View Full Version : Writer Sujata passes away
RC
28th February 2008, 02:20 AM
http://sify.com/news/fullstory.php?id=14611743 :(
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080227132845&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
http://www.hindu.com/2008/02/28/stories/2008022860921100.htm
m_23_bayarea
28th February 2008, 02:23 AM
May his soul RIP! :cry:
What a great talent lost so early... :cry:
ajithfederer
28th February 2008, 02:25 AM
RIP :cry:
interz
28th February 2008, 03:37 AM
Rest In Peace Sujatha.
You were and still are one of the best dialogue writers in tamil cinema and a great author.
Movie Cop
28th February 2008, 03:41 AM
RIP :cry:
Pras
28th February 2008, 03:45 AM
:shock:
RIP :(
Pras
28th February 2008, 03:45 AM
Rest In Peace Sujatha.
You were and still are one of the best dialogue writers in tamil cinema and a great author.
i'll say THE best :(
Yathu
28th February 2008, 04:52 AM
R.I.P :(
dinesh2002
28th February 2008, 05:53 AM
Rest In Peace Sujatha.
You were and still are one of the best dialogue writers in tamil cinema and a great author.
i'll say THE best :(
i second this....
R.I.P Sujatha...
its a HUGE loss for ROBOT team & Tamil Film Industry... what is Robot going to be like without him.... :( !!
Thalafanz
28th February 2008, 06:21 AM
Hearthiest condolences to his family & everyone.
May God bless his soul.
R.I.P :cry:
joe
28th February 2008, 06:39 AM
:shock: :shock:
RIP :( :(
Karikalen
28th February 2008, 06:42 AM
I was saddened to read about this in the papers. A great talent. A highly qualified man with a deep sense for Tamil. Just like Abdul Kalam, his classmate at St Joseph's in Tiruchi. My condolences goes out to his family and his army of fans. Undouftedly a massive blow for Robot.
Deepest condolences
Karikalen
joe
28th February 2008, 06:53 AM
சுஜாதா - வாழ்க்கை குறிப்பு
http://www.kirukkal.com/archives/2007/04/writer_sujatha_short_biography.html
joe
28th February 2008, 06:53 AM
http://nganesan.blogspot.com/2008/02/amarar-sujatha.html
selvakumar
28th February 2008, 08:27 AM
What a shocking news ! :shock:
May his soul rest in peace !
I haven't read most of his works. Know him just as a dialogue writer.
A great loss to tamil literature, cinema and esp his fans ! :(
bingleguy
28th February 2008, 08:39 AM
OH man ... this is really a shocking news ...... :( oh man ... he is really a very good writer ... a man who saw the future and really got us to heights on science fiction in tamil screen .... his writings will be remembered ever ..... May his soul rest in peace !!!
Kalyasi
28th February 2008, 08:39 AM
R.I.P.
Arthi
28th February 2008, 08:45 AM
Heard this heart throbbing news in the Morning NEWS :( :(
I am very saddened to accept that Sujata is no more :cry2:
May his soul rest in peace :(
cyouinme
28th February 2008, 08:56 AM
R.I.P :(
rangan_08
28th February 2008, 09:40 AM
Irreparable loss to literary world, cine industry...etc.. avar aanma shanthi adaya vendugiren. Deep condolenses to his family.
He was really a genius. Arivujeevithanamana vishayangalai janaranjagamana murayil ezhudhi sadhanai padaithavar. Avar thodadha subjects migavum kuraivu. Ennaipol pala perukku padikkum aarvathai thoondi, ulaga alavil sirandha puthagangalayum adayaalam kaattiyavar.
He never retired as far as writing is concerned.
Jyothsna
28th February 2008, 09:46 AM
setha pin enna enru therinthu kolvathal yaaruku laabam? naan setha pin naanaha irunthal than enaku prayosanam.en moolai,en puthakangal,en lesana muthukerichal ellam irunthal than naan naanaha iruka mudiyum.sethalum aathma thodarnthu indonesiyavilo allathu venice naharathil oru padagotiyagavo pirapathil arthamillai.
naan naanahave thodara vendum. Atharku ennai arinthavarkal vendum. uravinargal, en vasagarkal vendum. muthaaram vendum. Katturai anupinaal athai patri vimarsippavargal vendum. Tamil vendum. athellam illavidil uyir enbathu thodarnthal enna, mudinthal enna? yenave saavu enbathu konjam yosithu paarthal nam ninaivugalin azhivu
-Sujatha
'Irappu enbathu mutrupulliya?'
Arivom sinthippom
Nerd
28th February 2008, 09:47 AM
:omg: :cry: Rest in peace..
My most favorite contemporary tamil writer. I am a huge fan of his non-fiction works.. I have not missed a single katRathum petRathum episode and that apprently is the first thing I read in AV.. One of the best screenplay/dialog specialists.. Irrepairable!
MADDY
28th February 2008, 09:52 AM
very very sad & shocking moment :cry:
a big loss to creative fraternity - :( ..............bigger loss to shankar, who has been a guiding force for him........Robo becomes brainless now :cry2:
May god give his family the strength to overcome this sad moment....
Sanguine Sridhar
28th February 2008, 09:53 AM
Hayyo Kadavule!!! :cry: :cry:
I am really disappointed and shocked to hear this news... :cry: :cry:
I was regular reader of his "Kattradhum Pettradhum" and Q & A in Kumudham and Kungumam!!
Who can forget his movie dialogues :cry:
Greatesssssssst lose
tvsankar
28th February 2008, 10:03 AM
Avaruku than vayadhu agi irukiradhu.
Avarudaiya Brain - irudhi varai -
migavum -
ARPUDHAMAGA IYANGI KONDU IRUNDHU IRUKIRADHU..... Thats why He is a GENIUS...
mgb
28th February 2008, 10:11 AM
எனக்கு தமிழ் சரியாக படிக்க இயலாத பொழுது, என் அம்மா, சுஜாதாவின் கதைகளை கொடுத்து படிக்க சொன்னார்கள்.. சுஜாதாவின் எழுத்துக்கள் நிச்சயமாக என் தமிழ் ஆர்வத்தை தூண்டும் என்று அவ்வளவு நம்பிக்கை :)
எனக்கு தமிழ்பால் இருக்கும் காதலுக்கு முதற்காரணம் "சுஜாதா" :notworthy:
உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக :notworthy:
Cinefan
28th February 2008, 10:14 AM
:shock: :(
I was a regular reader of his 'Katradhum Petradhum' series in AV&a huge fan of his 'Srirangathu Devadhaigal'.
A sad moment for Literature&Cinema.
Was surprised to know he was 73,his brain was still very sharp.
May his soul rest in peace
Srimannarayanan
28th February 2008, 10:24 AM
May his Soul Rest in peace. :( :(
Roshan
28th February 2008, 10:24 AM
தாங்கிக்கொள்ள் முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. அதிர்ச்சியிலும் சோகத்திலுமிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. சமீபத்தில் 'சிவாஜி' 175 நாள் விழா நிகழ்ச்சியில் தளர்வோடு காணப்பட்டார். அதைப்பார்த்ததும் சட்டென்ற் இனம்புரியாத ஒரு சின்ன பயமும் வேதனையும் என்னுள் எட்டிப்பார்த்தது. மனதுக்குள் 'இந்த மனிதர் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன்'. ஆனால் இப்போது.... :cry:
புத்தககங்கள் படிப்பதற்கான ஆர்வத்தை என்னுள் விதைத்தது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். நெருங்கிய நண்பரை, உறவினரை இழந்ததுபோல் உணர்கிறேன் :(
Shakthiprabha.
28th February 2008, 10:57 AM
இன்னொரு சுஜாதா நிச்சயமாக உருவாக இயலாது. ஈடு இணை செய்ய முடியாத இழப்பு.
sarna_blr
28th February 2008, 10:59 AM
joe
28th February 2008, 11:01 AM
ஸ்ரீரங்கத்து தேவதைகள் மூலம் என்னை கவர்ந்தவர் சுஜாதா . 'கற்றதும் பெற்றதும்' -லிருந்து நான் பெற்றது அதிகம்.
புரியாமல் எழுதுவது தான் தீவிர இலக்கியத்தின் பாணி என்பதை மாற்றி எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிமையாக எழுதியவர் சுஜாதா!
அவர் இயற்பியல் பயின்ற அதே வகுப்பறையில் நானும் பயின்றேன் என்பதும் எனக்கு ஒரு மகிழ்ச்சி.
அன்னார் ஆன்மா சாந்தியடைவதாக!!
joe
28th February 2008, 11:27 AM
சென்னை: சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.
சுஜாதாவின் மறைவுக்கு கமல்ஹாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் ஊரில் இல்லை. நாளைதான் அவர் திரும்புகிறார்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர், நேற்று இரவு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சுஜாதாவின் குடும்பத்தினருடன் இருந்தார்.
Thatstamil.com
anoops
28th February 2008, 11:51 AM
Shocking News :(
i jus finished reading Pirivom Sandhippom novel of his :oops:
Sanjeevi
28th February 2008, 12:01 PM
Shocking news :shock:
I am fan of his writings.
Srirangathu Devathaigal, En Iniya Iyanthira, Katrathum Petrathum and many Tamil scince-fiction stories will tell his name ever
May his soul rest in peace
rajasaranam
28th February 2008, 12:02 PM
:(
மரனம் என்பது நிச்சயம்! ஆன்மா என்பது உன்மை அல்ல! நாம் இப்பேரண்டத்தின் சிறு துகள் மட்டுமே! பரினாம வளர்ச்சி விளையாட்டின் விதி மீறிய விளைவே 'நாம்'!...நமது உடலும், அறிவும். மனமும், ஒய்வுராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் துகள் பரிமாற்றத்தின் இடை நிகழ்வே! எனும் எனது இன்றைய அறிவியல் புரிதலுக்கு 'முதல்' வித்திட்டவனே! நன்றி உன் வாழ்வுக்கு. அஞ்சலி செலுத்துவது 'நீ' கற்று தந்து அறிவியலுக்கு முரன்பாடானது என்றாலும் - 'சுக நித்திரை கொள்'....எம் நினனவில் வாழ்வாய் என்றென்றும் :cry:
Thirumaran
28th February 2008, 12:13 PM
:shock: :shock:
Just now i am looking at this :(
Very sad and a big loss to Creative community.
RIP :cry:
MrJudge
28th February 2008, 12:20 PM
I liked his Srirangaththu Devathaigal, his Katrathum Pettrathum was also good. He was quite old and he looked sharp even a few months back. RIP.
selvakumar
28th February 2008, 12:33 PM
:(
மரனம் என்பது நிச்சயம்! ஆன்மா என்பது உன்மை அல்ல! நாம் இப்பேரண்டத்தின் சிறு துகள் மட்டுமே! பரினாம வளர்ச்சி விளையாட்டின் விதி மீறிய விளைவே 'நாம்'!...நமது உடலும், அறிவும். மனமும், ஒய்வுராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் துகள் பரிமாற்றத்தின் இடை நிகழ்வே! எனும் எனது இன்றைய அறிவியல் புரிதலுக்கு 'முதல்' வித்திட்டவனே! நன்றி உன் வாழ்வுக்கு. அஞ்சலி செலுத்துவது 'நீ' கற்று தந்து அறிவியலுக்கு முரன்பாடானது என்றாலும் - 'சுக நித்திரை கொள்'....எம் நினனவில் வாழ்வாய் என்றென்றும் :cry:
:shock: enna Oru anjali !
rangan_08
28th February 2008, 01:15 PM
adhu aazhvar pasuramagattum, allahvin pugazhagattum, yesuvin bible agattum, yaar manadhum punpadadhavagayil, ellavatrilirundhum eg. kaatti, azhagaga vilakkam tharuvar. Avar jaadhi, madha inangalai kadandha arpudha padaippali.
Silar eppodhum nammudaneye irukka maattargala endru ninaikka thondrum - appadippattavardhan nam sujatha.
:( :( :(
Shakthiprabha.
28th February 2008, 01:20 PM
உங்கள் ஒவ்வொருவரின் அஞ்சலி படிக்கும் பொழுது மனம் மீண்டும் மீண்டும் மீண்டும் கனக்கிறது.
நேற்று அழ மறுத்த என்னையும் அழ வைத்து விட்டது, இங்கு வரையப்பட்டிருக்கும் ஓவ்வொருவரின் எழுத்துப் பரிமாற்றமும்.
Arthi
28th February 2008, 01:35 PM
yes, feeling so sad, deeply absorbed in grief :cry3: :cry3:
dhukkam adhigamaagiradhu kuraya vazhi illai, vazhi thEriyavum illa
Time is the best medicine for Sujata's family to come out this sorrow :(
VENKIRAJA
28th February 2008, 01:48 PM
I have no words to express my grief.....when ma dad called me up and said this,i posted it in the hub at 11.45 pm.....yesterday!
I'm feeling like lost my grandpa now.....!Nothing else could i say.....
anoops
28th February 2008, 01:55 PM
வாழ்க்கையிலும் VCR இல் உள்ளது போல ஒரு REWIND பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :cry2: :cry2:
Murali Srinivas
28th February 2008, 01:59 PM
நெருங்கிய உறவினரை இழந்தது போல ஒரு வேதனை. அவரை பற்றிய ஏராளமான நினைவுகள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு கற்றதும் பெற்றதும்-ல் எழுதியிருந்தார்."இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்கிறேன். இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" இதற்கு நிறைய Reactions வந்தது. அடுத்த வாரம் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லியிருந்த்தார். இப்போது மக்களின் மன நிலையை பார்த்திருந்தார் என்றால் என்ன சொல்லியிருப்பார் என்று அபத்தமாக தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைவதாக.
rangan_08
28th February 2008, 02:27 PM
வாழ்க்கையிலும் VCR இல் உள்ளது போல ஒரு REWIND பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :cry2: :cry2:
iduvum Mudalvan padathil avar ezhudiya dialogue dhan - ungalukku therindirukkum endru ninaikkiren.
நெருங்கிய உறவினரை இழந்தது போல ஒரு வேதனை. அவரை பற்றிய ஏராளமான நினைவுகள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு கற்றதும் பெற்றதும்-ல் எழுதியிருந்தார்."இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்கிறேன். இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" இதற்கு நிறைய Reactions வந்தது. அடுத்த வாரம் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லியிருந்த்தார். இப்போது மக்களின் மன நிலையை பார்த்திருந்தார் என்றால் என்ன சொல்லியிருப்பார் என்று அபத்தமாக தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைவதாக.
Yes. I have also read this. Vazhkaiyai migavum practicalaga parthavar avar. Avar evvalavo katrirundalum, avarudaya ezhuthil thulikooda " enakku ellam therium " endra garvam irukkadu. Elimai at the same time knowledge thaan avar speciality. .....sorry.....romba kashtamaga irukku....
Jyothsna
28th February 2008, 02:49 PM
[tscii:b9ea6ab672]ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.
என் தலைமுறையைச்சேர்ந்தவர்கள் இலக்கியத்தில் நடை என்ற ஒன்றின் தனித்த வசீகரத்தை சுஜாதா மூலமே துல்லியமாக உணர்ந்திருப்பார்கள். அன்று சாண்டில்யன், பிவிஆர், அகிலன்,நா.பார்த்தசாரதி போல பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும்தான் வாசகர்களைக் கவர்ந்தார்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.
என் பள்ளிநாட்களில் குமுதத்தில் தொடராக வந்த ‘அனிதா- இளம்மனைவி’ நாவலை மீண்டும் மீண்டும் வாசித்தது இபோதும் நினைவுக்கு வருகிறது. பாலு என்பவர் வரைந்த நீளமுகம் கொண்ட கணேஷ்! [அப்போது வசந்த் இல்லை]. அக்கதையின் சித்தரிப்புமுறை அளித்த வசீகரத்தை இப்போதுகூட அதே உணர்வுடன் மீட்ட முடிகிறது. அதேபோல என்னை அப்போது கவர்ந்த இன்னொரு படைப்பாளி அசோகமித்திரன். ‘நானும் ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்துஎடுத்த சினிமாபப்டம்’ இலாரியா’ போன்ற கதைகளை குமுதத்தில் பலமுறை வாசித்து அந்த நுண்ணிய எளிய மொழியின் புதுமையில் மயங்கினேன். ஆனால் பெயர் நினைவில் இல்லை. பத்துவருடம் கழித்து அசோகமித்திரனைப் படிக்கும்போது அக்கதைகளின் வரிகள் எல்லாமே அப்படியே நினைவில் இருப்பதை உணர்ந்தேன். அவரா இவர் என்று பிரமித்தேன்.
அனிதா இளம் மனைவியை பதினைந்து வருடம் கழித்து மீண்டும்படித்தபோதும் சுஜாதாவின் நடை அதே துள்ளலுடன் இருந்ததை உணர்ந்தேன். அதில் நான் கவனித்த நுட்பங்களை இளமையிலேயே ரசித்திருந்தேன். கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா?’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார். அதில் மோனிகா அறிமுகமாகும் காட்சியில் அவளுடைய குணச்சித்திரம் ஏழெட்டு வரிகளுக்குள்ளாகவே உருவாகி வரும் மாயம்.!
சுஜாதா அன்றும் இன்றும் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவரது எழுத்துக்கு ஆழம் இல்லை என்று இன்று எனக்குத்தெரியும். அது முற்றிலும் மேற்தளத்திலேயே நிகழ்ந்துமுடியும் எழுத்து. அதன் இலக்கியத்தன்மை அதில் உள்ள அபாரமான சித்தரிப்புத்திறனால் மட்டுமே உருவாவது. மொழியால் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா. அவரிடமிருந்து நான் கற்றவை ஏராளம். ஆகவேதான் என் முதல் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் [திசைகளின் நடுவே] என் முன்னோடிகளாக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருடன் சுஜாதாவையும் சொல்லியிருந்தேன். சிற்றிதழ்ப்புனிதங்கள் கறாராகப் பேணப்பட்ட அன்று அது ஒரு விவாதமாக ஆகியது. என் ‘விசும்பு’ அறிவியல் புனைகதைகள் நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம்செய்திருந்தேன்.
சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே. புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பலவகையிலும் நிகரானவை அவை. தமிழில் குறைவாகவே கவனிக்கப்பட்ட அவரது எழுத்து நாடகங்கள்தான். யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். மேலும் நாடகங்களில் அவர் தனக்கு மிக அந்தரங்கமான ஒரு தளத்தையே எடுத்துக் கொள்கிறார். மத்தியதர வைணவ பிராமண குடும்பம்.பதன் தர்மசங்கடங்கள், தடுமாற்றங்கள்.
சுஜாதாவை தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சிசித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப்பொருந்திவருபவை. சிறுகதையின் செவ்வியல் வடிவம் சரியாக உருவாகி அவ்ந்த சிறுகதைகள் அவை. அவற்றை இரண்டாகப்பிரிக்கலாம். ‘குதிரை’ போன்று சிறந்த நகைச்சுவைப்படைப்புகள் ஒருவகை. ‘எல்டொராடோ’, ‘மாஞ்சு’ போல நடுத்தர வற்கத்தின் அன்றாடவாழ்க்கையின் ஒரு தருணத்தை முன்வைக்கும் துல்லியமான யதார்த்தக்கதைகள் இன்னொருவகை.
ஆனாலும் சுஜாதாவின் நடையே அவர் தமிழுக்கு அளித்த முதல்பெரும் கொடை. தமிழ் இலக்கியவரலாற்றில் அவரை நிலைநாட்டும் அம்சமும் அதுவே. சொல்லப்போனால் தமிழ் உரைநடையில் புதுமைப்பித்தனுக்குப் பின் நிகழ்ந்த முக்கிய்மான அடுத்த பாய்ச்சல் என்று அதையே சொல்லவேண்டும். அது ஒருவகை முன்னோடிவகைமை- ‘டிரென்ட் செட்டர்.
சுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராயவேஎன்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்ல அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம். பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.
இரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.
மூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும். அதுவே அவரது பலவீனமும் கூட. அவருடைய படைப்புலகில் அவரை மீறி நிகழும் எதுவும் இல்லை. நெகிழ்ச்சிகள் கவித்துவ எழுச்சிகள் எதுவுமே இல்லை. ஆழ்மனம் நோக்கிய பயணமே இல்லை. ”எனக்கு எழுத்துமேலே இமோஷனல் ஈடுபாடு கெடையாது” என்று ஒருமுறை சொன்னார். ஆனால் அங்கதத்துக்கு அந்த மூளைத்திறன் பெரும்பலம்.
நான் நாலைந்துமுறையே அவரைச் சந்தித்திருக்கிறேன். பொதுவாக அதிகம் பேசாதவர். ஆனால் முசுடு அல்ல. பேசும்தருணம் வாய்த்தால் பேசிக் கோண்டே இருப்பார். வண்ணதாசன் மகளுக்கு திருமணம் நடந்தநாளில் மண்டபத்தில் அவர் என்னிடம் வைணவம் பற்றி விரிவாக பேசியதை நினைவுகூர்கிறேன்.1997 ல் விஷ்ணுபுரம் எழுதிய பின் அதை நவீன இலக்கியம் அறிந்த வைணவ அறிஞர் ஒருவரிடம் காட்டவேண்டுமென்று தோன்றியதும் அவரை அணுகினேன். அதைப்பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். திருவட்டாறு கோயிலுக்கு ஒருமுறை வர விரும்பியதாகச் சொன்னார். இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஆதவன்,சுஜாதா, இந்திராபார்த்த சாரதி ஆகியோரைப்பற்றி எழுத திட்டமிட்டிருந்தேன்.
சுஜாதாவின் முகங்கள் பல. உள்வாங்கும் குணம் கொண்ட, அனுபவவாத அறிவியல் நோக்கு கொண்ட , தொழில்நுட்பக் காதலரான மனிதர். நவீன அறிவியல் மட்டுமே உலகை மீட்கும் என்ற எண்ணம் கொண்டவர். நான் அறிந்தவரை சாதிமத நோக்குகளுக்கு அப்பாற்பட்டவர், குடும்பமும் அப்படியே. அதற்கு அப்பால் அரங்கன் மீது மட்டும் உணர்வு ரீதியான, அவராலேயே விளக்க முடியாத, ஆழ்ந்த பிரேமை இருந்தது. அதற்கு அவருடைய இளமைப்பருவம், ஆழ்வார்களின் தமிழ் மீது அவருக்கிருந்த அடங்காத காதல் போன்றவை காரணம்
அவரைப்புரிந்துகொள்ள முக்கியமான ஒரு நிகழ்வு உதவும். திருச்சிபக்கம் பின்தங்கிய வணிக ஊர் ஒன்றில் போலியோவால் கால்களை இழந்து ,கல்விகற்பிக்கக்கூடப் பொருட்படுத்தப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, சுயநம்பிக்கையே இல்லாமல் தனக்குள் சுருண்டு வாழ்ந்த முஸ்லீம் இளைஞன் ஒருவனின் சில கவிதை வரிகள் வழியாக அவனைக் கண்டுபிடித்தார் அவர். இருண்ட உள்ளறைக்குள் நாள்கணக்கில் வாரக்கணக்கில் அவன் வாழ்ந்த அந்த உயரமான பிசுக்கு படிந்த பழங்காலக் கட்டிலை நான் கண்டிருக்கிறேன். அவன் அறியாத ஓர் உலகிலிருந்து சுஜாதா அவனை நோக்கி கையை நீட்டினார். அவனுக்கு தன்னம்பிக்கையை அளித்தார். அவன் வெளியுலகைப் பார்கக்ச்செய்தார். வெளியுலகம் அவனைப் பார்க்கும்படிச் செய்தார். படிப்படியாக அவனை ஒரு முக்கியமான கலாச்சாரச் சக்தியாக தமிழ்ச்சூழலில் நிலை நாட்டினார். மனுஷ்யபுத்திரன் சுஜாதா தமிழுக்கு அளித்த கொடை. அவரது எழுத்தில் அதிகம் தெரியாத அவரது அகம் எத்தகையது என்பதற்கான முக்கியமான ஆதாரம்.
முன்பொருமுறை எழுதிய கடிதத்தில் கீதைபற்றிய என் கேள்விக்குப்பதிலாக, விவாதத்தை முடிக்கும்முகமாக சுஜாதா ‘அறிதலின் எல்லைகளை உணர ஒரு வயது இருக்கிறது. இந்த புரோட்டீன் காலிஃப்ளவர் சலித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அது அதை மீறி எதையாவது அறிய ஆரம்பிக்கிறது” என்று எழுதினார்.
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதே கொண்டு
எல்லா கருமங்களும் செய்து
எல்லையில் மாயனைக் கண்ணனைத்தாள்பற்றி
யானோர் துக்கமும் இலனே
-jayamohan
[/tscii:b9ea6ab672]
Roshan
28th February 2008, 02:59 PM
[tscii:83590a7660]Trying to repost it in unicode in order to enable reading.
ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.

[/tscii:83590a7660]
dinesh13284
28th February 2008, 03:35 PM
May His Soul Rest in Peace :cry:
sriranga
28th February 2008, 03:59 PM
சுஜாதாவின் ஆத்மா ஷாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
kalnayak
28th February 2008, 04:45 PM
My heart-felt condolences. I feel saddened to hear this news. My most favorite Tamil writer is no more. I will keep reading his novels, short stories, and other writings.
rangan_08
28th February 2008, 05:25 PM
எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவு தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் பாகம்1, 2 ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் கட் அவுட் வைத்துப் பெருமைப்படுத்தினார். - thatstamil.com
Mahen
28th February 2008, 05:53 PM
RIP mr sujatha...
Guys, is there any english version of his works??
Roshan
28th February 2008, 09:01 PM
From a fan in orkut.
இதயத்தை வருடும் குடும்பக் கதைகளாகட்டும்,
மனதை மயக்கும் இளமைக் கதைகளாகட்டும்,
வியக்க வைக்கும் விஞ்ஞானக் கதைகளாகட்டும்,
உறைய வைக்கும் திகில் கதைகளாகட்டும்,
சிரிக்கவைக்கும் சிந்தனைக் கதைகளாகட்டும்,
எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர்.
வசன நடை மிகுந்த நாடக உலகில், பேச்ச்சுத் தமிழை பூர்ணம் விசுவநாதனின் நாடகங்கள் மூலம் கொண்டு வந்தவர் சுஜாதா
பிரியா கதை படம் ஆனதன் மூலம் கணேஷ் கதாபாத்திரத்துக்கு ரஜினிகாந்தை நினைக்க வைத்தார்.
அவரின் திரைவசனம் மூலம் பல பாராட்டுக்களையும் ,சில சர்ச்சைகளையும் பெற்றார்,
கணேஷ் வசந்தை மறக்க முடியுமா..?? இனி அவர்களையும், மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கையும் யாரிடம் கேட்போம்..??
ஸ்ரீரங்கத்து தேவதைகளால், இதயத்தைக் கட்டிப்போட்டார்
தான் கற்றதையும் பெற்றதையும் அடுத்தவரும் அறிய கொடுக்க
அவர் தயங்கியதே இல்லை.
விஞ்ஞானக் கேள்வி ப்தில்கள் மூலம் பாமரனுக்கும் புரியும்படியாய் அறிவியல் சொன்னார்.
வரலாற்றுப் புதினமும் முயன்று வென்றார்(ரத்தம் ஒரே நிறம்)
தனது 72 வயதிலும், அம்பலத்தில் அயராது வரும் கேள்விக்கணைகளை அநாயாசமாய் ஏற்று பதிலளித்த பாங்கு யாரிடம் இனி வரும்..??
மின்னணு வோட்டளிக்கும் இயந்திரத்தின் மூளைகளுள் ஒருவராய் இருந்து, அதை எதிர்த்து போடப்படும் வழக்குகள் இருக்குமிடம் எல்லாம் ஆஜராகி, விளக்கமளித்து ஐயம் நீக்கியவர்.
தனது தள்ளாத வயது தொடங்கும் நிலையைக் கூட மிக நகைச்சுவையாய் அணுகியவர்.
தனக்கு பைபாஸ் சர்ஜரி செய்ததையும், மாத்திரைகளால் மருத்துவர்கள் வருத்துவதையும், நகையிழையோட சொல்லும் பாங்கு அவருக்கு மட்டுமே வரும்.
இன்றைய பல எழுத்தாளர்களின் ஆதர்சம். மானசீக குரு, துரோணார் என்றால் மிகையில்லை.
அவரது எழுத்துக்களுக்கு ஜெயராஜ் வரைந்த ஓவியங்களும், பல உருவங்களை நம் மனதில் நிறுத்தின.
அவர் நம்மிடையே இல்லை என்று நினைத்துப் பார்க்கும் போதே ஏதோ தொண்டைக் குழியில் ஒரு பந்தடைத்தது போன்ற ஒரு துக்கம்.
ரோபோ படத்தின் மூலம் அவரது விஞ்ஞான விசுவரூபத்தை, விஷுவலாகக் கண்டு களிக்கப் போகிறோம் என்ற நினைப்பில் ஒரு இடி.
சுஜாதா ரங்கராஜன் புகழ் இவ்விணையத் தமிழ்க் கட்டிடத்தில் ஒரு முக்கியக் கூரை என்றால் மிகை இல்லை.
கம்ப்யூட்டரை கண்மாய்க் கரைகளும் பேசும் படி எழுதினார்.
வாழ்க அவரது புகழ்...!! கண்ணீர் அஞ்சலிகளை மீண்டும் காணிக்கையாக்குகிறேன் என் ஆதர்ச எழுத்தாளனுக்கு...!!!
kannannn
28th February 2008, 10:18 PM
மிகுந்த வருத்ததை அளிக்கும் செய்தி. நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சுக் குழி அடைக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சுஜாதாவின் எழுத்துக்களை படித்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு வெள்ளியன்றும் விகடனுக்காக வீட்டில் நடக்கும் போட்டிக்கு முக்கிய பொறுப்பாளி அவராகத்தான் இருப்பார். தமிழ் இலக்கியத்தின் மீது என் ஆர்வத்தை தூண்டியவர்களில் மிக முக்கியமான ஒருவர். ரூபாய்க்கு ஒன்று என்று மக்களின் அறிவை மழுங்கடிக்க வந்த நாவல்களின் மத்தியில் அவரின் எழுத்துக்களில் ஆறுதல் தேடிய காலமும் உண்டு. அனிதாவின் காதல்கள் எழுதிய கையோடு ஒரு பூக்குட்டி எழுத வேறு எவரால் முடியும்? தமிழ் இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
joe
28th February 2008, 10:36 PM
சுஜாதாவுக்கு கமலஹாசன் அஞ்சலி
சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தே இருந்தேன். அவரும்தான்.
வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்துகொள்வது அவசியம். சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்ததுபோல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை. நெறி அது.
விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் அவருக்குத் தன் எழுத்தைப் பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவுசெய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான் சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்துகொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம்போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லலாம் மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.
தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட, கொடுத்ததற்கு நன்றி சொல்லவேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.
பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமோ வாசகத் தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும்.
m_23_bayarea
28th February 2008, 11:09 PM
Writer Sujatha Expired
(Wednesday, 27th February 2008)
முதுபெரும் எழுத்தாளரும் சிவாஜிபடத்தின் வசனகர்த்தாவுமான சுஜாதா இன்று மறைந்தார். வெகுஜன பத்திரிக்கைகளில் தனக்கென்று தன்னிகரற்ற இடத்தை வகித்து வந்த சுஜாதா நீண்ட காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார்.
சென்ற மாதம் உடல்நிலை கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உடல்நிலை தேறி ரோபாட் படத்தின் வேலைகளை கலந்து கொண்டிருந்தார். இந்நேரத்தில் சுஜாதா திடீரென்று நேற்று உடல்நிலை குன்றி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மாலை அபாயாகட்டத்திலிருந்த சுஜாதாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்து இன்று இரவு ஒன்பதரை மணிக்கு உயிர் நீத்தார்.
இதுவரை காயத்ரி, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், சிவாஜி என பல ரஜினி படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் சுஜாதா எழுத்துலகில் மட்டுமல்ல சினிமாவுலகிலும் வசனங்களின் முலம் புரட்சி ஏற்படுத்தியவர், அன்னாரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கும் மட்டுமல்ல தமிழ் படிப்பவர்கள் அனைவருக்குமே பேரிழப்பு,
அன்னாரது ஆத்மா சாந்தியடைய ரஜினி ரசிகர்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம்,
http://rajinifans.com/detailView.php?title=541
Nerd
28th February 2008, 11:53 PM
நெருங்கிய உறவினரை இழந்தது போல ஒரு வேதனை. அவரை பற்றிய ஏராளமான நினைவுகள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு கற்றதும் பெற்றதும்-ல் எழுதியிருந்தார்."இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்கிறேன். இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" இதற்கு நிறைய Reactions வந்தது. அடுத்த வாரம் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லியிருந்த்தார். இப்போது மக்களின் மன நிலையை பார்த்திருந்தார் என்றால் என்ன சொல்லியிருப்பார் என்று அபத்தமாக தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைவதாக.
That probably is one of the best KP episodes ever. I could not do anything for the next 30 minutes at least. Kept on thinking about it.. If I am not wrong that episode even carried a pic of his (pale and gaunt)
Murali sir and others, do you remember the approximate date of that issue? I think it was almost 2 years back. I wish to goto vikatan.com and find it in the archives :bow:
littlemaster1982
29th February 2008, 12:30 AM
[tscii:5af7de9596]
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
http://www.desikan.com/blogcms/?item=63
[/tscii:5af7de9596]
littlemaster1982
29th February 2008, 12:34 AM
நெருங்கிய உறவினரை இழந்தது போல ஒரு வேதனை. அவரை பற்றிய ஏராளமான நினைவுகள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு கற்றதும் பெற்றதும்-ல் எழுதியிருந்தார்."இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்கிறேன். இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" இதற்கு நிறைய Reactions வந்தது. அடுத்த வாரம் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லியிருந்த்தார். இப்போது மக்களின் மன நிலையை பார்த்திருந்தார் என்றால் என்ன சொல்லியிருப்பார் என்று அபத்தமாக தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைவதாக.
That probably is one of the best KP episodes ever. I could not do anything for the next 30 minutes at least. Kept on thinking about it.. If I am not wrong that episode even carried a pic of his (pale and gaunt)
Murali sir and others, do you remember the approximate date of that issue? I think it was almost 2 years back. I wish to goto vikatan.com and find it in the archives :bow:
Nerd,
See my post above. Is that the article you were searching?
The pic you are talking about came in another episode in which he had written about his hospital experiences. But couldnt get hold of that. That one also ranks among his best.
RC
29th February 2008, 01:02 AM
Thanks master for sharing this wonderful article!
littlemaster1982
29th February 2008, 01:14 AM
Thanks master for sharing this wonderful article!
A small contribution from a long time Sujatha fan to those, who missed this gem of an article.
Jyothsna
29th February 2008, 08:37 AM
பிரிக்க முடியாத மௌனம். - சுஜாதாவிற்கான அஞ்சலி.
நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது.
கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு இல்லையா என்று ஆதங்கத்துடன் சொன்னான். நிஜம் அது.
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.
படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள்.
இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது.
ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது.
எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.
ஒரு எழுத்தாளராக அவரது புனைகதைகள் உருவாக்கிய வாசகர்கள் ஒரு பக்கம் என்றால் அவரது விஞ்ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிமுகத்தின் வழியாக
தங்கள் வாழ்வை உருவாக்கி கொண்டவர்கள் மறுபக்கம். இரண்டிலுமே அவருக்குத் தனியிடமிருக்கிறது.
சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் அளவு கன்னடத்தில் கூட வேறு எவரும் எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை.
நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது.
ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார் என்று.
ஒரு முறை லேண்ட்மார்கினுள் அவர் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்து பார்த்தேன். அவர் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தவுடனே தீர்மானித்துவிடுகிறார். சில நிமிச நேரம் கூட தேர்வு செய்ய யோசிப்பதில்லை. எப்படி சார் அது என்று கேட்டவுடன் தாழ்ந்த குரலில் பட்சி சொல்லுது என்று சிரித்த முகத்தோடு சொன்னார். அவருக்குள் இருந்த பட்சி கடைசி வரை சரியாகவே சொல்லிக் கொண்டிருந்தது.
தமிழ் கதையுலகில் அவரது எழுத்து விசேசமானது. இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்பதற்கு அவரது நடையே உதாரணம். சொற்களை அவர் பயன்படுத்தும் விதம் ஆச்சரியமளிக்ககூடியது. குறிப்பாக அவரது வர்ணனைகள். சொல்லை உடைத்து சுருக்கும் லாவகம். அதை சவுக்கடி வசனநடை என்று சொல்லலாம். ஒரு சொடுக்கில் தாவிச் செல்லும் அற்புதம் கொண்டது.
சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியத் தேர்ச்சியும் தமிழ் கவிதைகளின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் மிக முக்கியமானது. அவர் கவிதைகளை உணர்ந்து வாசிப்பதையும் தான் உணர்ந்தவற்றை உலகிற்கு அடையாளம் காட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இன்று பிரபலங்களாக உள்ள பல முக்கியக் கவிஞர்கள் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அதுவும் அவர்களது முதல் தொகுப்புகள் வெளியான நாட்களில் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டவர்கள்.
அவரது கவிதைரசனை மொழிக்கு அப்பாற்பட்டது. சங்கக்கவிதையை ரசிப்பது போலவே ஹைகூ கவிதைகளை ரசித்திருக்கிறார். அவருக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் பிடித்திருக்கிறது இன்னொரு புறம் மகுடேஸ்வரனையும் பிடித்திருக்கிறது.
அவருக்குள் எப்போதுமே ஒரு கவிஞன் இருந்தான். அவன் மிக தன்னடக்கமானவன். எழுதி தன்னை காட்டிக் கொள்ளாதவன். மாறாக கவிதையை ரசிப்பதையும் கவிதையின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதிலும், கவிதை வாசித்தலின் வழியாக தியானநிலையை உணர்ந்தவனுமாக இருந்திருக்கிறான். பகடிக்காக அவர் எழுதிய மரபுக்கவிதைகளில் கூட இலக்கணம் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணிப்பொறியியல், இலக்கியம் நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞான கதைகள், சிறுகதைகள் குறுநாவல்கள், இசை என்று அவர் தொடாத துறைகளே இல்லை. எதிலும் அவர் நுனிப்புல் மேயவில்லை. சிறிய உதாரணம், ஒரு முறை அவரோடு நீலி கதை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு நிமிசம் இருங்கள் என்றபடியே அவரது புத்தக அடுக்கிலிருந்து நுறு வருசங்களுக்கு முன்பு வெளியான பெரிய எழுத்து நீலிகதையை கொண்டு வந்து வாசித்து காட்டி விளக்கினார். அவர் தேடுதலில் கொண்ட நாட்டம் ஆச்சரியமளிக்க கூடியது. அதே நேரம் தனக்கு தெரியாதது தொடர்பாக அவர் உடனே ஒத்துக் கொள்வதோடு அதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்பதற்கும் தயாராக இருப்பார்.
தமிழ் சினிமாவில் அவரது கதைகள் முறையாகப் படமாக்கபடவில்லை என்ற குறை அவருக்குள் நெடுங்காலமாகவே இருந்து வந்தது. ஆனாலும் தான் வசனம் எழுதுகின்ற படங்கள் பற்றி அவருக்கு ஒரு குறையுமில்லை. அத்தோடு ஐம்பது வருசமாக எழுதப்பட்டு வந்த அடுக்குதொடர் வசனங்களும் கண்ணீர் மல்கி பெருகும் நீண்ட பிலாக்கணங்களையும் விலக்கி அவர் எழுதிய நறுக்கு தெறித்த வசனங்கள் இன்று என் போன்றோருக்கு முன்னோடியாக உள்ளன.
அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது.
எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.
சுஜாதாவின் எழுத்து மூன்று தலைமுறைகளை தாண்டி இன்றும் தொடர்ந்த வாசிப்பிற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அவரது ஆளுமை எண்ணிக்கையற்ற வாசகர்களை உருவாக்கியிருக்கிறது. மேம்படுத்தியிருக்கிறது. அவர்களில் நானும் ஒருவனாகயிருக்கிறேன்.
சுஜாதா அதிகம் பேசக்கூடியவரில்லை. பொது விழாக்களில் கூட அவர் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் கொள்வார். அவர் பேசுவிரும்பியதெல்லாம் எழுத்தானது. சர்சைகள் விவாதங்கள். பாராட்டுகள் யாவற்றையும் மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இனியும் அவரோடு பேசிக் கொள்ள அவரது எழுத்து மட்டுமே இருக்கும். அவரது மௌனம் கவிதையைப் போல எங்கும் எப்போதும் நீக்கமற்று நிறைந்திருக்க கூடும்.
பின்குறிப்பு. இதைக் கணிப்பொறியில் எழுதும் போது கூட முதல்முதலாக கணிப்பொறியில் எழுதியவர் சுஜாதா தான் என்ற நினைப்பு மேலோங்குகிறது. அவரைப்போல கணிப்பொறியில் எழுத வேண்டும் என்ற ஆசை சமீபமாக தான் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக நானும் சொல்லிக் கொள்கிறேன்.
போய் வாருங்கள் வாத்தியாரே.
எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்.
-S.Ramakrishnan
http://www.sramakrishnan.com/
Nerd
29th February 2008, 08:38 AM
LM, thank you. idhukku mEla onnum solla mudiyala :cry:
joe
29th February 2008, 08:59 AM
LM,
நன்றி! மறு வாசிப்பென்றாலும் மனம் கனத்துப் போனது :(
Nerd
29th February 2008, 09:01 AM
LM, are you sure that this was not the episode in which his pic was posted?? I vaguely remember him recounting his hospital experiences.. Anyway I will try finding that this weekend in vikatan.com
joe
29th February 2008, 09:09 AM
Nerd,
I too think ,The picture is with the hospital episode .But I am not sure about the issue date ..Let me also search.
littlemaster1982
29th February 2008, 10:29 AM
LM, are you sure that this was not the episode in which his pic was posted?? I vaguely remember him recounting his hospital experiences.. Anyway I will try finding that this weekend in vikatan.com
I'm sure about it. Most of the readers were shocked to see Sujatha in such a shape. He wrote about that pic in next week's KP as follows...
விகடன் ஆபிஸில் அந்த போட்டோவை பள்ளம் தோண்டி புதைக்க சொல்லியிருக்கிறேன். கைக்குழந்தைகள் பயந்து அலறுகின்றனவாம்.
Cinefan
29th February 2008, 10:29 AM
Thanks Jyotsna.
Reading Ramakrishnan's condolences made me cry esp the last two lines.Very apt.
R I P Sujatha :(
Wibha
29th February 2008, 10:32 AM
RIP :(
Nerd
29th February 2008, 10:33 AM
LM, I see. Then that particular KP is at least 3+ years old.. I don't think vikatan.com archives 3 year old AVs.. anyway let me try my luck..
littlemaster1982
29th February 2008, 10:36 AM
என் பழைய நண்பி ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்," Nobody dies; they live in memories and in the genes of their children". How True ?
http://www.kirukkal.com/archives/2007/04/writer_sujatha_short_biography.html
Shakthiprabha.
29th February 2008, 10:41 AM

Very much true practically!
littlemaster1982
29th February 2008, 10:41 AM
LM, I see. Then that particular KP is at least 3+ years old.. I don't think vikatan.com archives 3 year old AVs.. anyway let me try my luck..
I'll also try.
littlemaster1982
29th February 2008, 10:46 AM
சுஜாதா கடைசியாக எழுதிய அப்பல்லோ தினங்கள் என்னும் பத்தி, அடுத்த வார ஆனந்த விகடனின் முதல் பக்கத்தில் இடம்பெறும்.
http://www.sujathalogy.com/
rangan_08
29th February 2008, 10:52 AM
tk us so much master..... meendum idhai padikkombothu, bramippum valiyum sogamum erpadukiradhu... :(
joe
29th February 2008, 11:01 AM
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html
A.ANAND
29th February 2008, 11:09 AM
RIP :cry: avar enimel nammidam illai endru, ninaithu kuda parka mudiyavillai.. :cry3: :cry3: :cry3:poi vaa thalaiva!
Shakthiprabha.
29th February 2008, 11:15 AM
thx for the links !
படிக்க படிக்க.. இன்னும் இன்னும் என்று கேட்கிறது.
Shakthiprabha.
29th February 2008, 11:38 AM
சுஜாதாவின் 'கடவுள்' கட்டுரை தொகுப்பிலிருந்து
மனிதனைப் பொறுத்தவரை உயிர் என்பது உடல் இயக்கமா ? அவன் நினைவுகளா ?........
உயிர் என்பது என்ன அன்று ஆதாரமாக சிந்திக்கும் பொழுது, நம் ஞாபகங்கள் தான் உயிர்...
எனின், நம் ஓவ்வொருவருள்ளும், அவரின் ஞாபகங்களை ஆழமாய் விதைத்துச் சென்று (விதைத்து நின்று) அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
Roshan
29th February 2008, 11:56 AM
LM,
நன்றி! மறு வாசிப்பென்றாலும் மனம் கனத்துப் போனது :(
Yeah same here :( AzhakoodAthenRu evvaLavu muyARchiththAlum itheyellAm padikkumpOthu azhugaiyai kattupadutha mudiyavillai :cry:
Shakthiprabha.
29th February 2008, 12:01 PM
பிரிக்க முடியாத மௌனம். - சுஜாதாவிற்கான அஞ்சலி.
பின்குறிப்பு. இதைக் கணிப்பொறியில் எழுதும் போது கூட முதல்முதலாக கணிப்பொறியில் எழுதியவர் சுஜாதா தான் என்ற நினைப்பு மேலோங்குகிறது. அவரைப்போல கணிப்பொறியில் எழுத வேண்டும் என்ற ஆசை சமீபமாக தான் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக நானும் சொல்லிக் கொள்கிறேன்.
போய் வாருங்கள் வாத்தியாரே.
எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்.
-S.Ramakrishnan
http://www.sramakrishnan.com/
இந்த நினைவு பலருக்கு இன்று மேலோங்கி இருக்கும். கணிப்பொறி பற்றி தெரியாததையும் தெரிந்து கொண்டு என் தாய் என்னிடம் 'சுஜாதா கட்டுரையில் படித்திருக்கிறேன்' என்று சொல்லிக்கொள்வார். பணம் கட்டி நான் தனியார் கல்வி நிறுவனங்களில் தெரிந்து கொண்டதை விட, சுஜாதா, நிறைய சொல்லி கொடுத்திருக்கிறார் என்று தோன்றும்.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், கடைசி வரிகள் என்னை மீண்டுமொரு முறை அழ வைத்தது.
Roshan
29th February 2008, 12:52 PM
கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு இல்லையா என்று ஆதங்கத்துடன் சொன்னான். நிஜம் அது.
நேற்று காலை சுஜாதாவை தங்கள் குருவாக நினைக்கும் எனது பள்ளி நண்பர்கள் இருவருடன் தொலைபேசியில் பேசியபோது, இப்படிதான் பேசிக்கொண்டோம். சுஜாதாபற்றியும் அவர் புத்தகங்கள் பற்றியும் மணிக்கணக்காக பேசி சிலாகித்துக் கொண்ட அந்த பள்ளி நாட்களை நினைவு கூர்ந்தபோது, மீண்டும் கண்ணீர்.
. எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.
பள்ளியில் விஞ்ஞான பாட வினாக்களுக்கு விடை அளிக்கும்போது, பாட புத்தகத்திலிருப்பதையும் தாண்டி ஏதாவது புதுமையாக, கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆசையில் சுஜாதாவின் 'ஏன் எதற்கு எப்படி' , 'கற்பனைக்கு அப்பால்' போன்ற பல புத்தகங்களை படித்து அதில் உள்ளவற்றை புகுத்தி எழுதியதும், ஆசிரியர் அதை படித்துவிட்டு, "இது எப்படி உனக்கு தெரிந்தது" என்று கேட்டபோது "சுஜாதா இந்த புத்தகத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்" என்று பெருமையாகச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. S. Ramakrishnan கூறியதுபோல் அவர் இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு வாத்தியாராக இருந்திருக்கிறார். இருப்பார்.
Jyothsna
29th February 2008, 03:51 PM
சுஜாதாவுக்கு என் இறுதி அஞ்சலி...
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று...பேச தைரியம் இல்லை என்றாலும் ஒரு முறை அவரை தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரது உடலை பார்க்க மட்டுமே எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது போலும்...
தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பேருந்தில் செல்லும்போது மனதில் அலை அலையாக அவரை பற்றிய நினைவுகள்...ஏன் எதற்கு எப்படிதான் நான் முதலில் படித்த சுஜாதா புத்தகம்...அதில் எரிமலை பற்றிய தகவலை படித்து வகுப்பில் சொன்னபோது என் ஆசிரியர் ஆச்சர்யப்பட்டு பாராட்டினார். அப்போது படிப்பில் நான் சராசரிக்கும் கீழ். ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக படிக்க ஆரம்பித்து, "ஏய், அவர் புக் எல்லாம் நல்லா இருக்கும்" என்று என் அண்ணன் அவரது புத்தகங்களை வாங்கி கொடுக்க, அவரது தீவிர வாசகி ஆனேன்.
பிரிவோம் சந்திப்போம் படித்து இரவெல்லாம் மதுமிதாவுக்காக வருத்தபட்டது, எந்த புத்தக கண்காட்சிக்கு போனாலும் அவரது புத்தகங்களை தேடி தேடி வாங்கியது, "அவர் புக்குல என்னதான் இருக்கோ" என அம்மாவிடம் திட்டு வாங்கியது, அவர் எழுத்தை பற்றி விவாதிப்பதற்காகவே என் தோழியையும் படிக்க சொல்லி படுத்தியது, அவர் சொன்ன புத்தகங்களை படித்தது...இன்னும் ஏதேதோ...
அவரது வீடு நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. நான் முன்பு தங்கி இருந்த இடத்தில் இருந்து பத்து நிமிட தூரம், ஆனால் அப்போது எனக்கு அதுதான் அவர் வீடு என்று தெரியாது.
அவர் வீட்டுக்கு பத்தடி முன்பே காவலர்கள் நின்றிருந்தனர், எழுத்தாளர் சார் வீடு என்றதும் "இங்கதாம்மா போங்க" என்றனர். உள்ளே விடுவார்களோ என்னமோ என்று தயக்கத்துடனே சென்றேன். நுழைந்ததும் அவரது இளைய மகன் எங்களை பார்த்து கும்பிட்டு சுஜாதா இருந்த திசையில் கை காட்டினார் (நாங்கள் யாரென்றெ தெரியாத போதும்!!!)
அருகில் செல்ல செல்ல கால்கள் பின்னி கொன்டன. முதலில் அவரது முகம் மட்டுமே தெரிந்தது. நினைக்க கூட வார்த்தைகள் இன்றி வெறித்தபடி இருந்தேன். அங்கு வந்த அனைவருமே ஆழ்ந்த மௌனத்தில் அவரது உடலருகில் நின்றிருந்தனர். என் தோழியின் கைகளை இறுக்கி பிடித்தபடி அவர் அருகில் சென்றேன். ஒரு வினாடி கூட இல்லை.. என் வாழ்க்கையின் ஆதர்சம் சரிந்து கிடப்பதை காண சகிக்காமல் திரும்பிவிட்டேன். அதுவரை அடைக்கி வைத்திருந்த துக்கம் பொங்கி வர கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் அழுதேன்.
அவரது உயிரற்ற உடலை பார்த்தபின்னும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் அரற்றியது. வழியெல்லாம் கண்ணீருடன் அவரை பற்றி பேசியபடியே வந்தேன்.
சற்று அமைதி அடைந்து யோசித்தபோது தோன்றியது...எங்கோ பட்டுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த நான், அவரது எழுத்தால் பாதிக்கபட்டு, உயிரோடு இருந்தபோதெல்லாம் பார்க்க தைரியம் இல்லாமல் அவரது இறுதிச்சடங்கின்போது தெருமுனையில் நின்று அழுதிருக்கிறேனே, அதுதான் அவரது எழுத்துக்கு வெற்றி!!!
அவரே சொன்னதுபோல் "புத்தகங்கள் பழைய நண்பர்களை போல...அவற்றை எழுதியவர்கள் சாவதில்லை, மறுபடி வாழ்கிறார்கள்". :notworthy:
Shakthiprabha.
29th February 2008, 03:59 PM
சுஜாதாவுக்கு என் இறுதி அஞ்சலி....
அவரே சொன்னது போல் "புத்தகங்கள் பழைய நண்பர்கள் போல... அவற்றை எழுதியவர்கள் சாவதில்லை.மறுபடி வாழ்கிறார்கள்."
நிச்சயமாக.
Arthi
29th February 2008, 05:18 PM
பள்ளியில் விஞ்ஞான பாட வினாக்களுக்கு விடை அளிக்கும்போது, பாட புத்தகத்திலிருப்பதையும் தாண்டி ஏதாவது புதுமையாக, கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆசையில் சுஜாதாவின் 'ஏன் எதற்கு எப்படி' , 'கற்பனைக்கு அப்பால்' போன்ற பல புத்தகங்களை படித்து அதில் உள்ளவற்றை புகுத்தி எழுதியதும், ஆசிரியர் அதை படித்துவிட்டு, "இது எப்படி உனக்கு தெரிந்தது" என்று கேட்டபோது "சுஜாதா இந்த புத்தகத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்" என்று பெருமையாகச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. S. Ramakrishnan கூறியதுபோல் அவர் இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு வாத்தியாராக இருந்திருக்கிறார். இருப்பார்.
Roshan: kaNeer varugiradhu :( :(
Arthi
29th February 2008, 05:22 PM
சுஜாதாவுக்கு என் இறுதி அஞ்சலி....
.. அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பொங்கி வர கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் ஆழுதேன்.
அவரது உயிரற்ற உடலை பார்த்த பின்னும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் அரற்றியது.. வழியெல்லாம் கண்ணீருடன் அவரை பற்றி பேசிய படியே வந்தேன்.
:notworthy:
:cry3: :cry3:
A.ANAND
29th February 2008, 05:26 PM
எளிமையான ஜீனியஸ் சுஜாதா- ஷங்கர்
இலவச நியூஸ் லெட்டர் பெற
மேலும் புதிய படங்கள்மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ். அவரது மறைவை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சுஜாதா மறைவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் ஷங்கர்தான். அவரது பெரும்பாலான படங்களுக்கு சுஜாதாதான் வசனம் எழுதியிருக்கிறார். தொழில் தவிர்த்து, இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஜாதாவை தனது தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் ஷங்கர்.
சுஜாதாவின் மறைவினால் பெரிதும் கலங்கியுள்ள ஷங்கர், அவரை எளிமையான ஜீனியஸ் என புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவருடைய இழப்பு எழுத்துலகத்துக்கு மட்டுமில்லை திரை உலகிற்கும் தான். அவருடன் இந்தியன் படத்திலிருந்து, முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என்று நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படங்களில் அவர் வசனம் எழுதியிருந்தாலும் அவருக்கு மிகவும் பொருத்தமான தீனி போடும் படம் ரோபோ.
என்னுடைய கேரியரில் அவருடைய பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
அவரும் எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தமான புராஜெக்ட் என்று சொல்வார். இந்த படம் முடிவதற்குள்ளாகவே எங்களை விட்டு மறைந்து விட்டார்.
ஒவ்வொரு படத்துக்காகவும் டிஸ்கஷனுக்காக பத்து நாட்கள் வெளியூர் போவோம். அந்த இனிமையான நாட்களை மறக்க முடியாது. கதை போக்கையும், அதிலுள்ள சிக்கல்களையும், குறைபாடுகளையும் மிக அழகாக அலசுவார்.
அவருடைய சிந்தனை எப்பொழுதும் ஒரு கல்லூரி மாணவன் மாதிரி இளமையாக இருக்கும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுருக்கமாகவும், நவீனமாகவும், சுவாரசியமானதாகவும் எழுதிக்கூடியவர். சமயத்தில் நண்பராகவும், சமயத்தில் ஒரு ஆசிரியராகவும் நான் அவரை உணர்வேன்.
அவருக்கு பணத்தாசை கிடையாது. சம்பளம் கேட்கவே தெரியாதவர். சம்பளம் பற்றிப் பேசினால், 'எதாவது கொடுங்க' என்பார். ஆசைகள் ஏதும் இல்லாத எளிய மனம் கொண்டவர்.
யாரையும் காயப்படுத்த மாட்டார். எல்லோரையும் மதிக்கும் குணமுடையவர். திறமை எங்கிருந்தாலும் கண்டெடுத்து பத்திரிகைகள் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார். எதற்கும் கலங்க மாட்டார், எதற்கும் உணர்ச்சி வசப்பட மாட்டார். பாசாங்கு இல்லாதவர்.
அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்ளும் போதுகூட அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. கூல் அண்டு டேக் இட் ஈசி என்பார்.
எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு போன் பண்ணினால் அதற்கு அவர் மிகச் சுலபமாக தீர்வு சொல்லி நொடியில் தீர்த்து விடுவார். அதற்கு நன்றி சொன்னால், எதற்கு நன்றியெல்லாம் நீ என் மகன் மாதிரி என்பார்.
இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எனக்கும் தான்... இதை என்னால் அவரது பாணியில் 'கூலாகவோ ஈசியாகவோ' எடுத்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஷங்கர்.
Sanguine Sridhar
29th February 2008, 05:28 PM
Thanks Jyothsna and LM for sharing! No words to describe his greatness.
A.ANAND
29th February 2008, 05:30 PM
'என் வேலையை முடிச்சுட்டேன்'...சுஜாதா!!
வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம், கதை எழுதியுள்ளார். அவரது பங்களிப்பால் திரையுலகம் பரிமளித்துள்ளது.
சுஜாதாவின் திரையுலக வாழ்க்கை ரஜினிகாந்த், ஜெய்சங்கர் இணைந்து நடித்த காயத்ரி படத்திலிருந்து தொடங்கியது. அவரது நாவலான காயத்ரியை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
இதையடுத்து சுஜாதாவின் இன்னொரு பிரபல கதையான பிரியாவும் படமானது. இதிலும் ரஜினியே நடித்தார். அதன் பின்னர் கரையெல்லாம் செண்பகப்பூ, நினைத்தாலே இனிக்கும், பொய் முகங்கள், வணக்கத்துக்குரிய காதலியே ஆகிய படங்களும் சுஜாதாவின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்கள்.
ஆர்யபட்டா, 24 ரூபாய் தீவு, அனிதா இளம் மனைவி, நிர்வாண நகரம் ஆகியவை கன்னடத்தில் படமாகியுள்ளன. பத்து செகன்ட் முத்தம் கதையை இயக்குநர் மெளலி, தெலுங்கில் படமாக்கினார். அஸ்வினி நாச்சப்பாவை ஹீரோயினாகக் கொண்டு, அஸ்வினி என்ற பெயரில்
மெளலி படமாக்கினார்.
சினிமாவுக்கென்றே முதன் முதலில் சுஜாதா உருவாக்கிய கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசனின் விக்ரம். இந்தப் படம்தான் தமிழில் அறிவியலை மையமாகக் கொண்டு வந்த முதல் படமும் கூட.
பின்னர் மணிரத்னம் மற்றும் ஷங்கரின் ஆஸ்தான திரைக் கதாசிரியராக பின்னர் மாறினார் சுஜாதா.
இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், அந்நியன், பாய்ஸ் என ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து பணியாற்றினர். உச்சகட்டமாக அமைந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி.
இந்தியன், முதல்வன், அந்நியன், பாய்ஸ் என ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து பணியாற்றினர். உச்சகட்டமாக அமைந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி. ரஜினி படத்துக்கும் தன்னால் வசனம் எழுத முடியும் என்பதை நிரூபித்து சிவாஜி மூலம் பெயர் தட்டிச் சென்றார் சுஜாதா.
தற்போது ஷங்கரின் ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரா, இயந்திரன் என்ற பெயர்களையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டிருக்கிறது.
இதேபோல மணிரத்னத்தின் இருவர், ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், குரு ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார் சுஜாதா. மணிரத்னம் விரைவில் இயக்கவுள்ள அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்கும் அவர்தான் வசனம், திரைக்கதை அமைப்பதாக இருந்தது.
கடைசிப் படைப்பு:
ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரன் என்ற பெயரையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் ஷங்கரின் ரோபோட் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துக் கொடுத்தாராம் சுஜாதா. ஸ்கிரிப்ட்டை ஷங்கரிடம் கொடுத்த அவர், ''ஷங்கர் எனது வேலையை முடித்து விட்டேன். இனி எனக்கு டென்ஷன் இல்லை. இதுவே எனக்கு கடைசிப் படமாக இருந்தாலும் கவலை இல்லை'' என்றாராம்.
அதேபோல, ஸ்ரீபிரியாவின் தயாரிப்பில் சிம்ரன் நடிக்க ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'சிம்ரன்' சின்னத்திரையின் முதல் கதையே சுஜாதாவின் கதைதான்.
அதுவே அவரது கடைசிப் படைப்பும் ஆகியுள்ளது.
சுஜாதாவின் மறைவு தமிழ் படைப்புலகம் மாத்திரமல்ல கலையுலகத்துக்கும் பேரிழப்பு தான்.
Sanguine Sridhar
29th February 2008, 05:32 PM
அவருக்கு பணத்தாசை கிடையாது. சம்பளம் கேட்கவே தெரியாதவர். சம்பளம் பற்றிப் பேசினால், 'எதாவது கொடுங்க' என்பார். ஆசைகள் ஏதும் இல்லாத எளிய மனம் கொண்டவர்.
யாரையும் காயப்படுத்த மாட்டார். எல்லோரையும் மதிக்கும் குணமுடையவர். திறமை எங்கிருந்தாலும் கண்டெடுத்து பத்திரிகைகள் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார். எதற்கும் கலங்க மாட்டார், எதற்கும் உணர்ச்சி வசப்பட மாட்டார். பாசாங்கு இல்லாதவர்.
அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்ளும் போதுகூட அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. கூல் அண்டு டேக் இட் ஈசி என்பார்.
எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு போன் பண்ணினால் அதற்கு அவர் மிகச் சுலபமாக தீர்வு சொல்லி நொடியில் தீர்த்து விடுவார். அதற்கு நன்றி சொன்னால், எதற்கு நன்றியெல்லாம் நீ என் மகன் மாதிரி என்பார்.
இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எனக்கும் தான்... இதை என்னால் அவரது பாணியில் 'கூலாகவோ ஈசியாகவோ' எடுத்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஷங்கர்.
:cry:
Mahen
29th February 2008, 06:26 PM
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/14577.html
By looking at the pics, i can surely tell you that the one whos gona deeply miss sujatha is Shankar...
Suprisingly, maniratnam wasnt there...and where are all the young heroes??!
ThalaNass
29th February 2008, 06:56 PM
RIP sir :cry: :cry2:
joe
29th February 2008, 07:14 PM
Thalaivar kalainjar Anjali
http://image1.indiaglitz.com/tamil/gallery/Events/sujatha_tribu290208/sujatha290208_1.jpg
saradhaa_sn
29th February 2008, 07:22 PM
உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி, சுஜாதாவின் மறைவு..
விஞ்ஞானம், கணிணித்துறை, எழுத்துலகம்... என்று அனைத்திலும் தன் முத்திரையைப்பதித்தவர் சுஜாதா.
எழுத்துலகில் தன் முன் சென்றோரைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, அதில் வெற்றி நடைபோட்டவர்.
எந்நாளும் இளமையாய் சிந்தித்தவர்.
கையிலெடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அற்புத நாவல்களைத்தந்தவர்.
பல வாரப்பத்திரிகைகளின் விற்பனை அதிகரிக்கக் காரணமாயிருந்த அற்புத மனிதர்.
திரையுலகிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
இப்படி பல முகம் கொண்ட ஒரு எழுத்தாளரை இனி எப்போது பார்க்கபோகிறோம்..!!.
அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
m_23_bayarea
1st March 2008, 01:18 AM
Mortal remains of 'Sujatha' consigned to flames :cry: :cry: :cry:
Chennai (PTI): Tamil Nadu Chief Minister M Karunanidhi, film personalities, writers and people from various walks of life on Friday paid homage to renowned Tamil writer S Rangarajan alias Sujatha, who died here on Wednesday.
The body of the 73-year-old writer, who died following multiple organ failure, was brought to his residence at Mylapore here from the Apollo Hospital this morning, following the arrival of his elder son from the United States.
Besides Karunanidhi, his wife Rajathiammal and daughter and Rajya Sabha MP Kanimozhi, MDMK chief Vaiko, BJP state President L Ganesan, actors Rajnikanth, Kamal Hassan, directors Balu Mahendra and Parthiban and writer Lena Tamilvanan were among those who paid homage.
Later, the body was cremated at the Besant Nagar crematorium.
http://www.hindu.com/thehindu/holnus/004200802291760.htm
VENKIRAJA
1st March 2008, 01:33 AM
For the first time,the death of a tamizh writer is so happening in the media.........whatsoever the government should take some steps in making something memorable about the pioneer in some way soon and solid......
RIP
:(
ajithfederer
1st March 2008, 03:29 AM
Tribute to Sujatha (http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/14577.html)
:cry:
Shakthiprabha.
1st March 2008, 10:28 AM
ஆண்டாண்டு காலம்
அழுது புரண்டாலும்
மாண்டார் மீண்டு வருவதில்லை.
இத்திரியை படிக்கும் போதெல்லாம் மனம் கனத்துப் போகிறது.
Shakthiprabha.
1st March 2008, 03:40 PM
http://www.writersujatha.com/
Designer
2nd March 2008, 06:28 AM
அமுதமாய் தமிழில் எழுதி, அற்புதமான சிந்தனைகளை பாரி வள்ளள் போல் வாரி வழங்கிய சுஜாதா (http://en.wikipedia.org/wiki/Sujatha) அவர்களின் மறைவால், மனம் சோகத்தில் மூழ்கி கணக்கிறது. தமிழ் எழுத்துலகிற்கு ஈடில்லா மாபெரும் இழப்பு.
அவரின் ஆத்மா சாந்தி அடய இறைவனை ப்ரார்திக்கிறேன்.
raaja_rasigan
2nd March 2008, 07:01 PM
Aathma Santhi Adayattum :(
raaja_rasigan
2nd March 2008, 07:06 PM
[tscii:899173834d]Director Shankar has recalled his fond memories of the writer Sujatha, who had worked with the director in four films. Shankar has recollected the days when both of them go to some place for the story discussion. His thought, according to Shankar, was always fresh and young like that of a collage student.
Shankar has showered praise on his most preferred dialogue writer as a person capable of presenting the heavy and complex things in simple and precise manner.
Both of them have worked together in four films viz, 'Mudhalvan', 'Boys', 'Anniyan', and 'Sivaji'. No one could forget his powerful dialogues in the interview scene in 'Mudhalvan' and the Nehru Stadium scene in 'Anniyan'.
'Robot', Shankar says, could have been the most intimate project for the writer, who has a great passion and knowledge towards science.
Shankar has also recalled the unique qualities of Sujatha, who never accepted “thanks” from the director for any kind of help. All that he used to say was, “why do you thank me? You are like my son…”
The words of the condolence statement express the unbearable sorrow of Shankar. We present here the full text in Tamil.
http://www.indiaglitz.com/channels/tamil/article/36964.html[/tscii:899173834d]
getcurry
6th March 2008, 12:32 PM
http://www.kollywoodtoday.com/events/celebrities-tribute-to-sujatha-videos/
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.