View Full Version : TFM Lyricist
R.Latha
11th March 2009, 01:40 PM
[tscii:435d808a89]கவிஞர் வைரமுத்துவுக்கு ‘சாதனா சம்மான்' விருது
சென்னை, மார்ச் 22: கவிஞர் வைரமுத்துவுக்கு அகில இந்திய அளவில் வழங்கப்படும் இலக்கிய விருதான சாதனா சம்மான் தேசிய விருதை பாரதிய பாஷா பரிஷத் வழங்குகிறது.
கோல்கத்தாவில் இயங்கி வரும் பாரதிய பாஷா பரிஷத் என்ற இந்திய மொழிக் கழகம், தேசிய அளவில் 14 மொழிகளின் சிறந்த படைப்பாளிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பணிகளுக்காக இந்த ஆண்டின் விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இலக்கியம்-நாவல்-திரைப்பாட்டு மூலமாக அவர் இந்திய இலக்கியத்திற்கு செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக பாரதிய பாஷா பரிஷத் அறிவித்திருக்கிறது.
ஜெயகாந்தன், சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் இந்த விருதை ஏற்கெனவே பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 18-ம் தேதி கோல்கத்தாவில் நடைபெறும் விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு 51,000 ரூபாய் பொற்கிழியும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படுகிறது.
வைரமுத்துவின் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்த்துப்பரப்பும் பொறுப்பையும் பாரதிய பாஷா பரிஷத் ஏற்றுக் கொள்கிறது.
சாதனா சம்மான் விருதுக்கு தேர்வாகியுள்ளது குறித்து வைரமுத்து கூறியது:
முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு செம்மொழிப் பெருமை பெற்றுத் தந்திருக்கும் காலத்தில் வங்க மண் இந்த விருதைத் தமிழ் படைப்பாளிக்கு வழங்கியிருக்கிறது. மகாகவி தாகூர் பிறந்த மண்ணில் இந்த விருதைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்.
எனக்குத் தமிழும் வாழ்க்கையும் சொல்லிக் கொடுத்த முன்னோடிகளுக்கு நன்றி சொல்லி இந்த விருதைத் தமிழ் மண்ணுக்கே காணிக்கையாக்குகிறேன். ‘இலக்கியம் நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் விருது பெறும் மேடையில் ஏற்புரையாற்றுகிறேன் என்றார் வைரமுத்து.[/tscii:435d808a89]
R.Latha
25th March 2009, 01:17 PM
[tscii:367356ba72]Vairamuthu gets the Sadhana Samaan
IndiaGlitz [Wednesday, March 25, 2009]
Here’s another institution and another state to appreciate poet Vairamuthu’s world of words. The Sadhana Samaan, which is a literary honour given by the Bharathiya Baasha Parishad, will be given to the poet on April 18.
One of the most revered poet of our times, Kavipperarasu Vairamuthu has been in the writing field for over three decades and has written over 5,800 songs for films. Besides these, he is also widely acclaimed for his literary genius and has published several novels, short stories and poems. A recipient of the National Award five times, he is also popular for having worked with several musical greats, like Illayaraja and AR Rahman.
The Sadhana Samaan will be yet another jewel in the crown of this celebrated poet and lyricist. He will also deliver a speech on Literature: the past, present and the future at the awards ceremony.
The Sadhana Samaan has earlier been won by Tamil writers like Jayakanthan, Indra Parthasarathy and Sivasankari.
Here’s wishing the great litterateur Vairamuthu all success and luck on winning this honour.[/tscii:367356ba72]
R.Latha
29th June 2009, 01:25 PM
முத்துவின் பொக்கிஷம்!
First Published : 29 Jun 2009 12:38:28 AM IST
Last Updated :
"என் அப்பா நாகராஜ். பள்ளி ஆசிரியரான அவர் ஒரு புத்தகப் பிரியர். ஒரு லட்சம் புத்தகம் சேகரித்து வைத்திருப்பதுடன், ஓலைச் சுவடிகளும் சேகரித்து வைத்தவர். அந்த புத்தகங்களையெல்லாம் இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். புத்தகம் போல நல்ல நண்பர்கள் கிடையாது என்பார்கள். பலரைப் போல அது என் வாழ்விலும் நிரூபணமாகியுள்ளது. என் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றால் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு புத்தகங்கள் இருக்கும்'.
"புகைப்படம்' பட பாடல் கேசட் விழாவில் இப்படிச் சொன்னார் பாடலாசிரியர் நா.முத்துகுமார்.
R.Latha
3rd July 2009, 02:10 PM
[tscii:448c622472]Vairamuthu’s son turns lyricist too
IndiaGlitz [Thursday, July 02, 2009]
With a legend writer at home, it’s hard to keep off the creative ink. And Madan Karkki seems to have succumbed to it. Son of noted lyricist Vairamuthu has also begun writing lyrics for films, toeing his dad’s line.
Announcing this at a press meet for the film ‘Ilamai Idho Idho’, was Karkki. “My father didn’t want me to become a lyricist. But I convinced him by telling him I am not doing it as a full time profession. I studied at the Anna University and now work there,” says the youngster, whose first film will be Rajini’s ‘Endhiran’.
It seems Vairamuthu, who did not want to stand in the way of his son’s ambitions, wanted to launch his son in a big film. When he approached Rajinikanth and director Shankar with the idea, both were gracious to offer the lyricist’s son an opportunity to write in ‘Endhiran’. Vairamuthu was initially supposed to write all songs but it was later learnt that his song will also be writing one song, which is a duet. And then, ‘Ilamai Idho Idho’ happened. “I’ve written three songs for this film,” says the youngster. ‘Ilamai Idho Idho’ has four new comers in the lead, and is being directed by debutant Raja.
Watch Now - 'Ilamai Idho Idho' Press Meet
http://www.indiaglitz.com/channels/tamil/article/48019.html
[/tscii:448c622472]
R.Latha
20th July 2009, 01:08 PM
[tscii:1ac5aa6507]Shruti with Gautam Menon & Silambarasan
July 18, 2009
Shruti is on cloud nine with her Luck’s release drawing closer and the positive buzz surrounding the movie. She arranged for a special screening for a very few of her dear ones in Chennai. Shruti played host for the screening that was held at the Four Frames theatre with Kamal, Gautami, Shruti’s friends, director Soham Shah and Gautam Menon and Silambarasan watching the movie.
Luck’s songs (especially Jee Le) are already making waves in television channels with Shruti’s rock chick looks contemplating the songs.
http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-09-03/luck-18-07-09.html[/tscii:1ac5aa6507]
R.Latha
29th September 2009, 12:35 PM
அடுத்த பரிமாணத்தை அடைந்தேன்!
ஜி.அசோக்
First Published : 27 Sep 2009 11:46:00 AM IST
Last Updated :
கண்ணீர் அறியா கண்களும் உண்டோ.... மண்ணில் பெருகா குருதியும் உண்டோ..' என விரிகிறது உன்னைப் போல் ஒருவனுக்காக மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடல். இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மனுஷ்ய புத்திரன் திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருப்பது ஆரோக்கியமான விஷயம். திரைப்பாடலாசிரியர் மனுஷ்ய புத்திரன் இனி உங்களுடன்...
கமலுக்கும் உங்களுக்குமான அலைவரிசை எப்படி அமைந்தது?
ஆறு வருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த "உயிர்மை' பதிப்பகத்தின் துவக்க விழாவில்தான் முதன் முதலாக கமலுக்கும் எனக்குமான சந்திப்பு நடந்தது. அதற்கு முன்பே என் கவிதைகளை மறைமுகமாக காதலித்து என்னை கவனித்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும். அதன்பிறகு எங்களின் சந்திப்புகள் அவ்வப்போது நடைபெற்றாலும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ள மாட்டோம். ""என்னுடைய புதுப் படம் ஒன்றில் பாடல் எழுத வேண்டும்'' என அவரிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது. அப்போதுதான் நிறைய பேசினோம். வன்முறை, வெடிகுண்டு கலாசார வேதனைகளால் எந்த சம்பந்தமும் இல்லாமல் கொல்லப்படும் அப்பாவி மக்களின் வேதனைகள்தான் பாடலின் சூழல் என்றார். எப்போது வேண்டும் என்றேன். இப்போதே வேண்டும் என்றார்.
""இதற்கு முன் சினிமாவில் எழுதியது இல்லை. கொஞ்சம் டைம் வேண்டும்'' என்றேன். ஷ்ருதி புது ட்யூன் ஒன்று தந்தார். அன்று இரவே பாடலை எழுதி விட்டேன்.
பாடல் கமலை கவர்ந்திருந்ததா?
கண்ணீர் அறியா கண்களும் உண்டோ..?
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ..?
- என பாடல் வந்து விழுந்ததும், மிகவும் சந்தோஷப்பட்டார். வழக்கமான சினிமா பாடல் இது இல்லை என பெரிய வார்த்தைகளை உதிர்த்தார். 50 வருட உலக சினிமாவின் நீள அகலங்களைத் தெரிந்த சாதனையாளரான கமலின் அந்த வார்த்தைகள் இன்னும் சில இரவுகளின் தூக்கத்தைக் கலைத்துச் செல்கிறது. எழுத்தாக எழுதப்பட்ட வரிகளைப் பாடலாக, கலையாக மாற்றிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஷ்ருதியும் கமலும் வரிகள் இசைக்கு மிகவும் பொருந்தியிருப்பதாகச் சொல்லியபோது மிகவும் உற்சாகமாக இருந்தது. முதல் சவாலிலேயே வெற்றி பெற்ற உற்சாகம் அது. அதற்கு அடுத்த நாளே பாடல் பதிவு செய்யப்பட்டது. எனது எழுத்து வாழ்க்கையில் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நான் நகர்ந்த ஒரு தினமாகவே அந்த நாள் என் நினைவில் இருக்கிறது.
"அல்லா ஜானே' பாடலுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதா?
பாடல் வெளிவந்த அன்றே இணையதளத்துக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் நிறைய வரவேற்புகள் வந்திருந்தன. மிகச் சிறந்த வரிகள் என பத்திரிகைகள் கொண்டாடின. ஈழத்தோழன் ஒருவன் எங்களுக்காக எழுதப்பட்ட பாட்டு இது என கண்ணீர் வடித்திருந்தான். அந்த சகோதரனின் கண்ணீர் என் பேனாக்களுக்குப் புதிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்தப் பாடலின் வெற்றிக்கு வரிகள் மட்டுமல்ல, ஷ்ருதி ஹாசனின் அற்புதமான இசையும் கமல் ஹாசனின் உணர்ச்சிகரமான குரலும்தான் முக்கியக் காரணங்கள். இசையும் குரலும் வரிகளும் வெகுநேர்த்தியாக ஒன்றை மற்றொன்று எவ்வாறு முழுமை செய்யமுடியும் என்பதை "அல்லா ஜானே' வெளிப்படுத்தியிருக்கிறது.
சினிமா பாடல்களை ரசிப்பதுண்டா?
தமிழ் சினிமா பாடல்களின் தீவிர ரசிகன் நான். கண்ணதாசனையும், வைரமுத்துவையும் பெரிதாக மதிக்கிறேன். தமிழ் மொழியில் கவிதைகளைப் புனைந்து தந்தப் பெருமை அந்த இருவருக்கும் உண்டு.
""ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கையிலும் நான் சஞ்சலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்'' என கண்ணதாசன் சொல்லுவார். தமிழைச் சரளமாகச் சொல்லும் வல்லமை அவருக்கு எங்கே உருவானது என்பது இன்று வரைக்கும் புரியாத புதிர்.
"இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்..' என எழுதி தமிழர்களை முணுமுணுக்க வைத்தவர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் பாடல்களை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றவர் அவர்.
இப்போது உள்ள இளைய தலைமுறை கவிஞர்களும் நன்றாகதான் எழுதுகிறார்கள். 90-க்குப் பிறகு பாடல்களை கேட்கிற மனப்பக்குவம் உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டது. அர்த்தமற்ற வரிகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. நா.முத்துகுமாரின் வெயிலோடு விளையாடி... என்னை ஏதோ செய்தது.
""இலக்கியவாதிகளுக்கு உள்ள சுதந்திரம் கதாசிரியர்களுக்கு இல்லை'' என கமல் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே..?
சினிமாவில் யாரும் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் கதை சாத்தியப்படாது. இயக்குநர்தான் அங்கு கேப்டன். அவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். இதையும் தாண்டி வர்த்தக ரீதியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதைப் பொறுத்தவரையில் கமலின் வருத்தம் நிச்சயம் அர்த்தப்பட்டு நிற்கிறது.
உங்கள் பார்வையில் தமிழ் சினிமா?
கொஞ்சம் காலமாகவே தமிழ் சினிமாவில் மாற்றம் நடந்து வருகிறது. எதார்த்தமான வாழ்க்கையை அதன் பக்கத்தில் சென்று நம் படைப்பாளிகள் பார்த்து வருகிறார்கள். எதார்த்தத்தை அதன் அருகில் நின்று பதிவு செய்ய துணிந்துவிட்டார்கள். அத்திப்பூத்தது போல பாலு மகேந்திராவும், மகேந்திரனும் செய்ததை நெருஞ்சிப் பூ பூப்பதைப்போல செய்து விட்டார்கள். "பருத்தி வீரன்' அதில் முதல் நெருஞ்சிப் பூ என எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு வருடங்களாக இது தொடர்கிறது. கலாசாரங்களைப் பதிவு செய்ய முற்படுவது சினிமாவில் தைரியமான விஷயம். ரசிகர்களும் எதார்த்தத்தை ஆதரிக்கிறார்கள். இடையில் வியாபார ரீதியாகவும் சில இயக்குநர்கள் சினிமா செய்கிறார்கள் அவர்களுக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. மாற்றம் தொடர்ந்தால் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் உயரம் தெரிய வரும்.
மனுஷ்யபுத்திரன் திரைப் பாடலாசிரியராக தொடர்வாரா?
எழுதுவதுதான் என் வேலை. இந்தப் பாடல் தந்த உத்வேகம் என்னை தொடர்ந்து எழுத ஆசையைத் தூண்டியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கிறேன். அதற்கான சூழலை காலமும் நேரமும் அமைத்துக் கொடுக்கும்
R.Latha
27th October 2009, 12:18 PM
மெட்டுக்குக் கட்டுப்படும் சுகம்!
சினிமா ஆசையோடு சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு பேர் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் பல கடும் முயற்சிகளுக்குப் பின்னர் அதில் நுழைந்து இடம் பிடித்து முத்திரை பதித்தவர்கள் எவ்வளவு பேர் என்று சொல்லிவிட முடியும். தமிழ் எம்.ஏ. படித்த ஓர் இளைஞன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து முதன் முதலில் காலடி வைத்தபோது சினிமா ஆசை வெறும் கனவாகவே இருந்தது. ஆனால் இன்று அந்த இளைஞன் எழுதிய பாடல்கள் "செம' ஹிட்டாகி எல்லாருடைய காதுகளிலும் தேனை நிரப்பிக் கொண்டு இருக்கின்றன. அந்த இளைஞன் திரைப்படப் பாடலாசிரியர் பிரியன்.
அவரிடம் பேசிய போது...,
""நான் கல்லூரியில் படிக்கும்போதே இப்போது போலவே தமிழிலும் கவிதையிலும் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கல்லூரிகளில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வேன். கவிதை என்றால் எனக்கு உயிர். ஆனால் கவிதை தன்னைப் படிப்பவர்களைத்தானே சென்றடையும்? பாமர மனிதனுக்குக் கவிதை வேண்டாமா? பாமர மனிதனின் கவிதை திரைப்பட பாடல்கள் அல்லவா?
இப்படி நினைத்தவுடனே திரைப்படத்தின் பக்கம் என் கவனம் திரும்பியது. திரைப்படம் மட்டுமே என் கவிதையை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று தோன்றியது. எப்படியாவது, எப்பாடு பட்டாவது திரையுலகின் கனவு தேசத்தில் காலடி எடுத்து வைக்க
வேண்டும் என்ற வெறி தோன்றியது.
தமிழ் எம்.ஏ.யுடன் நான் சேர்த்துப் படித்த நிர்வாகவியல் பட்டம் சென்னையில் எனக்கு ஒரு நிறுவனத்தில் மேலாளர் வேலையைத் தேடிக் கொடுத்தது. ஆனால் என் கவனம் என்னவோ சினிமாவின் பக்கமே குவிந்திருந்தது. எத்தனையோ படிகளில் ஏறி இறங்கிக் களைத்துச் சோர்ந்த போதும் என் கனவுகளின் வலிமை இற்றுப் போகாமல் நிலைநிறுத்தியது அந்த மேலாளர் வேலைதான். அப்புறம் முதன்முதலில் "ஆட்டம்' படத்தில் பாடல்கள் எழுதினேன். அதன் பிறகு 10 சிறிய படங்களில் பாடல்கள் எழுதினாலும் அடையாளம் கிடைக்கவில்லை. மனம் தளராமல் இருநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்குப் பாடல்கள் எழுதினேன். மிஷ்கினின் "அஞ்சாதே' படத்தில் சுந்தர் சி பாபு இசையில் உருவான "மனசுக்குள் மனசு' என்ற பாடல் எனது என் கனவுகளை நனவாக்கியது. சினிமா உலகின் வெளிச்ச ரேகைகள் என் மீது பிரகாசமாக விழுந்தன.
"நியூ மியூசிக் டைம்ஸ்' என்ற இதழில் நான் ஒரு தொடர் எழுதினேன். அது காதல் கவிதைத் தொடர். அது இசையமைப்பாளர் விஜய் ஆன்டெனி கண்களில் பட்டது. மனசைத் தொட்டது. மனம் நிறைந்து பாராட்டினார். அன்று முதல் அவருடைய அறிமுகம் கிட்டியது. "காதலில் விழுந்தேன்' படத்தில் "புயலாய் புறப்படு' பாடலிலிருந்து நான் புயலாய்ப் புறப்பட விஜய் ஆன்டெனி அவர்களின் அன்பும் ஆதரவுக் கரமும் துணை நின்றன.
தொடர்ந்து "பந்தயம்' படத்தில் "தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி', "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் "செக்ஸ் லேடி.. கிட்ட வாடி' என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் எனது சினிமா கனவு, நனவாகி மகிழ்வைத் தந்தது. "வேட்டைக்காரன்' திரைப்பட கேஸட் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் நினைத்தாலே இனிக்கும் படத்தில் நான் எழுதிய "செக்ஸ் லேடி' பாடல் ஷங்கருக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போனதாகச் சொன்ன போது பூமியில் இருந்து இரண்டடி தொலைவில் என் கால்கள் உயரப் பறந்தன.
இன்னும் "ரசிக்கும் சீமானே', "முன்தினம் பார்த்தேனே', "கதிர்வேல்', "வீரசேகரன்', "மார்கழி 16', "புழுதி', "பலம்' போன்ற 20 மேற்பட்ட படங்களில் என் பாடல்கள் ஒலிக்கப் போகின்றன. நான் இலக்கண வரம்புகளுக்குள் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாத புதுக்கவிதைக்காரன். என்றாலும் மெட்டுக்குக் கட்டுப்பட்டுச் சிறகடிப்பதில்தான் எனக்கு எத்தனை சந்தோஷம் என்று நினைக்கிறபோது எனக்கே வியப்பாக இருக்கிறது'' என்றார்.
ந.ஜீவா
மெட்டுக்குக் கட்டுப்படும் சுகம்!
சினிமா ஆசையோடு சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு பேர் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் பல கடும் முயற்சிகளுக்குப் பின்னர் அதில் நுழைந்து இடம் பிடித்து முத்திரை பதித்தவர்கள் எவ்வளவு பேர் என்று சொல்லிவிட முடியும். தமிழ் எம்.ஏ. படித்த ஓர் இளைஞன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து முதன் முதலில் காலடி வைத்தபோது சினிமா ஆசை வெறும் கனவாகவே இருந்தது. ஆனால் இன்று அந்த இளைஞன் எழுதிய பாடல்கள் "செம' ஹிட்டாகி எல்லாருடைய காதுகளிலும் தேனை நிரப்பிக் கொண்டு இருக்கின்றன. அந்த இளைஞன் திரைப்படப் பாடலாசிரியர் பிரியன்.
அவரிடம் பேசிய போது...,
""நான் கல்லூரியில் படிக்கும்போதே இப்போது போலவே தமிழிலும் கவிதையிலும் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கல்லூரிகளில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வேன். கவிதை என்றால் எனக்கு உயிர். ஆனால் கவிதை தன்னைப் படிப்பவர்களைத்தானே சென்றடையும்? பாமர மனிதனுக்குக் கவிதை வேண்டாமா? பாமர மனிதனின் கவிதை திரைப்பட பாடல்கள் அல்லவா?
