View Full Version : Raj TV
aanaa
5th May 2008, 06:43 PM
ராஜ் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 8.01க்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அசத்தல் மாமியார்-கலக்கல் மருமகள்.
இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் மாமியார்களாக ஒரு பக்கமும், மருமகள்களாக மற்றொரு பக்கமும் இருந்து பல போட்டிகளை சந்திக் கின் றனர்.
பிரபல நடிகை காயத்ரி ஜெயராம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான நான்கு சுற்றுகள் உள்ளன.
ஒவ்வொரு சுற்றிலும் மாமியார்- மருமகள் ஆகியோருக்கு நடத்தப்படும் போட்டிகள் நகைச்சுவை துள்ளலுடன் ரொம் பவே ரசிக்க வைக்கிறது.
இந்த வாரம் மாமியார்களாக பசி சத்யா மற்றும் எஸ்.எஸ்.பார்வதி மருமகள்களாக ரிந்தியா மற்றும் ராணி பங்கேற்கும் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
aanaa
7th May 2008, 12:32 AM
ஒவ்வொரு ஞாயிறன்றும் பகல் 12 மணிக்கு ராஜ் "டிவி'யில் இசை விழா ஒளிபரப்பு நடக்கிறது.
பிரபல பாடகர், பாடகிகள் பங்கேற்று, தமிழ்நாடு முழுதும் நடந்த லட்சுமண் சுருதி குழுவினர் நடத்திய விழாக்களின் தொகுப்பு இதில் காட்டப்படும்.
---
விஜய் "டிவி'யில் கிராண்ட் மாஸ்டரில் வந்த காயத்ரி ஜெயராம், ராஜில் இப்போது! அதே பேச்சு; அதே சிரிப்பு. உடையிலும் அப்படியே!
"அசத்தல் மாமியார் - கலக்கல் மருமகள்' நிகழ்ச்சியில் நான்கு சுற்று தமாஷான கலாய்ப்பு. பிரபலங்களின் மாமியார் - மருமகள் விவாதம் தமாஷாக இருக்கிறது. சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு.
R.Latha
7th May 2008, 12:08 PM
AANAA :clap: :clap:
aanaa
12th May 2008, 06:28 PM
ஒவ்வொரு டி.வி. சேனலும் தங்கள் கோணத்தில் புதுமையான முறையில் தொடர்களை தருவதில் போட்டி போட்டு வருகின்றன. தொடர் என்றால் அழுகை என்ற எண்ணத்தை மாற்ற இப்போது டி.வி.க்கள் தயாராகி விட்டன.
ராஜ் டி.வி.யில் வெளிவரும் தொடர்களில் திருமதி ஜானகிராமன், காலத்துக்கேற்ற வகையில் புதுமையான கதையம்சத்துடன் உள்ளது. விருப்பமில்லாமல் மணந்து கொண்டதால், புகுந்த வீட்டில் ஒரு பெண் அவதிப்படுவது தான் கதை. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30க்கு.
இன்னொரு மெகா தொடர் சித்தாரா. பிரபல சினிமா நடிகை, அவளை பணம் கறக்கும் இயந் திரமாக்கிய அண்ணன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப் பட்டுள்ளது. வார நாட்களில் மாலை 6.05க்கு.
இது போல, நட்பின் பெருமை பேசும் தொடர், சிநேகிதி வார நாட்களில் மாலை 6.30 மணிக்கு.
R.Latha
21st May 2008, 08:09 AM
ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் புரியாத புதிர்.
பல்வேறு பிரச்சினைகளால் மனம் உடைந்து போன புவனா, மும்பையில் பெரிய தொழில் அதிபரான ராஜேந்திரனிடம் வேலைக்கு செல்கிறார்.குழந்தையின்றி தவிக்கும் ராஜேந்திரன்- கவுசல்யா தம்பதிகளுக்காகவும் தன்னுடைய சூழ்நிலைக்காகவும் அங்கு வாடகை தாயாக இருக்க உடன்பட்டு ஒரு குழந்தையை சுமக்கிறாள். இந்த விஷயம் ஊரில் இருக்கும் புவனாவின் உறவினர் யாருக்கும் தெரியாது.
இந்த சூழ்நிலையில் அவளது தந்தை சீனிவாசன் தனது நண்பர் ராமநாதனின் மகன் பிரகாசிற்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்து மகளிடம் கேட்க, கர்ப்பவதியான புவனா பிடிவாதமாக மறுத்து விடுகிறாள்.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது அடுத்த மகள் சித்ராவை பிரகாஷிற்கு திருமணம் செய்து வைக்க பேசி முடிக்கிறார்.
குழந்தையை பெற்று தந்ததற்காக ராஜேந்திரன் தம்பதியினரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட புவனா, தங்கை திருமணத்திற்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வரும் போது, அந்த பணத்தையும் இழக்க நேரிடுகிறது.
அடுத்து என்ன நடக்கும்? எதிர்பார்ப்போடு கதை பின்னப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தொடராகி இருக்கிறது'' என்கிறார், இயக்குனர் செந்தில்.
aanaa
23rd May 2008, 12:00 AM
ராஜ் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 8.01க்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அசத்தல் மாமியார்-கலக்கல் மருமகள்.
இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் மாமியார்களாக ஒரு பக்கமும், மருமகள்களாக மற்றொரு பக்கமும் இருந்து பல போட்டிகளை சந்திக் கின் றனர்.
பிரபல நடிகை காயத்ரி ஜெயராம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான நான்கு சுற்றுகள் உள்ளன.
ஒவ்வொரு சுற்றிலும் மாமியார்- மருமகள் ஆகியோருக்கு நடத்தப்படும் போட்டிகள் நகைச்சுவை துள்ளலுடன் ரொம் பவே ரசிக்க வைக்கிறது.
இந்த வாரம் மாமியார்களாக பசி சத்யா மற்றும் எஸ்.எஸ்.பார்வதி மருமகள்களாக ரிந்தியா மற்றும் ராணி பங்கேற்கும் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
aanaa
23rd May 2008, 12:07 AM
ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினந்தோறும் இரவு 8.01-க்கு ஒளிபரப்பாகி வரும் புதிய கலக்கல் மெகா தொடர் காமெடி.காம்.
சோகத்தையும் பிரச்சினைகளையும் மட்டுமே கதைக்களமாக கொண்டு பல தொடர்கள் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் அதிரடி நகைச்சுவையுடன் அழுத்தமான கதை அமைப்புடன் அரங்கேறியுள்ளது இந்த தொடர்.
அப்சர், பிருந்தா தாஸ், ஒய். விஜயா, சிவகுமார், வந்தனா மற்றும் பலர் நடித்துள்ள இந்த தொடரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அனைவரையும் ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் வெங்கட்.
aanaa
23rd May 2008, 12:08 AM
ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய நிகழ்ச்சி காதல் மீட்டர்.
பிரம்மாண்டமான அரங்கில் படம் பிடிக்கப்பட்டு ஒளிப்பரப்படும் இந்த நிகழ்ச்சியில் மூன்று இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரைப்பட நடிகையை கவரும் வகையில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொள்ள அவர்களை கவரும் வகையில் பல வகையான பிரிவுகளில் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முயல்வது நகைச்சுவை தோரணமாக உள்ளது.
இளைஞர்களின் பதில்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு இறுதியில் அதிக மதிப் பெண்கள் பெற்ற நபர் நடிகையை கவர்ந்த நாயகனாக அறிவிக்கப்படுகிறார்.
எத்தனையோ வகையான நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சி நேயர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
aanaa
26th May 2008, 07:41 PM
விஜய் டிவியில், சங்கமம் நிகழ்ச்சியை தொகுத்து வந்த பாடகி மாதங்கி, இப்போது ராஜ் டிவியில், இசை மழையில், இசையமைப்பாளர் பரத்வாஜுடன் பங்கேற்கிறார்.
தமிழகம் முழுவதும், லஷ்மண் சுருதி குழுவினர் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதை ஒளிபரப்ப ராஜ் டிவி முடிவு செய்துள்ளது. இன்று பகல் 12 மணிக்கு, திருச்சியில் நடந்த இசை நிகழ்ச்சி தொகுப்பு காட்டப்படுகிறது. அன்றைய பாடல்கள் முதல் இன்றைய பாடல்கள் வரை இதில் அளிக்கப்படுகிறது. மிமிக்ரி நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது
aanaa
1st June 2008, 06:44 PM
ஸ்டார் சிங்கர் இனி 3 நாள்!
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும்
அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர்
aanaa
9th June 2008, 06:09 PM
ராஜ் டிவியில் திங்கட்கிழமை தோறும் காலையில் ஒளிபரப்பாகும் கொக்கரக்கோ நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நகைச்சுவை திரைப்படங்களில் நடித்த நடிகர், நடிகையர் பங்கேற்று காலை நேரத்தை கலகலப்பாக்குகின்றனர். பல குரல் மன்னர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்குகின்றனர்.
aanaa
9th June 2008, 06:10 PM
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும்
அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர்
aanaa
16th June 2008, 11:41 PM
ராஜ் டிவியில் திங்கட்கிழமை தோறும் காலையில் ஒளிபரப்பாகும் கொக்கரக்கோ நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நகைச்சுவை திரைப்படங்களில் நடித்த நடிகர், நடிகையர் பங்கேற்று காலை நேரத்தை கலகலப்பாக்குகின்றனர். பல குரல் மன்னர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்குகின்றனர்.
aanaa
16th June 2008, 11:42 PM
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும்
அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர்
aanaa
1st July 2008, 08:35 PM
ஸ்டார் சிங்கர் இனி 3 நாள்!
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும்
அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர்
aanaa
1st August 2008, 06:14 PM
ராஜ் டிவி'யில், சமுதாய நோக்கில் அளிக்கப்படும் வித்தியாசமான நிகழ்ச்சி அகடவிகடம்.
பாஸ்கர் ராஜ் இயக்கும் இந்த நிகழ்ச்சியில் பேசுவோரிடம் ஆவேசம் இல்லை; ஆணித்தரமான வாதம் உண்டு. ஆரோக்கியமான விவாதம் தான் இந்த மேடை. 375 வாரங்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி சிறிது கூட தொய்வில்லாமல் தூள் கிளப்புகிறது. ஞாயிறு தோறும் பகல் 10.30க்கு.
aanaa
13th August 2008, 06:43 PM
ராஜ் "டிவி'யில் வரும் 15ம் தேதி சுதந் திர தினத்தை ஒட்டி, காலை முதல் மாலை வரை, ஏகப்பட்ட தேசப் பற்று நிகழ்ச்சிகள் உள்ளன. வி.ஐ.பி.,க் கள் மற்றும் நட்சத்திர பேட்டிகள் உண்டு.
எல்லாரும் ரசிக்கும் படி சுவாரஸ்யத் துக்கு குறைவிருக்காது. * அறுசுவை அரங்கம்: வெள்ளிதோறும் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகும் அறுசுவை அரங்கம் நிகழ்ச்சியில் பல்வேறு வித்தியாசமான உணவு வகைகள் சமைப்பது குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. குந்தவை தரும் குறிப்புகளும் அருமை.
aanaa
17th August 2008, 12:22 AM
பெண்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `பெண்' நிகழ்ச்சி. சமையல் கலை, கலை நயமிக்க கைவினைப் பொருட்கள், சிறுதொழில் முன்னேற்றம் மற்றும் நலமான வாழ்வு போன்ற பெண்களுக்கான பல விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன.
aanaa
17th August 2008, 12:39 AM
ஆள் பாதி ரீல் பாதி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு குட்டிக் கதையுடன் நகைச்சுவை கலந்து ஒளிபரப்புகிறது, `ஆள் பாதி ரீல் பாதி' நிகழ்ச்சி.
தொகுத்து வழங்குகிறார் `மிமிக்ரி' செந்தில்.
aanaa
23rd August 2008, 07:53 AM
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு ராஜ் டிவி ஒளிபரப்பும் நிகழ்ச்சி, `பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.
இந்த நிகழ்ச்சியில் வாழ்த்து பெறுகிறவர்களின் புகைப்படத்தையும், அவருக்கு பிடித்த பாடலையும் ஒளிபரப்பி மகிழ்விக்கிறது இந்நிகழ்ச்சி.
சனிக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
aanaa
30th September 2008, 10:53 PM
"ஆதிபராசக்தி''
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஆன்மிகத் தொடர் "ஓம் ஆதிபராசக்தி.'' நடிகை சுகன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்தொடரை எழுதி தயாரித்துள்ளார் ஸ்ரீபிரியா. அன்னை ஆதிபராசக்தியின் பெருமைகளை போற்றும் புராண அடிப்படையிலான தொடராகும் இது.
வெள்ளிதோறும் இரவு 8.01 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆதிபராசக்தி தொடர்.
aanaa
30th September 2008, 10:57 PM
பெண்களுக்கான `பரிசு விளையாட்டு'
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `பரிசு பத்தாயிரம்.'
இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் மூலம் இல்லத்தரசிகள் நாள்தோறும் பத்தாயிரம் ரூபாய் வரை வெல்லலாம். சொந்த பணத்தேவைகளுக்காக கணவனின் கையை எதிர்பார்க்கும் புத்திசாலிப் பெண்கள், தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தங்கள் செலவுக்குத் தேவையான பணத்தை பரிசாக வெல்லும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி அளிக்கிறது.
aanaa
3rd October 2008, 10:51 PM
மிக பழமையான இதிகாசமான மகாபாரதம் தமிழ் நேயர்களுக்காக வரும் திங்கட்கிழமை முதல் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன் இது குறித்து கூறுகையில், மகாபாரதம் தலைமுறைகள் மற்றும் காலத்தைக் கடந்தது. அரசியல், வஞ்சகம், துரோகம் மற்றும் உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது எழுதப்பட்ட காலத்திற்கேற்றார் போலவே இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளது. இதற்கு முன் தொடர்களில் காணப்படாத பிரம்மாண்டத்தை நேயர்கள் அனுபவித்து மகிழ வேண்டும்' என்றார்.
திரைப்படத்துறையில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையுடன் இத் தொடர் உருவாக் கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வேத வியாசரால் எழு தப்பட்ட மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எந்த வித திரிபும் இன்றி, இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வியாழன் வரை ராஜ் டி.வி.யில் மகாபாரதம் உங்களுக்குபுது அனுபவமாக இருக்கும்.
aanaa
5th October 2008, 02:22 AM
கோலிவுட் பஸ்
ராஜ் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `கோலிவுட் பஸ்'. தமிழ் திரையுலகின் நிகழ்வுகளை ஒரு கண்ணாடியாக பிரதிபலிக்கிறது கோலிவுட் பஸ் நிகழ்ச்சி. புதுப்பட பூஜை, புது ரிலீஸ், இசை வெளியீடு, வசூல் சாதனைகள், படப்பிடிப்பு தளங்கள், பிரபல நட்சத்திரங்களின் பேட்டிகள், புதுப்பட முன்னோட்ட காட்சிகள் மற்றும் பல தகவல்களை தருகிறது இந்த நிகழ்ச்சி.
R.Latha
22nd October 2008, 01:35 PM
மந்திர வாசல்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `மந்திரவாசல்' நிகழ்ச்சி திகிலூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
R.Latha
22nd October 2008, 01:51 PM
என்ன என்ன வார்த்தைகளோ
பள்ளி செல்லும் மாணவர்களின் குறிப்பாக 7, 8 மற்றும் 9-வது வகுப்பில் பயிலுவோரின் அறிவுப்பசியைத் தூண்டும் வகையில் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி, ``என்ன என்ன வார்த்தைகளோ.''
