்வி ஜெயலலிதாவை நடிக்க வைக்கலாம் என்று யோசனை சொன்னேன். முக்தா தயங்கினார். 'என்னுடைய பொம்மலாட்டம் படத்தில் நடித்தபோது அவர் இருந்த ஸ்டேஜ் வேறு. ஆனா இப்போ அவர் பெரிய நட்சத்திரம். இப்போ அவர் வாங்கும் சமபளம் எல்லாம் கொடுக்க நமக்கு கட்டுபடியாகாது' என்றார்.
நல்ல ரோலாக இருப்பதால் ரேட்டில் நான் கன்வின்ஸ் பண்றேன், நீங்க மட்டும் சம்மதம் கொடுங்க என்று நான் சொல்ல முக்தா சம்மதித்தார். ஜெயலலிதா வீட்டுக்குப்போய் கதை சொன்னேன். அவருக்கும் ரோல் பிடித்துப்போகவே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது செல்போனெல்லாம் கிடையாது, ஆகவே ஜெயலலிதா வீட்டிலிருந்தே முக்தா சீனிவாசனுக்கு போன் செய்து ஜெ. நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதைச் சொன்னேன். அதற்கு அவர் 'அம்மு இப்போ ஒரு படத்துக்கு ஒரு லட்சம் வாங்குறாங்க. நமக்கு அதெல்லாம் கட்டுபடியாகாது. நம்ம படத்துக்கு முப்பதாயிரம் ரூபாய்தான் தர முடியும். அதற்கு சம்மதமான்னு கேளுங்க' என்று சொல்ல, நான் போனை கட் பண்ணாமல் கையில் ரிஸீவரை வைத்துக்கொண்டே ஜெயலலிதா அவர்களிடம் விவரத்தைச்சொல்ல, அவர் போனை என் கையிலிருந்து வாங்கி, "டைரக்டர் சார், புரொபஸர் எல்லா விவரமும் சொன்னார். இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய சம்பளம் 100 நயா பைசா, அதாவது ஒரு ரூபாய். சரியா?. மேற்கொண்டு ஆக வேண்டியதைப்பாருங்க" என்று போனை வைத்து விட்டார்.
'சூரியகாந்தி' படம் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து முக்தா சீனிவாசன் ஜெயலலிதா அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் கொடுத்தார். அதைப்பார்த்த ஜெயலலிதா "நான் ஒரு ரூபாய்தானே கேட்டேன்" என்று தமாஷாகச்சொல்ல, முக்தாவும் தமாஷாக "மீதி 39,999 ரூபாய் அடுத்த படத்துக்கான அட்வான்ஸாக வச்சுக்குங்க அம்மு" என்று சொல்ல அந்த சூழ்நிலையே மிகவும் சந்தோஷமாக இருந்தது.
tfmlover
18th November 2010, 04:08 AM
நடிகர்திலகத்துக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்றார். இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் விருதை வழங்கினார். விருது வழங்கும் முன்னதாக திரையுலகப்பிரமுகர்கள் பலரும் மைக்கில் பேசும்போது ஜெயலலிதாவை 'மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்றே விளித்துப்பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடிகர்திலகத்துக்கு காஃபி வந்தது. காஃபியை கையில் வாங்கிய நடிகர்திலகம், தன் அருகில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப்பார்த்து படு கேஷுவலாக "அம்மு... காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்க, அவர் புன்முறுவலோடு மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சரானபின்னரும் அவரை ஒருமையில் அழைத்தவர் நடிகர்திலகம் மட்டுமே.
திரையுலகலிருந்து நெருங்கி பழகிய நண்பிகள் நண்பர்கள் எல்லாருமே
அம்மு அம்மு என்று இன்னும் ஒருமையில்தான் அழைத்துப் பழகுகிறார்கள்
அவர்கள் மத்தியில் வீண் பந்தா இல்லை மேடையிலும்
சச்சு ராஜஸ்ரீ ம*னோரமா ஆச்சி அத்தனை பேரும் இன்னும் அதிக உரிமையோடு !
Regards
saradhaa_sn
18th November 2010, 05:48 PM
ஜெயலலிதாவின் ஒரு ரூபாய் சம்பளம் பற்றி எழுதும்போது, அதே போன்ற இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
தயாரிப்பாளர், இயக்குனர் வி.சி.குகநாதன் தனது 'மஞ்சள் முகமே வருக' படத்தைத் துவங்கியபோது, அவர் கையில் இருந்தது வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே. இதைக்கொண்டுதான் முதல் நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டும். படப்பிடிப்புக்கு முந்திய நாள் பிரதான நடிகர் நடிகையருக்கு மட்டும் ஆளுக்கு ரூ. 100 அல்லது 150 அட்வான்ஸாகக் கொடுத்து புக் பண்ணினார். அவரது நெருக்கடியான நிலையைப் பார்த்து சிலர் அட்வான்ஸ் வேண்டாம். படம் துவங்கிய பிறகு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர். S.N.லட்சுமியம்மாவிடம் 100 ரூபாய் கொடுத்தபோது, அதில் 50 ரூபாயைத்திருப்பிக்கொடுத்து, 'இதை இன்னொருவருக்கு அட்வான்ஸா கொடுத்துக்கோ' என்று சொன்னாராம்.
இறுதியாக படத்தின் கதாநாயகனான நடிகர் முத்துராமனிடம் போய் அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும் என்று கேட்டபோது முத்துராமன், "நான் இரண்டு தொகை மனசுல நினைச்சிருக்கேன். அதுல எதைக்கேட்கலாம்னு பூவா தலையா போட்டுப்பார்ப்போம். அதுக்கு ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் கொடுங்க" என்று குகநாதனிடம் கேட்க, அவரும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டியிருக்கிறார். அதை வாங்கி பூவா தலையா போட்டுப்பார்க்காமல் தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்ட முத்துராமன், "இப்போ நீங்க கொடுத்த ஒரு ரூபாய்தான் என் அட்வான்ஸ். நீங்க போய் மற்ற வேலைகளைப்பாருங்க" என்று சொல்லி விட்டாராம்.
மிச்சமிருந்த பணத்தில் 460 ரூபாய்க்கு கருப்பு வெள்ளை பிலிம் ரோல் ஒன்று வாங்கி, மறுநாள் குறிப்பிட்டபடி ஒரு மரத்தடியில் படப்பிடிப்பைத்துவங்கி விட்டாராம். முதல்நாள் படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்த விநியோகஸ்தர்களில் ஒருவர், ஒரு ஏரியாவைத்தான் வாங்கிக்கொள்வதாக விலைபேசி அப்போதே அட்வான்ஸாக ரூ. 25,000-க்கு செக் கொடுக்க, அதைக்கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினாராம் குகநாதன். (கேட்கும் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது).
திரையுலகில் எல்லோரும் இப்படி தாராள மனதுடன் நடந்துகொள்பவர்கள் அல்ல. பலர் ரொம்ப கறார் பேர்வழிகள். படப்பிடிப்பு துவங்கும் முன்னரே முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்ளும் சில்க் ஸ்மிதா போன்றவர்களும் இத்திரையுலகில்தான் இருந்தனர், இருக்கின்றனர்.
rajeshkrv
18th November 2010, 10:59 PM
same with jai too. he had acted without any renumeration in many movies. those were the days when people had thozhil bhakthi ... ipoo bakthiyavadhu mannavadhu..
tfmlover
18th November 2010, 11:46 PM
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது - that's news to me :shock:
படப்பிடிப்பு துவங்கும் முன்னரே முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்ளும் சில்க் ஸ்மிதா போன்றவர்களும் இத்திரையுலகில்தான் இருந்தனர்
really ? ??
Regards
app_engine
19th November 2010, 12:20 AM
Dig
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது - that's news to me :shock:
How does it matter anyways? Per recent allegations by mu-kA, she started as CM with 2 cr wealth and ended with 60+cr wealth...
End-dig
saradhaa_sn
19th November 2010, 01:12 PM
same with jai too. he had acted without any renumeration in many movies. those were the days when people had thozhil bhakthi ... ipoo bakthiyavadhu mannavadhu..
