View Full Version : Mekala By:The Metti Oli Team
sahana6
7th August 2007, 06:18 AM
hey guys,
well metti oli's team has started mekala which has been going on for a while now but i recently have started watching it and so far its not as bad as metti oli was.... if someone could post usually what happend that would be a great help thanks!!!
Mekala - Title song (http://raretfm.mayyam.com/stream/tvserial/Mekala.rm)
coucou
8th August 2007, 04:13 PM
its not as bad as metti oli was
:shock: :?
aanaa
8th August 2007, 06:03 PM
in brief:
Mehala - heroine ( Kayathri metti oli heroine) had hit the athai (namma vadivu) and thought she's dead so run away.
Was living Bangalore/ Malaysia / ?
Her father (Deepan Sakravathi)is a businessman - pet to his acca - always hate his wife ( Rajalaxmy) and the first daughter Mehala.
His family 1 boy & 4 girls - Mehala, Sakthi(Bavana), Kanmani(sri Vidhya), kerthana (Revathi priya).
He praise always his acca for success.
Mehala accidenty sees in TV her athai is alive and came back Chennai.
She met Anita who is friend of sakthi.
Sakthi had a boyfriend and drop
marriage arranged with another family ..
sahana6
22nd August 2007, 01:52 AM
does anyone knoe if shakthi commits suicide in the end?
aanaa
22nd August 2007, 07:22 PM
Shanthi ran away
may be marring (Today) her lover.
R.Latha
13th November 2007, 12:26 PM
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடர், நூறாவது எபிசோடைத் தாண்டியிருக்கிறது. குடும்ப உறவுகளை உணர்வுபூர்வமாக சொல்லும் இந்தத் தொடரின் கதை இனி எப்படிப் போகும்?
தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தனைக் கேட்டபோது-
"8 வயதில் வீட்டை விட்டு ஒடிப்போன மேகலா, சில ஊர்களில் பல இன்னல்களைத் தாண்டி கடைசியில்தனது சொந்த வீட்டுக்கே வந்து சேருகிறாள். மித்ரா என்ற புதுப்பெயரில் அங்கே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அப்பா, அத்தை தவிர மற்ற அனைவருக்கும் அவள் தங்கள் குடும்பத்து வாரிசு மேகலா தான் என்பது தெரிந்துபோக, ரகசியமாய் அன்பைப் பொழிகிறார்கள்.அவள் யாரென்று அப்பாவுக்கோ அத்தைக்கோ தெரிய வந்தால் அப்போதே அங்கே பூகம்பம் வெடிக்கும்.
ஆனால் இப்போது பூகம்பம் வெடித்தே விட்டது.மித்ரா தான் மேகலா என்பது அவள்அப்பாவுக்குத் தெரிந்து போக எரிமலையாகிறார்.ஒரு நிமிடம் கூட மேகலா அந்த வீட்டில்இருந்தால் நடப்பதே வேறு என்கிறார்.
மேகலாவும் கண்ணில் நீர்வழிய கிளம்ப ஆயத்தமாகிறாள்.குடும்பமே கலங்கித் தவித்த அந்த ராத்திரியில் எதிர்பாராத திருப்பம் நிகழுகிறது. மேகலாவை தாக்க இருந்த பூகம்பம் திசைமாறுகிறது.மேகலா அந்த வீட்டிலேயே இருக்கும்படியான சூழல் நிகழுகிறது. இப்படித்தான் நடக்கும் என்று எண்ணிய அத்தனை நிகழ்வுகளும் தலைகீழாகிறது. அது என்ன என்பது தான் அடுத்து வரும் சஸ்பென்ஸ் திருப்பங்கள்.''
புதிர் போலவே சொல்லி முடித்தார், டைரக்டர் விக்ரமாதித்தன்.
தொடரில் மேகலாவாக நடிப்பவர் காயத்ரி.
aanaa
13th November 2007, 06:22 PM
thanks for the review.
aanaa
17th November 2007, 07:46 PM
still could not find any reason to stay Mekala at home
R.Latha
2nd January 2008, 02:12 PM
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மேகலா தொடரில், பிரச்சினைகளுக்குப் பயந்து அப்பா கலையரசு வீட்டைவிட்டே ஓடிவிட அவர் நிர்வகித்து வந்த பில்டிங் கட்டுமான பொறுப்பை மகள் மேகலா ஏற்றுக் கொள்கிறாள். மேகலாவின் அப்பாவிடம் வீடுகட்ட முன்பணம் கொடுத்த பலரும் மேகலாவின் மீது நம்பிக்கை வைக்க, மூன்று பேர் மட்டும் நம்பிக்கையில்லாமல் லோக்கல் தாதாவிடம் போகிறார்கள். அவர்கள் மூலம் அந்த சொத்தின் மதிப்பு பலகோடி என்பதை தெரிந்து கொண்ட தாதாவுக்கு சொத்தை அபகரிக்கும் ஆசை உண்டாகிறது.
இதனால் மேகலாவுக்கு தாதா தலைவலியாகிறான். முதல் கட்டமாக மேகலாவை தன் வழிக்குக் கொண்டுவரும் நோக்கில் மேகலாவின் தங்கை கண்மணியை கடத்துகிறான். இது தெரியாமல் கண்மணியை அவள் கணவன் கொலை செய்து விட்டதாக இருவர் வீட்டிலும் பிரச்சினையாகிறது. போலீஸ் வரை போகும் இந்த பிரச்சினையில், கண்மணியை தாதா தான் கடத்தி வைத்திருக்கிறான் என்பதை கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறது போலீஸ். இதனால் தாதாவின் ஆட்டம் அதிகமாகிறது.
மேகலாவால் தாதாவுக்கு ஈடுகொடுத்து பிரச்சினையை எதிர்கொள்ள முடிந்ததா? தங்கை கண்மணியை தாதாவிடம் இருந்து உயிருடன் மீட்க முடிந்ததா? "உயிரை பணயம் வைத்து மேகலா நடத்தும் யுத்தத்தில் மேகலாவின் விஸ்வரூபத்தை பார்க்கப் போகிறீர்கள்'' என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன்.
தொடரில் மேகலாவாக நடிப்பவர் நடிகை காயத்ரி. தாதாவாக சின்னத்திரை இயக்குனர் கவிதாபாரதி நடிக்கிறார்.
aanaa
2nd January 2008, 07:15 PM
Thank you for the outlines.
and also thanking you for new info - serial director KAVITHA BARATHI
R.Latha
7th April 2008, 08:27 AM
சன் டிவியில் திங்கள்முதல் வெள்ளிவரை தினமும்இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `மேகலா' தொடர் 200 எபிசோடை தாண்டியிருக்கிறது.
"அத்தை சண்முகவடிவின் கொடுமை தாங்காமல் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போன மேகலா, கேரளாவில் ஆசிரியர் சார்லஸ் குடும்பத்துடன் ஐக்கியமாகிறாள். வளர்ந்து பெரியவளாகும்போது பக்கத்து வீட்டு யுகேந்திரனுடனான நட்பில் அவளுக்குள் காதல் பூ பூக்க, அந்தக் காதல் பிடிக்காமல் யுகேந்திரனின் அம்மா குயிலி தடுக்க முயல... யுகேந்திரன் இடம் மாற்றப்பட்டு காதலுக்கு இடைவேளை!
இதற்கிடையே சார்லசின் சொந்த மகள் மெர்சி ஒரு இளைஞனின் காதலில் ஏமாந்து, அவள் காதலனுடன் நெருக்கமாக இருந்த படங்கள் `இன்டர்நெட்' வரை வந்து விட...
உடைந்து போகிறது, அந்தக் குடும்பம்.
வளர்ந்த பெண்ணாக தனது சொந்த வீட்டுக்கு மேகலா வருகிறாள். அப்போதுதான் கடன் பிரச்சினைக்காக மேகலாவின் தந்தை வீட்டை விட்டு ஓடிப்போகும் சூழ்நிலை நேர்கிறது. மேகலா கடனுக்குப் பொறுப்பேற்று அப்போதைக்கு பிரச்சினைகளை சமாளிக்கிறாள்.
இதற்கிடையே அவள் தங்கைகள் கண்மணி, சக்தி இருவருக்கும் திருமணமாகி, அவர்கள் வாழ்விலும் பிரச்சினைகள் அணிவகுக்கின்றன. இதையே காரணம் காட்டும் அத்தை சண்முக வடிவு, அவள் வந்த பிறகு தான்இதுமாதிரி நடக்கிறது என்று புகார்ப்பட்டியல் வாசிக்க, ஒரு கட்டத்தில் மேகலாவின் அம்மாவும் மகளின் `கவலை முகம்' காண விரும்பாமல் அத்தை சொன்னதையே உறுதிப்படுத்த...
மேகலா மறுக்கிறாள். `சிறு வயதில் கிடைக்காத தாயன்பு மறுபடி கிடைத்திருக்கிறது. எந்த சூழலிலும் இதை இழக்கமாட்டேன்' என்று அடம்பிடிக்கிறாள்.
இந்த நிலையில் மேலும் ஒரு இடியாக, தங்கை சக்தி குடும்பத்தில் ஒரு புயல் வீசுகிறது. இது போதாதென்று பில்டிங் காண்ட்ராக்டர் தியாகுவும் தன் பங்குக்கு மேகலாவுக்கு எதிரான காரியங்களை மீண்டும் முடுக்கி விடுகிறான்.
தங்கை பிரச்சினை, வில்லன் மூலம் ஏற்படும் சிக்கல்களை மேகலாவால் எதிர்கொள்ள முடிந்ததா? கேரளாவில் விட்டு வந்த அவள் காதல் மீண்டும் தளிர்த்ததா?
தொடரும் காட்சிகளில் மேகலாவின் சாதுர்யமும், சாகசமும் வெளிப்படும்'' என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன்.
மேகலாவாக `மெட்டிஒலி' காயத்ரி நடிக்கிறார். மற்றும் பாவனா, ஸ்ரீவித்யா, வடிவுக்கரசியும் நடிக்கிறார்கள். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக்.
aanaa
7th April 2008, 08:57 PM
thanks Latha for the update
R.Latha
5th May 2008, 07:58 AM
* சன் டிவியில் முதலில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மேகலா தொடர், அதன்பிறகு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இப்போது மீண்டும் தொடரின் நேரத்தை மாலை 6 மணிக்கு மாற்றி இருக்கிறார்கள்.
* மேகலா தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. "பெண் கிராமத்துப் பக்கமா? நகரமா?'' என்று கேட்டால், "எதுவென்றாலும் ஓ.கே. தான். முடிவானதும் சொல்கிறேனே'' என்கிறார், விக்ரமாதித்தன்.
R.Latha
30th May 2008, 01:10 PM
mekalavin new house -il bom vaithu vidugiran antha villan. but bom-kku megala thatha baliyaagirar. then megala paatti got very upset. megala next steP-yai eduthu vaipatharkul sanmuga vadivu disturb seigirar . what to do avaravar vethanai avargalukkuthane theriyum. Antha villan phone il mirattum bothu vadivu attend seigirar, mirativitan bayangaramaga,bayanthuvittar. thats why she want to move to town.megala didn"t accept.
sathi mamiyar than paiyanidam doctor-yai consult panna sollivitar. sakthi padhatram.
vayadi thamarai is so happy. she dont know they are frad.thats why . panathai puthu marumagal ammaukku ketkum bothellam tharugirar. endru maatappogiraro kaiyum kalavumaga .
paavam megala lover antha villanidam maativittan. avanthan ippothu trumcard for villan(thadha).
aanaa
31st May 2008, 05:07 AM
thank you Latha
keep updated
aanaa
17th August 2008, 12:44 AM
மேகலா-300
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடர் 300 எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது. முதலில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்தத்தொடர், அதன்பிறகு 8 மணிக்கு மாறியது. சமீபகாலமாக அதிலும் மாற்றம் நேர்ந்து இப்போது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
குடும்பத்தின் எந்தவொரு பிரச்சினையானாலும் அது மேகலாவின் தலையீட்டில் தீர்த்து வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு கேரக்டருமே தனித்தனி முக்கியம் வாய்ந்தவை. அவரவர் எதிர்கொள்ளும் போராட்டங்களில் நீந்தி கரை கடக்க மேகலா அவர்களின் பக்கத்துணையாய் இருக்கிறாள்.
மேகலாவின் சகோதரிகள் சக்தி, கண்மணி இருவரின் பிரச்சினைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நேரத்தில், மேகலாவின் பிளாஷ்பேக், அதில் மேகலாவுக்குள் இருந்த காதல் என கதை பயணிக்கிறது.மேகலாவின் காதலன் விஸ்வம் இப்போது ஜெயிலில் இருக்கிறான். அவர்கள் ஒன்று சேர்வார்களா? இல்லையா? என்ற கேள்விக்குப் பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் நிற்கிறது.
மேகலாவின் தங்கை சக்தி இப்போது தனது காதல் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விட்டாள். அங்கே அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிற மாதிரி ஒரு சம்பவம் அமைகிறது. சக்தி வேலையில் சேர்ந்த ஆபீசின் 45 வயது பேச்சிலர் மேனேஜர்தான் இந்தப் பிரச்சினையின் நாயகன்.
இப்போது மேகலா குடும்பத்தின் ஒரே வாரிசான கடைசித் தம்பியின் கதைக்குள் தொடர் வந்திருக்கிறது. அவன் ஒரு தவறான முடிவெடுத்து விடுகிறான். அவர்கள் குடும்பத்துக்கு ஆகாத குடும்பத்துப் பெண்ணொருத்தி மேல் காதலானவன், அந்தப்பெண்ணை மணந்து வீட்டோடு மாப்பிள்ளையாகி தங்கள் குடும்பத்தை அதிர வைக்கிறான். இதில் வெடிக்கும் பிரச்சினைகள் மேகலா குடும்பத்துக்குள் எந்த மாதிரியான பூகம்பத்தை உருவாக்கி வைக்கிறது என்பது இனிவரும் பரபரப்பான காட்சிகளாக இருக்கும் என்கிறார், இயக்குனர் விக்ரமாதித்தன்.
தொடரில் மேகலாவாக காயத்ரி, சக்தியாக பாவனா, கண்மணியாக ஸ்ரீவித்யா நடிக்கிறார்கள். தயாரிப்பு: சித்திக். தொடர்பற்றி அவர் கூறும்போது, "குடும்பப்பாங்கான தொடர்கள் உணர்வுபூர்வமாகவும்அமைந்துவிட்டால் ரசிகர்கள் தொடரோடு ஒன்றி விடுவார்கள் என்பதற்கு எனது தயாரிப்பில் வந்த மெட்டி ஒலி தொடர் உதாரணம். இப்போது மேகலா தொடரும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாகும் நேரம் 6 மணிக்கு மாற்றப்பட்ட பிறகும் கனமான கதையால் 8 மணிக்கு ஒளிபரப்பானபோது இருந்த அதே ரேட்டிங்கை தொடர் தக்கவைத்திருக்கிறது.'' என்கிறார்.
aanaa
4th January 2009, 08:34 PM
மேகலா-400
திங்கள்முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடர், இப்போது 400 எபிசோடை நிறைவு செய்திருக்கிறது.
தனது குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைக்கும் தன்னை வருத்திக் கொள்ளும் மேகலா கேரக்டர், பெண்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாகி இருக்கிறது.
தொடரில் மேகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தனிடம் கேட்டபோது...
"தொடரில் இப்போது இடம் பிடித்திருக்கும் அன்பு கேரக்டர் மேகலாவின் வாழ்க்கையில் எப்படி இடம் பிடிக்க முயற்சிக்கிறான் என்பது அடுத்துவரும் பரபரப்பு காட்சிகளாக இருக்கும்.
இந்த அன்பு ஒரு பிரபல நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருக்கிறான். தனது சின்ன வயதில் நேர்ந்த பெரும்பாதிப்பு காரணமாக திருமணத்தை தவிர்த்து வருகிறான். தற்செயலாக ஒரு பத்திரிகையில், அடுத்து டிவியில் என்று முகம் காட்டும் மேகலா அவனைக் கவர்கிறாள். அவளை இப்படி ஊடகங்களின் வழியாக அவன் காணநேர்ந்த நாட்களில் அவனுக்கு ஏதாவது நல்லது நடக்கிறது. எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அவளையே மணப்பது என்ற முடிவில் இருக்கும் நேரத்தில், அவனது கம்பெனிக்கே வேலைக்கு வருகிறாள் மேகலா.
அவளை தனது நேரடி உதவியாளராக நியமித்துக்கொண்டு காதலை சொல்ல தருணம் பார்க்கும் நேரத்தில், மேகலாவின் கடைசித் தங்கை கீர்த்தனா ஒரு பிரச்சினையில் சிக்குகிறாள். இந்தப் பிரச்சினைக்கு மேகலா குடும்பமே செய்வதறியாது பதறும் சூழலில், அன்பு தனது செல்வாக்கு மூலம் அந்த பிரச்சினையை சரி செய்கிறான்.
மேகலாவின்குடும்பத்தினரிடம் தன்னை நல்லவனாக காட்டிக்கொண்டு அவளை தன் மனைவியாக்க வேண்டும் என்பதுதானே அவன் திட்டம்.
எல்லாம் கூடி வரும்வேளையில், அன்புவை உள்ளூற நேசிக்கும் மேகலாவின் தோழி அனிதா மேகலாவை சந்திக்கிறாள். "நீ நினைத்தால் அன்புவை எனக்கு பேசி முடிக்கலாம்'' என்கிறாள்.
இப்போது மேகலாவே தன் தோழியின் விருப்பம் குறித்து அன்புவிடம் பேசவேண்டிய கட்டாயம். அன்பு அதை எப்படி எடுத்துக்கொள்வான்?
இதற்கிடையில் மேகலாவின் காணாமல்போன தந்தையை தனது பாதுகாப்பில் அடைத்து வைத்திருப்பவன் அன்பு தான் என்ற உண்மையும் அவளை நெருங்கி வரப்போகிறது. மேகலா மனதில் இப்போதும் காதலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஸ்வம் ஒரு கைதியாக ஜெயிலில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான். இந்த விஸ்வம் யாரென்று தெரிந்தால் அன்புவால் அவன் என்னமாதிரியான பிரச்சினைகளை சந்திக்க நேரும்?
இப்படி கேள்விகளுக்கு விறுவிறுப்பான பதிலாய் மேகலா விரைகிறாள்.''
தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக்.
aanaa
7th February 2009, 06:24 AM
அதிரடி அத்தை
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடரில் மேகலாவின் தம்பி செரியன் தொடர்பான காட்சிகள் இப்போது பற்றிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
விரக்தியின் எல்லைக்கே போய்விட்ட செரியன் தன் இயலாமையின் கடைசி ஆயுதமாக தற்கொலையை தேர்ந்தெடுக்க, அதிலும் உடனடி சிகிச்சையில் பிழைத்துக் கொள்கிறான். மருமகனின் இந்த முடிவால் பாதிக்கப்பட்ட மாமனார், செரியனை இனி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துவிடகேட்டுக் கொள்கிறார். அதே நேரம் ஒரு கண்டிஷனும் போடுகிறார். மருமகன் பேரைச்சொல்லிக் கொண்டு எந்த உறவுக்காரர்களும் வீட்டுப் பக்கம்கூட எட்டிப் பார்க்கக்கூடாது என்பது தான்அந்த கண்டிஷன். இதற்குசெரியனும் ஒப்புக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுகிறான்.
ஆனால் செரியனின் அத்தையும் தன் சாமர்த்தியத்தால் அந்த வீட்டில் டேரா போட்டுவிடுகிறாள். அவள் தன்தம்பி மகனின் மனதில் ஒரு திட்டம் விதைக்கிறாள். அதன்படி செரியனின் மனைவி பெயரில் அவளுக்கான சொத்துக்களை அவள்அப்பாவிடம் கேட்டு வாங்குவது. அதன்பிறகு அந்த வீட்டில் இருந்து தனிக்குடித்தனத்துக்கு செரியனையும் அவன் மனைவியையும் அழைத்துச் சென்று விடுவது. இந்த திட்டத்தை செரியனின் அத்தை ஆரம்பிக்கும்போது ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை பரபரப்பாக வைத்திருக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன்.
செரியனாக நடிப்பவர் நடிகர் சரவணன். அத்தை கேரக்டரில் வடிவுக்கரசி நடிக்கிறார். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக்.
aanaa
9th May 2009, 06:16 PM
DHEEPAN CHAKRAVARTHY COMES BACK TO MEGALA SERIAL AFTER A YEAR'S TIME
For the last one year, the mega-serial Megala has been running without the character Kalaiyarasu being done by Dheepan Chakravarthy. As per the story line, Kalaiyarasu, is the building contractor and head of the family is kidnapped by a gang. The story remains suspense over the whereabouts of the Kalaiarasu. His family consists of elder sister Vadivukarasi, wife Sankarabaranam fame Rajalakshmi, their three daughters - Gayathri, Sri Vidya, Revathy Priya and Bhavana Kalaiarasu are faced with a lot of problems when Kalaiarasu was dumped in a dark room. Meghala which has crossed nearly 500 episodes now, is again inttroducing Dheepan Chakravarthy as if he escapes from the imprisoned room of the goondas. But in reality, he seeks asylum in a car to escape after getting away from the room. But the very same goons take him to another place and when they tried, the car meets with an accident. In the end, Kaliarasan losts all his previous happenings and has become like a child getting admitted to a hospital.
Last week, when the hospital scene was shot at the ARS Gardens, the director of the serial Vikramadityan and his two of his associates Kannan and Dinesh wanted to give the real picture of the hospital and hence had chosen the ARS. In the hospital scene real tablets brought from a pharmacy and all of them were B complex with some syringes and injection tubes. Nearly 40 to 50 junior artistes were hired with bandages to give a good look of the hospital. They were supplied eatables like biscuit pockets, fruits like bananas and organge and bread too.
For each and every shot, both the associate directors of Vikramaditya were careful about the delivery of the dialogues in which an artist Sekar, who took recently VRS from a nationalised bank to deliver the dialogues.
In the scene, Kalaiarasan ( who is in a mental state of forgetfullness) begs two of the unknown visitors of the hospital to remind him who he was.
Meghala, according to many viewers, has a lot of female artistes than male artistes. It has Vadivukarasi, Sankarabaranam Rajalakshmi, Sri Vidya, Bhavana, Revathy Priya, Bhanumathy, 'Sethu' fame Bharathi, Sri Lekha, besides the leading artistes like Rajakanth, Raj Madan, Yugendran.
The serial was initially introduced to be telecast around 8 PM to 8.30 PM through the Sun TV Channel was changed to 6 PM to 6.30 PM.
Since, the election date is nearing the Cine Times are making out possible effort to produceas much episode as it could do for telecast in the Sun TV Channel.
நன்றி: film channels
aanaa
26th September 2009, 09:07 PM
இவரல்லவா நடிகர்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடரில் முக்கிய கேரக்டரில் யுகேந்திரன் நடித்து வந்தார். இப்போது அவர் நடித்த கேரக்டரில் விஜயசாரதி நடித்து வருகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரை இன்னொரு நடிகர் ஒப்புக்கொள்ளும்போது அந்த கேரக்டரை அவர் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கேரக்டர் சோபிக்கும். அதைப் புரிந்து கொண்டு டைரக்டர் விக்ரமாதித்தன் விஜயசாரதியிடம் அந்த கேரக்டரின் தன்மை பற்றி விளக்க முற்பட்டார். ஆனால் விஜயசாரதியோ நீங்கள் அந்த கேரக்டரில் என்னை நடிக்க கேட்டபோதே இன்டர்நெட்டில் தொடரை பார்த்து அந்த கேரக்டரை ஸ்டெடி பண்ணிக்கொண்டேன். அதனால் நாளைக்கே படப்பிடிப்பு என்றாலும் நான் ஓ.கே. என்று சொல்லியிருக்கிறார்.
நடிகரின் இந்த இன்வால்வ்மென்ட்டில் ஒருகணம் பிரமித்துப் போயிருக்கிறார், இயக்குனர்.
நன்றி: தினதந்தி
aanaa
17th October 2009, 06:42 PM
மேகலா-600
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடர் 600 எபிசோடை கடந்திருக்கிறது.
கடன் தொல்லையை சமாளிக்க முடியாத மேகலாவின் தந்தை கலையரசு ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே ஓடிப் போகிறார். போகிற இடத்தில் ஒரு விபத்தில் சிக்கி பழைய நினைவை அறவே இழந்து விடுகிறார். இப்போது அவருக்கு தான் யார் என்பது கூட நினைவில் இல்லை.
பழசையெல்லாம் மறக்கவைத்து கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் காலம், கடைசியில் அவரை அவரது கடைசிப்பெண் திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது. கல்யாண வீட்டில் சமையல்காரர்களில் ஒருவராக அவரைப்பார்த்து அதிர்ச்சிஅடைகிறாள் அவரின் அக்கா சண்முகவடிவு. அக்கா மூலம் பிரிந்த குடும்பம் மீண்டும் அவருக்கு கிடைக்கிறது.
தொழிலதிபராக கொடிகட்டிப்பறந்த அன்றைய கால கட்டத்தில் அவருக்கு அக்கா வடிவு பேச்சு தான் வேதம். அக்கா பேச்சை கண்ணை மூடிக்கொண்டு கேட்டவர் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் வெறுப்புக்குரியவரானார்.அக்கா பேச்சைக் கேட்டே மூத்தமகள் மேகலாவை வீட்டை விட்டு துரத்தினார்.
இப்படி வீட்டில் இருந்த அந்த நாளில் குடும்பத்துக்கே சிம்மசொப்பனமாக இருந்துவந்த அந்த கலையரசன், இப்போது எல்லாம் மறந்தவராய் எதுவும் நினைவில் இல்லாதவராய் மீண்டும் அந்த குடும்பத்திற்குள் வந்திருக்கிறார்.ஆனால் அதிரடியான மாற்றம், எல்லாரிடமும் அன்பைப் பொழிகிறார். தன் கோபக்கார தம்பி பாசமிகு தம்பியாக திரும்பி வந்திருப்பதில் அக்கா வடிவுக்கு மட்டும் அதிர்ச்சி. குடும்பத்தவரை பற்றி அக்கா பழைய நினைப்பில் ஏதாவது குறை சொல்லப் போக, அதற்காக அவர் அக்காவை கண்டிக்கும் அளவுக்குப் போகிறார். இது அக்காவை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது..
அன்பு, மேகலா குடும்பத்தில் நல்லவனாக நடித்தபடி தன் நாடகத்தை தொடர்ந்த காலம் உண்டு. அவன் நோக்கம் மேகலாவை திருமணம் செய்துகொள்வது. அதற்காக பெயருக்கேற்றபடி அத்தனை அன்பை அந்தக் குடும்பத்தில் கொட்டுகிறான். அத்தனை சாமர்த்தியமாக காய் நகர்த்தி மேகலாவைத் தவிர அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த அன்புக்கும் உரியவனாகி விட்ட அன்புவால் மேகலாவை திருமணம் செய்யமுடியுமா?
மேகலாவின் அப்பா கலையரசனுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டால் இப்போது அவர் பாசத்தை பொழிந்து கொண்டிருக்கும் மேகலாவை மறுபடியும் துரத்தி விட்டுவிடுவாரா?
மேகலாவின் தங்கை கண்மணி வாழ்வில் அவள் கணவனாக வந்த பூபதி ஒரு அதிர்ச்சிப்புயல். குடிபோதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மனைவியை அத்தனை நோகப்பண்ணினவன் இப்போது அதிக போதையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ஒருநோயாளி. அதுவும் மரணத்தின் நாட்கள் எண்ணப்படும் ஒரு நோயாளி. அவன் போகிற காலத்துக்குள் அதுவரை தன்னால் சுகப்படாத தன்மனைவி கண்மணிக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட நினைக்கிறான்.அவன் எண்ணம் ஈடேறியதா?
தொடரும் காட்சிகள், தொடரை தொடர்ந்து சுவாரசியப்படுத்தும்'' என்கிறார், இயக்குனர் விக்ரமாதித்தன்.
மேகலாவாக காயத்ரி நடிக்கிறார். மேகலாவின் தந்தை கேரக்டரில் தீபன்சக்ரவர்த்தியும் அத்தை கேரக்டரில் வடிவுக்கரசியும் நடிக்கிறார்கள்.மற்றும் பாவனா, ஸ்ரீதேவி, ஸ்ரீ, சஞ்சீவ், சந்திரபோஸ், ராஜலட்சுமி, கவுதமி, ராஜ்காந்த், ஸ்ரீகுமார், வின்சென்ட்ராய் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: பாஸ்கர் சக்தி. இசை: இளங்கோ. இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக்.
[html:e2695898da]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091017/TV-04%20img019.jpg</div>[/html:e2695898da]
நன்றி: தினதந்தி
R.Latha
16th April 2010, 10:18 AM
megala mudiyapoguthu so idhai parkkavum.
[html:19cf6ac359]<object width="480" height="360"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/video/xcysxb"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed type="application/x-shockwave-flash" src="http://www.dailymotion.com/swf/video/xcysxb" width="480" height="360" allowfullscreen="true" allowscriptaccess="always"></embed></object>
15_04_10_megala1 (http://www.dailymotion.com/video/xcysxb_15-04-10-megala1_shortfilms)
Uploaded by ananney (http://www.dailymotion.com/ananney). - Watch feature films and entire TV shows. (http://www.dailymotion.com/en/channel/shortfilms)[/html:19cf6ac359]
[html:19cf6ac359]<object width="480" height="360"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/video/xcysxe"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed type="application/x-shockwave-flash" src="http://www.dailymotion.com/swf/video/xcysxe" width="480" height="360" allowfullscreen="true" allowscriptaccess="always"></embed></object>
15_04_10_megala2 (http://www.dailymotion.com/video/xcysxe_15-04-10-megala2_shortfilms)
Uploaded by ananney (http://www.dailymotion.com/ananney). - Classic TV and last night's shows, online. (http://www.dailymotion.com/en/channel/shortfilms)[/html:19cf6ac359]
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.