Aravind_06
2nd July 2008, 10:05 PM
[tscii:924b67ba32]ரயில்நிலையம்
ரயில் நிலையத்தின்
பளிங்கு தரை பளப்பளக்கும்
துப்பப்பட்ட எச்சில்களோடு..
ஊரார் கைவிட்ட ஊனமுற்றோரும்
முதியோரும் எச்சில்களோடு
சமுதாயத்தின் எச்சங்களாய் அமர்ந்திருக்கும்
கோலம் மனதில் அறையும்.
கால் வைக்கும் இடமெல்லாம் கழிவுகளும்
துப்பல்களுமே… அப்படியும் கடந்து
நடைமேடை வந்தடைய ரயில் பாதை
குதித்தேறும் கும்பல்..
நேரத்திற்கு வராத ரயிலின் வாசல்களில்
தேனீக்களாய் கூட்டம்..
நிற்கும் வரை நின்று விட்டு
ரயில் சென்ற பின்னர் ரயிலோடு
போட்டி யிடும் காளைகள்..
திகில் படக்காட்சிகளையே தினமும்
காட்டும் ரயில் நிலையத்தின் ஒரு
மூலையில்…பெட்டிக்கடையின்
முக்கிய செய்திகள் -கொலையும், கொள்ளையும், பூகம்பமும் -
இத்தணையும் கடந்து தினமும் பயணிக்கும்
இந்தியன் – சகித்துக்கொள்கிறான் இந்தியாவை!!
இந்தியாவும் சகித்துக்கொள்கிறது அசுத்தத்தோடு
சமரசம் கொள்ளூம் இந்தியனை!!!
[/tscii:924b67ba32]
ரயில் நிலையத்தின்
பளிங்கு தரை பளப்பளக்கும்
துப்பப்பட்ட எச்சில்களோடு..
ஊரார் கைவிட்ட ஊனமுற்றோரும்
முதியோரும் எச்சில்களோடு
சமுதாயத்தின் எச்சங்களாய் அமர்ந்திருக்கும்
கோலம் மனதில் அறையும்.
கால் வைக்கும் இடமெல்லாம் கழிவுகளும்
துப்பல்களுமே… அப்படியும் கடந்து
நடைமேடை வந்தடைய ரயில் பாதை
குதித்தேறும் கும்பல்..
நேரத்திற்கு வராத ரயிலின் வாசல்களில்
தேனீக்களாய் கூட்டம்..
நிற்கும் வரை நின்று விட்டு
ரயில் சென்ற பின்னர் ரயிலோடு
போட்டி யிடும் காளைகள்..
திகில் படக்காட்சிகளையே தினமும்
காட்டும் ரயில் நிலையத்தின் ஒரு
மூலையில்…பெட்டிக்கடையின்
முக்கிய செய்திகள் -கொலையும், கொள்ளையும், பூகம்பமும் -
இத்தணையும் கடந்து தினமும் பயணிக்கும்
இந்தியன் – சகித்துக்கொள்கிறான் இந்தியாவை!!
இந்தியாவும் சகித்துக்கொள்கிறது அசுத்தத்தோடு
சமரசம் கொள்ளூம் இந்தியனை!!!
[/tscii:924b67ba32]