உண்மைதான். அதைப்பற்றி 'நட்புக்கு ஒரு ஜெய்சங்கர்' என்ற தலைப்பில் ஜெய் திரியில் எழுதியிருக்கிறோம்.
http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13518&start=0
saradhaa_sn
20th November 2010, 11:20 AM
[tscii:eff6b46f51]Thanks to BaalHanuman (Uppili Srinivas)
http://awardakodukkaranga.wordpress.com
விகடன் காலப்பெட்டகம் (1996 )
———————————
இயக்குநர் ஸ்ரீதர், ஜெயலலிதா பற்றிய தன் மனக் குறையைச் சொல்லி விகடனுக்குப் பேட்டியளிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இந்தச் சர்ச்சையில், தயாரிப்பாளர் கோவை செழியனும் தனது கருத்தைச் சொல்ல, பரபரப்பானது விஷயம். இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்…
“என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!”
புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது.கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்…
“என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட ‘என்ன’னு ஒரு வார்த்தை விசாரிக்கலே!
‘வெண்ணிற ஆடை’ படத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! ‘வெண் ணிற ஆடை’ படத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!” – தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.
“தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். ‘கான்வென்ட்’ படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!
தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது. இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!
கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? ‘வெண்ணிற ஆடை’ படம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக் கறப்ப கஷ்டமா இருக்கு!”
விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: “என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!”
“யூ டூ மிஸ்டர் ஸ்ரீதர்?” – ஜெயலலிதா விளக்கம்!
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.
பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.
நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந் தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற் றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட்டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்பதனையும் நான் அறிவேன்.
என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
‘இனிய உளவாக இன்னாத கூறல்’ அவசியமா திரு.ஸ்ரீதர்?
- ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
முன்னாள் தமிழக முதலமைச்சர்.
ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!
ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, “என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!” என்று டைரக்டர் ஸ்ரீதரிடமிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்…
“என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெயலலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!
ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!
மேலும், ஜெயலலிதா சொல்வது போல், ஹேமமாலினியை நான் தேர்வு செய்தது ‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு அல்ல; ‘காதலிக்க நேர மில்லை’ படத்துக்கு! அப்போது அவர் முகம் குழந்தைத்தனமாக இருந்ததால், அறிமுகம் செய்ய வில்லை. ஆனால், அவர் இந்தியில் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் அறிமுகமாகி நடிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.
ஜெயலலிதாவுக்கு நானும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும் புகிறேன் – ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு!”
தயாரிப்பாளர் கோவை செழியனைச் சந்தித்தோம்.
“டைரக்டர் ஸ்ரீதருக்கு ஜெயலலிதா பதில் எழுதிய கடிதத்தை விகடனில் நானும் படித்தேன். ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.
நான் தயாரித்த ‘சுமைதாங்கி’ படம் வெளியான பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிற ஆடை’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.மற்ற தேர்வுகள் முடிந்து கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான், சிவாஜி தலைமையில் நடிகை சந்தியாவின் மகள் நடன அரங்கேற்றம் நடந்தது. ‘அவரை ஏன் கதாநாயகியாக்க முயற்சிக்கக் கூடாது?” என்று சந்தியாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசி னோம். அப்போது ஜெயலலிதாவுக்கு 14 வயது. கதாநாயகி பாத்திரத்துக்குப் பொருந்திவரமாட்டார் என்ற முடிவில், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துவிட்டோம்.
சித்ராலயா ஆபீஸில் பாடல் கம்போஸிங். டைரக்டர் ஸ்ரீதர், நான், எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு அனைவரும் இருந்தபோது, சந்தியா அங்கு வந்தார். ‘வேறு நடிகை தேடுகிறீர்களாமே… நீங்கள் அவசியம் என் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண் டார். ‘என் மகள் வயது குறைந்தவள் என்றாலும், நல்ல முறையில் நடிப்பாள். அவள் நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால் பிறகு மாற்றிவிடுங் கள்!’ என்று சொன்னபோது, சந்தியாவின் கண்களில் நீர் பெருகி விட்டது. அதன்பிறகுதான் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடங்கி னோம்!” என்றார்.
[/tscii:eff6b46f51]
mr_karthik
22nd November 2010, 06:02 PM
Director Sreedhar mentioned in his interview that..
'ஜெயலலிதா போனில் கூட விசாரிக்கவில்லை'
But NO PROPER ANSWER from Jayalalitha's statement.
