PDA

View Full Version : Babloo



Sanguine Sridhar
25th April 2009, 10:21 AM
ஒரு செவ்வாய் காலை ஆபீஸ் கிளம்பிகொண்டிருந்தேன். அடுத்த வாரம் என்னுடைய ப்ராஜெக்ட் லைவ் போயிருக்கும். அதனால் தினமும் இரவு லேட்-ஆக தான் வீடு திரும்பி கொன்டிருந்தேன். தலை வலித்தது. அம்மாவிடம் காபி கேட்கலாம் என என்னி என் அறை கதவை திறந்தேன். தலையில் சொத் என்று என்னவோ விழுந்தது. பதறி, விலகி பார்த்தால் ஒரு பல்லி, அதை பல்லி என்று கூட சொல்ல முடியாது ரொம்ப பெருசாக ஏதோ ஓணான் போல தோற்றம், சோர சோர என moisturizer போடாத தோல், வாந்தி வந்தது . விழுந்த வேகத்தில் அது தரையில் அப்படியே அசைவின்றி கிடந்தது, என்ன தைரியம்? . ஒரு 1 நிமிடம் கழித்து "அம்மா" என்று அலறினேன்.

"என்னடா? "

"பல்லி!"

"பல்லியா? ஒ பப்லு வா?"

"என்னது பப்லு-வா?"

"ஆமாண்டா இது ஆதம்பாகத்து வீட்டுல இருந்து காலி பன்னி வரும்போது ஏதோ ஒரு மூட்டை-ல சேர்ந்து வந்துச்சு.ரொம்ப சாதுடா, ஒன்னும் பன்னாது, ஜென்டில்மேன் செந்தில் மாதரி கொழு கொழு-னு இருக்குல அதான் அந்த பேரு வச்சேன்."

"அம்மா! நீயும் உன் ரசனையும் ஏதோ குட்டி டைனோசார் மாதரி இருக்கு. தலையில விழுந்துடுச்சு, சனியன்."

"தலையிலயா?" ஒரு நிமிஷம் - என்று கேலண்டரின் பின் புறத்தில் எதையோ பார்த்துவிட்டு அமைதியாக சென்று விட்டாள்.

அம்மா அவ்வளோ சீக்கிரம் எதற்கும் அசைய மாட்டாள். ஆனா இப்போது அப்படி தெரியவில்லை. நானும் கேலண்டரின் பின் புறத்தில் பார்த்தேன், இந்து பண்டிகைகள், கிறிஸ்துவ பண்டிகைகள், இஸ்லாம் ...... மனையடி சாஸ்திரம்.....பல்லி விழுந்த பலன்கள்... ஒ இது தானா? "அடபாவிகளா!" என்று விவேக் ஸ்டைல்-இல் சொல்லிவிட்டு பலன்களை பார்த்தேன், மேல் உதடு - தனவிரயம், கீழ் உதடு - தன லாபம், ஆண்குறி - தரித்திரம் [அங்கெல்லாம் எப்படி?], தலை - மரணம்! தூக்கி வாரி போட்டது! அம்மா நான் பார்த்ததை பார்த்துவிட்டாள்.

"போடா போய் குளி! அதெல்லாம் ஒன்னும் இல்ல!" - ஆனாலும் முகம் சிறுத்து, சோகமாக இருந்தது.

குளித்து விட்டு வெளியே வந்தேன், வீட்டில் எல்லாரும் ஒன்னொன்னு சொல்லி கொண்டிருந்தார்கள்.

"ஜோசியர பாத்ருவோமா? எதாவது பரிகாரம் சொல்லுவார்!" - அம்மா
" பல்லி கரெக்ட்-ஆ தலையிலயா விழுந்துச்சு? கொஞ்சம் வேற எடத்துல பட்டா கூட பலன் பலிக்காது." - அப்பா
" காஞ்சிபுரத்துல வரதராஜர் கோவில்-ல பல்லி செல ஒன்னு இருக்கு அத தொட்டு கும்பிடடா தோஷம் போய்டும்" - தாத்தா.
" நேரா நடக்குற நம்மளே சமயத்துல தடுக்கி விழறோம், அதுங்க தலைகீழா வேற நடக்குதுங்க, balance இல்லாம கீழ விழுந்த்ருகும், இத போய் பெருசா பேசுறீங்களே" - தங்கை புவனா, எங்கள் வீட்டிலே இவள் தான் கொன்சம் wise-ஆக எல்லா விஷயத்தையும் யோசிப்பாள்.

எல்லாரும் இவ்வளோ serious-ஆக பேசுவதை பார்த்து எனக்கும் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. தலை வாரிகொண்டிருந்தேன். அந்த பல்... பப்லு செவுற்றில் மெதுவாக ஏறி கொண்டிருந்தது. நம்மிடம் எதாவது சொல்ல வருகிறதா? ஒரு வேல உண்மையாக இருக்குமோ? பயமாக இருந்தது. அப்பொழுது தான் கவனித்தேன், மூக்கில் இருந்து ரத்தம் வருவது போல இருந்தது. மூளை நரம்பு வெடிசுடுசோ? அவ்வளோ தானா?

" என்னடா மூக்கை சொறிஞ்சுக்கிட்டு இருக்க?" - புவனா கேட்டாள்.

"ஒண்ணுமில்ல போடி"

"என்னடா ரத்தம் வருது....டேய்! அம்மா" என்று அலறினாள்.

குடும்பமே என் மூக்கை ஆராய்ந்து, ஒரு கட்டி உடைந்து ரத்தம் வந்தது என்று முடிவுக்கு வந்தார்கள்.

"டேய் நீ ஆபீஸ் போக வேணாம்" - அம்மா

"சும்மா இருமா! அடுத்த வாரம் ப்ராஜெக்ட் லைவ் போகுது"

"உன்னோட வேல செய்றவங்க பாதுபாங்க, நீ போக வேணாம்!"

"என் கூட வேல செய்றது கவிதா மட்டும் தான். அவ செரியான சோம்பேறி மா! ஆ ஊ நா
வயிற வலிக்குதுனு லீவ்-வ போட்டுறா! மாசத்துல மூணு நாள் சொன்னா பரவால்ல!"

"விடு சித்ரா அவன் போகட்டும் - சாயங்காலம் சீக்கிரம் வந்துடுடா காஞ்சிபுரம் போயிட்டு வந்துரலாம்!" - அப்பா சொனார்.

பைக்-ஐ எடுத்து தெரு மொககில் திரும்பினேன். பக்கத்துக்கு வீடு சுப்புடு தாத்தா சைக்கிள்-இல் வந்து கொண்டிருந்தார். என்னை அறியமால் அவர் மீது மோதி விட்டேன். "பெருமாளே!" என்று சொல்லி கொன்டே slow motion-il கீழே விழுந்தார். "சாரி தாத்தா" என்று சொல்லி அவரை வீடு வரை கொண்டு போய் சேர்த்தேன். மாமி என்னை சாரா மாரியாக திட்டினாள். என்ன நினைத்தாளோ கடைசியாக ஒரு காபி கிடைத்தது .

என் ஆபீஸ் வலது பக்கம் இருக்கும் நான் இடது பக்கம் வந்து கொன்டிருந்தேன். பின் புறம் பாக்காமல் திருப்பினேன். ஷேர் ஆட்டோ ஒரு sudden break அடித்து நின்றது. ஆடோகாரன் முறையே "தே, தூ, பு, பூ" என்று ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தைகளால்
திட்டினான். "Indicator போட்டு திருபுடா மூதேவி!" என்பது மட்டும் Hub-in ரூல்ஸ் படி இங்கே பதியும்.

லிப்ட்-இல் ஏறினேன். மனது கஷ்டமாக இருந்தது. என்ன இப்படி ஆகுதே! நெஞ்சு வலி
பது போல இருந்தது. என் சீட்டில் வந்து உக்காந்த பிறகு நெஞ்சு வலி அதிகமானது! ஒரு வேல ஹார்ட் அட்டாக்-எ ? என் பாஸ் சிடம் சென்றேன். அவர் இந்த 3 வருடத்தில் இரண்டு முறை bypass செய்துகொண்டவர்.

"வா! requirement 3.4 complete பண்ணிடியாடா? "
"இல்ல பாஸ்! ஹார்ட் அட்டாக் சிம்ப்டோம்ஸ் என்ன?"
"ஏன்டா?" அதிர்ச்சியாய்.

சீட்டில் உக்காந்த பிறகு கொஞ்சம் நெஞ்சு வலி குறைந்திறந்தது! கவிதா வந்திருந்தாள். இன்று அழக்காக இருந்த மாதரி தெரிந்தது. அவளையே வெறித்து பாத்து கொன்டிருந்தேன்.

"என்ன?" என்றாள்.
"ஒண்ணுமில்ல, இன்னைக்கு எதாவது விசேஷமா?"
"ஏன்?"
"இல்ல பிரெஷ்-ஷா இருக்குற?"

ஜொள்ளு-ஆ விடுறேன்? விட்டுடுபோறேன், நாளைக்கு உடுறதுக்கு இருக்கேன்னோ இல்லைய்யோ? அடுத்த வாரம் project நான் இல்லாம லைவ் போகுமா? இவள் முடிச்ருவாளா? எனக்காக லைவ் ட்டே-ஐ தள்ளி வைத்து மௌன அஞ்சலி செலுத்துவாங்கலா?

மதியம் சாபிட்டு விட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். மனது ஓடவில்லை... கொஞ்சம் வாந்தி வருவது போல இருந்தது. Restroom-il குடம் குடமாக வாந்தி எடுத்தேன். மயக்கம் வருவது போல இருந்தது.

