R.Latha
30th March 2009, 01:12 PM
Thread for Vijay antony albums & news...
---
இசையால் நடிப்பதற்கு இசையவில்லை!- விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரிகார்டிங் ஸ்டுடியோவுக்கு இரண்டு பூட்டுகள். கேட்டில் பகலிலும் தொங்கும் பித்தளை பூட்டு வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு மட்டும் எளிதில் திறந்து கொள்ளும். இரண்டாவது பூட்டு- அந்த ஸ்டுடியோ சாளரம் உட்பட அனைத்தையும் அடைத்து சுவர்களுக்கும் போட்டிருக்கும் வாய்பூட்டு. இங்குதான் விஜய்யின் இசை ராஜ்ஜியத்தில், நாக்குமூக்கு' போன்ற அதிரடி பாடல்களும், உன் தலைமுடி உதிர்வதைக்கூட' போன்ற மெலடிப் பாடல்களும் தங்களை கௌரவப்படுத்திக் கொள்கின்றன! நாம் போனபோதும் ஏதோ படத்தின் பாடலைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அவரோடு பேசினோம். எந்த விஷயத்தையும் மறைத்துப் பூட்டிக்கொள்ளாமல் இயல்பாகப் பேசினார்:
பரபரப்பான இசையமைப்பாளராக மாறியிருக்கிறீர்கள். இந்நிலையிலிருந்து உங்கள் ஆரம்பக்கட்ட போராட்ட நிலையைத் திரும்பிப் பார்க்கிறபோது எப்படி இருக்கிறது?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வளர்ந்துவிட்டேன். சாதித்துவிட்டேன், திரும்பிப் பார்க்கிறேன் என்றெல்லாம் என்னால் நினைக்க முடியவில்லை. கண்ணுக்குத் தெரிந்து எவ்வளவோ விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கிறது. பாட்டுகள் வெற்றி பெறலாம். ரீ-ரிகார்டிங் பிரமாதமாகப் பேசப்படலாம். ஆனால் அதற்குள் இருக்கிற விஷயங்களை ஊடுருவிப் பார்த்தோமானால் குறைகள் தெரிகின்றன. இதையே அதிகம் நினைத்து மேம்பட வேண்டியவற்றைச் செய்து வருகிறேன். அதற்காகப் பழைய விஷயங்களை மறக்கக்கூடியவன் என்று அர்த்தம் இல்லை. நட்பில் தொடங்கி சின்னச்சின்ன விஷயங்களைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள கூடியவன்தான்.
வாய்ப்புக்காகப் போராடிய காலத்தில் நீங்கள் திட்டமிட்டவற்றையெல்லாம் இப்போது நிறைவேற்ற முடிகிறதா?
ஆரம்ப காலங்களில் இசையமைப்பதில் சுதந்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது என்னுடைய இசை வெற்றிபெற்று இருப்பதால் நான் எதிர்பார்த்தது கிடைக்கிறது. என்னுடைய விருப்பப்படி இசையமைக்கட்டுமா? என்றால் உடனே அங்கீகரிக்கிறார்கள். இதற்குத்தான் நான் ஏங்கினேன். ஏனென்றால் அங்கீகாரம் இல்லாதபோது யாருடைய இசையையாவது கொண்டுவந்து இதைப்போல் மியூசிக் போடுங்கள்... அதைப்போல் மியூசிக் போடுங்கள்... என்பார்கள். அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். இவரிடம் கொடுத்தால் சரியாகச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தைத்தான் நான் தேடினேன். மற்றபடி இசையமைக்கிறபோது திட்டமிடலோடு உட்காருவதில்லை. திட்டமிடும் போது, இறுக்கமான சூழலில் மனம் சொல்வது மட்டுமே இசையாக வரும். அப்படி இல்லாமல் மனதை நெகிழ்வாக, இயல்பாக வைத்திருந்தாலே எனக்குத் தேவையானது கிடைக்கிறது. இசை தானாகக் கிடைப்பது. அதைப்போல இசை விருப்பமும் நாளுக்கு நாள் மாறுபடலாம். நாளைக்கு என்ன பிடிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல்தான் இசையமைப்பேன்.
மெல்லிசை பாடல்தான் உங்கள் விருப்பமென்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இசையமைப்பில் பெரும்பாலானவை அதிரடிப் பாடல்களாகவே இருக்கின்றனவே?
சப்போஸ் உன்ன காதலிச்சு', நெஞ்சாங்கூட்டில்', பூமிக்கு வெளிச்சமெல்லாம்', ஏன் எனக்கு மயக்கம்' உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியவில்லை' என நிறைய மெலடிப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால், நாக்குமூக்கு' பாடல் எல்லா மெலடிகளையும் தாண்டி புதிய சாதனை படைத்திருக்கிறது. அதனால் விஜய் ஆண்டனி என்றாலே நாக்குமூக்கு' என்று ஒரு விசிட்டிங் கார்டுபோல ஆகிவிட்டது.
என்னைப் பொறுத்தவரை மெலடியை நல்ல பாட்டு என்றும் குத்துபாட்டை மோசமான பாட்டு என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாவகையான பாடலுக்கும் அடிநாதமாக ஓர் உயிர் இருக்கும். அந்த உயிரை எனது உயிரைக் கொடுத்தாவது இசைக்க நினைக்கிறேன். அப்படி இசையமைத்ததுதான் நாக்கமூக்கு பாடலும். அடுத்து ஒரு மெலடிப் பாடல் வெற்றி பெறும். அடுத்து அதிரடி என சுழற்சியாக மக்கள் ரசனையைப் பூர்த்தி செய்வேன்.
நல்ல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் வார்த்தைகளை முழுங்குகிற பாடல்களாகவே வருவது ஏன்?
இப்போது வார்த்தைகள் முழுங்கப்படுவதே இல்லை. முன்பிருந்த தொழில்நுட்பத்திற்கும் இப்போதைய தொழில்நுட்பத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்காகவே இப்போது கோடிக்கோடியாகச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தம் குறைவாக வைத்து எந்தப் பாட்டையும் கேட்டுப் பாருங்கள். எல்லா வரிகளும் தெளிவாகக் கேட்கும். யாரும் அதை யோசிப்பதே இல்லை. ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்வதால் மக்களுடைய மனநிலையும் அப்படியே மாறிப் போயிருக்கிறது.
இசையமைப்பாளர் துறையும் போட்டிகள் நிறைந்த துறையாக மாறிவிட்டதே?
இதைப் போட்டியாக நினைக்கவில்லை. வெற்றிக்கொடுக்க முடிகிறவரை மட்டும் சினிமாத்துறையில் இருப்பேன். எப்போது என்னால் ஒழுங்காக இசையமைக்க முடியவில்லை என்று தோன்றுகிறதோ அன்று நேர்மையாக இந்தத் துறையை விட்டு போய்விடுவேன். போட்டிப் போடவேண்டும் என நினைக்க மாட்டேன். சுதந்திரத்துடன் பிடித்த காரியத்தைச் செய்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான ஆஸ்கர் விருது வாங்கியிருந்தாலும்கூட நம்முடைய இசையமைப்பாளர்கள் உலகத்தரமான இசையைக் கொடுப்பதில்லை என்கிற கருத்து நிலவுகிறதே?
