PDA

View Full Version : Enna Pooo



Pages : 1 [2] 3

kirukan
4th December 2009, 01:25 PM
செல்லும் சாலை தவறாயின் சீக்கிரம்
சென்று என்ன பயன்.

-
கிறுக்கன்

kirukan
11th December 2009, 11:03 PM
ஏற்றத்தில் நண்பன் உனை அறிவான்
இறக்கத்தில் நண்பனை நீயறிவாய்.

-
கிறுக்கன்

suvai
12th December 2009, 07:40 AM
excellent nga K... :thumbsup:

kirukan
12th December 2009, 01:00 PM
களைப்பு கபடில்லா உழைப்பின் நிறைவு
கட்டுக் கடங்கா உயர்வு.

-
கிறுக்கன்

<font color=brown size=6>Dedicated</font><font color=green size=6> to</font><font color=red size=6> our </font><font color=blue size=6>beloved </font><font color=gold size=6>Super Star.</font>

19thmay
12th December 2009, 03:27 PM
ஏற்றத்தில் நண்பன் உனை அறிவான்
இறக்கத்தில் நண்பனை நீயறிவாய்.

-
கிறுக்கன்

Ah! Beauty :thumbsup: I like it. :)

kirukan
13th December 2009, 01:21 PM
அறுஞ்சுவை உணவினும் பெருஞ்சுவை ஆரோக்கியம்
அருளும் நல் நகைச்சுவை.

-
கிறுக்கன்

suvai
13th December 2009, 08:15 PM
:-)

suvai
13th December 2009, 08:20 PM
அறுஞ்சுவை உணவினும் பெருஞ்சுவை ஆரோக்கியம்
அருளும் நல் நகைச்சுவை.

-
கிறுக்கன்


ahaaaa....K........... :lol: ... :rotfl: :rotfl3: :mrgreen: apadeengareenga ;-)

K .......i sincerely hope that you are keeping a good record of all your writings!!!

:clap:

kirukan
14th December 2009, 11:49 AM
சொல்லும் செயலும் கனிவாய் பிறக்க
எல்லாத் துயரும் மரிக்கும்.

-
கிறுக்கன்

<font color=green>குறிப்பு: இது என்னுடைய 100வது கிறுக்கிறள் ஊக்கமளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.இக்கொடுமை தொடரும்.(கால கொடுவென...) </font>

kirukan
19th December 2009, 02:05 AM
அறியா இயல்கள் இயலா தெனும்
இயல்கள் அறியும் அறிவியல்.

-
கிறுக்கன்

suvai
19th December 2009, 08:28 AM
K.............101 completed !!!!! awesome nga!!!!!! :thumbsup: :thumbsup: :clap: :clap:
Congrats!!!!! Hopefully we will all see more of kirukans kirukalgal :mrgreen:

kirukan
22nd December 2009, 10:54 PM
சிகரம் மற்றும் வாழ்வில் ஏற்றம்
சிரமம் இறக்கம் எளிதாம்.

கிறுக்கன்

suvai
23rd December 2009, 07:33 AM
:thumbsup:

kirukan
30th December 2009, 12:16 PM
உயர்வை காட்டும் வளமை என்றும்
எளிமை கூட்டும் வலிமை.

-
கிறுக்கன்

suvai
31st December 2009, 06:00 AM
உயர்வை காட்டும் வளமை என்றும்
எளிமை கூட்டும் வலிமை.

-
கிறுக்கன்


:thumbsup: K

kirukan
5th January 2010, 10:57 PM
உணர்ச்சிபூர்வ முடிவினும் உரிய உத்திகள்
உடனான முடிவுகள் உரவு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th January 2010, 08:51 AM
உயர்வு?

kirukan
6th January 2010, 11:52 AM
உயர்வு?

உரவு = வலிமை.
Firmness

isn't correct madam?

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th January 2010, 03:40 PM
:oops: Haven't heard it! Not a popularly known word!

kirukan
6th January 2010, 10:52 PM
உரவு என்ற சொல்லில் இருந்து தான் உரம் வந்திருக்கும் என எண்ணுகிறேன்.
உங்களுக்கு ஒரு சொல் தான் பரவாயில்லை உங்கள் ஆங்கில கவிதைகளில் ஒரு சில சொற்கள் தான் நான் :cry2: பார்த்த கேட்ட வாற்தைகளாக இருக்கின்றன....

-கிறுக்கன்

pavalamani pragasam
7th January 2010, 09:10 AM
:(

kirukan
8th January 2010, 06:36 PM
தொடங்கும் வேலையில் அடிப்படை முதலடி
தயார்நிலை எனும் வெற்றிப்படி.

-
கிறுக்கன்

kirukan
31st January 2010, 01:09 PM
வெறுப்புடன் விட்டு கொடுத்தலினும் விருப்புடன்
புரிதல் கூட்டும் பயன்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
31st January 2010, 03:21 PM
:exactly:

kirukan
10th February 2010, 07:13 PM
இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.

-
கிறுக்கன்

suvai
27th February 2010, 09:13 AM
இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.

-
கிறுக்கன்


well said nga K....!!!!

kirukan
1st March 2010, 05:25 PM
வலி இல்லா வாழ்வில் வழியும்
இல்லை ஒளியும் இல்லை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
1st March 2010, 07:47 PM
சந்தோஷம் காணாத வாழ்வுண்டோ என்ற திரைப்படப் பாடலை நினைவு படுத்துகிறது! :)

suvai
7th March 2010, 07:06 AM
hello nga k..
illai....iruku....patri rendu vari plz...& thanks!

suvai
7th March 2010, 07:07 AM
hello nga pp maam....nallaa irukeengala?....:-)

pavalamani pragasam
7th March 2010, 08:48 AM
Fine, thanks! :D

kirukan
7th March 2010, 10:38 AM
இல்லா இடத்தில் இருக்காது இருக்கும்
இடத்தில் இல்லை இருக்காது.
:D
old
இருக்கிறது என்றிருந்து ஏமாறும் இன்னலினும்
இல்லை என்றிருத்தல் நலமாம்.

இல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்
இருக்கும் இன்பம் இல்லாதாகும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
7th March 2010, 10:51 AM
இனிமையாய் இருக்கிறது. இரு கருத்துக்கு இடமில்லை!


ppavalamani.blogspot.com

kirukan
7th March 2010, 02:08 PM
மிரட்டலுடன் மின்னலாய் ஒரு வலை பதிவு...
எங்களை போன்றோர்க்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள் வாசித்து போக.திடுக்கிடும் உண்மை போல.

