PDA

View Full Version : "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin



pulavar
3rd February 2010, 06:34 PM
[tscii:70802494b9]நான் ஒரு இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் ரசிகன். ஆனால் நான் சமீபத்தில் வாசித்த ஒரு ஆக்கம் என்னை மிகவும் பாதித்து விட்டது.

எனக்கு சங்கீத அறிவு கிடையாது அதனால், சங்கீத அறிவுள்ளவர்கள் தயவு செய்து கருத்து கூறவும்.

அந்த ஆக்கத்தின் அந்த பகுதி

"அகத்தியர் படத்தில் இரு பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் சீர்காழி கோவிந்த ராஜனுடன் இணைந்து பாடியிருக்கிறார். ‘நமச்சிவாயம் எனச் சொல்வோமே’, ‘இசையாய் தமிழாய் இருப்பவனே’ ஆகிய இப்பாடல்கள் இரு பாடகர்களையும் ஒப்பிடுவதற்குச் சிறந்த உதாரணங்களாக அமைபவை. டி.ஆர்.மகாலிங்கம் சற்றும் சிரமம் தெரியாமல், துல்லியமான சுருதியுடன், சரளமான சங்கதிகளுடன், உயிரோட்டமுள்ள உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் இந்தப் பாடல்கள் வழியாக மிதந்து செல்கிறார். ஆனால் சீர்காழி கோவிந்தராஜனின் பாடும்முறை வலிந்து செய்வதாக இருக்கிறது.

என்னால் சீர்காழி கோவிந்தராஜனின் குரலையோ, பாடும் முறையையோ ரசிக்க முடிந்ததே இல்லை. வெண்கலக் குரலோன் போன்ற பல துதிகள் அவர்மேல் உள்ளன என்றாலும் அவரது குரல் சற்றும் இசைத்தன்மைகொண்டது அல்ல. அவரது குரல் எந்த நடிகருக்கும் பொருந்தியதுமில்லை, கதைச் சந்தர்ப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாடும்முறையை மாற்றியமைக்க அவரால் முடிந்ததுமில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன் போன்றவர்களுக்காக அவர் பாடியிருந்தாலும் அதிகமும் பொதுவான பின்குரலாகவே அமைந்தது அவரது பாட்டுகள்.

என்னுடைய ரசனையின்படி சீர்காழி கோவிந்த ராஜனின் குரல் இயல்பிலேயே சுருதி நடுங்கும் தன்மை கொண்டது. வீரக்கனல் படத்தில் வரும் ‘சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா?’ என்ற பாடலில் அவருடன் சேர்ந்துபாடும் சுசீலாவின் பாடும்முறையுடன் ஒப்பிட்டு இதை நாம் தெளிவாகவே உணரலாம். ‘சிரிக்கக் கூடாதா?’ போன்ற இடங்களில் அவரது சுருதி முற்றிலும் விலகுகிறது. பெரும்பாலான கீழிறங்கும் சுரங்கள் (landing notes) அவரிடம் அப்படித்தான் அமைகின்றன. பெரும்புகழ்பெற்ற ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ போன்ற பாடல்களில்கூட அவரது சுருதி முற்றிலும் விலகுவது நாம் உணரலாம். அவரது அதீதமான கமகங்கள் வலிந்துசெய்யப்படுவனவாகவும் கேட்பதற்கு நெருடலானவையாகவும் உள்ளன."
[/tscii:70802494b9]


முழுமையான ஆக்கம்

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=519

jaiiyappan
5th February 2010, 03:19 PM
I dont know music and all you wrote ... But onething we have been entertained by his "Vengala Kural" .

Iyappan