வட்டச்செயலாளர் வண்டுமுருகன், சதுரச்செயலாளர் சந்துமுருகனிடமெல்லாம் பேச நேரமிருந்த ஜெயலலிதாவுக்கு, தன்னை அறிமுகப்படுத்தியவரின் உடல் நலனை விசாரிக்க நேரமில்லை. (அதுசரி, தன்னை ஆளாக்கிவிட்ட எம்.ஜி.ஆரையே அவர் தேர்தலுக்குத் தேர்தல்தானே நினைக்கிறார்).
adiram
30th May 2011, 04:38 PM
we no need to shock for shreedhar vs jayalalitha matter.
the original charector of jayalalitha is well known for all.
mr_karthik
1st June 2011, 02:28 PM
'ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
சாரதா மேடம்,
நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலாக தெரியவில்லை 'ஆயிரத்தில் ஒருவன்' படம் சமீப காலமாக மறு வெளியீடுகளின் போதுதான் நன்றாக போகிறதே தவிர, முதல் வெளியீட்டின்போது அப்படி ஒன்றும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது எல்லோர் மத்தியிலும் நிலவும் கருத்து. அதற்க்கு ஏற்றார்போல, அப்படம் முதல் வெளியீட்டில் 100 நாட்களைக் கடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
1965 ம் ஆண்டில் எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டு பிள்ளை' மட்டும்தான் வெற்றிப்படம். அதை விட்டால் அடுத்த ஆண்டில் 'அன்பே வா' படம்தான் வெற்றியடைந்தது.
saradhaa_sn
1st June 2011, 04:39 PM
சாரதா மேடம்,
நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலாக தெரியவில்லை 'ஆயிரத்தில் ஒருவன்' படம் சமீப காலமாக மறு வெளியீடுகளின் போதுதான் நன்றாக போகிறதே தவிர, முதல் வெளியீட்டின்போது அப்படி ஒன்றும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது எல்லோர் மத்தியிலும் நிலவும் கருத்து. அதற்க்கு ஏற்றார்போல, அப்படம் முதல் வெளியீட்டில் 100 நாட்களைக் கடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
1965 ம் ஆண்டில் எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டு பிள்ளை' மட்டும்தான் வெற்றிப்படம். அதை விட்டால் அடுத்த ஆண்டில் 'அன்பே வா' படம்தான் வெற்றியடைந்தது.
கார்த்திக்,
ரிலீஸ் ஆனபோதே ஆயிரத்தில் ஒருவன் வெற்றிப்படம்தான்.
சென்னையில் மிட்லண்ட், ஸ்ரீகிருஷ்ணா, மேகலா ஆகிய திடேட்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கிறது. அத்துடன் மதுரையிலும் 99 நாட்கள் ஓடியுள்ளது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். (ஆனால் ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை).
rajeshkrv
3rd August 2011, 11:03 PM
I cant remember seeing Jayalalitha in half saree in tamil movies
See here in the original of Muradan muthu in kannada
Jaya & Kalyan kumar played roles of Devika & NT
http://www.youtube.com/watch?v=hNfVHHK_xuI (kalyana oorvalam paaru)
http://www.youtube.com/watch?v=5UZ9HtTG1Aw (thamarai poo kulathile version)
nice to Jayalalitha naive and innocent .. having seen mostly as tomboyish this is a welcome change
groucho070
4th August 2011, 08:28 AM
Original-la Kalyan Kumar-A :shock: Oh man, lucky I saw Muradan Muthu first. Thanks for the share, rajeshkrv.
sivaramakrishnanG
4th August 2011, 02:28 PM
I cant remember seeing Jayalalitha in half saree in tamil movies
அன்புள்ள ராஜேஷ்,
உங்களுக்காக தாவணியுடன் ஜெயலலிதா - தமிழ்ப் படத்தில் .
இளநீர் விற்கிறார்.படம் - நம் நாடு.
http://youtu.be/OYDqNCQaulg
என்றும் அன்புடன்,
சிவா.G
rajeshkrv
4th August 2011, 07:51 PM
Siva thanks for the clip. What i meant was "Davanai potta adhu madhiri nadakkanume " appadi illamal dhavanai pottalum adavadiyave paartha jayalalitha ..
only exception was Arasa kattalai where she was way young and acted very innocent ..this is what i meant
thanks for the clip
tfmlover
28th February 2014, 10:17 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/artcl/JJ_zps9762b97f.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/artcl/JJ1_zps21fd17f8.jpg
Russellcaj
27th April 2014, 07:35 PM
tfmlover,
very nice memorable incident.
thanks for posting.
tfmlover
30th May 2014, 04:49 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/jay/j_zpsec6e97fc.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/jay/j1_zps5b524842.jpg
Regards
adiram
7th December 2016, 03:47 PM
"அதிர்சசியுற்றேன்"
=================
'ஜெயலலிதா'....... தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, தமிழக அரசியல் உலகில் மட்டுமல்ல, தமிழர் வாழ்விலிருந்து அகற்ற முடியாத பெயர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த ஒரு ஆளுமை நிறைந்த சக்தி.
இம்முறை பதவியேற்றத்தில் இருந்தே அவர் முகத்தில் பழைய பொலிவில்லை. மிகவும் சோர்ந்து காணப்பட்டார். கடசியிலிருந்தோ, மக்களிடமிருந்தோ, எதிர்க்கட்ச்சிகளிடமிருந்தோ எந்த நெருக்கடியும் நிச்சயமாக இல்லை. அவரது கோட்டைக்குள் கூடவே இருந்தவர்களால் ஏதோ வெளியில் சொல்ல முடியாத நெருக்கடிகளால் தவித்திருக்கிறார், பாவம்.
அப்பல்லோவில் அட்மிட் ஆனார் என்றபோதே மனது துணுக்குற்றது. தொடர்ந்து வந்த செய்திகளில் இருந்த முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் கவலை படர்ந்தது. இருந்தபோதும் 'அம்மா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்' என்ற செய்திகள் மனதுக்கு அமைதியை தந்தது.
ஆனால் நான்காம் தேதி மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியும், தொடந்து நிலைமை கவலைக்கிடம் என்ற தகவல்களும் நம் நம்பிக்கையை தகர்த்தது. இறைவா இந்த செய்திகள் பொய்யாக இருக்க வேண்டுமே என்று மனம் துடித்தது. ஆனால் இயற்கையின் தீர்ப்புக்கு முன் எல்லாம் தோற்றது. எது நடக்க கூடாது என்று துடித்தோமோ அது நடந்து விட்டது.
ஆம், தமிழக அரசியலில் முப்பது வருடங்களாக ஆர்ப்பரித்த பெண் சிங்கத்தை இழந்து விட்டோம். சூறாவளியாக சுழன்றடித்த அந்த ஆளுமை, அந்த கம்பீரம் நேற்று முழுவதும் ராஜாஜி மண்டப வாயிலில் மீளா துயிலில் கிடந்த போது, கண்ணீர் விடாதோர், கதறாதோர் உண்டோ.
எழுபத்தைந்து நாட்கள் நீ என்ன நினைத்தாய், என்ன சொல்ல துடித்தாய் என்பது யாருக்கும் தெரியாது போனதே தாயே. உன் இறுதி நாட்களில் குள்ளநரி கூட்டத்தின் கைகளில் விளையாட்டு பொருளாகி போனாயே. மூன்று தொகுதிகளின் வெற்றிசெய்தி உனக்கு உத்வேகம் தந்து உன்னை எழுந்து உட்கார வைத்து விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் வெற்றியை தந்தனரே. ஆனால் தேர்தல் நடந்ததே உனக்கு தெரியுமா என்ற ஐயப்பாடு இப்போது எங்களுக்குள் எழுகிறதே.
ஆள், அம்பு, சேனை பரிவாரம் எல்லாமிருந்தும் ஏதுமற்றவராய், அந்த கடைசி நேர மூச்சுகாற்றுக்காக எவ்வளவு துடித்திருப்பாய் என்று எண்ணும்போதே இதயம் கனத்து, கண்களில் நீர் பெருக்கெடுக்கிறதே தாயே.
உன் தலைவரையும், எங்கள் அண்ணனையும் காணச்சென்று விட்ட தாயே, நாங்களும் வரிசையில் நிற்கிறோம், வந்து விடுவோம்.
ஆனால் அங்கேயும் நான் உனக்கு எதிர்க்கட்ச்சிதான். உன்னை உரிமையோடு எதிர்ப்பதில் உள்ள சுகமே தனி.
சென்று வா... தாயே
கண்ணீருடன்
ஆதி.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.