PDA

View Full Version : Mokkai Conversations -2 ( Doctor Jokes )



MumbaiRamki
11th April 2010, 11:17 PM
1***
டாக்டர் :அந்த பேஷண்டக்கு எப்பலேர்ந்து ஜுரம் அதிகமாச்சு?

நர்ஸ் 2: நைட் டியூடி நர்ஸ் அடிக்கடி குனிஞ்சு பேனா எடுக்கும் போது !

2***

பேஷன்ட் : டாக்டர், அபரேஷன் , வர தீபாவளிக்கு அப்புறம் வச்சுக்கலாமே ?

டாக்டர் : ஏன்?

பேஷன்ட் : தீபாவளிக்கு ஒரு பத்து பர்சன்ட் தள்ளுபடி கிடைக்கும்ல ?

3***
டாக்டர் 1 : எப்படியா , வலது கண்ணுக்கு பதில இடது கண்ணுக்கு ஆபரேஷன் பண்ணின ?

டாக்டர் 2 : நீங்க தானே, கண்ணாடி போட்டு கிட்டு ஆபிரேஷன் பண்ண சொன்னீங்க ..நான் எங்க வீட்டு கண்னாடி அந்த பேஷன்ட் பக்கதில போட்டு பன்ணினேன் !

4****

டாக்டர் 1 : எம்மா, அந்த ஆளுக்கு , வயத்தில தானே ஆபிரேஷன் பண்ணினேன், எப்படி இப்ப கண் தெரியலன்னு சொல்றாறு ?
நர்ஸ் : இன்னிக்கு, அவர் கிட்ட பில்ல காண்பிச்சேன், அப்பலேர்ந்து தெரியல டாக்டர்.

5***

டாக்டர் : எப்பலேர்ந்து , உங்களுக்கு சக்கரை வியாதி இருக்கும்ன்னு சந்தேக்கிறேங்க?
பேஷன்ட் : எங்க வீட்டில எறும்பு அதிகமாகும் போதே சந்தேகபட்டேன் !

6*****

பேஷன்ட் : எப்படி டாக்டர், போன வருஷத்தோட இப்ப இளமையா இருக்கீங்க ?

டாக்டர் : இருங்க, எங்க அப்பாவ கூப்பிடறேன். அவர் கிட்ட கேளுங்க !

7*******

டாக்டர் : பரவாயில்லையே, கல்யாணமாணதுக்கப்புறம் ஒங்க பீ.பீ 120 யா குறஞ்சு இருக்கு .

பேஷன்ட் : நீங்க பாக்கிறது , என்னோட பாங்க் பாலன்ஸ் சார்.

8************

பேஷன்ட் : டாக்டர், எங்களுக்கு அஞ்சு வருஷம்மா குழந்தை பொறக்கல ..

டாக்டர் : கொஞ்சம் வருத்தமா தான் இருக்கும் . கவல படாதீங்க . உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு வருஷம் இருக்கும் ?

பேஷன்ட் : அடுத்த மாசம் எங்களுக்கு கல்யாணம் டாக்டர்.

9****

பேஷன்ட் : பத்தாயிரம் மேல ஆபிரேஷன் பண்ணிகிட்டா , இனாம் கிடையாதா ?

நர்ஸ் ( கடுப்பாகி ) : இருக்கும் ..எங்க ஆபிரேஷன் பண்ணிணாங்களோ, அங்கேயே . கிளிச்சு எடுத்துகோங்க !

10****
நர்ஸ்1 : பள்ளிகரணையில , பத்து கிரௌன்ட் இடம் வாங்கினாரே டாக்டர்.அங்க என்ன கட்டினார் ?

நர்ஸ்2 : ஒரு சுடுகாடும் , ஒரு இடு காடும் கட்டினார் . என்ன இருந்தாலும் தொழில தர்மம் வேணும்ல ?

11******
நர்ஸ்1 : நம்ம டாக்டர வெளி நாட்டிலிருந்து கூப்பிடறாங்க தெரியுமா ?

நர்ஸ் 2: பரவாயில்லயே ..நம்ம டாக்டர் கை ராசி அவங்களுக்கு சீக்கீரமா தெரிஞ்சிருச்சா ?

நர்ஸ் 1 : இல்ல ..அங்க , மக்கள் தொகை அதிகாமாகிடுச்சாம் ..சிக்கிரமா குறைக்க வழி தேடறாங்க..

12*****
ராமு : அந்த டாக்டர் கிட்ட போனதுக்கபுறம், என்னோட வயத்து வலி சுத்தமா குணமாகிடுச்சு.

சோமு : சூப்பர் டா ...ஆனா, அவர் கொடுத்த மாத்திரைக்கு ஏதாவ்து சைட் ஏஃபக்ட் இருந்ததா ?

ராமு : லேசா .. வாரத்துக்கு ஒரு முறை இரத்த வாந்தி வரும்.

pavalamani pragasam
12th April 2010, 08:34 AM
:rotfl3:

TamilMoon
3rd October 2010, 02:35 PM
12*****
ராமு : அந்த டாக்டர் கிட்ட போனதுக்கபுறம், என்னோட வயத்து வலி சுத்தமா குணமாகிடுச்சு.

சோமு : சூப்பர் டா ...ஆனா, அவர் கொடுத்த மாத்திரைக்கு ஏதாவ்து சைட் ஏஃபக்ட் இருந்ததா ?

ராமு : லேசா .. வாரத்துக்கு ஒரு முறை இரத்த வாந்தி வரும். :rotfl: :lol: :rotfl: :lol: