PDA

View Full Version : Tamil mozhi/kalachaaram/varalaaru potrum padangal

Anban
30th August 2008, 11:18 PM
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே,

தங்கள் பார்வையில் தமிழ், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு பறைசாற்றும் திரைப்படங்களாக நீங்கள் கருதியவை எவை?

எனது பார்வையில்,
இவ்வாறு வெகு சில படங்களே இதுவரை வெளிவந்துள்ள. நாம் அது போன்ற உயரிய படங்களைப்பற்றி இங்கு பேசலாம்.

தயவு செய்து, தமிழினை இழிவு செய்யும் படங்களையும், எப்போதும் அது போன்ற படங்களில் நடிக்கும் பிறவிகளைப்பற்றி இங்கு வாதம் செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :P

Vivasaayi
30th August 2008, 11:39 PM
ஹிஹி

இது யார்னு ஒரு அளவுக்கு யூகித்துவிட்டேன்.

Vivasaayi
30th August 2008, 11:44 PM
வரலாற்றையும் பண்பாட்டையும் சரியாக கையாள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்...முதலில் தற்கால நாகரீகத்தை சரியாக கையாள்கிறார்களா?

Shakthiprabha.
30th August 2008, 11:52 PM
தங்கள் பார்வையில் தமிழ், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு பறைசாற்றும் திரைப்படங்களாக நீங்கள் கருதியவை எவை?

:P

"ஏன்னா...நான் ஒரு தமிழ்ப் பொண்ணு"

"தமிழனுக்கு தலை வணங்கி பழக்கம் இல்லை"

"நீங்கள் என் தெய்வம் அல்லவா! கல்லானாலும்....."

"வீடு தேடி வந்தவங்களை வான்னு சொல்றது தான் தமிழ் பண்பாடு"

என்று நம் பண்பாட்டை நினைவூட்டும் தெள்ளுத்தமிழ் வசனங்களைக் கொண்ட படங்கள்... மற்றும்

நேற்று வரை குட்டைப் பாவாடையில் திரிந்த பெண்கள் திருமணமானவுடன் சேலைக்கு மாறிவிடும் நடைமுறைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் இப்படி பல படங்கள் தமிழ் பண்பாட்டை பறைசாற்றுகிறதே :? எதைக் குறிப்பிடுவது! எதை விடுவது!

Roshan
31st August 2008, 12:40 AM

SP :lol:

More 'thamizh kalaachaara dialaaks'

நீ என் பொண்டாட்டி, எனக்கு ஒன்ன கை நீட்டி அடிக்க உரிமை இருக்கு..

எதுவா இருந்தாலும், நீதாம்மா அனுசரிச்சு போகணும்..

பொம்பளேன்னா அடக்கம் ஒழுக்கமா இருக்கணும் (as if ஆம்பளைன்னா அடக்கம் ஒழுக்கம் தேவையில்லை)

ஒரு விதவையோ, விவாகரத்தானவளோ மறுமணம் செய்வதுபோல் கதை இருந்தால் பெரும்பாலும் அவள் கற்புடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆனால் ஆண்மகன் குழந்தைகளுடன் இருந்தாலும் பெண் தியாகியாக மாறி அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்னத்த சொல்ல .. :sigh2: :curse:

joe
31st August 2008, 07:14 AM
SP,
நீங்கள் சொல்பவற்றில் பெரும்பான்மை தமிழருக்கிடையே மதமும் ,சாதியும் புகுந்த பிறகு வந்து சேர்ந்த கலாச்சாரங்கள் . பெண்கள் படிக்க லாயகில்லை என்று கற்பித்த மதமும் சாதியும் வருவதற்கு முன்னர் அவ்வை போன்ற பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க.

joe
31st August 2008, 07:30 AM
"வீடு தேடி வந்தவங்களை வான்னு சொல்றது தான் தமிழ் பண்பாடு"

மற்றவற்றோடு இதையும் சேர்த்த மர்மம் என்னவோ ? :roll:

ஏன் இந்த பண்பாட்டுல உங்களுக்கு உடன்பாடு இல்லையா? :shock:

NOV
31st August 2008, 10:35 AM
social - mEl naattu marumagal

history - thirumaal perumai, raaja raaja chOlan, kappal Ottiya thamizhan

P_R
31st August 2008, 11:23 AM
டேய் சொந்த வீட்டுக்குள்ள வரதுக்கு தந்தி அடிச்சிட்டாடா வருவாங்க ?
ஹி ஹி...சொந்த வீடாவே இருந்தாலும் கதவை தட்டிட்டு வரது தான் தமிழருடைய பண்பாடு
(அடுத்த வரியை படத்தில் தேடிக்கொள்ளவும்)

P_R
31st August 2008, 11:29 AM
SP and Roshan :thumbsup:

நீ என் பொண்டாட்டி, எனக்கு ஒன்ன கை நீட்டி அடிக்க உரிமை இருக்கு..

It's actually even worse
நீங்க என் கணவர் என்னை அடிங்க, உதைங்க, வெட்டிப் போடுங்க...அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு (!!!!) ஆனா...

:evil: :lol:

joe
31st August 2008, 12:04 PM
"உங்களுக்கு சேவை செய்ய கிடைச்ச பாக்கியமா நினைக்குறேன்"

"காலம் பூரா உங்க காலடியில கிடந்து பாத பூஜை செய்யுறத விட எனக்கு வேறென்ன வேணும்"

P_R
31st August 2008, 12:20 PM
வசிட்டருக்கும் ராமருக்கும் வள்ளுவனுக்கும்
முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்து ஓராயிரம் ஆண்டு தவம் செய்து பார்க்கினும்
பெறல் சால அரிது காண்
புசிப்பதும் பரிநல்லமுது என்றெண்ணி
புலையர் விற்றிடும் கள்ளுண்னலாமோ ?
அசுத்தர் சொல்வது கேட்களிர் காளையீர்
ஆண்மை வேண்டின் இம்மணம் முடித்தல் ஓம்புமின்

- :twisted:

joe
31st August 2008, 12:27 PM
PR,
இப்பாடல் எதிலுள்ளது ?

P_R
31st August 2008, 01:56 PM
PR,
இப்பாடல் எதிலுள்ளது ?

பாரதியின் 'சுயசரிதை' என்ற நெடுங்கவிதையிலிருந்து.
அன்னிக்கு அவர் மனைவியோட என்ன சண்டையோ தெரியல :P

I just saw a comedy (?) scene where Vivek says something like:

"இப்பொ எல்லாம் பட்டணத்து பொம்பளைங்க எவளுகளுமே புருஷனுக்கு சமைக்கிறதில்ல" I found that incredibly blunt. And borne out of a regressive frame of mind. The irony is Vivek plays a social 'reformer' in a film.

I am not trying to belittle Vivek or Bharathi.Bharathi is one of the forerunners in Women's lib. in the Tamil world. But at some level, even he cannot escape being trapped in the mores of his time.

Anyway, the point I am trying to make is that: 'culture' is a product of collective existence and not consciously created by individuals. So when we look back at times to criticize we must keep in mind that what offends us was deemed acceptable just a few years back. One cannot help but wonder what barbarities generations to come will criticize us. We may not even be aware today what atrocities we are committing. Doesn't justify anything of course. Just some food for thought :-)

Ok. Enough digression.

joe
31st August 2008, 02:07 PM

Completely Agreed. :)
Many reformers has taken at least one step further ,may not be complete revolution ..but that itself should be appreciated considering the time and status of then soceity.

Vivasaayi
31st August 2008, 02:15 PM
PR,
இப்பாடல் எதிலுள்ளது ?

Anyway, the point I am trying to make is that: 'culture' is a product of collective existence and not consciously created by individuals. So when we look back at times to criticize we must keep in mind that what offends us was deemed acceptable just a few years back. One cannot help but wonder what barbarities generations to come will criticize us. We may not even be aware today what atrocities we are committing. Doesn't justify anything of course. Just some food for thought :-)

anything that affects others is an atrocity...and also when we look into the culture of other soceities and other nations we could easily find the difference.

tr style-la sonna anything that "supress and depress and oppresss" the views of others is an atrocity :lol:

just that we dont want to be aware of it...to maintain the comfort level
even when we find it sometimes as an atrocity we console ourselves as its just a part of our culture and soceity

P_R
31st August 2008, 02:19 PM
Viv, I am not trying to be an escapist. Of course all of us , individually, try to resist what society thrusts and try to live a life that is morally defensible. But I am saying certain things are over and above that too.

anything that affects others is an atrocity...and also when we look into the culture of other soceities and other nations we could easily find the difference.Wish it were that easy to define. We 'affect' others all the time.The definition of 'affect' (physically,mentally,morally) and the definition of 'others' (ethnic groups, compatriots, the human race, all sentient beings) are all quite difficult.

Vivasaayi
31st August 2008, 02:24 PM
pr,

the initial scenes of dasa

i found it unexaggerated...

but for the elephant and neps(which is acceptable) everything looked acceptable.

the way people are taken via river...nambi is taken inside the sea or the mandapam in which neps sits in the sea shore.

P_R
31st August 2008, 02:24 PM
Ok back to the topic.

தங்கள் பார்வையில் தமிழ், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு பறைசாற்றும் திரைப்படங்களாக நீங்கள் கருதியவை எவை?

சிவகங்கை சீமை திரைப்படத்தில் மன்னர் சற்று உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருப்பார். அவையோர் பக்கவாட்டில் உள்ள பீடங்களில் சம்மணம் இட்டு அமர்ந்திருப்பர்.இதுதான் உண்மைக்கு மிக அருகில் இருந்த சித்தரிப்பு. நாற்காலியில் வீற்றிருப்பது போல அல்ல.காலில் ஒற்றை சிலம்பு தவிற யாருக்கும் அணிகலன்கள் இல்லை.ஆடவர்கள் வெற்று மேலுடம்புடன் இருப்பர், அல்லது சாதாரண மேல்துண்டு. பொன்னால் ஆன ஆபரணங்கள், பட்டுடை, தங்கக்ரீடம் போன்றவை எல்லாம் கிடையாது. குறைந்தபட்சம் தினப்படி அப்படி அணிவது கிடையாது. இது தான் நமது வழக்கம். மார்கோ போலோ, அமிர் குஸ்ரொ போன்ற உலகப்பிரயாணிகள் தமிழகத்தில் தங்கி (உணர்ச்சிவசப்படாமல்) எழுதிய குறிப்புகள் இவ்வாறே கூறுவதாக படித்துள்ளேன்.

ஆனால் நமது சித்தரிப்பு எல்லாம் அனேகமாக பட்டும்-தங்கமும் ஜொலிக்கும் வகை தான். அதை பிழை என்றும் சொல்ல முடியாது. பார்ப்பவர்களிடம் பிரமிப்பையும்,பெருமையையும் ஏற்படுத்த செய்த மிகையான சித்தரிப்பு என்று சொல்லலாம்.

Vivasaayi
31st August 2008, 02:35 PM
sivangangai seemai is kannadasan production and also written by him...right?

apn padathula pathuthan ivlo jewellery models irukunne neraya peruku theriyum :lol:

Shakthiprabha.
31st August 2008, 02:36 PM
"வீடு தேடி வந்தவங்களை வான்னு சொல்றது தான் தமிழ் பண்பாடு"

மற்றவற்றோடு இதையும் சேர்த்த மர்மம் என்னவோ ? :roll:

ஏன் இந்த பண்பாட்டுல உங்களுக்கு உடன்பாடு இல்லையா? :shock:

joe,

Tamizh panpaadu means something EXCLUSIVE OR UNIQUE to the tamizh folks. I find it extremely irritating and annoying to hear
'NORMAL HUMAN behaviour' to be labelled as "tamizh panpaadu" in our movies.

வந்தவங்களை உலகத்துல உள்ள அனைத்து மக்களும் "வா" ன்னு சொல்வது தான் பண்பு. அது மனித இயல்பு. மனித பண்பு. அது கன்னட மக்களுக்கும், ஒரிய மக்களுக்கும் இந்தியரல்லாத, இன்னும் ஏனைய நாட்டு மக்கள் சிலருக்கும் பொருந்தும்.

Dont u find it RIDICULOUS to brand few "good human behaviours" as TAMIZH PANPAADU?

இன்னொன்று....

"ஒரு தமிழ் பொண்ணுக்கு மானம் தான் பெருசு!" :sigh2: :banghead: அப்போ தெலுங்கு பொண்ணுக்கோ, மஹராஷ்ட்ரா பொண்ணுக்கோ, இந்தியரல்லாத, கென்யா நாட்டு பொண்ணுக்கோ மானம் பெரிசில்லையா?!!?!?! என்ன %$#^^ நான்சென்ஸ் இது!!!

"ஒரு தமிழ் பொண்ணோட மானம் காப்பது என் கடமை"

ஏன் வேற மொழி பேசற பொண்ணு மானம் போச்சுன்னா காப்பாத்த மாட்டீங்களா! சுத்த அபத்தம்!

Shakthiprabha.
31st August 2008, 02:39 PM
பி.ரா குறிப்பிட்ட பாரதி, விவேக் விவகாரத்திற்கு பிறகு வருகிறேன்.

//to get back rightfully on topic of this thread....

என்னைப் பொறுத்த வரை நான் பார்த்த சில படங்களில் தமிழ் கலாச்சாரத்தை மிகையின்றி ஒரளவு சரியாக சித்தரித்த படங்கள்

1. சிவகங்கைச் சீமை
2. பூம்புகார்

Vivasaayi
31st August 2008, 02:41 PM
sp,

enna ipdi solliteenga

"virundhombal" is ofcourse a tamizhians identity.

வீட்டின் முன் திண்ணையை எந்த வெள்ளைக்காரன் கட்டி வைத்தான்?

joe
31st August 2008, 02:48 PM

இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே !

உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .

இன்னொன்று....

"ஒரு தமிழ் பொண்ணுக்கு மானம் தான் பெருசு!" :sigh2: :banghead: அப்போ தெலுங்கு பொண்ணுக்கோ, மஹராஷ்ட்ரா பொண்ணுக்கோ, இந்தியரல்லாத, கென்யா நாட்டு பொண்ணுக்கோ மானம் பெரிசில்லையா?!!?!?! என்ன %$#^^ நான்சென்ஸ் இது!!!

"ஒரு தமிழ் பொண்ணோட மானம் காப்பது என் கடமை"

ஏன் வேற மொழி பேசற பொண்ணு மானம் போச்சுன்னா காப்பாத்த மாட்டீங்களா! சுத்த அபத்தம்!

இதைப்பற்றியெல்லாம் நான் கேட்கவேயில்லை .உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை . :huh:

P_R
31st August 2008, 02:48 PM
sivangangai seemai is kannadasan production and also written by him...right?
Yes. And the great song
veerargaL vaazhum dhAvida nAttai venRavar kidayAdhu

It is next only to achcham enbadhu madamayadA

joe
31st August 2008, 02:53 PM
பி.ரா குறிப்பிட்ட பாரதி, விவேக் விவகாரத்திற்கு பிறகு வருகிறேன்.

//to get back rightfully on topic of this thread....

என்னைப் பொறுத்த வரை நான் பார்த்த சில படங்களில் தமிழ் கலாச்சாரத்தை மிகையின்றி ஒரளவு சரியாக சித்தரித்த படங்கள்

1. சிவகங்கைச் சீமை
2. பூம்புகார்

தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியோடு சென்றவனை நினைத்து வெட்டியாக இருந்து விட்டு ,அவனை தண்டிக்காமல் ,அவன் பொருட்டு சம்பந்தம் இல்லாமல் மதுரையை எரிப்பது தான் தமிழ் பண்பாடா ? :x

joe
31st August 2008, 02:56 PM
sivangangai seemai is kannadasan production and also written by him...right?
Yes. And the great song
veerargaL vaazhum dhAvida nAttai venRavar kidayAdhu

It is next only to achcham enbadhu madamayadA

One more information ,Sivagangai seemai VKP-kku pottiyaga athe kaala kattathil edukkappattathu ..But poor Kannadasan lost a lot in this movie. :(

Vivasaayi
31st August 2008, 02:57 PM
joe,

periyarin seedar kalaingare adhuthan thamizh panbaadunnu othukutaru :lol2:

Shakthiprabha.
31st August 2008, 02:57 PM
SP,
இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே !

உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .

I suppose its unnecessary strain to bring in the name of any community or clan on a particular behaviour syndrom joe.

"iraivanukku nandri sollivutu" is not a right example. Few of us do, some of us dont.

Where as "hospitality" is a common behaviour which need not be tagged along with any clan.

"enga kudumbathula naanga vanthavangala vaa nnu solli thaan pazhakkam" ipdi yaarum yaartaiyum nijathula solrathillai

Vivasaayi
31st August 2008, 02:57 PM
vkp?

joe
31st August 2008, 03:00 PM
joe,

periyarin seedar kalaingare adhuthan thamizh panbaadunnu othukutaru :lol2:

Wrong information ..First of all Periyar opposed Kannagi by all means ..Karunanithi praised Kannagi for that pesudo *Karppu* part ,but for Her boldness to question even a king for his atrocity .

Vivasaayi
31st August 2008, 03:00 PM
SP,
இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே !

உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .

Where as "hospitality" is a common behaviour which need not be tagged along with any clan.

who said?

in which culture was the concept of "virundhombal" was followed like our tamilians?

"தண்ணீர் பந்தல்" "அன்னச்சாவடி" "திண்ணை"

indha concept ellam tamilians pride :mad:

Shakthiprabha.
31st August 2008, 03:01 PM
பி.ரா குறிப்பிட்ட பாரதி, விவேக் விவகாரத்திற்கு பிறகு வருகிறேன்.

//to get back rightfully on topic of this thread....

என்னைப் பொறுத்த வரை நான் பார்த்த சில படங்களில் தமிழ் கலாச்சாரத்தை மிகையின்றி ஒரளவு சரியாக சித்தரித்த படங்கள்

1. சிவகங்கைச் சீமை
2. பூம்புகார்

தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியோடு சென்றவனை நினைத்து வெட்டியாக இருந்து விட்டு ,அவனை தண்டிக்காமல் ,அவன் பொருட்டு சம்பந்தம் இல்லாமல் மதுரையை எரிப்பது தான் தமிழ் பண்பாடா ? :x

Personally I am NOT FOND OF kannagi character (I infact regard madhavi better) .

KANNAGI alone does not define all tamil's way of living :D She was just a bad example.

Lifestyle /trends/language etc to be differentiated from CHARACTER of any single individual.

I chose poompuhar, ONLY for its portrayal of pazhan thamizhargaL's nadaimurai vazhkai murai. NOT a particular woman's character

Vivasaayi
31st August 2008, 03:01 PM
joe,

periyarin seedar kalaingare adhuthan thamizh panbaadunnu othukutaru :lol2:

Wrong information ..First of all Periyar opposed Kannagi by all means ..Karunanithi praised Kannagi for that pesudo *Karppu* part ,but for Her boldness to question even a king for his atrocity .

adhathan naanum soldren

joe
31st August 2008, 03:02 PM
"enga kudumbathula naanga vanthavangala vaa nnu solli thaan pazhakkam" ipdi yaarum yaartaiyum nijathula solrathillai

Sorry ..You may not have that experience ..I have ..I have seen people say this .

joe
31st August 2008, 03:04 PM
joe,

periyarin seedar kalaingare adhuthan thamizh panbaadunnu othukutaru :lol2:

Wrong information ..First of all Periyar opposed Kannagi by all means ..Karunanithi praised Kannagi for that pesudo *Karppu* part ,but for Her boldness to question even a king for his atrocity .

adhathan naanum soldren

Karunanithi praised Kannagi not for that pesudo *Karppu* part ,but for Her boldness to question even a king for his atrocity .

I missed *not* previously. :)

Shakthiprabha.
31st August 2008, 03:05 PM
SP,
இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே !

உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .

Where as "hospitality" is a common behaviour which need not be tagged along with any clan.

who said?

in which culture was the concept of "virundhombal" was followed like our tamilians?

"தண்ணீர் பந்தல்" "அன்னச்சாவடி" "திண்ணை"

indha concept ellam tamilians pride :mad:

joe,

:mad: oru nalla pazhaathai "naan thamizhan, enbathaal seythen" nnu solrathu , vedikkaiya irukku.

'thaneer pandhal , annachavadi, thinnai' elaam vera vera per vechu thamizh naadu thavira vera entha maahanangaLilum irunthathE illaiya??????? :roll:

thamizhan mattum thaan thinnai kattinaana?

its like a girl saying "u know i am a good girl, its my family tradition to be a good girl"

plzzzzzzzz!

Vivasaayi
31st August 2008, 03:06 PM
okok :D

ennamo neenga soldreenga...

Shakthiprabha.
31st August 2008, 03:06 PM
"enga kudumbathula naanga vanthavangala vaa nnu solli thaan pazhakkam" ipdi yaarum yaartaiyum nijathula solrathillai

Sorry ..You may not have that experience ..I have ..I have seen people say this .

:roll:

joe
31st August 2008, 03:13 PM
okok :D

ennamo neenga soldreenga...
:lol:

SP,
There is a difference between "இது எங்கள் பழக்கம்" and "இது எங்களுக்கே மட்டுமான பழக்கம்"

ஆனால் சில சமூகங்கள் ஆதி காலத்திலிருந்தே சில நெறிமுறைகளை கடை பிடித்து வரும் போது அதை தங்கள் பாரம்பரியமாக சொல்வது வழக்கம் தான் .

சாப் ஸ்டிக்கில் சாப்பிடுவது சீனப்பழக்கம் . இப்போது சில நேரம் நான் கூட சாப்ஸ்டிக்கில் சாப்பிடுகிறேன் .அதனால் எப்படி நீ அதை சீனபழக்கம் என சொல்லலாம் என கேட்கக்கூடாது .

VENKIRAJA
31st August 2008, 03:13 PM
Though I could understand that this is not a topic for *kids* like me,I could say a few points.Can't I?There is kinda confusion(atleast to me)about differentiating between Indian culture and tamil culture.So if I consider something that pertains tamil culture,and not the even broader spectrum of Tamil history/culture I could say(But I don't know movies which portray them)-
*Vadakkirunthu uyir Neethal:Maanam karuthi uyirai maaithukkoLLum mannarkaL vazakkam.
*kaNavan iRappin,thuNaiviyum uyir neeppathu.(Though this is ridiculous,it is true)
*virunthOmbal-Definitely.
*kutavOlai-Early systems of democracy to choose local administrative provinces' heads.
*Hailing local heroes or warriors as Gods(What a genetic coincidence!We hail filmstars as idols now!)

I don't know whether these are exactly what the discussion is looking for(I can't cite refernces too).But,AFAIK these are surely some part of our history.

Shakthiprabha.
31st August 2008, 03:16 PM
okok :D

ennamo neenga soldreenga...
:lol:

SP,
There is a difference between "இது எங்கள் பழக்கம்" and "இது எங்களுக்கே மட்டுமான பழக்கம்"

ஆனால் சில சமூகங்கள் ஆதி காலத்திலிருந்தே சில நெறிமுறைகளை கடை பிடித்து வரும் போது அதை தங்கள் பாரம்பரியமாக சொல்வது வழக்கம் தான் .

சாப் ஸ்டிக்கில் சாப்பிடுவது சீனப்பழக்கம் . இப்போது சில நேரம் நான் கூட சாப்ஸ்டிக்கில் சாப்பிடுகிறேன் .அதனால் எப்படி நீ அதை சீனபழக்கம் என சொல்லலாம் என கேட்கக்கூடாது .

ஜோ,

நீங்கள் சொல்வதையே நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் சொல்வதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

இப்படி இருவருமே பிடிவாதம் பிடித்தால் எப்படி?!

சாப் ஸ்டிக்ஸ் சாப்பிடுவது is a physical habit, which is UNIQUE, for probably only chinese.

virunthombal is a TRAIT, good human traiT, which 70 percent of world's population possess.

athai thanithuva paduthuvathu THAVARU endru sollavilai.
thanithuvap padithi solla athil ondrum illai endru sonnen. (nothing to be proud, its just normal)

plz joe :(

VENKIRAJA
31st August 2008, 03:18 PM
SP,
இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே !

உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .

Where as "hospitality" is a common behaviour which need not be tagged along with any clan.

who said?

in which culture was the concept of "virundhombal" was followed like our tamilians?

"தண்ணீர் பந்தல்" "அன்னச்சாவடி" "திண்ணை"

indha concept ellam tamilians pride :mad:

joe,

:mad: oru nalla pazhaathai "naan thamizhan, enbathaal seythen" nnu solrathu , vedikkaiya irukku.

'thaneer pandhal , annachavadi, thinnai' elaam vera vera per vechu thamizh naadu thavira vera entha maahanangaLilum irunthathE illaiya??????? :roll:

thamizhan mattum thaan thinnai kattinaana?

its like a girl saying "u know i am a good girl, its my family tradition to be a good girl"

plzzzzzzzz!

Not at all.I beg to differ.To be serious,I learn that 'building a house with a so-called thinnai' is very very ancient,and now is phrased as Vernacular architecture which is a part of my syllabus.(As my professor told it is reffered to as a particular trace in dakshina kannada and so many parts of AP and TN)

Shakthiprabha.
31st August 2008, 03:21 PM
Matra mozhi ilakkiyangaL padithaal athilum veru peyarudan, thinai, kudavolai, sati practice (thats indian practice :cry: ) elaamE irunthirukkalaam :?

joe
31st August 2008, 03:21 PM
ஜோ,

நீங்கள் சொல்வதையே நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் சொல்வதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

உண்மை தான் .ஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணம் சொன்னால் நீங்கள் கருத்தை விட்டு விட்டு உதாரணத்தை பிடித்து தொங்க ஆரம்பித்து விடுகிறீர்கள் .

இப்படி இருவருமே பிடிவாதம் பிடித்தால் எப்படி?!

ஆம் .அதனால் நாம் என் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்கிறேன் .நன்றி :)

Shakthiprabha.
31st August 2008, 03:23 PM
ஜோ,

நீங்கள் சொல்வதையே நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் சொல்வதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

உண்மை தான் .ஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணம் சொன்னால் நீங்கள் கருத்தை விட்டு விட்டு உதாரணத்தை பிடித்து தொங்க ஆரம்பித்து விடுகிறீர்கள் .

நான் இதை மறுக்கிறேன். உங்கள் உதாரணங்களே சரியாக இல்லை என்பது தான் என் வாதம்!

ஆம் .அதனால் நாம் என் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்கிறேன் .நன்றி :)

GOOOD! :thumbsup:

Shakthiprabha.
31st August 2008, 03:26 PM
I would always like to define

kalachaaram as = 'trends/ways/practices/rituals/foodhabits' otherwise unique for one particular clan alone.

defintiely not HUMAN BEHAVIOURS.

பண்பு வேறு கலாச்சாரம் வேறு.

my 2 cents!

joe
31st August 2008, 03:31 PM
ஜோ,

நீங்கள் சொல்வதையே நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் சொல்வதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

உண்மை தான் .ஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணம் சொன்னால் நீங்கள் கருத்தை விட்டு விட்டு உதாரணத்தை பிடித்து தொங்க ஆரம்பித்து விடுகிறீர்கள் .

நான் இதை மறுக்கிறேன். உங்கள் உதாரணங்களே சரியாக இல்லை என்பது தான் என் வாதம்!

அப்படியே ஆகட்டும் :lol:

joe
31st August 2008, 03:34 PM
பண்பு வேறு கலாச்சாரம் வேறு.

ஆம் .ஆனால் கலாச்சாரத்தில் இருந்து தான் பண்பு பிறக்கிறது .

VENKIRAJA
31st August 2008, 03:53 PM
Matra mozhi ilakkiyangaL padithaal athilum veru peyarudan, thinai, kudavolai, sati practice (thats indian practice :cry: ) elaamE irunthirukkalaam :?

I have given a clear disclaimer. :roll:
Anni,don't u think its actually impossible for us individuals to decide on a topic,we just are aware from books or maybe movies.To me I can't even believe things my granny says.If so,then what could exactly be a part of tamil culture?I remember that a guy started arguing that Tamil culture is being spoilt by working women.Atrocious.

joe
31st August 2008, 03:56 PM
பண்பு வேறு கலாச்சாரம் வேறு.

ஆம் .ஆனால் கலாச்சாரத்தில் இருந்து தான் பண்பு பிறக்கிறது .

SP,
எப்படி என்று நீங்கள் கேட்கலாம் .

நீங்கள் 'மனிதப் பண்பு' என்றொன்று இயற்கையிலேயே மனிதனினுக்கு பிறக்கும் போதே இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் நான் அதை மறுக்கிறேன்.

உதாரணமாக ( :lol: வேறு வழியில்லை இந்த ஒரு முறையும் மன்னிக்கவும்) . :)

ஒரு ஆடவன் தன் தாயுடனோ அல்லது சகோதரியுடனோ உடல் உறவு கொள்ளலாகாது என்பது மனித பண்பு என வைத்துக்கொள்ளுவோம் .இது ஆதி மனிதன் பிறக்கும் போதே அடிப்படையாகவே அவன் மனதில் இருந்தது என நான் நினைக்கவில்லை ..ஆதி காலத்தில் இந்த பழக்கம் இருந்திருக்கலாம் .அது மனிதப் பண்புக்கு உட்பட்டதாகவே கருதப்பட்டிருக்கலாம் .ஆனால் நாளடைவில் மனித இனம் தனக்கென்று சில பண்பாடுகளை வரையறுத்துக் கொண்டபோது "தாயோடும் சகோதரிகளோடும் உடல் உறவு கொள்ளலாகாது" என்பதை ஒரு கலாச்சாரமாக பின் பற்ற ஆரம்பித்து இன்று அது ஒரு அடிப்படை மனித பண்பாக மாறியிருக்கிறது .ஆனாலும் குழந்தை பிறக்கும் போது அதற்கு இந்த பண்பாடு தெரியாது .வளரும் போது தன் சமூகத்தின் பண்பாட்டை அது தெரிந்து கொள்ளுகிறது ..ஆனாலும் இன்னும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஆதிவாசிகள் அதை இன்னும் பின்பற்றுபவர்கள் இருக்கலாம் .யார் கண்டது ? எனவே கலாச்சாரத்திலிருந்து கற்றுக்கொள்ளாத மனித பண்பு என்று தானாகவே எதுவுமில்லை .

Roshan
31st August 2008, 09:02 PM
sp,

enna ipdi solliteenga

"virundhombal" is ofcourse a tamizhians identity.

வீட்டின் முன் திண்ணையை எந்த வெள்ளைக்காரன் கட்டி வைத்தான்?

I am sure you will change your opinion once you get an opportunity to visit and learn about other countries and culture. I have visited a few countries and I can certainly say that there are other countries and communities that are exceptionally good at virunthOmbal.

Roshan
31st August 2008, 09:17 PM
SP and Prabhu :thumbsup:

Thirumaran
1st September 2008, 09:39 AM
sp,

enna ipdi solliteenga

"virundhombal" is ofcourse a tamizhians identity.

வீட்டின் முன் திண்ணையை எந்த வெள்ளைக்காரன் கட்டி வைத்தான்?

I am sure you will change your opinion once you get an opportunity to visit and learn about other countries and culture. I have visited a few countries and I can certainly say that there are other countries and communities that are exceptionally good at virunthOmbal.

True !!! Virunthoambala vidunga. In abroad, if some one is crossing the door and u are also about to cross the same, they make it a point to make the door open till you cross. Inga atha pathi ellaam kavala padrathu konja paer thaan. Nammala thalli vittuttu munnaadi poaravanga ellaam irukaanga. :twisted:

SP :thumbsup: Completely agree with you. Summaa summaa thamizh kalaachaaram, athu ithunnu paesuratha vidungappaa. :lol2: There are lots of good things we can learn from other instead of talking about our own old puraanams :yessir:

sarna_blr
1st September 2008, 10:19 AM
பண்பு வேறு கலாச்சாரம் வேறு.

SP akka, thamizh'la kalaachchaaram'nu onnE kedayaadhu, i mean the chol or sol :lol2: CULTURE'ndra vaarththai thamizh'la kalaachchaaram'nu thirinjirukku, idhukku ivlO periya discussion :twisted:

appuram yaarO punniyavaan ( pEr theriyaadhu ) " பண்பாடு "nu oru sol'la kandu pidichchu, idhu dhaampaa thamizh'la kalaachchaaram'nu sonnaapla :)

illaadha onna irukkunnu solli vaadham panradhu namma thamizhargalaala mattum dhaan mudiyum :wink:

selvakumar
1st September 2008, 02:05 PM
Last night, I was watching Lollu Sabha. (on Paruthiveeran).
The spoof :rotfl: esp conversation between Muthazhagu & veeran.

I don't remember the exact dialogue. Pardon if it is wrong
Muthazhagu : innum ezaezhu jenmathukkum naan thaan unakku pondaatti
Veeran : Podi kooru kettavazhae.. adutha jenmathukku asin.. athukadutha jenmathukku trishannu nenachukittu irukkaen... ellam jenmathukkum nee thaannu sollura :lol:

Shakthiprabha.
1st September 2008, 02:20 PM
:D

sarna_blr
1st September 2008, 02:22 PM
:D

:evil: :roll:

selvakumar
1st September 2008, 02:25 PM
I agree with Joe and his POV. The thread is about discussing something that will praise our culture and identity. Hence, தமிழன் என்றால் இதை பண்ணனும். அப்படின்னு சொல்லுறது தப்பில்லை. முன்னாடி இப்படி தமிழர்கள் இருந்தாங்களா / இல்லையான்னு ஆராயாம, நாம இப்படி இருந்தோம் / இருக்க வேண்டும் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.

கொஞ்சகாலம் முன்னாடி லியோனியோட பட்டிமன்றத்தில் கேட்டது.
நந்தலாலா : மற்ற கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கை எப்படி இருந்தது என்றுதான் எழுதினார்கள். பட்டிக்கோட்டை மட்டும்தான் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று எழுதினான்.

அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிட உடமையடா - இப்படி சொன்னா நாமெல்லாம் முன்னாடி பயம் இல்லாமல், அடிமை வேலை செய்யாமல் வாழ்ந்தோம் அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால், இதெல்லாம் இல்லாமலும் ஒரு காலத்தில் இருந்திருக்கோம். அதைப் போற்றி, அப்படி வாழ்வதற்க்கு, அவ்வாறான சான்றுகளை கூறுவதில் என்ன தவறு ?

நம்முடைய நல்ல பழக்கம் மற்றவர்களிடமும் இருக்கிறது. இருந்துவிட்டு போகட்டுமே ! அவங்க நாளைக்கு மாறலாம். நாம நல்லதை கடைபிடிப்போமே ! கருத்து கூட கொஞ்சம் தற்பெருமையுடன் வந்தால்தான் ஏற்கப்படும்.

selvakumar
1st September 2008, 02:29 PM
I am finding it difficult to recollect the movies that praise tamil culture :lol:

Roshan
1st September 2008, 02:54 PM
I am finding it difficult to recollect the movies that praise tamil culture :lol:

:lol: adhuthAn matter. Namma perumaiyA sollikkiRathukku ethuvum illa.. adhunAla thamiz kalAchAram enguRa pErla cinemAla nadakkiRa aniyAyangaLa solla vEndi irukku :banghead:

selvakumar
1st September 2008, 02:58 PM
I am finding it difficult to recollect the movies that praise tamil culture :lol:

:lol: adhuthAn matter. Namma perumaiyA sollikkiRathukku ethuvum illa.. adhunAla thamiz kalAchAram enguRa pErla cinemAla nadakkiRa aniyAyangaLa solla vEndi irukku :banghead:
Irukkunnu nenaikiraen :)
However, padathula atha thedurathu konjam kastamaa irukku :)

Roshan
1st September 2008, 03:07 PM
I am finding it difficult to recollect the movies that praise tamil culture :lol:

:lol: adhuthAn matter. Namma perumaiyA sollikkiRathukku ethuvum illa.. adhunAla thamiz kalAchAram enguRa pErla cinemAla nadakkiRa aniyAyangaLa solla vEndi irukku :banghead:
Irukkunnu nenaikiraen :)
However, padathula atha thedurathu konjam kastamaa irukku :)

AdhathAn naangaLum solROm :)

selvakumar
1st September 2008, 03:09 PM

oh ! I was confused by your first line "நம்ம பெருமையா சொல்லிக்கிறதுக்கு ஒண்ணும் இல்லை".

joe
1st September 2008, 03:25 PM
Selva,
Thamizh kalaacharatha poi tamil cinema-la thedurathu joke thaan :lol:

And ofcourse ,the present Thamizh kalaacharam is the worst among few kalacharams i came to know travelling various countries .

Even in so-called claim that "we Tamils indians have better family values" and bond between parents - children is great ,I have different opinion ..while in many other cultures ,parents give 'individuality' and respect for children's personal wish and taste and help them to grow as a individual entity ,our soceity is very closed and hypocratic ..most of our family love are more of 'tourchering in the name of love' or 'threatening in the name of love' rather than real love ,which respect individual preferences .

sarna_blr
1st September 2008, 03:32 PM
Tamizh mozhi'ya pOtrum padangalna, Virumaandi tops the chart :yes:

selvakumar
1st September 2008, 03:33 PM
Selva,
Thamizh kalaacharatha poi tamil cinema-la thedurathu joke thaan :lol:

And ofcourse ,the present Thamizh kalaacharam is the worst among few kalacharams i came to know travelling various countries .

Even in so-called claim that "we Tamils indians have better family values" and bond between parents - children is great ,I have different opinion ..while in many other cultures ,parents give 'individuality' and respect for children's personal wish and taste and help them to grow as a individual entity ,our soceity is very closed and hypocratic ..most of our family love are more of 'tourchering in the name of love' or 'threatening in the name of love' rather than real love ,which respect individual preferences .

I don't know which one is right. :lol: But I feel both should co-exist. A good parental care in the adulthood can avoid the youngster from bad habits. Strictly my opinion.

viraajan
1st September 2008, 03:45 PM
Selva,
Thamizh kalaacharatha poi tamil cinema-la thedurathu joke thaan :lol:

And ofcourse ,the present Thamizh kalaacharam is the worst among few kalacharams i came to know travelling various countries .

Even in so-called claim that "we Tamils indians have better family values" and bond between parents - children is great ,I have different opinion ..while in many other cultures ,parents give 'individuality' and respect for children's personal wish and taste and help them to grow as a individual entity ,our soceity is very closed and hypocratic ..most of our family love are more of 'tourchering in the name of love' or 'threatening in the name of love' rather than real love ,which respect individual preferences .

I don't know which one is right. :lol: But I feel both should co-exist. A good parental care in the adulthood can avoid the youngster from bad habits. Strictly my opinion

IMHO, attitude matters. The attitude of the youngster plays a crucial role in doing away with bad habits. If he possess the right attitude, he can easily avoid bad habits.
I have seen this in my friends. Even tho they were brought up really well with good care, parents being very friendly, they got addicted to certain things. :)

sarna_blr
1st September 2008, 03:54 PM

Bad habbits :roll:

viraajan
1st September 2008, 03:57 PM

I gues, selva mentioned smoking, drinking etc :roll:

sarna_blr
1st September 2008, 04:17 PM
Viraajan :)

Kaalukku seruppu eppadi vandhadhu mullukku nandri sol :thumbsup:

Panbaadu is not an fixed one but originating one :) It has undergone several versions and undergoing several versions and will undergo several versions.

one small example.... do u know about SATI...Sati is described as a Hindu custom (tradition) in India in which the widow was burnt to ashes on her dead husband's pyre :sigh2: but later it was considered as SIN :)

oru kaalaththu sari is next kaalaththu sin

Nirandhiramaana BAD'nu edhuvumE illa, idha Geedhai'la kooda solliyirukkaanga :o

viraajan
1st September 2008, 04:20 PM
:exactly:

Indha ulagathula maatram illadha ore visshayam "maatram" than.

Sati - some big good doer prohibited and banned it. his name is presently elluding me :roll:

joe
1st September 2008, 04:25 PM
Sati - some big good doer prohibited and banned it. his name is presently elluding me :roll:

Rajaram Mohan rai of 18th century fought against this crime.

crajkumar_be
1st September 2008, 06:19 PM
Selva,
Thamizh kalaacharatha poi tamil cinema-la thedurathu joke thaan :lol:

And ofcourse ,the present Thamizh kalaacharam is the worst among few kalacharams i came to know travelling various countries .

Even in so-called claim that "we Tamils indians have better family values" and bond between parents - children is great ,I have different opinion ..while in many other cultures ,parents give 'individuality' and respect for children's personal wish and taste and help them to grow as a individual entity ,our soceity is very closed and hypocratic ..most of our family love are more of 'tourchering in the name of love' or 'threatening in the name of love' rather than real love ,which respect individual preferences .
Absolutely!
Reminded of the conversation we had on these topics (among eveything under the sun) in Singai :)

joe
1st September 2008, 07:04 PM
Reminded of the conversation we had on these topics (among eveything under the sun) in Singai :)

:D

ajithfederer
4th September 2008, 04:03 AM
True!!!

Even in so-called claim that "we Tamils indians have better family values" and bond between parents - children is great ,I have different opinion ..while in many other cultures ,parents give 'individuality' and respect for children's personal wish and taste and help them to grow as a individual entity ,our soceity is very closed and hypocratic ..most of our family love are more of 'tourchering in the name of love' or 'threatening in the name of love' rather than real love ,which respect individual preferences .

sarna_blr
4th September 2008, 03:23 PM
Wt abt Thevarmagan , Virumaandi , Kaadhal , Paruthiveeran, Azhagi :)

sarna_blr
3rd December 2008, 09:10 AM
-reviving Tamil mozhi/kalachaaram/varalaaru potrum padangal -

MrJudge
3rd December 2008, 10:36 AM
Selva,
Thamizh kalaacharatha poi tamil cinema-la thedurathu joke thaan :lol:

And ofcourse ,the present Thamizh kalaacharam is the worst among few kalacharams i came to know travelling various countries .

Even in so-called claim that "we Tamils indians have better family values" and bond between parents - children is great ,I have different opinion ..while in many other cultures ,parents give 'individuality' and respect for children's personal wish and taste and help them to grow as a individual entity ,our soceity is very closed and hypocratic ..most of our family love are more of 'tourchering in the name of love' or 'threatening in the name of love' rather than real love ,which respect individual preferences .

I am on your side, joe. பூ படத்தில் ஒளிந்திருக்கும் மையக்கருத்து இது தான்.

எந்த ஒரு கலாச்சாரத்தையும் சிறந்தது என்று சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கு.

NOV
3rd December 2008, 11:28 AM
today I was buying breakfast at a Malay food stall and one of the customers was talking loudly. when she saw me, she remarked, "Indians are very stingy with love; they shower more care to their newly met in-laws than to thier own parents. No other ppl are as stingy as Indians!"

I was shocked at this outburst, and the seller quickly told me that the woman was "mentally-off."

Was she?

sarna_blr
3rd December 2008, 12:09 PM
Raman thEdiya seedhai :cool2:

Cinemarasigan
3rd December 2008, 04:46 PM
IMO Definitely Indians are not stingy with Love.. But this vary from family to family..

kalnayak
3rd December 2008, 07:42 PM
topicikku vaanga. Thread aarambichavar OdiyE pOyittaar.

saradhaa_sn
7th December 2008, 05:36 PM
topicikku vaanga. Thread aarambichavar OdiyE pOyittaar.

பின்னே..?. இந்த த்ரெட்ல மூணு மாசமா டிஸ்கஷன் நடக்கவேயில்லையே. ஓடாமல் என்ன பண்ணுவார்..?.

சரி, தமிழ்க்கலாச்சாரம், பண்பாடு பற்றிய படங்களில் யாருமே 'தில்லானா மோகனாம்பாள்' படத்தைக் குறிப்பிடவில்லயே. (ஒருவேளை அது இந்த டாபிக்ல ஒட்டி வரலையோ?. தப்பாயிருந்தால் நீக்கிடுவோம்).

Anban
8th December 2008, 02:50 AM
topicikku vaanga. Thread aarambichavar OdiyE pOyittaar.

பின்னே..?. இந்த த்ரெட்ல மூணு மாசமா டிஸ்கஷன் நடக்கவேயில்லையே. ஓடாமல் என்ன பண்ணுவார்..?.

சரி, தமிழ்க்கலாச்சாரம், பண்பாடு பற்றிய படங்களில் யாருமே 'தில்லானா மோகனாம்பாள்' படத்தைக் குறிப்பிடவில்லயே. (ஒருவேளை அது இந்த டாபிக்ல ஒட்டி வரலையோ?. தப்பாயிருந்தால் நீக்கிடுவோம்). Raja Raja Cholan padam eppadi irukkum?? no NT fan talks abt it much.. antha padathula namma Chozha mannargal pathi eppadi kaatteenrunthaanga..

HonestRaj
8th December 2008, 07:27 AM
Not restricting to Thamizh kalacharam... "Vanathai pola" shows how to get along with other family members esp. with the new comers (Anni) & also about Annan, Thambi pasam :cry2:

vazhakkam pola yarum idha serious-ah eduthukka matteenga :)

Thirumaran
8th December 2008, 04:22 PM
Not restricting to Thamizh kalacharam... "Vanathai pola" shows how to get along with other family members esp. with the new comers (Anni) & also about Annan, Thambi pasam :cry2:

vazhakkam pola yarum idha serious-ah eduthukka matteenga :)

oh yeah :rotfl: