View Full Version : Chellamay - Sun TV
jovemac
13th September 2009, 12:58 AM
ராதிகா சரத்குமார், ராதா ரவி, டெல்லி கணேஷ், வாசு விக்ரம், ராஜ் கமல், மோகினி, சுபாஷினி, சோனியா, லதா ராவ் மற்றும் பலர்... நடித்து தீனாவின் இசையில் ஜவகர் இயக்கத்தில் செப். 14,2009 முதல் ஓளிபரப்பாகவிருக்கும் ராடான் மீடியா ஒர்க்ஸின் அடுத்த படைப்பு!
செல்லமே
Chellame - Title Song (http://raretfm.mayyam.com/stream//tvserial/Chellame.rm)
jovemac
13th September 2009, 12:39 PM
இதுவரை அரசியாக சின்னத்திரை மூலம் தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி செல்லமே தொடரின் மூலம் பாசத்தைக் கொட்ட வருகிறார்.
சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறனர் ராடான் குழுமத்தினர்..
அரசி,சித்தி - இரண்டு தொடர்களுமே ராதிகா அவர்களையே மையப்படுத்தி அமைந்திருந்தது.செல்லமே ஒரு குடும்ப்பக் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதை கிராமிய மணம் கமிழ சித்தரிக்கும் கதை....
saradhaa_sn
13th September 2009, 01:15 PM
ராதிகா சரத்குமார், ராதா ரவி, வாசு விக்ரம்....
ஓ... அப்படீன்னா இது சந்தேகமில்லாமல் குடும்பச் சித்திரம்தான்.
அப்படியே நிரோஷாவுக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கலாமே. 'சின்னபாப்பா பெரியபாப்பா'வோடு ராடான் நிறுவனம் அவரை ஓரம் கட்டிவிட்டதே.
saradhaa_sn
13th September 2009, 01:31 PM
அரசி,சித்தி - இரண்டு தொடர்களுமே ராதிகா அவர்களையே மையப்படுத்தி அமைந்திருந்தது.
aanaa
13th September 2009, 06:44 PM
`செல்லமே' குடும்பம்!
ராடன் டிவி நிறுவனம் தயாரிக்கும் "செல்லமே'' புதிய தொடர், வரும் திங்கள் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் செல்லம்மா என்கிற குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அதாவது ராதிகாவின் அண்ணன் பாத்திரத்தில் எம்.ஆர்.ராதாரவி நடிக்கிறார்.
உண்மையில் அண்ணன் - தங்கையான ராதாரவியும், ராதிகாவும் சின்னத்திரையில் முதன் முறையாக அண்ணன் - தங்கையாகவே நடிக்கிறார்கள் என்பது சிறப்பு அம்சம்.
இதுபற்றி ராதாரவி கூறும்போது, "நானும் என் தங்கை ராதிகாவும் பெரிய திரையில் சேர்ந்து நடித்திருக்கிறோம். சின்னத்திரையில் அண்ணன் - தங்கையாக நடிப்பது முதன் முறை. ராதிகா மீது எனக்கு எப்போதுமே அன்பும், பாசமும் நிறைய உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் நிஜமாகவே ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். என் நடிப்புக்கு சவால் விடும் நல்ல கேரக்டர் இதில் கிடைத்திருக்கிறது'' என்றார்.
இதுபற்றி ராதிகாவிடம் கேட்டபோது, "செல்லமே'' தொடரில் என் அண்ணன் ராதாரவியுடன் நடிப்பது ரொம்பவே பெருமை. ராதாரவியின் கதாபாத்திரம் இத்தொடரில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். அதுமட்டுமல்ல, என்னுடைய இன்னொரு அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் வாசுவிக்ரம் இதில் அசத்தலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்தி தொடரில் வாசுவிக்ரம் நடித்து புகழ் பெற்றது போல, இதிலும் அவர் மிகப்பெரிய பெயரை சம்பாதிப்பார்'' என்றார்.
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `செல்லமே.'
[html:25887f0c9b]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090912/TV05.jpg</div>[/html:25887f0c9b]
நன்றி: தினதந்தி
R.Latha
14th September 2009, 01:22 PM
[tscii:82cf6e2a90]அரசி இப்போது "செல்லமே' ஆகிவிட்டார். ஆமாம்! இதுவரை அரசியாக தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி பாசத்தைக் கொட்ட வருகிறார். சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தோம்:
செல்லமே' என்ன மாதிரியான தொடர்? மற்ற தொடர்களிலிருந்து இது எப்படி மாறுபட்டது?
அரசி, சித்தி இரண்டிலும் என்னை மையப்படுத்தி எடுத்திருந்தோம். "செல்லமே' ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.
வேறு என்ன புதிய சிறப்புகள் இருக்கிறது?
இந்தத் தொடர் கிராமிய மணத்தோடு இருக்கும்."மாறன்' என்கிற படத்தை இயக்கிய ஜவகர், இந்தத் தொடரை
டைரக்ட் செய்கிறார். இதில் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளை கும்ப கோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் போன்ற இடங்களில் எடுத்திருக்கிறோம். சினிமா படப்பிடிப்புக்குச் சென்ற மாதிரி அதே குவாலிட்டியோடு அவுட்டோரில் படமாக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு வருஷமா அரசியாக வாழ்ந்தீர்கள்? அந்தக் கதாபாத்திரத் திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?
ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர ரொம்ப நாளாகக் காத்திருந்தேன். சினிமாவில் வந்து ரெண்டு வேடம் பண்றதுக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுவோம். டிவியைப் பொறுத்த வரைக்கும் நிற்கவே டயம் கிடையாது. அப்படி இருக்கும்போது ரெண்டு ரோல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். குரலை மாற்ற வேண்டும், டிரெஸ் மாற்ற வேண்டும். ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அந்த கேரக்டருக்கு குட்பை சொல்ற நேரம் வந்தது.. கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷம்தான்.
இரவு ஒன்பது முப்பது என்றால் அது உங்கள் நேரம் என பத்து வருடங்களுக்கும் மேலாக நிலைக்க வைத்துவிட்டீர்கள்? அதன் ரகசியம் என்ன?
ரகசியமே கிடையாது. எல்லாம் போராட்டம்தான். இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.
"செல்வி'யாவும் "அரசி'யாகவும் நடித்தீர்கள். இதில் எந்த வேடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?
ரெண்டும் வித்தியாசம்தான். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன்.
எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால்.
நீங்கள் தயாரிக்கும் "செந்தூரப்பூவே' தொடரில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?
எவ்வளவுதான் நடிக்கிறது? நான் பிஸினûஸப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை. நேரம் கிடைக் கும்போது பசங் ககூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.
சில நடிகைகளிடம் பேசியபோது உங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்கள்? அதைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து அப்படி நினைச்சிருப் பாங்க. நான் எப்படி வந்தேன், எப்படி இருக்கேன், எப்படி எல்லாம் விழுந்து அடி பட்டு எழுந்தேன் என எல்லாமே
அவர்களுக்குத் தெரிகிறதில்லையா?
வேறு படங்களில் நடிப்பதில்லையே ஏன்?
நடிக்கக் கூடாது என்று இல்லை. நேரம் சரியாக அமையவில்லை. கண்டிப்பாக நடிப்பேன். சரியான நேரமும் கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.
உங்களுடைய "அரசி' இயக்குநர் சமுத்திரக்கனி, "நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிலேயும் வாய்ப்பு கிடைத்து உயர்ந்திருக்கிறாரே? அவரைப் பற்றி?
