PDA

View Full Version : KAVITHAI ARANGAM



V.Annasamy
3rd May 2008, 09:49 AM
நிலவுப் பெண்..

வெள்ளை நிலவே! எந்தன் மனதை
கொள்ளை செய்தாயே; முகில் கூட்டத்தில்
பள்ளி கொண்டாயே; விழிக்கு குளுமையும்
உள்ளத்தில் மகிழ்வும் ஈந்தாயே; வானத்தாயே.

திங்களே! உனக்கோர் திங்களில் இருபிறையாம்;
அங்கம் குறுகி, பெருகி, விண்ணிடை
பாங்காய் பவனி வந்தே எவரும்
ஏங்கும் வண்ணம் எழில் பெற்றாயே.

மறைகள் ஓதும் மலைமேல் உறைவோன்
பிறைநுதல் அணிந்து அகம் மகிழ்ந்தான்.
குறைவற்ற நீயோ மாதமோர் நாளில்
மறைந்து போவதன் மர்மம் என்னவோ?

ஆதவன் அன்றாடம் அடங்கும் இடத்தே
புதுமணப் பெண்ணாய், புதிராய் வருகிறாய்;
மாதம், வருடம், யுகமென மாறிடினும்
கதறும் குழந்தைக்கு நல்விருந்தாய் அமைகிறாய்.

முழுமதி ஆகிநீ வானப் பல்லக்கில்
எழுகின்ற போதுன் வனப்பு கூடுதே!
சூழும் மேகம் மகுடமாய் விளங்குதே!
பழுதிலா உனதழகை பருகியது இவ்வுலகே.

- வை.அண்ணாஸாமி -

pavalamani pragasam
3rd May 2008, 09:59 AM
:clap:

V.Annasamy
3rd May 2008, 10:16 AM
PP

நன்றிகள் உங்களுக்கு.

va

crazy
3rd May 2008, 12:47 PM
:clap:

V.Annasamy
3rd May 2008, 04:48 PM
:ty:

disk.box
5th May 2008, 07:20 AM
களங்கம் உண்டெனும் அறிவியல் குறைகொண்ட அந்நாள் கூற்றை அழகாய் மறுக்கும் "பழுதிலா உனதழகை" வெகுவாய் ரசித்தேன்.
மாதமொரு முறை மறைந்து போகும் இந்த மர்ம நாளில்:lol: இக்கவிதையைப் படிக்க நேர்ந்ததை எண்ணி வியந்தேன்.

V.Annasamy
5th May 2008, 09:17 AM
disk.box


'அறிவியல்பாய்' வந்ததே !

நன்றி

V.Annasamy
30th August 2008, 05:58 PM
கடவுளாய் என்றும் எண்ணும் மனிதன்-அதனைக்
கடந்து மனிதனாய் வாழும் புனிதன்.

மனிதனையும் கடவுளையும் கண்முன்னே ஒருங்கே,
தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்.

V.Annasamy
2nd September 2008, 11:32 AM
மழையும் பெய்து ஓய்ந்து விட,
மழலை நீர்க்குமிழின் மகிழ்ச்சி ஊஸலாட,
அழும் குழந்தையும் அமைதி கூட்ட,
பழுதிலா 'பன்னிறவில்' முகம் காட்டியதே.

வை. அண்ணாஸாமி

V.Annasamy
2nd September 2008, 02:19 PM
''குளிர் விட்ட''
தளிர்களைக் கேட்டேன்.
'பளீரென்று' பகன்றது.
'வாளிப்பும்' விருந்துதான்.


வை. அண்ணாஸாமி

Janar
6th September 2008, 06:52 PM
Thinking of the beautiful moon that i saw not too long ago...beautiful poem..:D

V.Annasamy
8th September 2008, 10:07 AM
நன்றி, ஜனார் அவர்களே.

V.Annasamy
30th September 2008, 12:39 PM
பூவின் கூற்று


வானமே, நீவிரிந்து படர்ந்து கிடந்தாலும்,
மனம் கவரும் வண்ணக் கலவை உனக்குண்டோ?
சுவையான தேனையடக்கும் திறமையும் என்னுள்.
கவிகளின் கற்பனை 'ஊற்றும்'நானே.

suba
10th October 2008, 12:39 AM
[tscii:51a3d073ac] :)

þÂü¨¸ì ¸Å¢»ÕìÌ ±ý Žì¸õ. ¿øÄ¡ ±Ø¾¢Â¢Õ츣í¸. ¿¢¨È ±ØÐÅ£í¸ þøÄ...

:)
[/tscii:51a3d073ac]

suba
10th October 2008, 12:41 AM
[tscii:31e5e89b28] :)

ÀýÉ¢ÈÅ¢ø - «ôÀÊýÉ¡? ÀÄ þÃÅ¢øÛ «÷ò¾§Á¡!!!!

:)
[/tscii:31e5e89b28]

V.Annasamy
10th October 2008, 02:29 PM
சுபா,

தங்களது கருத்துக்களை உணர இயலவில்லை.
மொழி புதிது. மொழியும் விதமும் புதிது.

V.Annasamy
2nd March 2010, 10:45 AM
A small kavithai I had presented to one of my known family who had invited us for the 'grahapravesham' on 25/02 (tamil month maasi 13th). I want to share with our kavis.

மாசிபதி மூன்றில் புதுமனை புகுவோர்
காசினியில் எண்ணிரண்டு செல்வமும் பெற்று - மாசிலா
தென்றலென எண்ணிலா இன்பமுடன் இனிதுவாழ
மேன்மைமிகு ஏழுமலையானை வேன்டுகிறோம்.

வை. அண்ணசாமி

pavalamani pragasam
2nd March 2010, 11:46 AM
:clap:

V.Annasamy
2nd March 2010, 01:03 PM
தலைக்குமேல் கைகளுயுர்த்தி ஆரவாரம் காட்டும்
கலையினைக் கண்டென் உள்ளம் மகிழ்ந்தது. தலைசிறந்த
கவிதை ஒன்று கொணற மனம்
தாவியோட, தொடர்வேன் அதன்பின்னே.

pavalamani pragasam
2nd March 2010, 02:20 PM
காத்திருக்கிறோம். :)

V.Annasamy
2nd March 2010, 03:26 PM
காத்திருப்பர் பவழமணி, முத்து, கவிதைக்காக;

பூத்தபுது மலரென மணம்வீசும் விதமாய், தித்திக்கும்

தேனாம் தமிழில் தெளிவான நடையில்

நானும் கவிதை இட்டேனே.

pavalamani pragasam
2nd March 2010, 05:07 PM
:D திருத்தம்:பவளமணி.

V.Annasamy
3rd April 2010, 03:17 PM
பச்சிளங் குழந்தை

ஒருவரிக் கவிதை! காண்போரின் கவலைகளை
சுருக்கியே வாழ்வில் சுவைகூட்டும் நல்லதோர் மருந்து.
ஒவ்வோர் அசைவும் நமக்கு ஊட்ட்ம்தான்.
எவ்விதம் மறப்பார் இவ்வின்பத்தை.

சிரிப்பினை, ஈர்க்கும் சின்ன இதழ்
விரிப்பினை கண்டு மயங்காதோர் உண்டோ? அரிதான
இறைவன் இவந்தானோ? பன்னாட்கள் 'பளிச்சென்ற'
பிறைனுதல் நம்வீட்டு வானிலும்!

-வை.அண்ணாசாமி

suvai
3rd April 2010, 07:23 PM
A small kavithai I had presented to one of my known family who had invited us for the 'grahapravesham' on 25/02 (tamil month maasi 13th). I want to share with our kavis.

மாசிபதி மூன்றில் புதுமனை புகுவோர்
காசினியில் எண்ணிரண்டு செல்வமும் பெற்று - மாசிலா
தென்றலென எண்ணிலா இன்பமுடன் இனிதுவாழ
மேன்மைமிகு ஏழுமலையானை வேன்டுகிறோம்.

வை. அண்ணசாமி


hello nga v.a......miga arumai...ungal kavithaigalaiyum padithu purinthavatrai rasithu / puriyaathavatrai guess panni maghizgiren.... :mrgreen:
:thumbsup:

pavalamani pragasam
3rd April 2010, 09:12 PM
மிகவும் அழகான உண்மை நிறைந்த கவிதை! தன் மக்கள் அழகே மறக்காத நிலையில் அவர்கள் மக்களின் அழகு கொஞ்சும் வளர்ச்சியினை காண்பதும் பேரின்பம் என்று உணர்கிறேன்!

bis_mala
7th April 2010, 03:52 PM
A very beautiful poem indeed and the kavi's astrological knowledge is quite implicit,

V.Annasamy
13th April 2010, 03:46 PM
நன்றிகள்

V.Annasamy
13th April 2010, 03:48 PM
நதி புகட்டும் பாடம்.

மேடுபள் ளங்களில் செல்லும்விதம் காட்டி, கூடும் மண்ணின் நிறமாகவே உருமாறி - தேடும்
உயிர்களின் தாகம் சமமாய் தீர்க்கும் தாயுள்ளம் கொண்டவள் நதி.

pavalamani pragasam
13th April 2010, 10:24 PM
:yes: :exactly:

V.Annasamy
21st April 2010, 02:10 PM
- காதல் ? -

எனது உணர்வுகளில்
ஒருவித மாற்றம்..

எதுவும் தெரிவதில்லை
உன்னைத் தவிர..

கேட்கவும் முடிவதில்லை
உன் குரல் தவிர..

பேச முயல்கிறேன்
உன் விழிகள் முந்துகிறது.

ஊரே சொல்கிறது
காதல்
வயப்பட்டேனென்று...

V.Annasamy
22nd April 2010, 09:57 AM
- மனிதன் -

இருப்பதை மறந்தும், நல்லதையே பெறவிழையும்
அருமையான உயிரினம்!. பெற்ற ஆறறிவில் பொறுமையாய், ஒன்றை உபயோகித்தாலே போதும்.
பிறரையும் தன்னையும் காக்க இயலாதா?

ஓட்டங்கள் - பின்னணியில் ஒராயிரம் ஆசைகள்.
தட்டிப் பறித்தாவது பொருள், வெற்றி ஈட்டிட வேண்டும் - நீதி, நேர்மை முதலியவை வேண்டா சொற்கள் மனிதனுக்கு.

V.Annasamy
6th May 2010, 12:52 PM
!ஓ அமைச்சர்'

அமைச்சர் பெருமாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
தமையும் சொற்பொழி வாற்ற அழைத்தற்கு. அமைதியின்றி
இரண்டு நாட்களாய். பக்கம் பக்கமாய்..
பரபரபான பேச்சுக்கு ஆயத்தம்.

'அந்த' நாளும், வேளையும் வந்ததே.
'சொந்த' காரிலே சொகுசாய் பள்ளிக்கு. எந்த
சிந்தனையும் இல்லை இதைத் தவிர.
உந்தும் உற்சாகமொடு மேடைக்கு..

துள்ளி ஓடிவந்த தலைமை ஆசிரியர்
மெள்ள அவரின் காதில் - 'முதலில் பள்ளி
சிறுவர்களுக்கு பரிசு வழங்குகள், பின்னர்
அருமையான உங்கள் பேச்சென்றார்."

பலமுறை சொல்லியும் கேளாத பெருமாள்.
கலகலப்பாய், பேச்சுக் களத்திலே. நகைச்சுவை துலங்க
தனது ஆற்றலை ஆர்பாட்டமாய் வெளிப்படுத்த;
அனைத்து சிறுவரும் அசையாமலே...

சிரிக்காத, கைதட்டாத மாணவர்களைக் கண்டு
எரியும் சினமொடு ஒருவழியாய் அமர்ந்தார். திரும்பினால்..
" கேட்கும் திறன் கருவி கொடுக்கும்விழா'...
சட்டென உணர்ந்தார் தன்பிழையை.

pavalamani pragasam
6th May 2010, 01:22 PM
:clap:

V.Annasamy
11th June 2010, 01:01 PM
தாயே நீயின்றி..

என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.

பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.

எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.

வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...

pavalamani pragasam
11th June 2010, 03:00 PM
:clap:

Sudhaama
14th July 2010, 07:30 AM
.





பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !.?


அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி


உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள்
பூத்திருக்கும் வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.!

- ந. முத்து
கோவை



Courtesy: Web-Dunia Tamil.
.
.

Sudhaama
15th July 2010, 04:23 PM
.


. கோவை தந்த தமிழ்-மணம்.!!!


தமிழ்-மணம் கமழப் பெற்றோம் ஒரு சிறு துளியே எனினும்
அமிழ்தினும் இனிய தமிழ் ஆனந்தம் கொண்டோம் அம்மா
சிமிழ்-அளவே தந்தார் இங்கே கோவை நகர் ஞாலப்புகழே
குமிழி நீர் போல் சற்றே தோன்றியே மறைந்திட்டாலும்
குமிழவே நினைவு நீங்கா தமிழ்-மணம் தொட்டோம் பொட்டாய்.!!!

.

.

varunlss12
11th August 2010, 01:15 PM
தாயே நீயின்றி..

என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.

பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.

எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.

வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...மிக அருமை... தங்கலின் அனைத்து கவிதைகலும்

bis_mala
21st August 2010, 05:05 AM
தாயே நீயின்றி..

என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.

பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.

எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.

வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...மிக அருமை... தங்கலின் அனைத்து கவிதைகலும்


Very well composed. It reminds me of a very old song by Great Poet Papanasam Sivan "ammai appaa ungkaL anbai maRaanthEn"