PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5



Pages : 1 2 3 4 5 [6]

Murali Srinivas
1st December 2009, 12:01 AM
கர்ணன் படப் பாடல்களைப் பார்த்தேன் என்று சொன்னேன். அதில் தோன்றிய சில எண்ணங்கள். மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தின் பாடல்களை ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருப்பதாக பலரும் சொல்லி கேள்வி. அந்த ராகங்களைப் பற்றியும் இந்த பாடல்களைப் பற்றியும் இசை மேதைகள் நிறைய சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். நாம் பாடல் காட்சிகளைப் பற்றி பேசலாம்.

என்னுயிர் தோழி - முதல் பாடல். முத்தான பாடல். ராகம் - ஹமீர் கல்யாணி.

எத்தனை பாடகியர் வந்தாலும் நாம் ஏன் சுசீலாவை அளவுக்கோலாக கொள்கிறோம் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் முதல் சரணத்தில் அரண்மனை அறிவான் அரியணை அறிவான் என்ற இடத்தில் நிறுத்தி ஒரு ஆலாபனை செய்வாரே, அது ஒன்று போதும். இனி காட்சிக்கு வருவோம்.

இந்த பாடல் படமாக்கப்பட்டபோது சாவித்திரிக்கு இரண்டு அசௌகரியங்கள். ஒன்று உடல் எடை கூடி விட்டது. இரண்டு அவர் அப்போது அவரது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். ஆதலால் அவரை அவ்வளவாக ஆட, ஓட விடாமல் படமாக்கியிருப்பார்கள். பாடலின் இடையில் நடிகர் திலகமும் அசோகனும் உள்ளே நுழைய முயற்சித்து ஆடலைப் பார்த்து விட்டு மறைந்துக் கொள்வதாக காட்சி. நடிகர் திலகத்தின் அந்த இரண்டு க்ளோஸ் அப் காட்சிகளாகட்டும் இல்லை லாங் ஷாட் ஆகட்டும் [இத்தனைக்கும் காம்பிநேஷன் இல்லை, சஜ்ஜெஷன் ஷாட்தான்] அந்த முகத்தில்தான் எத்தனை உணர்வுகள் மின்னி மறையும்? இசைக் கருவிகளை வாசிக்கும் தோழியர், பாடும் சேடிப் பெண்கள், ஆடும் நடன மங்கையர் என்று எல்லாமே அழகான லயத்தில் அமைந்திருக்கும்.

கண்கள் எங்கே - ராகம் - சுத்த தன்யாசி.

சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. இந்த பாடலை மட்டுமே ஒரு காஸட்டின் ஒரு பகுதி முழுக்க பதிந்து வைத்திருந்த ஒரு நண்பர் இருந்தார். அவ்வளவு இனிமை. இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் வரமாட்டார். ஆனால் அந்த குறையை தேவிகா போக்கி விடுவார். சரணங்களின் இடையில் தேவிகாவின் ஒரு சில நடன ஸ்டெப்ஸ் நளினமாக இருக்கும். அந்த ஏக்கத்தையும் விரகத்தையும் குறிப்பாக குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் என்ற வரிகளின் போது ரசனையோடு வெளிப்படுத்தியிருப்பார்.

இரவும் நிலவும் வளரட்டுமே - ராகம் - சுத்த சாரங்கி

பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் காட்சி. கர்நாடகாவில் உள்ள பேலூர் - ஹளபேடு கோவிலில் படமாக்கப்பட்ட காட்சி. சுசீலா ஆலாபனை ஆரம்பிக்கும் போதே தியேட்டர் களை கட்டி விடும். நடிகர் திலகத்தின் ராஜ நடை, காலை வளைத்து நிற்கும் போஸ், நாயக நாயகியரை மட்டும் போஃக்கஸ் செய்யாமல் அரண்மனையின் சிற்ப அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையாளன் உணரும் வண்ணம் அமைக்கப்பட்ட காமிரா கோணங்கள், நடிகர் திலகம் - தேவிகா இடையிலான கெமிஸ்ட்ரி இவை அனைத்தும் வெளிப்படும் ஒரு சிறந்த பாடல்.

கண்ணுக்கு குலம் ஏது - ராகம் - பஹடி

முதலிரவு பாடல். ஆனால் சோகத்தில் ஆரம்பித்து மகிழ்ச்சியில் முடியும். தன் குலத்தையும் பிறப்பையும் கேவலப்படுத்தி விட்ட கோவம் கர்ணனுக்கு. அது மட்டுமல்ல, மனைவியே தன்னை உதாசினப்படுத்திவிட்டாள் என்ற எண்ணம். மனைவி தவறு செய்யவில்லை என்றவுடன் சிறிது மகிழ்ச்சி அடைந்து பிறகு மனைவியின் பாடல் வரிகள் எப்படி மனதுக்கு சாந்தி அளிக்கின்றன என்பதை வெறும் முகபாவங்களிலேயே காட்டியிருக்கும் நேர்த்தி. குலத்தை விட குணமே சிறந்தது என்பதற்கு கண்ணதாசனின் வரிகள் மிக அழகாக விளக்கம் கொடுக்கும். இதில் குறிப்பிட தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் உள்ளே ஒரு மனப்போராட்டம் நடக்கும் போது வெளியே சேடிப் பெண்கள் ஆடிக் கொண்டிருப்பர். அதாவது உள்ளே நடப்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் உள்ளே ஒரு முதலிரவு கொண்டாட்டம் நடக்கிறது என்று நினைத்திருப்பர். இது ஒரு லாஜிக்கலான காட்சியமைப்பு.

மேலும் பேசுவோம்.

அன்புடன்

பாடல்களின் ராகங்களைப் பற்றிய விவரங்கள் அளித்த ராகபிரவாஹம் இணையதளதிற்கு நன்றி.

saradhaa_sn
1st December 2009, 03:07 PM
I wish to quote the incident narrated by Shankar-Ganesh.

NT the directors actor

1. Quoted by Director Durai.

2. Quoted by ACT.

3. NT: A true artist.
Quoted by 'Chithralaya Gopu'


4. NT: A great observer
Quoted by VVS

5. NT: with nice sense of humour
Quoted by ARS.

6. NT: admired by MGR
Quoted by Kalaignanam.
தனுஷ்... அருமையான தொகுப்பு.

ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு விஷயம் கவனித்தீர்களா?. அதில் பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும், நடிகர்திலகம் பற்றிய ஏதேனும் அபூர்வ தகவல்களை தவறாமல் சொல்லுகின்றனர்.

கொஞ்சம் ஏமாற்றமளித்தது இயக்குனர் சி.வி.ராஜேந்திரனின் நிகழ்ச்சிதான். நடிகர்திலகம் பற்றி அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம். ஒருசிலவற்றை மட்டுமே, அதுவும் லேசாக கோடிட்டதோடு சரி. ஏன் அப்படி..?.

சில விஷயங்கள் ரொம்பவே மனதைத்தொட்டன... கோடம்பாக்கம் மேம்பாலத்தில் கைரிக்ஷாவை பாதியில் நிறுத்திவிட்டு, "திருலோக்.. எனக்கு மாரை வலிக்குது" என்று துடித்தது.

ஏ.ஆர்.எஸ்ஸிடம் "இன்னுமா அந்தக்கடவுள் நீங்க பாடுறதைப் பொறுத்திக்கிட்டிருக்கான்?" என்று கிண்டலாக கேட்டது.

saradhaa_sn
1st December 2009, 03:50 PM
டியர் முரளி...

கர்ணன் பட பாடல்கள் பற்றிய ஆய்வு அருமை. அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம் தான் கர்ணன் திரைப்படம். அதைப்பற்றி பேசப்பேச புது புது விஷயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும்.

'என்னுயிர் தோழி' பாடல் முழுக்க முழுக்க சுசீலாவின் பாடல். சாவித்திரி ஜஸ்ட் உச்சரிக்கும் வாய். அவ்வளவுதான். ஃபுல் டாமினேஷன் சுசீலாதான், குறிப்பாக நீங்கள் சொன்ன அந்த ஆலாபனை.

ஆனால் 'கண்கள் எங்கே' பாடலின் சிறப்பில் பாதிப்பங்கு எங்கள் 'தேவிக்குட்டி'க்கு சேரும். (தேவிகாவுக்கு எங்க அம்மா வயசு. ஆனால் பாசம், பிரியம்னு வரும்போது மரியாதையை சற்று தளி வைப்பதில் தவறில்லை). 'பீப்பாய்'ஆகவும் இல்லாமல், 'உலக அழகியா'கவும் இல்லாமல் அளவான அழகான ஒரு தோற்றம். ('அதென்ன உல்க அழகி'ன்னு கேக்கறீங்களா?. அதாங்க, எலும்புக்கூட்டுக்கு மேல தோல் போர்த்தியதுபோல). அதற்கு மெருகு சேர்க்கிறாற்போன்ற அந்த அழகுச்சிரிப்பு... அய்யோ. அந்தக்காலத்தில் கர்ணன் பார்த்துட்டு எத்தனை ஆண்கள் தூக்கத்தை தொலைத்தார்களோ தெரியலே.

இந்தப்பாடல் முடிந்து ஐந்தே நிமிடங்களில் 'இரவும் நிலவும் வளரட்டுமே' பாடல். இடையில் ஒரே காட்சி மட்டும்தான், அது மிக முக்கிய காட்சியான தாயம் விளையாடும் காட்சி ('எடுக்கவோ கோர்க்கவோ'). அந்தப்பாடலிலும் 'தேவிக்குட்டியின்' ட்ரெஸ் மிக அழகாக இருக்கும். அவரது அழகைப்பார்ப்பதா?. எங்கள் கர்ணனின் கம்பீர நடையைப்பார்ப்பதா?. கண்ணதாசனின் வரிகளை ரசிப்பதா?. இடையிசையில் டபுள் ஷெனாய் கொடுக்கும் 'விஸ்வா ராமு' வின் இசைவெள்ளத்தில் மிதப்பதா?. காட்சியமைப்பை ரசிப்பதா? போங்கண்ணா.. (பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவிலுள்ள Belur & Halabed கோயில்)

அதனால்தான் வாரம் ஒருமுறையாவது 'கர்ணன்' எங்கள் வீட்டு நடுக்கூடத்துக்கு வந்து விடுகிறான்.

RAGHAVENDRA
1st December 2009, 05:27 PM
இளைய திலகம் பிரபுவின் திரையுலக சாதனைகள், பட விவரங்கள் பற்றிய புதிய இணையதளம், www.ilaiyathilagamprabhu.com, துவங்கப் பட்டுள்ளது. தற்போதைக்கு முகப்பு மட்டும் மிக மிக விரைவில் முழு அளவில் வடிவம் பெறும்.

தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்

ராகவேந்திரன்

Murali Srinivas
1st December 2009, 11:35 PM
மழை கொடுக்கும் கொடையும் - ராகம் ஹிந்தோளம்

கர்ணனின் அரசவையில் புலவர்கள் பாடும் பாடல் தொகுப்பில் இடம் பெறும் முதல் பாடல். சீர்காழியின் கம்பீர குரலில் ஒலிக்கும். நடிகர் திலகம் நடந்து வந்து அந்த சிம்மாசனத்தில் அமரும் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

நாணி சிவந்தன மாதரார் கண்கள்

திருச்சி லோகநாதனின் குரலில் பாடல் ஒலிக்க பெண்களையும் புலவர்களையும் ரிஷிகளையும் வரிகளுக்கேற்ப காட்டி விட்டு தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே என்ற வரிகளின் போது நடிகர் திலகத்தின் கரங்களை க்ளோஸ் அப்பில் காட்ட செவ்வரி ஓடியிருக்கும்.

இந்த காட்சி முடிந்தவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஓடி வந்து பாடசாலையில் சேர்க்க மறுக்கிறார்கள் எனும் காட்சி. [உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என்ற வசனத்தின் போது கைதட்டல் பறக்கும்].

ஆயிரம் கரங்கள் நீட்டி

தன் தந்தையான சூரியனை வழிப்பாடு செய்து கர்ணனும் குழுவினரும் பாடும் பாடல். சம்ஸ்கிருத மந்திரங்களை சொல்லும் வேத விற்பனர்களை தாங்கள் தங்கியிருந்த பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்கள் பாடும் அதே ராகத்தில் கண்ணதாசன் வரிகள் எழுதி மெல்லிசை மன்னர்களால் இசை அமைக்கப்பட்டது என்று சொல்லுவார்கள். டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடும் இந்த பாடலில் தனியாக "அழைக்கும் ஓர் உயிர்களுகெல்லாம்" என்ற வரியின் போது டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட நடிகர் திலகத்தின் வாயைசைப்பு ஆஹா! [இத்தனைக்கும் லாங் ஷாட் அதுவும் பக்கவாட்டில் காமிரா மூவ்மென்ட்].

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் - ராகம் ஹம்சநந்தி

தன் மகனான அர்சுனனுக்காக இந்திரன் வந்து கவச குண்டலங்களை யாசகம் கேட்கும் காட்சி. பி.பி.எஸ். உருக்கியிருப்பார். வந்திருப்பது யார் என்பதை சொல்லி எந்த காரணத்திற்காக வந்திருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டு சூரிய பகவான் எச்சரிக்க அதையும் மீறி கர்ணன் உடலோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்களை தானம் கொடுக்கும் காட்சி. இதில் கூட மனித வடிவிலே வந்திருக்கும் இந்திரனிடம் அவரது நோக்கத்தை குத்திக் காட்டும் கர்ணன்.[தள்ளாடும் தேகம் ஆனால் தள்ளாடாத நோக்கம்] வேடம் கலைந்த இந்திரன் தன் சுயரூபத்தில் காட்சி தர நொடி நேரத்தில் கை கூப்பி கால் மடக்கி தேவேந்திரா என வணங்கும் பணிவு. அவன்தான் நடிகன்.

போய் வா மகளே - ராகம் ஆனந்த பைரவி.

தாய் வீட்டிற்கு செல்லும் சுபாங்கியை துரியோதனன் மனைவி பானுமதி வழியனுப்பி வைப்பதாக வரும் பாடல். ஒரு மாறுதலுக்கு சூலமங்கலம் பாடியிருப்பார். மனைவி செல்வதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்கும் கர்ணன் - அந்த பாவங்கள் பாடலின் ஆரம்ப வரிகளில் அவர் முகத்தில் வெளிப்படும். பாடல் செல்ல செல்ல மனம் சிறுது சிறுதாய் மாறுவதை காண்பித்து பாடலின் இறுதியில் மாளிகையின் வாசலில் மனைவி தேர் ஏறும் காட்சியில் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைப்பதை இவ்வளவு convincing ஆக வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

மஞ்சள் முகம் நிறம் மாறி - ராகம் பீலு

தந்தையால் அவமானப்படுத்தப்படும் சுபாங்கியின் வளைக்காப்பு நிகழ்ச்சியை கர்ணனின் அரண்மனையில் கொண்டாடும் பாடல். நடுவில் வரும் சரணம் மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி என்பது மட்டும் ஆரபியில் வரும். இதிலும் உப்பரிக்கையில் நின்று பார்க்கும் நடிகர் திலகம். அதிலும் குறிப்பாக கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா எதிர்காலத்தில் இந்த தேசத்தில் கருணை செய்வான் அல்லவா என்ற வரிகளின் போது அந்த முகம்! வாய்ப்பே கிடையாது. மகனை போர்களத்திலே பலி கொடுத்து உயிரற்ற அவனது அந்த உடலை சுமந்து கொண்டு வந்து தன் மாளிகையில் கிடத்தும் போது இதே வரிகள் பின்னணியில் ஒலிக்க அப்போது அதே முகம் எப்படி மாறும்!

மேலும் பேசுவோம்.

அன்புடன்

பாராட்டுகளுக்கு நன்றி சாரதா. சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டு விட்டது.

RAGHAVENDRA
2nd December 2009, 12:28 AM
டியர் முரளி சார், சகோதரி சாரதா மற்றும் நண்பர்களுக்கு,
நடிகர் திலகம் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறி விடுவார் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. ஆனால் உண்மையில் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனையும் கவனிப்பார். அந்த அளவுக்கு அவர் தன்னுள் தன்னை அடக்கி வைத்திருக்கக் கூடிய வல்லமை பெற்றவர். ஆனால் கர்ணன் கதாபாத்திரம் உண்மையாகவே அவருக்குள் உள்ளது. ஆம், நிஜ வாழ்க்கையில் கர்ணனாகவே வாழ்ந்து காட்டினார். தான் சம்பாதித்ததைத் தானம் செய்தார், தயாரிப்பாளரைக் கைகாட்டி விட்டு பெயர் வாங்கும் வேலை செய்யவில்லை.
இந்த வளைகாப்பு பாடலுக்கு வருவோம். இப் பாடலின் இறுதியில் நடிகர் திலகத்திற்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ஒரு விருத்தம் உண்டு. சங்கினால் பால் கொடுத்தால் .... என்று துவங்கும். இன்றும் அப் பாடல் அக்காலத்தைய 78 ரிக்கார்டுகளில் கேட்கலாம். யாரிடமாவது இருந்தால் அதை அப்லோடு செய்து கேட்டுப் பார்த்தால் மெல்லிசை மன்னர் எந்த அளவிற்கு சிரத்தையுடன் அப்பாடலை உருவாக்கியுள்ளார் என்பது தெரிய வரும்.
மற்ற படி இது போன்று மேலும் பல படங்களைத் தங்கள் மூலம் நாங்கள் அறிய ஆவலாய் உள்ளோம்.

ராகவேந்திரன்

rangan_08
2nd December 2009, 06:57 PM
Murali sir, wonderful compilation of Karnan songs. The Master Sridhar scene which you have quoted is one of my fav. scenes in the film. " En inamada nee.." endru garjippar parungal...wow ! :notworthy:

Raghavendra sir, wishing all the best for Prabhu's website.

rangan_08
2nd December 2009, 06:59 PM
[tscii:fc50d52639]Last week my colleague bought a new DVD player and he asked me do I have any NT films. I said, “ enna ippadi kaekureenga, ungalukku enna venum……”, and gave him the nuggets which includes Gowravam, Thangapadakkam, Paasa malar, Babu & Navarathiri.

Later, he said that after watching Gowravam, his daughter who is about 11 years old, asked him, “ Ivanga rendu perukkum vera vera aal kural kuduthirukangala, illa avarey pesi irukkara. “ !!!. And his son, who is about 8 years old, also liked the film. I was so glad to hear it since that was my intention after all, to induce NT’s magic among children.

Whenever I get a chance to watch NT’s movies along with children and youngsters , I try to give them as much as, information I know, as possible. I used to tell them, “ See, nowadays we have internet and other reference materials readily available. But in those days, where did this gentleman sourced his inspiration from ??? If you tell them in proper manner, I’m sure they will pay attention and begin to recognize the genius of NT.

I know it’s a difficult task to persuade today’s younger generation to shun away from “ kariyada pariyada “ and other “ jodi “ programmes. But, we are not going to lose anything by giving it a shot.

Once smitten by the bug, you can be satisfied that the job is done.
[/tscii:fc50d52639]

NOV
2nd December 2009, 07:05 PM
Rangan, all three of my children are firm Sivaji fans. They even cried at the climax of Vietnam Veedu. :P

rangan_08
2nd December 2009, 07:07 PM
Rangan, all three of my children are firm Sivaji fans. They even cried at the climax of Vietnam Veedu. :P

Nice to hear that NOV. And, what a co-incidence !!! NT also had 3 children in Vietnam Veedu !! :D

NOV
2nd December 2009, 07:10 PM
Rangan, all three of my children are firm Sivaji fans. They even cried at the climax of Vietnam Veedu. :PNice to hear that NOV. And, what a co-incidence !!! NT also had 3 children in Vietnam Veedu !! :DNow you are making me worried :shaking:

rangan_08
2nd December 2009, 07:14 PM
Rangan, all three of my children are firm Sivaji fans. They even cried at the climax of Vietnam Veedu. :PNice to hear that NOV. And, what a co-incidence !!! NT also had 3 children in Vietnam Veedu !! :DNow you are making me worried :shaking:

:lol:

Don't worry NOV. You can always stand on your own legs :D .

Murali Srinivas
3rd December 2009, 12:29 AM
இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.

மரணத்தை எண்ணி - ராகம் நாட்டை.

குருஷேத்ர யுத்த பூமியில் தன் சுற்றத்தார் அனைவரும் தன் எதிரணியில் நிற்பதை பார்த்து மனம் தளரும் அர்ஜுனன், அவர்களை எப்படி எதிர்த்து போராடுவது, அவர்களை எப்படி கொல்வது என்று மனம் பேதலித்து காண்டீபத்தை நழுவ விட, கிருஷ்ணா பரமாத்மா கீதோபதேசம் செய்யும் காட்சி. கீதை என்ற மாபெரும் தத்துவக் கடலை கண்ணதாசன் தனக்கே உரிய எளிய பாணியில் அழகாக விளக்கிட மெல்லிசை மன்னர்கள் இந்த வசன பாடலுக்கு பொருத்தமான இசையை கோர்த்திருக்க சீர்காழி கன கம்பீரமாய் முழங்கிய பாடல். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை கவியரசு

மானிடர் ஆத்மா மரணம் இல்லாதது
மறுபடி பிறந்திருக்கும்
மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்

என்று வெகு எளிமையாக புரிய வைத்திருப்பார்.

ஆசாபாசங்களை கடந்த பெரியவர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தை சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து. அதாவது அனைத்தும் பகவான் கிருஷ்ணனையே சேரும். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க வண்ணம் கண்ணதாசன்

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான்
கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்

என சொல்லும் போது அதை உள்வாங்கும் மனிதர்கள் தியேட்டரில் முழங்கும் கைதட்டல் ஒலியை நேரில் கேட்க வேண்டும். இதை சரியான வாய் அசைப்போடு என்.டி.ஆர் செய்து விட்டு பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதும் போது மொத்த பார்வையாளர்களும் யுத்தத்திற்கு தயாராகி விடுவார்கள். அற்புதமான பாடல்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.

படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.

இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா; நானும்
உன் பழி கொண்டேனடா

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
வஞ்சகன் கண்ணனடா.

பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.

மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

மீண்டும் பேசுவோம்.

அன்புடன்

abkhlabhi
3rd December 2009, 12:07 PM
Murali,

Waiting for the Maharajan Song, though not in the film. One of the best song in Karnan

saradhaa_sn
3rd December 2009, 05:41 PM
நேற்றைய சிங்கதமிழன் சிவாஜி நிகழ்ச்சியில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தனது அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொண்டார். தான் இயக்கிய கவரிமான், ரிஷிமூலம் படங்களின் முக்கிய காட்சிகளைப்பற்றிச்சொல்லி அவற்றை ஒளிபரப்பியவர், மற்ற படங்களான தில்லானா, தெய்வமகன் போன்ற படங்களின் காட்சிகளையும் ஒளிபரப்பினார். வழக்கமாக தெய்வமகன் படக்காட்சியை ஒளிபரப்புவோர், மூன்று சிவாஜிகள் தோன்றும் அந்த 'ப்ளாங்க் செக்' காட்சியைத்தான் போடுவார்கள். நேற்று ஒரு மாற்றமாக கிளைமாக்ஸ் காட்சியை ஒளிபரப்பினார். ஆகா, அந்த கண்ணன் பாத்திரத்தில்தான் என்ன ஒரு பெர்ஃபார்மென்ஸ். அதற்கு ஈடு கொடுத்து பண்டரிபாய் செய்திருக்கும் அற்புதம். (தெய்வமகனிலும், கௌரவத்திலும் ஜெயாவும் உஷாவும் டூயட் கதாநாயகிகளாக இருக்கலாம். ஆனால் கதையின் நாயகி பண்டரிம்மாதான்).

எஸ்.பி.முத்துராமனும், அன்னை இல்லத்தின் விருந்தோம்பல் சிறப்புகளை எடுத்துரைத்தார். அதை இன்றளவும் அவரது வாரிசுகளான சகோதரர் ராம்குமாரும், இளையதிலகமும் மாறாமல் கடைபிடித்து வருவதையும் சொல்லிப் பெருமைப்பட்டார்.

ஷூட்டிங்கின்போது, தன்னுடைய காட்சியில்லாவிட்டாலும் செட்டை விட்டு வெளியில் போகாமல் மற்றவர்களின் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்துக்கொண்டிருப்பார். யாருடைய நடிப்பிலாவது திருத்தம் சொல்ல நினைத்தால் அதை அவர்களிடம் நேரடியாகச் சொல்லாமல், இயக்குனருக்கு மதிப்பு கொடுத்து, 'முத்து, அவரை இப்படி செய்யச்சொல்லேன். நன்றாக இருக்கும்' என்பார். இயக்குனர் 'பிரேக்' சொல்லாமல் செட்டை விட்டு வெளியே போகமாட்டார். அதுபோல 'பேக்-அப்' சொல்லாமல் வீட்டுக்குப்போக மாட்டார். (இப்போது படப்பிடிப்பில் ஐந்து நிமிடம் இடைவெளி கிடைத்தாலும், ஓய்வெடுக்க இரட்டை ஏ.சி. பொருத்திய 'காரவன்' வேன் கேட்போருக்காக இதைச்சொன்னார்). எவ்வளவுதான் முண்டியடித்து, 'இன்றைக்கு காலையில் சிவாஜி சாருக்கு முன்னால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப்போய்விட வேண்டும்' என்று ஓடினாலும், அதற்கு முன்னால் சிவாஜி சார் அங்கு இருப்பார் என்றார்.

மொத்தத்தில் ஒரு மாணவன் தன் ஆசிரியரைப்பற்றி பெருமையோடு பேசியது போலிருந்தது.

groucho070
4th December 2009, 07:45 AM
Murali-sar, just when other NT mythical/historical films threatens Karnan as my fav film of that genre, here comes a reminder why Karnan remains the greatest in that much forgotten gem of a genre. Superb re-creation of the song and the sequence in your writing. Thank you, sir.

Saradha mdm, thanks for the info.

rangan_08
5th December 2009, 01:00 PM
உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.



பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது.

:exactly:

Obviously, this is not a continuous shot. But throughout the song, NT will maintain the pain & helplessness on his face. Another acting lesson which explains " continuity ".

rangan_08
5th December 2009, 01:05 PM
Tit bit from today's Ananda Vikatan :

Director Shankar's mother was a pregnant lady when she watched " Kungumam ", in which NT's character's name is Shankar. Immediately she decided that if it happens to be a boy child, he should be named after this character. And, yes, it was a boy and here we have Director Shankar.

Whenever this mother calls her son by his name, will she not be reminded about NT and his character in Kungumam.

Now, this is what I call a real tribute.

Murali Srinivas
7th December 2009, 11:50 PM
Thanks Rakesh, Bala and Mohan. System was down for couple of days and so couldn't reply or continue.

Bala,

Would write about it.

Regards

Murali Srinivas
9th December 2009, 12:24 AM
படத்தில் இடம் பெற்ற ஆனால் எழுத விட்டு போன பாடல்.

மன்னவர் பொருள்களை கைக் கொண்டு நீட்டுவார்.

அரசவையில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று. கர்ணனின் வள்ளல் தன்மையை விளக்கும் பாடல். வழக்கம் போல் டி.எம்.எஸ். மெருகு படுத்தியிருப்பார். உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல்.

படத்தில் இடம் பெறாமல் ஆனால் மக்கள் மனதில் இடம் பெற்ற பாடல்.

மகாராஜன் உலகை ஆளலாம் - ராகம் கரகரப்ரியா

படத்தில் இடம் பெறாமல் போனாலும் ஏராளமான மக்கள் மனதில் நிரந்தரமாக தங்கியுள்ள பாடல். இந்த பாடலை எப்படி விட்டார்கள் என்பது புரியாத புதிர். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பேன். அதிலும் நடிகர் திலகம் - தேவிகா ஜோடி எனும் போது பாடல் காட்சி மிக பிரமாதமாக வந்திருக்கும். நடிகர் திலகத்தின் ஸ்டைல்-க்கு இந்த பாடல் மிக பொருத்தமாக அமைந்திருக்கும். அதிலும் சில வரிகள்

பாதத்தில் முகம் இருக்கும்
பார்வை இறங்கி வரும்
வேகத்தில் லயித்திருக்கும்
வீரம் களைத்திருக்கும்

வரும் போது நடிகர் திலகம் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கும்.

ஒரு சில படங்களில் பதிவு செய்யப்பட்ட நல்ல பாடல்கள் இடம் பெறாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். உதாரணத்திற்கு இரத்த திலகம் படத்தில் தாழம்பூவே தங்க நிலாவே, வசந்த மாளிகையில் அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன போன்றவற்றை குறிப்பிடலாம். கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு தரம் ஒரே தரம் பாடலாவது சுமதி என் சுந்தரியில் இடம் பெற்றது. மேற் சொன்ன பாடல்கள் வரவே இல்லை. அந்த வரிசையில் மகாராஜன் உலகை ஆளலாம் முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு முறை எம்.எஸ்.வி அவர்களை பற்றி இளையராஜா சொல்லும் போது மகாராஜன் உலகை ஆளலாம் பாடல் ஒன்று போதும். தமிழ் திரை இசை இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும் என்றார். அதுதான் இந்த பாடலின் வெற்றி.

அன்புடன்

saradhaa_sn
9th December 2009, 02:25 PM
மகாராஜன் உலகை ஆளலாம் - ராகம் கரகரப்ரியா

படத்தில் இடம் பெறாமல் போனாலும் ஏராளமான மக்கள் மனதில் நிரந்தரமாக தங்கியுள்ள பாடல். அதிலும் நடிகர் திலகம் - தேவிகா ஜோடி எனும் போது பாடல் காட்சி மிக பிரமாதமாக வந்திருக்கும்.
டியர் முரளி,
மிகச்சரியாகச்சொன்னீர்கள். நமக்குத்தான் கொடுப்பினையில்லை.


ஒரு சில படங்களில் பதிவு செய்யப்பட்ட நல்ல பாடல்கள் இடம் பெறாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். உதாரணத்திற்கு இரத்த திலகம் படத்தில் தாழம்பூவே தங்க நிலாவே, வசந்த மாளிகையில் அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன போன்றவற்றை குறிப்பிடலாம்.
அப்படி விடுபட்டுப்போன இன்னொரு அருமையான பாடல்
'தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்' (பாலும் பழமும்)

வசந்தமாளிகையில் இடம்பெறாமல் போன 'அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன' பாடல் பற்றிச் சொல்ல வேண்டும்.

ஒருமுறை பிலிமாலயா இதழில் பாலமுருகன் சொல்லியிருந்தார். இப்பாடல் மலைவாழ் மக்களிடையே சிவாஜியும் வாணிஷ்ரீயும் ஆடிப்பாடும் காட்சிக்காக எழுதி இசையமைக்கப்பட்டதாம். பாடலின் இடையே காதலர்கள் பாடிக்கொள்வதுபோன்ற வரிகள் இடம் பெற்றிருந்ததாம். ஆனால் அந்தக்காட்சி வரும் சமயத்தில் சிவாஜிக்கும் வாணிக்கும் இடையில் காதல் உண்டாகியிருக்கவில்லை (அதுவரை 'இளைய ஜமீன்தார் - செக்ரட்டரி' உறவுதான்). சிவாஜிக்காவது வாணி மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் வாணிக்கு அப்படி ஒரு எண்ணமே அதுவரை வந்திருக்காது. அந்த சமயத்தில் இந்தப்பாடலை வைத்தால் அபத்தமாக இருக்கும் என்பதாலும், ஏற்கெனவே சிவாஜி பற்றி வாணி இப்படிப்பட்ட காதல் வரிகளைப்பாடிவிட்டால், பின்னர் 'வசந்தமாளிகை கண்ணாடிக்காட்சி'க்கு ("என் இதயத்தில் குடியிருக்கும் அந்த தேவதையைப்பார்க்க வேண்டுமா?. உள்ளே சென்று பார். அங்குதான் அவள் இருக்கிறாள். என் இதயமும் இருக்கிறது") அவ்வளவு எஃபெக்ட் இருக்காது என்று கருதியதாலும், எல்லோரும் முடிவு செய்து இப்பாடலை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வெறும் இசைக்கு ஆடுவதாகக் காட்டிவிட்டார்களாம்.

Irene Hastings
9th December 2009, 03:17 PM
சரியாகச்சொன்னீர்கள் திரு முரளி . நம் நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைக்காவியத்தில் ஒரு அற்புதமான பாடலான
என்னை தொட்டு சென்றன கண்கள். ஏக்கம் தந்தே சென்றன கைகள்.

கைவிடப்பட்டது. பி.பி.எஸ். மற்றும் சுசீலாவின் குரலில் அமைக்கப்பட்ட இப்பாடல் ஒரு மேற்கத்திய இசையான வால்ட்ஸை போல இருக்கும்.

kalnayak
9th December 2009, 05:45 PM
Once my brother said one of the Vasantha Maaligai version had 'Adiyamma Raasaathi sangathiyenna' song like its -ve climax scene. Is it true?

RAGHAVENDRA
9th December 2009, 08:48 PM
படத்திலிருந்து நீக்கப் பட்ட பாடல்கள், வேறு படத்துக்கு பயன்படுத்தப் பட்ட பாடல்கள், முதலில் இடம் பெற்று பின்னர் நீக்கப் பட்ட பாடல்கள், இப்படி பல வகையில் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பெற்ற பாடல்கள் பல உண்டு. முரளி சார் குறிப்பிட்டது போல், இதில் முதன்மை வகிப்பது மஹராஜன் பாடல் தான். அதே போல் வசந்த மாளிகை படத்தில் இடம் பெறாமல் போன அடியம்மா ராசாத்தி பாடல் படமாக்கப் படவில்லை. பாடல் மட்டும் பதிவு செய்யப் பட்டது. இப் பாடலுடன் இன்னொரு பாடலும் இதே இருவர் குரலில் பதிவு செய்யப் பட்டு பின்னர் வேறொரு படத்தில் பயன் படுத்தப் பட்டது. அப் பாடல் நெருங்கி நெருங்கி பழகும் போது என்று துவங்கும் நேற்று இன்று நாளை படப் பாடல். இப் பாடல் தற்செயலாக இப் படத்தில் இடம் பெற்றது. இதன் கூட பதிவு செய்யப் பட்டு பயன்படுத்தப் பட்ட மற்றொரு பாடலும் உண்டு. அது பட்டிக் காட்டுப் பொன்னையா படத்தில் இடம் பெற்றது. இந்த மூன்று பாடல்களும் ஒரே சமயத்தில் பதிவு செய்யப் பட்டன. ஒரு தயாரிப்பாளருக்காக உருவாக்கிய பாடல் வெவ்வேறு தயாரிப்பாளர்களால் பின்னர் பயன்படுத்தப் பெற்றன.
அதே போல் பார் மகளே பார் படத்தில் என்னைத் தொட்டு பாடலும் படத்தில் இடம் பெற்ற பாடல் தான். நானே அப்பாடலைப் பார்த்திருக்கிறேன். நெகடிவ் பிரதி எடுக்கும் போது அப்பாடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் அப்பாடலை மறு பிரதி எடுக்க முடியாமல் கைவிட்டதாகவும் கேள்வி. தாழம்பூவே பாடல் படமாக்கப் படவில்லை எனவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ராகவேந்திரன்

Murali Srinivas
9th December 2009, 11:56 PM
நன்றி சாரதா.

வசந்த மாளிகையில் அடியம்மா ராசாத்தி பாடல் இடம் பெறாத காரணம் பற்றி பாலமுருகன் சொன்னது சரியான பாயிண்ட்.

ராகவேந்தர் சார்,

பார் மகளே பார் படத்தில் என்னை தொட்டு சென்றன பாடல் முதலில் இடம் பெற்றது என்ற செய்தியை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். முத்துராமன் விஜயகுமாரி டூயட் பாடலா அது?

நன்றி ஹேஸ்டிங்ஸ்

அன்புடன்

Irene Hastings
10th December 2009, 09:43 AM
முரளி சார்,

இப்படத்தில் இரு இளம் ஜோடிகள். ஒன்று, ஏ.வி.எம்.ராஜன் - புஷ்பலதா . மற்றும் முத்துராமன் - விஜயகுமாரி.

அக்காலத்தில் முத்துராமனுக்கு ( ஜெமினியை தவிர ) பி.பி.எஸ். அதிகம் பாடியுள்ளார். எனவே, நான் இப்பாடலும் முத்துவிர்கு தான் என எண்ணுகிறேன்.

இப்படத்தின் ஒரு வியத்தகு அம்சத்தை பார்த்தீர்களா !! நம் நடிகர் திலகத்தின் வயது மிக மிக சிறயது அப்போது. ஆனால் அவர் செய்த வேடமோ ஒரு 45-50 வயது தந்தை. இது ஒன்றே போதும், அவர் காலத்தை வென்றவர் என்பதற்கு.

ஓரு வேண்குகோள் விடுக்கிறேன். என்னால் முடிந்தவரை இத்திரைகாவியத்தினை பற்றி எழுதுகிறேன் சகோதரி சாரதாவின் அனுமதியோடு. பகுதி பகுதியாக எழுதுகிறேன். நன்றி.

saradhaa_sn
10th December 2009, 10:48 AM
என்னால் முடிந்தவரை இத்திரைகாவியத்தினை பற்றி எழுதுகிறேன் சகோதரி சாரதாவின் அனுமதியோடு. பகுதி பகுதியாக எழுதுகிறேன். நன்றி.
Dear Irene Hastings,

இந்த வரிகளை எதற்கு எழுதினீர்கள் என்பதுதான் தெரியவில்லை.

சர்ச்சைகளுக்குள் விழாத வகையில், மாடரேட்டர்களின் ஆட்சேபத்துக்கு ஆளாகாத வகையில் இங்கு யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அதிலும் போயும் போயும் என்னுடைய அனுமதி......????????. நான் யார் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ அனுமதி அளிக்க...????.

எழுத விரும்பியதை நீங்க எழுத வேண்டியதுதானே...!!.

kalnayak
10th December 2009, 10:51 AM
நன்றி ராகவேந்தர் சார் மற்றும் முரளி சார் அவர்களுக்கு.. திரு Hestings அவர்களுக்கு உங்களின் எழுத்தில் 'பார் மகளே பார்' பார்த்திட காத்திருக்கிறேன்.

saradhaa_sn
10th December 2009, 11:17 AM
டியர் முரளி,
பாடல் பதிவுபெற்று படத்தில் இடம்பெறாத பாடல்களில் இன்னொன்று, "யாரோடும் பேசக்கூடாது.... ஆகட்டும்" (ஊட்டிவரை உறவு). பி.பி.எஸ்., ஈஸ்வரி குரல் என்பதால் அது நிச்சயம் முத்துராமன் - எல்.வி. ஜோடிக்காகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு பாடலுக்கு பதிலாக வேறொரு பாடல் இடம்பெற்றதும் சிலமுறை நடந்ததுண்டு....

'பொம்பளையா லட்சணமா பொடவையைக்கட்டு' பாடலுக்கு பதிலாக, 'சிங்கார தேர் கூட திரை மூடிப் போகும்' (இளைய தலைமுறை)

'என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்' பாடலுக்கு பதிலாக 'அம்மானை... அழகு மிகும் கண்மானை' (அவன் ஒரு சரித்திரம்)

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'என் கேள்விக்கென்ன பதில்' பாடல், படத்தில் வந்த VERSION வேறு, இசைத்தட்டில் வந்த VERSHION வேறு. (இசைத்தட்டு வெர்ஷனில் பாங்கோஸ் பயன்படுத்தப்பட, படத்தில் தபேலா பயன்படுத்தப்பட்டிருக்கும். மனதைக்கவர்வது இசைத்தட்டு வடிவம்தான்).

டியர் ராகவேந்தர்,

'நெருங்கி நெருங்கி பழகும்போது' (நே.இ.நாளை) பாடலில் கே.வி.எம் முத்திரை நன்றாகத்தெரிகிறது. முதலில் கே.வி.எம். மாமாவை புக பண்ணிவிட்டு அப்புறம் எம்.எஸ்.வி. அவர்களிடம் மாறினார்களோ என்று நினைத்தேன். நீங்க சொன்னபின் உண்மை புரிந்தது.

rangan_08
10th December 2009, 07:27 PM
Oh! My God !!! so much of informations !!! To be honest, I was not at all aware that so many wonderful gem of songs have been deleted from NT's films. Especially, " Maharajan..". What a song !

Thank you Murali sir, Raghavendra sir, Saradha mam & Irene.

rangan_08
11th December 2009, 06:08 PM
This week's " Singathamizhan Sivaji " was nothing but a repetition of the old episode that featured Kumari Anandhan.

rangan_08
11th December 2009, 06:12 PM
Visu in " Thirumbiparkiren " (Jaya TV) was full of praises for NT. In the 70's he was staying in Ambattur and it was the budding stage of his cinematic career (Ambattur was a remote area during those days ). They had gone to NT's house to invite him for a function which is to be held at Ambattur. Without any hesitation or ego, NT immediately obliged and gave them his word. And, as usual he stuck to his word.

There are so many wonderful qualities that NT, the man posessed and it is heartening and good to hear it from his colleagues, friends, associates & peers.

pammalar
12th December 2009, 10:05 PM
இன்று (12.12.2009) 60வது பிறந்த நாள் காணும் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தமது 46வது பிறந்த நாளான 12.12.1995 அன்று, சென்னை தொலைக்காட்சியின் முதல் அலைவரிசையில் அளித்த பேட்டியில், ஒரு தொலைக்காட்சி நேயரின் கேள்விக்கு அளித்த பதில் :

நேயர் கேள்வி : நடிகர் திலகம் சிவாஜி பற்றி ... ?

ரஜினி பதில் : சிவாஜி சார் பத்தி எவ்வளவோ பேசலாம். அவ்வளவு விஷயமிருக்கு.ஆனாலும் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். என்னை ஸ்டைல் கிங்னு சொல்றாங்க. உண்மையிலேயே ஸ்டைல் கிங் சிவாஜி சார் தான். அவர் ஸ்டைல் கிங் மட்டுமல்ல, ஸ்டைல் சக்கரவர்த்தி !

Happy Birthday Mr. Rajini ! It's a Sweet Sixty for you !! Many More Happy Returns !!!

Regards,
Pammalar.

groucho070
14th December 2009, 08:05 AM
Mentioned many times before, but worth repeating again and again

நேயர் கேள்வி : நடிகர் திலகம் சிவாஜி பற்றி ... ?

ரஜினி பதில் : சிவாஜி சார் பத்தி எவ்வளவோ பேசலாம். அவ்வளவு விஷயமிருக்கு.ஆனாலும் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். என்னை ஸ்டைல் கிங்னு சொல்றாங்க. உண்மையிலேயே ஸ்டைல் கிங் சிவாஜி சார் தான். அவர் ஸ்டைல் கிங் மட்டுமல்ல, ஸ்டைல் சக்கரவர்த்தி ! :thumbsup:

DHANUSU
14th December 2009, 08:51 AM
முரளி சார்,

இப்படத்தில் இரு இளம் ஜோடிகள். ஒன்று, ஏ.வி.எம்.ராஜன் - புஷ்பலதா . மற்றும் முத்துராமன் - விஜயகுமாரி.