அந்தக் கதையை நான் பண்ண வேண்டியது. அவர் என்னிடம் அந்தக் கதையை சொன்னபோதே நான் சொன்னேன். ரொம்ப நல்லா இருக்கு கனி. இந்தச் சமயத்துல எனக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் இந்தப் படம் பண்ண முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கையோட ஜெயிச்சிருக்கார். "செல்லமே' தொடர் ஆரம்பமாவதைக் கேள்விப்பட்டு, "உங்க புது சீரியலில் பத்து நாள் வந்து ஒர்க் பண்ணிட்டு போவட்டுமா?'ன்னு போன் செய்தார். அப்படி ஒரு சென்டிமெண்ட் அவரிடம்.
சின்னத்திரை மூலமா மக்களைத் தினம் சந்திக்கிறீர்கள்? அவர்களுக்கு இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புறீர்கள்?
நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=123379&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:82cf6e2a90]
jovemac
15th September 2009, 09:17 AM
செல்லமே!
இன்று முதல் பாகம். அனைவரின் அறிமுகத்துடன் தொடரின் பின்னனி பாடல்...
டெல்லி கணேஷ் - தவசி - ஒரு சமையல் காரர்...
500 தேங்காய் ஆர்டர் கொடுத்து 506 தேங்காய்களை சப்ளை செய்தவரிடன் 6 தேங்காய்களுக்காக வாதாடுபவர்....
ராதாரவி - இவர் என்ன செய்கிறார் என்று இதுவரை தெரியவில்லை...
saradhaa_sn
15th September 2009, 06:21 PM
அதிலும் கும்பகோணம், திருவிடைமருதூர், சுவாமிமலை, குத்தாலம் போன்ற இடங்களில்..
aanaa
16th September 2009, 04:23 AM
if anyone interested....
கமலேஷ் ------------------- ராமகிருஷ்ணா
கிருத்திகா ------------------- கோமதி
சாக்ஷிசிவா ------------------- வடமலை
சினேகா நம்பியார் ------------ வள்ளியம்மை
சுபாஷினி ------------------- தாழையம்மா
சோனியா ------------------- கலைவாணி
டெல்லி கணேஷ் --------------- தவசி
நீலிமாராணி ------------------- அமுதா
மாளவிகா ------------------- முத்தழகு
மோகினி -------------------
ரவிகுமார் ------------------- ஆவுடையப்பன்
ராதாரவி ------------------- கடற்கரை
ராதிகா ------------------- செல்லம்மா
ராஜ்கமல் -------------------
லதாராவ் ------------------- வள்ளியரை
வந்தனா -------------------
விஸ்வநாதன் ------------------- சோலமலை
வாசு விக்ரம் ------------------- கந்ததுரை
ஜார்ஜ் விஸ்ணு ------------------- வைரவா
appachelam
16th September 2009, 12:13 PM
can anyone share with me the last episod of arasi pls
sudha india
16th September 2009, 12:31 PM
Saw the first episode.
However made up, Sakshi Siva looks younger than Radhika....
Husband wife madhiri illama, akka thambi madhiri irukanga
saradhaa_sn
16th September 2009, 02:00 PM
Saw the first episode.
However made up, Sakshi Siva looks younger than Radhika....
Husband wife madhiri illama, akka thambi madhiri irukanga
jovemac
17th September 2009, 09:52 AM
நேற்றும் அந்த ஓட்டம் தொடர்ந்து அவனை பிடித்து அவன் முகத்தினை பார்த்த ராதிகாவுக்கு பலத்த அதிர்ச்சி... ஆம் அவர் தான் கல்யாணமான இரண்டாம் நாளே ஓடிப்போன தம்பி i.e வள்ளியாரை யின் கணவர்.
அவரை பிடித்து உடனே சிகை அலங்காரம்... மற்றும் டிங்கரிங் செய்து பட்டி பார்த்து பட்டுவேட்டி சட்டையுடன் அணியில் நிற்கிறார்...
R.Latha
23rd September 2009, 12:45 PM
'அரசி' climax
எதிர்பார்த்தது போலவே கொஞ்சம் ஏமாற்றமான 'சப்'பென்ற முடிவு. விஸ்வநாத்னைப்பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைத்து தண்டனை வாங்கிக்கொடுப்பார என்று பார்த்தால், விஸ்வநாதனைச் சுட்டுக்கொல்வதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?. அதை எப்போதோ செய்திருக்கலாமே?. அரசியின் முன் பலமுறை வந்துபோனாரே. கதையில் ஜீரணிக்க முடியாத இன்னொரு விஷயம், விஸ்வநாதன் தனக்கு பலமுறை துரோகம் செய்த ஜி.ஜே.யை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு, அவருக்கு பலமுறை உறுதுணையாக இருந்த சிங்கபெருமாளை (Liakath Ali Khan) சட்டென்று சுட்டுக்கொன்றது. (ஜி.ஜே.யை சும்மா விட்டது, கடைசிக் காட்சியில் செல்வியை சிரித்த முகத்தோடு காண்பிக்க வேண்டுமென்பதற்காகவா?).
கடைசிக்காட்சிகளில் வந்த செயற்கை மழை, செயற்கைப்புயல், எல்லாம் சினிமா கிளைமாக்ஸை நினைவூட்டியது. காவேரியின் கல்யாணத்தோடு கதையை முடித்துவிட்டார்கள். மகன் மகள், மருமகள் எல்லாம் அரசியிடம் பாவமன்னிப்பு பெற்றார்கள். அரசி ராதிகா, முதல்வர் கலைஞர் கையால் பதக்கம் பெறுவதுபோன்ற 'ஒட்டவைத்த' காட்சிகள் நம மனதில் ஒட்டவில்லை, அதிகப்படியாகத்தெரிந்தது.
கதையில் பல இடங்களில் அறுத்துவந்த லதாவும் அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் கடைசிக்காட்சிகளில் அடக்கி வாசித்தனர். கதை முழுக்க கலக்கி வந்த ஜி.ஜே.யை (Venu Arvindh)கடைசியில் பைத்தியமாகப்புலம்ப விட்டது ஏமாற்றமளித்தது.
நிறைய கதாபாத்திரங்கள் என்னவானார்கள் என்பது தொங்கலிலேயே விடப்பட்டது.....
மொத்தத்தில் எதையாவது பண்ணி எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற குழப்பம் தெரிந்தது. அது சரி, அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகளோ...
_________________
R.Latha
6th October 2009, 11:41 AM
valliyammai,muthazagu both are anti heroines. sellammavai oram katta ninaikkirargal. Netraiya eposode;
pearapillaigal aavudaiyappan thathavukku cycle katru kodukka avar keelea vizhunthu kaalil sirukaayam pada doctor udane vara, doctor said, neengal call panniyirunthal podhum. naan medicine solliyirupean endru solgirar. intha visayam therinthu sellamma, thaalaiyama pathari ennanea ipadiyachu endru iruvarum padhara,engal kudumbamea ungalai parka varugirathu endru sonnathum chiken, fish ellam cook seithu ellorukkum virunthu koduka solgirar.
iru marumagalum kitchenil, sellam vegetable cutting, perangal thaatha pakkathil irukka thaatha kadhai sollum bodhea thadumaari muchadaithu mayakkamadaiya, perangal satham poda anaivarum ange vara aavudai mugathai matum kaanbithu thodarum pottu vittargal.
R.Latha
13th October 2009, 10:29 AM
உழைப்பால் உயரும் செல்லம்மா!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் `செல்லமே.'
ஆவுடையப்பன், தாழையம்மா இருவரும் அண்ணன், தங்கை. ஆவுடையப்பன் தன் தங்கை மீது மிகுந்த பாசமுடையவர்.
சென்னையில் சிறிய தள்ளுவண்டி உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆவுடையப்பன் அவருடைய நெருங்கிய நண்பர் தவசி, நளபாகனாக வேலை செய்வதுடன், அதற்கு ஊதியமும் பெற்று வருகிறார்.
தன் தங்கை தாழையம்மாவிடம் உணவு விடுதியை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கூற, தன்னிடமுள்ள நகை மற்றும் பணத்தைக் கொடுத்து உதவுகிறார் அவர். தன்னுடைய ஒரே மகளின் பெயரில் `செல்லம்மா உணவகம்' என்ற ஓட்டலைத் தொடங்கி, தன் அயராத உழைப்பால் பல கிளைகளைத் தொடங்கி உயர்ந்த நிலையை அடைகிறார் ஆவுடையப்பன். இதைப் பார்க்கும் நண்பர் தவசிக்குள் தன் மகனுக்கு செல்லம்மாளை திருமணம் செய்துவைத்து மொத்த சொத்தையும் தனதாக்கும் எண்ணம் ஓடுகிறது.
ஆனால் நடந்தது வேறு. ஆவுடையப்பன் தன் மகளை தங்கைமகன்வடமலைக்குத் திருமணம் செய்து வைப்பதுடன், ஓட்டலையும் சீதனமாகத் தருகிறார்.
இதைக் கண்டு ஆவுடையப்பனின் பழைய நண்பர் தவசி, செல்லம்மாவையும், வடமலையையும் எப்படியாவது பிரித்து, செல்லம்மாவை தன் மகனுக்கு மறுமணம் செய்து வைத்தாவது சொத்துகளைப் பெற வேண்டும் என முடிவெடுக்கிறார்.
தவசியின் சதியால் ஆவுடையப்பனின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பழி செல்லம்மாவின் கணவர் மீது விழ, தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிக்கும் செல்லம்மா, தவசிதான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிப்பதுடன், தவசியின் போலியான முகத்திரையைக் கிழித்து தன் தந்தைக்கு உண்மையை உணர்த்துகிறாள். பிரச்சினைகளை சமாளித்து, பிரிந்த குடும்பத்தை செல்லம்மா இணைக்கும் நிலையில் பயணிக்கிறது கதை.
ராதிகாவின் ராடன் நிறுவன தயாரிப்பு இது.
இயக்கம்: ஜவகர்.
saradhaa_sn
13th October 2009, 01:39 PM
:D
R.Latha
23rd October 2009, 12:25 PM
கிருத்திகா- --------------------------------- கோமதி
R.Latha
23rd October 2009, 12:26 PM
anybody know another name and stories
saradhaa_sn
7th November 2009, 04:44 PM
:shock:
aanaa
21st November 2009, 11:50 PM
திருப்பங்களுடன் `செல்லமே'
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``செல்லமே'' தொடர், திருப்பங்களுடன் கூடிய காட்சிகளுடன் தொடர்கிறது.
செல்லம்மாவாக மென்மையான குடும்ப பாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ராதிகா கதாபாத்திரம், வரும் வாரங்களில் மிகப்பெரிய மனமாற்றத்துடன் தன் மீது பாயும் கணைகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் புரட்சிப்பெண் பாத்திரமாக மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது.``செல்லம்மாவின் தம்பி மணியரசுக்கு வேறு ஒரு பெண்ணான கவிதாவை (மகாலட்சுமி) திருமணம் செய்ய முடிகிறது. ஆனால் மணியரசுவை வெறித்தனமாக காதலிக்கும் அமுதாவோ (நீலிமாராணி) மணியரசைத் தனக்கே மணமுடித்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதரவு செல்லம்மா தான்! ஆனால் செல்லம்மா கணவர் வடமலையோ, இத்திருமணத்தை எதிர்க்கிறார். இந்த நிலையில் இரு இளம் பெண்களில் மணியரசு யாருக்கு மாலை சூட்டி மணம் முடிக்கப் போகிறான்? உண்மையில் செல்லம்மாவின் ஆதரவு யாருக்கு? என்பது கதை ஓட்டத்தில் அடுத்து வரும் மிகப்பெரிய திருப்பமாக இருக்கும்'' என்கிறார் ராடன் டிவியின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.
