PDA

View Full Version : SUN TV yin - ThiruviLaiyaadaL



R.Latha
5th May 2008, 08:03 AM
for title song (http://raretfm.mayyam.com/stream//tvserial/Thiruvilaiyadal.rm)

சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புராணத் தொடர் திருவிளையாடல்.

சிவபெருமான், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய திருவிளையாடல்கள் திருவிளையாடற்புராணம், சிவபுராணம், சிவமகாபுராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளின் தொகுப்பே இந்த திருவிளையாடல். தொடரில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராபிக்ஸ் குழு பணியாற்றி வருகிறது.

சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், அவ்வையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரித்விராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்க கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

இசை:கங்கை அமரன், ஒளிப்பதிவு:சரவணபாண்டியன், எபிசோட் டைரக்டர்:செல்வபாண்டியன், திரைக்கதை வசனம்: ஸ்ரீமான் கவிச்செல்வர். இயக்கம்: ராகேஷ், சின்ஹா.

ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது.

################################
WHO ACT AS VINAYAGAR?

Shakthiprabha.
21st May 2008, 01:15 PM
திங்கள் முதல் வெள்ளி வரை
இரவு 8.00 மணியிலிருந்து 8.30 வரை இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது.

காச்-முச் என்று கத்தும் மெகா சீரியல்களுக்கிடையே
வம்பு, சண்டை, வெட்டு, குத்து, பழி, மாமியார்-மருமகள் சண்டை என்று பார்த்து சலித்து விட்ட மக்களிடையே, அருமையாய் ஒரு பக்தித் தொடர் "ராடன் க்ரியேஷன்ஸ்' சன் டிவி மூலம் வழங்குகிறது.

தூய தமிழில் தமிழ் நடிகர்கள் கொண்டு ஒளிபரப்பாகும் இத்தொடர் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது.

இது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இதோ இத்திரி.

Shakthiprabha.
21st May 2008, 01:19 PM
இரு தினங்கள் முன் ஒளிபரப்பான பகுதியில்,
முருகனின் அம்சங்களாக நவபாலகர்களை பற்றி கூறியிருந்தார்கள்.

மக்களுக்கு ரசிக்கும் வகையில் தொடரை வழங்க வேண்டும் என்ற முனைப்பு பாராட்டத் தக்கது, எனினும், இதற்காக, இக்கால வழக்கில் உள்ள சொற்களை, குறிப்பாக இளைஞர்களை கவர்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் சில வழக்குச் சொற்களை "நவபாலகர்கள்' பயன்படுத்தியது, சற்று எரிச்சலை உண்டு பண்ணியது.

நொடிக்கு நூறு தரம், அந்த பாலகர்களில் ஒருவர் முருகன் தன் சொல்லாட்சியில் வென்றாலோ, அல்லது முருகனின் கூற்று சரியாகி விட்டாலோ

"அப்படி போடு!" / "அப்படி போடுங்கள்"

என்று கூறிக்கொண்டிருந்தனர்.

அது ரசிக்கும்படி இல்லை!

மேலும், நெடுந்தொடர் என்பதால், சொற்களும், வசனங்களும் நிதானமாக வருகிறது. அது பாதகமில்லை. நமக்கு சில நாட்களில் பழகி விடும் :)

Shakthiprabha.
21st May 2008, 01:22 PM
அவ்வை என்றாலே "கே.பி.சுந்தராம்பாள்" நினைவு தான் தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு வரும்.

நம் ஆச்சி இதை சவாலாகவே எடுத்துக்கொண்டு விட்டார் போலும்.

வந்த இரண்டே நாட்களில் நம் மனதில் அவ்வை என்றால் மனோரமா ஆச்சி இடம் பெறும் அளவு இவர் நடிப்பும், தமிழும், பேச்சும், ஒப்பனையும் அமைந்திருக்கிறது.

கே.பி.சுந்தராம்பாள் இடத்தை இரண்டே நாட்களில் கொள்ளை கொண்டு விட்ட மனோரமாவிற்கு இது மாபெறும் வெற்றி!

:clap:

Shakthiprabha.
21st May 2008, 01:23 PM
சிவனாக வரும் ஸ்ரீதர் நன்றாகத் தான் செய்கிறார். எனினும், சிவபெருமான் என்றாலே நடிகர் திலகம் தான் நம்மில் பலருக்கு.

துணிந்து இப்பாத்திரம் ஏற்றுச் செய்யும் ஸ்ரீதருக்கு வாழ்த்துக்கள் :clap:

aanaa
21st May 2008, 05:48 PM
முதலில் திருவிளையாடல் என்றாலே சிவாஜின் படம் தான் ஞாபகத்திற்கு வந்துவிடுகின்றது.

எதையுமே புதிதாகப் பார்த்தால் பிரச்சனையில்லை. ஆனால் எப்படித்தான் சொன்னாலும் இந்தப் பாழாய்ப்போன மனம் ஒப்பிட்டுப் பார்க்கவே துடிக்கின்றது.
பழக்க வேண்டும்.

தொடரட்டும் நல்லதொரு விளையாடல்

aanaa
21st May 2008, 06:17 PM
மனோரமா, ராதாரவி, பூவிலங்கு மோகன் , ஸ்ரீதர் தங்களது பாத்திரங்களை நன்றாகவே செய்கின்றனர்.
:clap:

Shakthiprabha.
21st May 2008, 07:38 PM
நன்றி லதா!
அருமையான தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள். மேலும் இத்தொடரின் துவக்கப் பாடல் மிக அருமையாய் உள்ளது!

Shakthiprabha.
21st May 2008, 10:35 PM
இன்றைய தொடரில் சிற்றரசன் ஒருவன், தனக்கு மகன் அதாவது அந்நாட்டு இளவரசன் பிறந்த செய்தியை முரசுகொட்டி அறிவித்து, மக்களையும் தன் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொது அழைப்பு விடுக்கிறார்.

அரண்மணையில் பொருள் கொண்டுவருவோர்க்கு பெருமதிப்பும் மற்றோர்க்கு முகச்சுளிப்பும் பரிசளிக்கிறார்கள்.

அழகாய், அர்த்தமாய், ஆழமாய் கவிதை ஒன்றை புனைந்து சென்ற புலவர் ஒருவர்க்கு கிட்டியதென்னவோ ஏளனமும் அவமரியாதையும்.

வீரக்கலைளை கற்பிக்கும் மற்றொருவனுக்கும் பெருத்த அவமானத்தையே பரிசளிக்கின்றனர்.

இது கண்டு தன் நாடகம் ஒன்றைத் துவக்குகிறார் நாரதர்.

என்னடா இது "ஸரஸ்வதி சபதம்" படம் பார்ப்பது போல் உள்ளதே என்று நாம் நினைக்கும் முன்பே, அதையே தான் அடுத்த சில நாட்களுக்கு திருவிளையாடற் கதையாக வழங்கவிருக்கிறார்கள் என்று புரிந்துவிடுகிறது.

நம் எண்ணத்தை போலவே பிரம்மலோகத்திற்குச் சென்று, கல்வி பெரிதா செல்வம் பெரிதா என்ற சர்ச்சையை துவக்குகிறார் நாரதர். பிரம்மதேவனும் இதை மேலும் தூண்டிவிடவே கோபமுற்ற சரஸ்வதி 'அறிவே உலகில் சாலச் சிறந்தது' என்று உணரத்தப் புறப்படுகிறார்.

அடுத்து ஸ்ரீவைகுந்தம் சென்று ஆனந்தமாய் வீற்றிருக்கும் லக்ஷ்மியை கோபமுறச்செய்ததும், 'உலகில் செல்வமே சிறந்தது' என்ற கூற்றை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து புறப்படுகிறார் லக்ஷ்மிதேவி.

"அடுத்து என்ன திருக்கைலாயம் தானே!"
என்று விஷமமாக முடிந்தது இன்றைய பகுதி.

பிரம்மதேவன், "உலகில் சாலச் சிறந்தது செல்வமே" என்று சொன்னவுடன்,

"ஆஹா இதைத் தான் நான்" என்று புன்னகையுடன் ஆரம்பித்து

"நாரதா!" என்று ஸரஸ்வதி சினந்ததும்

"எதிர்பார்க்கவில்லை" என்று சொல்ல வந்தேன் தேவி என்று நாரதர் சொல்வது ரசிக்கும்படி இருந்தது!

செல்வங்கள் எல்லாமே அழிந்துவிடக்கூடியவை தான், கல்வி செல்வத்தைத் தவிர, என்று ஞானநிலையில் நம்மில் பலர் உளமாற நினைத்தாலும், உண்மையில், இப்பூவுலகில் நாம் வாழும் வரை, ஆசை, பிடிப்பு, அர்த்தம் எல்லாம் இருக்கும் வரை, செல்வமும் வீரமும் துணை புரிந்தால் தான் உலகில் பிழைத்திருக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஜனரஞ்சகமாக ரசிக்கும்படி பல உரையாடல்கள், இருப்பதால், இத்தொடரை 'சமயம் சார்ந்த' தொடராகத் தான் பார்க்க முடிகிறது. ஞானதாகம் கொண்டு அலையும் சிலருக்கு ஆங்காங்கே சில ஞான முத்துக்கள் சிதறக்கூடும். அவற்றை கவனமாய் சேகரித்துக் கொள்வது அவர்கள் சாமர்த்தியம்.

புலவரின் மனைவியாக நடித்தவர் இன்னும் சற்று பாத்திரத்தில் ஊறியிருக்கலாம். அவர் நடிப்பு சோபிக்கவில்லை. அரசன் அரசி இருவரும் வெகு சுமார். புலவராக நடித்தவர் பரவாயில்லை, நன்றாகவே செய்திருந்தார்.

Shakthiprabha.
21st May 2008, 10:42 PM
ஒரு அன்பு வேண்டுகோள்

லதா, அல்லது ஆனா, அல்லது வேறு யாராவது

இத்தொடரில் வரும முக்கிய நடிகர்கள் பெயர்களை சேகரித்து முதல் பதிவில் இணைத்து விடலாமே :idea:

Shakthiprabha.
21st May 2008, 10:47 PM
ஒப்பனையாளரின் பங்கு பாராட்டத்தக்கதாய் உள்ளது.

சிவன், பார்வதி என்ற தெய்வக் கதாபாத்திரங்கள் நாம் பார்த்துப் பழகியவை(அவர்கள் க்ரீடங்கள், குறிப்பாக பார்வதியின் க்ரீடம், சிவனின் பாம்பு, முதலியவை ரொம்பவே ஜொலிக்கிறது! இதைக் கொஞ்சம் கவனம் கொண்டு சற்றே நம் கண்கள் மேல் கருணை காட்டலாம்!) . இவற்றை விட, குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் அக்காலத்து கதா பாத்திரங்களாய் வளைய வரும் சாமான்யர்கள் புலவர், அவர் மனைவி, வீரர், இவர்கள் ஒப்பனை மிக அழகாய், இயல்பாய், யதார்த்தமாய் இருந்தது !

பாராட்டுக்கள் :clap:

aanaa
22nd May 2008, 05:30 PM
ஸ்ரீதர் - சிவன்
யமுனா - பார்வதி

ராதாரவி - நாரதர்
மனோரமா - ஒளவையார்

பூவிலங்கு மோகன் - பிரம்மா
பாவனா - லட்சுமி
ப்ரவல்லிகா -
மாஸ்டர் மோகன்ராஜ் - பிள்ளையார்
பேபி பூஜா - முருகன்

பீலிசிவம் - வியாழபகவான்
பிருதிவிராஜ் - இந்திரன்
யுவராணி - இந்திராணி


சுதர்சன் - துவஸ்டர்
ஐசக் - விஸ்வரூபன்

ராம்கி - வித்யாதரன்
கிருத்திகா - கலையரசி
கனிகா - அம்பிகை (அரசி)
பிர்லாபோஸ் - மாமல்லன்
நளினிகாந்த் - வசந்தபுர அமைச்சர்
செளமியன் - பார்த்திபன்
பால்குணசேகரன் -
சுப்பையா -

சுந்தர் OAK - தட்சன்
சுமங்கலி - வேதவல்லி
சுஜிதா ஸ்ரீ - தாட்சாயினி
பிரியங்கா - ரேவதி
வாசுவி - அஸ்வினி
கோல்டன் சுரேஷ் - சந்திரன்
பாபூஸ் - வீரபத்திரன்

மனோகர் - தனபதி
மல்லிகா - குணவதி
யோகினி - சுசீலை
விக்கி - பூபதி
சாந்தி வில்லியம்ஸ் - பொன்னம்மா
அமலா - அன்னம்
சாட்சி சிவா - மனோகர்
சாந்தி ஆனந்த்ராஜ் - மரகதம்


ரமணி
ஸ்ருதி

===========
அனுமான் வால்போல் ......

saradhaa_sn
22nd May 2008, 05:52 PM
சக்திப்ரபா...

'திருவிளையாடல்' தொடர் பற்றிய உங்களின் தொடர் பதிவு மிக அருமையாக உள்ளது. வர்ணனைகள் மிக இயல்பாக உள்ளன. குறைகளையும் தவறாமல் சுட்டிக்காட்டுகிறீர்கள்.

தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

aanaa
22nd May 2008, 06:17 PM
ஒப்பனையாளரின் பங்கு பாராட்டத்தக்கதாய் உள்ளது.
பாராட்டுக்கள் :clap:
பாராட்டுக்கள்

:clap: :clap:

Shakthiprabha.
22nd May 2008, 08:45 PM
பெயர்களை நினைவுகூர்ந்ததற்கு நன்றி 'ஆனா'.

'பேபி பூஜா' என்பவர் தான் முருகனாக நடிக்கிறார் என்று நினைக்கிறேன்.

சாரதா,

:bow:

Shakthiprabha.
22nd May 2008, 10:46 PM
22.5.08
______

கைலாயத்தில் கலகலப்பாக கலகம் துவங்குகிறது. உமாமஹேஸ்வரியாக
யமுனாவின் கோபம், அலட்சியப் பார்வை, சிரிப்பு எல்லாமே நன்றாக
அமைந்திருந்தது. தன் பங்குக்கு தானும் கோழை ஒருவனை வீரனாக்கி
செல்வம் படைத்த அரசியையும், நாவன்மை படைத்த கலைமகள் அருள்
பெற்றவனையும், வீரனின் அடிமை ஆக்குகிறேன் என்று சபதமிட்டுச்
செல்கிறார்.

நாரதர் "ஆம் தேவி" என்று இழுத்து, 'சரஸ்வதி சபத' சிவாஜியை
நினைவூட்டுகிறார். சிவாஜியை நினைவூட்டாமல் நடிப்பது கடினம் என்றாலும்,
இம்மி பிசகாமல் அதே வசனத்தை இயக்காமல் இருந்திருக்கலாம். (நடித்த
திரு.ராதாரவி அவர்களும் நடிகர் திலகத்தை போல் செய்யாமல்
இருந்திருக்கலாம்) . எல்லோருக்கும் நடிகர் திலகம் படம்
நெஞ்சத்தில் நிறைந்து இருக்கிறது என்பதால் நம்மை மகிழ வைக்க இப்படி
செய்கிறார்கள் போலும்!

அடுத்து நமக்குத் தெரிந்த சரஸ்வதி சபதக் கதையில் வித்யாபதி என்றவன்
ஊமை, அவனை பேசவைத்து கலைமகளின் ஆசிப் பெறச் செய்கிறார்
சரஸ்வதி. இங்கே கதைப் படி, வித்யாதரன் என்ற இளைஞன் ஊமை அல்ல.
மூடன். அதாவது பகுத்தறிவு குறைவாக (மிகக் குறைவாக) பெற்றவன்.
(வித்யதாராக நடனக் கலைஞரும் நடிகருமான ராம்ஜி நடிக்கிறார். )

'சரஸ்வதி சபத'க் கதையும், 'மஹா கவி-காளிதாசர்' கதையும் ஒன்றாய்
அமைந்தது போல் இருந்தது.

வித்யாதரன், மூடனாய் வளர்கிறான். உலையில் அரிசிபோட்டு சோறு வடித்து வை என்று அவன் தாய் கட்டளை இட, இவனோ, உலையில் அரிசி பொங்குவதற்குள் இன்னும் நேரம் ஆகிவிடும், என்று அரிசியை நேராக அடுப்பில் போட்டுவிடுகிறான். தணல் எரியாத குறைக்கு அவன் தந்தை எழுதிய ஓலைச் சுவடியையும்
அடிப்பில் போட்டு எரியவிடுகிறான். அவன் தாய் மூடனைப் பெற்றதற்கு கண்ணீர் வடிக்கிறாள்.

இது இப்படி இருக்க, இன்னொரு செல்வந்தன் வீட்டில் செல்லப் பெண்ணாய்
அறிவிற் சிறந்த 'கலையரசி' என்று ஒரு பெண் வளர்ந்து வருகிறாள்.
தனக்கு வரப் போகும் மணாளன் அறிவில் சிறந்த சான்றோனாக இருக்கவேண்டும்
என்ற விருப்பத்தின் பேரில், தன்னை பார்க்க வரும் வரன்களை கேள்விக்
கணைகள் கொண்டு எதிர்கொள்ள நினைக்கிறாள். இவளின் தைரியம் கண்டு,
அக்காலப்(இக்காலமும் / எக்காலமும் ?!?!) பெண்ணுக்கே உரிய பணிவும்
பண்பும் இல்லாதவளாக அவளை வளர்த்து வரும் சித்தியே
குறைகூறி முத்திரைக் குத்திவிடுகிறாள்

( மேலும் என்ன நடைக்கிறது என்பது நாளை பார்ப்போம் )


ஒரு சிறு வேண்டுகோள்: இயக்குனர் கவனிக்க வேண்டிய ஒன்று.
இறைப் பாத்திரங்கள் தூயத்தமிழில் தான் பேசவேண்டும் என்பதால்,
அவர்களின் தமிழ், நடைமுறைத் தமிழுக்கு வழுக்குவதில்லை. ஆனால்,
சாதாரண மக்கள் கதாபாத்திரம் ஏற்போரும், புராணத் தொடர் என்பதால்
தூயத் தமிழில் பேசுவதை வழக்காக்கி, தொடர் முழுதும் எல்லாப் பாத்திரங்களும்
தூயத் தமிழ் பேசச் செய்திருக்கிறீர்கள். இதில் நடுநடுவே இப்படிப்பட்ட
பொதுமக்கள் கதாபாத்திரங்கள் வழக்கு தமிழுக்கு சறுக்கிவிடுகின்றனர்.
இதை கவனம் கொள்ளவேண்டியது அவசியம்.

அஃதாவது, ஒன்று, நடைமுறைத் தமிழ் பேசவேண்டும். இல்லையென்றால்,
புராணத் தொடர் என்பதால் எல்லோருமே தூயத்தமிழ் பேசவேண்டும்.
இப்படியும் அப்படியுமாய் மாற்றி மாற்றி பேசுவது மனதில் பிசிறுதட்டுகிறது.
இதை கவனம் கொள்வது நல்லது.

aanaa
22nd May 2008, 11:54 PM
இன்னும் 7 மணியத்தாலங்கள் இருக்கின்றன எமக்கு.

நன்றி

Shakthiprabha.
23rd May 2008, 03:28 PM
ஆனா,

இனி ஏதாவது எழுதுவதாய் இருந்தால், தொடர் ஒளிபரப்பிற்கு பிறகு, இந்திய நேரப்படி ஒரு நாள் கழித்து பதிவு செய்கிறேன்.

aanaa
23rd May 2008, 05:23 PM
சக்தி பிரபா!!

அப்படிக் கூறவரவில்லை.
உங்களது விமர்சனங்களை உடனுக்குடன் தரவும்

ஆறப் போட்டால் சுவையும் குன்றிவிடும்
சிலவேளை சொல்ல வந்ததையும் மறந்துவிடுவோம்.

உங்கள் விமர்சனம்தான்
அதை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகின்றது.
ஆகவே உடன் தொடருங்கள்.


அதுவும் இன்று கட்டாயம் தேவை
இன்று பார்க்கச் சந்தர்ப்பம் இல்லை

saradhaa_sn
23rd May 2008, 05:48 PM
சக்திப்ரபா,

ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள். கதையை மட்டும் சொல்லாமல், கூடவே உங்க கமெண்ட்டுகளையும் இணைத்திருப்பது சுவையூட்டுகிறது. ராதரவியின் உச்சரிப்பு, நடிகர்திலகத்தின் பாதிப்பு, இயக்குனருக்கு வேண்டுகோள் என கலக்குகிறீர்கள்.

'தொடர்' தொடரும்வரை உங்கள் எழுத்தும் தொடரட்டும்.

Shakthiprabha.
23rd May 2008, 06:16 PM
நன்றி நன்றி நன்றி சாரதா, ஆனா

:bow:

ஆனா,

வெளிநாட்டில் வசித்து வரும் உங்களுக்கெல்லாம் சுவை குன்றிவிடுமோ என்று அஞ்சித்தான் ஒருநாள் கழித்துப் பதிவைப் பதிக்கலாம் என்று நினைத்தேன்.

:)

நன்றி

Shakthiprabha.
24th May 2008, 12:40 PM
நண்பர்களே,

நேற்றைய பதிவில், "கலைச்செல்வி"
என்று ஒரு பெண்ணின் பாத்திரப் பெயரைப் பதித்திருந்தேன். அது தவறு. அவள் பெயர் "கலையரசி". தவறுக்கு மன்னிக்கவும்.
பதிவிலும் திருத்தம் செய்துவிட்டேன்.

Shakthiprabha.
24th May 2008, 01:21 PM
23.5.08
______

இன்றைக்கு சிவன், பார்வதி, சமேதர்கள் எல்லோருக்கும் ஓய்வு.
நடக்கும் நிகழ்ச்சி அனைத்தும் கலையரசி வீட்டிலும், வித்யாதரன்
வீட்டிலும் நடந்து முடிந்து விடுகிறது.

கலையரசி அவளை பெண்பார்க்க வந்திருப்பவரிடம், கேள்விகள்
கேட்க விழைகிறாள். பெண்பார்க்க வந்திருப்போர்கள் வெகுண்டு
வரனை ஒதுக்கிவிட்டுப் புறப்படும் நேரம், அந்த ஆண்மகன்
தான் கோழையல்ல என்று நிரூபித்து, அவள் கேள்விகளை சந்திக்கத் தயார் ஆகிறான்.

கலையரசியும் மூன்று கேள்விகளைத் தொடுக்கிறாள். மூன்றும்
விடுகதை போல் மூக்கைத் தலைவழி சுற்றித் தொடும் கேள்விகள்.
கேள்விகளைச் சரியாய் புரிந்து கொள்ளாமல், அவளின் ஒழுக்கத்தின்
பேரில் களங்கம் கற்பிக்கின்றனர். பின்னர் அவளே அந்த கேள்விகளுக்கு
விடையளிக்க, அவமானம் தாங்காமல் சென்றுவிடுகின்றனர். இவளின்
அறிவை அவள் தந்தை மட்டுமே பாராட்டிப் பெருமைக் கொள்கிறார்.

முதலாவதாக "எந்தத் திருமணத்தில் ஒரு பெண் திருப்தி அடைகிறாள்?"
என்று கேட்கிறாள். அதற்கு விடையாக அவள் தருவது "தனக்கு
பிடித்தமான அறிவில், ஒழுக்கத்தில், சிறந்த ஒரு நல்லவனை மணக்கும்
போது ஒருத்தி திருப்தி அடைகிறாள்" என்று கூறுகிறாள்

அடுத்ததாக அவள் கேட்கும் கேள்வி, "எத்தனையாவது திருமணத்தில்
அவள் மிகத் திருப்தி அடைகிறாள்" என்பது. இதற்கு ஆன்றோர்களோ
சான்றோர்களோ தேவையில்லை. தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும்
நமக்கே விடை க்ஷண நேரத்தில் தெரிந்துவிடுகிறது. இருந்தாலும், சுற்றி
இருப்போர்கள் விழிக்கிறார்கள்! இவள் விடை பின்வருமாறு அளிக்கிறாள்
"தன் பிள்ளைகளளின் திருமணத்தில் அவள் மிகத் திருப்தி அடைகிறாள்.
பேரன்களும் பேத்திகளும் சூழ அவளுக்கு நடக்கும் அறுபதாவது திருமணத்தில்
அவள் மிக மிக திருப்தி அடைகிறாள்"

"எத்தனை ஆடவர் ஒரு பெண்ணைத் தொடலாம்" என்பது அடுத்த கேள்வி.
"பெற்றவனும், காது குத்தும் போது (அதாவது அவள் சின்னஞ்சிறு சிசுவாக
இருப்பதிலிருந்து) தட்டானும், கால் கொலுசு /வளையல்கள் அணிவிப்பவர்களும்,
ஆடைகள் தயாரிப்பவனும், மணாளனும், மகனும், பேரனும், இறுதியாக அவளை
சிதையில் இடுபவனும் தொடலாம்" என்கிறாள்

அடுத்து சொல்விளையாட்டு!

"அப்பாவை ஒருத்தியும் அக்காளை ஒருவனும் மணந்தால் தவறா?"

"அப்- பாவை ஒருத்தியும் அக் - காளை ஒருவனும் மணந்தால் என்ன தவறு"

இப்படி வினாக்களை அடுக்கியதோடல்லாமல், அவள் சித்தி, மற்ற பெரியவர்களை
மரியாதையுடன் நடத்தத் தவறுகிறாள். ஆக, அவளுக்கு அறிவின் தாகம்
இருப்பது தவறல்ல, அதனால் கூடவே சேர்ந்து அகந்தையும், அடக்கமின்மையும்
சேர்ந்தே இருப்பது தான் தவறு.

கேள்விகள் இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கலாம். நடைமுறை வாழ்விற்கு
ஒத்துப் போவதாய் இருந்திருக்கலாம். உப்பு சப்பில்லாத கேள்விகள், அதற்கு
எல்லோருக்கும் தெரிந்த உப்பு சப்பில்லாத பதில்கள்!

அறிவில் சிறந்தவள் ஒருத்தி வாதிடுகிறாள் என்றால், இன்னும் கேள்விகள்
பயனுள்ளதாய், வித்தியாசமாய், புத்திசாலித்தனமாய் இருப்பது அவசியம்.

பார்க்கும் நமக்கே எரிச்சல் வந்தால், கூட இருக்கும் சித்திக்கு எப்படி
இருக்கும் யோசித்துப் பாருங்கள்!

அதனால் கோபத்தில் உச்சியில் இருக்கும் அவள் சித்தி பழி வாங்க முற்படுகிறாள்.
சந்தையில் ஒரு நாள் வித்யாதரனின் அறிவை கண்கூடாய் கண்டு விட்டு,
இவன் தான் தன் மகளுக்கு ஏற்றவன் என்று முடிவு செய்து, அவன் தாயை
சந்தித்து, மறுநாள் பெண்பார்க்க வருமாறு அழைப்பு விடுக்கிறாள். தன்
கணவனை, பெண்பார்க்க வரும் மறுதினம் வீட்டில் இருக்கக் கூடாது, என்று
மிரட்டுகிறாள். இறுதியாக ஒரு வரனை அழைத்து வரப்போவதாகவும், இதிலும்
இவர்கள் புகுந்து தலையிட்டு கலைத்து விட்டால், அவர்களையும் கொன்று,
தானும் தற்கொலை செய்து கொள்வதாய் மிரட்டுகிறாள். செய்வதறியாது நிற்கிறார்
அந்தத் தந்தை.

(இனி அடுத்த வாரம் தொடரும்)

வித்யாதரனின் தாயாரிடம், "இப்படிப் பட்ட அறிவாளியை பெற்ற நீங்கள்
பாக்கியசாலி" என்கிறாள் சித்தி. அவளும் புரியாமல் முதலில் விழிக்கிறாள்.
பிறகு "ஒரு பொருள் தன்னை விட்டுப் பிரியும் போது தான் அதன் அருமை
தெரியும்" என்று மகனை நினைத்து கண்ணீர் சிந்துகிறாள்! அவன் மூடன்
என்று தெரிந்தும் அந்தத் தாய்க்கோ வந்தவளை நம்பிவிடும் வெகுளி மனம்!
இவ்வளவு வெகுளியாகக் கூட சிலர் இருக்க முடியுமா என்ற கேள்விகள்
எல்லாம் நம் மனதுள் வைத்து பூட்டிவிடுவது நலம்.

சந்தைக் கடைகளும் அதன் அமைப்புகளும் ப்ரமாதமாய் இருந்தன.
அவர்கள் வைத்திருக்கும் அடுக்குகள், அளக்கும் மரக்கால்கள் என
கவனம் செலுத்தி சுற்றுப்புற அமைப்புகள் படு கச்சிதமாய் அமைந்திருந்தது! :clap: :clap:

சந்தைக்கடையில் வித்யாதரனின், முட்டாள்தனத்தை எடுத்துக் காட்ட,
நகைச்சுவையாக சில காட்சிகளை அமைத்திருந்தார்கள்.
முல்லா நசுருதீன்/தெனாலி ராமன் கதைகளில் வருவது போல் நன்கு
அமைந்திருந்தது. குறிப்பாக, முட்டை வாங்கப் போனவன்,

"இது யார் போட்ட முட்டை" என்று கேட்க,
"அது கோழி போட்ட முட்டை"
"இதுக்குள்ள என்ன இருக்கு!"
"ஹ்ம்ம் அதுக்குள்ள கோழி இருக்கு"
"உள்ள இருந்தே கோழி எப்படி முட்டை போட்டுச்சு"

ரசிக்கும்படி இருந்தது!

Shakthiprabha.
24th May 2008, 01:30 PM
அடுத்த இரு தினங்கள் (திங்கள் / செவ்வாய்)
நான் தொடரைப் பார்க்க முடியாது. ஆகவே புதன்கிழமைத் தொடரிலிருந்து தொடர்கிறேன். :wave:

ஒரு சின்ன வேண்டுகோள். இந்த இருதினம் என்ன நடந்தது என்று வேறு யாராவது எழுதுங்களேன். :ty:

aanaa
24th May 2008, 05:27 PM
நன்றி சக்திபிரபா


----------
ஊரிலிருந்து....

aanaa
28th May 2008, 09:35 PM
பொன் கிடைத்தாலும் புதன் கிடையாது என்பார்கள்.
ம்ம்ம்ம்ம்

புதனும் வந்து போகின்றது....

Shakthiprabha.
29th May 2008, 11:43 AM
ஆனா,

இதோ புதன் (சற்றுத் தாமதமாக) வந்து விட்டது !

:)

Shakthiprabha.
29th May 2008, 11:45 AM
28. 5. 08
_______


இரண்டு நாள் பார்க்காத குறைக்கு, கதையும் சில கட்டங்கள் முன்னேறி
இருந்ததால், திடீரென படுக்கையில் அரசர் படுத்திருக்கும் காட்சியமைப்பு
திக்குமுக்காடச் செய்தது. பழைய சரஸ்வதி சபதத்தை நினைவு கூர்ந்து,
அரசர் இறந்தால் புதிய ராணி (ஏழை ஒருத்தியை செல்வ சீமாட்டியாக்கும்
திருமகள் சபதம்) வரவிருக்கும் அடுத்த கட்டத்தை நாம் உணர முடிந்தது.

அரசர் இவ்வாறு படுத்திருக்க, வாரிசு இல்லாத அரசாட்சிக்கு இனி தானே
அரசன் என்று மகிழ்கிறார் அமைச்சர்.

இன்னொரு இடத்தில், இப்படிப் பட்ட மூடனை தன் மணாளனாக்கித்
தன்னை பழி வாங்கி விட்டாளே சித்தி என்று சித்தியிடம் குமுறுகிறாள்
கலையரசி. "உன் மகளாக இருந்தால் இப்படிச் செய்திருபாயா" என்று
கேட்கிறாள். சித்தியும் தன் பங்குக்கான காரணத்தை கூறுகிறாள். கலையரசி
ஆணவத்தால் தன்னை எடுத்தெறிந்து பேசியதற்கு பழி தீர்த்துக் கொண்டதைக்
கூறுகிறாள். மூடனுடன் தனக்கு வாழ உடன்பாடு இல்லை என்று கூறுகிறாள்
கலையரசி. இருவருமாக செர்ந்து, தங்கள் வெறுப்பை மூடன் மேலும்
அவனின் அபார பசி மேலும் காண்பிக்க, சுடு சொல் பொருக்காமல் வித்யாதரனின்
தாய், தன் பங்குக்கு அவனை நிந்தித்து அடித்து விரட்டி விடுகிறாள்.

வித்யாதரன், மிகுந்த மனவேதனையுடன், புலம்பிக்கொண்டே திக்கு தெரியாமல்
மனம் போன போக்கில் அலைகிறான். இங்கே இவன் சொல்லும் சில வசனங்கள்
யோசிக்க வைக்கிறது.

"நான் என்ன திருடினேனா, கொள்ளை அடித்தேனா, கொலை செய்தேனா, பிறர்
மனம் நோகச் செய்தேனா, நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை எல்லோரும் இகழ்கிறார்கள்" என்று சிறு பிள்ளை போல் அழுகிறான்.

உண்மை தான். இந்த மண்ணுலகில், பெருந்தவறு செய்த ஒருவன் கூட மன்னிக்கப்பட்டு விடுகிறான். அவன் தவறுகள் மறக்கப்பட்டு / மறைக்கப்பட்டு விடுகின்றன. பிழைக்கத் தெரியாத மூடர்களுக்கும், முட்டாள்களுக்கும், மென்மையுள்ளம் கொண்ட சாதுக்களுக்கும் இப்பூவுலகம் தன் கோர ஸ்வரூபத்தை காண்பித்து அவர்களைப் பாடாய் படுத்துகிறது.

அறிவு என்பது எத்தகைய இன்றியமையாத ஒன்று என்று விளங்குகிறது. வித்யாதரனாக குழந்தையைப் போல் புலம்பும் ராம்ஜி மிக நன்றாக தன் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அழுது புலம்பி வீட்டை விட்டு வெளியேறும் போது சித்தியாக நடித்தவரின் முகத்தில் சற்று பரிதாபம் தெரிந்தாலும், கலையரசி,
கர்வத்துடனே அலட்சியமாய்த் தான் நிற்கிறாள்.

( இனி நாளை வியாதியில் பாதியில் விட்டு விட்ட
அரசர்க்கு என்ன ஆயிற்று என்று பார்ப்போம்)

aanaa
29th May 2008, 09:37 PM
நன்றி சக்திபிரபா!



"நான் என்ன திருடினேனா, கொள்ளை அடித்தேனா, கொலை செய்தேனா, பிறர்
மனம் நோகச் செய்தேனா, நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை எல்லோரும் இகழ்கிறார்கள்" என்று சிறு பிள்ளை போல் அழுகிறான்.


பலசாலி மட்டும் வாழகின்ற காடு தான் இதுவும்.
அதே நியதி

Shakthiprabha.
30th May 2008, 12:11 PM
என் வீட்டில் மின்சாரம் மிகுந்த சதி செய்ததால், ஆங்காங்கே
தொடர்பு விட்டுப் போன தொடராய்த் தான் பார்க்க முடிந்தது.

ஒருவழியாக மின்சார வாரியம் தன் திருவிளையாடலை நிறுத்தி
தொலைக்காட்சி பெட்டி கருணைகூர்ந்து ஒளிபரப்பிய போது,
வித்யாதரன், அம்சமாய் பட்டுடுத்தி, பலர் முன்னிலையில் புலவர்
தருமிக்கு ஈசன் பதிலுறுத்ததைப் போல் வினாவிடைகளுக்கு பிறர்
வியக்க பதிலுறுத்துக்கொண்டிருந்தார். உலகில் சிறந்தது என்பதற்கு
"அறிவு" என்று பதிலளித்தார். அவர் கண்ணிலும் முகத்திலும்
அறிவின் தேஜஸ் சிரித்தவண்ணம் இருந்தது. சோர்வுடன் ஏதோ
நினைவில் மூழ்கியபடி சென்று கொண்டிருந்த கலையரசியை ஒரு பெண்
தடுத்து நிறுத்தி, மூடனை ஒரே இரவில் அறிவாளியாக்கிய அவளை
பாராட்டி விட்டு செல்கிறாள். மலங்க மலங்க விழித்தபடி நின்ற கலையரசியை
சென்று பார் உன் கணவர் அறிவே உருவாய் கோவலில் ஆன்றோர்
சான்றோர்களிடையே உரையாற்றிக் கொண்டுருப்பதை என்று கூறிச் செல்கிறாள்.
கோவிலிற்கு சென்ற கலையரசிக்கு பெரும் பேரின்ப அதிர்ச்சி.
கண்ணில் நீர் சொரிந்தபடி வித்யாதரனை பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
தன்னை மன்னிக்குமாறு வேண்டி கைகூப்புகிறாள்.

வித்யாதரன் புன்னகையுடன், அறிவில் சிறந்த அவள் அந்நிலையில் அப்படி
நடந்து கொண்டது தவறே இல்லை என்று கூறி, தனக்கு எவ்வாறு கலைவாணியின்
அருள் கிட்டியது என்று விளக்குகிறான். சாகப் போன தன்னை, கலைவாணி
தடுத்தி நிறுத்தி அருளிச்சென்றதை மகிழ்வுடன் தெரிவிக்கிறான். கலையரசி
உவகைக் கொள்கிறாள். இருவரும் மகிழ்ச்சியுடன் மனை செல்கின்றனர்.

அரசவையில், மன்னருக்கு இன்னுமா நேரம் நெருங்கவில்லை என்ற
நினைப்புடன், தன்னுடைய ராஜ்ஜிய போகத்தை குறியாய்க் கொண்டு
சுற்றிவந்துகொண்டிருக்கிறான் தளபதி.

முன்பே கூறியதைப் போல், வித்யாதரனின் நடிப்பு நன்று. "அறிவில்
சிறந்த நீ அப்படி நடந்து கொண்டது தவறில்லை, எனினும் அறிவுடன்
ஆணவம் சேரும் போது, அந்த அறிவே கசந்து போகிறது" என்று கூறியிருக்கலாம்.
அவள் நடந்து கொண்டது முழுவதும் சரி என்று ஏற்றுக்கொண்டது
ஏனோ மனதை நெருடியது.

(தொடரும்)

(இன்றும் தொடரை பார்க்க முடியாமல் போகும். அதற்குள் அரசன் இறந்து
ராணி வந்து விடுவாள் என்று எண்ணுகிறேன்)

Shakthiprabha.
30th May 2008, 12:13 PM
நன்றி சக்திபிரபா!



"நான் என்ன திருடினேனா, கொள்ளை அடித்தேனா, கொலை செய்தேனா, பிறர்
மனம் நோகச் செய்தேனா, நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை எல்லோரும் இகழ்கிறார்கள்" என்று சிறு பிள்ளை போல் அழுகிறான்.


பலசாலி மட்டும் வாழகின்ற காடு தான் இதுவும்.
அதே நியதி

கசப்பான உண்மை! ஆங்கிலத்தில் "சர்வைவல் ஒஃப் த ஃபிட்டஸ்ட்" என்பது தான் பரிணாம வளர்ச்சியின் தத்துவமே. அதே அடிப்படையில் தான் உலகம் இயங்கிவருகிறது. இயங்கும்!

Badri
30th May 2008, 01:05 PM
சக்திபிரப்ஹா!

மிக அருமை! எங்களால் இங்கு காணமுடியாத தொடரை உங்களது சொற்சித்திரத்தை வைத்து ஒர் அள்விற்கு நன்றாகவே ரசிக்க முடிகிறது!

இந்த அறிய சேவைக்கு மிக்க நன்றி.

By the way உங்கள் பெயரை சரியாக சொல்லியுள்ளேனா?

Shakthiprabha.
30th May 2008, 01:08 PM
நன்றி பத்ரி!

கடந்த இருநாட்களாக தொடரைப் பார்க்கமுடியவில்லை. நேற்றும் அரைகுறையாகத் தான் பார்க்க்க முடிந்தது. இன்றும் முடியாது. சில தினங்களாக தொடரை அதன் அத்தனை குறை நிறைகளுடன் முழுமையாய் எழுதவில்லை என்ற குறை எனக்கு உள்ளது. ஜுன் 10ம் தேதிக்கு பிறகு தினமும் தவறாமல் பார்த்து எழுதுகிறேன்.

Shakthiprabha.
30th May 2008, 01:09 PM
பத்ரி,

'ப்ரப்ஹா' என்பது சரி தான். இவ்வளவு வருடங்கள் கழித்து, அதுவும் தமிழில் ஒருவர் இப்படி எழுதி(உச்சரித்தால்) எனக்கே என் பெயர் சரியாய் புரிபடவில்லை :lol2:

நன்றி :D

Badri
30th May 2008, 01:15 PM
நன்றி பத்ரி!

கடந்த இருநாட்களாக தொடரைப் பார்க்கமுடியவில்லை. நேற்றும் அரைகுறையாகத் தான் பார்க்க்க முடிந்தது. இன்றும் முடியாது. சில தினங்களாக தொடரை அதன் அத்தனை குறை நிறைகளுடன் முழுமையாய் எழுதவில்லை என்ற குறை எனக்கு உள்ளது. ஜுன் 10ம் தேதிக்கு பிறகு தினமும் தவறாமல் பார்த்து எழுதுகிறேன்.

அது என்ன ஜூன் 10்? அது வறை என்ன? வீட்டிலேதாவது விசேடமா? இல்லைத்தொடரை அது வறை பார்க்கக்கூடதென்று வேண்டுதலா?

Shakthiprabha.
30th May 2008, 01:19 PM
ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் 8 வரை திருமணம் ஒன்றிற்காக வெளியூர் செல்லவிருக்கிறேன். :)

ஜூன் 9ஆம் தேதி முதல் பார்க்க முடியும். பத்து என்று குத்துமதிப்பாய் கூறினேன். (குத்துக்கு என்ன மதிப்பு என்று கேட்காதீர்கள்)

இன்றும் நண்பர் ஒருவரின் வீட்டுற்கு விருந்திற்கு செல்ல உள்ளதால் பார்க்க முடியாது :( . ஜூன் 4 வரையும் கூட விட்டுவிட்டுத் தான்பார்க்க முடியும், தொடர்ந்து பார்க்க முடியாது என்பதால் ஜுன்10 என்று குறிப்பிட்டேன்.

R.Latha
30th May 2008, 01:40 PM
late-ga anuppinalum latest-ai anuppinal nandru. Neengal porumaiyaga thamilil ezhuthuvatharkku mikka nandri.

Thirumaran
30th May 2008, 01:41 PM
oh. Ippadi oru Serial varutha. 8-) Paarkanum whenever time permits :)

aanaa
31st May 2008, 05:01 AM
இந்த அறிய சேவைக்கு மிக்க நன்றி.


:-)

aanaa
31st May 2008, 05:02 AM
ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் 8 வரை திருமணம் ஒன்றிற்காக வெளியூர் செல்லவிருக்கிறேன். :)

ஜூன் 9ஆம் தேதி முதல் பார்க்க முடியும். பத்து என்று குத்துமதிப்பாய் கூறினேன். (குத்துக்கு என்ன மதிப்பு என்று கேட்காதீர்கள்)

இன்றும் நண்பர் ஒருவரின் வீட்டுற்கு விருந்திற்கு செல்ல உள்ளதால் பார்க்க முடியாது :( . ஜூன் 4 வரையும் கூட விட்டுவிட்டுத் தான்பார்க்க முடியும், தொடர்ந்து பார்க்க முடியாது என்பதால் ஜுன்10 என்று குறிப்பிட்டேன்.

குடும்பத்துடன் சென்று வாருங்கள்

aanaa
31st May 2008, 05:04 AM
நன்றி பத்ரி!
கடந்த இருநாட்களாக தொடரைப் பார்க்கமுடியவில்லை. நேற்றும் அரைகுறையாகத் தான் பார்க்க்க முடிந்தது. இன்றும் முடியாது. சில தினங்களாக தொடரை அதன் அத்தனை குறை நிறைகளுடன் முழுமையாய் எழுதவில்லை என்ற குறை எனக்கு உள்ளது. ஜுன் 10ம் தேதிக்கு பிறகு தினமும் தவறாமல் பார்த்து எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.

aanaa
3rd June 2008, 07:18 AM
பெயர்கள் முதல்பக்கத்தில் இருக்கின்றன.

பிழையிருப்பின் திருத்தவும்

உதவவும்

Shakthiprabha.
3rd June 2008, 11:17 AM
நன்றி ஆனா!

இன்று தொடரை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் 9ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து எழுதுவேன்.

aanaa
4th June 2008, 06:47 PM
Sakthipraha!

I like the icon (s)
and also the changing frequency
:clap:

mr_karthik
5th June 2008, 06:32 PM
சக்திபிரப்ஹா!

மிக அருமை! எங்களால் இங்கு காணமுடியாத தொடரை உங்களது சொற்சித்திரத்தை வைத்து ஒர் அள்விற்கு நன்றாகவே ரசிக்க முடிகிறது!

Are you not able watch Sun TV...?.

Is it not reaching Ausy...?. I thought sun network is world wide.

mr_karthik
5th June 2008, 06:39 PM
ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் 8 வரை திருமணம் ஒன்றிற்காக வெளியூர் செல்லவிருக்கிறேன். :)

இன்றும் நண்பர் ஒருவரின் வீட்டுற்கு விருந்திற்கு செல்ல உள்ளதால் பார்க்க முடியாது.

Hummm... koduththu vachavanga.
ennai yaarum virundhukku azhaiththu romba naaL aachu.. :oops:


ஜூன் 9ஆம் தேதி முதல் பார்க்க முடியும். பத்து என்று குத்துமதிப்பாய் கூறினேன். (குத்துக்கு என்ன மதிப்பு என்று கேட்காதீர்கள்)

avar Parthiban alla, Badri.
adhanaal kEtka maattaar... :D

mr_karthik
5th June 2008, 06:45 PM
yesterday I happened to watch this serial....

especially the scene of 'mupperum dhEviyar' challenging each other in front of Naradhar....

and....

the temple scene, where the poet and queen were arguing, exactly remembered the movie Saraswathi Sabatham, where NT and KRV were arguing. (the queen is Kaniga...?).

aanaa
6th June 2008, 06:37 PM
yes, The same Hanika who was in "Thangavettai"

list of names at
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=11525&postdays=0&postorder=asc&start=0

aanaa
6th June 2008, 06:38 PM
வில்லன் தளபதி = செளமியனா?

Sinthiya
9th June 2008, 08:16 AM
I watched the first dvd of Thiruvilaiyaadal...it's good :)

Shakthiprabha.
9th June 2008, 11:28 PM
09/06/08

திடீரென எவனோ ஒருவன் அதிகாரம் செய்கிறான்.
திடீரென எவளோ ஒருத்தி, அரசவையில் வீற்றிருக்கிறாள்,
என்றெல்லாம் குழம்பி நிற்காமல், உடனே கதையின் போக்கு
புரிந்ததற்கு 'சரஸ்வதி சபதத்திற்கு' நன்றி சொல்லவேண்டும்.

வீரம் என்றாலே எங்கிருந்தோ சேர்ந்து தொத்திக்கொண்டு விடுகிறது
அதிகாரமும், ஆளுமையும். நம் அன்றாட வாழ்விலும் இதைக்
கண்டு வருகிறோம். எவன் ஒருவனுக்கு அல்லது எவள் ஒருத்திக்கு
எதிர்த்து நிற்கும் துணிவு இருக்கிறதோ, தன் சொல்லை செல்லுபடியாக்கும்
மனோதிடம் இருக்கிறதோ அவர்கள், மற்றவர்களை ஆட்டி வைக்கத்
தவறுவதில்லை.

இங்கும் வீரத்துடன் சேர்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்திறார் மலைமகளின் அருள் பெற்ற தளபதி மாமல்லன். மண்டபத்தில் கூடாரமிட்டுருக்கும் பிச்சைக்காரர்களை அவதூறு பேசி, விரட்டி விடுகிறார். தளபதி நகர்ந்த பிறகு, பிச்சைக்காரர்கள் சிலர், அரசியாரும் முன்னொரு நாளில் பிச்சைக்காரியாக இருந்ததால், இவர்களை சந்திக்க நேரிட்டால் தனக்கு களங்கம் உண்டாகுமோ என கருதி கடுமையாக நடந்து கொண்டுள்ளார் என்று புரளியைக் கிளப்புகின்றனர். அரசாட்சியையும் நாட்டையும் அவமரியாதையாகப் பேசுகின்றனர். இதைக் கேட்டுகொண்டிருந்த அமைசருக்கு மனம் சங்கடப்படுகிறது. அரசியிடம் நடந்ததைக் கூறி தகுந்த நடவெடிக்கை எடுக்குமாறு அறிவுரைக்கிறார் அமைச்சர். அரசியாரும்
தளபதியை வரவழைத்து, அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததை
சுட்டிக்காட்டி, தளபதியைக் கண்டிக்கிறார். அரசாட்சியில் திருட்டும்
கொள்ளையும் மிகுந்து விடாமல் தடுக்க, பிச்சைக்காரர்களையும் தடுக்கவேண்டுமென்றும், பிச்சைக்காரர்களின் ரூபத்தில் திருடனோ, அல்லது உளவாளியோ கூட உலவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், தான் அத்தகைய கடுமையான நடவேடிக்கை எடுக்க நேர்ந்ததைக் கூறுகிறார். எதையும் தீர விசாரிக்காமல் செய்தது தவறு என்று அவரின் அதிகாரத்தை கத்தரிக்கிறார் அரசி.

புகைந்து கொண்டிருக்கும் தளபதியின் மனசை, மேலும் பற்றவைக்கிறார் பார்த்திபன் (இவர் முன்னாள் தளபதி என்றெண்ணுகிறேன் :? ). அமைச்சர், தளபதையைப் பற்றி தவறக அரசியிடம் புரளி கிளப்பிவிடுகிறார் என்று தளபதியின் கோபத்தை திசை திருப்புகிறார். இப்படியே வளைந்து கொடுத்து பழகிவிட்டால் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று பொருமுகிறார் தளபதி. அவரே மன்னன் ஆவதற்கு ஒரு அருமையான யோசனை இருப்பதாகக்
கூறுகிறார் பார்த்திபன்.

அவரின் யோசனைப்படி, தனித்திருக்கும் அரசியிடம், எந்த வித ஒளிவு மறைவும் இன்றி, தனது இச்சையைத் தெரிவிக்கிறார்
தளபதி. அரசி தன் அதிகாரத்தை பயன் படுத்தி அவரை அப்புறப்படுத்த நினைக்கிறார். எந்தக் காவலாளியும் அவரின் குரலுக்கு செவிசாய்த்து துணைவராததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். லாவகமாக தளபதி அரசப் படைகளை தன் வசமாக்கியிருப்பதை உணர்கிறார். மீண்டுமொரு முறை
தன் இச்சையைத் தெரிவித்து, தான் அரசனாக மணிமுடி தரிக்க ஆசைப் படுவதைக் கூறி, தன்னை மணந்து கொள்ளும்படி கேட்கிறார் தளபதி.

அரசியாக கனிகாவின் நடிப்பு நன்று.

தளபதியாக நடிப்பவர் கொடூரம் முகத்தில் காட்டவேண்டும் என்பதற்காக, மூக்கை மட்டும் ஒரு பக்கமாய் இழுத்து கோபத்தை காட்டுவது ரசிக்கும்படி இல்லை. இவர் மூக்கை இழுப்பதற்கு பதில் சொல்வது போல் பார்த்திபனாக நடிப்பவர் புருவம் உயர்த்துகிறார். இது சற்றே மிகையாகத் தெரிந்தது. தளபதியாக நடிப்பவர் 'பிர்லாபோஸ்' என்று 'ஆனா' பதித்திருந்தார். அசப்பில் நடிகர் அஜித்குமாரின் சுமாரான கார்பன் காபி போல் இருக்கிறார்.

"அவர்கலிடம் வலைந்து கொடுத்து விடுவேன் என்று வீரத்தை
இலுக்காக எண்ணி கொல்லாதே" என்று நம்மை கொல்கிறார்கள்.
தளபதியாருக்கு 'ழ'கரமும் 'ள'கரமும் ததிங்கிணத்தோம்
போடுகிறது. கனிகாவிற்கும் கூர்ந்து கவனித்தால் சில இடங்களில்
அழகுத் தமிழின் 'ள' சற்று சறுக்குகிறது.

ராடன் க்ரியேஷன்ஸின் ராதிகாவிற்கே 'ள'கரம் 'ழ'கரம் தகராறு இருப்பதால்
இதற்கு கவனம் செலுத்தவில்லை போலும். செந்தமிழில் தொடர் வருவதால் சொல்வளமும் அதை சரியாய் உச்சரிக்கும் நா-வளமும் நன்கு தேவைப் படுகிறது. எந்த காலத்திலும்
சிலருக்கு 'ழ'கர 'ள'கர தகராறுகள் இருந்திருக்கலாம் என்று சாக்கு சொல்லி நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.

கனிகா நீல நிறத்தில் ஜொலிக்கும் உடை அணிந்திருக்கிறார். அதற்கு பொருத்தமாய் காதணியும், கழுத்தில் அட்டிகையும் நீல நிறத்தில் ஜொலிக்கிறது. அழகே உருவாய் காட்சி தருகிறார். ஆனால் தலையை அலங்கரிக்கும் சுட்டி மட்டும் ஏன் தங்க நிறம்? நீலக் கற்கள் பதித்த தலை அலங்காரச் சுட்டிகள் கிடைக்கவில்லை போலும்!

அமைச்சரின் அதிகார பலத்தை காண்பிக்கவும், அரசியின் தலையீட்டை ஊர்ஜிதப்படுத்தவும், வேறு ஏதேனும் பலமான காரணத்தைக் கதையாக்கியிருக்கலாம் (பிச்சைக்காரர்களின் விரட்டலுக்காக பெரிய பதைபதைப்பும் அதனால் கதையில் மாற்றமும் ஜீரணிக்க முடியவில்லை)


(மீண்டும் நாளை)

aanaa
10th June 2008, 07:39 AM
நன்றி - சக்திபிரபா

மீண்டும் நாளை




"அவர்கலிடம் வலைந்து கொடுத்து விடுவேன் என்று வீரத்தை
இலுக்காக எண்ணி கொல்லாதே" என்று நம்மை கொல்கிறார்கள்.
தளபதியாருக்கு 'ழ'கரமும் 'ள'கரமும் ததிங்கிணத்தோம்
போடுகிறது. கனிகாவிற்கும் கூர்ந்து கவனித்தால் சில இடங்களில்
அழகுத் தமிழின் 'ள' சற்று சறுக்குகிறது.

ராடன் க்ரியேஷன்ஸின் ராதிகாவிற்கே 'ள'கரம் 'ழ'கரம் தகராறு இருப்பதால்
இதற்கு கவனம் செலுத்தவில்லை போலும். செந்தமிழில் தொடர் வருவதால் சொல்வளமும் அதை சரியாய் உச்சரிக்கும் நா-வளமும் நன்கு தேவைப் படுகிறது. எந்த காலத்திலும்
சிலருக்கு 'ழ'கர 'ள'கர தகராறுகள் இருந்திருக்கலாம் என்று சாக்கு சொல்லி நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.

:clap: :clap:

வாழ்க தமிழ்.

Shakthiprabha.
10th June 2008, 09:44 PM
10.6.08

அரசி தளபதியை மணப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.
அவளை சிறைவைக்கிறான் மாமல்லன். சிறையில் வித்யாதரனின்
எக்காளச் சிரிப்பு மேலும் அவளை அவமானப் படுத்துகிறது.
"கற்றோரையும், அரசாளும் ராணியையும் சிறைவைத்து நீ என்ன
கதிக்கு ஆளாகப் போகிறாய் என்று நினைத்தால் பரிதாபமாக உள்ளது" என்று மாமல்லனை இகழ்கிறான் வித்யாதரன்.

இதற்கிடையே, மலைமகள் களிநகைப் புரிய, அலைமகளும் கலைமகளும் வேதனையுடன் உலாவருகின்றனர். நாரதரும் அங்கு செல்ல, அவர்களிடையே கடும் விவாதப் போர் துவங்குகிறது. "துக்கம் தொடருவதில்லை" "சிரித்தவர் வாழ்ந்ததில்லை, அழுதவர் கெட்டதில்லை" என்று வசனங்கள் பரிமாறப்படுகின்றன. அத்தனையும் கேட்டும், எக்காளச் சிரிப்பு சிரிக்கிறாள் ஷக்தி. நாரதர், மூன்று தேவியரும் ஒற்றுமையோடு செயல்படுவதே நன்று என்றும் கூறியதை அவள் லட்க்ஷியம் செய்யவில்லை.

"கலகம் உண்டு பண்ணினால் செவி சாய்ப்பவர்கள், நல்லனவற்றை எடுத்துரைத்தால் அலட்சியம் செய்கிறார்களே" என்று நாரதர் வருந்துகிறார்.

அமைச்சர், செய்தியறிந்து மனமுடைந்து விடுகிறார். அவரும் தங்கள் வசம் இருப்பின் நன்று, இல்லையெனில், அம்பிகைக்கு அடுத்த சிறையில் கம்பி எண்ண நேரிடும் என்று மாமல்லன் எச்சரிக்கிறான். மனம் வெம்பினாலும், வெளியே அரிதாரமின்றி முகமூடியிட்டு, தனக்கு ஏதும் இழப்பில்லை என்பது போல் காட்டிக்கொள்கிறார் அமைச்சர். "யார் அரசாண்டால் என்ன, என்னுடைய முதிர்ந்த இந்த வயதில் நான் அமைச்சராகவே இறுதிவரை நீடித்தால் சரி" என்று சாதூர்யமாகப் பேசுகிறார். அவரை இன்னும் முழுமையாக நம்பாத மாமல்லன் அவரைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டுமென்று பார்த்திபனுக்கு கட்டளை இடுகிறான்.

இதற்கிடையில் சிறையில் வித்யாதரன், அம்பிகைக்கு ஒரு யுக்தி கூறுகிறான். மாமல்லனின் இச்சைக்கு இப்போதைக்கு 'சரி' என்று சம்மதம் தெரிவிக்குமாறு கூறுகிறான்.

(இனி நாளை)

வித்யாதரனாய் நடிக்கும் ராம்ஜியின் தமிழ் உச்சரிப்பும் தகராறு தான். மனம் வருந்துகிறது. அவரின் நடிப்பு நிச்சயம் மற்றோரக் காட்டிலும் ஜொலிக்கிறது. கண் பேசுகிறது.

அதிகாரம் செலுத்துபவன் என்றால் முகத்தை கடுகடுவென வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிரித்தே சாதித்தோர் பலர். மற்றபடி நன்றாகத் தான் செய்கிறார் பிர்லா போஸ்.

அதிகாரம் மட்டும் செலுத்தும் ஒருவனுக்கு மதியூகம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதாலோ என்னவோ, அவர்கள் பேசிக்கொள்வதற்கு வசதியாக, அம்பிகையை, வித்யாதரனின் அடுத்த அறையிலேயே சிறை வைக்கிறான். போதாத குறைக்கு இரு சிறைக்கும் மத்தியில் சுவரே இல்லை.
வெறும் கம்பிகள். கம்பிக் கதவிற்கு தாள் இல்லை என்றால், குறுக்க நெடுக்க புழங்கி ஒரு ஆணும் பெண்ணும் குடும்பமே நடத்திவிடலாம்.

aanaa
11th June 2008, 06:56 AM
. கம்பிக் கதவிற்கு தாள் இல்லை என்றால், குறுக்க நெடுக்க புழங்கி ஒரு ஆணும் பெண்ணும் குடும்பமே நடத்திவிடலாம்.

:clap: :clap:

(இனி நாளை).

:wave:

aanaa
11th June 2008, 06:56 AM
ப்ரவல்லிகா = சரஸ்வதியா?

Shakthiprabha.
12th June 2008, 10:14 AM
மாமல்லைனை மணக்க சம்மதம் தெரிவிக்குமாறு வித்யாதரன்
அம்பிகையிடம் ஆலோசனை கூறுகிறான். அவ்வாறு சம்மதித்தால்
மாமல்லன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து திருமண ஏற்பாடுகளை
கவனிக்க முற்படுவான். அமைச்சரைக் கண்காணிப்பின்றி அவன்
உலவவிடக் கூடும். அப்போது அமைச்சரை, அம்பிகை சந்தித்து,
திருமணத்தைப் பற்றி மக்களிடையே பொது அறிவிப்பு விடுக்கும் போது,
சூசகமாய் நடந்த உண்மைகளையும் கூறினால், மக்களிடையே எழுச்சி
ஏற்படச் செய்து விட முடியும் என்று வித்யாதரன் திட்டமிடுகிறான்.

எதிர்பார்த்த படியே மாமல்லன் மிக்க மகிழ்ச்சியோடு ஏற்பாடுகளை
கவனிக்கிறான். அமைச்சர் மட்டும் அதிர்ச்சியாகிறார். பின்னர் சிறையில்
அம்பிகையை சந்தித்த போது, அவருக்கும் வித்யாதரன் திட்டதை
விளக்குகிறான். அதன் படி, அவர் வித்யாதரனின் மனைவி 'கலையரசி'யை
சந்திக்கமாறு வேண்டுகிறான். கலையரசியிடமே மக்களிடையே புரட்சியூட்டும்
பொறுப்பை விட்டுவிடுவது நலம். அறிவிலும் மதிநுட்பதிலும் சிறந்த கலையரசியே
இக்காரியத்திற்கு ஏற்றவள் என்று அமைச்சரும், அம்பிகையும் நம்புகிறனர்.

எதிர்பார்த்தது போலவே புரட்சித்தீ மெதுவாக நாட்டில் பரவுகிறது. திருமணத்தன்று
அம்பிகை அலங்கரித்து அழைத்து வரப்படுகிறாள். இன்னும் சற்றே நேரத்தில்
தான் அரசனாகப் போவது ஊர்ஜிதமாகிவிட்டபடியால், பார்த்திபனை தளபதி
பொறுப்பை ஏற்கும்படி மாமல்லன் ஆணையிடுகிறான்.

அதே சமயத்தில், கலையரசி நாட்டுமக்கள் பலர் சூழ அரண்மணையின் காவலை
மீறி, உள்ளே நுழைகிறாள். அம்பிகை தன் திட்டம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில்
புன்னகைக்க, மாமல்லன் எதிர்க்க முற்படும் முன், முன்னேற்பாட்டின்படி திருமண
அலங்காரத்தில் ஈடுபட்டிருந்த சில வீரர்கள் (பொது மக்களுள் சிலர்) க்ஷண நேரத்தில்
உடைவாளை உருவ, மாமல்லனின் கழுத்து குறிவைக்கப் படுகிறது.

திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. மேடை நாடகம் பார்ப்பது போல் உள்ளது.
வசனங்களில் ஆழம் இல்லை. காட்சியமைப்பு மட்டும் அருமையாக இருக்கிறது.

(தொடரும்)

mr_karthik
12th June 2008, 03:32 PM
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. மேடை நாடகம் பார்ப்பது போல் உள்ளது.
வசனங்களில் ஆழம் இல்லை. காட்சியமைப்பு மட்டும் அருமையாக இருக்கிறது.
It is true SP mam...

this kind of historical serials need 'adukkumozhi, alangaara, anal paRallum' dialogues. that is missing here. (true, everyone cant be APN).

watched last night, as you said earlier, the forehead ornament not suit with others, because all others are in light blue.

On releasing from jail, when she was passing the poet's cell, Kaniga gives a meaningful look tto that poet, which was shown in close-up, beautiful. (but Kaniga's make-up was little dull in this scene and tried to show her own colour).

Shakthiprabha.
12th June 2008, 03:47 PM
this kind of historical serials need 'adukkumozhi, alangaara, anal paRallum' dialogues. that is missing here. (true, everyone cant be APN).

மிகச் சரியாகச் சொன்னீர்கள் கார்த்திக்!


On releasing from jail, when she was passing the poet's cell, Kaniga gives a meaningful look tto that poet, which was shown in close-up, beautiful.

நானும் அதை ரசித்தேன். :)

கனிகா தவிர ராம்ஜியின் நடிப்பும், சிரிப்பும் கூட பிரமாதமாய் இருக்கிறது. இவர்களின் தமிழ் உச்சரிப்புத் தான் இடிக்கிறது :(

aanaa
12th June 2008, 06:23 PM
Thanks again Shakthiprabha!!

We have been used to compare everything. Thats normal.

APN is genius for spiritual movies. Its bad we lost him- part of the life. since then no one attempted up to that level.


கனிகா தவிர ராம்ஜியின் நடிப்பும், சிரிப்பும் கூட பிரமாதமாய் இருக்கிறது. இவர்களின் தமிழ் உச்சரிப்புத் தான் இடிக்கிறது

Mother tongue may be not Tamil ( aiyoo adika varavendam :-) ) or they donot have good tamil KG teachers.



நானும் அதை ரசித்தேன். :)

Shakthiprabha.
13th June 2008, 08:54 AM
APN is genius for spiritual movies. Its bad we lost him- part of the life. since then no one attempted up to that level.

நீங்கள் சொல்வது சரிதான் ஆனா!

இந்த ஒரு விஷயம் மட்டுமே ஏனைய குறைகளை போக்க வல்லது. தொடர்களையோ வேறு தொலைக்காட்சிக் கேளிக்கைளையோ பார்க்க பிரியப் படாத என் போன்றோர்களையும் இந்தத் தோடர் தொலைக்காட்சி முன் உட்கார வைத்திருக்கிறது.

புராண இதிஹாஸத் தொடர்களைத் தயாரிப்பதோ, திரைப்படங்களைத் தயாரிப்பதோ சாமான்ய விஷயமல்ல.

இத்தகைய தொடர்களின் மூலம், நிறைய நல்ல கருத்துக்கள் சிந்தனைகள் மக்களைச் சென்றடையும்.

துணிந்த எடுத்த இந்த முயற்சிக்காகவே ராடான் க்ரியேஷன்ஸை பெருமளவில் பாராட்டினாலும் தகும்.

:clap: :clap: :clap:

Shakthiprabha.
13th June 2008, 08:56 AM
இன்றெப்படியும் "சரஸ்வதி சப்தம்" முடிந்து விடும் என்ற எண்ணதுடனேயே நாமும் திருவிளையாடல் பார்க்கத் துவங்குகிறோம். நம் எண்ணமும் வீண்போகவில்லை.

பார்த்திபனும், மாமல்லனும், கைது செய்யப் படுகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் சேர்ந்து, எஞ்சியிருக்கும் மாமல்லனின் காவலர்களை அடித்து விரட்டுகின்றனர்.மாமல்லனை மட்டும் தூக்கிலிட உத்தரவிடுகிறாள் அம்பிகை.

தன்னருள் பெற்றவனை சதி செய்து தூக்கிலிடப் போகிறார்கள் என்றதும் உமையவளுக்கு வருத்தம் மேலிடுகிறது. கலைமகளருள் பெற்றவனும் அம்பிகையும் தனித்தனியே இயங்காமல், கூட்டணி அமைத்து தனியொருவனாய் மாமல்லனை தூக்கிலிடுவது எப்படி சரியாகும் என்று அவள் வாதிடுகிறாள். நாரதரும் அங்கு வந்து சேர்ந்து, உமையவளுக்கு பரிந்து பேசுகிறார். வித்யாதரனை சிறையிலடைக்க எப்படி மாமல்லனும் அம்பிகையும் கூட வேறு சமயம் கூட்டாய்ச் செயல் பட்டதை இறைவன் நினைவுறுத்துகிறார். தேவியர் மூவரின் சபதத்தில் ஒரு உயிரல்லவோ பலியாகவிருக்கிறது, அதைக் காப்பது இறைவன் கடமை என்று நாரதரின் வலியுறுத்தலின் பேரில், இறைவன் வசந்தபுரத்தில் திருவெழுகிறார். இறைவன் சென்றதும் மற்ற தெய்வங்களும் அங்கு எழுந்தருளுகின்றனர்.

அதன் பின்னரும் கூட, சரஸ்வதிதேவியோ நிலைத்திருக்கும் கல்வியறிவும் ஞானமுமே என்றும் சிறந்தது என்று வாதிட, திருமகளோ இம்மைக்கு செல்வங்களிருந்தாலேயொழிய வாழ்வின் இலக்கை எட்டுவது கடினம் என்கிறாள். இத்துணை செல்வமும், கல்வியறிவும் இருந்தாலும் கூட அதைக் கட்டிக் காக்கும் வீரமும் தைரியமும் இன்றியமையாதது என்று உமையவள் அழுத்தம்திருத்தமாய்க் கூற, இறைவன்...

"இம்மூன்றும் ஒருங்கே பெற்ற ஒரு தனிமனிதனோ, நாடோ இருந்தால் அதற்கு இணை இருக்கவும் முடியுமா? மூன்றின் பெருமையும் ஒருங்கே செயல்படும் போது தான் அதன் வலிமை அதிக்கரிக்கிறது" என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். வீண்தர்க்கத்தின் விளைவாக மூவரும் தனித்தனியே மூவருக்கு அருளி இறுமாந்திருந்ததை விட, ஒருங்கே தங்கள் கருணையை ஒரு தனி மனிதனுக்கு வழங்கினால் அவனால் நாடும் வீடும் சுற்றமும் பெறும் நன்மைக்கு ஈடாகுமா என்று முடிக்கிறார். தேவியர் மூவரும் கூட, தங்கள் அறியாமையை நினைந்து சற்றே வெட்கி, இறைவனின் தீர்ப்பை ஒப்புக்கொள்கின்றனர். இறுதியில், அம்பிகை, வித்யாதரன், மாமல்லன் மூவருக்கும் அருள் வழங்கிச் செல்கின்றனர்.

தாவி பின்னோக்கி ஓடும் மனதை "அடச்சீ சும்மாயிரு" என்று அடக்கினாலும் கூட, சிவாஜி நடிப்பில் டி.எம்.எஸ் "கல்வியா செல்வமா வீரமா" என்று பாடிய பாடல் மனக்கண் முன் வந்து போகிறது.

"ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
...
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது அது
ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
...
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா"

என்று பாடலும் அதன் அர்த்தமிகு வரிகளும், இசையும், சிவாஜியும், இன்னும் ஏனையோரும் வந்து போகின்றனார்.

இப்பாடலை கண்டு மகிழ, கீழே சுட்டுங்கள்

http://www.youtube.com/watch?v=1yC2C3wdVjk

இறுதிக் காட்சியில், அரசியாய் அம்பிகை வீற்றிருக்க, பக்கத்தில் அரண்மணைப் புலவன் வித்யாதரனும், இன்னொரு புறம் தளபதியாய் மாமல்லனும் வீற்றிருக்கிறார்கள். எல்லாம் கலைவாணியின் அருள் என்று வித்யாதரன் சிரிக்க, ஏன் உமையவள் அருள் என்று சொல்லக்கூடாதா என்று மாமல்லன் கேலிக்க, திருமகளின் அருளன்றி வேறேது என்று நகைக்கிறாள் அம்பிகை. இக்கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்திருக்கும் அமைச்சரும் "அடடா மறுபடியும் ஆரம்பித்துவிட்டதா" என்று கவலைப் பட

"இல்லையில்லை முடிந்துவிட்டது....அடுத்தது வேறொன்று ஆரம்பமாகும்" என்று அம்பிகை (டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நமக்குச் சொல்ல :P ) சொல்லவும் மூவரும் புன்னகைக்கின்றனர்


தூக்கிலிடுவதற்கு முன் மாமல்லன், வித்யாதரன், அம்பிகை மூவரும் உதிர்க்கும் வசனங்களை ரசிக்க முடிகிறது.

"நீ என்ன சிறுவயதிலா ஏட்டைப் பிடித்தாயா, கலைவாணியின் அருள் இடையில் கிடைக்கப் பெற்றவன் தானே" என்று வித்யாதரனை மாமல்லன் அவமதிக்க

"நீ மட்டும் அம்மாவின் வயிற்றிலேயே வாள் பிடித்தாயோ" என்று பதிலுரைக்கிறான் வித்யாதரன்.

இறைவனும் இறைவியும் மற்றோரும் பேசும் வசங்களும் பரவாயில்லை. நடுநடுவே தொன்று தொட்டு வழங்கி வரும், ஆண்கள் பெண்களிடம் அமைதி காப்பது போல் நடிப்பதும், "நல்லவேளை நான் பிரம்மச்சாரி" என்று நாரதர் பெருமூச்சுவிடுவதும், கேட்டுக் கேட்டுப் புளித்தப் போன நகைச்சுவைகள். சாமான்யர்கள் பேசும் வசனங்களையே தெய்வங்களையும் பேச வைத்தால் பல நேரம், சலிப்பு தட்டுகிறது. சில நேரம் புன்னகையும் மலர்கிறது.

வேறொரு கோணத்தில் பார்க்கும் போது, பெருமளவில் மக்கள் தொடரைப் பார்க்கும் போது பலரது மனநிலை, மனமுதிர்ச்சியை மனதில் கொண்டு வசனங்களை அமைத்திருக்கிறார்கள் என்று புரிகிறது. சில எளிய கருத்துக்களை எளியவர்க்கு சென்றடையும் நோக்கத்துடன் செயல்படும் போது, எளிய வழக்கும், பேச்சும் இருப்பது தான் சரி.

சுருக்கமாய் சொன்னால், நேற்றைய பகுதியில், சற்றே சுவாரஸ்யம் கூடியிருந்தது. இனி அடுத்தது என்ன என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.

'கூட்டாகச் சதி' செய்வது என்பது என்றைக்கும் எக்கால கட்டதிலும் எந்த யுகத்திலும் அரசியலுக்கு உகந்தது போலும். கூட்டணிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அரசியல் மட்டுமென்ன நடைமுறை வாழ்கைக்கு விதிவிலக்கா என்ன!? நம் அன்றாட அலுவலகக் கலகங்கள், குடும்ப மனப்பூசல்கள், நண்பர்கள் தகராறுகள் என எல்லாவற்றிலும் கூட்டுச் சதி, செயல்பாடு, பின் கட்சி மாறுவது என நவரச நாடகங்கள் எல்லா வீட்டிலும், ஏன் ஒவ்வொரு தனி மனிதனுக்குளேயும் கூட இருக்கத்தானே செய்கிறது! ஒரு போது ஒன்று நினைக்கிறோம் சிறிது நேரத்தில் நம் கண்ணோட்டம் மாறுகிறது. மாற்றங்கள் மட்டுமே நிலையானது. (கட்சி விட்டு கட்சி தாவுவதும் இப்படித் தான் என்பது முதிர்ந்த அரசியல் கூற்று!)

காட்சி அமைப்புக்கள் நன்றாக இருந்தது என்று நேற்று நான் எழுதியது, கண்பட்டு விட்டது போலும். இன்றைக்கு இருந்த தூக்கு மேடை காட்சியமைப்புகள் அத்தனையும் அட்டையில் செய்யபட்ட போலி அமைப்பு என்று குழந்தை கூட சொல்லிவிடும். இப்படிப் பட்ட அரிய காட்சிகளை படமெடுக்க சிரமம் இருப்பின், மிக்ஸிங் செய்யும் போது க்ரீன் ஸ்க்ரீன் / ப்ளூ ஸ்கீரீன் தொழில் நுட்பம் உபயோகித்து, ஏதேனும் ஒரு கல் மண்டபத்தின் காட்சியுடன் இணைத்திருக்கலாம்.

மிக்ஸிங் நுட்பங்கள் தெரிந்தோர்களுக்கு இந்த போலி காட்சியமைப்பு இன்னுமே உறுத்துகிறது. பள்ளி /கல்லூரிகளில் மேடை நாடகத்தில் வைக்கும் அமைப்பைப் போல் இருந்தது.

(நாளை வேறு விளையாடல் :) )

mr_karthik
13th June 2008, 11:24 AM
//இன்றெப்படியும் "சரஸ்வதி சப்தம்" முடிந்து விடும் என்ற எண்ணதுடனேயே நாமும் திருவிளையாடல் பார்க்கத் துவங்குகிறோம். நம் எண்ணமும் வீண்போகவில்லை.

(நாளை வேறு விளையாடல்)//

next movie 'kandhan karunai?' or 'thiruvarutchelvar ?' or 'agaththiyar ?' . let us watch today.

//தாவி பின்னோக்கி ஓடும் மனதை "அடச்சீ சும்மாயிரு" என்று அடக்கினாலும் கூட, சிவாஜி நடிப்பில் டி.எம்.எஸ் "கல்வியா செல்வமா வீரமா" என்று பாடிய பாடல் மனக்கண் முன் வந்து போகிறது.//

thiruviLaiyaadalai vida ungaL 'sol viLaiyaadal' nallaa irukku.

aanaa
13th June 2008, 09:58 PM
(நாளை வேறு விளையாடல் :D)

64 திருவிளையாடல்களாம் - ராதிகா கூறியிருந்தா.
ஆகவே இன்னும் 62 உள்ளன.
( மாம்பழம் /சரஸவதி சபதம்)

நன்றி சக்திபிரபா
தொடருங்கள் உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை...

aanaa
14th June 2008, 03:44 AM
ராதிகாவின் பார்வையில்:

[img=http://img99.imageshack.us/img99/9554/thiruvi03yh6.th.jpg] (http://img99.imageshack.us/my.php?image=thiruvi03yh6.jpg)

aanaa
14th June 2008, 07:01 AM
சுந்தர் OAK = தட்சன்

சுந்தர் OAK = OAK தேவரின் மகன்

மிக வேகமாக வசனங்களை உச்சரிக்கின்றார்..

mr_karthik
14th June 2008, 11:55 AM
(நாளை வேறு விளையாடல் :D)

64 திருவிளையாடல்களாம் - ராதிகா கூறியிருந்தா.
ஆகவே இன்னும் 62 உள்ளன.
( மாம்பழம் /சரஸவதி சபதம்)


It is not movie, and therefore no time limit.

She can pull even up to 640 thiruviLaiyaadal

The one which you mentioned as 'maambazham' is ஞானப்பழம்...?.

saradhaa_sn
14th June 2008, 01:56 PM
சக்திப்ரபா, மிக அருமையாக எழுதுகிறீர்கள். தொடரையே நேரில் பார்ப்பது போலிருக்கிறது. தொடர் பார்த்தபின் உங்கள் விமர்சனம் படிப்பது ஒரு சுவையான அனுபவம்.

சின்ன சின்ன விஷயங்களைக்கூட விடாமல் கோர்வையாக, அதோடு முக்கியமாக உங்களது சுவாரஸ்யமான இடைச்செருகல் கமெண்ட்ஸ்களோடு தருகிறீர்கள். சூப்பர்.

நிறுத்தாமல் தொடருங்கள்.


சுந்தர் OAK = தட்சன்

சுந்தர் OAK = OAK தேவரின் மகன்

மிக வேகமாக வசனங்களை உச்சரிக்கின்றார்..

என்ன ஒரு ஒற்றுமை...!!

'திருவிளையாடல்' படத்தில் தட்சனாக நடித்தவர் ஓ.ஏ.கே.தேவர்.

திருவிளையாடல் தொடரில் அதே ரோலில் அவரது மகன் ஓ.ஏ.கே.சுந்தர்.

ஆஹா... ஓ.ஏ.கே.தேவரின் அந்த வசன் உச்சரிப்பு... அடடா..

"ஈசன்... ஹும்... யாரவன்?. இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ளும் பித்தன். பேய்கள் நடமாடும் சுடுகாட்டை கட்டிக்காக்கும் சடையன். அந்த இடுகாட்டுத்தலைவனின் மனைவியை இங்கு எதிர் கொண்டழைக்க யாருமில்லை.. போய்விடு".

என்ன வேகம், என்ன அட்சர சுத்தமான உச்சரிப்பு..!.

இன்று அந்த வசனத்தைப் பேசச் சொன்னால் எத்தனை பேர் தேறுவார்கள்...?.

Shakthiprabha.
15th June 2008, 09:45 AM
நன்றி கார்த்திக், சாரதா, ஆனா :bow:

சற்று உடல் நிலை சரியில்லாததால், என்னால் வெள்ளிக்கிழமை பகுதியைப் பற்றி உடனே எழுத முடியவில்லை.

நான் எழுத நினைத்ததை சாரதாவும் ஆனாவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஓ.ஏ.கே தேவரின் மகன் என்ற தகவலுக்கு நன்றி.

வேகமாய் அனல்பறக்கும் வசனங்கள் வீசி, சரியான உச்சரிப்பைக் கேட்க தாகம் கொண்டு அலையும் நம்மை, மகிழ்வித்தவர் யார் என்று நானும் யோசித்துக்கொண்டிருந்தேன்!

:clap:

aanaa
15th June 2008, 08:46 PM
The one which you mentioned as 'maambazham' is ஞானப்பழம்...?.
thank you

Shakthiprabha.
17th June 2008, 12:13 PM
"இனி எல்லோரும் எனக்குக் கீழ், ஈசன் எனக்குச் சமம்" என்று
மமதையில் வசனங்களை வீசும் தக்ஷனிடம் ஏனோ காழ்புணர்ச்சி வரவேயில்லை.
ஒருவேளை தமிழை இனிதாய் வழங்குவதால் நமக்கு இவரை பிடித்துப் போய்விட்டதோ என்னும் நம்
எண்ணம் தவறு என்பது போல் அடுத்து வரும் வருணனும், வாயுவும், அக்னியும் கூட
புன்சிரிப்புடனேயே தக்ஷனின் ஆணை ஏற்கின்றனர். தக்ஷனுக்கு அடிபணிவதைப் பற்றி சிறிதும் கவலையற்று காணப்பட்டனர். தக்ஷன் பிரம்மாவின் புதல்வன் என்பதால் எல்லோருக்கும் அடிபணிவதில் மகிழ்ச்சி இருக்கும் போலும். தஷனை 'தக்ஷப் ப்ரஜாபதி' என்றும் வழங்குவர் என்று புராணம் கூறுகிறது :? தக்ஷன் அஹங்காரத்தின் உருவாய் தெரிந்தாலும், மற்ற அரக்க குணங்கள் அற்று காணப்படுகிறான்.

பூமாதேவியும் கூட தக்ஷனுக்கு இனி அடிபணிந்தே இயங்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். குரு பகவானின்
வருகைக்கு பணிந்து நிற்கும் தக்ஷன், தன்னுடன் குருவும் இசைந்து, இணைந்து, இயங்கக் கோருகிறான்.

தக்ஷனைப் பற்றி பல வரலாற்றுக் கதைகள் உண்டு. தக்ஷன் பிரம்மாவின் வலது கட்டைவிரலிலிருந்து உருவானவன் என்றும் தக்ஷனின் மனைவியோ பிரம்மாவின் இடது கட்டைவிரலிலிருந்து உருவானவள் என்றும் கூறுவதுண்டு. சிலர் தக்ஷன் பஞ்சஜனியை மண்ந்தார் என்றும் கூறுவர். இவருக்கு புராணக் கதைகளின் வழக்குப் படி பல புதல்விகள் உண்டு. திருவிளையாடலில் தக்ஷன் "ப்ரசுத்தியை" மணந்ததாகக் கொண்டு கதையை கூறுகின்றனர். பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு

நம் கதையில் மூன்று புதல்விகளுடன் நிறுத்திவிட்டனர்.
தக்ஷனின் புதல்விகளான அஸ்வினியும் ரேவதியும் ரோஹிணியும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் 'யார் பெரியவர்' என்ற போட்டி நடக்கிறது. புலிக்கு பிறந்ததல்லவா! விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, முதலாமவள் "நான் தான் தக்ஷன், என் சொற்படித் தான் எல்லோரும் கேட்கவேண்டும்" என்கிறாள். மற்ற இருவரும் தங்கள் தான் தக்ஷன் தங்கள் சொற்படி தான் எல்லோரும் இயங்க வேண்டும் என்கின்றனர். "நான் என்ன அக்னி, வாயு, வருணனைப் போல் தலையசைத்து விடுவேனா, என் சொற்படி நீங்கள் கேளுங்கள்" என்று அதிகார தர்க்கம் துவங்குகிறது. இவர்களைப் பார்த்துப் பூரிப்படைகிறாள் பிரசுத்தி. அங்கு வந்து சேரும் தக்ஷனும் இதனைக் கண்டு மகிழ்கிறான். உலகமே உங்களின் கீழ் இயங்கும் போது, நான் எப்பேர்பட்ட பாக்கியசாலி என்று பெருமிதம் கொள்ளும் மனைவியிடம், தன் எண்ணதில் ஒரு பகுதி நிறைவேறி விட்டதென்றும் இன்னும் சில எண்ணங்கள் இருக்கிறது, அவையும் ஈடேறும் நாளை எதிர்ப்பார்த்திருப்பதாய் கூறுகிறான் தக்ஷன்.

சிவனும் ஷக்தியும் கைலாயத்தில் தக்ஷனைப் பற்றியும், அவனுக்களித்த வரத்தைப் பற்றியும் சம்பாஷணையில் ஈடுபட்டிருக்கின்றனர். நாரதர் வந்து சேருகிறார். "ஒருவனுக்கு ஆளும் திறமை இருந்தும், அருளிய வரம் இருந்தும், கூட ஷக்தி இருந்தாலல்லவா அவனால் இயங்க/இயக்கவிக்க முடியும்" என்று முன்னுரை வழங்கிச் செல்கிறார் நாரதர். அதன்படி ஷக்தி தக்ஷனிடம் வெகு விரைவில் சென்றடையும் நேரம் வந்து விட்டது என்று நாம் யூகிக்கிறோம்.

"உலகை அடக்கி ஆளும் அவன், இனி என்னையும் மருமகனக்கிப்) பணிய யுக்தி செய்திருக்கிறான்" என்று பூடகமாய் தெரிவிக்கிறார் இறைவன். நாரதர் சென்றவுடன் வழக்கம் போல் அஹம் சிறிதே தலை தூக்கிவிடுகிறது இறைவிக்கு. எங்கும் இயங்க ஷக்தி இல்லையேல் வழியேது என்று பெருமிதம் கொப்பளிக்க வினவுகிறாள்.

இது சிவனின் கோபத்தை தூண்டுவிடுகிறது. "நீரிலும் நெருப்பிலும், ஆகாயத்திலும், ப்ரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது யாம்...யாமன்றி வேறுண்டோ" என்கிறார்.

"அப்படி எங்கும் நிறைந்திருக்கும் ப்ரம்மத்தை இயங்கச் செய்பவள் ஷக்தி. என் இயக்கமின்றி இங்கு எதுவும் செயல்படாது.." என்று இவர்களின் வாதம் முற்றுகிறது..

( இனி அடுத்த பகுதியில் ஷக்தி சாபமேற்பாள்....)

தக்ஷனாக வரும் ஓ.ஏ.தேவரின் மகன் சுந்தருக்கு :clap: அவர் சொற்சுத்தம், தொனி, ஏற்ற இறக்கம், எல்லாமே வெகு அற்புதமாய் பொருந்த, தக்ஷனாகவே உருவெடுத்துவிட்டார்.

தக்ஷனின் மனைவியாக சுமங்கலி. (ட்ராமா புகழ்)
சிவனாய் ஸ்ரீதர் நன்று.

நேற்று நாரதர் "அடடா....உமையும், இறைவனும் தனித்திருக்கும் போது வந்து விட்டேனே...." என்று வருத்தப்படுகிறார். இரண்டொரு வார்த்தை பேசி தன் வேலை முடிந்ததும் "அமைதியாய் அளவளாவிக் கொண்டிருக்கும் போது நான் வந்ததே தவறு...நான் பிறகு வருகிறேன்" என்று உடனே புறப்பட்டு விடுகிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், யாரேனும் வந்து விட்டால், வலுக்கட்டாயமாய் புன்னகைத்து, காப்பி, பலகாரம் வேறு வழங்கவேண்டியிருக்கிறது. இறைவிக்கு காப்பி பலகாரம் வழங்கும் கடமையெல்லாம் கிடையாது. நாமோ, காப்பி பலகாரம் வழங்குவதோடன்றி, யோசித்த்து யோசித்து புதிதாய் ஏதேனும் சுவாரஸ்யமாய் பேசி, சிரித்து, அளவளாவி அவர்களை மகிழ்விக்கும் கடமையில் ஊந்தப்படுகிறோம். அவர்களும் லேசில் கிளம்பமாட்டார்கள். இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.

ஆனாலும் நாரதர் "பரலோகத்தில் அதிகாரத் தகராறு" என்று சொல்லும் போது, இகலோகமான பூமியில் நிகழும், பொறாமை போட்டி, இகழ்ச்சி, புகழ்ச்சி, வருததம், மகிழ்ச்சி என்ற இரட்டைகளைத் தாண்டி அங்கு சென்றாலும் "அஹங்காரதுடன்" மோதவேண்டுமா என்ற சலிப்பு ஏற்படுகிறது. இதனால் தான் எல்லாம் தாண்டிய 'ப்ரம்மநிலையே' பேரானந்தம் என்று சொல்கிறார்கள் பெரியவர்கள் என்று நினைக்கிறேன். ஆசையற்ற அறிவுநிலைக்கு ஈடேது!!

mr_karthik
17th June 2008, 04:02 PM
SP mam,

on reading last two paras, we afraid you soon become a 'saamiyaarini'. (kaavi dress kattikittu maraththadiyil pOy utkaaraamal irundhaal sari).

If anybody want to go to SP mam's home on Sundays, please think twice before you go.

just kidding........

your writing is really superb and touching, and it brings the effect of physically watching the episode.

keep up your writing as long as the serial goes.

selvakumar
17th June 2008, 04:16 PM
I just saw a scene in this.

அன்னை சரஸ்வதி : அவன் என்னுடைய பிள்ளை அல்லவா ?
பிரம்மா : ம்ம்.... நம்முடைய பிள்ளை ! :banghead: :lol: (He grins)

Dialogue writer :hammer: Oru masala serial paartha effect antha scene la. Konjam chinnapullathanaama irukku ithu :lol:

Anyway, haven't seen any of the episodes fully. The sets are good and cool. Let me see any one episode fully and comment on this.

Shakthiprabha.
17th June 2008, 05:40 PM
karthik,

:)

selva,




Dialogue writer :hammer: Oru masala serial paartha effect antha scene la. Konjam chinnapullathanaama irukku ithu :lol:



நான் முன்பு கூறியதைப் போல், பலதரப்பட்ட மக்களை தொடரைக் காணச் செய்வதற்கு இது போன்ற அரிய நகைச்சுவையும், வசனங்களும் இணைத்திருக்கிறார்கள் (அள்ளி இறைத்திருக்கிறார்கள்) என்று எண்ணுகிறேன். இத்தகைய நகைச்சுவை நமக்கு நகையை வரவழைக்காத பக்ஷத்தில் நாம் கண்டும் காணாமலும் போவதே உத்தமம் :roll: :cry:

தொடரின் அடித்தளமாய் நிற்கும் சொல்லப்படாத கருத்துக்களும், மெல்லியதாய் இழையோடும் பாடங்களும் மட்டுமே ஏற்பது நன்று.

:?

aanaa
17th June 2008, 07:48 PM
தக்ஷனைப் பற்றி பல வரலாற்றுக் கதைகள் உண்டு. தக்ஷன் பிரம்மாவின் வலது கட்டைவிரலிலிருந்து உருவானவன் என்றும் தக்ஷனின் மனைவியோ பிரம்மாவின் இடது கட்டைவிரலிலிருந்து உருவானவள் என்றும் கூறுவதுண்டு. சிலர் தக்ஷன் பஞ்சஜனியை மண்ந்தார் என்றும் கூறுவர். இவருக்கு புராணக் கதைகளின் வழக்குப் படி பல புதல்விகள் உண்டு. திருவிளையாடலில் தக்ஷன் "ப்ரசுத்தியை" மணந்ததாகக் கொண்டு கதையை கூறுகின்றனர். பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
நன்றி இடைசெருகல்களுக்கும்..



இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், ....
இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.

டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
கல்யாணம்
பூப்புனித நீராட்டு
வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்

ஓய்வே இல்லை.

இப்பொழுது
ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...


தொடருங்கள் உங்கள் பாணியில்
:clap:


SP mam, ...

:D

aanaa
18th June 2008, 07:17 AM
தாட்சாயினி யாக - சுஜிதா ஸ்ரீ
கணவருக்காக நாடகதின் கதாநாயகி்
காற்றுக்கென்ன வேலி யின் கதாநாயகியு்மான இவர்
பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் குழந்தை நட்சத்திரமுமாவார்.

எல்லா நாடகங்களிலும் ஏதாவதொரு வேடத்தில் தலைகாட்டும் 'பிரியங்காவும்"
இங்கும் ஒரு நடத்திரம் ( 27 ல் 1, அஸ்வினி =?)

Shakthiprabha.
18th June 2008, 12:18 PM
டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
கல்யாணம்
பூப்புனித நீராட்டு
வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்

ஓய்வே இல்லை.

இப்பொழுது
ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...


தொடருங்கள் உங்கள் பாணியில்
:clap:

உலகெங்கும் உள்ள பொதுநடப்பு :)

பொதுவாய் ஞாயிற்றுக்கிழமை சடங்குகள், கொண்டாட்டங்கள் வைத்துக் கொண்டால் விடுப்பு எடுக்க நேராமல் ஆஜாராவது எளிது என்று பலர் கருதிகிறார்கள் :)



SP mam, ...

:D

:? :thinking: :?

__

பி.கு: நடிகர்களின் பெயர் அறிவிப்புகளுக்கு நன்றி. எனக்குப் பொதுவாய் சீரியலில் நடிப்பவர்கள் பெயர்கள் தெரிவதில்லை. தெரிந்த சிலதும் நினைவில் நிற்பதில்லை.

Shakthiprabha.
18th June 2008, 12:21 PM
"யாமனறி பிறிதொன்றும் உண்டோ" (இங்கு சிவம் எனப்படும் தத்துவத்தை விருப்பமுள்ளவர்கள் "சத் -சித் -ஆனந்தம்" (சச்சிதானந்தம்) ஆன பரம்பொருள் என்று பொருள் கொள்ளலாம்)

"கதிரவன் எழுவதும் விழுவதும், காற்றும், ஒளியும், நீரும் பஞ்ச பூதங்களுமாய் திகழ்வது யாம். எல்லாம் எமக்குள் அடக்கம்" (எல்லாமே நானாகிப் போகிறேன்) என்று இறைவன் கர்ஜிக்க
இன்னும் ஒரு மாத்திரை ஷ்ருதியை ஏற்றி, "ஆனால் நீரோ எமக்குள் அடக்கம்" என்கிறாள் ஷக்தி.

(ஷக்தி எனப்படுவது, எங்கும் இயக்கமாய் இயங்கும் ஆற்றல், அருட்பேராற்றல்)

இறுதியில் கோபமுற்ற சிவன், ருத்ர மூர்த்தியாய் பேருருவெடுக்கிறார். அண்டமெங்கும் அதையும் தாண்டியும், முடிவுறாத பரப்ப்ரம்மமாய் எல்லைகள் கடந்து எல்லைகளற்று எங்கும் நீக்கமற வியாபித்து நிற்கிறார். சிவன் இயக்கமற்று (ஷக்தியின்றி தனித்து) நின்றவுடன், எங்கும் இயக்கங்கள் நின்று போகின்றன. கடலும் காற்றும் ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. இகத்திலும் பரத்திலும் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்கிறது. (இதனை பேரழிவின் நிலைக்கு ஒப்பாகக் கொள்ளலாம். பொதுவாக ஆக்கல் அல்லது உயிர்களின் தோன்றலின் போது, ஒன்றாய் திகழ்ந்திருக்கும் உயிர்சக்தி, பல்வேறு துகளாய் சிதறி வெவ்வேறு ரூபங்கள் கொள்கிறன. மீண்டும் அவை அந்த ஆதியான ஒன்றுடன் (சிவம்) கூடுவதை நாம் பேரழிவு என்கிறோம். (அஃதாவது ஆறுகள் கடலுடன் கலப்பது போல்.)

சிவன், மட்டுமே இயக்கநிலையில் அல்லாது தனித்து நிற்கும் போது, எங்கும் சொச்சமாக நிற்பது வெறும் "இருப்பு" மட்டுமே.

சராசரமெங்கும் நிறைந்து நிற்கும், காலநேரமற்ற சிவனின் இருப்பை கண்ட ஷக்திக்கு, உடல் நடுங்குகிறது. மெய் துவள்கிறது. தான் பெரிய தவறு செய்து விட்டதை உணர்கிறாள். சிவம் என்பதே இல்லாத போது ஷக்தி எனும் இயக்கநிலைக்கு ஏது அர்த்தம்? சிவனும் ஷக்தியும் இணைதலில் தான் பிரபஞ்சத்தின் செயல்பாடு நிகழ்கிறது. மீண்டும் கல்வியா/செல்வமா/வீரமா தர்க்கத்தை போல், ஒன்றை ஒன்று சார்புடையது. (dependant). இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது? எது சார்ந்தது எது சாராதது? இதற்கு பதில் தேடுவதே அனர்த்தம்.

உடல் நடுங்க, பயத்திடன், பவ்யத்துடன், தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஷக்தி சிவனிடம் மன்னிப்பு வேண்டுகிறாள். சிவன் சற்றே சாந்தமடைந்ததும், "வீண்தர்க்கம் செய்த பலனாய் பூமியில் பிறப்பெடுத்து கர்மத்தை நீயே கழித்துவிட்டுத் திரும்பு" என்று சொல்ல, உமையவள் உடன் பூமியில் அவதரிக்கிறாள்.

அழகிய இளஞ்சிவப்புத் தாமரை மலரில் சங்கின் வடிவம் கொண்டு ஆற்றிலே மிதந்து தக்ஷனின் கைக்கு வந்து சேருகிறாள். தக்ஷன் சங்கினைத் தொட்டதும் சங்கு அழகிய குழந்தையாய் உருவெடுக்கிறது. தக்ஷனும் பெருமகிழ்ச்சிக் கொள்கிறான். அவன் மனைவி ( புராணத்தின் படி பாஞ்சஜனி, பிரசுத்தி, அசுக்லி என்ற மனைவியர் தான் கேள்வி பட்டதுண்டு. நம் திருவிளையாடலில் தக்ஷன் மனைவியின் பெயர் வேதவல்லியாக்கபட்டிருக்கிறது) வேதவல்லியிடம் தம் அருமை மகளை வளர்க்கும் படி கூறிகிறான். தக்ஷனின் மகள் என்பதால் "தாக்ஷாயணி" என்று பெயர் சூட்டி செல்லமாய் வளர்க்கபடுகிறாள்.

தாக்ஷாயணி சிறு வயது முதல் சிவபூஜையில் ஈடுபடுவதும், சிவனைத் துதிப்பதுமாய் இருக்கிறாள். தக்ஷனுக்கும் உமையவளே தாக்ஷாயணியாய் உருவெடுத்திருப்பது புரிகிறது. காலங்கள் மிக வேகமாய் உருண்டோட,

(..............புராணத் தொடர்களில் ராமந்த் சாகரின் ராமாயணம், மஹாபாரதம், மற்றும் தற்போது ஞாயிறன்று தமிழ்ப் படுத்தபட்டு ஒளிபரப்பாகும் ராமாயணமும் பார்த்ததன் விளைவு, குழந்தைகள் பெரியவர்களாய் வளர குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் (பகுதிகள்) என்று மனதுள் வாங்கிப் பழகி விட்டது. சிறு குழந்தையாய் இரு நிமிடம் சிவனுக்கு பூஜை செய்த தாக்ஷாயணி, அடுத்த வினாடி, இளங்குமரியாய் பருவப்பெண்ணாய் மாறிவிடுகிறாள். பழைய தமிழ் திரைப்படங்களில் பாடிக்கொண்டே ஆடிக்கொண்டே, பந்து விளையாடிக்கொண்டே இரு வினாடியில் வளர்ந்துவிடும் சிறுவர்களைப் போல்.......)

நம் தாக்ஷாயணியும் வளர்ந்து விடுகிறாள்.

(மீண்டும் நாளை)

சிவன் உயர்ந்தோங்கி வியாபித்திருக்க, எங்கும் இருள் சூழ்ந்திருப்பதை புரியவைக்க சில பாத்திரங்களைப் பேசச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் சரஸ்வதி பிரம்மா, லக்ஷ்மி விஷ்ணுவும் உண்டு. எல்லா இடமும் இருட்டாய் இருக்க, இவர்கள் முகத்தைச் சுற்றி, டார்ச் அடிப்பது போல் 'ஸ்பாட் லைட்'. ஒருவேளை அவர்களின் ஞான ஒளிவட்டமாய் இருக்கலாம். நம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டால், அங்கு விளங்கும் சூழ்நிலைக்கு ஒப்பாய் இருந்தது.

இந்தப் பாத்திரங்கள் "பெண் கோபம் கொண்டால் எப்பேர்பட்ட நஷ்டம்' என்று படையப்பா ரஜினியைப் போல் வசனம் பேசினர். கோபம் என்பது பொதுவான ஒரு உணர்ச்சி. அது ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் அழிவை உண்டு பண்ணும். இங்கே ஏன் பாகுபாடு?

போதாத குறைக்கு "கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டாம், எனினும் ஒரு பெண் அடக்கமாய் இருப்பது அவசியம்" என்று திருமால் திருவாயால் திருவருளினார்.

"ஷக்தியாகவே இருந்தாலும் பெண்புத்தி பின்புத்திதான், அவசரப்பட்டு நானும் பெண் என்று நிரூபித்து விட்டேன்" என்று இறைவி தேவையற்ற வசனங்களை உதிர்க்கிறார்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் சமத்துவம் பேசிக்கொண்டு, இத்தொடரை பார்த்துக்கொண்டிருக்கும் சாமான்யர்களுக்கு இவர்கள் சொல்லவரும் செய்தி என்ன?

நம் மதத்தில் சொல்லப்பட்ட சமத்துவக் கருத்துக்கள் ஏராளம்.
ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சமநிலை நோக்கை கொண்டுள்ள மதம் என்ற பெருமை நமக்கு உண்டு.

நம் புராணங்களில், மதத்தில் வழங்கப்பெற்றுவரும் அறிவுரைகளை, கருத்துக்களை, உவமைகளை, தர்க்கத்திற்குரியவைகளாக ஆக்கவேண்டாமே.


வீண்வாதம் செய்வதும், தர்க்கம் செய்வதும், கோபம் கொள்வதும், ஆணவம் கொள்வதும் தவறு, அது 'ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி'

ஜனரஞ்சகமாக வழங்குகிறேன் பேர்வழி என்று இப்படிப்பட்ட வசனங்களை இணைத்து எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.

mr_karthik
18th June 2008, 12:47 PM
பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
those kadavuLs and saints married too many wives, but preaching thaththuvam as "oruvanukku oruththi" only for us.

they should follw it first.




இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், ....
இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.

டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..
விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
கல்யாணம்
பூப்புனித நீராட்டு
வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்

ஓய்வே இல்லை.

இப்பொழுது
ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...

if these functions arranged in working days, who will come?. thatswhy they are choosing holidays.

aanaa, if you go to north pole there will be very very less population and you will get complete rest.

Shakthiprabha.
18th June 2008, 12:54 PM
பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
those kadavuLs and saints married too many wives, but preaching thaththuvam as "oruvanukku oruththi" only for us.

they should follw it first.


காத்திக், நம் மதத்தில் கடவுளை (இயற்கையை) உருவ வழிபாட்டிற்காக (நம் வசதிக்காக) உருவமேற்கச் செய்துள்ளனர். (nature is personified)

இருபத்தேழு பெண்களும் இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவர்களின் கணவராய் சொல்லபடுபவன் சந்திரன் (moon)

எல்லாம் நம் புரிதலில் உள்ளது.

உங்கள் வசதிக்குத் தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' தத்துவம். விலைவாசி இருக்கும் நிலையில் இதற்கு மேல் தாங்காது :D

aanaa
18th June 2008, 06:10 PM
aanaa, if you go to north pole there will be very very less population and you will get complete rest.

:rotfl:
:rotfl:

(விழுந்து விழுந்து சிரித்தேன்)

மனமும் - உடம்பும்

எங்கிருந்தாலும் தனித்திருக்கலாம்

aanaa
18th June 2008, 06:13 PM
எல்லாம் நம் புரிதலில் உள்ளது.
:D
பழைய படம் :ஜெமினி சாவித்திரி

ஊருக்குப் பயந்து தான் ஒரு பெண்ணுடன் வாழ்வதா
இல்லையென்றால் --

aanaa
18th June 2008, 06:20 PM
ஒன்றை ஒன்று சார்புடையது. (dependant). இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது? எது சார்ந்தது எது சாராதது? இதற்கு பதில் தேடுவதே அனர்த்தம்.
அருமை


புராணத்தின் படி பாஞ்சஜனி,
ஏன் வேதவல்லி???





். பழைய தமிழ் திரைப்படங்களில் பாடிக்கொண்டே ஆடிக்கொண்டே, பந்து விளையாடிக்கொண்டே இரு வினாடியில் வளர்ந்துவிடும் சிறுவர்களைப் போல

நம் தாக்ஷாயணியும் வளர்ந்து விடுகிறாள். :clap:



ஜனரஞ்சகமாக வழங்குகிறேன் பேர்வழி என்று இப்படிப்பட்ட வசனங்களை இணைத்து எரிச்சலூட்டியிருக்கிறார்கள். :banghead:

Shakthiprabha.
18th June 2008, 07:27 PM
புராணத்தின் படி பாஞ்சஜனி,
ஏன் வேதவல்லி???



புரியவில்லை ஆனா! நானும் வலையைச் சலித்து தேடிவிட்டேன், வேதவல்லி என்ற பெயர் கொண்டவளாய் தக்ஷனின் மனைவி எங்குமே சுட்டிக்காட்டப் படவில்லை :?

Shakthiprabha.
19th June 2008, 11:40 AM
தாக்ஷாயணி இரவும் பகலும் சிவனின் சிந்தனையில் பொழுதைக் கழிக்கிறாள்.
வெகு சிரத்தையுடன், பூஜை செய்கிறாள். மலர்கள் சேகரிப்பதும், அபிஷேகம் செய்து
சிவனை வழிபடுவதுமே அவளுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

மெய்வருத்தி இறைப்பணி செய்வதை தந்தை கண்டால்
மனம் வருந்தக் கூடுமோ என்று அஞ்சுகிறாள். தக்ஷன், தன் மகளின்
செய்கையில் பெருமை கொள்கிறான். "ஈசனோ என் சித்ததில் உறைபவர் தாங்களோ
என் எண்ணத்தின் இருப்பவர். ஈசனிடம் நான் கொண்டிருப்பது பக்தி, தாங்களிடம்
நான் வைத்துள்ளது அளவற்ற பாசம்" என்று தாக்ஷாயணியும் தந்தையின் செல்ல மகளாகவே
வளர்கிறாள். சிறுவயது முதல் தக்ஷனிடம் வளர்ந்து வருவதால், அவன் சிவ பூஜை செய்வதைப்
பார்த்து அவனின் சிவபக்தையைக் கண்டு தாக்ஷாயணியும் அவ்வாறே சிவபக்தி கொண்டுவிட்டாள்
என்று உவகைக் கொள்கிறாள் வேதவல்லி.

சோமன்(சந்திரன்) தன் மூன்று மனைவியருடன் தக்ஷனைக் காணவருகிறான். மூன்று மகள்களுள்
க்ருதிகையிடம் அவன் அதிகம் அன்பு பாராட்டுகிறான். இது மற்ற இருமனைவிகளுக்கும் மனவருத்தம்
தருகிறது. ( சோமன் ரோஹிணியிடம் அதிகப் பிரியத்துடன் இருந்தான் என்று தான் கதையுண்டு.
திருவிளையாடற்புராணத்தைப் பற்றி எந்த நூலை மையமாகக் கொண்டு ஆராய்ந்து கதையமைதிருக்கிறார்கள் என்று புரியவில்லை)

சஹோதரிகள் தாக்ஷாயணியைக் காணச் செல்கின்றனர். அவள் பூஜை செய்யும் அழகைக் பார்த்திருக்கின்றனர்.
முதன் முறையாக சகோதரிகளிடம் தன் மனதை திறந்து ஆசையை வெளிப்படுத்துகிறாள் தாக்ஷாயணி.
தான் மூன்று காலமும் சிவபூஜை செய்வது, அந்த சிவனையே மணானாகப் பெறுவதற்காக என்று கூறுகிறாள்.
முப்பொழுதும் அவனையன்றி என் மனம் வேறொன்றை நினைக்க மறுக்கிறது என்று வெட்கத்துடன் தெரிவிக்கிறாள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவள் தாய் அதிர்ச்சியடைகிறாள். தக்ஷனிடம், மகள் கூறியதைக் இயம்பி,
தன் பயத்தை வெளியிடுகிறாள். "ஆடும் வயதில் த்யானத்தில் ஈடுபட்டாள். மண்டபம் கட்டிக் கொடுத்தோம்,
பின் அங்கு செய்ய சிவலிங்கம் வேண்டும் என்றாள். செய்து கொடுத்தோம். இன்று அந்த சிவனே வேண்டுமென்கிறாளே" என்று பதபதைக்கிறாள்.

தக்ஷனுக்கு சொல்லொணா மகிழ்ச்சியுண்டாகிறது. அவன் மனைவிடம் இதைப் பற்றி சிறுதும் கவலைக் கொள்ளவேண்டாம், செய்வது என்ன என்று தனக்கு தெரியும் என்று ஆணையிடுகிறான். அவன் மனம் முழுதும் ஆணவத்தின் சாயை படிய எக்காளிக்கிறான். "இனி அந்தச் சிவனும் என்னை வணங்கவேண்டும்" என்று குதூகலிக்கிறான்.

வைகுந்தத்தில், அக்னியும், வாயுவும், வருணனும், நாரதர் சமேதமாகச் சென்று தங்கள் வருத்தத்தைத் தெர்விக்கின்றனர். அவர் ஆணைப்படி ஆடி ஆடி ஆட்டம்கண்டிருக்கிறோம் என்கின்றனர். தங்களது சுதந்திரம் பறிபோய்விட்டதாய் புலம்புகின்றனர்.

திருமால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது எனினும், ஒரு உபாயம் கூறுவதாகக் அருளுகிறார்.

(தொடரும்)

ஆழியின் நடுவே பாம்புப் படுக்கை அமைப்பில் பின்னே நாகத்தின் தலையும் அசைவது போல் செய்திருக்கிறார்கள். சிறு விஷயங்களிலும் கவனமெடுத்து, வைகுந்தக் காட்சியில் எல்லாம், ஆழியின் ஒலி அடித்தளத்தில் ஒலித்துக்கொண்டே இருப்பது பாராட்டத் தக்கது.

தாக்ஷாயணியாக சுஜிதா நன்றாக நடித்துள்ளார். வேதவல்லியாக சுமங்கலி நன்றாக நடித்திருக்கிறார்.

இருவரும் இருக்குமிடமே தெரியாமல் செய்துவிடுகிறார் ஓ.ஏ.கே சுந்தர். என்ன ஒரு அலட்சியம்! அட்டகாசம்! மந்தகாசப் புன்னகை! சொற்சுத்தம்! நடை! பாவனை! :clap: இது வரை நடித்த பலரில் (ஸ்ரீதர் பூவிலங்கு மோஹன் உட்பட) இவருக்கே முதல் பரிசு!

ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.

mr_karthik
19th June 2008, 12:14 PM
// தாக்ஷாயணியாக சுஜிதா நன்றாக நடித்துள்ளார். வேதவல்லியாக சுமங்கலி நன்றாக நடித்திருக்கிறார். இருவரும் இருக்குமிடமே தெரியாமல் செய்துவிடுகிறார் ஓ.ஏ.கே சுந்தர். என்ன ஒரு அலட்சியம்! அட்டகாசம்! மந்தகாசப் புன்னகை! சொற்சுத்தம்! நடை! பாவனை! இது வரை நடித்த பலரில் (ஸ்ரீதர் பூவிலங்கு மோஹன் உட்பட) இவருக்கே முதல் பரிசு!

ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.//

yes SP mam,

I also feel the same. O.A.K.Sundhar is one of the very few, speaking very good 'thamizh'. Most of the others speaking 'tamil', which is so horrible to digest in this serial.

Shakthiprabha.
19th June 2008, 12:37 PM
:yes: :)

aanaa
19th June 2008, 05:23 PM
சோமன்(சந்திரன்) தன் மூன்று மனைவியருடன் தக்ஷனைக் காணவருகிறான். மூன்று மகள்களுள்
க்ருதிகையிடம் அவன் அதிகம் அன்பு பாராட்டுகிறான். இது மற்ற இருமனைவிகளுக்கும் மனவருத்தம்
தருகிறது. ( சோமன் ரோஹிணியிடம் அதிகப் பிரியத்துடன் இருந்தான் என்று தான் கதையுண்டு.
திருவிளையாடற்புராணத்தைப் பற்றி எந்த நூலை மையமாகக் கொண்டு ஆராய்ந்து கதையமைதிருக்கிறார்கள் என்று புரியவில்லை)


புராணக் கதைகளை ஆதாரமில்லாமல் சிதைப்பது வரவேற்கத்தக்கதல்ல.
:huh:



ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.
:exactly:

Shakthiprabha.
19th June 2008, 05:33 PM
ஆனா,

ஆதாரமின்றி இவ்வளவு பெரிய தயாரிப்பில் இத்தனை பேர் பார்க்க தொடரை சித்தரிக்க மாட்டார்கள் என்பது என் கருத்து.

நமக்குத் தான் தெரியவில்லை எதை ஆதாரமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார்கள் என்று. :?

Shakthiprabha.
20th June 2008, 09:31 AM
தக்ஷனின் பிரச்சனைக்கு திருமால் உபயம் வழஙகுகிறார். சோமன் தன் மனைவியர் அத்தனைப் பேரிலும்
க்ருத்திகையிடம் (நம் கதையின் படி. எந்த நூலைப் புரட்டிப் படித்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள் என்று புரியவேயில்லை ) மட்டுமே அதிகப் ஆசை வைத்திருக்கிறான்.

(ரோஹிணியிடம் ப்ரியத்துடன் இருப்பதாகத் தான் அனைத்து வலைப்பதிவுகள் / சுட்டிகள் தெரிவிக்கின்றன. ரோஹினி எனபவளுக்கு அழகு, அழகுச்சாதனங்கள், ஆபரணங்கள் சம்பந்தபட்ட அனைத்தும் ப்ரியமானதாகக் கருதப்படுகிறது. (அதனால் இந்நட்சத்திரத்தின் ஆளுமையில் பிறந்தவர்களுக்கும் இதே பொன்ற ஆசைகள் இருக்கக்கூடும்) அழகனாம் சந்திரனும், இவளிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்துபவனாகக் கருதப்படுகிறான். அஃதாவது ரோஹிணி நட்சட்த்திரத்தின் 'காரகன்' சந்திரன். Astrologically, this constellation is ruled by the planet moon )

சோலைவனத்தில் காதலின் பிடியில் சிக்கித் தவித்து, கவிதைகள் பிதற்றியபடி தன் ஆசை மனைவி க்ருத்திகையைத் தேடுகிறான். ஆவலுடன் அங்கு வரும் அச்வினியையும், ரேவதியையும், எரிச்சலுடன் திருப்பி அனுப்பிவிடுகிறான். க்ருத்திகையிடம் பிரியமாக இருப்பதை, சுட்டிக் காட்டி திருமால் "சோமனின் குடும்ப்பத்தில் ஏதோ பிரச்சனையாமே என்று அடி எடுத்துக் கொடுக்கிறார்"

"உங்கள் கண்ணசைவிற்கு ஆயிரம் அர்த்தங்கள்" என்று உடனே புரிந்து கொண்ட நாரதர், தம் வேலையைத் துவங்குகிறார். தனித்திருக்கும் மற்ற சஹோதரிகளிடம், அவர்களின் பரிதாபத்தை, கோபத்தை, ஆதங்கத்தை தூண்டிவிடுகிறார். "எங்கள் சஹோதரி அல்லவா சந்தோஷமாக இருக்கிறாள், இதில் எங்களுக்கும் ஒன்றும் பிரச்சனையில்லை" என்று மழுப்பப்பார்த்தாலும், வாடிய முகங்கள், அவர்களின் சந்தோஷமற்ற நிலையை காட்டிக்கொடுத்து விடுகிறது. இங்கேயே இருந்துகொண்டு வாடுவதை விட உங்கள் தந்தையிடமே சென்றுவிடலாம் என்கிறார் நாரதர்.

இதற்கு வழிவகுக்குமாறு, சோமனிடமும், ஆசையற்ற மனைவிகளை இங்கேயே வைத்திருப்பதில் என்ன பயன், உங்களின் சந்தோஷ வாழ்வைப் பார்த்து அவர்கள் பெருமூச்சுவிடுவார்கள். பொறாமைப் படக்கூடம், அது உங்களை வாழ விடாமல் செய்து விடும் என்றவுடன், அவர்களை தந்தையிடமே அனுப்பிவைக்க உடன் புறப்பட்டு விடுகிறான் சோமன். க்ருத்திகைக்கு மிகுந்த கோபமும் மனவருத்தமும் நாரதரின் பேரில் உண்டாகிறது.

பலத்த தர்க்கத்தில் சோமனும் மற்ற மனைவியரும் ஈடுபடுகின்றனர். ஒரு கொடியில் பூத்த மலர்கள் நாங்கள், ஒன்றை மட்டும் சூடிக்கொண்டு, மற்றதை வீசிவிடுவது தான் நியாயமா என்று பொருமுகிறாள் அஸ்வினி. க்ருத்திகையைப் போல் என் மனதை புரிந்து கொண்டு அன்பு செலுத்தத் தவறியது, இவர்களின் தவறே என்று வாதிட்டு, அவர்களைத் தங்கள் தந்தையிடமே அனுப்புவிடுகிறான் சோமன்.

தனித்து இருவரும் வந்திருப்பதைக் கண்ட தாயிடம், பின்னர் கணவர் வருவதாகக் கூறி சமாளிக்கின்றனர். க்ருத்திகையும் பிறகு வருவாள் என்கின்றனர்.

தக்ஷனுக்கும் இந்த செய்தி எட்டுகிறது

(தொடரும்)

க்ருத்திகையாக வரும் நடிகை பேசும் தமிழ், கொஞ்சிக் கொஞ்சி எரிச்சலூட்டுகிறது. பாடத்தை உருவேற்றி அப்படியே ஒப்பித்துவிடுகிறார். அதில் பாவம்(bhavam), ஏற்ற-இறக்கம் என்று எதுவுமே இல்லை. ரேவதியாக செய்திருப்பவர் நன்று. அதை விட அஸ்வினியாக வரும் நடிகை வெகமாய், அழகுத் தமிழில் பொரிந்து தள்ளுகிறார். பாராட்டுக்கள்.

"சந்தோஷமாக இருக்கிறீர்களா" என்று கேட்கும் வேதவல்லியிடம்

"ம்ம் இருக்கிறாள்" என்ற அஸ்வினியின் ஒற்றை பதில் அனைத்தையும் கூறிவிடுகிறது. ரசிக்க முடிகிறது :clap:

நேற்றே கூறவெண்டுமென்று நினைத்தாலும், தயக்கத்தின் காரணாமாய் கூறாமல் விட்டுவிட்டேன். தயக்கமாய் இருப்பினும் இன்றேனும் இதைக் கூறாமலிருக்க முடியவில்லை. நேற்று, ரேவதி/அஸ்வினி உடைகளும் இன்று ரேவதி அணிந்திருந்த உடையும் உருத்தும்படி இருக்கிறது. அஃதாவது, கைவைக்காத (ஸ்லீவ்லெஸ்) உடைகள் அணிய நடிகைகளுக்கு தயக்கமிருப்பின், ஒன்று உடையை மாற்றிவிடலாம், இல்லாவிட்டால் நடிகையை மாற்றிவிடலாம். இரண்டும் இல்லாவிற்றால், சிறிதளவு கைகளையும் சோளியின் நீளத்தையும் நீட்டிவிடலாம். இது எதுவுமே இன்றி, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ராஜ உடைகளை, தோல்நிறத்தில் இல்லாத வெள்ளை நிற (கை வைத்த) ஸ்லிப்களோடு :banghead: அணிந்துக்கொண்டு உடையையும் கேவலப்படுத்தி, தாங்களும் கேலிக்குள்ளாக்கிக்கொள்கிறார்கள். இது பார்ப்பதற்கும் படுமோசமாய் இருக்கிறது.

சோமனும் க்ருத்திகையும் பேசிக்கொள்வதற்கு மிக அழகான ஊஞ்சல், அதில் பூ அலங்காரங்கள் என்று பிரமாதப்படுத்தியிருந்தார்கள். பின்னால் பொடப்பட்டுள்ளது மட்டும் சுவரொட்டி என்று அழகாய்த் தெரிகிறது. ஏதேனும் சோலையில் சென்றே இக்காட்சியை எடுத்திருக்கலாம்.

சோலையின் (!!) முன்னால் அட்டைப் பூக்களை காற்றில் அசையச்செய்வதற்காக, பொம்மலாட்டட்தில் தேர்ச்சியின்றி ஆட்டுவது போல் ஆட்டியிருக்கிறார்கள். அது மென்பொருள் உபயோகித்து செய்யப்பட்ட க்ராஃபிக்ஸ் எனும் பக்ஷத்தில், படு சுமாரான வேலை.

தஷன் அரண்மணையில் பல இடங்களில் அட்டைத் தூண்கள் இளிக்கின்றன. சாகரின் ராமாயணம், மஹாபாரதம் முதலிய தொடர்களில் காட்சியமைப்பிற்காக எத்தனை அதிகம் செலவிட்டிருப்பார்கள் என்று இத்தொடரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்! நல்முயற்ச்சியுடனும் நோக்கத்துடனும் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்தொடரில் பணமும் முயற்சியும் சற்று அதிகமாகக் காட்சியமைப்பிற்காகவும் ஒதுக்கினால் இன்னும் பிரமாதப் படுத்தலாம்.

வைகுந்தத்தில் செய்திருக்கும் ஆழியமைப்பு, அதைச் சேர்ந்த க்ராஃபிக்ஸ் நன்று.

சோமனுக்கும் அவன் மனைவியருக்கும் நடக்கும் தகராறில், பொதுவாய், ஆசையின்றி, ஊருக்காக வாழும் கணவன் மனைவியின் நிலை படமாக்கப் பட்டது போல் இருந்தது. ஊர் என்ன சொல்லும்! உற்றாரிடம் எந்த முகத்தைக்கொண்டு விழிப்போம், அடடா குழந்தைகள் அனாதையாகிவிடுவார்களே என்ற நினைப்பில் ஆசையற்ற தாம்பாத்யம் கொண்டுள்ள பலரின் மனவாட்டதை படம் பிடித்து காட்டியுள்ளார்கள்

aanaa
20th June 2008, 05:53 PM
சக்திப்பிரபா!
உன்னிப்பாக கவனித்து விமர்சனங்களை எழுதி வருகின்றீகள்
:clap: :clap:

தொடருங்கள்

aanaa
20th June 2008, 05:55 PM
சந்திரனாக கோல்டன் சுரேஷ்்
ரேவதி = பிரியங்கா

அஸ்வினி / கிருத்திகை யார் ???

Shakthiprabha.
24th June 2008, 10:56 AM
சென்ற வெள்ளியன்று தொலைக்காட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தொடரைக் காணா இயலவில்லை. இவ்வாரத்தின் ஆரம்பத்தின் சந்திரன் சிவனிடம் முறையிடும் காட்சியிலிருந்து ஆரம்பித்திருந்தார்கள். எனில், சந்திரனை தக்ஷன் சாபத்திர்க்கு உள்ளாக்கியிருக்கவேண்டும். சந்திரனின் தேஜஸ் குறைந்து குன்றி அவன் தேய்ந்தே இறந்து போகும் படி சாபமிடுகிறான் தஷன். இதனைத் தொடந்து பயத்தில், இறைவனாம் ஈசனை சந்திரன் நாடுவதாக கதை உண்டு.

இறைவனிடம், சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை எடுத்துரைத்து கருணை வேண்டி நிற்கிறான். இறைவனும், 'மாதத்தின் 15 நாட்கள் தேய்ந்து மங்கிப் போனாலும் மீதமுள்ள 15 தினங்கள் உன் ஒளி கூடி, வளர்ந்து பூரணமடைவாய்' என்று சாபத்தை தணிக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்ட தஷன், தாங்கொணா கோபத்திற்குள்ளாகிறான். 'பெற்று வளர்த்தவன் நான், பெற்றவனுக்கல்லவா தெரியும் வாழாத பெண்களின் துயரம். இவன் சர்வலோக நாயகன் என்ற பட்டதை ஒரு காலத்தில் பெற்றவனாய் இருக்கலாம். அவனிடமிருந்து நான் அதைப் பறித்து பலகாலமாகிவிட்டது. என் வரத்தை தணிக்க இவன் யார்!' என்றெல்லாம் ஆத்திரத்தில் கூச்சலிடுகிறான். இதனைக் கேட்ட தாக்ஷாயணி வேதனை அடைகிறாள். அவன் சிவ நிந்தனை செய்வது தவறு என்று எடுத்துரைக்கிறாள். என் மகளாய் இருந்தும் நீ ஈசனுக்கே பரிந்து பேசுகிறாயே என்று தக்ஷன் கடிந்து கொள்ளும் போது, அப்பேர்பட்ட பக்தியை அவளுக்கு கற்றுக்கொடுத்ததே அவள் தந்தை என்பதை நினைவு படுத்துகிறாள். தக்ஷனுக்கு மீண்டும் தன் வரம் நினைவுக்கு வர சிவனை தனக்கு அடங்கச் செய்யும் நாள் வெகு விரைவில் வரவிருக்கிறது என்று நினைத்து புன்னகைக்கிறான்.

சதா சிவ பூஜையில் ஈடுபட்டிருக்கும் தாஷாயணியை, தன் வயதொத்த பெண்களைப் போல் ஆடிப்பாடி களிக்கக்கூடாதா என்று வினவுகிறாள் அவள் தாய். வயதிற்கும் பக்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. என் மனம் ஆடிப்பாடி களிப்பது சிவனை துதிக்கும் போது தான் என்று பதிலளிக்கிறாள். அவள் சிவனிடம் கொண்டிருப்பது பக்தி மட்டுமல்ல, அவள் செய்வது பூஜை மட்டுமல்ல, அவரையே அடையவதற்கான தவம், அவரையே திருமணம் செய்து கொள்ள அவள் விழைவதாய் கூறுவது வேதவல்லிக்கு பெரும் கவலையை அளிக்கிறது.

பருவப்பெண்ணாய் வளர்ந்து விட்ட தாஷாயணியின் சிவபூஜைக்கு செவி சாய்க்கும் நேரம் வந்துவிட்டதால், இனி தாமதம் செய்யலாகாது என்று சிவன் பூலோகத்திற்கு புறப்படுகிறார். தன் சிநேகிதிகளுடனும், தமக்கைகளுடனும் நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, அங்கே திடீரென ஒரு கிழவர் தோன்றுகிறார். (அட சரியாய் யூகித்துவிட்டீர்களே...வேறு யாரும் அல்ல நம் சிவன் தான ) கிழவர் வேடத்தில் பெண்களிடம் வம்பு செய்கிறார் இறைவன். வம்பு வளர்த்து, தாஷாயணி மேல் தனக்கு பிரியம் இருப்பதாகவும், அவளை தூக்கிக்கொண்டு போய் திருமணம் செய்யவும் தயார் என்று சிரிக்கிறார். தாஷாயணி சற்று நேரம், பரிச்சயமான அவரின் பார்வையில் தன்னை மறந்தாலும், கிழவரின் பேரில் பெரும் கோபம் கொண்டு, அவரை விரட்டி விட எத்தனிக்கிறாள். 'நீ விரட்ட வேண்டாம், நானே சென்று விடுகிறேன்' என்று சிவன் மாயமாய் மறைந்து விடவும், எல்லோருக்கும் பீதி அதிகரிக்கிறது.

விரைந்து வந்து தங்கள் அன்னையிடம் முறையிட, அங்கும் அந்த கிழவனின் தோற்றம் தாஷாயணியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. அவள் நோக்கும் இடமெங்கும் கிழவன் சிரிப்பும், அழைப்பும் அவளுக்கு மட்டும் தெரிய, பீதி அதிகரிக்கிறது.

(தொடரும்)

தலையலங்காரங்கள் அழகாய் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். சுஜிதா கொள்ளை அழகுடன் வலம் வருகிறார். மற்ற இரு பெண்களான அச்வினியும், ரேவதியும், தங்களின் தந்தையர் வீட்டில் இன்னும் அழகாய் ஆடை அலங்காரத்துடன் காட்சியளிப்பது, பாராட்டத்தக்கது (அஃதாவது சந்திரன் அவர்களை சரியாய் பராமரிக்க தவறிய போது அவர்கள் ஆடைகள் சற்றே சுமாராக உடுத்தியது) ஆனாலும் அணியும் உள்ளாடைகளின் நிலை மட்டும் அப்படியே இருக்கிறது.

சந்திரன் தேய்வதும், குன்றுவதும் அழகாய் (சரியாய்) காண்பித்திருந்தனர். சுமங்கலியாய் வந்தவர் நன்றாக செய்கிறார் என்றாலும் "நந்தவனத்தில் கிழவன் ஒருவன் இருக்கிறானம்மா" என்று பெண்கள் வந்து முறையிட்டதும்,

"என்னது...நந்தவனத்தில் கிழவனா!" (குமரன் இருந்தால் மட்டும் பரவாயில்லை என்பது போல்) என்று பதபதைக்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. ஒருவேளை அங்கு அமைந்திருந்த வசனம் காரணமாய் இருக்கலாம்.

கதை மெல்லமாய் ஊர்ந்து செல்கிறது. இன்னும் கொஞ்சம் துரிதப்படுத்தலாம். கதை தெரிந்ததாய் இருந்தாலும், புரிந்ததாய் இருந்தாலும், ஒரே வரிக்கதையாய் இருந்தாலும் கூட, திரைக்கதையும், வசனமும் கொண்டு ஈர்ப்பை இருக்கச்செய்துவிடலாம்.

அந்த விஷயதில் இவர்கள் ... இன்னும் முயலவேண்டும்!

சிவன் கிழவன் வேடத்தில், ஸ்ரீதர் நன்றாகச் செய்திருந்தார். இவர் தான் சிவன் என்று இருவினாடிகள் கழித்தே புரியுமளவுக்கு ஒப்பனை நன்றாக இருந்தது. ஆனாலும் என் எட்டு வயதுப் பெண், "அம்மா இது சிவன் தானே கிழவன் வேஷத்தில்" என்ரு ஒரே நொடியில் கண்டு பிடித்து விட்டாள். அவளுக்கு கதை கூட சில நேரம் புரியாத போது ஒப்பனை சட்டென்று கண்டுபிடித்து விட்டாள்.

இக்கால குழந்தைகள் படு சுட்டிகள். இவர்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வெறும் தாடி, மீசை வைத்து வேறு வேடம் கட்டும் நடிகர்களை, அதையும் கூட கண்டுபிடிக்க முடியாமல் ஏமார்ந்து போகும் வில்லன்களைக் கண்டால் என்ன சொல்வார்கள்!

sarna_blr
24th June 2008, 10:58 AM
avlO nallaa irukkaa, indha program.. :roll:

Shakthiprabha.
24th June 2008, 11:01 AM
I dont know about that sarna, I watch it only because, it talks on mythology and religion and I AM FOND of mythology and religion.

I aint interested in watching anything else.

sarna_blr
24th June 2008, 11:02 AM
ok .... :P

Shakthiprabha.
24th June 2008, 11:09 AM
ஆச்சரியமான அழகான விஷயம் நம் புராணக் கதைகள். புனைவுக் கதைகளை அதன் கற்பனை வளம் குன்றாமல் ரசிக்க முயன்றால், மிகப் புதுமையான உலகுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பூமியின் சுழற்சிக் காரணமாய் மறைந்தும் மறையாமலும் தோன்றும் நிலவுக்குத் தான் எத்தனைப் புனைக்கதைகள்!

aanaa
24th June 2008, 08:12 PM
"என்னது...நந்தவனத்தில் கிழவனா!" [/color](குமரன் இருந்தால் மட்டும் பரவாயில்லை என்பது போல்) [color=blue]என்று பதபதைக்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது.

:D
:rotfl:



சிவன் கிழவன் வேடத்தில், ஸ்ரீதர் நன்றாகச் செய்திருந்தார். இவர் தான் சிவன் என்று இருவினாடிகள் கழித்தே புரியுமளவுக்கு ஒப்பனை நன்றாக இருந்தது.
:exactly:

Shakthiprabha.
25th June 2008, 10:50 AM
வேறு யார் கண்களுக்கும் தெரியாத கிழவன் தாக்ஷாயணியின் கண்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறான்? தன் படுக்கையறையிலும் அக்கிழவன் வந்து தொல்லைக் கொடுப்பதாய் முறையிடுகிறாள் தாஷாயணி. தஷனும், வேதவல்லியும் ஏனையரும் செய்வதறியாது நின்றிகின்றனர். இத்தனைக் கட்டுக்காவல்களை மீறி ஒருவன் அதுவும் கிழவன் எப்படி நந்தவனத்திற்குள்ளும படுக்கையறையிலும் நுழைந்திருக்க முடியும்! என்று பலவாறு குழம்புகின்றனர். தஷனின் மாளிகையின் காவலை மீறும் அளவு, எப்படி இத்தனைத் துணிச்சல் ஒருவனுக்கு இருக்க முடியும்? ஒரு வேளை புத்தி பேதலித்தவனாய் இருப்பானோ என்று தஷன் சந்தேகம் கொள்கிறான்.

அடுத்த தினம் சகோதரிகள் மூவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். நந்தவனத்தில் அவர்கள் தனியே நடமாடும் போது அக்கிழவன் தோன்றினால், வம்பு செய்தால், தாஷாயணி அவனுக்கு ஒப்புதல் அளிப்பது போல் அவனுடன் ஆசையுடன் பேசி அளவளாவ வேண்டும். இதற்குள் மற்றவர்கள் சென்று அரண்மணைக் காவலாளிகளைக் கொண்டு அவனை கையும் களவுமாய் பிடிக்கலாம் என்று யுக்தி செய்கின்றனர். அதன்படி கிழவனாய் சிவன் தோன்றவே தாஷாயணியும் அவருடன் சிரித்து பேசி அவரைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறாள். இதற்குள் மற்ற சஹோதரிகள் சென்று தஷன், ஏனைய காவலாளிகள் வந்து அவனை பிடித்து விடுகின்றனர்.

கிழவனும், மாட்டிக்கொண்டது பொல் பரிதவித்து, அவர்களுடன் அரண்மணைச் செல்கிறான். தஷன் கிழவன் ஒரு மாயாவி என்ற முடிவு கட்டி, கிழவனுக்கு மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து மந்திரவாதிகளை எல்லாம் கழுவில் ஏற்ற உத்தரவிடுகிறான்.

இனி தன் விளையாட்டை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து, கிழ உருவைக் கலைதது விட்டு, சிவனாய் தரிசனம் தருகிறார். மிதமிஞ்சிய ஆச்சரியம், மகிழ்ச்சி கொப்பளிக்க தஷனும், தாஷாயணியும் மற்றோரும் அவரை வரவேற்கின்றனர்.

"என் மகளைத் தா என்று கேட்டால் தந்திருக்க மாட்டேனா, உங்களுக்காகவே தானே அவளை நான் வளர்த்து வருகிறேன்" என்று தஷன் பவ்யமாய் கூறுகிறான். திருமண ஏற்பாடுகள் அனைவரும் தயாராகின்றனர். தஷனிடம், மகிழ்ச்சியின் ஊடே ஆணவமும் தலை தூக்கை அதை இறைவன் மட்டும் கண்டு புன்னகைக்கிறார்.

"இவள் செய்தது பக்தி என்று நினைத்தோம் பதி-பக்தி என்று இப்பொதல்லவா தெரிகிறது" என்று சஹோதரிகள் கேலிக்கின்றனர். மணமகள் அலங்காரத்திற்கு தாஷாயணி தயாராகி நிற்க, ரேவதியும், அஸ்வினியும் முகத்தில் வாட்டமுடன் தங்கள் அன்னையிடம் எடுத்துரைக்கின்றனர்.

"திருமணத்திற்கு எல்லோரும் வந்திருக்கும் போது, தங்கள் முதல் மருமகனுக்கும் அழைப்பு விடுக்கவேண்டுமல்லவா. அவர் இல்லாமல் இருந்தால் நன்றாய் இராது, சந்திரன் வந்து விட்டால் எங்களையும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்!" என்கின்றனர்.

( 'முழுதாய் ஒளிர்ந்தாலும் மணாளன்....
அரையாய் தேய்ந்தாலும் ஆகமுடையான...'

என்பது புதுமொழியாம்! )

____

தஷன், கிழவனிடம் "முதியோருக்கே உள்ள பக்குவம், ஞானம், முதிர்ச்சியெல்லாம் துளியும் தென்படவில்லையே!" என்கிறான். பக்குவமும் பக்தியும் ஞானமும் முதிர்ச்சியும் வயதையொத்து வருவதல்ல. தாஷாயணியின் சிறுவயது பக்தியும் இதற்கொரு எடுத்துக்காட்டு.

ஞானமும், ஏனைய பெருங்குணமும், அவரவர் கர்மவினைப்படி, ஆன்மாவின் முதிர்ச்சியின் படி அமைவது. சிறுபிள்ளைத்தனமாய் நடக்கும் எத்தனையோ பெரியோர்களை நாம் காண்கிறோம். நற்குணங்களும், பொறுமையும் கொண்ட சிறியோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வயதிற்கும் அறிவிக்கும் (பொதுஅறிவு அல்ல) சம்பந்தமில்லை என்பது கண்கூடு!

கிழவன் சிவனாய் மாறும் போது, தஷனின் முகத்தில் தோன்றிய மாற்றம் அருமையாய் இருந்தது. மிக நன்றாகச் செய்திருந்தார். தாஷாயாணியாக சுஜிதாவும் ஈடுகொடுத்து பாவங்களை மாற்றி, வசங்களை அழகாய் உச்சரித்து, தன் பங்குக்கு உழைப்பை அளித்திருக்கிறார்!

aanaa
25th June 2008, 06:10 PM
முழுதாய் ஒளிர்ந்தாலும் மணாளன்....
அரையாய் தேய்ந்தாலும் ஆகமுடையான...'

என்பது புதுமொழியாம்
:rotfl:

தஷன், கிழவனிடம் "முதியோருக்கே உள்ள பக்குவம், ஞானம், முதிர்ச்சியெல்லாம் துளியும் தென்படவில்லையே!" என்கிறான். பக்குவமும் பக்தியும் ஞானமும் முதிர்ச்சியும் வயதையொத்து வருவதல்ல. தாஷாயணியின் சிறுவயது பக்தியும் இதற்கொரு எடுத்துக்காட்டு.
:exactly:


கிழவன் சிவனாய் மாறும் போது, தஷனின் முகத்தில் தோன்றிய மாற்றம் அருமையாய் இருந்தது. மிக நன்றாகச் செய்திருந்தார். தாஷாயாணியாக சுஜிதாவும் ஈடுகொடுத்து பாவங்களை மாற்றி, வசங்களை அழகாய் உச்சரித்து, தன் பங்குக்கு உழைப்பை அளித்திருக்கிறார்!
:clap:

Shakthiprabha.
25th June 2008, 06:38 PM
nandri aana!

என் வீட்டில் சிறிது வேலைகள் இருப்பதால், இன்னும் 10/20 நாட்களுக்கு உடனுக்குடன் எழுத முடியுமா தெரியவில்லை.

முயல்கிறேன். எப்படியும் சுருக்கமாகவாவது எழுதிவிடுகிறேன்.

Shakthiprabha.
26th June 2008, 06:27 PM
சந்திரனை அழைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கும் முன்னே,
தக்ஷனுக்கு கோபம் தலைக்கேறிவிடுகிறது. அது பற்றி மற்றவர்களின் யோசனையைப்
புரக்கணிக்கிறான்.

தாஷாயணியின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது.
மணமகள் அழகாய் அலங்கரிக்கப் பட்டு அழைத்து வரப்படுகிறாள். தேவர்களும் மூவர்களும்
புடை சூழ, தஷன், தாஷாயணியை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் நேரம், அவன்
சித்தமெல்லாம் பூரிக்கிறது. இறைவன் ஈசன் தன் மருமகன் என்ற மகிழ்ச்சியால் அல்ல.
அத்தனைக்கும் அதிபதியாம் உலக நாயகனாம் ஈசன், உயர்ந்தவன் ஈசன், இந்த ஒரு க்ஷணம்
கையை கீழேந்தி, என்னிடம் யாசிக்கிறான். இந்த ஒரு நிமிடம், என் கை உயர்ந்திருக்கிறது.
இந்த ஒரு நிமிடம், நான் கொடுப்பவனாகவும் அவன் கேட்க்பவனாகவும் இருக்கிறான்.
இந்த ஒரு நிமிடம் நான் உயர்ந்தவன் என்ற மமதை தக்ஷனுக்கு ஏற்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும்
பரம்பொருள் எண்ணித்திலும் இருப்பவர் அல்லவா, அதனால் அவருக்கும் அவனின் எண்ணம்
தெரிந்து விடுகிறது. உடனே மணமேடையை விட்டு மாயமாய் மறைந்து விடுகிறார்.

தக்ஷன் மிகுந்த கோபம் கொள்கிறான். காபலிகன், சுடலையில் உறைபவன், சாம்பல் தரிப்பவனுமான
இவனுக்கு என் அருமைப் புதல்வியை திருமணம் செய்து கொடுக்க எண்ணியது என் தவறு.
மணமேடையில் காரணமேதும் கூறாமல் அவமதித்து சென்ற இவனை யாருமே இனி வழிபடக்கூடாது.
இவனின் இந்தச் செய்கைக்கு மனம் வருந்தி வெட்கப்படவேண்டும் என்று ஆத்திரம் பொங்க
கர்ஜிக்கிறான்.

தஷனைப் பெற்றவனாம் பிரம்மனும், சிவனின் செய்கை தனக்கு மிகுந்த மனவருத்தத்தையும்
குழப்பத்தையும், தருவதாக வருந்துகிறார். மனக்குறை ஏதேனும் நேர்ந்திருக்கவேண்டும், அதனாலேயே
இறைவன் மறைந்து விட்டான் என்று எண்ணுகிறார்.

தாஷாயணி மிகுந்த மனத்துன்பத்திற்காளாகிறாள். யாராலும் அவளின் துன்பத்தை ஆற்றமுடியவில்லை.
'தன் பூஜையில் சிரத்தையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ' என்று அவள் தனிமையை அழுகிறாள்.
என்ன தவறு, என்ன குற்றம் நேர்ந்தது என்று தெரியாமலே இப்படி புலம்பும்படி ஆகிவிட்டதற்கு
கண்ணீர்வடிக்கிறாள்.

தஷனால் தாஷாயணியின் வருத்தத்தை தாங்க முடியவில்லை. 'எல்லாம் என் குற்றம் தான்,
சிவனின் தரம் தெரியாமல் சிறு வயது முதல் உனக்கு பக்தி செய்ய பழகி கொடுத்தது என் குற்றம்.
அதற்குத் துணை போனது உன் தாயின் குற்றம்' என்று அரற்றுகிறான்.

(தொடரும்)

இக்கதை இதுவரை நான் கேட்டறியாதது. தஷன் யாகம் கதையைத் தான் கேட்டிருக்கிறோமே தவிர,
தாஷாயணியின் திருமணம் பற்றிய தகவல்கள் நமக்குப் புதுமையாக இருக்கின்றன.

நம் திருமணங்களில் மணமகளுக்கு ஆயிரம் அலங்காரங்களும், முத்துக்களும் ரத்தினங்களும் பட்டும்
ஜரிகையும் அலங்கரிக்க, மணமகனுக்கு பட்டு வேட்டியுடன் கச்சிதமாய் முடிந்து விடும். சிவனுக்கு
அதுவும் இல்லை. சடா முடியன். புலித்தோல் போர்த்தியவன். அவனுக்கு திருமணம் என்றால்
எவ்வாறு அலங்காரம் செய்வது? சரியென்று விசேஷமாக வெள்ளைப் புலித்தோலுடன்
காட்சித் தருகிறார் (bengal tiger)! :D

தாஷாயணி வருத்தப்படும் சோகக் காட்சிகளில் பின்னணி இசையாக "புத்தம்புது பூ பூத்ததோ" என்ற
"தளபதி" திரைப்படத்தின் பின்னணி இசையை சேர்த்தது போல் தோன்றுகிறது!!

"பெண்ணாகப் பிறந்தவளுக்கு இப்படித் துன்பங்கள் வரத்தான் செய்யும், பெண்கள் பொருத்துக் கொள்ள
வேண்டும்" என்று வேதவல்லி சொல்வது நாடக வசனம்!

திருமணப்பாடலில் "இந்திரன் சந்திரன் வேதம் முழங்க" என்று வருகிறது. சந்திரனை திருமண மண்டபத்தில்
காணோம்! :?

இறைவனாகவே இருந்தாலும், கோபித்துக் கொண்டு மணமேடையை விட்டு ஓடிவிடுவது எந்த விதத்தில்
நியாயம்!! இப்புனைவுக் கதாநாயகன் சிவன் என் முன் தோன்றினால் சட்டையைப் பிடித்து (சரி புலித்தோலை பிடித்து ) காரசாரமாக கேட்டுவிட வேண்டும்! அந்த பயத்தில் தான் என் போன்ற சாதார்ணர்களுக்கு இறைவன் காட்சியளிக்க மறுக்கிறார்!

aanaa
26th June 2008, 10:46 PM
வீட்டு வேலைகளுக்கிடையிலும்
இத்தொடரைத்் தொடர்வதற்குநன்றி



இக்கதை இதுவரை நான் கேட்டறியாதது.ன்ற சாதார்ணர்களுக்கு இறைவன் காட்சியளிக்க மறுக்கிறார்!

புதுப் புது புனைகதைகளைத் தருகின்றார்கள்.
:banghead:

aanaa
26th June 2008, 10:49 PM
திருமணம்
தமிழ் /சைவ முறையில் நடக்கும் என்று எதிர்பார்த்தால் ..ம்ம்ம்

சிவனுக்கு யார் தாரை வார்ப்பது என்று பார்த்தும் எமாற்றம்தான் ..

Shakthiprabha.
27th June 2008, 01:52 PM
இறைவன் பால் பற்று வைத்தது என் தவறா என்று பலவாறு ஆற்றாமையால் புலம்பிக் கண்ணீர் வடிக்கிறாள்
தாஷாயணி. தஷனும், வெறும் கல்லாய் இருக்கும் உனக்கு பூஜைகள் எதற்கு. சாம்பல் தரிப்பவனுக்கு
சந்தனத்தின் வாசம் தெரியுமா. என்னை, என் பெண்ணை இப்படி அவமானப்படுத்தி மறைந்த நீ
பட்டமரமாகப் போவாய் என்றெல்லாம் கோபத்தில் உச்சியில் அரற்றுகிறான்.

தாஷாயணி தனியாய் நந்தவனத்தில் அழுது புலம்புவது சிவனின் கோபத்தை சற்றே மட்டுப்படுத்துகிறது. அவள் தனியாய் இருக்கும் போது, அவள் முன் தரிசனம் தந்து, தன்னுடன் வரச் சம்மதமா என்று கை நீட்டுகிறான். அவளும் சூழ்நிலை ஏதும் நினைவின்றி, இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் தன் கை கோர்க்க உடன் தாஷாயணியுடன் கைலாயம் சென்றுவிடுகின்றார் சிவன்.

இதை பார்த்து விட்ட தஷனின் மற்ற புதல்விகள் நடந்ததை தஷனுக்கு தெரிவிக்கின்றனர். 'நான் தாரைவார்த்துக் கொடுக்கும் போது கோழை போல் மறைந்து விட்டு, இப்போது என் மகளைக் கடத்திச் சென்று விட்டான் அந்த ஈசன். இவனே என் முதல் சத்ரு' என்று கர்ஜிக்கிறான்.

கைலாயத்தில் ஷக்தியாய் மாறுகிறாள் தாஷாயணி. சிவனிடம் முறைப்படி தன்னை மணந்து கொள்ளாததன் காரணம் கேட்கிறாள். கொடுப்பவன் மனநிலை, எப்படிப்பட்டது என்பதைப் பொருத்துத் தான் தானத்தின் பெருமையும் உள்ளது. தானம் கொடுப்பவன், பிரதிபலன் ஏதுமின்றி சந்தோஷத்துடன், அஹங்காரமின்றி தானம் கொடுக்கவேண்டும். தஷனிடத்தில் அது தொலைந்தபடியால், நான் மறைந்து விட்டேன். அவன் கை உயர்ந்திருந்ததாக எண்ணினான்.

இப்பொழுது அவன் ஏதும் எனக்கு கொடுக்கவுமில்லை. நான் வாங்கவுமில்லை. எனினும் முறைப்படி அவனிடம் சொல்லிவிடுவது சரி என்று உமையவள் கூறுகிறாள். இத்தனை வருடம் பெற்று வளர்த்த தந்தைபாசம் அவளை பற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஈசனோ, 'ஆதி அந்தமில்லாதவன் நான். எனக்கு பந்தமென்றும் உறவென்றும் ஏதுமில்லை. உன்னை அடையும் தருணத்தில் அடைந்தேன். எனக்கு வேறெந்த பிணைப்பும் கிடையாது' என்று வாதிடுகிறார். அவனுக்கு நான் வரமளித்திருப்பதால் இனி அவனே எனக்குக் கடன் பட்டவனாகிறான் என்கிறார். இறைவிக்கு மனவருத்தம் உண்டாகிறது.

தஷனோ, கோபம், ஆத்திரம், என்ற நிலைகளைக் கடந்து, வெறுப்பும், பிடிப்பின்மையுடனும் அடைந்து கிடக்கிறான். தன் நாட்டையும் வேலைகளையும் கூட சரிவர கவனிக்க மறுக்கிறான். 'என்னை ஒருவன் சிறுமைப்படுத்திவிட்டான், இது என் மாபெரும் தோல்வி என்று வெறுமை மேலிட விரக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறான்.

பிரம்மா, விஷ்ணு உட்பட ஏனையர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். 'நீ சொல்வதிலும் நியாயம் இருப்பினும், சிவனின் செய்கைக்கு அர்த்தம் இருக்கும்' அதை தெரியாமல் அவரை அவதூறு சொல்லவேண்டாம் என்கின்றனர். இத்தனைத் தவறு செய்தவனை நான் விட்டு வைத்திருப்பதே என் பெருந்தன்மையைக் காட்டுகின்றது. அவனை விட நானல்லவோ மேலானவன் என்கிறான் தஷன். பிரம்மாவும் "அவருக்கு சொந்தமான ஒன்றை நீ வளர்த்தாய், இப்போது அதை அவரே எடுத்துக் கொண்டுவிட்டார் என்று நினைத்து மனதைத் தேற்றுக்கொள். நீ சென்று சமாதானம் பேசி, உறவை வளர்ப்பதே உசிதம்' என்று எடுத்துரைக்கின்றனர்.

(தொடரும்)

ஆனா,

இக்கதை புனைக்கதையாய் இருப்பினும், ஏதேனும் ஏடுகளை புரட்டாமல், நூல்களை ஆராயாமல், கதையமைத்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன் :? (நமக்குத் தெரியாமல் இருக்கலாம் :? )

தாஷாயணியைப் பற்றி பல கதைகள் உண்டு. தந்தையையும் விட்டுக்கொடுக்க மனமின்றி, கணவன் பாசத்திற்கும் கட்டுப் பட்டு அவள் பட்ட துன்பமும், தஷனின் யாகத்திற்குச் சென்ற அவள், இறுதியில் கோபமுற்று தன்னையே அக்னிக்கு இறையாக்கிக் கொண்டு இறந்து விடுகிறாள் என்றும் கூறுவர்.

இந்த துயர் தாங்காத சிவனும், மிகுந்த கோபம் கொண்டு, அவளின் சாம்பலின் மேல் ருத்ர தாண்டவம் ஆடி, தஷனை எரித்தாய் கதை உண்டு. (உபயம்: அமர்சித்ரகதா)

இப்படி பார்த்தாலும், தாஷாயணியின் கதை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை.

(நம் தொடரில் எப்படிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை)

தமிழ்க் கடவுள் முருகனாய் இருந்தால் தாரைவார்க்கத் தேவையின்றித் திருமணம் செய்துகொண்டிருப்பாரோ :? இக்கதையை பார்க்கும் நமக்கும், இறைவன் என்பதை மறந்து சாமான்யனின் கதை என்று நோக்கினால், தஷனின் பக்கத்து நியாயங்களும் விளங்கும்.

கதையைப் பார்த்துக் கொண்டிருந்த என் பெண், தாஷாயணிக்காக பரிதாபப் பட்டு, " I dont like shiva! he is bad !" என்று முத்திரைக் குத்திவிட்டாள்! :(

Madhu Sree
27th June 2008, 04:24 PM
இக்கதை புனைக்கதையாய் இருப்பினும், ஏதேனும் ஏடுகளை புரட்டாமல், நூல்களை ஆராயாமல், கதையமைத்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன் :? (நமக்குத் தெரியாமல் இருக்கலாம் :? )


Aamaam SP, indha kathaiyai, chinna vayathil en paati solla naan ketirukiren... idhu punaikadhai alla...

aanaa
27th June 2008, 06:00 PM
நன்றி சக்திப்பிரபா

ஆதாரம் இல்லாமல் புராணக் கதைகளில் "கை" வைக்கத் தயங்குவார்கள்தானே.



கதையைப் பார்த்துக் கொண்டிருந்த என் பெண், தாஷாயணிக்காக பரிதாபப் பட்டு, " I dont like shiva! he is bad !" என்று முத்திரைக் குத்திவிட்டாள்! Sad
திரை நாடகங்களின் உயிர்நாடியே
அழுகைதானே
:-)

Shakthiprabha.
27th June 2008, 06:45 PM
இக்கதை புனைக்கதையாய் இருப்பினும், ஏதேனும் ஏடுகளை புரட்டாமல், நூல்களை ஆராயாமல், கதையமைத்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன் :? (நமக்குத் தெரியாமல் இருக்கலாம் :? )


Aamaam SP, indha kathaiyai, chinna vayathil en paati solla naan ketirukiren... idhu punaikadhai alla...

மது,

புனைக் கதை என்றால் ஆதாரமின்றி என்ற அர்த்தத்தில் நான் அதைச் சொல்லவில்லை. பொதுவாக, வழிவழியாய் வந்த புராணக் கதைகள் பலவற்றிற்கும் ஆதாரம் இருப்பது கடினம். சில நடப்புகளை, வழக்குகளை, நமக்குப் புரியவைக்க முன்னோர்கள் அதை கதை வடிவில் சொல்லிவந்திருக்கின்றனர். (including moon's phases and personification of stars as his wife) . வானவியலை நமக்கு கதை வழியாய் சொல்ல வைக்க ஒரு முயற்சி. இது போல் பல நீதிகளை போதனைகளை கதை வழியாய் சொல்வது தான் புராணக் கதைகள் அதை "புனைக்கதைகள்" (அதாவது உருவாக்கப்பட்ட) என்றும் சொல்வதுண்டு.

இப்படி ஒரு கதை வழக்கில் (அதாவது ஏதோ ஒரு ஏட்டில் / நூலில் / சொல்வழி வழக்கில்) இருந்ததா என்ற ஐயத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

அதனால், சொல்வழி வழக்கில் வந்திருந்தாலும், புராணக் கதைகள் பலவற்றை (இதிஹாசக் கதைகளை அல்ல) புனைவுக் கதைகள் என்று கூறுவது சரி என்று எண்ணுகிறேன்.

ஆனா,

:)

aanaa
1st July 2008, 07:10 AM
வீரபத்திரனாக பாபுஸ்

Shakthiprabha.
1st July 2008, 02:24 PM
ஹ்ம்ம்

கதை நமக்கு புதிதல்ல. தாஷாயணியின் இறப்பு. பின் வீரபத்திரன். இனி "பத்ர-காளி"யும் தோன்றுவாள் என்று நினைக்கிறேன்.


இதன் பிறகு தான் உடன்கட்டை ஏறுதலை, "சதி" என்ற வழக்கத்தின் பேரில் கடை பிடித்து வந்தார்களோ?

( சதி (ஷக்தி) என்பவள் தாஷாயணியாய் அவதரித்த உமையவளின் பிறப்பு! )

நேற்றைய சிவ-ஷக்தி உரையாடல் பாதிக்கு மேல், "திருவிளையாடல்" வசனம்.

( "அறிவு தஷனுக்கு ஏராளம்
அதை விட...ஆணவம்...ஏராளம்...ஏராளம்" என்பது உட்பட! )

நடிகர்திலகம் மறுபடி வந்து போனார் (மனக்கண் முன்)

aanaa
1st July 2008, 08:21 PM
ஹ்ம்ம்

கதை நமக்கு புதிதல்ல. தாஷாயணியின் இறப்பு. பின் வீரபத்திரன். இனி "பத்ர-காளி"யும் தோன்றுவாள் என்று நினைக்கிறேன்.


இதன் பிறகு தான் உடன்கட்டை ஏறுதலை, "சதி" என்ற வழக்கத்தின் பேரில் கடை பிடித்து வந்தார்களோ?

( சதி (ஷக்தி) என்பவள் தாஷாயணியாய் அவதரித்த உமையவளின் பிறப்பு! )

நேற்றைய சிவ-ஷக்தி உரையாடல் பாதிக்கு மேல், "திருவிளையாடல்" வசனம்.

( "அறிவு தஷனுக்கு ஏராளம்
அதை விட...ஆணவம்...ஏராளம்...ஏராளம்" என்பது உட்பட! )

நடிகர்திலகம் மறுபடி வந்து போனார் (மனக்கண் முன்)

:exactly:

Shakthiprabha.
3rd July 2008, 03:00 PM
I could not watch the serial for past 2 days :(

I supp the dhakshayani story got over. :?

Shakthiprabha.
3rd July 2008, 09:39 PM
Indrum paarkavillai :(
en pennukku class test :cry:

any story briefings?

aanaa
4th July 2008, 12:25 AM
good luck
Shakthiprabha

aanaa
4th July 2008, 12:25 AM
I have seen Sharadha's post ut not now
Is it illusion??

priya_2008
4th July 2008, 04:08 PM
I think a fresh story started, bcos i cud not see any continuation with the updates here.

Shakthiprabha.
4th July 2008, 06:30 PM
Saradha,

plz do post if u had posted before :?

I think I shall resume seeing the serial today :redjump:

I am sure I wont undrestand head or tail and def, the old daakshayani story is over.

omg

I would really miss o.a.k. sundar :|

aanaa
4th July 2008, 07:28 PM
மூன்றாவது தொடர்:

மாமனுக்கு வழக்குரைத்த கதை

கணபதி/குணவதி என அண்ணன் தங்கை
கணபதி ஒரு வணிகன் - பெரிய செல்வந்தன்

தங்கைக்கு ஒரு வேண்டுதல்:
பிச்சை எடுத்து சன்னியாசிக்கு அமுது படைக்க

பணக்கார ஜொலிப்பில் பிச்சை எடுக்கின்றாள் தங்கை.
தொழிலுக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாத படியால்
யாருமே பிச்சை இடவில்லை போலும்

அடுத்த ஊரில் உள்ள ஒரு சிறு தனவந்தன் அரிசி போடுகின்றான்
அதை உணவாக்கி சன்னியாசிமாருக்கு அமுது படைத்து விரதத்தை நிறைவேற்றி ஆசியும் வேண்டி நிற்கின்றாள் அந்தப் பாவை.

--
வீட்டில் அண்ணனுக்கு இந்த விபரத்தைத் தெரியப் படுத்த

அந்த வணிகனுக்கும் குணவதிக்கும் திருமணம் நடைபெறுகின்றது
( எவ்வளவு விரைவாக
காரணங்களே இல்லாமல் ..)

புகுந்த வீட்டில் அண்ணன் புராணம்
இங்கு கணபதி மனைவியிடம் தங்கை புராணம்

விடியலுக்கு முன்பே தங்கை அண்ணன் வீட்டில்
சொல்லாமல் கொள்ளாமல் இவ்விடம் வந்து விட்டாள்

புத்தி புகட்டி கணவன் வீட்டில் தங்கையை கூட்டி வந்து விட்டு மன்னிப்பும் கேட்கின்றான் பாசமுள்ள அண்ணன்.

------
பெயர் விபரங்கள் முதலாம் பக்கத்தில்

------------

தங்கையின் மாமியாக மெட்டி ஒலி புகழ் சாந்தி வில்லியம்ஸ்
அதே ...

aanaa
4th July 2008, 07:37 PM
சரஸ்வதியாக வருபவரின் பெயர் என்ன?
யாராவது உதவுங்களேன்

aanaa
4th July 2008, 07:39 PM
கணபதி - மனோகர்
குணவதி - மல்லிகா
யோகினி - சுசிலா ( அண்ணி)
விக்கி - பூபதி
சாந்தி வில்லியம்ஸ் - பூபதியின் அம்மா

aanaa
4th July 2008, 07:41 PM
3 பகுதிகளுக்கும் மூன்று இயக்குனர்கள்

1. ஞானப் பழம் (நன்றி - கார்த்திக்)-பாலாஜி யாதவ்
2. தட்சன் - சமுத்திரகனி/அருள்ராய்
3. மாமன்கதை- சுகி ஜெயராம்

பறுவாயில்லையே...

குறிப்பு:
நானும் 2 நாட்கள் ஊருக்குப் போயிருந்தேன்

aanaa
5th July 2008, 07:00 AM
some comments

http:/ / sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_16.html

Shakthiprabha.
5th July 2008, 05:14 PM
அடுத்த கதையில், குணவதி என்பவள், பிறந்தகத்து அன்பில் கட்டுண்டு முதலிரவன்றே தன் தமையன் வீட்டுக்கு சென்றுவிடுவது, பாசத்தின் உச்சகட்டம்!!! அவள் கணவன் நிலை அந்தோ பரிதாபம். தன் தங்கையின் ஒரு 'பாசமலர்' என்று எடுத்துரைத்து விட்டு அண்ணன் வீடு திரும்புகிறான். இதை இடித்துக் கூறி பரிகசிக்கிறாள் அண்ணி.

அடுத்த நாள் நல்லவேளை, குணவதி குறிப்பறிந்து நடந்து கொண்டுவிடுகிறாள். எனினும், அவள் கணவனுடன் சந்தோஷமாக இருக்கிறாளோ இல்லையோ என்ற கவலையில், தமையன் வலிய வரும் தன் மனைவியை உதாசீனப்படுத்தி, தங்கையின் நினைவாகவே இருந்து மனைவியின் கோபத்திற்கு ஆளாகிறான். மக்கட்பேறு இல்லாத குறையும் அவளை சேர்த்து வாட்டுகிறது.

குணவதியின் கணவன் பூபதி, வாணிபம் செய்யும் பொருட்டு, சில மாதங்கள் பிரிந்து செல்ல நேரிடுகிறது. மனைவிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி புறப்படுகிறான் பூபதி.

__


காட்சியமைப்புக்கு பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டாம் எனறிருந்தாலும், இருக்கும் சிறு காட்சிகளை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள். ஒப்பனை, உடை அலங்காரங்கள் பளிச்!


செல்வந்தர்களுக்கும் செல்வந்தர் அல்லாதவர்களுக்கும் வித்தியாசமின்றி அண்ணியின் பிறந்தகத்தவர்களும்( பணப்பற்றாக்குறை என்று சொல்லிக்கொண்டு) அதே போல் முத்து, தங்க நகை அணிந்திருக்கின்றனர் (ஒரு வேளை கவரிங் நகையாக இருக்கலாம்!? :roll: ) ஒவ்வொரு கதையின் சோகக்காட்சியிலும் அதே பின்னணி இசை (புத்தம் புது பூ பூத்ததோ-தளபதி)!

"பூ வாடுவதற்குள் திரும்பிவிடுகிறேன்" என்று சொல்லும்போதே நமக்கு எந்த அர்த்ததில் சொல்கிறான் என்று தெரிந்துவிடுகிறது. தொன்று தொட்டு ஆண்கள் சொல்லும் அதே பொய்கள்!!!


திண்ணையில் பாட்டி சொல்லும் வம்புக்கதை போல் இருக்கிறது. வேண்டுமென்றால் தற்காலத்திற்கேற்றபடி, 'மதியம் வரும் குடும்ப-சீரியல் கதைபோல் இருக்கிறது' என்று சொல்லலாம். பக்தியின் சாறு இனிதான் பிழியப்படும்!

கதை ஏனோதானோவென்று சலிப்பு தட்டுகிறது...(இதுவரை)....

(இனி...)

aanaa
6th July 2008, 05:13 AM
நன்றி



அதே போல் முத்து, தங்க நகை அணிந்திருக்கின்றனர் (ஒரு வேளை கவரிங் நகையாக இருக்கலாம்!? :roll: )
.(இதுவரை)....

(இனி...)
அந்த அண்னனுக்கு சுருட்டுறதுதான் தொழில்போலும்..

கவனித்திருப்பீர்கள் ' ""முத்து நகை வேண்டும்"" என்று அங்கு குழந்தை சொன்னது.

aanaa
8th July 2008, 08:16 PM
சனிப் பிரதோஷ விரத்தைக் கூடக் கடைப் பிடிக்கத் தடுக்கும் கொடுமைக்கார மாமியுடன் குணவதி.

குணவதி கர்ப்பமாகியுள்ளா.

aanaa
9th July 2008, 07:31 AM
சீர்வரிசை வரும் என
சிலநேரம் நல்ல மாமியாக இனிய செய்தியை சம்பந்தி வீட்டிற்குச்
சென்று செய்தி சொல்கின்றா.

யோகினி தனக்குக் குழந்தை இல்லை என்ற கவலையில்
அந்த செய்தியை கணவனுக்குச் சொலலாமல் மறைக்கின்றா.

சீர்வரிசையை எதிர்பார்த்த ஏமாந்த மாமியயாரும்
மீண்டும் சுயரூபம் எடுக்க..

கணபதி இன்று தங்கையைப் பார்க்க வருகின்றான்
....

இங்கும் தமிழ் கொல்லப் படுகின்றது

மனம் --> மணமா கிறது :lol:

saradhaa_sn
9th July 2008, 01:08 PM
அண்ணன்காரன் யானையில் சீர் கொண்டுவருவான் என்று காத்திருந்த குணவதியின் மாமியாருக்கு ஏமாற்றம். அண்ணன் வெறும் கையுடன் வந்திருக்கிறான். பாவம், அவனுக்கு தெரியாது, தன் தங்கை உண்டாகியிருக்கும் விஷயமும், தன் வீட்டிலேயே அவளுக்கு அண்ணி என்ற உருவில் ஒரு வில்லி இருப்பதும்.

மெட்டிஒலி ராஜம் செந்தமிழ் பேசினால் எப்படியிருக்கும்?. அதேதான். மொழிதான் மாறியிருக்கிறதே தவிர, அதே கொடுமைக்கார மாமியாராக சாந்தி 'வில்லி'யம்ஸ்.

நேற்றுவரை பேச்சு சூடு பிடிக்கவில்லை. இன்று ஆரம்பமே அதாகத்தான் இருக்கும். (கொஞ்ச நாளைக்கு தேவலோக செட்களில் இருந்து விடுதலை).

Shakthiprabha.
9th July 2008, 03:22 PM
:D

thamizh kollapadugirathu - nandri - anniyaaga nadithirupavarukku

2 varik kathaiyai 10 naatkaLaaga izhuuuuuuuuuuukkiraargaL :evil:

(viyaakkizhamai athiyaayam muthal meendum thodarven)

saradhaa_sn
9th July 2008, 05:01 PM
2 varik kathaiyai 10 naatkaLaaga izhuuuuuuuuuuukkiraargaL :evil:
சக்தி,

நீங்க லீவுல போறீங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் இழுக்கிறாங்க. 'வந்துட்டேன்'ன்னு ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்திடுங்க.

இது பரவாயில்லை. 'பொறந்த வீடா புகுந்த வீடா' என்றொரு சீரியல் வருகிறது. அதை ஒருமாதம் கழித்துப்பார்த்தாலும் கதை அங்கேயேதான் நின்றுகொண்டிருக்கும். 'ராதிகா கல்யாணம் - மஹி கல்யாணம் - செண்பகம் கல்யாணம்' என்று செக்குமாடாக சுற்றி சுற்றி வருகிறது. இந்த கல்யாண சப்ஜெக்டை விட்டால் வேறு எதுவுமே கிடையாதா உலகத்தில்..?.

Madhu Sree
9th July 2008, 05:40 PM
2 varik kathaiyai 10 naatkaLaaga izhuuuuuuuuuuukkiraargaL :evil:
சக்தி,

நீங்க லீவுல போறீங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் இழுக்கிறாங்க. 'வந்துட்டேன்'ன்னு ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்திடுங்க.

இது பரவாயில்லை. 'பொறந்த வீடா புகுந்த வீடா' என்றொரு சீரியல் வருகிறது. அதை ஒருமாதம் கழித்துப்பார்த்தாலும் கதை அங்கேயேதான் நின்றுகொண்டிருக்கும். 'ராதிகா கல்யாணம் - மஹி கல்யாணம் - செண்பகம் கல்யாணம்' என்று செக்குமாடாக சுற்றி சுற்றி வருகிறது. இந்த கல்யாண சப்ஜெக்டை விட்டால் வேறு எதுவுமே கிடையாதா உலகத்தில்..?.

Hahahaha... :lol: , Yes, even I too saw that after 1 month and I can still feel the same... storyle oru maatramum illai... :x

Shakthiprabha.
9th July 2008, 05:49 PM
aana,

izhuuuuuu izhuuuuuuuuuuuuu endru izhukkiraargaL endra orEEE kaaranathukku thaan naan serial parpathillai :D

Thanks to my mother in law, 2 to 3 serials la enna kathai nnu paarkara alavu (kekkara alavu) naan kadantha 15 naalaaga thEri vitten.

meendum serial galai muzhukku pottu viduven.
(enna achunnu nnu 2 to 3 serials mudinja piragu climax solrennu promise pannirukaanga :D :lol2: )

My athai (MIL) and myself concluded that every serial should finish in 1 month or max 2 months to retain the interest of the viewers. I am sure its not gonna happen though :(

I shall post here regularly (thiruvilaiyaadal) from friday (i.e. thursday episode :) )

// sorry for the digression !

aanaa
9th July 2008, 06:49 PM
கதைகள் சவ்வு மாதிரி இழுபடுவதால்

சீரியலை 'மிஸ்' பண்ணப்போகிறோம் என்ற கவலை இல்லை.

2. இப்படியான நாடகங்களுக்கு விரைவில் சமாதி ஏற்படலாம்.
இந்த trend விரவில் முடிவிற்கு வந்து விடும்

Shakthiprabha.
12th July 2008, 01:56 PM
இன்றைய பகுதி குணவதியின் அழுகையுடன் ஆரம்பித்தது. பூபதி இறந்து விடுகிறான்.
அன்றைய காலகட்டத்தில் உள்ள வழக்கம்படி குணவதியின் மாமியார் அவளின் மாங்கல்ய
பலத்தை குறை கூறுகிறாள். தன்னுடன் குணவதி இருப்பதை இஷ்டப்படாமல், அவளை
தமையன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறாள். செல்லத் தங்கையின் பழைய குதூகலத்தையும்,
அலங்கார பொம்மையாய் அவள் வளைய வந்ததையும் நினைத்து வருந்தியபடி இருக்கிறான்
அவள் அண்ணன். எதிர்பார்த்தபடி அண்ணியும் தன் கோபத்தை, இயலாமையை, வெறுப்பை,
வண்டி வண்டியாய் சேமித்து குணவதியிடம் வெளிப்படுத்துகிறாள். அவளை ஒரே அறையில்
அடைந்து கிடக்கும்படி ஆணையிடுகிறாள் (அக்கால வழக்கம்ப்படி :? ) துளசி மாடத்திற்கு
நீர் விடும் குணவதியை, நிந்தித்து விரட்டுகிறாள். துளசிச்செடி மிகவும் பவித்ரமானதால்
கைமை அடைந்தவர்கள் நீர் விடுவது செடியை வாட்டி, பட்டுப்போக செய்து விடும் என்பது
கூற்றாம். துளசி வாடினால், செல்வச் செழிப்பும் மனையில் குறைந்து விடும் என்பது
நம்பிக்கை. அப்படி எதுவும் ஆகிவிடாது என்று மறுமொழி கூறுகிறாள் குணவதி. இருந்தும்,
அவளை வருத்துவதற்காக, ரகசியமாய் துளசிச்செடியில் கல்-உப்பை போட்டு பட்டுப்போவதற்கு
வழி செய்கிறாள். அண்ணிக்கு மனை செழிப்பு, நம்பிக்கை, எல்லாவற்றையும் தாண்டி, குணவதியை புண்படுத்துவதே முதல் நோக்கமாகிறது.

இடையே இவர்கள் மாட்டு வண்டியில் ஊர் திரும்பும் போது, சிவனடியார் ஒருவர் இவர்களை
பார்த்தபடி நின்று, இது 'திருவிளையாடல்' தொடர் என்பதை நினைவூட்டி புண்ணியம் கட்டிக்கொள்கிறார்.
பண்டைய கால தவறான வழக்கங்கள் பலவற்றைக் கேள்வி கேட்க வைக்கிறது இந்த அத்தியாயம்.
இன்றும் சில இடங்களில் இது நடந்து கொண்டு இருக்கிறது என்பது வருந்துதற்குறிய விஷயம்.

துளசிச் செடிக்கு நீர் விடக்கூடாது என்பதற்கும், கைமை அடைந்தவள் ஒரு அறைக்குள் அடைந்து
கிடப்பதற்கும் சொல்லவும் முடியாத சில காரணங்கள் உண்டு. எனினும், பொதுப்படையில் பார்க்கும் போது
இவை எல்லாம் பெண்ணிற்கு இழைத்த அநீதிகள் தான்.

சிவன் குழுவினர்க்கு 2 வாரமாக லீவ்! நமக்கு சலிப்பு தட்டும்முன், தரிசனம் தருவது நலம்.
பிரதோஷ நந்நாளை எதிர்ப்பார்த்து நட்சத்திரம் குறித்து காத்திருக்கிறார்கள் போலும்.

என்னதான் குணவதியும், மாமியாராக வரும் ஷாந்தி வில்லியம்ஸ் (சரிதானே?), மற்றும் அண்ணனாக வருபவரும் நன்கு நடித்திருந்தாலும், (அண்ணியின் நடிப்பு சுமார் தான்), இது பக்தித்தொடர்
என்பதால், வெறும் கதையுடன், அண்ணனும் தங்கையும், இறைவனிடம் கொண்ட பக்தியை முதன்மையாக
வைத்து சித்தரிக்க வேண்டும். இல்லையெனில், மாமியார்-மருமகள் சண்டை, மதனி-நாதினி வயிற்றெறிச்சல்
என்று அரைத்த மாவையே ஒரு மாறுதலுக்காக 'செந்தமிழில்' அரைத்து வழங்குவதாகிவிடும்.

இதனை கவனம் கொண்டால் இத்தொடரின் சுவாரஸ்யத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

(மீண்டும் அடுத்த திங்கள்)

aanaa
12th July 2008, 06:12 PM
இன்றைய பகுதி குணவதியின் அழுகையுடன் ஆரம்பித்தது. பூபதி இறந்து விடுகிறான்.
(மீண்டும் அடுத்த திங்கள்)
நன்றி
நேற்றைய தொடரைப் பார்க்க முடியவில்லை.


இவ்விடம் - சிவன் கோவில் ( ஒரே ஒரு சைவக் கோயில் ) கொடியேறிய படியால் ,,,,,

( 2 கோவில்கள் உள்ளன.
1. குஜராத் (?)..வெள்ளைச் சிலை விஷ்ணு - சிவன் /முருகன்/பிள்ளையார் வீற்றிருக்கின்றார்கள்
2. இப்பொழுதுதான் 1 வருடம்- ஆரம்பித்த சிவன் கோவில்)


வேலை நாட்கள்.
ஆகவே இரவுத் திருவிழா மட்டுமே.
6.00 மணைக்கு ஆரம்பமாகி 10.30 /11.00 முடியும்

aanaa
12th July 2008, 06:20 PM
என்னதான் குணவதியும், மாமியாராக வரும் ஷாந்தி வில்லியம்ஸ் (சரிதானே?), மற்றும் அண்ணனாக வருபவரும் நன்கு நடித்திருந்தாலும், (அண்ணியின் நடிப்பு சுமார் தான்),



முடிந்த அளவு பெயர்கள் இத் தொடரின் முதல் பக்கத்தில் இட்டு வருகின்றேன்.

saradhaa_sn
12th July 2008, 07:43 PM
ஷக்தி,

ஒரு முக்கிய விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா?.

பெண்ணின் மாங்கல்யக் குறையினால்தான் தன் மகன் இறந்தான் என்று எந்த மாமனாரும் சொன்னதில்லை, மாமியார்தான் சொல்லி வருகிறாள்.

துளசிச்செடிக்கு விதவை தண்ணீர் விடக்கூடாது என்று எந்த ஆணும் சொன்னதில்லை, இன்னொரு பெண்தான் சொல்கிறாள்.

மங்கல காரியங்களின்போது விதவைப்பெண்கள் வந்து நின்றால் அவர்களை எந்த ஆணும் குற்றம் குறைகளால் இடித்து விரட்டுவது கிடையாது. 'சுமங்கலி'பெண்கள்தான் விரட்டுவார்கள்.

ஆகவே இவைபோன்ற காரியங்கள் பெண்களுக்கு எதிராக "பெண்களாலேயே" ஏற்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் கொடுமைகள். எதிர்த்துக்கேட்கும் ஆணைப்பார்த்து' நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று விரட்டுவதும் நம் இனம்தான் என்பதில் நாம் பெருமை கொள்ள முடிகிறதா..??????.

Shakthiprabha.
12th July 2008, 09:07 PM
உண்மைதான் சாரதா!
கசப்பான உண்மை!

நான் நம்பும் உண்மையும் கூட.
பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரி பல சமயங்களில்.

இன்றைய காலகட்டத்தில், ஒரு பெண்ணை, அவள் திறமையை, அவள் அறிவை, ஏன் அவள் நடத்தையைக் கூட வம்பு பேசுவதில் இன்னொரு பெண்ணுக்கே பெரும் பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத விஷயம்.

பொறாமை எனும் தீ யாரை விட்டு வைக்கிறது! வருந்த வேண்டிய ஒன்று.

Shakthiprabha.
15th July 2008, 04:29 PM
குணவதியை புண்படுத்துவதையே முதல் நோக்கமாகக் கொண்டு அவளை
வாட்டி வருகிறாள் சுசீலை. அமைதியைத் தேடி இறைவன் சன்னதியில் இருக்கும் நேரம்
செல்வந்தர் ஒருவர் அன்னதானம் செய்கிறார். அவர்களே நிறைமாத கர்பிணியான குணவதிக்கு
தாங்களாக கொண்டு வந்து உணவு கொடுக்கின்றனர். இதை தற்செயலாக அங்கு வந்த சுசீலையின்
அண்ணி பார்த்து விட, அவளுக்கு குணவதியின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. சுசீலை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லை, குணவதி உண்ணும் போது பசியின் பரபரப்பு தெரிகிறது என்று
அவள் வாதத்தை, சுசீலையின் அண்ணன் உதாசீனப் படுத்துகிறான்.

இங்கு முதலுக்கு மோசமாய், சுடுசொல்லும், பசியும் வாட்டி எடுக்க, அவள் அண்ணனுக்கோ குணவதிக்கு வளைகாப்பு
செய்துவிட வேண்டும் என்ற ஆவல் துடிக்கிறது. ஊராரின் பேச்சுக்கும், கருத்துக்கும் அவன் கட்டுப்படுபவனாகவோ, பயப்படுபவனாகவோ இல்லை. குணவதியின் மாமியாரிடம் 'வளைகாப்பு' நடத்தப் போகும் நற்செய்தியை கொண்டு சென்று, பதிலுக்கு அவமரியாதையை வாங்கிக்கொண்டு வருகிறான். எதைப் பற்றியும் அவனுக்கு கவலையும் இல்லை. அவன் தங்கையின் மகிழ்ச்சி மட்டுமே குறியாய் இருக்கிறான்.

பரலோகத்தில் இருந்து கொண்டே மூம்மூர்த்திகள் தம்பதி சமேதராய், கைமை அடைந்த பெண்ணுக்கு
வளைகாப்பு நடக்கும் விஷயம் பற்றி அறிந்து, தங்கள் அதிர்ச்சியை, ஒவ்வாமையை பிரதிபலிக்கின்றனர்.
(குறிப்பாக, பெண் அம்சங்களான சரஸ்வதியும், லக்ஷ்மியும் அதிர்ச்சி அடைய, பிரம்மாவும் விஷ்ணுவும்
புன்முறுவல் பூக்கின்றனர்) உமையவள் மட்டும் சிவனுடன் சேர்ந்து புன்முறுவல் பூக்கிறாள்.
சாரதா சொன்னது போல் இறை அம்சங்களில் கூட பெண்ணுக்கு பெண் தான் முதல் தடை விதிப்பார்கள் போலும்!

மும்மூர்த்திகள் யாவரும் குணவதி பற்றிய 'தொலைக்காட்சித் தொடர்' பார்க்கும் முகபாவத்துடன்,
காட்சி அளித்தது எரிச்சலூட்டியது.

குணவதி, செய்வதறியாது குழம்புகிறாள். தனக்கு மகனின் (கவனிக்க, இவளும், தனக்கு பிறக்கப் போகும்
"குழந்தையை"ப் பற்றி யோசிக்கவில்லை, பிறக்கப் போகும்""""மகன்"-னைப் பற்றி பேசுகிறாள் ) வருகைக்காக
அண்ணன் கொண்டாடுவது, சரியில்லையோ என்று குழம்புகிறாள்

(தொடரும்)

aanaa
15th July 2008, 07:38 PM
மும்மூர்த்திகள் யாவரும் குணவதி பற்றிய 'தொலைக்காட்சித் தொடர்' பார்க்கும் முகபாவத்துடன்,
காட்சி அளித்தது எரிச்சலூட்டியது.
:exactly:


் (கவனிக்க, இவளும், தனக்கு பிறக்கப் போகும்
"குழந்தையை"ப் பற்றி யோசிக்கவில்லை, பிறக்கப் போகும்""""மகன்"-னைப் பற்றி பேசுகிறாள் )

(தொடரும்)
ஆகவே
இன்று நேற்று ஏற்பட்டதல்ல ....

தொடருங்கள்

Shakthiprabha.
15th July 2008, 07:53 PM
//ஆகவே
இன்று நேற்று ஏற்பட்டதல்ல .... //

ஆமாம் ஆனா! தொன்றுதொட்டு வந்த சிறந்த பழக்கம் ! :|

Shakthiprabha.
15th July 2008, 07:54 PM
எங்கள் ஜாதியில் பிள்ளைபெறப்போகும் பெண்ணுக்கு வளைகாப்பிடும் போது, சுமங்கலிப் பெண்கள் சுற்றி கும்மியிட்டு

"பையன் பொறக்கணம்"
"பையன் பொறக்கணம்" ன்னு சொல்லிகிட்டே கும்மியடிப்பாங்க

:|

Madhu Sree
15th July 2008, 08:11 PM
:sigh2:

eppo thaaan idhelaam maara pogudho... atleast we can make a change in the future... :D

Shakthiprabha.
15th July 2008, 08:38 PM
Madhu,

ippo ipdi yaarum solrathillai :)
It was there 20 years back, Its changing now.

Madhu Sree
16th July 2008, 12:45 PM
Madhu,

ippo ipdi yaarum solrathillai :)
It was there 20 years back, Its changing now.

SP, definetely it is changing... But I hope still it is there....
It happened to my close friend who is married 2 years back, after she delivered girl baby... she said she wished to have a boy...
enna kodumai idhu... :evil:
But, I feel how a girl can hate a girl baby.....??? :oops:

Wibha
16th July 2008, 12:48 PM
Madhu,

ippo ipdi yaarum solrathillai :)
It was there 20 years back, Its changing now.

SP, definetely it is changing... But I hope still it is there....
It happened to my close friend who is married 2 years back, after she delivered girl baby... she said she wished to have a boy...
enna kodumai idhu... :evil:
But, I feel how a girl can hate a girl baby.....??? :oops:

WHAT THE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :shock: that's atrocious :cry2:

Shakthiprabha.
17th July 2008, 11:21 AM
குணவதிக்கு மகன் பிறக்கிறான். ஆதித்தன் என்று பெயரிட்டு செல்லமாய் வளர்த்து வருகின்றனர்.
எட்டு வயது குழந்தைக்கு மாமன் ஊட்டி விடும் அளவு செல்லம். அவனை சிறந்த பாடசாலையில்
கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்கிறான் தனபதி. இவரின் பாசத்தையும் அன்பையும் ஊரே பாராட்டுகிறது.
தனபதி ஆதித்தன் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பு, தன் தங்கையையும் தன்னையும் (!!!)
என்றாவது நிராதரவாய் செய்டுவிடும் என்று அஞ்சி அண்ணனையும் தங்கையையும் பிரிக்கவேண்டும் என்று எச்சரிக்கிறான் சுசீலையின் அண்ணன்.

புத்ரதோஷம் நீங்கி மக்கட்பேறு பெறுவதற்காக தன்னுடன் கோவிலுக்கு வருவதற்கு எட்டு ஆண்டுக்கும் மேலாய் சலிக்காமல் சுசிலை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள் (ரொம்ப பாவம்! ) . தனபதியும் பெயருக்கேற்ப தனம் தீட்டுவதில் குறியாய், நேரமின்மையை சுட்டிக்காட்டுகிறான். அதித்தனுக்கும், குணவதிக்கும் என்றால் நேரமின்மை என்ற பேச்சிற்கு இடமிருப்பதில்லை. 'ஏன் பாசத்தில் இந்த ஓரவஞ்சனை' என்று இத்தனை வருடத்து எரிச்சலை, ஏமாற்றத்தை மறைத்து (எரிச்சலை மொத்தமாக, தவறான இடத்தில், அதாவது, குணவதியிடம் காட்டிவிடுகிறாள்!) வருத்தம் மேலிட வினவுகிறாள் சுசிலை.

நேற்றைய பகுதியில், சில நண்பர்களின் ஆலோசனையின் பேரில் குழந்தை ஒன்றை தத்தெடுக்க, சுசீலையிடம்
கலந்தாலோசித்து முடிவெடுக்கிறான் தனபதி. ஆனால் அவன் தத்தெடுக்க நினைத்திருப்பது "ஆதித்தனை"த்தான்
என்பது சுசீலைக்கு இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தைக் கேட்ட குணவதி, தன் அண்ணி
இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வாள் என்று எண்ணி கலக்கமுறுகிறாள்.


(தொடரும்)

செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

என்கிறது திருக்குறள்.

சுசீலையால் தன் கணவனை அன்பால் திருப்பமுடியவில்லை.
'தானும் தானே அன்புக்கு ஏங்கியவள் ' சினந்து கேட்க முடியவில்லை. கேட்டும் பயனில்லை.

அப்படியிருக்க,

குணவதியை நொந்து, வாட்டி என்ன பயன்!? இதனால் சுசீலையின் பக்கத்து இருக்கும் சில நியாயங்களும் மறைந்து விட, அவள் சம்பாதிப்பது அவபெயர் மட்டுமே.

உன்னை விட உயர்ந்தோரிடம் நீ சினத்தை காப்பது பெரிதல்ல. எவன் ஒருவன் உன்னிலும் தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவனிடம் உன் பொறுமையைக் காட்டு. உன் அன்பை வெளிப்படுத்து. உன் சினத்தை அடக்கிக் கொள். என்பது மானுடப் பாடம்.

(கடந்த பல அத்தியாயங்களாக, 'இறைவன்' வந்து ஒரு அருளுரையும் கூறுவது போல் தெரியவில்லை என்பதால், இத்தொடரின் ஆன்மீகம் கெட்டுவிடாமல் இருக்க நாமே இப்படிப்பட்ட சில அரிய/நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் உண்டு! )

(இந்தத் திரியை 'நிரந்தரத்திரி' ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதற்காகவேனும், அவ்வப்போது, முடிந்த போது சில நல்ல கருத்துக்களை பகிர்ந்து வரலாம் என்று எண்ணுகிறேன்)

saradhaa_sn
17th July 2008, 01:54 PM
// (கடந்த பல அத்தியாயங்களாக, 'இறைவன்' வந்து ஒரு அருளுரையும் கூறுவது போல் தெரியவில்லை என்பதால், இத்தொடரின் ஆன்மீகம் கெட்டுவிடாமல் இருக்க நாமே இப்படிப்பட்ட சில அரிய/நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் உண்டு! )//

உண்மைதான் சக்தி,

குணவதியின் கதை தொடங்கியதில் இருந்து, இது புராண தொடர் என்பதிலிருந்து சற்று மாறி, இக்கால தொடர் ஒன்றை அக்கால உடையணிந்து செந்தமிழ் பேசி நடிப்பதுபோலுள்ளது. (அதை மாற்றத்தான் நேற்று திடீரென தேவலோகத்தைக்காட்டினரோ).

பெண்கள் எப்போதும் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பெண் கல்யாணமானதும் நம்மை விட்டுப்போய்விடுவாள். பையன்தானே கடைசிவரை நம்ம கூட இருப்பான்'. (இக்கால தனிக்குடித்தன வாழ்க்கையில் பையனும்தான் போய்விடுகிறான்).

// (இந்தத் திரியை 'நிரந்தரத்திரி' ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதற்காகவேனும், அவ்வப்போது, முடிந்த போது சில நல்ல கருத்துக்களை பகிர்ந்து வரலாம் என்று எண்ணுகிறேன்) //

'திருவிளையாடல்' திரியை நிரந்தரமாக்கியதில் சந்தோஷம். ஆனால் 'இன்னொரு' திரியையும் நிரந்தரமாக்கியதுதான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. "அந்த" நிகழ்ச்சியின் பக்கமோ, "அந்த" திரியின் பக்கமோ போய் பல வாரங்களாகி விட்டன.

aanaa
17th July 2008, 11:32 PM
(கடந்த பல அத்தியாயங்களாக, 'இறைவன்' வந்து ஒரு அருளுரையும் கூறுவது போல் தெரியவில்லை என்பதால், இத்தொடரின் ஆன்மீகம் கெட்டுவிடாமல் இருக்க நாமே இப்படிப்பட்ட சில அரிய/நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் உண்டு! )

:-)

Shakthiprabha.
18th July 2008, 11:23 AM
பெண்கள் எப்போதும் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பெண் கல்யாணமானதும் நம்மை விட்டுப்போய்விடுவாள். பையன்தானே கடைசிவரை நம்ம கூட இருப்பான்'. (இக்கால தனிக்குடித்தன வாழ்க்கையில் பையனும்தான் போய்விடுகிறான்).



உண்மை தான். வேறொரு காரணமான 'வரதக்ஷணை'யும் பெண் பிறப்பிற்கு கவலை அளிப்பதாய் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலைகள் இப்போது சற்றே குறைந்து வருகிறது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்!

Shakthiprabha.
18th July 2008, 11:24 AM
சுசீலை மிக ஆசையுடன், தன் அண்ணன் மகனைத் தத்தெடுக்க அண்ணனுடன்
கலந்தாலோசித்து திட்டமிடுகிறாள். அழுது புரண்டு, சண்டையிட்டு மிரட்டியாவது
அண்ணன் மகனையே தத்து எடுக்க வெண்டும் என்று நினைக்கிறாள்.

குணவதியோ அண்ணியும் மனப்பூர்வமாக சம்மதம் தெர்வித்தால் தான், தன் மகனை
தானம் தர சம்மதிப்பேன் என்று கூறிவிடுகிறாள். தனபதி, சுசீலையும் அவள் அண்ணனும்
கோவலில் பேசிக்கொண்டிருப்பதை ஏதேச்சையாக பார்த்துவிடுகிறான். அவன் மனம் சந்தோஷத்தில்
மிதக்க, உடனே சுசீலையிடன் சென்று "ஆதித்தனை" தத்து எடுக்க தனக்கு முழுச்சம்மதம் என்று
கூறுமாறு ஆணையிடுகிறான்.

கணவன் இல்லாத சமயம் தைரியமாக பேசும் சுசீலை, அவன் பேச்சுக்கு மறு பேச்சு பேச
தயங்கி, இறுதியில் குணவதியின் விருப்பப்படி, தன் தாலி மீது சத்தியம் செய்து, அதித்தனை
நன்றாகப் பார்த்துக்கொள்வதாய் உறுதி அளிக்கிறாள். தன்னால் எதும் செய்ய முடியாத நிலையில்
இனி அதித்தன் அன்புடனும், அறிவுடனும் சிறப்பாய் வளர்ப்பதே தன் கடன் என்று ஏற்றுக்கொண்டுவிடுகிறாள்.
இவர்கள் சொத்தின் மீது ஆசைப்படும் அவள் அண்ணன் மட்டும் வேறு ஏதோ ஊறு விளைவிக்க
ரகசியமாய் எண்ணமிடுகிறான்.

(தொடரும்)

தாலியின் மீது ஆணையிடுவது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் தொன்று தொட்டு வரும் பழக்கம்
என்று இந்த தொடர் மூலம் நமக்குத் தெரியவருகிறது. இதில், இக்காலத் திரைப்படங்களை நொந்து என்ன
பயன்! அவர்கள் நம் மரபை அல்லவா தழைக்கசெய்கிறார்கள் ! :|

பொதுவாய் தீயச் செயலில் ஈடுபடும் மனிதர்களை சிலவகையாய் பிரிக்கலாம்.

ஒன்று: பிறப்பிலேயே சூது நிறைந்து, பிறர் குடியைக் கெடுத்து அதில் இன்பம் காணுபது, அல்லது
பிறரை துன்புறுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் படைத்த சிலர்.

இரண்டு: மண், பொன், பெண் (இந்தக் கால சீரியல்களில் தனக்குத் தேவையான ஒரு 'ஆண்' கிடைப்பதற்கு
பெண் செய்யும் யுக்திகளும் சொல்லி மாளாது!!!) இம்மூன்றும் தனக்கு வசப்படுத்திக் கொள்ள எக்காரியத்திலும் ஈடுபடத் தயங்காதவர்கள்.

மூன்று: சுய புத்தி மழுங்கி, சூழ்நிலையின் காரணமாய், தீய காரியங்களுக்குத் துணை போகும் மனிதர்கள்

தீயச் செயலுக்கு ஊந்தப் படும் பலரும், மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

கைகேயி, இராவணன் போன்ற இயறகையில் நற்குணம் படைத்த பலரும் கூட மூன்றாம் வகைக்கு தள்ளப்பட்டிருப்பது செவிவழி அறிந்த உண்மை.

அதனாலேயே முயன்றவரை நம் சேர்கையை சரியானதாய் அமைத்துக்கொள்ள வேண்டும். புத்தியானது மழுங்கி, கலங்கி, தெளிவற்று இருக்கும் சமயத்தில், இன்னல் விளைவிக்கும் சிலரின் ஆலோசனைகள், நம் மனக் கதவைக் கூடத் தட்டாமல், ஆழப் புகுந்து விடும் அபாயம் உண்டு. இங்கு சுசீலையின் நிலையும் அப்படித் தான் இருக்கிறது.

நேற்றைய மொத்தக் கதை இவ்வளவு தான்.

******

குணவதி குழந்தையைத் தத்து கொடுக்க, தன் அண்ணியும் மனப்பூர்வமாக சம்மதம் தெர்விக்க வேண்டும் என்கிறாள். அவள் அண்ணியும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

*****

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் பேசி நடிக்கும் கீழ்கண்ட வசனம் இது.

"உதவி டைரெக்டர்: சார் அடுத்த எபிசோட் கதை எப்டி டெவலப் பண்றது"

டைரெக்டர் : முதல் எபிசோட் கதை எது வரை நிக்குது?

உதவி : கதையின் மெயின் கேரட்கர், மாடிலெருந்து கீழ நடப்பதை பாக்கறாங்க.

டைரெக்டர்: அப்ப இந்த எபிசோட்ல மாடிலெருந்து இறங்கி கீழ வராங்க....அப்டியே 'தொடரும்' போட்ருங்க!

*****

'ஒரு வரித் திரைக்கதையை ஒரு அத்தியாயமாக்குவது எப்படி' என்று ஏதாவது புத்தகத்தை படித்துவிட்டுத்தான் படமெடுக்க வருகிறார்கள் பலர்!

priya_2008
18th July 2008, 03:27 PM
@ Sakthi prabha Mam,

:clap: :ty:

saradhaa_sn
18th July 2008, 06:39 PM
சக்தி,

இன்று நடக்கும் அத்தனை தகிடுததம், தில்லுமுல்லு, ஏமாற்றுதல், ஏமாறுதல் எல்லாமே புராணங்களில் இருந்து வந்தவைதானே.

இந்திரனின் பொய்சேவல கூவக்கேட்டு நீராடச்சென்ற அகலிகையின் கணவனுக்கும், பொன்மான் என நினைத்து பொய்மானைத் துரத்திசென்ற ராமனுக்கும் அவை போலி என்பது பின்னர்தானே தெரிந்தது. ஆகவே போலிகளைக் கண்டு ஏமாறுவது நம் மூதாதையர் நமக்கு தந்த சொத்து.

அதுபோல, ஒருவன் நேர்வழியில் சென்றால் பலன் கிடைக்காது, குறுக்கு வழிதான் பலன் தரும் என்பதற்கு வினாயகர் - முருகன் - ஞானப்பழம் சம்பவம் ஒன்று போதாதா?. நிஜமாகவே உலகைச்சுற்றிய முருகனுக்கு பழம் கிடைக்கவில்லயே...!. பட்டைநாமம்தானே கிடைத்தது..!.

aanaa
18th July 2008, 06:41 PM
நேற்றைய மொத்தக் கதை இவ்வளவு தான்.
******

குணவதி குழந்தையைத் தத்து கொடுக்க, தன் அண்ணியும் மனப்பூர்வமாக சம்மதம் தெர்விக்க வேண்டும் என்கிறாள். அவள் அண்ணியும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

*****

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் பேசி நடிக்கும் கீழ்கண்ட வசனம் இது.

"உதவி டைரெக்டர்: சார் அடுத்த எபிசோட் கதை எப்டி டெவலப் பண்றது"

டைரெக்டர் : முதல் எபிசோட் கதை எது வரை நிக்குது?

உதவி : கதையின் மெயின் கேரட்கர், மாடிலெருந்து கீழ நடப்பதை பாக்கறாங்க.

டைரெக்டர்: அப்ப இந்த எபிசோட்ல மாடிலெருந்து இறங்கி கீழ வராங்க....அப்டியே 'தொடரும்' போட்ருங்க!

*****

'ஒரு வரித் திரைக்கதையை ஒரு அத்தியாயமாக்குவது எப்படி' என்று ஏதாவது புத்தகத்தை படித்துவிட்டுத்தான் படமெடுக்க வருகிறார்கள் பலர்!

:rotfl: :rotfl: :clap:

aanaa
18th July 2008, 06:45 PM
தாலியின் மீது ஆணையிடுவது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் தொன்று தொட்டு வரும் பழக்கம்
என்று இந்த தொடர் மூலம் நமக்குத் தெரியவருகிறது. இதில், இக்காலத் திரைப்படங்களை நொந்து என்ன
பயன்! அவர்கள் நம் மரபை அல்லவா தழைக்கசெய்கிறார்கள் ! :|

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்

தாலி கட்டுதல் தமிழரின் தொன்று தொட்ட பழக்கம் இல்லை.


இளங்கோவின் - சிலப்பதிகாரம் இதற்குச் சான்று..
கோவலன் - கண்ணகி - தாலிச் சடங்கு எங்குமே கூறப்படவில்லை.

இடையில் புகுத்தப்பட்ட மரபு.
இப்படி எத்தனையோ ..

aanaa
18th July 2008, 06:49 PM
சக்தி,
இன்று நடக்கும் அத்தனை தகிடுததம், தில்லுமுல்லு, ஏமாற்றுதல், ஏமாறுதல் எல்லாமே புராணங்களில் இருந்து வந்தவைதானே..
எம்மை நாமே ஏமாற்ற
எமக்குத் துணைபோகும் காட்சிகள் .

Shakthiprabha.
18th July 2008, 06:51 PM
சாரதா,

உண்மை தான். தொன்று தொட்டு எல்லா மனிதர்களும் தவறு செய்து கொண்டுவந்திருக்கிறார்கள். அதன் மூலம் பாடம் கற்கிறார்கள்! கற்பிக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும், ஒவ்வொரு தலைமுறையினரும், தாங்களாகவே சுயமாய் தவறு செய்து தெளிவது தான் தொடரும்.


ஆனா,

நீங்கள் சொல்வது சரி. நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாலி என்பதும் பொன் என்பதும், (சேமிப்பு என்ற பெயரில்) பின்னர் சேர்க்கப்பட்ட விஷயங்கள்!

Shakthiprabha.
21st July 2008, 12:12 PM
தத்துக் கொடுக்கும் போது சஞ்சல மனத்துடனும், சங்கடத்துடனும், காட்சி தரும்
குணவதியின் பின்னால் ஒரு சிறு குழப்பக் கதை இருக்கிறது. கோவிலில் சந்திக்கும்
சிவனடியார் ஒருவர், தத்துக் கொடுப்பதால் அவள் குழந்தைக்கு ஆபத்து என்று
கூறுவிடுவதாலேயே அவள் மனம் கலங்கமுற்றிருக்கிறது.

சடங்கை செய்து கொண்டிருக்கும் வரை வாய் மூடி மௌனமாய் இறுக்கமாய் இருந்துவிட்டு,
புரோகிதர் "தத்துக் கொடுக்க சம்மதமா" என்று கேட்டவுடன், மடை திறந்த வெள்ளமாய்
அவளுக்கு சிவனடியாரின் வாக்கு நினைவுக்கு வர, "முடியாது" என்று மறுத்து மகனை
இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்கிறாள்.

பின்னால் ஒடி வரும் தன் தமையனையும் சந்தேகப்பட்டு, சுடு சொல் உதிர்த்து,
அவனை விட்டு பிரிந்து செல்கிறாள்.

அடுத்த காட்சியிலேயே தன் அண்ணன் போலி சிவனடியாருக்கு பணம் கொடுத்து
விலை பேசியதை அறிந்துகொண்டு விடுகிறாள் சுசீலை. குணவதி பிரிந்து போனதற்காக நிச்சயம் மனம்
கலங்குவிடுவாரே தன் கணவர் என்று வருந்துகிறாள். தன் கணவனுக்கு எப்படி
சமாதானம் சொல்வது, என்று மனம் கலங்குகிறாள்.

குணவதியின் பிரிவை, அவள் சுடுசொல்லை தாங்க முடியாத தனபதி, யாரிடமும்
பேசாமல், பூட்டிய அறைக்குள் தனிமையை நாடுகிறான்.

(அல்லது........? )

(தொடரும்)

"பொய் சத்தியத்தை நம்பி ஏமாறாதே" என்று சொன்ன சிவனடியாரின் வாக்கில்
கவனம் வைத்தால், 'அண்ணன்' மேல் காட்டும் வீண் அச்சம் பழி விலகியிருக்கும்.
(அண்ணன் சத்தியம் ஏதும் செய்யவில்லையே! அண்ணி அல்லவா செய்தாள்)
இத்தனை வருடம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் மேல் அத்தனை சீக்கிரம்
சந்தேகம் வந்துவிடக்கூடுமா? 'சிவபக்தி' தான் காரணமோ என்னவோ!

மல்லிகை முல்லையை தொடச்சொல்லும் போலி சிவனடியார்
"முட்டாள் பெண்ணே, மணக்கும் முல்லையை விட்டுவிட்டு, வாடிவிடும் மல்லியை
தொட்டுவிட்டாயே" என்கிறார். இந்த வாக்கியத்தின் அபத்தத்தை கண்டுகொண்டாலே
அவன் சிவனடியாரா இல்லையா என்று தெரிந்துவிடும்! முதல் ஒரு நிமிடங்களுக்கு
நமக்கே சந்தேகம் வராதபடி இருந்தது அவரின் நடிப்பு. இருந்தும் மல்லிகை முல்லை
என்றெல்லாம் அளந்தவுடன் நாம் கண்டுபிடித்துவிட முடிகிறது.

சிவனடியாராக வந்த நடிகர் நறுக்கு தெரித்தாற் போல் வசனம் உச்சரித்தார். நன்று!

அவருக்கு கொடுக்கபட்ட வசனமும்,

"உடன்பட்டு நின்றால் உன் பொருள் உன்னதன்று
முரண்பட்டு நின்றால் மகனுக்கு மகிழ்ச்சி"

என்றெல்லாம் எதுகை மோனையுடன் அழகாய் இருந்தது (பொருள் அழகற்றது என்றாலும் கூட!) அவரும் தமிழை நன்கு உச்சரித்து தமிழுக்கும் வசனகர்த்தாவிற்கும் பெருமை சேர்த்தார்!

நான்கு பேர் கூடிவிடும் வரை காத்திருந்து விட்டு தன் ஒப்புதலை தர மறுப்பது, மிகுந்த
வேதனைக்குறியது. (ஒரு வேளை சிவனடியாரை சடங்கு நடக்கும் சில நாழிகை முன்பு
தான் பார்த்தாள் என்று வைத்துக்கொள்ளலாம்!)

குணவதியாய் நடிக்கும் மல்லிகா, தனபதியாய் நடிக்கும் மனோகர் (சரியா?)
மற்றும் சுசீலை, அவள் அண்ணன் என எல்லோரும் தங்கள் பாத்திரத்தை நன்றாக செய்கிறார்கள்.
சுசீலை கூட முன்பை விட சோபிக்கிறார்.

போலிச்சாமியார்கள் கண்டு ஏமாறுவது இக்காலத்து கேடு என்று தலைவலியை நொந்து கொண்டால்,
எக்காலத்திலும் போலிகளுக்கு பஞ்சமிருந்திருக்கவில்லை.

நம் அறிவை விட மிஞ்சியது எதுவுமே இல்லை.
நம்மீதும் நம் உள்ளுணர்வின் மீதும் பகுத்தறிவின் மீதும் நம்பிக்கை இருந்தால், கேட்பார் பேச்சைக் கேட்டு
சீரழியாமல் இருக்கலாம். "கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"
என்றெல்லாம் பல பழமொழிகள் அன்றே பலர் கூறிச்சென்றிருந்தாலும், பல நேரங்களில் புலனறிவு பகுத்தறிவை மிஞ்சிவிடுகிறது.

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

திருவள்ளுவர் விட்டுவைக்காத சங்கதி எதுவுமே இல்லை!!!!

aanaa
21st July 2008, 07:57 PM
நன்றி
:ty:


சிவனடியாராக வந்த நடிகர் நறுக்கு தெரித்தாற் போல் வசனம் உச்சரித்தார். நன்று!

அவருக்கு கொடுக்கபட்ட வசனமும்,

"உடன்பட்டு நின்றால் உன் பொருள் உன்னதன்று
முரண்பட்டு நின்றால் மகனுக்கு மகிழ்ச்சி"

என்றெல்லாம் எதுகை மோனையுடன் அழகாய் இருந்தது (பொருள் அழகற்றது என்றாலும் கூட!) அவரும் தமிழை நன்கு உச்சரித்து தமிழுக்கும் வசனகர்த்தாவிற்கும் பெருமை சேர்த்தார்!

:clap: :clap:



குணவதியாய் நடிக்கும் மல்லிகா, தனபதியாய் நடிக்கும் மனோகர் (சரியா?)
மற்றும் சுசீலை, அவள் அண்ணன் என எல்லோரும் தங்கள் பாத்திரத்தை நன்றாக செய்கிறார்கள்.
சுசீலை கூட முன்பை விட சோபிக்கிறார்.
:exactly:

பார்க்க:
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=11525&postdays=0&postorder=asc&start=0




போலிச்சாமியார்கள் கண்டு ஏமாறுவது இக்காலத்து கேடு என்று தலைவலியை நொந்து கொண்டால், எக்காலத்திலும் போலிகளுக்கு பஞ்சமிருந்திருக்கவில்லை.
:banghead: :banghead:


"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

திருவள்ளுவர் விட்டுவைக்காத சங்கதி எதுவுமே இல்லை!!!!
:yes:

aanaa
24th July 2008, 06:28 PM
டொக் டொக் டொக் ....

aanaa
25th July 2008, 08:18 AM
இது நாளையுடன் முடிகின்றதா?

:-(((

Shakthiprabha.
25th July 2008, 08:36 PM
இரு தினங்களுக்கும் மேலாக, சில பல தனிப்பட்ட காரணங்களால் தொடரைப் பார்க்க முடியவில்லை.

'இன்றுடன் இத்துடன் முடிவடைந்தது' (தனபதி/குணவதி கதையுடன்) என்று அறிவித்து மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கி விட்டார்கள்.

ஒரே ஒரு தொடர்! புராணங்களைப் பற்றி இருந்திருந்து ஆரம்பித்து, அதையும் தொடராமல் முடித்து விட்டார்களே!

மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

சாதாரணக் கதைகளை இழுத்து 2 வருடங்கள் இழுக்க முடியும் இவர்களுக்கு, பக்தித் தொட்ர்கள், புராணத் தொடர்கள் 2 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சளைக்காமல் ராமாயணம், மஹாபாரதம், க்ருஷ்ணக் கதைகள் என்று எடுக்கும் ராமனந்சாகர் போன்ற வட இந்தியர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

Shakthiprabha.
25th July 2008, 08:41 PM
ஷக்திப்ரபாவிற்கும் தொலைக்காட்சிக்கும் வெகு தூரம் போலும்!
நான் ரசித்துப் பார்த்து வந்த ஒரே தொடர் முடிவடைந்து விட்டது (தவறு! அறுபட்டு விட்டது (பாதியிலேயே) )!


நான் எழுதியவற்றை இதுவரை பொறுமையாய்ப் படித்து, என்னை மேலும் எழுதத் தூண்டி, ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

:ty:

:wave:

aanaa
26th July 2008, 05:33 AM
ஷக்திப்ரபாவிற்கும் தொலைக்காட்சிக்கும் வெகு தூரம் போலும்!
நான் ரசித்துப் பார்த்து வந்த ஒரே தொடர் முடிவடைந்து விட்டது (தவறு! அறுபட்டு விட்டது (பாதியிலேயே) )!

உண்ணப் பொசிப்பிருந்தால் உவகையிலும் சம்பா விளயுமாம்.

உங்கள் எழுத்துக்கும் பின்னூட்டுகளுக்கும் நன்றி

தொடர்ந்து எழுதுங்கள்
உங்களுப்பிடித்த நாடகங்களை

அதுவரை...



நான் எழுதியவற்றை இதுவரை பொறுமையாய்ப் படித்து, என்னை மேலும் எழுதத் தூண்டி, ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

:ty:

:wave:

அந்த APநாகராஜன் அவர்கட்கு ஒரு hatsoff :clap:
அவர் மறைவுக்குப் பின் இந்தப் பக்கம் யாருமே துணிந்து வந்ததில்லை.

சரி
திருவிளையாடலாவது
-கோலங்கள்போல் 4 /5 வருடம் ஓட்டாவிட்டலும் பறுவாயில்லை
mega சீரியல் என்ற தலைப்பையாவது தக்க வைக்க முயற்சித்திருக்கலாம்

:roll:

saradhaa_sn
26th July 2008, 11:35 AM
நான்கு நாட்களுக்கு முன், சன் டிவியில் புதிய தொடர் 'செந்தூரப்பூவே' என்று அறிவித்தார்கள். இப்போதுதானே 'லட்சுமி', 'பொறந்த வீடா' சீரியல்கள் முடிந்துள்ளன, அப்படீன்னா கோலங்கள்தான் முடியப்போகிறதோ என்று நினைத்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் புதிய தொடரின் நேரம் அறிவிக்கப்பட்டதும் 'அடடா, இது திருவிளையாடல் ஒளிபரப்பாகும் நேரமல்லவா' என்று குழம்பினேன். முடியும் என்று நினைக்கவில்லை.

(ஏனென்றால், ஏற்கெனவே அறுபத்து நாலு திருவிளையாடல்களையும் கவர்பண்ணப்போவதாக, ராதிகா வாய்கிழிய பேட்டி கொடுத்திருந்தாரே என்ற நம்பிக்கை).

ஆனால் வெறும் நாலே திருவிளையாடலோடு (64 எபிசோட்) முடித்து விட்டு சுபம் போட்டுவிட்டார்கள். கடைசியில் வந்த 'மாமன் திருச்சபை வழக்குரைத்த படலம்' தவிர மற்றவை எல்லாம் கிட்டத்தட்ட நமக்கு பரிச்சயமானவையே. 'பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை'யெல்லாம் ஏன் விட்டுவிட்டார்கள் என்பது தெரியவில்லை.

அருமையாக எழுதிய ஷக்திபிரபாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

உங்கள் ஆசையைப்பூர்த்தி செய்யவாவது விரைவில் இன்னொரு புராணத்தொடர் வரட்டும்.

Shakthiprabha.
26th July 2008, 03:42 PM
நன்றி சாரதா :)

அன்பு நண்பர்களே,

எந்த அலைவரிசையிலாவது, புராணத் தொடர்/பக்தித் தொடர் ஏதேனும் ஒளிபரப்பினால் எனக்குத் தெரியபடுத்துங்கள்!

sudha india
28th July 2008, 03:27 PM
Congrats Prabha.

Though I had never posted here, I read all your posts / vimarsanam. Your flow was too good and the critical comments were just apt.

:thumbsup:

Shakthiprabha.
28th July 2008, 03:29 PM
:ty: sudha

sudha india
28th July 2008, 04:00 PM
Why should you limit your writings only to purana kadhaigal (You may like it, thats different)

Keep writing and improving more and more.

if you wait for a purana serial, the wait may be endless.

Shakthiprabha.
28th July 2008, 04:03 PM
Sudha, I have a blog (used to write once articles, poetries, stories etc , in some gruops)

now, due to some other reasons, I am not writing.

I dunno if I will, or when I will etc.

I AM NOT interested in SOAPS of tvs though.

aanaa
28th July 2008, 07:17 PM
if you wait for a purana serial, the wait may be endless.
:exactly:

Shakthiprabha.
29th July 2008, 04:51 PM
வேறு எங்கு பதிவிடுவது என்று தெரியாததால், இத்திரியில் பதிக்கிறேன்.

என் பெண் நேற்று ஒரே அழுகை, 'திருவிளையாடல' நான் தான் பார்க்கவிடாமல் செய்து விட்டேன் என நினைத்துவிட்டாள். சன் தொலைக்காட்சி சேனலை பொட்டுக் காண்பித்து அவளை சமாதானப் படுத்துவதற்குள் பெரும் பாடாகி விட்டது .

இன்றோ 'முன்னமே என் வீட்டுப்பாடத்தை படித்து விட்டால், 'திருவிளையாடல்' நம் டிவியில் வருமா' என்று சளைக்காமல் கேட்கிறாள் :(

Madhu Sree
29th July 2008, 07:00 PM
வேறு எங்கு பதிவிடுவது என்று தெரியாததால், இத்திரியில் பதிக்கிறேன்.

என் பெண் நேற்று ஒரே அழுகை, 'திருவிளையாடல' நான் தான் பார்க்கவிடாமல் செய்து விட்டேன் என நினைத்துவிட்டாள். சன் தொலைக்காட்சி சேனலை பொட்டுக் காண்பித்து அவளை சமாதானப் படுத்துவதற்குள் பெரும் பாடாகி விட்டது .

இன்றோ 'முன்னமே என் வீட்டுப்பாடத்தை படித்து விட்டால், 'திருவிளையாடல்' நம் டிவியில் வருமா' என்று சளைக்காமல் கேட்கிறாள் :(

:( so sad, 'Thiruvilaiyaadal' - bramaanda thodar nu sollittu, ipdi seekram mudichaa, ipdi thaan nadakkum... children use to get attract to these type of programs so soon.... 'Mahabharath' - DDle telecast panneenaanga when I was a small girl... I use to finish my Homework soon and sit in front of the TV to see that program... even, I was bit happy for the initiative taken to give such programmes... but still roumba naal needikala... :x

aanaa
29th July 2008, 10:17 PM
வேறு எங்கு பதிவிடுவது என்று தெரியாததால், இத்திரியில் பதிக்கிறேன்.

என் பெண் நேற்று ஒரே அழுகை, 'திருவிளையாடல' நான் தான் பார்க்கவிடாமல் செய்து விட்டேன் என நினைத்துவிட்டாள். சன் தொலைக்காட்சி சேனலை பொட்டுக் காண்பித்து அவளை சமாதானப் படுத்துவதற்குள் பெரும் பாடாகி விட்டது .

இன்றோ 'முன்னமே என் வீட்டுப்பாடத்தை படித்து விட்டால், 'திருவிளையாடல்' நம் டிவியில் வருமா' என்று சளைக்காமல் கேட்கிறாள் :(

:shock:

saradhaa_sn
30th July 2008, 07:04 PM
வேறு எங்கு பதிவிடுவது என்று தெரியாததால், இத்திரியில் பதிக்கிறேன்.

என் பெண் நேற்று ஒரே அழுகை, 'திருவிளையாடல' நான் தான் பார்க்கவிடாமல் செய்து விட்டேன் என நினைத்துவிட்டாள். சன் தொலைக்காட்சி சேனலை பொட்டுக் காண்பித்து அவளை சமாதானப் படுத்துவதற்குள் பெரும் பாடாகி விட்டது .

இன்றோ 'முன்னமே என் வீட்டுப்பாடத்தை படித்து விட்டால், 'திருவிளையாடல்' நம் டிவியில் வருமா' என்று சளைக்காமல் கேட்கிறாள் :(
உப்புசப்பில்லாத தொடர்களையெல்லாம் 700, 800 எபிசோட்கள் இழுக்க முடிந்த ராடான் நிறுவனத்துக்கு, இருந்த ஒரே புராணத் தொடரான 'திருவிளையாடலை' 70 எபிசோட் கூட நகர்த்த முடியவில்லை என்பது வருத்தம் தரக்கூடியது.

பாவம், உங்கள் மகளின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. சிறுவர்களுக்கு இம்மாதிரி புராண, சரித்திரத் தொடர்கள் மிகவும் பிடிக்கும். என்மகன்கூட விரும்பிப்பார்த்தான். அவன் விரும்பிப்பார்க்கும் இன்னொரு தொடர், ஞாயிறுதோறும் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'மாவீரன் திப்புசுல்தான்'.

சீரியல் பார்க்கும் விஷயத்தில் பிள்ளைகள் நம்மைவிட தெளிவாக இருக்கிறார்கள்.

Shakthiprabha.
30th July 2008, 07:14 PM
saaradha,

மிகச் சரியாகச் சொன்னீர்கள்!
ஞாயிறு ஒளிபரப்பாகும் "ராமாயணமும்" நன்றாக இருக்கிறது (சன் டிவியில்)