View Full Version : Kalaignar TV?
R.Latha
6th August 2007, 02:13 PM
கலைஞர் டிவிக்காக சீரியல்கள் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இருப்பவர்களில் முக்கியமானவர் டைரக்டர் கே.பாலச்சந்தர்.அவருக்கே உரிய பாணியில் குடும்பப் பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு சொல்லும் விதமாய் உருவாக்கி வரும் இந்த சீரியலுக்குப் பெயர் `தேன்மொழியாள்.'
R.Latha
6th August 2007, 02:21 PM
வருகிற செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கவிருக்கும் கலைஞர் டி.வி.க்கான தொடர்களும், நிகழ்ச்சிகளும் தயாரிப்பில் இருந்து வருகின்றன. இதில் முதன்முதலாக தொடங்கப்பட்ட மெகா தொடரான பாரதி தொடர் இப்போது படப்பிடிப்பில் வளர்ந்து வருகிறது.
இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்படுகிறது. `தாயகம்' திரைப்படத்தையும், `கங்கா யமுனா சரஸ்வதி' தொடரையும் இயக்கிய ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
தொடருக்கு முதல் முதலாக பிரபல இசையமைப்பாளர் `தேவா' இசையமைக்கிறார்.
கதைச்சுருக்கம்: திருமணமாகும் இளம் பெண் தன் ஆசை, பாசம், பழக்க வழக்கம் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். கணவன், மாமியார், மாமனார் என வீட்டில் உள்ள அனைவருக்கும் எல்லா பணிவிடைகளையும் செய்கிறாள். ஆனாலும் அந்த வாழ வந்த பெண்ணை அவள் கணவன் அடிப்பதும் துன்புறுத்துவதும் தொடர்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மரணத்தை தழுவிய அந்தப் பெண்ணின் தங்கை, அந்த குடும்பத்திற்கு மருமகளாக வருகிறாள். அக்காவுக்கு நேர்ந்த அநீதியை அவளால் தட்டிக் கேட்க முடிந்ததா?
தொடரின் சில காட்சிகளில் கம்ப்οட்டர் கிராபிக்ஸ் உத்திகள் பயன்படுத்தப்பட உள்ளன.
நட்சத்திரங்கள்: சஞ்சய் பார்கவ், பானு பிரகாஷ், கல்யாணி, காவேரி, `சேது' பாரதி, சத்யபிரியா, விஜயகிருஷ்ணராஜ்.
கதை வசனத்தை ரகுராஜன் எழுதுகிறார். ஒளிப்பதிவு குணசேகரன். பாடல்: பா.விஜய். டிரைடன்ட் டெலிவிஷன் சார்பில் ரவீந்திரன், அப்துல் லத்தீப் தயாரிக்கிறார்கள்.
mr_karthik
6th August 2007, 02:56 PM
கலைஞர் டி.வி.யில் இடம்பெறப்போகும் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு காம்பியராக வர இருப்பவர் குஷ்பூ (ஜெயா டிவி கோபிக்குமா?)..
தன்னுடைய புதிய தொடர் ஒன்றுக்காக கலைஞர் டி.வி.யை அணுகி இருப்பவர் ஜெயசித்ரா.
இது தவிர 'அரட்டை அரங்கம்', 'மக்கள் அரங்கம்' போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் பாக்கியராஜ்.
aanaa
6th August 2007, 06:32 PM
தகவலுக்கு நன்றி லதா.
என்ன --> கலைஞர் டிவி தான் இல்லை.
aanaa
6th August 2007, 06:34 PM
`கங்கா யமுனா சரஸ்வதி'
ஆமா இந்தப் சீரியலின் பாடல் இருக்கின்றதா
R.Latha
20th August 2007, 03:36 PM
கலைஞர் டி.வி.க்காக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சீரியல் ரேகா ஐ.பி.எஸ். நடிகை அனுஹாசன் இத்தொடரில் மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
மற்றும் விஜய் ஆதிராஜ், டெல்லிகணேஷ், கமலேஷ், சாக்ஷி சிவா, சஞ்சிவ், பாலாசிங், வெங்கட், சிந்துஜா, ஆர்த்தி, சாதனா, ஐஸ்வர்யா, வினோத்ராஜ், வத்சலா ராஜகோபாலன், நந்தகுமார், அப்சர்பாபு, ரவிவர்மா, மனீந்தர், ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள்.
`வீரமோ ஒரு பாதி...ஈரமோ ஒரு பாதி... தியாகமே அவள் சாதி... என்ற பாத்திரப்படைப்பில் பெண்ணினப் பிரதிநிதியாய், புயலாய் அநீதிகளை ஒடுக்கும் வித்தியாசமான கேரக்டரில் வரும் அனுஹாசனுக்கு அடிதடி காட்சியில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
சித்ரா லட்சுமணன் கதைக்கு சுபாவெங்கட் திரைக்கதை எழுத, இ.ராமதாஸ் வசனம் எழுதுகிறார். பாடல்: பிறைசூடன், இசை: சத்யா, ஒளிப்பதிவு: ஆம்ஸ்ட்ராங். இயக்கம்: நித்யானந்தம். பிரமிடு சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது.
---
Junior Vijayashanthi Uruvaagiraar!!!
aanaa
22nd August 2007, 07:28 PM
தகவலுக்கு நன்றி
bingleguy
22nd August 2007, 07:37 PM
நாகா வின்
"பொன்னியின் செல்வன்"
The much awaited moment is here ......................................
சிதம்பர ரகசியத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ....... மீண்டும் சின்னதிரையில் வீற வெற்றி நடை போட வரும்.....
நிக் ஆர்ட்ஸ் வழங்கும்
"மர்ம தேசம்" நாகா வின்
பொன்னியின் செல்வன்
விரைவில் கலைஞர் டிவி யில்...................
For Discussions and Upgrades ..... visit :
http://mayyam.com/hub/viewtopic.php?t=10135
R.Latha
27th August 2007, 09:56 AM
முள்ளும் மலரும்
கலைஞர் தொலைக்காட்சியில் `முள்ளும் மலரும்' என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது.
வீனஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் கும்பகோணம், மற்றும் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தொடரின் கதைச் சுருக்கம் வருமாறு:-
பெண் என்பவள் சுமைதாங்கியா? இடிதாங்கியா? எரிமலையா? பனிமலையா? என்ற கேள்விகளை எழுப்பினால், `ஆம் அவள் எல்லாமும் தான்' என்ற பதிலே பொருத்தமாக இருக்கும். அவள் மனதுக்குள் மறைந்திருக்கும் முட்களும், பூக்களும் கொஞ்சமல்ல. முள்ளாய் குத்துவதோ... பூவாய் மலர்ந்து சிரிப்பதோ சூழ்நிலைகளின் மாயா விநோதங்களே!
பெண் விடுதலை கிடைத்து வெளியே வந்ததாக தோற்றமளித்தாலும், அவள் அடைபட்டுக் கிடக்கும் ரகசிய சிறைகள் அநேகம் என்பதே உண்மை. அவள் மவுனமாய் அடையும் துயரங்களின் கணக்கை வீட்டுத் தூண்களும், அலுவலகங்களின் ஜன்னல்களும் மட்டுமே அறியும். வெளியே சிரித்து, உள்ளுக்குள் அழுது இந்த தேசமெங்கும் சோக பிம்பங்களாய் நடமாடும் பெண்களின் உணர்ச்சிகளை சொல்லி மாளாது.
இந்த முள்ளும் மலரும் தொடர், பெண்களின் ஆனந்தத்தை, கண்ணீரை கரைபுரளும் உணர்ச்சிகளை ஒரு புதிய கோணத்தில், ரத்தமும், சதையுமாக சொல்ல வருகிறது. இது வழக்கமான தொடரல்ல... ஒரு நிஜமான வாழ்க்கைத் தொடர்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது, அவளுடைய திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பெண்ணை கரை சேர்த்து நிம்மதி அடைகின்றனர் பெற்றோர். ஆனால் ஒரு பெண்ணின் திருமணமே ஒரு மிகப் பெரிய பிரச்சினையை சுமந்து நின்றால், அவள் வாழ்வு என்னாகும்? அவளைப் பெற்றவர்களின் மனநிலை எப்படி உருக்குலைந்து போகும்? ஆனந்தங்களின் ஆரம்பமான திருமண உறவே, அதிர்ச்சிகளின் தொகுப்பானால், அவள் வாழ்க்கை எந்த திசையில் போகும்?
இந்த உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு முள்ளும், மலரும் தொடர் விடை தருகிறது என்கிறார், தொடரின் இயக்குனர் சுகி மூர்த்தி.
நடிகர்கள்:- விஷ்வா, ஷியாம் கணேஷ், ராஜேஸ்வரி (அறிமுகம்), வனஜா, கவுதமி, தேசிகன், `பெங்களூர்' நாகேஷ், ரேவதி சங்கரன். வசனம்:- பாலமுரளிவர்மா, ஒளிப்பதிவு:- சீனு, பாடலாசிரியர்:- எஸ்.ராஜகுமாரன், தயாரிப்பு:- கு.சண்முகவள்ளி, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
R.Latha
27th August 2007, 09:58 AM
கலைஞர் டிவிக்காக டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கி தயாரிக்கும் புதிய தொடர் தேன்மொழியாள். பொருந்தாத திருமணங்கள், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கதைக் கரு கொண்டுள்ளது. ஒரு நகரத்தில் வெவ்வேறு இடத்தில் வசிக்கும் மூன்று தம்பதிகளுக்குள் நடக்கும் பிரச்சினைகளை, தேன்மொழி தீர்க்க நினைக்கிறாள். அப்போது அவளுக்கு எழும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பது கதை.
கலைஞர் டி.வி.க்காக தயாராகி வரும் இந்த தொடரை டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்குகிறார். `கவிதாலயா' நிறுவனம் தயாரிக்கிறது. தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிகை சுவர்ணா நடிக்கிறார். சுபலேக சுதாகர், `கவிதாலயா' கிருஷ்ணன், புவனா, ராணி, காவேரி, வனஜா, சுபலஷ்மி ஆகியோரும் இருக்கிறார்கள்.
mr_karthik
28th August 2007, 06:45 PM
'கலைஞர் டிவி' யின் மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரத்துறை அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.லதாவுக்கு வாழ்த்துக்கள்.
(சீரியஸா எடுத்துக்காதீங்க.... )
bingleguy
29th August 2007, 09:45 PM
Sarath Kumar, an experienced hand from Sun TV, has taken the charge as the CEO (Chief Executive Officer) of the Channel. He plans to telecast 9 news bulletins per day apart from regular soap operas, film related shows and serials.
Courtesy : OneINdia
R.Latha
3rd September 2007, 02:38 PM
karthik nanri hahaa. more new below.
R.Latha
3rd September 2007, 02:44 PM
நடிகர் `வெண்ணிற ஆடை' மூர்த்தி நடிப்பில் சன் டிவியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் சன் டிவியில் நிறைவு பெற்றது.
கலைஞர் டிவியில் வருகிற 16-ந்தேதி ஞாயிறு முதல் காலை 9 மணிக்கு `குலுங்க குலுங்க சிரிப்பு' என்ற பெயரில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடித் தொடர் இடம் பெறுகிறது.
---
சன் டிவியில் `பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியை வழங்கி வந்த ரமேஷ்பிரபா, கலைஞர் டிவிக்கு போய் விட்டார். இந்த நிகழ்ச்சியை சில மாற்றங்களுடன் கலைஞர் டிவியில் அவர் தரவிருக்கிறார்.ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீது மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்.
---
சின்னத்திரை நடிகை ஆர்த்தி இப்போது குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சி தயாரிக்கிறார். இந்த நிகழ்ச்சியை கலைஞர் டிவிக்காக அவர் தயாரிக்கிறார்.
---
SUN TV ambEl!
Sanjeevi
3rd September 2007, 03:09 PM
What happened to a serial with Ilaiyaraja's music in Kalaignar TV?
yvsmani
3rd September 2007, 03:58 PM
R.Latha : intha vishayangal ellaam ungalukku yaar aliththaargal ??
R.Latha
5th September 2007, 03:08 PM
மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர் "தெற்கத்திப் பொண்ணு'. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடிக்கிறார்.
நடிகைகள் ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் தொடரை இயக்குநர் பாரதிராஜா இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.
"எனது அரசியல் குருநாதர் முதல்வர் கருணாநிதி, திரைப்படத் துறை குருநாதர் இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்காக டி.வி. தொடரில் முதல்முறையாக நடிப்பதாக' நடிகர் நெப்போலியன் கூறினார்.
R.Latha
5th September 2007, 03:09 PM
R.Latha : intha vishayangal ellaam ungalukku yaar aliththaargal ??
world wide web!
R.Latha
10th September 2007, 08:55 AM
************
வரும் வியாழன் முதல் `கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருக்கும் நகைச்சுவை தொடர் ``சகல கலா பவன்''
சகல கலா பவன் உரிமையாளர் மீனாட்சி; அவர் கணவர் சங்கரன் அடிக்கும் லூட்டி; அவர் மைத்துனன் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஆம்ஸ்ட்ராங்கை துரத்தித் துரத்தி காதலிக்கும் மகள் ஷைலு; சமையல்காரர் பாலக்காடு செல்லப்பாவும், நாயுடுப்பேட்டை நரசம்மாவும் அடிக்கும் காமெடி கலாட்டா; ஒன்று விட்ட சித்தப்பா 'தப்பு' தர்மராஜனின் கலக்கல்; இவை அனைத்தும் சகல கலா பவனின் மனதைத் தொடும் நகைச்சுவை பாத்திரங்கள்.
வாரம் ஒரு விருந்தினர் அந்த ஓட்டலுக்கு வந்து தங்கி இவர்களிடம் படாதபாடு படும் அனுபவங்கள் தான் கதை.
ஒய்.ஜி.மகேந்திரா திரைக்கதை அமைத்து இயக்கும் இத்தொடரை கோவை அனுராதா எழுதுகிறார். நாகா சரவணன் கேமிராவை இயக்க, பி.பி.பாலாஜி இசை.
ஒய்.ஜி.மகேந்திரா, கிரேஸி குமார், கோவை அனுராதா, நித்யா, சுரேஷ்வர், நாகலட்சுமி, டைப்பிஸ்ட் கோபு ஆகியோருடன் மனோரமா, ஏ.ஆர்.எஸ், சச்சு, வெண்ணிற ஆடை மூர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, சி.ஐ.டி.சகுந்தலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வியாழன் தோறும் இந்த தொடர் `கலைஞர் டி.வி.யில்' ஒளிபரப்பாகிறது.
****************
சன் டிவியில் டாப்-10 நிகழ்ச்சியில் நடித்து வந்த கணேஷ்-ஆர்த்தி இருவரும் இப்போது கலைஞர் டிவிக்கு போய் விட்டார்கள்.விஜய் டிவியில் `லொள்ளுசபா' நிகழ்ச்சியில் இருந்த மனோகர், இப்போது சன் டிவியின் `சூப்பர் டென்' நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.
***********
கோலங்கள் தொடரில் நடித்து வரும் நடிகை தேவயானி, இப்போது கலைஞர் டிவிக்கென தயாராகி வரும் மஞ்சள்மகிமை தொடரிலும் நடிக்கவிருக்கிறார். பாலாஜி டெலிபிலிம் இந்த தொடரை தயாரிக்கிறது.
***********
bingleguy
11th September 2007, 09:38 PM
[tscii:09df1969dc]Unofficial ..... Tentative schedule for 15/09/2007 & 16/09/2007
15/09/2007 SPECIAL PROGRAMMES
06.30am 07.00am - Sudha Raghunathan
07.30am 08.00am - NEWS
08.00am 08.30am - Interview with actor Kamalhassan
08.30am 09.00am - Interview with Maestro Ilayaraja
09.00am 09.30am - Interview with director K.Shankar
09.30am 10.30am - Leoni Pattimandram
10.30am 01.00pm - Pokkiri movie 100th day function
01.00pm 01.30pm - NEWS
G 01.30pm 04.30pm - Block Buster movie MOZHI *ng Prakash Raj, Prithiv Raj, Jothika, Swarnamalya..
04.30pm 05.00pm - Ungal choice (dial in) Jeyam Ravi
05.00pm 05.30pm - Interview with comedian Vadivel
05.30pm - - Super Hit Movie IMSAI ARASAN 23rd PULIKESI *ng Vadivelu & others.
07.30pm 08.00pm - NEWS
08.00pm 08.30pm - Interview with actor Surya
08.30pm 09.00pm - Pudhu Padangal New movies review
09.00pm 09.30pm - Interview with actor Vivek
09.30pm 10.30pm - Mannada Mayilada
10.30pm 11.00pm - Interview with director / actor Cheran
11.00pm 11.30pm - Magic show
16/09/2007 SPECIAL PROGRAMMES
06.30am 07.00am - Nityashree
07.30am 08.00am - NEWS
08.00am 08.30am - Interview with actor Asin
08.30am 09.00am - Interview with actor Vishal
09.00am 09.30am - Interview with actor Sneha
09.30am 10.00am - Interview with actor Arjun
10.00am 10.30am - Interview with actor Sandhya
10.30pm 11.00pm - Interview with actor Bharath
11.00am 11.30am - Logic Illai Magic
11.30pm - Block Buster movie AYUDHA EZUTHU *ng Surya,Madhavan, Trisha, Meera Jasmine & others.
01.00pm 01.30pm - NEWS
03.00pm 04.30pm - Chandramuki 100th day function
04.30pm 07.30pm - Movie PERIYAR *ng Satyaraj & Others.
07.30pm 08.00pm - NEWS
08.00pm 08.30pm - Mannada Mayilada curtain raiser
08.30pm 09.30pm - Ellamae Siripputhan
09.30pm 10.30pm - Comedy skit by Yuhi Sethu
10.30pm 11.00pm - Interview with actor Madhavan. [/tscii:09df1969dc]
aanaa
12th September 2007, 05:44 PM
thank you fro the info
madhu
15th September 2007, 02:01 PM
"mozhi" with ekkachakka cuts...
appappO advt.-kAga scenes kANAma pOikittu irukku :(
bingleguy
15th September 2007, 08:46 PM
can somebody give some updates on hows the TV goin on ?????????
Madhu ... advertisement kku naduvula padam poduradhula Raj TV KING ;-) nyabagam vechukongo ;-)
madhu
15th September 2007, 09:43 PM
vasanth...
advt.-kku naduvula padam atleast muzhusA pOttA thEvala..
andha vishayathula Sun TV evvalavO thevalai..
( malaysia kOttumalai gaNesar koil abhishEgam kattarAnga.. podhigai TV-la )
R.Latha
5th October 2007, 03:19 PM
கலைஞர் டி.வி.யில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது,டைரக்டர் அரிராஜன் இயக்கும் `அப்பா' மெகா தொடர்.
அப்பாவாக பிரசன்னா, மகனாக கமலேஷ் நடிக்க, மகள்களாக தேவிப்ரியா, நர்மதா, ராஜஸ்ரீ நடிக்கிறார்கள்.
கமலேஷின் மனைவியாக தாரிகா நடிக்கிறார். தாரிகாவின் பெற்றோராக அனுமோகனும் குயிலியும் நடிக்கிறார்கள்.
ஜி.சத்யா, மங்கை அரிராஜன் இணைந்து தயாரிக்கும் `அப்பா' தொடரின் டைட்டில் பாடல் காட்சி சமீபத்தில் ஒகனேக்கல்லில் படமாக்கப்பட்டது.
திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பாகும்.
``இதுவரை சின்னத்திரை கண்டிராத குடும்பக் கதை. ஆண் கேரக்டர்கள் மூலம் தொடரை பார்க்கும் பெண்களை கண் கலங்கச் செய்யும் யதார்த்தமான கதைப் பின்னணியில் இந்தத் தொடரை இயக்கியிருக்கிறேன்' என்கிறார், தொடரின் இயக்குனர் மங்கை அரிராஜன்.
MEDIA ASIA
23rd October 2007, 09:20 PM
Hi,
Can anyone from India give me the contact details of Kalaignar TV? I'm thinking of their telephone number and address...
And do they have a website?
I have heard that the rights for Kalaignar TV programs have been sold to a TV-station in Europe... anyone know which?
I know for sure that it is not Tharisanam TV Europe... Deepam TV has allready Vijay TV and some Jaya TV prorgrams rights, like CeeITV has rights for Jaya TV...
Thirumaran
24th October 2007, 03:55 PM
Vijay TV la vantha sila programs Sun TV la Copy panni ippa Kalaignar TV la yum panna aarambichachu :evil: Other than that lots of serails which i dont watch anyway :roll:
I suppose there is a Program on NT where prabhu shares certain opinion which is good. And There is one logic illa Magic. Okay.
Is there more specific program worth a watch ?
R.Latha
26th October 2007, 08:31 AM
கலைஞர் "டிவி' சேனலில், எல்லாமே சிரிப்பு தான் என்ற நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் வருகிறது. கலக்கப்போவது யாராக இருந்த விஜய் நிகழ்ச்சியில் இருந்து, இன்னொரு சேனலுக்கு போய், அசத்தப்போவது யாரு என்று நடத்தியவர்களில் சிலர் சேர்ந்து, இப்போது எல்லாமே சிரிப்பு என்று கலக்குகின்றனர். அவர்களில் ஒருவர், சமீபத்தில், பள்ளிவகுப்பில் டீச்சரிடம் நம்பர் 1 போக வேண்டும் என்று குழந்தைகள் கேட்பது போல, பிரபலங்கள் கேட்டால் எப்படி கேட்பார்கள் என்று சொல்லி, முதலில் நடிகர் திலகம் சிவாஜி சொல்வதாக அவர் குரலில், "கை வீசம்மா கைவீசு...கடைக்கு போகலாம் கைவீசு' என்பதை மாற்றி, கடைக்கு என்பதற்கு பதில், பாத்ரூமுக்கு...என்று ஜோக் அடித்தது வேதனை. இதுவா சிரிப்பு...?
R.Latha
29th October 2007, 08:18 AM
[tscii:da8bb91d52] Naan Aval Illai is a serial that is making waves on Kalaignar TV. Directed by K. Balachander, it tries to cash in on the veteran directors classic Naan Avan Illai, starring Gemini Ganesan, which was recently re-made with Jeevan in the lead. In its television avatar, the only difference is the protagonist is a woman. The story revolves around Anitha (Indiraja) who, due to circumstances, has to disguise herself as Vanitha, a non-existent twin sister of Anitha! What follows is a comedy of errors resulting in Anitha juggling various disguises and sojourning in prison as well. Jayakodi (Renuka) comes to her rescue but she too gets caught up in the melee and what unfolds is a comedy riot. The serial, produced by Pushpa Kandasamy, proves that television audiences are brand conscious and old film titles have tremendous recall value.[/tscii:da8bb91d52]
Dhesh
12th November 2007, 02:13 AM
Can anyone tell me what the frequency of Kalignar Tv is because I want to get it installed in to my channels with Sun Tv and KTV.
I have Hotbird 1-5.
MEDIA ASIA
19th November 2007, 11:15 PM
Hi,
Only Tharisanam TV, Deepam TV, Sun TV, KTV, Holy God, Blessing TV, Living God, Maharaji Words of Peace and Rainbow TV are Tamil TV channels available on Hotbird satellites.
Kalaignar TV is not telecasting in Europe... it is said that a unidentified TV-channel has bought rights for Kalaignar TV to telecast in Europe... But I don't know which...
saradhaa_sn
26th November 2007, 06:15 PM
கலைஞர் "டிவி' சேனலில், எல்லாமே சிரிப்பு தான் என்ற நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் வருகிறது. கலக்கப்போவது யாராக இருந்த விஜய் நிகழ்ச்சியில் இருந்து, இன்னொரு சேனலுக்கு போய், அசத்தப்போவது யாரு என்று நடத்தியவர்களில் சிலர் சேர்ந்து, இப்போது எல்லாமே சிரிப்பு என்று கலக்குகின்றனர். அவர்களில் ஒருவர், சமீபத்தில், பள்ளிவகுப்பில் டீச்சரிடம் நம்பர் 1 போக வேண்டும் என்று குழந்தைகள் கேட்பது போல, பிரபலங்கள் கேட்டால் எப்படி கேட்பார்கள் என்று சொல்லி, முதலில் நடிகர் திலகம் சிவாஜி சொல்வதாக அவர் குரலில், "கை வீசம்மா கைவீசு...கடைக்கு போகலாம் கைவீசு' என்பதை மாற்றி, கடைக்கு என்பதற்கு பதில், பாத்ரூமுக்கு...என்று ஜோக் அடித்தது வேதனை. இதுவா சிரிப்பு...?
உண்மையில் வருத்தம் தரக்கூடிய விஷயம்தான்.
வர வர காமெடி என்ற பெயரில் காமநெடி தரக்கூடிய விஷயங்களையும், மேலே குறிப்பிட்டதைப்போன்ற அருவருப்பான கான்செப்ட்களையும் சர்வ சாதாரணமாக தரத்துவங்கிவிட்டனர். நடுவர்களாக இருப்பவர்களும் அவர்களைக் கண்டித்து ஒரு குட்டு வைப்பதை விட்டு, அவர்களும் சேர்ந்து சிரித்து தொலைக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்களும் நடுவர்களாகவோ காம்பியர்களாகவோ வருகிறார்கள். அவர்கள் கூட இதை கண்டிப்பதில்லை என்பது மட்டுமின்றி, ரசிக்கவும் செய்கிறார்கள். உமாரியாஸ், கோவை சரளா, ஸ்வர்ணமால்யா, திவ்யதர்ஷிணி, மகேஸ்வரி என்று யாரும் இதில் விதிவிலக்கில்லை.
இது போன்ற காமெடிகள், ஒரு குறிப்பிட்ட வயதினர் மட்டத்தில், அல்லது நண்பர்கள் வட்டத்தில் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஜோக்குகளாக இருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஒரு வீட்டில் ஐந்து வயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர்கள் வரை ஒன்றாக உட்கார்ந்து பார்க்கக் கூடிய ஒரு விஷயம். அதிலும் இது போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மாமனார், மருமகள், அம்மா, மகன் என்று அனைத்து உறவுகளும் ஒன்று சேர்ந்து பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் இது போன்ற அருவருப்பான, முகம் சுழிக்கும்படியானவற்றை தருவது எவ்வளவு அபத்தம் என்பதை பங்கு பெறுபவர்கள் உணர வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் தரக்கூடாது. நடுவர்ககளும் நமக்கென்ன என்று இருக்காமல், அவர்களைக் கண்டிக்க வேண்டும், மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும். அனைவருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்.
சமீபத்தில் 'கலக்கப்போவது யாரு - பகுதி 3' ல் ஒரு பெண் கலந்து கொண்டு நகைச்சுவைகளை சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கால் வாசி ஆண்-பெண் கள்ளத்தொடர்பு பற்றிய விஷயங்கள். நகைச்சுவை என்ர பெயரில் ரொம்ப சர்வ சாதாரணமாக சொன்னார். அவர் பெயர் சங்கீதா. இத்தனைக்கும் அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியையாம். டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறாராம். வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார். இவரிடம் படிக்கும் மாணவ மாணவிகள்... பாவம்.
saradhaa_sn
26th November 2007, 06:21 PM
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் சொல்லியிருக்கிறார். வரவேற்போம். ஆனால் அதை விட மோசமான குடிக்கும் (மதுவருந்தும்) காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறுகின்றன. இளைஞர்கள் விரும்பி பார்க்கும் திரைப்படங்களில் மட்டுமல்ல, குடும்பத்தோடு பார்க்கக்குடிய தொலைக்காட்சிகளிலும் சர்வ சாதரணமாக இடம் பெறுகின்றன. முன்பெல்லாம் குடிப்பவன் என்றால், வில்லனையும் கொடுரமானவனையும் காண்பிப்பார்கள். ஆனால் இப்போதோ, குடிப்பழக்கம் இல்லாத கல்லூரி மாணவனையே காண்பிப்பதில்லை. போலீஸ்கார்கள் காவல் நிலையத்திலேயே குடிப்பதாக காட்டுகிறார்கள். காசு என்பதை எப்படியாவது சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் தான் இவர்கள் அலைகிறார்களா?.
'உங்களை யார் மேடம் பார்க்கச்சொன்னார்கள்?' என்று இவர்கள் கேட்கலாம். நான் ஒருத்தி மட்டும் தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டால் போதுமா?. மற்றவர்கள் கெட்டால் பரவாயில்லையா?. சமீபத்தில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் (கலக்கப்போவது யாரு 3) ஒருவர் நகைச்சுவை பண்ணுகிறார். எப்படி தெரியுமா?. அப்பன் வைத்திருந்த மதுவை குழந்தை குடித்து விட்டு, மயக்கத்தில் ஊறுகாய் கேட்கிறதாம். மிமிக்ரி பண்ணுகிறார். அதை நடுவர் எஸ்.வி.சேகரும், உமா ரியாஸும் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆண்டவா....
நகைச்சுவைக் காட்சிகளில் குவாட்டர், கட்டிங் என்ற வார்த்தைகள் இல்லாத ஜோகுகள் ரொம்பவே அரிதாகி வருகிறது. இதுக்கெலாம் அரசாங்கம் தான் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் என்பதில்லை. 'இவற்றை மக்களுக்கு கொடுத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்றால் அந்த காசு எனக்கு தேவையில்லை' என்று இவர்கள் முடிவெடுக்க வேண்டும். இவர்கள் யாரும் வேற்றுக்கிரக வாசிகள் அல்ல. சமுதாயத்தில் இவர்களும் ஒரு அங்கம்தான் என்பதை உணர வேண்டும்.
'எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்ற தோற்றமுடைய ஒருவர் வருகிறார். அவர் அங்குள்ள பெண் காம்பியர் மகேஸ்வரியிடம் 'வழிவதை' ஒரு தொடர் நகைச்சுவையாக வைத்திருக்கிறார். போதும் நிறுத்துங்க தம்பி......
aanaa
26th November 2007, 07:45 PM
saradhaa_sn has brought very concerning point to our future oncoming generation. We all have responsibilty to build healthy community.
'namakkenna '' ena iraamal join together to raise our voise.
mr_karthik
28th November 2007, 02:40 PM
the participants MUST maintain the 'Stage Decency' (mEdai nAgareegam) in their performances. If they did not follow, then the socalled judges MUST eliminate them from programmes.
R.Latha
31st January 2008, 07:46 AM
கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், மகராசி.
தனியாக நின்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மகராசியின் வெற்றிக்கான இலக்கு தான் கதையின் முடிச்சு.
சாதனை படைக்க வேண்டுமென்ற வெறியோடு திருமண வாழ்க்கையை வெறுக்கிறாள் மகராசி. பெற்றோர்களோ, மகளைத் திருமண கோலத்தில் பார்க்கத் துடிக்கிறார்கள். வேறு வழி தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் மகராசிக்கு சந்திரமோகன் என்ற தொழிலதிபரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் தனது நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்குகிறார். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், முழு முயற்சியோடு நிறுவனங்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கிறாள் மகராசி.
சந்திரமோகன் என்ற தொழிலதிபராக `மோகமுள்' அபிஷேக்கும், மகராசியாக புஷ்பலதா என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள்.
aanaa
26th February 2008, 09:15 PM
கலைஞர் "டிவி'யின் இன்னொரு சேனல், "இசையருவி!' பாடல்கள், சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது இது. அந்த காலபாடல்கள் முதல், லேட்டஸ்ட் குத்துப்பாட்டுகள் வரை, இதில் கேட்டு ரசிக்கலாம்.
aanaa
3rd March 2008, 08:28 PM
go to isaitamil net and watch life
saradhaa_sn
19th April 2008, 04:52 PM
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30க்கு (முன்பு 8.30) டாட்டா இண்டிகாமின் "ஆட்டம் பாட்டம்" என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரபாகிறது. சென்ர வாரம் வரை அதில் நடுவர்களாக வந்த நடிகை பூஜா, டான்ஸ் மாஸ்ட்டர் பிரசன்னா இருவரும் மாற்றப்பட்டு, தற்போது நடிகர் அப்பாஸ், மற்றும் நடிகை காயத்ரி நடுவர்களாக இருந்து ஸ்கோர் வழங்குகிறார்கள். (இந்த நிகழ்ச்சிக்கென்று தனி த்ரெட் இல்லாததால் இங்கு போஸ்ட் பண்ணியிருக்கிறேன்).
பூஜாவும் பிரசன்னாவும் இருந்தபோது ஓரளவுக்கு சரியான முறையில் மதிப்பிட்டு மார்க் வழங்கி வந்தனர். அதிலும் பிரசன்னா, ஆடுபவர்களின் நடனத்தில் உள்ள நிறை, குறைகளை (குறிப்பாக குறைகளை) சரியான முறையில் சுட்டிக்காட்டுவார். ஆனால் இப்போது அப்பாஸ் மற்றும் காயத்ரி வந்தபின்னர் மதிப்பீடு என்பது கேலிக்கூத்தாகி விட்டது. சும்மா சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி (கைக்கு வந்தபடி..?) ஒன்பது, பத்து என்று அள்ளி வழங்குகின்றனர். உண்மையில் நன்றாக ஆடியவர்களுக்கு வழங்கினால் பரவாயில்லை. ஆனல் நிலைமை அப்படியில்லையே..!.
சரியான ஆட்டத்துக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறதென்றால் அதைக்கண்டு மகிழ்ச்சியடைபவள் நான்தான். அதே சமயம் பல்வேறு டான்ஸ் மாஸ்டர்கள் கட்டிக்காத்த அரங்கில் தவறான ஆட்டத்துக்கு முழு மதிப்பெண் வழங்கப்படுமானால் அதைக்கண்டு வருத்தம் அடைபவளும் நான்தான். (நான் சங்க காலத்து நக்கீரனின் கொள்ளுப்பேத்தி).
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றைச்சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்போது ரீமிக்ஸ் ரவுண்ட் நடந்து வருகிறது. அதில் முதலில் பழைய பாடலையும், பின்னர் பாதிக்குமேல், அந்தப்பாடலின் தற்காலத்திய கெடுக்கப்பட்ட வடிவத்தையும் ஒலிபரப்பி அதற்கு தகுந்தாற்போல ஆடுகின்றனர். முந்தாநாள் ஒரு போட்டியாளர், இளையராஜாவின் அன்றைய பாடலான 'வாடி என் கப்பக்கிழங்கே' பாடலுக்கும் அதன் தற்போதைய வடிவத்துக்கும் ஆடினார். பின்னர் ஆடிய பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் டான்ஸ் இருந்தது. முதல் பகுதியில் அறவே ஆட்டமில்லை. சும்மா அங்கே இங்கே நின்றாரே தவிர எந்த டான்ஸ் மூவ்மெண்ட்டும் கொடுக்கவில்லை. அதுக்கு இருவரும் பத்துக்கு பத்து (மொத்தம் 20) கொடுத்தனர். அது மட்டுமல்லாது, காயத்ரி ஏதோ காணாததைக் கண்டதுபோல அந்த பெர்ஃபாமென்ஸுக்கு (??) புகழ்மழை பொழிந்தார். அப்பாஸுக்கு சரியாக த்மிழ் பேச வரவில்லை. திக்கித்திணறி பேசுகிறார். ஏதோ சொல்ல நினைக்கிறார். அதை சரியான வார்த்தைகளால் அவரால் சொல்ல முடியவில்லை.
ஒருசில போட்டியாளர்கள் நிஜமாகவே ரொம்ப நல்லா பண்றாங்க. ஆனால் மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் காரணமாக பின்னுக்குப்போய் விடுகிறார்கள்.
saradhaa_sn
20th April 2008, 12:22 PM
கலைஞர் தொலைக்காட்சியில் நடந்து வந்த 'கானா குயில் பாட்டு' முதல் பகுதி சென்ற வாரம் முடிவு பெற்று, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை (ரூ.1 லட்சம்..?) காசோலையாக வழங்கப்பட்டது. முதற்பகுதியின் நடுவர்களாக 'தேனிசைத்தென்றல்' தேவாவும், கானா உலகநாதனும், வாராவாரம் பங்கேற்று, பல்வேறு நிலைகளில் பலரை வடிகட்டி, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். தொகுப்பாளர்களாக தொலைக்காட்சி நடிகர் ஷியாம் மற்றும் காயத்ரிப்ரியா பங்கேற்றனர். கலகலப்பாக சென்ற முதல்பகுதி நிறைவடைந்தாலும், இரண்டாவது பகுதி உடன் துவங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று இரண்டாம் பகுதி துவங்கியது. தொகுப்பாளர்களாக அதே ஷியாம், (காயத்ரிக்கு பதிலாக) தீபா வெங்கட் வந்துள்ளனர். அதுபோலவே நடுவர்களாக அதே 'கானா' உலகநாதனும், தேவாவுக்கு பதிலாக பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகங்களைக்கொண்ட கங்கை அமரனும் வந்துள்ளனர். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கெட்டப்பில் தோன்றும் அமரன், இம்முறை தாடியில்லாமல், தலையில் கருப்பு(?) முடியுடன் சற்று இளமையாக தோற்றமளித்தார். முன்பெல்லாம் இடையிடையே ஷியாம் மட்டுமே பாடுவார். காயத்ரி பாட மாட்டார். இம்முறை தீபாவெங்கட்டும் பாடுகிறார்.
போட்டியில் பாடுபவர்கள் வெறும் கேலிக்கூத்தாக இல்லாமல் ஏதாவது சமுதாய கருத்தை மையமாக வைத்துப்பாடுவது நன்றாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
aanaa
20th April 2008, 05:25 PM
Thanks Saradhaa for the continuous support
R.Latha
5th May 2008, 08:00 AM
தேவயானியின் பிரசவத்துக்காக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மஞ்சள்மகிமை தொடருக்கு இடைவேளை விட்டார்கள். இப்போது பிரசவம் முடிந்து மீண்டும் தேவயானி நடிக்கத் தயாராகி விட்டதால் மஞ்சள்மகிமை மீண்டும் தொடரத் தொடங்கியிருக்கிறது.
"திருமண உறவில் விரிசல் ஏற்படவே புகுந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள் கதாநாயகி. தற்செயலாக ஒரு வீட்டில் அடைக்கலமாக, அங்கு இருப்பவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. அதே வீட்டில் கதாநாயகியை போன்ற தோற்றம் கொண்ட இளம் பெண் காணாமல் போனதால் சோகத்தில் ஆழ்ந்திருந்த குடும்பம், அடைக்கலமாக வந்த புதுவரவால் ஆனந்த கூத்தாடுகிறது. புது சொந்தங்கள் கொடுத்த அன்பில் திக்குமுக்காடினாலும் தன்னுடைய சாமர்த்தியத்தால் அந்த வீட்டில் இருந்து காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கிறாள். பின்னர் தன்னுடைய கணவனிடம் நியாயத்தைக் கேட்டு போராட புறப்படுகிறாள்.''
இதுதான் `மஞ்சள் மகிமை' தொடரின் கதைக்களம். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேவயானி நாயகியாக நடிக்கிறார். மோகன் சர்மா, ரவிக்குமார், வேணு அரவிந்த், அஜய் ரத்தினம், லதா, சீமா உள்பட பலர் இத் தொடரில் நடிக்கிறார்கள்.
aanaa
5th May 2008, 06:48 PM
கலைஞர் டி.வி.யில் தினமும் காலை 11.30 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் நெடுந்தொடர் கல்யாணப்பரிசு இந்த தொடர் 100-வது நாளை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இந்த தொடருக்கு பெண்களிடமிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமர்சனக் கடிதங்கள் வருவதால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த விமர்சனத்திற்கு வாரம் ஒரு பட்டுப் புடவை வழங்கப்பட்டு வருகிறது.
-
தத்தெடுத்த மகளுக்கும், வளர்த்த தாய்க்கும் இடையே நடக்கும் சொத்துத்தகராறுதான் கதை. தத்தெடுத்த மகள் மீது பாசம் காட்டும் தந்தை, அவளுக்கு சொத்தை எழுதி விட, தத்தெடுத்த மகளுடன் வளர்ப்பு தாய் மோதுகிறாள். 100 நாளை தாண்டி, பழனியில் இப்போது கதை ஓடிக்கொண்டிருக்கிறது.
aanaa
7th May 2008, 12:35 AM
தசாவதாரத்தின்' இசை நாடா வெளியீட்டின் மிக பிரமாண்ட விழா கலைஞர் "டிவி'யில் ஒளிபரப்பப் பட்டது. மிகப்பெரிய நெட்வொர்க், கலைஞர் "டிவி'யிடம் உள்ளது. எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும், நிகழ்ச்சி நிர்வாகிகளும் நிரம்ப அனுபவஸ்தர்களாகத்தான் இருப்பர்.
இத்தனைக்கும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு கிடையாது. பதிவு ஒளிபரப்பு தான். பாட்டு, நடனம், மிமிக்ரி என வேறு எந்த அயிட்டங்களும் இல்லை. மிகப் "பெரியவர்கள்' (முதல்வர், ஜாக்கிசான், கமல், அமிதாப், மம்முட்டி) மேடையில் இருந்தனர். பார்வையாளர்கள் இடத்தில் திரையுலக பிரபலங்களின் பெரும் அணிவகுப்பு. ரசிகர்கள் செம கூட்டம். கேமரா, மேடையிலேயே படுத்து தூங்கிவிட்டது. மோஷன் கேமரா அல்ல அது. ஸ்டில் கேமரா, நோ மூவ்மென்ட்ஸ். மல்லிகா ஷெராவத் "படு கிளாமராய்' துளி ஆபாசமில்லாமல் எல்லைக் கோட்டில் உடுத்தி உயிரை வாங்கினார். ஜாக்கிசானின் சீன மொழியில் பேசி அவரை வரவேற்றிருக்கலாம் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகை ஷோபனா.
இதில், மற்ற அனைவரையும் அவரவர் தாய்மொழியில் அல்லது "திரை' மொழியில் வரவேற்று விழாவின் பாணியை வித்தியாசப்படுத்தி இருந்தார். ஒவ்வொரு பிரபலம் பேசுவதற்கு முன்னும் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைக் காட்சிகள் காட்டப்பட்டன. முழு விழாவையும், அதிரடியாய் ஒரே முழுங்காய் விழுங்கி ஏப்பம் விட்டவர் ஜாக்கிசான். என்ன பணிவு, என்ன மரியாதை! ரஷ்ய, சீன நாடுகளில் மக்கள் கைதட்டும்போது மேடையில் இருப்பவர்களுக்கும் ஒரு பண்பாடு உண்டு. அது பதிலுக்கு நன்றி சொல்லுதலாய் கைதட்டுவது. ஒவ்வொரு ரசிகர்களின் கைதட்டலுக்கும் ஜாக்கியும் தட்டினார். ஒன்றுமே புரியாவிட்டாலும் புளகாங்கிதமாய் அமர்ந்திருந்தார்; தனக்கு போட்ட மல்லிகை மாலையை முகர்ந்து சந்தோஷித்தார். மேடையில் கிடந்த காகித குப்பையை எடுத்து ஓரம் போட்டார்.
மிக மிக இயல்பாய், குழந்தையாய் இருந்து அங்கிருந்த அனைவருக் கும் "பாடமாக', "உயிருள்ள மனித பாடமாக' திகழ்ந்தார். "முதலமைச்சர் கருணாநிதி' என்று ஜாக்கி தமிழ் பேசியது கண்டு முதல்வரே வியப்புற்றார். என்னை பற்றியா சொல்கின்றனர் என்று கேட்க, அடிக்கடி தன் மூக்குக்கு நேரே ஆட்காட்டி விரலை காட்டி காட்டி அவர் சைகை செய்து கேட்டது கண் முன் நிற்கிறது. முதல்வர், ஜாக்கிசானின் வரலாற்றை பிறப்பிலிருந்து தொட்டுக் காட்டியவிதம், விசிலடிச்சான் குட்டிகளுக்கு நற்போதனை. ஜாக்கிசான் தன்னை பற்றி எழுதிய புத்தகத்தில் "பெற்றோர் இருக்கும் போதே மரியாதை செலுத்துங்கள். கல்லறையில் மரியாதை செலுத்தாதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். அதை இளைஞர்கள் தங்கள் இதயத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.
saradhaa_sn
7th May 2008, 11:39 AM
தேவயானியின் பிரசவத்துக்காக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மஞ்சள்மகிமை தொடருக்கு இடைவேளை விட்டார்கள். இப்போது பிரசவம் முடிந்து மீண்டும் தேவயானி நடிக்கத் தயாராகி விட்டதால் மஞ்சள்மகிமை மீண்டும் தொடரத் தொடங்கியிருக்கிறது.
ஆனால் 'கோலங்கள்' சீரியலில், திருச்செல்வம் புத்திசாலித்தனமாக 'அபி' அமெரிக்கா போய்விட்டதாக 'கதை' பண்ணி, தேவயானியை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டார். காரணம் அபி இல்லாமலேயே கதையைக்கொண்டு போகுமளவுக்கு தொல்ஸ், ஆர்த்தி, ஆனந்தி, ஆதி கேரக்டர்கள் ஸ்ட்ராங்காக இருக்கின்றன.
uthuman
9th May 2008, 12:16 PM
What happened to Thenmoziyal serial...Since last monday no mention about Thenmoziyal...After the 'manjal mahimai' restart, namma kudumbam shifted to 21.00hrs which was previously Thenmoziyal slot.
uthuman
9th May 2008, 12:50 PM
Rekha IPS...it seems Rekha can not do any thing....The criminals are more smarter than Rekha always...Yesterday's episode, Rekha with 4 police officials tried to catch the criminal David....They rounded the his house in a planned manner but finally as usual he escaped...
saradhaa_sn
15th May 2008, 12:23 PM
கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 க்கு ஒளிபரப்பாகி வரும் இன்னொரு நடன போட்டியான 'ஆட்டம் பாட்டம்' நிகழ்ச்சியில் பங்கேற்போர் மிக அருமையாக ஆடி வருகின்றனர். 'கையில் காசு வாயில் தோசை' என்பதுபோல ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றோர் அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒருசிலர் தவிர, பெரும்பாலோரிடம் நல்ல நடனத்திறமையிருக்கிறது. அட்டகாசமாக ஆடுகிறார்கள்.
நேற்று நடந்த 'HORROR EPISODE' ல் பங்கேற்றோர் அனைவரும், பேய் சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு அசத்தினர். ஒருவரிடம் மட்டும்தான் ஆட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. மற்றவர்களெல்லாம் நன்றாக ஆடினர். கான்செப்டுகளும், லைட்டிங்ஸ்,செட் அரேஞ்ச்மெண்ட், சவுண்ட் எஃபெக்ட் அனைத்தும் சேர்ந்து கலக்கின.
முன்பு அப்பாஸ் - காயத்ரிரகுராம் நடுவர்களாக இருந்தபோது சற்று தொய்வடைந்த நிகழ்ச்சி பின்னர் சென்ற வாரம் முழுக்க பூஜா - பிருந்தா நடுவர்களாக இருந்தபோது மீண்டும் சுறுசுறுப்படைந்தது. நேற்று முதல் மீண்டும் 'பூஜா - பிரசன்னா மாஸ்ட்டர்' கூட்டணி நடுவர் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்துகின்றனர்.
தினமும் அரைமணிநேரம் நிகழ்ச்சிதான். ஆனாலும் 20 - 20 மேட்ச் போல விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த காம்பியர் பொண்ணு ரொம்ப நல்லா பண்ணுகிறது.
aanaa
15th May 2008, 05:14 PM
தினமும் அரைமணிநேரம் நிகழ்ச்சிதான். ஆனாலும் 20 - 20 மேட்ச் போல விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த காம்பியர் பொண்ணு ரொம்ப நல்லா பண்ணுகிறது.
:clap: :clap:
saradhaa_sn
16th May 2008, 01:23 PM
'ஆட்டம் பாட்டம்' போட்டியில் நேற்றும் 'HORROR ROUND EPISODE' தொடர்ந்தது. (தினமும் அரைமணிநேரமே என்பதால் ஒவ்வொரு எபிசோடும், குறைந்தது மூன்று நாட்களுக்கு வருகிறது).
நேற்றும் பேய்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் கொண்டு வரும் கான்செப்டகளைப்பார்க்கும்போது, அப்பப்பா... எப்படியெப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று மலைப்பு வருகிறது. (வருகிற பேய்கள் அத்தனையும் நடுவர் பூஜாவை பயமுறுத்துவதை ஒரு அங்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் ஒரு பேய், பூஜாவுக்கு தெரியாமல் அவருக்குப் பின்னாலிருந்து வந்து திடீரென பயமுறுத்தியபோது.... அய்யோ. பாவம் அந்தபொண்ணு). ஒருவர் பச்சை மாமிசம் தின்பவராக வந்தவர், உடம்பு முழுக்க மைதா மாவினால் மேக்கப் போட்டு, அங்கங்கே ரத்தம் வடிவதுபோல பண்ணியிருந்தது பயங்கரமாக இருந்தது. டெக்னிக்கல் அம்சங்களில் நம்மவர்கள் ரொம்பவே முன்னேறியிருக்கிறார்கள்.
வந்த பேய்களில் நல்லபேய் எது என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ரசிகர்களிடமே உள்ளது. நல்ல பேய் என்றால் சாந்தமான பேய் அல்ல, அதிக அட்டகாசம் செய்து பயமுறுத்திய பேய் எது என்பதுதான்.
மனிதர்களுக்கு ஓட்டுப்போட்ட காலம் போய், இப்போது பேய்களுக்கு ஓட்டு. ('உங்கள் ஓட்டு ரத்தக்காட்டேரிக்கே', 'உங்கள் ஓட்டு மோகினிப்பிசாசுக்கே' என்று ஆட்டோக்களில் கத்திக்கொண்டு வராமல் இருந்தால் சரி).
aanaa
16th May 2008, 05:06 PM
:rotfl:
aanaa
19th May 2008, 05:15 PM
கலைஞர் "டிவி'யில் திங்கள் முதல், வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் "லட்சியம்' தொடரில் திருப்பம். வெளியில் சமூகசேவகராகவும், திரைமறைவில் பெண் பித்தராகவும் இருப்பவர் பரசுராமன்
சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்டின் மகளை மணக்க விரும்புகிறார். ஆனால், பரசுராமனால், சகோதரியின் வாழ்க்கை பறிபோனதால் கொதித்த தங்கை கவிதா, இந்த திருமணத்தை நிறுத்துகிறாள். பரசுராமனாக மலையாள படங்களில் வில்லனாக வரும் தேவன் நடித்துள்ளார். சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மகளாக தீபா வெங்கட், கவிதாவாக மஞ்சரி மற்றும் ராஜ்காந்த், சாய்பிரசாந்த், பிருந்தா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
saradhaa_sn
23rd May 2008, 12:38 PM
'ஆட்டம் பாட்டம்' நடனப்போட்டியில், பேய்களின் அட்டூழியங்கள் ஒழிந்து, கடந்த மூன்று நாட்களாக 'இந்திய கலாச்சார நடனங்கள்' ரவுண்ட்.
பங்குபெறும் போட்டியாளர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கும் பல்வேறு நடனங்களான பரதம், கதகளி, குச்சுப்புடி, ஓடிஸி, பாங்க்ரா, டாண்டியா, நாட்டுப்புற நடனங்கள்... என பல்வேறு விதமான நடனங்களில் அசத்துகின்றனர். முந்தாநாள் ஒரு பெண் ஆடிய கிருஷ்ணா - ராதா நடனம் அழகாக இருந்தது. (அதில் வந்த பாடல் 'தசாவதாரம்' படத்திலுள்ளதாமே).
இன்னொருவர் கான்செப்டை தப்பாக புரிந்துகொண்டு, 'இந்திய நாடு என் வீடு' பாடலுக்கு குரூப் டான்ஸர்களோடு ஆடினார். அது கலாச்சார பாடல் அல்ல, மத மற்றும் மொழி நல்லிணக்கப்பாடல். அதனால் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது.
அதேசமயம், இன்னொரு பெண் ஆடிய 'பொம்மலாட்டம்' நடனமும் அருமையாக இருந்தது. (ஆடியவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். இனிமேல் கூர்ந்து கவனிக்க வேண்டும்). நேற்று பஞ்சாபி பாங்க்ராவுக்கு ஒருவர், நாம் எதிர்பார்த்தபடியே 'ஆடலுடன் பாடலைக்கேட்டு' பாடலுக்கு ஆடினார். ஆட்டத்தில் இறுதியில் கடத்தல் கும்பலை போலீஸார் மேடையிலேயே கைது செய்தனர்.
நேற்று இறுதியில் ஆடிய ஒருவர், தன் குழுவினருடன் முழுக்க வெள்ளை ஆடை அணிந்து மிக அற்புதமாக ஆடினார். அது என்ன வகையான நடனம் என்பது தெரியவில்லை. ஆனால் ஸ்லோ மூவ்மெண்ட்டுகளுடன் ரொம்ப அட்டகாசமாக இருந்தது. குரூப் நல்ல சப்போர்ட், அவர்களும் எந்த ஒரு ஸ்டெப்பையும் சொதப்பாமல் ஆடினர்.
பிரசன்னா மாஸ்டரும் பூஜாவும் நடுவர்களாக இருந்து அசத்துகின்றனர்.
aanaa
23rd May 2008, 05:27 PM
saradhaa
:clap:
R.Latha
25th May 2008, 11:03 AM
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் `ஆனந்தம் விளையாடும் வீடு'
தயாள குணமும், மனித நேயமும் கொண்ட தொழிலதிபர் ராம்குமாருக்கு, வெங்கட், விக்னேஷ், விஜய் என மூன்று மகன்கள். அப்பா மீது மகன்களும், மகன்கள் மீது அப்பாவும் அதிகமான அன்பு காட்டும் அழகிய பூந்தோட்டம் ராம்குமாரின்
குடும்பம்.
மகன்கள் வெங்கட், விக்னேஷ் இருவருக்கும் பெண் பார்த்து திருமணம் நடக்கிறது. வீட்டுக்கு வந்த இரு மருமகள்கள் மூலம் குடும்பத்தில் புயல் உருவாகிறது. வீடு கலவர பூமியாகிறது.
அன்னை தெரசா இல்லத்தின் நிர்வாகி சீதா அந்த இல்லத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவர், ஆனால் அவர் ஒரு தூக்கு தண்டனைக் கைதி.
கலவர பூமியாகிவிட்ட ராம்குமாரின் வீட்டிற்குள் குடும்பத் தலைவியாக வருகிறார் சீதா. அவர் அந்த வீட்டில் அடியெடுத்த வைத்த பிறகு ராம்குமாரின் குடும்ப பிரச்சினை தீர்ந்ததா? சீதா தூக்கு தண்டனையிலிருந்து தப்பினாரா? கேள்விகளுக்கு விடையே `ஆனந்தம் விளையாடும் வீடு'
இத்தொடரில் சீதாவாக நடிகை மவுனிகா, தொழிலதிபர் ராம்குமாராக சுபலேக சுதாகர், மருமகள்களாக வினோதினி, தேவிபிரியா, மற்றும் `கவிதாலயா' `கிருஷ்ணன், `அச்சமில்லை' கோபி, தேவானந்த், விஜய் ஆனந்த், சரத், ராஜேந்திரன், புவனா, சங்கீதா பாலன், சொப்னா, சுந்தரி, வத்சலா ராஜகோபால், மாஸ்டர் சாருக்கான் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு: ராஜு வி.கிருஷ்ணா. இசை: கணேஷ். கதை, திரைக்கதை: விமலா கணேசன். பாடல்கள்: கிருத்தியா. வசனம்: கிருஷ்ணசாமி. தயாரிப்பு மேற்பார்வை: கானூர் என்.நிர்மல். தயாரிப்பு: ஆர்.ரவீந்திரன், ஜெ.அப்துல் லத்தீப். இயக்கம்: ஆர்.தேவேந்திரன்.
அடுத்த மாதம் 16-ம்தேதி முதல் இந்த தொடரை கலைஞர் டிவியில் காணலாம்.
mr_karthik
25th May 2008, 12:52 PM
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் `ஆனந்தம் விளையாடும் வீடு'
அன்னை தெரசா இல்லத்தின் நிர்வாகி சீதா அந்த இல்லத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவர்.
ராம்குமாரின் வீட்டிற்குள் குடும்பத் தலைவியாக வருகிறார் சீதா.
இத்தொடரில் சீதாவாக நடிகை மவுனிகா.
ayyayyO, indha ammaavaa...?.
Overaa alattikkuvaangaLE.. :evil: :shock: :oops:
thank God, this serial is coming in 12 noon, when we are in office.
aanaa
26th May 2008, 07:42 PM
தெக்கித்திப்பொண்ணு இனி திருப்பம் தான்
கலைஞர் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி தோறும் ஒளிபரப்பாகும், தெக்கித்திப் பொண்ணு தொடர் 30 நாளை தாண்டுகிறது.
பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கும் இந்த தொடரில் இனி படு திருப்பம் தான். நடிகர் நெப்போலியன், ரஞ்சிதா, சுவர்ணமால்யா, சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். ரேட்டிங்கில் சக்கை போடு போடுகிறது.
aanaa
1st June 2008, 06:42 PM
வைர மங்கை
கலைஞர் டிவியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் புது போட்டி நிகழ்ச்சி வைரமங்கை
பங்கேற்கும் பெண்கள், கராத்தே, டான்ஸ், மற்போர், கலை, ஓவியம், கைத்தொழில், சமையல் கலை, வாகன ஓட்டுதல் போன்ற சாதனைகளை படைப்பர். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சி இது.
R.Latha
3rd June 2008, 09:53 AM
AZHAGIYA TAMIL MAGAL
கலைஞர் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி, அழகிய தமிழ் மகள்நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகளிர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் என்று மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அலசி ஆராயப்படுகிறது.
ஸ்ரீவெங்கடேசுவரா டெலிபிலிம்ஸ் தயாரித்து வழங்கும் இந்நிகழ்ச்சி, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பகுதியின் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை தோலுரித்து அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
aanaa
9th June 2008, 06:10 PM
கலைஞர் டிவியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் புது போட்டி நிகழ்ச்சி வைரமங்கை
பங்கேற்கும் பெண்கள், கராத்தே, டான்ஸ், மற்போர், கலை, ஓவியம், கைத்தொழில், சமையல் கலை, வாகன ஓட்டுதல் போன்ற சாதனைகளை படைப்பர். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சி இது.
R.Latha
16th June 2008, 08:07 AM
News Dedicated to Mr. KARTHIK
நடிகை மவுனிகாவும் ஒரு வருட அஞ்ஞான வாசத்துக்குப் பிறகு `ஆனந்தம் விளையாடும் வீடு' தொடர் மூலம் நடிப்புக்கு மறுபிரவேசம் செய்திருக்கிறார். மவுனிகா நடிக்காமல் இருந்த காரணம் கண்ணீர் சமாச்சாரம். அடிக்கடி அழுது நடிக்கும் கேரக்டர்களே அமைந்ததால் அழுவதற்காக கண்களில் பயன்படுத்தும் கிளிசரின் இவருக்கு அலர்ஜியாகி விட்டது. இப்போது எல்லாம் சரியாகி மீண்டும் வந்திருக்கும் மவுனிகாவுக்கு இந்த தொடரில் அழுகிற மாதிரி கேரக்டர் இல்லை என்பது ஆச்சரியம்.
R.Latha
16th June 2008, 08:53 AM
கலைஞர் டி.வி.யில் வரும் திங்கள் முதல் தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், `சூப்பர் சுந்தரி' இது குழந்தைகளுக்கான மெகா தொடர்.
ஹீமென், ஸ்பைடர்மென் என எண்ணற்ற சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் இப்போது `சூப்பர் சுந்தரி'தொடராகியிருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கென முதல் முறையாக ஒரு சூப்பர் ஹியுமன் கதாபாத்திரத்தை `சூப்பர் சுந்தரி' மூலம் பிரமிட் சாய்மிரா நிறுவனம் கொண்டு வருகிறது.
நகைச்சுவை, அதிரடி என இரண்டும் கலந்து மிரட்ட வருகிறாள் சூப்பர் சுந்தரி. இது குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டதென்றாலும், குடும்பத்திலுள்ள அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.
`சூப்பர் சுந்தரி'யாக கலக்கியிருப்பவர் நடிகை உமா ரியாஸ். இவருடன் நளினி, பாலு ஆனந்த், அரவிந்த், மாறன் ஆகியோரும் உண்டு.
`சூப்பர் சுந்தரி' ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக இருந்து துயரம் வரும் சமயம் புயலென கிளம்பி பிரச்சினையைத் தீர்த்து வைப்பாள். சாதாரண குடும்ப பெண்ணாகவும், அப்பாவி கிராமத்து பெண்ணாகவும் `சூப்பர் சுந்தரி'யாகவும் உமா ரியாஸ் நடிப்பில் பல பரிணாமங்களை இத்தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொடருக்கு ஒளிப்பதிவு தர்மராஜ். செந் தமிழன் கதைக்கு. திரைக்கதை எழுதியிருப்பவர் கோபிநாத். வசனம்: ரவிகுமார். இயக்கம்: மோகன்.
--
Super Sundari OR Super Kizhavi ???
aanaa
16th June 2008, 11:43 PM
கலைஞர் டிவியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் புது போட்டி நிகழ்ச்சி வைரமங்கை
பங்கேற்கும் பெண்கள், கராத்தே, டான்ஸ், மற்போர், கலை, ஓவியம், கைத்தொழில், சமையல் கலை, வாகன ஓட்டுதல் போன்ற சாதனைகளை படைப்பர். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சி இது.
aanaa
1st July 2008, 08:30 PM
நம்ம குடும்பம் தொடரில் புது திருப்பம்
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நம்ம குடும்பம் தொடரில் புது திருப்பம்!
நெசவாளர் குடும்ப கதையான இதில், குடும்பத்தலைவன் மரணப்படுக்கையில் விழ, மருத்துவ செலவுக்கு வீட்டை அடமானம் வைக்க, கடைசியில் அவர் இறந்து விடுகிறார். கடன் பாக்கிக்காக வீடும் கைவிட்டுப் போய் விடுகிறது; மூன்று பெண்களை எப் படி தாய் காப்பாற்றுகிறார்? இப்படி போகும் தொடரில் கே.ஆர்.விஜயாவின் நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா? அவரின் மகள்களாக குஷ்பு, உமா மகேஸ்வரி, கிருத்திகா நடிக்கின்றனர். டி.ஆர்.பி., ரேட்டிங்கில் வெளுத்துக் கட்டுது இது.
aanaa
23rd July 2008, 07:49 PM
கலைஞர் டிவியில் மெகா தொடர்களுக்கு குறைவில்லை. சமீபத்தில் ஆரம்பமான மெகா தொடர், ஆனந்தம் விளையாடும் வீடு தொழிலதிபர் வீட்டுக் கதை இது.
மூன்று பிள்ளைகளில் இருவருக்கு திருமணமாக, அவர்களின் மனைவிகளால் வீட்டு அமைதி பறிபோகிறது. சிறையில் இருந்து பரோலில் சீதா வருவது தான் கதையின் திருப்பம். என்ன நடக்கப்போகிறது? திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணிக்கு பாருங்கள்.
clnarain
26th July 2008, 12:19 PM
Is kalaignar TV available in the US? Or atleast are there any private websites which provide live streaming?
saradhaa_sn
26th July 2008, 03:17 PM
கலைஞர் தொலைக்காட்சியின் இன்னொரு அங்கமான "இசையருவி" சேனலின், 'இசை வல்லுனர்களு'க்கான விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியை நேற்று காட்டினர்.
சாதனையாளர்களாக வயலின் லால்குடி ஜெயராமன், கடம் 'விக்கு' வினாயக்ராம், 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் விருது பெற்றனர். தனக்கு விருது வழங்க வந்தவர்களிடம், முதலில் அவருக்கு கொடுங்கள் என்று ராமமூர்த்தியைக் காட்டினார் விஸ்வநாதன் (மனுஷன் பணிவுன்னா அப்படி பணிவு.... எந்த சாதனையாளரும் இப்படியிருக்க மாட்டார்கள்).
நிறைய புதியவர்களுக்கும் விருது பெற்றனர். பாடகி சுஜாதாவின் மகள் சிறந்த புதுமுக பாடகியாகவும், பென்னி ('மதுரைக்கு போகாதடீ..') சிறந்த புதுமுக பாடகாராவும், ஜி.வி.பிரகாஷ் சிறந்த புதுமுக இசையமைப்பாளராகவும் பரிசு பெற்றனர் (வாக்காளர் ஓட்டெடுப்பின்படி தேர்வு).
சிறந்த 'ரீமிக்ஸ்' பாடலாக, பொல்லாதவன் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட 'எங்கேயும் எப்போதும்' பாடல் பரிசு பெற்றது. பரிசு பெற்றவர், 'இந்த விருதுக்கான ஒரு சதவீதம், தயாரிப்பாளருக்கும், ஒரு சதவீதம் ரீமிக்ஸ் செய்தவருக்கும் போகிறதே தவிர, மீதம் 98 சதவீதம் இப்பாடலை ஒரிஜினலாக உருவாக்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களைச்சேர்ந்தது' என்று சொன்னது மனதில் பால் வார்த்தது.
திரையுலகினரும் இசையுலகினரும் ஏராளமாக திரண்டிருந்த இந்த விழாவில் மனத்தை நெருடிய இரண்டு விஷயங்கள், கலாவின் கும்பல் ஆடிய குத்துப்பாடல்களும், அதைவிட கொடுமையாக, விழா வர்ணனை செய்த ராகவ் - அபர்ணா ஜோடியும். இருவரும் ரொம்ப அலட்டிக்கொண்டார்கள். மரியாதைக்குரிய இவ்விழாவை, ஏதோ கல்லூரி கல்ச்சுரல் விழா போல அசிங்கப்படுத்தினர். அதிலும் அபர்ணா படுமோசம்.
இதன் பிற்பாதி இன்று ஒளிபரப்பாகிறது. பாருங்கள் நான் சொன்னது உண்மையென்று தெரியும்.
aanaa
26th July 2008, 06:21 PM
Is kalaignar TV available in the US? Or atleast are there any private websites which provide live streaming?
not yet in US
but you can subscribe thru internet/channelone thats live
clnarain
27th July 2008, 02:55 AM
Is kalaignar TV available in the US? Or atleast are there any private websites which provide live streaming?
not yet in US
but you can subscribe thru internet/channelone thats live
Could you pls give me the exact website which provides the live streaming?
aanaa
31st July 2008, 10:40 PM
Could you pls give me the exact website which provides the live streaming?
go here
h t t p : / / w w w . channellive.tv/default.aspx
choose your plan
sign in
basic 4.99 for kalaignar
Kalaignar - A La Carte
Top rated Tamil channel progrmms comprising of Movies, Serials, News, Music, Reality shows and special programs. $4.99
Tamil Premium
Kalaignar, Raj, Jaya, Makkal, Isaiaruvi, Raj Musix. Chutty Tv (Free), CNN IBN (Free)
*Summer promotion. Limited time offer. Price subject to change without notice. $9.99
for 9.99 its very cheap
Enjoy
aanaa
8th August 2008, 05:34 PM
கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னேறி வருகிறது.
பிரமிட் சாய் மீரா தயாரித்து அனுஹாசன் நடிக்கும் ரேகா ஐ.பி.எஸ் தேவயானி கதாநாயகியாக நடிக்கும் மஞ்சள் மகிமை ஏ.வி.எம். தயாரிப்பில் வைர நெஞ்சம் பாரதி ராஜா இயக்கத்தில் நடிகர்கள் நெப்போலியன் ரஞ்சிதா நடிக்கும் தெக்கித்தி பொண்ணு குஷ்பு நடிக்கும் நம்ம குடும்பம் நடிகை பூஜா நடன இயக்குநர் பிரசன்னா நடுவர்களாக பங்கேற்கும் இளைஞர்களின் கலக்கல் நடன நிகழ்ச்சி ஆட்டம்-பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.
aanaa
10th August 2008, 06:54 PM
[tscii:8160f2c809]
DEEPANGAL A NEW SOAP
DEEPANGAL, a new mega serial will be telecast through the kalaignar tv channel. The present news says that it will be telecast at 11.00 AM to 11.30 AM. Though the new Kalaignar TV Channel has come with a bang, some of its soaps which were telecast was abruptly stopped from telecasting. It is also understood that many serials did not have the story weight and there were less sponsors for those programmes. There is no other option and the channel had to abandon those serials, it is said..
Deepangal story line is based on a married man who wants to become a millionaire. For this his mother also encourages. Her son marries a rich mans daughter. The married girl does not know about his earlier marriage. This hero running a luxury life in the city with his second wife.
The story will aim at how the newly married fellow manages between the two wives.
The serial is produced by famous Director Thalapathy and M.R.Sivakumar, and Directed by Edward Raj. The acters are Srikanth, Rajkanth, Bhavna, Vanaja, Nalini, Arunadevi and others.
[/tscii:8160f2c809]
aanaa
13th August 2008, 06:37 PM
கலைஞர் "டிவி'யில், திங்கள் வெள்ளி தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அழகான நாட்கள் தொடர் 125 எபிசோட்களை தாண்டி விட்டது.
திருமணம் நிச்சயம் செய்த பெண்ணை மணமுடிக்க முடியாமல் சிக்கல்; கிராமத்துக்கு பெற்றோருடன் திரும்பும் இளைஞனுக்கு திருமணம் நின்று போன காரணம் தெரிகிறது. அதற்குள், மாமா மகளுடன் சகஜமாக பேச, அதுவே காதல் என்று அவள் கணக்குபோட இன்னொரு குழப்பம். இதனிடையே, விபத்தில் இளைஞன் சிக்க, அவன் மனநிலையை உணர்ந்து வருந்தி, நிச்சயம் செய்த பெண்ணையே மணமுடிக்க பெற்றோர் சம்மதிக்க, அப்போது தான் ஏகப்பட்ட திருப்பங்கள். இப்படிபோகும் கதையின் சுவாரஸ்யம்.
aanaa
15th August 2008, 07:20 PM
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சி.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பாதிக்கப்பட்ட பெண்களே மேடையேற்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
கடந்த 27-7-08 புதன்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி செஸ் சாம்பியன் தேர்வுக்கு பண உதவி கேட்டு சமூக நல அமைப்புகளை அணுகியும், எவ்விதமான பலனும் இல்லாத காரணத்தால் போலி அமைப்புகளை கலைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள், அரங்கிலேயே ரூ.48,000/- வசூல் செய்து, அந்த பெண்ணை ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலக ஒலிம்பியாட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொள்ள ஆவன செய் துள்ளார்கள்.
நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந் நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
aanaa
17th August 2008, 12:46 AM
[tscii:e45b11c300]
வெற்றிப் பாதையில் மகராசி
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் `மகராசி'.
தனது எண்ணங்களுடன் உடன்பாடு இல்லாத பெற்றோருடன் போராடி தோல்வியடைந்த மகராசி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தற்செயலாக சந்திரமோகன் என்ற கோடீஸ்வர தொழிலதிபரை சந்திக்கிறாள். அவளது ஆளுமைத் திறனை தெரிந்து கொள்ளும் தொழிலதிபர், அவளை தன்னுடைய தொழிற்சாலையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கொடுக்கிறார். விடா முயற்சியோடு தொழிற்சாலையை நிர்வகித்து, எல்லோருடைய பாராட்டுக்களையும் பெறுகிறாள் மகராசி.
இந்நிலையில் மகராசிக்கு தொழிலதிபர் குடும்பம் சில இடைοறுகளை ஏற்படுத்தி வைக்கிறது. அந்த தொந்தரவுகளை மகராசி எவ்வாறு சமாளித்தாள்? தனது பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினாளா? கேள்விகளுக்கு விடையாக `மகராசி' தனது வெற்றிப்பாதையை தொடர்கிறாள்.சந்திரமோகனாக நடிகர் அபிஷேக், மகராசியாக புதுமுகம் புஷ்பலதா நடிக்கிறார்கள்.
[/tscii:e45b11c300]
aanaa
23rd August 2008, 07:45 AM
லட்சியம்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "லட்சியம்.''
ஊருக்கு நல்லவனாக வேடம் போட்டு, சொகுசு காரில் வலம் வருபவர் தொழில் அதிபர் பரசுராமன். ஊரில் நல்லது கெட்டது என்றால், முதல் ஆளாக ஓடோடி வந்து காரியங்கள் செய்பவர் என்று மனித தெய்வமாக போற்றப்படுபவர். ஆனால் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் யாராவது அழகான பெண்களைக் கண்டுவிட்டால், அந்த பெண்ணை அடையாமல் விடமாட்டார்.
தொழில் அதிபரான பரசுராமனின் நிறுவனங்களின் பொது மேலாளர் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி. நிறுவன விஷயமாக, ஆடிட்டர் வீட்டிற்கு செல்லும் பரசுராமனின் கண்களில் சிக்குகிறார் ஆடிட்டரின் செல்ல மகள் திவ்யா. அவளைத் திருமணம் செய்ய ஆவலாக உள்ளதை ஆடிட்டரிடம் தெரிவிக்கிறார். பெரும் பணக்காரரான பரசுராமன் தன்னை விரும்புகிறார் என்பதை அறிந்து மகிழ்கிறாள் திவ்யா.
திருமண ஏற்பாடுகளை முடுக்கி விடுகிறார் தொழில் அதிபர்.
திடுக்கென்று அவருடைய வாழ்க்கையில் பிரவேசிக்கிறாள், கவிதா. தன்னுடைய சகோதரியை திருமணம் செய்வதாக கூறி, குடும்பம் நடத்திவிட்டு, கொலை செய்து விட்ட பரசுராமனை பழி வாங்க தேடி வருபவள் அவள். பரசுராமனை அடையாளம் கண்டு கொண்ட கவிதா, பழிவாங்கினாளா, பரசுராமனின் திருமணம் நடந்ததா என்பதே கதையின் கரு.
திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் நடிகர் தேவன், பரசுராமனாக தோன்றுகிறார். ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியாக ஆடிட்டர் ஸ்ரீதரன், குடும்ப பெண் கதாபாத்திரத்தில் தீபா வெங்கட், பழிவாங்க அலையும் கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் ராஜ்காந்த், சாய்பிரசாத், யுவஸ்ரீ, பிருந்தாதாஸ் ஆகியோரும் உண்டு.
வெற்றிவிஷன் சார்பில் தொடரை தயாரிப்பவர் வி.எஸ்.குமரன்.
aanaa
23rd August 2008, 07:50 AM
ஐரோப்பிய நாடுகளிலும் கலைஞர் தொலைக்காட்சி
உதயமாகி ஒரு வருடம் நிறைவுறும் முன்பே அகில உலக தமிழ் நேயர்களை மகிழ்விக்கும் வண்ணம் தன்னுடைய ஒளிபரப்பை உலகமயமாக்கி வருகிறது, கலைஞர் டிவி.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தன்னுடைய ஒளிபரப்பு சேவையை தொடங்கிய குறுகிய காலத்திலேயே வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளதால், விரைவிலையே இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளில் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது கலைஞர் தொலைக்காட்சி.
aanaa
23rd August 2008, 07:50 AM
deleted
aanaa
30th September 2008, 10:43 PM
காந்தி கணக்கு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தயாராகும் ஒரு மணி நேர தொலைக்காட்சிப்படம் "காந்தி கணக்கு.''
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
காந்தி போதனைகளில் முக்கியமான `உயிர்க்கொலை செய்வது பாவம், பிறரைக் குறை பேசக்கூடாது, பெரியவர்களை மதிக்க வேண்டும், பொய் சொல்லக்கூடாது, உண்மையாக நடப்பது, திருடாமை, தீண்டாமை, தீயவைகளை நாடாதிருத்தல்' போன்ற கருத்துக்களையும் படமாக்கியிருக்கிறார்கள்.
"காந்தி கணக்கு'' என்ற வார்த்தை எதனால் வந்தது? அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை விளக்கும் முக்கிய வேடத்தில் மனோரமா நடித்திருக்கிறார்.
வித்தியாசமான வேடத்தில் இயக்குனர் பாலாமணி நடித்திருக்கிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: அன்புராஜ், இசை: கதிர். தயாரிப்பு: தேவிகா. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்: பி.பாலாமணி.
காந்தி ஜெயந்தியன்று இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
.
aanaa
30th September 2008, 10:49 PM
தீம்... தரிகிட...''
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ``தீம்.. தரிகிட''... நிகழ்ச்சி 50 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.
எஸ்.பி.பி.சரண் இயக்கும் இந்நிகழ்ச்சியில், பாடும் திறமை மட்டுமல்லாமல், குரல் வளம், அனைத்து வாத்தியகருவிகளோடு இணைந்து ஒலிப்பதிவு கூடத்தில் ஒலிப்பதிவு தரத்தில் இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காகவென்றே, பிரத்யேகமான ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பதிவும் படப்பிடிப்பும் நடைபெறுகிறது. பிரபல இசையமைப்பாளர் அல்லது பிரபல பின்னணி பாடகர் ஒருவரை நடுவராக கொண்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இவ்வார சிறப்பு நடுவராக பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீராம் பங்கேற்கிறார்.
aanaa
30th September 2008, 10:51 PM
"சூப்பர் சுந்தரி''
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க வருகிறாள் "சூப்பர் சுந்தரி.''
பேட்மேன், சூப்பர்மேன் வரிசையில் "சூப்பர் சுந்தரி'' குழந்தைகளை மகிழ்விக்கும் இந்த தொடரில், நடிகை உமா ரியாஸ்கான் வெவ்வேறு உருவெடுத்து, பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுவதாக கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.
aanaa
5th October 2008, 02:18 AM
தீபங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் `தீபங்கள்' தொடரை, திரைப்பட இயக்குநர் தளபதி இயக்குகிறார்.
ஏற்கனவே மணமுடித்து மகிழ்ச்சியுடன் வாழும் தன் மகனை, தனது அந்தஸ்து கூடிய காரணத்தால் மீண்டும் மணமுடிக்க வைக்கிறார் தந்தை. அழகான முதல் மனைவி கிராமத்தில் இருக்க, தாயின் சொல்லில் மயங்கி, மிகப்பெரிய செல்வந்தனாகும் ஆசையில், நகரத்தில் உள்ள பணக்கார குடும்ப பெண்ணை மணக்கிறார் மகன்.
இருவருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்திய மகனின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்ததா? அல்லது வெளிச்சத்திற்கு வராமல் இருப்பதற்காக தந்தையும் மகனும் நடத்திய நாடகம் வெற்றி அடைந்ததா என்பதே கதையின் கரு.
நட்சத்திரங்கள் ஸ்ரீகாந்த், ராஜ்காந்த், பாவனா, வனஜா, நளினி, காயத்ரி, அருணாதேவி பிரவினா.
aanaa
5th October 2008, 02:25 AM
அழகிய தமிழ்மகள்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``அழகிய தமிழ் மகள்'' நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகளிர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் என்று மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அலசி ஆராயப்படுகிறது.
aanaa
19th October 2008, 04:40 AM
ஆசை நிலவு
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``ஆசை நிலவு'' தொடர். விஸ்வநாதன்-சரஸ்வதி தம்பதிக்கு ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணுமாக பாலாவும் ராதாவும் விளங்குகிறார்கள். தன்னுடைய மகள் ராதா காதலிக்கும் சூரியாவிற்கே மணமுடிக்க விசுவநாதன் முடிவு செய்கிறார். தன் ஆஸ்தான ஜோசியர் தேவநாராயணனிடம் இதைப்பற்றி கூறிய போது அவர் தடுத்து விடுகிறார்.
ஜோசியர் கூறியது போலவே விசுவநாதனின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். பயந்து போன விசுவநாதன், திருமணத்தை தள்ளிப் போடுகிறார். நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு துணைவியாக ஒரு பெண்ணை தயார் செய்யுமாறு தனது நெருங்கிய நண்பர் ரவியிடம் கூறுகிறார். உடனே அஞ்சலி என்ற பெண்ணை, வேலைக்கு அமர்த்துகிறார், ரவி.
அஞ்சலி வேறு யாருமல்ல. ரவியின் சகோதரி சித்ராவிற்கு, விசுவநாதன் மூலம் திருமணமாகாமல் பிறந்த பெண்தான் அஞ்சலி. எப்படியாவது, விசுவநாதன் வீட்டில், அஞ்சலியை சேர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்த ரவி சரியான வாய்ப்பு வந்ததும், அஞ்சலியை விசுவநாதன் வீட்டில் வேலைக்கார பெண்ணாக சேர்த்து விடுகிறார்.
மீண்டும், தன் மகள் ராதா-சூரியா திருமணத்தை நடத்த முடிவு எடுக்கிறார் விசுவநாதன். இப்போதும் ஜோசியர் தடுக்கிறார். சூரியாவின் முதல் திருமணம் நிற்காது. முதல் மனைவி இறந்து விட அவன் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டி வரும் என்கிறார் ஜோசியர். முதல் மனைவியாக வேலைக் காரப் பெண் அஞ்சலியை மணமுடித்து, அஞ்சலி இறந்து விட்டால் இரண்டாவதாக சூர்யாவை திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று மகள் ராதா அறிவிக்க, அதிர்ந்து போகிறார், ரவி. அஞ்சலி பற்றிய உண்மையை இப்போதாவது விஸ்வநாதனிடம் ரவி சொன்னாரா? திருமணம் நடந்ததா என்பதே கதையின் உச்சக்கட்டம்.
திலக்ஜி, கே.எஸ். ஜெயலட்சுமி, பரத் கல்யாண், சுவப்னா நடிக்க, தொடரை இயக்குகிறார், உன்னி.
R.Latha
22nd October 2008, 02:13 PM
கானா குயில் பாட்டு
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "கானா குயில் பாட்டு'' 26 எபிசோடுகளுடன் தனது இசைப் பயணத்தை முடித்துக் கொண்டது. இன்று இரவு 9 மணி நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற பாடகர்களுக்கு பரிசு வழங்கி விடை பெறுகிறது.
டான்ஸ் மாஸ்டர் கலா இயக்கத்தில், இசை அமைப்பாளர் சபேஷ் மற்றும் கானா உலகநாதனை நடுவர்களாக கொண்ட இந்நிகழ்ச்சியில் முதல் பரிசான ரூ. 21/2 லட்சத்தை சரவணனும், இரண்டாவது பரிசான ரூ. 11/2 லட்சத்தை சுரேஷ் குமாரும் வென்றார்கள். மூன்றாவது பரிசான ரூ. 1 லட்சம் இரு நேயர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
இறுதி போட்டியையும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியையும் இன்று இரவு 9 மணிக்கு காணலாம்.
aanaa
25th October 2008, 08:35 AM
மறக்க முடியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பான `மறக்கமுடியுமா?' நிகழ்ச்சி இப்போது ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜியைத் தொடர்ந்து சாதனை படைத்த வெள்ளித்திரை கலைஞர்கள் வரிசையில் நடிகர் ஜெமினிகணேசனின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் ஜெமினிகணேசன் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்களும், அவரது உறவினர்களின் பேட்டியும் இடம் பெறுகிறது.
aanaa
25th October 2008, 08:36 AM
ஓடி விளையாடு பாப்பா
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு `ஓடி விளையாடு பாப்பா' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சின்னத்திரை நட்சத்திரங்களுக்காக உருவான `மானாட மயிலாட' நிகழ்ச்சியும் நேயர்களுக்காக வழங்கப்பட்ட `ஆட்டம் பாட்டம்' நிகழ்ச்சியும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து குழந்தைகளுக்கான நடனப் போட்டி நிகழ்ச்சியை நடத்த கலைஞர் தொலைக்காட்சி முன் வந்து இருக்கிறது. நிகழ்ச்சியை இயக்குபவர் டான்ஸ் மாஸ்டர் கலா.
aanaa
25th October 2008, 08:37 AM
தில்தில் மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. `தில்தில் மனதில்' என்ற நிகழ்ச்சி.
வீர விளையாட்டுகளில் முன்னணியில் இருக்கும் தமிழக இளைஞர்களின் சாகச நிகழ்ச்சிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது உருவாகி இருக்கிறது.
thriinone
25th October 2008, 08:37 AM
orE tholaikatchila 10 vithama nadana nigazhchi vazhangina, pulichu poirum.
aanaa
25th October 2008, 08:37 AM
தங்கமான புருஷன்
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் `தங்கமான புருஷன்'.
கண்ணியமான ஒரு இளைஞன் வாழ்வில் 3 பெண்கள் குறுக்கிடுகிறார்கள். அந்த 3 பெண்களில் யார் அவன் இதயம் ஊடுருவிச் செல்கிறார்கள் என்பது காட்சிகளாக்கப் பட்டிருக்கிறது. சின்னத்திரை தொடர்களில் பெண்கள் மட்டுமே உயர்வாக சித்திரிக்கப்பட்ட சூழ்நிலை இருந்து வந்தது. இப்போது முதன்முதலாக இந்த தொடர் மூலம் நல்ல குணம் கொண்ட ஆண்களின் சிறப்பு அம்சங்கள் திரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. தொடரில் தேவா இசையில் சித்ரா பாடிய டைட்டில் பாடல் அதை உறுதி செய்கிறது. இதற்கென வாலி எழுதிய பாடலில் `தங்கம் போல மனமிருந்தால் தாயைப்போல குணமிருந்தால் தங்கமான புருஷன் அவனே' என்பதாக வார்த்தை மாலைகள் ஆண்களுக்காக கோர்க்கப் பட்டிருக்கின்றன.நட்சத்திரங்கள்: பிரேம்சாய், `சேது'அபிதா, டெல்லி குமார், சந்திரபோஸ், பாத்திமா பாபு, நீபா, ஷ்ரவனி, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி.
தொடருக்கு கதை இந்திரா சவுந்தர்ராஜன். வசனம்: தங்கவேலு. கேமரா: பொன்ஸ். இயக்கம்: சுந்தர்கே.விஜயன்.
தயாரிப்பு: எவர்ஸ்மைல். தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.ராமதாஸ்.
R.Latha
28th October 2008, 12:16 PM
தங்கமான புருஷன்
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் `தங்கமான புருஷன்'.
கண்ணியமான ஒரு இளைஞன் வாழ்வில் 3 பெண்கள் குறுக்கிடுகிறார்கள். அந்த 3 பெண்களில் யார் அவன் இதயம் ஊடுருவிச் செல்கிறார்கள் என்பது காட்சிகளாக்கப் பட்டிருக்கிறது. சின்னத்திரை தொடர்களில் பெண்கள் மட்டுமே உயர்வாக சித்திரிக்கப்பட்ட சூழ்நிலை இருந்து வந்தது. இப்போது முதன்முதலாக இந்த தொடர் மூலம் நல்ல குணம் கொண்ட ஆண்களின் சிறப்பு அம்சங்கள் திரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. தொடரில் தேவா இசையில் சித்ரா பாடிய டைட்டில் பாடல் அதை உறுதி செய்கிறது. இதற்கென வாலி எழுதிய பாடலில் `தங்கம் போல மனமிருந்தால் தாயைப்போல குணமிருந்தால் தங்கமான புருஷன் அவனே' என்பதாக வார்த்தை மாலைகள் ஆண்களுக்காக கோர்க்கப் பட்டிருக்கின்றன.நட்சத்திரங்கள்: பிரேம்சாய், `சேது'அபிதா, டெல்லி குமார், சந்திரபோஸ், பாத்திமா பாபு, நீபா, ஷ்ரவனி, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி.
தொடருக்கு கதை இந்திரா சவுந்தர்ராஜன். வசனம்: தங்கவேலு. கேமரா: பொன்ஸ். இயக்கம்: சுந்தர்கே.விஜயன்.
தயாரிப்பு: எவர்ஸ்மைல். தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.ராமதாஸ்.
R.Latha
28th October 2008, 12:26 PM
தில்தில் மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. `தில்தில் மனதில்' என்ற நிகழ்ச்சி.
வீர விளையாட்டுகளில் முன்னணியில் இருக்கும் தமிழக இளைஞர்களின் சாகச நிகழ்ச்சிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது உருவாகி இருக்கிறது.
aanaa
8th November 2008, 08:21 PM
மானாட... மயிலாட - 3
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு ஒளிபரப்பான "மானாட.. மயிலாட-2'' நிகழ்ச்சி நிறைவடைந்ததையொட்டி, பாகம்-3 விரைவில் துவங்க இருக்கிறது. நாட்டிய பள்ளி மற்றும் நடனப்பள்ளி ஆசிரியர்களும், பிரபல மாடல்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் தங்களுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை பெற இருக்கிறார்கள்.
பாகம் இரண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதல் பரிசான 10 லட்சம் ரூபாய் பால-பிரியதர்ஷினிக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசான ரூ.5 லட்சத்தை கணேஷ்-ஆர்த்தி ஜோடியும், மூன்றாவது பரிசான ரூ.3 லட்சத்தை லோகேஷ்- சுஜிபாலாவும் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சரின் மனைவி தயாளு அம்மையார் கலந்து கொண்டார்.
R.Latha
10th November 2008, 02:10 PM
சந்தோஷம்''
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய தொடர் `சந்தோஷம்'
எல்.சிவகுமார் தயாரிக்கும் இத்தொடரின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சரவணன்.
தேவா இசையமைக்க, டி.மகிபாலன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். டைட்டில் பாடலை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார்.
நிர்வாக தயாரிப்பு: என்.எஸ்.தேவராஜ்.
கதை: பூர்ணிமா- கவுதம் இருவரும் பொருத்தமான தம்பதிகளாக, மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்வை நடத்தி வருகின்றனர்.
கணவன் கவுதம் குறுக்கு வழியில் பெரிய பணக்காரனாக ஆசைப்படுகிறான். அதன் விளைவால் பூர்ணிமா கணவனைப் பிரிய நேர்கிறது.
பூர்ணிமா ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கி, கொலைகாரியாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகிறாள்.
கொலைப்பழியிலிருந்து பூர்ணிமா மீண்டாளா? மீண்டும் கணவனுடன் சேர்ந்து அவருடைய வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியாக மாறியதா?
இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது `சந்தோஷம்'.
பூர்ணிமாவாக மீனாகுமாரியும் கவுதமாக விஜய் ஆனந்தும் நடிக்கும் இத்தொடரில் ரவிசங்கர், குயிலி, ராஜ்மதன், ஆர்த்திகாஸ்ரீ, ஸ்ரீஷைலஜா, ஸ்ரீதேவி, அருண், அழகு, திடீர் கன்னையா, `விழுதுகள்' சந்தானம், மேனேஜர் சீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
aanaa
15th November 2008, 06:52 AM
சிரித்து வாழ்வோம்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ``சிரித்து வாழ்வோம்'' நிகழ்ச்சி.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்நிகழ்ச்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் குழுவினர் இணைந்து சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகிறார்கள். இடையிடையே, கருத்துக்குத் தகுந்த காமெடி காட்சிகள் காட்டப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, நகைச்சுவையாக கதை வசனம் எழுதி இயக்குகிறார் அசோக்.
aanaa
22nd November 2008, 07:39 PM
மானாட மயிலாட- 3
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட பாகம்-3 நிகழ்ச்சியில் விளம்பர மாடல்கள், நடனப்பள்ளி இயக்குநர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்று ஒரு பெரும் படையே அணிவகுத்து நிற்கிறது. அசார்- ரஜினி பயாஸ்- தர்ஷினி, ராம்- பிரியா, முரளி-நிஷா, அஸ்வந்த்- சுகுணா, அருண்- அப்சரா, ரஞ்ஜித்-ஐஸ்வர்யா, நிவாஸ்- கிருத்திகா, அஜய்- ரேகா, ராகவா- சுவேதா மற்றும் சைதன்யா- மாயா என நடனக் கலைஞர்கள் அத்தனை பேரும் நாளை இரவு 7.30 மணிக்கு தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.
aanaa
22nd November 2008, 07:40 PM
நேரம் மாறும் `மறக்க முடியுமா?'
கலைஞர் தொலைக்காட்சியில் இதுவரை சனிக்கிழமைகளில் ஒளிபரப்பான "மறக்க முடியுமா?'' நிகழ்ச்சி, இனி ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து இப்போது இந்த தொடரில் நடிகர் ஜெமினிகணேசனின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாக உள்ளது.
aanaa
22nd November 2008, 07:41 PM
தில் தில் மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது "தில் தில் மனதில்.''
வீர விளையாட்டுகளில் முன்னணியில் இருக்கும் தமிழக இளைஞர்களின் சாகச நிகழ்ச்சிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமையும்.நெருப்பை உணவாக உட்கொள்ளும் இளைஞர்களின்சாகசம், தேள் போன்ற விஷ ஜந்துக்களை வாய்க்குள் வைத்திருந்து வெளியே எடுப்பது, பேருந்தை பற்களால் கடித்து இழுப்பது என்ற எண்ணிலடங்கா மயிர்க்கூச்செரியும் சம்பவங்கள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.
aanaa
30th November 2008, 04:36 AM
தீபங்கள்
கலைஞர் டி.வி.யில் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தீபங்கள் தொடர், இனி 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சொந்த கிராமத்தில் இருக்கும் மனைவி எழிலுக்கு தெரியாமல், செம்பியன் சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் மகள் மதுவை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறான். இந்த உண்மை மதுவுக்கும், எழிலுக்கும் தெரிந்துவிடாமல் இருக்க பல நாடகங்களை அரங்கேற்றுகிறான். இந்நிலையில் செம்பியனுக்கே தெரியாமல் சில அதிரடி திருப்பங்கள் நடந்துவிடுகிறது.
இந்நிலையில் செம்பியனின் முதல் மனைவி எழில் கர்ப்பமாகிறாள். ஆனால் அந்த கர்ப்பத்துக்கு தான் காரணமல்ல என்று செம்பியனும், அவனது அம்மா அலங்காரமும் சொல்லி அதிர வைக்கிறார்கள்.
பேராசை கொண்ட செம்பியனின் குறுக்கு புத்தி அடுத்தகட்டத்தில் இறங்குகிறது. தனது இரண்டாவது மனைவி மதுவின் தங்கையான மானசாவை மூன்றாவதாக தானே திருமணம் செய்ய திட்டமிடுகிறான். அந்த திட்டம் பலித்ததா? செம்பியனின் லீலைகள் வெட்ட வெளிச்சமானதா? என்பதை வரும் நாட்களில் காணலாம்.
ராஜ்காந்த், வனஜா, பாவனா, நளினி,அருணாதேவி, தேவ், ஸ்ரீவித்யா, காயத்ரி, அமரசிகாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை: எஸ்.கென்னடி தமிழரசன்.
வசனம்: சிவராமன், ஒளிப்பதிவு: நித்தியானந்தம், இயக்கம்: எஸ்.ஜே. எட்வர்ட் ராஜ்.
தயாரிப்பு: விஜய் வீடியோ விஷன், எம்.எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ்.
aanaa
14th December 2008, 02:04 AM
இவரல்லவா மாமியார்!
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடர் பெண்களின் அதிகபட்ச விருப்பத் தொடராகியிருக்கிறது.
மகேஸ்வரியின் தந்தை சந்திரபோஸ் கிட்னி பாதிப்பில் தவிக்கிறார். கருவுற்றிருக்கும் அவர் மகள் மகேஸ்வரி தந்தைக்காக தன் கிட்னியை கொடுக்க முன் வருகிறாள்.
ஆனால் கருவை கலைத்தால் தான் கிட்னி கொடுக்க முடியும். அதற்கு அவள் கணவன் ரவியின் (விஜய் ஆனந்த்) சம்மதம் வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். அதற்காக தன் கணவனிடமும் தன் மாமியார் அலமேலுவிடமும் (சாந்தி வில்லியம்ஸ்) மன்றாடிக் கேட்கிறாள். அவர்கள் ஒத்துக் கொள்வதாக இல்லை.
இந்த நிலையில் அலமேலுவுக்கு தன் வாழ்க்கையில் நடந்துமுடிந்த சில சம்பவங்கள் நினைவுக்குவர, மகேஸ்வரியின் கருவை கலைத்து அவள் தந்தைக்கு ஒரு கிட்னியைக் கொடுக்கலாம் என்று தன் மகன் ரவியிடம் கூறுகிறாள்.
அவன் முதலில் சம்மதிக்கவில்லை. இந்தக் கருவை கலைப்பதினால் குழந்தையே பிறக்காது என நினைக்க வேண்டாம் இறைவனின் அருளால் திரும்பவும் கர்ப்பம் தரிக்கும். குழந்தை பிறக்கும் என அலமேலு தன் மகனை கட்டாயப்படுத்தி மகேஸ்வரியை மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போகச் சொல்கிறாள், அலமேலு. மகேஸ்வரி தனது மாமியார் காலில் விழுந்து நன்றியை தெரிவிக்கிறாள். இந்த உணர்ச்சிகரமான காட்சி ஏவிஎம்மின் வைரநெஞ்சம் தொடரில் இடம் பெற்றது.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், பெண்கள் மாமியார் அலமேலுவை கடிதங்கள் மற்றும் போன் மூலமாக பாராட்டினார்கள். `இவரல்லவா மாமியார்! எங்கள் மாமியாரும் இப்படிப்பட்ட நல்ல குணம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்' என்று தெரிவித்திருந்தார்கள்.
மீனாகுமாரி, விஷ்வா, பீரித்தி சீனிவாசன், பரத் கல்யாண், சாந்தி வில்லியம்ஸ், தீபக், விஜய் ஆனந்த், புஷ்பலதா, சந்திரபோஸ் தொடரின் நட்சத்திரங்கள்..
ஒளிப்பதிவு: ஜி.அனுமந்தராவ், இசை: தேவா. பாடல் : வைரமுத்து, எடிட்டிங்: எஸ்.ஆர்.ஜி.விஜயகண்ணன், கதை, வசனம்: சேக்கிழார், இயக்கம்: ஆர்.கே. இணைத்தயாரிப்பு: அருணா குகன், அபர்ணா குகன், தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ்.குகன்.
aanaa
14th December 2008, 02:05 AM
மறக்க முடியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``மறக்க முடியுமா?'' நிகழ்ச்சி.
மறைந்த திரை உலக மேதைகளைப் பற்றிய இந்த வாழ்க்கை திரை வரலாற்று நிகழ்ச்சியில் இதுவரை மறைந்த மாமேதைகள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். காதல் மன்னன் ஜெமினி கணேசன் இடம் பெற்றனர். இனி அடுத்த நான்கு வாரங்களுக்கு நாட்டியப் பேரொளி பத்மினி பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒளிபரப்பாகும்.
aanaa
14th December 2008, 02:06 AM
[tscii:ff024cded3]ரேகா ஐ.பி.எஸ்-300
பிரமிட் சாய்மீராவின் முதல் தொடரான `ரேகா ஐ.பி.எஸ்.' கலைஞர் டிவியில் 300-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.
நேர்மையான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ரேகாவை எதிரியாக நினைத்து அவளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வந்த மாசி, இப்போது மந்திரியாகவும் ஆகிவிடுகிறான். அவன் மூலம் தன்னுடைய பதவிக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் வரும் சோதனைகளை தனது சாதுர்யத்தால் முறியடிக்கிறாள் ரேகா.
அவளுடைய தங்கை வசந்தி, மாசியை கொலை செய்ய பல முறை முயற்சி செய்தும் முடியாமல் தோற்றுப் போய் நிற்கிறாள். மாசி தனக்கெதிராக செய்து வரும் இடைοறுகளை சமாளித்துக் கொண்டிருக்கும் ரேகா, மாசியை தனது தங்கையிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகிறாள்.
இதற்கிடையே மாசியின் மைத்துனி சந்தியாவையும் அவளது புகுந்த வீட்டாரிடமிருந்து காப்பாற்றுகிறாள் ரேகா.
சந்தியா தனது கணவன் குடும்பத்தாரை பழி தீர்த்தாளா? ரேகாவின் உதவியால் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாளா? திடுக்கிடும் எதிர்பார்ப்புகளுடன் தொடர்கிறது, தொடர்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், அனுஹாசன், விஜய் ஆதிராஜ், பொள்ளாச்சி பாபு, வி.எஸ்.ராகவன், அப்ஸர் பாபு, பிரியதர்ஷினி, கிருத்திகா, பாபூஸ், ஸ்ரீலேகா நடிக்கிறார்கள்.
கதை: சித்ரா லட்சுமணன், திரைக்கதை: தவமணி வசீகரன், வசனம்: மனோகர், ஒளிப்பதிவு: தியாகராஜன், இயக்கம்: ரத்னம், கிரியேட்டிவ் ஹெட்: சுபா வெங்கட்.
[/tscii:ff024cded3]
R.Latha
15th December 2008, 01:02 PM
குஷ்புவின் புதிய தொடர்
சோனியா அகர்வால் நாயகி
டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், அதற்குப் பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நடிகை குஷ்பு சொன்ன கதையைக் கேட்டதும் சின்னத்திரையில் நடிக்க வந்து விட்டார். இந்தக் கதையே `நாணல்' என்ற பெயரில் கலைஞர் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது.
``புயல் வீசும் போது வளர்ந்து நிற்கும் ஆலமரம் கூட வேரோடு சாய்ந்து விடும். ஆனால் அதே ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாணலோ புயலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி நிமிர்ந்தபடி நின்று பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும்.
பெண் என்பவள் வாழ்க்கையில் எந்த மாதிரியான புயலை சந்தித்தாலும் கலங்காமல் நாணல் போல நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே கதையின் மையக் கரு'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு.
``தேவைப்படும் நேரத்தில் வளையும் இந்த பெண், பிரச்சினை என்று வரும்போது நிமிர்ந்து நின்று பதிலடி கொடுப்பாள். தான் மட்டும் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் சும்மா இருந்தால் நம் நாயகிக்கு பிடிக்காது. இப்படித்தான் படிக்கிற தம்பி, தங்கைகளை கூட படிப்புச் செலவுக்கு உழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற யதார்த்தவாதியாகவும் இருக்கிறாள்.
இந்தக் கதை முடிவானதும், இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மனக்கண்ணில் சட்டென வெளிப்பட்டவர். சோனியா அகர்வால்தான். சினிமாவில் கூட அவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியொரு அற்புதமான கேரக்டர். தொடர் வெளிவரத் தொடங்கியதுமே சோனியா பெண்கள் பிரதிநிதியாக கொண்டாடப்படுவார்.''
உற்சாகமாகவே சொன்னார் குஷ்பு.
தொடரின் மற்ற நடிகர்கள், ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ், ரேவதி சங்கரன், ஜோக்கர் துளசி, பானுமதி, விசு, கே.எஸ்.ஜி, வெங்கடேஷ்.
ஒளிப்பதிவு: நாக கிருஷ்ணன். திரைக்கதை: சிவராமன், பாடல்: தபு சங்கர், இசை: ராம்கிரண் தினா, பின்னணி இசை: இளங்கோ, பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், சித்ரா, இயக்கம்: ராபர்ட்-ராஜசேகர்.சினிமாவில் `சின்னப்பூவே மெல்லப்பேசு' படம் தொடங்கி பாலைவனச்சோலை, மனசுக்குள்மத்தாப்பூ வரை 3 படங்கள் இணைந்து இயக்கிய இந்த இயக்குன இரட்டையர்கள் முதன்முதலாக சின்னத்திரையிலும் இந்த தொடர் மூலம் கால் பதித்திருக்கிறார்கள்.
கதை கிரியேட்டிங் ஹெட்: குஷ்பு சுந்தர்.
aanaa
20th December 2008, 04:27 AM
கலைஞர் தொலைக்காட்சியில் தினந்தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ``சதி லீலாவதி'' தொடர்.
சூர்யாவிற்கும், லீலாவதிக்கும் நடைபெறும் மறைமுகமான மோதல், சூர்யாவிற்கும் பரத்திற்கும் இடையே ஏற்படும் நேரடியான மோதல், ரஞ்சித்திற்கும் ராமநாதனுக்கும் இடையே உருவான மர்மமான மோதல் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் படைப்பும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் போக்கில் அனுதினமும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும் தொடராக இந்த தொடர் இருக்கும்'' என்கிறார், இயக்குனர் கே.வி.சக்தி.
நடிகர்கள்: சாக்ஷி சிவா, யோகிணி, ஸ்ரீ, லட்சுமிராஜ், நேத்ரன், மோனிகா, சண்முகசுந்தரம்.
aanaa
20th December 2008, 04:34 AM
தில்... தில்... மனதில்...
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``தில் தில் மனதில்'' இடது கால் ஒரு அம்பாசிடர் காரிலும் வலது கால் மற்றொரு அம்பாசிடர் காரிலும் கட்டப்பட்ட நிலையில் கார்கள் பின்னோக்கி இயங்கும் போது தன்னுடைய மன வலிமையாலும் உடல் உறுதியாலும் கார்களை ஓரளவிற்கு மேல் இயங்காமல் செய்வது வியக்கத்தக்க சாதனை என்றால், பாட்டில் ஒன்றின் மீது அமர்வது அடுத்தகட்ட சாதனை.
மனதில் `தில்' ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்கிறது `தில்தில் மனதில்'.
aanaa
27th December 2008, 10:43 PM
சந்தோஷம்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ``சந்தோஷம்''.
வருமான வரித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ராமநாதன் மற்றும் அவருடைய மூன்று மகள்களை சுற்றி பின்னப்பட்டது இந்த
தொடர்.வி.சரவணன் கதை வசனம் எழுதி இயக்கும் இத்தொடரில், ராஜ்மதன், மீனாகுமாரி, லதா, தேவிஸ்ரீ, விஜய் ஆனந்த், குயிலி, மானேஜர் சீனா மற்றும் திடீர் கன்னையா நடித்து இருக்கிறார்கள்.
R.Latha
5th January 2009, 01:02 PM
பாரதிராஜாவின் தெக்கித்திப்பொண்ணு சீரியலில் நடிகர் நெப்போலியன் நடித்த கேரக்டரில் இப்போது டைரக்டர் ஷரவண சுப்பையா நடிக்கிறார். இவர் அஜித் நடித்த சிட்டிசன் வெற்றிப்படத்தை இயக்கியவர்.
* சோனியா அகர்வால் சீரியலில் நடிக்கவந்த பிறகு ஜோதிமயமான அந்த முன்னாள் முன்னணி நடிகையையும் ஒரு நிறுவனத்தில் நடிக்கக் கேட்டு அணுகியிருக்கிறார்கள். நடிகை தனது மார்க்கண்டேய மாமா சம்மதம் தந்தாலொழிய நடிப்பதில்லை என்றிருக்கிறார். மாமாவின் எண்ணமோ மருமகள் இனி குடும்பம், குழந்தை என்று கவனித்துக் கொண்டாலே போதும் என்பது தானாம்.
R.Latha
9th January 2009, 12:51 PM
[tscii:257dda9405]மறக்க முடியுமா?
தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த வெள்ளித்திரையின் முன்னாள் நாயகர்-நாயகிகளின் வாழ்க்கை வரலாறு மறக்க முடியுமா?' என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன், பத்மினி ஆகியோரைப் பற்றி ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற அரிய தகவல்கள், நேயர்களைப் பெரிதும் ஈர்த்தன.
இவர்களையடுத்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிறது. எம்.ஆர்.ராதாவைப் பற்றி அவருடைய குடும்பத்தினர் நடிகைகள் ராதிகா, நிரோஷா, ராதாரவி, எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் ஆகியோரும் எம்.ஆர்.ராதாவுடன் பணியாற்றிய கலைஞர்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி, ஜன.4 முதல் ஞாயிறுதோறும் காலை 10.15 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
Dinamani 9.1.09[/tscii:257dda9405]
aanaa
17th January 2009, 09:32 PM
சந்தோஷத் திருப்பங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் ``சந்தோஷம்'' தொடர், 50-வது எபிசோடை தொட்டிருக்கிறது.
ஒரு குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அழகுற படம் பிடித்து, பாமரனும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது இந்த தொடர்.
``ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ராமநாதன் மற்றும் அவருடைய மூன்று மகள்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. ராமநாதனின் முதல் மாப்பிள்ளை விவாகரத்து கேட்டு நிற்க, இரண்டாவது பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்க, மூன்றாவது பெண் காதலனோடு வெளியேற, வீடே கதி கலங்கி நிற்கிறது.
எல்.எஸ்.கே, நிறுவனம் சார்பில் வி.சரவணன் கதை, வசனம் எழுதி இயக்கும் இத்தொடரில், ராஜ்மதன், மீனாகுமாரி, லதா, தேவிஸ்ரீ, விஜய்ஆனந்த், குயிலி, மானேஜர் சீனா, `திடீர்' கன்னையா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
aanaa
17th January 2009, 09:33 PM
ரேகா ஐ.பி.எஸ்.
கலைஞர் தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரேகா ஐபிஎஸ் தொடர், 350-வது எபிசோடை நெருங்குகிறது.
களரி கலையில் கற்றுத் தேர்ந்த நடிகை அனுஹாசன் காவல்துறை அதிகாரி வேடத்தில் வருகிறார்.
தனது தங்கையை திருமணம் செய்தவரின் அண்ணனும், பிரபல அரசியல்வாதியுமான மாசி என்கிற ஊழல் மன்னன் மூலமாக, தனது பணியிடத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு அனுஹாசன் எதிர்கொள்கிறார் என்பது தொடரின் இப்போதைய கதைப்பின்னணி.
aanaa
17th January 2009, 09:34 PM
மாற்றங்கள் புதிது
பாரதிராஜா இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் `தெக்கித்திப்பொண்ணு' தொடரில் இருந்து திடுமென நடிகர் நெப்போலியன் விலகிக் கொண்டார். அவருக்குப் பதில் இப்போது டைரக்டர் ஷரவணசுப்பையா நடிக்கிறார். தற்போது தொடரில் நடித்து வந்த ரஞ்சிதாவும் விலகிக்கொண்டுவிட, அவரது கேரக்டரில் நடிகை புவனேஸ்வரி நடித்துக் கொண்டிருக்கிறார்.
thanks - thinathanthi
aanaa
24th January 2009, 09:52 PM
வைர மங்கை
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``வைர மங்கை'' போட்டிநிகழ்ச்சி. மகளிர் சாதனைகளை பறைசாற்றும் இந்நிகழ்ச்சியினை சின்னத்திரை மங்கைகள் நிஷா மற்றும் சுஜிதா தொகுத்து வழங்குகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் பல சுற்றுகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
15 மாவட்ட தலைநகர்களில் இதற்கான போட்டி நடந்த பிறகு, இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வைர மங்கைகளில் சூப்பர் வைரமங்கையாக ஒரு பெண்மணி தேர்வுசெய்யப்படுகிறார். அவருக்கு 5 லட்சம் மதிப்புள்ள வைர கிரீடம் சூட்டப்படும்.
நன்றி -- தினதந்தி
aanaa
24th January 2009, 09:53 PM
அழகிய தமிழ் மகள்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது "அழகிய தமிழ் மகள்'' நிகழ்ச்சி. முற்றிலும் பெண்களே பங்கு பெறும் இந்நிகழ்ச்சியில் சமுதாய பிரச்சினைகள் மற்றும் தீர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதுவரை திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, கோவை, திருநெல்வேலி, கரூர் மற்றும் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சி, நாளை வேலூரில் நடைபெற உள்ளது. திருச்சியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது ஊனமுற்ற ஏழைப் பெண் ஜெர்மனியில் நடந்த சதுரங்க போட்டியில் கலந்து கொள்ளவும், கரூரில் நடந்தபோது இருதய அறுவை சிகிச்சைக்காக ஒரு பெண்மணிக்கு மேடையிலேயே பொருள் உதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகை ரோகிணி.
நன்றி -- தினதந்தி
aanaa
31st January 2009, 06:20 AM
தெக்கித்திப் பொண்ணு
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `தெக்கித்திப் பொண்ணு' தொடர் 200 எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆண்டாண்டு காலமாக, கலாச்சாரம் என்கிற போர்வையிலே அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் உணர்ச்சிகளை தத்ரூபமாக வெளிக்கொண்டு வரும் இந்த தொடரை இயக்குபவர் டைரக்டர் பாரதிராஜா.
நன்றி - தினதந்தி
aanaa
31st January 2009, 06:22 AM
நடனத்தில் சாதனை
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``மானாட மயிலாட'' நிகழ்ச்சியில் அருண்-அப்ஸரா ஜோடி இப்போது முதல் நிலைக்கு வந்து விட்டனர்.
அருண் ஏற்கனவே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். `வானத்தை போல' `எங்கள் அண்ணா' ஆகிய படங்களில் இளம் வயது விஜயகாந்த் இவர் தான்.
கடந்த வார நிகழ்ச்சியில் அருண்-அப்ஸரா ஜோடியினர் `பிதாமகன்' படக்கதையை பத்தே நிமிடத்தில் கண் முன் காட்டி பிரமிக்க வைத்தனர். திரையில் மட்டுமே காண முடிந்த இரட்டை வேடத்தை, மேடையில் செய்துகாட்டி பிரமிப்பு ஏற்படுத்தினார், அருண்.
நன்றி - தினதந்தி
aanaa
7th February 2009, 06:33 AM
துளசி
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் துளசி.
வெற்றிவிஷன் தயாரிப்பு நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்காக உருவாக்கிவரும் இந்த தொடரை ராதா கிருஷ்ணன் இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் அசோகன், சுஜிதா, லாவண்யா, விஸ்வா, சாய்ராம், ஸ்வேதா, சவுந்தர்யா நடிக்கிறார்கள்.
மலையாள திரைப்பட உலகில் பிரபல வில்லனாக அடையாளம் காணப்பட்ட நடிகர் தேவன் நடிப்பில் ஏற்கனவே ``லட்சியம்'' என்ற தொடரை இதே நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி
aanaa
15th February 2009, 05:34 AM
மறக்க முடியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ``மறக்க முடியுமா?''.
கலைப்பயணத்தில் சேவைகள் பல புரிந்து வெற்றிக்கொடி நாட்டி இவ்வுலகம் மறந்த, அல்லது மறைந்த திரை உலக மேதைகளைப்பற்றிய வாழ்க்கை வரலாறு இது.
நாளைய நிகழ்ச்சியில் மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பற்றிய பல சுவையான தகவல்கள் ஒளிபரப்பாக உள்ளது.
ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். காதல் மன்னன் ஜெமினி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி
aanaa
15th February 2009, 05:35 AM
தங்கமான புருஷன்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``தங்கமான புருஷன்'' தொடர். பிரபல சின்னத்திரை இயக்குநர் சுந்தர் கே.விஜயன் இயக்கும் இந்த நெடுந்தொடரை எவர்ஸ்மைல் நிறுவனத்திற்காக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்குகிறார்.
வண்ணமிகு கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கும் மூன்று பெண்களைப் பற்றிய கதையிது. சேது திரைப்பட நாயகி அபிதா, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை புகழ் வினோதினி ``மானாட மயிலாட' புகழ் நீபா ஆகியோருடன் பிரேம்சாய், டெல்லி குமார் மற்றும் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
15th February 2009, 05:37 AM
[tscii:75d476f7be]
நடிகர்-நடிகைகள் விருது பெற்ற விழா
கலைஞர் டிவியில் இன்று ஒளிபரப்பு
புத்தாண்டையொட்டி கடந்த ஆண்டின் சிறந்த நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நூற்றுக்கணக் கானோருக்கு சென்னையில் விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் வி-4 என்டர்டெய்னர் நிறுவனம் வழங்கிய பாபுலர் திரைப்பட விருதுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலவர் கே.ஆர்.ஜி, டைரக்டர் கே.பாலச்சந்தர், படஅதிபர் இப்ராகிம்ராவுத்தர், வினியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகை குஷ்பு ஆகியோர் வழங்கி சிறப்பித்தார்கள்.
விருது பெற்ற நடிகர்-நடிகைள்: பிரபு, சேரன், ஜெயம்ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், பரத், பிரசன்னா, பாண்டியராஜன், பசுபதி, சாந்தனு, ஆர்.கே., விவேக், அலெக்ஸ், டாக்டர் ராம், மனோபாலா, நடிகைகள் சிநேகா, விமலாராமன், விஜயலட்சுமி, கீர்த்திசாவ்லா, சரண்யா, கோவைசரளா.
விருது பெற்ற இயக்குனர்கள்: கே.எஸ்.ரவிகுமார், தரணி, சசி, ராதாமோகன், வெங்கட்பிரபு, ஜெயம்ராஜா, மிஷ்கின், பேரரசு, ஜி.சிவா, ஆதி.
சிறந்த கலைவித்தகருக்கான விருதை பிலிம்நிοஸ் ஆனந்தனும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்- வைஜயந்திமாலாவும் பெற்றுக் கொண்டார்கள்.
மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், புதுமுக நடிகர்-நடிகைகளும் விருது பெற்றார்கள்.
திரையுலகமே திரண்டுவந்த இந்த விருது நிகழ்ச்சியை கலைஞர் டிவி இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்புகிறது.
நன்றி: தினதந்தி[/tscii:75d476f7be]
R.Latha
20th February 2009, 01:36 PM
[tscii:6368a7693b]சிரிப்பொலி
கலைஞர் தொலைக்காட்சிக் குழுமத்தில் சிரிப்பொலி' என்ற பெயரில் மற்றுமொரு 24 மணி நேர சேனல் உதயமாகிறது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்பாகும்.
சிரிப்பொலி' சேனல் வரும் பிப்ரவரி 22-ம் தேதியிலிருந்து தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது. திரைப்பட நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமல்லாமல் நகைச்சுவை சார்ந்த வித்தியாசமான நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறுகின்றன.
பிரபல நகைச்சுவை நடிகர்களின் பேட்டிகள், பிற துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் நகைச்சுவை அனுபவங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் நகைச்சுவைத் தொடர்கள் போன்றவையும் இந்த சேனலில் ஒளிபரப்பாகின்றன.[/tscii:6368a7693b]
R.Latha
20th February 2009, 01:43 PM
[tscii:4cd2bed22b]மழை பெய்த தருணங்களில்...'
பரபரப்பு இல்லாமல் ஒரு சின்னத்திரை திருமணம் அரங்கேறப் போகிறது. யாருக்கும் தெரியாமல் எப்படி முடிந்தது என்றால்...அதான் தெரிந்து விட்டதே என்கிறார் மானாட மயிலாட' சஞ்ஜீவ்.
இனி அவருடன் ஒரு ஆட்டம்...
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக இருந்த இடம் கல்லூரியாகதான் இருக்கும். எனக்கும் அப்படித் தான். மனது நிறைய கனவுகளுடன் வலம் வந்ததும், என்னை முழு மனிதனாக மாற்றிய இடமும் லயோலா கல்லூரி.
நடிகர் விஜய், ராம்குமார் என நிறைய நண்பர்கள் அங்கு கிடைத்தார்கள். இன்றைக்கு எல்லோருமே ஏதோ ஒரு துறையில் சாதித்து கொண்டு இருக்கிறோம்.
எனக்கு சினிமா துறையில் ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது. ஒரு மொட்டை மாடி இரவில் எனக்கும், சினிமா ஞானம் வந்ததது. உடனே, வந்து விட்டேன்.
நிலாவே வா', பத்ரி' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாக வந்து போனேன். அதன் பிறகு தான் தனியாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியும், பொறியும் கிளம்பியது. சீரியலுக்கு வந்து விட்டேன்.
இயக்குனர் திருமுருகன் மெட்டி ஒலி'யில் தந்த வாய்ப்பு இன்று கலசம்' வரை உயர்ந்து இருக்கிறது. இந்த காலங்களில் என்னை நானே பிரமிப்பாக பார்த்த தருணங்கள் நிறைய உண்டு.
இப்போது என் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம் காதல். ஆமாம், வைரநெஞ்சம்' ப்ரீத்தி'யைத் தான் காதலிக்கிறேன். ஷீட்டிங்' நடக்கிற சமயங்களில் பார்த்து ஒரு ஹாய்' சொல்லிப்போம் அவ்வளவுதான். மற்றபடி ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்போதாவது போனில் பேசிக் கொள்வோம். திடீரென ஒரு நாள் திருமதி செல்வம்' சீரியலில் உங்கள் நடிப்பு சூப்பராக இருந்தது. அதே பாணியை தொடர்ந்து கடைபிடியுங்கள். உங்கள் பாணியைதான் நானும் என் சீரியலில் கடைபிடிக்கிறேன்'' என்றார் ஒரே போடாக...
அதில், விழுந்தவன் தான். பிறகு, சீரியல்களைப் பற்றி நிறைய பேசினோம். இப்போதும் அந்த நிமிடங்கள் வந்து போகின்றன. திடீரென ஒரு நாள் நான் உங்களை காதலிக்கிறேன்' என்றார். என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. இப்போது நினைத்தாலும் மழை பெய்கிற தருணம் வந்து போகிறது. இரண்டு பேர் வீட்டிலும் பேசி முடிந்து விட்டது. வருகிற மார்ச் மாதம் டும்...டும்...இருக்கும் எனக் கூறிய சஞ்ஜீவ், நமக்கும் அழைப்புக் கொடுத்தார்[/tscii:4cd2bed22b]
aanaa
22nd February 2009, 04:13 AM
மானாட... மயிலாட...
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ``மானாட... மயிலாட'' நடனப் போட்டியின் முதல் இரண்டு பகுதிகள் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் 75-வது எபிசோடை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் கலா இயக்குகிறார், நடிகை ரம்பா மற்றும் நடிகை குஷ்பூ நடுவர்களாக பங்கேற்கிறார்கள். முதல் பரிசு பத்து லட்ச ரூபாய் என்பதால், மூன்றாவது பகுதியிலும் போட்டி கடுமையாகவே இருக்கிறது.
நன்றி: தினதந்தி
aanaa
22nd February 2009, 04:14 AM
மைதிலி
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `மைதிலி'.
பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வளர்பவள் மைதிலி. பிறப்பிலேயே தன் தாயை இழந்து பின் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவள்.
நாயகன் ராம் பிரசாத் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் கடுமையான உழைப்பால் மிகப் பெரிய உயரத்தை தொட்டவன்.
காலம் ராம் பிரசாத்-மைதிலியை இணைத்து வைக்கிறது. சந்தோஷமான அவர்களது வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. ஒரு கட்டத்தில் ராம் பிரசாத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுய நினைவை இழக்கிறான். தனியான மைதிலி இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறாள்.
சங்கீதத்தில் தேர்ந்த மைதிலி தன் முயற்சியில் திரை உலகில் மிக பெரிய பாடகியாகிறாள். தன்னை உதாசீனப்படுத்திய குடும்பத்தை ஒரு தாய் போல் தாங்குகிறாள். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறாள். ராம் பிரசாத் என்ன ஆனான்? கணவன்- மனைவி சந்தித்தார்களா? இப்படி பல முடிச்சுகளுடன் கதை நகர்கிறது.
கதை காஞ்சீபுரத்தில் ஆரம்பித்து சென்னை, மலேசியா, சிங்கப்பூர் என்று பறக்கிறது.
`நீ மன்னவனா சின்னவனா சொல்லி விடும் பிறப்பு
நீ நல்லவனா கெட்டவனா சொல்லி விடும் இறப்பு' என கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் பின்னணியில் உருவான கதை இது.
மீடியா மாஸ்டர்ஸ் பேனரில் டாக்டர் ஸ்ரீதர் நாராயணன், திருமதி விஜயா தயாரிக்கிறார்கள். வசனம் பாலமுருகன். இசை எஸ்.பி.வெங்கடேஷ். பின்னணி இசை எஸ்.பி.பூபதி. கதை- திரைக்கதை, இயக்கம்: எம்.விஸ்வநாத்.
ராம் பிரசாத்தாக அஜய், மைதிலியாக சுஜிதா, சித்தியாக வடிவுக்கரசி, மற்றும் சண்முக சுந்தரம், ஓ.ஏ.கே.சுந்தர், தீபாவெங்கட், கிரி, பாரதி கண்ணன், எல்.ஐ.சி.நரசிம்மன், சிலோன் மனோகர் நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
22nd February 2009, 04:15 AM
24 மணி நேரமும் சிரிப்பொலி
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து ``கலைஞர்'', ``இசையருவி'' மற்றும் ``செய்திகள்'' தொலைக்காட்சிகளை அடுத்து 24 மணி நேர நகைச்சுவைக்கான தொலைக்காட்சியாக ``சிரிப்பொலி'', நாளை முதல் உதயமாகிறது.
இதன் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ``சிரிப்பொலி'' தொலைக்காட்சி முத்திரையை நடிகர் கமலஹாசன் வெளியிடுகிறார். நகைச்சுவை நட்சத்திரங்கள் முன்னணி வகிக்க, பிரபல நடிகர், நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.
``சோஷியல் மீடியா'' நிறுவனம், இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியோடு இணைந்து ``இசையருவி'' தொலைக்காட்சியின் முதலாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது.
நன்றி: தினதந்தி
mr_karthik
23rd February 2009, 06:12 PM
மானாட... மயிலாட...
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ``மானாட... மயிலாட'' நடனப் போட்டியின் முதல் இரண்டு பகுதிகள் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் 75-வது எபிசோடை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் கலா இயக்குகிறார், நடிகை ரம்பா மற்றும் நடிகை குஷ்பூ நடுவர்களாக பங்கேற்கிறார்கள். முதல் பரிசு பத்து லட்ச ரூபாய் என்பதால், மூன்றாவது பகுதியிலும் போட்டி கடுமையாகவே இருக்கிறது.
நன்றி: தினதந்தி
'Dhinathandhi' gives information in wrong way.
MM group is celebrating 75th week for all three parts combined (MM part 1, 2, 3), not for Part 3 only.
aanaa
24th February 2009, 04:12 AM
thanks for clarification mr_karthik
aanaa
28th February 2009, 08:57 AM
ரேகா ஐ.பி.எஸ்.
கலைஞர் தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரேகா ஐ.பி.எஸ். தொடர் 350 எபிசோடுகளைத் தாண்டியிருக்கிறது. இரண்டு காவல் துறை அதிகாரிகளிடையே நடைபெறும் `நீயா நானா' போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதையின் சாராம்சம். தொடரில் களரி உள்ளிட்ட சகல கலைகளும் கற்றுத் தேர்ந்த போலீஸ் அதிகாரியாக அனுஹாசன் நடிக்கிறார்.
நன்றி -- தினதந்தி
aanaa
28th February 2009, 09:07 AM
Kalaignar TV launched their brand new 24 hour comedy channel 'Sirippoli', at a function at Taj Coromandal on Saturday.
Kamal Hassan launched the channel, in the presence of Tamil films comedians like Manobala, Charly, Vyapuri, M.S Bhaskar, Napolean and others.
Social Media India Ltd, a leading media and entertainment marketing and advertising sales partner of Kalaignar TV, will market the new comedy channel. They had earlier made Kalaignar's music channel Isaiaruvi a huge hit.
Before launching the show Kamal was sang few lines of his famous song 'Panneer Pushpangale...' at the request of the event's host Vijay Aadhiraj.
Kamal said after the formal launch, "I sang this song when I was just starting out and was busy in Malayalam films, and Ilayaraja who was the music director helped me to get the pronunciation of the words in Tamil correctly, as I had a very heavy Malayalam accent then..."
He further requested, "Almost all the media representatives and film industry people mention Tamil Film Industry as Kollywood, It is very ugly and the funniest thing, please don't do the same insult again and again to our film industry that produces legends and so many new talents.."
நன்றி -- film channels
aanaa
14th March 2009, 07:30 PM
தெற்கத்தி பொண்ணு
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `தெற்கத்தி பொண்ணு' தொடர் 225 எபிசோடு தாண்டியிருக்கிறது.
சந்திரசேகர், சரவண சுப்பையா, பிரகதி, புவனேஸ்வரி, தேவிபிரியா, வைஷாலி, சொர்ணமால்யா நடிக்கிறார்கள் தொடரில் சிவனாண்டியாக வரும் நடிகர் சந்திரசேகரின் முறைப்பெண்ணாக `அலங்காநல்லூர் அன்னக்கொடி' கதாபாத்திரத்தில் நடிகை பிரகதி வருகிறார். மணமாகி வந்தவள் விட்டுச் சென்றவுடன் உரிமையோடு முறைப்பெண் என்ற முறையில் சிவனாண்டி வீட்டில் நுழைகிறாள் இந்த அன்னக்கொடி. ஆனால், எதிர்பாராத விதமாக கொலை செய்யப்படுகிறாள். அவள் கொலை செய்யப்படுவதையும் அதனால் புதுப்பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாவதையும் வரும் எபிசோடுகளில் காணலாம். இயக்கம் பாரதிராஜா.
நன்றி -- தினதந்தி
aanaa
21st March 2009, 10:44 PM
திருப்பங்களுடன் `நாணல்'
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாணல் தொடர் திருப்புமுனைக்காட்சிகளுடன் விறுவிறுப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ராதிகா நாணல் மாதிரி வளைந்து நிற்பாள். ஆனால் உடைய மாட்டாள். மறுபடியும் நிமிர்ந்து நிற்பாள்.அவளுக்குத்தான் எத்தனை போராட்டங்கள். கணவன் ராஜேஷ் இறந்து விட்டான் என்று அறிந்ததும் அவள் விதவைக் கோலம் பூணுகிறாள். ஆனால் இறந்ததாக சொல்லப்பட்ட கணவன் இறக்கவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்ற உண்மை அவள் கண்ணெதிரே நின்றபோதும் அவளால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.
அதற்கும் காரணம் இருந்தது. அவள் கணவன் இப்போது காதம்பரி என்ற இன்னொரு பெண்ணுக்கும் கணவன்.
அவள் கணவனுக்கோ `இவள் தான் என் முதல் மனைவி' என்று இரண்டாவது மனைவி காதம்பரியிடம் சொல்ல முடியாக நிலை. வாழ்க்கை இப்படி கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்க, இப்படியொரு கணவன் தேவைதானா என்ற கேள்வி ராதிகாவுக்குள் வந்து போகிறது. ஆனாலும் அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியாய் இருக்கும் குழந்தைக்காக அதன் எதிர்காலத்துக்காக எல்லாம் பொறுக்கிறாள். ஆனால் இரண்டாவது மனைவி காதம்பரிக்கு உண்மை தெரிய வரும்போது அவள் எந்தமாதிரி அதை எடுத்துக் கொள்ளப் போகிறாள்? ராதிகாவுக்காக வாழ்க்கையை விட்டுக் கொடுப்பாளா?தேவியர் இருவர் பிரச்சினையில் கணவன் ராஜேஷின் நிலை என்னவாக இருக்கும்?
கேள்விகளுக்கு அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் விடை சொல்லும் என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் குஷ்பு. தொடருக்கு கதையும் இவர்தான்.
தொடரில் ராதிகாவாக சோனியாஅகர்வால், ராஜேஷாக ஸ்ரீ, இரண்டாவது மனைவி காதம்பரியாக நீபா நடிக்கிறார்கள்.
திரைக்கதை: தூயமணி-ரத்னவேல். கேமரா: ஸ்ரீனிவாசன். இயக்கம்: கங்கா.
நன்றி -- தினதந்தி
aanaa
21st March 2009, 10:46 PM
ஓடி விளையாடு பாப்பா
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `ஓடி விளையாடு பாப்பா.' சிறுவர் சிறுமிகளை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த நடனப்போட்டியை டான்ஸ் மாஸ்டர் கலா இயக்குகிறார். டான்ஸ் மாஸ்டர்கள் பிருந்தா, பிரசன்னா இருவரும் நிகழ்ச்சிக்கு நடுவர்கள்.
நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பை ஞாயிறு காலை 10.15 மணிக்கு காணலாம்.
நன்றி -- தினதந்தி
aanaa
21st March 2009, 10:48 PM
தில் தில் மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ``தில் தில் மனதில்''
சாகசக் கலைஞர்களை அவர்களுடைய வீரதீர சாகசங்களோடு படம் பிடித்து நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள்.
வருகிற வாரங்களில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் சாகசங்களைக் காணலாம்.
நன்றி -- தினதந்தி
R.Latha
23rd March 2009, 12:31 PM
நடிகை கொஞ்சிய குழந்தை
கோகுலத்தில் சீதை தொடரின் படப்பிடிப்பு நடந்த செட்டில் எல்லாரும் சங்கவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சங்கவி ஒரு குழந்தையை முழுமூச்சாய் கொஞ்சிக்கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம். சங்கவியின் அம்மா அழைத்தும் நகராமல் சங்கவியுடன் ஒட்டிக் கொண்டு விட்டது குழந்தை.
தாய்ப்பாசத்துக்கு இணையான சங்கவியின் குழந்தைப் பாசம் பார்த்தவர்கள் உருகிப் போனார்கள்.
யார் அந்தக் குழந்தை என்று விசாரித்தால் சங்கவியின் அக்கா குழந்தை என்று பதில் கிடைத்தது.
R.Latha
30th March 2009, 12:08 PM
தீராத விளையாட்டு
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ``சிரிப்பொலி'' தொலைக்காட்சி, நகைச்சுவை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை ஜோடிகளான கணேஷ்கர்-ஆர்த்தி பங்கு பெறும் ``தீராத விளையாட்டு'' என்கிற தொடர் விளையாட்டுப் போட்டி, சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாக உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகங்கள், திரைப்பட அரங்குகள், முச்சந்திகள் என்று பரபரப்பான இடங்களில் நேரடியாக சென்று நேயர்களை பங்குபெறச் செய்யும் வித்தியாசமான `கேம் ஷோ' இது.
R.Latha
30th March 2009, 12:49 PM
[tscii:ad041c0442]சதம் தொடும் சதி லீலாவதி'
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சதி லீலாவதி' தொடர், நேயர்களின் ஆதரவோடு 100-வது எபிஸோடை எட்டியுள்ளது.
இதில் சாக்ஷி சிவா, ஸ்ரீ, லட்சுமி ராஜா, நேத்ரன், யோகினி, தேவிப்பிரியா, சுமதிஸ்ரீ, சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
குடும்பப் பாங்கான பின்னணியில் புதுமையான கதையம்சத்துடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இத்தொடரை மிகவும் விறுவிறுப்பாகக் கொண்டுசெல்கிறார் தொடரின் கதை, உரையாடலை எழுதும் கிரியேட்டிவ் ஹெட் எஸ்.பிரபு சங்கர். ஒவ்வொரு எபிஸோடின் ஆரம்பத்திலும் தொடரின் கதையோட்டத்தை கவிதை வடிவில் வழங்குகிறார் இதன் தயாரிப்பாளர் எஸ்.ஜெயலட்சுமி.
இயக்கம் -கே.வீ.சக்தி. ஒளிப்பதிவு -ஆர்.கே.விக்ரமன். தயாரிப்பு -சாப்ரன் கம்பெனி.
திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு உருவாக்கப்பட்டுள்ள சதி லீலாவதி' தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.[/tscii:ad041c0442]
R.Latha
6th April 2009, 01:53 PM
`சொன்னதும் செய்ததும்''
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தைச் சேர்ந்த ``செய்திகள்'' தொலைக்காட்சியில், தேர்தலை முன்னிட்டு, தொடர்ந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `சொன்னதும் செய்ததும், நிகழ்ச்சி.
தேர்தல் தொகுதி நிலவரம் குறித்த நிகழ்ச்சி இது. நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை தொகுதிகளின் சிறப்பு அம்சங்கள், முக்கிய பிரச்சினைகள் முன்னாள் எம்.பிக்கள், தேர்தலில் தி.மு.க கூட்டணி தந்த வாக்குறுதிகளை குறித்த விரிவான தகவல்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதன் மறுஒளிபரப்பு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
R.Latha
6th April 2009, 01:59 PM
டாப் 10 காமெடி
ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ``சிரிப்பொலி'' தொலைக்காட்சியில் `டாப் 10 காமெடி நிகழ்ச்சி' ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை நட்சத்திரம் ராஜீ பற்பல கெட்டப்புகளில் தோன்றி காமெடி செய்கிறார்.
சமீப காலங்களில் திரைக்கு வந்த திரைப்படங்களில் குபீர் சிரிப்பை வரவழைத்த காட்சிகளாகத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நாளைய ஒளிபரப்பில் `ஒட்டுநர் - நடத்துனர்' என்று இரு வேடங்களில் தோன்றி சிரிப்பு மழை பொழிகிறார் ராஜி.
R.Latha
20th April 2009, 12:53 PM
தில்.. தில்... மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் திக் திக் நிகழ்ச்சி ``தில் தில் மனதில்'' மாயாஜால வித்தைகளை நேரில் நடத்திக் காட்டுகின்ற வீரர்களின் வீர தீர சாகசங்களையும் இதில் காணலாம்.
R.Latha
27th April 2009, 03:53 PM
வளையோசை
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `வளையோசை'. முற்றிலும் புதியவர்கள் பங்கேற்கும் இந்த தொடர், நடுத்தர வர்க்கத்தின் பாசப் போராட்டத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
ஒரு ஊமையின் சத்தம், சமுதாயத்தை திருத்த நினைக்கும் ஒரு இளைஞனின் கோபம், விதி எனும் கொடுமை மனிதனின் வாழ்க்கையில் விதைக்கும் விளையாட்டு என காட்சிகள் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுருங்கச்சொன்னால் நடுத்தர வாழ் மக்களே நிம்மதியானவர்கள். அவர்களே, வாழ்க்கையை சரியாக வாழ்பவர்கள் என விவரிக்கும் இந்த கதைப்பின்னணியில் நம் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறக்காமல் சித்தரித்திருக்கிறார்கள்.
சவுண்டு மீடியா தயாரிப்பு நிறுவனம் வழங்க, சகாயராஜ் இயக்கும் இந்த தொடரில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் நடிகைகள் ரஜினி, உமா சுமங்கலி, சுதா, சுகாசினி மற்றும் நடிகர் ஷவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
R.Latha
27th April 2009, 03:55 PM
ராதிகா எடுக்கும் முடிவு என்ன?
கலைஞர் டிவியில் 75 எபிசோடுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர் `நாணல்'. நடிகை குஷ்பு தனது அவ்னி மீடியா நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்த தொடருக்கு கதையும் அவர் தான்.
டைரக்டர் செல்வராகவனை மணந்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை சோனியா அகர்வால், இந்த தொடரின் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டு சின்னத்திரையில் முதன்முதலாக தனது நடிப்புப் பிரவேசத்தை தொடங்கினார்.
நாணல் தொடர்பற்றி கதாசிரியர் குஷ்பு கூறும்போது, "தொடரில் அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் ரசிகர்களை நாணலுக்குள் அதிகமாகவே ஈர்த்திருக்கிறது. காணாமல் போன கணவன் இப்போது இன்னொரு பெண்ணுக்கும் கணவன் என்பதை எந்தப் பெண் தாங்குவாள்? ஆனால் என் கதையின் நாயகி ராதிகா தாங்குகிறாள். மனசுக்குள் போராட்டத்தை சுமந்தபடி அவள் இந்தப்பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பது பரபரப்புடன் கூடிய காட்சிகளாக இருக்கும்'' என்கிறார்.
தொடரில் தொடரப்போகும் திருப்பங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:
"இறந்து போனதாக நம்பப்பட்ட கணவனை 5 வருடம் கழித்து ராதிகா உயிரோடு பார்க்க நேரிடுகிறது. ஆனால் கணவன் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு வேறுபெயரில் திருச்சியில் வாழ்ந்து கொண்டிருந்தது தெரிய வந்ததும் அதிர்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள்.
ராஜேஷ் இரண்டாவதாக மணந்திருக்கும் காதம்பரிக்கும் தன் கணவருக்கு முதல் மனைவி இருப்பது தெரியாது. ராதிகாவை அவள் நல்லதொரு சிநேகிதி கோணத்தில்தான் பார்க்கிறாள்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து காதம்பரியின் தம்பி பிரசாந்த் ஊருக்கு வருகிறான். கையில் 5வயதுக்குழந்தையுடன் விதவைக் கோலத்தில் இருக்கும் ராதிகா அவனைக் கவர்கிறாள். கொடுத்தால் இப்படியொரு விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்று எண்ணும் பிரசாந்த், தனது விருப்பத்தை ராதிகாவிடமும் வெளிப்படுத்தி விடுகிறான்.
இதற்கிடையே சில மாதங்களாக கோமாவில் இருந்த ஒரு நபர் இப்போது கோமாவில் இருந்து விடுபட்டு சுயநினைவுக்கு வருகிறார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட தகவல் ராதிகா, ராஜேஷ், காதம்பரி மூன்றுபேருக்கும் தெரியவருகிறது. அவர் கண்ணில்பட்டுவிட்டால் ஏற்படப் போகும் பிரச்சினைகள் அவர்களை தனித்தனியே வாட்டுகிறது.
அந்த நபருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவரைப் பார்த்து இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்.? அவர் கோமாவில் இருந்ததற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
ராஜேஷ் இறந்ததாக போலீஸ் ரெக்கார்டுகள் சொன்னாலும் ஒரு போலீஸ்அதிகாரிக்கு மட்டும் ராஜேஷ் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அந்த நம்பிக்கையில் அவர் ராஜேஷைத் தேடுவதை தனது தலையாய பணியில் ஒன்றாக வைத்திருக்கிறார்.
கணவனின் இரண்டாவது மனைவி காதம்பரியின் பாட்டியை ஒரு நாள் தற்செயலாக சந்திக்கிறாள் ராதிகா. பார்த்தமாத்திரத்தில் அதிர்ந்து போகிறாள். சிறுவயதில் தனது குடும்பம் அழியக்காரணம் அந்தப் பாட்டிதான் என்கிற அதிர்ச்சி அவளை பலமாகவே தாக்குகிறது.
இப்போது அவள் பாட்டியை பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கிறாளா?
இப்படி எதிர்பார்க்கவைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் தொடரின்அடுத்தடுத்த காட்சிகள் பதிலாய் அமையும்.''
தொடரில் ராதிகாவாக சோனியாஅகர்வால், ராஜேஷாக ஸ்ரீ, காதம்பரியாக நீபா, பிரசாந்த் ஆக சாய்பிரசாந்த், பாட்டியாக ரேவதி சங்கரன் நடிக்கிறார்கள்.
குஷ்புவின் கதைக்கு திரைக்கதை-வசனம் :செல்வபாண்டியன். இயக்கம்: கங்கா.
R.Latha
4th May 2009, 03:27 PM
தெக்கித்திப்பொண்ணு
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `தெக்கித்திப்பொண்ணு' தொடர் 250-வது எபிசோடைத் தாண்டியிருக்கிறது. இந்த கிராமியத்தொடரை தனக்கேயுரிய உத்திகளுடன் இயக்கிவருகிறார், இயக்குனர் பாரதிராஜா.
மண்வாசனை வீசும் கதைகளை அதன் மெருகு குறையாமல் திரைக்குத் தந்த பாரதிராஜா சின்னத்திரையில் தன் முதல் தொடரான இந்த தொடரையும் மதுரை மண்ணின் கலாச்சாரப் பிரதிபலிப்பு மிளிரும் வகையில் இயக்கிவருகிறார். இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. தொடரில் வாகை சந்திரசேகர், புவனேசுவரி, சுவர்ணமால்யா, பிரகதி நடிக்கிறார்கள். டைட்டில் இசை: இளையராஜா. பின்னணி இசை: தேவேந்திரன்.
http://dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=5/2/2009&secid=9
R.Latha
4th May 2009, 03:56 PM
[tscii:195ad80db2]
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் வளையோசை'.
சவுண்ட் மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் விக்கி இயக்கும் இந்த தொடரில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மெட்டி ஒலி' உமா மகேஸ்வரி, ரஜினி நிவேதா, சுகாசினி மற்றும் ஷிவன், அருண் நடிக்கின்றனர்.
நடுத்தர வாழ்க்கையை வாழ்பவர்களே நிம்மதியானவர்கள்; அவர்களே, வாழ்க்கையைச் சரியான முறையில் வழிநடத்துகிறார்கள் என்ற கதையுடன் நடுத்தர வர்க்கத்தின் பாசப் போராட்டத்தைப் படம்பிடிக்கிறது இந்த தொடர் .
ள/ற்ள்ஸ்ரீண்ண்ன[/tscii:195ad80db2]
aanaa
9th May 2009, 05:57 PM
50-வது வாரத்தில் "வைரமங்கை''
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்களுக்கான நிகழ்ச்சி "வைரமங்கை.'' இதன் 50-வது எபிசோடு இன்று ஒளிபரப்பாகிறது.
இதுவரை தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு நிறைந்தது இந்த நிகழ்ச்சி.
பிற மொழி கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் பேசக்கூடிய "தமிழச்சி.''
ஆடல், பாடல் தனித்திறமையை பெண்கள் வெளிக்காட்ட "உன்னால் முடியும் பெண்ணே!''
நடிப்பாற்றலை வெளிக்காட்ட "ஆஸ்கார் அரசி,''
அழகுக் கலையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு "அழகே அழகாய்''
இப்படி நான்கு வகையான போட்டிகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியாக "சமயோஜிதம்'' என்ற துரித வினாடி - வினா போட்டி மூலமாக மொத்த வெற்றியாளர்களில் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவர் அந்த மாவட்டத்தின் வைரமங்கையாக கிரீடம் சூட்டப்படுகிறார்.
முடிவில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட வைரமங்கைகளுக்கு போட்டி நடத்தப்பட்டு முதலாவதாக வந்த பெண், தமிழகத்தின் வைரமங்கையாக தேர்வு செய்யப்படுவார். அந்த பெண்மணி தமிழகத்தின் வைரமங்கையாக அறிவிக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைரகிரீடம் சூட்டப்படும்.
இன்று ஒளிபரப்பாகும் 50-வது எபிசோடு வைரமங்கை ஒளிபரப்பில், நடிகை ரேவதி, இயக்குனர் சேரன் மற்றும் பிரபலங்கள் "வைரமங்கை'' தொடர் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் ஒளிபரப்பாகின்றன.
நிகழ்ச்சியை மதுரை ஆர்.ரவிச்சந்திரன் இயக்க, தயாரிப்பு கிரியேட்டிவ் கிரியேஷன்ஸ்
நன்றி: தினதந்தி
R.Latha
11th May 2009, 12:14 PM
வெட்டிப்பேச்சு லீக்
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி, வெட்டிப்பேச்சு லீக்' திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், பாஸ்கி தலைமையில் நடிகர் நீலு, பிரசாத் மற்றும் நானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டணியில் அலசப்படாத கருத்துக்களே இல்லை. அந்த அளவிற்கு இந்த வெட்டிப்பேச்சு கூட்டணியில் சிக்கி, சாதாரண பிரச்சினை கூட இடியாப்ப சிக்கலாகி விட, இறுதியில் நகைச்சுவையாக தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்வதற்குள் நால்வரணியினரின் சண்டையை தீர்ப்பதே பாஸ்கியின் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. இந்த `கலகல' நிகழ்ச்சியில் நேயர்களும், தொலைபேசி மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
aanaa
16th May 2009, 02:40 AM
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "வைரமங்கை' நிகழ்ச்சி, 50 எபிசோடுகளை கடந்துள்ளது.
இதில், பெண்கள் எந்த துறையில் சாதிக்க நினைக்கிறார்களோ அவை தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதுவரை 9 மாவட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் தொடர்ந்து ஒரு நிமிடம் பேசக் கூடிய "தமிழச்சி'. நடிப்பாற்றலை வெளிக்காட்டும் "ஆஸ்கர் அரசி' அழகுக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு "அழகே அழகு' என மூன்று சுற்று போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் பெண்களுக்கு இறுதியாக "சமயோசிதம்' என்ற துரித வினாடி வினா போட்டி நடத்தப்படும்.
அதில் வெற்றி பெறும் பெண், அந்த மாவட்டத்தின் வைரமங்கையாக அறிவிக்கப்படுவார். இதே போல் அனைத்து மாவட்ட வைரமங்கைகளுக்குள் போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர கீரிடம் சூட்டப்பட்டு, அவர் தமிழகத்தின் வைரமங்கையாக அறிவிக்கப்படுவார்.
பெண்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் சனிக்கிழமை காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமணி
aanaa
23rd May 2009, 06:22 AM
வளையோசை
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது ``வளையோசை.'' திருப்பங்களுடன் கூடிய இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சவுண்டு மீடியா நிறுவனம் தயாரித்து வழங்க சகாயராஜ் இயக்கும் இந்த தொடரில், இசையமைப்பாளர் சந்திரபோஸ் ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக நடிக்கிறார். நடிகைகள் நிவேதிதா, உமா சுமங்கலி, சுகாசினி சுதா, நடிகர்கள் ஷவன், அருண், நடியாரன் ஆகியோர்
நன்றி: தினதந்தி
aanaa
23rd May 2009, 06:23 AM
இறுதி கட்டத்தில் `மானாட... மயிலாட...'
கலைஞர் தொலைக்காட்சியின் `மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இப்போது ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நடன இயக்குநர் கலா இயக்கத்தில் குஷ்பூ, மற்றும் ரம்பா ஆகியோர்களை நடுவர்களாக கொண்ட இந்த நடனப்போட்டி, இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட போட்டியாளர்களில் இருந்து எஸ்.எம்.எஸ். வாயிலாக ரசிகர்களே முதல், இரண்டு மற்றும் மூன்றாவது பரிசுக்குரியவர்களை தேர்வு செய்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
23rd May 2009, 06:24 AM
மூன்று பெண்கள் கதை
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``தங்கமான புருஷன்'' தொடர். வண்ணமிகு கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் மூன்று பெண்களைப் பற்றிய கதையிது.
`சேது' திரைப்பட நாயகி அபிதா, வினோதினி, நீபா, பிரேம் சாய், டெல்லி குமார் ஆகியோர் நடிக்கும் இத்தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
R.Latha
25th May 2009, 12:38 PM
50-வது வாரத்தில் "வைர
மங்கை'
கலைஞர் தொலைக்காட்சியில்
சனிக்கிழமை தோறும் காலை எட்டு
மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்
களுக்கான நிகழ்ச்சி "வைர மங்கை'.
50 எபிசோடை தொட்டுள்ள இந்தத்
தொடர் மக்களிடையே பெரும் வர
வேற்பை பெற்றுள்ளது.
இதற்காக தமிழகத்திலுள்ள ஒன்
பது மாவட்டங்களில் படப்பிடிப்பு
நடந்து முடிந்துள்ளது. மற்ற மாவட்
டங்களிலும் தொடர்ந்து படப்பி
டிப்பு நடந்து வருகிறது. பெண்கள்
தங்கள் திறமையை முழுமையாக
வெளிப்படுத்தும் வாய்ப்பு நிறைந்த
நிகழ்ச்சி இது.
இந்நிகழ்ச்சியில், பிறமொழி கலக்
காமல் தமிழில் ஒரு நிமிடம் பேசக்கூ
டிய "தமிழச்சி', பெண்களின் ஆடல்,
பாடல் தனித் திறமையை வெளிக்
காட்ட கூடிய, "உன்னால் முடியும்
பெண்ணே', நடிப்பாற்றலை வெளி
காட்டக் கூடிய, "ஆஸ்கர் அரசி', அழ
குக் கலையில் ஆர்வமுள்ள பெண்க
ளுக்காக "அழகே அழகாய்' ஆகிய
நான்கு வகையான போட்டிகள்
வைக்கப்பட்டு, ஒவ்வொரு போட்டி
யிலும் முதல் சிறந்த மூன்று பெண்
கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதி
யாக "சமயோஜிதம்' என்ற "துரித
வினாடி-வினா' போட்டி மூலமாக
மொத்த வெற்றியாளர்களில் ஒரு
பெண் தேர்வு செய்யப்பட்டு அவர்
அந்த மாவட்டத்தின் "வைர
மங்கை'யாக கிரீடம் சூட்டப்படுகி
றார்.
முடிவில் அனைத்து மாவட்டங்க
ளிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட
"வைர மங்கை'களுக்கு போட்டி நடத்
தப்பட்டு முதலாவதாக வரும் பெண்,
தமிழகத்தின் "வைர மங்கை'யாக
தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 5
லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கிரீ
டம் சூட்டப்படும்.
50-வது எபிசோடில் "வைர மங்கை'
நிகழ்ச்சியில் நடிகை ரேவதி, இயக்கு
னர் சேரன் மற்றும் பல திரையுலக
பிரபலங்கள் கலந்துகொண்டு "வைர
மங்கை' தொடர் பற்றி வெளியிட்ட
கருத்துக்கள் ஒளிபரப்பாகின்றன.
இந்நிகழ்ச்சியை மதுரை ஆர். ரவிச்
சந்திரன் இயக்க, கிரியேட்டிவ் கிரியே
ஷன்ஸ் தயாரிக்கிறது.
http://www.cinemaexpress.com/Pdf/1752009/59.pdf
aanaa
6th June 2009, 07:23 PM
"மானாட மயிலாட'' பரிசுக் கலைஞர்கள்
கலைஞர் டிவி உதயமானது முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி "மானாட மயிலாட.'' டிவி ரசிகர்களின் அதிகபட்ச வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடனக் கலைஞர்களுக்கான இறுதிப்போட்டி நடந்தது.
இவர்களில் சிறந்த ஜோடி யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பு வழக்கம்போல பார்வையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்கு அளித்ததில் ரஞ்சித் - ஐஸ்வர்யா ஜோடி முதல் பரிசான ரூபாய் 10 லட்சத்தையும், ரியாஸ் - தர்ஷினி இரண்டாவது பரிசான ரூபாய் 5 லட்சத்தையும், அசர் - ரஜினி மூன்றாவது பரிசான ரூபாய் 3 லட்சத்தையும் பரிசாக பெற்றார்கள்.
"மானாட மயிலாட'' பாகம் 4-க்காக தேர்வு நடைபெறுகிறது. இது நாளை கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
aanaa
15th June 2009, 05:27 AM
மறக்க முடியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ``மறக்க முடியுமா?'' நிகழ்ச்சி.
தமிழ்த்திரை உலகில், தங்களுடைய நடிப்புத் திறமையினாலும் அன்றாட வாழ்க்கை முறையினாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சாதனை பல புரிந்த திரை உலக நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு, அரிய புகைப்படங்களுடன் ``மறக்க முடியுமா''? என்ற தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வரிசையில் இயக்குநர் ஏ.பீம்சிங்கின் வாழ்க்கை வரலாறு, வரும் 4 வாரங்களுக்கு ஒளிபரப்பாகும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர் பீம்சிங். இவர் இயக்கிய 25 திரைப்படங்களில் 18 படங்களில் சிவாஜி நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி
aanaa
27th June 2009, 06:29 PM
நெஞ்சம் மறப்பதில்லை
ஞாயிறுதோறும் காலை 10.15 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி தொடராக வெளிவருகிறது `நெஞ்சம் மறப்பதில்லை.' நாளை தொடங்கும் இந்த இசை நிகழ்ச்சி, காலத்தால் அழியாத பழைய பாடல்களை எப்போதுமே நேசிக்கும் ரசிகர்களுக்கு கிடைத்த இசைப் பொக்கிஷம்.
எம்.கே.தியாகராஜ பாகவதர், சி.எஸ்.ஜெயராமன், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசை ஜாம்பவான்களால் பாடப்பட்ட பழமை வாய்ந்த, பாடல்கள் இப்போது கேட்டாலும் காதுகளில் தேன் பாயும். இந்தப் பாடல்களின் தரம் சிறிதும் மாறாமல் அதே குரல் வளம் கொண்ட இன்றைய பாடகர்கள் பாட, மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அரங்கில் இன்றைய இசைக்கருவிகள் கொண்டும் நவீன தொழில் நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தியும் இந்தப் பாடல்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
திரைப்பட இசையமைப்பாளர்கள் ஆர்.கே.சுந்தர், கணபதி ஆகியோர் துல்லியமாக இசையை கோர்த்து ஒருங்கிணைத்துள்ளனர்.
லிபர்ட்டி மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பால் டி.ராஜா, சுப்புலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
4th July 2009, 06:30 PM
இது ரோஸ் நேரம்
கலைஞர் தொலைக்காட்சியில் இன்று முதல் ``இது ரோஸ் நேரம்'' என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல அரவாணி ரோஸ் தொகுத்து, தயாரித்து வழங்குகிறார். நேயர்களுடைய பிரச்சினைகளை முற்றிலும் புதிய அணுகு முறையோடு விவாதித்து தீர்வும் தருகிறார்.
முதல் நிகழ்ச்சியில் உடல் பருமன் காரணமாக வாழ்க்கையை தொலைத்தவர்களைப் பற்றிய கலந்துரையாடல் ஒளிபரப்பாகிறது. உடல் பருமன் காரணமாக விவாகரத்து செய்யப்பட்டவர் ஒளிவுமறைவு இன்றி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பட்ட கஷ்டங்களைக் கூற, மனநல மருத்துவரும், உடற்பயிற்சி நிபுணர்களும் தீர்வு சொல்கிறார்கள்.
aanaa
12th July 2009, 08:12 AM
பவானி
கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய நெடுந்தொடர் ``பவானி.'' திங்கள் இரவு 9.30 மணிக்கு தனது சின்னத்திரை பயணத்தை துவங்கும் `பவானி', திங்கள் முதல் வியாழன் வரை தினமும் நேயர்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக பவனி வருவாள்.
நடிகர்கள் விஜயசாரதி, சுபலேகா சுதாகர் மற்றும் நடிகைகள் பாவனா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடமேற்று நடிக்க, சின்னத்திரை இயக்குநர் ரசூல் இயக்க, ஸ்ட்ரீட் சினிமா நிறுவனம் இந்த நெடுந்தொடரை தயாரித்து வழங்குகிறது.
தனது தந்தையை கொன்ற தாதா வீரபாண்டியனின் குடும்பத்திற்குள் மருமகளாக நுழைந்து அனைவரையும் அன்பினால் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னர் தந்தையைக் கொன்ற வீரபாண்டியனை சிறைக்கு அனுப்பி பழிவாங்கும் ஒரு புதுமைப் பெண்ணின் கதை இது.
நன்றி: தினதந்தி
aanaa
12th July 2009, 05:17 PM
ரசிகன் - 50
கலைஞர் டி.வியில் ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ரசிகன்' நிகழ்ச்சி 50-வது வாரத்தை கடந்திருக்கிறது. 50-வது வார நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கென தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரையுலக நடிகர்களின் ரசிகர்களை நேரடியாக சந்தித்து அவர்களில் சிறந்த ரசிகர்கள் தேர்ந்தெடுத்தனர். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்ட முதலாவது நிகழ்ச்சி 5 வாரங்கள் ஒளிபரப்பானது. கமல்ஹாசனின் ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி அடுத்த 5 வாரங்கள் ஒளிபரப்பானது.
இவர்களை அடுத்து விஜய், அஜித், விக்ரம் ரசிகர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களும் கலந்து கொண்டார்கள்.
25-வது வார சிறப்பு நிகழ்ச்சியாக இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து பிரபல பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசிலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், பாடகி எஸ்.ஜானகி ஆகியோரது ரசிகர்களும் இடம் பெற்றனர்.
50வது வார சிறப்பு நிகழ்ச்சியாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் தனது ரசிகர்களைக் காண எம்.எஸ்.விஸ்வநாதன் அரங்கத்திற்கு வந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
கிராவிட்டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக பி.விஜயகுமார் தயாரிக்கிறார்.
நன்றி: தினதந்தி
aanaa
19th July 2009, 01:15 AM
மானாட மயிலாட-100
கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் வித்தியாசமான நடன நிகழ்ச்சி "மானாட மயிலாட.''
இப்போது நடைபெற்று வருவது 4-வது பாகம். நாளை இந்த நடன நிகழ்ச்சியின் 100-வது எபிசோட் ஒளிபரப்பாகிறது. ஒட்டு மொத்த ரசிகர்களின் மனங்களை கிறங்க வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரத்யேகமான அரங்குகள் வடிவமைக்கப்பட்டு நடன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நாளை வெளியாகும் 100-வது எபிசோடுக்காக ரூ.10 லட்சம் செலவில் கண்ணை கவரும் வகையில் பிரம்மாண்டமான `செட்' அமைத்து 10 இளம் ஜோடிகள் பம்பரம்போல் சுழன்று ஆடும் நடன காட்சிகள் 3 நாட்கள் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார், இயக்குனர் கலா மாஸ்டர்.
இதில் பிரபல நடிகர்களைப்போல பல குரலில் பேசி, நடனமும் ஆடி அசத்தும் மனோ, சுகுமார் இருவரும் பங்கு பெறும் நகைச்சுவை பகுதி மட்டும் 10 நிமிடம் இடம் பெறுகிறது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, `ஆடப் பிறந்தவளே ஆடிவா' என்ற பாடலுக்கு கலா மாஸ்டரும், `நீ எங்கே... நான் இங்கே...' என்ற பாடலுக்கு நடிகை குஷ்புவும் நடனம் ஆட, நடிகை நமீதா ஆங்கில `பாப்' பாடல் ஒன்றை சொந்தக்குரலில் பாடுகிறார்.
இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
நடன இயக்குனர் கலா இந்த நிகழ்ச்சியை இயக்க, ஒளிப்பதிவு ஜெயவேல். ஸ்கிரிப்ட்: முகுந்தன். தொகுப்புரை. சஞ்சீவ், கீர்த்தி.
நன்றி: தினதந்தி
aanaa
19th July 2009, 01:16 AM
நகைச்சுவை தர்பார்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ``நகைச்சுவை தர்பார்'' வரும் 29-ந் தேதி திங்கள் முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கனேஷ்கர்-ஆர்த்தி ஆகியோர் நேயர்களுடன் தொலைபேசியில் உரையாடி நேயர்கள் விரும்பும் திரைப்பட நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
aanaa
19th July 2009, 01:17 AM
இவங்க அப்படித்தான்...
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் ஒரு அங்கமான ``சிரிப்பொலி'' தொலைக்காட்சி நகைச்சுவைக்காக மட்டுமே உதயமாகி உள்ளது. திரைப்படங்களிலுள்ள நகைச்சுவை காட்சிகள் மட்டுமல்லாமல், இந்த தொலைக்காட்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் நகைச்சுவை காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.
புத்தம் புதிய நிகழ்ச்சியாக திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது, ``இவங்க அப்படித்தான்'' நகைச்சுவை நிகழ்ச்சி. ரோபோ சங்கர், அரவிந்த் இணைந்து வழங்குகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நகைச்சுவை நிகழ்ச்சி.
நன்றி: தினதந்தி
aanaa
19th July 2009, 01:44 AM
மைதிலி : புதிய சீரியலின் முன்னோட்டம்
தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலைஞர் டி.வி.யில் புதிதாக இடம்பிடித்திருக்கும் சீரீயல் மைதிலி. மீடியா மாஸ்டர்ஸ் வழங்கும் இந்த சீரியலை ஸ்ரீதர் நாராயணன், விஜயா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை- திரைக்கதை- இயக்கம் எம்.விஸ்வநாத். சீரியலின் கதைப்படி பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வாழ்பவர் மைதிலி. தன் இளம் வயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பால் உயர்ந்தவன் ராம் பிரசாத். ஒரு சந்தர்ப்பத்தில் ராம் பிரசாத் கடத்தப்பட்டு, தன் சுய நினைவை இழக்கிறார். மைதிலி தான் கற்ற சங்கீதத்தின் மூலம் மிகப்பெரிய திரைப்பட பாகியாகிறார். தன்னை அவமானப்படுத்திய தன் குடும்பத்தை ஒரு தாயாய் தாங்குகிறார். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறார். பழைய நினைவுகளை மறந்த ராம்பிரசாத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று புதிய வாழ்க்கை*யை வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் மீண்டும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் மைதிலி சீரியலில் சீரீயஸ் கதையாம்.
சீரியலில் அஜய், சுஜிதா, வடிவுக்கரசி, சண்முக சுந்தரம், தீபா வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், கிரி, சிலோன் மனோகர், எல்.ஐ.சி.,நரசிம்மன், பாரதி கண்ணன், சிலானி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சி.பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை மைதிலியை கலைஞர் டி.வி.யில் காணலாம்.
aanaa
20th July 2009, 03:04 AM
[html:fce645d947]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14451264&vid=5493387&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9924/89166621.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14451264&vid=5493387&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9924/89166621.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:fce645d947]
aanaa
20th July 2009, 03:05 AM
[html:148fde8550] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14451122&vid=5493336&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9924/89166023.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14451122&vid=5493336&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9924/89166023.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:148fde8550]
R.Latha
24th July 2009, 12:08 PM
டெலிசிப்ஸ்: கடற்கரை சாலையில் குஷ்பு...
First Published : 24 Jul 2009 01:26:49 AM IST
Last Updated :
* ஆடித் தள்ளுபடியை முன்னிட்டு துணிக் கடைகள், நகைக் கடைகள், பெரிய ஷோ ரூம்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்கு சின்னத்திரை நடிகைகளைப் பயன்படுத்துவது வழக்கம். அப்போதெல்லாம் சின்னத்திரை நாயகிகளுக்கு மவுசு கூடி விடும். விளம்பரத்திற்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கி, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் சில சீரியல்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
* "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலா, தர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவுக்கு வந்து விட்டனர். இதனால் மீதம் இருப்பவர்களும் சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். "மானாடா மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்றால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் என்ற சென்டிமெண்ட், இப்போது அந்த நிகழ்ச்சியைப் பிடித்து ஆட்டுகிறதாம்.
* சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மை காலமாக படப்பிடிப்பு முடிந்தவுடன், சென்னை சாந்தோம் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். குஷ்புவின் சின்னத்திரைக்கான பெரிய திட்டங்கள் உருவாகும் இடம் அதுதானாம்.
* சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் இருந்து விலகி இருக்கும் நடிகை லட்சுமி, மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். தமிழில் அல்ல. கன்னடத்தின் பிரபல சேனல் "கதையல்ல நிஜம்' பாணியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க லட்சுமியை அனுகியிருக்கிறது. லட்சுமியும் அதற்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.
* ஆறாம் வகுப்பிலிருந்தே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தவர் சன் டி.வி.யின் உஷா. இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்ணு என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை திருமணம் செய்து லண்டனில் செட்டிலாகி விட்டார். விடுமுறைக்காக வந்த போதுதான் அவருக்கு "அசத்த போவது யாரு' வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டாராம்.
சன் மியூசிக்கின் "பட பட' காம்பியர்களில் குறிப்பிடத்தக்கவர் மஹாலட்சுமி. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக காணமால் போயிருந்த இவர் தற்போது சீரியலுக்கு வந்திருக்கிறார். "அரசி' தொடரில் ராதிகாவின் தங்கையாக நடித்து வரும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
* நடிகர் ரித்தீஸ் தயாரிப்பில் சுகன்யா நடிப்பதாக இருந்த புதிய தொடரின் படப்பிடிப்பு தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. தொடரை ஒளிபரப்ப தயாராக இருந்த கலைஞர் டி.வி.யும் "பவானி' என்ற புதிய தொடரை வாங்கி ஒளிபரப்பி வருகிறது. ஹீரோயின் வாய்ப்புக்காகக் காத்திருந்த சுகன்யாவும் தெலுங்கு சீரியல்களில் பிஸியாகி விட்டார்.
* சினிமாவுக்குப் பிறகு புது மாப்பிள்ளையுடன் அந்தமானில் செட்டில் ஆகி விட்ட நடிகை காயத்ரி ஜெயராம், சென்னை வரும்போது விடுமுறை நாள்களில் ஏதாவது டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "ச்சீயர் லீடர்ஸ்' நிகழ்ச்சிக்கு இவர்தான் நடுவர். விடுமுறை முடிந்து விட்டதால் மீண்டும் அந்தமானுக்குப் பறந்து விட்டார். செப்டம்பர் மாதம்தான் மறு விஜயமாம்.
* சன் மியூசிக்கின் பிரபல ஜோடி ஆனந்த கண்ணன், ஹேமா சின்ஹா ஆகியோரை மீண்டும் அழைத்திருக்கிறது சன் குழுமம். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பாளர்கள் யாரும் அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை என்பதுதான் இதன் காரணமாம். ஆனந்த கண்ணன் சினிமாவில் பிஸியாக இருப்பதாலும், ஹேமா சின்ஹாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாலும் சன் மியூசிக்கில் தொடர முடியாதநிலை.
* கலைஞர் குழுமத்தின் பிரபல தொகுப்பாளினி ரியா தனக்கு வரும் சின்ன சின்ன சினிமா வாய்ப்புகளை மறுத்து வருகிறார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற பிடிவாதம்தான் அதற்கு காரணம். அடுத்த ஆண்டுக்குள் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடித்து விடுவேன் அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ரியா
aanaa
25th July 2009, 08:09 PM
தங்கமான புருஷன்-200
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகி வரும் ``தங்கமான புருஷன்'' 200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கலைமாமணி சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். தொடரில் தங்கமான புருஷனாக நடிப்பவர் பிரேம்சாய். சேது பட நாயகி அபிதா நாயகி. இவர்களுடன் பூஜா, பாத்திமா பாபுவும் நடிக்கிறார்கள். எவர்ஸ்மைல் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்குகிறார்.
கல்யாண்-ராசி மனமொத்த தம்பதிகள். இவர்கள் இல்லற வாழ்வில் நெருஞ்சி முள்ளாய் குறுக்கிடுகிறாள் தாரா.
இவள் கல்யாணை ஆரம்பம் முதலே நேசித்து வருபவள். ஆனால் தன் காதலை கல்யாணிடம் சொல்லத் தருணம் பார்த்திருந்த இடைவெளிக்குள் அவன் ராசியின் தங்கமான புருஷனாகி விடுகிறான்.
ஆனாலும் தாராவால் கல்யாணை மறக்க முடியவில்லை. எப்பாடு பட்டாவது அவனை அடையும்விதமாக காய்களை நகர்த்துகிறாள். அதனால் கல்யாண் மட்டுமின்றி அவன் மனைவி ராசியும் பாதிக்கப்படுகிறாள்.
தாராவின் மறைமுக தாக்குதலை கல்யாணும் ராசியும் எதிர்கொண்டு மீண்டு வரமுடிகிறதா என்பது பிற்பகுதி கதை.
கதையை விவரித்த டைரக்டர் சுந்தர்.கே.விஜயன், தொடரில் சில புதிய கேரக்டர்கள் இனி வரப்போகிறார்கள் என்றும் தெரிவித்தார். `அலைகள்'ராணி, பானுமதி, பொள்ளாச்சி பாபு, லதாராவ் ஆகியோர் இந்த புதிய பட்டியலில் இருக்கிறார்கள்.
[html:78a1e346ca]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090725/TV0.jpg[/html:78a1e346ca]
நன்றி: தினதந்தி
aanaa
25th July 2009, 08:09 PM
`வைர' விருது
ஏவி.எம். தயாரித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைரநெஞ்சம் தொடர்,, 450 எபிசோடுகள் ஒளிபரப்பாகி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஏவி.எம். ஏ.சி. அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்குகலைஞர் தொலைக்காட்சி நிர்வாகிகள் அமிர்தம், ராம.நாராயணன் தலைமையேற்று, தொடரின் இயக்குனர் ஆர்.கே., தயாரிப்பாளர்கள் எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்கள் வழங்கினார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது `வைர நெஞ்சம்' தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர் மன்றம் வைத்து கடிதங்கள் எழுதியவர்களை பாராட்டினார்.
தயாரிப்பாளர்களின் சார்பில் கலைஞர் டிவிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள். அதை அமிர்தம், ராம.நாராயணன் பெற்றுக் கொண்டனர்.
[html:046af9c251]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090725/TV01.jpg[/html:046af9c251]
நன்றி: தினதந்தி
R.Latha
28th July 2009, 12:58 PM
அவள் ஒரு மின்சாரம்
http://www.cinemaexpress.com/Pdf/1572009/62.pdf
http://www.cinemaexpress.com/Pdf/1572009/63.pdf
aanaa
1st August 2009, 09:31 PM
மைதிலி-100
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மைதிலி தொடர் 100 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. நடைமுறை வாழ்க்கையை இயல்பாக சொல்லிவரும் இந்த தொடரில் அழுகை கிடையாது பழிவாங்கல் கிடையாது. கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்களே கதையை இயல்பாகவும் பரபரப்பாகவும் நகர்த்திப் போகிறது.
ஜனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் எந்த விஷயமும் இப்படியான தொடர்கள் மூலம் மக்களுக்குப் போய்ச்சேரும்போது அது மாபெரும் மாற்றத்தை உண்டு பண்ணி விடுகிறது. அப்படியொரு விழிப்புணர்வு விஷயம் மைதிலி தொடரில் கதையோடு கலந்து சொல்லப்பட்டதால் இந்த தொடருக்கு எதிர்பார்த்ததைவிடவும் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது'' என்கிறார், தொடரின் இயக்குனர் டி.மாறன். தொடருக்கான திரைக்கதை வசனமும் இவரே.
தொடரில் அஜய்யும் சுஜிதாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இதையும் பெருமையாக பகிர்ந்த கொண்டார், இயக்குனர்.
[html:f93841ae16]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090801/MUTHUCHARAM-TV1.gif</div>[/html:f93841ae16]
நன்றி: தினதந்தி
R.Latha
21st October 2009, 03:00 PM
நேரம் மாறும் `அவள் ஒரு மின்சாரம்'
கலைஞர் தொலைக்காட்சியில் இரவில் ஒளிபரப்பாகி வரும் ``அவள் ஒரு மின்சாரம்'' தொடர் இப்போது திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஏவி.எம்.நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த தொடர், நேயர்களின் விருப்பத்திற்கிணங்க, மீண்டும் முதல் எபிசோட்டுடன் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரம் மாற்றி ஒளிபரப்புவதால் இதுவரை இந்த நெடுந்தொடரை பார்க்கத்தவறிய நேயர்களுக்காக தொடக்கத்தில் இருந்து இந்த தொடரை கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்பது சிற
R.Latha
11th November 2009, 01:15 PM
திருமாங்கல்யம்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் தினமும் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `திருமாங்கல்யம்'.
திருமதி செல்வம் தொடரில் குடும்ப நாயகனாக வந்த நாயகன் சஞ்சீவ், திருமாங்கல்யம் தொடரில் அதிரடியான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ருத்து.
முக்கிய கதாபாத்திரங்களில் `சுபலேகா' சுதாகர், கவுதமி, வாசுவிக்ரம், சாதனா, ராமச்சந்திரன், வரலட்சுமி, சிவன் சீனிவாசன், சிவகவிதா, ஆதித்யா, காவியா, கிச்சா, பரத் நடிக்கின்றனர்.
டைட்டில் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, மகதி பாடியுள்ளார். இசையமைத்திருப்பவர் ஏ.ஜான்சன்.
கதிராஜ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக என்.வெங்கடேஷ்வரன் தயாரிக்கும் இந்த தொடரின் திரைக்கதையை கே.பார்த்திபன் எழுத, வசனம் பாலமுரளிவர்மன். கதை- இயக்கம் ப.வள்ளிமுத்து.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழும் ஒரு பெண்ணும், சென்னையில் வாழும் இளைஞனும் திருமணம் செய்து கொள்ளமுடிவாகும்போது எதிர்பாராமல் ஏற்படும் சம்பவங்களே தொடரின் கதை.
http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=11/7/2009&secid=9
R.Latha
20th January 2010, 01:29 PM
உறவுக்கு கை கொடுப்போம்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏவி.எம்.மின் `உறவுக்கு கை கொடுப்போம்' தொடர், எதிர்பாராத திருப்பங்களில் விறுவிறுப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக் கிறது. கூட்டுக் குடும்பத்தின் மூத்த அண்ணன் ஜோதிகிருஷ்ணா ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறார் என்பது இந்த வார பரபரப்பு அத்தியாயம்.
நாலு தம்பிகள், ஒரு தங்கை இவர்களே தன் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தின் மூத்தஅண்ணன் ஜோதிகிருஷ்ணா, தன் உடன்பிறப்புகளுக்காக திருமண சிந்தனை கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் தன் தம்பிகளின் கட்டாயத்துக்காக ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொள்கிறார்.
வழக்கமாக இதுமாதிரியான கூட்டுக்குடும்பங்களில் வாழ்க்கைப்படும் பெண்கள் எதையாவது சொல்லி தனிக் குடித்தனத்திற்கு தங்கள் கணவனை தயார் செய்வது தான் நடக்கும். ஆனால் ஜானகியோ தன் கணவனை விடவும் ஒரு படி மேலாகப்போய் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறாள். அப்படியிருந்தும் அவள் கொழுந்தன்மார்கள் இருவர் தங்கள் மனைவியின் சொல் கேட்டு அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்து தங்களை வெளியேற்றிக் கொள்கிறார்கள்.
இதற்கிடையே தங்கைக்கும் திருமணம் ஆகிறது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் தங்கை என்ற எண்ணமே அண்ணன் ஜோதிகிருஷ்ணாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு வேட்டுவைக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. தங்கையின் கணவர் ஒருநாள் திடீரென ஜோதிகிருஷ்ணாவை குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அங்கே போனால் தங்கை கணவர் அந்த இடத்தில் இல்லை. அங்கே இருந்தது... அதாவது கிடந்தது ஒரு பிணம்.
இதனால் கொலைப்பழி அவர் மீது விழுகிறது.
இந்தக்கொலையை செய்தது யார்? தங்கையின் கணவனா? அல்லது ஜோதிகிருஷ்ணாவிடம் முன்பகை கொண்டு அவருக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் தமயந்தி சுகுமாறனா?
தொடரும் காட்சியமைப்புகள் ஜோதிகிருஷ்ணா இந்த கொலைப்பழியில் இருந்து தப்பவேண்டுமே என்று நேயர்களை படபடக்க வைக்கும்.'' இப்படிச்சொல்லி சஸ்பென்ஸ் வைத்த தொடரின் கதை-வசனகர்த்தா சேக்கிழார், `இந்த கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து எழுதும் நேயர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் பரிசளித்து பெருமைப்படுத்தும்'' என்றும் தெரிவித்தார்.
தொடரில் ஜோதிகிருஷ்ணாவாக நடிப்பவர் `பூவிலங்கு' மோகன்.
தொடருக்கு பாடல்: வைரமுத்து. இசை: பரத்வாஜ். ஒளிப்பதிவு: பிரபாகர். கதைவசனம்: சேக்கிழார். இயக்கம்: புவனேஷ். தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.
R.Latha
20th January 2010, 01:30 PM
டைரக்டர் கே.பாக்யராஜின் `விளக்கு வச்ச நேரத்திலே'
கலைஞர் டிவியில் வரும் திங்கள் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் `விளக்கு வச்ச நேரத்திலே..' டைரக்டர் கே.பாக்யராஜ் திரைக்கதையில் உருவாகும் இந்த தொடரை இயக்குபவர் டைரக்டர் சி.ரங்க நாதன்.
"ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. ஆனால் இது சுவாரசிய முடிச்சு. நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை. குடும்பப்பாங்கான இந்தக்கதையில் காமெடிக்காட்சிகளும் கதைக்குத் தேவையான விதத்தில் இடம் பிடிக்கும் என்பது தொடரின் சிறப்பு என்கிறார், டைரக்டர் சி.ரங்கநாதன்.
தொடரின் நட்சத்திரங்கள்: சுஜிதா, சஞ்சீவ், காத்தாடி ராமமூர்த்தி, கவுசிக், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சிவன்சீனிவாசன், பயில்வான்ரங்கநாதன். பாடல்: வைரமுத்து. இசை: தேவா. கதை, திரைக்கதை-வசனம்: கே.பாக்யராஜ். இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனம் சார்பில் தொடரை தயாரித்து வழங்குபவர் ஈ.ராமதாஸ்.
R.Latha
20th January 2010, 01:33 PM
அபிராமி ராமநாதன் தயாரிப்பில் கவுதமி நடிக்கும் `அபிராமி'
கலைஞர் டிவியில் வரும் திங்கட் கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், `அபிராமி'. நடிகை கவுதமி தொடரின் நாயகியாக நடிக்கிறார். கவுதமியின் முதல் சின்னத்திரைப் பிரவேசம் இந்த தொடரில் இருந்து தொடங்குகிறது.
பழமை குலத்தில் பிறந்தும், பழைய கருத்துகளில் பாசி படிந்துவிடாமல், புதுமை கருத்துக்களை தன் செயலின் மூலம் புரிய வைப்பவள் அபிராமி.
இவர் எரிமலையாக வெடிக்கவும் செய்வாள் குளிர்நிலவாக சுற்றத்தாருக்கு வெளிச்சமும் தருவாள். இன்றைய நாகரிக உலகத்திற்கு ஒத்துப்போகாத மூட பழக்கங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி முற்போக்கு சிந்தனையை பரவச் செய்கிறாள் அபிராமி.
ஒரு கட்டுப்பாடுமிக்க குடும்பத்தில் பிறந்து, தனது எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் எதிர்ப்பு இருந்தபோதும், அதை தன் உயிர் மூச்சாக கருதி, ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மூடப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை நாடே போற்றும் அளவுக்கு ஒரு பெரிய நிலைக்கு உயர்த்துகிறாள் அபிராமி.
அபிராமியாக நடிகை கவுதமி வருகிறார் பெரிய திரையில் சாதனைகள் புரிந்து இப்போது சின்னத்திரையில் முத்திரை பதிக்க வருகிறார். மற்றும் கல்பனா, கிருஷ்ணகுமார் பவானி, மனோகர், `வியட்நாம் வீடு'சுந்தரம், லட்சுமி, லால்சா, ஜாய், பேபி ஆர்யா இன்னும் பலர் நடிக்கிறார்கள்.
இத்தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக திருமதி. குட்டிபத்மினி பணியாற்றுகிறார். திரைக்கதை: ஜோதி. வசனம்: `காலசக்ரா' நரசிம்மன். இயக்கம்: மதிவாணன். தயாரிப்பு: `அபிராமி மெகாமால்' சார்பில் `அபிராமி' ராமநாதன், நல்லம்மை ராமநாதன்.
mr_karthik
16th February 2010, 12:26 PM
டைரக்டர் கே.பாக்யராஜின் `விளக்கு வச்ச நேரத்திலே'
"ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. ஆனால் இது சுவாரசிய முடிச்சு. நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை.
சீரியல் எடுப்பவர்கள் இதைத்தாண்டி சிந்தித்துவிடக்கூடாது என்பது எழுதப்படாத விதியா..?
mr_karthik
16th February 2010, 12:33 PM
அபிராமி ராமநாதன் தயாரிப்பில் கவுதமி நடிக்கும் `அபிராமி'
இவர் எரிமலையாக வெடிக்கவும் செய்வாள் குளிர்நிலவாக சுற்றத்தாருக்கு வெளிச்சமும் தருவாள். இன்றைய நாகரிக உலகத்திற்கு ஒத்துப்போகாத மூட பழக்கங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி முற்போக்கு சிந்தனையை பரவச் செய்கிறாள் அபிராமி.
இப்படியெல்லாம் இருந்தால்தான் அவள் சீரியல் நாயகி.
அபிராமியாக நடிகை கவுதமி வருகிறார் பெரிய திரையில் சாதனைகள் புரிந்து இப்போது சின்னத்திரையில் முத்திரை பதிக்க வருகிறார்.
:lol: :lol: :lol:
R.Latha
19th February 2010, 12:34 PM
[பழிவாங்குவது பிடித்திருக்கிறது!]
கலைஞர் டிவியின் "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டம். இறுதிப்போட்டிக்காக தன் உடலை ரப்பர் போல் வளைத்து ஆடிய ஆட்டத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் நீபா. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.
என்ன, என்ன தொடர்கள் நடிச்சிகிட்டு இருக்கீங்க?
"அவர்கள்', "கிருஷ்ணா காட்டேஜ்', "தேவதை, பந்தம்', "நம்ம குடும்பம்' இந்த தொடர்களில் நடித்திருக்கிறேன். தற்போழுது நடித்துக் கொண்டிருக்கும் தொடர்கள் "கண்மணி', "தங்கமான புருஷன்', "மூன்று முகம்', விஜய் டிவியில் "ரோஜாக்கூட்டம்' ஆகிய நான்கு தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கேன். மஸ்தானா மஸ்தானாவுல ஏற்கனவே கலந்துகிட்டு டைட்டில் ஜெயிச்சியிருக்கேன். மானாட மாயிலாட எம்.எம்.2 ல ஜெயிக்க முடியல. எம்.எம்.4 பைனல்ஸ் ஆடி முடிச்சிருக்கோம். அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும், யார் ஜெயிக்கப் பண்ணப் போறாங்கன்னு. ரொம்ப படப்படப்பா இருக்கு. இந்த முறை கண்டிப்பா ஜெயிப்போம்னு நிறைய நம்பிக்கை இருக்கு.
"கண்மணி' தொடரில் வெறிதனமா பழிவாங்க துடிக்கிறீங்களே? யாரும் திட்டலையா?
உண்மையில் எனக்கு அந்த ரோல் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ரொம்ப ரசித்து, கஷ்டப்பட்டு செய்கிற ரோல் அந்த திலகா கேரக்டர். இதுப் போல வித்தியாசமான கேரக்டர் செய்யும் போதுதான் மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும். அதனாலயே நெகட்டீவ் ரோல் செய்ய எனக்கு ரொம்ப இஷ்டம். தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அக்காவா வருவேன். ஒரு பிரச்னையால் பாதிக்கப்படும் தங்கைக்காகப் பழிவாங்க துடிக்கும் அக்கா கேரக்டர் அது. இந்த மாதிரி பழிவாங்குவது ரொம்ப பிடிச்சிருக்கு.
டான்ஸ் புரொகிராம்மில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்கள் நிறைய பேர் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாதாக சொல்கிறார்களே உண்மையா?
நான் ஏற்கனவே இந்த மாதிரி டான்ஸ் ஷோஸ் எல்லாம் கலந்துகிட்டதுனால எனக்கு எந்த பிரச்னையும் தெரியவில்லை. நான் ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரிச்சு செய்வதுனால என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரைக்கும் வந்ததில்லை. ஸ்பாட்டுக்குப் போய்ட்டா என்ன காட்சியோ அதை சரியா முடிச்சு கொடுத்திட்டு வந்திடுவேன். அங்க போய்ட்டு தூக்கமின்மை, டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவதனால் ஏற்படும் வலி அதையெல்லாம் கம்மிச்சுக்க மாட்டேன்.
அதுப்போல ஷோ இருக்கிற அன்று சீரியலுக்கு தேதி தரமாட்டேன். ஒரே நேரத்துல ரெண்டடையும் செய்ய முடியாது.
பெரியத்திரையில் படங்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்களா?
என்னோட முதல்படம் "பெருசு' அதில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். காமராஜ் சார் டைரக்ட் செய்திருந்தார். அவர்தான் அந்தப் படத்திற்கு புரொடியூசரும் கூட. அதன்பிறகு கதம் கதம்ன்னு ஒரு படம் பண்ணியிருந்தேன். பத்மா மதன் டைரக்ட் செய்த "அம்முவாகிய நான்' என்ற படத்திலும் நடிச்சிருக்கேன்.
அதன்பிறகு தங்கர்பச்சன் சார் டைரக்ஷன்ல "பள்ளிக்கூடம்' படத்தில் நடிச்சிருக்கேன். பி.ஆர்.ஓ பாலன் டைரக்ட் பண்ணின "ராசாத்தி'ன்னு ஒரு டெலி ஃபிலிம் பண்ணியிருக்கேன். இப்போ லேட்டஸ்ட்டா பாலா சார் அஸிடெண்ட் டைரக்ட் பண்ணும் "தேரோடும் வீதியிலே' நடிச்சுகிட்டு இருக்கேன். அதற்கடுத்து பாலசூரியா சார் டைரக்ஷன்ல ஒரு படம். அதில் ரெண்டாவது ஹீரோயினா நடித்துக்கொண்டிருக்கேன்.
மானாட மயிலாட, தொடர்கள், பெரியத்திரைன்னு பிஸியா இருக்கீங்க எப்படி நேரம் கிடைக்குது?
காலையில் 9-9 சூட்டிங் முடித்துவிட்டு அதன் பிறகு டான்ஸ் பிராக்டீஸ்க்கு போயிடுவேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் நேரத்தை பகிர்ந்து செய்வதால் எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. இப்படி டைட் ஷெடியூல்ல ஓர்க் பண்ணுவது எனக்கு பிடிச்சிருக்கு. சும்மா உட்கார்ந்தா சோம்பேறி ஆயிடுவோம்ல. அதனால எப்போழுதும் சுறுசுறுப்பா இருக்கனும் ஏதாவது வேலையை செய்துகிட்டே இருக்கணும்.
இந்த மாதிரி கேரக்டர் நடிக்கணும்னு நினைத்ததுண்டா?
ஓரளவுக்கு எல்லா மாதிரி கேரக்டரும் நடிச்சுட்டேன். நான் இதுவரை நடிக்காத கேரக்டர்ன்னா அது பைத்தியகாரி கேரக்டர், இன்ஸ்பக்டர் கேரக்டர், ஊனமுற்றவர்கள் கேரக்டர் பண்ணதில்லை. அந்த மாதிரி கேரக்டர் பண்ண வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கு.
நடிப்பு தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?
நாட்டியம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பேஸிக்கலாவே ஒரு கிளாசிக்கல் டான்ஸர். இப்பவும் பரதநாட்டியத்தில் சாதிக்கணும்ங்கிற வெறி, எண்ணம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூல் வைத்து பெரிய அளவில் வரணும்ங்கிற ஆசையும் இருக்கிறது.
உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?
டான்ஸ் மாஸ்டர் ராமன் பழனிதான் என் அப்பா. அம்மா, நான் தம்பி என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கான்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=197317&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=
Harihalan
26th February 2010, 03:57 AM
What happend to thirumangalyam serial?Here (London)it is suddenly stopped.Any Problem? :confused2: :roll:
aanaa
27th February 2010, 08:35 PM
கலைஞர் தொலைக்காட்சியில் புதுப்பொலிவுடன் மீண்டும் ``மானாட... மயிலாட..'' நடனப் போட்டி துவங்கியுள்ளது. ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, நான்கு பாகங்களைக் கடந்து 5-ம் பாகத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
நடன இயக்குநர் கலா மேற்பார்வையில் நடைபெறும் இந்த நடனப் போட்டியில் மாஸ்டர் பிருந்தா, நடிகைகள் ரம்பா மற்றும் நமீதா ஆகியோர் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். 9 ஜோடிகள் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
முதல் பரிசாக 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 வீடுகள் வெற்றி பெறும் ஜோடிக்கு வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த முறை போட்டி, மிகவும் பரபரப்புள்ளதாக இருக்கும்.
great
27th February 2010, 09:09 PM
[html:31719f24a7]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090801/MUTHUCHARAM-TV1.gif</div>[/html:31719f24a7]
நன்றி: தினதந்தி
who is this girl? resembles Meera Jasmine
aanaa
1st March 2010, 07:23 PM
who is this girl? resembles Meera Jasmine
Sujitha
She was in
- Thangamana purushan
- Akka Thankai
- manada mayillada &
etc....
R.Latha
22nd March 2010, 11:58 AM
அடுத்த கட்டத்தில் அபிராமி
மூடப் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராடும் அபிராமியின் வாழ்க்கையில் விதி கேள்விக்குறி வைக்கிறது.
தன் புகுந்த வீட்டின் கவுரவத்தையே குழி தோண்டிப் புதைக்கக் கூடிய சம்பவங்கள் நடக்க, அதற்கு சாட்சியாகிறாள், அபிராமி. குற்றவாளி என்று குற்றம் சாட்டுகிறது அவள் குடும்பம். ஒருபுறம் குடும்ப கவுரவம், மறுபுறம் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி.
இவை இரண்டில் ஒன்றை மட்டுமே காப்பாற்றக்கூடிய நிலைமையில் அபிராமி எடுத்த முடிவு என்ன? நடைபெற்ற சம்பவத்திற்கு என்ன பின்னணி? கேள்விக்குறிகள் ஆச்சரியக்குறிகள் ஆகுமா? காரணங்களை விரிவாகவும் விறுவிறுப்புடனும் காட்சிகள் விவரிக்கின்றன.
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரின் தயாரிப்பு: `அபிராமி' ராமநாதன், நல்லம்மை ராமநாதன். தொடருக்கு ஒளிப்பதிவு: வினோத் பாரதி. இயக்கம்: மதிவாணன், ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ்: மீனாட்சி பெரிய கருப்பன்.
R.Latha
22nd March 2010, 12:08 PM
வீட்டுக்கு வீடு
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `வீட்டுக்கு வீடு' தொடரில், மீனாகுமாரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் ராஜ்காந்த், ஜெயலட்சுமி, வந்தனா, ஜெயந்த் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
தொடரில் இடம் பெறும் கேரக்டர்கள் வருமாறு:-
தனம்: (மீனாகுமாரி) கிராமத்து பெண். கை நிறைய சம்பாதிக்கும் கணவனை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறாள்.சிவா: (ராஜ்காந்த்) தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். தான் திருமணம் செய்து கொள்ளும் பெண், வீட்டோடு மனைவியாக இருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன்.
கல்பனா: (ஜெயலட்சுமி) சிவாவை காதலித்து திருமணம் செய்ய முடியாமல் வேறொருவனை மணந்து விவாகரத்து ஆனவள். மீண்டும் சிவாவையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்.
சிவாவின் நண்பன் ரவி: (ஜெயந்த்) இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற எண்ணத்தில் வேலைக்கு போகும் காயத்ரியை (வந்தனா) திருமணம் செய்து கொள் கிறான்.
இவர்களுக்கு மத்தியில் நடக்கும் குடும்ப போராட்டமும், கொள்கைப் போராட்டமும்தான் வீ.சேகரின் ``வீட்டுக்கு வீடு''. இயக்கம்: ஜி.ராஜேந்திரன். தயாரிப்பு எஸ்.தமிழ்ச்செல்வி.
aanaa
22nd March 2010, 06:02 PM
வீட்டுக்கு வீடு
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `வீட்டுக்கு வீடு' .
:ty:
:-)
R.Latha
31st January 2011, 12:05 PM
வெற்றிச்சரித்திரம்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `வெற்றிச் சரித்திரம்'. இந்த நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு உலக வரலாற்றை நமது வரவேற்பறைக்கே கொண்டு வருகிறது.
20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொட்டு மனித இனம், பல்வேறு அரசியல் மத கலாச்சாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு உருமாறி வருவதை, படக்காட்சிகளோடு இந்த நிகழ்ச்சி விளக்குகிறது.
அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வரலாற்று மாணவர் களுக்கு வரப்பிரசாதம்.
R.Latha
31st January 2011, 12:10 PM
டாப் டென் காமெடி
கலைஞர் குழுமத்தின் சேனல்களில் ஒன்றான `சிரிப்பொலி' தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``டாப் டென் காமெடி'' நிகழ்ச்சி நூறாவது எபிசோடை தாண்டியிருக்கிறது.
நிகழ்ச்சியை ராஜி தொகுத்து வழங்க, தயாரித்து வெளியிடுபவர் சுரேஷ் குமார். ஒவ்வொரு லொகேஷனிலும் படப்பிடிப்பு நடத்தி, அந்த லொகேஷன் தொடர்பான காமெடி காட்சியை ஒளிபரப்பாக்கி வருவது நிகழ்ச்சியின் சிறப்பு.
வண்ணப் படமாக உலகப் போர்
இரண்டாம் உலகப் போர் சம்பந்தமான, ஆனால் இதுவரை அறியப்படாத அபூர்வமான கறுப்பு-வெள்ளை படச்சுருள்கள் ரசிகர்கள் பார்வைக்கு வண்ணப்படமாக, 13 பாகங்களைக் கொண்ட `வோர்ல்ட் வார் 11-ன் கலர் தொடராக' இப்போது ஒளிபரப்பாகிறது.
வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த, உலகின் மீது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரின் சில முக்கியமான நிகழ்வுகள் மற்றும் தருணங்கள், இதுவரை பார்வைக்கு வராத போர் நிகழ்வுகள் தொடராக ஒளிபரப்பாகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வண்ணப்படமாகரசிகர்கள் பார்வைக்கு வருகிறது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட நிலப்பரப்பின் படங்கள், மிக நவீனமான கிராபிக்ஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு 20-ம் நூற்றாண்டின் மாபெரும் மோதலாக கலர் தொடராக வெளியாகிறது.
R.Latha
31st January 2011, 12:13 PM
டாப் டென் காமெடி
கலைஞர் குழுமத்தின் சேனல்களில் ஒன்றான `சிரிப்பொலி' தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``டாப் டென் காமெடி'' நிகழ்ச்சி நூறாவது எபிசோடை தாண்டியிருக்கிறது.
நிகழ்ச்சியை ராஜி தொகுத்து வழங்க, தயாரித்து வெளியிடுபவர் சுரேஷ் குமார். ஒவ்வொரு லொகேஷனிலும் படப்பிடிப்பு நடத்தி, அந்த லொகேஷன் தொடர்பான காமெடி காட்சியை ஒளிபரப்பாக்கி வருவது நிகழ்ச்சியின் சிறப்பு.
aanaa
3rd October 2011, 12:16 AM
உனக்காக எல்லாம் உனக்காக
http://www.youtube.com/watch?list=PLA2AA46F380C15C41&v=2xT6tZgUU-s
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.