View Full Version : 'Navarasa Thilagam' Yesteryear's Muthuraman
PARAMASHIVAN
10th May 2010, 06:08 PM
Hi all
Shall we talk about actor Muthuraman .. Though he was a very good actor, he was never a famous hero, he mostly played second fidle to heros, mainly to Shivaji. why? :?
Why didn't he become a big hero's like MGR, Shivaji And Gemini those days :?
app_engine
10th May 2010, 07:24 PM
I feel this should be in the "classic TF" section and not here :-)
PARAMASHIVAN
10th May 2010, 07:26 PM
Er apadeena SHivaji sir thread kooda angE thaanE irukanum, any way, unga opinion pls :)
HonestRaj
10th May 2010, 09:47 PM
Paramu.. aal illadha kadayila tea aathuradhukkum oru thiramai venum... vandhu enkitta apprecity'ah serndhukkanga :lol2:
PARAMASHIVAN
10th May 2010, 09:52 PM
Paramu.. aal illadha kadayila tea aathuradhukkum oru thiramai venum... vandhu enkitta apprecity'ah serndhukkanga :lol2:
enna sola vareengha :? , muthuraman was a fine actor :roll:
tamizharasan
10th May 2010, 09:54 PM
Even though he played lot of second fiddle roles, his acting was memorable in many movies.
PARAMASHIVAN
10th May 2010, 09:56 PM
Even though he played lot of second fiddle roles, his acting was memorable in many movies.
yes , but why couldn't he do full fledged hero movie? I have never seen a movie where is the 'Hero' :oops: :cry:
Did he do such movies ? :roll: :?
joe
10th May 2010, 10:00 PM
yes , but why couldn't he do full fledged hero movie? I have never seen a movie where is the 'Hero' :oops: :cry:
athu unga thappu ..He has done many movies as hero.
Sanjeevi
10th May 2010, 10:01 PM
Paramu.. aal illadha kadayila tea aathuradhukkum oru thiramai venum... vandhu enkitta apprecity'ah serndhukkanga :lol2:
:lol:
PARAMASHIVAN
10th May 2010, 10:01 PM
yes , but why couldn't he do full fledged hero movie? I have never seen a movie where is the 'Hero' :oops: :cry:
athu unga thappu ..He has done many movies as hero.
konjam list kodunga pls :roll:
tamizharasan
10th May 2010, 10:03 PM
Even though he played lot of second fiddle roles, his acting was memorable in many movies.
yes , but why couldn't he do full fledged hero movie? I have never seen a movie where is the 'Hero' :oops: :cry:
Did he do such movies ? :roll: :?
Suryakanthi with Jayalalitha.
joe
10th May 2010, 10:08 PM
yes , but why couldn't he do full fledged hero movie? I have never seen a movie where is the 'Hero' :oops: :cry:
athu unga thappu ..He has done many movies as hero.
konjam list kodunga pls :roll:
Many movies listed here (not all as main hero)
http://en.wikipedia.org/wiki/R._Muthuraman
Plum
11th May 2010, 05:21 PM
Even though he played lot of second fiddle roles, his acting was memorable in many movies.
yes , but why couldn't he do full fledged hero movie? I have never seen a movie where is the 'Hero' :oops: :cry:
Did he do such movies ? :roll: :?
Suryakanthi with Jayalalitha.
Yes, adhula oru song irukku
Paramashivan kazhuthilirundhu pAmbu kEttadhu GarudA sowkyamA?
:-)
app_engine
11th May 2010, 08:02 PM
Plum
:-)
Kavingar sings on screen this song (as a stage performance) while Muthuraman / JJ sit in the audience :-)
rajeshkrv
11th May 2010, 08:36 PM
Muthuraman did lot of movies as hero.
Probably he didnt achieve the stardom as Shivaji,MGR and Gemini . I guess the reason is once he accpeted and started as other hero along with main heroes he was branded as character artist and those days it was very difficult to break the image because producers will say " andha thambi characterukku muthuramana potturalamba " etc etc .. but whatever role came his way he did with excellence .. shantam to kobam , kobam to comedy edhu seyyala avar.. Wow!!
gkrishna
12th May 2010, 11:19 AM
திரு முத்துராமன் ஹீரோ ஆக நடித்த படங்கள் எத்தனையோ உள்ளன .
