PDA

View Full Version : madhavanin kaadhal



MumbaiRamki
20th February 2008, 09:55 AM
ஒரு 25 வயது மென்பொருள் பொறியாலருக்கான எந்த அறிகுறியும் இல்லை - ஒரு ரூபாய் வழுக்கை , வீட்டில் முதலில் நுழையும் தொந்தி , அதை விட பெரிதான பொறுப்புகள் - எதுவும் இல்லை. எல்லாம் இரண்டு மாதமாக மாறி போனது மாதவனுக்கு. காலை ஐந்து மணிக்கு எழுந்து ஐந்து கிலோமீடர் ஓடி gymல் தன் உடலை செதுக்கி சிற்பம் போல வைத்து இருந்தான். கிரிஜா அவன் biceps தடவி - ஐயோ ! வேண்டாம். இப்படி சொன்னாலே ஒரு அடர்ந்த காட்டில் பனிகட்டிகள் சுழபட்ட ஒரு நெருப்பின் வெதுவெதுப்பு நியாபகம் வரும். அவளின் மெல்லிய வரைந்து வைத்த உதடுகளிலிருந்து இரண்டு வார்த்தை பாராட்டு போதும்- இவன் திருக்குறள் எழுத ! காதலியாச்சே! கடந்த இரண்டு மாதங்களில் , தன்னிடம் உடலாலும் மனதாலும் இவ்வளவு நெருங்கி வந்தவள் இவள் ஒருத்தி தான்.

ஆனால் இரண்டு மாதம் முன்பு இப்படி இல்லை . நாலாப்புரமும் சுவர்கள். நாறும்சுவர்கள். மெல்ல மெல்ல சுவர்கள் இவனை நெருக்க வந்தன. வாழ்க்கையில் மனதை கீரலை உண்டாகி, பூக்களை மொட்டுகளாக மாற்றின .தன் உயர் அதிகாரியிடம் கோபத்தை காட்டினால் , தன் இளைய சகோதரன் தனக்கு மேனஜராக ஆகி விடும் நிலைமை வரும். சகாகளிடம் காட்டினால் ஒரு "வேளையும்" கடக்காது. தன் கோபத்தை ,அடக்கி வைத்த கெட்ட வார்த்தைகளை ,குழப்பத்துடான் கலந்து ரோட்டில் ஒல்லியான அப்பாவிகளிடம் தேல்லிபான். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ,ஹிந்தி, - எல்லா மொழிகளிலும் அவர்களின் அம்மாவை அவமானபடுத்துவான்.

இரவு பத்து மணிக்கி வீட்டுக்குள் வருவான். உப்புமாவும் தயிர் சோறும் சாப்பிட்டு விட்டு TV ரூமுக்கு போவான். யாருக்கும் கேட்காதவாறு காதில் headset போட்டு கொண்டு பார்ப்பான். காமெடி, புது பட trailer ,புது பாடல்கள் ,மிட் நைட் மசாலா - எல்லாவற்றையும் ஒரு emotions ஆக பார்ப்பான்.

அப்பாவின் தோள் மேல் வளர்ந்தும், அப்பாவின் தோல் தளர்ந்து போனாலும் அவர் தான் வீட்டிம் அதிபதி. வீட்ட்டின் ஒவ்வொரு செங்கலும் அவர் plan படி தான் வைக்க பட்டது. வேளச்சேரி மெய்ன் ரோடில் ஒரு தனி வீடு, தன் பேரப்பிள்ளைகள் வசதியாக தங்குவதற்கு கூட வீட்டை பிளான் பண்ணியிருந்தார். அப்பாவிற்கு பயந்து கத்திரிக்காய் கூட சாப்பிடுவது கிடையாது. காதலெலாம் கல்யாணத்திற்கு பிறகு , அப்பா பார்க்கதவாறு தான் !

இப்படியாக இவன் வாழ்க்கை கலவை இருக்க ,ஒரு sleevless ல் எதேச்சியாக உறசியபடி அறிமுகமானாள் கிரிஜா. அதிகம் பேசா உதடுகளும் , தன்னை அழுத்தமாக கட்டி அணைக்கும் விழிகளும் ஏனோ இவனை கவர்ந்தன. அவளின் கழுத்து, நெற்றி , கைவிரல்களை பார்த்தான் . மறு மறு படி பார்த்தான். எந்த சிற்பியும் தொடாத சிற்பம இவள். அவள் தன் இயல்புக்கு மாறாக இருந்தாலும் தன் DNA க்களை மாற்றி அமைத்தான். முதலில் காலை வணக்கங்குளுடன் ஆரம்பித்த பொறி , நள்ளிரவில், செல்போன் பில் எகிறும் வரை காதலாக மலர்ந்தது.
ஒரு முறை அவனுக்கு ஒரு விபத்து நடந்தது . நேரில் வர வேண்டாம், அப்பா பார்த்தால் நிலைமை மோசமாகி விடுமென்று சொன்னான். அவள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் செய்தால். வேறு யாரும் பார்க்கும் முன்பு ,செல்போனிலிருந்து அதன் பதிவுகளை நீக்கினான். திரும்ப ஆபிஸ் சேர்ந்தாலும், அவன் வேலையில் பாதி அவள் பார்த்து கொண்டாள். அவனுடைய பாதியாக ஆக ஆசை பட்டாள். ஆனால் சமுதாயத்திற்கு பயந்து சொல்லாமல் விட்டாள்.

இப்படியாக எந்த காதல் ஆறு மாசமாக மன பூமியின் இறுதி வரை வேர் விட்டிருந்தது . மாதவன் சுதந்திரத்தை விரும்பினான். வீட்டு பொறுப்பினை ஏற்க விரும்பினான். கிரிஜாவுடன் வெளி தேசத்தில் அருமையான இல்லத்தில் குடியேற வேண்டும். ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்த்து ,ஐந்து மணி நேரம் உல்லாசமாக காற்றில் காதலை பறக்க விட்டு , அது பறப்பதை ரசிக்க வேண்டும். இப்படியாக எண்ணி கொண்டு இடது புறம் உறங்க ஆரம்பித்தான். அப்பொழுது அந்த அறையில் இன்னும் இரண்டு மனிதர்கள் சுவாசித்து கொண்டு இருந்தனர். அவன் கண் இமைகள் உறகத்தின் வாயிலை அடையும் முன்பு , அவனை ஒரு சிறய கை தட்டியது .
"நாளைக்கு தினேஷ் அப்பா ஸ்கூல் வராங்க .நீங்களும் அம்மாவோட வருவீங்களா?"
இந்த கதையின் முதல் பத்தியின் கிடைசி வரியை திரும்ப படிக்கவும்.

pavalamani pragasam
20th February 2008, 02:35 PM
:roll: :confused2:

btr
23rd February 2008, 06:11 PM
oree kozhapam, 2monthsa alladhu 200 months munnadi nadanda kadhala? konjam confusion.
mathapadi kadhal (kathai) nandraga, jillendru oru snadhipu madhiri iruku. pl continue....










:confused2:

crazy
23rd February 2008, 09:03 PM
maadhavanin kanava idhu?

P_R
24th February 2008, 12:11 AM
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். எழுதுகிறீர்கள்.

'இரண்டு மாதம்' என்பது இரண்டு இடத்திலும் மிக அழகாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள். முதல் நெருக்கம் சிலிர்ப்பாக இருந்தாலும் இரண்டாவதில் 'வலி'யை கொண்டு வர முடிந்திருக்கிறது.

புதுப்புது அந்நியங்களை உருவாக்கிக் கொள்வது மனிதனின் சாபக்கேடு என்பதைப்போன்ற ஒரு வித ஃபேட்டாலிடி கதையில் வந்திருக்கிறது.

வேளச்சேரியில் இருந்து விலக முடிந்ததா ? ஹெட்செட் மாட்டிக்கொண்டு பலம் பார்ப்பவன் அப்பாவை எதிர்த்து கிளர்ந்தெழுந்தானா ?

அப்பாவிடம் இருந்தது பாசத்தின் நெருக்கம் ஏற்படுத்திய நெருக்கடிகள் என்றால் அதிலிருந்து விடுபட்டது (விடுபட்டானா என்று கதை சொல்லவில்லை) விடுதலையா ? இல்லை வேறொரு ரூபத்தில் வேறு தளைகள் தான் வந்து சேர்ந்ததா.
அப்படியானால் அப்பா கெக்கலிப்பாரா, இல்லை இவன் கஷ்டங்களை பகிர்ந்துகொள்வாரா ?

அதிமிக்கியமாக திறந்தநிலையிலேயே விடப்பட்ட ஒரு கேள்வி...அருகில் படுத்திருந்த ரெண்டாமவள் கிரிஜா தானா ? காலம் அதையும் கூட மாற்றியதா ? ஆட்கள் மாறினாலும் சூழ்நிலைகள் மாறுவதில்லை என்பதுதானே விஷயமே.

இதுபோல பல கேள்விகளை சிந்திக்கவைக்கும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை.

ஒரு சில விமர்சனங்கள்:

இரண்டு இடங்களிலும், 'இரண்டு மாதம்' என்பது சின்ன கால இடைவெளியாகத் ஹோன்றியது.


கிரிஜாவைப் பற்றிய வர்ணணை , அவள் இவன் மீது நிகழ்த்திய மாற்றங்கள் எல்லாம் கதையின் மொத்த தரத்தை விட கொஞ்சம் சராசரியாகப் பட்டது.

சிறு சிறு கதைகளில் "ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்தது" என்று சொல்வதில் சில சங்கடங்கள் உண்டு. கதைமாந்தர்களுக்கு இடையில் பல நடந்திருந்தாலும் படிப்பவர்கள் அந்த ஒரு நிகழ்வை மட்டும் பெரிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடும்.

மொத்தமாக அந்நிகழ்வைப் பற்றிய கதை என்றால் பரவாயில்லை, ஆனால் இது ஒரு உணர்ச்சி-உறவு-'காலம் செய்த கோலம்' போன்ற கதை. இதில் ஒரு நிகழ்வை மட்டும் பெரிதாக (டிஸ்ப்ரபோர்ஷனேட்டாக) சொன்னால் அதைச் சுற்றியே அவர்கள் உறவை நினைக்கத் தோன்றும்.

அந்த விபத்து: அவன் குடும்பச்சூழல், அவர்கள் நெருங்குவது என்று பல விஷயங்களுக்கு மையமானதாக இருந்தாலும்...அதை பல நிகழ்வுக்ள் மூலம் சொல்லியிருந்தால் இன்னும் ஆழமாக பதிந்திருக்கும். இரண்டு மாத கெடு தான் இதையும் நெருக்குகிறதோ ? :-)

வாழ்த்துக்கள்.

MumbaiRamki
24th February 2008, 07:54 PM
PP,Btr,Crazy
Thanks - I wanted to write and surreal love story of an mentally -claustrophobic person . But somewhere down the line, i lost focus and hence in the first reading , it would appear as an mixed up story !

MumbaiRamki
24th February 2008, 08:00 PM
Prabhu Ram ,
You had written exactly of what i thought about the story ! After i finished this story , i felt that i didn't create the impact which i wanted to .

This story is nothing new. It is purely inspired from Pachaikili Muthucharam/Derailed/Rettai Val Kuruvi - i wanted to explore the mindset of a guy who feels cramped in his personal/Married life and seeks to explore his induviduality by romancing with another woman.