PDA

View Full Version : First Tamil in US Govt.!



NOV
25th March 2010, 10:08 AM
I heard over the radio this morning that a Tamil has been nominated for a leading position in Barack Obama's govt.

Any details guys?

joe
25th March 2010, 10:42 AM
http://thatstamil.oneindia.in/news/2010/03/24/raja-krishnamurthy-may-become-illin.html

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண துணை ஆளுநராக தமிழரை நியமிக்க ஒபாமா முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத் துணை ஆளுநர் பதவிக்கு தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தியை நியமிக்க அதிபர் பாரக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

துணை ஆளுநர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க மாகாணம் ஒன்றின் துணை ஆளுநர் பதவிக்கு வரும் முதல் தமிழர் என்ற பெருமை இவருக்குக் கிடைக்கும்.

இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர் மற்றும் துணை ஆளுநர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

ஆளுநர் பதவிக்கு தற்போதைய ஜனநாயகக் கட்சியின் ஆளுநரான பாட்குயினே மீண்டும் போட்டியிடுகிறார்.

துணை ஆளுநர் பதவிக்கு 100 பேரின் பெயர்கள் அடிபட்டன. இதில் முதல் சுற்றில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ராஜாவும் ஒருவர். அமெரிக்க வாழ் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஒபாமா அரசில் கொள்கை முடிவெடுத்தல் ஆலோசகராக இருந்தவர்.

2வது சுற்று வேட்பாளர் தேர்வு சிகாகோவில் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அப்போது ராஜா வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

இவரை வேட்பாளராக்க ஒபாமா மிகத் தீவிரமாக உள்ளதால் அவர் வேட்பாளராவது உறுதி என்று தெரிகிறது.

கணக்கு தணிக்கை அதிகாரி பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ராஜா கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டிருந்தார்.

ஆனால் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே அவருக்கு துணை கவர்னர் பதவி அளிக்க ஒபாமா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிபர் ஒபாமாவின் நீண்ட கால நண்பர்தான் ராஜா. கடந்த 2004ல் ஒபாமா செனட் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக தீவிரமாக பாடுபட்டார் ராஜா. பின்னர் அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்டபோதும் அவரது பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாவுக்கு பிரியா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

NOV
25th March 2010, 11:43 AM
:ty: Joe

I am :redjump: :bluejump:

ARR uttered the first Tamil words in Oscars last year and now this :clap: