PDA

View Full Version : Songs by new singer Roshni



app_engine
24th May 2007, 03:04 AM
Can someone post songs sung by this new singer...I believe she has sung a few numbers under YSR / KR among other MD's...

R.Latha
25th May 2007, 08:10 AM
pOttu thaakku in KUTHTHU :)

app_engine
25th May 2007, 06:46 PM
Thank you Latha...

My sudden interest in this relatively less-known singer is because one of her relatives has joined as a teammate in our project...

I heard from her of another song where she has sung with -hold your breath - none other than IR, yes IR himself!
('namma kAttula' from pattiyal (music YSR))...However, it seems they both sang at different times, due to the current style of track recording etc. In fact, the new singers won't even know whether the songs that they've sung will really be released with their voice...there could be other versions / more famous singers for sale value etc. that could eventually find a place in the CD...(& yet another version on the movie screen etc.)...

R.Latha
28th May 2007, 10:36 AM
Good point.

Two More Hits

Nee Rasthali (Parattai Engira Azhakku Sundaram)
Karuppana Kayala (Thamira Barani)

rockydeva
11th June 2007, 12:33 PM
Karuppana Kayala (Thamira Barani)

i love that song... :D

R.Latha
4th November 2008, 09:59 AM
she did one show in VIJAY TV

http://www.youtube.com/watch?v=8tBCX4quCQI&feature=related

A.ANAND
4th November 2008, 01:42 PM
pottu thakku singer-rukku ellam oru thread! :banghead:
vera nalla singer-re illaya tfm-la! :oops:

R.Latha
15th January 2009, 02:18 PM
முன்னணி வரிசையிலிருக்கும் பின்னணிப் பாடகி. குத்தில் கும்மாங் -குத்தாக `போட்டுத் தாக்(கு)'கியவர். இசைஞானியோடு `நம்ம காட்டுல மழை பெய்யத்' தொடங்கிய நேரத்திலிருந்து டைம் ஸ்டார்ட்! அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் தித்திப்புக் குரலழகி... `போட்டுத் தாக்கு' ரோஷினி!

குடும்பம்: ``அன்பான அம்மா லூசி. அப்பா ஜோசப் கலியபெருமாள். திருச்சி ஜோசப் காலேஜ்ல தமிழ்ப் பேராசிரியரா வேலை பார்த்தவர். இப்ப லயோலா காலேஜ்ல பார்ட் டைமா வேலை பார்க்கிறார். அக்கா அனிதா சாலமன் எனக்காக எத்தனையோ தியாகங்கள் பண்ணியிருக்கா. வானவில் மாதிரி அழகான அன்பான ஒரு குடும்பம்.''

ஆரம்பம்: ``அக்கா கூட சேர்ந்து முறைப்படி நானும் சங்கீதம் படிக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசுலயிருந்தே ரெண்டு பேரும் நிறைய நிகழ்ச்சிகள் பண்ணி இருக்கோம். கிட்டத்தட்ட 2000த்திற்கும் அதிகம்.''

வாய்ப்பு: ``நான் நிகழ்ச்சிகளில் பாடுறதை வச்சுத்தான் எதிர்பாராமல் வாய்ப்புகள் வந்தது. ஷ்ரீகாந்த் தேவா சாரிடம் இருந்து `போட்டுத்தாக்கு' சான்ஸ் முதன் முதலா கிடைச்சது இந்த ஜென்மத்துல மறக்க முடியாதது.''

வியப்பு: ```நம்ம காட்டுல மழை பெய்யுது' பாட்டு பாடியது. ஒருநாள் காலேஜ்ல இருந்தப்ப அம்மா ஃபோன் பண்ணி வரச் சொன்னாங்க. அவசர அவசரமாய் ஓடிப்போய் யுவன் சார் ஸ்டூடியோவுல அப்படியே சும்மா என்னோட ட்ராக் மட்டும் பாடிட்டு வந்துட்டேன். ஒரு சில மாதங்களுக்குப் பின்பு, ஒருநாள் அம்மா சி.டி. வாங்கிட்டு வந்தாங்க. `உனக்கொரு ஆச்சரியம் காத்திருக்கு'ன்னு சி.டி.யைக் கையில தந்தாங்க.

சி.டி.யில் என்னுடன் பாடிய ஆண் பாடகர் யார்னு பார்த்தபொழுது இசைஞானி இளையராஜா சார்ன்னு போட்டிருந்துச்சு. ஒரு நிமிஷம் பயங்கர த்ரில் ஆயிடுச்சு!

என் வாழ்க்கையில மறக்க முடியாத த்ரில் கொடுத்த அந்தப் பாடலை எனக்கு ரொம்ப பிடிக்கும்.''

லட்சியம்: ``இசைஞானி சார் இசையில் குறைந்தபட்சம் ஒரு ட்ராக்காவது பாடிரணும்.''
14.1.08 kumudham