PDA

View Full Version : Songs that have made an emotional impact on us - 4



Pages : 1 2 3 4 5 6 7 [8]

chinnakkannan
18th February 2016, 02:32 PM
தென்றல் ஒரு தாளம் சொன்னது…
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே நல்ல பாட் தான் வீட் போய் கேக்கணும்..சிலோன் ரேடியோல கேட்ட நினைவு..துள்ளலாய்த் தான் இருக்கும்..

yoyisohuni
18th February 2016, 06:39 PM
நல்ல பாடல்களின் நீரோட்டம். தொடரட்டும்.

raagadevan
22nd February 2016, 09:51 AM
I probably have posted this song more than once before! This one really has an "emotional impact" on me!
By the way Dasettan (KJY) also thinks that he has an emotional impact whenever he sings or listens to
this song. He used to make his son Vijay sing the last two saraNams of the song on stage (starting when
Vijay was 7 years old!) during his concerts all over the world. Unfortunately I could not find a video that
has the whole song! :)

திரைப்படம்: நீ தானா அந்த குயில் (1986)
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & சங்கீதா

https://www.youtube.com/watch?v=ydVUE-4phMk

கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே...
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட

கல்யாணம் ஆகவில்ல
அப்பனின்னு சொன்னாயா
அப்பனுக்கு பொண்ணு பாக்க
அப்பன் கூட வந்தாயா
கல்யாணம் ஆகவில்ல
அப்பனின்னு சொன்னாயா
அப்பனுக்கு பொண்ணு பாக்க
அப்பன் கூட வந்தாயா
கோபம் ஒரு கண்ணுக்குள்ள
பாசம் ஒரு கண்ணுக்குள்ள
சம்பந்தம் இல்லையின்னா
சாதி சனம் நம்பவில்ல
கூடிய கூட்டத்துக்கு
கோமாளியா ஆனேனா
பூனைய கூட்டிகிட்டு
பொண்ணு பாக்க போனேனா

கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே

சேரசோழ பாண்டியன
தோண்டிப் பாத்து சொன்னேனே
உன்னப் பெத்த அப்பனத் தான்
காணவில்ல செந்தேனே
சேரசோழ பாண்டியன
தோண்டிப்பாத்து சொன்னேனே
உன்னப் பெத்த அப்பனத் தான்
காணவில்ல செந்தேனே
தங்கம் உன்ன தத்தெடுத்து
தரையில முத்தெடுத்து
பாவி உன்ன காணோமென்னு
பாசத்துல தத்தளிச்சேன்
மூடி வச்ச கண்ணுக்குள்ளே
முத்து முத்தா கண்ணீரு
நானிருக்க சோகமென்ன
நண்டுப் பைய்யா நல்லாறு

அன்பான அப்பா உன்னை
என்ன சொல்லி பாரட்ட
பார்வதி தேவை இல்ல
பையனுக்கு பாலூட்ட
அனாத போல வந்தேன் நானே
அப்பாவும் அம்மாவும் யார் நீ தானே

அன்பான அப்பா உன்ன
என்ன சொல்லி பாரட்ட
பார்வதி தேவை இல்ல
பையனுக்கு பாலூட்ட

chinnakkannan
23rd February 2016, 04:30 PM
காதலன்..காதலி..பின் என்ன ரொமான்ஸ் தான்..

டபக்குன்னு பார்த்தா..சின்னத் தொட்டி நிறையத் தண்ணீரில் அங்குமிங்கும் குறுகுறுன்னு ஓடும் கோல்ட் ஃபிஷ்ஷோட கலரைக் கொள்ளாம துறுதுறுப்பை மட்டும் கொண்ட கண்கள்..புதிதாய் ஆசீர்வாத் ஆட்டான்னு போட்டிருக்கான்னு வாங்கி அதில் சப்பாத்தி மாவு பிசைந்து டவ்வால போடறச்சே அந்தச் சப்பாத்தி புஸு புஸூன்னு பொங்கறாமாதிரி புஸு புஸு கன்னம்..காற்று அடிக்கடி காதல்கொண்டு மெல்ல மெல்லக் கலைத்துவிடும் கூந்தல்..ஷார்ப் நோஸ்.. முக்கியமாகத் தேவையான இளமை..கொண்டவர் தான் அந்தப் பெண்..ஸ்ருத்திகா..( நிஜத்தில் தேங்காய் சீனிவாசனின் பேத்தியாம்)

ஸ்ருத்திகா பத்திப் போட்டாச்னு ஒரு குரல் வந்தாலும் வரும்..பக்கத்து இழைக்கு வந்துடுச்சு..