பாஸ் கேட்டார்

"Are you alright?"

"No"

வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அம்மா

"டேய் வாடா வா! போய் உன் ரூம்-ல போய் பாரு!"

போய் பார்த்தேன்..... பப்லு பணாலாகி கிடந்தது! திரும்பவும் கேலண்டரின் பின் புறத்தை பார்த்தேன். தலை - மரணம்!!

P_R
25th April 2009, 10:48 AM
Well written Sridhar :D
:lol: at many places

Naachiappan vaazhkkai varalaarukku appuram romba gap vittutteenga. adikkadi ezudhunga. :clap:

madhu
25th April 2009, 12:25 PM
தூள் பெக்ஸ்...

நல்ல வேளை ... எங்க வீட்டு பஞ்சாங்கம், காலண்டர் பின்னாலே தலை-கலகம்-னு போட்டிருக்கு...

நமக்கோ.. பல்லிக்கோ... எதுக்கானாலும் சரிதான்..

pavalamani pragasam
25th April 2009, 09:42 PM
A kavithai I wrote long ago:

பலன்

சுவற்றில் பல்லி
சொன்னது கௌளி
நடக்கும் பலன்
மாறும் நலன்
திசைக்கொப்ப
பழங்கதையது
செல்ல நாயதுவும்
அடமாய் கேட்டது
பல்லி வேட்டை
பரிவு செய்ததில்
பரிதாப மரணம்
கௌளி பலன்
பஞ்சாங்கம் ஏதுக்கு

Sanguine Sridhar
26th April 2009, 02:35 PM
Thanks PR and Madhu! :D

Nice poem PP mam :)

pavalamani pragasam
26th April 2009, 02:46 PM
:ty:

VENKIRAJA
26th April 2009, 05:16 PM
சோர சோர என moisturizer போடாத தோல்,

ஆரம்பமே அசத்தல்! 8-)



ஜென்டில்மேன் செந்தில் மாதரி கொழு கொழு-னு இருக்குல அதான் அந்த பேரு வச்சேன்."

அண்ணன் ரசிகர்னு நிரூபிக்கறீங்க...சபாஷ்! :thumbsup:



ஆண்குறி - தரித்திரம் [அங்கெல்லாம் எப்படி?]

அக்மார்க் ஸ்ரீதர் அண்ணே சாயல்! :notworthy:



" நேரா நடக்குற நம்மளே சமயத்துல தடுக்கி விழறோம், அதுங்க தலைகீழா வேற நடக்குதுங்க, balance இல்லாம கீழ விழுந்த்ருகும், இத போய் பெருசா பேசுறீங்களே" - தங்கை புவனா, எங்கள் வீட்டிலே இவள் தான் கொன்சம் wise-ஆக எல்லா விஷயத்தையும் யோசிப்பாள்.

எல்லா வீட்டுலயும் இப்படித்தானோ? ;)



பப்லு செவுற்றில் மெதுவாக ஏறி கொண்டிருந்தது. நம்மிடம் எதாவது சொல்ல வருகிறதா?

தேர்ந்த படைப்புத்திறனின் வெளிப்பாடு :D



ஆடோகாரன் முறையே "தே, தூ, பு, பூ" என்று ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தைகளால்
திட்டினான். "Indicator போட்டு திருபுடா மூதேவி!" என்பது மட்டும் Hub-in ரூல்ஸ் படி இங்கே பதியும்.

சொரீங்க ஆபீஸர் :lol2:



"ஏன்டா?" அதிர்ச்சியாய்.

பூர்ணம் விஸ்வநாதனை நினைத்துக்கொண்டேன். :lol:



ஜொள்ளு-ஆ விடுறேன்? விட்டுடுபோறேன், நாளைக்கு உடுறதுக்கு இருக்கேன்னோ இல்லைய்யோ?
அவனவனுக்கு ஆயிரம் கவலை, நமக்கு ஒரே கவலை! :slurp:

மொத்ததுல அற்புதம் அற்புதம்! :clap:

ArulprakasH
26th April 2009, 05:38 PM
Sridhar anna kalakkal.. :clap:

Sanguine Sridhar
26th April 2009, 09:06 PM
Venki and Arul thank you soooo much!! :D

littlemaster1982
26th April 2009, 09:54 PM
Good one SS!!! PR sonna maadhiri "adikkadi ezhudhunga" :D

sarna_blr
26th April 2009, 10:16 PM
SS :clap: :clap: kalakkureenga :)

but engEyO eppavO padichchamaadhiri irukku :?

wrap07
27th April 2009, 11:17 AM
sridhar :D :clap:
natural flow with nagaichuvai.

complicateur
27th April 2009, 04:38 PM
Humor is hard to write. Quite a few :lol: moments in the story. Nice work Sridhar.

Sanguine Sridhar
27th April 2009, 10:58 PM
Thanks LM, Sarna, Shankar and Compli! :D