அக்காலத்தில் முத்துராமனுக்கு ( ஜெமினியை தவிர ) பி.பி.எஸ். அதிகம் பாடியுள்ளார். எனவே, நான் இப்பாடலும் முத்துவிர்கு தான் என எண்ணுகிறேன்.

இப்படத்தின் ஒரு வியத்தகு அம்சத்தை பார்த்தீர்களா !! நம் நடிகர் திலகத்தின் வயது மிக மிக சிறயது அப்போது. ஆனால் அவர் செய்த வேடமோ ஒரு 45-50 வயது தந்தை. இது ஒன்றே போதும், அவர் காலத்தை வென்றவர் என்பதற்கு.



Another feature of PMP is the acting of VKR. The scene where after being humiliated by NT VKR discloses the secret that one of the daughters is not born to NT in the presence of invitees to a function is a memorable one. Acting of NT as a rich man forgetting his past and humiliating his past friend was simply superb. And the acting of VKR as an affected person was just towering!! And all the coactors also acted well in this scene.



ஓரு வேண்குகோள் விடுக்கிறேன். என்னால் முடிந்தவரை இத்திரைகாவியத்தினை பற்றி எழுதுகிறேன் சகோதரி சாரதாவின் அனுமதியோடு. பகுதி பகுதியாக எழுதுகிறேன். நன்றி.

Irene Hastings
14th December 2009, 10:05 AM
பார் மகளே பார் - முன்னுரை

நண்பர்களே. நம் நடிகர் திலகம் ஒரு பல்கலை கழகம். நடிப்புக்கு ஓர் இலக்கணம் வகுத்தவர். அவர் ஒரு புத்தகம் போல. அதை பார்த்து , படித்து பயன் அடைந்தவர் பலர். இதை இன்று முண்ணனியில் இருக்கும் அனைத்துதரப்பினரும், அவருடன் நடித்த எல்லோரும் ஒரு மனதாக ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

நான் தேர்ந்தெடுத்த ஒரு காவியம் பார் மகளே பார்.

இத்திரைப்படம் 1963ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது நடிகர் திலகத்திற்கு வயது எவ்வளவு தெரியுமா ? 35 தான் . அனால் அவர் ஏற்ற வேடமோ ஒரு 50 வயது பாத்திரம். முதல் 30 நிமிடம் தான் ஒரு இளைனரைபோல வலம் வருவார். மற்றபடி முற்றிலும் ஒரு வயதான தோற்றம் தான். இதுவே ஒரு மாபெரும் சாதனை.

நடிகர் திலகத்தை இயக்கியவர்களில் திரு திருலோக்சந்தர் தான் அதிகம் எடுத்தவர் - 20. திரு மாதவன் எடுத்தவை 17. இப்படத்தை இயக்கிய திரு பீம்சிங் எடுத்தவை 18. அதிலும் நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கால்ம் என்று பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளும் 50 மற்றும் 60களில் இவர் ( பீம்பாய் என அன்புடன் அழைக்கப்பட்டவர் ) 18 படஙகளை கொடுத்தார். அவை :

1. ராஜா ராணி - 1956
2. பதிபக்தி - 1958
3. பாகப்பிரிவினை - 1959
4. படிக்காத மேதை - 1960
5. பெற்ற மனம் - 1960
6. பாவ மன்னிப்பு - 1961
7. பாச மலர் - 1961
8. பாலும் பழமும் - 1961
9. பார்த்தால் பசி தீரும் - 1962
10. படித்தால் மட்டும் போதுமா - 1962
11. செந்தாமரை - 1962
12. பந்தபாசம் - 1962
13. பார் மகளே பார் - 1963
14. பச்சை விளக்கு - 1964
15. பழனி - 1965
16. ஷாந்தி - 1965
17. பாலாடை - 1967
18. பாதுகாப்பு - 1970

ஆம். 1970யுடன் இந்த கூட்டணி முடிந்தது. 60களின் நடுவில் / முடிவில் வந்தவர்கள் ஏ.சி.டி. , மாதவன் போன்றோர்.

நம் நடிகர் திலகத்தின் வெற்றிக்கு ஒரு வகையில் நல்ல கதைகள், நல்ல பாத்திரங்களை கொடுத்தவர் என்ற பெருமை பீம்பாய்க்கு உண்டு என்று சொல்லலாம்.

பீம்சிங் என்றாலே பா வரிசை இயக்குனர் என்று அடையாளம் காட்டுவர் நம் முந்தைய சமூகத்தினர்.

பீம்சிங் பின் எடுத்த படங்களில் மிகவும் பெயர் பெற்றவை - சில நேரங்களில் சில மனிதர்கள் - தேசிய விருது பெற்ற படம். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் . இரண்டும் ஜெயகாந்தன் எழுத பீம்சிங் இயக்கியவை.

சிவாஜி-பீம்சிங் தமிழ் திரையுலகில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய ஒரு பெயர்கள்.


தொடரும் நம் தேடல்

Irene Hastings
14th December 2009, 01:19 PM
பார் மகளே பார் - இப்படம் வருவதற்குமுன் நடிகர்திலகம் நடித்தவை

இப்பொழுது நாம் இத்திரைப்படம் வெளியாகுமுன் நடிகர் திலகம் நடித்தவைகளை பற்றி அலசுவோம். அதாவது 1961- 62வில் நடித்தவை எப்பேற்பட்டவை என்பதை ஒரு கண்ணோட்டம் பார்ப்பது அவசியம். 1952 ( பராசக்தி ) முதல் 1961க்குள் அவர் 70+ படஙகளில் தோன்றியுள்ளார். அதாவது, சராசரியாக ஒரு வருடத்திற்கு 7 படங்கள் ! அவர் அச்சமயத்தில் ஏற்ற வேடங்கள் எந்த ஒரு கலைஞனும் கற்பனை செய்யமுடியாதது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

தெய்வப்பிறவி ---மனைவியின் உயிரினும் மேலான அன்பு கொண்டுவிட்டு, பின்னர் அவரையே சந்தேகம் கொள்ளும்,

படிக்காத மேதை---இறைவனின் பிள்ளை , தன்னை வளர்த்தவரின் குடும்பத்தினருக்கு தன் உயிரையும் கொடுக்க தயங்காத உயர்ந்த உள்ளம் >> பண்பிலே தெய்வனாய்.....பார்வயிலே சேவகனாய்...எங்கள் ரங்கன்...எங்கிருந்தோ வந்தான்

பார்த்தால் பசி தீரும்- நண்பனின் அன்பு மனைவி ( முதல் மனைவி ) கண் பார்வை போக அவர் பிரிந்து வாடும் ஒரு அபலை பெண் மற்றும் சிறு குழந்தை உலக நாயகன் இவர்களை தன் சொந்த சகோதரி போல பாவித்து அதன் விளைவுகளுக்கு தானே பொறுப்பேற்றுகொண்டு அதே நண்பனின் புதிய குடும்பத்தின் நன்மைக்காக எல்லா உண்மைகளயும் மறைத்து வாழும் இக்கட்டான பாத்திரம்

பாவ மன்னிப்பு -----சிறு வயதிலேயே தாய் தந்தையினை பிரிந்து ஒரு இஸ்லாமிய புனிதரின் சமூகத்தில் வளர்ந்து பண்புக்கும், அன்புக்கும் ஒரு இலக்கணமாய் வாழ்ந்த ராம் எனும் ரகீம் ,

பாசமலர் -----சகோதர சகோதரி பாசத்தின் எல்லை . இவர்களை போன்றவர்களும் உண்டோ

பாலும் பழமும் ---- பல மருத்துவர்கள் இவரை பார்த்து..... ஓ நாமும் இப்படி தான் இருக்கவேண்டும் என்று மாற்ற்க்கொள்ளும் அளவிற்கு ஒரு திறமை !! என்ன ஒரு பண்பான பாத்திரம் !

,புனர்ஜென்மம் >>> இவைபோன்ற கதாபாத்திரங்களும், மற்றும் பலே பாண்டியா போன்ற நகைச்சுவை பாத்திரஙகளும்

கப்பலோடிய தமிழன் - இதைப்பற்றி சொல்லவேவெண்டுமா ?திரு வா.வூ.சி.யின் புதல்வரே தன் தந்தையினை மீண்டும் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியவராயிற்றே !!

ஆலயமணி - இவர் நாயகனா அல்லது வில்லனா என்ற வினா நமக்கு எழும்

இவைகளுக்கிடையே ஷ்ரிவள்ளி, மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி >> போன்ற படங்களும் கூட !

இருவர் உள்ளம் - இதை பற்றி என்ன சொல்ல ? பல பெண்களுடன் நட்பு கொண்டு பின்னர் திருந்தி வாழ நினைக்கும் ஒரு கதாபாத்திரம் !

இப்படி பலதரப்பட்ட வேடங்களில் நடித்து நடிகர் திலகம் என்ற பெயரும் பெற்று கோலொச்சிய காலத்திபோது தான் பார் மகளே பார் வந்தது.

தேடுதல் தொடரும்

Irene Hastings
14th December 2009, 02:06 PM
பார் மகளே பார் - கலைஞர்களின் பட்டியல்

ஒரு படத்தின் வெற்றி அல்லது தோவ்விக்கு ஒருவர் மட்டும் பொறுப்பாக இயலாது. இந்த அருமையான படத்தின் வெற்றிக்கு பங்குவகித்தவர்கள் :

நடிகயர் >>> சவ்கார் ஜானகி , விஜயகுமாரி புஷ்பலதா, ருக்மணி ( நடிகை லஷ்மியின் தாயாரும், கப்பலோட்டிய தமிழனில் நடிகர் திலகத்தின் இல்லதரசியும் ) , மனோரமா , தாம்பரம் லலிதா

நடிகர்கள் >>> சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா,வி.கே.ராமசாமி, முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் மற்றும் கருணாநிதி

சோ ராமசாமி இப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்று ஏண்ணுகிறேன்.

கதை >> பெற்றால் தான் பிள்ளையா என்ற நாடகத்தினை தழுவி எடுக்கப்பட்தது !!!!!

திரைக்கதை >> வலம்புரி சோமனாதன்

வசனம் >> ஆரூர்தாஸ்

பாடல்கள் >> கவிஞர் கண்ணதாசன் மற்றும் யோகி சுத்தானந்தபாரதி

இசை >>மெல்லிசை மன்னர்கள்

தயாரிப்பு >> கஸ்தூரி பிலிம்ஸ் , திரு . வி.சி. சுப்பராமன்

இயக்கம் >> பீம்சிங்

தேடுதலின் அடுத்த பகுதி -------->> கதை

Irene Hastings
14th December 2009, 11:01 PM
http://s949.photobucket.com/albums/ad335/Irenehastings/

Some special photos of various moods of Nadigar Thilagam during Par magale par !

RAGHAVENDRA
16th December 2009, 07:02 PM
[tscii:c206539263]Dear Irene Hastings,
Your series of write up on PAR MAGALE PAR has kindled enthusiasm to read more and more. Keep it up.
For a break, a nostalgia from a web page on NT Padmini:

Link: http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/B60D5A42BACFF0FE65256B0E003D41F2?OpenDocument



"Sivaji & Padmini: a retrospective

Clipping (51kbs) - Deccan Herald, 12-08-2001. By A. Bharat

Record Number : A0352309

Click to browse by keyword: Film Industry Film Stars Performance Tamil Cinema




SIVAJI & PADMINI: a retrospective

A BHARAT remembers a screen duo whose careers took off at the same time and who shared an empathy that continued to flourish through all the films the two acted in together.

Let us begin this survey with a breezy romantic exchange between a young man called Sunder whom we discover
lying in bed with a book in an obvious effort to swot up for his examination and the young girl called Sumati who
happens to be the daughter of his landlord and who has just come upstairs with a cup of coffee to help him keep
awake. The young man takes a sip, and looking up at her eager face, says, “Sumati, this coffee is just like you;
your innocent heart resembles the milk, your qualities resemble the sugar in it, and.. and-” As he hesitates,
desperately searching for the appropriate word to complete his simile she she helpfully supplies the word, “and my
colour resembles the coffee powder?”.

When we were watching this witty sequence featuring Sivaji Ganesan and Padmini, back in November 1954, in
Saravanabhava & Unity Films’ Classic Ethirparathathu, we had no reason to suspect that this romantic partnership
which had begun hardly two years earlier in a tepid fashion in a mediocre film called Panam was to span three
decades, chalk up dozens of films and become a legendary one.

Sivaji had burst into films in Parasakti (51) and in his very next film had gained Padmini as his partner. She
however had been in that business for a long time. Throughout the 40s she had been appearing in dance sequences
in AVM films playing second fiddle to her successful elder sister Lalita. She got an adult lead role in Manamagal
the same year as Sivaji. And next year when she appeared as the other woman in Kanchana where her fragile
beauty simply put the heroine in the shade.

If the Sivaji-Padmini duo did not take off in their initial pairing in Panam, they really got the show going in their
second film Anbu (53). The film was actually centered around T R Rajakumari who played Sivaji’s brother’s wife,
but the romantic scenes were all given to the new pair. Who can forget the scene where Sivaji climbs up the stairs
to the opening bars of Padmini’s piano playing and within the span of the song “enna enna inbame” adds
impromptu notes on the piano, decorates her hair with a rose and finally persuades her to accept his proposal - all
without a line of dialogue?

1954 was not only a vintage year for the Tamil cinema with Anda Naal (Sivaji) Malaikallan (MGR) and
Koondukkili (MGR & Sivaji) -- it was also a bumper year for our romantic pair. Out of the seven Sivaji films four
featured Padmini as the female lead.

In Karunanidhi’s Illara Jothi Padmini was an heiress obsessed with a married Sivaji. As was the fashion in those
days the film had a play within the film. And this time it was-Anarkali. The three pages of lamentation Sivaji pours
out on Anarkali’s tomb used to boom out of thousands loudspeakers all over the south as was also the fashion then
when the dialogue sets of the films used to be issued on records along with the songs.

B R Panthulu began his series of films featuring Sivaji that year with Kalyanam Panniyum Brahmachari, a riproaring
comedy in which Sivaji completely outshone the titular comedian T R Ramachandran. But Padmini put both of
them in their places with a dazzling performance aptly symbolized by the romantic duet “Medhaavi pole” wherein
she makes Sivaji literally slap his cheeks and beg her pardon.

Then there was Thookku Thooklu an old chestnut about five riddles which was given fresh life by a witty script,
lovely music by G Ramanathan, the enchanting presence of Padmini with her sisters and an over-the-board
performance by Sivaji. He also found his “voice” T M Sounderrajan in that film Sivaji being a trained dancer
himself found no difficulty in keeping pace with Padmini and Ragini in the hilarious “Kurangilirundu pirandavan”
dance sequence.

The fourth film that year was Ethirparathathu, which was C V Sridhar’s first film script and which was specifically
tailored to fit the talents of the three principals Sivaji Padmini and Nagaiah. Starting like a romantic comedy the film
abruptly turns into tragic paths midway with Sivaji reported dead in a plane crash and Padmini marrying his aged
father Nagaiah. When a blind Sivaji returns to claim his romantic due he encounters a stubborn Padmini with her
own ideas of marital rectitude. In a climactic sequence, in pouring rain Sivaji pours out his heart in a reprise of their
earlier romantic song “Sirpi sedukkada por silaiye”. Drawn irresistibly by that haunting refrain Padmini rushes out
to him and for a few minutes allows herself to participate in his fantasy. Suddenly snapping out of the dream and
suffering a terrible reaction she literally slaps poor Sivaji around savagely and leaving him hurt and sodden in the
mud runs back to the house. Never before or after in their long partnership did they reach the emotional intensity of
this early film.

Kaveri (55) was a lighter film remarkable only for the reprise of Sivaji’s Bharatanatyam. Towards the end, in a
dance sequence, the repetition of the heroine’s name makes Sivaji regain his memory reminding us of Dilip
Kumar’s Shabnam.

The same year the pair chalked up a hit in Mangigyar Tilakam, which was adapted from Bhabhi ki Choodiyan.
Here Padmini played the role which Rajakumari had played in Anbu a couple of years back. Their excellent
performances and the melodious score makes for an extremely satisfying film with Padmini’s visual rendition of the
song “Neelavanna kanna vaada” unforgettably stamped on our mental screen.

Raja Rani (56) with a script by Karunanidhi was an absolutely entertaining Comedy package with a paper-thin
coating of social comment regarding widow remarriage. In true Roman Holiday style Sivaji gives lodging to a
drugged and sleepy Padmini and mistakes her to be a runaway heiress leading to various complications concerning
the other comedy team of N S Krishnan -- T A Maduram. This film had two plays within it, of which the second --
Socrates -- is justly famous. When the villain Rajendran tries to use this play to feed “Socrates” Sivaji with some
real “hemlock”, it is the watchful Krishnan who collars him and brings about a happy ending.

Again in 1957 Karunanidhi came out with an entertaining script for our pair in Pudayal in which Sivaji played a
postman. lt had the novel situation of a love-sick Chandrababu sending translations of Shakespeare’s love poems
to Padmini who promptly tore them off without reading them to the ire of the Shakespeare fan Sivaji who read
them aloud to her thereby starting their romance.

When the writer Sridhar began his own company called Venus Pictures his first film was Uttama Puthiran (58)
based on The Man in the Iron Mask in which Sivaji played more than one role for the first time in his career. The
film had a lovely Padmini, lilting music by G Ramanathan with songs like “Mullai malar mele” and picturisation of a
Padmini dance in Brindavan Gardens.

Through the years Sivaji acted with other heroines like Pandari Bai, Bhanumati, Savitri and so on, and Padmini had
her own series of films with Gemini Ganesan and MGR. But that did not stop the regular flow of Sivaji -Padmini
films like Bhagyavati (57),Thangppadumai (58) which had an early Viswanathan-Ramamurty score featuring songs
including “mugattil mugam paarkkalaam”, Maragadam (59) where Padmini feigns a “dual” role, Deivapiravi (60)
with Sivaji as a contractor and Padmini as a coolie etc.

It is appropriate enough that a legendary partnership should have a classic Finale. There was a popular serial in
Ananda Vikatan by Kottamangalam Subbu called Tillana Mohanambal about a Nadaswaram player and a dancer
which literally called out for the talents of Sivaji and Padmini. Since neither of them were now in their early youth
the emphasis was now on their acting and dancing abilities. In his usual thorough manner Sivaji spent months
watching and perfecting the mannerisms of a Nadaswaram player. His performance in the film is so lifelike one is
instantly reminded of the exactly similar situation of James Stewart playing the title role in the film The Glenn Miller
Story. In both cases the nadaswaram and trombone playing looked genuine enough to fool even experts.

The Sivaji-Padmini partnership was remarkable in that their careers began almost simultaneously and had a parallel
progress and right from their second film together they had developed an empathy which continued to flourish in all
their films. lt is significant that even though Padmini did a large number of films with, say, Gemini Ganesan, nobody
talks of a Gemini-Padmini duo. There is only a Sivaji-Padmini duo. And that’s it."




Raghavendran[/tscii:c206539263]

Irene Hastings
17th December 2009, 09:57 AM
பார் மகளே பார் -கதை பகுதி - 1

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/CopyofImage027.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image028.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image029.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image030.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image032.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image033.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/CopyofImage036.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/CopyofImage037.jpg



http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/CopyofImage034.jpg



மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.

கதை பகுதி - 2 விரைவில்

Irene Hastings
17th December 2009, 12:50 PM
பார் மகளே பார் - கதை பகுதி - 2

நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.

ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.

வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.

தொடரும்.

Irene Hastings
17th December 2009, 02:32 PM
பார் மகளே பார் - கதை பகுதி - 3



http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage046.jpg




http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage047.jpg




http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage048.jpg




http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage049.jpg




http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage050.jpg




http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage053.jpg




http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage054.jpg




ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.

விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.

சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.

சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.



தொடரும்.

Irene Hastings
17th December 2009, 03:21 PM
[tscii:dcb95de235][/tscii:dcb95de235]Dear Friends,
Even while covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him ! :D

Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.

Irene Hastings
17th December 2009, 10:05 PM
பார் மகளே பார் - கதை பகுதி - 4


http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image008.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image009.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image014.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image016.jpg


http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage057.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage058.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage059.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage060.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage061.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage063.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage064.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image010.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image021.jpg



நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "

வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.

சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?

வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே

இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.

வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.

தொடரும்..

RC
18th December 2009, 02:55 AM
[tscii:bb3973d311][/tscii:bb3973d311]Thuli Visham (1954)

K. R. Ramasami, Sivaji Ganesan, S. V. Ranga Rao, Mukkamala Krishnamurthi, D. V. Narayanasami, Krishnakumari, S. D. Subbulakshmi, P. K. Saraswathi, ‘Kaka' Radhakrishnan, T. P. Muthulakshmi, ‘Kottapuli' Jayaraman, ‘ Pottai' Krishnamurthi, ‘Jayakodi' K. Natarajan, Rita, K. Balajee (uncredited).

After his stunning debut in Parasakthi (1952), Sivaji Ganesan played the villain or anti-hero in quite a few films such as Thirumbi Paar, Andha Naal, Rangoon Radha and Goondukili. In Thuli Visham too, he played the villain, pitted against Ramasami, who was then a noted hero, especially after the watershed movie Velaikkari (1949).

Based on a play by well known Tamil writer Chandilyan, who specialised in the historical genre, the film was written and directed by A. S. A. Sami, a successful filmmaker of that day. Produced by V. L. Narasu of Narasu Studios, it was a story of kings, queens and manipulating rajagurus. A greedy king (Ranga Rao) usurps the country of another king (Krishnamurthi), who manages to escape. But before fleeing, he leaves his queen (Subbulakshmi) and son in the custody of the kind hearted rajaguru (Narayanasami) who brings up the prince (KRR) without anybody's knowledge. Wanting to get back his kingdom, the wandering king organises a secret army. Meanwhile, the rajaguru takes the young man to the greedy king and with his influence secures him the job of army commander. The princess (Krishnakumari) falls in love with him. The greedy king sends the commander on a mission to find the deposed king and kill him. The commander sets out on the mission, completely unaware that he is on his father's trail.

Enters another king (Sivaji Ganesan) who seeks the princess' love but is rejected. A court dancer (Saraswathi) also falls in love with the hero. After many twists and turns, the villain's plans are foiled.

Meanwhile, the two women consume a small dose of poison (hence the title) given by the rajaguru. The king excuses everybody's follies and gives the deposed king his crown back. The two women wake up, (shades of Romeo and Juliet!) The poison was only a ruse used by the rajaguru to restore happiness in the kingdom.

A well-woven story, it was tautly narrated by Sami with impressive cinematography by Mastan, one of the finest in south Indian cinema. The music was composed by K. N. Dhandayudhapani Pillai, who also choreographed the dance sequences of Saraswathi and Kerala Sisters. The film was edited by R. Ramamurthi, who later became a successful producer-director in Kannada cinema.

One of the highlights of the film is a sequence where Ramasami and Sivaji Ganesan indulge in a wordy duel which runs for nearly 20 minutes.

Narayanasami (S. S. Rajendran's brother-in-law), a popular figure in Tamil theatre, gives a beautiful, understated performance.

There were many songs in the movie but none of them became popular.

In spite of the presence of Ramasami and Sivaji Ganesan and in spite of the movie having been written by Sami and produced by coffee magnate-turned-film producer V. L. Narasu at his Narasu Studios in Guindy, it did not do well.

The later day star-producer Balajee appears in a single scene un-credited, while his name appears in the credits as ‘Production Assistant'.

Remembered for: the well-woven storyline, fine performances by Ramasami, Sivaji Ganesan and Narayanasami and well-choreographed dance sequences.

RANDOR GUY

Irene Hastings
18th December 2009, 12:43 PM
பார் மகளே பார் - கதை பகுதி - 5


http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image022.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage066.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image025.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image024.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage067.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage068.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage070.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image023.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image026.jpg



நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.

தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.

சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.

சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.

தொடரும்..

Irene Hastings
19th December 2009, 10:06 AM
பார் மகளே பார் - கதை பகுதி - 6

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image071-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image072-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image073-1.jpg


உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.

ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.

ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.



கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..

Irene Hastings
19th December 2009, 10:25 AM
நண்பர்களே,

இந்தப்பதிவோடு இணைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை சற்று பாருங்கள் ! உங்களுக்கு அதன் பிண்ணனி புரியும் உடனே ! . அவை வேறு எந்த தருணத்தில் தெரியுமா ?

அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !

அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி

தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !

உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.

இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.

எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!

pammalar
21st December 2009, 07:27 PM
டியர் மிஸ்டர் ஹேஸ்டிங்க்ஸ்,

நமது நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைக்காவியம் குறித்த தங்களது கண்ணோட்டம், திறனாய்வு ஆரம்பத்திலிருந்தே அபாரம், மிக மிக அருமை. நடிகர் திலகத்தின் நடிப்புச் சுவையை ர(ரு)சிக்கும் போது, எத்தகைய மகிழ்ச்சிகளெல்லாம் தோன்றுமோ, அத்தகைய பரவசங்களை தங்களது திறனாய்வுக் கட்டுரைகள் தீர்க்கமாக அளிக்கின்றன என்றால் அது மிகையன்று. பார் மகளே பார் திரைக்காவியத்தை இயக்கிய, பார் போற்றும் இயக்குநர் பீம்சிங், இக்காவியத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்க எப்படியெல்லாம் சிரத்தையோடு அணுவணுவாக அலசி ஆராய்ந்து மெனக்கட்டிருப்பாரோ, அதே போன்று தாங்களும், இத்திரைக்காவியத்தின் திறனாய்வுக்காக இக்காவியத்தில் உள்ள விஷயங்களை அணுவணுவாக அலசி, ஆராய்ந்து, ரசித்து, ருசித்து அழகுற அளித்திருக்கிறீர்கள். தாங்கள், இதிலே பீம்சிங்கிற்கு நிகர் என்று மொழிவதே பொருத்தமானதாகும். தாங்கள் அளித்துள்ள பார் மகளே பார் திரைக்காவியத்தின் புகைப்படங்களும் , தங்களின் கண்ணோட்டக் கட்டுரைகளுக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. தாங்கள் இது போன்று, தங்களது பொன்னான நேரத்தில், நமது நடிகர் திலகத்தின், பல திரைப்படங்களையும் (அனைத்து திரைப்படங்களையும் !!!) அணுவணுவாக அலசி, ஆராய்ந்து தீட்சண்யமான திறனாய்வுகளை வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மொத்தத்தில், தங்களது பார் மகளே பார் திறனாய்வு, நடிகர் திலகத்தின் நுட்பமான நடிப்புலக சாதனைகளை, பார் பாரே பார் என இப்பாரைப் பார்த்து முழங்குவது போல் உள்ளது.

வாழ்க தங்களது திருத்தொண்டு !

வளர்க தங்களது திறனாய்வு !!

வெல்க தங்களது திருப்பணி !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd December 2009, 01:21 AM
நடிகர் திலகத்தின் "பார் மகளே பார்" சாதனைத் துளிகள் :

பார் மகளே பார், நடிகர் திலகத்தின் 89வது திரைக்காவியம் (87வது கருப்பு - வெள்ளைக் காவியம்)

நடிகர் திலகத்தை பீம்சிங் இயக்கிய 13வது படம்; சிவாஜி - பீம்சிங் கூட்டணியின், "ப" வரிசைப் படங்களில், 10வது படம்.

வெளியான தேதி : 12.7.1963 (வெள்ளிக்கிழமை)

சென்னையில் சாந்தி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

சென்னையில் சாந்தி திரையரங்கில் 64 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. சாந்தியில் 12.7.1963 அன்று வெளியாகி 13.9.1963 வரை ஓடியது. 14.9.1963 அன்று சாந்தியில் தேசிய திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது. (சாந்தி 1214 இருக்கைகள்)

பார் மகளே பார் சாந்தியில் 64 நாட்கள் ஓடி முடிய பெற்ற மொத்த வசூல் ரு. 1,24,466 /-.

பிரபாத்தில் 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை, 56 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது. 6.9.1963 முதல் 13.9.1963 வரை 8 நாட்கள் பிரபாத்தில் மாயா மச்சீந்திரா என்ற திரைப்படம் நடைபெற்றது. மாயா மச்சீந்திரா முதன்முதலில் 22.4.1939 அன்று வெளியான படம். இதில் திரு. எம்.ஜி.ஆர். , எம்.ஜி. ராம்சந்தர் என்ற பெயரில் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.14.9.1963 அன்று பிரபாத்தில், பாரத ஜோதியின் இரத்தத்திலகம் வெளியானது. (பிரபாத் 1277 இருக்கைகள்)

சரஸ்வதியில் 56 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. அதாவது, 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை ஓடியது. 6.9.1963 அன்று சரஸ்வதியில் நடிகர் திலகத்தின் பாலும் பழமும் மறு வெளியீடாக வெளியானது. (சரஸ்வதி 974 இருக்கைகள்)

மேலும், பார் மகளே பார், மதுரையில் 1662 இருக்கைகள் கொண்ட சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12.7.1963 லிருந்து 13.9.1963 வரை 64 நாட்கள் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது. (64 நாள் மொத்த வசூல் ரு. 1,06,402 /-). 14.9.1963 அன்று சென்ட்ரல் சினிமாவில் தியாகத்திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது.

திருநெல்வேலியில், பார் மகளே பார், 1352 இருக்கைகள் கொண்ட லட்சுமி திரையரங்கில், 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

நாகர்கோவிலில், 1088 இருக்கைகள் கொண்ட பயனீர் பிக்சர்பேலஸ் அரங்கில் 50 நாட்கள் ஓடி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.

மொத்தத்தில், 'ஏ' சென்டர்களில் 50 நாட்கள் முதல் 9 வாரங்களும், 'பி' சென்டர்களில் 5 வாரங்கள் முதல் 8 வாரங்களும், 'சி' சென்டர்களில் 4 வாரங்கள் முதல் 5 வாரங்களும் வெற்றிகரமாக ஓடி, சிவாஜி-பீம்சிங் கூட்டணிக்கு சிறந்ததொரு வெற்றியைத் தேடித் தந்த படம் 'பார் மகளே பார்'.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd December 2009, 06:40 AM
ஹேஸ்டிங்ஸ் அவர்களின் பார் மகளே பார் திரைப்படத்தைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ரீமேக் செய்து ஹப்பில் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்களின் போராதரவுடன் படம் மற்றுமொரு நூறு நாட்களைக் கடந்து வெள்ளி விழா ஓடும். பம்மலார் குறிப்பிட்டுள்ள வியத்தகு சாதனைகளைக் கடந்து மேலும் சாதனைகளைப் படைக்கும்...

படத்தைக் கண்முன் நிறுத்திவிட்ட ஹேஸ்டிங்ஸ் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

அதேபோல் பம்மலாறாக சாதனை விவரங்களை ஓட விடும் பம்மலாருக்கும் நமது நன்றி.

இவையெல்லாம் தலைமுறைகளைக்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் பெருமைக்கு சான்றாகும். இதற்கு மற்றொரு சான்று, கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய பறவையை அலசியுள்ளார். படித்து மகிழுங்கள்.

http://xmsr.blogspot.com/2009/12/puthiya-paravai.html


"MONDAY, DECEMBER 21, 2009
Puthiya Paravai
Saw this Tamil movie, first released in 1964, recently. It tells the story of Gopal (Sivaji Ganesan), a wealthy widower, who moves from Malaysia to India (Ooty, to be specific). On the ship to India, he meets the beautiful Latha (Saroja Devi), and her father (V. K. Ramaswamy). They meet again in Ooty, and Gopal and Latha get closer. Gopal reveals a phobia for train crossings, and explains to Latha that this is because his wife Chitra (Sowcar Janaki) - who was a nightclub singer - committed suicide after a fight with him, by lying on the tracks. Things become complex as a lady who looks exactly like Chitra shows up, with her uncle (M. R. Radha), claiming that Chitra never died. Gopal, however, is absolutely certain that she did die. The ending proves Gopal to be right, but is a totally surprising - if artificial - twist.

Sivaji has done a great job in this movie - not only in terms of acting, but the risk he took in playing what eventually turns out to be a negative character. I had expected another of those idealistic and simplistic love stories - but then I had underestimated Sivaji and perhaps confused him a bit with MGR. Sivaji's acting in the final scenes is spectacularly understated (unlike his normal tendency to be overdramatic) - and one starts doubting all aspects of his story - he becomes an unreliable narrator, as we might see in an Ishiguro novel. Saroja Devi is her gorgeous self - though I must say that both Sivaji and Saroja Devi look more aged than modern audiences will accept in a lead pair. Sowcar Janaki acts great, as usual. The comedy team consists of V. K. Ramaswamy, Nagesh, and Manorama.

Last, but not least, are the songs in this movie. Written by Kannadasan and set to music by Viswanathan-Ramamoorthy, these songs remain among the greatest in Tamil moviedom: Unnai Ondru Kaetpaen - Unmai Solla Vendum (P. Susheela), Paarttha Njaabagam Illaiyo (P. Susheela), Enge Nimmadhi, Enge Nimmadhi, Ange Enakkor Idam Vendum (T. M. Soundararajan) - absolute, everlasting melodies. For these alone, this movie will go down in history, but it has much more to offer than these...
Posted by Xmsr at 9:31 AM"



ராகவேந்திரன்

RAGHAVENDRA
22nd December 2009, 06:50 AM
இன்றைய தலைமுறையினரிடம் நடிகர் திலகம் - மற்றுமோர் உதாரணம்
http://groups.google.com.na/group/anbudan/browse_thread/thread/6fdc3779c08cbcd1/58556ee87b5f7e48?#58556ee87b5f7e48

"

அன்பின் டேவிட்,
நான் ஈழத்தில் இருந்த இனிமையான பொழுதுகளை எனது நினைவில் கொண்டு
வருகிறேன்.
" வசந்த மாளிகை @ எனது மனதை விட்டு அகலாத படம். ஈழத்தில் 235 நாட்கள்
தொடர்ந்து ஓடு வசூல் சாத்னையை ஏற்படுத்திய படம்.
முதலாவது நாள், ஜம்பதாவது நாள், நூறாவது நாள், நுற்றைம்பதாவது நாள்,
இருநூறாவது நாள், இருநூற்றி இருபத்திஜந்தாவது நாள் என ஜந்துமுறை
இப்படத்தை நானும் எனது உற்ற நண்பனும் பார்த்தோம்.
அவரது நடிப்பு, கொடுக்கப்பட்ட வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசும் பாவம்,
கண்ணதாசனின் கருத்து மிகு பாடல்கள், அவற்ரிற்கு அற்புதமாக MSV அளித்த
இசை. இவையனைத்தும் ஒன்றிணைந்து அந்தப்படத்தை மிகவும் தரம் வாய்ந்த படமாக
மாற்றியிருந்தது.
இங்கே எனக்குப் பிடித்த இரு காட்சிகளை விபரிக்கிறேன்
1) குடிகாரனாக இருந்த சிவாஜி கணேசனை, மாற்றி ஒரு நல்ல மனிதனாக
ஆக்குகிறார் வாணிஸ்ரீ, அதுவரையில் சிவாஜி கணேசன் இருந்த இடத்தைக்கூட
திரும்பிப் பார்க்காத வரது அண்ணணும், அண்ணியும் அவரின் மாற்றத்தைக்
கண்டதும், சொத்தை தமக்குள் வைத்துக் கொள்வதற்காக அண்னியின் தங்கையை
அவருக்கு மணம் பேசுகிறார்கள். ஆனால் சிவாஜி கணேசனோ தனது மனதை
வாணிஸ்ரீயிடம் பறிகொடுத்து விட்டார். அவரது அண்ணணாக பாலாஜி
நடித்திருந்தார். இதோ அந்தச் சம்பாஷணை.
பாலாஜி : எப்படிப்பட்ட பெண்ணை உனக்குப் பிடிக்கும் ?
சிவாஜி கணேஷன்: ஆடம்பரமில்லாத அழகு, அந்தஸ்தைப் பார்க்காத அன்பு
பாலாஜி : அப்படிப்பட்ட பெண் யாரையாவது நீ விரும்புகிறாயா ?
சிவாஜி: நான் விரும்பும் பெண் எனக்குத் தேவையில்லை, என்னை விரும்பும்
பெண்தான் எனக்குத் தேவை
இந்தக் காட்ச்சியில் சிவாஜி கணேஷன் தனது வசனங்களை பேசும் போது உதட்டால்
பேசவில்லை. உள்ளத்தால் பேசினார், அத்னால் தான் அவர் நடிகர் திலகம்.
2) இரண்டாவது காட்சி, தனது மனதில் இடம் பிடித்த பெண்னைக் காட்டுவதாகக்
கூரி வாணிஸ்ரீயை வசந்தமாளிகைக்கு அழைத்துச் செல்கிறார், அங்கே அந்த வசந்த
மாளிகையையும், அதற்குச் சொந்தக்காரியாகிய தன் மனங்கவர்ந்தவளையும் பற்றி
விபரிக்கும் போது
" இறைவன் மட்டும் எனக்கும் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால்,
அகாயத்திலே பறந்து சென்று அந்த நிலவை எடுத்து வந்து இந்த வசந்தமாளிகைக்கு
வண்ணவிளக்காக அலங்கரித்திருப்பேன், வானத்திலே மின்னும் நட்சத்திரங்களை
எடுத்து வந்து தோரணங்களாக தொங்க விட்டிருப்பேன், ஆனால் இறைவன் தான்
எனக்கு அந்த சக்தியை கொடுக்கவில்லையே ! என்ன செய்வேன்? என்ன செய்வேன் ? "
இந்த வசனத்தைப் பேசும் போது காதல் உணர்ச்சிகள் மாறி, மாறி அவர் முகத்தில்
வந்து அலைமோது, தமிழ் அப்படியே கணீரெனேஉ ஒலிக்கும். நடிகர் திலகத்திற்கு
நிகர் அவரேதான்.
அன்பின் டேவிட் அருமையான இழை ஆரம்பித்ததுக்கு என் நன்றிகள்
அன்புடன்
சக்தி "


ராகவேந்திரன்

Irene Hastings
22nd December 2009, 10:03 AM
திரு பம்மலார் மற்றும் திரு ராகவேந்தர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உண்மையை நான் உரைக்கவேண்டுமென்றால், கடந்த ஒரு வாரமாக நான், மீண்டும் மீண்டும் இப்படத்தினை பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை கூர்ந்து கவனம் செய்து பதிவு செய்கிறேன். அதனால் தான் சிறிது இடைவேளி ஏற்படுகிறது. தயவுசெய்து மன்னிக்கவும்.
நடிகர் திலகத்தை பற்றி எழுத எனக்கு ஒரு தகுதி உண்டா என்று பல முறை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்த மாபெரும் சாதனையாளர் தன் சிறு வயதிலே ( வாலிப வயதிலேயே என்று படிக்கவும் ) ஏற்ற முற்றிலும் மாறுபட்ட வேடங்கள் தான் என்னை இத்திரைப்படத்தினை பற்றி எழுதத்தூண்டியது.
எனைப்பொறுத்தவரை இதை ஒரு ஆய்வாக கருதுகிறேன்.

இப்படம் முழுக்க முழுக்க நம் நடிகர்திலகத்தின் படம். ( கிட்டத்தட்ட ஞானஓளி போன்றது ). அதனால் மிக்க கவனத்துடன் எழுத வேண்டியது எனது கடமை/பொறுப்பாகும்.


விரைவில் முடிவுப்பகுதியினையும் , இப்படத்தில் பணியாற்றிய மற்ற நடிக/நடிகைகளின் பங்கு மற்றும் , திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் ...... முடிவில் நம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாற்றல் ...சில மனம்கவர்ந்த காட்சிகளை பற்றி அடியேன் எழுதுவேன்....

இப்படத்தின் வெற்றி குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி திரு பம்மலாருக்கு.

நிச்சயம் நான் மற்ற காவியஙளையும் பற்றி விரிவாக எழுதுவேன்.

நன்றி அனைவருக்கும்.

sivank
22nd December 2009, 11:21 AM
Great narration Irene Hastings. Even though it sounds repetetive, you really brought the film back to me. Thanks for sharing it with us.

Expecting many more from you

pammalar
22nd December 2009, 12:51 PM
Dear Mr. Irene Hastings,

Thank you very much !

Congrats & All the best for your future assignments (NT Film Reviews)!!

Expecting a lot & many more from you !!!

Let's God's grace & NT's blessings shower on your write-ups.

Warm Wishes,
Pammalar.

rangan_08
22nd December 2009, 06:59 PM
Dear Irene Hastings,

I really appreciate & congratulate you for your painstaking effort to bring " Paar magale paar " back to its glory. I have to admit that I have read it only in parts. But then, I can understand your penchant towards NT.

Keep it up & all the best.

rangan_08
22nd December 2009, 07:00 PM
[tscii:ae35c0a53a]Had a great time watching, “ Ennirandu 16 vayadhu….” :clap: . Another apt example wherein, almost all of NT’s favourite & signature moves comes to the fore beautifully in a song. His phenomenal gait, gentle nodding in tune with the song, his countenance reflecting joy & satisfaction - everything exemplified in top notch manner. A real treat for fans. And, all that Muthuraman can do is, simply watch this genius, in awe.[/tscii:ae35c0a53a]

pammalar
23rd December 2009, 01:40 AM
அனைவருக்கும் எமது அட்வான்ஸ் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நமது நடிகர் திலகத்தின் சொந்தத் திரையரங்கமான சென்னை சாந்தி திரையரங்கிற்கு 2010-ம் ஆண்டு பொன்விழா ஆண்டாகும். அதாவது பொன் விழா ஆண்டின் தொடக்கம்.

சென்னை சாந்தி திரையரங்கம் 1961 ஜனவரியில் தொடங்கப்பட்டது. 2010 ஜனவரியில் 49 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 50வது பொன்விழா ஆண்டு தொடங்குகிறது.

பொன்விழா ஆண்டில் பீடு நடை போடும் சாந்தி திரையரங்கம், நூற்றாண்டு விழாக் காண இதயபூர்வமான வாழ்த்துக்கள் ! இவ்வரங்கம் இன்னும் மென்மேலும் பல விழாக்களைக் காணவும், திரையுலகிற்கு மேலும் சேவை புரியவும், மக்களை தொடர்ந்து மகிழ்விக்கவும் பல கோடி நல்வாழ்த்துக்கள் !

சென்னை சாந்தி திரையரங்கம், தமிழகத்தின் முதல் ஏர்கண்டீஷன்ட் டீலக்ஸ் திரையரங்கம். அதாவது, சாதாரண இருக்கைகளோடு சொகுசு இருக்கைகளும் (குஷன் சீட்ஸ்) கொண்ட முதல் திரையரங்கம். மொத்த இருக்கைகள் : 1214.

சாந்தியில் வெளியான முதல் புதிய தமிழ்த் திரைப்படம் "தூய உள்ளம்". வெளியான தேதி : 14.1.1961. தூய உள்ளம் 1961 பொங்கல் வெளியீடாக சென்னையில் சாந்தி, கிருஷ்ணா, உமா ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. இதில் நாகேஸ்வரராவ், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சாந்தி திரையரங்கம் பொன்விழாக் காணும் இந்த பொன்னான வேளையிலே, சாதனைகளின் சக்கரவர்த்தி, நமது நடிகர் திலகம், சாந்தியில் நிகழ்த்திய சிகர சாதனைகளை நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும். இனி, சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் :

சாந்தியில் வெளியான முதல் சிவாஜி படம், "பாவமன்னிப்பு". இக்காவியம் 16.3.1961 அன்று சென்னையில் சாந்தி, கிருஷ்ணா, ராக்ஸி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில் ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்

2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்

3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்

4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்

5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்

6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்

7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்

8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்

10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்

11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்

12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்

13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்

14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்

15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்

16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்

17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்

18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்

19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்

20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்

21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்

22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்

23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்

24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்

25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்

26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்

27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்

28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

சாந்தி சாதனைகள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
23rd December 2009, 12:40 PM
Hello Pammalar sir,

Thanks a lot for the detailed list of NT's movies at Chennai Shanti Theatre.

So, by your information, I understood that Midaland was changed as A/c theatre in its half way, because Midland was constructed before Shanti, I hope


8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

??????????????

I think CRP must be the lowest run of NT movie at Shanti. Why..?. Is that movie that much normal..?.

rangan_08
23rd December 2009, 07:01 PM
Pammalar sir, good to know that Shanthi is stepping into Golden jubilee year. Great. The detailed informations are mind blowing.

rangan_08
23rd December 2009, 07:04 PM
8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

??????????????

I think CRP must be the lowest run of NT movie at Shanti. Why..?. Is that movie that much normal..?.

karthik sir, I can see only one reason, which is a regular phenomenon, i.e., NT himself is his competitor. This films must have been lifted from theatre just to give way for the release of NT's next film - Arivali ?

pammalar
24th December 2009, 02:03 AM
My Sincere thanks to Mr.Karthik & Mr.Rangan !

Regards,
Pammalar.

pammalar
24th December 2009, 03:15 AM
Hello Pammalar sir,

Thanks a lot for the detailed list of NT's movies at Chennai Shanti Theatre.

So, by your information, I understood that Midaland was changed as A/c theatre in its half way, because Midland was constructed before Shanti, I hope


8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

??????????????

I think CRP must be the lowest run of NT movie at Shanti. Why..?. Is that movie that much normal..?.
டியர் கார்த்திக் சார்,

சித்தூர் ராணி பத்மினி ஓட்டத்தில் சறுக்கியதற்கு, எமக்குத் தெரிந்த மூன்று காரணங்கள்:

1. திரு. ரங்கன் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் திரைப்படமே, நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு போட்டியாக வந்தது தான் முழுமுதற் காரணம். ஏற்கனவே புக் செய்யப்பட்ட அறிவாளி திரைப்படத்திற்காக, சித்தூர் ராணி பத்மினியை எடுக்க வேண்டிய சூழ்நிலை. அறிவாளிக்கும் இதே நிலை தான். ஏற்கனவே காண்ட்ராக்ட் போடப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக, அறிவாளியை எடுக்க வேண்டிய தர்மசங்கடம்.

2. சித்தூர் ராணி பத்மினி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. தயாரிப்பு தாமதங்கள், படத்தின் வெற்றிக்கு பங்கம் விளைவிக்கும் என்பது தெரிந்த ஒன்று. தாமதத்திற்கான காரணங்களில், முதன்மையானது, கதாநாயகி வைஜயந்திமாலாவின் கால்ஷீட் குளறுபடிகள் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

3. பாலையா அவர்கள் சிறந்த குணச்சித்ர நடிகர் தான். ஆனாலும், இப்படத்தில் அவர் சோபிக்கவில்லை. இதில் அவருக்கு பவர்ஃபுல்லான அலாவுதீன் கில்ஜி வேடம். மிகுந்த கம்பீரத்துடன் செய்ய வேண்டிய ரோலை காட்டமான காமெடியாகச் செய்திருப்பார். படம் படுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பது எமது தாழ்மையான கருத்து. ஏனென்றால், கில்ஜி சாம்ராஜ்யத்தின், உச்ச சக்கரவர்த்தி, அலாவுதீன் கில்ஜி. அவரைப் பாவம், ஒரு பஃபூன் போல ஆக்கியிருப்பார்கள்.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டுகள் : நடிகர் திலகத்தின் கம்பீரமான நடிப்பும், ஜி. ராமநாதன் அவர்களின் நேர்த்தியான இசையும் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th December 2009, 06:31 AM
நடிகர் திலகத்தின் உற்ற நண்பர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 23வது நினைவு நாளில் நமது இதய பூர்வமான அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th December 2009, 06:37 AM
பம்மலார் சொன்னது போல் நன்றாக வந்திருக்க வேண்டிய, நடிகர் திலகத்தில் புகழ்க் கிரீடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக வந்திருக்க வேண்டிய சித்தூர் ராணி பத்மினி திரைப்படம், சொதப்பல் ராணி பத்மினியாக மாறிவிட்டதற்கு காரணமானவர்களை அவர்களது மனசாட்சியே மன்னிக்காது. நடிகர் திலகமும் ஜி.ராமநாதன் அவர்களும் உழைத்த உழைப்பே இன்றும் அப்படத்தைப் பார்க்கும் அளவிற்கு வைத்திருக்கிறது. குறிப்பாக ஒஹோ நிலா ராணி பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மிகவும் அற்புதமாக இருக்கும். தற்போது இப்படம் ஒளிக் குறுந்தகடு அல்லது நெடுந்தகடு வடிவில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். கிடைத்தால் பாருங்கள்.

மிகவும் அபூர்வமான பழைய படங்களைப்பற்றி, குறிப்பாக அதிகம் பேசப்படாத இன்றைய தலைமுறையினர் முற்றிலும் அறிந்திராத அதே சமயம் நடிகர் திலகத்தின் முழு முத்திரையைப் படைத்த படங்கள் பலவுண்டு. அவற்றை இங்கே அறிமுகப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.

ராகவேந்திரன்

Irene Hastings
24th December 2009, 10:48 AM
பார் மகளே பார் - கதை பகுதி - 7

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image074-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image075-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image076-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image079-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image080-2.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image081-2.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image082-2.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image083-2.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image084-2.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image085-2.jpg


சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.

அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.

செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.

சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.

அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்

pammalar
24th December 2009, 11:52 AM
நடிகர் திலகம் பற்றி தந்தை பெரியார் :
(8.6.1969 வெளியான நடிகர் திலகத்தின் சிறப்பு மலரிலிருந்து)

"உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியம். மேலும், சிவாஜி கணேசன் அவர்களிடத்தில் எனக்கு மெத்தவும் மதிப்புண்டு. அவர் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெற்று, நடிகர் திலகமாகி உச்ச வரிசையிலிருப்பவர். மற்றும் அவர் ஒரு தமிழருமாவார்."

இன்று (24.12.2009) ஈரோட்டுச் சிங்கம், வைக்கம் வீரர், தந்தை பெரியார் அவர்களது 36வது நினைவு தினம்.

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
24th December 2009, 01:00 PM
டியர் பம்மலார் & ராகவேந்தர்....

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை சாந்தி திரையரங்க நிர்வாகத்துக்கும், குறிப்பாக கடந்த 35 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வரும் 'மாப்பிள்ளை' வேணுகோபால் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த தருணத்தில் நடிகர்திலகம் இல்லையே என்பது மட்டுமல்லாது, சாந்தி திரையரங்கின் முதுகெலும்பாக நின்ற ஆருயிர் அண்ணன் வி.சி.சண்முகம் அவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் நமக்கு மேலிடுகிறது.

சாந்தி திரையரங்கில் வெளியாகி சாதனை புரிந்த படங்களின் பட்டியல் மட்டுமல்லாது, சாந்தியில்தான் வெளியாக வேண்டும் என்ற பிடிவாதத்தினால் சாதனைகளைத் தவறவிட்ட படங்களின் பட்டியலையும் வெளியிட்ட பம்மலார் அவர்களுக்கு நன்றிகள்.

'சித்தூர் ராணி பத்மினி' படத்தைப்பொறுத்தவரை, வில்லன் குறித்து பம்மலார் சொன்ன கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. வில்லன் ரோல் என்பது கதாநாயகனுக்கு நிகரான (ஆனால் பாத்திரப்படைப்பில் நேர்மாறான) ஒன்று. அது எப்போதும் எஃபெக்டிவாக இருக்க வேண்டும். இந்தக்குறை சம்பூர்ண ராமாயணத்திலும் தெரிந்தது. டி.கே.பகவதி ஒரு சொதப்பல் ராவணனாக வந்தார். இந்த ரோலில் பி.எஸ்.வீரப்பா நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணத்தோடேயே படம் பார்க்க முடிந்தது.

அதுபோலவே, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மெகா வெற்றி பெற்றுவிட்டதால் நம்மில் பலருக்கு குறையாகத்தெரியாமல் இருக்கலாம். ஆனால், எஃபெக்டிவான 'எட்டப்பன்' ரோலில் காமெடியன் வி.கே.ராமசாமி அவர்களை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை. அந்த ரோலில் நம்பியார் அல்லது வீரப்பா நடித்திருக்க வேண்டும். அல்லது படம் முழுக்க ஊமையாகவே இருக்கும் ஊமைத்துரை ரோலில் யாரையாவது போட்டுவிட்டு, O.A.K.தேவரையாவது எட்டப்பனாக்கியிருக்க வேண்டும்.

saradhaa_sn
24th December 2009, 01:27 PM
'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழந்ததால் நாம் இன்னொரு அருமையான வரலாற்றுப்படத்தை இழந்துவிட்டோம் என்பது நம்மில் பலருக்குத் தெரியுமா?.

சரித்திரக்கதை மன்னன் 'சாண்டில்யன்' எழுதிய "ஜீவ பூமி" என்ற நாவல் திரைப்படமாக எடுக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, 'ரதன் சந்தாவத் சலூம்பரா' என்ற ராஜபுத்திர வீரனாக நடிகர்திலகமும், மேவார் நாட்டு இளவரசியாக வைஜயந்திமாலாவும், மொகலாய மன்னர் இரண்டாம் அக்பர் சக்கரவர்த்தியாக நம்பியாரும் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் துவங்கியது. படத்தின் ஸ்டில்களும் 'பேசும் படம்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. கே.வி.மகாதேவன் இசையில் இரண்டு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழக்கவே, கிட்டத்தட்ட அதேமாதிரியான கதைக்களத்தைக்கொண்ட 'ஜீவபூமி' படம் எடுத்தவரையில் கைவிடப்பட்டது.

ஆனால், ஜீவபூமி நாவலைப்படித்தபோது, சாண்டில்யனின் நடையும் வர்ணனைகளும் நடிகர்திலகத்தின் ஸ்டைலான நடிப்பைக் கண்முன் கொண்டுவந்து ஏக்கப்பெருமூச்சை ஏற்படுத்தின. அந்த நாவல் இரண்டாம் பதிப்பு வெளியானபோது, படத்துக்காக எடுக்கப்பட்ட நடிகர்திலகம் - வைஜயந்திமாலா ஸ்டில்லே அட்டைப்படமாக இடம்பெற்றிருந்தது.

abkhlabhi
24th December 2009, 01:41 PM
http://wiki.pkp.in/sivaji-ganesan-documentary

rangan_08
24th December 2009, 06:38 PM
My Sincere thanks to Mr.Karthik & Mr.Rangan !

Regards,
Pammalar.

My humble request to Shanthi theatre authorities & NT's family is that, atleast from this year onwards, they must take initiatives to screen NT's films regularly in Shanthi theatre as a tribute to our beloved Nadigar Thilagam.

rangan_08
24th December 2009, 06:41 PM
[tscii:98c5630c78]Yesterday's “ Singathamizhan Sivaji “ in Vasanth TV was great, featuring Mrs. Jayanthi Kannappan as guest. Most of you must be aware that she is the daughter-in-law of Mr. A.L. Srinivasan, a good friend of NT, who produced movies under “ ALS Productions “. ALS is the elder brother of Kavignar Kannadasan.

She was reminiscing some unforgettable & beautiful moments of her life, concerning NT. Throughout the programme, she addressed NT as “ Sivaji appa “ and described the close knit relationship her family had with NT’s family for generations. She said that, “ Panam” was the first movie produced by ALS and that NT used to proudly say that “ Panam padathula nadicha piragudhan enakku neraya panam vara arambichudhu…”. There was many such interesting anecdotes in that half an hour programme.

When ALS died, NT was shooting in Ooty and after hearing the news, he rushed up to Chennai the same evening. She said, “ mama udala pathu Sivajippa kadhari azhudhadha ennala marakku mudiyadhu…”.

Scenes from Babu, Gnana Oli etc., were shown. In “ devaney ennai parungal “ song, just watch him walk in quick pace, according to the tune of the song, for the entire stanza starting from “ thaai madiyiley mazhalaigal oomayo…”. A big cloud passes exactly over NT’s head and its’ shadow will fall on the ground which makes the scene stunning. I was bowled over completely for nth time – enna manusanpa !!! B.N. Sundaram, the cinematographer, said in one of his interviews that this scene was really unexpected and it gave a wonderful effect. However, this never happened for the hindi remake. How nice it would be if this film is released now in theatres. And, that makes me to say that , in recent times, say about past three months, I’ve seen posters of Thaai sollai thattadhey, Panam padaithavan, Thaayai katha thanayan, Dharmam thalai kakum, Kumari koatam, Sirithu vazha vendum, in Chennai. MGR movies are continuously being played in Chennai theatres. Why is it not happening for NT’s films ???

Now, coming back to “ Singathamizhan…”. When Mrs. Jayanthi finally lamented about the dark day, I really felt a lump in my throat. They showed a picture of NT sleeping peacefully, leaving behind millions of fans in tears. I just couldn’t bear that terrible sight. You wouldn’t believe, that for a moment I saw images of NT in front of my eyes – Vasantha Maligai NT in white & white, NT in my avatar, Pasa malar NT, SP Chowdary, Raja……a painful moment, indeed. When the news began to spread, the phones in NT’s house were continuously ringing and she attended most of the calls, confirming the sad news. One such call was from the Canadian Radio Station. They put her live on air and she tearfully conveyed the news to the audience. She said, it was an unforgettable moment in her life.
[/tscii:98c5630c78]

Plum
24th December 2009, 06:43 PM
My Sincere thanks to Mr.Karthik & Mr.Rangan !

Regards,
Pammalar.

My humble request to Shanthi theatre authorities & NT's family is that, atleast from this year onwards, they must take initiatives to screen NT's films regularly in Shanthi theatre as a tribute to our beloved Nadigar Thilagam.

Great suggestion Rangan. Such an obvious solution, why doesnt it occur to the concerned parties?

pammalar
25th December 2009, 02:59 AM
நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம் :
(1.11.1962 அன்று மதி ஒளி வெளியிட்ட நடிகர் திலகம் (1952 - 1962) பத்தாண்டுகள் சிறப்பு மலரிலிருந்து)

"தம்பி கணேசன் நாடகத்தில் நடித்த போது அந்த நடிப்புக்கு பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்குமுன்பு வேறு நடிகர்களுக்கு குரல் கொடுத்த போது அந்தக் குரலுக்கு பெருமை குவிந்தது. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கிய போதும், வெற்றிப் படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக் கூடிய தகுதி, அவரிடம் வேரூன்றி இருக்கிறது.

தமிழ்ப் பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும் வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டை, தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச் சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ் மொழிக்கு, தமிழினத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு கிடைத்த பாராட்டாகும் அல்லவா! இந்திய துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும், "சிவாஜி கணேசன் யார் ?" என்ற கேள்வி எழும் போது , " அவர் நாடு தமிழ் நாடு; அவரது பண்பாடு தமிழ்ப் பண்பாடு" என்ற பதில் தான் கிடைக்கும். இதை விட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒரு முகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு !"

1977 முதல் 1987 வரை பத்தாண்டுகளுக்கும் மேல் மக்கள் ஆதரவைப் பெற்று, தமிழக முதல்வராக இருந்து மறைந்த, நடிகர் திலகத்தின் உடன் பிறவா அண்ணன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இன்று (24.12.2009) 22வது நினைவு தினம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2009, 03:15 AM
பம்மலார் சொன்னது போல் நன்றாக வந்திருக்க வேண்டிய, நடிகர் திலகத்தில் புகழ்க் கிரீடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக வந்திருக்க வேண்டிய சித்தூர் ராணி பத்மினி திரைப்படம், சொதப்பல் ராணி பத்மினியாக மாறிவிட்டதற்கு காரணமானவர்களை அவர்களது மனசாட்சியே மன்னிக்காது. நடிகர் திலகமும் ஜி.ராமநாதன் அவர்களும் உழைத்த உழைப்பே இன்றும் அப்படத்தைப் பார்க்கும் அளவிற்கு வைத்திருக்கிறது. குறிப்பாக ஒஹோ நிலா ராணி பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மிகவும் அற்புதமாக இருக்கும். தற்போது இப்படம் ஒளிக் குறுந்தகடு அல்லது நெடுந்தகடு வடிவில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். கிடைத்தால் பாருங்கள்.


பாராட்டுக்களுக்கு நன்றி , திரு. ராகவேந்திரன் சார் !

மேலும், சித்தூர் ராணி பத்மினி திரைப்படத்தின் ஒளிக் குறுந்தகடு/நெடுந்தகடு ஆகியவற்றை சென்னையில் உள்ள ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2009, 03:24 AM
மிகவும் அபூர்வமான பழைய படங்களைப்பற்றி, குறிப்பாக அதிகம் பேசப்படாத இன்றைய தலைமுறையினர் முற்றிலும் அறிந்திராத அதே சமயம் நடிகர் திலகத்தின் முழு முத்திரையைப் படைத்த படங்கள் பலவுண்டு. அவற்றை இங்கே அறிமுகப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.

ராகவேந்திரன்
அவசியம் எழுதுங்கள். தங்களது பதிவுகளை அனைவரும், ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2009, 03:37 AM
'சித்தூர் ராணி பத்மினி' படத்தைப்பொறுத்தவரை, வில்லன் குறித்து பம்மலார் சொன்ன கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. வில்லன் ரோல் என்பது கதாநாயகனுக்கு நிகரான (ஆனால் பாத்திரப்படைப்பில் நேர்மாறான) ஒன்று. அது எப்போதும் எஃபெக்டிவாக இருக்க வேண்டும். இந்தக்குறை சம்பூர்ண ராமாயணத்திலும் தெரிந்தது. டி.கே.பகவதி ஒரு சொதப்பல் ராவணனாக வந்தார். இந்த ரோலில் பி.எஸ்.வீரப்பா நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணத்தோடேயே படம் பார்க்க முடிந்தது.

அதுபோலவே, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மெகா வெற்றி பெற்றுவிட்டதால் நம்மில் பலருக்கு குறையாகத்தெரியாமல் இருக்கலாம். ஆனால், எஃபெக்டிவான 'எட்டப்பன்' ரோலில் காமெடியன் வி.கே.ராமசாமி அவர்களை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை. அந்த ரோலில் நம்பியார் அல்லது வீரப்பா நடித்திருக்க வேண்டும். அல்லது படம் முழுக்க ஊமையாகவே இருக்கும் ஊமைத்துரை ரோலில் யாரையாவது போட்டுவிட்டு, O.A.K.தேவரையாவது எட்டப்பனாக்கியிருக்க வேண்டும்.

வில்லன்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்து, உண்மைகளை உலகுக்கு உணர்த்திய சகோதரி சாரதா அவர்களுக்கு பற்பல நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th December 2009, 03:46 AM
'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழந்ததால் நாம் இன்னொரு அருமையான வரலாற்றுப்படத்தை இழந்துவிட்டோம் என்பது நம்மில் பலருக்குத் தெரியுமா?.

சரித்திரக்கதை மன்னன் 'சாண்டில்யன்' எழுதிய "ஜீவ பூமி" என்ற நாவல் திரைப்படமாக எடுக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, 'ரதன் சந்தாவத் சலூம்பரா' என்ற ராஜபுத்திர வீரனாக நடிகர்திலகமும், மேவார் நாட்டு இளவரசியாக வைஜயந்திமாலாவும், மொகலாய மன்னர் இரண்டாம் அக்பர் சக்கரவர்த்தியாக நம்பியாரும் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் துவங்கியது. படத்தின் ஸ்டில்களும் 'பேசும் படம்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. கே.வி.மகாதேவன் இசையில் இரண்டு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழக்கவே, கிட்டத்தட்ட அதேமாதிரியான கதைக்களத்தைக்கொண்ட 'ஜீவபூமி' படம் எடுத்தவரையில் கைவிடப்பட்டது.

ஆனால், ஜீவபூமி நாவலைப்படித்தபோது, சாண்டில்யனின் நடையும் வர்ணனைகளும் நடிகர்திலகத்தின் ஸ்டைலான நடிப்பைக் கண்முன் கொண்டுவந்து ஏக்கப்பெருமூச்சை ஏற்படுத்தின. அந்த நாவல் இரண்டாம் பதிப்பு வெளியானபோது, படத்துக்காக எடுக்கப்பட்ட நடிகர்திலகம் - வைஜயந்திமாலா ஸ்டில்லே அட்டைப்படமாக இடம்பெற்றிருந்தது.

வெளிவராத திரைப்படம் பற்றி, தாங்கள் வெளியிட்ட தகவல்கள் பிரமாதம் !

அதிலே, ஒரு சிறு திருத்தம்:

ஜீவபூமி திரைப்படத்தில் கதாநாயகி ரோலில் நடித்தது சரோஜாதேவி.

அன்புடன்
பம்மலார்.

Murali Srinivas
25th December 2009, 11:57 AM
Wishing A Merry Christmas To All Hubbers.


Regards

Murali Srinivas
25th December 2009, 04:49 PM
சென்னை வாழ் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களின் மெக்கா என்று அறியப்படும், அழைக்கப்படும் சாந்தி திரையரங்கம் தன் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாவ மன்னிப்பு முதல் தெய்வ மகன் வரை அங்கே வெளியான படங்களின் பட்டியலையும் ஓடிய நாட்களையும் வெளியிட்டு அனைவரையும் சந்தோஷப்படுத்திய சுவாமிக்கு நன்றி!நன்றி! இனி வியட்நாம் வீடு முதல் வெளியாகப் போகும் இரண்டாவது பட்டியலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். மோகன் இங்கே சொன்னது போல் சாந்தியில் மீண்டும் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டால் அதை விட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை.

சித்தூர் ராணி பத்மினி படத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் அந்த படத்தை பற்றிய ஆவலை தூண்டியிருக்கும். நமது திரியில் ஏற்கனவே அந்த படத்தின் விமர்சனம் இடம் பெற்றிருக்கிறது. முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த பக்கத்திற்கு செல்லும் சுட்டி இதோ.

http://www.mayyam.com/hub/viewtopic.php?t=12282&postdays=0&postorder=asc&start=௪௨௦

அப்போது போதிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இப்போது ஒளி நெடுந்தகடாக வெளிவந்திருக்கும் போது நல்ல சேல்ஸ். R.A.புரத்தில் உள்ள Moser Baer கடையில் இரு முறை வரவழைக்கப்பட்டு அவை அனைத்தும் விற்று தீர்ந்ததை நானே நேரில் பார்த்தேன். கடைக்கு வந்த ஒருவர் இந்த DVD-யைப் பார்த்து விட்டு திருச்சியில் உள்ள தன் நண்பரை கைபேசியில் அழைத்து DVD வந்திருக்கும் விவரத்தை சொல்லி அவருக்கும் சேர்த்து இரண்டு CD-களை வாங்கிப் போனதையும் நேரில் பார்த்தேன்.

ஜீவ பூமியை பொறுத்த வரை கணிசமான அளவிற்கு படமாக்கப்பட்டது என்றே கேள்வி. அன்றைய நாளிதழ்களில் Coming Soon என்று தலைப்பிட்டு முழுக்க ஆங்கிலத்திலேயே முழு பக்க விளம்பரம் செய்யப்பட்ட அந்த விளம்பரத்தின் ஸ்கேன் காப்பி சென்னை மன்றங்கள் வெளியிட்ட மலரில் இருக்கிறது. இங்கே சாரதா குறிப்பிட்டது போல் நல்ல படைப்பாக வந்திருக்க வேண்டிய படம். ஏ.பி.நாகராஜன் திரைக்கதை வசனம் எழுத அவரது குருவான சோமு அவர்கள் [சம்பூர்ண ராமாயணம் படத்தை இயக்கியவர்] இயக்குனர் பொறுப்பை ஏற்றிருந்தார். ரசிகர்களுக்கு கிடைக்காமல் போன ஒரு முத்து என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்.

அன்புடன்

HARISH2619
25th December 2009, 07:49 PM
A RARE PHOTOGRAPH OF THALAIVAR

http://www.thehindu.com/mp/2009/07/15/stories/2009071550030100.htm

HARISH2619
25th December 2009, 07:53 PM
THALAPATHY WITH THALAIVAR

http://im.rediff.com/movies/2009/sep/01ram.jpg

HARISH2619
25th December 2009, 07:57 PM
ABDUL HAMEED WITH THALAIVAR

http://www.bhabdulhameed.com/english/gallery.html

pammalar
25th December 2009, 11:45 PM
அனைவருக்கும் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th December 2009, 12:19 AM
டியர் முரளி சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

joe
26th December 2009, 12:31 AM
நடிகர் திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்!

pammalar
26th December 2009, 01:14 AM
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், இன்று (25.12.2009) முதல் தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் புராண காவியம் திரையிடப்பட்டுள்ளது. இறையனாரின் திருவிளையாடல் திரைக்காவியத்தை தரிசித்து இறையருள் பெறுவோம் !

பரம பக்தன்,
பம்மலார்.

joe
26th December 2009, 11:01 AM
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதி -க்கு செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது .

மேல மாசி வீதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு தள்ளு வண்டி கடந்து சென்றது . கும்பிட்ட கையோடு (முருகா ! செந்தூர் வாழ் செல்வக் குமரா !) கட்டபொம்மனாக நடிகர் திலகத்தின் உருவம் பொறித்து 'சிவாஜி கணேசன் பருத்திப் பால்' என மூன்று புறங்களும் அழகுற எழுதப்பட்டிருந்தது . புகைப்படம் எடுக்க முனையும் முன் கடந்து சென்று விட்டது . முரளி சாரின் நினைவு தான் வந்தது :)

saradhaa_sn
26th December 2009, 12:54 PM
நமது நடிகர் திலகம், சாந்தியில் நிகழ்த்திய சிகர சாதனைகளை நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.
8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்

10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்





13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்

14. பழநி - 14.1.1965

\\ From Murali's 'NT acheivements Thread':
வருடம் - 1964
1. இந்த ஆண்டு மீண்டும் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு.

நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7
அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 6
100 நாட்களை கடந்த படங்கள் - 5
2. முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

3. அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்

கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3

பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி, மஹாராணி - 3

கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4

புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1

நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம் - 4

4. 1963-ல் வெளியாகி 1964- ம் ஆண்டு சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.//
--------------------------------------------

டியர் முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் மற்றும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கு.....

நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களால் நமக்குத்தெளிவாக தெரிவது என்ன?.

முதலில்.....
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையாத அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்களுக்கு நன்றிகள்.

1964-ம் ஆண்டில் சென்னையில் எங்கள் நடிகர்திலகத்தின் படங்களை வெற்றிப்படங்களாக்கிய அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்க்ளுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.

உங்களின் 'சங்கம்' திரைப்படத்தின் ரீல்கள் சாந்தி தியேட்டரின் ப்ரொஜக்டரில் கழற்றமுடியாத அளவுக்கு, 200 நாட்களுக்கும் அதிகமாக ஒட்டிக்கொண்டதாலேயே, அந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் படங்கள் எல்லாம் மற்ற தியேட்டர்களில் வெளியாகி, உருப்படியாக ஓடி தொடர் வெற்றிகளைப்பெற்று ரசிகர்கள் மனதில் பாலை வார்த்தன.

1964 பொங்கல் முதல் 1965 பொங்கல் வரை 365 நாட்களில் 'கர்ணன்' படம் ஓடிய 100 நாட்கள் தவிர, 265 நாட்கள் சாந்தியில் வேறு படங்கள் இல்லை. காரணம் உங்கள் சங்கம் படம். உங்கள் படம் மட்டும் திரையிடப்படாமல் இருந்திருந்தால், பேராசைக்காரர்களால், அத்தனை படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சாந்தியிலேயே வெளியாகி 'ஒருவழி' ஆகியிருக்கும். காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள்.

'சித்தூர் ராணி பத்மினி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால், நிச்ச்யம் ஆறு வாரங்கள் ஓடியிருக்கும். 'அறிவாளி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால் நிச்சயம் 50 நாட்களைக்கடந்திருக்கும். (மறு வெளியீட்டில் அறிவாளி பெரும் சாதனை புரிந்துள்ளது). அதற்கு மாறாக, பாரகனில் 135 நாட்கள் ஓடிய 'புதிய பறவை' சாந்தியில் வந்திருந்தால் ஈவு இரக்கமின்றி 75 நாட்களில், நடிகர்திலகத்தின் வேறு படத்துக்காக, தூக்கப்பட்டிருக்கும்.

சாந்தியில் வெளிவந்ததாலேயே.......
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'பட்டிக்காடா பட்டனமா' 148 நாட்களில் தியேட்டர் மாற்றப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய ராமன் எத்தனை ராமனடி' 75 நாட்களில் தியேட்டர் மாறியது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'அண்ணன் ஒரு கோயில்' (தியாகம் படத்துக்காக) 100+ நாட்களில் எடுக்கப்பட்டது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'தியாகம்' நல்ல கூட்டம் இருக்கும்போதே (ஜெனரல் சக்கரவர்த்தி படத்துக்காக) தூக்கப்பட்டது.
250 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய 'திரிசூலம்' (இமயம் படத்துக்காக) 175 நாட்களில் எடுக்கப்பட்டது. (இவையெல்லாம் சில சோறு பதங்கள். இன்னும் நிறைய இருக்கிறது).

சாந்தி தியேட்டரால் நடிகர்திலகத்தின் படங்களுக்கு சாதகமா? பாதகமா?.

என் மனதுக்கு எட்டியவரையில் பாதகம்தான்.

rangan_08
26th December 2009, 06:56 PM
My Sincere thanks to Mr.Karthik & Mr.Rangan !

Regards,
Pammalar.

My humble request to Shanthi theatre authorities & NT's family is that, atleast from this year onwards, they must take initiatives to screen NT's films regularly in Shanthi theatre as a tribute to our beloved Nadigar Thilagam.

Great suggestion Rangan. Such an obvious solution, why doesnt it occur to the concerned parties?

I keep saying this time & again Plum, both here in the hub & to Murali sir. He said that there are some practical difficulties involved in implementing this. Any way, let's hope that they come out with a pragmatic solution, soon.

rangan_08
26th December 2009, 06:58 PM
A RARE PHOTOGRAPH OF THALAIVAR

http://www.thehindu.com/mp/2009/07/15/stories/2009071550030100.htm

Thank you Harish. That's from " Paarthaal pasi theerum ". :thumbsup:

pammalar
27th December 2009, 02:01 AM
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதி -க்கு செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது .

மேல மாசி வீதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு தள்ளு வண்டி கடந்து சென்றது . கும்பிட்ட கையோடு (முருகா ! செந்தூர் வாழ் செல்வக் குமரா !) கட்டபொம்மனாக நடிகர் திலகத்தின் உருவம் பொறித்து 'சிவாஜி கணேசன் பருத்திப் பால்' என மூன்று புறங்களும் அழகுற எழுதப்பட்டிருந்தது . புகைப்படம் எடுக்க முனையும் முன் கடந்து சென்று விட்டது . முரளி சாரின் நினைவு தான் வந்தது :)

"சிவாஜி கணேசன் பருத்திப் பால்" விற்பவரின் வியாபாரம் தினந்தோறும் செழிக்க வேண்டும். அவர் நீடூழி வாழ வேண்டும்.

தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்காக திரு. ஜோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2009, 02:26 AM
சாந்தி தியேட்டரால் நடிகர்திலகத்தின் படங்களுக்கு சாதகமா? பாதகமா?.

என் மனதுக்கு எட்டியவரையில் பாதகம்தான்.

சகோதரி சாரதா அவர்களுக்கு,

தங்களது கூற்றை, தலைப்பாக வைத்து, ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

தங்களின் ஆய்வு பிரமாதம்.

தங்களின் ஆதங்கம் நியாயமானது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2009, 02:34 AM
வாழ்வியல் திலகத்தின் "வாழ்விலே ஒரு நாள்" திரைக்காவியம் ஒளி நெடுந்தகடாக வெளிவந்துள்ளது. சென்னை ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. ராஜ் வீடியோ விஷனுக்கு நமது நன்றிகள் என்றென்றும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th December 2009, 03:25 AM
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது .........

29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்

30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்

31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்

32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்

33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்

34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்

35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்

36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்

37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்

38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்

39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்

40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்

41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்

42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்

43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்

44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்

45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்

46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்

47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்

48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்

49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்

50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்

51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

சாந்தி சாதனைகள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
27th December 2009, 07:53 AM
டியர் ஜோ அவர்களே,
மதுரையில் நமது நண்பர்கள் யாரிடமாவது சொல்லி சிவாஜி கணேசன் பருத்திப் பால் புகைப்படத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள கேட்டுப் பார்ப்போம்.

பம்மலாறாக கலக்கிக் கொண்டிருக்கும் பம்மலாரின் சாந்தி திரையரங்க விவரங்கள் பிரமிப்பையூட்டுகின்றன. சாரதா அவர்கள் சொன்னது போல் மற்ற திரையரங்குகளில் நமது படங்கள் புரிந்த சாதனையை நமது திரையரங்குகளில் புரிய விடாமல் தடுத்த பெருமை நம்மைச் சார்ந்தவர்களையே சாரும் என்பது புலனாகிறது. அடுத்தடுத்து நம் படங்கள் சாந்தியில் வராமல் வெளிவந்திருந்தால் 100 நாட்கள் வெள்ளி விழாக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் கூடியிருக்கும். திருடாதே திரைப்படம் நமது சாந்தியில் தான் வர இருந்தது. பின்னர் 73ல் உலகம் சுற்றும் வாலிபன் நம் சாந்தி திரையரங்கில் வெளி வர வாய்ப்பிருந்தது. இப்படி பல வரலாறுகளைத் தன்னிடத்தில் உள்ளடக்கி 50 ஆண்டுகளில் வியக்கத்தகு சாதனைகளை புரிந்துள்ளது.

திரையரங்கைப் பற்றிப் பேசும் போது ஒரு சுவையான தகவல். ஒரு மாணவி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை. அவள் நடிகர் திலகத்தின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்தாக வேண்டும். அன்று மட்டும் அவளுக்கு வகுப்பில் தலைவலி வந்து விடும். உடனே நடிகர் திலகம் எனும் மருத்துவரிடம் சென்று அவர் படம் என்ற மருந்தை அருந்தி தன் தலைவலியைப் போக்கிக் கொள்வார். இதை ஒருநாள் தோழியர் கவனித்து விட்டனர். அதற்கடுத்த வாய்ப்பில் நடிகர் திலகம் படம் வெளியாவதற்கு முதல் நாள் வகுப்பில் அந்த மாணவியை கலாய்த்து விட்டனர். நாளை உனக்கு தலைவலி வந்து விடுமே என்று....

அந்த மாணவி யார் ....

சற்றுப் பொறுங்கள்...

ராகவேந்திரன்

rangan_08
27th December 2009, 11:49 AM
R.A.புரத்தில் உள்ள Moser Baer கடையில் இரு முறை வரவழைக்கப்பட்டு அவை அனைத்தும் விற்று தீர்ந்ததை நானே நேரில் பார்த்தேன். கடைக்கு வந்த ஒருவர் இந்த DVD-யைப் பார்த்து விட்டு திருச்சியில் உள்ள தன் நண்பரை கைபேசியில் அழைத்து DVD வந்திருக்கும் விவரத்தை சொல்லி அவருக்கும் சேர்த்து இரண்டு CD-களை வாங்கிப் போனதையும் நேரில் பார்த்தேன்.



I like to hear such news which makes me immensely happy :thumbsup:

rangan_08
27th December 2009, 11:51 AM
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், இன்று (25.12.2009) முதல் தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் புராண காவியம் திரையிடப்பட்டுள்ளது. இறையனாரின் திருவிளையாடல் திரைக்காவியத்தை தரிசித்து இறையருள் பெறுவோம் !

பரம பக்தன்,
பம்மலார்.


Grrrreat !!! Madurai rasigargal are very very fortunate & lucky.

rangan_08
27th December 2009, 11:58 AM
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதி -க்கு செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது .

மேல மாசி வீதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு தள்ளு வண்டி கடந்து சென்றது . கும்பிட்ட கையோடு (முருகா ! செந்தூர் வாழ் செல்வக் குமரா !) கட்டபொம்மனாக நடிகர் திலகத்தின் உருவம் பொறித்து 'சிவாஜி கணேசன் பருத்திப் பால்' என மூன்று புறங்களும் அழகுற எழுதப்பட்டிருந்தது . புகைப்படம் எடுக்க முனையும் முன் கடந்து சென்று விட்டது . முரளி சாரின் நினைவு தான் வந்தது :)நடிகர் திலகத்தின்பால் வைத்த அன்பால் உருவானது இந்த பருத்திப் பால் கடை.

என்னே கணேச பக்தி !!!

வாழ்க அந்த வியாபாரி.

வாழ்க நடிகர் திலகம்.

rangan_08
27th December 2009, 12:01 PM
டியர் முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் மற்றும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கு.....

நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களால் நமக்குத்தெளிவாக தெரிவது என்ன?.

முதலில்.....
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையாத அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்களுக்கு நன்றிகள்.

1964-ம் ஆண்டில் சென்னையில் எங்கள் நடிகர்திலகத்தின் படங்களை வெற்றிப்படங்களாக்கிய அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்க்ளுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.

உங்களின் 'சங்கம்' திரைப்படத்தின் ரீல்கள் சாந்தி தியேட்டரின் ப்ரொஜக்டரில் கழற்றமுடியாத அளவுக்கு, 200 நாட்களுக்கும் அதிகமாக ஒட்டிக்கொண்டதாலேயே, அந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் படங்கள் எல்லாம் மற்ற தியேட்டர்களில் வெளியாகி, உருப்படியாக ஓடி தொடர் வெற்றிகளைப்பெற்று ரசிகர்கள் மனதில் பாலை வார்த்தன.

1964 பொங்கல் முதல் 1965 பொங்கல் வரை 365 நாட்களில் 'கர்ணன்' படம் ஓடிய 100 நாட்கள் தவிர, 265 நாட்கள் சாந்தியில் வேறு படங்கள் இல்லை. காரணம் உங்கள் சங்கம் படம். உங்கள் படம் மட்டும் திரையிடப்படாமல் இருந்திருந்தால், பேராசைக்காரர்களால், அத்தனை படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சாந்தியிலேயே வெளியாகி 'ஒருவழி' ஆகியிருக்கும். காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள்.

'சித்தூர் ராணி பத்மினி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால், நிச்ச்யம் ஆறு வாரங்கள் ஓடியிருக்கும். 'அறிவாளி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால் நிச்சயம் 50 நாட்களைக்கடந்திருக்கும். (மறு வெளியீட்டில் அறிவாளி பெரும் சாதனை புரிந்துள்ளது). அதற்கு மாறாக, பாரகனில் 135 நாட்கள் ஓடிய 'புதிய பறவை' சாந்தியில் வந்திருந்தால் ஈவு இரக்கமின்றி 75 நாட்களில், நடிகர்திலகத்தின் வேறு படத்துக்காக, தூக்கப்பட்டிருக்கும்.

சாந்தியில் வெளிவந்ததாலேயே.......
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'பட்டிக்காடா பட்டனமா' 148 நாட்களில் தியேட்டர் மாற்றப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய ராமன் எத்தனை ராமனடி' 75 நாட்களில் தியேட்டர் மாறியது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'அண்ணன் ஒரு கோயில்' (தியாகம் படத்துக்காக) 100+ நாட்களில் எடுக்கப்பட்டது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'தியாகம்' நல்ல கூட்டம் இருக்கும்போதே (ஜெனரல் சக்கரவர்த்தி படத்துக்காக) தூக்கப்பட்டது.
250 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய 'திரிசூலம்' (இமயம் படத்துக்காக) 175 நாட்களில் எடுக்கப்பட்டது. (இவையெல்லாம் சில சோறு பதங்கள். இன்னும் நிறைய இருக்கிறது).

சாந்தி தியேட்டரால் நடிகர்திலகத்தின் படங்களுக்கு சாதகமா? பாதகமா?.

என் மனதுக்கு எட்டியவரையில் பாதகம்தான்.

Very well said :clap:

rangan_08
27th December 2009, 12:06 PM
சாந்தியில் வெளிவந்ததாலேயே.......
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'பட்டிக்காடா பட்டனமா' 148 நாட்களில் தியேட்டர் மாற்றப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய ராமன் எத்தனை ராமனடி' 75 நாட்களில் தியேட்டர் மாறியது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'அண்ணன் ஒரு கோயில்' (தியாகம் படத்துக்காக) 100+ நாட்களில் எடுக்கப்பட்டது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'தியாகம்' நல்ல கூட்டம் இருக்கும்போதே (ஜெனரல் சக்கரவர்த்தி படத்துக்காக) தூக்கப்பட்டது.
250 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய 'திரிசூலம்' (இமயம் படத்துக்காக) 175 நாட்களில் எடுக்கப்பட்டது. (இவையெல்லாம் சில சோறு பதங்கள். இன்னும் நிறைய இருக்கிறது).

சாந்தி தியேட்டரால் நடிகர்திலகத்தின் படங்களுக்கு சாதகமா? பாதகமா?.

என் மனதுக்கு எட்டியவரையில் பாதகம்தான்.

:shock:

Apart from acting, NT should have taken more care on such issues also. But what to do, this man knows only 3 things in life - Acting, Acting & Acting (only on screen, by the way ).

saradhaa_sn
27th December 2009, 02:34 PM
பம்மலாறாக கலக்கிக் கொண்டிருக்கும் பம்மலாரின் சாந்தி திரையரங்க விவரங்கள் பிரமிப்பையூட்டுகின்றன.

73ல் உலகம் சுற்றும் வாலிபன் நம் சாந்தி திரையரங்கில் வெளி வர வாய்ப்பிருந்தது.

