PDA

View Full Version : Thamizh Peachu - Vijay TV

joe
17th March 2008, 08:49 AM
தேனினும் இனிய நம் தமிழ் மொழியினை செவியில் பருகும் இன்பத்தை இன்றைய இளைய தலைமுறையினர் பலர் உணராத இந்த காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக் கலைக்கொரு களத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள்.

இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் அருந்தமிழில் தங்கள் பேச்சுத் திறமையை வெளிக்காட்ட போட்டி போட்டுக் கொண்டு வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

நெல்லைக் கண்ணன் மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகிய தகுதியான தமிழறிஞர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள்.

வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளே எடுபடும் என்ற பரவலான கூற்றை பொய்யாக்கி இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுக்களும் நன்றியும்! :D

sarna_blr
17th March 2008, 09:55 AM
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு thread'களே எடுபடும் என்ற பரவலான கூற்றை பொய்யாக்கி இந்த thread வெற்றி பெற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

சும்மா தமாசுக்கு.....(ஜோ அண்ணா)...சும்மா தமாசுக்கு

நல்ல நிகழ்ச்சி.....வெற்றி பெற வேண்டும்....இந்த thread வெற்றி அடஞ்சா.....அந்த நிகழ்ச்சி வெற்றி அடஞ்ச மாதிறி.....

Roshan
15th July 2008, 03:02 PM
Any one who is watching this show?

I have become a fan of this program. Really a good effort by Vijay TV and the contestants are really doing great. Kudos to the Judge Nellai Kannan who is conducting this program exceptionally well.

Last night (repeat telecast of Sunday Episode) in the ethugai mOnai round - the guy who presented his poetry on "kaipEsi" simply stole the show. What an amazing talent. pichchu uthaRittAr. Wish they telecast it again.

priya_2008
15th July 2008, 05:44 PM
Wen is the retelecast???

priya_2008
15th July 2008, 05:47 PM
I TOO SAW THE TRAILER "KAIPESI" , BUT MISSED THE SHOW, PLS TEL ME WEN IS THE RETELECAST??????

Roshan
15th July 2008, 05:55 PM
I TOO SAW THE TRAILER "KAIPESI" , BUT MISSED THE SHOW, PLS TEL ME WEN IS THE RETELECAST??????

Retelecast was last night. I really wish if they retelecast it again for the people who had missed it. That guy (I think he is the youngest among the whole lot) was amazing. Each and every line was appreciated by Mr.Nellai Kannan and the two lyricists - Snehan and Viveka.

There were quite a few other contestants who were good as well. The one who spoke about 'kadal' then the girl who was given the topic 'kOlam'.

But 'kaipEsi' was the most outstanding. Chance'E illa :clap:

priya_2008
16th July 2008, 09:45 AM
Ya, i saw that streday in Techsathish.com, tht guy too younger, his speech was amazing, chanceailla.................. :clap:

Roshan
16th July 2008, 11:08 AM
Ya, i saw that streday in Techsathish.com, tht guy too younger, his speech was amazing, chanceailla.................. :clap:

Link Please :)

Sanguine Sridhar
16th July 2008, 11:19 AM
I saw couple of episodes in this program in which I liked "Thamizha! Nee pesuvadhu thamizha?" :)

P_R
16th July 2008, 11:40 AM
I saw couple of episodes in this program in which I liked "Thamizha! Nee pesuvadhu thamizha?" :) That is a song by Kasi Anandan. Isn't it ?

Sanguine Sridhar
16th July 2008, 11:52 AM
I saw couple of episodes in this program in which I liked "Thamizha! Nee pesuvadhu thamizha?" :) That is a song by Kasi Anandan. Isn't it ?

:roll:

P_R
16th July 2008, 12:21 PM
He is a poet from SriLanks who is known as uNarchikkavignar.

தமிழா நீ பேசுவது தமிழா

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

காசி ஆனந்தன்

priya_2008
16th July 2008, 03:33 PM
Roshan wrote:

Link Please

http://www.techsatish.net/2008/07/15/vijay-tv-tamil-petchu-engal-mutchu-15/

aanaa
16th July 2008, 08:56 PM
or here
http://www.techsatish.net/2008/07/15/tamil-petchu-engl-mutchu/

clnarain
17th July 2008, 01:01 AM
Unfortunately this is the second part of "Ethugai Monai" round. The first part would have been quiet interesting with Mr.Arul Prakash speaking. I really love his speech. Does anyone have the link for the first part?

Roshan
17th July 2008, 01:01 PM
Unfortunately this is the second part of "Ethugai Monai" round. The first part would have been quiet interesting with Mr.Arul Prakash speaking. I really love his speech. Does anyone have the link for the first part?

Arul Prakash is one of the best. He has done well in all rounds - specially in the 'Oviya Chutru'. Even in ethugai mOnai round the judges were spellbound with his poetry titled 'kadal'.

Nevertheless, I think 'kaipEsi' was the ultimate winner.

Arul Prakash is highly influenced by Vairamuthu I guess. His oratory style, wordings, voice, tone everything resembles Vairamuthu a lot.

sarna_blr
17th July 2008, 01:32 PM
I too have seen few episodes.... really good attempt... :bow:

i learnt few new Tamizh words :shock:

clnarain
19th July 2008, 01:42 AM
I'm a regular watcher of this beautiful program. In a recent episode Ayya Subhavi said that words "வயது" & "ஜாச்தி" are not pure tamil words. I was really astonished to hear that. I could digest this fact for the word "ஜாச்தி" as it sounds somewhat like sanskrit, but could never believe this fact for the word வயது. It seems that "அகவை" is the correct word for it. Anyway these are just tidbits of information. There are more such available in this beautiful program.

Roshan
2nd August 2008, 05:32 PM
[tscii:78f856b55b]The links given here for the 'kaipEsi' poetry didnt work. Stumbled across another link while googling for some lyrics.

Thurai Saravanan at his best - in the ethugai mOnai round of Vijay's thamiz pEchu engaL moochu.

It's more gripping when you listen to the poetry with visuals. He's got an interesting style.

http://www.bollywoodsargam.com/video_todayfeaturedvideo.php?blockbustermovieclip= hitfisvSJuU---latest-Tamil_Pechu_enkal_muchu_-_Kavithai_featured_hollywood_blockbuster_video.htm l

வடக்கே திருச்சி மலைக்கோட்டை
தெற்கே திருமையம் புகழ்கோட்டை
நடுவிலே திகழும் கலைக்கோட்டை
நாடே புகழும் புதுக்கோட்டை
என்னுடைய ஊர்
என் ஊருக்கு முதல் வணக்கம்

என்னைப்பார்த்து கவிதை எழுதச் சொன்னார்கள்
கவிதை எனும் பேரரசி வரவுக்காக - நான்
கைய்யினிலே கோல் பிடித்து காத்திருந்த நேரமது

மக்கள் எல்லாம் மாக்கள் ஆனார்
எதனாலே? இரண்டாலே
ஒன்று விலைவாசி
மற்றொன்று கைபேசி

கைபேசி...
அதற்கு மேதினியில்
மேன்மைதரும் சிறப்பு - நான்
கைகொள்ளும் மேன்மைதரும்
அதுவே என் தலைப்பு

கைபேசி என்னிடம் பேசிய கதை சொல்கிறேன்

எல்லா திசைகளும் எனக்குள் அடக்கம்
எல்லோர்க்கும் என்மீதே இன்றைய மயக்கம்
வடிவத்தில் சிறியவன் நான்
வாமன அவதாரம் நான்
அடியெடுத்து நான் அளந்தால்
அண்டமெல்லாம் சிறிதாகும்

கையளவு இதயத்தின்
கடலளவு ஆசைகளை
கடல்கடந்து இருந்தாலும்
கச்சிதமாய் எடுத்துரைப்பேன்

மூர்த்தியிலே சிறியவன் நான்
மும்மடங்கு பொழிகின்ற
கீர்த்தியிலே உயர்ந்தவன் நான்
கேள்வி ஞானம் உடையவன் நான்

சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் எல்லோரின்
காதோரம் பேசுகின்றேன்
கைக்குள்ளே வாழுகின்றேன்

கன்னியர்க்கும் காளையர்க்கும்
கைப்பேசி இல்லையெனில்
அன்னையற்ற பிள்ளையென
அனாதையாய் திரிந்திடுவார்

தானாலெ பேசினாலே - தனியாக
சிரித்தபடி போனாலே
பைத்தியம்தான் போகுதென்பார் அந்நாளில்
வீதியிலே இன்றைக்கோ
வாகன நெரிசலிலும்
பாதிபேர் சிரித்தபடி
பைத்தியம்போல் உளருகின்றார்
காரணம்தான் தெரிகிறதா
கைபேசி என்னிடம்தான்
ஊர்கதைகள் அளக்கின்றார்
உலகையே மறக்கின்றார்

மன்னனுக்கும் புலவனுக்கும்
மதிகாணா நட்பு அன்று
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கைப்பேசி காதல் இன்று

பொத்தானை மறந்தாலும்
புத்தகத்தை மறந்தாலும்
புசித்திடவே மறந்தாலும்
பெற்றோரை அத்தானை
யாரைத்தான் மறந்தாலும் - மனிதன்
விவேக கைப்பேசியென்னை
வித்தகனை மறப்பதில்லை

காதலனும் நோக்கியா
காதலியும் நோக்கியா - இதில்
பேதையான பெற்றோரும்
பின்னொரு நாள் நோக்கியா
நோக்கமெல்லாம் மனிதருக்கு
நோக்கியாவின் பக்கம்தான்
ஏக்கமெல்லாம் மனிதருக்கு (நோக்கியாவின்)
என்வரிசை கைபேசிதான்

சோற்றுக்கு வழியில்லை - உனக்கு
சோனி எரிக்சன் அவசியமா
ஏரோட்டும் பிழைப்பிருக்கு - உனக்கு
எதிர்த்தாப்பில் ஏர்செல் கடை எதற்கு

நோயில்லா வாழ்வுபோதும்
நோக்கியா தேவையில்லை
என்று நான் சொன்னாலும்
என் கேள்விக்கு பதில் இல்லை
என்னையே புகழ்கின்றார்
எருமைபோல் விழிக்கின்றார்

“என காதலியே
உன் காதல் வார்த்தை பட்டால்
கல்லும் இனிதாகும் கனியாகும்
உன் காதல் வார்த்தை வாங்கிதரும்
என் கைப்பேசி இனிதாகும்”
என்று சொல்வோன் சிலர்

“பலருக்கோ நிமிஷமும் இனிக்கும்
பிழைப்பில்லை
எனக்கோ என் காதலியிடமிருந்து
கைபேசியிலே அழைப்பில்லை”
என்று என்னால் ஏங்குவோர் சிலருண்டு
என்றாலும் தினம் காலை - நான்
எழுப்புவோர் பலருண்டு

தலையான கைபேசி - என்னை
தவமிருந்து கண்டெடுங்கால்
கொலைக்காரன் கைய்யில் நான்
குத்துயிராய் கிடைக்கின்றேன்

கைப்பேசி திரையினிலே
காந்திபடம் இருப்பதில்லை
மைப்பூசும் நடிகையரின்
மார்பளவு படமிருக்கும்

இருக்குமிடம் தெரியாமல்
பித்தனைப்போல் பிதற்றுவோனுக்கு
கைபேசி நஞ்சாகும்
கல்லறைக்கு வழியாகும்
அஞ்சுதற்கும் அஞ்சாமல்
அறிவிலிபோல் நடந்துகொண்டால்
கைபேசி கொலைக்கருவி
கல்லறைக்கு வழிகாட்டி

