PDA

View Full Version : Actors And Escalating Salaries



R.Latha
25th May 2008, 10:55 AM
நடிகர்கள் சம்பள உயர்வு
தமிழ் பட உலகம் அதிர்ச்சி


பிரமிட் சாய்மீரா, மோசர்பேர், ஐங்கரன், அட்லப்ஸ், இன்சைட் மீடியா ஆகிய `கார்பரேட்' நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிக்கவும், வினியோகிக்கவும் முன்வந்துள்ளன. இதேபோல் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் பட தயாரிப்பில் இறங்கியுள்ளன. இந்த புதிய சூழ்நிலை, தமிழ் பட உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

பெரும்பாலான கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்கள். விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற பெரிய கதாநாயகர்கள் ஏற்கனவே கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பல கதாநாயகர்கள், தங்கள் சம்பளத்தை கோடிகள் ஆக்கிவிட்டார்கள்.

`திருவிளையாடல் ஆரம்பம்,' `யாரடி நீ மோகினி' ஆகிய 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி இருக்கிறார். (இவர் முன்பு இரண்டரை கோடி வாங்கிக்கொண்டிருந்தார்.)

சிலம்பரசன் சம்பளம் இரண்டரை கோடி ரூபாயும், சென்னை நகர வினியோக உரிமையும்...

`கற்றது தமிழ்' படத்துக்கு ரூ.55 லட்சம் சம்பளம் வாங்கிய ஜீவா, இப்போது தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக்கி விட்டார்.

ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜெயம் ரவி, தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

பரத், `நேபாளி' படத்துக்கு ரூ.55 லட்சம் வாங்கியிருந்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் `சேவல்' படத்துக்கு, ரூ.75 லட்சம் வாங்கியிருக்கிறார். ஹரி டைரக்டு செய்கிற இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பில், அடுத்த படத்துக்கு தன் சம்பளத்தை ஒன்றே கால் கோடியாக்கி விட்டார்.

ரூ.40 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த சுந்தர் சி, தனது படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெறுகின்றன என்பதை காரணம் காட்டி, சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தி விட்டார்.

ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நரேன், `அஞ்சாதே' படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.

ஜீவன், தனது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதை காரணம் காட்டி, ரூ.75 லட்சமாக இருந்த சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

டைரக்டர் சேரன், `பிரிவோம் சந்திப்போம்' படத்தில் நடித்ததற்காக, ரூ.75 லட்சம் சம்பளம் பெற்றார். இப்போது அவருடைய சம்பளம் (நடிப்பதற்கு மட்டும்), ஒன்றரை கோடி ரூபாய்.

கர்நாடகாவை சேர்ந்த வினய் நடித்து, `உன்னாலே உன்னாலே' என்ற ஒரே ஒரு படம்தான் திரைக்கு வந்து இருக்கிறது. அந்த படத்தில் இவருடைய சம்பளம், ரூ.3 லட்சம். `ஜெயம்கொண்டான்' என்ற படத்துக்காக தனது சம்பளத்தை ரூ.9 லட்சமாக உயர்த்தினார். இப்போது அவர் அடுத்த படத்துக்காக கேட்கிற சம்பளம் ரூ.75 லட்சம்!

இதேபோல் மலையாள கதாநாயகனான பிருதிவிராஜ், `மொழி' படத்துக்காக வாங்கிய சம்பளம், ரூ.5 லட்சம். இப்போது அவர் ரூ.50 லட்சம் கேட்கிறார்!

நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தியதால், நடிகைகளும் தங்கள் சம்பளத்தை கணிசமாக உயர்த்த தீர்மானித்து இருக்கிறார்கள். இதனால் தமிழ் பட உலகம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது.

நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவதால், பெரும்பாலான டைரக்டர்கள் நடிகர்களாக மாறி வருகிறார்கள்!

VENKIRAJA
25th May 2008, 11:59 AM
dEi ithellAm remba Over dA.....
vAyila asinga asingamaa varrathu...venAmnu pArkuren...ungalukkellAm manassAtchinne onnu kedayAtha?athuvum Sundar.C ellam 1 kOdi...dEi dEi...sathiyamA solrEn,nInga sApidura sOru serimAname aagathu...!

jumbo
25th May 2008, 12:47 PM
dEi ithellAm remba Over dA.....
vAyila asinga asingamaa varrathu...venAmnu pArkuren...ungalukkellAm manassAtchinne onnu kedayAtha?athuvum Sundar.C ellam 1 kOdi...dEi dEi...sathiyamA solrEn,nInga sApidura sOru serimAname aagathu...!

:lol: nenachu patha athirichithaan. athan ellorume nadika kilmabittanga pola irukku. vazha valamudan :P

Devar Magan
25th May 2008, 04:06 PM
why are the producers giving such salaries for these actors??

cinemalover
3rd June 2008, 03:06 PM
because now adays TV channels buying movies mindlessly for crores to increase their TRP ratings.

the same happened to bollywood films 5 years ago

even at the puja time the deal is worked out.