PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6



Pages : 1 2 3 [4] 5 6

pammalar
5th May 2010, 02:10 AM
திரு.தாமு அவர்களின் மறைவுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் அத்துணை பேருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

pammalar
5th May 2010, 02:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 4

கே: சிவாஜி தம் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருப்பதேன்? (மைத்ரேயி நடராஜன், மதுரை)

ப: அவர் தன் அன்னையிடம் மிகவும் பக்தி கொண்டவர். அவரது அன்னையார் தான் அவரது வளர்ச்சிக்குக் காரணமானவர். அன்னை மாரியம்மனிடம் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு. இரண்டுக்கும் பொருத்தமாக அன்னை இல்லம் என்று தன் இல்லத்துக்கு பெயரிட்டிருக்கிறார்.

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th May 2010, 03:25 AM
ஒய்.ஜி. விழா - 3

விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறப்புரை:
"கடந்த 60 ஆண்டு கால தமிழக வரலாற்றில், தமிழினத்துக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்த பேராசான்கள் இருவர் - ஒருவர் கலைஞர், இன்னொருவர் சிவாஜி. ஆம்! தமிழர்களுக்கு தாய்மொழியாம் தமிழைக் கற்றுக் கொடுத்தவை - கலைஞரின் விரல், சிவாஜியின் குரல். இதை எவரும், எங்கும், என்றும் மறுக்க முடியாது.

கலைஞரும், சிவாஜியும் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள். நான் சிவாஜியுடன் சில வருடங்கள் தான் பழகியிருக்கிறேன். அவருடன் பழகிய அந்த இனிய தருணங்களை, நினைவுகளாக அசை போடும் போது, நான் என்னை மறந்து எங்கோ சென்று விடுகிறேன். எனக்கே அப்படி என்றால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அவருடன் நெருங்கிப் பழகிய கலைஞருக்கு எப்படி எல்லாம் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சிவாஜிக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பாராட்டுக்களை வழங்கியிருக்கலாம். ஆனால், கலைஞரின் ஒரு செய்கை அளித்த பாராட்டைப் போல் அவருக்கு வேறு எவரும் வழங்கியிருக்க முடியாது. ஒரு முறை. தனது இல்லத்தில் தனது அறையில், கலைஞர் அவர்கள் தொலைக்காட்சியில் ஒரு சிவாஜி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சிப் பெட்டிக்கும், அவருக்கும் உள்ள இடைவெளி கிட்டத்தட்ட 12 அடிகள். சிவாஜியின் நடிப்பில் அப்படியே மெய்மறந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், சட்டென்று எழுந்தவர், அந்த 12 அடிகளையும் கடந்து, தொலைக்காட்சித் திரைக்கு அருகே சென்று சிவாஜியின் உருவத்தை தொட்டுத் தடவி 'நீ தான்யா நடிகன். உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்' என்று பாராட்டி சிவாஜியின் திரை பிம்பத்துக்கு முத்தமும் கொடுத்தார். இதை விட சிவாஜிக்கு உச்சமான பாராட்டு வேறென்ன இருக்க முடியும். திரையில் வருவது, சிவாஜியின் பிம்பம் என கலைஞரின் உள்ளம் நம்பும். இருப்பினும், அதையும் மீறிய பாராட்டு. தனது நெருங்கிய நண்பன் தலைசிறந்த நடிகன் என்கின்ற பூரிப்பில், பெருமிதத்தில் நட்பினால் வழங்கப்பட்ட பாசப் பாராட்டு.

சிவாஜியுடன் தனக்குள்ள நெருக்கத்தைப் பற்றி, ஆழமான நட்புறவைப் பற்றி, எவ்வளவோ முறை எத்தனையோ சம்பவங்களை என்னிடம் கலைஞர் அவர்கள் கூறியிருக்கிறார். அதில் இரண்டை மட்டும் இன்று இந்த விழாவில் கூறுகிறேன்.

பராசக்தி படம் வெளிவந்து இரவோடு இரவாக (ஒரே இரவில்) சிவாஜி, வெள்ளித்திரையின் உச்சத்திற்கே போய் விட்டார். அடுத்து அவர் நடித்துக் கொண்டிருந்த பணம் திரைப்படத்தில் அதுவரை அவருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. பணம் படத்திற்கும் வசனம் கலைஞர் தான்.

'பணத்திற்கு பணம் வாங்கினாயா, கணேசு' - இது கலைஞர்.

'இல்லை மூனாகனா, இனிமேல் தான் கேட்க வேண்டும்' - இது சிவாஜி.

'எவ்வளவு கேட்கப் போகிறாய்' - கலைஞர்.

'ஒரு பத்தாயிரம் ரூபாய் கேட்கலாம் என்று இருக்கிறேன்' - சிவாஜி.

'அட என்னப்பா நீ, இவ்வளவு குறைத்துக் கேட்கிறாய். உன் திறமை, உன் மதிப்பு உனக்கே தெரியவில்லையே! இன்னும் அதிகமாகக் கேள்' என்று கூறி தன் ஆருயிர் நண்பனுக்கு பணம் சம்பாதிக்கும் வழியையும் பாங்குறக் காட்டினார் கலைஞர். இதைக் கலைஞர் என்னிடம் கூறிய போது அவர்களது நட்பின் ஆழம் என்னை வியக்க வைத்தது.

இன்னொன்று கலைஞர்பால் சிவாஜி வைத்திருந்த அழியாத அன்பைப் பறைசாற்றும். ஒருமுறை சங்கரன் கோவிலில் நாடகம் நடத்தி முடித்து விட்டு நள்ளிரவில் சிவாஜியும், கலைஞரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். கலைஞருக்கோ கடுமையான வயிற்றுவலி. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. சிவாஜி பார்த்தார். தனது ஆருயிர் நண்பனுக்கு மின்னல் வேகத்தில் முதலுதவி புரிந்து வலியிலிருந்து விடுதலைப் பெறச் செய்தார். அப்படி என்னதான் செய்தார் சிவாஜி. அவர்கள் இருவரும் இருந்த அந்த இடத்திற்கு மிக அருகில் ஒரு பெரிய நீர்த்தொட்டி பெருமளவு நீருடன் காணப்பட்டது. அந்த நீர்த்தொட்டியிலே அப்படியே கலைஞரை அலேக்காகத் தூக்கி, 'தொபகடீர்' என்று போட்டு விட்டார் சிவாஜி. சில நிமிடங்கள் நீரில் இருந்த கலைஞர், சிவாஜியால் மீண்டும் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டார். அவரது வயிற்றுவலி பறந்து போயிருந்தது. சிவாஜியின் கைவைத்தியம் கலைஞருக்கு பலித்தது. கலைஞரிடம் அவர் வைத்திருந்த அன்புக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!

சிவாஜி நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை அவரது சீடர் ஒய்ஜி நடிப்பதே ஒரு மிகப் பெரிய சவால். ஒய்ஜியின் வெற்றிகரமான இம்முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! சிவாஜிக்கு ஒய்ஜி செய்யும் தலைசிறந்த அஞ்சலி இது. ஒரு மனிதன், மாமேதையாகத் திகழ்ந்து மறைந்த இன்னொரு மனிதனை, எண்ணத்தால் நினைக்கலாம். பேச்சால் நினைவுபடுத்தலாம். எழுத்தால் நினைவுபடுத்தலாம். செயலால் நினைவுபடுத்தலாம். இன்னும் எத்தனையோ வகைகளில் நினைவைப் போற்றலாம். ஆனால், ஒய்ஜி, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தனது மானசீக குருவான சிவாஜியை, தனது உடலால், அங்க அசைவுகளால், தனது நடிப்பால் நினைவு கூர்கிறார். சிவாஜியின் நினைவை இதைவிட சிறந்த முறையில் வேறு எவரும் போற்ற முடியாது. இதை விட உன்னதமான அஞ்சலியை அந்த மகாகலைஞனுக்கு வேறு எவரும் செலுத்த முடியாது. ஆம்! உண்மை. ஒய்ஜிமகேந்திராவின் உன்னத நடிப்பில், அவரது உடல் அசைவுகளில் நாம் சிவாஜியைக் காண்கிறோம். சிவாஜியை மறந்து விட்டு, அவரது நடிப்பை மறந்து விட்டு இந்நாடகத்தை நாம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு, சிவாஜி என்கின்ற காவியக் கலைஞன் நம் அனைவருக்குள்ளும் வியாபித்திருக்கிறார். இந்நாடகத்தின் மூலம் நமக்கு மீண்டும் சிவாஜியை நினைவூட்டிய பொன்விழா நாயகன் ஒய்ஜிமகேந்திரா அவர்கள், இதுபோல் மென்மேலும் பற்பல சாதனைகளைப் புரிய வேண்டும் என என் மனதார அவரை நான் வாழ்த்துகிறேன்."

தொடரும் .....

அன்புடன்,
பம்மலார்.

goldstar
5th May 2010, 06:03 AM
Joe,

I have watched tribute to Sivaji from Singapore, excellent. Host is very simple and very real like us, just comparing so called big TVs and killing our Tamil. We must appreciate host interviewing different people and getting new details of NT from each one of them. I have watched this video for couple of times and still not boring, I will watch again and gain for few more times this week.

In Australia, I meet lots of Srilankan Tamils and they all simply love our NT's movies and some time old NT movies shown at Srilankan Tamils community gathering.

Cheers,
Sathish

kaveri kannan
5th May 2010, 12:29 PM
திரு தாமு அவர்களின் மறைவுக்கு அஞ்சலிகள்.


சிவன்கே அவர்களின் பார்த்தால் பசி தீரும் - திரைக்கதை, திறனாய்வு அலசல் - ரசித்து ருசித்தேன். பாராட்டும் நன்றியும்.


பம்மலார் வழங்கும் கேள்வி -பதில்களும்
உரைத்தொகுப்புகளும் - கோயில் பிரசாதங்களாய் வணங்கி அருந்துகிறேன்.
நன்றி அய்யா.

RAGHAVENDRA
5th May 2010, 09:51 PM
இன்றைய 05.05.2010 சிங்கத் தமிழன் நிகழ்ச்சியுடன் சி.வி.ஆர் - மனோ சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இனி வரும் வாரங்களில் வேறு பிரபலங்கள் பங்கேற்கக் கூடும்.
இன்று சி.வி.ஆர். மிகுந்த மன நெகிழ்ச்சியுடன் காணப் பட்டார். நடிகர் திலகம் மறைய மாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும் ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து வி்ட்டதாகவும் கூறினார்.
பிரபுவின் திரையுலகப் பிரவேசம், மகன்-தந்தை உறவை தொழிலில் ஈடுபடுத்தாமல் அவருக்கு ஈடாக நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் நடித்ததை நினைவு கூர்ந்தார். மற்றும் ஒன்ஸ் மோர் படத்தில் நடிக்க வைத்ததைப் பற்றியும் சிலாகித்துக் கூறினார்.

முத்தாய்ப்பாக அவர் கூறிய ஒரு நடந்த நிகழ்ச்சி மிகவும் புல்லரி்க்க வைத்தது. 81வது பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக சேலம் சென்ற பொது ஒரு இளைஞனைப் பார்த்ததாகவும் அவர் 25 முறை நேர்காணல் சென்றும் எதுவும் பயனில்லை என்று வருந்தியதாகவும் சொன்னார். உடனே அவர் அந்த இளைஞனிடம் சொன்னாராம் - வருத்தப் படாதே, இந்த நேர்காணலை நீ நிச்சயம் பங்கேற்க வேண்டும். நிச்சயம் உன்னுடைய தகுதியைப் பற்றிக் கேட்பார்கள். அப்போது நீ சொல்ல வேண்டியது, நான் குறைந்தது 50, 60 சிவாஜி படங்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொல் என்றாராம். பின்னர் மறுமுறை அந்த இளைஞனைச் சந்திக்க நேர்ந்த போது அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியுடன் இவருக்கு நன்றி நவின்றானாம். சி.வி.ஆர். அவர்கள் காரணம் கேட்ட போது, அந்த இளைஞன் - நீங்கள் சொன்னது போன்றே நான் சிவாஜி படத்தைப் பார்த்தது பற்றி சொன்னேன். உடனே எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றானாம். சி.வி.ஆர் அந்த இளைஞனை வாழ்த்தினாராம். பின்னர் அந்த இளைஞனுக்கு வேலை கொடுத்த நிர்வாகியிடம் கேட்டாராம். அதற்கு அந்த நிர்வாகி சொன்னாராம். சிவாஜி படங்களில் 50, 60 படங்களைப் பார்த்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவருடைய நற்குணங்கள் அவனிடம் குடி புகுந்திருக்கும் . ஏனென்றால் அவர் படங்களைப் பார்த்து அவருடைய நற்குணங்கள் என்னிடம் குடி கொண்டுள்ளன. அதே போல் இந்த இளைஞனும் ஒழுங்காக வேலைக்கு நேரத்தோடு வருவான் என்று கூறினாராம்.
இந்த சம்பவத்தைக் கூறிவிட்டு, நடிகர் திலகம் எவ்வளவு பெரிய மகான் என சிலாகித்தார் சி.வி.ஆர்.

நடிகர் திலகம் மகான் என்பதில் ஐயம் உண்டோ

ராகவேந்திரன்

pammalar
6th May 2010, 02:09 AM
டியர் முரளி சார், ராகவேந்திரன் சார்,

பல்கலைக்கழகங்களாகிய தாங்கள் வழங்கிய பட்டங்களுக்கு எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்!

திரு.சிவன்கே,

பார்த்தால் பசி தீரும் - திரைக்கதை, திறனாய்வு - எல்லாமே பிரமாதம். தங்களது அழகிய எழுத்து நடை, மீண்டும் ஒரு முறை இக்காவியத்தைக் கண்டு களித்த திருப்தியை ஏற்படுத்தியது.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திரு.கிருஷ்ணாஜி, திரு.காவேரிக்கண்ணன், திரு.சதீஷ்.

Mr.Joe, Thanks a lot for the stupendous links!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th May 2010, 02:29 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 5

கே: நடிகர் திலகம் அமெரிக்கா போகிறாரே, அவருக்கு ஆங்கிலம் தெரியுமா? (மிஸ்.பியூலா எலிசபெத், கோவை)

ப: இதையே அவருக்கு ஆங்கிலத்தில் எழுதிக் கேளுங்கள். அழகாக அவரிடமிருந்து ஆங்கிலத்திலேயே பதில் வரும்!

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1961)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th May 2010, 03:33 AM
"சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்குக் காலமுண்டு முத்துமாரி
மகராசன் வாழ்கவென்று வாழ்த்து கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டையேறி"

என்று அன்னை மாரியம்மனிடம் பக்திப் பெருக்குடன் முழங்கிய மூக்கையா சேர்வைக்கு நாளை (6.5.2010) 39வது ஜெயந்தி!

பட்டிக்காடா பட்டணமா

6.5.1972 (ஸ்திர வாரமான சனிக்கிழமை)

156வது காவியம் (132வது கருப்பு-வெள்ளைக் காவியம்)

மதுரை சென்ட்ரல் சினிமாவில் கோலாகல வெள்ளி விழா (26 வாரங்கள்)

9 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல்

கிட்டத்தட்ட திரையிட்ட சகல ஊர்களிலும் 50 நாட்களுக்கு மேல்

ஒரு கோடி ரூபாய் மொத்த வசூல் ஈட்டிய ஒரே தமிழ் கருப்பு-வெள்ளைக் காவியம்

இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகள்! எண்ணினால் எண்ணிலடங்கா!! எழுதினால் ஏட்டிலடங்கா!!!

உலக கருப்பு-வெள்ளை சினிமாவின் நிரந்தரப் பெருமை, பட்டிக்காடா பட்டணமா.

சத்தியத்திற்கும் நாளை (6.5.2010) 35வது ஆண்டு ஆரம்ப விழா!

அன்புடன்,
பம்மலார்.

sankara1970
6th May 2010, 11:16 AM
Patti Kada Pattanama vil annan anintha cooling glass appo romba famous.

Nalvazthu nan solluven nalla padi vazga vendru

B'lore la intha padathukku romba nalla varaverpu endru ennudaya college professor solluvar.

aramabame super pattu-ambigaie easwariye
ennai alavandu koil konda kumguma kari

patti thoti engum ella koil vizhavilum intha pattu speaker la poduvanga-

kudumi uncle endru JJ koopiduvathu azagu

Iyakunar PMadhavan thantha super padam!

goldstar
6th May 2010, 11:40 AM
Guys,

Any of NT movies will be released this week in Chennai/Madurai/Nellai?

Cheers,
Sathish

joe
6th May 2010, 12:17 PM
[tscii:0ffb4c9984]வரும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சிங்கை வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில் நடிப்புலக இமயத்தின் ‘உயர்ந்த மனிதன்’ 8-) [/tscii:0ffb4c9984]

kaveri kannan
6th May 2010, 05:30 PM
அப்போது 60 வயதிருக்கும் என் பாட்டிக்கு.

சினிமா பார்த்திராத அவரை நான் ரசிகனாயிருக்கும் நடிகர்திலகத்தின்
பட்டிக்காடா பட்டணமா படத்துக்கு அழைத்துப்போனேன்.

முழு ரசிகராய் மாறினார் என் பாட்டி.

ஆறிலிருந்து அறுபதுவரை
முழுமையான ரசிகர்களை
ஈர்த்து இறுதிவரை வைக்கும்
உலகின் ஒப்பற்ற காந்தசக்தி
நம் நடிகர்திலகம்.

பட்டிக்காடா பட்டணமா நினைவுகளை மீட்டிய பம்மலாருக்கு நன்றியும் பாராட்டும்..

( எனக்கே சாந்தி தியேட்டரா? எனப் பம்மலார் முறுவலிப்பது மனக்கண்ணில் தெரிகிறது..)

sivank
6th May 2010, 07:02 PM
Thanks Murali, Kaveri Kannan and Pammalar

Murali, unga maadhiri ezhudha ennaala mudiyaadhu. But next time kandippaa innum alasa try pannaren

pammalar
7th May 2010, 02:22 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 6

கே: வேறுபடுத்துங்கள்..... அ) இறைவன் ஆ) மனிதன் (எஸ்.ரேணுகா, நீடாமங்கலம்)

ப: அ) இறைவன் = திருவிளையாடல் ஆ) மனிதன் = அவன் தான் மனிதன்

(ஆதாரம் : தமிழன் எக்ஸ்பிரஸ், 1-7 ஆகஸ்ட் 2001)

அன்புடன்,
பம்மலார்.

joe
7th May 2010, 10:45 AM
YG mahendran function
http://www.sivajitv.com/events/yg.mahendrans-50th-year-felicitation-video.htm

pammalar
7th May 2010, 04:08 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 7

கே: எத்தனை மேக்கப் மேன்கள் வந்தாலும் செவாலியே சிவாஜி போட்ட மேக்கப்பிற்கு ஈடாவதில்லையே...ஏன்? (எஸ்.காளிமுத்து, திருவாரூர்)

ப: நடிக்கவே அவதாரம் எடுத்தவர் சிவாஜி. அதனால் அரிதாரம் அவருக்கு முன்னால் கைகட்டி நிற்கிறது...!

(ஆதாரம் : பொம்மை, செப்டம்பர் 1996)

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
7th May 2010, 06:59 PM
Hello everybody, good to see you all after a short break.

So many good things happening around !!

Hearty welcome to goldstar sathish.

Sivan sir's giant leap in the form of Parthal pasi theerum review - congrats sir !

:D

pammalar
8th May 2010, 01:11 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 8

கே: நடிப்புத்துறையில் மூவேந்தர்கள் என்று போற்றப்படுபவர்களில் நடிப்பில் முதல் வேந்தன் யார்? (அ.சம்பந்தன், சென்னை)

ப: காட்டுராஜாவின் பெயரைக் குரலில் கொண்டிருப்பவர்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1959)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th May 2010, 02:10 PM
பாசத்திலகத்தின் பாசமலர், சமீபத்தில் சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் திரையிடப்பட்ட சமயம், ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சியின் போது, கோடம்பாக்கம் கலைப்பூங்கா சிவாஜி மன்றம் சார்பில் வழங்கப்பட்ட நோட்டீஸ்:

http://paasamalar69.webs.com/apps/photos/photo?photoid=81585755

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th May 2010, 03:41 PM
குமுதம் 28.4.2010 இதழில், நமது நடிகர் திலகம் திருவானைக்காவல் கோயிலுக்கு யானை வழங்கியுள்ள தகவல்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=81591790

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
8th May 2010, 06:37 PM
[color=blue][b]கே: நடிப்புத்துறையில் மூவேந்தர்கள் என்று போற்றப்படுபவர்களில் நடிப்பில் முதல் வேந்தன் யார்?

Btw, who are the other 2 vendhar's he is refering to ???

pammalar
8th May 2010, 07:27 PM
[color=blue][b]கே: நடிப்புத்துறையில் மூவேந்தர்கள் என்று போற்றப்படுபவர்களில் நடிப்பில் முதல் வேந்தன் யார்?

Btw, who are the other 2 vendhar's he is refering to ???

Makkal Thilagam MGR & Kaadhal Mannan Gemini Ganesan.

Regards,
Pammalar.

pammalar
10th May 2010, 02:58 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 9

கே: "ஆலயமணி" யில் ஓசையே இல்லையே? (என்.முருகன், திருநெல்வேலி)

ப: யார் சொன்னது? தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து ஆலயமணியின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1963)

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
10th May 2010, 10:24 AM
[tscii:db7bcdafc2]‘திருவருட்செல்வர் ‘ படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘ தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.


அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….

‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.


நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

“ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்“ என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”

ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .



[/tscii:db7bcdafc2]

joe
10th May 2010, 12:32 PM
வார இறுதியில் சன் தொலைக்காட்சியில் இளம் நடிகர் தனுஷின் பேட்டி ஒன்றை காண நேரிட்டது.

கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் குறிப்பிட்டது ... உங்க எல்லோருக்குமே தெரியும் சிவாஜி சார் ஒரு பல்கலைகழகம் .நான் பல பேரிடமிருந்து பல பாடங்களை கத்துகிட்டிருக்கேன் . மிகப்பெரிய பல்கலைக்கழகமான சிவாஜி சாரிடம் பல காலமா நான் எதையும் கத்துகிடல்ல .. ஆறேழு வருடங்களுக்கு முன் படப்பிடிப்புக்கு போன போது கொஞ்சம் நேர அவகாசம் கிடைக்க சிவாஜி சாரின் சில பழைய படங்களை பார்க்க ஆரம்பிச்சேன் ..பின்னர் தான் எனக்கு புரிஞ்சது .. சிவாஜி சார் கிட்ட இருந்து கத்துகிறதுக்கு கூட குறைந்த பட்சம் ஆறேழு வருடம் நடிப்பு அனுபவம் என்கிற தகுதி வேணும் .சிவாஜி சார் யுனிவர்சிட்டி . 8-)

pammalar
11th May 2010, 02:58 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 10

கே: கிரிக்கெட் உலகில் சுனில் கவாஸ்கர் செய்த சாதனைகளையும், நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் செய்த சாதனைகளையும் ஒப்பிடுக? (மு.முரளிகிருஷ்ணன், சென்னை)

ப: கவாஸ்கரின் பெயர் கிரிக்கெட் புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சிவாஜி, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பொன்னாலான புத்தகம்.

(ஆதாரம் : குமுதம், 4.4.1985)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th May 2010, 01:48 PM
ஆனந்த விகடன் 5.5.2010 இதழில், பொக்கிஷம் பகுதியில், இசைக்குயில் லதா மங்கேஷ்கர் குறித்து நடிகர் திலகம்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=81992816 (முதல் இரண்டு பக்கங்கள்)

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=81992817 (மூன்றாவது பக்கம்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th May 2010, 04:20 PM
குமுதம் 12.5.2010 இதழில், ஒய்ஜி விழா:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=81994570 (முதல் இரண்டு பக்கங்கள்)

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=82005286 (மூன்றாவது பக்கம்)

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=82005287 (நான்காவது பக்கம்)

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=82005288 (ஐந்தாவது பக்கம்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2010, 02:39 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 11

கே: சிவாஜி கணேசன் தனக்கு ஜோடியாக தேவிகாவைப் போடும்படி வற்புறுத்துகிறாராமே? (வி.பி.பதி, தஞ்சமாலிம்)

ப: சேச்சே! அவர் அப்படிக் கேட்கக் கூடியவரல்லர். திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திராணி நம் தாரகையர் யாருக்கும் இல்லை.

(ஆதாரம் : சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ், ஆகஸ்ட் 1964)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2010, 04:16 AM
ஒய்.ஜி. விழா - 4

விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)

கலைஞானி கமலஹாசன் அவர்களின் சிறப்புரை:
"கலைஞர் அவர்களும், நடிகர் திலகம் அவர்களும் எத்தகையதொரு நட்பைப் பாராட்டினார்கள் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்து ரசித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் என் பேரன்-பேத்திகளுக்கு பெருமையாகச் சொல்வேன். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், தான் எழுதிய வசனமொன்றை நடிகர் திலகம் பேச, அந்தத் திரைப்படத்தின் காட்சி ஒளித்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீண்ட, நெடிய வசனம் நடிகர் திலகத்தால் ஒரே ஷாட்டில் பேசப்பட்டது. கலைஞர் அவர்கள் ஒளித்திரையில் ஓடிக் கொண்டிருந்த அத்திரைப்படக் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது கண்களில் நீர்த்துளிகள்! தான் எழுதிய வசனம் என்பதையே மறந்து ஒரு ரசிகனாக, நண்பனாக அவரது கண்கள் பனித்தன. அதனைப் பார்த்த என் கண்களிலும் ஈரக்கசிவுகள்.

எனக்கும், எனது ஆருயிர் நண்பன் ஒய்ஜிக்கும் அடிக்கடி சண்டை வரும், 'யார் நடிகர் திலகத்தின் பெரிய ரசிகன்' என்று. கடைசியில், நட்பு கருதி போனால் போகட்டும் என்று பொய்யாக, 'நீதான் பெரிய ரசிகன்' என்று நான் விட்டுக் கொடுத்து விடுவேன். அது எப்பொழுதுமே, நிஜமாகவே பொய்யாக விட்டுக் கொடுத்ததுதான்."

தொடரும் .....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2010, 04:22 AM
டியர் பாலா சார்,

கலையுலக மகானின் ஆன்மீக ஈடுபாட்டை, தொண்டினை அடிக்கோடிட்டு காட்டிய தங்களது பதிவுக்கு நன்றிகள் பற்பல.

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
12th May 2010, 02:21 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 11

கே: சிவாஜி கணேசன் தனக்கு ஜோடியாக தேவிகாவைப் போடும்படி வற்புறுத்துகிறாராமே? (வி.பி.பதி, தஞ்சமாலிம்)

ப: சேச்சே! அவர் அப்படிக் கேட்கக் கூடியவரல்லர். திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திராணி நம் தாரகையர் யாருக்கும் இல்லை.

(ஆதாரம் : சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ், ஆகஸ்ட் 1964)

அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலார்,

நடிகர்திலகம் அப்படிக்கேட்டிருந்தால் கூட அதில் என்ன தவறு?. அவ்வளவு பெரிய கலைஞனுக்கு, தன் கூட யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்கக்கூட உரிமையில்லையா?. அதேசமயம் 'வேறு சிலர்' தன் படத்தில் ஒரு வேலைக்காரன் ரோலில் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையைக்கூட தன் வசம் வைத்திருந்தனர். இந்தக்கேள்வி கேட்டவர்கள் அதைப்பற்றியெல்லாம் வாய் திறந்திருக்க மாட்டார்களே. அந்தக்காலத்திலிருந்தே இதே வேலையாகப்போச்சு. இத்தனைக்கும் தேவிகா, நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த ஜோடிகளில் ஒருவர்.

'சிவாஜி படத்துக்கு மட்டும் பூதக்கண்ணாடி' என்ற எனது திரிக்கு மட்டும் மாடரேட்டர்கள் அனுமதி வழங்கட்டும். அப்புறம் நான் கிழிக்கிற கிழியில் தினமும் குருக்ஷேத்திரம்தான்.

J.Radhakrishnan
12th May 2010, 09:36 PM
pammalar wrote:
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 11

கே: சிவாஜி கணேசன் தனக்கு ஜோடியாக தேவிகாவைப் போடும்படி வற்புறுத்துகிறாராமே? (வி.பி.பதி, தஞ்சமாலிம்)

ப: சேச்சே! அவர் அப்படிக் கேட்கக் கூடியவரல்லர். திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திராணி நம் தாரகையர் யாருக்கும் இல்லை.

(ஆதாரம் : சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ், ஆகஸ்ட் 1964)

அன்புடன்,
பம்மலார்

திரு பம்மலார் சார்,
அந்த சமயத்தில் (1964) வேறு சிறந்த கதாநாயகி இல்லையே? பத்மினி திருமணம் ஆகி அமெரிக்கா போய் விட்டார் சாவித்திரி கர்ணன் படத்திலேயே குண்டாக தெரிவார்! மீதம் இருப்பது சரோஜா தேவி தான் அவர் வேறு சிலர் படங்களில் பிசியாக இருந்ததால் கூட இருக்கலாம்.

pammalar
13th May 2010, 03:22 AM
சகோதரி சாரதா,

நன்றி. தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது.

திரு.ஜேயார்,

மிக்க நன்றி. தாங்கள் கூறியதும் சரியே.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th May 2010, 03:33 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 12

கே: மார்லன் பிராண்டோ + ராஜ் கபூர் = நடிகர் திலகம் என்ற விடை சரியா? (க.ந.நம்பி, சத்தியமங்கலம்)

ப: சரியில்லை. கலப்படத்திற்கும், அசலுக்கும் வித்தியாசம் இல்லையா?

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th May 2010, 12:54 AM
நாளை (14.5.2010) வெள்ளி முதல், சென்னை பிராட்வே திரையரங்கில் (இப்பொழுது இதன் பெயர் நியூபிராட்வே திரையரங்கம்), தினசரி 3 காட்சிகளாக, பாசத்திலகத்தின் "பாசமலர்" திரைக்காவியம் வெற்றிகரமாக திரையிடப்படுகிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th May 2010, 01:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 13

கே: காதல் பாடல் காட்சிகளில் 'ஸ்டைல்' நடிப்பில் தங்களை அசத்துபவர் யார்? (ஜி.பசுபதி, திண்டுக்கல்)

ப: என்றும் சிவாஜி.

(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
14th May 2010, 01:44 PM
http://muthusidharal.blogspot.com/search/label/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E 0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE% 95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

abkhlabhi
14th May 2010, 02:16 PM
Thanks to : எழுதியது நெல்லை கண்ணன்

தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை


பல்கலைக் கழகமாய்
வந்து நின்றான்

நடிப்புக் கல்லூரிகள்
பின்னரே
தோன்றின

அவனுக்கு
விருது
வழங்காததால்
குடியரசுத் தலைவர்
மாளிகை

ஒரு
சிங்க நடையைத்
தரிசிக்கும்
வாய்ப்பை
இழந்தது

தேசத்திற்கே
விருதாய்
வந்தவனுக்கு

தேசம்
எப்படி
விருதளிக்க
முடியும்

அவன்
போட்ட
பிச்சையிலே தான்
பலர்
இன்று
கோடீஸ்வரர்

pammalar
14th May 2010, 06:33 PM
ஒய்.ஜி. விழா - 5

விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)

விழாத் தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையுரை:
"இந்த 'வியட்நாம் வீடு' நாடகத்தில், சிவாஜி வாழ்ந்து காட்டிய பிரஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்தை, தம்பி ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களும் சிறப்பான முறையில் செய்திருக்கிறார். கண்டிப்புக்கு பேர் போன குடும்பத்தைச் சேர்ந்தவராகத் திகழ்வதால்தான், கண்டிப்பே உருவான இப்பாத்திரத்தை, தம்பி ஒய்.ஜி.மகேந்திரன் தத்ரூபமாக நடித்துக் காட்ட முடிந்தது.

'வியட்நாம் வீடு' நாடகத்தை, ஒய்.ஜி.மகேந்திரன் மேடையேற்றி நடத்துவதே ஒரு பகீரத முயற்சி, ஒரு சவால். இதை நடித்து தமிழ்நாட்டில் பேரும், புகழும் பெற்றவர் என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்த அந்தப் பாத்திரத்தில் நடிப்பதே பெரிய சவால். 'இதனைக் குரு தட்சணையாக நடத்துகிறேன்' என்று ஒய்.ஜி.மகேந்திரன் என்னிடத்திலே சொன்னார். அந்த குரு காணிக்கையை சிறப்பான முறையிலே அவர் செலுத்தியிருக்கிறார்.

இங்கே இந்த நாடகத்தைக் காண வரும் போது, சிவாஜி நடித்த பாத்திரத்தை, அந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்போடு தான் வந்து அமர்ந்தேன். ஆனால் திருப்தியோடு தான் நான் இங்கிருந்து திரும்புகிறேன். பாதி நாடகம் பார்த்தே வியந்திருக்கிறேன். இன்று காலையிலிருந்தே எனக்குள்ள கடுமையான கண்வலியினால் மீதி நாடகத்தை கண்டு களிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். கண்வலிக்கு மருந்தாக இந்நாடகம் அமையும் என்று தான் வந்தேன். மருந்தாக அமைந்திருக்கிறது. இந்த நாடகம் உள்ளபடியே 'வியட்நாம் வீடு போல அல்ல, வியட்நாம் வீடே தான்' என்று சொல்லி விடைபெறுகிறேன்."

தொடரும் .....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th May 2010, 02:47 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 14

கே: நடிகர் திலகம் ஆங்கிலப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால்? (கே.கே.ராஜன், விம்கோ நகர்)

ப: பல ஆங்கில நடிகர்களின் மார்க்கெட் சரியும். இங்கே பலர் உயர ஏறி விடுவார்கள்.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1966)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th May 2010, 02:56 AM
நன்றி திரு. காவேரிக் கண்ணன்.

ஒய்ஜி விழாவின் வீடியோ லிங்க்கை வழங்கியமைக்கு மிக்க நன்றி திரு. ஜோ.

பாலா சார், உலகப் பெரு நடிகரின் ஓவியம் அற்புதம். ஓவியர் திருமதி.மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வழங்கிய உங்களுக்கு நயமிகு நன்றிகள்! நெல்லை கண்ணன் கவிதை அருமை.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th May 2010, 02:09 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 15

கே: பொதுவாழ்வில்.... நடிகர் திலகத்தின் பலம் எது? பலவீனம் எது? (எஸ்.வி.கோவிந்தசாமி, நாகர்கோவில்)

ப: பலம்.....உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாமை! பலவீனமும்..... அதுதான்!!

(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th May 2010, 03:42 PM
இன்று (16.5.2010), நமது விடுதலை வேள்விக்கு முதல் முழக்கமிட்ட மாவீரன், வீரபாண்டிய கட்டபொம்மனாக, நமது தேசிய திலகம் வாழ்ந்து காட்டிய, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்திற்கு 52வது ஆண்டு தொடக்க விழா. இக்காவியம் வாழ்வியல் திலகத்தின் முதல் வண்ணத் திரைக்காவியம். வெள்ளிவிழாக் கண்ட இக்காவியம், உலகத் திரைப்பட வரலாற்றில் சாதனைகளின் உச்சம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியம் குறித்த ஓர் அரிய,அபூர்வ, அற்புதத் தகவல்:
(1959-ம் ஆண்டு 'சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ்' என்கின்ற சிங்கப்பூர் சினிமா இதழ் வெளியிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட சிறப்பு மலரிலிருந்து)

லண்டனில் கட்டபொம்மன்
"இந்தியப் படவுலகின் சரித்திரத்திலேயே, ஒரு புதுமையாக, தமிழ்நாட்டில் தயாரான ஒரு படம், இந்தியாவில் திரையிடப்படுவதற்கு முன்னதாகவே, லண்டனில் வாழும் தமிழர்கள் முதல் தடவையாக பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். அதுவும் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரனின் முழக்கம் ஆங்கிலேயரின் நாட்டில் முதன்முதலில் ஒலித்தது வியப்பன்றோ!

வீரபாண்டிய கட்டபொம்மன் சென்ற மே மாதம் 10 ஆம் தேதி லண்டன் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் திரையிடப்பட்டது. ஏராளமான தமிழர்களும், வெள்ளையர்களும் விஜயம் செய்திருந்த இந்தக் காட்சிக்கு, லண்டனிலுள்ள இந்திய ஹைகமிஷனர் ஸ்ரீமதி. விஜயலட்சுமி பண்டிட் தலைமை தாங்கித் தனிச்சிறப்பை அளித்ததுடன், படத்தின் தரத்தையும், நடிப்பின் உயர்வையும் வெகுவாகப் புகழ்ந்தார்."

ஸ்ரீமதி. விஜயலட்சுமி பண்டிட் பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்:

http://en.wikipedia.org/wiki/Vijaya_Lakshmi_Pandit

அன்புடன்,
பம்மலார்.

sankara70
16th May 2010, 04:49 PM
nice to know about the screening of VPK in London by tamils

pammalar
17th May 2010, 02:21 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 16

கே: நடிகர் திலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? (என்.வெங்கடேசன், கோவை)

ப: இன்னும் சிறப்பாக இருக்கும். திறமைக்கு தமிழ்நாட்டில் என்றுமே மதிப்பும், ஆதரவும் உண்டு.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1965)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
17th May 2010, 06:51 AM
டியர் பம்மலார்
தங்களின் கேள்வி பதில் தொகுப்புகள் தகவல்களை அள்ளி அள்ளி தருகின்றன. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

சென்னையில் தற்போது நியூ பிராட்வேயில் பாசமலர் திரையிடப்பட்டுள்ளது. அங்கு கண்ட சில காட்சிகள் படங்களாக.
http://paasamalar.blogspot.com/


ராகவேந்திரன்

gkrishna
17th May 2010, 03:35 PM
சிரிப்பொலி சேனல் இல் அடிக்கடி இரவு காட்சி இல் சில நல்ல திரைப்படங்கள் திரையிடபடுகின்றன சமீபத்தில் வா கண்ணா வா (என்ன ஒரு நடிப்பு) உத்தம புத்திரன் தியாகம் போன்ற நல்ல படங்கள் ஒளிபரப்பப்பட்டன ஆனால் அட்வேர்டிசெமேன்ட் ரொம்ப அதிகம்

அன்புடன் gk

rangan_08
17th May 2010, 05:25 PM
[color=blue][b]கே: நடிப்புத்துறையில் மூவேந்தர்கள் என்று போற்றப்படுபவர்களில் நடிப்பில் முதல் வேந்தன் யார்?

Btw, who are the other 2 vendhar's he is refering to ???

Makkal Thilagam MGR & Kaadhal Mannan Gemini Ganesan.

Regards,
Pammalar.

thank you sir. actually, the word " nadipputhurai " sort of prompted me to raise this question :D

rangan_08
17th May 2010, 05:34 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 11

கே: சிவாஜி கணேசன் தனக்கு ஜோடியாக தேவிகாவைப் போடும்படி வற்புறுத்துகிறாராமே? (வி.பி.பதி, தஞ்சமாலிம்)

ப: சேச்சே! அவர் அப்படிக் கேட்கக் கூடியவரல்லர். திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திராணி நம் தாரகையர் யாருக்கும் இல்லை.

(ஆதாரம் : சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ், ஆகஸ்ட் 1964)

அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலார்,

நடிகர்திலகம் அப்படிக்கேட்டிருந்தால் கூட அதில் என்ன தவறு?. அவ்வளவு பெரிய கலைஞனுக்கு, தன் கூட யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்கக்கூட உரிமையில்லையா?. அதேசமயம் 'வேறு சிலர்' தன் படத்தில் ஒரு வேலைக்காரன் ரோலில் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையைக்கூட தன் வசம் வைத்திருந்தனர். இந்தக்கேள்வி கேட்டவர்கள் அதைப்பற்றியெல்லாம் வாய் திறந்திருக்க மாட்டார்களே. அந்தக்காலத்திலிருந்தே இதே வேலையாகப்போச்சு.

Though not concerned in any way to the above post except for NT's generosity & professionalism, I would like to share my views as below.

Recently watched Thyagam in one of the channels and in one of the duet songs, NT is seen wearing a white pant and a shirt printed with Red, Black & White colours, which as everybody knows, is the colour of MGR's party flag !!!

Again, in the same film, during a fight scene, Thengai Srinivasan, after kicking one of the guys says, " Ippadi adikka enakku solli koduthadhu enga Vathiyar, enga vathiyar yaru theriyuma ??? After a pause he says, Bruce Lee :)

rangan_08
17th May 2010, 05:36 PM
Pammalar sir, your "kelvi pirandhadhu nalla badhil kidaithadhu " is a wonderful and new effort.

Congratulations & all the best to you.

rangan_08
17th May 2010, 05:39 PM
சிரிப்பொலி சேனல் இல் அடிக்கடி இரவு காட்சி இல் சில நல்ல திரைப்படங்கள் திரையிடபடுகின்றன சமீபத்தில் வா கண்ணா வா (என்ன ஒரு நடிப்பு) உத்தம புத்திரன் தியாகம் போன்ற நல்ல படங்கள் ஒளிபரப்பப்பட்டன ஆனால் அட்வேர்டிசெமேன்ட் ரொம்ப அதிகம்

அன்புடன் gk

yes. tues, wed & thur - 8 pm. pls do watch.

rangan_08
17th May 2010, 05:43 PM
டியர் பம்மலார்
தங்களின் கேள்வி பதில் தொகுப்புகள் தகவல்களை அள்ளி அள்ளி தருகின்றன. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

சென்னையில் தற்போது நியூ பிராட்வேயில் பாசமலர் திரையிடப்பட்டுள்ளது. அங்கு கண்ட சில காட்சிகள் படங்களாக.
http://paasamalar.blogspot.com/


ராகவேந்திரன்

thank you sir.

andha aarathi eduppavar padu theeviraman rasigar polirukku. we have already witnessed his love and affection for NT @ Mahalakshmi theatre.

RAGHAVENDRA
17th May 2010, 09:52 PM
Dear friends,
There is a poll for the top ten greatest actors of the world. Nadigar Thilagam is listed at Sl.No.107.

Here is the link:
http://www.the-top-tens.com/lists/greatest-actors-2.asp

Raghavendran

joe
17th May 2010, 10:17 PM
Dear friends,
There is a poll for the top ten greatest actors of the world. Nadigar Thilagam is listed at Sl.No.107.

Here is the link:
http://www.the-top-tens.com/lists/greatest-actors-2.asp

Raghavendran

ராகவேந்திரா சார்,
இது போன்ற வெறும் கும்பல் சார் தர வரிசைப் படுத்துதலை தவிர்ப்பது நல்லது.

அகில உலக சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஜோசப் விஜய் 11-வது இடத்திலும் , சிவாஜி கணேசன் 107 -வது இடத்திலும் இருந்தால் ஜோசப் விஜய் ரசிகர்கள் கூட நகைக்க மாட்டார்களா? :lol:

pammalar
18th May 2010, 02:19 AM
மதுரை மாநகரின் ஸ்ரீதேவி திரையரங்கில் ஸ்ரீ சிவாஜி பெருமானின் சிகர சாதனைகள்

[திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. பணம் - 27.12.1952 - 84 நாட்கள்

2. மனோகரா - 3.3.1954 - 156 நாட்கள்

3. கள்வனின் காதலி - 13.11.1955 - 83 நாட்கள்

4. ரங்கோன் ராதா - 1.11.1956 - 71 நாட்கள்

5. புதையல் - 10.5.1957 - 84 நாட்கள்

6. சம்பூர்ண ராமாயணம் - 14.4.1958 - 165 நாட்கள்

7. நான் சொல்லும் ரகசியம் - 7.3.1959 - 64 நாட்கள்

8. அவள் யார் - 30.10.1959 - 35 நாட்கள்

9. குறவஞ்சி - 4.3.1960 - 56 நாட்கள்

10. பாவை விளக்கு - 19.10.1960 - 58 நாட்கள்

11. கப்பலோட்டிய தமிழன் - 7.11.1961 - 68 நாட்கள்

12. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 28 நாட்கள்

13. நவராத்திரி - 3.11.1964 - 108 நாட்கள்

14. திருவிளையாடல் - 31.7.1965 - 167 நாட்கள்

15. மஹாகவி காளிதாஸ் - 19.8.1966 - 15 நாட்கள்

16. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 104 நாட்கள்

17. திருமால் பெருமை - 16.2.1968 - 71 நாட்கள்

18. லக்ஷ்மி கல்யாணம் - 15.11.1968 - 60 நாட்கள்

19. குரு தட்சணை - 14.6.1969 - 35 நாட்கள்

20. திருடன் - 10.10.1969 - 49 நாட்கள்

21. வியட்நாம் வீடு - 11.4.1970 - 90 நாட்கள்

22. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்

23. தங்கைக்காக - 6.2.1971 - 48 நாட்கள்

24. குலமா குணமா - 26.3.1971 - 100 நாட்கள்

25. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்

26. பாபு - 18.10.1971 - 89 நாட்கள்

27. தர்மம் எங்கே - 15.7.1972 - 49 நாட்கள்

28. சிவகாமியின் செல்வன் - 26.1.1974 - 69 நாட்கள்

29. மனிதனும் தெய்வமாகலாம் - 11.1.1975 - 42 நாட்கள்

30. வைர நெஞ்சம் - 2.11.1975 - 34 நாட்கள்

31. கவரிமான் - 6.4.1979 - 49 நாட்கள்

32. நான் வாழவைப்பேன் - 10.8.1979 - 84 நாட்கள்

33. ஊரும் உறவும் - 14.11.1982 - 26 நாட்கள்

34. ராஜரிஷி - 20.9.1985 - 56 நாட்கள்

35. முதல் குரல் - 15.8.1992 - 13 நாட்கள்

150 நாட்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள் : 3

100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடிய காவியங்கள் : 5

10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை : 8

50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை : 7

7 வாரங்கள் வரை : 12

குறிப்பு:
1. ஸ்ரீதேவி திரையரங்கில் வெளியான சிங்கத்தமிழனின் புதிய திரைக்காவியங்கள் மட்டும் பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளன.

2. மஹாகவி காளிதாஸ், மதுரையில், முதல் வெளியீட்டில், இரு அரங்குகளில் திரையிடப்பட்டது. ஸ்ரீலக்ஷ்மி திரையரங்கில் 42 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. ஸ்ரீதேவியில் 15 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்த, அடுத்த காவியமான, சரஸ்வதி சபதம் திரைக்காவியத்திற்கு வழி விட்டது.

3. குலமா குணமா திரைக்காவியத்தின் 100வது நாளன்று (3.7.1971) சவாலே சமாளி வெளியானது. 100வது நாளன்று காலை ஸ்ரீதேவி அரங்கில், குலமா குணமா திரைக்காவியத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. பின்னர், காலை 9:15 மணிக் காட்சியாக, ஒரு காட்சி மட்டும், குலமா குணமா திரையிடப்பட்டது. அன்று மதியம், ஸ்ரீதேவியில் சவாலே சமாளி ரிலீஸ். அன்று மாலை, மதுரை சின்னக் கடைத் தெருவில் உள்ள ராதாகிருஷ்ணா கல்யாண மஹாலில், குலமா குணமா 100வது நாள் விழா, மிக விமரிசையாக நடைபெற்றது.

4. கோயில் மாநகரில், ஸ்ரீதேவி திரையரங்கில், விண்ணை அளக்கும் சாதனையை நிகழ்த்திக் காட்டினார், ஸ்ரீ சிவாஜி பெருமான். இந்த அரங்கில், தொடர்ந்து 443 நாட்கள், நமது நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்களே வெற்றி பவனி வந்தன.
[எங்கிருந்தோ வந்தாள் - 100 நாட்கள்
தங்கைக்காக - 48 நாட்கள்
குலமா குணமா - 99 நாட்கள் (100 வது நாள் காலைக் காட்சி மட்டும்)
சவாலே சமாளி - 107 நாட்கள்
பாபு - 89 நாட்கள்]
ஆக மொத்தம், தொடர்ச்சியாக 443 நாட்கள்.

5. ராஜ ரிஷி, மதுரையில், முதல் வெளியீட்டில், இரு அரங்குகளில் திரையிடப்பட்டது. ஸ்ரீதேவி அரங்கில் 56 வெற்றி நாட்கள் மற்றும் சுந்தரம் அரங்கில் 25 வெற்றி நாட்கள்.

6. ஸ்ரீதேவி திரையரங்கின் இட எண்ணிக்கை : 1549 இருக்கைகள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

[சிங்கத்தமிழனின் திரையரங்க சாதனைகள் சிறப்புப் பதிவுகள் நெடுந்தொடரில், விரைவில் வரப்போகும் அடுத்த சிறப்புப் பதிவில் இடம் பெற இருக்கும் திரையரங்கம் : சென்னை சித்ரா]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th May 2010, 02:36 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 17

கே: சிவாஜி கணேசனிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்கமென்ன? (ஆர்.பாலகிருஷ்ணன், மாத்தளை, இலங்கை)

ப: அவரது தன்னடக்கம், தொழிலில் அவருக்குள்ள பக்தி.

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1969)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
18th May 2010, 06:22 AM
Dear friends,
There is a poll for the top ten greatest actors of the world. Nadigar Thilagam is listed at Sl.No.107.

Here is the link:
http://www.the-top-tens.com/lists/greatest-actors-2.asp

Raghavendran

ராகவேந்திரா சார்,
இது போன்ற வெறும் கும்பல் சார் தர வரிசைப் படுத்துதலை தவிர்ப்பது நல்லது.

அகில உலக சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஜோசப் விஜய் 11-வது இடத்திலும் , சிவாஜி கணேசன் 107 -வது இடத்திலும் இருந்தால் ஜோசப் விஜய் ரசிகர்கள் கூட நகைக்க மாட்டார்களா? :lol:

டியர் ஜோ,
தங்கள் கூற்று 100க்கு 500 சதம் உண்மை. அதனால் தான் நான் வெறும் சுட்டியை மட்டும் காட்டி யுள்ளேன். தலைமுறை கடந்த நடிகர் திலகத்தையும் எந்தத் தலைமுறையும் ஏற்றுக் கொள்ளாத நடிகர்களையும் ஒரே தரத் தட்டில் எடை போடுவதை நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

ராகவேந்திரன்

pammalar
18th May 2010, 09:59 AM
திரு.சங்கரா சார், மிக்க நன்றி.

டியர் ராகவேந்திரன் சார், ரங்கன் சார்,
தங்களது இதயபூர்வமான பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
18th May 2010, 01:12 PM
தங்கை இன்றோடு 43 வயது முடிந்து நாளை 44 லில் அடி எடுத்து வைக்கிறாள். தங்கை, ACT யும் கே.பாலாஜியும் நம் நடிகர் திலகதுடன் முதன் முறையாக இணைத்து பாலமாக அமைந்தாள். நடிகர் திலகத்தோடு ஒரு நல்ல புரிதல் உண்டாவதற்கும் ஏ.சி.டி. மற்றும் கே.பாலாஜி அவர்களுக்கு இந்த தங்கை பயன்பட்டாள்.
தங்கையை பற்றி முரளியின் விமர்சனம் பார்ட் 5ல். தேங்க்ஸ் டு முரளி

abkhlabhi
18th May 2010, 03:20 PM
http://kadugu-agasthian.blogspot.com/2010/04/blog-post_18.html

abkhlabhi
18th May 2010, 03:48 PM
http://www.nhm.in/blog/nhmreview/2007/11/2007_5923.html

abkhlabhi
18th May 2010, 04:25 PM
http://rathnapeters.blogspot.com/2009/08/blog-post_19.html

J.Radhakrishnan
18th May 2010, 10:14 PM
நன்றி திரு abkhlabhi அவர்களே,

தங்களின் 3 Link யும் படித்தேன். பயனுள்ள தகவல்கள் !!!

நன்றிகள் பல!!

pammalar
19th May 2010, 01:59 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 18

கே: ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட் ஃபோர்ட் நடிப்பை தமிழ் நடிகர் யாருடன் ஒப்பிடலாம்? (எஸ்.ரவிகுமார், சென்னை - 44)

ப: உயர்ந்த ஹாலிவுட் நடிகர் யாராக இருந்தாலும் அவர் நடிப்புக் கற்றுக் கொள்ள வேண்டியது - நடிகர் திலகம் சிவாஜியிடம் தான் என்று ஒரு ஹாலிவுட் நடிகரே பேட்டியில் கூறியுள்ளது உங்களுக்குத் தெரியாதோ!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.1.1994)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th May 2010, 02:37 AM
அசத்தல் லிங்க்குகளை அள்ளி அள்ளி அளித்தமைக்கு அன்பான நன்றிகள், பாலா சார்.

கடுகு அவர்களது லிங்க்கில் இரண்டு திருத்தங்கள்:
1. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் முதன்முதலில், சேலம் கண்காட்சி கலையரங்கில், 28.8.1957 புதன்கிழமையன்று அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றத்தன்று டாக்டர் மு.வரதராசனார் (டாக்டர் மு.வ.) தலைமை வகித்தார். சென்னையில் முதன்முதலில் இந்நாடகம் 14.9.1957 சனிக்கிழமையன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள சத்தியமூர்த்தி கலையரங்கில், முதன்முதலில் இந்நாடகம், 18.1.1958 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

2. நடிகர் திலகம் ராஜ்யசபா எம்.பி ஆனது 1982-ல். 1984-ல் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

அன்புடன்,
பம்மலார்.

goldstar
19th May 2010, 08:14 AM
Pammalar sir,

You got our NT details in your finger tip. I am very happy to get all our NT new news from you.

Guys, its very quiet for some time, we need to back to full force. Let me start with writing my experience our thalaivar movies re-released in Madurai from tomorrow.

Cheers,
Sathish

saradhaa_sn
19th May 2010, 11:12 AM
டியர் பம்மலார்,

மதுரை தேவி அரங்கில் நடிகர்திலகத்தின் முதல் வெளியீடுகளின் தொகுப்பு அருமை. உங்களது புள்ளி விவரம் உண்மையில் மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள், நன்றிகள்.

[quote="pammalar"] 3. கள்வனின் காதலி - 13.11.1955 - 83 நாட்கள்

5. புதையல் - 10.5.1957 - 84 நாட்கள்

6. சம்பூர்ண ராமாயணம் - 14.4.1958 - 165 நாட்கள்

14. திருவிளையாடல் - 31.7.1965 - 167 நாட்கள்

21. வியட்நாம் வீடு - 11.4.1970 - 90 நாட்கள்

26. பாபு - 18.10.1971 - 89 நாட்கள்

32. நான் வாழவைப்பேன் - 10.8.1979 - 84 நாட்கள்

[color=green][b]

பல படங்கள் வெள்ளிவிழாவையும், 100 நாட்களையும் மயிரிழையில் தவற விட்டிருப்பது தெரிகிறது.

திருவிளையாடலை இன்னும் ஒரு 8 நாட்கள் ஓட்ட முடியாத அந்த விநியோகஸ்தர் யாரென்று தெரியவில்லை. ஓடியிருந்தால் நான்கு அரங்குகளில் 'வெள்ளி விழா' ஆகியிருக்கும். அதுபோல சம்பூர்ண ராமாயணம் 10 நாட்கள் ஓடியிருந்தால் அதுவும் வெள்ளி விழா.

வியட்நாம் வீடு படம், மதுரையில் பவர்ஃபுல் விநியோகஸ்தர்களான சேது பிலிம்ஸாரால் மாணவன் படத்துக்காக 90 நாட்களில் எடுக்கப்பட்டதாக முன்பு முரளியண்ணா சொல்லியிருந்தார்.

இதுபோன்ற இடங்களில்தான், திரு ஆர்.எம்.வீரப்பனையும், திரு வி.சி.சண்முகத்தையும் ஒப்பிட வேண்டியிருக்கிறது.

அதுபோல 70-களில் 'கல்கண்டு' இதழில் வந்திருந்த ஒரு கேள்வி பதில் தேவையில்லாமல் இப்போது நினைவு வருகிறது.

கேள்வி: "முசிறி புத்தன், சின்ன அண்ணாமலை - ஒப்பிடுக".

தமிழ்வாணன் பதில்: "முசிறிபுத்தன் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பலம். சின்ன அண்ணாமலை சிவாஜிக்கு கிடைத்த பலவீனம்".

Mahesh_K
19th May 2010, 02:19 PM
டியர் பம்மலார்,

மதுரை தேவி அரங்கில் நடிகர்திலகத்தின் முதல் வெளியீடுகளின் தொகுப்பு அருமை. உங்களது புள்ளி விவரம் உண்மையில் மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள், நன்றிகள்.

[quote=pammalar] 3. கள்வனின் காதலி - 13.11.1955 - 83 நாட்கள்

5. புதையல் - 10.5.1957 - 84 நாட்கள்

6. சம்பூர்ண ராமாயணம் - 14.4.1958 - 165 நாட்கள்

14. திருவிளையாடல் - 31.7.1965 - 167 நாட்கள்

21. வியட்நாம் வீடு - 11.4.1970 - 90 நாட்கள்

26. பாபு - 18.10.1971 - 89 நாட்கள்

32. நான் வாழவைப்பேன் - 10.8.1979 - 84 நாட்கள்

[color=green][b]

பல படங்கள் வெள்ளிவிழாவையும், 100 நாட்களையும் மயிரிழையில் தவற விட்டிருப்பது தெரிகிறது.

திருவிளையாடலை இன்னும் ஒரு 8 நாட்கள் ஓட்ட முடியாத அந்த விநியோகஸ்தர் யாரென்று தெரியவில்லை. ஓடியிருந்தால் நான்கு அரங்குகளில் 'வெள்ளி விழா' ஆகியிருக்கும். அதுபோல சம்பூர்ண ராமாயணம் 10 நாட்கள் ஓடியிருந்தால் அதுவும் வெள்ளி விழா.

வியட்நாம் வீடு படம், மதுரையில் பவர்ஃபுல் விநியோகஸ்தர்களான சேது பிலிம்ஸாரால் மாணவன் படத்துக்காக 90 நாட்களில் எடுக்கப்பட்டதாக முன்பு முரளியண்ணா சொல்லியிருந்தார்.

இதுபோன்ற இடங்களில்தான், திரு ஆர்.எம்.வீரப்பனையும், திரு வி.சி.சண்முகத்தையும் ஒப்பிட வேண்டியிருக்கிறது.

அதுபோல 70-களில் 'கல்கண்டு' இதழில் வந்திருந்த ஒரு கேள்வி பதில் தேவையில்லாமல் இப்போது நினைவு வருகிறது.

கேள்வி: "முசிறி புத்தன், சின்ன அண்ணாமலை - ஒப்பிடுக".

தமிழ்வாணன் பதில்: "முசிறிபுத்தன் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பலம். சின்ன அண்ணாமலை சிவாஜிக்கு கிடைத்த பலவீனம்".

Saradhaa madam,

திரு. சின்ன அண்ணாமலை கவியரசர் கண்ணதாசனின் உறவினர், சுதந்திரப் போராட்ட வீரர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். அவரது 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற புத்தகம் வியப்பூட்டும் பல குறுந்தகவல்கள் அடங்கியது - நான் சிறு வயதில் படித்து வியந்திருக்கிறேன். இங்கே ஒப்பீடு செய்யப்பட்டிருப்வர்களை விட நிச்சயம் சிறந்தவரே. கல்கண்டு விமர்சனம் எதன் அடிப்படையில் அமைந்து என்று புரிந்து கொள்ள முடியவில்லை. Organising skills குறைவாக இருந்திருக்கலாம். தேசியவாதியான அவர் இந்த விஷயத்தில் திராவிட இயக்கதவருடன் போட்டியிட முடிந்திருக்காது என்பதுதானே தமிழகத்தின் யதார்த்தம் -அன்றும் இன்றும்.

RAGHAVENDRA
19th May 2010, 03:53 PM
டியர் மகேஷ்,
நீங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை. நடிகர் திலகத்தின் மாபெரும் ரசிகர் மன்ற அமைப்புகளை ஒருங்கிணைத்து அரவணைத்துச் சென்றதில் அவருக்கு இன்றும் ஈடில்லை. ஆனால் அவற்றை இன்னும் சரியாக பயன் படுத்தியிருக்கலாம் என்பதையே சாரதா அவர்கள் கோடிட்டுக் காட்டியிருப்பதாக நான் எண்ணுகிறேன். முசிறிபுத்தன் அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் தலமைப் பொறுப்பைத் திறம்பட நடத்தும் ஆற்றலும் பெற்று விளங்கினார். சின்ன அண்ணாமலை ஒரு தேசிய வாதி என்ற கண்ணோட்டத்திலேயே ரசிகர் மன்றங்களை பார்த்து வழி நடத்தினார். எனவே வித்தியாசம் இருந்தது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இருந்த சுதந்திரம், அவர் முசிறிபுத்தன் அவர்களுக்கு வழங்கிய சுதந்திரம் ஆகியன, அவருக்கு பேருதவியாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. இருவரும் வெவ்வேறு முறையில் நிர்வாகம் செய்ததாக அமைவதால், அதனை ஒப்பீடு செய்யத் தேவையில்லை என்பதே என் தனிப்பட்ட எண்ணம்.

இன்று 19.05.2010 இரவு 8.00 மணிக்கு சிரிப்பொலி தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் திரைக்காவியம் எங்கிருந்தோ வந்தாள் ஒளிபரப்பாகவுள்ளது.

ராகவேந்திரன்.

abkhlabhi
19th May 2010, 05:55 PM
இமயத்தில் இருந்து கங்கை யமுனை பாட்டு. 1979 லில் இந்த பாடல் நடிகர் திலகம் இளம் நடிகர்களுக்கு சவால் செய்து இருபதாக ஆனந்த விகடனில் விமர்சனம் வெளி வந்தது. இதற்கு முன்பு இந்த திரில் வந்ததா என்று தெரியவிள்ளை. பாடல் இங்கே.

http://oruwebsite.com/music_videos/imayam/gangai-yamunai-indruthan-video_dbd0a4121.html

saradhaa_sn
19th May 2010, 07:39 PM
Saradhaa madam,

திரு. சின்ன அண்ணாமலை கவியரசர் கண்ணதாசனின் உறவினர், சுதந்திரப் போராட்ட வீரர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். அவரது 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற புத்தகம் வியப்பூட்டும் பல குறுந்தகவல்கள் அடங்கியது - நான் சிறு வயதில் படித்து வியந்திருக்கிறேன். இங்கே ஒப்பீடு செய்யப்பட்டிருப்வர்களை விட நிச்சயம் சிறந்தவரே. கல்கண்டு விமர்சனம் எதன் அடிப்படையில் அமைந்து என்று புரிந்து கொள்ள முடியவில்லை. Organising skills குறைவாக இருந்திருக்கலாம். தேசியவாதியான அவர் இந்த விஷயத்தில் திராவிட இயக்கதவருடன் போட்டியிட முடிந்திருக்காது என்பதுதானே தமிழகத்தின் யதார்த்தம் -அன்றும் இன்றும்.
மகேஷ்...

திரு சின்ன அண்ணாமலை ஒரு தேசியவாதி, இலக்கியவாதி, தியாகி என்பதிலெல்லாம் எந்த ஐயமும் இல்லை. அதுபோன்ற பின்புலங்கள் திரு. முசிறி புத்தனுக்கு இல்லை என்பதும் உண்மை.

ஆனால் இங்கே ஒப்பீடு செய்ய எடுக்கப்பட்டிருக்கும் ஒரே அளவுகோல்.....
சின்ன அண்ணாமலை - சிவாஜி மன்றத்தலைவர்
முசிறிபுத்தன் - எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர்
என்பது மட்டுமே.

நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கும் படங்கள் மட்டும் திரு எம்.ஜி.ஆர் படங்களாயிருந்திருந்தால் ஆர்.எம்.வீரப்பன், முசிறிபுத்தன் போன்றோரின் பெருமுயற்சியால் 100 நாள் மற்றும் வெள்ளிவிழாப்படங்களாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த விஷயத்தில் 'நம்ம ஆட்கள்' கொஞ்சம் மாற்று கம்மிதான். ரசிகர்களிடம் இருந்த உத்வேகம் தலைவர்களிடம் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

RAGHAVENDRA
19th May 2010, 08:25 PM
சென்னையில் நடைபெற்ற பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட் ராஜா ராணி திரைப்படத்தில் இடம் பெற்ற சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சியும் மன நெகிழ்வோடு கலைஞர் அதை ரசிக்கும் காட்சியும் காண

http://www.youtube.com/watch?v=apOfe5uz5uk

ராகவேந்திரன்

pammalar
19th May 2010, 08:53 PM
தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் பழனியின் சந்தானகிருஷ்ணா திரையரங்கில், 16.5.2010 ஞாயிறு முதல், தினசரி 4 காட்சிகளாக, திரையுலக நீதியரசரின் "நீதி" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

மதுரையம்பதியின் நியூடீலக்ஸ் திரையரங்கில், 17.5.2010 திங்கள் முதல், தினசரி 3 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரையிடப்பட்டு சக்கை போடு போடுகிறது.

இந்த இரு இனிப்புகளை வழங்கிய எமது நெருங்கிய நண்பர், சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
19th May 2010, 11:35 PM
சுவாமி,

ஸ்ரீதேவியின் பெருமைகளை பட்டியலிட்டு படைத்ததற்கு நன்றி. உங்கள் தகவல்களில் ஸ்லிப் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம். நான் வாழ வைப்பேன் 100 நாட்கள் ஓடியதாக என் நினைவு. 1979 ஆகஸ்ட் 10 அன்று வெளியாகி நவம்பர் 22 வரை 105 நாட்கள் ஓடியதாக நினைவு. நவம்பர் 23 அன்று அன்பே சங்கீதா வெளியானது. நீங்கள் சொல்லும் கணக்குப்படி நவம்பர் 2 அன்று வேறு படம் வெளியாகி இருக்க வேண்டும். நான் யோசித்துப் பார்த்ததில் எந்த படம் என்று தெரியவில்லை. தீபாவளி கூட அக்டோபர் 19 அன்றே வந்து போய்விட்டது.

சாரதா,

நீங்கள் சொல்வது போல் பல படங்கள் வெற்றிக் கோடுகளை நூலிழையில் தவற விட்டிருக்கின்றன. சம்பூர்ண ராமாயணத்தை குறிப்பாக சொல்ல வேண்டும். மற்ற சென்டர்கள் எல்லாவற்றையும் விட ஸ்ரீதேவியில் அதிகமான நாட்கள் ஓடிய அந்தப் படம் நிச்சயமாக வெள்ளி விழா கொண்டாடியிருக்க வேண்டும். திருவிளையாடலை பொறுத்தவரை 1966 பொங்கலுக்கு மாற்றப்பட்டது. இவ்விரண்டு படங்களும் ஏன் மனோகராவும் வெள்ளி விழா படங்களாக மாறியிருந்திருக்கும், நீங்கள் சொன்னது போல் ஒரு தலைமை இருந்திருந்தால். அது போல் பாபு,அகத்தியர் படத்திற்காக மாற்றப்பட்டது.

சில வருடங்களுக்கு முன் வியட்நாம் வீடு அநியாயமாக தூக்கபட்டதை பற்றி நான் எழுதியிருந்ததை இங்கே நினைவு கூர்ந்ததற்கு நன்றி. அது போல் நீங்கள் குறிப்பிட்ட கல்கண்டு கேள்வி பதில் விஷயத்தை சில காலம் முன்புதான் நான் நண்பர் சுவாமியிடம் குறிப்பிட்டு அதைப் பற்றி பேசினோம்.

பாலா,

நீங்கள் குறிப்பிட்டது சரியே. "கங்கை யமுனை - இந்த பாடலில் தன் அனுபவத்தையே வயதாக கொண்ட இளம் நடிகர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் சிவாஜி" -இப்படி விகடன் எழுதியிருந்ததாக நினைவு.

சுவாமி,

பழனி சந்தானகிருஷ்ணா அரங்கில் நீதி, மதுரை நியூடீலக்ஸ் [சதீஷ், உங்கள் பேவரிட்] அரங்கில் சுமதி என் சுந்தரி என்ற இனிப்பான செய்திகளை வழங்கியதற்கு நன்றி. மேலும் ஸ்ரீதேவி லிஸ்ட்-ஐ பார்த்தவுடன் வேறு ஒரு விஷயம் மனதில் தோன்றுகிறது. அதை பிறகு எழுதுகிறேன்.

அன்புடன்

tamizharasan
19th May 2010, 11:37 PM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Murali Srinivas
19th May 2010, 11:54 PM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Madurai - Central - 182 Days - Highest run

Chennai - Shanthi - 146 Days [Removed for Vasantha Maaligai]

Chennai - Crown - 111 Days

Chennai - Bhuvaneswari - 104 Days

Tiruchi - Roxy - 140 Days

Salem - Jaya - 133 Days

Tirunelveli - Parvathy - 111 Days.

Regarding other centres, Swami will be able to furnish more details.

In Madurai city it ran for 1 year [by means of shifting] completing 365th day in Imperial, one of the oldest theatres in Madurai.

Pattikkaada Pattanamaa till today remains the highest grosser of all Black and White films released in Tamil.

Regards

tamizharasan
20th May 2010, 12:00 AM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Madurai - Central - 182 Days - Highest run

Chennai - Shanthi - 146 Days [Removed for Vasantha Maaligai]

Chennai - Crown - 111 Days

Chennai - Bhuvaneswari - 104 Days

Tiruchi - Roxy - 140 Days

Salem - Jaya - 133 Days

Tirunelveli - Parvathy - 111 Days.

Regarding other centres, Swami will be able to furnish more details.

In Madurai city it ran for 1 year [by means of shifting] completing 365th day in Imperial, one of the oldest theatres in Madurai.

Pattikkaada Pattanamaa till today remains the highest grosser of all Black and White films released in Tamil.

Regards

Are you sure about Salem Jaya. Because my father-in-law(hardcore sivaji fan) who owns salem jaya theatre as well as distributor for that movie in salem fondly remembering yesterday that it ran for 176 days in salem jaya and only movie crossed silver jubilee in that theatre. He also remembers his meeting with Sivaji when he visited the theatre.

Murali Srinivas
20th May 2010, 12:12 AM
Dear TA,

As for as I know, Madurai was the only centre where PP celebrated Silver Jubilee and NT came on the 177th day to the theatre, which if I remember correctly was on 29th of October 1972.

At the same time, I am not discounting your F-I-Law's claim that NT came to Salem Jaya theatre. He might have come but the movie crossing 175 days there is, AFAIK is doubtful.

Regards

tamizharasan
20th May 2010, 12:16 AM
Dear TA,

As for as I know, Madurai was the only centre where PP celebrated Silver Jubilee and NT came on the 177th day to the theatre, which if I remember correctly was on 29th of October 1972.

At the same time, I am not discounting your F-I-Law's claim that NT came to Salem Jaya theatre. He might have come but the movie crossing 175 days there is, AFAIK is doubtful.

Regards

Thanks. Yesterday when I asked him the movie which ran maximum at Salem Jaya theatre, he immediately said pattikkaada pattanama 176 days and then told me the rest of the story.That is why I was curious to know, how it performed in other centers. I will probably double check with him and let you know.

pammalar
20th May 2010, 12:39 AM
சகோதரி சாரதா, திரு.சதீஷ், திரு.மகேஷ், முரளி சார்,
பாராட்டுக்களுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th May 2010, 01:20 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 19

கே: சினிமா உலகிலேயே விலை உயர்ந்த கார் யாரிடம் இருக்கிறது? (எஸ்.வி. மோனே, திருவனந்தபுரம்)

ப: 'இம்பாலா' என்ற காரை சிவாஜி வைத்திருக்கிறார். அசோக்குமாரிடம் 'ரோல்ஸ் ராய்ஸ்' இருக்கிறது. இந்த அளவுக்கு வேறு யாரும் கார் வாங்கியதாகத் தெரியவில்லை.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1961)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th May 2010, 02:02 AM
சுவாமி,

ஸ்ரீதேவியின் பெருமைகளை பட்டியலிட்டு படைத்ததற்கு நன்றி. உங்கள் தகவல்களில் ஸ்லிப் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம். நான் வாழ வைப்பேன் 100 நாட்கள் ஓடியதாக என் நினைவு. 1979 ஆகஸ்ட் 10 அன்று வெளியாகி நவம்பர் 22 வரை 105 நாட்கள் ஓடியதாக நினைவு. நவம்பர் 23 அன்று அன்பே சங்கீதா வெளியானது. நீங்கள் சொல்லும் கணக்குப்படி நவம்பர் 2 அன்று வேறு படம் வெளியாகி இருக்க வேண்டும். நான் யோசித்துப் பார்த்ததில் எந்த படம் என்று தெரியவில்லை. தீபாவளி கூட அக்டோபர் 19 அன்றே வந்து போய்விட்டது.

அன்புடன்
டியர் முரளி சார்,

யாம் அளிக்கும் புள்ளி விவரங்களின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அபார நம்பிக்கைக்கு அன்பான நன்றிகள்!

சற்று அவகாசம் கொடுங்கள். விளக்கம் அளிக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th May 2010, 02:12 AM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Madurai - Central - 182 Days - Highest run

Chennai - Shanthi - 146 Days [Removed for Vasantha Maaligai]

Chennai - Crown - 111 Days

Chennai - Bhuvaneswari - 104 Days

Tiruchi - Roxy - 140 Days

Salem - Jaya - 133 Days

Tirunelveli - Parvathy - 111 Days.

Regarding other centres, Swami will be able to furnish more details.

In Madurai city it ran for 1 year [by means of shifting] completing 365th day in Imperial, one of the oldest theatres in Madurai.

Pattikkaada Pattanamaa till today remains the highest grosser of all Black and White films released in Tamil.

Regards

Dear Murali Sir,

Thank you very much. I will furnish the details as early as possible.

Regards,
Pammalar.

tamizharasan
20th May 2010, 02:22 AM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Madurai - Central - 182 Days - Highest run

Chennai - Shanthi - 146 Days [Removed for Vasantha Maaligai]

Chennai - Crown - 111 Days

Chennai - Bhuvaneswari - 104 Days

Tiruchi - Roxy - 140 Days

Salem - Jaya - 133 Days

Tirunelveli - Parvathy - 111 Days.

Regarding other centres, Swami will be able to furnish more details.

In Madurai city it ran for 1 year [by means of shifting] completing 365th day in Imperial, one of the oldest theatres in Madurai.

Pattikkaada Pattanamaa till today remains the highest grosser of all Black and White films released in Tamil.

Regards

Dear Murali Sir,

Thank you very much. I will furnish the details as early as possible.

Regards,
Pammalar.

thanks to both of you. Pammalar Sir please verify the salem too.

Jeev
20th May 2010, 02:48 AM
Dear Murali,

Pattikada Pattanama ran 115 days at Colombo - Central and Yalpanam (Jaffna) - Rani.

Regards

pammalar
20th May 2010, 03:14 AM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Madurai - Central - 182 Days - Highest run

Chennai - Shanthi - 146 Days [Removed for Vasantha Maaligai]

Chennai - Crown - 111 Days

Chennai - Bhuvaneswari - 104 Days

Tiruchi - Roxy - 140 Days

Salem - Jaya - 133 Days

Tirunelveli - Parvathy - 111 Days.

Regarding other centres, Swami will be able to furnish more details.

In Madurai city it ran for 1 year [by means of shifting] completing 365th day in Imperial, one of the oldest theatres in Madurai.

Pattikkaada Pattanamaa till today remains the highest grosser of all Black and White films released in Tamil.

Regards

Are you sure about Salem Jaya. Because my father-in-law(hardcore sivaji fan) who owns salem jaya theatre as well as distributor for that movie in salem fondly remembering yesterday that it ran for 176 days in salem jaya and only movie crossed silver jubilee in that theatre. He also remembers his meeting with Sivaji when he visited the theatre.

திரு. தமிழரசன்,

புள்ளி விவரக் கணக்கின் அடிப்படையில், 'பட்டிக்காடா பட்டணமா', சேலம் ஜெயா திரையரங்கில், 6.5.1972 சனிக்கிழமையன்று வெளியாகி, அன்றிலிருந்து, 28.9.1972 வியாழக்கிழமை வரை, 146 நாட்கள் வெற்றிகரமாக ஓடி, வசூல் மழை பொழிந்து, 146 நாட்களில் மொத்த வசூலாக ரூ.4,00,297-60 பை. அளித்தது.