அவரும் இன்னொரு ஆடவரும் (பேரு..ஹூ கேர்ஸ் :) ) நடித்த ஆல்பம் படத்தில் லவர்ஸ் ரொமான்ஸ் இருக்கே மேரிகோ பஹூத் பஸந்த் ஹை..என்கு ரொம்ப் பிட்கும்.. :)

செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் வழியாக
உன்னிடம் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்


https://youtu.be/PG4ezKq2olc

ஸ்ருத்திகா பற்றி மேலும் தகவல்கள்..ம்ம் வரத்தானே போகுது..பக்கெட்டுடன் வந்தா நல்லா இருக்கும் :)

madhu
23rd February 2016, 06:56 PM
சிக்கா...

எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். பை த பை... அந்த ஆடவர் பெயர் ஆர்யன் ராஜேஷ்

https://www.youtube.com/watch?v=7GvIwWuhgks

chinnakkannan
24th February 2016, 12:11 AM
தத்தளிக்குதே தாமரைப் பூவு ஒண்ணு தாவணியில் கலக்குதே.. நல்ல பாட் எனக்கும் பிடிக்கும்..

chinnakkannan
24th February 2016, 12:15 AM
ரொமாண்டிக் துள்ளல் அண்ட் மெலடின்னு பார்த்தாக்க.. எனக்குப் பிடிச்சது அற்றைத்திங்கள் வானிடம்...சிவப்பதிகாரம் பாட்..அது மாதிரி வேற?

chinnakkannan
2nd March 2016, 12:28 AM
https://youtu.be/vN6dexC45wY

எம்.எஸ் வந்து பாட்டுக்குப் பாட்டில் இந்தப்பாட்டு போட்டதிலிருந்து நான் ஃபேன் ஆகி, அதனால் அடுத்த அறையில் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்த என் வீ.காவும் ஈர்க்கப்பட்டது மட்டுமின்றி கற்றுக்கொண்டிருந்த மாணவியும் மெய்ம்மறந்து கேட்க, சுதாரித்த வீ.காவிடம் குட்டும் வாங்கினாள்.. நல்ல பாட்.. பட் நான் படம் பார்த்த போது ஓட்டிவிட்டேன் என நினைக்கிறேன். படம் வந்து பதின் மூன்று வருடங்கள் அப்புறம் பாடல் கேட்கிறேன்..எனக்குப் பிடிச்சுருக்கு..உங்களுக்கு..

ஆமா கீத்து மோஹன் தாஸ் அதுக்கப்புறம் எங்க போனார்?

இந்த மாதவனுக்கும் இறுதிச்சுற்று மாதவனுக்கும் தான் எவ்ளோ வித்யாசம்

chinnakkannan
5th March 2016, 06:10 PM
கொஞ்சம் நன்றாக ஊறிய தயிர்வடையைப்போன்ற கன்னம், க்ராஸ் பண்ணலாமா பண்ணினால் அருகில் பிடிக்க வருவானா என்ன செய்யலாம் என்ற யோசனையுடன்பார்க்கும் பூனைக்குட்டியின் துறுதுறு கண்கள், நன்றாக கொஞ்சம் மீடியம் சைஸ் வெள்ளரிப்பிஞ்செடுத்து அதன் தோல் நீக்கி நெட்டுவாக்கில் ஒல்லி ஒல்லியாய் வெட்ட பளீரிடும் விதைகள் போலப் பளீரிடும் பெப்ஸோடெண்ட் பற்கள், வேறு உவமை அகப்படாததால் பழைய அன்றலர்ந்த செண்பகப்பூவைப் போன்ற நாசி, சொய்ங்க் என்று ஒட்டி வாராமல் கொஞ்சம் ஷாம்ப்பூ போட்டுக்காயவைத்தாற்போலச் சிலும்பும் தலைமுடி – இது அன்று இருந்த இன்றைய நஸ்ரியா ஃபகத் ஃபாசில்

கொஞ்சம் ஆஞ்சனேயர் வடையைப் போன்றத் தட்டைக் கன்னம், கொஞ்சம் ஆழ்கடலில் கிடைக்கும் அமைதியைப் பெற்றிருக்கும் கண்கள், துளியேனும் கவலைப்படாமல் நன்றாக வாரிய கரெண்ட்கட் இருட்டின் நிறத்தில் கூந்தல், தீர்க்கமான மூக்கு, மூன்று வருடமாக ஏறவே ஏறாத வயதும் இளமையும் – இது ஸ்ரீதிவ்யா

எதற்காக இந்தக் கம்பேரிசன் – பெங்களூர் டேஸ் மலையாளத்திற்கும் பெங்களூர் நாட்கள் தமிழுக்கும் நாயகிகள் இவர்கள்..

என்னமோ ஸ்ரீதிவ்யாவிற்கு நடிக்க வராது இன்னும்செய்திருக்கலாம் ஒன்றும் சரியில்லை..ஒரிஜினல் நஸ்ரியா அளவுக்குச் செய்யவில்லைஎன முக்கால் வாசி விமர்சனங்கள் வந்திருக்கின்றன..பட் பார்த்தால் ஸ்ரீ திவ்யா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.. நன்றாகவே செய்திருக்கிறார்..

என்ன முதலில் மலையாள பெங்களூர் டேஸ் வந்துவிட்டது.அதனால் தான்..

மலையாளத்தில் பார்த்த போது சில விஷயங்கள் புரியவே இல்லை. என்ன பேஸிக் விஷயமான இவர்கள் கஸின்ஸ்..மூவரும் ஒன்று விட்ட சகோதர சகோதரி என்பதே எனக்குப் புரியாமல் இருந்தது..பட் இருந்தும் விஷூவலில் மிக மிக ஈர்த்திருந்தது படம்..தட்டூ நித்யா மேனன் இறுதியில் வரும் இரு நிமிடங்கள்..

தமிழ் பெங்களூர் நாட்களும் நேற்று கொஞ்சம் தயங்கிய வண்ணம் தான்பார்த்து முடித்தேன்..அப்படியொன்றும் மோசமில்லை.. தவிர மலையாளம்பார்க்காமல் த்மிழில் பார்த்தால் வியக்கத் தான் வைக்கும்..

எவ்ளோ ஆக்டர்ஸ் ஆக்ட்ரஸஸ் ஸ்ரீதிவ்யா,(ம…நஸ்ரியா) (இருவரிடமும் பொங்கி வழியும் இளமை) ஆர்யா (மலையாளத்தில் துலகர் சல்மான்) பாபி சிம்ஹா, ராணா(ஃபஹத் பாசில் ) லஷ்மி ராய், சமந்தா( நித்யா மேனன்) ப்ரகாஷ் ராஜ் ராதிகா, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அப்பா எல்லாமே சரியான தேர்வுகளே..

அதிலும்.. ஃபஹத் பாசில் ரோல் (முன்னால் ஃபீமேல் கோட்டய வில்லனாய்ப் பார்த்தது) இதில் இறுகிய கணவனாக நன்றாகவே மலையாளத்தில் செய்திருந்ததை – ராணா (பாகுபலி பல்லாள தேவன்) ஃப்பூ என ஊதித் தள்ளியிருக்கிறார்.. பேண்ட் ஷர்ட் க்ளாஸஸில் தெரிகின்ற கம்பீரம், மெல்ல மாட்டுவண்டி போலக் கார் ஓட்டுவதிலாகட்டும், பின் இறுதியில் சீறிப்பாய்ந்து வேகமெடுக்கும் காட்சியிலாகட்டும் சமந்தாவுடன் வ்ரும் இரு நிமிடமாகட்டும் நன்றாகவே செய்திருக்கிறார் மனிதர்..(த்ரிஷா ரினிவல் பண்ணுவதைப்பற்றி யோசிப்பது நல்லது!)

என்ன தான் அம்மா செய்த வெங்காய சாம்பார் வாசனை சுவையில் அதிகமாகத் தான் இருக்கும்.. அதே ரெஸிப்பி வைத்து வீட்டில் மனைவி வைத்தால் அந்த் அளவு வராது தான்.. ஏனெனில் அது ரீமேக்.. பட் அதற்காக மோசம் என்றெல்லாம் சொல்லக் கூடாது..(சொல்லவும் முடியாது வெ.சா பொறுத்தவரை என்பது வேறு விஷயம்)

அது போலவே பெங்களூர் நாட்கள்.. நன்றாகவே இருக்கிறது..தைரியமாகப் பார்க்கலாம்.

