pavalamani pragasam
31st December 2004, 12:02 AM
Last week I read in “The Hindu” about a Texas woman who had her dead cat cloned at a cost of rs.22 lakhs. Yesterday’s editorial again spoke about the incident decrying the practice of cloning pets, clinching it thus: “In any case, isn’t it better to cherish memories than to chase an illusion by trying to recreate a much-loved pet?” The inspiration for my following kavithai:
மறுபடியும்
துட்டுள்ள சீமாட்டி
கேட்டுப் பெற்றனள்
செத்துப் போய்விட்ட
செல்லப் பூனையின்
அசலான நகலினை
அன்போடு போற்றிட
ஐயகோ! இது என்ன சோதனை!
ஐயங்கள் செய்யுதே வாதனை!
மாண்ட உறவினை,
மனைவியை, மகனை,
மற்றும் நண்பனை
மறுபடியும் பிறப்பித்து
தொடரும் கதையினால்
தொடராதோ குழப்பமே?
விதியோடு விளையாட
மதி கொண்ட கிறுக்கிலே
மரிக்குமோ ஒரு துன்பம்?
பிறக்குமோ மறு துன்பம்?
வினையாகும் விஞ்ஞானம்
விளைவிக்கும் விபரீதம்
மற்றுமொரு மும்தாஜால்
மறையுமே தாஜ்மகால்
அநித்தியம் அற்றபின்
அர்த்தமென்ன வாழ்விலே?
அடுத்த பிறவியேது?
அனுபவத்தின் புதுமையெங்கே?
ஆழ்துயரின் அழகேது?
அழியாதோ அகிலமே
விரவுகின்ற வெறுமையில்?
மறுபடியும்
துட்டுள்ள சீமாட்டி
கேட்டுப் பெற்றனள்
செத்துப் போய்விட்ட
செல்லப் பூனையின்
அசலான நகலினை
அன்போடு போற்றிட
ஐயகோ! இது என்ன சோதனை!
ஐயங்கள் செய்யுதே வாதனை!
மாண்ட உறவினை,
மனைவியை, மகனை,
மற்றும் நண்பனை
மறுபடியும் பிறப்பித்து
தொடரும் கதையினால்
தொடராதோ குழப்பமே?
விதியோடு விளையாட
மதி கொண்ட கிறுக்கிலே
மரிக்குமோ ஒரு துன்பம்?
பிறக்குமோ மறு துன்பம்?
வினையாகும் விஞ்ஞானம்
விளைவிக்கும் விபரீதம்
மற்றுமொரு மும்தாஜால்
மறையுமே தாஜ்மகால்
அநித்தியம் அற்றபின்
அர்த்தமென்ன வாழ்விலே?
அடுத்த பிறவியேது?
அனுபவத்தின் புதுமையெங்கே?
ஆழ்துயரின் அழகேது?
அழியாதோ அகிலமே
விரவுகின்ற வெறுமையில்?