PDA

View Full Version : Nadhaswaram - Thirumurugan's new serial



aanaa
29th March 2010, 02:39 AM
மெட்டிஒலி என்ற தொடர் மூலம் தேர்ந்த இயக்குனராக தன்னை அடையாளம் காட்டியவர் திருமுருகன். குடும்பஉறவுகள் பற்றிய இவரது கதைப்பின்னணி, தொடரோடு நேயர்களை இணைத்தது. இந்த தொடரில் கிடைத்த புகழைத் தொடர்ந்து பெரிய திரைக்கும் போனார், திருமுருகன். இப்போது சின்னத்திரையில் தயாரிப்பாளர் என்ற புதிய அடைமொழியையும் சேர்த்துக்கொண்டு களம் இறங்குகிறார்.


இவர் இயக்கும் தொடருக்குப் பெயர் நாதஸ்வரம். காரைக்குடி பகுதியில் வாழும் ஒரு நாதஸ்வரைக் கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை களமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படைப்பில் திருமுருகனுக்கே உரிய குடும்ப நேசிப்பு, நெகிழ்வுக் காட்சிகளும் உண்டு.


தொடரில் நாதஸ்வரக்கலைஞராக மவுலி நடிக்க, அவரது மகனாக திருமுருகன் நடிக்கிறார். இவர்கள் தவிர மற்ற அனைவரும் புத்தம் புதுமுகங்கள். இந்த புதுமுகங்களின் தேர்வு கடந்த 2 மாதங்களாக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நேரடித்தேர்வில் முதற்கட்டமாக 40 பேரை தேர்ந்தெடுத்திருக்கிறார், திருமுருகன். இவர்களுக்கான நடிப்பு பயிலரங்கம் சென்னையில் 3 நாட்கள் நடந்தது. நடிகர் நாசரின் `அடவு பவுண்டேஷன்' இந்த பயிற்சியை நடத்தி முடித்தது. நடிகர் சண்முகராஜன், டைரக்டர் அனிஷ், ராம் ஆகியோரும் சிறப்பு பயிற்சி அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 14 வயது தொடங்கி 72 வயது வரை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.


படப்பிடிப்பு கடந்த 19-ந்தேதி காரைக்குடியில் தொடங்கியது. விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, நாதஸ்வரம்.




http://3.bp.blogspot.com/_k91x0zKrHgc/TNAx03AVfHI/AAAAAAAABo4/XvfMdMK8Py8/S748/nadhaswaram.jpg


நாதஸ்வரம். - Nathaswaram- Title Song (http://raretfm.mayyam.com/stream//tvserial/Nathaswaram.rm)




நன்றி: தினதந்தி


கொசுறு:
check this - ( Not mine)
http://nadhaswaramblog.blogspot.com/

R.Latha
16th April 2010, 11:42 AM
[tscii:50b3019609]Director M. Thirumurugan of ‘Metti Oli’ fame tells T.SARAVANAN what it takes to make a TV serial

Strongly rooted to culture and tradition, film director M. Thirumurugan belongs to the old school of filmmaking a la K.S. Gopalakrishnan, a popular filmmaker of yesteryears.

Name and fame knocked on his doors after the stupendous success of mega television serial ‘Metti Oli’, smashing most TRP records. But it also came only after eight serials that he had directed for different channels.

Success of ‘Metti Oli’

The character ‘Gopi’ he played in ‘Metti Oli’ gained more popularity and has propelled him to retain the name for his role in the next television mega serial “Nadaswaram” slated to hit the small screen later this month.

At a time, when people are becoming more independent and individualistic at the risk of losing values, his attempt to portray the joy of staying together and sacrificing for family welfare, has renewed interest in the joint family system.

Making style

On the sets of ‘Nadaswaram’ in Karaikudi, Thirumurugan reels out his filmmaking pattern and talks about his struggles before he made a mark in the industry.

“Our strength lies in our value system. I consider family and relationship our strength and also weakness. To be frank, my family has been the driving force behind my success,” he asserts.

Hailing from Karaikudi, he is not unfamiliar with the Chettinad culture. Though he did a B.Sc in Zoology, his interest in films took him to the Film Institute in Chennai for a course.

“My father, Muniyandi, was a strict disciplinarian. As a medical doctor, he wanted his only son to continue the legacy, which I could not. I applied for the film course without his knowledge. Sometimes, he was quite harsh on me. But when I look back, I can feel his unconditional love, possessiveness and extreme care,” he recalls.

