pavalamani pragasam
2nd March 2009, 05:51 PM
அவர்கள் அவல் மெல்கிறார்கள்- முதல் பாகம்
மேடையில் 4 நாற்காலிகள். ஒன்றில் ஒரு பெண் உட்கார்ந்திருக்க இன்னொரு பெண் வருகிறாள்.
ரமா: என்னக்கா, தனியா உக்காந்து என்ன யோசிச்சிகிட்டு இருக்கீங்க?
(அதை கேட்டுக் கொண்டே மேலும் இரண்டு பெண்கள் வந்து அமர்கிறார்கள்)
பூமா: சொல்லுங்கக்கா! நாங்களுந்தான் தெரிஞ்சிக்கிறோமே!
பாமா: சாயங்காலம் பள்ளிக்கூடத்துலேர்ந்து பிள்ளைகள் பசியோட வருவாங்களே, என்ன டிபன் செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.
உமா: நான் இப்பத்தான் முறுக்கு சுட்டு தூக்குல அடுக்கிட்டு வர்றேன்.
ரமா: நான் எப்பவும் 2,3 தினுசு பிஸ்கட் பாக்கெட்டை டப்பாவுல வச்சிருப்பேன்.
பூமா: நான் ஸ்டாக் தீர தீர பெரிய பாக்கெட் 2-minutes noodles வாங்கி வச்சிருவேன்.
பாமா: ஆமா. அதுவெல்லாம் போக பொரிகடலை, கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் போல ஏதாவது அவசர பசிக்கு வீட்டுல எந்நேரமும் இருக்கணும். ஏன்னா நம்ம இயற்கை உந்துதல்கள்லயே முதல் இடம் பசிக்குத்தானே?
உமா: பசி வந்திட பத்தும் பறந்துபோம்னு பழமொழி கூட இருக்கே!
ரமா: ஆமா, பசி வந்துட்டா 10 நல்ல குணங்களும் பறந்து போயிடுமாம்.
பாமா: இன்னொரு அர்த்தமும் இருக்கு அந்த பழமொழிக்கு: பத்தும்கிறத பற்றும்னு மாத்திச் சொல்லும் போது பாசம்ங்கிற பற்றும் பறந்து போயிரும்னு அர்த்தம் இருக்கு.
பூமா: ஓகோ! அதனாலதான் தாயும் சேயுமானாலும் வாயும் வயிறும் வேறுன்னு சொல்றாங்களோ?
உமா: பசியை உணர்த்துற வயிறு படுத்துற பாட்டைப் பற்றி ஔவையார் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? 'ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இரு நாள் உணவை ஏலென்றால் ஏலாய், இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தலரிது'
ரமா: ரொம்ப சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஒரு நா சாப்பிடாம இருக்கிறதும் கஷ்டம், 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டுக்கவும் முடியாது- ஒட்டகம் மாதிரி stock பண்ணிக்க முடியாதே! இப்படி தகராறு பண்ற வயிறோட வாழ்றது சிரமந்தானே?
பாமா: அவங்க கோணத்துல பாத்தா வயிறால தொந்தரவுதான். ஆனா, ஒரு மனுசனோட மனசுக்குள்ள நுழையறதுக்கு வயிறுதான் சரியான பாதைன்னு ஒரு ஆங்கில பழமொழி சொல்லுது: 'The way to a man's heart is through his stomach' அப்படின்னு.
பூமா: அது என்னவோ வாஸ்தவந்தான். வீட்டுக்காரருக்கும், பிள்ளைங்களுக்கும் வயிறார சாப்பாடு போடுற பொம்பளைங்க ரொம்ப மகிழ்ச்சியாத்தான் இருக்காங்க.
உமா: இவ்வளவு சர்வ வல்லமை படைச்ச வயிறு வீணா கர்வப்பட்ட ஒரு சமயத்துல மத்த உறுப்புகளெல்லாம் சேந்து வேலை நிறுத்தம் செஞ்சி அதுக்கு புத்தி புகட்டின நீதிக்கதைதான் நமக்கெல்லாம் தெரியுமே!
ரமா: ஆனா வயிற்றுப் பசிங்கிறது ரொம்ப கொடுமையானது. அத உணர்ந்ததுனாலதான் பாரதியார் 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,' அப்படின்னு பாடினாரு.
பாமா: பசிப்பிணியால அவதிப்பட்ட காயசண்டிகைக்கு மணிமேகலை கையிலிருந்த அமுதசுரபியால விமோசனம் கிடைச்சதுன்னு நம்ம தமிழ் காவியம் சொல்லுது.
பூமா: மணிமேகலைக்கு பசிப்பிணியை போக்குறதுக்கு ஒரு அமுதசுரபி தேவைப்பட்டது. ஆனா, மகாபாரதத்து திரௌபதியால பாத்திரத்துல ஒட்டிக்கிட்டிடிருந்த ஒரு பருக்கையில பெரிய விருந்து குடுக்க முடிஞ்ச அதிசயமும் நடந்திருக்கு.
உமா: திரௌபதியோட ஒரு பருக்கை பெரிய விருந்தானது அதிசயந்தான். அதைவிட அதிசயம் பெரிய ராஜா வீட்டு மொத்த கல்யாண சாப்பாடும் கடோத்கஜன்ங்கற ஒத்தை ஆளுக்கு பத்தலையாங்கிற சங்கதி.
ரமா: அந்த கடோத்கஜனை மாதிரியே நம்ம மதுரை மீனாட்சிய கல்யாணம் பண்ண வந்த சுந்தரேஸ்வரரின் பக்தனான குண்டோதரனும் மலையத்வராஜாவோட கல்யாண சாப்பாடு முழுசையும் சாப்பிட்டு முடிச்சானாம்.
பாமா: இப்படிப்பட்ட பெருந்தீனியர்கள் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் கோபெருஞ்சோழன், பிசிராந்தையார், கபிலர் மாதிரி நிறையப் பேர் வடக்கிருந்து - அதாவது உணவருந்தாம- உயிரை விட்டுருக்காங்க.
பூமா: பிற்காலத்துல உண்ணாவிரதம் நம்ம மகாத்மா காந்தி கையில எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமா இருந்து நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் குடுத்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே!
உமா: ஒவ்வொரு வருசமும் இன்னின்ன மாசத்துல, இன்னின்ன கிழமைல இத்தனை இத்தனை வேளை உண்ணாம நோன்பிருக்கணும்கிற பழக்கம் எல்லா மதத்திலயும் ஒரு ஆன்மீக நெறியா பல நூற்றாண்டுகளா இருக்கு.
ரமா: ஆமாமா. இப்படி விரதமிருக்கிற பழக்கத்தால நல்ல சிந்தனைகள் வளந்து தர்மம் தழைக்கிறதோட 'லங்கனம் பரம ஔஷதம்'னு சொன்ன வாக்குப்படி ஒரு சிறப்பான வைத்திய சிகிச்சையாவுமில்ல இருக்கு!
பாமா: ரொம்ப சரியா சொன்னீங்க! விரதம் இருக்கிறது உடல் நலத்துக்கு மட்டுமில்ல நாட்டோட பொருளாதாரத்துக்குமில்லா உதவி செஞ்சிருக்கு! நம்ம பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 'miss-a meal-on-Monday' அப்படிங்கிற திட்டத்த அறிமுகப்படுத்தினது எனக்கு ஞாபகம் வருது.
(இன்னும் மெல்வார்கள்!)