PDA

View Full Version : Malgudi days - Polimer TV



jovemac
8th November 2009, 04:04 PM
Malgudi days - A collection of short stories by R.K. Narayan that focused on the trial and tribulations of a small Indian town of Malgudi.

According to R.K. Narayan, Malgudi is a town "habited by timeless characters who could be living anywhere in the world" and is located on the banks of river Sarayu and surrounded by the Mempi Hills.

Polimer TV - A newly started TV channel is currently telecasting Malgudi Days in Tamil every sunday at 10AM. - A must watch

Twenty years back, the same serial was telecast on national channel of Doordarshan. At that time, it was just a fun of watching it as there was no other means of entertainment. But, now it would be a different feeling . As you watch that same programme, you would get ignited by nostalagic thinking. Each and every episode would bring back the memories of the events and incidents that had taken place two decades ago. At the back of everyone's mind , we all yearn for our childhood days. But, sadly we won't get back those days again .That is reality. Life must go on.

aanaa
9th November 2009, 03:26 AM
[tscii:6d05985de5] [/tscii:6d05985de5]

சென்னையில் ‘பாலிமர் டி.வி’ தொடக்க விழா அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டார்


தமிழக கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம்(டி.சி.ஓ.ஏ.,), பாலிமர் நிறுவனம் இணைந்து, பாலிமர் சாட்டிலைட் "டிவி' துவக்கவிழா சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடந்தது. பாலிமரின் முதன்மை செயல் அதிகாரி முரளிராமன் வரவேற்றார். இதில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டார்.

சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கேபிள் டி.வி.யாக செயல்பட்டு வந்த பாலிமர் நிறுவனம் தற்போது சாட்டிலைட் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் பாலிமர் டி.வி.யை பார்க்க முடியும். காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் அரைமணி நேரம் செய்திகளும், பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த பாலிமர் டி.வியின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாநில தலைவர் பி.சகிலன் தலைமை தாங்கினார். பாலிமர் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி முரளிராமன் அனைவரையும் வரவேற்றார். பாலிமர் டி.வி. நிர்வாக இயக்குனர் பி.வி.கல்யாணசுந்தரம், அவருடைய மனைவி அருள்ஜோதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி சாட்டிலைட் டி.வி.யை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பாலிபர் டி.வியின் லோகோவை பி.வி.கல்யாண சுந்தரம் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கி பேசும்போது, Òபி.எஸ்.எல்.வி. சிரூ14 என்ற ராக்கெட் 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அதை போலவே இன்று பாலிமர் டி.வி.யின் தொடக்க விழா நடைபெறுகிறது. அந்த ராக்கெட்டை போலவே, பாலிமர் டி.வி வெற்றி பெற வாழ்த்துகிறேன்Ó என்று தெரிவித்தார். கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பொதுநலசங்கத்தின் மாநில தலைவர் சகிலன் பேசும்போது, Òஎம்.எஸ்.ஓ கேபிள் டி.வி ஆபரேட்டர்களுடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இணைந்து செயல்படுவோம்Ó என்று கூறினார்.

தமிழக கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத் தலைவர் சகிலன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கேபிள் "டிவி' ஆபரேட்டர்களை இணைத்து, 12 ஆண்டுகளாக ஓர் இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். கேபிள் "டிவி' தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது எங்களது சங்கம் தான். ஏராளமான தமிழ் சேனல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, பிரதான சேனல்களாக மாற்றியதும் கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தான். 15 ஆண்டுகளுக்கு முன் சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கேபிள் தொழில் நடத்திவரும் பாலிமர் நிறுவனம் தற்போது, பாலிமர் சாட்டிலைட் "டிவி'யைத் துவக்கியுள்ளது.

கேபிள் "டிவி' ஆபரேட்டர்களோடு இணைந்து துவங்கும் முதல் தமிழ் சேனல் இது. "பாலிமர் டிவி' ஒளிபரப்பில் எவ்வித பிரச்னையும் இல்லை. எங்களை யாரும் தவிர்க்க மாட்டார்கள். தவிர்க்கும் நிலை வந்தால், அதுகுறித்து அப்போது முடிவெடுப்போம். தினமும் காலை, மதியம், இரவு என நடுநிலை செய்திகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும். அரசு கேபிள் "டிவி'யின் நிலை குறித்து, அதன் நிர்வாக இயக்குனரை சந்தித்துப் பேசவுள்ளோம்.

""கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் மத்தியில் இருந்து உருவாகும் இந்த சேனல், பல தடைகளையும் தாண்டி வெற்றி பெறும். போராடியே பழக்கப்பட்டவர்கள் ஆபரேட்டர்கள். முதல்வரின் தலைமையில் மாநாடு நடத்தி, சலுகைகளை போராடிப் பெற்றோம். எந்தப் போராட்டத்திற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்,'' என்றார்.

இவ்வாறு சகிலன்; பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, தமிழரசு, கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்கியராஜ், அகத்தியன், நடிகர் ஸ்ரீகாந்த், சினிமா தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ஆர்.பி.சவுத்ரி, தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தின் பொதுசெயலாளர் எஸ்.பி.கே.கோகுல்தாஸ், பொருளாளர் எஸ்.கே.பாஸ்கர், டி.எம்.ஓ.ஏ மாநில தலைவர் பி.ஜெயராமன், துணை செயலாளர் ஜி.தாமோதரன் உள்பட நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் நடிகைகளின் நடனநிகழ்ச்சி, மேஜிக் ஷோ உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.




[html:6d05985de5]<div align="center"><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/gH6GDRcwcgs&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/gH6GDRcwcgs&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object</div>[/html:6d05985de5]