-
கிறுக்கன்

pavalamani pragasam
7th March 2010, 02:34 PM
:lol:

kirukan
8th March 2010, 10:55 AM
சபை வேண்டி சண்டைகாரர் ஆயினும்
சுமக்கும் சிரிப்பு புன்சிரிப்பு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
8th March 2010, 01:37 PM
மெத்த சரியாக சொன்னீர்கள்! வலைப்பூவில் மேலும் கொஞ்சம் பூக்கள் மலர்ந்துள்ளன! :)

kirukan
13th March 2010, 12:42 PM
புரியாபோதும் பிறர் சிரிக்க நாம்
சிரித்தல் கட்டாயச் சிரிப்பு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
13th March 2010, 01:54 PM
பலவிதமான சிரிப்பு!

suvai
14th March 2010, 02:09 AM
k :-)

awesome awesome....thank u for writing about siripu ;-)

tell me ...are you keeping a record of all your writings???? I sincerly hope...as all these are treasures...

kirukan
17th March 2010, 11:47 AM
இல்லாதோர் இயலாமையை இருப்போர் இகழ்ந்து
எள்ளல் ஏளனச் சிரிப்பு.

-
கிறுக்கன்

suvai
17th March 2010, 09:29 PM
இல்லாதோர் இயலாமையை இருப்போர் இகழ்ந்து
எள்ளல் ஏளனச் சிரிப்பு.

-
கிறுக்கன்


another one for siripu... :thumbsup: :thumbsup: thank u K

kirukan
2nd April 2010, 12:52 PM
வாழ்வில் வெற்றி விடியலின் விடை
உழைப்பில்லா சோம்பலின் விடை.

-
கிறுக்கன்

வந்ததே நெட் வந்ததே ஜீபோம்பா யார் போட்டதோ!!!!!

suvai
2nd April 2010, 09:30 PM
:thumbsup: nga k!

kirukan
16th April 2010, 05:12 PM
குழந்தையின் குறைகண்டு குரையாது நிறையை
தட்டிக்கொடின் குறை குறையும்.
-
கிறுக்கன்

pavalamani pragasam
16th April 2010, 07:57 PM
:yes:

suvai
17th April 2010, 04:14 AM
குழந்தையின் குறைகண்டு குரையாது நிறையை
தட்டிக்கொடின் குறை குறையும.
-
கிறுக்கன்ம்ம்


true nga K..... :clap:

kirukan
8th May 2010, 09:05 PM
எதிரியை அறிதல் எளிது நல்
நண்பனை அறிதல் அரிது.

-
கிறுக்கன்

kirukan
8th May 2010, 09:13 PM
சிறு பிழைக்கண்டு பகை போற்றாது
பிழை பொறுத்தல் பண்பு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
8th May 2010, 10:24 PM
aamaam!

kirukan
18th May 2010, 01:23 AM
இளமை திமிரில்
இச்சை கொண்டு
இல்லம் மறந்து
இசைந்து செல்ல

இரயில் ஆனாலும்
என்னவன் விரும்ப
என்னை முழுதாய்
விருந்தாய் படைக்க

விழித்து பார்த்தால்
வீதியில் நான்
நாயகனும் இல்லை
நகையும் இல்லை

எச்சில் இலையாய்
விழுந்த என்னில்
மிச்சம் பார்த்து
எச்சிலை நாய்கள்

நித்தம் நித்தம்
என்னை சுகிக்க
உயிர் வேண்டி
நானும் சகிக்க

வாடிய பின்னும்
தான் இன்புற
என்னை இம்சித்து
ரசித்த சுற்றம்

உணவின்றி
உயிர் மறித்து
உடல் எரித்த
பின் தான் விட்டது
என்னை....

நாட்டில் எண்ணிக்கை
கூடியதால் தான்
காட்டில் விலங்குகளின்
எண்ணிக்கை குறைந்தனவோ...
(காதலால் கற்பிழந்து தன்னிலை இழந்து கல்லறை செல்லும் வரை மனித மிருகங்களால் களங்கபட்ட மஹாவிறுக்கு...

நேசித்த பாவத்தால்
வேசி ஆனவள்
)

பாதித்ததால் பதித்தேன்
இப்பதிவு
உங்களை பாதித்தால்
என்னை மன்னிக்கவும்...

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th May 2010, 07:44 AM
:cry:

kirukan
19th May 2010, 03:48 PM
விரும்பி முகம் அரும்பி விருந்தோம்பின்
வயிறொடு நிறையும் மனம் .
-
கிறுக்கன்

kirukan
28th May 2010, 09:46 PM
பரிவுடன் பாலூட்டினால் வளர்ப்பவன் பந்தங்களையும்
பாதுகாக்கும் பைரவனின் பாசம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
28th May 2010, 09:54 PM
நல்ல நன்றி நவிலல் நாய்க்கு!

kirukan
28th May 2010, 10:27 PM
சண்டை சமாதானத்துடன் சகிப்பும் சேர்ந்து
சுரக்கும் சகோதர சிநேகம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
28th May 2010, 10:35 PM
:D

kirukan
28th May 2010, 11:45 PM
கண்டிப்பு இல்லாது கரிசனம் காட்டும்
ஆணிடம் அன்னையின் அன்பு.

-
கிறுக்கன்

kirukan
28th May 2010, 11:54 PM
கண்டிப்பு தண்டிப்புடன் பண்பை போதிக்கும்
பெண்ணிடம் பெற்றவளின் பாசம்.

-
கிறுக்கன்

suvai
29th May 2010, 06:11 AM
விரும்பி முகம் அரும்பி விருந்தோம்பின்
வயிறொடு நிறையும் மனம் .
-
கிறுக்கன்

so true K.... :thumbsup:

suvai
29th May 2010, 06:12 AM
சண்டை சமாதானத்துடன் சகிப்பும் சேர்ந்து
சுரக்கும் சகோதர சிநேகம்.

-
கிறுக்கன்


True two liners....K...... :clap: :clap:


Thanks k..;-)

kirukan
29th May 2010, 08:40 PM
முதுகில் சுமந்தாய்
முழுதாய் பணிந்தாய்
என்னை காக்க
உன்னை நொந்தாய்

தேய்ந்து போனாலும்
ஓய்ந்து போகாது
வேதனை மறைத்து
வேகம் சென்றாய்

வெய்யில் மழையில்
வெளியில் நின்றாலும்
வார்த்தை பேசாது
பயணம் தொடர்ந்தாய்

என்னையும் உன்னையும்
பிரித்தவன் என்றாலும்
வஞ்சம் மறந்து
நெஞ்சம் தருவாய்

என்னருமை பைக்கே...

Dedicated to lost bike
TN-07
M-8141
Hero honda splender
-
கிறுக்கன்

pavalamani pragasam
29th May 2010, 09:25 PM
:(

suvai
30th May 2010, 01:53 AM
ohhh no.....sorry to hear it K.....antha thukathilum nalla manasilirunthu varum vaarthaigaley

"vanjam maranthu nenjam tharuvaai""... :clap:

kirukan
5th June 2010, 12:07 PM
மும்மையெண்ணி முடங்காது மறுமையெண்ணி மருளாது
இம்மையை ஏற்றலே நன்மை.

-
கிறுக்கன்

suvai
6th June 2010, 04:47 AM
very true !!! :thumbsup:

kirukan
18th June 2010, 06:39 PM
பெற்ற பிறந்த பெற பிணைந்த
உறவில் மட்டுமே உரிமை.

-
கிறுக்கன்

kirukan
18th June 2010, 06:51 PM
எதிலும் எதிர்பார்த்து ஏங்கும் உறவு
என்றும் இணையா பிளவு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th June 2010, 07:56 PM
:yes:

suvai
19th June 2010, 07:09 PM
hello nga K.......... :thumbsup: :thumbsup:

kirukan
22nd June 2010, 09:57 AM
கையிரண்டும் காலிரண்டும்
கதைக்க நேரம்
பார்த்ததாம்

கையிரண்டின் ஓய்வின்போது
காலிரண்டும் நடந்ததாம்
காலிரண்டும் இருக்கையிலே
கையிரண்டும் உழைத்ததாம்

இரவு வருமென
எதிர்பார்த்து இருந்ததாம்
உடல் முழுதும்
ஓய்ந்த போதும்
இவ்விரண்டும் விழித்ததாம்

கையிரண்டும் காலைப்பார்த்து
நானே பெரியவன்
என்றதாம்

காலிரண்டும் சிரித்துவிட்டு
சிறித்திருக்கும்
நீயா பெரியவன்
உன்னையும் சேர்த்து
தூக்கும் நானே
பெரியவன் என்றதாம்

சளைக்காத கைகள்
நீ என் சேவகன்
ஆகவே சுமக்கிறாய்
என்றதாம்

சீரிய கால்கள்
நானாவது சுமக்கிறேன்
நீயென்னை சுத்தமல்லவோ
செய்கிறாய்

சத்தம் இடாமல்
கேட்ட உடல்
குறுக்கே வந்து
நீங்களும் பெரியவரில்லை
நானும் பெரியவனில்லை

நம்மை இயக்கும்
உயிரே பெரியவன்
அவனில்லை யெனில்
எதுவும் அசையாது

அமைதியாய் தூங்குங்கள்
என்றதாம்....

(ஆட்டுபவன் எங்கோயிருக்க ஆடுபவன் ஏன் அடித்து கொள்(ல்)கிறான்....)

-
கிறுக்கன்

pavalamani pragasam
22nd June 2010, 01:28 PM
puthu neethikkathai! :D

suvai
23rd June 2010, 04:23 AM
Hello nga K...... :clap: :clap:

thank u ....;-)

kirukan
2nd July 2010, 04:14 PM
பொருட்செல்வம் தேடி அருட்செல்வம் தொலைத்து
உடமையின் அடிமையாதல் மடமை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
2nd July 2010, 07:41 PM
மெத்த சரியாக சொன்னீர்கள்!

suvai
3rd July 2010, 03:11 AM
hello nga k,
Just two lines..... but message stands strong & true..... :clap:

kirukan
5th July 2010, 10:38 PM
எதிர்பார்ப்பில்லா அன்பென்பது இல்லை ஏனெனில்
எதிர்பார்ப்பின் அது அன்பில்லை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
5th July 2010, 10:52 PM
:confused2:

kirukan
5th July 2010, 11:09 PM
:confused2:
எதிர்பார்ப்புள்ள அன்பு எதிர்பார்ப்பில்லா அன்பு என்று அன்பு வகைபடாது அன்பென்றாலே எதிர்பார்பிலாததுதான் என்பது அடியேன் கருத்து.

-
கிறுக்கன்

pavalamani pragasam
5th July 2010, 11:18 PM
:)

kirukan
13th July 2010, 09:45 AM
ஊசியால் தினம்தினம் உருகுலைவதினும் வாள்
வீசி வீழ்வது மேல்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
13th July 2010, 02:19 PM
:exactly:

kirukan
15th July 2010, 10:48 AM
வீழ்ந்தாலும் வெகுண்டு எழுதலே வாழ்வின்
விடியலுக்கு வித்திடும் விதை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th July 2010, 01:15 PM
:clap:

kirukan
17th July 2010, 12:06 PM
ஆலம் விழுது விழுவது வீழ்வதற்கல்ல
பலமுடன் பலநாள் வாழ்வதற்கு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
17th July 2010, 02:00 PM
:2thumbsup:

suvai
17th July 2010, 11:40 PM
hello K......alam vizhuthu two liner....superrrrr o superrrr.... :thumbsup:

kirukan
19th July 2010, 09:48 AM
வேண்டியவன் வேண்டியது வேண்டியதால் வேண்டிய
ஒன்றோடு மூன்று அருளியதும்
வேண்டியவன் வேண்டியதை வெறுத்திட்டான்.

அது என்ன?
______________________________________________

-
கிறுக்கன்

pavalamani pragasam
19th July 2010, 05:00 PM
:wink:

kirukan
6th August 2010, 12:52 PM
:wink:
பதில் சொல்லலியே மேடம்...

kirukan
6th August 2010, 12:54 PM
வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th August 2010, 07:43 PM
:confused2:

kirukan
18th August 2010, 10:06 PM
பேசி தெரிதலினும் நேசித்து அறிதல்
பிரியா உறவின் வலிவு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th August 2010, 10:49 PM
ம்ம்.

suvai
19th August 2010, 06:25 AM
பேசி தெரிதலினும் நேசித்து அறிதல்
பிரியா உறவின் வலிவு.

-
கிறுக்கன்


Kk.... :thumbsup: (so true)

kirukan
27th August 2010, 02:50 PM
உச்சி வெய்யில் வேளையிலே
உழுது நானும் வெதைக்கையிலே
உன் நினப்பும் வருகுதடி
காண மனம் துடிக்குதடி

வஞ்சி உனை நினைக்கையிலே
கஞ்சி கலையம் சுமந்து-நீயும்
கொஞ்சி வரும் அழகினிலே
நெஞ்சம் உருகி மருகுதடி

கையலம்பி நிழலினிலே
களைப்பாற்ற அமரயிலே
கையுருட்டி தந்திட்ட
கருவாடும் மணக்குதடி

உணவுக்கு பின்னாலே
உன்பேச்சு ரசிக்குமடி
உறங்காம நான் உறங்கும்
உன்மடியே சொர்கமடி...

-
கிறுக்கன்

pavalamani pragasam
27th August 2010, 03:59 PM
ஆஹா! :clap:

kirukan
4th September 2010, 03:33 PM
அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்.

-
கிறுக்கன்

கருத்துதவி:- உலகம் சுற்றும் வாலிபன்.

pavalamani pragasam
4th September 2010, 04:07 PM
ம்ம்..

suvai
4th September 2010, 11:36 PM
hello nga kk......:-) antha vayal varappukey kootikutu poiteenga.....could clearly see the whole picture....awesome....ngo... :thumbsup: :clap:

kirukan
5th September 2010, 11:57 PM
உன்னை உள்ளூர உணர உள்ளம்
உருகும் உன்னதம் ஊறும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th September 2010, 08:49 AM
ஆம்!

kirukan
15th September 2010, 04:00 PM
கருப்பாய் இருந்ததினால்
வெறுப்பை உமிழ்ந்தவரை
சிரிப்பை சுமந்தே
இதயத்தில் இடம்பிடித்தாய்


பத்தில் தோற்றாலும்
பலபட்டம் பெற்றாய்
கடைசி படம்வரை
கல்லூரியில் படித்தாய்

என்றும் பதினாறு
என்றிருந்த உன்னை
எமன் எப்படி
எடுத்து சென்றான்

மகள் தாயாகி
முத்தொன்று பெற்றெடுத்தால்
முதுமை முளைக்குமென்று
முந்தி கொண்டாயோ

உடல்விட்டு போனாலும்
உன் நினைவு
பல நெஞ்சில்
உயிரோடு உறவாடும் !!!!!!!!!!

pavalamani pragasam
15th September 2010, 08:38 PM
அழகான, உருக்கமான அஞ்சலி முரளிக்கு!

kirukan
18th September 2010, 02:56 PM
மென்மையாய் மொழிவதால் மெய்யென திரிந்து
உயர்ந்து விடாது பொய்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th September 2010, 03:02 PM
சரியாக சொன்னீர்கள்!

kirukan
19th September 2010, 09:17 AM
பண்பிடம் பணிவும் பகையிடம் துணிவும்
பலம் தரும் குணமாம்.

-
கிறுக்கன்

kirukan
19th September 2010, 09:20 AM
பணங்கண்டு குணம் மாறும் உறவு
விளக்கு இல்லா இரவு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
19th September 2010, 09:36 AM
நல்ல கருத்துக்களை, உண்மைகளை நச்சென்று, சுருக்கமாய் சொல்லுகிறீர்கள்! :clap:

kirukan
19th September 2010, 10:49 AM
நல்ல கருத்துக்களை, உண்மைகளை நச்சென்று, சுருக்கமாய் சொல்லுகிறீர்கள்! :clap:

Thank you ma'am for your continuous support and encouragement. :ty:

kirukan
26th September 2010, 06:46 PM
தரம் கூட்டும் உரம் தரமில்லையெனில்
உரமிட்டு என்ன பயன்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
26th September 2010, 07:09 PM
ஒன்றுமில்லை!

rajraj
26th September 2010, 09:11 PM
ஒன்றுமில்லை!

tharam illaa uram tharai uyaram koottum ! :lol:

pavalamani pragasam
26th September 2010, 09:31 PM
Oh! :lol2:

kirukan
2nd October 2010, 05:04 PM
உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட.

150ஆவது கிறுக்கிறள்...
வழிகாட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

கிறுக்கு இன்னும் தெளியவில்லை ஆகவே இது தொடரும்..

-
கிறுக்கன்

pavalamani pragasam
2nd October 2010, 07:49 PM
தெளியவேண்டாம் உங்கள் இனிமையான, ரசிக்கத்தக்க, சிந்திக்க வைக்கும் அரிய 'கிறுக்கு'!!!!

kirukan
10th October 2010, 12:26 AM
நன்மையும் தீதென திரிந்து தெரியும்
வெறுப்போர் செய்தார் எனின்.

-
கிறுக்கன்

suvai
10th October 2010, 05:24 AM
:thumbsup: :clap: :thumbsup: :clap:
Congratttttssss!!!! nga K.....:-) on the 150th....plz continue to share your valuable pon mozhigals.
Good luck to write more!!

kirukan
15th October 2010, 02:16 PM
சறுக்கல் இல்லா வாழ்வின் சாரம்
சலனம் இல்லா சந்தோஷம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th October 2010, 08:09 PM
:clap: மிகச் சரியாகச் சொன்னீர்கள்!

kirukan
15th October 2010, 11:14 PM
தன்செயல் பிறர் போற்றல் பெருமை
தானே போற்றல் சிறுமை.

-
கிறுக்கன்

kirukan
16th October 2010, 01:20 PM
சுமையின் சுமையறிய
சுமையை சுமக்க
சுமை சுமையென
எண்ணி
சுமையை இறக்க
நான் நினைக்க
சுமையேயில்லை என
அடுத்தோர் எண்ணி
சுமையை ஏற்றிவிட்டால்
நானே சுமையாகி
வீழ்வேனோ????

-
கிறுக்கன்

pavalamani pragasam
16th October 2010, 02:05 PM
:lol:

kirukan
16th October 2010, 02:19 PM
:lol:
இதை கண்டு
பிறர் சிரிக்க
என் செய்வேன்
பராபரமே.... :(

pavalamani pragasam
16th October 2010, 05:28 PM
சுமக்கிறோம் என்று எண்ணாமலே சும்ந்து செல்வது சுகம்!

kirukan
23rd October 2010, 01:31 AM
வழிகாட்டல் வற்புறுத்தலிடை வித்யாசம் சிறிது
அதன் வினை பெரிது.

-
கிறுக்கன்

kirukan
23rd October 2010, 01:39 AM
அதிகாரம் ஆளுமை மட்டும் இருக்கும்
இடத்து இருப்பதில்லை அன்பு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
23rd October 2010, 09:49 AM
ஆமாம்.

kirukan
31st October 2010, 10:34 PM
முகத்தினில் இனித்து முதுகினில் கசக்கும்
முட்டாளாக்கி மூழ்கடிக்கும் உறவு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
1st November 2010, 08:27 AM
:( எப்போதுமா? எல்லோருமா? விதிவிலக்குகள் நம் ஆறுதலுக்கு எப்போதும் உண்டே!

kirukan
1st November 2010, 10:32 AM
:( எப்போதுமா? எல்லோருமா? விதிவிலக்குகள் நம் ஆறுதலுக்கு எப்போதும் உண்டே!

இரண்டாம் அடியை முதலில் படித்து முதல் அடியை பின் படிக்கவும்....

நான் கண்ட பெரும்பாலான உறவுகள் அவ்வண்ணமே ...95%...

-
கிறுக்கன்

pavalamani pragasam
1st November 2010, 04:46 PM
:sigh2:
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை, நீர் அடித்து நீர் விலகாது, தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்..இன்னும் எத்தனையோ சொல்லியிருக்கிறார்கள்..ஆனால் கசக்கும் உண்மைகளை விழுங்கத்தான் வேண்டியிருக்கிறது!

kirukan
6th November 2010, 10:58 AM
திருந்த வைக்கும் அறிவுரை பரிசு
வருந்த வைப்பதோ தரிசு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th November 2010, 05:05 PM
:)

kirukan
7th November 2010, 12:47 PM
நினைத்தது நினைத்தபடி நிலைக்காத போதும்
நிலைப்பது நிகரில்லா நல்லனுபவம்.

கருத்துதவி- Thanks to NOV
-
கிறுக்கன்

pavalamani pragasam
7th November 2010, 05:20 PM
:swinghead:

kirukan
12th November 2010, 01:24 AM
பழுதாகி புண்பட்டாலும் புரை நீக்கி
பழுதகற்ற பண்படும் மனம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
12th November 2010, 08:38 AM
ஆம்!

kirukan
12th November 2010, 07:57 PM
ஆணவம் தன்னுள் ஆனந்தத்தை மறைக்க
வெளியே தேடும் மானிடம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
12th November 2010, 08:34 PM
:lol:

kirukan
27th November 2010, 12:49 PM
வித்தாகி சத்தாகி சித்தாகி பித்தம்
தெளிய வைக்கும் சிவம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
27th November 2010, 01:54 PM
:)

kirukan
1st December 2010, 12:21 PM
தவறி தவறலினும் தவறாகும் என
நம்பி தவறல் தவறு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
1st December 2010, 01:10 PM
:lol:

kirukan
18th December 2010, 01:11 PM
இன்பமே என்னாளும் துன்பம் இல்லை
ஈடில்லா இறையருள் பெறின்.

கருத்துதவி- அப்பர்

-
கிறுக்கன்

kirukan
18th December 2010, 01:20 PM
உயிருடன் வாழ்தலினும் உயிர்ப்புடன் வாழ்தலே
வாழ்வில் உயர்வு தரும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th December 2010, 02:59 PM
ஆம்,ஆம்!

kirukan
21st December 2010, 10:14 AM
மறதி மன்னிப்பை மனிதன் மறக்க
மறைந்திடும் மன அமைதி.

-
கிறுக்கன்

kirukan
29th December 2010, 02:44 PM
இல்லாதோர் பலமைல் புசிக்க நடக்க
இருப்போர் நடப்பர் செரிக்க.

-
கிறுக்கன்

kirukan
11th January 2011, 11:27 AM
போட்டியில் போட்டியிடாது வாழ்வில் போட்டியிட
வாழ்க்கை நொடிந்து வாடிடும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
11th January 2011, 11:44 AM
:(

kirukan
13th January 2011, 11:05 AM
பட்டம் பெற்றோர் பட்டம் விட்டாலும்
நூலில்லா பட்டம் பாழ்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
13th January 2011, 02:17 PM
:lol:

kirukan
30th January 2011, 04:16 PM
யாவரையும் நம்புதல் ஆபத்து எனின்
எவரையும் நம்பேல் பேராபத்து.

-
கிறுக்கன்

pavalamani pragasam
30th January 2011, 07:48 PM
:swinghead:

suvai
15th February 2011, 06:38 AM
K....#400:thumbsup:

infact ovondrum pon mozhigal!

kirukan
12th March 2011, 02:39 PM
விடியுமென நம்பி விழி அயர்ந்தாரை
இயற்கை வீழ்த்தியது விடியாது.

-
கிறுக்கன்

pavalamani pragasam
12th March 2011, 02:52 PM
இயற்கையின் கணக்கு புரியாத புதிரே!

suvai
13th March 2011, 08:12 AM
# 407 true to every word u have written...nga k...

kirukan
5th April 2011, 06:53 PM
நாவில் நற்சொல்லும் நெஞ்சில் நஞ்சும்
இனித்திடும் விஷம் போலாம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th April 2011, 07:49 AM
.....:exactly:....

kirukan
7th April 2011, 11:51 AM
லஞ்சம் ஒழிக்க வந்த தாத்தா-பல
லட்சம் மனதை வென்ற தாத்தா
கண்துடைப்பு தாத்தாக்கள் நடுவில்-மக்கள்
துயர்துடைக்க வந்த தாத்தா
பல் விழுந்த வயதினிலும்-தேசதுரோகிகளை
பலமுடனே எதிர்க்கும் தாத்தா
சுயநலமில்லா போராட்டம்-இளம்
தலைமுறையின் நலத்திற்கான வெள்ளோட்டம்..

வாழ்க அண்ணா ஹசாரே தாத்தா....

pavalamani pragasam
7th April 2011, 01:24 PM
:2thumbsup:

suvai
10th April 2011, 02:26 AM
:2thumbsup:

kirukan
1st May 2011, 08:20 PM
முனைப்புடன் விதைக்கும் உழைப்பு வளர்க்கும்
செழிப்புடன் நன் மதிப்பு.

-
கிறுக்கன்

suvai
1st May 2011, 08:29 PM
hello nga k.....this is all gibberish on here....for me......:-(

kirukan
1st May 2011, 10:04 PM
Pls chk now.

pavalamani pragasam
1st May 2011, 10:36 PM
முனைப்புடன் விதைக்கும் உழைப்பு வளர்க்கும்
செழிப்புடன் நன் மதிப்பு.

-
கிறுக்கன்
ரொம்ப சரியா சொன்னீங்க!

suvai
7th May 2011, 11:43 PM
ipo padika mudiyuthu nga k...
ty...:thumbsup:

kirukan
6th June 2011, 10:41 AM
பற்று பற்றாகி பற்றற்று பற்றிடின்
முற்றற்று முற்றிடும் பகை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
6th June 2011, 02:47 PM
ஆமாம்! சரியா சொன்னீங்க!

kirukan
7th June 2011, 10:40 AM
நிறம் இனம் பாராது குணம்
திறம் போற்றும் இறை.

-
கிறுக்கன்

kirukan
8th June 2011, 11:10 AM
சினம் கூட்டி குணம் சிதைக்கும்
கூடா நட்பின் பணம்.

-
கிறுக்கன்

SoftSword
8th June 2011, 03:36 PM
dig/// kirukan - baba postku vilakkam kaetteenga... padicheengala...

kirukan
8th June 2011, 05:51 PM
dig/// kirukan - baba postku vilakkam kaetteenga... padicheengala...

Padichenga...enakku neengal soluvathil muzhu udanpadu illai enralum etrukollum padiye irunthathu...ungal commentil iruntha 'Maha mokkai' endra varthigale ennai ezhutha thoondiyathu....ennai porutha vari oru mozhiyai epozhuthu vendumanalum katrukollalam...atharkum arivukkum sambantham illai enbathey en karuthu....Arivai valarpathey siramam...
Thaimoziyil padipathey mokkaiya enbathey enakku uruthiyathu...oru mozhi verum pesuvatharkku payan pattal athan azhivu nerungugirathu endru artham...En kuzhanthaikku naan tamizhil ezhutha padikka solli kodukka vittal avalukku ithu ponra forumgal matrum pathirikaigal tharam thazhnthathaagavum artha matra thagave thondrum...thaimozhi payanatra thagave theriyum....avalin sinthanai thaverenu koora mudiyathu...en enil achinthanaiyai vithaithavan naan...ithu samoogathirkkum porunthum....

kirukan
18th June 2011, 12:46 PM
திட்டை தடுக்கும் தடையெனாது தவறை
துடைக்கும் துணையென கொள்.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
18th June 2011, 07:58 PM
அப்படியே செய்துவிடுகிறேன்!

kirukan
21st June 2011, 02:42 PM
தெரியாது தெளியாது வாழ்வில் உதவாது
புரியாது விதைத்த கல்வி.

-
கிறுக்கன்

pavalamani pragasam
21st June 2011, 07:23 PM
ஆமாம்! சரியாக சொன்னீர்கள்!

suvai
23rd June 2011, 12:00 AM
#428:thumbsup::thumbsup: nga k...

kirukan
23rd June 2011, 07:49 PM
பரிவற்று பரிகாசித்து பார்க்கும் துணையின்
பிரிவில் புரியும் பிரியம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
29th June 2011, 03:37 PM
பிரியும் முன்னாடியே புரிய வைத்திருக்கக் கூடாதா?!

kirukan
29th July 2011, 11:55 PM
இருமனம் இணங்கி பிணங்கி சுணங்கும்
இடியாப்ப சிக்கல் காதல்.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
30th July 2011, 07:53 AM
:lol2:புதுமையான பொருத்தமான உவமை!:slurp:

kirukan
1st August 2011, 05:53 PM
விரக்கடை அளந்து வண்டலில் விதைத்தாலும்
விளையாது சத்தில்லா விதை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
1st August 2011, 07:31 PM
மிகவும் சரி!

kirukan
2nd August 2011, 07:32 PM
பேதம் ஒழித்து சமத்துவம் பிறக்க
ஓதும் வேதம் காதல்.

kirukan
9th August 2011, 01:49 PM
வீம்பு வம்பை வளர்க்கும் வளரும்
வம்பு அன்பை தளர்க்கும்.

-
கிறுக்கன்.

kirukan
15th August 2011, 10:38 AM
சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.

-
கிறுக்கன்

அனைவருக்கும் கிறுக்கனின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!!!!

kirukan
24th September 2011, 01:42 PM
தளராது துவளாது துணிந்திடும் துணிவிடம்
பாயாது பயந்திடும் பயம்.

pavalamani pragasam
24th September 2011, 02:07 PM
:clap::2thumbsup:

kirukan
25th September 2011, 11:13 PM
துணிவாய் பணிவாய் கனிவாய் இனிவாய்
உயர்வாய் திறவாய் திருவாய்.

kirukan
27th September 2011, 09:51 AM
உழையாதும் உயர்த்தும் உயிர் பிரிவதால்
உயிர் பெறும் உயில்.

kirukan
28th September 2011, 10:02 AM
பினி மறந்து பணி செய்யும்
பாச பட்டறை கருவறை.

kirukan
29th September 2011, 11:27 PM
மதி மறைத்து பிதற்ற வைக்கும்
மனிதனின் கிறுக்கும் செருக்கும்.

kirukan
26th October 2011, 02:00 PM
வலி மறந்து வாழ்வில் ஒளி
தேடும் திருநாள் தீபாவளி.

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!!!!

chinnakkannan
26th October 2011, 07:10 PM
ஹாய் கிறுக்கரே ஹாப்பி தீபாவளி..
ஆமா..மேலே ஏதோ எழுத்தெல்லாம் சைனீஸாத் தெரியறது

kirukan
26th October 2011, 07:48 PM
Thanks and wish u the same....I beleive its corrected now......

suvai
18th November 2011, 02:21 AM
vanakam nga K....:-)

methuva ovoru muthaa padichikitu varen......superbbbbb ellaamey.....;-)

kirukan
19th November 2011, 02:21 PM
மனவீட்டில் பணம் குடியேர மறுகணமே
மனங்குன்றி குடிபெயரும் குணம்.

kirukan
27th November 2011, 09:55 AM
தகரமாய் இருப்பினும் குறைவில்லை துருவற்று
தரமாய் இருக்கும் வரை.

suvai
4th December 2011, 10:20 PM
k....#450 superbbbbbbb.....well said!!!

kirukan
16th December 2011, 04:10 PM
பெரும்படை முன் வீழா மன்னனும்
மெல்லிடை முன் வீழ்வதுண்டு.

suvai
17th December 2011, 08:10 PM
:noteeth: #453....

kirukan
11th January 2012, 01:35 PM
எந்நிலை மாறினும் தன்னிலை மாறா
மனிதரை காண்பது அரிது.

pavalamani pragasam
11th January 2012, 07:56 PM
ரொம்பச் சரி!

suvai
19th February 2012, 12:43 AM
engey namma kirukar avarai kaanomey romba naala!!

hope all is well nga k

kirukan
13th April 2012, 01:47 PM
"பண(ணி) சுமை ஏறியதால் மன சுமை இறக்க மறந்து போனேன்."

நகைச்சுவை நோய் தீர்க்க நகையின்
சுவை நிதி தீர்க்கும்.
-
கிறுக்கன்

suvai
18th April 2012, 05:48 AM
:thumbsup:


k....:-) .mudiyumbothu....inga ...........onga arthamulla kirakalgalai kiruka marakaatheenga kirukan avargaley...:noteeth:

kirukan
20th July 2012, 08:00 PM
பணத்துடன் பாவத்தை சேர்த்து வைத்தால்
பாவமே பணத்தை பறித்திடும்.
-
கிறுக்கன்.

pavalamani pragasam
20th July 2012, 10:43 PM
romba sariyaa sonneenga!

kirukan
8th August 2012, 10:10 AM
சாபமும் சாதகமாய் மாறும் சாதுர்யமாய்
சாதிக்கும் சாமர்த்தியசாலி இடத்து.
-
கிறுக்கன்.

pavalamani pragasam
8th August 2012, 07:15 PM
Exactly!

kirukan
2nd September 2012, 09:46 AM
உடலை உருவாக்கும் உடலுக்கு உருவாக்கத்
தெரியும் நோயின் மருந்து.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
2nd September 2012, 01:03 PM
நிச்சயமாய்! அது தெரியாமல் மருத்துவர்களையும் மருந்துக்கடைகளையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம்!!!

suvai
9th September 2012, 08:35 PM
hello nga pp...& hello nga k

correct ah soneenga...

suvai
23rd December 2012, 06:12 AM
why no more kirukals here nga K?

kirukan
27th January 2013, 06:52 PM
விடியா இரவென்றும் விலகா பிணியென்றும்
வாழ்வில் என்றும் இல்லை.
-
கிறுக்கன்

kirukan
1st February 2013, 03:28 PM
இருந்தார் இறந்தா ராயினும் இருந்த

இருப்பால் இறந்தும் இருப்பர்.


-

கிறுக்கன்

suvai
3rd February 2013, 07:46 AM
well said nga K.....;-)

kirukan
30th July 2013, 12:15 PM
முடியாதென முடிவெடுத்த பின் முயலும்
முயற்சி முடிவை தரா.

-
கிறுக்கன்

pavalamani pragasam
31st July 2013, 10:37 AM
Yes!Yes!

kirukan
17th January 2014, 10:29 PM
எழில்கண்டு செய்யும் தொழில்கண்டு பிறரை
மதித்தலும் மிதித்தலும் மடமை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th January 2014, 01:14 PM
வாங்க! வாங்க!

suvai
16th March 2014, 05:10 AM
vaanga seekiram vaanga..:noteeth:

kirukan
25th August 2014, 11:22 AM
நித்தம் நித்தம் நோக வைத்து
என்ன சுகம் கண்டாயோ
எந்தன் மூச்சு நின்று போனால்
நீயும் அமைதி ஆவாயோ

குத்தி குத்தி நொந்த நெஞ்சில்
குருதி வருவதை அறிவாயோ
காயம் பட்டு கல்லறை சென்றால்
உள்ளம் நீயும் குளிர்வாயோ.

-
கிறுக்கன்

kirukan
2nd September 2014, 04:05 PM
இறைவா
வெட்டுபட்ட உள்ளத்தில்
ரத்தம் ரொம்ப கொட்டுதடா
மருந்தை நானும் தேடுகிறேன்
மரணவலி என்னை கொல்லுதடா

உள்ளம் நொந்து போனதனால்
உன்னை ரொம்ப தேடுதடா
ஆறுதல் சொல்லி தேற்றிட
அருகில் நீயும் வாராயோ

முடியாதென தெரிந்திருந்தும்
முட்டாள் மனம் ஏங்குதடா
மனம் கொஞ்சம் தேறிட
கனவிலேனும் வருவாயோ

சோர்ந்து போய் இருப்பதனால்
சோகம் ரொம்ப தூக்கலடா
பாரம் உன்மேல் ஏற்றிடேன்
என்னை நீயும் சகிபாயோ

-
கிறுக்கன்

pavalamani pragasam
2nd September 2014, 08:08 PM
இறைவா, தீர்த்துவிடு வலிகளை!

kirukan
3rd September 2014, 07:45 AM
என்ன கேட்டேன் உன்னிடம்
என்ன தந்தாய் என்னிடம்
வெட்டுபட்ட நெஞ்சின்
வலி நீக்க உனைகேட்டால்

வெட்டும் கைமட்டும் மாறியது
ரத்தம் இன்னும் கொட்டியது
ஆள் மாறி மாறி வெட்டுவதை
பார்த்து பார்த்து ரசித்தாயோ

என் தாங்கும் சக்திகாண
கைகட்டி நின்றாயோ
தாங்கும் வரை தாங்கிடுவேன்
கைமீறி போயின் பொசிங்கிடுவேன்

-
கிறுக்கன்

pavalamani pragasam
3rd September 2014, 08:32 AM
ஏனிந்த சோதனை?

kirukan
3rd September 2014, 10:31 AM
Piravi payan

pavalamani pragasam
3rd September 2014, 07:31 PM
அப்படியெல்லாம் சொல்லி சோர்ந்து போகக் கூடாது- இரவும் பகலும் மாறி மாறி வருவது இயற்கை. இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இணைந்திருப்பது இயல்பு. The night is darkest when the dawn is nearest.

kirukan
14th September 2014, 05:48 PM
உயிரற்று போனபின்னே
உன்பெயர் கூட உனதில்லை
இனமேது ஆனாலும் நீ
பிணமன்றி வேறில்லை

உடல் உறுதியாய் இருந்தும்
உயிரற்று கிடத்திட்டால்
உடல் ஊதி புழுத்திடும்
ஊர் தூற்ற நாரிடும்

உயிரற்ற உடல் கண்டும்
உன் மனமின்னும் மாறலியோ
உயிரில்லா பொருள்மீது
உன் மோகம்தான் தீரலியோ?

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th September 2014, 08:49 AM
ம்ம்ம்....:(

kirukan
17th September 2014, 07:20 PM
இன்னல் இல்லா இதயம் இல்லை
இருள் இல்லா இரவும் இல்லை
ஊடல் இல்லா உறவும் இல்லை
மோதல் இல்லா மேகமும் இல்லை
உன்னை விடவும் நொந்தார் உண்டு
நினைத்து பார்த்து நிம்மதி நாடு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
18th September 2014, 08:36 AM
ஆம், படியில்லா வீட்டு வாசலில்லை; நிழலில்லா உருவமில்லை;நிழலின் அருமை அறியத்தானோ வெயிலின் கொடுமை?

kirukan
28th September 2014, 11:17 PM
உன்னை நான் பார்த்ததில்லை
உன்னை நான் கேட்டதுமில்லை
உன்னை எனக்கு தெரியவும் தெரியாது
பின்பு எப்படி மயக்கினாய் என்னை
மண்டை புடைத்த பின்தான் தெரிந்தது
தன்னிலை மறந்து மயங்கினால் வரும்
விபரீதம் என்னவென்று....

pavalamani pragasam
29th September 2014, 06:16 PM
:lol::clap:

kirukan
30th September 2014, 11:22 AM
இதயத்தின் துயர் துடைக்க
இறைவனை துதித்தேன்
உள்வலி துறக்க
வெளிவலி தந்தான் போலும்
உள்வலி மறைக்கும்
வெளிவலியும் இன்பமே....

kirukan
30th September 2014, 01:19 PM
Written in 2010 HUB Magazine --for backup
கருத்துடன் நின்று
காவல் புரிந்தவனே
போய் வருகிறேன்
--கதவு
மிதித்த போதும்
மிருதுவாய் சுமந்தவனே
போய் வருகிறேன்
--தரை
வெறித்த போதெல்லாம்
வெள்ளந்தியாய் சிரித்தவனே
போய் வருகிறேன்
--மேற்கூரை
இடைவெளி உணர்த்த
இடையில் நின்றவனே
போய் வருகிறேன்
--சுவர்
அழுக்குற வரும்போதெல்லாம்
அழகுற செய்தவனே
போய் வருகிறேன்
--குளியல் அறை
சிறிதுநேரம் இருந்தாலும்
சாந்தியைத் தந்தவனே
போய் வருகிறேன்
--பூஜை அறை
இருளை அகற்ற
இரவெல்லாம் விழித்தவனே
போய் வருகிறேன்
--மின்விளக்கு
அயர்ச்சியாய் வரும்போதெல்லாம்
அமைதி தந்தவனே
போய் வருகிறேன்
--படுக்கைஅறை
உன்னுடன் இருந்த நாட்களை
உதிரத்தில் சுமந்திருப்பேன்
விடைகொடு வாடகை வீடே...

pavalamani pragasam
1st October 2014, 06:58 PM
அருமை!:clap:

kirukan
2nd October 2014, 10:26 AM
உடல்வலி உன்னிடம்
உணர்தியது என்ன
இம்சை வலி உனை
இம்சிக்க அல்ல
இருக்கும் இன்னலை
உனக்கு உணர்த்த

இன்னல் பாராது
வலிக்கு மருந்திடல்
இன்னலை இரட்டிக்கும்
வலியை வாழ்வாக்கும்
உன் சுற்றம் தரும்
வலியும் இவ்வகையே!!!

-
கிறுக்கன்

kirukan
3rd October 2014, 02:11 PM
பயமில்லா பகட்டில்லா பக்தி பெற்றிடும்
பரவசநிலை யெனும் முக்தி.

-
கிறுக்கன்

pavalamani pragasam
4th October 2014, 08:42 AM
:yes:

kirukan
5th October 2014, 01:15 PM
இன்பம் துன்பம் இரண்டும் அடுத்தவர்
தினிப்பன்று அவரவர் நினைப்பே.
-
கிறுக்கன்

pavalamani pragasam
6th October 2014, 08:26 AM
:exactly:

kirukan
12th October 2014, 10:41 PM
பரிட்சைக்கு பின் பாடம் புகட்டும்
பண்பட்ட ஆசிரியர் அனுபவம்.
-
கிறுக்கன்

pavalamani pragasam
13th October 2014, 08:11 AM
ம்ம்ம்...

kirukan
13th October 2014, 11:19 PM
அமைதிக்கு நோபல் பரிசு
கிறுக்கனின் பார்வையில்
ஆராய்ந்து பார்த்தேன்
அதிர்ந்து போனேன்

இல்லாததை தெரிவிப்பதற்கோ
தெரியாததை தெளிவிப்பதற்கோ
புதியதை படைப்பதற்கோ
கொடுக்கும் விருது அமைதிக்கோ


அமைதி இல்லாமல் போனதோ
தெரியாமல் போனதோ
புதியதாய் ஆனதோ
இல்லை இன்றுதான் இப்படியோ

எந்த காலமாயினும்
இதுதான் நிலைமை
தொன்றுதொட்டு சமூகத்தில்
தொடரும் பயங்கரவாதம்

அன்று கொடுத்திருந்தால்
ஔவையாரும்
பின்பு கொடுத்திருந்தால்
புத்தரும் வாங்கியிருப்பர்

-
கிறுக்கன்

pavalamani pragasam
14th October 2014, 07:40 AM
மிக சரியாக சொன்னீர்கள்!