PDA

View Full Version : Pallavan Magal



sivank
22nd June 2008, 03:36 AM
பல்லவன் மகள்

அன்பு நன்பர்களே, புலியை கண்டு பூனை சூடு போட்டு கொள்ளலாமா. இந்த பூனை சூடு போட்டு கொள்ள போகிறது. மனதிற்குள் பல ஆயிரம் கதை இருந்தாலும் எழுத்து வடிவத்தில் வெளி கொணர்வது இதுவே முதல் தடவை. தவறு இருப்பின் மன்னித்து அருள்வது உமது தலயாய கடமை. இனி நாம் நமது கதைக்கு செல்வோம் நம்மை வரவேற்க அரசரும் அரசியரும் தோழியரும் காத்து இருக்கின்றனர். நாம் சற்றே ஆறாம் நூறான்டை நோக்கி பயனப்படுவோம்


ஆதிவராகன் கோவில்

முன்னிறவு வேளையில் கடல் மல்லை சற்றே உறக்க கோலத்தொடு காட்சி அளித்து கொண்டு இருந்தது. வீதிகளிலும் துறைமுகதிலும் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. பெரிய பெரிய பண்டகசாலைகளில் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக காத்து இருந்தது. மல்லையில் அன்று இந்திர விழா கொண்டாடபட்டதால் மக்கள் விரைவாகவே வீடு சென்று விட்டனர் போலும். காஞ்சியில் இருந்து மன்னரும் இளவலும் வந்து சென்றது மக்களுக்கு மன நிறைவை அளித்திருக்க கூடும்.

அந்த முன்னிறவு வேளையில் வெகுதூரம் ஓடி களைத்துவிட்ட தனது குதிரையை விரட்ட மனமில்லாமல் மெதுவாகவே செலுத்தி வந்த அந்த வீரன் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாக பன்டங்களை சுமந்து தொலைவில் நிற்க்கும் கப்பல்களை நோக்கி சென்று கொன்டிருந்தன. சிம்ம விஷ்னு சக்ரவர்த்தியின் காலத்தில் இருந்து சிறிய துறைமுகமாக விளங்கிய மல்லை மகேந்திர சக்ரவர்த்தியின் காலத்திலும் பிறகு நரசிம்ம சக்ரவர்த்தியின் காலத்திலும் தலைமை துறைமுகமாக உருவெடுத்து விட்டது. இலங்கைக்கும் கலிங்கதிற்க்கும் கடல் வாணிபம் பெருத்து விட்டது.

கடற்கரை ஓரமாக தனது குதிரையை செலுத்திய அவ்வீரன் மெதுவாக ஊரை தாண்டி பாறைகளை குடைந்து குகை கோவில்களாக மாற்றபட்ட இடத்தை நோக்கி சென்றான். சற்றே தயக்கதுடன் வெளி வரும் நிலவொளியில் அவனை சிறிது உற்று பார்ப்போம். நடுத்தற வயதினை தாண்டினாலும் கஷ்டமில்லாமல் அவன் குதிரை மீது அமர்ந்து வந்தது அவனது இடைவிடாத உடற்பயிற்ச்சியை நமக்கு உணர்த்தியது.

மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றி சென்று ஆதி வராகன் கோவில் எனப்படும் குகையை அடைந்த அவ்வீரன் எரிந்து கொண்டிருந்த சிறு விளக்கை நன்கு தூண்டி பிரகாசமாக்கினான். நரசிம்ம சக்ரவர்த்தியால் உருவாக்க பட்ட அக்கோவிலில் நாரயனான ஆதி வராகர் உக்கிரமும் சாந்தமும் கலந்து நோக்கி கொண்டிருந்தார். ஆதி வராகரை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்த அவ்வீரனை விளக்கொளியில் உற்று நோக்குவோம். ஆஜானுபாகுவாக இருந்த அவ்வீரனின் அளவோடு சிறுத்த இடுப்பும், பறந்த மார்பும், முதுகும் அவனது உடற்பலத்தினை சற்றே உணர்த்தியது. சற்றே அகற்றி நிற்பதால் அவனது கால்களும் இரும்பினால் செய்யப்பட்டதாகவே தோன்றியது. அதிக சதைபிடிப்பு இல்லாத அவன் தேகமும் இடையில் இருந்த வாளின் மீது வைக்க பட்டிறுந்த நீண்ட கரமும் அவனது வீரத்தை நமக்கு பறைசாற்றின.

விளக்கொளியில் அவனது கூரிய விழிகள் அங்கு ஒரு மூலையில் இருந்த மகேந்திரவர்மரின் சிலையை பார்த்து இருப்பதை கண்டால் அச்சிலை அவனுடன் ஏதோ பேசுவதை போலவே காட்சி அளித்தது. அவன் நின்ற தோரனையும் அடிக்கடி குகை வாயிலை பார்ப்பதையும் கண்டால் யாரையோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் என்றே தோன்றும் வேளையில் தூரத்தில் குதிரையின் குளம்பொலி கேட்டது

pavalamani pragasam
22nd June 2008, 07:53 AM
:clap: இத்தனை நாள் எங்கே ஒளித்துவைத்திருந்தீர்கள் இந்த அபார திறமையை? சாண்டில்யன் தோற்றார்!

bingleguy
22nd June 2008, 08:30 AM
sivan :notworthy:

pugazhvadharkku ..... vArthai thanai agarAthiyil thedum nAl dhaan indru vandhuvittadhO ....

sivank
22nd June 2008, 02:05 PM
Thank you very much PP and BG for your encouraging and comforting words.

sivank
22nd June 2008, 03:52 PM
பழகிய குரல்

குதிரையின் குளம்பொலியை கேட்ட அவ்வீரன் உடனே விளக்கை அணைத்ததால் அக்குகை முன்னை விட மேலும் இருண்டு காட்சி அளித்தது.

வியர்க்க விறுவிறுக்க வேகமாக குதிரையில் வந்த புது மனிதன் அந்த காரிருளில் ஆதி வராக குகை வாயிலை உடனே கண்டுபிடிக்க முடியாமல் திணறினான், குதிரையின் உடல் நடுக்கதில் இருந்து அதன் அவஸ்தையை புரிந்து கொண்டு குதிரையை விட்டு இறங்கி குகையை நோக்கி விரைந்தான்.

குகை வாயிலில் மறைந்து இருந்த நமது வீரன் தன்னை தேடி வருபவனை பார்த்து முன்னேறி சென்று இரு கைகளாலும் அணைத்து கொண்டான்.

"தேவசேனரே, என்ன இவ்வேளையில் தனியாக இவ்வளவு தூரம்? "

குரலை கேட்டு லேசாக அதிர்ந்தாலும் வியப்பெய்தாத தேவசேனன்,"வீரசேனரே, தங்களை காணவே நான் நமது ஆயனரின் கொடி வீட்டிற்க்கு வந்தேன். உறையூரில்...."
என்று ஆரம்பித்த தேவசேனனை சைகையால் நிறுத்த சொன்னான் வீரசேனன்.

வேண்டாம், நாம் இங்கு பேசுவதை விட காஞ்சியில் நாற்சந்தியில் உரக்க பேசுவது மிக எளியது. இந்த பல்லவ தேசத்தில் ஒற்றர்களுக்கு பஞ்சமே இல்லை.... நாம் அந்த கொடி வீட்டிற்க்கு செல்வதே நலம்.

குதிரையில் ஏறிய இருவரும் மீன்டும் மல்லையை நோக்கி செல்லாமல் அடர்ந்த காட்டின் வழியே விரைந்து சென்றனர்.

"தேவசேனா, உனக்கு நம்முடைய முதல் சந்திப்பு நினைவு இருக்கிறதா.."

"மறக்க முடியுமா, பிர....", என்றவனை முறைத்த வீரசேனன்,"உனக்கு எத்தனை முறை சொல்வது, நான் பல்லவ சக்ரவர்த்தியின் ஊழியன், அவ்வப்போது தூதனாகவும், சில நேரம் ஒற்றனாகவும் ஊழியம் செய்பவன், அதற்கு மேல் எவருக்கும் ஏதும் தெரிய வேண்டிய அவசியமில்லை"

தனக்குள் மெல்ல நகைத்த தேவசேனன், இவருக்கு வயதாகி என்ன அன்று போல் தான் இன்றும் அதே பிடிவாதம், கோபம். ஆனால் கோபமுள்ள இடத்தில் தானே குணமுண்டு என்று நினைத்தான். அப்பப்பா, இந்த பல்லவர்களின் குணாதிசயமே அலாதி தான்.

கொடிவீட்டின் கதவை இடித்த வீரசேனனை கண்டு ஒரு கனம் வியப்பெய்திய சேவகன் உடனே சுதாரித்து அவன் காட்டிய சிங்க இலச்சனையை பார்த்து தலைவணங்கி வரவேற்று உண்ண உணவும் கொடுத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்த தேவசேனன் அங்கு இன்னும் ஜீவகளை அழியாமல் இருந்த சிற்பங்களை கண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

"ஆம், எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது. சிவகாமி ஆட, ஆயனர் அதை அப்படியே சிலையாக வடிக்க நான் அவரது சிஷ்யனாகவே இருந்திருக்க கூடாதா என ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றுகிறது. விதி எப்படி எல்லாம் அவரவர் வாழ்கையில் விளயாடுகிறது பார்த்தாயா விக்கிரமா"

இதை கேட்டதும் சற்றே முறுவலித்த சோழ மன்னன் விக்கிரமன், "ஐயா, விதி என் வாழ்விலும் எப்படி விளையாடியது என்று உமக்கும் தெரியுமே, என் தந்தை கண்ட கனவு பல்லவ சக்ரவர்த்தியால் ஒரு விதமாய் நிறைவேறியது, ஆனால் தற்போதய நிலவரம் என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.."

"ஆம், நீங்கள் வருவதாக எனக்கு செய்தி வந்தவுடன் இங்கு தான் வருவீர் என எதிர்பார்த்து காத்திருந்தேன். என்ன அப்படி முக்கியமான செய்தி"...

"ஐயா, காஞ்சியில் இருந்து நல்ல செய்திகள் இல்லை. பரமேஸ்வர பல்லவரின் நடவடிக்கைகள் நம்பிக்கை தரும்படியாக இல்லை. மாமல்லரின் காலத்திலும், இரண்டாம் மகேந்திரவர்மரின் காலத்திலும் இருந்த மதிப்பு குறைகிறது. சோழ மண்டலம் இன்று சிறியதாக இருந்தாலும் அது ஒரு தனி நாடு அதை சபையோர் முன் குறை கூறுவது நல்ல செயல் அல்ல. மகேந்திரரின் அகால மரணதிற்க்கு பின் நமது உறவில் விரிசல் விட ஆரம்பித்துள்ளது"....

முகத்தில் வாட்டத்துடன் கேட்டு கொண்டிருந்த வீரசேனன்," குந்தவி தேவியார் நாளை காஞ்சி வருவதாக எனக்கு செய்தி வந்துள்ளது..."

"கிளம்பி விட்டாளா தேவி!, நான் பேசி பயன் இல்லை என்று சொன்னதை கேளாமல் சென்று இருக்கிறாள்..."

"விக்கிரமா, நான் இன்றே காஞ்சி சென்று நிலமை அறிந்து வருகிறேன். நீ உறையூருக்கு விரைந்து செல். எனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. வாதாபியில் விக்ரமாதித்தன் நன்றாக கால் ஊன்றிவிட்டான். பல்லவர் செய்த கொடுமையை அவன் என்றும் மறக்க மாட்டான். அவனுக்கு துணையாக கங்க மன்னன் பூவிக்கிரமனும் சேர்ந்து விட்டான். இனி வாளாவிருந்தால் நல்லதல்ல.."

தன்னை அனைத்து விட்டு குதிரை ஏறி சென்ற வீரசேனனை வெகு நேரம் பார்த்து கொண்டு இருந்தான் சோழ மன்னன்

disk.box
23rd June 2008, 01:05 AM
இதைத்தானே எதிர்பார்த்தோம் மதிப்பிற்குரிய சிவன் அவர்களே!
மிக மிக மிக அருமையான துவக்கம்.

வார சஞ்சிகைகளில் வரலாற்றுத் தொடர்களை முதன் முறையாகப் படித்ததும்.....
சஞ்சிகை வரும் தினத்தில் விளையாட்டு, வீட்டுப்பாடம் அத்தனையும் மறந்து புத்தகக் கடையில் காத்திருந்த காலங்களும் நினைவுக்கு வருகின்றன.

அங்ஙனம் காக்க வைக்காமல் இருப்பீர்கள் என நம்புகிறோம். இணையத்தில் வரலாற்றுத் தொடரை முதன் முதலாகப் படிக்கிறேன். ( ஒருவேளை இதுவே இணையத்தின் முதல் வரலாற்றுத் தொடராகவும் இருக்கலாம் )

தொடரட்டும் தங்கள் பணி.
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

Shakthiprabha.
23rd June 2008, 11:08 AM
:clap:

கதையை விட உங்களின் இத்திறமையை தனியே வெளி கொணர்வது, வர்ணனை தான்.

கதைக்கு ஒரு சபாஷ் என்றால், வர்ணனைக்கு இரண்டு.

அடுத்த அத்தியாயம், குதிரையின் சென்றடையும் வேகத்திலேயே தொடருங்கள்!

VENKIRAJA
23rd June 2008, 05:08 PM
நான் இதுகாறும் சரித்தரப் புதினங்கள் ஏதும் படித்ததில்லை.இஃது ஒரு புது அனுபவம் எனப் புரிகிறது.இந்த வாரமே கல்கியைப் படிக்கலாம் என்றிருக்கிறேன்.நன்றி சிவன்.எனக்கு ஒளி தந்த விளக்கு உங்களுடையது.வாழ்த்துகள்.கதையை மிகவும் நேர்த்தியாகவும்,சிரத்தையுடனுடனும் தொடங்கியுள்ளீர்கள்.முற்றும் என்று சீக்கிரமாக போட்டுவிடாதீர்கள்.

sivank
24th June 2008, 02:22 AM
Thanks Sp, DB, Venki Raja for your encouragement.

sivank
24th June 2008, 03:25 AM
காஞ்சி சுந்தரி

நாம் சற்று கடல் மல்லையை விட்டு விலகி பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரமான காஞ்சி நோக்கி செல்வோம்.

" புஷ்பேஷூ ஜாதி புருஷேஷூ விஷ்ணு
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி "

என பாரவியால் பாடப்பட்ட நகரம். சைவர்களும், வைணவர்களும், சமணர்களும், பௌத்தர்களும் நிறைந்து வாழும் நகரம் அது. சமணர்களும், பௌத்தர்களும் பல்லவ மன்னர்கள் மீது தற்போது மனஸ்தாபத்தில் உள்ளனர் என்பது வேறு கதை. சைவமும், வைணவமும் தீஞ்சுவை பாடல்களால் மக்களை அடைந்து ஆதலால் நகரத்தில் எங்கு நோக்கினும் கோவில்களாகவே தெரிந்தது. அதோ சற்று முன் செல்லும் பல்லக்கின் பின் சென்று அப்படியே நகரத்தின் அழகினையும் பருகுவோம்.

எங்கு நோக்கினும் மாட மாளிகைகள், புதிய மண்டபங்கள் கோபுரங்கள். சிறிய குன்றினை போல் யானைகள் பரவலாக திரியும் மக்களின் நடுவே அசைந்து சென்று கொண்டிருந்தன. அதோ அங்கு வேத கோஷம் கேட்கின்றதே அது தான் வாகீசர் மடம் போல் தெரிகிறது, ஆம் அது திருநாவுக்கரசர் மடம் தான். வாகீசர் சில காலம் முன் முக்தி எய்தினாலும் அங்கு பக்திக்கு குறைவில்லை.

அடடா, நகரத்தை சுற்றி பார்க்கும் ஆசையில் நமது பல்லக்கை தவற விட்டு விட்டோமே. இல்லை, அதோ அந்த திருப்பத்தில் சென்று மறைகிறதே அது தான் நாம் தேடி வரும் பல்லக்கு. பல்லக்கை தொடர்வது இனி கடினமில்லை, ஏனெனில் அது நகரத்தின் நடுவில் உள்ள பெரிய அரண்மனைக்குத்தான் செல்கிறது. நகரத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் உயர பறக்கும் சிங்க கொடி ஒன்றே போதுமே அரண்மனையை கண்டுபிடிக்க

அரண்மனை வளாகத்தில் நுழைந்து அந்தப்புரத்தை அடைந்த பல்லக்கை எதிர்நோக்கி காத்திருந்தான் பல்லவ மன்னன் பரமேஸ்வரன். தண்டில் இறக்கி வைக்கப்பட்ட பல்லக்கில் இருந்து இறங்கியது ஒரு மானிட பெண் தானா இல்லை இவள் தேவலோகத்தில் இருந்து வந்த தேவதையா என நம்மை ஒரு கணம் சிந்திக்க தூண்டக்கூடிய உருவம்.

" பரமேஸ்வரா, இது முறையல்லவே.. நாடாளும் மன்னன் நீ எனை வரவேற்க்க இங்கு வரலாமா.."

ஆஜானுபாகுவாக இருந்தாலும் தமக்கையை கரம் கூப்பி வணங்கிய மன்னன் சோழ ராணியான குந்தவி தேவியை பார்த்து," நாடாளும் வேந்தனும் ஒரு தாய்க்கு பிள்ளைதானே, என்ன மனவேற்றுமை இருந்தாலும் நான் உங்களுக்கு இளையவன் தானே. நமது தாய்மார்கள் வேறாக இருந்தாலும் தந்தை ஒன்றுதானே.." என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் அந்த காஞ்சி சுந்தரி

disk.box
26th June 2008, 01:06 AM
இந்த ரமேஷ்தான் மகியோட அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் இருக்கிறதா? :?

sivank
26th June 2008, 02:56 AM
இந்த ரமேஷ்தான் மகியோட அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் இருக்கிறதா? :?

DB :huh: :confused2:

P_R
26th June 2008, 07:27 AM
சிவன் நல்ல தொடக்கம். :thumbsup:

எனக்கு சரித்திர கதைகளில் பொதுவாக நாட்டம் இருந்ததில்லை. கீழே வைக்கமுடியாததாக அறியப்படும் பல சரித்திர நாவல்களை சிலப்ல முறை படிக்க முயன்று தோற்றிருக்கிறேன்.

ஆனால் இம்முறை தொடக்கமே சுவாரஸ்யமாக இருக்கிறது.
வளவளக்காமல் கச்சிதமான வருணணைகள், அதிகம் தகவல்களை வெளியிட்டுவிடாத கவனமான உரையாடல்கள் இரண்டும் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக தேவசேனன்-விக்கிரமன் உரையாடல். வாசகர்களுக்கு தகவல் தர வேண்டும் என்பதற்காக அவர்கள் அ-னா ஆ-வன்னா விலிருந்து பேசத் தொடங்கவில்லை.மிக இயல்பாக வந்திருந்தது. இதனால் மேலே அறிந்துகொள்ளும் ஆவல்.

கதைசொல்லி உடன் உரையாடிக்கொண்டே வருவது அழகாக இருக்கிறது. தமிழில் ஒரு சில சுஜாதா கதைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

அதிவராகர் குகை = திருவிடெந்தை ? எனக்குத் தெரிந்து இன்று மாமல்லை அருகில் இருக்கும் கோவில் அதுவே. ஆனால் அது குகை போல இல்லை. மேலும் அது 6ம் நூற்றாண்டிற்குப் பிறகு கட்டப்பட்டதாக படித்த நினைவு. குகைக்கோவில் உங்கள் புனைவாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் இங்கு சென்றிருந்ததால் இந்த ஆர்வக்கேள்வி :-)


இனி வாளாவிருந்தால் நல்லதல்ல :?

disk.box
26th June 2008, 01:09 PM
//இந்த பரமேஸ்வர பல்லவர்தான் மகேந்திரவர்மரின் அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் உள்ளதா? :? //

sivank
26th June 2008, 06:34 PM
[tscii:25dcebf467]
சிவன் நல்ல தொடக்கம். :thumbsup:

எனக்கு சரித்திர கதைகளில் பொதுவாக நாட்டம் இருந்ததில்லை. கீழே வைக்கமுடியாததாக அறியப்படும் பல சரித்திர நாவல்களை சிலப்ல முறை படிக்க முயன்று தோற்றிருக்கிறேன்.

ஆனால் இம்முறை தொடக்கமே சுவாரஸ்யமாக இருக்கிறது.
வளவளக்காமல் கச்சிதமான வருணணைகள், அதிகம் தகவல்களை வெளியிட்டுவிடாத கவனமான உரையாடல்கள் இரண்டும் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக தேவசேனன்-விக்கிரமன் உரையாடல். வாசகர்களுக்கு தகவல் தர வேண்டும் என்பதற்காக அவர்கள் அ-னா ஆ-வன்னா விலிருந்து பேசத் தொடங்கவில்லை.மிக இயல்பாக வந்திருந்தது. இதனால் மேலே அறிந்துகொள்ளும் ஆவல்.


Thanks for your comment Prabu. I will try my best to make it more interesting.


கதைசொல்லி உடன் உரையாடிக்கொண்டே வருவது அழகாக இருக்கிறது. தமிழில் ஒரு சில சுஜாதா கதைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.


Upto my humble knowledge Kalki was very famous for this sort of writing. I must admit that I am very much influenced by his writing.



அதிவராகர் குகை = திருவிடெந்தை ? எனக்குத் தெரிந்து இன்று மாமல்லை அருகில் இருக்கும் கோவில் அதுவே. ஆனால் அது குகை போல இல்லை. மேலும் அது 6ம் நூற்றாண்டிற்குப் பிறகு கட்டப்பட்டதாக படித்த நினைவு. குகைக்கோவில் உங்கள் புனைவாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் இங்கு சென்றிருந்ததால் இந்த ஆர்வக்கேள்வி :-)


இனி வாளாவிருந்தால் நல்லதல்ல :?

Since all thiose temples were carved out of solid stone and I have read in books that this temple being mentioned as a cave I made it so. I haven´t visited Mallai for the past 28 years[/tscii:25dcebf467]

sivank
26th June 2008, 06:36 PM
//இந்த பரமேஸ்வர பல்லவர்தான் மகேந்திரவர்மரின் அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் உள்ளதா? :? //

அப்படி இருப்பதாக நான் படித்ததில்லை டி.பி. ஆனால் அன்று இவ்வாறு நடத்தல் வெகு சாதாரணம்

sivank
26th June 2008, 07:55 PM
மந்திராலோச்சனை

பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனின் ஆணைப்படி அரசவை வந்த முதல் மந்திரி குலசேகர பட்டர் மந்திரி மண்டலத்தை கூட்டி மன்னனின் வருகைக்காக காத்திருந்தார்

"குலசேகரரே, மன்னன் முடிவு எப்படி இருக்கும் என நீர் எண்ணுகிறீர்.." என கேட்ட ஒரு மந்திரி பிரதானியை முறைத்த குலசேகர பட்டர், " ஆமாம், மன்னர் எலலாவற்றையும் என்னிடம் சொல்லி விட்டு தான் செய்கிறார் போல் கேட்கிறீரே, ஆனால் எனக்கு ஒன்று நிச்சயம் தெரிந்துவிட்டது. போர் முரசு கொட்டும் நாள் அதிக தூரத்தில் இல்லை."

"போர் என்றால் யாருடன் போர் பட்டரே.."?

" மேலை சாளுக்கியம் கூட வலுவிழந்து இருக்கிறதே, பாண்டியனோ பெண் கொடுத்தவன், சோழனோ பெண் எடுத்தவன், சேர குல விழுது தான் இன்று நாட்டை ஆளுகிறது, பின் யாருடன் தான் போர்...?"

குலசேகர பட்டர் வாய் திறந்து பதில் சொல்லுமுன் மன்னரும், மன்னருடன் இளவரசர் ராஜசிம்மனும், குந்தவி தேவியும் வருவதை கண்டு தலை குனிந்து எழுந்து வரவேற்றனர் மந்திரி மண்டலதார்.

மிக சஞ்சலத்துடன் காணப்பட்ட மன்னன் சபையோரை அமற சொல்லி தானும் அரியணையில் அமர்ந்தான்.

"மந்திரி மண்டலத்தாரை நான் இங்கு அவசரமாக அழைத்த காரணத்தை நான் சொல்லு முன் மூன்று நாட்களுக்கு முன் எனக்கு வந்த முக்கிய செய்தி, உத்திர பாரத சக்ரவர்த்தி ஹர்ஷவர்தனர் பரமனடி எய்தினார் என்பதே..."

சபையில் ஆ........ என்ற குரல்கள் ஓங்கி பரவலாக ஒலித்தது.

