PDA

View Full Version : JAYA TV



subanrao
3rd December 2007, 06:55 AM
WHAT DO U THINK ABOUT JAYA TV PROGRAMMES?WHICH PROGRAMME DO U LIKE?

saradhaa_sn
4th December 2007, 12:49 PM
WHAT DO U THINK ABOUT JAYA TV PROGRAMMES?WHICH PROGRAMME DO U LIKE?

'ஜெயா டி.வி.'யில் வரும் நிகழ்ச்சிகளில்....

** ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் நடிகை குஷ்பு நடத்தும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி, ரொம்ப காலமாக தொய்வில்லாமல் நடந்து வரும் ஒன்று. பலருடைய மனதைக்கவர்ந்த நிகழ்ச்சி.

** திங்கள் முதல் வெள்ளி வரையில், தினமும் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒளிபரப்பாகும் 'தேண்கிண்ணம்' நிகழ்ச்சி. அருமையான, காணக்கிடைக்காத பழைய பாடல்களின் தொகுப்பு.

** இவற்றுக்கு அடுத்து பார்ப்பதென்றால், விஜய் ஆதிராஜ் நடத்தும் 'ராகமாலிகா' இசை நிகழ்ச்சி. இதுவும் ரொம்ப காலமாக நடந்து வருகிறது. இருப்பினும் சுவாரஸ்யமாக போகிறது. இதே சேனலில் எஸ்.பி.பி.நடத்தும் 'என்னோடு பாட்டுப் பாடுங்கள்' நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யம் குறைவு.

பெண்களை உயர்த்துவதாக சொல்லிக்கொண்டு இவர்கள் நடத்தும் 'மகளிர் மட்டும்' நிகழ்ச்சி, உண்மையிலேயே மகளிரை மட்டம் தட்டும் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் பெண்களுக்குள்ள் மதிப்பை குறைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உருப்படியாக எதுவுல் இல்லாமல் வெறும் கூத்தடிப்பு நிகழ்ச்சி.

இவற்றையும், மெகா சீரியல்களான ரோஜா, கிரிஜா, கல்கி போன்றவற்றையும் நீக்கி விட்டால், மற்றபடி முழுக்க முழுக்க அரசியல் நெடிதான். அரசியலுக்கென்றே பல்வேறு நிகழ்ச்சிகள். பெரும்பாலான டிவி சேனல்கள் கட்சி சார்புடையதாக இருந்தபோதிலும் கூட, கட்சி விஷயத்துக்காக அதிகம் நிகழ்ச்சி நடத்துவது ஜெயா டிவிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செய்திகளை எடுத்துக்கொண்டால் கூட, நாட்டில் எவ்வளவு முக்கிய விஷயங்கள் நடந்தபோதிலும் இவர்கள் தலைப்பு செய்தியாக சொல்வது, கட்சித்தலைவி ஜெயலலிதா என்ன அறிக்கை விட்டிருக்கிறார் என்பது பற்றிதான். முழுக்க முழுக்க 'மைனாரிட்டி தி.மு.க.அரசை' சாடும் விஷயங்கள்தான். அ.தி.மு.க. கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை முக்கிய இடம் பெறும். (அதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பிரச்சினைகள் முழுக்க, ஏதோ கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முளைத்தது போல இவர்கள் சித்தரிக்க முயல்வதுதான்). செய்திகள் கூட மக்களுக்காக என்பதை விட கட்சிக்காரர்களுக்கே என்பது போல தோன்றும் வகையில், கட்சித்தலைவி, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவதை ஒரு முக்கிய விஷயம் போல சொல்வதும், தலைவியை கட்சியின் எந்தெந்த செயலாளர்கள் சந்தித்து, பிறந்த நாள், திருமண நாள் ஆசி பெற்றனர் என்பதை விலாவரியாக காட்சியுடன் விவரிப்பதும்... (இதெல்லாம் பொது மக்களுக்கு தேவையா?). அத்துடன் போனால் போகிறதென்று சில பொதுவான செய்திகள்.

இது போக வாராவாரம் 'ரபி பெர்னார்ட்' நடத்தும் 'நேர்முகம்' நிகழ்ச்சியில், மத்திய மாநில அரசுகள் செய்யும் திட்டங்களில் குறைகளை சொல்வதற்கென்று சில பிரமுகர்களை (பெரும்பாலும் அவர்கள் கட்சியினரே) கூட்டி வைத்து விவாதம் (என்ற பெயரில்) நடத்துவது... இதுதான் அந்த சேனலின் சிறப்பு அம்சங்கள்.

Sanjeevi
4th December 2007, 01:19 PM
Some song oriented programmes in Jeya TV are good such as "Sokkuthey Manam", "ThEn Kinnam" and "Ennodu PAttu PAdungal"

Worst programme is News when AIADMK rules TN

subanrao
15th December 2007, 07:59 AM
what do u think abt engga area ulla vaangga and dance machi dance programmes?

aanaa
17th January 2008, 07:28 AM
இசைஞானி இளையராஜா வின் இசை நிகழ்ச்சி இனிதே மகிழ்வித்தது.
இளையராஜா வின் கிராமத்து மண்வாசனை தமிழ்மணம் செவியையும் கண்களையும் - புளகாங்கிதமடைய வைத்தது.
பாலா
சித்ரா
மனோ
கமல்
வாலி
கார்த்திக்
பவதாரணி

பார்த்திபன்
என பலர் விருந்தளித்தனர்

நன்றி ஜெயா TV

aanaa
17th January 2008, 07:16 PM
did anyone watch the above program

R.Latha
4th February 2008, 08:24 AM
[tscii:7d5b831ba2]Simran Thirai

Pyramid Saimira launches Simran’s small screen Entry!

The much awaited, revolutionary project from Pyramid Saimira Production Limited, "Simran Thirai" is a mini-mega, where Actress Simran will be playing the role of the protagonist each month. Yes it is a monthly one-story concept where the audience will get to witness the beginning of a new drama, as the protagonist's character and the story take a new dimension. Unlike the megas that run for years this is a groundbreaking concept. The Mini Megas are crisp, compact and condensed to entertain and not elaborate or exaggerate the heroine's plight. Actress Simran will be donning diverse roles in each of the serials.

Popular actress and director Sripriya directs the first serial based on the book "Vannathupoochchi Vaettai" by Writer Sujatha. It will be telecast shortly in Jaya TV during the 8.30PM- 9PM slot daily.

---

howeez this serial?[/tscii:7d5b831ba2]

saradhaa_sn
25th February 2008, 04:58 PM
எல்லாவற்றிலும் 'சீஸன் - 2' துவங்குவதுபோல, சமீபத்தில் முடிவடைந்த, 'லிட்டில் மாஸ்ட்டர் சீஸன் 2' ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் மீண்டும் துவங்கி விட்டது.

முதற்கட்டமாக, தமிழ க முக்கிய நகரங்களில் இருந்து சின்ன வயது திறமையாளர்களைத்தேர்வு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுத்து சென்னையில் நடக்க் இருக்கும் தேர்வுப்போட்டிக்காக தேர்வு செய்யும் நிகழ்ச்சி. கோவையில் நடந்தது நேற்று ஒளிபரப்பானது.

இரண்டு நடுவர்கள் யார் தெரியுமா...?. சமீப காலத்தில் இருவேறு பிரபலமான நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த

'ராகவ் & பிருத்விராஜ் (பப்லு)' தான் அவர்கள் இருவரும்.

பிருத்வி, இதுதான் உங்களுக்கு அழகு. நீங்களே தீர்ப்பு சொல்லும் இடத்தில் இருக்க வேண்டியிருக்க, நீங்கள் பார்த்து வளர்ந்த பையன்களிடமெல்லாம் நீங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா?.

Keep it up..

Shakthiprabha.
25th February 2008, 08:20 PM
I dont watch tv much.

but I AM A GREAT FAN OF

jayatv's

THEN KINNAM. miss pannaama parpen (if i have to go out during the day, I watch at nights )

p.s: SUNMUSIC telecasts good 80z / 70z song from 11.00 pm onwards at night :)

Arthi
26th February 2008, 03:41 PM
Popular actress and director Sripriya directs the first serial based on the book "Vannathupoochchi Vaettai" by Writer Sujatha. It will be telecast shortly in Jaya TV during the 8.30PM- 9PM slot daily.


O YEAH, I HAD READ THIS NOVEL OF SUJATHA'S, UNFORTUNATELY CAN'T VIEW THE SERIAL, THE CONCEPT IS A BIT DIFFERENT COMPARED TO AGE OLD STEREO TYPE SERIALS

selvakumar
3rd March 2008, 11:56 AM
Yesterday I watched the dance program for 2 mins. Raghav and Prithvi are the judges.

Prithvi indirectly commented about simbu while he was about to criticize a girl's dance. :rotfl2: Looks like, the problem b/w simbu and prithvi is not a fake at all. :lol:

Simbu voda adutha padathula prithvi kku ethira punch dialogue ethir paarkalaam :smile2:

aanaa
2nd April 2008, 06:30 PM
மறந்து போன சினிமா பாடல்கள்

பல ஆண்டுக்கு முன், வெளியான படங்களின் பாடல்களை கேட்க வேண்டுமா? அப்படியானால் ஜெயா சேனலில், திங்கள் முதல், வெள்ளி வரை காலை 9.30க்கு ஒளிபரப்பாகும் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை மறக்காமல் பாருங்கள். இந்த நிகழ்ச்சி 650 நாட்களை தாண்டி வெற்றிநடை போடுகிறது. மெகா "டிவி'யில், அமுத கானம் என்ற பெயரில் ஆதவன் அழகு தமிழில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலும் அருமையான பழைய தமிழ்ப்பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

R.Latha
5th May 2008, 08:04 AM
ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அலைபாயுதே' தொடர் 100-வது எபிசோடை தொடுகிறது.

மூன்று சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த தொடரில், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேராகும்.

மூத்தவளான பைரவி தனது குடும்ப வறுமையை போக்கும் பொருட்டு, கணவனை குறுக்கு வழிக்கு செல்லத் தூண்டுகிறாள். கணவனான பால்பாண்டியும் தீயவர்களின் சகவாசத்தில் குறுக்கு வழியில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். குறுக்கு வழியில் சென்ற பால்பாண்டியை கூடிய சீக்கிரம் கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்ள, பைரவி கவலை அடைகிறாள். பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை, தனது கணவன் திருந்த வேண்டும் என்பதற்காக பைரவி போராடிக் கொண்டிருக்கிறாள்.

இரண்டாவது சகோதரி கண்ணம்மாவின் வாழ்க்கை போராட்டம் வேறுவிதமானது. கலெக்டரான ராஜேந்திரனை மணந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவின் வாழ்க்கையில், வர்ஷா என்ற பெண் மூலம் சோதனை ஆரம்பிக்கிறது.

வர்ஷா ராஜேந்திரனின் ஆசைநாயகியாக கண்ணம்மாவின் வீட்டுக்குள் நுழைய, கண்ணம்மாவிடம் டைவர்ஸ் கேட்டு, ராஜேந்திரன் அவளை விதம் விதமாய் கொடுமைப்படுத்துகிறான். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தனது மனைவி என்ற ஸ்தானத்தை பறிகொடுக்க மறுத்தவள், தனக்கு துரோகம் செய்த கணவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டி, டைவர்ஸ் கொடுக்காமல் தனது ஐந்து வயது மகனோடு போராடிக்கொண்டிருக்கிறாள்.

மூன்றாவது சகோதரி பாரதியின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது. பாண்டிச்சேரியில் இருந்து, மலேஷிய மாப்பிள்ளையான ஸ்ரீகாந்தை மணந்து மலேஷியா செல்கிறாள். அவளின் புகுந்த வீடு அவளது கற்பையே அடமானம் வைக்கும் அளவுக்கு தரக்குறைவாக நடந்து கொள்ள, பாரதி அந்த குடும்பத்திடம் இருந்து தப்பி இந்தியா வந்து அக்கா பைரவி வீட்டில் அடைக்கலமாகிறாள், அங்கும் தனது கணவனின் தொல்லைகள் தொடர, தனது பழைய காதலன் கணேஷின் வீட்டில் தஞ்சம் புகுந்து, தனது நிம்மதியான எதிர்காலத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறாள்.

அடுத்து ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சிக்கு கொண்டு போகும் என்கிறார், தொடரின் இயக்குனர்

aanaa
12th May 2008, 06:26 PM
ஜெயா டிவியில் மே 5 முதல் வார நாட்களில் இரவு 9 மணிக்கு வருகிறது காமெடி காலனி. கே.பாலசந்தர் காமெடியை மறுபடியும் சீரியலாக கொண்டு வந்துள்ளார். மாளவிகா, சச்சு, பாலாஜி என்ற பெரிய பட்டாளமே டைரக்டர் டி.ரங்கநாதனின் வழிகாட்டுதலில் சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றனர்.

கே.பி.,யின் லோகாவில் டிஜிட்டல் மாற்றம். ஆனாலும் முதல் குறளும் முன்பிருந்த இசையும் மாறவில்லை. எடுத்தவுடன் ஒரு ஜோக். பின் தொடர்வது டைட்டில். அதைத் தொடர்ந்து தொடர், இடைவெளி, பின் கடைசியில் மறுநாளின் டிரைய்லர். பின்னணி சிரிப்பு என்பது எல்லாரும் ஒரே மாதிரி பயன்படுத்துவர். அந்த சிரிப்பு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது. இனி எல்லாரும் மாற்றுவார்கள். ஒவ்வொருத்தரும் வித்தியாசமான கேரக்டர்கள், அறிமுகப் படலமே பிச்சு வாங்குது. தாலிய காணோம், கடவுளே கடவுளே என அலறியபடி எழும் மாளவிகா அது தன் கழுத்தில் இருப்பதை கண்டு கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லி அறிமுகமாகிறார். ஒரு புது யுக்தியை புகுத்தியுள்ளனர்.

யோசிப்பு, கோபம், ஆச்சர்யம் இப்படி உணர்ச்சிவயப்படும் கேரக்டர்கள் மேல் ஒரு லென்ஸ் வைக்கப்பட்டு நபரின் முகம் பெரிசு, சிறிசு, கோணல், வீங்கல் என பலபல பரிமாணங்கள் எடுத்து சிரிக்க வைக்கிறது. சில நடிகர்கள் லென்ஸ் பார்வைப்படும் போது பல நடிகர்களின் முகங்களை பார்க்க முடிவது கண்டுபிடி கண்டுபிடி பாணி க்விஸ் சிறப்பு. பாரதியார்தாச தாத்தா நல்ல விஷயங்களை நவில்கிறார். டாரட் ரீடிஸ், கரி நாக்கு, க்ரிஸ்டல் பால் ரீடிங் என பலதும் செய்யும் பெண். வாண்டுகள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆல் ஏஜ் கூட்டம். ஐயோ, அந்த ரூல்ஸ் செக்யூரிட்டியும், அவரிடம் வந்து பண்ணும் பால் பையனும் பலே, பலே! தகவல் அறியும் சட்டம் உள்ளிட்ட நடப்பு விஷயங்கள் அனைத்து அங்கங்கே வருகிறது. அரைமணி ஆனந்தமாய் சிரிக்கலாம் வாங்க காமெடி காலனிக்கு!

R.Latha
21st May 2008, 08:10 AM
ஜெயா டிவியில் . செவ்வாய் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது `என்ன பொருத்தம்' நிகழ்ச்சி.

சிறந்த ஜோடிகளை தேர்ந்தெடுத்து, அவர்களிலும் சிறந்த ஒரு ஜோடியை கவுரவிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இதற்கென சென்னை, கோவை, மதுரை நகரங்களில் சிறந்த ஜோடிகளுக்கான தேர்வு நடந்தது. இந்த நகரங்களில் சிறந்த தம்பதிகளுக்கான போட்டி நடந்தபோது சுற்றுப்புறங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஜோடிகள் கலந்து கொண்டார்கள்.

மூன்று மாவட்டங்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வடிகட்டியதில் இறுதியாக எஞ்சியிருந்தது 10 ஜோடிகள் மட்டுமே. இந்த 10 ஜோடிகளும் தங்களில் சிறந்த ஜோடி யார் என்பதை நிரூபிக்கும் இறுதிப் போட்டிக்காக சென்னை வந்திருந்தார்கள். சென்னை சோவியத் கலாச்சார மைய அரங்கில் தங்களைப் பற்றிய முன்னோட்டங்கள், விருப்பு, வெறுப்புகள், தம்பதியர்க்குள்ளான புரிதல் தன்மை பற்றி மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த 10 ஜோடிகளில் 3 ஜோடி காதல் மணம் புரிந்தவர்கள்.

போட்டியின்போது "கணவரை எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று மனைவியரிடம் கேட்கப்பட்டது.

"உங்கள் மனைவி எப்படி?'' என்று கணவர்களிடம் கேட்டார்கள்.

சிலர் யோசிக்காமல் சட்டென பதில் தந்தார்கள். சிலர் தங்கள் `பார்ட்னரை' கலந்து பதில் சொன்னார்கள்.

இந்த போட்டி இவர்களில் பல ஜோடிகளை நண்பர்களாக்கியிருக்கிறது. "போட்டிக்கு வந்த இடத்திலும் எங்களுக்குள் நட்பு பலப்பட்டது. போட்டி வரும். போகும். வெற்றி பெறுவது யாரோ ஒரு ஜோடிதான்! ஆனாலும் நாங்கள் நண்பர்களாக நீடிப்போம்'' என்று புவனா என்ற பெண்மணி சொன்னபோது அரங்கு அதிர கைதட்டல். கரகோஷம் செய்தவர்கள் பட்டியலில் இவரது கணவர் விக்னேஷும் இருந்தார்.

மதுரையில் இருந்து வந்த அழகர்சாமி - சிவமணி ஜோடியில் கணவர் தமிழ் ஆசிரியர். மனைவி குடும்பத்தலைவி.

"போட்டிக்காக வந்தாலும், சென்னை எங்கள் தேனிலவுப் பிரதேசமாகி விட்டது'' என்று வெளிப்படையாகச் சொல்லி அரங்கை குலுங்க வைத்தார் ஆசிரியர் அழகர்சாமி.

காலை 9 மணிக்கு வீட்டை விட்டு போகிற கணவர் மறுபடி கதவைத் தட்டுவது இரவு 10 மணிக்கு மேல்தானாம். மனைவி என்பவள் கணவனின் அன்புக்கு எப்படியெல்லாம் ஏங்குவாள்? என்பதை போட்டிக்கு வந்த இந்த நாலு நாட்களில் என் கணவர் உணர்ந்து விட்டார். என் உணர்வுகளை பங்கிட மனம் விட்டுப்பேசக் கிடைத்த வாய்ப்பில், "சீக்கிரம் வீடு வர முயற்சிக்கிறேன்'' என்றார். இந்த போட்டி என் கணவருக்கு என் முக்கியத்துவம் உணர்த்தியிருக்கிறது. இது போதாதா?'' நெகிழ்ந்தார், ஒரு குடும்பத் தலைவி.

தம்பதியர்க்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்தன. நம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரபுநேபால் கூறும்போது, "ஒரு தம்பதியரை பார்க்கும்போது தோற்றத்தில் மட்டும் `என்ன பொருத்தம்' என்று மற்றவர்கள் சொல்லும்படி இருந்துவிடக்கூடாது. பழகும் தன்மை, நட்புறவு, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம், சின்ன விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அக்கறை இதெல்லாம் இணைந்த தம்பதிகள்தான் "என்ன பொருத்தம்!'' என்று கொண்டாடத்தக்கவர்கள். அப்படி ஒரு ஜோடியை கண்டறிவதே இந்த போட்டியின் நோக்கம்'' என்றார்.

saradhaa_sn
21st May 2008, 11:37 AM
காலை 9 மணிக்கு வீட்டை விட்டு போகிற கணவர் மறுபடி கதவைத் தட்டுவது இரவு 10 மணிக்கு மேல்தானாம். மனைவி என்பவள் கணவனின் அன்புக்கு எப்படியெல்லாம் ஏங்குவாள்? என்பதை போட்டிக்கு வந்த இந்த நாலு நாட்களில் என் கணவர் உணர்ந்து விட்டார். என் உணர்வுகளை பங்கிட மனம் விட்டுப்பேசக் கிடைத்த வாய்ப்பில், "சீக்கிரம் வீடு வர முயற்சிக்கிறேன்'' என்றார். இந்த போட்டி என் கணவருக்கு என் முக்கியத்துவம் உணர்த்தியிருக்கிறது. இது போதாதா?'' நெகிழ்ந்தார், ஒரு குடும்பத் தலைவி.

இந்தப்பகுதியைப் படிக்கும்போது, எனக்கு தெரிந்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது...

ஒருவர் சொன்னார்: "என்னுடைய இந்த விரைவான வளர்ச்சிக்கு என் மனைவிதான் காரணம்".

நண்பர் கேட்டார்: "எப்படி சொல்றீங்க?"

முதலாமவர் சொன்னார்: "அலுவலகத்தில் என்னுடைய மேஜையின் மேல் என் மனைவியின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அதைப்பார்க்கும்போதெல்லாம் 'வீட்டுக்கு சீக்கிரம் போகக்கூடாது' என்று தோன்றும். அதனால் அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி நிறைய வேலைகளைச் செய்ததால், எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த காலத்துக்கு முன்பே செய்து முடித்து, என் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று அதனால் என் புரமோஷனும் சம்பளமும் 'மள மள' வென உயர்ந்துவிட்டது".

aanaa
21st May 2008, 06:36 PM
saradha
:clap: :clap:

aanaa
26th May 2008, 07:40 PM
கர்நாடக இசை பிரியர்களுக்கு குஷி!



ஆன்மீகம், கர்நாடக இசை இரண்டிலும் ஜெயா சேனலை அடிக்க ஆளில்லை. இதோ கர்நாடக இசை பிரியர்களுக்கு, கோடையில் விருந்தளிக்க வந்துவிட்டது,

கிளிவ்லேண்டு தியாகராஜ உற்சவம். அமெரிக்காவில் உள்ள இந்த நகரில் நடந்த இந்த வைபவத்தில் பிரபலங்கள் பாடியதை ஐந்தாவது ஆண்டாக ஒளிபரப்ப தயாராகி விட்டது சேனல். ரவி கிரண், ஸ்ரீகாந்தன், நெய்வேலி சந்தான கோபாலன், ஓ.எஸ்.தியாகராஜன், எம்.எஸ்.ஷீலா, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், விஜயலட்சுமி உட்பட கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. நாளை ஆரம்பமாகிறது. திங்கள் முதல் வெள்ளிதோறும் காலை 6.30 மணி

aanaa
2nd June 2008, 07:17 AM
little master
I happened to watch this program - Sunday evening (?)

little kids
what a performance
great dance
:clap: :clap:

judges:
Raguram & Kuyili (the dancer introduced by KB)

R.Latha
9th June 2008, 09:56 AM
ஜெயா டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `தகதிமிதா' நிகழ்ச்சி 250 எபிசோடுகளை தொட்டிருக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் வேர்களே அதனுடைய சாஸ்திரிய கலைகள்தான். அப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரியமான பரத கலையை வளர்க்கவும் பாதுகாக்கவுமான கலைத் தொண்டுதான் `தகதிமிதா' நிகழ்ச்சி. உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே சாஸ்திரிய நடன கலை மீது அமைக்கப்பட்ட ஒரே கேம்ஷோவும் தகதிமிதா தான்.

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான பானுப்பிரியா, ஷோபனா, சுகன்யா, விமலா, இந்திரஜா, `அண்ணி' மாளவிகா, மோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

aanaa
9th June 2008, 06:08 PM
ஜெயா டிவியும் முகூர்த்தம் நெட் திருமண இணையதளமும் இணைந்து ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை 7.30 மணிக்குநடத்தும் முகூர்த்த நேரம் நிகழ்ச்சியை டிவி நடிகை மீராகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

எழுத்தாளர் பாலகுமாரன் திருமணம் மற்றும் இல்லற சம்பந்தமான விளக்கங்களை அளிக்கிறார். மனநல ஆலோசகர் முனீஸ்வர சாஸ்திரிகள் இந்து மத திருமணம் பற்றி பேசுகிறார். இந்து மத திருமண சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி சட்ட ஆலோசகர் விஜய் ஆலோசனை வழங்குகிறார். திருமணத்திற்கு முந்திய மனோதத்துவ ரீதியான ஆலோசனைகளை மன நல ஆலோசகர் சரஸ்வதி பாஸ்கர் வழங்குகிறார். திருமணம் சம்பந்தமான ஜோதிட ஆலோசனைகள், ஜாதககணிப்பு, ஜாதகத்தில் தோஷம் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய எளிய பரிகார ஆலோசனைகளும் முகூர்த்த நெட்டில் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம் சென்னையில் பிரமாண்ட சுயவரம் நிகழ்ச்சியையும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

aanaa
21st June 2008, 06:41 PM
ஜெயா பிளஸ் சானலில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஹலோ டாக்டர் இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு மணி நேரம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. நேயர்கள் தொலை பேசி வழியாக தங்களது சந்தேகங்களை கேட்கலாம். அவர்களுடைய நோய் குறித்த மருத்துவ ஆலோசனை விரிவாக சொல்லப்படும்.

தொகுப்பாளர் அன்றைய மருத்துவ தலைப்பு குறித்து நன்கு அறிந்து அதை ஒட்டிய கேள்விகள் மட்டுமே எழுப்புவார். இதன் மூலம் நேயர்கள் தங்கள் நோய் குறித்த முழு தகவல்களும் அறிந்து கொள்ள முடியும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பார்கள்.

aanaa
11th July 2008, 07:01 PM
Ennodu Pattu padungal -2 Grand Finale is on July 13th and 20 at 8 pm in Jaya TV. SPB, Director Vasanth and Music director Ramesh Vinayagam will be the Judges

aanaa
11th July 2008, 07:02 PM
HariGiri Assembly, aired on Jaya TV, weekdays, 19.00., will roll out its 50th episode this week. Hosted by Bosskey and Sethu, the show comes with many interesting segments. This is a show were the participant willingly put himself/herself to the ridiculing but comical bombardment of the duo and are also given a chence to retaliate. This show is a hit. Anu Hassan joins them as a special guest this week.

aanaa
11th July 2008, 07:04 PM
[tscii:08117c46a2]
Dance Jodi Dance,’ the dance show on Jaya TV, reaches its finals, to be aired on Wednesday,June 16th 21.30. Actor Suja and choreographer Nobel are the special judges who will review the performances of the contesting pairs. [/tscii:08117c46a2]

aanaa
23rd July 2008, 07:48 PM
டான்ஸ் ஜோடி டான்ஸ்



ஜெயா சேனலில், பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டி நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

23ம் தேதி இரவு 9.30 க்கு நடக்கும் நிகழ்ச்சியில், யாருக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு என்பது தெரிந்து விடும். நடிகர் ராம்ஜி தொகுத்து வழங்கும் இதில், சிறப்பு நடுவர்களாக நடிகை சுஜா, நடன இயக்குனர் நோபல் பங்கேற்கின்றனர்.

aanaa
23rd July 2008, 07:48 PM
ஜெயா சேனலில், லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 2 இறுதிப் போட்டி களை கட்டி விட்டது. முழுக்க முழுக்க குழந் தைகள் பங்கேற்கும் கலக்கல் நிகழ்ச்சியான இதில், ஆறு மாத கடும் போட்டிக்கு பின், இறுதிப் போட்டியில் பாடும் ஆறு , ஆடும் ஆறு குழந்தைகள் இருந்தனர்.

எந்தக்குழந்தைக்கு மகுடம்? எந்த குழந்தை மனதை கவர்ந்தது? வெற்றியா ளர்களை பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுத்தனர். நடன கலக்கல் களை இன்று இரவு 9 மணிக்கு பார்க்க மறக்காதீங்க.

aanaa
23rd July 2008, 07:48 PM
ஜெயா சேனலில், லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 2 இறுதிப் போட்டி களை கட்டி விட்டது. முழுக்க முழுக்க குழந் தைகள் பங்கேற்கும் கலக்கல் நிகழ்ச்சியான இதில், ஆறு மாத கடும் போட்டிக்கு பின், இறுதிப் போட்டியில் பாடும் ஆறு , ஆடும் ஆறு குழந்தைகள் இருந்தனர்.

எந்தக்குழந்தைக்கு மகுடம்? எந்த குழந்தை மனதை கவர்ந்தது? வெற்றியா ளர்களை பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுத்தனர். நடன கலக்கல் களை இன்று இரவு 9 மணிக்கு பார்க்க மறக்காதீங்க.

aanaa
23rd July 2008, 07:49 PM
தகதிமிதா

ஜெயா சேனலில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தகதிமிதாவின் 250வது நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

பிரபல நடிகைகள் தொகுத்து வழங்கிய, 1,500 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் 250வது நிகழ்ச்சி சமீபத்தில் பலர் முன்னிலையில் நேரடியாக நடந்தது. வைஜெயந்திமாலா பாலி பங்கேற்றார். இதில் பல நடனக்கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். இதை இன்று காலை 8 மணிக்கு காணலாம்.

aanaa
23rd July 2008, 08:03 PM
[tscii:c6b765626c]
LIFE HISTORY OF CRICKET PLAYER‘CHANDRASEKARAN.

Famous Cricket player Chandrasekar’s life history is going to be telecast through the Jaya Tv Channel. The history of the cricketer from his childhood days has been planned by the Channel. The Indian Team bowler’s achievements in various test matches in which he participated, all will be appearing in this slot. It is a 26-week programme will be broadcast on all Sundays at 11 Am.

The Director of this programme Mr. Haricharan said, “ this not a documentary but somewhat like a mini serial. Chandrasekar’s grand father, father and relatives are going to share their experiences with him and they will tell his activities and how he read the cricket. So they are going to show Chandrasekar as a Childhood, as a student, as a young chap and present Chandrasekar. Present man is Chandrasekar himself acting’.

So the programme will reach the viewers in a different angle.

[/tscii:c6b765626c]

aanaa
25th July 2008, 08:33 AM
[tscii:0d75dca75e]

"தகதிமிதா' -250 வது பகுதி

சாஸ்திரிய நடனக் கலைகளை மையமாக வைத்து ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "தகதிமிதா' நிகழ்ச்சி, நேயர்களின் சிறப்பான வரவேற்போடு 250 வது எபிúஸôடை எட்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகைகளும் நடனக் கலைஞர்களுமான ஷோபனா, பானுப்ரியா, சுகன்யா, விமலா, இந்திரஜா, மாளவிகா, மோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், இந்த நிகழ்ச்சியின் மூலம் பாராட்டும் பரிசும் பெற்று பிரபலமாகியுள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் 250-வது எபிúஸôடுக்கு வைஜெயந்திமாலா பாலி தலைமையேற்கிறார். பத்மா சுப்பிரமணியன், சித்ரா விஸ்வேஸ்வரன், சுதாராணி ரகுபதி, தனஞ்ஜெயன், சரஸ்வதி, பார்வதி ரவி கண்டசாலா, முரளிதரன், திவ்யசேனா, ஷீலா உன்னிகிருஷ்ணன், மதுசூதனன் போன்ற பிரபல நாட்டியக் கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் சிறப்பு நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
[/tscii:0d75dca75e]

aanaa
1st August 2008, 06:13 PM
நாம சங்கீர்த்தனத்தில் சிகரமாக இருப்பது அஷ்டபதி. அருள் நேர சிறப்பு நிகழ்ச்சியாக இதை ஜெயா சேனல், சனி, ஞாயிறு கிழமைகளில் காலை ஆறு மணிக்கு ஒளிபரப்புகிறது.

ஜெயதேவ சுவாமிகள் அருளிய, கீத கோவிந்த மகா காவியம் அஷ்டபதியை வழங்குவது, உடையாளூர் கல்யாணராம பாகவதர்.

aanaa
15th August 2008, 07:24 PM
நினை வலைகள்




இசைக்கென்று பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி.யின் புதிய படைப்பு நினைவலைகள்.

பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த வித்தியாசமான பேட்டி கலந்த பாடல் நிகழ்ச்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார்.

இந்த வாரம் நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 9 மணி நிகழ்ச்சியில் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா பங்கேற்கிறார். திரை இசையில் தன்னை கவர்ந்த பாடல்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் அவரது அனுபவத்தையும் இசையோடு பகிர்ந்து கொள்கிறார்.

aanaa
23rd August 2008, 07:44 AM
என்னோடு பாட்டுப்பாடுங்கள்-4




பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜெயா டிவியில் வழங்கும் "என்னோடு பாட்டுப்பாடுங்கள்'' நிகழ்ச்சியில் இளம் பாடகர், பாடகிகள், திருமணமான இல்லத்தரசிகள் என இதுவரை 3 பகுதிகள் அரங்கேறியுள்ளன.

இதன் வரிசையில் தற்போது மேடைக் கச்சேரிகளில் பாடுவதை தொழிலாக கொண்ட பாடகர், பாடகிகளுக்காக இப்பொழுது `டூயட் சீரிஸ்' என 4-வது பகுதி தயாராகிறது.

இன்று முதல் இந்த "டூயட் சீரிஸ்'' இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

aanaa
23rd August 2008, 07:49 AM
ஜெயா டிவியில் 20-20





புத்திசாலியான இளம் பெண்களுக்கு விரைவில் ஜெயா டிவியில் `20-20' எனும் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

`20-20' இது கிரிக்கெட் இல்லை! அதை விட சுவாரஸ்யமானது.

முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய ஒரு எளிமையான பொது அறிவுப் போட்டி.

ஒரே நேரத்தில் 20 பெண்கள் பங்கேற்க முடியும். ஆனால் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அப்படி வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உண்டு.

`அனு ஹாசன்' தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

aanaa
30th September 2008, 10:37 PM
ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் "ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் புதிய திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்களை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டின் சிறந்த டாக் ஷோவுக்கான "ராபா' விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி வரும் வாரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

aanaa
30th September 2008, 10:38 PM
இசைப் பிரியர்களைப் பெரிதும் ஈர்த்து வரும் ஜெயா டி.வி.யின் "சொக்குதே மனம்' நிகழ்ச்சி, வரும் வாரத்திலிருந்து புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. காலத்தால் அழியாத பல பாடல்களை அதே வசீகரத்துடன் ப்ரியா சுப்ரமணியம் குழுவினர் பாடி வருகிறார்கள்.

aanaa
30th September 2008, 11:08 PM
பிள்ளையார் சதுர்த்தியை வழக்கம் போல சேனல்கள் கொண்டாட, இந்த முறை ஜெயா "டிவி'யின் இரு நிகழ்ச்சிகள் மட்டும் தனியாக தெரிந்தன. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புக்கு ஏற்ப "இசை வாயில்' என்று ஒரு நிகழ்ச்சி வந்தது.

. நவ வாலிபர்கள் சிவப்பு, வெள்ளையில் ஒரே மாதிரி குர்தா அணிந்து வாத்தியங்களே இல்லாமல் பாடல்களை வாத்திய எபக்டில் பாடினர். புகழ்பெற்ற பாடல்களான "தாய் மண்ணே வணக்கம், மகாபாரத சீரியலின் டைட்டில் பாட்டு' என்று இவைகளோடு கர்நாடக மற்றும் சினிமா பாடல்களையும் பாடினர். அவர்கள் விதவிதமாய் வாயை அசைத்ததும், அசாமி இளைஞன் போல ஒருவர் இருந்ததும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித சிகை யலங்காரம் செய்து இருந்ததும், பாடுவதற்கேற்ப மைக் முன் நகர்ந்து வந்து பாடுவதும் போவதும், ஒரே அசைவினில் ஆடுவதும் என அசத்தினர். மாறுபட்ட முயற்சி என்பதால், ஜெயா "டிவி' அரங்கினை பேப்பர் மாதிரிகளை கொண்டு பல வண்ணங்களில் அமைத்திருந்தது. அவர்கள் பாடுமுன் விளக்குகள் அணைந்து அணைந்து எரிவதும், புகை கிளம்புவதும், இருட்டாய் இருப்பதும் என, தங்கள் பங்கிற்கு மாறுபட்டனர்.* உயரமாய் மைக், தலைக்கு மேல் மைக், முன்னாடி மைக் என மைக்கிற்கே ஏகப்பட்ட ஏற்பாடு.

aanaa
30th September 2008, 11:09 PM
ஜெயா சேனலில் ஞாயிறு தோறும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் குஷ்புவின் ஜாக்பாட் நிகழ்ச்சி, புதிய வண்ணமய அரங்குகளில் படம்பிடிக்கப்பட்டு,..

டிஜிட்டல் போர்டின் மூலம் இனி வரும் வாரங்களில் வசீகரிக்கும். ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த கேம்ஷோவுக்கு மவுசு கூடிக் கொண்டேயிருக்கிறது.

aanaa
5th October 2008, 02:20 AM
நவராத்திரி பிரமோற்சவம்

பிரம்மனால் தொடங்கி வைக்கப்பட்டது திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஸ்வாமி பிரம்மோற்சவம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தெய்வீகத் திருவிழா, இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டத்துடன் இணைந்து அமைகிறது.

அங்குரார்ப்பணம் (விதையிடுதல்), கொடியேற்றம், பெரிய சேஷ, சிறிய சேஷ, ஹம்ச, சிம்ம முத்துப்பந்தல், கல்பவிருட்ச, சர்வ பூபால, தந்தப்பல்லக்கு (மோகினி அவதாரம்), கருட, அனுமான், கஜ, சூர்ய, ப்ரபை, சந்திர ப்ரபை அசுவ ஆகிய வாகனங்களில் திருமலைத் தெய்வத்தின் அருள் உலாவும் தங்க ரதம், தேர்த் திருவிழா, சுக்ர தீர்த்தம், கொடியிறக்கம் மற்றும் நாள்தோறும் இடம்பெறும் ஸ்நபன திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுடனும் அற்புதமான பாசுரங்கள், பாடல்கள், வர்ணனைகள், தெய்வ திருக்காட்சிகளுடனும் திருவருள் திருவிழாவை வழங்கி வருகிறது, ஜெயா டி.வி.

aanaa
5th October 2008, 02:20 AM
நலம் தரும் நவராத்திரி



துர்கா, லஷ்மி, சரஸ்வதி என மூன்று தெய்வங்களை குறித்து விரதம் இருந்து வழிபாடு நிகழ்த்துவது `நவராத்திரி'யின் சிறப்பு.

இந்த தெய்வ வழிபாட்டுடன் இசைவழிபாடும் இணைகிறது. இதனை `நலந்தரும் நவராத்திரி' என்ற தலைப்புடன் வருகிற 9-ந் தேதி வரை வழங்குகின்றது ஜெயா டி.வி.

திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 5.30 மணிக்கும், ஞாயிறு மட்டும் காலை 6.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இசை வழிபாட்டை பாடகிகள் புஷ்பநாயகி, தீபிகா, சுபிக்ஷா, ரம்யா, கடலூர் ஜனனி, ஸ்ரீரஞ்சனி, காயத்ரி, பிரார்த்னா, சாய் சகோதரிகள், சிலோன் சகோதரிகள் நிகழ்த்துகின்றனர். தயாரிப்பு: ஜெயா டி.வி.

aanaa
5th October 2008, 02:21 AM
கிச்சு கிச்சு .காம்



ஜெயா டி.வி.யில் வியாழன்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வேடிக்கை வினோத நிகழ்ச்சி, கிச்சு கிச்சு.காம்.

சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வீகாலேண்ட் தீம் பார்க்கில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. கிண்டல் விளையாட்டுகள் ஜாலியாக படம் பிடிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் இடையிடையே திரைப்பட நகைச்சுவை காட்சிகளும் இடம்பெறும்.

aanaa
10th October 2008, 03:30 AM
ஜாக்பாட் தானா?

பெண்களுக்கான டாப் மோஸ்ட் கேம் ஷோ ஜெயா "டிவி'யில் குஷ்பூ வழங்கும் ஜாக்பாட். ஆனால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கறிவேப்பிலை கணக்காகவாவது ஒரு பெண்ணும் காணோம். காரணம், நல்ல காரணம் தான். அதில் ஒரு விசேஷம் உண்டு.

ஒரு விழிப்புணர்வு எபிசோடாக அது அமைந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதில் இருந்து மீண்டதோடு மற்ற குடிப்பழக்க அடிமைகளும், ""எங்களை போல மீள முடியும்'' என, மறைந்து நின்று அல்ல, ஜாக்பாட்டில் உரக்க சொன்னார்கள்.

"இது ஒரு வளரும் தன்மையுள்ள நோய். எதை எதை இழக்கக் கூடாதோ அவற்றை எல்லாம் இழக்கச் செய்யும் இந்த குடிப்பழக்க நோய்'' என்று அனுபவப்பட்டவர்கள் அறிவுறுத்தினர். "ஆல்கஹாலிக்ஸ் அனானமைஸ்' எனும் அமைப்பு குடிப்பழக்க அடிமைகளை அதில் இருந்து மீட்கிறது. இதன் போன் எண்கள்: 94434 41601, 94422 71601 மற்றும் 94431 82206. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்கள் இந்த அமைப்பு மூலம் விடுதலை பெற்று, இந்த அமைப்பை பற்றி பிரசாரம் செய்கின்றனர். ஒவ்வொரு வாழ்வின் நிலையிலிருந்து இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியவர்கள், காரணம், பட்ட அவதிகள், அமைப்பின் வழிகாட்டல், மீண்டது, இப்போது வாழும் வாழ்க்கை என ஆளுக்கு ஓரொரு கதையென சொன்னார்கள். இந்த உண்மை கதைகள் பலரையும் தன்னம்பிக்கை பெறவும், உஷாராக்கவும் நிச்சயம் மாறுதலை செய்தது. பெண்களே கலந்து கொள்ளாமல் இருபக்க அணிகளிலும் ஆண்களே இருந்தனர்.

ஒரு ஆண் தீய பழக்கத்திற்கு ஆளானால் முதலில் அதனால் பாதிக்கப்படுவது அவனது தாய், மனைவி, மகள் என குடும்பத்தின் பெண்கள்தான். ஆண்களே முழுமையாக பங்கு பெற்றாலும் இதுவும் பெண்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் சமுதாயத்திற்கான சிறப்பான சேவையாய் இந்த எபிசோட் இருந்தது.

R.Latha
22nd October 2008, 01:39 PM
நினைவலைகள்



இசைக்கென்று பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டிவியின் புதிய படைப்பு "நினைவலைகள்.''

பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்த வித்தியாசமான பேட்டி கலந்த பாடல் நிகழ்ச்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார். ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம். நாளைய நிகழ்ச்சியில் இளம் பாடகர் `பென்னி தயாள்' பங்கேற்கிறார். திரை இசையில் தன்னை கவர்ந்த பாடல்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடனான அவரது அனுபவத்தையும் இசையோடு பகிர்ந்து கொள்கிறார்.

R.Latha
22nd October 2008, 03:18 PM
சுந்தரி நீயும்...! சுந்தரன் நானும்...!'



"இந்தியக் கலாச்சார அடையாளத்தோடு பெண் தேடி வரும் அமெரிக்க மாப்பிள்ளை, ஜானகியை பெண் பார்க்கப் போகும் போது ஏற்பட்ட குழப்பத்தில் இடம் மாறி எதிர் வீட்டில் இருக்கும் கோகிலாவை பார்த்து விடுகிறான். அதனால் ஏற்படும் காமெடித் தோரணங்கள் தான் சிம்ரன் திரையின் `சுந்தரி நீயும்...! சுந்தரன் நானும்...!'

அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க விரும்பி கோகிலாவும், அவளது குடும்பத்தினரும் போடும் திட்டங்களை, ஜானகியும் அவளது குடும்பத்தினரும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதனை சிரிக்க வைக்கும் காட்சிகளுடன் படமாக்கி உள்ளனர்.

வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் `சிம்ரன் திரை'யின் 8-வது குறுந்தொடரான `சுந்தரி நீயும்...! சுந்தரன் நானும்...!' ஒளிபரப்பாகவுள்ளது.

சிம்ரனுடன் சதீஷ், தீபாவெங்கட், ஷைலஸா, ஷோபனா, கிரேஸி குமார், சாய்ராம், பிரியா, நாகலட்சுமி, அர்ச்சனா, சந்தானம், சுருளி மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

aanaa
25th October 2008, 08:38 AM
``தோஸ்த் படா தோஸ்த்'



ஜெயா டிவியில் `சரோஜா' படக்குழுவினரான வெங்கட்பிரபு, சிவா, பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் `சரோஜா' பட வெற்றிக்கான காரணங்களை சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மலேசியாவில் படமாக்கப்பட்டது.

திங்கள் மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
25th October 2008, 08:39 AM
`மாதவன் நம்ம ஆளு'



நடிகர் மாதவன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். "அலைபாயுதே'' முதல் "குரு என் ஆளு'' வரை நடந்த அனுபவங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி கல்லூரி மாணவிகளுடன் கலகலப்பாக கலந்துரையாடுகிறார்.

`மாதவன் நம்ம ஆளு' என்னும் இந்த நிகழ்ச்சி, ஜெயா டிவியில் திங்கள் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
25th October 2008, 08:41 AM
குரு-சிஷ்யன்




டைரக்டர் எஸ்.என்.சக்திவேல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் `சிம்ரன்திரை' தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவரது சீடரான மோகன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `சூப்பர்சுந்தரி' தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இரு தொடர்களையும் பிரமிடு சாய்மீரா நிறுவனம் தயாரித்து வருகிறது.

aanaa
1st November 2008, 07:52 PM
என்னோடு பாட்டுபாடுங்கள்




ஜெயா டிவியில் பிரபல பின்னணி பாடகர் டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியில் இளம்பாடகர், பாடகிகள் திருமணமான இல்லத்தரசிகள் என இதுவரை 3 பகுதிகள் அரங்கேறியுள்ளன.

இந்த வரிசையில் தற்போது மேடை கச்சேரிகளில் பாடுவதை தொழிலாக கொண்ட பாடகர், பாடகிகளுக்காக இப்பொழுது `டூயட் சீரிஸ்' என புதிய பகுதி உருவாக்கப்படுகிறது.

ரசிகர்களை இசைவெள்ளத்தில் மூழ்கவைக்கும் இந்த வார `டூயட் சீரிஸ்' எபிசோடின் சிறப்பு நடுவராக பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் பங்கேற்கிறார்.

பல சுவாரஸ்ய பின்னணியுடன் இன்று இரவு 8 மணிக்கு `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இதன் மறு ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
1st November 2008, 07:54 PM
[tscii:f05eb92442]
ஹாசினி பேசும் படம்'


ஜெயா டி.வி.யில் `ஹாசினி பேசும் படம்' ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

திரைப்பட நடிகை `சுஹாசினி' தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாரம் ராஜ×சுந்தரம் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்த `ஏகன்', திரைப்பட விமர்சனம் இடம் பெறுகிறது.

[/tscii:f05eb92442]

aanaa
8th November 2008, 08:19 PM
மூவி நெம்பர்-1


ஜெயா டிவியில் புதிய திரைப்படங்களின் தர வரிசையை சொல்லும் மூவி நெம்பர்-1 நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் புதிய கோணத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் வேறொரு கோணத்தில் வரப்போகிறது.

திரைப் படத்துறையில் நடக்கும் கதை விவாதம், நடிக - நடிகைகள் தேர்வு நடைபெறுவது எப்படி? என்பதையும், சினிமா படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுவாரசியமாக சொல்கிறார்கள்.

ஞாயிறுதோறும் காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
8th November 2008, 08:20 PM
நினைவலைகள்



ஜெயா டிவியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பகும் புதிய படைப்பு, `நினைவலைகள்'.

பிரபல பின்னணி பாடகர் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பேட்டி கலந்த பாடல் நிகழ்ச்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் வரும் வாரம் பாடகர் `திப்பு' பங்கேற்கிறார். திரை இசையில் தன்னைக் கவர்ந்த பாடல்கள், இசையமைப்பாளர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களோடு தனது அனுபவத்தையும் திப்பு பகிர்ந்து கொள்கிறார்.

aanaa
8th November 2008, 08:27 PM
[tscii:7a67651209]

Movie No.1

(Jaya TV, Sundays, 10.30)

Jaya TV’s reviews of Tamil films for the month of November will traverse a different path. Segments that cover the story-discussion stage of a film, the nitty-gritty involved in the choice of cast, interesting happenings at the shooting spot and so on, will be part of the programme . Don’t miss it.

[/tscii:7a67651209]

aanaa
8th November 2008, 08:27 PM
[tscii:ae11a80266]


Movie No.1

(Jaya TV, Sundays, 10.30)

Jaya TV’s reviews of Tamil films for the month of November will traverse a different path. Segments that cover the story-discussion stage of a film, the nitty-gritty involved in the choice of cast, interesting happenings at the shooting spot and so on, will be part of the programme . Don’t miss it.
Ninaivalaigal

(Jaya TV, Sundays, 21.00)

Singer Sriram anchors the show, which features popular singers and musicians, will focus on singer Tippu in its next edition. Tippu will talk about his favourite numbers and composers and pepper it with his interactions with them, and his experiences as a singer.
[/tscii:ae11a80266]

R.Latha
10th November 2008, 02:16 PM
மூவி நெம்பர்-1



ஜெயா டிவியில் புதிய திரைப்படங்களின் தர வரிசையை சொல்லும் மூவி நெம்பர்-1 நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் புதிய கோணத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் வேறொரு கோணத்தில் வரப்போகிறது.

திரைப் படத்துறையில் நடக்கும் கதை விவாதம், நடிக - நடிகைகள் தேர்வு நடைபெறுவது எப்படி? என்பதையும், சினிமா படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுவாரசியமாக சொல்கிறார்கள்.

ஞாயிறுதோறும் காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
15th November 2008, 06:45 AM
[tscii:708dfab68f]பிசினஸ் பிளஸ்


ஜெயா பிளசில், `பிசினஸ் பிளஸ்' என்ற பெயரில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு வர்த்தகச் செய்திகள் ஒளிபரப்பாகின்றன.

உலக பொருளாதாரம் முதல் உள்ளூர் வர்த்தகங்கள் வரை, அன்றாட அனைத்து வகையான வணிகப் பரிமாற்றங்கள் குறித்து முழுமையான செய்திகள் இதில் இடம்பெறுகின்றன.

உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக ஒப்பந்தங்கள், நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள், வங்கிகளின் செயல்பாடுகள், பங்குச் சந்தையின் ஏற்ற-இறக்கங்கள், தங்கம், வெள்ளி விலை நிலவரம் பல்வேறு நாடுகளின் பண மதிப்பீடுகள், மிïச்சுவல் பண்ட் நிலவரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன், சந்தைக்கு வரும் புதிய பொருட்கள் பற்றிய அறிமுகமும் இதில் இடம் பெறுகிறது.

பங்குச் சந்தை குறித்த பல்வேறு ஆய்வுகளுடன், இத்துறை சார்ந்த முன்னணி பகுத்தாய்வாளர்கள் வழங்கும் முன்வர்த்தகத்திற்கான பரிந்துரைகளும் நாள்தோறும் இச்செய்தியின் இடம்பெறுகின்றன.

இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த செய்திகள், தொடர்ந்து இரவு 10.30 மணிக்கும், நள்ளிரவு 1 மணிக்கும் ஜெயா பிளஸ்சில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.



[/tscii:708dfab68f]

aanaa
15th November 2008, 06:45 AM
ஜெயா டிவியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு சிறுவர்களுக்கான `ஏ டூ இசட் ஜஸ்ட் பார் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி 150-வது எபிசோடை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மாணவர்களின் கணிதத் திறமையை வளர்த்து அவர்களை கணிதமேதையாக்குவதே இந்த நிகழ்ச்சியின்நோக்கம்.

இந்த நிகழ்ச்சியுடன் கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் சிறுவர்களை இனம் கண்டு, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் `நாளைய மேதைகள்' என்ற பகுதியும் உண்டு. பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கீபோர்டு, மிருதங்கம், வயலின், வீணை போன்ற கர்நாடக இசை சம்பந்தப்பட்ட சிறுவர்களை இதன் மூலம் வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்துவதே இந்த பகுதியின் நோக்கம்.

aanaa
17th November 2008, 07:14 AM
Comedy Colony,one of the comedy serials that is being telecast through Jaya TV Channels from Mondays to Fridays is nearing its 100the episode today. The serial has a large number of viewers since, the comedy is written on the basis of problems that are handled in a comedy way. The actors in the serial range from young boys and girls to big experienced artistes of the film industry too. For example, a husband who always lives in his world being diverted by his wife to the reality of life. But this subject was handled with care but in a comedy way. One should have the capacity of the psychological approach to rectify such character and this Comedy Colony does all with a purpose of comedy.

aanaa
22nd November 2008, 07:32 PM
ஜெயா டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய இசை நிகழ்ச்சி, `சரிகம பேமிலி' வரும் 30-ந் தேதி ஞாயிறு முதல் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த இசை கொண்டாட்டம் 3 தலைமுறையினர் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அதாவது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மற்றும் அவர்களது 10 வயதுக்குட்பட்ட குழந்தையும் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 2 அணிகள் போட்டியிட, ஒரு அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

aanaa
28th November 2008, 09:01 PM
ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் "கவரி மான்கள்'. இதில் சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் உமா, நிர்ல், பிர்லா, சுஹாசினி, ராஜா, வினோத்ராஜ் உளளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பெரிய பணக்காரக் குடும்பம், சமூகத்தில் மரியாதையுடன் வாழ்ந்து வருகிறது. பணக்காரத் தொழிலதிபருக்கு மூன்று மகன்கள். மூத்த மகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. மூத்த மருமகள் சந்தியா, தன்னுடைய அன்பான நடவடிக்கைகளாலும் பணிவாலும் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறாள்.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் தொழிலதிபர். வீட்டுக்கு வரும் மூன்றாவது மருமகள் மாதவிக்கு மூத்த மருமகள் சந்தியா மீது வெறுப்பு. அதனால் குடும்பத்தில் பல பிரச்னைகளைத் தந்திரமாக உருவாக்கி சந்தியாவை அனைவரும் வெறுக்கும்படி செய்கிறாள். கூட்டுக் குடும்பம் பிரிகிறது.

அனைத்துக்கும் காரணம் மாதவிதான் என்பதைப் புரிந்துகொள்ளும் சந்தியா, குடும்பத்தை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதை காதல், குடும்ப பாசம், சென்டிமென்ட், க்ரைம் கலந்து சொல்வதுதான் கதை.

தேவிபாலா திரைக்கதை அமைத்திருக்கிறார். பிரபு நேபால் தயாரித்து இயக்குகிறார். இந்தப் புதிய தொடர் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

aanaa
30th November 2008, 04:40 AM
லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்




ஜெயா டிவியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ். 8 வயதில் இருந்து 13 வயது வரையிலான சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் இந்த நிகழ்ச்சி மூன்றாவது ஆண்டாக தொடர்கிறது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறம் முதற்கட்டப் போட்டிகளில் இருந்து 75 திறமையாளர்கள் பாடலுக்கும், 75 திறமையாளர்கள் ஆடலுக்குமாய் தேர்ந்தெடுக்கபட்டு சென்னையில் அடுத்த கட்ட போட்டிக்கு வரவழைக்கப் படுகிறார்கள்.

பல சோதனைகளுக்குப் பிறகு இவர்களில் 12 பேர் மட்டும் இறுதிக்கட்ட போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்த பன்னிருவரில் சாம்பியன் பட்டம் பெறும் சிறுவன், அல்லது சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

aanaa
30th November 2008, 04:41 AM
ஜெயா டி.வி.யின் `அரிகிரி அசெம்பிளி' புதிய வடிவில் ஒளிபரப்பாகி வருகிறது. பாஸ்கி, சேது இருவரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

கலகலப்பூட்டும் இந்நிகழ்ச்சி வரும் செவ்வாயன்று 150-வது பகுதியை தொடுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

saradhaa_sn
30th November 2008, 05:40 PM
ஜெயா டிவியின் விசித்திரம்
--------------------------

பலகாலமாக ஜெயா டிவியில் சில திரைப்பட பாடல்களை ஒளிபரப்பும்போது, சில வரிகள் திடீரென காணாமல் போகும்.

உதாரணமாக, அன்பே வா படத்தில் வரும் புதிய வானம் புதிய பூமி பாடலில் 'புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே' என்ற வரிகள் கட் பண்னிவிடுவார்கள். அதுபோல நம்நாடு படத்தில் வாங்கைய்யா வாத்தியாரய்யா பாடலில் 'சூரியன் உதிச்சதுங்க இங்கு காரிருள் மறைஞ்சதுங்க' என்ற வரிகளும் அதற்கான காட்சிகளும் கட்.

காரணம் 'உள்ளங்கை நெல்லிக்கனி'.

ஆனால் சமீபத்தில், காதலிக்க நேரமில்லை படத்தில் யேசுதாஸ் சுசீலா பாடும் 'நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா' பாடலில் ஒரு குறிப்பிட்ட இடம் கட் ஆனது. பின்னர் இன்னொருமுறை ஒளிபரப்பானபோதும் அதே இடத்தில் கட் ஆகி ஜம்ப் ஆகிப்போனது. என்ன காரனம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, சில நாட்களுக்கு முன் மெகா டிவியின் அமுத கானம் நிகழ்ச்சியில் அதே பாடலைப்பார்த்தபோதுதான் காரணம் புரிந்தது.

அந்தக்காட்சியில் முத்துராமனும் காஞ்சனாவும் ஊட்டிகார்டனில் ஒரு சிறிய மரப்பாலத்தில் நின்று பாடும்போது அந்தப்பாலத்தில் கிரில் அமைப்பில் 'உதயசூரியன்' வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக்காட்சியை 'கட்' பண்ன அதுதான் காரனம் என்று தெரிந்தது.

ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு இவ்வளவு குறுகிய எண்ணம் தேவையா..?

ஆனால் கலைஞர் டிவியில் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த படங்களும் பாடல்களும் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பாகின்றன. அதிலும் கருணாநிதியைத்தாக்கும் வசனங்களோ காட்சிகளோ இருந்தால் அவை மிகவும் தெளிவாக காட்டப்படுகின்றன.

இந்த விஷயத்தில் 'ஜெயா' டிவியைவிட 'கலைஞர்' டிவிக்கு தைரியம் மற்றும் தாராளம்.

aanaa
30th November 2008, 09:13 PM
ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு இவ்வளவு குறுகிய எண்ணம் தேவையா..?


இந்த மனப்பாங்கு வளர்ச்சிக்கு நன்றல்ல

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமல்லவா

திறந்த மனம் தேவை

mr_karthik
1st December 2008, 05:03 PM
till now I have noted this. (rarely watching Jaya TV), hereafter will have a keen watch about this.

but jaya tv always known for narrow minded policy.

its newreaders always using an irritating word 'minority thi.mu.ka. arasu'.

aanaa
6th December 2008, 07:55 PM
மூவி நெம்பர்-1'



ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `மூவி நெம்பர் -1' நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் புதிய செட்டப்புடன் பல கெட்டப்புகளில் வரவிருக்கிறது.

இந்த மாதம் முழுவதும் ஊர் பஞ்சாயத்து கூடி படங்களை விவாதிக்கின்றனர். இதில் பஞ்சாயத்து தலைவராக பாபுஜியும், அவரது தம்பியாக செல்வாவும், ஊர்க்காரராக நல்லமுத்துவும் தோன்றி படங்களை விமர்சிக்கிறார்கள்.

.

aanaa
6th December 2008, 07:58 PM
`ஹாசினி பேசும் படம்'

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்துள்ள `பூ' திரைப்படத்தை விமர்சனம் செய்கிறார்கள். இதில் அப்படத்தின் இயக்குனர் சசி, நாயகன், ஸ்ரீகாந்த் மற்றும் நாயகி பார்வதி கலந்து கொண்டு நடிகை சுஹாசினியிடம் பல சுவாரஸ்யமான விஷயங்களை விவாதிக்கின்றனர்.

.

aanaa
14th December 2008, 02:10 AM
மார்கழி மஹா உற்சவம்


மார்கழி மாத இசை நிகழ்ச்சியை ஜெயா டி.வி. கடந்த 8 வருடங்களாக வழங்கி வருகிறது. தற்போது 9-ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சிஅடியெடுத்து வைக்கிறது.

இந்நிகழ்ச்சி செட்டிநாடு வித்யாசரம் ஹாலில் நடைபெற்றபோது, கத்ரி கோபால்நாத், சவுமியா, சஞ்சனி-காயத்ரி, சஞ்சய் சுப்பிரமணியம், சுதாரகுநாதன், அருணா சாய்ராம், நெய்வேலி சந்தானகோபாலன், விஜய்சிவா, ஓ.எஸ்.அருண், உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீமகாதேவன், கணேசன்-குமரேஷ், விசாகஹரி மற்றும் டி.எம்.கிருஷ்ணா போன்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் இசை சம்பந்தமாக நடந்த மறக்கமுடியாத சுவாரஸ்யமான நிகழ்வுகளை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியில் புதிய பகுதியாக `ஆடியன்ஸ்-குவிஸ்' சேர்க்கப்பட்டு இதில் இசைமேதைகள் நேயர்களிடம் கேள்வி கேட்டார்கள்.

இந்த இசை நிகழ்ச்சி ஜெயா டிவியில் வரும் 16-ந் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம். இதன் மறுஒளிபரப்பை காலை 6.15 மணிக்கும் காணலாம்.

aanaa
4th January 2009, 08:44 PM
ஜெயா டிவியில் நெற்றிக்கண்
ஜெயா "டிவி'யில் , திங்கள் முதல் வெள்ளி தோறும் இரவு 8.30க்கு ஒளிரப்பாகும் சிம்ரன் திரையில், இம்மாத குறுந்தொடர் நெற்றிக்கண். ஏழாவது தொடரான இதில், காதலன் கணவனுக்கு இடையே ஏற்படும் ஒரு பெண்ணின் மனப்போராட்டம் தான் கதை. சிம்ரனுடன் அபிஷேக், சாக்ஷி சிவா, சிவன் சீனிவாசன், நித்யா,காவேரி, ஷில்பா, ராஜஸ்ரீ, விஜயலட்சுமி, வைஜெயந்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

R.Latha
5th January 2009, 01:04 PM
சபாஷ் சரியான காமெடி

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ``சபாஷ் சரியான காமெடி'' எனும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் `சிக்ஸ் பேக் சில்லி ராஜா' எனும் வித்தியாசமான கேரக்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருபவர், ஜேக்கப். இவர் சொல்லும் தத்துவமும், கடி ஜோக்கும் பிரம்மாண்டமான அரங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் நடிகர்களின் நகைச்சுவை காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறும்.

R.Latha
9th January 2009, 12:19 PM
[tscii:d4f8d15d41]ளற்ள்ஸ்ரீண்ண்னசபாஷ் சரியானகாமெடி

ெஜ ய ா டி.வி.யில் ேந ய ர் க ளின் வர வேற்பைப் ெப ற் ற நிகழ்ச்சிக ளுள் ஒன்று ‘சபாஷ் சரி ய ா ன காமெடி'


சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்க வும் வைக்கும் இந்த இந்நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[/tscii:d4f8d15d41]

R.Latha
9th January 2009, 12:31 PM
[tscii:7133ba3fb7]அறுசுவை நேரம்

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ‘அறுசுவை நேரம்'. இந்நிகழ்ச்சி ‘சமையல் நேரம்', ‘ஆரோக்கிய மாக', ‘டிப்ஸ்' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது

சமையல் நேரத்தில் விதவிதமான சைவ உணவு வகை களை செய்து காட்டுவார்கள். இதில் வட இந்திய, தென் னிந்திய உணவு வகைகளும் அடங்கும்

உடல் நலத்திற்கு தேவையான உணவு வகைகள், டயா பெட்டிஸ், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றை வரும் முன் தடுப்பது குறித்த ஆலோசனைகள் போன்றவை ‘ஆரோக்கியமாக' பகுதியில் இடம்பெறும்

‘டிப்ஸ்' பகுதியில் மருத்துவம், சமையல் சார்ந்த குறிப்பு கள் எளிமையாக விளக்கப்படுகின்றன

சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, வாரம்தோறும் செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Dinamani 9.1.09[/tscii:7133ba3fb7]

R.Latha
9th January 2009, 12:36 PM
[tscii:1827edcffe]தெரிந்ததை மட்டும் செய்வேன்: வினோ



ஜெயா டி.வி.யின் ‘ஸ்டார்ஸ் உங்களுடன்', ‘டயல் ஏ ஜெயா' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ‘வினோ'வை சந்தித்த போது கூறியதாவது.

வந்தவாசிதான் என் சொந்த ஊர். படிக்கதான் சென்னை வந்தேன். சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்எம். கல்லூரியில் கட்டடக் கலை படித்து முடித்து விட்டு ‘ரேடியோ 1' ல் ஒரு வருடம் இருந்தேன். அதன் பிறகுதான் ஜெயா டி.வி.க்கு வந்தேன்.

தற்போது ஜெயா டி.வி.யில் ‘ஸ்டார்ஸ் உங்களுடன்', ‘டயல் ஏ ஜெயா' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். சினிமாத் துறையைச் சார்ந்த பலரை பேட்டி காண்பதே ‘ஸ்டார்ஸ் உங்களுடன்' நிகழ்ச்சியாகும். இதுவரை கரு. பழனியப்பன், லிங்குசாமி உள்ளிட்ட பலரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறேன்.

அதே போல் ‘டயல் ஏ ஜெயா' நிகழ்ச்சியும் வித்தியாசமானது. பல துறைகளைச் சார்ந்தவர்களின் கருத்துகளை மக்களோடு பகிர்ந்து கொள்வதே அந்நிகழ்ச்சியாகும்.

சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கு ஆர்வம் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு நடிக்கவே தெரியாது. சீரியல் வாய்ப்புகள் நிறைய வந்தன. நான் தொடர்ந்து மறுத்து வருவதால் இப்போது வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதற்காக நான் கவலைப்பட்டது இல்லை.

காம்பியரிங் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. அதனால் எனக்கு தெரிந்ததை மட்டும் செய்து வருகிறேன். அதை நன்றாக செய்தாலே போதும். மற்றபடி வேறொன்றும் ஆசை இல்லை.

என்னால் மறக்க முடியாதது என்னுடைய கல்லூரி வாழ்க்கைதான். 5 வருடம் போனதே தெரியவில்லை. எதை ரசித்து செய்கிறோமோ அந்த வேலையில் சலிப்பு தட்டாது என்பார்கள் அது உண்மைதான். கல்லூரி வாழ்க்கையில் என்றைக்குமே சலிப்பு ஏற்ப்பட்டதில்லை.

கல்லூரி படிக்கும் போது கிளாசிக்கல் டான்ஸ் கற்றிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தாததால் வெற்றி பெற முடியவில்லை என்றார் ‘வினோ


Dinamani 9.1.09[/tscii:1827edcffe]

R.Latha
9th January 2009, 12:52 PM
[tscii:f1259958f0]ஹாசினி பேசும் படம்

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஹாசினி பேசும் படம்' விமர்சன நிகழ்ச்சி, நேயர்களிடமும் திரையுலகப் பிரமுகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகை சுஹாசினி வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் ‘அபியும் நானும்' படத்தைப் பற்றிய விமர்சனம் இடம்பெறுகிறது.

இதில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ்ராஜ், இயக்குநர் ராதமோகன், நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு படத்தைப் பற்றியும் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.


Dinamani 9.1.09[/tscii:f1259958f0]

Sanguine Sridhar
11th January 2009, 11:17 AM
I saw a singer competition for kids in Jaya TV. A small girl, around 6 to 7 years of age was singing 'kAdhal vaibOgamE!' from SIS. The judge rejected her and said that "innum feeling-Oda pAdanum!". :banghead: :evil: Crap!

Like VV 'peeling-a? enna..... peeling-u?'

aanaa
17th January 2009, 09:27 PM
என்னோடு பாட்டுப்பாடுங்கள்



ஜெயா டிவியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியில், இளம்பாடகர், பாடகிகள் திருமணமான இல்லத்தரசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் வரிசையில் தற்போது மேடை கச்சேரிகளில் பாடுவதை தொழிலாக கொண்ட பாடகர், பாடகிகளுக்காக `டூயட் சீரிஸ்' எனும் பகுதி ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் `அரை இறுதி' போட்டி ஆரம்பமாக உள்ளது. சிறப்பு நடுவராக கிட்டாரிஸ்ட் அமல்ராஜ் பங்கேற்கிறார்.

aanaa
17th January 2009, 09:28 PM
ராகமாலிகா

ஜெயா டிவியில் 275 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி "ராகமாலிகா.'' இதன் சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. ஏற்கனவே ராகமாலிகா நிகழ்ச்சியில் பாடி வெற்றி பெற்ற பாடகர்கள் பங்கேற்று பாடினர். வரும் மூன்று ஞாயிறுகளில் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் காணலாம்.

aanaa
17th January 2009, 09:28 PM
நிலாவில் மூவி நெம்பர்-1'



ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `மூவி நம்பர்-1'

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போலீஸ், நாட்டாமை, டாக்டர்கள் என பல்வேறு கெட்டப்புகளில் சினிமா விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

வரும் வாரங்களில் நிலாவில் சென்று சினிமா விமர்சனம் செய்கிறார்கள். இதற்கென நிலா பின்னணியிலான செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாபுஜி, செல்வா, நல்லமுத்து நடிக்கின்றனர்.

aanaa
17th January 2009, 09:29 PM
எங்கிருந்தோ வந்தாள்



ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், `எங்கிருந்தோ வந்தாள்' இது ஒரு மறுஒளிபரப்புத் தொடர்.

ஆழ் மனதால் கட்டுண்ட பெண்களின் உணர்வுகளும், வருத்தங்களும், போராட்டங்களும் பெண் குலத்தை வலுப்படுத்தும் மெல்லிய அதிர்வுகளுமே `எங்கிருந்தோ வந்தாள்.'தனி மனித வாழ்க்கை அர்த்தப்படும்போது, கடந்த கால காயங்கள் புனிதப்படும் என்பது கதைப்பின்னணியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

நடிகர்-நடிகைகள்: பானுச்சந்தர், விஜய் ஆதிராஜ், வினோதினி, மோகன்ராம், வனிதா, காவ்யா, ஸ்ருதி, விஜயகிருஷ்ணராஜ், கவுசிக், லதாராவ், கீர்த்தனா, ராஜசேகர், ஷோபனா மற்றும் நித்யா. இயக்கம்- எல்.கணபதி.

-thanks - dailythanthi

aanaa
17th January 2009, 09:54 PM
Ragamalika

(Jaya TV, Sunday, 9 a.m.)

The music-based talent hunt has completed 275 episodes, making it the longest running programme of its kind on Tamil television. The winners and celebrity singers got together and presented a programme of old songs in Tiruchi to mark the occasion, in front of a live audience. This programme will be telecast on Sunday.

aanaa
17th January 2009, 09:55 PM
[tscii:07f02f1a2c]
Ennodu Paatu Padungal

(Jaya TV, Saturday, 8 p.m.)

‘Ennodu Paatu Padungal,’ the popular music show in which aspirants — men and women of all age groups — participate, has reached the semi-final stage. On air is the duet series featuring stage performers.

Presented by S. P. Balasubramaniam, the special judge this week is guitarist Amalraj.

[/tscii:07f02f1a2c]

aanaa
17th January 2009, 09:55 PM
[tscii:6ec5e347a0]

Movie No. 1

(Jaya TV, Sunday, 10.30 a.m.)

Movie Number 1 is a platform where films that hit the screen are analysed. Innovatively conceived, the scenes vary — police, doctor, village panchayat, etc. The latest is the moon where actors Babuji, Selva and Nallamuthu land to review new releases.


- hindu.com[/tscii:6ec5e347a0]

R.Latha
19th January 2009, 01:50 PM
என்னோடு பாட்டுப்பாடுங்கள்

ஜெயா டிவியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியில், இளம்பாடகர், பாடகிகள் திருமணமான இல்லத்தரசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் வரிசையில் தற்போது மேடை கச்சேரிகளில் பாடுவதை தொழிலாக கொண்ட பாடகர், பாடகிகளுக்காக `டூயட் சீரிஸ்' எனும் பகுதி ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் `அரை இறுதி' போட்டி ஆரம்பமாக உள்ளது. சிறப்பு நடுவராக கிட்டாரிஸ்ட் அமல்ராஜ் பங்கேற்கிறார்.

R.Latha
19th January 2009, 01:52 PM
`நிலாவில் மூவி நெம்பர்-1'

font change aagiyirundhadhu. athanal font maatri ungal pageleye potten. sorry thavaraaga ninaikka veandaam.

R.Latha
19th January 2009, 01:55 PM
thank you for posting aanaa.

aanaa
20th January 2009, 10:14 PM
`நிலாவில் மூவி நெம்பர்-1'

font change aagiyirundhadhu. athanal font maatri ungal pageleye potten. sorry thavaraaga ninaikka veandaam.

you are always welcome

no misunderstanding - NEVER

purpose: everyone gets to know the news - spread the news

R.Latha
23rd January 2009, 12:35 PM
[tscii:4385a27add]சரிகம ஃபேமிலி

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் புதுமையான இசை நிகழ்ச்சி ‘சரிகமா ஃபேமிலி'.

மூன்று தலைமுறையினர் பங்கேற்கும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்படுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதாவது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மற்றும் 10 வயதுக்குள்பட்ட குழந்தையும் பங்கேற்கலாம்.

இந்நிகழ்ச்சியின் கால் இறுதி சுற்றுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. சிறப்பு நடுவர்களாக இயக்குனர் மனோபாலா, பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆதித்யன் மற்றும் பாவனா ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



[/tscii:4385a27add]

aanaa
24th January 2009, 04:12 AM
:ty: Latha

aanaa
24th January 2009, 09:45 PM
கால்இறுதிச் சுற்றில் `சரிகமா பேமிலி'

ஜெயா டிவியில் 3 தலை முறையினர் பங்கேற்கும் வகையில் ஒளிபரப்பாகிவரும் `சரிகமா பேமிலி' நிகழ்ச்சி கால் இறுதியைத் தொட்டிருக்கிறது. ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக இயக்குனர் மனோபாலா, பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா பங்கேற்கிறார்கள். தொகுத்து வழங்குவோர்: இசையமைப்பாளர் ஆதித்யன் மற்றும் பாவனா.

நாளை முதல் இந்த இசைப் போட்டியில் கால் இறுதி சுற்றுக்கள் ஒளிபரப்பாகவுள்ளன.


நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 10:01 PM
[tscii:a000732bb4] Sa re ga ma Family — quarter finals

(Jaya TV, Sunday, 12 noon)

The highlight of the show is that three generations of a family (with the number not exceeding five) take part. The programme, telecast every Sunday, enters another interesting phase this week. The stage is set for the quarterfinals and the special judges will be actor and film director Manobala, and singers Charulatha Mani and Srimadhumita. Composer Adityan and Bhavana are the anchors. So get ready for the mega show on January 25.

thanks - Hindu
[/tscii:a000732bb4]

aanaa
31st January 2009, 06:23 AM
டூயட் சீரிஸ் இறுதிப்போட்டி



ஜெயா டிவியில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' தொடர் நிகழ்ச்சி வரிசையில், தற்போது மேடை கச்சேரிகளில் பாடுவதை தொழிலாக கொண்ட பாடகர்-பாடகிகளுக்கான `டூயட் சீரிஸ்' ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு இசையமைப்பாளர் தீனா சிறப்பு நடுவர். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நான்கு ஜோடிகள் சதிஷ் - சரண்யா, பாலாஜி - சுசித்ரா, ராஜ்குமார் - விஜயலட்சுமி மற்றும் சரவணன் - ஐஸ்வர்யா ஆகியோரில் வெற்றி பெறும் ஜோடி யார் என்பதை இன்று இரவு 8 மணிக்கு தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியின் தொடர்ச்சியை வரும் 7-ந் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கும் காணலாம்.

நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:25 AM
சுவையோ சுவை'



ஜெயா டிவியில் வியாழன் தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சுவையோ சுவை' நிகழ்ச்சி 300-வது எபிசோடை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சமையற்கலை நிபுணர் தாமோதரன் மண்பாண்டங்களை கொண்டு விதவிதமான சமையல் செய்துகாட்டுவதோடு, மண்பாண்டங்களில் சமைப்பதின் நன்மைகளையும் விளக்குகிறார்.

நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:35 AM
Ennodu Paattu Paadungal

(Jaya TV, Saturday, 8 p.m.)

The programme presented by S. P. Balasubramaniam began with youngsters showcasing their music skills, went on to give opportunities to housewives, graduated to those in the age group 15 and above, and is now into its Duet Series for singers from various light music troupes. Sathish-Charanya, Balaji-Suchitra, Rajkumar-Vijayalakshmi and Saravanan-Aishwarya are the four pairs who have qualified for the finals after four rigorous rounds. Composer Dhina is the special judge of the finals which will be telecast on January 31 and February 7.

thanks - Hindu

aanaa
31st January 2009, 06:35 AM
Suvaiyo Suvai

(Jaya TV, Thursday, 6.30 p.m.)

The show hosted by culinary expert Damodaran reaches its 300th episode on February 5. Cooking delicious dishes in earthenware has been his forte. This week he explains in detail the value of using clay utensils.


thanks - Hindu

aanaa
1st February 2009, 06:52 AM
275ஐ தொட்டது ராகமாலிகா!
ஞாயிற்றுகிழமைகளில் ஜெயா தொலைக்காட்சியில் காலை ஒன்பது மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் 'ராகமாலிகா' நிகழ்ச்சி பல்வேறு புதிய புதிய குரல்களுக்கு மேடை போட்டு கொடுத்து இளம் பாடகர்களை உற்சாகப்படுத்துகிறது.

வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் 'ராகமாலிகா' நிகழ்ச்சி தற்போது தனது 275வது பகுதியை எட்டியுள்ளது. இதனை சிறப்பிக்கும்விதமாக சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றினை திருச்சியில் சமீபத்தில் நடத்தினர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். பிரபல பழைய பாடல்களை பாடி அசத்தினர் நிகழ்ச்சியில் பாடியவர்கள். காலத்தினாலும் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களை கேட்டு அரங்கமே திக்குமுக்காடிப்போனது என்றால் அதுமிகையல்ல.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பினை கடந்த ஞாயிறு முதல் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு காலை 9 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பரப்பி வருகிறது.

aanaa
7th February 2009, 06:29 AM
சென்னையில் ஜப்பான்



பிரபல டேபிள்டென்னிஸ் வீரர் சந்திரசேகரின் விளையாட்டுடன் இணைந்த உணர்வுபூர்வமான வாழ்க்கைப் பின்னணி சந்திரா என்ற பெயரில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சந்திரசேகரின் விளையாட்டு சாதனைகள் பிரமிக்க வைப்பதுடன், அவரது நட்பு வட்டத்தின் முக்கியத்துவமும் நெஞ்சை நெகிழ்த்துகிறது.

சமீபத்தில் இந்த தொடருக்கான ஜப்பான் செட் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்ட் டைரக்டர் பி.கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவாகியிருந்தது. செட்டைப்பார்த்தபோது எப்போது ஜப்பானுக்கு வந்தோம் என்று மிரளவைத்தது.

இந்த தொடரில் சிறுவயது சந்திரசேகராக ஸ்ரீராம் நடிக்க, பிற்பகுதியில் உள்ள காட்சிகளில் விளையாட்டு வீரர் சநதிரசேகரே நடிக்கிறார். தொடரில் இவரது அம்மா கேரக்டரில் நடிகை நித்யா நடித்திருந்தார். நித்யாவின் நடிப்பை பார்த்த சந்திரசேகரின் அம்மா, டைரக்டர் ஹரிசரணிடம் "நானே நடித்திருந்தால் கூட இத்தனை இயல்பாக நடித்திருப்பேனா என்று தெரியாது. அத்தனை நேர்த்தியாக தாய்மையின் உணர்வை நித்யா பிரதிபலித்தார்'' என்று பாராட்டியிருக்கிறார்.

தொடரில் ஜப்பான் செட் வந்த காரணம் கேட்டபோது டைரக்டர் ஹரிசரண் சொன்னார்: "சந்திரசேகர் சிறுவயதில் இந்தோ-ஜப்பான் கலைக்கழகம் மூலம் ஜப்பான் சென்று டேபிள்டென்னிசில் பயிற்சி எடுத்தார். அப்போது அங்கே அவருக்கு சில நண்பர்களும் கிடைத்தார்கள். தொடரில் அந்தகாட்சி இடம் பெறுகிறது. தொடர் என்பதால் இதற்காக ஜப்பான் சென்று வர சாத்தியம் இல்லை. இதுபற்றி ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது ஜப்பானை இங்கே கொண்டுவந்துவிடுகிறேன். என்றார். சொன்னபடி செய்துவிட்டார். தொடரில் இந்த ஜப்பான் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போது சென்னையில் ஜப்பான் பார்த்த ரசிகர்களும் வியக்கப் போகிறார்கள்.''



நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:30 AM
எங்கே பிராமணன்'



நடிகரும் எழுத்தாளருமான சோ எழுத்தில் வெளிவந்த `எங்கே பிராமணன்' நாவல், சின்னத்திரை தொடராக ஜெயா டிவியில் வருகிறது.

பிரபல தொழில் அதிபர் நாதன்-வசுமதி தம்பதியரின் ஒரே வாரிசு அசோக் விரக்தியின் விளிம்பில் நின்று `தான் யார்?' என்ற ஆன்மிகத் தேடலில் ஈடுபடுகிறான். சந்தேக நிவாரணியாக கை கொடுக்கும் மாங்காடு பாகவதர், சாஸ்திரத்தில் துளியும் நம்பிக்கையற்ற நாதனின் உறவுக்காரர் நீலகண்டய்யர், பல வைதீகர்களை காண்ட்ராக்டில் கையடக்கி வைக்கும் வேம்பு, செல்வந்தரானாலும் வைதீக பிராமணர்களை மதித்து போற்றும் நீதிபதி ஜகன்னாதய்யர் இவ்வாறு பல பாத்திரங்கள் கதையை ஆளுகின்றன.

தன்னை யார் என தெரிந்து கொள்ள பாடுபடும் அசோக்கிற்கு பிரம்மோபதேசம் செய்து வைத்தால், நிவாரணம் ஏற்படும் என்கிறார் பாகவதர். யார் உண்மையான பிராமணன் என்ற சர்ச்சை தீர, வசிஷ்டரை பூமியில் மானுடனாக (அசோக்) பிறப்பித்த விஷயத்தை கூறுகிறான் ஈசன். `யார் பிராமணன்' என்ற கேள்விக்கு விடை காணாத வசிஷ்டர் பிரம்மோபதேசம் நிறைவேறியதும் விடை காண்பார் என சிவபெருமான் கூறுகிறார். ஆனால் அவ்வாறு விடை கிடைக்காமல் போகவே, சிவனை அணுகி கேட்க அவர் `பூணூல் நடைபெற்றது. ஆனால் பிரம்மோபதேசம் இன்னும் நடைபெறவில்லை' என்கிறார்.

சிவபெருமான் குறிப்பிட்ட `அந்த' பிரம்மோபதேசம் அசோக்கிற்கு வையாபுரி என்ற அரசியல்வாதியின் கையாள் சிங்காரம் என்கிற பிராமணன் அல்லாத மனிதன் மூலம் சித்திக்கின்றது! குலத்தால் அல்ல, குணத்தாலே பிராமணியம் அறியப்படும்என்ற பேருண்மை விளங்குகிறது.

வசிஷ்டர் தேடிய `பிராமணன்' கிடைக்கிறான்.

டெல்லிகுமார், நளினி, குயிலி, கோபி, கோல்டன் சுரேஷ், வரலட்சுமி, ஸ்ரீவித்யா, விஜயகிருஷ்ணராஜ் நடிக்கிறார்கள். திரைக்கதை வசனம் எழுதி தொடரை இயக்குபவர்: வெங்கட்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:32 AM
`ஹாசினி பேசும் படம்'


ஜெயா டிவியில் நாளை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் மஞ்சு மனோஜ்குமார் நடித்த "என்னைத் தெரியுமா'' திரைப்படத்தை சுஹாசினி விமர்சனம் செய்கிறார்.

`தி டைவிங் பெல் அன்ட் தி பட்டர்பிளை' என்ற ஆங்கிலப்படத்தின் சிறப்புப் பார்வையும் இதில் இடம் பெறுகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:52 AM
சீனியர் சீரிஸ் ஆரம்பமாகிறது!
ஜெயா தொலைக்காட்சியில் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் 'என்னோடு பாட்டு பாடுங்கள்' நிகழ்ச்சி தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கிறது. பின்னணி பாடகர் எஸ்.பி. இந்நிகழ்ச்சியை வழங்குகிறார். ஹமாம் நலங்கு மாவின் தயாரித்து வழங்கும் இந்நிகழ்ச்சி பலவேறு கட்டமாக நடைப்பெற்று தறபோது டூயட் சீரியஸ் விறுவிறுப்பாக நடைப்பெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.

அடுத்து 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கான இசை நிகழ்ச்சி 'சீனியர் சீரியஸ்' என்ற பெயரில் ஆரம்பமாகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிரும்புபவர்கள் வருகிற 10ம் தேதிக்குள் தங்களது குரலை பதிவு செய்து ஜெயா தொலைக்காட்சிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியை பல்வேறு சுவையான தகவல்களுடன் நடத்தி செல்லும் எஸ்.பி.பி அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

aanaa
15th February 2009, 05:30 AM
கவரி மான்கள்



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `கவரிமான்கள்' தொடர் 50-வது எபிசோட்டை தொட்டிருக்கிறது.

அருணுக்கு மாதவியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதால் மனமுடைகிறாள் சந்தியா. சாரதா தனக்கு வரும் கடைசி மருமகள் (அருணின் மனைவி) சந்தியாவின் தங்கை விஜயாவாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

சந்தியாவின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற தவறான நோக்கத்தில் சாரதாவிற்காக சந்தியா சமைத்த உணவில் அவளது அக்காள் கணவன் மூர்த்தி விஷத்தை கலந்துவிடுகிறான்.

சந்தியா கொண்டு வந்த விஷம் கலந்த உணவை சாரதா சாப்பிட்டாரா?

சந்தியா தனது குடும்ப கவுரவத்திற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறாள் என்று அவளது நல்ல மனதை சாரதா புரிந்து கொண்டு அவளை ஏற்றுக்கொள்கிறாரா?

அருணை திருமணம் செய்து கொள்ளப் போவது யார்? விஜியா? மாதவியா? கேள்விகளுக்கு தொடரும் காட்சிகள் விடை தருகிறது.

நட்சத்திரங்கள் - சித்தாரா, உமா, நிர்மல், பிர்லா, ராஜா, சுஹாசினி, வினோத்ராஜ், நடராஜன், விஜயலட்சுமி, தியாகராஜன், ரொசாரியோ, ஹேமா, நாஞ்சில் நளினி, தனுஷ் நம்பியார்.

திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு - இயக்கம் -பிரபு நேபால்.

நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:32 AM
[tscii:85daeac9f8]

சொக்குதே மனம்



இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இசைநிகழ்ச்சி `சொக்குதே மனம்.'

இளைய தலைமுறைக்கும், முதிய தலைமுறைக்கும் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சிதான் `சொக்குதே மனம்.' இதில் இசையின் தன்மை சிறிதும் மாறாமல். அதே நேரம் அந்தப் பாடலுக்கான திரைக்காட்சியுடன் பொருந்துவது போல் நிகழ்ச்சியை அமைத்திருப்பது தனிச்சிறப்பு.

இந்நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் ஞாயிறு தோறும் இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. பழைய பாடல்களை புதிய வடிவிலும், புதிய பாடல்களுக்கு பழைய வடிவம் கொடுத்தும், ரீமிக்ஸ் செய்தும் மேலும் பல மாறுபட்ட வடிவில் தர உள்ளனர்.

பிரியம் எண்டர்டெய்னர்ஸ் பிரைவேட்டட் லிமி டெட் சார்பில் தயாரிப்பாளர் நாராயணன் மற்றும் பிரியா சுப்பிரமணியன் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி இது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் பற்றி நாராயணன் கூறியதாவது:-

பழைய பாடல்கள் புதுப்பொலிவுடன் ரசிகர்களை பரவசப்படுத்துவதோடு இளையராஜாவின் ராஜபார்வை நிகழ்ச்சியும் இந்நிகழ்ச்சிக்கு இனிமை சேர்க்கிறது. இசைத்தன்மை மிகத்துல்லியமாகவும், இனிமையாகவும் இருக்க மேலும் பல இசைக் கலைஞர்களையும், பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாடகர்களையும், நவீன இசை வாத்தியங்கள் மற்றும் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பிரமாண்டமான மேடையமைப்போடு, புதிய ஒளியமைப்பில் புதுமை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை மற்றும் வெளிïர்களில் நடக்கும் மாதம் 10 முதல் 15 வரையிலான நேரடி நிகழ்ச்சியை ஜெயா டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.




நன்றி: தினதந்தி[/tscii:85daeac9f8]

aanaa
15th February 2009, 05:36 AM
சங்கீத உற்சவம்


காதலர் தினத்தை முன்னிட்டு `சங்கீத உற்சவம்' எனும் இசை நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் கார்த்திக், ஹரிசரண், பாடகி சுசித்ரா பாடுகிறார்கள். மதுரையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது அங்குள்ள ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினதந்தி

R.Latha
19th February 2009, 12:09 PM
[tscii:78082b9eab]எங்கே பிராமணன்?
பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகி விடுவ
தில்லை. பிராமணன் என்பது ஒரு ஜாதியை குறிக்
கும் சொல் அல்ல. பிராமணனாக இருப்பவன்,
உயர்ந்து வாழும் வகையைக் கண்டுபிடிக்கிறான்.
அது ஒரு வாழும் கலையே.
இன்று நம்மில் யாரும் தனித்தனி வர்ணத்தாராக
இல்லை. ஒவ்வொரு வர்ணத்திலும் கொஞ்சம்
கொஞ்சம் சேர்ந்த கலவையாக ஒரு புதிய வர்
ணத்தை தேர்ந்தெடுத்து கொண்டவர்கள்தான்
அனைவரும். இதில் நான் பிராமணன் என்று
சொல்லிக் கொள்ள யாருக்கு உரிமை இருக்கிறது?
இக்கருத்தை மையமாக வைத்து சோ எழுதிய
"எங்கே பிராமணன்' என்ற கதையை ஜெயா
டி.வி.க்காக தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகி
றது.
இதில் டெல்லி குமார், நளினி, நீலு, குயிலி, "அச்ச
மில்லை' கோபி, அப்ஸர், உஷா, கம்பர் ஜெயரா
மன், கோல்டன் சுரேஷ், சங்கீதா, நாகலட்சுமி,
அசோக், தியாகராஜன், வரலட்சுமி, "சன்னல்' லட்
சுமி, ராம்கி, கெüதமி, டப்பிங் ஜானகி, ஸ்ரீவித்யா,
கவிதாலயா கிருஷ்ணன், விஜயகிருஷ்ணராஜ்,
கெüசல்யா செந்தாமரை ஆகியோர் நடிக்க, அமிர்
தாலயா தயாரித்திருக்கிறது. இத்தொ
டரின் திரைக்கதை, வசனம், எழுதி
இயக்கி வருபவர் வெங்கட்.
கே.எஸ்.நாகராஜ் ஒளிப்பதிவு செய்ய,
ராஜேஷ் வைத்யா இசையமைத்துள்
ளார்.
[/tscii:78082b9eab]

R.Latha
20th February 2009, 01:34 PM
[tscii:facd6b1f03]சொக்குதே மனம்

ஜெயா டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சொக்குதே மனம்' .

இசைத்துறையில் இளைய தலைமுறைக்கும் மூத்த தலைமுறைக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இசையின் தன்மை சிறிதும் மாறாமல், சம்பந்தப்பட்ட பாடலுக்கான திரைக்காட்சி பின்னணியில் வருவதுபோல் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இந்த நிகழ்ச்சியில் வரும் வாரத்திலிருந்து பிரமாண்டமான மேடை, புதிய ஒளியமைப்பு, நவீன இசை வாத்தியங்கள், பிரபல இசைக் கலைஞர்களின் பங்கேற்பு என மேலும் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்படவுள்ளன.

அதோடு பழைய பாடல்களைப் புதிய வடிவிலும், புதிய பாடல்களுக்கு பழைய வடிவம் கொடுத்து ரீமிக்ஸ் பாணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ப்ரியா சுப்பிரமணியன் வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

[/tscii:facd6b1f03]

aanaa
22nd February 2009, 04:06 AM
சிறப்பு தேன் கிண்ணம்
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தேன்கிண்ணம்'. இது பழைய திரைப்பட பாடல்களின் தொகுப்பு.

வரும் திங்கட்கிழமை சிறப்பு தேன் கிண்ணத்தில் பழம்பெரும் திரைப்பட நடிகை அஞ்சலி தேவி கலந்து கொண்டு அவருக்கு பிடித்த பாடல்களையும், அதற்கான காரணங்களையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:07 AM
லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்
ஜெயா டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ். 8 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆடல், பாடல் திறமையை வெளிக் கொண்டுவரும் இந்த நிகழ்ச்சி, 3-வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது.




நன்றி: தினதந்தி

aanaa
28th February 2009, 08:54 AM
லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்



இன்றும், நாளையும் இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்'. இது முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான ஆடல்-பாடல் போட்டி நிகழ்ச்சி.

பல்வேறு நகரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடல் மற்றும் பாடலில் தேர்ந்த 24 குழந்தைகளுக்கான இறுதி கட்டத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்கு முதல் கட்டமாக `நாட்டுப்புற பாடல்'களுக்கு ஆடும் 12 குழந்தைகள் மற்றும் பாடும் 12 குழந்தைகள் வரும் 2 வார நிகழ்ச்சியில் பாடி-ஆடப் போகிறார்கள்.

போட்டியில் சிறப்பு நடுவர்களாக புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா பங்கு பெறுகிறார்கள்.



நன்றி -- தினதந்தி

aanaa
28th February 2009, 08:56 AM
ஜாக்பாட் 300



ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஜாக்பாட்' நிகழ்ச்சி, 300-வது வாரத்தை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை குஷ்பூ வழங்கி வரும் இந்நிகழ்ச்சி, இனிவரும் வாரங்களில் புதிய பிரம்மாண்டமான அரங்கில் ஒளிபரப்பாகிறது.



நன்றி -- தினதந்தி

R.Latha
10th March 2009, 01:13 PM
[tscii:3eca461d1c]திரும்பிப் பார்க்கிறேன்

ஜெயா டி.வி.யில் ‘திரும்பிப் பார்க்கிறேன்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு திரையுலக பிரபலம் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின்ல் பங்கேற்கும் பிரபலம் நடித்த படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகள் இடையிடையே ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான ‘சோ' திங்கள்கிழமை பங்கேற்று தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை சுவைபட பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090308124622&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:3eca461d1c]

R.Latha
11th March 2009, 01:10 PM
[tscii:598a4fa990]மண்டேலாவைக் கவர்ந்த ‘கவரி மான்கள்

சித்தாரா

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘கவரிமான்கள்' மெகா தொடர், நேயர்களின் ஆதரவோடு 50-வது எபிஸோடைக் கடந்துள்ளது. சித்தாரா, பிர்லாபோஸ், நிர்மல், உமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் தொடரைத் தயாரித்து இயக்குபவர் பிரபு நேபால். குடும்பத்தில் பெண்களின் முக்கியப் பங்கு, அவர்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை சென்டிமெண்ட் கலந்து சுவாரஸ்யமாகக் கூறுகிறது இந்தத் தொடர்.

தென் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட இயக்குநர் நேபால் ‘கவரி மான்கள்' தொடரை ஆங்கில சப் டைட்டிலோடு தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு கடந்த மாதம் திரையிட்டுக் காண்பித்தார். தொடரால் வெகுவாகக் கவரப்பட்ட மண்டேலா ஒட்டுமொத்த யூனிட்டையும் பார்க்க விரும்புவதாக பிரபு நேபாலிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து ஒட்டுமொத்தக் குழுவும் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளது. தற்போது அங்கு ‘கவரி மான்கள்' தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நெல்சன் மண்டேலா விருந்தளித்து கௌரவிக்கவுள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

‘கவரி மான்கள்' தொடரின் 100-வது எபிஸோடு ஒளிபரப்பாகும் நாளில் சென்னை அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழுந்தைகளுக்கும் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090310125946&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:598a4fa990]

aanaa
14th March 2009, 07:19 PM
திரும்பிப் பார்க்கிறேன்

ஜெயா டி.வி.யில் "திரும்பிப் பார்க்கிறேன்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு திரையுலக பிரபலம் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின்ல் பங்கேற்கும் பிரபலம் நடித்த படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகள் இடையிடையே ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான "சோ' திங்கள்கிழமை பங்கேற்று தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை சுவைபட பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


மறக்க முடியாத சினிமா வரலாறு



சினிமா வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் உண்டு. அந்தவகையில் ஜெயா டிவியில் நடிகர்-நடிகையரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சி, ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாகி இருக்கிறது.

இந்த தொடரை இயக்கும் டைரக்டர் பரத் இதுபற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

"சினிமாக் கலைஞர்களை திரையில் ரசிக்கும் ரசிகர்கள் அவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தங்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்த இடம் அவர்கள் கல்விக் காலங்கள், நடிக்க வந்த பின்னணி என எல்லாமே அவர்கள் ரசனைக்குஉரியவையாகி விடுகின்றன. இதையே சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் நேரடியாக சொல்லும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சோ, நடிகை சரோஜாதேவி என தொடர்ந்து இந்த வாரம் சிவாஜியுடன் ஜோடியாக சிவந்தமண் படத்தில் நடித்த நடிகை காஞ்சனாவின் பின்னணி இடம்பெறுகிறது. அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களை மனம் உருக அவர் விவரித்தபோது அத்தனையும் கொஞ்சமும் எதிர்பாராத தகவல்கள்.

இப்படி ஒவ்வொரு கலைஞர்களும் அவர்களே தங்கள் வாழ்க்கைப் பின்னணியை சொல்லும் இந்த தொடரில் சமீபத்தில் மறைந்த பழம்பெரும் வில்லன்நடிகர் நம்பியாரும் இடம் பெறுகிறார். அவர் உயிருடன் இருந்தபோதே தன்னைப்பற்றி மனம் விட்டுச்சொன்ன தகவல்கள் அத்தனையும் ரசிகர்களுக்கு பொக்கிஷங்களாக இருக்கும். இவர் சினிமாவில் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் என்ற தகவல் ஒரு இயக்குனராக என்னையே வியக்க வைத்த தகவல்.

நடிகர்- நடிகைகள் தவிர இயக்குனர்கள், டான்ஸ் மாஸ்டர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலை இயக்குனர்கள் என சினிமாவின் அத்தனை கலைஞர்களின் எண்ணப் பதிவுகளும் இந்த திரும்பிப் பார்க்கிறேன் பட்டியலை அலங்கரிக்கும்.''

aanaa
14th March 2009, 07:22 PM
என்னோடு பாட்டுபாடுங்கள்



ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டு பாடுங்கள்' நிகழ்ச்சியில் இளம் பாடகர்-பாடகிகள், இல்லத்தரசிகள், டூயட் சிரிஸ் என இதுவரை 4 பகுதிகள் அரங்கேறியுள்ளது.

30 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும்வகையில் `சீனியர் சீரிஸ்' என்ற நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு, இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதன் மறுஒளிபரப்பை நாளை இரவு 11 மணிக்கு காணலாம்.


நன்றி -- தினதந்தி

R.Latha
16th March 2009, 01:32 PM
[tscii:8cb2850e8d]ஹைக்கூ கவிதை பிடிக்கும்'



ஜெயா டி.வி.யின் ‘தேன் கிண்ணம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவுக்கு ஹைக்கூ கவிதைகள் என்றால் பிடிக்குமாம். இனி அவரே கவிதை நயத்துடன் பேசுகிறார்.

பிடிக்காத ஒன்று நடந்து முடிந்த பிறகு பிடித்து விடும் போலிருக்கிறது; அப்படித்தான் இந்த காம்பியர் வாழ்க்கையும். படிப்புதான் வாழ்க்கை என்று இருந்த பொழுதுகளில் தற்செயலாகக் கிடைத்ததுதான் இந்த வாய்ப்பு.

மற்றபடி எனக்கு காம்பியரிங் பற்றி ஒன்றுமே தெரியாது. இருந்தாலும் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. எப்படியோ தேறிவிட்டேன். முதன் முதலாக கேமிரா பார்த்தபோது கொஞ்சம் பயமாகதான் இருந்தது. அதன் பிறகு பழகிவிட்டது.

தமிழ் நன்றாக பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. நிகழ்ச்சியைப் பார்க்க கூடிய ஒவ்வொருவரையும் கவரும் விதத்தில் பேச வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் நம் நிகழ்ச்சியைப் பார்க்க ஆள் இருக்க மாட்டார்கள்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து முடித்து டாக்டராக வேண்டும். அதுதான் என் வாழ்க்கையின் லட்சியம், கனவு எல்லாமும். அதில்தான் என் ஆர்வம் அனைத்தும் இருக்கிறது. மற்றபடி காம்பயரிங்கில் கொஞ்சம் காலம் இருந்துவிட்டு திடீரென்று ஒரு நாள் சினிமாவுக்கு போய் விடலாம் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை.

சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் ஒன்றிரண்டு வந்தன. அதைத் தவிர்த்து விட்டேன். கல்லூரி வாழ்க்கை எல்லோருக்கும் இருப்பதை போலதான் எனக்கும். நண்பர்களுடன் சினிமா பார்ப்பது ரொம்ப பிடித்தமானது. அதுவும் காமெடி சினிமா என்றால் உடனே கிளம்பி விடுவேன்.

ஹைக்கூ கவிதைகள் படிப்பது பிடிக்கும். ஹைக்கூ கவிதைகள்தான் என் தமிழ் உச்சரிப்புக்கு ஆதாரம். பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்' மிகவும் பிடித்த புத்தகம். என் புத்தக அலமாரியை அலங்கரிப்பது கவிதைப் புத்தகங்கள்தாம்!

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090311125809&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:8cb2850e8d]

R.Latha
16th March 2009, 01:42 PM
‘திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் காஞ்சனா

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி ‘திரும்பிப்பார்க்கிறேன்'. இதில் வாரம்தோறும் ஒரு பிரபலம் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அதோடு அவர்கள் பணியாற்றிய படங்களிலிருந்து பாடல் காட்சிகளும், முக்கியக் காட்சிகளும் ஒளிபரப்பபடும்.

சரோஜாதேவி, சோ இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் ‘காதலிக்க நேரமில்லை', ‘அதே கண்கள்', ‘பறக்கும் பாவை', ‘சிவந்த மண்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காஞ்சனா பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற இதுவரை வெளிவராத, மறக்க முடியாத நிகழ்வுகளையும் சக நடிகர், நடிகைகளைப் பற்றியும் சுவைபடக் கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சி, மார்ச் 16-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090311130207&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:6370865cab]

ridz
17th March 2009, 11:24 AM
WATCH Kaverree Maangal starring actress Sithara on Jaya TV at 8.30pm Monday to Friday

Sandhya the elder daughter in law of Venketesh' family along with the contribution of the family members take a decision to get Balaji's second brother Vivek married to a middle class girl called Madhavi who they see and fix later realizing that she will be the apt person for Vivek. The third brother Arun has already been spoken to get married to Sandhya's younger sister Viji. They decide to conduct both the marriages together.

Meanwhile Gayathri Vivek's boss's daughter who is in love with him but has not disclosed her love so far, gets shocked hearing about this and tries to commit suicide and her father stops her and later she confesses to her father Chakrabani about her love for Vivek. Chakrabani immediately decides to talk to Vivek about it and Vivek tells him that unfortunately he wasn't aware of Gayathri's love as they were very good friends only and that now since his betrothal is almost fixed he cant take any decision and that they would have to only talk to his family about it. Chakrabani immediately decides to do so.

Madhavi on the other hand along with Sandhya's sister Viji has been invited by Sandhya to their house to select their wedding saris and jewels. Madhavi is very excited about her wedding and goes around showing off Vivek's photo to her friends saying that she is getting married in a well off family and that everyone loves her very much there. Her friends envy her future.

The next day Chakrabani along with Gayathri comes to Venketesh's family and discloses the matter and asks for Vivek to marry his daughter. The family is taken aback. Gayathri takes Sandhya separately and begs her telling her that she has attempted suicide and without Vivek she cannot live. While the family members are dumbstruck not knowing what to do, Sandhya asks Chakrabani to give them sometime and that she will come up with a good solution for the matter.

The next day Sandhya requests Balaji to accompany her to Madhavi's house. Sandhya tells the matter to Madhavis' house and conveys her decision of getting Vivek married to Gayathri and when the family is shocked and they talk about Madhavi's future, she tells them that whatever set and done Madhavi is definitely the daughter in law of their family and that she plans to get Madhavi married to Arun. Hearing this Madhavi and her family are flabbergasted along with Balaji. She tells them to think about it and tell her a favorable reply. Madhavi's mother tries to convince her about getting married to Arun but Madhavi being strong willed girl denies it and tells her mother that tomorrow if a situation arises that Arun too is in love with someone else then the family might throw her out of the house and she does like to be treated like a bouncing ball. Madhavi's friends make fun of Madhavi telling her that all rich family treats middle class girls this way and that if she did have to marry Arun she will be only treated like a slave in that house as Sandhya will always have an upper hand in that family. Hearing this Madhavi develops a dislike and vengeance towards Sandhya as she was the deciding authority and the sole responsible person for this confusion. Madhavi decides to get married to Arun and enter into that family and break everyone's respect for Sandhya and send her to the streets and embarrass her the same way she was embarrassed and to create a dislike for Sandhya amongst the family members and to separate her away from that family.

Sandhya's mother in law is astonished hearing Sandhya's decision of getting Vivek and Gayathri married and to get Madhavi and Arun married, as she has always had a soft corner for Viji, a little bit more than Sandhya. Everyone else agrees for Sandhya's decision knowing that it is the best for the family except for Sharadha. She tries to convince the family members saying that she want Viji as her last daughter in law, but all in vain. Knowing that no matter what she does this wedding will take place, Sharadha tales a hasty decision of leaving the house and going away to an old age home. When everyone in the family convinces her to come back she tells them that until and unless everyone decides to get Viji married to Arun she will never come back into that house and she also shows a strong hatred towards Sandhya as she is the main cause for all this confusion. Hearing this Viji also dislikes Sandhya.

Four women lives are at stake, Gayathri, Madhavi, Viji and Sandhya. What is Sandhya going to do now?

How is she going to set things back to normal in her family again?

Will she win back the love of her mother in law?

Who gets married to whom now?

Actors - Sithara, Birla Bose, Nirmal, Raja, Uma, K. Natraj, Vinod Raj

Produced by Prabhu Nepal

Screenplay - Devibala

Dialogue writers - G.K Gajendra Kumar

Music Director - Vijay Sanjay

aanaa
21st March 2009, 10:59 PM
தக திமி தா



கடந்த 6 ஆண்டுகளாக ஜெயா டிவியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் `தகதமிதா' நிகழ்ச்சி பரதக்கலையை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட இளம் நடன மணிகள் பங்கேற்று நடனமாடி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை நாளை முதல் புது சுற்றுக்களுடன், புது பொலிவுடன் வழங்க வருகிறார் நடிகை அபர்ணா. வித்தியாசமான சுற்றுக்களில் இளம் நடனமணிகள் போட்டியிடப் போகிறார்கள்.

கருத்து - வடிவமைப்பு மற்றும் இயக்கம் - திருமதி ராதிகா சூரஜித்.

ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஜெயா டிவியில் `தகதிமிதா' நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி -- தினதந்தி

R.Latha
22nd March 2009, 06:27 PM
thank you

R.Latha
24th March 2009, 12:59 PM
[tscii:9e60d4aee4]இனிது இனிது இலக்கியம் இனிது

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் பயனுள்ள நிகழ்ச்சி ‘இனிது இனிது இலக்கியம் இனிது'. இந்த நிகழ்ச்சியில் ஔவையின் ‘ஆத்திச்சூடி'யை எளிய நடையில் இனிய தமிழில் சிறந்த உதாரணங்களோடு வழங்கி வருகிறார் கவிஞர் வைகைச்செல்வன்.

மேலும் ஔவை எழுதிய ‘கொன்றை வேந்தன்' கதையையும் உரிய பொருளுடன் எளிமையாக விளக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழ் நீதி நூல்களான வெற்றி வேற்கை, உலக நீதி, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதி வெண்பா போன்றவற்றில் பொதிந்து கிடக்கும் வாழ்வியல் தத்துவங்களை தற்காலத்துக்கு ஏற்றவாறு விளக்குகிறார்.

பழம்பெருமை வாய்ந்த இலக்கியங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இனிது இனிது இலக்கியம் இனிது' நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.50 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.[/tscii:9e60d4aee4]

R.Latha
24th March 2009, 01:16 PM
திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் பாலாஜி

ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி திரும்பிப் பார்க்கிறேன்.

இதில் வாரம்தோறும் ஒரு பிரபலம் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சரோஜாதேவி, சோ, காஞ்சனா இவர்களைத் தொடர்ந்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலாஜி, தனது கலையுலக வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத, வெளிவராத சுவையான நிகழ்வுகள் மற்றும் சக நடிகர் -நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி வெளிப்படையாக மனம் திறந்து பேசுகிறார்.

இந்நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090319124734&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0

R.Latha
30th March 2009, 12:03 PM
சகலகலா கல்லூரி

ஜெயா டிவியில் `சகலகலா கல்லூரி' என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள கலை-அறிவியல்- பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களின் இசை- நடனம் மற்றும் நகைச்சுவை திறமைகளை வெளிக்கொண்டுவருவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தேர்வு நடத்தி அதிலிருந்து திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் போட்டிகள் நடக்கவுள்ளன.

இதில் இசை-நடனம் மற்றும் நகைச்சுவை ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் கல்லூரிக்கு `சகலாகலா கல்லூரி' என்ற பட்டம் வழங்கப்படும்.

R.Latha
30th March 2009, 12:12 PM
``ஜாலிவுட் சினிமா''

ஜெயா டிவியில் `ஜாலிவுட் சினிமா' எனும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வெள்ளி விழா கண்ட தமிழ்ப் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிக்குப் பிறகு அந்தப் படம் தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்நிகழ்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.

`ஜாலிவுட் சினிமா' ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும்.

இந்த வாரம் `அந்த 7 நாட்கள்' திரைப்படம் இடம் பெறுகிறது. பிரபல நடிகர், நடிகைகளின் அச்சு அசலான முகச்சாயல் கொண்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

R.Latha
30th March 2009, 12:39 PM
[tscii:9900cbb23c]சகலகலா கல்லூரி

ஜெயா டி.வி.யில் ‘சகலகலா கல்லூரி' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள கலை -அறிவியல் -பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது இசை, நடனம் மற்றும் நகைச்சுவைத் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். இசை -நடனம் மற்றும் நகைச்சுவை ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் கல்லூரிக்கு ‘சகலகலா கல்லூரி' என்ற பட்டம் வழங்கப்படும்.

பிரமாண்டமான அரங்கில் நடைபெற உள்ள இந்நிழ்ச்சியை மிமிக்ரி சேதுவுடன் மோனிகா தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பாடகி கல்பனா ராகவேந்தர், நடன இயக்குனர் காதல் காந்தாஸ், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 29-ம் தேதியிலிருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிப்பரப்பாகிறது.[/tscii:9900cbb23c]

R.Latha
6th April 2009, 12:48 PM
`திரும்பிப் பார்க்கிறார்' நடிகை சச்சு

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு இடம் பெறும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் வரும் வாரம் நடிகை சச்சு பங்கேற்கிறார்.

வீரத்திருமகன் படத்தில் நாயகியாக அறிமுகமாகி காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் ஜோடியாக காமெடி நடிப்பிலும் கொடிகட்டியவர் சச்சு. இந்த நிகழ்ச்சியில் இதுவரை அவர் வாழ்வில் நடைபெற்ற மறக்கமுடியாத பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார். இடையிடையே அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் ஒளிபரப்பாகும்.

R.Latha
6th April 2009, 02:04 PM
மக்கள் அரங்கம்

ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை மணிக்கு ஒளிபரப்பாகும் விசுவின் `மக்கள் அரங்கம்' நிகழ்ச்சி புதியஅரங்கில் படம்பிடிக்கப்பட்டு வருகிறது. புதிய நிகழ்ச்சியில் மேடையில் பேச்சாளர்களோடு பொதுமக்களும் உட்கார வைக்கப்பட்டனர். சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேச்சாளர்களுடன் வெளியுர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேச்சாளர்களும் 4 தலைப்புகளில் பேசி விவாதத்தை சூடேற்றினார்கள்.

நாளை காலை 11 மணிக்கு பேச்சாளர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
13th April 2009, 11:08 PM
ஜாக்பாட்

ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் `ஜாக்பாட்' கேம்ஷோ நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. சித்திரைத் திருவிழாவையொட்டி நாளை சிறப்பு `ஜாக்பாட்' நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.

நான்கு பிரபலமான தம்பதிகளை கொண்டு, பெண்கள் ஒரு பிரிவாகவும், ஆண்கள் ஒரு பிரிவாகவும் வேடிக்கையோடும், புத்திசாலித்தனத்தோடும் போட்டி போட்டுக்கொண்டால் சந்தோஷம் இரட்டிப்புத்தானே?

ஒரு அணியில் திறமைக்கு சவால் விடும் போஸ் வெங்கட், ராகவ், யுகேந்திரன், சடகோபன் ரமேஷ் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

மற்றொரு அணியில் சோனியா, பிரீத்தி, மாலினி, அபர்ணா ஆகியோர் இணைந்து தங்கள் திறமையை நிரூபிக்க போட்டி போடுகிறார்கள். முடிவு நாளையே தெரிந்து விடும்.

நன்றி: தினதந்தி

R.Latha
15th April 2009, 11:39 AM
தக திமி தா

இந்திய கலாசாரத்தின் வேர்களே அதனுடைய சாஸ்திரிய கலைகள்தான். அப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரியமான பரத கலையை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஜெயா டிவி வழங்கி வரும் நிகழ்ச்சியே தகதிமிதா நடன நிகழ்ச்சி.

பரத கலையை பாதுகாக்க வேண்டும், அதனை இளைய தலைமுறையினரிடையே வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் வித்தியாசமாக அமைக்கப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய திரை நட்சத்திரமும், நடன மேதையுமான வைஜெயந்திமாலா முதல் முறையாக சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது அரிய நடனம் மற்றும் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த சிறப்பு தகதிமிதா நடன நிகழ்ச்சியை வரும் திங்கள் காலை 7.30 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.

நடிகை அபர்ணா தொகுத்து வழங்குகிறார்.

கருத்து வடிவமைப்பு மற்றும் இயக்கம் - திருமதி ராதிகா சூரஜித்.

R.Latha
20th April 2009, 12:37 PM
சகலகலா கல்லூரி

முழுக்க முழுக்க கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் `சகலகலா கல்லூரி' நிகழ்ச்சி, ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் இதற்கான தேர்வு சுற்று நடத்தப்பட்டது. திறமையின் அடிப்படையில் 21 கல்லூரிகள் போட்டிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டன.

சகலகலா கல்லூரி என்ற பட்டத்தை வெல்லுவதற்காக, மாணவர்கள் கடுமையாக பயிற்சி செய்துள்ளனர் என்பது முதற்கட்ட போட்டியில் அவர்கள் வெளிக்காட்டிய திறமையிலிருந்தே தெரிந்தது. இசை, நடனம், வெரைட்டி என்று எல்லா சுற்றிலுமே, ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டனர்.

முதல்கட்ட போட்டியில் கலந்து கொண்ட 21 கல்லூரிகளில் வாரம் இரண்டு கல்லூரிகள் அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.

பிறகு இரண்டாம் கட்ட போட்டியில் மேலும் சில கல்லூரிகள் வெளியேற்றப்பட்டு, கால் இறுதிப் போட்டிக்கு 9 கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகிறது. அதிலிருந்து 3 கல்லூரிகள் வெளியேற்றப்பட்டு அரை இறுதிச் போட்டிக்கு 6 கல்லூரி தேர்வு செய்யப்படும்.

அரை இறுதிப் போட்டியில் இரண்டு அணிகள் வெளியேற்றப்படும். பிறகு, இறுதிப் போட்டியில் 4 கல்லூரிகள் மோதும். அதில் வெற்றி பெறும் கல்லூரி, `சகலகலா கல்லூரி' என்ற பட்டத்தை வெல்லும்.

மாணவர்களின் இசைத் திறமையை பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தரும், நடனத்திறமையை நடன இயக்குனர் கந்தாஸும், நகைச்சுவை மற்றும் இதர திறமைகளை நடிகை ஐஸ்வர்யாவும் மதிப்பிட உள்ளனர்.

இவை தவிர நிகழ்ச்சியின் அரை இறுதி சுற்றுக்களிலிருந்து சில திரைப்பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக வரவுள்ளனர்.

R.Latha
20th April 2009, 12:39 PM
ஜாலிவுட் சினிமா'

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சி, `ஜாலிவுட் சினிமா.' இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் `காதல் கொண்டேன்' திரைப்படம் இடம்பெறுகிறது.

`காதல் கொண்டேன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மலையிலிருந்து விழுந்து இறந்துபோகும் வினோத் கதாபாத்திரமும் `மன்மதன்' திரைப்படத்தில் காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இறந்துபோகும் விச்சு கதாபாத்திரமும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் இந்த கதை தொடர்கிறது. வினோத் கேரக்டரில் தனுஷும், விச்சு கேரக்டரில் சிம்புவும் நடித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கேரக்டர்களும் இணைந்து காதல் போர்வையில் பெண்களை கடத்துகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணிடம் இருவருமே காதல் வயப்பட்டு தாங்களின் காதலை சொல்ல முற்படுகிறார்கள். கடத்தப்பட்ட பெண்களின் நிலை என்ன? இவர்களின் காதல் கைகூடியதா?

ஜெயா டிவியில் நாளை காலை 10 மணிக்கு `ஜாலிவுட் சினிமா' நிகழ்ச்சியில் காணலாம்.

R.Latha
28th April 2009, 11:51 AM
திரும்பிப் பார்க்கிறேன்

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சி வெள்ளித்திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான் `திரும்பிப்பார்க்கிறேன்'.

சரோஜாதேவி, சோ, காஞ்சனா, பாலாஜி, சச்சு இவர்களைத் தொடர்ந்து, இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பங்கேற்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி உட்பட 18 மொழிகளில் பாடி தனது குரல்வளத்தால் பல இதயங்களை நெகிழ வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத, மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும், சக பாடகர்கள்-பாடகிகள், இசையமைப்பாளர்களுடனான அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார். அவர் பாடிய பாடல்களும், காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறும்.

R.Latha
4th May 2009, 03:46 PM
அறுசுவை நேரம்



ஜெயா டி.வி.யில் செவ்வாய்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `அறுசுவை நேரம்' பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா பலராமன் சமைத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி புது அரங்கில் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.

இதில் விதவிதமான சைவ உணவு வகைகளின் செய்முறைகளை விளக்கத்துடன் செய்து காண்பிக்கிறார். இதில் வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகளும் அடங்கும்.

R.Latha
4th May 2009, 03:47 PM
`ஹாசினி பேசும் படம்'



ஜெயா டி.வி.யில் ஞாயிறுதோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியை நடிகை `சுஹாசினி' தொகுத்து வழங்குகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் ராஜமோகன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள `குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படத்தை விமர்சனம் செய்கிறார்.

R.Latha
4th May 2009, 03:59 PM
[tscii:86c4a97965]அறுசுவை நேரம்

First Published : 04 May 2009 11:03:00 AM IST


ஜெயா டி.வி.யில் இல்லத்தரசிகளைக் கவர்ந்து வரும் ‘அறுசுவை நேரம்' சமையல் நிகழ்ச்சி, வரும் வாரங்களிலிருந்து புதுப் பொலிவுடன் புதிய அரங்கில் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.

சமையல் கலை நிபுணர் சாந்தா பலராமன் சமைத்துத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விதவிதமான சைவ உணவு வகைகள், வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் தயாரிப்பது குறித்து செய்முறைகளுடன் விளக்கப்படுகிறது.

உடல் நலத்திற்கு தேவையான... குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்னைகளை வரும் முன் தடுப்பதற்கு ஏற்ற உணவு வகைகள் சமைத்துக் காட்டப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
[/tscii:86c4a97965]

aanaa
9th May 2009, 06:30 PM
Kichukichu.com

(Jaya TV, Thursdays, 7 p.m.)

The fun-filled episode of Kichukichu.com features the Vegaland theme park in Kochi. Filmed in the colourful settings, an added attraction of this series is the comedy interludes chosen from films.



நன்றி: Hindu

R.Latha
11th May 2009, 11:12 AM
[tscii:6e2b638f73]பொய் சொல்ல போறோம்

:ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை தொடர் ‘பொய் சொல்ல போறோம்'.
இந்த தொடர் வரும் நாள்களில் 50 வது எபிசோடை தொடுகின்றது. ஜோசியக்காரனால் சொல்லப்படும் அடுத்த ஜென்மத்துக் கதையால் ஏற்படும் விபரீதங்கள் இதில் நகைச்சுவையாகச் சொல்லப்படுகிறது.
நடிகர்கள் மோகன்ராம், சாய்ராம், விஜய்சாரதி, ‘பூ' விலங்கு மோகன், நளினி, தேவதர்ஷினி, ஆர்த்தி, பாலாதி, அரவிந்த் ராகவ், நித்யா, ஸ்ரீலதா, ராஜாஸ்ரீ, தீபா உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்தொடர் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF %8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+ %E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%A F%8D&artid=pXYVVVDiI8A=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:6e2b638f73]

R.Latha
11th May 2009, 12:05 PM
பொய் சொல்ல போறோம்

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `பொய் சொல்லப் போறோம்' தொடர், 50-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.

சாய்ராம் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான காலனியில் குடியிருப்பவர்களை காலி பண்ணுவதற்கு பண்ணிய கலாட்டாக்கள், காலனியில் குடியிருப்பவர்கள் வாடகை தராமல் சாய்ராம் குடும்பத்தினரை படுத்திய பாடுகள் என தொடரும் நகைச்சுவை காட்சிகள் சிரிப்பு மயமானவை.

சாய்ராமிற்கு பிரச்சினை மேல் பிரச்சினை வர, தனது நண்பனிடம் சென்று ஐடியா கேட்கிறார். அவனோ "இதற்கு ஒரே வழி, நாடிமுத்து ஜோசியரை பார்ப்பதுதான்'' என்கிறான். சாய்ராமும் ஜோசியரை சென்று பார்க்க அவரோ "இன்னும் 6 மாதத்தில் நீ உயிர் இழந்து விடுவாய்'' என்று அதிர்ச்சி வெடிகுண்டை வீசுகிறார்.

ஜோசியர் சொன்னதில் சாய்ராம் அதிர்ச்சியடைகிறார். ஆனாலும் மனதை தேற்றிக் கொண்டு அடுத்த ஜென்மத்தில் பிறக்கப்போகும் பிறப்பு பற்றி கேட்கிறார். அதற்கு நாடிமுத்து ஜோதிடர், "முதுகில் ஒரு ரூபாய் சைசிற்கு மச்சம் உள்ள தாத்தா ஒருவர் உனது காலனியில் இருக்கிறார். அவருக்கு தத்து மகளாக இருக்கும் பெண்ணிற்கு திருமணமாகி அவள் மகனாக நீ பிறப்பாய்'' என்று கூறுகிறார்.

சாய்ராம் தன் அடுத்த ஜென்மத்து தாத்தாவை தேட, அது சாமிநாதன் என்று தெரியவர அவரை தாத்தா, தாத்தா என்று கூப்பிடத் தொடங்குகிறார். அவரது தத்து பெண்ணையும் தேடுகிறார். தனது அடுத்த ஜென்மத்து அம்மாவை சாய்ராம் கண்டுபிடித்தாரா... அல்லது இந்த ஜென்மத்து அம்மாவை சாய்ராம் கண்டுபிடித்தாரா, அல்லது இந்த ஜென்மத்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்தாரா என்பதை தொடரும் நகைச்சுவை காட்சிகள் விவரிக்கிறது.

நடிப்பு : மோகன்ராம், சாய்ராம், விஜய் சாரதி, பூவிலங்குமோகன், நளினி, தேவதர்ஷினி, ஆர்த்தி, பாலாஜி, அரவிந்த் ராகவ், சாமிநாதன், ஸ்ரீலதா, ராஜஸ்ரீ, தீபா.

aanaa
17th May 2009, 05:56 PM
எம்.என். நம்பியாரின் `திரும்பிப் பார்க்கிறேன்'



தமிழ்த் திரைவானில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான் `திரும்பிப்பார்க்கிறேன்'.

நடிகர்-நடிகைகள் வரிசையில் சரோஜாதேவி, சோ, காஞ்சனா, பாலாஜி, சச்சு, வி.எஸ்.ராகவன் ஆகியோரைத் தொடர்ந்து, இந்த வாரம் முதல் வில்லன் நடிப்பில் தனிமுத்திரை பதித்த மறைந்த நடிகர் எம்.என். நம்பியாரின் பேட்டி ஒளிபரப்பாகிறது. நம்பியார் உயிருடன் இருந்த போது அவர் கொடுத்த கடைசி பேட்டி இது.

தன் இளம் வயதிலேயே நடிப்பின் மீது இருந்த மோகத்தால் 13 வயதில் மேடை நாடக குழு ஒன்றில் சேர்ந்த நம்பியார், 1935 ஆம் ஆண்டு `பக்த ராமதாஸ்' எனும் திரைப்படத்தில் நடிகரானார். இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வில்லன் வேடமே.

தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் வில்லன் வேடங்களே அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. 70 வருடங்களில் 7 தலைமுறைகளுடன்ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

இந்நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத, மறக்க முடியாத பசுமையான நினைவுகளுடன் சக நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். அவர் நடித்த படங்களிலிருந்து காட்சிகள், பாடல்கள் இடையிடையே இடம்பெறும்.

வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு இந்த சுயசரிதை தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.


நன்றி: தினதந்தி

aanaa
17th May 2009, 05:57 PM
மீண்டும் சிம்ரன்



நடிகை சிம்ரனை சின்னத்திரைக்கு கொண்டு வந்து `சிம்ரன் திரை' என்ற தலைப்பில், மாதம் ஒரு குறுந்தொடரை ஒளிபரப்பியது, ஜெயா டிவி.

விதவிதமான கதாபாத்திரங்களில் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்க, ஒளிபரப்பாகி முடிந்த இந்த குறுந்தொடரை ஜெயா டிவி மறுஒளிபரப்பு செய்கிறது, வரும் திங்கள் முதல் இரவு 9.30 மணிக்கு மறு ஒளிபரப்பு தொடங்குகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:25 PM
ராகமாலிகா



ஜெயா டிவியின் பிரபலமான இசை நிகழ்ச்சிகளில் ஒன்று `ராகமாலிகா' புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதோடு அற்புதமான பழைய பாடல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதில் ஜெயா டிவியின் `ராகமாலிகா' நிகழ்ச்சி ஒரு முன்னோடி.

தற்போது 300-வது வாரத்தை எட்டியுள்ள இந்த இசை நிகழ்ச்சி, உலகம் முழுவதிலும் வாழும் இசை ரசிகர்களை பெரிதும் ஈர்த்த நிகழ்ச்சி. முழுமையான பாடகர்கள், பாடகிகளை உருவாக்கும் ஒரு பயிற்சி மேடையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல இளைஞர்கள் திரைத்துறையிலும், இசைத் துறையிலும் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக திரையுலக மேதைகளின் பாடல்களை பாடி சிறப்பித்து வந்த இந்த நிகழ்ச்சி, அதன் உச்சக்கட்டமாக, பிரம்மாண்டமான 300-வது நிகழ்ச்சியாக நாளை சென்னை நாரத கான சபாவில் நடைபெற உள்ளது.

இதுவரை ராகமாலிகா நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி பாராட்டுப் பெற்ற இளைஞர்கள் மற்றும் பிரபல பின்னணி பாடகர்களும் இணைந்து இந்த 300-வது சிறப்பு நிகழ்ச்சியில் பாடவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை இலவசமாக ரசிகர்களும் நேரில் கண்டு ரசிக்கலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:29 PM
திரும்பிப் பார்க்கிறேன்



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு `ஜெயா தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பாகி வரும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில், வரும் திங்கள் முதல் நடிகர் ரவிச்சந்திரனின் நினைவலைகள் ஒளிபரப்பாகிறது.

இயக்குனர் ஸ்ரீதரால் `காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமானவர் ரவிச்சந்திரன். முதல் படமே வெள்ளி விழா கொண்டாடியது. நடனம் ஆடுவதிலும் சண்டைக்காட்சிகளிலும் திறமை பெற்ற ரவிச்சந்திரன் அன்றைய இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தொடர்ந்து பல வெள்ளி விழா படங்களை கொடுத்து `வெள்ளி விழா நாயகன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவரும் இவரே. இதயக் கமலம், குமரிப் பெண், அதே கண்கள், நான், மூன்றெழுத்து, ஊமைவிழிகள் போன்ற பல படங்கள் இவரது நடிப்புத்திறனுக்கு சான்றாகும்.

ரவிச்சந்திரனின் திரையுலக வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்வுகள் இதில் ஒளிபரப்பாவதோடு அவர் நடித்த சில படங்களிலிருந்து பாடல் காட்சிகளும் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:31 PM
[tscii:9106b94c43]

`ஜாலிவுட் சினிமா'வில் ஜ×ராசிக் பார்க்



ஜெயா டிவியில் நாளை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் `ஜாலிவுட் சினிமா' நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி.

ஆலிவுட்டை கலக்கிய `ஜ×ராசிக் பார்க்' திரைப்படத்தில் வரும் டைனோசர் கோடம்பாக்கத்துக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பது இந்த வார கற்பனை காட்சிகளாகியிருக்கிறது.

கோலிவுட் நட்சத்திரங்கள் ரஜினி, டி.ராஜேந்தர், பாக்யராஜ், வடிவேலு ஆகியோர் டைனோசரை சந்தித்தால் என்னவாகும் என்பதை நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.

நன்றி: தினதந்தி [/tscii:9106b94c43]

aanaa
15th June 2009, 07:30 AM
ராகமாலிகா -300



ஜெயா டிவியின் `ராகமாலிகா' இசை நிகழ்ச்சி, இசைவரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சங்கீதத்தின் முக்கியத்துவம் குறையாமல் பழைய பாடல்களை இளைஞர்கள் பாடுவதால் உலகெங்கும் `ராகமாலிகா' நிகழ்ச்சிக்கென ரசிகர்கள் உருவாகிவருகிறார்கள்.

6 வருடங்களுக்கு முன்பு `ராகமாலிகா' நிகழ்ச்சியை தொடங்கி வைத்த டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா இந்த நிகழ்ச்சியின் 300-வது சிறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு நடுவர்களாக பி.சுசிலா, சுதா ரகுநாதன், ரவிகிரண் பங்கு பெற்றார்கள்.

இளம் பாடகர்களும், பாடகிகளும் காலத்தால் அழிக்க முடியாத பழைய பாடல்களைப் பாடி பரவசப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று வாரங்கள் காலை 9 மணிக்கு காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:18 PM
அமெரிக்காவில் கர்நாடக இசைவிழா



அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காகவே, ஓஹியோ மாநிலத்தில் உள்ள க்ளீவ் லேண்ட் நகரத்தில் ஜெயா டிவியால் நடத்தப்படும் மிகப் பிரம்மாண்டமான கர்நாடக இசை நிகழ்ச்சி `க்ளீவ் லேண்ட் தியாகராஜ உற்சவம்.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜெயா டிவி. இந்த இசை வைபவத்தை வழங்குகிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் சுதா ரகுநாதன், ரவிகிரண், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணா, சவுமியா மற்றும் பிரபல இசைக் கலைஞர்களும் இந்தியாவிலிருந்து இந்த இசை நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர்.

தொலைக்காட்சி வரலாற்றிலேயே `ஜெயா டிவி' மட்டுமே அமெரிக்காவில் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சியை வருடந்தோறும் ஒளிபரப்புகிறது.

இசைக் கச்சேரிகள் தவிர அங்குள்ள சுற்றுலாத்தலங்களின் அழகையும் அதன் பெருமைகளையும் சொல்லும் வண்ணம் அமைந்துள்ளது, `அக்கரைச் சீமை அழகு' என்னும் புதிய பகுதி.

ஜெயா டிவியில் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:45 PM
இதயம் தொட்ட கதைகள்



ஜெயா டிவியில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 8-30 மணிக்கு பிரபல எழுத்தாளர்களின் கதைகள், `இதயம் தொட்ட கதைகள்' என்ற பெயரில் வாரத்திற்கு ஒன்றாக ஒளிபரப்பாகின்றன. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சிவசங்கரி, அனுராதா ரமணன், ராஜேஷ்குமார், இந்திரா சவுந்தர்ராஜன் உள்ளிட்ட அத்தனை முன்னணி எழுத்தாளர்களின் படைப்புக்களும் திரைக்கேற்ற விதத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

எழுத்தாளர்களின் எத்தனையோ சிறந்த படைப்புக்கள் கடைசி வரை புத்தகமாகவே இருந்து விடுவதால் லைபரரி போன்ற இடங்களில் படிப்பவர்கள் மட்டுமே அந்த கதைக்குள் புகுந்து ரசிக்க முடியும். ஆனால் இந்த முறையில் திரைவடிவம் பெறும்போது சின்னத்திரை பார்க்கும் அந்தனை பேருக்கும் அந்தக்கதையின் சிறப்பு போய் சேர்ந்து விடுகிறது. இதனால் முற்றிலும் எதிர்பாராத கதையம்சங்களுடன் கூடிய பல வித்தியாசமான படைப்புக்கள் திரை வடிவம் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த புதிய கதைப் படைப்பை தயாரிப்பவர் விஷ்வா சுந்தர். இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர். முதல் கதையாக எழுத்தாளர் சுஜாதாவின் கதை ஒளிபரப்பாகிறது.




நன்றி: தினதந்தி

saradhaa_sn
20th June 2009, 07:06 PM
சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் ஒளிபரப்பாகிய நடிகர் ரவிச்சந்திரனின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தன் திரையுலக அனுபவங்களையும், தான் நடித்தவற்றுள் குறிப்பிடத்தக்க படங்களைப்பற்றியும் மிகவும் சுவையாகவும், நமக்கு தெரியாத பல அதிரடியான விஷயங்களையும் அழகாக தொகுத்து வழங்கினார். தான் படப்பிடிப்புகளின்போது சந்தித்த விபத்துக்கள், குறிப்பாக 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்துக்காக சேலம் சென்றபோது வழியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தான் சிக்கியது பற்றி அவர் குறிப்பிட்டபோது, நமக்கு உடல் சிலிர்த்தது. அதுபோலவே அதே கண்கள் படப்பிடிப்பின்போது பிருந்தாவனம் கார்டனில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவு.

மொத்தம் ஐந்து நாள் எபிசோட்டில், தன்னை அறிமுகப்படுத்திய சித்ராலயா நிறுவனத்தையும் இயக்குனர் பற்றியும் பேசவே கிட்டத்தட்ட் ஒன்றரை எபிசோட்கள் எடுத்துக்கொண்டார். ரவியைப்பற்றி சித்ராலயா கோபு, வெ,ஆ.மூர்த்தி ஆகியோரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சித்ராலயா, மாடர்ன் தியேட்டர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, தேவர் பிலிம்ஸ் என எல்லா பெரிய நிறுவனங்களிலும் தான் பணியாற்றியதை மிகவும் பெருமையாகச்சொன்னார். அவ்வப்போது அந்தந்த படங்களின் காட்சித்தொகுப்புகளும் காண்பிக்கப்பட்டன.

('காதலிக்க நேரமில்லை' என்ற தலைப்புக்கு அவர் கொடுத்த விளக்கம் வெகு ஜோர். அதாவது, மற்ற எல்லா வேலைகளுக்கும் என தனித்தனியாக நேரங்கள் இருக்கின்றன ஆனால் காதலிப்பதற்கென்று தனியாக நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரத்திலும் காதலிக்கலாம் என்ற பொருள்படத்தான் காதலிக்க நேரமில்லை என்று இயக்குனர் வைத்தார் என்று சொன்னார்).

மோட்டார் சுந்தரம் பிள்ளை படம் பற்றி சொல்லும்போது, இந்தப்படத்தின் போது சிவாஜி சாருடன் பேசிப்பழக வாய்ப்புக்கிடைத்தது என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டது கொஞ்சம் ஏமாற்றமளித்தது. அதுபோல தன் சமகால கதாநாயகனான ஜெய்சங்கர் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. சில படங்களைச்சொல்லும்போது, இந்தப்படத்தில் என்னுடன் ஜெய்சங்கர், நாகேஷ், நிர்மலா ஆகியோர் நடித்தனர் என்று பொத்தாம் பொதுவாகச்சொல்லிப்போனார். தன்னை உயர்த்திவிட்ட இன்னொரு இயக்குனரான ராமண்ணா பற்றி விவரமாகச்சொன்னார். (பின்னே... குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி யெல்லாம் மறக்கக்கூடியதா?). ஜெயலலிதாவைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், 'மேடம் ஜெயலலிதா' என்றே சொன்னார்.

தன் அழகான குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். மனைவி, மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. அழகான நிறைவான குடும்பம் அவருடையது.

ஆனால் கடைசி வரையில் ஷீலாவுடனான தன் வாழ்க்கையின் 'இருண்ட காலம்' பற்றிச் சொல்லவேயில்லை. தன் சொந்தப்படமான மஞ்சள் குங்குமம் படம் பற்றிச்சொன்னபோது கூட இயக்குனர் பட்டு, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், பற்றியும் 'என் காதல் கண்மணி' பாடல் பற்றியும் சொன்னவர் ஷீலாவை கவனமாகத் தவிர்த்துவிட்டார்.

இறுதியில் முடிக்கும்போது, தன்னுடைய 46 ஆண்டு கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த ஐந்து நாட்கள் போதாதென்றும், இன்னும் ஐந்து நாட்களாவது தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (நியாயம்தானே).

saradhaa_sn
20th June 2009, 08:07 PM
சென்ற வாரம் 'திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் நடிகை சுமித்ரா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மலையாளப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த தன்னை, குணச்சித்திர நடிகை பண்டரிபாய் அம்மாதான் தன்னுடைய சொந்தப்படமான 'அவளும் பெண்தானே' படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் என்றும் அவரை தன் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்றும் சொன்னார். (பண்டரிபாய் என்று தெளிவாக உச்சரிக்காமல் பண்ட்றிபாய், பண்ட்றிபாய் என்று அவர் உச்சரித்தது நம் காதுகளில் நாராசமாக ஒலித்தது).

தனக்கு மிகப்பெரிய திருப்பம் தந்த 'புவனா ஒரு கேள்விக்குறி' பற்றியும் 'நிழல் நிஜமாகிறது' பற்றியும் நிறையச்சொன்னார். பாரபட்சமில்லாமல் கமலுக்கு ஒன்று, ரஜினிக்கு ஒன்று. சக நடிகை ஷோபாவை ரொம்ப புகழ்ந்தார். 'அண்ணன் ஒரு கோயில்' பட அனுபவம் பற்றிச் சொன்னபோது நடிகர்திலகத்தை வானளாவ புகந்தார். அப்படத்தில் தன்னுடைய ரோலை, பாசமலர் சாவித்திரியுடன் ஒப்பிட்டு சிவாஜி சொன்னதைச்சொல்லி பூரித்தார். அப்படத்தில் இருந்து மட்டும் மூன்று நான்கு காட்சிகள் காண்பிக்கப்பட்டன. நடிகர்திலகத்துடன் ஜோடியாக நடித்த வீர 'பாண்டியுடன்', மற்றும் நடிகர்திலகத்தின் இன்னொரு படமான 'ஜஸ்டிஸ் கோபிநாத்' (ஜோடி ரஜினிகாந்த்) ஆகியவற்றைப்பற்றியும் சொல்ல, முன்னதிலிருந்து ஒரு உணர்ச்சி மயமான காட்சியும் பின்னதிலிருந்து ரஜினியுடன் டூயட் காட்சியும் காண்பிக்கப்பட்டன. வி.ஐ.பி கருத்தாக எஸ்.பி.முத்துராமன், துரை ஆகிய இயக்குனர்கள் வந்து சுமித்ராவைப்பற்றி கருத்துக்கூறினர்.

சிவகுமாருடன் நடித்த 'சிட்டுக்குருவி' படம் பற்றிச்சொல்ல அந்த காட்சியும் வந்து போனது. தன்னுடன் அதிகப்படங்களில் நடித்ததுடன் தனக்கு பொருத்தமான ஜோடி என்றும் சொல்லப்பட்ட மறைந்த ஜெய்கணேஷ் பற்றி தனியாக குறிப்பிட்டு சொல்லாதது ஏமாற்றமளித்தது. ('ஒரே முத்தம்' படத்தின்போது ஏற்பட்ட தகராறு காரணமோ?. எப்படியிருந்தாலும் அவர் இப்போது உயிருடன் இல்லை. அதனால் பழையவற்றை மறந்து அவர்பற்றி சற்று விவரமாகச்சொல்லியிருக்கலாம்).

முக்கியமான இயக்குனர்கள் தவிர மற்றவர்கள் பெயரை மறந்து சற்று தடுமாறினார். டி.யோகானந்த் பெயரை ரெங்கநாத் என்று சொன்னார். இருந்தாலும் நிறுத்தி நிதானமாகப்பேசியது அழகாக இருந்தது. பிற்காலத்தில் அம்மாவான பிறகு நடித்த படங்களில் 'பணக்காரன்', 'அக்னி நட்சத்திரம்', 'இதயத்தை திருடாதே' படங்களைப்பற்றிச்சொன்னார். இதயத்தை த்ருடாதே படத்தில், தான் ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது ஓடும் ரயிலில் தாவி ஏறும்போது நடக்கவிருந்த விபத்திலிருந்து நாகார்ஜுன் காப்பாற்றியது பற்றிச்சொன்னதுடன், அந்தக் காட்சியையும் காண்பித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

சுமித்ரா மட்டுமல்ல, ஒவ்வொரு நட்சத்திரமும் இந்நிகழ்ச்சியில் ஐந்து நாட்கள் நம் வீட்டு வரவேற்பறையில் வந்து நம்முடன் உரையாடிவிட்டு, ஐந்தாவது நாள் விடைபெறும்போது நம் மனது கனத்துப்போகிறது.

கடைசியாக வரும் அறிவிப்பளர் (அறிவிப்பாளி?), 'அடுத்த வாரம் இன்னொரு சாதனையாளருடன் சந்திப்போம்' என்று சொல்வதோடு அந்த இன்னொரு நட்சத்திரம் யாரென்று சொன்னால் நாமும் கொஞ்சம் தயாராயிருப்போமில்லையா?. ஜெயா டி.வி.செய்யுமா?.

எங்களுடைய இன்னொரு ஆதர்ஷ நாயகன் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்தை கொண்டுவாங்கம்மா.

aanaa
22nd June 2009, 02:49 AM
1. JAYA TV
A.Ethayam thotta kathaikal[ heart rendering stories], is a new serial at 8.30 every week day. It will picturize famous stories by popular writers like sujatha,pattukotai prabakar, sivashankari, rajeshkumar, Indira soundarajan, anuradha ramana, etc. Each week will be a story. The first story is that of sujatha.

aanaa
22nd June 2009, 02:49 AM
Monday to Friday, everyday morning 6.30 , you can watch Americas in Jaya TV. The program is the recorded version AND A RETELECAST of Cleveland Thyagaraja Utsavam, an yearly event in AMERICA. RENOWN ARTISTE LIKE Smt. Sudha Raghunathan, Kunnakkudi Sri M. Balamuralikrishna, Neyveli Santhanagopalan, O.S.Thyagarajan, M.S. Sheela, Lalgudi GJR Krishnan and Vijayalakshmi. The year 2009 is the Aradhana's 32nd year[ APRIL 9TH TO APRIL 19TH] {ALREADY SUDHA RANGANTHAN, SOWMAYA, RAVIKIRAN AND SOME GLIMPSES OF usA have been TELECAST last week)

aanaa
27th June 2009, 06:35 PM
திரும்பிப் பார்க்கிறேன்



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு `ஜெயா தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பாகி வரும் `திரும்பிப் பார்க்கிறேன்' சிறப்பு நிகழ்ச்சியில் இந்த வாரம் திரைப்பட நடிகை ராஜசுலோசனா குறித்த நினைவலைகள் ஒளிபரப்பாகிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் போன்ற அன்றைய பிரபல நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை ராஜசுலோசனா. இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் உச்சரிப்பில் வல்லவர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். நடனம் கற்றவர். அன்றைய இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். கதாநாயகியாகவும், நகைச்சுவையாகவும் குணசித்திர பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது கணவர் ஒரு புகழ்மிக்க திரையுலக இயக்குனர்.

நிகழ்ச்சியில் இளம் வயது முதல் கலையுலக வாழ்வில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த நிகழ்வுகளை ராஜசுலோசனா பட்டியலிடுகிறார். நிகழ்ச்சியினூடே அவர் நடித்த காட்சிகள், மற்றும் பாடல்களும் ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
4th July 2009, 06:28 PM
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் காலத்தால் அழியாத பழைய திரைப்பட பாடல்களின் தொகுப்பு இடம் பெறுகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற நிகழ்ச்சி என்ற பெருமையும் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.

வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சிறப்பு தேன்கிண்ணத்தில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் அவருக்கு பிடித்த பாடல்களை பாடுவதோடு, பிடித்ததற்கான காரணங்களையும் கூறுகிறார். திங்கள் தோறும் நான்கு வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது, இந்த நிகழ்ச்சி.

aanaa
5th July 2009, 06:13 PM
சவால்-500



ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சவால்' நிகழ்ச்சி, பத்து வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து ஒளிபரப்பாகி 500-வது நிகழ்ச்சியை தாண்டியிருக்கிறது.

நடிகர் பிருத்விராஜ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, பல சவால்களை பலதரப்பட்டவர்களுக்கும் கொடுத்து வெற்றிவாகை சூடி வருகிறது.

மலேசியா, கொழும்பு, லண்டன், மொரீஷியஸ் என்று பல வெளிநாடுகளுக்கும் சென்று `சவால்' நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களில் பல சாதனைகளை புரியத் துடிக்கும் பலருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு மேடையாகவும் அமைந்துள்ளது.

aanaa
5th July 2009, 06:21 PM
[tscii:3778730b93]Thaen Kinnam Special

(Jaya TV, Monday, 9.30 a.m.)

The special edition of ‘Thaen Kinnam’ to be telecast on July 6 will be hosted by the popular yesteryear playback singer, P. Suseela. This time, the weekly show that includes rare, lilting movie music of the past, will have Suseela presenting her choice numbers, singing them for listeners and explaining the reasons for choosing them. [/tscii:3778730b93]

aanaa
5th July 2009, 06:21 PM
Padi Maathi Padi

(Jaya Plus, Saturdays, 12 Noon)

Prospects of courses taken up after Plus Two, higher level qualifications and job opportunities will be detailed in a new show on Jaya Plus every Saturday, beginning July 4. The one-hour programme will highlight the courses that have been introduced this academic year.

Heads of colleges will participate and offer useful information to viewers, besides clarifying doubts of callers.

aanaa
12th July 2009, 05:21 PM
இதயம் தொட்ட கதைகள்



திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `இதயம் தொட்ட கதைகள்'.

இதில் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாரம் ஒரு கதையாக வெளிவருகிறது. சின்னத்திரை முன்னணி நடிகர்- நடிகைகள் ரசிகர்களின் இதயத்தை வசப்படுத்த வருகிறார்கள்.

பிரபல எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை' எனும் தொடர்முதலில் வெளிவருகிறது. தொடர்ந்து சுவாரஸ்யமான கதையம்சங்களுடன் கூடிய பல வித்தியாசமான படைப்புகள் வெளிவரவுள்ளன. முக்கிய கதாபாத்திரங்களாக வேலு பிரபாகரன், சாந்தி ஜீவா யுவராஜ், பிரியன் நடிக்கிறார்கள்.

செந்தில் குமார் இயக்குகிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:26 PM
`ஹாசினி பேசும் படம்'



ஜெயா டி.வி.யில் நடிகை `சுஹாசினி' தொகுத்து வழங்கும் `ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்துள்ள `நாடோடிகள்' திரைப்படத்தை விமர்சனம் செய்கிறார்கள். படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, கதாநாயகன் சசிகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நாளை மதியம் 1.30 மணிக்கு இந்த

நன்றி: தினதந்தி

aanaa
18th July 2009, 07:12 AM
திரும்பிப் பார்க்கிறேன்



ஜெயா டிவியில் அன்றைய திரைக்கலைஞர்கள் பங்கேற்று வரும் `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி பங்கேற்கிறார்.

கன்னட மாநிலத்தில் பிறந்த ஜெயந்தியின் இயற்பெயர் கமலா குமாரி, நடன கலைஞராக ஆகவேண்டும் என்று தாயாரின் விருப்பத்திற்கிணங்க நடனப்பள்ளியில் பயின்றார்.

இளம் வயதில் சில தமிழ், தெலுங்குப்படங்களில் துணை நடிகை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் அறிமுகமான முதல் படம் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். பிரபல நடிகை அஞ்சலிதேவியால் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத, மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும், சக நடிகர்கள் - நடிகைகளுடனான அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நடித்த படங்களிலிருந்து பாடல்களும், காட்சிகளும் இடையிடையே இடம்பெறும்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி.

aanaa
19th July 2009, 01:13 AM
அரையிறுதிப் போட்டியில் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்'



ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியில் இளம்பாடகர், பாடகிகள் திருமணமான இல்லத்தரசிகள், டூயட் சீரிஸ் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் 4 பகுதிகளாக அரங்கேறியது.

அதனை தொடர்ந்து 30 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் `சீனியர் சீரிஸ்' எனும் பகுதி ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் முதல் `அரை இறுதி' போட்டி தொடங்கவுள்ளது. பின்னணி பாடகர் மனோ பங்கேற்கிறார். இந்த அரை இறுதி சுற்று தொடர்ந்து 2 வாரங்கள் ஒளிபரப்பாகவுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் காணலாம்.




நன்றி: தினதந்தி

saradhaa_sn
9th March 2010, 07:59 PM
திரும்பிப் பார்க்கிறேன்

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சி வெள்ளித்திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான் `திரும்பிப்பார்க்கிறேன்'.

சரோஜாதேவி, சோ, காஞ்சனா, பாலாஜி, சச்சு இவர்களைத் தொடர்ந்து, இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பங்கேற்கிறார்.


எங்களுடைய இன்னொரு ஆதர்ஷ நாயகன் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்தை கொண்டுவாங்கம்மா.

ஜெயா டி.வி.யின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்களன்றும் நமக்கு ஒரு எதிர்பார்ப்பு. இந்த வாரம் யார் வந்து தன் திரையுலக அனுபவங்களைத் திரும்பிப்பார்த்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆர்வம். (இந்த வாரம் வரப்போவது யார் என்று முதல் வாரமே அறிவிக்க மாட்டார்கள்).

அந்த வகையில் நேற்று (08.03.2010) யார் வரப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருந்தபோது, இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் அந்தப்பெண் காம்பியர் இப்படி அறிவித்தார்.. "அதிர்ஷ்டம்னா இவர் மாதிரிதாங்க இருக்கனும். பெரிய இயக்குனரான கே.பாலச்சந்தர் அவர்களால் நாடக மேடைகளில் செதுக்கப்பட்டு, இன்னொரு பெரிய இயக்குனரான ஸ்ரீதர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரோடு முதல் படத்தில் நடிச்சது யார் தெரியுமா? நம்ம் புரட்சித் தலைவி அம்மாதான். தெரியலீங்களா?. என்னங்க அடுத்தாத்து அம்புஜத்துக்குக் கூட இவரைத் தெரிஞ்சிருக்கும்போது உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?" என்று அந்தப்பெண் அறிவித்ததுமே புரிஞ்சு போச்சு. ஆகா.... "நம்ம" ஸ்ரீகாந்த் அல்லவா வரப்போகிறார் என்று மனம் முழுக்க மகிழ்ச்சி.

அவரேதான்....

R.Latha
22nd March 2010, 12:10 PM
ராகமாலிகா'வில் பி.சுசீலா



ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி, `ராகமாலிகா.' இப்போது இந்த நிகழ்ச்சி 8 முதல் 13 வயதுள்ள மாணவ, மாணவியர்களுக்கானஸ்கூல் சாம்பியன்சிப் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. ஏற்கனவே கல்லூரி மாணவர்களுக்கான போட்டியை ராகமாலிகா நடத்தி முடித்ததை தொடர்ந்து இப்போது பள்ளி மாணவர்கள் பக்கம் இந்த நிகழ்ச்சி வந்திருக்கிறது.

தொடர் முழுவதும் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தலைமையேற்கிறார். பழைய பாடல்களின் பெருமையையும் இனிமையையும் எப்போதும் மக்களுக்கு உணர்த்தி வரும் `ராகமாலிகா'வில் பிஞ்சுக் குரல்கள் அந்தக் கால நினைவுகளை அசை போடுகிறார்கள்.

R.Latha
29th March 2010, 12:09 PM
அருக்கானி டூ அழகுராணி

பெண்களுக்காகப் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி.​ 'அருக்கானி டூ அழகுராணி' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

​ ​ கல்லூரி மாணவிகள்,​​ பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோருக்கு முறையான பயிற்சிகள் அளித்து,​​ தன்னம்பிக்கையூட்டி அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.​ இதில்,​​ தாம் அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை உண்மையான அழகுராணிகளாக மாற்றுகிறார்கள்.

​ ​ தங்களிடம் உள்ள திறமையை அறியாத பெண்களை வித்தியாசமான அணுகுறை மூலம் அவர்களுடைய திறமையை அறியச் செய்யும் இந்த நிகழ்ச்சியை குட்டிபத்மினியின் மகள் கீர்த்தனா தயாரிக்கிறார்.​ அகிலா பிரகாஷ் இயக்குகிறார்.

​ ​ பிரபல சிகை அலங்கார நிபுணர்கள்,​​ ஆடை வடிவமைப்பாளர்கள்,​​ கல்வியாளர்கள்,​​ மனோதத்துவ நிபுணர்கள்,​​ பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 28}ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=216592&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

aanaa
17th April 2010, 07:23 PM
எம்.ஜி.ஆர் -சிவாஜியின் நண்பர்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இந்த வாரமும் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் கலை உலக அனுபவங்கள் தொடர்கிறது. ஒரு நட்சத்திர நடிகராக அவர் நேசித்த எம்.ஜி.ஆர், பின்னாளில் அவரது நெருங்கிய நண்பராகவே ஆகிப்போனார்.

அந்த நட்பின் வலிமை தான் பின்னாளில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரானபோது சரவணனுக்கு சென்னை நகர ஷெரீப் அந்தஸ்தையும் தேடிக் கொண்டு வந்து சேர்த்தது.

எம்.ஜி.ஆர். மீதான இவரது அன்பின் அடுத்த கட்ட வெளிப்பாடே, அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சையளித்து அவர் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் பிரீட்மேனுக்கு சென்னையில் பெரும்விழா எடுத்து கவுரவிக்கும் அளவுக்கு போனது.

உத்தர்புருஷ் என்ற வங்காளப் படத்தின் கதையில் சின்னச்சின்ன மாற்றம் செய்து அதை தமிழுக்கு ஏற்றவிதத்தில் உருவாக்கிய படமே உயர்ந்தமனிதன். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப்படத்தில் சிவாஜி நடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் சரவணன்.

படத்தில் அசோகன் நடித்த டாக்டர் கேரக்டரில் நடிக்கவே முதலில் சிவாஜி விரும்பியிருக்கிறார். ஆனால் கதாநாயகனாக நடித்தேயாக வேண்டும் என்று சரவணன் வற்புறுத்தியதன் பேரில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி தமிழக அரசின் அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை பெற்றார் சிவாஜி. அதோடு `சிவாஜியின் 125-வது படம்...ஏவி.எம்.மின் வெற்றிப்படம்' என்ற பெயரையும் நிலைநிறுத்தியது.

இந்தப்படம் தயாரான கால கட்டத்தில் அதுவரை சிறுமனஸ்தாபம் காரணமாக நட்பு பாராட்டாமல் இருந்த சிவாஜியையும் அசோகனையும் மீண்டும் நண்பர்களாக்கிய பெருமையும் சரவணனுக்கு உண்டு.

இதுபற்றியெல்லாம் சுவாரசியமாக விவரித்திருக்கும் சரவணன், அடுத்து ரஜினி, கமல் படங்களை தயாரித்த அனுபவம், விசு எழுதி இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் தயாரித்த பின்னணி பற்றியும் சுவை பட விவரிக்கிறார். முத்தாய்ப்பாக ரஜினி-ஷங்கர் கூட்டணியைக் கொண்டு வெற்றிப்படமான `சிவாஜி' தந்த அனுபவமும் இடம் பிடிக்கிறது. இயக்கம்: கா.பரத்.


நன்றி: தினதந்தி

R.Latha
7th June 2010, 12:10 PM
சினிமா
ஜாக்பாட்டில் நதியா

First Published : 04 Jun 2010 05:47:55 AM IST

Last Updated :

நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கி வந்த ஜெயா டி.வி.யின் "ஜாக்பாட்' நிகழ்ச்சியை இனி நடிகை நதியா தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வந்த குஷ்பூ, தி.மு.க.வில் இணைந்ததால் ஜாக்பாட் நிகழ்ச்சி கடந்த மாதம் நிறுத்தப்பட்டது.

இப்போது "ஜாக்பாட் சீசன் -2' என்ற பெயரில் வரும் 13-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி தன் ஒளிபரப்பைத் தொடங்குகிறது. பழைய ஜாக்பாட் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிய அதே டெலி ஜூம் நிறுவனம், இந்த நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்குகிறது.

திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து "பட்டாளம்', "சண்டை' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போது முதன் முதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நதியா வந்திருக்கிறார்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=251243&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

aanaa
15th January 2012, 08:31 PM
Jaya Tv Nagaisuvai Pongal 15-01-12



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=UwZYyvaigyo

aanaa
15th January 2012, 08:33 PM
Jaya Tv Pongal Sirappu Pattimandram 15-01-12



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5doFv_4js70




http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mufUmm7yo2w




http://www.youtube.com/watch?v=sD-PU14IQIw&feature=player_embedded




http://www.youtube.com/watch?v=sD-PU14IQIw&feature=player_embedded




http://www.youtube.com/watch?v=y9PiGVBozrQ&feature=player_embedded