View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
kaveri kannan
12th April 2010, 12:04 PM
பம்மலார் அவர்களே
20 படங்களும் அருமை.
அரங்கில் அமர்ந்திருந்த உணர்வை அளித்தன.
அழியாது நம் நடிகர்திலகம் புகழ்!
படங்களுக்கு நன்றி பம்மலாரே!
rangan_08
12th April 2010, 06:38 PM
மெலொடி கிங் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், முதன்முதலில், நமது நடிகர் திலகத்திற்கு "நான் சொல்லும் ரகசியம்" திரைக்காவியத்தில் பின்னணி பாடினார். "கண்டேனே உன்னைக் கண்ணாலே, காதல் ஜோதியே" எனத் தொடங்கும் இந்த டூயட்
Thalaivar attagasama shorts-la varuvar :thumbsup:
HARISH2619
12th April 2010, 06:39 PM
திரு ராகவேந்தர் சார் & திரு பம்மல் சார்,
தங்கள் வர்னனை மற்றும் புகைப்படங்களால் படத்தை நேரில் பார்த்த உனர்வை ஏற்ப்படுத்தி விட்டீர்கள்.நன்றிகள் பல கோடி.
"வர்னனை திலகம்" முரளி சார் அவர்களின் பதிவை ஆவலோடு எதிற்பார்த்து காத்துகொன்டிருக்கிறோம்
rangan_08
12th April 2010, 06:46 PM
[tscii:3e871b1855]Sunday evening PASA MALAR turned out to be a great show. It was a GRAND GALA EVENT and I CANNOT HAVE ASKED FOR MORE !!! And, watching the film with RASIGA MANIGAL, Murali sir, Raghavendra sir & Pammalar was another reason for me to rejoice.
The theatre, both outside & inside, bore a festive look and the fans were literally uncontrollable. A few minutes before show time, they burst crackers & broke coconuts on the road. Quite similar to last week, the policemen found it difficult to control the anxious & cheerful crowd.
After a long time, I was seeing such a lively and blasting audience response inside the theatre. For every song, there was deafening whistle sound, applause and cheers. A part of the crowd went on top of the stage near the screen and started performing “ arathis “ and began to dance and cheer. Particularly, for the famous confrontation scene between NT & Gemini in the factory, the fans went berserk and brought the roof down. For that entire scene, which almost ran for about 5 minutes, I couldn’t hear a single piece of dialogue – such was the response!!! Throughout “ Malarndhum malaradha…”, the fans lit number of candles on the stage in a horizontal row besides doing “ arathis”. It was a very touching moment and I could say that for most part I had a blurred vision as my eyes were moist.
Gemini and B.S. Gyanam earned the wrath of fans whenever they uttered a word against NT. Pammalar’s comment was, “ In Karnan they used to abuse even Lord Krishna “ :D .
It was unbelievable and amazing to see the over whelming response for a black & white movie that was released in the 60’s ( date of release : 27-05-1961). Finally, when people began to leave the cinema hall, I saw a few ladies and even some gents wiping their eyes!!!
As usual, the die-hard fan, Ms. Girija was present for the occasion.
By and large, there was a considerable number of family audience including many youngsters. Seeing so many youngsters enjoying the film shattered all my apprehensions and worries about making the present generation aware about the greatness of NT. The needful has been done already.
YES ! OUR NADIGAR THILAGAM WILL CONTINUE TO LIVE FOREVER IN THE HEARTS OF MILLIONS AND MILLIONS OF FANS AND THERE IS NOT AN IOTA OF DOUBT ABOUT IT.
THREE CHEERS TO PASA MALAR :thumbsup: :clap: [/tscii:3e871b1855]
pammalar
12th April 2010, 09:36 PM
தங்களின் தொடர் பாராட்டுகளுக்கு பாசமிகு நன்றிகள் திரு.காவேரிக் கண்ணன்.
மிக்க நன்றி திரு.செந்தில்.
ராகவேந்திரன் சாரும், திரு.மோகனும் மீண்டும் அரங்கிற்கே - அந்த பொன் மாலைப் பொழுதிற்கே - அழைத்துச் சென்று விட்டார்கள். அவர்களோடும், முரளி சாரோடும், முரளி சாரின் உறவினரோடும் இக்காவியத்தைக் கண்டு களித்ததே ஒரு இனிய அனுபவம்.
திரு.டாக்,
பாராட்டுக்கு நன்றி! தாங்கள் கூறியுள்ள ஒவ்வொரு காட்சியிலும் மற்றும் இன்னும் அநேக காட்சிகளிலும் அரங்கமே ஆர்ப்பரித்து அலறியது, கதறியது. குறிப்பாக பாடல் காட்சிகளுக்கு பக்தர்கள் செய்த ஆரவாரங்களை அளவிடவே முடியாது. "எங்களுக்கும் கால்ம் வரும்" பாடலில் ஆர்ப்பரிக்கும் அடலேறுவாக அலறியது அரங்கம். "நெஞ்சில் ஒரு களங்கமில்லை, சொல்லில் ஒரு பொய்யுமில்லை, வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என்ற வரிகளுக்கு எழுந்த ஆர்ப்பரிப்புகளை, ஆரவாரங்களை வார்த்தைகளால் வருணிக்க இயலாது. நேரே பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும்.அவ்வளவு அட்டகாசம். அந்த ஒரு பாட்டிற்கே மஹாலட்சுமி தியேட்டரின் கூரை பிய்த்துக் கொண்டது போங்கள்! பாடலின் முடிவில் போலீஸ் அரங்கிற்குள்ளே வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். [முரளி சார் சொன்னது போல் வழக்கம் போல் போலீஸ் வந்து விட்டது]. "மக்களை ஏமாற்றாத ஒரே தலைவர், எங்கள் தலைவர் சிவாஜி, அவரது புகழ் வாழ்க!" என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. "பாட்டொன்று கேட்டேன்" பாடலில், பியானோ வாசிக்கும் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும் அம்சமான அப்ளாஸ்,அபாரமான ஆரவாரம். "மயங்குகிறாள் ஒரு மாது" பாடலுக்கு கேட்கவே வேண்டாம். பலத்த காகோஷம், ஆரவாரம். நடிகர் திலகத்திற்கு நடிப்பில் அடக்கி வாசிக்கத் தெரியாது எனக் கூறும் அறிவிலிகளுக்கு, அவரது பற்பல காவியங்களிலிருந்து எண்ணிலடங்கா காட்சிகளையும், ஏட்டிலடங்கா பாடல்களையும் கோடிட்டுக் காட்ட முடியும். அந்த வகையில் மிக முக்கியமானதொரு உதாரணம், "மயங்குகிறாள் ஒரு மாது" பாடல். எவ்வளவு ஸப்டுலாக செய்திருக்கிறார். ஸப்டில் நடிப்பு பற்றி கூரை மேல் ஏறிக் கூவுவோரெல்லாம் நடிகர் திலகத்திடம் பாடம் படிக்க வேண்டும். திரு.சோ அவர்கள் ஒரு முறையல்ல, ஒவ்வொரு முறையும் கூறுவார், "கேமராவுக்கு முன், சிவாஜி அவர்களுக்கு தெரியாத ஆக்டிங்கே இல்லை" என்று. எவ்வளவு கரெக்டான கணிப்பு. இக்கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. ["மயங்குகிறாள் ஒரு மாது" பாடலின் போது முரளி சார் ஒன்றை நினைவு கூர்ந்தார். ஒரு முறை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 'சிங்கம் வெட்கப்பட்டு யாரேனும் பார்த்ததுண்டா?! இந்தப் பாடலில் பாருங்கள்' என்று கூறியதை முரளி சார் சரியான தருணத்தில் நினைவில் பதித்தார்]. "மலர்ந்து மலராத" பாடலின் போது பக்தகோடிகள் எமோஷனலாகி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறியதை, அழுததைக் கண்ட அனைவரது கண்களும் குளமாகியது. கிளைமாக்ஸின் போது அரங்கமே அமைதி, பின்னர் கண்ணீர்க்கடலில் மூழ்கியது. நிறைவடைந்து வெளியே வரும் போது, அனைவரும் கண்களில் நீர்த்துளிகளுடன், கனத்த இதயத்துடன் அரங்கை விட்டு வெளியே வந்தனர்.விரைவில் பொன்விழாக் காணப் போகும் இக்காவியத்தின் நாயகனான நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியே இதுதானே!!!
மாலைக் காட்சி தொடங்குவதற்கு முன்னர் அரங்கிற்கு வெளியே நடந்தவற்றையும், காட்சியின் போது அரங்கினுள்ளே நிகழ்ந்தவற்றையும், ஏட்டில் பதிக்க, அருமை நண்பர் வர்ணனை வித்தகர் முரளி சார் அவர்கள் தமது வளமான வர்ணனைகளின் மூலம் தூள் கிளப்ப வருகிறார்.
ஓவர் டு முரளி சார்!!!
அன்புடன்,
பம்மலார்.
joe
12th April 2010, 09:40 PM
வர்ணனை வித்தகர் முரளி சார் அவர்கள் தமது வளமான வர்ணனைகளின் மூலம் தூள் கிளப்ப வருகிறார்.
விரைந்து வருக ! விருந்து தருக!
kaveri kannan
12th April 2010, 10:35 PM
திரு ரங்கன் அவர்களில் வர்ணனை தேன்..
நம் பம்மலார் வர்ணிப்பு பசும்பால்..
தேனும்பாலும் அருந்தினால் கண்களில் புன்கணீர் அரும்புமா என்ன?
அசத்திய ரசிகமணி நெஞ்சங்களுக்கு நன்றி..
---------------
வரும் சித்திரை முதல்நாள் கலைஞர் தொலைக்காட்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு
நடிகர்திலகத்தின் '' பணம்'' காட்சியளிக்கிறது.
இயக்கம் : கலைவாணர்
திரைக்கதை வசனம் : கலைஞர் மு கருணாநிதி
Murali Srinivas
13th April 2010, 01:15 AM
நமது அருமை நண்பர்கள் எல்லோரும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லி விட்ட பின் தனியாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன்.
சுவாமி அவர்கள் குறிப்பிட்டது போல நமது ரசிகர்களுக்கும் காவல் துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அது நேற்றும் தொடர்ந்தது. மாலைக் காட்சிக்கு முன்னரே வந்து விட்ட ரசிக உள்ளங்கள் வழக்கம் போல் போஸ்டருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சூடம் காண்பித்து ஒரு பட்டாஸ் வெடித்தவுடன் போலீஸ் வந்து விட்டது. தியேட்டருக்கு அருகாமையில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் திரு நிதின் கட்காரி அவர்கள் கொடியேற்ற வந்திருக்கிறார். ஆகவே பாதுகாப்பு காரணம் கருதி இங்கே பட்டாஸ் வெடிக்கக் கூடாது என்று தடுக்க ரசிகர்கள் கொந்தளிப்பானார்கள். சற்று நேரத்தில் பா.ஜ. கட்சியினர் அங்கே வெடி வெடிக்க இங்கே சூடு ஏறியது. உடனே கட்காரி கிளம்பி விட்டார். அவர் கார் அதை தொடர்ந்து பல வாகனங்கள் வந்தன. ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார். நமது கூட்டத்தின் காரணமாக நின்று நின்று சென்றன வாகனங்கள். பஸ்சிலிருந்த ஒருவர் இது பழைய படம்தானே என்று கேட்க ரசிகர் ஒருவர் எங்களுக்கு என்னிக்கும் இது புது படம்தான் என்று சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்தவர்கள் ஒரு 10000 வாலா சரத்தை கொளுத்த, அந்த ஏரியாவே சத்தத்தில் சின்னாபின்னமானது. எதிர் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வசிப்போர் அனைவரும் பால்கனியில் குவிந்து விட்டனர். பட்டாஸ் முடிந்தவுடன் சரமாரியாக கணேசருக்கு தேங்காய் உடைக்கப்பட்டன. குறைந்தது ஒரு 50 காய் உடைத்திருப்பார்கள். தெரு முழுக்க சில்லு தேங்காய். வெளியே ஆரவாரம் தொடர உள்ளே படம் தொடங்க நாங்கள் அரங்கில் நுழைந்தோம். வெளியே எந்த அளவிற்கு அலப்பறை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். என்னுடைய நண்பர் ஒருவர் [நமது சுவாமி, ஜோ வயதையொத்தவர்] சிவாஜி ரசிகர், தன்னை விட இளையவர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியில் நடந்த மாலை சார்த்துதல், சூட ஆராதனை, வாண வேடிக்கை போலீஸ் காவல் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மிரண்டு விட்டார்கள். படம் பார்க்க வந்தவர்கள் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள்.அவர்களால் நண்பரும் பார்க்கும் வாய்ப்பை
துறந்தார்.
நடிகர் திலகம் அறிமுக காட்சி. ஒரே ஆரவாரம். தங்கைக்கு அடிப்பட்டு விட்டது என்று தெரிந்து மேஸ்திரியிடம் போய்யா என்று சொல்வது, பிறகு கையெழுத்து போட மறைந்து மறைந்து வருவது, முதலாளியிடம் போய் பேசும் போது ஜெமினி சொல்வதை அபப்டியே பார்ப்பது இவை எல்லாவற்றிற்கும் கைதட்டல் இருந்துக் கொண்டே இருந்தது. ராகவேந்தர் சார் சொன்னது போல் சும்மா கத்தும் கூட்டம் இல்லை ரசனையுள்ள கூட்டம் என்பதற்கு சாட்சி உடனே கிடைத்தது. வெளியே வரும்போது நடிகர் திலகம் தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆட்டிக் கொண்டே வருவார். அதற்க்கெல்லாம் அப்படி ஒரு கைதட்டல். நீ முதலாளி கிட்டே பேசினது இது இல்லை ஆனா என் தங்கச்சியை காப்பாத்தினேன் சொன்ன பாரு அதுதான் இது என்ற வசனத்திற்கு எல்லாம் பெரிய ஆரவாரம்.
அடுத்து ஜெமினி வீடு தேடி வரும் சீன். ஆனந்தா அது சிரிச்சா நான் சிரிப்பேன். அது அழுதா ஐயையோ என்னாலே தாங்கவே முடியாது என்ற வசனத்திற்கும், இந்த உலகம் என்னை பத்தி கவலைப்படுதோ என்ற வசனத்திற்கும் சுயநலத்திலிருந்துதான் பொது நலமே பிறக்குது என்ற வசனத்திற்கு எல்லாம் ஒரே கைதட்டல்.
வந்தது மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் பாடல். அதிர ஆரம்பித்தது அரங்கு. ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட, திரையின் முன்னால் ரசிகர்கள் கூட, ஆரவாரம் ஆரம்பமானது.எவ்வளவு ரசனையான ரசிகர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு குறிப்பு. முதல் சரணத்தில் மாவிலை தோரணம் ஆடிட கண்டாள் என்ற வரிகளுக்கு வலது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவார், அதிர்ந்தது அரங்கு. அது போல் இரண்டாவது சரணத்தில் தங்கைக்கு கற்பனை கல்யாணம் முடிந்தவுடன் காலில் விழும் தங்கையை தூக்கி ஒரு கையால் அணிந்திருக்கும் கண்ணாடியை சற்றே மேலே தூக்கி கண்ணீர் துடைப்பார். இங்கே எழுந்தது கூட்டம். அது போல் மருமகள் கண்ணில் அன்பு மாமன் தெய்வம் கண்டான் என்ற போதும் கைதட்டல் பறந்தது.
பிறகு ஸ்ட்ரைக் காட்சி. வந்து தங்கையிடம் புலம்புவார். தங்கை இவர் கலந்து கொள்ளாவிட்டாலும் வேலை போயிருக்கும் என்பதை விளக்கியவுடன் வரும் முகபாவம், ஆயிரம் ரூபாய் என்று கேட்டவுடன் வரும் அதிர்ச்சி + ஆனந்தம் இவை எல்லாம் அடுத்து வரும் திருவிழாவிற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருந்தது.
சுவாமி சொன்னது போல் எங்களுக்கும் காலம் வரும் ஆரம்பமே அமர்க்களம். சின்னதாய் ஒரு சுற்று சுற்றி பாட தொடங்குவார். அப்போது ஆரம்பித்த ரகளை கூடி கூடி போனது. மேடையில் ஏறவிடாமல் தடுப்பதற்கே இரண்டு மூன்று பேர் வேண்டியிருந்தது. இதற்கிடையில் தீபம் வேறு. மேலே பால்கனியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் சூடத்தை கொளுத்தி [கையில்?] சுத்த, அவர் கையைப் பற்றியும், எரியும் சூடம் கிழே விழுந்தால் என்ன ஆவது என்ற பயமும் வந்தன. ஆனால் அவர் லாவகமாக அதை சுற்றி கிழே கைப்பிடி சுவரில் வைத்து அணைத்தார். பாடல் ஓட ஓட அதிகமாகி போன டெசிபல் லெவல் சுவாமி சொன்னது போல் நெஞ்சில் ஒரு களங்கமில்லை வரியில் ஆரம்பித்து வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை என்ற உச்சக்கட்ட வரிகளுக்கு டி.எம்.எஸ்-ன் குரலையும் தாண்டிய அலப்பறை- தெருவிற்கே கேட்டிருக்கும். எங்கள் தங்க ராஜாவை விட ஆர்ப்பாட்டம் அதிகம் என்று புரிந்தவுடன் போலீஸ் உள்ளே நுழைய,ரசிகர்கள் மேலும் ஆவேசமானார்கள். மன்றத்தினரும் மற்ற சிலரும் சேர்ந்து சமாதானப்படுத்த சிறிது அமைதி திரும்பியது.
அன்புடன்
(தொடரும்)
tac,
நீங்கள் எழுதியது சென்னை ரசிகர்களை உசுப்பி விட்டது என்று நினைக்கிறேன். தியேட்டரை ரெண்டு பண்ணி விட்டார்கள்.
அரங்கிற்கு வெளியில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவாஜி மன்றத்திலிருந்து பாசமலர் சாதனைகளை பற்றியும் 1961-ல் நடிகர் திலகத்தின் ஏனைய படங்களை பற்றியும் ஒரு நோட்டீஸ் [சாதனை தகவல் உபயம் நமது சுவாமி] கொடுத்தார்கள். சுவாரசியமானதாக இருந்த அதை பலரும் விரும்பி கேட்டு வாங்கி சென்றார்கள்
pammalar
13th April 2010, 03:16 AM
தேனும் பாலும் என வர்ணனைகளை வருணித்த தங்களது வரிகள், பதிவுகள் ஒவ்வொன்றும் தொடக்கத்திலிருந்தே தெவிட்டாத தெள்ளமுது. மிக்க நன்றி திரு.காவேரிக் கண்ணன்.
முரளி சார், ஸ்பெஷல் நன்றிகள்! நிஜமாகவே தூள் கிளப்பி விட்டீர்க்ள்.அடுத்த பதிவைக் காண ஆவல் மேலிடுகிறது.
இன்று (12.4.2010), வாழ்வியல் திலகத்தின் வணங்காமுடி (12.4.1957) திரைக்காவியத்திற்கு 54வது உதய தினம்.
அன்புடன்,
பம்மலார்.
joe
13th April 2010, 07:13 AM
ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார்.
:rotfl:
groucho070
13th April 2010, 07:18 AM
Raghavendra-sir, Mohan, Murali-sar :clap: I am consumed with jealousy, what to do. But your writings make up for it. :D
tacinema
13th April 2010, 08:56 AM
நமது அருமை நண்பர்கள் எல்லோரும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லி விட்ட பின் தனியாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன்.
சுவாமி அவர்கள் குறிப்பிட்டது போல நமது ரசிகர்களுக்கும் காவல் துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அது நேற்றும் தொடர்ந்தது. மாலைக் காட்சிக்கு முன்னரே வந்து விட்ட ரசிக உள்ளங்கள் வழக்கம் போல் போஸ்டருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சூடம் காண்பித்து ஒரு பட்டாஸ் வெடித்தவுடன் போலீஸ் வந்து விட்டது. தியேட்டருக்கு அருகாமையில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் திரு நிதின் கட்காரி அவர்கள் கொடியேற்ற வந்திருக்கிறார். ஆகவே பாதுகாப்பு காரணம் கருதி இங்கே பட்டாஸ் வெடிக்கக் கூடாது என்று தடுக்க ரசிகர்கள் கொந்தளிப்பானார்கள். சற்று நேரத்தில் பா.ஜ. கட்சியினர் அங்கே வெடி வெடிக்க இங்கே சூடு ஏறியது. உடனே கட்காரி கிளம்பி விட்டார். அவர் கார் அதை தொடர்ந்து பல வாகனங்கள் வந்தன. ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார். நமது கூட்டத்தின் காரணமாக நின்று நின்று சென்றன வாகனங்கள். பஸ்சிலிருந்த ஒருவர் இது பழைய படம்தானே என்று கேட்க ரசிகர் ஒருவர் எங்களுக்கு என்னிக்கும் இது புது படம்தான் என்று சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்தவர்கள் ஒரு 10000 வாலா சரத்தை கொளுத்த, அந்த ஏரியாவே சத்தத்தில் சின்னாபின்னமானது. எதிர் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வசிப்போர் அனைவரும் பால்கனியில் குவிந்து விட்டனர். பட்டாஸ் முடிந்தவுடன் சரமாரியாக கணேசருக்கு தேங்காய் உடைக்கப்பட்டன. குறைந்தது ஒரு 50 காய் உடைத்திருப்பார்கள். தெரு முழுக்க சில்லு தேங்காய். வெளியே ஆரவாரம் தொடர உள்ளே படம் தொடங்க நாங்கள் அரங்கில் நுழைந்தோம். வெளியே எந்த அளவிற்கு அலப்பறை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். என்னுடைய நண்பர் ஒருவர் [நமது சுவாமி, ஜோ வயதையொத்தவர்] சிவாஜி ரசிகர், தன்னை விட இளையவர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியில் நடந்த மாலை சார்த்துதல், சூட ஆராதனை, வாண வேடிக்கை போலீஸ் காவல் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மிரண்டு விட்டார்கள். படம் பார்க்க வந்தவர்கள் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள்.அவர்களால் நண்பரும் பார்க்கும் வாய்ப்பை
துறந்தார்.
நடிகர் திலகம் அறிமுக காட்சி. ஒரே ஆரவாரம். தங்கைக்கு அடிப்பட்டு விட்டது என்று தெரிந்து மேஸ்திரியிடம் போய்யா என்று சொல்வது, பிறகு கையெழுத்து போட மறைந்து மறைந்து வருவது, முதலாளியிடம் போய் பேசும் போது ஜெமினி சொல்வதை அபப்டியே பார்ப்பது இவை எல்லாவற்றிற்கும் கைதட்டல் இருந்துக் கொண்டே இருந்தது. ராகவேந்தர் சார் சொன்னது போல் சும்மா கத்தும் கூட்டம் இல்லை ரசனையுள்ள கூட்டம் என்பதற்கு சாட்சி உடனே கிடைத்தது. வெளியே வரும்போது நடிகர் திலகம் தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆட்டிக் கொண்டே வருவார். அதற்க்கெல்லாம் அப்படி ஒரு கைதட்டல். நீ முதலாளி கிட்டே பேசினது இது இல்லை ஆனா என் தங்கச்சியை காப்பாத்தினேன் சொன்ன பாரு அதுதான் இது என்ற வசனத்திற்கு எல்லாம் பெரிய ஆரவாரம்.
அடுத்து ஜெமினி வீடு தேடி வரும் சீன். ஆனந்தா அது சிரிச்சா நான் சிரிப்பேன். அது அழுதா ஐயையோ என்னாலே தாங்கவே முடியாது என்ற வசனத்திற்கும், இந்த உலகம் என்னை பத்தி கவலைப்படுதோ என்ற வசனத்திற்கும் சுயநலத்திலிருந்துதான் பொது நலமே பிறக்குது என்ற வசனத்திற்கு எல்லாம் ஒரே கைதட்டல்.
வந்தது மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் பாடல். அதிர ஆரம்பித்தது அரங்கு. ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட, திரையின் முன்னால் ரசிகர்கள் கூட, ஆரவாரம் ஆரம்பமானது.எவ்வளவு ரசனையான ரசிகர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு குறிப்பு. முதல் சரணத்தில் மாவிலை தோரணம் ஆடிட கண்டாள் என்ற வரிகளுக்கு வலது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவார், அதிர்ந்தது அரங்கு. அது போல் இரண்டாவது சரணத்தில் தங்கைக்கு கற்பனை கல்யாணம் முடிந்தவுடன் காலில் விழும் தங்கையை தூக்கி ஒரு கையால் அணிந்திருக்கும் கண்ணாடியை சற்றே மேலே தூக்கி கண்ணீர் துடைப்பார். இங்கே எழுந்தது கூட்டம். அது போல் மருமகள் கண்ணில் அன்பு மாமன் தெய்வம் கண்டான் என்ற போதும் கைதட்டல் பறந்தது.
பிறகு ஸ்ட்ரைக் காட்சி. வந்து தங்கையிடம் புலம்புவார். தங்கை இவர் கலந்து கொள்ளாவிட்டாலும் வேலை போயிருக்கும் என்பதை விளக்கியவுடன் வரும் முகபாவம், ஆயிரம் ரூபாய் என்று கேட்டவுடன் வரும் அதிர்ச்சி + ஆனந்தம் இவை எல்லாம் அடுத்து வரும் திருவிழாவிற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருந்தது.
சுவாமி சொன்னது போல் எங்களுக்கும் காலம் வரும் ஆரம்பமே அமர்க்களம். சின்னதாய் ஒரு சுற்று சுற்றி பாட தொடங்குவார். அப்போது ஆரம்பித்த ரகளை கூடி கூடி போனது. மேடையில் ஏறவிடாமல் தடுப்பதற்கே இரண்டு மூன்று பேர் வேண்டியிருந்தது. இதற்கிடையில் தீபம் வேறு. மேலே பால்கனியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் சூடத்தை கொளுத்தி [கையில்?] சுத்த, அவர் கையைப் பற்றியும், எரியும் சூடம் கிழே விழுந்தால் என்ன ஆவது என்ற பயமும் வந்தன. ஆனால் அவர் லாவகமாக அதை சுற்றி கிழே கைப்பிடி சுவரில் வைத்து அணைத்தார். பாடல் ஓட ஓட அதிகமாகி போன டெசிபல் லெவல் சுவாமி சொன்னது போல் நெஞ்சில் ஒரு களங்கமில்லை வரியில் ஆரம்பித்து வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை என்ற உச்சக்கட்ட வரிகளுக்கு டி.எம்.எஸ்-ன் குரலையும் தாண்டிய அலப்பறை- தெருவிற்கே கேட்டிருக்கும். எங்கள் தங்க ராஜாவை விட ஆர்ப்பாட்டம் அதிகம் என்று புரிந்தவுடன் போலீஸ் உள்ளே நுழைய,ரசிகர்கள் மேலும் ஆவேசமானார்கள். மன்றத்தினரும் மற்ற சிலரும் சேர்ந்து சமாதானப்படுத்த சிறிது அமைதி திரும்பியது.
அன்புடன்
(தொடரும்)
tac,
நீங்கள் எழுதியது சென்னை ரசிகர்களை உசுப்பி விட்டது என்று நினைக்கிறேன். தியேட்டரை ரெண்டு பண்ணி விட்டார்கள்.
அரங்கிற்கு வெளியில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவாஜி மன்றத்திலிருந்து பாசமலர் சாதனைகளை பற்றியும் 1961-ல் நடிகர் திலகத்தின் ஏனைய படங்களை பற்றியும் ஒரு நோட்டீஸ் [சாதனை தகவல் உபயம் நமது சுவாமி] கொடுத்தார்கள். சுவாரசியமானதாக இருந்த அதை பலரும் விரும்பி கேட்டு வாங்கி சென்றார்கள்
Raghavendra/pammalar/rangan,
Great Analysis of our one and only Paasa Malar.
முரளி,
நடிகர் திலகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க காவியத்தை முதல் 30 நிமிட படத்தை தான் முடித்து உள்ளீர்கள். இனி மேல் தான் படமே ஆரம்பம் ஆகபோகிறது. அதுவும் அவர் பணக்கார ராஜசேகர்-கா மாறி அவருடைய activities - mannerism மாறும் பொது - நோ சான்ஸ்.. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு NT மாதிரி ஒரு நடிகர் பிறக்க போவதில்லை. 3 மணி நேர படத்திற்கு தங்களிடமிருந்து இன்னும் at least 3 பகுதிகள் வரும் என நினைக்கிறேன்.
மதுரை சென்னையை உசுப்பி விட்டது ........... இதை போன்று தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் நமது சிம்ம குரோலோன் படங்கள் வரட்டும்.....
NT 1961 -இல் சாதனை படைத்த வருடம் ஆயிற்றே - Along with Paasa Malar, his Paava Manippu ran for silver jubilee in the same year. Two PAA movies ran for over 175 days in all major centers in TN. Additionally, there were other movies in the year ran for 100+ days.
Two things:
1. NT 1961 - சாதனை நோட்டீஸ் எங்கே ஸ்கேன் செய்து கொடுக்கவும்
2. Video of Sunday evening celebration - video இருந்தால் இங்கே கொடுக்கவும்
சென்னையை அலங்கரிக்க போகும் அடுத்த NT movie எது? மதுரையில் NT நியூஸ் என்ன?
Regards
abkhlabhi
13th April 2010, 10:39 AM
Dear Murali,Paamlar, Rangan, Tac, KK, Sharada Mada, and others,
உங்களுடைய பதிவுகளை படிக்கும் போது
பொறாமையாக இருக்கிறது என்னால் முடியவில்லையென்று.
அதே சமயம் பெருமையாக உள்ளது உங்களைப் போன்ற சிவாஜி (NT) ரசிகர்களின் நட்பு கிடைத்திருக்கிறது (through FH NT thread).
kaveri kannan
13th April 2010, 11:58 AM
கோலஞ்செய் நடிப்புவேழத்துக்கு
பாகும் பருப்பும் சேர்த்துப் படைக்கும்
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களே..
படிக்கப் படிக்க எத்தனை உணர்ச்சிப்பிரவாகம் எனக்குள்..
என் மனமார்ந்த நன்றி..
தொடருங்கள்..
saradhaa_sn
13th April 2010, 12:53 PM
டியர் ராகவேந்தர், பம்மலார், மோகன் மற்றும் முரளி...
உங்கள் நால்வரின் வர்ணனைகளும், பம்மலாரின் புகைப்படத்தொகுப்பும் வரலாற்று நாயகனின் பாசமலருக்கு மகாலட்சுமியில் கிடைத்த வரவேற்பை கண்முன் நிறுத்தின. முன்போல இருந்தால் முதல் ஆளாக நானும் திரையரங்கில் நின்றிருப்பேன். என்ன செய்வது... 'கனவில் நினையாத காலம் இடைவந்து பிரித்த கதை சொல்லவா?'.
ஆனாலும், என்னைப்போன்ற வரமுடியாத பலரது ஏக்கத்தை தீர்க்கும் வண்ணம் நீங்கள் நால்வரும் விழாவை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டிவிட்டீர்கள்.
இதற்கு 'நன்றி' என்ற வார்த்தையெல்லாம் ரொம்ப ரொம்ப சின்னது.
saradhaa_sn
13th April 2010, 01:04 PM
எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தந்து மகிழ்ந்தவர் எங்கள் அண்ணன் நடிகர்திலகம். அவரது ரசிகக் கண்மணிகளும், மொழியறியாத (பி.ஜே.பி.தலைவர்) கட்காரிக்கு மனமகிழ்ச்சியைத் தந்துள்ளனர், தங்கள் வாழ்த்துக்கோஷங்கள் மூலமாக.
'சென்னையில் எனக்கு எப்படிப்பட்ட வரவேற்பு தெரியுமா?' என்று வடக்கே சொல்லி மகிழ்வார். :D
P_R
13th April 2010, 01:30 PM
எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார். :rotfl:
sankara70
13th April 2010, 01:50 PM
[quote="tacinema
நான் மும்பை ஆரோர தியேட்டரில் ஞாயிறு காலை காட்சியில் "மலர்ந்தும் மலராத" பாட்டு காட்சியில் தியேட்டர் கதறி விட்டது.
Still, I feel our madurai fans will handsomely beat chennai fans.
regards[/quote]
Tac,
Are u from Mumbai?
I remember seeing Pasamalar screened in Arora, Mumbai in 90s
Enakku ninaivu therinju nan partha padam Pasa malar.
Appuram enga oorla tharai ticket la urkarnthu konjam friends udan evening show(azhudu konde) partha niyabakam
Intha padathukku eedu inai yethu undu
Thirai ulagile paasathai valartha padam endru annan solli irukar
Annan endru nam intha padathukku appurama than avarai azhaikirom.
Entha scenai viduvathu -Sivaji udan oru pullu(grass) nadicha kooda nalla nadikume
Sivaji intha padathil padi padiya munneruvathaka kathai-avarudaya nadai udai bhavam maruvathu arumai
Intha padathil naditha mathiri oru 5% yaravathu nadikka mudiyuma
Gemini-nalla modulation-oru scenela avarukkum NT kkum karuthu verubadu vandapuram-appao kooda avar NT ya vittu kudukkama
pesuvathaka oru katchi irukkum
Thangai Savithri-made for the role
MN rajam-also nalla role-NTs wife in the movie.
Padalgal Then-Kannadasan
Thangavelu-Saroja nalla comedy
PS Gnam ammaa-bayama irukku ippo ninaicha kooda
joe
13th April 2010, 02:09 PM
[tscii:cb9232c6f3]சிவாஜி வாரம் மற்றும் பாசமலர் அரங்கு நிறைந்த காட்சிகள் பற்றிய செய்திகள் பரவலாக அறியப்பெற்று மீண்டும் நடிகர் திலகத்தின் படங்கள் முதல் தர திரையரங்களிலும் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினரும் சென்று பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
சென்னையில் இருந்த போது 90களின் இறுதியில் சங்கம் திரையரங்கில் ‘தெய்வமகன்’ வெளியாகி அரங்கம் நிறைந்த மக்களோடு பார்த்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது 8-) [/tscii:cb9232c6f3]
RAGHAVENDRA
13th April 2010, 03:16 PM
டியர் ஜோ,
தங்களைப் போல் நம் அனைவருக்கும் தீராத ஆவல் முதல் தர திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே. ஆனால் அதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது.
நம் ரசிகர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மற்ற வகையான அளப்பரைகள் யாவருக்கும் மகிழ்வூட்டி அவர்களையும் ஈடுபடுத்தும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் தடைக்கல்லாக இருக்கும். திரையருகே சூடம் கொளுத்துவது மட்டும் நாம் சற்று தவிர்த்தால் நலம் என நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். இந்தக் காரணத்தால் முன்னணி திரையரங்குகளில் படம் திரையிடத் தயங்குவார்கள். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டால் அந்தத் தடையினையும் நாம் எதிர்கொள்ளலாம்.
மற்றபடி ஒரு முக்கியமான படம் நகரின் மையமான பகுதியில் ஒரு பிரசித்தி பெற்ற குளிர்சாதன திரையரங்கில் வெளிவரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. கூடிய விரைவில் தகவல்களை எதிர்பார்ப்போம்.
ராகவேந்திரன்
pammalar
13th April 2010, 05:08 PM
திருச்சி முருகன் திரையரங்கில், 9.4.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, நடிப்புலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" திரைக்காவியம் திரையிடப்பட்டு சக்கை போடு போட்டு வருகிறது.
திருநெல்வேலியில் உள்ள அருணகிரி (இளைய திலகத்தின் சின்ன தம்பி வெள்ளி விழா ஓடிய அரங்கு) திரையரங்கில், நேற்று (12.4.2010) திங்கள் முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
இத்தகவல்களை அளித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
rangan_08
13th April 2010, 06:58 PM
[tscii:b4c35c73dc]Thank you kaveri kannan, rakesh, tac, abkhlabhi & saradha mam.
The audience gave huge and excellent response for Mayangugiral oru maadhu song as they did for every other song. They shouted in joy when they saw NT in subtle and slightly romantic moves. We could have actually seen him blushing if it was a color film. :D
As pammalar said, Murali sir rightly recalled Vairamuthu’s quote, “சிங்கம் வெட்கப்பட்டுப் பார்த்திருக்கிறீர்களா? “ :thumbsup:
The best part comes towards the end of the song when NT slowly turns his sister’s photograph down on the table. Character analysis, character arc, mis en scene, plots, sub-plots etc., etc., etc., எல்லாத்துக்கும் அந்த காலத்துலயே base போட்டாச்சு.
In which film institute did these guys had training???
:notworthy: :notworthy: :notworthy:
[/tscii:b4c35c73dc]
rangan_08
13th April 2010, 07:01 PM
முன்போல இருந்தால் முதல் ஆளாக நானும் திரையரங்கில் நின்றிருப்பேன். என்ன செய்வது... 'கனவில் நினையாத காலம் இடைவந்து பிரித்த கதை சொல்லவா?'.
Oh !! :(
I pray that your wishes come true very soon.
pammalar
13th April 2010, 09:45 PM
Thank you very much Sister Sarada, Mr.Tac, Mr.Bala & also my sincere thanks to everyone.
Mr.Tac,
Here's the link through which you can view the Paasamalar Notice, prepared & distributed by Chennai Kodambakkam Kalaipoonga Sivaji Rasigar Mandram.
http://paasamalar69.webs.com/apps/photos/photo?photoid=78098083
Happy Viewing,
Pammalar.
kaveri kannan
14th April 2010, 12:59 AM
அன்பு பம்மலார் அவர்களே
திருச்சி, நெல்லை தித்திப்புச் சேதிகளுக்கும்
பாசமலர் சாதனைப் பதிவின் சுட்டி இணைப்புக்கும்
இரட்டிப்பு நன்றிகள்.
அன்பு சாரதா அவர்களே
மண்ணும் கடல்வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாத, பிரிக்க முடியாத
நம் - நடிகர்திலகம் உறவைப்
புத்துணர்ச்சியோடு நீங்கள் கொண்டாடும் காலம் வரும்..
அதைக் கண்டு மகிழ எங்களுக்கும் காலம் வரும்!
Murali Srinivas
14th April 2010, 01:10 AM
ஆவேசத்தின் முனையில் இருந்த ரசிகர்களை அவ்வப்போது அமைதிப்படுத்தும் பொறுப்பை யாரும் சொல்லாமலே தங்கவேலு எடுத்துக்கொண்டார். இந்த நேரத்திலும் ரசிகர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த அவர், எம்.சரோஜா மற்றும் M.R .சந்தானம் சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்தன. பிறகு நடிகர் திலகம் ஒரு தொழிலதிபர் ஆகி ஆங்கிலம் உட்பட பல்வேறு கலைகளையும் கற்று பியானோ வாசிக்கும் கைகளை காட்டியவுடன் இங்கே மீண்டும் பொங்கிய உணர்ச்சி அலைகள், அவர் கோட் சூட் அணிந்து படியில் டக் டக் என்று இறங்க ஓசை கூடி, சாவித்திரி கையில் வைத்திருக்கும் சூடத்தை அபப்டியே ஸ்டைலாக கண்ணில் ஒத்திக்கொண்டு, மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க என்று சொன்னவுடன் அப்படியே அந்த இடது கையை ஒரு நீட்டு நீட்டி சற்றே மணிக்கட்டை மடித்து வாட்சில் மணி பார்க்கும் போது அணை உடைந்து பாய்ந்தது. அப்படியே ஆபிஸ் சென்று காந்திஜியின் படத்திற்கு ரோஜா மலரை வைத்துவிட்டு சீட்டில் உட்காருவது வரை அது அடங்கவேயில்லை.
பிறகு ஜெமினி ஊருக்கு திரும்பி வருவது தங்கவேலுவிடம் விவரங்களை தெரிந்துக் கொள்வது என்ற காட்சி முடிந்தவுடன் மீண்டும் அலுவலக அறை. கே.டி.சந்தானத்துடன் பேசிக் கொண்டிருக்கும் ராஜசேகர். ஆனந்தன் என்ற பெயர் கேட்டவுடன் அந்த முகத்தில் வரும் துடிப்பு, வரச் சொல் என்று சொல்லி விட்டு கேடிஎஸ் இருப்பதனால் மனம் விட்டு பேச தயங்க அவர் சென்றவுடன் ஆனந்தா என்று கட்டி பிடித்தவுடன் மீண்டும் ஆரவாரம். கோட் பூட் போட்ருக்கேன்னு பாக்கிறியா அதெல்லாம் ஊருக்கு நம்ம இது போடலைனா கஞ்சன்னு சொல்லுவாங்க, இந்த வசனத்திற்கு பயங்கரமான கைதட்டல்கள் முழக்கங்கள் ஒலித்தன. ஜெமினி வேலை கேட்க அதை தவிர்க்க நினைக்கும் நடிகர் திலகத்தின் தர்மசங்கடமான பல்வேறு முகபாவங்கள் இவற்றையெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து பார்த்தது. அடுத்து வந்தது சாவித்திரியின் பிறந்த நாள் காட்சி.
ராதா உன் தோழிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே போ என்ற வசனத்தில் ஆரம்பித்து ஜெமினியை அடித்துவிட்டு கதவை திறக்க கேடிஎஸ் தடுக்க தடுக்க மீண்டும் அடிக்க முயற்சிக்கும் வண்ணமாக இடது தோளை சரித்து முட்டியை மடக்கி மோதிரத்தை வாயோடு சேர்த்து வைத்து கண்ணில் வெறியை காட்டும் அந்த போஸிற்கு காது செவிடாகும் கைதட்டல்.
அந்த உணர்வை அதிகப்படுத்துவது போல உடனே தொழிற்சாலை காட்சி. கத்தியை எடுத்து பென்சிலை சீவும் போது தொடங்கியது. எலிப்பொறியில் உணவை வைப்பது எலியின் பசியை போக்கவா, புற்றுக்கு வெளியே நாதம் இசைப்பது நாகத்தின் காதுகளை குளிர வைக்கவா எனும்போதெல்லாம் சிம்மகுரலோனின் ஒலியையும் விஞ்சும் வண்ணம் இங்கே ஆரவாரம். நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்து, Mr.Anandhan, I am the sole proprietor என்று அடுத்த வசனத்தை எல்லாம் யாரும் கேட்டிருக்கவே முடியாது. அது போல் I say no - விற்கும் விசில் பறந்தது. முரசு கொட்டு முழக்கமிடு- வில் ஆரம்பித்து now get out வரை யாரும் அடங்கவேயில்லை.
நடிகர் திலகம் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார் என்பதற்கு அடுத்த காட்சி ஒரு அற்புதமான உதாரணம். ஸ்ட்ரைக் செய்யும் ஜெமினியை கைது செய்ய போலீசிற்கு போன் செய்வார். இன்ஸ்பெக்டர் நான்தான் ராஜசேகர் பேசறேன் yes ராஜசேகர் என்று சொல்லிவிட்டு குட் மார்னிங் குட் மார்னிங் என்பார். ஒரு பெரும் தொழிலதிபர், ஊர் பெரிய மனிதர் பேசும்போது அரசாங்க அதிகாரிகள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மனதில் இருத்தி அதை திரையில் வெளிப்படுத்தும் பாங்கு -அற்புதம்.
அடுத்து வரிசையாக அலப்பறை காட்சிகள். நம்பியார் வீட்டு விருந்துக்கு செல்லும் நடிகர் திலகம். எம்.என்.ராஜத்தை கண்டவுடன் சிகரெட்டை கிழே போட்டுவிட்டு வணங்கும் பணிவு, பியானோவில் விரல்கள் விளையாட பாட்டொன்று கேட்டேன் பாடல். இந்த அளவிற்கு விசிலும் கைதட்டலும் இனி கேட்க முடியுமா என்கிற அளவிற்கு ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்.
அடுத்த காட்சியில் காமிரா மேலிருந்து பார்க்க வீட்டுக்குள்ளே ராஜ நடை நடந்து வருவார். தங்கச்சி தோட்டத்தில் ஆனந்தனோடு என்று கேட்கும்போதே சங்கரனின் கழுத்தை நெரிக்கும் நடிகர் திலகம். பிஸ்டலை கையில் எடுத்து தோட்டத்திற்கு போக யாருக்கும் எந்த வசனமும் கேட்கவில்லை. உன் அண்ணன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போது ஜெமினிக்கு விழுந்த லட்சார்ச்சனை இருக்கிறதே! பாவம். அந்த பிஸ்டலால் கண்ணீரை துடைக்கும் போதெல்லாம் தியேட்டருக்கே வெறி பிடித்தாற் போன்று இருந்தது. அடுத்த காட்சி தங்கை விரும்பியவனையே மனம் முடிக்கும் காட்சி. தன் அண்ணனுக்காக தன் வாழ்வின் ஆதாரமான காதலையே ஒரு தங்கை தியாகம் செய்யறானா அந்த தங்கைக்காக அந்த அண்ணன் என்ன வேணா செய்யலாம்மா என்ன வேணா செய்யலாம் என்னும் போது நிறையப் பேர் உணர்ச்சிவசப்பட்டனர்.
வாராய் என் தோழி பாடல் அடுத்து. இறுதி சரணம் மலராத பெண்மை மலரும் - இதில் ஆரம்பித்து இரண்டோடு மூன்று வளராதோ எனும் போது தலை குனிந்தவாறே சின்ன புன்னைகையுடன் நடிகர் திலகம் அந்த இடத்திலிருந்து நடந்து செல்ல இங்கே பிரித்து எடுத்து விட்டார்கள்.
அன்புடன்
(தொடரும்)
Murali Srinivas
14th April 2010, 01:33 AM
பாராட்டிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.
பாசமலர் நோட்டிஸை ஸ்கேன் செய்த சுவாமிக்கு நன்றி. அதை விட திருச்சியில் ஆண்டவன் கட்டளை, நெல்லையில் சிவகாமியின் செல்வன் என்ற செய்திகள் மிகுந்த மகிழ்வை கொடுத்தன.
tac,
1961-ன் சாதனைகளைப் பார்த்தீர்களா? இதில் கூட பாருங்கள் அந்த வருடம் சென்னையில் 50- நாட்களை தவற விட்ட ஒரே படம் மருத நாட்டு வீரன் நமது மதுரையில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. கேரளத்தில் 75 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது. மறு வெளியீடுகளில் வசூலை வாரிக் குவித்தது. நமது படங்களே நமது படங்களுக்கு போட்டியாக வந்திருக்காவிட்டால் பாசமலர் மதுரையிலும் திருச்சியிலும் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும். திண்டுக்கல் போன்ற நகரங்களில் 100 நாட்களை கடந்திருக்கும். பாலும் பழமும் மதுரையில் வெள்ளி விழா ஓடியிருக்கும்.
ஏப்ரல் 13 - தெய்வப்பிறவி பொன் விழா.
ஏப்ரல் 14 - பேசும் தெய்வம் 43 -ம் ஆண்டு நிறைவு விழா.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்
pammalar
14th April 2010, 03:31 AM
ஆண்டவனின் அவதாரமாக இப்பூவுலகில் அவதரித்த நமது நடிப்புலக மகானின் "தெய்வப்பிறவி" திரைக்காவியத்திற்கு இன்று (13.4.2010) பொன்விழா நிறைவு. இக்காவியம் இன்று 50 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து 51வது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது. இக்காவியத்தைப் பற்றிய தகவல்களுக்கு, புகைப்படங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்.
http://deivappiravi61.webs.com/
அன்புடன்,
பம்மலார்.
tacinema
14th April 2010, 09:03 AM
ஆவேசத்தின் முனையில் இருந்த ரசிகர்களை அவ்வப்போது அமைதிப்படுத்தும் பொறுப்பை யாரும் சொல்லாமலே தங்கவேலு எடுத்துக்கொண்டார். இந்த நேரத்திலும் ரசிகர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த அவர், எம்.சரோஜா மற்றும் M.R .சந்தானம் சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்தன. பிறகு நடிகர் திலகம் ஒரு தொழிலதிபர் ஆகி ஆங்கிலம் உட்பட பல்வேறு கலைகளையும் கற்று பியானோ வாசிக்கும் கைகளை காட்டியவுடன் இங்கே மீண்டும் பொங்கிய உணர்ச்சி அலைகள், அவர் கோட் சூட் அணிந்து படியில் டக் டக் என்று இறங்க ஓசை கூடி, சாவித்திரி கையில் வைத்திருக்கும் சூடத்தை அபப்டியே ஸ்டைலாக கண்ணில் ஒத்திக்கொண்டு, மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க என்று சொன்னவுடன் அப்படியே அந்த இடது கையை ஒரு நீட்டு நீட்டி சற்றே மணிக்கட்டை மடித்து வாட்சில் மணி பார்க்கும் போது அணை உடைந்து பாய்ந்தது. அப்படியே ஆபிஸ் சென்று காந்திஜியின் படத்திற்கு ரோஜா மலரை வைத்துவிட்டு சீட்டில் உட்காருவது வரை அது அடங்கவேயில்லை.
பிறகு ஜெமினி ஊருக்கு திரும்பி வருவது தங்கவேலுவிடம் விவரங்களை தெரிந்துக் கொள்வது என்ற காட்சி முடிந்தவுடன் மீண்டும் அலுவலக அறை. கே.டி.சந்தானத்துடன் பேசிக் கொண்டிருக்கும் ராஜசேகர். ஆனந்தன் என்ற பெயர் கேட்டவுடன் அந்த முகத்தில் வரும் துடிப்பு, வரச் சொல் என்று சொல்லி விட்டு கேடிஎஸ் இருப்பதனால் மனம் விட்டு பேச தயங்க அவர் சென்றவுடன் ஆனந்தா என்று கட்டி பிடித்தவுடன் மீண்டும் ஆரவாரம். கோட் பூட் போட்ருக்கேன்னு பாக்கிறியா அதெல்லாம் ஊருக்கு நம்ம இது போடலைனா கஞ்சன்னு சொல்லுவாங்க, இந்த வசனத்திற்கு பயங்கரமான கைதட்டல்கள் முழக்கங்கள் ஒலித்தன. ஜெமினி வேலை கேட்க அதை தவிர்க்க நினைக்கும் நடிகர் திலகத்தின் தர்மசங்கடமான பல்வேறு முகபாவங்கள் இவற்றையெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து பார்த்தது. அடுத்து வந்தது சாவித்திரியின் பிறந்த நாள் காட்சி.
ராதா உன் தோழிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே போ என்ற வசனத்தில் ஆரம்பித்து ஜெமினியை அடித்துவிட்டு கதவை திறக்க கேடிஎஸ் தடுக்க தடுக்க மீண்டும் அடிக்க முயற்சிக்கும் வண்ணமாக இடது தோளை சரித்து முட்டியை மடக்கி மோதிரத்தை வாயோடு சேர்த்து வைத்து கண்ணில் வெறியை காட்டும் அந்த போஸிற்கு காது செவிடாகும் கைதட்டல்.
அந்த உணர்வை அதிகப்படுத்துவது போல உடனே தொழிற்சாலை காட்சி. கத்தியை எடுத்து பென்சிலை சீவும் போது தொடங்கியது. எலிப்பொறியில் உணவை வைப்பது எலியின் பசியை போக்கவா, புற்றுக்கு வெளியே நாதம் இசைப்பது நாகத்தின் காதுகளை குளிர வைக்கவா எனும்போதெல்லாம் சிம்மகுரலோனின் ஒலியையும் விஞ்சும் வண்ணம் இங்கே ஆரவாரம். நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்து, Mr.Anandhan, I am the sole proprietor என்று அடுத்த வசனத்தை எல்லாம் யாரும் கேட்டிருக்கவே முடியாது. அது போல் I say no - விற்கும் விசில் பறந்தது. முரசு கொட்டு முழக்கமிடு- வில் ஆரம்பித்து now get out வரை யாரும் அடங்கவேயில்லை.
நடிகர் திலகம் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார் என்பதற்கு அடுத்த காட்சி ஒரு அற்புதமான உதாரணம். ஸ்ட்ரைக் செய்யும் ஜெமினியை கைது செய்ய போலீசிற்கு போன் செய்வார். இன்ஸ்பெக்டர் நான்தான் ராஜசேகர் பேசறேன் yes ராஜசேகர் என்று சொல்லிவிட்டு குட் மார்னிங் குட் மார்னிங் என்பார். ஒரு பெரும் தொழிலதிபர், ஊர் பெரிய மனிதர் பேசும்போது அரசாங்க அதிகாரிகள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மனதில் இருத்தி அதை திரையில் வெளிப்படுத்தும் பாங்கு -அற்புதம்.
அடுத்து வரிசையாக அலப்பறை காட்சிகள். நம்பியார் வீட்டு விருந்துக்கு செல்லும் நடிகர் திலகம். எம்.என்.ராஜத்தை கண்டவுடன் சிகரெட்டை கிழே போட்டுவிட்டு வணங்கும் பணிவு, பியானோவில் விரல்கள் விளையாட பாட்டொன்று கேட்டேன் பாடல். இந்த அளவிற்கு விசிலும் கைதட்டலும் இனி கேட்க முடியுமா என்கிற அளவிற்கு ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்.
அடுத்த காட்சியில் காமிரா மேலிருந்து பார்க்க வீட்டுக்குள்ளே ராஜ நடை நடந்து வருவார். தங்கச்சி தோட்டத்தில் ஆனந்தனோடு என்று கேட்கும்போதே சங்கரனின் கழுத்தை நெரிக்கும் நடிகர் திலகம். பிஸ்டலை கையில் எடுத்து தோட்டத்திற்கு போக யாருக்கும் எந்த வசனமும் கேட்கவில்லை. உன் அண்ணன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போது ஜெமினிக்கு விழுந்த லட்சார்ச்சனை இருக்கிறதே! பாவம். அந்த பிஸ்டலால் கண்ணீரை துடைக்கும் போதெல்லாம் தியேட்டருக்கே வெறி பிடித்தாற் போன்று இருந்தது. அடுத்த காட்சி தங்கை விரும்பியவனையே மனம் முடிக்கும் காட்சி. தன் அண்ணனுக்காக தன் வாழ்வின் ஆதாரமான காதலையே ஒரு தங்கை தியாகம் செய்யறானா அந்த தங்கைக்காக அந்த அண்ணன் என்ன வேணா செய்யலாம்மா என்ன வேணா செய்யலாம் என்னும் போது நிறையப் பேர் உணர்ச்சிவசப்பட்டனர்.
வாராய் என் தோழி பாடல் அடுத்து. இறுதி சரணம் மலராத பெண்மை மலரும் - இதில் ஆரம்பித்து இரண்டோடு மூன்று வளராதோ எனும் போது தலை குனிந்தவாறே சின்ன புன்னைகையுடன் நடிகர் திலகம் அந்த இடத்திலிருந்து நடந்து செல்ல இங்கே பிரித்து எடுத்து விட்டார்கள்.
அன்புடன்
(தொடரும்)
Murali,
பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரம் போல தங்கள் NT பற்றி எழுதும் எழுத்து ஜொலிக்கிறது. Your Episode 2 is better than episode 1. Great going.
தமிழ் பட வரலாற்றிலேயே பாசமலர் NT -GG Argument சீன் தான் பெஸ்ட் Argument சீன் என்று சொல்லலாம். Gemini என்ன தான் ஈடு கொடுத்து நடித்தாலும் நம் நடிகர் திலகம் சும்மா புகுந்து விளையாண்டிருப்பார். நான் தான் இந்த பாக்டரி முதலாளி என்று சொல்லும் arrogance ஆகட்டும், பென்சிலை சீவி கொண்டே ஸ்டைலோடு பேசுவதாக ஆகட்டும் - A Treat to Watch !! அந்த 5 நிமிட சீன் - நம்மை வேறு உலகத்துக்கே கொண்டு சென்றுவிடும். இந்த சீன்க்கு 1961 -இல் எவ்வாறு response இருந்துருக்கும்!!?
Eagerly waiting for your next episode.
Regards
tacinema
14th April 2010, 09:45 AM
[quote="tacinema
நான் மும்பை ஆரோர தியேட்டரில் ஞாயிறு காலை காட்சியில் "மலர்ந்தும் மலராத" பாட்டு காட்சியில் தியேட்டர் கதறி விட்டது.
Still, I feel our madurai fans will handsomely beat chennai fans.
regards
Tac,
Are u from Mumbai?
I remember seeing Pasamalar screened in Arora, Mumbai in 90s
Enakku ninaivu therinju nan partha padam Pasa malar.
Appuram enga oorla tharai ticket la urkarnthu konjam friends udan evening show(azhudu konde) partha niyabakam
Intha padathukku eedu inai yethu undu
Thirai ulagile paasathai valartha padam endru annan solli irukar
Annan endru nam intha padathukku appurama than avarai azhaikirom.
Entha scenai viduvathu -Sivaji udan oru pullu(grass) nadicha kooda nalla nadikume
Sivaji intha padathil padi padiya munneruvathaka kathai-avarudaya nadai udai bhavam maruvathu arumai
Intha padathil naditha mathiri oru 5% yaravathu nadikka mudiyuma
Gemini-nalla modulation-oru scenela avarukkum NT kkum karuthu verubadu vandapuram-appao kooda avar NT ya vittu kudukkama
pesuvathaka oru katchi irukkum
Thangai Savithri-made for the role
MN rajam-also nalla role-NTs wife in the movie.
Padalgal Then-Kannadasan
Thangavelu-Saroja nalla comedy
PS Gnam ammaa-bayama irukku ippo ninaicha kooda
Sankara,
I used to work in Mumbai and that was my 3rd time I watched this movie at Aurora.
It was a wonderful experience watching paasamalar at Mumbai: Paid 100% more for a "black" ticket for Sunday Morning show..... With lots of NT fans from Dharavi - it was a great experience.
Regards.
sankara70
14th April 2010, 10:34 AM
NT Rasiga nanbarkalukku ithayam kanintha
thamiz puthandu nal vazthukkal
RAGHAVENDRA
14th April 2010, 10:59 AM
நடிகர் திலகத்தின் நல்லாசியோடும் அனைவரின் ஆதரவுடனும் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம் இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் விக்ருதி ஆண்டு வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்
saradhaa_sn
14th April 2010, 01:43 PM
நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்கள், மற்றும் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மூன்றாண்டுகளை வெற்றிகரமாகக்கடந்து, இன்று நான்காம் ஆண்டில் அடிவைத்து வீறுநடைபோடும் நடிகர்திலகம் இணையதளத்துக்கும், அதன் முதுகெலும்பாய், முழுமுதற்பொருளாய் விளங்கும் அன்புச்சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தமிழ்ப்புத்தாண்டில் வெளியான நடிகர்திலகத்தின் அத்தனை படங்களுக்கும் இன்று நிறைவுநாள் (ஆண்டுகள் வேறுபடினும்). நடிகர்திலகத்தின் காவியங்களை என்றென்றும் போற்றுவோம்.
saradhaa_sn
14th April 2010, 02:49 PM
டியர் மோகன் & காவேரிக்கண்ணன்...
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
டியர் முரளி....
பாசமலர் திருவிழாக் காட்சிகளை கண்முன்னே காணமுடிகிறது, உங்கள் scene by scene வர்ணனையால். எனக்கென்னவோ இப்போது சிவாஜி படை மீண்டும் வீறு கொண்டு எழுந்துவிட்டதை உணர முடிகிறது. நான் குறிப்பிடுவதற்குக் காரணம், பாசமலர் கிட்டத்தட்ட சென்னையின் பழைய திரையரங்குகள் அனைத்திலும் சிறிது சிறிது இடைவெளியிகளில் வலம் வந்த படம்தான். ஏன், இதே மகாலட்சுமியிலும் முன்பு திரையிடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அப்போதெல்லாம் விட இப்போது ஆர்வமும், ஆரவாரங்களும், அலப்பறைகளும் அதிகரித்திருக்கின்றன என்பதே உண்மை. இதற்குமுன் நானும் பலமுறை பல திரையரங்குகளில் பாசமலரைக் கண்டுகளித்திருக்கிறேன். குறிப்பிட்ட காட்சிகளில் மாத்திரம் தவறாமல் கைதட்டல்கள் விழும். ஆனால் இப்படி காட்சிக்குக் காட்சி ஆர்ப்பாட்டங்களையும் ஆரத்திகளையும் கண்டதில்லை. அதனால்தான் சிவாஜி படை வீறுகொண்டு எழுந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளேன்.
டியர் பம்மலார்...
கோடம்ப்பாக்கம் 'கலைப்பூங்கா சிவாஜி ரசிகர் மன்ற'த்தினர் வெளியிட்டுள்ள, 1961-ல் நடிகர்திலகத்தின் சாதனைப்பட்டியல் அருமை. அதைப்பெற்றுச்சென்றோர் பலருக்கும், பல உண்மைகள் தெரிய வந்திருக்கும். அதை செவ்வனே இணையத்தில் பதிவிறக்கம் செய்துள்ள தங்களுக்கு அனைத்து ரசிகர்களின் நன்றிகள் பல.
மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்/பக்தரான Roop தன்னுடைய இணையதளத்தில் சென்னை நடராஜ் தியேட்டரில் மக்கள் திலகத்தின் திரைப்படம் வெளியிடப்பட்ட விவரத்தைச்சொல்லிவிட்டு, முடிவில் 'நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கோர் நற்செய்தி. விரைவில் நடிகர்திலகத்தின் இரண்டு திரைப்படங்கள் நடராஜ் தியேட்டரில் வெளியாகவுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி எதுவும் விவரம் தெரியுமா?. தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
abkhlabhi
14th April 2010, 05:08 PM
WISH ONE AND ALL A HAPPY AND PROSPEROUS TAMIL NEW YEAR
rangan_08
14th April 2010, 06:13 PM
மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்/பக்தரான Roop தன்னுடைய இணையதளத்தில் சென்னை நடராஜ் தியேட்டரில் மக்கள் திலகத்தின் திரைப்படம் வெளியிடப்பட்ட விவரத்தைச்சொல்லிவிட்டு, முடிவில் 'நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கோர் நற்செய்தி. விரைவில் நடிகர்திலகத்தின் இரண்டு திரைப்படங்கள் நடராஜ் தியேட்டரில் வெளியாகவுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி எதுவும் விவரம் தெரியுமா?. தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
Good news. So far, I have not seen any posters.
rangan_08
14th April 2010, 06:15 PM
Raghavendra sir, Congratulations and All The Very Best for nadigarthilagam.com.
J.Radhakrishnan
14th April 2010, 10:58 PM
டியர் முரளி சார்,
பாசமலர் (தியேட்டர்) நிகழ்வுகளை அப்படியே கண் முன் நிறுத்திவிட்டீர்கள். நம்மவரின் ரசிகர்கள் போல் எங்கும் பார்க்கமுடியாது
மிகுந்த மகிழ்ச்சியுடன் ..........
Radhakrishnan (NT Devotee)
pammalar
15th April 2010, 02:56 AM
அனைவருக்கும் இனிய விக்ருதி தமிழ்ப் புத்தாண்டு, விஷு மற்றும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று/தினத்தையொட்டி வெள்ளித்திரைக்கு வந்த தங்கத்தமிழ்ப் பெருமகனின் திரைக்காவியங்கள்:
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. இல்லற ஜோதி - 9.4.1954 - 63 நாட்கள்
2. அந்த நாள் - 13.4.1954 - 52 நாட்கள்
3. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 13.4.1954 - 100 நாட்கள்
4. உலகம் பல விதம் - 14.4.1955 - 43 நாட்கள்
5. வணங்காமுடி - 12.4.1957 - 100 நாட்கள்
6. சம்பூர்ண ராமாயணம் - 14.4.1958 - 165 நாட்கள்
7. தெய்வப்பிறவி - 13.4.1960 - 121 நாட்கள்
8. படித்தால் மட்டும் போதுமா - 14.4.1962 - 112 நாட்கள்
9. நான் வணங்கும் தெய்வம் - 12.4.1963 - 43 நாட்கள்
10. பேசும் தெய்வம் - 14.4.1967 - 84 நாட்கள்
11. ஹரிச்சந்திரா - 11.4.1968 - 63 நாட்கள்
12. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்
13. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்
14. சுமதி என் சுந்தரி - 14.4.1971 - 86 நாட்கள்
15. பிராப்தம் - 14.4.1971 - 65 நாட்கள்
16. வாணி ராணி - 12.4.1974 - 100 நாட்கள்
17. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 122 நாட்கள்
18. கிரஹப்பிரவேசம் - 10.4.1976 - 100 நாட்கள்
19. சங்கிலி - 14.4.1982 - 63 நாட்கள்
20. இமைகள் - 14.4.1983 - 36 நாட்கள்
21. வாழ்க்கை - 14.4.1984 - 117 நாட்கள்
22. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்
23. விடுதலை - 11.4.1986 - 87 நாட்கள்
24. வீரபாண்டியன் - 14.4.1987 - 70 நாட்கள்
25. பசும்பொன் - 14.4.1995 - 90 நாட்கள்
26. படையப்பா - 10.4.1999 - 210 நாட்கள்
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
15th April 2010, 03:33 AM
ரசிக முதல்வர் ராகவேந்திரன் சார்,
நான்காவது ஆண்டில் வெற்றி நடை போடும் நடிகர்திலகம்.காம் இணையதளம் மென்மேலும் வளர்ந்து பற்பல வெற்றிகளைக் குவிக்க நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
15th April 2010, 03:45 AM
நமது முரளி சார் அவர்கள், பாசமலர் தியேட்டர் நிகழ்வுப் பதிவுகளை, இன்னும் ஓரிரு தினங்களில் தொடர்வார். அவரது கணிப்பொறியில் சற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் சரியானவுடன், மீண்டும் பதிவிடுவார். சற்று காத்திருப்போம்.
காத்து கிடப்பதில் இன்பம் உண்டு! (நமக்கு)
காக்க வைப்பதில் சுகம் உண்டு! (முரளி சாருக்கு)
அன்புடன்,
பம்மலார்.
tacinema
15th April 2010, 08:16 AM
முரளி,
Eagerly waiting for next Paasamalar episode.
சென்னையில் அடுத்த NT படம் என்ன ரிலீஸ் ஆகிறது?
Regards
HARISH2619
15th April 2010, 03:36 PM
திரு ராகவேந்தர் சார்,
நான்காம் ஆன்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தங்களின் நடிகர்திலகம்.காம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் திருப்பனி.
நடிகர்திலகம் திரியின் இந்த பாகம் செல்லும் வேகத்தை பார்த்தால் மற்ற 5 பாகங்களை விடவும் இது விரைவில் நிறைவடையும் என்பது உறுதி.
முரளி சார்,இப்படி செய்து விட்டீர்களே,பாசமலர் அளப்பரை முழுதும் படிக்காவிட்டால் என் தலையே வெடித்து விடும்,கூடிய சீக்கிரம் வரவும்.
pammalar
15th April 2010, 05:50 PM
நாளை (16.4.2010) வெள்ளி முதல், வெற்றிகரமான இணைந்த 2வது வாரமாக, பாசத் தலைவரின் "பாசமலர்" காவியம், சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாகத் தொடர்கிறது.
நாளை (16.4.2010) வெள்ளி முதல், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், வெற்றி நடை போட வருகிறது.
அன்புடன்,
பம்மலார்.
kaveri kannan
16th April 2010, 12:35 AM
அன்பு முரளி சார்
அங்குலம் அங்குலமாய் நீங்கள் அலங்கரித்து அளித்த இரண்டாம் பாகமும் மிக அருமை.
இப்படிப்பட்ட ரசிகர்கள் பெற்ற மாபெரும் கலைமகன் நம் நடிகர்திலகம் என்ற பூரிப்பு பொங்குது எனக்குள்.
அன்பு பம்மலார் அளிக்கும் சிறப்புச் செய்திகளால்
துள்ளாத மனமும் துள்ளும்..
கணிப்பொறி சீராகி முரளி அவர்கள் தொடரும்வரை
கட்டுண்டோம்
காத்திருப்போம்..
அன்பு ராகவேந்திரா அவர்களுக்கு
நம் நடிகர்திலகம் இணையதள ஆண்டுவிழாவுக்கு வாழ்த்தும்
அரிய பணிக்கு நன்றியும்.
Mahesh_K
16th April 2010, 05:55 PM
நடிகர் திலகத்தின் நல்லாசியோடும் அனைவரின் ஆதரவுடனும் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம் இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் விக்ருதி ஆண்டு வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்
ராகவேந்திரன் சார்
நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது இணையதளத்துக்கு வாழ்த்துக்கள். வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் இந்த 3 ஆண்டுகளில் நாளுக்கு நாள் நம்முடைய தளம் மெருகேறி வந்ததைக் கவனித்து வந்திருக்கிறேன். இத்துணை சிறப்பான தளம் ஓரிரு தமிழ் நடிகர்களுக்கு மட்டுமே உள்ளது. இதன் பின்னணியில் உள்ள தங்களுடைய அசாதாரண உழைப்பு வியக்க வைக்கிறது. தங்கள் பணி தொடர வாழ்த்தூக்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
pammalar
17th April 2010, 02:53 AM
Paasath Thalaivarin Paasamalar : Successful Second Week at Chennai Srinivasa : Photo Feature
http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8752709
Happy Viewing,
Pammalar.
saradhaa_sn
17th April 2010, 12:50 PM
Paasath Thalaivarin Paasamalar : Successful Second Week at Chennai Srinivasa : Photo Feature
http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8752709
Happy Viewing,
Pammalar.
டியர் பம்மலார்...
போட்டுத்தாக்குறீங்க...
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
இனி நடிகர்திலகத்தின் சென்னை மறு வெளியீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆல்பம் எதிர்பார்க்கலாமா..?.
rangan_08
17th April 2010, 03:55 PM
Paasath Thalaivarin Paasamalar : Successful Second Week at Chennai Srinivasa : Photo Feature
http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8752709
Happy Viewing,
Pammalar.
Thank you pammalar sir. As usual you are very prompt in publishing the photos.
rangan_08
17th April 2010, 04:00 PM
I believe that almost 75% of NT-6 is filled up with NT's re-release screening events. In the process, we are missing some nice reviews of NT's films, which is one of this thread's favourite portion, widely read by fans & fellow hubbers.
Hope that we'll get a nice review of one of NT's super duper film very soon, i.e. only after Murali sir completes his Pasamalar series :D
Murali Srinivas
18th April 2010, 12:20 AM
அனைவரும் மன்னிக்கவும். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நான்கு தினங்களாக என்னால் பதிவிட முடியவில்லை. இப்போதுதான் சரியானது.
நடிகர் திலகத்தின் இணைய தளம் அது பெற வேண்டிய அங்கீகாரத்தை இப்போதுதான் சிறிது சிறிதாக பெற்று வருகிறது. அது வான் புகழ் அடையும் நேரம்தான் ராகவேந்தர் சாரின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம். விரைவில் அது நடைபெற வேண்டுவோம், வாழ்த்துவோம்.
நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே.
நன்றி காவேரி கண்ணன் அவர்களே
சாரி செந்தில்.
சாரதா,
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. நானும் பாசமலர் படத்தை பல முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இது போல் ஒரு ஆரவாரத்தோடு பார்த்ததில்லை.
மோகன்,
நடிகர் திலகத்தின் திரைப்பட விமர்சனங்கள் தொடரும். நானே ஓரிரண்டு படங்களைப் பற்றி நினைத்திருக்கிறேன். விமர்சனம் என்றவுடன் உங்களுக்கு ஒரு சந்தோஷ சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.
சுவாமி,
தமிழ் வருடப்பிறப்பன்றும் ஒட்டியும் வெளிவந்த நடிகர் திலகத்தின் படப்பட்டியலுக்கு நன்றி. நாங்கள் எப்போதும் காலரை தூக்கிவிட்டுக் கொள்வது போல் இப்போதும் செய்கிறோம். காரணம் பல படங்களும் அதிகபட்சம் ஓடியது எங்கள் நான்மாடக்கூடலான மதுரையம்பதியில்தானே
அன்புடன்
Murali Srinivas
18th April 2010, 12:53 AM
பாசமலர் தொடர்ச்சி
சாவித்திரி கல்யாணம் முடிந்தவுடன் தேனிலவு காட்சிகள். பாடல் இல்லாமல் காட்சிகளாகவே நடக்கும். இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். நடுவில் யார் யார் அது யாரோ பாடல் வந்த போது நான் எதிர்பார்த்ததற்கு மாறாக பாடல் காட்சி ரசித்து பார்க்கப்பட்டது. வெளியில் சென்ற ஆட்களும் குறைவு. தேனிலவு முடிந்து வரும் போது சாவித்திரி எம்.என்.ராஜத்தை பார்ப்பது, அதன் பிறகு சாவித்திரி வந்து நடிகர் திலகத்திடம் பேசுவது போன்ற காட்சி. டாக்டர் மாலதி என்ற பெயர் கேட்டவுடன் கையில் இருக்கும் சிகரெட்டை ஒரு பப் இழுப்பார். இது நடக்காது என்பார். ஏன் என்று கேட்கும் சாவித்திரியிடம் தயங்கி தயங்கி சொல்லுவார். அதாவது ஜெமினியை திருமணம் செய்துக் கொண்டதால் எப்படி முன் நிச்சயித்த கல்யாணம் நடக்காமல் போனது என்பதை சாவித்திரியின் மனம் புண்பட்டு விடாமல் அவர் சொல்லும் விதம் இருக்கிறதே அதற்கும், அந்த வசனங்களுக்கு நடுவே அவர் சிகரெட்டை இரண்டு விரல்களுக்கிடையில் பிடிக்காமல் ஆனால் அந்த இரண்டு விரல்களால் அவர் உதட்டில் வைத்து இழுப்பதற்கும் அரங்கம் அதிர்ந்தது. அடுத்து சாவித்திரி சென்று நம்பியாரை ஒத்துக்கொள்ள வைக்கும் காட்சி. நம்பியார் இந்த காட்சியில் மிக நன்றாக செய்திருப்பார், ஆரூர்தாஸின் வசனங்களும் மிக இயல்பாக இருக்கும்.
அடுத்து திருமணம். முதலிரவு காட்சி. தேனினும் இனிய குரலில் சுசீலா ஹம்மிங் கொடுக்கும் போதே ஆரவாரம் ஆரம்பித்துவிட்டது. நடிகர் திலகத்தை காட்டும் போதெல்லாம் அலப்பறை. அதிலும் அவர் நடந்து வருவது, ராஜத்திடம் அருகில் வந்து பின் விலகி செல்வது, பின் அந்த ஸ்டைல் நடை நடந்து சென்று சாவித்திரி ஜெமினி போட்டோவை திருப்பி வைத்துவிட்டு வருவது அதற்கெல்லாம் பயங்கர கைதட்டல். பாடல் முடிந்தது. படத்தின் சீரியஸ் காட்சிகள் ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
RAGHAVENDRA
18th April 2010, 07:42 AM
சகோதரி சாரதா, ரங்கன், காவிரிக் கண்ணன், tac. ஹரீஷ், ராதாகிருஷ்ணன், மகேஷ், பம்மலார், முரளி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஊர் கூடி இழுக்கும் தேர். இதற்கு தங்கள் அனைவருடைய ஆதரவே முக்கிய காரணம். தொடர்நது தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.
முரளி சாரின் கணிப்பொறி சரியானது அவரைவிட நமக்கு அதிக மகழ்வூட்டுகிறது. இனி மீண்டும் தொடர்ந்து அவருடைய பங்களிப்பு நம்மை அசத்த இருக்கிறது.
சாதனைகளை பறை சாற்றுவதற்கென்றே நடிகர் திலகத்தால் நம்மிடைய அனுப்பப் பட்டுள்ள பம்மலார் மென் மேலும் விவரங்களைத் தந்து நம்மை அசத்த வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
அனைவருக்கும் மீண்டும் நன்றி.
ராகவேந்திரன்
saradhaa_sn
18th April 2010, 10:55 AM
அடுத்து சாவித்திரி சென்று நம்பியாரை ஒத்துக்கொள்ள வைக்கும் காட்சி. நம்பியார் இந்த காட்சியில் மிக நன்றாக செய்திருப்பார்.
உண்மை.... நானும் ஒவ்வொருமுறையும் இக்காட்சியில் நம்பியாரின் இயல்பான நடிப்பை ரசித்திருக்கிறேன். சும்மா சம்பிரதாயத்துக்காக, சோபாவில் எதிரெதிரே உட்கார்ந்து பேசுவதாக இல்லாமல், ஒரு எஞ்சினீயர் என்ற வகையில், அதற்கான உபகரணங்களைக்கொண்டு ஸ்கெட்ச் போட்டுக்கொண்டே பேசுமிடம் அருமை. பேச்சிலும் கவனம் செயலிலும் கவனம் என்ற இந்த இடம் ரொம்ப இயல்பு. (அவரை சும்மா அடிவாங்குபவராகக் காட்டியே வீணாக்கி விட்டது தமிழ்த்திரையுலகம்)
pammalar
18th April 2010, 04:46 PM
Destination : Chennai Srinivasa
On Your Mark! Get Set!! Go!!!
J.Radhakrishnan
18th April 2010, 10:29 PM
அதன் பிறகு சாவித்திரி வந்து நடிகர் திலகத்திடம் பேசுவது போன்ற காட்சி. டாக்டர் மாலதி என்ற பெயர் கேட்டவுடன் கையில் இருக்கும் சிகரெட்டை ஒரு பப் இழுப்பார். இது நடக்காது என்பார். ஏன் என்று கேட்கும் சாவித்திரியிடம் தயங்கி தயங்கி சொல்லுவார். அதாவது ஜெமினியை திருமணம் செய்துக் கொண்டதால் எப்படி முன் நிச்சயித்த கல்யாணம் நடக்காமல் போனது என்பதை சாவித்திரியின் மனம் புண்பட்டு விடாமல் அவர் சொல்லும் விதம் இருக்கிறதே அதற்கும், அந்த வசனங்களுக்கு நடுவே அவர் சிகரெட்டை இரண்டு விரல்களுக்கிடையில் பிடிக்காமல் ஆனால் அந்த இரண்டு விரல்களால் அவர் உதட்டில் வைத்து இழுப்பதற்கும் அரங்கம் அதிர்ந்தது.
Yes Mr.Murali sir,
எனக்கும் அந்த சீன் மிகவும் பிடிக்கும். என்ன இருந்தாலும் தியேட்டரில் ரசிகர்களுடன் பார்ப்பதில் உள்ள அனுபவம் DVD-இல் பார்க்கும் போது இல்லை
Murali Srinivas
19th April 2010, 12:22 AM
பாசமலர் தொடர்ச்சி
நடிகர் திலகம் - ராஜம் திருமணக் காட்சிக்கு பின் அரங்கில் சற்று அமைதி திரும்பியது. தங்கவேலு உண்ணாவிரதம், எம்.சரோஜாவை அவர் பதிவு திருமணம் செய்துக் கொள்வது பின் பங்களாவில் அதைப் பற்றி நடிகர் திலகம் குறை கூறுவது, இரண்டு புடவை வாங்கி வரும் நடிகர் திலகம், அண்ணியின் முக மாறுதலை கண்டு புடவையை மாற்றிக் கொள்ளும் சாவித்திரி, எம்.என்.ராஜத்தின் பீரோவிலிருந்து பி.எஸ்.ஞானம் புடவையை எடுத்து மறைத்து வைப்பது அதை தொடர்ந்து உண்டாகும் சண்டைகள். இந்தக் காட்சியில் சிவாஜி -ஜெமினி கட்டிப் புரளும் சண்டைக்கு மட்டும் அரங்கில் ஆர்ப்பாட்டம் இருந்தது.
வீட்டை விட்டு வெளியேறும் நடிகர் திலகம் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக முனிசிபல் தேர்தலில் நிற்பது, ஜெமினி எதிர்த்து நிற்பது, தேர்தலிலிருந்து விலகுகிறேன் என சொல்லும் நடிகர் திலகத்தை மற்றவர்கள் கன்வின்ஸ் செய்வது [இந்தக் காட்சியிலும் அரூர்தாஸின் வசனங்கள் மிக இயல்பாக, இரு தரப்பு வாதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கும்], தங்கவேலு வந்து நடிகர் திலகத்திடம் பணம் கேட்பது, அதன் பின் கோர்ட் மூலமாக ரிசீவரை நியமிப்பது, சாவித்திரி வந்து நடிகர் திலகத்திடம் தேர்தலில் விட்டுக் கொடுக்கும்படி கேட்பது. இந்தக் காட்சியில் சாவித்திரி சொல்லுவார் எங்க அண்ணன் பட்டம் பதவிக்கு ஆசைப்படாதவர். அதனாலதான் கேட்கிறேன். இதற்கு நல்ல கைதட்டல் இருந்தது.
பிறகு நடிகர் திலகம் போட்டியிலிருந்து விலகுவது, சாவித்திரியின் கையெழுத்தைப் பயன்படுத்தி வக்கீல் நோட்டீஸ் விடுவது, பதில் நடவடிக்கை காரணமாக சாவித்திரி ஜெமினி வீட்டைவிட்டு வெளியேறுவது, எம்.என்.ராஜத்திற்கு ஆண் குழந்தை பிறப்பது, அப்போது வேலைக்காரன் சங்கரன் வந்து ராதாம்மாவுக்கு பிரசவ வலி எடுத்திருக்கிறது என்றவுடன் நடிகர் திலகம் முகத்தில் மின்னி மறையும் அந்த முகபாவங்களுக்கு பெரிய ஆரவாரம் எழுந்தது. சாவித்திரிக்கு பெண் குழந்தை பிறப்பது, குழந்தையை பார்க்க வரும் சங்கரன் கண் முன்னால் பி.எஸ்.ஞானம் சாவித்திரியை அடிப்பது அதை தட்டி கேட்கும் சங்கரனை வெளியே போடா நாயே என்று சொன்னவுடன் சங்கரன் சொல்லும் நாயா இருந்திருந்தா சோறு போட்டு வளர்த்த எஜமானி அம்மாவை அடிச்சா கையை கடிச்சு குதறி இருக்கும் என்ற வசனத்திற்கு நல்ல வரவேற்பு.
சொத்துகளை தங்கச்சி பேரிலே எழுதிடிங்க என்று சங்கரன் சொன்னவுடன் காமிராவிற்கு முதுகை காட்டியபடியே நடந்து புத்தர் சிலையை அப்படியே பார்த்து, டேபிளில் இருக்கும் தங்கையின் புகைப்படத்தில் முகத்தை வருடிவிட்டு கையில் புகையும் சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்குவார். அந்த ஷாட் முடியும் வரை கைதட்டல் இருந்துக் கொண்டே இருந்தது.
அடுத்த காட்சியில் சொத்துகளை தங்கை பேருக்கு எழுதி வைப்பதை தடுக்கும் நம்பியார், முதலில் சாதாரணமாக பேசும் நடிகர் திலகம் உங்களுக்கு உங்கள் தங்கை மேல் பாசம் இருந்தால் நீங்களும் எழுதி வையுங்களேன் ஏன் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்க Mr. ராஜசேகர் என்று நம்பியார் அருகில் வர Mr.பாஸ்கர் என்று நடிகர் திலகம் கையை உயர்த்தி இது என் குடும்ப விஷயம் இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்ற வசனத்திற்கு எல்லாம் ஒரே ஆரவாரம் கைதட்டல். அடுத்த காட்சியில் நம்பியார் ராஜத்திற்கு மேற்படிப்பு படிக்க வெளிநாட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது எனும் போது கையில் புகையும் சிகரெட்டோடு நடிகர் திலகம் ஒரு கையை தாடையில் கொடுத்து சிலையாய் உட்கார்ந்திருப்பார். இதையெல்லாம் கூட மிகவும் ரசித்து கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். அந்த வசனத்தை எல்லாம் கேட்கவே விடவில்லை. அது மட்டுமல்ல அப்போதே அகல் விளக்குகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் மேடையில் வரிசையாக வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த காட்சி ஏர்போர்ட். வெளிநாடு செல்லும் ராஜம் விடை பெறும் காட்சி. காட்சி முடிகிறது. தொட்டிலுக்கு மேலே சுற்றும் கிலுகிலுப்பை.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் எழுதி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாடகர்கள் பாடி எந்த நூற்றாண்டிலும் ஈடு இணையற்ற நடிகர்கள் நடித்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாடல் மலர்ந்தும் மலராத ஆரம்பித்தது. இந்த நேரத்தில் மேடைக்கு முன் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டுவிட்டன.
சாதாரணமாக இந்த பாடலில் அத்தை மகளை மனம் கொண்டு வரிகளின் போதும், மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக என்ற வரிகளின் போதும் கடைசி சரணத்திலும் கைதட்டல் விழுவது வழக்கம். ஆனால் இங்கோ பாடல் தொடங்கியது முதல் இறுதி வரை ஆர்ப்பாட்டம் அலப்பறை. அதிலும் இறுதி சரணத்தில் புலிதோலில் படுத்திருக்கும் நடிகர் திலகம், கண்ணின் மணி போல மணியின் நிழல் போல என்ற வரிகளின் போது க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகத்தின் கண்களும் முகமும் காட்டும் அந்த பாவங்கள், இந்த காட்சியை இப்படி ஒரு ஆரவாரத்தோடு இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.
[நண்பர் Nerd ஒரு முறை எழுதியிருந்தார். வேலை செய்துக் கொண்டே பாடல்கள் கேட்பேன். ஆனால் இந்த பாடல் வந்தால் மட்டும் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது என்று. பலருக்கும் இதே கருத்துதான். அப்படி மனதை உருக்கும் பாடல், அதை இப்படி பார்த்தது ஒரு புதிய அனுபவம்].
பாடல் முடிந்தவுடன் எதிர்பார்த்தது போல் நிறைய பேர் கிளம்பி விட்டார்கள். அடுத்து வந்தது நடிகர் திலகம் மகனையும் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக சுற்றும் காட்சிகள், பின் அவர் திரும்பி வருவது, அவரை பி.எஸ்.ஞானம் விரட்டுவது, கடை தெருவில் பட்டாஸ் வெடிக்கும் போது சாவித்திரி மகளை காப்பாற்றுவது, விஷயம் தெரிந்து சாவித்திரி அண்ணனை தேடி வருவது பிறகு வருவது எந்த கல்நெஞ்சையும் கரைக்கும் காட்சி.
திரையிட்ட நாள் முதல் இந்த 49 ஆண்டுகளில் எப்போதெல்லாம் எங்கெல்லாம் திரையிடப்பட்டதோ அந்த ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கில் மக்கள் கண்ணீர் சிந்தாமல் இருந்ததில்லை என்ற சாதனையை செய்த காட்சி. அந்த கை வீசம்மா கைவீசு இந்த முறையும் பலரின் கண்களை நனைத்தது. அதன் உச்சக்கட்டமாக காலத்தால் அழியாத அந்த அண்ணன் தங்கை விண்ணுலகம் ஏக, அந்த அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என நாமும் ஆமோதித்து அரங்கிலிருந்து வெளியேறினோம். ஆனால் நமது மனதிலிருந்து என்றுமே வெளியேறாமல் வாழும் இந்த காவியத்தை மீண்டும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக வடிவமைத்து தந்த சென்னை வாழ் ரசிகர்களுக்கு மனங்கனிந்த நன்றி.
அன்புடன்
gkrishna
19th April 2010, 01:17 PM
I would like to contact Mr.Murali srinivas/Mr.Ragavendar/Mr.Pammalar/Mrs.Saradha Prakash and all other sivaji fans . Kindly include me also in this list as serious sivaji fans. my contact mail id is gk@indiacements.co.in. Basically I belong to Tirunelveli district and migrated to chennai during 2000. Now only got this information about this forum such a nice one.
gkrishna
19th April 2010, 01:31 PM
what a beautiful forum. missed a lot. thank god for atleast shown now. thanks for all sivaji fans
abkhlabhi
19th April 2010, 02:34 PM
A WARM WELCOME TO NT THREAD MR.GKRISHNA
joe
19th April 2010, 02:43 PM
what a beautiful forum. missed a lot. thank god for atleast shown now. thanks for all sivaji fans
வருக நண்பரே!
இந்த திரியின் முதல் பக்கத்தில் இதற்கு முந்திய திரிகள் மற்றும் முக்கியமான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன :D
groucho070
19th April 2010, 03:23 PM
I would like to contact Mr.Murali srinivas/Mr.Ragavendar/Mr.Pammalar/Mrs.Saradha Prakash and all other sivaji fans . Kindly include me also in this list as serious sivaji fans. my contact mail id is gk@indiacements.co.in. Basically I belong to Tirunelveli district and migrated to chennai during 2000. Now only got this information about this forum such a nice one.Welcome. We meet here at this forum and discuss lots of stuff, please post your views, opinion and comments on other postings here. We are one big happy family :D
saradhaa_sn
19th April 2010, 03:56 PM
நமது திரியின் புதிய நண்பர்/விருந்தினர்/பதிவாளர்/ அனைத்துக்கும் மேலாக நடிகர்திலகத்தின் ரசிகமணி திரு ஜி.கிருஷ்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஜோ, அவர்கள் சொன்னதுபோல இதற்கு முந்தைய பதிவுகளைப் படித்து இன்புறுங்கள். நடிகர்திலகத்தின் திரைப்படங்கள், அவர் நடிப்பின் ஆளுமை மற்றும் அவரைப்பற்றிய சுவையான தகவல்கள் நீங்கள் அறிந்தவற்றை இங்கே பதியுங்கள். தொடர்ந்து பங்குபெறுங்கள்.
வருக.
sankara70
19th April 2010, 03:59 PM
Welcome Mr Gkrishna to NT thread
saradhaa_sn
19th April 2010, 04:14 PM
டியர் முரளி....
நீங்கள் வரைந்த, பாசமலரின் கடைசிப்பகுதியைப்படித்து முடிக்கும்போது கண்கள் நீர்த்திரையிட்டு கணிணியின் திரையை மறைத்துவிட்டன. பார்க்கும்போதுதான் என்றில்லை, படிக்கும்போதும் இதே நிலை. அது பாசமலருக்கே உரிய தனிப்பெருமை.
டியர் பம்மலார்...
மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கின் நேற்று மாலை பாசமலருக்கான வரவேற்பு எப்படியிருந்தன என்றறிய ஆவலுறுகிறோம்.
J.Radhakrishnan
19th April 2010, 09:40 PM
Welcome, welcome Mr.G krishna to our NT thread
RAGHAVENDRA
19th April 2010, 10:10 PM
Dear Sri Krishna,
Hearty welcome to you. You have before you a vast jamakkalam which will take you to the places you wish. This jamakkalam is made up of the calibre of Murali Sir, Pammal Sir, Saradha, Prabhu Ram, TAC, Joe, and a wide range of intellectuals. Once you relax and get into them then you will be part of the jamakkalam.
Raghavendran
Murali Srinivas
19th April 2010, 10:53 PM
A very warm welcome Mr.Krishna. Pleasure is ours as more and more NT fans are joining the thread. Hope your stay is memorable. Please share your experiences and views here.
நல்ல இடம் நீங்கள்
வந்த இடம்.
Regards
நன்றி சாரதா.
pammalar
20th April 2010, 01:46 AM
Paasath Thalaivarin Paasamalar : Successful Second Week at Chennai Srinivasa : Photo Feature
http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8752709
Happy Viewing,
Pammalar.
டியர் பம்மலார்...
போட்டுத்தாக்குறீங்க...
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
இனி நடிகர்திலகத்தின் சென்னை மறு வெளியீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆல்பம் எதிர்பார்க்கலாமா..?.
மனமார்ந்த நன்றி சகோதரி சாரதா. இயன்ற அளவுக்கு ஆல்பங்களை அளிக்க சித்தமாயிருக்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
pammalar
20th April 2010, 02:04 AM
Paasath Thalaivarin Paasamalar : Successful Second Week at Chennai Srinivasa : Photo Feature
http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8752709
Happy Viewing,
Pammalar.
Thank you pammalar sir. As usual you are very prompt in publishing the photos.
Mr.Mohan,
Thank you very much for your appreciation.
Regards,
Pammalar.
pammalar
20th April 2010, 02:18 AM
சுவாமி,
தமிழ் வருடப்பிறப்பன்றும் ஒட்டியும் வெளிவந்த நடிகர் திலகத்தின் படப்பட்டியலுக்கு நன்றி. நாங்கள் எப்போதும் காலரை தூக்கிவிட்டுக் கொள்வது போல் இப்போதும் செய்கிறோம். காரணம் பல படங்களும் அதிகபட்சம் ஓடியது எங்கள் நான்மாடக்கூடலான மதுரையம்பதியில்தானே
அன்புடன்
மிக்க நன்றி முரளி சார். வழக்கம் போல் மதுரை முன்னணி.
அன்புடன்,
பம்மலார்.
pammalar
20th April 2010, 02:23 AM
சாதனைகளை பறை சாற்றுவதற்கென்றே நடிகர் திலகத்தால் நம்மிடைய அனுப்பப் பட்டுள்ள பம்மலார் மென் மேலும் விவரங்களைத் தந்து நம்மை அசத்த வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
ராகவேந்திரன்
தங்களின் பாராட்டு ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்து விட்டது. சிரம் தாழ்த்திய நன்றிகள் ராகவேந்திரன் சார்.
அன்புடன்,
பம்மலார்.
pammalar
20th April 2010, 02:33 AM
Paasath Thilagaththin Paasamalar : Successful 2nd Week at Chennai Srinivasa : 18.4.2010 Sunday Special : For Your Eyes Only
http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8779269
A Very Happy Viewing,
Pammalar.
pammalar
20th April 2010, 02:51 AM
கிருஷ்ணா ஜி,
தங்களை வருக! வருக! எனப் பெருமகிழ்ச்சியுடன் உளமார வரவேற்கிறோம்!
அன்புடன்,
பம்மலார்.
gkrishna
20th April 2010, 12:45 PM
thanks for the warm welcome. definetely share my experience. to start with "Iru dhuravam" PSV pictures was not released at tirunelveli but released at tenkasi packialakshmi theatre because of non availability of theatres. at that time of i was doing my 6th std. 4 of sivaji fans(including me) went to tenkasi from tirunelveli chengottai passenger morning 6.00 am started and reached tenkasi around 9.30 bus frequency was less at that time.
morning 10.30 show we had darshan of deivam NT. later on it was released at nellai new royal after 2 weeks. eventhough the movie was not super hit songs are good - theru parka vandhirukkum chitra penna and attruku pakkam oru thennam pillai by sirkazhi
any one can help how to type tamil fonts
G.Krishna (sivaji fan from 1967) but not mingled with others
Murali Srinivas
20th April 2010, 11:50 PM
Thanks Krishna for that Iru Dhuruvam experience. It would have been a big success only if it had been altered to suit the Tamilnadu nativity factor. The second reason is so many NT films in so short a time was also one of the major reasons.
For Tamil typing, here is the link. Once you click the link, a dialogue box will open and you can type whatever Tamil word you want to use, in English alphabets and press enter. You will get the Tamil version.
For eg, inside the dialogue box if you type Vanakkam and press space, it will automatically become வணக்கம்.
http://www.google.com/transliterate/
[You will get many language options and you can choose Tamil]
Regards
gkrishna
21st April 2010, 11:27 AM
தகவலக்கு நன்றி . நீங்கள் சொன்னது போல் கதைக்களம் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைகாரர்கள் பற்றியது என்பதால் தமிழ்ல் எடுபடவில்லை . ஆற்றுக்கு பக்கம் ஒரு தென்னம்பிள்ளை (சீர்காழி) என்ற பாடல் அந்த படத்தில்தான உள்ளதா நடிகர் திலகம் பத்மினி முத்துராமன் ராஜஸ்ரீ நாகேஷ் என்று நடிகர் பட்டாளமே உண்டு. இந்த வாரம் எதாவது நடிகர்திலகம் திரைப்படம் சென்னையில் திரையிட பட உள்ளதா . திருடன் திரைப்படம் வரபோவதாக திரு ராகவேந்தர் சொன்னதாக கேள்விபட்டேன்
gkrishna
21st April 2010, 11:44 AM
மேலும் பாலாடை திரைபடத்தை பற்றி யாரவது விமர்சனம் எழுதி உள்ளார்களா தேனும் பாலும் பற்றி படித்தேன். பாலாடை திரைப்படமும் அந்த கால கட்டத்தில் வெளியானது என்று நினைக்கிறன் வெரி cute face of sivaji
gkrishna
21st April 2010, 12:07 PM
திரு பம்மலார் தரும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன
gkrishna
21st April 2010, 12:46 PM
வெண்ணிறாடை ஸ்ரீகாந்த் திரியில் சாரதா பிரகாஷ் அவர்களுக்கு மேலும் சில ஸ்ரீகாந்தின் நல்ல படங்களை கொடுத்திருந்தேன் ஒரு வீடு இரு உலகம் பற்றி அவர்கள் விமர்சனம் எழுத வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் துரை அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த நல்ல திரைப்படம் ஸ்ரீகாந்தின் திரியை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நடிகர் திலகம் திரியில் இதை சொல்வதன் காரணம் எல்லோராலும் படிக்கபடுகிறது என்பதால்தான். மேலும் ஒரு கால கட்டத்தில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடிகர் திலகம் நடித்த எல்லா திரை படங்களலும் இடம் பெற்று இருந்தார் என்பது ஒரு காரணம் எனது வேண்டுகோள்தான்
gkrishna
21st April 2010, 12:59 PM
மேலும் ஒரு மனவருத்தம் உண்டு அரசியல் பேசுவதாக யாரும் தவறாக எண்ண வேண்டாம் 1988 ஆம் ஆண்டு நடிகர் திலகம் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளிஎற்றபடவேண்டிய காரணம் என்ன தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு முகவரி தந்தவர் அல்லவா சிவாஜி அவர்கள். மனதில் உள்ள வருத்தங்களை பகிர்ந்து கொள்ளலாமா இந்த தளத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வதாக எண்ண வேண்டாம்
saradhaa_sn
21st April 2010, 06:39 PM
மேலும் பாலாடை திரைபடத்தை பற்றி யாரவது விமர்சனம் எழுதி உள்ளார்களா தேனும் பாலும் பற்றி படித்தேன். பாலாடை திரைப்படமும் அந்த கால கட்டத்தில் வெளியானது என்று நினைக்கிறன் வெரி cute face of sivaji
1967-ல் வெளியான, நடிகர்திலகத்தின் 'பாலாடை' திரைப்படம் பற்றிய விமர்சனக்கட்டுரை இதுவரை யாரும் எழுதவில்லை. (இதுவரை வெளியான விமர்சனக்கட்டுரைகள் முதல் பக்க அட்டவணையில் பார்த்திருப்பீர்கள்).
உங்களது முதல் விமர்சனக்கட்டுரை 'பாலாடை'யாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?. (அதாவது பாலாடை படம் பற்றிய, அதே சமயம் பாலாடை போல் சுவையாக).
saradhaa_sn
21st April 2010, 06:55 PM
வெண்ணிறாடை ஸ்ரீகாந்த் திரியில் சாரதா பிரகாஷ் அவர்களுக்கு மேலும் சில ஸ்ரீகாந்தின் நல்ல படங்களை கொடுத்திருந்தேன் ஒரு வீடு இரு உலகம் பற்றி அவர்கள் விமர்சனம் எழுத வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் துரை அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த நல்ல திரைப்படம் ஸ்ரீகாந்தின் திரியை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நடிகர் திலகம் திரியில் இதை சொல்வதன் காரணம் எல்லோராலும் படிக்கபடுகிறது என்பதால்தான். மேலும் ஒரு கால கட்டத்தில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடிகர் திலகம் நடித்த எல்லா திரை படங்களலும் இடம் பெற்று இருந்தார் என்பது ஒரு காரணம் எனது வேண்டுகோள்தான்
Dig//
அவர் (Shreekanth) நடித்த நிறையப்படங்கள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைதான். ஆனால் சில படங்கள் பார்த்து நாளாகிவிட்டதால் காட்சிகள் கோர்வையாக நினைவில் இருப்பதில்லை. அதுதான் காரணம். விரைவில் வேறு சில படங்கள் பற்றி எழுத இருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள படம் உங்களுக்கு மிகவும் பிடித்த படமென்றால் நீங்களும் விரிவான விமர்சனக்கட்டுரை அங்கே பதிக்கலாம். எந்த திரியும் யாருடைய ஏகபோக உரிமை அல்ல. பலரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென்பதுதான் நம் எல்லோருடைய விருப்பமும். சகோதரர் ராகவேந்தர் அடிக்கடி சொல்வது போல, இது ஊர்கூடி தேர் இழுக்கும் நிகழ்ச்சி.
//dig ends.
pammalar
22nd April 2010, 02:35 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில், கடந்த 16.4.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிக் கொடி நாட்டி வரும் கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி", முதல் மூன்று நாட்களில் [16.4.2010 வெள்ளி முதல் 18.4.2010 ஞாயிறு வரை]அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).
இத்தகவலை எமக்களித்த பழம்பெரும் மதுரை ரசிக நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
22nd April 2010, 03:11 AM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)
10.4.2010 - சனி
பிற்பகல் 2:30 = ரூ.3,200/- (ரூபாய் மூவாயிரத்து இருநூறு)
மாலை 6:15 = ரூ.3,200/- (ரூபாய் மூவாயிரத்து இருநூறு)
இரவு 9:45 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
11.4.2010 - ஞாயிறு
பிற்பகல் 2:30 = ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)
மாலை 6:15 = ரூ.11,000/- (ரூபாய் பதினோராயிரம்) [கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் ரேஞ்ச்]
இரவு 9:45 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
12.4.2010 - திங்கள்
பிற்பகல் 2:30 = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)
மாலை 6:15 = ரூ.2,800/- (ரூபாய் இரண்டாயிரத்து எண்ணூறு)
இரவு 9:45 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
அன்புடன்,
பம்மலார்.
tacinema
22nd April 2010, 07:54 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில், கடந்த 16.4.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிக் கொடி நாட்டி வரும் கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி", முதல் மூன்று நாட்களில் [16.4.2010 வெள்ளி முதல் 18.4.2010 ஞாயிறு வரை]அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).
இத்தகவலை எமக்களித்த பழம்பெரும் மதுரை ரசிக நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார்,
BEAUTIFUL. நமது நடிகர் திலகத்தின் சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால் அவரின் அதி அற்புத நடிப்பில் உருவான உத்தம புத்திரன், பாச மலர்,வசந்த மாளிகை, தங்கபதக்கம், ராஜா போன்ற படங்களுக்கு மதுரை ரசிகர்கள் தமிழ் கலையுலக சக்கரவர்த்தி NT க்கு RED CARPET WELCOME நிச்சயம் தருவார்கள்.
சுமதி என் சுந்தரி மதுரை போஸ்டர்ஸ் / videos இருந்தால் இங்கே கொடுக்கவும்.
regards
gkrishna
22nd April 2010, 12:49 PM
சாரதா madem அவர்களுக்கு மிக்க நன்றி . விரைவில் பாலாடை பற்றி எழுத முயற்சி செய்கிறேன்
நமது நடிகர் திலகத்தின் சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால் அவரின் அதி அற்புத நடிப்பில் உருவான உத்தம புத்திரன், பாச மலர்,வசந்த மாளிகை, தங்கபதக்கம், ராஜா போன்ற படங்களுக்கு மதுரை ரசிகர்கள் தமிழ் கலையுலக சக்கரவர்த்தி NT க்கு RED CARPET WELCOME நிச்சயம் தருவார்கள். என்று ஒரு ரசிகர் சொல்லியிருக்கிறார் இந்த நேரத்தில் திரு spb அவர்கள் ஒரு பேட்டியில் கூறியதை நினவு கூற விரும்புகிறேன் சுமதி என் சுந்தரி திரைபடதிருகாக 'பொட்டு வைதத முகமோ' பாடல் பதிவின் போது நடிகர்திலகம் குரலுக்கு spb வாய்ஸ் பொருத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் வந்த போது நடிகர்திலகம் அவர்கள் இந்த குரலுக்காக என்னுடைய தோற்றத்தையும் நடிப்பையும் மாற்றி கொள்கிறேன் என்று சொன்னதாக படிதத நினவு அப்போது NT ஏஜ் 43 . அந்த வயிதில் ஒரு 25 வயது வாலிபனாக காட்சி கொடுத்தார்
sankara70
22nd April 2010, 01:11 PM
Amma en su sundari
nalla time pass movie
Pottu vaitha mugamo padalil, shoulder lesaga
asaipathu arumai-unnal mattum than mudiyum
Ana intha padalil(padathil) JJ romba kundu
NT romba slima irupar.
RAGHAVENDRA
22nd April 2010, 04:04 PM
BEAUTIFUL. நமது நடிகர் திலகத்தின் சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால் ....
Objection tac
அது என்ன சுமதி என் சுந்தரிக்கே....
உலக மகா நடிகர் சிவாஜி கணேசன், சினிமா என்றால் என்ன என்றே தெரியாத ஒரு இளைஞனாக நடித்தது மிகவும் கடினமான பாத்திரம், அவருக்கு சவாலாக அமைந்ததாகும். சற்றும் சினிமா சாயல் தெரியாமல் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதுவும் முழு நேரமும் சினிமா சிந்தனையிலேயே மூழ்கி ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டுகளில் நடித்து வந்தவருக்குள் சினிமா தாக்கமே தெரியாத வாலிபனாக நடிப்பது சவால் விடுவது போலாகும். கொஞ்சம் அசந்தாலும் ஒரு நடிகனின் நடை உடை பாவனைகள் வந்து விடக்கூடிய அளவிற்கு மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் செய்திருப்பார். அவர் மிகவும் அநாயாசமாக அதை செய்ததால் நமக்கு அதனுடைய வலிமை தெரியவில்லை. இதே கதாபாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் இந்த அளவிற்கு சினிமாவின் தாக்கம் தெரியாமல் செய்திருக்க முடியாது. அதே போல் கதாநாயகி ஒரு சினிமா நடிகையாக இருந்தும் வந்த இடத்தில் அதன் சுவடு சிறிதும் தெரியாமல் நடந்து கொள்வதும் ஜெயலலிதாவுக்கு சவாலான கதாபாத்திரம்.
இருவருக்குமே மறக்க முடியாத படமாகும் சுமதி என் சுந்தரி.
ராகவேந்திரன்.
sankara70
22nd April 2010, 04:24 PM
Yes, mudalil Sudarsan kooda JJ paduvathu ponra katchi vandavudan,
ellorukkum ithu enna vera padama enkira ennam varum-sila samayam pakkathu theatre la povatharku pathilla poster sariya parkama, vera padam parka vandu vittomo endru enna thondrum.
Appuram athu shooting endru therinda vudan than, nimmathi ya irukkum
saradhaa_sn
22nd April 2010, 04:47 PM
அன்புள்ள tac....
நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் துடிப்பு ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம், நான் எந்த வரியை 'கோட்' பண்ணி பதில் எழுத நினைத்தேனோ அதை அப்படியே சகோதரர் ராகவேந்தர் எழுதியுள்ளார். 'சுமதி என் சுந்தரி' படத்தின் சிறப்புகள் பற்றி ஏற்கெனவே என்னுடைய விமர்சனக்கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தபோதும், மீண்டும் சுருக்கமாக....
1) 'சிவாஜி படங்கள் பார்க்கச்சென்றால் கைக்குட்டையை மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி செய்தோரின் வாயை அடைத்த படம்.
2) 1971-ல் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பலரை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம்.
3) முதல்காட்சி பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த பல ரசிகர்களை, அப்படியே அடுத்த காட்சிக்கான கியூவில் நிற்க வைத்த படம்.
4) டிக்கட் வாங்கி உள்ளே சென்று உட்காருவதுதான் தெரியும், எப்போது படம் முடிந்ததென்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு ரம்மியமான, விறுவிறுப்பான, பொழுதுபோக்குப் படம்.
5) சென்னை சஃபையர் வளாகத்திலிருந்த 'ப்ளூ டைமண்ட்' தியேட்டரில், Continuous Show காண்பிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம்.
6) கூட்டத்தில் மாட்டாமல் தனித்து வெளியாகி, போதிய இடைவெளி கிடைத்திருந்தால் பெரிய சாதனை செய்திருக்கக் கூடிய படம். (இன்னொரு விசேஷம் பல எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப்பிடித்த சிவாஜி படம்)
7) நீங்கள் குறிப்பிட்ட மற்ற ஆறு படங்களூக்கும் எந்த விதத்திலும் குறைவில்லாத படம்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலோருக்கு நான் திரும்பவும் விடுக்கும் வேண்டுகோள். தயவு செய்து 'பதினைந்து பட வட்டத்தில்' இருந்து வெளியே வாருங்கள். அவர் நடித்த 305 படங்களில் 200-க்கும் மேற்பட்டவை மிகச்சிறந்த படங்கள்.
saradhaa_sn
22nd April 2010, 05:13 PM
Yes, mudalil Sudarsan kooda JJ paduvathu ponra katchi vandavudan,
ellorukkum ithu enna vera padama enkira ennam varum-sila samayam pakkathu theatre la povatharku pathilla poster sariya parkama, vera padam parka vandu vittomo endru enna thondrum.
Appuram athu shooting endru therinda vudan than, nimmathi ya irukkum
அன்புள்ள சங்கரா...
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த பாயிண்ட்டையும் என்னுடைய விமர்சனத்தில் எழுதியுள்ளேன் படித்திருப்பீர்கள். படிக்காதவரகளுக்காக, சுமதி என் சுந்தரி விமர்சன, ஆய்வுக்கட்டுரை (முரளியண்ணாவின் கூடுதல் தகவல்களுடன்)இங்கே:
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743
RAGHAVENDRA
22nd April 2010, 05:23 PM
[quote2) 1971-ல் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பலரை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம்.[/quote]
சகோதரி சாரதா அவர்கள் நூற்றுக்கு நூறு நடந்ததை எழுதியுள்ளார். 1970-71ம் ஆண்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். சொல்லப் போனால் எப்போதுமே பொற்காலம் தான். இருந்தாலும் இந்த காலகட்டத்தில் புத்தம் புதிய ரசிகர்கள் ஏராளமானோர் நடிகர் திலகத்திற்கு உருவாகக் காரணமாயிருநதது இந்தப் படம் தான். அதுவும் சாரதா அவர்கள் சொன்னது போல் இப்படம் ஓடிக் கொண்டிருந்த போது தான் அதிக பட்சமாக ஓரே நடிகரின் ஐந்து புதிய படங்கள் ஒரே சமயத்தில் ஓடிக் கொண்டிருந்த முதல் சாதனையாகவும் அமைந்தது. அண்ணா சாலையைப் பொறுத்த வரையில் நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல் சித்ராவில் சுமதி என் சுந்தரி, சாந்தியில் தங்கைக்காக, பிளாஸாவில் குலமா குணமா, வெலிங்டனில் அருணோதயம் மற்றும் மிட்லண்டில் பிராப்தம் என ஐந்தும் ஒரே சமயத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தன. அது மட்டுமல்லாமல் இடையில் கெயிட்டியில் நடுநடுவில் சில பழைய படங்களும் இடம் பெற்றன. தனியே சுமதி என் சுந்தரி வெளியாகி இருந்தால் நிச்சயம் வெள்ளி விழா கண்டிருக்கும். இதைக் கூறக் காரணம், REPEATED AUDIENCE FACTOR. எந்த ஒரு படமும் பொது மக்கள் ஒரு முறை பார்த்தால் வெள்ளி விழா ஓட முடியாது. திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் படம் தான் ரசிகர்களின் பேராதரவுடன் 25 வாரங்களும் அதற்கு மேலும் ஓடும். அப்படி ரிபீடெட் ஆடியென்ஸ் கண்ட படம் தான் சுமதி என் சுந்தரி. அப் படத்தை ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் குறைந்தது 10 முறையாவது பார்த்திருப்பார் அந்த குறுகிய கால கட்டத்திலேயே. அப்படித் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்த படம் சுமதி என் சுந்தரி. அப்படி பார்க்கும் 10 முறைகளில் குறைந்தது 3 முறை மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகவும் அந்த இளமை தளும்பும் ஹம்மிங்கிற்காகவும் 2 முறை கலைச் செல்வி ஜெயலலிதாவின் எழில் பொங்கும் தோற்றம் மற்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ரொமான்ஸான காட்சிகள், மற்றும் மது என்ற வார்த்தையை அவர் உச்சிரிக்கும் போதெல்லாம் ஏற்படக் கூடிய உடல் சிலிர்ப்பு ஆகியவையும் காரணமாகும். குறிப்பாக பூங்காவில் பெஞ்ச் மேல் அமர்ந்த படி இருவரும் ஒருவரை யொருவர் காதல் வயப் பட்டு பார்த்தவாறே இருக்க, அப்போது மெல்லிசை மன்னரின் இசைக்குழுவினரின் ஹம்மிங் ஒலிக்க, புத்தகத்தைக் கீழே போட்டு விட்டு உணர்ச்சி வயப்படுதல், அந்தக் கால இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதென்றால் அது மிகையன்று. இந்தக் காட்சியில் ஜெயலலிதா அவர்களின் நடிப்பிற்கு ஈடாக யாரையும் இன்று வரை காண முடியவில்லை. பின்னர் தொடரும் பொட்டு வைத்த முகமோ பாடல் போனஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படத்தை இவ்வளவு சிலாகித்துக் கூறக் காரணம் அப்படத்தை இக்காட்சிக்காகவே இன்று வரை குறைந்தது 150 முறையாவது அப்படத்தை நான் பார்த்திருப்பேன். நடிகர் திலகத்தின் 305 படங்களில் எனக்கு மிகவும் பிடித்து நான் முதலிடம் கொடுக்கும் படம் சுமதி என் சுந்தரி தான்.
நன்றி tac அவர்களே, இப்படத்தைப் பற்றிய என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பளித்தமைக்கு.
ராகவேந்திரன்
J.Radhakrishnan
22nd April 2010, 07:47 PM
சுமதி என் சுந்தரி நினைவுகளை பகிர்ந்து கொண்ட சகோதரி சாரதா மற்றும் திரு ராகவேந்தர் அவர்களுக்கு நன்றி. தெய்வமகன் படத்தை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த படம் இது தான். பாடல் காட்சிகளில் NT கலக்கி இருப்பார். பொட்டு வைத்த முகமோ பாடல் ஆகட்டும், ஒரு தரம் ஒரே தரம் பாடல் ஆகட்டும் NT - ன் ஸ்டைலே தனி. ஒரு தரம் ஒரே தரம் பாடல் நடுவே பௌலிங் செய்வது போல், பின் பாறைகளுக்கு நடுவில் ஓடி வந்து ஒரு காலில்அழகாக நிற்பது இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
rajeshkrv
22nd April 2010, 10:00 PM
நேற்று நடிகர் திலகத்தின் கை கொடுத்த தெய்வம் பார்த்தேன். அது ஏற்கனவே பல முறை பார்த்து ரசித்த படம் என்றாலும் இந்த முறை அதிகம் ரசித்தேன்.
குறிப்பாக அந்த ஆரம்ப காட்சிகளில் பம்பாயில் ரொட்டி சாப்பாட்டை வெறுக்கும் காட்சிகளும், கே.ஆர்விஜயாவை தமிழ் பெண்ணாக மாற்றும் காட்சிகளும் அருமை .. சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயா அருமையாக செய்திருப்பார்கள் . சிவாஜி விஜயாவிற்கு சமையல் சொல்லி கொடுக்கும் விதமே அழகு ...
Murali Srinivas
23rd April 2010, 01:04 AM
ஜோ,
நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். எப்போதும் நாகர்கோவில் ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல நல்ல விஷயங்களுக்கும் முதல் மரியாதை, முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
புவி வெப்பமயமாவதல் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாகர்கோவில் வாழ் சிவாஜி ரசிகர்கள் அங்கிருந்து ஒரு வானில் கிளம்பி திருநெல்வேலி வழியாக மதுரை வரை பயணம் செய்து வழியில் பொது மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்தபடி சென்றிருக்கின்றனர். அதைப் பற்றிய சுவையான கூடுதல் தகவல்களோடு விரைவில் தகவல் திலகம் சுவாமி உங்கள் முன் தோன்றுவார்.
சுமதி என் சுந்தரி பற்றிய வாதங்கள் வெகு சுவாரஸ்யம். சாரதாவின் போஸ்டை மீண்டும் படித்த போது முதலில் படித்தபோது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி இப்போதும் ஏற்பட்டது.
அன்புடன்
joe
23rd April 2010, 08:33 AM
ஜோ,
நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். எப்போதும் நாகர்கோவில் ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல நல்ல விஷயங்களுக்கும் முதல் மரியாதை, முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
:clap: :thumbsup:
tacinema
23rd April 2010, 08:54 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில், கடந்த 16.4.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிக் கொடி நாட்டி வரும் கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி", முதல் மூன்று நாட்களில் [16.4.2010 வெள்ளி முதல் 18.4.2010 ஞாயிறு வரை]அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).
இத்தகவலை எமக்களித்த பழம்பெரும் மதுரை ரசிக நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார்,
BEAUTIFUL. நமது நடிகர் திலகத்தின் சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால் அவரின் அதி அற்புத நடிப்பில் உருவான உத்தம புத்திரன், பாச மலர்,வசந்த மாளிகை, தங்கபதக்கம், ராஜா போன்ற படங்களுக்கு மதுரை ரசிகர்கள் தமிழ் கலையுலக சக்கரவர்த்தி NT க்கு RED CARPET WELCOME நிச்சயம் தருவார்கள்.
சுமதி என் சுந்தரி மதுரை போஸ்டர்ஸ் / videos இருந்தால் இங்கே கொடுக்கவும்.
regards
All,
I would like to clear the misrepresentation that my message created. In my view, SES is a good movie - just good. No doubt, NT looks unbelievably handsome - for me, anything related to SES begins with handsome NT and regrettably, it ends there too. I feel the movie has got a hole in its logic, a bit bulky heroine - in spite of these negative stuff, the movie is totally a time pass just because of NT.
When I watched this movie during one of its re-releases in Madurai, I didn't get the "kick" that you normally get with NT's phenomenal movies such as Deiva Magan or Gnana oli or pattikkada pattanama. May be, Madurai fans look NT movie at a different angle.
In terms of NT's look, i think in all CV Rajendran directed movies, he looked absolutely handsome and radiating - including Raja.
Regards
tacinema
23rd April 2010, 09:12 AM
அன்புள்ள tac....
நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் துடிப்பு ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம், நான் எந்த வரியை 'கோட்' பண்ணி பதில் எழுத நினைத்தேனோ அதை அப்படியே சகோதரர் ராகவேந்தர் எழுதியுள்ளார். 'சுமதி என் சுந்தரி' படத்தின் சிறப்புகள் பற்றி ஏற்கெனவே என்னுடைய விமர்சனக்கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தபோதும், மீண்டும் சுருக்கமாக....
1) 'சிவாஜி படங்கள் பார்க்கச்சென்றால் கைக்குட்டையை மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி செய்தோரின் வாயை அடைத்த படம்.
Saraadha Madam,
That must be an absolutely cooked up statement. In terms of versatility in Tamil Cinema, our NT comes top with a strong show and any other actor will come a distant second.
Any character - be it comedy, romance, sentimental, religious, mythological - our NT is there and he is there with absolute brilliance.
காமெடி எடுத்துகொள்வோம்: எனக்கு தெரிந்து அவர் நடித்த காமெடி படங்கள்:
1 கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி
2 சபாஷ் மீனா
3 அறிவாளி
4 கலாட்டா கல்யாணம்
5 ஊட்டி வரை உறவு
அதனால் சிவாஜி படங்கள் என்றால் கைக்குட்டை வேண்டும் என்று சொன்னது எல்லாம் சுத்த அபத்தமானது. NT not just proved his brilliance in each of his movies, but he put stamp in each of his scenes in those movies.
Regards
sankara70
23rd April 2010, 11:24 AM
Nagerkoil NT rasigargalin effort to educate people about global warming is appreciable!
This must be the first of its kind!
joe
23rd April 2010, 11:33 AM
A Lesson in Gratitude from the Movie Maestro Sivaji Ganesan
http://www.sangam.org/taraki/articles/2005/12-19_Lesson_in_Gratitude_from_Sivaji_Ganesan.php?uid =1382
gkrishna
23rd April 2010, 12:02 PM
சுமதி என் சுந்தரி பற்றிய விவாதம் மிகவும் அருமை. நண்பர் tac குறிபிட்டது போல் உணர்ச்சிமயமான காட்சிகள் என்பது எதவும் சுசு வில் கிடையாது . ஆனால் கற்பனையில் நடக்கும் முதல் இரவு காட்சியை மறக்கமுடியுமா மேலும் இறுதி காட்சியில் சுமதி ஒரு நடிகை என்று தெரிந்தவுடன் Ntin முகபாவங்கள் குறிப்பிடத்தக்கவை. சுசு ஷர்ட் என்று 70 கால கட்டங்களில் famous ஆனது நாகேஷ்/வ.கோபாலகிருஷ்ணன்/தங்கவேல் முன்னால் jj சிவாஜி இன் பின்னால் முகத்தை மறைதுகொள்வது மற்றும் எஅய் பிள்ளை சச்சாயி ஏனுங்க பாடல் முடிந்தவுடன் கையில் பலூனுடன் NT அண்ட் ஜ்ஜ் இரவில் நடந்து வரும் போது MSV backround மியூசிக் மற்றும் ஹம்மிங் மறக்கமுடியுமா
நட்புடன் GK
saradhaa_sn
23rd April 2010, 12:05 PM
டியர் tac.....
நீங்கள் சொலவ்து உண்மைதான். (உங்கள் லிஸ்ட்டில் வரவேண்டிய இன்னொரு படம் 'பலே பாண்டியா' -1962). ஆனால் கலாட்டா கல்யாணம் படத்துக்குபின் நடிகர்திலகத்தின் படங்களில் நகைச்சுவைப்படங்களுக்கு பெரிய இடைவெளி விழுந்து விட்டது. அப்போது வந்தவை (அரிச்சந்திரா, எங்க ஊர் ராஜா, உயர்ந்த மனிதன், தெய்வமகன், திருடன், சிவந்த மண், விளையாட்டுப்பிள்ளை, வியட்நாம் வீடு, எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, குலமா குணமா) போன்ற படு சீரியஸ் படங்களே. எங்கமாமாவில் கூட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்த அளவுக்கு நகைச்சுவை குறைவுதான். அதே நேரத்தில் மற்றவர்களின் படங்களில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றதோடு வீட்டுக்கு வீடு, உத்தரவின்றி உள்ளே வா போன்ற முழுநீள நகைச்சுவைப்படங்களும் வந்து கலக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அப்போதைய நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி (சிலரால்) அப்படி ஒரு கேலிப்பேச்சு எழுந்தது உண்மையே. அந்நேரம், எதிர்பாராத சமய சஞ்சீவியாக வந்து கேலிபேசியோரின் வாயை அடைத்த படம்தான் சுமதி என் சுந்தரி.. (இதற்குப்பின் அதே ஆண்டில் வந்த படம் 'மூன்று தெய்வங்கள்')
'சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் எனும்போது...' என்ற வரிகள்தான் என்னையும் சகோதரர் ராகவேந்தர் அவர்களையும் உசுப்பி விட்டது. இன்னொன்று கவனித்தீர்களா?. பம்மலார் தந்துள்ள வசூல் விவரங்களே, அப்படம் மதுரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறதே.
joe
23rd April 2010, 12:40 PM
இன்றிரவு சிங்கப்பூர் வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் ..குலமா குணமா.
gkrishna
23rd April 2010, 01:47 PM
திரு முரளி மற்றும் சாரதா madem அவர்கள் கவனத்திற்கு
மன்னவன் வந்தானடி திரைபடத்தில் ஒரு காட்சி NT ஐ அடிபதற்காக திரு நம்பியார் குருசாமி 4 அடியாட்கள் பெயரை கூறுவார்
ஆய் மாதவா பாலமுருகா சங்கரா ஆறுமுகம் - படத்தின் டைரக்டர் ப.மாதவன் கதை வசனம் பாலமுருகன் தயாயிருப்பு சங்கரன் ஆறுமுகம் (ஜேயார் movies producers
forum படிக்கும் போது memory வேறு யாராவது சொல்லியிருந்தாலும் நன்றி
நட்புடன் GK
gkrishna
23rd April 2010, 02:41 PM
Sun Oct 08, 2006 10:01 am you have posted the review of ennai pol oruvan
சகோதரி சாரதா அவர்களின் என்னை போல் ஒருவன் திரைப்படம் விமர்சனம் 2006 -2007 காலகட்டங்களில் (பார்ட் ௨) எழுதி உள்ளீர்கள் திருநெல்வேலியில் அந்த திரைப்படம் 1976 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்று நினவு அந்த திரைபடத்தின் விநியோகஸ்தர் (நெல்லை-கன்னியாகுமரி) திரு சூரிய நாராயணன் அவர்கள் முயற்ச்சியால் திரு முரளி கூறியது போல் 1976 ஆம் ஆண்டே censor ஆகி விட்டது ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் என்று TMS பாடல் ஒன்று உண்டு (வித் சாய்பாபா இங்கிலீஷ் poem ) உங்கள் விமர்சனத்தில் அந்த பாடல் விடுபட்டுவிட்டது என்று நினைகிறேன்.
நட்புடன் Gk
saradhaa_sn
24th April 2010, 11:24 AM
Sun Oct 08, 2006 10:01 am you have posted the review of ennai pol oruvan
சகோதரி சாரதா அவர்களின் என்னை போல் ஒருவன் திரைப்படம் விமர்சனம் 2006 -2007 காலகட்டங்களில் (பார்ட் ௨) எழுதி உள்ளீர்கள் திருநெல்வேலியில் அந்த திரைப்படம் 1976 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்று நினவு அந்த திரைபடத்தின் விநியோகஸ்தர் (நெல்லை-கன்னியாகுமரி) திரு சூரிய நாராயணன் அவர்கள் முயற்ச்சியால் திரு முரளி கூறியது போல் 1976 ஆம் ஆண்டே censor ஆகி விட்டது ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் என்று TMS பாடல் ஒன்று உண்டு (வித் சாய்பாபா இங்கிலீஷ் poem ) உங்கள் விமர்சனத்தில் அந்த பாடல் விடுபட்டுவிட்டது என்று நினைகிறேன்.
நட்புடன் Gk
அன்புள்ள ஜி.கிருஷ்ணா...
அந்த 'என்னைப்போல் விமர்சனம்' நான் தமிழில் எழுதக்கற்றுக்கொள்ளும் முன் ஆங்கிலத்தில் எழுதியது. இப்போது படிக்கும்போது இன்னும் விவரமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றும். ஆனால் இந்த 6-ம் பாகத்தில், மார்ச் 18 தேதிகளில், என்னைப்போல் ஒருவன் வெளியீட்டு நாள் பதிப்பில், நான், முரளியார், பம்மலார், ராகவேந்தர் மற்றும் நண்பர்கள் அப்படம் பற்றிய மேற்கொண்டு தகவல்களையும், 'ரிலீஸ் மேளா' விவரங்களையும் பதிந்துள்ளோம் பார்த்திருப்பீர்கள். என் விமர்சனத்தில் 'ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும்' பாடல் விடுபட்டிருந்ததை, அப்போதே ஒரு நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார்.
என்னைப்போல் ஒருவன் தமிழகமெங்கும் 1978 மார்ச் 18-லும், சென்னையில் மட்டும் 1978 ஏப்ரல் 14-லிலும் வெளியானதாகத்தான் நினைவு. ஆனால் திருநெல்வேலியில் மட்டும் 1976-லேயே (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) வெளியானதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இதுபற்றி 'புள்ளிவிவர நிபுணர்கள்' முரளியாரும், பம்மலாரும்தான் விளக்க வேண்டும்.
kaveri kannan
24th April 2010, 11:31 AM
கண்துளிர்க்க வைத்த பாசமலர் மூன்றாம் பாகம் அளித்த முரளிசாருக்கு நன்றி.
சரியான அவர் கணினிக்கும் நன்றி.
பம்மலார் பற்றி ராகவேந்திரா சார் சொன்ன வார்த்தைகள் சத்தியமானவை.
தொடர்ந்து நடிகர்திலகத்தின் சாதனைப்பட்டியலைத் தீட்டும் பம்மலாரின் அன்புக்கரங்களுக்கு நன்றி..
சாரதா அவர்கள் சொல்லும் சுமதி என் சுந்தரி தொடர்பான சேதிகள் எல்லாமே சுவை --
சட்டையின் அரைக்கைப் பகுதியின் நுனியில் சின்ன வெட்டு வைத்து தைப்பது - கல்லூரி மாணவர்கள் அனைவரும் பின்பற்றிய ஸ்டைல் என ஒரு பேட்டியில் இப்படம் பார்த்து ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சத்யராஜ் சொல்லியிருந்தார்.
கருப்பு வெள்ளையிலேயே ஸ்டைலில் கலக்கி, ட்ரெண்ட்செட்டர் ஆச்சே நம்ம நடிகர்திலகம்.
ராமன் எத்தனை ராமனடி பொம்மைகள் போட்ட ஸ்டைல் சட்டை
பட்டிக்காடா பட்டணமா பெல்பாட்டம், ஹேர்ஸ்டைல்..
-------------------
நம் கலாச்சாரச் சின்னம் நடிகர்திலகம்.
இன்னும் சவாலே சமாளியை விஞ்சும் வேட்டிசட்டைத் தோற்றம் வேறு எவரிடமும் கண்டதில்லை.
புதியபறவையில் முழுக்கைச்சட்டையை புஜம் வரைமடித்துவிடும் ''அலட்சியநேர்த்தி'' அழகை அடிக்க ஆளில்லை..
----------------------------------
ஜோ அவர்கள் கொடுத்த சுட்டி படித்து நெகிழ்ந்தேன்.
ஒருமுறை பெருமாள் அவர்கள் வந்ததால், எழுந்து மறைத்த சிகரட்டை கையாலே அழுத்தி அணைத்தவராம் நம் நடிகர்திலகம்.
