Billgates
10th January 2008, 05:33 PM
http://in.tamil.yahoo.com/News/Regional/0801/10/1080110032_1.htm
பிரபல நடிகர் பாண்டியன் மரணம்
மதுரை (ஏஜென்சி), 10 ஜனவரி 2008 ( 16:08 IST )
பிரபல தமிழ் நடிகர் பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரில் இன்று மரணமடைந்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ' மண்வாசனை ' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பாண்டியன்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பாண்டியனுக்கு புதுமைப் பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர் வேறு சில தொழில்களில் ஈடுபட்டார்.அத்துடன் நடிகர் பாண்டியன் கடந்த 2001 ம் ஆண்டு முதல் அதிமுகவிலும் சேர்ந்து அக்கட்சிக்காக பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வந்தார்.
இந்நிலையில் அவருக்கு குடல்வால் மற்றும் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதோடு, ஈரலும் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இருப்பினும் அவர் கடந்த சில நாட்களாக இந்நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதனையடுத்து அவர், நேற்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு ஹெபடிடிஸ் வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை 10 மணியளவில் மரணமடைந்தாதக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது மறைவிற்கு தமிழ் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நடிகர் பாண்டியன் மறைவிற்கு ஆழந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துள்ளதோடு, கட்சிக்காக அவர் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்துள்ளார்.
பாண்டியனின் இறுதிச் சடங்கு நாளை மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது. .
MAY HIS SOUL REST IN PEACE