பார்வதி மேனனை விட்டு விட்டேன்.. வெகு அழகிய நடிப்பு..அவர் வரும் பாட்டு எனக்குப் பிடித்திருந்தது..உங்களுக்கு..

https://youtu.be/jr3BSC23L4I

raagadevan
13th March 2016, 11:30 AM
பாடல்: ஞாபகம் இல்லையோ... (Solo)
படம்: மலர்களே மலருங்கள் (1980)
வரிகள்/இசை: கங்கை அமரன்
பாடகர்: கே.ஜே.யேசுதாஸ்

http://www.youtube.com/watch?v=-ikrfOOuzJI


ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன் மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ

பாடுவது உனை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே
ஆ ஆ ஆஆ...
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி
அதில் காணும் நிம்மதி
தினம் தேடித் தேடி பாடும் ஏழை மனம்

ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ

வைகரையில் பனி தான் மூடும் நேரம்
வைகை நதிக் கரை பூஞ்சோலை ஓரம்
வந்து போராடுதே என் மனம்
ஆ ஆ ஆஆ...
வந்து போராடுதே என் மனம்
உனைக் காண நாளெலாம் பல வந்து போனது
உறங்காத கண்கள் உன்னைத் தேடியது

ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன் மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ கண்ணே
_______________________

Disclaimer: I probably have posted this song on earlier occasion(s)!

yoyisohuni
17th March 2016, 01:29 PM
thozhudhu madangum from AksharangaL

https://www.youtube.com/watch?v=ona6duCfkzw

raagadevan
17th March 2016, 07:52 PM
Hello kaatu_poochi: "thozhudhu madangum..." from AKSHARANGAL is a great song; ONV's lines set to music by Shyam, and beautifully sung by Unni Menon. I will let you in on a little bit of trivia regarding this song... Quoting from a silly (and stupid) politician, the media went into a frenzy that the 1984 Kerala State Award for best male singer was given to K.J. Yesudas for this song! The accusation was that Yesudas collected the award, and kept quiet about Unni Menon being the real singer of the song. Of course, Unni Menon was the real singer. Yesudas actually won the award that year for "ee marubhoovil..." from the movie SWANTHAM SARIKA! :)

yoyisohuni
24th March 2016, 08:24 PM
Thankyou for letting me into that unheard bit of information.

raagadevan
23rd July 2016, 09:24 AM
https://www.youtube.com/watch?v=BSq0islk3XY

raagadevan
13th August 2016, 11:41 PM
திரைப்படம்: வீண்டும் (1986)
வரிகள்: ஷிபு சக்ரவர்த்தி
இசை: Ouseppachan
ராகம்: ஹம்சத்வனி

https://www.youtube.com/watch?v=LHCNRgUtvYg

chinnakkannan
14th August 2016, 04:05 PM
காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்
காதல் அது வந்துவிட்டால்
உன் இதயத்தைப் பலி கேட்டுவிடும் ( நா. முத்துக்குமார்..அழகு குட்டி செல்லம்)

https://youtu.be/7IINBiChssY

raagadevan
16th August 2016, 12:43 AM
Na. Muthukumar's National Award winning songs:

https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw

https://www.youtube.com/watch?v=E7y9H-Rit6o

raagadevan
28th December 2016, 07:18 AM
Oscar winning acting:

https://www.youtube.com/watch?v=XbXr-h_oz9I

https://www.youtube.com/watch?v=TuYhfCkRxyE

raagadevan
12th January 2017, 09:01 AM
Happy 77th B'day (January 10) Dasettan....

My favourite raga Karaharapriya at its best (with shades of ragas Shri, Bhoopaalam and may be
Hanumathodi); Sharath's composition at its best; ONV at his lyrical best; picturiz(s)ation at its best;
and of course Dasettan at his usual...

https://www.youtube.com/watch?v=t50ssBnoO7o&list=RDt50ssBnoO7o#t=37

raagadevan
21st May 2017, 04:04 AM
Movie: கூட்டத்தில் ஒருவன் (2016)
Lyrics: கபிலன் / எம்சீ கொன்சலஸ்
Music: நிவாஸ் கே. பிரசன்னா
Singers: எஸ்.பி.பி (SPB) / எம்சீ கொன்சலஸ்

https://www.youtube.com/watch?v=4dVRdyXD0d0

ஓடுற நரியில ஒரு நரி குள்ளநரி
குள்ள நரி குள்ள நரி வண்டியில
ஒரு பக்கம் பிஞ்ச டயர்
பிஞ்ச டயர் ஒட்டி ஓட்டும்
தினசரி மனுசன்
பில்டப் ஆனா ஒன்னும்மில்ல
கூட்டத்தில் ஒருத்தன்

நான் தான் நடக்குறேன்
எதுவும் நடக்கல ஏண்டா இப்படி
பல்லு இருந்தும் பக்கோடா கெடைக்கல
ஏண்டா இப்படி
ஃபேஸ்சு புக்கிலும் ப்ரண்சிப் இல்ல
ஏண்டா இப்படி
மார்க்கு அடிச்சும் மண்டையில ஏறல
ஏண்டா இப்படி

ரெக்கை இருந்தும் பறக்கலையே
கதவு இருந்தும் திறக்கலையே
கிட்ட இருந்தும் கிடைக்கலையே
நல்லது நடக்கலையே
நூலு இல்லா காத்தாடி
வேஷம் இல்லா கூத்தாடி
எந்தன் வாழ்வுல இதுபோல
சம்பவம் பல கோடி

ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி

அரை குறை வயசுல புடிச்சது கெடைக்கல
கெடைச்சது புடிச்சாலும் அதுக்கென்ன புடிக்கல
வெளிச்சத்தில் தினம் தினம் முட்டிப்போட்டு படிச்சாலும்
படிச்சது மறந்துட்டு எக்சாமுல வரும் ஜொரம்
அடிதடி சண்டையில அடிக்கடி மண்டையில அடிப்பட்டு
மிதிப்பட்டு ஆபாச இரசிக்க இங்க பாஸ்சும்மில்ல கிலாஸ்சும்மில்ல
கிலாஸ்சு போனா மிஸ்சும்மில்ல
கிளிஞ்சிப்போன காருமேல தாருமாறா வெலாசுற

ஒன் மோர் டைம்

கொல்லையில்ல கோமாளி
விட்டுக்கொடுக்கும் ஏமாளி
அதிஷ்டம் எனக்கு எதிராளி
நான் தோத்த போராளி
24 மணி நேரம்
எனக்கு இல்ல நல்ல நேரம்
இதுக்கு என்ன பரிகாரம்
நான் முள்ளொடைஞ்ச கடிகாரம்
தப்பு செய்யல தண்டன கெடைக்கிது
ஏன்டா… இப்படி
கடவுள் வணங்கியும் காரியம் நடக்கல
ஏண்டா... இப்படி... ஏண்டா... இப்படி...

எனக்கு ஏண்டா... இப்படி...
ஏண்டா... இப்படி…
ஏண்டா... இப்படி...
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி

ஆலமர உச்சியில கொசு ஒன்னு ஆடிக்கினு
நொச்சிக்குப்பம் டுச்சிக்குள்ள கட்சி கொடி பாடிக்கினு
குழா அடி சண்டையில கொந்திவிட்டு கொந்திக்கின்னு
பாராளுமண்றத்துல பஞ்சிமிட்டாய் வாங்கித்திண்ணு
கொக்கிலி பிக்கிலி ஜங்கல் இல்ல சுண்டெலி
பசியில படுத்தா பஞ்சத்துல தக்காளி
ரோட்டுல போற ஓனான லுங்கிக்குள்ள உட்டுக்கிட்டு
வண்ணத்திரையில வந்து வாலன்டரி வழிபறி

வயிறு நெறையிது வாழ்க்க நெறையில ஏன்டா இப்படி
எட்டு திசையிலும் வழியே தெரியல ஏன்டா இப்படி
உதடு இருந்தும் சிரிக்க முடியல ஏன்டா இப்படி
முட்டி மோதியும் ஒன்னும் நடக்கல ஏன்டா இப்படி
ரெக்கை இருந்தும் பறக்கலையே
கதவு இருந்தும் திறக்கலையே
கிட்ட இருந்தும் கிடைக்கலையே
நல்லது நடக்கலையே
நூலு இல்லா காத்தாடி
வேஷம் இல்லா கூத்தாடி
எந்தன் வாழ்வுல இதுபோல
சம்பவம் பல கோடி

ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி
ஏண்டா... இப்படி... எனக்கு ஏன்டா இப்படி...

raagadevan
21st May 2018, 03:55 AM
Written, tuned, composed and sung by the legendary Canadian
poet/novelist/musician/ composer/singer Leonard Cohen who passed away
on November 7, 2016. I strongly feel that the Nobel Committee fumbled (again)
picking Bob Dylan instead of Cohen for that year’s Nobel Prize for Literature!


Dance me to your beauty with a burning violin
Dance me through the panic 'til I'm gathered safely in
Lift me like an olive branch and be my homeward dove
And dance me to the end of love
Yeah dance me to the end of love

Let me see your beauty when the witnesses are gone
Let me feel you moving like they do in Babylon
Show me slowly what I only know the limits of
And dance me to the end of love
Yeah dance me to the end of love

Dance me to the wedding now, dance me on and on
Dance me very tenderly and dance me very long
We're both of us beneath our love, we're both of us above
And dance me to the end of love
Yeah dance me to the end of love

Dance me to the children who are asking to be born
Dance me through the curtains that our kisses have outworn
Raise a tent of shelter now, though every thread is torn
And dance me to the end of love

Dance me to your beauty with a burning violin
Dance me through the panic till I'm gathered safely in
Touch me with your naked hand or touch me with your glove
Dance me to the end of love
Yeah dance me to the end of love
Oh dance me to the end of love…

Movie version of the song... from SCENT OF A WOMAN; featuring Al Pacino in his Oscar winning role...

https://www.youtube.com/watch?v=x0FhRTvWDVk

Leonard Cohen's (original) live version...

https://www.youtube.com/watch?v=2zjLBWnZGTU

raagadevan
23rd September 2018, 08:28 AM
"konjam sirikkirEn..."

Movie: AMUTHA (2018)
Director of the movie: P.S. Arjun
Lyrics: G.Ra
Music: Arun Gopan
Singer(s): Vineeth Sreenivasan & Chorus


https://www.youtube.com/watch?v=F_mRgDz1Mko

raagadevan
4th November 2018, 07:01 AM
https://www.youtube.com/watch?v=wfMXD135VRI

ரசிகன் ஒரு ரசிகை (1986)/புலமைப்பித்தன்/ரவீந்திரன்/கே.ஜெ. யேசுதாஸ்


பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறாதோ கோபம் தீராதோ
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜா போல் வேஷங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்…

raagadevan
26th December 2018, 02:39 PM
“ஆசையா கோபமா...”

from IRU VALLAAVARGAL (1966)

https://www.youtube.com/watch?v=wNF_dt2m3z0

Kannadasan/Veda/P. Susheela & T. M. Sounderarajan/L. Vijayalakshmi & Jaishankar

…and the original:

“mErE yaar shabba khair…”

from JUNGLEE (1961)

https://www.youtube.com/watch?v=OiggiiL_4do

Shailendra/Shankar & Jaikishan/Lata Mangeshkar & Mohammed Rafi/Saira Banu & Shammi Kapoor

raagadevan
16th March 2019, 08:40 PM
"மனசுக்குள்ளே எந்தன் மனசுக்குள்ளே
உயிரோடு உயிராக நீ இருந்தாய்..."


https://www.youtube.com/watch?time_c...&v=n2iPvkwNBtk

Movie: mEra naam shaaji (2019)

Director: Nadirsha
Lyrics:Santhosh Varma
Music:Emil Muhammed
Singers: Shreya Ghoshal & Ranjith Govind
Actors: Nikhila Vimal & Asif Ali

raagadevan
23rd June 2019, 09:39 AM
Movie: Manu Needhi

https://www.youtube.com/watch?v=DzFEFoSCSCs

Lyrics: Snehan / Music: Deva / Singers: Chithra & Unnikrishnan / Featuring: Murali & Prathyusha

ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...

raagadevan
9th May 2020, 02:04 AM
https://www.youtube.com/watch?time_continue=215&v=Dnx1-bnXyM0&feature=emb_logo

raagadevan
30th May 2020, 09:22 AM
"vasudhaiva kutumbakam..." by Bharat Symphony

Featuring Dr L. Subramaniam and India's legendary singers/artists...

https://www.youtube.com/watch?v=dOlf-Ho6Kw4&feature=emb_logo