PDA

View Full Version : Relay Songs IX



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10

pavalamani pragasam
5th August 2024, 08:05 PM
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ

priya32
6th August 2024, 06:00 AM
அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ்தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்

NOV
6th August 2024, 06:37 AM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்

priya32
6th August 2024, 07:18 AM
ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே
உன் முதுகை தொலைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வை
உடம்பு மண்ணில் புதையுற வரையில்
உடன் வரக்கூடுமோ

NOV
6th August 2024, 07:42 AM
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

pavalamani pragasam
6th August 2024, 09:12 AM
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு

NOV
6th August 2024, 10:28 AM
முக்கனிச் சாறு பிழிந்து வைத்து
அதை மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
வாசல் சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு

pavalamani pragasam
6th August 2024, 10:33 AM
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா

NOV
6th August 2024, 11:35 AM
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா

pavalamani pragasam
6th August 2024, 12:32 PM
அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன

NOV
6th August 2024, 01:45 PM
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றே தான் வேரா என்ன

மெய் எல்லாம் பொய் ஆக, பொய் எல்லாம் மெய்

pavalamani pragasam
6th August 2024, 04:18 PM
மழை என்பதா
வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை தான்
புயல் என்பதா

மெய் என்பதா
பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே
மெய் ஆனதா

அடியே பெண்ணே
அறியாத பிள்ளை

NOV
6th August 2024, 06:08 PM
அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
வீண் ஆத்திரப் படலாமா
கண் அசைவாலே

pavalamani pragasam
6th August 2024, 09:57 PM
சின்னச் சின்ன…
கண்ணசைவில்…
உன் அடிமை ஆகவா…
செல்லச் செல்ல முத்தங்களில்…
உன் உயிரை வாங்கவா

NOV
7th August 2024, 06:26 AM
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழை அல்லவோ கல்வி
நீ வாயார உண்ணுவாய் போ என் புதல்வி

pavalamani pragasam
7th August 2024, 08:18 AM
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

NOV
7th August 2024, 09:22 AM
மண் பார்த்து வாழும் பெண்ணே
மானத்தைக் காக்கும் கண்ணே

ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே

pavalamani pragasam
7th August 2024, 10:55 AM
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே

NOV
7th August 2024, 11:41 AM
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா

pavalamani pragasam
7th August 2024, 12:30 PM
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்

NOV
7th August 2024, 01:40 PM
வீசு தென்றலே வீசுவேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
பாடு கோகிலம்

pavalamani pragasam
7th August 2024, 02:04 PM
கூவாமல் கூவும் கோகிலம் - உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே

NOV
7th August 2024, 03:35 PM
ராம நாமம் ஒரு வேதமே
மனம் எனும் வீணை

pavalamani pragasam
7th August 2024, 05:21 PM
இதயவீணை தூங்கும் போது. பாட முடியுமா ? இரண்டு கண்கள். இரண்டு காட்சி.

NOV
7th August 2024, 07:17 PM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம்

pavalamani pragasam
7th August 2024, 10:15 PM
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக

NOV
8th August 2024, 05:52 AM
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது

pavalamani pragasam
8th August 2024, 07:44 AM
அள்ளித் தந்த பூமி
அன்னை அல்லவா..
சொல்லித்தந்த வானம்
தந்தை

NOV
8th August 2024, 09:39 AM
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

pavalamani pragasam
8th August 2024, 10:11 AM
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத

NOV
8th August 2024, 11:15 AM
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்

pavalamani pragasam
8th August 2024, 12:02 PM
சீ!சீ!சீ! என்ன பழக்கம் இது? சின்ன புள்ள போல
பித்து பிடிக்கிறதே தொட்டுவிட்டதால
சிச்சிசிச்சிசீசீ…
ம்ம்.. வம்பு பண்ணுவ நீ வம்பு

NOV
8th August 2024, 02:38 PM
மைனா மைனா நெஞ்சு குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற

pavalamani pragasam
8th August 2024, 03:49 PM
சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுறே...ஏஏ

அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடை

NOV
8th August 2024, 05:39 PM
ஒத்த சடை ரோசா நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா என்ன சுருட்டுறா

pavalamani pragasam
8th August 2024, 06:12 PM
சுட்டி சுட்டி உன் வால
கொஞ்சம் சுருட்டி கொள்ளடி
வட்டி வட்டியும் முதலுமா
வாங்கி கொள்ளடி
போனா போகட்டும் ஒரு
பொம்பளை

NOV
8th August 2024, 07:05 PM
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள
English படிச்சாலும் இன்பத் தமிழ்நாட்டில

pavalamani pragasam
8th August 2024, 07:30 PM
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு

priya32
9th August 2024, 05:04 AM
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

NOV
9th August 2024, 06:26 AM
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

priya32
9th August 2024, 07:20 AM
தும்ப பூவு மல்லுவேட்டி
தொடை தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுறே
வழி விடுங்க நேரமாச்சி

ஏலே புத்திக்குள்ளே சுத்துது கிறுக்கு
உன் இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு

NOV
9th August 2024, 07:30 AM
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

pavalamani pragasam
9th August 2024, 08:15 AM
ரெட்ட ஜட பல்லக்கொன்னு நடக்குதே நடிக்குதே இடிக்குதே

அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சி வந்து
நின்னு தந்திரிச்சி முத்தமின்னு நெஞ்சில் துள்ளுதே

NOV
9th August 2024, 09:05 AM
சொல்லாததை உன் கண்கள் சொல்லுதே
என்னென்னவோ என் நெஞ்சில் துள்ளுதே
தித்திக்கும் தித்திக்கும் அழகை பக்கத்தில் சந்தித்தேன்
ரட்சிக்கும் ரட்சிக்கும் வரங்கள் உன்னிடம் யாசித்தேன்

pavalamani pragasam
9th August 2024, 10:40 AM
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும்

NOV
9th August 2024, 11:32 AM
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மாவளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு

நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

pavalamani pragasam
9th August 2024, 01:41 PM
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

NOV
9th August 2024, 04:17 PM
பம்பை சத்தம் முழங்கும் வேளையில் பம்பரமா ஆடிகிட்டு
பாம்பு புத்து நீங்கி வந்த பைரவி

pavalamani pragasam
9th August 2024, 04:41 PM
ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்

ஒரு கையில் சிறு வில்லும்
மறு கையில் சுடர் வாளும்

NOV
9th August 2024, 06:24 PM
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின்
வாள்
தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க

pavalamani pragasam
9th August 2024, 10:30 PM
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய்

NOV
10th August 2024, 06:35 AM
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

pavalamani pragasam
10th August 2024, 08:16 AM
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ

NOV
10th August 2024, 09:19 AM
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை

pavalamani pragasam
10th August 2024, 10:34 AM
பிடிக்குதே…
திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்துகொள்ள துணிந்த

NOV
10th August 2024, 12:25 PM
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்

pavalamani pragasam
10th August 2024, 10:06 PM
ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர்காலத்தில்,
அதே பலம் அதே திறம் அகம்புறம் நம் தேகத்தில்

NOV
11th August 2024, 12:04 PM
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல்

pavalamani pragasam
11th August 2024, 01:02 PM
சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடா........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம்

NOV
11th August 2024, 03:22 PM
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு

pavalamani pragasam
11th August 2024, 06:11 PM
உன் இடுப்பு ஒண்ணு
அதில் உடுப்பு ரெண்டு
அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

மியாவ் மியாவ் பூனை

priya32
12th August 2024, 06:19 AM
பக்கத்தில் நீ வாடி அள்ளிக் கொடுக்க
பூனை போல வீட்டுக்குள்ள வந்து விடுவேன்
புன்னகையில் நீ சிந்தும் பாலை குடிப்பேன்
வந்திடாத சத்தம் போட்டு கத்திப்புடுவேன்

NOV
12th August 2024, 06:21 AM
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