கனத்தினிலே...
கைபேசி காதலினால் சாலையிலே
பிணமானோர் எண்ணிக்கை - நான்
பேசத்தான் அடங்கிடுமா

கைபேசி காத்திருக்க
கவனமெல்லாம் அதிலிருக்க
மெய்பேசி சென்றவன்மேல்
மோதியதே பேருந்து
இரு சக்கர வாகனத்தில்
விரைவாக செல்கையிலும்
பெருமை பல பேசுகின்றார்
பெரு விபத்தில சாகின்றார்

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
மூலையெல்லாம் பேச்சிருக்கும்
வானளக்கும் எஸ் எம் எஸ்
வளர்கொடுமை என் சொல்வேன்

அங்கிங்கெனாதபடி
ஆனந்த கைபேசி
எங்கெங்கும் நிறைந்திருக்கும்
இவ்வுலக புதுமைக் கடவுள்

ஊர் உலகே மிக விரும்பி
உறவாடும் என்னை ஏன்
தேர்தலிலே இன்னும் - தேரந்த
சின்னமாக வைக்கவில்லை
இருந்தாலும் எனக்குள்ள
ஏற்றத்தை சொல்லிவிட்டேன்
வரும்நாளில் சின்னமென
வைக்கட்டும் தேர்தலிலே

:clap: :clap: :clap:[/tscii:78f856b55b]

littlemaster1982
2nd August 2008, 08:00 PM
Good one :clap: :clap: :clap: Thanks Roshan for posting this :D

Roshan
2nd August 2008, 08:13 PM
Good one :clap: :clap: :clap: Thanks Roshan for posting this :D

:D

Have you seen the video?

rocketboy
2nd August 2008, 08:24 PM
Unfortunately this is the second part of "Ethugai Monai" round. The first part would have been quiet interesting with Mr.Arul Prakash speaking. I really love his speech. Does anyone have the link for the first part?

Arul Prakash is one of the best. He has done well in all rounds - specially in the 'Oviya Chutru'. Even in ethugai mOnai round the judges were spellbound with his poetry titled 'kadal'.

Nevertheless, I think 'kaipEsi' was the ultimate winner.

Arul Prakash is highly influenced by Vairamuthu I guess. His oratory style, wordings, voice, tone everything resembles Vairamuthu a lot.

Arul Prakash is the best. :) I am rooting for him right from day one.

Roshan
2nd August 2008, 08:33 PM

Me too :) But I am sure Durai Saravanan will be a tough contender. Saravanan is very young too - so he might have an edge over Arul Prakash.

Arul Prakash's poetry 'kadal' was also a very good one. I am unable to find it on the web :(

littlemaster1982
2nd August 2008, 08:49 PM
Good one :clap: :clap: :clap: Thanks Roshan for posting this :D

:D

Have you seen the video?

Not yet Roshan. Bookmarked it to see it later (stupid download limit and overshot bills already).

aanaa
4th August 2008, 05:51 PM
Good one :clap: :clap: :clap: Thanks Roshan for posting this :D

:D

Have you seen the video?

:ty:

:yes:

clnarain
27th August 2008, 05:49 AM
seems vijayan will win the race...i think Nellai Kannan is way too biased in this regard. Any comments on this?

Roshan
27th August 2008, 10:51 AM
seems vijayan will win the race...i think Nellai Kannan is way too biased in this regard. Any comments on this?

Hmm Haven't noticed. Last two weeks program pAkkala. Have to catch up this week.

Vijayan's body language is irritating to the core and there's nothing great about his performance, though he does well once in a while. Arul Prakash is consistent.

joe
8th September 2008, 02:13 PM
Vijayan's body language is irritating to the core
Trying to immitate Vaiko is OK ..But imitating Vaiko 'adjusting his black Thundu' without even having any thundu is too much :)

Arul Prakash is consistent.

:exactly: Content also very good. :)

selvakumar
16th September 2008, 12:12 PM
Saw around 45 mins of the program last night.
Kanna mattum moodikittu petchai mattum ketta romba nalla irukku. Body language of the contestants :oops: Over-Action.
Tamil pesurathukku ivvalavu body language thevaiyaa.. etho political meet la pesura maari.

Forgot who was Vijayan. But there was a guy whose B.L was ||| to Vaiko. My bet would be on the guy who spoke for the lines "நல்லதோர் வீணை செய்து". Quite simple without much drama !

Last night, thamizh arignar 'Avvai natarajan' (yaar ivarooe :huh: ) was one of the judges.

joe
16th September 2008, 01:17 PM
Last night, thamizh arignar 'Avvai natarajan' (yaar ivarooe :huh: ) was one of the judges.

Avvai Natarasan is a former Vice Chanclor of University (I think Chennai)

Nerd
16th September 2008, 07:06 PM
Saw one of the episodes sometime back. NadigargaL arasiyalukku varalAmA. Some guy was attacking rajini blatantly. Karu. Pal did not have anything to say. Vijay TV did mute a few parts but it was obvious who that guy was targetting. More than that right from the participant to the judges everyone was singing eulogies on MGR. Wtf, I mean whats the freakin need?? I was wondering if I tuned in jaya TV :shaking:

joe
17th September 2008, 06:51 AM

Poyum poyum neenga intha episode thaana paakkaNum ? :lol: IMO ,This topic is not a good one in Thamizh pechu EngaL moochu ..Don't ignore other parts of the programme. :)

selvakumar
17th September 2008, 09:07 AM
Poyum poyum neenga intha episode thaana paakkaNum ? :lol: IMO ,This topic is not a good one in Thamizh pechu EngaL moochu ..Don't ignore other parts of the programme. :)
Saw parts of that episode. Hope I am referring to the same. I didn't feel it weird though. However, judges seem to *force* their opinion as a final result to judge the contestants. Sila topics la ellam oru levelukku mela pesa muidyaathu

nadigargal arasiyalukku varalaamaa ?
- Varakoodaathunnu sonna sattapadi solla urimai illai and it depends on the individual. Itha vachi vara koodaathunnu pesuravar ennatha pesuvaar.. If the judges don't care about the verdict or the conclusion, this program would be even more interesting.

Nerd
17th September 2008, 06:57 PM
Saw one of the episodes sometime back. NadigargaL arasiyalukku varalAmA. Some guy was attacking rajini blatantly. Karu. Pal did not have anything to say. Vijay TV did mute a few parts but it was obvious who that guy was targetting. More than that right from the participant to the judges everyone was singing eulogies on MGR. Wtf, I mean whats the freakin need?? I was wondering if I tuned in jaya TV :shaking:

Poyum poyum neenga intha episode thaana paakkaNum ? :lol: IMO ,This topic is not a good one in Thamizh pechu EngaL moochu ..Don't ignore other parts of the programme. :)That episode was plain dumb. I was watching this programme on and off but decided to stop watching it after that torchur of an episode. May be I ll start watching it again sometime later.

selvakumar
6th October 2008, 04:00 PM
"Sollaadal" section is quite interesting. Avvai Natarajan's judgement on the speakers is just great. With great patience, he explains the flaws and how they should have approached a given line. Indirectly, he was stressing them to focus on the entire poem and its meaning. Most of the guys were concentrating only on the literal meaning of the given line.

IN one of the previous episodes, Kannan interrupted a guy and asked him the subsequent line. Needless to say, the guy couldn't recall it :lol: Most of them are popular lines infact :) While it would be really tough to remember everything, most of them were beating around the given line and by deviating lot more from the bigger picture.

Avvai Natarajan should have continued as the judge for some more time :thumbsup: He doesn't react to the points in a sensitive way.

Roshan
6th October 2008, 07:37 PM

I missed the 'sollAdal' round :( I watched it yesterday and now the 'patti manRam' round has started and the judge is Abdul Cader (who is he.. :roll: ). He too looks quite calm and composed without getting emotionally driven. Nellai Kannan tends to get emotional at
times. In the patti manRam round on koottu kudumbam and thani kudithanam - Vijayan purely played it with emotions - that too with amma sentiment - and NK got carried away. But Nelson from the opposite team handled it very well and was to the point. I liked when he said 'oru pirachinaiyai uNarvu poorvamAga anuguvathu vERu.. aRivu poorvamAga anuguvathu vERu' . Abdul Cader was agreeing mostly to the points adressed by Nelson.

Overall a very good 'quality' program by Vijay TV :thumbsup:

rocketboy
23rd October 2008, 10:02 AM
Ennachu. :roll: Ethavathu update kodungapa

aanaa
23rd October 2008, 07:16 PM
thamil pechallava
athuthaan

rocketboy
19th December 2008, 08:56 PM
Tomorrow the final for Tamil Pechu Engal Moochu will be held at Arignar Anna Arangam (opposite Chennai Doordarshan ) at 5.30 pm. Entry is free .

ArulPrakash is a strong contender for the title . Nellai Kannan enna sonnaruna "Ithula enna miratrathu sila per than. Athula Neer thanya Muthal Idam". I can't remember the exact words he used but it was something along these lines. :)

Good Luck

clnarain
20th December 2008, 12:09 AM
I bet vijayan will be the winner :thumbsup:

R.Latha
12th January 2009, 12:49 PM
சிறந்த தமிழ் பேச்சாளர்

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் டி.வி. ``தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு'' எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் போட்டியை நடத்தி வருகிறது.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 மண்டலங்களிலிருந்து சுமார் 200 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 30 பேரை தேர்ந்தெடுத்தனர். `பழமொழிக் குட்டிக்கதை,' `காட்சிக்கு பேச்சு சுற்று', `பட்டிமன்ற சுற்று', `சிலேசை', `ஓவியச் சுற்று', `வாதம் விவாதம்', `அரசியல் விவாத மேடை', `மக்கள் மனசு சுற்று' போன்ற புதிய பல சுற்றுகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நெல்லை கண்ணன் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து சிறப்பித்துள்ளார். இவரோடு நெல்லை ஜெயந்தா, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத், `நக்கீரன்'கோபால், நடிகர் சிவகுமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, மலைச்சாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக பங்கு பெற்றனர்.

பேச்சாளர்களின் தமிழ் ஆற்றலை சோதித்து சிறந்த பேச்சாளரை தேர்ந்தெடுப்பதோடு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்படுகிறது.

விஜயன், அருள் பிரகாஷ், அபிராமி ஆகியோரே இறுதி சுற்றின் போட்டியாளர்கள்.இறுதிச் சுற்றுக்கான போட்டி சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடந்தது.

புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மூன்று இறுதிச் சுற்று போட்டியாளர்களும் முதலில், ``தமிழன்... நேற்று, இன்று, நாளை,'' எனும் தலைப்பின் கீழ் பேச அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் பேச தலா 15 நிமிடம் வழங்கப்பட்டது.

அதிக வாக்குகள் பெற்று, அருள் பிரகாஷ் மற்றும் விஜயன் இரண்டாம் கட்ட இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் இந்த இருவருக்கும் ``நாடு எங்கே போகிறது'' எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இறுதியில் சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் வாக்கெடுப்பின் மூலம் தமிழகத்தின் சிறந்த பேச்சாளராக விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜயன் படித்து வளர்ந்தது தஞ்சையில், இவருக்கு அரசியல் மீது பற்று அதிகம். மேடை பேச்சாளர்களை பார்த்து, அவர்களின் தமிழ் பேச்சுக்களை கேட்டே தனக்கு தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது என்று கூறுகிறார்.

தனக்கு கிடைத்துள்ள இப்பரிசுத் தொகையை கிராமங்களில் வாழும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப் போவதாக தெரிவித்தார்.

அண்ணா கலையரங்கத்தில் நடந்த இறுதி சுற்று நிகழ்ச்சி தொகுப்புகள் 11-ந் தேதி காலை 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.