Strong point

Adept in screenplay, Thirumurugan relies on a heavy story line with strong characters and delineated importance. He deserves appreciation for spontaneous improvisations that add sheen to scenes he directs. Thirumurugan’s penchant for family dramastems from his own circumstances. “I derive inspiration from my family members. Ours is a big family and we too have petty quarrels. I at times include them in my scripts to lend more authenticity to the characters,” he substantiates.

Not in for exotic locations, he prefers ordinary middle class homes for televising his serials.

Eye for detail

With a keen eye for detail, right from the sofa to the television set, the wall with peeled off paint to the soot-filled kitchen, he attempts to catch the essence of a home on every occasion.

While filming ‘Nadaswaram’, he was quick to point out to the lead character to leave the footwear outside the entrance of the house.

“I just want to relate to people. You have to be true to your script. You cannot show a middle income earning person in a flashy set up, it will look artificial. You have to be extremely careful in portraying middle class society. It’s like tight-rope walking as they are more sentimental,” he explains.

Talent hunt

The effort he takes for his serials are worth mentioning. He prefers to field new faces and this time went on a massive talent hunt across the State and shortlisted 33 persons, who were trained at a workshop in Chennai with the help of film actors Nasser, M. Shanmugaraja, and film director, A. Anis.

Being the producer of the serial, he also had the liberty to take the bold decision of shifting the whole unit from Chennai to Karaikudi. “Normally, not many would venture out of Chennai for a television serial. But in my case, as the story revolved around the life of people residing in the backyard of palatial Chettinad mansions, I had to come here to lend more credibility to the script. You might have seen the huge bungalows, lying vacant for most part of the year with a lone person staying there to guard. But if you peep into the backyard, it will be bustling with life with big families squeezing themselves into small row houses. The serial is a sincere attempt to capture the essence of that life and bring to light the economic inequality,” he signs off.

BOXES:

SHORT TAKE:

Actor M. Shanmugaraja, who has worked with him: “He does not differentiate between television serials and films. His work ethics are the same for both. What is more commendable is his attempt to bridge the widening gap between the two media. He has become one of the torchbearers for television serial directors. If those who looked down upon serial directors changed their mindset, much of the credit goes to M. Thirumurugan.

FUTURE FILM PROJECTS

“Kaathu”

“Kurai Ondrum Illai”

MOVIES

“Em Mahan”

“Muniyandi Vilangiyal Moondram Aandu”

TELEVISION SERIALS

“Chinnath Thirai-k-kathaigal”

“Nallur Kaaval Nilayam”

“Akshaya”

“Panchavarnakkili”

“Sathyaa”

“Anantha Bhavan”

“Kaaveri”

“Metti Oli”

http://beta.thehindu.com/arts/radio-and-tv/article396815.ece
[/tscii:50b3019609]

R.Latha
20th April 2010, 11:34 AM
from today (monday to friday 7.30pm)
[html:523b23acde]
<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=19218688&vid=7352342&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/14319/106019938.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=19218688&vid=7352342&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/14319/106019938.jpeg&embed=1" ></embed></object>
Natha 1 (http://video.yahoo.com/watch/7352342/19218688) @ Yahoo! Video (http://video.yahoo.com)</div>[/html:523b23acde]


[html:523b23acde]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=19218692&vid=7352343&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/14319/106019951.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=19218692&vid=7352343&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/14319/106019951.jpeg&embed=1" ></embed></object>
Natha 2 (http://video.yahoo.com/watch/7352343/19218692) @ Yahoo! Video (http://video.yahoo.com)</div>[/html:523b23acde]

