Vivasaayi
8th June 2009, 04:02 PM
"யாரோட வேலை"
தென்றல் வீசும் மாலைநேரம்.ஆடுகள் புல்வெளியை மேய்ந்து கொண்டிருக்க மேய்ப்பாளன் கண்காணித்துக்கொண்டிருந்தான்.வழக்கமான வழியில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன .
"அங்க பாத்தியா!" மேய்வதை நிறுத்திவிட்டு வெள்ளை ஆடு அதன் தோழியிடம் முணுமுணுத்தது.
தன் நண்பன் கண்ஜாடை காட்டிய இடத்தில் திரும்பிப் பார்த்த தோழி,"இதத்தான் தெனமும் பாக்குறமே.இப்போ என்ன புதுசா "
என்று கூறிவிட்டு திரும்பவும் மேய ஆரம்பித்தது .
இருவரும் பார்த்தது பக்கத்துக் காட்டில் உள்ள பழத்தோட்டத்தை.பல நிறங்களில் பழங்கள் குலுங்குகின்றன .தினமும் இந்த இடத்தில் மேயும் பொழுது எல்லா ஆடுகளுக்கும் புல் கசக்கும் .ஆனால் மேய்ப்பாளனை மீறி எப்படி செல்வது ?.
"இன்னிக்கி ஏதாவது செய்யணும்.எவ்ளோ நாள்தான் கண்ணாலயே சாப்பிட்றது.கொறஞ்சது ஒரு தடவ நக்கியாவது
பாத்துடனும்"யோசித்துக்கொண்டே மேய்ப்பாளனை பார்த்தது வெள்ளை ஆடு .
"தலைவரே "
"என்னடா "
"ஆஹா...பதில் வருது" என்று மனதில் நினைத்துக்கொண்டு மெதுவாக ஆரம்பித்தது ."அந்தக் காடு யாரோடது ?"
"நம்ம மொதலாளியோடது கிடையாது.உனக்கு அவ்ளோ தெரிஞ்சா போதும் .மேயுற வேலைய ஒழுங்காப் பாரு "
"ஆமா தலைவரே...அந்தக் காட்ல இருக்குற பழமெல்லாம் இனிக்குமாமே "
"அதெப்பிடி உனக்குத் தெரியும் "
"அந்தத் தோட்டத்து ஆடுங்க தான் சொல்லுதுங்க.ரொம்ப இனிக்குமாம்.அவுங்க மொதலாளி எவ்ளோ சாப்பிட்டாலும் திட்டமாட்டாராம் "
"இங்க மட்டும் என்ன .எவ்ளோ புல் வேணாலும் சாப்டு .யாரு திட்ட போறா "
"இது எங்களுக்கு தெரியாதாக்கும் " என்று முணுமுணுத்துவிட்டு பிறகு சத்தமாக "ஏன் தலைவரே அங்க போக வேண்டாங்கறீங்க "
"அந்த தோட்டத்துகாரன் நல்லா சாப்பிட விடுவான்.ஆனா ஆடு நல்லா கொளுத்ததுக்கு அப்புறம் வெட்டி முழிங்குடுவான். போயி பாக்குறியா "
"நான் வேணா வேகமா போயி ஒரே ஒரு தடவ சாப்டுட்டு வரட்டா "
"வேண்டாம்"
"ஒடனே ஓடியாந்துருவேன் "
"இப்ப வருவ.ஆனா ஆசை விடாது .மறுபடியும் போக தோணும்.அதான் வேண்டாங்குறேன் "
"சாப்பிட மாட்டேன் தலைவரே.ஒரு தடவ நக்கி மட்டும் "
"வேண்டாம்..நக்குனா கடிக்காம விட மாட்ட "
"மோந்து..."
"ப்ச் "
கோபம் தலைக்கு ஏற,ஆடு கத்தியது ."இவ்வளவு அக்கறை இருக்குல்ல.அப்போ வேற வழியா கூட்டிட்டு போக வேண்டியதுதான .எதுக்கு இந்த வழியா கூட்டிட்டு வந்து எரிச்சல கெளப்பனும்.
"அவன்கிட்ட பேசுனதுக்கு ரெண்டு கட்டு புல்ல மேஞ்சிருக்கலாம் " என்றது தோழி .
மேய்ப்பாளன் சிறிது நேரம் அமைதியாக பார்த்து விட்டு "நீ வேணா அந்த பக்கம் போயி சாப்டுக்கோ.ஆனா அந்த தோட்டத்துகாரன்ட மாட்டுனா நான் பொறுப்பில்ல " என்றான்.
"ஆட்ட காணோமேனு மொதலாளி கேக்க மாட்டாரா"
"நீ வழி மாறி போறது உன் தப்பு .நான் என்ன பண்ண முடியும் "
இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியான ஆடு,மற்றவர்களுடன் புற்களை மேய ஆரம்பித்தது .
ஆனால் இவ்வளவு நேரம் அமைதியாக கவனித்து வந்த தோழி,ஆர்வத்தினால் அதன் பல நாள் கேள்வியை தொடுத்தது
"தலைவரே!ஆடு வழி மாறாம இருக்கறது ஆட்டோட கடமையா இல்ல மேய்ப்பாளனோட வேலையா"