வெளிநாட்டவர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு என்பது என் முதல் நிலை. ஆங்கிலத்தில் படம் எடுத்தால் விருது கிடைக்கப் போகிறது. அடுத்து நம்முடைய இசை ஏன் உலகத் தரத்துக்குப் போகவில்லை என்றால் தொழில்நுட்பங்கள் அதிகம் இணைத்துக் கொள்வதில்லை. மேற்கத்திய இசையைக் கேட்டீர்கள் என்றால், உச்சஸ்தாயில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். அதற்குக் கீழ் ஸ்தாயில் ஒரு குரல் ஒலிக்கும். அதற்கும் கீழாக பேஸில் ஒருவர் பாடுவார். நம்முடைய இசை நிர்ணயிக்கப்பட்ட காலப்பிரமாணத்தில் சஞ்சரிக்கக் கூடியது. மேற்கத்திய இசை வடிவங்களை மீறி கர்நாடக இசைக்கென்று தனி வீர்யம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. மேட்ரிக்ஸ்' என்கிற ஆங்கிலப் படத்தில் தம்பூராவில் ஓம்' என்கிற பிரணவ மந்திரத்தை ஒலிக்க வைத்திருப்பார்கள். அதைப்போல பல படங்களில் தபேலாவையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையும் மீறி நம்முடைய கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானியும் வளரவேண்டும் என்றால் ப்யூஷன் மாதிரியும் இல்லாமல் வேறு மாதிரியாகச் செய்ய வேண்டும். அதையும் சிலர் செய்கிறார்கள்.
இரவுகளில் இசையமைப்பது? வெளிநாடுகளுக்கு சென்று மெட்டமைக்கிற வகையில் நீங்களும் வருகிறீர்களா?
இல்லை. சில இரவுகளில் தூக்கம் வராது. அந்த நேரத்தில் வேலை செய்வேன். எப்போதெல்லாம் சுறுசுறுப்பாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் இசையமைக்கத் தொடங்கிவிடுவேன். வெளிநாடுகளுக்குச் சென்றால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இசையமைக்கலாம் என்பதற்காக செல்வார்களே தவிர, மெட்டுகளுக்காக இல்லை. இதுவரை எனக்கு அதுபோன்ற வாய்ப்பு வரவில்லை. வந்தால் நானும் போவேன்.
உங்கள் இசையில் மேனுவல் ஆர்க்கெஸ்ட்ரா'வை எந்தளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?
கிளப்பில் பாடக்கூடிய டிஸ்கோ பாட்டில் தபேலாவையும் மிருதங்கத்தையும் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்தினால் யாரும் ஆடமாட்டார்கள். நாக்குமூக்கு' நெஞ்சாங்கூட்டில் நீயே' எனத் தேவைப்படுகிற பாடல்களுக்கெல்லாம் கட்டாயம் பயன்படுத்துகிறேன்.
ரீமிக்ஸ் பாடல்களுக்கு எதிரான கருத்து நிலவுகிறதே?
ரீமிக்ஸ் செய்வதை குற்றமாகப் பார்க்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் மக்கள் ரசனையைப் பூர்த்தி செய்வதற்காகச் செய்ய சொல்கிறார்கள். இது தொழில் தர்மம். மறுக்கமுடியாது. நல்ல பாடலை எடுத்துச் செய்கிறோம். அதைக் கெடுத்துவிடாமல் செய்வது என்பது அடுத்தகட்ட தொழில் தர்மம். ரீமிக்ஸ் செய்தாலும் அந்தப் பாட்டிற்கு ஒரிஜினல் மெட்டமைத்த இசையமைப்பாளரின் பெயரையே போடவேண்டும் என்பது என் கருத்து.
ரிங்டோனாகப் பயன்படுத்துகிற பாடல்களுக்கு ராயல்டி தரவேண்டுமா?
தரவேண்டும் என்பது முறைதான். ஆனால் முறையாகத் தயாரிப்பாளர்களுக்குத்தான் தரவேண்டும். இசையமைப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். படம் ஓடாவிட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது தயாரிப்பாளர்களே. அதனால் அவர்களுக்கு அதிகம் கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட சதவிதம் இசையமைப்பாளர்களுக்குத் தரலாம்.
திரையில் தோன்றுகிற எண்ணம் உண்டா?
வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அதிகப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு நடிப்பதற்கு நான் இசையவில்லை!
http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090322062701&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4