அன்பிற் பணியுமாம் பெருமை!
saradhaa_sn
24th April 2010, 11:51 AM
மன்னவன் வந்தானடி திரைபடத்தில் ஒரு காட்சி NT ஐ அடிபதற்காக திரு நம்பியார் குருசாமி 4 அடியாட்கள் பெயரை கூறுவார்
ஆய் மாதவா பாலமுருகா சங்கரா ஆறுமுகம் - படத்தின் டைரக்டர் ப.மாதவன் கதை வசனம் பாலமுருகன் தயாயிருப்பு சங்கரன் ஆறுமுகம் (ஜேயார் movies producers)
forum படிக்கும் போது memory வேறு யாராவது சொல்லியிருந்தாலும் நன்றி
நட்புடன் GK
Dig/......
இதைப்படித்ததும் நினைவுக்கு வரும் இன்னொன்று....
காசேதான் கடவுளடா படத்தில் முத்துராமனும் லட்சுமியும் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்க, அங்குள்ள ஒலிபெருக்கியில் நேயர் விருப்பம் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். 'அடுத்த பாடல் காசேதான் கடவுளடா படத்தில் கோவை சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது. விரும்பிக்கேட்டவர்கள் சரவணன், கோபு, விஸ்வநாதன், வாலி ஆகியோர்'. (இவர்கள் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்). .....dig ends.
saradhaa_sn
24th April 2010, 12:55 PM
நம் கலாச்சாரச் சின்னம் நடிகர்திலகம்.
இன்னும் சவாலே சமாளியை விஞ்சும் வேட்டிசட்டைத் தோற்றம் வேறு எவரிடமும் கண்டதில்லை.
புதியபறவையில் முழுக்கைச்சட்டையை புஜம் வரைமடித்துவிடும் ''அலட்சியநேர்த்தி'' அழகை அடிக்க ஆளில்லை..
முழங்கை வரை மடக்கிவிடப்பட்ட முழுக்கை சட்டையென்றதும் எனக்கு நினைவுக்கு வருவது 'பொன்னூஞ்சல்' படத்தில் வரும் 'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' பாடல் காட்சிதான். என்ன ஒரு அழகு. கதாநாயகனும் நாயகியும் ஐம்பது மீட்டர் இடைவெளியில் நின்று பாடும், அருமையான கருப்புவெள்ளை ஓவியம். வேஷ்ட்டி சட்டையில் தலைவர் சூப்பரா இருப்பார்.
gkrishna
24th April 2010, 01:55 PM
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சாரதா madem என்னை போல் ஒருவன் பற்றி நான் குறிப்பிட்டது ஒரு நினைவில் வருடம் தவறாக இருக்கலாம். ஏன் என்றால் க்ரஹப்ரவேசம் (D.யோகானந்த் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் ) நெல்லை பூர்ணகலவில் திரையிடப்பட்டு 55 நாட்கள் ஓடியதாக நினவு தீடீர் என்று இன்றே இப்படம் கடைசி என்று நண்பர்கள் கூறியவுடன் கிட்டத்தட்ட 20 ரசிகர்கள் சென்று நெல்லை பூர்ணகலா திரைஅரங்கு உரிமையாளர் அவர்களடிம் சென்று முறையிட்டோம் மேலும 5 நாட்கள் மட்டுமாவது நீடித்து 60 நாட்கள் என்று முடிதுகொள்ளுமாறு கேட்டோம் ஆனால் வசூல் குறையவில்லை மேலும் தொடரசசியாக அந்த வருடத்தில் 2 /3 படங்கள் சரியாக போகவில்லை.ஆனால் இது சம்பந்தமாக எதுவும் செய்ய முடியாது நீங்கள் சுவாமி pictures உரிமையாளர் SK என்ற ச.கல்யாணசுந்தரம் இடம் சென்று முறையிடவும் என்று சொல்லிவிட்டார் இதில் காமெடி என்னவென்றால் இருவரும் பக்கா காங்கிரஸ்/சிவாஜி ரசிகர்கள். ஆனால் பிசினஸ் என்றவுடன் மாறிவிட்டனர். க்ரஹப்ரவேசம் திரைபடத்தை மாற்றிவிட்டு என்னை போல் ஒருவன் திரையிடபட்டதாக நினவு சிவாஜி மன்றத்தில் இருந்து கொடி மற்றும் தோரணம் கட்ட முடியாது என்று கூறி விட்டோம் பின்னர் கூலி ஆட்களை வைத்து காங்கிரஸ் கொடியும் அண்ணன் banner வைத்தார்கள் நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. யாரவுது நெல்லை ரசிகர் அந்த காலகட்டததை சேர்ந்தவர்கள் இருந்தால் நமது போரத்தில் இருந்தால் உறுதி படுத்தலாம்
காசேதான் கடவுளடா படத்தில் மேலும் ஒரு காட்சி தேங்காய் ஸ்ரீனிவாசன் சாமியார் வேடம் போட்டு உள்ளே வரும் போது வரிசையாக சுருளிராஜன்/வெண்ணிறாடை மூர்த்தி/மனோரமா/முத்துராமன்/லக்ஷ்மி/ஸ்ரீகாந்த் என்று நின்று கொண்டு இருப்பார்கள் அப்போது தேங்காய் கூறும் ஒரு வசனம் "சுருளிராஜ மனோரம் மூர்த்தி முத்துராம லக்ஷ்மி ஸ்ரீகாந்த நாம சுஷ்ம பிரசிதக' இதை பற்றி திரு கோபு/cvr ஒரு பேட்டியில் தேங்காய் ஸ்ரீனிவாசன் இன் timing sense பற்றி கூறி இருந்தார்கள்
rangan_08
24th April 2010, 04:29 PM
Hearty welcome to NT club, Mr Krishna.
Murali sir, hope you will break the suspense very soon with a stunning review.
saradhaa_sn
24th April 2010, 05:33 PM
க்ரஹப்ரவேசம் (D.யோகானந்த் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் ) நெல்லை பூர்ணகலவில் திரையிடப்பட்டு 55 நாட்கள் ஓடியதாக நினவு தீடீர் என்று இன்றே இப்படம் கடைசி என்று நண்பர்கள் கூறியவுடன் கிட்டத்தட்ட 20 ரசிகர்கள் சென்று நெல்லை பூர்ணகலா திரைஅரங்கு உரிமையாளர் அவர்களடிம் சென்று முறையிட்டோம் மேலும 5 நாட்கள் மட்டுமாவது நீடித்து 60 நாட்கள் என்று முடிதுகொள்ளுமாறு கேட்டோம் ஆனால் வசூல் குறையவில்லை மேலும் தொடரசசியாக அந்த வருடத்தில் 2 /3 படங்கள் சரியாக போகவில்லை.ஆனால் இது சம்பந்தமாக எதுவும் செய்ய முடியாது நீங்கள் சுவாமி pictures உரிமையாளர் SK என்ற ச.கல்யாணசுந்தரம் இடம் சென்று முறையிடவும் என்று சொல்லிவிட்டார் இதில் காமெடி என்னவென்றால் இருவரும் பக்கா காங்கிரஸ்/சிவாஜி ரசிகர்கள். ஆனால் பிசினஸ் என்றவுடன் மாறிவிட்டனர். க்ரஹப்ரவேசம் திரைபடத்தை மாற்றிவிட்டு என்னை போல் ஒருவன் திரையிடபட்டதாக நினவு சிவாஜி மன்றத்தில் இருந்து கொடி மற்றும் தோரணம் கட்ட முடியாது என்று கூறி விட்டோம் பின்னர் கூலி ஆட்களை வைத்து காங்கிரஸ் கொடியும் அண்ணன் banner வைத்தார்கள் நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. யாரவுது நெல்லை ரசிகர் அந்த காலகட்டததை சேர்ந்தவர்கள் இருந்தால் நமது போரத்தில் இருந்தால் உறுதி படுத்தலாம்
கிருஷ்ணா.....
1976-ம் ஆண்டில் 'கிரகப்ரவேசம்' ஏப்ரல் 10 அன்று ரிலீஸ் ஆனது. அதிலிருந்து 27 நாட்கள் கழித்து மே 6 அன்று 'சத்யம்' ரிலீஸானது.
கிரகப்ரவேசம் வெளியாகி 77 நாட்களும், சத்யம் வெளியாகி 51 நாட்களும் ஆனபோது 'உத்தமன்' (June-26) ரிலீஸானது. இதில் எந்தப்படத்தைச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. (பின்னர் அக்டோபர் 22 தீபாவளியன்று 'சித்ரா பௌரணமி'யும், டிசம்பர் 15 அன்று 'ரோஜாவின் ராஜா'வும் வெளியிடப்பட்டது).
pammalar
24th April 2010, 07:59 PM
கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நேற்று (23.4.2010) வெள்ளி முதல், தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. முதல் நாள், முதல் காட்சியான நேற்றைய மாலைக் காட்சியை மட்டும், 200 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.10/-. ஒரே காட்சியில், ரூ.2,000/-த்துக்கும் மேல் (ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது. டூரிங் டாக்கீஸைப் பொறுத்தவரை, இது இமாலய சாதனை.
இத்தகவல்களை எமக்களித்த ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
sankara70
25th April 2010, 11:27 AM
இதய வேன்தன் சிவாஜி மன்ட்ரம் மஹாலக்ஷ்மி தெஅட்ரெ உழியர்கு வேட்டி அன்ட் சேலை கொடுததை நடிகர்திலgaம்.com முலம் தெரிந்து கொன்டென் வாழ்க
gkrishna
25th April 2010, 12:26 PM
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
உங்களது தகவல்கள் என்னை கடந்த காலங்களுக்கு கொண்டு சென்று விட்டன. உங்கள் உடைய statistcis அபாரம.
சத்யம்,உத்தமன் மற்றும் ரோஜாவின் ராஜா நினவு உள்ளது.
சத்யம் (இயக்கம் ச.கண்ணன்) நெல்லை சென்ட்ரல் theatre இல் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தேவிகா அவர்கள் ஜோடியாக நடித்திருப்பார்கள். மேலும் கமலஹாசன்,மஞ்சுளா மற்றும் ஜெயசித்ரா உண்டு 'கல்யாண கோயிலின் தைவிக கலசம் ' மிக அருமையான பாடல்
ரோஜாவின் ராஜா (NVR Pictures direction கே.விஜயன்) நெல்லை சிவசக்தி theatre இல் வெளியானது. வாணிஸ்ரீ அவர்கள் ஜோடியாக நடித்திருப்பார்கள். அதில் வரும் சினிமா theatre காட்சிஇல் சிவாஜி அவர்கள் பின் சீட் இல் இருக்கும் வாணிஸ்ரீக்கு பொப்கோர்ன் கொடுப்பர்துகு பதிலாக வீரராகவன் அவர்களுக்கு கொடுப்பர் அதை வாணிஸ்ரீ நக்கல் அடிக்கும் காட்சி எல்லோராலும் ரசிக்கப்பட்டது.'ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருப்பான் ராஜா ராமன் நினைத்திருப்பான்' பாடல் காட்சி மிகவும் சிறப்பாக படம் பிடித்திருப்பார்கள் பாடலுடுன் வரும் விசில் அருமை மேலும் சுருளி அவர்கள் சிவாஜி முன்னால் நடிக்கும் கட்டபொம்மன் காட்சி,சிவாஜின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் அற்புதம் "நாளை நீ மன்னவன்","ஓடி கொண்டேய் இருப்பேன்" என்று இரண்டு பாடல்கள் மேலும் உண்டு
ரிலீஸ் முதல் நாள் அன்று முதல் காட்சிஇல் ரசிகர்கள் அனைவருக்கும் ரோஜா பூ ஒன்று வழங்கப்பட்டது
உத்தமன் நெல்லை பூர்ணகலவில் வெளியானது
உத்தமன் என்றதும் ஒரு நினவு உத்தமனில் சிவாஜி பெயர் கோபி மஞ்சுளா பெயர் ராதா அதே போல் உரிமை குரல் mgr பெயர் கோபி லதா பெயர் ராதா நெல்லை பூர்ணகலவில் உத்தமன் வசூல் மற்றும் உரிமைகுரல் வசூல் இரண்டயும் ஒப்பிட்டு ஒரு போஸ்டர் நெல்லை சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டது போஸ்டர் வாசகங்கள் இப்படி இருந்தன "உத்தமன் கோபி ராதா 50 வது நாள் வசூல் 188000
உரிமை குரல் கோபி ராதா 50 வது நாள் வசூல் 177000 " . உத்தமன் aakale lakjha என்ற ஹிந்தி படத்தின் தழுவல் என்று நினவு அதில் படகு படகு ஆசை படகு பாடலில் இளைய திலகம் scatting செய்யும் காட்சி உண்டு . முதல் ரிலீஸ் போது இந்த செய்தி வெளி வரவில்லை 1984 காலகட்டத்தின் போது உத்தமன் rerelease செய்யும் போது போஸ்டர்ல் இளைய திலகம் நடிகர் திலகத்துடன் இணைந்து செய்யும் scatting நிகழிச்சி காண தவறாதிர்கள் என்று விளம்பரம் செய்தார்கள்.
உத்தமன் விமர்சனம் நமது போரும்ல் வெளியிடப்பட்டு உள்ளதா
நட்பு உடன் Gk
sankara70
25th April 2010, 12:44 PM
Uthamanil skate scene undu anal
ilaya thilagam illai nam ithaya thilagam
neenga solvathu santhippu padama irukum(Sivaji-Prabu)
Uthaman is remake of Aa Gale Lagja Hindi (Shashi,Sharmila)
Murali Srinivas
25th April 2010, 05:00 PM
நன்றி கண்ணன் அவர்களே.
மோகன், கொஞ்சம் பொறுங்கள்.
சுவாமி, உண்மையிலே சத்தியசீலன் ஹரிச்சந்திரனின் வசூல் பிரமிக்கத்தக்கதுதான்.
கிருஷ்ணா,
உங்களிடம் நிறைய தகவல்கள் புதைந்து கிடப்பது நன்றாக தெரிகிறது. என்னைப் போல் ஒருவன் சென்சார் ஆனது 1976 டிசம்பர் 31. ஆகவே அது கிரகப்பிரவேசம் படத்தை ஒட்டி வெளி வர வாய்ப்பில்லை. எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது அந்தமான் காதலி - என்னைப் போல் ஒருவன் படங்களாக இருக்குமோ என்று. காரணம் 1978 ஜனவரி 26 அன்று வெளியான அந்தமான் காதலி மார்ச் 17 அன்று 51 நாட்களை நிறைவு செய்தது. மார்ச் 18 அன்று என்னை போல் ஒருவன் வெளியானது. என் சந்தேகம் சரியென்றால் அந்தமான் காதலி பூர்ணகலாவில் வெளியிடப்பட்டதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
ரோஜாவின் ராஜா படத்தைப் பற்றிய நினைவுகள் அருமை. ஆனால் ஒரு சின்ன திருத்தம். நடிகர் திலகம் பின்னால் உட்கார்ந்திருக்கும் வீரராகவனுக்கு கொடுப்பது பாப்கார்ன் அல்ல, சிக்லெட். [சார் இப்படி சிக்லெட் கொடுத்து கொடுத்துதான் என் தலை இந்த மாதிரி ஆயிடுச்சு].
சாரதா, ரோஜாவின் ராஜா டிசம்பர் 25 ரிலீஸ்.
சங்கரா,
உத்தமன் படத்தில் இளைய திலகத்தின் ஸ்கேடிங் உண்டு. ஆனால் அது படகு படகு பாடல் காட்சின் போது அல்ல. கேளாய் மகனே பாடலின் இறுதியில் ஸ்கேடிங் கிளப்பில் மகன் ஸ்கேட் செய்துக் கொண்டிருப்பான். அப்போது அங்கே வேறு சிலரும் ஸ்கேடிங் செய்துக் கொண்டிருப்பார்கள். அதில் இளைய திலகமும் ஒருவர்.
அன்புடன்
sankara70
25th April 2010, 05:18 PM
சங்கரா,
உத்தமன் படத்தில் இளைய திலகத்தின் ஸ்கேடிங் உண்டு. ஆனால் அது படகு படகு பாடல் காட்சின் போது அல்ல. கேளாய் மகனே பாடலின் இறுதியில் ஸ்கேடிங் கிளப்பில் மகன் ஸ்கேட் செய்துக் கொண்டிருப்பான். அப்போது அங்கே வேறு சிலரும் ஸ்கேடிங் செய்துக் கொண்டிருப்பார்கள். அதில் இளைய திலகமும் ஒருவர்.
அன்புடன்
சாரி எனக்கு தெரியாது-ஆசர்யமா இருக்கே
kaveri kannan
25th April 2010, 08:42 PM
முரளி சார்
சிக்லெட் - வீரராகவன் தலையைத் தடவியபடி சொல்லும் வசனத்தைச் சரியாகச் சொன்னதில் தெரிகிறது ---
உங்கள் ஆழ்ந்த ரசனை.
இந்தப் படத்தை நான் தொடர்ந்து 14 நாட்கள் தினம் ஒரு முறை பார்த்து
டைட்டில் இசை முதல் இறுதி வரை அப்படியே ஒலிச்சித்திரமாய் நண்பர்களுக்கு சொல்லி அசத்திய நினைவலைகள்.
Extreme depression - இதற்கான முகபாவம் -
நம் நடிகர்திலகத்தின் ஒரு பக்க கன்னச்சதையிடம் உலக் நடிகர்கள் பிச்சை வாங்க வேண்டும்.
ஏவிஎம் ராஜனுக்காகப் பெண்பார்க்கப் போன இடத்தில் வாணிஸ்ரீ..
அந்த அதிர்ச்சி முகபாவம் ---
,, மேலே போட வேண்டிய பெயரை கீழே ..'' அழைப்பிதழைக் கண்டு சொல்லும் இயலாமை...
'' அம்மா, தூங்கணும்'' என அபத்தமாய்ச் சொல்லும் மனப்பிறழ்வின் தொடக்கம்..
வண்ணத்தூரிகையால் எண்ணம் சொல்லும் முழுதான மனச்சிதைவு...
படிப்படியாய் முகஓவியம் தீட்ட இவர் ஒருவரைவிட வேறு எவர்?
நான் கண்டதில்லை இதுவரை.
கிருஷ்ணன் வந்தான்
அவன்தான் மனிதன்
இவற்றிலும் வாழ்ந்து கெட்டவனின் அடிபட்ட மனம் காட்டும் முகம்..
தாடி வேண்டாம்..அதீத தொழில்நுட்ப உதவி வேண்டாம்..
கன்னம் காட்டும் பச்சயம் போதும்
எங்கள் நடிப்புவைரத்துக்கு!
kaveri kannan
25th April 2010, 09:33 PM
காலப் பெட்டகம்
ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் கையால் 'பத்மஸ்ரீ' விருது பெறுவதற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் டெல்லி சென்றார். அந்த அனுபவங்களை விகடனில் நான்கு வாரங்களுக்குச் சுவைபட எழுதியுள்ளார். அதிலிருந்து, இதோ ஒரு துளி!
1966 ( vikatan)
ஜனாதிபதியுடன் ஒரு மணி நேரம்..
- பத்மஸ்ரீ சிவாஜிகணேசன்
சென்னையிலிருந்து டெல்லிக்கு 'காரெவெல்' விமானத்தில் நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றில் இரண்டு பயணங்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது நமது படை வீரர்களை உற்சாகப்படுத்த கலைஞர் தூதுக்குழு ஒன்று சென்றதல்லவா? அந்தக் குழுவில் ஒருவனக நான் டெல்லிக்குப் பறந்தபோது, 'இந்த நாட்டின் குடி மகன் என்ற முறையில் நம் கட மையை ஆற்றப் போகிறோம்' என்ற பெருமித உணர்வு என்னிடம் குடி கொண்டிருந்தது. அதேபோல், சென்ற மாதக் கடைசியில் நமது மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களி டமிருந்து 'பத்மஸ்ரீ' பட்டத்தைப் பெற டெல்லிக்குச் சென்றபோதும், 'இந்த நாட்டுக் கலைஞன் என்ற முறையில், கலைஞர்களின் பிரதிநிதியாக கிடைத்த கௌரவத்தைப் பெறப்போகிறோம்' என்ற எண் ணம் ஒருவித உவகையை என்னுள் உண்டாக்கியது. இந்த இரண்டும் என் வாழ்க்கையில் மிக முக்கியமன பயணங்கள்.
நடுவே ஜனாதிபதி - அந்தப் பக்கம் 'பத்மஸ்ரீ' பானுமதி - இந்தப் பக்கம் நான். எங்களைத் தவிர திரு. ஸி.ஆர்.பட்டாபிராமன், திருமதி சௌந்தரம் ராமச்சந்திரன், இன்னும் நம் ஊரைச் சேர்ந்த பலர் அந்தக் கொட்டகையில் குழுமி இருந்தோம். 'திருவிளையாடல்' படம் ஆரம்பமாகியது. இன்டர்வெல் கிடையாது. மூன்று மணி நேரம், இப்படி அப்படி நகராமல், தொண்டையைக் கனைக்காமல், பொம்மைபோல் உட்கார்ந்து நான் படம் பார்த்த ஒரே நாள் அதுவாகத்தான் இருக்க முடியும். அவர் அருகே அமர்ந்து படம் பார்க்கும்போது, ஏதோ ஒருவித பக்தி உணர்வு என்னைப் பீடித்தது. ஒரு மாபெரும் அறிவாளியின் அருகில் அமரும் பாக்கியம் கிடைத்ததே என்றெண்ணி, அக மகிழ்ந்தேன். படத்தைப் பார்க்கும் போது ஜனாதிபதி நகைச்சுவை யுடன் சொன்னார்: ''நான் சிவா ஜியுடன் அமர்ந்து 'சிவ்ஜி'யைப் பார்க்கிறேன்!''
இதற்கு முன்பு, அதே தியேட்டரில் தலைவர் காமராஜ் அவர்க ளுடன், 'நவராத்திரி' படத்தை ஜனாதிபதி பார்த்து மகிழ்ந்ததாகவும் அறிந்தேன்.
மறைந்த மாவீரர் லால்பகதூர் சாஸ்திரிக்கு 'பாரத ரத்னா' பட்டம் அவர் மகன் ஹரிகிருஷ்ணாவிடம் வழங்கப்பட்டபோதும், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை முதன்முதலா கக் கண்டுபிடித்துக் கொடுத்த முகம்மத் தின் ஜகால் அவர்களுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்ட போதும், அந்தக் கூடத்தில் எழுந்த கரவொலி விண் அதிரச் செய்தது. விருது வழங்க என் பெயர் வாசிக் கப்பட்டபோது, ''அடடே! உங்க ளுக்கு அவ்வளவு பெரிய பெயரா? விழுப்புரம் சின்னய்யா கணேசனா நீங்கள்'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார் நம் அருமை ஜனாதிபதி.
விழா முடிந்ததும், விருது பெற்ற கலைஞர்களுக்கு ஒரு தேநீர் விருந்து. அந்த விருந்தின்போது, ஜனாதிபதி என்னைப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு அறி முகப்படுத்தி வைத்தார். ஏற்கெனவே அவர்களை எனக்கு நன்கு தெரிந் திருப்பினும், ஜனாதிபதி அறிமுகம் செய்துவைத்தது தனிப் பெரு மையை அளித்தது.
''மிகச் சிறந்த நடிகர். நொடியில் முகபாவங்களை மாற்றி, உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டுவார்'' என்றார் ஜனாதிபதி.
பலமுறை, பலரிடம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தபோதிலும், அவரிடமிருந்து வந்த அந்தச் சொற் கள் என்னைப் புல்லரிக்கச் செய் தன.
pammalar
25th April 2010, 11:00 PM
ராணி வாரப் பத்திரிகையின் சென்ற இதழிலும்(18.4.2010), அதன் தொடர்ச்சியாக இந்த இதழிலும்(25.4.2010), தனது மானசீக குருவான நடிகர் திலகத்தைப் பற்றி அவரது சிறந்த சிஷ்யர் சிவகுமார் அவர்கள் எழுதியவற்றைப் படிக்க கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கவும்.
http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=79795690
http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=79795691
http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=79795692
http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=79795693
அன்புடன்,
பம்மலார்.
pammalar
25th April 2010, 11:27 PM
கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிகரமாக நடைபெற்றுள்ள ஒரு வார காலகட்டத்தில் [16.4.2010 வெள்ளி முதல் 22.4.2010 வியாழன் வரை], அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம்).
இக்காவியத்தை வெளியிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், சற்றேறக்குறைய ரூ.10,000/-த்துக்கும் மேல் (ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.
இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
26th April 2010, 03:05 AM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)
13.4.2010 - செவ்வாய்
பிற்பகல் 2:30 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
மாலை 6:15 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
இரவு 9:45 = ரூ.1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)
14.4.2010 - புதன்
பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
மாலை 6:15 = ரூ.2,300/- (ரூபாய் இரண்டாயிரத்து முந்நூறு)
இரவு 9:45 = ரூ.1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)
15.4.2010 - வியாழன்
பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
மாலை 6:15 = ரூ.1,800/- (ரூபாய் ஓராயிரத்து எண்ணூறு)
இரவு 9:45 = ரூ.1,300/- (ரூபாய் ஓராயிரத்து முந்நூறு)
அன்புடன்,
பம்மலார்.
gkrishna
26th April 2010, 12:52 PM
திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே உண்மை என்ன ஒரு அருமையான கணக்கு . அந்தமான் காதலி திரைப்படமும் நெல்லை பூர்ணகலவில் வெளியானது 55 நாட்கள் ஓடியதாக நினவு. அப்போது நான் PUC முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ்/சயின்ஸ் admission ஆக வெயிட் செய்து கொண்டிருந்த காலகட்டம்.
இந்த தருணத்தில் இந்த தளத்திருக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. ஆண்டாள் அருளிய திருபாவை அதை மு ஸ்ரீனிவாச iyengar என்ற ஆராட்சியாளர் எந்த கால கட்டத்தில் திருபாவை எழுத பட்டிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சி செய்யும்போது ஒரு பாசுரத்தில் "வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று" என்ற வரி வைத்து இந்த பாடல் 10 அல்லது 11 வது பாடலில் வரும் மார்கழி என்பது decemeber 14 அல்லது 15 வது தேதியில் வரும் அன்று பௌர்ணமி அதிலிருந்து என்று வெள்ளி கிழமை வந்தது என்று கண்டு பிடித்து 8 வது century என்று கூறி யதாக writer சுஜாதா சொல்லியிருந்தார் கிரேட் Mr .முரளி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நீங்கள் சென்னையில் இருந்தால் ஒரு முறை உங்களை எல்லாம் நேரில் சந்திக்க ஆவல்
நட்புடன் gk
J.Radhakrishnan
26th April 2010, 01:32 PM
நன்றி திரு பம்மலார் சார்,
ராணி வாரப் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி அவரது சிறந்த சிஷ்யர் சிவகுமார் அவர்கள் கூறியவற்றை படித்தேன்.
அருமை அத்தனையும் அருமை.
எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மீண்டும் நன்றி.
saradhaa_sn
26th April 2010, 02:03 PM
அன்புள்ள கிருஷ்ணா...
இப்போது தெளிவாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். 'அந்தமான் காதலி'யை 'கிரகப்ரவேசம்' என்று நினைத்ததன் விளைவாக, 'என்னைப்போல ஒருவனை' 1976-லேயே ரிலீஸ் பண்ணிட்டீங்க. :D (just joke)
நமது பம்மலார், முரளியார், ராகவேந்தர் இவர்களின் 'புள்ளிவிவரக் கணக்கு' எல்லோரையும் அசர வைக்கும். அவர்களிடம் யாரும் தவறான ஒரு தகவலைச்சொல்லி விட்டு தப்பிவிட முடியாது. ஏற்கெனவே மாற்று முகாம் ரசிகர்களுடன் சண்டை நடந்து, தற்போது பூட்டப்பட்டிருக்கும் திரிகளின் பக்கம் சென்று பார்த்தீர்களானால் தெரியும். நடிகர்திலகத்தின் படங்களின் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களெல்லாம் கூட எப்போது வெளியானது, எத்தனை நாட்கள் ஓடியது, திரையரங்கிலிருந்து அப்படம் எடுக்கப்பட்ட அடுத்தநாள் என்ன படம் அங்கே திரையிடப்பட்டது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. (1976-ல் நான் சொன்ன ஐந்து படங்கள் தவிர ஜனவரி 26 அன்று 'உனக்காக நான்' மட்டும் ரிலீஸாகியிருந்தது).
நெல்லை திரையரங்க வெளியீடுகள் பற்றிய உங்களின் பதிவுகள் சுவையாக உள்ளன. தொடர்ந்து பதிவிடுவீர்கள் என ஆவலுறுகிறோம். அந்தமான் காதலியை பூர்ணகலாவில் மேலும் நீட்டிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
பம்மலார், முரளி, ராகவேந்தர் மூவருமே சென்னையில்தான் உள்ளனர். சந்தித்தீர்களானால் அந்த தங்கச்சுரங்கங்களில் ஏராளமான தங்க(த்தகவல்)களை வெட்டியெடுத்துச்செல்லலாம்.
gkrishna
26th April 2010, 03:46 PM
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
நீங்கள் கூறியபடி வேறு எந்த திரியும் இவ்வளுவு நீண்டதாக இல்லை. எத்தனை தகவல் எத்தனை நிகழ்வுகள் படிக்க படிக்க இன்ப தேன் வந்து பாயுது காதினிலே இந்த தருணத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுடுன் ஒரு சந்திப்பு எனக்கு நிகழ்ந்தது அப்போது தமிழக முன்னேற்ற முன்னணி இயக்கத்தின் ஒரு பொது கூட்டத்திற்கு மேஜர் அவர்கள் (தென்காசி) வந்திருந்த்தார்கள் அவரை அழைத்து செல்ல வேண்டிய கார் சற்று தாமதமாக வந்தது அதனால் அவர்கள் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்போர்ம்இல் வெயிட் செய்து கொண்டிருந்தர்கள். நிகழிசுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள்/கட்சி அங்கத்தினர்கள் யாரும் வரவில்லை நான் வேறு ஒரு வேலை ஆக ரயில்வே ஸ்டேஷன் சென்று இருந்தேன். நானே வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது அவர்கள் சற்று ஜோவியல் ஆக கூறினார்கள் 'சிவாஜி மட்டும் 75 காலகட்டங்களில் பெருந்தலைவர் மறைவுக்கு பிறகு கட்சி ஆரம்பித்து இருந்தால் எங்கோ சென்று இருப்பார். உண்மையான ரசிகர்கள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இன்று கட்சி வளர பெரும் பாடுபட வேண்டி இருக்கிறது' கடைசியில் அவரும் பிரிந்து சென்று விட்டார். அவர் நம்மவரை விட்டு பிரிந்தற்றுகு எதாவது மிக பெரிய காரணம் உள்ளதா தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஆனால் VKR இறுதி வரை அண்ணனுடன் நட்பாகவே இருந்தார் என்று கேள்வி பட்டேன் சிவாஜி/மேஜர்/vkr இல்லை என்றால் நடிகர் சங்கம் என்றோ காணாமல் போய் இருக்கும்.
தியாகம் 100vadhu நாள் விழா நெல்லை பார்வதி திரை அரங்கில் நடந்ததை மிக விரைவில் நினைவுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்கிறேன்
ஸ்ரீநிவாஸ் அவர்களின் அரசியல் நிகழ்வுகள் கட்டுரை பாதி படித்தேன் 1984 வரை மீதி நமது போரும் இல் உள்ளதா
நன்றியுடன் GK
gkrishna
26th April 2010, 04:13 PM
திரு சிவகுமார் அவர்களின் கட்டுரை படித்தேன் பம்மலர் அவர்களின் வெப்.கேம்ஸ். தளத்தில். இது ஏற்கனவே அவருடய "இது ராஜா பாட்டை அல்ல" புக் இல் வெளியானது என்று நினைக்கிறன் அந்த புத்தகத்தில் அவர் எல்லா நடிகர்களையும் பற்றி எழுதி உள்ளார். ஆனால் சிவாஜிக்கு மாத்திரம் 5 chapters
திரு பம்மலார் அவர்கள் பம்மல் கண்ணதாசன் மன்றம் தலைவர் அல்லது செயலாளர் ஆக உள்ளார்களா
ஏன் என்றால் கடந்த வருடம் வாணி மஹால் ஒரு நிகழிசயில் திரு ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் திருமதி ஜெயசித்ரா அவர்களுக்கும் சிறந்த சாதனையாளர் விருது வழங்கினார்கள் அப்போது அங்கே சென்று இருந்தேன் திரு ஸ்ரீகாந்த் உடல் நலம் குன்றி மேடை ஏறவே மிகவும் கஷ்டபட்டார்கள் அப்போது சுவாமிநாதன் என்ற ஒருவரடுன் பேசிய நினவு திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் தலைமை வகித்தார்கள் திரு தமிழருவி மணியன் அவர்கள் சிறப்பு பேச்சாளர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி அமைத்து இருந்தார்கள் காதல் மன்னன் heroine மிஸ்.மனு நடனம் ஆடினார்கள்
நட்புடன் Gk
RAGHAVENDRA
26th April 2010, 08:01 PM
டியர் திரு கிருஷ்ணா,
தங்களுடைய நினைவுகளைப் படிக்கும் பொழுது பல சுவையான தகவல்கள் தெரிய வருகின்றன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தகவல் களஞ்சியமே இருக்கும். அதற்கு நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன.
நடிகர் திலகம் அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் திகழ்ந்தார்கள். 1975 என்ற ஆண்டினைப் பற்றிப் பலர் கூறும் ஒரே கூற்று அவர் ஸ்தாபன காங்கிரஸை விட்டுச் சென்றிருக்கக் கூடாது என்பது. இதைப் பற்றி அலசும் முன் அன்றைக்கு இருந்த சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. சரி நடிகர் திலகம் தான் சென்று விட்டார். அதன் பிறகு மற்றவர்கள் அதைத் தொடர்ந்திருக்கலாமே, யார் வேண்டாம் என்றார்கள். ஸ்தாபன காங்கிரஸிலேயே தங்கி விட்ட காமராஜ் விசுவாசிகள் என்று கூறிக்கொண்டவர்கள் ஏன் அக்கட்சியைத் தொடரந்து நடத்தவில்லை. பின்னர் எமர்ஜென்சி காலத்திலேயே அது ஜனதா வாகி பல கட்சிகள் ஒருங்கிணைந்து தானே உத்தமத் தலைவர் மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியையும் அவர்களால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே. ஆனால் அவர்கள் என்ன கூறினார்கள், இனிமேல் சிவாஜி படம் போணியாகாது, யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள். கலை வேறு அரசியல் வேறு என்பதில் நடிகர் திலகம் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் மக்களும் நன்கு உணர்ந்ததால் தான் அதற்குப் பின்னர் அவருடைய வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்ற திரிசூலம் வெளிவந்தது.
இப்படி பல கேலிகள், ஏளனங்கள் அனைத்தையும் தாண்டித் தான் நடிகர் திலகம் வெற்றிகளைக் குவித்தார். இதில் ஒரு பெரிய விஷயம் என்ன வென்றால் இநதக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நடிகர் திலகம் அவர்களுக்கும் இடையே நட்பு மேலும் இறுகியது நெருக்கமானது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து தம் உண்மையான நட்பைப் பேணிக் காத்தனர். இது தான் நடந்தது. அவர் யாருக்கு ஆதரவளித்தாரோ அந்தக் கட்சியினர் தான் அவரைப் புழுதி வாரித் தூற்றினர். இது ஊரறிந்த உண்மை.
1977-80க்குப் பின் அவர்களெல்லாம் எங்கே. அன்று நடிகர் திலகத்தைத் தூற்றியவர் பலரும் பின்னர் இந்திரா அம்மையார் மீண்டும் பிரதமரான போது அந்தக் காங்கிரஸில் தானே ஐக்கியமாயினர்.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரிடையே இருந்த நெருக்கத்தின் முக்கியமான சான்று. எனக்குத் தெரிந்த வரை நடிகர் திலகமும் எம்.ஜி.ஆர். அவர்களும் அரசியலில் நேருக்கு நேர் மோதியதாகத் தெரியவில்லை. இருவருமே அவரவர் சார்ந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டு தங்களுடைய உழைப்பினையும், பொருள், நேரம் யாவையும் ரசிகர் பலத்தையும் அர்ப்பணித்தனரே யன்றி தமக்காகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. 1977ல் தான் முதன் முதலாக எம்.ஜி.ஆர். அவர்கள் தமக்காக மக்களிடம் போய் நின்றார். அப்போது அவருக்குக துணையாக ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் நடிகர் திலகம். 1980 மற்றும் 1984 ஆண்டுகளில் காங்கிரஸில் நமது சிவாஜிரசிகர் மன்றம் கண்ட சோதனைகள் ஊரறிந்த வரலாறு. 1984ல் பின்னர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலமுற்றிருந்த போது நடிகர் திலகம் அவர்களுக்காக குடும்பத்துடன் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் மசூதிகளிலும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி அவர் நலம் பெற வேண்டிக் கொண்டார். அது மட்டுமன்றி அமெரிக்கா சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இவையெல்லாவற்றையும் விட 1987ல் அவர் மறைந்த பொழுது அவருடைய இயக்கம் சிதறக்கூடாது, ஒன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தானே காங்கிரஸுடன் கருத்து வேறு பாடு கொண்டு விலகினார். பின்னர் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்த போது மகிழ்வுற்றார். அதே போல் 1989ல் தமது உடன் பிறவா சகோதரர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் ஜானகி அம்மையாருக்காகத் தானே வாக்குக் கேட்டார். அப்போதும் தனக்கெனக் கேட்க வில்லையே. அவருடைய தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்டதே 50 தொகுதிகளில் மட்டும் தானே.
இதையெல்லாம் சொல்லக் காரணம் நடிகர் திலகம் தேர்தலிலும் தோற்றிருக்கலாம், அரசியலிலும் தோற்றதாக சிலர் எண்ணலாம். ஆனால் அதில் மனிதாபிமானமும் நட்பும் சகோதரத்துவமும் காப்பதற்காக உழைத்த உண்மையான மனிதனுக்கேற்பட்ட தோல்வியாகத்தான் கருத வேண்டும். அந்தத் தோல்வியினால் நட்டம் அந்த மனிதருக்கல்ல. அதனால் நாம் சிறுமைப்படத் தேவையில்லை என்பதே என் பணிவான தனிப்பட்ட கருத்து. இதில் கருத்து மாறுபட எவருக்கும் உரிமையுண்டு என்பதையும் நானறிவேன். இது என் தனிப்பட்ட கருத்து என்பதை மட்டும் கூறிக் கொள்ள விழைகிறேன்.
அன்பு நண்பர் கிருஷ்ணா மட்டுமல்ல பல சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் திலகத்தின் தோல்வி பற்றிய ஒரு ஆதங்கம் மனதில் இருந்து கொண்டே யிருக்கும். அதைக் களைவதற்கான முயற்சியே இவ்வளவு நீளமான பதிவு.
ராகவேந்திரன்.
pammalar
26th April 2010, 09:30 PM
தாராசுரத்தில் ஹரிச்சந்திரா அசுர சாதனை
கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" சிகர சாதனை புரிந்துள்ளது. 23.4.2010 வெள்ளி முதல், இங்கே தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], இக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டு வருவதையும், வெள்ளியன்று மாலைக் காட்சி மட்டும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் வசூல் அளித்ததையும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
மேலும், "ஹரிச்சந்திரா" திரைக்காவியத்தை, வெள்ளி (23.4.2010) இரவுக்காட்சி, சனி (24.4.2010) மாலை மற்றும் இரவுக்காட்சிகள் ஆகிய 3 காட்சிகளில் மொத்தம் 400 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். இந்த 3 காட்சிகளிலும் மொத்தம் ரூ.4,000/-த்துக்கும் மேல் (ரூபாய் நான்காயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், நேற்று (25.4.2010) ஞாயிறன்று மாலைக் காட்சியை மட்டும், 300 மக்களுக்கும் மேல் கண்டு களித்து ரசித்துள்ளனர். இந்த ஒரு காட்சி மட்டும் ரூ.3,000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) வசூல் அளித்துள்ளது. ஆக, ஞாயிறு (25.4.2010) மாலைக் காட்சி வரை, நமது சத்தியசுந்தரத்தின் "ஹரிச்சந்திரா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.9,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஒன்பதாயிரத்துக்கும் மேல்).
"வெள்ளி,சனி,ஞாயிறு - மூன்று நாட்களுக்கு மட்டும்" என்ற அறிவிப்புடன் வெளியான இக்காவியம் உருவாக்கிய வசூல் பிரளையத்தால், இன்று 26.4.2010 திங்களன்று நான்காவது நாளாக வெற்றி பவனி வருகிறது. ஏ, பி, சி சென்டர்கள் மட்டுமல்லாது, ரிமோட் சி சென்ட்ர்களான டூரிங் டாக்கீஸுகளிலும் , பராசக்தி காலம் தொடங்கி இன்று வரை ஈடு, இணையற்ற சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவை நமது நடிகர் திலகத்தின் காவியங்களே என்பதற்கு இதை விட வேறென்ன கட்டியம் கூற வேண்டும். சினிமா சாதனைகளின் நிரந்தர சக்கரவர்த்தி நமது நடிகர் திலகமே.
போனஸ் நியூஸ்:
தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு டூரிங் டாக்கீஸில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய, முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும், பார் போற்றும் பாரத ஜோதியின் "பாவமன்னிப்பு" திரைக்காவியமே. இராமநாதபுரத்தில் உள்ள சிவாஜி டூரிங் டாக்கீஸில், "பாவமன்னிப்பு" 16.3.1961 வியாழன் முதல் 23.6.1961 வெள்ளி வரை, 100 நாட்கள் ஓடி, விண்ணை முட்டும் வெற்றியைப் பெற்றது.
"ஹரிச்சந்திரா" தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Murali Srinivas
27th April 2010, 12:18 AM
கிருஷ்ணா,
நன்றி. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டுமல்ல வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்த கோதை நாச்சியாரைப் பற்றியும் ஆழ்ந்து படிப்பவர் நீங்கள் என தெரிகிறது. வாழ்த்துகள்.
நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை தொடராக எழுதி வந்த நான் அதை 1982-ம் காலக்கட்டத்திற்கு பிறகு தொடர முடியவில்லை. சில உண்மை நிகழ்வுகளை எழுத்தில் வடிக்கும் போது ஏற்படும் நடை முறை சிக்கல் இது. நேரம் காலம் சேர்ந்து வரும் பிறிதொரு காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். நீங்கள் இப்போது மேஜர் பற்றி கேட்டிருக்கும் கேள்வியும் மேற்சொன்னவற்றில் அடங்கும் என்பதால் பின்னர் பேசுவோம்.
நான் சென்னையில்தான் உள்ளேன். நிச்சயமாக சந்திப்போம்.
ராகவேந்தர் சார்,
சரியாக சொன்னீர்கள். யாருக்கு பாடுபட்டாரோ அவர்களே இன்று கேலி பேசுவதுதான் காலத்தின் கோலம். இதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.
சுமதி என் சுந்தரி மதுரை வசூல் பற்றி பேசும்போது சில விஷயங்களை குறிப்பிட வேண்டும்.
ஐ.பி.எல்.
சித்திரை திருவிழா
ஞாயிறு மாலை 5.45 முதல் 6.45 வரை இடி மின்னலுடன் பெய்த கன மழை.
புதிய படங்களுக்கே இவற்றை கடந்து வசூலிப்பது என்பது கடினமான விஷயம். அப்படியிருக்க இவற்றையும் மீறி மதுரை மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது. ஆனால் அவர்களையும் விஞ்சும் வண்ணம் தாராசுரம் மக்கள் ஹரிச்சந்திராவிற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர். வாழ்க அம்மக்கள்.
அன்புடன்
pammalar
27th April 2010, 01:06 AM
டியர் கிருஷ்ணாஜி, தங்களின் பாராட்டுக்கள் எம்மை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள்!
பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு.டாக். "சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால்" என்று நீங்கள் எழுதியதால் நிறைய நன்மை. இந்த இளமைக்காவியம் குறித்து எத்தனை அதியற்புதமான பதிவுகள். இதற்காக உங்களுக்கும், கிருஷ்ணாஜிக்கும், திரு.சங்கரா அவ்ர்களுக்கும், "சுமதி என் சுந்தரி" என்று சிவாஜி(மது) கூறினால், "சிவாஜி(மது) என் சுந்தரர்" என முழங்கும் ராகவேந்திரன் சாருக்கும், சுந்தரத் தமிழில் "சுமதி என் சுந்தரி"க்கு சூப்பர் விமர்சனத்தை (இனி இது போல் எவரும் எழுத முடியாது என்கின்ற அளவுக்கு) எழுதிய சகோதரி சாரதாவுக்கும், அபரிமிதமான அற்புதத் தகவல்களை அள்ளி அளித்துள்ள முரளி சாருக்கும் மற்றும் ஜேயாருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!
தங்களின் பாசமிகு பாராட்டுக்களுக்கு நயமிகு நன்றிகள், திரு.காவேரிக் கண்ணன்.
அன்புடன்,
பம்மலார்.
tacinema
27th April 2010, 08:04 AM
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
நீங்கள் கூறியபடி வேறு எந்த திரியும் இவ்வளுவு நீண்டதாக இல்லை. எத்தனை தகவல் எத்தனை நிகழ்வுகள் படிக்க படிக்க இன்ப தேன் வந்து பாயுது காதினிலே இந்த தருணத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுடுன் ஒரு சந்திப்பு எனக்கு நிகழ்ந்தது அப்போது தமிழக முன்னேற்ற முன்னணி இயக்கத்தின் ஒரு பொது கூட்டத்திற்கு மேஜர் அவர்கள் (தென்காசி) வந்திருந்த்தார்கள் அவரை அழைத்து செல்ல வேண்டிய கார் சற்று தாமதமாக வந்தது அதனால் அவர்கள் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்போர்ம்இல் வெயிட் செய்து கொண்டிருந்தர்கள். நிகழிசுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள்/கட்சி அங்கத்தினர்கள் யாரும் வரவில்லை நான் வேறு ஒரு வேலை ஆக ரயில்வே ஸ்டேஷன் சென்று இருந்தேன். நானே வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது அவர்கள் சற்று ஜோவியல் ஆக கூறினார்கள் 'சிவாஜி மட்டும் 75 காலகட்டங்களில் பெருந்தலைவர் மறைவுக்கு பிறகு கட்சி ஆரம்பித்து இருந்தால் எங்கோ சென்று இருப்பார். உண்மையான ரசிகர்கள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இன்று கட்சி வளர பெரும் பாடுபட வேண்டி இருக்கிறது' கடைசியில் அவரும் பிரிந்து சென்று விட்டார். அவர் நம்மவரை விட்டு பிரிந்தற்றுகு எதாவது மிக பெரிய காரணம் உள்ளதா தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஆனால் VKR இறுதி வரை அண்ணனுடன் நட்பாகவே இருந்தார் என்று கேள்வி பட்டேன் சிவாஜி/மேஜர்/vkr இல்லை என்றால் நடிகர் சங்கம் என்றோ காணாமல் போய் இருக்கும்.
தியாகம் 100vadhu நாள் விழா நெல்லை பார்வதி திரை அரங்கில் நடந்ததை மிக விரைவில் நினைவுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்கிறேன்
ஸ்ரீநிவாஸ் அவர்களின் அரசியல் நிகழ்வுகள் கட்டுரை பாதி படித்தேன் 1984 வரை மீதி நமது போரும் இல் உள்ளதா
நன்றியுடன் GK
GK அவர்களே,
தியாகம் 100 வது நாள் நெல்லை நிகழ்ச்சிகள் பற்றி எழுதுங்கள். என்னை பொறுத்த வரை தியாகம் அனைத்து NT ரசிகர்களுக்கும் பிடித்த படம். இந்த படம் எங்கள் மதுரை சிந்தாமணியில் சில்வர் ஜுபிலி கொண்டாடிய படம். என் cousin தொடர்ந்து 25 முறை பார்த்து ரசித்த படம் (எங்கள் சொந்தக்காரர் தான் அன்றைய தியேட்டர் உரிமையாளர்).
Murali should have lot of information about this movie and madurai celebrations.
Regards
tacinema
27th April 2010, 08:10 AM
டியர் கிருஷ்ணாஜி, தங்களின் பாராட்டுக்கள் எம்மை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள்!
பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு.டாக். "சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால்" என்று நீங்கள் எழுதியதால் நிறைய நன்மை. இந்த இளமைக்காவியம் குறித்து எத்தனை அதியற்புதமான பதிவுகள். இதற்காக உங்களுக்கும், கிருஷ்ணாஜிக்கும், திரு.சங்கரா அவ்ர்களுக்கும், "சுமதி என் சுந்தரி" என்று சிவாஜி(மது) கூறினால், "சிவாஜி(மது) என் சுந்தரர்" என முழங்கும் ராகவேந்திரன் சாருக்கும், சுந்தரத் தமிழில் "சுமதி என் சுந்தரி"க்கு சூப்பர் விமர்சனத்தை (இனி இது போல் எவரும் எழுத முடியாது என்கின்ற அளவுக்கு) எழுதிய சகோதரி சாரதாவுக்கும், அபரிமிதமான அற்புதத் தகவல்களை அள்ளி அளித்துள்ள முரளி சாருக்கும் மற்றும் ஜேயாருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!
தங்களின் பாசமிகு பாராட்டுக்களுக்கு நயமிகு நன்றிகள், திரு.காவேரிக் கண்ணன்.
அன்புடன்,
பம்மலார்.
Pammalar,
As usual, you are outdoing yourself. The collection of SES (rs.40k) is a bit disappointment and it is less than that of Pudhiya Paravai (rs. 45k).
kaaranam ennavo? Chitrai Tiruvizha samayam?
Regards
goldstar
27th April 2010, 09:38 AM
Hi guys,
I am Sathish from Australia and native of Madurai. I am big big veriyan of Sivaji and was part of GoldStar Sivaji Student Wing in Madurai. We used to have posters for all our Thalaivar NT movies. We are first one started 4 bits poster for "Avan Than Manithan" when releasted in Meenatchi theatre.
I have been NT follower from my class 7th. One time in Alankar theatre for the movie "Nitchaya Thmboolam" myself and my consin both shown "Karpooram" standing on Balcony slap if we miss a step we might have fallen down to ground floor. That time theatre people came and took both of use to theatre admin room and called police. We both are very small ie., 12 years old and not caring about police and looking at 100 days shields displayed in the cabin. Finally NT fans came and rescused us. It is still thrills me a lot.
After my College days (till 1993) I have not gone to theatres on Sundays. Before that every time NT movies released anywhere in Madurai used to watch the movie on Friday evening show, Sunday evening show and last day evening show.
Tac, if your consin watched movies at Chinthamani (his relative threature), then I bet you should be a Sourashtra guy like me...
Because in Madurai more 80% Sourashtra people like one and only NT movies.
I will post my experience in coming days...
Swamynathn, your effort is unbelievable. Thanks for showing Thalaivar NT's movies gala on Sundays which take me back to my olden Madurai days.
Last week I have watched SES in DVD and enjoyed it lot.
I have more than 70 NT movies in DVD and whenever I travel around the world always carry NT movies DVD to refresh and entertain myself.
gkrishna
27th April 2010, 09:57 AM
திரு ராகவேந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி
அன்பு நண்பர் கிருஷ்ணா மட்டுமல்ல பல சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் திலகத்தின் தோல்வி பற்றிய ஒரு ஆதங்கம் மனதில் இருந்து கொண்டே யிருக்கும். அதைக் களைவதற்கான முயற்சியே இவ்வளவு நீளமான பதிவு.
உங்கள் உடைய கருத்து எல்லோர்ருக்கும் நிச்சயமாக ஏற்புடையதே
இந்த பதிவு மூலமாக நம்முடைய (சிவாஜி ரசிகர்கள்) ஆதங்கம் நீங்கினால் மிகவும் நன்றே. நெல்லை சிவாஜி மன்ற தலைவர் ஒருவர் 80 கால கட்டங்களின் துவக்கத்தில் சிவாஜி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்க முன் வராத போது அதற்காக வாதிட்டு காங்கிரஸ் கட்சியிஇன் ஒரு முக்கிய பிரமுகர் ஒருவரினால் தன்னுடைய வேலைஐ இழந்தார் என்று கேள்விப்பட்டு உள்ளேன் அந்த அளவுக்கு சிவாஜி அவர்கள் ஒரு ரசிக கூட்டதை உருவாக்கி வைத்து இருந்தார் என்பது உண்மை.
நடிகர் திலகம் அவர்கள் என்றுமே தனக்காக வாழவில்லை. உயர்ந்த மனிதன் திரைப்படத்திலே ஒரு வசனம் நினவு டாக்டர் கோபால் (அசோகன்) அவர்கள் "ராஜு நீ ஒரு கோழை சுயநலக்காரன் தீஇலே எறிந்த பார்வதிஐ (வாணிஸ்ரீ) உன்னாலே காப்பாற்ற முடியவில்லை" கூறும் போது "கோபால் என்னை கோழை என்று சொல்லு ஆனால் சுயநலக்காரன் என்று சொல்லாதே நான் என்றும் எனக்காக வாழவில்லை எப்போதுமே பிறருக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்" என்று கூறுவர்.
நான் இதை சினிமா வசனமாக கருதவில்லை நடிகர்திலகத்தின் அடி மனதில் இருந்து வந்த வர்தைகளாகவே கருதுகிறேன்
நட்பு உடன் gk
sankara70
27th April 2010, 10:46 AM
வெல்கம் கோல்ட் ச்டார்-Mஅதுரை யின் பலம் கூடி வருகிரது
saradhaa_sn
27th April 2010, 11:56 AM
நமது திரியின் புதிய 'தங்க நட்சத்திரம்' சதீஷ் அவர்களை அன்புடன் இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.
உங்களின் முதற்பதிவே முத்தான பதிவாக அமைந்துள்ளது. சிறு வயதிலேயே நடிகர்திலகத்துக்காக உங்களின் சாகசம் வியப்புற/சிலிர்க்க வைக்கிறது (உங்கள் கஸினுக்கும் சேர்த்துத்தான்). நமது திரியில் நடிகர்திலகத்தின் படை பெருகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜி.கிருஷ்ணா, காவேரிக்கண்ணன், ராதாகிருஷ்ணன், சதீஷ் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் அசர வைக்கிறது.
முரளியார், tac, இவர்களுடன் இன்னொரு மதுரை மாமணியாக வந்திருக்கும் சதீஷ் அவர்களே உங்களது அனுபவங்களை தொடர்ந்து தந்து அதிசயிக்க வைக்க வேண்டுகிறோம்.
ஜி.கிருஷ்ணா...
நம் சகோதரர் tac சொன்னது போல 'தியாகம்' 100-வது நாள் நெல்லை பார்வதி நிகழ்வுகளை அறிய ஆவலாக இருக்கிறோம். மேஜருடனான சந்திப்பு அருமை. நானும் அவரை சந்தித்திருக்கிறேன். (அவர், நம் அண்ணனை விட்டு விலகிய காரணம் ரொம்ப நெகிழ்வூட்டுவது. யாருடைய பிரிவுக்கும் அண்ணன் இவ்வளவு நெகிழ்ந்ததில்லை. 'இவன் கூட என்னை விட்டுப்போவான்னு நினைக்கலையே' என்று அண்ணன் ரொம்பவே வருந்தினார். ராகவேந்தர் சொன்னதுபோல வெளிப்படையாக அலச முடியாத விஷயங்கள்).
ராதா கிருஷ்ணன்....
அருமையான பதிவுக்கு நன்றி. உங்கள் பங்களிப்பை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்.
காவேரிக்கண்ணன்.....
தெள்ளிய தமிழ்நடையில் வரும் உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.
ராகவேந்தர் சார்...
நடிகர்திலகத்தின் அப்போதைய அரசியல் முடிவை ஆய்ந்து எழுதப்பட்ட அருமையான விளக்கக் கட்டுரை. பலருடைய சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வண்ணம் அமைந்தது. அவர் யார் யாருக்கெல்லாம் ஊர் ஊராகச்சென்று பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தாரோ, அவர்களெல்லாம் கொஞ்சம் கூட கூசாமல் அவரை தாக்கி விமர்சனம் செய்தது ரசிகர்கள் மனதை வலிக்கச்செய்தது. நீங்கள் சொன்னது போல எம்.ஜி.ஆரோ அல்லது கலைஞரோ கூட அவரை அப்படிப்பேசியதில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கூட்டம் மட்டும் அப்படியே அவருடன் துணை நின்று தெம்பும் ஆதரவும் தந்தனர். அதனால் 'உத்தமனி'லிருந்து மீண்டும் வெற்றிகளைக் குவிக்கத் துவங்கினார்.
பம்மலார்....
பாராட்டுக்கு நன்றி. சென்னை நகரில் மட்டுமல்லாது, கிராமங்களிலுள்ள டூரிங் டாக்கீஸ் வரை அண்ணனின் படங்களின் வசூலை திரட்டி நீங்கள் தரும் பாங்கே தனியொரு சாதனை. 'அரிச்சந்திரா' வசூல் விவரம் அசத்தியது. தாராசுரம் மக்களுக்கு நன்றி.
முரளியண்ணா....
தங்களின் அரசியல் கட்டுரை தொடராமல் நின்று போனதில் எங்கள் எல்லோருக்கும் ஏமாற்றமே. என்ன செய்வது?. இடம் பொருள், ஏவல் இருக்கிறதல்லவா. என்னுடைய சிறு யோசனை, நீங்கள் தனியாக Blog ஒரு துவங்கி அதில் அண்ணனின் அரசியல் பயணத்தை விவரிக்கலாம். ரொம்பப்பேர் எதிர்பார்க்கின்றனர்.
goldstar
27th April 2010, 12:17 PM
Thanks Sarada madam.
Let me start with small flashback.
When "Paddikkathavan" released we had big riverly with Rajinikanth fan which continued on "Viduthalai" release time also. Around that time, Thalaivar NT movie "Nan Vazha Vaiphen" released in Madurai Sivam theatre and as usual Gold Star Sivaji fan had poster for that movie and that time Rajni movie "Kaali" released in Madurai Alankar theatre. We have pasted NVV posters on Rajni face in the Alankar theatre itself on Friday. But on Sunday we found Rajni fans had poster for NVV and they have pasted on the top of our poster everywhere in Madurai including at Sivam theatre which made us very angry and we have shown that on Sunday evening in the theatre whenever Rajni came in the screen we made big noise and Rajni fans were also there but finally our numbers were more, so we won.
Those are happy days....
Next, I should recall "Avan Than Manithan" for 4 bits poster which lots of MGR fans did not like it, because we were first one to start 4 bits of poster that time.
Cheers,
Sathish
gkrishna
27th April 2010, 01:15 PM
திரு சதீஷ் அவர்களே வருக வருக "வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே"
விடுதலை என்றதும் ஒரு நினவு . நெல்லை சிவசக்தி ரிலீஸ் 1984 ஓர் 1985 என்று நினேகிறேன் முதல் நாள் ரசிகர் மன்ற ஷோ சிவாஜி மன்றம நடத்துவதா அல்லது
ரஜினி மன்றம் நடத்துவதா என்று பெரிய பட்டிமன்றம் சீனியர் அடிப்படையில் நமது மன்றம் திரைபடத்தின் கதாநாயகன் என்ற அடிப்படையில் ரஜினி மன்றம் நமது மன்ற உறுபினர்கள் எல்லோருமே குறைந்த பட்சம் 25 வயது மேல் உள்ளவர்கள் .ரஜினி ரசிகர் மன்றம் ஹை ஸ்கூல் ரேஞ்சு.
இறுதியில் கடம்பூர் ஜனார்தன் என்று ஒரு MP நெல்லை தொகுதிஇடம் பிரச்சனை சென்றது அவர் சீனியர் மற்றும் காங்கிரஸ்/admk alliance என்பதால் சிவாஜி மன்றதிருக்குதன முன்னரிமை என்று கூறிவிட்டார். இதனால் வெகுண்ட ரஜினி ரசிகர்கள் நமது மன்ற உறுப்பினர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டார் பெரிய பிரச்னை ஆகி விட்டது போலீஸ் பாது காப்புடன் முதல் காட்சி திரையிடப்பட்டது நம்மவரின் ரோலும் சரியில்லை காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் கூட வந்து காயம் பட்டவரை பார்கவில்லை. ஆனால் mgr ரசிகர் மன்ற தலைவர் இளமதி/செச்றேடரி செல்வராஜ் என்பவர்கள் வந்து பார்த்தார்கள் காயம் பட்டவர் ஒரு கூலி வேலை செய்பவர் பணத்திற்கு மிகவும் கஷ்டபட்டார் கட்சியிலிருண்டு பணம் எதுவம் வரவில்லை மன்றம் ஓரளவு செலவு செய்தது திரு நவநீதன் என்பவர் முன்னாள் சிவாஜி மன்ற தலைவர் அவர்தான் உதவி செய்தார் அதன் பிறகு அந்த மன்ற உறுப்பினர் பற்றி தகவல் எதுவம் தெரியவில்லை
நட்புடன் GK
gkrishna
27th April 2010, 01:29 PM
இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு காரணம் சிவாஜி ரசிகர் மன்றம் என்ற அமைப்பு பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல நிறைய நல்ல நல்ல உருபினர்கள் எல்லாம் கொண்ட அமைப்பு சங்கத்தை ஒருகினதது திரு மதி ஒளி சண்முகம் மற்றும் திரு சின்ன அண்ணாமலை என்று நினைகிரன். பின்னர் திரு குருமூர்த்தி என்று ஒருவர் தலைவராக இருந்தார் தியாகம் திரைபடத்தில் நடிகர் திலகதிற்கு சைக்கிள் போட்டியில் பரிசு கொடுப்பவராக வருவர் பின்னர் தளபதி சண்முகம் அதன் பிறகு தொடர்பு விட்டு விட்டது .இப்போது திரு பூமிநாதன் அவர்கள் என்று நிநேகிறேன். இந்த tree structure கூட திரு முரளி அவர்களோ அல்லது திரு ராகவேந்தர் அவர்களோ அல்லது பம்மலர் அவர்களோ விளக்கலாம்
நட்புடன் gk
HARISH2619
27th April 2010, 01:43 PM
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பாசறையில் புதிதாக வந்து சேர்ந்துள்ள அனைவரையும் நடிகர்திலகதின் பக்தகோடிகள் சார்பாக வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறோம்.தொடர்ந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி வேன்டிக்கொள்கிறேன்.
பம்மல் சார்,
அரிச்சந்திரா வசூல் விபரம் பிரமிக்க வைக்கிறது.தகவலுக்கு நன்றி.அரிச்சந்திராவுக்கே இந்த வசூல் என்றால்....... வேன்டாம் சாரதா மேடம் மற்றும் ராகவேந்தர் சார் இருவரும் சன்டைக்கு வருவார்கள் :lol:
முரளி சார்,
சாரதா மேடம் சொன்னதை போல் 1984ல் விட்ட இடத்திலிருந்து தாங்கள் மீன்டும் தொடர வேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
J.Radhakrishnan
27th April 2010, 01:59 PM
சகோதரி சாரதா/திரு பம்மலார்/திரு முரளி/திரு ராகவேந்தர் சார்
நடிகர் பாலாஜி நம் நடிகர்திலகத்தை வைத்து 17 படம் எடுத்ததாக படித்திருக்கிறேன். அந்த படங்களின் list கொடுக்கமுடியுமா ?
gkrishna
27th April 2010, 02:19 PM
தங்கை
திருடன்
என் தம்பி
எங்கிருந்தோ வந்தாள்
ராஜா
நீதி
என்மகன்
உனக்காக நான்
தீபம்
தியாகம்
நல்லதொரு குடும்பம்
தீர்ப்பு
நீதிபதி
விடுதலை
பந்தம்
மருமகள்
குடும்பம் ஒரு கோயில்
எதாவது விடுபற்றிந்தால் திரு முரளி/திரு பம்மலர்/திரு ராகவேந்தர்/சகோதரி சாரதா அவர்கள் தெரிவிக்கவும் உங்கள் பணியினை ஜஸ்ட் ஷேர் செய்தேன் தவறாக என்ன வேண்டாம்
gkrishna
27th April 2010, 02:26 PM
திரு பாலாஜி அவர்கள் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரர் என்று தான் எல்லோரும் சொல்வார்கள் ஆனால் அவர்கள் இருவருக்க்மே ஒரு கால கட்டத்தில் பிணக்கு வந்து 3 ஆண்டுகள் சிவாஜி அவர்களை வைத்து படம் எடுக்க வில்லை என்று கேள்விபட்டேன் நல்லதொரு குடும்பம் மற்றும் தீர்ப்பு இடைவெளி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இருக்கும் இது பற்றி சுவையான தகவல்கள் இருந்தால் தெரியபடுத்தவும்
நட்புடன் gk
saradhaa_sn
27th April 2010, 02:42 PM
பம்மல் சார்,
அரிச்சந்திரா வசூல் விபரம் பிரமிக்க வைக்கிறது.தகவலுக்கு நன்றி.அரிச்சந்திராவுக்கே இந்த வசூல் என்றால்....... வேன்டாம் சாரதா மேடம் மற்றும் ராகவேந்தர் சார் இருவரும் சன்டைக்கு வருவார்கள் :lol:
அதென்ன 'அரிச்சந்திராவுக்கே இந்த வசூலா' என்ற கேள்வி?...
'அரிச்சந்திரா' படம் என்ன மட்டமா?. அது மட்டும் தனியாக வெளியாகியிருந்தால் பெரிய வெற்றி பெற்றிருக்கும். கலாட்டா கல்யாணம் படத்துடன் (ஒருநாள் இடைவெளியில்) வெளியாகியும் கூட 50 நாட்களுக்கு மேல் ஓடி சுமாரைக்கடந்த வெற்றியைப் பெற்ற படம் (ஆதாரம்: சகோதரி கிரிஜாவின் வெப்சைட்டில் இடம்பெற்றுள்ள '51-வது நாள்' தினத்தந்தி விளம்பரம்). ஒல்லியான அழகான உடம்புடன், அரிச்சந்திரனாக வந்து கணீர் வசனம் பேசி அசத்தியிருப்பார் அண்ணன் நடிகர்திலகம். என் தம்பி, தில்லானா மோகனாம்பாள் படங்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டும் (மறுபக்கம் குடியிருந்த கோயில், எதிர்நீச்சல் என்று பயமுறுத்தியும்), மக்கள் ஆதரவுடன் நன்றாக ஓடிய படம். அதனால்தான் இப்போதும் கூட ஒரு டூரிங் டாக்கீஸில் இந்த ஓட்டம் ஓடுகிறது.
(அந்தப்பக்கம் யாரோ, 'சித்ரா பௌர்ணமி படத்துக்கே இந்த வசூலா?' என்று சொல்வது கேட்கிறது. அது என்னன்னு போய் பார்த்துட்டு வர்ரேன்).
gkrishna
27th April 2010, 02:48 PM
சாரதா madem அவர்களே
(அந்தப்பக்கம் யாரோ, 'சித்ரா பௌர்ணமி படத்துக்கே இந்த வசூலா?' என்று சொல்வது கேட்கிறது. அது என்னன்னு போய் பார்த்துட்டு வர்ரேன்).
உங்கள் வார்தைகள் சிரிப்பை ...............டைப் செய்ய முடியவில்லை
gkrishna
27th April 2010, 03:28 PM
madem அவர்களுக்கு கர்ணன் திரைப்படம் வேட்டைக்காரன் படத்திடம் என்ன பாடு பட்டது தெரியுமா நெல்லையில் இரண்டும் ஒரே நாள் ரிலீஸ் (பொங்கல்) 14 /01 /1964 எனக்கு அப்போது வயுது சரியாக 5 என்னடுய பெரிய சகோதரர் அவருக்கு அப்போது 14 வயது அவர்தான் அவரும் சிவாஜி ரசிகர் பிற்காலத்தில் DMK ஸ்டுடென்ட் wing secretary
இந்த சம்பவத்தை எனக்கு ஒரு சமயம் கூறினார்
கர்ணன் 2 theatre களில் ரிலீஸ் (ரத்னா மற்றும் பார்வதி) ஒரே owner (நாங்குநேரி திரு ராமகிருஷ்ணன் அவர்கள்) காங்கிரஸ் கட்சி காரர் சிவாஜி ரசிகர்களிடம் மிகவும் அன்பாக பழுகுவர்
வேட்டைக்காரன் நெல்லை சென்ட்ரல் மற்றும் popular (இப்போது கணேஷ் theatre ) ஒரே owner . கல்யாணசுந்தரம் பிள்ளை அவர்கள் காங்கிரஸ் கட்சி காரர் ஆனால் MGR படத்திருக்கு முன்னுரிமை கொடுப்பார் ரத்னா மற்றும் பார்வதி அருகில் முதல் ரீல் ரத்னாவில் முடிந்தவுடன் பார்வதிஇல் டைட்டில் போடுவார்கள். சென்ட்ரல் மற்றும் போபுலர் கிட்டத்தட்ட 2 1 /2 கம். சைக்கிள் இல் கொண்டு செல்லுவார்கள் முதல் வாரம் கர்ணன் வசூல் சுமார் தான் வேட்டைக்காரன் பிச்சுகிட்டு போச்சு MGR ரசிகர்கள் ரத்னா மற்றும் பார்வதி theatre நடுவில் நின்று கொண்டு முதல் ரீல் இரும்பு மற்றும் அலுமினும் கலந்த பெட்டியை பக்கத்தில் உள்ள வயற்காட்டில் தூக்கி போட்டு விட்டார்கள் ஏன் என்றால் வேட்டைக்காரன் முதல் ரீல் போன பிறகுதான் கர்ணன் முதல் ரீல் பார்வதி theatre இல் போடவேண்டும் என்று.
பார்வதி theatre மஜோரிட்டி பெண்கள் கூட்டம் எல்லோரும் சேர்ந்து திரு ராமகிருஷ்ணன் (owner of both theatres ) அவர்களை கைரோ செய்து டிக்கெட் பணம் வாபஸ் கேட்டார்கள். அன்றைய தினத்தந்தி பேப்பர்இல் பெரிய செய்தியாக வந்தது. ஆனால் அதே ரத்னா பார்வதி theatre களில் mgr இன் ரகசிய போலீஸ் 115 இரண்டு theatre களிலும் ரிலீஸ் எந்த பிரைச்சனையும் இல்லாமல் ஓடியது
நட்புடன் Gk
pammalar
27th April 2010, 06:22 PM
சென்னை காஸினோ திரையரங்கில் கலைக்குரிசிலின் காவியங்கள் : ஒரு புள்ளி விவரக் கண்ணோட்டம்
[திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. அன்பு - 7.8.1953 - 35 நாட்கள்
2. கோடீஸ்வரன் - 13.11.1955 - 33 நாட்கள்
3. பெண்ணின் பெருமை - 17.2.1956 - 105 நாட்கள்
4. அமரதீபம் - 29.6.1956 - 125 நாட்கள்
5. உத்தமபுத்திரன் - 7.2.1958 - 105 நாட்கள்
6. சபாஷ் மீனா - 3.10.1958 - 119 நாட்கள்
7. அவள் யார் - 30.10.1959 - 42 நாட்கள்
8. புனர்ஜென்மம் - 21.4.1961 - 49 நாட்கள்
9. ஸ்ரீ வள்ளி - 1.7.1961 - 54 நாட்கள்
10. மருதநாட்டு வீரன் - 24.8.1961 - 28 நாட்கள்
11. நான் வணங்கும் தெய்வம் - 27.4.1963 - 34 நாட்கள்
12. கல்யாணியின் கணவன் - 20.9.1963 - 56 நாட்கள்
13. அன்னை இல்லம் - 15.11.1963 - 104 நாட்கள்
14. என் ஆச ராசாவே - 28.8.1998 - 42 நாட்கள்
100 நாட்களுக்கு மேல் ஓடிய காவியங்கள் : 5
50 நாட்களுக்கு மேல் ஓடியவை : 2
7 வாரங்கள் வரை : 7
குறிப்பு:
1. காஸினோவில் வெளியான கலைச் சக்கரவர்த்தியின் புதிய திரைக்காவியங்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2. சென்னை தவிர தென்னகமெங்கும், அன்பு மற்றும் நான் வணங்கும் தெய்வம் திரைக்காவியங்கள் முறையே 24.7.1953 மற்றும் 12.4.1963 ஆகிய தேதிகளில் வெளியாயின. சென்னையில் மட்டும் இந்த இரு காவியங்களும், சில தினங்கள் தள்ளி, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் வெளியாயின.
3. தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை, காஸினோ அரங்கில், ஒரே ஆண்டில் இரண்டு 100 நாள் படங்களை, இரு முறை கொடுத்த பெருமைக்குரியவர் நமது நடிகர் திலகம். [1956 - பெண்ணின் பெருமை, அமரதீபம் மற்றும் 1958 - உத்தமபுத்திரன், சபாஷ் மீனா]
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
[சிங்கத்தமிழனின் திரையரங்க சாதனைகள் சிறப்புப் பதிவுகள் நெடுந்தொடரில், விரைவில் வரப்போகும் அடுத்த சிறப்புப் பதிவில் இடம் பெற இருக்கும் திரையரங்கம் : மதுரை ஸ்ரீதேவி]
அன்புடன்,
பம்மலார்.
Mahesh_K
27th April 2010, 07:01 PM
madem அவர்களுக்கு கர்ணன் திரைப்படம் வேட்டைக்காரன் படத்திடம் என்ன பாடு பட்டது தெரியுமா நெல்லையில் இரண்டும் ஒரே நாள் ரிலீஸ் (பொங்கல்) 14 /01 /1964 எனக்கு அப்போது வயுது சரியாக 5 என்னடுய பெரிய சகோதரர் அவருக்கு அப்போது 14 வயது அவர்தான் அவரும் சிவாஜி ரசிகர் பிற்காலத்தில் DMK ஸ்டுடென்ட் wing secretary
இந்த சம்பவத்தை எனக்கு ஒரு சமயம் கூறினார்
கர்ணன் 2 theatre களில் ரிலீஸ் (ரத்னா மற்றும் பார்வதி) ஒரே owner (நாங்குநேரி திரு ராமகிருஷ்ணன் அவர்கள்) காங்கிரஸ் கட்சி காரர் சிவாஜி ரசிகர்களிடம் மிகவும் அன்பாக பழுகுவர்
வேட்டைக்காரன் நெல்லை சென்ட்ரல் மற்றும் popular (இப்போது கணேஷ் theatre ) ஒரே owner . கல்யாணசுந்தரம் பிள்ளை அவர்கள் காங்கிரஸ் கட்சி காரர் ஆனால் MGR படத்திருக்கு முன்னுரிமை கொடுப்பார் ரத்னா மற்றும் பார்வதி அருகில் முதல் ரீல் ரத்னாவில் முடிந்தவுடன் பார்வதிஇல் டைட்டில் போடுவார்கள். சென்ட்ரல் மற்றும் போபுலர் கிட்டத்தட்ட 2 1 /2 கம். சைக்கிள் இல் கொண்டு செல்லுவார்கள் முதல் வாரம் கர்ணன் வசூல் சுமார் தான் வேட்டைக்காரன் பிச்சுகிட்டு போச்சு MGR ரசிகர்கள் ரத்னா மற்றும் பார்வதி theatre நடுவில் நின்று கொண்டு முதல் ரீல் இரும்பு மற்றும் அலுமினும் கலந்த பெட்டியை பக்கத்தில் உள்ள வயற்காட்டில் தூக்கி போட்டு விட்டார்கள் ஏன் என்றால் வேட்டைக்காரன் முதல் ரீல் போன பிறகுதான் கர்ணன் முதல் ரீல் பார்வதி theatre இல் போடவேண்டும் என்று.
பார்வதி theatre மஜோரிட்டி பெண்கள் கூட்டம் எல்லோரும் சேர்ந்து திரு ராமகிருஷ்ணன் (owner of both theatres ) அவர்களை கைரோ செய்து டிக்கெட் பணம் வாபஸ் கேட்டார்கள். அன்றைய தினத்தந்தி பேப்பர்இல் பெரிய செய்தியாக வந்தது. ஆனால் அதே ரத்னா பார்வதி theatre களில் mgr இன் ரகசிய போலீஸ் 115 இரண்டு theatre களிலும் ரிலீஸ் எந்த பிரைச்சனையும் இல்லாமல் ஓடியது
நட்புடன் Gk
கிருஷ்ணா சார் தந்த தகவல்களுக்கு நன்றி. ஓரு சில திருத்தங்கள்.
வேட்டைக்காரன் படம் நெல்லையில் ஒரு திரையரங்கில் -சென்ட்ரலில் -மட்டும் தான் திரையிடப்பட்டது. அங்கே 7 வாரங்கள் ஓடிய பிறகு ( ஒரு S.S.R படத்துக்காக) பாப்புலர் திரையரங்குக்கு மாற்றப்பட்டு, ஷிப்டிங்ல் 50 நாட்களைக் கடந்து, மொத்தம் 9 வாரம் ஓடியது.
நெல்லையில் முதன் முதலாக இரு அரங்குகளில் திரையிடப்பட்ட பெருமைக்குரிய கர்ணன், பார்வதியில் 59 நாட்களும், ரத்னாவில் 6 நாட்களும் ஆக மொத்தம் 65 நாட்கள் ஓடியது.
மற்றபடி கர்ணன் பட வசூல் குறைவு என்பதும், தயாரிப்பு செலவை கருத்தில் கொண்டு சொல்ல்ப்பட்டது தானே தவிர யதார்த்தம் அல்ல.
நெல்லையில் இரண்டாவதாக இரு திரையரங்குகளில் வந்த படம். திரு. M.G.R., - பந்துலு இணைந்த ரகசிய போலீஸ் 115 -அதே ரத்னா மற்றும் பார்வதியில். ஊட்டி வரை வரவு படம் ரத்னாவில் 71 நாட்கள் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த போதும், முன் ஒப்பந்தம் காரணமாக மாற்றப்பட்டு ரகசிய போலீஸ் 115 திரையிடப்பட்டது.
நன்றி.
Murali Srinivas
28th April 2010, 01:09 AM
மற்றுமொரு மதுரை மைந்தன் சதீஷ் அவர்களே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். 80-களில் நடைபெற்ற சுவையான நிகழ்வுகளை இங்கே பகிர்ந்தளியுங்கள்.
சாரதா,
அந்த யோசனை எனக்கு வராமல் இல்லை. ஆனால் வலைப்பூ உலகிலும் அரசியல் அதிகம். ஜோ-வை கேட்டால் சொல்வார்.
செந்தில்,
பொறுங்கள். வழி பிறக்கும். இப்படி ஹரிச்சந்திரா பெயரை சொல்லி மாட்டிக் கொண்டீர்களே! வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம் ஹரிச்சந்திரா. ஜி.வரலட்சுமி ஜோடி எனும்போதே தெரியவில்லையா. தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட தாமதத்தினால் பட வெளியீடு தள்ளிப் போனது. இறுதியில் 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அப்போதும் எங்கள் மதுரையில் தான் அதிகபட்ச நாட்கள் [63 ] ஓடியது. கிரிஜா அவர்களின் இணையதளத்தில் இருக்கும் விளம்பரத்தைப் பார்த்தால் அது மதுரை விளம்பரம் என்றும் மதுரை கல்பனாவில் ஓடிக் கொண்டிருந்த விவரமும் அதில் காணலாம்.
இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த 1968-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் 8 படங்கள் வெளியாகின. அவை அனைத்தும் மதுரையில் 50 நாட்களை கடந்தன என்பது தனி சிறப்பு. அவற்றில் 4 படங்கள் மதுரையில் தான் அதிகபட்ச நாட்கள் ஓடின.
16.02.1968 - திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 81 நாட்கள் [ஷிப்டிங்கில் 100] - அதிகபட்ச நாட்கள்.
11.04.1968 - ஹரிச்சந்திரா- கல்பனா - 63 நாட்கள் - அதிகபட்ச நாட்கள்.
12.04.1968 - கலாட்டா கல்யாணம் - மீனாட்சி 70 நாட்கள் -
[அதிகபட்சம் சென்னை - 100 நாட்களுக்கும் மேல்]
07.06.1968 - என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள் [ஷிப்டிங்கில் 100] - அதிகபட்ச நாட்கள்.
27.07.1968 - தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள் - அதிகபட்ச நாட்கள்
21.10.1968 - எங்க ஊர் ராஜா - நியூசினிமா - 72 நாட்கள் [அதிகபட்சம் சென்னை - 85 நாட்கள்] - ஷிப்டிங்கில் 100.
15.11.1968 - லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள் - அதிகபட்ச நாட்கள்.
29.11.1968 - உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்
[அதிகபட்சம் சென்னை - 100 நாட்களுக்கும் மேல்]
அந்த வருடத்திலேயே [1968 ] மதுரை தங்கத்தில் வெளியான பணமா பாசமா படத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் மதுரை நகரிலே அதிகமான வசூலை கொடுத்த படம் தில்லானா மோகனாம்பாள். [above Rs 3,47 ,000 /-].
tac
தியாகம் பற்றி நிறைய சொல்லலாம். தருணம் வரும்போது செய்வோம்.
கிருஷ்ணா,
நெல்லை தகவல்களுக்கு நன்றி.
மகேஷ்,
திருத்தங்களை கூட அழகாக எழுதியிருகிறீர்கள்.
சுவாமி,
350 -வது பதிவு முத்தான பதிவு. காசினோவிலும் கணேச சாதனைகள்! மதுரை ஸ்ரீதேவியை வரவேற்க ஆவலுடன் இருக்கிறோம். தமிழகத்திலே எந்த திரையரங்கமும் செய்யாத சாதனையாக தொடர்ந்து 443 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்களை மட்டுமே திரையிட்ட முதல் அரங்கம் எங்கள் ஸ்ரீதேவி. அதன் மற்ற சாதனைகளும் இங்கே அரங்கேறட்டும்
அன்புடன்
pammalar
28th April 2010, 02:51 AM
கோல்டன் ஆக்டரின் கோல்டுஸ்டார் திரு. சதீஷ் அவர்களை, இந்த கோல்டன் திரிக்கு, "வருக!, வருக!" என இரு கரம் கூப்பி இதயபூர்வமாக வரவேற்கிறேன். தங்களின் பாசமிகு பாராட்டுக்களுக்கு பசுமையான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
28th April 2010, 03:05 AM
டியர் ஜேயார்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி!
டியர் ராகவேந்திரன் சார்,
அண்ணலின் அரசியல் குறித்த தங்களது பதிவு மிக அருமை. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், பாரத புண்ணிய பூமியில் அப்பழுக்கில்லாமல் அரசியல் தொண்டாற்றியவர்கள் வெகு சிலரே. அப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய அந்த சிலரில், நமது தலைவர் முதல் தரமானவர். மிக மிக நேர்மையான அரசியல்வாதிகளில் முதன்மையானவர். இதுவே அவரது அரசியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அவரது தொய்வில்லாத தொண்டர்களாகிய நாம் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டிய/கொண்டாடிக் கொண்டிருக்கும் வெற்றி!
டியர் டாக்,
மதுரையில் சுமதி என் சுந்தரி கிட்டத்தட்ட ரூ.43,000/- (ரூபாய் நாற்பத்து மூன்றாயிரம்) வசூல் செய்திருக்க வேண்டும். முரளி சார் கூறியது போல், ஐபிஎல், சித்திரைத் திருவிழா முக்கிய காரணங்கள். இருப்பினும், அவர் தெரிவித்திருந்த மூன்றாவது காரணமே மிக மிக முக்கியமான காரணமாகி விட்டது. ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சிக்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இடி முழக்கத்துடனும், மின்னலுடனும் திடீரென்று ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், Show-time audience (காட்சி நேர கனவான்கள்) ஆப்சென்ட். சாதாரணமாகவே, கணிசமான மக்கள் பார்த்தாலே, நமது திரைப்படத்திற்கு, சென்ட்ரல் திரையரங்கில், இன்றைய நாட்களில், ஞாயிறு மாலைக் காட்சிக்கு மட்டும் ரூ.7,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஏழாயிரத்துக்கும் மேல்) வசூல் ஆகி விடும். ஆனால் அன்றைய கடும்மழையால், அந்த ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சிக்கு, ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு) வரை தான் வசூலானது. சர்வ சாதாரணமாக ஆகும் ஏழாயிரம் ரூபாயை விட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குறைவு. ஒரு வாரத்திற்கான மொத்த வசூல் நமது கண்களுக்கு சற்று குறைவாக காணப்படுவதற்கு இதுவே காரணம். எனினும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், இக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
சகோதரி சாரதா,
பாராட்டுக்கு நன்றி. தங்களுக்கு ஒரு போனஸ் நியூஸ். மதுரை சென்ட்ரலில் வெளியிடப்பட்ட சுமதி என் சுந்தரி பட பிரிண்ட், துளி கூட கீறல் விழாத சூப்பரோ சூப்பர் பிரிண்டாம்.
டியர் செந்தில் சார்,
மிக்க நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
28th April 2010, 03:40 AM
திருச்சி முருகன் திரையரங்கில், சென்ற வெள்ளி (23.4.2010) முதல், தினசரி 4 காட்சிகளாக, சாதனைச் சக்கரவர்த்தியின் "ராஜ ராஜ சோழன்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி முழக்கமிட்டு வருகிறது. சோழ சக்கரவர்த்தியை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காட்சியிலும் கணிசமான மக்கள் கண்டு தரிசித்து வருகின்றனர்.
இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
goldstar
28th April 2010, 06:21 AM
Thanks guys.
Let me recall "Avan Than Manithan" released in Meenatchi theatre. ATM released in Madurai after 9 to 10 years and NT fans eagerly waiting for this movie for some time. Just before ATM, MGR movie "Ullagum Sutrum Valiban" released with the title "Japanil MGR" ie., MGR in Japan. So compete with USV, we have requested Madurai distributor to put "Singapuril Sivaji" ie., Sivaji in Singapore as ATM shooted half of the movie in Singapore. Madurai distributor agreed our request and all the new posters of ATM had "Singapuril Sivaji".
For ATM, GoldStar Sivaji Wing created history by posters of 4 bits. Around that time only 2 bits were famous and 4 bits were talk of town that time. ATM run for 2 weeks continuously in Meenatchi theatre which is itself a record. Interestingly after AVM, MGR movie "Adimai Pen" released and our MGR fans had 4 bits posters.
Next, I should recall "Deepam" re-released in New Deluxe theatre on Deepvali day.
Cheers,
Sathish
RAGHAVENDRA
28th April 2010, 08:08 AM
டியர் கோல்டு ஸ்டார் மற்றும் சதீஷ்,
தங்கப் பதுமை, தங்கப் பதக்கம் போன்ற காவியங்களைத் தந்த தங்கத் தலைவனின் தங்கமான ரசிகர்களே, தங்களின் வரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் மதுரை, நெல்லை என போட்டி போட்டுக் கொண்டு தகவல்களை அள்ளித் தருகிறீர்கள். மிகவும் மகிழ்வுடனும் பல புதிய தகவல்களை அறிந்த மன நிறைவுடனும் உள்ளோம்.
டியர் பம்மலார்,
காஸினோ, ஸ்ரீதேவி, எனத் திரையரங்குகளைத் தங்கள் விரல் நுனியில் அடக்கி விட்டீர்கள். அடுத்தது அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன் என வெளியூர் திரையரங்கு விவரங்களையும் கவர் செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
முரளி சார்,
நீங்களும் பம்மலாரும் கொடுக்கும் தகவல்கள் நடிகர் திலகத்தின் ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே யிருக்கும். இப்போது இருந்தால் நடிகர் திலகம் இப்படித் தான் சொல்லியிருப்பார்
"நாம என்னென்னவோ செய்து விட்டதாக பிள்ளைகள் சொல்கிறார்கள். எல்லாம் ஆண்டவன் கருணை , நமக்கு தெரிந்ததெல்லாம் நடிக்கிறது மட்டும் தான்."
அனைவருக்கும் உளமார்ந்த சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள். இன்று சித்ரா பௌர்ணமி படத்தை நினைவு கூர்வோம். நன்றாக வந்திருக்க வேண்டிய படம். பெரும் பகுதி காஷ்மீரில் எடுக்கப் பட்டது. எதையோ நினைத்து எதையோ இடித்த கதையாக அமைந்தாலும் நடிகர் திலகத்தின் நடிப்பு நம்மை கட்டிப் போட்டு விடும். குறிப்பாக அந்த செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம் பாடல் காட்சியில் வெள்ளுடை வேந்தராக அவர் காட்சியளிக்கும் போது, வெள்ளை நிறமே பெருமைப் படும் . எனக்கு பெருமை சேர்ப்பதற்கென்றே உங்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்று நினைத்துக் கொள்ளும். குதிரையேற்றக் காட்சிகளில் அநாயாசமாக தூள் கிளப்பி யிருப்பார். பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு கண்களைக் கவர்ந்து விடும். மெல்லிசை மன்னரின் பங்களிப்பு அப்படத்திற்கு மிகப் பெரிய பலம். காலதாமதமான வெளியீடு, இடைவெளியின்மை, போன்ற பல காரணங்களினால் நல்ல வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம் எதி்ர்பார்த்த அளவு ஓடவிலலை என்பது உண்மை. காலம் உண்டு என்ற எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல், வந்தாலும் வந்தாண்டி ராஜா, என்னடி சின்னக் குட்டி போன்ற உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இருந்தும் பயனில்லாமல் போய் விட்டது. அப்படியும் அப்படம் மதுரையில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். முரளி சார் கூறுவார் என எதிர்பார்ப்போம்.
ராகவேந்திரன்
tacinema
28th April 2010, 09:16 AM
Hi guys,
Tac, if your consin watched movies at Chinthamani (his relative threature), then I bet you should be a Sourashtra guy like me...
Because in Madurai more 80% Sourashtra people like one and only NT movies.
Goldstar,
First, heartfelt welcome to NT thread. As your name says, you are a gold in a galaxy of NT stars. You are spot on in recognizing me a sourashtrian. You are absolutely right that sourashtra community in Madurai had a special affinity toward NT. That special bond still exists!!
regards
tacinema
28th April 2010, 09:25 AM
Thanks guys.
Let me recall "Avan Than Manithan" released in Meenatchi theatre. ATM released in Madurai after 9 to 10 years and NT fans eagerly waiting for this movie for some time. Just before ATM, MGR movie "Ullagum Sutrum Valiban" released with the title "Japanil MGR" ie., MGR in Japan. So compete with USV, we have requested Madurai distributor to put "Singapuril Sivaji" ie., Sivaji in Singapore as ATM shooted half of the movie in Singapore. Madurai distributor agreed our request and all the new posters of ATM had "Singapuril Sivaji".
For ATM, GoldStar Sivaji Wing created history by posters of 4 bits. Around that time only 2 bits were famous and 4 bits were talk of town that time. ATM run for 2 weeks continuously in Meenatchi theatre which is itself a record. Interestingly after AVM, MGR movie "Adimai Pen" released and our MGR fans had 4 bits posters.
Next, I should recall "Deepam" re-released in New Deluxe theatre on Deepvali day.
Cheers,
Sathish
Hi,
What exactly is posters of 4 bits? I might have seen them but couldn't recollect.
I remember ATM re-release in Meenakshi theater - it made record collection in Meenakshi, which is often considered as MGR fort.
Did we have Paris-il Sivaji for Sivandha Mann? Do you remember Sivandha Mann rerelease in Alankar during this time?
For a change, when NT veterans like pammalar, saradha mdm, madurai murali, raghavendra and others give records for 1st time releases, we should give here NTs Madurai re-release records.
Thank you for recollecting happier days.
Regards
tacinema
28th April 2010, 09:30 AM
டியர் டாக்,
மதுரையில் சுமதி என் சுந்தரி கிட்டத்தட்ட ரூ.43,000/- (ரூபாய் நாற்பத்து மூன்றாயிரம்) வசூல் செய்திருக்க வேண்டும். முரளி சார் கூறியது போல், ஐபிஎல், சித்திரைத் திருவிழா முக்கிய காரணங்கள். இருப்பினும், அவர் தெரிவித்திருந்த மூன்றாவது காரணமே மிக மிக முக்கியமான காரணமாகி விட்டது. ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சிக்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இடி முழக்கத்துடனும், மின்னலுடனும் திடீரென்று ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், Show-time audience (காட்சி நேர கனவான்கள்) ஆப்சென்ட். சாதாரணமாகவே, கணிசமான மக்கள் பார்த்தாலே, நமது திரைப்படத்திற்கு, சென்ட்ரல் திரையரங்கில், இன்றைய நாட்களில், ஞாயிறு மாலைக் காட்சிக்கு மட்டும் ரூ.7,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஏழாயிரத்துக்கும் மேல்) வசூல் ஆகி விடும். ஆனால் அன்றைய கடும்மழையால், அந்த ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சிக்கு, ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு) வரை தான் வசூலானது. சர்வ சாதாரணமாக ஆகும் ஏழாயிரம் ரூபாயை விட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குறைவு. ஒரு வாரத்திற்கான மொத்த வசூல் நமது கண்களுக்கு சற்று குறைவாக காணப்படுவதற்கு இதுவே காரணம். எனினும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், இக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
அன்புடன்,
பம்மலார்.
Pammalar,
Thank you for responding me. It was a very casual quesetion about SES collection. Your devoted answer for such a question shows how serious you are in recollecting NT's every minute record.
That shows your unflinching dedication and love towards NT and his fame.
Thank you very much again.
tacinema
28th April 2010, 09:33 AM
[சிங்கத்தமிழனின் திரையரங்க சாதனைகள் சிறப்புப் பதிவுகள் நெடுந்தொடரில், விரைவில் வரப்போகும் அடுத்த சிறப்புப் பதிவில் இடம் பெற இருக்கும் திரையரங்கம் : மதுரை ஸ்ரீதேவி]
அன்புடன்,
பம்மலார்.
Pammalar,
Madurai Sridevi NT records - expect big bang and never ever will be broken by anybody in tamil film history. We already had a glimpse of this in previous threads from Murali.
Regards.
gkrishna
28th April 2010, 10:12 AM
திரு மகேஷ் அவர்களுக்கு தங்களுடுய திருத்தங்கள் மிக்க நன்றி . எனினும் கர்ணன் தான் நெல்லையில் முதன் முதலாக இரண்டு திரை அரங்குகளில் வெளியானது என்ற நமது செய்தி NT இன் புகழ் மகுடதிருக்கு மேலும் ஒரு வைரக்கல் நீங்கள் நெல்லையை சேர்ந்தவர் என்றால் மிக்க மகழிச்சி எனுடைய மற்ற செய்திகளிலும் திருத்தங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
திரு முரளி/திரு ராகவேந்தர்/திரு பம்மலர் மற்றும் இதர சென்னை வாழ் NT இன் ரசிக கண்மணிகளுக்கு சென்னையில் இந்த வாரம் எதாவுது நம்மவரின் திரைப்படம் உண்டா
திரி எவ்வளுவு வேகமாக வளுருகிறது மிக்க மகிழிசி
என்றும் நட்புடன் gk
gkrishna
28th April 2010, 10:59 AM
இன்று சித்ரா பௌர்ணமி
ப.மாதவன் டைரக்ட் செய்த படம் என்று நினவு ஸ்ரீ புவேனேஸ்வர் பிலிம் circuit production என்றும நினவு
நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் பொங்கல் முதல் நாள் காலை காட்சி திரைப்படம் ஆரம்பித்து சற்று அமைதியாக சென்று கொண்டு இருந்தது ரசிகர்களின் ஆரவாரம் எதுவம் இல்லை படம் சுதாரிப்பு இல்லாமல் சென்று கொண்டு இருந்தது தீடீர் என்று ஓர் சப்தம் நெல்லை சிவாஜி மன்றம் உறுபின்னர் (திரு அய்யாதுரை or அய்யாக்குட்டி பாண்டியன் அவர்கள்) குதிரை போல் ஒரு கனைப்பு கனைதர்கள் அவ்வளுவ்தன் படம் தியேட்டரில் ஒரே கலாட்டா 3 வாரங்கள் ஓடியது என்றும் நினவு திரு மகேஷ் அவர்கள் confirm செயுமாறு கேட்டு கொள்ளுகிறேன்
திரு ராகவேந்தர் அவர்கள் நினைவுகளுக்கு நன்றி
என்றும் நட்புடன் gk
goldstar
28th April 2010, 11:22 AM
Thaks Tac.
I don't think "SivandhaMann" posters had "France il Sivaji".
Well, regarding 4 bits, normally fans used to have 1 bit poster or 2 bit poster (not sure about size) but for ATM, we had 4 bits poters ie., joining 4 bits, so that we can have big letters and big NT pictures.
Regarding Madurai fans, I could remember 2 guys Sahul Ahamed and "Keeradurai" Thangavelu used to have very loud voice and both these 2 guys used to start in theatres then followed by one more NT fan "Thakkali" (forgot his name).
Madurai is always NT's fort and his re-release movies always successfully and generated huge money to theatre owners, so they always prefer NT movie.
There was a theatre in Madurai called "Shanthi", it is closed now. Shanthi theatre will definitely show a Sivaji movie on Sunday, incase none of theatre released any Sivaji Movies.
Cheers,
Sathish
sankara70
28th April 2010, 11:38 AM
Among theatres in Nellai(about 10),
Sivasakthi has special place for NT.
I remember seen Sivantha Mann in 80s there.
The posters were attractive for this film. Sivaji in 6 or 7 poses.
Later I saw Mudal Mariyathai sometime during 75 th day or so, night show-with house full
When Mudal Mariyathai was released, I was in Tuticorin. Charles-Mini Charles screened 5 shows a day in both theatres in same complex. It was running in both theatres for couple of weeks.
J.Radhakrishnan
28th April 2010, 11:56 AM
தங்கை
திருடன்
என் தம்பி
எங்கிருந்தோ வந்தாள்
ராஜா
நீதி
என்மகன்
உனக்காக நான்
தீபம்
தியாகம்
நல்லதொரு குடும்பம்
தீர்ப்பு
நீதிபதி
விடுதலை
பந்தம்
மருமகள்
குடும்பம் ஒரு கோயில்
நன்றி திரு கிருஷ்ணா அவர்களே !
தொடரட்டும் தங்கள் பணி !!!!
abkhlabhi
28th April 2010, 12:51 PM
source : ஈகரை தமிழ் களஞ்சியம் ::
இலங்கையில் சாதனை
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் இலங்கையில் 1,100 (3 வருடம்) நாள் ஓடி சாதனை படைத்தது. வசந்த மாளிகை 782நாள் Is it true ?
கோவையில் சிவாஜி படங்கள் சாதனை
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் கோவையில் ஏற்படுத்திய சாதனைகள்.
பராசக்தி(128நாள்)
சம்பூர்ண ராமாயணம்(100நாள்)
பாகப்பிரிவிi(120)
வீரபாண்டிய கட்டபொம்மன்(124)
இரும்புத் திரை(156)
படிக்காத மேடை(115)
புதையல்(107)
பாசமலர்(122)
பாவமன்னிப்பு(117)
பதிபக்தி (117)
தெய்வபிறவி(100)
பாலும் பழமும்(100)
படித்தால் மட்டும் போதுமா(100)
ஆலயமணி(100)
கர்ணன்(100)
பச்சைவிளக்கு(100)
நவராத்திரி(100)
திருவிளை யாடல்(117)
சரஸ்வதி சபதம்(100)
தூக்கு தூக்கி(120)
தங்கை (100)
ஊட்டிவரை உறவு(103)
சிவந்த மண்(103)
தில்லானா மோகனம்பாள்(103)
வியட்நாம் வீடு(104)
எங்கிருந்தோ வந்தாள்(100)
சவாலே சமாளி (100)
பட்டிகாடா பட்டணமா(100)
வசந்த மாளிகை(110)
எங்கள் தங்க ராஜா(100)
கவுரவம்(100)
தங்க பதக்கம்(140)
அவன்தான் மனிதன்(100)
மன்னவன் வந்தானடி(100)
அண்ணன் ஒரு கோவில்(100)
அந்தமான் காதலி(100)
தியாகம்(105)
திருசூலம்(175)
கல்தூண்(105)
தீர்ப்பு(105)
நீதிபதி(105)
வெள்ளை ரோஜா(105)
முதல் மரியாதை(175)
படிக்காதவன்(100)
தேவர் மகன்(105).
படையப்பா(210)
gkrishna
28th April 2010, 01:14 PM
திரு சங்கர் அவர்களுக்கு நெல்லை பற்றி குறிப்பட்டமைக்கு நன்றி
நெல்லையில் உள்ள திரை அரங்கு களில் NT படத்திற்கு மட்டுமல்ல ரசிகர்கள்க்கும மரியாதை கொடுத்தது பார்வதி மற்றும் ரத்னா தான்
பூர்ணகல திரை அரங்கு 72 73 கால கட்டங்களில் திறக்கபட்டதாக நினவு (முதல் பாடல் ஸ்ரீனிவாச கல்யாணம் rerelease - இரண்டவது படம் ஆதி பராசக்தி - rerelease - மூன்றவடு படம் அன்னமிட்ட கை first ரிலீஸ்) நம்மவர் படங்கள் நிறைய ரிலீஸ் செய்யபட்டது -(ராஜா ராஜா சோழன், தாய,அன்பை தேடி, க்ரஹப்ரவேசம்,,உத்தமன்,மனிதருள் மாணிக்கம்,உனக்காக நான்,அவன் ஒரு சரிதரம், ராஜரிஷி,வெள்ளை ரோஜா,நாங்கள் போன்ற படங்கள் ) owner சிவாஜி ரசிகர்களுக்கு மரியாதை கொஞ்சம் கூட கொடுக்க மாட்டார் ஆனால் காமெடி என்னவென்றால் அவரும் சிவாஜி ரசிகர் தினசரி கதர் தான் அணிவர்
சிவசக்தி திரை அரங்கு 75 கால கட்டங்களில் திறக்கபட்டதாக நினவு
ஊட்டி வரை உறவு நெல்லை ரத்னாவில் ரிலீஸ் ஆகியது தினசரி ஹாப்பி இன்று முதல் ஹாப்பி பாடலுக்கு நடிகர் திலகத்தின் தோள் அசைவுக்கு (டட டட TMS ) theatre முழுக்க ஆட்டம் உடனே ஒரு slide "ரசிக பெருமக்கள் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக இருந்து நடிகர் திலகத்தின் ஆட்டத்தையும் பாட்டையும் கண்டு களிக்குமாறு கேட்டு கொள்ளுகிறோம் -RT '
என்று மிக இனிமையான நாட்கள் மகிழிசி கடலில் மிதந்த நாட்கள் (நடிகர் திலகத்தின்/கே.R .Vijaya ) ckc பனியன் advertisement நீண்ட நாட்களுக்கு ஊட்டி வரை உறவு வைட் pant வித் some
black /கிரீன் கலர் கோட் வித் tie அண்ட் கே.R விஜயா சல்வார்) நெல்லை சாலை குமார் கோயில் எத்ரில் உள்ள திருப்பூர் பனியன் store வாசலில் பெரிய போர்டு வைத்திருப்பார்கள் நான்
2000 வரை அந்த போர்டை அங்கு பார்த்திருக்கிறேன்
saradhaa_sn
28th April 2010, 01:31 PM
டியர் சதீஷ், ஜி.கிருஷ்ணா மற்றும் மகேஷ்....
இவ்வளவு அருமையான தகவல்களை வைத்துக்கொண்டு இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்?. மதுரை மற்றும் நெல்லையில் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்களின் முதல் வெளியீடு மற்றும் மறு வெளியீடுகள் பற்றிய தகவல்கள் அற்புதம். இதுவரை கேட்டிராதது. அசத்துகிறீர்கள். குறிப்பாக 'சிங்கப்பூரில் சிவாஜி' போஸ்ட்டர் பற்றிய பின்னணி சுவையாக உள்ளது. தொடர்ந்து அசத்துங்கள்.
டியர் பம்மலார்...
சென்னை காஸினோ அரங்கில் நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் சாதனைப்பட்டியல் தொகுப்பு அருமை. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் தலைமை மன்றத்தால் பத்திரப்படுத்தப்பட வேண்டியவை. அன்னை இல்லத்துக்குப்பின் நீண்ட வருடங்களாக அங்கே நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வெளியாகாததற்கு விசேஷ காரணங்கள் உண்டா?. (ஒருகாலத்தில் இயக்குனர் ஸ்ரீதரின் கோட்டையாக இருந்த காஸினோ அரங்கம், எழுபதுகளில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் அரங்காக மாறிப்போனது). அடுத்து மதுரை ஸ்ரீதேவி அரங்கின் சாதனைகளை வரவேற்கத் தயாராகி விட்டோம். இதுபோல திருச்சி பிரபாத், சேலம் ஜெயா, சென்னை கிரௌன் அரங்குகள் பற்றியும் அறிய ஆவலாயுள்ளோம். நீங்கள் செய்வீர்கள், இருந்தாலும் முன்கூட்டியே ஒரு விண்ணப்பம். (சென்னை கிரௌன் அரங்குக்கு ஒரு விசேஷம். அது சித்ரா, கிரௌன், சயானி காம்பினேஷனிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனிலும் வெற்றிக்கொடிகளைப் பறக்கவிட்டது).
மலைக்கோட்டை நகரில் 'ராஜராஜசோழன்' வெற்றிபவனி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
டியர் ராகவேந்தர் சார்...
நீங்கள் சொன்னது போல நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு தகவல் களஞ்சியம்தான். அசத்துறாங்க பார்த்தீங்களா?. சித்ரா பௌர்ணமி படத்தைப்பொறுத்தவரை, சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள 'ஸ்ரீபத்மநாபா' தியேட்டரில் நீண்ட காலமாக பழைய படங்களே திரையிடப்பட்டு வந்த நிலையில், சித்ரா பௌர்ணமிதான் புதுப்படமாக வெளியிடப்பட்டது. வடசென்னை ரசிகர்களுக்கு அதுவே ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. ('என்னடா இது, 'கண்ட கண்ட' ப்டத்துக்கெல்லாம் அகஸ்தியா, மகாராணின்னு பிடிக்கும்போது நம்ம படத்துக்கு தியேட்டர் பிடிச்சிருக்கானுங்க பாரு' என்று ரசிகர்கள் முணுமுணுத்தார்களாம்). 'மூன்று தெய்வங்கள்' படத்தைத் தயாரித்த 'ஸ்ரீபுவனேஸ்வரி மூவீஸ்' சீனிவாசன், படத்தை முடிக்க முடியாமல் திணறிப்போய் ஸ்ரீஉமையாம்பிகை பிக்சர்ஸிடம் படத்தை விற்றுவிட, ஸ்ரீஉமையாம்பிகை பிக்சர்ஸார் படத்தை முடித்து திரையிட்டனர். நீண்டநாள் தயாரிப்பான 'சித்ரா பௌர்ணமி'யுடன் 1976 தீபாவளியன்று இன்னொரு நீண்ட நாள் தயாரிப்பான 'இளைய தலைமுறை'யும் ரிலீஸாவதாக இருந்தது. பாங்க் ஆஃப் மதுரை, அப்படத்தின் நெகட்டிவ்களை முடக்கியதால் வெளிவரவில்லை. பல தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் துவக்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டது.
டியர் முரளி...
1968-ம் ஆண்டில் நடிகர்திலகத்தின் திரைப்பட வெற்றி பவனி பட்டியலுக்கு நன்றி. வழக்கம்போல 'மதுரை புராணம்' பாடியுள்ளீர்கள். ஆனாலும் அந்த வருடம் உங்களால் ஒரு 100 நாள் படத்தைத்தான் (தில்லானா மோகனாம்பாள்) தர முடிந்தது. ஆனால் அதே ஆண்டில் அண்ணனின் மூன்று படங்களை (தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், உயர்ந்த மனிதன்) 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்து பெருமை கொண்டது எங்கள் சென்னையே.
sankara70
28th April 2010, 01:31 PM
OVU 86la la Rathna Talkies il oru night show parthen.
I remember it ran houseful for 2 weeks.
ennudaya chithi husbandai first time ange than santhithen-avarum pakka NT rasigar fm Kallidaikurichi,Tly.ennudan en mama vandirunthar-avar pakka MGR rasigar.
enga rendu perukkum romba sandai varum-nan NT ya vittu kodukka matten-veetil en chithi kaludan pesi avarkalai NT kku support panna solven.
Ana sayanthiram we both will be watching a film together in one of the theatres in Nellai.
Time separates man and relationship!
Uthama Puthiran Parvathi theatreil oru evening show parka en ammavidam kenji koothadi ponathu niyabakam irukku
antha nal thirumba varuma!
gkrishna
28th April 2010, 02:02 PM
தாய படத்தை பற்றி ஒரு சிறு நினவு D.யோகானந்த் direction பாபு movies production பின்னால் இதே பாபு movies மாலை சூடவா என்று கமல்/கவிதா வை வைது CVR direction இல் எடுத்தார்கள்
தாய படம் black அண்ட் வைட் படம் ஈஸ்ட்மன் கலர் வந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும்) ச.வரலக்ஷ்மி அவர்கள் அம்மாவாக நடித்திருப்பார் ஜெயலலிதா அவர்கள் heroine ஒரு பாடல் "நாடாள வந்தாரு நாடாள வந்தாரு நாடாரு வந்தாரும்மா கல்லாமை தந்தாரு இல்லாமை தந்தாரு கல்லூரி தந்தாரும்மா " என்ற பாடல் பெருந்தலைவர் அவர்களின் புகழ் பாடும் பாடல் எல்லா ஓல்ட் காங்கிரஸ் மீட்டிங் களிலும் loud ஸ்பீக்கர் இல் ஒலி பரப்பப்படும் மேலும் 'நான் பார்த்தாலும் பார்த்தேண்டி மெட்ராஸ் பட்டணத்தை பத்து கண்ணு போததம்மா பட்டுகட்டு அம்மா' என்று ஒரு பாடல் சிவாஜி அவர்கள் வாடிப்பட்டி கிராம்மத்தில் இருந்து சென்னை க்கு வந்து வேடிக்கை பார்த்ததை பாட்டாக படிப்பது ச.வரலக்ஷ்மி அவர்கள் பையன் சிவாஜி
கிராம்மத்தில் இருந்து நகரத்துக்கு செல்வதை விரும்பமட்டார்கள் . இந்த படத்தின் CD தேடி அலைகிறேன் ராஜபார்ட் ரங்கதுரை ஓட்டி வந்த படம். Thai படம் முதல் நாள் ஸ்கூல் கட் அடைத்து விட்டு மாட்னி ஷோ பார்த்த நினவு (ஃப்ரைடே) மறுநாள் ஸ்கூல் லீவ் monday கிளாஸ் டீச்சர திரு வானமாமலை அவர்கள்(MDT ஸ்கூல் திருநெல்வேலி) (அவரும் சிவாஜி ரசிகர்) அடி பின்னி எடுத்து விட்டார் ஆனால் அன்று evening என்னை தனியாக கூப்பிட்டு சிவாஜி படம் எதையும் மிஸ் பண்ண கூடாது ஆனால் கட் அடித்து பார்க்காதே என்று அட்வைஸ் செய்தார்
இந்த போரும் இல் சேர்ந்தவுடன் பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றக நினைவுக்கு வருகின்றன நெல்லை இல் தாய திரைப்படம் கிட்டத்தட்ட 45 நாட்கள் ஓடியது என்று நினவு .
gkrishna
28th April 2010, 03:50 PM
the following was written by Mr.Murali srinivas on March 10 2007 3 years back still it is worth to read really sir I am extremely sorry to inform that last month only I came across about this forum 4 years it is running without any break like our NT movies. really I missed a lot. now we are in NT part 6
I am just pasting part 2 article to honour Mr.Murali Srinivas ofcourse I know that all NT fans are not for any honours. pls. read the last word some may get bored . no sir if real NT fan won't get bored about NT's acting /NT fans article's reading . kindly excuse if I made any mistake
Take for example Ms.Girija an outstanding fan of NT. recently I spoke to her over phone and introduced myself immediately she asked "do you have any information like photos/paper ads anything to post in her website what a dedicated lady.
Dear Sivan/Groucho,
Both of you had written something which made me to write this.
Groucho, you said that you don't have PP and sivan said that he don't get to watch Tamil movies and is quoting from his memory.
Sivan, we are in the same boat. It would surprise people if I say I don't have even a single VCD/DVD of NT movies at home. Not that I can't buy but somehow the idea of watching it in CD/DVD format doesn't excite me. For me the movie has to be watched in Theatre. That is the ultimate experience, especially for NT movies.
Maybe, having become a NT fan in the hey days and having watched all that movies in theatre has made me feel like this.(In fact I don't watch any movie in CD/DVD). So till the time satellite TVs came to the front, old movies were getting released in theatres and we used to see it. The advent of Satellite TVs put a stop to that. Now all the movies are being telecast in TV. In a way, many get a chance to watch these movies, which otherwise would not have been possible. Even then there are some old movies like Iruvar Ullam and Vilayattu Pillai (to name a few) which are not being shown.
These channels do a over kill and for me especially two films Karnan and Vasantha Maaligai which I would have always preferred to watch it in theatres are being telecast almost once in every month, which simply takes away the charm from them. In Vasantha Maaligai, when I watch the song sequence " Oru Kinnathai Endhukiren", I would always look forward to the last part of the last saranam which would start with NT (TMS) singing
Kattazahkanothor Karpanai Rajiyam Kaati Mudindhada; Athil
Kattil Amaindhada;
Angu Sattangal Dharmangal Ethumillai; Inba chakkram suthudhada
Having sung these line, NT in his own royal style would strech his legs a bit apart, put his hands in his hip,with a slight laugh, will sing
"Naan Chakravarthiyada."
Immediately my mind would jump to Sep 29, 1972, (the day VM was released) matinee show at Madurai New cinema,( I was in school and it was quarterly exam holidays) where I saw the entire theate erupting in joy. Not only on that day,whenever I have seen whether it was during the first release or subsequent releases, the experience was the same.Many scenes would attract the same response in theatre. Watching it in TV, I don't get that ecstacy.
So after coming to Chennai, almost 2 years ago, when I saw the Ad of VM getting released in Pandian Theatre, I decided to go. My colleague (younger than me and a fan of NT) came with me. We decided to go for the Sunday evening show. I waited for him. He was a bit late. The beauty is we didn't know where the theatre was. I asked all my friends, but nobody could give the exact location except saying that it is there in North Madras. Finally called up Tele services and got the phone no of the theatre. Called up the theatre itself and took the route map (all these land line calls were done from my mobile!). We were near Egmore and when we reached Mint it was almost 6.30 PM. The theatre is situated in a small by lane and the lane entrance itself had a huge NT poster with a garland. But Alas! when we went neaar the theatre it was House Full and around 100- 200 people were trying for tickets. We tried our level best to get in but it was of no avail. We had to return. After a month or so, VM was released in Kodambakkam Liberty and this time I made sure that there are no hiccups and I went for the Sunday evening show and saw it. What I could notice was if the movie had not been regularly shown in TV, the theatre atmosphere would have been terrific.
But times are changing. Now I feel that I have to buy the CD/DVDs as the chances of watching NT movies in theatres is fast becoming zero. But still I am postponing the purchase.
Another factor which I would like to tell here is also related to Groucho's feelings on so called over acting critisicm. Again this is due to TV/CD/DVD watching. If you had seen the people who talk about over acting, mostly they would be of next generation having watched NT movies only thro' TV and that too in bits and pieces. And remember they are watching a movie released in 60s and 70s after 30/40 years and they are not aware of the social background of TN at that point of time. So their feelings based on today's mind set is to be expected, though they are totally off the mark.That's why I don't argue with anybody who talks about NT's so called overacting.
I think this has become a bit long.Thanks to Groucho for giving me a chance to put this things here, though it might have bored some(or many?)
Regards
sankara70
28th April 2010, 05:24 PM
Dear Krishna
U echoed many fans' feelings!
It is surprising u r not watching any CDs and do not have CDs of NT films
Nothing wrong, if u have chance to watch NT films in theatres. CD only help u see movie as and when u feel like.
But the thrill of watching in theatre is different as u said.
VM I saw sometime in early 90s in a place near Tiruchendur where we lived. VM always was liked by all movie lovers. Ramdoss a pottu purati edukara scene-athilum thalai mudiya adjust panra style-athula oru vasanam vera-lovely songs-marakamudiyuma?
I have few of NT movie CDs. Thiruvilayadal DVD is regularly watched by my 4 year old daughter. I am recollecting NT movies to tell stories to my daughter in the nights
pammalar
28th April 2010, 05:28 PM
கோவையில் சிவாஜி படங்கள் சாதனை
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் கோவையில் ஏற்படுத்திய சாதனைகள்.
பராசக்தி(128நாள்)
சம்பூர்ண ராமாயணம்(100நாள்)
பாகப்பிரிவிi(120)
வீரபாண்டிய கட்டபொம்மன்(124)
இரும்புத் திரை(156)
படிக்காத மேடை(115)
புதையல்(107)
பாசமலர்(122)
பாவமன்னிப்பு(117)
பதிபக்தி (117)
தெய்வபிறவி(100)
பாலும் பழமும்(100)
படித்தால் மட்டும் போதுமா(100)
ஆலயமணி(100)
கர்ணன்(100)
பச்சைவிளக்கு(100)
நவராத்திரி(100)
திருவிளை யாடல்(117)
சரஸ்வதி சபதம்(100)
தூக்கு தூக்கி(120)
தங்கை (100)
ஊட்டிவரை உறவு(103)
சிவந்த மண்(103)
தில்லானா மோகனம்பாள்(103)
வியட்நாம் வீடு(104)
எங்கிருந்தோ வந்தாள்(100)
சவாலே சமாளி (100)
பட்டிகாடா பட்டணமா(100)
வசந்த மாளிகை(110)
எங்கள் தங்க ராஜா(100)
கவுரவம்(100)
தங்க பதக்கம்(140)
அவன்தான் மனிதன்(100)
மன்னவன் வந்தானடி(100)
அண்ணன் ஒரு கோவில்(100)
அந்தமான் காதலி(100)
தியாகம்(105)
திருசூலம்(175)
கல்தூண்(105)
தீர்ப்பு(105)
நீதிபதி(105)
வெள்ளை ரோஜா(105)
முதல் மரியாதை(175)
படிக்காதவன்(100)
தேவர் மகன்(105).
படையப்பா(210)
டியர் பாலா சார்,
கோவை மாநகரில் நமது நடிகர் திலகத்தின் காவியங்களின் சாதனைப் பட்டியல் அருமை. அவற்றில் சில திருத்தங்கள்:
1. சவாலே சமாளி - ராயல் திரையரங்கில் 90 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல்)
2. பட்டிக்காடா பட்டணமா - ராஜா திரையரங்கில் 90 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல்)
3. வசந்த மாளிகை - ராஜா திரையரங்கில் 107 நாட்கள்
4. எங்கள் தங்க ராஜா - ராயல் திரையரங்கில் 102 நாட்கள் (தீபாவளி வெளியீடான கௌரவத்திற்காக எடுக்கப்பட்டது)
5. கௌரவம் - ராயல் திரையரங்கில் 93 நாட்கள் (சிவகாமியின் செல்வனுக்காக எடுக்கப்பட்டது) (கௌரவம் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல்)
6. அவன் தான் மனிதன் - கீதாலயா திரையரங்கில் 85 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல்)
7. மன்னவன் வந்தானடி - கீதாலயா திரையரங்கில் 91 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல்) (நடிகர் முத்துராமன் நடித்த தீபாவளி வெளியீடான வாழ்ந்து காட்டுகிறேன் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது)
8. அந்தமான் காதலி - ராயல் திரையரங்கில் 78 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல்)
தங்களது பட்டியலில் விடுபட்டுள்ள திரைக்காவியம் மிருதங்க சக்கரவர்த்தி. இக்காவியம் கோவை கீதாலயா திரையரங்கில் 112 நாட்கள் ஓடி பம்பர் ஹிட்டானது.
அன்புடன்,
பம்மலார்.
sankara70
28th April 2010, 05:51 PM
Akhlabhi's Coimbatore stats are amazing
Point to be noted,
Irumbu Thirai ran more days than other films in the b&W category
C'tore is a industrial area and they have given the film which (is about labour problems) a huge success.
Mahesh_K
28th April 2010, 05:51 PM
Among theatres in Nellai(about 10),
Sivasakthi has special place for NT.
I remember seen Sivantha Mann in 80s there.
The posters were attractive for this film. Sivaji in 6 or 7 poses.
Later I saw Mudal Mariyathai sometime during 75 th day or so, night show-with house full
When Mudal Mariyathai was released, I was in Tuticorin. Charles-Mini Charles screened 5 shows a day in both theatres in same complex. It was running in both theatres for couple of weeks. நெல்லையில் பார்வதி, ரத்னா மற்றும் சென்ட்ரல் திரையரங்குகள் 70கள் வரை நம்து படங்களை அதிகமாக திரையிட்டன என்றால் 80 களில் கோலோச்சியது சிவசக்தி அரங்கு தான் .
சிவசக்தி அரங்கில் நடிகர் திலகம் படங்கள்
வைர நெஞ்சம் - 41 நாட்கள்
ரோஜவின் ராஜா - 41 நாட்கள்
புண்ணிய பூமி - 19 நாட்கள்
Naan vazha vaippen - 61 நாட்கள்
கீழ்வானம் சிவக்கும் - 21 நாட்கள்
அமரகாவியம் - 14 நாட்கள்
தீர்ப்பு - 112 நாட்கள்
Sumangali - 21 நாட்கள்
மிருதங்க சக்ரவர்த்தி - 41 நாட்கள்
Neethipathi - 63 நாட்கள்
வாழ்க்கை - 56 நாட்கள்
வம்சவிளக்கு - 28 நாட்கள்
திருப்பம் - 38 நாட்கள்
முதல் மரியாதை - 109 நாட்கள்
சாதனை - 21 நாட்கள்
விடுதலை - 56 நாட்கள்.
Mahesh_K
28th April 2010, 06:51 PM
இன்று சித்ரா பௌர்ணமி
ப.மாதவன் டைரக்ட் செய்த படம் என்று நினவு ஸ்ரீ புவேனேஸ்வர் பிலிம் circuit production என்றும நினவு
நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் பொங்கல் முதல் நாள் காலை காட்சி திரைப்படம் ஆரம்பித்து சற்று அமைதியாக சென்று கொண்டு இருந்தது ரசிகர்களின் ஆரவாரம் எதுவம் இல்லை படம் சுதாரிப்பு இல்லாமல் சென்று கொண்டு இருந்தது தீடீர் என்று ஓர் சப்தம் நெல்லை சிவாஜி மன்றம் உறுபின்னர் (திரு அய்யாதுரை or அய்யாக்குட்டி பாண்டியன் அவர்கள்) குதிரை போல் ஒரு கனைப்பு கனைதர்கள் அவ்வளுவ்தன் படம் தியேட்டரில் ஒரே கலாட்டா 3 வாரங்கள் ஓடியது என்றும் நினவு திரு மகேஷ் அவர்கள் confirm செயுமாறு கேட்டு கொள்ளுகிறேன்
திரு ராகவேந்தர் அவர்கள் நினைவுகளுக்கு நன்றி
என்றும் நட்புடன் gk
ஆம். சித்ரா பவுர்ணமி 3 வாரங்கள் ஓடியது.
PARAMASHIVAN
28th April 2010, 07:37 PM
Dear all
Can some one pls post the video (you tube, any videos) of this song from Karnan
'Aayirum karangal koopi' where Shivaji sir would be praying to Surya deva
thanks
pammalar
28th April 2010, 09:45 PM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் தொடர் நெல்லை தகவல்களுக்கும், புள்ளி விவரங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
தங்களது பசுமை நிறைந்த நினைவுகளுக்கு மேலும் இனிமை சேர்க்க, எமக்குத் தெரிந்த நெல்லைப் புள்ளி விவரத் தகவல்களையும் இங்கே பதிவிடுகிறேன்.
1976-ல் நமது நடிகர் திலகத்தின் சாதனைப் பட்டியல்: (நெல்லை மட்டும்)
[காவியம் - வெளியான தேதி - அரங்கம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. உனக்காக நான் - 12.2.1976 - பூர்ணகலா - 29 நாட்கள்
2. கிரஹப்பிரவேசம் - 10.4.1976 - பூர்ணகலா - 55 நாட்கள் (மொத்த வசூல் : ரூ.1,36,305-15) (இந்த வசூல் அன்றைய சாதனை)
3. சத்தியம் - 4.6.1976 - சென்ட்ரல் - 36 நாட்கள்
4. உத்தமன் - 25.6.1976 - பூர்ணகலா - 64 நாட்கள் (மொத்த வசூல் : ரூ. 1,67,780-80) (9 வார வசூலில் சிகர சாதனை)
5. சித்ரா பௌர்ணமி - 22.10.1976 - சென்ட்ரல் - 21 நாட்கள்
6. ரோஜாவின் ராஜா - 25.12.1976 - சிவசக்தி - 41 நாட்கள்
குறிப்பு:
1. கிரஹப்பிரவேசம், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு, சித்ரா பௌர்ணமி தீபாவளி ரிலீஸ்.
2. சென்னை மற்றும் தென்னகமெங்கும் 6.5.1976 அன்று வெளியான சத்தியம், நெல்லையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தள்ளி ரிலீஸ்.
3. சிவசக்தி அரங்கில், ரோஜாவின் ராஜா வெளியாகி, 45 தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகள். 1974-ம் ஆண்டில் இந்த அரங்கம் தொடங்கியதிலிருந்து, ரோஜாவின் ராஜா வெளியான காலகட்டம் வரை, இத்தனை தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளை சிவசக்தி அரங்கில் வேறு எந்த படமும் தந்ததில்லை. பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, சிவசக்தியில், ரோஜாவின் ராஜா 41 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. சிவசக்தியில், ரோஜாவின் ராஜா திரைக்காவியத்தின் 14 நாள் மொத்த வசூல், ரூ.59,982-75. இரண்டு வார வசூலில், இது இமாலய சாதனை.
அன்புடன்,
பம்மலார்.
Murali Srinivas
29th April 2010, 12:44 AM
மதுரையில் மறு வெளியீடுகளின் போது நடந்த சுவையான செய்திகளை அள்ளி வழங்கும் சதீஷ் அவர்களே! மிக்க நன்றி.
கிருஷ்ணா, என்னுடைய மூன்று வருடத்திற்கு முந்தைய பதிவை மீள் பதிவு செய்ததற்கு நன்றி. இப்போது நானும் டி.வி.டி. வாங்க ஆரம்பித்து விட்டேன்.
சங்கர்,
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அரங்குகளில் முன்பு சிவாஜி படங்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
பாலா, வெல்கம் ! வெல்கம்!
சாரதா,
மதுரையை பற்றி எழுதும் போது நீங்கள் சென்னைக்கு பரிந்துக் கொண்டு வருவீர்கள் என நினைத்தேன். மதுரை என்றாலே புராணம், புராணம் என்றாலே மதுரை அல்லவா! சென்னை மட்டுமல்ல எந்த ஊரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஆக்கமும் ஆதரவும் கொடுப்பதில் முன்னணியில் நின்றது மதுரை. கலாட்டா கல்யாணத்திற்கும் உயர்ந்த மனிதனுக்கும் 100 நாட்களுக்கு மேல் ஆதரவு கொடுப்பது நல்ல விஷயம் எனினும் ஹரிச்சந்திரா மற்றும் லட்சுமி கல்யாணத்திற்கு அதிக பட்ச நாட்களை வழங்கியது எங்கள் மதுரையின் சாதனை அல்லவா!
அன்புடன்
pammalar
29th April 2010, 02:09 AM
டியர் கிருஷ்ணாஜி,
1978-ல் நமது நடிகர் திலகத்தின் சாதனைப் பட்டியல்: (நெல்லை மட்டும்) (தமிழ்த் திரைக்காவியங்கள் மட்டும்)
[காவியம் - வெளியான தேதி - அரங்கம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. அந்தமான் காதலி - 26.1.1978 - பூர்ணகலா - 51 நாட்கள் (மொத்த வசூல் ரூ.1,67,737-95)
2. தியாகம் - 4.3.1978 - பார்வதி - 104 நாட்கள் (மொத்த வசூல் ரூ.2,58,100-90)
3. என்னைப் போல் ஒருவன் - 18.3.1978 - பூர்ணகலா - 41 நாட்கள்
4. புண்ணிய பூமி - 12.5.1978 - சிவசக்தி - 19 நாட்கள்
5. ஜெனரல் சக்கரவர்த்தி - 16.6.1978 - பார்வதி - 50 நாட்கள்
6. பைலட் பிரேம்நாத் - 30.10.1978 - சென்ட்ரல் - 46 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 1,41,980-92)
7. ஜஸ்டிஸ் கோபிநாத் - 16.12.1978 - ராயல் - 34 நாட்கள்
அன்புடன்,
பம்மலார்.
pammalar
29th April 2010, 04:11 AM
திரு சிவகுமார் அவர்களின் கட்டுரை படித்தேன் பம்மலர் அவர்களின் வெப்.கேம்ஸ். தளத்தில். இது ஏற்கனவே அவருடய "இது ராஜா பாட்டை அல்ல" புக் இல் வெளியானது என்று நினைக்கிறன் அந்த புத்தகத்தில் அவர் எல்லா நடிகர்களையும் பற்றி எழுதி உள்ளார். ஆனால் சிவாஜிக்கு மாத்திரம் 5 chapters
திரு பம்மலார் அவர்கள் பம்மல் கண்ணதாசன் மன்றம் தலைவர் அல்லது செயலாளர் ஆக உள்ளார்களா
ஏன் என்றால் கடந்த வருடம் வாணி மஹால் ஒரு நிகழிசயில் திரு ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் திருமதி ஜெயசித்ரா அவர்களுக்கும் சிறந்த சாதனையாளர் விருது வழங்கினார்கள் அப்போது அங்கே சென்று இருந்தேன் திரு ஸ்ரீகாந்த் உடல் நலம் குன்றி மேடை ஏறவே மிகவும் கஷ்டபட்டார்கள் அப்போது சுவாமிநாதன் என்ற ஒருவரடுன் பேசிய நினவு திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் தலைமை வகித்தார்கள் திரு தமிழருவி மணியன் அவர்கள் சிறப்பு பேச்சாளர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி அமைத்து இருந்தார்கள் காதல் மன்னன் heroine மிஸ்.மனு நடனம் ஆடினார்கள்
நட்புடன் Gk
டியர் கிருஷ்ணாஜி,
"இது ராஜபாட்டை அல்ல" என்கின்ற தனது சுயசரிதை நூலில், நமது நடிகர் திலகம் குறித்து எழுதியுள்ளவற்றைத் தான் இன்னும் சற்று விரிவாக, ராணி வார இதழில் எழுதுகோல் வித்தகர் நடிகர் சிவகுமார் அவர்கள் எழுதியுள்ளார்.
அடியேன் பம்மலார் என்கிற பம்மல் ஆர். சுவாமிநாதன், நமது இதயதெய்வமாக விளங்கும் நமது நடிகர் திலகத்தின் அதி திவீர பக்தன். எம்மை இது வரை எந்தவொரு அமைப்பிலும், இயக்கத்திலும் இணைத்துக் கொண்டதில்லை. பம்மலில் இயங்கி வரும் கவியரசு கண்ணதாசன் மன்றத்தின் பிரதான நிர்வாகி திரு.காவேரி மைந்தன் அவர்கள். அவர் வேறு, அடியேன் வேறு. சில வருடங்களுக்கு முன், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைக்காட்சியாக, நடிகர் சங்கத்தில் உள்ள தேவர் பிரிவ்யூ தியேட்டரில், நமது நடிகர் திலகத்தின் "முதல் தேதி" திரைக்காவியம் திரையிட்டார்கள். அக்காவியத்தைக் காணச் சென்றிருந்த பொழுது, அங்கே எதேச்சையாக திரு.காவேரி மைந்தன் அவர்கள் எமக்கு அறிமுகமானார். எமது வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டார். அவர் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கவியரசரின் விழாவுக்கு, எமக்கு தபால் கார்டில் அழைப்பு விடுப்பார். இதுவரை, எந்தவொரு வருடம் நடந்த விழாவுக்கும் என்னால் செல்ல முடியவில்லை. தவறு தான். காரணம், ஒவ்வொரு வருடமும், விழாவன்று தான் எமக்கு அலுவல் மிக அதிகமாக இருக்கும். அதனாலேயே போக முடியாமல் போய் விடும். ரொம்ப வருத்தமாயிருக்கும். இந்த வருடமாவது அவசியம் செல்ல வேண்டும் என்று இருக்கிறேன். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், தாங்கள் கவியரசு விழாவில் சந்தித்த திரு.சுவாமிநாதன் என்பவர் வேறு, அடியேன் வேறு.
அடியேனும் சென்னையில் தான் உள்ளேன். தங்களது விருப்பப்படி அவசியம் சந்திப்போம்!
அன்புடன்,
பம்மலார்.
goldstar
29th April 2010, 05:25 AM
Thanks guys for appreciation. I am not too old, I am just 37 years old. So I had only re-release experience more and couple of new releaes like "Sumangali", "JalliKattu".
Well, let me recall my experience with "Deepam" re-released in New Deluxe theatre which one of strong MGR's fort and mostly MGR movies shown there and very rarely Sivaji's movies shown there. I did see few 2 or 3 NT movies on Sundays.
On Deepvali day (may be 1984 or 1985) none of Sivaji movie released in Madurai, but "Deepam" released in New Deluxe by surprise. I went for matinee show and groud floor tickets were all full, so I have left with Balcony option which is quite expensive that time I think Rs. 1.80 but I managed with Deepavali money given my relatives and matinee show housefull and full of NT fans were there and lots of "Aallapparai" and enjoyed it lot. "Deepam" for the record run for 10 continues days in New Deluxe which is quite remarkable for this theatre.
Next I should recall "Kandan Karunai" which was re-released in New Cineme theatre.
Cheers,
Sathish
sankara70
29th April 2010, 11:25 AM
In early 80s I was in Madurai to attend my aunt's marriage-once the dinner was over-my mama theeeevira Sivaji rasigar fm Nellai and me went to Ram theatre (name not sure) where Puthiya Paravai was running-
when we went inside the film already started-We were standing for almost throughout.
groucho070
29th April 2010, 11:26 AM
Many more new members, NT fans :D :clap: Welcome! Welcome!
sankara70
29th April 2010, 12:55 PM
Nellaiyil 80s la, periya film postera vandiyil vaithu thalli kondu varuvargal-mostly in the evenings-
oru film varuvatharku munbum-release ana pin, 'vetrikaramana-thaikulam potrum' ponra vasagangaludanum-intha vandigal veedhigalil varum
nalla ethirparpodu irupom
matra oorgalil eppadiyo!
saradhaa_sn
29th April 2010, 01:44 PM
Nellaiyil 80s la, periya film postera vandiyil vaithu thalli kondu varuvargal-mostly in the evenings-
oru film varuvatharku munbum-release ana pin, 'vetrikaramana-thaikulam potrum' ponra vasagangaludanum-intha vandigal veedhigalil varum
nalla ethirparpodu irupom
matra oorgalil eppadiyo!
நீங்கள் சொன்ன இதே விஷயம் தஞ்சாவூர் சென்றிருந்த சமயங்களில் பார்த்திருக்கிறேன். கூண்டு அடிக்கப்பட்ட மாட்டு வண்டியில் (அல்லது குதிரை வண்டி..?) இரண்டு பக்கமும் தட்டிகளில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு, அல்லது பேனர் கட்டப்பட்டு, ஒலிபெருக்கியில் அந்த திரைப்படத்தின் பாடல்களை கேஸட்டில் ஒலிபரப்பிக்கொண்டு வருவார்கள். வண்டியின் உள்ளே அமர்ந்திருக்கும் ஒருவர் இடையிடையே பாட்டை நிறுத்திவிட்டு அப்படத்தின் சிறப்புகள் பற்றி மைக்கில் பேசுவார். வண்டியைக்க கண்டதும் சிறுவர்கள் கிட்டே ஓடுவார்கள். அவர்களுக்கு படத்தின் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீஸ் வழங்குவார்கள். அதை வாங்க சிறுவர்களுக்கிடையே போட்டா போட்டி.
இங்கே சென்னையில் அதெல்லாம் இல்லை. சுவரொட்டிகளும், செய்தித்தாள் விளம்பரங்களும்தான்.
abkhlabhi
29th April 2010, 05:10 PM
Dear Paramashivam,
Here it is :
http://vimeo.com/8473735
http://oruwebsite.com/music_videos/karnan/mazhai-kodukkum-kodaiyum-video_5ce77cc8d.html
RAGHAVENDRA
29th April 2010, 05:46 PM
இங்கே சென்னையில் அதெல்லாம் இல்லை. சுவரொட்டிகளும், செய்தித்தாள் விளம்பரங்களும்தான்.
சென்னையிலும் இருந்தது. நான் சின்னஞ்சிறுவனாக இருந்த பொழுது பாவ மன்னிப்பு, பாச மலர் படங்களுக்கு சென்னை மாநகரத்தில் குதிரை வண்டிகளில் தட்டி கட்டி போஸ்டர் ஒட்டி, பாட்டிசைத்து, பிட் நோட்டீஸ் விநியோகித்து அனைத்து வகை விளம்பரங்களும் இருந்தன. குறிப்பாக போர் சமயங்களில் மாலை 4.00 மணிக்குள் இந்த வண்டிகள் திரும்பி விட வேண்டும். திரையரங்குகள் மருத்துவ மனைகள் போன்ற முக்கியமான பொது மக்கள் கூடும் இடங்களில் மட்டும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டன. மற்றபடி மாலை 6.மணியிலிருந்த இரவு சுமார் 9.00 மணி வரை என்று நினைவு, எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் நிறுத்தப் படும். இருட்டடிப்பு செய்யப் படும். மக்கள் சாலைகளில் இருந்தால் ஓரமாக சென்று விட வேண்டும். மேலே விமானம் பறந்தால் சாலையில் குப்புறப் படுத்து விட வேண்டும். இப்படிப்பட்ட நெருக்கடியான காலங்களில் கூட மக்கள் திரைப்படங்களைப் பார்க்கத் தவறவில்லை. இப்படி பல நிகழ்ச்சிகள் தற்போதைய தலைமுறைகள் அறிந்திருக்க முடியாது.
ராகவேந்திரன்
PARAMASHIVAN
29th April 2010, 06:24 PM
Dear Paramashivam,
Here it is :
http://vimeo.com/8473735
http://oruwebsite.com/music_videos/karnan/mazhai-kodukkum-kodaiyum-video_5ce77cc8d.html
Dear abkhlabhi
Many thanks. just look at the walk just look at it , simply awsome Raja nadai :P
joe
29th April 2010, 07:41 PM
Dear Paramashivam,
Here it is :
http://vimeo.com/8473735
http://oruwebsite.com/music_videos/karnan/mazhai-kodukkum-kodaiyum-video_5ce77cc8d.html
Dear abkhlabhi
Many thanks. just look at the walk just look at it , simply awsome Raja nadai :P
http://vimeo.com/8473468
இதையும் பாரு தம்பி !
இப்படி ஓர் நடை படைத்தவன் எவருமுண்டோ கூறு தம்பி!
RAGHAVENDRA
29th April 2010, 08:17 PM
டியர் ஜோ ,
கர்ணன் படம் துவக்கம் முதல் வணக்கம் வரை நெஞ்சை அள்ளும். அதிலும் குறிப்பாக நீங்கள் சுட்டியிருக்கும் காட்சி ..... சொல்லத் தான் வார்த்தையில்லை...
ஹிந்து நாளிதழில் மரகதம் திரைப்படத்தினைப் பற்றிய நினைவூட்டல் ... இந்த சுட்டியில் ....
http://beta.thehindu.com/arts/cinema/article416029.ece
நடிகர் திலகம் மற்றும் பத்மினி தோன்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் படம் ... அருமை..
ராகவேந்திரன்
rajeshkrv
29th April 2010, 08:53 PM
Those who want to watch maragatham online
here is the youtube link
http://www.youtube.com/watch?v=zwTAAzYIYhs
PARAMASHIVAN
29th April 2010, 08:54 PM
Dear Paramashivam,
Here it is :
http://vimeo.com/8473735
http://oruwebsite.com/music_videos/karnan/mazhai-kodukkum-kodaiyum-video_5ce77cc8d.html
Dear abkhlabhi
Many thanks. just look at the walk just look at it , simply awsome Raja nadai :P
http://vimeo.com/8473468
இதையும் பாரு தம்பி !
இப்படி ஓர் நடை படைத்தவன் எவருமுண்டோ கூறு தம்பி!
Joe anNe
Nandraha parthEn, NT in Kambeerarmum , anth nadaiyum, antha sima kuralum naan india cinema sarithirathil parthathilai, inmEl parkapOvathum ilaianother film
Thiruvizhaiyadal, where NT acts as the Lord, in one scene he would be acting as a Meenavan (fisherman) to attract savithiri amayar,. athil antha kadal karaiyil oru nadai irkum, athu ena oru nadai pa ...
:notworthy: :notworthy:
If you can find that video , pls post it... many thanks
Murali Srinivas
30th April 2010, 12:27 AM
சதீஷ்,
நியூடீலக்ஸ் தியேட்டரில் ஏராளமான நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன. நானே அங்கு பார்த்தவை என்று எடுத்துக்கொண்டால் முரடன் முத்து, நவராத்திரி,அன்புக்கரங்கள்,சாந்தி,ஊட்டி வரை உறவு, தெய்வ மகன், திருடன், உத்தமன் என்று நிறைய சொல்லலாம். நான் குறிப்பிடுவது 1978 முதல் 1981 காலக்கட்டம் வரை.
அது போல தீபாவளிக்கு நடிகர் திலகம் படம் இல்லாமலா? அதுவும் 84 -85 உள்பட எல்லா வருடமும் இருந்தது. 84-ல் வம்சவிளக்கு, 85-ல் படிக்காதவன். இன்னும் சொல்லப்போனால் இடையில் 1965 - ஐ மட்டும் விட்டுவிட்டால் அவர் படங்கள் வெளிவராத தீபாவளி 1987-ல் தான் வந்தது. தமிழகத்தில் முதன் முதலாக, சிவாஜி படம் வெளி வராத தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளி என்று போஸ்டர் அடித்ததும் நமது ரசிகர்கள் தான். அலங்கார் தியேட்டர் எதிரில் இருக்கும் காந்தி பொட்டல் சிவாஜி மன்றத்திலிருந்து, நகரத்தில் எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.
அன்புடன்
pammalar
30th April 2010, 03:01 AM
முரளி சார், ராகவேந்திரன் சார், திரு.டாக், சகோதரி சாரதா,
தாங்கள் ஒவ்வொருவரும் வழங்கிய பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள்!
கிருஷ்ணாஜி, சதீஷ், சங்கர்,
தங்களது அனுபவப் பதிவுகள் ஒவ்வொன்றும் தேன்துளிகள்! தங்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்!
Thank you very much Mr.Bala & Mr.Joe for Evergreen NT's Karnan Links.
NADIGAR THILAGAM - The Greatest Actor of the Universe - Ever.
After seeing all kinds & varieties of scintillating stuff for more than n number of times, can we (NT Devotees) accept any other actor or star? Never.
அன்புடன்,
பம்மலார்.
NOV
30th April 2010, 07:30 AM
After seeing all kinds & varieties of scintillating stuff for more than n number of times, can we (NT Devotees) accept any other actor or star? Quite difficult. Standards are too high for any other actor to catch up. :D
RAGHAVENDRA
30th April 2010, 07:34 AM
...
அது போல தீபாவளிக்கு நடிகர் திலகம் படம் இல்லாமலா? அதுவும் 84 -85 உள்பட எல்லா வருடமும் இருந்தது. 84-ல் வம்சவிளக்கு, 85-ல் படிக்காதவன். இன்னும் சொல்லப்போனால் இடையில் 1965 - ஐ மட்டும் விட்டுவிட்டால் அவர் படங்கள் வெளிவராத தீபாவளி 1987-ல் தான் வந்தது. ...
அன்புடன்
1972... தீபாவளிக்கு விட்டுப் போனது, தங்கள் பதிவிலும் விட்டுப் போனது...
ராகவேந்திரன்
goldstar
30th April 2010, 09:49 AM
Murali,
I may be wrong, the year could be 1984 and NT fans preferred to watch "Deepam" than "Vamsa Villakku".
New Deluxe did show NT movies but not much compare to MGR movies and in my experience I have not seen much NT movies there.
Let me recall "Kandhan Karunai" re-released in New Cinema theatre which one of strong NT fort and I have seen lots lots Thalaivar NT movies there.
Before KK, there was a MGR movie released and MGR fans have pasted posters on the top of NT posters which were displayed for previously released NT movies. Event at the time of KK released MGR posters were there which lots of NT fans did not like it and also GoldStar did not have any posters for KK. So myself and one Grocery guy (forgot his name) bought lots of Sivaji calenders closer by New Cinema theatre, interestingly no glue we carried, so to alternative to glue we have used Sugar Banana and pasted Thalaivar NT photos every where in the theatre.
Inside the theatre we were very quite till NT given darshan, after that so much whitsle and claps, flowers, coins inside the theatres.
I should recall 2 veriyan fans of NT, they are Nagesh and Thamaari (male). Both these guys were famous to through papers, flowers and coins because the way thrown the papers which will occupy whole screen.
I am searching for GoldStar Sivaji wing leader Kannan for some time. After school days we lost contacts and not sure whether Kannan reads our post here. Interestingly he is also a Sourashtra guy. We used to plan for NT movies poster at Sourashtra HSS. Madurai.
Have a great week end guys.
I will come up with "Thanga Surangam" re-released in Chinthamani theatre on Monday.
Cheers,
Sathish
goldstar
30th April 2010, 09:51 AM
Guys,
I forgot to add one more thing for "Deepam" re-released in New Deluxe theatre.
Huge crowds were there and police came and did "latthi charge" and I also got "latthi charge" in my leg which I had felt pain for nearly a year, but these pain gone in a second when NT face seen in the screen. NT is god.
Cheers,
Sathish
abkhlabhi
30th April 2010, 10:16 AM
http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko
sankara70
30th April 2010, 11:50 AM
Guys,
I forgot to add one more thing for "Deepam" re-released in New Deluxe theatre.
Huge crowds were there and police came and did "latthi charge" and I also got "latthi charge" in my leg which I had felt pain for nearly a year, but these pain gone in a second when NT face seen in the screen. NT is god.
Cheers,
Sathish
GOLDSTAR Sathish is really 24 ct gold-avarukku Rasiga Thilagam endru pattam vazangalam
mr_karthik
30th April 2010, 12:36 PM
Hello all NT fans & devotees...
ரொம்ப நாள் ஆச்சு இந்தப்பக்கம் வந்து...
வேலைப்பளூ, கணிணியின் வேலை நிறுத்தம் என்று சில காரணங்களால் தொடர்ந்து தலைகாட்ட முடியவில்லை. முதலில், வந்திருக்கும் புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்... வந்தது முதற்கொண்டு தங்கள் அனுபவமிக்க பதிவுகளால் அசத்தி வருகின்றனர்.
ஜி. கிருஷ்ணா
ராதாகிருஷ்ணன்
காவேரி கண்ணன்
மகேஷ்
'கோல்ட் ஸ்டார்' சதீஷ்
அனைவரின் பதிவுகளும் அருமை. தென்மாவட்ட நிகழ்வுகளையும், திரைப்பட பட்டியலையும் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். நன்றி.
பழையவர்களான முரளிசார், ராகவேந்தர் சார், சாரதா, பம்மலார் ஆகியோரும் சற்றும் சளைக்காமல் புள்ளி விவரங்களையும், அன்றைய நிகழ்வுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
மகாலட்சுமியில் சிவாஜி வாரம் கொண்டாட்டம்
மகாலட்சுமியில் பாசமலர் சாதனை
சீனிவாசாவில் பாசமலர் மறு வெளியீடு
ஆகியவை பற்றிய முரளி சார், ராகவேந்தர், பம்மலார் ஆகியோரின் வர்ணனைகளும், அடிஷனலாக பம்மலார் அளித்த புகைப்பட ஆல்பங்களும் கண்களையும் இதயத்தையும் கவர்ந்தன. அதிகம் பேசப்படாத அரிச்சந்திரா, சித்ரா பௌர்ணமி படங்கள் பற்றி இவர்கள் அளித்த விவரங்கள் நன்றாக இருந்தன.
பம்மலாரின் திரையரங்கப்பட்டியல்கள் (சென்னை காஸினோ, நெல்லை அரங்குகள்) அருமை.
பம்மலாரின் தமிழகமெங்கும் நடிகர்திலகத்தின் திரைப்பட மறு வெளியீடுகள் மற்றும் அவற்றின் வசூல் விவரங்கள் அற்புதம்.
இவர்களோடு வழக்கம்போல Joe, sankara70, Bala, tacinema, Rakesh, Rangan, Harish, Nov ஆகியோரும் பல்வேறு சுவையான தகவல்களையும், விவரங்களையும் தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகின்றனர்.
அனைவருக்கும் நன்றி.
pammalar
30th April 2010, 01:24 PM
After seeing all kinds & varieties of scintillating stuff for more than n number of times, can we (NT Devotees) accept any other actor or star? Quite difficult. Standards are too high for any other actor to catch up. :D
Certainly. Thanks for the response.
Regards,
Pammalar.
pammalar
30th April 2010, 01:36 PM
Welcome back Mr.Karthik!
My sincere thanks for your appreciation.
Regards,
Pammalar.
pammalar
30th April 2010, 02:12 PM
பொன்விழா நாயகன்
நமது நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தரும் (பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல - பெருமாளுக்கு பெரியாழ்வார் போல்), பன்முக வித்தகரும், இன்றளவும் தமிழ் நாடக உலகைக் கட்டிக் காப்பவருமான பெருமதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய நடிகர் திரு.ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு இன்று கலையுலகில் பொன்விழா நிறைவு. 51வது ஆண்டில் வெற்றி நடை போடும் அவருக்கு - பொன்விழா நாயகருக்கு - நமது திரியின் சார்பில் பல கோடி நல்வாழ்த்துக்கள்! கடவுள் அருளோடும், கலைக்கடவுளின் ஆசியோடும், திரு.ஒய்.ஜி. அவர்கள், இன்னும் மென்மேலும் பற்பல வெற்றி விழாக்களைக் காணப் போகிறார் என்பது திண்ணம்.
பொன்விழா நாயகர் திரு.ஒய்.ஜிக்கு இன்று 30.4.2010 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி அளவில், சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் பாராட்டு விழா. திரை இலக்கியத் திலகம், முத்தமிழறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமை வகிக்கிறார்.
விழா சிறப்புற நடைபெற நமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
joe
30th April 2010, 02:22 PM
எங்கு சென்றாலும் எந்த தருணத்திலும் நடிகர் திலகத்தை நெஞ்சினில் ஏந்தி அவர் புகழ்பாடும் ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு வாழ்த்துகள்!
mr_karthik
30th April 2010, 05:36 PM
Y.Gee.மகேந்திரன் ஒரு நிகழ்ச்சியில் பத்து வரிகள் பேசினால், அதில் ஏழு வரிகள் நடிகர்திலகம் பற்றியதாக இருக்கும். அந்த அளவுக்கு நடிகர்திலகத்தின் மீது பற்றும் பாசமும், பக்தியும் கொண்டவர். 'என்னைப்பெற்ற தந்தை Y.G.பார்த்தசாரதி... ஆனால் நான் பெற்ற தந்தை சிவாஜி கணேசன்' என்று சொல்லி சொல்லி மகிழ்பவர்.
அவர் தனது நூறாவது ஆண்டையும் கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்.
sankara70
30th April 2010, 06:07 PM
Congrats to Mr YGM
kaveri kannan
1st May 2010, 11:54 AM
நடிகர்திலகத்தின் நல்ல இரசிகர் ஒய் ஜி மகேந்திரா அவர்களுக்கு பொன்விழா வாழ்த்துகள்.
தங்க விண்மீன், கிருஷ்ணா எனக் கலக்கும் புதியவர்களும்...
தொடர்ந்து அசத்திவரும் நம் பம்மலார், முரளிசார், ராகவேந்திரா சார், சாரதா அவர்கள் --
அனைவரின் பதிவுகளையும் கற்கண்டாய் சுவைத்து படித்தேன்.
------------------------------------------
திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் ஏவிஎம் சரவணன் அவர்கள் -
உயர்ந்த மனிதன் படத்தில் -
நடிகர்திலகம் முதலில் டாக்டர் பாத்திரம் செய்ய விரும்பியதை..
அசோகனுக்கு அந்த வேடம் சென்றநிலையில்
சொந்த விருப்புவெறுப்பை மீறிய தொழில்திறன்/நேர்மை பறைசாற்றும் விதமாய்
அசோகனுக்கு மாரடைப்பு/இறப்புக் காட்சியை நடித்துக்காட்டிக் கற்பித்ததை...
சரவணன் அசோகனிடம் '' அவர் செய்துகாட்டியதில் பத்து சதம் செய்.. போதும்.. ஆடியன்ஸ் அசந்துபோவார்கள்''
எனச் சொல்லியதையும்...
பகிர்ந்து... நம் இரசிக நெஞ்சங்களை நிறைத்தார்.
சரவணன் அவர்களுக்கு நன்றி.
HARISH2619
1st May 2010, 12:46 PM
தனது கலைஉலகின் 50வது ஆண்டில் காலடி வைக்கும் திரு ஒய்.ஜி.எம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வின்னுலகில் தங்களது திருமன நாளை கொன்டாடிகொன்டிருக்கும் நடிகர்திலகம்-கமலம்மாள் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.
pammalar
1st May 2010, 11:55 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 1
கே: சிவாஜி கணேசனின் நடிப்பை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதில்லையே, ஏன்? (எஸ்.எஸ்.குமார், திருவனந்தபுரம்)
ப: தேன் என்றும் கசப்பதில்லை.
(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1969)
அன்புடன்,
பம்மலார்.
pammalar
2nd May 2010, 01:35 AM
வாழ்வியல் திலகம் அருளிய பொன்மொழி
(இந்த வார [2.5.2010] ராணி இதழிலிருந்து) (எழுதியவர் : த.ஜெகன், சரலூர் )
மனைவியின் அருமை
1995-ம் ஆண்டு நாகர்கோவிலில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசுகையில், "நமது மனச்சுமையை நண்பனிடம் சொன்னால் உதவிக்கு அஸ்திவாரம் போடுவதாக நினைப்பான். தந்தையிடம் சொன்னால் - 'என் மகனுக்கு பிழைக்கத் தெரியவில்லை' என்பார். சகோதரனிடம் சொன்னால் சுமை தன் தோளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுவான். பிள்ளையிடம் சொன்னால் - 'கையாலாகாத அப்பா புலம்புகிறார்' என்று நினைப்பான். தாயிடம் சொன்னால் இடிந்து போய்விடுவாள். ஆனால், எந்த காலகட்டத்திலும் மனைவியிடம் மனச்சுமைகளைப் பகிர்ந்து கொள்வதைப் போன்ற சுகம் வேறு எதிலும் இல்லை" என்றார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திருமணக் கூட்டமே ரசித்து கைதட்டியது.
அன்புடன்,
பம்மலார்.
pammalar
2nd May 2010, 04:10 AM
ஒய்.ஜி. விழா - 1
திரு. ஒய்.ஜி. மகேந்திரா அவர்களின் கலையுலகப் பொன்விழா [நாடக மேடையில் 50 ஆண்டுகள் (1960-2010)], நேற்று (30.4.2010) வெள்ளியன்று, மாலை 6:15 மணி முதல் இரவு 10:15 மணி வரை, சென்னை மியூசிக் அகாடமியில் சிறந்த முறையில் இனிதே நடைபெற்றது. திரை இலக்கியத் திலகம், முத்தமிழறிஞர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமை வகித்தார். திருமதி.ஒய்ஜிபி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கலைஞானி கமலஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக சிறப்பித்தனர். நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் தளபதி ஜி. ராம்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், சென்னை நகர மேயர் மற்றும் கலையுலகப் பிரமுகர்கள், பல்துறைப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பெருந்திரளான பொதுமக்கள், ரசிகர்கள் (அரங்கம் கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்) ஆகியோர் படையெனப் புடை சூழ பொன்விழா களை கட்டி ஜொலிஜொலித்தது.
விழா, "வியட்நாம் வீடு" நாடகத்துடன் தொடங்கியது. சிவாஜி நாடக மன்றத்தின் மெகாஹிட் நாடகமான நடிகர் திலகத்தின் "வியட்நாம் வீடு" நாடகத்தை, கடந்த 1.10.2008 முதல் (நடிகர் திலகத்தின் 80வது ஜெயந்தி நிறைவு விழா முதல்) இன்று வரை, அவரது நினைவைப் போற்றும் வகையில், திரு.ஒய்.ஜி. அவர்கள், தனது UAA (United Amateur Artistes) குழு சார்பில் மிக வெற்றிகரமாக நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இக்குறுகிய காலத்திற்குள், 50 முறைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இந்நாடகம், கூடிய விரைவில் 100வது நாடக விழாவை நோக்கி வெற்றி நடைபோட உள்ளது.
"வியட்நாம் வீடு" நாடகம் சரியாக மாலை 6:15 மணிக்குத் தொடங்கியது. 'அமரர் நடிகர் திலகம் என்கின்ற குருவுக்கு, இந்த எளிய சிஷ்யனின் குரு காணிக்கை, அவரது பொற்பாத கமலங்களுக்கு இந்நாடகம் சமர்ப்பணம்' என்கின்ற பக்தி உரையுடன் நாடகம் தொடங்கியது. பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் பாத்திரத்தில் ஒய்ஜிஎம் ஜெம்(GEM). ஏனைய பாத்திரங்களில் நடித்தவர்களும் உணர்ந்து நடித்திருந்தனர். சரியாக 6 மணிக்கு விழா அரங்கிற்கு வருகை புரிந்த முதல்வர் கலைஞர் அவர்கள், தனக்கிருந்த கண்வலியோடு இடைவேளை வரை நாடகத்தை கண்டு களித்தார். பின்னர் பாராட்டு விழாவுக்கும் தலைமை தாங்கி ஒய்ஜிஎம்மை வாயார வாழ்த்தினார். என்னே அவரது கலை ஈடுபாடு! எல்லா விஷயங்களிலும் அவருக்கு நிகர் அவரே!
சரியாக 7:45 மணிக்கு நாடகத்திற்கு இடைவேளை விடப்பட்டு, பாராட்டு விழா தொடங்கியது.
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.
Karikalen
2nd May 2010, 05:08 AM
http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/05/kamal-speech-mahendiran-rajini-sivaji.html
pammalar
2nd May 2010, 12:34 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 2
கே: "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன், சிவாஜி கணேசன் எம்.பி. - ஒப்பிடுக? (தீபன், புதுவை)
ப: ஒன்று அவரது தொழிலுக்குக் கிடைத்த பட்டம், மற்றது அவரது நாட்டுப்பற்றுக்குக் கிடைத்த கௌரவம்.
(ஆதாரம் : பொம்மை, மே 1982)
அன்புடன்,
பம்மலார்.
J.Radhakrishnan
2nd May 2010, 01:41 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 2
கே: "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன், சிவாஜி கணேசன் எம்.பி. - ஒப்பிடுக? (தீபன், புதுவை)
ப: ஒன்று அவரது தொழிலுக்குக் கிடைத்த பட்டம், மற்றது அவரது நாட்டுப்பற்றுக்குக் கிடைத்த கௌரவம்.
(ஆதாரம் : பொம்மை, மே 1982)
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் சார்,
எப்படி சார் உங்களுக்கு மட்டும் தலைவரை பற்றிய எல்லா தகவல்களும்!!! அதுவும் 1982 ம் வருடம் வந்த பொம்மை இதழ்!!!!
Fantastic!
மிக்க நன்றி !!!!!!!!!!
pammalar
2nd May 2010, 05:42 PM
டியர் பம்மலார்...
சென்னை காஸினோ அரங்கில் நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் சாதனைப்பட்டியல் தொகுப்பு அருமை. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் தலைமை மன்றத்தால் பத்திரப்படுத்தப்பட வேண்டியவை. அன்னை இல்லத்துக்குப்பின் நீண்ட வருடங்களாக அங்கே நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வெளியாகாததற்கு விசேஷ காரணங்கள் உண்டா?. (ஒருகாலத்தில் இயக்குனர் ஸ்ரீதரின் கோட்டையாக இருந்த காஸினோ அரங்கம், எழுபதுகளில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் அரங்காக மாறிப்போனது). அடுத்து மதுரை ஸ்ரீதேவி அரங்கின் சாதனைகளை வரவேற்கத் தயாராகி விட்டோம். இதுபோல திருச்சி பிரபாத், சேலம் ஜெயா, சென்னை கிரௌன் அரங்குகள் பற்றியும் அறிய ஆவலாயுள்ளோம். நீங்கள் செய்வீர்கள், இருந்தாலும் முன்கூட்டியே ஒரு விண்ணப்பம். (சென்னை கிரௌன் அரங்குக்கு ஒரு விசேஷம். அது சித்ரா, கிரௌன், சயானி காம்பினேஷனிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனிலும் வெற்றிக்கொடிகளைப் பறக்கவிட்டது).
மலைக்கோட்டை நகரில் 'ராஜராஜசோழன்' வெற்றிபவனி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சகோதரி சாரதா,
தங்களது பண்பான பாராட்டுக்களுக்கு அன்பான நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு திரையரங்கிலும், நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த சாதனைகள், கூடிய விரைவில் சிறப்புப் பதிவுகளாக வர உள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை காஸினோ அரங்கில், 1950களில் நமது நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் போலவே, மக்கள் திலகம் மற்றும் காதல் மன்னன் ஆகியோரது திரைப்படங்களும் சாதனைகள் புரிந்துள்ளன.
மக்கள் திலகத்தின் சூப்பர்ஹிட் எவர்கிரீன் காவியமான மலைக்கள்ளன்(1954), காஸினோவில் 100 நாள் விழாக் கொண்டாடியது.
காதல் மன்னனின் காலத்தை வென்ற காவியங்களான மிஸ்ஸியம்மா(1955) மற்றும் கணவனே கண்கண்ட தெய்வம்(1955) ஆகியவை காஸினோ அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி கண்ட திரைக்காவியங்கள். 1957-ம் ஆண்டு வெளிவந்த மாயா பஜார் திரைக்காவியமும் இங்கே 100 நாள் விழாக் கொண்டாடியது. மேலும், காதல் மன்னன் கதாநாயகனாக நடித்த ஸ்ரீதரின் கல்யாண பரிசு(1959) திரைக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கண்டது.
1960களில், காஸினோவில், நமது நடிகர் திலகத்தின் அன்னை இல்லம்(1963) 100 நாள் விழாக் கொண்டாடியது. (நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை, எல்லா விவரங்களும் காஸினோ அரங்கின் பட்டியலில் உள்ளது)
காதல் மன்னனின் கைராசி(1960), காஸினோவில் மிக வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது.
தாங்கள் குறிப்பிட்டதைப் போலவே, காஸினோ அரங்கம், சில காலம் சாதனை இயக்குநர் ஸ்ரீதரின் கோட்டையாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்ரீதரின் செல்லுலாய்ட் காவியமான நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) இங்கே 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட். காமெடிக் காவியமான காதலிக்க நேரமில்லை(1964), இங்கே 210 நாட்கள் ஓடி ஹிமாலயன் ஹிட்.
பின்னர், காஸினோ, இரண்டு ஆண்டுகளுக்கு, மக்கள் திலகத்தின் கோட்டையாக மாறியது. மக்கள் திலகத்தின் மகாமெகாஹிட் காவியமான எங்க வீட்டுப் பிள்ளை(1965) இங்கே 211 நாட்கள் ஓடி விண்ணை முட்டும் வெற்றியைப் பெற்றது. ஏவிஎம் தயாரிப்பில் மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த அன்பே வா(1966), இங்கே 154 நாட்கள் சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடியது.
இதற்குப் பின்னர், இங்கே தமிழ்ப் படங்கள் வெளியாவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, தாங்கள் குறிப்பிட்டதைப் போல், 1970 களிலிருந்து, ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடும் அரங்கமாக மாறிப் போனது. (அத்தி பூத்தாற் போல் எப்போதாவது தமிழ்ப் படங்கள் வெளியாவதுண்டு.)
1982-ல் கமலின் வாழ்வே மாயம் இங்கே வெள்ளிவிழாக் கண்டது.
தற்பொழுது இங்கே தெலுங்குப் படங்கள் அதிகமாக திரையிடப்படுகின்றன.
1963-ல் அன்னை இல்லத்திற்குப் பின், 35 வருடங்கள் கழித்து, 1998-ல் என் ஆச ராசாவே வெளியானதற்குக் காரணம், காஸினோவில், தொடர்ந்து ஆங்கிலப் படங்களும் பின்னர் தெலுங்குப் படங்களும் வெளியானதால் தான்.
எமது அறிவுக்கு எட்டிய புள்ளி விவரங்களை, எமக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் இங்கே அளித்துள்ளேன்.
அன்புடன்,
பம்மலார்.
NOV
2nd May 2010, 05:44 PM
watched Karnan once again on Vellithirai. eththanai thadavai paarththaalum thigattaatha mahaa kaaviyam.
saththiyamaa sollren, innoruththen porandhu varanum.....
sathya_1979
2nd May 2010, 05:49 PM
watched Karnan once again on Vellithirai. eththanai thadavai paarththaalum thigattaatha mahaa kaaviyam.
saththiyamaa sollren, innoruththen porandhu varanum.....
Idharkku vaaippe illai. Nadippu ennum kalai started and ended with Nadigar Thilagam!
sivank
2nd May 2010, 05:53 PM
வணக்கம் நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பக்தர் குழுவின் கடை நிலை தொண்டர் அடி பொடியார்களில் நானும் ஒருவன். இங்கு வந்து குவியும் எண்ணற்ற விஷயங்களை ஆழ்ந்து ரசித்து படிக்கும் பக்தர்களில் நானும் ஒருவன். மற்றவர்களை போல் எழுத ஆசை இருந்தாலும் ஞானம் இல்லாததால் கடலோரம் நின்று காற்று வாங்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். இருந்தும் எனக்கும் அவ்வப்போது எழுத ஆசை தோன்றும். ஆனால் என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று தெரியாததால் ஆசை நிராசையாகி விடும். என் மனதை மிகவும் கவர்ந்த படங்களை பற்றி எழுதலாம் என்றால் இங்கு அதை ஏற்கனவே எழுதி விட்டார்கள். சகோதரி சாரதாவுடனோ, சகோதரர் முரளியுடனோ போட்டியிட முடியுமா.
இருந்தும் ஆசை யாரை விட்டது. சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஏனோ தெரியவில்லை பார்த்தால் பசி தீரும் படத்தின் மீது அப்படி ஒரு காதல். எனது பள்ளி காலத்தில் பார்த்த படம் அது. ஒரு முறை பார்த்த பின் என்னை பல முறை பார்க்க வைத்த படம் . இனி எனது பார்வையில் பார்த்தால் பசி தீரும்.
sivank
2nd May 2010, 06:43 PM
பார்த்தால் பசி தீரும்
பீம்சிங்கின் ப வரிசை படங்களில் மிக சிறந்த படங்களில் ஒன்றான இப்படம் இரண்டாம் உலக போருடன் ஆரம்பிக்கும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானிகளான வேலுவும்(ஜெமினி) பாலுவும் (ந.தி) அசாம் எல்லையில் ஜப்பானியர்களை எதிர்த்து போரிடும் வேளையில் அவர்களது விமானம் குண்டடிபட்டு எரிந்து அசாம் காட்டு பகுதிகளில் விழுந்து விடும். மிகவும் அடி பட்ட வேலுவை தூக்கி கொண்டு பாலு துரத்தி வரும் எதிரிகளை மீறி 50 மைல்களை கடந்து இந்த்ரோமாவின்(சாவித்திரி) வீட்டிற்க்கு கொண்டு வந்து புகலிடம் கோருவார். அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர் என அறிந்து கொண்டு பாஷை தெரியாவிட்டிலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வேலுவை சிசுருஷை செய்து காப்பாற்றுவார்கள் இந்த்ரோமாவும் அவரது தந்தையும். மெதுவாக நினைவு திரும்பும் வேலு தன் உயிரை காப்பாற்றிய பாலுவை தன் சகோதரனாகவே ஏற்று கொள்கிறான். தமது படை இருக்கும் இடத்தை திரும்ப அடையும் முயற்சியில் பாலு ஈடுபடும் நேரத்தில் வேலுவுக்கும் இந்த்ரோமாவுக்கும் இடையில் காதல் அரும்புகிறது. ஆரம்பத்தில் அதை விரும்பாத பாலுவும் அதற்க்கு தனது ஆசியை தரும் வேளையில் ஜப்பானிய வீரர்கள் அந்த கிராமத்தை சோதனையிட வருகிறார்கள். வேலுவை ஒரு பெரும் கூடைக்குள் ஒளித்து விட்டு தானும் மறைந்து கொள்ளும் பாலு, அவர்கள் அக்கூடையை நோக்கி செல்லும் போது தன்னை வெளி காட்டி ஓடி செல்கிறான். ஓடுபவனை துரத்தும் வீரர்கள் அவனை நோக்கி சுட குண்டடிபட்டு தரையில் விழும் பாலுவை காப்பாற்ற முடியாமல் கதறி அழுகிறான் வேலு.
பாலு இறந்ததாகவே கருதி வாடும் வேலுவிற்க்கு இந்த்ரோமாவின் காதல் ஆறுதல் தருகிறது. அவளை இந்திரா என்று அழைக்கும் அவன் அவளுக்கு தமிழ் கற்று கொடுக்கிறான். (அன்று ஊமை பெண்ணல்லோ பாடல்) . அவர்களது சாதி முறைப்படி திருமணம் முடிந்த மறுநாளே பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினரால் வேலு மீண்டும் போருக்கு அழைத்து செல்ல படுகிறான். கதறி அழும் இந்திராவை சமாதன படுத்தும் வேலு வெகு சீக்கிரம் வந்து அவளை தன்னுடன் அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்து போருக்கு செல்கிறான்.
கருவுற்று இருக்கும் இந்திரா வேலுவின் வரவை எண்ணி காத்திருக்கும் வேளையில் ஜப்பானிய விமானங்கள் வீசும் குண்டு வீச்சில் அவர்களது கிராமமே அழிந்து போகிறது. அவளை தேடி வரும் வேலுவின் கண்களில் அழிந்த அக்கிராமம் தென்பட அவனது உலகம் இருண்டு போகிறது. அவள் இறந்து விட்டதாக கருதி கண்ணீர் விட்டு கதறுகிறான் அவன்.
காலம் பறக்கிறது. ஜப்பானியர்களால் சுடப்பட்டு கால் ஊனமுற்ற பாலு அவர்களால் நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஒப்படைக்க படுகிறான். அவர்களுடன் சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டவனை கைது செய்து கூண்டில் ஏற்றும் அரசாங்கம் அவனை விடுதலை போராட்ட வீரன் என்று விடுதலை செய்கிறது. டில்லியில் சிறிது நாள் தங்கும் வேளையில் ஒரு பேப்பர் விற்கும் தமிழ் சிறுவனை சந்திக்க நேரும் பாலு அவன் தாயையும் சந்திக்க நேர்கிறது. தனக்கு ஆதரவாக இருந்த தந்தையை இழந்து தவிக்கும் கண்ணிழந்த அப்பெண்மணி சில வருடங்களுக்கு முன் தன்னை காப்பற்றிய இந்த்ரோமா என அறிந்து அதிர்சிக்குலாகும் பாலு அவள் தனது நண்பன் வேலுவின் மனைவி என்று அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறான். பாலுவை அவனது குரல் மூலம் அறிந்து கொள்ளும் இந்திரா அவன் காலில் விழுந்து அடைக்கலம் கேட்கிறாள். திக்கி தெரியாமல் தவிக்கும் அவளையும் அவளது சிறு மகன் பாபுவையும் (கமல்) அழைத்து கொண்டு வேலுவை தேடி சென்னைக்கு புறப்படுகிறான் பாலு.
mr_karthik
2nd May 2010, 06:45 PM
Sivan.K sir,
We all know well about your valuable contributions for this thread in previous parts, and previous pages.
Now we are eagerly waiting for your beautiful analysis about the beautiful movie 'PARTHAAL PASI THEERUM' a true story for the friendship.
Those who are blaming NT with the word 'Over Acting', MUST see this film, then automatically will change their openion.
....and now the thread is yours.
RAGHAVENDRA
2nd May 2010, 06:47 PM
டியர் சிவன்K,
மனோரஞ்சித மலர் நாம் எந்த மணத்தை உள்ளுணர்வில் எண்ணுகிறோமோ, அந்த மலரின் வாசம் வீசுமாம். அதைப் போலத் தான் நடிகர் திலகத்தின் படங்களும். அவரவர் எண்ணங்களுக்கேற்ப, அவரவர் பார்வைக்கேற்ப புதிய புதிய கோணங்களில் புதுப் புது பரிணாமங்களில் பரிமளிக்கும். அதனால் எந்தப் படத்தையும் நாம் எத்தனை முறை பார்த்தாலும் ரசித்தாலும் விமர்சித்தாலும் புதிய வடிவமும் கருத்துக்களும் கிடைக்கும். எனவே நீங்கள் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை உங்கள் பார்வையில் எழுதலாம். தலைமறை கடந்த பார்வைகளில் நடிகர் திலகத்தின் படங்கள் புதுப்புது ஆய்வுகளில் மிளிர்ந்து கொண்டேயிருக்கும்.