50-வது எபிசோடை கடந்து தொடரும் இந்த தொடரில் டெல்லிகணேஷ், எம்.ஆர்.ராதாரவி, ரவிக்குமார், வாசுவிக்ரம், சாக்சிசிவா, ஜார்ஜ், விச்சு, அஸ்வின், மாளவிகா, கிருத்திகா, சினேகா நம்பியார், சோனியா, வந்தனா, லதாராவ், சுபாஷினி நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு: ரமேஷ் அழகிரி. பின்னணி இசை: கிரண். இயக்கம்: ஜவஹர். தயாரிப்பு ராடன் நிறுவனம்.
[html:bd29161460]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091121/TV-03.jpg</div>[/html:bd29161460]
நன்றி: தினதந்தி
R.Latha
8th February 2010, 12:35 PM
yaarum chellame patri comment pannave illai. CHithi arasi selvi varaikkum intrestaga seriyal edutha raadhi ka - madam indha seriyalayum pasam adhai mayyapaduthiye varugirATHU.
nandraga irukkum endru parthal theavaiye illamal sandai varfugirathu. kadhai orea paasam. intrestinga aduthathu. kadahi oadikondea irukanum.niraya seriyal varukirathu. ratingla nalla irukkura maadhiri kadhai vithiyasappaduthinal nallarukkum. radha raviyai kondru viduvargalam. athuvum sellama purusan meal pazhi vizhugiradhu adhiyum sellama thiramaiyil vendru viduvaram.
DELLI GANESH THAN MAGALUKKU PHONE PANNI NEE INGU VARUM NEARAM VANDHUVITTADHU VAA ENGIRAR .AVARUM OK SOLKIRAR. ATHU MATTUM SUSPENSE.
aanaa
27th February 2010, 08:43 PM
சதி வலையில் செல்லம்மா!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்பத் தொடர், `செல்லமே'. எல்லோரிடமும் பாசம் காட்டி, நல்லதையே நினைத்து செயல்படுபவள் செல்லம்மா. இந்த கேரக்டரில் நடிகை ராதிகா செல்லம்மா வாகவே மாறியிருக்கிறார்.
தொடரில் தொடரும் கதைப்பின்னணி பற்றி கிரியேட்டிவ் ஹெட் ராதிகா கூறியதாவது:
"யாரும் எதிர்பாராத வகையில் தன் கணவர் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தாரின் கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளாகி ஒதுக்கி தள்ளப்பட்டு கண்ணீரும், கம்பலையுமாக வீட்டை விட்டே வெளியேறுகிறாள் செல்லம்மா.
பிரச்சினைக்கு சொத்து தகராறுதான் காரணம். இப்போது செல்லம்மாவிடம் மிஞ்சியிருக்கும் ஒரே சொத்து ஓட்டல் ஒன்று தான்! இதையும் கைப்பற்ற சதிக் கூட்டம் வலை விரிக்கிறது. அந்த சதி வலையிலிருந்து செல்லம்மா மீள்வாளா?
எல்லாவற்றுக்கும் மேலாக அநியாயமாக கொலைப் பழி சுமத்தப்பட்டு சிறையில் வாடும் தன் தந்தை ஆவுடையப்பனை மீட்க தீவிரமாக முயல்கிறாள் செல்லம்மா, அவளுக்கு வெற்றி கிடைக்குமா? பரபரப்பான இந்த கேள்விகளுக்கு வரும் வாரங்களில் விடை கிடைக்கும்.''
தொடரில் ராதிகாவுடன் ராதாரவி, ரவிக்குமார், டெல்லி கணேஷ், நந்தகுமார், சாக்ஷி சிவா, வாசு விக்ரம், கவுதம், சோனியா, விச்சு, மாளவிகா, நீலிமாராணி, ஸ்நேகா நம்பியார், நித்யா, மகாலட்சுமி நடிக்கிறார்கள். தயாரிப்பு : ரடான் நிறுவனம்.
[html:b92b07cc08]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100227/TV09.jpg</div>[/html:b92b07cc08]
thanks to Dailthanthi
aanaa
18th September 2011, 06:03 PM
Avudaiappan is a widower with three sons & only one lovable daughter “Chellama.” His sister Thazhaiamma is a widow with three sons & three daughters. She stays with Avudaiappan’s family. Avudaiappan being a sole breadwinner of a joint family faces tough time to run his family with a meager salary. Yet, he is very affectionate with everyone. He never throws tantrum at anybody & has a positive approach towards life. One fine day, Avudaiappan’s family migrates to Chennai for a better life.
Thavasi is a taciturn man & a close-buddy of Avudaiappan accompanies to Chennai. He stands by Avudaiappan’s side during the worst phase of his life. Thavasi is a good cook & he is known for the delicious recipes. Both of them decide to start a roadside motel called Chellama. Avudaiappan invests money for their motel business. Thavasi works with him as a Chef. Due to Thavasi’s culinary skills, motel Chellama becomes popular over the night. They are doing decent profit in their business.
Avudaiappan always wanted to become an entrepreneur. He asks Thavasi to invest some money to start a Hotel. Thavasi is reluctant & doesn’t want to risk his money. But Avudaiappan strives hard to get some financial aid. At this moment, Thazhaiamma helps Avudaiappan by giving her jewels for pledging. He invests more money, expands his business & becomes wealthy over the period. Now ‘Chellama’ is one of a leading hotel with the branches all over Chennai.
Thavasi thinks that Avudaiappan’s growth is only because of his brilliant culinary skills & not Avudaiappan’s hard work. Still he works with him as a supervising chef for a monthly salary. He has never imagined that Avudaiappan’s efforts would turn to be a huge success. His frustrations change him to be a Shakuni … deep inside he hates Avudaiappan & his family but never shows it to anybody. His only aim is to dysfunction Avudaiappan’s family & business.
Avudaiappan becomes old and he wants his sons to take over the business. But his sons are happy go lucky kind & they all refused to do so. Then Avudaiappan decides to divide his properties & offers a major share to his sister Thazhaiamma as she has helped him to start the business. Meanwhile Thavasi wants to get her son married to Chellama, so that he could acquire his property. Then the bolt comes from blue, instead of taking a share from Avudaiappan’s property, Thazhaiamma requests Avudaiappan to get her son Vadamalai married to Chellama. Avudaiappan feels delighted to have Chellama as his daughter-in-law. Moreover Chellama has the charisma & ability to play the fulcrum of Avudaiappan’s joint family. Chellama marries Vadamalai. Thavasi’s only hope to retrieve some money from Avudaiappan becomes impossible. Now Thavasi becomes cantankerous & schemes a silent trap to bring down Avudaiappan’s business & separate the family.
Due to Thavasi’s diabolical plan, rift starts between both families and Avudaiappan moves away from his sister’s family. Again Thavasi schemes a trap & kills Avudaiappan’s son and the murder is framed on Chellama’s husband Vadamalai.
Vadamalai is arrested & sentenced to death. Chellama comes to know that Thavasi is the reason for all the mishaps. She can’t simply go against him, as he is a close associate of her father. Her counter play to Thavasi forms the base of the story. Chellama proves him as innocent over 3 years of court trail. Chellama proves to Avudaiappan that Thavasi is the reason for her brother’s murder.
Chellama not only takes care of the entire family and also plays a vital role in developing the hotel business. Thavasi tries to destroy her family & business, with his intellectual deeds. Chellama acts a rock center & protects her family. Chellama faces so many hurdles in her life yet she deals every problem with her elegant panache & resolves it. Chellama’s struggle to withhold her family & run the business successfully against Thavasi’s plans forms the tapestry of this mega series.
...................
aanaa
3rd May 2012, 08:26 AM
can anyone do the update here please.
Need some volunteers
also need Ilavarasi updates. Is any one here
aanaa
9th July 2012, 11:53 PM
பழனி மலையில் செல்லமே படப்பிடிப்பு
http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2012/07/Chellamay-4.jpg
750வது எபிசோடுகளை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் செல்லமே தொடரின் படப்பிடிப்பு. கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடை பெற்றது. கேரளாவின் இயற்கை வனப்பு மிக்க நீர்நிலைகள் மற்றும் போட் ஹவுஸ் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றது..
இதில் சாக்ஷிசிவா.. ·பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி.. சங்கராபரணம் ராஜலட்சுமி..ஆகியோர் நடித்த காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டன.. அதை தொடர்ந்து பிரசித்தி பெற்ற முருகனின் மூன்றாம் படை வீடான பழனி மலையில் பலகாட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.. இதில் ராதிகா. சாக்ஷிசிவா நடித்த காட்சிகள் இனிவரும் தொடர்களில் ஒளிபரப்பாக உள்ளது.
பழனியில் நடை பெற்ற படப்பிடிப்பில் ராதிகாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விட்டனர்.குறிப்பாக பெண்கள் ராதிகாவை தங்கள் வீட்டு பெண்போல் பாவித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.. தன்னை காண வந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று ராதிகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க மக்கள் வெள்ளத்துக்கு நடுவில் அமைதியாக படப்பிடிப்பு நடை பெற்றது. இனிவரும் செல்லமே தொடரின் கதைகளம் கேரளா, மற்றும் தமிழகத்தின் பழனி என பல முக்கிய நகரங்களில் பயணிக்கிறது.. சினேகாவின் சூழ்ச்சியால் தொலைந்த குழந்தை கிடைத்ததென நம்பிய செல்லம்மா தன் கணவன் வடமலையிடம் கொண்டு வந்து தர, வடமலை செல்லம்மாவை ஏற்றுக்கொள்கிறான்..
இதுவரை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்த செல்லம்மா.. தன் பொறுப்புகளை சுரேஷிடம் ஒப்படைத்து விட்டு, உறவுகளிடம் விடை பெற்று புதிய வாழ்க்கை தொடங்க பழனிக்கு பயணமாகிறாள்அமைதியான வாழ்க்கையை வேண்டி பழனிக்கு வந்த செல்லம்மாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம் உண்டாகிறது. அங்கு நடக்கும் சம்பவம் செல்லம்மாவின் வாழ்க்கையே புரட்டி போடுகிறது..
பழனியில் நடை பெறும் சம்பவம் என்ன..?
அந்த சம்பவத்தின் முடிவில் செல்லம்மா எடுத்த முடிவு என்ன..?
வடமலை எதற்காக கேரளா பயணிக்கிறான்..?
இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான முடிவுகளோடு பயணிப்பதே இந்த கதையின்
நீண்ட பயணம்.மக்களை கவரும் வகையில் ஏராளமான பொருட்செலவில் ராடான் நிறுவனம் செல்லமே
வெற்றித்தொடரை தயாரித்து வருகிறது..
செல்லமே தொடர் சன் TVயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது..
நடிகர்கள்: R.ராதிகா சரத்குமார், ராதாரவி, சக்ஷி சிவா, மாளவிகா, ரவிகுமார், வாசு விக்ரம், டெல்லி கணேஷ், தேவி பிரியா, விச்சு, ராஜ்காந்த் நீலிமா, சரவணன், மஹாலட்சுமி,தொழில் நுட்பக் கலைஞர்கள் : கதை: ராடான் கதை குழு, திரைக்கதை : குரு சம்பத்குமார் மற்றும் ஜோதி அருணாச்சலம்.
வசனம்: பா.ராகவன், ஒளிபதிவு: காசிநாதன், இயக்கம் :O.N.ரத்தினம்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.