சேலம் மாநகரில், முதன்முதலில், நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த முதல் படம் 'பட்டிக்காடா பட்டணமா'. 29.9.1972 வெள்ளியன்று, சேலம் ஜெயாவில் 'வசந்த மாளிகை' வெளியாயிற்று. எனவே, 'பட்டிக்காடா பட்டணமா', சேலம் ஜெயாவில், 146 நாட்கள் தான் புள்ளி விவரக் கணக்குப்படி வரும். 29.9.1972 வெள்ளியன்று, சேலம் நடராஜா அரங்கிற்கு ஷிஃப்ட் செய்யப்பட்ட 'பட்டிக்காடா பட்டணமா', வெள்ளிவிழா வாரத்தின் போதும் அங்கே (சேலம் நடராஜா) தான் ஓடிக் கொண்டிருந்தது. 'பட்டிக்காடா பட்டணமா'வின் வெள்ளிவிழா வார விளம்பரத்திலும், சேலம் நடராஜா அரங்கமே கொடுக்கப்பட்டுள்ளது. இக்காவியத்தின் வெள்ளி விழா, சேலம் மாநகரில், 5.11.1972 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளதாகவும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th May 2010, 03:21 AM
பார் போற்றும் பாரத ஜோதியின் "பட்டிக்காடா பட்டணமா" திரைக்காவியம் : ஓடிய புள்ளி விவரம்

1. சென்னை - சாந்தி - 146 நாட்கள்

2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்

3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் - 182 நாட்கள்

5. சேலம் - ஜெயா - 146 நாட்கள்

6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள்

7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்

8. கொழும்பு - சென்ட்ரல் - 121 நாட்கள்

9. யாழ்ப்பாணம் - ராணி - 105 நாட்கள்

10. கோவை - ராஜா - 90 நாட்கள் (பின்னர் வள்ளி அரங்கிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது)

11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் (பின்னர் கிரௌன் அரங்கிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது)

மேலும் விவரங்கள் வெகு விரைவில்.....

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
20th May 2010, 06:31 AM
டியர் முரளி சார்,
சற்று நீண்டு விட்ட இடைவெளிக்குப் பின்னர் back with a bang என்று புள்ளி விவரங்களுடன் அசத்தி வருகிறீர்கள்.

டியர் பம்மலார்,
தங்களின் தகவல்களுக்கு பாராட்டுத் தெரிவிக்க மட்டுமே தனி திரி போடவேண்டும். அள்ளித் தருகிறீர்கள். பாராட்டுக்கள். கிட்டத் தட்ட 100 படங்களு்க்கு மேல் முதல் வெளியீடு, மறு வெளியீடு என நடிகர் திலகத்தின் கோட்டையாக விளங்கிய சென்னை சித்ரா திரையரங்கின் விவரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அப்படி வசந்த மாளிகையின் வெளியீட்டால் வெள்ளி விழா பாதிக்கப் பட்ட அரங்குகளில் சேலம் ஜெயாவும் ஒன்று. சேலம் ஜெயாவில் நன்கு வசூல் செய்த படம் 146 நாட்களில் எடுக்கப் பட்ட செய்தி நம் சாந்தியில் மிகவும் வருத்தத்துடன் ரசிகர்களால் வசந்த மாளிகை ரிலீஸ் அன்று விவாதிக்க்ப்ட்டது.

ராகவேந்திரன்

joe
20th May 2010, 06:41 AM
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகரில் பட்டிக்காடா பட்டணமா ஓடிய நாட்கள் எத்தனை? :)

thamiz
20th May 2010, 06:47 AM
மதுரையில் அமோக வெற்றி பெற்றதற்கு இன்னொரு காரணம்!

இது மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தானில் நடப்பதாக எடுக்கப் பட்டதால் மதுரை மக்கள் இதை அதிகம்ரசித்தார்கள் என்று சொல்லலாம் :)

RAGHAVENDRA
20th May 2010, 09:09 AM
சோழவந்தானில் கதைக்களம் மட்டுமல்ல, படப்பதிவும் அங்கே தான் நடந்தது. குறிப்பாக டி.ஆர்.மஹாலிங்கம் அவர்களின் பண்ணையில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப் பட்டதாக படித்திருக்கிறேன். ஷூட்டிங் சமயத்தில் நடிகர் திலகத்துடன் டி.ஆர். மஹாலிங்கம் அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட படங்கள் பத்திரிகைகளில் வந்ததுண்டு.

ராகவேந்திரன்

pammalar
20th May 2010, 09:10 AM
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகரில் பட்டிக்காடா பட்டணமா ஓடிய நாட்கள் எத்தனை? :)

டியர் ஜோ சார்,

நாஞ்சில் நகரில், பட்டிக்காடா பட்டணமா, பயோனீர் பிக்சர் பேலஸ் அரங்கில், 50 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
20th May 2010, 09:55 AM
விரைவில் சென்னை மஹாலக்ஷ்மியில் நடிகர் திலகத்தின் இரு மாறுபட்ட வேடங்களில், என்னைப் போல் ஒருவன், வெளியாகிறது.

ராகவேந்திரன்

pammalar
20th May 2010, 10:09 AM
விரைவில் சென்னை மஹாலக்ஷ்மியில் நடிகர் திலகத்தின் இரு மாறுபட்ட வேடங்களில், என்னைப் போல் ஒருவன், வெளியாகிறது.

ராகவேந்திரன்

தகவலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.

சகோதரி சாரதா காட்டில் மழை தான். இத்தகவல் குறித்து, நம் எல்லோரையும் விட ஒரு படி மேலாக அவர் தான் அதிக சந்தோஷப்படுவார்.

அன்புடன்,
பம்மலார்.

goldstar
20th May 2010, 11:12 AM
Guys,

Let me recall TMM's 1st confrence held at Madurai.

Thalaivar's TMM 1st confrence held at Madurai was one of big rally and crowd had for some time.

Whole Madurai was had TMM's flag white and red and every where thalaivar's song going and huge crowd gathered at Madurai Thappukkam and most of other political leaders surprised a lot by seeing this crowd. I could remember myself sitting corner of Thammmukkam ground and thalaivar telling "Pillaikale"...

Its indeed sad that TMM was not progressed like ADMK, whose fault?? That time I was a kid and not had much political knowledge.

I appreciate people remember about TMM 1st confrence.

Cheers,
Sathish

joe
20th May 2010, 12:21 PM
[tscii:298fbfa6db]’என் தமிழ் என் மக்கள்’ திரைப்படம் இது வரை நான் பார்த்ததில்லை ..வி.சி.டி , டி.வி.டி களோ ,பாடல் காட்சிகளோ ,ஒரு துணுக்கு காட்சியோ கூட எங்கும் பார்த்ததில்லை.

ஏன்? இந்த படத்தை எப்படி பார்ப்பது ? :roll: [/tscii:298fbfa6db]

goldstar
20th May 2010, 04:05 PM
Hi all,

I got some news about TMM at

http://en.wikipedia.org
/wiki/Thamizhaga_Munnetra_Munnani

But it would be good to see photos.

Cheers,
Sathish

pammalar
20th May 2010, 05:17 PM
நக்கீரன் வாரமிருமுறை இதழின், லேட்டஸ்ட் (21.5.2010) இதழில், வெளியாகியுள்ள ஒரு சாக்லெட் தகவல்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=83278117

நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களின் பெருமுயற்சிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

NOV
20th May 2010, 06:44 PM
A fantastic response to all those who said that TMS sings in high pitch.

http://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw&feature=channel

who says that the younger generation cannot enjoy classic songs?


i cant believe that searching for this songs and listing to them .. i wish my dad was around to see me doing this... he used keep these songs so loud and i used get bugged in the night ,.. i miss him so much and these songs are filling in for him i guess .i just love these songs now ... i miss you appa ...
danny6246 5 months ago


I want to die while i am hearing this song (no words to tell, fantabulous)


Can you please translate the lyric in to English...
I would love to understand it... Pleaseeee

and some history


How this songs was shhot.heard from M.S.Viswanathan during an interview;
After composing the song by Kannadhasan, TM Soundhararajan and MSViswanathan the song was sent to Sivaji ganesan for him to prepare for the next day shooting as it was in pracice those days.Sivaji was so
influenced by it and took thre days to prepare himself for this song!!!!!!!!
So it turned out to be so great.MSV liked the moving of cigaratte by Sivaji in the song.

rangan_08
20th May 2010, 06:45 PM
விரைவில் சென்னை மஹாலக்ஷ்மியில் நடிகர் திலகத்தின் இரு மாறுபட்ட வேடங்களில், என்னைப் போல் ஒருவன், வெளியாகிறது.

ராகவேந்திரன்

thanks for the good news :)

rangan_08
20th May 2010, 06:48 PM
[tscii:aa453a528c]I often used to wonder why people always compare Nadigar Thilagam with Marlon Brando when they are poles apart as far as acting is concerned. Both of them have unique style, appearance, gait, acting method etc., and you will notice that there is a stark difference in their performance. Both of them are legends in their own way.

NT is a master in memorizing his lines even if it runs to more than 30-40 pages whereas in most of the films, Brando has refused to memorize his lines.

In the film, “ Last Tango in Paris “, Brando, as usual, has refused to memorize his lines and decided to write them on a cue card and pasted them around the sets for easy reference!! There is a long monologue in the film where Brando sits beside his dead wife and speaks with all emotion and I was surprised to learn that he actually uttered those dialogues by looking at the cue cards pasted all over the sets. Brando even asked Bertolucci, the director if he could paste the dialogues on the actress’s rear end !!! :D

One of Brando’s characteristic feature is to lift his eyebrows upwards and he does it in this scene also which was not spontaneous. He did it in order to search for his next cue, according to wiki.

Now, I began to ruminate NT’s performance in Cheran Senguttuvan scene (I’m not comparing here, but just trying to differentiate :) ).

This is not at all an attempt to demean Brando and who the hell am I to do so?? After all, Don Veto Corleone is my favourite guest who frequently visit my drawing room.
[/tscii:aa453a528c]

RAGHAVENDRA
20th May 2010, 06:59 PM
Dear Mohan,
I wonder how would you have seen the film "Last Tango in Paris" which was banned in India and as far as my memory goes, the distributor never tried to release the film afterwards. Maybe you must have watched it in a video. From your posting I only made a guess that you saw the film, but I am not sure.

The raising of eye brow is a mannerism of Sir Marlon Brando which he guises occasionally. I feel Marlon Brando was lucky enough that NT did not go to hollywood.

Raghavendran

tamizharasan
20th May 2010, 07:00 PM
Can anyone please post the run of Pattikkaada pattanama movie in various cities in TN?

Madurai - Central - 182 Days - Highest run

Chennai - Shanthi - 146 Days [Removed for Vasantha Maaligai]

Chennai - Crown - 111 Days

Chennai - Bhuvaneswari - 104 Days

Tiruchi - Roxy - 140 Days

Salem - Jaya - 133 Days

Tirunelveli - Parvathy - 111 Days.

Regarding other centres, Swami will be able to furnish more details.

In Madurai city it ran for 1 year [by means of shifting] completing 365th day in Imperial, one of the oldest theatres in Madurai.

Pattikkaada Pattanamaa till today remains the highest grosser of all Black and White films released in Tamil.

Regards

Are you sure about Salem Jaya. Because my father-in-law(hardcore sivaji fan) who owns salem jaya theatre as well as distributor for that movie in salem fondly remembering yesterday that it ran for 176 days in salem jaya and only movie crossed silver jubilee in that theatre. He also remembers his meeting with Sivaji when he visited the theatre.

திரு. தமிழரசன்,

புள்ளி விவரக் கணக்கின் அடிப்படையில், 'பட்டிக்காடா பட்டணமா', சேலம் ஜெயா திரையரங்கில், 6.5.1972 சனிக்கிழமையன்று வெளியாகி, அன்றிலிருந்து, 28.9.1972 வியாழக்கிழமை வரை, 146 நாட்கள் வெற்றிகரமாக ஓடி, வசூல் மழை பொழிந்து, 146 நாட்களில் மொத்த வசூலாக ரூ.4,00,297-60 பை. அளித்தது.

சேலம் மாநகரில், முதன்முதலில், நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த முதல் படம் 'பட்டிக்காடா பட்டணமா'. 29.9.1972 வெள்ளியன்று, சேலம் ஜெயாவில் 'வசந்த மாளிகை' வெளியாயிற்று. எனவே, 'பட்டிக்காடா பட்டணமா', சேலம் ஜெயாவில், 146 நாட்கள் தான் புள்ளி விவரக் கணக்குப்படி வரும். 29.9.1972 வெள்ளியன்று, சேலம் நடராஜா அரங்கிற்கு ஷிஃப்ட் செய்யப்பட்ட 'பட்டிக்காடா பட்டணமா', வெள்ளிவிழா வாரத்தின் போதும் அங்கே (சேலம் நடராஜா) தான் ஓடிக் கொண்டிருந்தது. 'பட்டிக்காடா பட்டணமா'வின் வெள்ளிவிழா வார விளம்பரத்திலும், சேலம் நடராஜா அரங்கமே கொடுக்கப்பட்டுள்ளது. இக்காவியத்தின் வெள்ளி விழா, சேலம் மாநகரில், 5.11.1972 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளதாகவும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

Pammalar Sir
I talked with my father-in-law and he did say that vasantha maaligai was also released in that theatre and completed 100 days there. He was in mid-teens during then and theatre was taken care by his father then and that could be the reason , He might be going by the no. on the shield. According to him the function happened right in front of the theatre. BTW Salem Nataraja is not that far from that place. Thanks for all the statistics.

joe
20th May 2010, 08:45 PM
[tscii:b62e3ab42a]சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நாளை வெள்ளி இரவு 9 மணிக்கு நடிகர் திலகத்தின் ‘பட்டிக்காடா பட்டணமா?’[/tscii:b62e3ab42a]

RAGHAVENDRA
20th May 2010, 10:34 PM
[tscii:89cdea93a7]சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நாளை வெள்ளி இரவு 9 மணிக்கு நடிகர் திலகத்தின் ‘பட்டிக்காடா பட்டணமா?’[/tscii:89cdea93a7]

சிங்கப்பூர் நேரமா அல்லது இந்திய நேரமா?

ராகவேந்திரன்

joe
20th May 2010, 10:40 PM
[tscii:dc64ad2085]சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நாளை வெள்ளி இரவு 9 மணிக்கு நடிகர் திலகத்தின் ‘பட்டிக்காடா பட்டணமா?’[/tscii:dc64ad2085]

சிங்கப்பூர் நேரமா அல்லது இந்திய நேரமா?

சிங்கை நேரம் :)

Murali Srinivas
21st May 2010, 12:25 AM
[tscii:7e4b198d76]’என் தமிழ் என் மக்கள்’ திரைப்படம் இது வரை நான் பார்த்ததில்லை ..வி.சி.டி , டி.வி.டி களோ ,பாடல் காட்சிகளோ ,ஒரு துணுக்கு காட்சியோ கூட எங்கும் பார்த்ததில்லை.

ஏன்? இந்த படத்தை எப்படி பார்ப்பது ? :roll: [/tscii:7e4b198d76]

உண்மை. நானும் இந்தப் படத்தை பார்த்ததேயில்லை. சி.டி. கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

ராகவேந்தர் சார்,

தங்கள் வரவேற்பிற்கும் என்னைப் போல் ஒருவன் செய்திக்கும் நன்றி. நான் எங்கும் போய் விடவில்லை. இங்குதான் இருக்கிறேன்

அன்புடன்

Murali Srinivas
21st May 2010, 12:39 AM
நடிகர் திலகம் மதுரையில் குவித்த தொடர் வெற்றிகள்

சில மாதங்களுக்கு முன்பு வேறொரு திரியில் ஒரு விவாதத்தின் போது தொடர்ந்து படங்கள் வெளிவந்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறும், பெற்றன என்பதை பேசினோம். அப்போது குறிப்பாக 1966, 67, 68 வருடங்களைப் பற்றி ஒரு ஒப்பிடல் வந்தது. இந்த மூன்று வருடங்களில் நடிகர் திலகம் நடித்து 20 படங்கள் வெளிவந்தன. இவை அனைத்துமே [ஒன்றை தவிர] மதுரையில் 50 நாட்களையும் தாண்டி ஓடியிருக்கின்றன என்பதுதான் சிறப்பம்சம். அதே காலக்கட்டத்தில் எல்லா நடிகர்களுக்கும் கிட்டத்தட்ட இதே
எண்ணிக்கையில் படங்கள் வெளிவந்தன. ஆனால் யாருக்குமே இப்படி ஒரு வெற்றி கிடைக்கவில்லை. வேறு எவருக்கும் இது போல அனைத்துப் படங்களும் 50 நாட்கள் ஓடவில்லை.

பட்டியல் இதோ

1966

1 மோட்டார் சுந்தரம் பிள்ளை - கல்பனா - 100 நாட்கள்

2. மகாகவி காளிதாஸ் - ஸ்ரீதேவி & லட்சுமி - 57 நாட்கள்

3. சரஸ்வதி சபதம் - ஸ்ரீதேவி - 104 நாட்கள்

4. செல்வம் - சென்ட்ரல் - 64 நாட்கள்

1967

5. கந்தன் கருணை - நியூசினிமா - 125 நாட்கள்

6. நெஞ்சிருக்கும் வரை - சென்ட்ரல் - 43 நாட்கள்

7. பேசும் தெய்வம் - சிந்தாமணி - 70 நாட்கள்

8. தங்கை - நியூசினிமா - 70 நாட்கள்

9. பாலாடை - ஸ்ரீமீனாட்சி - 57 நாட்கள்

10.திருவருட்செல்வர் - நியூசினிமா - 84 நாட்கள்

11 இரு மலர்கள் - நியூ சினிமா - 75 நாட்கள்

12.ஊட்டி வரை உறவு - சென்ட்ரல் - 114 நாட்கள்

1968

13.திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 71 நாட்கள்

14.கலாட்டா கல்யாணம் - ஸ்ரீமீனாட்சி - 70 நாட்கள்

15.ஹரிச்சந்திரா - கல்பனா - 63 நாட்கள்

16.என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள்

17.தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள்

18.எங்க ஊர் ராஜா - நியூ சினிமா - 72 நாட்கள்

19.லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள்

20.உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்

ஏராளமான முறை சொன்னாலும் கூட சலிக்காது நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உண்மை - மதுரை என்றென்றும் நடிகர் திலகத்தின் கோட்டை.

அன்புடன்

PS: சாரதா, என்னுடன் சண்டை போடுவீர்கள் [செல்லமாக தான்] என்று தெரியும். இருந்தும் இதை எழுதுகிறேன்.

pammalar
21st May 2010, 03:30 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 20

கே: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரெஞ்சு அரசு கூட விருது வழங்குகிறதே, நம் இந்திய அரசு? (கோவி.முருகையன், மாராபட்டு)

ப: வள்ளுவனுக்கு சங்கப்பலகை இடம் கொடுக்க மறுத்தது. கம்பனை ஸ்ரீரங்கம் கண்டு கொள்ளவே இல்லை. கவிதைப் போட்டியில் பாரதிக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்தது. இவர்கள் எல்லாம் இன்றும் வாழ்கிறார்கள். எதிர்த்தவர்கள் எங்கே? சாதனையாளர்களோ சரித்திரம். அரசாங்கப் பரிசுகள் அன்றோடு மறந்து போகும் செய்தி.

(ஆதாரம் : தினமணி கதிர், 21.8.1994)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st May 2010, 03:45 AM
டியர் பம்மலார்,
தங்களின் தகவல்களுக்கு பாராட்டுத் தெரிவிக்க மட்டுமே தனி திரி போடவேண்டும். அள்ளித் தருகிறீர்கள். பாராட்டுக்கள். கிட்டத் தட்ட 100 படங்களு்க்கு மேல் முதல் வெளியீடு, மறு வெளியீடு என நடிகர் திலகத்தின் கோட்டையாக விளங்கிய சென்னை சித்ரா திரையரங்கின் விவரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது பாராட்டுக்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்.

தங்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் என்னால் இயன்ற அளவு பூர்த்தி செய்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st May 2010, 06:32 AM
[tscii:3b5a40d3f7]’என் தமிழ் என் மக்கள்’ திரைப்படம் இது வரை நான் பார்த்ததில்லை ..வி.சி.டி , டி.வி.டி களோ ,பாடல் காட்சிகளோ ,ஒரு துணுக்கு காட்சியோ கூட எங்கும் பார்த்ததில்லை.

ஏன்? இந்த படத்தை எப்படி பார்ப்பது ? :roll: [/tscii:3b5a40d3f7]

உண்மை. நானும் இந்தப் படத்தை பார்த்ததேயில்லை. சி.டி. கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

ராகவேந்தர் சார்,

தங்கள் வரவேற்பிற்கும் என்னைப் போல் ஒருவன் செய்திக்கும் நன்றி. நான் எங்கும் போய் விடவில்லை. இங்குதான் இருக்கிறேன்

அன்புடன்

டியர் முரளி சார்
தங்களுடைய பதிவுகளைப் பார்த்தேன், படித்தேன், மகிழ்ந்தேன். நன்றி. உங்களை யார் போக விட்டார்க்ள்.

என் தமிழ் என் மக்கள் படம் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் அரசியல் வாழ்க்கையை ஒத்திருக்கும். சம்பவங்கள் லேசாக திரைக்கதைக் கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். மற்ற படங்களில் நடிப்பால் நம் கண்களைக் குளமாக்கினார் என்றால் இப் படத்தின் கதையே நம் உள்ளத்தை, குறிப்பாக ரசிகர்கள், உருக்கி விடும். படம் பிரமாதமாக ஒன்றும் அமைய வில்லை என்றாலும் கூட ரசிகர்களின் உள்ளத்தை அப்படியே பிரதிபலித்தது எனலாம். நம் த.மு.மு. கொடி படத்தில் பட்டொளி வீசிப் பறக்கும். நடிகர் திலகம் காங்கிரஸிலிருந்து விலகி வந்த அன்றைய அரசியல் சூழலைத் தழுவி எடுக்க்ப் பட்ட படம். பாடல்கள் சரியாக அமையவில்லை என்பதும் ஒரு காரணம்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
21st May 2010, 08:27 AM
நடிகர் திலகம் நடித்த ஒரே தொலைக்காட்சித் தொடரான மீண்டும் கௌரவம், இணயத்தில் பார்வைக்காக தரப்பட்டுள்ளது. இது வரை அதனைப் பார்த்திராத பலர் இருக்கக் கூடும். இருபது பகுதிகள் உள்ளன. அவர்களுக்காக இதோ அந்த இணைப்புகள்

http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-1
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-2
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-3
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-4
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-5
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-6
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-7
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-8
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-9
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-10
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-11
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-12
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-13
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-14
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-15
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-16
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-17
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-18
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-19
http://www.rajshritamil.com/Video/Meendum-Gauravam-Episode-20

ராகவேந்திரன்

abkhlabhi
21st May 2010, 10:17 AM
சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் மியூசிக் வேர்ல்ட் / பிளானெட் M இல் என் தமிழ் என் மக்கள் cd பார்த்தாக ஞாபகம் . விசாரித்து விவரம் தெரிவிக்க்றேன். கிழே கொடுக்கப்பட்டுள்ள வலையில் கிடைபதாக அறிந்தேன். நாட் sure .


http://www.anytamil.com/php/searlist.php

rangan_08
21st May 2010, 06:32 PM
என் தமிழ் என் மக்கள் படம் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் அரசியல் வாழ்க்கையை ஒத்திருக்கும். சம்பவங்கள் லேசாக திரைக்கதைக் கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். மற்ற படங்களில் நடிப்பால் நம் கண்களைக் குளமாக்கினார் என்றால் இப் படத்தின் கதையே நம் உள்ளத்தை, குறிப்பாக ரசிகர்கள், உருக்கி விடும்.
ராகவேந்திரன்

I vaguely remember seeing the banner of ETEM which was placed in Bhuvaneswari theatre. NT almost had the same looks of Mudhal Mariyadhai in this film, if I'm right.

rangan_08
21st May 2010, 06:36 PM
NT Part 6 about to cross 58 pages in such a short time. My God ! what a sprint !!! :clap:

Wishes to all the participants and keep going :thumbsup:

pammalar
21st May 2010, 11:33 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 21

கே: 'சிவந்த மண்' எதிர்பார்த்த அளவு வெற்றி தரவில்லையே, காரணம் என்ன? (என்.பி.ஈஸ்வர், திருவனந்தபுரம் - 2)

ப: பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமாம்! ஸ்ரீதரே மலைக்குமளவுக்கு வெற்றி தந்த படம் அது. கதை விடாதீர்!

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2010, 02:34 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 22

கே: நடிகர் திலகம் இதுவரை நடிக்காத ஏதாவது ஒரு பாத்திரம்? (ஆர்.கர்ணன், பெத்தெரங்கபுரம்)

ப: போலி அரசியல்வாதி!

(ஆதாரம் : பொம்மை, பிப்ரவரி 1994)

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
23rd May 2010, 01:19 PM
டியர் முரளி...

சச்சின் எத்தனை செஞ்சுரிகள் அடித்தார் என்றுதான் கணக்கிடுவார்களே தவிர, எத்தனை முறை 80 - 90ல் அவுட்டானார் என்று யாரும் கனக்கில் கொள்வதில்லை.