இப்படி நினைத்தவுடனே திரைப்படத்தின் பக்கம் என் கவனம் திரும்பியது. திரைப்படம் மட்டுமே என் கவிதையை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று தோன்றியது. எப்படியாவது, எப்பாடு பட்டாவது திரையுலகின் கனவு தேசத்தில் காலடி எடுத்து வைக்க
வேண்டும் என்ற வெறி தோன்றியது.
தமிழ் எம்.ஏ.யுடன் நான் சேர்த்துப் படித்த நிர்வாகவியல் பட்டம் சென்னையில் எனக்கு ஒரு நிறுவனத்தில் மேலாளர் வேலையைத் தேடிக் கொடுத்தது.
ஆனால் என் கவனம் என்னவோ சினிமாவின் பக்கமே குவிந்திருந்தது. எத்தனையோ படிகளில் ஏறி இறங்கிக் களைத்துச் சோர்ந்த போதும் என் கனவுகளின் வலிமை இற்றுப் போகாமல் நிலைநிறுத்தியது அந்த மேலாளர் வேலைதான்.
அப்புறம் முதன்முதலில் "ஆட்டம்' படத்தில் பாடல்கள் எழுதினேன். அதன் பிறகு 10 சிறிய படங்களில்
பாடல்கள் எழுதினாலும் அடையாளம் கிடைக்கவில்லை. மனம் தளராமல் இருநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்குப் பாடல்கள் எழுதினேன்.
மிஷ்கினின் "அஞ்சாதே' படத்தில் சுந்தர் சி பாபு இசையில் உருவான "மனசுக்குள் மனசு' என்ற பாடல் எனது என் கனவுகளை நனவாக்கியது. சினிமா உலகின் வெளிச்ச ரேகைகள் என் மீது பிரகாசமாக விழுந்தன.
"நியூ மியூசிக் டைம்ஸ்' என்ற இதழில் நான் ஒரு தொடர் எழுதினேன். அது காதல் கவிதைத் தொடர். அது இசையமைப்பாளர் விஜய் ஆன்டெனி கண்களில் பட்டது. மனசைத் தொட்டது. மனம் நிறைந்து பாராட்டினார். அன்று முதல் அவருடைய அறிமுகம் கிட்டியது. "காதலில் விழுந்தேன்' படத்தில் "புயலாய் புறப்படு' பாடலிலிருந்து நான் புயலாய்ப் புறப்பட விஜய் ஆன்டெனி அவர்களின் அன்பும் ஆதரவுக் கரமும் துணை நின்றன.
தொடர்ந்து "பந்தயம்' படத்தில் "தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி', "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் "செக்ஸ் லேடி.. கிட்ட வாடி' என்று ஐம்பதுக்கும்
மேற்பட்ட பாடல்களில் எனது சினிமா கனவு, நனவாகி மகிழ்வைத் தந்தது.
"வேட்டைக்காரன்' திரைப்பட கேஸட் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் நினைத்தாலே இனிக்கும் படத்தில் நான் எழுதிய "செக்ஸ் லேடி' பாடல் ஷங்கருக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போனதாகச் சொன்ன போது பூமியில் இருந்து இரண்டடி தொலைவில் என் கால்கள் உயரப் பறந்தன.
இன்னும் "ரசிக்கும் சீமானே', "முன்தினம் பார்த்தேனே', "கதிர்வேல்', "வீரசேகரன்', "மார்கழி 16', "புழுதி', "பலம்' போன்ற 20 மேற்பட்ட படங்களில் என் பாடல்கள் ஒலிக்கப் போகின்றன. நான் இலக்கண வரம்புகளுக்குள் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாத புதுக்கவிதைக்காரன். என்றாலும் மெட்டுக்குக் கட்டுப்பட்டுச் சிறகடிப்பதில்தான் எனக்கு எத்தனை சந்தோஷம் என்று நினைக்கிறபோது எனக்கே வியப்பாக இருக்கிறது'' என்றார்.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=144803&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.