"ஆம், இது நமக்கு பெருத்த சோதனைக்காலம். வாதாபி போர் முடிந்த 15 வருடத்தில் 2 முறை பெருத்த பஞ்சம் எற்பட்டு விட்டது. இவ்வருடமும் மழை பொய்த்து விட்டதால் தானிய விளைச்சலும் அமோகமாக இல்லை. இந்நிலையில் விக்ரமாதித்யன் படை பலம் பெறுக்குவான். வடக்கிலுருந்து ஆபத்து இல்லாததால் தஷிண திசை நோக்கி படை எடுப்பான். இந்நேரத்தில் அருகில் இருந்து ஆலோசனை கூற என் தந்தையும் இல்லை. என் முடிசூட்டு விழாவிற்க்கு பிறகு தேசாந்திரம் சென்ற பல்லவ நரசிம்மர் இன்று எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை, இந்நிலையில் நாம் செய்யகூடியதை பற்றி பேசவே நான் உங்களை அழைதேன். பழம் நழுவி பாலில் விழுந்ததை போல் சோழ ராணியும் என் தமக்கையுமான குந்தவி தேவியாரும் இங்கே உள்ளதால் என் எண்ணம் எளிதே நிறைவேறும் என எண்ணுகிறேன்..."

மிகுந்த அழகானவளும், அழகை விட மதியூகியுமான குந்தவி தேவி புருவத்தை நெரித்து, " சோழர்களிடம் என எதிர்பார்க்கிறாய், பரமேஸ்வரா..?" என்றாள்

குந்தவியின் நேரடி கேள்வியை எதிர்பாராத பல்லவ மன்னன் ஒரு கனம் தடுமாறி," சாம்ராஜியதிற்க்கு சோதனை வந்தால் அந்நேரம் கை கொடுப்பது குறுநிலங்களின் கடமை...."

"சோழ தேசம் பல்லவ தேசத்தின் குறுநிலம் அல்ல, பரமேஸ்வரா.. சோழ நாடு சுதந்திர பூமி. அதன் மேல் பாத்தியதை கொள்ள உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது."

"தேவி, மன்னர் சொல்லுவது என்னவென்றால்..." என குறுக்கிட்ட குலசேகர பட்டரை எரித்து விடுவது போல் பார்த்த குந்தவி

"என் சகோதரனை நன்கு அறிவேன் குலசேகர பட்டரே. பரமேஸ்வரா, ஒன்று தெரிந்து கொள், தாயாதி சண்டையால் சிதறுண்டு இருக்கும் சோழ நாடு ஒரு போதும் மீண்டும் பல்லவ நாட்டிற்க்கு அடமை ஆகாது..." என கூறி சபையை விட்டு வெளியேறினாள் நரசிம்மபல்லவரின் மகளும் விக்ரம சோழனின் பட்டத்து ராணியுமான குந்தவி தேவி.

sivank
30th June 2008, 08:07 PM
உறையூரில் கலக்கம்

அதோ தூரத்தில் தெரியும் குந்தவிதேவியாரின் பரிவாரங்கள் நகரை அடையுமுன் நாம் சற்று விரைவாக உறையூரில் நுழைந்து நகர்வலம் வருவோம்.

கடந்த 300 வருடங்களில் உறையூர் நன்கு வளர்ந்து விட்டது. புகார் நகரம் கடலுக்கு இரையான பின் சோழர்களால் தலைநகரமாகப்பட்ட நகரத்தில் அனேக மாற்றத்தை காண்கிறோம். அந்நாளில் கட்டப்பட்ட பழைய அரண்மனைகளும், பின்னால் கட்டப்பட்ட புது மாளிகைகளும் நிறைந்து காணப்பட்டது. எங்கு நோக்கினும் பச்சை பசேல் என காட்சி அளித்த இயற்கை அன்னை சோலைகளையும், வயற்காடுகளையும் செழுமையாக காட்சி அளிக்க வைத்தாள். காலம் காலமாக காவிரியால் அடித்து உருட்டி கொண்டு வரப்பட்ட வண்டல் மண் மூன்று போக விளைச்சலை தந்தது. ஊருக்கு வெளியே உள்ள கருமார் குடியிருப்பில் இருந்து அடுப்பு புகையும், இரும்பு இரும்பால் அடிபடும் ஓசையும் கேட்டது. தூரத்தில் எங்கோ கோவிலில் காண்டாமணியின் ஓசை உச்சி கால பூஜையை நமக்கு தெரிவித்தது. சிறுவர்கள் கோழிகளை துரத்தி களைத்து, ஆநிரைகளை குளிப்பாட்ட ஆற்றினில் இறங்கினர். இறைச்சி வதக்கும் மணம் காற்றில் கலந்து நமது நாசிகளை அடைந்தது.

நகரத்தின் மத்தியில் சுண்ணம் அடித்து புது மெருகுடன் பொலியும் பெருமாளிகையின் உச்சியில் புலிக்கொடி கம்பீரமாக பறந்து கொண்டு இருந்தது. இதோ நாம் நகர்வலம் வருமுன் குந்தவிதேவியாரின் பரிவாரங்களும் மாளிகையை அடைந்துவிட்டது. பரிவாரங்களோடு நாமும் கலந்து உள்ளே நுழைவோம்.

மந்திரி பிரதானிகளும், சேவகர்களும் ஒருவித பதட்டத்துடன் உலா வருவதை கண்டால் ராணி வருமுன் காஞ்சி சபையில் நடந்தது ஒற்றர் மூலம் வெளியே கசிந்து விட்டது எனத்தெரிகிறது.

மன்னனை காணாது சிறிது சஞ்சலப்பட்ட குந்தவி சேனாதிபதி கண்டன் மறவனாரை அழைத்தாள்.

"மன்னரிடமிருந்து தகவல் வந்ததா, சேனாபதி?.."

"5 நாட்களுக்கு முன் வீர்சேனரை சந்திக்க சென்ற மன்னரிடமிருந்து இது வரை தகவல் ஏதும் இல்லை தாயே, ஆனால் வீரசேனர் மன்னரை மல்லையில் சந்தித்த பிறகு திருவொற்றியூர் சென்றுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது., காஞ்சியில்...."என ஆரம்பித்தவரை பார்வையால் தடுத்த குந்தவி," சோழ நாட்டிற்க்கு நேரம் சரியில்லை, கண்டனாரே, பல்லவ மன்னன் சோழ நாட்டை மீண்டும் திறை செலுத்தும் அடிமை நாடாக மாற்ற ஆசைப்படுகிறான். பஞ்சத்தில் வாடும் தொண்டை மண்டலத்திற்க்கு சோழ நாட்டின் வளத்தை அளிக்க முயற்ச்சிக்கிறான் பரமேஸ்வரன். விலை கொடுத்து வாணிபம் செய்ய தயாரில்லை அவன், அடிமையாக்குவதன் மூலம் திறையாக எடுக்க முயல்கிறான். நாடெங்கும் கோவில் கட்டி பொக்கிஷத்தை செலவழித்த பல்லவன் போர் துவங்கும் வேளையில் நமது மடியில் கை வைக்கிறான்.."

"தாயே, இப்படியே போனால் ...?" என கலக்கத்துடன் சொன்ன கண்டன் மறவனாரை வருத்தத்துடன் பார்த்த பல்லவன் மகளும், சோழகுல விளக்குமான் குந்தவி பிராட்டி," புரட்டாசி பௌர்னமி வெண்ணாறங்கரை மறந்து விட்டதா மறவனாரே...?" என்றாள்

crazy
30th June 2008, 09:25 PM
sivan anna :clap: :clap:

sivank
30th June 2008, 10:42 PM
thanks vaasi

madhu
4th July 2008, 04:11 AM
hayya ... :bluejump:

sarithira kadhai.. :clap:

sivanji.. pramAdhamAna start..

pallavan magaLaukku pAppA dEsathin sArbil pettagam niRaiya katti thangam koNdu vandhuLLOm arasE !

//PR.. kadalukkuL kANAma pOna kOvil, gugai etc.la indha Adhi varAhar gugaiyum oNNu-nu vachuppOm.. idhu thiruvidanthai gugaikkum munnAdiyE irundha gugai pOla irukku.. I mean Adhi Adhi varAhar gugai..
silaiyAi irundhA tsunAmi-la vELila vara mudiyum.. gugai eppadi varum ? :mrgreen: //

sivank
4th July 2008, 04:24 PM
Paappa desathu makkalukku pallava desathaarin saarbil nandri therivithu kolgiren

madhu
4th July 2008, 05:03 PM
Paappa desathu makkalukku pallava desathaarin saarbil nandri therivithu kolgiren

:shock:

pallava mannA !

nanRi therivithu koLLalAmE.. edhaRku kolgireergaL ? :cry2:

//sivanji adikka varum mun :yessir:

sivank
6th July 2008, 03:20 PM
குருவும் சிஷ்யனும்

ஆதவன் கிழக்கில் நன்கு எழும்பியது நமக்கு சுரீரென்று உறைத்தது. பச்சை தகடாகவும் சில நேரம் நீலப்பட்டாடை விரித்தது போலவும் காட்சி தரும் கடலன்னை அன்று ஏனோ மகிழ்ச்சியுடன் நர்த்தனமாட, அலைகள் பெரிதாக எழும்பி மனதிற்க்குள் சிறிது பயத்தை ஏற்படுத்தியது. கரையை நோக்கி வெகு வேகமாக வந்த அலைகள் கரையில் வெகு தூரம் ஏறி சக்தி இழந்து வந்த வழியே திரும்பின. பயம் எல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் நமக்குத்தான், மீன் குஞ்சுகள் போல் கடலில் குதித்து நீந்தி விளையாடும் பரதவ குழந்தைகளுக்கு அல்ல. தம் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்து கொண்டு வலை பின்னும் பரதவ பெண்களையும் அங்கு காண்கிறோம். ஆடவர் அனைவரும் ஆதவன் துயிலெழுமுன்னமே கடலில் வலை வீச சென்றுவிட்டனர் போலும்.

இவற்றை நோக்கியபடியே மெதுவாக குதிரையின் மீது அமர்ந்து வரும், நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வீரசேனன் கடலை உற்று நோக்கியபடியே வந்தான். அவன் பார்வை தொலைதூரத்தில் அசைந்து வரும் படகின் மீது இருந்தது.

படகிலிருந்து இறங்கியவன் நேராக வீரசேனனின் காலில் விழுந்து," குருவே, உங்களை இங்கு ச்ந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.." என்றான்.

காலில் விழுந்தவனை தூக்கி எழுப்பி மார்புற தழுவிக்கொண்ட வீரசேனன்," கரியாட்டி, உன்னை கண்டதும் யானை பலம் வந்துவிட்டதடா, உன்னோடு பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன, உன் வீட்டிற்க்கு செல்வோமா?... என்றார்

சைவர்களும், வைணவர்களும், பௌத்தர்களும், சமணர்களும், சில யவனர்களும் சேர்ந்து வாழும் இடம் அது. கடற்கரையை ஒட்டி திருமயிலையில் சைவர்களும் திருஅல்லிக்கேணியில் வைணவர்களும் தனித்தனியே அக்ரஹாரம் அமைத்து
வாழ்ந்து வந்தார்கள்.

குதிரையின் தலைக்கயிறை பிடித்தவாறு நடந்த வீரசேனன்," வெண்ணாற்றங்கரை போர் ஞாபகம் உள்ளதா கரியாட்டி.."? எனெ கேட்க, " அது எப்படி மறக்கும் குருவே, நீங்கள் எத்தனை முறை அதை எனக்கு சொல்லி இருக்கிறீர்கள். அதை மீண்டும் ஒரு முறை கேட்க ஆசைப்படுகிறேன்.."

"அந்த புரட்டாசி பௌர்ணமி இரவில் வெண்ணாற்றில் நீருக்கு பதிலாக குருதி ஓடியது. உறையூரிலுருந்து வந்த 10000 வீரர்களில் ஒருவன் கூட செய்தி சொல்ல திரும்பவில்லை. லக்ஷம் பேர் கொண்ட பல்லவ சைன்யத்தோடு இந்த சிறு படை கொண்டு மோத மிகுந்த தைரியம் வேண்டும். அது பார்த்திபனிடம் இருந்தது, அதுவே மாமல்ல சக்ரவர்த்திக்கு உகந்ததாகப்போக பார்த்திபனின் சுயராஜ்யக்கனவை விக்கிரமன் மூலமாக நிறைவேற்றினார். இன்று அந்த கனவிற்க்கு வந்தது ஆபத்து.."

"குருவே, இப்போது என்ன புதிய ஆபத்து வந்துவிட்டது..?"

கரியாட்டியை கூர்ந்து பார்த்த வீரசேனன்," சிலநேரம் நீ என்னை பரிட்ச்சிக்கிறாயோ என்ற எண்ணம் எனக்கு உண்டு, உத்தரபாரத சக்ரவர்த்தி ஹர்ஷர் சந்ததியின்றி மாண்டது பல்லவ நாட்டின் தலை சிறந்த ஒற்றனுக்கு தெரியாமல் இருக்காது. அங்கு வாரிசு பிரச்சனை தலை ஓங்கி இருக்கும் வேளையில் சளுக்கியரை பற்றிய கவலையில் இருவரும் போரிடா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இனி சளுக்க மன்னன் விக்ரமாதித்தன் கவலையின்றி தென்திசை நோக்கி படைஎடுக்கலாம். அவனுக்கு போர் மந்திரியாக பொறுப்பு ஏற்று இருப்பவர் ஸ்ரீராமபுண்யவல்லபர்......"

அப்பெயரை கேட்டதும் தேள் கொட்டியது போல் குதித்த கரியாட்டி," அவர் ஒரு அந்தணர், போர் செய்து பழக்கமில்லதவர் என்று கேள்விப்பட்டெனே.." என்றவனைப்பார்த்து சிரித்த வீரசேனன், " ஒரு படையை அயுதம் இல்லாமலும் அழிக்க அவரால் முடியும். விக்ரமாதித்தன் வீரமும், ஸ்ரீராமபுண்யவல்லபரின் மதியூகமும் பல்லவ நாட்டை பொசுக்கப்போகிறது. இதற்கு முதல் களபலி சோழநாட்டின் சுதந்திரம்.."

Arthi
6th July 2008, 04:23 PM
sivan aNNa :shock: :clap: read 2 episodes...
anna, really interesting... generally i don't prefer reading historical stories... tried only Kalki's writings...
but ur style is really awesome... keep up your work anna :clap:
every weekend i will definetly catch up with you :D

crazy
6th July 2008, 11:05 PM
parathava'na enna? :)

sivank
7th July 2008, 10:05 AM
Vaasi, baradhavar enraal meenavar enru porul.

Zimmermann
7th July 2008, 01:59 PM
Sivan you have the talent.
As you said, reminding me reading Ponniyin selvan...Kalki style writing. Amazing.

But, check a bit for Typos...


பல்லவன் மகள்

முன்னிறவு

முன்னிரவு

sivank
7th July 2008, 02:09 PM
Sivan you have the talent.
As you said, reminding me reading Ponniyin selvan...Kalki style writing. Amazing.

But, check a bit for Typos...


பல்லவன் மகள்

முன்னிறவு

முன்னிரவு

Thanks Zimmi. Will be careful about typos

ksen
7th July 2008, 03:47 PM
Very nice Sivan :clap: Looks like you have done quite some research into the subject. Kalkiyin saayalil your style is awesome !

Zimmermann
8th July 2008, 10:45 AM
aduththa chapter pOdunga Sivan....
oru naaLaikku 10 thadavai vandhu paarthuNdirukkEn :-D

sivank
8th July 2008, 11:18 AM
seekiram ezhudharen zimmi... :D

madhu
8th July 2008, 09:44 PM
எழுதுங்க எழுதுங்க !

sivank
11th July 2008, 08:49 PM
கரியாட்டியின் கதை


நாள்தோறும் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரின் மூலம் இந்த உலகினை உலா வந்து தன் ஒளியினால் உலகை வாழ வைக்கும் சூரியபகவான் அன்போடு தன் பல்லாயிரம் கரங்களை நீட்ட அதில் ஒன்று மண் தரையில் படுத்து இருக்கும் கரியாட்டியின் முகத்தில் விழுந்தது. திரும்பி படுத்த கரியாட்டியின் கண்கள் அயர்ந்து உறங்கும் வீரசேனனை பார்த்து நின்றது. இவர் இல்லாவிடில் இன்று நான் இல்லை என்று எண்ணிய அவன் மனம் சற்றே இறந்த காலத்தை நோக்கி நடைபோட்டது.

40 ஆண்டுகளுக்கு முன் ஓட்டர்தேசத்தில் கரை இறங்கிய யாசோஸ் கேரியோட்டிஸின் கண்களில் பட்டவள் பத்ரா என்னும் கலிங்க தேசத்து தேவரடியாள். பல தேசங்களை கண்டு பழக்கப்பட்ட மாலுமியான அந்த யவனனுக்கு அவள் ஆட்டமும், பாட்டமும் புதிதாக தெரிய அந்த கணமே அவளிடம் தன் மனத்தை பறி கொடுத்தான்.

அவனது உயரத்தையும் ஆகிருதியையும் கண்டு முதலில் பயந்த பத்ரா நாளடைவில் அவனது வெள்ளை உள்ளத்தில் தன்னை ஐக்கியம் ஆக்கியதின் பலன் ஒரு வருடத்தில் கையில் கிடைத்தது. நீல கண்களும், செம்பட்டை முடியுமாக இருந்த சாவோஸ் கேரியோட்டிஸுக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. சிறு வயதில் தாயை இழந்த அந்த சிறுவனை சரியாக வாழ அந்த சமுதாயம் அநுமதிக்கவில்லை. இதை காண சகிக்காத தகப்பன் அவனை யவனம் செல்லும் கப்பலில் ஏற்றி தன் குடும்பதாரிடம் அனுப்பி வைத்தான். மத்தளத்திற்க்கு இரு பக்கமும் அடி என்பது போல் அங்கும் நிலைமை சரியில்லை. நாள்தோறும் ஆடுகளை மேய்த்து விட்டு பின் ஆட்டுப்பாலினால் செய்யப்பட்ட பாலேடு கட்டிகளும், பிட்டா ரொட்டியும் அவனுக்கு அலுத்து விட்டது. தாய் ஊட்டிய பால் சோறும், நெய் சோறும், கதம்பச்சோறும் அவனுக்கு மறக்கவில்லை. மேலும் தகப்பனை போல் உயரமும், ஆகிருதியும் கொண்ட அவனை அவன் சுற்றத்தார் பார்த்த பார்வையும் அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டை விட்டு ஓடிய சாவோஸுக்கு புகலிடம் கொடுத்தது தகப்பனின் தொழிலே. அரபு நாடு வழியாக பாரதம் செல்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக அவன் வேலைக்கமர்ந்த அரபுக்கப்பல் அவன் கனவிலும் நினைத்திராத துன்பத்தை அளித்தது. கசையடிகளை தாங்க முடியாத சாவோஸ் ஒரு நாள் கப்பலில் இருந்து கடலில் குதித்து விட்டான். கை சளைத்து மூழ்கும் அவனை காப்பாற்றியது ஒரு பல்லவ நாட்டு கப்பல். பத்து நாள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவனை பேணிக் காத்தது அக்கப்பலின் கலபதி போன்று காட்சியளித்த வீரசேனன். நினைவு திரும்பியதும் இதமாக பேசி அவன் பயத்தை போகிய வீரசெனன், தனக்கும் அவன் வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறிய பின் அவன் மீது பக்தியே வந்து விட்டது.

வீரசேனனின் ஆலோசனையின் பேரில் பல்லவ கடற்படையில் சேர்ந்த கரியாட்டி ( இனி அவனை மற்றவரைப்போல் இப்பெயரிலேயே அழைப்போம்) விரைவிலேயே தான் வித்தியாசமானவன் என நிறுபித்து விட்டான். கழுகு போன்ற கூரிய பார்வையும் பெருங்காற்றினிலும், அலைகளிலும் குரங்கு போல் பாய்மரங்களில் அவன் தாவி ஏறியது அவன் சிறந்த மாலுமி எக்ஸ் தெரிய வைத்தது. மல்லை வரும் போதெல்லாம் வீரசேனரை தேடி சந்தித்து அவருடன் அளவளாவுவது அவனுக்கு பிடித்தமானதாகவும் இருந்தது. வீரசேனனும் கரியாட்டியை பேச விட்டு அவனிடம் இருந்து உலகத்தை பற்றி நிறைய அறிந்து கொண்டார்.

யவன பெருமன்னனான சிக்கந்தரைப்பற்றி அறிஎது கொள்வதில் அவர் ஆவலாக இருந்தார். 800 ஆண்டுகளுக்கு முன் எப்படி அப்பெருமன்னனால் 10 வருடங்கள் தொடர் படையெடுப்பு நடத்த முடிந்தது, அவனது போர் சாஸ்திரம், போர் சாகசம் பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார். கரியாட்டியும் தனக்கு தெரிந்ததையும் தெரியாததை மற்ற யவனர்களிடம் கேட்டு வந்து சொன்னான்.

தஷினபாரதத்தை காண ஹர்ஷரின் உதவியோடு பல்லவ தேசம் வந்த சீன புத்த யாத்ரீகரை தனது கப்பல் மூலம் கலிங்கதுக்கு அழைத்து சென்ற கரியாட்டி அவரிடம் இருந்து ஆயுதம் இன்றி போரிடும் முறையை கற்று கொண்டான். இதை மேலும் கற்று கொள்ள சீன தேசம் சென்ற கரியாட்டி சீன வாட்போர் முறையையும் கற்று தேர்ந்தான். அவனது திறமைகளை கண்ட வீரசேனர் அவனை தனது அந்தரங்க ஒற்றனாக வைத்துக்கொண்டார். கடலோடியும் யவனனுமான கரியாட்டி மற்றவர்கள் புக முடியாத இடத்தில் எல்லாம் புகுந்து செய்தி திரட்டி வந்தான்.

தனது குடிசையில் தன்னை மறந்து அயர்ந்து உறங்கும் வீரசேனரை கண்ட கரியாட்டி அவர் முகத்தில் தெரிந்த அயர்ச்சியும், கவலையையும் பார்த்து மனம் கலங்கினான். வீரசேனர் உண்மையில் யார் என்பதை வெகு காலம் முன்பே அவன் அறிந்தவனாதலால் பல்லவ மன்னன் மீது கோபம் கொண்டான்.

crazy
11th July 2008, 09:45 PM
:P

Shakthiprabha.
13th July 2008, 11:25 AM
sivan,

A small jist which includes characters, their intros, and also a brief recap of what has happened so far, would thro more light.

I need not say ur story is simply way above the ordinary.

:clap:

Shakthiprabha.
13th July 2008, 11:28 AM
காஞ்சி சுந்தரி

சிறிய குன்றினை போல் யானைகள் பரவலாக திரியும் மக்களின் நடுவே அசைந்து சென்று கொண்டிருந்தன.


குருவும் சிஷ்யனும்

ஆதவன் கிழக்கில் நன்கு எழும்பியது நமக்கு சுரீரென்று உறைத்தது. பச்சை தகடாகவும் சில நேரம் நீலப்பட்டாடை விரித்தது போலவும் காட்சி தரும் கடலன்னை




கரியாட்டியின் கதை


நாள்தோறும் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரின் மூலம் இந்த உலகினை உலா வந்து தன் ஒளியினால் உலகை வாழ வைக்கும் சூரியபகவான் அன்போடு தன் பல்லாயிரம் கரங்களை நீட்ட அதில் ஒன்று மண் தரையில் படுத்து இருக்கும் கரியாட்டியின் முகத்தில் விழுந்தது

As usual, I am enjoying ur description of nature, way above other research or even ur story :clap:

too creative!

madhu
13th July 2008, 02:10 PM
யவன தேசத்தின் வடமேற்கு மலைகளுக்கப்பால் கருமண் பூமியில் வசிக்கும் மங்கல்ம் நல்கும் கடவுளின் பெயர் கொண்ட இனிய நண்பருக்கு....

தொண்டை மண்டலத்துக்க் கடற்கரையோர குடியிருப்பில் ஒரு அங்கமான மாபிலம் எனும் பெயருடைய சிற்றூரில் இருந்து பூந்தேறல் எழுதும் மடல்..

கடற்கரை மணலில் காணும் காலடிச்சுவடுகள் மறைந்தபோதிலும்
தங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்தும் சில காலச்சுவடுகள் என்றும் மறையாதிருக்க வாழ்த்துகிறேன்.

வள்ர்க உங்கள் எழுத்தாக்கம் !! :victory:

madhu
13th July 2008, 02:12 PM
அண்ணாத்தே...

புச்சா எவனோ ஒளறிக்கிறானேன்னு பாக்குறியா ?

அது நாந்தான்... :mrgreen:

sivank
13th July 2008, 09:07 PM
sivan,

A small jist which includes characters, their intros, and also a brief recap of what has happened so far, would thro more light.

I need not say ur story is simply way above the ordinary.

:clap: :notworthy:

sivank
13th July 2008, 09:08 PM
யவன தேசத்தின் வடமேற்கு மலைகளுக்கப்பால் கருமண் பூமியில் வசிக்கும் மங்கல்ம் நல்கும் கடவுளின் பெயர் கொண்ட இனிய நண்பருக்கு....

தொண்டை மண்டலத்துக்க் கடற்கரையோர குடியிருப்பில் ஒரு அங்கமான மாபிலம் எனும் பெயருடைய சிற்றூரில் இருந்து பூந்தேறல் எழுதும் மடல்..

கடற்கரை மணலில் காணும் காலடிச்சுவடுகள் மறைந்தபோதிலும்
தங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்தும் சில காலச்சுவடுகள் என்றும் மறையாதிருக்க வாழ்த்துகிறேன்.

வள்ர்க உங்கள் எழுத்தாக்கம் !! :victory: :notworthy:

Zimmermann
14th July 2008, 03:05 PM
Endlich :D
Und wieder lebendige Wortespiel.
Keep it up Sivan

ksen
14th July 2008, 03:27 PM
:clap: Sivan, going great !


பூந்தேறல் அவர்களே ! மாபிலம் மாம்பலம் ஆனது எவ்வாறோ :?

madhu
14th July 2008, 06:25 PM
:clap: Sivan, going great !


பூந்தேறல் அவர்களே ! மாபிலம் மாம்பலம் ஆனது எவ்வாறோ :?

adhu latest mambalam times-la pOttirukkum news..

adhu epdi aachu-nu enakku theriyaleengO !

P_R
16th July 2008, 03:32 PM
கருமண் பத்தி நம்ம லெமூரியாவாதிகள் யாராவது கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

அது என்ன 'பூந்தேறல்'...புனைப்பெயரா ?

madhu
16th July 2008, 07:55 PM
கருமண் பத்தி நம்ம லெமூரியாவாதிகள் யாராவது கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

அது என்ன 'பூந்தேறல்'...புனைப்பெயரா ?

prabhu..

adhu nAnAgavE "madhu"vukku kodutha arunchoRporuL :noteeth:

Arthi
20th July 2008, 11:21 PM
anna... superb :clap: thOdarattum :thumbsup:

Arthi
21st July 2008, 06:15 PM
aNNa... waiting for updates.... :D
plz write soon :)

sivank
17th August 2008, 11:55 PM
அன்பு நண்பர்களே, வேலை பளூவின் காரணமாக தொடர்ந்து எழுத முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்

sivank
19th August 2008, 11:41 PM
மதில் மேல் பூனை

அந்த வருஷத்தில் ஆனி மாத ஆரம்பத்திலேயே பலத்த மழை பெய்ததால் வைகையில் வெள்ளம் வந்து விட்டது. இரு கரையையும் மீறி வெள்ளம் சென்று கொண்டு இருந்தது. வெள்ளதின் வேகம் வெகு பலமாக இருந்தது. அப்படி இருந்தும் இளஞ்சிறுவர்கள் இடுப்பில் கயிறு கட்டி கொண்டு நீந்த முயற்சித்து கொண்டு இருந்தார்கள். கை சளைத்து தடுமாறியவர்களை கரையில் இருந்தவர்கள் கயிற்றை பிடித்து கரைக்கு இழுத்தார்கள். ஆக மொத்தத்தில் சிரிப்பும் கும்மாளமுமாக பொழுதை கழித்து கொண்டிருந்த அவர்களை கவனியாமல் தன் குதிரையை மதுரை நோக்கி செலுத்தினான் வீரசேனன். மனதிற்க்குள் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதியதால் கண் முன்னே தென்பட்ட இயற்கை அழகினை கூட கண்டு பருகாமல் விரைந்து சென்றான். உறையூரிலிருந்து கரியாட்டி அறிந்து வந்த செய்திகளும், காஞ்சியில் இருந்து வந்த செய்திகளும் அவரை மிகவும் துன்புறுத்தின. தன் காலத்தில் ஏற்படுத்தபட்ட சமாதானம் இப்படி சீரழிந்து போனதை எண்ணி எண்ணி அவர் மனம் வெம்பியது

மதுரை நகருக்குள் நுழையாமல் குதிரையை அவர் அழகர் மலை காட்டினுள் செலுத்தினார். காலில் கல் தைத்து தடுமாறிய குதிரையின் மேலிருந்து இறங்கி அக்கல்லை குளம்பில் இருந்து விடுவித்த அவருக்கு கரியாட்டி சொன்னது நினைவிற்க்கு வந்தது. குதிரையின் குளம்பில் இரும்பை வளைத்து லாடம் அடிப்பதாமே, இது சாத்தியம் தானா, நமது கொல்லர்களால் அது முடியுமா, என தனக்குள்ளே கேட்டு சிரித்து கொண்டார். தனஞ்ஜெயா நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தானடா என தன் குதிரையை தடவி கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தினால் ஏற்பட்ட ஆனந்தத்தில் அக்குதிரை கனைத்தது. அக்கனைப்பின் எதிரொலி போல் மற்றொரு குதிரையும் தூரத்தில் கனைத்தது.

அழகர்மலை அடிவாரத்தில் அக்காட்டின் நடுவே இருக்கும் அந்த தாமரைக்குளத்தினை சற்று அருகே சென்று பார்ப்போம். அட, என்றும் இல்லாத அதிசயமாக இன்று இங்கு ஒரு ரதம் நிற்க்கின்றதே. குதிரையின் கனைப்பை கேட்டு அதை தடவி சமாதானம் செய்ய சென்ற ஆடவன் குளகக்ரையில் சிலை போல் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து," மாமா, எதற்கு நம்மை இங்கு சந்திப்பதாக சொன்னார், நேராக அரண்மனை வந்திருக்கலாமே," என்றான்.

பேசாமடந்தை போல் அமர்ந்திருந்த பாண்டிய ராணி மங்கையர்க்கரசியின் தெய்வீக முகத்தில் ஒரு சிறு சலனம் தோன்றி மறைந்தது. "ஐயா, மாமா காரணமில்லாமல் நம்மை இங்கு வரச்சொல்லி இருக்கமாட்டார், ஏதோ முக்கிய காரணம் இல்லாமல் போகாது".

crazy
20th August 2008, 07:41 PM
:)

sivank
6th September 2008, 10:46 PM
" இருக்கட்டும் தேவி, ஆனாலும் அரண்மனைக்கு வராமல் நம்மை இங்கு வரச்சொன்ன காரணம் தான் எனக்கு புரியவில்லை"...

"ஐயா, அதோ மாமாவே வந்து விட்டார், வாருங்கள் இதை அவரிடமே கேட்ப்போம்.."

தன்னை வணங்கி நின்ற பாண்டிய மன்னனையும், அரசியையும் வாழ்த்திய வீரசேனர் மன்னன் நெடுமாறனை நெஞ்சுற அணைத்துக்கொண்டார். "நெடுமாறா, உன்னை இப்படி காண மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காழி வாழ் மகான் ஞானசம்பந்தரின் மகிமையே மகிமை. என் தந்தையும் இப்படி வாகீசரின் துணையால் அகக்கண் திறக்கப்பெற்றார். எல்லாம் அந்த ஈசன் செயல்.."

"மாமா, கூன் பாண்டியனாக இருந்த என்னை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய அந்த சம்பன்த பெருமானின் அருளை என்னவென்று சொல்லுவேன், வாருங்கள், அங்கு அமர்ந்து பேசுவோம்

"பாண்டிய மன்னா.." என்று ஆரம்பித்த வீரசேனரை தடுக்க முயன்ற நெடுமாறனை நோக்கி," இன்று நான் பல்லவ மன்னனின் தூதனாக வரவில்லை, இந்த தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்தை உனக்கு விளக்கவே உன்னை இவ்விடம் வரச்செய்தேன்..."

"இருந்தாலும், என்னை மன்னா என்று தாங்கள் அழைப்பது சரியல்லவே.."

"இல்லை நெடுமாறா, இன்று நான் ஒரு சாதாரணன். என் மகன் இறந்து நான் உயிரோடு இருப்பது, என்னை மிகவும் துயரப்பட வைக்கிறது. எனக்கு போர் மீது சிறிதும் நாட்டமில்லை. ஆனால், நடப்பதை கவனித்தால் போரை தவிர்க்க முடியாது போல் இருக்கிறது.."

இது வரை பேசாமல் இருந்த பாண்டிய ராணி," போர் பாண்டிய நாட்டையும் பாதிக்குமா, மாமா?.."

"தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போர் மதுரை வரை நீளும் என்பது நிச்சயம் தாயே. நெடுமாறா, உனது தந்தை எனக்கு எதிராக புலிகேசியோடு அணி சேர்ந்தார். புலிகேசி காவிரியில் யானைப்பாலம் அமைத்து சோழ நாட்டை அபகரிக்க துணை நின்றார். வாதாபி சென்ற எனக்கு உதவி செய்ய வந்த உன்னை உன் தந்தையின் உடல் நலம் கருதி மதுரைக்கு திருப்பி அனுப்பினேன் நான். இப்போது காஞ்சியில் அரசாள்வது பரமேஸ்வரன் அவனை எதிர்ப்பதோ ஸ்ரீராமபுண்யவல்லபரின் துணை கொண்ட விக்ரமாதித்தன்.

wrap07
7th September 2008, 11:31 PM
brilliant writing with naturally flowing description of events. :D
பிரமாதம்.

P_R
8th September 2008, 01:29 PM
Going well thus far. Keep up the pace :thumbsup:

Murali Srinivas
22nd September 2008, 11:02 PM
சிவன்,

என்ன சொல்ல! என்ன சொல்ல!

ஒரு புறம் கடல் மல்லை, காஞ்சி மற்றும் சென்னை

மறு புறம் உறையூர்

வேறொரு புறம் மதுரை

போதாதென்று யவனம்

இப்படி நூற்றாண்டுகளுக்கு முன் நானாபுறமும் உங்கள் கற்பனை சிறகை விரித்து ஒரு சரித்திர புதினம் படைக்கும் நீங்கள் தான் ஜாம்பவான்.

அன்புடன்

disk.box
4th October 2008, 03:19 AM
கார்காலம் தொடங்கியபின்னும் தலைவனைக் காணாது பரிதவிக்கிறாள் "பல்லவன் மகள்".

தேரின் வேகத்தை துரிதப்படுத்தி விரைந்து வருக தலைவ!

sivank
7th October 2008, 02:20 PM
Hi Murali,

Thanks for your comments. Still I can never reach your standard.

Hi Prabhu, DB

I will be starting soon

sivank
7th October 2008, 03:16 PM
"மாமா, ஆனாலும் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே கவலைபடுவதாக எனக்கு தோன்றுகிறது,"

"இல்லை நெடுமாறா, நிலைமை உனக்கு இன்னும் பிடிபடவில்லை. புலிகேசியாவது யானைப்பாலம் கட்டி காவிரி கடந்து சோழ நாடு வந்தான், தென் நாட்டை வீரத்தால் அடைய முயன்றான், ஆனால் ஸ்ரீராம புண்யவல்லபர் மித்ர பேதம் செய்வதில் வல்லவர். நான் வாதாபி போருக்குப்பின் செய்ய நினைத்ததை செய்து முடித்திருந்தால் இன்று இந்த போர் மூண்டு இராது".

wrap07
7th October 2008, 03:25 PM
sri sivan,

nice. :D eagerly waiting for more.

wrap07
7th October 2008, 03:26 PM
sri sivan,

great to see u back :D

sivank
7th October 2008, 03:44 PM
Thanks sankar

sivank
7th October 2008, 04:28 PM
"நெடுமாறா, ஹர்ஷரின் ராஜ்யம் எவ்வளவு பெரிது என்று நீ அறிவாயா? 200 காத நீளமுள்ள ராஜ்யம் அது. நமது தென்னாட்டிலே 10 காதம் தாண்டுவதற்க்கு முன் மூன்று ராஜ்யங்களை கடக்க வேண்டும். ஹர்ஷரின் ராஜ்யத்தை போலவே தென் நாட்டில் இனி பல்லவ ராஜ்யம் மட்டுமே இருக்க வேண்டும் என உறுதியோடு இருந்த என்னை ஒரு மனிதனின் சுத்த வீரம் மாற்றியது. மீண்டும் ஒரு ராஜ்யமாக சேர்ந்து விக்ரமாதித்தனை எதிர்க்காவிட்டால் தமிழகம் பிரியப்போவது உறுதி."

வியப்புடன் வீரசேனர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த பாண்டிய மன்னன்," மாமா, தாங்கள் அனைத்தும் அறிந்தவர், இந்நிலையில் பாண்டிய தேசம் என்ன செய்ய வேண்டும் என தாங்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும்."

"மாமா, பொருட்சேதத்தையும்,உயிர் சேதத்தையும் தடுக்க வழி இல்லையா?", என கேட்ட மங்கையர்கரசியை நோக்கிய வீரசேனர், "இருக்கிறது தாயே, நான் வகுக்கும் திட்டம் நிறைவேறுமானால் சேதம் மிக குறைவாக இருக்கும். நெடுமாறா, நீ உடனே ரணதீரன் தலைமையில் ஒரு பெரிய படையை தென் பாண்டி சீமைக்கு அனுப்பி விடு. அங்கு அவர்கள் கடுமையாக போர் பயிற்சி பெறட்டும். காந்தளூர்சாலையிருந்து ஆசான்களை வரவழைத்து கடுமையான பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய். இது ரகசியமாக இருக்கட்டும். சளுக்க நாட்டில் இருந்து தூது வந்தால் பாண்டிய நாடு நடுநிலை வகுக்கும் என தெரிவித்து விடு. நான் இங்கிருந்து உறையூர் செல்கிறேன்".

தேரில் ஏறி வீரசேனரை பற்றி பேசியவாறே அரண்மனை திரும்பிய பாண்டிய மன்னனை எதிர்கொண்டது ஸ்ரீராம புண்யவல்லபரின் புன்னகை ததும்பிய முகம்

sivank
14th October 2008, 06:17 PM
குந்தவியின் தயக்கம்

தூரத்தில் கோட்டை மணி இரவு மூன்றாம் ஜாமத்தை நெருங்கியதை பலமாக அறிவித்தது. எங்கு நோக்கினும் கும்மிருட்டு. இருள் தன் மேல் ஒரு போர்வையை போர்த்தி கொண்டதைப்போல் இருந்தது. குதிரையின் தலைகயிற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்த வீரசேனர் நேராக கரிகால் பெருவளத்தானின் பழைய மாளிகையை நோக்கி சென்றார். நகர காவலர்கள் அவரை கண்டும் காணாதது போல் இருந்தது அவர் வரவு எதிர்பார்க்கபட்டதே என நமக்கு தோன்றுகிறது.

மாளிகையை நெருங்கிய வீரசேனரின் கால்களில் வந்து விழுந்தான் கரியாட்டி. அவனை தூக்கி எழுப்பி மார்புற அணைத்துக்கொண்ட வீரசேனர் அவன் அதற்க்குள் எப்படி மதுரையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தான் என வியந்தார். அவரது முகக்குறியிலிருந்து அவருள் இருந்த கேள்வியை புரிந்து கொண்ட கரியாட்டி,"அய்யா, முதலில் உள்ளே வந்து சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள் பிறகு நான் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகிறேன்,"என்றான்

disk.box
14th October 2008, 11:19 PM
மதிப்பிற்குரிய சிவன் அவர்களே!

வர்ணனைகள் அருமை. "இருள் தன்மேல் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டதைப்போல்" . :thumbsup:

அது எப்படிப்பட்ட இருளாக இருக்கும் யோசிக்கும்போதே சுற்றியுள்ள வெளிச்சங்கள் மறைந்து இருட்டாவதைப்போல் இருக்கிறது :) .

"அது இருளைவிடக் கரியதாக இருந்தது" என கல்கி அழகாக வர்ணித்திருப்பார்.
அதற்கிணையானதிந்த "இருள் போர்வை". :clap:

இடைவேளைகளற்று தொடரட்டும் தங்கள் காவிய சிற்பப் பணி.

நன்றி.

sivank
14th October 2008, 11:28 PM
நன்றி டிஸ்க்பாக்ஸ் அவர்களே :notworthy:

crazy
14th October 2008, 11:45 PM
:P

sivank
19th October 2008, 07:19 PM
"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்"

படுத்திருந்த வீரசேனரின் நினைவில் மீண்டும் மீண்டும் இப்பாடல் ஒலிக்க தொடங்கியது. வியர்த்து திடுக்கிட்டு கண் விழித்த அவரது கண்களில் கண்ணீர் தளும்பியது." இன்னும் எத்தனை காலத்துக்கடி என்னை இப்படி சித்ரவதை செய்யப்போகிறாய். நானே இன்னும் சிறிது காலத்தில் உன்னிடம் வந்து விடுவேனே. அடி சிவகாமி, பாதகி என்னை இப்படி வதைக்காதே", என கூறியபடி நன்றாக விழித்துக்கொண்ட வீரசேனர் அயர்ந்து உறங்கும் கரியாட்டி எழுப்ப மனமில்லாமல் அந்த அறையின் மூலையில் இருந்த பாண்டத்தில் இருந்து சிறிது நீரை உட்கொண்டபின் அறையில் இருந்து உப்பரிகைக்கு வந்து அங்கு இருந்த மேடையில் அமர்ந்தார். நினைவலைகள் அவரை மீண்டும் வாலிபனாக்கி காஞ்சிக்கும், மாமல்லபுரத்திற்க்கும் இழுத்து சென்றது. அவரது மனக்கண் முன் மகேந்திர சக்ரவர்த்தியின் கம்பீரமான முகம் தோன்றி, நான் செய்தது நாட்டு நலம் கருதிதானடா என் கண்ணே என்றது. கவலை ததும்பிய ஆயன சிற்பியின் முகம், இப்படி செய்து விட்டீர்களே பிரபு, என்றது. தன் பெரிய கரிய கண்களில் கண்ணீரோடு சிவகாமி ஒன்றுமே பெசாமல் அவரை பார்த்தாள். கை வெட்டுப்பட்ட நிலையிலும் நாகநந்தி அடிகளும், மகா காலபைரவரும் ஏளனமாக சிரித்தனர். கண்ணில் கருணையோடு பரஞ்சோதியாகிய சிறுத்தொண்டர், நான் இருக்கிறேன் பிரபு, கவலை வேண்டாம் , என்றார்.

அந்த குளிர்ந்த வைகறை பொழுதிலும் வியர்த்த முகத்தோடு இருந்த வீரசேனரை மெதுவாக நெருங்கிய கரியாட்டி, "ஐயா, என்ன ஆயிற்று தங்களுக்கு, சுரமாக இருக்கிறதா"? என்றான்.

crazy
19th October 2008, 07:23 PM
:P

sivank
19th October 2008, 10:39 PM
அவனுக்கு உடனடியாக பதில் கூறாமல் தொடுவானத்தையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்த வீரசேனர் மெதுவாக கூறினார்," எனது இறந்தகாலம் எனது வருங்காலதை முடிவு செய்ய பார்க்கிறது", புரியாமல் முழித்த கரியட்டியை நோக்கி, "உனது தாயும் ஒரு ஆடலரசி தானே, உனக்கு அவளது நினைவு வருவதில்லையா", என கேட்டார்.

"மறந்தால் தானே பிரபு நினைப்பதற்கு", என்றவனை நோக்கி, "எனக்கும் அதே நிலை தானடா, சரி மதுரையில் இருந்து என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறாய்," என்றார்

"பாண்டிய மன்னர், தாங்கள் கூறியபடியே ஸ்ரீ ராமபுண்யவல்லபரிடம் நடுநிலை வகுப்பதாக சொல்லி விட்டார், மேலும் இளவரசர் ரணதீரர் ஒரு பெரும்படையுடன் சேதுக்கரை ஓரத்தில் சேரநாட்டு முன்குடுமி அந்தனர் உதவியோடு போர்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார். பாண்டிய மன்னரோடும், இளவரசரோடும் கலந்து பேசியபின் மந்திரி குலச்சிறை தாங்களிடம் சொல்ல சொன்ன செய்தி, பாண்டிய நாடு தயாராக உள்ளது என்பதுவே."

wrap07
20th October 2008, 01:16 PM
:)

Shakthiprabha.
20th October 2008, 01:18 PM
sivan,

sivagamiyai apdi ipdi kathaila nuzhanchuteengala :lol2:

vazhakkam pol ungaL varNAnaigaL arumai.

sivank
28th October 2008, 12:36 PM
Thanks Sp, wrap

crazy
29th October 2008, 02:24 AM
:)

sivank
1st November 2008, 08:32 PM
கரியாட்டி கூறியதை கேட்டு சிந்தனையில் ஆழ்ந்த வீரசேனர், "நீ சோழ மன்னரை பார்த்தாயா"? என்றார்.

" சோழ மன்னர் நேற்றிரவு தான் உறையூருக்கு திரும்பி வந்தார். மஹாராணி தான் என்னை மதுரையில் நடந்ததை அப்படியே சொல்ல சொன்னார். பின்பு சேனாபதி கண்டன் மறவனாருடன் வெகுநேரம் பேசி கொண்டிருந்தார்."

"ஆதவன் உதிக்க இன்னும் ஒரு ஜாமம் தான் உள்ளது, இனி உறங்குவதில் பயன் ஏதும் இல்லை. என்னுடன் நகர்வலம் செல்ல வருகிறாயா?"

உறையூர் மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாலும் அவ்வேளையிலும் சில வேளாளர்கள் கலப்பையை தோளில் சுமந்து தமது விளைநிலம் நோக்கி சென்றனர். கடைவீதியில் சில வர்த்தகர்கள் காலை உணவுக்கு ஏற்ப சூடான நொய் கஞ்சியும், பிரண்டை துகையலும் விற்று கொண்டு இருந்தனர். வேதியர்கள் ருத்ரம் உச்சரிதபடியே காலை பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தனர். இந்த நடமாட்டங்களை பார்த்து கொண்டிருந்த சேவல் ஒன்று விடியலை அறிவிக்கலாமா வேண்டாமா என குழம்பி அங்கிருந்து வேகமாக விலகி போனது. திருச்சீரபுர மலைக்கோவிலில் இருந்து முதல் பூஜைக்கான மணி ஒலிக்க தொடங்கியது.

வேத கோஷங்களை கேட்டவாறே வந்த கரியாட்டி வீரசேனரை பார்த்து, "இங்கு உள்ள அந்தனர்க்கும், மதுரையில் நான் கண்ட அந்தனர்களுக்கும் பெரும் வித்யாசம் இருக்கின்றதே." என்றான்

அதை கேட்டு புன்முறுவல் செய்த வீரசேனர், "அப்படி, என்ன வித்யாசம் கண்டு விட்டாய் நீ,"

"இல்லை, இந்த அந்தனர்கள் அமைதியாக இருக்கின்றார்கள், ஆனால் அவர்களோ அமைதியாக இருந்தாலும் ஒரு வித வேகத்துடன் இருக்கிறார்கள். இவர்களிடம் எந்த விதமான ஆயுதங்களும் நான் காணவில்லை, எங்கு சென்றாலும் கால்நடையாகவோ, இல்லை கட்டை வண்டியிலே செல்கிறார்கள், ஆனால் அவர்களோ ஆயுத பயிற்சியில் கரை கண்டவர்களாக உள்ளார்கள். குதிரை மீது செல்லும் அந்தனரையும் நான் அங்கு தான் முதமுதலில் கண்டென். அந்தன்ர் போர்த்தொழில் செய்ய மாட்டார்கள் என்றல்லவா நான் இதுகாறும் நினைத்திருந்தேன்."

sivank
1st November 2008, 08:54 PM
" நீ கண்ட அந்தனர்கள் சேர நாட்டை சேர்ந்தவர்கள். தங்களை பரசுராமரின் வழித்தோன்றல் என கூறி கொள்பவர்கள். வேதத்தில் அதர்வண வேதத்தை பின்பற்றுபவர்கள். விரதங்களாலும், கடும் பயிற்சியினாலும் உடலை இரும்பாக்கி கொண்டவர்கள். ஆய கலைகள் அனைத்தும் அறிந்தவர்கள். இவர்களுடைய கடிகையில் தான் மாணவனாக சேர்வது மிக கடினம். மகேந்திர சக்ரவர்த்தி காஞ்சியில் கடிகை ஆரம்பித்தார் என்பதாலும், அதற்கு தண்டி மஹாகவி ஆச்சாரியர் என்பதிலும் இவர்களுக்கு பல்லவர் மீது வருத்தம் உண்டு."

sivank
2nd November 2008, 01:04 AM
"அப்போது இவர்கள் சார்ந்த படை மிகவும் பலமானதாக இருக்குமே," என்றான் கரியாட்டி

"இவர்களுடைய பலமும் பலவீனமும் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள் என்பதே. ஆசானாக இருப்பார்களே தவிர படை வீரராக ஒருவருக்கும் அடி பணிய மாட்டார்கள். இவர்களை சமயமறிந்து உபயோகித்தால் வெற்றி நிச்சயம்."

"எதிரிகளும் அவ்வாறே நினக்கக்கூடும் அல்லவா," என்ற கரியாட்டியை ஆழ்ந்து நோக்கிய வீரசேனர்," ஸ்ரீ ராமபுண்யவல்லபர் எதற்காக மதுரையில் இருந்து வஞ்சி மாநகரம் சென்று இருக்கிறார் என்று எண்ணுகிறாய்."

sivank
9th November 2008, 04:43 PM
சோழ மன்னன் விக்ரமனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. எதிரே இருந்த சேனாபதி கண்டன் மறவனாரின் கண்களோ பலி கேட்கும் சூத்ர தேவதையின் கண்களை போல் கோபத்தால் சிவந்து இருந்தது.

"அரசே, இந்த துரோகத்தை ஒரு நாளும் அநுமதிக்க கூடாது. சசாங்கனுக்கு தாங்கள் மிகுந்த தயை காட்டி வந்தது விஷ நாகதிற்க்கு பால் வார்ப்பது போல் ஆகும். அவன் தங்கள் சிற்றப்பன் மகனாக இருக்கலாம், ஆனால் அவன் அந்த குல துரோகி மாரப்பனின் மகன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது." என்றார் சோழ சேனாபதி.

"மறவனாரே, சசாங்கன் இப்படி மாறுவான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. பல தலைமுறைகளாக பிரிந்து இருந்த சோழ நாடு செம்பியன் வளவரின் காலத்திற்க்கு பின் ஒன்றாக இணையும் வேளையில் இப்படி ஒரு குழப்பம். கொடும்பாளூருக்கு இளவரச்ன் பிரதாபன் தலைமையிலொரு படையை அனுப்பி சசாங்கனை கைது செய்து இங்கு கொண்டு வர செய்யுங்கள்."

சேனாதிபதி வெளியேறியவுடன் தனது அந்தரங்க அறைக்கு வந்த விக்ரமன் வீரசேனனையும், குந்தவியையும் கண்டு வருத்ததோடு புன்முறுவல் செய்தான்.

"கலங்காதே விக்ரமா, இது சசாங்கனின் செயல் அல்ல, அவனை இயக்குபவர்கள் வேறு எவரோ. நீ பிரதாபனை அங்கு அனுப்பியது மிகவும் உசிதமான செயல். இளவரசன் அங்கு வரும் முன்னே சசாங்கன் வெளியேறிவிடுவான், படைகளுடன் இளவரசன் அங்கேயே இருக்கட்டும். பாண்டிமாதேவி மங்கையர்கரசிக்கும் ஒரு பலமான சோழ மண்டலத்தை உருவாக்கும் எண்ணம் இருப்பதால் கொடும்பாளூர் ராஜ்ஜியத்தை உறையூருடன் இணைப்பதில் ஆர்வமாக உள்ளார்கள். சசாங்கனை பின்னால் இருந்து தூண்டுபவர்கள் யார் என அறிய ஒரு கை தேர்ந்த ஒற்றனை அனுப்ப வேண்டும், பின்னால் இருப்பவர் யார் என தெரிந்து கொண்டால் சசாங்கனை உசுப்பி விட்டதன் மர்மம் விளங்கும்."


"விக்ரமாதித்தன் விரைவில் தனது படையெடுப்பை தொடங்குவான் என்றே எனக்கு செய்திகள் வந்துள்ளன," என்ற விக்ரமனை, " இன்னும் சிறிது காலம் செல்லும் என்று தான் நினைக்கிறேன் விக்ரமா, தன் தந்தை செய்த தவறுகளை விக்ரமாதித்தன் செய்ய மாட்டான். தென்னாட்டில் பலமாக காலூன்ற எண்ணுகிறான், தகப்பன் போல் சூறையாடாமல் படைகளோடு மட்டும் பொருதி மக்களை தன் வயபடுத்த பார்க்கிறான்."

mgb
17th November 2008, 07:58 PM
சிவன்.. அருமையான நடை :clap:
நான் சாளுக்கிய நாட்டில் இருப்பதால், தேவசேனர் போடும் திட்டத்தை விக்ரமாதித்யரிடம் தெரிவிக்கிறேன் :twisted:

sivank
7th January 2009, 07:09 PM
சிவன்.. அருமையான நடை :clap:
நான் சாளுக்கிய நாட்டில் இருப்பதால், தேவசேனர் போடும் திட்டத்தை விக்ரமாதித்யரிடம் தெரிவிக்கிறேன் :twisted:

thanks ganesh, avara paatheenganna kandippa sollungo, sandhodha paduvaar :D

sivank
7th January 2009, 07:55 PM
முதலில் பல்லவர்களை தனியாக ஆக்கிய பிறகு தான் படை நகர ஒப்புதல் அளிப்பார் போர் மந்திரி. அதன் முதல் கட்டம் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் குழப்பம் மூட்டுவதுவே. உனக்கு சசாங்கன் மூலமாக பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. பாண்டியனுக்கு எப்படி மூளுமோ இன்னும் தெரியவில்லை. நாம் ஒன்று சேர்ந்து செயல் பட்டால் தான் சளுக்க ஆதிக்கத்தை முறியடிக்க இயலும். எனக்கு தோன்றிய யோசனையை நான் கூறுகிறேன், நன்றாக யோசித்து முடிவுக்கு வாருங்கள்".

யோசைனையை கேட்ட விக்ரமன் மெல்ல நகைத்தான். குந்தவியின் முகம் அவளது தயக்கத்தை காட்டியது

sivank
23rd July 2009, 03:05 AM
வாதாபி

தமிழக சரித்திரத்தில் முக்கியமான இடம் பெற்ற வாதாபி நகரம் நம் கண் முன்னே விரிந்து பரந்து இருக்கிறது. பழம் பெருமை வாய்ந்த வாதாபி நகரத்தை சளுக்க சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாற்றிய பெருமை முதலாம் புலிகேசியையே சாரும். கடம்பர்களை முறியடித்த அம்மாவீரன் தனது சளுக்க சாம்ராஜ்யத்திற்க்காக இழைத்து இழைத்து கட்டிய நகரம் வாதாபி. அவனது காலத்திலும், அவனது தம்பி மங்களேசன் காலத்திலும், அவனது மகன் இரண்டாம் புலிகேசியின் காலத்திலும் ஒப்புயர்வற்ற நகரமாக விளங்கிய வாதாபி இன்று தனது பழம் பெருமையை இழந்து சற்று மங்கிய நிலையில் காட்சியளித்தது. மாமல்ல சக்ரவர்த்தியால் முழுதும் எரிக்கப்பட்ட வாதாபி இந்த 15 வருடத்தில், 12 வருடங்கள் பல்லவ அரசரின் பிரதநிதியாக இருந்த புத்தவர்மன் பெரிதாக ஒன்றும் வாதாபியை புனரமைக்க முயற்சி எடுத்து கொள்ளவில்லை. வேங்கியில் இருந்த புலிகேசியின் புதல்வர்கள் ஐவரும் தம்முள் அரியணை ஏற போட்டியிட்டதில் மிகுந்த காலம் சென்று விட்டது. ஒரு வழியாக தனது அமைச்சரின் உதவியோடும், தாய் மாமன் கங்க மன்னனான துர்விநீதனின் உதவியோடும் சளுக்க மன்னனாக முடி சூட்டிய விக்ரமாதித்தன் செய்த முதல் காரியம் வாதாபியை மீண்டும் அடைவது தான். 3 வருடங்களுக்கு முன் அவனுக்கு ஏதுவாக மூப்படைந்த புத்தவர்மன் உடல் நல குறைவினால் காஞ்சி செல்ல நேரிட்ட போது ஒரு பெரும் படையுடன் வாதாபியை மீண்டும் தனதாக்கிக் கொண்டான் விக்ரமாதித்தன். வாதாபிக்கு திரும்பிய விக்ரமாதித்தன் செய்த முதல் காரியம் மாமல்ல சக்ரவர்த்தியால் நிறுவப்பட்ட ஜயஸ்தம்பத்தை உடைத்தெறிந்தது தான். 3 வருடங்களாக நகரை புனருத்தாரணம் செய்தும் வாதாபி இன்னும் களையிழந்தே தான் காணப்பட்டது.

நகரை சுற்றிய பெரும் மதில் சுவரும், கோட்டை வாசலில் மீண்டும் நிறுவப்பட்ட கணபதியும் பழைய வாதாபியை நமக்கு மீண்டும் நினைவு படுத்துகிறது. மிக கடுமையான காவலிடையே கோட்டைக்குள் நுழைந்து வெளியேறும் மக்களுடன் நாமும் சற்று நகர் வலம் வருவோம். நகரை ஒட்டி பாயும் மலப்பிரபா நதி கரையோரத்தில் மன்னனின் ஆணைப்படி விரூபாக்ஷருக்கு கோவில் கட்ட முனைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அகஸ்திய ஏரியின் கரையில் அமைந்த பூதநாதர் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜைக்கான மணி அடித்து கொண்டிருந்தது.

sivank
26th July 2009, 09:43 PM
எங்கும் நிசப்தமான அவ்வேளையில் ஒரு பெரிய போர்வையை போர்த்தியவாறு நகரின் மத்தியில் இருக்கும் மாளிகையை நோக்கி செல்லும் கிழவனை நிறுத்திய காவலன், அவன் காட்டிய முத்திரையை கண்டு அவனை மாளிகைக்குள் போக அநுமதித்தான். அந்த அகால நேரத்திலும் ஒரு பீடத்தில் அமர்ந்து எதையோ எழுதி கொண்டிருந்த சளுக்க சாம்ராஜ்யத்தின் போர் மந்திரி தன் முன் வந்த அந்த கிழவனைப் பார்த்து, "மன்னவா, இது என்ன கோலம். தாங்கள் மீண்டும் நகர் சோதனைக்கு மெய்காவலர் கூட இல்லாமல் தனியாகவே கிளம்பி விட்டீர்களா? தாங்களிடம் இந்த விஷ பரிசோதனை வேண்டாம் என பல முறை வேண்டி கொண்டு இருக்கிறேனே. இன்றைய அரசியல் சூழ்நிலையில் எந்த ஒற்றன் எங்கு இருக்கிறான் என்று சொல்லவே முடியாத நிலையில் தாங்கள் இப்படி தனியாக போவது எனக்கு உசிதமானதாக இல்லை."

இதை கேட்டு பெரிதாக சிரித்த சளுக்கிய மன்னன் சத்யாச்சிரிய விக்ரமாதித்தன் தன் வேஷத்தை கலைத்தவாறே, "ஆச்சார்யரே, தங்கள் எண்ணம் எனக்கு தெரியாததல்ல, இருந்தும் மன்னன் என்ற கடமை எனக்குள்ளது. உளவுப்படையின் ஒற்றர்கள் கொண்டு வரும் செய்திகளை விட நான் இப்படி மாறுவேஷத்தில் நான் மக்களிடையே கலந்து இருக்கும் போது எனக்கு கிடைக்கும் செய்திகள் மிக அதிகம். தஙளுக்கு தெரியாததல்ல ஆச்சார்யரே, மக்கள் மீண்டும் ஒரு போரை தற்போது விரும்பவில்லை. த்ற்போது தான் வாதாபி நகரம் மெதுவாக தன் பொலிவை மீண்டும் பெற்று வருகிறது. ஆகையால் நமது படையின் பெரும் பகுதியை இங்கு எனது மகன் விநயாதித்தன் தலைமையில் விட்டு விட்டு, வேங்கி படைகளுடனும், கங்க மன்னன் பூவிக்ரமன் அளிக்கும் படைகளுடனும் காஞ்சியை நோக்கி நகர போகிறேன். பரமேஸ்வர பல்லவன் ஒரு மகா வீரன், அதே சமயம் ச்ற்று அவசரக்காரன். வாதாபியை அழித்த அந்த பல்லவ நரசிம்மனை பழி வாங்க ஆசைப்படுகிறேன். வடக்கிலும் நமக்கு த்ற்போது ஆபத்து இல்லை. உஜ்ஜைனி இப்போது வேறு எதையும் செய்யும் நிலையில் இல்லை. ஹர்ஷ சக்ரவர்த்தியின் மறைவு அவர்களுக்குள் தாயாதி சண்டையை மூட்டி விட்டது. இதுதான் தெற்கு நோக்கி செல்ல சரியான சமயம். பல்லவ ராஜ்யத்தில் இரன்டாவது முறையாக பஞ்சம் வந்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாக ஒற்றர்கள் மூலமாக அறிகிறேன். தாங்கள் எனது போர் மந்திரி மட்டுமல்ல, எனது குருவும் கூட. தாங்கல் தான் எனக்கு தகுந்த அறிவுரை கூற வேண்டும் " என்று வணங்கி நின்ற சளுக்க மன்னன் விக்ரமாதித்தனை ஆழ்ந்து நோக்கினார் போர் மந்திரி

sivank
5th August 2009, 10:16 PM
பழிக்கு பழி

மன்னனுக்கும் தனக்கும் சூடான பால் கொண்டு வர சொல்லிவிட்டு, மன்னனை அழைத்து கொண்டு தனது அந்தரங்க அறைக்கு சென்ற ஆச்சார்யர், " இப்படி அமர்ந்து கொள் விக்ரமா" என்றார்

ஆச்சார்யர் தன்னை விக்ரமா என்று விளித்ததிலிருந்தே, அவர் மன்னன் அமைச்சர் என்ற முறையில் உரையாட போவதில்லை என்று உணர்ந்த விக்ரமாதித்தன், தனது ஆசனத்தில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.

" விக்ரமா, உனக்கு நினைவு இருக்கிறதா, நீயும் உனது சகோதரர்களும் என்னிடம் பாடம் கற்ற நாட்களை. ஐவரில் நடுவனான உன்னை எனக்கு மிகவும் பிடித்த காரணம் உனது உயர்ந்த நோக்கம். சத்தியம் தவறாதவனாக வளர்ந்த உன்னிடம் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னனாக கூடிய அனைத்து அம்சங்களும் இருந்தன. உன் தந்தையின் காலத்திற்கு பின் உன்னை நான் ஆதரித்த காரணமே உனது சிறந்த குணங்கள் தான். இதனால் உனது சகோதரர்கள் நால்வரின் கோபத்திற்கு ஆளானது உனக்கும் தெரியும். மன்னனான பிறகு என்னை உனது அமைச்சராக சொன்ன போது மறுத்த நான் இப்போது உந்த போர் அமைச்சராக இசைந்தது, இப்போரை நல்ல படியாக நடத்தவே. உனக்கு தெரியாததல்ல, இருந்தும் சில விஷயங்களை உனக்கு நினைவூட்ட ஆசைபடுகிறேன். இன்றைக்கு சற்றே ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் உனது முப்பாட்டனார் முதலாம் புலிகேசி கடம்பர்களை முறியடித்து இந்த சாளுக்கிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். வாதாபியை தலைநகராக்கிய அம்மன்னனை தொடர்ந்த உனது பாட்டன் கிர்த்திவர்மன், தனது தந்தை ஸ்தாபித்த ராஜ்யத்தை நிலை நிறுத்த முற்பட்டான். கடம்பர்களை அடியோடு முறியடித்த பிறகு நளவாடியின் நளர்களை ஒடுக்கினான். பிறகு ரேவதித்வீபம் நோக்கி திரும்பிய அவனது கவனம், அத்துறைமுக பட்டிணத்தை
சளுக்க ராஜ்யத்தில் இணைத்த வேளையில் அவனது முடிவை கொடுத்தது. அப்போது உனது தந்தையும் அவரது சகோதரர்களும் இளம் சிறுவர்கள். இதை பயன்படுத்தி கொண்ட உனது சிறிய பாட்டன் மங்களேசன் ராஜ்யத்தை பறித்து கொண்டான். பதினான்கு ஆண்டுகள் அஜந்தா மலை சாரல்களில் மறைந்திருந்த உனது தந்தை மங்களேசனையும் அவனது மகன் சுந்தரவர்மனையும் போரில் கொன்று மன்னனாக முடி சூட்டி கொண்டான். எரேயன் என்ற தனது பெயரை விட்டு இரண்டாம் புலிகேசியாக முடிசூடிய உனது தந்தையை போல் யாருமே உனது வம்சத்தில் இதுவரை இல்லை. கடம்பர்கள், கங்கர்கள், அலுப்பர்களை வென்றவன். பிறகு கிழக்கு நோக்கி சென்றவன் கோசலர்களை வென்று கலிங்கத்தை அடக்கி வேங்கியை கைபற்றி உனது சிற்றப்பன் விஷ்ணு வர்த்தனனை அதன் மன்னனாக்கினான். உனது தந்தையின் வளர்ச்சியை கண்டு உத்தரபாரத சக்ரவர்த்தியான ஹர்ஷரே படைதலைமை எடுத்து உனது தந்தையுடன் நர்மதை கரையில் பொருதி தோற்று, உடன்படிக்கையில் நர்மதை கரையை தனது ராஜ்யத்தின் எல்லையாக ஒப்பு கொண்டார். இதை கண்ட ஹர்ஷரின் சீன விருந்தினர் வாதாபிக்கு வருகை தந்து அஜந்தா ஓவியங்களை கண்டு மகிழ்ந்தார். உனது தந்தையின் பெருமைகளை கேட்டறிந்த பாரசீக மன்னன் வாதாபிக்கு தூதுவர்களை அனுப்பி மரியாதை செய்தான். இவ்வளவு சீரும் சிறப்பும் வாய்ந்த உனது தந்தை செய்த ஒரே தவறு பல்லவர்களை பகைவர்களாக்கி கொண்டது தான். உனது தந்தையின் வீரத்தை தனது தந்திரத்தால் முறியடித்தான் மகேந்திர பல்லவன்.

காஞ்சி கோட்டையை வீழ்த்த முடியாத கோபத்தில் வெறும் கையுடன் நாடு திரும்பிய உன் தந்தை தொண்டை மண்டலத்தை சூறையாடினார். ஆடு மாடுகளையும் பெண்களையும் இழுத்து கொண்டு வந்த கும்பலில் வந்தவள் வாதாபிக்கே எமனாக மாறிய சிவகாமி. பல்லவ ராஜ்யத்தின் கண்ணாக இருந்தவளை நாற்சந்தியில் நடனமாட வைத்தார் உன் தந்தை. இதுவும் போதாதென்று வாதாபியின் நடுவில் பல்லவர்களை வென்றதற்கான ஒரு ஜய ஸ்தம்பத்தையும் நிறுவினார்.

ஆண்டுகள் சில கழிந்தன. பெரும் படையுடன் வந்தான் பல்லவ நரசிமன். இவன் தகப்பனை விட பெரிய வீரன். இவனுக்கு துணையாக இலங்கையின் மானவன்மனும் சேர்ந்து கொண்டான். அஜந்தா சென்று இருந்த மன்னர் திரும்புவதற்குள் வாதாபியை சூழ்ந்து கொண்டது பல்லவர் படை. போரில் மன்னர் வீர மரணம் அடைந்ததும், வாதாபியை தீக்கிரையாக்கி, பழைய ஜய ஸ்தம்பத்தை உடைத்து புதிய ஜய ஸ்தம்பத்தை நிறுத்தி புத்தவர்மனை தனது பிரதிநிதியாக்கி வெற்றியுடன் காஞ்சி திரும்பினான் நரசிம்மன்".

இவ்வளவு நேரம் ஆச்சார்யர் பேசுவதை கேட்டு கொண்டிருந்த விக்ரமாதித்தன், " பல்லவ படைகள் செய்த அட்டூழியங்களை கேட்டு என் ரத்தம் கொதித்தது ஆச்சார்யரே. வேங்கி நாட்டு படைகளுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தியது பின்னால் மறைந்து இருந்த பல்லவர்களின் இரண்டாம் படை. பகைவர்களின் படைகளுக்கு நடுவில் வசமாக மாட்டி கொண்டோம். மன்னர் இறந்த செய்தி கேட்டு படைகளுடன் சரணாகதி அடைந்தான் எனது சகோதரன் சந்திராதித்யன். பல்லவர் தயவில் வாழ பிடிக்காமல் கங்க நாட்டிற்கு சென்றேன். தங்கள் உதவியுடன் மீண்டும் வாதாபியை மீட்டேன். பல்லவனை பழிக்கு பழி வாங்க துடிக்கும் எனது ஆசையை நிறைவேற்ற தாங்கள் தான் உறுதுணை செய்ய வேண்டும் " என்றான்.

sivank
23rd August 2009, 11:01 PM
யவன தந்திரம்

தொலை தூரம் ஓடியதால் களைத்திருந்த தனது குதிரையை மேலும் விரட்ட மனமில்லாத பரமேஸ்வர பல்லவன் அதை மெதுவாக செலுத்தி வந்தான். தந்தை தன்னை இங்கு வர சொன்ன காரணம் புரியாமல் ஏதேதோ எண்ணங்களில் மனத்தை ஓட்டிய பல்லவ மன்னனின் கண்களில் தூரத்தில் கம்பிரமான வட வேங்கடமுடையானின் மலை தெரிந்தது. பக்கத்தில் சல சலவென ஓடும் ஸ்வர்ணமுகி நதி அந்த திருமலைநாதனின் பாதங்களையும் காளத்திநாதனின் பாதங்களையும் வருடி தனது பாவங்களை துறந்து கடலில் போய் கலந்தது. இவ்வாறே மனிதர்களும் ஆண்டவனை சரணடைந்து தன பாவங்களை கழுவி மோட்சம் என்னும் கடலில் கலப்பார்கள் போல இருக்கிறது என எண்ணியவாறே வந்தவனின் கண்களில் தென்பட்டது அந்த மண்டபம்.

மகேந்திரவர்மரால் நாடு முழுவதும் கட்டபட்ட பாரத மண்டபத்தில் ஒன்றான அந்த மண்டபம் கொஞ்சம் சிதிலமான நிலையிலேயே இருந்தது. அந்த மண்டபத்தை ஒட்டி ஸ்வர்ணமுகி நதி பாய்வதால் யாத்ரிகர்கள் அதை உண்பதற்கும் உறங்குவதற்கும் பயன்படுத்துவார்கள். மாட்டு வண்டிகளும் கட்டை வண்டிகளும் அடிக்கடி வந்து போகும் அந்த மண்டபம் இன்று இரு குதிரைகளை தவிர காலியாக இருந்தன. தனது குதிரையையும் அவற்றோடு சேர்த்து நிறுத்திய பரமேஸ்வரனின் கண்களில் ஆற்றில் நீந்தி விளையாடும் வீரசேனரும் கரியாட்டியும் தென்பட்டனர்.

அவன் வருவதை கண்டு கரையேறும் தந்தையை கண்ட பல்லவ மன்னன் திடுக்கிட்டான். கம்பீரமாக வலம் வந்த மாமல்ல சக்ரவர்த்தி இப்போது தளர்ந்த நடையுடன் வருவது அவனை வேதனை செய்தது. கண்ணில் நீருடன் அவரது கால்களில் விழுந்தவனை வாரி நெஞ்சுடன் அணைத்துக்கொண்ட மாமல்லர்( ஆம், இனி அவரை அவரது நிஜ பெயரிலேயே அழைப்போம்) அவனது முதுகினை அன்புடன் வருடினார்.

"தந்தையே, தாங்கள் செய்வது தங்களுக்கே சரியாக படுகிறதா? பெரிய சாம்ராஜ்ய சக்ரவர்த்தி இப்படி காட்டிலும் மேட்டிலும் அலைந்து அல்லல் படலாமா? அரண்மனையில் இருந்து எனக்கு வழி காட்ட வேண்டிய தாங்கள் ஒரு சாதாரண ஒற்றனை போல் அலையை வேண்டிய அவசியம் தான் என்ன. நம்மிடம் இல்லாத ஒற்றர் படையா, அல்லது நம்மிடம் வீரர்களுக்கு பஞ்சமா"? என பொரிந்து கொட்டினான் பல்லவ மன்னன் பரமேஸ்வரன்.

மகனின் கோபத்தை கண்டு நகைத்த மாமல்லர், " எல்லாம் உனது நன்மைக்குத்தான் பரமேஸ்வரா, நீ அரசேறிய நிலையை சற்று யோசித்து பார். உனது சகோதரனின் அகால மரணத்திற்கு பின் அரச பதவி ஏற்றாய். மீண்டும் ஆட்சி பொறுப்பை நான் ஏற்க வேண்டும் என்று பல திசைகளில் இருந்து குரல்கள் எழும்பின. உன்னை மறைக்கும் ஆலமரமாக இருக்க வேண்டாம் என்று எண்ணி தான் நான் காஞ்சியை விட்டு விலகி இருந்தேன். உனக்கே தெரியும் நான் கடந்த சில ஆண்டுகளாகவே மாறுவேடம் அணிந்து நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து வருவதை. இந்த கரியாட்டியின் துணையோடு நான் அறிந்த விஷயங்கள் எண்ணிலடங்கா. மேலும் பல்லவ நாட்டை சுற்றியுள்ள அபாயத்தை நீ நன்கு அறிந்திருப்பாய். கரியாட்டி வாதாபியில் இருந்து கொண்டு வந்த செய்திகளை உன்னிடம் முதலில் தனியாக பேசவே உன்னை இங்கு அழைத்தேன் ".

madhu
24th August 2009, 05:29 AM
சிவன் ஜி..

PM பாருங்க !

sivank
24th August 2009, 11:31 AM
சிவன் ஜி..

PM பாருங்க !

paathuttu badhil pottutten :D

sivank
21st May 2011, 11:34 PM
மறுபடியும் தொடங்கலாமா :thinking:

disk.box
25th July 2012, 01:43 PM
மூன்றாண்டுகளாக பல்லவன் மகளை காத்திருக்கவைக்காதீர்கள் மதிப்பிற்குரிய சிவன் அவர்களே!:???: