PDA

View Full Version : rajarasigan-the ilayaraja website



singamsoundar
12th November 2009, 10:06 PM
hi to all ilayaraja fans.
i have created a website for ilayaraja fans
just visit my website,and give me some suggections to improve our maestro's website[/b]
http://raja rasigan.blogspot.com/

Hulkster
21st November 2009, 09:57 AM
Hi good intiative, but beware of all the copyright restrictions.

Try to sort all the songs with regards to year or filmography like thiraipaadal. Otherwise your website is right on track :thumbsup: Perhaps you can also post links to maestroquiz and indianbackgroundscore as sister websites.

singamsoundar
28th November 2009, 04:00 AM
hai

thank u for ur reply.

இசையால் இணைவோம் ! இசைஞானியை புகழ்வோம் !!

regards,
soundar

http://rajarasigan.blogspot.com/

singamsoundar
26th September 2010, 05:41 PM
ராஜாரசிகன் (http://rajarasigan.blogspot.com) இன்று இரண் டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது.இது வெற்றிபடியா...தோல்விபடியா..என்று கூட எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்று,சும்மா பொழுது போக்கிற்காக துவங்கபட்ட ராஜாரசிகனில் இது 150வது பதிவு ஆகும் .சாதாரணமாக ஆரம்பிக்க பட்ட ராஜாரசிகன் இன்று இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றிணையும் தளமாக விளங்குகிறது.
20000 மேற்பட்ட ரசிகர்களால் 68000 பக்கங்கள் புரட்டபட்டிருக்கின்றன.


இன்று youtubeஎன்ற இணையதளம் மூலமாக rajarasigan (http://www.youtube.com/user/rajarasigan)என்ற usernameஇல் 80video களும், singamsoundar (http://www.youtube.com/user/singamsoundar)என்ற usernameஇல் 80 videoகளும் விண்ணில் உலவ விடப்பட்டிருக்கின்றன.
தினந்தோறும் நூற்றுகணக்கானோர் அந்த videoகளை கண்டுகளிக்கின்றனர்.


GOOGLEஇல் "rasigan" என்று தேடினால் நம் இளையராஜா சார்பாக ராஜாரசிகன் முன்னால் வந்து நிற்கிறான்.இது நமக்கு பெருமையும் அதே நேரத்தில் இன்னும் வளர்க்க வேண்டிய பொறுப்பையும் கூட்டுகிறது.

இந்த அளவிற்கு ராஜாரசிகன் வளர காரணமானவர்களை இந்நேரத்தில் நினைத்து பார்கிறேன் ..


முதல் காரணம் நம் தலைவர் இளையராஜா
இவர்பெயரை கொண்டு வெறுமனே ஒரு இணையதளத்தை உறுவாக்கினால்கூட குறைந்தது ஒரு நாளைக்கு 50 பேராவது வந்து போவார்கள். இணையதளத்தில் அப்படிஒரு புகழ் நம் தலைவருக்கு.


இரண்டாம் காரணம் நம் GOOGLE ளைதான் சொல்லவேண்டும்.இளையராஜா தொடர்பான தேடுதல்களுக்கு நம் இணையதளத்தை முன்னிறுத்தி பரிந்துரை செய்கிறது


மூன்றாவதாக ராஜாரசிகர்களைதான் சொல்ல வேண்டும்

நம் இணைய நண் பர்கள் குறிப்பாக SRIGANESH,RAJESH VARADHARAJA,ROMAL,DHEEPAN,NAGARAJ,SUNDAR,PRINCE போன்ற நண் பர்கள் தவறாமல் ராஜாரசிகனை பார்ப்பதுடன் அவர்களே ராஜாரசிகனை வழி நடத்தவும் செய்கின்றனர்.அடுத்த பதிவு என்னவாக இருக்க வேண் டும் ,அதில் என்னென்ன பாடல்கள் இருக்கவேண்டும் என்பதையும் அவர்களே தெளிவு படுத்துகின்றனர்.அவர்களுக்கு நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்லிகொள்வதை போலாகும்.

நானும் தலைவரின் தீவிர ரசிகன் தான் .ஆனால் என்னைவிட உயிருக்கு உயிராக இளையராஜாவின் இசையை நேசிக்கும் ரசிகர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த ராஜாரசிகன் தான்.
இதற்காக நான் பட்ட கஷ்டங்களையும் சொல்லிமுடிக்க முடியாது.இந்த ராஜாரசிகனில் மூழ்கிய பின் எனக்கு பல இரவுகள் காணாமல் போயின.கூடவே துக்கங்களும்...தூக்கங்களும்....என்னை நான் உலகுக்கு அறிமுகபடுத்துவதை விட புதைந்து கிடக்கும் தலைவரின் பொக்கிஷங்களை இந்த தலைமுறைக்கு சொல்லி பெறுமைபடுத்துவதே என் நோக்கமாயிருந்தது.


சென்ற மே மாதம் 3 நாட்கள் இடைவிடாமல் ராஜாரசிகனில் இருந்ததால் 3 நாட்கள் VASAN EYE CAREருக்கு 3 நாட்கள் படையெடுக்க வேண்டியதாகிபோச்சு.அப்போது கூட அந்த வெறி அடங்க வில்லை .அந்த அளவிற்கு இந்த இசை என்னை பாதித்துள்ளது
ரசித்து வாழ்ந்திருந்தால் விட்டு போயிருக்கலாம் ..அனுபவித்து வாழ்ந்தோமே ..அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?


அவர் படத்துக்கு இசையமத்தார்.ஆனால் அது என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்க்கைக்கு பின்னனி இசையாகிபோனது.எங்களின் ஒவ்வொரு நிகழ்வும் தலைவரின் பாடல்களின் பின்னனியில் தான் அமைந்திருக்கிறது..இனியும் தொடரபோகிறது.


இந்த ராஜாரசிகனின் அடுத்த வருட லட்சியம் 500 பதிவுகளை தாண்டுவது ..அதுவும் லட்சகணக்கான ரசிகர்களுடன்....


அனைவருக்கும் நன்றி.
ராஜாரசிகனின் உடன்பிறவா சகோதரர்களான அனைத்து FOLLOWERகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்
சௌந்தர்

singamsoundar
4th June 2011, 12:56 AM
ஒரு மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை வெற்றி படமாக்க கூடிய சக்தி படைத்த ஒரே மந்திரகோல் மனிதர் இசைஞானி இளையராஜா மட்டுமே..

இப்படி பல நூறுகளோடு விளையாடிய நம் தலைவர் வயதிற்கான செஞ்சுரியையும் அடிக்க வேண்டும் என்பதே கோடான கோடி ரசிகர்களின் வேண்டுதல்

இசை வாழ... இசைஞானி வாழனும் .


JUNE 2 ம் தேதி பிறந்த நாள் கொண்டாட போகும் நம் தலைவர் நூறு வருசம் நலமுடன் வாழ வாழ்த்துவோம் .வணங்குவோம்

HAPPY BIRTHDAY THALAIVAA../http://rajarasigan.blogspot.com/

app_engine
4th June 2011, 02:29 AM
150 posts in one year, remarkable!
:clap: