Arthi
5th February 2008, 05:01 PM
[tscii]சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
food court போகலாம் வர்றீங்களா?
பக்கத்து கியூபிக்களிலிருந்து அவன் கேட்டதும் ஓ போலாமே என்றவாறு கிளம்பினாள்.ட்ரெயினிங்கில் ஒரே பேட்சில் இருந்தபோது அவர்களுக்குள் ஆரம்பித்த பழக்கம் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. கோவையில் ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து வந்த அவனுக்கும், மதுரையில் ஒரு மகளிர் கல்லூரியில் MCA முடித்து வந்த அவளுக்கும் எதிர் பால் நட்பு கொள்ள இங்கு வந்துதான் முதல் வாய்ப்பு. இவர்கள் பேட்சில் இருந்த பலரும் வேறு நிறுவனங்கள்/ஆன்சைட் என்று கிளம்பிவிட நிறுவனத்தின் சென்னை கிளையில் இவர்கள் பேட்சில் மிஞ்சியிருந்தது அவர்களிருவரும்தான் என்பதும் அவர்களுக்குள் நெருக்கம் கூடுவதற்கு ஒரு காரணம். ஒன்றாக சாப்பிடப் போவது, தாமதாமானால் அவளைக் கொண்டு போய் விடுதியில் விடுவது என்று ஆரம்பித்து தீபாவளிக்கு துணி தேர்வு செய்யக்கூட அவன் தேவைப்படும் நிலை வரை வந்த பின்னும், பேச்சில் மட்டும் இன்னும் வாங்க போங்க தான். நட்பைத் தாண்டி எப்பொழுதோ அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாலும் இன்னும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, அவ்வளவே. அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தவளை, முதல்நாள் இரவு வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் திருமணப் பேச்சு, விரைவுபடுத்தியிருந்தது. இப்பொழுதே கேட்டுவிடுவது என்ற முடிவோடு அவனுடன் நடந்தாள்.
தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?
ம்ம்ம் ஆமா காதலிக்கிறேன்
அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல
அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா
ம்ம்ம்
நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல
நெடுநேரத்திற்கான ஓர் உரையாடல் மிக எளிதாக துவங்கியிருந்தது.
***
திருச்சி நகருக்கு வெளியே இருந்த அந்தக் கல்லூரியில் எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி. மூத்த மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் இரண்டாமாண்டு படிக்கும் அவள் மட்டும் தனியாக சுரத்தில்லாமல் நின்றிருந்தாள். கல்லூரி நிர்வாகிகளின் வழக்கமானப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. அவளுக்கு தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு வர சுற்றும் முற்றும் பார்த்தாள். பக்கத்தில் மேடையைப் பார்த்தபடி அவள் தோழிகள் மட்டுமே நின்றிருந்தனர். மீண்டும் அதே போலொரு உணர்வெழுந்து அவள் வலப்புறம் திரும்பிய போது புதிய மாணவர்கள் பக்கமிருந்த ஒரு தலை தன்னைத் திருப்பிக் கொண்டது. அவள் அவன் முதுகையே பார்த்தபடியிருக்க, கொஞ்ச நேரத்தில் அவன் தன் முகத்தை அவள் பக்கம் மெதுவாக திருப்பியதும் அவளுக்குள் வேகமாக அதிர்ச்சி பரவ ஆரம்பித்தது.
***
அவனிடம் காதலைப் பகிர்ந்துவிட்ட மகிழ்ச்சியிருந்தாலும், வீட்டில் எப்படி சொல்லுவது என்கிற குழப்பத்தோடு இருந்தவளை அன்று மாலை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
எனக்கு எங்க வீட்ல எப்படி சொல்றதுன்னுதான் பயமா இருக்குங்க. எங்கப்பா வேற சீக்கிரமா என் கல்யாணத்த முடிச்சிடனும்னு தீவிரமா மாப்பிள்ள தேடிட்டு இருக்கார்
இப்போதான மாப்பிள்ள தேட ஆரம்பிச்சிருக்காங்க. ஜாதகமெல்லாம் பொருந்தி நல்ல வரம் அமையறதுக்கு எப்படியும் இன்னும் ஒரு வருசம் ஆகிடும். அதுக்குள்ள சொல்லிடலாம்
ப்ச். புரியாமப் பேசாதீங்க. இந்த மார்ச்சுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஜாதகத்துல இருக்காம். அதனால இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள முடிச்சிடனும்னு எங்கப்பா சொல்லிட்டு இருக்கார். இந்த வாரம் நான் வீட்டுக்குப் போகும்போது சொல்லிடலாம்னு இருக்கேன். ஆனா வேற ஜாதினு தெரிஞ்சதும் எங்கப்பா கோபப்படறதையோ, எங்கம்மா அழறதையோ என்னாலத் தாங்க முடியாது. அதான் உங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமானு யோசிக்கிறேன்
இங்க பாரு. உங்க அப்பா கிட்ட நேர்ல வந்து பேசறதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. ஆனா அதுக்கு முன்னாடி மொதல்ல எங்க வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கறது நல்லதுனு நெனைக்கிறேன். எனக்கு இப்போதான் இருபத்தஞ்சு வயசு முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு வருசம் போனாதான் எங்க வீட்ல இந்தப் பேச்சே எடுக்க முடியும். அதனாலதான் சொல்றேன். நீ எப்படியாவது உங்க வீட்ல கல்யாணத்த மட்டும் இன்னும் ஒரு வருசம் தள்ளிப் போடு. மீதியெல்லாம் நல்லதா நடக்கும்
அவள் செல்பேசி சிணுங்கியது. அவளுடைய அப்பாதான்.
சொல்லுங்கப்பா
நல்லாருக்கியாம்மா?
நல்லாருக்கேன்ப்பா. அம்மா எப்படியிருக்காங்க
ம்ம்ம் நல்லாருக்கா. அப்புறம் இந்த வாரம் ஊருக்கு வந்துட்டுப் போம்மா. ஒரு வரன் வந்திருக்கு. ஞாயித்துக்கிழம பொண்ணு பாக்க வர்றோம்னு சொல்லிட்டாங்க. நானும் சரினு சொல்லியிருக்கேன்
***
கல்லூரி ஆரம்பித்து மூன்று மாதமாய் அவன், அவளிடம் பேசுவதற்கு முயற்சி செய்வதும் அவனைப் பார்த்தாலே அவள் விலகிப் போவதும் தொடர்ந்தபடியிருந்தது. அவளைக் காலையில் வந்து விடுவதற்கும், மாலையில் வந்து அழைத்துப் போவதற்கும் அவளுடைய அப்பா வந்துவிடுவதால், விடுதியில் தங்கியிருந்த அவனுக்கு அவளைத் தனியாக சந்திக்க கல்லூரி மட்டுமே ஒரே இடமா இருந்தது. ஆனால் அதையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் எல்லா வகுப்புகளும் அசைன்மெண்டிலும், தேர்விலும் பின்னப்பட்டிருந்தன. டீ, லஞ்ச் ப்ரேக் எதற்கும் அவள் கேண்டீன் பக்கம் வருவதில்லை. அவள் விலகலைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அன்று லஞ்ச் ப்ரேக்கில் அவள் வகுப்புக்குள் நுழைந்தான். அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தாள்.
ஏன் இப்படி லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க? உன் கூட இருக்கனும்னுதான் இந்த காலேஜ்லயே வந்து சேர்ந்தேன். என் கூட ஒரு பத்து நிமிசம் பேசக் கூட உனக்கு விருப்பமில்லையா?
கண்ணீர் வர வர அதனைத் துடைத்தபடியே அமைதியாக இருந்தாள். அவள் தோழிகள் எல்லோரும் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருக்கவும்,
அவள் அழுவதைக் காணச்சகியாதவனாய் ஈவினிங் கேண்டீன்ல வெயிட் பண்றேன். ஒரு பத்து நிமிசம் வந்துட்டுப் போ. ப்ளீஸ்
மாலை கேண்டினில் அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. அவள் தந்ததாய்ச் சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனாள் அவள் தோழியொருத்தி
***
அந்த வெள்ளிக்கிழமை அவளை வைகை எக்ஸ்பிரசில் மதுரைக்கு அனுப்பி வைக்க எக்மோர் சென்றான். கவலையுடன் இருந்தவளை எதுக்கிப்போ இவ்ளோ சோகமா இருக்க? இப்போ என்ன பொண்ணு பாக்கதான வர்றாங்க. வரட்டும். நீ மாப்பிள்ளயப் பிடிக்கலன்னு சொல்லிடு. அட்லீஸ்ட் இன்னும் ஒரு ஆறு மாசமாவது வெயிட் பண்ணு. அதுக்குள்ள எங்க வீட்ல பெர்மிஷன் வாங்கிட்றேன்
நானா வெயிட் பண்ண மாட்டேன்னு சொல்றேன்?
அவள் கஷ்டமெல்லாம் கோபமாக வந்தது.
சரி சரி இந்த டைம் போயிட்டு வா. நான் அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது எங்க வீட்ல சொல்லிட்றேன்
தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தான். ரயில் நிலையம் விட்டு வெளியே வருவதற்குள் அவன் செல்பேசிக்கு அழைப்பு வந்தது, அவன் அக்காவிடமிருந்து.
சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்தவன் உங்க கம்பனில கங்கானு புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்காம். முடிஞ்சா விசாரிச்சு வச்சுக்கோ என்று அவன் அக்கா சொன்னதும் குழம்பினான்.
எதுக்கு?
நீ தான் லவ் பண்றதுக்கு பொண்ணு கெடைக்கலன்னு சொல்லிட்டு இருந்தியே அதுக்குதான்
கொஞ்சம் தெளிவா சொல்றியா?
இல்லடா நம்ம சித்தப்பா அவருக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் பொண்ணுக்கு உன்னக் கேட்கிறாங்கனு சொல்லி அப்பாகிட்ட பேச வந்தாங்களாம். அப்பா இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்னு சொல்லிட்டாங்க போல. ஆனா பொண்ணு வீட்லையும் இன்னும் ரெண்டு வருசம் கழிச்சே வச்சிக்கலாம், ஜாதகப் பொருத்தம் மட்டும் பாத்துக்கலாம்னு கேட்ருக்காங்க. கடசில ஜாதகமெல்லாம் பொருந்தியிருக்காம். பொண்ணும் உங்க கம்பனிலதான் ஜாய்ன் பண்ணியிருக்காளாம். அதான் ஒரு இன்ஃபர்மேஷன் கொடுக்கலாமேனு கால் பண்ணினேன். விளக்கம் போதுமா?
அவனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. கோயம்பேட்டுக்குக் கிளம்பினான் கோவை பேருந்தைப் பிடிக்க
***
அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் அவனுக்கு அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது. இந்தக் காரணத்துக்காக தான் அவள் அவனை தொடர்பு கொள்ளாமல் விலகி விலகிப் போகிறாள் என்பது புரிந்துதான் அவளோடு நெருங்கியிருக்க இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தான். ஆனால் அவனுக்கு அது புரியாதது போலவும், அதனைப் புரிய வைப்பதாகவும் நினைத்துக் கொண்டு ஏழு பக்கத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். லூசு லூசு என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவளை கல்லூரியில் வந்து விட்டுப் போனதும் அவளுடைய அப்பாவை பைக்கில் தொடர்ந்தான். அந்த ஏரியாவில் குறுக்கும் நெடுக்குமாக பிரிந்த சாலைகளில் ஏதோ ஒன்றின் மத்தியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் அவர். கொஞ்சம் நேரம் கழித்து அதே வீட்டுக்குள் அவனும் நுழைந்தான்
***
கோவையில் தன் வீட்டிற்குப் போனதும் அவனுடைய சித்தப்பா வந்து போன விசயத்தை அவனுடைய அம்மா ஆர்வமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். கோனியம்மன் கோவிலில் வைத்து அந்தப் பெண்ணையும் ஒருமுறைப் பார்த்துவிட்டதாகவும் அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறாளென்றும் பெருமையாக அவன் அம்மா சொல்லிக் கொண்டேபோக, தன்னுடையக் காதலைத் தன்னைப் பெற்றவர்களிடம் சொல்லுவது சினிமாவிலோ, கதைகளிலோ உள்ளபடி அத்தனை எளிதானதில்லை என்று உணரத் துவங்கினான். அவனுடைய அப்பாவும் அவனும் மட்டும் தனித்திருந்த மாலை நேரத்தில் எங்கேயோப் பார்த்தபடி ஒழுங்கில்லாத, இடைவெளிகள் நிறைந்த பேச்சில் தன் காதலைப் பற்றி சொல்லிவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தான். அவரோ அமைதியாக இருந்தார். அவருடையக் கோபங்களைப் பலமுறை எதிர்கொண்டு பழகிவிட்ட அவன், அதைப் போலொன்றையே எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவருடைய புரிந்துகொள்ள முடியாத மௌனம் வேதனையைக் கூட்டுவதாக இருந்தது.வேற சாதியில பொண்ணெடுத்தா நாளைக்கு நம்ம சாதி சனத்துல யாராச்சும் மதிப்பாங்களா? அவர் கொடுத்த மௌனத்தையே அவருக்கும் பதிலாகக் கொடுத்தான். அவனைப் போலவே அவருக்கும் இந்த மௌனம் வேதனையைக் கொடுத்திருக்கலாம். மொதல்ல அவங்க வீட்ல சொல்ல சொல்லு. அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னுப் பாப்போம் என்று மட்டும் சொல்லி வைத்தார். அதுவே அவனுக்கு பாதி சம்மதம் கிடைத்த மாதிரியிருந்தது. சந்தோசமாய் இந்த விசயத்தை அவளுக்கு சொல்ல நினைத்தவன் அங்கே அவளை பெண் பார்க்க வருகிற அவஸ்தையில் இருப்பாளென்பதால் அவளே அழைக்கட்டும் என்று காத்திருந்தான்
***
அவளுடைய அப்பாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவன், தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வந்த விசயத்தை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். எனக்கும் சந்தோசம்தான். மொதல்ல ரெண்டு பேருக்கும் படிப்பு முடியட்டும். ஆனா உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். மொதல்ல உங்க வீட்ல சம்மதம் வாங்குங்க. அதுக்கப்புறம் நானே உங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பா அம்மா கிட்டப் பேசறேன்.
சரிங்க. நான் எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு மறுபடி வர்றேன்
ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் அவன் வீட்டிற்குப் போக சத்திரம் பேருந்து நிலையம் வந்தான்.
***
[color=green:a3dcf614b5]அடுத்த நாள் மதியம் அவளிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும் அவசரமாய்க் கேட்டான்
ஏ என்னாச்சு?
ம்ம்ம் கல்யாணம் நிச்சமாயிடுச்சு
என்ன சார் பயந்துட்டீங்களா? ஒன்னும் ஆகல. அவங்க வரும்போது யாரோ தெருவுல வெறகு எடுத்துட்டுப் போனாங்களாம். சகுனம் சரியில்லனு கடமைக்கு வந்து பாத்துட்டுப் போயிட்டாங்க
அப்பாடா ஏ இன்னொரு விசயம். நான் இப்போ கோயம்புத்தூர்ல இருக்கேன் தெரியுமா?
என்ன விசேசம். சொல்லாமக் கூட போயிருக்கீங்க?
சென்னை வா ஒரு குட் நியூஸ் சொல்றேன்
அடுத்த நாள் அலுவலகத்தில் மீண்டும் அவர்கள் சந்தித்தபோது எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டான்
இப்போ சொல்லுங்க மேடம். நான் எப்போ மதுரை வந்து உங்கப்பாவ மீட் பண்ணனும்?
எங்க வீட்ல இப்படி பொண்ணுப் பாக்கறதுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டு இப்போ திடீர்னு நான் இந்த விசயத்த சொன்னா நான் காதலிக்கிறேன்ங்கற கோபத்த விட அவர்கிட்ட கடைசி நேரத்துல சொல்றேனேங்கற கோபம் அதிகமா இருக்குமோனு பயமா இருக்கு
சரி நானே உங்கப்பாகிட்ட பேசவா?
இல்லங்க. நேர்ல சொல்றதுக்கு எனக்கே ரொம்ப தயக்கமா இருக்கு. இதுல நீங்க அங்க வந்து எங்க ஊரப் பத்தி உங்களுக்குத் தெரியாது
அப்போ எப்படிதான் சொல்றது?
ம்ம்ம் எல்லாத்தையும் லெட்டரா எழுதியனுப்பலாம்னு இருக்கேன்
அது அவ்வளவு மரியாதையா இருக்காது. உனக்கு நேர்ல பேசறதுக்கு தயக்கமா இருந்தா எல்லாத்தையும் லெட்டரா எழுதி அடுத்த தடவ ஊருக்குப் போகும்போது நேர்லயே உங்கப்பாகிட்ட கொடுத்துடு
ம்ம்ம் அப்படிதாங்க பண்ணனும்
இன்னும் என்ன வாங்க போங்க் னே சொல்லிட்ட
&