aanaa
23rd April 2010, 12:35 AM
:ty: Latha

நடிகர்கள் /நடிகைகள் 80% அறிமுகம்

:notworthy: Thirumurugan

anbupani
5th May 2010, 03:58 PM
watch all updates on


http://www.usertube.com/browse-Natheswaram-Serial-videos-1-date.html

regular updates

R.Latha
18th November 2010, 02:25 PM
`மெட்டுப் போட்ட' நாதஸ்வரம்

பொதுவாக சீரியலில் பாடல் என்றால் அது டைட்டிலில் இடம் பெறுவது மட்டும்தான். சீரியல் கதைகளில் டூயட்டுக்கோ, ஜாலி பாடல்களுக்கோ இடமிருக்காது. இந்த மரபை தன்னுடைய `மெட்டி ஒலி' சீரியலில் உடைத்து காட்டியவர் இயக்குனர் திருமுருகன். கதையின் நடுவே வரும் காட்சிகளுக்கு ஏற்ப பாடல் காட்சி வைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அந்த மரபை தன்னுடைய நாதஸ்வரம் சீரியலிலும் தொடர்கிறார் திருமுருகன். அதுபற்றி அவரிடம் பேசியபோது, இசைங்கிறது எல்லோருடைய வாழ்விலும் தொடர்புடைய விஷயம். எல்லோருக்குமே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சில பாடல்கள் வாழ்க்கைக்கும் மறக்க முடியாத அம்சமாக அமைஞ்சிடும். இந்தக் கதையின் அடிநாதமே இசைக் குடும்பம்தான். அப்படி இருக்கும்போது இதில் இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகுமா என்ன? பொதுவாக பாடல்ங்கிறது யதார்த்தத்தை மீறிய விஷயம். அதனால், அதை சீரியலுக்குள் நுழைக்க முடியாது என்றுதான் பலரும் சொல்வாங்க.

ஆனால் யதார்த்த வாழ்க்கையில் என்ன நடக்குது? மகிழ்ச்சி யாக இருக்கும் போது நம்ம உதடுகள் சந்தோஷமான பாட்டுக்களை முணுமுணுக்கத்தான் செய்யும். அதேபோல, வேதனையில் இருக்குறப்போ நமக்கு ஆறுதலாக இருக்கிறது இதே இசையும், பாட்டுகளும்தான். அப்படி நிஜ வாழ்க்கைல நம் கூடவே இருக்கிற இசையை சீரியலில் மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கணும்?

நிஜ வாழ்க்கைல எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவுக்கு எல்லை மீறாமல் இந்தத் தொடரில் பாடலை வெச்சிருக்கேன். கதையின் மிக முக்கியமான கட்டத்தில் சந்தோஷத்தின் வெளிப்பாடாக அந்தப் பாடல் அமைஞ்சிருக்கு.

"பாட்டுக்கான சூழலைச் சொன்னவுடன் அந்தக் காட்சியமைப்புக்கு பொருந்திப் போறமாதிரி இசையமைச்சுக் கொடுத்த இசையமைப்பாளர் சஞ்சீவ் ரத்தனும், அதற்கு வார்த்தைகள் மூலம் உயிர் கொடுத்த பாடலாசிரியர் யுகபாரதியும் இந்தப் பாடல் ஒளிபரப்பான பிறகு நிச்சயம் பாராட்டப்படுவாங்க.

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலிலும் மக்கள் கவனத்தை நம்ம பக்கம் திருப்புறதுக்கு பல உத்திகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே போற நமக்கு இந்த சவால் கொஞ்சம் அதிகம். அதனால் மக்களை கதையோடு கட்டிப் போடற பல விஷயங்களைச் செய்துக்கிட்டே இருக்கோம். மக்களும் ரசிக்கிறாங்க. பாடல் காட்சியைப் பார்த்துட்டு அவங்க தரப் போற விமர்சனத்துக்காக இப்போதிருந்தே காத்துக்கிட்டிருக்கேன்'' என்றார் திருமுருகன்.

நாதஸ்வரத்தில் புதிய ராகம்.
http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=11/13/2010&secid=29

aanaa
18th November 2010, 11:12 PM
Nadaswaram love songs , nadaswaram romantic songs

gopi and malar romance songs

click below link to watch those romantic song



http://www.usertube.com/nadaswaram/nadaswaram-love-songs-video_9a47edcc0.html

http://img94.imageshack.us/img94/1386/xnafdd.png

after watched comment plz :D

aanaa
8th January 2011, 08:52 AM
குடும்பத்துக்காக காதலைத் துறந்த கோபி

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் நாளுக்கு நாள் வேகம் பிடிக்கிறது.