அந்த வகையில் 1966, 67,68-ல் நடிகர்திலகம் மதுரை கிரவுண்டில் அடித்த செஞ்சுரிகள் - (5) ஐந்து (மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, ஊட்டிவரை உறவு, தில்லானா)

அதே 1966, 67, 68-ல் அவர் சென்னை கிரவுண்டில் அடித்த செஞ்சுரிகள் - (7) ஏழு (சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, ஊட்டிவரை உறவு, இரு மலர்கள், கலாட்டா கல்யாணம், தில்லானா, உயர்ந்த மனிதன்)

ஐந்து செஞ்சுரிக்கே கோட்டை என்றால், ஏழு செஞ்சுரி அடித்த ஸ்டேடியத்தை என்ன சொல்வீர்கள்?.

இது ஒருபக்கம் இருக்க, அதென்ன 'நெஞ்சிருக்கும் வரை' 43 நாட்கள்?. இது 'முத்துக்களோ கண்கள்' பாடலுக்கே சரியா போச்சே, அப்படத்திலுள்ள மற்ற விஷயங்களுக்கெல்லாம் எப்படி..?.

pammalar
23rd May 2010, 01:28 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 23

கே: நடிப்பிலே போதிய தேர்ச்சி இல்லாத மஞ்சுளா, உஷாநந்தினி போன்ற நடிகையருடன் சிவாஜி இணைந்து நடிக்கத் தான் வேண்டுமா? (மதுரைவாலா, தாராபுரம்)

ப: அவர்கள் இருவரும் வளர வேண்டிய நடிகைகள், போகப் போக வளர்ச்சியை நடிப்பில் காட்டும் ஆர்வம் கொண்டவர்கள். சிவாஜி இவர்களுடன் நடித்து, நடிப்பு சொல்லிக் கொடுத்து, தைரியமூட்டி இவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டுகிறார். இன்னாருடன் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்திருந்தால், பல நடிகைகள் முன்னுக்கு வந்திருக்க முடியாது தெரியுமோ!

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1974)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
23rd May 2010, 06:07 PM
சாரதா,

நான் சொல்ல வந்தது வேறு. நான் சென்னையில் நடிகர் திலகத்தின் சாதனைகளையும் மதுரையில் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் ஒப்பிடவேயில்லை. மீண்டும் படித்துப் பாருங்கள். நான் சொல்லியிருப்பது, அதே காலக்கட்டத்தில் அன்றைக்கு முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் [20] படங்கள் வெளிவந்தன [1966,67,68]. ஆனால் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டும்தான் இந்த வெற்றிகளை பெற்றிருக்கின்றன. வேறு எந்த நடிகருக்கும் மதுரையில் அனைத்துப் படங்களும் இந்த வெற்றிக் கோட்டை தொடவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

நீங்கள் என்னுடன் (செல்லமாக) சண்டை போடுவீர்கள் என நான் குறிப்பிட்டது எதற்காக என்றால் மதுரை புகழ் பாடுகிறேன் என சொல்லுவீர்கள் என்பதற்காகத்தான்.

உங்கள் அதீத ஆர்வத்தில் நீங்களே சென்னையின் ஒரு செஞ்சுரியை குறைத்து விட்டீர்களே. ஆம், மோட்டார் சுந்தரம் பிள்ளையைதான் குறிப்பிடுகிறேன். அதுவும் சேர்த்து சென்னையில் 8.

ஆனால் ஒன்று. சென்னை அளவிற்கு திரையரங்குகளோ, மக்கள் தொகையோ இல்லாத மதுரையில் அனைத்துப் படங்களுமே 8 வாரங்களும் அதற்கும் மேலும் வெற்றிகரமாக ஓடுவதும் அவற்றில் சில தமிழகத்திலே அதிக நாட்கள் ஓடியதும் எங்கள் மதுரையில்தான் என சொல்லும் போது எங்கள் பெருமை நியாயமானதுதானே!

நெஞ்சிருக்கும் வரையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். அதைப் பற்றி தனிப்பட்ட முறையில் கூட எனக்கு மிக பெரிய வருத்தம் உண்டு. எப்படி ஆண்டவன் கட்டளை, நீல வானம் போன்றவை பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்பதில் நமக்கு பெரிய அளவு வருத்தம் இருக்கிறதோ அதே அளவு வருத்தம் இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு கதையில் விநியோகஸ்தர்களின் நிர்பந்தம் காரணமாக ஏற்படுத்திய மாற்றங்களினாலும் தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றிய 1967 பொதுத் தேர்தலின் போது வெளியானதாலும் [ரிலீஸ் தேதி 02.03.1967], படத்தின் வெற்றி பாதித்தது. காரணங்கள் பல சொன்னாலும் அது ஒரு வருத்தமாகவே என்றும் இருக்கும். இங்கே பதிவிடுவதற்கு முன் சுவாமி அவர்களிடமும் இதே கருத்தைத்தான் குறிப்பிட்டேன்.

அன்புடன்

saradhaa_sn
23rd May 2010, 07:59 PM
உங்கள் அதீத ஆர்வத்தில் நீங்களே சென்னையின் ஒரு செஞ்சுரியை குறைத்து விட்டீர்களே. ஆம், மோட்டார் சுந்தரம் பிள்ளையைதான் குறிப்பிடுகிறேன். அதுவும் சேர்த்து சென்னையில் 8.
டியர் முரளி....

'மோட்டார் சுந்தரம் பிள்ளை' சென்னையில் 100 நாட்கள் ஓடவில்லை. மதுரையில் மட்டும்தான். சென்னையில் பத்து வாரங்கள்தான் ஒடியது.


ஆனால் ஒன்று. சென்னை அளவிற்கு திரையரங்குகளோ, மக்கள் தொகையோ இல்லாத மதுரையில் அனைத்துப் படங்களுமே 8 வாரங்களும் அதற்கும் மேலும் வெற்றிகரமாக ஓடுவதும் அவற்றில் சில தமிழகத்திலே அதிக நாட்கள் ஓடியதும் எங்கள் மதுரையில்தான் என சொல்லும் போது எங்கள் பெருமை நியாயமானதுதானே!
ஆனால் எல்லாப்படங்களும் சென்னையில் குறைந்தது மூன்று முதல் ஐந்து திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஆனால் மதுரையில் ஒரு அரங்கில்தானே. (எப்போதாவது அபூர்வமாக இரண்டு, அந்த இரண்டாவது அரங்கில் பத்து பதினைந்து நாட்களில் எடுக்கப்பட்டுவிடும்).


நெஞ்சிருக்கும் வரையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். அதைப் பற்றி தனிப்பட்ட முறையில் கூட எனக்கு மிக பெரிய வருத்தம் உண்டு. எப்படி ஆண்டவன் கட்டளை, நீல வானம் போன்றவை பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்பதில் நமக்கு பெரிய அளவு வருத்தம் இருக்கிறதோ அதே அளவு வருத்தம் இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு கதையில் விநியோகஸ்தர்களின் நிர்பந்தம் காரணமாக ஏற்படுத்திய மாற்றங்களினாலும் தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றிய 1967 பொதுத் தேர்தலின் போது வெளியானதாலும் [ரிலீஸ் தேதி 02.03.1967], படத்தின் வெற்றி பாதித்தது. காரணங்கள் பல சொன்னாலும் அது ஒரு வருத்தமாகவே என்றும் இருக்கும்.
அதே சமயம் சென்னையில் பத்து வாரங்கள் 'நெஞ்சிருக்கும் வரை' ஓடியது. (புதுமை செய்கிறேன் என்று 'முத்துக்களோ கண்கள்' பாடலை இயக்குனர் ஷ்ரீதர் ரொம்ப இருட்டாக்கி விட்டார். போதாக்குறைக்கு இருவருக்கும் மேக்கப்பும் கிடையாது. அதே சிச்சுவேஷனில் அமைந்த 'மடிமீது தலைவைத்து' (அன்னை இல்லம்) பாடலை அவரது சீடர் மாதவன் சூப்பராக பண்ணியிருந்தார்).

மதுரை ஒரு விசித்திரமான ஊர். மற்ற இடங்களில் நன்றாக ஓடிய சிலபடங்கள் அங்கே ஓடியதில்லை. மற்ற இடங்களில் அவ்வளவாக ஓடாத பல படங்கள் அங்கு ஒடி வெற்றியடைந்திருக்கின்றன.

pammalar
23rd May 2010, 09:07 PM
உங்கள் அதீத ஆர்வத்தில் நீங்களே சென்னையின் ஒரு செஞ்சுரியை குறைத்து விட்டீர்களே. ஆம், மோட்டார் சுந்தரம் பிள்ளையைதான் குறிப்பிடுகிறேன். அதுவும் சேர்த்து சென்னையில் 8.
டியர் முரளி....

'மோட்டார் சுந்தரம் பிள்ளை' சென்னையில் 100 நாட்கள் ஓடவில்லை. மதுரையில் மட்டும்தான். சென்னையில் பத்து வாரங்கள்தான் ஒடியது.


சகோதரி சாரதா,

'மோட்டார் சுந்தரம் பிள்ளை' சென்னையில் 78 நாட்கள் மிக வெற்றிகரமாக ஓடியது.

சாந்தி - 78 நாட்கள் (26.1.1966 முதல் 13.4.1966 வரை : 14.4.1966 முதல் 'ஃபான்டோமாஸ்' ஆங்கிலத் திரைப்படம்)

கிரௌன் - 78 நாட்கள் (26.1.1966 முதல் 13.4.1966 வரை : 14.4.1966 முதல் 'சாதுமிரண்டால்' திரைப்படம்)

புவனேஸ்வரி - 78 நாட்கள் (26.1.1966 முதல் 13.4.1966 வரை : 14.4.1966 முதல் 'சாதுமிரண்டால்' திரைப்படம்)

100 நாட்கள் ஓடிய சென்டர்கள்:

மதுரை - கல்பனா

திருச்சி - பிரபாத்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2010, 09:37 PM
தமிழன் எக்ஸ்பிரஸ் 13.5.2010 இதழில் வெளியாகியுள்ள தலையங்கம்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=83700210

இதனை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

joe
24th May 2010, 10:26 AM
இரு வாரங்களுக்கு முன்னர் காபி வித் அனு நிகழ்ச்சியில் வந்த நடிகர் விஜயகுமார் தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்ததற்கே நடிகர் திலகம் தூண்டுகோலாக அமைந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தினார் .

pammalar
25th May 2010, 02:08 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 24

கே: 'தெய்வமகன்' படம் உலகப் படவிழாவுக்குப் போவது பற்றி உங்கள் கருத்து என்ன? (எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம்)

ப: இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவனும் - குறிப்பாக தமிழன் பெருமைப்பட வேண்டும்.

(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
25th May 2010, 01:30 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 24

கே: 'தெய்வமகன்' படம் உலகப் படவிழாவுக்குப் போவது பற்றி உங்கள் கருத்து என்ன? (எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம்)

ப: இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவனும் - குறிப்பாக தமிழன் பெருமைப்பட வேண்டும்.

(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.


PAMMAL SIR,
It was world film festival or oscar nomination?

RAGHAVENDRA
25th May 2010, 02:06 PM
டியர் ரங்கன்,
அந்தக் கேள்வி கேட்டவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணி. அவர் எம்.ஜி.ஆர். அவர்க்ளின் ரசிகர் என்றாலும் அந்தக் காலத்திலேயே நடிகர் திலகத்தின் படங்களையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பாராட்டத் தயங்க மாட்டார். சிறந்த வெளிநாட்டுப் படம் என்கின்ற பிரிவில் இந்திய அரசின் சார்பில் எதிர்ப்புகளைச் சந்தித்து அனுப்பப் பட்ட படம் தெய்வ மகன். அதைத் தான் அவர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பது என் எண்ணம்.

ராகவேந்திரன்

goldstar
25th May 2010, 04:59 PM
Our NT related links

http://www.behindwoods.com/features/column/index-ss-4.html

http://shantosh.blogspot.com/2010/01/sivaji-ganesan-did-he-overact.html

rangan_08
25th May 2010, 06:41 PM
டியர் ரங்கன்,அந்தக் கேள்வி கேட்டவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணி. அவர் எம்.ஜி.ஆர். அவர்க்ளின் ரசிகர் என்றாலும் அந்தக் காலத்திலேயே நடிகர் திலகத்தின் படங்களையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பாராட்டத் தயங்க மாட்டார். சிறந்த வெளிநாட்டுப் படம் என்கின்ற பிரிவில் இந்திய அரசின் சார்பில் எதிர்ப்புகளைச் சந்தித்து அனுப்பப் பட்ட படம் தெய்வ மகன். அதைத் தான் அவர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பது என் எண்ணம்.

ராகவேந்திரன்

re directed to harish :D He is the one who asked this ques.

rangan_08
25th May 2010, 06:43 PM
[tscii:9cc41e1a7e]I like this particular scene in “ Vaa Kanna Vaa”. As you all know, NT plays the character of a telugu speaking (Naidu ??) old man living with his wife and is yearning for love and affection.

The ladies organize “ valaikaapu” in his house and a granny in the crowd asks him to sing a song. NT just excels in this scene as he beautifully brings out the telugu speaking nature of the character on screen by saying with all shyness, “ Sigguga undhi avva “ :) . Just wonderful to watch an old man in a child’s shoes.

:clap:

[/tscii:9cc41e1a7e]

RAGHAVENDRA
25th May 2010, 06:52 PM
டியர் ரங்கன்,அந்தக் கேள்வி கேட்டவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணி. அவர் எம்.ஜி.ஆர். அவர்க்ளின் ரசிகர் என்றாலும் அந்தக் காலத்திலேயே நடிகர் திலகத்தின் படங்களையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பாராட்டத் தயங்க மாட்டார். சிறந்த வெளிநாட்டுப் படம் என்கின்ற பிரிவில் இந்திய அரசின் சார்பில் எதிர்ப்புகளைச் சந்தித்து அனுப்பப் பட்ட படம் தெய்வ மகன். அதைத் தான் அவர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பது என் எண்ணம்.

ராகவேந்திரன்

re directed to harish :D He is the one who asked this ques.

மன்னிக்க வேண்டுகிறேன் ... ஐயா... ஆவலில் தவறி விட்டேன்

ராகவேந்திரன்

Mahesh_K
26th May 2010, 12:52 PM
மதுரை ஒரு விசித்திரமான ஊர். மற்ற இடங்களில் நன்றாக ஓடிய சிலபடங்கள் அங்கே ஓடியதில்லை. மற்ற இடங்களில் அவ்வளவாக ஓடாத பல படங்கள் அங்கு ஒடி வெற்றியடைந்திருக்கின்றன.

இது எல்லா ஊருக்கும் பொருந்தி வரக்கூடியதுதான். தமிழகமெங்கும் பிரம்மாதமாக ஓடிய super hit - class movie முதல் மரியாதை சென்னையில் உதயம் தியேட்டரில் 5 வாரமே ஓடியது என்பதைக் கேள்விப்பட்டுருக்கிறேன். அதைவிட கொடுமை, முதல் மரியாதையை எடுத்துவிட்டு போட்ட ஒரு பாடாவதி மசாலா படம் 7 வாரம் உதயத்தில் ஓடியது தான். (இத்தனைக்கும் அந்த ப்டம் முதல் மரியாதை 100 நாட்கள் ஓடிய - மசாலா படங்களை பொதுவாக ரசிக்கும்- சிறு ஊர்களில் கூட 3 வாரம் தாண்டவில்லை).

சென்னையே இப்படி என்கிற போது மற்ற ஊர்கள் ரசனையும் இப்படித்தான் மாறுபடும். எங்கள் நெல்லையில் சில படங்கள் ஓடிய நாட்களை நம் சென்னை நண்பர்கள் சிலரிடம் சொன்ன போது அதிர்ச்சியே அடைந்துவிட்டார்கள். என்னை அடிக்காத குறைதான் போங்கள்.

pammalar
26th May 2010, 01:15 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நன்றி!

டியர் செந்தில் சார்,

'தெய்வமகன்' ஆஸ்கார் பட விழாவுக்கு அனுப்பப்பட இருப்பதைத்தான் கேள்வி கேட்ட திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் உலகப்பட விழா என்று கேட்டிருக்கிறார்.

அன்புடன்,
பம்மலார்.

joe
26th May 2010, 01:49 PM
முதல் மரியாதை சென்னையில் உதயம் தியேட்டரில் 5 வாரமே ஓடியது என்பதைக் கேள்விப்பட்டுருக்கிறேன்.

முதல் மரியாதை சென்னை சாந்தியில் வெள்ளிவிழா கண்டது.

kumareshanprabhu
26th May 2010, 02:29 PM
hi let me introduce my self iam kumareshan president karnataka state prabhu fans welfare assn Banglaore.

can any one discuss about One song in Rajapart Rangadurail

Mahesh_K
26th May 2010, 02:43 PM
முதல் மரியாதை சென்னையில் உதயம் தியேட்டரில் 5 வாரமே ஓடியது என்பதைக் கேள்விப்பட்டுருக்கிறேன்.

முதல் மரியாதை சென்னை சாந்தியில் வெள்ளிவிழா கண்டது.

Yes. I was told by a friend that the collections improved later and the film had a very good run with houseful shows even during 20th- 21st weeks.

kumareshanprabhu
26th May 2010, 03:04 PM
HI MAHESH. iam from Bangalore, those days in Bangalore there was no simaltaneous relase like now, i still remember when we all went to salem towatch this movie. we were so upset, after a week or so again we went to salem we were shocked to see the response, thats why we call him the great NT

kumareshanprabhu
26th May 2010, 03:10 PM
One more important message recently kamal hassan had spoken in the function, he mentioned that 12 films were continiously flop of NT other NT nobody colud survive if 12 films flops were given and the 13th movie Mudhal Maryadai was a hit , he says only one actor who can do all this is the great men Dr,Sivajiganesan

RAGHAVENDRA
26th May 2010, 03:14 PM
இளைய திலகம் பிரபு அவர்களின் இனிய ரசிகர்களின் படைப்புகளுக்கு மேலும் ஒரு பங்களிப்பாக வந்திருக்கும் குமரேசன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். தங்கள் வருகையாலும் பதிவுகளாலும் இத்திரி மென்மேலும் மெருகேறட்டும் வளரட்டும்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
26th May 2010, 03:16 PM
திரு கமல்ஹாஸன் அவர்கள் மட்டுமல்ல பலர் இதைப் போன்ற தகவல்களை கூறி வருகிறார்கள். தயவு செய்து அந்த படங்களைத் தேதி வாரியாகவும் எத்தனை நாட்கள் ஓடியது என்றும் அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். நமக்கும் உதவியாக இருக்கும்.

ராகவேந்திரன்.

kumareshanprabhu
26th May 2010, 03:24 PM
raghavendra please help me how to add a image

joe
26th May 2010, 03:29 PM
Kumaresan,
How to add image ..answer is already given to you in Prabhu thread and someone even send Personal Message to you .

Kindly don't digress NT thread ..If any help ,pls send PM to any of us . :)

Murali Srinivas
26th May 2010, 11:59 PM
காலத்தை வென்ற காவியம். உடன் பிறந்தவர்கள் பாசத்திற்கு இலக்கணம் வகுத்த ஓவியம் அன்று முதல் இன்று வரை ஏன் தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை அண்ணன் தங்கை அன்பை அடையாளப்படுத்தவும் அளவுக்கோலாக கொள்ளவும் விளங்கப் போகும் நடிப்பின் நாயகனின் பாசமலர் தனது பொன் விழா ஆண்டில் இன்று [27th May] அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் இந்த திரைக்காவியத்தை நமக்கு வழங்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்வோம்.

அன்புடன்

pammalar
27th May 2010, 02:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 25

கே: கலைக்குரிசில் கணேசனின் அன்றைய நடிப்பிற்கும், இன்றைய நடிப்பிற்கும் காணப்படும் வித்தியாசம் என்ன? (க.ஏ.தாசன், மா.சூசைநாதன், தங்கவயல்)

ப: அன்றைய நடிப்பு சுவையான பால். இன்றைய நடிப்போ அதோடு தேனும், முக்கனியும் கலந்தது. சுவைக்கு கேட்க வேண்டுமோ!

(ஆதாரம் : சினிமா கதிர், ஜூன் 1964)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th May 2010, 02:32 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 26

கே: சிவாஜிக்குக் கொடுக்கப்படும் வசனத்தை அவர் மனப்பாடம் செய்வாரா? (சிவாஜி சுந்தர், குரோம்பேட்டை)

ப: ஒரு முறை படிக்கச் சொல்லிக் கேட்பார். அப்புறம் மளமளவென்று பேசி விடுவார். புதிதாக நடிக்க வருபவர்கள் தான், அவர் படங்களில் பேசிய வசனங்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு, நான் அவரைப் போலவே வசனம் பேசுவேன் என்று பேசி நடித்துக் காட்டுவதுண்டு.

(ஆதாரம் : பொம்மை, மே 1981)

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
27th May 2010, 06:13 PM
Som time back I read this

Who is No.1 Great Actor ?


Don't you/we think Actor means variety without any restriction of acting character/pair/duet/image/cooperation and THAN popularity.

One and only IT WAS and IS SivajiGanesan

abkhlabhi
27th May 2010, 06:44 PM
Not many know that Kannada and Telugu star Saikumar is an avid fan of Tamil legend Sivaji Ganesan. His video library at home has a record collection of Sivaji's films. The collection has video CDs and cassettes of all of Sivaji's films, right from his debut "Parasakti" down to his cinematic swansong, "Poopparikkar Varugiroam". He is also acted in Tamil films as villain.

Recently he is hosting WOW A game show in Eenadu Telugu TV. During the shows, he often mentioned about NT and he always says he a great fan of NT though he acting career very limited in TF.

pammalar
28th May 2010, 01:32 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27

கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)

ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.

(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th May 2010, 02:04 AM
ஆசிய ஜோதி பற்றி நடிப்புலக ஜோதி:
(பிரதமர் நேருஜி மறைந்த சமயத்தில் வானொலியில் 31.5.1964 அன்று நடிகர் திலகம் விடுத்த இரங்கல் செய்தி)
(சினிமா கதிர் ஜூன் 1964 இதழிலும் வெளியானது)

"உலகத்தில் உள்ள பூசல்களையெல்லாம் ஒழிக்கப் பாடுபட்டார் நேரு. நேருவைப் போன்ற ஒரு மாபெரும் தலைவரைக் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. நான் வெளிநாடு போய் இருந்த போது என்னை வெளிநாட்டார் வரவேற்றார்கள். 'நேரு நாட்டில் இருந்தா வருகிறீர்கள்' என்று கேட்டார்கள். நேருவின் பெருமையை நினைத்து பூரிப்படைந்தேன். நம்மையெல்லாம் தவிக்க விட்டுவிட்டு நேரு மரணமடைந்தார். தாயை இழந்ததைப் போல், தந்தையை இழந்ததைப் போல் நாம் தவிக்கிறோம்; அழுகிறோம்; கண்ணீர் வடிக்கிறோம். நேருவின் கொள்கையைப் பின்பற்றி இந்தியாவைக் காப்பாற்றுவோம்."

இன்று 27.5.2010 அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 46வது நினைவு தினம்.

ஆசிய ஜோதிக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி!

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
28th May 2010, 02:50 AM
பாசத்திலகத்தின் "பாசமலர்" திரைக்காவியத்திற்கு இன்று (27.5.2010) பொன்விழா ஆண்டின் தொடக்கம். அண்ணன் - தங்கைப் பாசம், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம், பந்தபாசங்களின் முக்கியத்துவம் போன்ற பாரத புண்ணிய பூமியின் ஆணிவேராக விளங்கும் பாரம்பர்ய பாச உணர்வுகளை உயர்த்திக் காட்டிய உயர்ந்த காவியம் "பாசமலர்". எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், இம்மலர் ஒரு வாசமிகு வாடாமலர்.

"பாசமலர்" பற்றிய தகவல்களுக்கு, புகைப்படங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்:

http://www.paasamalar69.webs.com/

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

kumareshanprabhu
28th May 2010, 09:24 AM
nice one pammalar

kumareshanprabhu
28th May 2010, 09:37 AM
hi abkhlabhi i am also from Bangalore, what you said about sai kumar was right, one more information i want to share with all of u in the hub, after NT Passed away he went to chennai to NT house, he was talking with nt family he rquested with kamalamma, that he wanted the CHAPPALS of NT WHICH HE WAS WEARING,

AND HE TOOK THE CHAPPALS AND HE HAS TOLD THEM THAT THIS CHAPPALS ARE IS PRECIOUS THING WHICH HE HAS GOT IN IS LIFE,

WE ARE ALL ARE GREAT TO BE A FANS OF SUCH WONDERFUL HUMAN BEING AND GREATEST ACTOR IN THE WORLD OUR NADIGAR THILGAM

J.Radhakrishnan
28th May 2010, 01:15 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27

கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)

ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.

(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)

அன்புடன்,
பம்மலார்.

டியர் பம்மலார் சார்,

நானும் இதை V.K ராமசாமி அவர்களின் பேட்டியில் படித்திருக்கிறேன் S.V சுப்பையா காவல் தெய்வம் படம் முடித்தவுடன் NT அவர்கள் வேறு ஷூட்டிங்கில் இருக்கும் போது ஒரு டிபன் பாக்சை கொடுத்து உங்களுக்கு பிடித்த டிபன் வைத்திருக்கிறேன் என்று கொடுத்தாராம். NT அவர்கள் பிரித்து பார்த்தால் அதில் பணம் இருந்தது. அதை அவர் வாங்க மறுத்தார் என்று படித்திருக்கிறேன்

saradhaa_sn
28th May 2010, 02:28 PM
-deleted due to a hubber's request-

abkhlabhi
28th May 2010, 05:07 PM
GIRIJA's interview in CNNIBN About NT

http://www.youtube.com/watch?v=HF5o8tmmhWA&feature=related

HARISH2619
28th May 2010, 08:04 PM
DEAR KUMARESAN SIR,
HEARTY WELCOME TO OUR THREAD.Even I stay in bangalore in RTnagar area.I have seen you in newspapers in NT and prabhu related functions.Infact I have attended many functions including the one in townhall in 2003 and NT birthday functions which will be held every year in sivanchetty garden area ,prakashnagar area and cottonpet area.I feel very happy to meet you thro' this thread.Expecting many details about NT movies bangalore records.

Murali Srinivas
28th May 2010, 11:31 PM
இன்று முதல் புரசைவாக்கம் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125-வது திரைக்காவியமான உயர்ந்த மனிதன் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை அனுப்பி வைத்த நண்பர் மோகன்[ரங்கன்] அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

pammalar
29th May 2010, 02:20 AM
சகோதரி சாரதா, திரு.ஜேயார்,
அசத்தல் தகவல்களுக்கு அன்பான நன்றிகள்!

திரு.குமரேசன் பிரபு அவர்களே, "வருக!, வருக!". தங்களது பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th May 2010, 02:32 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 28

கே: நீங்கள் கலந்து கொண்ட திரைப்பட விழாக்களிலேயே மறக்க முடியாத விழா எது? (பி.சிவகுமார் பிரபு, திருப்பூர் - 6)

ப: தமிழ்த் திரைப்பட விழாக்களிலேயே பிரம்மாண்டமான விழா சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட விழா தான். இனி அப்படி விழாக் கொண்டாடவே முடியாது.

(ஆதாரம் : பிலிமாலயா, செப்டம்பர் 1995)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
30th May 2010, 11:45 AM
சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில், வசந்தம் பாக்ஸ் ஆபீஸ் நிகழ்ச்சியில் இன்று 30.05.2010 இரவு சிங்கப்பூர் நேரம் 9.00 மணிக்கு நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த என்னைப் போல் ஒருவன் ஒளிபரப்பாகிறது.

ராகவேந்திரன்

NOV
30th May 2010, 02:00 PM
Watched Shanti on Astro Vellithiri today :thumbsup:

Amazing that one movie has ALL great songs. Kannadhasan and V-R were rocking. :2thumbsup:

Film starts with Santhanam (Sivaji) and Ramu (SSR) finishing college and travelling to Trichy - வாழ்ந்து பார்க்க வேண்டும், அறிவில் மனிதனாக வேண்டும்.

Santhanam and mother go for bride-seeking to Madurai and meet Shanti (Vijayakumari). Before that Santhanam meets Mallika (Devika) and is drawn to her.
Discovering that Shanti is blind, the mother rejects the proposal. Devika then consoles Shanti - ஊரெங்கும் மாப்பிளை ஊர்வலம்.

In the meantime, Santhanam meets Devika in Trichy and proposes to her - நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்.
The next scene has Santhanam informing his mother of thier love. You must watch the scene to enjoy it. :rotfl:

Ramu leaves with his greedy Sithappa (MR Radha) who arranges Ramus marriage to Shanti without informing him of her handicap.
Both Shanti and Ramu are happy with the impending wedding - செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்

Immediately after the wedding, Ramu learns of Shanti's blindness and leaves in a fury.
Santhanam traces him and persuades him to return. Ramu requests for some time and writes to his father in law, that he is returning.

Shanti is overjoyed and sings செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன். A new doctor arrives from Delhi and manages to cure her blindness.

However, Ramu dies in an unfortunate hunting accident and Santhanam comes to deliver the news to Shanti's father (Nagiah) who unable to take the shock, dies of hear attack.

The scheming MR Radha, not wishing to forego the wealth of Shanti, manages to persuade Santhanam to pretend that he is Ramu! Shanti blissfully unaware of the drama, openly welcomes Santhanam into her life.

Thus a web of deceit is built - யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் நான் வந்த வரவு!

Watch Shanti, to discover how the knot is untied, by master story-teller Bhim Singh!

joe
30th May 2010, 02:30 PM
சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில், வசந்தம் பாக்ஸ் ஆபீஸ் நிகழ்ச்சியில் இன்று 30.05.2010 இரவு சிங்கப்பூர் நேரம் 9.00 மணிக்கு நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த என்னைப் போல் ஒருவன் ஒளிபரப்பாகிறது.

ராகவேந்திரன்

Yesterday they have shown 'Padithal mattum pothuma'

Murali Srinivas
31st May 2010, 12:11 AM
இன்று ஞாயிறு [30.05.2010] மாலைக்காட்சி புரசைவாக்கம் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125-வது திரைக்காவியமான உயர்ந்த மனிதன் படத்திற்கு சென்றிருந்தோம். எங்கள் தங்க ராஜா, பாசமலர் படங்களுக்கு வந்த அந்தளவு கூட்டம் இல்லையென்றாலும் கணிசமான ஆட்கள் வந்திருந்தனர். விளம்பரமே இல்லாமல் இந்தளவு ஆட்கள் வந்தது பெரிய விஷயம்தான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அலப்பறைக்கு எந்த குறையுமில்லை. எத்தனை போஸ்டர்கள் இருந்தனவோ அத்தனைக்கும் மாலைகள், பாலாபிஷேகம், மணி அடித்து சூட தீபாராதனை, 5000 வாலா சரம் வெடித்தல், தேங்காய் உடைத்தல் போன்ற சம்பிரதாயங்கள் பெரும் ஆரவாரத்துடன் அரங்கேறின.

தியேட்டர் அமைந்திருக்கும் ரோடு [Brickline ரோடு?] எப்போதும் மிகுந்த போக்குவரத்து நடைபெறும் சாலை. அது வழியாக சென்ற பேருந்து பயணிகள், காரில் சென்றவர்கள், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் எல்லோரும் ஒரு நிமிட நேரம் நின்று மிகுந்த ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்து சென்ற காட்சி, அதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு களிப்பை உருவாக்கின. இந்த காட்சிகள் எல்லாம் விரைவில் ராகவேந்தர் சார் மூலமாகவும் சுவாமி வழியாகவும் இங்கே இடம் பெறும்.

பிறகு அரங்கத்தில் படம் ஓடிய போது ரசிக கண்மணிகள் எல்லாம் உள்ளே வந்து விட்டனர். ரசனையை பொறுத்த வரை ரசிகர்கள் advanced. எனவே நடிகர் திலகம் அறிமுக காட்சியில் ஆரம்பித்த ஆரவாரம் காட்சியின் தன்மைக்கேற்ப தொடர்ந்தது. கொடைக்கானலுக்கு கார் ஒட்டி வரும் மேஜரிடம் சிகரெட்டை கொடுத்து விட்டு அசோகனிடம் மேஜர் தன் கூடப் படித்ததையும் தன் அப்பாவால் மேஜரின் படிப்பு நின்று போனதையும் சொல்லிவிட்டு bloody fools என்று வெகு இயல்பாக சொல்லுவார் அந்த வசனத்திற்கு, வாணிஸ்ரீயை தேடி வது பேசும் போதும் காட்டும் ஸ்டைல் இவை எல்லாம் ஒரு ரகம் என்றால் பாடல் காட்சிகள் கேட்கவே வேண்டாம். நாளை இந்த வேளை பார்த்து பாடலில் அவரின் துள்ளலான நடைக்கும் துடிப்புக்கும் கைதட்டல், குறிப்பாக பெண்மையே உன் மென்மை கண்டு என்ற வரிகளுக்கு ஒரு சின்ன முகட்டில் தாவி ஏறுவார் அதற்கெல்லாம் அமர்க்களம் என்றால் வெள்ளிக் கிண்ணம்தான் பாடல் அட்டகாசத்தின் உச்சக் கட்டம். முதல் சரணத்தில் [சித்திர விழிகளென்ன மீனோ மானோ] படகு ஒட்டிக் கொண்டே காட்டும் ஸ்டைல் சரணம் முடிந்தவுடன் சுசீலாவின் ஒரு ஹம்மிங் மட்டும் வரும் அது முடிய இரண்டு கைகளையும் ஒன்று மாற்றி ஒன்று முன்னே நீட்டி ஒரு ஸ்டெப் போடுவார். தட்டி தீர்த்து விட்டார்கள். ஒன்றுக்கு மூன்று சூட தட்டுகள் திரைக்கு முன் சுற்றப்பட, படம் நிறுத்தப்பட்டு விட்டது. சில ரசிகர்கள் சென்று பேசி மீண்டும் படத்தை தொடர செய்தனர். ஆனால் ரசிகர்கள் உடனே மீண்டும் ஆரவாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

அதன் பிறகு அரங்கத்தில் அமைதி திரும்பியது என்று சொன்னாலும் படத்தின் ரசனையான காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தனர். ரசிக்க ஆரம்பித்தனர். வாணிஸ்ரீயை எரித்து விட்டு ராமதாஸ், சௌகாரை மணந்து கொள்ள மிரட்டும் போது நடிகர் திலகம் கொடுக்கும் ரியாக்ஷன், கண்ணீர் முட்டி நிற்க அதை மறைக்கும் புன்னகையோடு என் இஷ்டமா எல்லாமே எங்க அப்பாவோட இஷ்டம்தான் என இடறும் குரலில் பதில் சொல்வதற்கு, சொல்லிவிட்டு நடப்பதற்கு, பிறகு வரும் மத்திய வயது industrialist ராஜலிங்கத்தின் அறிமுகம், அவர் வீட்டுக்குள் நடந்து வரும் ஸ்டைல், கடைதெருவில் சண்டை போடும் சிவகுமாரை சமாதானப்படுத்தி விட்டு நெற்றியை தொட்டு பார்த்து விட்டு வலிக்கிறதா என கேட்பது, காதலித்தவளை கைப்பிடிக்க முடியாமல் காரணம் சொல்லும் ஜெயசந்திரனை கண்டிப்பது, அவர்கள் சென்றவுடன் தன்னை குத்திக் காட்டும் அசோகனின் வார்த்தைகளால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகளிலெல்லாம் நல்ல வரவேற்பு. அது போல வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாகையா நடிகர் திலகத்திடம் கண்ணீர் விட அவர் கையை ஆதரவாக அமுக்குவதன் மூலம் மன உணர்வுகளை வெளிபடுத்தும் காட்சி அப்போதும் நல்ல ஆரவாரம்.

அத்துடன் இடைவேளை. தவிர்க்க இயலாத வேலை இருந்ததால் நான் தியேட்டரிலிருந்து கிளம்பி விட்டேன். சுவாமி அவர்கள் அதற்கு பிறகு நடந்த சுவாரஸ்யங்களை விவரிப்பார்.

அன்புடன்

Murali Srinivas
31st May 2010, 12:29 AM
தியேட்டரில் கிடைத்த செய்திகள்.

சென்னை அமிஞ்சிக்கரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா அரங்கம் மூடப்படுகிறது. ஆகையால் இந்த வாரம் தினசரி ஒரு நாள் ஒரு படம் திரையிடப்படுகின்றது. அந்த வகையில் வரும் வியாழன் அன்று நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் திரையிடப்படுகின்றது.

அடுத்த வாரம் இதே சரவணா அல்லது அருகில் இருக்கும் பாலாஜி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை வெளியாகலாம் என தெரிகிறது.

வரும் ஜூன் மாதம் 2-வது அல்லது 3-வது வாரம் மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் திலகத்தின் என்னைப் போல் ஒருவன் வெளியாகிறது

ஜூலை மாதம் அநேகமாக புதிய பறவை பைலட் திரையரங்கில் வெளியாகலாம் என தெரிகிறது..

இது தவிர கர்ணன் மற்றும் சவாலே சமாளி படங்களும் திரையிட தயாராக இருக்கின்றன.

அன்புடன்

NOV,

Thanks for Shanthi - a movie worth watching.

RAGHAVENDRA
31st May 2010, 10:26 AM
முரளி சார் சொன்னது போல் நம் மக்களின் அளப்பரை இங்கும் தொடர்ந்தது. தகவல் நகரின் பிற பகுதிகளில் அதிகமாகத் தெரியாத காரணத்தால் கூட்டம் ஓஹோ என்று இல்லை. இருந்தாலும் அதையும் மீறி கணிசமான மக்கள் படத்தைக் கண்டு களித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை 30.05.2010 அன்று மாலைக் காட்சியில் கண்டகாட்சிகள் உங்கள் முன் ஒளிப்படமாக இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளது
http://ntfans.blogspot.com/

இந்த முறை நல்லபடியாக யாரும் திரைக்கு அருகில் சென்று சூடம் தீபம் காட்டாமல் தொலைவிலேயே காட்டினர். ரசிகர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். காரணம் நம் மக்கள் உணர்ச்சியின் வேகத்திற்கு கடிவாளம் போடத் தெரியாதவர்கள். பாசமும் நேசமும் அந்த அளவி்ற்கு அவர்களுக்குள் வியாபித்துள்ளன. அவர்களுக்கு நம் உளமார்ந்த பாராட்டுக்கள்.

சரவணா திரையரங்கு என்றுமே எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களின் கோட்டை என அழைக்கப்படும் அரங்காகும். நமது ரசிகர்கள் அங்கே அதிகம் சென்றதில்லை. நிறைய பேருக்கு அந்த அரங்கம் எங்கே உள்ளது எனவும் தெரியாது. நமக்கு தெரிந்த நமது நடிகர் திலகத்தின் முதல் வெளியீ்ட்டுத் திரைப்படம் என்றால் அது நீதி மட்டும் தான். என்னைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலைக் காட்சியில் அதாவது 10.30 மணி, நடிகர் திலகத்தின் அபூர்வமான படங்கள் திரையிடப் படும். அப்போது பார்த்த பாக்கியவதி படம் தான் நான் அந்த திரையரங்கிற்கு கடைசியாக சென்றது. அதன் பின்னர் நேற்று தான் சென்றேன். அந்த நாளைய நினைவுகள் வந்து போயின. நல்ல வீடு, பாக்கியவதி, போன்ற அபூர்வமான படங்கள் அப்படி காலைக் காட்சியில் பார்த்தது தான்.

திரையரங்கில் ஒரு விநியோகஸ்தரைச் சந்தித்தோம். விடைபெறும்போது அவர் ஆவலோடு சொன்னது மணியான வார்த்தைகள் -
1960-1970 ஆண்டுகளின் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலகட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடுவோம்.

இடைவேளையின் போது பாடற் காட்சிகள் குறிப்பாக வெள்ளிக் கிண்ணம் தான் மற்றும் அந்த நாள் ஞாபகம் பாடற் காட்சிகள் தனியாக ஒளிபரப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது.

சரவணா திரையரங்கிற்கு நமது நன்றிகள்.

ராகவேந்திரன்

joe
31st May 2010, 10:38 AM
http://ntfans.blogspot.com/


:shock: In photos ,screen looks like color movie ..how ? :roll:

groucho070
31st May 2010, 10:44 AM
Watch Shanti, to discover how the knot is untied, by master story-teller Bhim Singh!Forgot that it was by Bhim Singh, a non-Pa varisai film. Caught it on TV here and there.

A typical comment from my wife, which we fans keep hearing again, and again, "Sivaji looks stylish!!!", and she was especially awed by "Yar Antha nilavu" song, I told her the background story on how NT wanted to better MSV/Kavignar/TMS and ended with just a ciggie prop and overshadowed the rest :lol:

saradhaa_sn
31st May 2010, 11:52 AM
முரளி சார் சொன்னது போல் நம் மக்களின் அளப்பரை இங்கும் தொடர்ந்தது. தகவல் நகரின் பிற பகுதிகளில் அதிகமாகத் தெரியாத காரணத்தால் கூட்டம் ஓஹோ என்று இல்லை. இருந்தாலும் அதையும் மீறி கணிசமான மக்கள் படத்தைக் கண்டு களித்து வருகிறார்கள்.

டியர் முரளி....
டியர் ராகவேந்தர்...

நடிகர்திலகத்தின் திரைப்பட மறுவெளியீடுகளுக்கு நேரில் சென்று நடப்புகளையும், ரசிகர்களின் ஆரவாரங்களையும் இங்கு தொகுத்தளித்து, பங்கேற்க முடியாதவர்களை பரவசமடையச்செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளமைக்கு பல்லாயிரம் நன்றிகள். சென்னை திரையரங்குகளில் நடிகர்திலகத்தின் திரைப்படங்களை ரசிகர்கள் கண்டு களிக்கும் காலம் வராதா என்று ஏங்கி நின்றோரின் ஏக்கங்களைத் தீர்த்து வைக்கும் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றிகள் பல. 'உயர்ந்த மனிதன்' வெளியீடு பற்றி தினத்தந்தியில் சிறிய விளம்பரம் கொடுத்திருந்தாரானால், பல்வேறு இடங்களிலும் உள்ள ரசிகர்களுக்கும் விவரம் தெரிந்து குவிந்திருப்பார்கள். விளம்பரப்பணத்தைப்போல பல மடங்கு அவருக்கும் வசூலாகியிருக்கும்.

கூட்டம் குறைந்தாலும் அலப்பரைகள் குறையவில்லை என்பதையறிந்து மகிழ்ச்சி.


சரவணா திரையரங்கு என்றுமே எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களின் கோட்டை என அழைக்கப்படும் அரங்காகும். நமது ரசிகர்கள் அங்கே அதிகம் சென்றதில்லை. நிறைய பேருக்கு அந்த அரங்கம் எங்கே உள்ளது எனவும் தெரியாது. நமக்கு தெரிந்த நமது நடிகர் திலகத்தின் முதல் வெளியீ்ட்டுத் திரைப்படம் என்றால் அது நீதி மட்டும் தான். என்னைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலைக் காட்சியில் அதாவது 10.30 மணி, நடிகர் திலகத்தின் அபூர்வமான படங்கள் திரையிடப் படும். அப்போது பார்த்த பாக்கியவதி படம் தான் நான் அந்த திரையரங்கிற்கு கடைசியாக சென்றது.
'சரவணா' திரையரங்கம் அமைந்திருக்கும் ஒட்டேரி ஏரியா மக்களின் ரசனைக்கு ஏற்ப படங்களைத்திரையிடுவதை அத்திரையரங்க நிர்வாகம் வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, அடிதடி சண்டைக்காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தடாலடியான காட்சிகள் நிறைந்த படங்களுக்கு அங்கு மவுசு அதிகம். எண்பதுகளின் மத்தியில் நடிகர்திலகத்தின் ராஜா, தங்கச்சுரங்கம், சொர்க்கம் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டபோது அரங்கு நிறைந்த கூட்டத்துடன் பெரிய வரவேற்பைப்பெற்றன. அதே சமயம் நிச்சயதாம்பூலம் திரையிடப்பட்டபோது போதிய வரவேற்பு இல்லை. சமீப காலமாக தொடர்ந்து மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரின் படங்கள் அங்கு வெளியாகி ஓடின. (தொடர்ந்து பதினைந்து வாரங்கள் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களே ஒடியதாகக்கேள்வி). தற்போது நடிகர்திலகத்தின் படங்களுக்கு வழி திறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல 'நீதி' அங்கு முதல் வெளியீட்டில் 77 நாட்கள் ஓடி வெற்றியடைந்தது. (தேவி பாரடைஸ்- 99, பிரபாத்- 70).


திரையரங்கில் ஒரு விநியோகஸ்தரைச் சந்தித்தோம். விடைபெறும்போது அவர் ஆவலோடு சொன்னது மணியான வார்த்தைகள் -
1960-1970 ஆண்டுகளின் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலகட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடுவோம்.
பொற்காலம் திரும்பட்டும்.

அடுத்தடுத்த திரையரங்குகளில் நடிகர்திலகம், மக்கள் திலகம் படங்கள் வெளியாகி, இருதரப்பு ரசிகர்களும் அடித்துக்கொள்ளும் கண்கொள்ளாக் காட்சியை மீண்டும் காண ஆவல் :lol: . (ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. நடிகர்திலகத்தின் படங்களுக்கு எம்ஜியார் ரசிகர்கள் தோரணம் கட்டுவதையும், அவர் படத்துக்கு இவரது ரசிகர்கள் கொடி கட்டுவதையும் பார்க்க முடிகிறது. ஆக, இவர்களின் பொது எதிரி புதுப்படங்கள்).

joe
31st May 2010, 12:36 PM
(ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. நடிகர்திலகத்தின் படங்களுக்கு எம்ஜியார் ரசிகர்கள் தோரணம் கட்டுவதையும், அவர் படத்துக்கு இவரது ரசிகர்கள் கொடி கட்டுவதையும் பார்க்க முடிகிறது. )

:o :D is it really happening ? :D

HARISH2619
31st May 2010, 01:35 PM
முரளி சார்,
தியேட்டர் நிகழ்வுகளை வழக்கம்போல் அருமையாக தொகுத்து தந்ததற்க்கு நன்றி.உங்களையெல்லாம் நினைத்தால் பெருமையாகவும் அதே நேரத்தில் சற்று பொறாமையாகவும் உள்ளது . இது போன்ற காட்சிகளை நேரில் கானும் வாய்ப்பு பெங்களூரில் இனி கிடைக்காது என்பதால்தான்.குமரேசன்பிரபு மனது வைத்தால் மா.நடராஜ்,செல்வகுமார்(கர்னாடக மன்ற தலைவர்கள்)போன்றவர்களிடம் பேசி இதேபோல் தூள் கிளப்பலாம்.முயற்சிப்பீர்களா குமரேசன் சார்?

ராகவேந்திரன் சார்,
படங்களுக்கு நன்றி.ஜோ சார் சொன்னது போல் கலர்படம் போல தெரிகிறதே எப்படி?

RAGHAVENDRA
31st May 2010, 10:48 PM
http://ntfans.blogspot.com/


:shock: In photos ,screen looks like color movie ..how ? :roll:

டியர் ஜோ மற்றும் ஹரீஷ்,
தங்களின் ஐயம் சரி. கருப்பு வெள்ளை பிலிம் ரோல் பிரிண்ட் எடுப்பதற்கு கிடைக்காத காரணத்தினால் கலர் பிலிமில் ஏதேனும் ஒரு வண்ணத்தைத் தழுவி பிரிண்ட் எடுக்கக் கூடிய வசதியைப் பயன் படுத்தி உயர்நத மனிதன் படத்திற்கு பிரதி எடுத்திருப்பதாக அரங்கில் விநியோகஸ்தர் கூறினார். அது குறிப்பாக கேவா கலர், டெக்னிக் கலர் படங்களுக்கு புதிய வகையில் வண்ணப் பிரதி எடுக்கப் படுகின்றன என்றும் அந்த தொழில் நுட்பமே இங்கும் பயன் படுத்தப் பட்டதாகவும் அவர் கூறினார். நாங்கள் கூட இது புதுமையாக உள்ளதே என வியந்தோம். ஆனால் அதே சமயம், பழைய கருப்பு வெள்ளை பிரதியின் நேடிவிடி இதில் அந்த அளவிற்கு பிரதிபலிக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் கூற வந்த கருத்துக்களும் நுண்ணிய விளக்கங்களும் மக்களை சரியான அளவில் போய் சேருமா என்பதும் ஐயமே.

ராகவேந்திரன்

gkrishna
1st June 2010, 01:03 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்/முரளி சார்/பம்மலர் சார் அவர்களுக்கு

ஒரு சிறு வேண்டுகோள் சென்னையில் எதாவது திரை அரங்கில் நம்மவர் படம் வெளியானால் அதை இந்த திரியில் சற்று முன்னர் தெரிவித்தால் என்னை போன்ற ரசிகர்களுக்கு மிகவும் உதவி ஆக இருக்கும்

நட்புடன் Gk

RAGHAVENDRA
1st June 2010, 04:02 PM
டியர் கிருஷ்ணாஜி
தங்களுடைய எண்ணங்கள் தான் நமது அனைவருடைய எண்ணமும். எங்களுக்கு தெரிந்த தகவல் அடுத்த விநாடியில் நமது ஹப்பிலும் நமது நடிகர் திலகம் இணைய தளத்திலும் பதியப் பட்டு விடும். எனவே தொடர்ந்து நமது இணைய தளத்தினையும் இத்திரியினையும் பார்வையிட்டு வாருங்கள். ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல் சென்னை மஹாலக்ஷ்மியில் அநேகமாக ஜூன் 4 அல்லது 11ம் தேதி வாக்கில் என்னைப் போல் ஒருவன் திரையிடப் படுகிறது. அதனைத் தொடர்நது இந்த வாரமோ அல்லது விரைவிலேயோ ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப் படுகிறது. நாம் அனைவரும் பெரும் திரளாக ஆதரவு தந்தால் மேலும் மேலும் படங்கள் வெளிவரத் துவங்கும். ஒரு விநியோகஸ்தர் குறிப்பி்ட்டது போல் 1960-70களின் பொற்காலம் திரும்பும்.

ராகவேந்திரன்

joe
1st June 2010, 06:23 PM
[tscii:2cdfa036c5]சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வரும் வெள்ளியன்று ‘தெனாலிராமன்’ :D [/tscii:2cdfa036c5]

sankara70
1st June 2010, 06:31 PM
NT yin Sivantha Mann shooting pothu Paris il NT ku Thamiz Changam varaverpu koduthathathaga paditha niyabaham. Ethum record irukiratha?

RAGHAVENDRA
1st June 2010, 09:17 PM
[tscii:dbe1a84401]சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வரும் வெள்ளியன்று ‘தெனாலிராமன்’ :D [/tscii:dbe1a84401]

Thank you, Joe Sir.

Raghavendran

groucho070
2nd June 2010, 06:56 AM
Trip down memory lane by our Mohanram sir. But imagine how this would have turned out :shock:

http://mohanramanmuses.blogspot.com/2010/06/down-memory-lane-nadigar-thilakam.html

From Left to right standing - Mahesh, Music Director, Yours truly,
G.Ramkumar and Director K.Subaash.

Around the late 1990s Sivaji films wanted to make a TV show on Nadigar Thilakam (NT).

This was tentatively titled "Naanum oru rasikan" and was to have been him reliving
his experiences with around 100 of his colleagues, seniors and even those who came later.

His thoughts on them, his roles with them and then we wanted to get reactions from each of them ( those available). He wanted to trace the trip from M.K.Thyagaraja Bhagavathar down to
the then present day.

Subaash , probably one of the few "friends" I have from this tinsel world, many like Prabhu and Ramkumar were friends before I became an actor, was excited to work with NT as his father Krishnan (Panju) was the one who introduced this legend in "Parasakthi" with that immortal first shot -"Success".

At a time when graphics had not grown his plan was to merge NT at home moving about when suddenly VO Chidambaram, Kattabomman, Parama sivan, prestige padmanabhan, barrister rajinikanth and several others keep walking past and to each of them NT reacts -
I was to have interacted with him and assisted Subaash with the research, script and editing.My good friend Mahesh was to have made the Music. For all of us it was the joy of working with the living legend.

In fact this helped me sit and discuss with him the list of people he wanted - the Producers, The Directors ,The Technicians ( all the crafts from Camera, Dance, Make up, Costume, writers and so on), His fellow actors and others whom he had enjoyed watching on screen - Olivier , Brando , Spencer Tracy , Paul Muni and many others up North including Prithviraj Kapoor etc. In fact we were wondering how to source footage from Hollywood films and the Royalty costs etc. You must remember the economy had not opened up as much as it is today.

Mahesh was toying with a medley of his songs , sometimes the old tune with new words and sometimes the old words with new tunes etc.....and one fully new tune.

The experiences he shared with us will live evergreen in our minds and the kind of respect he had for people like L.V.Prasad, Nagesh , M.R.Radha , Balaiah , Sridhar , APN , Chandrababu, ACT , His mentors P.A.Perumal and Subaash's father Krishnan , AVM , MGR ,the present CM Kalaignar, S.Balachander , Heeralal Master , Padmini, Kannamba , Manorama , Savithri to name just a few was really high .

We actually took up a list of 60 plus names to work with initially .

This was to have been either for Doordarshan or Sun TV - in those days DD was still in the big budget League.

Just reliving those moments brings tears, both of Joy and sorrow - Like he sang -
Naan azhudhukonde sirikkindren.

pammalar
2nd June 2010, 11:51 PM
நாளை (3.6.2010) வியாழக்கிழமை (ஒரு நாள் மட்டும்), சென்னை அமைந்தகரையில் உள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில், மூன்று காட்சிகளாக, கலைமகளின் அருள்வடிவமாகத் திகழும் நமது கலைக்குரிசிலின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

பிரம்ம புத்திரர் நாரதரையும், தெய்வப் புலவர் வித்யாபதியையும் தரிசிக்க பக்த கோடிகளே, திரண்டு வருக!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd June 2010, 01:29 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 29

கே: திரும்பவும் வெளியாகியுள்ள 'பராசக்தி' எப்படி நடை போடுகிறது? (சாந்தி கன்னியப்பன், மலேசியா)

ப: ராஜ நடை!

(ஆதாரம் : பொம்மை, பிப்ரவரி 1969)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd June 2010, 01:51 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 30

கே: ஸ்ரீதர், ஏ.பி.என்., கே.எஸ்.ஜி., மல்லியம் ராஜகோபால் முதலியோர் தமது லட்சியப் படங்களில் சிவாஜியை நடிக்கச் செய்வது ஏன்? (பெ.சுப்பண்ணன், ராமநாதபுரம்)

ப: லட்சியப் படங்களிலாவது நடிப்புத்தரம் உயர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால் இருக்கலாம்.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd June 2010, 02:41 AM
கலையுலக முதல்வர் டாக்டர் சிவாஜி அவர்களும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இணைந்து பணியாற்றிய திரைக்காவியங்கள் :

1. பராசக்தி(1952)

2. பணம்(1952)

3. திரும்பிப் பார்(1953)

4. மனோகரா(1954)

5. இல்லற ஜோதி(1954) [அனார்கலி - சலீம் ஓரங்க நாடகம் மட்டும்]

6. ராஜா ராணி(1956)

7. ரங்கோன் ராதா(1956)

8. புதையல்(1957)

9. குறவஞ்சி(1960)

10. இருவர் உள்ளம்(1963)

11. மாடி வீட்டு ஏழை(1981)

நாளை (3.6.2010), திரை இலக்கியத் திலகமாகத் திகழும் முதல்வர் கலைஞர் அவர்களின் 87வது பிறந்த நாள். ஆம், திராவிட சூரியனுக்கு 87வது உதயம்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd June 2010, 03:03 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 31

கே : இப்பொழுது சிவாஜிக்கும், ரவிச்சந்திரனுக்கும் தோற்றத்தில் வித்தியாசமே தெரியவில்லையே...? (எம்.எஸ்.விஸ்வநாதன், மாயூரம்)

ப: நடிப்பில் தெரிந்து விடுகிறதே...!

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

joe
3rd June 2010, 08:13 AM
விஜய் தொலைக்காட்சி வழங்கும் 'செவாலியே சிவாஜி விருதை' இவ்வாண்டு பெற்ற நடிகர் திலகத்தின் சீடர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களை வாழ்த்துவோம்.

RAGHAVENDRA
3rd June 2010, 11:38 AM
நிச்சயமாக. செவாலியே விருதினை ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விழாவிற்கு வரமுடியாத பட்சத்தில் அவர்கள் இல்லத்திற்கு சென்று அளிப்பது மரபாக வைத்துள்ளனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் தானே நேரில் சென்று பெற்றுள்ளது, நடிகர் திலகத்தின் பால் அவர் வைத்துள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் காட்டுகிறது.

பாராட்டுக்கள் ரஜனிகாந்த் அவர்களே,

ராகவேந்திரன்

joe
3rd June 2010, 12:09 PM
ராகவேந்திரா சார்,
விழாவுக்கு ரஜினிகாந்த் அவர்கள் வராததால் , பிரபுவும் ராம்குமாரும் ரஜினி வீட்டுக்கே சென்று வழங்கியதாக கேள்விப்பட்டேன்.

abkhlabhi
3rd June 2010, 12:09 PM
பெங்களூரில் சிவாஜி கணேசன் திரை இடப்படும் திரை அரங்கம் - நடராஜ், கினோ, ஸ்வஸ்திக், தேவி, லக்ஷ்மி , லாவண்யா முதலியவை தான் எனக்கும் என் நண்பர்களுக்கும் வெள்ளி , சனி மற்றும் சண்டே கோவிலாக இருந்தது. முதல் முன்று நாட்களும் சாயங்காலம் ஷோ கண்டிப்பாக செல்வோம். என் நண்பர்கள் ரமேஷ், நீலு, ஜகன், குரு , கிருஷ்ணமுர்த்தி, ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமுர்த்தி எங்களைவிட வயதில் பெரியவர். ஸ்ரீனிவாசன் TM படத்தை தொடர்து 25 தடவை பார்த்தவர். (இவர் மராதியன்). நீலு நடிகர் திலகத்தின் வெறியன். (gowaram படத்தை ௦ தடவைக்கு மேல் பார்த்தவன். அவருடைய பற்றிய தகவல் அனைத்தும் சேகரித்து வைத்தவன். இப்பொழுது எல்லாம் மிஸ்ஸிங். நானும், மற்றவர்கள் ரசிகர்கள் . பசுமையான நினைவுகள். வரவு இல்லாமல் செலவு செய்த அந்த நாட்கள் மிண்டும் வராதா ? அப்பொழுது பிரமசாரிகள் இப்பொழுது குடும்பம், மனைவி, மக்கள், கடமை. UM பாடல் தான் நினைவுக்கு வருகிறது. .................... பாதைகள் மாறினோம் , கடமையும் வந்தது கவலையும் வந்தது. நண்பர்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. பணம் இருக்கிறது. டைம் அண்ட் என்ஜாய் செய்ய நண்பர்கள் இல்லை. multiplex culture மற்றும் பழைய படங்களை போல் இப்பொழுது படங்கள் வருவதில்லை அதுவும் ஒரு காரணம்.

pammalar
3rd June 2010, 01:33 PM
தினமலர் (22.5.2010) திருச்சி பதிப்பில் வெளியாகியுள்ள செய்தி:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=85223766

தினமலர் (23.5.2010) எல்லா பதிப்புகளிலும் வெளியாகியுள்ள செய்தி:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=85223767

இச்செய்திகளை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

joe
3rd June 2010, 02:01 PM
பம்மலார், தினமலருக்கு புதிதாக சிவாஜி மீது அக்கறை வந்தது மகிழ்ச்சியே :) . நடிகர் திலகத்துக்கு சிலை வைத்த கலைஞரின் கவனத்துக்கு உரிய முறையில் எடுத்துச்செல்லப்பட்டால் அரசு சார்பில் மரியாதை பட்டியலில் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை .. பிரபுவோ ,ராம்குமாரோ ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றிவிடக்கூடிய காரியம் இது.

gkrishna
3rd June 2010, 03:34 PM
நன்றி திரு ராகவேந்தர் அவர்களே

நிச்சயமாக என்னை போல் ஒருவன் திரைப்படம் 6th சண்டே or 13th சண்டே அன்று சென்னையில் இருந்தால் நிச்சயம் நம்மவரை (மற்றும் நம் ரசிக கண்மணிகளையும்) சந்திக்க முயற்ச்சி செய்வேன் சிரிபொலி தொலைகாட்சியில் செவ்வாய் அன்று படித்தல் மட்டும் போதுமா ஒளி பரப்பினார்கள் சற்று இரைச்சல் ஆக இருந்தது நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாடலில் நடிகர் திலகத்தின் டான்ஸ் மற்றும் லிப்ஸ் movement அற்புதம் சற்று மாறுபட்ட மேக்கப் என் உடைய இரண்டு பெண்களும் படத்தில் சிவாஜி அவர்களை பார்த்து விட்டு கூறிய வார்த்தைகள் "சிவாஜி சற்று குண்டாக இருக்கிறார் ஆனால் எப்படி போனவாரம் ராஜ் டிவி இல் பார்த்த 'எங்கமாமா' படத்தில் ஒல்லியாக இருக்கிறார்" எப்படி திடீர் என்று நடிகர் திலகம் உடலை ஸ்லிம் ஆக்கினார்கள்

நட்புடன் GK

PARAMASHIVAN
3rd June 2010, 03:39 PM
Singam ondru nadakirathu paarungal

:notworthy: :notworthy: :notworthy:

http://vimeo.com/8473735

RAGHAVENDRA
3rd June 2010, 10:32 PM
பம்மலார் அவர்களின் பதிவுகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றன. தினசரி அவருடைய பதிவுகளைப் படித்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு நம்மை ஆளாக்கி விட்டார். வாழ்க.

மதுரையில் மிக விரைவில் - காலத்தால் அழிக்க முடியாத காவியம் - நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் ஜூபிடரின் தங்க பதுமை. இப் படத்தினைப் பற்றிய நினைவூட்டல் கட்டுரை ஹிந்து 04.06.2010 தேதியிட்ட இதழில் ... இணைப்பு இதோ -
http://beta.thehindu.com/arts/cinema/article445590.ece

ராகவேந்திரன்

Mahesh_K
4th June 2010, 01:24 PM
இன்று SPB க்கு பிறந்த நாள். நமது திரியின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள். அவர் NT க்கு பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்தது எது என்று யோசித்துப் பார்த்தேன். உடனே நினைவுக்கு வந்தது பட்டாக்கத்தி பைரவனின் "எங்கெங்ஙோ செல்லும் என் எண்ணங்கள்" தான்.

Link

http://www.videomeli.com/video/7GfcnpI6qmM/ilayaraja-hits-engengo-sellum-en-ennangalsuper-hit-song-from-our-maestro-isaignani-ilayaraja.html

Irene Hastings
4th June 2010, 01:57 PM
இன்று SPB க்கு பிறந்த நாள். நமது திரியின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள். அவர் NT க்கு பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்தது எது என்று யோசித்துப் பார்த்தேன். உடனே நினைவுக்கு வந்தது பட்டாக்கத்தி பைரவனின் "எங்கெங்ஙோ செல்லும் என் எண்ணங்கள்" தான்.

Link

http://www.videomeli.com/video/7GfcnpI6qmM/ilayaraja-hits-engengo-sellum-en-ennangalsuper-hit-song-from-our-maestro-isaignani-ilayaraja.html

திரு எஸ்.பி.பிக்கு மிகவும் பெருமை அளித்த பாடல் பொட்டு வைத்த முகமோ !
அய்யகோ. இந்த நன்றியில்லாத உலகம் இதை மறந்து விட்டதே :twisted:

joe
4th June 2010, 02:24 PM
திரு எஸ்.பி.பிக்கு மிகவும் பெருமை அளித்த பாடல் பொட்டு வைத்த முகமோ !
அய்யகோ. இந்த நன்றியில்லாத உலகம் இதை மறந்து விட்டதே :twisted:

பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருட்டு -ன்னு நினைச்சுக்குமாம் என்பதற்கு இதுவே சாட்சி.

நடிகர் திலகம் திரியில் எஸ்.பி.பி-க்கு பிறந்தநாள் வாழ்த்தும் சொல்லி அவர் மனதில் தோன்றும் பாடலை மகேஷ் சொல்கிறார்.

உடனே ஏதோ எல்லா நடிகர் திலகம் ரசிகர்களும் கருத்து சொல்லி வேண்டுமென்றே 'பொட்டு வைத்த முகமோ' பாடலை நிராகரித்து விட்டது போல இவர் ஏன் இப்படி கொதிக்கிறாரோ தெரியவில்லை ? :evil: .நடிகர் திலகம் திரியில் எத்தனையோ முறை 'பொட்டு வைத்த முகமோ' பாடலைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டுக்களும் விவாதங்களும் நடந்ததை படித்துப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் .. சும்மா வந்து 'அய்யகோ' என்றால் என்ன அர்த்தம் ? :huh:

மேலும் , 'பொட்டு வைத்த முகமோ' பாடல் எஸ்.பி.பி-க்கு பெருமை அளித்த பாடல் என்றால் அதற்கு எஸ்.பி.பி தானே நன்றி சொல்ல வேண்டும் ? ஏன் உலகத்தை இழுக்கிறார்? :roll:

PARAMASHIVAN
4th June 2010, 02:30 PM
happy 64th birthday to the genius Thiru Dr.SPB sir, SPB gaaru :notworthy:

groucho070
4th June 2010, 02:47 PM
Nowadays I find myself listening to latter days NT/SPB songs.

1. Asai theera pesavendum unnidattil (Ratta Paasam)
2. Rajatti Varunggadi (Tirusoolam)
3. Poopola Un Punnagaiyil (Kavariman)
4. Kaalam maaralam (Vazhkai)
5. Devathai Oru Devathai (Pattakathi Bairavan - Is this for NT? I forgot).

Edit. Not to mention, Thirutheeril Varum silayoo...

PARAMASHIVAN
4th June 2010, 02:59 PM
Nowadays I find myself listening to latter days NT/SPB songs.

1. Asai theera pesavendum unnidattil (Ratta Paasam)
2. Rajatti Varunggadi (Tirusoolam)
3. Poopola Un Punnagaiyil (Kavariman)
4. Kaalam maaralam (Vazhkai)
5. Devathai Oru Devathai (Pattakathi Bairavan - Is this for NT? I forgot).

Edit. Not to mention, Thirutheeril Varum silayoo...

Grouch na

How can you forget

Jamuna nathi engE rathai mugam engE _ Gowravam
Ellorum padungal nal vazhthu koorungazh _ Shivaji sir, Kr.Vijaya maam (cant remember the film, was it unnai vaazha vaipEn , staring* Super*)
Appa ennappa - Anbulla appa

groucho070
4th June 2010, 03:02 PM
Raghu, I consider Yamuna Nathi as early NT/SPB. I am talking about the ones later than, say, after 1977/78. A big NO to Anbulla Appa song though :D Ellorum Padunggal doesn't have that bite.

Now, my mental music player is playing Rajatti Padunggadi...the rukkururukkururukku...part is looping....

PARAMASHIVAN
4th June 2010, 03:07 PM
ok, how about

Viduthali - Raajaa

Jalli katu - Hey raajah ondranum indru

PARAMASHIVAN
4th June 2010, 03:08 PM
how about 'Annan oru kovil endral thangai oru geetham andrO' which film is that from, I have seen that, it had Jaiganesh as well

what a song by the genius :notworthy:

groucho070
4th June 2010, 03:10 PM
You mean Rajavee Raajaa in Viduthalai? I hate that song :evil: Also, any song in that stupid movie (only Rajini and NT watchable, other than that :hammer: )

The Jallikattu song is notable only for pairing of SPB and Mano, mattabadi there's nothing much. :)

PARAMASHIVAN
4th June 2010, 03:11 PM
Yengengo Sellum - patakathi bhairavan

PARAMASHIVAN
4th June 2010, 03:12 PM
You mean Rajavee Raajaa in Viduthalai? I hate that song :evil: Also, any song in that stupid movie (only Rajini and NT watchable, other than that :hammer: )

The Jallikattu song is notable only for pairing of SPB and Mano, mattabadi there's nothing much. :)

:rotfl: sorry mudiyala :rotfl:

groucho070
4th June 2010, 03:12 PM
what a song by the genius :notworthy:Credit largely goes to MSV. Song title is the movie title. Nice song too. Okay, we are chatting in NT thread, better give way to others.

PARAMASHIVAN
4th June 2010, 03:14 PM
what a song by the genius :notworthy:Credit largely goes to MSV. Song title is the movie title. Nice song too. Okay, we are chatting in NT thread, better give way to others.

I think the MD was shanker Ganesh, not MSV I am sure !

mr_karthik
4th June 2010, 05:06 PM
what a song by the genius :notworthy:Credit largely goes to MSV. Song title is the movie title. Nice song too. Okay, we are chatting in NT thread, better give way to others.

I think the MD was shanker Ganesh, not MSV I am sure !
தயவு செஞ்சு யாராவது 'அண்ணன் ஒரு கோயில்' பட டைட்டில் ரீலை youtube-ல இருந்தா இங்கே போடுங்க.

அதுல கொட்டை எழுத்தில் 'இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்' அப்படீன்னு வர்ரதைப் பார்த்த பின்பாவது அண்ணன் பரமு தெரிஞ்சுக்கட்டும்.

PARAMASHIVAN
4th June 2010, 05:11 PM
what a song by the genius :notworthy:Credit largely goes to MSV. Song title is the movie title. Nice song too. Okay, we are chatting in NT thread, better give way to others.

I think the MD was shanker Ganesh, not MSV I am sure !
தயவு செஞ்சு யாராவது 'அண்ணன் ஒரு கோயில்' பட டைட்டில் ரீலை youtube-ல இருந்தா இங்கே போடுங்க.

அதுல கொட்டை எழுத்தில் 'இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்' அப்படீன்னு வர்ரதைப் பார்த்த பின்பாவது அண்ணன் பரமு தெரிஞ்சுக்கட்டும்.

neenga thaan nijayama enaku anNan naa illa :notthatway:

Perhaps it was MSV :oops:

mr_karthik
4th June 2010, 05:23 PM
இன்று SPB க்கு பிறந்த நாள். நமது திரியின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள். அவர் NT க்கு பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்தது எது என்று யோசித்துப் பார்த்தேன். உடனே நினைவுக்கு வந்தது பட்டாக்கத்தி பைரவனின் "எங்கெங்ஙோ செல்லும் என் எண்ணங்கள்" தான்.

Link

http://www.videomeli.com/video/7GfcnpI6qmM/ilayaraja-hits-engengo-sellum-en-ennangalsuper-hit-song-from-our-maestro-isaignani-ilayaraja.html

திரு எஸ்.பி.பிக்கு மிகவும் பெருமை அளித்த பாடல் பொட்டு வைத்த முகமோ !
அய்யகோ. இந்த நன்றியில்லாத உலகம் இதை மறந்து விட்டதே :twisted:

ஓகோ.... திரு மகேஷ் தனக்குப்பிடித்த எஸ்.பி.பி.யின் பாடல் 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்' என்று சொன்னதினால், உடனே உலகம் நன்றி கெட்டதாகி விடுமா..?

'பொட்டுவைத்த முகமோ' பாடலின் சிறப்பைப் பற்றி சுமதி என் சுந்தரி விமர்சனத்தில் சாரதா எழுதியிருப்பதை இந்த இணைப்பில் பார்க்கலாம்...

http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743

Mahesh_K
4th June 2010, 05:31 PM
NT ரசிகர் ஒருவர் கொடுத்த தகவல். 70களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( போஸ்ட் கார்டில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.

10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம்.

இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மற்றும் சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க" இரன்டும் தானாம். இவை இரண்டுமே NT + S.P.B யின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1983க்குப் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சக்தி குறைக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கேட்பது நின்றுவிட்டது.

ஒரு உபரி தகவல் - இதே நிகழ்ச்சியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த மற்றொரு பாடல் இளையராஜா இசையமைத்த "ஓரம்போ..ஓரம்போ" என்ற பாடல். அதாவது T.M.S அவர்களால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை ( between Ilayaraaja and TMS) ஏற்படுத்திய பாடல்.

RAGHAVENDRA
4th June 2010, 06:50 PM
இலங்கை வானொலியில் அதிக வாரங்கள் முதலிடத்தில் வந்த பாடல் என்ற பெருமையைப் பெற்றது, நீயா படத்தில் வரும் நான் கட்டில் மேலே என்ற பாடலே. பல வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலேயே இடம் பிடித்தது மட்டுமல்ல, படம் வெளியாகி பல வாரங்களுக்கு - ஏன் மாதங்கள் என்றும் சொல்லலாம் - பிறகே இதன் எதிரொலியாக, சென்னை வானோலியில் இப்பாடல் ஒலிபரபப்பட்டதாக நினைவு. அது வரை ஒரே ஜீவன் பாடல் தான் சென்னை வானொலியில் ஒலிபரப்பப் பட்டது.

சங்கிலி படத்தில் நல்லோர்கள் பாடல் மீக நீண்ட வாரங்களுக்கு தொடர்ந்து முதல் இடத்திலேயே இருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். இப்பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். ஆவார்.

ராகவேந்திரன்

rangan_08
4th June 2010, 06:52 PM
தியேட்டர் அமைந்திருக்கும் ரோடு [Brickline ரோடு?]

That's actually brick kiln road.

Oru kaalathil sengal soolai irundha idam. :)

SuraTheLeader
4th June 2010, 07:17 PM
Hi All,
I joined this HUB last month.
But this is the first time I m posting in NT's Thread.
I come from a family where all the members in my family are NT SIVAJI's Fans.
My Father is a Die-Hard fan of Great Sivaji sir.
He used to tell me that he will go to the first show and wouldnt get tickets.So he ll wait in the Theatre and get ticket 4 the next show and go late to home where he used to get beatings from my Grand-Father for turning up late :lol: .
In my Childhood I like mostly MGR movies [songs,Sword Fight etc.]But when I got matured I statted loving sivaji sir.What a Versatile Performer [No need to say this...The World Knows it ].
My most Favourite Film is ' GOURAVAM ' --- BARRISTER RAJINIKANTH - Chanceless.
One day I saw his film MUDHAL THETHI and was crying 4 the whole day.Can the seniors here share few thing about that movie.
This movies suggests how SUICIDE is not a solution to any Problem.NT performance as an helpless Dad,Husband is simply great as always.Even K.Balachander has taken films on this issue :),But the Impact was lesser.
I m a Vijay fan as my UserId suggests,v r proud to say that in the current generation actors only VIJAY has acted along with ALL TIME GREAT NT SIVAJI GANESAN sir.

PARAMASHIVAN
4th June 2010, 07:20 PM
:shock:

joe
4th June 2010, 07:50 PM
SuraTheLeader,
Welcome to NT thread ..Very glad to know your affection on NT. It gives great pleasure when young generation talk about NT.

தொடர்ந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள் :D

joe
4th June 2010, 10:40 PM
[tscii:77e9f561dd]சிங்கை தொலைக்காட்சியில் இப்போது ‘தெனாலிராமன்’ பார்த்தேன். :D

மன்னனாக நடித்த என்.டி.ஆரின் குரல் அவருடையது தானா? :roll: [/tscii:77e9f561dd]

Murali Srinivas
5th June 2010, 12:41 AM
[tscii:0c699cac49]Sura,

Welcome and thanks for that piece on Mudhal Thethi. Like Joe said, I am very happy that youngsters talk about rare NT films. I had seen it long back and don't have much of a recollect now. May be Raghavender sir would be able to talk about it.

ஜோ,

என்.டி.ஆர். நடித்த அனைத்து தமிழ் படங்களுக்கும் அவருக்கு பின்னணிக் குரல்தான் பயன்படுத்தப்பட்டது. நீங்கள் கர்ணன் படத்தை நினைத்துக் கொண்டு கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அதிலும் அவருக்கு டப்பிங்தான்.

‘தெனாலிராமன்’ படத்தைப் பற்றி சொல்லுங்கள்.

