PDA

View Full Version : Kalyanam



R.Latha
28th April 2009, 01:10 PM
கல்யாணத்தில் சஸ்பென்ஸ்

சன் டிவியில் நடிகை மீனா நடிக்கும் தொடர், `கல்யாணம்.' குடும்ப சூழ்நிலையில் நடைபெறும் திடுக்கிடும் சம்பவங்களை அடிப்படையாய் வைத்து பின்னப்பட்ட ஒரு குடும்ப கதை தான் கல்யாணம்.

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறாள் சுஜாதா. `மறைக்கப்பட்ட உண்மைகள்' புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஆதித்யனை சந்திக்கிறாள். தன் சந்தேகங்களை அவர் சுஜாதாவிடம் சொல்ல, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள் சுஜாதா. அதன் தொடர்பாக அடுக்கடுக்காய் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெறுகிறது.

சுஜாதா புத்தகத்தில் குறிப்பிட்ட உண்மைகளை கண்டுபிடித்தாளா இல்லையா? ஏன் அவர் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள்? புத்தகத்திலிருந்த சம்பவத்திற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த, மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?

இவை அனைத்திற்கும் விடையாக வருகிறது அடுத்தடுத்த எபிசோடுகள்.

R.Latha
19th May 2009, 12:17 PM
கல்யாண சென்டிமென்ட்



நடிகை மீனா உற்சாகமாக இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கல்யாணம் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்கத் தொடங்கிய நேரத்தில் கூடவே மீனாவின் கல்யாணச் செய்தியும் வந்துவிட்டது தான் சந்தோஷத்துக்கு காரணம்.

அதாவது கல்யாணம் தொடரில் நடித்த நேரம் நிஜமாகவே கல்யாணப் பெண்ணாகிவிட்டார் மீனா.

திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மீனா கல்யாணம் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வேன் என்றும் கூறி கல்யாணம் தொடர் யுனிட்டையும் உற்சாகமாக்கியிருக்கிறார்.

R.Latha
25th May 2009, 12:30 PM
ராஜ்மல்லிகா -துரைராஜ் தம்பதியின் மகள் மீனா. இவர் சிவாஜி
கணேசன் நடித்த, "நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறி
முகமானார். பிறகு, "அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற பல படங்களில்
குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அடுத்து, "ஒரு புதிய கதை' படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமான மீனா, ராஜ்கிரணுக்கு ஜோடியாக
நடித்த, "என் ராசாவின் மனசிலே' படம் பெரும் புகழை பெற்றுத் தந்
தது.
தொடர்ந்து ரஜினிகாந்துடன் "எஜமான்', "முத்து', "வீரா' போன்ற
பல படங்களிலும், கமல்ஹாசனுடன் "அவ்வை சண்முகி' படத்
திலும் நடித்து நெம்பர் ஒன் கதாநாயகியாக திகழந்து வந்த
மீனா, ஏராளமான தெலுங்கு, மலையாளம், கன்னடம்
ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் "லட்சுமி' என்ற தொடரில் நடித்த
மீனா, இப்போது நடித்து வரும் தொடர், "கல்யாணம்'.
இந்தத் தொடரில் நடிக்கத் துவங்கியதும் மீனாவுக்
கும் திருமணம் முடிவாகிவிட்டது.
மீனாவை மணக்கப் போகும் மணமகனின்
பெயர் வித்யாசாகர். பெங்களூரைச் சேர்ந்த
கம்ப்யூட்டர் என்ஜினீயர் இவர். பெற்
றோர் பார்த்து நிச்சயம் செய்த திரும
ணம் இது.
இவர்களது திருமண நிச்சயதார்த்த
நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை
சைதாப்பேட்டையிலுள்ள மீனா
வின் வீட்டில் நடந்தது. வருகிற
ஜூலை 12-ஆம் தேதி திரும
ணமும், ஜூலை 14-ஆம்
தேதி சென்னையில் வர
வேற்பு நிகழ்ச்சியும் நடை
பெறவுள்ளது.
""நல்ல வேடங்கள்
அமைந்தால் திருமணத்திற்
குப் பிறகும் சின்னத்திரை மற்
றும் சினிமாவில் நடிப்பேன்''என்கிறார் மீனா.

