PDA

View Full Version : Cho-vin "EngE BraahmNan"? Jaya tv



Pages : [1] 2 3 4

Shakthiprabha.
2nd February 2009, 10:45 PM
சோ-வின் எங்கே பிராமணன் எனும் தொடர் இன்று முதல் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணியில் இருந்து 8.30 மணி வரை ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதன் மூலம் நாம் சொல்லப்போகும் கருத்துக்கள் உபநிஷத்துக்கள் வேதங்களை ஒட்டி அமைந்திருக்கும் என்று விளம்பரம் செய்திருந்தனர்.

பிராம்மணன் என்பவன் பிறப்பால் மட்டும் பிராம்மணன் ஆக மாட்டான். பிரம்மத்தை எவன் தியானித்து இருக்கிறானோ அவனே பிராம்மணன் என்று வேதங்களும் உயர்ந்த கருத்துக்களும் தெரிவிக்கின்றன.

இக்கருத்தை எந்த அளவு ஒருமித்து, செய்திகளையும், தகவல்களையும் பரிமாறவிருக்கிறார்கள் என்ற ஆவல் எழுகிறது.


Enke Biramanan (http://raretfm.mayyam.com/stream//tvserial/Enge_Brahmanan.rm) - Title song

sivank
2nd February 2009, 10:49 PM
sp, enge brahmannan padichu irukeengalaa?

Shakthiprabha.
2nd February 2009, 10:49 PM
நான் இத்தொடரை தொடர்ந்து பார்த்து வர எண்ணியுள்ளேன்.

ஏதேனும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தாலோ, பேச அல்லது விவாதிக்கக்கூடிய நல்ல அல்லது நல்லது அல்லாத கருத்துக்கள் இருந்தாலோ, எனக்கு நேரம் இருப்பின் நிச்சயம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன.

Shakthiprabha.
2nd February 2009, 10:50 PM
oh was that a novel sivan?
yaarodathu?

paarka ninaichirukken thodaraaga.

sivank
2nd February 2009, 10:52 PM
cho ezhudhinadhu adhu. oru bayangara galatta pannittar adhu thodar kadhayaa varum bodhu

aanaa
7th February 2009, 06:30 AM
எங்கே பிராமணன்'



நடிகரும் எழுத்தாளருமான சோ எழுத்தில் வெளிவந்த `எங்கே பிராமணன்' நாவல், சின்னத்திரை தொடராக ஜெயா டிவியில் வருகிறது.

பிரபல தொழில் அதிபர் நாதன்-வசுமதி தம்பதியரின் ஒரே வாரிசு அசோக் விரக்தியின் விளிம்பில் நின்று `தான் யார்?' என்ற ஆன்மிகத் தேடலில் ஈடுபடுகிறான். சந்தேக நிவாரணியாக கை கொடுக்கும் மாங்காடு பாகவதர், சாஸ்திரத்தில் துளியும் நம்பிக்கையற்ற நாதனின் உறவுக்காரர் நீலகண்டய்யர், பல வைதீகர்களை காண்ட்ராக்டில் கையடக்கி வைக்கும் வேம்பு, செல்வந்தரானாலும் வைதீக பிராமணர்களை மதித்து போற்றும் நீதிபதி ஜகன்னாதய்யர் இவ்வாறு பல பாத்திரங்கள் கதையை ஆளுகின்றன.

தன்னை யார் என தெரிந்து கொள்ள பாடுபடும் அசோக்கிற்கு பிரம்மோபதேசம் செய்து வைத்தால், நிவாரணம் ஏற்படும் என்கிறார் பாகவதர். யார் உண்மையான பிராமணன் என்ற சர்ச்சை தீர, வசிஷ்டரை பூமியில் மானுடனாக (அசோக்) பிறப்பித்த விஷயத்தை கூறுகிறான் ஈசன். `யார் பிராமணன்' என்ற கேள்விக்கு விடை காணாத வசிஷ்டர் பிரம்மோபதேசம் நிறைவேறியதும் விடை காண்பார் என சிவபெருமான் கூறுகிறார். ஆனால் அவ்வாறு விடை கிடைக்காமல் போகவே, சிவனை அணுகி கேட்க அவர் `பூணூல் நடைபெற்றது. ஆனால் பிரம்மோபதேசம் இன்னும் நடைபெறவில்லை' என்கிறார்.

சிவபெருமான் குறிப்பிட்ட `அந்த' பிரம்மோபதேசம் அசோக்கிற்கு வையாபுரி என்ற அரசியல்வாதியின் கையாள் சிங்காரம் என்கிற பிராமணன் அல்லாத மனிதன் மூலம் சித்திக்கின்றது! குலத்தால் அல்ல, குணத்தாலே பிராமணியம் அறியப்படும்என்ற பேருண்மை விளங்குகிறது.

வசிஷ்டர் தேடிய `பிராமணன்' கிடைக்கிறான்.

டெல்லிகுமார், நளினி, குயிலி, கோபி, கோல்டன் சுரேஷ், வரலட்சுமி, ஸ்ரீவித்யா, விஜயகிருஷ்ணராஜ் நடிக்கிறார்கள். திரைக்கதை வசனம் எழுதி தொடரை இயக்குபவர்: வெங்கட்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகிறது.

bingleguy
7th February 2009, 11:49 AM
hmn .... interesting ...... mudhal vaaram paathavanga enna solraanga indha thodarai pathi ? naan padichadhillai indha writing ai ... so idhula paatha better aa irukkum nnu ninaikiren .... Well this is a viable controversial serial i suppose !

Shakthiprabha.
10th February 2009, 11:33 AM
இந்த நாவலை நான் படித்ததில்லை. ஆனா கூறியது போல், அஷோக் என்ற வாலிபன், சுயத்தின் தேடலில் ஈடுபடுகிறான். இளம் வயதில் ஆன்ம வெளிபாட்டை தாண்டிய வேதாந்த தேடல் பெற்றோருக்கு கவலையை தருகிறது. இக்குடும்பத்திலும், இவன் சந்திக்கும் நபர்கள் அவர்களை சேர்ந்தவர்கள் குடும்பத்திலும் நடக்கும் கதை மட்டுமே அல்ல இத்தொடர். அவர்கள் நடத்தும் சம்பாஷணையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய சில அரிய கருத்துக்களை கதையின் ஊடே பேச்சின் ஊடே புகுத்தியிருக்கிறார்.

சென்றவாரமே விளக்கு ஏற்றுதலின் முக்கியத்துவம், விடியற்காலை கோலமிடுதல் என்பன பொன்ற சாஸ்திர விஷயங்களை ஆராய்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்கள்.

இடையிடையே, தொடரைப்பற்றிய சில சந்தேகங்களை சோ விடமே ஒரு நபர் கேட்பது போலவும், அதற்கு சோவும் தன் சுய கருத்தை வெளியிடுவது போலவும் அமைத்திருப்பது, பொதுவாய் வெளிவரும் சராசரி தொடர் என்ற நினைப்பைத் தாண்டி வித்தியாசத்தை கொணர்கிறது.

Shakthiprabha.
10th February 2009, 12:02 PM
திங்கள் பிப்ப்ரவரி 9
_________________

அஷோக்கின் பிறந்தநாளையொட்டி அவன் பெற்றோர் புதுத் துணி வாங்கி வருகிறார்கள்.

"நீங்கள் குடுத்த இந்த உடம்பு எனும் சட்டை இருக்கையில் எனக்கென் புதுச்சட்டை" என்று மறுத்துவிடுகிறான் அஷோக்.

"பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த கணம் முதலே மரணத்தை நோக்கி தம் பயணத்தை தொடங்கிவிடுகின்றனர். இதில் கொண்டாட என்ன இருக்கிறது. பிறந்த நாள் என்பது வெறும் மயில்கல்" என்கிறான்.

குயிலி கோபு குடும்பத்தில் ஸ்ரார்த்தம் நடைபெறுகிறது. நம்பிக்கையற்ற கோபுவின் கேள்விகளுக்கு, (உதாரணமாக "ஹவிஸ் அக்னியில் இடும் போது, அது எப்படி முன்னோர்க்கு போகும்? அக்னி என்ன குரியர் செர்விஸ் நடத்துகிறாரா?" ) ஸ்ரார்த்தம் செய்துவைக்க வந்த சாஸ்த்ரிகள் அர்த்தம் கூறிகிறார். இதன் விளக்கங்கள் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அளித்திருப்பது "தெய்வத்தின் குரல்-பகுதி4" இல் இருக்கிறது என்கிறார்.

ஸ்ரார்த்தம் செய்யும் போது ஏன் பஞ்சகச்சம் அணிய வேண்டும் என்பதற்கு சோ வின் விளக்கம் வித்தியாசமாய் இருந்தது. 'Was it convincing enough?' என முடிவெடுக்க வேண்டியது அவரவர் தனிப்பட்ட விஷயம்.

ஸ்ரார்த்த உணவை ஏன் குடும்பம் அல்லாத (கோத்திரம் அல்லாத) ஒருவர் உண்ணக்க்கூடாது என்பதற்கும் விளக்கம் இருந்தது. (அப்படியே பழக்கம் என்று கூறிகிறார்) ( I wasn't conviced about this part of his explanation)


அஷோக்கின் கல்லூரியில் அவனைப் பற்றி ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்கிறார். வகுப்புக்களுக்கு சரிவர வருவதில்லை, எனினும் 95 சதவிகிதம் மதிப்பெண் பெறுகிறான். மிகவும் அமைதியாக, யாருடனும் பேசாது, மௌனியாய் இருக்கிறான், எப்போதும் மரத்தடியில் ஆழ்ந்த சிந்தையில் ஈடுபட்டிருக்கிறான். அல்லது ஏதேனும் புத்தகம் படித்தபடி இருக்கிறான், என்கிறார்.

அவன் சஞ்சரிக்கும் லோகமே வேறு என்று தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் முடிவு செய்கின்றனர்.

லோகத்தில் அவ்வப்பொழுது, ஒரு Einstein, c.v.raman, ramanujam போன்ற அரிய பிறப்புக்கள் பிறக்கும். அவர்களின் போக்கும், செயலும் வித்தியாசமாய் இருக்கும். அவர்களின் பிறப்பிற்கு ஒரு பலமான நோக்கம் இருக்கும். நமக்கு அதை தெர்ந்து கொள்வதும் கடினம், என இருவரும் மகிழ்வுடன் ஸ்லாகிக்கின்றனர்.

இந்த தொடரிலும் "காதல்" வரும் என்று சோ தன்னுடன் உரையாடுபவரிடம் சொல்லி முடிக்கிறார். That is to grab the interest of all and sundry.

'இன்னும் தேடுவோம்' என்று நேற்றைய தொடரை முடித்தனர்.

இதுவரை, சாஸ்திர விளக்கங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ஆன்மீகத்தேடலுக்கு இன்னும் தரப்படவில்லை என்பது என்போன்ற சிலருக்கு வருத்தம் அளிக்கிறது :(

"தேடித்தான் பார்ப்போமே!" என்று எனக்கும் தோணுகிறது.

தேடிப்பார்ப்பேன்.

Shakthiprabha.
11th February 2009, 12:14 PM
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். நேற்றையிலிருந்து நான் இத்தொடரை பார்த்து வருகிறேன். அதனால் சென்ற பதிவில் இடம் பெறும் "தன்னுடன் உரையாடுபவர்" என்ற சொற்றொடருக்கு பதில் "தயாரிப்பாளர்" என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

சோ அவ்வப்பொழுது உரையாடுவது தொடரின் தயாரிப்பாளருடன்.

Shakthiprabha.
11th February 2009, 12:32 PM
செவ்வாய் - Feb 10
________________

நம் மாங்காடு பாகவதரின் குடும்பச்சண்டைகள் நேற்றைய பாதி தொடரை ஆக்ரமித்தது. நமக்கேன் அவர்கள் வீட்டுக் கதையெல்லாம்!? பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு "நகரேஷு காஞ்சி" என்று காஞ்சி மாநகரின் பெருமையை சுட்டிக் காட்டினார்.

உடல் நலம் குன்றியும் ஜட்ஜ் வீட்டுத் தர்பணத்திற்கு செல்ல விழைந்த தன் தகப்பனை, மகன் தடுத்து தான் சென்று தர்பணம் நடத்திவிட்டு வருகிறான். வேதியல் படித்து வேலையில் அமர்ந்திருப்பவனுக்கு வேதமும் தெரியும் என அடக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன்னை வெளிப்படுத்துகிறான்.

கலியுகத்தில் வேதம் தெரிந்தவர்கள் குறைந்து வருவது மலிந்து கிடக்க, இளம் வாலிபன் ஒருவனின் வேத அப்யாசம் கண்டு திருப்தியடைக்கிறார் நீதிபதி.


தர்பணம் பற்றிய பேச்சு அடிபடும் போது, முன்னோருக்கு மட்டுமின்றி அவர்கள் செய்யும் கார்யம், பாரபட்சமற்று ஜாதி மத வேறுபாடுகளற்று, தாய் தந்தை உறவினர் அற்ற மற்ற ஆன்மாக்களுக்கும் சென்று சேர்வதாய் ஒரு ஸ்லோகம் சொல்வதுண்டு.

யேஷம் ந மாதா ந பிதா ந ப்ராதா
ந பந்து ந அந்ய கொத்ரீந:
தே சர்வே த்ருப்திமயந்து

என்பது ச்லோகம்.



நம் கதாநாயகன் அஷோகை கிண்டல் செய்த ஆட்டோ ட்ரைவர் ஏதேச்சையாய் இறந்து விட, விட்டேத்தியாய் பேசிய அஷோக்கின் கரி-நாக்கும் இதற்கு காரணம் என்று பேசத் துவங்குகின்றனர் அக்கம் பக்கத்தவர்.

முறையே, இங்கு தொடரை நிறுத்தி சோவின் விளக்கம் தொடர்ந்தது. வாக்கு பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது co-incidence ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் அடைந்துவிட்டவனெல்லாம் மஹான் அல்ல என்றார். பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டல்லவா?!

என் பாட்டியும் அம்மாவும் அப்பாவும் சொன்ன "இட்சிணி தேவதைகளை" பற்றித் தான் இவரும் சொன்னார். Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும். இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் பாட்டிகள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள்.

இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம். நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும். நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் (ஒழிந்து போ, சனியனே போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது) இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்.

இதையே சோவும் கூறி தொடரை முடித்தார்.

viraajan
11th February 2009, 12:38 PM
My mom has read this book once and she was enthralled. Just today I came to know that there is a serial on Jaya TV about this. I'm planning to watch it. I'll surely participate in the discussions.

I have the thirst to know more about "Self Realization", "God's existence", "Power of Vedhas/Mantras" etc.

Hope I'll be able to get it in this serial. :bow:

Shakthiprabha.
11th February 2009, 12:40 PM
:redjump: welcome vr :)

I think the serial talks more on religous rituals and its meanings, yeah vedhas and its powers, mantras would be there as much as u want. I have my own reservations and doubts on how much its gonna talk on 'Self realization'.

I am eagerly waiting whats in store. :)

viraajan
11th February 2009, 12:44 PM
:ty: akka :bluejump:

Great to know this akka. :redjump:

I believe in Mantras/Vedhas (even though i've no in-depth knowledge in this :ashamed: ) :bow:

I have strong belief in the rituals which our ancestors followed, which this generation does not follow. :oops:

sivank
11th February 2009, 01:30 PM
seems like they have induced lot of new characters for the serial.

viraajan
11th February 2009, 08:45 PM
Watched today's episode.

Not bad :|

But the explanation that Cho gave for classical dance was good :bow:

Equally good was Cricekt-BarathaNattiyam comparison.

:clap:

Shakthiprabha.
12th February 2009, 05:50 PM
நேற்றைய பகுதியில் சொல்லிக்கொள்கிறார் போல் ஒன்றும் இல்லை.

நாதன் அவர்களின் club தேர்தல் சார்ந்த அலட்டல்களும் பேச்சுக்களும் தொடர்ந்தன. நளினி தன் பகுதியை மிகச் சிறப்பாக செய்கிறார். தொலைக்காட்சி நாடகத்தில் மட்டுமே நடிப்பவர்களுக்கும், திரை நட்சத்திரங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் காண முடிகிறது. kudos to naLini :clap:

சோ சொன்னதைப் போல் இன்றைய காலகட்டத்தில், தெருக்கு தெரு, தொகுதிக்கு தொகுதி, அடுக்குமாடி குடியிருப்பு உட்பட மகளிர் அணி, நல்வாழ்வு அமைப்பு என்று பல பெயர்களுடன் associations அதைச் சார்ந்த, குழப்பங்கள், ego, பொறாமை போட்டி என சொல்லி மாளாது.

ஒன்றையணா பெறாத இந்த அமைப்புக்களில் யார் தேர்தலில் ஜெயித்தால் என்ன! யார் தோற்றால் என்ன! பெரும்பாலான இடங்களில், தனிப்பட்ட விரோதங்கள் நிரம்ப வளர்ந்து வருவது கண்கூடு.

அப்புறம், இன்னொன்று:

சாஸ்த்ரிகள் மகனுக்கும் ஜட்ஜ் பெண்ணுக்கும் இடையே அழகான நட்பு கலந்த காதல் மலர்வது போல் தெரிகிறது.

aanaa
13th February 2009, 03:03 AM
திங்கள் பிப்ப்ரவரி 9


:ty:

மைல்கல்
மயில்கல்
:bangcomp: :-)

aanaa
13th February 2009, 03:06 AM
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். ்.

தொடருங்கள்

{jaya TV இல்லை }

aanaa
13th February 2009, 03:11 AM
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். ்.
100% உண்மை

கெட்ட சொற்களின் சக்தி
முதலில் சொன்னவர்களைத் தாக்கிய பின்தான்
மற்றவர்களிடம் செல்கின்றது.

ஆகவே பாதிக்கப்படுபவர்கள் முதலில் பேசியவர்கள்தான்.

Shakthiprabha.
13th February 2009, 01:07 PM
திங்கள் பிப்ப்ரவரி 9


:ty:

மைல்கல்
மயில்கல்
:bangcomp: :-)

:oops: ஹி ஹி ஹி ஆர்வக்கோளாறின் காரணமாய் கவனிக்கவில்லை :oops: :)

Shakthiprabha.
13th February 2009, 01:08 PM
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். ்.
100% உண்மை

கெட்ட சொற்களின் சக்தி
முதலில் சொன்னவர்களைத் தாக்கிய பின்தான்
மற்றவர்களிடம் செல்கின்றது.

ஆகவே பாதிக்கப்படுபவர்கள் முதலில் பேசியவர்கள்தான்.

உண்மை :bow:

Shakthiprabha.
13th February 2009, 01:46 PM
Feb 12th
_______

நேற்றைய தொடரில், உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகள் தான்.
ஆசையுடன் பேரனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்தெடுத்துக்கொண்டு அவனைப் பார்க்கச்செல்லும் தாத்தா பாட்டி,

காதல் போன்றதொரு ஈர்ப்பை சொல்லத்தெரியாத சாஸ்த்ரிகள் மகன், அவனை சொல்லவைக்க ஊடல் கொண்டாடும் ஜட்ஜின் மகள்,

புதிதாய் ஒன்றும் இதைப்பற்றி நான் அலச விரும்பவில்லை என முன்பே கூறியிருந்தேன்.

இடையிடையே தொகுதித் தேர்தல் பற்றிய கதைக்களங்களும் இருந்தன.

பிராமணன் ஏன் சமஸ்க்ருதம் படித்தல் தவறா? சமஸ்க்ருதம் படிப்பதால் அவன் தமிழன் அல்ல என்பது எப்படி நியாயமான வாதம்? என்பது போன்ற தர்க்க விவாதங்களுக்கு சோவின் பார்வை மட்டும் சுவாரஸ்யமாய் இருந்தது.

விவாததிற்கும் எதிர்விவாததிற்கும் வலைவிரிக்கும்படி இருந்தது. சமஸ்க்ருதத்தை, ஏற்றுக்கொண்டதால் பிராமணன் தமிழன் அல்ல என்றால், தாம் ஓதும் குர்-ஆன் -இல் அரபு மொழிக் கலந்து ஓதும் முஸ்லிம் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? லத்தின்மொழி கலந்திருக்கும் பைபிளை ஓதும் க்ருத்துவன் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? என்று காரசாரமாய் தம் கோணத்தை பகிர்ந்து முடித்தார்.

viraajan
13th February 2009, 01:49 PM
பிராமணன் ஏன் சமஸ்க்ருதம் படித்தல் தவறா? சமஸ்க்ருதம் படிப்பதால் அவன் தமிழன் அல்ல என்பது எப்படி நியாயமான வாதம்? என்பது போன்ற தர்க்க விவாதங்களுக்கு சோவின் பார்வை மட்டும் சுவாரஸ்யமாய் இருந்தது.

விவாததிற்கும் எதிர்விவாததிற்கும் வலைவிரிக்கும்படி இருந்தது. சமஸ்க்ருதத்தை, ஏற்றுக்கொண்டதால் பிராமணன் தமிழன் அல்ல என்றால், தாம் ஓதும் குர்-ஆன் -இல் அரபு மொழிக் கலந்து ஓதும் முஸ்லிம் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? லத்தின்மொழி கலந்திருக்கும் பைபிளை ஓதும் க்ருத்துவன் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? என்று காரசாரமாய் தம் கோணத்தை பகிர்ந்து முடித்தார்.

I couldn't watch it yesterday :oops:

But this question tells it all. Very good opinion about Sanskrit, Bible and Kuran. Slapping on the face of those who say Sanskrit is not for Tamilan. :bow:

bingleguy
13th February 2009, 03:55 PM
பிராமணன் ஏன் சமஸ்க்ருதம் படித்தல் தவறா? சமஸ்க்ருதம் படிப்பதால் அவன் தமிழன் அல்ல என்பது எப்படி நியாயமான வாதம்? என்பது போன்ற தர்க்க விவாதங்களுக்கு சோவின் பார்வை மட்டும் சுவாரஸ்யமாய் இருந்தது.

விவாததிற்கும் எதிர்விவாததிற்கும் வலைவிரிக்கும்படி இருந்தது. சமஸ்க்ருதத்தை, ஏற்றுக்கொண்டதால் பிராமணன் தமிழன் அல்ல என்றால், தாம் ஓதும் குர்-ஆன் -இல் அரபு மொழிக் கலந்து ஓதும் முஸ்லிம் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? லத்தின்மொழி கலந்திருக்கும் பைபிளை ஓதும் க்ருத்துவன் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? என்று காரசாரமாய் தம் கோணத்தை பகிர்ந்து முடித்தார்.

I couldn't watch it yesterday :oops:

But this question tells it all. Very good opinion about Sanskrit, Bible and Kuran. Slapping on the face of those who say Sanskrit is not for Tamilan. :bow:

really appreciable ! adithu sollappadum or karuthu ....

aanaa
14th February 2009, 01:03 AM
Feb 12th
_______

சமஸ்க்ருதத்தை, ஏற்றுக்கொண்டதால் பிராமணன் தமிழன் அல்ல என்றால், தாம் ஓதும் குர்-ஆன் -இல் அரபு மொழிக் கலந்து ஓதும் முஸ்லிம் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? லத்தின்மொழி கலந்திருக்கும் பைபிளை ஓதும் க்ருத்துவன் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? என்று காரசாரமாய் தம் கோணத்தை பகிர்ந்து முடித்தார்.

thank u

aanaa
14th February 2009, 06:59 AM
http://www.cinechipz.com/tv/2009/02/13_02_09-enge-bramanan/

Shakthiprabha.
16th February 2009, 12:00 PM
நன்றி ஆனா.

Feb - 13th

______

சோவின் கருத்துப் பரிமாற்றத்தில் 'இன்னொரு மொழியின் துவேஷம் தேவையில்லை என்ற கருத்தையொட்டி, சமஸ்க்ருத பாஷையில் புனையப்பட்ட உயர்ந்த காவியங்கள் மட்டுமின்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள், தகவல்கள்' என பல பொக்கிஷங்கள், சமஸ்க்ருத மொழியில் புனையப்பட்டிருபப்தை சுட்டிக்காட்டினார்.

யான் எனது எம் மொழி என்ற பிரிவு மனப்பான்மையை விடுத்து எதிலும் நல்லனவற்றை எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மையே அல்லவா விளைகிறது என்ற தொனியில் அவர் பேச்சு தொடர்ந்தது.

நீலகண்டன் (கோபு?) அஷோக்கை ஆன்மீக மடத்திலிருந்து வெளிவருவதைக் கண்டு, நாதனிடம் தன் மனவருத்ததை தெரிவிக்கிறார். சதா பூஜை புனஸ்காரம் என்று வளர்க்கப்பட்டதால் அவன் மற்றோரைப்போல் இல்லாமல் வித்தியாசமாய் பண்டாரம் போல் திரிவதாக குறைப்பட்டுக்கொள்கிறார். மதம், ஆச்சாரம், எல்லாமே உபயோகமற்றது என்றும், தான் இதை எல்லாம் அனுஷ்டிக்காததாலேயே தன் குடும்பம் சௌகரியமாக இருப்பதாய் அங்கலாய்த்தார்.

குயிலி (நீலகண்டன் மனைவி) ஊரார் வம்பில் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கடிந்து கொண்டாலும், தம் உறவினர் மகன் ஒருவன், பண்டாரம் போல் திரிவதைக் கண்டு எவ்வாறு சும்மாய் இருப்பது என்று வருந்துகிறார் நீலகண்டன்.

இதனைக் கேட்ட நாதனும், அவர் மனைவியும், அஷோக்-கிடம் "ஏன் இப்படி இருக்கிறாய்" என்று கேள்விகள் அடுக்குகின்றனர். "நீ எதையோ பறிகொடுத்தவன் போல் ஏன் சோகம் கப்பிய முகத்துடன் சிந்தனையில் இருக்கிறாய்." என்று நாதன் வினவ.

"ஆமாம் அப்பா! நான் என்னையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்" என்கிறான் அஷோக்.


"என்ன வேணும் உனக்கு, சொல்லு நானும் சேர்ந்து தேடுகிறேன். என்ன தெரியணும் உனக்கு சொல்லு, எனக்கு தெரிஞ்சதை நானும் சொல்றேன்" என்று சொல்ல

"ஆத்மானுபூதி பற்றி தெரியுமாப்பா" என்று வினவ அவர் வேதனையுடன் வாயடைத்துப் போய் வெறுப்புடன் இடத்தை விட்டு நகர்கிறார்.

அவன் மற்றவனைப் போல் சினிமா ட்ராமா என்று சுற்றாமல் மடம், இறைவன் என சுற்றுகிறானே என கவலை தொனிக்க பேசும் நாதன் பேச்சு யதார்த்தமாய் இருந்தது. அவரின் வருத்தம், கோபம், இயலாமை அழகாய் வெளிப்பட்டது.

"யாரு நீலகண்டனா சொன்னது? பேரு தான் தூரத்து சொந்தம், ஆனா எப்பவும் கிட்டகயே தான் இருக்கார்' என்று நளினி இயல்பாய் அங்கலாய்ப்பது புன்னகைக்க வைக்கிறது.

(தொடரும்)

( Actress NaLini, is racing wildly in the contest to win our hearts )

aanaa
16th February 2009, 06:18 PM
"ஆமாம் அப்பா! நான் என்னையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்" என்கிறான் அஷோக்.
......
(தொடரும்)

( Actress NaLini, is racing wildly in the contest to win our hearts )
நன்றி சாரதா

//தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்//
விடை கிடைக்குமா

Shakthiprabha.
17th February 2009, 02:00 PM
"ஆமாம் அப்பா! நான் என்னையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்" என்கிறான் அஷோக்.
......
(தொடரும்)

( Actress NaLini, is racing wildly in the contest to win our hearts )
நன்றி சாரதா

//தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்//
விடை கிடைக்குமா

ஷக்தி :)

leosimha
17th February 2009, 02:15 PM
I heard this came in Tughlaq magazine. Is this story a fiction or non-fiction? How good is this story? Is it really good to watch. 1/2 an hour serial means only 15 minutes of serial will be telecast leaving the reast 15 minutes to advt.

Shakthiprabha.
17th February 2009, 03:38 PM
Leo,

Yeah it did come as a novel. Its a fiction combined with few messages or talks on vedhas and scriptures it talks a lil on self-quest too.

I aint too keen on watching the story part, I do watch the messages and am keen on character called ashok and his life. (who is into self - enquiry)

It seems adverstisements are flooding in. true.

Shakthiprabha.
17th February 2009, 03:52 PM
Feb - 16th

நேற்றைய தொடரில் ஒரு புனைக்கதை ஒன்றை சோ பகிர்ந்துக்கொண்டார். மிகவும் சுவாரஸ்யமாகவும், சிந்திக்கும்படியும் இருந்தது.

ஒரு சந்யாசி தேசாந்திரமாய் திரிந்துகொண்டிருந்த போது, அவரை அரசன் ஒருவன் வருந்தி அழைத்து, தன் மாளிகையில் உணவு அருந்த வற்புறுத்துகிறான். சந்யாசியும், பிறர் மனையில் உணவு அருந்துவதில்லை, என்ற கொள்கை உடையவன் என்று மறுத்துக்கூறுகிறான். அரசன் மிகவும் மனம் வருந்தி, மிக்க பணிவன்புடன் மீண்டும் தன் கோரிக்கையை சந்யாசியிடம் வைக்கிறான். மறுக்க இயலாமல் அவரும் ஒப்புக்கொண்டு உணவு உண்ணச்செல்கிறார்.

உணவு உண்டு முடிக்கும் தருவாயில், அரச மண்டபத்தில் அழகாய் தொங்கிக்கொண்டிருந்த மணிமாலை, முத்து மணிமாலை ஒன்று பளிச்சென மின்னி கண்ணைக் கவர்ந்தது. சந்யாசிக்கும் அந்த மாலையை அபகரிக்கும் எண்ணம் தோன்றுகிறது. அவர் மாலையை களவாடி குடிலுக்கு திரும்புகிறார்.

அரசரோ, அனைவரின் பேரிலும் சந்தேகம் கொண்டு, விசாரிக்கிறார். உண்மை வெளிவராது போகவே, சித்திரவதை செய்தாவது திருடனை கண்டுபிடிக்க எண்ணுகிறார்.

குடிலில் சற்று நேரம் கழித்து தன் செயல்களை ஆராய்ந்த சந்யாசிக்கு தனக்கு எவ்வாறு இப்படி ஒரு அவதூறு/கஸ்மல எண்ணம் எழுந்தது என வருந்தி, மாலையை அரசரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறார். சந்யாசியின் திருட்டை அரசர் என்று நம்ப மறுக்க, சந்யாசி உடனே, "இதற்குத் தன் நான் பிறர் மனையில் உட்கொள்வதில்லை" உணவில் தான் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. இன்றைக்கு மாறுபட்டதாய் நான் செயல்படக் காரணம், வழக்கத்திற்கு மாறாக நான் கொண்ட உணவு தான் என்கிறார்.

அரசர் உடனே, யார் சமைத்த உணவு என்றும், அரிசி எங்கிருந்து வந்தது என்பன போன்ற விஷயங்களை விசாரிக்கிறார். விசாரணையில், அரிசி, ஒரு கொள்ளைக்கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அரிசி எனத் தெரியவந்தது.

உணவை சமைப்பவனும், அதைத் தீண்டுபவனின் சிந்தனையும் கூட உணவில் பரிமாறப்பட்டுவிடுகிறது.

___

சோ இதைக் கூறிய பின், தயாரிப்பாளர் நகைக்கிறார்.

உடனே சோ "ஏன் நம்பிக்கை இல்லையா, தொற்றுவியாதி உள்ள ஒருவனின் வீட்டில் இருந்த உயிரற்ற வஸ்துக்களுக்கும் கிருமிகள் பரப்பும் வாய்ப்பு உள்ள போது, அன்னம் என்பதில் தொற்றாதா" என்று சொல்ல

"நன்றாய் கதை அளக்கிறீர்கள்" என்கிறார் தயாரிப்பாளர்.

'நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்' என்று முடித்தார் சோ.

___

பொதுவாகவே நம் உடல், பஞ்சபூதங்களால் ஆனது, அதை உயிரூட்டுவது உணவு. அது உணவினால் ஆக்கப்படுவது. எங்கள் வீடுகளில் கூட சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடனும், இறை தியானத்துடனும் சமைத்தால், அந்த எண்ணம் சமைக்கப்படும் உணவில் தங்கி, உண்பவருக்கு நல்லது விளைவிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.


***

இதைத் தவிர நேற்றைய தொடரில், பாகவதர் வீட்டு மாட்டுப்பெண்-புக்ககத்தார் விவாதங்கள், நாதன் வீட்டிற்கு நீலகண்டன் தம் குடும்பத்துடன் வாழ்த்து தெரிவிக்க வருகிறார். பாகவதரும் வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஹாங்....சொல்ல மறந்து விட்டேனே....ஏன் என்றால்...

நாதன் தொகுதித் தேர்தலில் வென்றுவிடுகிறார்.

(தொடரும்)

Thirumaran
17th February 2009, 04:08 PM
:shock: Is this started :cry: I am missing everything :evil:

Any links to view online :huh:

Shakthiprabha.
17th February 2009, 04:12 PM
http://www.cinechipz.com/tv/2009/02/13_02_09-enge-bramanan/

tm,

I bet u miss :(

Thirumaran
17th February 2009, 04:18 PM
Will check that link later SP.. :ty:

Need to go thru ur writings too :D Keep it up :thumbsup:

Shakthiprabha.
17th February 2009, 04:43 PM
thanks tm :)
I am not highlighting story part of the serial. I am highlighting only the messages behind the talks.

aanaa
18th February 2009, 03:52 AM
thanks tm :)
I am not highlighting story part of the serial. I am highlighting only the messages behind the talks.
:goodidea: welcome
:ty:

leosimha
18th February 2009, 11:47 AM
Thank you for the information Ms. SP.

Yesterday I missed the first 20 minutes and saw from the point when the boy is answering the girl about Bharathiyaar poems and sings praises about him.

I need to catch up on the missed parts and episodes.

Shakthiprabha.
18th February 2009, 12:04 PM
leo,

:cool: happy watching!

:ty: aana

Shakthiprabha.
18th February 2009, 12:37 PM
Feb - 17th
_________

புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்ற கருத்து நெடுங்காலமாய் நிலவிவருகிறது. அதாவது, நம் ஹிந்து மதத்தில் பல புத்திமதிகளை வாழைப்பழ ஊசி போல், இலைமறை காய்மறைவாய், பூடகமாய், சொல்லப்பட்ட கருத்துக்கள் நிறைய. அவற்றைச் சொல்வதற்கு புராணக் கதைகள் நிறையவே உதவியிருக்கின்றன.

அஷோக்-கிடம் நீலகண்டன் "புராணக்கதைகள் எல்லாம் புருடா, கட்டுக்கதைகள்" என்று சொல்ல, அவனும் "நம் மூளைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லாமே கட்டுகதை என்று சொல்வது நம் முட்டாள்தனத்தை குறிக்கும்" என்று காரசாரமாய் விவாதிக்கிறான்.

நீலகண்டனை அவமதிப்பது போல் அவன் பேச்சு இருப்பதால், நாதன் மிகவும் கூனிக்குறுகி மனம் வருந்தி, அஷோக்கை கண்டிக்கிறார். "உங்கள் பையனின் மதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால் நானும் பாகவதர் போல் இருந்தால் தான் முடியும். அப்படி என்னதான் பாகவதர் வசியம் செய்தாரோ" என்று அஷோக் அவமதித்ததை இலகுவாக எடுத்துக்கொண்டு விடுகிறார் நீலகண்டன்.

சோ தன் கருத்தை இவ்விடத்தில் வைக்கிறார். புராணங்கள் எல்லாம் நம் மனம் புத்திக்கு அப்பாற்பட்டவையாய் இருப்பதாலேயே அது பொய் என ஆகிவிடுவதில்லை என்று ஆணித்திரமாய் வாதிட்டார். சில காலம் முன்பு பசி, தாகம் இன்றி ஒரு பெண் உயிர்வாழ்வதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அதிசயங்களாய் பேசப்பட்ட போது அதை நம்பும் மக்கள், விஷ்வாமித்ரர் இராமருக்கு "பலா-அதிபலா" என இரண்டு மந்திரங்கள் உபதேசித்ததன் பேரில், அவர்கள் பசி தாககமற்று தம் வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது என்பதை ஏன் நம்ப மறுக்கிறார்கள்" என்கிறார்.


எதுவொன்றும் விஞ்ஞானத்தின் முத்திரையுடன், அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் ஒப்புக்கொள்ளும் நம் அறிவு, மனம் மனத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மாவைச் சார்ந்த விஷயத்திற்கு பகுத்தறிவு என்ற பெயரில் ஆராய முற்படுகிறது. அது விஞ்ஞான ரீதியில் இன்னும் நிரூபணம் ஆகவில்லை என்றால் அது பொய் என்று அலட்சியமாய் தள்ளிவிடுகிறது.

தயாரிப்பாளர் உடனே "எனக்கு அந்த மந்திரத்தை சொல்லிக்கொடுங்களேன்! நானும் பசி தாகமற்று இருந்துவிட்டுப்போகிறேன்" என்று புத்திசாலித்தனமாய் கேள்வி வினவுகிறார். அதற்குச் சோ "அந்த மந்திரங்களை கேட்பவனும் சொன்னவனும் எப்பேர்பட்டவர்கள். சொன்னவனோ பிரம்மரிஷி "விஷ்வாமித்ரர்" கேட்டவனோ "இராமன்" புருஷர்களில் உத்தமன். அப்படிப்பட்டவன் சொல்லி இப்படிப்பட்டவன் கேட்டதை, சாமன்யமான நானும் நீங்களும் சொல்லிக் கேட்டுக்கொண்டால் எப்படி அய்யா பலிக்கும்" என்று பதிலுரைத்தார். இதையே தன் கதாகாலேட்சியபத்தின் போது வினவிய ஒருவனிடம் பதிலாக உரைத்தாராம் க்ருபானந்தவாரியார்.

நாசா ஷட்டில் இந்திய இலங்கைக்கு நடுவே உள்ள இராமர் பாலத்தை படமெடுத்துக்காட்டியிருக்கிறது. அதை நம்மால் மறுக்க முடியுமா? இராமரும் க்ருஷ்ணரும் வாழ்ந்ததற்கு archeological evidences நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் எப்படி மறுக்க முடியும். கதையாய் கட்டுக்கதையாய் எழுதிய பின், அதற்கேற்றாற் போல் பாலத்தை கட்டியிருக்கவா முடியும். இதெல்லாம் இருந்ததால் தானே கதை (சரித்திரம்) உருவானது. மேலும் இதிஹாசங்களைப் பற்றி பேசும் போது, நாயகர்களாம் இராமனையும், க்ருஷ்ணனையும் ஹீரோ வர்ஷிப் மட்டும் செய்யவில்லை.

வால்மீகியோ, வியாசரோ உண்மைகளை புட்டு வைக்கின்றனர். இராவணனைப் புகழ வேண்டிய இடத்தில் அவனை உயர்த்திப் பேசியிருக்கின்றனர். எப்பேர்பட்ட சிவபக்தன் இராவணன் என்பதற்கு பல இடங்களில் அவனை புகழ்ந்திருக்கின்றனர். அவனின் தேஜஸைப் பற்றி சிலாகித்திருக்கின்றனர்.

அதே போல் க்ரிஷ்ணனிடம் துரியோதனன் மஹாபாரதப்போர் முடிந்ததும் "சீ இதெல்லாம் ஒரு வெற்றியா?! யாரையாவது முறையாய் வென்றாயா? எப்பேர்பட்ட பித்தலாக்காரன் நீ. பித்தலாட்டம் செய்தல்லவா பீஷ்மர் முதல் துரோணர் வரை வீழ்த்தியிருக்கிறாய். இதோ இப்பொழுது என்னையும், தொடையில் அடித்து பீமன் வீழ்த்த அதை அங்கீகாரம் செய்தது நீ தானே. வெட்கமாக இல்லையா " என்று காரி உமிழ்வதும், உடனே க்ருஷ்ணன் வெட்கி தலைக்குனிவதும், மேலிருந்து தேவர்கள் பூமாரி துரியோதனன் மேல் பொழிந்ததாய் இதிஹாசம் கூறுகிறது.

ஆகையால், இதிஹாசங்கள், தெய்வம் என்பதால் உயர்த்தியும், மற்றோரைத் தாழ்த்தியும் பேசப்பட்டதல்ல. They stated mere facts irrespective of the characters involved, இதை எப்படி அண்டப்புளுகு, ஆதாரமில்லை என்று தள்ளி வைக்க முடியும், என்று பெரிய விளக்கமே கொடுத்துவிட்டார் சோ.

__

இதற்கிடையே அஷோக்கிடம் பாரதி என்ற கவிஞன் மட்டும் எப்படி உயர்ந்து போனான் என்று நீலகண்டன் மகள் (பெயர் தெரியவில்லை) கேட்க, பாரதியின் பெருமையை, அவன் கவிஞன் என்பதைத் தாண்டிய ஞானியாய் மிளிர்வதை, அவன் கவிதைகளின் தாக்கங்கள் எல்லா தரப்பிற்கும் முழுமையாய் சென்றடைந்ததை அப்படி மின்னிய அவன் பல பரிமாணம் பெற்ற ஞானி என்பதே சரி, என்று தன் எண்ணத்தை விளக்குகிறான் அஷோக். அதைக்கெட்டு திகைத்து, அவனின் சொல்லாளுமையும், திறமையையும் கண்டு வியந்து போகிறாள் அவள்.

எந்நேரமும் பாகவதருடன் சந்தேகம் நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறானே இதை வளரவிடுவது சரியா என்று அங்கலாய்க்கிறா என்று அஷோக்கின் தாய்.

சென்ற இரு தினங்கள் முன்பு சாஸ்திரிகள் மகனும் ஜட்ஜின் மகளுக்கும் நட்பு கலந்த காதல் மலர்வது போல் இருக்கிறது என்று எழுதியிருந்தேனல்லவா. அதை திருத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கும் காதல் மலர்ந்து குலுங்குகிறது. சாஸ்த்ரிகள் மகனுக்கு அந்த பெண் ஏதோ கடிதம் எழுத, அதைப் படித்து நன்கு அசடு வழிந்தான். டன் டன்னாய் அவனிடம் வழிந்த அசட்டை பார்த்து நமக்கும் புன்னகை தொற்றிக்கொள்கிறது.

(வளரும்)

__

நம் மனம் கேட்கும் கேள்விகள் : புரணங்கள் கட்டுக்கதைகள் என்று கூறுவதற்கு இதிஹாசங்களை மட்டுமே விளக்குகிறாரே சோ. புராணக்கதைகள் நடந்ததற்கு சான்று மிகக்குறைவு. அவை மிக மிக பழமை வாய்ந்த கதைகள். இதிஹாசங்களை ஒப்புக்கொள்ளும் பலரும் கூட புராணங்களும் அதனைச் சார்ந்த கிளைக்கதைகளும் நம்ப மறுக்கிறார்கள். (இங்கே புராணம் என்பது பிரம்ம புராணம், விஷ்ணுபுரணம் உட்பட்ட வியாசரால் தொகுக்கப்பட்ட 18 புராணங்கள். இவற்றிற்கு ஆதாரங்கள் எனக்குத் தெரிந்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை. )

viraajan
18th February 2009, 12:53 PM
:bow:

Thank you so much akka. I missed it yesterday. Superb writing!!! :bow:

Planning to miss it everyday... :wink: Ungaludhu padicha innum nalla irukkum :wink: :lol:

Shakthiprabha.
18th February 2009, 12:56 PM
hehe vr thanks :D

I love watching it because some of cho's perspectives and thoughts are thought provoking. Very intellently put across :bow:

I think as we continue to watch we may develop a liking towards characters. They add on to the spice and lighten the atmosphere.

Right now I am so fascinated by one and only ASHOK. :bow:

viraajan
18th February 2009, 01:00 PM
I'm yet to get the character names correctly :oops:

Yes. Q & A session is the best part. I loved it. Almost the questions that are in our mind are probed! Cho's explanation is thought provoking!

One small instance: Purity is being spoiled by mixing Barathanatyam with Western! That was great!

Thirumaran
18th February 2009, 09:02 PM
Just gone through ur updates SP. Very nice :clap:

Eagerly waiting for more :mrgreen:

aanaa
19th February 2009, 03:40 AM
:clap: keep up SP :clap:

aanaa
19th February 2009, 03:49 AM
Feb - 17th
_________
__

இதற்கிடையே அஷோக்கிடம் பாரதி என்ற கவிஞன் மட்டும் எப்படி உயர்ந்து போனான் என்று நீலகண்டன் மகள் (பெயர் தெரியவில்லை)
(வளரும்)
..


உமா என்னும் ஸ்ரீவித்தியா

Shakthiprabha.
19th February 2009, 04:03 PM
நன்றி ஆனா :)

Shakthiprabha.
19th February 2009, 04:04 PM
Feb - 18th
_________

நாதனின் கிளப் தேர்தல் வெற்றியை கொண்டாட பெரிதாக விருந்து வைக்க எண்ணுகிறார் அவர் மனைவி. விருந்து என்றாலே மதுபானங்கள் உண்டு என்று இக்காலகட்டத்தில் சாதாரணமாய் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி மாமிசம் உண்பதும் கூட ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவாய் மாறிவிட்டது. தேவர்களும் கூட சோமபானம் குடிப்பவர்கள் தானே என்று தமக்குத் தாமே பலர் நியாயப்படுத்திக்கொள்கின்றனர்.

இதைப்பற்றி கூறவரும் சோ அவர்கள், சோமபானம் என்பதும் சுராபானம் என்பது வெவ்வேறு. சோமபானம் என்பது, வித்யையை ரக்ஷிக்கக் கூடிய உயர் பானம் என்றும், அதை அருந்துவதே பெறும் பேறு என்றும், ஒரு வகைக்கொடியில் இருந்து தயாரிக்கபடுவதாகவும் அது மனிதர்களுக்கு கிடைப்பது அரிது என்றும் கூறினார். தேவர்கள் விரும்பி அருந்துவது சோமபானம். (to be differentiated from sura panam)

http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Soma

(for reference)

'பிராமணன் மாமிசம் உண்பது தவறா என்றால் தவறு தான், என்று கூறினாலும், பண்டைய கால வழக்கங்களில் முனிவர்களில் அகத்தியர் உட்பட பலரும் மாமிசம் உண்பவர்களாகவே இருந்தனர். ஒரு முறை அகத்தியர், வாதாபி இல்வலன் என்ற அரக்கர்களின் சூஷ்மத்தில் சிக்காமல் "வாதாபி ஜீரணோ பவ" என்று வாதாபியை ஜீரணித்த பின்பு, புலால் உணவினால் வந்த கேட்டை மனத்தில் நிறுத்தி அவரே பிராமணன் ஆகப்பட்டவன், மாமிசம், மதுரசம் முதலியவற்றை தவிர்த்தல் நல்லது என வழிவகுத்தார்' என விளக்கினார். ('வாதாபி-இல்வலன்' கதை பலருக்கும் தெரிந்திருக்கும் நியாயம் இருப்பதால், நான் அதை, இங்கு, விளக்கவில்லை)

நம் மனம் கூறும் மறுப்பு: புலால் உண்ணுதல், சாத்வீக குணத்திற்கு அப்பாற்பட்டதாய், சாதகனுக்கு ஊறு விளைவிக்கலாம் என்பது கீதை முதல் பல வேதங்களில் கூறப்பட்ட ஒன்று. சாதக நிலையைத் தாண்டிய ஒரு பிரம்ம ஞானியோ, அல்லது ஸ்திதப்ரஞ்ஜனோ (அகத்தியரைப் போன்ற மஹாதுறவிகள்) புல்லால் உண்டால் அதன் நன்மை தீமை அவனை பாதிப்பதில்லை. பிறப்பால் பிராமணன் என்று பகுத்துப் பேசாமல், சாதகம் செய்யும் அனைவரும் புலால் உண்ணுதல், மதுபானம் அருந்துதல் முதலியவற்றைத் தவிர்த்தல் நலம். (அல்லவா?) எந்த நிலையும் கடந்தவன் அகோரியாகக் கூட இருக்கலாம். உணவு அவனை பாதிப்பதில்லை. ஆனால் சாதகனுக்கு (பிறப்பால் பிராமணன் அல்ல) உணவுக் கட்டுப்பாடு அவசியம் இல்லையா சோ அவர்களே?

இதன் நடுவே பாகவதரின் பேரனுக்கு உடம்பு சுகமில்லாமல் ஆகிவிடுகிறது. 'தாத்தா மந்திரம் ஓதி விபூதி பூசி'னாலே சரியாகிவிடும் எனப் பேரன் நம்புகிறான். இது என்ன குருட்டு நம்பிக்கை என்று வாதத்தை மறுத்துப் பேசுகிறார் சோ. எப்படி ஒருவன் மருத்துவனிடமும் அவன் மேல் உள்ள திறனிலும் நம்பிக்கையோடு மருந்தை உட்கொண்டு குணமடைகிறோமோ அதே போல் மந்திரங்களுக்கும் ஷக்தி உண்டு. அதை முறையே நெறி வழுவாமல் நிர்மல வாழ்க்கை வாழும் உசந்த மனிதன், ஜபித்தால், அதன் பலன் அபரீமிதமாய் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மருந்துகள் உட்கொண்ட பின்பும் கூட பல வருடங்கள் கழித்து அம்மருந்தின் பக்கவிளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் கண்டுகூறுகிறது. அப்படியிருக்க, எந்த நம்பிக்கையில் தைரியத்தில் மருந்தை உட்கொண்டு சுகமடைகிறீர்கள்? அதே நம்பிக்கை ஏன் மந்திர ஷக்திக்கு இருக்கக்கூடாது என்று அலசினார்.

நம் மனத்தின் கதறல்: எப்படி சோ அவர்கள் மந்திர-ஷக்தியையும் அதனைச் சார்ந்த நம்பிக்கையையும், மருந்துகளுடன் ஒப்பிடுகிறார். மருந்து குணப்படுத்துவது புற-உடலை. மந்திரமோ energy வடிவில், ஆன்ம பலத்தையும் auroவையும் குணப்படுத்துகிறது. அதன் பலத்தை அதிகரிக்கிறது. இதை அதனுடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பது விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா? எனினும் கூற வந்தது நல்ல கருத்து, wasn't delivered in a convincing way though.

__

கதைப் பகுதியில் இன்று, நாதன் தன் பழைய வாழ்வை நெகிழ்வுடன் அசை போடுகிறார். அவரின் இந்த உயர்வுக்கு பாகவர் காட்டிய வழியும், அவர் ஆசீர்வாதமுமே காரணம் என்று பாகவதரிடம் பவ்யமாய் அளவளாவுகிறார். பாகவதரும் நாதனுக்கும் அவர் மனைவுக்கும் ஏற்பட்டுள்ள புத்திரக் கவலை அஃதாவது அஷோக் பற்றிய கவலை சீக்கிரம் விலகும் என்று ஆறுதல் அளிக்கிறார். அவனுள் நடப்பது "identity crisis" அதற்கு விரைவில் பதில் கிடைக்கும் என்கிறார்.

ps: 'Identity crisis' is not the right word to be used for someone who is delving on the question of "who am i" . The char seems to be too engrossed in self-realisation and its related queries and confusions. I feel, "self-enquiry" would be the right term. Identity crisis is a psychological term, to be used for person who has LOST HIMSELF in the maze of society. However, a person who is into "self-enquiry" would be blissful and not be seen forlorn or lost.

So...there he is?! (cho ramasamy)


(தொடரும்)

Shakthiprabha.
19th February 2009, 09:56 PM
Dear all I am FLABBERGASTED with the title song of எங்கே பிராமணன்.

http://tamiltv4u.com/enge-brahmanan/enge-brahmanan-tamil-serial-17022009/

Check out the song (wait patiently for 2 mins for the isaitamizh.net ad)

Wow for the lyrics, tune. :bow: (மனசைப் பிழியும் இசை :bow: )

I am not able to get any mp3 version until now :?

பாட்டு
_____

வேத கோஷம் வேத கோஷம் வேண்டும் பொருள் என்னவோ!
யோகம் வாழ்க லோகம் வாழ்க எண்ணும் வரம் அல்லவோ!
நடைபெறும் துன்பம் மெல்ல விடைபெறும் என்றே சொல்ல யாரும் உரியவரோ...
இடைவரும் காலம் மெல்ல இனியவை யாவும் செய்ய யாரும் உரியவரோ..
அவரடி தேடித் தேடி நானும் போனால் ஷாந்தி ஷாந்தியடா :bow:
இதிலொரு பாவம் ஏது?!
வேதம் என்றால் மனித நேயமடா!
செடியும் கொடியும் செழித்திடும் கனியும் விளைந்திடவே, பணியும் வரமே வேண்டுகிறோம்.
ஜனமும் மனமும் விலங்குகள் இனமும் நலம் பெறவே, தினமும் திருவை தேடுகிறோம்
போதும் சூது தீது வன்முறை பாதை மாறிடவே..
அலை மோதும்போது நெஞ்சமே அலை ஓய்ந்து தூங்கிடுவே..
இணக்கம் பிறக்க இதயம் திறக்க இறைவன் அடி விருந்தே (???)

(singer : Doctor. k. narayanan
lyricist: doctor. Kruthiya
music: Rajesh vaidhya )

aanaa
20th February 2009, 03:39 AM
Feb - 18th
_________

http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Soma

(for reference)


(தொடரும்)

wow
:2thumbsup:

aanaa
20th February 2009, 03:40 AM
Dear all I am FLABBERGASTED with the title song of எங்கே பிராமணன்.

http://tamiltv4u.com/enge-brahmanan/enge-brahmanan-tamil-serial-17022009/



(singer : Doctor. k. narayanan
lyricist: doctor. Kruthiya
music: Rajesh vaidhya )

:ty: SP

but quality of the sound
:cry2:

aanaa
20th February 2009, 03:45 AM
நம் மனம் கூறும் மறுப்பு: புலால் உண்ணுதல், சாத்வீக குணத்திற்கு அப்பாற்பட்டதாய், சாதகனுக்கு ஊறு விளைவிக்கலாம் என்பது கீதை முதல் பல வேதங்களில் கூறப்பட்ட ஒன்று

கொசுறு:

மாமிசம் உண்ணும் மிருகங்கள் - நாக்கால் நக்கிக் குடிக்கின்றன

சைவ உணவு உண்ணும் மிருகங்கள் - உறிஞ்சிக் குடிக்கின்றன

ஆகவே நாம் - படைப்பினால் .......

anbu_kathir
20th February 2009, 06:15 PM
நம் மனம் கேட்கும் கேள்விகள் : புரணங்கள் கட்டுக்கதைகள் என்று கூறுவதற்கு இதிஹாசங்களை மட்டுமே விளக்குகிறாரே சோ. புராணக்கதைகள் நடந்ததற்கு சான்று மிகக்குறைவு. அவை மிக மிக பழமை வாய்ந்த கதைகள். இதிஹாசங்களை ஒப்புக்கொள்ளும் பலரும் கூட புராணங்களும் அதனைச் சார்ந்த கிளைக்கதைகளும் நம்ப மறுக்கிறார்கள். (இங்கே புராணம் என்பது பிரம்ம புராணம், விஷ்ணுபுரணம் உட்பட்ட வியாசரால் தொகுக்கப்பட்ட 18 புராணங்கள். இவற்றிற்கு ஆதாரங்கள் எனக்குத் தெரிந்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை. )

I had posted this elsewhere in the hub::
---------
To me, Ramayana and Mahabharata and other Puranas mean much more as Puranas than if they would have happened really. As Puranas, they offer many metaphors that are placed to free the mind from the droll of everyday life and living that we consider to be 'normal'. In this sense the artful/psychological descriptions of the characters and the situations invoke a certain sense of awe for the dreams of the ancients and their notions about what is sacred and what is not. A theory that relates these Puranas to scientific evidence would never ever compensate for their value as stories and myths that contain metaphors of the Divine in spiritual and physical planes of existence.
--------------

I thought of such proofs for a few years now, ultimately the answer from every side: Stop looking and start feeling :D.

Love and Light :).

anbu_kathir
20th February 2009, 06:29 PM
Feb - 18th

ps: 'Identity crisis' is not the right word to be used for someone who is delving on the question of "who am i" . The char seems to be too engrossed in self-realisation and its related queries and confusions. I feel, "self-enquiry" would be the right term. Identity crisis is a psychological term, to be used for person who has LOST HIMSELF in the maze of society. However, a person who is into "self-enquiry" would be blissful and not be seen forlorn or lost.



'Self enquiry' is not necessarily blissful, although there is a certain satisfaction associated with it. Bliss, I always thought, is the result of finding the Self. Psychology, physiology, spirituality are not necessarily separate. Often a spiritual crisis manifests itself as a psychological or a physiological one.

Several spiritual 'seekers' can be found to be in extensive mental, emotional turmoil before they meet their Guru, or before a divine event. Arjuna, Vivekananda, in fact Sri Ramakrishna Himself come immediately to my mind... they were all affected psychologically before being picked up by a divine Hand.

Love and Light.

Shakthiprabha.
20th February 2009, 07:49 PM
'Self enquiry' is not necessarily blissful, although there is a certain satisfaction associated with it. Bliss, I always thought, is the result of finding the Self. Psychology, physiology, spirituality are not necessarily separate. Often a spiritual crisis manifests itself as a psychological or a physiological one.

Several spiritual 'seekers' can be found to be in extensive mental, emotional turmoil before they meet their Guru, or before a divine event. Arjuna, Vivekananda, in fact Sri Ramakrishna Himself come immediately to my mind... they were all affected psychologically before being picked up by a divine Hand.

Love and Light.

you are right. :thumbsup: :bow:

Shakthiprabha.
20th February 2009, 07:49 PM
I had posted this elsewhere in the hub::
---------
To me, Ramayana and Mahabharata and other Puranas mean much more as Puranas than if they would have happened really. As Puranas, they offer many metaphors that are placed to free the mind from the droll of everyday life and living that we consider to be 'normal'. In this sense the artful/psychological descriptions of the characters and the situations invoke a certain sense of awe for the dreams of the ancients and their notions about what is sacred and what is not. A theory that relates these Puranas to scientific evidence would never ever compensate for their value as stories and myths that contain metaphors of the Divine in spiritual and physical planes of existence.
--------------

I thought of such proofs for a few years now, ultimately the answer from every side: Stop looking and start feeling :D.

Love and Light :).

:)

wrap07
20th February 2009, 10:24 PM
just now saw this. nice work sp :clap:

Shakthiprabha.
20th February 2009, 10:25 PM
thanks shankar.
nethuthu innum ezhuthala :oops:
would do it tonight or tomm :|

wrap07
20th February 2009, 10:27 PM
You continue to amaze with different facets.
Today I missed out the last 15 minutes. I will wait for your updates :D

Relevant to this Cho has compiled a Book with anugraha Bashan of Pujyasri Maha Swamigal on Hindu Dharma. :)

Shakthiprabha.
20th February 2009, 10:47 PM
Cho's talk is a treat to watch. Seriously :)

wrap07
20th February 2009, 11:00 PM
yes. He is so versatile and his wide and indepth knowledge is quite phenomenal. As you may be aware, he has already written books on Mahabharatham/Ramayanam and is now writing Hindu Maha Samudram covering various aspects in Thuklaq. It is another brilliant and valuable work. Even here, he raises questions and answers them in his typical style. :)

aanaa
21st February 2009, 06:56 AM
I like your Avatar SP

Shakthiprabha.
21st February 2009, 11:44 PM
:ty: aana

Shakthiprabha.
22nd February 2009, 12:48 AM
Feb 19th
________


சென்ற இரு நாட்களில் முக்யமாக பேசப்பட்டது இரண்டு விஷயங்கள். முதலாவது 'மனுஸ்ம்ருதி' என்பது பற்றிய சிறு சர்சைகளும் அதற்கு சோ அவர்களின் பார்வையும். இரண்டாவது 'விதி', அதன் தாக்கம் குறித்த சில ஐயப்பாடுகள்.

மனுஸ்ம்ருதி என்பது மனு என்ற ஒரு அரசனால், முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட சில judgements / verdicts on general conduct and behaviour of every individual. அது இன்றைய நடைமுறைக்கு மாற்றப்பட்டே புழங்குகிறது, எந்த ஒரு சட்டமும், காலத்திற்கும் வழக்கத்திற்கும் தகுந்தாற்போல் மாற்றப்பட்டு நிற்பது இயல்பு. எனவே ராஜாராம் மோஹன்ராய் போன்றோர் 'சதி' வழக்கத்தை விட்டொழித்தில் மனுஸ்ம்ருதிக்கு
புறம்பாக எதுவும் செய்யப்படவில்லை. மேலும், யஞ்யவல்க்யர்-ஸ்ம்ருதியில் சட்டமும் ஏனைய வழக்கங்களும் அதன் தீர்ப்புகளும் காலத்தின் பேரில் மாறி வந்தே ஆகவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படி ஒரு நாட்டின் சட்டம் அவ்வப்பொழுது திருத்தி அமைக்கப்படுகிறதோ, அத்தனையும் அந்த சட்டம் உள்வாங்கி இடம் கொடுக்கிறதோ, வளைந்து கொடுக்கிறதோ, அதே போல் மனுஸ்ம்ருதியும் விதிவிலக்கல்ல. Any wisely written law accomodates the amendments in its due course and manusmruthi is no exception.

மேலும் வர்ணாசிரம வழக்குப்படி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மனுஸ்ம்ருதியில் அதிக சலுகைகள் அளிக்கபட்டிருப்பதாக கருத்து நிலவி வருவதும் பொய்யானதே. மனுஸ்ம்ருதியில் பிராமணன் ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு மற்றோனை விட தண்டனை பன்மடங்கு அதிகம் பரிந்துரைக்கபட்டிருக்கிறது. பிராமணனை விட அரசனையே அதாவது க்ஷத்ரியனையே உயர்த்திப்பேசுகிறது. ராஜ்யஸ்ய யக்ஞம் முதலியவை நடைபேறும் போது க்ஷத்ரியனாம் அரசன் மேல் அமர முன் பிராமணன் கீழ் பணிந்து அமர்வதே வழக்கமாம்.

இங்கே பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகப்பட்டவன் அல்ல. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணனும் அல்ல. எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்று கூற இயலும். மேலும் பிறப்பால் ஒரு வகுப்பில் பிறந்த எவனும், தன் நடத்தையால், குணத்தின்
இயல்பால் இன்னொரு வகுப்புக்கு மாறுவதும் இயல்பு.


கதைப் பகுதியில், க்ருபா (சாஸ்த்ரிகள் மகன்) வீட்டின் கொலுவிற்கு ப்ரியா (ஜுட்ஜ் மகள்) தன் நடனபயிற்சியை ரத்து செய்து விட்டு வருகிறாள். க்ருபாவும் தன் அலுவலகப் பணிகளை ஒத்திப்போட்டு விட்டு இவளுக்காக சுருக்க வீடுவந்து விடுகிறான். அவர்கள் இருவருக்கும் உள்ள காதல், காதலின் பேரில் அவர்கள் செய்யும் extra efforts வழக்கம் போல் மற்றவர் கண்களுக்கு சுத்தமாய் தெரியவில்லை.

அப்புறம் அஷோக் வீட்டில் மஹா சுவாரஸ்யமான ஒரு விஷயம். பெற்றோர்கள் பார்ட்டிக்கு சென்றிருக்க, அஷோக் தோட்டத்தில் தனிமையில் ஆழ்ந்திருக்கிறான். அப்பொழுது அங்கு வரும் பாகவதர், 'உன் தந்தை கூப்பிட்டனுப்பினால் மனம் மாறி சென்றுவிடுவாயா, அல்லது இதே வைராக்கியத்தோடு கேளிக்கைகளில் நாட்டமின்றி இருப்பாயா?' என்று சீண்டுகிறார். "எனக்கு அது போன்ற கேளிக்கைகளில் மனம் ஈடுபடவில்லை, வருந்தி அழைத்தாலும் நான் செல்லமாட்டென்" என்கிறான் அஷோக்.

"நீ உன் நிலை இடாறாது இருக்கிறாயா என்று பரிட்சித்தேன். உண்மையில் நீ ஒரு ஸ்திதப்ரக்ஞன்" தான் என்று கூறிச்செல்கிறார்.

இரண்டு வினாடி கழித்து வீட்டுத் தொலைப்பேசியில் பேசியதோ காஞ்சீவரத்தில் இருந்து 'பாகவதர்'

அப்படியென்றால் தோட்டத்தில் அஷோக்கை சந்தித்தது யார்....?

(தொடரும்)

Shakthiprabha.
22nd February 2009, 01:47 AM
Feb 20th
________

வெள்ளியன்று, கதைப்பகுதி விருவிருப்பான கட்டத்தில் நுழைந்து வெகு வித்தியாசமான கோணத்தில் நம்மை ஆச்சர்யத்தில் தள்ளியது.

அஷோக் பாகவதரைக் கண்டதாய் கூறியதைக் கேட்ட சமையல் மாமி, நாதனிடம் இதைத் தெரிவிக்க, அவர் தம் மகனின் நடத்தையில் பெரிதும் கவலைக்கொள்கிறார். "உனக்கு hallucination! அது தான் கண்டதையும் உளறுகிறாய். காஞ்சீவரத்தில் இருக்கும் பாகவதரால் எப்படி தொட்டதில் வர முடியும்? அவர் என்ன சித்து வேலை தெரிந்தவரா? அல்லது கடவுளா' என்று தன் பக்கத்து கேள்விகளை நாதன் அடுக்க, மிக நிதானமாய் அஷோக், "நீங்கள் பார்க்கவில்லை, கேள்வி முறையில், நான் சொல்லி தெரிந்து கொண்டீர்கள், நானோ அவரை நேரில்பார்த்தேன், ப்ரத்யக்ஷமாய் பார்த்தேன், அது சத்தியம் என்பது எனக்குத் தெரியும்." என்று அமைதியாய் கூறுகிறான்.

பிட்சைக்கு, ஒரு யோகி கையேந்தி நாதன் வீட்டு வாசலில் நிற்கிறார். வசுமதி அவரை அலட்சியப்படுத்த முற்பட, சமையல் மாமியோ 'ஒரு பிடி சாதம் தானே கேட்கிறார், கொடுத்து அனுப்பிவிடுகிறேன்' என்று பிட்சையிட்டு அனுப்புகிறாள். இதை கவனித்துக்கொண்டிருந்த பாகவதர், வசுமதியிடம், அவள் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று எச்சரித்து, நாதன் குடும்பத்தில் சில தலைமுறைகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைக் கதை அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று நடந்த கதையைக் கூறுகிறார்.

ஒரு இளம் காலைப்பொழுதில், பைராகி ஒருத்தி பிட்சைக்கு கை ஏந்துகிறாள். அதை அலட்சியம் செய்து ஒரு ஸ்த்ரீ, மிகக் கேவலமாக அவளை அவமதிக்க, பைராகியும் பொறுமையாய், தான் பிச்சைக்கு வரவில்லை, தான் வடக்கிலிருந்து வந்திருக்கும் பைராகி, என்று கோபத்தை அடக்கி விளக்க முற்படுகிறாள். அந்த ஸ்த்ரீ, அலட்சியம் மேலிட, மேலும் ஏசி விரட்டுகிறாள். மும்முறை கோபத்தைக் கட்டுப்படுத்தி மிகப் பொறுமையாய்
பைராகி பதிலுறுக்க, அதை லட்சியம் செய்யாத அந்த ஸ்த்ரீ தொடர்ந்து அவமதிக்கிறாள். கோபம் கட்டுக்கடங்காமல் தன்னால் அவளை பஸ்பமாக்க முடியும் என்று கர்ஜிக்கிறாள் பைராகி. இப்பொழுது பெண்மணிக்கோ பயத்தில் முகம் வெளிரிவிடுகிறது. தொடர்ந்து பேசும் பைராகி,

"உன் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவன் இல்லறத்தை துறந்து சன்னியாசம் ஏற்பான். இது அவனுக்கு ஆன்ம ஷாந்தியைத் தரும் என்றாலும், அப்படி செல்பவனின் பிறிவால் ஏனையோரும் பெற்றோரும் பிரிவுத் துயரில் வாடுவது திண்ணம்" என்று வாக்கு உரைத்துச் செல்கிறாள்.

இதைக் கேட்ட பெண்மணி உடல் ஒடுங்கி பயத்துடன் வீட்டுக்கதவை தாளிட்டுக்கொண்டுவிடுகிறாள். (அப்பொழுதேனும், ஒரு வாய் உணவு இட்டுவிட்டு லேசாக 'sorry' கேட்டிருந்தால், பைராகியின் வாக்கின் கடுமை குறைந்திருக்கும். ஆனால் விதி...வலியது.)


உங்களுக்கும் புரிந்திருக்கும், அந்தப் பெண்மணி நாதனின் மூதாதையரில் ஒருத்தி என்று. இதைக் கேட்ட வசுமதி கண்கலங்கி செய்வதறியாது நிற்கிறாள். நள்ளிரவில் வசுமதி தனியே அழுதுகொண்டிருப்பதைக் கண்ட நாதன், தன் குடும்ப்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் 30 அல்லது 35 வயது வாலிபன் ஒருவன், திடீரென ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவு பூண்டிருப்பதை ஊர்ஜிதப்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை வசுமதிக்கு காண்பிக்கிறார்.


'விதி' க்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் எனச் சொல்லியிருந்தேன் அல்லவா? சோ சொன்னது இது தான்.

ஒவ்வொருவரின் வாழ்விலும், விதியின் பங்கு நிச்சயம் உண்டு. ஆனால் விதி நல்லதாய் இருக்கிறதே என்று முயற்சி செய்யாமல் விட்டுவிட்டால், மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. விதியுடன் மனித முயற்சியும் வேண்டும். நாம் நம் செயல்களில் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். விதி நன்கு அமைந்தால், நலன் கூடுதல், முயற்சி செய்தும் பலன் இல்லாவிட்டால், அது தான் விதி.

நிலத்தை உழுது, பயிரிடுவது நம் கடமை. மழை பெய்வதும், பெய்யாதிருப்பதும் விதி.

Effort + fate = result

No effort + favourable-fate= minimised result

Effort + unfavourable-fate = play of fate.

என்பது தான் formula.

P.s: Bhairagis, I assume are a class of shiva-yogins who are wanderers, meditating and delving on god and his prescence. They live on alms.

http://www.samasya.com/religion/states/tamilnadu/uthrapatheeswarar/index.html

aanaa
22nd February 2009, 03:40 AM
Feb 20th

http://www.samasya.com/religion/states/tamilnadu/uthrapatheeswarar/index.html

:ty:

கயிற்றினால் கட்டப் பட்ட மாடு.

அந்த வட்டத்தை சுற்றி மேயாமல்
ஒரே இடத்தில் நின்று கொண்டுருந்தால் --அது விதி
வட்டம் முழுவதையும் மேயமுடியுமானால் - மதி

எல்லையைத் தாண்ட முடியுமா?????? ம்ம்
கர்மா ...

wrap07
23rd February 2009, 11:18 AM
தெளிவான விளக்கம். SP
:clap:
your valuable comments adds substance to the subject :)

Shakthiprabha.
25th February 2009, 12:01 PM
Feb 23rd
________


பூனை குறுக்கே போனால் புறப்படும் காரியம் சரியாய் நடைபெறாது என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இன்று அதை மூட நம்பிக்கை என்று முத்திரைக் குத்தி புறம் தள்ளி விட்டாலும், பழங்காலத்தில் இதெல்லாம் சகுன சாஸ்திரம் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டதாம். அஃதாவது, பூனை குறுக்கே புகுந்து நமக்கு என்ன உணர்த்துகிறது? பூனை என்ன முற்றும் அறிந்த ஞானியா? என்றால், பூனையை குறுக்கே போக வைப்பது நம்மை ஆட்டுவிக்கும் கர்ம வினைகள். வானிலையில் இன்று மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம் என்று மைய்யத்தில் எப்படி ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்களோ, அதே போல், கிரக நிலைகள் சரியில்லாத பொழுது, இது போன்ற எச்சரிக்கைகள், சிறு சமிக்ஞைகள் முதலியவை உருவாக்கி நம்மை தயார்படுத்துகிறது இயற்கை. கிரக நிலைகள் சரியில்லாத பொழுது, மனிதன் மனம், உடல், ஆன்மா முதல் பாதிக்கப்பட்டுவிடலாம். அல்லது எழுச்சி பெறலாம்.

ஏழாம் நூற்றாண்டில் மதுரை நகரை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் சமண மதத்தைச் சேர்ந்தவன் அவன் மனைவி மங்கையர்க்கரசியோ சைவ சமயத்தைச் சேர்ந்தவர். மன்னருக்கு நோய் அண்டும் பொழுது அமைச்சர் குலச்சிறையாரின் ஆலோசனையின் பேரில் திருஞானசம்பந்தரை அழைக்கிறார்கள். அப்பொழுது சமண மதம் செழித்து வந்த காலகட்டம். அப்பர், சம்பந்தரிடம் இப்பொழுது நேரம் சரியிருக்கிறதோ என்று பரிட்சித்து பின் செல்லலாம். சமணர்களால் தாங்களுக்கு ஊறு ஏதேனும் விளையுமோ என்று அஞ்சுகிறேன் என்று உரைக்க,

சம்பந்தரோ, "நாளும் கோளும் இறைவனின் அடியாரை என் செய்யும்!" என்று பதில் மொழி கூறி "வேயுறு தோளி பங்கன்" என்ற கோளறு பதிப்பகத்தை திருவாய்மொழிந்தருளினார்.

"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!"

கோளறு பதிப்பகம் பாராயணம் செய்வோர்க்கு கோள்களால் நேரும் இடர்கள் குறையும் என்பது நம்பிக்கை.

சரி, இந்த கோளும் நாளும் என் செய்யும் என்று சம்பந்தரே சொல்லிவிட்டார். அப்புறம் ஏன் பூனை, நாய் என சகுனத் தூதர்களை நினைத்து பயப்படுவது? பின் ஏன் எமகண்டம், இராகு காலம், நல்ல நேரம் எல்லாம்? கோளும் நாளும் ஒன்றும் செய்யாது என்பது சரி. ஆனால் யாருக்கு? பக்தியில், ஞானத்தில், இறைவனின் அடி தொழும் பரிபூர்ண நிலை எய்திய பக்தர்களுக்கு. நம்மைப்போன்று பக்குவம் அடையாத பலருக்கு இருக்கும் ஆன்ம பலன் கோள்களின் பலத்தை வெல்லும் அளவு வலுவானதல்ல. எளிதல்ல.

இதுவெல்லாம் இப்பொழுது இங்கெதற்கு என்றால், காலையில் மாமியிடம் விடைபெற்றுக்கொண்டு அஷோக் செல்லும் போது குறுக்கே பூனை ஒன்று ஓடுகிறது. மாமி பதைபதைக்க, அதை சட்டை செய்யாமல் அஷோக் சென்றுவிடுகிறான். சென்றுவிட்டவன் வீடு திரும்பவில்லை. இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறு நாளும் வீடு திரும்பாததால், நாதன் போலீஸுக்கும் புகார் கொடுக்கிறார். நாதனும் அவர் மனைவியும் படும் பாடு, அழும் அழுகை, குமுறும் குமுறல் கொஞ்ச நஞ்சமல்ல.