அன்புடன்

<Dig

மகேஷ் & ராகவேந்தர் சார்,

இலங்கை வானொலியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த பாடல் சந்திரபோஸ் இசையில் வந்த மாம்பூவே இளம் மைனாவே [யேசுதாஸ், சுசீலா - படம் - மச்சானை பார்த்தீங்களா]

End Dig>[/tscii:0c699cac49]

RAGHAVENDRA
5th June 2010, 07:27 AM
டியர் சுறா,
தங்கள் தலைமுறையினரையும் தாண்டி மேலும் தொடரும் தலைமுறைகளையும் நடிகர் திலகம் சுண்டியிழுப்பார் என்பதில் ஐயமில்லை. தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் படங்கள் பாடங்கள். இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளையும் அவருடைய படங்கள் அலசியிருக்கும், அவற்றுக்கான தீர்வுகளும் சொல்லப் பட்டிருககும். இந்த முழுமுதற்காரணமே, அவருடைய படங்கள் பல தலைமுறைகளைத் தாண்டி நிற்கக் கூடியவை என்பதற்கான சான்றுகள்.

முதல் தேதியும் இப்படிப்பட்ட படமே. காலத்தால் அழியாத காவியம் எனப் படும் படங்களில் முதல் தேதிக்கு இடம். உண்டு.

சீரியஸான கதை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், இருந்த வேலை போனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் இவையனைத்தும் சொல்லப் பட்டிருக்கும். ஷட்டில், ஷப்ட்யூட் போன்ற வார்த்தைகளைப் பற்றி பேசக் கூடியவர்கள் அவற்றுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளக் கூடிய ஒரே இடம் நடிகர் திலகத்தின் படங்களே. குறிப்பாக முதல் தேதி. இப்படம் டி.வி.டி. மற்றும் வி.சி.டி. யில் வெளி வந்துள்ளது. நிச்சயம் அனைவரும் வாங்கிப் பார்க்க வேண்டிய படம். படத்தின் இறுதியில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கும் என்ற அளவுக்கு க்ளைமாக்ஸ் அமைக்கப் பட்டிருக்கும்.

இப்படத்தின் சிறப்பம்சம் இதுவரை வெளிவராத தகவலைக் கூற விரும்புகிறேன்.

நடிகர் திலகத்துக்குப் பின்னணி பாடல் பாடியுள்ளோர் பலர். அவர் திரைக்கு வந்த காலத்தில் எம்.எல்.வசந்தகுமாரி போன்று பல கர்நாடக இசைப் பாடகர்கள் திரையில் பின்னணி பாடியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் இசையரசர் எம்.எம். தண்டபாணி தேசிகர் ஆவார். அவருடைய நந்தனார் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றதாகும். எனக்கு தெரிந்து அவர் பின்னணி பாடியதாக நினைவில்லை. அவருடைய படங்களில் அவர் நடித்துப் பாடியது மட்டுமே தெரியும்.

அப்படிப் பட்ட பெருமைக்குரிய தண்டபாணி தேசிகர் அவர்கள் இப்படத்தில் நடிகர் திலகத்திற்காக பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் வகையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். நடிகர் திலகம் வேலை கேட்டு அலைந்து கிடைக்காமல் அல்லாடும் காட்சியில் ஒலிக்கும் இப்பாடல்.

மிகவும் அருமையான படம். மறு வெளியீட்டில் சென்னையில் சக்கைப் போடு போட்டது. நல்ல வசூல்.

தன் முதல் பதிவை முத்தான பதிவாய்த் தந்த சுறா அவர்களுக்கு நன்றி, இப்படத்தினைப் பற்றிப் பகர்ந்து கொள்ள வாய்ப்புத் தந்தமைக்கு.

முரளி சார்,
இலங்கை ரசிகர்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுடைய தேர்வு கணிக்க முடியாது. அதனுடைய பிரதிபலிப்பாகத் தான் பாடல்களின் முதலிடம். மச்சானைப் பார்த்தீங்களா பாடலும் அதே போல் தான். தங்களுடைய சுட்டலு்க்கு நன்றி.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
5th June 2010, 10:20 AM
பார்த்தால் பசி தீரும் படத்தில் இடம் பெற்ற உள்ளம் என்பது ஆமை என்ற பாடலைப் பற்றிய அலசல்
http://moonramsuzhi.blogspot.com/2010/03/blog-post_12.html

Irene Hastings
5th June 2010, 10:50 AM
[tscii:48bbfbfc35]<Dig

மகேஷ் & ராகவேந்தர் சார்,

இலங்கை வானொலியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த பாடல் சந்திரபோஸ் இசையில் வந்த மாம்பூவே இளம் மைனாவே [யேசுதாஸ், சுசீலா - படம் - மச்சானை பார்த்தீங்களா]

End Dig>[/tscii:48bbfbfc35]

முரளி அய்யா,

வணக்கம். நலமா. நான் கேள்விப்பட்டது என்னவென்றால் நிழல்கள் படத்தில் வரும் பொன்மாலை பொழுது தான் அதிக வாரஙகள் வந்ததாம் ! கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ! அதாவது வருடம் 1979-80-81 ?

Irene Hastings
5th June 2010, 10:55 AM
பார்த்தால் பசி தீரும் படத்தில் இடம் பெற்ற உள்ளம் என்பது ஆமை என்ற பாடலைப் பற்றிய அலசல்
http://moonramsuzhi.blogspot.com/2010/03/blog-post_12.html

நேற்று மனதோடு மனோ தொடரில் திரு மனோ இப்பாடலை பாடிக்காட்டினார். பாடும்போது சும்மா இல்லாமல் நடிகர்திலகத்தைபோல பாடுகிறேன் என்று நிறைய குரங்குதனங்களை செய்தது மனதை மிகவும் வாட்டியது. இப்போது எல்லாருமே சிவாஜியைபோல நடித்துவேண்டுமென்றே அவரை தாழ்த்துவது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.

gkrishna
5th June 2010, 03:50 PM
S .P பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் நடிகர் திலகம் நடித்த ராஜா திரைபடத்தின் "இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறு யாரு உன்னை தொடுவார் " பாடலை பற்றி யாருமே சொல்லவில்லையே அதே போல் பாட்டும் பரதமும் திரைபடத்தில் "மை சாங் இஸ் போர் யு " பாடலையும் சொல்லலாம்

நட்புடன்

gkrishna
5th June 2010, 03:52 PM
மேலும் அண்ணன் ஒரு கோயில் திரைபடத்தில் "நாலு பக்கம் வேடர் உண்டு நடுவிலே மான் இரண்டு காதல் இன்ப காதல் அம்மம்மா" என்ன ஒரு பாடல் பாலுவும் வாணியும் குரலின் இளமை இனிமை மறக்க முடியுமோ

நட்புடன் gk

pammalar
5th June 2010, 04:18 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 32

கே: அமெரிக்கா சென்ற நடிகர் திலகம் தங்களுக்கு (பேசும் படத்திற்கு) என்ன கொண்டு வந்தார்? (எம்.கோவிந்தசாமி, கல்கந்தை, காட்மோர்)

ப: "உலகிலேயே சிறந்த பத்திரிகைக்காரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்" என்று சொன்னாரே, அது போதாதா!

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1962)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th June 2010, 04:31 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 33

கே: சிவாஜி அவர்களையடுத்து நடிப்பில் ஒரு சகாப்தம் என்று யாரைக் கூறலாம்? (நெல்லை சுவாதி, சென்னை - 33)

ப: நெருங்கி வரக் கூட யாருமிருப்பதாகத் தெரியவில்லையே.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.10.1983)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th June 2010, 06:35 PM
பம்மலார், தினமலருக்கு புதிதாக சிவாஜி மீது அக்கறை வந்தது மகிழ்ச்சியே :) . நடிகர் திலகத்துக்கு சிலை வைத்த கலைஞரின் கவனத்துக்கு உரிய முறையில் எடுத்துச்செல்லப்பட்டால் அரசு சார்பில் மரியாதை பட்டியலில் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை .. பிரபுவோ ,ராம்குமாரோ ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றிவிடக்கூடிய காரியம் இது.

டியர் ஜோ சார்,

தங்களது கருத்துக்களை மனப்பூர்வமாக ஆமோதிக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th June 2010, 06:43 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 34

கே: சிவாஜிக்கு சிலை வைத்த முதல்வர் கருணாநிதி அவருக்கு மணிமண்டபம் கட்டுவாரா? (டி.கே.சங்கர், பசுபதிகோயில்)

ப: சிவாஜி மீது இன்றைய முதல்வர் கலைஞர் வைத்திருக்கும் மதிப்பு உணர்வுபூர்வமானது. நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவர் குறை இல்லாமல் நிறைவு செய்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-31 ஆகஸ்ட் 2006)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
5th June 2010, 07:44 PM
பம்மலார், தினமலருக்கு புதிதாக சிவாஜி மீது அக்கறை வந்தது மகிழ்ச்சியே :) . நடிகர் திலகத்துக்கு சிலை வைத்த கலைஞரின் கவனத்துக்கு உரிய முறையில் எடுத்துச்செல்லப்பட்டால் அரசு சார்பில் மரியாதை பட்டியலில் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை .. பிரபுவோ ,ராம்குமாரோ ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றிவிடக்கூடிய காரியம் இது.

டியர் ஜோ சார்,

தங்களது கருத்துக்களை மனப்பூர்வமாக ஆமோதிக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

டியர் ஜோ, பம்மலார் மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய கருத்துக்களிலிருந்து நான் சற்று மாறுபட வேண்டியுள்ளது. அன்புச் சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு அவர்கள் நடிகர்திலகத்தின் லட்சிய நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களைத் திறம்பட தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். படத்தயாரிப்பு என்பது லாபம் நஷ்டம் இரண்டையுமே சந்திக்கும் தொழில். அவர்களுக்குள்ள பல தொழில் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த நிறுவனங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருவதே மிகப் பெருமை வாய்ந்த விஷயமாகும். நமக்குத் தெரிந்த பல கலைஞர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப் பெரும் சாதனையாளர்கள், அவர்களின் வாழ்நாளுக்குப் பிறகு சரியான வாரிசுகள் இல்லாமலும் பேணுவோர் இல்லாமலும் சுவடற்றுப் போகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சிலர் வாரிசுகள் இல்லாமலோ, அல்லது இருக்கும் வாரிசுகளும் சொத்துகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கருத்து வேற்றுமை, குடும்பப் பிரச்னைகள் உண்டாதல் போன்ற பல காரணங்களினால் காலத்தின் வேகத்தில் கரைந்து போயுள்ளனர். அப்படி தந்தை வழி போற்றிப் பேணும் தனயன்களை அதுவும் தமிழ்த் திரையுலகில் விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் தலையாயதாய் அமைந்து இன்றும் நடிகர் திலகத்தின் புகழ் பாடிவரும் அவருடைய தனயன்களை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அதே சமயம் அனைத்துக்கும் அவர்களே செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது சரியானதாக இருக்காது என்பது என் தனிப்பட்ட எண்ணம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்திற்காக சிலை வைத்த கலைஞரின் அரசு நிர்வாகமே இதையும் எடுத்து செய்திருக்க வேண்டும். மற்ற அரசு செயல்முறைகளையெல்லாம் கலைஞர் சொல்லும் வரை இவர்கள் செய்யாமல் இருப்பார்களா அல்லது நிறைவேற்றாமல் இருக்கிறார்களா. இது முழுக்க முழுக்க அரசு இயந்திரம் முனைப்பெடுத்து செய்ய வேண்டிய வேலை. யாருக்காகவும் கேட்க வேண்டியதில்லை. முன்னர் சிலை வைத்த தலைவர்கள், கலைஞர்களுக்கெல்லாம் இவ்வாறு தான் நடந்துள்ளதா என்பது தெரியவில்லை. அரசாங்க அதிகாரிகள் கலையுணர்வோடும் நடிகர் திலகம் என்கின்ற மாமனிதரிடம் உள்ளன்போடும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு தானாக நடந்திருக்க வேண்டிய காரியம் இது.

அதற்கு மேலும் உந்துதல் தேவைப்பட்டால் இதை செய்ய வேண்டியது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகள் ஆகும். அந்த வகையில் இவற்றுக்கு உந்துதல் செய்ய வேண்டியவர்கள் தங்கள் பணியை துரிதப் படுத்தினால் இவை காலாகாலத்தில் நடக்கும்.

மேலும் நமக்கு மிக முக்கியமாக பல பணிகள் நடிகர் திலகத்தின் புகழ் சேர்க்க நடக்க வேண்டியுள்ளன. முக்கியமானது மணி மண்டபம். அப்படிப்பட்ட பெரிய பெரிய காரியங்களின் போது அவர்களின் உதவி நிச்சயம் தேவைப்படும். அப்போது கேட்காமலே முன்வந்து செய்யக் கூடியவர்கள் நடிகர் திலகத்தின் புதல்வர்கள்.

அன்புடன்,

ராகவேந்திரன்

pammalar
5th June 2010, 11:45 PM
டியர் ராகவேந்திரன் சார்,

இந்நானிலத்தில், நமது நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், நமது நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களுக்கு மட்டுமே இருக்கின்ற மாபெரும் விசேஷ சிறப்பு சக்திகள் (SPECIAL VETO POWERS), குறித்தே திரு.ஜோ அவர்கள் எழுதியுள்ளார். நானும் அதனை ஆமோதித்துள்ளேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th June 2010, 11:55 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 35

கே: நடிகர் திலகத்தின் வாரிசுகளான ராம்குமார் - பிரபு இடையே உறவும், ஒற்றுமையும் எந்த அளவுக்கு உள்ளது? (கே.இசக்கி பாண்டியன், தென்காசி)

ப: ராமர் - லட்சுமணரைப் போல் ஒருவர் மீது ஒருவர் பாச மழை பொழிகிற அளவுக்கு ஒற்றுமையான சகோதரர்கள்.

(ஆதாரம் : தினத்தந்தி, 16.10.2005, "குருவியார் சினிமா கேள்வி - பதில்" பகுதி)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th June 2010, 12:42 AM
HAPPY BIRTHDAY TO OUR SPB. MANY MORE HAPPY RETURNS!

Dear Mahesh Sir,

"Enghengo Sellum En Ennangal" is one of my all-time favourite number. Thanks a lot for this song link.

Regards,
Pammalar.

pammalar
6th June 2010, 12:52 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 36

கே: எஸ்.பி.பி.யின் இடத்தை உதித் நாராயண் பிடித்து விடுவாரா? (பி.முத்துகுமாரசாமி, காரைக்குடி)

ப: சிவாஜியின் இடத்தை வையாபுரி பிடித்து விடுவாரா?

(ஆதாரம் : குமுதம், 14.3.2005)

அன்புடன்,
பம்மலார்.

sankara70
6th June 2010, 11:06 AM
"azaki oruthi ilani vikkira kozumbu veethiyile " padal ad niraya thadavai Ilangai vanoliyil ketirukiren.

It was a joy listening to Ilangai vanoli-we the south TN people were fortunate in that sense.
I have heard Abdul Hameed's voice also, lot of times.

In the morning," pongum poompunal " was a daily songs programme.

Avargal pirantha nal vazthu solvathe azagu.

mr_karthik
6th June 2010, 11:23 AM
கே: எஸ்.பி.பி.யின் இடத்தை உதித் நாராயண் பிடித்து விடுவாரா? (பி.முத்துகுமாரசாமி, காரைக்குடி)

ப: சிவாஜியின் இடத்தை வையாபுரி பிடித்து விடுவாரா?

(ஆதாரம் : குமுதம், 14.3.2005)

அன்புடன்,
பம்மலார்.
actually, what 'Kumudam' editor wants to tell...?.

why he pull Shivaji to answer about SPB and Udhit..?

to create controvercial arguments...?.

Kumudam Q & A are not always good. sometimes only.

pammalar
6th June 2010, 01:31 PM
CHENNAI RENDEZVOUS

Thursday (3.6.2010) Mela at Muralikrishna : Saraswathi Sabatham

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=9194634

Happy Viewing,
Pammalar.

mohanraman
6th June 2010, 03:54 PM
This is what Asha Bhonsle tweeted.....

" I remember a Giant amongst men, a Honourable man, a Generous man, a Superstar, a Brother.. Actor Sivaji Ganeshan. Fond Memories. Goodnight !"

Thank you Asha Ji for this memory......

mohanraman
6th June 2010, 03:56 PM
Vegunaatlakal aagiyum, ingu nadappadhai nanbar murali srinivas moolam aridhu kodu dhaan irukkiren.....meendum sandhikkum varai - vaazhga NT pugazh.

RAGHAVENDRA
6th June 2010, 06:23 PM
டியர் மோகன்ராமன் சார்,
படிக்க வேண்டும் உங்கள் பதிவு மோகன் ராமய்யா
படிக்க படிக்க குளிரும் எங்கள் உள்ளம் தானய்யா...
(தாயில்லாப் பிள்ளை பாடல் மெட்டில் படிக்கவும் )

மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் இங்கு வந்து நடிகர் திலகத்துடனான தங்கள் அனுபவங்களைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ராகவேந்திரன்

J.Radhakrishnan
6th June 2010, 10:39 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 34

கே: சிவாஜிக்கு சிலை வைத்த முதல்வர் கருணாநிதி அவருக்கு மணிமண்டபம் கட்டுவாரா? (டி.கே.சங்கர், பசுபதிகோயில்)

ப: சிவாஜி மீது இன்றைய முதல்வர் கலைஞர் வைத்திருக்கும் மதிப்பு உணர்வுபூர்வமானது. நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவர் குறை இல்லாமல் நிறைவு செய்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-31 ஆகஸ்ட் 2006)

அன்புடன்,
பம்மலார்.

டியர் பம்மலார் சார்,

இப்போது நாம் இருப்பது 2010... இன்னும் இதற்க்கு முடிவு தெரியவில்லையே???

மிகுந்த ஏக்கத்துடன் ...........

groucho070
7th June 2010, 09:02 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 36

கே: எஸ்.பி.பி.யின் இடத்தை உதித் நாராயண் பிடித்து விடுவாரா? (பி.முத்துகுமாரசாமி, காரைக்குடி)

ப: சிவாஜியின் இடத்தை வையாபுரி பிடித்து விடுவாரா?

(ஆதாரம் : குமுதம், 14.3.2005)

அன்புடன்,
பம்மலார். :lol:

NOV
7th June 2010, 02:11 PM
9th SIVAJI GANESAN MEMORIAL ANNIVERSARY

Date: 23 July, 2010
Venue: Tan Sri KR Soma Auditorium, Wisma Tun Sambanthan, KL
Time 7.00pm

Tentative Program

Welcome address by Organizing Chairman

Address by President of Sivaji Ganesan Cultural Society Malaysia

Speech about Nadigar Thilagam Sivaji Ganesan - by Rajendran,
President, Tamil Writers Association

Musical Program - Popular songs from Sivaji Ganesan movies by prominent local artistes

Sathiavan Savithri Thaerukuthu by artiste Veerasingam and group

Q&A about Sivaji Ganesan ( attractive prizes to be won)

Admission: FREE

Light refreshments and snacks would be served.

Please keep the date 23rd July free for this event. Bring along ur parents and friends.

For further info contact - 016-6880455

Thanks

*EASHVARA LINGAM*
Sivaji Ganesan Cultural Society, Malaysia

groucho070
7th June 2010, 02:28 PM
:roll: I want re-screening of NT films here.

SuraTheLeader
7th June 2010, 04:12 PM
* Thanks Raghavendra sir for sharing some good information about 'MUTHAL THETHI'.
* I think only NT started the trend of doing comedy films followed by some serious/emotional films
* I do remember one of his comedy movie " GALATTA KALYANAM ".
* Generally they see chemistry between HERO/HERO-INE,But I m not sure which Hero-ine's chemistry works well with NT,But I m very fond of the chemistry betwwn sivaji sir and Nagesh.
* Few scenes which come to my mind immediately from that movie are :
சிவாஜி (to Nagesh) : சன்திரன்(Chandran) பெயருல இருக்குர அழகு கொஞம்மாவுது முகத் தில இருக்க குடாதா... :lol:
Nagesh (After seeing Jayalalitha for first time, to sivaji sir):
என்னடா அவ என்ன விட அழகா இருப்பானு சொன்ன, உன்ன விட அழகா இருக்கா (Pulling NT's legs)
This shows that even though NT was a super star,he allowed his co-artist to tease him on-screen without any ego.

* The more v get to know about him,the more v admire him,respect him.

Another scene between Nagesh/Manorama :
Manorama :" Naan Ippavum soldraen aangalaiyae adiyodu verukkiraen, aana ungalai thavira "
Nagesh : " enna thaviraya,appa naan yaru !? :lol: "

* The whole episode where they manage that small kid would be very funny
* The scenes involving Last BrideGroom { The Textile Shop Owner,I dont know his name } would also be very nice.

Few Sivaji/Nagesh Scenes which I enjoyed very much :
1.Of course, Tharumi's pulambal and Q&A between Tharumi and sivaperuman [ EVERGREEN CLASSIC ]
2. Even in " GOURAVAM ",after kannan separates from periyappa's house,he will come there to get his periyappa's old coat and blessings.Where he will see nagesh and nagesh will tease him.When his periyamma enters the scene he will pretend as if he was welcoming Kannan :notworthy: .

These r the scenes which come immediately to my mind.
Sir, can u share any other movies where this pair rocked,so that v can watch those movies and enjoy.

Thanks,

pammalar
7th June 2010, 06:25 PM
Dear Mr.Nov,

Thank you very much for the 9th SIVAJI GANESAN MEMORIAL ANNIVERSARY Information.

Dear SuraTheLeader,

A warm welcome to you to our NT thread.

The textile shopowner role in Galaatta Kalyaanam was played by Actor V.Gopalakrishnan. He is a nice stage & film actor. Who can forget his fine performance as Peter in Nenjirukkum Varai?.

Regarding NT-Nagesh Combo, the list is very big. And to name a few in that.....
Mannavan Vanthaanadi
Vasanthamaaligai
Thillaanaa Mohanaambaal etc....

Regards,
Pammalar.

mr_karthik
7th June 2010, 08:35 PM
These r the scenes which come immediately to my mind.
Sir, can u share any other movies where this pair rocked,so that v can watch those movies and enjoy.

Thanks,
சுறா அவர்களே வருக...

'சவாலே சமாளி'யில் பஞ்சாயத்து தேர்தலில் தோற்றால் சிவாஜியும், பகவதியும் பரஸ்பரம் என்ன செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் எழுதும் காட்சி.

அக்காட்சியில் நாகேஷின் யதார்த்த காமெடி நடிப்பை மிஞ்ச இன்னொருத்தன் பொறந்து வரணும். (சாத்தியமில்லை, மீண்டும் நாகேஷே வந்து பொறந்தால்தான் உண்டு).

நாகேஷ் போன்ற நகைச்சுவை மேதைகள் இருந்து கோலோச்சிய இடத்தில் இப்போது சில 'ரப்பர் வாயன்'கள். காலத்தின் கொடுமையா இது?.

RAGHAVENDRA
7th June 2010, 09:18 PM
அடேங்கப்பா, இந்தக் கால தொலைக் காட்சி சேனல்கள் பொது அறிவை வளர்க்கும் பாணியே தனி. விஞ்ஞானத்தை வளக்கப் போறேன்டி என்று கலைவாணர் அன்று பாடியதை இவர்கள் இப்படியெல்லாம் அர்த்தம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை அப்படி பாடியிருக்க மாட்டாரோ..

கெமிஸ்ட்ரி - நமக்குத் தெரிந்தது டெஸ்ட் ட்யூப், ப்யூரெட் பிப்பெட் போன்றவை
ஆனால் இந்தக் கெமிஸ்ட்ரி நடன நிகழ்ச்சிகளில் எப்படியெல்லாம் பொருள் தருகின்றன.

போதாக்குறைக்கு இப்பொழுது குழந்தைகளுக்குள்ளும் கெமிஸ்ட்ரியை போதிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஜோடி நம்பர் ஜூனியர் ...

பிசிக்ஸ் ... கேட்கவே வேண்டாம் ...

மேதமேடிக்ஸ் .. கமிஷன்கள் அலசப்படும் போது கணிதம் போதிக்கப் படுகின்றது

ஹிஸ்டரி ... கடந்த காலங்களின் ஆட்டமும் பாட்டமும் மறக்கடிக்கப் படுவது...

ஜியாக்ரபி ... பங்கேற்கும் போட்டியாளரின் சொந்த ஊரைப் பொறுத்தது...

இப்படிப்பட்ட அறிவியல் உலகத்தில் தொலைக்காட்சிகளின் போதனையில் பாடங்கள் மிக அருமையாக போதிக்கப் படுகின்றன...

வருங்கால தலைமுறைகள் ஓஹோ என வளரும் ...

என ஆசைப் படுவோம்.

இந்த கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை அன்பு நண்பர் சுறா அவர்கள் எழுதியதில் எழுந்த எண்ணங்களே இவை...

தாங்கள் எழுதியதில் பல படங்கள் இடம் பெறும்.. ஏன் நடிகர் திலகமும் நாகேஷும் இணைந்து நடித்த ஒவ்வொரு படமும் குறிப்பிடத் தக்கவை.

அன்புடன்,
ராகவேந்திரன்

joe
8th June 2010, 07:26 AM
நடிகர் திலகம் பற்றிய பல்சுவை தகவல்கள்
http://www.eegarai.net/-f18/--t933.htm

rangan_08
8th June 2010, 06:40 PM
My most Favourite Film is ' GOURAVAM ' --- BARRISTER RAJINIKANTH - Chanceless.


Welcome HOME :)

pammalar
8th June 2010, 08:07 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 37

கே: அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது சிவாஜி கணேசன் எதைக் கொண்டு வருவார்? (புருஷோத்தமன், செங்கல்பட்டு)

ப: பாரதத்தாய்க்குப் புகழ்மாலையையும், தமிழ்த்தாய்க்குப் பெருமையையும்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1962)

அன்புடன்,
பம்மலார்.