PDA

View Full Version : Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas



Murali Srinivas
15th September 2008, 01:25 PM
வரும் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதை முன்னிட்டு நடிகர் திலகத்தின் சாதனைகள் சிலவற்றை இங்கே தொட்டு காட்ட விரும்புகிறேன். இங்கே அனேகமாக அவரது நடிப்பாற்றலை பற்றி மட்டுமே அதிகமாக பேசியிருக்கிறோம். இது அதிலிருந்து சற்று மாறுபட்டு அவரது சாதனைகளை பற்றிய தகவல்கள் இடம் பெறும்.

முதலில் பராசக்தி.

ஜோ,

1952 -ம ஆண்டு பற்றிய ஒரு தகவல் கேட்டிருந்தீர்கள். இதன் மூலம் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கும்.

அன்புடன்

Murali Srinivas
15th September 2008, 05:25 PM
பராசக்தி

1. நடிகர் திலகத்தின் முதல் படமே தமிழ்நாட்டை கலக்கியது. முதல் படமே அது வரை தமிழ் திரையுலகம் கண்டிராத ஒரு சாதனையை நிகழ்த்தியது, ஆம் அந்த படம் 62 சென்டர்களில் 50 நாட்களை கடந்தது. அதற்கு முன் எந்த படமும் அது போன்ற ஒரு சாதனையை புரியவில்லை.

2. அது போல முதல் படமே தமிழகத்தில் 7 திரை அரங்கங்களில் 100 நாட்களை கடந்து ஓடியது. அவை

சென்னை - பாரகன், பாரத், அசோக்.

மதுரை - தங்கம் (ஆசியாவிலேயே மிக பெரிய திரை அரங்கம்) -112 நாட்கள்.

அங்கிருந்து ஷிப்ட் செய்யப்பட்டு மதுரை - சிட்டி சினிமாவில் 126 நாட்கள்.

கோவை - ஸ்ரீ முருகன்

சேலம் - பாலஸ்

திருச்சி - வெலிங்டன்

3. முதல் படமே வெள்ளி விழாவை தாண்டி 200 நாட்களை கடந்தது.

திருச்சி - வெலிங்டன் - 245 நாட்கள்

4.முதல் படமே வெளி மாநிலத்தில் - 100 நாட்கள்

பெங்களூர் - கீதா, சுபர்ஸ்ரீ அரங்கங்கள் (பெங்களூரில் இதுதான் 100 நாட்களை கடந்த முதல் தமிழ் படம்).

5. முதல் படமே வெளி நாட்டில் ( இலங்கை) வெள்ளி விழாவை தாண்டியது.

கொழும்பு - மைலன் - 294 நாட்கள்
யாழ்பாணம் - வெலிங்டன் - 200 நாட்கள்

6. முதல் முதலாக பராசக்தி படத்தில் தான் டைட்டில் பாடல் வந்தது.

7. முதன் முதலாக பராசக்தியின் வசனம் தான் இசை தட்டாக வெளி வந்தது. விற்பனையில் புதிய சாதனையும் படைத்தது.

8. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1968-ல் பராசக்தி வெளியான போது

சென்னை - மகாராஜாவில் - 110 நாட்கள். அங்கிருந்து ஷிப்டிங்கில் 175 நாட்களை கடந்தது.

மதுரை -ஸ்ரீதேவியில் - 49 நாட்கள், ஷிப்டிங்கில் -73 நாட்கள்.

அதே 1952-ம ஆண்டில் நடிகர் திலகம் நடித்த இரண்டாவது படமான பணம் வெளியானது. இதில் சில "முதல்கள்"

என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்

மெல்லிசை மன்னர்கள் முதன் முதலில் இசையமைத்த படம்

தமிழ் திரை உலகில் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் திலகம் - நாட்டிய பேரொளியும் இணைந்து நடித்த முதல் படம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
16th September 2008, 11:45 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1953

1. முதன் முதலாக நடிகர் திலகம் வேற்று மொழி படத்தில் நடித்தது இந்த வருடம் தான். படம் பரதேசி. மொழி தெலுங்கு.

2. நடிகர் திலகத்தின் மனங்கவர்ந்த இயக்குனர் எல்.வி.பிரசாத் முதன் முதலாக நடிகர் திலகத்தை இயக்கியதும் இந்த படத்தில் தான்.

3. இதே வருடம் தான் எல்.வி. பிரசாத் முதன் முறையாக நடிகர் திலகத்தை தமிழிலும் இயக்கினார். படம் - பூங்கோதை.

4. நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ஏ.என்.ஆர் (ANR), நடிகர் திலகத்தோடு இணைந்து முதன் முதலாக நடித்ததும் பரதேசி படத்தில் தான்.

5. முதன் முதலாக நடிகர் திலகம் ஆன்டி ஹீரோ (Anti -Hero) ரோலில் நடித்ததும், கதாநாயகன் வில்லனாக நடித்தால் இமேஜ் போய் விடும் என்பதை உடைத்ததும் இந்த வருடத்தில் தான். படம் - திரும்பிப்பார்.

6. முதன் முதலாக தமிழ் படங்களுக்கு டிரைலர் காண்பிக்கப்பட்டதும் திரும்பிப்பார் படத்திற்கு தான்.

7. முதன் முதலாக ஓரங்க நாடகங்கள் திரைப்படங்களில் இணைக்கப்பட ஆரம்பித்ததும் நடிகர் திலகத்தின் படத்திலிருந்து தான். படம்- அன்பு. நாடகம் - ஒத்தல்லோ.

8. ஓரங்க நாடகங்கள் இணைக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் - 34

9. முதன் முதலாக ஸ்லோ மோஷன் (slow motion) டெக்னிக் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான். படம் - கண்கள்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
17th September 2008, 11:50 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி.

வருடம் - 1954

1. முதன் முதலாக ஒரே படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு அவை மூன்றும் ஒரே வருடம் வெளியானதும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - மனோகரா.

2. மதுரை - ஸ்ரீதேவி திரையரங்கில் முதன் முதலாக அதிக நாட்கள் ஓடிய படம் மனோகரா. ஓடிய நாட்கள் - 156

3. முதன் முதலாக பாடல்கள் இல்லாமல் வெளி வந்த தமிழ் படம் - அந்த நாள்.

4. முதன் முதலாக கதாநாயகன் முதற் காட்சியிலே இறந்து விடுவது போல அமைந்ததும் அந்த நாள் படத்தில் தான்.

5. முதன் முதலாக வேறு தயாரிப்பாளருடன் கூட்டு சேராமல் ஏ.வி. எம்.நிறுவனம் தனியாக தயாரித்த படம் அந்த நாள்.

6. முதன் முதலாக டி.எம்.எஸ். நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடியது இந்த வருடத்தில் தான். படம் - தூக்கு தூக்கி.

7. முதன் முதலாக ஆன்டி சென்டிமென்ட் கதை தமிழில் திரைப்படமாக வந்ததும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - எதிர்பாராதது.

8. சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே முதன் முதலாக பரிசு பெற்ற படங்கள் - அந்த நாள் மற்றும் தூக்கு தூக்கி.

9. முதன் முதலாக இந்திய அரசாங்கத்தின் திரைப்பட விருது குழுவின் நற்சான்றிதழ் பெற்ற தமிழ் படங்கள் - அந்த நாள் & எதிர்பாராதது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
19th September 2008, 12:42 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1954 & 1955

1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.

3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்

4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

வெளியான நாள் - 26.08.1954

5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.

அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.

7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.

8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.

மனோகரா

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -

[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]

எதிர்பாராதது

9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.

10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.

11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
20th September 2008, 12:13 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1956

1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.

படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு

வெளியான நாள் - 14.01.1956

2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை

நான் பெற்ற செல்வம் - 14.01.1956

நல்ல வீடு - 14.01.1956

நானே ராஜா - 25.01.1956

தெனாலி ராமன் - 03.02.1956

பெண்ணின் பெருமை - 17.02.1956

ராஜா ராணி - 25.02.1956

3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.

4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை

சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.

சேலம் - நியூ சினிமா

திருச்சி - ஜுபிடர்

5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.

6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.

7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - அமர தீபம்

அரங்கு - காசினோ

8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.

9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
23rd September 2008, 12:21 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1956

1. முதன் முதலாக ஏ,பி.என் நடிகர் திலகத்தோடு இணைந்த படம் - நான் பெற்ற செல்வம்

2. முதன் முதலாக நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் (படத்தின் ஒரு காட்சியில்) நடித்த படம் - நான் பெற்ற செல்வம்.

வருடம் - 1957

1. முதன் முதலாக வட்டார வழக்கு மொழி, தமிழ் சினிமாவில் இடம் பெற்றது நடிகர் திலகத்தின் படத்தில் தான். வட்டார மொழி - கொங்கு தமிழ். படம் - மக்களை பெற்ற மகராசி.

2. தமிழகத்தின் திரைப்பட சரித்திரத்திலேயே, ஏன் இந்திய திரையுலகிலே முதன் முதலாக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்திற்கு தான்.

படம் - வணங்காமுடி

இடம் - சென்னை சித்ரா திரையரங்கம்

உயரம் - 80 அடி.

3. மதுரை தங்கம் திரையரங்கில் புதிய வசூல் சாதனை படைத்தது வணங்காமுடி படம். 100 நாட்கள் ஓடாமலேயே அதிக வசூல் செய்தது வணங்காமுடி தான்.

ஓடின நாட்கள் - 78

மொத்த வசூல் - Rs 1,26,904 - 11 அணா - 5 ந பை

வரி நீக்கிய வசூல் - Rs 1.00,845 - 8 அணா-7 ந பை

விநியோகஸ்தர் பங்கு - Rs 55,716 - 12 அணா -8 ந பை

[அன்றைய காலக்கட்டத்தில், அதாவது 51 வருடங்களுக்கு முன்பு, இந்த 1.26 லட்சம் என்பது எத்தனை கோடிகளுக்கு சமம் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்].

4. ஒரு நடிகர் திலகத்தின் படம் தான் இன்னொரு நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக அமையும் என்பது வெறும் வார்த்தையல்ல. 78 நாட்களை வெற்றிகரமாக கடந்த வணங்காமுடி நிறுத்தப்பட்டதன் காரணம் தங்கமலை ரகசியம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது தான். இல்லாவிடின் மதுரை தங்கத்தில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் 100 நாட்களை கடந்திருக்கும்.

5. முதன் முதலாக தமிழ் படத்தில் டார்ஜான் வேடத்தில் நடித்தவர் நடிகர் திலகம் தான். படம் - தங்கமலை ரகசியம்.

6. தமிழில் ஒரு முன்னணி கதாநாயகன் பாதி படத்திற்கு மேல் ஊமையாக நடித்தார் என்பதும் நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியமாயிருக்கிறது. படம் - தங்கமலை ரகசியம்.

7. தி.மு.கவுடனான உறவு முறிந்த பிறகு கலைஞர் கதை வசனத்தில் நடிகர் திலகம் முதன் முதலாக நடித்தது இந்த வருடத்தில் தான். படம் - புதையல்.

8. முதன் முதலாக நடிகர் திலகம் என டைட்டில் கார்டு வந்தது இந்த வருடத்தில் தான். படம் - அம்பிகாபதி.

9. 1954 -ம் வருடத்திற்கு பிறகு 1956 மற்றும் 1957-ம் வருடங்களிலும் நடிகர் திலகம் தலா 9 படங்களில் நாயகனாக நடித்து மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை நிகழ்த்தினார்.

(சாதனைகள் தொடரும்)


அன்புடன்

Murali Srinivas
23rd September 2008, 11:54 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1958

1. முதன் முதலாக ஒரு முழு நீள படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடித்தது இந்த வருடம் தான். படம் - உத்தமபுத்திரன்.

2. முதன் முதலாக நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியின் "ப" வரிசை படங்கள் ஆரம்பித்தது இந்த வருடத்தில் தான். படம் - பதிபக்தி.

3. முதன் முதலாக படத்தின் நாயகனாக இல்லாவிடினும், நாயகனை விட பெயரும் புகழும் பெற முடியும் என்பதை நிரூபித்ததோடு, வசூலிலும் சாதனை செய்ய முடியும் என்பதையும் வெளிப்படுத்திய படம் - சம்பூர்ண ராமாயணம்.

4. முதன் முதலாக *சக்கரவர்த்தி திருமகனை" எழுதிய மூதறிஞர் ராஜாஜி அவர்கள் படத்தை பார்த்து விட்டு "பரதனைக் கண்டேன்" என்று சொன்ன படம் - சம்பூர்ண ராமாயணம்.

5. முதன் முதலாக ஒரு ஆண்டில் முதலில் வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் மட்டும் தான்.

1958 -ல் முதலில் வெளியானது

உத்தமபுத்திரன்.

வெளியான நாள் - 07.02.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

சென்னை- காசினோ

மதுரை - நியூ சினிமா

மைசூர் - லட்சுமி.

இரண்டாவது படம்

பதிபக்தி

வெளியான நாள் - 14.03.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

சென்னை - கெயிட்டி

மதுரை -கல்பனா

திருச்சி - ஜுபிடர்

கோவை - கர்னாடிக்.

மூன்றாவது படம்

சம்பூர்ண ராமாயணம்

வெளியான நாள் - 14.04.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

மதுரை - ஸ்ரீதேவி (165 நாட்கள்)

திருச்சி -சென்ட்ரல்

சேலம் -ஓரியண்டல்

கோவை - டைமண்ட்

தஞ்சை- யாகப்பா.

6. முதன் முதலாக நடிக்க வந்த 6 வருடங்களில் 50 படங்களில் அதுவும் நாயகனாக நடித்தவர் நடிகர் திலகம் தான்.

பராசக்தி - 17.10.1952 - முதல் படம்

சாரங்கதாரா - 15.08.1958 - 50-வது படம்

7. முதன் முதலாக ஒரே வருடத்தில் நான்கு 100 நாள் படங்களை கொடுத்த சாதனையும் நடிகர் திலகத்திற்கே உரியது.

1958-ல் நான்காவது 100 நாள் படம் - சபாஷ் மீனா.

8. முதன் முதலாக நாயகன் ஒரு வேடத்திலும் துணை நாயகன்/காமெடியன் இரண்டு வேடங்களிலும் நடித்த படம் = சபாஷ் மீனா. இரட்டை வேடம் பூண்டவர் - சந்திரபாபு. அந்த பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம்.

9. ஹாட்ரிக் என்று சொல்லுவது போல 1956,1957 -ஐ தொடர்ந்து, 1958 -ம வருடமும் 9 படங்களில் நடித்து மீண்டும் ஒரு சாதனை புரிந்தவர் நடிகர் திலகம்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
24th September 2008, 10:48 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1959

இந்த வருடம் வெளியான படங்கள் - 6

இந்த ஆண்டு குறிப்பாக மதுரையில் சாதனை சரித்திரம் படைத்த ஆண்டு. இந்த சாதனையை இரண்டு படங்கள் பங்கிட்டு கொண்டன. முதலில்

வீரபாண்டிய கட்டபொம்மன்.

1. முதன் முதலாக சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடகம் திரைப்படமாக்கப்பட்டது இந்த படத்தின் மூலமாகத்தான்.

2. படமாக்கப்படுவதற்கு முன்பும், படம் வெளி வந்த பிறகும் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.

3. முதன் முதலாக ஒரு நாடகத்தின் மூலமாக கல்விக்கூடங்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தது கட்டபொம்மன் தான்.

4. முதன் முதலாக ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட தமிழ் படம் கட்டபொம்மன்.

5. முதன் முதலாக டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட தமிழ் படம் -கட்டபொம்மன்.

6. முதன் முதலாக லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம் - கட்டபொம்மன்.

கட்டபொம்மன் வெற்றி சரித்திரம் தொடரும்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
25th September 2008, 11:06 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1959

கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

1. முதன் முதலாக 26 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடின தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்.

2. மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்

அரங்கு - நியூ சினிமா

நாட்கள் - 181

3. மதுரையில் முதன் முதலாக 2 லட்சத்திற்கு மேல் வசூல் தந்த படம் - கட்டபொம்மன்

181 நாட்கள் மொத்த வசூல் - Rs 2,77.365.71

வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,08,113.44

விநியோகஸ்தர் பங்கு - Rs 1,13, 583.55

4. வெற்றிவிழாவிற்கு மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்ட முதல் கலைஞன் - நடிகர் திலகம்.

5. வெற்றி விழா பரிசாக 2-ம் வகுப்பு வரை சிலேட்- குச்சியும்,5-ம் வகுப்பு வரை பென்சிலும், 10-ம் வகுப்பு வரை பேனாவும், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும், அந்தந்த பள்ளிகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்பட்டது முதன் முதலாக மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாததும் கூட.

6. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று 1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் அது வரை எந்த தமிழ் படமும் செய்யாத சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகமும் பெற்றார்கள்.

கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடரும்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
27th September 2008, 01:33 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1959

கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.

ஊர் - திருவனந்தபுரம்

2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.

6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143

1959 - ம் வருடத்தின் இரண்டாவது சாதனை படம்

பாகப்பிரிவினை

7. மதுரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம்

1959 - வருடத்திலேயே இரண்டாவது வெள்ளி விழா படம் - பாகப்பிரிவினை

8. மதுரையின் திரைப்பட சரித்திரத்திலேயே முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

கட்டபொம்மன் - நியூ சினிமா - 181 நாட்கள்.

பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.

9.Tier II cities என்று சொல்லப்படுகிற தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றான மதுரையில் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்கள் கொடுத்த சாதனையை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.

(இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அந்தந்த வருடங்கள் வரும் போது தருகிறேன்).

10. முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் - பாகப்பிரிவினை.

மதுரை - சிந்தாமணியில்

216 நாட்கள் மொத்த வசூல் - Rs 3,36,180.54

வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,52,301.00

விநியோகஸ்தர் பங்கு - Rs 1,31,233.58

11. மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை.

12. மதுரை- சிந்தாமணியில் 200 நாட்கள் ஓடிய இரண்டு படங்களின் கதாநாயகனுமே நடிகர் திலகம் தான். படங்கள்

பாகப்பிரிவினை

திரிசூலம்

மாநகரங்களையும், நகரங்களையும் தாண்டி இடை நிலை ஊர்களிலும் சாதனை செய்தவர் நடிகர் திலகம்.

13. முதன் முதலாக திண்டுக்கல் நகரில் 100 நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை

திரையரங்கம் - NVGB

நாட்கள் - 100

14. 1959 -ம் வருடத்தில் இரண்டு படங்களின் வெற்றி விழாவும் மதுரையில் நடக்க அதில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு "முதன் முதல்" சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
29th September 2008, 11:25 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1959

1. இதே ஆண்டில் கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை படங்களின் நடுவில் வெளி வந்தும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் மரகதம்.

2. மீண்டும் ஒரே நாள் வித்யாசத்தில் இரண்டு நடிகர் திலகம் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று வெற்றிப்படமாக அமைந்தது.

அவள் யார் - 30.10.1959

பாகப்பிரிவினை - 31.01.1959


வருடம் - 1960

1. பாகப்பிரிவினையை தொடர்ந்து 1960 பொங்கலன்று வெளியான இரும்பு திரையும் வெள்ளி விழா கொண்டாடியது.

கோவை - கர்னாடிக்.

2. தொடர்ந்து மூன்று வெள்ளி விழா படங்களை கொடுத்ததன் மூலம் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

3. இந்த வருடம் இரும்பு திரை தவிர மூன்று 100 நாட்கள் படங்களை கொடுத்தார் நடிகர் திலகம்.

தெய்வப்பிறவி

படிக்காத மேதை

விடி வெள்ளி.

4. ஒரே வருடத்தில் ஒரு வெள்ளி விழா மற்றும் மூன்று 100 நாட்கள் படங்களை முதன் முதலாக கொடுத்தவர் நடிகர் திலகம் தான்.

5. படிக்காத மேதை ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படமாக அமைந்தது.

6. படிக்காத மேதை ஓடிய 116 நாட்களில் பெற்ற வசூல் எல்லோரையும் திகைக்க வைத்தது.

116 நாட்களில் மொத்த வசூல் - Rs 2,21,314- 1 அ - 3 ந பை

வரி நீக்கிய நிகர வசூல் - Rs 1,65,293 - 4 அ - 11 ந பை

விநியோகஸ்தர் பங்கு - Rs 89,103 - 15 அ - 5 ந பை

7. நடிகர் திலகம் திரையில் நடிகர் திலகமாகவே தோன்றிய படம் - பாவை விளக்கு.

8. படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் நடிகர்களாகவே முதல் காட்சியில் தோன்றி பின் நடிகர் திலகம் அகிலனின் பாவை விளக்கு நாவலை படிக்க அனைவரும் கதாபாத்திரங்களாக மாறியது முதன் முதலாக வந்தது பாவை விளக்கு படத்தில் தான்.

9. முதன் முதலாக தாஜ் மகாலில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - பாவை விளக்கு.

10. முதன் முதலாக ஸ்ரீதர் இயக்கிய நடிகர் திலகத்தின் படம் - விடி வெள்ளி.

11. மீண்டும் ஒரே நாளில் (தீபாவளி) இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானது

பாவை விளக்கு - 19.10.1960

பெற்ற மனம் - 19.10.1960

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st October 2008, 12:17 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1961

1. நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டு இது. காரணம் காலங்களை கடந்து அமர காவியங்களாக அனைவர் மனதிலும் இடம் பெற்றிருக்கும் படங்கள் வெளியான வருடம்

பாவ மன்னிப்பு

பாச மலர்

பாலும் பழமும்

கப்பலோட்டிய தமிழன்

2. 1959 -ஐ போலவே இந்த வருடத்திலும் இரண்டு வெள்ளி விழா படங்கள்.

பாவ மன்னிப்பு

சென்னை - சாந்தி

பாச மலர்

சென்னை - சித்ரா

3. முதன் முதலாக சென்னை சாந்தி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - பாவ மன்னிப்பு

4. முதன் முதலாக சென்னையில் பிரம்மாண்டமான பலூன் மூலமாக விளம்பரம் செய்யப்பட்ட படம் - பாவ மன்னிப்பு.

இடம்- சென்னை சாந்தி திரையரங்கம்

5. முதன் முதலாக பாடல்கள் அடங்கிய இசை தட்டுகள் அதிகளவில் விற்ற சரித்திரம் படைத்தது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு தான்.

6. முதன் முதலாக ஒரு திரைப்படத்தின் பாடல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மக்களுக்கு பரிசு வழங்கப்பட்டதும் பாவ மன்னிப்பு படத்திற்கு தான்.

7. தமிழ் திரைப்பட வரலாற்றிலே முதன் முதலாக டூரிங் டாக்கிஸ் அரங்கில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - பாவ மன்னிப்பு

ராமநாதபுரம் - சிவாஜி டூரிங் டாக்கிஸ்

இது முதன் முதல் மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் தான்

8. 1961- ம் வருடத்திய தேசிய திரைப்பட விருது குழுவால் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற முதல் தமிழ் படம் நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு

1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st October 2008, 11:30 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

நடிகர் திலகத்தின் 80 -வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை பற்றி மேலும் பேசுவோம்.

வருடம் - 1961

1. பாவமன்னிப்பை தொடர்ந்து வெளியான பா வரிசை படம் - பாச மலர்

வெளியான நாள் - 27.05.1961

2. 1961- ம் வருடத்திய இரண்டாவது வெள்ளி விழா படம் - பாச மலர்

ஊர் - சென்னை

அரங்கம் - சித்ரா

3. முதன் முதலாக ஒரே மொழியில் இரண்டு வருட இடைவெளியில் வெளியான ஒரு நடிகரின் 5 திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் தான்.

காலம்

1959 மே - 1961 மே

வெள்ளி விழா படங்கள் - 5

கட்டபொம்மன்

பாகப்பிரிவினை

இரும்பு திரை

பாவ மன்னிப்பு

பாச மலர்

4. மதுரை சிந்தாமணியில் வெளியான இந்த படம் ஓடின நாட்கள் - 166.

முன்கூடியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 09.11.1961 அன்று (தீபாவளி) மாற்றப்பட்டது.

5. பிறகு ஷிப்டிங்கில் ஓடின நாட்கள் - 59

ஆக மொத்தம் மதுரையில் ஓடின நாட்கள் - 225 [32 வாரம்]

6. 1961-ம் வருடத்திய தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாக தேர்வான படம் - பாச மலர்.

1961 - ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
4th October 2008, 01:09 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடர்கிறது.

1. இந்த வருடம் வெளியான மூன்றாவது பா வரிசை படம் - பாலும் பழமும்

வெளியான நாள் - 09.09.1961

இதுவும் 100 நாள் படம்.

மதுரை - சென்ட்ரலில் ஓடிய நாட்கள் - 127

2. திண்டுக்கல் நகரில் முதன் முதலாக ஒரு நடிகரின் மூன்று திரைப் படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.

படம் -பாலும் பழமும்

அரங்கு - சோலைஹால்

3. மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியிட்டு ஒரு புதிய சரித்திரம் படைத்தார். நடிகர் திலகம்

நாள் - 01.07.1961

படங்கள் - எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி.

4. இந்த வருடத்தில் இரண்டு வெள்ளி விழா, இரண்டு 100 நாட்கள் படங்கள். இவை எதுவுமே பண்டிகை நாளில் திரையிடப்படவில்லை என்பது தனி சிறப்பு.

5. முதன் முதலாக ஒரே படத்தில் ஒரு நடிகர் 14 கெட் அப்-ல் தோன்றிய சாதனையையும் செய்தவர் நடிகர் திலகம்.

படம் -மருத நாட்டு வீரன்

6. தொடர்ந்து மூன்று வருடங்களில் கேரளத்தில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

1959 - கட்டபொம்மன்

1960 - இரும்பு திரை

1961 - மருத நாட்டு வீரன்

7. தமிழகத்தில் மட்டுமல்ல கடல் கடந்தும் நடிகர் திலகம் சாதனை புரிந்த ஆண்டு 1961. ஆம்,1961 - ல் இலங்கையில் 100 நாட்களை கடந்த நடிகர் திலகத்தின் படங்கள் 4. அவை

பாவ மன்னிப்பு

பாச மலர்

ஸ்ரீ வள்ளி

கப்பலோட்டிய தமிழன்.

8. அந்நிய மண்ணில் ஒரே வருடத்தில் நான்கு 100 நாட்கள் படங்களை கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

9. தமிழில் முதன் முதலாக வரி விலக்கு பெற்ற படம் கப்பலோட்டிய தமிழன்.

10. 1961- ம் வருடத்திய தேசிய விருதுகளில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் சிறந்த படம் என்ற முறையில் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற படம் - கப்பலோட்டிய தமிழன்.

11. 1961- ம் வருடத்திய தேசிய விருதுகளில் மூன்று பரிசுகள் தமிழ் படங்களுக்கு. அவை

இந்தியாவின் சிறந்த இரண்டாவது படம் - பாவ மன்னிப்பு

தமிழின் சிறந்த படம் - பாச மலர்

தேசிய ஒற்றுமைக்கான படம் - கப்பலோட்டிய தமிழன்.

12. தேசிய விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரே வருடத்தில் ஒரே மொழியில் ஒரே நடிகரின் மூன்று திரைப்படங்கள் விருது வென்றது இதுவரை வெல்லப்படாத வரலாற்று சாதனையாகும்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
6th October 2008, 10:29 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1962

1. இந்த வருடத்தில் 100 நாட்களை கடந்து ஓடிய நடிகர் திலகத்தின் படங்கள் - 3

பார்த்தால் பசி தீரும்

படித்தால் மட்டும் போதுமா

ஆலய மணி

2. நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த ப வரிசை படங்கள் இரண்டுமே 100 நாட்களை கடந்தன.

பார்த்தால் பசி தீரும்

படித்தால் மட்டும் போதுமா

3. இதன் மூலம் முதன் முதலாக ஒரே நடிகரும் ஒரே இயக்குனரும் தொடர்ந்து பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது.

4. நான்கு வருட இடைவெளியில் ஒரே நடிகரும் ஒரே இயக்குனரும் பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்களையும் 3 படங்கள் வெள்ளி விழாவையும் கடந்து ஓடிய சாதனை இன்று வரை தமிழ் திரையுலகில் முறியடிக்கப்படாத ஒன்றாகும். அந்த படங்கள்

காலம் - 1958 மார்ச் முதல் 1962 ஏப்ரல் வரை

பதி பக்தி - 100 நாட்கள்

பாகப்பிரிவினை - வெள்ளி விழா

படிக்காத மேதை - 100 நாட்கள்

பாவ மன்னிப்பு - வெள்ளி விழா

பாச மலர் - வெள்ளி விழா

பாலும் பழமும் - 100 நாட்கள்

பார்த்தால் பசி தீரும் - 100 நாட்கள்

படித்தால் மட்டும் போதுமா - 100 நாட்கள்

5. முதன் முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடிய சாதனையையும் செய்தது நடிகர் திலகம் தான்

படம் - ஆலய மணி

அரங்குகள் - பாரகன், கிருஷ்ணா, உமா, நூர்ஜகான்.

6. முதன் முதலாக சென்னையில் ஆங்கிலத்தில் போஸ்டர்கள் அடிக்கப்பட்ட திரைப்படம் -ஆலயமணி

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
7th October 2008, 11:02 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1962

1. இந்த வருடத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் திலகம் அமெரிக்க நாட்டிற்கு விஜயம் செய்தார். அந்த நாட்டின் நயாகரா நகரம் அவரை ஒரு நாள் மேயராக பதவியளித்து கௌரவித்தது. இந்த கெளரவம் அளிக்கப்பட்ட முதல் இந்திய கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.

வருடம் - 1963

1. கதையாக வெளி வந்து அதன் பின் திரைப்படமாக்கப்பட்ட படம் இருவர் உள்ளம். வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் - கலைஞர் பங்களிப்பில் வந்த படம் இருவர் உள்ளம்.

100 நாட்கள் ஓடிய படம் - இருவர் உள்ளம்.

2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.

சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

திருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75

மதுரை பரமேஸ்வரியில் - 4 வாரம்

3. இந்தியா- சீன போரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் - இரத்த திலகம்.

[html:243770e7b1]
http://www.nadigarthilagam.com/papercuttings/rathathilakam.jpg
[/html:243770e7b1]

முதன் முதலாக தமிழில் போர் பின்னணியில் படமாக்கப்பட்ட படம் - இரத்த திலகம்.

4. முதன் முதலாக கதாநாயக நடிகரின் வீட்டின் பெயரே தலைப்பாக கொண்டு வெளியான படம் - அன்னை இல்லம்

ஓடிய நாட்கள் - 100

அரங்கு

சென்னை - காசினோ

5. மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் (2900 இருக்கைகள்) முதல் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடியது அதுவரை மதுரை மாநகரம் கண்டிராத சாதனையாகும்.

6. முதன் முதலாக மதுரையில் முதல் வார வசூல் அரை லட்சத்தை தாண்டிய சாதனையை செய்ததும் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் படம் தான்.

முதல் வார வசூல் - Rs 51,096/-

முந்தைய வசூல் சாதனையை முறியடித்த சாதனையாகும் இது.

7. நடிகர் திலகத்தின் ஒரு படமே மற்றொரு படத்திற்கு போட்டியாக வரும் என்ற உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கர்ணன் 14.01.1964 அன்று தங்கத்தில் திரையிடப்பட்டதால் அன்னை இல்லம் 60 நாட்களில் ஷிப்ட் செய்யப்பட்டது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
9th October 2008, 12:46 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1964

1. இந்த ஆண்டு மீண்டும் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு.

நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7

அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 6

100 நாட்களை கடந்த படங்கள் - 5

2. முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

3. அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்

கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3

பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி,மஹாராணி - 4

கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லாண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4

புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1

நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லாண்ட், மஹாராணி, உமா, ராம் - 4

4. 1963-ல் வெளியாகி 1964- ம் ஆண்டு சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.

5. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படம் - புதிய பறவை.

6. முதன் முதலாக ஒரு பாடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான்.

பாடல் -எங்கே நிம்மதி

படம் - புதிய பறவை.

7. மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்களை கடந்த படம் - கர்ணன்.

8. முதன் முதலாக தங்கத்தில் ஒரு நாயக நடிகரின் 3 படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை நிகழ்த்தியதும் நடிகர்திலகம் தான். அவை

பராசக்தி - 112 நாட்கள்

படிக்காத மேதை - 116 நாட்கள்

கர்ணன் - 108 நாட்கள்

இன்று வரை இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.

9. மதுரை - தங்கத்தில் கர்ணன் 108 நாட்களில் பெற்ற வசூல் - Rs 1,98,102.99 p.

10. ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.

வெளியான நாள் - 23.11.1978

அரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி

தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50(இது ஒரு சாதனையாகும்)

ஓடிய நாட்கள் - 22

மொத்த வசூல் - Rs 93,280.55 p

ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50

சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

11. முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்

12. மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.

பழைய படங்கள் மறு வெளியீடு என்பதே அரிதாகி போன இந்த காலக்கட்டத்திலே இது ஒரு சாதனை.

13. முதன் முதலாக பன்னிரண்டு வருட இடைவெளியில் 100 படங்களில் அதுவும் நாயகனாகவே நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தான்.

1952 தீபாவளி - பராசக்தி

1964 தீபாவளி - நவராத்திரி

14. முதன் முதலாக இந்திய திரையுலகில் ஒரு நாயகன் ஒரு திரைப்படத்தில் 9 வேடங்கள் ஏற்று நடித்த சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.

படம் - நவராத்திரி.

15. ஒன்பது வேடங்களில் சிறந்த மூன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டு, ஆர்வத்துடன் மக்கள் பங்கு பெற, அவர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் முதன் முதலாக நடிகர் திலகத்தின் நவராத்திரி படத்தின் மூலமாகத்தான்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
9th October 2008, 07:35 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1965

இந்த வருடம் வெளியான படங்கள் - 5

வெள்ளி விழா படம் - 1 - திருவிளையாடல்

100 நாட்கள் ஓடிய படம் - 1 - சாந்தி

இந்த வருடத்தை திருவிளையாடல் வருடம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சாதனைகள் புரிந்த படம் திருவிளையாடல்.

1. முதன் முதலாக 1 கோடிக்கு மேல் வசூல் செய்த புராண படம் - திருவிளையாடல்.

2. முதன் முதலாக தமிழகத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த புராண படம் - திருவிளையாடல்.

3. முதன் முதலாக சென்னையில் 3 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் புராண படம் - திருவிளையாடல்

சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி.

4. மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் 100 நாட்களில் தினம் ஒரு முறை வீதம் 100 முறை பார்த்த ஒரு வயதான பாட்டியம்மாளுக்கு 100-வது நாளன்று பரிசு வழங்கப்பட்டது, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த செய்தியாகும்.

5. மதுரை - ஸ்ரீதேவியில் தொடர்ந்து 81 காட்சிகள் அரங்கு நிறைந்தது - திருவிளையாடல்

மதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 167

மொத்த வசூல் - Rs 3,54,457.53 p

அத்திரையரங்கத்தின் முந்தைய சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது.

6. 1965 வருடம் ஜூலை 31 அன்று வெளியான இந்த படம் 1966 ஜனவரி 13 வரை 167 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பொங்கலுக்கு புதிய படம் வெளியிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 200

7. பல ஆண்டுகளுக்கு பிறகு அதே மதுரை - ஸ்ரீதேவியில் வெளியானபோது செய்த சாதனைகள்

வெளியான நாள் - 20.02.1985

ஓடிய நாட்கள் - 28

மொத்த வசூல் - Rs 2,57,600.80 p

மதுரையில் ஒரு மறு வெளியீட்டின் போது நான்கே வாரத்தில் மிக அதிகமான வசூல் புரிந்த சாதனையும் செய்தது நடிகர் திலகத்தின் திருவிளையாடல் மட்டுமே.

8. முதன் முதலாக தமிழ் படங்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்த பிலிம் பேர் பருவ இதழ் திருவிளையாடல் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகத்திற்கு வழங்கியது.

9. இலங்கை வானொலியில் மிக அதிகமாக ஒலிபரப்பட்ட ஒலிச்சித்திரம் - திருவிளையாடல். 224 தடவை ஒலிப்பரப்பட்டது.

10. அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போன்று சென்னையில் திருவிளையாடல் நிகழ்த்திய சாதனை.

சென்னை அரங்குகள் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி

மொத்தம் ஓடிய நாட்கள் - 537

மொத்த வசூல் - Rs 13,82,002.91 p

பார்த்த மக்கள் - 11,02,567

சென்னையின் முந்தைய ரிக்கார்ட்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

[ஒரு உண்மையை இங்கே சொல்ல வேண்டும். அதே 1965 வருடத்தில் வெளியான மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லப்படுகிற ஒரு பொழுது போக்கு சித்திரத்தின் மொத்த வசூலை, அதை விட 26 நாட்கள் குறைவாக ஓடி முறியடித்த படம் -திருவிளையாடல். அதாவது அந்த படம் சென்னையில் 563 நாட்கள் ஓடி பெற்ற மொத்த வசூலை விட 537 நாட்களில் திருவிளையாடல் பெற்ற மொத்த வசூல் சுமார் அறுபது ஆயிரத்திற்கும் அதிகம்].

11. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் திருவிளையாடல் இந்த வெற்றியை பெற்றது என்பதை உற்று நோக்கினால் அதன் வெற்றியின் பிரம்மாண்டம் புரியும்.

1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சியையும் அதை சேர்ந்தவர்களையும் வெறுக்கும்படி மக்கள் தூண்டி விடப்பட்டிருந்தனர்.

கடவுள் மறுப்பு கொள்கை என்பது தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட நேரம்.

மேற்சொன்னவை பெரும்பாலோருக்கு தெரிந்த விஷயம்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று.

1965 - செப்டெம்பரில் இந்திய - பாகிஸ்தான் போர் மூண்டது. குஜராத்தின் கட்ச் பகுதி வழியாகவும், பஞ்சாபின் வாகா எல்லை வழியாகவும் பாகிஸ்தான் படைகள் அத்து மீறி உள்ளே நுழைந்து நம்மை தாக்கியது. இந்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு நேரங்களில் Black out என்று சொல்லப்படும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறை எல்லா நகரங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் எச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்கள் இந்த முறை இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதும் (முன் இரவுகளிலும், இரவுகளிலும் மக்கள் வெளியே வர தயக்கம் கொண்டிருந்த காலத்தில்) திருவிளையாடல் பெற்ற வெற்றி ஒரு வரலாற்று சாதனையாகும்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
13th October 2008, 11:27 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1966

1. இந்த வருடம் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

2. தமிழ் திரையுலகில் முதன் முதலாக இந்த பட்டதை பெற்ற கதாநாயக நடிகர் நமது நடிகர் திலகம் தான்.

3. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 4

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

மோட்டார் சுந்தரம் பிள்ளை

சரஸ்வதி சபதம்

4. இமேஜ் என்பதை பற்றி கவலைப்படாதவர் நடிகர் திலகம் என்பது மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மூலமாக மீண்டும் நிரூபணமானது.

5. இந்தப் படத்தில் 13 குழந்தைகளுக்கு தகப்பனாய் அதுவும் தன்னுடைய 38-வது வயதிலே நடித்தார் நடிகர் திலகம்.

6. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்தது.

சென்னை - சாந்தி

மதுரை - கல்பனா

(பிற ஊர்களின் தகவல்கள் தற்சமயம் கைவசம் இல்லை).

7. மதுரையில் 05.05.1966 அன்று 100 நாட்களை கொண்டாடிய மோட்டார் சுந்தரம் பிள்ளை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 2 மற்றும் 4 ந் தேதிகளில் 4 காட்சிகளும் 3 ந் தேதி 5 காட்சிகளும் (நள்ளிரவு 2 மணி காட்சி) திரையிடப்பட்டது. இவை அனைத்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது ஒரு புதிய சாதனையாகும்.

8. முதன் முதலாக நடிகர் திலகம் இரட்டை வேடம் ஏற்று நடித்த கலர் படம் - சரஸ்வதி சபதம்

9. ரத்த சம்பந்தமில்லாத இரண்டு கதாபாத்திரங்களை ஒரே நடிகர் ஏற்று நடித்த புதுமையும் இந்த படத்தில் தான் வந்தது.

10. இரட்டை வேடமாயினும் இரண்டிலுமே ஜோடியோ டூயட் பாடலோ இல்லாமல் நடிக்கும் துணிச்சல் நடிகர் திலகத்திற்கு மட்டுமே இருந்தது. [இதை 17 வருடத்திற்கு பிறகு வெள்ளை ரோஜா (1983) மூலமாக மீண்டும் செய்தது காட்டியவர் நடிகர் திலகம்].

11. சரஸ்வதி சபதம் 100 நாட்கள் ஓடிய அரங்குகள்

சென்னை - சாந்தி

மதுரை - ஸ்ரீ தேவி.

(இந்த படத்திற்கும் பிற ஊர்களின் தகவல்கள் தற்சமயம் கைவசம் இல்லை).

12. சாதாரண நாளில் (03.09.1966) வெளியான சரஸ்வதி சபதம் மதுரையில் தீபாவளியையும் தாண்டி பொங்கல் வரை ஓடியது.

மதுரை - ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 132

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
14th October 2008, 11:32 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1967

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 8

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 7

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

கந்தன் கருணை

திருவருட்செல்வர்

இரு மலர்கள்

ஊட்டி வரை உறவு

2. 50 நாட்களை கடந்து ஓடிய படங்கள்

நெஞ்சிருக்கும் வரை

பேசும் தெய்வம்

தங்கை

3. 1967 ஜனவரி 14 பொங்கலன்று வெளியான கந்தன் கருணை மதுரை நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 125

4. மதுரை - நியூ சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய புராண படம் - கந்தன் கருணை.

5. முதன் முதலாக தமிழில் ஒரு கதாநாயக நடிகர் ஒரு படம் முழுக்க மேக் அப் இல்லாமல் நடித்த சாதனையை செய்ததும் நடிகர் திலகம் தான்.

படம் - நெஞ்சிருக்கும் வரை.

6. நமது நடிகர் திலகமும் மலையாளத்தின் சிவாஜி என்றழைக்கப்பட்ட சத்யனும் முதலாகவும் இறுதியாகவும் இணைந்து நடித்த ஒரே படம் - பேசும் தெய்வம்.

7. எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் நடிகர் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்தது - 1967.

8. தொடர்ந்து வெளியான மூன்று படங்களும் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள்.

திருவருட்செல்வர்

இரு மலர்கள்

ஊட்டி வரை உறவு

இப்படி தொடர் வெற்றிகளை தொடர்ந்து பல முறை சாதித்து காட்டிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

9. ஒரே நாளில் (01.11.1967- தீபாவளி திருநாள்) வெளியான ஒரே நடிகரின் இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடிய முதன் முதல் சாதனை ஒரு பிரமிப்பான நிகழ்வாக அமைந்தது.

படங்கள்

ஊட்டி வரை உறவு

சென்னை - சாந்தி

மதுரை -சென்ட்ரல்

இரு மலர்கள்

சென்னை -வெலிங்டன்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
15th October 2008, 11:57 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1967

1. நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை தயாரித்த பாலாஜி (17 படங்கள்) முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த படம் - தங்கை.

2. அது போல் நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை இயக்கிய திருலோக்சந்தர் (20 படங்கள்) முதன் முதலாக இயக்கிய படம் - தங்கை.

வருடம் - 1968

இந்த வருடம் வெளியான படங்கள் - 8

1. 100 நாட்களை கடந்த படங்கள் - 4

கலாட்டா கல்யாணம்

என் தம்பி

தில்லானா மோகனாம்பாள்

உயர்ந்த மனிதன்

2. 75 நாட்களை கடந்த படங்கள் - 2

திருமால் பெருமை

எங்க ஊர் ராஜா
[html:6ac876c34f]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/eorajaprerelease.jpg">

[/html:6ac876c34f]


3. 50 நாட்களை கடந்த படம் - 1

லட்சுமி கல்யாணம்.

4. முதன் முதலாக சி.வி.ராஜேந்திரன் நடிகர் திலகத்தை இயக்கிய படம் - கலாட்டா கல்யாணம்.

5. டூயட் பாடல் காட்சிகளோ, தனி பாடலோ இல்லாமல் மிக பெரிய வெற்றிப்படத்தை தன்னால் தர முடியும் என்பதை நடிகர் திலகம் நிரூபித்த படம் - தில்லானா மோகனாம்பாள்.

[html:6ac876c34f]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/thillanarunning.jpg">

[/html:6ac876c34f]

மதுரை சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 132

மொத்த வசூல் - Rs 3,47,167.13 p

[இது சிந்தாமணியில் அதே இத்தனை நாட்கள் (132) ஓடிய எந்த படத்தின் வசூலை விடவும் அதிகம்].

6. நடிகர் திலகத்தின் அதிகமான படங்களை இயக்கியவரில் ஒருவரான பி.மாதவன் முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய படம் - எங்க ஊர் ராஜா.

நிறுவனம் - அருண் பிரசாத் மூவிஸ்.

7. உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதும் ஜோடியோ டூயட் பாடலோ இல்லாமல் நடிக்கும் துணிச்சலை மீண்டும் வெளிப்படுத்தினார் நடிகர் திலகம். படம் - லட்சுமி கல்யாணம்.

8. 16 ஆண்டுகளில் 125 படங்கள். அனைத்திலும் நாயகனாக. மீண்டும் ஒரு முதன் முதல் சாதனையை நிகழ்த்தினார் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் 125-வது படம் - உயர்ந்த மனிதன்.

17.10.1952 - பராசக்தி

29.11.1968 - உயர்ந்த மனிதன்

9. கதாநாயகனின் முதல் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் அதே நாயகனின் 125-வது படத்திற்கும் இணைந்தது தமிழ் பட உலகில் முதன் முதல் மட்டுமல்ல, இன்று வரை முறியடிக்க முடியாததும் கூட.

தயாரிப்பாளர் - ஏவிஎம்

இயக்குனர்கள் - கிருஷ்ணன் பஞ்சு

நாயகன் - நடிகர் திலகம்

படம் - உயர்ந்த மனிதன்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
17th October 2008, 12:02 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1969

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 9

100 நாட்களை கடந்த படங்கள் - 3

தெய்வ மகன்

திருடன்

சிவந்த மண்

2. 50 நாட்களை கடந்து 75 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 3

அன்பளிப்பு

தங்கசுரங்கம்

நிறைகுடம்

3. முதன் முதலாக நடிகர் திலகத்தோடு ஜெய்சங்கர் இணைந்து நடித்த படம் - அன்பளிப்பு.

4. முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி தனியாக இசையமைத்த படம் - தங்கசுரங்கம்.

5. குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களுக்கு உதவும் பொருட்டு ஊதியமே பெற்றுக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடித்து கொடுத்த படம் - காவல் தெய்வம்.

6. இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருதிற்கு அனுப்பப்படும் படங்களில் முதன் முதலாக ஒரு தமிழ் படமும் பரிந்துரை செய்யப்பட்ட சாதனை புரிந்ததும் நடிகர் திலகத்தின் படமான தெய்வ மகன் தான்,

சிவந்த மண் படத்திற்கு தனியாகவே ஒரு சாதனை பட்டியல் எழுதலாம்.

7. முதன் முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - சிவந்த மண்.

8. மிக அதிகமான இசை கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் சிவந்த மண் படத்தில் வந்த பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல்.

9. மிக அதிகமான ஊர்களில் வெளியான நாள் முதல் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய சாதனையை புரிந்தது சிவந்த மண்.

தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் பட்டியல்

சென்னை

குளோப் - 125 காட்சிகள்

அகஸ்தியா - 117 காட்சிகள்

மதுரை - சென்ட்ரல் - 101 காட்சிகள்

கோவை -ராயல் - 103 காட்சிகள்

திருச்சி - ராஜா - 104 காட்சிகள்

பட்டுகோட்டை - நீலா - 102 காட்சிகள்

10. 100 நாட்களை கடந்து ஓடிய ஊர் மற்றும் அரங்குகள்

சென்னை

குளோப் - 145 நாட்கள்

அகஸ்தியா - 117 நாட்கள்

மேகலா- 103 நாட்கள்

நூர்ஜகான் - 103 நாட்கள்

மதுரை - சென்ட்ரல் - 117 நாட்கள்

கோவை -ராயல் - 103 நாட்கள்

திருச்சி - ராஜா - 103 நாட்கள்

சேலம் - ஓரியண்டல் - 110 நாட்கள்

தூத்துக்குடி - பாலகிருஷ்ணா - 101 நாட்கள்

11. முதன் முதலாக தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓடிய படம் - சிவந்த மண்.

12. சென்னையில் மொத்த வசூல் - Rs 12,32,970. 21 p

சென்னையில் மொத்தம் ஓடிய நாட்களின் (468) கணக்குப்படி அந்த நாட்களுக்கு அதிகமான வசூலை பெற்ற படம் - சிவந்த மண்.

13. மதுரையில் பெற்ற வசூல் - Rs 3,37, 134.95 p

சென்ட்ரல் திரையரங்கில் 117 நாட்களுக்கு மிக அதிகமான வசூலை பெற்ற படம் சிவந்த மண்.

14. கோவையில் பெற்ற வசூல் - Rs 3,56, 453.59 p

சிவந்த மண் 50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய ஊர்கள் - 22.

15. நடிகர் திலகம் கௌரவ வேடத்தை ஏற்க (தமிழில் முத்துராமன் செய்தது) இந்தியிலும் தர்த்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வட நாட்டில் 8 ஊர்களில் 200 நாட்களை கடந்தது.

16. பல மறு வெளியிட்டிற்கு பின் மதுரையில் 22. 07. 1977 அன்று சிந்தாமணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவந்த மண் ஓடிய நாட்கள் - 23.

17. இரண்டு வருடங்களுக்கு பின் 08.06.1979 அன்று மீண்டும் மதுரை ஸ்ரீ தேவியில் திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

18. நீண்ட இடைவேளைக்கு பின் 15.08.1985 அன்று மதுரை சிந்தாமணியில் திரையிடப்பட்ட தங்கசுரங்கம் ஓடிய நாட்கள் - 21

19. 1990-ம் ஆண்டு பெங்களுர் நகரில் சங்கீத் திரையரங்கில் திரையிடப்பட்ட தெய்வமகன் ஓடிய நாட்கள் - 21 (நன்றி செந்தில்)


(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
18th October 2008, 12:02 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1970

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 8

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

வியட்நாம் வீடு

ராமன் எத்தனை ராமனடி

எங்கிருந்தோ வந்தாள்

சொர்க்கம்

[html:682a6df8ab]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/sorkkamprereleaseBommai.jpg">

[/html:682a6df8ab]

2. 50 நாட்களை கடந்து 85 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 3

எங்க மாமா

விளையாட்டுப் பிள்ளை (84 நாட்கள்)

எதிரொலி

3. முதன் முதலாக மதுரையில் பதினைந்தே நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்த படம் - எங்க மாமா.

அரங்கம் - தங்கம்

4. முதன் முதலாக மதுரையில் ஒரு கருப்பு வெள்ளை படம் தொடர்ந்து நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த சாதனையை புரிந்தது நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - வியட்நாம் வீடு

அரங்கம் - ஸ்ரீ தேவி

தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 106

5. கோவை மாநகரில் அதிகமாக ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்ட சென்ட்ரல் திரையரங்கில் சாதனை புரிந்தது வியட்நாம் வீடு.

தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகள் - 105.

[NOV & Rakesh, the following info is for you]

6. முதன் முதலாக மலேசியாவில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - வியட்நாம் வீடு.

7. நடிகர் திலகமும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் முதலாகவும் இறுதியாகவும் இணைந்த எதிரொலி இந்த ஆண்டு தான் வெளியானது.

8. மதுரையில் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை படைத்தார் நடிகர் திலகம். இரண்டு மாத இடைவெளியில் தொடர்ந்து வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்தன.

ராமன் எத்தனை ராமனடி - 15.08.1970 - 104 நாட்கள்

எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 101 நாட்கள்

சொர்க்கம் - 29.10.1970 - 100 நாட்கள்

9. முதன் முதல் என்பது மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையையும் நடிகர் திலகம் புரிந்த ஆண்டு - 1970.

1967-ல் ஒரே நாளில் (தீபாவளி) வெளியான ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் 100 நாட்களை கடந்தது போல இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் (1970) தீபாவளியன்று வெளியான எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் என்ற இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியது.

10. நடிகர் திலகத்தின் இந்த இரண்டு படங்களுமே சென்னை,மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நான்கு ஊர்களிலுமே 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வந்தாலும் முடியாது.

11. இரண்டு படங்களின் 100 -வது நாள் விழாவும் ஒரே மேடையில் நடைபெற்ற முதன் முதல் சாதனையும் நடிகர் திலகம் மூலமாகவே அரங்கேறியது.

12. இந்த வருடம் அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் நடிகர் திலகத்தின் 42- வது பிறந்த நாளை முன்னிட்டு முதன் முதலாக அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக சேலத்தில் இரண்டு நாள் மாநாடு நடை பெற்றது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
21st October 2008, 12:13 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1971

1. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 10

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

குலமா குணமா

சவாலே சமாளி

பாபு

2. 50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 5

இரு துருவம்

தங்கைக்காக

அருணோதயம்

சுமதி என் சுந்தரி

மூன்று தெய்வங்கள்

3. மூன்று மாத இடைவெளியில் ஆறு படங்கள் திரையிடப்பட்டும் கூட அதில் நான்கு படங்கள் 50 நாட்களை கடந்ததும் ஒரு படம் 100 நாட்கள் கொண்டாடியதும் நடிகர் திலகத்தால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை.

இரு துருவம் - 14.01.1971 - 50 நாட்கள்

தங்கைக்காக - 06.02.1971 - 50 + நாட்கள்

அருணோதயம் - 05.03.1971 - 50 + நாட்கள்

குலமா குணமா - 26.03.1971 - 100 நாட்கள்

சுமதி என் சுந்தரி - 14.04.1971 - 80 நாட்கள்

பிராப்தம் - 14.04.1971

4. ஒரே நேரத்தில் சென்னை திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் ஐந்து படங்கள் ஓடிய சாதனை இந்த வருடம் (1971) மீண்டும் அரங்கேறியது.

தங்கைக்காக - சாந்தி

அருணோதயம் - வெலிங்டன்

குலமா குணமா - பிளாசா

சுமதி என் சுந்தரி - சித்ரா
[html:c67c94bf84]
http://www.nadigarthilagam.com/papercuttings/sesundari.jpg

[/html:c67c94bf84]

பிராப்தம் - மிட்லண்ட்

5. 19 வருடங்களில் 150 படங்கள் அதுவும் நாயகனாகவே. ஆம் நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி இந்த வருடம் தான் வெளியானது.

பராசக்தி - 17.10.1952

சவாலே சமாளி - 03.07.1971

6. சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற ஊர்களில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது சவாலே சமாளி.

7. மீண்டும், ஜோடி - டூயட் பாடல் இத்யாதி இத்யாதி எதுவும் இல்லாமல் ஒரு வெற்றிப் படத்தை [விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த] தன்னால் (மட்டுமே) கொடுக்க முடியும் என்பதை நடிகர் திலகம் நிரூபித்த படம் - மூன்று தெய்வங்கள்.

8. 1971-ம் வருட தீபாவளிக்கு வெளியான பாபு தீபாவளி படங்களிலே பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது.

9. முதன் முதலாக தமிழகத்தில் வெளியான அதே நாளில் சிங்கப்பூரிலும் வெளியான தமிழ் படம் - பாபு.

10. இந்த ஆண்டைப் பொருத்த வரை மதுரை மாநகரம் குறிப்பாக மதுரையின் ஸ்ரீதேவி திரையரங்கம் தமிழ் சினிமா சரித்திரத்தில் தன் பெயரை பொறித்துக் கொண்ட வருடம். [இரண்டு வருடங்களுக்கு முன்பே இதை பற்றி நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்]

ஒரு திரையரங்கில், 15 மாதங்கள், கிட்டத்தட்ட 450 நாட்கள் அதிலும் ஒரு காலண்டர் வருடத்தின் (1971 Jan 1st to Dec 31st) அனைத்து நாட்களுமே (365), ஒரே நடிகரின் படங்கள் மட்டுமே ஓடிய சாதனை இதற்கு முன்பும் பின்பும் திரையுலகம் கண்டதில்லை. அந்த பட்டியல் இதோ

எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 to 05.02.1971- 100 நாட்கள்

தங்கைக்காக - 06.02.1971 to 25.03.1971 - 48 நாட்கள்

குலமா குணமா - 26.03.1971 to 03.07.1971 - 100 நாட்கள்

சவாலே சமாளி - 03.07.1971 to 17.10.1971 - 107 நாட்கள்

பாபு - 18.10.1971 to 14.01.1972 - 89 நாட்கள்

மொத்தம் - 444 நாட்கள்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
21st October 2008, 11:59 PM
சிகரம் தொட்ட நடிகர் திலகம் - முறியடிக்க முடியாத சாதனைகள்

தொடர்ச்சி

வருடம் - 1972

நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஆண்டு.

நடிகர் திலகம் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறிய ஆண்டு.

ஹீரோ - 72 என்பதே நடிகர் திலகத்தின் ஒரு படத்திற்கு பெயராக சூட்டப்பட்ட ஆண்டு.

இந்த வருடம் வெளியான படங்கள் - 7

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 6

வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் - 2

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் ஒரு தனி கதாநாயகனின் ஆறு படங்கள் வெற்றி பெற்ற சரித்திரம் [தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்] இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

1. ராஜா - 26.01.1972

இந்த வருடத்தின் முதல் படம் மட்டுமல்ல. முதல் 100 நாள் படமும் கூட.

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 107

107 ஹவுஸ் புல் காட்சிகளின் வசூல் - Rs 3,13,124.80 p

[html:db716cb660]
http://www.nadigarthilagam.com/papercuttings2/raja107hf.jpg

[/html:db716cb660]

[தேவி பாரடைஸ் அரங்கில் 35 நாட்களில் பெற்ற இந்த வசூல் ஒரு புதிய சாதனை]

மதுரை சென்ட்ரலில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 78

சென்னையில் 100 நாட்களை கடந்து ஓடிய திரையரங்குகள் - 3

தேவி பாரடைஸ்

அகஸ்தியா

ராக்சி

மற்றும்

மதுரை - சென்ட்ரல்

திருச்சி, சேலம், கோவை போன்ற ஊர்களிலும் 100 நாட்களை கடந்தது.

2. ஞான ஒளி - 11.03.1972

தொடர்ந்து இரண்டாவது 100 நாள் படம்.

சென்னையில் ஐந்து திரையரங்குகளில் வெளியான படம்

அனைத்திலுமே 75 நாட்களை கடந்து ஓடிய படம்

சென்னை சபாக்கள் சார்பாக மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டு அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது முதன் முதலாக சென்னை நகரம் கண்ட சாதனை.

சென்னையில் 100 நாட்களை கடந்த அரங்கம்

பிளாசா

மதுரை - நியூ சினிமா- வில் 90 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் ஒரு விநியோகஸ்தரின் பிடிவாதம் காரணமாக மாற்றப்பட்டு ஷிப்டிங்கில் 125 நாட்களை தாண்டியது.

3. பட்டிக்காடா பட்டணமா - 06.05.1972

தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து கருப்பு வெள்ளை படங்களில் உச்ச கட்ட வெற்றி பெற்ற படம்.

இன்று வரை தமிழின் எந்த கருப்பு வெள்ளை படமும் பெறாத வசூலை பெற்ற படம் - பட்டிக்காடா பட்டணமா

இந்த வருடத்தின் தொடர்ந்து மூன்றாவது 100 நாட்கள் படம்

இந்த வருடத்தின் முதல் வெள்ளி விழா படம்

சென்னை மாநகரிலே தொடர்ந்து வெளியான ஒரே நடிகரின் நான்கு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

பாபு

ராஜா

ஞான ஒளி

பட்டிக்காடா பட்டணமா

இந்த நான்கு படங்களும் சென்னையின் ஒன்பது திரையரங்குகளில் இந்த சாதனை புரிந்தது இன்று வரை பிரேக் பண்ண முடியாத ரிகார்ட்

பாபு - சாந்தி, கிரவுன்

ராஜா - தேவி பாரடைஸ், அகஸ்தியா, ராக்சி

ஞான ஒளி - பிளாசா

பட்டிக்காடா பட்டணமா - சாந்தி,கிரவுன்,புவனேஸ்வரி.

மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 139.

[அதாவது தொடர்ந்து 39 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].

மதுரையில் ஓடிய நாட்கள் - 182

மதுரையில் முதன் முதலில் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூல் செய்த படம் இது தான்.

மொத்த வசூல் - Rs 5,61, 495.20 p

வரி நீக்கிய வசூல் - Rs 3,10, 449.02 p

விநியோகஸ்தர் பங்கு - Rs 1,59, 429. 62 p.

மதுரையில் ஒரு சில படங்கள் 175 நாட்களில் பெற்ற வசூலை வெறும் 100 நாட்களிலே கடந்து புதிய சாதனை படைத்த படம் - பட்டிக்காடா பட்டணமா.

மதுரையில் ஏன் தமிழகத்திலேயே அதிகமான வசூல் செய்த கருப்பு வெள்ளை படமும் இது தான்.

சென்ட்ரல் திரையரங்கில் மிக அதிகமான நாட்கள் (182) ஓடிய படமும் இது தான்.

மதுரை மாநகரில் ஷிப்டிங்கில் ஒரு வருடம் ஓடிய முதல் தமிழ் படமும் இது தான்.

06.05.1972 அன்று வெளியான இந்த படம் 05.05.1973 அன்று ஒரு வருடத்தை நிறைவு செய்தது.

நிறைவு செய்த அரங்கு - இம்பீரியல்.

பரமகுடியில் முதன் முதலாக 50 நாட்களை கடந்த படம் பட்டிக்காடா பட்டணமா

அரங்கு - கிருஷ்ணா.

இந்த பொன் வருடத்தின் (1972) சாதனைகள் தொடரும்

அன்புடன்

Murali Srinivas
23rd October 2008, 12:07 AM
சிகரம் தொட்ட நடிகர் திலகம் - முறியடிக்க முடியாத சாதனைகள்

1972 -ம் வருட தொடர்ச்சி

4. தர்மம் எங்கே - 15.07.1972

இந்த வருடத்தில் வெளியாகி 100 நாட்கள் என்ற வெற்றி கோட்டை தொட முடியாமல் போன ஒரே படம்.

மதுரை -ஸ்ரீதேவியில் முதல் 16 நாட்களில் நடைபெற்ற 55 காட்சிகளில் 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

மதுரை -ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 50

5. தவப்புதல்வன் - 26.08.1972

இந்த வருடத்தின் நான்காவது 100 நாட்கள் படம்.

100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை சகாப்தத்தின் கடைசி அத்யாயம் [இந்த படத்திற்கு பிறகு அவர் மூன்று கருப்பு வெள்ளை படங்கள் மட்டுமே நடித்தார். அதில் ஒன்று கௌரவ தோற்றம்].

ஆங்கில படங்களே திரையிடப்பட்ட சென்னை பைலட் திரையரங்கில் வெளியாகி 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - தவப்புதல்வன்.

இதன் பின்னணியை பார்த்தால் பட்டிக்காடா பட்டணமா ஓடிக்கொண்டிருக்கும் போதே அதை தாண்டி, வசந்த மாளிகையின் வெற்றி வீச்சையும் சமாளித்து, தமிழகத்தில் அன்று நிலவிய அசாதாரண சூழ்நிலையையும் மீறி, தீபாவளியையும் தாண்டி 100 நாட்கள் ஓடியது என்றால் நடிகர் திலகத்தின் Boxoffice Power என்ன என்பது புரியும்.

மதுரை - சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 70

6. வசந்த மாளிகை - 29.09.1972

என்றென்றும் புகழ் மங்கா திரை ஓவியம். ரசிகர்களின் நெஞ்சங்களில் காவியம்.

இந்த வருடத்தின் ஐந்தாவது 100 நாட்கள் படம்

[html:5026924772]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/vm100days.jpg">

[/html:5026924772]

இந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படம்

இந்த காலண்டர் வருடத்தின் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய மூன்றாவது படம்.

ராஜா

பட்டிக்காடா பட்டணமா

வசந்த மாளிகை

மதுரை - நியூ சினிமாவில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 113.

[அதாவது முதல் 33 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].

மதுரை நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 200

மதுரை நியூ சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் வசந்த மாளிகை.

200 நாட்களின் மொத்த வசூல் - Rs 5,30,536.15 p

வரி நீக்கி நிகர வசூல் - Rs 2,92,183.53 p

விநியோகஸ்தர் பங்கு - Rs 1,59,098.63 p

மதுரை - நியூ சினிமாவில் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூல் பெற்ற முதல் படம் வசந்த மாளிகை.

மதுரை நியூ சினிமாவில் அதற்கு முன் அதிக வசூல் பெற்ற படத்தை விட குறைவான நாட்களில் அந்த வசூலை தாண்டிய படம் - வசந்த மாளிகை.

மதுரையில் ஒரே காலண்டர் வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை இரண்டாவது முறையாக நடத்தி காட்டினார் நடிகர் திலகம்.

வருடம் - 1959

கட்டபொம்மன் - நியூ சினிமா

பாகப்பிரிவினை - சிந்தாமணி

வருடம் - 1972

பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல்

வசந்த மாளிகை - நியூ சினிமா

மற்றவர்கள் மதுரையில் ஒரு முறை போலும் செய்ய முடியாத இந்த சாதனையை மூன்று முறை செய்தவர் நடிகர் திலகம் மட்டுமே. [மூன்றாவது முறையின் சாதனை அது நடைபெற்ற ஆண்டு வரும் போது வெளியாகும்]

மதுரை தவிர வெள்ளி விழா கொண்டாடிய இடம் - சென்னை

அரங்கு - சாந்தி

ஓடிய நாட்கள் - 176

[இதுவும் கூட நடிகர் திலகத்தின் அடுத்த படமான பாரத விலாஸ் திரையிடப்படுவதற்காக மாற்றப்பட்டது].

மதுரையில் 200 நாட்கள் ஓடிய இந்த படம் ஷிப்டிங்கில் 250 நாட்களை கடந்தது.

இது வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது[1973 பிப்-மார்ச் மாதங்கள்] தமிழகத்தில் 100% கடுமையான மின் வெட்டு [இன்றைய இதே அரசு தான் அன்றும்]. திரையரங்குகள் முழுக்க முழுக்க ஜெனரேட்டரை வைத்து ஓட்ட வேண்டிய சூழல். அரங்குகள் இதன் காரணமாக காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை. அப்படி இருந்தும் அதையும் மீறி இமலாய வெற்றி பெற்ற படம் - வசந்த மாளிகை.

7. நீதி - 07.12.1972

இந்த வருடத்தின் கடைசியாக வெளியான படம்

இந்த வருடத்தின் ஆறாவது 100 நாட்கள் படம்.

அதே நாயகன் -நாயகி - தயாரிப்பாளர் -இயக்குனர் - அதே யூனிட் என்று ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே 100 நாட்கள் ஓடிய சாதனையை புரிந்ததும் நடிகர் திலகம் தான்.

ராஜா

நீதி

100 நாட்கள் ஓடிய இடங்கள்

சேலம்

சென்னை - தேவி பாரடைஸ் [99 நாட்கள்]

ஒரே வருடத்தில் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.

தவப்புதல்வன்

வசந்த மாளிகை

நீதி

இந்த பொன் வருடத்தின் (1972) மேலும் சில சாதனைகளை நாளை பார்ப்போம்.

அன்புடன்

Murali Srinivas
24th October 2008, 12:15 AM
1972 வருட சாதனைகள் தொடர்ச்சி

இந்த வருடம் வெளியான படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் சாதனை புரிந்தன.

இதில் ராஜா, பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை போன்றவை பெங்களூர்,மைசூர் மற்றும் கேரளத்திலும் பெரிய வெற்றி பெற்றது.

வசந்த மாளிகையின் முடிவு கேரளத்தில் சோகமாக அமைக்கப்பட்டது. அதாவது கேரள மக்களின் ரசனைகேற்ப, நாயகன் விஷம் குடித்து இறந்து விடுவது போல் அமைக்கப்பட்டது. அது அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, தமிழ் பட வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இரண்டு மாநிலங்களுக்கு இரண்டு முடிவுகள் அமைக்கப்பட்டு அவை இரண்டுமே இரு மாநில மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையை முதன் முதலாக செய்ததும் நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை தான்.

வெளி நாடு

இலங்கையில் முதன் முதலாக திரையரங்கு வாசலில் ஒரு நடிகரின் சுழலும் கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்தின் ராஜா படத்திற்கு தான்.

இலங்கையில் வசந்த மாளிகை பெற்ற வெற்றியை அதற்கு முன் எந்த தமிழ் படமும் பெற்றதில்லை.

இலங்கையில் மூன்று அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் ஓடிய நாட்கள் மற்றும் அரங்குகள்

கொழும்பு - கேபிடல் - 287 நாட்கள்

கொழும்பு - பிளாசா - 176 நாட்கள்

யாழ்பாணம் - வெலிங்டன் - 250 நாட்கள்

யாழ்பாணம் - லிடோ - 100 நாட்கள்

யாழ் - வெலிங்டனில் கட்டுக்கடங்காத கூட்டம். அதற்காக லிடோ அரங்கிலும் திரையிடப்பட்டது.ஒரு அரங்கில் காலை காட்சி 10 மணிக்கு ஆரம்பமானால் மறு அரங்கில் 10.15 மணிக்கு தொடங்கும். இப்படி 15 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு ரீலாக டாக்சி மூலமாக ஒரு அரங்கிலிருந்து மற்றொரு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இப்படி யாழ் நகரில் 100 நாட்கள் வரை 4 காட்சிகளாக ஓடியது. அன்று வரை இலங்கை காணாத சாதனையாகும்.[ நன்றி யாழ் சுதாகர்].

இது இலங்கையில் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றது என்றால் இந்த பாடத்தின் பாடல்கள் இலங்கை வானொலியின் தமிழ் சேவையில் ஒலிப்பரப்பட்ட போது படத்தின் பெயரே கூறப்படாமல் பாடல் ஒலிப்பரப்பட்டது. அந்த அளவுக்கு படம் மிக பெரிய வெற்றி.

மறு வெளியீடிற்கு என்றே பிறவி எடுத்த படம் - வசந்த மாளிகை. அனேகமாக எல்லா வருடமும் மதுரையில் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வெளியான போது மக்கள் மீண்டும் மீண்டும் பெரிய வரவேற்பு நல்கி ஆதரித்தார்கள்.

பெங்களூரில் - 1984 ம் வருடம் மறு வெளியீட்டின் போது அருணா திரையரங்கில் ஓடிய நாட்கள் - 14 [ நன்றி செந்தில்].

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
24th October 2008, 11:37 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1973

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

100 நாட்களை கடந்த படங்கள் - 5

பாரத விலாஸ்

ராஜ ராஜ சோழன்
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/rrcprerelease.jpg">

[/html:cbcf007953]

எங்கள் தங்க ராஜா

கெளரவம்

ராஜபார்ட் ரங்கதுரை

50 நாட்களை கடந்து ஓடிய படம்

பொன்னூஞ்சல்

2. மற்றவர்கள் திக்கி திணறிய ஒரு கால கட்டத்தில், மீண்டும் ஒரே காலண்டர் வருடத்தில் ஐந்து படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை நடிகர் திலகம் சர்வ சாதாரணமாக செய்து காட்டினார்.

3. 1971- ம் வருட இறுதியில் வெளி வந்த பாபு முதல் 1973- ம் வருட இறுதியில் வெளியான ராஜபார்ட் வரை

வெளியான படங்கள் - 15

அதில் வெள்ளி விழா படங்கள் - 2

100 நாட்களை கடந்த படங்கள் - 10

50 நாட்களை கடந்த படங்கள் - 2

[மீதம் உள்ள ஒரே படமும் நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் வந்தது - மனிதருள் மாணிக்கம்].

அந்த பட்டியல்

பாபு - 18.10.1971 - 102 நாட்கள்

ராஜா - 26.01.1972 -106 நாட்கள்

ஞான ஒளி - 11.03.1972 - 111 நாட்கள்

பட்டிக்காடா பட்டணமா - 06.05.1972 - 182 நாட்கள்

தர்மம் எங்கே - 15.07.1972 - 50 நாட்கள்

தவப்புதல்வன் - 26.08.1972 - 112 நாட்கள்

வசந்த மாளிகை - 29.09.1972 - 200 நாட்கள்

[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/vmsilver.jpg">

[/html:cbcf007953]

நீதி - 07.12.1972 - 100 நாட்கள்

பாரத விலாஸ் - 24.03.1973 - 112 நாட்கள்

[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings2/bharathavilas55.jpg">

[/html:cbcf007953]

ராஜ ராஜ சோழன் - 31.03.1973 - 103 நாட்கள்.

பொன்னூஞ்சல் - 15.06.1973 - 63 நாட்கள்

எங்கள் தங்க ராஜா - 14.07.1973 - 103 நாட்கள்

கெளரவம் - 25.10.1973 - 106 நாட்கள்

மனிதருள் மாணிக்கம் - 07.12.1973

ராஜபார்ட் ரங்கதுரை - 22.12.1973 - 104 நாட்கள்.

இப்படி இரண்டே வருட இடைவெளியில் தொடர்ந்து தொட்டதெல்லாம் பொன்னாக்கிய சாதனையை தமிழ் பட உலகில் செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.

4. முதன் முதலாக இந்திய அரசாங்கமே ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய சாதனை நடிகர் திலகத்தின் பாரத விலாஸ் மூலமாக அரங்கேறியது.

இந்த படம் வெளியான நாள் - 24.03.1973

5. 100 நாட்களை கடந்த இடங்கள்

சென்னை - சாந்தி, கிரவுன்

மதுரை - சென்ட்ரல்

திருச்சி

சேலம்

6. தமிழில் முதன் முதலாக சினிமாஸ்கோப்பில் வெளியான படம் - ராஜ ராஜ சோழன்
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/rrsozhan.jpg">

[/html:cbcf007953]

இந்த படம் வெளியான நாள் - 31.03.1973

எங்கள் தங்க ராஜா - 14.07.1973

[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/etrrunning.jpg">

[/html:cbcf007953]

7. மதுரை - நியூ சினிமாவில் எங்கள் தங்க ராஜா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 106

8. எங்கள் தங்க ராஜா மதுரை - நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 103.

100 நாட்களை கடந்த பிற இடங்கள்

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி

திருச்சி- பிரபாத்

சேலம்

கோவை

நாகர்கோவில் - ராஜேஷ்

9. நாகர்கோவில் ராஜேஷில் முதன் முதலாக 100 நாட்களை கடந்து ஓடிய படம் - எங்கள் தங்க ராஜா.

கெளரவம் - 25.10.1973

10. மதுரை சிந்தாமணியில் கெளரவம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 101

11. சென்னை சாந்தியில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து ஓடிய கெளரவம் 50 நாட்கள் வரை தினசரி மாலை காட்சி ஹவுஸ் புல் ஆனது.

12. குவைத் நாட்டில் முதன் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் கெளரவம்.

13. கெளரவம் 100 நாட்களை கடந்த அரங்குகள்

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி

மதுரை - சிந்தாமணி

திருச்சி

கோவை

ராஜபார்ட் ரங்கதுரை - 22.12.1973

14. மருத நாட்டு வீரனுக்கு பிறகு நடிகர் திலகம் 14 கெட்அப்- களில் தோன்றிய படம் ராஜபார்ட் ரங்கதுரை

[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings2/rrdurai200hf.jpg">

[/html:cbcf007953]

15. தேசிய பற்றுணர்வு நிறைந்த இந்த படம், திரைப்படமே பார்க்காத பெருந்தலைவர் அவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது

16. பைலட் திரையரங்கில் நடிகர் திலகத்தின் இரண்டாவது 100 நாட்கள் படம் ராஜபார்ட் ரங்கதுரை.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

PS: Rakesh, நீங்கள் பிறந்த இந்த வருடத்திற்கு இந்த சாதனைகள போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Murali Srinivas
29th October 2008, 11:02 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1974

இந்த வருடம் வெளியான படங்கள் - 6

1. வெள்ளி விழா படம் - 1

தங்கப்பதக்கம்

[html:120f2ea890]
http://www.nadigarthilagam.com/papercuttings3/thangapadakkamrunning.jpg

[/html:120f2ea890]

100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படங்கள் - 2

வாணி ராணி

[html:120f2ea890]
http://www.nadigarthilagam.com/papercuttings/vanirani.jpg

[/html:120f2ea890]

என் மகன்

50 நாட்களை கடந்து ஓடிய திரைப்படங்கள் - 2

சிவகாமியின் செல்வன்

அன்பை தேடி

2. மதுரையில் முதன் முதலாக ஓபனிங் ஷோ காலையில் ஏழு மணிக்கு தொடங்கிய சாதனையை நிகழ்த்தியவர் நடிகர் திலகம்.

படம் - சிவகாமியின் செல்வன்

நாள் - 26.01.1974

அரங்கு - ஸ்ரீ தேவி

3. மதுரை ஸ்ரீதேவியில் சிவகாமியின் செல்வன் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 104.

[அதாவது முதல் 31 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].

மதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 69

4. மீண்டும் மதுரையில் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை இந்த வருடமும் செய்து காட்டினார் நடிகர் திலகம்.

வாணி ராணி - 12.04.1974 - நியூசினிமா - 112 நாட்கள்

தங்கப்பதக்கம் - 01.06.1974 - சென்ட்ரல் - 134 நாட்கள்

என் மகன் - 21.08.1974 - நியூசினிமா - 101 நாட்கள்

5. சிவாஜி நாடக மன்றம் மூலமாக முதலில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு பின்னர் திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய ஹாட்ரிக் சாதனையை புரிந்தார் நடிகர் திலகம்.

கட்டபொம்மன்

வியட்நாம் வீடு

தங்கப்பதக்கம்

6. இவற்றோடு ஞான ஒளி மற்றும் கெளரவம் ஆகியவற்றையும் சேர்த்தால் அதிகமான நாடகங்கள் திரைப்படமாக வெற்றி பெற்றது நடிகர் திலகத்தின் படங்கள் மூலமாக தான் என்பது தெளிவு.

7. தமிழகத்தில் முதன் முதலாக 1 3/4 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் - தங்கப்பதக்கம்.

8. தமிழ் நாட்டில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் - 9

சென்னை

மதுரை

திருச்சி

கோவை

சேலம்

நெல்லை

தஞ்சை
[மற்றும் சில]

9. 25 வாரங்களை (வெள்ளி விழாவினை) கடந்து ஓடிய இடங்கள்

சென்னை

சாந்தி
கிரௌன்
புவனேஸ்வரி

திருச்சி - பிரபாத்

நடிகர் திலகத்தின் சாதனையை மீண்டும் நடிகர் திலகமே முறியடிப்பார் என்பதை நிரூபித்த படம் - தங்கப்பதக்கம்.

10. மதுரை - சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா ஏற்படுத்திய சாதனையை முறியடித்து புதிய சாதனை புரிந்தது தங்கப்பதக்கம்.

11. மதுரை சென்ட்ரலில் தங்கப்பதக்கம் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 185

[முதல் 56 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].

12. மதுரையில் தங்கப்பதக்கம் ஓடிய நாட்கள் - 134

மொத்த வசூல் - Rs 5,42,902.90 p

வரி நீக்கிய வசூல் - Rs 2,74,013.35 p

விநியோகஸ்தர் பங்கு - Rs 1,46,115.39 p


13. வெளி மாநிலங்களில் தங்கப்பதக்கம்

பெங்களூரில் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள் - 2

சங்கீத்

கினோ

14. கேரளத்தில் 50 நாட்களை கடந்து ஓடிய இடங்கள் - 3

திருவனந்தபுரம்

எர்ணாகுளம்

பாலக்காடு

15. வெளி நாட்டில் தங்கப்பதக்கம்

இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள் - 2

ஸ்ரீதர்

சென்ட்ரல்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
31st October 2008, 12:16 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1975

1.100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

அவன்தான் மனிதன்

மன்னவன் வந்தானடி

2. 50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

மனிதனும் தெய்வமாகலாம்

Dr.சிவா

பாட்டும் பரதமும்

3. 23 ஆண்டுகளில் 175 படங்கள். அனைத்திலும் நாயகனாக நடித்து மீண்டும் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

முதல் படம் - பராசக்தி - 17.10.1952

175-வது படம் - அவன்தான் மனிதன் - 11.04.1975

4. மீண்டும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளில் 100 -ஐ கடந்தது அவன்தான் மனிதன்.

மதுரை சென்ட்ரலில் அவன்தான் மனிதன் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 130.

[முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].

5. மதுரை - சென்ட்ரலில் ஓடிய நாட்கள் - 105.

6. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இதே அவன்தான் மனிதன் அதே மதுரை சென்ட்ரலில் திரையிட்ட போது ஒரே வாரத்தில் அள்ளி குவித்த வசூல் ரூபாய் அறுபதாயிரதிற்கும் அதிகம் [more than Rs 60,000/-]. பழைய படங்கள் மறு வெளியீட்டில் இது ஒரு புதிய சாதனை.

[இந்த சாதனையை முறியடித்ததும் மற்றொரு நடிகர் திலகத்தின் படம் தான். 2005 மார்ச் மாதம் இதே சென்ட்ரலில் வெளியான கர்ணன் இரண்டு வாரங்கள் ஓடி இந்த வசூலை மிஞ்சியது].

7. பெரிய நகரங்கள் மட்டுமல்ல இடை நிலை ஊர்களிலும் சாதனை புரிந்தவர் நடிகர் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்த படம் - அவன்தான் மனிதன்.

முதன் முதலாக பொள்ளாச்சி - செல்லம் திரையரங்கில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - அவன்தான் மனிதன்.

8. அவன்தான் மனிதன் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி

மதுரை - சென்ட்ரல்

திருச்சி - ராஜா

சேலம் - நியூசினிமா

[html:f4fb8d7858]
http://www.nadigarthilagam.com/papercuttings/adm.jpg

[/html:f4fb8d7858]



9. மதுரையில் முதன் முதலாக ஒரே காம்ப்ளெக்ஸ்- ல் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - மன்னவன் வந்தானடி.

அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா

நாள் - 02..08.1975

10. மன்னவன் வந்தானடி மதுரையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 125

11. மன்னவன் வந்தானடி மதுரையில் ஓடிய நாட்கள் - 110.

12. இதே வருடத்தில் மதுரையில் மீண்டும் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - பாட்டும் பரதமும்.

அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா

நாள் - 06.12.1975

ஓடிய நாட்கள் - 63.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
31st October 2008, 11:30 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1976

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 6

அதில் வெள்ளி விழா படம் - 1

உத்தமன்

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

கிரகப்பிரவேசம்

சத்யம்

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

உனக்காக நான்

ரோஜாவின் ராஜா

[html:8252aae1ec]
http://www.nadigarthilagam.com/papercuttings2/rojavinrajarelease.jpg

[/html:8252aae1ec]

2. நடிகர் திலகத்தின் திரையுலக பயணத்தில் ஒரு சிறிய தேக்க நிலை என்று சொல்லப்பட்ட காலகட்டத்திலேயே இப்படிப்பட்ட வெற்றிகளை கொடுத்தார் என்றால் அவரது Boxoffice Power-ஐ புரிந்து கொள்ளலாம்.

3. மதுரை - நியூசினிமாவில் உத்தமன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 106

[25.06.1976 அன்று வெளியான இந்த படம் முதல் 32 நாட்களில் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்]

4. மதுரை - நியூசினிமாவில் உத்தமன் ஓடிய நாட்கள் - 105

5. கடல் கடந்து இலங்கையில் இரண்டாவது வசந்த மாளிகையாக உருவெடுத்தது உத்தமன்.

கொழும்பு - சென்ட்ரல் - 203 நாட்கள்

யாழ்பாணம் - ராணி - 179 நாட்கள்

மட்டுநகர் - விஜயா - 114 நாட்கள்

6. அதே நேரத்தில் வெளியான சத்யம் திரைப்படமும் இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடியது.

சத்யம் - யாழ் வின்சர் திரையரங்கில் ஓடிய நாட்கள் - 102

7. ரோஜாவின் ராஜா: படம் வெளியாகி (25.12.1976), 20 நாட்கள் ஆகும் முன்பே அடுத்த படம் (அவன் ஒரு சரித்திரம் -14.01.1977) வெளியாக, அடுத்த 10 நாட்களில் அடுத்த நடிகர் திலகத்தின் படம் (தீபம்- 26.01.1977) வெளி வந்தும் கூட, சென்னை பிளாசாவில் ரோஜாவின் ராஜா 70 நாட்களை கடந்தது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
3rd November 2008, 11:57 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1977

1.இந்த ஆண்டில் வெளியான அனைத்து படங்களுமே 50 நாட்களை கடந்தது.

இந்த ஆண்டு வெளியான படங்கள் - 5

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

தீபம்

அண்ணன் ஒரு கோவில்

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

அவன் ஒரு சரித்திரம் (12 வாரங்கள்)

இளைய தலைமுறை

நாம் பிறந்த மண்

2. நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்து விட்டது என்று எழுந்த சில கூக்குரல்களுக்கு பதிலாக மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் தீபம்.

3. 26.01.1977 அன்று வெளியாகி தமிழகத்தின் பெரிய ஊர்களிலெல்லாம் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடிய படம் தீபம்.

சென்னை

சாந்தி - 100 காட்சிகள்

கிரவுன் - 100 காட்சிகள்

புவனேஸ்வரி - 85 காட்சிகள்

மதுரை - சிந்தாமணி - 110 காட்சிகள்

கோவை - கீதாலயா - 100 காட்சிகள்

திருச்சி - ராக்ஸி - 102 காட்சிகள்

சேலம் - சங்கீத் - 80 காட்சிகள்

நெல்லை -பார்வதி - 75 காட்சிகள்

4. அன்றைய காலக்கட்டதிலே ஒரு புதிய வசூல் சாதனை படைத்தது தீபம்.

ஆறே வாரங்களில் (42 நாட்களில்) தீபம் பெற்ற வசூல்

சென்னை

சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி - Rs 8,14,730/-

மதுரை - சிந்தாமணி - Rs 2,18,785/-

கோவை - கீதாலயா - Rs 3.04,529/-

திருச்சி - ராக்ஸி - Rs 2,06,419/-

மற்றும் நெல்லை, தஞ்சை, ஈரோடு,பாண்டி, வேலூர் நகரங்களில் 42 நாட்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது.

5. 100 நாட்களுக்கு மேல் ஓடிய அரங்குகள்

சென்னை

சாந்தி - 135 நாட்கள்

கிரவுன்

புவனேஸ்வரி

மதுரை - சிந்தாமணி.

6. கடல் கடந்து இலங்கையிலும் 100 நாட்களை கடந்தது தீபம்.

7. வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு படம் (ரோஜாவின் ராஜா), பொங்கலன்று ரீலிஸாகி பத்து நாட்களுக்குள்ளாக அடுத்த படம் (தீபம்), இப்படி நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றுக்கு ஒன்று போட்டியாக வந்தாலும் 12 வாரங்கள் (84 நாட்கள்) ஓடிய படம் அவன் ஒரு சரித்திரம்.

அரங்கு - ஸ்ரீகிருஷ்ணா (சென்னை).

8. இடையில் வெளியான இளைய தலைமுறையும் (28.05.1077), நாம் பிறந்த மண்ணும் (07.10.1977) முறையே 60 நாட்களை கடந்து ஓட, தீபாவளி தினத்தன்று திரையுலக வாழ்கையில் வெள்ளி விழா வருடங்களை (1952 - 1977) நிறைவு செய்தார் நடிகர் திலகம்.

9. வெள்ளி விழா பரிசாக வந்த அண்ணன் ஒரு கோவில் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை காணிக்கையாக தந்தது.

10. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் மீண்டும் ஒரு சாதனை புரிந்தது அண்ணன் ஒரு கோவில்.

சென்னையில் சாந்தி,கிரவுன், புவனேஸ்வரி அரங்குகளில் 350-கும் மேற்பட்ட காட்சிகள்.

மதுரை -நியூ சினிமாவில் - 101 காட்சிகள்.

11. பல போட்டிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் நடுவே 1977 தீபாவளி ரேசில் முதல் பரிசு பெற்று மிகப் பெரிய வெற்றியை அண்ணன் ஒரு கோவில் மூலமாக பெற்றார் நடிகர் திலகம்.

12. அண்ணன் ஒரு கோவில் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள் - 9

சென்னை

சாந்தி

கிரவுன்

புவனேஸ்வரி

மதுரை - சிந்தாமணி

கோவை - கீதாலயா

திருச்சி - பிரபாத்

சேலம் - சாந்தி

தஞ்சை -அருள்

குடந்தை - செல்வம் (நூர்மஹால்).

13. தமிழில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழனில் நடித்த நடிகர் திலகம் அதே போல் தெலுங்கு மொழியில் முதல் சினிமாஸ்கோப் படமான சந்திரகுப்த சாணக்யா படத்திலும் நடித்தார்.

14. ஆந்திராவில் 100 நாட்களை கடந்து ஓடிய படம் - சந்திரகுப்த சாணக்யா.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

NOV
4th November 2008, 09:47 AM
Note: This thread is a compilation of the works by Murali on சிவாஜியின் சாதனை சிகரங்கள் and will be on read-only mode.

For discussions on the subject, please go to the original thread here: http://tfmpage.mayyam.com/hub/viewtopic.php?t=11237&start=1425

Thanks.

Murali Srinivas
5th November 2008, 12:39 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1978

1. இந்த வருடம் நடிகர் திலகத்திற்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய சாதனை வருடமாக மாறியது.

2. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

இதில் வெள்ளி விழா படங்கள் - 2

தியாகம்

பைலட் பிரேம்நாத்

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

அந்தமான் காதலி

ஜெனரல் சக்கரவர்த்தி

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

என்னைப் போல் ஒருவன் - 70 நாட்கள்

புண்ணிய பூமி

ஜஸ்டிஸ் கோபிநாத்

3. இந்த வருடத்தின் முதல் படம் அந்தமான் காதலி - 26.01.19978

சாதாரண நிலையில் படங்கள் பெரிய திரையரங்கில் வெளியாகி சிறிது நாள் கழித்து சிறிய அரங்கிற்கு மாற்றப்படும். ஆனால் சிறிய அரங்கில் (லியோ) வெளியாகி மக்களின் பேராதரவு காரணமாக பெரிய அரங்கிற்கு (மிட்லாண்ட்) மாற்றப்பட்டு 100 நாட்களை கடந்து ஓடிய படம் - அந்தமான் காதலி.

4. மதுரை - சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 130

5. அந்தமான் காதலி 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்

சென்னை

மிட்லாண்ட்

மகாராணி

ராக்ஸி

மதுரை -சினிப்ரியா

சேலம் - ஜெயா

6. இந்த வருடத்தின் இராண்டாவது படம் - தியாகம் - 04.03.1978

வெள்ளி விழா கொண்டாடிய தியாகம் அந்த வருடத்தின் மிகப் பெரிய வெற்றிப்படமாக மாறி Highest grosser of the year என்ற பெருமையையும் பெற்றது.

7. மதுரையில் மீண்டும் ஒரு முறை, தொடர்ந்து வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்த சாதனையை nth முறை புரிந்தார் நடிகர் திலகம்.

அண்ணன் ஒரு கோவில் - நியூ சினிமா

அந்தமான் காதலி - சினிப்ரியா

தியாகம் - சிந்தாமணி

8. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளிலே ஒரு புதிய சாதனையை மீண்டும் தியாகம் மூலமாக ஏற்படுத்தினார் நடிகர் திலகம்.

தியாகம் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் பட்டியல்

சென்னை - சாந்தி - 134 காட்சிகள்

சென்னை -கிரவுன் - 210 காட்சிகள்

சென்னை - புவனேஸ்வரி - 100 காட்சிகள்

மதுரை - சிந்தாமணி - 207 காட்சிகள்

[முதல் 63 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல். சிந்தாமணியில் அனைத்து முன் சாதனைகளும் அவுட்]

கோவை -கீதாலயா - 100 காட்சிகள்

சேலம் -சாந்தி - 100 காட்சிகள்

9. தியாகம் 100 நாட்களை கடந்த அரங்குகள் - 8
சென்னை -

சாந்தி

கிரவுன்

புவனேஸ்வரி

மதுரை - சிந்தாமணி

கோவை -கீதாலயா

சேலம் -சாந்தி

திருச்சி - ஜுபிடர்

நெல்லை -பார்வதி

10. தியாகம் வெள்ளி விழா கண்ட அரங்கு - 1

மதுரை - சிந்தாமணி

11. மதுரை சிந்தாமணியில் 175 நாட்களில் பெற்ற மொத்த வசூல் ரூபாய் ஆறு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்திற்கும் அதிகம். [More than Rs 6,74,000/-].

12. அன்று வரை மதுரையில் 175 நாட்களில் சாதனை வசூல் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களின் ரிகார்ட்களும் முறியடிக்கப்பட்டு புதிய சாதனையை புரிந்தது தியாகம்.

13. மூன்றாவது படம் என்னைப் போல் ஒருவன் - 18.03.1978

அணைந்து விட்டது என்று சொல்லப்பட்ட இந்த படம் ஜெகஜோதியாய் வெற்றிப் பெற்றது.

14. தியாகம் வெளியாகி இரண்டே வாரங்களில் வெளியான இந்த படம் 70 நாட்களை கடந்து ஓடியது.

அரங்குகள்

சென்னை - தேவி பாரடைஸ், அகஸ்தியா, முரளி கிருஷ்ணா.

15. மதுரை தங்கத்தில் வெளியான இந்த படம் முதல் வாரத்தில் அறுபது ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று புதிய சாதனை புரிந்தது.

16. நான்காவது படம் புண்ணிய பூமி - 12.05.1978

50 நாட்களை கடந்து ஓடியது - சென்னை - சித்ரா.

17. இந்த வருடத்தின் ஐந்தாவது படம் ஜெனரல் சக்கரவர்த்தி (16.06.1978)

ஜெனரல் சக்கரவர்த்தி 100 நாட்களை கடந்து ஓடிய அரங்கு

சென்னை சாந்தி

18. தீபாவளியன்று (30.10.1978) வெளியான இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான பைலட் பிரேம்நாத், இந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது.

19. மேடை நாடகத்தை ஒரு வெற்றிப் படமாக்க தன்னால் (மட்டுமே) முடியும் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்த படம் பைலட் பிரேம்நாத்.

[நடிகர் ஏஆர்எஸ் நடத்திய மெழுகு பொம்மைகள் நாடகமே பைலட் பிரேம்நாத் படம்]

20. பைலட் பிரேம்நாத் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்

சென்னை - ஈகா - 100 காட்சிகள்

மதுரை - சென்ட்ரல் - 100 காட்சிகள்

21. பைலட் பிரேம்நாத் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்

சென்னை - ஈகா

மதுரை - சென்ட்ரல்

சென்னையின் மிகப் பெரிய திரையரங்கான அலங்கார் (இப்போது இல்லை) தியேட்டரில் 12 வாரங்கள் (84 நாட்கள்) ஓடிய படம் பைலட் பிரேம்நாத்.

22. கடல் கடந்து இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஒரு புதிய சரித்திரமே படைத்தது.

23. இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஓடிய அரங்குகளும் நாட்களும் பட்டியல்

யாழ்பாணம் - வின்சர் - 222 நாட்கள்

கொழும்பு - கேப்பிட்டல் -189 நாட்கள்

கொழும்பு - ராஜேஸ்வரா - 176 நாட்கள்

கொழும்பு - சவோய் - 189 நாட்கள்

24. இதற்கு பிறகு ஷிப்டிங் முறையில் பைலட் பிரேம்நாத் ஓடிய நாட்கள் - 1080.

கடல் கடந்து வேறொரு நாட்டிலே முதன் முதலாக திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்த நாள் முதலாக இன்று வரை இந்த சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

25. நடிகர் திலகத்துடன் ரஜினி முதன் முதலாக இணைந்து நடித்த படம் - ஜஸ்டிஸ் கோபிநாத் - 16.12.1978

சென்னை - பாரகனில் 60 நாட்களை கடந்து ஓடிய படம் - ஜஸ்டிஸ் கோபிநாத்.

26. இந்திய திரையுலகில் யாருமே செய்யாத ஒரு ஹாட்ரிக் சாதனை செய்தார் நடிகர் திலகம்.

தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் - ராஜ ராஜ சோழன் (1973)

தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம் - சந்திரகுப்த சாணக்கியா (1977)

மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் - தச்சோளி அம்பு (1978).

இந்த மூன்றிலும் நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம்.

27. இந்த மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியது என்பது மற்றுமொரு சாதனை.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
6th November 2008, 01:14 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1979

இன்றைய தினம் திரிசூலம் ஸ்பெஷல்.

1. நடிகர் திலகத்தின் 200-வது படம் திரிசூலம்

2. 26 வருடங்களில் 200 படங்கள். அனைத்திலும் நாயகனாகவே நடித்து சாதனை புரிந்தார்.

3. 27.01.1979 அன்று வெளியான திரிசூலம் அது வரை தமிழில் வெளி வந்த அனைத்து படங்களின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் படைத்தது.

4. முதன் முதலாக தமிழில் 2 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் திரிசூலம்.

5. முதன் முதலாக தமிழக அரசிற்கு 1 கோடிக்கு மேல் கேளிகை வரி செலுத்திய படம் திரிசூலம்.

6. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் ஒரு புதிய சரித்திரம் படைத்தது திரிசூலம். அந்த பட்டியல் இதோ.

சென்னை - சாந்தி - 315 காட்சிகள்

சென்னை - கிரவுன் - 313 காட்சிகள்

சென்னை - புவனேஸ்வரி - 318 காட்சிகள்

மதுரை - சிந்தாமணி - 401 காட்சிகள்

சேலம் - ஓரியண்டல் - 265 காட்சிகள்

கோவை - கீதாலயா - 189 காட்சிகள்

திருச்சி - பிரபாத் - 180 காட்சிகள்

ஈரோடு - ராயல் - 151 காட்சிகள்

பொள்ளாச்சி - துரைஸ் - 123 காட்சிகள்

திருவண்ணாமலை - ஸ்ரீ பாலசுப்ரமணி - 150 காட்சிகள்

மேட்டுப்பாளையம் - செந்தில் - 105 காட்சிகள்

பட்டுக்கோட்டை - முருகையா - 117 காட்சிகள்

தர்மபுரி - ஸ்ரீ கணேசா - 119 காட்சிகள்

சிவகாசி -ஒலிம்பிக் - 106 காட்சிகள்

நாகர்கோவில் - ராஜேஷ் - 146 காட்சிகள்.

7. முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிகமான திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த படம் திரிசூலம்.

அரங்குகள் - 59

சென்னை - 3

NSC Area - 17

மதுரை - 8

திருச்சி - 8

கோவை -13

சேலம் - 4

நெல்லை - 4

இலங்கை - 2

8. முதன் முதலாக அதிகமான அரங்குகளில் 100 நாட்களை கடந்த படம் - திரிசூலம்.

அரங்குகளின் எண்ணிக்கை - 20

9. முதன் முதலாக திருப்பூரில் 100 நாட்களை கடந்த படம் - திரிசூலம்

அரங்கு - டைமண்ட்

10. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக 100 நாட்களில் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த அற்புத நிகழ்வை நடத்தி காட்டினார் நடிகர் திலகம்.

11. தமிழகத்தில் ஒன்றல்ல, நான்கு திரையரங்குகளில் 100 நாட்களில் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல். இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. அரங்குகளின் விவரம்

சென்னை - சாந்தி - 315 காட்சிகள் - 105 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்

சென்னை - கிரவுன் - 313 காட்சிகள் - 105 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்

சென்னை - புவனேஸ்வரி - 318 காட்சிகள் - 106 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்

மதுரை - சிந்தாமணி - 401 காட்சிகள் - 120 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்

12. திரிசூலம் சென்னை நூறாவது நாள் போஸ்டரில் 100 நாட்களில் 900 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்தது என்ற விளம்பர வரிகள் தமிழ் சினிமாவிற்கு ஒரு முதல் அனுபவம். இந்த மூன்று அரங்குகளுமே 1000 இருக்கைகளுக்கு மேல் இட வசதி உள்ள பெரிய அரங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தில் சென்னையையும் விஞ்சியது மதுரை.

13. திரிசூலம் மதுரை சிந்தாமணியில் முதல் 120 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. இன்று வரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை.

14. வெள்ளி விழா கொண்டாட்டத்திலும் ஒரு புதிய சாதனை
படைத்தது திரிசூலம்.

15. முதன் முதலாக 6 ஊர்கள், 8 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி ஒரு சரித்திரம் படைத்த படம் திரிசூலம். அரங்குகள் பட்டியல்

சென்னை - சாந்தி

சென்னை - கிரவுன்

சென்னை - புவனேஸ்வரி

மதுரை - சிந்தாமணி

சேலம் - ஓரியண்டல்

கோவை - கீதாலயா

திருச்சி - பிரபாத்

வேலூர் - அப்சரா

16. முதன் முதலாக வேலூரில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - திரிசூலம்.

17. 200 நாட்கள் ஓடிய அரங்கு

மதுரை - சிந்தாமணி

18. மதுரையில் முதன் முதலாக பத்து லட்சத்திற்கு மேல் வசூல் செய்த படம் - திரிசூலம்.

19. ஒரு சில படங்கள் மதுரையில் 217 நாட்களில் பெற்ற ரிகார்ட் வசூலை வெறும் 105 நாட்களில் முறியடித்தது திரிசூலம்.

மதுரையில் திரிசூலத்தின் வசூல் சாதனை

மொத்த நாட்கள் - 200

மொத்த வசூல் - Rs 10,28,819.55 p

வரி நீக்கி வசூல் - Rs 5,13,415.77 p

விநியோகஸ்தர் பங்கு - Rs 2,67,687.18 p

திரையரங்கின் பங்கு - Rs 2,45, 722. 59 p

20. முதன் முதலாக மதுரையில் பத்து லட்சம் டிக்கெட்டுகள் விற்றது திரிசூலம் படத்திற்கு தான் [அதாவது பார்த்தவர் எண்ணிகை 10 லட்சம் என்றும் குறிப்பிடலாம்].

21. மதுரை சிந்தாமணியில் நடிகர் திலகத்தின் இரண்டாவது 200 -வது நாள் படம் திரிசூலம்

22. மதுரை சிந்தாமணியில் நடிகர் திலகத்தின் மூன்றாவது வெள்ளி விழா படம் திரிசூலம்.

பாகப் பிரிவினை - 216 நாட்கள்

தியாகம் - 175 நாட்கள்

திரிசூலம் - 200 நாட்கள்.

23. மதுரையில் நடிகர் திலகத்தின் மூன்றாவது 200-வது நாள் படம் திரிசூலம்.

பாகப் பிரிவினை - 216 நாட்கள்

வசந்த மாளிகை - 200 நாட்கள்

திரிசூலம் - 200 நாட்கள்

மதுரையில் மூன்று 200 நாள் படங்களை கொடுத்த ஒரே நடிகன் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.

24. மதுரை விநியோகஸ்தர் (ஜெயந்தி பிலிம்ஸ்) திரிசூலம் படத்தை மதுரை ராமநாதபுரம் வட்டாரங்களுக்கு என்ன விலைக்கு வாங்கினாரோ அது மதுரை நகரில் ஓடிய போதே வசூலாகி விட்ட அற்புத சாதனை முதன் முதலாக அரங்கேறியது நடிகர் திலகத்தின் திரிசூலம் மூலமாக.

25. கடல் கடந்து இலங்கையிலும் இரண்டு அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய படம் திரிசூலம்.

26. நடிகர் திலகம் அவர்கள் படங்களில் நடித்ததற்கு ஒரு அரசியல் கலையுலக பாராட்டு விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் 1979 ஆண்டு மார்ச் 10.11 தேதிகளில் நடைபெற்றது. தமிழ் திரையுலகமே ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து பாராட்டிய இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு திரிசூலம் படத்தின் 100 நாட்களுக்கு பிறகு படத்தின் இடைவேளையின் போது காண்பிக்கப்பட்டது. இதை இயக்கியவர் எஸ்பி.முத்துராமன்.

27. தமிழகம் மட்டுமல்ல, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மற்றும் மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் திரிசூலம்.