R.Latha
25th May 2009, 12:30 PM
ராஜ்மல்லிகா -துரைராஜ் தம்பதியின் மகள் மீனா. இவர் சிவாஜி
கணேசன் நடித்த, "நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறி
முகமானார். பிறகு, "அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற பல படங்களில்
குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அடுத்து, "ஒரு புதிய கதை' படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமான மீனா, ராஜ்கிரணுக்கு ஜோடியாக
நடித்த, "என் ராசாவின் மனசிலே' படம் பெரும் புகழை பெற்றுத் தந்
தது.
தொடர்ந்து ரஜினிகாந்துடன் "எஜமான்', "முத்து', "வீரா' போன்ற
பல படங்களிலும், கமல்ஹாசனுடன் "அவ்வை சண்முகி' படத்
திலும் நடித்து நெம்பர் ஒன் கதாநாயகியாக திகழந்து வந்த
மீனா, ஏராளமான தெலுங்கு, மலையாளம், கன்னடம்
ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் "லட்சுமி' என்ற தொடரில் நடித்த
மீனா, இப்போது நடித்து வரும் தொடர், "கல்யாணம்'.
இந்தத் தொடரில் நடிக்கத் துவங்கியதும் மீனாவுக்
கும் திருமணம் முடிவாகிவிட்டது.
மீனாவை மணக்கப் போகும் மணமகனின்
பெயர் வித்யாசாகர். பெங்களூரைச் சேர்ந்த
கம்ப்யூட்டர் என்ஜினீயர் இவர். பெற்
றோர் பார்த்து நிச்சயம் செய்த திரும
ணம் இது.
இவர்களது திருமண நிச்சயதார்த்த
நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை
சைதாப்பேட்டையிலுள்ள மீனா
வின் வீட்டில் நடந்தது. வருகிற
ஜூலை 12-ஆம் தேதி திரும
ணமும், ஜூலை 14-ஆம்
தேதி சென்னையில் வர
வேற்பு நிகழ்ச்சியும் நடை
பெறவுள்ளது.
""நல்ல வேடங்கள்
அமைந்தால் திருமணத்திற்
குப் பிறகும் சின்னத்திரை மற்
றும் சினிமாவில் நடிப்பேன்''என்கிறார் மீனா.

aanaa
12th July 2009, 08:10 AM
துப்பறியும் மீனா



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கல்யாணம். நடிகை மீனா இரட்டைவேடத்தில் நடிக்கும் இந்த தொடர் எதிர்பார்ப்புக்குரியதாகி இருக்கிறது.

மத்தியமந்திரியின் கொலைக்கு மீரா-ரஞ்சன் இருவரும் காரணமாகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு மாயாவதி கொலையாளியை தேடும் வேட்டையை தீவிரமாக்குகிறார்.அதில் மீரா பற்றிய தகவல் கிடைத்து புலன் விசாரணையை தொடரும்போது மீராவுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தது அவள்தோழி ஆர்த்தி எனத்தெரிகிறது. ஆனால் போலீஸ் வளையத்திற்குள் வரும்முன்னே ஆர்த்தி மரணத்தை தழுவி விடுகிறாள்.

இந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து மீராவைப் போன்றே தோற்றம் கொண்ட ஜேர்னலிஸ்ட் சுஜாதா ஊருக்கு வருகிறாள். தன் உயிர்த்தோழி ஆர்த்தியின் கொடூர மரணம் அவளைப் பாதித்ததில் இந்த திடீர் வரவு.

கொலையாளி மீராவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக போலீஸ் ஆர்த்தியின் குடும்பத்தை பந்தாடுகிறது. ஆர்த்தியின் அப்பாவை ஜெயிலில் அடைக்கிறது. அம்மாவோ அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்படுகிறார். பத்திரிகைத்துறையில் பணியாற்றும் சுஜாதா தன் பாணியில் துப்புதுலக்கி ஆர்த்தியின் காதலன் கணேஷை கண்டுபிடிக்கிறாள்.அவன் வீட்டுக்குப் போனவள் `நான்தான் கணேஷின் சிங்கப்பூர் காதலி' என்ற பொய்யை அவிழ்த்து விடுகிறாள். கணேஷின் பெற்றோர் இதை நம்பிவிட, கணேஷ் தான்அதிர்ந்துபோகிறான்.

கொலையாளி மீராவை ஆர்த்தி வீட்டில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தது கணேஷ்தான் என்று தெரிய வருகிறது. அதனால் ஆர்த்தியின் திடீர் மரணத்திற்கு கணேஷ் தான் காரணம் என சுஜாதா நினைக்கிறாள். அதையே கணேஷிடமும் கேட்கிறாள். அவனோ அதை மறுக்கிறான். அவன் சொன்னதில் உண்மை இருப்பதை உணர்ந்து அப்போதைக்கு அமைதியாகி விடுகிறாள் சுஜாதா.

இந்நிலையில் கணேஷ்- சுஜாதா திருமணத்துக்கு கணேஷின் பெற்றோர் ஏற்பாடு செய்கிறார்கள்.இந்த நேரத்தில் ஆர்த்தி குடும்பத்துடன் மீரா இருப்பது போன்ற ஒரு புகைப்படம் போலீஸ் சூப்பிரண்டு மாயாவதி கையில் கிடைக்கிறது.

கொலையாளி மீராவைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் இருக்கும் சுஜாதாவை போலீஸ் மீராவாக கருதி கைது செய்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து சுஜாதாவால் மீண்டு வர முடிகிறதா? மீரா இறந்திருந்தால் சுஜாதாவின் நிலை என்னவாகும்? நடக்கவிருந்த அவள் கல்யாணம் அவ்வளவுதானா?

இப்பமடி பரபரவென்று நகரும் காட்சிகள் தொடரை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. மீரா-சுஜாதா என இரண்டு கேரக்டர்களிலும் நடிகை மீனா வேறுபடுத்திக்காட்டும் வித்தியாசங்களும் தொடருக்கு பிளஸ்சாகியிருக்கிறது'' என்கிறார், தொடரின் இயக்குனர் விடுதலை.

தொடருக்கு திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: திருஞானசுந்தரம். ஒளிப்பதிவு: நாககிருஷ்ணன். இயக்கம்: விடுதலை.



நன்றி: தினதந்தி

aanaa
9th August 2009, 03:16 AM
நேற்றுடன் நிறவுற்றது.

short and Good