டியர் பம்மலார்,
கீற்றுக் கொட்டகை தொடங்கி மல்டிப்ளெக்ஸ் வரை என்று புதுத் திரியே தொடங்கும் அளவிற்கு தகவல்களை வாரி வாரி வழங்கிவரும் உங்களை தகவல் வள்ளல் என்று அழைக்கலாம் என்று விரும்புகிறேன். அனைவரும் நிச்சயம் ஆமோதிப்பர் என எண்ணுகிறேன்.
ராகவேந்திரன்
mr_karthik
2nd May 2010, 07:15 PM
டியர் பம்மலார்,
கீற்றுக் கொட்டகை தொடங்கி மல்டிப்ளெக்ஸ் வரை என்று புதுத் திரியே தொடங்கும் அளவிற்கு தகவல்களை வாரி வாரி வழங்கிவரும் உங்களை தகவல் வள்ளல் என்று அழைக்கலாம் என்று விரும்புகிறேன். அனைவரும் நிச்சயம் ஆமோதிப்பர் என எண்ணுகிறேன்.
ராகவேந்திரன்
முதல் ஆளாக நான் ஆமோதிக்கிறேன், ராகவேந்தர் சார்.
பம்மலார் சார்,
சென்னை காஸினோ தியேட்டரில் நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை மட்டுமல்லாது, மக்கள்திலகம், காதல் மன்னன், புதுமை இயக்குனர்... என அனைவரது சாதனைகளையும் பட்டியலிட்டு விட்டீர்கள்.
ஒருவர் தனது வலைப்பதிவில், நம்முடைய இந்த த்ரெட்டை பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தார் 'சிவாஜி ரசிகர்கள், அவர்களது அபிமான நடிகரது சாதனைகளை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலக சாதனைகளையே விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்' என்று. அதைப்படித்தபோது என் நினைவுக்கு வந்தவர்கள் இந்த த்ரெட்டில் ஆட்சி செய்யும் ஐவர் குழு.
RAGHAVENDRA
2nd May 2010, 09:09 PM
நன்றி, கார்த்திக். நீங்கள் படித்த அந்த வலைப்பதிவின் இணைப்பை இங்கே கொடுத்தால் அனைவரும் அதைப் படிக்கலாம். அந்த அன்பருக்கும் நமது நன்றி உரி்த்தாகட்டும். இதில் ஐவர், அறுவர் என்ற எண்ணிக்கைக்கே இடமில்லை. இது அனைவருக்குமே பொருந்தும். நான் ஒரு முறை ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னேன். நமக்கு இசையை ரசிக்கக் கற்றுக் கொடுத்தது மெல்லிசை மன்னர், கலையை ரசிக்கக் கற்றுக் கொடுத்தது நடிகர் திலகம் - குறிப்பாக நடனத்தைச் சொல்ல வேண்டும். நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்துப் பார்த்து ரசித்த கண்களுக்கு பரத நாட்டியம் எளிதாக ரசிக்க முடிகிறது, அதன் நுணுக்கங்களும் பெரிதளவு புரிகிறது. அப்படி சமீபத்தில் பார்த்த ஒரு பரத நாட்டியத்தில் ஆடிய குழந்தையின் நாட்டியத்தில் அக் குழந்தையின் முகபாவங்கள் அருமையாக இருந்தன. முத்திரைகள் புரிந்தன. அப்பொழுது தான் நடிகர் திலகத்தின் அருமை நமக்குப் புரிய வருகிறது. ஆம் அத்தனை இலக்கணங்களையும் தன்னுடைய நடிப்பின் மூலம் நமக்குப் புரிய வைத்த, தெளிய வைத்த ரசிக்க வைத்த நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எதையும் எடுத்தெறிந்து விட மாட்டார்கள். அனைத்தையும் அலசி ஆய்ந்து அதன் முடிவில் தொடக்கத்திற்கே வருவார்கள் - ஆம் முதலும் தொடக்கமுமான அந்த முடிவு, நடிகர் திலகத்தைப் போல் நடிப்பின் இலக்கணத்தை வகுத்த்வர் எவரும் இல்லை. இந்த முடிவினைத் தொடக்கமாக வைத்து ஆய்ந்து அதே முடிவிற்கே முடிவில் வருவது இவரிடம் மட்டுமே முடியும்.
நடிகர் திலகத்திற்கு அஞ்சலி செலுத்திய ராஜ் டி.வி.யின் நெடுந்தகட்டில் பார்த்திபன் அவர்கள் கூறியது இங்கே நினைவு கூறத்தக்கது.
இரண்டு வெள்ளைத் தாள்கள், நடுவே கார்பன் வைத்து எதை எழுதினாலும் அது பின்னே உள்ள பிரதித் தாளில் அப்படியே விழும். ஆனால் அதே காகிதத்தில் நடிப்பு என்ற சொல்லை எழுதினால், அது சிவாஜி என்று தான் கீழே உள்ள தாளில் பதியும் என்றார். எவ்வளவு ஆழமான கருத்து. பாராட்டுக்கள் பார்த்திபன்.
1970களில் காஸினோ திரையரங்குகளைப் பற்றி பம்மலார் எழுதியது உண்மை. காரணம் அப்போது அங்கு திரையிடப் பட்ட ஆங்கிலப் படங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பே காரணம். அது மட்டுமல்ல. அத் திரையரங்கின் அமைப்பும் முக்கியமான காரணம். அதுவுமன்றி எப்போது போனாலும் ஒழுங்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே போன ரசிகர்களும் காரணம். அப்படி பல முறை பல படங்களைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். திரையரங்கு அமைப்பு என்பதில் இருக்கைகளின் அமைப்பும் அடக்கம். மிகவும் குறைந்த கட்ட்ண வகுப்பில் போனாலும் கூட வசதியாக பாடம் பார்க்க அமைக்கப் பட்ட அரங்கு காசினோ. ஆம், திரைக்கு முன்னர் இருக்கக் கூடிய முதல் வரிசைக்கும் திரைக்கும் குறைந்த பட்சம் 50 அடி இடைவெளி இருக்கும். அந்தத் திரையரங்கில் விளம்பரங்கள், செய்திப் படங்கள் முடிந்த வுடன் அந்த பாரமவுண்ட் லட்சினை தோன்றும் பொழுது அந்த அமைதியான ஒலியற்ற தன்மை அனைவரையும் மெய் மறக்கசசெய்யும். உடனே நீண்ட வெட்ட வெளியுடன் தோன்றும் மேற்கத்திய கௌபாய் படங்கள் நம்மை அந்த உலகத்திற்கே இட்டுச் செல்லும். இப்படிப்பட்ட அமைதியான சூழல், ஆரவாரமற்ற ரசிகர் கூட்டம், ஒளிப்பதிவிற்கு சிறப்பாக கைதட்டும் ரசிகர்கள், எவ்வளவு நீண்ட நேர வசனக் காட்சியானாலும் பொறுமையாகக் கேட்டு ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்ட தலைமுறை, இப்படி கிட்டத் தட்ட ஒரு பத்து ஆண்டுகளுக்கு காஸினோ திரையரங்கு பெரும்பாலானவர்களை ஆங்கிலத்தில் புலமைபெற வைத்தது என்றால் மிகையில்லை. அதனாலேயே அங்கு பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் திரையிடப் பட்டன, மறுபக்கம் ஓடியனிலும் மேற்கத்திய படங்கள், குளோபில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள், சபையர் திரையரங்கில் பிரம்மாண்ட மான படங்கள் , இடையிடையே நியூ எல்பின்ஸ்டோனிலும் ஆங்கிலப் படங்கள் என வெளியான போதும் கூட காஸினோவுக்கு தனி மவுசு இருந்தது. அப்படிப்பட்ட காஸினோ திரையரங்கின் எண்ணற்ற ரசிகர்களில் நடிகர் திலகமும் ஒருவர். வெள்ளிக் கிழமையானால் இரவுக் காட்சியில் அவரைப் பார்க்கலாம்.
பல மறக்க முடியாத ஆங்கிலப் படங்களை தந்த காஸினோவை என்றைக்கும் மறக்க முடியாது.
வாய்ப்புக்கு நன்றி
ராகவேந்திரன்
pammalar
3rd May 2010, 01:02 AM
திரு.சிவன்கே,
"பார்த்தால் பசி தீரும்" தொடக்கமே களை கட்டி விட்டது.
திரு.காவேரிக் கண்ணன், திரு.ஜேயார், திரு.கார்த்திக்,
பாராட்டுக்கு நன்றி!
டியர் ராகவேந்திரன் சார்,
இந்த எளியேனையும் பெருமைப்படுத்திய தங்களுக்கு நன்றி!
காஸினோ அரங்கம் குறித்த கூடுதல் தகவல்கள் அசத்தல்!
அன்புடன்,
பம்மலார்.
pammalar
3rd May 2010, 02:58 AM
ஒய்.ஜி. விழா - 2
விழா மேடையை விழாத் தலைவர் முதல்வர் கலைஞர், விழா நாயகன் ஒய்.ஜி., திருமதி.ஒய்ஜிபி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கலைஞானி கமல், கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய பிரமுகர்கள் அலங்கரித்தனர். மேலும், விழா மேடையை அமரர் ஒய்ஜிபி, அமரர் நடிகர் திலகம் ஆகியோரது திருவுருவப் படங்களும் அலங்கரித்தன. தன்னைப் பெற்ற தந்தைக்கும், தான் பெற்ற தந்தைக்கும் ஒய்ஜி அவர்கள் மலர் தூவி வணங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்க, திரு.ஒய்ஜியின் மகள் திருமதி.மதுவந்தி அருண் வரவேற்புரை நல்கி விழா நிகழ்வுகளைத் தொகுத்தளித்தார். முதல் நிகழ்வாக, UAA குழுவின் கல்தூண்களாக விளங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். விழா மேடையை அலங்கரித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் விழாத் தலைவர் பாராட்டுரை வழங்கினார். ஏற்புரையை விழா நாயகன் ஒய்ஜி இனிதே நல்கினார்.
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)
விழா உரைகள்
-------------------
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் சிறப்புரை:
"சிவாஜி நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை, நான் சென்னை எழும்பூர் மியூசியம் ஹாலில் பார்த்தேன். அப்படியே அந்த நாடகத்தில் ஐக்கியமாகி கட்டுண்டு போனேன். நாடகம் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போய் விட்டார்கள் (நாடகக் குழு உட்பட). நான் அப்படியே அந்த ஹாலில், நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அந்த அளவுக்கு நாடகம் என்னை முழுவதுமாக பாதித்திருந்தது. ஹால் காவலாளி என்னைத் தட்டி எழுப்பி இவ்வுலகுக்கு வரச் செய்தார். பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் சிவாஜியையும், கதாசிரியர் சுந்தரத்தையும் பார்க்க விரும்பினேன். அவர்கள் எப்போதோ கிளம்பிப் போயிருந்தார்கள். பின்னர், ஒரு நிறைவான நாடகத்தை கண்டு களித்த திருப்தியோடு வீடு திரும்பினேன்.
சமீபத்தில், வியட்நாம் வீடு நாடகத்தை மேடையேற்றப் போவதாகவும், அதில், தான், சிவாஜி நடித்த பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் பாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் ஒய்ஜி என்னிடம் கூறிய போது நான் என்ன பதில் கூறினேன் தெரியுமா?! 'ஒய்ஜி, நீ இந்த நாடகத்தில், இந்தப் பாத்திரத்தில் வெற்றியடைய வேண்டுமானால், இதில் சிவாஜி நடித்ததை மறந்து விடு. அவரை இமிடேட் செய்து, அவரைப் போல் யாராலும் நடிக்க முடியாது. நீ இயன்ற அளவுக்கு உன் பாணியிலேயே நடி. அது தான் நல்லது' என்று கூறி அனுப்பினேன். நாடக அரங்கேற்றத்தன்று நானும் சென்றிருந்தேன். முதன்முதலில் இந்நாடகத்தைப் பார்த்த போது ஏற்பட்ட அதே அனுபவம், மீண்டும் ஏற்பட்டது. இன்றும் அதே நிலை தான். நான் எப்பொழுது பார்த்தாலும் சரி, வியட்நாம் வீடு என்னைக் கட்டிப் போட்டு விடும் நாடகம்."
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.
gkrishna
3rd May 2010, 10:04 AM
காலை வணக்கம் எல்லோருக்கும் . 4 நாட்கள் சென்னையில் இல்லை இன்று காலை சென்னை வந்தேன் வந்தவுடன் நமது forum ஓபன் செய்தேன் ஏப்ரல் 28th திரி 45 பக்கங்கள் இன்று அது 49 எத்தனை தகவல்கள் திரு பம்மலர் அவர்களுக்கு மிக்க நன்றி நெல்லையில் திரையிடப்பட்ட நம்மவரின் திரை காவியங்கள் பற்றி எழுதி இருந்தார் நினைவுகள் சிறகடித்து பறக்கின்றன், நெல்லை பூர்னகலவில் மன்னவன் வந்தானடி தொடர்ந்து 34 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடி கொண்டிருந்தது 35 வது காட்சி tuesday இரவு கட்சி housefull ஆகவில்லை. ரசிகர் மன்றதிலிருண்டு மிச்ச டிக்கெட் வாங்கி எல்லோர்ருக்கும் கொடுத்தார்கள் . அப்போது நெல்லை மாவட்ட mgr மன்ற செயலாளர் திரு திரவியராஜ் (இம்பீரியல் பாட்டரி
சர்வீஸ் owner ) அவர்கள் வந்து சிறபிதர்கள்.
உத்தமன் இறுதி நாள் இரவு காட்சி அதே நெல்லை பூர்னகலவில் 'தேவன் வந்தானடி ஒரு தீபம் கொண்டாடி காதல் கொண்டானடி பல கட்டிலும் கொண்டாடி' பாடல் once மோர்
kettu operator oali parapinar migavum inimaiyana நினைவுகள் . thai thirai padathi pattri ezhudi irunden thiru murali/ragavender/saradha madem avargal melum adhu pattri ezhudinal suvai aaga irukkum
goldstar
3rd May 2010, 10:10 AM
Guys,
On the weekends (Sat. and Sun.) by 6 hours I have watched following thalaivar NT movies
1. SivandhaMann
2. Gauram
3. Rajapat Rangadurai
4. Sivagamin Selvan
5. Sorgam
6. Deepam
Watched only NT scenes and songs.
Well, come back to "Thanga Surangam" re-released in Chinthamani theater, Madurai. TS released after gap of 10 years and very very big (60 feet) cutout of Sivaji (introduction scene, NT with cap and suitcase) and lots lots of garland. GoldStar Sivaji wing has posters for this movie and all Madurai fans had posters like new movie and collection is unbelievable, it has run for 2 weeks in Chinthamani.
Cheers,
Sathish
mr_karthik
3rd May 2010, 11:10 AM
' thai' thirai padathi pattri ezhudi irunden thiru murali/ragavender/saradha madem avargal melum adhu pattri ezhudinal suvai aaga irukkum
Krishnan,
already our Raghavendar sir and saradha mam wrote about the movie 'தாய்' in the earlier pages of this part 6.
joe
3rd May 2010, 05:49 PM
சிவாஜிக்கு பெரிய ரசிகன் யார்?-கமல்ஹாஸன்
http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/05/kamal-speech-mahendiran-rajini-sivaji.html
joe
3rd May 2010, 05:50 PM
watched Karnan once again on Vellithirai. eththanai thadavai paarththaalum thigattaatha mahaa kaaviyam.
saththiyamaa sollren, innoruththen porandhu varanum.....
இன்னொருத்தரெல்லாம் பொறந்து வர முடியாது ..நடிகர் திலகம் தான் பொறந்து வரணும் 8-)
pammalar
3rd May 2010, 06:32 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 3
கே: நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே? (உஷா செந்தில், கூந்தளிர்)
ப: தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள் கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு, நேரந்தவறாமை, திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு எண்ணம் தேவையல்ல.
(ஆதாரம் : கல்கண்டு, 24.8.1995)
அன்புடன்,
பம்மலார்.
sivank
3rd May 2010, 09:27 PM
பார்த்தால் பசி தீரும்
வேலுவை தேடி சென்னை வந்த பாலு, வேல் அண்ட் கோ வில் வேலை செய்யும் சக்ரபாணி(தங்கவேலு) வீட்டிற்கு குடியிருக்க வருகிறான். வீட்டில் குடியிருக்க இடம் குடுத்த சக்ரபாணி தனது கம்பனியிலேயே பாலுவிற்கும் வேலை தேடி தருவதாக சொல்கிறான். அவனது பேச்சை கேட்டு மறுநாள் அந்த கம்பனி செல்லும் பாலுவை வெளியில் இருக்க வைத்து, முதலாளியிடம் நண்பனுக்காக வேலை கேட்க போகிறான் சக்ரபாணி. சிபாரிசை அடியோடு வெறுக்கும் வேல் அண்ட் கோ வின் முதலாளி வேலு, ஆம் நமது பழைய நண்பன் வேலு தான், முதலில் மறுத்தாலும் பின்பு வேலை தேடுபவர் ஒரு எக்ஸ் சர்வீஸ்மான் என தெரிந்து தன்னை மறுநாள் வந்து பார்க்க சொல்லி அவசரமாக வெளியில் போகிறான். வேலு வெளியே போவதை பார்த்த பாலு, அவன் யார் என்று சக்ரபாணியிடம் தெரிந்து கொண்டு அவனது வீடு விலாசத்தை வாங்கி அவனை சந்திக்க செல்கிறான். போகும் வழியில் வீட்டிற்க்கு ஓடி போய் தங்கையிடம் வேலுவை கண்டாகி விட்டது, அவனை தான் காண போகிறேன் என்ற விஷயத்தை சொல்ல, மகிழ்ச்சி கடலில் மிதக்கிறாள் இந்திரா.
அவசர வேலையை முடித்து கொண்டு தனது பங்களாவிற்கு திரும்பும் வேலுவை வரவேற்கிறாள் அவனது மனைவி ஜானகியும் (சௌகார்), மைத்துனி சரோஜாவும்(சரோஜாதேவி). சரோஜா காலேஜில் படிக்கும் அழகிய இளம் பெண், ஆட்டத்திலும் பாட்டத்திலும் மிகுந்த ஆசை கொண்டவள் (பார்த்தால் பசி தீரும் பாடல்). மகன் குமாருடன் (கமல்) பேசி கொண்டிருக்கும் வேளையில் வாசலில் நுழையும் பாலுவை அடையாளம் கண்டு கொண்ட வேலு அவனை அப்படியே வாரி அனைத்து கொள்கிறான். வேலுவையும் அவனது குடும்பத்தையும் கண்ட பாலுவின் மனதில் பெரும் அதிர்ச்சி. வேலுவின் மேல் வெறுப்பு வளர்கிறது. மனைவியிடம் காப்பி கொண்டு வர சொல்லிவிட்டு பாலுவை தனது அறைக்கு அழைத்து செல்லும் வேலு, அவனிடம் மனம் திறந்து பேசுகிறான். தான் இந்திராவை காதலித்து மணமுடித்தது. உடனே அவளை பிரிந்தது, திரும்பி வந்து தேடிய போது அவளும் அவள் கிராமமும் அழிந்து மண்ணோடு மண் ஆகி போனதும், மனைவி இறந்த துயரம் தாங்காமல் திரும்பி சென்னை வந்ததும், தந்தையின் வருபுறுத்தலால் இதய நோயாளியான, அத்தை மகள் ஜானகியை மணம் புரிய நேரிட்டதையும் சொல்லி வருந்தினான் வேலு. வேலுவின் மேல் தவறில்லை என்று புரிந்து கொண்ட பாலு, மெதுவாக இந்திராவும் அவனது மகன் பாபுவும் தன்னுடன் தான் சக்ரபாணி வீட்டில் இருக்கிறார்கள் என்று கூற, வேலு பைத்தியம் பிடித்த நிலைக்கு ஆளாகிறான். அவர்களை பார்க்க துடிக்கும் வேலுவை, ஜானகியின் நோயை கூறி கட்டுபடுத்தும் பாலு, இதற்க்கு ஒரு வழி கண்டு பிடிப்பதாகவும் அது வரை இது யாருக்கும் தெரிய வேண்டாம் என சத்தியம் வாங்கி கொள்கிறான். சக்ரபாணி அழைத்து வந்த ஆள் பாலு தான் என்று மகிழும் வேலு, பாலுவின் கால் ஊனத்தை பார்த்து துடித்து போகிறான்.
கணவன் வரப்போகிறான் என்று எண்ணி தன்னை அலங்கரித்து கொள்ளும் இந்திரா (அன்று ஊமை பெண்ணல்லோ பாடல்) காலடி சப்தம் கேட்டு ஆசையுடன் ஓடி வர, அவளை வேதனை படுத்தும் செய்தியை தருகிறான் பாலு. தான் வேறு யாரையோ வேலு என்று எண்ணி ஏமாந்து அவளையும் ஏமாற்றி விட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்கும் அவனை தேற்றுகிறாள் அந்த பேதை.
sivank
3rd May 2010, 09:28 PM
Thanks Mr. karthik, Ragavendra sir, Pammalaar sir. ellam unga aasaeervaadham thaan
joe
3rd May 2010, 10:08 PM
எம் தந்தை
http://www.youtube.com/watch?v=da89d7irDO0&feature=related
Murali Srinivas
3rd May 2010, 11:37 PM
ராகவேந்தர் சார்,
1972-ஐ மறக்கவே கூடாது. ஆனால் நான் மறந்து விட்டேன். நினைவுப்படுத்தியதற்கு நன்றி.
சுவாமிக்கு தகவல் திலகம் என்று ஏற்கனவே அளித்து விட்டேன் பட்டம்.
சிவன்,
நான் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த திரியில் உங்களின் பங்களிப்பு வந்து நிறைய நாட்களாயிற்றே என்று. அந்த குறை நீக்கி அமர்களமாக கதையை கூற ஆரம்பித்திருக்கிறீர்கள். படத்தைப் பற்றிய விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
சுவாமி,
ஒய்.ஜி.எம் நிகழ்ச்சி வர்ணனை நன்றாக இருக்கிறது.
சத்யா,
இந்த திரியில் உங்கள் முதல் பதிவே, அது ஓரிரு வரிகளே ஆனபோதும், முத்தாய்ப்பான பதிவாக அமைந்து விட்டது.
சதீஷ்,
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். தங்கச் சுரங்கம் சிந்தாமணியில் வெளியானபோது [1985 ஆகஸ்ட் 16 ] அதற்கு முதல் நாள்தான் முதல் மரியாதை குருவிலும் மதுவிலும் வெளியானது. ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் சிந்தாமணிக்குதான் வந்திருந்தார்கள்.
அன்புடன்
sivank
3rd May 2010, 11:52 PM
பார்த்தால் பசி தீரும்
மறுநாள் வேளையில் சேரும் பாலுவிற்கு பெரும் அதிர்ச்சி. குமாஸ்தாவின் இடத்தில் அமரும் அவனை தன்னுடைய பார்ட்னராக ஆக்கி மகிழ்கிறான் வேலு. பாலுவின் குணத்திலும் கம்பீரத்திலும் மயங்கி அவனிடம் தன மனதை பறி கொடுக்கும் சரோஜா அவனை தன் கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு அழைக்கிறாள். நாட்டியம் ( இசை மட்டும் தான் பாடல் இல்லை) முடிந்த பின் பாலுவை அவன் வீட்டில் விடும் வேலு அங்கு ஒரு சிறுவன் பாலுவை அப்பா என்று அழைப்பதையும், வீட்டு வாசலில் நிற்கும் இந்திரா அவனை ஏறெடுத்து பாராததையும் எண்ணி புழுங்குகிறான். மறுநாள் ஆபிசில் வேலுவின் கோவத்தை கண்டு பாலு, இந்திராவின் கதையை கூறுகிறான். கண்ணிழந்து அகதியாய் டில்லியில் தன்னால் காப்பாற்ற பட்ட இந்திரா தன் தங்கையை போல் என்றும், அவளது வாழ்விற்காக தான் எதையும் தியாகம் செய்ய தயார் என்பதையும் விளக்குகிறான். ஏற்கனவே பாலுவிடம் பெரும் கடமைப்பட்ட வேலு இதை கேட்டு அவன் மேல் இன்னும் அன்பை சொரிகிறான். இந்திராவை பார்க்க துடிக்கும் வேலுவை பாலுதான் அவ்வப்போது கட்டு படுத்தி வைக்கிறான்.
நாளாக நாளாக பாலுவின் மேல் சரோஜாவிற்கு காதல் பெருகுகிறது(யாருக்கு மாப்பிள்ளை யாரோ பாடல்). இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கும் வேலுவின் காரில் ஒரு நாள் இந்திரா வந்து விழ, அதை தாங்காமல் இரவில் அவளை காண வரும் வேலுவை மீண்டும் அவனது வீட்டில் கொண்டு விடும் பாலுவை சற்று சந்தேக கண்ணோடு பார்க்கிறாள் ஜானகி. தனக்கு திருமணமாகவில்லை என்று சொல்லும் பாலு தன் வீட்டில் ஒரு குருட்டு பெண்ணையும் ஒரு சிறுவனையும் வைத்து இருப்பது அவளுக்கு ஒரு ஐயத்தை ஏற்படுத்துகிறது. மனைவிக்கு தெரியாமல் தனது சொத்தில் பாதியை பாலுவின் பெயரில் எழுதி, அதை இந்திராவிற்கும் பாபுவிற்கும் கொடுக்குமாறு கொடுக்க, பெரும் தயக்கத்திற்கு பிறகு ஏற்று கொள்கிறான் பாலு. தன் மகன் குமார் படிக்கும் பள்ளியிலேயே பாபுவையும் சேர்க்க செய்கிறான் வேலு.
சரோஜாவின் பால் காதல் பாலுவின் மனத்திலும் படர்கிறது (கொடி அசைந்ததால் காற்று வந்ததா பாடல்). பள்ளி நண்பனான பாபுவை தன் வீட்டிற்கு கூட்டி வரும் குமார், தன் தாயிடம் பாலுவின் மகன் என அறிமுகம் செய்ய ஜானகியின் மனதில் ஐயம் வேர் விட்டு வளர்கிறது. குடும்பத்தோடு சினிமா பீச் செல்ல தயாராகும் வேலு பாபு மரத்தில் இருந்து விழுந்து காயப்பட்ட செய்தி கேட்டு ஓடுவது ஜானகியின் மனதில் கோவத்தையும் பாலுவின் பால் வெறுப்பையும் அதிகரித்தது. அமைதியாக சென்ற தன் வாழ்வு பாலுவின் வரவால் சீரழிந்தது என்று அவனிடம் வெறுப்பை பொழிகிறாள். காயப்பட்ட பாபுவை கையில் ஏந்தி வாழ்வின் நிலைமையை எண்ணி பாடுகிறான் (பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடல்).
சரோஜாவின் காதலை அறிந்த ஜானகி அதை எதிர்க்கிறாள். வீட்டிற்கு வரும் பாலுவை வார்த்தைகளால் எரித்து கொட்டும் ஜானகி அவன் வரவால் தான் அவள் குடும்ப அமைதி ஒழிந்தது என்று சாடுகிறாள். மனம் கலங்கி செல்கிறான் பாலு ( உள்ளம் என்பது ஆமை பாடல்). பாலுவிற்கு பரிந்து வரும் சரோஜாவிடம், தனது ஐயத்தை சொல்கிறாள் ஜானகி. அக்காவின் வார்த்தையை கேட்டு பாலுவின் வீட்டிற்கு செல்லும் சரோஜா அங்கே பாபு பாலுவை அப்பா என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டு, பாலுவின் மேல் வெறுப்படைந்து வீடு திரும்புகிறாள். அவள் பின்னாலே உயிலை எடுத்து கொண்டு செல்கிறான் பாலு. நடந்ததை பாபுவின் மூலம் அறிந்த இந்திராவும் அங்கு செல்கிறாள். உயிலை அவர்களிடம் கொடுத்து விட்டு ஊரை விட்டு விலகி போக முடிவெடுக்கும் பாலு அங்கு வரும் இந்திராவை கண்டு திகைக்கிறான். தன் முன் யார் இருக்கிறார்கள் என்று அறியாத இந்திரா அவர்களிடம் தன் கதையை கூறுகிறாள். புனிதமான உறவை களங்க படுத்த வேண்டாம் என்று கெஞ்சும் இந்திராவை பார்க்க முடியாமல் தன்னை வெளி படுத்தி கொள்கிறான் வேலு. கதை கேட்ட உடனே உண்மை புரிந்து கொண்ட ஜானகி, இதயவலியால் அவதிபடுகிறாள். தான் இறப்பது திண்ணம் என்று உணர்ந்த ஜானகி, தன் மரணத்துக்கு பிறகு தன் கண்களை இந்திராவிற்கு பொருத்துமாறு கூறி அவர்களை இணைத்து மறைகிறாள்.
sivank
4th May 2010, 12:57 AM
பார்த்தால் பசி தீரும்- ஒரு அலசல்
நட்புக்காக வாழும் ஒரு சிறந்த மனிதனின் கதை இது. நடிகர்திலகம் ஒரு மிகை நடிகர் என்று கூறுவோர் முகத்தில் கரியை பூசும் மிதமான ஆழமான நடிப்பு. பாடி லாங்க்வேஜ் என்றால் என்னவென்று இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து புரிந்து கொள்ளலாம். படத்தை ஓவர் டாமினேட் செய்யாமல் ஜெமினிக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து இருப்பார். விமான ஓட்டிகளில் தலைமை விமானி ஜெமினி, ந.தி. துணை விமானி தான். அந்த ஓவராலும் (போர் விமானி சீருடை) அந்த பழங்காலத்து தொப்பியும் அவருக்கு மிக பாந்தமாக இருக்கும். அந்த கம்பீர நடை, பின்பு கால் ஊனமுற்று விந்தியபடி நடக்கும் நடை அழகு, அது அவரால் மட்டும் தான் முடியும்.
குற்றவாளி கூண்டில் ஏறி, நேதாஜியின் புகழ் பாடும் நேரத்தில் பெருமிதம், ஜெமினியை தமிழ்நாட்டு காதல் மன்னா என்று அழைக்கும்போது ஏளனம், காயம் பட்ட கமலை கையில் வைத்து பாடும் போது ஆற்றாமை, சாவித்திரிக்கு நம்பிக்கை கொடுத்து பின் அதை நிறைவேற்றமுடியாமல் போகும் போது ஏற்படும் தவிப்பு, குடும்பத்தோடு வாழும் ஜெமினியை பார்க்கும் போதும் ஏற்படும் கோபம், திருட்டுத்தனமாக வரும் ஜெமினியை வீட்டில் கொண்டு விட்டு அவருக்கு புத்திமதி சொல்லும்போது கட்டும் முதிர்ச்சி, நடையில் கம்பீரம், கண்களில் கருணை என்று அனைத்தையும் கண்களாலேயே காட்டி இருப்பார்.
வேலுவாக ஜெமினி, அவர் நடித்த படங்களில் மிக சிறந்த ஒன்றாக இதை கருதலாம். காதல் காட்சிகளிலும், பின்பு இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் இடங்களிலும் வெளுத்து வாங்கி இருப்பார்.
சாவித்திரி பற்றி கூறவே வேண்டாம். குதூகலமான இந்த்ரோமாகவும், கண்ணிழந்த இந்திராவாகவும் நடிப்பை பிழிந்து தள்ளி இருப்பார். பாசமலர், கை கொடுத்த தெய்வம், நவராத்திரி போன்ற படங்களை போல் இப்படத்திலும் ந. தி. க்கு இணையாக நடித்து இருப்பார்.
சௌகார் ஜானகிக்கு டைலர் மேட் பாத்திரம் இது. வெகு பொசசிவான மனைவி பாத்திரம் அவருக்கு. இப்பாத்திரத்தை அவரை விட வேறு யாராலும் சிறப்பாக செய்து இருக்க முடியாது.
சரோஜாதேவிக்கு இப்படத்தில் அதிக வாய்ப்பில்லை. கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்து முடித்துள்ளார்.
கமலுக்கு இரண்டாவது படம், இரட்டை வேடம். லாப்படி பேசும் பாபுவிற்கு குமாரை விட வாய்ப்புகள் அதிகம். அதிகம் வராவிட்டாலும் படம் முழுதும் வியாபித்து நிற்பது அவரது நடிப்பு திறமையை அன்றே வெளிப்படுத்தியது. தங்கவேலுவுடன் காமெடி சீன்களிலும் வெளுத்து வாங்கி இருப்பார் அவர்.
தங்கவேலு, சரோஜா, c .k .சரஸ்வதி காமெடிக்காக வரும் ஊறுகாய்கள். இதில் சி.கே .சரஸ்வதி மிகவும் அடக்கி வாசித்து இருப்பார். உருளும் கண்கள் இதில் இருக்காது. மருமகளிடம் சதா சண்டையிடும் ஒரு நல்ல மனம் கொண்ட மாமியாராக வருவார்.
ஏவீஎம் வெளியீட்டில் வந்த படம் இது. நடிகர்கள் என்று பார்த்தால் 10 பேருக்கு மேல் கிடையாது. படத்தையே 10 காட்சிகளாக பிரித்து விடலாம். படத்தில் வில்லனே கிடையாது. பீம்சிங்கின் படங்களில் தவறாமல் வரும் எம்.ஆர். ராதா இதில் கிடையாது. ஏ.சி. திருலோகசந்தர் கதையில் ஆருர்தாஸ் வசனம் கோடையில் சாப்பிடும் தயிர்சாதமும் மாவடுவும் போல. மெல்லிசை மன்னர்களின் இசையில் மொத்தம் ஏழு பாடல்கள். பின்னணி பாடியவரோ மூன்றே பேர் தான். டி.எம்.எஸ். சுசீலா, ஏ.எல்.ராகவன்.
இந்த மொத்த பதார்த்தங்களை ஒரு தேர்ந்த சமையல்காரர் போல் சுவையாக சமைத்திருப்பார் பீம்பாய்.
கவியரசர் இப்படத்தில் தனது கற்பனை குதிரையை தட்டி விட்டு இருப்பார். மெல்லிசை மன்னர்களும் அவரது ரசனைக்கேற்ப மெட்டமைத்து இருப்பார்கள். கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா ஒன்றே போதுமே அந்த அதீதமான கற்பனை வெள்ளத்தை நாம் பாராட்ட. காட்சிக்கு தகுந்தாற்போல் பாடல்கள் இப்படத்தில் வருவது ஒரு சிறந்த விஷயம். பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடலின் வேதனை நம்மை உருக்கும். கணவனை எண்ணி இந்திரா பாடும் அன்று ஊமை பெண்ணல்லோ நம்மை அப்படியே அழ வைக்கும். தமிழ் வாத்தியார் ஜெமினியின் அன்று ஊமை பெண்ணல்லோ நம்மை ஆட வைக்கும். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அமுதம் இப்பாடல்களும் அதன் இசையும்.
கணேசரின் அருளால் என்னால் இயன்ற வரை எழுதி விட்டேன். பிழை இருந்தால் பொருத்தருள்வீராக.
வாய்ப்புக்கு நன்றி
sivank
4th May 2010, 12:59 AM
Thanks Murali. I will certainly try to contribute more in future
goldstar
4th May 2010, 06:19 AM
Murali,
You are right, "Mudhal Mariyathai" released both in Guru and Madhu theatres and at Madhu, MM run for 88 housefull days and I have been there for couple of days to check the crowd and met many NT fans there.
Sivan, your skills matching with Saradha sister, I could see each scene of "Parthaal Pasi Therum" in your writings. PPT, one of NT movie's DVD I don't own. I will buy this movie soon.
Murali, just curious are you from South Gate area in Madurai and not sure whether I have met you in Sundays at NT's movies released theatre.
Pammallar, your writing is excellent, plesae keep make us happy by giving new NT's details.
Saradha sister, no writing from your side for some time.
I am looking for film review of following movie
1. Justice Gopinath (very average movie or...)
2. Naam Iruvar (NT's 250 movie)
3. Tharma Raja
4. Vetrikku Orugan
Cheers,
Sathish
joe
4th May 2010, 11:32 AM
NT - A tribute from Singapore
http://video.google.com/videoplay?docid=-4485639840118217879#docid=3604633588006801092
sankara1970
4th May 2010, 12:11 PM
Thanks Sivank for Parthal Pasi Theerum
It's a nice movie. NT's 75th. AVM-ACT-NT-Beemsingh-Arurdoss combo. The narration of the movie style was probably similar to old english movies
Oru B&W parkira feeling varathu. Marubadium parka thoondum padam.
Saroja Devi loves NT a handicapped soldier.
Songs are honey. Ithil varum oru padal Kodi asainthathum back ground reminds Puthiya Paravai Chitu kuruvi mutham koduthu. May be similar location.
abkhlabhi
4th May 2010, 01:11 PM
பா.ப.தீ. = விமர்சனம் அற்புதம்
Mahesh_K
4th May 2010, 01:19 PM
பார்த்தால் பசி தீரும்- ஒரு அலசல்
நட்புக்காக வாழும் ஒரு சிறந்த மனிதனின் கதை இது. நடிகர்திலகம் ஒரு மிகை நடிகர் என்று கூறுவோர் முகத்தில் கரியை பூசும் மிதமான ஆழமான நடிப்பு. பாடி லாங்க்வேஜ் என்றால் என்னவென்று இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து புரிந்து கொள்ளலாம். படத்தை ஓவர் டாமினேட் செய்யாமல் ஜெமினிக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து இருப்பார்.
பார்த்தால் பசி தீரும் மட்டுமல்லாமல், மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பல படங்களிலும் அண்டர்பிளே செய்திருப்பார். அவரது நடிப்பின் தன்மை எப்போதுமே இயக்குனரின் விருப்பத்துக்கும் தேவைக்கும் தகுந்த அளவே இருக்கும். நுணுக்கமான ரசனை உள்ளவர்கள் இதனை அறிவர். மற்றபடி மிகை நடிப்பு என்று சொல்பவர்களில் பலர் படத்தை முழுமையாகப் பார்க்காமல் தொலைக்காட்சியில் துண்டு காட்சியை பார்த்து கருத்து சொல்பவர்களாகவோ அல்லது படம் வெளி வந்த காலகட்டத்தின் திரைமொழியை கருத்தில் கொள்ளத் தவறியவராகவோ இருப்பார். தங்கள் அபிமான நடிக்ர் சிவாஜி போல பன்முகத் தன்மையுடய பாத்திரங்களில் நடிக்கும் திறனற்று இருப்பதை மறைக்க சிவாஜி நடிப்பு மிகை நடிப்பு என்று சொல்லும் ஒரு சிலர் உள்ளனர் - என் நண்பர்கள் ஒரு சிலர் கூட.
saradhaa_sn
4th May 2010, 07:24 PM
டியர் சிவன்.K,
உங்களின் 'பார்த்தால் பசிதீரும்' பட ஆய்வுக்கட்டுரை மிக மிக அருமை. படத்தை இன்னொருமுறை பார்த்தது போலிருந்தது. கதை விளக்கமும், கடைசியில் கொடுத்த திறனாய்வும் மிக அருமையாக அமைந்திருந்தது.
சமீபத்தில் நமது நண்பர் மோகன் (ரங்கன்) நமது திரியில் சமீபகாலமாக திரைப்பட விமர்சனக்கட்டுரைகள் வருவதில்லையென்று குறைபட்டிருந்தார். அவரது குறையை மட்டுமல்ல, நம் அனைவரின் ஏக்கத்தையும் தீர்த்து விட்டீர்கள். தொடர்ந்து உங்களின் இதுபோன்ற அற்புத விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்.
சின்ன டிப்ஸ்: மூன்று நான்கு பாகங்கள் வரக்கூடிய விமர்சனமானால், முதலில் நான்கு இடங்களை அடுத்தடுத்து ரிசர்வ் செய்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு இடமாக எடிட் செய்து பதித்தால், விமர்சனம் துண்டு துண்டாக நிற்காது. இடையிடையே மற்றவர்களின் பதிவுகள் வந்தாலும் இடையூறு இருக்காது. (என்னுடைய 'எங்கிருந்தோ வந்தாள்' விமர்சனம் இப்படி துண்டு துண்டாக அமைந்தபின் வந்த ஞானோதயம் இது :lol: ).
sivank
4th May 2010, 09:06 PM
Thanks Saradha. I will certainly keep in mind what you suggested
Thanks Sankara, Mahesh, Goldstar, Bala
Murali Srinivas
5th May 2010, 12:08 AM
சிவன்,
படத்தின் திரைக்கதையை போலவே திறனாய்வையும் இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதியிருக்கலாமோ என்று ஒரு எண்ணம். காரணம் எழுதிய விதம் சுவராஸ்யம். அது மட்டுமல்ல நமக்கு எப்போதும் நடிகர் திலகத்தைப் பற்றி எவ்வளவு பேசினாலும் எவ்வளவு எழுதினாலும் போதாது அல்லவா. இது போல் மேலும் பல படங்களின் திறனாய்வுகள் உங்கள் தூரிகையிலிருந்து வெளிவரட்டும்.
மகேஷ்,
அழகாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் நடையில் ஒரு நல்ல flow இருக்கிறது. நீங்களும் படங்களைப் பற்றிய விமர்சனம் எழுதலாம்.
Sathish,
I don't belong to South Gate area. We lived in the heart of the town off Town hall road during my school and college days. The chances of we having met are very remote because during mid 80s, I had moved away from Madurai due to occupational reasons and later came back only in the late 90s.
அன்புடன்
இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் இசை அருவி மற்றும் ஜெயா சானல்களில் பாடல்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அருவியில் தத்துவ சோகப் பாடல்கள் என்றால் ஜெயாவில் சந்தோஷ டுயட்கள். மொத்த படங்கள் கூட வேண்டாம். பாடல்களைப் பார்த்தாலே எவ்வளவு வெரைட்டி?
போனால் போகட்டும் போடா
பூமாலையில் ஒரு மல்லிகை
படைத்தானே படைத்தானே
நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
சட்டி சுட்டதடா
இதயம் இருக்கின்றதே
ஆறு மனமே ஆறு
உலகம் இதிலே அடங்குது.
பார்க்க பார்க்க கேட்க கேட்க என்றும் இனிப்பவை அன்றோ இவை!
RAGHAVENDRA
5th May 2010, 12:20 AM
டியர் முரளி,
நானும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகின்றன.
நெஞ்சை அள்ளும் நேரத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு துயர செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நமது இளைய திலகம் பிரபு தென்சென்னை மாவட்ட நிர்வாகியும் தீவிர சிவாஜி ரசிகருமான திரு தாமு எ தாமோதரன், 04.05.2010 அன்று திடீரென்று மாரடைப்பால் காலமானார். காலையில் பார்த்த சாரதி கோயிலில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டும் நடிகர் திலகத்தின் மண நாளையொட்டியும் அன்னதானம் வழங்கி, நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டு விட்டு மற்ற நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்வதற்காகவும் தொடர்புடைய மற்ற காரியங்களுக்காகவும் வீட்டுக்கு வந்திருந்திருந்தவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தியுள்ளார்.
அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, பிரபு ரசிகர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவர் நம்முடைய ஹப்பிற்கு தொடர்பில்லாதவர் என்றாலும் இங்கே அவருடைய நண்பர்கள் யாராவது இருக்கக் கூடும் என்பதால் தகவலுக்காக இங்கே தரப்பட்டிருக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
ராகவேந்திரன்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.