28. சென்னையில் மூன்று அரங்குகளில் திரிசூலம் பெற்ற வசூல் ரூபாய் முப்பத்தி மூன்று லட்சத்திற்கும் அதிகம். முன் ரிகார்டுகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு ஒரு புதிய சாதனையை படைத்தார் நடிகர் திலகம்.

29. ஒன்று மட்டும் உறுதி. டிக்கெட் கட்டணங்கள் மிக மிக அதிகமான கூட்டப்பட்டதாலும் இப்போது வரி இல்லாததாலும் திரிசூலத்தின் வசூலை இப்போது சில படங்கள் விஞ்சியிருக்கலாம். ஆனால் குவாண்டம் ஒப் சக்சஸ் (Quantum Of success) என்ற அடிப்படையில் பார்த்தால் திரிசூலத்தின் வெற்றி ஒரு அசைக்க முடியாத ரிகார்ட்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
7th November 2008, 12:55 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1979

1. திரிசூலம் என்ற பிரும்மாண்டமான வெற்றி படம் வெளி வந்த வருடம் என்பதால் அதே வருடம் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இந்த பாதகமான சூழ்நிலையிலும் வெளியான அனைத்து படங்களும் 50 நாட்களை கடந்தன.

2. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

வெள்ளி விழா படம் - 1

திரிசூலம்

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

நான் வாழ வைப்பேன்

பட்டாகத்தி பைரவன்

50 நாட்களை கடந்த படங்கள் - 4

கவரி மான்

நல்லதொரு குடும்பம் (79 நாட்கள்)

இமயம்

வெற்றிக்கு ஒருவன்

3. திரிசூலம் வெளியாகி 69 நாட்களே ஆன நிலையில் வெளியான கவரிமான் (06.04.1979), 50 நாட்களை கடந்து ஓடியது.

4. முதன் முதலாக எஸ்பி.முத்துராமன் நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய படம் கவரி மான்.

5. திரிசூலம் வெளியாகி 96 நாட்கள், கவரி மான் வெளியாகி 27 நாட்கள் என்ற நிலையில் 03.05.1979 அன்று வெளியான நல்லதொரு குடும்பம் 75 நாட்களை கடந்தது.

6. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக மதுரை சென்ட்ரலில் 100-வது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே 79 நாட்களோடு நிறுத்தப்பட்டு(நடிகர் திலகத்தின் அடுத்த படமான இமயத்திற்கு வேண்டியே மாற்றப்பட்டது) ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது.

7. 21.7.1979 அன்று வெளியான இமயம் (இந்த படத்திற்காகவே சென்னை மற்றும் திருச்சி நகர அரங்குகளில் திரிசூலம் 175 நாட்களோடு நிறுத்தப்பட்டது) 20 நாட்களில் அடுத்த நடிகர் திலகத்தின் ரிலீஸ் படமான நான் வாழ வைப்பேனை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. இருப்பினும் 60 நாட்களை கடந்து ஓடியது இமயம்.

8. 10.08.1979 அன்று வெளியானது நான் வாழ வைப்பேன். நடிகர் திலகத்துடன் ரஜினி இணைந்த இரண்டாவது படம்.

9. மதுரை - ஸ்ரீதேவியில் 125 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்த படம் - நான் வாழ வைப்பேன்.

[முதல் 35 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்]

10. நான் வாழ வைப்பேன் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்

சென்னை -சித்ரா

மதுரை - ஸ்ரீதேவி.

11. தீபாவளியன்று (19.10.1979) வெளியான படம் - பட்டாகத்தி பைரவன்.

12. நடிகர் திலகத்துடன் முதன் முதலாக ஜெயசுதா ஜோடி சேர்ந்த படம் - பட்டாகத்தி பைரவன்.

13. தமிழகத்தில் 60 நாட்களை கடந்த பைரவன் கடல் கடந்து இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடியது.

14. 08.12.1979 அன்று வெளியான படம் வெற்றிக்கு ஒருவன்.
அந்த நேரத்தில் நடைபெற்ற கடுமையான போட்டி நிலவிய பாராளுமன்ற தேர்தல் காரணமாக பாதிக்கப்பட்டாலும் 50 நாட்களை கடந்து ஓடியது வெற்றிக்கு ஒருவன்.

(சாதனைகள் தொடரும்).

அன்புடன்

Murali Srinivas
7th November 2008, 11:39 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1980


1. இந்த வருடம் வெளியான படங்கள் - 5

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

ரிஷி மூலம்

விஸ்வரூபம்

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

தர்ம ராஜா

ரத்த பாசம்

2. இயக்குனரான பிறகு மகேந்திரனின் கதை வசனத்தில் நடிகர் திலகம் நடித்த படம் - ரிஷி மூலம்.

3. எஸ்பி முத்துராமன் கடைசியாக நடிகர் திலகத்தை இயக்கிய படம் - ரிஷி மூலம்.

4. 26.01.1980 அன்று வெளியான ரிஷி மூலம் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்

சென்னை - சாந்தி

மதுரை - சினிப்ரியா

5. முதன் முதலாக ஜப்பானில் படமாக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - தர்மராஜா, 26.04.1980 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்து ஓடியது.

6. தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் அனல் பறந்த உச்சக்கட்ட நேரத்தில் 17.05.1980 அன்று வெளியான படம் - எமனுக்கு எமன்.

7. முதன் முதலாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சிவாஜி புரொடக்ஷன்ஸ் படம் - ரத்த பாசம்.

14.06.1980 அன்று வெளியான இந்த படம் 70 நாட்கள் ஓடியது.

8. தீபாவளியன்று {06.11.1980) வெளியான படம் - விஸ்வரூபம்.

9. இந்த ஆண்டில் நடிகர் திலகம் நடித்து தொடர்ந்து வெளியான மூன்று படங்களிலுமே அவருக்கு இரட்டை வேடங்கள் அமைந்தது தமிழ் சினிமாவிற்கு முதல் அனுபவம்.

எமனுக்கு எமன்

ரத்த பாசம்

விஸ்வரூபம்.

10. விஸ்வரூபம் 100 நாட்களை கடந்து ஓடிய திரையரங்கு

சென்னை -சாந்தி

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
10th November 2008, 11:29 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1981

1. இந்த வருடமும் வெளியான அனைத்து படங்களும் 50 நாட்களை கடந்து ஓடின.

இந்த வருடம் வெளியான படங்கள் - 7

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

சத்திய சுந்தரம்

கல்தூண்

கீழ்வானம் சிவக்கும்

[லாரி டிரைவர் ராஜாக்கண்ணு சேலத்தில் 100 நாட்களை கடந்து ஓடியதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படாத செய்தி என்பதால் அது 50 நாட்கள் பட்டியலில் இடம் பெறுகிறது]

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

மோகன புன்னகை

அமர காவியம்

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

மாடி வீட்டு ஏழை

2. நடிகர் திலகமும் இயக்குனர் ஸ்ரீதரும் கடைசியாக இணைந்த மோகன புன்னகை 14.01.1981 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்து ஓடியது.

3. எந்த வித எதிர்பார்ப்புமின்றி 21.02.1981 அன்று வெளியான சத்திய சுந்தரம் 100 நாட்களை கடந்து ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது.

4. வெளியான 60 நாட்களுக்குள்ளாக நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ். இருப்பினும் 100 நாட்களை கடந்த படம் சத்திய சுந்தரம்.

5. சத்திய சுந்தரம் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்கு

சென்னை -சாந்தி

6. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த படம் அமர காவியம். 24.04.1981 அன்று வெளியான இந்த படம் 50 நாட்களை கடந்தது.

7. மேஜர் சுந்தர்ராஜன் முதன் முதலாக இயக்கிய படம் கல்தூண். வெளியான நாள் - 01.05.1981

8. மீண்டும் மேடை நாடகத்தை திரைப்படமாக்கி வெற்றி படமாகவும் ஆக்கினார் நடிகர் திலகம் கல்தூண் மூலமாக.

9. கல்தூண் நாட்களை 100 கடந்து ஓடிய இடங்கள்

சென்னை - பிளாசா

சென்னை -முரளி கிருஷ்ணா

மதுரை - சிந்தாமணி

10. முதன் முதலாக சென்னை முரளி கிருஷ்ணாவில் 100 நாட்களை கடந்த படம் கல்தூண்

11. முதன் முதலாக நாமக்கல் நகரில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் - கல்தூண்.

12. ஏவி.எம் ராஜன் முதன் முதலாக தயாரித்த படம் - லாரி டிரைவர் ராஜாக்கண்ணு.

03.07.1981 அன்று வெளியான இந்த படம் 85 நாட்களை கடந்தது. அதிக பட்சமாக ஓடிய இடம் சேலம் - ஜெயா(?).

13. கலைஞரின் வசனத்தை கடைசி முறையாக திரையில் நடிகர் திலகம் பேசிய படம் -மாடி வீட்டு ஏழை.

நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் 22.08.1981 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

14. தீபாவளியன்று (26.10.1981) வெளியான படம் - கீழ் வானம் சிவக்கும்.

15. விசு முதன் முதலாக வசனம் எழுதிய படம் - கீழ் வானம்
சிவக்கும்

இதன் மூலம் மீண்டும் மேடை நாடகம் வெற்றி படமானது.

16. நடிகர் திலகத்தோடு சரிதா முதன் முதலாக இணைந்து நடித்த படம் - கீழ் வானம் சிவக்கும்.

17. கீழ் வானம் சிவக்கும் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்கு

சென்னை - சாந்தி.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
11th November 2008, 11:52 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி.

ஒரு சின்ன பிளாஷ்பாக். இது ஒரு மினி தங்கப்பதக்கம் ஸ்பெஷல். [1974]

இந்த தொடருக்கு, முன்பே சில தகவல்கள் அளித்த பெங்களூரை சேர்ந்த நமது ஹப்பர் செந்தில்குமார் அவரது தந்தையார் போற்றி பாதுகாத்து வைத்திருந்த ஒரு நோட்டிஸை நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பெங்களுர் மல்லேஸ்வரம் சிவாஜி ரசிகர் மன்றத்தினரால் 1974- ம் வருடம் வெளியிடப்பட்ட இந்த நோட்டீஸ் தங்கப்பதக்கத்தின் வசூல் சாதனைகளை பட்டியலிடுகிறது.

செந்தில் மற்றும் இந்த விவரங்களை அறிய ஆவலாக இருந்த tacinema- விற்காகவும் முன்பே விட்டுப்போன சில தகவல்கள் இங்கே.

1. தங்கப்பதக்கம் 100 நாட்களை கடந்த ஊர்களும் அரங்குகளும்

சென்னை

சாந்தி

கிரவுன்

புவனேஸ்வரி

மதுரை -சென்ட்ரல்

திருச்சி - பிரபாத்

கோவை -ராயல்

சேலம் -சாந்தி

நெல்லை - சென்ட்ரல்

தஞ்சை - ராஜா

குடந்தை - கற்பகம்

ஈரோடு - முத்துகுமார்

2. சென்னை-சாந்தியில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 237
[79 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல். இந்த சாதனையைதான் திரிசூலம் முறியடித்தது]

3. சென்னையில் மூன்று திரையரங்குகளில் 100 நாட்களில் தங்கப்பதக்கம் பெற்ற வசூல் - Rs 16,96,175.90 p.

4. இது அதற்கு முன்பு சென்னையில் ரிகார்ட் என்று சொல்லப்பட்ட படத்தின் மூன்று திரையரங்குகளின் 100 நாட்கள் வசூலை விட முப்பத்தி மூவாயிரத்திற்கும் அதிகம். [More than Rs 33,000/-].

5. சென்னை மட்டுமல்ல மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் வேலூர்,பழனி, பல்லாவரம் போன்ற இடங்களிலும் முந்தைய ரிகார்ட் வசூலை முறியடித்து வாகை சூடிய படம் தங்கப்பதக்கம்.

6. ஆக திரிசூலம் வருவதற்கு முன்பே தங்கப்பதக்கம் மூலமாக சாதனை படைத்து விட்டார் நடிகர் திலகம்.

7. அந்த நோட்டீசில் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் தங்கப்பதக்கம் பெற்ற வசூல் பட்டியலிடப்பட்டிருக்கிறது. பிறிதொரு சமயம் அதை இங்கே வெளியிடலாம்.

8. அது மட்டுமல்ல கேரளம், புதுவை மற்றும் ஆந்திரத்திலும் தங்கப்பதக்கம் பெற்ற வசூல் விவரங்கள் உள்ளன.

9. மற்றும் ஒரு முறியடிக்க முடியாத சாதனை, தங்கப்பதக்கம் பம்பாய் நகரிலே வெளியாவதற்கு முன் ரிசர்வேஷன் (முன் பதிவு) மூலமாகவே ஒரு மாதத்திற்கு அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. [ஆதாரம் - தமிழ் முரசு நாளிதழ், பம்பாய்].

மனங்கனிந்த நன்றி செந்தில்.

இன்றைய இடை செருகலுக்கு பிறகு நாளை 1982- ம் வருட பட்டியல்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
13th November 2008, 12:19 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1982

1.நடிகர் திலகம் திரையுலகிற்கு வந்து முப்பது ஆண்டுகள் நிறைவு பெற்ற வருடம். அவருக்கு பிறகு இரண்டு தலைமுறை நடிகர்கள் வந்து விட்ட போதிலும் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையிலே ஒரு காலண்டர் வருடத்தில் மிக அதிகமான படங்களில், அனைத்திலும் நாயகனாகவே நடித்த வருடம் இது- 1982.

2. இந்த வருடம் வெளியான படங்கள் - 13

தமிழ் - 12

தெலுங்கு - 1

இதில் வெள்ளி விழா படங்கள் - 2

தீர்ப்பு

நிவரு கப்பின நிப்பு (தெலுங்கு)

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

வா கண்ணா வா

சங்கிலி

தியாகி
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercutting4/thyagirelease.jpg

[/html:496c792768]

பரிட்சைக்கு நேரமாச்சு

[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercutting4/paritchairelease.jpg

[/html:496c792768]

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள்

கருடா சௌக்கியமா
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercuttings/garuda.jpg

[/html:496c792768]

துணை
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercutting4/thunairelease2.jpg

[/html:496c792768]

ஊரும் உறவும்
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercutting4/oorumuravumrelease.jpg

[/html:496c792768]

நெஞ்சங்கள்

3. இந்த வருடத்தின் தொடக்கத்தில் முப்பத்தி ஒன்று (31) நாட்கள் இடைவெளியில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியாகி ஒரு புதிய சாதனை படைத்தது.

ஹிட்லர் உமாநாத் - 26.01.1982

ஊருக்கு ஒரு பிள்ளை- 05.02.1982
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercuttings/oopillai.jpg

[/html:496c792768]

வா கண்ணா வா - 06.02.1982

கருடா சௌக்கியமா - 25.02.1982

4. இது இப்படியென்றால் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தொடங்கி அடுத்த 38 நாட்களில் மீண்டும் மூன்று படங்கள் ரிலீஸ்.

சங்கிலி - 14.04.1982

வசந்தத்தில் ஓர் நாள் - 07.05.1982

தீர்ப்பு - 21.05.1982
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercuttings/theerppu.jpg

[/html:496c792768]


5. 06.02.1982 அன்று வெளியான வா கண்ணா வா 100 நாட்களை கடந்து ஓடியது.

ஓடிய அரங்குகள் - 3

சென்னை

சாந்தி - 104 நாட்கள்

கிரவுன் - 104 நாட்கள்

புவனேஸ்வரி - 104 நாட்கள்

6. வா கண்ணா வா சென்னையின் மூன்று திரையரங்குகளின் 104 நாட்கள் வசூல் - Rs 20,07,089.30 p.

7. நடிகர் திலகத்தின் இளைய மகன் இளைய திலகம் பிரபு அறிமுகமான படம் - சங்கிலி.

8. முதன் முதலாக மதுரை - அலங்கார் திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - சங்கிலி.

9. 14.04.1982 அன்று வெளியாகி 80 நாட்களை கடந்து ஓடிய சங்கிலி இலங்கையில் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது.

10. 30 வருடங்களில் 225 படங்கள் அனைத்திலும் நாயகனாகவே நடித்து என்றுமே யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்தார் நடிகர் திலகம்.

நடிகர் திலகத்தின் 225 -வது படமாக வெளி வந்தது தீர்ப்பு.

பராசக்தி - 17.10.1952

தீர்ப்பு - 21.05.1982

11. நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது
தீர்ப்பு.

12. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூல் சாதனை புரிந்து 6 சென்டர் 8 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது தீர்ப்பு.


[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercuttings2/thirppu100daysSalem.jpg

[/html:496c792768]

தீர்ப்பு 100 நாட்களை கடந்த அரங்குகள்

சென்னை

சாந்தி

கிரவுன்

புவனேஸ்வரி

மதுரை - சினிப்ரியா

சேலம் - சாந்தி

திருச்சி - பிரபாத்

கோவை

[மற்றுமொரு நகரம்]

13. தீர்ப்பு வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு

மதுரை - சினிப்ரியா - 177 நாட்கள்.

14. சினிப்ரியா வளாகத்தில் நடிகர் திலகத்தின் முதல் வெள்ளி விழா படம் - தீர்ப்பு.

15. மீண்டும் செப்டம்பர் 3- ம் தேதி முதல் டிசம்பர் 10 வரை நடிகர் திலகத்தின் 6 படங்கள் ரிலீஸ்.

தியாகி - 03.09.1982

துணை - 01.10.1982

பரிட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982

ஊரும் உறவும் - 14.11.1982

நெஞ்சங்கள் - 10.12.1982

16. இது தவிர தெலுங்கு படமான நிவரு கப்பின நிப்பு 10.09.1982 அன்று வெளியானது.

17. 03.09.1982 அன்று வெளியான தியாகி அனைத்து ஊர்களிலும் 70 நாட்களை கடந்தது. தீபாவளி படங்களின் வெளியீடு காரணமாக 72 நாட்களோடு பல அரங்குகளிருந்தும் மாற்றப்பட்ட தியாகி இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடியது.
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercuttings/thyaagi.jpg

[/html:496c792768]

18. 01.10.1982 - நடிகர் திலகத்தின் 54 -வது பிறந்த நாளன்று வெளியான படம் - துணை.

19. இயக்குனர் துரை முதன் முதலாக நடிகர் திலகத்தை இயக்கிய படம் - துணை.

20. அண்டர் ப்ளே என்பதும் தனக்கு கை வந்த கலை என்பதை நடிகர் திலகம் நிரூபித்த படம் - துணை.

21. நடிகர் திலகத்தின் படத்திற்கு முதன் முதலாக இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இசையமைத்த படம் - துணை.

22. தீபாவளி வெளியீடுகள் (அவற்றில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்களும் அடக்கம்) மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும்- துணை. 50 நாட்களை கடந்து ஓடியது.
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercutting4/thunairunning25days.jpg

[/html:496c792768]

23. மீண்டும் தீபாவளியன்று [14.11.1982] இரண்டு படங்கள் ரிலீஸ்.

24. முக்தா பிலிம்ஸ் தயாரித்த பரிட்சைக்கு நேரமாச்சு படம் 100 நாட்களை கடந்து ஓடியது.
[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercuttings2/paritchai75days.jpg

[/html:496c792768]

அரங்கு - சென்னை -சாந்தி.

25. ஏவிஎம். ராஜன் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த இரண்டாவது படம் - ஊரும் உறவும்.

26. மேஜர் இயக்கிய இரண்டாவது படமான ஊரும் உறவும் 50 நாட்களை கடந்தது.

27.நடிகர் விஜயகுமார் தயாரித்த முதல் படம் - நெஞ்சங்கள்

28. நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் - நெஞ்சங்கள்

29. மேஜர் இயக்கிய நெஞ்சங்கள் 10.12.1982 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

[html:496c792768]
http://www.nadigarthilagam.com/papercutting4/nenjangalrelease.jpg

[/html:496c792768]
30. 10.09.1982 அன்று வெளியான நடிகர் திலகம் நடித்த தெலுங்கு படமான நிவரு கப்பின நிப்பு அந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது.

31. ஹைதராபத் உட்பட எட்டு ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - நிவரு கப்பின நிப்பு.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
14th November 2008, 12:46 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1983

இந்த வருடமும் (திரையுலகில் நடிகர் திலகத்தின் 31-வது ஆண்டு) நடிகர் திலகம் மிகப் பெரிய வெற்றிகளை குவித்த ஆண்டாக அமைந்தது.

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

தமிழ் - 6

தெலுங்கு - 1

இதில் வெள்ளி விழா படங்கள் -2

நீதிபதி
[html:e4b609cb89]
http://www.nadigarthilagam.com/papercuttings2/needhipadhireserve.jpg

[/html:e4b609cb89]

சந்திப்பு

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

மிருதங்க சக்ரவர்த்தி

வெள்ளை ரோஜா

பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு)

50 நாட்களை கடந்து ஓடிய படம்

சுமங்கலி

2. இந்த ஆண்டின் முதல் படமான நீதிபதி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

3. மதுரை (சினிப்ரியா), திண்டுக்கல் (சக்தி), தேனி (அருணா), விருதுநகர் (அமிர்தராஜ்) மற்றும் பழனி (ரமேஷ்) அரங்குகளில் நான்கே வாரத்தில் ஆறு லட்ச ரூபாய் வசூலை கடந்து, பட வெளியிட்டாளருக்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி தந்தது.

4. 26.01.1983 அன்று வெளியான நீதிபதி அனைத்து முக்கிய நகரங்களிலும் 100 நாட்களை கடந்தது. அவற்றில் சில

சென்னை

சாந்தி (141 நாட்கள்)

அகஸ்தியா

அன்னை அபிராமி

மதுரை - சினிப்ரியா

திருச்சி

கோவை

சேலம்

தஞ்சை

நெல்லை

5. வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு

மதுரை - சினிப்ரியா [ 177 நாட்கள்]
[html:e4b609cb89]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings2/needhipadhi5wk.jpg">

[/html:e4b609cb89]

6.மதுரையில் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது நீதிபதி

தீர்ப்பு - 1982

நீதிபதி - 1983

7. நடிகர் திலகம் - பாலாஜி கூட்டணியில் மூன்றாவது வெள்ளி விழா படம்- நீதிபதி

தியாகம் - 1978

தீர்ப்பு - 1982

நீதிபதி - 1983

8. நடிகர் திலகத்தின் படத்திற்கு முதன் முதலாக கங்கை அமரன் இசையமைத்த படம் - நீதிபதி.

9. இந்த வருடத்தின் இரண்டாவது படம் - இமைகள்.[வெளியான நாள் - 12.04.1983]

10. முதன் முதலாக பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடிய படம் - இமைகள்.

11. இந்த வருடத்தின் மூன்றாவது படம் - சந்திப்பு. வெளியான நாள் - 16.06.1983

மீண்டும் பல வசூல் சாதனைகளை செய்த படம் - சந்திப்பு.

12. மதுரை - சுகப்ரியா திரையரங்கில் சந்திப்பு தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 202

இது அந்த திரையரங்கில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.

13. திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிய சந்திப்பு 100 நாட்களை தாண்டிய இடங்கள்

சென்னை

சாந்தி

கிரவுன்

புவனேஸ்வரி

மதுரை - சுகப்ரியா

திருச்சி

சேலம்

கோவை

நெல்லை

தஞ்சை

14. சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு

மதுரை - சுகப்ரியா

ஓடிய நாட்கள் - 177

15. மதுரை - சுகப்ரியா அரங்கில் முதல் வெள்ளி விழா படம் - சந்திப்பு.

இயக்குனர் சி. வி. ராஜேந்திரன் அவர்களுக்கு முதல் வெள்ளி விழா படம் - சந்திப்பு.

16. மதுரை - சினிப்ரியா திரையரங்க வளாகத்தில் மூன்றாவது வெள்ளி விழா படம் - சந்திப்பு.

17. 1982-ம் ஆண்டு மே முதல் 1983 -ம் ஆண்டு ஜூன் வரை சினிப்ரியா வளாகத்தில் வெளியான நடிகர் திலகத்தின் மூன்று படங்களுமே வெள்ளி விழா கொண்டாடியது மதுரை மாநகரம் இன்று வரை காணாத சாதனை.

18. இந்த வருடமும் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது.

19. மதுரை மாநகரிலே மூன்றாவது முறையாக ஒரே வருடத்தில் வெளியான ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

1959

கட்டபொம்மன்

பாகப்பிரிவினை

1972

பட்டிக்காடா பட்டணமா

வசந்த மாளிகை

1983

நீதிபதி

சந்திப்பு.

20. திரையுலகிற்கு வந்து வெற்றிகரமான 31 வருடங்களுக்கு பிறகும், வெற்றிகரமான 230 படங்களுக்கு நாயகனான பிறகும், அன்றைய தேதியில் இருந்த பிற நாயகர்களின் வயதையே தன் திரையுலக அனுபவமாக கொண்ட நடிகர் திலகம் இந்த சாதனையை புரிந்தார் என்றால் அவரது வெற்றி வரலாற்றில் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை இது.

21. நான்காவதாக 12.08.1983 அன்று வெளியான படம் சுமங்கலி.

50 நாட்களை கடந்து ஓடிய படம் சுமங்கலி

22. அடுத்த படம் - மிருதங்க சக்ரவர்த்தி. வெளியான நாள் 23.09.1983.

24. மிருதங்க சக்ரவர்த்தி நாட்களை 100 கடந்து ஓடிய இடங்கள்

சென்னை - சாந்தி

25. தீபாவளியன்று (4.11.1983) வெளியான படம் - வெள்ளை ரோஜா.

26. இரட்டை வேடங்களில் நடித்தும் இரண்டுக்குமே ஜோடியோ டூயட் பாடல்களோ இல்லாமல் நடிகர் திலகம் நடித்த இரண்டாவது படம் - வெள்ளை ரோஜா.

[முதல் படம் - சரஸ்வதி சபதம்].

27. முதன் முதலாக சென்னையில் ஆறு திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த படம் - வெள்ளை ரோஜா.

தேவி பாரடைஸ்

கிரவுன்

புவனேஸ்வரி

அபிராமி

உதயம்

[மற்றுமொரு அரங்கு]

28. 100 நாட்களை கடந்த அரங்குகள்

சென்னை

தேவி பாரடைஸ்

கிரவுன்

புவனேஸ்வரி

அபிராமி

உதயம்

மதுரை - சென்ட்ரல்

திருச்சி

கோவை

சேலம்

29. இதை தவிர தெலுங்கில் நடிகர் திலகம் நடித்து இந்த வருடம் வெளியான பெஜவாடா பொப்பிலி ஆந்திரத்தில் 100 நாட்களை கடந்து ஓடியது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
15th November 2008, 12:06 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1984

1. இந்த வருடமும் அதாவது அவரது திரையுலக வாழ்கையின் 32-வது வருடத்திலும் படங்களின் எண்ணிக்கையில் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

2. இந்த வருடம் வெளியான படங்கள் - 10

அவற்றில் 100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

திருப்பம்

வாழ்க்கை

தாவணி கனவுகள்

50 நாட்களை கடந்த படங்கள் - 4

சிரஞ்சீவி

சிம்ம சொப்பனம்

எழுதாத சட்டங்கள்

வம்ச விளக்கு

3. பொங்கலன்று (14.01.1984) வெளியான திருப்பம் மக்கள் பேராதரவைப் பெற்று 100 நாட்களை கடந்தது.

[html:b283c090fd]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/thiruppam.jpg">

[/html:b283c090fd]
திருப்பம் 100 நாட்களை கடந்த அரங்கு

சென்னை - சாந்தி

4. மீண்டும் இடைவெளியின்றி அதே வருடத்தில் தொடர்ந்து வெளியான மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை, யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு, அத்தனை தடவை செய்தார் நடிகர் திலகம். அந்த மூன்று படங்கள்

மிருதங்க சக்கரவர்த்தி

வெள்ளை ரோஜா

திருப்பம்

5. முதன் முதலாக முழுக்க முழுக்க கப்பலிலே படமாக்கப்பட்ட தமிழ் படம் நடிகர் திலகத்தின் சிரஞ்சீவி.

6. வெறும் பதினெட்டு நாட்களில் (1983 செப் 13 முதல் 30 வரை) எடுக்கப்பட்ட படம் - சிரஞ்சீவி.

[html:b283c090fd]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercutting4/siranjivirunning.jpg">

[/html:b283c090fd]

17.02.1984 அன்று வெளியான சிரஞ்சீவி 50 நாட்களை கடந்து ஓடியது.

7. முதன் முதலாக சென்னை சபையர் திரையரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் படம் - தராசு [16.03.1984].

8. 14.04.1984 அன்று வெளியான வாழ்க்கை தமிழகமெங்கும் மீண்டும் ஒரு வெற்றி சரித்திரத்தை எழுதியது.

9. சென்னையின் மிக பெரிய திரையரங்கான அலங்கார்
திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடிய படம் - வாழ்க்கை.

10. மதுரை - மது திரையரங்கில் வெளியான முதல் நடிகர் திலகத்தின் படம் வாழ்க்கை. அந்த அரங்கில் வாழ்க்கை 77 நாட்கள் ஓடியது.

11. என்.டி.ஆர் அவர்களின் சொந்த நிறுவனமான ராமகிருஷ்ணா ஸ்டூடியோ சார்பாக தமிழில் நடிகர் திலகத்தை வைத்து எடுத்த முதல் படம் - சரித்திர நாயகன்[26.05.1984].

12. முதன் முதலாக ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வேடத்தில் நடிகர் திலகம் நடித்த படம் -சிம்ம சொப்பனம்.

13. 30.06.1984 அன்று வெளியான சிம்ம சொப்பனம் 60 நாட்களை கடந்து ஓடியது.

14. மீண்டும் ஜோடி இல்லாமல் நடிகர் திலகம் நடித்த படம் - எழுதாத சட்டங்கள்.

15. 15.08.1984 அன்று வெளியான எழுதாத சட்டங்கள் 60 நாட்களை கடந்து ஓடியது.

16. நடிகர் திலகத்துடன் பாக்யராஜ் இணைந்த படம் - தாவணி கனவுகள்

17. 14.09.1984 அன்று வெளியான தாவணி கனவுகள் சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது.

18. மீண்டும் ஒரே நாளில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ரிலீஸ்.

ஆம், தாவணி கனவுகள் வெளியான அதே நாளில் (14.09.1984 -இது ஒன்றும் பண்டிகை நாள் இல்லை) வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படம் முக்தா பிலிம்சின் இரு மேதைகள்.

19. இந்த வருடத்தின் 10-வது படமாக தீபாவளியன்று (23.10.1984)வெளியான படம் - வம்ச விளக்கு.
[html:b283c090fd]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/vamsa.jpg">

[/html:b283c090fd]

நடிகர் திலகத்தின் பேரனாக பிரபு நடித்த இந்த படம் 60 நாட்களை கடந்தது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
18th November 2008, 12:29 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1985

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 8

இதில் வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் - 2

முதல் மரியாதை

படிக்காதவன் [ கௌரவ தோற்றம்]

100 நாட்களை கடந்த படம் - 1

பந்தம்

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் -2

நீதியின் நிழல் [கௌரவ தோற்றம்]

ராஜ ரிஷி

2. தன் அந்தஸ்திற்கு ஒத்து வராத மகளின் காதலை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் மகளின் கணவன் விபத்தில் இறந்து போனதை கொண்டாடும் ஒரு குரூர வில்லத்தன்மையையும், பேத்தி மீது அளவற்ற பாசம் வைக்கும் மனிதனையும் ஒரே சேர நம் கண் முன் நிறுத்தினார் நடிகர் திலகம் பந்தம் படத்தின் மூலமாக.

3. 26.01.1985 அன்று வெளியான பந்தம் 100 நாட்களை கடந்து ஓடியது.

4. பேபி ஷாலினி தமிழில் அறிமுகமான படம் - பந்தம்

5. 33 ஆண்டுகளில் 250 படங்கள். அனைத்திலும் நாயகனாகவே நடித்து புதிய சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

250-வது படமாக வெளியானது - நாம் இருவர். [08.03.1985]

6. பதினான்கு வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகமும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனும் இணைந்த படம் - படிக்காத பண்ணையார். வெளியான நாள் - 23.03.1985

7. இந்த காலக்கட்டத்தில் தொடர்ந்து ஜோடி இல்லாமல் நடித்து கொண்டிருந்தார் நடிகர் திலகம்.

எழுதாத சட்டங்கள்

தாவணி கனவுகள்

வம்ச விளக்கு

பந்தம்

நாம் இருவர்

படிக்காத பண்ணையார்.

[இதை இங்கே குறிப்பிட காரணம் சிலர் நடிகர் திலகம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்காமல் டூயட் பாடிக் கொண்டிருந்தார் என்று விஷயம் தெரியாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்].

8. பாரதி வாசு இயக்கத்தில் நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் நடித்த படம் நீதியின் நிழல்.

9. 13.04.1985 அன்று வெளியான நீதியின் நிழல் 70 நாட்கள் ஓடியது.

10. வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் கல்லூரி பேராசிரியாராக நடித்த படம் - நேர்மை. 03.05.1985 அன்று வெளியானது.

11. வந்தது ஆகஸ்ட் 15. தமிழ் திரையுலகில் என்றுமே முதல் மரியாதை நடிகர் திலகத்திற்கு தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தது.

12. கிளாஸ் - மாஸ் இரண்டு கூட்டத்தினரையும் சரி சமமாக கவர்ந்த படம் முதல் மரியாதை.

13. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் புதிய சாதனை படைத்த படம் - முதல் மரியாதை.

கோவை - அர்ச்சனா/தர்சனா அரங்கு - 450 காட்சிகள் [புதிய ரிகார்ட்]

தஞ்சை - கமலா - 400 காட்சிகள் [புதிய ரிகார்ட்]

சேலம் - சங்கம் பாரடைஸ் - 350 காட்சிகள் [புதிய ரிகார்ட்]

திருச்சி - மாரீஸ் - 112 காட்சிகள்

நெல்லை -சிவசக்தி - 100 காட்சிகள்

பாண்டி - அண்ணா - 100 காட்சிகள்

14. மதுரை குருவில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய முதல் படம் - முதல் மரியாதை.

15. ஈரோடு நகரிலே ஒரு படம் 50 நாட்களை கடந்தாலே பெரிய சாதனை என நினைக்கப்பட்ட அந்நாளிலே 127 நாட்கள் ஓடிய படம் - முதல் மரியாதை

16. திருச்சி மாநகரில் 100 நாட்களில் பதினான்கு லட்ச ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் படம் - முதல் மரியாதை.

17. குடந்தை நகரில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டு அதிக நாட்கள் ஓடிய படம் - முதல் மரியாதை

அரங்கு - காசி

நாட்கள் - 88 நாட்கள்

18. மதுரையில் புதிய சாதனை படைத்த படம் - முதல் மரியாதை.

19. இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து ஓடிய நாட்கள் - 215

மதுரை - குரு - 127 நாட்கள் - Rs 7,18,340.10 p

மதுரை - மது - 88 நாட்கள் - Rs 6,23,490.45 p

மதுரையின் மொத்த வசூல் - Rs Rs 13,41,830.55 p

20. முன் கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக மதுரை மது திரையரங்கில் தீபாவளியன்று (11.11.1985) முதல் மரியாதை 88 நாட்களுக்கு பிறகு மாற்றப்பட்டது. இல்லாவிடின் இரண்டு திரையரங்குகளிலுமே 100 நாட்களை தாண்டியிருக்கும்.

21. முதல் மரியாதையின் மாபெரும் சாதனைகள் சில

50 நாட்களை கடந்த அரங்குகள் - 35

75 நாட்களை கடந்த அரங்குகள் -16

100 நாட்களை கடந்த அரங்குகள் -10

125 நாட்களை கடந்த அரங்குகள் -8

150 நாட்களை கடந்த அரங்குகள் -5

175 நாட்களை கடந்த அரங்குகள் - 3

வெள்ளி விழாவை கடந்த அரங்குகள்

சென்னை -சாந்தி

கோவை - அர்ச்சனா/தர்சனா

சேலம் - சங்கம் பாரடைஸ்.

22. வெகு நாட்களுக்கு பிறகு சரித்திர/புராண படத்தில் நடித்தார் நடிகர் திலகம்.

23. கௌசிக மன்னனாகவும், ராஜ ரிஷி விஸ்வாமித்ரனாகவும் நடிகர் திலகம் நடித்த படம் - ராஜ ரிஷி.

24. நாடக காவலர் மனோகர் அவர்களின் விஸ்வாமித்திரன் நாடகமே ராஜ ரிஷி என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.

25. 20.09.1985 அன்று வெளியான ராஜ ரிஷி 50 நாட்களை கடந்தது.

26. 1985 வருடத்தின் கடைசி படமாக தீபாவளியன்று [11.11.1985] வெளியான படம் படிக்காதவன்.

27. ஆறு வருட இடைவெளிக்கு பின் நடிகர் திலகமும் ரஜினியும் இணைந்த படிக்காதவன் வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது.

28. நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் தோன்றிய படிக்காதவன் வெள்ளி விழாவை கடந்த அரங்குகள்

சென்னை - ஆல்பட்

மதுரை - சென்ட்ரல்

29. மதுரை சென்ட்ரலில் படிக்காதவன் ஓடிய நாட்கள் - 175

175 நாட்களின் மொத்த வசூல் - Rs 15,50,435/-

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
19th November 2008, 12:27 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1986

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

100 நாட்களை கடந்த படங்கள் - 3

சாதனை

மருமகள்

விடுதலை

50 நாட்களை கடந்த படங்கள் -2

ஆனந்தக் கண்ணீர்

தாய்க்கு ஒரு தாலாட்டு

2. திரையுலகிற்கு வந்து முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகும் 7 படங்கள். அதுவும் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்கள் ரீலீஸ்.

3. முதன் முதலாக ஒரு சினிமா இயக்குனராக நடிகர் திலகம் நடித்த படம் - சாதனை.

4. 10.01.1986 அன்று வெளியான சாதனை சென்னை நாகேஷ் திரையரங்கில் ஒரு சாதனை புரிந்தது.

5. அந்த அரங்கின் வரலாற்றில் அதிகமாக தொடர் ஹவுஸ் புல் ஆனது சாதனை படத்திற்கு தான்.

அந்த அரங்கில் தொடர்ந்து 133 காட்சிகள் அரங்கு நிறைந்தது

6. அந்த அரங்கில் அதிக நாட்கள் ஓடிய படமும் சாதனை தான்.

சாதனை படம் ஓடிய நாட்கள் - 112

சாதனை திரைப்படம் 100 நாட்களை கடந்த அரங்குகள்

சென்னை - தேவி பாரடைஸ்/தேவி பாலா

சென்னை - நாகேஷ்

7. சாதனை திரைப்படம் வெளியான 15 நாட்கள் இடைவெளியில் 26.01.1986 அன்று வெளியான படம் - மருமகள்.

8. படத்தின் மொத்த நேரத்தில் சுமார் 80 சதவீதம் நேரம் நடிகர் திலகம் படுக்கையில் படுத்து கொண்டே நடித்த பாத்திரம் இடம் பெற்ற படம் - மருமகள்.

ஆயினும் கூட "நடிகர் திலகம் படுத்துக் கொண்டே ஜெயித்த" படம் - மருமகள்

மருமகள் 100 நாட்களை கடந்த அரங்கு

சென்னை - தேவிகலா.

9. இதன் மூலம் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை புரிந்தார் நடிகர் திலகம்.

படிக்காதவன்

சாதனை

மருமகள்.

10. இந்த வெற்றியின் பின்னணியை பார்க்க வேண்டும். முதல் மரியாதை வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. படிக்காதவன் வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் வெளியான நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் 100 நாட்களை கடந்து ஓடுகின்றன அதுவும் நடிக்க வந்த 34-வது வருடத்தில் என்றால், இதை விட நடிகர் திலகத்தின் BO பவருக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

11. மூன்றாவதாக வெளியான படம் -ஆனந்தக் கண்ணீர். மீண்டும் மேடை நாடகம் திரைப்படமானது.

12. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 07.03.1986 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

13. மீண்டும் நடிகர் திலகமும் ரஜினியும் இணைந்த படம் -விடுதலை.

14. ஹிந்தி குர்பானி தமிழில் விடுதலை என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 11.04.1986 அன்று வெளியானது.

இந்த படம் 100 நாட்களை கடந்து ஓடியது.

சென்னை - தேவி பாரடைஸ்

15. மலையாளத்தின் பாக்யராஜ் என்று அழைக்கப்பட்டிருந்த பாலச்சந்திர மேனன் தமிழில் முதன் முதலாக இயக்கிய படம் - தாய்க்கு ஒரு தாலாட்டு.

17. 16.07.1986 அன்று வெளியான இந்த படம் 50 நாட்களை கடந்து ஓடியது.

18. தீபாவளியன்று (01.11.1986) வெளியான படம் -லெட்சுமி வந்தாச்சு.

19. ஹிந்து ரங்கராஜன் தயாரித்து ராஜசேகர் இயக்கிய படம் - லெட்சுமி வந்தாச்சு.

20. கோவை தம்பியின் தயாரிப்பில் பாரதி ராஜாவின் மைத்துனர் மனோஜ் குமார் நடிகர் திலகத்தை இயக்கிய படம் - மண்ணுக்குள் வைரம். வெளியான நாள் 12.12.1986.

21. நடிகர் திலகத்தோடு அன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் முரளி, வாணி விஸ்வநாத் முதன் முதலாக இணைந்து நடித்த படம் - மண்ணுக்குள் வைரம்.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
20th November 2008, 12:58 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1987

1. திரையுலகில் நடிகர் திலகம் ஆக்டிவாக இருந்த கடைசி வருடம்.

2. இந்த வருடம் வெளியான படங்கள் - 10

தமிழ் - 8

தெலுங்கு - 2

இந்த ஆண்டில் 100 நாட்களை கடந்த படங்கள் - 3

ஜல்லிக்கட்டு

விஸ்வநாத நாயக்குடு [தெலுங்கு]

அக்னி புத்ருடு [தெலுங்கு]

50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

முத்துக்கள் மூன்று

வீர பாண்டியன்

அன்புள்ள அப்பா

கிருஷ்ணன் வந்தான்

3. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் கார்த்திக் இணைந்து நடித்த படம் ராஜ மரியாதை.

ராஜ மரியாதை 14.01.1987 பொங்கலன்று வெளியானது.

4. நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை தயாரித்த பாலாஜி தயாரிப்பில் நடிகர் திலகம் கடைசியாக நடித்த படம் - குடும்பம் ஒரு கோவில்.

26.01.1987 குடியரசு தினத்தன்று வெளியானது குடும்பம் ஒரு கோவில்.

5. முதன் முதலாக நடிகர் திலகம் படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்த படம் முத்துக்கள் மூன்று.

6. மேஜர் தயாரிப்பில் ஏ.ஜகந்நாதன் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் சத்யராஜ் மற்றும் பாண்டியராஜன் இணைந்து நடித்த முத்துக்கள் மூன்று 06.3.1987 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்து ஓடியது.

7. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் விஜயகாந்த் இணைந்து நடித்த படம் வீர பாண்டியன்.

8. இயக்குனர் துரை தயாரிக்க கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் 14.04.1987 அன்று வெளியான வீர பாண்டியன் 50 நாட்களை கடந்து ஓடியது.

9. நீண்ட இடைவெளிக்கு பின் ஏ,வி.எம் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் அன்புள்ள அப்பா.

10. நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை இயக்கிய திருலோகச்சந்தர் நடிகர் திலகத்தை கடைசியாக இயக்கிய படம் அன்புள்ள அப்பா.

11. நடிகர் திலகத்துடன் இளைய தலைமுறையை சேர்ந்த நதியா மற்றும் ரஹ்மான் இணைந்து நடித்த அன்புள்ள அப்பா 16.05.1987 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

12. 14.08.1987 அன்று வெளியான படம் விஸ்வநாத நாயக்குடு [தெலுங்கு] ஆந்திராவில் மெயின் சென்டர்களிலெல்லாம் 100 நாட்களை கடந்தது.

13. திரையுலகில் தன்னுடைய 35வது ஆண்டில் நிற்கும் போதும் சாதனை செய்வதை நிறுத்தவில்லை நடிகர் திலகம்.

14. பொங்கல்,புத்தாண்டு தீபாவளி இப்படி எந்த விசேஷ நாளும் இல்லாமல் சாதாரண நாளான 28.08.1987 அன்று ஒரே நாளில் நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் வெளியாகின.

ஜல்லிக்கட்டு

கிருஷ்ணன் வந்தான்

அக்னி புத்ருடு [தெலுங்கு]

இவற்றில் 100 நாட்களை கடந்த படங்கள்

ஜல்லிக்கட்டு

அக்னி புத்ருடு [தெலுங்கு]

50 நாட்களை கடந்த படம்

கிருஷ்ணன் வந்தான்.

15. ஒரு நடிகன் திரைப்பட துறைக்கு வந்து 35 வருடங்களுக்கு பிறகும், அந்த 35 அனுபவ வருடங்களை விட வயது குறைவான ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் நிலை பெற்ற பிறகும், ஒரே நாளில் மூன்று படங்களை வெளியிடுவது அதில் இரண்டு நூறு நாட்களை கடப்பது ஒன்று ஐம்பது நாட்களை கடந்து ஓடுவது என்ற சாதனையை நடிகர் திலகம் செய்தார் என்று சொன்னால், நடிப்பில் மட்டுமல்ல இது போல சாதனை சக்கரவர்த்தியையும் தமிழ் சினிமா கண்டதுமில்லை இனி காணப் போவதுமில்லை.

16. முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து மணிவண்ணன் இயக்கிய படம் ஜல்லிக்கட்டு.

100 நாட்களை கடந்து ஓடிய அரங்கு

சென்னை - சாந்தி.

17. நடிகர் திலகம் நடித்த ஒரு படத்தின் 100 -வது நாள் விழாவிற்கு மக்கள் திலகம் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கியது முதலும் கடைசியுமாய் ஜல்லிக்கட்டு படத்திற்கு தான்,

18. 1987 டிசம்பர் 5 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு படத்தின் -100-வது நாள் விழாவே எம்.ஜி.ஆர் இறுதியாக கலந்து கொண்ட திரைப்பட விழா.

19. அக்னி புத்ருடு ஐதராபாத், வைசாக், விஜயவாடா மற்றும் பல நகரங்களில் 100 நாட்களை கடந்து ஓடியது.

20. நடிகர் தேங்காய் சீனிவாசன் முதன் முதலாக தயாரித்த படம் கிருஷ்ணன் வந்தான் 50 நாட்களை கடந்து ஓடியது.

21. 15 வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகத்தின் படம் வெளியாகாமல் தீபாவளி கடந்து போனது இந்த வருடம் தான்,

22. முதன் முதலாக இரட்டையர்கள் மனோஜ் கியான் இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் தாம்பத்யம்.

23. நடிகர் திலகத்துடன் அம்பிகா மற்றும் ராதா இணைந்து நடித்த தாம்பத்யம் 20.11.1987 அன்று வெளியானது.

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
21st November 2008, 12:16 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1988

1987-ம் டிசம்பர் மாதம் 24-ந் தேதி தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்தார். அதற்கு பிறகு தமிழக அரசியலில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களின் விளைவாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக திரைபடங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

எனவே இந்த வருடம் வெளியான படங்கள் - 2

1.புதிய பறவைக்கு பிறகு சிவாஜி பிலிம்ஸ் பானரில் தயாரித்த படம் - என் தமிழ் என் மக்கள்.

சந்தான பாரதி இயக்கிய இந்த படம் 02.09.1988 அன்று வெளியானது.

2. முதன் முதலாக சத்யா மூவீஸ் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் - புதிய வானம்.

3. முதன் முதலாக ஆர். வி. உதயகுமார் நடிகர் திலகத்தை இயக்கிய படம் - புதிய வானம்.

4. நடிகர் திலகத்தின் 275 -வது படம் - புதிய வானம்.

5. 36 வருடங்களில் 275 படங்களில் நடித்து சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

6. 10.12.1988 அன்று வெளியான புதிய வானம் 100 நாட்களை கடந்து ஓடியது.

7. 1989 மற்றும் 1990 -ம் வருடங்களில் நடிகர் திலகம் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

8. 1991 - ம் ஆண்டு நடிகர் திலகம் நடித்து ஒரே ஒரு படம் வெளியானது.

9. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் மனோரமா ஜோடியாக நடித்த படம் - ஞானப்பறவை.

11.01.1991 அன்று வெளியானது ஞானப்பறவை.

1992- ம் ஆண்டில் நடிகர் திலகம் நடித்து நான்கு படங்கள் வெளியாகின

10. நடிகர் திலகம் மற்றும் பிரபுவுடன் ராமாயணம் சீரியல் சீதை புகழ் தீபிகா நடித்த படம் நாங்கள்.

13.03.19992 அன்று நாங்கள் வெளியானது

11. முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து கேயார் இயக்கிய படம் - சின்ன மருமகள்.

23.05.1992 அன்று வெளியானது சின்ன மருமகள்.

12. நடிகர் திலகம் பத்திரிக்கையாளராக நடித்த படம் - முதல் குரல்.

வி.சி.குகநாதன் இயக்கிய முதல் குரல் 14.08.1992 அன்று வெளியானது.

13. பதினைந்து வருட இடைவெளிக்கு பின் நடிகர் திலகமும் கமலும் இணைந்து நடித்த படம் தேவர் மகன்.

14. மலையாளத்தின் பரதன் தமிழில் இயக்கிய படம் தேவர் மகன்.

15. 1992 - வருடம் தீபாவளியன்று [25.10.1992] வெளியான தேவர் மகன் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக ஓடி சாதனை புரிந்தது.

16. தேவர் மகன் 100 நாட்கள் ஓடிய அரங்குகளின் எண்ணிக்கை - 15

தேவர் மகன் வெள்ளி விழா கொண்டாடிய ஊர்கள் - 2

சென்னை

மதுரை - மீனாக்ஷி பாரடைஸ்

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்

PS: Thamizh, check 1987 year post - Veera Pandiyan

Murali Srinivas
22nd November 2008, 02:17 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் -1993

1. முதன் முதலாக இயக்குனர் மனோபாலா நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய படம் -பாரம்பரியம்

2. நடிகர் திலகத்துடன் சரோஜா தேவி, நிரோஷா போன்றவர்கள் இணைந்து நடித்த பாரம்பரியம் தீபாவளி நாளன்று (13.11.1993) வெளியானது.

வருடம் -1995

3. நடிகர் திலகத்தோடு மீண்டும் பாரதி ராஜா இணைந்த படம் - பசும் பொன்.

4. முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த படம் - பசும் பொன்.

5. நடிகர் திலகத்துடன் பிரபு, சிவகுமார் மற்றும் ராதிகா இணைந்து நடித்த பசும் பொன் 14.04.1995 அன்று வெளியானது.

வருடம் -1997

6. நடிகர் திலகத்துடன் முதன் முதலாக விஜய் இணைந்த நடித்த படம் ஒன்ஸ் மோர்.

7. இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் தயாரிக்க S.A. சந்திரசேகர் இயக்கிய படம் ஒன்ஸ் மோர்

8. 1997 ம் வருடம் ஜூலை மாதம் 3 ந் தேதி நடிகர் திலகத்திற்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு மறு தினம் (04.11.1997) வெளியான ஒன்ஸ் மோர் 100 நாட்களை கடந்து ஓடியது.

9. சென்னை M.M. திரையரங்கில் அதிக நாட்கள் (133) ஓடிய படம் ஒன்ஸ் மோர்.

10. நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் திலகம் நடித்த மலையாள படம் ஒரு யாத்ரா மொழி

11. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் மோகன்லால் இணைந்து நடித்த படம் ஒரு யாத்ரா மொழி.

12. பிரதாப் போத்தன் இயக்கிய ஒரு யாத்ரா மொழி 07.08.1997 அன்று வெளியாகி மெயின் சென்டர்களான திருவனந்தபுரம், எர்ணாகுளம். கோழிகோடு, திருச்சூர், பாலக்காடு, கொல்லம் போன்ற ஊர்களில் 70 நாட்கள் ஓடியது.

வருடம் -1998

13. இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க இதயத்தினுள்ளில் பேஸ் மேக்கர் (pace maker) பொருத்தப்பட்டிருந்த நிலையிலும், தான் அது வரை ஏற்காத வேடம் என்பதால் தலையில் கரகம் வைத்து ஆடும் நாட்டுப்புற கலைஞனாக தன்னுடைய 70-வது வயதில் நடிகர் திலகம் நடித்த படம் என் ஆச ராசாவே.

14. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் முரளி, ராதிகா, ரோஜா போன்றவர்கள் நடித்த என் ஆச ராசாவே 28.08.1998 அன்று வெளியானது.

வருடம் -1999

15. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் அர்ஜுன் இணைந்த படம் மன்னவரு சின்னவரு.

16. கலைப்புலி தாணு தயாரிப்பில் பி.என். ராமச்சந்தர் இயக்கிய மன்னவரு சின்னவரு 15.01.1999 அன்று வெளியானது.

17. நடிகர் திலகமும் ரஜினியும் கடைசி முறையாக இணைந்த படம் படையப்பா.

18. முதன் முதலாக கே. எஸ்.. ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த படம் - படையப்பா.

19. முதன் முதலாக நடிகர் திலகம் நடித்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த படம் - படையப்பா [நடிகர் திலகத்திற்கு பாடல் காட்சி இல்லையென்றால் கூட]

20. நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் தோன்றிய படையப்பா மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

21. 10.04.1999 அன்று வெளியான படையப்பா 88 அரங்குகளில் 100 நாட்களும் 6 அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது

22. நடிகர் திலகத்தின் நடிப்பாளுமையை மூவீ காமிரா கடைசி முறையாக உள் வாங்கிக்கொண்ட படம் - பூ பறிக்க வருகிறோம்.

23. இளைய தலைமுறையை சேர்ந்த ஏ. வெங்கடேஷ் இயக்க, இன்றைய நாயகர்களில் ஒருவரான விஷாலின் அண்ணன் அஜய், மாளவிகா மற்றும் நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்த பூ பறிக்க வருகிறோம் 17.09.1999 அன்று வெளியானது.

நடிகர் திலகத்தின் புதிய படங்கள் இதற்கு பிறகு வெளி வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சாகா வரம் பெற்ற படங்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும், சிற்றூர்களிலும் இன்றும் திரையிடப்படுகின்றன. அவை சாதனைகளை புரிந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் படங்களும் அவற்றை திரையிட திரையரங்குகளும் இருக்கும் வரை அவரது சாதனைக்கு முடிவேது?

அன்புடன்

PS: இந்த தொடரை பற்றிய ஒரு பின்னுரை விரைவில்

Murali Srinivas
23rd November 2008, 11:32 PM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

பின்னுரை

இந்த தொடரை ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்த போது இந்த விஷயங்களை இப்போது எழுத வேண்டிய தேவை என்ன என்ற எண்ணம் ஒரு சிலருக்கு தோன்றியிருக்கலாம். நண்பர் Plum போன்றவர்கள் அதை வெளிப்படையாக கேட்கவும் செய்தார்கள். நடிகர் திலகத்தின் படங்களை காப்பாற்றி வைத்தாலே, 2080-லும் இருக்கக்கூடிய ரசிகன் சொக்கி போவானே என்று அழகான ஒரு பாய்ண்ட் சொன்னார். உண்மைதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர் ரசிக்கப்படுவார். அதில் இங்கே யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அவரை ஒரு சிறந்த நடிகராக மட்டுமே முன்னிறுத்தி அவரது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை மறைத்து விட பல காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அந்த கருத்து நாளைடைவில் பரவலாக பரப்பபட்டது.

நடிகர் திலகம் ஒரு அற்புதமான நடிகர். ஆனால் அவரது படங்கள் எப்போதாவது தான் சிறப்பாக ஓடியிருக்கிறது. மினிமம் காரண்டி கிடையாது என்றெல்லாம் சொல்ல, எழுத ஆரம்பித்தார்கள். முதலில் கர்ணன் தோல்வி, பிறகு சிவந்த மண் தோல்வி, உத்தம புத்திரன் தோல்வி என்றெல்லாம் பல வருடங்களாக சொல்லி சொல்லி வந்தவர்கள் இப்போது அண்மையில் வீர பாண்டிய கட்டபொம்மன் தோல்வி என்று எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியே போனால் வசந்த மாளிகை கூட தோல்வி படம் என்று சொல்லுவார்கள். அதிலும் இணைய தளமும் வலைப்பூக்களும் வந்த பிறகு விஷயம் தெரியாதவர்கள், ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் எல்லாம் படம் ஓடிய அரங்குகளில் இருந்த டி.சி. ஆரை பக்கத்திலிருந்து பார்த்தது போல கமன்ட் வேறு. இன்று இணையதளத்திலேயே வாழும் இளைய தலைமுறையும் அடுத்தடுத்த தலைமுறைகளும் இதை உண்மை என்றே நம்பி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உடனே அடுத்த கேள்வி எழும். இவர்கள் சொல்வதாலோ, எழுதுவதாலோ கட்டபொம்மனோ வசந்த மாளிகையோ தோல்விப் படமாகி விடுமா? அப்போது இந்த எழுத்துகளை பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற வினா வரும், வந்திருக்கிறது. இதை கேட்கும் போது நான் படித்த ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது.

ஒரு தமிழறிஞர் ஒரு வார இதழில் நாம் அன்றாட வாழ்வில் தமிழ் சொற்களை விடுத்து பிற மொழி சொற்களை பயன்படுத்துவதை ஒரு குறையாக சொல்லியிருந்தார். உதாரணமாக அருவி என்ற தமிழ் சொல்லை விடுத்து ஆங்கிலத்தின் water falls -ஐ மொழி பெயர்த்து நீர் வீழ்ச்சி என்று சொல்லுகிறோம். சாளரம் என்ற சொல்லை விடுத்து ஜன்னல் என்று சொல்லுகிறோம். இப்படி போனது அவரது வாதம். ஒரு வாசகர் கடிதம் அனுப்புகிறார். பயன்படுத்த எளிதாக உள்ளதும் அனைவருக்கும் தெரிந்த வார்த்தையான ஜன்னல் என்ற சொல்லை விடுத்து சாளரம் என்று சொல்ல வேண்டுமா? இப்படி கேட்டிருந்தார் அவர். அதற்கு அறிஞர் சொன்ன பதில். தவறில்லை. ஆனால் ஜன்னல் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தினால் நாளடைவில் சாளரம் என்ற சொல் புழக்கத்திலிருந்து மறைந்து போகும். ஜன்னல் மட்டுமே நிலை நிற்கும். இது வருங்கால வரலாற்று ஆர்வலர்களுக்கு நாம் செய்யும் துரோகம். காரணம் ஜன்னல் என்பது போர்ச்கிசிய சொல். வரலாற்று அறிஞர்கள், போர்ச்கிசியர்கள் இந்தியாவிற்கு/ தமிழகத்திற்கு வந்த பிறகு தான் கட்டிடங்களுக்கு ஜன்னல் வைக்கும் முறையே வந்தது என்ற முடிவுக்கு வருவார்கள். யாரும் சொல்லி தராமலே அது குடில் ஆனாலும் கோபுரம் ஆனாலும் வெளிச்சமும் காற்றும் வருவதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி அந்த இடைவெளி வழியாக விலங்கினங்கள் உள்ளே வராமல் இருக்க கம்பிகள் கட்டைகள் வைத்து அடைத்து அதற்கு சாளரம் என்றும் பேரிட்டவன் தமிழன். அவனுக்கு போர்ச்கிசியர்கள் வந்து சொல்லிக்கொடுத்தார்கள் என்ற வரலாற்று பிழை சரித்திரத்தில் இடம் பெறாமல் இருக்கவே இந்த முயற்சி என்று முடித்தார் அறிஞர்.

அது போல நாளை தமிழ் திரைப்பட வரலாறு எழுதப்படும் போது நடிகர் திலகத்தை பற்றிய வரலாற்று பிழைகள் இடம் பெற்று விடக்கூடாது என்பதே நமது விருப்பம். என்னால் தமிழ் கூறும் நல்லுலகம் மொத்தத்திற்கும் இதை சொல்ல முடியாவிட்டாலும் கூட, இங்கே எழுதுவதன் மூலம் கணிசமான ஆட்களிடம் இதை கொண்டு சேர்க்க முடிந்ததில் ஒரு மன நிறைவு.

இந்த தொடரின் ஆரம்ப வித்து விழுந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு. மதுரைக்கு சென்றிருந்த போது அங்கே கர்ணன் படம் சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற எனக்கு அங்கிருந்த ரசிகர்கள் மூலமாக ஒரு கையேடு (Booklet) கிடைத்தது. அதில் நடிகர் திலகத்தின் படங்கள் மதுரையில் மற்றும் சென்னையில் நிகழ்த்திய சாதனைகளை தொகுத்திருந்தனர். நடிகர் திலகத்தின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவற்றுடன் எனக்கு தெரிந்த தகவல்களையும் இணைத்து கொண்டேன்.

வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் என்னுடைய சாயங்காலங்களை சந்தோஷப்படுத்திய, ஏன் என் காலைகளை, மதியங்களை மாலைகளை இரவுகளை சந்தோஷப்படுத்திய, தன் நடிப்பின் மூலமாக ஒரு பரவச உணர்வு நல்கிய அந்த மகா கலைஞனுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு காணிக்கை இந்த தொடர். இது மதுரையை மட்டுமே (சென்னையையும்) மையமாக வைத்து தொகுக்கப்பட்ட ஒன்று. இது போல திருச்சியிலும் சேலத்திலும், கோவையிலும் நெல்லையிலும் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடிகர் திலகம் புரிந்த சாதனைகள் எத்தனை எத்தனையோ.

இந்த தொடருக்கு நான் நன்றி சொல்ல வேண்டியது இந்த கையேட்டை வழங்கிய எங்கள் மதுரையின் காமராஜர் சாலை அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ்-ஐ சேர்ந்தவர்களுக்கும், நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் பேப்பர் கட்டிங்களை தொகுத்து வழங்கிய சென்னை ரசிகர்களுக்கும், அதையும் தன்னிடம் இருந்த நாளிதழ் விளம்பரங்களையும் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டு, நான் எந்த நேரத்தில் கூப்பிட்டு தகவல்கள் கேட்டாலும் முகம் சுளிக்காமல் கொடுத்துதவிய ராகவேந்தர் அவர்களுக்கும், அந்த விளம்பரங்களை இங்கே அப் லோட் செய்த ஜோ அவர்களுக்கும். தகவல்கள் அளித்து உதவிய செந்தில்குமார் போன்றவர்களுக்கும், இதை ஒரு தனி திரியாக அனுமதித்த ஹப் moderators, இந்த தொடருக்கு பெரிதும் அதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

அன்புடன்