PDA

View Full Version : Imayam TV



R.Latha
16th March 2009, 01:38 PM
[tscii:725b2a7dbc]சபாஷ் குடும்பம்



இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சி ‘சபாஷ் குடும்பம்'.

இதில் வாரம்தோறும் இரண்டு குடும்பங்கள் இரு அணியாகப் பிரிந்து போட்டியிடும். குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள அன்பு, பாசம், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிமுறை, சமயோசிதத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து சுற்றுப் போட்டிகள் நடத்தப்படும்.

இந்த போட்டிகளில் வென்று தாங்கள்தான் சந்தோஷமான குடும்பம் என நிருபிக்கும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும். சனிக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியை காயத்ரி ப்ரியா தொகுத்து வழங்குகிறார்.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090311130055&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:725b2a7dbc]

R.Latha
23rd March 2009, 12:30 PM
அமுத கீதம்

இமயம் டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி "அமுத கீதம்.''

திரையுலகம் தோன்றியது முதல், காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்கள் பல உள்ளன. அந்த அருமையான பாடல்களை இன்றைய பாடகர்கள் தங்கள் தேன் குரலில் பாடி இசை அமுதமாய் பொழியும் நிகழ்ச்சியே அமுத கீதம்.

பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா பாடிய பாடல்களை அவரது மகன் சந்திரசேகரின் இனிமையான நினைவுகளோடு வித்யா தொகுத்து வழங்குகிறார்.

R.Latha
24th March 2009, 01:02 PM
[tscii:393b60fd8d]பாடவா என் பாடலை

இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி ‘பாடவா என் பாடலை'.

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு, திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு மேடை அமைத்துத் தருவதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுடன் தொகுப்பாளினி ஸ்ருதி சுவாரஸ்யமாகக் கலந்துரையாடி இசை குறித்த பல தகவல்களை நேயர்களுக்கு அளிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்த விரும்புபவர்கள் ‘இமயம் டி.வி., தபால் பெட்டி எண்: 6050, சென்னை-83' என்ற முகவரியிலும், 98844 03035 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி வாரம்தோறும் புதன்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[/tscii:393b60fd8d]

R.Latha
30th March 2009, 12:31 PM
[tscii:0152eaf627]ஜாலி தர்பார்

இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜாலி தர்பார்' நகைச்சுவை நிகழ்ச்சி, பல புதிய மாற்றங்களுடன் புதிய அரங்கில் ஒளிபரப்பாகிறது. சம கால பிரச்னைகளை திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளுடன் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது. காமெடி நடிகர்கள் சுருளிமோகன், லொள்ளு ஆண்டனி, ரவி ஆகியோர் இணைந்து வழங்கும் ‘ஜாலி தர்பார்' நிகழ்ச்சி, ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090328101959&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:0152eaf627]

R.Latha
6th April 2009, 01:54 PM
பாடவா என் பாடலை

இமயம் டிவியில் புதன் தோறும் இரவு 7 மணிக்கும் மற்றும் வெள்ளி பிற்பகல் 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி "பாடவா என் பாடலை.'' திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு சரியான மேடை அமைத்துத் தருவதே இந்த நிகழ்ச்சி. ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார்.

R.Latha
6th April 2009, 03:05 PM
[tscii:60666efc48]இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி ‘கலக்கல் அரங்கம்'. இதில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான, வினோதமான சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முன்னணி கதாநாயகி சொப்பன சுந்தரி (வயது 55), குருட்டாம் போக்கில் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரன், கப்சிப் என்று கபடி விளையாடும் கபடி வீரர் கந்தசாமி போன்றோர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களோடு நேயர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேள்விகளையும் விமர்சனங்களையும் தெரிவிக்கலாம். நிகழ்ச்சியின் இடையே திரைப்பட காமெடி நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

வசனம் -விஜயகோபாலன். இயக்கம் -ஜெய்குமார். கலகலப்பான இந்த காமெடி நிகழ்ச்சி தினமும் இரவு 8 மணிக்கு இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.




[/tscii:60666efc48]

R.Latha
20th April 2009, 12:59 PM
ஜாலி தர்பார்



இமயம் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, "ஜாலி தர்பார்'' காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் புதுப்பொலிவுடன் நகைச்சுவை சரவெடியாக வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறார்கள், காமெடி நடிகர்கள் சுருளிமோகன், லொள்ளு ஆன்டனி மற்றும் ரவி ஆகியோர்.

இயக்கம்: மனுமயன்.

MEDIA ASIA
23rd April 2009, 12:49 AM
Does Imayam TV have a website???

R.Latha
4th May 2009, 03:31 PM
Media Asia no idea

கதையின் கதை

ஒவ்வொரு வாரமும் திரைப்பட இயக்குநர்கள் கதை உருவாக்கிய விதம் பற்றி கூறும் `கதையின் கதை' நிகழ்ச்சி இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தங்கள் இயக்கத்தில் உருவான படங்களைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதோடு படப்பிடிப்பின்போது நடந்த சுவராஸ்யமான விஷயங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதன் மறு ஒளிபரப்பு சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு.

aanaa
6th June 2009, 07:38 PM
இது எப்படி இருக்கு?



இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மாறுபட்ட, வித்தியாசமான நகைச்சுவை, `இது எப்படி இருக்கு?'

சினிமா பிரபலங்களின் நேர்காணல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், அவர்களது பேட்டிகளை கண்டு அவர்களே ஆச்சரியப்படும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

நடிகர் நடிகைகளும், திரை இயக்குநர்களும் சீரியஸாக வழங்கிய பதில்கள், வித்தியாசமான, விளையாட்டான, வில்லங்கமான கேள்விகள் மூலம் நகைச்சுவை பதில்களாக மாறுவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

லொள்ளு சபா ஈஸ்டரும், தொகுப்பாளர் ஜாலி ஸ்ரீதரும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, இமயம் தொலைக்காட்சியில் `செவ்வாய் தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:23 PM
பிரபலமா? ப்ராப்ளமா?



எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ சோதனைகள், எத்தனையோ அவமானங்கள் என பல தடைகளை தாண்டித்தான் மனிதன் பிரபலமாகிறான்.

இப்படி பிரபலம் ஆவதற்கு அவன் கடக்க வேண்டிய ப்ராபளங்கள் ஏராளம். பிரபலம் ஆன பிறகும் அவன் சந்திக்க வேண்டிய ப்ராபளங்கள் ஏராளம்.

இதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? அவர்களின் சுவாரசியமான அனுபவங்கள் எப்படி? என்பதை வெற்றி பெற்ற பிரபலங்கள் எடுத்துக் கூறும் வித்தியாசமான, புதுமையான நிகழ்ச்சியே `பிரபலமா? ப்ராபளமா?'

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், மிருதங்க வித்வான் உமையாள்புரம் கே.சிவராமன் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து கலந்து கொள்கிறார்கள்.

சின்னத்திரை நடிகர் சாய்ராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சிவகுமார் இயக்குகிறார். ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இமயம் டிவி.யில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி: தினதந்தி