PDA

View Full Version : Z - Tamil



Murali Srinivas
7th March 2008, 06:16 PM
As if the existing channels are not enough, Zee group is venturing into Tamil. Named as Zee Tamil, this is supposed to hit the small screen on May 1st. On Day 1 itself a new movie (Thiraikku vandhu oru maadhame aana puthham puthiya thiraipadam) "Sila Nerangalil" would be telecast. Vijaya Sarathy (Neengal Ketta Padal) is the chief Programming officer.

Regards

saradhaa_sn
8th March 2008, 02:34 PM
As if the existing channels are not enough, Zee group is venturing into Tamil. Named as Zee Tamil,

இன்னொன்றா...??

இப்பவே 24 மணி நேரம் போதவில்லையே...!!!!.

R.Latha
9th March 2008, 09:25 AM
* வடக்கே பிரபலமான ஜீ டிவி தனது வேகத்தை தென்னகத்திலும் காட்டத் தொடங்கி விட்டது. வரும் ஜூன்மாதம் முதல்தேதி முதல் தனது ஒளிபரப்பை தமிழ்நாட்டில் தொடங்கும் இந்த சேனல், இப்போதே புதியபடங்களை வாங்குவதிலும் போட்டியை ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கும் `சில நேரங்களில்' படத்தை மிகப்பெரிய விலை கொடுத்து ஒளிபரப்பு உரிமை வாங்கியிருக்கிறது. புதிய படங்களை வாங்குவதில் போட்டி போடும் இரண்டு முன்னணி சேனல்களையும் தாண்டி அதிக விலைக்கு இந்த டிவி வாங்கியிருப்பது சேனல் வட்டாரத்தில் ஆச்சரிய அலைகளை உற்பத்தி செய்திருக்கிறது.

* சன் டிவியில் `நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த விஜயசாரதி, இப்போது புதிதாக தொடங்கவிருக்கும் ஜீ டிவிக்கு வந்து விட்டார்.

R.Latha
21st April 2008, 08:02 AM
இந்தியாவில் முதன் முறையாக தனியார் செயற்கை கோள் தொலைக்காட்சியைத் தொடங்கிய ஜீ நெட் வொர்க், சமீப காலமாக தென்னகத்திலும் முத்திரை பதித்து வருகிறது. `ஜீ தெலுங்கு', `ஜீ கன்னடம்' ஆகிய சேனல்களைத் தொடர்ந்து தமிழிலும் `ஜீ தமிழ்' என்ற பெயரில் சேவையைத் தொடங்க இருக்கிறது.

இதன் ஒளிபரப்பு வருகிற ஜுன் 15-ந் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்தத் தொலைக்காட்சியில் இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை குஷ்பு, இயக்குநர் நாகா மற்றும் பிரபு நேபால் ஆகியோர் நெடுந்தொடர்களைத் தயாரிக்க இருக்கிறார்கள்.

இன்னும் பல பிரபலங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

R.Latha
25th May 2008, 10:58 AM
அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் ஜீ டிவியில், அன்றைய தினமே குஷ்பு நடிக்கும் ருத்ரா சீரியலும் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை டைரக்டர் செந்தில்நாதன் இயக்குகிறார். இவர் விஜயகாந்த் நடித்த பூந்தோட்டக்காவல்காரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இந்த தொடரின் படப்பிடிப்புக்கு தனது 2 மகள்களையும் குஷ்பு அழைத்து வந்திருந்தார்.

R.Latha
9th June 2008, 09:54 AM
AMBIKA COMINGKKA

வரும் 15-ம்தேதி முதல் தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கும் ஜீ டிவியில் பெரும்பாலான தொடர்களும் இடம் பிடிக்கின்றன.

டைக்டர் பிரபு நேபால் தனது நிறுவனத்தின் சார்பில் இயக்கி தயாரிக்கும் `அழகான ராட்சஸி' தொடரும் ஜீ டிவிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரை சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த நடிகை அம்பிகாவை இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்துவருகிறார், பிரபு நேபால்.

பிரபு நேபால் இயக்கும் தொடர்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கும். இந்தத்தொடரிலும் நடிகை அம்பிகாவுக்கு அப்படியொரு கேரக்டர் என்கிறார்கள்.

MEDIA ASIA
29th August 2008, 03:33 PM
Has this channel started in India??

Thirumaran
13th October 2008, 11:59 AM
Yesterday it started :P Aana enga area la innum varala :twisted: :roll:

R.Latha
22nd October 2008, 01:55 PM
அழகான ராட்சசி



ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர். அழகான ராட்சசி. பிரபுநேபால் இயக்கி வரும் இந்த தொடரின் கதைச்சுருக்கம்

இதோ...கிராமப் பின்னணியில் வளர்ந்த இளம் பெண் சென்னைக்கு வரும் போது எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை மையப்படுத்தி இந்த தொடர் செல்கிறது. நன்றாகப் படித்திருந்தாலும் அந்தப்பெண்ணுக்கு புதிய சூழல் எப்படி திருப்பங்களை உண்டாக்குகிறது என்பது தொடரை பார்த்தால் புரியும்.

பொள்ளாச்சி பகுதிகளில் இந்த தொடரின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

R.Latha
22nd October 2008, 02:11 PM
ருத்ரா



மனித வாழ்க்கையே ஒரு விடுகதைதான். பல கேள்விகளுக்கு பதில் இருக்கும், சில கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருக்கும். இதுதான் ருத்ரா.

குடும்பப் பெண்கள் வரிசையிலும் அவள் இருப்பாள். கொடுமை கண்டு குமுறும் பெண்கள் மத்தியிலும் அவள் இருப்பாள். மற்றவர்கள் கஷ்டத்திற்காக சட்டம் கற்றவள். தனது கஷ்டத்திற்காக கோர்ட் படி ஏறமுடியவில்லை. அது ஏன்?

குடும்பத் தெளிவுக்காக போராடுபவள், குடும்பக் குழப்பத்தில் அமிழ்ந்து போகத் தயாராக இருக்கிறாள். அது ஏன்?

விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்ற விபரம் தெரிந்திருந்தும் - கணவனை விட்டுப் பிரியும்படி ருத்ராவுக்கு நடந்ததுதான் என்ன?

ஜி டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ருத்ராவை சந்திக்கலாம். `ருத்ரா'வாக நடிகை குஷ்பு நடிக்கிறார்.

சீனு, ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ், மனோ, சாய்ராம், சி.ஆர்.சரஸ்வதி ஸ்ரீலட்சுமி, ராஜசேகர், கண்ணன் ஆகியோர் தொடரின் பிற நட்சத்திரங்கள்.

கதை: குஷ்பு சுந்தர். ஒளிப்பதிவு: எல்.மோகன். திரைக்கதை: கவிபாரதி. வசனம்: கே.நட்ராஜ். டைட்டில் பாடல் இசை: டி.இமான். பாடல்: தபுசங்கர். பாடியவர்: ஷங்கர் மகாதேவன். இயக்கம்: செந்தில்நாதன். பின்னணி இசை: ஏ.அன்புச்செல்வன்.

aanaa
22nd October 2008, 07:03 PM
ருத்ரா



விரைவில் தலைப்புப் பாடலையும் அரங்கேற்றுகிறேன்

R.Latha
9th January 2009, 12:06 PM
[tscii:6ab9b125da][/tscii:6ab9b125da]சுஜாதாவை மிஸ் பண்ணிவிட்டேன்'

ஜீ டி.வி.யில் ‘ஹலோ நான் அஷ்டலட்சுமி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ‘அம்சிகா'வை சந்தித்தபோது கூறியதாவது:

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். சென்னை எஸ்.ஐ.டி. கல்லூரியில் பி.ஏ. படித்த போது சூரியன் எப்.எம்.மில் காம்பியர் செலக்ஷன் நடந்து கொண்டு இருந்தது. காம்பிரியரிங் மற்றும் மாடலிங் செய்வதில் சின்ன வயதிலிருந்தே ஆசை இருந்ததால் அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கி கொண்டு சூரியன் எப்.எம். இண்டர்வியூக்கு போய் விட்டேன்.

அங்கு நடந்த தேர்வில் 24 பேரில் நானும் செலக்ஷன் ஆகி என் சின்ன வயது கனவை நிறைவேற்றினேன்.

சூரியன் எப்.எம்.மில் ‘காதல் காதல்', ‘ஊர் சுத்தலாம் வாங்க', ‘மகளிர் மட்டும்' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். அப்போது ஆனந்த விகடனில் வெளிவந்த எழுத்தாளர் சுஜாதாவின் விருதுகளில் சிறந்த காம்பியருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தது.
அப்போது நான் அடைந்த சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. தமிழ் எழுத்துலகமே கொண்டாடுகிற சுஜாதாவை என் குரல் கவர்ந்திருக்கிறது என நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருந்தது.

இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்த அவரை நான் சந்திக்க முடியாமல் போய் விட்டது. இப்போது நினைத்தாலும் என்னால் அவரை சந்திக்க முடியாது. அந்த விஷயத்தை நினைக்கும் போதெல்லாம் என்னையே எனக்கு பிடிக்காமல் போய் விடும்.