திரு சோவின் உண்மையே உன் விலை என்ன திரை படத்தில் பாதர் ஆக வருவர் . அந்த ஆண்டின் மிக சிறந்த நடிகர் விருது பெற்றார் (நன்றி பேசும் படம் மற்றும் பிலிம் fare ).
புனித அந்தோனியார் திரைபடத்தில் அந்தோனியார் ஆக வருவர்.
gentleman இன் தமிழ் industry 53 வயிதில் மாரடைப்பில் மரணம் அடைந்து விட்டார். ஆயிரம் முத்தங்கள் (சிவகுமார் மற்றும் ராதா) நடித்து வெளி வந்தது பட பிடிப்பின் போது காலை morning வாக் போகும் போது அவருக்கு மரணம் ஏற்பட்டது அதை பற்றி சிவாஜி அவர்கள் சிவகுமார் இடம் (தேவன் ரொம்ப கொடுத்து வைச்சவன் நடிக்கும் போது உயிர் பிரிந்து விட்டது) கூறியதாக திரு சிவகுமார் அவருடைய இது ராஜா பட்டை அல்ல புத்தகத்தில் எழுதி உள்ளார்
மேலும் அவருடைய முக்கியமான படங்கள் வரிசையில் நடிகர் திலகத்தின் சிவந்த மண்,மயயுங்கிறல் ஒரு மாது,நல்ல பெண்மணி,தீர்க்க சுமங்கலி, பேரும் புகழும் ,உறவு சொல்ல ஒருவன்,வாழ்ந்து காட்டுகிறேன்,வாழ்வு என் பக்கம் ,மறு பிறவி, முத்தான முத்துஅல்லவோ,வீட்டுக்கு வீடு, நாணல், மூன்று தெய்வங்கள் காலங்களில் அவள் வசந்தம் முருகன் அடிமை பதிலுக்கு பதில் அவளுக்கென்று ஓர் மனம்,ஊட்டி வரை உறவு நெஞ்சிருக்கும் வரை, அவன் தான் மனிதன் சவாலே சமாளி இரு துருவம் ஒரு தாய் மக்கள் திருமாங்கல்யம் இன்னும் உள்ளன
Narashima
14th May 2010, 04:04 PM
You can add Ravichandran in the list of 'Unfortunate' actors who did not make it big along with Muthuraman !
bingleguy
27th December 2010, 09:09 AM
You can add Ravichandran in the list of 'Unfortunate' actors who did not make it big along with Muthuraman !
mudhal padathulaye pala periya advantages kidaitha baakiyam ivarukku undE ....
>> Mudhal padathil kadhanAyagan
>> mudhal padam - Color padam
>> mudhal padam - SUPER o SUPER HIT
ippadi sollalaam ....
:)
bingleguy
27th December 2010, 09:19 AM
muthuraman ....
udaRpayirchiyiyai mooladhanamAga konda sila nadigargaLil ivarum oruvar .... sirippu matrum kuralin inimaiyil palaraiyum kavarndhavar ...
thAn iyarkkum pAthirangaLukku mutrilum mukkiyathuvam koduppavar ...
avarudaiya padangaLil enakku piditha sila...
>> miga iyarkkaiyAga thandhaiyAgavum / vAlibanAgavum azhagAga naditha kAdhalikka nEramillai ....
>> kangaLAlum pechAlum matravarai azha vaitha nenjil or Alayam....
>> pAndiyanAga thiruviLaiyAdal
>> kAraikkAl ammaiyAr ...
>> rAja rAja chOzhan
>> Server Sundaram ....
>> bhAmA vijayam...
>> edhirneechal ....
NOV
27th December 2010, 09:38 AM
vasanth, pinnitta :thumbsup:
you left out sivandha mann
bingleguy
29th December 2010, 09:31 PM
vasanth, pinnitta :thumbsup:
you left out sivandha mann
Sivantha Mann - Sridhar padam thAnE ....
infact some of the good inspirations from Sridhar had Muthuraman in them ... like nenjil or alayam, ooty varai uravu, sivantha mann, kathalikka neramillai, avalukkendru oru manam etc ...
What was Muthuraman's last movie?
bingleguy
29th December 2010, 09:47 PM
Muthuraman in ThiruvilayAdal ....
Muthuraman defined a new meaning to what it is to be a King ....
Coping a scene with NT is something everybody fears - Muthuraman handled the scene with utmost discipline and respect - even when giving back a stern reply to NT in the scene (idhu arasa sabai andru - thamizh thiruchabai) - one would definitely note voice modulation when he shows the stern high pitch when saying "arasa sabai andru" and brings his voice down with respect when he says thamizh thiruchabai .... that coming up with ease in front of the great NT - is something
His dialogue delivery too was very sharp and his voice took its advantage ....
