PDA

View Full Version : S.S.Music



R.Latha
9th January 2009, 12:00 PM
[tscii:d2ee3eb865]கமலுடன் நடிக்க ஆசை': 'பி.சி.ஒ' பூஜா

எஸ்.எஸ். மியூசிக்கின் ‘பி.சி.ஒ.' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ‘பூஜா'வை சந்தித்த போது கூறியதாவது:

பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாம் பெங்களூர். அப்பா ராணுவ அதிகாரி, அம்மா, ஒரு தங்கை இதுதான் என் குடும்பம். அப்பாவை திடீரென்று கோவை என்.சி.சி. பிரிவிற்கு மாற்றி விட்டார்கள். இதனால் என் கல்லூரி படிப்பு கோவையிலே அமைந்து விட்டது.

சின்ன வயதில் நேசித்த பெங்களூரில் படிக்க முடியாமல் போனது வருத்தம்தான். வயலின் வாசிக்காதக் குறையாக கல்லூரிக்கு சென்று வந்தேன். என் வாழ்க்கையில் முதல் முதலாக வருத்தப்பட்டது அப்போதுதான்.

கோவை ‘பிஷப் அப்பாசாமி' கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். கல்லூரி வாழ்க்கை எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எனக்கு அப்படி அமையவில்லை.கல்லூரியில் என்னுடன் படித்த 5 பேர்தான் இப்போதும் என் ஃப்ரண்ட்ஸ். அவர்களுடன் இருந்த காலம் மறக்க முடியாதவை.

அப்போது எங்கள் கல்லூரியில் எஸ்.எஸ் மியூசிக் சேனலுக்காக காம்பியர் செலக்ஷன் நடந்தது. அதில் கலந்து கொண்டு செலக்ஷன் ஆனது மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பிறகுதான் சென்னைக்கு வந்து எஸ்.எஸ். மியூசிக்கில் காம்பியரிங் செய்ய ஆரம்பித்தேன். தற்போது ‘பி.சி.ஒ,' ‘டாப் டென் சாங்ஸ்' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். காம்பியரிங் செய்வது ஒரு அற்புதமான விஷயம்.

எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதுவும் ஹீரோயினாக மட்டுமே. அதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் சினிமாவுக்கு வந்து விடுவேன். டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஆர்வம் உண்டு. தற்போது எஸ்.எஸ். மியூசிக்கில் காம்பியரிங் மட்டுமே செய்து வருகிறேன். வீட்டில் தனியாக இருப்பது எனக்கு பிடிக்கும். அந்த நேரங்களில் எல்லாம் புத்தகம், கம்ப்யூட்டர், டி.வி, மியூசிக், டான்ஸ் இவைகள்தான் என் பொழுதுபோக்கு.

ஹிந்தி மற்றும் ஆங்கில சினிமாக்கள் பார்ப்பது பிடிக்கும். ஷாருக்கான் சினிமா ரிலீசான உடனே பார்த்து விடுவேன். தமிழில் ‘வேட்டையாடு விளையாடு' பார்த்தேன் ரொம்ப அருமையாக இருந்தது. கமலுடன் நடிக்க ஆசையாக உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்கள் பிடிக்கும். வருடத்திற்க்கு ஒரு முறையாவது அங்கு சென்று வர வேண்டும் என்பது என் எதிர்காலத் திட்டம்.

‘பேட் மின்டன்,' ‘நீச்சல்' ரொம்ப பிடித்தமானது. நாள் முழுக்க நீந்த சொன்னாலும் நீந்தி கொண்டே இருப்பேன். கர்நாடகத்தில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன் என்றார் ‘பூஜா'.[/tscii:d2ee3eb865]