NOV
12th August 2024, 06:26 AM
ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்

priya32
12th August 2024, 06:45 AM
கோடம்பாக்கம் ஏரியா
ஒட்டு கேட்டு வாரியா
குத்தாட்டம் என்னோட
ஆட ரெடியா

NOV
12th August 2024, 07:12 AM
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டு பிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா

pavalamani pragasam
12th August 2024, 08:49 AM
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி

NOV
12th August 2024, 10:02 AM
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி
என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்

வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்
ஒரு பாடல் நான் கேட்டேன்

pavalamani pragasam
12th August 2024, 10:48 AM
காம்பினில் பசும்பால் கறந்தால்…
அதுதான் சாதனை…
கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன்…
அதுதான் சாதனை…
சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா

NOV
12th August 2024, 11:58 AM
சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா

மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும் மனிதா

pavalamani pragasam
12th August 2024, 01:57 PM
தட்டுத் தடுமாறி நெஞ்சம் - கை
தொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும் - கை
பட்டு மலர் மேனி துள்ளும்

NOV
12th August 2024, 04:09 PM
தொட்டுத் தாவிட துள்ளும்
என் மனம் கட்டுக் காவலை மீறும்

pavalamani pragasam
12th August 2024, 06:27 PM
எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண்மேல் சுகமே

NOV
12th August 2024, 07:42 PM
ஹேய் ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண
விடிகாலையின்

pavalamani pragasam
12th August 2024, 08:07 PM
விரல் பிடித்து நகம்
கடிப்பேன் சம்மதமா சம்மதமா?
நீ கடிக்க நான் வளர்ப்பேன்
சம்மதமா சம்மதமா?
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா?
இடைவேளை

priya32
13th August 2024, 04:55 AM
இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்னவென்று சரி பார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன்

NOV
13th August 2024, 06:18 AM
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்

pavalamani pragasam
13th August 2024, 07:07 AM
பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை

NOV
13th August 2024, 07:45 AM
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்

pavalamani pragasam
13th August 2024, 02:42 PM
அள்ளி கொண்டை முடிச்சு
அரை காசு பொட்டு வச்சு
வெள்ளி சலங்கை

NOV
15th August 2024, 06:35 AM
வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க

pavalamani pragasam
15th August 2024, 08:26 AM
சடையாலே நீ இழுக்க. இடைமேலே நான் வழுக்க. காய்ச்சலுக்கும் காய்ச்சல்

NOV
15th August 2024, 08:42 AM
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை

pavalamani pragasam
15th August 2024, 11:06 AM
என் போர்வைக்கு.
நீ பொறுப்பு.
உன் வேர்வைக்கு....
நான் பொறுப்பு

NOV
15th August 2024, 03:20 PM
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்

pavalamani pragasam
15th August 2024, 03:52 PM
சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம்

NOV
15th August 2024, 04:28 PM
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

pavalamani pragasam
15th August 2024, 05:25 PM
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர்

NOV
15th August 2024, 08:46 PM
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில்

pavalamani pragasam
15th August 2024, 09:30 PM
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு

priya32
16th August 2024, 05:42 AM
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில்
தாமரை போலே
மலர்ந்தது ஒரு மொட்டு

NOV
16th August 2024, 06:47 AM
ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று

pavalamani pragasam
16th August 2024, 08:37 AM
கைகட்டிச் சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி

NOV
16th August 2024, 10:51 AM
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

pavalamani pragasam
16th August 2024, 12:55 PM
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே திருடாதே

NOV
16th August 2024, 02:33 PM
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப

pavalamani pragasam
16th August 2024, 03:13 PM
கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு கண்ணே நீ வெல்லம்

NOV
17th August 2024, 06:56 AM
ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்

மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

pavalamani pragasam
17th August 2024, 07:42 AM
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான்

NOV
17th August 2024, 08:32 AM
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி

pavalamani pragasam
25th August 2024, 07:48 PM
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம்

NOV
25th August 2024, 09:19 PM
நாலு வருஷம் வீணாச்சி ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவ

pavalamani pragasam
25th August 2024, 11:13 PM
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

வயலுக்குத் தேவை மேகம்

NOV
26th August 2024, 06:17 AM
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கரு விழி வரைந்தது மன்மத ஜாடை

pavalamani pragasam
26th August 2024, 08:30 AM
அடி நீ குளிச்சா
ஒரு துளி ஜலமே
கடலில் விழுந்தா
கடல் வெளுத்திடுமே

கரு மேகம்
மட்டும் தானே
பூமியில
மழைத்தூவும்
அழகு

NOV
26th August 2024, 08:40 AM
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா

pavalamani pragasam
26th August 2024, 10:22 AM
ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

NOV
26th August 2024, 02:20 PM
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம்

pavalamani pragasam
26th August 2024, 04:28 PM
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில்

NOV
26th August 2024, 08:53 PM
யாரை கேட்டு எந்தன் நெஞ்சில்
இடப்பக்கம் நீ தான் நுழைந்தாயோ
உந்தன் உயிரில் உந்தன் பெயரில்
வலப்பக்கம் என் பெயர் சேர்ப்பாயோ

pavalamani pragasam
26th August 2024, 09:29 PM
வலைவிரிக்கும் எங்களுக்கு
கைவிரிக்க மாட்டாயே
வஞ்சிரமோ வவ்வால் மீனோ
வலையில் கொண்டு சேர்ப்பாயோ
நல்லவளே

NOV
27th August 2024, 06:47 AM
மூக்கு முழி உள்ளவளே முத்தத்துக்கு நல்லவளே
மாரளவு நான் எடுத்து முத்து மாலை தரவா
முச்சத்துல உள்ளவனே மச்சம் உள்ள மன்மதனே
மாரளவு எடுக்கையிலே ஓரளவு தொடவா

pavalamani pragasam
27th August 2024, 07:48 AM
மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா மாயங்கள் காட்டி மோசம்

NOV
27th August 2024, 09:44 AM
ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லீங்க
ஆதரவை கேட்டால் பாவம் இல்லீங்க
நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு
நடப்பது தானே ஓடாதீங்க

Hello Miss Hello Miss எங்கே போறீங்க
இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

pavalamani pragasam
27th August 2024, 10:35 AM
ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு

NOV
27th August 2024, 11:23 AM
பகலுடன் இரவும் பதினெட்டு வருடம்
வளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு

pavalamani pragasam
27th August 2024, 01:01 PM
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி

NOV
27th August 2024, 05:13 PM
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி

pavalamani pragasam
28th August 2024, 08:08 AM
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு

NOV
28th August 2024, 08:14 AM
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையில் நாலு காசை அள்ளி வீசுங்க

தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே

pavalamani pragasam
28th August 2024, 10:20 AM
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்

NOV
28th August 2024, 10:54 AM
வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலையோ
அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்

ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்

pavalamani pragasam
28th August 2024, 06:47 PM
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு

NOV
28th August 2024, 06:58 PM
நான் ஏழு வயசிலே இளநி வித்தவ
பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டி காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும் வந்த தாகத்தை

pavalamani pragasam
28th August 2024, 09:55 PM
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம்

NOV
29th August 2024, 05:50 AM
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

pavalamani pragasam
29th August 2024, 07:56 AM
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா

NOV
29th August 2024, 07:59 AM
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
Never!

pavalamani pragasam
29th August 2024, 11:27 AM
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம்

NOV
29th August 2024, 11:43 AM
ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

pavalamani pragasam
29th August 2024, 08:50 PM
என் தாரகை நீதானடி…
கண் விழியால் கொல்லாதடி…
தல்லாதடி கை விரலால்…

சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணாமல் போனால் காணாமல்

NOV
30th August 2024, 06:42 AM
உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

pavalamani pragasam
30th August 2024, 12:27 PM
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள்

NOV
30th August 2024, 05:54 PM
நாணமாம் துணை இருந்தால் போதுமே
எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே

pavalamani pragasam
30th August 2024, 11:00 PM
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும். ஆனாலும் அனல்

NOV
31st August 2024, 07:28 AM
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால

pavalamani pragasam
31st August 2024, 07:48 AM
இது காலதேவனின் கலக்கம். இதை காதல் என்பது பழக்கம்.

NOV
31st August 2024, 08:15 AM
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல

pavalamani pragasam
31st August 2024, 11:25 AM
வாய் திறந்து என் பெண்மை சொல்வது
வழக்கமில்லை பழக்கமில்லை விளக்கமில்லை

அந்தக் கைகுட்டையை யார் எடுத்தது

NOV
31st August 2024, 11:58 AM
கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்துது இது வரைக்கும்

pavalamani pragasam
31st August 2024, 02:53 PM
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

NOV
31st August 2024, 04:11 PM
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்

pavalamani pragasam
31st August 2024, 07:24 PM
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே

NOV
1st September 2024, 05:56 AM
பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே
மானே மானே உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்

pavalamani pragasam
1st September 2024, 08:35 AM
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை

NOV
1st September 2024, 08:47 AM
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு

pavalamani pragasam
1st September 2024, 02:50 PM
தமிழ் வீரத்தை நிலை நாட்டு
குற்றங்களை கண்டால் நீயும்
போராடு அதை வீழ்த்தும் துணிவோடு
உலகமே உனை வணங்குமே
நீ தமிழை பாடும்போது

NOV
1st September 2024, 05:42 PM
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

pavalamani pragasam
1st September 2024, 06:43 PM
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம்

NOV
1st September 2024, 07:41 PM
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே

pavalamani pragasam
1st September 2024, 10:12 PM
மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன்

NOV
2nd September 2024, 06:30 AM
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சி பேசி நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

pavalamani pragasam
2nd September 2024, 07:52 AM
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு

தீரத்திலே படை

NOV
2nd September 2024, 08:26 AM
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா

pavalamani pragasam
2nd September 2024, 11:02 AM
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம்

NOV
2nd September 2024, 12:28 PM
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம்

pavalamani pragasam
2nd September 2024, 01:05 PM
எண்ணத்தைக் கிள்ளி கிள்ளி...

போகாதே என் தாபம் தீராதே...

பூங்காற்றே

NOV
2nd September 2024, 02:31 PM
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல்

pavalamani pragasam
2nd September 2024, 03:50 PM
கண் இமைக்காமல் உனை
பார்த்தென்ன கை இணைக்காமல்
உடல் வேர்த்தென்ன நீ பறிக்காமல்
தினம்

NOV
2nd September 2024, 05:40 PM
.நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும்
இசை பாடும் ஜில் ஜில் ஜில்

pavalamani pragasam
2nd September 2024, 07:18 PM
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

NOV
3rd September 2024, 06:43 AM
இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா

pavalamani pragasam
3rd September 2024, 12:43 PM
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

NOV
3rd September 2024, 07:20 PM
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது

pavalamani pragasam
3rd September 2024, 10:24 PM
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்

NOV
4th September 2024, 06:27 AM
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்

pavalamani pragasam
4th September 2024, 08:13 AM
வான்மதியே.... ஓ வான்மதியே....

தூது செல்லு.... வான்மதியே....
மாளிகை பொன் மாடம்

மல்லிகை பூ மஞ்சம்

யாவுமே இந்நேரம்

NOV
4th September 2024, 09:00 AM
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்

pavalamani pragasam
4th September 2024, 09:50 AM
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம்

NOV
4th September 2024, 11:25 AM
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்

pavalamani pragasam
4th September 2024, 03:11 PM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா

NOV
4th September 2024, 07:10 PM
ராசாவே என்ன தெரியலையா
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா
அந்த உச்சிமல தேனருவி

pavalamani pragasam
4th September 2024, 10:44 PM
ஹேய் தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது
வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது
வண்ணம் கொஞ்சும் அன்னம்

NOV
5th September 2024, 06:09 AM
கன்னிப் பருவமெனும் கட்டழகுத் தேரினிலே
என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே
உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே

pavalamani pragasam
5th September 2024, 08:05 AM
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்

NOV
5th September 2024, 08:55 AM
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்

pavalamani pragasam
5th September 2024, 10:40 AM
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு

NOV
5th September 2024, 11:31 AM
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து

pavalamani pragasam
5th September 2024, 12:28 PM
நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே

NOV
5th September 2024, 01:49 PM
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
தாய் மடியில்

pavalamani pragasam
5th September 2024, 04:08 PM
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

NOV
5th September 2024, 07:09 PM
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு

pavalamani pragasam
5th September 2024, 11:35 PM
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய்

NOV
6th September 2024, 06:12 AM
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப் பாடமாய் உரையாடல் நிகழும்

pavalamani pragasam
6th September 2024, 08:55 AM
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை

NOV
6th September 2024, 09:42 AM
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா

வைகாசி மாசம் பொறந்து
கை வீசி மாலை அணிந்து
ஊர்கோலம் நாம் போகலாம்

pavalamani pragasam
6th September 2024, 11:12 AM
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம்

NOV
6th September 2024, 11:41 AM
Is that the beginning of the song? :think:

பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்த பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்

pavalamani pragasam
6th September 2024, 04:25 PM
Yes. Beginning of the song. Becoming lazy to search!!!
கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…
கன்னி என்றேனடி கைகளை

NOV
7th September 2024, 06:23 AM
காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள்
கற்புகள் என்று காட்டியே தந்தவன் நானே
இரு கைகளை குலிக்கிடும் மானே
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும்
தோற்றம் இவன் தானே

pavalamani pragasam
7th September 2024, 07:39 AM
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி

NOV
7th September 2024, 08:23 AM
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

pavalamani pragasam
7th September 2024, 09:20 AM
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம்

NOV
7th September 2024, 12:32 PM
சரி நிகராக யாவரும் வாழ்வில் இருப்பது தான் அதன் தத்துவம்
அந்த நாள் என்று வந்திடும் மக்கள் சிந்தித்தாலே

pavalamani pragasam
7th September 2024, 01:43 PM
திருடாதே... பாப்பா திருடாதே...

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு

NOV
7th September 2024, 03:48 PM
தப்பு எல்லாம் கணிதமாகும் தவறு எல்லாம் புனிதமாகும்

pavalamani pragasam
8th September 2024, 12:04 AM
காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

NOV
8th September 2024, 06:10 AM
ஏழு தெருவில் நீங்கள் நடந்தால்
கோடி ரூபாய் கொட்டும்
கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம்

pavalamani pragasam
8th September 2024, 08:51 AM
போட்டு வைத்த
காதல் திட்டம் ஓகே
கண்மணி ஓஹோ
காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி

NOV
8th September 2024, 10:15 AM
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

pavalamani pragasam
8th September 2024, 10:25 AM
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்

NOV
8th September 2024, 11:03 AM
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்

pavalamani pragasam
8th September 2024, 12:14 PM
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம்

NOV
8th September 2024, 01:06 PM
மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு

pavalamani pragasam
8th September 2024, 07:53 PM
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்

NOV
9th September 2024, 06:38 AM
பொன்னுலகம் வந்தாலும் என்னுலகம் உன்னுடனே
நீயே என் உள்ளத்தின் ராகம்
நீயே என் பெண்மைக்கு நாதம்
நீயே என் ராஜாங்க வேதம்
யார் அறிவார் யார் அறிவார் யார் அறிவார்

pavalamani pragasam
9th September 2024, 08:29 AM
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

NOV
9th September 2024, 10:05 AM
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

pavalamani pragasam
9th September 2024, 11:41 AM
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

NOV
9th September 2024, 01:41 PM
ஊர காக்க உருவான சங்கம்
உயிர கொடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டுப் புள்ள
வருத்தப்படாத வாலிபர்

pavalamani pragasam
9th September 2024, 03:13 PM
மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்

NOV
9th September 2024, 04:08 PM
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம் ஏந்த

pavalamani pragasam
9th September 2024, 05:57 PM
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே

NOV
9th September 2024, 06:44 PM
கொஞ்சும் கிளி பாட வெச்சா கும்மாலமும் போட வெச்சா வீதியில ஆட வெச்சா டா
கோயிலில சூடம் வெச்சா கொண்டையில

pavalamani pragasam
10th September 2024, 08:46 AM
அண்டங்காக்கா கொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அச்சு வெல்லம் தொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அய்யாரெட்டு பல்லுக்காரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அயிரமீனு

NOV
10th September 2024, 11:37 AM
ஆத்துக்குள்ள அயிரமீனு
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
மாத்தி மாத்தி மடக்கி புடி
வாழ மீனு மாட்டி கிச்சு

pavalamani pragasam
10th September 2024, 12:05 PM
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா

NOV
10th September 2024, 01:57 PM
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா

pavalamani pragasam
10th September 2024, 03:13 PM
Clue, pls!

NOV
10th September 2024, 06:29 PM
Raghu Thatha song

pavalamani pragasam
10th September 2024, 06:35 PM
மணநாள் வரைக்கும்
பொறுத்திரு செல்வா

கூண்டும் ஒரு வீடென்பது
புரியாமலே குற்றம் கண்டாள்
காசு பணம்

NOV
10th September 2024, 07:48 PM
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக்குயிலோ மணியோடு
பூலோகம்

pavalamani pragasam
10th September 2024, 11:08 PM
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி

NOV
11th September 2024, 06:29 AM
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில்
காணப் போக வேண்டும் சூரக்கோட்டை
அந்த சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா

pavalamani pragasam
11th September 2024, 08:39 AM
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம்

NOV
11th September 2024, 10:26 AM
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது

pavalamani pragasam
11th September 2024, 11:54 AM
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ

NOV
11th September 2024, 01:30 PM
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும்

pavalamani pragasam
11th September 2024, 05:08 PM
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

NOV
11th September 2024, 06:18 PM
டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப

pavalamani pragasam
11th September 2024, 10:21 PM
பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

NOV
12th September 2024, 06:28 AM
மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா

சொக்கா போட்டா அக்கா பாத்து காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ

pavalamani pragasam
12th September 2024, 08:39 AM
(lol! இதத்தான் எதிர்பார்த்தேன்!)

சேர்ந்து நிப்போமா கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா மனச மடிச்சி

NOV
12th September 2024, 12:30 PM
:think:

மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற

pavalamani pragasam
12th September 2024, 01:34 PM
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற காத்தோட

NOV
12th September 2024, 03:45 PM
சிரிக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே

pavalamani pragasam
12th September 2024, 05:41 PM
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன்

NOV
12th September 2024, 06:15 PM
கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா

pavalamani pragasam
12th September 2024, 10:13 PM
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர்

NOV
13th September 2024, 06:23 AM
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ? எனக்கோர் இடம் நீ தருவாயோ

pavalamani pragasam
13th September 2024, 08:52 AM
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம்

NOV
13th September 2024, 09:39 AM
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே

pavalamani pragasam
13th September 2024, 11:07 AM
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை · தாய்

NOV
13th September 2024, 11:53 AM
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்

சோலை மலர்க்கூட்டம் சொந்தம் கொண்டாடி

pavalamani pragasam
13th September 2024, 02:08 PM
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள்

NOV
13th September 2024, 02:54 PM
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை

pavalamani pragasam
13th September 2024, 04:57 PM
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

NOV
13th September 2024, 08:08 PM
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய

pavalamani pragasam
13th September 2024, 09:26 PM
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும்

NOV
14th September 2024, 06:52 AM
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு