PDA

View Full Version : Sivasakthi



R.Latha
3rd June 2008, 09:49 AM
சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் `சிவஷக்தி'.

தன் மகள் ஷக்திக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டுமென்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவள் சிவகாமி.

தாயை உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்ற ஆசையில் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருப்பவள் ஷக்தி.

இந்த முரண்பட்ட வாழ்க்கையில் இவர்களது பிணைப்பு என்பது இருவருக்குள் இழையோடும் பாசம் மட்டுமே.

சிவகாமியின் மனதுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு ரகசியம் உண்டு. அவள் நடவடிக்கைகளில் மகளால் கூட புரிந்து கொள்ளமுடியாத மர்மங்கள் பொதிந்து கிடக்கின்றன.

இந்த மர்மத்தினால் தாயிடம் காணப்படும் மாறுதல்களைக் கண்டு சந்தேகிக்கும் ஷக்தி, அதைக் கண்டுபிடிக்கத் துடிக்கிறாள். அதற்கான வேளையும் வருகிறது. பல வருடங்களாக மனதில் கிடந்த ரகசியத்தை ஷக்தியிடம் கூறுகிறாள் சிவகாமி. அதைக் கேட்டு ஷக்தியின் கோபம் அதிகரிக்க, தாய், மகளுக்குள் அதிரடியான முரண்பாடுகள் விளைகின்றன.

இந்தக் குறுகிய கால முரண்பாடும் ஒரு கட்டத்தில் உடைகிறது. ஷக்தி தன் தாயின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறாள். அச்சமயம் சிவகாமி தன் மகள் ஷக்தியிடம் ஒரு விருப்பத்தை வேண்டுகோளாகக் கேட்கிறாள். அந்த விருப்பத்தைக் கேட்டுக் கலங்கிய ஷக்தி தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற உறுதி பூணுகிறாள். ஆனால் இதனை நிறைவேற்றுவதென்பது மிகவும் கடினமான விஷயம். அது ஒரு பெரும் போராட்டமான முயற்சி. ஷக்தி மலைத்துப் போகிறாள். ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடுகிறாள்.

தன் தாயின் இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றும் போராட்டக் களத்தில் ஏற்படும் சிக்கல்களை மீறி ஷக்தி வெற்றி பெற்றாளா என்பது தொடரின் சுவாரஸ்யமான, வித்தியாசமான விறுவிறுப்பான முழுப் பகுதி.

தொடரில் கதாநாயகி ஷக்தியாக ஷமிதா நடிக்கிறார். இவர் இயக்குனர் சேரன் இயக்கிய "பாண்டவர் பூமி'' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவரது தாய் சிவகாமியாக ரேணுகா நடிக்கிறார். இவர் டைரக்டர் கே. பாலச்சந்தரின் பல தொடர்களில் நடித்தவர். கதாநாயகனாக நிர்மல் நடிக்கிறார். இவர் பல திரைப்படங்களில் நடித்தவர்.

மற்றும் பூவிலங்கு மோகன், `மெட்டி ஒலி' உமா மகேஷ்வரி, விஜய் கிருஷ்ணராஜ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், பயில்வான் ரங்கநாதன், சுவாமிநாதன், அசோக், சாந்தி ஆனந்த், நெல்லை சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்தொடருக்கு பக்ருதீன் திரைக்கதை எழுத, பா. ராகவன் வசனமெழுதுகிறார். நாட்டாமை, முத்து உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் இசை: டி. இமான், பாடல்: பா. விஜய். கதை எழுதி இருப்பவர் சுந்தரமூர்த்தி. இவர் மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருமுருகனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் இயக்கும் முதல் மெகாத் தொடரே `சிவஷக்தி'.

தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார். சன் டிவியில் இவரது `ஹோம் மீடியா' நிறுவனத்தின் 8-வது தொடர் இது. மருமகள், ஜனனி, குங்குமம், மனைவி, லட்சுமி போன்ற மெகா தொடர்கள் இவரது தயாரிப்பில் பிரபலமானவை.



Sivasakthi - Title song (http://raretfm.mayyam.com/stream/tvserial/Sivasakthi.rm)

R.Latha
16th June 2008, 08:05 AM
சின்னத்திரையில் இப்போதெல்லாம் ரிச்னெஸ் விஷயங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஒரு அறை அதில் கதாபாத்திரங்கள் பேசுவது என்று ஆரம்பித்த சீரியல்கள் இப்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.

காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் கதை முழுக்க சிங்கப்பூரில் நடக்கிற மாதிரி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கல்லூரிக்காலம் தொடரிலோ பாடல்காட்சியை மட்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போட்டு எடுத்திருந்தார்கள். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கெனவே ஏவி.எம் ஸ்டூடியோவில் அருவி பின்னணியில் ஒரு நிரந்தர செட் போட்டு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

இந்த ரிச்னெஸ் விஷயம் இப்போது பிரமிப்பின் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. சன் டிவியில் வரவிருக்கும் சிவசக்தி தொடருக்கென போடப்பட்டிருக்கும் பிரமாண்ட செட்டுக்கள் பற்றித்தான் இப்போது சின்னத்திரை, பெரியதிரை வட்டாரங்களில் பேச்சு. சென்னை நந்தம்பாக்கம் பர்மா காலனியில் கிராமப்புற பின்னணியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் இப்படி எத்தனைவகை கிராமிய நடனங்கள் உண்டோ அத்தனையையும் ஒன்றாகக் கூட்டிச்சேர்த்து தொடருக்காக பாடல்காட்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். `சந்தோஷம்தானே வாழ்க்கையில் எல்லாரும் தேடறது', என்று தொடங்கும் இந்தப் பாடல்காட்சியில் கிராமிய நடனக்கலைஞர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நடனக்கலைஞர்களும் இணைந்து ஆடினார்கள்.

இந்தக்காட்சி படமாக்கப்பட்ட பகுதி முழுக்க கிராமத்து மக்கள் வாழும் பகுதி என்பதால், படப்பிடிப்பை பார்க்க ஒட்டு மொத்தக் கிராமமே திரண்டு வந்திருந்தது.

"டிவி தொடருக்கு இப்படியொரு பிரமாண்டம் அதுவும் பாடல் காட்சிக்கே இப்படி என்பது சீரியலுக்கு சரிவருமா?'' சிவசக்தி தொடரின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரிடம் இந்த கேள்வியை வைத்தோம். அவர் சொன்னார்: "இப்போது ரசிகர்களிடம் புதுமையை விரும்பும் மனநிலை ஏற்பட்டு இருக்கிறது. நல்ல கதையாக இருந்தாலும் அதிலும் அவர்கள் ரசனைக்கேற்ற விஷயங்கள் இருக்கிறதா என்பதையும் கவனிக்கிறார்கள். இதனால் தொடர்களிலும் ரிச்னெஸ் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.''

gta129
10th July 2008, 11:47 PM
Is anybody watching this serial? Is it any good?
I rent serials on DVD, so I don't want to waste the money if the serial is not interesting. So is it worth renting it?

gta129
22nd July 2008, 09:14 AM
Who is the guy dancing in the opening theme songs? Is he Sivagami's son?

Dhesh
18th August 2008, 05:38 PM
Can someone send me the sivasakthi tv serial title song because when I clicked on that link it doesn't work for me.

aanaa
18th August 2008, 11:16 PM
does anyone has the same issue?

I tried today
works for me

aanaa
1st November 2008, 07:51 PM
சிவசக்தி - 100



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்பப் பின்னணியில் அமைந்த சிவசக்தி தொடர், நூறு எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.

ஐந்து குழந்தைகளை பெற்ற சிவகாமி அற்புதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் `விதி' விளையாடுகிறது. சிவகாமியின் கணவர் இறந்து விட, ஐந்து குழந்தைகளுடன் தெருவுக்கு வருகிறாள் சிவகாமி! ஒரு கட்டத்தில் இதய நோயால் சிவகாமி இறந்து விடுவாளோ என்ற நிலையில், தன் ஐந்து குழந்தைகளும் அனாதைகளாகி விடக்கூடாது என்ற பயத்தில், அவர்களை அனாதை விடுதி மூலம் தத்துக் கொடுத்து விடுகிறாள்.

ஆனால் எதிர்பாராமல் சிவகாமி பிழைத்து விட, ஒரு தம்பதி மட்டும் சிவகாமியின் மகள் சக்தியை திரும்ப கொடுத்து விடுகிறார்கள்.

சக்தி வளர்ந்து விடுகிறாள். தன் வாழ்வில் லட்சியமே, மற்ற நாலு உடன்பிறப்புகளையும் தேடிக் கண்டுபிடித்து அம்மாவிடம் ஒப்படைப்பதுதான் என்றெண்ணி களத்தில் இறங்குகிறாள். அந்த நாலு பேரும் பிரிந்து பல வருடம் கழித்து சேரும்போது எதிரும் புதிருமாக நிற்கிறார்கள். உடன் பிறப்புகளுக்குள் உருவாகும் ஆவேச மோதல்கள், பாசப்போராட்டம் தொடரின் காட்சிகளாகத் தொடருகின்றன.

தயாரிப்பு: சுஜாதா விஜய்குமார். இயக்கம்: ஆர்.கணேஷ். திரைக்கதை: தேவிபாலா.

நட்சத்திரங்கள்: ஷமிதா, ரேணுகா, சாக்ஷி சிவா, ஸ்ரீ, மஞ்சரி, பூவிலங்கு மோகன், ஸ்ரீலேகா.