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.
R.Latha
22nd October 2008, 02:18 PM
தங்க குரல் வேட்டை
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி, தங்க குரல் வேட்டை. தமிழகம் முழுவதும் உள்ள 15 முதல் 40 வயது வரை உள்ளவர்களில் 96 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசளிக்கப்படுகிறது. மேலும் இருவருக்கு பின்னணி பாடகராகும் வாய்ப்பும் உண்டு.
பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் தமிழக இசை உலக பாடகர்களான பிரசாந்தினி, வினயா, பென்னி கிருஷ்ணகுமார், ஜெயராஜ் கோபால், சத்யன், ராஜலட்சுமி மற்றும் இசை அமைப்பாளர் ரைஹானா போன்றவர்களால் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடுவர்களாக பாடகர் கிரிஷ்; அனுபமா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பங்கேற்கிறார்கள். திரைத்துறை மற்றும் இசைத்துறை பிரபலங்கள் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.
இந்த இசை நிகழ்ச்சி 2 விதமான சுற்றுகளை கொண்டது. முதல் சுற்றில் திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையை சேர்ந்த போட்டியாளர்கள் மொத்தம் 48 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் சென்னை, திருப்பூர், ஈரோடு மற்றும் நெல்லையை சேர்ந்த போட்டியாளர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த 96 போட்டியாளர்களிலிருந்து 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இறுதிச் சுற்றில், போட்டியாளர்கள் பல்வேறு திறமை சுற்றுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒரே ஒரு தங்க குரலுக்கான போட்டியாளர் தேர்வாகிறார். நிகழ்ச்சி வர்ணனையாளர் நடிகை சுவாதி. தயாரிப்பு: சேடல் வீடியோஸ்.
aanaa
22nd October 2008, 07:46 PM
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ள புதிய இசை நிகழ்ச்சி "டாப் சிங்கர்'. இதில் 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்கும் அனைத்துப் போட்டியாளர்களும் பாடகர்கள் சத்யன், ஜெயராஜ் கோபால், பென்னி கிருஷ்ணகுமார், பிரசாந்தினி, வினயா, ராஜலட்சுமி மற்றும் இசையமைப்பாளர் ரெஹேனா ஆகியோரால் பல்வேறு சுற்றுத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பாடகர் கிரிஷ், அனுபமா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்கிறார்கள். இவர்களுடன் திரைத்துறை மற்றும் இசைத்துறையின் பிரபலங்கள் சிறப்பு நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள்.
அனைத்துப் போட்டியாளர்களிலிருந்தும் இறுதியாக 96 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர், அவர்களுள் 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். வித்தியாமான, பிரம்மாண்டமான அரங்கில் போட்டி நடைபெறும்.
இறுதி வரை சிறப்பாகப் பாடி அனைவரையும் கவரும் ஒரு தங்கக் குரலுக்குச் சொந்தக்காரர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு இதுவரை தமிழகத்தில் எந்தத் தொலைக்காட்சிச் சேனலும் தராத வகையில் ரூ.1 கோடிக்கான பரிசும் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பும் வழங்கப்படும்.
சிட்டாடல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை சுவாதி தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம், ஒளிபரப்பு நேரம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும்.
aanaa
8th November 2008, 08:13 PM
டாப் சிங்கர்
சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி டாப் சிங்கர். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுபவர்க்கு பரிசு காத்திருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் டாப் சிங்கர் ஒளிபரப்பாகிறது.
டாப் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாவட்டவாரியாக பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை நம்மிடம் தெரிவித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அம்பிலி கிருஷ்ணன், போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் பற்றியும் விவரித்தார்.
அவர் கூறியதாவது:-
முதல் கட்டமாக சேலம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இருந்து தேர்வு நடத்தி 48 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களில் 20 பேர் நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். இதையடுத்து சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாடும் ஆற்றல் கொண்டவர்கள் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் இந்த இண்டாம் கட்ட பரிசீலனை முடிந்ததும் இறுதிக்கட்டத்தேர்வு விறுவிறுப்பாகத் தொடங்கிவிடும்.
இந்த போட்டியின்நடுவர்களாக இதுவரை பிரபல பாடகர்களுடன் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பரத், நடிகைகள் மும்தாஜ், பூர்ணிதா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இறுதிப்போட்டியில் பிரபல இசைமேதை ஒருவர் கலந்து கொள்கிறார்.
aanaa
8th November 2008, 08:14 PM
மனம் கவர்ந்த மகாபாரதம்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் ஈர்த்த தொடராகியிருக்கிறது.
அஸ்தினாபுரம் மன்னன் சாந்தனுவின் திருமணத்தில் இருந்து தொடங்கிய கதை, இப்போது பாண்டவர்களின் சிறுபிராயத்தை சுவைபட சொல்லத் தொடங்கியிருக்கிறது.
பாண்டவர்களைப் பிடிக்காத சகுனி தான் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பிரிவு ஏற்படுத்த எண்ணுகிறான். இந்த சூழ்ச்சி எதையும் அறியாத துரியோதனன் பாண்டவர்களிடம் உறவுமுறையில் நட்பு பாராட்டவே செய்கிறான். பாண்டவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரனிடம் (தர்மர்) "அண்ணா... நான் உங்களுக்கு உங்கள் தம்பிகள் போல உடனிருந்து உதவி செய்வேன்'' என்கிறான். சொன்னபடி சிறுசிறு உதவிகள் செய்து அந்தக் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக்கொள்கிறான்.
ஆனால் இதை கொஞ்சமும் எதிர் பாராத சகுனி, தன் திட்டம் இதனால் பாழாகிவிடும் என்று பயப்படுகிறான். இதனால் அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் முதல்விதையை விதைக்கிறான். கவுரவர்களுடன் பாண்டவர்களுக்கும் கிருபாச்சாரியார் உபநயனம் செய்விக்கிறார். அப்போது அங்கு செல்லும் சகுனி அங்கிருந்து பாண்டவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறான்.இந்த சம்பவம் பாண்டவர்களை எந்தஅளவில் பாதிக்கிறது என்பதை அடுத்து வரும் காட்சிகள் சித்தரிக்கிறது.
aanaa
8th November 2008, 08:15 PM
அறுசுவை அரங்கம்
வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி அறுசுவை அரங்கம். புகழ் பெற்ற சமையல் கலை வல்லுனர்களால் பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பு பற்றி இதில் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பல சுவாரசியமான சமையல் குறிப்புகளையும் நிகழ்ச்சியில் வழங்குகிறார்கள்.
aanaa
8th November 2008, 08:16 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கான நிகழ்ச்சி இது. பிறந்த நாள் காணும் நபரின் புகைப்படத்தையும், அவருக்கு பிடித்த பாடலையும் ஒளிபரப்பி நேயர்களை மகிழ்விக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி, ராஜ் டிவியில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
aanaa
8th November 2008, 08:17 PM
பெண்
ராஜ் டிவியில் தினமும் காலை 11 மணிக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பல பயனுள்ள தகவல்களையும் தரும் நிகழ்ச்சி `பெண்'. பெண்களால் வழங்கப்பட்டு, பெண்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், சமையல், கைவினை, அழகு குறிப்புகள் என்று மட்டுமில்லாமல், அலுவலக வேலை, தொழில், வணிகம் போன்ற துறைகளில் பெண்களின் சாதனைகளையும் தருகிறார்கள்.
aanaa
8th November 2008, 08:17 PM
ஆள் பாதி ரீல் பாதி
உழைப்பு, விடா முயற்சி, வெற்றி, முன்னேற்றம் என்று வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக, ஒரு குட்டி கதையுடன், நகைச்சுவை கலந்து மிக சுவாரசியமாக வழங்குகிறது, `ஆள் பாதி ரீல் பாதி' நிகழ்ச்சி. தனக்கே உரிய பாணியில், கிண்டலும், நையாண்டியும் கலந்து திரைப்படங்களிலிருந்து காமெடி காட்சிகளை பல வித்தியாசமான வேடங்கள் தரித்து தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் `மிமிக்ரி' செந்தில்.
ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
R.Latha
10th November 2008, 02:12 PM
டாப் சிங்கர்
சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி டாப் சிங்கர். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுபவர்க்கு பரிசு காத்திருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் டாப் சிங்கர் ஒளிபரப்பாகிறது.
டாப் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாவட்டவாரியாக பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை நம்மிடம் தெரிவித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அம்பிலி கிருஷ்ணன், போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் பற்றியும் விவரித்தார்.
அவர் கூறியதாவது:-
முதல் கட்டமாக சேலம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இருந்து தேர்வு நடத்தி 48 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களில் 20 பேர் நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். இதையடுத்து சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாடும் ஆற்றல் கொண்டவர்கள் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் இந்த இண்டாம் கட்ட பரிசீலனை முடிந்ததும் இறுதிக்கட்டத்தேர்வு விறுவிறுப்பாகத் தொடங்கிவிடும்.
இந்த போட்டியின்நடுவர்களாக இதுவரை பிரபல பாடகர்களுடன் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பரத், நடிகைகள் மும்தாஜ், பூர்ணிதா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இறுதிப்போட்டியில் பிரபல இசைமேதை ஒருவர் கலந்து கொள்கிறார்.
R.Latha
10th November 2008, 02:14 PM
மனம் கவர்ந்த மகாபாரதம்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் ஈர்த்த தொடராகியிருக்கிறது.
அஸ்தினாபுரம் மன்னன் சாந்தனுவின் திருமணத்தில் இருந்து தொடங்கிய கதை, இப்போது பாண்டவர்களின் சிறுபிராயத்தை சுவைபட சொல்லத் தொடங்கியிருக்கிறது.
பாண்டவர்களைப் பிடிக்காத சகுனி தான் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பிரிவு ஏற்படுத்த எண்ணுகிறான். இந்த சூழ்ச்சி எதையும் அறியாத துரியோதனன் பாண்டவர்களிடம் உறவுமுறையில் நட்பு பாராட்டவே செய்கிறான். பாண்டவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரனிடம் (தர்மர்) "அண்ணா... நான் உங்களுக்கு உங்கள் தம்பிகள் போல உடனிருந்து உதவி செய்வேன்'' என்கிறான். சொன்னபடி சிறுசிறு உதவிகள் செய்து அந்தக் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக்கொள்கிறான்.
ஆனால் இதை கொஞ்சமும் எதிர் பாராத சகுனி, தன் திட்டம் இதனால் பாழாகிவிடும் என்று பயப்படுகிறான். இதனால் அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் முதல்விதையை விதைக்கிறான். கவுரவர்களுடன் பாண்டவர்களுக்கும் கிருபாச்சாரியார் உபநயனம் செய்விக்கிறார். அப்போது அங்கு செல்லும் சகுனி அங்கிருந்து பாண்டவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறான்.இந்த சம்பவம் பாண்டவர்களை எந்தஅளவில் பாதிக்கிறது என்பதை அடுத்து வரும் காட்சிகள் சித்தரிக்கிறது.
R.Latha
10th November 2008, 02:23 PM
ஆள் பாதி ரீல் பாதி
உழைப்பு, விடா முயற்சி, வெற்றி, முன்னேற்றம் என்று வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக, ஒரு குட்டி கதையுடன், நகைச்சுவை கலந்து மிக சுவாரசியமாக வழங்குகிறது, `ஆள் பாதி ரீல் பாதி' நிகழ்ச்சி. தனக்கே உரிய பாணியில், கிண்டலும், நையாண்டியும் கலந்து திரைப்படங்களிலிருந்து காமெடி காட்சிகளை பல வித்தியாசமான வேடங்கள் தரித்து தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் `மிமிக்ரி' செந்தில்.
ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
aanaa
15th November 2008, 06:38 AM
ஆதிபராசக்தி
ராஜ் டிவியில்வெள்ளி தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆதிபராசக்தி புராணத் தொடர்.
அன்னை எந்தெந்த திருத்தலங்களில் எத்தனை விதமான திருவிளையாடல் புரிந்திருக்கிறாள் என்பதை காட்சிப்படுத்தும் தொடர் இது.
காஞ்சி காமாட்சியாக இருந்து குடும்ப வாழ்வின் பெருமையை விளக்கும் அவளே மதுரை மீனாட்சியாக இருந்து வீரத்தை விளக்குகிறாள். கருணையின் வடிவான அவளே காளியாகவும் இருந்து அசுரவதம் புரிகிறாள். அவளால் எத்தனையோ புலவர்கள் வாக்குவளம் பெற்று பல அரிய நூல்கள் தந்திருக்கிறார்கள். ஒட்டக்கூத்தர், கவிகாளமேகம், மூககவி, காளிதாசன், தெனாலி ராமன் இப்படி எத்தனையோ கவிஞர்கள் அன்னையின் அருளால் கவிமேதைகளாகி இருக்கிறார்கள்.
மாங்காட்டில் காமாட்சியாக இருக்கும் அன்னை, திருவேற்காட்டில் கருமாரியாக வந்து காட்சி தருகிறாள். பாம்பாக இருக்கும் அவளே, வேம்பாகவும் இருந்து அருள் புரிகிறாள். இந்த அன்னை இமயம் முதல் குமரி வரை எந்தெந்த திருத்தலங்களில் பக்தர்களுக்கு எவ்விதமாய் காட்சியளித்தாள் என்பதை தொடரும் காட்சிகளில் காணலாம்.
ஆதிபராசக்தியாக நடிகை சுகன்யா நடிக்கிறார். மாஸ்டர் ஸ்ரீதர், காளிதாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உண்டு.
தொடருக்கு கதைவசனம்: கே.பி.அறிவானந்தம். இசை:ராஜேஷ் வைத்யா. இயக்கம்: கோபி பீம்சிங்.
aanaa
19th November 2008, 12:49 AM
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "மகாபாரதம்' இதிகாசத் தொடர் நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பஞ்ச பாண்டவர்களின் போராட்டம், பாஞ்சாலியின் சபதம், சகுனியின் சூழ்ச்சி, கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த கீதா உபதேசம், அர்ச்சுனனின் வீரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த "மகாபாரதம்' மெகா தொடரில் இடம்பெற்றுள்ள தந்திரக் காட்சிகள் சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிப்பாகிறது.
R.Latha
27th November 2008, 01:40 PM
நாகம்மா
ராஜ் டி.வி.யில் இன்று இரவு 8.01 மணிக்கு தொடங்கும் புதிய பக்தித் தொடர், நாகம்மா.
600 வருடங்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. சர்வசக்தி பெற்ற தேவி நாகம்மாளின் சிலை காணாமல் போய் விடுகிறது. அந்த சிலையின் மதிப்பு தெரிந்து தொல்பொருள் ஆய்வுத்துறையில் இருந்து அதிகாரிகள் கூட்டம் சிலை தேடும் பணியில் ஈடுபடுகிறது.
சிலையின் கணக்கற்ற மதிப்பு தெரிந்த திருடர்கள் கூட்டமும் சிலையைத் தேடி தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.
இவர்கள் போதாதென்று மந்திரவாதி ஒருவனின் பார்வையும் நாகம்மா சிலை மீது இருக்கிறது. தனக்கு நாகம்மா சிலை கிடைப்பதன் மூலம் தன்னை சர்வசக்தி உடையவனாக மாற்றி விட முடியும். பிறகு எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று எண்ணும் அவனும் சிலை தேடலில் மும்முரமாகிறான்.
இந்த சிலைக்கு காலகாலமாக தொடர்ந்து பூஜை செய்து வந்த பூசாரியின் குடும்பம் தான் சிலைக்கு பாதுகாப்பு. அவர்கள் நாகம்மா சிலையை `பச்சையம்மா' வாக்கி வேறொரு கோவிலில் வழிபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இதை மந்திரவாதி மட்டும் தனது மந்திரசக்தியால் தெரிந்து கொள்கிறான். `பச்சையம்மன்' சிலையை கைப்பற்ற தீவிரமாகிறான்.பச்சையம்மன் கோவில் இருக்கும் ஊரில் ஒரு தெய்வக்குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை சொல்வதெல்லாம் `அருள்வாக்காக' பலிப்பதால் ஜனங்கள் தெய்வக் குழந்தையாக கொண்டாடுகிறார்கள். இந்தக் குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாகும் போது ஒரு இளைஞன் அவளை கவர்கிறான். அவனை சந்தித்தது தெய்வத்தின் விருப்பமாக இருக்கும் என்று எண்ணும் அந்தப் பெண், பெரியவர்கள் சம்மதத்துடன் அவனை மணந்து கொள்கிறாள்.
திருமணத்துக்குப் பிறகே சிலை திருட வந்த திருட்டுக்கும்பலில் அவனும் ஒருவன் என்பது தெரிய வருகிறது.
இப்போது அந்தப் பெண் எடுக்கும் முடிவு என்ன? அவர் கணவனாலோ, மந்திரவாதியாலோ பச்சையம்மனாக மாறிய `நாகம்மா' வின் சிலையை அபகரிக்க முடிந்ததா என்பது பரபரப்பும் விறுவிறுப்புமான கிளைமாக்ஸ் என்கிறார், தொடரின் இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ்.
தொடருக்கு ஒளிப்பதிவு: பி.எஸ்.முருகன், இசை: தேவா. பாடல்: பிறைசூடன்.
`நாகம்மா'வாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் சண்முக சுந்தரம், சிவன் சீனிவாசன், சுபாஷினி, அழகு, டி.ராஜன், ஸ்ரீவித்யா ஆகியோரும் உண்டு. சனிக்கிழமை தோறும் இந்த தொடரை காணலாம்.
aanaa
14th December 2008, 02:18 AM
அகட விகடம்
ராஜ் டிவியில் எட்டு வருடங்களை கடந்து ஒன்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அகட விகடம் விவாத நிகழ்ச்சி, பொழுது போக்கும் நிகழ்ச்சி மட்டும் இல்லாமல் சமுதாயத்தின் பழுதை நீக்கும் நிகழ்ச்சியும் கூட. முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற அனாதை இல்லங்கள், உடல் ஊனமுற்றோர் இல்லங்கள், இன்னும் பல தொண்டு அமைப்புகள் போன்றவைக்கு அகட விகடம் நிகழ்ச்சியின் வாயிலாக நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் உள்ள ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், ஜேசீஸ் சங்கங்கள், மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சி கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும், பஹ்ரைன் போன்ற வெளி நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. வரும் ஜனவரி மாதம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.
இது ஒரு ராஜ் டிவி தயாரிப்பு. ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
aanaa
20th December 2008, 04:24 AM
வெளிநாட்டிலும் ராஜகீதம்
ராஜ் டிவியில் பி.எச்.அப்துல் ஹமீது நடத்தி வரும் ராஜகீதம் நிகழ்ச்சி `மெகா பைனல்' கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கான நேரடிப்போட்டி வருகிற ஜனவரி 26-ந்தேதி நடக்கிறது.
திரைப்படத்தில் பாடும் திறன் கொண்டவர்களை சினிமாவுக்காக உருவாக்கும் நிகழ்ச்சி, ராஜகீதம். இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து புகழ் பெற்ற பி.எச்.அப்துல் ஹமீது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் டிவியில் இந்த நிகழ்ச்சியை தொடங்கினார். சின்னத்திரைக்கும்-வெள்ளித்திரைக் கும் ஒரு பாலமாக இந்த நிகழ்ச்சி தொடங்கி, தொடர்ந்து பாடகர்களை உருவாக்கி வருகிறது.
நிகழ்ச்சி பற்றி அப்துல் ஹமீது கூறும்போது...
"இதுவரை நடந்த பாட்டுப்போட்டியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பாடினார்கள். அவர்களில் 160 பேர் பாடகர் அந்தஸ்துக்கு தேர்வு பெற்றார்கள். இவர்களில் ஒரு பாடகர், ஒரு பாடகி பார்வையாளர்களின் வாக்குச்சீட்டு மூலம் தேர்வு
செய்யப்பட்டார்கள்.இரண்டாவது சுற்றில் டிவி பார்க்கும் ரசிகர்கள் எஸ்.எம்.எஸ்.கள் மூலம் தேர்ந்தெடுத்தார்கள்.
மூன்றாவது சுற்றில் 3 நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் பாடகர்களிடம் உள்ள குறைகளை சரி செய்து பாட அனுமதித்து தேர்வு செய்தார்கள்.
நடுவர்களில் ஒருவரான `படையப்பா' பாடகர் ஸ்ரீராம், பாடகர்களின் குறைகளை திருத்தியதோடு அவரே நடுவராகவும் அமர்ந்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது 4-வது சுற்று போய்க்கொண்டிருக்கிறது. இதில் நடுவர் என்று யாரும் கிடையாது. பாடகர்கள் சுதந்திரமாக பாடுவார்கள். பிரபல இசையமைப்பாளர் தீனா அதை தனது ஸ்டூடியோவில் இருந்து பார்த்து தேர்வு செய்தார். இப்படி அவர் மொத்தம் 14 பாடகர்களை தேர்வு செய்தார்.
இதில் இறுதிக்கட்டத்தில் 3 இசையமைப்பாளர்கள், 3 பாடல் ஆசிரியர்கள், 3 இயக்குனர்கள், 3 தயாரிப்பாளர்கள், 3 பாடகர்-பாடகிகள் கலந்து கொண்டு `மார்க்' வழங்கி சிறந்த பாடகர் - பாடகியை தேர்வு செய்கிறார்கள். திரையுலகில் ஒட்டுமொத்தமாக இப்படி அத்தனை பேரும் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கும் பின்னணிக்கு காரணம், சினிமா பின்னணி பாடகர் வாய்ப்பு மேடையிலேயே பாடகர்களுக்கு கிடைக்கும் என்பதுதான்.
8-வது ஆண்டில் நடக்கும் இந்த மூன்றாவது மெகா பைனல் போட்டியில் 3 பாடகர்கள், 3 பாடகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிவந்தபோதே முகேஷ், மதுமிதா, சுசித்ரா ராமன், சத்யன், ஹரிசரண், ஹரிணி, சுதாகர், பிரியதர்ஷினி, சுருதிப்பிரியா ஆகியோர் சினிமாவில் பாடகர்கள் ஆகி விட்டார்கள். இப்போது புதியவர்களுக்கும் நிச்சய வாய்ப்பு என்பது இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு அம்சம், கனடா, ஜெர்மனி, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இந்த போட்டியில் பாட வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் ஆர்வத்தை போற்றும் வகையில் அடுத்த ஆண்டு வெளிநாடுகளிலும் இந்த நிகழ்ச்சியை விரிவுபடுத்த இருக்கிறோம்.''
R.Latha
9th January 2009, 12:28 PM
[tscii:7953b70557]தினம் தினம்கொக்கரக்கோ
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘தினம் தினம் -கொக்க ரக்கோ'
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பல்வேறு விருந்தினர்களு டன் தொகுப்பாளர்கள் உரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப் பட்டுள்ளது
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இதில் தொலைபேசி மூலம் நேயர்க ளும் சிறப்பு விருந்தினர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள லாம்
திங்கள்கிழமை ஒளிபரப்பாகும் ‘கொக்கரக்கோ' நிகழ்ச்சியில் நகைச்சு வைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது
இதில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
நாள்தோறும் ஒவ்வொரு தலைப் பில் சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பா கிறது.[/tscii:7953b70557]
R.Latha
9th January 2009, 12:29 PM
[tscii:a055fa0a84]தினம் தினம்கொக்கரக்கோ
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘தினம் தினம் -கொக்க ரக்கோ'
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பல்வேறு விருந்தினர்களு டன் தொகுப்பாளர்கள் உரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப் பட்டுள்ளது
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இதில் தொலைபேசி மூலம் நேயர்க ளும் சிறப்பு விருந்தினர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள லாம்
திங்கள்கிழமை ஒளிபரப்பாகும் ‘கொக்கரக்கோ' நிகழ்ச்சியில் நகைச்சு வைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது
இதில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
நாள்தோறும் ஒவ்வொரு தலைப் பில் சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பா கிறது.
Dinamani 9.1.09
[/tscii:a055fa0a84]
aanaa
11th January 2009, 11:57 PM
The Paramapatha Vasal is open. Thanks to Raj TV and Sun news channel many could see the vasal open early today at 5.00 am in Srirangam and it is also available as live video's in the temple websites.
chennai television
aanaa
11th January 2009, 11:58 PM
Raj Tv , Sun News are screening live from Srirangam from 3 and 4 am respectively.
Vaikuntha Ekadasi is celebrated for 20 days in Srirangam on the Sukla Ekadasi day of the Tamil month of Margazhi. On Vaikuntha Ekadasi day, Lord Ranganatha, wearing a garment of rubies, goes out of the temple in a magnificent procession through the Parampada Vasal gate (gateway to salvation) and goes to the 1000-pillar hall.
The program in Parthasarathy temple today is as follows.
2.00 - Moolavar dharsanam
4.00 - ul purapadu
4.30- paramapatha vasal thirapu
10.00- urchavar thirumanjanam
12.00 - periya veedhi purapadu
The sorka vaasal will open every day till 15th from 6.00 PM and from 11th to 16th from 9.30 am.
The most important festival celebrated for full twenty one days during Tamil month Margazhi (December-January), is divided to two ten days as pagal pathu and ra pathu, with all pomp and pageantry.On Vaikunta Ekadesi day, Lord Ranganatha, attired in splendid garment, proceeds in a magnificient procession through Paramapada Vasal, arrives at Thirumamani Mandapam in the Thousand in a pillared hall to the thrill and joy of the devotees gathered in lakhs who have come from all over India and abroad. This occasion is the peak point of all festivals conducted in the Temple, on this day of days; Sri Ranganatha becomes a virtual king and is known as Sri Rangaraja. He holds his Divine Durbar in that huge hall which is further extended by a specially erected and tastefully decorated pandal, throughout the day Nalayira Dhivyaprabandham is recieted, and gets back to the Temple only late in the night. Milling crowds of devotees constantly keep moving from dawn to midnight. Teams of devotees, engaged in non-stop bhajans, fast throughout the day and keep endless vigil during the whole night, singing and dancing to the beat of cymbals. Verily, it is the sight for the gods to see. A paradise on Earth indeed!
chennai television
aanaa
17th January 2009, 09:24 PM
ஓடிவிளையாடு பாப்பா
திங்கள் தோறும் மாலை 6.05 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி, `ஓடிவிளையாடு பாப்பா'
மழலைச் செல்வங்கள் தங்கள் தனித்திறமைகளை அழகிய மழலை மொழியில் பேசி, பாடி நடித்து, மாறுவேடங்களில் நேயர்கள் முன் தோன்றி மகிழ்விக்கும் நிகழ்ச்சி இது.
இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினியும் மழலையோடு மழலையாக உரையாடி குழந்தைகளை உற்சாகப்படுத்தி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்கிறார்.
- thanks dailythanthi
aanaa
17th January 2009, 09:25 PM
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, `பிறந்தநாள் வாழ்த்துக்கள்' நிகழ்ச்சி.
மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கான வாய்ப்பை ராஜ் டிவி ஏற்படுத்திக் கொடுக்கிறது. உங்கள் அன்புக்கு உரியவர்களின் பிறந்த நாள் வாழ்த்தை ராஜ் டிவி மூலம் தெரிவிப்பதோடு அவர்களின் புகைப்படத்தையும், அவர்களின் விருப்பப் பாடலையும் ஒளிபரப்பி மகிழ்விக்கிறது, இந்நிகழ்ச்சி.
aanaa
24th January 2009, 09:44 PM
ஹாலிவுட் படம்
ராஜ் டிவியில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் ஹாலிவுட் திரைப்படம் `காட் சென்ட்'.
விபத்தில் இறக்கும் தங்கள் மகனை பிரிய விரும்பாத தம்பதியர், இயற்கைக்கு மாறாக ஒரு டாக்டரின் உதவியுடன் குளோனிங் முறையில் தங்கள் மகனை உயிர்ப்பிக்கிறார்கள். அச்சிறுவனின் எட்டாவது வயதில் அவனுக்குள் ஏற்படும் பயமும், முரண்பாடான மாற்றங்களும் படத்தை திகில் பகுதிக்குள் கொண்டு செல்கின்றன.
நன்றி -- தினதந்தி
aanaa
31st January 2009, 06:25 AM
பர்ஸ்ட் பிரேம்
ராஜ் டிவியில் ஞாயிறு தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``பர்ஸ்ட் பிரேம்''. இதில் வாரந்தோறும் நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதோடு அவர்கள் நடித்த, இயக்கிய, பாடிய தொகுப்புகளும் இடம் பெறுகிறது.
நன்றி - தினதந்தி
aanaa
7th February 2009, 06:34 AM
ஹாலிவுட் படம்
ராஜ் டிவி வழங்கும் ஹாலிவுட் திரைத்திருவிழாவில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் படம் ``ஸ்பிரிட் பியர்''
அழிந்து வரும் ஒரு அபூர்வ இனக் கரடியையும், காட்டினையும் காப்பாற்றப் போராடும் ஒரு சிறுவன். அவன் முயற்சிகளைத் தகர்த்தெறியும் முன்னணித் தொழிற்சாலை முதலாளி. சமூகத்தின் அவலங்களைத் தட்டிக்கேட்ட அச்சிறுவன் தன் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது கதை.
நன்றி: தினதந்தி
aanaa
22nd February 2009, 03:59 AM
ஆலிவுட் திரைத்திருவிழா
இயற்கை வளங்களை காப்பாற்றும் வன அதிகாரி ஒருவர் சிங்கங்களின் மறுவாழ்வுக்காக தனது மந்திர சக்தியின் மூலம், நில ஆக்கிரமிப்பாளர்களிடம் போராடி ஜெயிக்கிறார். நிலத்தை மீட்டு சிங்கங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறார். இந்தப் பின்னணியில் உருவான ஆலிவுட் திரைப்படம் `டு வாக் வித் லயன்ஸ்.'
ராஜ் டிவியில் இன்று மாலை 5 மணிக்கு இந்த திரைப்படத்தை காணலாம்.
நன்றி: தினதந்தி
R.Latha
16th March 2009, 12:39 PM
[tscii:e4802ea085]ஜெய் ஸ்ரீகிருஷ்ணா
ராஜ் டி.வி.யில் ‘ஜெய் ஸ்ரீகிருஷ்னா' என்ற புதிய ஆன்மிகத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
கிருஷ்ணரின் சிறுவயது விளையாட்டுகளையும், அவரது வீரத்தையும் சொல்லும் இந்த கதையில், மக்கள் அனைவரையும் கவர்ந்த கிருஷ்ணர் எவ்வாறு அரண்மனை சிறையில் பிறந்து, கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லுகிறது.
இத்தொடர் மார்ச் 16-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[/tscii:e4802ea085]
aanaa
21st March 2009, 11:04 PM
ராஜகீதம்
ராஜ் டிவியில் ஒன்பது வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் `ராஜகீதம்' நிகழ்ச்சி, சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கும் பாலம் அமைத்து பல பின்னணிப் பாடகர்களை உருவாக்கியிருக்கிறது.
இப்போது ராஜகீதம் ஐந்தாவது தொடரின் படப்பிடிப்பு ராஜ் டிவியின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முதல் சுற்றில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் ஐந்தாவது தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
நன்றி -- தினதந்தி
R.Latha
23rd March 2009, 12:32 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு ராஜ் டிவி ஒளிபரப்பும் நிகழ்ச்சி, `பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.
வாழ்த்துபவர்களின் புகைப்படத்தையும், அவர்களுக்கு பிடித்த பாடலையும் ஒளிபரப்பி மகிழ்விக்கிறது இந்நிகழ்ச்சி.
சனிக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.
R.Latha
30th March 2009, 12:10 PM
டாப் சிங்கர்
தமிழகத்தின் சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி, டாப் சிங்கர். சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த வடிகால். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு உண்டு.
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
R.Latha
30th March 2009, 12:17 PM
டி.வி. தந்த பாடகர்கள்
இன்றைய பின்னணி பாடகர்களில் பலரும் ராஜகீதம் நிகழ்ச்சி மூலம் கிடைத்தவர்கள் தான்.முகேஷ், மதுமிதா, ஹரிசரண், ஹரிணி, சத்யன், சுகிர்தா ராம், பிரியதர்ஷினி, விக்னேஷ் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. ராஜ் டிவியில் 9-வது ஆண்டாக தொடரும் இந்த இசைநிகழ்ச்சியை இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது நடத்தி வருகிறார்.
R.Latha
6th April 2009, 02:57 PM
ஃபர்ஸ்ட் ஃப்ரேம்
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஃபர்ஸ்ட் ஃப்ரேம்.
இதில், தமிழ் திரை உலகில் அறிமுகமாகியுள்ள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் தொழில் நுட்ப இயக்குநர்கள் பங்கேற்று தங்களது திரையுலக அனுபவங்களையும், சினிமா உலக கனவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதில் மேலும் அவர்கள் சம்மந்தப்பட்ட சினிமா காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.
இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090402123731&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
aanaa
13th April 2009, 11:26 PM
ராஜ் டி.வி.,யில் கிருஷ்ணா பார்க்கிறீங்களா?
கிருஷ்ணா பார்க்கிறீங்களா?: ராஜ் "டிவி'யில், வார நாட்களில் இரவு 7 மணிக்கு பார்க்காமல் இருக்காதீர்கள். ராமாயணம், மகாபாரத கதைகளைதான் தொடர்களாக பார்த்திருப்பீர்கள். கிருஷ்ணா பற்றி தெரிய வேண்டாமா? அருமையான தமிழ் உச்சரிப்பு, அற்புதமான காட்சிகள் அமைப்புடன் பிரமிக்க வைக்கும் தொடர் ஜெய ஸ்ரீ கிருஷ்ணா. மறு ஒளிபரப்பாக காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.வெண்ணெய் திருடும் கண்ணன் முதல் கம்சனை வதம் செய்து மக்களை காப்பாற்றும் கிருஷ்ணன் வரை அவனது லீலைகளை கண்டு களிக்கலாம்.
என்றும் இனியவை : ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில், பழைய சினிமா பாடல்களின் தொகுப்பு காட்டப்படுகிறது. பழைய பாடல்களின் தாக்கம் இல்லாமல் இப்போதும் எந்த பாடலும் இல்லை. அப்படிப்பட்ட நினைவில் இருந்து மறக்காத பாடல் காட்சிகளை பார்க்கலாம். ஞாயிறு தோறும் காலை 7.30க்கு.
http://tinyurl.com/cexs6p
R.Latha
14th April 2009, 01:37 PM
sun tvyil ramayanam indiavil poduranga...but singapore-il poduvadhe illai. i dont know why. Raj TV channel illai.
R.Latha
14th April 2009, 01:38 PM
only sun tv vijay tv
aanaa
15th April 2009, 06:29 AM
sun tvyil ramayanam indiavil poduranga...but singapore-il poduvadhe illai. i dont know why. Raj TV channel illai.
http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=4/11/2009&secid=9
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா
வரும் திங்கட்கிழமை ராஜ் டிவியில் தொடங்கவிருக்கும் புதிய புராணத் தொடர் ஜெய்ஸ்ரீகிருஷ்ணா. கிருஷ்ணரின் சிறு வயது விளையாட்டுகளையும், அவரது வீரத்தையும் சொல்லும் கதை. உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த கிருஷ்ணர் எவ்வாறு அரண்மனைச் சிறையில் பிறந்து கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்கிறார் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
திங்கள் தோறும் இரவு 7.30 மணிக்கு இந்ததொடர் ஒளிபரப்பாகிறது.
http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=338&Cat=4&Title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE% 9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.,%E0%AE%AF%E0%AE%BF %E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0% AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%A A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0% AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D %E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE?
or
http://tinyurl.com/cexs6p
R.Latha
17th April 2009, 01:55 PM
[tscii:2d3e219848]
சினிமா
ஏர்டெல் டாப் சிங்கர்
First Published : 17 Apr 2009 09:18:00 PM IST
Last Updated :
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி ‘ஏர்டெல் டாப் சிங்கர்'. இதில், பாடும் திறமை உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களது குரல் வலிமையை வெளி காட்டுகின்றனர். சிறப்பாகப் பாடி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும், முன்னணி பாடகர்களும் நடுவர்களாக பங்கேற்று சிறந்த பாடகர், பாடகிகளை தேர்ந்தேடுக்கின்றனர். தமிழகத்தின் சிறந்த குரல் தேடலுக்கான இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE %9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BE% E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%A F%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&artid=evyI7Srk88c=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:2d3e219848]
R.Latha
20th April 2009, 12:50 PM
புத்தம் புது காலை
ராஜ் டிவியில் தினமும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, `புத்தம் புது காலை' நிகழ்ச்சி.
இதில் தகவல் பெட்டி, படிக்கட்டுகள், ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இடம் பெறுகின்றன. குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்கள், பெண்கள் இப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் தேவையான கருத்துக்களையும் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
ராஜ் டிஜிட்டல் பிளஸ்சிலும் தினமும் காலை 7 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம்.
R.Latha
20th April 2009, 01:03 PM
டாப் சிங்கர்
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``டாப் சிங்கர்'' தமிழகத்தின் சிறந்த குரல் தேடலுக்கான ராஜ் டிவியின் முயற்சி தான் `டாப் சிங்கர்' நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வடிகாலாக அமைகிறது.
வெற்றி பெறுபவர்க்கு பரிசுகள் உண்டு.
R.Latha
4th May 2009, 03:29 PM
ஆதி பராசக்தி
மருவூரில் வீற்றிருக்கும் ஆதிபராசக்தியின் அற்புத லீலைகள் ராஜ் டிவியில் மெகா தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. வெள்ளி தோறும் இரவு 8 மணிக்கு இந்த தொடரை காணலாம்.
R.Latha
4th May 2009, 03:35 PM
டாப்சிங்கர்
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `டாப்சிங்கர்' நிகழ்ச்சி தமிழகத்தில் தங்கக்குரல் தேடலுக்கான முயற்சி. இந்த நிகழ்ச்சி 110-வது எபிசோடை கடந்திருக்கிறது. சின்னத்திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் நடுவர் களாக அமர்ந்து சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுக்கின்றனர். வெற்றி பெறும் பாடகர்களுக்கு பரிசுகள் உண்டு.
R.Latha
4th May 2009, 03:36 PM
ராஜ் டிவியில் `தி வாக் வித் லயன்ஸ்' என்ற ஆலிவுட் படம் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆலிவுட் படம்
இயற்கை வளங்களை காப்பாற்றும் அந்த வன அதிகாரிக்கு காட்டு விலங்குகள் மீது தனிப் பிரியம் உண்டு. காட்டில் பாதிக்கப்பட்ட சிங்கங்களின் மறுவாழ்வுக்காக தனது மந்திர சக்தியின் மூலம் முயற்சிக்கிறார். காட்டை ஆக்ரமித்து மிருகங்களின் மனநெருக்கடிக்கு காரணமான நில ஆக்கிரமிப்பாளர்களிடம் போராடி நிலத்தை மீட்டு சிங்கங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறார்.
aanaa
17th May 2009, 05:59 PM
சூப்பர் காமெடி
ராஜ் டிவியில் ஞாயிறு தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ``சூப்பர் காமெடி'' இதில் பயில்வான் ரங்கநாதன், சவுந்தர்யா, உசேன் உள்ளிட்ட காமெடி பிரபலங்கள் நடித்துள்ளனர். கருத்துகள் பொதிந்த ஒரு கதைக்கு காமெடி தோரணம் கட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி
aanaa
17th May 2009, 06:00 PM
ராஜ கீதம்
இசைப்பிரியர்களுக்கென்றே ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ``ராஜகீதம்''. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பி.எச்.அப்துல் ஹமீது அழகிய தமிழில் வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இப்பொழுது தேர்வுச்சுற்று நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த மாதம் 6-ந் தேதி மதுரையிலும், 7-ந் தேதி திருச்சியிலும், 9-ந் தேதி சேலத்திலும் மற்றும் கோவையில் 10-ந் தேதியிலும் இந்த தேர்வுச் சுற்று
நடைபெறவுள்ளது.ஞாயிறு தோறும் ராஜ் டிவியில் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.
நன்றி: தினதந்தி
aanaa
23rd May 2009, 06:26 AM
என் பார்வையில்
ராஜ் டிவியில் திங்கள் தோறும் மாலை 6.30 மணிக்கு `என் பார்வையில்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. திரையில் உணர்வு பூர்வமாய் கதை சொல்லும் இயக்குனர்கள், தங்கள் சினிமா சாதனைகளை `மனம் திறந்து' பேசுகிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
23rd May 2009, 06:27 AM
தினம் தினம்
ராஜ் டிவியில் வியாழன் தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `தினம் தினம்' மக்கள் மேடை'
மருத்துவர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் பல துறை வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
30th May 2009, 08:23 PM
என்றும் இனியவை
தமிழ்த்திரை வரலாற்றில் என்னதான் மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும் பழைய பாடல்களை ரசிக்கும் ரசனை என்றுமே குறைவதில்லை. கேட்கத் தெவிட்டாத பழைய பாடல்களின் தொகுப்பாக ``என்றும் இனியவை'' நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது ராஜ் டிவி.
ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் திங்கள் தோறும் காலை 7.30 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்தி
aanaa
6th June 2009, 07:33 PM
எஸ்.பி.பி. திரைக் காவியங்கள்
ராஜ் டிவியில் இம்மாதம் முழுவதும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்த படங்கள் இடம்பெறுகின்றன.
இன்றளவும் தமிழ் திரை இசை வரலாற்றில் தனது மதுரக்குரலால் நீங்காத முத்திரையைப் பதித்தவர், ஒரு கட்டத்தில் நடிகராகவும் முத்திரை பதித்தவர். குறிப்பாக கேளடி கண்மணி, சிகரம் போன்ற படங்களில் தேர்ந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்பட்டவர்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.30 மணிக்கு எஸ்.பி.பி. நடித்த படங்களை காணலாம்.
நன்றி: தினதந்தி
aanaa
6th June 2009, 07:34 PM
கோடைக் கொண்டாட்டம்
ராஜ் டிவி நடத்திவரும் கோடை சிறப்பு நிகழ்ச்சிகளில் ``கோடைக் கொண்டாட்டம்'' நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாகி இருக்கிறது. திருவண்ணாமலை, மதுரை போன்ற இடங்களில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்போது திருச்சியிலும் நடைபெறுகிறது.
திருச்சியில் நடைபெறும் ``கோடைக் கொண்டாட்டம்'' இசை நிகழ்ச்சியின் தொகுப்பு, நாளை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
நன்றி: தினதந்தி
aanaa
19th July 2009, 01:23 AM
புத்தம் புது காலை
ராஜ் டிவியில் தினமும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ``புத்தம் புது காலை'' இதில் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும் யோகக் கலையை ``நலம் வாழ'' பகுதியின் வாயிலாக எளிய முறையில் எடுத்துரைப்பது சிறப்பு அம்சம். அதோடு உடற்பயிற்சி பற்றிய செயல்முறை விளக்கங்களும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
நன்றி: தினதந்தி
aanaa
25th July 2009, 08:00 PM
ராஜகீதம்
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``ராஜகீதம்'' ஒன்பது வருடங்களாக இசை நேயர்களை கவர்ந்த நிகழ்ச்சி. நான்கு தொடர்களை முடித்து இப்போது ஐந்தாவது தொடரில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல இடங்களில் குரல் தேர்வு நடந்தது.
இந்த முதல்சுற்றில் நேயர்களே நடுவர்களாக இருந்து சிறந்த பாடகர்களுக்கு வாக்களிப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி
aanaa
25th July 2009, 08:02 PM
ஆலிவுட் திரைத்திருவிழா
ராஜ் டிவியில் சனிக் கிழமை தோறும் ஆலிவுட் படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை கவரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள், குழந்தைகளை கவரும் நகைச்சுவை மற்றும் மாயாஜால தந்திர காட்சிகள் நிறைந்த படங்கள் ஒளிபரப்பாகின்றன.
நன்றி: தினதந்தி
aanaa
1st August 2009, 09:23 PM
ஆத்ம சங்கமம்
ராஜ் டி.வி.யில் இப்போது சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "ஆத்ம சங்கமம்'' இதில் ஸ்ரீராஜ சுவாமிகள் வழங்கும் ஆன்மீக அறிவுரைகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
dev
5th August 2009, 07:20 PM
when is top singer finals?
R.Latha
22nd March 2010, 12:06 PM
வீட்டுக்கு வீடு
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `வீட்டுக்கு வீடு' தொடரில், மீனாகுமாரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் ராஜ்காந்த், ஜெயலட்சுமி, வந்தனா, ஜெயந்த் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
தொடரில் இடம் பெறும் கேரக்டர்கள் வருமாறு:-
தனம்: (மீனாகுமாரி) கிராமத்து பெண். கை நிறைய சம்பாதிக்கும் கணவனை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறாள்.சிவா: (ராஜ்காந்த்) தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். தான் திருமணம் செய்து கொள்ளும் பெண், வீட்டோடு மனைவியாக இருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன்.
கல்பனா: (ஜெயலட்சுமி) சிவாவை காதலித்து திருமணம் செய்ய முடியாமல் வேறொருவனை மணந்து விவாகரத்து ஆனவள். மீண்டும் சிவாவையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்.
சிவாவின் நண்பன் ரவி: (ஜெயந்த்) இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற எண்ணத்தில் வேலைக்கு போகும் காயத்ரியை (வந்தனா) திருமணம் செய்து கொள் கிறான்.
இவர்களுக்கு மத்தியில் நடக்கும் குடும்ப போராட்டமும், கொள்கைப் போராட்டமும்தான் வீ.சேகரின் ``வீட்டுக்கு வீடு''. இயக்கம்: ஜி.ராஜேந்திரன். தயாரிப்பு எஸ்.தமிழ்ச்செல்வி.
http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=3/20/2010&secid=29
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.