PDA

View Full Version : SANGAM LITERATURE PERIOD TAMILS

devapriya
8th October 2007, 01:35 AM
சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி

கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்

கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைஅகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம், சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள், அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம்.

Sudhaama
11th October 2007, 10:52 AM
சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.

...............

பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம், சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள், அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம்.

"சங்கம்" என்னும் தமிழ் சொல்... வடமொழி மூலத்திலிருந்த வந்த தற்சம சொல். தமிழ் இலக்கியத்தில் சேர்ந்து விட்ட...

... கரம், முகம், சிகரம், மகுடம், சிம்மாசனம் போன்ற

...வடமொழி சொற்களை தமிழ்-மொழி ஏற்றுக்கொண்டுள்ளதை போல.

ஆனால் "சமுதாயம்" என்னும் சொல் வடமொழி அன்று. தமிழே தான்.

வடமொழியில் அதன் பெயர் "சமாஜம்" என்பதாகும்.
.

devapriya
6th November 2007, 12:29 PM
சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.

மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.

கொல்லப்பட்ட அரக்கன் - தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Sudhaama
6th November 2007, 06:22 PM

... :clap: :clap: :clap:
.

devapriya
6th November 2007, 09:29 PM
இருதமிழ் மன்னர்கள் ஒற்றுமையாய் காணுதல் அரிது என்பதை விளக்க சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்து துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக கண்டதை காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் புறநானூறில் பாடுகின்றார்:

இருப்பெருந் தெய்வங்கள் கண்ணனையும் பலதேவனையும் ஒன்றாக பார்ப்பது போலுள்ளது என்கின்றார்.

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறநானூறு்:58:14 - 16

செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! - (பரி.3:81-82)

சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே! பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.

புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-பரிபாடில்.15:49-52

கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல் கடவுளாம்.

சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் 1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
- சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை

கொல்லப்பட்ட கொடுங்கோல் அரக்கன் - தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

அனைத்து மன்ற உறவுகளுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இன்பம் பொங்கும் தீபாவளி மகிழ்வை தரட்டும் அனைவருக்கும்.

devapriya
7th November 2007, 03:58 PM
சங்க இலக்கியம் என்பது பாட்டும்-தொகையும்.

பத்துப்பாட்ட்டும்- எட்டுத் தொகையும்.

உலகில் பெரும்பாலான நாடுகள் பொலே இலக்கியக் காலம் குறிக்க முன்பே குறிக்கப் பட்ட மன்னர்கள் நிகழ்வுகள் இவற்றோடு இணைத்து நோக்கி காலம் குறித்தனர். பின் கல்வெட்டுகள். புதை பொருள் ஆய்வில் கிடைத்தவை கார்பன் - 14 ஆய்வு என உதவும். மேலும் நிச்சயமாய் காலம் குறிக்கப் பட்ட இலக்கியம் முன்பு உள்ள ஒரு பாட்டை கூறும் போது அந்த பழைய பாடல் காலமிடப்படும்.

இவ்வழி சங்க காலம் காலம் நிர்ணயம் செய்ய உத்வியது அசோகர் கல்வெட்டுகள். அசோகர் காலம் வ.கா.மு.3ம் நூற்றாண்டு, அவர் கல்வெட்டு தமிழகத்தில் 4 பெரும் அரசுகள் என சதியபுத்ர-கேரளபுத்ர- சோர-பாண்டிய என இருந்தது. இவை அதியமாந்சேர- சோழ- பாண்டிய எனக் காணவும், மேலும் சில பாடல்கள் மோரியர் வரவு பற்றி உள்ளது. சிலப்பகிகாரத்தில் கண்ணகி விழ்ழவிற்கு இலங்கை மன்னன் கயவாகு வந்தான் என உள்ளது, இவன் காலம் வ.கா. 2ம் நூற்றாண்டு.

(B.C.E.-Before Common Era-வ.கா.மு. வரலாற்று காலத்துக்கு முன; C.E.-Common Era-வ.கா.)

எனவே சங்க இலக்கியம் வ.கா.மு.200- வ.கா. 250 இடையே என்ப்பட்டது.

பல கல்வெட்டுகளும் உதவும்.

இன்றைய நிலை- சங்க காலம் ந்ன்பது வ.கா.மு.500- வ.கா. 200 இடையே என்ப்பட்டது ஆகும்.
தொல்காப்பியம் பாட்டுத்தொகைகுப் பின் வ.கா. 200 வாக்கிலானது.
திருக்குறள் இதற்குப் பின்னான சில ஆண்டுஅளில்.
சிலம்பும்- மணிமேகலையும் இந்நூற்றாண்டு இறுதியில்.

250 வாக்கில் ஒரு பக்கம் களப் பிரார்கள் வWத பின் தமிழ் இலக்கியம் வாழ்வியல் முறையிலிருந்து நீதிநெறி போதிப்பதானது- குறளிருந்து.

கரிகால் சோழன், தலையானங்கானத்டு வென்ற பாண்டியன் போன்றோர் சங்கால மன்னர்கல்.
களப் பிரார்கள் வWத பின் பல்லவர்கல் காலம்.
பின் பிற்கால சோழர்ஸேரர் என வரும்.

devapriya
23rd November 2007, 10:28 PM
[tscii:fca7ecaa49]திருக் கார்த்திகை தீபம்.
===========================
கார்திகை மாத பெªர்ணமி தினத்தன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.ஆதிகால�
�் தொட்டே மக்கள் அக்கினியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அந்த அடிப்படைக் காரணம் தான் பெரும்பாலும் நம் பண்டிகைகளில் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்கினியைத்திருப்தி செய்வதுதான் இப்ப்ண்டிகையின் நோக்கமாகும்.

அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்கினியும் பிரகாசிக்கின்றது. அக்கினியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் 'சிவம்' என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி சொரூபமாகக் காட்சி தருகிறது. அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதிஎனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம்.

கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர். தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பெªர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். "உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே." "ஆடிப்பாடி அண்னாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ளவினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிர்சித்தமானது. அடி முடி காண முடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தவே திருமாலும் நான் முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது. அனற்பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார் எம் பெருமான். அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் அம்பலவாணரைத் தேடி விண்ணுலகம் சுற்றினார். திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார். அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். ஓவ்வொரு சிவன் கோவிலின் பின்புற பிரகாரத்திலும் இந்த தத்துவத்தை விளக்கும் சிவனின் தோற்றத்தை சித்திர வடிவத்தில் காணலாம். ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தரமாக விளங்குகிறது.

சிவபேருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாருர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு,ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும். காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி! திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோத்ி! மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத்தூள்சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.

அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்னால் பனை மரத்தைத் தரையில் ஊன்றி அதனுள் பனை ஓலையயும் வெடிகளையும், வண்ண மத்தாப்புக்களையும் கட்டி வைத்துக் கொளுத்துவர். சிவ பெருமானை ஜோதி வடிவாகக் காண்பது தான் சொக்கப்பனை கொளுத்துவதின் முக்கியமான ஐதீகம்.

இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர். சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனதுமறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்த் கேட்டான்.

திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில்,' கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார். ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்கு��
் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

சில ஊர்களில் மந்தாரை இலையில்,தீபம் ஏற்றுகிறார்கள்.வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கர்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் ம்ந்திரம்:
கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா
ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.
இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம். தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள்.

இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக .
நன்றி: செய்தி மூலம் தம்பிராஸ். [/tscii:fca7ecaa49]

devapriya
23rd November 2007, 10:29 PM
[tscii:4d118a425c]திருக் கார்த்திகை தீபம்.

நன்றி: செய்தி மூலம் தம்பிராஸ். [/tscii:4d118a425c]

devapriya
3rd December 2007, 05:28 PM
[tscii:e75c6c8b40]ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

பரிபாடல்2:76-87
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர்.
முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர்.
அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.

இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்
தலைவன் கூற்று

'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு ஆடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால் ...55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து,
என ஆங்கு-

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, ஆவ் யாறு' எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு,
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'
ஐயர், வாய்பூசுறார், ஆறு.
-பா¢பாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.
[/tscii:e75c6c8b40]

devapriya
12th December 2007, 10:35 PM
[tscii:07a3c7aa42]தொல்காப்பிய நூற்பா களவியல்-1

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே-

தமிழர் வீடுபேற்றுக்கு - அறம்-பொருள்- இன்பம் இவற்றை அன்போடு இணைத்து காதலர்கள் இணையுமுன் வைதீகர்கள் கூறும் 8 வித திருமண முறைகளான - 1. பிரம்ம முறை 2. தைவ 3. ஆர்ஷ 4. பிராஜாபத்யம் 5அஸ¥ர, 6.கந்தர்வ 7.ராக்ஷஸ மற்றும் 8. பைசாச முறை, இவற்றில் கந்தர்வமுறையில் மணம் செய்தபின் இணைவர்.

துறை அமை நல் யாழ்த் துணைமையோர்- கந்தர்வர்கள்.

இறையனார் அகப்பொருளுரை நேரடியாக கந்தர்வர்கள் என்கிறது.

அன்பின் ஐந்திணைக் களவென்பது படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தர்வ வழக்கம் எனமனார் புலவர்- இறையனார் அகப்பொருளுரை

[/tscii:07a3c7aa42]