PDA

View Full Version : Yaamirukka Bayam Yen Story By Naga in Vijay TV



raghus555
23rd February 2010, 04:06 AM
Hi Guys,

Today I read in a website that Vijay TV is telecasting a new serial named "Yaamirukka Bayam Yen" a spiritual thriller, the story written by Great Naga. I have seen most of his serials which include Marma Desam 1, Vidathu Karuppu, Chidambara Ragasiyam.

Previously I have followed the threads for Chidambara Ragasiyam and Naga Neram, I would like to start this thread for discussion about the serial. I am in NZ and I will only able to see the episodes after some delay. So please write in your comments and updates on this serial. I hope it will be as good as the serials that Naga sir directed.

So watch it and start sharing the views.

aanaa
23rd February 2010, 06:40 AM
welcome raghus555


view this preview also.

http://tamiltv4u.com/yamirukka-bayamen/yamirukka-bayamen-tamil-serial-15-02-10/#

another interview
http://getmadcat.com/video/248800/Yamirukka-Payamen-Press-Meet.html



`யாமிருக்க பயமேன்'



விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மர்மத்தொடர் `யாமிருக்க பயமேன்.'

பூமிக்குள் புதைந்த ரகசியம் உறங்கிவிடும்; மனித மனங்களுக்குள் புதைந்த ரகசியம் உறங்கிடாது என்பதற்கேற்ப நூற்றுக்கணக்கான வருடங்களுக்குமுன் நமது மண்ணில் வாழ்ந்த சித்தர்களும், சித்தாந்தர்களும் விட்டுச்சென்ற மர்மங்கள் ஏராளம். அவற்றை அறிய நாம் செய்த ஆராய்ச்சியில் விடை தெரியாத பல மர்மங்கள் அடங்கிக் கிடக்கின்றன. அதில் சில உண்மைகளையும், கற்பனைகளையும் கலந்து மக்களின் ரசனைக்கேற்ப ஒரு தேர்ந்த கதைக்களத்தை எடுத்து அதை தொடராக வழங்கியுள்ளதுதான் இந்த `யாமிருக்க பயமேன்' தொடர்.

பழனி முருகன் சிலையை உருவாக்கியது போகர் சித்தர் என்பது புராண இதிகாசங்கள் கூறும் உண்மை. நவபாஷாணங்களால் உருவான அந்த சிலையைப் போல போகர் இன்னொரு சிலையை உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. ஆனால் அந்த இரண்டாவது சிலை எங்கே என்பதுதான் இன்றுவரை பதில் கண்டறியப்படாத மர்மமாக நீடித்து வருகிறது.

பழனி மலைப்பகுதியில் மறைந்துள்ள முருகனின் இரண்டாவது சிலையை காலம் காலமாய் பல குழுக்கள் தேடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். பல தலைமுறைகளாக தொடரும் முருகன் சிலைக்கான இந்த தேடலில் தற்காலத்தில் மிக தீவிரமாக முயற்சித்து வருபவர்கள் பழனி நகரத்தில் வசிக்கும் இந்திராணி மற்றும் பழனி மலைப்பகுதியில் வசிக்கும் திணைக்காத்தான் குடும்பத்தினர். இரு குழுக்களுமே `இரண்டாவது சிலை தங்கள் பரம்பரைக்கு சேர வேண்டிய குலச் சொத்து' என கருதுவதால், அதை கைப்பற்றும் முயற்சியில் பல தலைமுறைகளாக பல்வேறு யுத்தங்களையும், அதனால் பெரும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளனர்.

புதிராய் தொடரும் இந்த மர்மக் களத்தில் ஒருவன் பலியாக, அந்த வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அது கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய, பழனியில் வசிக்கும் வெற்றிவேலின் நண்பன் ஆறுமுகம் இந்த மரணத்திற்கும் சிலை தேடலுக்கும் நிச்சயம் தொடர்புண்டு என திட்டவட்டமாக கூறுகிறான். வெற்றிவேல் இதை நம்ப மறுத்தாலும், தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகள் புரிதலுக்கும் மீறிய நிஜங்களாக வந்து போக, இந்த வழக்கில் மிகுந்த ஆர்வம் கொள்கிறான்.

அந்த இரண்டாவது சிலையை தேடும் நோக்கத்தோடு சென்றவர்கள் கண்டது பல சாகசங்களை தெரிந்து வைத்திருந்த சித்தர்களை. இந்த சித்தர்கள் இரும்பை தங்கமாக்கும் `ரசவாதக்கலை'யில் தேர்ந்தவர்கள். பாதரசத்தை இறுகச்செய்து ஆபரணமாக அணிபவர்கள். பலவித ஆரூடங்களும், மாயவித்தைகளும் கற்றுத்தேர்ந்தவர்கள். இவர்களால் நிகழவிருக்கும் அற்புதங்கள் என்ன என்பதை `யாமிருக்க பயமேன்' கதை சொல்லும்.

வழிபடுவதற்காக முருகன் சிலையை தேடும் இவர்களைத் தவிர, சிலையை கைப்பற்றி, பல்லாயிரம் கோடி பணம் பார்க்கவும் ஒரு கும்பல் இந்த தேடுதல் போராட்டத்தில் ஈடுபடுகிறது. விடையில்லா இந்த தேடலின் முடிவில் உணர்த்தப் போகும் உண்மை இறுதியில் தரப்போவது என்ன? முருகனின் இரண்டாவது சிலையா? அதைத் தேடியலைந்தவர்கள் அதற்காக கொடுத்த விலையா? புதைந்திருக்கும் ரகசியங்கள் வெளிப்பட பதிலளிக்க வருவதே `யாமிருக்க பயமேன்'.

மூலக்கதை நாகா மற்றும் ராம்ஜி. திரைக்கதை இந்திரா சவுந்தர்ராஜன். இசை: ஸ்ரீஹரி கிருஷ்ணா. நட்சத்திரங்கள்: வடிவுக்கரசி, மாஸ்டர் சாணக்கியா, சசி ஆனந்த், அனில், மகாலட்சுமி.

தயாரிப்பு விஜய் டிவி.
-------------
.

raghus555
24th February 2010, 04:33 AM
Hi,

Thanks for the links. From the interview one thing is clear, the serial creation team has taken too much care to be logical in every sense and I think this is due to the discussion forums like the HUB which has scrutinized every bit of information from the serials done by Mr. Naga and Mr. Indira Soundarajan combination.

So we must thank the Hubbers for the reasoning and effort they put on watching the serials which are well ahead and advanced than the stereotypical serials telecasted.

Eager to watch the episodes and discuss the doubts and questions regarding the serial.

NOV
24th February 2010, 06:52 AM
Welcome to the Hub Raghu.

For your information, Mr. Naga himself is a Hubber and that he obtains feedback from viewers itself, speaks volumes about his search for perfection.

Do enjoy your stay. :)

pamrang
27th June 2010, 01:56 AM
I was hoping to see some great discussion here about the serial but, am mildly disappointed to find none. Is the serial good at all? I am thinking of starting to watch it and want hubbers opinion regarding this. I am a big fan of Naga and all his TV serials - does this serial live up to that standard?

pavalamani pragasam
27th June 2010, 09:18 AM
My hubby is not in the habit of watching serials. But he is watching this serial which means it is engrossing!

pamrang
28th June 2010, 01:59 AM
Thanks! Pavalamani Madam

:D

sivank
9th July 2010, 08:49 PM
[tscii:fb095160f4]I really canīt understand why no one is writing about this serial. I happened to watch one part and got immersed so much that I am really addicted to this.

I am not going to talk about story etc. It is simply something special in this serial, which I am not able to express. I feel so immersed in this.

Muruga.........[/tscii:fb095160f4]

anbupani
6th September 2010, 09:16 PM
all episodes are avilable here

www.usertube.com

no more popups, 1y website free from popups.

aanaa
1st March 2011, 06:26 AM
யாமிருக்க பயமேன்



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `யாமிருக்க பயமேன்'.

போகர் உருவாக்கிய இரண்டாவது முருகன் சிலைக்கான தேடலை அடிப்படையாக கொண்ட இந்த தொடர், தற்போது பழனியை தாண்டி, அடுத்த கட்டமாக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் பயணிக்கப் போகிறது.

சிறுவன் குகனின் ஆன்மாவாய் விளங்கும் போகர் எடுத்த சில முடிவுகள் முருகனை கோபமடையச் செய்ய, போகரின் சக்திகளை பறித்து 48 நாட்களில் குகனின் உடலை விட்டு வெளியேறச் சொல்கிறார். குகன் பரிகாரம் வேண்ட, `தனது அறுபடை வீடுகளுக்கும் பயணம் சென்று இழந்த சக்திகளை மீட்டு வருமாறு' கட்டளையிடுகிறார்.

குகனின் அறுபடை வீடு பயணம் வெற்றியடைந்தால் தங்களுடைய நோக்கம் நிறைவேறாது என எண்ணும் அஞ்சும், திணைக்காத்தானும், இந்திராணியும் குகன் படைத்த வனநீலியையே அவனுக்கு எதிராக திருப்பி பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றனர்.

மூலக்கதை நாகா மற்றும் ராம்ஜி. தயாரிப்பு விஜய் டிவி; திரைக்கதை இந்திரா சவுந்தர்ராஜன், இசை: ஸ்ரீஹரி கிருஷ்ணா. நட்சத்திரங்கள்: வடிவுக்கரசி, மாஸ்டர் சாணக்யா, சசி ஆனந்த், அனில், மஹாலட்சுமி.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110226/TV-01.jpg

நன்றி: தினதந்தி