Also, when you interrupt somebody - your voice should carry over between two stunning voices - this too is something which Muthuraman did it with ease when he was saying "pulavargaLE .. sAnthamAga uraiyAdungaL ...." - one could observe a pitch difference at this point too - where pulavargaLe would be said in a puchy way - and then his voice slides down to calm them ...
When NT and APN are arguing - the camera still engulps the King in their presence - one could see his involvement in the scene by looking with utmost fear and keen-ness and belonging to the scene though he has no dialogue delivery to make .... there used to be many actors who may just look perplexed when they are part of a scene and has nothing to speak ... Muthuraman's belonging to that scene too is something ....
NOV
30th December 2010, 06:14 AM
What was Muthuraman's last movie?He died in 1982.
That year he had acted in two movies - Thaai Moogaambigai and Mullillaatha Roja
RAGHAVENDRA
30th December 2010, 06:23 AM
1000 Muthangal was the last film Muthuraman was acting and this film had Radha and Malayalam actor Jose in the lead roles, with a beautiful song "Selai Kudai Pidikka" tuned by Shankar Ganesh. The character played by Jose was of a sadist resembling one of characters now played in the TV serial Nadhaswaram.
Raghavendran,
NOV
30th December 2010, 06:27 AM
Yes, yes Raghavendra. I now remember Aayiram Muththangal was his last film. :)
groucho070
30th December 2010, 08:02 AM
:thumbsup: guys. Keep it going.
Muthuraman, I dare say, is one of the best looking of them all. I recall reading somewhere, where someone, it seems, told MGR that after NT, there were none who can act well. MGR said, "Yen, namma Muthuraman irukkare?". I could be wrong, but I vaguely recall that.
My mother said that when folks were going nuts about NT and MT, she was secretly admiring Muthuraman as great actor, and Jai (had crush too) as a star.
mr_karthik
9th June 2014, 11:57 AM
கண்ணம்மா (1972)
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, (தென்னகத்துக்கு தேசிய விருதுகள் குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில்) தேசிய விருதை அள்ளிய செம்மீன் படத்தை இயக்கிய ராமுகாரியத், தமிழில் தயாரித்த வண்ணப்படம் கண்ணம்மா. இப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியவர் மா. லட்சுமணன்.
நாயகனாக நவரசத்திலகம் முத்துராமன், நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் மிக அருமையான குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் நம்பியாரும், பாலாஜியும். பிற்காலத்தில் நம்பியார் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கியபின் வந்த படமல்ல, அவர் வில்லனாக கொடிகட்டிப்பறந்த காலத்தில் வந்த படம். இப்படி ஒரு வேடத்தில் கொஞ்சமும் எதிர்பாராமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இன்னொரு திருப்பம் இப்படத்தின் பிரதான வில்லனாக நாகேஷ். அழகான பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக்கொண்ட காமுகன். இவர்தான் எந்த ரோலிலும் தூள் கிளப்புவாரே. அதகளம் பண்ணிட்டார். நீச்சல் குளத்தை ஒட்டிய, கண்ணாடி சுவர் வைத்த பாதாள அறையில் அமர்ந்து, குளிக்கும் பெண்களின் அழகை அவர்கள் அறியாவண்ணம் ரசிப்பது, பின் அவர்களில் ஒருவரை மிரட்டி படுக்கை அறைக்கு வரவழைப்பது போன்ற காமக் கொடுரங்களில் '24 மணிநேரம்' எக்ஸ்.டபிள்யூ.ராமரத்னம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு பிளே-பாய்.
நகைச்சுவை நடிகர் வில்லனாக கோட்டையைப் பிடித்தாரென்றால், வில்லன் நடிகர் குணச்சித்திர ரோலில் கொடிநாட்டினார். இரண்டு பெண்குழந்தைகளில் ஒன்றை இறந்தும், இன்னொன்றை உயிரோடும் பறிகொடுத்துவிட்டு பிள்ளைப்பாசத்தில் துடிக்கும் துடிப்பை நம்பியார் மிக அருமையாக காட்டியிருந்தார்.
அதிலும் பிளாஷ் பேக்கில் காட்டப்படும் காட்சி மனதை அதிர வைக்கும். ரங்கூனிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்குழந்தை இறந்துவிட, சொந்த ஊரில் கொண்டுபோய் இறுதிச்சடங்கு செய்ய கொண்டுவரும்போது, ரயிலில் உடன் பயணம் செய்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிணத்தை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியும்படி வற்புறுத்த, இவர் மறுக்க, இதனிடையே இறந்த குழந்தையின் பிணத்தை பக்கத்தில் கிடத்திவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, பயணிகள் அனைவரும் தொடர்ந்து விடாமல் நச்சரிக்க, அவசரத்தில் செய்வதறியாமல் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே வீசியெறிய, ஜன்னலைத்தாண்டி விழும்போது குழந்தை 'அப்பா'வென்று காத்த, அதிர்ச்சியில் "கண்ணம்மா" என்று நம்பியார் அலறும்போது தியேட்டர் மொத்தமும் அதிர்ச்சி அலையில்.
இன்னொருபக்கம் பாலாஜி, கண்சிமிட்டும் வக்கீல் பத்திரத்தை மிக அழகாக செய்திருந்தார். முத்துராமனுக்கு அளவான, அமைதியான கதாநாயகன் ரோல், மிக நன்றாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயாதான் வழக்கம்போல கொஞ்சம் ஓவராக அலட்டிக்கொண்டார். டைட்டில் அவர் பெயரிலாச்சே, அதுவும் ஒரு காரணமோ. இவர்களோடு ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக சுகுமாரி, முஸ்லிம் பெரியவராக ஓ.ஏ.கே.தேவர், நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக ஜெய்குமாரி நடித்திருந்தனர். (அழகான ஜெய்குமாரியை விட்டுவிட்டு, அவரைப்போல இருமடங்கு உருவம் கொண்ட மொக்கை கே.ஆர்.விஜயாவை நாயகன் காதலிக்கும்போது 'என்னய்யா உன் டேஸ்ட்டு' என்று தோன்றுகிறது நமக்கு).
இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் காதுக்கினிய மதுர கீதங்கள். நீண்ட நெடிய காலத்துக்குப்பிறகு இப்படத்தின் பாடல்கள் தற்போது தொலைக்காட்சிகளில் (குறிப்பாக 'முரசு' சேனலில்) ஒளிபரப்பாகின்றன.
கிராமத்து கல்யாண ரிசப்ஷனில் முத்துராமன் பாடுவதாக அமைந்த "எங்கெங்கும் என் எண்ணம், அங்கெல்லாம் உன் வண்ணம்" பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இறுதிக்காலப் பாடல்களில் ஒன்று. நிஜமான கிராமத்து கல்யாண வரவேற்பு இசை நிகழ்ச்சி போலவே அமைத்திருப்பார் இயக்குனர். மேடையில் அமர்ந்து மடியில் 'புல்-புல்-தராங்' இசைக்கருவியை வைத்து இசைததவாரே ரொம்ப கேஷுவலாக நடித்திருப்பார் முத்துராமன். (இந்த -புல்-புல்-தராங்' இசைக்கருவி எங்கள் வீட்டிலும் ரொம்ப காலம் இருந்தது. இந்த இசைக்கருவியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' பாடல்தான்).
அடுத்த பாடல் விஜயாவின் கற்பனையில் கே.ஆர்.விஜயா, முத்துராமனுடன் டூயட் பாடுவதாக வரும் "அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு" என்ற சுசீலாவின் சோலோ பாடல். ஊட்டி கார்டனில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கியிருப்பார்கள். மெட்டும் அழகான மெட்டு. என்ன ஒன்று, விஜயா பல்வேறு மாடர்ன் உடைகளில் வந்து பாடாய் படுத்துவார். (அவரது கணவர் இப்படத்தின் துணைத்தயாரிப்பாளர் என்பதால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது?).
எனக்குப்பிடித்த இன்னொரு அருமையான பாடல் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடிய "தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்". இப்பாடலில் முத்துராமனும் விஜயாவும் கேரளா முஸ்லிம் பணியில் உடையணிந்திருக்க, கேரளா சூழலில் படமாக்கப்பட்ட அழகான பாடல். கேரள ஏரியில் படகு சவாரி கண்களுக்கு விருந்து.
விஜயாவுக்காக சுசீலா பாடும் மற்றொரு பாடல், "செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே" என்ற பாடல். தன் வளர்ப்புத்தந்தை நம்பியார் அளிக்கும் விருந்தில் செல்வர்கள் கூடியிருக்க, தன் ஏழைக்காதலன் முத்துராமனை நினைத்துப் பாடும் பாடல். அனைத்துப்பாடல்களுமே சங்கர்-கணேஷ் இரட்டையர் உழைத்து உருவாக்கியிருந்தனர்.
படத்தின் டைட்டில் காட்சியில் சென்னை மௌண்ட்ரோட்டில் கேமரா பயணிக்கும்போது சாந்தியில் பட்டிக்காடா பட்டணமா, பிளாசாவில் பிள்ளையோ பிள்ளை, குளோப்பில் நான் ஏன் பிறந்தேன் படங்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களைக் காணலாம்.
எனது அனுபவம்: பட ரீலீஸின்போதே குளுகுளு மிட்லண்ட் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன். சற்று வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களின் வித்தியாசமான உருவாக்கம், நட்சத்திரங்களின் மாறுபட்ட நடிப்பு, இனிய பாடல்கள் மற்றும் இசை என எல்லாவிதத்திலும் எனக்குப்பிடித்திருந்தது
gkrishna
9th June 2014, 12:54 PM
கார்த்தி சார்
உண்மையில் நாகேஷ் அருமையான வில்லன் கேரக்டர் பண்ணுவார்
அபூர்வ சகோதர்கள்,மௌனம் சம்மதம் (மம்மூட்டி),சோழன் பாண்டியன் (விஜயகுமார் சரத்குமார்) எல்லாமே நாகேஷின் மிக சிறந்த வில்லன் கேரக்டர் கொண்ட திரைப்படங்கள் even நம்ம "கௌவரம்" தில் அவர்தானே வில்லன்
mr_karthik
9th June 2014, 01:26 PM
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி கிருஷ்ணாஜி,
தில்லானாவிலும். இவரது வில்லத்தனம் பெரிய வில்லன்களை பின்னுக்குத் தள்ளிவிடும்.
RAGHAVENDRA
9th June 2014, 09:15 PM
டியர் கார்த்திக்
மிட்லண்ட் தியேட்டரில் கண்ணம்மா படத்தை நானும் பார்த்திருக்கிறேன். தாங்கள் கூறியது போல் அந்த டைட்டில் காட்சிக்காகவே பலர் அந்த படத்தைப் பார்க்க வந்திருந்தார்கள். பாடல்கள் அனைத்துமே நன்றாக இருந்ததும் படத்திற்கே பலம்.
கண்ணம்மா படத்தில் தாங்கள் கூறிய அந்த டைட்டில் காட்சி நம் பார்வைக்காக மீண்டும் இப்போது
http://youtu.be/zVLzLfy4wCo
gkrishna
10th June 2014, 10:06 AM
எல்லோருக்கும் காலை வணக்கம்
இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இனிதே முடிய எல்லாம் வல்ல அந்த "அன்னை விநாயக பெருமானை" வேண்டி ஒரு சிறிய தகவல்
நேற்று இரவு சூரிய காந்தி திரை படம் இரவு சன் லைப் தொலை கட்சியில்
முத்துராமன் மற்றும் ஜெயா ஜோடி
நேற்று தான் அதை பற்றி வாசு சார் எழுதி இருந்தார்
எக்ஸ்செல்லன்ட் அண்டர் ப்ளே by நவரச திலகம்
இறுதி காட்சியில் தன் மேல் உள்ள தவறை ஒப்பு கொள்ளும் போது மிக அருமையான பாடி language . அதே போல் ஜெயாவிடம் ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லும் போது இருக்கும் பணிவு இப்போது எல்லாம் இதே போல் நடிக்க யாராவது இருக்கிறர்களா
mr_karthik
10th June 2014, 01:59 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,
கண்ணம்மா பட பதிவுக்கு அழகிய பின்னூட்டம் இட்டது மட்டுமல்லாது, கண்ணம்மா முழுப் படத்தின் வீடியோவையும் தந்து அசத்தி விட்டீர்கள். மிக மிக நன்றி. இதுவரை பார்த்திராதவர்கள் (நிச்சயம் நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள்) பார்த்து இன்புறச் செய்து விட்டீர்கள்.
இப்பதிவுக்கு தங்கள் பின்னூட்டமும் தாங்கள் பார்த்த அனுபவமும் நிச்சயம் வருமென்று எதிர்பார்த்தேன். ஆனால் முழுப் படத்தின் வீடியோவையும் தந்து அசத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
பெரிய மனிதர் என்றைக்கும் பெரிய மனிதர்தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.
vasudevan31355
10th June 2014, 07:51 PM
http://images.boxtv.com/clips/398/14398/crop_230x332_94299_14398_q60.jpg
கார்த்திக் சார்,
என்ன ஆச்சர்யம்!
மூன்று வருடங்களுக்கு மேலாகத் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனைக் கண்ணம்மாவைக் காட்டி எழுப்பி விட்டீர்கள். நவரசத் திலகம் திரி மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டது தங்களால்.
நான் இப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. அவ்வப்போது தொலைக்காட்சியில் சில காட்சிகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
ஆனால் பாடல்கள் அனைத்தையும் ஒலி,ஒளி வடிவில் வைத்திருக்கிறேன்.
எங்கெங்கும் உன் வண்ணம், தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம், செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு என்று மனதிற்கு இதமான பாடல்கள்.
'மனதை மயக்கும் மதுர கானங்கள்' திரியில் இப்படத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தனியாக அலசலாம்.
தங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஒருமணி நேரம் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்கினேன். இதிலிருந்தே தங்கள் பதவின் சிறப்பை உணரலாம்.
அருமையான ஒரு முழு கவரேஜ் ஒரு படத்தைப் பற்றித் தர தங்களாலும், முரளி சாராலும் மட்டுமே முடியும்.
அதுவும் ஜனரஞ்சகமான தங்கள் எழுத்துக்களுக்கு எக்காலமும் நான் அடிமை.
தூள் பரத்துங்கள்.
Gopal.s
11th June 2014, 03:30 AM
நவரச திலகம் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ,நவராத்திரி படம் வந்த போது ,ஒரு பிரபல அரசியல் தலைவரால் வழங்க பட்டது.முத்துராமனுக்கு அந்த பட்டம் ,அவரது குடும்ப நண்பரால் பிரஸ்தாபிக்க பட்ட போது ஒருவர் இதை சுட்டி காட்ட ,முத்துராமன் ,நடிகர்திலகத்துடன் கலந்து பேசியுள்ளார்.உங்களுக்கு தந்த பட்டமாச்சே என்று.நடிகர்த்திலகமோ,சிரித்து கொண்டே,ஆமா,நாளுக்கு ஒரு பட்டம் கொடுப்பாங்க,நாமெல்லாம் அதை உபயோக படுத்தவே இல்லையே,நீ போட்டுக்கப்பா என்றதும் ,முத்துராமன் அதை போட்டு கொண்டதாக கேள்வி.
ஆனால் ,அவன்தான் மனிதனுக்கு பிறகு நன்றி கேட்டு போனார் முத்துராமன்.பிறகு தனக்கு கே.ஆர்.விஜயா தயவில் கிடைத்த புண்ணியத்தை 1976 இல் இழந்து, மார்கெட் இல்லாமல் தவித்தார்.
vasudevan31355
11th June 2014, 06:24 AM
ஆனால் ,அவன்தான் மனிதனுக்கு பிறகு நன்றி கேட்டு போனார் முத்துராமன்.பிறகு தனக்கு கே.ஆர்.விஜயா தயவில் கிடைத்த புண்ணியத்தை 1976 இல் இழந்து, மார்கெட் இல்லாமல் தவித்தார்.
நன்றி கெட்டுப் போனாரா?
நன்றி கேட்டுப் போனாரா? :banghead:
mr_karthik
11th June 2014, 07:43 PM
அருமை பம்மலார் அவர்களுக்கு நன்றி
gkrishna
12th June 2014, 12:28 PM
டியர் கார்த்திக் சார்
உங்களின் கண்ணம்மா படித்தவுடன் நினைவிற்கு வந்தது "அமுதம் pictures " சொந்தம் திரைப்படம் தான் A .C T இன் direction
விச்சுவின் ஆரம்ப வரிகள் உடன் வரும் "நல்ல தான் யோசிகீரீங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு "
வாட் எ lovely family டிராமா முத்துராமன் விஜயா prameela pair
mr_karthik
14th June 2014, 01:31 PM
கம்பீரம் - கனிவு - கலாட்டா - கலகலப்பு
இப்படி ஒரு படம் இனி எப்போது வரும்?.
mr_karthik
19th June 2014, 02:40 PM
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி....
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.