தற்போது ஜீ டி.வி.யில் ‘ஹலோ நான் அதிர்ஷ்டலட்சுமி' என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறேன். சூரியன் எப்.எம்.மில் இருக்கும்போதே டி.வி.யில் காம்பியராக வர வேண்டும் என ஆசை இருந்தது. அதனால்தான் ஜீ டி.வி.க்கு வந்துவிட்டேன். டி.வி.க்கும், எப்.எம்.முக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. சினிமா, சீரியல் ஆசைகள் எனக்கு இல்லை. சினிமாவில் மட்டும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் ஓரிரு படங்களில் நடிப்பேன். தற்போது நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறேன். இப்போது இருக்கிற அம்சிகாவைதான் என் குடும்பத்துக்கு பிடித்திருக்கிறது. என் குடும்ப சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.

சென்னையில் நடனப் பள்ளியை தொடங்குவதே என் லட்சியம். வீட்டில் இருக்கும் நேரங்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் கேட்பதும், குட்டி குட்டி கதைகள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு என்றார் ‘அம்சிகா'.

R.Latha
9th January 2009, 12:16 PM
[tscii:41402cdd5a].[/tscii:41402cdd5a]‘என் உந்து சக்தி': பாலாஜி

ஜீ டி.வி.யின் ‘பட்டியல்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ‘பாலாஜி'யை சந்தித்த போது கூறியதாவது.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயதில் இருந்து பார்த்த சினிமாக்கள்தான் என்னுள் அதன் மீதான ஆசையை வளர்த்து விட்டது. சினிமா உலகத்தில் சாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவு அடி மனதில் இன்னும் அப்பிக் கிடக்கிறது. அதற்காகவே நான் தேர்ந்தெடுத்த படிப்பு கூட மீடியா சம்மந்தப்பட்டதாகவே இருந்தது.

சென்னை பல்கலைகழகக்தில் மாஸ் கம்யூனிகேஷன் படித்து விட்டு சன் டி.வி.யில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அங்கு ‘நட்சத்திரம்', ‘வணக்கம் தமிழகம்' மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் என ஏராளமானவற்றை தயாரித்திருக்கிறேன். இதை தவிர மீடியா சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். எந்த வேலையாக இருந்தாலும் சினிமா பற்றிய கனவு மட்டும் உள்ளூர உறுத்திக் கொண்டே இருக்கிறது.

‘பிதாமகன்', ‘பருத்தி வீரன்', ‘கற்றது தமிழ்' உள்ளிட்ட படங்களைப் பார்த்துவிட்டு அசந்துபோய் விட்டேன். நகரத்திலே பிறந்து வளர்ந்த எனக்கு அமீரின் ‘பருத்தி வீரன்' வித்தியாசமானதாக இருந்தது. மதுரையிலிருந்து கிளம்பிய ‘பாலா', ‘அமீர்', ‘ராம்' ஆகிய மூன்று பேரும் தமிழ் சினிமாவை ஒரு சென்டி மீட்டராவது உயர்த்தி விட்டார்கள் என்பது பெருமையான விஷயம்.

அந்த படங்கள்தான் என் உந்து சக்தியாக இருக்கிறது. என்னை மாதிரி நிறைய இளைஞர்களை அந்த சினிமாக்கள் தமிழ் சினிமாவுக்கு இழுத்து வந்து விட்டன.

அதன் பிறகு புதிதாக தொடங்கப்பட்ட ஜீ டி.வி.க்கு வந்து விட்டேன். தற்போது ஜீ டி.வி.யில் ‘பட்டியல்' என்ற கவுன் டவுன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவதோடு தயாரித்தும் வருகிறேன். புதிதாக வெளிவரும் படங்களின் தரத்தை பற்றிப் ஆராய்வதே இந்நிகழ்ச்சியாகும்.

இதை தவிர நடிப்பதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் டைரக்ஷன்தான் என் லட்சியம். அதற்காக நிறைய விஷயங்களை கற்று வருகிறேன் என்றார் ‘பாலாஜி'

R.Latha
9th January 2009, 12:58 PM
[tscii:4a06aaa1b7] [/tscii:4a06aaa1b7]கவிதை எழுதுவேன்': சரண்யா



ஜீடி.வி.யின் ‘தமிழ் வணக் கம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ‘சரண்யா'வை சந்தித்த போது கூறியதா வது

பிறந்து, வளர்ந்து சென் னையில். எத்திராஜ் கல்லூரி யில் பி.காம் படித்துக் கொண்டு இருந்த போது கலைஞர் டி.வி.யில் காம்பிய ரிங் செய்ய கூப்பிட்டார்கள்

நானும் அதைப் பற்றி எது வும் தெரியாமல் போய் கேமரா முன்னாடி நின்று விட்டேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டு ஓரளவுக்குத் தேறி னேன்

சமையலைப் பற்றி எது வுமே தெரியாத எனக்கு கலைஞர் டி.வி.யில் ‘சுவையோ சுவை' என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கச் சொன் னார்கள். அதையும் ஓரள வுக்கு செய்து முடித்தேன்

அதன் பிறகு ராஜ் மியூசிக்ஸ் சேனலில் ‘சினிமா பாடல்கள்', ‘காமெடி ஷோ' என பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். தற்போது ஜீ டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழ் வணக்கம்' மற்றும் ‘அஞ்சறைப் பெட்டி' ஆகிய நிகழ்ச்சிக ளைத் தொகுத்து வழங்கி வரு கிறேன். சமையல் பற்றி தெரி யாததால் என்னவோ எங்கு போனாலும் சமையல் சம்பந் தப்பட்ட நிகழ்ச்சிகளாகவே வந்து சேருகின்றது

தற்போது வைஷ்ணவா கல்லூரியில் மாஸ் கம்யூனி கேஷன் படித்து வருகிறேன்

குறிப்பாக, சென்னை பெண் கள் என்றாலே சரியாகத் தமிழ் பேசத் தெரியாது என எல்லோரும் சொல்லுவார் கள். ஆனால் நான் தமிழ் நன்றாகப் பேசுவேன்

தமிழ்ப் புத்தகங்களை அதிக மாகப் படிப்பேன். பாரதியா ரின் கவிதைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. ஜக்கி குரு தேவின் எழுத்துகளுக்கு நான் அடிமை. தற்போது நான் எழுதிய கடித வடிவி லான கவிதைகளை புத்தக மாக வெளியிடும் வேலை யில் உள்ளேன்

இதைத் தவிர மிமிக்ரி பண்ணுவதிலும் ஆர்வம் உண்டு. டி.ஆர், எம்.ஜி.ஆர், வைரமுத்து உள்ளிட்ட பலர் மாதிரி பேசுவேன். வீட்டில் எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டால் என் கவிதையும், மிமிக்ரியும்தான் அரங்கே றும்

எனக்கு கிடைக்க வேண்டி யது எல்லாமே சரியான நேரங்களில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எதைப் பற்றியும் எப்போதுமே கவ லைப்பட்டது கிடையாது

சினிமா, சீரியல் வாய்ப்புகள் நிறைய வந்தன. அதில் துளி கூட ஆர்வம் இல்லை என்ப தால் அதைப் பற்றி யோசிக்க வில்லை. கல்லூரியில் நிறைய பேர் என்னிடம் காதலை சொல்லியிருக்கிறார்கள்

சிலர் கடிதம் கொடுத்து விட்டு வழிந்து நிற்பார்கள்

சிலர் தைரியமாகச் சொல்லு வார்கள். அவர்களிடம் நான் வாயைத் திறந்தால் ரொம்ப தூரம் ஒடி விடுவார்கள்

அந்த அளவிற்கு நான் ஒரு வாயாடிப் பெண்.

Dinamani 9.1.09

R.Latha
16th January 2009, 02:22 PM
[tscii:3846975a59] [/tscii:3846975a59]கிராமத்துப் பெண்ணாக வாழ்கிறேன்'

ஜீ டி.வி.யின் ‘அழகான ராட்சஸி' சீரியலில் சக்தி கேரக்டரில் நடித்து வரும் ‘சியாமந்தா'வை சந்தித்தபோது கூறியதாவது:

சென்னையில் பிறந்து, வளர்ந்து இப்போதுதான் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். சின்ன வயதில் இருந்தே டான்ல் மீது தீராத காதல். அம்மாவின் பின்னாடியே சுற்றும் சின்ன குழந்தையைப் போல எப்போது பார்த்தாலும் டான்ஸ் டான்ஸ் என்றுதான் சுற்றுவேன். என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அப்பா என்னை ‘பார்வதி ரவிகண்டசாலா' என்பவரிடம் சேர்த்து விட்டார். அவரிடம் கடந்த 8 வருடமாக கிளாசிக்கல் டான்ஸ் கற்று வருகிறேன்.

கல்லூரியில் வகுப்பில் இருந்த நேரங்களை விட ஆடிட்டோரியத்தில் இருந்த நேரம்தான் அதிகம். எந்த நேரமும் டான்ஸ்தான். கல்லூரியில் நடைபெறும் நிறைய டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடியிருக்கிறேன். அப்போது என் டான்ஸ் நிகழ்ச்சியை பார்த்த இயக்குனர் ‘பிரபு நேபால்'தான் ஜெயா டி.வி.யின் 'ஜெயம்‘ என்ற சீரியலில் நடிக்க அழைத்தார். முதலில் எனக்கு திகைப்பாக இருந்தது. பின்னர் அந்த சீரியலின் கதை டான்ஸ் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் நடிப்பதற்கு சுலபமாக இருக்கும் என சம்மதித்தேன்.

இதுதான் நான் நடிக்க வந்த கதை. பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டு அப்போலா கம்ப்யூட்டர் உள்பட 25-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். பின்னர் கலைஞர் டி.வி.யில் ‘எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். சுட்டி டி.வி.யிலும் இருந்தேன்.

தற்போது ஜீ.டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகான ராட்சஸி' சீரியலில் சக்தி கேரக்டரில் நடித்து வருகிறேன். ‘ஜெயம்' சீரியலுக்கு பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இயக்குனர் பிரபு நேபால் ‘அழகான ராட்சஸி' சீரியலின் கதையைச் சொன்னபோது வித்தியாசமாக இருந்தது.

வழக்கமாக அழுது கொண்டும், கண்களை கசக்கி கொண்டும் இருக்கும் கதை அல்ல என தெரிந்தது. அதனால்தான் ஒப்புக்கொண்டேன். அதுவும் கல்லூரியில் படிக்கிற வயதிலேயே ஒரு வித்தியாசமான கதையில் நடிக்கப் போகிறோம் என்ற பெருமிதம் இருந்தது.

கிராமத்தில் இருந்து வந்த பெண் சென்னையில் பணிபுரிந்து வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் ‘அழகான ராட்சஸி'யின் கதை. நகரத்தில் பிறந்து வளர்ந்த நான் அந்த சீரியலில் கிராமத்துப் பெண்ணாக வாழ்கிறேன். எனக்கு அந்த கேரக்டரை தந்த இயக்குனர் பிரபு நேபாலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் சீரியலில் நடிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் இப்போது தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சினிமாவில் கிளாமர் அல்லாத கேரக்டர்களில் நடிப்பேன். அதற்கான வாய்ப்புகள் இன்னும் வரவில்லை. கல்லூரி முடிந்தவுடன் சினிமாவில் நடிப்பேன் என்றார் ‘சியாமந்தா'.


dinamani.com

aanaa
16th January 2009, 08:18 PM
:ty:

R.Latha
28th January 2009, 12:50 PM
அழகான ராட்சசி



ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர் சின்னத்திரை நேயர்களின் அதிக பட்ச விருப்பத் தொடராகியிருக்கிறது. "வித்தியாசமான கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். அழகான ராட்சசி கதையிலும் அதன் கதைப்பின்னணி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. துணிச்சல்மிக்க ஒரு பெண்ணின் சாகசங்கள்தான் கதையின் முடிச்சு. நாயகி உட்பட அத்தனை நட்சத்திரங்களும் கதையோடு பொருந்திப்போனார்கள்'' என்கிறார், தொடரின் இயக்குனர் பிரபுநேபால்.

கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் ஜாலியாக சுற்றித் திரிந்து சுதந்திரக்காற்றை அனுபவித்துவந்த இளம் பெண் ஷக்தி, பாட்டி இறந்ததும் வேலைதேடி பட்டணம் வருகிறாள். வானொலி நிலையத்தில் வேலை கிடைக்கிறது.

அம்மா சிவகாமியிடம் இருக்கும் திரண்ட சொத்துக்காக மகன் கிஷோர் அடிதடி வரை இறங்கத் தயாராகிறான். சிவகாமியோ, "எப்போது உனக்கு திருமணம் ஆகிறதோ, அப்போது உன் பாகத்தை பிரித்துக் கொடுக்கிறேன்'' என்று கூறிவிடுகிறாள். ஊதாரி இளைஞனுக்கு யார் துணிந்து பெண் கொடுப்பார்கள்?

இந்நிலையில் சாலை விபத்துக்குள்ளாகும் கிஷோருக்கு ஷக்தி ரத்தம் கொடுக்கிறாள். இந்த புதிய ரத்தபந்தம் அவர்களை மணமேடை வரை கொண்டுபோகிறது. அதற்குள் அந்த இளைஞனின் அடாவடி விஷயங்கள் அத்தனையும் ஷக்திக்கு தெரிந்து போகிறது.

திருமணம் நடக்கிறது. மனைவிக்கு தன்னைப்பற்றி எதுவும் தெரியாது என்று கணவன் கிஷோர் நினைத்திருக்க, ஷக்தியோ கணவனின் நடவடிக்கைகளில் கவனம் பதிக்கிறாள்.

இதற்கிடையே சிவகாமியின் தம்பி மனைவி காஞ்சனாவுக்கு கிஷோரின் கணக்கில்லாத சொத்தின்மீது ஒரு கண். சிவகாமியுைம் ஷக்தியையும் கொன்றுவிட்டு தன் மகள் பூஜாவை ஷக்திக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள். துணிச்சலே உருவான ஷக்திக்கு இது தெரிந்து விட, தன் முழுபலத்தையும் பிரயோகித்து இந்த `வாழ்வா...சாவா' போராட்டத்தை எதிர்கொள்கிறாள். சதியை முறியடிக்க அவளால் முடிந்ததா என்பது தொடரின் அடுத்தடுத்த பரபரப்பு காட்சிகள்'' என்கிறார், பிரபுநேபால்.

தொடரின் நட்சத்திரங்கள்: ஷியாமந்தா, சுரேஷ்குமார், பிரியா, அப்சர்பாபு, ஜெயரேகா.

திரைக்கதை: தேவிபாலா. கதை பிரபுநேபால். வசனம்: கஜேந்திரன், ஜீ.கே. தயாரிப்பு, இயக்கம்: பிரபுநேபால்.

http://dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=1/24/2009&secid=9

R.Latha
23rd March 2009, 12:25 PM
அழகான ராட்சசி

ஷக்தி என்ன செய்யப்போகிறாள்?

திங்கள் முதல்வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர், இப்போது 75-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்து கிடைக்காது என்ற பயம் கோடீஸ்வர கிஷோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது. ஏதாவது கிராமத்து அப்பாவிப் பெண்ணை மணந்துகொண்டால் சொத்து தன் பெயருக்கு வந்ததும் அந்தப்பெண்ணை துரத்திவிட்டு வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கலாம் என்பது அவன் திட்டம். கிராமத்துப் பெண் ஷக்தி அவன் கண்ணுக்கு அப்பாவியாகப்பட, திருமணத்துக்கு சம்மதிக்கிறான்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு ஷக்தி அத்தனை சீக்கிரமாய் கழட்டிவிட முடிகிற ரகம் இல்லை என்பது புரிந்து போகிறது. மாமியார் சிவகாமிக்கு பிரியமான மருமகளாக இருக்கிறாள்.

அதேநேரம் சிவகாமியின் அண்ணனும் அவர் மனைவியும் கிஷோருக்கு தங்கள்மகளை திருமணம் செய்துகொடுத்து அந்த குடும்பத்தின் சொத்துக்கு சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள்.அதற்காக அவர்கள் பங்குக்கு ஷக்தியை துரத்தும் முயற்சியைத் தொடர்கிறார்கள். முயற்சி கைகூடாமல் தோற்றுப்போகிறார்கள்.

இனி நடப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் கிஷோரின் அத்தை கோபத்தில் ஊருக்குப் போய் விடுகிறாள். இனி அதிரடியாய் ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்று முடிவுக்கு வரும் கிஷோர், தனது மாமா பெண்ணை மணந்து கொண்டு வீட்டுக்கு வருகிறான்.அதிர்ந்து போகும் தாய் சிவகாமியிடம், "இனி உன்னால் என்ன செய்யமுடியும்? மாமா பெண் மூலம் பிறக்கும் என் குழந்தைக்குத்தானே சொத்து உரியதாகும்'' என்று நக்கலாக பேசுகிறான்.

ஆனால் அடுத்தகணமே தாயார் சிவகாமி அவனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். நேற்று காலையில் தான் சொத்தை ஷக்தி பெயருக்கு மாற்றி எழுதினேன் என்கிறாள்.

இதைக்கேட்டு கிஷோர் மட்டுமல்ல... ஷக்தியும் அதிர்ச்சி அடைகிறாள். உண்மையில் இந்த சொத்து மாற்றம் விஷயமாக சிவகாமி அம்மாள் ஷக்தியிடம் கூட எதுவும் கேட்கவில்லை. உண்மையில்அவள் நோக்கமே கிஷோரை திருத்தணும். அவன் தன் தாயாருக்கு நல்ல பிள்ளையாக இருக்கணும் என்பது தான்.அதற்காக அவள் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறாள்.

கதை பற்றிவிவரித்த டைரக்டர் பிரபுநேபால் தொடர்ந்து கூறும்போது, "தொடரில் இந்த வாரம் புதிதாக இரண்டு குடும்பங்கள் அறிமுகமாகிறார்கள். ஷக்திக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இவர்கள் எப்படி ஷக்தியுடன் ஒரே நேர்கோட்டில் இணைகிறார்கள் என்பது சுவாரசிய பின்னணியாக இருக்கும்'' என்கிறார்.

தொடருக்கு திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஜி.கே. ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார். தயாரிப்பு-இயக்கம்: பிரபுநேபால்.

R.Latha
24th March 2009, 12:52 PM
[tscii:acdf70af43] சொல்லத்தான் நினைக்கிறேன்

ஜீ டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய மெகா தொடர் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்'.

இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் இத்தொடரைத் தயாரிக்கிறது.

தாய்ப் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்தொடரை திரைப்பட இயக்குநர் பாம்பே சாணக்கியா இயக்குகிறார்.

இதில் ரவி ராகவேந்தர், ‘சஹானா' காவ்யா, யுவராணி, பீலி சிவம், ‘விழுதுகள்' சந்தானம், பாத்திமா பாபு, பாம்பே ஞானம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்கள்.

இத்தொடர் மார்ச் 22-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7 மணிக்கு ஜீ டி.வி.யில் ஒளிப்பரப்பாகிறது
http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090320122018&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:acdf70af43]

R.Latha
6th April 2009, 01:58 PM
புதிய கேரக்டர்கள்

ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அழகான ராட்சசி' தொடரில் இப்போது கதை புதிய டிரெண்டில் பயணிக்கிறது. அதற்கேற்ப நடிகை சுதாசந்திரன், சுலக்ஷனா, அஜய்ரத்னம், சஞ்சய், வனஜா, மனோகர், ஜெயலட்சுமி ஆகியோர் கதையின் புதிய பக்கங்களில் பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.

R.Latha
6th April 2009, 02:00 PM
மீண்டும்...

ஜி டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்த விஜயசாரதி அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார். முதல் கலைப்பயணத்தை மலேசியாவில் முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

R.Latha
15th April 2009, 11:35 AM
சீரியல் பாட்டுக்கு மவுசு



ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கே.பாலச்சந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடரின் டைட்டில் பாட்டுக்கு கிடைத்த புது மவுசு சின்னத்திரை வட்டாரத்தை கலக்கியிருக்கிறது.

இந்தப் பாடலைக் கேட்ட ஜி தொலைக்காட்சியினர் புதிய சினிமாப் பாடல்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்தப்பாடலையும் ஒளிபரப்பினர். இது எந்த சீரியல் பாட்டுக்கும் இதுவரை கிடைத்திராத கவுரவம். கார்த்திக் பாடிய இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ராஜேஷ் வைத்யா. பாடலை எழுதியவர் டாக்டர் கிருதயா.

R.Latha
11th May 2009, 12:03 PM
அவளுக்கென்று ஒரு மனம்'

பல்வேறு திரைப்படங்களையும், தொலைக் காட்சி தொடர்களையும் தயாரித்த அழகன் தமிழ்மணி, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கும் தொடர், `அவளுக்கென்று ஒரு மனம்'. இத் தொடர் ரசிகர்களின் வரவேற்போடு 100-வது எபிசோடை நிறைவு செய்கிறது.

மன்னார்குடி பக்கத்தில் வடசேரி கிராமத்தில் கோவில் பூசாரியின் மகள் மங்கைக்கும், நூலகர் சந்தானத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த வேளையில் மங்கையின் தாய் நித்யா கர்ப்பமடைகிறாள். இதை அவமானமாகக் கருதி மங்கையின் தந்தை பொன்னம்பலம் ஊரை விட்டு ஓடுகிறார். குழந்தையை பெற்றெடுத்த அம்மா நித்யா இறந்து போகிறாள். இதனால் மங்கையின் திருமணம் நின்று போகிறது.

இந்த வேதனை போதாதென்று மங்கையின் சொத்துக்களையெல்லாம் அவள் பெரியப்பா ஏமாற்றி அபகரித்துக் கொள்கிறார்.

அனாதையாக தம்பியுடன் சென்னைக்கு வரும் மங்கை பல்வேறு இடைஞ்சல்களையும், அவமானங்களையும் சந்திக்கிறாள்.

அப்போது அவளுக்கு பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவி கிடைக்கிறது. கிருஷ்ணமூர்த்திக்கும், மங்கைக்கும் தொடர்பிருப்பதாக கிருஷ்ணமூர்த்தியின் மகன் மனோஜும், மங்கைக்கும், பார்த்திபனுக்கும் தொடர்பிருப்பதாக பார்த்திபனின் அக்கா மனோன்மணியும் நம்புகிறார்கள்.

இது மங்கையை கொலை செய்யும் அளவிற்கு போகிறது.

மங்கை உயிர் பிழைத்தாளா...? அவள்
தம்பியின் நிலை என்ன ஆனது...?

`ஜீ' டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 6.30 மணிக்கு இந்த தொடரை காணலாம்.

திரைக்கதை: கண்மணிசுப்பு. வசனம்: மருது சங்கர். ஒளிப்பதிவு: சரவணன். பாடல் இசை: தினா. இயக்கம்: ஆர்.வி.ரமேஷ்ராஜி. தயாரிப்பு: அழகன்தமிழ்மணி, தமிழ்க்
குமரன்.


for the title song:

அவளுக்கென்று ஒரு மனம்' - Title song (http://raretfm.mayyam.com/stream/tvserial/Avalukenru1manam.rm)

aanaa
5th July 2009, 06:17 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் `சொல்லத்தான் நினைக்கிறேன்.' டைரக்டர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் தொடர் இது.

மதன் ஒரு பிரபல சின்னத் திரை நடிகர். நேர்மையானவர். நேரம் தவறாதவர். அவருடைய ஒரே மகள் சாரு. வயது 20. மிகச் சிறிய வயதிலிருந்தே தாயாகவும், தந்தையாகவும் இருந்து பேணிப் போற்றி சாருவை வளர்க்கிறார் மதன். தந்தை மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சாரு.

தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து போய் எங்கோ வாழ்ந்து வரும் உண்மையை மட்டும் அவரால் சாருவிடம் சொல்ல முடியாமல் போய் விடுகிறது.

தாய்ப் பாசமே தெரியாமல் வளர்ந்து வரும் சாருவின் எதிரில் ஒரு நாள் அவளுடைய அம்மா வந்து நின்றால் என்ன நடக்கும்?

மதனாக ரவி ராகவேந்தரும், சாருவாக `சஹானா' புகழ் காவ்யாவும், சாருவின் தாயாக யுவராணியும் நடித்துள்ளனர் மற்றும் பீலி சிவம், `விழுதுகள்' சந்தானம் பாத்திமா பாபு, பாம்பே ஞானம் ஆகியோரும் இந்தொடரில் பாத்திரமேற்றுள்ளனர்.

இதன் மறு ஒளிபரப்பை மதியம் 2 மணிக்கு காணலாம்.

aanaa
12th July 2009, 05:22 PM
சரிகமப சேலஞ்ச் - 2009



`ஜி' தமிழ் தொலைக்காட்சியில் `சரிகமப சேலஞ்ச் - 2009' நிகழ்ச்சி 15 பின்னணி பாடகர்களை ரதத்தில் வரவேற்று பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. இந்த 15 பாடகர்களும் தங்களுடன் இணையவிருக்கும் போட்டியாளர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அவர்களை தேடி பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த வார நிகழ்ச்சியில், அணிக்கு மூன்று பேர் என 5 அணியாக பிரிந்து, தமிழமெங்கும் குரல் தேடலுக்கு செல்கின்றனர். அவர்களே தங்களது அனுபவங்களை பற்றி பேசுகின்றனர்.

ஆசை, திறமை, பயம், நனவாக்க முடியாத கனவு, புலம்பல், கோபம், வெற்றி, தோல்வி, சண்டை, வாக்குவாதம் என பல உணர்வுகளை கொண்ட கதையாக `சரிகமப சேலஞ்ச்-2009' அமைந்துள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி: தினதந்தி

R.Latha
13th October 2009, 10:36 AM
சொல்லத்தான் நினைக்கிறேன்



ஜி தமிழ் சேனலில் திங்கள்முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், சொல்லத்தான் நினைக்கிறேன். மகள் சாரு மேல் உயிரையே வைத்திருக்கிறார், மதன். சாருவின் சிறுவயது பிராயத்தில் மனைவி பொன்மணியை ஒரு சூழலில் பிரிந்த அவர், மகளை தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்க்கிறார்.

சாரு பெரிய பெண் ஆகிறாள். கால இடைவெளியில் பொன்மணிக்கு தன்மகளைப் பார்க்கும் ஆர்வம் வருகிறது.அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது சாருவே அவளுக்கு புதையல் மாதிரி கிடைக்கிறாள். தன்தாய் என்ற தெரியாமலே பொன்மணியிடம் சாரு காட்டும் அன்பில் அம்மா பொன்மணியும் உருகிப்போகிறாள்.

இவர்கள் சந்திப்பு தெரிந்த மதன் அதிர்கிறார். மனைவி பொன்மணியை சந்தித்தவர், எந்தக் காரணத்துக்காகவும் இனி சாருவை சந்திக்கக்கூடாது என்று உத்தரவு போடுகிறார்.பாசத்தில் உறைந்துபோன பொன்மணி இந்த கண்டிப்பான உத்தரவில் குமுறுகிறாள்.

இதற்கிடையே பொன்மணிக்கு எதிரியான இளங்கோ அவளை பழிவாங்கும் நோக்கில் காய் நகர்த்துகிறான்.அவனுக்கு வேண்டிய போலீஸ்கமிஷனர் பெங்களுருக்கு நியமிக்கப்பட்டதும் அவர் மூலம் பொன்மணியை பழி வாங்கத் துடிக்கிறான். அவனது திட்டத்தின் அடுத்தகட்டம் பொன்மணியின் தோழி கவிதாவை பயன்படுத்தி காரியத்தை முடிப்பது. அது நடந்தததா என்பது அடுத்து வரும் பரபர காட்சிகள்.