ஒரே நாளில் காதலைச் சொல்லி அன்றே பிரியவும் செய்த கோபி-மலர் ஜோடிதான் இப்போது பெண்கள் மத்தியில் ஒரே பேச்சாக இருக்கிறது. என்ன ஆனாலும் மலருக்கு கோகுலுடன் திருமணம் நடக்காது. அவர் கோபியுடன் தான் சேருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், கோகுல்- மலர் திருமணம் நடந்தே விட்டது. அந்த திருமணத்துக்கு கோபியே நாதஸ்வரம் வாசிக்க நேர்ந்தது அதிர்ச்சி இணைந்த சுவாரசியம்.


"எதற்காக இந்த தடாலடி முடிவு?'' தொடரின் தயாரிப்பாளரும், இயக்குநருமான திருமுருகனிடம் கேட்டால், "திருமணத்தின் போது கோபி ஏதாவது சாகசம் செய்து மலரை திருமணம் செய்திருந்தால் தான் தடாலடி. இதுதான் யதார்த்தம். காதலித்த பெண்ணாக இருந்தாலும் தந்தையின் கவுரவத்திற்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் நேசித்த மீசையைக் கூட துறந்து நாதஸ்வரத்தைக் கையில் எடுக்கிறான் கோபி. நம்முடைய ஆசைகளைவிட குடும்பத்தின் நலனுக்காக வாழ்பவன்தான் உண்மையிலேயே குடும்பப் பற்று உள்ளவன்.

பெண்களுக்கும் இது பொருந்தும். மலரும் அப்படிப்பட்ட பெண்தான்.

குடும்பத்துக்காக தன் காதலைப் பூட்டிக் கொண்டுவிட்டாலும் மலருக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, கோபி எந்த அளவுக்கு துணையாக இருப்பான் என்பதை ரசிகர்கள் இப்போது தெரிந்து கொண்டிருக்கிறார்கள். `சைக்கோ' மனநிலைக்கு மாறிவிட்ட கோகுலிடம் இருந்து மலரைக் காப்பாற்றி காரைக்குடிக்கே அழைத்து வரும் கோபி, அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதுதான் கதையின் அடுத்தகட்ட திருப்பம்'' என்கிறார், திருமுருகன்.

"மலர் திருமண வாழ்வில் மனம் உடைந்து திரும்பி வந்திருக்கும் சூழல் மகாவை எப்படி பாதிக்கிறது? மலரும் கோபியும் சந்திப்பதையே வெறுக்கும் மகா என்ன முடிவை எடுக்கிறாள்? அவளுடைய முடிவால் கோபி திருமணத்துக்கு சம்மதிக்கும் நிலை வருமா? இதற்கிடையே தன் காதல் தோற்றாலும் தன் தங்கை காமுவின் காதலை ஜெயிக்க வைக்கப் போராடும் கோபியின் முயற்சிகள் வெற்றி அடைந்ததா? திருமண நாள் அன்றே பிரிந்து சென்ற மலரை சந்தித்த கோகுல், அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிகள் எடுத்தானா? இதுபோன்ற பல எதிர்பார்ப்புக்குரிய கேள்விகளுக்கு விடை வரும்காட்சிகளில் தொடரும்'' என்கிறார், திருமுருகன்.




நன்றி: தினதந்தி

aanaa
9th April 2011, 06:26 PM
காதலுக்காக ஒரு போராட்டம்


திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நாதஸ்வரம்' தொடர் இப்போது ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்கிறது.

"மலர், கோபி, மகா என்று முதலில் இருந்த முக்கோணக் காதல் கதை, மலருக்கு நடந்த திருமணத்தை ஒட்டி முடிவுக்கு வந்தது. இதனால் கோபிக்கும், மகாவுக்குமான திருமணம் உறுதியானது.

ஆனால், மகாவை ஒருதலையாய்க் காதலித்த கோபியின் தம்பி பாண்டி, கோபியைக் கொன்றாவது மகாவை அடைவது என்னும் முயற்சியில் இறங்க, அதனால் மகாவின் தலையில் அடிபட்டு அவள் தன் நினைவுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால், அந்த நிலையிலும் கூட மகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதில் உறுதியாக இருக்க, அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக மொத்த குடும்பமும் ராமேஸ்வரம் சென்றது. ராமேஸ்வரத்தில் கோபி, மகா திருமணம் நடப்பதற்கு முன்பாக மகா காணாமல் போக, பின் நடந்த விசாரணையில், `மகா காணாமல் போகவில்லை. பாண்டியால் கடத்தப்பட்டிருக்கிறாள்' என்பது தெரியவந்தது.

இந்நிலையில் திடீர்த் திருப்பமாக மலரின் கணவன் கோகுல், மலரிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதை அடுத்து, மீண்டும் மலருக்கும், கோபிக்குமான காதல் துளிர்த்து, இருவரும் இணைவதற்கான சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.

இதே தருணத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வாக கோபியின் தங்கை காமுவுக்கும், கறார் பேர்வழியான நெல்லியாண்டவரின் மகன் மூர்த்திக்குமான திருமணம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நெல்லியாண்டவருக்குக் காதல் என்றாலே பிடிக்காது. இதனால் மூர்த்திக்கும், காமுவுக்கும் இருந்த காதலை மறைத்து, அவர்
களின் திருமணத்தை நடத்தி வைக்கும் முயற்சியில் கோபி இருக்கிறான். கோபியின் தந்தை சொக்கலிங்கம், கோபியின் சித்தப்பா மயில் வாகனம் ஆகியோருக்கும் இது தெரியும்.

இந்நிலையில் காணாமல் போன மகாவைக் கண்டுபிடிப்பதை விட்டு, இப்படி காமுவின் திருமண வேலைகளில் கோபியும், கோபியின் குடும்பமும் ஈடுபட்டிருப்பதாக மகாவின் பெற்றோர்களான பிறைசூடனும், புஷ்பாவும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எந்த நேரமும் புலம்பலும், அழுகையுமாய் இருக்கும் புஷ்பாவால் கல்யாண வீடு களையிழந்து கிடக்கிறது பிறைசூடனோ, மகா காணாமல் போனதற்குக் காரணம் பாண்டி மட்டுமல்ல, கோபியும் தான் என்று தவறாக நினைத்துக்கொண்டு கோபியைக் கைது செய்து சிறையிலடைக்கும் முயற்சியில் இருக்கிறார்.

அப்படி கோபி கைதானால் காமுவின் திருமணம் நிச்சயமாக நின்றுபோகும். இது தவிர, காமுவின் கல்யாணத்துக்காக வைத்திருந்த ஒரு லட்சரூபாய் பணத்தையும் பாண்டி திருடிக்கொண்டு போயிருக்கிறான். இதனால் இப்போது கடும் பண நெருக்கடிவேறு.

மலரின் தங்கை ரோஹிணியை ஏமாற்றி கற்பை சூறையாடி சிறைசென்ற சங்கரை, மலரின் கணவன் கோகுல் ஒரு பெரும் சதித்திட்டத்தோடு ஜாமீனில் வெளிக்கொண்டுவருகிறான். சங்கரையும், சங்கரும் ரோஹிணியும் சங்கமித்த வீடியோ க்ளிப்பையும் பயன்படுத்தி மலரை மீண்டும் அடைவதற்கான முயற்சியில் இறங்குகிறான்.

டைவர்ஸ் மூலம் கோகுலிடமிருந்து விடுதலையாகப் போகிறோம் என்னும் நிம்மதியில் இருக்கும் மலருக்கு இது ஒரு பேரிடியாகிறது. இந்நிலையில் கோபியும் தனக்கு இருக்கும் ஏராளமான பிரச்சினைகளால் மலருக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருக்க, மலர், கோகுலின் சதித்திட்டத்திலிருந்து தப்பித்தாளா? தன் தங்கை ரோஹிணியைக் காப்பாற்றினாளா?

`மகாவும், பாண்டியும் மறைந்து இருக்கும் இடம் பற்றி தகவல் கோபிக்குக் கிடைக்கிறது. காமுவின் கல்யாணம் தலைமேல் இருக்க, மகாவைத் தேடிக் கிளம்புகிறான் கோபி. மகாவையும், பாண்டியையும் அவன் கண்டுபிடித்தானா, அப்போது மகா என்ன நிலையில் இருக்கிறாள், மகாவுக்கும் கோபிக்கும் மீண்டும் திருமணம் நடக்குமா? அல்லது கோகுலிடமிருந்து மீண்டும் தப்பி மலர் கோபியின் கரங்களைப் பிடிப்பாளா?

அதிரடிக்கேள்விகளுக்கான பதில்களோடு வரும் கோடைகாலம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அனலைக் கிளப்பவிருக்கிறது நாதஸ்வரம்!'' என்கிறார், இயக்குநர் திருமுருகன்.



நன்றி: தினதந்தி