(வளரும்)

Shakthiprabha.
25th February 2009, 12:43 PM
Feb 24th
________

போலீஸில் புகார் கொடுத்தும் கண்டபலன் இதுவரை ஒன்றும் இல்லை. பத்து தினங்களாக, போலீசார் கண்டெடுத்த அனாதைப் பிணங்களில் அடையாளம் காட்ட முடியுமா? என்று இன்ஸ்பெக்டர் கேட்க, நாதன் மனம் வெம்பி விடுகிறது. "என் மகன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்று எனக்குத் தெரியும், எனக்கு அங்கு வந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்று மறுத்துப் பேசி வேதனையுடன் மனை திரும்புகிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு வருவதற்கு முக்கியப்பங்கு வகிப்பதே "மரணம்". மரணம் பற்றிய பயம், அல்லது அறியாமை, அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம். இறந்த பின் என்ன? இறப்பது யார்? இறந்த பின் ஒன்றுமில்லாமல் சூன்யத்தில் கலந்து விடுவோமா? ஒன்றுமில்லாதது என்பது என்ன? இப்படிப் பலக் கேள்விகள் அடுக்கடுக்காய் மனிதப்பிறவிகள் பலருக்கும் இடைவிடாது தோன்றியபடி இருக்கும்.

இன்னார் இறந்து விட்டார் என்றால், ஏதோ ஒன்று, இன்னாரின் உடலில் இருந்து பிரிந்து செல்கிறது. இன்னார் என்று இதுவரைக் கூறிவந்தது அவர் உடலை. ஆனால் அந்த "ஏதோ ஒன்று" பிரிந்து சென்றதும், உடலுக்கு அங்கு மதிப்பு இல்லை. "அது" பிணம் என்ற அஃரிணைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. அதனால் x அல்லது y அல்லது Z அவரவர் உடல் அல்ல. அதிலிருந்து பிரிந்து செல்லும் கண்ணுக்குப் புலப்படாத பொருள்.

அதை "உயிர்" என்று வைத்துக்கொள்வோம். உயிர் என்றால் என்ன? உயிர் என்றால் இதயத்துடிப்பு என்று மீண்டும் உடலுடன் தொடர்பு படுத்திப்பார்ப்பது அறிவீனம். உயிர் என்றால் மூளை என்போமேயானால், ppl who are declared brain dead sometimes exist in coma state, i.e indicating that 'life-force' has not departed. உயிர் என்பது இதயத்துடிப்பு என்றால், இதய்மாற்று அறுவைசிகிச்சை செய்தால், அவ்வுடலில் புதிதாய் உருவெடுத்திருப்பது வேறொருவனா?

உயிர் என்றால் செயலாற்றல், உயிர் என்றால் இயக்கம். அப்படியெனில் உயிர் என்றால் என்ன? life force. ஆன்மா அல்லது soul என்றும் சோல்லலாம். ஆன்மா என்பது எங்கும் பரவி வியாபித்திருக்கும் ஒன்று என்றால், ஒவ்வொரு தனிமனித உடலில் மாயையால் கட்டுண்டு, ஆசைகளின் தொகுப்புக்களைச் சேமித்து, வெவ்வேறு உடல் தாங்கி பிறந்தும் இறந்தும் கிடப்பது ஜீவ-ஆத்மா (ஜீவனின்/மனிதனின் ஆத்மா). மாயின் சாயை இன்றி எங்கும் சிதறிக்கிடப்பது நிறைந்திருப்பது பரமாத்மா (the brahman)

ஆக ஒரு மனிதன் இறந்தால், அவன் தரித்திருந்த உடலினின்று பிரிந்து செல்வது "ஜீவாத்மா". எதற்கு இந்த வியாக்கியானம்! அஷோக் உயிருடன் இருக்கிறான் என்றே நம்பி, அவனைத் தேடும் பணி என்னவாயிற்று என்று பார்ப்போம். நாட்கள் நகர்ந்தவண்ணம் இருக்கிறாதேயொழிய அசோக் வந்தபாடில்லை. நீலகண்டன் பேப்பரிலும் விளம்பரம் குடுக்கலாமே என்று யோசனை கூறுகிறார். நீலகண்டனுக்கும் சமையல் மாமிக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுவிடுகிறது. நாதன் ஏற்கனவே கவலையில் இருக்க, நாவிலும் சொல்லிலும் கட்டுப்பாடின்றி, சமையல் மாமியை மிகவும் மனம் நோகும் படி கண்டித்துவிடுகிறார். அஷோக் போலவே ஒருவனின் உடல் மடத்தின் அருகே உயிரற்று இருந்த செய்தியை செய்தித்தாளொன்றில் படித்த சமையல் மாமியும், நீலகண்டன் மனைவி பர்வதமும் மிகுந்த மனவருத்ததுடனும், சந்தேகத்துடனும், கவலையுடனும் பேசிக்கொள்கின்றனர்.

எத்தனை மட்டமாய் பேசியும் கூட, மறுநாள் தன் கடமையை முகம் சுளிப்பில்லாமல், ஷாந்தமாய் தொடரும் சமையல் மாமி பாத்திரம் இவ்விடத்தில் ஜொலிக்கிறது.

"எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்று சொல்லாமல் சொல்கிறார். கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

(வளரும்)

anbu_kathir
25th February 2009, 02:12 PM
Feb 24th
________

இன்னார் இறந்து விட்டார் என்றால், ஏதோ ஒன்று, இன்னாரின் உடலில் இருந்து பிரிந்து செல்கிறது. இன்னார் என்று இதுவரைக் கூறிவந்தது அவர் உடலை. ஆனால் அந்த "ஏதோ ஒன்று" பிரிந்து சென்றதும், உடலுக்கு அங்கு மதிப்பு இல்லை. "அது" பிணம் என்ற அஃரிணைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. அதனால் x அல்லது y அல்லது Z அவரவர் உடல் அல்ல. அதிலிருந்து பிரிந்து செல்லும் கண்ணுக்குப் புலப்படாத பொருள்.

அதை "உயிர்" என்று வைத்துக்கொள்வோம். உயிர் என்றால் என்ன? உயிர் என்றால் இதயத்துடிப்பு என்று மீண்டும் உடலுடன் தொடர்பு படுத்திப்பார்ப்பது அறிவீனம். உயிர் என்றால் மூளை என்போமேயானால், ppl who are declared brain dead sometimes exist in coma state, i.e indicating that 'life-force' has not departed. உயிர் என்பது இதயத்துடிப்பு என்றால், இதய்மாற்று அறுவைசிகிச்சை செய்தால், அவ்வுடலில் புதிதாய் உருவெடுத்திருப்பது வேறொருவனா?

உயிர் என்றால் செயலாற்றல், உயிர் என்றால் இயக்கம். அப்படியெனில் உயிர் என்றால் என்ன? life force. ஆன்மா அல்லது soul என்றும் சோல்லலாம். ஆன்மா என்பது எங்கும் பரவி வியாபித்திருக்கும் ஒன்று என்றால், ஒவ்வொரு தனிமனித உடலில் மாயையால் கட்டுண்டு, ஆசைகளின் தொகுப்புக்களைச் சேமித்து, வெவ்வேறு உடல் தாங்கி பிறந்தும் இறந்தும் கிடப்பது ஜீவ-ஆத்மா (ஜீவனின்/மனிதனின் ஆத்மா). மாயின் சாயை இன்றி எங்கும் சிதறிக்கிடப்பது நிறைந்திருப்பது பரமாத்மா (the brahman)

ஆக ஒரு மனிதன் இறந்தால், அவன் தரித்திருந்த உடலினின்று பிரிந்து செல்வது "ஜீவாத்மா". எதற்கு இந்த வியாக்கியானம்!


Athe thaan naanum kEtkirEn :D. There is absolutely nothing 'disprovable' with associating the 'I-ness' with a sensation in the brain. The person who is in the coma doesn't have this sensation, but his body still functions because its parts, including its brain are not completely worn out yet. A dead man on the other hand is a body whose parts, especially the brain or the heart, have worn out beyond a particular critical point which offers any possible renewal.

No amount of argument against such a theory could possibly establish this as 'wrong', just like the argument of the Atman and Brahman.

Ultimately such statements, facts or not, are beliefs. One who believes in a God is equivalent to one who doesn't believe in God.. both don't know. The one who knows doesn't have to 'believe' in anything because its as clear as the morning sun. Therefore it is best to leave such things for 'realization'.

Aagayaal,


"எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்று சொல்லாமல் சொல்கிறார். கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

idhuve miga sariyanaadhu :D.

Love and Light.

Shakthiprabha.
25th February 2009, 02:20 PM
Athe thaan naanum kEtkirEn :D. There is absolutely nothing 'disprovable' with associating the 'I-ness' with a sensation in the brain. The person who is in the coma doesn't have this sensation, but his body still functions because its parts, including its brain are not completely worn out yet. A dead man on the other hand is a body whose parts, especially the brain or the heart, have worn out beyond a particular critical point which offers any possible renewal.

No amount of argument against such a theory could possibly establish this as 'wrong', just like the argument of the Atman and Brahman.

Ultimately such statements, facts or not, are beliefs. One who believes in a God is equivalent to one who doesn't believe in God.. both don't know. The one who knows doesn't have to 'believe' in anything because its as clear as the morning sun. Therefore it is best to leave such things for 'realization'.


nice words. :thumbsup: :ty:

anbu_kathir
25th February 2009, 03:08 PM
I found this and the pages within to have information with a great level of clarity and understanding of the psyche of human. Enjoy...

http://www.enteleky.com/meaningoflife/

Love and Light.

aanaa
26th February 2009, 07:11 AM
Feb 23rd
பூனை குறுக்கே போனால் புறப்படும் காரியம் சரியாய் நடைபெறாது
(வளரும்)

வளரட்டும்

:ty:

aanaa
26th February 2009, 07:14 AM
Feb 24th
"எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்று சொல்லாமல் சொல்கிறார். கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

(வளரும்)என்றுமே மாணவர்தான் நாம்

கற்றது கைமண்ணளவு....கல்லாதது

Shakthiprabha.
27th February 2009, 11:54 PM
Feb 25th
________

பெற்றோர்கள் தவித்தபடி இருக்க, திருவண்ணாமலையில், பசி-தூக்கமின்றி இலக்கின்றி ஆனால் இலக்கைத் தேடி, அஷோக். தன் புற-நிலையின் பிரக்ஞை அற்று, ஆழ்ந்த சிந்தனையில், மோனத்தில், தவத்தில், கால் போன போக்கில் திரிந்தலைந்தபடி இருக்கிறான்.

டீக்கடை வைத்திருக்கும் ஒரு இரக்கமனம் படைத்தவன், இவன் மேல் கருணைக்கொண்டு ஆகாரம் அளிக்கிறான். பசி என்று வந்தால் பத்தும் பறந்தல்லவா போகும். ஜீவனின் உயிர் தாங்க, தகுந்த நேரத்தில் யார் உணவளிக்கிறார்களோ அவர்களே அங்கு சாக்ஷாத் பிரத்யக்ஷ தெய்வம் ருபம் அல்லவோ!

அதைப்போன்று உரிய நேரத்தில், உணவளிக்கும் ஒருவனின் குலமோ கோத்திரமோ, புறத்தோற்றமோ பசித்தவனுக்கு ஒரு பொருட்டல்ல. ஒரு அழமான உண்மையை வெளிப்படுத்தும் கதை ஒன்றை சோ பகிர்ந்து கொண்டார்.

உதங்கர் எனும் ரிஷி, க்ருஷ்ணனிடம் 'நீர் அருந்த வேண்டும் போதெல்லாம் உடனே நீர் கிடைக்கும்படி வரம் அருள வேண்டும்' என்று வேண்டிக்கொள்கிறார். வேறொரு சமயம், நீர் அருந்தும் தேவை ஏற்படுகிறது. நீர் வேண்டும் என்று நினைத்த மாத்திரம், அருவெறுக்கத்தக்க சண்டாளன் உருகொண்டு, மிக அசுத்தமான தோல்பை ஒன்றில் நீர் கொண்டு வந்தவனை புறம்தள்ளி நொந்துக்கொள்கிறார். "ஆஹா எனக்கு நீர் இப்படிப்பட்ட அசுத்தமானவனிடம் இருந்தா வேண்டியது, இதற்கு நான் தாகம் தணிக்காமலே இருந்து விடுகிறேன்", என்று நீர் அருந்த மறுத்துவிடுகிறார். ஆனால் அங்கு நடந்தது என்ன? சண்டாளன் உருகொண்டு வந்தவன் இந்திரன். கொண்டு வந்த நீரோ மனிதர்களுக்கு கிட்டாத அரிய அம்ருதம்.

உதங்க ரிஷி மனப்பக்குவம் அடையவில்லை என்று எடுத்துக்காட்ட வேறு சாட்சியம் வேண்டுமா? எவன் ஒருவன், தோற்றத்திற்கு அப்பாற்பட்ட உண்மையை உணர மறுக்கிறானோ அவன் எவ்வாறு பக்குவம் அடைந்தவனாவான்? கிட்டத்தட்ட இதே கதை தான் ஆதி-ஷங்கரருக்கு ஈசன் வேறுபட்ட சாதி ஒருத்தனின் உரு தாங்கி படிப்பித்தக் கதையும்.

அஷோக் போகும் இடங்களில் எவனோ ஒருவன் அவன் நிலைக்கு இரங்கி உணவளிக்கிறானல்லவா இறையருள் என்பது கூட இது தான்.

பிரம்மாவும் விஷ்ணுவும் 'அடி-முடி' தேடிய சுவாரஸ்யமான கதை, எல்லொருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சிவன் ஜோதிஸ்வரூபமாய் நிற்க, அவரின் அடி-முடி, அஃதாவது ஆரம்பமும் முடிவும் தேடி, விஷ்ணு வராக ரூபம் எடுத்து, அடி தேடி கிழே செல்ல, பிரம்மா அன்னபட்சி வடிவாக மேலே பறந்து தேடுகிறார். விஷ்ணு நீண்டு போகும் முடிவற்ற முடிவை கண்டு மலைத்து தன் தோல்வியை ஒப்புகொள்கிறார். பிரம்மா, கணக்கற்ற வருடங்களாய் தேடிக்கொண்டிருக்கும் போது ஜோதிஸ்வரூப்பத்திலிருந்து தாழம்பூ ஒன்று கீழ் நோக்கி வந்துகொண்டிருந்தது. "நீ எங்கிருந்து வருகிறாய்" என்று இவர் வினவ "பல்லாயிரக்கணக்கான வருடங்களாய் நான் விழுந்துகொண்டிருக்கிறேன்" என்று பதிலளித்ததாம். பிரம்மா, ஜோதியின் முடியைக் கண்டதாய் தாழம்பூ பொய் சாட்சி சொல்லத் தூண்ட அதுவும் ஒத்துக்கொண்டது. இதனால் கோபமடைந்த சிவன், பிரம்மாவிற்கு பூலோகத்தில் கோவில்கள் இராது என்று சபித்து, தாழம்பூவை தன் பூஜையில் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாய் ஸ்தலபுராணம்.

இந்த ஸ்த்லசரிதையை யார் நம்மிடம் யார் பகிர்ந்துகொள்கிறார் என்று நினைக்கிறீர்கள்? நீலகண்டன் தம் அலுவலக வேலையாய் திருவண்ணாமலை செல்கிறார். 'கோவிலாவது இன்னொன்றாவது, அதெல்லாம் வேலையத்தவனுக்கு' என்று சொன்னவரிடம் அவர் மேலதிகாரி ஸ்தலபுராணம் விளக்கம் கேட்க, அதனால் ஸ்தலபுராணத்தைப் பற்றி தெரிந்துகொண்டு, அவரே விளக்கவேண்டிய கட்டாயம்!

இத்தனையும் கேட்டுக்கொண்டு கடைசியில் உத்தியோக உயர்வுக்கு பதிலாய், உயரதிகாரி இவருக்கு பக்தியாய் மூன்றுமுக ருத்ராக்ஷம் ஒன்றை அளித்துச் செல்கிறார்.


(வளரும்)

Shakthiprabha.
28th February 2009, 12:02 AM
An after thought:

What is meditation?

It is but concentrated concentration on/about ANYTHING with single minded focus. When the focus or concentration deepens, one becomes oblivious to the surroundings (observed even with anyone wanna achieve material heights and work hard on it) so much so, that, if the object of meditation is a subtler and a powerful one, then very conscience of the physical body is completely forgone or kept aside.

Shakthiprabha.
28th February 2009, 12:49 AM
Feb 26th
________

ருத்ராக்ஷம் என்றாலே ஒரு காலத்தில் மிகுந்த பயபக்தியுடன், பூஜித்து அணிந்துகொள்ளப்பட்ட ஒரு விஷயம். இன்றோ எல்லாமே வணிகமாக்கப்பட்டு பலதரப்பட்ட ஆன்மீகச் சின்னங்கள் அதிகமாய் புழக்கத்தில் வந்துவிட்டது. ஒருவனின் ஆன்மபலம், அவன் நம்பிக்கை, அவனின் aura போன்ற பலவிஷயங்களைப் பொருத்து இது போன்று ஆன்மீகம் சின்னங்களின் சக்தியும் பலனும் அமைகிறது என்கிறார் சோ.

இறைவனுக்கு பக்தியுடன் பூஜை செய்கிறோம். சரி. ஆனால் கூடவே படையல் படைக்கிறோம். சாமி என்ன அதை சாப்பிடவா போகிறது? இறைத் தத்துவத்துக்கு பசி தாகம் ஆட்கொள்ளுமா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. "சாமி மட்டும் நிஜமாகவே வந்து எல்லாத்தையும் சாப்பிட்டா, அவனவன் படைக்கறதையே நிறுத்திடுவான். அப்புறம் நாம என்னத்த சாப்பிடறது? சாமி பேரை சொல்லிகிட்டு நாம சாப்பிடத்தான் எல்லாம்" என்ற கிண்டல் பேச்சுக்களும் ஏராளம் கேட்டிருக்கிறோம்.

சாமிதான் சாப்பிடுவதில்லையே பின் ஏன் படைக்கிறோம்? அதாவது நான் செய்யும் அனைத்தையும் இறைவனே உனக்கு அர்ப்பணம் என்று அர்ப்பணிக்கும் மனப்பாங்கு வளர்வதற்கே இதையெல்லாம் செய்வது. உண்மையில் ஆன்மீக நாட்டம் கொண்ட அன்பர்கள், தம் செயல், செயலின் பலன், எண்ணம் முதலிவையெல்லாவற்றை அர்ப்பணிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய நம்மால் பல நேரம் முடியாமற் போகிறது. மாயை ஆட்கொள்கிறது. குறைந்தபட்சம் உணவு, உடை போன்ற எளிமையான விடயங்களிலிருந்து இறையை நாடலாமெ!ஆகவே இறைவனே இந்த உணவை இந்த எளியேன் உனக்கு அர்பணிக்கிறேன் என்ற தொண்டனின் மனத்துடன் படைத்து, அதையே உணவாக, பிரசாதமாக உண்கிறான் பக்தன்.

மற்றபடி இறைவன் நிஜமாகவே நாம் படைக்கும் உணவை உண்பாரா என்றால், கண்ணப்பநாயனார் போன்ற பக்திபூர்வமான ஆன்மாக்களுக்கு இறையின் அருள் தங்கு தடையின்றி, மனிதன் வகுத்திருக்கும் பல சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடந்தும் பொழியும்.

க்ருபா கோவிலில் பிரசாதம் வினியோகித்துக்கொண்டிருக்க "சாமி என்ன நிவேதனத்தை நிஜமாவே சாப்பிடுமா" என்ற தயாரிப்பாளரின் கேள்விக்கு சோவின் சுருக்கமான பதிலைத் தான் நான் சற்றே விஸ்தாரமாய் எழுதினேன்.

அஷோக் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பார்ப்போம். திருவண்ணாமலையில் ஒரு வீட்டின் திண்ணையில் அவன் அமர்ந்திருக்க, அவ்வீட்டுப் பெண்மணி, அவனுக்கு உணவு அளிக்கிறாள். அவள் வேறு யாரும் அல்ல, க்ருபாவின் அத்தை. க்ருபாவின் அப்பா அவர்கள் வீட்டிற்கு வேலை நிமித்தமாய் சென்றிருக்கிறார். மன நிம்மதி தேடி ஆலயம் சென்ற நாதன் மனைவிக்கு க்ருபாவின் அறிமுகம் கிடைக்கிறது. (பின்னே, கதையில் முடிச்சு விழவேண்டாமா! ) க்ருபாவின் தந்தையிடம் தன் மனக்குறை தீர பிரார்த்தனை செய்யும்படி நாதன் மனைவி, கேட்டுக்கொள்கிறாள்.

அஷோக் ஏன் இப்படி பரிதாபத்துக்குறிய நிலைக்கு ஆளாகிவிட்டான் என வருந்துவோருக்கு, 'அஷோக் எந்த நிலைக்கு உயரப்போகிறான்' என பொருத்திருந்து பாருங்கள் என்கிறார் சோ.

நம் நடுவே நடமாடும் சாமான்யன் என நாம் கருதும் ஒருவன் இறையின் பரிபூர்ண அம்சமாய் இருக்கலாம். இறைவன் என்பவன் நான்கு கைகளுடனோ அல்லது க்ரீடம், நகைகள் தாங்கி, மாலைகள் தாங்கி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முள் ஒருவனாய் அவன் பேசலாம், தோன்றலாம், சிலாகிக்கலாம்.அவனை அடையாளம் காண நம் மனம் பக்குவப்பட்டிராததால், நாம் அறிய மாட்டோம். எப்படி ஒரு விஞ்ஞானியை இன்னொரு விஞ்ஞானியே அடையாளம் காண முடியுமோ, அவனோடு அவனுக்குச் சமமாய் அளவளாவ முடியுமோ, புரிந்துகொள்ள முடியுமோ அப்படி, only a soul with elevated frequency இறையருள் பெற்ற இன்னொருவனையோ அல்லது இறையின் மனிதவடிவையோ அடையாளாம் காண முடியும்

(வளரும்)

Shakthiprabha.
28th February 2009, 01:43 AM
Feb 27th
________

கதை மளமளவென நகர்வது போல் தெரிந்தது.

பத்திரிகையில் காணவில்லை பகுதியைப் படித்து, க்ரூபாவின் தந்தை க்ருபாவிற்கு தொலைப்பேசி மூலம் தம் தங்கையின் வீட்டில் இருக்கும் வாலிபன் தான் அஷோக் என்று தெரிவிக்கிறார். அது நாதன் வீடு என்று தெரிந்து குதூகலத்துடன், க்ருபா நாதன் மனைவியிடம் தகவல தெரிவிக்கிறான்.

தனக்கு அலுவலகப் பணிகள் மிகுந்து இருப்பதால் (what the hell !!! ) நாதன், நீலகண்டனை பாகவதரின் துணையுடன் அஷோக்கை அழைத்து வர திருவண்ணாமலை அனுப்புகிறார். அடடா! ஒருவழியாக அஷோக் கிடைத்துவிடப்போகிறான். நம் நாதனின் மனைவியின் அழகிய பெரிய கண்கள் நீர் சிந்துவதை நிறுத்தி இனி சிரிக்கப்போகிறது எனத்துள்ளுகிறது நம் மனம். "அஷோக் நேற்று வரை இங்கு தான் இருந்தான், திடீரென நேற்று காணாமல் போய்விட்டான்" என்று திருவண்ணாமலையில் இருக்கும் சாஸ்த்ரிகள் குடும்பம் கைவிரித்து விடுகிறது. நம் சந்தோஷமும் காற்று போன பலூனாய் களையிழந்து விடுகிறது.

ஆக, கதை ஆரம்பித்த வட்டத்திலேயே மீண்டும் சிக்கியது.

திருவண்ணாமலைச் செல்லும் வழியில் பாகவதரை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் நிலகண்டன். எல்லாம் என் 'பிராரப்த கர்மா' என்று அலுத்துக்கொள்கிறார் பாகவதர்.

இவ்விடத்தில் சோ தொடர்கிறார். கர்மாவைப் பற்றி நம் ஹிந்து மதத்தில் அதிகம் பேசப்பட்டிருபதை சுட்டிக்காட்டினார். நல்லது செய்யும் ஒருவனை துன்பம் சூழ்வதற்கும், நல்லது அல்லாதது செய்யும் ஒருவன் நன்றாய் வாழ்வதற்கும் வேறு என்ன காரணம் இருக்க முடியும்? everything has to tally, and be accounted somewhere என்ற தத்துவத்தின் பேரில் அமைந்தது தான் 'கர்மா' என்ற விளக்கம்.

கர்மா என்பதை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சஞ்தித கர்மா, ஒருவன் இதுவரை சேமித்து வைத்திருக்கும் நல்லன நல்லனவற்ற செயல்களின் தொகுப்பு. பிராரப்த கர்மா, ஒரு தனிப்பட்ட பிறவியில் அவனின் சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாய் அவற்றின் கர்மபலனாய் அவனை ஆட்டுவிக்கப் போவது. க்ரியமாண கர்மா என்பது நாம் தற்போது செய்து கொண்டிருக்கும் நல்லன நல்லன அல்லாத செயல்களின் பதிவுகள். ஆகம கர்மா, நாம் இப்பொழுது செய்யும் கர்மத்தால் நமக்கு, பிறிதொரு பிறவியில் தோன்றப்போகும் வினைகள்.

இதையும் தாண்டி க்ருஷ்ணன் "யக்ஞ கர்மா" என்கிறான். அதாவது யக்ஞம் / யாகம் செய்வதால் வரும் கர்மா அல்ல. கர்மயோகியாய் ஒருவன் செயல்பட்டு, செயலின் பலனை துறந்து, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, கடமையைச் செய்யும் கர்மா 'யக்ஞ-கர்மா'.

http://anmikam4dumbme.blogspot.com/2008/12/3.html

(ஒவ்வொருவரும் தம் பாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.

பாகவதராய் முகத்தில் வருத்தம் மேலிட அலுத்துக்கொள்ளும் நீலு,

அவரை ஒரு கை பார்க்கும் நீலகண்டனாய் கோபு,

அழகிய விழிகளில் அறுபது உணர்ச்சிகளையும் தேக்கி நம்மைக் கொள்ளை கொள்ளும் நாதனின் மனைவியாய் நளினி,

யாரைச் சொல்வது, யாரை விடுப்பது!)

(வளரும்)

Shakthiprabha.
28th February 2009, 01:54 AM
Three things to ponder on
_____________________

1. Doesn't Buddhism talk on 'karma' (may be with a different name?) ? Does only hinduism talk on karma ?

2. Talking on karma, what if someone tries to get oversmart by convincingly thinking about CHANCE? IF xyz happens to undergo something its CHANCE / Probability theory. Why nature has to tally? Why do we assume, things are in perfection and hence WE NEED ACCOUNTABILITY in the form of 'KARMA' to finish the invisible picture?

We have time till monday for the next episode and until then...

Anbu_kathir or anyone else who want to talk or explain can take over here :P :oops:

aanaa
28th February 2009, 04:42 AM
Feb 25th
________
். ஜீவனின் உயிர் தாங்க, தகுந்த நேரத்தில் யார் உணவளிக்கிறார்களோ அவர்களே அங்கு சாக்ஷாத் பிரத்யக்ஷ தெய்வம் ருபம் அல்லவோ!
். கொண்டு வந்த நீரோ மனிதர்களுக்கு கிட்டாத அரிய அம்ருதம்.

.


(வளரும்)

:ty: SP
உண்ணப் பொசுப்பிருந்தால் உவைகையிலும் சம்பா கிடைக்கும்

aanaa
28th February 2009, 04:45 AM
Feb 27th
________் (what the hell !!! )
(வளரும்)
ஏன் இவ்வளவு கோபம் ?

aanaa
28th February 2009, 04:49 AM
கடவுளை ஏன் மனிதனாக உருவகிக்கின்றோம்?

இவ் வுலகில் ஆகக் கூடிய சக்தி - மனிதனுக்குத் தான் உள்ளது
ஆகவெ நாம் மனிதனாக உருவகித்து - பல செயல்களைச் செய்வதால்
4 /6/12 கைகள் -
நிரம்பவே யோசிப்பதனால்
- பலதலைகள்
என உருவகித்துள்ளோம் .

aanaa
28th February 2009, 04:50 AM
deleted

anbu_kathir
28th February 2009, 03:16 PM
Three things to ponder on
_____________________

1. Doesn't Buddhism talk on 'karma' (may be with a different name?) ? Does only hinduism talk on karma ?



Of course Buddhism talks about Karma. AFAIK it is the same as the Hindu concept, although the praarabhda, sancitha etc types may be different.



2. Talking on karma, what if someone tries to get oversmart by convincingly thinking about CHANCE? IF xyz happens to undergo something its CHANCE / Probability theory. Why nature has to tally? Why do we assume, things are in perfection and hence WE NEED ACCOUNTABILITY in the form of 'KARMA' to finish the invisible picture?


There's nothing wrong with chance. As with the argument about the 'existence' of divinity, Karma cannot be proved or disproved, and neither can the probabilistic argument be proved/disproved (except of course in minuscule levels of Quantum theory).

'Why Karma? Why does this tallying take place?' I personally have no answer to this question. It is simply the nature of Life. You can ask the same of the laws of conservation of energy/momentum etc in physics. Why does nature behave in the way it does? I don't believe there is any sane answer to this question.

Karma includes the trident "thought, word and physical action". I like to think rather benignly of Praarabhda karma, as generating "new opportunities", based on ones past karma. Sometimes the opportunity might be of playing a lottery ticket winner, sometimes it might involve being the victim of an accident. But it is entirely up to oneself what one makes out of such opportunities.

Experiences are good or bad only subjectively, and often in the greatest curse lies the grandest blessing; and vice versa. That is so often the paradox of Life and it is upto oneself to put one's arm into the darkness and grab the Light out of it.

Ultimately a belief in Karma can only be used to broadly govern our social behaviour. For most intricate parts of Life, this good-bad-action-reaction ideology fails miserably, because of the fact that Life is simply far more grey-er than we assume it to be. Therefore it is upto oneself to realize his Swa-Dharma and act accordingly, be it a cold-blooded murderer or a most compassionate saint.

Love and Light.

Shakthiprabha.
28th February 2009, 07:18 PM
கடவுளை ஏன் மனிதனாக உருவகிக்கின்றோம்?

இவ்வுலகில் ஆகக் கூடிய சக்தி - மனிதனுக்குத் தான் உள்ளது
ஆகவே நாம் மனிதனாக உருவகித்து - பல செயல்களைச் செய்வதால்
4 /6/12 கைகள் -
நிரம்பவே யோசிப்பதனால்
- பலதலைகள்
என உருவகித்துள்ளோம்.

நன்றாகச் சொன்னீர்கள் :thumbsup:




Feb 27th
(what the hell !!! )

ஏன் இவ்வளவு கோபம் ?

His son is missign for a fortnight or so, wont a dad be too eager to go and fetch him all by himself? I agree these are priorities. Fine so be it. It was unpleasant to me.

viraajan
28th February 2009, 07:20 PM
I'm happy.

Interestingly just a week ago I posted a Poll on my blog "Do you believe in Karma?". :D :D

Response: 36 votes in total.
Yes - 29
No - 4
No Idea - 3

I had but a hazy view about Karma. I do believe in it. If somebody asks me what Karma is, i would simply say that "Karma is the Deciding Factor". Yes it is.

Certain things cannot be proved. But can be felt, realized or experienced.

You be an atheist or theist - But believe in Karma. You get what you deserve.

I've few more to share about Karma. Will Share :D :D

Shakthiprabha.
28th February 2009, 07:24 PM
anbu_kathir,

True.

Karma or chance was/is a vast topic of debate in itself. We have had such debates in our hub and the result pointed nowhere.

aanaa
28th February 2009, 08:47 PM
our action is our karma- we are responsible for karma - for continuity too

so we can control in forth coming lives if we do good now ...

Shakthiprabha.
28th February 2009, 08:59 PM
aana,

My suggestion.

we can keep polls on th ese topics
(changing the poll topic every week)

aanaa
28th February 2009, 09:06 PM
agreed

go ahead SP

Shakthiprabha.
28th February 2009, 09:18 PM
NeengaLe seyyngaLEn aana,

oru vaarathukku Indha serialil varum oru viLakathai eduthukondu, atharkku negating and agreeing response veikkalaam.

Even if 3 to 5 people vote, we can switch over to another topic , consecutive week.

viraajan
28th February 2009, 09:43 PM
As we say that Karma is nothing but our action. So the good things, hardships that we face in this birth are the result of the Karma of our last birth.

But, in some cases, whatever bad things that an X does are passed on to his children and his children suffer a lot. Whats your (anyone here, SP, Anbu sir, Aana) call on this?

Shakthiprabha.
28th February 2009, 09:47 PM
VR,

I know one cult of thought where they share the idea, that,

....the soul with its vaasanas, desires and imprints, after it forgoes the body gets merged in the grand children or anyone with SIMILAR ideas and thoughts. That is why we find, the children or grandchildren fulfilling grand parent's wishes.
i.e. that is why they also say,

"avanga sagalai, unga (dash dash) vadivla nammaloda thaan irukaanga" etc.

i.e Jivatmas which bear similar nature, or has similar desires or vaasanas to a major extent, unites together to achieve their goal.

In many cases soul attaches itself to the grandchildren or its own progenies, very rare cases it unites with similar other souls of NO GENETIC connection.

i.e. to some xyz who has similar nature or thoguhts or desires.

___

Some others explain, that, when the child is formed in the womb, some of the imprints or cluster of our karmic desires of parents, pass on to the children (thus we suffer or benefit because of our forefathers)

___

viraajan
28th February 2009, 10:01 PM
That's a Great piece of information.... 1st time i'm hearing this akka. Thank you so much. :ty:

I'll quote one instance which may better explain what exactly I'm asking.

X gets married to a girl. He tortures her physically, mentally. He doesn't give her the peace. He (when she is alive) has contacts various other girls/ladies and starts a life with another girl leaving his first wife in hardship.
Now the son of X (born to first wife) gets married and just in a span of few years the son gets divorced. This son is very genuine in his char. But the girl he got married to is worst in char, not being sincere to him. Assume that X is still alive and leading a life with the 2nd wife.

So where exactly the "Karma" factor comes plays its trick in this instance? Why does the son suffer even though he hasn't done anything wrong?

Shakthiprabha.
28th February 2009, 10:04 PM
vr,

regarding the cult of thought which says 'souls of which has same nature and goal, merge together'

I have no complete knowledge to pass some theory as yes or say no to some theory. I am still learning and contemplating. So, thats just an info I shared. I aint vouching it :|

Shakthiprabha.
28th February 2009, 10:08 PM
X gets married to a girl. He tortures her physically, mentally. He doesn't give her the peace. He (when she is alive) has contacts various other girls/ladies and starts a life with another girl leaving his first wife in hardship.
Now the son of X (born to first wife) gets married and just in a span of few years the son gets divorced. This son is very genuine in his char. But the girl he got married to is worst in char, not being sincere to him. Assume that X is still alive and leading a life with the 2nd wife.

So where exactly the "Karma" factor comes plays its trick in this instance? Why does the son suffer even though he hasn't done anything wrong?

Karma does not start with X, vr.

That would have been karmas of their families passed for thro genes for ages unknown.

So, the son is suffering because of some genetic connection, for which probably, HE is rightfully the sinner from ages unknown. It is believed every thought and action would have a reaction.

So, he (x's son) alone is responsible. Karmic imprints of this suffering must have been passed to him, who is the rightful bearer.

viraajan
28th February 2009, 10:09 PM
Akka, thanks for sharing it :) :)

You say you are still learning... But i'm saying that just now i've started learning :oops: So every piece of information is valuable to me :yes:

anbu_kathir
28th February 2009, 10:37 PM
As we say that Karma is nothing but our action. So the good things, hardships that we face in this birth are the result of the Karma of our last birth.
But, in some cases, whatever bad things that an X does are passed on to his children and his children suffer a lot. Whats your (anyone here, SP, Anbu sir, Aana) call on this?
_________________

That's a Great piece of information.... 1st time i'm hearing this akka. Thank you so much.

I'll quote one instance which may better explain what exactly I'm asking. X gets married to a girl. He tortures her physically, mentally. He doesn't give her the peace. He (when she is alive) has contacts various other girls/ladies and starts a life with another girl leaving his first wife in hardship.

Now the son of X (born to first wife) gets married and just in a span of few

years the son gets divorced. This son is very genuine in his char. But the girl he got married to is worst in char, not being sincere to him. Assume that X is still alive and leading a life with the 2nd wife.

So where exactly the "Karma" factor comes plays its trick in this instance? Why does the son suffer even though he hasn't done anything wrong?
_________________


Viraajan,

The following is how I think of it and might have little bearing with what is traditionally accepted as how things work. I tend to use a lot of 'vocabulary' that makes up my reality about these issues, so please bear with me if you wish to go through this.

The Universe is a place of Free Choice. That was the whole point of Creation. The Creator need not have created (or equivalently have become the Creation) if He/She didn't wish to give Creation ( His/Her parts - the Jivaatmans - Individuations ) Free Will.

It would have been really stupid on the Creators part if He/She wished to create His own Individuations, and then put rules for them to be 'forced' to be attached to other Individuations.

I wholeheartedly believe there is absolutely nothing that is happening with us that we have not asked for (by thought, word or deed -- in other words, Karma) at some level. By this 'level', I mean the subconscious, the conscious, or the superconscious levels of awareness. One may indeed raise the issues - " Did the person who is being murdered by a killer ask for such a death to happen to him/her?" I believe the answer is yes, although it is not apparent to any of us why one may have 'chosen' such a death, I believe nothing is experienced by the Jivaatman which is not in its line of spiritual development.

So the answer to your question is simple. The Individuation (Jivaatman) that called itself Person X wished to experience being a torturer, a traitor to his wife, a womaniser. The Individuation that called itself " Wife of Person X" wished to experience being tortured, being betrayed. Similarly the Individuations that called itself as "Son of X" and the "wifes of X" wished to experience what they experienced. Because of the complementary desires of these Individuations, they decided to journey together in the physical realm as long as their desires are fulfilled satisfactorily, and then they pass along.

Again I would like to stress: when I mean "wished to experience", this does not necessarily happen at the level of conscious awareness, ie the conscious mind. It happens at a far more subtler level. The souls of these people themselves seek to address their own spiritual evolution in this manner. It is only the awakened person that is able to see the perfection of the system, the myriad beautiful ways in which Free Will plays itself out and also is able to actually consciously create His/Her own experience because to Him/Her there is absolutely no difference between Subconscious/Conscious/Superconscious states of Awareness (aka God and the Soul are One).

Although it sounds sadistic, it is in no way meant so. There is great pain in the process of evolution, as we know, Nature evolves itself through several several mistakes. So many species have sprung and fallen before Nature has become the beauty she is today, and all of them, however dangerous or fierce, were beautiful in the same way that the ones survived are beautiful today.

Love and Light

viraajan
1st March 2009, 11:00 AM
Thanks Anbu Kathir for your explanation.

I understand some of your points.

You've mentioned that X or his wife or his son wished to experience the hardships. So this happens in subconscious level. Am I right?
Now my question is,
When exactly the wish blossoms?
Will the person be in the same subconscious level till the end?

anbu_kathir
1st March 2009, 11:56 AM
Thanks Anbu Kathir for your explanation.

I understand some of your points.

You've mentioned that X or his wife or his son wished to experience the hardships. So this happens in subconscious level. Am I right?
Now my question is,
When exactly the wish blossoms?
Will the person be in the same subconscious level till the end?


Not necessarily the subconscious level. The subconscious is that part of the mind which is necessary for 'spontaneous' reactions that the conscious mind doesn't have to be bothered about... like you touch a hot plate, immediately your hand pulls back... that doesn't have to be a consciously made decision, it is something the body has learnt and absorbed into its nature as a result of prior experience (over millions of years).

The mind too, has so many subconscious reactions as a result of the evolution of the human psyche. All these are subconscious imprints, and although we experience their effects in the physical world, we are unaware of why we react in that way or what caused such a reaction.

The desire of having an experience of living with hardships, or the desire of living any particular kind of experience in a life, are often made at the superconscious levels. By the superconscious I mean that level of awareness where there is a understanding of the 'big picture', like getting a birds eye view of the cosmic interconnections between ourselves and the souls of the universe, the lifetimes that we have lived on the physical plane and elsewhere.

From this state of awareness, one could deliberately make a decision which might be one of shocking and unimaginable pain in one's own physical manifestation. Like the fact that one understands the need to take bitter medicine in order to get cured of a physical ailment, just so, at that level of awareness, it is a perfectly sane decision.

When does such a decision get made? First of all, time is not linear. So it is often better to accept 'states of Awareness' as the reference point, not time. For example, a normal human being who lives in and out of the three states of existence - Sleep, Waking, Dreams, in general makes many such "Life decisions" before he/she comes into the physical existence because that is where he/she would be in the superconscious state.

But a spiritually awakened human being, who has transcended his/her attachment with the world, can by his/her own accord move to a superconscious state inspite of being in waking/dream/sleep states and make his/her Life decisions there.

Can such a decision be overwritten when living the Life or would one have to live with the pain till the end? Yes surely, but for that one needs to be spiritually developed. It is very possible to shift the states of Awareness while being in the physical body by performing actions with certain intent - also called Tapas or Penance or Yoga or Communion. This might be through Bhakti, Jnaana, Karma .. the systems of Yoga most well documented in Hindu philosophy. Any other system will probably fall into one of these categories.

Love and Light.

viraajan
1st March 2009, 01:17 PM
Thank you so much Anbu Kathir for the explanation. But, I couldn't understand some parts of it :oops:

I'll ask few more such questions :)

aanaa
1st March 2009, 08:13 PM
thank you folks shedding more lights here
:clap:

aanaa
3rd March 2009, 06:58 PM
why no one here ....

Shakthiprabha.
3rd March 2009, 07:00 PM
ah I am yet to write yesterday's episode :oops:

aanaa
3rd March 2009, 07:13 PM
thanks

I do like ur avatar

Shakthiprabha.
3rd March 2009, 11:10 PM
March 2nd
________


கிருபாவின் அத்தை வீட்டில் தென்படாத அஷோக், சாலை நடுவில் மயங்கிய நிலையில் திருவண்ணாமலை அருகிலேயே நீலகண்டனுக்குக் கிடைக்கிறான். பெற்றோரும், நீலகண்டனும் அவன் போக்கில் தங்களுக்குள்ள மனவருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

அவர்களுள் நடந்த அழகிய சம்பாஷணையின் தோராயமான தொகுப்பு இதோ:

"எங்களை விட்டு விட்டு எங்கேடா போன?"

"எங்கே போவது? எங்கே போக முடியும்? எல்லாமே ஒரே இடத்துல லயிச்சு இருக்கும் போது, எது, அல்லது யார் எங்கே தான் போய்விட முடியும். ரமணரும் இதைத் தான் சொல்றார். எல்லாமும் எல்லா இடத்திலையும் இருக்கும் போது, எதுவும் எங்கேயும் போக முடியாது. ஐன்ஸ்டீன் கூட இதைத்தான் கண்டுபுடிச்சார்"

"இப்படி இருக்கியே, நாலு பேரை மாதிரி படிச்சு, பெரிய ஆள வரவேண்டாமா, நீயே ஒரு scientist, doctor-a ஆகலாமேடா"

"அவாள்ளாம் (அவர்கள் எல்லாம்) தனக்கு வெளிய ஆராய்ச்சி நடத்தினாளேயொழிய தனக்குள்ள இருக்கிற முழுமையை தேட நேரமில்லாம ஓய்ஞ்சு போயிட்டா. நான் அந்த முழுமையை ஆராய்ச்சி பண்றேன். அது தான் பூர்ணம். ultimate goal. Jesus என்ன டாக்டருக்கா படிச்சார்? ஆனால், அவர் எத்தனைப் பேரை குணமாக்கினார்? சித்தர்களுக்கு இருக்கிற ஆத்மஷக்தியால தங்களை தாங்களே உயர்த்திண்டா. அதை இன்னும் உசந்ததில்லையா"

"நாதன் இவனை பேசாம எதானும் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட அழைச்சுண்டு போறது better."

"neurosis ன்னு சொல்லி, இரண்டு மருந்து எழுதி தருவா, சொல்ல போனா எல்லாருமே schezophreniaல பாதிக்கப்பட்டவா தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான level. ஒரளவு எல்லாரும் ஒரே லெவல்ல இருந்த அது நார்மல், அது வேற வகையில இருந்த அதை அப்நார்மல் ன்னு சொல்லி தனியா பார்க்கறோம்"

இதையெல்லாம் கெட்டு அவன் பெற்றோர் மேலும் கலவரப்படுகின்றனர். நீலகண்டன் நடந்ததை தம் மனைவி பர்வதத்திடம் கூறுகிறார். அவளோ, அஷோக்கிற்கு ஜாதக தோஷத்திற்கு பரிஹாரம் செய்தால் குணமாகலாம் என்கிறார். இவ்விடத்தில் சோ, மருத்துவரிடம் அண்டும் போது எவ்வாறு சில மருந்துகள், மருத்துவர்கள் நமக்கு சரிப்படாமற் போய்விடுகிறதோ, தவறான மருந்து கொடுத்துவிடுகின்றனரோ, அதே போல் ஜோசியம் இன்றைய காலகட்டத்தில் வியாபாரமயமாக்கபட்டுவிட்டதால், சில நேரங்களில் (நம் கிரக நிலைகள் சரியாக அமையாத போது) நாம் காணும் ஜோசியம் பலிப்பதில்லை. அதனால் சரியானபடி ஜாதகம் கணிக்கப்படாமல், பரிகாரமும் தவறாய் அமைகிறது. நேரம் நன்றாக இருப்பின், சரியானதொரு பரிஹாரம் கிடைத்து, வாக்கு பலிதம் ஏற்படும் ஜோசியரும், துல்லியமான ஜாதக கணிப்பும், நமக்கு கைகூடும் என்பது தன் நம்பிக்கை என்று முடித்தார்.

aanaa
4th March 2009, 01:45 AM
March 2nd
________
. நேரம் நன்றாக இருப்பின், சரியானதொரு பரிஹாரம் கிடைத்து, வாக்கு பலிதம் ஏற்படும் ஜோசியரும், துல்லியமான ஜாதக கணிப்பும், நமக்கு கைகூடும் என்பது தன் நம்பிக்கை என்று முடித்தார்.

:ty:

சோதிடத்தில் நம்பிக்கை உண்டா?

bingleguy
4th March 2009, 12:01 PM
is jodhidam science ???? :roll:

Shakthiprabha.
4th March 2009, 01:14 PM
March 2nd
________
. நேரம் நன்றாக இருப்பின், சரியானதொரு பரிஹாரம் கிடைத்து, வாக்கு பலிதம் ஏற்படும் ஜோசியரும், துல்லியமான ஜாதக கணிப்பும், நமக்கு கைகூடும் என்பது தன் நம்பிக்கை என்று முடித்தார்.

:ty:

சோதிடத்தில் நம்பிக்கை உண்டா?

If u are asking me, then, yes, may be DEPENDS.
I believe a knowledgeable astrologer can very much predict one's past. Future predictions may and would vary depending on the mental will and drive of each person.

I would be based on what I am today. What I am today is in MY HANDS to a large extent. We can change the future, if not to a great extent, atleast to minute extent. (again it depends on how strong a person is wilfully or how strong is his aura )

Shakthiprabha.
4th March 2009, 01:17 PM
is jodhidam science ???? :roll:

In my opinion, it is. Planets and its positions are minutely calculated and the effects are studied based on innumerable experience and knowledge. Its a combination of astronomical science, mathematical science, planetorial positions and variations in its path, along iwth divine knowledge.

http://www.akgupta.com/Thoughts/astrology.htm

HonestRaj
4th March 2009, 10:17 PM
I have already read this novel / story (sariya solla theriyalai)"enge Bramanan" . I think it was written sometime in the 1950's / 60's .. right?

viraajan
4th March 2009, 10:19 PM
Dnt know when it was written. but yes it was first released as a book.
But worth reading. My mom has read it. I'm trying to get hold of a copy :)

Shakthiprabha.
4th March 2009, 10:28 PM
I have already read this novel / story (sariya solla theriyalai)"enge Bramanan" . I think it was written sometime in the 1950's / 60's .. right?

sometime after that i think, not sure when.
yes it was read widely as a novel .

viraajan
4th March 2009, 10:33 PM
As Cho clearly says, Astrology is TRUE. But astrologers??? hmmm :|

Shakthiprabha.
5th March 2009, 12:43 AM
March 3rd
________

சன்யாசம் பற்றியும் காவியுடையின் மகத்துவம் பற்றியும் புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான் அஷோக். அதை பிடுங்கி எறிகிறாள் வசுமதி.

"நம்மைப் பிடித்திருக்கிற மாயைக் கூட இப்படி விட்டெறிய வேண்டும்" என்கிறான்.

தான் சன்யாசம் மேற்கொண்டால், அவள் சம்மதிப்பாளா என்று கேட்கிறான். வசுமதி காட்டமாக பதில் பேசுகிறாள். நீ சன்யாசம் வாங்கிக்கொண்டு போவாயானால் போய்க்கொள் எனக்கு யாதொரு கவலையும் இல்லை என்று அழுகையும் ஆதங்கமும் கொப்பளிக்க கோபமாக பேசுகிறாள். எனக்கு ஏன் இப்படி ஒரு பிள்ளையை கொடுத்தாய் என்று இறைவனிடம் அழுகிறாள்.

"நாடகம் ஒன்று தான், பாத்திரங்கள் தான் மாறும், உனக்கு எப்படி உன் மகன் உன்னைப் புரிந்து கொண்டு உன்னுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதே போல் அண்ட சராசரத்தை படைத்த எல்லோருக்கும் மாதாவான உலக அன்னை, நான் அவளடி இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாளா" என்கிறான்

சன்யாசத்தைப் பற்றி பேசும் போது, சோ இவ்வாறு கூறுகிறார். சன்யாசத்தில் நான்கு வகை உண்டாம். க்ரம சன்யாசம், ஆதுர சன்யாசம், அதி ஆதுர சன்யாசம், ஆபத் சன்யாசம் என்பன.

(இதைப் பற்றி சோ விளக்கவில்லை) க்ரமம் என்றால் நியதி rule. அஃதாவது படிப்படியாய் சன்யாசம் பெறுவது. முறைப்படி சன்யாசம் பெறுவது. க்ருஹஸ்தாஸ்ரம் தொடங்கி, வானப்ரஸ்தம் தொடர்ந்து, 60 வயதிற்கு மேல் பக்குவம் அடைந்த சிலர் க்ரம சன்யாசம் மேற்கொள்ளலாம். அல்லது முறையாய் குருவின் ஆசியோடு சன்யாசம் வாங்கிக்கொள்ளலாம். இது தான் க்ரம சன்யாசம் என்று நினைக்கிறேன். அதிஆதுர சன்யாசம் மற்றும் ஆதுர சன்யாசம் பற்றி தெரியவில்லை. ஆதுரம் என்றால் படிப்படியாக என்று பொருட்படலாம். சரியாய் தெரியவில்லை.

பெற்றோரின் ஒப்புதல் இன்றி சன்யாசம் மேற்கொள்ளக்கூடாது. இதற்காகவே ஷங்கராச்சார்யார், முதலையின் பிடியில் இருக்கும் போது, 'சன்யாசம் என்பது மறு பிறவி, இந்த முதலைக்கு என்னை இப்பிறவியில் தீண்டும் கர்மா உள்ளது, நான் சன்யாசம் மேற்கொண்டால் எனக்கு இன்னொரு பிறவி, ஆகவே முதலை என்னை விட்டுவிடும், எனக்கு ஒப்புதல் அளி' என்று தாயாரை வேண்டுகிறார். அதன் படி தாயார் சம்மதத்தின் பேரில் அவர் உடனே 'ஆபத்-சன்யாசம்' மேற்கொண்டாராம். சன்யாசம் மேற்கொள்ளும் போது ப்ரிஷை மந்திரம் என்று ஒன்று சொல்லவேண்டுமாம். அதன் அர்த்தம் "நான் ஒருவருக்கும் தீமை/தீங்கு இழைக்க மாட்டேன்" என்பது. மாத்வாச்சாரியார் சன்யாசம் பெற அவர் பெற்றோர் மறுத்தனர். அவரை போகமல் இருக்க வேண்டி அவர் தந்தை அவரை வலம் வந்து நமஸ்கரித்தார். உடனே மாத்வாச்சார்யார் சிரித்து "பிள்ளையைத் தந்தை வணங்கி என்னை சன்யாசி ஆக்கிவிட்டீர்கள்" என்றாராம். சன்யாசியை பெரியவர் சிறியவர் என எல்லோரும் வணங்கவேண்டும். பெற்ற தந்தையும் வணங்கவேண்டும். ஆனால் அவரின் தாயை மட்டும்
சன்யாசி விழுந்து வணங்கலாம்.

ஆங்! கதை என்னவாயிற்று என்று தெரியணுமா? பெரிசா ஒண்ணும் இல்லை. புதியதாக வேம்பு என்ற ஒரு புரோகிதர் அவர் குடும்பம் என பாத்திரங்கள் புகுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஜெயந்தி என்ற ஒரு பெண், அவளுடைய திருமணப்பேச்சு நடக்கும் போது, க்ருபாவிற்கு அவளை திருமணம் செய்ய வெம்பு ப்ரியப்பட ஆனால் அவர் மனைவிக்கு அதில் இஷ்டம் இல்லை. ஜெயந்தி தனக்கு க்ருபாவை மணந்து கொள்வதில் இஷ்டம் எனச் சொல்லிச் செல்கிறாள். ஆக, நம் கதையும் முக்கோணக் காதலில் சிக்கியாகிவிட்டது.

(வளரும்)

aanaa
5th March 2009, 01:42 AM
Future predictions may and would vary depending on the mental will and drive of each person.


எல்லாமே நடந்து முடிந்தது என்றால் -
ஏன் எதிர்காலத்தை துண்ணியமாகக் கணிக்க முடிவதில்லை

aanaa
5th March 2009, 01:47 AM
March 3rd
________

. சன்யாசம் மேற்கொள்ளும் போது ப்ரிஷை மந்திரம் என்று ஒன்று சொல்லவேண்டுமாம். அதன் அர்த்தம் "நான் ஒருவருக்கும் தீமை/தீங்கு இழைக்க மாட்டேன்" என்பது. (வளரும்)

சன்யாசி மட்டுமல்ல மனிதப் பிறவிகள் யாவருமே இப்படி ஒரு சங்கல்ப்பம் எடுக்கணும்

anbu_kathir
5th March 2009, 09:38 AM
Future predictions may and would vary depending on the mental will and drive of each person.


எல்லாமே நடந்து முடிந்தது என்றால் -
ஏன் எதிர்காலத்தை துண்ணியமாகக் கணிக்க முடிவதில்லை

Aanaa,

I believe the Universe is a place of infinite possibilities. If you study the quantum theory of physics, you will get to know that in any given situation, an infinite number of possible future situations exist, each of which has a certain probability of happening depending upon the previous events (http://en.wikipedia.org/wiki/Schrodingers_cat). The same thing is true about our future.

" Ellaame nadandhu mudindhadu " means "All possibilities exist and have happened/can happen when a certain sequence of previous events occur." That sequence (of previous events) is primarily determined by the actions of the individual. Just as in quantum physics there are an infinite number of variables to be taken into account whenever one has to study the behavior of any particular particle in a many-body system (http://en.wikipedia.org/wiki/Many-body_theory) , in the same way, the future of an individual involves so many variables, the most important of which is his/her own efforts. Quantum physics therefore is a good analogy, however I do not think one can proclaim for astrology to be a science in the normal convention of the word, as Quantum physics is. I think that would be a bit preposterous.

Predicting the future means picking one of those infinite possibilities of the future. Therefore it is impossible to predict the actual sequence of events exactly (picking one with 100% guarantee would mean that the Universe is in fact not a field of infinite possibilities and there is therefore no meaning for human effort). Thus the astrologer, however good he/she might be, can only indicate those events which have a high probability of happening. Again there is a small albeit finite probability that it might also not happen, because of the fact that one cannot track all the infinite variables involved (again, the most important of which is human effort). I believe this is what is meant by "vidiyai madiyaal vendru vidalaam".

Love and Light.

viraajan
5th March 2009, 11:09 AM
Thus the astrologer, however good he/she might be, can only indicate those events which have a high probability of happening. Again there is a small albeit finite probability that it might also not happen, because of the fact that one cannot track all the infinite variables involved (again, the most important of which is human effort). I believe this is what is meant by "vidiyai madiyaal vendru vidalaam".

Love and Light.

That's a good point actually :D

I would like to share what I've heard.

According to the calculation of no of planets, in Planet Astrology, the max no of probabilities that can exist is 108.

I'm not sure how true it is... :|

directhit
5th March 2009, 11:16 AM
Aanaa,

I believe the Universe is a place of infinite possibilities. If you study the quantum theory of physics, you will get to know that in any given situation, an infinite number of possible future situations exist, each of which has a certain probability of happening depending upon the previous events (http://en.wikipedia.org/wiki/Schrodingers_cat). The same thing is true about our future.

" Ellaame nadandhu mudindhadu " means "All possibilities exist and have happened/can happen when a certain sequence of previous events occur." That sequence (of previous events) is primarily determined by the actions of the individual. Just as in quantum physics there are an infinite number of variables to be taken into account whenever one has to study the behavior of any particular particle in a many-body system (http://en.wikipedia.org/wiki/Many-body_theory) , in the same way, the future of an individual involves so many variables, the most important of which is his/her own efforts. Quantum physics therefore is a good analogy, however I do not think one can proclaim for astrology to be a science in the normal convention of the word, as Quantum physics is. I think that would be a bit preposterous.

Predicting the future means picking one of those infinite possibilities of the future. Therefore it is impossible to predict the actual sequence of events exactly (picking one with 100% guarantee would mean that the Universe is in fact not a field of infinite possibilities and there is therefore no meaning for human effort). Thus the astrologer, however good he/she might be, can only indicate those events which have a high probability of happening. Again there is a small albeit finite probability that it might also not happen, because of the fact that one cannot track all the infinite variables involved (again, the most important of which is human effort). I believe this is what is meant by "vidiyai madiyaal vendru vidalaam".

Love and Light. :ty: Good writeup

anbu_kathir
5th March 2009, 11:19 AM
Thus the astrologer, however good he/she might be, can only indicate those events which have a high probability of happening. Again there is a small albeit finite probability that it might also not happen, because of the fact that one cannot track all the infinite variables involved (again, the most important of which is human effort). I believe this is what is meant by "vidiyai madiyaal vendru vidalaam".

Love and Light.

That's a good point actually :D

I would like to share what I've heard.

According to the calculation of no of planets, in Planet Astrology, the max no of probabilities that can exist is 108.

I'm not sure how true it is... :|

With a high degree of probability, this is not accurate :D.

This kind of rigid numbers, 108, 33 million gods, Trimurthi, etc etc.. has to do more with mythology than with actual science. Our ancestors more often than not mixed up their science with myths and art, and as with any ancient civilization they had a fascination for numbers. For example, this 108 .. 1+8 = 9 = 0 according to the indian number system, and thereby completing a cycle.. a cycle/circle is a symbol of perfection and hence is divine in many myths across the world .. number of planets.. and in so many places a 'divine' number of sorts.. number of times a manthra should be repeated etc etc so on and so forth.

Love and Light.

joe
5th March 2009, 03:21 PM
http://dondu.blogspot.com/2009/03/21-22-23.html

Shakthiprabha.
5th March 2009, 03:24 PM
Joe,

oh coool!!!! :cool:

anbukkathir (ak),

excellent point relating QT and astrological predictions of future :thumbsup:

Shakthiprabha.
5th March 2009, 03:29 PM
With a high degree of probability, this is not accurate :D.

This kind of rigid numbers, 108, 33 million gods, Trimurthi, etc etc.. has to do more with mythology than with actual science. Our ancestors more often than not mixed up their science with myths and art, and as with any ancient civilization they had a fascination for numbers. For example, this 108 .. 1+8 = 9 = 0 according to the indian number system, and thereby completing a cycle.. a cycle/circle is a symbol of perfection and hence is divine in many myths across the world .. number of planets.. and in so many places a 'divine' number of sorts.. number of times a manthra should be repeated etc etc so on and so forth.

Love and Light.

:bow:

anbukkathir, I have a humble suggestion. You can start a thread in either lounge or in history section and post an article on any general topic per day and talk on what u know. Sharing your knowledge would be very useful for most of us, to delve more on the same.

Shakthiprabha.
5th March 2009, 04:59 PM
March 4th
_________

பாகவதரின் பேரன் தன் குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுகிறான். தாத்தா எப்படி காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டே அஷோக் வீட்டு தொட்டத்திலும் உரையாடினாரோ, அது போல், தன் விடுதிக்கும் வருமாறு குழந்தைத்தனத்துடன் விண்ணப்பிக்கிறான். அசோக் சரியான மனநிலையில் இல்லாதவன் என பாகவதரின் இளைய மகன் அபிப்ராயம் தெரிவிக்க, "சில விடயங்கள் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை, அவற்றை விஞ்ஞானத்தால் விளக்க முடியாது" என்கிறார் பாகவதர். அப்படிப்பட்ட உன்னதமான அதிசயங்களை ஜீசஸ் முதலிய இறைத் தூதர்கள், அவதாரங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒரு முறை விவேகானந்தர் பாரிஸ் நகரம் போயிருந்த போது, "நீங்கள் எமக்கு இயேசு க்ருத்துவைப் போன்றவர், எம் பாவங்களை நீக்கி அருளுங்கள்" என்று அங்குள்ள பக்தர்கள் வேண்டிக்கொண்டனராம். அதற்கு விவேகானந்தர் "என்னால் அன்னாரைப் போல் செய்வது முடியாத காரியம். அவர் பெரிய மஹான்" என்று மறுத்துவிட்டாராம்.

அரபிந்தோ ஆஸ்ரமத்தைச் சேர்ந்த மதர் மீரா, பறக்கும் தட்டு ஒன்றை கண்ட போது, அது vital planeஇல் (like earth plane) இருந்து, i.e. ஒரு வேறொரு கிரகத்திருலிருந்து வந்திருப்பதாக கண்டுணர்ந்தாராம். இவையெல்லாம் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து சுட்டிக்காட்டுகிற சிறு நிகழ்வுகள்.

நாதனின் வீட்டில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்ள ஒரு முதியவர் அமர்த்தப்படுகிறார். அவர் சமையல் மாமியின் கணவர் என பின் தெரியவருகிறது. பல ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு இல்லாததால், மாமியை ஒதுக்கிவிட்டு அவர் கணவருக்கு வேறு மணம் செய்வித்தார்களாம்.

ஹிந்து சாஸ்திரத்திலும் விவாகரத்திற்கு வழிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. அன்பில்லாத கணவனிடமுருந்து மனைவியும், அன்பில்லாத மனைவியிடமிருந்து கணவனும், பரஸ்பரம் அன்பில்லாத இருவரும் விவாகத்தை ரத்து செய்து விடலாம். ஒரு கணவன் தீய குணங்களுக்கு அடிமை ஆகியிருந்தாலோ, அரசாங்கத்திற்கு எதிராக பணி செய்தாலோ, வியாதியஸ்தனாக இருந்தாலோ, மனைவிக்கு விவாகரத்து செய்யும் உரிமை உண்டு. இப்படிபட்டவர்கள் மறுவிவாகம் செய்யவும் சட்டத்திலும் சாஸ்திரத்திலும் இடம் உண்டு.

எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்ணையும், பனிரெண்டு ஆண்டுகள் ஆகியும் ஆண் மகனைப் பெற்றுத் தராத பெண்ணையும் கணவன் விவாகரத்து செய்யலாம் என்ற விதியும் இருக்கிறது என்றார். (what nonsense!!!)

இன்று பேசப்பட்ட இன்னொரு விஷயம் "பண்டாரம்' பற்றியது. "தெருப்பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்" என்றெல்லாம் நாம் கூறக்கேட்டிருப்போம். பண்டாரம் என்றால், வேலை வெட்டி இல்லாத வெத்துப் பயல் என்ற அளவிற்கு அவ்வார்த்தையின் அர்த்தம் பொருள் தொலைத்திருக்கிறது. பண்டாரம் என்று கூறப்படுபவர்கள் சோழ நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தனராம். இவர்கள் ஏறக்குறைய சித்தர்களைப் போல் பக்தி/அறிவு மிக்கவர்கள். சன்யாசிகளைப் போல் பண்டாரங்களும் தீக்ஷை (dheekshai) பெற்றவர்கள் என்க்கூறுகிறார்.

"யாழ்ப்பாண சாதிக்கட்டமைப்பில் பிராமணர், வெள்ளார் ஆகியோருக்கு அடுத்த படியாகவும் ஆலய தொண்டுகள் வளிபாடுகளில் பிரமாணருக்கு நிகராகவும் கட்டியமைக்கப்பட்டுவந்த ஒரு சாதிக்கட்டுமானம் இதுவாகும். குவாக்கை என்ற குழுக்குறி மூலம் அடைளம் செய்யப்படும் இச்சாதி அமைப்பு தமது சாதிக்கட்டுமானங்களில் இறுக்கமான தன்மைகளை இன்றும் கடைப்பிடித்துவருவது குறிப்பிடத்தக்கது."

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%A E%B0%E0%AE%AE%E0%AF%8D

சுட்டியிலிருந்து எடுக்கப்பட்டது, சுட்டியின் விளக்கப்படி, பண்டாரம் என்பவர்கள் ஒரு வகைச் சாதியினர். உயர்ந்த குடிமக்களாய்க் கருதப்பட்டவர்கள் என விளங்குகிறது. ஆனால் இந்த சுட்டியில் இருப்பது யாழ்பாணத்தில் வழங்கி வந்த அர்த்தம் என நினைக்கிறேன். நம் தமிழ்நாட்டில், கற்றுத் தேர்ந்த, இறையருள் பெற்ற தீட்சை பெற்ற ஒருவரை பண்டாரம் என்று அழைத்துவந்தோம்.

இன்றைய வழக்கு முறையில், ஒருவனை "பண்டாரம்" என்றால் அவன் உபயோகமற்றவன் எனக் கருதும் தரக்குறைவு சொல்லாய் அங்கீகரிக்கப்படுகிறாது. அநியாயத்திற்கு பண்டாரத்தின் பெயர் இப்படி கீழிரங்கி இருக்க வேண்டாம் :(


(வளரும்)

aanaa
5th March 2009, 06:25 PM
;;
I believe the Universe is a place of infinite possibilities.
Love and Light.

thanks

aanaa
5th March 2009, 06:25 PM
http://dondu.blogspot.com/2009/03/21-22-23.html
:ty:

aanaa
5th March 2009, 06:26 PM
March 4th
_________

, பண்டாரம் என்பவர்கள் ஒரு வகைச் சாதியினர். உயர்ந்த குடிமக்களாய்க் கருதப்பட்டவர்கள் என விளங்குகிறது.
(வளரும்)


:ty: SP

கதிர்காமத்தில் பூசை செய்பவர்கள் இக் குடியினரே

FYI

Shakthiprabha.
5th March 2009, 06:29 PM
oh cool aana :thumbsup:

anbu_kathir
6th March 2009, 12:41 PM
anbukkathir, I have a humble suggestion. You can start a thread in either lounge or in history section and post an article on any general topic per day and talk on what u know. Sharing your knowledge would be very useful for most of us, to delve more on the same.

Many thanks for the inspiration, SP. :). I am somehow not that good in starting topics. If there are some topics you like to discuss, start the thread with them and I shall definitely contribute what I can.

Love and Light.

Shakthiprabha.
6th March 2009, 12:50 PM
Not any particular topic anbukkathir, just common discussions, u can talk on any topic u want, may be one per day or one per week (as per ur time or inclination or mood)
but put down all ur knowledge a thread and share with us. :)

Shakthiprabha.
6th March 2009, 03:24 PM
March 5th
_________


மறுபடியும் நேற்று ஜாதகம் ஜோதிடம் பற்றி சொச்ச மிச்ச கருத்தை அலசினார் சோ. உலகம் தட்டை என்று வாதிட்டு பின் உருண்டை என்று ஏனையோர் கண்டனர். ஆனால் நம் புராணங்களிலும் வேதங்களும் பூமியை "அண்டம்" என்றும், ப்ரம்மாண்டம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். அண்டம் என்றால் உருண்டை. எனவே நம் புராணங்களும் வேதமும் சாஸ்திரமும் ஒட்டு மொத்தமாய் புளுகு மூட்டைகள் என்று ஓரம்கட்டிவிட முடியாது. சூரியன் பூமியைச் சுற்றுவதாய் ஏனையோர் ஊகித்து பின் விஞ்ஞான வளர்ச்சி மூலம் உண்மை கண்டு தெளிந்தனர். இந்த உண்மையை பாஸ்கராச்சார்யரும், ஆர்யபட்டரும் முன்னமே உரைத்திருக்க, இன்னமும் ரிக்-வேதத்திலும் கூட பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்னும் குறிப்பு இருக்கிறது.

இதெல்லாம் சரி, க்ரக நிலைகள் எப்படி மனிதனை பாதிக்கும். சுத்த பேத்தல் என்று நீலகண்டன் சொல்வதைப் போல் பலரும் நினைப்பதுண்டு. ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு என்றால், Saturn என்பது ஒரு planet, அதன் சுழற்சியும் செயல்பாடும் ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும்? காதில் பூ சுற்றுவதற்கு அளவே இல்லையா? என்று நினைப்போருக்கு, சூரியனின் கிரணங்கள் பூமிக்கு விழுகிறதல்லவா? சூரியனின் தீட்சணயமும், தூரமும், நம் பூலோகத்தில் காலங்களாக அதன் வித்தியாசத்தை காட்டுகிறது. அதனால் பெய்யும் மழை, வெள்ளம், பாலைவனம் வறட்சி, இளவேனிற்காலம் பூ முகிழும் வசந்தம் என மனிதனை மகிழ்த்தவும் செய்கிறது, பாடும் படுத்துகிறது. சூரியனும் ஒரு கோள் தானே? பின் எப்படி அது மனிதனை ஆட்டிவைக்கிறது? என்ற கேள்விக்கு விடை எதுவோ அதே விடை தான் ஏழரை-சனி, மிச்ச கிரக உபாதைகள் என ஏனைய சந்தேகங்களுக்கும் விடை என வேம்பு சாஸ்த்ரிகள் நீலகண்டனின் மனக்குறைக்கு பதிலளிக்கிறார். நளனைப் போன்றோரைக் கூட ஆட்டி வைத்து தெருவில் அல்லாடவிடக்கூடிய சக்தி சனியின் பாதிப்பிற்கு உண்டு. சனி உபாதை தீர திருநள்ளாறு சென்று வருமாறு கூறுகிறார். நல்ல விளக்கம்!

அந்த சிவனையே இரண்டரை நாழிகை பிடித்தாரம் சனிஸ்வரர் (பிடித்ததாம் சனியின் பாதிப்பு). 'நீர் என்ன நேரில் பார்த்தீரோ' என்று நம்மைப் போல் சிலர் கேட்கக்கூடும். அதற்கு அழகான பதில் தர்க்கம் ஒன்றை வைத்திருக்கிறார் சோ. பானிபட் யுத்தம் நடந்தது என்று வரலாறு கூறித்தானே உங்களுக்குத் தெரியும். நீர் நேரில் யுத்தம் நடந்ததைப் பார்த்தீரா? என வெம்பு சாஸ்த்ரிகளின் வாதம் மூலம் தம் எண்ணைத்தை வெளிப்படுத்துகிறார் சோ.

(அது சரி... வரலாறும் புராணமும் ஒன்றா? வரலாறுக்கு சாட்சி உண்டு. புராணமோ பல வரலாறுகள் கடந்து பின் சென்றால் நிகழ்ந்ததாக கூறப்படும் ஒன்று, வலுவான சாட்சி ஏதும் இல்லை. வரலாறு என்றாலும், புராணம் என்றாலும், நம்மில் சிலர் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்று மட்டுமே பொது. )

ராமசுப்புவின் (பாகவதர் பேரன்) தோழன் வகுப்பில் மதிப்பெண்கள் சரியாக பெறாததால், தற்கொலை செய்துகொண்டுவிடுகிறான். தற்கொலை, சாஸ்திரங்களால் 'தவிர்க்கப்படவேண்டிய என்று' வலியுறுத்தப்படுகிறது. உயிர் உருவாகப்பட்டது இறையின் கருணை. உடல் கொடுத்தோர் பெற்றோர்கள். அவர்களால் படைக்கப்பட்ட நாம் வெறும் காரணகர்த்தாக்கள் என்பதால் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. நமக்குப் பிடித்த வாழ்வு கிடைக்காவிட்டாலும், இந்த உயிரை, உடலைத் தாங்கி நான்கு பேருக்கு நல்ல காரியம் செய்வது நம் கடமை. It is a precioius gift. உயிர் என்பதன் முக்கியத்துவத்தை, உணர்த்த பிரபல பன்னிக்கதை ஒன்றையும் நினைவு படுத்துகிறார். (தெரிந்திருக்கும் அனைவருக்கும்?) புழு பூச்சி முதல் எல்லா உயிர்களுக்கும் அதனதன் உயிர் மேல் பற்றும் ஆசையும் உண்டு. உருவத்தால் வேறுபட்டிருந்தாலும், உயிர் என்பதும், அந்தந்த உருவத்தில் அதனதன் வாழ்வும், வாழ்வின் மேல் அவற்றிற்கு இருக்கும் ஆசையும் ஒன்று தான்.


நேற்றைய தொடரில் கதையும் கருத்தும் பின்னிப்பிணைந்து இருந்தது. வேம்பு சாஸ்த்ரிகள் தம் மகளுக்கு க்ருபாவை மணமுடிக்க அபிப்ராயப் படுவதாய் நீலகண்டன் விட்டில் பேசிக்கொண்டிருக்கிறார். நீலகண்டனின் மகள் , பர்வதத்திடம், தான் க்ருபாவை வேறொரு பெண்ணுடன் பார்க், பீச் என்று சுற்றித்திரிவதைப் பார்த்திருக்கிறேன், என சங்கடத்துடன் கூறுகிறாள்.

வெம்பு தம் மனைவியுடன் பெண் கேட்டுச் செல்கிறார். க்ருபாவின் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்து, பெண் பார்க்கவருவதாய் ஒப்புக்கொள்கின்றனர். இதை கவனிக்கும் க்ருபாவின் தங்கை, அவனுக்கு செய்தி தெரிவிக்கிறாள். பிள்ளையின் திருமணத்திற்கு அவன் வாழப்போகும் வாழ்வுக்கு, அவன் தனிப்பட்ட சம்மதம் பற்றிய சிந்தனையே இல்லாது, தம்மிடம் இருக்கும் 'பொருள்'
ஒன்றைதப் பகிரும் எண்ணத்துடன் செயல்படும் கணக்கிலடங்கா பெற்றோர்களின் பிரதிபலிப்பு!

வையாபுரி என்ற அரசியல்வாதியிடம் (இவருக்கும் நாதனுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு) சிங்காரம் என்ற அடியாள் (பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், சினிமாவிலும் வரும் நபர். பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்)வேலைப்பார்க்கிறான். இவனின் கொள்கையிலிருந்து மாறுபட்டவள் இவன் மனைவி. நேற்றைய பகுதியில் யாரோ ஒருவனை தீர்த்துகட்டிவிட்டோ, அல்லது அடித்து நொறுக்கிவிட்டோ, கொடுத்த கூலிக்கு வேலை செய்து திரும்பிக்கொண்டிருக்கிறான் சிங்காரம். அதை ஏதேச்சையாக சாலையில் சென்றுகொண்டிருக்கும் அசோக் கண்டு திகைக்கிறான்.


(வளரும்)

anbu_kathir
6th March 2009, 09:56 PM
Not any particular topic anbukkathir, just common discussions, u can talk on any topic u want, may be one per day or one per week (as per ur time or inclination or mood)
but put down all ur knowledge a thread and share with us. :)

OK, SP. I will try :D.

Love and Light.

aanaa
6th March 2009, 10:45 PM
March 5th
_________
வெம்பு தம் மனைவியுடன் பெண் கேட்டுச் செல்கிறார்.
(வளரும்)

:ty:


அதற்காக இப்படியா "வேம்பு"வின் கொம்பை வாரிவிடுவது :lol:

anbu_kathir
6th March 2009, 10:47 PM
March 5th
_________
வெம்பு தம் மனைவியுடன் பெண் கேட்டுச் செல்கிறார்.
(வளரும்)

:ty:


அதற்காக இப்படியா "வேம்பு"வின் கொம்பை வாரிவிடுவது :lol:


:lol:

Shakthiprabha.
6th March 2009, 10:48 PM
March 5th
_________
வெம்பு தம் மனைவியுடன் பெண் கேட்டுச் செல்கிறார்.
(வளரும்)

:ty:


அதற்காக இப்படியா "வேம்பு"வின் கொம்பை வாரிவிடுவது :lol:


:lol:

:rotfl2: :sorry: :D :oops:

aanaa
6th March 2009, 10:53 PM
take it easy
I just kidding...

could have noticed icon :lol:
means take it easy

Shakthiprabha.
6th March 2009, 10:55 PM
I did take it easy, infact I enjoyed the joke myself :lol2: all the pent up anger on vembu seeking alliance for his daughter with krupa, against his wish, I supp, I took it out on him :rotfl2:

aanaa
6th March 2009, 11:02 PM
:cool2:

anbu_kathir
6th March 2009, 11:05 PM
Sadly I can't follow the serial. :(.

Shakthiprabha.
6th March 2009, 11:07 PM
anbukkathir,
Dont u have jayatv at the place where u stay?

anbu_kathir
6th March 2009, 11:08 PM
I stay in a hostel.. TV room irukku .. but Jaya TV reception is worst and moreover the timings are during my dinner time.

Shakthiprabha.
7th March 2009, 01:36 AM
March 6th
_________

இன்றைய தொடர் முழுவதும் அஷோக்கைச் சுற்றி அமைந்திருந்தது.

வெங்கடராமன் எப்படி ரமணர் ஆனார் என பாகவதர் கூறிக்கொண்டிருக்கிறார். உறவினர் ஒருவர், 'அருணாசலம்' என்ற பெயரிட்ட இன்னொருவரை விளிக்க, அந்த வார்த்தை அவருள் பெரிய மாறுதலை உண்டாக்கியது. திடீரென ஆன்ம தாகம் பெருக்கெடுக்க, அதற்கு விடையும், அதன் இலக்கையும் தேடத் துவங்கினார். சிறுவயதிலேயே அவர் சமாதிநிலையை அனுபவித்துள்ளார். அதைப் பற்றி பிறரிடம் கூறத்தான் என்ன இருக்கிறது? அதனால் அதைப் பற்றி வீட்டிலோ வெளியிலோ விஸ்தாரிக்கவில்லை. 'அருணாசலம்' என்ற வார்த்தை கேட்ட மாத்திரம் நிகழ்ந்த உள்ளுணர்வைத் தொடர்ந்து, 'தன்னைத் தேடவேண்டாம்' எனக் கடிதம் எழுதிவைத்து விட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதைப்போலவே தங்களுடைய மகனும் சென்றுவிடுவானோ என்ற எண்ணம் நாதன் தம்பதிக்கு மேலிடுகிறது. அஷோக் திருவண்ணாமலை சென்றதன் காரணம், நோக்கம் குறித்து பாகவதர் அவனிடம் கேட்டு தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறார் நாதன்.

அஷோக் மனம் திறந்து உரையாடும் ஒரே நபர் பாகவதராக இருக்க, திருவண்ணாமலையில் அவனுக்கு நடந்த அதிசயத்தையும், அங்கு சென்ற காரணத்தையும் பாகவதருக்கு விளக்குகிறான்.

கல்லூரி விட்டுத் திரும்பும் போது, யாரோ ஒருவர் இன்னொருவரை "கைலாசம்" என்று கூப்பிட, இவனுக்கு பொறிதட்டினார் போல் உடம்பு சிலிர்க்கிறது. அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரம், சகல நாடி நரம்பும்
மலர்ந்து ரோமாஞ்சனம் அடைகிறான். 'நான் பூமிக்கு வந்திருக்கும் சுற்றுப்பயணியைப் போல் உணர்ந்தேன். இந்த உடல் நானில்லை என்று உணர்ந்தேன். என் உயிரை உடலினின்று தனித்து உணர்ந்தேன். உடல் எனக்கு கட்டுண்டு என்னுடன் நடந்து வர, நான் திருவண்ணாமலையில் இருப்பதை உணர்ந்தேன். தேவைக்கு, நேரத்திற்கு, யாராரோ எனக்கு உணவளித்தனர், தங்கும் இடம் கொடுத்தனர். திருவண்ணமலை
அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. க்ஷண நேரத்து மின்னலைப் போல் வந்து போயிற்று"

"உன்னை நீயே ஒரு உன்னத நிலைக்காக தயார்படுத்திக்கொண்டிருக்கிறாய். you are gifted. உன்னுள் ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. அமைதியாக இரு" என பதிலளிக்கிறார் பாகவதர்.

அவன் மேலும் தொடர்கிறான். "இதுமட்டுமல்ல, ஒரு பெரிய அதிசயமும் நிகழ்ந்தது." மரத்தடியில் ஒரு மனிதர் சாய்ந்து படுத்திருக்கிறார். அவ்வழியே செல்லும் அஷோக்கை தடுத்து நிறுத்தி, "ஏன் அலைந்துகொண்டே இருக்கிறாய். ஓர் இடத்தில் அமைதியாய் இரு. சும்மா இருத்தலே சுகம். வெளியே அலைந்து தேடுவதை விடுத்து, உன்னுள் ஆழ்ந்து தேடிப்பார். ஒரு பிச்சைக்காரன் பாறையின் மேல் அமர்ந்து தினமும் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் ஒரு நாள் பாறையை தோண்டிய போது அங்கு புதையலே இருப்பது தெரிந்தது, அது தெரியாமலே, இத்தனை நாள் அவன் வெளியில் பிச்சை எடுத்திருக்கிறான், அது போலத்தான் வெளியே அமைதி தேடும் முயற்சி. உன்னைத் தேடி உன் வீட்டார் வருவர். உன் வீட்டிலேயே இரு. அங்கேயே உனக்கு விடை கிடைக்கும்." என்று கூறுகிறார். கூறிய மறுநொடி, மறைந்தும் விடுகிறார். அடையாளமாக அவர் அணிந்த ருத்ராக்ஷம் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

"உன்னுள்ளும் வெளியேயும் நடப்பதை அமைதியாய் கவனித்துக்கொண்டிரு. கடவுள் நிச்சயம் வழி வகுப்பார்" என்று ஆறுதல் கூறுகிறார் பாகவதர். "இதையெல்லாம் நான் யாரிடம் சொல்ல முடியும்? இங்கு என்னை யார் புரிந்து கொள்வார்கள். அதனால் நான் இதையெல்லாம் வெளியே கூறிக்கொள்வதில்லை" என அஷோக் முடிக்கிறான்.

வசுமதியிடம் பேச்சு கொடுக்கும் பாகவதர், நீ பிள்ளையை சுமந்திருக்கும் போது என்னென்ன படித்தாய் எனக் கேட்கிறார்.
சத்புத்திரன் வேண்டும் என்றெண்ணி பாகவதம், இராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை படித்ததாகக் கூறுகிறாள் வசுமதி. சீமந்தம் (பிள்ளை சுமக்கும் தாய்க்கு ஏழாம் மாதம் நடக்கும் விழா) முடிந்த அன்று நள்ளிரவு வீட்டில் ம்ருதங்க ஒலியும், நாதஸ்வர ஒலியும் கெட்டதாகவும், எங்கிருந்து வருகிறது என ஆராய முற்பட்டபோது உடனே அவ்வொலிகள் நின்றுவிட்டது என்று அவள் முன்பு கூறியதையும் நினைவு படுத்துகிறாள்.

சத்புத்ரன் நீ தானே வேண்டிக் கேட்டுக்கொண்டாய். உனக்கு இறைவன் வரம் அருளி சத்புத்ரன் வழங்கியிருக்கும் போது, 'சாமான்ய புத்ரன்' கிடைக்க அருள் செயவில்லை என்று நீ முறையிட்டால் எப்படி சரியாகும், உன் ஆன்ம பலத்தை வளர்த்திக்கொள். உனக்கு வாய்க்கப்பெற்றிருக்கும் மகன் சாமன்யன் அல்ல என வசுமதியை மெதுவாய் தயார்படுத்துகிறார் பாகவதர்.

வார்த்தைகளுக்கும் ஒலிகளுக்கும் பலம் அதிகம். நல்ல வார்த்தைகளும் ஓலிகளையும் பகிர்ந்துகொள்ள முடியாது போனால், மௌனமாய் இருப்பது நலம் என்று கருத்தைப் பரிமாறும் சோ, இறைவனிடம் மந்திரங்கள் ஜெபிக்கும் போது வார்த்தைகளை மிகச் சரியாக உச்சரிக்கவேண்டும் என்றார்.

த்வஷ்டா என்ற தேவதச்சன் யாகம் செய்து இந்திரனைக் கொல்ல ஒரு மகன் வேண்டினான். மந்திரம் உச்சரிக்கும் போது உச்சரிப்பு தவறியதால் அவனுக்கு கிடைத்ததோ இந்திரனால் கொல்லபட்ட மகன். ஆகவே இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து மந்திரம் சொல்லும் போது, மிகவும் கவனமாக பிரார்த்திப்பதும், உச்சரிப்பதும் அவசியம்.

கொசுறு தகவல்: நம் வீடுகளில் விரத பூஜைகளுக்கு மந்திரம் ஓதி சங்கல்பம் எடுத்து செய்யும் போது (குறிப்பாக வரலக்ஷ்மி விரதம், விக்னேஸ்வர பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை) கடைசியில் ஒரு மந்திரம் சொல்லி முடிப்பது வழக்கம்.

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் சுரேஷ்வரீ
யத் பூஜிதம் மயா தேவி பரிபூரணம் ததாஸ்து மே

இதன் பொருள், 'இப்பூஜையில் ஏற்பட்டிருக்கும் மந்திர தவறுகள், செயலால் அல்லது பக்தியின் குறைவால் ஏற்பட்டிருக்கும் குறைகளை மன்னித்து, பரிபூர்ண பலன் அருள்வாய்' என்பதாகும்.


(வளரும்)

aanaa
7th March 2009, 08:01 AM
I stay in a hostel.. TV room irukku .. but Jaya TV reception is worst and moreover the timings are during my dinner time.
http://www.isaitamil.net/forums/f67-sun-tv-serial-zone/


u can watch here if time permits

aanaa
7th March 2009, 08:10 AM
March 6th
_________


(வளரும்)
wow

:ty:
------

ஏன் இப்படி பறந்து கொண்டிருக்கிறாய்?

ஓ! அதுவா
பறக்க வேண்டுமென சிவனிடம் வரம் வேண்டினேன்.
இப்படித் தந்துவிட்டான்

Shakthiprabha.
10th March 2009, 07:25 PM
I wont be seeing today's episode :(

(can someone plz write a jist about it?)

I shall write about yesterdays episode asap :(

Shakthiprabha.
10th March 2009, 07:26 PM
------

ஏன் இப்படி பறந்து கொண்டிருக்கிறாய்?

ஓ! அதுவா
பறக்க வேண்டுமென சிவனிடம் வரம் வேண்டினேன்.
இப்படித் தந்துவிட்டான்

என்ன சொல்லவரீங்க? புரியலை :?

aanaa
11th March 2009, 02:47 AM
எது தேவையோ அதை தருகின்றான்.
தேவையில்லாமல் பேராசைப்பட்டு உள்ளதையும் இழக்கின்றான்

Shakthiprabha.
11th March 2009, 11:59 AM
March 9th
_________

வையாபுரியின் அடியாள் சிங்காரம் செய்த கொலையை கண்ணால் கண்ட சாக்ஷியாக தான் இருப்பதாக கூறுகிறான் அஷோக். இந்த வழக்கு வழக்காடுமன்றத்தில் விவாதிக்கப்பட்டால், தான் அஜாராவது திண்ணம் எனக்கூறுகிறான். நாதன் அவனை கடிந்து கொள்கிறார். அவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு சில நேரங்களில் சில இடையூறுகளை சமாளிக்க வையாபுரி போன்றோரின் உதவி தேவைப்படுவதால், வையாபுரிக்கு எதிராக நிற்க தன் மனசாட்சி இடம் கொடுக்க மறுப்பதாக தெரிவிக்கிறார்.

'நியாயம் நேர்மை நியதி பண்பு ethics, morality' எனப் பலச்சொற்களை தன்னுள் அடக்கிய சொல் 'தர்மம்' என நடுவில் புகுந்து விளக்குகிறார் சோ. அவரவர்கள் தமக்கென வேறுபட்ட தர்மங்கள் வகுத்துக் கொள்கின்றனர். "இது தான் தர்மம் என்றோ நான் தான் தர்மம்" என்றோ, தர்மம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 'இது தான் தர்மம்' என புதிதாய் யாரும் போதிப்பதில்லை. தொன்றுதொட்ட காலமாய், பெரியவர்கள் (வயதில் பெரியவர்கள் அல்ல, அறிவிற் பெரியவர்கள்) வலியுறுத்தி வந்ததை தர்மம் எனக் கடைபிடித்து வருகிறோம்.
கர்ணன் நட்புக்குத் தலை வணங்கி, துரியோதனனுக்கு துணை நிற்பதை தர்மம் எனக்கருதினான். குந்தி அவளை அன்னை என்று அறிமுகப்படுத்திக்கொண்ட போது "ஆற்றில் தவழ்ந்து வந்த என்னை தழுவி எடுத்த தேரோட்டியின் மனைவியே என் தாய்" எனப் பகர்கிறான். அன்பின் காரணமாய் அதிரதன் மனைவிக்கு கர்ணனைக் கண்டதும் மார்பகத்தில் பால் சுரந்ததாம். எப்பேர்பட்ட அன்பு! விபீஷனனின் தர்மம் தர்மத்தின் பக்கம் நிற்பதே என்றால், கும்பகர்ணனின் தர்மம், தன் தமையனுக்கு துணை நின்று அவனுக்காக உயிர் நீப்பது. இப்படி அவரவர் தம் தர்ம எல்லைகளை, நியாயங்களை தாமே வகுத்துக்கொள்கிறார்கள். அவரவர்க்கென "ச்வதர்மா" வை வகுத்துக்கொண்டு அதன்படியே நடக்கின்றனர்.

ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது , தனிப்பட்ட மனிதனின் தர்மப்படி நியாயமாக தோன்றாவிடினும், ராஜதர்மத்தின் படி முறையானதே. ராஜாவின் மனைவி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத போது அந்த அரசின் ஆணை பெருமளவு மதிக்கப்பெறாது. அரசின் தரம் குறையும், அரசு கவிழும். அரசு தர்மத்தை நிலை நிறுத்த சிதையை விட்டு பிரிந்து வாழ்வதே தர்மமாக ராமன் கருதினான்.

கல்லூரியில் அஷோக் சிக மாணவர்களால் சீண்டிவிடப்படுகிறான். 'நீ ஏன் புத்தகம் கொண்டுவருவதில்லை" என்றால், "கீதை, குர்-ஆன், பைபிள் போன்ற புத்தகங்களைத் தவிர மற்றவை எதுவும் எனக்கு குப்பைக்கு சமானம் அவற்றை நான் புத்தகங்களாக கருதுவதில்லை" என்று கூறுவதோடில்லாமல், குப்பை என்றால் எரித்துவிடுவாயா என்ற கேள்விக்கு அதை எரித்து சாம்பலாக்கி தன் பதிலை ஊர்ஜிதப்படுத்துகிறான். இதனால் அவன் கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறான்.

An after thought:: இயல்பான மனநிலையைத் தாண்டிய plane or சிந்தனை ஓட்டம் உடையவர்களுக்கு பொது ஜனத்துடன் பழகுதல், இருத்தல், அவர்களுடன் லௌகீக விஷயங்களில் ஈடுபட்டு இன்புறுதல், இதெல்லாம் மிகக்கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஞானநிலையை எய்திவிட்டால், அவர்கள் பொது ஜன மனஓட்டத்துக்கு கீழிறங்கி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆச்சார்யர்களாக, குருக்களாக, மஹான்களாகத் திகழ்கின்றனர். வேறு சிலர், காடுகள் மலைகள் என தனிமையைத் தேடி, அங்கு சித்தர்களாக வாழ்ந்து நித்யானந்தம் அனுபவிக்கின்றனர்.

உலகத்தோடு ஒட்டொழுகல் கடினம் என்பதாலேயே, ஞான நிலையை நோக்கி படிகள் எடுத்து வைப்பவன், பெரும்பாலும் தனிமையை நோக்கியே பயணிக்கிறான்.

(வளரும்)

aanaa
11th March 2009, 05:34 PM
March 9th
_________


(வளரும்)

:ty:

interesting points

anbu_kathir
11th March 2009, 08:07 PM
March 9th
_________


'நியாயம் நேர்மை நியதி பண்பு ethics, morality' எனப் பலச்சொற்களை தன்னுள் அடக்கிய சொல் 'தர்மம்' என நடுவில் புகுந்து விளக்குகிறார் சோ.

(வளரும்)

One of the renowned Western philosophers, Schopenhauer says "Compassion is the basis of all morality" in his famous work "On the Basis of Morality." According to me too.. indha 'dharma'vin unmaiyaana adipadai "Anbu" aagum. EndhappaNi anbilirundhu thodangigiradho adhuve dharmam aagiradhu.

This idea is central in Buddhism (the Dalai Lama himself is considered to be an incarnation of the Buddha of Infinite Compassion) and in the Vedic religion (http://veda.wikidot.com/dharma) too. Schopenhauer himself went into Hinduism and Buddhism and found parallels between his and those philosophies. Schopenhauer himself said about the Upanishads that they were ' the solace of his life and the solace of death'.

Love and Light.

Shakthiprabha.
12th March 2009, 12:21 PM
March 11th
_________

நேற்று பேசப்பட்ட ஒரே விஷயம், 'நிஷ்காம கர்மா'. நாதன் அவருடைய நிறுவன விஷயமாய் ஏக மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதைக் கண்டு அஷோக் "நீங்கள் ஏன் நிஷ்காம முறைப்படி செயலாற்றக் கூடாது" என ஆலோசனை வழங்குகிறான்.

'நிஷ்காம கர்மா' என்பது பலனை எதிர்பாராமல், கடமையைச் செய்வது. நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும், செயலை விட செயல் ஈட்டும் பலன் மேல் சந்தோஷம் இருக்கக்கூடும். நிஷ்காம கர்மாவைச் செய்பவனுக்கு செயலே சந்தோஷத்தை தருகிறது. அதனைத் தாண்டிய பலனைப் பற்றி அவன் பொருட்டாய் நினையாமல், செயலை சிறப்பாய் செய்வதிலேயே முழுமையான மகிழ்ச்சியை அடைந்து விடுகிறான்.

இதனை நடைமுறை வாழ்வில் கொணரும் போது, செய்யும் செயலில் மேலும் நேர்த்தி கூடுகிறது. ஒரு பொருளின் தரத்தில் கவனம் செலுத்தி, அதனை தயாரித்தால், அதன் தரம் மேம்பட்டு, உபயோகிப்பவன் பயன் அடைகிறான். So called goodwill increases. இறுதியாக, நாம் பயனைப் பொருட்டாய் கருதாவிட்டாலும், பயன் நன்றாக அமைந்து விடுகிறது. லாபத்துக்காக பொருளின் தரத்தை குறைத்து தயாரிப்பவன் நெடு நாள் வேரூன்ற முடிவதில்லை.

இலவசப் படிகள், ஊக்கத்தொகை, சம்பள உயர்வை மனதில் கொண்டு, உழைப்பவனின் உழைப்பு, முழுமையாய் வெளிப்படுவதில்லை. முழுமையாய் உழைப்பதை தம் கடமையாக கொண்டவனுக்கு, ஊதிய உயர்வு இத்யாதிகள் தானே வந்து சேர்கிறது.

இங்கு கர்மா எனப்படுவது அவரவர் செய்யும் தொழில் எனக் கொள்ளலாம், பெரிய அளவில், உயரிய நோக்கில் கர்மா எனப்படுவது யாகம் போன்றவற்றை குறிக்கும் எனக் கூறுவதோடு நிறுத்திக்கொண்டார். (He didn't touch what is actual karma, based on sects or otherwise)

கர்மாவை பற்றற்று செய்பவனுக்கு, அவற்றினால் ஏற்படும் பாப புண்யங்கள் பற்றிக்கொள்வதில்லை. கர்ம பலன்கள், அவனை சுற்றிப் பிணைத்துக்கொள்வதில்லை. இதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது ஒரு கதை.

ருக்மிணியை துர்வாச முனிவருக்கு பிரசாதம் வழங்கிவிட்டு வருமாறு க்ருஷ்ணன் அனுப்புகிறான். வழியே ஆற்றுவெள்ளப்பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றபடியால், ருக்மிணியால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. "க்ருஷ்ணன் நித்ய ப்ரமச்சாரி என்றால் வழி விடு" என்று வேண்ட சொல்கிறான் க்ருஷ்ணன். ருக்மிணியும் அவ்வாறே கேட்டுக்கொள்ள ஆறு ஒதுங்கி வழிவிட்டது. பிரசாதம் உட்கொண்டு துர்வாசரிடத்தில் விடை பெற்று திரும்புகிறாள் ருக்மிணி. மீண்டும் வெள்ளம். "துர்வாசர் நித்ய உபவாசி என்றால் வழி விடு" என்று பணிக்கச் சொல்கிறார் மாமுனி. ருக்மிணியும் அவ்வாறே கூற ஆறு வழிவிடுகிறது. ருக்மிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. தம்முடன், குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் க்ருஷ்ணன் எப்படி நித்ய பிரம்மசாரி ஆக முடியும்? க்ஷண நேரம் முன்பு பிரசாதம் உட்கொண்ட முனிவர் எப்படி நித்ய உபவாசி ஆகப் பெறுவார்? குழப்பதிற்கு விடை க்ருஷ்ணன் அளிக்கிறான். 'நாங்கள் இருவருமே பற்றற்று எங்கள் செயல்களை, கடமைகளை, செய்வதால், எங்களுக்கு கடமையால் பிணைப்பு ஏற்படுவதில்லை' என்கிறான். எப்பேற்பட்ட பற்றற்ற நிலை இருந்தால் இது சாத்தியம் ஆகும் !! :bow:

இப்படித்தான், அஷோக் தன் கடமை என நினைத்து, சிங்காரத்திற்கு எதிராய், அவனால் பாதிக்கபட்டவனுடன் கைகோர்த்து, காவல் நிலையத்தில் சாட்சி கூறுகிறான். நீலகண்டன் மகள் அஷோகை நினைத்து வெகுவாய் கவலை கொள்கிறாள். க்ருபா ஜெயந்தியை மணந்து கொள்ள சம்மதம் இல்லை எனக் கூறிவிடுகிறான். இதை அறிந்த ஜெயந்தியோ அவளது பெற்றோர்களோ பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல், வேறு இடத்தில் வரன் தேடலைத் துவங்குகின்றனர்.

(வளரும்)

aanaa
12th March 2009, 10:05 PM
March 11th
_________

'நிஷ்காம கர்மா' என்பது பலனை எதிர்பாராமல், கடமையைச் செய்வது. நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும், செயலை விட செயல் ஈட்டும் பலன் மேல் சந்தோஷம் இருக்கக்கூடும். நிஷ்காம கர்மாவைச் செய்பவனுக்கு செயலே சந்தோஷத்தை தருகிறது. அதனைத் தாண்டிய பலனைப் பற்றி அவன் பொருட்டாய் நினையாமல், செயலை சிறப்பாய் செய்வதிலேயே முழுமையான மகிழ்ச்சியை அடைந்து விடுகிறான்.
(வளரும்)ஃ

:ty:

very good point :clap:

Shakthiprabha.
13th March 2009, 12:56 PM
March 12th
_________

வேம்பு சாஸ்திரிகள் க்ருபா ஒரு இளம் பெண்ணுடன் பழகுவதை தாம் நேரில் பார்த்ததாக கூறுகிறார். யாரென்று விசாரித்து நல்ல முறையில் திருமணம் நடத்திவிடுமாறு உள்ளன்போடு கேட்டுக்கொள்கிறார். முதலில் இடிந்து விடுகிறார் சாம்பு. அவன் விரும்பும் பெண் ஜட்ஜின் மகள் என்று தெரிவிக்கிறாள் க்ருபாவின் தங்கை. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் குடும்பம் எனத் தெரிந்து மேலும் கலங்கிப்போகிறார் சாம்பு.

'காதல் திருமணம் என்ன குற்றமா' என்ற கேள்விக்கு, இக்காலத்தில் காதல் மலிவுப் பொருளாகிவிட்டது. காதலிக்காவிட்டால் ஒரு மனிதன் உணர்ச்சியற்றவன் என்ற நிலைக்கு கேலிக்குள்ளாக்கப்படுகிறான். சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரும் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட உணர்வுகளை, மீடியாக்களும் இத்யாதிகளுமாகச் சேர்ந்து பொதுவில் கொண்டாடுவதும் போற்றுவதும் பாராட்டதக்கதல்ல என்று சோ தன் கருத்தை கூறுகிறார். காதலர் தினம் என்று தனியொரு தினத்தை தூக்கிவைத்து கொண்டாடுவதும் பெரிதும் வரவேற்க்கத்தக்கதல்ல எனக் கூறினார். அக்காலத்திலும் கூட துஷ்யந்தன்-ஷாகுந்தலா போல் உண்மையாய் காதலித்து, காதலித்தவர்களையே கைப்பிடித்தோர்களும் இருந்தனர். இப்பொழுதும் இருக்கின்றனர். எனினும் பெரும்பான்மை சதவிகிதத்தில் காதலின் புனித உணர்வு குறைந்து விட்டது. காதல் திருமணங்கள் பெருகப் பெருக, விவாகரத்துக்களும் அதிகரித்துவிட்டதாய் வருத்தப்பட்டார். சாஸ்திரத்தில் கூறியிருக்கிற எட்டு வகையான திருமணங்களில், பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து வைதீக முறைப்படி முடித்து வைக்கும் திருமணமே சிறந்ததாம்.

கிரஹணம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. கிரஹண தர்பணம் செய்வது நலன் என வேம்பு சாஸ்த்ரிகள் கூறுகிறார். நீலகண்டன் தனக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை, காரணம் புரியாமல் செய்ய விருப்பமில்லை என வாதிடுகிறார். வான சாஸ்திரத்தை சாதகமாக்கிக்கொண்டு பலர் தேவையற்ற நியதிகள் புகுத்திவிட்டார்கள் என சாடுகிறார். கொலம்பஸ் சிவப்பிந்தியர்களை ஏமாற்றி "உங்கள் உடைமைகளை நீங்கள் தரவில்லையென்றால், இதோ இந்த நிலா வராமல் போய்விடும்" என்று அமாவசை அன்று பயமுறுத்தி, ஏமாற்றி, பொருள் ஈட்டினானாம். ஒன்றும் தெரியாதவனை முட்டாளாக்கும் இது போன்ற சாஸ்திரத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். வேம்பு சாஸ்த்ரிகளுக்கு, நீலகண்டன் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்க முடியவில்லை.

இந்த கருத்தையொட்டி, சோ, பாம்பு, கிரஹணக் கதைகள் நம் புரிதலுக்காக இலகுவாக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கணக்கு சரியாய் அமைந்திருக்கிறது. இன்னைய தேதியில் இன்று இங்கே கிரஹணம் பாதிக்கும், என்ற கணக்குகள் துல்லியமாக இருப்பதாக கூறுகிறார். விஞ்ஞான முறைப்படியே நோக்கினும், சூரிய கிரஹணத்தன்று சூரியனின் ஒளி மட்டுபட்டிருக்கும் போது, ஏன் வெறும் கண்ணால் நோக்கக்கூடாது என்று விஞ்ஞானமே சொல்கிறது? நிச்சயம், அதன் ஒளியோ கீற்றோ உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியதாய் இருக்கலாம். ஒருவன் நீரிழிவு நோயால், புற்றுநோயால், இன்ன பிற நோயால் பாதிக்கபட்டு இறுதி நிலையிலோ ஆரம்ப நிலையிலோ மருத்துவரை நாடுகிறான். என்றோ ஒரு நாள் இந்த நோய் மனிதனை பீடிக்கத்துவங்குகிறது. அது கிரஹணத்தன்று கூட இருக்கலாம். நம்மால் கண்டறிய முடியாது. கிரஹணப் பீடை என்றால் பீடிப்பது, தாக்குவது, அவஸ்தைக்கு உள்ளாக்குவது என்று பொருள் எனக் கூறி முடித்தார்.

(வளரும்)

after thoughts: I cannot however agree, that divorces happen because of increased love-marriages. People are more open for seperation, added to it, tolerance level has gone down. Moreover, a partner is NOT a commodity to be chosen. It is awkward to accept the saying "you choose ur partner, love would (has to ?)follow." I am, biased and my thoughts are vehemently against arranged marriages and hence can be dismissed.

Shakthiprabha.
13th March 2009, 01:12 PM
இன்னொன்று:

கோபு (நீலகண்டன்) மிக நன்றாக இயல்பாக நடித்துள்ளார். :clap:

நாதன், நளினி(வசுமதி), அஷோக், எல்லோரும் தம் பங்கை இயல்பாய் செய்கின்றனர்.

பாகவதரும் அவர் மனைவியும் சற்றே உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பு, எனினும் சுமாராய், நன்றாய் இருக்கிறது.

நீலகண்டன் மனைவி பர்வதம் (குயிலி) ரொம்பவும் மெனக்கெட்டு, அதிக உணர்சிகள் முகத்தில் தெரிக்க, முகச் சுளிப்பு, சுழிப்பு என எல்லாமே அதிக பட்ச நடிப்பு. சற்றே அலுப்பு தட்டுகிறது என்று அடக்கிச் சொல்வதைத் தாண்டி, மிகவும் எரிச்சலூட்டுகிறது .

இதை கவனத்தில் கொண்டு அவர் இயல்பாய் நடிக்கலாம். (தேர்ந்த நடிகை, நாம் சொல்லித்தர வேண்டியதில்லை)

viraajan
13th March 2009, 04:58 PM
இன்னொன்று:

கோபு (நீலகண்டன்) மிக நன்றாக இயல்பாக நடித்துள்ளார். :clap:

Yes akka. His acting was really good yesterday :D



நாதன், நளினி(வசுமதி), அஷோக், எல்லோரும் தம் பங்கை இயல்பாய் செய்கின்றனர்.

:yes:


பாகவதரும் அவர் மனைவியும் சற்றே உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பு, எனினும் சுமாராய், நன்றாய் இருக்கிறது.

:|


நீலகண்டன் மனைவி பர்வதம் (குயிலி) ரொம்பவும் மெனக்கெட்டு, அதிக உணர்சிகள் முகத்தில் தெரிக்க, முகச் சுளிப்பு, சுழிப்பு என எல்லாமே அதிக பட்ச நடிப்பு. சற்றே அலுப்பு தட்டுகிறது என்று அடக்கிச் சொல்வதைத் தாண்டி, மிகவும் எரிச்சலூட்டுகிறது .

இதை கவனத்தில் கொண்டு அவர் இயல்பாய் நடிக்கலாம். (தேர்ந்த நடிகை, நாம் சொல்லித்தர வேண்டியதில்லை)

:exactly: Overaction... :huh: Irritating at times...

But atop all these characters, three characters which liked very much are "Maid Maami" @ Nathan's home... Mainly coz, she always shows a sadness on her face always (it is so realistic)... and Kavithalaya's guy... Vaiyapuri's adiyaal... :cool2: He is versatile... :bow:

and the last one is Vembu... romba natural'ana acting :thumbusp:

viraajan
13th March 2009, 05:02 PM
And about Love Marriage vs. Arranged marriage,

Both the marriages are acceptable as long as the couple have the Tolerance Level, Adjustment etc.

I have seen divorce in both the cases... :|

I stand for both!!!

Of course, "Jathagam" plays a major role... :oops:

Shakthiprabha.
13th March 2009, 10:21 PM
விராஜன்,

உண்மை. வேம்பு மற்றும் சமையல் மாமியின் பாத்திரங்கள் ஜொலிக்கின்றன.

'வேம்பு'வின் குணங்கள் எனக்கு வெகுவாய் பிடித்திருக்கிறது. கல்மிஷமற்ற நல்ல மனம் படைத்த மனிதருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டிய பண்புகள்.

Shakthiprabha.
13th March 2009, 10:24 PM
March 13th
_________

தன் பையனுக்கு பெண்கெட்டு சாம்பு சாஸ்திரிகள் வேம்புவுடன் ஜட்ஜ் வீட்டிற்கு செல்கிறார். மிகுந்த தயக்கத்துடன் சிரம் தாழ்ந்து சாம்பு அமர்ந்திருக்க, மெதுவாக விஷயத்தை எடுத்துச் சொல்கிறார் வேம்பு. ஜட்ஜ் பதிலேதும் கூறாமல் உள்ளே செல்கிறார். இந்தக் கட்டத்தில் "தேடுவோம்" எனத் தொடர்குறியுடன் நிறுத்திவிட்டனர். எல்லோர் வீடுகளிலும் நடக்கும் அந்தஸ்து பிரச்சனைகள் அலசப்பட்டன. இன்று என்றில்லாமல், காலாகாலத்திற்கும் பண ஏற்றத் தாழ்வுகள் மனிதனை பெரிதும் ஆட்கொண்டிருக்கிறது. பண்டையகாலத்தில் ருக்மிணி க்ருஷ்ணனனை திருமணம் செய்த போது, பண பலம், படை பலம் அதிகம் படைத்த ருக்மிணிக்கு தன்னுடன் இசைந்து வாழ சம்மதமா என்று இருமுறை ஊர்ஜிதம் செய்து கொண்டானாம்.

பொதுவாகவே வைதீகம் தெரிந்த பிராமணர்கள் என்ற மரியாதை, அவர்கள் சிரார்த்தம் அல்லது நல்ல காரியங்கள் செய்விக்க வரும் போது பேசப்படுவதுடன் நின்றுவிடுகிறது. இன்றைய தேதியில் வைதீக பிராமணர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை வார்த்தை அளவிலும், சில இடங்களில் மனதளவிலும் நின்றுவிடுகிறது. அவர்களுடன் சம அந்தஸ்துடன் அமர அளவளாவ பலர் தயங்குவர் என்பதே உண்மை. வேதம் கற்றுவிக்கும், ஓதும் பிராமணனுக்கு பிறப்பால் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களோ அல்லது அந்தஸ்தில் உயர்ந்த பிராமண வகுப்பில் பிறந்த இன்னொருவரோ, தரும் மதிப்பு அவ்வளவே என்பது வேதனைக்குறியது.

சிங்காரத்தை தேடி போலீஸ் வலைவீசுகிறது. அவனை வையாபுரி தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்க முனைகிறான். அஷோக்குடன் பேசப்படும் சமாதான உடன்படிக்கை சரிப்பட்டு வரவில்லை. "என் ஆன்மாவின் கட்டளைப்படியே நான் நடப்பேன்" என அவன் திட்டவட்டமாக கூறிவிடுகிறான். அடுத்து வையாபுரி எடுக்கப்போகும் நடவெடிக்கை பயங்கரமாகவும் இருக்கலாம் என்ற நினைப்பு நாதனை தடுமாறச்செய்கிறது.

நேற்றைய தொடரில் எழுத விடுபட்டப் போன இன்னொன்று. சமையல் மாமியின் கணவருக்கு ஒரு மகள். அவர் இரண்டாம் மனைவி இறந்து விட்டதை அவர் வருத்தத்தோடும் பீடிகையோடும் மாமியிடம் தெரிவிக்க, மாமியின் சோகம் கலந்த சலனமற்ற முகத்தில் மெல்லியதாய் ஒரு பரிதாபமும், அன்பும் ஊற்றேடுக்கிறது.

(தொடரும்)

பி.கு: (இன்றைய பகுதியில் அலசி பேசப்படும் அளவு விஷயம் ஒன்றும் இல்லை)

Shakthiprabha.
13th March 2009, 10:29 PM
vr,

I couldn't wtch the episode on march 10th. Can u please write a jist (atleast a line or two?) on that?

aanaa
14th March 2009, 06:48 AM
March 12th/13th
_________

(வளரும்)

after thoughts: I cannot however agree, that divorces happen because of increased love-marriages. People are more open for seperation, added to it, tolerance level has gone down. Moreover, a partner is NOT a commodity to be chosen. It is awkward to accept the saying "you choose ur partner, love would (has to ?)follow." I am, biased and my thoughts are vehemently against arranged marriages and hence can be dismissed.


:ty:

aanaa
14th March 2009, 06:58 AM
vr,

I couldn't wtch the episode on march 10th. Can u please write a jist (atleast a line or two?) on that?

http://www.cinechipz.com/tv/2009/03/10_03_09-enge-brahmanan/

நாதன் மிக ஆவேசத்துடன் கல்லூரிக்கு போய் கல்லூரி நிர்வாகியிடம் நியாயம் கேட்டு கொதிக்கின்றார்.
ஆனால் நிர்வாகி அசோக்கை மற்ற மாணவர்களின் கேலிக்கு ஒவ்வொரு நாளும் இரையாகுகின்றான் என்றும்
அவனைக் காப்பாற்றுவதற்க்காகவே
கல்லூரியிலிருந்து நீக்கியதாகும் கூறுகின்றார்.
சோ வின் - ஒரு ராஜாவின் கதை - ஜடபரதன் கதை.
அசோக்கை --
ஒரு கல்லூரிக்கும் அனுப்ப வேண்டாமெனவும்
அவன் ஒரு தெய்வக் குழந்தை எனவும் கூறி அனுப்பி வைக்கிறார்.
நல்லதோர் வீணை செய்து ...

viraajan
14th March 2009, 10:07 AM
:oops: I'm terribly sorry akka... Poor memory.. :shaking:

Appaadi... Thanks to aana... :ty:

Sorry'ka :oops: :cry:

Shakthiprabha.
17th March 2009, 12:03 PM
:ty: aana, your link didnot work for me.

The foll link works.

http://tamiltv4u.com/enge-brahmanan/enge-brahmanan-tamil-serial-dated-10032009/

Anyone interested in watching any episode can just try for the particular day's video clip.

Shakthiprabha.
17th March 2009, 01:05 PM
http://tamiltv4u.com/enge-brahmanan/enge-brahmanan-tamil-serial-dated-10032009/



ஸ்திதப்ரக்ஞன் பற்றி முன்பே ஒரு அத்தியாயத்தில் பார்த்திருந்தோம். அதாவது இரட்டைகள் அற்ற நிலை. நானோ நீங்களோ பேசிய பிறகு எழுதிய பிறகு, இதையெல்லாம் பற்றிப் படித்த பிறகு, உண்மை அறிவு நிலை என்ன என்று எழுத்தளவில் அறிந்த பிறகு, மீண்டும் ஆசைகள், ஏமாற்றங்கள்,
புகழ்ச்சி, இகழ்ச்சி, பெருமை, சிறுமை we enter into the dual syndrome. பற்பல பிறவிகளில் சேகரித்த ஆசைகள், நிராசைகளை, ஒட்டுமொத்தமாய் தொலைத்துவிட, அழித்துவிட முடிவதில்லை. படிப்படியாய் உயர வேண்டிய பாதை. அதனால் தான் மனத்தை முதல் படியாக ஒருநிலைப் படுத்த, பஜனை, தியானம், ஸ்லோகங்கள் என பல பாலப்படிகள். இதையெல்லாம் பாராயணம் செய்யவும் இன்றளவில் நேரமும், விருப்பமும் இல்லாமல் போய்விடுகிறது. க்ஷண நேரத்தில் மனம் மீண்டும் ரஜோ குணத்தால் பீடிக்கப்பட்டு..... முடிவில்லா சக்கரம்.

அசோக் போன்ற வெகு சொற்ப மனிதர்கள், இறைத்தன்மைக்கு சிறிது (relatively) அருகாமையில் இருப்பதால், அவர்களால், சட்டென்று ஒரே படியில் தாவ முடிகிறது. அவர்களை அவமானம் மானம் போன்ற இரட்டைகள் பாதிப்பதில்லை. Their existence is said to be in a different plane (probably higher) அதனால், அவர்களைத் துன்புறுத்தினால், reaction இல்லாமல் போனாலும், துன்புறுத்தியவனை மன்னிக்கும் பக்குவம் இருந்து, அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் மன்னித்தாலும், equal opposite reaction என்ற விதிப்படி, பாதிப்பு துன்புறுத்தியவனை தாக்கும். இங்கு சாமான்ய மனிதன் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய கட்டாயம். அந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில், இப்படிப்பட்டவர்களின் வாக்கு, சொல், செயல், சிந்தனை எல்லாமே நம்மை விட பன்மடங்கு அதிக பலம் வாய்ந்தது. Intensity can be higher.

இயேசு, தன்னை துன்புறுத்தியவர்களின் பால் மிகுந்த கருணை மேலிட "இவர்கள் செய்யும் பாவத்தை இவர்கள் அறிய மாட்டார்கள், எனவே பிதாவே இவர்களை மன்னியுங்கள்" என்று மன்னித்தருளினார். அவர் கருணைக் கொண்டு மன்னித்திராவிட்டால், விளைவுகள் அதிகமாக இருந்திருக்கும். Universal love என்று இதைச் சொல்வதுண்டு. தன்னைத் தவிர பிற ஒன்றை காணாது, எங்கும் தன்னையே கண்டுவிட்டதால்,
இரட்டைகள் அற்ற நிலை. Compasson and love hence flows towards one and all.

தானே எல்லாமாகி இருக்கிறோம் என்று அறிவு முழுமை பெறும்போது, அவமானம் மானம், துன்புறுத்துபவன், துன்புறுத்தபடுபவன் என்ற வேற்றுமை கடந்து நிற்கும் பக்குவம் வரப் பெற்றுவிடும். அது அவ்வளவு சாமான்யமானதல்ல.

ஜடபரதரின் கதை அதற்கு சான்று. ஜட பரதர் முற்பிறவியில் துஷ்யந்த மஹாராஜாவின் மகனாய் பிறந்தார். ராஜபோகத்தைத் துறந்து தேர்ந்த ஞானியாக விளங்கினார். ஆன்மநிலையை எட்டப்பெற்ற பின்னும் வீழ்ந்தார். எப்படி? தன்னை அண்டி வந்த மானின் மேல் அன்பு பாராட்டினார். மெல்ல மெல்ல மான் அவர் மனம் முழுவது ஆக்ரமிக்கத் துவங்கியது (like how a camel creeps into the tent). பாசம், அன்பு வேறூன்ற ஆரம்பித்த
அவரின் மனதில், இறைவனைத் தாண்டி மானின் நினைப்பு மட்டுமே மிஞ்சியது. மான் ஒரு நாள் இறந்துவிட்ட போது அந்த துயரம் தாங்காமல், பாசத்தால் பீடிக்கப்பட்டார். துடித்தார். இந்த பாசத்தை அறுக்க, மீண்டும் ஞானப்படிகள் ஏற அவருக்கு மேலும் இரண்டு பிறப்பு தேவைப்பட்டதாம். அவரின் கடைசி பிறவி 'ஜட பரதர்' என கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் தவத்தின் நிலையிலிருந்து வீழ்ந்துவிட்டதை உணர்ந்திருந்த அவர், மேற்பட்ட பிறவிகளில் உணர்வுகளுக்கு இடம் கொடாத 'ஜடமாய்' இருந்து, இறுதி நிலையை எய்வேன் என்ற உறுதிபூண்டதாக சொல்லபடுகிறது.

நாதனிடம் வசுமதி கேட்கிறாள்:

"அப்போ காலேஜ் படிப்புக்கு அவன் லாயக்கு இல்லையா?"

பட்டென்று நமக்குத் தோன்றும் பதில்.

"காலேஜ் படிப்பு இவனுக்கு லாயக்கு இல்லை" .

பாரதியார் எவ்வளவு அருமையாய் ஒரே சொல்லில் அடக்கிவிட்டார்! For all those whose existence is beyond worldly affairs...

சொல்லடி சிவஷக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்!
வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே! (such ppl find it diff to gel)

viraajan
17th March 2009, 01:41 PM
I missed yesterday's episode akka.... pls post it :oops:

Shakthiprabha.
17th March 2009, 03:44 PM
March 16th
_________

வையாபுரி, சிங்காரத்தை காப்பாற்றுவதற்கு தேர்ந்தெடுத்த ஒரே வழி, அஷோக்கின் சரீரத்தை ஹிம்சிக்காத வழி. அத்தெருவில் உள்ளோரிடம் "அசோக் மனநிலை சரியில்லாதவன்" என்று கையெழுத்து வாங்குகிறார். நாதனும் மனம் வெம்பியபடி கையெழுத்திடுகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் மகன்/மகளின் செய்கைக்கு தார்மீகப் பொறுப்பு (responsibility / accountability) உள்ளது என சாஸ்திரங்கள் கூறுவதாய் எடுத்துரைக்கிறார் சோ. அவர்கள் செய்யும் பாபங்களுக்கு இவர்கள் பொறுப்பாவார்கள். மகன் தந்தை வழியில், பிரஜைகளின் பாபங்களுக்கு அரசனும், சிஷ்யனின் செய்கைகளுக்கு குருவும், மனைவியின் பாபங்களுக்கு கணவனும் பொறுப்பாவான் என்பது முன்னோர்களின் கூற்று. ஆகவே உயர்ந்த பதவி (not to be taken literally) வகிப்பவர்கள் தம் நடத்தையால், செய்கையால், வார்த்தைகளால் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்த வேண்டிய கடமைக்கு உட்பட்டவர்கள்.

வேம்புவின் சம்பந்தத்தை வெகு சந்தோஷமாய், பெருமையாய் ஜகன்னாதன் (ஜட்ஜ்) ஏற்றுக்கொள்கிறார். அவர் மனைவிக்கு சற்றே மனம் சுருங்குகிறது. எனினும் சினிமா வில்லியைப் போல் இல்லாமல், இயல்பாய் இன்முகத்துடனேயே தன் விருப்பமின்மையை நாசூக்காக கூறுகிறார். அவர் மகளின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுக்கவும் செய்கிறார். வைதீகம் செய்து வைப்போர்களின் நிலைமையை நன்கு கையாண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் வேத வழி சென்று வேத மந்திரங்கள் ஓதும் அவர்களை, அதன் சாரம்சத்தை கட்டிக்காக்கும் அவர்களை நாம் சரிசமமாய் நடத்துவதில்லை எனும் உண்மை சுடுகிறது.

வேத மந்திரங்கள் ஒலிக்கும் வீட்டில் என் மகள் மன நிறைவுடன் இருப்பாள் எனக் கூறுகிறார் ஜகன்னாதன். Postive effects of mantras was subtly hinted.

உறவுகளின் பேச்சு அடிபடும் போது, துன்பம் விளைவிப்பவன் உறவினன் என்பது கண்கூடாய் தெரிவதாக அபிப்ராயம் சொல்லப்பட்டது. நிதர்சனத்தில் தனியொரு மனிதனின் வீழ்ச்சியும், உயர்வும், நண்பன் ஒருவனுக்கு வருத்தத்தையும் சந்தோஷத்தையும் தரும் அளவு உறவினனுக்கு உள்ளன்பு பொங்குவதில்லை. இதை இராவணனும், இராமனும் கூட முன்மொழிந்ததாய் கூறப்படுகிறது.

விபீஷனனைப் பற்றி எடுத்துரைக்கும் இராமன், "அவன் நீதிக்கு தலைவணங்குபவன், நியாயத்தின் பக்கம் நிற்பவன்" என்று சொல்வதோடு நிற்காமல், "மேலும் அவனுக்கு இராஜ்ஜியத்தில் ஆசை வந்துவிட்டது" என்றும் கூறுவதாய் இராமாயணத்தில் இடம்பெற்றிருக்கிறது. உறவினனே உலைவைப்பவன் ஆகிறான்.

(வளரும்)

(நேற்றைய தொடரில் லௌகீகப்பேச்சுக்கள் மட்டுமே இருந்தன)


after thoughts: இக்கருத்து பொதுப்படையாய் கூறப்படுகிறது. ஒப்புக்கொள்ள இயலாதது. பொறாமை, அசூயை, போன்ற குணங்கள் பொதுவானவை, அவை உறவினன் மட்டுமே இன்னொரு உறவினனுடன் பாராட்டுவான் என்று சொல்வது generalisation. யாருக்கும் எப்படிப்பட்ட குணமும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

விபீஷனனை விட கும்பர்கணன் சிலரால் புகழப்பெறுகிறான். தமையனுக்காக உயிர்த்தியாகம் செய்தவன் என்று பாராட்டபடுகிறான். இராஜ்ஜிய பரிபாலனத்தை ஏற்றிருக்காவிடின் விபீஷனன் இன்னும் உயர்ந்து நின்றிருக்கலாம். அவன் மனம் வெதும்பி வேண்டாம் என்று மறுத்ததாகவும், இராமன், உயர்ந்த ஞானத்தை எடுத்துரைத்து மக்கள் நலன் கருதி, இராஜ பரிபாலனத்தை ஏற்று நடத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கதை உண்டு.

http://tamiltv4u.com/enge-brahmanan/enge-brahmanan-tamil-serial-16032009/

(நேற்றைய பகுதியைக் காண மேலே சுட்டுங்கள் )

viraajan
17th March 2009, 04:13 PM
:ty: Akka...

லௌகீகப்பேச்சுக்கள் - :confused2: appadina enna ka? :oops:

Shakthiprabha.
17th March 2009, 04:15 PM
Talks on worldy life and matters. 99 % of all what we talk. Viyavahhaarik nnu sollalaam.

லௌகீகம் = லோகம் (உலகம், உலகம் சார்ந்த ஒட்டொழுகல்) சம்பந்தபட்ட பேச்சுக்கள்.

anythign that is NOT pertaining to supreme knowledge or god :| :oops:

viraajan
17th March 2009, 04:16 PM
Talks on worldy life and matters. 99 % of all what we talk. Viyavahhaarik nnu sollalaam.

லௌகீகம் = லோகம் (உலகம், உலகம் சார்ந்த ஒட்டொழுகல்) சம்பந்தபட்ட பேச்சுக்கள்.

anythign that is NOT pertaining to supreme knowledge or god :| :oops:

:bow: :bow:

Thank you so much!

Shakthiprabha.
17th March 2009, 10:38 PM
To beat the regular routine,

I absolutely admire character portrayal of,

1. Ashok
2. vEmbu
3. Samaiyal maami
4. Neelakantan

scale above the rest.

Please share ur favourites too ( and share reasons if u wanna add on)

aanaa
18th March 2009, 03:39 AM
மிக்க நன்றி SP

viraajan
18th March 2009, 09:31 AM
To beat the regular routine,

I absolutely admire character portrayal of,

1. Ashok
2. vEmbu
3. Samaiyal maami
4. Neelakantan

scale above the rest.

Please share ur favourites too ( and share reasons if u wanna add on)

Ashok is good. But he did not impress me much. :oops: But definitely I agree with the 2, 3 & 4 in your list. :bow:

Neelakandan wasn't much impressive at first but later he picked up the character and started living as Neelakantan. :thumbsup:

Vembu and Samayal Maami :redjump: Wonderful character just like someone next door... :yes:

Shakthiprabha.
18th March 2009, 12:39 PM
Thanks vr :)

I always appreciate ashok types and also relate to his types lot of times ( :| :oops: ) and definitely I know, most people wont admire his charactor or relate to him. Looks like we get along reg the rest.

Shakthiprabha.
18th March 2009, 12:41 PM
March 17th
_________

இவ்வளவு நடந்த பின்பும் எப்படி ஒருவனால் நிச்சலனமாக, கடமைகளைத் தொடர முடிகிறது? அஷோக் அப்படித் தான் இயல்பாய் தன் பணிகளைத் தொடர்கிறான். பிறர் பழிப்பதோ புகழ்வதோ அவனுக்கு பொருட்டாய் தெரிவதில்லை. இதைத் தொடர்ந்து பேசிய கதாசிரியர், உண்மையான ஞானி மற்றோரின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை. தன் பாதையை தானே வகுத்துப் பயணிக்கிறான், என்கிறார். மற்றோரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, பிற சாமான்யர்கள் ஞானிகளை விட உயர்ந்தவர்கள் அல்ல (உயர்ந்தவர்கள் = உயர்ந்த ஞானம் உடையவர்கள்).

பட்டினத்தார் எப்பேர்பட்ட ஞானி என இன்று நாம் பேசிக்கொண்டாலும், அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவரை இகழ்ந்தவர்களும், பைத்தியக்கார பட்டம் கட்டியவர்களும் அதிகம். ஒருமுறை பட்டினத்தார் வயல்வரப்பில் கையை தலைக்கு அணையாக வைத்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவ்வழியே கடந்து சென்ற இரு பெண்டிரில் ஒருவர், "இவரெல்லாம் என்ன ஞானி! உறங்கும் போதும் சுகம் வேண்டியிருக்கிறது பார், கையை தலைக்கு அணையாக்கி உறங்குகிறார்" என்று இன்னொருத்தியிடம் சாடை பேசுகிறாள். "அப்படி பேசாதே அவர் உண்மையில் பெரிய ஞானி" என்று மறுத்துரைக்கிறாள் மற்றொருத்தி. உடனே பட்டினத்தாருக்கு மனம் வெம்பியது. 'ஆஹா நம்மால் இன்னும் சரீர சுகத்தை துறக்கமுடியவில்லையே என்று வருந்தி, இனி இதுவும் வேண்டுவதில்லை என கையையும் விடுத்துப் படுத்தார். மீண்டும் அவ்வழியே திரும்பச்சென்ற அப்பெண்டிரில் இன்னொருத்தி "பார்த்தாயா நீ கூறியதும் அதையும் துறந்துவிட்டார்" என்று சொல்ல, முதல் பெண் "இன்னொருவர் சொல்வதைக் கேட்டு, அதனால் பாதிக்கப்பட்டு, தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இவரெல்லாம் ஞானியா" - அலட்சியம் பேசிச் செல்கிறாள். இக்கதையில் வரும் இரு பெண்டிரும் உமையும் சிவனுமே ஆவார்கள் எனக்கூறுவர். சுரீரென உறைத்தது பட்டினத்தாருக்கு. "உலகத்தோரின் பேச்சுக்கு தன் மனம், செவி சாய்த்து அதனால் பாதிக்கப்படுகிறதென்றால், எப்பேற்பட்ட அஞ்ஞானத்தில் உழன்றுகொண்டிருக்கிறோமே, இன்னும் எத்தனைப்படிகள் ஞானத்தை நோக்கி செல்லவேண்டுமோ" என மறுகுகிறார்.

"என் மனதுக்கு தெரியுமப்பா நான் பைத்தியம் அல்ல என்று" "நான் ஏன் கவலைப்பட வேண்டும்" என்கிறான் அஷோக். உலக மக்களைப் புரிந்து கொள்ள அவன் தன் வட்டத்தை விட்டு வெளிவர வேண்டும். அவர்களோடு பழகவேண்டும். அதன் பின்னர் அவன் சொல்லும் செய்தி, அவர்களுக்கும் எட்டலாம் என நாதன் அபிப்ராயப்படுகிறார்.

"அடடா பணக்காரனுக்கு இவ்வளவு கஷ்டமா" - பர்வதத்தின் கேள்விக்கு வசுமதியின் பதில் நன்றாய் இருந்தது. "பணத்தை நாங்க வெச்சுண்டு இருக்கிறதா நினைக்கிறா, அது தான் இல்லை, பணம் தான் எங்களை வெச்சுண்டு இருக்கு"

( ரஜினிகாந்துடைய 'முத்து' படத்திற்கு வைரைமுத்து எழுதிய வரிகள் நினைவிற்கு வருகிறது.

கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் )

பணக்காரனுக்கு உள்ள துன்பங்கள் சொல்லி மாளாது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. கட்டிக்காக்கும் பொறுப்பு இருக்கையில், அதைப் பற்றிய பயமும் அதிகரிக்கும். பணக்காரர்கள், தம் நண்பர்கள் -பகைவர்கள் - உறவினன் என எல்லோரையும் பயத்துடனேயே நெருங்குகின்றனர். என்றைக்கேனும் தனதென்று வைத்துள்ளது தம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் நிறைந்த வாழ்க்கை. "மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்" என்ற தொன்மை மிகுந்த கூற்றை இங்கு அப்படியே with literal meaning பயன்படுத்திக்கொள்ளலாம்.

சேமித்து வைத்து அதை தனதென்று உரிமைக்கொண்டாடி, பயத்துடன் கட்டிக்காப்போனுக்கு தேனி கதை பொருந்தும். தேனி சிறுக சிறுக சேமித்து கூட்டைக் கட்டும், ஒரே நாளில் அதை அழித்து அதன் பலனை இன்னொருவன் கொண்டு சென்றுவிடுவான். சேகரித்து சேமித்து வைக்கும் பணக்காரன் நிலையும் இது தான். இவ்வுலகில் எதுவும் சாஸ்வதம் அல்ல. தேவைக்கு அதிகமாக சேர்க்காத மலைப்பாம்பு, இரை அருகில் வந்தால் உண்ணுமாம். பசி நேரத்தில், தேவையான அளவு கிடைத்த பொழுது கிடைத்த உணவை உண்ணும்
மலைப்பாம்புக்கு வேறு அனாவசிய கவலைகள் இருக்க வாய்ப்பில்லை. உயர்ந்த ஞானிகள் தமக்கென சேமித்து வைப்பதில்லை. பட்டினத்தார், ஒருநாள் யாசகம் கேட்டுச் செல்கையில், அவருக்கு திருட்டுப் பட்டம் கட்டிவிட்டனர். மனம் வருந்தி, 'உணவு எனைத் தேடி வந்தால் உண்பேனே ஒழிய, இளைத்தாலும், நான் இனி உணவைத் தேடிச் செல்லமாட்டேன் என வைராக்கியம் பூண்கிறார்.

முக்கியத் திருப்பங்கள்:

1. தம் பெண்ணுக்கு அடையார் விட்டை எழுதிக்கொடுத்து தனிக்குடித்தனம் வைக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார் ருக்மிணி, ஜகன்னாதன் உடன் படுகிறார்.

2. தேர்ந்த மருத்துவர் ஒருவரின் சான்றிதழின் பேரிலேயே அசோக் மனநிலையை உறுதி செய்ய முடியும் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அவர்களை அடக்க, மந்திரியின் உதவியை நாடி, வையாபுரி வெற்றி காண்கிறார்.

3. சமையல் மாமியின் கணவருக்கு தம் மகள் கல்யாணாத்தையொட்டி பணம் புரட்டுவது கடினமாகிறது. தீர்கதரிசனத்துடன், அனேகமாக சமையல் மாமியே அவருக்கு உதவக்கூடும் என்ற முடிவுக்கு நாமே வரலாம்.


(வளரும்)

aanaa
19th March 2009, 02:39 AM
March 17th
_________
2. தேர்ந்த மருத்துவர் ஒருவரின் சான்றிதழின் பேரிலேயே அசோக் மனநிலையை உறுதி செய்ய முடியும் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அவர்களை அடக்க, மந்திரியின் உதவியை நாடி, வையாபுரி வெற்றி காண்கிறார்.

(வளரும்)

:ty: SP

அட் பாவமே !!
இங்கும் இப்படியா :hammer: :hammer:

viraajan
19th March 2009, 08:53 PM
Today's episode was good.

Cho explained the reason why Women should be treated with dignity.. :bow:

I loved his speech. Each point sounded very valid!!! :bow:

And, Kripa's wife's character has been portrayed so well. Romba nalla ponnu :cool:

Kripa's attitude - :hammer:

SP akka, awaiting your writing :yes:

Shakthiprabha.
19th March 2009, 11:01 PM
Today's episode was good.

Cho explained the reason why Women should be treated with dignity.. :bow:

I loved his speech. Each point sounded very valid!!! :bow:

SP akka, awaiting your writing :yes:

:| எழுதறேன்.

Shakthiprabha.
19th March 2009, 11:01 PM
March 18th
_________

தனிக்குடித்தனம் மிகுதியாகிவிட்டபடியால், தனிக்குடித்தனத்தை முகச்சுளிப்போடு ஏற்கும் நிலை போய், இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறோம். கலியுகத்தில் மனிதன் தன் மனைவி வழி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணத்தாலும் சரீராத்தாலும் உழைக்கக் கடவான் என்று பாகவதத்தில் கூறியிருக்கிறதாம். இதன் முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெண்கள். அனுசரணையாய் இல்லாமல், பிடுங்கும் ஒரு பெண்ணை சமாளிக்கத் தெரியாமல் அவள் போதனைக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம். சமுதாயம் என்னும் பிணைப்பில் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால், பெண்கள் சிந்தனைகள் மாறுவதற்கேற்ப, ஆண்களும் மாறுவது இயல்பு. இறுதியில் வீட்டில் நிம்மதி என்பது பெண்ணின் கூட்டுறவால் அமையப்பெறுகிறது, அதை அவள் விருப்பத்திற்கு இணங்கி விலை கொடுக்கவேண்டியதாயிருக்கிறது.

மேற்பட்ட கருத்தை மறுப்பதும் ஒப்புவதும் அவரவர் தனிப்பட்ட அனுபவங்களைப் பொருத்து. ஆனால் நம் சாம்புவும் அவர்கள் வீட்டாரும் விகல்பம் இல்லாது, நல்லமனதுடன் வாழத்தி தம்பதிகளை தனிக்குடித்தனம் வைக்கின்றனர்.

(பி.கு: க்ருபா/ப்ரியா திருமணம் ஒரே சீனில் மூன்றே மூன்று டைலாக்குடன் இனிதே முடிந்தது!)

எல்லாம் தெரிந்த ஞானிகளும் சில நேரம் ஏன் உலக விஷயங்களில் மூக்கை நுழைத்து மாட்டிக்கொள்கின்றனர்? ஸ்ரீ அரோபிந்தோ இந்திய பாக்கிஸ்தானிய உறவுகளுக்கு பாலமிட உடன்படுமாறு எடுத்துரைக்க முற்பட்டு அனுப்பிய மனு கவனிக்கபடவில்லை. அது கவனிக்கப்படாது என்று அவருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததல்லவா? தெரிந்திருந்திருந்தும், தம் கடமைக்காக செய்தார் என்று கூறியிருக்கிறார்.

பிட்டுக்கு மண் சுமந்த ஈசனும், பூமியில் பிறந்ததால், தாம் செய்ய வேண்டிய அனுபவிக்க வேண்டிய கடமையிலிருந்தும் தவறவில்லை. இராமனுக்கு சீதை அபரிக்கப்படுவாள் என்று தெரிந்திருந்ததா? அவர் பதினாறு குணங்கள் நிரம்பப்பெற்ற அவதார புருஷனல்லவா! தெரிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. துளசிதாஸ் இராமாயணத்தில் இராமன் அவதாரமாக இறைவனாக போற்றப்படுகிறான். ராவணன் அபகரித்தது நிஜ சீதையை அல்ல அது 'மாயா சீதா' எனும் வேதவதி என்ற கதை உண்டு. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இராமன், மனிதனாக அவதரித்து, ஒரு உயர்ந்த மனிதாக மட்டுமே வாழ்தார். மனிதாக மட்டுமே தன்னை உணர்ந்தார் என்றே கூறப்படுகிறது. அக்னிப் ப்ரவேசம் முடித்ததும், தேவதிதேவர்களும், சிவனும், பிரம்மனும் வந்து "நீ யார் என்று விளங்கவில்லையா" என்று கேட்டும் கூட "நான் தசரத புத்திரன் இராமன்" என்றே கூறுகிறாராம்.

{ ( சில சிந்தனைகள் ): இதை இரண்டு விதமாய் யோசிக்கலாம். தன்னை மனிதனாக பாவித்தப் பின், நிகழ்காலத்தின் மட்டுமே வாழ்ந்த ஞானியின் நிலையில், அவன் தன் இயல்பை மறந்து மனிதனாக மட்டுமே செயல் பட்டான். அப்படி செயல்பட்டதால், அவனே இறையம்சத்தின் பிரதிபலிப்பு என்பதும் கூட நினைவிலிருந்து அகன்று விட்டது.

அல்லது

தான் இறை என்பது நினைவில் இருந்தும், அவன் தன்னை மனிதனாக மட்டுமே வெளிப்படுத்தினான்.

கண்ணன் அவதாரம் வெகு வித்தியாசமானது. பரிபூர்ண அவதாரமான க்ருஷ்ணன், தான் மனிதனாக வாழ்ந்த போதும், இறைவனின் அத்தனை அம்சங்களையும் வியக்கத்தக்க வகையில் பல சில சமயங்களில் வெளிப்படுத்தினார் }

நீலகண்டன் நியாயவாதியாய் செயல்படுகிறார். வைதீகத்தை ஒருபுறம் அனுசரித்த போதும், மற்றைய விவகாரங்களில் வளைந்து கொடுத்து நடப்பவனை விட, தம் மனதுக்கு சரியென பட்ட தர்மத்தை துணிந்து செயலாற்றும் உயர்ந்த குணம் இவரிடம் மின்னுகிறது. அசோக் விவகாரத்தில் நேரடியாக இவர் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ள, வையாபுரி ஏவியதில் சிங்காரம், நீலகண்டனையும் அவர் குடும்பத்தையும் மிரட்டிச் செல்கிறான்.

(வளரும்)

aanaa
20th March 2009, 02:30 AM
March 18th
_________

இறுதியில் வீட்டில் நிம்மதி என்பது பெண்ணின் கூட்டுறவால் அமையப்பெறுகிறது, . :exactly:




(பி.கு: க்ருபா/ப்ரியா திருமணம் ஒரே சீனில் மூன்றே மூன்று டைலாக்குடன் இனிதே முடிந்தது!) :yes:

(வளரும்)


:ty:

anbu_kathir
20th March 2009, 02:38 PM
தானே எல்லாமாகி இருக்கிறோம் என்று அறிவு முழுமை பெறும்போது, அவமானம் மானம், துன்புறுத்துபவன், துன்புறுத்தபடுபவன் என்ற வேற்றுமை கடந்து நிற்கும் பக்குவம் வரப் பெற்றுவிடும். அது அவ்வளவு சாமான்யமானதல்ல.


What is easy or not easy is not in our hands, is it?. Our duty is merely to perform our dharma with passion and devotion. If it takes a billion more births to be enlightened.. so be it. What is more pleasurable than to enjoy our experiences with the co-creators of our reality? What is more pleasurable than to express and experience the infinitely many more aspects of God in each of our unique life-forms and births? Enlightenment doesn't even come close :D.

Love and Light.

Shakthiprabha.
20th March 2009, 02:41 PM
What is easy or not easy is not in our hands, is it?. Our duty is merely to perform our dharma with passion and devotion. If it takes a billion more births to be enlightened.. so be it. What is more pleasurable than to enjoy our experiences with the co-creators of our reality? What is more pleasurable than to express and experience the infinitely many more aspects of God in each of our unique life-forms and births? Enlightenment doesn't even come close :D.

Love and Light.

Ive heard this version. In other words some put it this way.
"Journey is more pleasurable and interesting than the destination itself"

:) Truly said, each has its own flavour and aroma.

anbu_kathir
20th March 2009, 02:54 PM
March 16th
_________

வேம்புவின் சம்பந்தத்தை வெகு சந்தோஷமாய், பெருமையாய் ஜகன்னாதன் (ஜட்ஜ்) ஏற்றுக்கொள்கிறார். அவர் மனைவிக்கு சற்றே மனம் சுருங்குகிறது. எனினும் சினிமா வில்லியைப் போல் இல்லாமல், இயல்பாய் இன்முகத்துடனேயே தன் விருப்பமின்மையை நாசூக்காக கூறுகிறார். அவர் மகளின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுக்கவும் செய்கிறார். வைதீகம் செய்து வைப்போர்களின் நிலைமையை நன்கு கையாண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் வேத வழி சென்று வேத மந்திரங்கள் ஓதும் அவர்களை, அதன் சாரம்சத்தை கட்டிக்காக்கும் அவர்களை நாம் சரிசமமாய் நடத்துவதில்லை எனும் உண்மை சுடுகிறது.

வேத மந்திரங்கள் ஒலிக்கும் வீட்டில் என் மகள் மன நிறைவுடன் இருப்பாள் எனக் கூறுகிறார் ஜகன்னாதன். Postive effects of mantras was subtly hinted.


This too seems to be a generalization, just like the one you mentioned about relatives-friends. IMHO there seems to be little difference between the distribution of mentality in people who chant manthras and those who don't. In my personal experience, I have known some really cruel personalities (who actions seemed pretty 'violent' at heart) who are well established Veda chanters.. and some really simple and good hearted people who know nothing except to say except to say some god's name. Again, I have noticed the opposite kind of people too. Finally imho a statement that 'our daughter will be having a good time in a place where Veda manthras resound' is quite illogical.

Love and Light.

Shakthiprabha.
20th March 2009, 02:58 PM
Prasad,

I also agree with u. But I look at it this way.

The chanting DOES have postive effect , and to the extent it has minute effect on ppl's mind set (may be negligible)
With alll that if a person is still disturbed, then he would have been more disturbed without chants (give it 2 percent)

Without all those postive vibration if a person is wonderful and reflects well with his surroundings, such person would vibrate with more energy (give it 2 percent) with chantings.

UNLESS (exception clause:) he is a gnani, where mantras and other vibration does not matter much as he himself is like a plain clear water, un perturbed.

anbu_kathir
20th March 2009, 03:02 PM
What is easy or not easy is not in our hands, is it?. Our duty is merely to perform our dharma with passion and devotion. If it takes a billion more births to be enlightened.. so be it. What is more pleasurable than to enjoy our experiences with the co-creators of our reality? What is more pleasurable than to express and experience the infinitely many more aspects of God in each of our unique life-forms and births? Enlightenment doesn't even come close :D.

Love and Light.

Ive heard this version. In other words some put it this way.
"Journey is more pleasurable and interesting than the destination itself"

:) Truly said, each has its own flavour and aroma.

'The journey' and 'the enlightenment' of the seeker are two illusions that don't exist. Morals, good-bad values, etc etc do nothing to serve those that seek Freedom. They basically maintain control and sanity in a society, but Freedom lies within and without all these things. The man who seeks Freedom goes with the flow of the natural order of things.. and Freedom comes to him as simply (or as complicatedly) as the flowering of a plant that has grown without being desperate to understand with logic or reason the miracle of Life.

Love and Light.

Shakthiprabha.
20th March 2009, 03:07 PM
'The journey' and 'the enlightenment' of the seeker are two illusions that don't exist. Morals, good-bad values, etc etc do nothing to serve those that seek Freedom. They basically maintain control and sanity in a society, but Freedom lies within and without all these things. The man who seeks Freedom goes with the flow of the natural order of things.. and Freedom comes to him as simply (or as complicatedly)

Love and Light.

Perfect! No second thoguhts. You pour ur thoguhts precisely to the point.

anbu_kathir
20th March 2009, 04:04 PM
Prasad,

I also agree with u. But I look at it this way.

The chanting DOES have postive effect , and to the extent it has minute effect on ppl's mind set (may be negligible)
With alll that if a person is still disturbed, then he would have been more disturbed without chants (give it 2 percent)

Without all those postive vibration if a person is wonderful and reflects well with his surroundings, such person would vibrate with more energy (give it 2 percent) with chantings.

UNLESS (exception clause:) he is a gnani, where mantras and other vibration does not matter much as he himself is like a plain clear water, un perturbed.

I believe that it is the 'intention' that counts. The state of being with which a manthra is said carries the greatest potential for the result of the manthra to manifest itself. In other words,

Intention (more important) + Action(less important) = Result
Good intention + Good action = good result
Good intention + Inefficient/Unknowingly done bad action = fair result
Bad intention + good action = Bad result
Bad intention + bad action = worse result

Of course, by good I mean that which is beneficial to the overall spiritual/mental/physical well being of one or many beings of the universe. In action, I include thought, word and deed, and thereby manthra-chanting is included too. This is why I believe the story of Valmiki who meditates on a 'tree' ( mara-mara) ends in a positive result, not because "mara" was morphed into Rama, although that could very well have played a part. Ultimately continuous intention drives the person towards one's result, not the action (external manifestation of the intention itself.. although it is essential).

Love and Light.

anbu_kathir
20th March 2009, 04:18 PM
March 18th
_________

தனிக்குடித்தனம் மிகுதியாகிவிட்டபடியால், தனிக்குடித்தனத்தை முகச்சுளிப்போடு ஏற்கும் நிலை போய், இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறோம். கலியுகத்தில் மனிதன் தன் மனைவி வழி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணத்தாலும் சரீராத்தாலும் உழைக்கக் கடவான் என்று பாகவதத்தில் கூறியிருக்கிறதாம். இதன் முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெண்கள். அனுசரணையாய் இல்லாமல், பிடுங்கும் ஒரு பெண்ணை சமாளிக்கத் தெரியாமல் அவள் போதனைக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம். சமுதாயம் என்னும் பிணைப்பில் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால், பெண்கள் சிந்தனைகள் மாறுவதற்கேற்ப, ஆண்களும் மாறுவது இயல்பு. இறுதியில் வீட்டில் நிம்மதி என்பது பெண்ணின் கூட்டுறவால் அமையப்பெறுகிறது, அதை அவள் விருப்பத்திற்கு இணங்கி விலை கொடுக்கவேண்டியதாயிருக்கிறது.




IMHO a human being is an extremely complicated and constantly changing machine (conscious machine :) ) and such 'general' time-invariant observations ('in the kali yuga' blah blah) are pretty useless when it comes to an actual relationship (how many people would have such thoughts in their head when they are in the relationship and not in solitude???). Instead the relationship itself is to be understood by the those in a relationship as a single living entity where every individual contributes to the whole.

Modern psychoanalysis actually suggests (and I guess this was definitely not something unknown to the ancient eastern philosophers) that every individual is made up of both the male and the female personalities in different proportions. A healthy relationship is probably one where the aggregate male/female personalities lies in dynamic balance.

http://en.wikipedia.org/wiki/Anima_and_animus

Love and Light.

Shakthiprabha.
23rd March 2009, 03:01 PM
gimme sometime :oops:
I shall update it today.

Shakthiprabha.
23rd March 2009, 04:54 PM
aana,

I am not able to change poll :|

(you can take this topic reg women and post something related to the discussion abotu women and their nature)

Shakthiprabha.
23rd March 2009, 04:54 PM
March 19th
___________

க்ருபா தன் சம்பளப் பணத்தை அவன் பெற்றோரிடம் சமர்ப்பித்து, அவர்களுக்கும் செலவிற்கும் உதவிவிட்டு, மிச்ச வருமானத்தில் குடும்பம் நடத்துவதே போதுமானது என்று அவன் மனைவி கூறுகிறாள். இப்படிப்பட்ட பெண்ணே பூஜிக்கத் தக்க நல்ல பெண்மணி வகையைச் சேர்ந்தவள்.

யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.

படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about rightiousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.

மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.

இதுவரை பஞ்சவடியும் மனுவையும் குறிப்பிட்ட சோ, பெண்களிலும் மிக நல்ல பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுவதாக முடித்தார்.

(வளரும்)

aanaa
24th March 2009, 12:54 AM
March 19th
___________

(வளரும்)

:ty:

வளரட்டும்

Thirumaran
24th March 2009, 02:40 AM
As usual nice write up SP :clap:

Anbukathir, Good analysis :thumbsup:

Shakthiprabha.
24th March 2009, 01:50 PM
நன்றி திருமாறன்.

// நண்பர்களே, என் மகளுக்கு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால், சில நேரங்களில் தொடரை முழுமையாக பார்க்க முடியவில்லை. 20ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட தொடர் அரைகுறையாகத் தான் பார்க்க நேர்ந்தது. நேற்றைய தொடரை முழுவதும் பார்க்க இயலவில்லை. நேற்றைய தொடரின் விடியோ சுட்டியைப் பார்த்து என்னால் இயன்ற உரை எழுதுகிறேன்.

இந்த பதிவில், கதையோட்டத்தை மட்டும் இரண்டே வரியில் முடித்துவிடுகிறேன்.

//

Random updates
___________



க்ருபாவின் மனைவி, தன் புகுந்து வீட்டு மனிதர்களிடம் மிகுந்த அன்பு ஆதரவும் கொண்டு பாசத்துடன் நடந்து கொள்வதோடு மட்டுமின்றி, தனிக்குடித்தனத்தில் ஈடுபாடின்றி, கூட்டுக்குடித்தனம் வாழ ஆசைப்படுகிறாள். இது பற்றி தன் மாமியாரிடம் வேண்டுகோள்விடுக்கிறாள்.

சமையல் மாமி தன் கணவருக்கு நகைகளை அளித்து அவர் மகளின் கல்யாணத்திற்கு உதவி செய்கிறாள். யாருடைய நகைகள் என்பது இன்னும் மர்மமான விஷயம். யாருமற்ற வீட்டில் பூட்டாத அலமாரியை மாமி, சஞ்சலத்துடன் பார்வையிடுகிறார். இதை மட்டுமே வைத்து நாம் மாமியைத் தவறாய் எடை போட்டு விட முடியாது. என்ன ஆயிற்று என்று பொருத்திருந்து பார்ப்போம். என்றாலும், பாசமும், பிணைப்பும், தேவையும் எந்த ஒரு நல்ல மனிதனையும், குறிப்பாக, மனத்தை தன் கட்டுக்குள் வைக்காத சாமான்யனை பிறழச் செய்ய முடியும் என்பது நினைவில் கொள்ளத் தக்க பாடம்.

(இதன் அடுத்த பகுதியில், கதையை அறவே விடுத்து, வெறும் விவாதங்களைப் பற்றி மட்டும் எழுத நினைக்கிறேன்)

(வளரும்)

Shakthiprabha.
24th March 2009, 06:32 PM
March 23rd
_________

நாதன் அஷோக்கிடம் மனம் திறந்து பேச எத்தனித்து, சில கேள்விகள் எழுப்புகிறார். "ஏண்டா நீ மத்தவா மாதிரி இருக்க மாட்டேன்கிற" என்கிற ரீதியில் வருத்தம் தோய்ந்த கேள்விகள். அதற்கு அசோக் அளிக்கும் தெளிந்த பதில்கள்.

எதை நீங்க சந்தோஷம் என்று சொல்கிறீர்கள்? இந்த material / உலக விஷயங்களைத் தாண்டி யோசிக்க மாட்டாது நீங்கள் எல்லோரும் அதிலையே ஊறிப்போயிருக்கிறீர்கள். இந்த உடல் நித்தியம் அல்ல. matter என்பது condensed spirit (for the want of right word, I stick to english). ஆன்மா என்பது பால் போல் தூய நிலை என்றால், matter என்பது condensed milk போன்றது ( good explanation).ஆனந்தம் என்பது மகிழ்ச்சி நிலை அல்ல. ஆனந்தம் என்பது ஷாந்தம் என்ற நிலை. க்ருத யுகத்தில், பிருகு, தம் தந்தை வருணனிடம், உண்மையான ஆனந்தம் என்பதை எப்படி அறிவது எனக் கேட்க, வருணன், பிருகுவை தபஸ் செய்யச் சொல்கிறார். இந்த இந்திர்யங்களும், சரீரமும்தான் எல்லாவற்றையும் உணருகிறது, இதுவே ஆனந்தம், நிரந்தரமானது எனக் கண்டுகொண்டு வருணனிடம் தாம் கண்டதை உரைக்கிறார். இன்னும் கொஞ்சம் தவம் செய்" என்று மறுபடியும் அனுப்பி வைக்கிறார். இவ்விடத்தில் நாம் அறியவேண்டியது ஒன்றுள்ளது. உலகம் என்பது மாயை எனச் சொல்வது relative அபிப்ராயம், ஆனால் உலகமும் அதன் மகிழ்ச்சியும் முற்றிலும் தவறு என்பது அல்ல. இந்த விதமான உலகமயமான ஆனந்தம் தவறு என்பதல்ல. அதனாலேயெ பிருகு "சரீரமும் இந்திரியமும் இன்பம்" என்று சொல்லும் போது "அது தவறு, இன்னும் தவம் செய்" என்று சொல்லவில்லை வருணன். "இன்னும் தவம் செய்" என்று மட்டுமே சொல்கிறார். மேலும் தவம் செய்த பிருகு, உண்மை ஆனந்தம், ப்ராணனில் இருப்பதாக உணார்கிறார், பின் படிப்படியாக, அவர் நிறைவான ஆனந்த (ஷாந்த) அனுபவத்தை உணர்வதாக தைத்ரிய உபநிஷத் எடுத்துரைக்கிறது. (Initially ashok mentions thaithriya upanishad, later when he finishes off in next episode, he says isha upanishad :? As per my knowledge this story is depected in thaithriya upanishad, I aint sure why they mention isha upanishad later in the conversation)

அப்படிபட்ட நல்ல நிலையை விடுத்து உலக விஷயங்களை என் மனம் நாடவில்லை என்கிறான் அஷோக். நீங்கள் கூறியபடியே எனக்கு உலகை அனுபவிக்கும் வயது என்றே வைத்துக் கொண்டாலும், தர்ம நியாயப்படி, உங்கள் வயதுப்படி நீங்கள் எல்லாவற்றையும் துறக்கவேண்டும். நீங்கள் ஏன் செய்யவில்லை எனக் கேட்கிறான். பந்தம் பாசம் என்பதெல்லாம் ஒரேடியாக விட்டுவிடக்கூடியதல்ல. படிப்படியாகத் தான் விட்டுவிடமுடியும் என நாதன் பதிலளிக்கிறார்.

இராமக்ருஷ்ணருக்கு பொன்முடிப்பை பரிசாக கொண்டு சென்ற பக்தரிடம், அதை கங்கையில் போட்டு விட உத்தரவிடுகிறார் இராமக்ருஷ்ணர். ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி குளத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார் பக்தர். சேர்க்கும் போது கண்ணும் கருத்துமாய் எண்ணிச் சேர்க்கிறானென்றால், மனிதன் துறக்கும் போதும் எண்ணித் துறக்கிறானே என்கிறார் இராமக்ருஷ்ணர். சங்கல்பம் செய்யும் ஒருவன் எண்ணிச் செய்கிறான். சமர்பணம் செய்யும் மனிதனோ, பலனையோ பணத்தையோ எண்ணுவதில்லை.

அஷோக்கின் ஜாதகத்தை பரிசீலிக்கும் ஜோசியர், இந்த ஜாதகக் காரனுக்கு கல்யாணம் குடும்பம் போன்ற ப்ராப்தி இல்லை. இது மஹான்களின் ஜாதகம். ஜாதகருக்கு வாக்கு பலிதம், ஏற்படும். தாமரை இலைத் தண்ணீரையொத்து பாச பிணைப்பின்றி இருப்பவன். ஆன்மீகத் தேடல் சிறுவயதிலேயே தொடங்கிவிடும். அர்ஜுனனுக்கு எப்படி பூர்வ புண்யங்கள் சேர்ந்து ஒரு பிறவியில் விஸ்வரூப தரிசனத்தையே பெற முடிததைப் போல் இவனுக்கும் பூர்வ புண்ய ஸ்தானம் மிக பலமாக இருப்பதால், இயற்கையிலேயே ஞானம் நிரம்பப் பெற்றிருக்கிறான். இவன் வாழ்வில் பல ஆச்சரியங்களும், அமானுஷ்யங்களும் நடைபேறும். இந்த சுடர் வெகு சீக்கிரம் பிரகாசிக்கும், அப்போது உலகிற்கு இந்த மஹானின் ஒளி புலப்படும் என்கிறார். ஆன்மீகப் பாதையை நாடுபவனுக்கு குரு இருத்தல் அவசியமானது என்பதல்ல, சிலர் "ஸ்வயம் ஆச்சார்யா"ர்களாக இருப்பர்.

அதன் பிறகு "குரு" என்ற சொல் எத்துணை புனிதமானது என்று விளக்குகிறார் சோ. 'வாத்தியார்', 'ஆச்சார்யர்', 'உபாத்யாயர்' என பல சொற்கள் இவற்றை குறிப்பிடுபவன என்று நாம் நினைத்தாலும், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறு.

வாத்தியார் எனும் சொல், அத்யாபகர், உபாத்தியாயர் போன்ற சில சொற்கள் மருவி வந்ததன் விளைவு. அத்யாபகர், உபாத்யாயர் என்றால் வேதங்களை கற்பிப்பவர். தற்காலத்தில், கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் என எதைக் கற்பித்தாலும், அவரை வாத்தியார் அல்லது உபாத்தியாயர் என்றே அழைக்கிறோம்.

ஆச்சார்யர் என்பவரோ, தாம் கற்பிப்பதை நடைமுறையில் கடைபிடிப்பவர். குருதஷிணையாக மாணவர்கள் எது கொடுத்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, குருகுலத்தில் வழி நடத்துபவர்.

சிறந்த குரு என்பவரோ, மௌனத்தினாலேயே பாடங்களைக் கற்பிப்பவர். முதல் குரு தக்ஷிணாமூர்த்தி என்பவரை நாம் கடவுளாய் வரிக்கிறோம். ஆலமரத்தடியில் சீடர்கள் அமர்ந்திருக்க, குரு என்பவர், மௌனமாய் அமர்ந்திருக்கிறார். அந்த மௌனத்தின் மொழியிலேயே சீடர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்கின்றன. அப்பேற்பட்டவர் குரு.

(வளரும்)

viraajan
24th March 2009, 08:51 PM
Today's episode was good!

Looking forward to Cho's explanation for Palm Leaves Astrology :yes:

Even though I've experienced this and know about this astrology, Cho's explanation would shed more lights on this :yes:

aanaa
25th March 2009, 12:31 AM
March 23rd
_________


(வளரும்)

:ty:

சமர்ப்பணம்

Shakthiprabha.
25th March 2009, 12:09 PM
March 24rd
__________

நாதனின் சஹோதரி செல்லம்மா, வசுமதியிடம், அவர்களின் குலதெய்வத்தை காண உடையாளூர் வந்து போகுமாறு அழைப்பு விடுக்கிறாள். குலதெய்வத்துக்கு செய்ய வேண்டிய ப்ரீதி செய்தாலே, வினை அத்தனையும் அகன்று, அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றமும் நிம்மதியும் ஏற்படும் என அபிப்ராயப்படுகிறாள். பொதுவாகவே நம் மனைகளிலும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இறை என்பது ஒன்று, i.e. பலவாய் காட்சி தரும் ஒருவன் என்பதே உண்மை என்றிருக்கும் போது, குலதேய்வத்தை தனியாய் ப்ரீதி செய்வது முரண்பாடாக தோன்றுகிறது என்று சிலர் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்து மதத்திற்கே உரிய ஒரு விஷயம், இறைவனை பலவகையாய் உருவகப்படுத்தியிருப்பது. இதன் உள்ளர்த்தமோ, தாத்பர்யமோ, பலவாய் அவனே தோன்றியிருக்கிறான். ஒரு ஷக்தியே பலவாய் தோன்றும் இயல்புடையது என்பதை புரிந்து கொள்ளவே. நம் எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ப இறை எந்த வடிவத்திலும் நம் முன் வரலாம். (நீங்கள் அறியாததொரு மனித வடிவில் வந்து உங்களுடன் உரையாடி, குழப்பம் தீர்த்துவிட்டும் போகலாம்). எல்லாவற்றிற்கும் காரணம் நம்பிக்கை. தொடங்கிய கேள்விக்கு வருவோம்.இறை ஒன்றாய் இருக்க, எந்த தெய்வத்திற்கு பிரார்த்தித்தால் என்ன? குலதெய்வத்திற்கு மட்டும் தனி அங்கீகாரம் வேண்டுமா? எனும் சந்தேகம் எழும்புகிறது.

காலகாலமாய் மூதாதையர்கள், குறிப்பிட்ட குலத்தை, குடும்பத்தை சேர்ந்தவர்கள், தனிப்பட்ட தெய்வத்திடம் தம் பாரத்தை, நம்பிக்கையை, பக்தியை செலுத்திவந்திருக்கின்றனர். அதனாலேயே அக்குடும்பத்துக்கு, ஏதுவான sanctity or purity அந்த இடத்தில் அந்த தெய்வத்தின் உருவகத்தில் உருவாகி இருக்குக்கூடும் என்பதை justifiable விளக்கமாக கருதலாம். மேலும் வேண்டுதல், ஸ்லோகங்கள், குலதெய்வம் போன்றவை நம்பிக்கை, ஒழுங்கு முதலியவற்றை வளர்க்க உதவுகின்றன.

பர்வதம் சகிதம் நாதம் குடும்பம் உடையாளூருக்கு செல்கிறது. அங்கு நிலவும் அமைதி அத்தனை பேர் மனதையும் கொள்ளை கொள்கிறது. கும்பகோணம் சென்று கோவில் தரிசனம் செய்து, அஷோக்கிற்கு நாடி ஜோதிடம் பார்க்குமாறு செல்லம்மா கூற, மறுத்துக்கூறும் அஷோக்கை வலுக்கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்கின்றனர்.

கும்பகோண க்ஷேத்திரத்தின் தனிப் பெருமை சொல்லி மாளாது. கோவில்கள் பல அமையப்பெற்றிருக்கும் திருத்தலம். மேலும், எப்பேற்பட்ட பாவங்கள் செய்தாலும், காசிக்குச் சென்றால் அவன் பாவம் தொலையும் என்பது நம்பிக்கை. காசியிலே செய்யும் பாவங்களைக் கூட, கும்பகோணத்தில் தொலைக்கலாம் என்பது பெரியவர்கள் கூற்று.

நாடி ஜோதிடத்தைப் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலகோடி வருடங்களுக்கு முன்பே ஓலைச்சுவடியில் இன்னாரின் பிறப்பு, எதிர்காலம், கணித்து வைத்திருக்கின்றனர் ரிஷிகள். அவரவரகள் முன் ஜன்மமும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்ந்த நாடி ஜோதிடரை நாடிச்சென்று படிக்கும் ஜோதிடம் ஆகையால் 'நாடி ஜோதிடம்'. எல்லாருக்கும் ஓலைகள் கிடைத்துவிடுவதில்லை. யாருக்கு பார்க்கவேண்டிய ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும். அஷோக், தன் ஓலைச்சுவடி கிடைக்காது, கிடைத்தாலும், முன் ஜன்மத்தை பற்றி தெர்ந்து கொள்ள இயலாது என்று கூறுகிறான்.

மேலும், எத்தனையோ பிறவிகள் ஜன்மங்கள் எடுத்துவிட்டதன் அறிகுறி நம் வாழ்வின் தடயங்களில் நிறைந்துள்ளது. மிருகமாய் பிறந்திருந்ததால் தான் இரை தேடுகிறோம். நரியின் தந்திரமும், யானையின் பலமும் ஒவ்வொரு மனிதனிடமும் இப்படிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. ஆதி மனிதனாகப் பிறந்திருந்ததால் தான் இன்னும் இருட்டைக் கண்டு பயம் கொள்கிறோம், இதில் சென்ற பிறவிகளைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என கூறுவது something to really ponder upon.

(வளரும்).

பி.கு: க்ருபாவின் வீட்டில் சேர்ந்து இருப்பது தன் மகளுக்கு முதலில் சரிபட்டு வந்தாலும், பின் சலிப்பு தட்டலாம் என க்ருபாவின் மாமியார் ருக்மிணி சாம்புவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து தன் எண்ணத்தை முன் வைக்கிறாள்.

aanaa
26th March 2009, 12:31 AM
March 24rd

நாடி ஜோதிடத்தைப் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலகோடி வருடங்களுக்கு முன்பே ஓலைச்சுவடியில் இன்னாரின் பிறப்பு, எதிர்காலம், கணித்து வைத்திருக்கின்றனர் ரிஷிகள். அவரவரகள் முன் ஜன்மமும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்ந்த நாடி ஜோதிடரை நாடிச்சென்று படிக்கும் ஜோதிடம் ஆகையால் 'நாடி ஜோதிடம்'. எல்லாருக்கும் ஓலைகள் கிடைத்துவிடுவதில்லை. யாருக்கு பார்க்கவேண்டிய ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும். அஷோக், தன் ஓலைச்சுவடி கிடைக்காது, கிடைத்தாலும், முன் ஜன்மத்தை பற்றி தெர்ந்து கொள்ள இயலாது என்று கூறுகிறான்.

__________

:ty:

இவ்வளவு கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்தாலே சில வேளை துன்பம்தான் மிஞ்சலாம்.

அத்துடன் போன பிறவி ஞபகமும் வந்தால் ..

வேண்டவே வேண்டாம்

Shakthiprabha.
26th March 2009, 11:50 PM
March 25th
__________

இறை என்ற நிலையில் எல்லாம் தெரிந்திருப்பதையும், ரிஷிகள்-ஞானிகள் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களால், ஞானக் கண் கொண்டு விஷயங்களை துல்லியமாய் கணித்து சொல்ல முடிவதையெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக சாமான்ய மனிதன் பார்க்கிறான். 'தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது அனைத்தும் யாம் அறிவோம்' என்ற திருவிளையாடல் வசனம் நினைவில் ஆடுகிறது. எப்படி இவர்களால் ஞானக்கண் கொண்டு நடப்பதையும் நடந்ததையும் கண்டுணர முடிகிறது? அது என்ன ஞானக் கண்? இதற்கு அசோக்-கின் கதாபாத்திரம் மூலமாக கதாசிரியர் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறார்.

நடந்தவை, நடப்பவை எல்லாம் ஆகாசம் என்ற ether-ல் பதிவாகி இருக்கின்றன. இதை aakashic records என்று சொல்வார்கள். இதை படிக்க முடிந்தவர்கள், பிரித்து அறியக்கூடிய ஞானிகள் பலர் இருந்தார்கள். நாஸ்ட்ராடமஸ்-ன் கணிப்புக்களும் இவ்வகையைச் சார்ந்தது. நடந்த நடக்கிற, நடக்கப் போகிற என்ற கால வரையரையைக் கடந்து நிற்கின்ற பதிவுகள் ஆகாசம் எங்கும் நிரம்பியிருக்கின்றன.

"அப்படி உன்ன பத்தியும் நிச்சயமா எழுதி வெச்சிருப்பா" என்று வசுமதியும், நாதனும் நம்பிக்கையோடிருக்க, "என் சுவடி கிடைக்காது" என்கிறான் அஷோக். அவனது சுவடியை அடையாளம் கண்டு படிக்கும் தருணத்தில் எதிர்பாராத பேய்க்காற்று ஊரெங்கும் வீசி, அவன் ஓலையை காணாமல் போக்கிவிடுகிறது. அரண்டு போய் வீடு திரும்புகின்றனர் நாதன் தம்பதிகள்.

இவனைப் பற்றிய ரகசியங்களைப் படிக்கவிடாமல் ஏதோ ஒரு ஷக்தி தடைசெய்ததென்றால், இவன் யார் என்பதில் அப்படி என்ன ரகசியம் இருக்க முடியும்? இவன் சாதாரண மனிதன் அல்ல, அப்படியென்றால் அவதாரமா?

அவதாரம் என்றாலே 10 மட்டுமே குறிப்பிடுகிறோம், புத்தரைக் கூட அவதாரமாக கருதுவதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. உண்மையில் புராணங்களின் கூற்றுப்படி தன்வந்திரி, பிருகு, தத்தாத்ரேயர் உட்பட 22 அவதாரங்கள் இருக்கின்றன. அதில் புத்தர் 21ஆம் அவதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கருட புராணம் மற்றும் வேறு சில புராணங்களிலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம். பத்து அவதாரங்கள் மட்டுமே பேசப்படுபவையாய், முக்கியமானதாய் இருக்கின்றன, அதைத் தவிர இன்னும் சில அவதாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டாம் அவதாரமாக கல்கி அவதரிக்கப்போவதாக எழுதியிருக்கிறது. இப்படிப்பட்டகள், பிறக்கும் (அல்லது உருவெடுக்கும் போது) போதே 'தான் ஒரு அவதாரம்' என்ற தெளிந்த ஞானத்துடன் உருவெடுக்கின்றனர்.

வேறு சிலர் தம் உயர் நிலையை விட்டுத் தாழ்ந்து, பிறழ்ந்து, பூமியில் பிறந்து பின் உயர் நிலை எய்துகின்றனர். இன்னும் சிலர் ஏதேனுமொரு குறிப்பிட்டதொரு உயர் நோக்கத்திற்காகப் படைக்கப்படுகின்றனர் (பூமியில் பிறப்பெடுக்கின்றனர்)

இதில் அசோக் போன்றவர்கள் அவதாரங்கள் இல்லை என்றாலும், மேற்-சொல்லப்பட்ட வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்ற கருத்துடனும் அதன் பின் தேவலோகத்தின் அறிமுகக் காட்சியுடன் இன்றைய தொடர் முடிந்தது.

பி.கு: தயாரிப்பாளர் "என்ன சார் மலேஷியா, சிங்கபூர்ன்னு காமிப்பீங்கன்னு பார்த்தா தேவலோகம் வருது" என்று கிண்டல் அடிக்க, பதிலுக்கு பஞ்சமே இராத சோ, "நீங்க குடுக்கற காசுக்கு கூடுவாஞ்சேரி கூட காட்ட முடியாது" என்று பதிலளித்தது தொடரின் களையைக் கூட்டியது.

பி.கு2: நாடி ஜோதிடத்திற்கு கைரேகையைக் கணக்கெடுப்பார்கள். அதைப் பற்றி ஏதும் காட்டாது, நேரே சுவடி எடுத்துவிட்டார் திரைக்கதை எழுதிய வெங்கட்!!! (இதெல்லாம் என்னதுக்கு விலாவாரியா என்று நினைத்திருக்கக்கூடும்)

பி.கு3: (இன்றைய தொடரில் நான் மிகவும் ஒன்றிப் போனேன். சத்தியமாக, மெய் சிலிர்த்தது என்றால் அது மிகையல்ல. ...
...
Another feeble n agnostic duo inside me asks me to give due credits to spl effects and audios and dialogues :P )

(வளரும்)

aanaa
27th March 2009, 02:27 AM
March 25th
__________
பி.கு: தயாரிப்பாளர் "என்ன சார் மலேஷியா, சிங்கபூர்ன்னு காமிப்பீங்கன்னு பார்த்தா தேவலோகம் வருது" என்று கிண்டல் அடிக்க, பதிலுக்கு பஞ்சமே இராத சோ, "நீங்க குடுக்கற காசுக்கு கூடுவாஞ்சேரி கூட காட்ட முடியாது" என்று பதிலளித்தது தொடரின் களையைக் கூட்டியது.

Another feeble n agnostic duo inside me asks me to give due credits to spl effects and audios and dialogues :P )

(வளரும்)

:ty:
:yes:

aanaa
27th March 2009, 02:31 AM
நடந்தவை, நடப்பவை எல்லாம் ஆகாசம் என்ற ether-ல் பதிவாகி இருக்கின்றன. இதை aakashic records என்று சொல்வார்கள். இதை படிக்க முடிந்தவர்கள், பிரித்து அறியக்கூடிய ஞானிகள் பலர் இருந்தார்கள். நாஸ்ட்ராடமஸ்-ன் கணிப்புக்களும் இவ்வகையைச் சார்ந்தது. நடந்த நடக்கிற, நடக்கப் போகிற என்ற கால வரையரையைக் கடந்து நிற்கின்ற பதிவுகள் ஆகாசம் எங்கும் நிரம்பியிருக்கின்றன.





Future predictions may and would vary depending on the mental will and drive of each person.


எல்லாமே நடந்து முடிந்தது என்றால் -
ஏன் எதிர்காலத்தை துண்ணியமாகக் கணிக்க முடிவதில்லை

viraajan
28th March 2009, 04:40 PM
Akka, 26th and 27th :D

Yesterday episode was great :thumbsup:

Loved that Palm Leaves episode too. But I expected Cho to intervene and speak something about Palm Leaves astrology. I even imagined even the words that will be used by producer :oops: :P

Producer: enna saar idhu...ennamO 1000 varushathukku munnAdiyE munivargal ellam nammala pathi ezhudhi vachaangalam. sutha pEthalA irukkE.
Cho: adhu appadi illa sir... adhu vandhu....................... :lol:

Shakthiprabha.
30th March 2009, 12:13 PM
March 26th
__________

பூலோகத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஜாதி அபிப்ராயங்கள், சச்சரவுகள், குறிப்பாக பிராமண ஜாதிகளுக்கான இட ஒதுக்கீடுகள், அவர்களுக்குள்ள வாய்ப்புக்கள் பற்றி பூலோகத்தில் மாநாடு நடைபெற்றதைப் நாரதர் கைலாயத்தில் பேசுகிறார். அச்சமயம் அங்கு வந்திருந்த விஸ்வாமித்ரரும், வசிஷ்டரும் இதில் தம் சந்தேகங்களை முதலில் கிளப்புகின்றனர். விஸ்வாமித்ரர் "இது பற்றிய கருத்தைத் தெரிவிப்பதற்கு முன், தற்போதைய நிலையில், எத்தனை பிராமணர்கள், எங்கே இருக்கிறார்கள்" என்ற வினா எழுப்ப, அதைவிட அடிப்படை வினாவான "யார் பிராமணன்" என்ற கேள்வியை வசிஷ்டர் எழுப்புகிறார். இதற்கு விடை காண வசிஷ்டர் பூமியில் மானிடனாக அவதரித்து, பிரம்மோபதேசம் நடைபெற்ற பின் ஞானத்தை நாடுவார், "உண்மையான பிராமணனை"த் தேடி அலைவார். அப்படி ஒருவனை அவர் கண்டுகொள்ளும் போது அவர் பெற்ற பிறவியின் நோக்கம் முடிந்து இறைவனடி மீண்டும் இணைவார் என்று ஈசன் அருள்கிறார். இப்பொழுது நமக்கு அஷோக் யாரென்று ஊகிக்க முடிகிறது.

பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணன் அல்ல. பிராமணனுக்குறிய நியதிகள் இன்று யாரும் கடைபிடிப்பதில்லை. பொதுவாகவே பிறப்பால் ஒருவரை இன்னார் எனக் கூறுவது சரியல்ல. அவன் நடத்தையால், குணத்தால் எப்படிப்பட்டவனாகத் திகழ்கிறானோ அப்படிப்பட்டவனாகக் கருதுவது தான் முறை. பிராமணர்கள் வேதம் ஓதி அதன் மூலம் வருவாய் (அவர்கள் இஷ்டப்பட்டு தருவதை, இவர்கள் தாமாக கேட்பது இல்லை) ஈட்டி வாழ்கை நடத்த வேண்டும். நாளைக்கு என சேர்த்துக்கொள்ளாத, பொருள் வேண்டாத வாழ்கை வாழ கடமைப் பட்டிருக்கிறான். "கர்மயோகி" வாழ வேண்டியவன். பிரம்மத்தை, அல்லது உண்மையை நோக்கி அவன் தவம், முயற்சி, எண்ணம், ஆர்வம் இருக்க வேண்டும். இப்பொழுது சொல்லுங்கள் யார் பிராமணன்?!

இக்கேள்வி பலரின் மனதில் வேறூன்ற தொடங்கியபோது, அதனையே அடிப்படை விவாதமாய் அமைத்து கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார்கள். Well injected mythological reasoning into the today's social scenario. நாம் விவாதிப்பதை சற்று ஒத்திவைத்து விட்டு, இத்தொடரின் சோ என்ன தான் சொல்கிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

(வளரும்)

Shakthiprabha.
30th March 2009, 12:24 PM
Producer: enna saar idhu...ennamO 1000 varushathukku munnAdiyE munivargal ellam nammala pathi ezhudhi vachaangalam. sutha pEthalA irukkE.

Cho: adhu appadi illa sir... adhu vandhu....................... :lol:

:D PERFECT. :D

Shakthiprabha.
30th March 2009, 12:39 PM
thevaiyatra pi.ku: சிவனும் பார்வதியும் ஒட்டவே இல்லை. வசிஷ்டர் சிடுசிடு என்று இருந்தார். சிவனே நேரில் வேறு ரூபம் எடுத்து வந்தால் கூட அது சிவாஜி மாதிரி இல்லை என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று நினைக்கிறேன் :oops:

Shakthiprabha.
30th March 2009, 01:15 PM
March 27th
__________

நாதனை தன் மகனுக்கு பிரம்மோபதேசம் செய்விக்குமாறு பாகவதர் விண்ணப்பிக்கிறார். பூணலுக்கு நகைகளை புதுப்பிக்க வேண்டுமென வசுமதி விரும்ப, சமையல் படபடப்பு அதிகரிக்கிறது. மாமியின் கதாபாத்திரம், மளமளமள வென சரிந்து அதள பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. It takes years to build and seconds to pull down. Holds true for anything.


"பூணல் மாட்டிவிடுவதால் ஒருவனின் மனம் மாறி நல்லது நடந்து விடும்" என்பதில் நம்பிக்கை இல்லை என்று நீலகண்டன் சலித்துக்கொள்கிறார். மந்திரங்களுக்கு ஷக்தி இருக்கிறது என்றால், உபதேசம் இல்லாமலே அவனே புத்தகத்தை எடுத்து ஓதிவிடுவதில் என்ன தவறு என்று வினா எழுப்புகிறார். மந்திரங்களை முறையாய் குரு ஸ்தானத்தில் ஒருவர் ஓதி இன்னொருவருக்கு சொல்வது என்பது தான் நியதி என்று நீலகண்டனின் மனைவி தனது நம்பிக்கையை பகிர்ந்து கொள்கிறாள்.

தொடரில் வரும் விளங்கங்களின் படியே வாதிட்டாலும் கூட குரு என்பவர் அம்மந்திரத்தின் தன்மையை, அதன் பக்தியை உணர்ந்து நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பவராய் இருக்கவேண்டும். இன்றைக்கு பல பேர் ஆவணி அவிட்டம் அன்று காயத்ரி சொல்வதுடன் சரி. இப்படிப்பட்ட தந்தையிடமிருந்து முறையாய் கற்றுக்கொள்வது என்பது எப்படி சாஸ்திர அடிப்படை ஆகும்?! முறையான ஒரு குரு உபதேசித்து மந்தோபதேசம் பெறுவது என்பது பலருக்கு இன்று நடப்பதில்லை.


(வேறு)

அரசன் நல்ல நீதிமானாக ஆட்சி புரிய வழக்குகளில் அவன் தீர்ப்பும் சரியானதாக அமையவேண்டும். திருவிளையாடற்புராணத்தில் இறைவன் அருளும் தயவும் இருந்தாலேயொழிய நல்ல நீதியோ ஆட்சியோ வழங்குதல் இயலாதது என்பதை உரைக்கும் பொருட்டு குலோத்துங்க சோழனின் கதை சிறந்த எடுத்துக்காட்டாக அமைவதை கூறுகின்றனர். தம்பதியர் காட்டினுள் செல்லும் பொழுது காற்றில் ஆடிய அம்பு மனைவியைக் கொன்று விட, தற்செயலாய் அவ்வழியே சென்ற வேடனை சாடுகிறார் கணவன். சாட்சிகளும் இல்லாத பொழுது, மன்னனால் எப்படி தீர்ப்பு வழங்க முடியும். பல நேரங்களில், சாட்சிகளின் தரப்பு வாதத்தை வைத்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது. நேரில் பாராது தீர்ப்பு வழங்கும் பெரும் பொறுப்பு நீதிபதிகளுக்கு. சாட்சிகள் இருக்கும் வழக்கிலேயே முடிவெடுத்தல் சாமான்யம் இல்லை எனும் போது, முறையான சாட்சிகள் இல்லாத இடங்களில் எப்படி intutive judgement வழங்குவது? அதை சரியாக வழங்க வேண்டும் என்றால், நம்மையும் தாண்டிய இறையின் அனுக்கிரகம் இருந்தாலேயொழிய அது வழங்குதல் இயலாது. குலோத்துங்கனும் பகவானை வணங்கி அவனுக்கு தெளிவு ஏற்பட்டு பின் சரியான தீர்ப்பு வழங்கியதாய் புராணம் கூறுகிறது.

(வளரும்)

viraajan
30th March 2009, 01:50 PM
thevaiyatra pi.ku: சிவனும் பார்வதியும் ஒட்டவே இல்லை. வசிஷ்டர் சிடுசிடு என்று இருந்தார். சிவனே நேரில் வேறு ரூபம் எடுத்து வந்தால் கூட அது சிவாஜி மாதிரி இல்லை என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று நினைக்கிறேன் :oops:

illayE :confused2: otti thaanE ukkarndhu irundhAnga :confused2:

Jokes apart :oops:

Aama ka... Not just the appearance, even the pronunciation was pathetic :banghead:

TP Gajendran says in PKS:

Unna pAthA KailAsh Sivan madiri illa.... Raayapuram sivan madiri irukku :lol:

Shakthiprabha.
30th March 2009, 02:00 PM
TP Gajendran says in PKS:

Unna pAthA KailAsh Sivan madiri illa.... Raayapuram sivan madiri irukku :lol:

:P :lol:

bingleguy
30th March 2009, 05:25 PM
அதன் பிறகு "குரு" என்ற சொல் எத்துணை புனிதமானது என்று விளக்குகிறார் சோ. 'வாத்தியார்', 'ஆச்சார்யர்', 'உபாத்யாயர்' என பல சொற்கள் இவற்றை குறிப்பிடுபவன என்று நாம் நினைத்தாலும், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறு.

சிறந்த குரு என்பவரோ, மௌனத்தினாலேயே பாடங்களைக் கற்பிப்பவர். முதல் குரு தக்ஷிணாமூர்த்தி என்பவரை நாம் கடவுளாய் வரிக்கிறோம். ஆலமரத்தடியில் சீடர்கள் அமர்ந்திருக்க, குரு என்பவர், மௌனமாய் அமர்ந்திருக்கிறார். அந்த மௌனத்தின் மொழியிலேயே சீடர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்கின்றன. அப்பேற்பட்டவர் குரு.

guruji :notworthy: :notworthy::notworthy::notworthy::notworthy::notwo rthy:
unmai unmai mutrilum unmai :-)

Shakthiprabha.
30th March 2009, 06:01 PM
dign

adhaavathu, thuppariyum sambu nnu oru char, avar enna pannaalum, ekkuthappa aana correct aa aagidumaam. athu maathiri.....

:roll:

//dign

aanaa
31st March 2009, 02:49 AM
:ty: SP

keep up

viraajan
1st April 2009, 08:46 PM
Conversation between Ashok and his girl (name??) was the highlight of today's episode. Excellent!

And that girl's dialogue delivery was outstanding today. I loved it.

Her love, affection for Ashok was beautifully portrayed. :clap: :bow:

What do you feel akka? :roll:

Shakthiprabha.
1st April 2009, 08:48 PM
Shez good :) probably would have been his best friend.

enakkum pidichuthu.

viraajan
1st April 2009, 08:54 PM
:cool2:

enakku romba pudihudhu. :D

Shakthiprabha.
1st April 2009, 11:14 PM
March 30th
__________

அடகு வைத்த வளையலை மீட்டு வந்து நகைப்பெட்டியில் திருப்பும் பொழுது கோமதி மாமி, தம்பதி சமேதராய் வசுமதி- நாதனிடம் மாட்டிக்கொள்கிறாள். வசுமதி, கோமதி மாமியின் தவறை மன்னித்து மறந்து விடுகிறாள். மன்னிக்கப்பட்டுவிட்டதால் மேலும் குற்ற உணர்வால் மிகவும் சிறுமைப்பட்டு மாமி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். நாதனும், மாமியை மன்னித்து மீண்டும் அவரைத் தேடி அழைத்து வர எத்தனிக்கிறார்.

த்ரோணருக்கும் த்ருபத மன்னனுக்கும் நடந்த 'அகந்தைப்' போட்டியில் எத்தனை நாஸ்தி ஏற்பட்டது! த்ரோணரும் மன்னனும் அகந்தையால் நடைபெறும் பேரிழப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. நம் ஒவ்வொருவர் வாழ்விலும், ஏறக்குறைய நடைபெறும் எல்லா தவறுகளும் மறந்தும் மன்னித்தும் விடக்கூடியவையே. எனினும் 'சுயத்தால்' பாதிக்கப்பட்டு, அகம் எனும் மாயை கண்களை மறைக்க, நமக்கு மன்னிக்கவும் மறக்கவும் எளிதில் கைவருவதில்லை. அகந்தையின் மாயை தலைக்கேறும் போது இன்னொருவனிடம் குறைந்தபட்சம் "மன்னிப்பு" கோரும் வழக்கமும் அறவே இல்லாதொழிகிறது. இதனால் ஒவ்வொருவரும் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. நம்மை நாமே வருத்திக்கொண்டு, பிறரையும் துன்புறுத்துகிறோம்.

மன்னிப்பதும் மறப்பதும் சிறந்த மனித குணங்கள். மன்னித்து விடுவதால் நம் அஹம் அமுக்கப்பட்டு, ஆத்மா உயர்ந்து நிற்கிறது. தவறை உணர்ந்து "என்னை மன்னித்து விடு" என்று கேட்கும் மனிதனோ களங்கள் கழுவப்பட்டு உயர்ந்து விடுகிறான். தவறு யாருடையாதாய் இருப்பினும் விட்டுக்கொடுத்து மன்னிக்கும் குணம் இருக்கும் மனிதனுக்கு பூலோகமே சொர்கம்.

(வளரும்)

Shakthiprabha.
2nd April 2009, 12:06 AM
wrong font :D

sorry !

Shakthiprabha.
2nd April 2009, 12:07 AM
:shock:

priya32
2nd April 2009, 12:09 AM
:shock:

:lol:

Shakthiprabha.
2nd April 2009, 12:11 AM
March 31st
__________

கிருபாவின் வீட்டில் ஹோமம் செய்ய சாம்பு மிக சொற்ப பணமே வாங்கிக்கொள்கிறார் (வழக்கம் போல). நியாய தர்மத்தை தளர்த்தி, விட்டுக்கொடுத்து வளைந்து வாழும் வாழ்க்கை சிறந்ததல்ல. வைதீகம் ஓதும் நாம் இப்படி வாழ்வை வாழ்ந்து பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். போதுமென்ற மனத்துடன் வருவாய்க்கேற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று மனைவிக்கும் எடுத்துரைக்கிறார். சிறிதே சஞ்சலப்படும் சாம்புவின் மனைவிக்கு சாம்பு கொடுக்கும் விளக்கங்கள் இவை. பொதுவாக பெண்கள் சபலத்திற்கு அதிக இடம்கொடுத்து விடுவதாகவும், பெண்கள் வரையறுக்கப் பட்ட கணிப்பிற்கு அப்பாற்பட்டு பல நேரங்களில் விளங்குவதாகவும் (அதாவது இரட்டை குணம், இரு நாக்கு, unpredictable behaviour) விதுர சாஸ்திரத்தில் இருக்கிறதாம்.

கோமதி மாமிக்கு பாசம் கண்ணை மறைக்க மீண்டும் வசுமதி வீட்டிற்கே வந்து விடுகிறார். மன்னிக்கப்படும் தவறுகளின் விளைவுகளோ ஆழமாய் பலப்படுத்தப்படும் உறவுகள்! அன்பின் அடிப்படையில் விதைக்கப்படும் விதைகள்! பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சி!

அசோக் பூணல் தொடர்பான ஏற்பாடுகள் பேச்சுக்கள் படாடோபமாய் பேசப்படுகிறது. உண்மையில் பூணூல் விழா என்பதே வைதீக விழா. அதன் போக்கே மாறிவரும் இந்நாளில், வைதீகத்தை பற்றி ஒருவரும் நையா-பைசா கவலைப்படாமல், லௌகீக, லோகாந்திர செலவுகளை அதிகரித்து, பணம் புரளுவதால், பட்டும் பளபளப்புமாய் விழக்கள் மாறிவருவது வேதனைக்குறியது (கல்யாணங்களும் இதில் அடக்கம்). பூணூல் என்பது அக்கால வழக்கப்படி, க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள் என எல்லோராலும் அணியப்பட்டது என்பது சோ சொன்ன புதிய தகவல்.


(வளரும்)

aanaa
2nd April 2009, 04:12 AM
March 31st
__________

அன்பின் அடிப்படையில் விதைக்கப்படும் விதைகள்! பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சி!


(வளரும்)

:exactly:

viraajan
2nd April 2009, 08:43 PM
:redjump:

Cho gave explanation for Palm Leaves astrology today :cool: The one which I expected to happen in one of the earlier episodes.

Also his explanation for Poonal Kalyanam was great :clap: :bow:

Shakthiprabha.
2nd April 2009, 08:47 PM
ungaLAi thaan ninaichEn vr :D

viraajan
2nd April 2009, 08:51 PM
ungaLAi thaan ninaichEn vr :D

:ty: :bow:

aanaa
2nd April 2009, 10:09 PM
kuthu kuthunnu kuthanam kuthanam
mothu mothunnu mothanam mothanam
mogaraiya parthu!


een ivvalavu athankam?

Shakthiprabha.
2nd April 2009, 10:14 PM
kuthu kuthunnu kuthanam kuthanam
mothu mothunnu mothanam mothanam
mogaraiya parthu!


een ivvalavu athankam?

miga athigamaana kovam aana! samoogathila 'manushargaL' engira perla nadamaadugindra aindharivu konda veriyargaL mela. jandhukkaL mela. ivangaLai elaam deiriyama case pottu uLLa thaLLa mudiyalaiyE engira varutham / iyalamai ennuL. naLaikku sariyaagidum....

anbu_kathir
3rd April 2009, 09:53 AM
March 30th
__________

நம் ஒவ்வொருவர் வாழ்விலும், ஏறக்குறைய நடைபெறும் எல்லா தவறுகளும் மறந்தும் மன்னித்தும் விடக்கூடியவையே. எனினும் 'சுயத்தால்' பாதிக்கப்பட்டு, அகம் எனும் மாயை கண்களை மறைக்க, நமக்கு மன்னிக்கவும் மறக்கவும் எளிதில் கைவருவதில்லை. அகந்தையின் மாயை தலைக்கேறும் போது இன்னொருவனிடம் குறைந்தபட்சம் "மன்னிப்பு" கோரும் வழக்கமும் அறவே இல்லாதொழிகிறது. இதனால் ஒவ்வொருவரும் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. நம்மை நாமே வருத்திக்கொண்டு, பிறரையும் துன்புறுத்துகிறோம்.

மன்னிப்பதும் மறப்பதும் சிறந்த மனித குணங்கள். மன்னித்து விடுவதால் நம் அஹம் அமுக்கப்பட்டு, ஆத்மா உயர்ந்து நிற்கிறது. தவறை உணர்ந்து "என்னை மன்னித்து விடு" என்று கேட்கும் மனிதனோ களங்கள் கழுவப்பட்டு உயர்ந்து விடுகிறான். தவறு யாருடையாதாய் இருப்பினும் விட்டுக்கொடுத்து மன்னிக்கும் குணம் இருக்கும் மனிதனுக்கு பூலோகமே சொர்கம்.

(வளரும்)

At the highest state, forgiveness becomes unnecessary. There is a clear understanding that everyone is exactly doing the 'right' thing in doing what they do given their own view of the world. Unconditional Love means not expecting someone to act or be in a particular fashion, therefore need for forgiveness is logically eliminated.

http://spiritlibrary.com/conversations-with-god/neale-talks-about-forgiveness

Love and Light.

aanaa
3rd April 2009, 05:23 PM
. naLaikku sariyaagidum....

காலம் மிக நல்ல மருந்து

aanaa
3rd April 2009, 05:24 PM
At the highest state, forgiveness becomes unnecessary.

http://spiritlibrary.com/conversations-with-god/neale-talks-about-forgiveness

Love and Light.

:clap:

aanaa
3rd April 2009, 05:28 PM
. naLaikku sariyaagidum....

கோபம்
கோபம் என்பது நாம் நினைப்பதை மற்றவர்கள் கடைப் பிடிக்கவில்லயே என்பதனால் வருவது.

தவறானா கண்ணோட்டம் தானே
வாழ்க்கையை ரசிக்கவும்
அப்படியே ஏற்றுக் கொள்ளவும்.

சொல்வது எளிது. :lol:

Shakthiprabha.
3rd April 2009, 05:31 PM
aana,

true. thanks :)

Shakthiprabha.
4th April 2009, 12:07 AM
Bear with me pps, tommorrow I shall update till date and walk hand n hand.

Shakthiprabha.
4th April 2009, 12:07 AM
anbukkthir,

Lovely website. I am truly thankful beyond words.

Shakthiprabha.
7th April 2009, 01:11 AM
April 1st
_______

பூணூல் வைபவத்தால் அசோக் மற்றோரைப் போல் இயல்பான நிலைக்கு திரும்பிவிடக்கூடும் என்ற நம்பிக்கை நீலகண்டனுக்கு இல்லை. பாகவதரிடம் தம் விருப்பமின்மையை காட்டமாக தெரிவிக்கிறார். காயத்திரி மந்திரங்கள் சொல்வதாலும் இன்ன பிற சாஸ்த்ரோத்தமான வாழ்க்கை வாழ்வதாலும் பாகவதர் தம்மைப் போன்றோரக் காட்டிலும் எவ்வகையில் உயர்ந்து நிற்கிறார் என பதில் வினா விடுக்கிறார். அதற்கு பாகவதர், நான் உங்களைப் போன்றோரை விட மன அமைதியுடன் இருக்கிறேன் அதுவல்லவா உண்மையான பெறும் பேறு என எதிர்வாதம் செய்கிறார்.

சாஸ்திரங்களில் (சாஸ்திரம், சம்பிரதாயங்கள் மட்டுமின்றி பொதுவாக இக்கூற்று பல துறைகளுக்குப் பொருந்தும்) ஒட்டதலும் இன்றி, வெட்டுதலும் இன்றி அரை குறையாய் விஷயம் அறிந்தவனுக்கு உணரவைப்பது மிகக் கடினமான காரியம். அரை குறை விஷயங்கள் அறிந்த பலரும் சரவாதம்
செய்பவர்கள். அவர்கள் முழுமையாய் இலக்கை அடைவதில்லை.

பூணூல் வைபவங்களோ, அல்லது நித்திய கர்மாக்களோ, உயர்ந்த நிலையை அடைய ஒரு பாதை மட்டுமே, படிக்கட்டுகள் போன்றவையே. பறக்கும் தருணம் வரும் பொழுது அக்கர்மாக்களைக் விட்டுச் செல்லவதே இயல்பு. அஷோக்கின் மன நிலை முற்றிலும் சலனமில்லாததாக இருக்கிறது. பூணூல் போட்டால் அவன் பிராமணன் என்று சாஸ்திரங்கள் சொல்கிறதா என்று நறுக்கென வினா தொடுக்கிறான். எதைத் தேடுகிறேன் என்று தெரியாத ஒரு தேடலில் இருக்கிறான். கவலை கொள்வது என்பது மனித இயல்பு. தன் பெற்றோருக்கு தான் ஒரு காரணமாய் இல்லாவிட்டால், வேறொரு காரணம் கிடைத்து விடும். கவலையை ஒழிப்பதற்கு ஒரே வழி மனதை ஒழிப்பது மட்டுமே என உயர்ந்த தத்துவத்தை கூறுகிறான்.

கதோபநிஷத்தில், யமனிடம் நசிகேதஸ் பாடம் பெறுகிறார். உடம்பைத் தேராகவும் இந்த்ரியங்களை குதிரைகளாகவும், மனசையே கடிவாளமாகவும் கூறுகிறார் யமன். அந்த மனம் எனும் கடிவாளம் ஒழுங்காய் முறையாய் குதிரைகளை செலுத்த புத்தியாகிய ஆன்மாவை துணை கொண்டு சென்றால் உடம்புத் தேர் நேர் பாதையில் செல்கிறது என்கிறது உபநிஷதம்.

(வளரும்)

Shakthiprabha.
7th April 2009, 04:19 PM
April 2nd
________


திருக்குறள் என்னும் அறநூல் ஹிந்து மதத்திற்கு (அல்லது பொதுவாக எந்தவொரு மதநம்பிக்கைக்கும்) புறம்பானதல்ல. அங்கு சொல்லப்பட்டுள்ளவையும் மதங்களுடன் ஒன்றி நிற்கும் கருத்துக்களே என எடுத்திரைக்குமாறு பல குறள்களும் அதற்கான விளங்கங்களும் காணலாம்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவன் உண்மையான அந்தணன் என்கிறது குறள். இவ்விடத்திலேயே நமக்கு எவன் உண்மையான அந்தணன் என்று தெரிந்துவிடுகிறது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனின் அடி சேர்ந்தால் பிறவிகள் தொலைக்கப்பட்டுவிடும். அடுத்த அடியாகிய 'இறைவன் பற்றிய சிந்தனை அற்று இருப்போர் மீண்டும் பிறந்து உழல நேரிடும்' எனபது நமக்கு தானாகவே புரிந்துவிடுகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பொய்த்துப்போனால் இவ்வுலகில் வானோர்க்கு நடை பெறும் வழிபாடுகள் நடைபெறாமல் போகும் எனும் குறளில் திருவள்ளுவர் 'வானோர்' என்று சிலரை குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் பல மதங்களில் ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று.


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி

ஐம்புலன்களை அடக்கமாட்டாதவனுக்கு இந்திரனின் கதியே சாபமே சிறந்த சான்று. இங்கு 'இந்திரன்'னும் அவனுக்கு நேர்ந்த கதியும் இக்குறள் சொல்லாமல் சொல்கிறது.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்: தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே.

( நன்றி ( http://www.ikmahal.org/tirekural/27thavam.htm ) )

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

என்னவெல்லாம் ஒருவனுக்கு வேண்டுமோ வேண்டிய வற்றை வேண்டிய வண்ணம் அடையலாம். எப்பொழுது? ஒருவன் தவம் செய்து முயன்றால். (இங்கு தவம் என்பதற்கு தொடரும் சலிப்பற்ற முயற்சி என்று பொருள் கொள்ளலாம்)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும்


ஊழ் எனும் விதியை விட வலிமை உள்ளது வேறென்ன இருக்கிறது? எல்லாவற்றையும் தாண்டி அது முன் வந்து நிற்கும் வலிமை உடையது' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 'விதி' என்னும் சொல் குறளில் அரங்கேறி இருக்கிறது. எனவே குறள் மத கோட்பாடுகளை அப்புறப்படுத்தும் விஷயமே அல்ல என்பதை தன் வாதமாக வைக்கிறார் கதாசிரியர்.

உபநயன விழா துவங்குகிறது. பல சம்பிரதாயங்களுக்கு சிரமேற்கொண்டு விளக்கம் அளித்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் :bow: இதைப் படித்து, மனதில் வாங்கிய பின், ஒரு க்ஷண நேரமானும், அதன் உள்ளத்தர்த்தை உணர்ந்து நடைமுறை வாழ்வில் செயல்படுத்த முற்பட்டால் அதுவே இவர்களுக்கு கிடைக்கும் வெற்றி.

மான் தோல் பூணூலில் கட்டப்படுகிறது. மான் தோல் தூய்மையை குறிப்பதாகும். மூன்று நூல்கள் அணிந்திருப்பது மூன்று குணங்களை குறிப்பதாகும். சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள் என்பவை. ஒரு மனிதனிடம் பொதுவாக எல்லா குணங்களும் கலந்து அமையப்பெற்றிருக்கும். எனினும், ஒவ்வொருவனுள்ளும் சில நேரங்களில் ஒரு குணம் மேலோங்கி நிற்கும். எப்படிப்பட்ட குணங்கள் அதிகமாக மேலோங்கி நிற்கிறது என்பதை வைத்தே அவன் எப்பேற்பட்டவன் எனத் தீர்மானிக்கப்படுகிறான். முப்புரி நூல் மனிதர்களிடத்து விளங்கும் மூன்று கடன்களையும் குறிக்கிறது. ரிஷிகளுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், தேவர்களுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், பித்ருக்களுக்கான தர்பணம் முதலிய கடன் என்பனவற்றையும் குறிக்கும்.

கல்லாலான அம்மியை போல் உறுதி மனம் குணம் பூண்டவனாய் அவன் விளங்க வேண்டும் என மந்திரங்கள் உபதேசிக்கிறது. மித்ரன் எனும் தேவனைப் போல் எல்லோரிடத்தும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவோனாக விளங்கவேண்டும். என மந்திரங்கள் அறிவுருத்துகிறது. பிரம்மச்சர்யத்தை மேற்கொள்பவன் அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளான்.

தொட்டத்தில் பாகவதாராக வந்தது தெய்வச் செயலா அல்லது பிரமையா? திருவண்ணாமலையில் பேசிய சித்தர் தெய்வமா அல்லது பிரமையா? புயல் காற்று அவன் நாடி ஓலையை சூறையாடிச் சென்றது தற்செயலா அல்லது தெய்வச்செயலா என்றெல்லாம் குழம்புவோருக்கு, "எல்லாம் இறைவனின் ஆணைப்படி நானே செய்வித்தேன்" என்று நாரதர் விளக்குகிறார்.

(வளரும்)

Shakthiprabha.
7th April 2009, 05:01 PM
April 3rd
_______

சம்பிரதாயமாக சொல்லப்படும் பல மந்திரங்களுக்கு விளங்கங்கள் அறிந்து சொல்வதாலேயே பயன் சிறந்து விளங்குகிறது. இல்லாவிடில் செய்யபடும் கடமை சரிவர செய்யாததாகிவிடுகிறது. இன்றைக்கு ஒரு வீட்டில் பூணூல் விழா எப்படி நடைபெறுகிறது? முறைப்படி பூணூல் போடப்படுவதற்கு "விழா" எனும் சொல்லே தவறு. ஒரு மாணவன் தன்னை பிரம்மச்சரியத்திற்கு தயார்படுத்திக்கொள்ளும் முதல் படி. அர்த்தம் புரியாமல் ஓதப்படும் மந்திரங்கள், செய்யும் செயலிலோ மந்திரங்களிலோ, வேதங்களிலோ சிறிதும் சிரத்தையற்று வருவோரை கவனித்து உபசரிக்கும் குதூகல விழாவாகி விட்டது. பட்டும் பளபளப்பும் அங்கு பேசப்படும் வம்பும் மட்டுமே இன்றைக்கு படாடோபமாக பூணூல் விழாவை முடித்து வைக்கிறது.


ஓம் பூர் புவஹ-சுவஹ
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தீயோ யோன ப்ரசோதயாத்

என்பது காயத்ரி மந்திரம்.

முக்காலங்களையும் மூன்று லோகங்களையும், முக்குணங்களையும் கடந்து நிற்கும் அன்னையே, உன்னை நான் வணங்குகிறேன். இருளை நீக்கும் சூரியனின் கிரணங்களையொத்து என் மாயையை, அறிவீனங்களை அகற்றி, அறிவொளி வழங்குமாறு வேண்டி அன்னையே உன்னைப் பணிகிறேன்.

என்பது இதன் பொருள்

பூணூல் போட்ட பிறகு அம்மாணாக்கன் சூரியனை காண்பது என்பது வழக்கு. சூரியனைப் போல் கடமைத் தவறாதோன் பிரபஞ்சத்தில் இல்லை. அவனைப் போல் இனி நானும் திகழவேண்டும் என்று மாணாக்கன் மன உறுதி பூண்கிறான். இது போல் சடங்குகளில், சின்னங்களின் அவசியங்களை விளக்க வரும் போது, அலைபாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நம் மனத்திற்கு ஸ்திரமாய் உறைக்க, பதித்து வைக்க சின்னங்கள் தேவை, அதிலும் ஆன்மா, இறை ஞானம் போன்ற சூக்ஷ்ம வஸ்துக்களை விளக்க சின்னங்கள் அவசியமாகிறது. அதன் பயனாக ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சொல்லப்படுபவை எளிதில் சென்றடைகிறது.

தான் யார், எவ்வழி, எக்குலத்தின் தோன்றல் என்றெல்லாம் தன்னை பற்றி கூறிக்கொண்டு, இன்னான் இந்த பிரம்மச்சரியத்தை மேற்கொண்டிருக்கிறேன். எனக்கு இனி,

இகழத்தக்கதல்ல இகழ்ச்சி
போற்றத்தக்கதல்ல இகழ்ச்சியின்மை

மேலும்,

நல்லவற்றில் கவனம்
தீயவற்றில் அலக்ஷியமும்

அறியத் தக்கதை அறிவது
அறியத் தகாததை அறியாமலேயே இருப்பது

நல்லவற்றையே கேட்பது
தீயவற்றை கேளாமல் இருப்பது

உண்மையை பேசுவது
பொய்யை பேசமலே இருப்பது

இவை எல்லாம் என் விரதங்கள், என்று உறுதிமொழி எடுத்து விரதம் பூண்கிறான். பூணூல் போடப்பட்டவன், குருவிற்கேற்ற நல்ல அடக்கமான சீடனாக விளங்குவது அவன் தலையாயக் கடமை. அவன் பிக்ஷை எடுத்து உண்ணல் வேண்டும். பிக்ஷை எடுப்பதால், ஒரு மனிதனின் அஹம் அடக்கப்பட்டு, அங்கு தன்னடக்கம் தானாய் வந்தமர்கிறது.

இத்தனைப் படிகளைக் கடந்துகொண்டே அவன் பாடங்கள் பயின்று நித்திய கர்மாக்களை செய்தால் மட்டுமே அவனுக்கு போடப்பட்ட பூணூல் முழுமையான பயன் பெறுகிறது. மறுபடியும் அதே கேள்வி. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணானா? போடப்பட்டதும் சரியாய் முறையாய் போடப்படுகிறதா?

பதில் விஸ்வாமித்ரர் கூறுகிறார்.

"இத்தனை சடங்குகள் நடந்தாலும் கூட, வசிஷ்டராய் அவதரித்திருக்கும் அம்மாணக்கனுக்கு போடப்பட்டது பூணலே அல்ல. அவன் பெற்றது பிரம்மோபதேசமே அல்ல"

(வளரும்)

Shakthiprabha.
7th April 2009, 05:12 PM
//பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணானா? //

ஒவ்வொரு முறை இந்த வார்த்தை பேசப்படும் போதும், நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு. பிராமணன் என்பவனை குலத்தின் தோன்றலால் பிறப்பால் பெயரிட முடியாது. எவன் பிரம்மத்தை அல்லது இறையை அல்லது இறைத் தத்துவத்தை நோக்கி தன்னை செலுத்துகிறானோ, அல்லது செல்லும் முயற்சியில் முழுமையாக முதல் படியில் தவழத்துவங்குகிறானோ, அவன் தன்னை மாணாக்கன் ஆக்கிக்கொள்கிறான்.

viraajan
7th April 2009, 05:20 PM
சோவின் எங்கே பிராமணன், திங்கள் முதல் வெள்ளி வரை நாள் தோறும் இரவு 8 மணிக்கு.

மறு ஒளிபரப்பு,

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12650&postdays=0&postorder=asc&start=0

Seriously, i'm wondering how you are able to keep everything in memory and reproduce it here. :clap: :bow:

Shakthiprabha.
7th April 2009, 05:24 PM
Basically if its abstract philsophy and philosophical musings, I remember the crux and never forget it.

Otherwise than philsophical happenings, I have a note specifically for this and I take notes of important points VR :oops:

Reg thirukkuraL I noted down the kuraL and found expl in net.

I am happy there are ppl reading it :) that gives me the enthu to pass on few good and messages and thoughts.

:ty:

viraajan
7th April 2009, 05:27 PM
Basically if its abstract philsophy and philosophical musings, I remember the crux and never forget it.

Otherwise than philsophical happenings, I have a note specifically for this and I take notes of important points VR :oops:

Reg thirukkuraL I noted down the kuraL and found expl in net.

I am happy there are ppl reading it :) that gives me the enthu to pass on few good and messages and thoughts.

:ty:

Notes eduppeengalA? :shock: :clap: Good habit actually. :)

We enjoy reading this ka. When this thread was started i never thought that this will be updated regularly. But you made it happen :bow:

Continue...

Ungal sEvai... indha thread'ku thEvai :bow: :ty:

Shakthiprabha.
7th April 2009, 05:34 PM
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

என்னவெல்லாம் ஒருவனுக்கு வேண்டுமோ வேண்டிய வற்றை வேண்டிய வண்ணம் அடையலாம். எப்பொழுது? ஒருவன் தவம் செய்து முயன்றால். (இங்கு தவம் என்பதற்கு தொடரும் சலிப்பற்ற முயற்சி என்று பொருள் கொள்ளலாம்)

ithai ezhuthum pothu ungaLai ninaichukitten :)

viraajan
7th April 2009, 05:36 PM
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

என்னவெல்லாம் ஒருவனுக்கு வேண்டுமோ வேண்டிய வற்றை வேண்டிய வண்ணம் அடையலாம். எப்பொழுது? ஒருவன் தவம் செய்து முயன்றால். (இங்கு தவம் என்பதற்கு தொடரும் சலிப்பற்ற முயற்சி என்று பொருள் கொள்ளலாம்)

ithai ezhuthum pothu ungaLai ninaichukitten :)

:bow: :bow:

thanks ka... yes... i will.... :bow:

aanaa
7th April 2009, 05:39 PM
:clap: SP

:ty: for the whole updates.

Thirukkural - -மேலும் மெருகேறுகின்றது உங்களின் கைவண்ணத்தில்

Shakthiprabha.
7th April 2009, 05:57 PM
:oops: :ty: aana. Vasishtar vaayal :)

Coming to think of vasishtar, uma's role is very cute :) I am sure vr would come up with a 'big' yes now :D

viraajan
7th April 2009, 06:25 PM
:oops: :ty: aana. Vasishtar vaayal :)

Coming to think of vasishtar, uma's role is very cute :) I am sure vr would come up with a 'big' yes now :D

Yesssssssssssss!!!

She is cute... i mean... her role is very cute ;)

Her way of speaking to ashok is superb... :)

Shakthiprabha.
8th April 2009, 12:31 AM
April 6th
_______

'அறம் காப்பவர்களே அந்தணர்கள்' என்ற கருத்தை, மஹாபாரதம், பதினெண்புராணங்கள், மனுதர்மம், வேதங்கள் போன்ற நூல்கள் வலியுறுத்தியுள்ளன. அந்தணனுக்கு ஆறுவகையான அறங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேதம் ஓதுதல், வேதம் பயில்வித்தில், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல் தானம் வாங்குதல் என்பதே அவை. இத்தர்மங்கள் தழைத்திருக்கும் நாடு சுபீட்ஷம் பெற்றிருக்கும் என்பது சான்றோர் வாக்கு. இதை வலியுறுத்தும் குறள் ஒன்றும் உள்ளது. "ராஜா தர்மத்தை மறந்திருக்கும் நாட்டில் பசுக்கள் பால் கறப்பதில்லை, அங்கு அந்தணர் அறம் மறப்பர்." என்று குறளின் உரை கூறுகிறது. இந்த ஆறு அறங்கள் உலகை நல்வழியில் காக்க ஏதுவாய் அமைகிறது. இதனை முன்னிறுத்திப் பார்த்தால், அறம் மறந்த பூவுலகின் நிலைமை எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என நமக்குப் புரியும்.

அஷோக்கிற்கு உமா 'யோக வாசிஷ்டம்' என்ற புத்தகத்தை பரிசாக அளிக்கிறாள். அந்த புத்தகத்தை பார்த்த (அதை உணர்ந்த) மாத்திரம், வசிஷ்டனே காரணப்பிறப்பாக பிறந்துள்ளதால் அவனுள் பல exalted experiences. பல யுகங்களைக் கடந்த நிகழ்வுகளுக்கு இட்டுச்செல்லப்படுகிறான்.

ராமன் அவதாரமாக மண்ணில் அவதரித்த போது, அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டார். ஒரு மனிதனாக எப்படியெல்லாம் உழன்று துன்பங்களை இன்பங்களை எதிர்கொள்ளாவேண்டுமோ அவ்வாறு வாழ்ந்தார். அப்படி வாழ்ந்ததால், துன்பத்திற்கும், குழப்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாக நேர்ந்தது. இறைவனின் அவதாரமே ஆயினும், அவர் அனுபவிக்க வெண்டிய கர்மாக்கள் இருந்தன. விஷ்ணுவாகிய அவருக்கு, சாபக்கடன் தீர அவ்வாறு உழல நேர்ந்தது.

முன்பொரு சமயம் சனத்குமாரர் என்ற ஞானியின் மேல் விஷ்ணு தவறாக கோபம் கொண்டிருந்தார். தவறற்ற தன் மேல் கோபம் கொண்டிருந்த விஷ்ணுவின் மேல் சனத்குமாரர் கோபம் கொள்ள, பூவுலகில் பிறக்குங்கால் நீ உழன்று சிக்கல்கள் சந்திக்க நேரிடும் என்று சபித்துவிடுகிறார். இதைத் தவிர பிருகு முனிவரின் மனைவியை விஷ்ணு கொல்ல நேர்ந்து விடுவதால், "மனைவியைப் பிரிந்து வருந்த நேரும்" என அவரும் சாபமிடுகிறார். நரசிம்ஹ அவதாரத்தை கண்ட பயத்தில் தேவதத்தனின் மனைவி இறந்துவிடுவதால், கோபமுற்ற தேவதத்தன் "மனைவியைப் பிறிந்து நீயும் அவதியுறுவாய்" என சபித்து விடுகிறார். இப்படி ஞானிகளும் மஹான்களும் உரைத்த சாபங்கள் பொய்த்துப் போகாது. அதனாலேயே ராமாவதாரத்தில் விஷ்ணு மிகுந்த மன உளைச்சலுக்கும், பிரிவுத் துயருக்கும் ஆளாக நேர்ந்தது.

உயர்ந்த செல்வச்செழிப்பில் புரண்டும் ராமன் மன அமைதியின்றி மிகுந்த குழப்பத்திற்கு ஆளாக நேர்ந்தது. நிலையற்ற இந்த செல்வமும், புகழும், வளமும், உயர்வும் என்ன நல்லன செய்துவிடுகிறது? பயனற்ற இந்த வாழ்வின் இலக்கு என்ன? எதை நோக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம்? எதையோ நிலையான இன்பம் அதன் பின் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று விரக்தி மேலிட அவர் பேசக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய ஒரு துறவியின் மனநிலையில் நின்று கேள்விகள் கேட்கிறான் ராமன். இப்பேற்பட்ட ஆன்மீகத் தேடல் விரக்தியின் வெளிப்பாடாக இருத்தல் கூடாது என்று ராமனின் சந்தேகங்களுக்கும், விளக்கங்கள் அளிக்கிறார் வசிஷ்டர். அந்நூல் "யோக வாசிஷ்டம்" என்ற பெயரில் விளங்கங்களாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

இராமாயணத்தில் அனுபந்தமாக இதையும் சேர்த்திருக்கிறர் வால்மீகி.

(வளரும்)

Shakthiprabha.
8th April 2009, 12:35 AM
// இறைவனின் அம்சங்களாகக் கருதப்படுபவர்களுக்கே இந்த விரக்தியும் குழப்பமும் என்றால்... :| //

anbu_kathir
8th April 2009, 10:56 AM
April 2nd
________

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவன் உண்மையான அந்தணன் என்கிறது குறள். இவ்விடத்திலேயே நமக்கு எவன் உண்மையான அந்தணன் என்று தெரிந்துவிடுகிறது.


"Karunai" endraal?



________

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

என்னவெல்லாம் ஒருவனுக்கு வேண்டுமோ வேண்டிய வற்றை வேண்டிய வண்ணம் அடையலாம். எப்பொழுது? ஒருவன் தவம் செய்து முயன்றால். (இங்கு தவம் என்பதற்கு தொடரும் சலிப்பற்ற முயற்சி என்று பொருள் கொள்ளலாம்)


What does சலிப்பற்ற முயற்சி mean exactly? To take the example of Sri Aurobindo, there comes a point in his life where he chooses spirituality instead of politics. It seems as though the choice is almost spiritually 'forced' upon him. By his very own efforts, he was poised to be one of India's greatest political leaders, but his path changes and he becomes a great spiritual leader instead. One could say he did practice Yoga intensely and this came as a result, but I wonder, was this a matter of his desire or choice ?


April 3rd
_______

ஓம் பூர் புவஹ-சுவஹ
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தீயோ யோன ப்ரசோதயாத்

என்பது காயத்ரி மந்திரம்.

முக்காலங்களையும் மூன்று லோகங்களையும், முக்குணங்களையும் கடந்து நிற்கும் அன்னையே, உன்னை நான் வணங்குகிறேன். இருளை நீக்கும் சூரியனின் கிரணங்களையொத்து என் மாயையை, அறிவீனங்களை அகற்றி, அறிவொளி வழங்குமாறு வேண்டி அன்னையே உன்னைப் பணிகிறேன்.



:) More here

http://sathyasai.org/devotion/prayers/gayatri.html


//பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணானா? //

ஒவ்வொரு முறை இந்த வார்த்தை பேசப்படும் போதும், நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு. பிராமணன் என்பவனை குலத்தின் தோன்றலால் பிறப்பால் பெயரிட முடியாது. எவன் பிரம்மத்தை அல்லது இறையை அல்லது இறைத் தத்துவத்தை நோக்கி தன்னை செலுத்துகிறானோ, அல்லது செல்லும் முயற்சியில் முழுமையாக முதல் படியில் தவழத்துவங்குகிறானோ, அவன் தன்னை மாணாக்கன் ஆக்கிக்கொள்கிறான்.

If so, then why go through the ceremony at all? What is the precise use of ritual (in these modern times)? Is it possible to provide a justification?


April 6th
_______

'அறம் காப்பவர்களே அந்தணர்கள்' என்ற கருத்தை, மஹாபாரதம், பதினெண்புராணங்கள், மனுதர்மம், வேதங்கள் போன்ற நூல்கள் வலியுறுத்தியுள்ளன. அந்தணனுக்கு ஆறுவகையான அறங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேதம் ஓதுதல், வேதம் பயில்வித்தில், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல் தானம் வாங்குதல் என்பதே அவை.

"Vedam" endraal? "Vedam odhudhal" andananin dharmam endraal, Jesus maadhiri iruppOr ellaam andanaraa illaya? :D



மான் தோல் பூணூலில் கட்டப்படுகிறது. மான் தோல் தூய்மையை குறிப்பதாகும். மூன்று நூல்கள் அணிந்திருப்பது மூன்று குணங்களை குறிப்பதாகும். சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள் என்பவை. ஒரு மனிதனிடம் பொதுவாக எல்லா குணங்களும் கலந்து அமையப்பெற்றிருக்கும். எனினும், ஒவ்வொருவனுள்ளும் சில நேரங்களில் ஒரு குணம் மேலோங்கி நிற்கும். எப்படிப்பட்ட குணங்கள் அதிகமாக மேலோங்கி நிற்கிறது என்பதை வைத்தே அவன் எப்பேற்பட்டவன் எனத் தீர்மானிக்கப்படுகிறான். முப்புரி நூல் மனிதர்களிடத்து விளங்கும் மூன்று கடன்களையும் குறிக்கிறது. ரிஷிகளுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், தேவர்களுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், பித்ருக்களுக்கான தர்பணம் முதலிய கடன் என்பனவற்றையும் குறிக்கும்.

கல்லாலான அம்மியை போல் உறுதி மனம் குணம் பூண்டவனாய் அவன் விளங்க வேண்டும் என மந்திரங்கள் உபதேசிக்கிறது. மித்ரன் எனும் தேவனைப் போல் எல்லோரிடத்தும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவோனாக விளங்கவேண்டும். என மந்திரங்கள் அறிவுருத்துகிறது. பிரம்மச்சர்யத்தை மேற்கொள்பவன் அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளான்.

(வளரும்)

Just thinking out loud, was it from this logic that these customs were originated? Or are we trying to 'best-fit' some logic into the customs which originated somehow (even for apparently illogical reasons)? On several occasions, I find myself split between the two opinions, and do not know what is accurate.



We enjoy reading this ka. When this thread was started i never thought that this will be updated regularly. But you made it happen :bow:

Continue...

Ungal sEvai... indha thread'ku thEvai :bow: :ty:

Yes! We are all grateful to you :).

----

Love and Light.

Shakthiprabha.
8th April 2009, 12:05 PM
"Karunai" endraal?

"karuNai" I feel every word can take a meaning based who they are, and what are their rightful duties (here duties as per what they take up willingly) .

I suppose 'karunai' here can mean impartial treatment to all beings (whilst doing his duty) . Again depending on "who u are and where u stand" karunai can demand unquestionable love for all beings (typically I can think of jesus christ)



What does சலிப்பற்ற முயற்சி mean exactly? To take the example of Sri Aurobindo, there comes a point in his life where he chooses spirituality instead of politics. It seems as though the choice is almost spiritually 'forced' upon him. By his very own efforts, he was poised to be one of India's greatest political leaders, but his path changes and he becomes a great spiritual leader instead. One could say he did practice Yoga intensely and this came as a result, but I wonder, was this a matter of his desire or choice ?

I remember "oozh" kuraL here. Destiny is pwoerful that it overpowers surroundigns and situations. What is ofcourse destiny but our own will and actions (though we are unaware of) . He chose yoga (unaware) and the link for this destiny or choice cannot be found in tht very birth.

Salipatra muyarchi... well, UNTIL ONE is desirious of an object or position AND if it is righteous (even if isn't he would turn towards it and its the path he chose) to keep trying without giving up. It holds good to understand the truth. Truth slips time and agian, and we need to climb again and again (i.e. if the person WANTS to be so)

When u decide the object or pleasure in question is NOT NEEDED for u peace, or uve gone beyond the pleasure found in objects or you have grown over that love, it can be forgotten.

If effort is not taken, and the desire persists, therez nothing lost, for u know the chain continues on.... that is why I supp it says

vendiyavatrai, vendiyavaaru muyandru kondirunthaal, YOU WOULD GET IT SOMETIME, SOMEDAY.

Crux : "you are what ur thought is"




:) More here

http://sathyasai.org/devotion/prayers/gayatri.html

:) :ty: