PDA

View Full Version : Relay Songs IX



Pages : 1 [2] 3 4 5 6 7

pavalamani pragasam
2nd February 2024, 11:47 AM
சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு

கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி

pavalamani pragasam
2nd February 2024, 01:39 PM
தேடினேன் வந்தது.....
நாடினேன் தந்தது...
வாசலில் நின்றது.....
வாழவா என்றது...

என் மனதில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி

NOV
2nd February 2024, 03:23 PM
வெளிவேசம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

pavalamani pragasam
2nd February 2024, 03:50 PM
ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா நாத்தம் புடுச்ச நாஸ்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஒட ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா

NOV
2nd February 2024, 05:53 PM
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

pavalamani pragasam
2nd February 2024, 07:20 PM
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு

NOV
3rd February 2024, 07:17 AM
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு

pavalamani pragasam
3rd February 2024, 07:42 AM
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,

NOV
3rd February 2024, 08:47 AM
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு
தாளத்தத்தான் நான் சொன்னது தட்டுங்களேன் சுகமா
தாலாட்டத்தான் நான் வந்தது பொன்னூஞ்சல் நான் தரவா

pavalamani pragasam
3rd February 2024, 10:51 AM
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே

NOV
3rd February 2024, 11:11 AM
இதை நான் செல்லும் பாதையில்
கண்டுக் கொண்டேன் இந்தக் காட்டிலே

நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே

pavalamani pragasam
3rd February 2024, 01:52 PM
கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம் வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு

NOV
3rd February 2024, 04:29 PM
வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி

pavalamani pragasam
3rd February 2024, 05:21 PM
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது. ஜிகுஜிகு வண்டியிலே. பொருத்தமான ஜோடி போகுது.. குபுகுபு வண்டியிலே

NOV
3rd February 2024, 06:38 PM
சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்

pavalamani pragasam
3rd February 2024, 08:50 PM
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா..
சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே

NOV
4th February 2024, 06:26 AM
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

pavalamani pragasam
4th February 2024, 07:49 AM
என் கனவில்
ஆ ஹா… நான் கண்ட
ஆ ஹா… நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா… பல கதைகள்

NOV
4th February 2024, 09:10 AM
இன்ப நிலாவே உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே

pavalamani pragasam
4th February 2024, 10:29 AM
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
நீட்டாதே கண்ணுக்குள்ள

NOV
4th February 2024, 11:29 AM
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா

pavalamani pragasam
4th February 2024, 12:12 PM
ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

NOV
4th February 2024, 02:29 PM
கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி

pavalamani pragasam
4th February 2024, 03:21 PM
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறையைத் தவிர்த்து சினம்

NOV
4th February 2024, 05:38 PM
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேருவது

pavalamani pragasam
4th February 2024, 05:50 PM
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு

NOV
4th February 2024, 09:10 PM
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு

pavalamani pragasam
4th February 2024, 10:00 PM
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்

NOV
5th February 2024, 06:57 AM
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ
கண்ணை மூடி தூங்க வேண்டும்
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தோளில்

pavalamani pragasam
5th February 2024, 08:07 AM
பச்சை புடவை உத்து பார்க்குது யார
புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது மச்சி

NOV
5th February 2024, 09:32 AM
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்

pavalamani pragasam
5th February 2024, 10:15 AM
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே

மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே

NOV
5th February 2024, 11:36 AM
காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண் பாரம்மா என் தேவியே என் நெஞ்சில் உன் ஆட்சியே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
என் கல்யாண மேடைக்கு நீ வேணுமே

pavalamani pragasam
5th February 2024, 01:29 PM
அவள் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும்
திருக்குறளாகும்

NOV
5th February 2024, 05:17 PM
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே

pavalamani pragasam
5th February 2024, 06:05 PM
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்

NOV
5th February 2024, 07:12 PM
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு

குறும்புக்கார

pavalamani pragasam
5th February 2024, 08:56 PM
பசு போல மனுஷனைதான்...
கூத்தாட செய்யும் பலே
குறும்புக்கார பொம்பளைதான்

NOV
6th February 2024, 06:30 AM
Don't touch me Mr. X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
Stupid! hmmm.. idiot! nonsense! hmmm!

pavalamani pragasam
6th February 2024, 07:17 AM
Yes I love this idiot; I love this lovable idiot!!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

NOV
6th February 2024, 08:43 AM
பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

pavalamani pragasam
6th February 2024, 10:30 AM
பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன் தளர்வே பயணம்

NOV
6th February 2024, 11:34 AM
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்

pavalamani pragasam
6th February 2024, 02:08 PM
நீ வாழும் வரை நானும் வாழேனோ என் உரிமை நீ தானோ என் உரிமை நீ தானோ தாலாட்டும் காற்றே

NOV
6th February 2024, 03:52 PM
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும்

pavalamani pragasam
6th February 2024, 04:53 PM
காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடருதடா குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள்

NOV
6th February 2024, 07:08 PM
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு

pavalamani pragasam
6th February 2024, 07:12 PM
நண்பன் ஒருவன் வந்த பிறகு…
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு

NOV
7th February 2024, 06:25 AM
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது

pavalamani pragasam
7th February 2024, 07:53 AM
நெஞ்சிலே நெருப்பு வச்சே
நீரிலே கொதிப்ப வச்சே
கண்ணில் வந்த ரத்தத்திலே
செம்பருத்தி

NOV
7th February 2024, 09:43 AM
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்திருக்க வா

pavalamani pragasam
7th February 2024, 10:04 AM
வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்

வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்

NOV
7th February 2024, 11:10 AM
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய் நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய் இது காதலா

pavalamani pragasam
7th February 2024, 06:31 PM
Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு

NOV
7th February 2024, 08:43 PM
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும்

pavalamani pragasam
7th February 2024, 10:05 PM
தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே
போதிக்கும் காதல் தினம் தேவை

NOV
8th February 2024, 06:12 AM
சமாதானமே தேவை என்றும் சமாதானமே தேவை
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை

போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக

pavalamani pragasam
8th February 2024, 07:51 AM
பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

NOV
8th February 2024, 08:33 AM
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக் காலத்திலே கண்கண்ட தெய்வமே

pavalamani pragasam
8th February 2024, 09:58 AM
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க

NOV
8th February 2024, 01:52 PM
பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க
திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா

பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ

pavalamani pragasam
8th February 2024, 04:41 PM
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா

NOV
8th February 2024, 05:49 PM
நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே

pavalamani pragasam
8th February 2024, 06:53 PM
ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………
ஆரம்பம்

NOV
8th February 2024, 06:58 PM
ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
மலர்கள் சிரிக்கும் கொடியில் அலைகள் சிரிக்கும் கடலில்
நிலவும் சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாள் என்ன

உதட்டு சிவப்பெடுத்து பதிக்க முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ

pavalamani pragasam
8th February 2024, 10:37 PM
ஊனம் கொண்ட உயிர்கள் வாழ
உதவும் எண்ணம் வேண்டும்
அழுதால் வந்து தழுவும் அன்பு
அன்னை உள்ளம் வேண்டும்

NOV
9th February 2024, 06:35 AM
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்

pavalamani pragasam
9th February 2024, 08:06 AM
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்

கனி உதட்டில் என்னடி

NOV
9th February 2024, 08:53 AM
என் தலைக்கேருற பொன் தடம் போடுற
என் உயிராடுற என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற

pavalamani pragasam
9th February 2024, 10:04 AM
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

NOV
9th February 2024, 11:08 AM
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

pavalamani pragasam
9th February 2024, 12:51 PM
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி

NOV
9th February 2024, 02:22 PM
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ வைத்திட டா

pavalamani pragasam
9th February 2024, 03:06 PM
இந்த வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்

NOV
9th February 2024, 04:53 PM
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி

pavalamani pragasam
9th February 2024, 05:43 PM
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி

என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி

தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன்

NOV
9th February 2024, 07:15 PM
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன்
நீளக் கடல் தானா வான் நீந்து

pavalamani pragasam
9th February 2024, 09:01 PM
ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா

பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்

NOV
10th February 2024, 06:20 AM
காதல் ஒருவழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்

pavalamani pragasam
10th February 2024, 07:44 AM
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க

NOV
10th February 2024, 08:01 AM
April fool ஏய்த்து பிழைக்க தெரிஞ்சவனே எவன்டா
April fool April fool
பின்னே வருவான் முன்னே போவான்
பின்னலை கண்டு தன்னை மறப்பான்
எண்ணத்தை சொல்ல திடம் இல்லாமல்
பெண்ணை விட்டவன் April fool

pavalamani pragasam
10th February 2024, 11:06 AM
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு

NOV
10th February 2024, 03:16 PM
படிப்பும் கல்லூரியும் special classஸும் boreரு boreரு boreரு
Professor எல்லோருமே seven o clock bladeடு bladeடு bladeடு
நம் raggingங்கும் teasingங்கும் தாங்காது ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும்

pavalamani pragasam
10th February 2024, 03:28 PM
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா. எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா

NOV
10th February 2024, 07:04 PM
அந்த எல்லை குள்ளே வந்துபுட்டா ஆகும் தொல்லடா
வெல்ல வேட்டி

pavalamani pragasam
10th February 2024, 07:52 PM
மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி

NOV
11th February 2024, 06:36 AM
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

pavalamani pragasam
11th February 2024, 07:52 AM
யாரோடும் பேசாம ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி

NOV
11th February 2024, 08:29 AM
அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
உந்தன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன்

pavalamani pragasam
11th February 2024, 10:39 AM
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்..ஆலயம்.

ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா

NOV
11th February 2024, 11:47 AM
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி

pavalamani pragasam
11th February 2024, 02:11 PM
மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்

NOV
11th February 2024, 04:16 PM
பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய்

pavalamani pragasam
11th February 2024, 06:44 PM
அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது

NOV
11th February 2024, 07:29 PM
இதோ இதோ என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ

pavalamani pragasam
11th February 2024, 09:54 PM
வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
இவள் யாரோ யாரோ

NOV
12th February 2024, 06:23 AM
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி

pavalamani pragasam
12th February 2024, 07:37 AM
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு உள்ளத்தை உன் கையில் அள்ளி

NOV
12th February 2024, 08:40 AM
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க

pavalamani pragasam
12th February 2024, 08:56 AM
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனியாக ஒரு வாலிபன் இருந்தால்
தரவேண்டும் பிரம்மச்சார்ய வரி
தாலி கட்டியே குடும்பம்

NOV
12th February 2024, 10:22 AM
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும்

pavalamani pragasam
12th February 2024, 11:41 AM
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
நந்தகுமாரன்

NOV
12th February 2024, 02:31 PM
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்

ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்

pavalamani pragasam
12th February 2024, 04:01 PM
ஒரு ஊருலே ஒரு ராஜகுமாரன்
பதினாறு வயாதிலே மன்மதராஜன்

NOV
12th February 2024, 04:17 PM
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின்

pavalamani pragasam
12th February 2024, 09:08 PM
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே

NOV
13th February 2024, 05:50 AM
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்

pavalamani pragasam
13th February 2024, 07:50 AM
பாரில் உழவுத் தொழில் வாழ பண்பு வாழ கலை வாழ

NOV
13th February 2024, 08:28 AM
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

pavalamani pragasam
13th February 2024, 10:08 AM
வா வா என் கீதாஞ்சலி
வாழும் நம் காதல் இனி

NOV
13th February 2024, 11:44 AM
சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம்

pavalamani pragasam
13th February 2024, 01:13 PM
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை

NOV
13th February 2024, 01:56 PM
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து

pavalamani pragasam
13th February 2024, 02:45 PM
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில்

NOV
13th February 2024, 06:00 PM
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகை

pavalamani pragasam
13th February 2024, 09:58 PM
என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை

NOV
14th February 2024, 06:20 AM
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆஹா

pavalamani pragasam
14th February 2024, 07:55 AM
பூஞ்சிறகில் கோலமிடும்
ஜாடை சொல்லும் கண்கள்
தேனிதழில் சேர்த்து வைத்த
மோக ரசம் பொங்கும்

NOV
14th February 2024, 09:54 AM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

pavalamani pragasam
14th February 2024, 10:23 AM
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

NOV
14th February 2024, 02:31 PM
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய

pavalamani pragasam
14th February 2024, 03:05 PM
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

NOV
14th February 2024, 03:52 PM
என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ

pavalamani pragasam
14th February 2024, 05:53 PM
காங்கேயம் காளை கம்பியூட்டர் மேல ஓயாம கெடந்தேனே உனக்காக தான் ஹைபுவா உருமாற மரபு கவித ஒண்ணு மருகுது ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ

சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே உத்து பாத்து பத்து வயசு

NOV
14th February 2024, 09:13 PM
எனக்கு இப்போ கல்யாண வயசு தான்
வந்துடுச்சுடி date பண்ணவா இல்ல set
பண்ணவா
உன் கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சுடி meet

pavalamani pragasam
14th February 2024, 10:17 PM
சேட்டர்டே இஸ் கமிங்கு…
மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா

NOV
15th February 2024, 06:30 AM
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே

pavalamani pragasam
15th February 2024, 07:35 AM
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்

NOV
15th February 2024, 08:04 AM
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்

pavalamani pragasam
15th February 2024, 10:57 AM
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு

NOV
15th February 2024, 12:10 PM
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம் தின்னு புட்டுப் போடியம்மா

pavalamani pragasam
15th February 2024, 02:02 PM
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை

NOV
15th February 2024, 06:10 PM
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம்

pavalamani pragasam
15th February 2024, 06:21 PM
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா

NOV
15th February 2024, 06:46 PM
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
இரவென்ன பகல் என்ன
கதை முடிக்காமல்

pavalamani pragasam
15th February 2024, 08:42 PM
மணமென்று முடிக்காமல்
நாம் கொள்ளும் உறவு
முதல் இரவொன்றும் இல்லாமல்
சிறு பிள்ளை வரவு

rajraj
16th February 2024, 02:08 AM
varavu ettaNaa selavu pathaNaa
adhikam rendaNaa kadaisiyil thundhaNaa
varavukku mele selavu seidhaal nimmadhi

NOV
16th February 2024, 06:22 AM
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை

pavalamani pragasam
16th February 2024, 07:46 AM
நிலா காயும் நேரம் சரணம் உலாப்போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது

NOV
16th February 2024, 08:56 AM
விழிகளிலே விழிகளிலே புதுப்புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புதுப்புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

pavalamani pragasam
16th February 2024, 09:45 AM
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை

NOV
16th February 2024, 10:42 AM
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

pavalamani pragasam
16th February 2024, 12:19 PM
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி சுற்றமும் சுகமும் வேறு வழி

NOV
16th February 2024, 02:54 PM
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே...
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்

pavalamani pragasam
16th February 2024, 06:32 PM
இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா இவந்தானா இவந்தானா மலர் சூட்டும் மணவாளன்

NOV
16th February 2024, 07:44 PM
வருகிறாள் உம்மைத் தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத் தேடி
உன் வாசலில் உருகி உருகி

pavalamani pragasam
16th February 2024, 09:39 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு

rajraj
17th February 2024, 06:03 AM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு

engume aanandham aanandhame jeevanin makarantham
madhi vaLar sandhya kaalam

pavalamani pragasam
17th February 2024, 07:31 AM
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை

NOV
17th February 2024, 07:39 AM
மூனு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி

pavalamani pragasam
17th February 2024, 10:28 AM
வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா போன ஜென்மம் பாவமடி அம்மாளு

NOV
17th February 2024, 10:35 AM
பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

pavalamani pragasam
17th February 2024, 01:14 PM
அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான்
அவள் ஆடியிலே

NOV
17th February 2024, 02:42 PM
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில்

pavalamani pragasam
17th February 2024, 06:01 PM
நதி என்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு
ஐப்பசி வந்தால் அடை மழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்

NOV
17th February 2024, 07:07 PM
அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக்கூடாதோ
It’s highly idiotic

கொஞ்சும் பொம்மை

pavalamani pragasam
17th February 2024, 08:38 PM
நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை தலைவன் முன்னே

NOV
18th February 2024, 06:35 AM
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்

pavalamani pragasam
18th February 2024, 10:19 AM
தைரியமாக சொல் நீ மனிதன் தானா? மனிதன் தானா? இல்லை! நீ தான் ஒரு மிருகம்

NOV
18th February 2024, 11:12 AM
அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்

pavalamani pragasam
18th February 2024, 01:07 PM
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம்

NOV
18th February 2024, 02:11 PM
கந்தனுக்கு கவசம் பாடு, அம்மனுக்கு வெரதம் எடு சிவனுக்கு நீ ஆட்டம் போடு ஸ்ரீரங்கம

pavalamani pragasam
18th February 2024, 07:24 PM
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா

NOV
18th February 2024, 08:52 PM
எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி

rajraj
18th February 2024, 09:27 PM
Yeri karaiyinmele poravaLe peN mayile
ennai konjam paaru

pavalamani pragasam
18th February 2024, 10:04 PM
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

NOV
19th February 2024, 06:10 AM
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
இரு தாளம் அதிலே இணையும்

pavalamani pragasam
19th February 2024, 07:41 AM
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி

NOV
19th February 2024, 08:09 AM
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா

pavalamani pragasam
19th February 2024, 10:01 AM
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

NOV
19th February 2024, 12:58 PM
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே

pavalamani pragasam
19th February 2024, 01:27 PM
என்மனம் துள்ளுது தன்வழி செல்லுது வண்ண வண்ண கோலம் மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி

NOV
19th February 2024, 03:32 PM
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கிச்சு கீச்

pavalamani pragasam
19th February 2024, 05:18 PM
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

NOV
19th February 2024, 06:05 PM
சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்குறப்போ சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்

அவசரமாய் வந்து பொறக்கணுமா உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா

pavalamani pragasam
19th February 2024, 10:07 PM
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு

NOV
20th February 2024, 06:15 AM
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்

pavalamani pragasam
20th February 2024, 07:37 AM
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில

NOV
20th February 2024, 08:46 AM
சாட்டை கையில் கொண்டு வாங்கிக் கொண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு

pavalamani pragasam
20th February 2024, 10:10 AM
முன்னால சீறுது
மயிலக்காளை ஆ
பின்னால பாயுது
மச்சக்காளை

அடக்கி

NOV
20th February 2024, 11:07 AM
முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ

pavalamani pragasam
20th February 2024, 01:49 PM
கன்றோடு பசு இன்று திண்டாடுது
கட்டிக் கரும்பே கண்ணா.....

சிப்பிக்குள் முத்து வந்தாலும் அது
சிப்பிக்கு சொந்தம் ஆகாது
நதியோடு போனால் கரை

NOV
20th February 2024, 05:34 PM
காவேரி கரை ஓரத்துல
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
கூவாத குயில் கூவுதடி

pavalamani pragasam
20th February 2024, 05:58 PM
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும்

NOV
20th February 2024, 08:51 PM
தலை தொடும் மழையே செவி தொடும் இசையே இதழ் தொடும் சுவையே இனிப்பாயே

pavalamani pragasam
20th February 2024, 09:01 PM
காட்டும் பொழுதே பறிப்பாயா நீ
வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பறிப்பாயா
நீ போர்வை

NOV
21st February 2024, 06:11 AM
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

pavalamani pragasam
21st February 2024, 07:39 AM
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல்

NOV
21st February 2024, 09:17 AM
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்

pavalamani pragasam
21st February 2024, 10:44 AM
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல்

NOV
21st February 2024, 11:26 AM
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
கண்ணில் அழைத்தானா கட்டிப் பிடித் தானா

pavalamani pragasam
21st February 2024, 01:34 PM
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா கட்டில் வரி போட போறேண்டா வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா கட்டில்

NOV
21st February 2024, 02:57 PM
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை

pavalamani pragasam
21st February 2024, 06:02 PM
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி

NOV
21st February 2024, 07:46 PM
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி

pavalamani pragasam
21st February 2024, 08:02 PM
தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க

NOV
22nd February 2024, 06:13 AM
அன்பு வாழ்க ஆசை வாழ்க இன்ப பண்பாடும் மனம் வாழ்க
எண்ணம் வாழ்க இதயம் வாழ்க கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

pavalamani pragasam
22nd February 2024, 07:47 AM
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும்

NOV
22nd February 2024, 08:33 AM
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்

pavalamani pragasam
22nd February 2024, 09:49 AM
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய்

NOV
22nd February 2024, 10:05 AM
கல்யாண வளையோசை கொண்டு
கச்தூரி மான் போல இன்று

பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க

pavalamani pragasam
22nd February 2024, 12:38 PM
நான் பாய் போட்டு படுத்தாலும் பாலாக
குடிச்சாலும் தூக்கம் புடிக்கலியே
எனக்கு ஏதும் ருசிக்கலியே

தென்னமரத்துல தென்றல் அடிக்குது
நந்தவன கிளியே அடியே

NOV
22nd February 2024, 01:51 PM
நெடுவாலி அடியே நெடுவாலி
உடும்பா உடும்பா
அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போறீயே
நெடுவாலி அடியே நெடுவாலி
அரும்பா அரும்பா

pavalamani pragasam
22nd February 2024, 06:22 PM
பத்து குழைந்தை குட்டி..
அரும்பா, அடிக் கரும்பா... ரொம்ப அழகா...
பெத்து எடுத்து இங்கு
புருசனுக்கோர் பரிசெனவே தருவேன்

NOV
23rd February 2024, 09:42 AM
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

pavalamani pragasam
23rd February 2024, 10:56 AM
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்

NOV
23rd February 2024, 12:15 PM
என் உள்ளம் உந்தன் ஆராதனை

pavalamani pragasam
23rd February 2024, 12:32 PM
சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை..

உள்ளத்தின் ஓசை கண்ணாலே காட்டும் ஆசை

NOV
23rd February 2024, 01:46 PM
ஏறு ஓட்டி சோறு காட்டும் ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா

pavalamani pragasam
23rd February 2024, 03:47 PM
அடியே தாறுமாறா தாவுற மொசலே
என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுகிற விசிலு

NOV
23rd February 2024, 04:45 PM
பாட்டொன்னு பாடப்போறேன்டா ஆடாம இருக்க முடியாதுடா ஊரெல்லாம் விசிலு பறக்குதுடா இது குத்தாட்டம்

pavalamani pragasam
23rd February 2024, 05:55 PM
வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாடு கோழி

NOV
24th February 2024, 05:19 AM
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

pavalamani pragasam
24th February 2024, 06:27 AM
ஊற காக்க உண்டான சங்கம்
உயிர குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

NOV
24th February 2024, 09:59 AM
செவத்த புள்ள கருப்பா இருக்குறவங்களாய் புடிக்காத உனக்கு
Ayo ladies and gentlemen
வணக்கம்

pavalamani pragasam
24th February 2024, 10:41 AM
சொந்த பந்தம்
போல தான் ஒன்னா
நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கொடி
உச்சத்துல பறக்கும்

வணக்கம் நமஸ்கார்
சலாம் அலைக்கும் எப்பவும்
நம்ம கூட்டம்

NOV
24th February 2024, 02:34 PM
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

pavalamani pragasam
24th February 2024, 04:13 PM
எடை பார்க்கும் மிஷின் கண்டு எங்கள் ஐயா ஏறி நிற்க
கூட்டமா ஏறாதீங்க சீட்டு

NOV
24th February 2024, 04:30 PM
மனசெல்லாம் சீட்டு கட்டா கலஞ்சேதான் போவதென்ன தோழா அவளோட கண்ண கண்டா உருண்டோடும்

pavalamani pragasam
24th February 2024, 09:04 PM
ஓரிடந்தனிலே நிலையில்லா உலகினிலே
உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே

rajraj
24th February 2024, 09:21 PM
ஓரிடந்தனிலே நிலையில்லா உலகினிலே
உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே


PoruLe illaarkku thollaiyaa pudhu vaazhve illaiyaa
iruL neengum maargam illaiyaa iraivaa

NOV
25th February 2024, 01:26 AM
இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
இறைவா இறைவா திசை கொடு
இறைவா இறைவா இசைத்திடு
இறைவா இறைவா அசைத்திடு

pavalamani pragasam
25th February 2024, 07:57 AM
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்


அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்

NOV
25th February 2024, 09:16 AM
சப்த ஸ்வர தேவி யுனரு
இனி என்னில் வர தானம் அருளு
நீ அழகில் மம நாவில் வாழு
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று

pavalamani pragasam
25th February 2024, 10:13 AM
விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று

NOV
25th February 2024, 10:54 AM
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்

pavalamani pragasam
25th February 2024, 03:51 PM
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி

NOV
25th February 2024, 04:46 PM
ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே
அரைநெடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே

pavalamani pragasam
25th February 2024, 05:54 PM
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை

NOV
26th February 2024, 04:47 AM
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிர் ஆடும் திகிலாலே

pavalamani pragasam
26th February 2024, 07:53 AM
Clue, pls.

NOV
26th February 2024, 08:58 AM
Dhaam Dhoom
Thenali

pavalamani pragasam
26th February 2024, 10:18 AM
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே
திகில் என்னும்
தீபொறி தென்றலை
அழைக்குதே தீ அணைக்க
நினைத்தால் தீபாவளி

NOV
26th February 2024, 10:44 AM
தாவணி போட்ட தீபாவளி, வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு, கால் முளைச்சு, ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சி,
என் கண்ணா பின்னா பேச்சு,
பட்டாம் பட்டாம் பூச்சி

pavalamani pragasam
26th February 2024, 03:19 PM
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா

இந்த ஊரும்
புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா

இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா

பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது

NOV
26th February 2024, 04:49 PM
கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
Tyre puncture ஆகுமோ
ID card′a மறந்துட்டான்னா
Boarding card'a தொலச்சிட்டான்னா

pavalamani pragasam
26th February 2024, 06:08 PM
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து

NOV
27th February 2024, 04:12 AM
நீ இங்கே அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி

pavalamani pragasam
27th February 2024, 07:51 AM
இடைத்தோ்தல் வந்தாலே
இவன்தானே கொடி நாட்டுவான்

சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற

NOV
27th February 2024, 08:19 AM
கண்ணக் காட்டுப் போதும் நிழலாக கூட வாறேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சின்னு காதல கொட்டுற ஆம்பல
ஒட்டுறியே உசுற நீ நீ
நிச்சயம் ஆகல சம்பந்தம்

pavalamani pragasam
27th February 2024, 11:33 AM
சந்தைக்கு போனா நானும் சாட்சிக்கு வரவா
சம்பந்தம் பண்ண உனக்கு சம்மதந்தானா


காக்கையில்லா சீமையிலே

NOV
27th February 2024, 12:26 PM
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ

pavalamani pragasam
27th February 2024, 01:04 PM
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி

எட்டாத காய் பார்த்து
கொட்டாவி

NOV
27th February 2024, 03:21 PM
சோக்கா வங்கி தின்னுபுட்டு உட்டானய்யா கொட்டாவி,
ஒட்டான்ச் செல்லிய எடுத்துகிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு ,
ஒராழாக்கு அரிசி

pavalamani pragasam
27th February 2024, 03:52 PM
எந்த கடையில
நீ அரிசி வாங்குற
உன் அழகுல என்
உசுர வாங்குற
உம்மை எடை

NOV
27th February 2024, 04:10 PM
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு

pavalamani pragasam
27th February 2024, 05:58 PM
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்

NOV
28th February 2024, 01:46 AM
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்
புயல் மையம்

pavalamani pragasam
28th February 2024, 10:47 AM
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே…
அதன் பெயர்தான் என்ன

NOV
28th February 2024, 04:17 PM
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்