உண்மைதான்.....

எம்.ஜி.ஆர், தனிக்கட்சி ஆரம்பித்தபின். முதல் படமாக வந்தது 'உலகம் சுற்றும் வாலிபன்'. அப்படத்தை வெளிவராமல் தடுக்க அப்போதிருந்த கலைஞர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றில் ஒன்று, சுவரொட்டிகளுக்கான வரியை சென்னை மநகராட்சி மூன்று பங்காக உயர்த்தியது. அதனால் அப்படத்துக்கு சென்னையில் ஒரு போஸ்ட்டர் கூட ஒட்டப்படவில்லை. செய்தித்தாள் விளம்பரங்களும், ஸ்டிக்கர் விளம்பரங்களும்தான். (பாவம், அந்த வரி உயர்வினால் மற்ற படங்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன).

அடுத்த தடங்கலாக, 'உ.சு.வாலிபன் படத்துக்கு யாரும் தியேட்டர் தரக்கூடாது' என தியேட்டர் உரிமையாளர்கள் அரசினால் மிரட்டப்பட்டனர். அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தியேட்டர் உரிமையாளர்கள் உ.சு.வாலிபன் படத்தைத் திரையிடத்தயங்கினர். அப்போது ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கும்தான் என்பதை உணர்ந்த நடிகர் திலகம், 'அப்படி யாரும் தியேட்டர் தரவில்லையென்றால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்களில் அண்ணனின் படம் வெளியாகட்டும். நாங்கள் தியேட்டர் தருகிறோம்' என்றார். அப்போது நடந்த 'மேக்கப்-மென் சங்கக்'கூட்டத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்த மேடையில் மைக்கில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் இதை அறிவித்தார்.

மாநில அரசு இடைஞ்சல் செய்தபோதும், மத்தியில் இருந்த இந்திரா அரசுடன் எம்.ஜி.ஆருக்கு சுமுகமான உறவு இருந்ததால், அவர்கள் தலையீட்டில் தியேட்டர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா, சீனிவாசா ஆகிய தியேட்டர்கள் புக் ஆகின. பின்னர் சீனிவாசா தியேட்டர் கைவிடப்பட்டது. மற்ற மூன்றிலும் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

rangan_08
27th December 2009, 03:09 PM
ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கும்தான் என்பதை உணர்ந்த நடிகர் திலகம், 'அப்படி யாரும் தியேட்டர் தரவில்லையென்றால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்களில் அண்ணனின் படம் வெளியாகட்டும். நாங்கள் தியேட்டர் தருகிறோம்' என்றார். அப்போது நடந்த 'மேக்கப்-மென் சங்கக்'கூட்டத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்த மேடையில் மைக்கில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் இதை அறிவித்தார்.



:clap: What a great & timely help. This is how friendship should be honoured.

rangan_08
27th December 2009, 03:19 PM
நாளை வைகுண்ட ஏகாதசி.

I still remember that even about 15 or 18 years ago, they used to screen " bhakthi " movies continuously on the night of Ekadasi (they do it even now in some places, but not spiritual movies). Mainly, movies like Thirumal perumai, Thiruvilayadal & Saraswathi sabatham will be screened without fail.

மக்களை ஏகாதசி விரதம் இருக்க வைத்தமாதிரியுமாயிற்று (to be awake for the whole night).

அவர்களை ஓரளவு இறை சிந்தனையோடு இருக்க வைத்தமாதிரியுமாயிற்று.

எல்லோரையும் நடிகர் திலகம் படங்களை பார்க்க வைத்தமாதிரியுமாயிற்று :D

Gone are those golden days.

RAGHAVENDRA
27th December 2009, 06:46 PM
டியர் மோகன்,
பழைய நினைவுகளை கிண்டி விட்டுள்ளீர்கள். ஒரு வைகுண்ட ஏகாதசியின் போது, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், பாடியில் ஒரு கீற்றுக் கொட்டகை இருந்தது. அப்போதெல்லாம் அது மிகவும் அந்துவானத்திலிருந்த குக்கிராமம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு இரவுக்காட்சியில் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள். சென்னையில் ரசிகர்களுக்கு கனவாக இருந்து கொண்டிருந்த புதிய பறவை அவற்றில் ஒன்று. என் நண்பன் வந்து சொன்னவுடன் நாங்கள் 5 பேர், சிவாஜி ரசிக நண்பர்கள், திருவல்லிக்கேணியிலிருந்து கிளம்பி விட்டோம். நீண்ட இடைவேளைக்குப் பின் புதிய பறவை பார்க்கும் சந்தோஷம், வந்து மற்றவர்களிடம் பெருமை பீற்றிக்கொள்ளக்கூடிய வேகம், காரணம் - ரிலீஸுக்குப் பின் அப்படம் மிக நீண்ட இடைவேளைக்குப் பின் தான் சென்னையில் திரையிடப்பட்டது, இந்தக் காரணங்களால் மிகவும் எதிர்பார்ப்புடன் சென்றோம். முதல் படம் என் அண்ணன். நாங்கள் அனைவரும் டிக்கெட் வாங்கிக் கொண்டு அமர்ந்தோம். எங்களைப் போல் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து பல சிவாஜி ரசிகர்கள் வந்திருந்தார்கள். அவர்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். பிறகு சொல்லி வைத்தார் போல் அனைவரும் தூங்கி விட்டிருந்தோம். எதேச்சையாக எழுந்து நான் பார்த்தால் என்னுடன் வந்த என் நண்பர்கள் உட்பட நாங்கள் அறிமுகப் படுத்திக்கொண்ட பல சிவாஜி ரசிகர்கள் ஆழ்ந்த உறக்கம். பின்னர் என் அண்ணன் படம் முடிந்த வுடன் புதிய பறவை. இப்படம் ஆரம்பித்தது தான் தாமதம். அப்போது தான் புரிந்தது. வந்த கூட்டம் அத்தனையும் சிவாஜி ரசிகர்கள்.. புதிய பறவைக்காக சிலர் செங்கல்பட்டு, திருத்தணி உட்பட சுற்று வட்டாரத்திலிருந்த பல ஊர்களிலிருந்து வந்திருந்தனர். பலத்த ஆரவாரம் கேட்க வேண்டுமா... குறிப்பாக காவல் நிலையத்தில் விரல் சொடுக்குப் போட்டு நடப்பாரே, அந்தக் காட்சியில் அந்தக் கூரையே பிய்த்து வந்து விடும் அளவிற்கு ஆரவாரம். புதிய பறவை முடிந்த பின் சரசா பி.ஏ. படம். நான் அந்தப் படத்தை முழுதும் பார்த்தேன். திரும்பிப் பார்த்தால் திரும்பவும் அனைத்து சிவாஜிரசிகர்களும் உறக்கம். வைகுண்ட ஏகாதசி விழிப்புக்கு குட்பை. புதிய பறவைக்கு வரவேற்பு. இப்படிக் கழிந்தது.
இப்படி பல வைகுண்ட ஏகாதசிகள்...

நான் முன்னர் கூறிய அந்த மாணவி யார் .... ஊகிக்க முடிகிறதா...

ராகவேந்திரன்

Murali Srinivas
27th December 2009, 10:57 PM
சாரதா,

சாந்தியில் வெளியிடப்பட்டதால் நன்றாக ஓட வேண்டிய படங்கள் கூட குறைந்த நாட்களிலே மாற்றப்பட்டதன் வேதனை உங்களுக்கு மட்டுமல்ல,அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் உள்ள ஒன்றாகும். எனக்கு தெரிந்த வரை மதுரையில் இந்த மாதிரி பிரச்சனைகளை நமது படங்கள் சந்தித்தில்லை. அபூர்வமாக இரண்டு முறை மட்டுமே இப்படி நடந்ததாக நினைவு. 1968-ம் ஆண்டு தீபாவளிக்கு [21.10.1968] நியூசினிமாவில் வெளியான எங்க ஊர் ராஜா 69-ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி வெளியான அன்பளிப்பு படத்திற்காக மாற்றப்பட்டது. இல்லையென்றால் மற்றும் ஒரு நூறு நாள் படமாக அமைந்திருக்கும். அது போல 1979-ம் ஆண்டு சென்ட்ரலில் வெளியான நல்லதொரு குடும்பம் 79 நாட்களில் இமயம் படத்திற்காக மாற்றப்பட்டது. இதுவும் நிச்சயமாக நூறு நாட்கள் ஓடியிருக்கும். இதை போன்றே வியட்நாம் வீடு திரைப்படமும் ஞான ஒளி படமும் 90 நாட்களில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும் போதே மாற்றப்பட்ட அநியாயமும் நடந்தது. என்ன செய்வது! எப்படியாவது படத்தை ஓட்டும் பாணி நமக்கு இல்லையே!

மோகன் நீங்கள் சொல்வது உண்மையே. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நடுநிசிக் காட்சி நடைபெறும். மதுரையைப் பொறுத்த வரை வருடத்தில் இரண்டு முறை. ஒன்று வைகுண்ட ஏகாதசி மற்றொன்று சித்திரை திருவிழாவின் போது அழகர் கோவிலிருந்து வரும் பெருமாளை எதிர்கொண்டு அழைப்பது என்ற நிகழ்ச்சி எதிர்சேவை என்ற பெயரில் நடைபெறும். அன்று இரவும் நடுநிசிக் காட்சி உண்டு. அநேகமாக இன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் திருவிளையாடல் நடுநிசிக் காட்சி நடைபெறும் என்றே நினைக்கிறேன்.

அன்புடன்

pammalar
28th December 2009, 02:34 AM
மதுரை சென்ட்ரல் அரங்கிற்கு, பக்த கோடிகள் அலைகடலெனத் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். கலையுலக சொக்கநாதரின் திருவிளையாடலை தரிசிக்கத் தானே இந்தக் கண்கள். வெள்ளிக்கிழமை (25.12.2009), முதல் நாள் மட்டும் , மொத்த வசூல் ரூ. 10600 /- (ரூபாய் பத்தாயிரத்து அறுனூறு). பழைய படங்களின், முதல் நாள் வசூலில், இது சிகர சாதனை.

முரளி சாரின் யூகம் சரியே. நாளை திங்கட்கிழமை (28.12.2009) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்ட்ரலில், திருவிளையாடல், நடுநிசிக் காட்சியாக நள்ளிரவு 1:30 மணிக்கு திரையிடப்படுகிறது.

தகவல்களை வழங்கிய மதுரை ரசிக நல்லிதயங்களுக்கு பசுமையான நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
28th December 2009, 11:21 AM
DEAR PAMMAL SIR AND MURALI SIR,
EAGERLY WAITING TO READ THE THEATRE HAPPENINGS OF THIRUVILAIYAADAL WITH PHOTOS

Plum
28th December 2009, 11:34 AM
DEAR RAGHAVENDRA SIR,
அந்த மதிப்பிற்க்குறிய மாணவி..... சாரதா மேடம்?
Wild guess - Jayalalitha?

HARISH2619
28th December 2009, 01:23 PM
MR PLUM,
திரு ராகவேந்திரா சாரின் பதிவை முழுதுமாக படிக்காமல் ஒரு ஆர்வக்கோளாறினால் உடனே என் யூகத்தை எழுதிவிட்டேன்.அதனால் அதை உடனே டிலீட்டும் செய்து விட்டேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்

Plum
28th December 2009, 01:48 PM
MR PLUM,
திரு ராகவேந்திரா சாரின் பதிவை முழுதுமாக படிக்காமல் ஒரு ஆர்வக்கோளாறினால் உடனே என் யூகத்தை எழுதிவிட்டேன்.அதனால் அதை உடனே டிலீட்டும் செய்து விட்டேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்

:roll: Puriyala. Naanum avarOda kELvikku oru wild guess dhAn post paNNinaen...we are in the same boat :-)

pammalar
28th December 2009, 03:21 PM
நான் முன்னர் கூறிய அந்த மாணவி யார் .... ஊகிக்க முடிகிறதா...

ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

அந்தப் பெருமதிப்பிற்குரிய மாணவி, முன்னாள் இலங்கை அதிபரும், நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகையுமான திருமதி. சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் !

எமது கணிப்பு சரியென்றே நினைக்கிறேன் !

தங்களது மேலான பதிலைத் தர வேண்டும் !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
28th December 2009, 04:36 PM
DEAR PAMMAL SIR AND MURALI SIR,
EAGERLY WAITING TO READ THE THEATRE HAPPENINGS OF THIRUVILAIYAADAL WITH PHOTOS

Senthil,

Theatre happenings-a? We both are at Chennai and so any news regarding the same can only be hearsay. From what I could understand from Swami, the people there who get in touch with him are not that tech - savvy and they are not well versed in sending mails etc.

Swami,

Please check with them if they can send some theatre photos.

Regards

saradhaa_sn
28th December 2009, 04:51 PM
DEAR RAGHAVENDRA SIR,
அந்த மதிப்பிற்க்குறிய மாணவி..... சாரதா மேடம்?
Wild guess - Jayalalitha?

Senthil (Harish),

I strongly hope, it is Mrs. GIRIJA (orgoanisor of 'nadigarthilagamsivaji' website).

RAGHAVENDRA
28th December 2009, 06:40 PM
நான் முன்னர் கூறிய அந்த மாணவி யார் .... ஊகிக்க முடிகிறதா...

ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

அந்தப் பெருமதிப்பிற்குரிய மாணவி, முன்னாள் இலங்கை அதிபரும், நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகையுமான திருமதி. சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் !

எமது கணிப்பு சரியென்றே நினைக்கிறேன் !

தங்களது மேலான பதிலைத் தர வேண்டும் !

அன்புடன்,
பம்மலார்.

:clap:

Dear friends,
Pammalar has guessed it exactly. It's Chandrika Kumarathunga

Raghavendran

HARISH2619
29th December 2009, 12:47 PM
MURALI SIR,
That is what I meant actually because you and pammal sir both have good friends in madurai .

raghavendra sir,
great news which I had never heard before though I knew that she had sent two of her ministers to chennai to pay homage on her behalf when NT left us.

saturday night there was one programme on kalaignar tv which had SPB and two others as judges .I think mr. yaar kannan was one among them.he was praising NT at one instance and recited a two line KAVIDHAI which he had written in praise of NT :

கலைகளும் பாடம் படிக்கும்
அவன் காலடி மண்ணும் நடிக்கும்

saradhaa_sn
29th December 2009, 01:54 PM
saturday night there was one programme on kalaignar tv which had SPB and two others as judges .I think mr. yaar kannan was one among them.he was praising NT at one instance and recited a two line KAVIDHAI which he had written in praise of NT :

கலைகளும் பாடம் படிக்கும்
அவன் காலடி மண்ணும் நடிக்கும்

அந்த நிகழ்ச்சியின் பெயர் 'வானம்பாடி' . நீங்கள் குறிப்பிடும் அந்த நபர், 'கவிஞர் பிறைசூடன்' (யார் கண்ணன் அல்ல).

ஒவ்வொரு போட்டியாளரும் பாடி முடித்தபின், அந்த பாடல் வரிகளின் உள்ளர்த்தங்களை மிக அழகாக விளக்கி, அந்த பாடலுக்கே ஒரு பொலிவு கொடுப்பார். அவர் அதிகமாகப்புகழ்வது கவியரசர் கண்ணதாசன, காவியக்கவிஞர் வாலி மற்றும் பட்டுக்கோட்டையார். அதே சமயம் தற்காலக் கவிஞர்(?)களை சாட தவறுவதுமில்லை. அவருடைய கமெண்ட்டுக்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

RAGHAVENDRA
30th December 2009, 09:28 AM
பிரபல தமிழ், கன்னட, ஹிந்தி மற்றும் மலையாள நடிகர் விஷ்ணுவர்த்தன் அவர்கள் இன்று காலை 30.12.2009, மாரடைப்பினால் காலமானார். இயக்குநர் ஸ்ரீதரின் அலைகள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறியப்பட்ட விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடிகர் திலகத்துடன் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் ரஜனிகாந்துடன் நடித்துள்ளார். அவர் நடித்த ஆப்த மித்ரா என்கிற கன்னட திரைப்படம் தமிழில் சந்திரமுகி படத்திற்கு அடிப்படையாக அமைந்து குறிப்பிடத் தக்கது. தந்தை நாராயணராவ், தாயார் காமாக்க்ஷம்மா. மனைவி பாரதி அவர்களும் பிரபல தமிழ், கன்னட நடிகையாவார். அவர் நடிகர் திலகத்துடன் தங்கசுரங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு வர்த்தன் அவர்கள் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். சாஹச ஸிம்ஹா படத்தில் அவர் பாடிய ஹேகித்தரு நீனே சன்னா என்கிற பாடல் மூலம் அவருக்கு சாஹஸ சிம்ஹா என்கிற பட்டப் பெயரும் நிலைத்து விட்டது. ஃபிலிம்ஃபேர், சினிமா எக்ஸ்பிரஸ், கன்னட சினிமா ரசிகர் சங்கம், மற்றும் கர்நாடக அரசு, உள்ளிட்ட பல அமைப்புகளிடமிருந்து சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார். அவருக்கு நம்முடைய அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

ராகவேந்திரன்

abkhlabhi
31st December 2009, 10:30 AM
WISH A HAPPY AND PROSPEROUS NEW YEAR TO EVERYONE

NOV
31st December 2009, 10:32 AM
ஹாப்பி நியூ இயர் to all Sivaji fans!

[html:468a87df90]
http://i268.photobucket.com/albums/jj8/andrea11_013/nieuwjaar_2009_2010_200x86.gif
[/html:468a87df90]


[html:468a87df90]
http://www.timescontent.com/tss/photos/preview/23607/Nadigar%20Thilagam%20Sivaji%20Ganesan.jpg
[/html:468a87df90]

groucho070
31st December 2009, 10:48 AM
Happy New Year, everyone. Let's hope for more NT related events next year.


And here's wishful thinking that Malaysia will start re-screening on NT films on big screen.... :roll:

HARISH2619
31st December 2009, 01:25 PM
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்

நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வரும் புத்தாண்டில் நம் நடிகர்திலகத்தின் புகழை மேலும் மேலும் பரப்புவோம் என்று சபதம் ஏற்போம்.

saradhaa_sn
31st December 2009, 02:01 PM
வசந்த் தொலைக்காட்சியின் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட்டில் பங்கேற்று நடிகர்திலகத்துடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர், பிரபல கதை வசனகர்த்தா/ இயக்குனர்/ நடிகர் விஜய் கிருஷ்ணராஜ். மிக அருமையாகவும் யதார்த்தமாகவும் பேசினார். அவர் கூறியவற்றிலிருந்து சில துளிகள்:

** நான் நடிகர்திலகத்துடன் பங்கேற்ற ஐந்து படங்களில் அவரிடம் பெற்ற அனுபவங்கள்தான் இன்றுவரை எனக்கு என் தொழிலில் முன்னேற கைகொடுக்கிறது.

** 'மற்றவர்கள் நடிக்கும்போது உனக்கு காட்சியில் பங்கில்லாவிட்டாலும் செட்டை விட்டு வெளியே போகாதே. மற்றவர்கள் நடிப்பதைப் பார்த்தால்தான் அடுத்த காட்சியில் நீ அதற்கேற்ப ரியாக்ஷன் கொடுக்க முடியும்' என்று சொல்வார் நடிகர்திலகம். அதை அவரும் கடைபிடிப்பார்.

** அவர் அரசியலில் ஈடுபடாமல் இருந்திருந்தால் கலைத்துறையில் இன்னும் பல உயரங்களை அடைந்திருப்பார். இன்னும் பல விருதுகள் அவருக்கு கிடைக்கவேண்டிய காலத்திலேயே கிடைத்திருக்க்கும்.

** எகிப்தில் பிறந்த 'ஓமர் ஷெரீப்' Hollywood நடிகராக உயர்ந்த்து போல இவரும் வேறு நாட்டில் பிறந்திருந்தால், உலக அளவில் உயர்ந்திருப்பார். குறைந்தபட்சம் வேறு மாநிலத்தில் பிறந்திருந்தாலாவது இன்னும் அதிகம் புகழடைந்திருப்பார்.

** நடிக்க வருபவர்களுக்கு தனியாக நடிப்பு இன்ஸ்டிட்யூட் எதுவும் தேவையில்லை. இவர் நடித்த 250-க்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்தாலே போதும். அவையே சிறந்த பாடங்கள்.

** ஐந்து பக்க வசனங்களை எழுதிக்கொண்டு போனால், 'இப்போவெல்லாம் எனக்கு வயசாச்சுப்பா. இவ்வளவு வசனம் எல்லாம் எதுக்கு?' என்பார். ஆனால் படிக்கும்போதே, 'இந்த இடத்தில் இதைக்கொஞ்சம் சேரு. அங்கே அதைக்கொஞ்சம் சேர்த்துக்கோ' என்று சொல்லி, ஐந்து பக்க வசனத்தை ஏழு, எட்டு பக்கமாக ஆக்கிடுவார்.

மொத்தத்தில் விஜய் கிருஷ்ணராஜ் பேட்டியில் செயற்கைத்தனம் எதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாகவும், சுவையாகவும் இருந்தது.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

rangan_08
31st December 2009, 06:34 PM
Dear Raghavendra Sir,

தங்களின் ஏகாதசி அனுபவம் பிரமாதம் :) .

ஒரு வேளை புதிய பறவை முதலில் திரையிடப்பட்டிருந்தால், அதன் பிறகு தியேட்டரே காலிதான் போலிருக்கிறது.

அண்ணனைப் பார்க்க தம்பிக்கூட்டம் வராதது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்.


முரளி சார், நான் முன்பே கூறியது போல், மதுரை மாநகர ரசிகப் பெருமக்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.

rangan_08
31st December 2009, 06:36 PM
[tscii:77195aaab6]அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) .

I don’t believe in resolutions, but as I used to keep saying, I will continue to spread the greatness of Nadigar Thilagam as much as possible, especially among children. The knowledge I gain from this thread and the moral support that I get from senior hubbers, gives me the confidence and strength that I require, to do this task effectively.
[/tscii:77195aaab6]

Murali Srinivas
1st January 2010, 12:00 AM
Wishing A Very Happy And Prosperous New Year 2010 To Everyone


It is good to see many people saying that they will carry forward the fame of NT through generations. Let this tribe grow.

Regards

pammalar
1st January 2010, 03:09 AM
WISH YOU ALL A VERY HAPPY, HEALTHY & A WEALTHY NEW YEAR AND A WONDERFUL NEW DECADE !

LET OUR GOD NT GIVE US ALL THE STRENGTH TO SPREAD HIS NAME & FAME THROUGHOUT !!

With lots of love & tonnes of affection,
Pammalar.

tacinema
1st January 2010, 08:34 AM
Wish you all a very happy and prosperous new year - 2010.

Sorry for coming back after a very long looooong time. I see quite a good number of new NT fans on this thread - especially Pammalar.

முரளி சார்,

மதுரையில் இருந்து NT பற்றி ஏதேனும் செய்திகள் உண்டா?

Best regards

Murali Srinivas
1st January 2010, 04:10 PM
tac,

Welcome back. Long time No see. Hope this is not yet another flying visit by you.

அக்டோபர்-ல் சிலை திறப்பு விழா, சென்ட்ரலில் ஒரு மாதத்திற்கு முன்பு உத்தம புத்திரன் இப்போது திருவிளையாடல் போன்றவை புரிந்த வசூல் சாதனைகள் என்பவையே மதுரை ஸ்பெஷல் செய்திகள்.

திருவிளையாடல் சென்ற ஞாயிறு மாலைக் காட்சியும், வைகுண்ட ஏகாதசி நடுநிசிக் காட்சியும் சிறப்பாக இருந்தன என்று செய்தி. இதை தவிர சுமதி என் சுந்தரி படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கி பிரிண்ட் போட்டிருக்கிறார், விரைவில் சென்ட்ரலிலும் மதுரை சுற்று வட்டாரத்திலும் வெளியாகும் என்று தெரிகிறது. அதே போல் ராஜாவும் கை மாறியிருக்கிறது என்றும் விரைவில் மீண்டும் [சமீபத்தில் வெளியானது பற்றி நீங்களே எழுதியிருந்தீர்கள்] வெளியாகும் என்று தெரிகிறது.

எல்லாவற்றையும் விட மதுரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் படமும் உடனே வெளியாகும் என்று சொல்கிறார்கள். நண்பர் சுவாமி [பம்மலார்] இது போன்ற பல செய்திகளை திரட்டி தந்திருக்கிறார்.

Regards

RAGHAVENDRA
2nd January 2010, 06:19 AM
அனைவருக்குகம் (தாமதத்திற்கு மன்னிக்கவும்) இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பம்மலாரிடம் இருந்து மதுரை தகவல்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

சமீபத்தில் கோவையில் மரகதம் திரையிடப்பட்டதாகவும் மிகப் பிரமாதமாக வெற்றியடைந்து நல்ல வசூல் கிடைத்ததாகவும் கேள்வி. கோவை அன்பர்கள் யாராவது இதைப் பற்றி விவரம் சொல்ல வேண்டுகிறேன்.

ராகவேந்திரன்

Irene Hastings
2nd January 2010, 11:45 AM
அனைத்து ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

விடுமுறையில் சென்றதால் எனது தொடரை முடிக்க இயலவில்லை. விரைவில் முடித்துவிடுவேன். மன்னிக்கவும்.

Murali Srinivas
3rd January 2010, 12:18 AM
என் தம்பி - Part I

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

வெளியான நாள்: 07.06.1968

நகரம் என்றும் சொல்ல முடியாமல் அதே சமயம் கிராமம் என்றும் இல்லாமல் உள்ள ஒரு நடுவாந்திர ஊர். அங்கே மிகப் பெரிய செல்வந்தர் முருகபூபதி. அவரின் மனைவி இறந்து விடவே இரண்டாம் திருமணம் திருமணம் செய்திருக்கிறார். மூத்த மனைவியின் மூலமாக ஒரு மகனும் இரண்டாவது மனைவி மூலமாக ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் அவருடைய வாரிசுகள். தவிர, கணவனை இழந்த விதவை தங்கையும் அவரது மகன் மற்றும் மகளும் அந்த வீட்டிலே வளர்கிறார்கள். தம்பி முறையாகும் அவரது சித்தப்பா மகனும், அவரது மகளும் பர்மாவிலிருந்து அகதிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். ஒரே மகள் உமா போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் மேல் மூத்த மகன் கண்ணன் உயிரையே வைத்திருக்கிறான். அந்த பெண்ணும் அப்படியே.

எல்லா நல்ல குணங்களும் பொருந்திய கண்ணன் ஜமீன் விவகாரங்களையும் கணக்கு வழக்குகளையும் கவனித்துக் கொள்ள இளைய மகன் விஸ்வம் ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். வீட்டிலே வளரும் அத்தை மகள் ராதாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தம்பியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்ணன் அவனை திருத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஒன்றுமில்லை.

இந்நிலையில் விஸ்வத்தின் செயல்பாடுகள் பொறுக்க முடியாமல் ஜமீந்தார் அவனது கைகளுக்கு பணமே போகாமல் செய்து விட ஒரு நாள் இரவில் தந்தையின் பீரோ சாவியை எடுத்து பணத்தை திருட முயற்சிக்கும் போது அவர் பார்த்து விட கடுமையான வாக்குவாதம் முற்றி விஸ்வம் தந்தைக்கு நேராக துப்பாக்கியை எடுத்து நீட்ட அது அவரது இதயத்தை பாதித்து நெஞ்சு வலி வந்து விடுகிறது.

படுக்கையில் விழும் அவர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். வக்கீலை அழைத்து உயில்எழுதுகிறார். அதன்படி சொத்துகளை நிர்வகித்து வரும் பொறுப்பையும் மூத்த மகன் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறார். மறுக்கும் கண்ணனிடம் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள செய்யும் அவர் யாருக்கும் தெரியாத குடும்ப ரகசியம் ஒன்றை கண்ணனின் காதில் சொல்கிறார். உயில் விஷயம் தெரிந்து தந்தையோடு சண்டை போடும் விஸ்வதிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே முருகபூபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.

தந்தையின் மறைவிற்கு பிறகு சொத்துக்களை நிர்வகித்து வரும் கண்ணன் தம்பியை திருத்தி விட முயற்சிக்கிறான். ஆனால் மேலும் விஸ்வத்தைப் பற்றி தவறான செய்திகளே வருகிறது. எஸ்டேட் பங்களாவில் வேலைக்கார பெண்ணிடம் பழகுவது பற்றி புகார்கள் வர, கண்ணன் அதைப் பற்றி விசாரிக்கிறான். அலட்சியமாக பதில் சொல்லும் தம்பியை பார்த்து நீ திருந்தவே மாட்டியா என்று கேட்டு போகும் அண்ணனின் குரல் விஸ்வத்தின் மனதில் எதிரொலிக்கிறது. மறு நாள் காலை அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. பக்திமானாக படியில் இறங்கும் விஸ்வம் அனைவரிடமும் திருந்தி விட்டேன் என்கிறான். கோவிலுக்கு போகிறான்.

கண்ணனுக்கு பெரும் சந்தோஷம். அந்த நேரத்தில் கண்ணன் ராதா இவர்களுடன் வெளியே செல்லும் தங்கை உமா தண்ணீரில் தவறி விழுந்து விட, காப்பற்ற செல்லும் கண்ணனும் சிக்கிக் கொள்கிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்ற விவரத்தை அப்போதுதான் ராதா தெரிந்துக் கொள்கிறாள். குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் தேர்ச்சி பெற்ற கண்ணன் நீச்சல் பயிற்சி பெறாததன் காரணம் அவனுக்கு நீரில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி அவனது தந்தை நீச்சல் சொல்லி தரவில்லை என்ற விஷயத்தை கண்ணன் சொல்கிறான்.

இந்நிலையில் விஸ்வம் ஒரு நாள் தங்கள் தந்தைக்கு ஒரு நினைவிடம் அமைப்பதற்கு பக்கத்திலுள்ள தீவில் இடம் பார்த்திருப்பதாகவும் அதை பார்க்க வர வேண்டும் என்று சொல்லி கண்ணனை அழைத்துப் போகிறான். மோட்டார் படகில் செல்லும் கண்ணன் படகு வேறு திசையில் பயணிப்பதை பார்த்து காரணம் கேட்க விஸ்வம் தன் சுயரூபத்தை காட்டுகிறான். சொத்து முழுவதும் கண்ணன் கையில் இருப்பதால் வாழ்நாள் முழுக்க கண்ணனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அது தன்னால் முடியாது,ஆகவே கண்ணனை ஒழித்து விட்டு தான் சொத்தை அடைய போவதாக சொல்கிறான். கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இந்த படகில் அழைத்து வந்து விட்டு பாதி வழியில் ஆற்றில் குதித்து விடுகிறான். வெகு வேகமாக ஓடும் மோட்டார் படகை சமாளிக்க் முடியாமல் கண்ணன் திணற, படகு ஒரு பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.

வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க விஸ்வமும் அவர்களுடன் சேர்ந்து சோகமாக இருப்பது போல் நடிக்கிறான். குழந்தை உமா அண்ணனை காணாமல் படுத்த படுக்கையாகி விடுகிறாள். இதற்கிடையே இப்போது சொத்தின் ஒரே பராமரிப்பாளாரான தன் அத்தையிடம் சொத்துகளையும் தன் பெரியம்மா [கண்ணனின் அம்மா] நகைகளையும் கேட்டு ரகளை செய்யும் விஸ்வம் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக மிரட்டுகிறான். நகைகளைப் பற்றி தெரியாது என்று சொல்லும் அத்தை சொத்துகளை தர சம்மதிக்கிறாள். முன்பு தன் அண்ணனிடம் தன் மகள் ராதாவை இந்த வீட்டு மருமகளாக்குகிறேன் என்று சொன்ன வாக்குறுதியை நினைவுப்படுத்தி விஸ்வம் ராதாவை மணந்துக் கொள்கிறேன் என்கிறான். ராதாவிற்கும் அவள் அண்ணன் சபாபதிக்கும் இதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர்களது தாய் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறாள்.

இந்த நேரத்தில் எஸ்டேட் வேலைக்காரன் ஒருவன் சபாபதியிடம் வந்து பக்கத்து கிராமத்தில் ஒரு நாடக குழு முகாமிட்டிருப்பதாகவும் அதில் கள்ளபார்ட் போடும் நடிகன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்கிறான். நாடகத்தை பார்க்க செல்லும் சபாபதி நாடக நடிகன் கந்தப்பாவை பார்த்து பிரமித்துப் போகிறான். காரணம் அச்சு அசல் அவன் கண்ணனைப் போலவே இருப்பதால். அவனிடம் சென்று விஷயங்களை விளக்கி கண்ணனாக நடிக்க சொல்ல அவன் முதலில் மறுக்கிறான். யாருக்கும் தெரியாமல் சபாபதி அவனை கூட்டிக் கொண்டு வந்து குழந்தையை காட்டவே, அந்த பெண்ணிற்காக நடிக்க ஒப்புக் கொள்கிறான்.

தன்னை ஒருதலையாய் காதலிக்கும் பர்மா மாமாவின் மகளிடமிருந்து பூட்டி கிடக்கும் அவர்களின் ஒரு வீட்டு சாவியை வாங்கி அங்கே கந்தப்பாவை தங்க வைத்து சபாபதி அவனை கண்ணனாக மாற்ற பயிற்சி கொடுக்கிறான்.

சொத்துகளை விஸ்வம் பெயருக்கே மாற்ற ஏற்பாடு செய்து அதை அனைவர் முன்னாலும் செய்ய போகும் நேரத்தில் கந்தப்பா, கண்ணனாக உள்ளே நுழைய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. விஸ்வம் மட்டும் அதிர்ச்சி அடைகிறான். அதை வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் கூட அவன் மனதில் குழப்பங்கள்.

வந்திருப்பவன் கண்ணன் அல்ல என்ற சந்தேகத்தை விஸ்வம் வெளிப்படுத்தி பல பரிட்சைகளை வைக்க அவை அனைத்திலும் கண்ணன் வெற்றிப் பெறுகிறான். இறுதியாக சிறு வயதில் போட்ட வாள் சண்டையை நினைவுப் படுத்தி சண்டைக்கு அழைக்கும் தம்பியின் சவாலை ஏற்று ஜெயித்துக் காட்டும் கண்ணன் தன்னை கொல்ல, வாள் முனையில் விஷம் தடவியிருக்கிறான் தம்பி என்று தெரிந்ததும் துடித்துப் போகிறான்.

நீ என் அண்ணன் இல்லை. பணம் தருகிறேன், வீட்டை விட்டு போய் விடு என்று சொல்லும் தம்பியிடம் பேரம் பேசும் கண்ணன் அவன் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கிறான். ஆனால் பேரம் பேசும் போது அதை கேட்டு விடும் அத்தை அவனை தவறாக புரிந்துக் கொண்டு விடுகிறாள். சபாபதியும் உண்மையை சொல்ல, தான் கந்தப்பா அல்ல கண்ணன்தான் என்ற உண்மையை கண்ணன் சொல்ல யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆற்றில் விழுந்த தன்னை ஒரு நாடக குழு காப்பாற்றியதாகவும், அதன் மூலமாகதான் தான் உயிர் பிழைத்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே வேறு வேடத்தில் வந்ததாகவும் கண்ணன் சொல்வது எடுபடாமல் போகிறது. அவனை வீட்டை விட்டு துரத்துகிறார்கள். அப்போது இறக்கும் தருவாயில் தன் தந்தை தன்னிடம் சொன்ன ரகசியம் நினைவிற்கு வருகிறது. மீண்டும் வீட்டுக்குள் செல்லும் அவன் பாரம்பரியமான குடும்ப நகைகளை தந்தை எங்கே வைத்திருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என்றும் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தான் கண்ணன் என்பதை நிரூபிப்பதாக சொல்லி விட்டு செல்கிறான். இதை கேட்டு அவன் பின்னே செல்லும் தம்பி, அண்ணன் நகைகளை எடுத்தவுடன் அதை பிடுங்கி கொண்டு அண்ணனை கொல்ல முயற்சிக்க, அந்த முயற்சியில் அவன் இயந்திரத்திற்கு அடியில் மாட்டிக் கொள்ள, அவனை அண்ணன் காப்பாற்றுகிறான். அவனின் நல்ல மனது புரிந்து தம்பி மனம் மாற, எல்லாம் இனிதே முடிவடைக்கிறது.

அன்புடன்

Murali Srinivas
3rd January 2010, 12:29 AM
என் தம்பி - Part II

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதற்கு முன் என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம். 1964 முதல் 1974 வரை எந்த சிவாஜி படத்தையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். காரணம் உடல் மெலிந்து ஸ்லிம் -மாக இளைமையான சிக்கென்ற நடிகர் திலகத்தை பார்ப்பதற்கே போகலாம் என்பான். ஒரு பிரபல ஒளிப்பதிவாளர் சொன்னதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழ் சினிமா நடிகர்களிலேயே காமிரா மூலமாக எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே முகம் நடிகர் திலகத்துடையதுதான் என்றார் அவர். என் தம்பி பார்க்கும் எவரும் இந்த இரண்டு கருத்துகளையும் ஆமோதிப்பார்.

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவருக்கு இந்த ரோல் a stroll in the park. அவ்வளவு இலகுவாக கையாண்டிருப்பார். சின்ன விஷயம் என்றாலும் அதை உன்னிப்பாக உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடியவர் என்பதற்கு இந்த படமும் ஒரு சான்று. முதல் பகுதியில் ஒரு செல்வந்தர் வீட்டு மகன், நடுவில் நாடகக்காரன் பிறகு மாளிகையில் நடிக்க வந்தவன், இறுதியில் உண்மையான கண்ணனாக வெளிப்படுவது இப்படி ஒரே கேரக்டர் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தும்.

தங்கை பாசத்தை வெளிப்படுத்த அவருக்கு சொல்லியா தர வேண்டும்? போலியோ பாதித்த ரோஜாரமணியின் மேல் கொண்ட பாசம் எந்த இடத்திலும் மெலோடிராமாவாக போகாமல் கச்சிதமாக செய்திருப்பார். முத்து நகையே பாடலில் கண்ணழகையும் கையழகையும் முகத்தில் தவழும் ஆனந்த புன்னகையோடு பாடி விட்டு அடுத்த வரியில் காலழகு பார்த்தால் என்று காலைப் பார்த்து விட்டு சட்டென்று புன்னகை மறைந்து கண்ணில் நீர் கட்டி நிற்க [இது ஒரே ஷாட்-ல் வரும்] பார்ப்பது, அந்த கண்ணீர் கன்னத்தில் வழியாமல் தன்னை சமாளித்துக் கொண்டு அடுத்த வரியை பாடுவது என்பது அந்த யுக கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். அது போல் படத்தில் இரண்டு டூயட்கள். முதல் பாடலில் [அடியே நேற்று பிறந்தவள்] aristocratic behaviour என்றால் இரண்டாவது பாடலில் [அய்யையா மெல்ல தட்டு] வெஸ்டேர்ன் டான்ஸ் தெரியாத வேஷம் போட வந்த ஒரு நாடக நடிகன் எப்படி தடுமாறுவான் என்பதை அசலாக செய்திருப்பார்.

இந்த படத்தில் ஸ்டைல்-க்கு ஒரு புதிய பாடமே நடத்தியிருப்பார். இரவு வெகு நேரம் கழித்து வரும் தம்பியிடம் விசாரிக்கும் போது White & White போட்டு அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஸ்டைல் சூப்பர் [இந்த போஸைதான் மறக்க முடியுமா டி.வி. நிகழ்ச்சியில் உபயோகித்தார்கள்].கந்தப்பா கண்ணனாக மாறி பங்களாவில் நுழையும் காட்சி.வாசலில் வந்து நிற்கும் ஸ்டைல் அதை தொடர்ந்து உள்ளே நடந்து வரும் ஸ்டைல் இவை அனைத்திற்கும் தியேட்டரே அதிரும். வெகு நாட்களுக்கு பின் அவர் கத்தி சண்டை போட்ட படம். இதில் முதலில் கத்தி பிடித்து நிற்பதிலாகட்டும் பின் படிகளில் ஏறிச் சென்று இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு ஸ்டெப் தாவி தாவி கத்தியை வீசும் போது தியேட்டரே ரகளையாய் இருக்கும்.

தம்பியின் மீது காட்டும் பாசமும் பரிவெல்லாம் அவருக்கு ப்பூ.நாடக நடிகனாக வரும் போது லைவ்லி -யாக செய்திருப்பார். நாடக மேடையின் மீது அவருக்கு இருந்த பக்தி அவரது வசனங்களிலும் உடல் மொழியிலும் வெளிப்படும். [சங்கர தாஸ் சுவாமிகள் சொன்ன வசனங்களெல்லாம் ரத்தத்தில் ஊறியிருக்கு]. அவருக்கு இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்ச்சிக்கும் இந்த நாடக கலைஞன் ரோல் மிகவும் உதவி செய்தது.

தெற்கத்தி கள்ளனடா பாடலுக்கு அவர் ஆடும் நடனம் unbelievable. தேர்ந்த நடனக் கலைஞரான ராஜசுலோச்சனாவுடன் போட்டி போட்டு ஆடும் அந்த ஆட்டம் ஒரு நாடக கூத்தாடியை கண் முன்னே கொண்டு நிறுத்தும்.

சரோஜாதேவி வருவார், வசனம் பேசுவார், பாடலுக்கு வாய் அசைப்பார். பாலாஜி தம்பி. பொதுவாகவே பாலாஜியின் உடல் மொழியில் தென்படும் திமிர் (இல்லை) மெஜஸ்டிக் லுக், பணக்கார திமிரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு நன்றாக சூட் ஆனது.

நாகேஷ் இந்த படத்தில் முழு நீள ரோல். கந்தப்பாவை கண்ணனாக மாற்றும் போதும் சினிமா பாட்டு பாடியே தன்னைக் கொல்லும் மாமா பெண்ணிடம் சிக்கி தவிக்கும் போதும் ரசனையாக பண்ணியிருப்பார். பர்மா அகதி அப்பா மகளாக வி.கே.ஆர்., மாதவி. எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணிக் குரலில் மாதவி பாடும் பிரபல பாடல்களின் இரண்டடிகள் எல்லாம் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கும். மேஜர், பண்டரிபாய், சுந்தரி பாய், நாகையா போன்ற பாலாஜி படத்தின் ஆஸ்தான நடிகர்கள் எல்லோரும் இதிலும் உண்டு. பக்த பிரகலாதா மூலம் பிரபலமான பேபி ரோஜாரமணி போலியோ தங்கையாக வருவார். [இந்த பேபி குமாரியான போது பாலாஜிதான் அவரது என் மகன் படத்தில் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தார்].

அன்புடன்

Murali Srinivas
3rd January 2010, 12:42 AM
என் தம்பி - Part III

தங்கை என்ற action பரீட்சை எழுதி பாஸ் செய்த பிறகு நடிகர் திலகத்தை வைத்து அடுத்த ஸ்டெப் எடுத்தார் பாலாஜி. அதுதான் என் தம்பி. மீண்டும் தெலுங்கு படம். ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். [இந்த ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் உரிமையாளர் வி.பி. ராஜேந்திர பிரசாத் அவர்கள்தான் பின்னாளில் நடிகர் திலகத்தை வைத்து எங்கள் தங்க ராஜா, உத்தமன் மற்றும் பட்டாக்கத்தி பைரவன் படங்களை எடுத்தவர். அவரது மகன் ஜெகபதி பாபு இன்று தெலுங்கில் ஹீரோ].

முந்தைய படத்திலிருந்து நாயகியும் வசனகர்த்தாவும் இதில் மாறினார்கள். K.R. விஜயாவிற்கு பதிலாக சரோஜாதேவி. ஆரூர்தாஸிற்கு பதிலாக ஏ.எல்.நாராயணன்.

பாலாஜியின் அபிமான நடிகையாய் இருந்தவர் சரோஜாதேவி. அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பி இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். புதிய பறவைக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவெளியில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்தார் அபிநய சரஸ்வதி. அவரின் கல்யாணத்திற்கு பிறகு அவர் நடிகர் திலகத்தோடு மீண்டும் இணைந்ததும் இந்தப்படத்தில்தான்.

ஆலகாலா என்று பாலாஜியால் அன்போடு அழைக்கப்பட்டவர் ஏ.எல். நாராயணன். வசனம் எழுதுவதில் இவர் வாலி. அதாவது எதுகை மோனை தூக்கலாக இருக்கும். இந்த படத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் அனைத்து பாலாஜி படங்களுக்கும் எழுதினார். 1984 -ல் வெளியான விதி படத்தின் மூலமாக மீண்டும் ஆரூர்தாஸ் பாலாஜி காம்பில் நுழைந்தார்.

படத்தில் சண்டை காட்சிகளே இல்லாமல் ஆனால் படம் முழுக்க ஒரு action மூட் என்று சொல்வோமே, அதை அதுவும் ஒரு குடும்பக் கதையில் ஏ.சி.டி. செவ்வனே நிலை நிறுத்தியிருந்தார். படத்தில் வரும் கத்தி சண்டை, பிறகு இறுதி காட்சியில் இரண்டு மூன்று punches, இவை மட்டுமேதான் இருக்கும். எந்த இடத்திலும் படம் போரடிக்காமல் போகும். கிளைமாக்ஸ் காட்சியில் பரம்பரை நகைகள் ஒரு பாழடைந்த கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அந்த லாஜிக் சறுக்கலை [தெலுங்கு மூலம்] மறந்து விட்டால் படத்தை ரசிக்கலாம்.

கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் பாடல்கள் பெரிய ஹிட்.

1. முத்து நகையே - டி.எம்.எஸ் - இரண்டு முறை வரும்.

முதலில் சந்தோஷமாக இறுதியில் சோகமாக. மிகவும் ஹிட்டான பாடல்.

2. அடியே நேற்று பிறந்தவள் நீயே - டி.எம்.எஸ்.- சுசீலா டூயட்.

மெலோடியில் எம்.எஸ்.வி. பின்னியிருப்பார். அதிலும் வாடைக் காற்றில் வெளியில் நின்றால் போர்வை போல தழுவிக் கொண்டு என்ற வரிகள் சுகம்.

3. தெற்கத்தி கள்ளனடா - சீர்காழி பாடும் நாடக மேடை பாடல்.

தென்னாட்டு சிங்கம்டா சிவாஜி கணேசனடா என்ற வரிகளுக்காகவே ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்தார்கள், கேட்டார்கள்.

4. அய்யையா மெல்ல தட்டு - டி.எம்.எஸ். சுசீலா டூயட். Western -Folk இரண்டையும் மன்னர் அழகாக மிக்ஸ் செய்திருப்பார்.

வெஸ்டேர்ன் மற்றும் டப்பாங்குத்து இரண்டையும் நடிகர் திலகம் மாறி மாறி ஆடும் போது இங்கே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்.

5. தட்டட்டும் கை தழுவட்டும் - சுசீலா. சரோஜாதேவியின் கூந்தலில் உள்ள பூவைப் சாட்டையின் மூலமாக பறிக்கச் சொல்லும் பரிட்சையின் போது வரும் பாடல். ஒரு பாஸ்ட் பீட்.

சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் [மிட்லண்ட்,அகஸ்தியா,ராக்ஸி,ராம்] 8 வாரங்களை கடந்து ஓடிய இந்த படம் அதிக பட்சமாக மதுரை சென்ட்ரல் மற்றும் சேலம் சாந்தியில் 12 வாரங்கள் [84 நாட்கள்] ஓடியது. மதுரையிலும் சேலத்திலும் ரிலீஸ் ஆன தியேட்டரிலிருந்து ஷிப்ட் ஆன அரங்குகளில் 100 நாட்களை கடந்தது. வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு எல்லாம் நிறைந்த லாபத்தைக் கொடுத்தது. மறு வெளியீடுகளில் சக்கைப் போடு போட்ட படம் இது.

இதன் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசும்போது ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். முன்பு மதுரையில் third party ரிலீஸ் என்று ஒன்று இருந்தது. ஒருவர் விநியோகஸ்தராகவோ அரங்க உரிமையாளராகவோ இல்லாவிடினும் படவிநியோகத்தில் பங்கு கொள்ளும் முறை இது. விநியோகஸ்தரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட படத்தின் பிரதியை சில குறிப்பிட்ட நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து ஒரு தியேட்டரில் ரிலீஸ் செய்து வரும் லாபத்தை எடுத்துக் கொள்வது. இதில் சிக்கல் என்னவென்றால் விநியோகஸ்தருக்கு வாடகை, தியேட்டருக்கு வாடகை, கேளிக்கை வரி அதை தவிர போஸ்டர் பேப்பர் விளம்பரம். இந்த செலவுகள் அனைத்தும் போக வசூல் வந்தால் லாபம். இல்லை போனது போனதுதான். இந்த third party distribution எல்லோருக்கும் கொடுக்க மாட்டார்கள். விநியோகஸ்தருக்கு நன்கு தெரிந்த ஆட்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இனி விஷயத்திற்கு வருகிறேன்.

1982 -ம் ஆண்டு. எனது நண்பனின் அண்ணன் விநியோக துறையில் இருந்தார். அதை வைத்து எங்கள் நண்பர்கள் ஒரு நான்கு பேர் சேர்ந்து இது போல் அவ்வப்போது third party distribution செய்து வந்தார்கள். ஒரு பெரிய படம் செய்ய வேண்டும் என்று ஆசை. சேது பிலிம்ஸ் பெரிய கம்பெனி. அவர்களிடம் சென்று பேசினார்கள். சிவாஜி படம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணம். மதுரையில் உள்ள அலங்கார் திரையரங்கு ஒரு வார காலம் ப்ரீ-யாக இருந்தது. இவர்கள் விநியோகஸ்தரிடம் தொகையும் பேசி விட்டார்கள். ஆனால் என்ன படம் என்பது முடிவாகவில்லை. நண்பர்கள் ராஜா வேண்டும் எனக் கேட்கிறார்கள். விநியோகஸ்தரோ அதை தவிர வேறு எந்த படம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி என் தம்பி பற்றி சொல்லுகிறார்.[பாலாஜி படம் எல்லாம் அவர்கள்தான் Distribution. ராஜா எப்போது வெளியிட்டாலும் வசூல் அள்ளும் என்பதால் வெளி ஆட்களுக்கு தர மாட்டேன் என்கிறார்]. மூன்று பேருக்கு என் தம்பி நன்றாக போகும் என்பது எண்ணம். நான்காவது நண்பருக்கு சந்தேகம். ஆகவே தடுத்து விட்டார்.

இவர்கள் வேண்டாம் என்று சொன்னவுடன் வேறு ஒருவர் விநியோகஸ்தரிடம் பேசி படத்தை வாங்கி அதே தேதியில் அதே அலங்கார் தியேட்டரில் ஒரு வாரத்திற்கு வெளியிட்டார். என் தம்பி படம் வெளியான வெள்ளிகிழமை மாட்னி முதல் கடைசி நாளான வியாழன் இரவு காட்சி வரை மொத்தம் 23 காட்சிகளும் ஹவுஸ் புல்.[தினசரி 3,சனி ஞாயிறு 4 காட்சிகள். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள்]. எல்லா செலவுகளும் போக பத்தாயிரத்திற்கு மேல் லாபம். 27 வருடங்களுக்கு முன் மிக பெரிய தொகை இது. நண்பர்களால் வெகு காலத்திற்கு இந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. எப்போது மறு வெளியீடு கண்டாலும் வசூலை குவிக்கும் படம் என் தம்பி என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். படத்தை நடிகர் திலகதிற்காகவே பார்க்கலாம்.

அன்புடன்

tacinema
3rd January 2010, 12:44 AM
tac,

Welcome back. Long time No see. Hope this is not yet another flying visit by you.

அக்டோபர்-ல் சிலை திறப்பு விழா, சென்ட்ரலில் ஒரு மாதத்திற்கு முன்பு உத்தம புத்திரன் இப்போது திருவிளையாடல் போன்றவை புரிந்த வசூல் சாதனைகள் என்பவையே மதுரை ஸ்பெஷல் செய்திகள்.

திருவிளையாடல் சென்ற ஞாயிறு மாலைக் காட்சியும், வைகுண்ட ஏகாதசி நடுநிசிக் காட்சியும் சிறப்பாக இருந்தன என்று செய்தி. இதை தவிர சுமதி என் சுந்தரி படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கி பிரிண்ட் போட்டிருக்கிறார், விரைவில் சென்ட்ரலிலும் மதுரை சுற்று வட்டாரத்திலும் வெளியாகும் என்று தெரிகிறது. அதே போல் ராஜாவும் கை மாறியிருக்கிறது என்றும் விரைவில் மீண்டும் [சமீபத்தில் வெளியானது பற்றி நீங்களே எழுதியிருந்தீர்கள்] வெளியாகும் என்று தெரிகிறது.

எல்லாவற்றையும் விட மதுரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் படமும் உடனே வெளியாகும் என்று சொல்கிறார்கள். நண்பர் சுவாமி [பம்மலார்] இது போன்ற பல செய்திகளை திரட்டி தந்திருக்கிறார்.

Regards

நன்றி முரளி!!

உத்தம புத்திரன் மற்றும் திருவிளையாடல் ஆகியவை என்றும் நினைவில் நிற்கும் evergreen NT படங்கள். I happened to see Uththama Puthiran recently on DVD - what a terrific acting and wonderful performance from NT. எல்லாவற்றிக்கும் மேலாக அழகான NT-பத்மினி ஜோடி!!

வைகுண்ட ஏகாதசி நடுநிசி ஸ்பெஷல் ஷோ என்று நீங்கள் சொல்லும் பொது எனக்கு அமிர்தம் தியேட்டரில் KARNAN பார்த்த ஞாபகம் வருகிறது. அன்று காட்சி ஹவுஸ் புல் - தியேட்டர் அதிர்ந்தது - an unforgettable experience.

Coming to re-releases, I think Madurai should now get all NT movies that had a wonderful run during previous re-releases . Some of them I remember are:

1. V P Kattabomman
2. Puthiya paravai
3. avan thaan manithan
4. raja
5. vasantha maaligai
6. paava manippu
7. pattikada pattanama

Madurai NT fans will have field day.

Regards

pammalar
3rd January 2010, 12:42 PM
Dear Tac,

A warm welcome to you. You are back with a bang.

Thank you very much for your appreciation.

Regards,
Pammalar.

saradhaa_sn
3rd January 2010, 06:48 PM
[tscii:18167af0bb]டியர் முரளி,

'என் தம்பி' திரைப்பட திறனாய்வு மிக, மிக அருமை. பலமுறை பார்த்த படமாயினும், உங்கள் எழுத்து வடிவில் பார்த்தபோது புதிய பரிமாணத்தில் பார்க்க முடிந்தது. நடிகர்திலகம் ஸ்டைல் ராஜாங்கம் நடத்திய படங்களில் இதுவும் ஒன்று. ஒரு சின்ன குறை. பாடல்களைப்பற்றி மிகச்சுருக்கமாக முடித்துக் கொண்டீர்கள். இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.
'தட்டட்டும் கை தழுவட்டும்
திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ... ஏனோ... ஏனோ...'
பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதிலும் அதில் ஒலிக்கும் படு வேகமான பாங்கோஸ், மன்னரின் முத்திரை.

இந்தப்படத்தில், நாடகத்தில் வரும் 'நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே' பாடல் மெட்டும், இதையடுத்து வெளியான தில்லானா'வில் மனோரமாவின் நாடகப்பாடல் மெட்டும் ஒரே மெட்டாக அமைந்தது எப்படி என்பதுதான் ஆச்சரியம். இத்தனைக்கும் வெவ்வேறு இசையமைப்பாளரகள். வெவ்வேறு இயக்குனர்கள்..?.

ரோஜாரமணி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அவர் அருகில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. ஏராளமான நட்சத்திரங்கள் தென்பட்டனர். அப்போது, இருக்கைகளின் எண்களைப்பார்த்து அமர வைத்துக்கொண்டிருந்தவரால் அழைத்து வரப்பட்ட ரோஜாரமணி, எங்கே அமரப்போகிறாரோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது எனது வலப்புற இருக்கையில் வந்து அமர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் (அறிமுகப்படுத்திக்கொள்ள என்ன இருக்கு) , ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்துவங்கி விட்டார்.

நடிகர்திலகம் பற்றி அதிகம் பேசினார். அவரைப்பற்றிக்குறிப்பிட்டபோதெல்லாம் ஒன்று கண்கலங்கினார், அல்லது உணர்ச்சி வசப்பட்டார். 'ஒரு காலத்தில் நான் இல்லாத சிவாஜி அங்கிள் படமே கிடையாது. அப்படி எல்லாப்படத்திலும் நான் இருந்திருக்கிறேன்' என்றார். அவர் நடித்த பல படங்களைப்பற்றி ஒவ்வொன்ன்றாக நினைவூட்டினேன். ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாகப் பேசினார். 'சிவாஜி அங்கிள் இல்லைங்கிறதை நினைச்சுப் பார்க்கவே முடியலை' என்று கலங்கினார். மேடையில் நிகழ்ச்சி பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. இருவருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை. 'யார் இந்தப்பொம்பளை, ப்ரோக்ராம் பார்க்க விடாமல் இடைஞ்சலாக?' என்று அவர் நினைக்கவில்லை. மிகவும் ஆர்வமாகப்பேசினார். 'ஸாரி, ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?' என்று (சும்மா சம்பிரதாயத்துக்காகக்) கேட்டேன். 'நோ.. நோ.. அதெல்லாமில்லை. நீங்க பேசுங்க' என்றார். எங்கள் உரையாடல் மற்றவர்களுக்கு இடஞ்சலாக இருக்குமோ என்று நினைத்த நேரங்களில், குனிந்து என் காதோடு பேசினாரே தவிர பேச்சை நிறுத்தவில்லை.

எனது பேவரிட் பாடலான 'அன்னமிட்ட கைகளுக்கு' (இரு மலர்கள்) பாட்டைக் குறிப்பிட்டபோது, ஒரு சின்னக்குழந்தையின் குதூகலத்தோடு என் கையைப் பிடித்துக் கொண்டவர், 'ஐயோ, அது எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுங்க' என்றார் (அச்சமயத்தில் தருணே வளர்ந்த பையனாக இருந்திருப்பான்). நடிகர்திலகத்தின் படம அல்லாது நாங்கள் பேசிய ஒரே வெளிப்படம் 'வயசுப்பொண்ணு' மட்டுமே.

போகும்போது, அவருடைய போன் நம்பரைத் தந்து 'ஒரு நாளைக்கு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க' என்றார். என்னால் போக முடியவில்லை. சமயம் வாய்க்காதது ஒருபுறம் என்றால், நாங்கள் சந்தித்தால் பேச வேண்டிவற்றை ஏற்கெனவே பேசிவிட்டோம் என்பது இன்னொரு காரணம். வீட்டுக்கு அழைப்பார் என்று தெரிந்தால், அத்தனை விஷயங்களையும் அரங்கிலேயே பேசியிருக்க மாட்டேன். ரோஜாரமணியை சந்தித்து உரையாடியது என்னால் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

முரளி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘Third Party Distribution’ பற்றிய விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளன. இது எப்படி?. சென்னை காஸினோ சந்திலுள்ள 'மீரான் சாகிப் தெரு' விநியோகஸ்தர்கள் போலவா?.
[/tscii:18167af0bb]

pammalar
4th January 2010, 02:32 AM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 1)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

இசைக் கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களின் பட்டியல் :
(பாடல் - படம்)

1. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - கந்தன் கருணை

2. வெள்ளிக்கிண்ணந்தான் - உயர்ந்த மனிதன்

3. பூங்காற்று திரும்புமா - முதல் மரியாதை

4. மதன மாளிகையில் - ராஜபார்ட் ரங்கதுரை

5. பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி

6. யமுனா நதி இங்கே - கௌரவம்

7. யாரடி நீ மோகினி - உத்தமபுத்திரன்

8. பொன்னொன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா

9. பூமாலையில் - ஊட்டி வரை உறவு

10. சிற்பி செதுக்காத பொற்சிலையே - எதிர்பாராதது

11. இரண்டு கைகள் - திரிசூலம்

12. பூப்போலே - கவரிமான்

13. பட்டத்து ராணி - சிவந்த மண்

14. முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை

15. நாகூரு பக்கத்துல - வெள்ளை ரோஜா

16. அன்புள்ள அப்பா - அன்புள்ள அப்பா

17. எங்கெங்கோ செல்லும் - பட்டாக்கத்தி பைரவன்

18. இரண்டில் ஒன்று - ராஜா

19. அத்திக்காய் - பலே பாண்டியா

20. எத்தனை அழகு - சிவகாமியின் செல்வன்

21. ஐ வில் சிங் ஃபார் யூ - மனிதரில் மாணிக்கம்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th January 2010, 02:59 AM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 2)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

அரங்கில் உள்ள திரையில் கீழ்க்காணும் திரைக்காவியங்களிலிருந்து காட்சிகள் திரையிடப்பட்டன :

1. வீரபாண்டிய கட்டபொம்மன்

2. உயர்ந்த மனிதன்

3. முதல் மரியாதை

4. உத்தமபுத்திரன்

5. வெள்ளை ரோஜா

6. படித்தால் மட்டும் போதுமா

7. சாந்தி

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th January 2010, 04:21 AM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 3)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

விழா நிகழ்வுகள் :

காமராஜர் அரங்கம் சிவாஜி விழாவுக்காக களை கட்டியிருந்தது. வந்திருந்த மக்கள் வெள்ளத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள், ஏராளமான பெண்கள்.

எல்லா வயது தரப்பினரும் வந்திருந்தனர். எல்லாத் தலைமுறையுடனும் நடிகர் திலகம் பின்னிப் பிணைந்திருக்கிறார் என்பது வந்திருந்த ஜன

சமுத்திரத்திலிருந்து மீண்டும் ஊர்ஜிதம் ஆகியது. விழாவுக்கான டிக்கெட்டுகள், பெருமளவுக்கு விளம்பரதாரர்கள் மூலமாகவே வெற்றிகரமாக

விற்கப்பட்டிருந்தன. ரூ. 200/-, ரூ. 350/-, ரு. 500/-, ரு. 750/-, ரூ. 1000/- என பல வகை ரேட்டுக்களில் டிக்கெட்டுக்கள். அனைத்துமே விழாத்

தொடங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்னமே விற்றுத் தீர்ந்திருந்தன. அரங்கம் ஹவுஸ்ஃபுல். (2000 இருக்கைகளுக்கு மேல்).

சிவாஜி இசை விழா செவ்வனே தொடங்கியது, ஒய். ஜி. மகேந்திராவின் உரையோடு.

"அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய மாலை வணக்கங்கள். நாங்க இங்க சிவாஜி சார் பாட்டுக்கள போடு போடுன்னு போடப்

போறோம். அதனால தயவு செஞ்சு போட்டுட்டு வந்தவங்க அமைதியா இருக்கணும்."

நடிகர் திலகத்தின் திரைப்படங்களிலிருந்து நிழற்படங்களாக காட்சிகள் ஓடின. கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது. சிவாஜின்னா சும்மா அதிருமில்ல.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரா பேச ஆரம்பித்தார்.

" இப்ப புரியுதா உங்க எல்லாருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு, ஏன் அவன் தான் நடிகன் என்று பேர் வெச்சோன்னு. நீங்க பாத்த காட்சிகள்ல எத்தனை

வெரைடி, எத்தனை ரேஞ்ச், எவ்வளோ ஸ்டைல். அதுனால தான் அவன் தான் நடிகன். மேற்கொண்டு பாடல்களுக்கு நடுவுல நீங்க பாக்க போற

கிளிப்பிங்ஸ் அவன் தான் நடிகன் னு உங்களுக்கு நல்லாவே புரிய வைக்கும். அவர் நடிச்ச படம் அவன் தான் மனிதன். அதையே தான் நாங்க இந்த

நிகழ்ச்சிக்காக கொஞ்சம் மாத்தி அவன் தான் நடிகன் னு வெச்சோம். ஒவ்வொரு வருஷமும் நிறைய படங்கள் வருது. போன வருஷமும் நிறைய

படங்கள் வந்தது. படங்கள் நிறைய வரவர சிவாஜி சார் பெருமை ஏறிண்டே போறது. காரணம், இன்னும் அவர பீட் பண்றதுக்கு யாரும் வரல

அப்படின்னு. அவர யாராலும் பீட் பண்ண முடியாது. அது வேற விஷயம். இனி நிகழ்ச்சிக்கு. முதலாவதாக ஒரு Prayer Song Clipping."

தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

kid-glove
4th January 2010, 04:56 AM
My parents went to the function. It seems there were people who were drunk. YG apparently said "show mattum houseful illa, inga neraiya pErum Full-a than irukkangaya" :lol: or something of that like.

joe
4th January 2010, 11:05 AM
நீண்ட இடைவெளிக்கு பின்னர்.. நடிகர் திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :D

Appu s
4th January 2010, 11:18 AM
There is a song in Sivaji productions Asal, "Em thanthaiye"

It looks like Vairamuthu wrote the lyrics keeping Nadigar thilagam in mind. :D

http://i45.tinypic.com/2lc2r5x.jpg

joe
4th January 2010, 11:32 AM
There is a song in Sivaji productions Asal, "Em thanthaiye"

It looks like Vairamuthu wrote the lyrics keeping Nadigar thilagam in mind. :D



வீரத்தின் மகனென்று
விழி சொல்லுமே!
வேழத்தின் இனமென்று
நடை சொல்லுமே!
நீதானே அசல்
என்று ஊர் சொல்லுமே!
உன் போல சிலரின்று
உருவாகலாம் - உன்
உடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?

எப்போதும் தோற்காது
உன் சேனை தான்!
இருந்தாலும்
இறந்தாலும் நீ யானை தான்!
கண்டங்கள் அரசாளும்
கலை மூர்த்தி தான்!
தலைமுறைகள் கழிந்தாலும்
உன் பேச்சு தான்

:thumbsup: :D

Irene Hastings
4th January 2010, 02:21 PM
பார் மகளே பார் - சக நடிகர் / நடிகைகளின் பங்கு

நகைச்சுவை நடிகரான வி.கே.ஆர். இதில் மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறார். நல்ல குணசித்திர வேடம். ஆரம்பத்திலிருந்து அவர் படம் முழுவதும் வருவார் முக்கியமான கட்டங்களில். சொல்லப்போனால் படத்தின் திருப்புமுனையே அவரால் தான் ஏற்படும். நண்பன் தன்னை மதிக்கவில்லையே ( வறுமையின்போது ) , அவன் குடும்பத்திற்கு தான் செய்த உதவிகளை மறந்துவிட்டானே >> என்று கோபமும், ஜானகியிடம் காட்டும் சகோதரபாசமும், நிச்சயதார்த்தின்போது கொதித்துபோவதும் , முடிவில் நடந்ததை எல்லாம் மறந்து பழைய ச்நேகம் காட்டுவதுமாக , அவர் ஒரு நல்ல இயல்பான நடிப்பை வெளியிடுவார். இவரால் இப்படிகூட நடிக்கமுடியுமா என்று வியக்கவைப்பார்.

எம்.ஆர்.ராதா - பாவமன்னிப்பு படத்தில் இவர் தான் முக்கிய நாயகன் . பார் மகளே பாரில் சற்று சுமாரான வேடம் தான். ஆனால் தன்னுடைய முத்திரையை பதித்திருப்பார்.
முத்துராமன், ராஜன், கருணாநிதி , சோ ----- தங்கள் பங்கை செவ்வனே செய்திருப்பர்.

சவ்கார் ஜானகிக்கு ஒரு நல்ல வேடம். கணவனிடம் அன்பு, பயம், மறியாதை , குழந்தைகளிடம் பாசம் என்று திறம்பட்ட நடிப்பு. நிற்க. இவரா பின்னர் பார்த்த ஞாபகம் இல்லையோ என பாடுவார் என்று நம்மை வியக்க வைக்கும் !

விஜயகுமாரி , மற்றும் புஷ்பலதா தங்களின் பங்கை செவ்வனே செய்வர்.

தொடரும்

Irene Hastings
4th January 2010, 03:06 PM
பார் மகளே பார் - இசை
மெல்லிசை மன்னர்களின் இன்னிசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தது என்றால் அது மிகையாகாது. இது ஒரு தேனிசை மழை என சொல்லலாம்.

1. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே - சிவாஜி - ஜானகி
இப்பாடலின் பிண்ணனி ஒரு பெரும் சுவையான சம்பவம். திரு எஸ்.பி.பி.யின் வாயால் கேட்போமே !

http://www.youtube.com/watch?v=DiT-X33VZ0k

http://www.youtube.com/watch?v=SokOCR2n25U

2. மதுரா நகரில் தமிழ் சங்கம் - முத்துராமன் - விஜயகுமாரி

3. அவள் பறந்து போனாளே- சிவாஜி - முத்துராமன்

http://oruwebsite.com/music_videos/paar-magale-paar/aval-paranthu-ponale-video_1baf236c9.html

4. பார் மகளே பார் - சிவாஜி

5. என்னை தொட்டு சென்றன கண்கள் -

சென்னை வானொலியில் மிகவும் பிரபலமான பாடல்கள் என கேள்விபடுகிறேன். ஏன் இன்றும் நாம் கேட்கிறோமே!

திரு டி.எம்.எஸ்.ஸின் குரலில் ஒரு பெருமிதமான தந்தை மற்றும் பெண்ணை இழந்து வாடும் ஒரு தந்தையாக அவர் சிவாஜியாகவே மாறிவிடுவார் !

எல்லா பாடல்களும் சிறப்பாக இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த பாடல் --- என்னை தொட்டு சென்றன கண்கள். ஒரு வால்ட்ஸ் இசையை போன்ற தாளத்துடன் அமைக்கப்பட்ட இப்பாடல் காலத்தை வென்றது. படத்தில் இடம் பெறவில்லை.

கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளை பற்றி எழுத எனக்கு தகுதியில்லை. மன்னிக்கவும்.

தொடரும்.

Plum
4th January 2010, 03:17 PM
irene, can you elaborate on the Neerodum incident for us youtube-disabled folks.

Irene Hastings
4th January 2010, 03:35 PM
irene, can you elaborate on the Neerodum incident for us youtube-disabled folks.

Sure Boss.

At the recording studio,when the song was about to be composed, MSV had revealed his plans to Kannadasan that he would like to have this song totally by whistling ! & he went on whistling the full tune also !Kavignar got wild and screamed jovially at MSV " endaa Visu, nee indha paattu muzuvadhum whistle senjaa appa naan enna varigal ezudhuven ? "
And kavignar didnt stop there ! He apparently dashed to Nadigar thilagam's house and narrated the whole drama what MSV had intended to do for this song .

Sivaji straight away went to the recording studio where the MSV team were present. He playfully chided MSV ...

" Enda nee paattu muzuvadhum whistling senjaa , naan eppadi reaction kodukkanumaam ?? "

So, the entire episode went on cheerfully and finally Kavignar had to be summoned again to pen the song ! :D

And what a mesmerising song it turned out to be :shock: :D


-----------------------------------------------------------------------------------

MSV still didnt leave his trade mark ! You can hear the whistling as a prelude and also at the end of each charanam :lol:

Plum
4th January 2010, 03:59 PM
Thanks Irene!

pammalar
4th January 2010, 04:52 PM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 4)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

பிரார்த்தனைப் பாடலாக வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து "வெற்றி வடிவேலனே" பாடல் காட்சி (தொகையறா மட்டும்) திரையில் ஒளிர்ந்தது. நடிகர் திலகத்திற்கு இசை மேதை வி.என்.சுந்தரம் பாடிய அபூர்வ பாடல். ஆரவாரத்தால் அரங்கம் அதிர்ந்தது.

திரைக்காட்சி முடிந்த பின்னர் ஒய்.ஜி. தொடர்கிறார் :
"நமக்கு கட்டபொம்மன்னா சிவாஜி சார் தான். நிஜ கட்டபொம்மனை யாருக்குமே தெரியாது. இன்னிக்கி வீரபாண்டிய கட்டபொம்மனோட 250வது பிறந்த நாள். இதை எனக்குச் சொன்னவர் திரு. ராகவேந்தர். சிவாஜி சாருக்கு நடிகர் திலகம்.காம் என்கிற வெப்சைட்டை ரொம்ப சிறப்பா நடத்துறாரே அவர் தான். எனக்கு இதை அவர் தான் சொன்னார். அதுனால தான் கட்டபொம்மனிலிருந்து முதல் காட்சி. அதே சமயம் சென்ற ஆண்டு மறைந்த இரண்டு மாபெரும் கலைஞர்களுக்கு நாம காட்சிகள் மூலமாவே அஞ்சலி செலுத்துவோம்."

உடனே ஒளித்திரையில் கட்டபொம்மனிலிருந்து "மனம் கனிந்தருள் வேல்முருகா" பாடலின் முதல் சில வரிகள் மறைந்த மாபெரும் நடிகை எஸ். வரலக்ஷ்மிக்காகக் காட்டப்பட்டன. தொடர்ந்து, மறைந்த மாபெரும் நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷுக்காக அவர் நடித்த திரைப்படங்களிலிருந்து நிழற்படங்களாக காட்சிகள் காட்டப்பட்டன. நாகேஷ் பிரபல கலைஞர்களுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களும் திரையில் காண்பிக்கப்பட்டன. நாகேஷ் காட்சிகளுக்கு பின்னிசையாக, "அப்பப்பா நான் அப்பனல்லடா" பாடலின் ஆரம்ப பின்னணி இசை இழையோடியது. அஞ்சலி அம்சமாக அமைந்தது.

இனி ஒய்.ஜி. "எப்பேர்ப்பட்ட அற்புதமான கலைஞர்கள். ஹேட்ஸ் ஆஃப் டு தெம். நம்ப நிகழ்ச்சியின் முதல் பாடலும் ஒரு பிரேயர் சாங். என்ன பாடல்னு நீங்களே பாருங்க. அதுக்கு முன்னாடி இந்தப் பாட்டப் பாடப் போறவங்களப் பத்தி நான் சொல்லியாகணும். பாடலை பாடப் போறவங்க பாக்யஸ்ரீ, விசாலின்னு இரண்டு மராத்தி பெண்கள். இவங்களுக்கு கொஞ்சம் கூட தமிழ் பேசத் தெரியாது. நான் இவங்கள இதுக்காக தமிழ்ல திட்டியும் பாத்தேன். அவங்களுக்கு புரியலை, தெரியலை. அதுனால சுத்தமா தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இவங்க பம்பாய்லேந்து நல்ல தமிழ் பாட்டுக்களை, அதுவும் சிவாஜி சார் பாட்டுக்களை பாடணும்னு ஆர்வத்தோட, மராட்டிய சிவாஜி மாநிலத்துலேந்து நமக்காக வந்திருக்காங்க. இவங்க ஆர்வத்த ஊக்குவித்தவர் இவங்களோட குரு கணேஷ். சமீபத்துல வந்த ஸ்லம் டாக் மில்லியனேர் படம் பாத்திருப்பீங்க. பம்பாயில, அந்த மாதிரி ஒரு ஏரியாவிலேந்து பிறந்து வளர்ந்து, கஷ்டப்பட்டு முன்னேறி, இன்னிக்கி சிறந்த பாடகிகளா ஜொலிஜொலிக்கிறாங்க. அவங்களுக்கும், அவங்க குருவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அவங்க பாடறத கேளுங்க. தமிழ் உச்சரிப்ப கவனிங்க. நீங்களே அசந்து போவீங்க. இனி முதல் பாடல் பாக்யஸ்ரீ, விசாலி குரல்களில்.
"

கந்தன் கருணை திரைக்காவியத்தில் இடம்பெற்ற "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" பாடலை, பிரார்த்தனைப் பாடலாக (முதல் பாடலாக) இரு மராட்டிய பாடகிகளும் ரொம்பப் பிரமாதமாகப் பாடினர். சிறந்த தமிழ் உச்சரிப்பு. செந்தமிழ் மொழியின் ழகர,ளகர, லகரங்களெல்லாம் அவர்கள் நாவில் நயமுற உட்கார்ந்து ஒளி வீசின. அவர்கள் பாடியதும் கஷ்டமான பாடல். அதன் ஏற்ற இறக்கங்களும், பாடலில் உள்ள கார்வைகளும், கமகங்களும், அசைவுகளும் அவர்களுக்கு வெகு சரளமாக வந்தன. மொத்தத்தில் சிம்ப்லி சூப்பர்ப். எல்லாம் கலைமகள் அருள். கலையுலகின் தலைமகன் சிவாஜி அருள். தமிழ் தெரியாதவர்கள், தமிழ்ப் பாடலை இத்தனை சிறப்பாகப் பாடியமைக்காக அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். தமிழே தெரியாது, தமிழ் எனக்கு வராது, தமிழ் உச்சரிப்பு சரியா வராது என்றெல்லாம் குதர்க்கம் பேசுவோர், இவர்கள் இருவரையும் உதாரணமாகக் கொண்டு, நல்ல தமிழைக் கற்க வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள சிறிதளவு முயற்சிகளையாவது மேற்கொள்ள வேண்டும். இந்த இரு சிறந்த பாடகிகளையும் நமக்கு அறிமுகப்படுத்திய ஒய்.ஜிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !

தொடரும் ....

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
4th January 2010, 07:33 PM
THIRU MURALI SIR,
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த என் தம்பி படத்தை என் மூளையின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் மங்கலாக ஞாபகப்படுத்தி வைத்திருந்தேன்.ஆனால் அந்த படத்தை மீண்டும் ஒரு முறை வெள்ளித்திரையில் பார்த்த அனுபவத்தை தங்கள் பதிவு கொடுத்தது.நான் எப்போதும் சொல்வது போல நடிகர்திலகத்தின் ரசிகர் சமூகம் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. :notworthy:



திரு பம்மல் சார்,
நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை எப்போதும் எங்களுக்கு முரளி சார் அவர்கள்தான் விலாவரியாக விவரிப்பார்.இப்போது நீங்களும் முனைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி.அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஏங்க வைத்து விட்டீர்கள்.தயவு செய்து வசந்தமாளிகை இதழை மீண்டும் கொண்டு வருமாறு பணிவோடு கோருகிறேன்

Murali Srinivas
4th January 2010, 11:35 PM
சாரதா,

நன்றி. நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி சொல்லும்போது பாடல்களின் நடுவே நடக்கும் நிகழ்வுகளை எழுதியதால் தனியாக அந்த பாடல்களைப் பற்றி விளக்கமாக எழுதவில்லை.

Third Party Distribution மதுரையில் ஒரு காலத்தில் பிரமாதமாக நடந்தது. விநியோகஸ்தரைப் பொறுத்த வரை பெட்டிக்குள்ளே இருப்பதை விட இது போன்ற ரிலீஸ்-கள் அவர்களுக்கு உட்கார்ந்த இடத்தில் பணத்தைக் குவித்துக் கொண்டிருந்தது. சென்னையில் இது நடைமுறையில் இருந்ததா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் ராகவேந்தர் சாரிடம் பேசிக்கொண்டிருந்த போது, இது சென்னையிலும் இருந்தது என்று சொன்னார். ரோஜாரமணியை சந்தித்தது பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லியிருந்த போதிலும் மீண்டுமொரு முறை படிப்பதற்கு சுவையாகவே இருந்தது.

செந்தில்,

நன்றி. உணர்ச்சி மிகுதியால் கடமைப்படுவது போன்ற வார்த்தைகளை சொல்கிறீர்கள். இந்த சிவாஜி சேனாவில் நானும் ஒரு அணில்.

நேற்று நடந்த இசை விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் செல்ல இயலவில்லை. நண்பர் சுவாமி அவர்கள் அதை அழகாக வர்ணனை செய்திருக்கிறார். நன்றி சுவாமி. செந்தில் சொன்னது போல அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்.

அன்புடன்

pammalar
5th January 2010, 02:29 AM
டியர் முரளி சார்,

தங்களது பாராட்டுக்களுக்கு அன்பான நன்றிகள் !

"என் தம்பி" தங்கக்கம்பி என்பார்கள். நமது நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, தங்களது நேர்த்தியான திறனாய்வுக்கும் இது பொருந்தும்.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. நடிகர் திலகம் நன்றாக நடிக்கிறார் என்று கூறினால், அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும் என்பார்கள். அது போல, தங்களின் திறனாய்வு பிரமாதமாக இருக்கிறது என்றால், அது எப்போதுமே எப்போதும் போல் பிரமாதமாகத் தானே இருக்கும் என்றே கூறுவார்கள். தங்களது எந்தவொரு திறனாய்வையும், யார் படித்தாலும் நான் மேற்கூறியதையே முன்மொழிவார்கள். நானும் அதையே வழிமொழிகிறேன்.

மூன்று பாகங்களும் முக்கனிகளாய் இனிக்கிறது.

மொத்தத்தில் தங்களது என் தம்பி திரைப்படக் கண்னோட்டம் / திறனாய்வு அருமை, செழுமை, முழுமை.

தங்களுக்கு எனது பாசமிகு பாராட்டுக்கள், நயமான நன்றிகள், வளமான வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th January 2010, 02:57 AM
டியர் ஹரீஷ் சார்,

தங்களது பாராட்டுக்களுக்கு பற்பல நன்றிகள் !

வசந்த மாளிகை (இதழ்), தற்காலிகமாகத் தான் பூட்டப்பட்டுள்ளது. கடவுள் அருளாலும், கலைக்குரிசிலின் ஆசிகளாலும், தங்களைப் போன்றோரது வாழ்த்துக்களாலும், அதன் திறவுகோல் , என்னிடம் பத்திரமாக உள்ளது. அதைக் கொண்டு, வசந்த மாளிகை மீண்டும் விரைவில் வெற்றிகரமாகத் திறக்கப்படும்.

காலம் கனியும் காத்திருப்போம் !

காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு !! காக்க வைப்பதில் சுகம் உண்டு !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th January 2010, 03:25 AM
மதுரை சென்ட்ரலில், சிவாஜி பெருமானின் திருவிளையாடல், வரலாறு படைத்துளளது. முதல் 5 நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்), அதாவது 25.12.2009 முதல் 29.12.2009 வரை, மொத்த வசூலாக ரூ. 40000 /- (ரூபாய் நாற்பதாயிரம்) அளித்துள்ளது. பழைய படங்களைப் பொறுத்த வரை இது இமாலய சாதனை.

வைகுண்ட ஏகாதசி (28.12.2009) அன்று, நடுநிசிக் காட்சியை தரிசித்தவர்கள் 192 பக்தர்கள். அந்த ஒரு காட்சிக்கு மட்டும் மொத்த வசூல் ரூ. 2200 /- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு). இதுவும், பழைய படங்களுக்கு ஒரு சிறப்பான சாதனையே.
( 5 நாள் மொத்த வசூல் தொகையில், நடுநிசிக் காட்சி வசூலும் அடங்கியுள்ளது.)

அன்புடன்,
பம்மலார்.

Irene Hastings
5th January 2010, 02:30 PM
பார் மகளே பார் - கதாநாயகன் - சிவாஜி கணேசன்

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage066.jpg


http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image026.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image012.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image007.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image005-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage048.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage067.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image075-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image076-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image080-2.jpg


http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image071-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image073-1.jpg

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image081-2.jpg


http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Image085-2.jpg


இப்படம் முற்றிலும் நடிகர் திலகத்தை பல கோணங்களில் காணலாம்:

முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்துவிடுவார் ! நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் ஆடுவது போல துவங்கம் அவர் வரும் காட்சி. ஒரு நடனமங்கை உங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார் என்று பணியாளர் சொன்ன உடனே முகபாவம் சற்று கோபமாக மாறி அந்த மனிதரை அனுப்பிவிடும் விதமே நமக்கு ஒரு செய்தி தரும்.....இவர் மற்றவர்களை போல இல்லை..மாறுபட்டவர் என்று !

தன் மனைவிக்கு ப்ரசவ வேதனை என்று செய்தி கிடைத்ததும் ஒரு வேகம்....

மருத்துவமனையில் தன் மனைவியை கண்டதும் ஒரு அன்பான அரவணைப்பு...

அருகில் 2 குழந்தைகளை கண்டதும்...." ஓ இரட்டை பிறவிகளா " என்று உற்சாகம்.

நண்பனின் போக்கு பிடிக்கவில்லை என்பதில் ஒரு தீர்மானமான முடிவு...அவர் அதில் காட்டும் கடுமை..ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...

குழந்தைகளிடம் அளவற்ற அன்பு....அதே சமயம் அவர்களிடம் ஒரு கண்டிப்பு...அவர்களை வளர்க்கும்விதத்தில்

தானாக வளர்த்துகொண்ட அந்தஸ்து என்ற பிடிவாத குணம்....அதனால் வெளிப்படுத்தும் ஒரு பெரிய மனிதனை போன்ற நடை, உடை , பாவனை

பணியாளர் கருணாநிதியிடம் முதலில் கண்டிப்பு.....

தன் பெண் ஒரு நல்ல குடும்பதை சேர்ந்த வாலிபனை மணக்க விரும்புகிறாள் என்றதும் ஒரு உற்சாகம், முத்துராமனிடம் சாதாரணமாக உரையாடத்துவங்கி உடனே தன் போக்கை மாற்றிக்கொள்ளும் விதம்..

ஒரு பெண் தன்னுடையவள் இல்லை என்று வி.கே.ஆர். சொன்னதும் ஒரு சீற்றம்..அதிற்ச்சி...

தன் அருமை மனைவி கூட தன்னிடம் மறைத்துவிட்டாளே என்று வெறுப்பு...

முதல் பெண் விஜயகுமாரி தன் மகள் இல்லை என்ற செய்தி கிடைத்ததும் ஒரு நிம்மதி..

பின் அவளை பற்றிய செய்தி அனைத்தும் தவறானது என்றதும் மீண்டும் பொங்கி எழும் ஒரு தந்தையின் பாசம். அன்பு.

ஆனால் அவள் இறந்து விட்டாளே என்று தாங்கமுடியாத சோகம்..அவலை நினைத்து நினைத்து வாடுவது... மனைவி படுத்த படுக்கையாகிவிட்டாளே என்று துயரம்..இயலாமை....

முடிவில் தன் பெண்ணை கண்டதும் சந்தோஷம்..மகிழ்ச்சி...

நண்பணிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பழைய நட்பின்படி, தன் பெண்ணை நண்பனின் மகனுக்கே மணமுடித்தல்.............


இப்படி ஒரு கம்பீரத்துடன் துவங்கும் அவர், படிபடியாக தளர்ந்து தான் கொண்ட அந்தஸ்து, கவுரவம்..என்ற கோட்பாட்டிலிருந்து வரும் அவர் தான் படத்தின் நாயகன்...

உண்மையிலேயே தன் சொந்த பெண்ணை பறிகொடுத்தவர் போல துடிக்கும் காட்சி தான் தலை சிறந்த நடிப்பு...

மின்னல் வேகத்தில் அவர் காட்டும் முகமாற்றம் இப்படத்தின் சிறப்பு..

அவருடைய நடை , உடை , பாவனையிலேயே ஒரு பணக்கார தொழிலதிபரின் எல்லா குணாதிசயங்களையும் காணலாம்.

படத்தின் 3/4 பகுதி புகை பிடிப்பது போல ஒரு அமைப்பு... அதில் பாதி பகுதி அதை பிடித்துக்கொண்டே பலவிதமாக பேசும் ஸ்டையில் !

வடநாட்டு ஆடையான குர்தா-பைஜாமா ...இந்த உடையை அவர் பொது வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்துவார்...இப்படம் முழுவது அதுதான் அவரின் உடை ! ஒரு அழகான குருந்தாடி கூட.!

34 வயதில் ஒரு நடுத்தர/ வயதான வேடம் செய்ய யாருக்கு தான் துணிச்சல் வரும்...

காதலி...மனைவியுடன் ஆடிப்பாட காதல் பாட்டு கிடையாது....

இப்படி படம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ளும் நம் நடிகர் திலகத்தின் திறமையை பற்றி எழுத ஒரு கட்டுரையே வேண்டும்
காலத்தை வென்ற நடிப்பு... நடிகர்களின் திலகம் தான் இவர் !

நன்றி.

pammalar
6th January 2010, 02:47 AM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 5)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

பாக்யஸ்ரீ, விசாலிக்கு "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" பாடலுக்காக ஆடியன்சிடமிருந்து அபார அப்ளாஸ். ஒய்.ஜி. தொடர்ந்தார்:

"அடுத்த பாடல் ஒரு டூயட். இன்னிக்கி நிகழ்ச்சில நாம பெரும்பாலும் சிவாஜி சாருடைய ரொமான்டிக் ஹிட்ஸ், அதாவது அவரது காதல் பாடல்களத் தான் அதிகம் பாக்கப் போறோம். இதுக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் சிவாஜி சாருடைய தெய்வீகம், தத்துவம், சோகம், வீரம் இழையோடிய பாட்டுக்கள பாடிருக்கோம். அதுனால இந்த நிகழ்ச்சில மெஜாரிட்டி அவருடைய காதல் ஹிட்ஸ். என்னமோ அவருக்கு காதலிக்கவே தெரியாதுங்குற மாதிரி சில பேர் பேசறாங்க. அவருக்கா! காதலிக்க தெரியாதா!? இப்போ நீங்க கேக்கப் போற பாட்டுக்கள் மூலமா அவரு எவ்வளோ பெரிய ரொமான்டிக் ஹீரோன்னு புரியும். அங்க அசைவுகளுக்கே போக வேண்டாம். தனது பார்வையாலேயே காதல், காமம் எல்லாத்தையும் காட்டக் கூடியவர், கொடுக்கக் கூடியவர் அவர். வைரமுத்து எழுதிய வரிகள் அவருக்கு நிச்சயமாப் பொருந்தும். "ஓரக்கண்ணால் பாத்தாலே நான் புள்ளத்தாச்சி" அப்பிடின்னு வைரமுத்து எழுதினார். சிவாஜி சார் ஓரக்கண்ணால பாத்தாலே புள்ளத்தாச்சி தான். அவரோட காதல் நடிப்பு அப்படி இருக்கும். இப்ப பாடப் போற காதல் டூயட் எனக்கு, என் மனதுக்கு மிகவும் பிடித்த சிவாஜி டூயட். இதைப் பாடப் போறவங்க எங்களின் டி.எம்.எஸ், புவர் மேன்ஸ் டி.எம்.எஸ் கோவை முரளி மற்றும் பர்த்டே பேபி போல இருக்கும் சைந்தவி."

வரகவி வாலியின் வைர வரிகளில் மினுமினுவென்று மின்னி ஜொலிஜொலிக்கும் உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தில் இடம்பெற்ற "வெள்ளிக்கிண்ணந்தான் தங்கக்கைகளில்" பாடல் மிக அற்புதமாகப் பாடப்பட்டது. கோவை முரளி நகல் டி.எம்.எஸ். சைந்தவியின் "ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா" ஹம்மிங் "ஓஹோ ஒஹோ" ரேஞ்ச். மொத்தத்தில் பாடல் பாடிய விதம் மனதுக்கு நிறைவு. பாடல் முடிந்ததும் பலத்த கைத்தட்டல். ஒய்.ஜி.க்கு மட்டுமா, நமக்கும் ரொம்பப் பிடித்த டூயட் ஆயிற்றே இது. தமிழ் சினிமாவின் தலைசிறந்த 100 டூயட்டுக்கள் என்ற பட்டியலிட்டால் அதில் "வெள்ளிக்கிண்ணந்தான்" நிச்சயம் இடம்பெறும். ஓவர் டு ஒய்.ஜி.

"அடுத்த பாடல் சிவாஜி சார் நடிக்காத படத்துலேந்து. புரியலையா!? அவர் நடிக்காமல் நடிச்ச படத்துலேந்து. யெஸ்! முதல் மரியாதையே தான். அவருக்கு non-acting வரும், subtle acting வரும். எல்லா வகை ஆக்டிங்கும் அவருக்கு வரும். இதோ இதப் பத்தியெல்லாம் சொல்ல வருகிறார் ஏ.ஆர்.எஸ்."

நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர், பராசக்தியை 17.10.1952 அன்றே சென்னை பாரகனில் பார்த்த பெருமைக்குரியவர், நாடக , திரைப்பட நடிகர் ஏ.ஆர். சீனிவாசன் என்கிற ஏ.ஆர்.எஸ். ஸ்மார்ட்டாக ஹீரோ போல் மேடைக்கு வந்தார். பேசத் தொடங்கினார்:

"எல்லோருக்கும் வணக்கம் ! மகேந்திரா சொன்னா மாதிரி சிவாஜி சாருக்கு தெரியாத ஆக்டிங்கே கிடையாது. முதல் மரியாதை படத்தோட முதல் 2 நாள் ஷுட்டிங் ஷெட்யூல் முடிஞ்சிருந்த சமயம் சிவாஜி சார ஷுட்டிங் ஸ்பாட்லேயே சந்திக்கற வாய்ப்பு எனக்கு கிடைச்சுது. அப்ப என்ன பாத்து சிவாஜி சொன்னார், 'முன்னல்லாம் நெறய நடிப்பேன், கொஞ்சம் பணம் குடுப்பாங்க. இப்ப கொஞ்சம் தான் நடிக்கறேன், ஆனா நெறய பணம் குடுக்கறாங்க.'அப்படின்னார். அதுக்கு அவர்கிட்ட நான் சொன்னேன், 'முன்னாடி நடிச்சதுக்கும் சேத்து இப்போ வட்டியும் மொதலுமா வாங்கிக்குங்க' அப்படின்னு சொன்னேன். அவர் முதல் மரியாதைல செஞ்சது non-acting. Subtle acting கிறது வேற. அவரு subtleலா எவ்ளோ படத்துல ஆக்ட் பண்ணிற்கார் தெரியுமா! அவர மாதிரி subtleலாவும் யாரும் ஆக்ட் பண்ண முடியாது. அவர பத்தி சில பேர் குறை சொல்லுவாங்க ஓவர் ஆக்டிங்னு. அவங்களுக்கு நான் சொல்றேன். ஆக்ட் பண்ண தெரிஞ்சா தான் ஓவர் ஆக்ட் பண்ண முடியும். அவருக்கு ஆக்டிங் தெரிஞ்சதுனால தான் அவரால கதை, பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அங்கங்க தேவையான இடத்துல ஓவர் ஆக்டிங்கும் பண்ண முடிஞ்சுது. இப்ப இருக்கிறவங்களெல்லாம் non-actors. அவங்களெல்லாம் அவரோட ஓவர் ஆக்டிங் பத்தி பேச தகுதி கிடையாது. இனி முதல் மரியாதை பாடலுக்குப் போவோம். இந்தப் பாடலப் பாடப் போறவங்க அனந்து, கல்பனா."

அனந்து,கல்பனா இரு குரலிசையில் "பூங்காற்று திரும்புமா" பாடல் மிக அருமையாகப் பாடப்பெற்றது. "அடி நீதானா அந்தக்குயில்" வரி வந்த போது விசேஷக் கைத்தட்டல். பாடல் நிறைவுற்றதும் பலத்த கைத்தட்டல்.

சிறந்த பாடல். சிறப்பாகப் பாடப்பட்டது. மக்கள் மனங்கள் மகிழ்ச்சியில் மிதந்தன.

தொடரும் ......

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
6th January 2010, 01:01 PM
Pammalar sir,

you are bringing the function in front of us, by giving detailed explanation for each song.

we feel of sitting in the centre hall of kamarajar arangam.

thanks a lot.

saradhaa_sn
7th January 2010, 03:26 PM
டியர் பம்மலார்,
நடிகர்திலகத்தின் இசை நிகழ்ச்சி பற்றிய விழா வர்ணனைகள் மிக அருமை. தொடர்ந்து ஒவ்வொரு பாடலுக்கும் உங்களின் விளக்கவுரையை எதிர்பார்க்கிறோம்.

நேற்று வசந்த் டி.வி.யின் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியில் பங்கேற்ற, மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் திரு வ.மு.சேதுராமன், கந்தன் கருணை படத்தில் நடிகர்திலகத்தின் 'வீரபாகுத்தேவன்' ரோலை ரொம்ப சிலாகித்துப்பேசினார். அதன் தொடர்பாக படத்தில் வந்த நடிகர்திலகம் மற்றும் அசோகன் வாதம் செய்யும் காட்சிகள் (அபூர்வமாக) காண்பிக்கப்பட்டன.

விருது வழங்கும் கமிட்டியில் இருந்தவர்களின் சுயநலப்போக்கை வன்மையாக சாடினார். நடிகர்திலகம் தன்னுடைய ரசிகர்மன்றத்தை பிஸினஸ் நோக்கில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஆணித்தரமாகச் சொன்னார். நடிகர்திலகத்தின் வரலாற்றுப்புத்தகங்கள் மலிவு விலையில் பதிப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தங்கள் இயக்கம் வேண்டிய உதவிகளைச்செய்யும் என்றும் கூறினார். காங்கிரஸ்காரர்கள் நடிகர்திலகத்தை தங்கள் சுயநலத்துகுப் பயன்படுத்திக்கொண்டு பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர் என்று ஆதங்கப்பட்டார். இறுதியாக, நடிகர்திலகத்துக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

DHANUSU
7th January 2010, 04:33 PM
Excerpts from Kutti Padmini's "Thirumbi Paarkiren" on 06/01/10.

'during the shooting of "Thiruvarutchelver" on a particular day a scene was to be shot in which NT was required to fall at the feet of KP, a 4 to 5 year old kid. Everyone in the set, including director APN, was sceptical that NT would agree to this. NT came and the scene and the dialogues were described to him. APN instructed the cameraman not to stop in between and go on filming till NT moves out of the field.

The shot began. After the wordy dual between the two, NT confesses his ignorance and screaming "AMMA THAYE!" FELL AT THE FEET OF THE KID to the disbelief of all others including KT herself.

Avandhan nadigan!!!

RAGHAVENDRA
7th January 2010, 06:44 PM
அசல் - அலசல்

அஜீத்-சரண்-பரத்வாஜ் கூட்டணியில் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸுக்காக இளைய திலகம் பிரபு தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் அசல் திரைப்படப் பாடல்கள் மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன. அதை ஏமாற்றாத வகையில் இசை குறுந்தகடு விற்பனையில் புதிய சாதனை படைக்கும் வகையில் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். 6 பாடல்கள் அதில் இரு விதமாக வரும் ஒரு பாடலை சேர்த்தால் மொத்தம் 7 பாடல்கள். அனைத்துப் பாடல்களும் அனைவரையும் கவரும் வகையில் இருப்பது பாராட்டுக்குரியது. அசல் தல போல வருமா என்ற பாடலுடன் தொடங்குகிறது இசைத்தகடு. சுனிதா மேனன் பாடியுள்ளார். அஜீத் அவர்களின் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்தை இப்பாடல் பெறும் என்பதில் ஐயமில்லை. தொடர்வது குதிரைக்கு தெரியும் என்கிற பாடல். சுர்முகி மற்றும் ஸ்ரீசரண் பாடியுள்ளனர். இப்பாடலில் புதிய பாணியில் இசையமைத்துள்ளார். இப்பாடல் ராகத்தை அடிப்படையாக வைத்து அதே சமயம் புதிய வகை இசையையும் இணைத்து மிகவும் அருமையாக உடனே ஹம் செய்யும் மெட்டில் படைத்துள்ளார். டொட்டொடெய்ங் என்ற அடுத்த பாடல் மேற்கத்திய இசையையும் நம்முடைய தொல்லிசையினையும் கலந்து உருவாக்கப் பட்டு மிகவும் வேகமாக பிரபலமாகக் கூடிய மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது. எங்கே எங்கே என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு முறையும் கார்த்திகேயன் குழுவினர் ஒரு முறையும் பாடியுள்ளனர். இந்தப்பாடல் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய பாடல் என்றாலும் ஹிட்டாக தாமதமாகும்.

குறுந்தகடின் சிறப்பம்சம் எம் தந்தைதான் என்று துவங்கும் பாடல். இப்பாடலின் ஒவ்வொரு வரியும் படத்தில் பாத்திரத்தைப் பொருத்தி எழுதப்பட்டாலும் உண்மையில் வார்த்தைக்கு வார்த்தை நடிகர் திலகத்தை எண்ணி எழுதப் பட்டுள்ளது. அப்பாடலிலிருந்து சில வரிகள்-
...
வீரத்தின் மகனென்று விழி சொல்லுமே
வேழத்தின் இனமென்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் எனப் பேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இன்று உருவாகலாம் - உன்
உடல் கொண்ட அசைவிற்கு ஈடாகுமா

..

எப்போதும் தோற்காது உன் சேனைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானை தான்
கண்டங்கள் அரசாளும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டிப் பொருளீட்டும் உன் கீர்த்தி தான்
..
தலைமுறைகள் கடந்தாலும் உன் பேச்சுத்தான்


இப்பாடலை பரத்வாஜ் அவர்கள் பாடியுள்ளார்.
-

குறுந்தகடின் மிகப் பிரபலமாக அமையக்கூடியது
துஷ்யந்தா என்று துவங்கும் பாடல்தான். சுர்முகி மற்றும் குமரன் பாடியுள்ள இப்பாடல் புதுமையாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது. வரிகளும் வார்த்தைகளும் நீண்ட நாட்களுக்குப் பின் இப்படத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை ஈர்க்கின்றன. இப்பாடல் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலுடன் ரீமிக்ஸ் செய்யப் பட்டுள்ளது. ஆனால் எங்கேயும் தற்போதைய ரீமிக்ஸ் கலாச்சாரம் போல் கெடுக்காமல் அழகாக ராகத்துடன் இணைக்கப் பட்டு சஞ்சாரம் செய்து பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வந்து முடிவடையும் போது இப்படிப் பட்ட ரீமிக்ஸ்களை வரவேற்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பாடலை ரீமிக்ஸ் எனசொல்வது கூடத் தவறு. இரு வெவ்வேறு பாடல்களின் இணை இசை என சொல்லலாம்.

மொத்தத்தில் பிரபு-அஜீத்-சரண்-பரத்வாஜ் கூட்டணியில் 2010ன் தொடக்கம் தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை அளிக்கின்ற படமாக அசல் திகழும் என்பதற்கு இக்குறுந்தகட்டின் பாடல்கள் கட்டியம் கூறுகின்றன.

இக்குறுந்தகட்டினைப் பொறுத்தமட்டில் இசையின் அடிப்படையில் பாடல்களை வரிசைப் படுத்த வேண்டுமானால் கீழ்க்கண்டவாறு அமையலாம் -

முதலிடம் - துஷ்யந்தா
இரண்டாமிடம் - குதிரைக்குத் தெரியும்
மூன்றாமிடம் - எம் தந்தைதான்
நான்காமிடம் - எங்கே எங்கே
ஐந்தாமிடம் - டொட்டொடெய்ங்
ஆறாமிடம் - தல போல வருமா

இது பிரபலமாகக் கூடிய வரிசை என்று அடிப்படையில் வரிசைப்படுத்தவில்லை. ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் தான் அமைத்துள்ளேன்.

ராகவேந்திரன்

Murali Srinivas
7th January 2010, 11:59 PM
நடிகர் திலகத்தின் மதுரை ரசிகர்கள் இப்போதும் மிக ஆக்டிவாக இருப்பவர்கள் என்பதை பல முறை பல ஆதாரங்களோடு இங்கே சொல்லியிருக்கிறோம். அதிலும் குறிப்பாக காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோயில் குரூப்ஸ் என்றைழைக்கப்படும் மன்றங்கள் இதில் முதன்மையாக இருப்பார்கள். இவர்கள் வருடா வருடம் அக்டோபர் மாதத்தில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் மதுரையில் சிலை திறப்பு விழா அந்த நேரத்தில் நடைபெற்றதால் தள்ளி வைக்கப்பட்ட அந்த பிறந்த நாள் விழா இந்த மாதம் 10-ம் தேதி, வரும் ஞாயிறன்று நடத்தப்படுகிறது. நமது சுவாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொள்கிறார்.

இந்த மாதத்திலேயே நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட வேறு ஒரு நிகழ்ச்சி முக்கியமான நகரத்தில் நடைபெற உள்ளது. விவரங்கள் விழா உறுதியானதும்.

அன்புடன்

HARISH2619
8th January 2010, 02:27 PM
இந்த மாதத்திலேயே நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட வேறு ஒரு நிகழ்ச்சி முக்கியமான நகரத்தில் நடைபெற உள்ளது. விவரங்கள் விழா உறுதியானதும்.

அன்புடன்

:bluejump:

Irene Hastings
8th January 2010, 05:12 PM
நண்பர்களே,

6வது பகுதியை நோக்கி வெற்றிப்பயணம் செய்யப்போகும் நம் நடிகர் திலகத்தின் திரியில் யாராவது ஆலயமணி பற்றி எழுதியுள்ளார்களா என்று தெரியவில்லை. இல்லையெனில் நான் விரைவில் அதை பற்றி எழுதுகிறேன், பொங்கல் சேர.

முரளி சார்,

நீங்கள் எழுதிய என் தம்பி பற்றிய தொகுப்பு மிகவும் அருமை. இதை போல பழைய படங்களை பற்றி எழுதவேண்டும் என்பது என் அவா. இப்படத்தில் நடிகர் திலகம் ஒரு வித்தியாசமான வேடத்தில் வருவது எனக்கு பிடித்த ஒன்று. முத்து நகையே பாடலில் அவர் நடிப்பு அற்புதம்.

நன்றி.

tacinema
8th January 2010, 11:22 PM
Sivaji Stays On...from The Hindu:
http://www.hindu.com/fr/2010/01/08/stories/2010010851491200.htm

Murali Srinivas
9th January 2010, 12:18 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா இந்த மாதம் 10-ம் தேதி, வரும் ஞாயிறன்று நடத்தப்படுகிறது.

மதுரை விழா தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்படும் என செய்தி வந்துள்ளது.

நன்றி ஹேஸ்டிங்ஸ்.

அன்புடன்

ஜோ,

சென்ற வார விகடனில் ஞான ஒளி விமர்சனம் வந்திருந்தது. அதை இங்கே பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.

pammalar
9th January 2010, 04:04 AM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 6)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

முதல் மரியாதை பாடலுக்குப் பின் ஒய்.ஜி. சிவாஜிக்கு ராஜ மரியாதை செய்ய நினைத்தார் போலும்! ஆடியோவிலிருந்து வீடியோவுக்கு மாறினார். (சிவாஜி பக்தர் என்பதிலிருந்து என்றுமே மாறாதவர்)

"இப்போ ஸ்கிரீன்ல சில கிளிப்பிங்ஸ்" என ஒய்.ஜி. உரைத்தவுடன் விசில் பறந்தது.

"இங்க நீங்க பாக்கப் போறது 2 காட்சிகள். 2 படத்துலேந்து. ரெண்டுமே சிவாஜி சார் சாப்படற சீன்ஸ். முதல் காட்சியா நீங்க பாக்கப் போறது உயர்ந்த மனிதன் படத்துல வர சாப்பாடு சீன். காட்சியை நல்லா கவனிச்சு பாருங்க!"

உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தில் உள்ள உணவு உண்ணும் காட்சி ஒளித்திரையில் ஓடியது தான் தாமதம். உடனே பார்வையாளர்களின் பலத்த கரகோஷம். சிவகுமார் உணவைப் பரிமாற சிவாஜி சாப்பிடுகிறார். "நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு." எனக் கூறிக் கொண்டே சிவாஜி ரசித்து, ருசித்து சாப்பிடும் அழகு, ஆஹா! ஆஹா! அவரது அபரிமிதமான நடிப்பு என்னும் கலை உணவை நாம் உட்கொள்ளும் போது நமது தாகம், பசி எல்லாம் தானாகத் தீர்ந்து விடுகிறது. உண்மை! அவர் நடிப்பைப் பார்த்தால் நம் பசி நிச்சயம் தீரும் ! ஆம் !! அவர் தான் நடிகர்!!!

காட்சி முடிந்ததும் ஒய்.ஜி. தொடர்ந்தார்.
"எவ்ளோ அனுபவிச்சு, ரசிச்சு, சுவைச்சு சாப்படறார் பாருங்க. இப்போ இந்த சீனப் பாருங்க. அதே சாப்படற சீன். ஆனா போன சீனுக்கும் இந்த சீனுக்கும் எவ்ளோ வித்தியாசம்னு பாருங்க."

முதல் மரியாதை மீன் சாப்பிடும் சீன் திரையில் நடைபெற்றது. கேட்கவே வேண்டாம். விசில் விண்ணைப் பிளந்தது. திரைக் காட்சி முடிவடையும் தருவாயில், உயர்ந்த மனிதனில் சாப்பாடு சாப்பிடும் அழகும், முதல் மரியாதையில் மீன் சாப்பிடும் நேர்த்தியும், அந்த ஒரே திரையில் வகுத்து, இடதுபுறமும், வலது புறமுமாகக் காட்டப்பட்டது. கம்பீரமான கரவொலி. இரண்டு சாப்பிடும் சீன்களை, இரண்டு வெவ்வேறு விதமாக செய்யும் நடிகர், உலகிலேயே நடிகர் திலகம் ஒருவராகத் தான் இருக்க முடியும். அதைப் பற்றி ஒய்.ஜி. கூறுவதையே கேளுங்கள்.

"அவர மாதிரி இழுத்துப் பாக்கறதுக்கு இங்க நமக்கு எதாவது மீன் துண்டு கிடைக்காதான்னு இருக்கு. ரெண்டு சீனையும் எவ்ளோ வித்தியாசமா பண்ணிருக்கார் பாருங்க! உயர்ந்த மனிதன்ல ஒரு பெரிய பணக்காரர், ஒரு பிரமுகர் எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. முதல் மரியாதைல , ஒரு கிராமத்து பெரியவர், எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. பாத்தீங்க இல்லையா ! அதுனால தான் சொல்றேன். அவன் தான் நடிகன் ! இனி அடுத்த பாடல். பாடப் போறது கோவை முரளி அண்ட் கல்பனா. இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அமைத்த one of the best duets. கேளுங்க!"

ராஜபார்ட் ரங்கதுரையிலிருந்து "மதன மாளிகையில்" என விருத்த நடையில் கோவை முரளி உச்சஸ்தாயியில் முழங்கிய போது காமராஜர் அரங்கமே கிடுகிடுத்தது. தொடர்ந்து "அன்பே ! அன்பே !" எனத் தன் குரல் என்னும் மயிலிறகால் மனங்களை வருடினார் கல்பனா. ஆரவார ஆரம்பம். தொடர்ந்து பாடல் பாங்குற பாடப்பட்டது. நிறைவடைந்தும் கூட நெஞ்சை விட்டு நீங்காமல் நின்றது. டி.எம்.எஸ்சையும் , சுசீலாவையும் அப்படியே நகல் எடுத்திருந்தார்கள் கோவை முரளியும், கல்பனாவும். பாடல் வரிகளைக் காதுகள் கேட்கக்கேட்க, நமது கண்களில் கலைக்குரிசில் காட்டும் காதல் கனிரசம், காதல் சிருங்காரம் காட்சிகளாகக் களை கட்டின. ரியல் ரொமான்டிக் ஹீரோ ரியலி அவர் மட்டும் தான்.

தொடரும் .....

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
9th January 2010, 06:52 AM
அவன் தான் நடிகன் நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அனுமதிச் சீட்டு இன்றி அரங்கம் தேடிச் செல்லாமல் அமர்ந்த இடத்திலேயே அனுபவிக்க வைக்கின்ற பம்மலாரை இனி நாம் இப்படி அழைக்கலாமே ...
"அவன் தான் ரசிகன்"

இன்று 09.01.2009, சனிக்கிழமை, 61வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குழந்தை Y.Gee.மகேந்திரா அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் அனைத்து சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

ராகவேந்திரன்.

RC
9th January 2010, 07:47 AM
ஞான ஒளி (விகடன் இதழில் இருந்து)

'ஏழை படும்பாடு' காலத்தி லிருந்து நமக்கு அறிமுகமான 'கைதி-போலீஸ் இன்ஸ்பெக்டர்' போராட்டம்தான் என்றாலும், ஒரே பாதிரியாரின் பராமரிப்பில் வளர்ந்த நண்பர்க ளான முரட்டு இளைஞன் அந் தோணியையும், போலீஸ் இன்ஸ் பெக்டர் லாரென்சையும் பாச உணர்ச்சியைக் குன்றவிடாமல், கடமைக்காகப் புத்தி தீட்சண்யத் துடன் மோதிக்கொள்ள வைத்தி ருப்பது கதையின் சுவையான இழையோட்டம். பிற்பகுதியில் இந்தப் போராட்டம் விறுவிறுப் பாக இருக்கிரது. குற்றவாளி கண் ணெதிரே இருக்கிறான். அவனைப் பிடிக்கக்கூடிய இன்ஸ்பெக்டரும் அருகிலேயே இருக்கிறார். ஆனாலும் பிடிக்க முடியவில்லை. 'இதோ, அதோ' என்ற பரபரப்புக் கிடையே இருவருடைய சாமர்த் தியங்களும் மோதிக்கொள்ளும் இடங்கள் கதைக்குப் புதிய புதிய திருப்பங்களையும், சுவையையும் ஊட்டுகின்றன.

பட்டை தீட்டப்பட்ட ஜாதி வைரத்துக்கு உவமானம் சொல்ல வேண்டுமானால், சிவாஜியின் நடிப்பைச் சொல்லலாம்.

அந்த வைரம் சரியான இடத் தில் (கதையில்) இணைய வேண் டும். அப்படி இணைந்துவிட் டால், அதன் ஒளி வீச்சே அலாதி யாக இருக்கும். அப்படி அமைந்த ஒரு படம், ஞான ஒளி.

படம் நெடுகிலும் பளபளக் கிறது அவருடைய நடிப்பு. குறிப் பாக மேஜரிடமிருந்து எவர்சில்வர் டம்ளரைக் கிண்டலாகப் பேசிப் பெறும் காட்சியில் அவருடைய முத்திரை முத்தாகத் திரையில் விழுகிறது.

பிற்பகுதியில் சிவாஜிக்கு ஈடு கொடுத்துக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் சுந்தர்ராஜன்.

எம்.ஆர்.ஆர்.வாசு - ஐ.எஸ்.ஆர். நகைச்சுவைப் பகுதி நன் றாக இருந்தாலும், வேண்டு மென்றே படத்தில் திணிக்கப்பட் டிருப்பது போலிருக்கிறது. வி.கே.ஆர். திரும்பி வந்து 30 பிஸ்கெட் என்னாச்சு என்று கேட்கிற இடம் அருமை.

சாரதாவின் உருக்கம் மிக்க அமைதியான தோற்றம், மேரியின் பாத்திரத்துக்கு அழகாகப் பொருந் துகிறது. ஆனால், காதல் காட்சி யில்..? பாவம், அவருக்குப் பொருந் தாத சூழ்நிலைகளையெல்லாம் உருவாக்கியிருக்கிறார்கள்.

நண்டு, கழுகு போராட்ட உவ மானம் ஆரம்பத்தில் சாதாரண மாகத் தோன்றினாலும், கடைசி யில் நண்டு வளையை விட்டு வெளி வரும்போது டைரக்டரின் சிறப்பும் வெளிப்பட்டது.

படத்தில் சில குறைகள் ஆங் காங்கே தென்பட்டாலும், அவற் றையெல்லாம் மறக்க வைக்கும் ஒரு சக்தி படத்தில் இருக்கிறது. அதுதான் ஜீவன்!

DHANUSU
11th January 2010, 01:36 PM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 6)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

முதல் மரியாதை பாடலுக்குப் பின் ஒய்.ஜி. சிவாஜிக்கு ராஜ மரியாதை செய்ய நினைத்தார் போலும்! ஆடியோவிலிருந்து வீடியோவுக்கு மாறினார். (சிவாஜி பக்தர் என்பதிலிருந்து என்றுமே மாறாதவர்)

"இப்போ ஸ்கிரீன்ல சில கிளிப்பிங்ஸ்" என ஒய்.ஜி. உரைத்தவுடன் விசில் பறந்தது.

"இங்க நீங்க பாக்கப் போறது 2 காட்சிகள். 2 படத்துலேந்து. ரெண்டுமே சிவாஜி சார் சாப்படற சீன்ஸ். முதல் காட்சியா நீங்க பாக்கப் போறது உயர்ந்த மனிதன் படத்துல வர சாப்பாடு சீன். காட்சியை நல்லா கவனிச்சு பாருங்க!"

உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தில் உள்ள உணவு உண்ணும் காட்சி ஒளித்திரையில் ஓடியது தான் தாமதம். உடனே பார்வையாளர்களின் பலத்த கரகோஷம். சிவகுமார் உணவைப் பரிமாற சிவாஜி சாப்பிடுகிறார். "நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு." எனக் கூறிக் கொண்டே சிவாஜி ரசித்து, ருசித்து சாப்பிடும் அழகு, ஆஹா! ஆஹா! அவரது அபரிமிதமான நடிப்பு என்னும் கலை உணவை நாம் உட்கொள்ளும் போது நமது தாகம், பசி எல்லாம் தானாகத் தீர்ந்து விடுகிறது. உண்மை! அவர் நடிப்பைப் பார்த்தால் நம் பசி நிச்சயம் தீரும் ! ஆம் !! அவர் தான் நடிகர்!!!

காட்சி முடிந்ததும் ஒய்.ஜி. தொடர்ந்தார்.
"எவ்ளோ அனுபவிச்சு, ரசிச்சு, சுவைச்சு சாப்படறார் பாருங்க. இப்போ இந்த சீனப் பாருங்க. அதே சாப்படற சீன். ஆனா போன சீனுக்கும் இந்த சீனுக்கும் எவ்ளோ வித்தியாசம்னு பாருங்க."

முதல் மரியாதை மீன் சாப்பிடும் சீன் திரையில் நடைபெற்றது. கேட்கவே வேண்டாம். விசில் விண்ணைப் பிளந்தது. திரைக் காட்சி முடிவடையும் தருவாயில், உயர்ந்த மனிதனில் சாப்பாடு சாப்பிடும் அழகும், முதல் மரியாதையில் மீன் சாப்பிடும் நேர்த்தியும், அந்த ஒரே திரையில் வகுத்து, இடதுபுறமும், வலது புறமுமாகக் காட்டப்பட்டது. கம்பீரமான கரவொலி. இரண்டு சாப்பிடும் சீன்களை, இரண்டு வெவ்வேறு விதமாக செய்யும் நடிகர், உலகிலேயே நடிகர் திலகம் ஒருவராகத் தான் இருக்க முடியும். அதைப் பற்றி ஒய்.ஜி. கூறுவதையே கேளுங்கள்.

"அவர மாதிரி இழுத்துப் பாக்கறதுக்கு இங்க நமக்கு எதாவது மீன் துண்டு கிடைக்காதான்னு இருக்கு. ரெண்டு சீனையும் எவ்ளோ வித்தியாசமா பண்ணிருக்கார் பாருங்க! உயர்ந்த மனிதன்ல ஒரு பெரிய பணக்காரர், ஒரு பிரமுகர் எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. முதல் மரியாதைல , ஒரு கிராமத்து பெரியவர், எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. பாத்தீங்க இல்லையா ! அதுனால தான் சொல்றேன். அவன் தான் நடிகன் ! இனி அடுத்த பாடல். பாடப் போறது கோவை முரளி அண்ட் கல்பனா. இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அமைத்த one of the best duets. கேளுங்க!"

ராஜபார்ட் ரங்கதுரையிலிருந்து "மதன மாளிகையில்" என விருத்த நடையில் கோவை முரளி உச்சஸ்தாயியில் முழங்கிய போது காமராஜர் அரங்கமே கிடுகிடுத்தது. தொடர்ந்து "அன்பே ! அன்பே !" எனத் தன் குரல் என்னும் மயிலிறகால் மனங்களை வருடினார் கல்பனா. ஆரவார ஆரம்பம். தொடர்ந்து பாடல் பாங்குற பாடப்பட்டது. நிறைவடைந்தும் கூட நெஞ்சை விட்டு நீங்காமல் நின்றது. டி.எம்.எஸ்சையும் , சுசீலாவையும் அப்படியே நகல் எடுத்திருந்தார்கள் கோவை முரளியும், கல்பனாவும். பாடல் வரிகளைக் காதுகள் கேட்கக்கேட்க, நமது கண்களில் கலைக்குரிசில் காட்டும் காதல் கனிரசம், காதல் சிருங்காரம் காட்சிகளாகக் களை கட்டின. ரியல் ரொமான்டிக் ஹீரோ ரியலி அவர் மட்டும் தான்.

தொடரும் .....

அன்புடன்,
பம்மலார்.


One more 'eating scene' from the spectrum of NT scenes is from 'Bale Pandiya' where NT, at MR Radha's residence, who has been starving for days, would pounce on the dining table and force everything available on the table into his mouth. One more dimension of 'eating'.

DHANUSU
11th January 2010, 01:37 PM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 6)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

முதல் மரியாதை பாடலுக்குப் பின் ஒய்.ஜி. சிவாஜிக்கு ராஜ மரியாதை செய்ய நினைத்தார் போலும்! ஆடியோவிலிருந்து வீடியோவுக்கு மாறினார். (சிவாஜி பக்தர் என்பதிலிருந்து என்றுமே மாறாதவர்)

"இப்போ ஸ்கிரீன்ல சில கிளிப்பிங்ஸ்" என ஒய்.ஜி. உரைத்தவுடன் விசில் பறந்தது.

"இங்க நீங்க பாக்கப் போறது 2 காட்சிகள். 2 படத்துலேந்து. ரெண்டுமே சிவாஜி சார் சாப்படற சீன்ஸ். முதல் காட்சியா நீங்க பாக்கப் போறது உயர்ந்த மனிதன் படத்துல வர சாப்பாடு சீன். காட்சியை நல்லா கவனிச்சு பாருங்க!"

உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தில் உள்ள உணவு உண்ணும் காட்சி ஒளித்திரையில் ஓடியது தான் தாமதம். உடனே பார்வையாளர்களின் பலத்த கரகோஷம். சிவகுமார் உணவைப் பரிமாற சிவாஜி சாப்பிடுகிறார். "நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு." எனக் கூறிக் கொண்டே சிவாஜி ரசித்து, ருசித்து சாப்பிடும் அழகு, ஆஹா! ஆஹா! அவரது அபரிமிதமான நடிப்பு என்னும் கலை உணவை நாம் உட்கொள்ளும் போது நமது தாகம், பசி எல்லாம் தானாகத் தீர்ந்து விடுகிறது. உண்மை! அவர் நடிப்பைப் பார்த்தால் நம் பசி நிச்சயம் தீரும் ! ஆம் !! அவர் தான் நடிகர்!!!

காட்சி முடிந்ததும் ஒய்.ஜி. தொடர்ந்தார்.
"எவ்ளோ அனுபவிச்சு, ரசிச்சு, சுவைச்சு சாப்படறார் பாருங்க. இப்போ இந்த சீனப் பாருங்க. அதே சாப்படற சீன். ஆனா போன சீனுக்கும் இந்த சீனுக்கும் எவ்ளோ வித்தியாசம்னு பாருங்க."

முதல் மரியாதை மீன் சாப்பிடும் சீன் திரையில் நடைபெற்றது. கேட்கவே வேண்டாம். விசில் விண்ணைப் பிளந்தது. திரைக் காட்சி முடிவடையும் தருவாயில், உயர்ந்த மனிதனில் சாப்பாடு சாப்பிடும் அழகும், முதல் மரியாதையில் மீன் சாப்பிடும் நேர்த்தியும், அந்த ஒரே திரையில் வகுத்து, இடதுபுறமும், வலது புறமுமாகக் காட்டப்பட்டது. கம்பீரமான கரவொலி. இரண்டு சாப்பிடும் சீன்களை, இரண்டு வெவ்வேறு விதமாக செய்யும் நடிகர், உலகிலேயே நடிகர் திலகம் ஒருவராகத் தான் இருக்க முடியும். அதைப் பற்றி ஒய்.ஜி. கூறுவதையே கேளுங்கள்.

"அவர மாதிரி இழுத்துப் பாக்கறதுக்கு இங்க நமக்கு எதாவது மீன் துண்டு கிடைக்காதான்னு இருக்கு. ரெண்டு சீனையும் எவ்ளோ வித்தியாசமா பண்ணிருக்கார் பாருங்க! உயர்ந்த மனிதன்ல ஒரு பெரிய பணக்காரர், ஒரு பிரமுகர் எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. முதல் மரியாதைல , ஒரு கிராமத்து பெரியவர், எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. பாத்தீங்க இல்லையா ! அதுனால தான் சொல்றேன். அவன் தான் நடிகன் ! இனி அடுத்த பாடல். பாடப் போறது கோவை முரளி அண்ட் கல்பனா. இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அமைத்த one of the best duets. கேளுங்க!"

ராஜபார்ட் ரங்கதுரையிலிருந்து "மதன மாளிகையில்" என விருத்த நடையில் கோவை முரளி உச்சஸ்தாயியில் முழங்கிய போது காமராஜர் அரங்கமே கிடுகிடுத்தது. தொடர்ந்து "அன்பே ! அன்பே !" எனத் தன் குரல் என்னும் மயிலிறகால் மனங்களை வருடினார் கல்பனா. ஆரவார ஆரம்பம். தொடர்ந்து பாடல் பாங்குற பாடப்பட்டது. நிறைவடைந்தும் கூட நெஞ்சை விட்டு நீங்காமல் நின்றது. டி.எம்.எஸ்சையும் , சுசீலாவையும் அப்படியே நகல் எடுத்திருந்தார்கள் கோவை முரளியும், கல்பனாவும். பாடல் வரிகளைக் காதுகள் கேட்கக்கேட்க, நமது கண்களில் கலைக்குரிசில் காட்டும் காதல் கனிரசம், காதல் சிருங்காரம் காட்சிகளாகக் களை கட்டின. ரியல் ரொமான்டிக் ஹீரோ ரியலி அவர் மட்டும் தான்.

தொடரும் .....

அன்புடன்,
பம்மலார்.


One more 'eating scene' from the spectrum of NT scenes is from 'Bale Pandiya' where NT, at MR Radha's residence, who has been starving for days, would pounce on the dining table and force everything available on the table into his mouth. One more dimension of 'eating'.

HARISH2619
11th January 2010, 06:04 PM
SOME RARE STILLS OF NT

http://images.google.co.in/imgres?imgurl=http://eegaraisiva.googlepages.com/mas_prab_ramku.jpg&imgrefurl=http://home.eegarai.com/-f18/--t933.htm&usg=__mxvM_ogh3YKXINXpJV2qtuqDclo=&h=266&w=392&sz=42&hl=ta&start=7&um=1&tbnid=gvRXsym3HlXjpM:&tbnh=83&tbnw=123&prev=/images%3Fq%3D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%2 5AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%2 5BF%2B%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258 7%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26h l%3Dta%26sa%3DX%26um%3D1

RAGHAVENDRA
11th January 2010, 07:30 PM
அன்பு நண்பர்களுக்கு,
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணத்தால் நமது நடிகர் திலகம் இணையதளம் தற்காலிகமாக ஓரிரு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. சரிசெய்யப்பட்ட அடுத்த கணம் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ராகவேந்திரன்

HARISH2619
11th January 2010, 07:46 PM
SUPER STILLS OF NT

http://images.google.co.in/imgres?imgurl=http://eegaraisiva.googlepages.com/21premnazir.jpg&imgrefurl=http://home.eegarai.com/-f18/--t933-20.htm&usg=__-URDHaU08VCiEWnVa0ye3oxFjCg=&h=363&w=324&sz=36&hl=ta&start=64&um=1&tbnid=_OiLRoC6cBGGBM:&tbnh=121&tbnw=108&prev=/images%3Fq%3D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%2 5AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%2 5BF%2B%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258 7%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26n dsp%3D20%26hl%3Dta%26sa%3DN%26start%3D60%26um%3D1

HARISH2619
13th January 2010, 12:17 PM
WISH YOU ALL A VERY HAPPY PONGAL AND PROSPEROUS TAMIL NEW YEAR

Murali Srinivas
13th January 2010, 11:31 PM
அனைத்து நல்லிதயங்களுக்கும் தமிழர் திருநாளாம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


அன்புடன்

Murali Srinivas
14th January 2010, 12:26 AM
ஜனவரி 14

இன்று பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மெக்கா என்று அறியப்படும் சாந்தி திரையரங்கிற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

இன்று மாணிக்கத்திற்கு வயது ஐம்பது.

ஆம் "இரும்பு திரை''க்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை, பிற்காலத்தில் பெரிய அளவில் வெடித்த தொழிலாளர் பிரச்னையை அன்றே சொன்ன மாணிக்கத்திற்கு இன்று பொன் விழா ஜெயந்தி.

இன்றைக்கும் கவித்துவமான காதல் காட்சிக்கு உதாரணம் சொல்லப்படுகிற [நடிகர் திலகம்-வைஜயந்தி குளக்கரையில் அமர்ந்து பேசும் காட்சி] இரும்பு திரை இன்று பொன் விழா ஆண்டுகளை [50] பூர்த்தி செய்கிறது. [14.01.1960 - 14.01.2010].

அதே போல் இதே நாளில்

நண்பனின் நல்வாழ்விற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த

உள்ளம் என்பது ஆமை; அதில்
உண்மை என்பது ஊமை

என்று மனதினில் உண்மையை பூட்டி வைத்துக் கொண்ட ராணுவ வீரனுக்கு இன்று வயது 48. ஆம், "பார்த்தால் பசி தீரும்" இன்று 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.[1962 -2010].

கொடை வள்ளல் என்ற பெயரில் மட்டுமே அறியப்பட்ட வீரனை

செஞ்சோற்று கடன் தீர
சேராத இடம் தேடி சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தவன்

என்ற குணாதிசயங்களை உடைய கர்ணனாக தமிழ் திரை உலகம் மூலமாக உலக மக்களுக்கு முன் மீண்டும் அவதாரம் எடுத்த நாள் இன்று. இந்த அவதாரத்திற்கு வயது 46 [1964 -2010].

தேர் கொண்ட மன்னன் ஏது

பேர் சொல்லும் உழவன் ஏது

ஏர் கொண்ட உழவன் இன்றி

போர் செய்யும் வீரன் ஏது

என்று உழவனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய "பழநி"க்கு இன்று வயது 45 [1965 -2010].

கைலாசம் தெரியும். பூதகணங்கள் தெரியும். ஆனால் அந்த பூதகணங்களின் நாயகனாம் வீரபாகுவின் வீரத்தை வெற்றிவேல் வீரவேல் என்ற சிங்க நடையை தமிழ் திரையுலகம் செல்லுலாயிடில் "கந்தன் கருணை" யினால் கண்டது 43 வருடங்களுக்கு முன்பு [1967 - 2010].

எல்லோரும் நலம் வாழ தான் பாடிய

குழந்தைகளை செல்லக்கிளிகளாகவும் செவ்வந்திப்பூக்களாகவும் தாலாட்டிய "எங்க மாமா"விற்கு இன்று 40 வயது நிறைவு பெறுகிறது [1970 - 2010].

சர்க்கரை பொங்கலை விட இனிப்பானது அல்லவோ மேற்சொன்ன பாத்திரங்கள்.

மீண்டும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்

tacinema
14th January 2010, 02:23 AM
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Murali Sir: A sweet NT list - as usual.

பொங்கல் பண்டிகையில் நடிகர் திலகம் சிங்க தமிழன் பாடல்களை பட்டியல் செய்வோம். One great song:
அம்பிகையே ஈஸ்வரியே என சிம்ம குரலோன் black/white படங்களில் மிக அதிகமாக வசூல் செய்த பட்டிக்காடா பட்டணமா-வில் பட்டையை கிளப்பிய பாடல்.

Pl. list other songs.

Regards

pammalar
14th January 2010, 10:34 AM
பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல் !!

அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th January 2010, 10:55 AM
டியர் முரளி சார்,

இரும்புத்திரை, கர்ணன், பழநி, எங்க மாமா பார்ததால் பசி தீரும். வீரபாகுவை தரிசித்து, கந்தன் கருணை கிடைக்க, வாழ்வில் என்றுமே சாந்தி தான்!

தங்களது முத்தாய்ப்பான தகவல்கள், பொங்கல் கரும்பை விடவும், சர்க்கரைப் பொங்கலைக் காட்டிலும் தித்திக்கின்றது !!

பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
14th January 2010, 01:55 PM
மண்ணை நம்பி உழுது வச்சு
மழையை நம்பி விதை விதைச்சு
வயலை நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா - ஒரு
பயலை நம்பத் தேவையில்லே சின்னம்மா - ஒரு
பயலை நம்பத் தேவையில்லே சின்னம்மா


போட்டது முளைச்சுதடி கண்ணம்மா
கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா - கை நிறைய
கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா

நான் தினமும் சோற்றில் கைவைக்க, வயல் காட்டில் சேற்றில் கால் வைக்கும் அத்தனை உழவர் பெருமக்களுக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

saradhaa_sn
14th January 2010, 02:10 PM
டியர் முரளி சார்,

இரும்புத்திரை, கர்ணன், பழநி, எங்க மாமா பார்ததால் பசி தீரும். வீரபாகுவை தரிசித்து, கந்தன் கருணை கிடைக்க, வாழ்வில் என்றுமே சாந்தி தான்!

தங்களது முத்தாய்ப்பான தகவல்கள், பொங்கல் கரும்பை விடவும், சர்க்கரைப் பொங்கலைக் காட்டிலும் தித்திக்கின்றது !!

பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!

அன்புடன்,
பம்மலார்.

டியர் முரளி & பம்மலார்...

'இருதுருவம்'(1971) மட்டுமல்ல, எத்துருவமும் 'அவன் ஒரு சரித்திரம்'(1977) என்று பாராட்டிய நமது அண்ணனின் 'மோகனப் புன்னகை'(1981) தமிழ்த்திரைக்கே 'திருப்பம்'(1984) ஏற்படுத்தி, 'ராஜமரியாதை'(1987) கிடைக்கசெய்த பொங்கல் திருநாளில், அவர் நினைவைப்போற்றுவோம்.

(அந்தந்த ஆண்டின் பொங்கல் வெளியீடுகள்)

pammalar
14th January 2010, 04:15 PM
பொங்கல் வெளியீடுகளாக வெளிவந்த சிங்கத்தமிழனின் பொங்கல் திரைக்காவியங்கள்:
(திரைப்படம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. பரதேசி (தெலுங்கு) - 12.1.1953 - வெற்றிக் காவியம்

2. காவேரி - 13.1.1955 - 100 நாட்கள்

3. நான் பெற்ற செல்வம் - 14.1.1956 - 55 நாட்கள்

4. நல்ல வீடு - 14.1.1956 - 34 நாட்கள்

5. பராசக்தி (தெலுங்கு) - 11.1.1957 - வெற்றிக் காவியம்

6. பொம்மல பெள்ளி (தெலுங்கு) - 11.1.1958 - வெற்றிக் காவியம்

7. தங்கப்பதுமை - 10.1.1959 - 94 நாட்கள்

8. இரும்புத்திரை - 14.1.1960 - 155 நாட்கள்

9. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 110 நாட்கள்

10. கர்ணன் - 14.1.1964 - 108 நாட்கள்

11. பழநி - 14.1.1965 - 57 நாட்கள்

12. கந்தன் கருணை - 14.1.1967 - 125 நாட்கள்

13. எங்க மாமா - 14.1.1970 - 58 நாட்கள்

14. இரு துருவம் - 14.1.1971 - 50 நாட்கள்

15. மனிதனும் தெய்வமாகலாம் - 11.1.1975 - 42 நாட்கள்

16. அவன் ஒரு சரித்திரம் - 14.1.1977 - 90 நாட்கள்

17. மோகனப்புன்னகை - 14.1.1981 - 44 நாட்கள்

18. பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு) - 14.1.1983 - 100 நாட்கள்

19. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்

20. சாதனை - 10.1.1986 - 132 நாட்கள்

21. ராஜ மரியாதை - 14.1.1987 - 67 நாட்கள்

22. ஞான பறவை - 11.1.1991 - 63 நாட்கள்

23. மன்னவரு சின்னவரு - 15.1.1999 - 28 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

NOV
14th January 2010, 04:57 PM
The no. 1 pongal song :thumbsup:


பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

:cheer: :cheer: :cheer: :cheer: :cheer:

RAGHAVENDRA
14th January 2010, 07:35 PM
அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். முரளி அவர்களும் பம்மலார் அவர்களும் இங்கு இடும் பதிவுகளைப் படிக்கும் போது எனக்கு ஒரு தவிர்க்க முடியாத நினைவும் கனவும் ஒரு சேர வருகின்றன. சற்று உணர்ச்சி மயமாக இருந்தாலும் அதை பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

ஆம், நடிகர் திலகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைக்காத பேரும் புகழும் அதை விட தற்பொழுது அவர் பெற்று வருகிறார். அதிலும் குறிப்பாக முரளி சாரும் பம்மலார் அவர்களும் இன்னும் சற்று 10 அல்லது 15 வயது முன்னதாக பிறந்திருந்தார்களானால் பல சாதனை விவரங்கள் தகுந்த நேரத்தில் வெளியாகி நடிகர் திலகத்தின் செல்வாக்கை அவர் இருக்கும் பொழுதே உலகெங்கும் பறைசாற்றியிருக்கும். என்றாலும் காலத்தை வென்று அவர் நிற்க வேண்டும், நிற்பார் என்பதை உணர்ந்து இறைவன் இவர்கள் இருவரையும் நம்மிடையே அனுப்பியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இறைவனை அறிய நமக்கு அடியார்கள் தேவைப்பட்டது. சிவ பெருமானின் பெருமைகளை உணர நாயன்மார்கள், விஷ்ணுவின் பெருமைகளை உணர ஆழ்வார்கள் போன்று, நடிகர் திலகம் என்கின்ற இறைவனின் பெருமைகளை உணர இவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

குறிப்பாக பொங்கல் தினத்தையொட்டி வெளியிடப் படும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதில்லை என்று ஒரு கூற்று உண்டு. அதில் சிலர் சில வகையான நம்பிக்கைகளையும் கலந்து கூறியதும் உண்டு. அதையும் மீறி இரும்புத்திரை, அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அவன் ஒரு சரித்திரம் படம் வெற்றியடைந்த படம். ஆனால் அதை முறியடிக்க திட்டமிட்டு செய்யப் பட்ட பிரச்சாரங்களுக்கும் பலன் கிடைத்தது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இப்படி பல நேரங்களில் பல வகையான பிரச்சாரங்கள், வதந்திகள் உள்ளிட்ட எதிர்ப்புகளை எதிர்கொண்டு தான் நடிகர் திலகம் அவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளார் என்பதை அறியும் பொழுது எந்த அளவிற்கு தமிழர் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார் என்பது புலனாகிறது.

அப்படிப் பல சாதனைகளை வெளிக் கொணரும் இவர்கள் இருவரின் பணி மென் மேலும் சிறக்க வேண்டும், இவர்கள் மட்டுமல்ல அனைவரும் எல்லா நலனும் பெற்று இன்புற்று வாழ இப் பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்

ராகவேந்திரன்

pammalar
14th January 2010, 08:54 PM
டியர் ராகவேந்திரன் சார்,

கலை தெய்வமாக விளங்கும் நடிகர் திலகத்தின் பல கோடி பக்தர்களில் நானும் ஒருவன்.

தாங்களே அவரது தலையாய பக்தர். இதய தெய்வத்திற்கு தாங்கள் கர்ம சிரத்தையோடு நடத்தி வரும் இணையதளமான நடிகர்திலகம்.காம் ஒன்று போதும், தங்களின் ஈடு இணையற்ற பங்களிப்பை பறைசாற்றுவதற்கு. தங்களுக்கு விண்ணுலக கணேசரின் அருளும், கலையுலக கணேசரின் அருளும் பரிபூரணமாக இருக்கிறது. அதன் மூலம், தங்களின் திருத்தொண்டு மென்மேலும் சிறந்து விளங்கும்!

தங்களுக்கு இந்த எளியேனின் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

தங்களது மனம் திறந்த பாராட்டுகளுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th January 2010, 11:01 PM
திரு. ராகவேந்திரன் அவர்களைப் பற்றி மேலும் சில வரிகள்:

சிங்கத்தமிழனின் சிலை திறப்பு விழாவினையொட்டி, மதுரை ரேஸ் கோர்ஸ் ரோடு, இளைஞர் விடுதியில் இரண்டு நாட்களுக்கு (3.10.2009 மற்றும் 4.10.2009), நடிகர் திலகத்தின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்நாள் 'இதயக்கனி', 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' மாத இதழ்களின் ஆசிரியர், அந்நாள் 'எங்கள் சிவாஜி' இதழாசிரியர், தீவிர சிவாஜி ரசிகர், ராஜபாளையம் எஸ். விஜயன் அவர்களின் பெரு முயற்சியில், கடின உழைப்பில் கண்காட்சி களை கட்டியது. சற்றேறக்குறைய 400 கிடைத்தற்கரிய கலைக்குரிசிலின் புகைப்படங்கள் கண்களுக்கு விருந்தளித்தன.

ரகுகுல ராமருக்கு ஆஞ்சநேயர் போல், நமது நடிகர் திலகத்திற்கு ராகவேந்திரர். ராம நாமத்தை உச்சரிப்போருக்கு, அனுமார் தோன்றி உதவிகள் செய்வது போல், நடிகர் திலகம் எனும் நாமத்தை நா நவிலும் நல்லோருக்கு, நல்லிதயம் ராகவேந்திரர் நேர்த்தியான, நல்ல பல உதவிகளைச் செய்தார், செய்கிறார், செய்வார். ஆம்! கண்காட்சியை நிர்மாணித்த திரு. விஜயன் அவர்களுக்கு, அந்தக் கண் போன்ற உதவிகளை கிட்டத்தட்ட 5 நாட்கள் அவருடனேயே தங்கி இருந்து செய்திருக்கிறார் திரு. ராகவேந்திரன். அவரது சிவாஜி பக்தி மெச்சத் தகுந்தது. போற்றுதலுக்குரியது.

16.5.2009 அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தின் பொன்விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அன்று அங்கே திரு. ராகவேந்திரன் அவர்களே வீரபாண்டிய கட்டபொம்மன் நாடக மற்றும் திரைப்படக் கண்காட்சியை நிர்மாணித்து கண்களுக்கு கண்கொள்ளா விருந்தளித்தார். அக்கண்காட்சியைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் பொன்விழாவில், திரு. ராகவேந்திரன் அமைத்த கண்காட்சி பொற்கிரீடத்தில் பதித்த வைரக்கல்லாக மின்னியது.

வாழ்க, வளர்க, வெல்க அவரது திருத்தொண்டு!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th January 2010, 03:08 AM
இன்று (14.1.2010 - வியாழன்) இதயவேந்தரின் காலத்தை வென்ற காவியமான "இரும்புத்திரை"க்கு பொன்விழா நிறைவு.

இரும்புத்திரை திரைக்காவியம் இதயராஜாவின் 59வது திரைக்காவியம். 58வது கருப்பு-வெள்ளைக் காவியம்.

வெளியான தேதி : 14.1.1960 (வியாழன்) [பொங்கல் வெளியீடு]
(என்னே ஒரு கிழமை ஒற்றுமை! முதல் வெளியீடு வியாழக்கிழமையில்!! பொன் விழா பூர்த்தியும் வியாழக்கிழமையில்!!!)

பிரம்மாண்ட படங்களுக்கு பிரசித்தி பெற்ற ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மகத்தான தயாரிப்பு. இயக்கம் : எஸ்.எஸ். வாசன்

இசை : எஸ்.வி. வெங்கட்ராமன் ("நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்", டி.எம்.எஸ், பி.லீலா இணையில் இன்றும் இனிக்கும் கிளாசிக் பாடல்)

கதை : ஜெமினி கதை இலாகா, வசனம் : கொத்தமங்கலம் சுப்பு

பாடல்கள் : பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு

கதாநாயகனான நடிகர் திலகத்துக்கு இணை கதாநாயகி வைஜயந்திமாலா
மற்றும் சரோஜாதேவி, பண்டரிபாய், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், ஜாவர் சீதாராமன், தங்கவேலு, டி.எஸ்.துரைராஜ் இன்னும் பலர் நடித்திருந்தனர்.

தொழிலாளர் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, அவர்தம் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை உயர்த்திக் காட்டிய உயர்ந்த படம், இரும்புத்திரை.

"இரும்புத்திரை"யின் சாதனைகள்:

இரும்புத்திரை, 14.1.1960 பொங்கலன்று, சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

சென்னையில் வெலிங்டனில் 14.1.1960லிருந்து 24.3.1960 வரை 71 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது. 25.3.1960 அன்று வெலிங்டனில், "ஜிம்போ" என்றொரு டப்பிங் படம் வெளியானது.

பிரபாத்தில் (1277 இருக்கைகள்) 14.1.1960 முதல் 17.3.1960 வரை 64 நாட்கள் ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. 18.3.1960 அன்று பிரபாத்தில், நடிகர் திலகத்தின் "சபாஷ் மீனா" மறுவெளியீடாக வெளியானது.

சரஸ்வதியில் (974 இருக்கைகள்) 14.1.1960 முதல் 17.3.1960 வரை 64 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது.

ஆக, இரும்புத்திரையின் சென்னை சாதனைகள்:

வெலிங்டன் - 71 நாட்கள்

பிரபாத் - 64 நாட்கள்

சரஸ்வதி - 64 நாட்கள்

மேலும், கோவை கர்னாடிக் திரையரங்கில் 14.1.1960 லிருந்து 16.6.1960 வரை 155 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது.

மதுரை சென்ட்ரல் சினிமாவில் (1662 இருக்கைகள்) 14.1.1960 முதல் 12.4.1960 வரை 90 நாட்கள் ஓடி சூப்பர்ஹிட்டானது. 13.4.1960 அன்று தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக, சென்ட்ரல் சினிமாவில், இதயதெய்வத்தின் "தெய்வப்பிறவி" வெளியானது.

நாகர்கோவில் பயோனீர்பிக்சர்பேலஸ் திரையரங்கில் (1088 இருக்கைகள்) 14.1.1960 முதல் 17.3.1960 வரை 64 நாட்கள் ஓடி பெரும் வெற்றிப்படமானது.

திருநெல்வேலி பார்வதி திரையரங்கில், 14.1.1960 முதல் 3.3.1960 வரை 50 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

ஆக மொத்தம் , ஏ சென்டர்களில் 9 முதல் 13 வாரங்களும், பி சென்டர்களில் 6 முதல் 9 வாரங்களும், சி சென்டர்களில் 4 முதல் 5 வாரங்களும் ஓடி மகோன்னத வெற்றியைப் பெற்ற படம் "இரும்புத்திரை".

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
16th January 2010, 11:07 AM
குறிப்பாக பொங்கல் தினத்தையொட்டி வெளியிடப் படும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதில்லை என்று ஒரு கூற்று உண்டு. அதில் சிலர் சில வகையான நம்பிக்கைகளையும் கலந்து கூறியதும் உண்டு.
நடிகர்திலகத்தைப் பொறுத்தவரையில், அவரது பொங்கல் வெளியீடுகளை விட, ஜனவரி 26 குடியரசு தின வெளியீடுகள் பெரும் வெற்றிகளைப்பெற்றுள்ளன. அதனால் நன்றாக ஓடக்கூடிய படங்கள் என்று தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் கணிக்கும் படங்கள் யாவும், ஜனவரி 26 வெளியீடுகளாக (12 நாட்கள்தானே என்று) தாமதப்படுத்தி வெளியிடப்பட்டு, அவை எதிர்பார்த்தபடியே பெரும் வெற்றிகளையும் சாதித்துள்ளன. இவ்வகை வெளியீடுகளில் நடிகர்திலகத்தின் ஆப்த நண்பரும், தயாரிப்பாளருமான திரு. பாலாஜி அவர்களின் படங்களான ராஜா, தீபம், நீதிபதி உட்பட பல படங்கள் பெரும் சாதனை புரிந்துள்ளன (ஜெமினி வாசனின் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' உட்பட).

RAGHAVENDRA
17th January 2010, 06:22 AM
http://www.esnips.com/doc/0c4fe6a2-20d8-4383-b3f3-604013c933fd/ntmgr

நாங்கள் எம்.ஜி.ஆர். படங்களை அந்தக் காலத்தில் அதிகமாகப் பார்த்ததில்லை. ஆனால் தற்காலத் தமிழ்ப்படங்களைப் பார்க்கும் பொழுது தங்கள் படங்களின் அருமை புரிகிறது. எந்தத் தொழில் நுட்ப உதவிகளும் அதிகமாக வந்திராத காலகட்டத்தில் நீங்கள் இருவரும் புரிந்த சாதனைகளின் ஒரு சதவீதம் கூட தற்போது வெளிவரும் படங்களால் செய்ய முடியவில்லை என்பதை உணரும் போது எந்த அளவிற்கு நீங்கள் இருவரும் தமிழ்த் திரையுலகை வாழ வைத்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. எல்லா விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளும் விரலசைவில் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ஏன் மாபெரும் வெற்றியை அல்ல, சாதாராண அடிப்படை லாபத்தைக் கூடக் காணமுடியாமல் தோற்கின்றன என்பது தான் புலனாகவில்லை.

மீண்டும் தமிழ்த் திரையுலகம் வீறுகொண்டு எழுந்து பல சாதனைகளைப் படைப்பதே உங்களுடைய பிறந்த நாளான இன்று (17.01.2010) உங்களுக்கு செய்யக் கூடிய பிறந்த நாள் மரியாதையாக இருக்கும்.
அந்நாள் விரைவில் வர தாங்களிருவரும் அருள் புரிய வேண்டும்

ராகவேந்திரன்

pammalar
18th January 2010, 03:02 AM
மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம்:
(டிசம்பர் 1984, ஜனவரி மற்றும் பிப்ரவரி 1985 பொம்மை இதழ்களிலிருந்து)

"அண்ணன் எம்.ஜி.ஆரைப் போல நானும், என்னைப் போல அண்ணன் எம்.ஜி.ஆரும் தாய்ப்பாசத்தில் அதிகமாகப் பற்று கொண்டவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள். தாயை தெய்வமாக மதிப்பவர்கள். அந்நாளிலும் இந்நாளிலும் நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், குறித்த நேரத்தில், சந்திக்க வேண்டிய இடத்தில், பேசுகின்ற பாஷையில், கண்களில் அன்பு நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து நிற்கின்ற அந்த நிலையை யாரால் விளக்க முடியும்?! இதை வெளியிலே கூற முடியுமா? சொன்னால் மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்?! படிப்புக்கு பலர் இலக்கணம் வகுத்திருப்பார்கள். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

ராஜாமணி அம்மையாருக்கு உடம்பு செளகரியமில்லை என்றால் தன் உடம்புக்கு வந்து விட்ட மாதிரி அண்ணன் இருப்பார். மூதாட்டி யாரைப் பார்த்தாலும் அண்ணன் தாய்ப்பாசத்தைப் பொழிவார். அந்த மூதாட்டியை அணைத்துக் கொள்வார். அரசியலுக்காக இதைக் கிண்டல் பண்ணலாம். ஆனால் அவருடைய மனதில் எங்கோ ஒரு மூலையில் தாய்ப்பாசம் இருப்பதனால் தானே இப்படிச் செய்கிறார். மற்றவர்களால் முடியுமா?!

திரையுலகில் அண்ணனின் பாணி வேறு. என்னுடைய வழி வேறு. நம்மாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தேன். தம்மாலும் நடிக்க முடியும் என்பதை அவரும் பல படங்களில் காண்பித்தார். எவ்வளவு தான் இருந்தாலும் அவர் அண்ணன், நான் தம்பி. அரசியலில் என்னை விட அவர் திறமைசாலி. நினைத்ததை செய்து காட்டியவர். நான் இன்றும் தொண்டனாகத் தான் இருக்கிறேன். அதனால் தான் அவர் அண்ணன், நான் தம்பி.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் நான் சென்று பார்ப்பேன். அவருக்கு கால் உடைந்த போது தொடர்ந்தாற் போல் சிரமங்கள் வந்து கொண்டு இருந்தன. அவருடைய மூத்த மனைவி இறந்து விட்டார். நான் அவருடன் இரண்டு தினங்கள் இருந்தேன். அவருடன் மயானத்திற்குப் போனேன். அங்கு அவருக்கு மயக்கம் வந்து விட்டது. அவரைக் காரில் வீட்டிற்கு அழைத்து வந்து நானே அவருக்கு குளிப்பாட்டி, தலை துவட்டி விட்டு 'ஒரு வாயாவது ஹார்லிக்ஸ் குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தி, அவர் ஹார்லிக்ஸ் குடித்த பிறகே நான் காபி குடித்தேன். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அண்ணன். நாம் அவருடன் பேசும் போது சென்டிமென்டைத் தொட்டு விட்டால் மற்றவற்றை அவர் மறந்து விடுவார். அப்போது அண்ணன் குழந்தை ஆகி விடுவார்.

அவர் மக்களுக்கு இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று கருதிய ஆண்டவன், நம் பிரார்த்தனைகளை ஏற்று அண்ணன் அவர்களை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடல் நலத்துடன் திருப்பி அனுப்பி இருக்கிறான். அவர் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால் இனிமேலாவது மற்றவர்களுக்காகப் பணியாற்றும் போது அண்ணன் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய இந்த சிறு வேண்டுகோளை அண்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டும்."

இன்று (17.1.2010) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 94வது பிறந்த நாள்.

போனஸ் நியூஸ்:
மக்கள் திலகத்தின் படங்களில் ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண் படங்கள் நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்தவை.

அதே போன்று, நடிகர் திலகத்தின் படங்களில் திரும்பிப் பார், ஆலயமணி, தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, மிருதங்க சக்கரவர்த்தி படங்கள் மக்கள் திலகத்திற்கு மிகவும் பிடித்தவை.

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
19th January 2010, 10:04 AM
http://movies.rediff.com/slide-show/2010/jan/15/slide-show-1-south-interview-with-ramkumar.htm

joe
19th January 2010, 03:50 PM
நடிகர் திலகம் - அஞ்சலி கவிதை

http://anbudanbuhari.blogspot.com/2010/01/youtube_18.html

pammalar
20th January 2010, 12:23 PM
நடிகர் திலகம் பற்றி முதல்வர் கலைஞர்:
(தினத்தந்தி, 20.1.2010, சென்னை)
"நான் ஒரு விழாவில் நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றிப் பேசும் போது சொன்னேன். விழாவிற்காக சொன்னதல்ல. சிவாஜியின் நண்பர்களுக்காகச் சொன்னதல்ல. அது எனக்காக நானே சொல்லிக் கொண்டது. சிவாஜியின் நடிப்பை இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் மறுபதிவாக வெளியிடும் போது சில நேரங்களில் - என்னுடைய துணைவியார் கூட இங்கே வந்திருக்கிறார், அவருக்கே தெரியும் - சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, அவருடைய வசன உச்சரிப்பைப் பார்த்து, அவர் கண்ணீர் விட்டு நடிக்கும் போதும், கனல் கக்க வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் அப்பராக நடித்தாலும் சரி, ஏழை சுப்பனாக நடித்தாலும் சரி, அந்த நடிப்பிலே காட்டுகின்ற உணர்வுகளைப் பார்க்கும் போதும் நான் எத்தனையோ முறை அந்தத் தொலைக்காட்சியைப் போய்த் தொட்டு முத்தமிட்டிருக்கிறேன். அதன் அடையாளம் தான் இன்றைக்கு சிவாஜியின் சிலை சென்னை கடற்கரையில் நிற்பது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது."

சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று (19.1.2010) நடைபெற்ற இசையுலக மகான் சீர்காழி கோவிந்தராஜனின் பவள விழாவில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில், நடிகர் திலகம் குறித்து அவர் குறிப்பிட்டது மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st January 2010, 10:01 AM
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 7)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)

ஒய்.ஜி. தொடர்ந்தார்:
"இனி அடுத்த பாடலுக்கு முன், இந்த இசை விழாவுக்காகவே வருகை புரிந்திருக்கும் நமது முக்கிய, சிறப்பு விருந்தினர் தி கிரேட் சிங்கர் நம்ம எஸ்.பி.பி. அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்."

கந்தர்வக்குரலோன் எஸ்.பி.பி. மேடைக்கு நடந்து வந்தார். கரவொலி விண்ணைப் பிளந்தது. 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பாட்டுலக ராஜபார்ட். வெயிட்டான குரல் கொண்டவர். ஹெட் வெயிட் இல்லாதவர். 'என்றும் பணியுமாம் பெருமை' என்பதற்கிணஙக, பணிவிலும், அடக்கத்திலும் நமது நடிகர் திலகத்தை போன்றவர் நம் எஸ்.பி.பி. மைக் பிடித்து பேசத் தொடங்கினார்.
"நல்ல நெஞ்சங்களே, வணக்கம்! இந்த நிகழ்ச்சில பாட வேண்டியது என்னோட கடமை. இன்னிக்கி இதே தேதில வேற ஒரு நிகழ்ச்சிக்கும் போக வேண்டியதா இருந்தது. அதுனால இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாம போயிடுமோ அப்படின்னு ரொம்ப கவலயாயிருந்தது. ஆனா அந்த இன்னொரு நிகழ்ச்சி நல்ல வேளையா கேன்சல் ஆயிடுத்து. சிவாஜி சாரே, என் விழால வந்து நீ பாடணும் , அப்படிங்கறத்துக்காக அவரே அந்த நிகழ்ச்சியை கேன்சல் பண்ணிட்டார்னு நான் நெனைக்கறேன். அவரோட விழால பாடறது என்னோட பாக்கியம். அதுவும் உங்க எல்லார் முன்னாடி பாடறத நான் ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் நெனக்கறேன். இங்கே இதுக்கு முன்னாடி பாடினவங்க எல்லாருமே ரொம்ப பிரமாதமா பாடினாங்க. எவ்ளோ யங் டலண்ட்ஸ். எத்தனை அழகா, எவ்ளோ அருமையா, ஸ்ருதி சுத்தமா ரசிச்சு இன்வால்மென்ட்டோட பாடறாங்க. இதெல்லாம் பாக்கறதுக்கும், கேக்கறதுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. காட் ப்ளஸ் தெம். நடிகர் திலகம் சிவாஜி சார் கடவுளோட அவதாரம், நடிப்பு தெய்வம், பார்ன் ஆர்டிஸ்ட். பிறவிக்கலைஞர்னா அவர்தான். அவருக்கு நான் பின்னணி பாடின முதல் பாடலதான் இன்னிக்கி இந்த நிகழ்ச்சில என்னோட முதல் பாடலா நான் பாடப் போறேன். அது என்ன பாட்டுன்னு உங்களுக்கே தெரியும். அந்தப் பாட்ட பாடறதுக்கு முன்னாடி, அந்தப் பாடலப் பத்தி உங்ககிட்ட சொல்லியாகணும். நம்ம விசு சார் கம்போஸ் பண்ணின டியுன்ல அந்தப் பாடலோட ரெக்கார்டிங் நடந்துட்டிருக்கு. அப்ப அங்க ஒத்தர் வந்து சொல்றார். பாடல் ரெக்கார்டிங்க கேக்க சிவாஜி சார் வரார் அப்படின்னு வந்தவர் சொல்றார். அது வரைக்கும் நார்மலா பாடிண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போச்சு. சிவாஜி சாரும் வந்துட்டார். பாட்டு ரெக்கார்டிங் நடந்துட்டேயிருக்கு. ஆனா சிவாஜி சார பாத்த பயத்துல என்னால நார்மலா பாட முடியல. எம்.எஸ்.வி. சார் வேற உனக்கு என்ன ஆச்சு அப்படின்னு என்ன கேக்க ஆரம்பிச்சுட்டார்.அத கவனிச்ச சிவாஜி சார் என் பக்கத்துல வந்தார். 'இதப்பாரு, எனக்காக உன் குரல மாத்தியோ இல்லன்னா அட்ஜஸ்ட் பண்ணியோ நீ பாட வேண்டாம், நீ எப்பவும் பாடறா மாதிரி உன்னோட குரல்லயே நார்மலா நல்லா தைரியமா பாடு. நீ பாடறதுக்கு ஏத்தா மாதிரி நான் அட்ஜஸ்ட் பண்ணி ஆக்ட் பண்ணிக்கறேன்' அப்படின்னு எனக்கு தைரியம் சொல்லிட்டு சிவாஜி சார் கிளம்பி போயிட்டார். அவர் குடுத்த தைரியத்துல அந்தப் பாட்டு நல்ல படியா வந்துது. இப்ப உங்களுக்காக அந்தப் பாடல்."

சுமதி என் சுந்தரியிலிருந்து பொட்டு வைத்த முகமோவின் ஆரம்ப பின்னணி இசை, அருவியெனத் துள்ளி வர, "பொட்டு வைத்த முகமோ" என்று பாடத் தொடங்கினார் பாடும் நிலா பாலு. 40 வயதுகள் நிரம்பிய பாடலை, மணி விழா கண்ட எஸ்.பி.பி., அன்று பாடிய் அதே இளமைக் கொஞ்சலுடன், சிலிர்க்கும் விறுவிறுப்புடன் இன்றும் பாடினார். என்றும் இளமை என்றால் அது எஸ்.பி.பி.யின் குரலும், தோற்றமும் தான். அவருக்கும், அவரது குரலுக்கும் விண்ணுலக ஆண்டவரும், நடிப்புலக ஆண்டவரும் தீர்கக ஆயுளைக் கொடுத்து, இசையுலகுக்கு இன்று போல் என்றும் அவர் சேவை செய்ய அருள் புரிய வேண்டும். வசந்தாவின் ஹம்மிங்கை, வசந்த ருதுவென வகையாக வார்த்துக் கொடுத்தார், சைந்தவி. மொத்தத்தில், பாடல் மிக அபாரமாக பாடப்பட்டது. ஆடியன்சின் அப்ளாசுக்கு கேட்கவும் வேண்டுமோ!

தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

sathya_1979
21st January 2010, 10:17 PM
இன்று ஆனன்த விகடனில் சிவாஜி 25 - நடிகர் திலகம் பற்றி 25 சுவையான செய்திகள்

RC
22nd January 2010, 02:52 AM
சிவாஜி 25

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

rangan_08
22nd January 2010, 07:08 PM
[tscii:22cb7a4f9f]Last week saw “ Gnana Oli “ with my f-in-law at his house. The moment I told him that I had bought the DVD, he got excited. On the same day, he had to attend a function and told me, “ poitu seekiram vandhiren – vandhu paakalam “. Finally he came and we sat down to watch the film by around 9.30 p.m.

Both of us are watching the film after a long gap and we thoroughly enjoyed it. Another film where you can say that NT stands as a pillar in the film. What a performance! A normal Anthony in the beginning, then next appearance with one eye blind-folded, and finally, millionaire Arun – both MASS & CLASS :clap: . Lovely & evergreen songs are another value addition.

My FIL told me to forward the Srikanth, VKR, Nagesh scenes and was keen in watching only NT scenes :) . He was waiting for his favourite “ I mean the silver tumbler “ scene and he used to say that whenever we discuss NT. He got so excited that he almost clapped when NT removes his gloves. For me, it was great time watching the film with another die-hard fan. So many wonderful scenes and I would like to mention 2 scenes in particular.

1. Sundarrajan brings NT in parole to meet the priest. First he goes into the room and briefs him about the situation while NT will be waiting near the threshold. Now SR goes out and the priest will call NT to come inside. The distance between NT and the priest would be say about 10 feet and the way in which he moves towards the priest – in pain, in humiliation, in grief, waiting to let down the tears, is just excellent :notworthy: :clap: .

2. NT as Arun, goes to VKR’s house to meet his daughter to give a blank cheque. SR repeatedly refers the name Anthony and this gets registered in NT’s mind and eventually signs the cheque as Anthony. Nicely analysed piece of writing, executed and enacted surpassingly.

Everyone had gone to sleep by the time and we were the only guys watching the film :D . The film got over by around 12 midnight. The next day, both of us woke up late and rushed up to office.
[/tscii:22cb7a4f9f]

Murali Srinivas
22nd January 2010, 11:34 PM
Mohan,

Nice and interesting write up about Gnana Oli. The more you watch keenly, more nuances you would find. After I read your post, went back to the previous pages and read Gnana Oli review recently republished by Vikatan and reproduced here. And again read your post. Call it as a coincidence, tonight before coming to hub was discussing something about Gnana Oli and some incidents that happened during the release period of the movie [March 1972]. Thanks again,

Regards

app_engine
22nd January 2010, 11:51 PM
rangan_08, you and me have one thing in common (i.e. f-i-l who adores Shivaji).

மற்றபடி அதிகம் பேசாதவர், சிவாஜி பற்றி மட்டும் மணிக்கணக்காக வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருப்பார், இரவு நெடுநேரம் விழித்திருந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பார் :-)

tamizharasan
23rd January 2010, 12:44 AM
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!


Great. What an actor. :clap: :clap: :clap:

Murali Srinivas
24th January 2010, 01:05 AM
திருடன் -Part I

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

வெளியான நாள்: 10.10.1969

கதை ஆரம்பிப்பதே சிறையிலிருந்துதான். தண்டனை கைதி ராஜு சிறையிலிருந்து விடுதலையாகிறான். அவனை கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ரகுவும் அங்கே இருக்கிறார். அவர் கண்ணோட்டத்தில் எந்த குற்றவாளியும் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்வார்கள் என்பதை ஆணித்தரமாக நம்புகிறார். அவரது கருத்தை மறுக்கும் ஜெயிலரோடும் ராஜுவோடும் வாதத்தில் ஈடுபடுகிறார். அவரோடு சவால் விட்டு வாழ்ந்து காட்டுவதாக சொல்லி விட்டு ராஜு செல்கிறான். வெளியே அவனை வரவேற்க முன்பு அவன் சேர்ந்து இருந்த கொள்ளை கூட்டம் காத்திருக்கிறது.

அவர்களோடு செல்ல மறுக்கும் ராஜுவை வற்புறுத்தி அழைத்து செல்கிறார்கள். அந்த கூட்ட தலைவன் ஜெகன்னாத், ராஜுவை மீண்டும் தங்கள் பணிகளுக்கு அழைக்க ராஜு மறுத்து விட்டு வெளியேறுகிறான். நீ மீண்டும் இங்கு வருவாய் என சவால் விடும் ஜெகன்னாத்திடம் வரவே மாட்டேன் என சொல்லி விட்டு ராஜு வெளியேறுகிறான்.

இந்நிலையில் ஒரு நாள் ஒரு பெட்ரோல் பங்கில் நின்று போன ஒரு காரை ரிப்பேர் செய்து கொடுக்கும் ராஜுவை அந்த முதலாளிக்கு பிடித்துப்போக அவனக்கு டிரைவிங் தெரியும் என்று தெரிந்து தனது லாரியின் டிரைவராக வேலை கொடுக்கிறார். லாரியில் லோட் ஏற்றி வரும்போது உள்ளே ஒரு பையன் ஒளிந்துக் கொண்டிருப்பதை கண்டுப் பிடிக்கிறார்கள். சிறிது நேரத்தில் அது பையன் அல்ல, ஆண் வேடம் அணிந்த பெண் என தெரிகிறது. அந்த பெண்ணை காணவில்லை என பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்க்கும் ராஜு அவளை அவள் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே தன் பழைய கூட்டத்தின் ஆள்தான் இந்த பெண்ணின் மாமன் என தெரிந்துக் கொள்ளும் ராஜு அவளை ஒப்படைக்காமல் தன்னுடனே அழைத்து வருகிறான். அந்த பெண் ராதா அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, ராஜு மறுக்கிறான். தான் யார் என்பதும் தன்னுடைய கடந்த காலம் பற்றி தெரிந்தால் தன்னை வெறுத்து விடுவாய் எனவும் சொல்கிறான். அவள் வற்புறுத்தவே தன் கதையை சொல்ல துவங்குகிறான்.

சின்ன வயது ராஜு. தந்தை இல்லாத அவனை வளர்க்க தாய் பெரிதும் துன்பப்படுகிறாள். ஒரு நாள் அவளின் உடல் நிலை மோசமாகி தெருவில் விழுந்து கிடக்க போவோர் வருவோரிடமெல்லாம் உதவி கேட்கும் ராஜு. ஆனால் யாரும் அவனை சட்டை செய்யவில்லை. தாய் இறந்து போகிறாள்.

பசியால் வாடும் ராஜுவிற்கு சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகிறான். அந்த நேரம் ஒரு கோரமான உருவத்தை உடைய ஒருவன் ராஜுவை நெருங்க ராஜு பயந்து ஓடுகிறான். ஆனால் அந்த குரூபியோ ராஜுவிற்கு சாப்பாடு வாங்கி தருகிறான். அதற்கு பிரதியுபகாரமாக இரவுகளில் வீடுகளில் புகுந்து தாழிட்டிருக்கும் கதவுகளை திறந்து கொடுத்து குரூபிக்கு கொள்ளையடிக்க உதவி செய்யும் ராஜு இதையே தொழிலாக செய்ய தொடங்குகிறான். வளர்ந்து வாலிபனாகும் போது ஜெகன்னாத்தின் கூட்டத்தில் ராஜுவிற்கு நம்பர் 1 ஸ்தானம். ஜெகநாத் சொல்லும் எந்த வேலையும் "டன்" என்று முடிக்கும் ராஜுவிடம் ஒரு சமயம் ஒரு குழந்தையை கடத்தும் வேலையை ஜெகநாத் ஒப்படைக்க ராஜு தயங்குகிறான். தன் தாயும் தன் சிறு வயது அனுபவமும் அதற்கு காரணம். ஆனால் ஜெகநாத் வற்புறுத்தி அவனை அனுப்பி வைக்கிறான்.

குழந்தையை கடத்தும் போது தாய் பார்த்து விட்டு சத்தம் போட ராஜு குழந்தையை மீண்டும் தாயிடம் கொண்டு சேர்க்கும் போது அந்த தாய் இறந்து போகிறாள். அதற்குள் வேலைக்காரர்கள் போன் செய்ய போலீஸ் வந்து விடுகிறது. ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வரும் இடத்தில்தான் கதை ஆரம்பித்திருந்தது. இதை கேட்டவுடன் ராதாவிற்கு ராஜுவை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அவளின் அன்பு தொல்லைக்கு ராஜுவும் இறுதியில் அடி பணிகிறான். திருமணம் நடக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.

இப்போது ராஜு சொந்தமாக ஒரு லாரி ஓட்ட வேண்டும் என நினைக்கிறான். தனக்கு தெரிந்த ஒரு முதலாளியிடம் கடன் வாங்கி லாரி வாங்குகிறான். இன்ஸ்பெக்டர் ரகு அவனை இப்போதும் சந்தேக கண்ணோட்டத்திலேயே பின் தொடர்கிறார். இதற்கிடையில் ராஜு இல்லாமல் ஜெகநாத்திற்கு எந்த வேலையும் சரியாக நடப்பதில்லை. எப்படியாவது மீண்டும் ராஜுவை தன் வழிக்குகொண்டு வர முயற்சிக்கிறான். ஒரு பார்ட்டியில் குடும்பத்துடன் ராஜு கலந்து கொள்ள அங்கே ஒரு ஹான்ட் bag-ஐ தன் ஆட்கள் மூலமாக திருடி விட்டு பழியை ராஜு மேல் போட முயற்சிக்கிறான். ராஜு வீட்டிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர் அவனை லேசாக விசாரிக்க ராஜு கோபப்படுகிறான். ராஜுவை காண வீட்டிற்கே நேரில் வரும் ஜெகனாத்தை ராஜு திருப்பி அனுப்பி விடுகிறான். எப்படியாவது ராஜுவை தன் இடத்திற்கு வரவழைக்க ஜெகநாத் திட்டமிடுகிறான்.

ராஜு கடன் வாங்கியிருக்கும் முதலாளியிடம் செல்லும் ஜெகநாத் அவரை மிரட்டி ராஜுவிடம் கடனை திருப்பி கேட்க சொல்கிறான். ராஜுவின் வீட்டிற்கு செல்லும் முதலாளி கடனை திருப்பிக் கேட்க அங்கே ஏற்படும் வாக்குவாதத்தில் ராஜுவின் பழைய வாழ்க்கையைப் பற்றி முதலாளி குத்திக் காட்ட கோபமுறும் ராஜு அவர் கழுத்தைப் பிடிக்க அந்நேரம் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ராஜுவை தடுக்கிறார். கடனை திருப்பிக் கட்டுவதற்கு சிறிது கால அவகாசம் வாங்கிக் கொடுக்கிறார்.

இதை மறைந்திருந்துப் பார்க்கும் ஜெகநாத் தன் ஆளை விட்டு லாரியில் மாட்டியிருக்கும் ராஜுவின் கோட்டை எடுத்து வரச் செய்கிறான். அந்த கோட்டை தன் அடியாளுக்கு அணிவித்து முதலாளி வீட்டிற்கு செல்ல சொல்கிறான். அந்த அடியாளால் முதலாளி கொல்லப்படுகிறார். காப்பாற்ற செல்லும் வேலைக்காரன் கையில் கோட் மட்டுமே சிக்குகிறது.

இந்த சம்பவம் நடக்கும் போது வெளியூர் சென்றிருக்கும் ராஜுவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் அழைத்து விசாரிக்கிறது. கொலையாளியை நேரில் கண்ட வேலைக்காரனை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதில் ராஜுவையும் நிறுத்துகிறார். ஆனால் வேலைக்காரன் கொலையாளி ராஜு அல்ல என்று சொல்லிவிட ராஜு விடுவிக்கப்படுகிறான். தங்கள் நினைத்தது நடக்காததால் கோபமுறும் ஜெகநாத், ராஜுவின் லாரியை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் ராஜு மீண்டும் டிரைவர் வேலைக்கு செல்கிறான்.

ஆனால் வெளியே வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. கிடைக்கும் ஒரு சில வேலைகளும் ராஜுவின் பழைய கதை தெரிந்ததும் போய் விடுகிறது. மனம் வெறுத்துப்போகும் ராஜு நல்லவனாக இருந்து எந்த உபயோகமும் இல்லை ஆகவே மீண்டும் தன் பழைய தொழிலுக்கே செல்லப் போவதாக உணர்ச்சிவசப்பட உடல் நலிவுறுகிறான். வருமானத்திற்காக ராஜு மனைவி ராதா ஹோட்டலில் வேலைக்கு செல்கிறாள். அவள் இல்லாத நேரம் வீட்டிற்கு வரும் ஜெகநாத் அவன் மனைவியை ஹோட்டலில் ஆட விட்டு ராஜு உட்கார்ந்து சாப்பிடுவதாக கிண்டல் செய்ய இந்த விஷயம் இப்போதுதான் தெரிய வரும் ராஜு கோபத்தின் உச்சிக்கு சென்று விடுகிறான். ராதாவை ஹோட்டலிருந்து இழுத்து வந்து வீட்டில் விட்டு விட்டு, நேரே இன்ஸ்பெக்டரிடம் செல்லும் ராஜு, தான் மீண்டும் தன் பழைய தொழிலுக்கே செல்லப் போவதாகவும் அதற்கு காரணம் இன்ஸ்பெக்டரும் தன் பழைய கூட்டாளிகளும்தான் என குற்றம் சாட்டுகிறான். இன்ஸ்பெக்டர் கடமைக்காக தன் சொந்த மகனை பறிக்கொடுத்த தன்னுடைய பழைய கதையைக் கூறி தான் ஏன் இப்படி ஆட்களை வெறுக்கும்படி ஆனேன் என்பதை சொல்கிறார். பழைய கூட்டாளிகளை பிடிப்பதற்கு ராஜு உதவ வேண்டும் என சொல்கிறார்.

அவர் சொல்படியே மீண்டும் ஜெகநாத்தின் கூட்டத்தில் சேரும் ராஜுவிடம் ஒரு வங்கி கொள்ளையை நடத்தும்படி ஜெகநாத் சொல்ல அதை இன்ஸ்பெக்டரிடம் ராஜு போனில் சொல்வதை கேட்டு விடும் ஜெகநாத் மறுநாள் திட்டத்தையே மாற்றி விடுகிறான். ரயிலில் வரும் ராணுவ அதிகாரியிடம் உள்ள ரகசிய ஆவணத்தை திருட வேண்டும் என்கிறான். ஆவணத்தை திருடி விட்டு அவர்களிடம் தப்பித்து செல்லும் ராஜுவை ஜெகநாத் கும்பல் ஒரு பக்கம் துரத்த, தன்னை ஏமாற்றிவிட்டான் என்று இன்ஸ்பெக்டரும் போலிஸும் துரத்துகின்றனர்.

இந்நிலையில் ராஜுவின் குழந்தையை ஜெகநாத் கடத்தி வைத்துக் கொண்டு ராஜுவின் கையில் இருக்கும் ஆவணத்தை கொண்டு வரச் சொல்கிறான் குழந்தையை காப்பாற்ற ஆவணத்தோடு செல்லும் ராஜுவை எதிர்பார்த்து ஜெகநாத் மற்றும் அடியாட்கள் ஒரு புறம் போலீஸ் மறுபுறம் நிற்க கிளைமாக்ஸ்.

அனைத்தும் நலமாக முடிய வணக்கம்.

அன்புடன்

Murali Srinivas
24th January 2010, 01:19 AM
திருடன் - Part II

தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.

என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்].

இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.

இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.

கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.

தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.

கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும்
தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.

1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.

ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.

2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.

சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள். [பாடலின் இசை பின்னணி, பயன்படுத்தப்பட்ட கருவிகள் பற்றி சாரதா சொல்வார்].

3.என் ஆசை என்னோடு- சுசீலா.

படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.

பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.

அன்புடன்

Murali Srinivas
24th January 2010, 01:26 AM
திருடன் - Part III

தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம்.

பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.

இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அந்த பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.

நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continous House full Showsவிளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.

ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம் படங்களின் ஓட்டம் பாதிப்பு.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.

கவரிமான் வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை வெளியிட்டார்.

வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.

சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.

இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜா மரியாதை 11 வெளியான நாட்களில் வெளியானது.

இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.

ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள். மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.

ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன் தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/- .

இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.

மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.

அன்புடன்

saradhaa_sn
24th January 2010, 08:01 PM
டியர் முரளி,
'திருடன்' திரைப்படத்திறனாய்வு வழக்கம்போல மிக அருமையாக அமைந்தது. கோட்டை மதில்மேலே பாடலில் யுவராஜாவாக வரும் காட்சிதான், மறைந்த சசிகுமார் திரையில் தோன்றிய முதல் காட்சி. அவரிடம் நடிகர்திலகம் பேசும் முதல் வசனம் 'கங்கிராஜுலேஷன்ஸ்' (என்ன ஒரு பொருத்தம்).

சிலமாதங்களுக்கு முன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, பார்த்துவிட்டு சின்ன கட்டுரை எழுதியிருந்தேன். அதைப்படித்துவிட்டு, படம் பார்த்து வெகுநாளாகிவிட்டது என்று சொல்லியிருந்தீர்கள். இப்படத்தில் நடிகர்திலகத்தின் முகபாவங்கள் மிக அருமை. (ஒவ்வொரு படத்திலும் அவர் அற்புதமாகத்தான் செய்திருக்கிறார். சிலர்தான் கடிவாளம் கட்டிய குதிரைகள் போல, அவர் நடித்தவற்றுள் ஒரு பத்து படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றையே சிலாகித்துக்கொண்டிருப்பர்). குறிப்பாக கடைசி அண்ணாநகர் டவர் சண்டைக்கு முன், குழந்தையைக் காப்பாற்றச்செல்லும் அவர், விஜயாவைப்பார்த்து' எதுக்கும் எனக்கு இப்பவே வாய்க்கரிசி போட்டு அனுப்பிடு' என்று சொல்லும் காட்சியில் அவர் முகபாவத்தைக் கவனித்தீர்களா?. என்ன ஒரு அற்புதம்..??.

நடிகர்திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பாதிப்பில் பாலாஜியைவிட பெரிய குற்றவாளி ஒருத்தர் உண்டு. வேறு யார்?. நம்ம அண்ணன் வி.சி.சண்முகம் அவர்கள்தான்.

pammalar
25th January 2010, 02:51 AM
எல்லோரது இதயங்களையும் திருடிய "திருடன்", ரசிக சாதனையாளரான முரளி சாரின் இதயத்தை திருடாமல் இருக்க முடியுமா?! அப்படித் திருடியதால் தானே இன்று நமக்கு தீட்சண்யமான "திருடன்" திறனாய்வு திறம்பட கிடைத்துள்ளது.

1,2,3 பாகங்கள், ஒவ்வொன்றும் ஏ-ஒன்.

முரளி சாரின் திரைப்படத் திறனாய்வுகளை / விரிவான விமர்சனங்களை இத்திரியில் உள்ள அனைவரையும் போலவே நானும், ஆரம்பத்திலிருந்தே வாசித்து, ரசித்து வருகிறேன். அத்தகைய ரசிப்பின் அடிப்படையில், அடியேன் அவருக்கு 'திறனாய்வுத் திலகம்' என்றும், 'விமர்சன வித்தகர்' என்றும், இரு இனிய பட்டங்களை நல்வாழ்த்துக்களோடு வழங்குகின்றேன். இந்த எளியேன் அளித்த இரு பட்டங்களையும் முரளி சார் அவர்கள் அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யாம் முன்மொழிந்த பட்டங்களை, இங்குள்ள அனைவருமே வழிமொழிவார்கள் என்பது திண்ணம்.

திறனாய்வுத் திலகம் முரளி சார் வாழ்க! வாழ்க!

விமர்சன வித்தகர் முரளி சார் வாழ்க! வாழ்க!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
25th January 2010, 03:38 AM
இப்படத்தில் நடிகர்திலகத்தின் முகபாவங்கள் மிக அருமை. (ஒவ்வொரு படத்திலும் அவர் அற்புதமாகத்தான் செய்திருக்கிறார். சிலர்தான் கடிவாளம் கட்டிய குதிரைகள் போல, அவர் நடித்தவற்றுள் ஒரு பத்து படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றையே சிலாகித்துக்கொண்டிருப்பர்).

நூற்றுக்கு நூறு உண்மை. இந்த மேதாவிகள் (கடிவாளம் கட்டிய குதிரைகள்) இயற்கை நடிப்பை ரசிக்கும் அதிமேதாவிகளாயிற்றே! நடிப்பு என்றாலே செயற்கை தான் என்பதையும் அறியாத அதிஅதிமேதாவிகள் இவர்கள்!

இந்த மேதாவிக் குதிரைகள், முதல் மரியாதை, படிக்காதவன், தேவர் மகன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பாசமலர், பராசக்தி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு குறிப்பிட்ட 10 படங்களைப் பற்றி மட்டுமே பேசுவர். (இந்த 10 படங்கள் / இது போன்ற 10 படங்கள், நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த தலைசிறந்த படங்கள் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.)

இக்குதிரைகளின் கண்களுக்கு, அந்த நாள், திரும்பிப் பார்,தூக்கு தூக்கி, முதல் தேதி, கள்வனின் காதலி, ராஜா ராணி, நான் பெற்ற செல்வம், அன்னையின் ஆணை, வணங்காமுடி, சபாஷ் மீனா இன்னும் இது போன்ற பற்பல படங்கள் / எண்ணிலடங்கா படங்கள் தெரியவே தெரியாது. பாவம், அப்பேர்ப்பட்ட கடிவாளம்!

நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிக்கத் தெரியாதவர்கள் ஞானசூன்யங்கள் என்று சோ கூறிய கூற்றைத் தான், இத்தகைய மேதாவிகளுக்கு நாம் பதிலாகத் தர முடியும்.

வருத்தத்துடன்,
பம்மலார்.

saradhaa_sn
25th January 2010, 10:32 AM
முரளி சாரின் திரைப்படத் திறனாய்வுகளை / விரிவான விமர்சனங்களை இத்திரியில் உள்ள அனைவரையும் போலவே நானும், ஆரம்பத்திலிருந்தே வாசித்து, ரசித்து வருகிறேன். அத்தகைய ரசிப்பின் அடிப்படையில், அடியேன் அவருக்கு 'திறனாய்வுத் திலகம்' என்றும், 'விமர்சன வித்தகர்' என்றும், இரு இனிய பட்டங்களை நல்வாழ்த்துக்களோடு வழங்குகின்றேன். இந்த எளியேன் அளித்த இரு பட்டங்களையும் முரளி சார் அவர்கள் அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யாம் முன்மொழிந்த பட்டங்களை, இங்குள்ள அனைவருமே வழிமொழிவார்கள் என்பது திண்ணம்.
டியர் பம்மலார்,

பொருத்தமான ஒருவருக்கு பொருத்தமான இரு பட்டங்கள் அளித்துள்ளீர்கள்.

முதல் ஆளாக நான் அதை வழிமொழிகிறேன்.

saradhaa_sn
25th January 2010, 11:50 AM
நூற்றுக்கு நூறு உண்மை. இந்த மேதாவிகள் (கடிவாளம் கட்டிய குதிரைகள்) இயற்கை நடிப்பை ரசிக்கும் அதிமேதாவிகளாயிற்றே! நடிப்பு என்றாலே செயற்கை தான் என்பதையும் அறியாத அதிஅதிமேதாவிகள் இவர்கள்!

இந்த மேதாவிக் குதிரைகள், முதல் மரியாதை, படிக்காதவன், தேவர் மகன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பாசமலர், பராசக்தி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு குறிப்பிட்ட 10 படங்களைப் பற்றி மட்டுமே பேசுவர். பற்பல படங்கள் / எண்ணிலடங்கா படங்கள் தெரியவே தெரியாது. பாவம், அப்பேர்ப்பட்ட கடிவாளம்!

வருத்தத்துடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,

முதலில் என் உணர்வுகளைப்புரிந்துகொண்டமைக்கு நன்றி. எங்கே எதிர்ப்புக்கணைகள் வருமோ என்று எண்ணினேன். மிகத்தகுதியான ஒருவரிடமிருந்து முதல் ஆதரவுக்கரம் நீண்டிருக்கிறது. கட்டபொம்மன், தில்லானா, பாசமலர், தெய்வமகன், முதல் மரியாதை என்று ஒரு பத்து படங்களை மட்டும் வைத்துக்கொண்டு செக்கு மாடு போல அவற்றையே சுற்றிவருவதனால், அவர் மற்ற படங்களில் ஒன்றும் செய்யவில்லையோ என்பதுபோன்ற எண்ணம் மற்றவர்களுக்கு வரக்கூடுமோ?. (பெருமைக்குச்சொல்லவில்லை. இத்திரியின் முதல் பக்கத்திலுள்ள அட்டவணையில் உள்ள எனது ஆய்வுகளில் நான் ஒரு 'கடிவாளப்படத்தைக்'கூட தொட்டிருக்கவில்லை. என்னைப்போல் ஒருவனிலும், எங்க மாமாவிலும்கூட அவர் நடிப்பைக் கண்டு வியந்தவள் நான்). அந்த வகையில் சகோதரர் முரளி அவர்கள், தற்போது 'திருடன்' படம் பற்றி ஆய்ந்திருப்பது மகிழ்வைத்தருகிறது.

அவரைப்பற்றிப்பேச தொலைக்காட்சி கேமரா முன் உட்காரும் வி.ஐ.பி.க்களைப்பற்றி ஒரு வார்த்தை. இவர்கள் திரைப்படங்களில்தான் அரைத்தமாவை அரைக்கிறார்கள் என்பதில்லை, தங்கள் பேட்டியிலும்தான். (இந்த எனது ஆதங்கத்தை நான் இங்கு ஐம்பது பக்கத்துக்கு ஒருமுறை சொல்லி வருவதால், இந்த அரைத்தமாவு பட்டம் எனக்கும் தரப்படக்கூடும்).

முதலில் கட்டபொம்மன் படத்தைப்பற்றி ஆரம்பிப்பார்கள். என்னுடைய பதிமூன்று வயது மகன் சொல்வான், 'அம்மா இப்போ வானம் பொழிகிறது பூமி விளைகிறது வசனம் வரப்போகுது'. சொல்லி வைத்தாற்போல அதைத்தான் போடுவார்கள். (நான் காலம் காலமாக பலமுறை இங்கே சொல்லியிருக்கும் 'நீலவானம்' படத்தின் நகைத்திருட்டு காட்சி எந்த ஒரு வி.ஐ.பி.க்காவது தெரியுமா?).

அடுத்து பராசக்தி தமிழ்த்திரையிலேயே ஒரு திருப்புமுனை என்று துவங்குவார்கள். உடனே என் பையன் 'இப்போ வரப்போகும் காட்சி என்ன தெரியுமா? 'இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது' என்ற வசனம்தான் என்பான். அவன் சொல்லி வாய்மூடும் முன் அதுதான் திரையில் வரும். ஒரு பதிமூன்று வயது சிறுவனெல்லாம் தீர்க்கதரிசியாக மாறும் அளவுக்கா உங்கள் பேட்டிகள் அரைவேக்காட்டுத்தனமாக அமைய வேண்டும்?. (தங்கச்சுரங்கத்தில் 'சர்ச்' காட்சியில் கைகளிலும் கால்களிலும் துப்பாக்கி சூடு வாங்கி துடிப்பாரே அந்தக்காட்சி பற்றியெல்லாம் இந்த 'ஸோகால்ட்' வி.ஐ.பி.க்களுக்குத் தெரியுமா?)

'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' காட்சியையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்போரே, 'ராஜா' படத்தில் தன் அம்மாவை வில்லன் அடிக்கும்போது, கைச்சீப்ப்பை வாயில் கடித்துக்கொண்டு உணர்ச்சிகளை மறைக்க முடியாமலே சிரிப்பாரே, அப்படி ஒரு காட்சி வந்திருக்கிறது என்பதாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?..... போங்கப்பா.

ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, வி.ஐ.பி.க்களே.... அந்த மனுஷன் 300 படங்களில் நடித்திருக்கிறார் ஐயா. முடிந்தால் உங்கள் கடிவாளங்களைக்கழற்றி வைத்து விட்டு பார்வையை அகலப்படுத்துங்கள். முடியலையா?. ஒதுங்கிக்கொண்டு, அவரது நடிப்பை அணு அணுவாக சுவாசிக்கக்கூடிய ரசிகர்களை அந்தக்கேமராக்கள் முன் நிறுத்துங்கள். அவர்களது விவரிப்பில், 'இப்படியெல்லாம் கூட அவரது நடிப்பு பல்வேறு படங்களில் வெளிப்பட்டிருக்கிறதா?' என்று நீங்கள் வெட்கி, நாணித்தலைகுனியும் வண்ணம், ரசிகர்கள் அறுத்துக்கிழிப்பார்கள்.

Murali Srinivas
26th January 2010, 11:51 AM
அடியேன் அவருக்கு 'திறனாய்வுத் திலகம்' என்றும், 'விமர்சன வித்தகர்' என்றும், இரு இனிய பட்டங்களை நல்வாழ்த்துக்களோடு வழங்குகின்றேன்.
பாசத்துடன்,
பம்மலார்.

சுவாமி,

தங்கள் அன்புக்கு நன்றி. ஆனால்?




இன்றைக்கு என்ன 'பம்மலார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா'வா?. இப்போதுதான் நடிகர்திலகத்தின் திரியில் தாங்கள் சகோதரர் முரளி அவர்களுக்கு, மிகத்தகுதியாக வழங்கியிருக்கும் இரண்டு பட்டங்களுக்கும் பாராட்டு தெரிவித்துவிட்டு இங்கு வந்து பார்த்தால், எனக்கும் ஒரு பட்டம் காத்திருக்கிறது. நமக்குள் பட்டங்கள் வழங்கிக்கொண்டு, நம்மை அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு கொண்டு செல்ல வேண்டுமா?.

சாரதாவின் கருத்துதான் என் கருத்தும். தவறாக நினைக்காதீர்கள். நாம் எப்பவும் இப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். பட்டங்கள் எல்லாம் எதற்கு?

சாரதா,

குறிப்பிட்ட படங்களைப் பற்றி மட்டுமே எழுதாமல் பலருக்கும் தெரியாத படங்களின் சிறப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணத்தினால்தான் இங்கே அது போன்ற படங்களின் விமர்சனங்கள் எழுதுகிறேன். நீங்கள் சொன்னது போல் லிஸ்ட் பார்த்தாலே தெரியும். நடுநடுவே கை கொடுத்த தெய்வங்களும் இடம் பெறுவது அதை ரசிக்கக் கூடிய பலரும் இங்கே இருப்பதனால்தான்.

அன்புடன்

joe
26th January 2010, 12:19 PM
கை கொடுத்த தெய்வங்களும் இடம் பெறுவது அதை ரசிக்கக் கூடிய பலரும் இங்கே இருப்பதனால்தான்.


:D

mr_karthik
26th January 2010, 12:55 PM
ஒரே நேரத்தில் இரட்டை ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானைப்போல, இரண்டு பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கும் முரளி சார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். பம்மலாருக்கு நன்றிகள்.

முரளி சார்,
சாரதாவும் பம்மலாரும் சொல்லியிருக்கும் கருத்துக்கள் உங்களுக்குப்பொருந்தாது. ஏனென்றால் நீங்களும் எப்போதுமே அபூர்வப்படங்களின் திறனாய்வுகளோடுதான் வருவீர்கள், கைகொடுத்த தெய்வமும் அப்படிப்பட்ட அபூர்வப்படம்தான். அவர்கள் குறிப்பிடுவது, தொலைக்காட்சிகளில் வரும் வி.ஐ.பிக்களின் அரைவேக்காட்டுத்தனம் பற்றி. அந்த 'பத்துபட செக்குமாடு' களின் (பட்டம் ரொம்ப நல்லாயிருக்குல்ல) பட்டியலில் தவறாமல் இடம் பெறும் இன்னொரு காட்சி, திருவிளையாடலில் வரும் "கேள்விகளை நீ கேட்கிறாயா, நான் கேடகட்டுமா?" வசனம். இது இசைத்தட்டுகளிலும் வந்து 86 சதவீத தமிழனுக்கு மனப்பாடமாகிவிட்ட வசனம். அதை இந்த பிரகஸ்பதிகள் புதுசா அள்ளிகிட்டு வருவாங்க. ஏன், சவாலே சமாளியில் வரும் கிளைமாக்ஸ் கிணற்றடிக்காட்சி வசனத்தை ஒருத்தனாவது போடக்கூடாதா?. அது வேறு ஒண்ணும் இல்லீங்க. சிவாஜி வசனக்காட்சி என்றதும் மக்கள் சலிப்படைந்து வேறு சேனலுக்கு மாத்தணும் என்ற நல்ல எண்ணம்தான். திருந்தவே மாட்டானுங்களே.

pammalar
26th January 2010, 05:56 PM
குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

குடியரசு நாளன்று (ஜனவரி 26) குதூகலத்துடன் வெளியான பாரதக் கலைச் சக்கரவர்த்தியின் திரைக்காவியங்கள்:
[காவியம் (வருடம்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) - 100 நாட்கள்

2. ராஜா (1972) - 108 நாட்கள்

3. சிவகாமியின் செல்வன் (1974) - 76 நாட்கள்

4. தீபம் (1977) - 148 நாட்கள்

5. அந்தமான் காதலி (1978) - 112 நாட்கள்

6. ரிஷிமூலம் (1980) - 104 நாட்கள்

7. ஹிட்லர் உமாநாத் (1982) - 38 நாட்கள்

8. நீதிபதி (1983) - 175 நாட்கள்

9. பந்தம் (1985) - 105 நாட்கள்

10. மருமகள் (1986) - 117 நாட்கள்

11. குடும்பம் ஒரு கோவில் (1987) - 67 நாட்கள்

குறிப்பு:
1. நடிகர் திலகத்தின் நானே ராஜா திரைக்காவியம், 25.1.1956 அன்று வெளியானது. முதன்முதலில் சென்னையில், சிகர சாதனையாக, 6 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அந்த 6 அரங்குகள் : அசோக், சன், முருகன், கபாலி, பிரைட்டன் & நூர்ஜஹான்.

2. நடிகர் திலகத்தின் 200வது திரைக்காவியமும், மெகா மகா ஹிட் காவியமுமான திரிசூலம் 27.1.1979 அன்று வெளியானது. சென்னையில் வெளியான சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி ஆகிய 3 அரங்குகளையும் சேர்த்து தமிழகமெங்கும் 8 திரையரங்குகளில் வெள்ளி விழாக் கண்ட முதல் திரைக்காவியம் திரிசூலம்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

NOV
26th January 2010, 07:15 PM
thavarugal manidhanin vazhakkam
adhai unarndhaal mannippu kedaikkum

Plum
26th January 2010, 08:00 PM
I am not sure if I can discuss this here especially as it is an ordinary movie:

Oru Yatra Mozhi (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=2024291#2024291)

Disappointed on multiple scores. Ofcourse, NT is the saving grace of the movie along with IR and Mohanlal. Several trite moments elevated just because he is enacting it. Watchable for the chemistry between Lal and NT(Lal's confidence in front of NT is amazing!) and nothing else. The director added to my misery by not picturising a song sung by MSV for Ilaiyaraja, which I wish had been picturised on NT. For 13 years I have been believing that this song exists in the movie, and it is a gross disappointment :-(

Has MSV sung for Sivaji Ganesan(lip sync or background)?
( I know he sung the background song for the mother in the Aaradhana remake)

Murali Srinivas
26th January 2010, 08:20 PM
Plum,

Oru Yathra Mozhi was done to salvage the producer VBK Menon. He was the one who produced Chithram. He had started a movie with NT and Lal and the direction was by Rajiv Nath [another good director from the Mallu filmdom].

He had taken a bold theme as the subject. Here NT was the father and Lal his son. A very affectionate father and son. As fate would have it father is diagonised with a life threatening illness. More than the illness, the sufferings he undergoes is more taxing for the son, which leads to a situation where mercy killing is considered. The effects it has on the relationship formed the crux.

But for reasons best known to the producer, this project got dropped and after a year or so in its place this Priyadharsan written, Prathap directed movie came out [1997 July].

Though as you said it is not earth shaking, it was a like a fresh air.

Regards

Plum
26th January 2010, 08:24 PM
Plum,

Oru Yathra Mozhi was done to salvage the producer VBK Menon. He was the one who produced Chithram. He had started a movie with NT and Lal and the direction was by Rajiv Nath [another good director from the Mallu filmdom].

He had taken a bold theme as the subject. Here NT was the father and Lal his son. A very affectionate father and son. As fate would have it father is diagonised with a life threatening illness. More than the illness, the sufferings he undergoes is more taxing for the son, which leads to a situation where mercy killing is considered. The effects it has on the relationship formed the crux.

But for reasons best known to the producer, this project got dropped and after a year or so in its place this Priyadharsan written, Prathap directed movie came out [1997 July].

Though as you said it is not earth shaking, it was a like a fresh air.

Regards

Trust Murali to have complete information :-)
The other plot sounds promising. I do agree that yatramozhi is eminently watchable - just that when you have Mohanlal pitted against NT, my expectations were a little higher.(Add IR to the mix, with MSV singing, and I really was expecting an earth-shattering one!).

pammalar
27th January 2010, 01:19 AM
மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 31.12.2009(வியாழன்) வரை ஒரு வாரம் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போட்ட கலையுலக சுந்தரேஸ்வரரின் "திருவிளையாடல்", அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.47,000/- (ரூபாய் நாற்பத்து ஏழாயிரம்). பழைய படங்களைப் பொறுத்தவரை இது சிகர சாதனை. இத்திரைக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில், ரூ.14,000/- (ரூபாய் பதினான்காயிரம்) லாபம் கிடைத்துள்ளது.

கலைக்கடவுளை நம்பினோர் கைவிடப்படார் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th January 2010, 02:00 AM
thavarugal manidhanin vazhakkam
adhai unarndhaal mannippu kedaikkum

The song lyric written by Kaviyarasu Kannadhaasan goes like this:

THAVARUDHAL MANIDHANIN PAZHAKKAM
ADHAI UNARNDHAAL MANNIPPU KIDAIKKUM

This song is set to tune by MSV and sung by Dr. Seerkaazhi S. Govindaraajan for V.Nagaiah in our NT Starrer "Iru Dhuruvam".

Regards,
Pammalar.

NOV
27th January 2010, 06:20 AM
This song is set to tune by MSV and sung by Dr. Seerkaazhi S. Govindaraajan for V.Nagaiah in our NT Starrer "Iru Dhuruvam".:exactly:
These lines were firmly etched in my mind after I watched the film back in the 70s, in the cinema. The two lines basically sum up the story of the film; kudos to Kavignar again!

It was nostalgia time again for me, when Vellithirai featured Iru Dhuruvam last night! :clap:

rangan_08
27th January 2010, 08:00 PM
Murali sir, glad to know that Gnana Oli caught your attention and thanks for your comment. Your " Thirudan " review was great - don't know when I'm going to watch it.

app_engine, not everyone get such a nice f-i-l. We are fortunate :D

Murali Srinivas
27th January 2010, 10:27 PM
Murali sir, glad to know that Gnana Oli caught your attention and thanks for your comment. Your " Thirudan " review was great - don't know when I'm going to watch it.



Mohan,

You know what? It not only caught my attention, AV review and your comments had made me long for the movie so much so that yesterday night I revisited the movie. Thought of rushing it up but ended up seeing from the censor certificate till nandri meendum varuga sign board [9 pm to 11.45 pm]. I was keenly watching and at the back of my mind, I was recollecting how as a school boy I had enjoyed it. The beauty is except for a very few scenes, the movie was as interesting for me as it was during March 1972. As the saying goes, it grows on us.

Thirudan - first time I am hearing from you that you have not seen a movie which is discussed here. I was expecting you to talk about seeing it in Mekala theatre etc and that brings me to another question. What about En Thambi? There was no comment from you. Hope you had seen that in theatre.

Regards

NOV, Astro Velli and Thangathirai seem to treat you people with Sumptuous fare especially NT related.

Murali Srinivas
27th January 2010, 10:42 PM
சென்ற வருடம் ஜனவரியில் நடிகர் திலகம் - ஒரு வரலாற்றின் வரலாறு புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டதும் அதைப் பற்றிய செய்திகள் இங்கே வெளியானதும் நினைவிருக்கக்கூடும். அதே புத்தகம் இப்போது இந்திய தலைநகர் நியூடெல்லியில் செயல்படும் டெல்லி முத்தமிழ் பேரவையின் சார்பில் மறு வெளியீடு செய்யப்படுகிறது. வரும் 31-ந் தேதி டெல்லியில் வைத்து இந்த விழா நடைபெறுகிறது. சிறப்பு அழைப்பாளாராக நமது பம்மல் சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மதுரை அரசமரம் சிவாஜி குரூப்ஸ் ஜனவரி 10 அன்று நடத்துவதாக இருந்து பின் ஒத்தி வைக்கப்பட்ட நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவும் அதே ஜனவரி 31-ந் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

அன்புடன்

groucho070
28th January 2010, 06:51 AM
99 pages. Time to start a new one. Congratulations to all who made part 5 reach this status :clap: I've been slacking here, but hopefully there will be more contributions from me on the next one. Thanks everyone.

Murali-sar, still haven't read your Thirudan review, will get on it soon :oops:

Murali Srinivas
28th January 2010, 11:07 PM
Has MSV sung for Sivaji Ganesan(lip sync or background)?
( I know he sung the background song for the mother in the Aaradhana remake)

I wanted to say this on that day itself but somehow got slipped.

Plum,

Probably you must have read this from Manisegaran sir's Paadalgal Palavithham series. If not or for people who have not read, here it is.

Gowravam was in the final stage of shooting. All portions had been completed except for one song. This song has been positioned in one of the crucial moment of the story. The foster son not seeing an eye to eye with his "Periappa" on the issue of appearing for Mohandas, the murder accused walks out of the house as the Barrister asking him to go out in a fit of anger. Barrister after some time comes down and on learning that son had walked out, bursts out emotionally. Yes it was "Palootti Valartha Kili" song.

The song had been written and tuned but the man was not there. Yes,TMS had gone on a musical tour to a foreign land and hardly 20 - 25 days remained for Deepavali, the scheduled release day and TMS was supposed to come back just a week ahead of Deepavali.

If they wait for TMS and then record it then there would be hardly any time left for shooting and post production works. The director VV Sundaram compelled MSV to sing the track so that shooting can be carried out. MSV reluctantly sang and when NT listened to the song he asked about MSV singing the song and he was told about the non availability of TMS. NT, the true professional he is gave out his best and shoot was completed.

People who listened to the song felt that MSV had done justice to the song. Even NT's brother VCS asked VV Sundaram to keep the MSV track in the movie. But MSV himself was not willing inspite of persuasions and the moment TMS came back, recorded the song with him.

Till that day NT used to lip sync for TMS voice. First time TMS saw how NT had acted and sang it accordingly. Now 37 years down the lane, Palootti Valartha Kili is immortalised with TMS voice but we never knew what it would have been with MSV rendering.

Regards

Plum
29th January 2010, 11:44 AM
Thanks MS. Another missed opportunity.

First time TMS saw how NT had acted and sang it accordingly
I didnt realise that at all. Most likely NT would have imagined how TMS would sing and covered it during shooting itself :-). TMS normalA pAdi irundhA kooda match aayirukkum

rangan_08
29th January 2010, 06:55 PM
Mohan,

Thirudan - first time I am hearing from you that you have not seen a movie which is discussed here. I was expecting you to talk about seeing it in Mekala theatre etc and that brings me to another question. What about En Thambi? There was no comment from you. Hope you had seen that in theatre.

Regards


Murali sir, you were right about Gnana Oli.

I am not as fortunate as you or any other senior hubber to watch many of NT's hit films and Thirudan is one among them - in fact, most of Balaji's production. I think I've told you this.

Sorry sir, I have not ready your En Thambi review (another NT's hit film that I have missed) which I will do soon.

rangan_08
29th January 2010, 07:27 PM
Naalaikku Part 6 release ayidumnu nenaikkiren.

Congrats :thumbsup:

abkhlabhi
30th January 2010, 10:36 AM
Congrats to all NT fans and fellow forum hubbers to have made this Part 5 also as a grand success. 500 not out and still going strong. We feel proud.

Long Live this thread and Long Live NT's name.

rangan_08
31st January 2010, 12:07 PM
என் தம்பி - Part II

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதற்கு முன் என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம். 1964 முதல் 1974 வரை எந்த சிவாஜி படத்தையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். காரணம் உடல் மெலிந்து ஸ்லிம் -மாக இளைமையான சிக்கென்ற நடிகர் திலகத்தை பார்ப்பதற்கே போகலாம் என்பான். ஒரு பிரபல ஒளிப்பதிவாளர் சொன்னதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழ் சினிமா நடிகர்களிலேயே காமிரா மூலமாக எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே முகம் நடிகர் திலகத்துடையதுதான் என்றார் அவர். என் தம்பி பார்க்கும் எவரும் இந்த இரண்டு கருத்துகளையும் ஆமோதிப்பார்.



:exactly:

Murali sir, just now read the review. Great ! The story seems to be more interesting than Thirudan. Unfortunately, another " to-be-watched" film for me :(

Reading your reviews had always been an interesting & informative session for me. And as for reading your recent reviews on En Magan & Thirudan, I have kept it postponing just for one reason. Once I read it, the urge to watch the film increases, and you know very well that the dvd of these Balaji's films is yet to hit the market. You must take all the responsibility for pushing me to such a bad situation :( :)[/quote]

Murali Srinivas
31st January 2010, 10:09 PM
Mohan,

Don't worry. Will help you to watch En Thambi and Thirudan soon.

I heard that En Magan DVDs had come though I have not seen it. Let me check.

Regards

rangan_08
1st February 2010, 06:23 PM
Murali sir,

Not sure about En Magan DVD, but watched it in Raj TV recently.

Murali Srinivas
1st February 2010, 11:51 PM
Mohan,

Instead of En Thambi, I think you had written it as En Magan and that's why I replied. I very well remember you telling me about watching En Magan on a saturday forenoon. If my memeory serves me right, you mentioned about missing a portion of the movie.

About the En Magan DVD, recently I was told by one of the fans that the same has come out. That's what I quoted here.

Regards

groucho070
2nd February 2010, 08:13 AM
They showed Kandhan Karunai in Astro Vellithirai on Thaipusam day.

It's tough to watch these sort of films with my non-Tamizh speaking wife. I had to keep saying, wait, wait, NT will be coming soon, while the boring scenes passed by. While waiting I explained the story to her and keep reminding her that this is not the best Lord Siva on screen...and as I kept on whining that NT in Thiruvilayadal is the best Lord Siva ever, so en imsai taangamudiyama she asked me to screen her Thiruvilayadal DVD.

Luckily my job as translator is much reduced thanks to superb subtitles in the DVD. And she loved it, and admitted that NT's Lord Siva was very very powerful. And also thanks to NTs own performance, she needed very little explanation on what's going on.

Note: First time watching it with translation. While overall it was good, one part was funny. When NT/Lord Siva said all the praises and dances for him "meysilirkavaithathu", the subtitle read, "I feel groovy" :lol:

Murali Srinivas
2nd February 2010, 11:47 PM
சென்ற ஞாயிறன்று [ஜனவரி 31] தலைநகர் டெல்லியில் முத்தமிழ் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட நடிகர் திலகம் - ஒரு வரலாற்றின் வரலாறு புத்தக மறு வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது என தகவல் வந்துள்ளது.

சிறப்பு சொற்பழிவாளராக பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். சுனாமி தாக்குதல் நிகழ்ந்த போது நிவாரண பணிகளை சிறப்பாக செய்தமைக்காக விருது பெற்ற மாவட்ட ஆட்சி தலைவர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றொரு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு அழகாக பேசினார். மெல்லிசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்த விழா மாலை சுமார் நாலரை மணிக்கு துவங்கி இரவு ஒன்பதரை வரை நடைபெற்றது. விழா அரங்கம் நிறைந்து வழிந்தது.

இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் அதே நாளில் [அதாவது நேற்று முந்தைய நாள் 31ந் தேதி அன்றே] எஸ்.வீ. சேகரின் நாடகம் டெல்லியில் நடைபெற்ற போதிலும் டெல்லி வாழ் தமிழ் மக்கள் இங்கே திரண்டு வந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்திருக்கின்றனர்.

விழா தகவல் நமது பம்மல் சுவாமிநாதன்.

அன்புடன்

saradhaa_sn
3rd February 2010, 02:14 PM
டியர் முரளி,

உங்களில் ராசியான கரங்களால் துவங்கி வைக்கப்பட்ட 'நடிகர்திலகத்தின் தகவல் களஞ்சியம்' ஐந்தாம் பாகம் விரைவாகவும் வெற்றிகரமாகவும் தற்போது 100 வது பக்கத்தில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆறாவது பாகத்தையும் நீங்களே வெற்றியுடன் துவக்கி வையுங்கள். அந்த ம்கா கலைஞனின் திறமை மற்றும் சாதனைகளை 500 பக்கங்களில் அலசியது போக மீதமானவற்றை 501-வது பக்கத்திலிருந்து தொடருவோம்.

டெல்லி நிகழ்ச்சி பற்றிய தகவலுக்கு நன்றி. பம்மலார் திரும்பியதும், சிறப்புப்பேச்சாளர்களின் உரைகளை தொகுத்து வழங்கச்செய்யுங்கள். எதிர்பார்க்கிறோம்.

Murali Srinivas
3rd February 2010, 11:43 PM
நன்றி சாரதா. இங்கே பங்களிப்பு செய்த அனைவரின் முயற்சியினால் நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இந்த திரி இப்படி ஒரு சிறப்பான நிலையை அடைந்திருக்கிறது. அது வரும் காலங்களிலும் தொடரும் என்பது திண்ணம்.

டெல்லி விழாவில் கலந்து கொண்டு விட்டு சுவாமி அவர்கள் இன்று இரவுதான் சென்னை திரும்புகிறார். வந்தவுடன் விழா நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கே எழுதுவார்.

அன்புடன்

pammalar
4th February 2010, 02:16 PM
நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இத்திரி, ஐந்து காண்டங்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, ஆறாவது காண்டத்தை கம்பீரத்தோடு தொடங்கயிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. ஆண்டவன் அருளோடும், நடிகர் திலகத்தின் நல்லாசிகளோடும், நல்லிதயங்களின் நல்வாழ்த்துக்களோடும், முரளி சாரின் திறன்மிகு தலைமையில், இத்திரி மென்மேலும் வளர்ந்து, பற்பல பதிவுகளையும், பக்கங்களையும், காண்டங்களையும் காணப் போகிறது என்பது திண்ணம். 500 பக்கங்களில், பல நல்ல நேர்த்தியான பதிவுகளை அளித்துள்ள இத்திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்! பங்களிப்பாளர்களின் இந்த இனிய சேவை நல்ல முறையில் தொடரட்டும்!

கலைக்குரிசில் என்னும் கலைக்களஞ்சியத்தைப் பற்றிய தகவல் களஞ்சியமாக இத்திரி தொடக்கத்திலிருந்தே விளங்கி வருகிறது என்பது சத்தியமான வார்த்தை.

இதுவரை வெளிவந்துள்ள ஐந்து பாகங்களும், ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போலத் திகழ்கின்றது என்றாலும் அது மிகையன்று.

நன்றிகள்! பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
பம்மலார்.

NOV
4th February 2010, 02:19 PM
pammalar, I am sure it will be an honour for you to begin the 6th part of this thread.
Please go ahead and open the thread with pomp and splendour!

mr_karthik
4th February 2010, 02:35 PM
Dear ALL NT fans,

Congrats and sincere thanks to ALL for the successful completion of 500 pages with wonderful / worthful reviews, analysis, interviews and other valuable informations about the Great Artist

Nadigar Thilagam, Padhmashree, Padhmabooshan, Chevalier, Dr. Sivaji Ganesan, the icon of Indian Cinema.

Let us continue in 501st page as proud NT fans. :clap: :clap: :clap: